Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20012
    Posts
  3. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    15740
    Posts
  4. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    5417
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/18/25 in all areas

  1. குடியேற்றவாசிகளில் சிலர் தாங்கள் குடியேறி செற்றிலான பின்பு புதிதாக குடியேற்றவாசிகள் வந்துவிட கூடாது என்பதில் முன்னுக்கு நிற்பார்கள் தானே
  2. ஒலியும் ஒளியும்….. முகட்டில நிண்டு கொண்டு இருட்டுக்க திசையும் தெரியாம “இப்ப இப்ப” எண்டு கேக்க தம்பி கீழ நிண்டபடி, “இப்பவாம்”எண்டு உள்ள கேட்டிட்டு “இல்லையாம்”எண்ட பதிலைத் திருப்பிச் சொன்னான். திருப்பியும் உருட்டி ஒரு மாதிரி செல்வா ஒளிபரப்பில வந்த கமலகாசன் தெரியத் தொடங்க அப்பிடியே வைச்சு கம்பியை இறுக்கீட்டு அம்மபிகாவின் வருகைக்குப் பாத்துக் கொண்டிருந்தம். எண்பதில முதல் முதலாப் பக்கத்து வீட்டை தான் ரீவி பாத்தது, அதுகும் black and white ரீவி. முன்னால fan ஸ்விட்ச் மாதிரி இருந்தை உருட்டி உருட்டி on பண்ணீட்டு டக்டக் எண்டு சுத்த, நம்மர் மாற ,அதில இழுக்கிறதைப் பாக்கலாம். ஆர்டேம் வீட்டை பெடியளை விடீறது சரியில்லை எண்டு அம்மா சொல்லீட்டு நாங்கள் பிறந்தொண்ன ஆரோ போட்ட பஞ்சாயுதம், மோதிரம் எல்லாத்தையும் சேத்து nanogramஐ மில்லிகிராமாக்கி மொத்தமா நிறுத்து வித்துக் குடுக்க அப்பா வெளீல இருந்து வாற ஒரு ஆளைப்பிடிச்சு duty free இல இருந்து ஒரு மாதிரி கலர் ரீவீ ஒண்டை வாங்கித் தந்தார். கொழும்பில இருந்து வந்த பெட்டியை ராகு காலம் தவித்து நல்ல நேரத்தில உடைப்பம் எண்டு வெளிக்கிட “பெட்டியும் உள்ள இருக்கிற ரெஜிபோமும் கவனம்” எண்டு அம்மா தீரக்கதரிசனமாச் சொன்னது பிறகு இடம் பெயரேக்க உதவிச்சுது. கால நேரம் பாத்து பெட்டியை உடைச்சாலும் டிவி ஓடினதிலும் பாக்க பெட்டீக்க இருந்த நாள்த் தான் கூட. “ Sony trinitron ” பெட்டியை உடைச்சு puzzle மாதிரிப் பாத்து பாத்துப் பொருத்தீட்டு போட வெளிக்கிட “கரண்ட் அடிக்கும் கவனம்” எண்டு அம்மம்மா சொன்னதால செருப்பையும் போட்டுக்கொண்டு on பண்ண “ஸ்ஸ்ஸ்” எண்ட சத்தத்தோட கோடுகோடா கலர் மழை பெஞ்சுது. VHF , UHF அதோட இருக்கிற எல்லா நம்பரையும் மாறி மாறி அமத்த தொடர்ந்து மழை மட்டும் பெய்ய முகம் தொங்கிச்சுது. அன்ரனாக் கம்பியை இழுத்து விரிச்சு திருப்ப ஒரு மாதிரி உருவம் வரத் தொடங்கிச்சுது. வந்த உருவம் நிக்காமல் கடகடவெண்டு மேல கீழ ஓடிக் கொண்டிருந்தச்சுது. முன்னால இருந்த லாச்சி மாதிரி இருந்த பெட்டியைத் துறந்து இருந்த நாலு உருட்டிற switch ஐயும் உருட்டிப் பழகி, பிறகு ஒருமாதிரி மேல கீழ ஓடிறதை நிப்பாட்டி, பிறகு ஒவ்வொண்டாப் பாத்து, ஒண்டு வெளிச்சம் கூட்டிக் குறைக்க மற்றது contrast எண்டு கண்டு பிடிச்சம். என்னடா இன்னும் கிளீயர் இல்லை எண்டு ஏங்க அன்ரெனாவை உயத்திக் கட்டினாத்தான் வடிவா எல்லா channelம் இழுக்கும் எண்டு சொல்ல அடுத்த budget ஓட அப்பா வரும் மட்டும் வெறும் மழையையும் இடைக்கிடை வாற நிழலையும் பாத்துக்கொண்டிருந்தம். ஒரு மாதிரி அப்பா ஓமெண்ட எங்கயோ ஒரு hardware கடைக்காரன் அன்ரெனா குழாய் விக்கிறதைக் கண்டு பிடிச்சுக் கூப்பிட வந்தவன் ஒரு குழாய் காணாது கிளீயரா வழாது எண்டு ரெண்டைப் போட்டு உயரத்தையும் விலையையும் கூட்டினான். கம்பிக்கு மேல கம்பி வைச்சுக்கட்டி அதில மேல பெரிய VHFஅன்ரெனாவைப் பூட்டி, கீழ குறுக்கா சின்ன UHF அன்ரெனாவையும் கட்டி, இடி விழாம இருக்க மண்ணுக்கு பெரிய இரும்புக்குழாயைப் புதைச்சு அதுக்குள்ள இந்தக் குழாயை இறக்கி அது ஆடாம இருக்க ஒரு ஆணியைப் பூட்டி, உயத்தின குழாயில இருந்து மூண்டு கம்பியை இழுத்து, தென்னையில ஒண்டு, பின் பத்தி தீராந்தீல ஒண்டு, முன் முகட்டில ஒண்டு எண்டு கட்டினம். உருட்டிப் பிரட்டி ஒவ்வொரு channel ஆ வரத் தொடங்க அண்டைக்கு முழுக்க பிறவிப் பெரும்பயனை அடைஞ்ச மாதிரி முழு நாளும் ரீவி மட்டும் பாத்துக் கொண்டிருந்தம். காலமை நிகழ்ச்சி தொடங்க முதல் கலர் கலரா வாற வட்டத்தைப் போட்டு “கூ” எண்ட சத்தம் வர போடிற TV பத்துமணிக்கு நமோ நமோ தாயே எண்டு முடியும் வரை on இல தான் இருந்திச்சுது . விளங்காத பாசையிலும் advertisement ஐக்கூட ஆவெண்டு பாத்தம்; Pears குளுகுளு baby, இவர்கள் சகோதரிகளா இல்லை தாயும் மகளும் எண்டு வந்த Rexona soap , இலங்கையில எல்லா வாகனமும் இங்க தான் விக்கிறது எண்டு நம்பின இந்திரா டிரேடர்ஸ், இடைக்கிடை தமிழில வாற அல்லி நூடில்ஷ்ஷும் பப்படமும், நந்தன விந்தன, திமுது முத்து எண்டு விளங்காதை எல்லாத்தையும் பாடமாக்கினம். கதைக்காத Tom& Jerryம், கூவிற woody wood peckerம், நாய் வளக்காத குறைக்கு “ லசியும்” பின்னேரம் விளையாட முதல் பாத்திட்டு. பிறகு 7.30க்குப் புட்டுப் பிளேட்டோட வந்திருக்க, knight rider, Battlestar galactica, Blake seven, Big foot and wild boy, Geminan, Automanம் இரவில பத்து மணிக்கு A- team, Strasky and Hutchம் இடேக்க ஓடிற Different strokes எண்டும் கொஞ்ச நாளா ஒடி ஓடிப் பாத்தம். அடிபாடு தொடங்க, முதலில கட்டி ஒளிச்சு வைக்கிறது ரீவீயுத் தான். ஒவ்வொரு முறையும் இடம் பெயரேக்க மட்டுமில்லை , பள்ளிக்கூடச் சோதினை எண்டாலும் அம்மா அதை மூடிக்கட்டி வைக்கிறதில குறியா இருந்தா. அம்மாக்குப் பிறகு அவவின்டை சீலையைக் கட்டினது எங்கடை ரீவீயும் settyயும் தான். அப்பிடிச் சோதினை முடிஞ்சு இப்ப holiday தானே எண்டு கடவுள் இறங்கி வந்தாலும் “கரண்ட்” எண்ட பூசாரி அடிக்கடி வரத்தைத் தடுத்திடுவார். அப்ப எங்கடை வாழ்க்கையில ரீவீயிலேம் தூரதரிசனமா இந்தியா மெல்ல உள்ள வந்திச்சுது. “ வாசிங் பௌடர் நிர்மா” வில வாற வெள்ளைச்சட்டைப் பிள்ளையும், “வாய்மணக்க, தாம்பூலம் சிறக்க” வந்த நிஜாம் பாக்கும் , வயலும் வாழ்வும் எண்டு எங்கடை வீடுகளுக்கு வந்த சேராத வேளாண்மையும் பொறுமையைச் சோதிக்க, வெள்ளிக்கிழமை ஓளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை படமும் படிப்பு டைம்டேபிளிலையே சேந்து இருந்திச்சுது. கடவுளையே கிட்டப்பாக்க காசுகேக்கிற ஊரில இது மட்டும், பேருக்கேத்த மாதிரி தூரத்தில இருந்தாலும் எங்களுக்கு கொஞ்சம் இலவச தரிசனம் இடைக்கிடை கிடைச்சுது. ரேடியோவில வரதாச்சாரியாரின் வர்ணனை மட்டும் கேட்டே matchஐ ரசிச்ச எங்களுக்கு ரீவீல match அதுகும் 83 World Cup வர சிறீக்காந்தும் , கப்பில்தேவும் இந்தியாவும் favorite ஆ மாறத் தொடங்கிச்சுது. வாய்கெட்டினது வயித்துக்கு எட்டாத மாதிரி, மண்டைதீவில அடி விழ உருவம் அருவமாகி பிறகு கொக்காவிலும் போக ஒன்றாய் தெரிஞ்சது பலவாய் மாறித் தெரிஞ்சு, கடைசீல சோதியாவே போட்டுது. அதோட பாதையிருந்தும் பயணத்தடைகள் கூடி, தியட்டர் இருந்தும் இல்லாமல் போக ஊர் உலகம் உய்ய எண்டு தான் பாத்த படத்தை அக்கம் பக்கச் சனமும் பாக்க எண்டு தொடங்கிச்சுது Local ஓளிபரப்பு. கொய்யாத்தோட்டத்தில றீகல், கச்சேரியடி செல்வாஸ், கோண்டாவில் expo, எண்டு ஊருக்கு ஒரு கோயில் மாதிரி ஒளிபரப்புக்களும் தொடங்கிச்சுது. சும்மா தொடங்கினவங்கள் அன்ரனா இருந்த வீடு வழிய போய் வசூலிக்கத் தொடங்கினாங்கள். காசு வாங்கிற கதை தம்பியவைக்குத் தெரிய வரக் கட்டணமும் கூடிக் படங்களில கட்டுப்பாடும் வரத் தொடங்கிச்சுது . கொஞ்சம் கொஞ்சமா கோட்டைக்குள்ள விழீற அடி கூடத் தொடங்க அங்க இருந்து திரும்பி வாற கீழ்வீச்சுச் செல்லடியோட மேல்வீச்சு பொம்மரடியும் சேர அம்மம்மா அடம் பிடிச்சா அன்ரனாக் குழாயை மேல இருந்து பாத்தா காம்ப் எண்டு அடிச்சுப் போடுவாங்கள் இறக்குவம் எண்டு. நல்ல வேளை நாங்க குழாயை இறக்க முதல் பக்கத்து நாட்டில இருந்து வந்த நிவாரணப் பொதிகள் இறங்க, குழாயை இறக்காமல் தப்பிச்சம். ஏங்கின நிவாரணங்களும் கிடைக்காம உள்ளூர் அகதியாய் திரிஞ்சிட்டு திருப்பி வீட்டைவர, இல்லாமல் இருந்த கரண்டும் திரும்பி வர, பனிக்கு மட்டும் இழுத்த தூர தர்சன் தொடந்து வடிவா , கிளீயரா இழுக்க அதுக்குப் பிறகு ராமாயணமும் மகாபாரத்துக் கதாவும், எங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. Term test க்கே TV ஐ மூடி வைக்கிற அம்மா அண்ணான்டை A/Lக்கு ஒரேடியா அந்த வருசம் மூடிக் கட்டி வைச்சதைப் பிறகு துறந்தா TV மட்டும் இருந்திச்சுது வேலை செய்யுதா எண்டு பாக்க கரண்டும் இல்லை இழுக்கக்கூடிய channelம் இருக்கேல்லை. அதுக்குப் பிறகு வேற ஒண்டும் கிடைக்காமல் ஓமர் முக்தாவும் ஒளிவீச்சும் சிறீதர் தியட்டரில பாக்கத் தொடங்க மூடிக்கட்டின TV மூலைக்குள்ளயே இருந்திச்சுது. படத்தை பாக்க ஒரு மாதிரி வந்த புதுத்தணிக்கை குழுவின் அனுமதி வர, வாடைக்கு Water pump generator,deck , cassette எல்லாம் வாடைக்கு குடுக்கிறது பிஸ்னஸா மாறிச்சுது. மூண்டு மணித்தியாலப் படத்தை தணிக்கை எண்டு வெட்டிக் கொத்தி ரெண்டு மணித்தியாலமாத்தர, அந்த ஒலியும் ஒளியும் இல்லாத படங்களை பாக்கத் தொடங்கினம். வருசத்துக்கு ஒருக்கா ரெண்டு தரம் கஸ்டப்பட்டு காசு சேத்துப் படம் பாக்கிறது பொங்கல் வருசப்பிறப்பு மாதிரித் தான் எங்களுக்கு ஒரு entertainment. மச்சான் என்ன மாதிரி இந்தமுறை விடுதலைக்க படம் பாப்பம் எண்டு தயாளன் சொல்ல முதலே காங்கேயன், பாஸ்கரன், எண்டு ஒழுங்கேக்க இருந்தவன், வந்தவன், எல்லாம் என்னைக் கழட்டிப் போட்டு அண்ணரோட கூட்டுச் சேந்தாங்கள் எப்பிடியும் ரெண்டு ரஜனி படம் போடோணும் எண்டு. ஒருமாதிரி பொருள், இடம், காலம் எண்டு எல்லாம் சரிவந்து படம் பாக்கவெண்டு வெளிக்கிட்டம். “படம் பாக்க அவங்கட்டை permission வேணுமாம், இல்லாட்டி எல்லாத்தையும் தூக்கிக் கொண்டு போயிடுவாங்களாம் எண்டு தொடங்கேக்கயே ஒண்டு வெருட்ட இஞ்சினை சாக்காலை மூடிச் சத்தம் கேக்காமப் பண்ணீட்டு வந்திருந்தம். “ தூளியிலே ஆட வந்த “ குஷ்புவைப் பாப்பம் எண்டு ஆவலா இருக்க ஓடின water pump திடீரெண்டு நிண்டிட்டு. தெரிஞ்ச அறிவில பிளக்கை கழட்டித் துப்பரவாக்கி போட இன்னும் கொஞ்சம் ஓடீட்டு திருப்பியும் நிக்க, வாடைக்கு தந்தவனை தேடிப் பிடிச்சு கொண்டு வந்தம். சாக்கால மூடின எப்பிடி காத்து வரும் புகையும் போகும் எண்டு பேசீட்டு , “சோக்கை இழுக்காதேங்கோ, காபிரேட்டரை கூட்டாதேங்கோ, எண்ணையை மட்டும் விடுங்கோ” எண்டு instructions குடுத்திட்டுப் போனான். சிவராத்திரி மாரி விடிய விடிய இருந்தும், படுத்தும், உருண்டும் குடுத்த காசுக்கு ஐஞ்சாறு படம் பாத்தம். ஒவ்வொருக்காலும் படராத்திரி முடிஞ்சாப்பறகு கொஞ்ச நாளைக்கு விகடன் விமர்சனக்குழுவுக்கும் மேலால விவாதங்களும் வியாக்கியானங்கள் நடக்கும். இதில சிலர் இன்னும் இளையராஜா, பாரதிராஜா எண்டு what’s appஇல பழைய விவாதங்களை தொடருராங்கள். 95 இல இடம்பெயர இதெல்லாம் காணாமல் போய் திரும்பி வந்து காணாமல் போனோர் பட்டியலில ஆக்களைத் தேடின கூட்டத்தில அம்மா ரீவீயையும் சேத்துக் கனகாலம் தேடித் திரிஞ்சவ. குஷ்பு மெலிஞ்சு போய், ரஜனி ரோபோவாகி, சுமனும் மோகனும் வில்லனாகி, அம்பிகாவும் ராதாவும் குண்டாகி, குள்ளக்கமல் கிழவனாகிப் போனதாலயோ இல்லாட்டி இப்பத்தை ட்ரெண்ட்க்கு நான் இன்னும் மாறாததாலையோ தெரியேல்லை, பெரிய ரீவீயும், எல்லாச் சனலும் இருந்தாலும் ஏனோ ஒளியும் ஒலியும் இல்லாமப் படம் பாத்த மாதிரி சந்தோசமான படம் ஒண்டையோ , படம் முடிய நல்ல வியாக்கியானங்களையோ ரசிக்கக் கிடைக்கேல்லை. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  3. 2000 ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் கடனட்டை என்பது மிக பெரிய சவாலாக இருந்தது.இலவச கடனட்டை என்று கொடுக்க மாட்டார்கள்.வருடாவருடம் சந்தாவாக ஒருதொகை வாங்குவார்கள். எங்காவது நாங்கள் சிறு தவறு செய்துவிட்டாலும் ஒருதொகையை அபராதமாக செலுத்த வேண்டிவரும். இந்தக் கடனட்டையாலேயே மூழ்கிப் போன குடும்பங்களும் உண்டு. 2000 ம் ஆண்டுக்குப் பின்னர்(சரியான ஆண்டு நினைவில் இல்லை)இலவச கடனட்டைகள் கொடுக்கத் தொடங்கினார்கள். இதிலும் பலர் நன்மையும் தீமையும் அடைந்தார்கள். அண்மையில் திரு @நியாயம் அவர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ஒரு தேநீர் குடிக்கக் கூட வழியில்லை என்று விசனமாக எழுதியிருந்தார்.அப்போதே இப்படி ஒரு பதிவு எழுதணும் என்று எண்ணினேன்.இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன். 2020 ஓய்வெடுத்த பின்பு பயணம் செய்யத் தொடங்கி இப்போது கடந்த 2-3 வருடங்களாக குறைந்தது வருடத்துக்கு 10 ஒருவழி பயணமாவது மேற்கொள்ளுகிறேன்.முதலில் மகளின் American Express Platinum Card காட்டில் இருந்து Additional Card எடுத்து தந்தார்.பயணம் செய்யும் போது கூடுதலான விமானநிலையங்களில் Airport Lounge இருக்கிறது.அங்கு இலவசமாக சாப்பிடலாம் குடிக்கலாம் (நான் குடிப்பதில்லை)பொழுதை கழிக்க நல்லதொரு இடம். American Express Platinum Card க்கு கூடுதலான பணம் என்று Capital One Venture X இல் இப்போ எடுத்து வைத்திருக்கிறார்கள். இதற்கு வருடாவருடம் 400 டாலர்கள் சந்தாவாக கட்ட வேண்டும். ஆனால் விமான ரிக்கட் 300 க்கு மேல் எடுத்தால் வருடம் ஒருதடவை அதைக்கழித்து விடுவார்கள். இதைவிட வேறுவேறு வழிகளிலும் நிறைய சலுகைகள் தருவார்கள்.நாங்கள் கட்டும் பணத்துக்கு அதிகமாக சலுகைகளை அனுபவிக்கலாம். இந்தக் காட்டை எடுத்தவுடன் Priority Pass காட்டுக்கு கோல்பண்ணினால் அந்தக் காட்டை வைத்து ஒரே நேரத்தில் 3 பேர் Airport Lounge க்குப் போகலாம். இலங்கையிலும் Airport Lounge இருக்கிறது.சிறியதாக இருந்தாலும் தரமாக இருந்தது. கடைசியாக இலங்கையில் இருந்து வரும்போது துருக்கியில் 10 மணிநேரம் இடைத்தங்கல்.எப்படித் தான் நேரம்போகப் போகுதோ என்று போனால் நல்ல சாப்பாடுகள் பழச்சாறுகள் என்று மாறிமாறி பசிக்கும் போது சாப்பிட்டோம். அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு இன்னும் ஒரு சலுகை இருக்கிறது. இலவசமாக Global Entry க்கு விண்ணப்பிக்கலாம். இது இருந்தால் அமெரிக்காவில் எந்த விமானநிலையத்திலும் TsaPre என்ற விசேடமாக உள்ள இடத்தால் உள்நுழையலாம். சப்பாத்து கழட்டத் தேவையில்லை கணனி எடுக்கத் தேவையில்லை. சர்வதேச பயணம் முடிந்து உள்நுழையும் போது பிரத்தியேகமாக உள்ள இடத்தில் பல கணனிகள் இருக்கும்.ஏதாவது ஒரு கணனியில் முகத்தைக் காட்டினால் Proceed என்று அறிவுறுத்தும்.குடிவரவு உத்தியோகத்தரிடம் போனால் கிட்ட போகும்போதே போகச் சொல்லி கையைக் காட்டுவார். இத்தனையும் 2-3 நிமிடங்களில் முடிந்துவிடும். இதுபற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை.நான் சொல்லி இங்கு பலர் எடுத்து அனுபவிக்கிறார்கள்.பலரும் வருடாவருடம் பயணம் செய்பவர்கள் இருந்தால் இப்படியான சலுகைகளை உங்கள் நாடுகளில் ஈருந்தால் நீங்களும் அனுபவிக்கலாம். நன்றி.
  4. ரூ.1.73 கோடி கட்டணம்: இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா? அமெரிக்கா, ஜெர்மனியில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சார்லட் லிட்டன் பதவி, ஒரு ஜெர்மன் கிரையோனிக்ஸ் (cryonics) ஸ்டார்ட்-அப் நிறுவனம், ரூ.1.73 கோடி இரண்டாவது வாழ்க்கைக்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த கிரையோஜெனிக்ஸ் (cryogenics) தொழில்நுட்பம், உண்மையில் சாத்தியமா அல்லது வெற்று வாக்குறுதியா? கிரையோஜெனிக்ஸ் என்பது குறைந்த வெப்பநிலையை எவ்வாறு அடைவது மற்றும் அத்தகைய வெப்பநிலையை பொருட்கள் அடையும் போது அவை எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதைப் பற்றிய படிப்பாகும். ஜெர்மனியின் மத்திய பெர்லினில், ஒரு சிறிய, கிட்டத்தட்ட பொம்மை போன்ற ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அதன் உள்ளே, மேல்புறத்தில் பல்வேறு வகையான கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவின் முதல் கிரையோனிக்ஸ் ஆய்வகமான டுமாரோ பயோ (Tomorrow bio), மறுசீரமைத்து இயக்கும் மூன்று ஆம்புலன்ஸ்களில் இதுவும் ஒன்றாகும். இதன் நோக்கம் நோயாளிகளை இறந்த பிறகு உறைய வைப்பது, பிறகு ஒருநாள் அவர்களை மீண்டும் உயிர்ப்பிப்பதாகும். இவை அனைத்துக்கும் 2,00,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.73 கோடி) செலவாகும். நீரிழிவு நோயாளிகள் 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனை செய்வது அவசியம் ஏன்? ஒரே ஆண்டில் 268 பேர் தானம்: தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பு தானம் அதிகரிப்பது ஏன்? சிங்கப்பூர் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழும் ரகசியம் பீட்ரூட் ஜூஸ் 'அதிசய' பானமா? உடற்பயிற்சிக்கு முன் குடித்தால் உடலில் என்ன நடக்கும்? பெர்ஃப்யூஷன் (Perfusion) பம்பில், டுமாரோ பயோவின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் புற்றுநோய் ஆராய்ச்சியாளரான எமில் கெண்ட்சியோரா உள்ளார். உலகின் முதல் கிரையோனிக்ஸ் ஆய்வகம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு மிச்சிகனில் திறக்கப்பட்டது. அது மனித குலத்தின் எதிர்காலம் என்று நம்புபவர்களுக்கும், அதை சாத்தியமற்ற ஒன்று என்று நிராகரிக்கும் மற்றவர்களுக்கும் இடையில் ஒரு கருத்து வேறுபாட்டை உருவாக்கியது. கெண்ட்சியோரா இத்தகைய ஆய்வகத்துக்கான தேவை படிப்படியாக உருவாகிறது என்று கூறுகிறார். இதுவரை அவர்கள் 'மூன்று அல்லது நான்கு' நபர்களையும் ஐந்து செல்லப்பிராணிகளையும் உறைய வைத்துள்ளனர் (அல்லது கிரையோபிரிசர்வ் (cryopreserved) செய்யப்பட்டுள்ளன). கிட்டத்தட்ட 700 பேர் இதற்காக பதிவு செய்துள்ளனர். 2025ஆம் ஆண்டில் அவர்கள் அமெரிக்கா முழுவதும் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவார்கள். உடல் பருமன்: பி.எம்.ஐ கணக்கீடு ஆரோக்கியம் பற்றி தெளிவாக உணர்த்துகிறதா?17 ஜனவரி 2025 ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம்17 ஜனவரி 2025 பட மூலாதாரம்,CHARLOTTE LYTTON படக்குறிப்பு, ஐரோப்பாவின் முதல் கிரையோனிக்ஸ் ஆய்வகமான டுமாரோ பயோ மறுசீரமைத்து இயக்கும் மூன்று ஆம்புலன்ஸ்களில் இதுவும் ஒன்றாகும் மனிதர்களை வெற்றிகரமாக உயிர்ப்பிக்க முடியுமா? கிரையோபிரெசர்வேஷன் முறையில் யாரும் இதுவரை வெற்றிகரமாக புத்துயிர் பெறவில்லை. அப்படி யாரேனும் வந்தாலும் கூட, அதன் சாத்தியமான விளைவு என்பது மூளையில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது. மனிதர்களைப் போன்ற சிக்கலான மூளை அமைப்புகளைக் கொண்ட உயிரினங்களை வெற்றிகரமாக உயிர்ப்பிக்க முடியும் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்பதே இந்த திட்டம் அபத்தமானது என்பதைக் காட்டுகிறது என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் நரம்பியல் பேராசிரியர் கிளைவ் கோயன் கூறுகிறார். 'நானோ தொழில்நுட்பம் (செயல்முறையின் கூறுகளை நானோ அளவில் மேற்கொள்வது) அல்லது கனெக்டோமிக்ஸ் (மூளையின் நியூரான்களை மேப்பிங் செய்தல்) ஆகியவை கோட்பாட்டு உயிரியலுக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான தற்போதைய இடைவெளியை குறைக்கும்' என்பது போன்ற வாக்குறுதிகள் மிகையானவை என அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,CHARLOTTE LYTTON படக்குறிப்பு, சரியான வெப்பநிலையில் உடலை வைத்திருக்கும் வரை, இங்கு கால வரம்புகள் கிடையாது என்கிறார் கெண்ட்சியோரா இத்தகைய விமர்சனங்கள் டுமாரோ பயோவின் லட்சியங்களை மழுங்கடிக்கவில்லை. ஒரு நோயாளி டுமாரோ பயோ நிறுவனத்துடன் இறுதி செயல்முறைக்கு கையெழுத்திட்டதும், அவர் தனது வாழ்க்கையின் இறுதி நாட்களில் இருப்பதை ஒரு மருத்துவர் உறுதிப்படுத்துவார். பிறகு நிறுவனம் அவர்களின் இருப்பிடத்திற்கு ஆம்புலன்ஸை அனுப்புகிறது. சட்டப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதும், அந்த நபரின் உடல் டுமாரோ பயோவின் ஆம்புலன்சுக்கு மாற்றப்படும். அங்கு கிரையோனிக்ஸ் செயல்முறை தொடங்குகிறது. மருத்துவ வரலாற்றில், சில நோயாளிகளின் இதயம் உறை வெப்பநிலையில் நிறுத்தப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கிய சம்பவங்களில் இருந்து, தங்களுக்கான உந்துதலை டுமாரோ பயோ நிறுவனம் பெற்றது. ஒரு உதாரணம் அன்னா பேகன்ஹோம் , 1999ஆம் ஆண்டில் நார்வே நாட்டுக்கு, விடுமுறையைக் கழிக்கச் சென்ற நபர். பனிச்சறுக்கு விளையாட்டின் போது, எதிர்பாராத ஒரு சம்பவத்தால் இரண்டு மணிநேரம் மருத்துவ ரீதியாக இறந்த நிலையில் இருந்தார் (Clinically dead). ஆனால் மீண்டும் புத்துயிர் பெற்றார். குளித்த பிறகு பயன்படுத்தும் துண்டை வாரத்திற்கு எத்தனை முறை, எப்படி துவைக்க வேண்டும்?16 ஜனவரி 2025 யாரை பழிவாங்க இவர்கள் இரவு 2 மணி வரை கண் விழிக்கிறார்கள்? ஆண், பெண்ணில் என்ன மாற்றம் நிகழும்?15 ஜனவரி 2025 மனித உடல் பூஜ்ஜிய டிகிரிக்கு கீழ் சென்றால் என்னவாகும்? இந்த செயல்முறையின் போது, உடல்கள் பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன, கிரையோபுரோடெக்டிவ் திரவமும் செலுத்தப்படுகின்றது. "மனித உடலை பூஜ்ஜிய டிகிரிக்கு கீழ், உடலை உறைய வைப்பது மட்டும் போதாது, அதை கிரையோப்ரெசர்வ் செய்ய வேண்டும். இல்லையெனில், எல்லா இடங்களிலும் உறைபனி படிகங்கள் இருக்கும், உடலின் திசுக்கள் அழிந்துவிடும்" என்கிறார் கெண்ட்சியோரா. "அதை எதிர்க்க, உடலின் அனைத்து நீரையும், உறையக்கூடிய அனைத்தையும், கிரையோபுரோடெக்டிவ் திரவம் கொண்டு மாற்ற வேண்டும். அதைச் செய்தவுடன், மிக வேகமாக சுமார் -125C டிகிரி (257F) வெப்பநிலையை அடைய வேண்டும். பின்னர் மிகவும் மெதுவாக, -125C முதல் -196C (384.8F) வெப்பநிலை வரை செல்ல வேண்டும்." என்கிறார் கெண்ட்சியோரா. பிந்தைய வெப்பநிலையில், நோயாளி சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு சேமிப்பு அலகுக்கு மாற்றப்படுகிறார். அதன் பிறகு 'காத்திருக்க வேண்டும்' என்று கெண்ட்சியோரா கூறுகிறார். "திட்டம் என்னவென்றால், எதிர்காலத்தின் ஒரு கட்டத்தில், மருத்துவத் தொழில்நுட்பம் போதுமான அளவு முன்னேறியிருக்கும். அப்போது புற்றுநோய் அல்லது அந்த நோயாளியின் மரணத்திற்கு எது வழிவகுத்ததோ அதை குணப்படுத்த வழி இருக்கும். மேலும் கிரையோபிரெசர்வேஷன் செயல்முறையை மீண்டும் தொடங்கிய கட்டத்திற்கே கொண்டுவரவும் அப்போது வழி இருக்கலாம்." ஆனால் அத்தகைய மருத்துவத் தொழில்நுட்பம் எப்போது கிடைக்கும்? 50, 100 அல்லது 1,000 ஆண்டுகளில் நடக்குமா என்பது தெரியாது. "ஆனால், அது உண்மையில் முக்கியமில்லை. நீங்கள் சரியான வெப்பநிலையில் உடலை வைத்திருக்கும் வரை, இது சாத்தியம். இங்கு கால வரம்பு கிடையாது" என்கிறார் கெண்ட்சியோரா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த செயல்முறையின் போது, உடல்கள் பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன (சித்தரிப்பு படம்) கிரையோனிக்ஸ் - நடைமுறையில் சாத்தியமா? கிரையோனிக்ஸ் பற்றி அறிமுகமில்லாதவர்களுக்கு இந்த யோசனை முட்டாள்தனமாகவும் அச்சுறுத்தக் கூடியதாகவும் தோன்றலாம். "ஆனால் கோட்பாட்டளவில் இது ஏன் சாத்தியம் இல்லை என்பதற்கு எந்தக் காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை" என கெண்ட்சியோரா கூறினாலும், கிரையோபிரெசர்வேஷன் செயல்முறைக்கு பிறகு வெற்றிகரமாக உயிர்ப்பிக்கப்பட்ட மனிதர்களின் தற்போதைய எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது. இந்த செயல்முறையின் திறனைக் காட்டும் ஒப்பீட்டு விலங்கு ஆய்வுகளும் குறைவு. எம்பாமிங் திரவத்தை உட்செலுத்துவதன் மூலம் ஒரு எலியின் மூளையைப் பாதுகாப்பது இப்போது சாத்தியம். எதிர்கால உயிர்ப்பித்தலுக்காக மனிதர்களின் மூளையும் ஒருநாள் இப்படி பாதுகாக்கப்படுவது சாத்தியமாகலாம் என்ற நம்பிக்கையை, மேற்கூறிய செயல்முறை அளிக்கிறது. ஆனால் இந்த செயல்முறை, விலங்கின் இதயம் துடித்துக் கொண்டிருக்கும் போதே நிகழ வேண்டும், அதாவது அந்த விலங்கை கொல்வதன் மூலம். கோவை: மஞ்சளாக மாறிய நிலத்தடி நீர், துரத்தியடிக்கும் துர்நாற்றம் – வெள்ளலூர் குப்பைக் கிடங்கின் பாதிப்புகள்12 ஜனவரி 2025 அழியும் ஆபத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ் நன்னீர் மீன்கள்: தமிழ்நாட்டு மீன்கள் எவை - விளைவுகள் என்ன?13 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனித உடல் பூஜ்ஜிய டிகிரிக்கு கீழ் சென்றால், உடலை உறைய வைப்பது மட்டும் போதாது, அதை கிரையோப்ரெசர்வ் செய்ய வேண்டும் என்கிறார் கெண்ட்சியோரா கெண்ட்சியோரா கூறுகையில், "பெரும்பாலான மருத்துவ முறைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும்போது அவநம்பிக்கையுடன் பார்க்கப்படுகின்றன. ஆனால் இந்த திட்டத்திற்கு இருக்கும் எதிர்ப்புக்கு காரணம், மரணத்தில் இருந்து ஒருவரை உயிர்ப்பிப்பது விசித்திரமாக தோன்றுவதால் தான்" என்றார். சி.எலிகன்ஸ் எனப்படும் ஒரு நூற்புழு, கிரையோப்ரிசர்வ் செய்யப்பட்டு, மீண்டும் முழு செயல்பாட்டிற்கு திரும்ப முடியும் என்பதைக் காட்டும் ஆராய்ச்சி, ஒரு உயிரினம் மரணத்தைக் கடக்க முடியும் என்பதற்கான சான்றுகளை ஊக்குவிக்கிறது என்றும் அவர் நினைக்கிறார். கொறித்துண்ணிகளிடையே (Rodents), உறுப்புகள் புத்துயிர் பெற்றதற்கான சில சான்றுகளும் உள்ளன. 2023ஆம் ஆண்டில், 'மினசோட்டா ட்வின் சிட்டிஸ் பல்கலைக்கழக' ஆராய்ச்சியாளர்கள் எலிகளின் சிறுநீரகங்களை 100 நாட்கள் வரை கிரையோஜெனிக் முறையில் சேமித்து வைத்தனர். பிறகு மீண்டும் அதை சாதாரண வெப்பநிலைக்கு கொண்டுவந்து, கிரையோப்ரொடெக்டிவ் திரவங்களை அகற்றி, அவற்றை மீண்டும் ஐந்து எலிகளுக்கு பொருத்தினர். 30 நாட்களுக்குள் அந்த உறுப்புகளின் முழு செயல்பாடு மீட்டெடுக்கப்பட்டது. "இன்னும் பல விஷயங்கள் உள்ளன. யாரும் அதை முயற்சிக்கவில்லை என்பதால் அது பயனளிக்காது என்ற எண்ணம் உள்ளது. முயற்சித்தால் தான் பயன்கள் தெரியும்" என்கிறார் கெண்ட்சியோரா. அதே சமயம், ஒருமுறை முயற்சித்துப் பார்த்தால், அவை பயனளிக்காது என்பதையும் தெரிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. கொறித்துண்ணிகள் அல்லது புழுக்கள் போன்றவற்றுக்குப் பொருந்துகிற பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு பொருந்தாது என்பதை தெரிந்துகொண்டதைப் போல. கிரீன்விச்சை அடிப்படையாகக் கொண்டு உலகின் நேர மண்டலம் உருவானது எப்படி தெரியுமா?12 ஜனவரி 2025 சென்னை: செயற்கை கடல் அலைகளை உருவாக்கி சுனாமி, புயல், கள்ளக்கடல் பாதிப்புகளை தடுப்பது பற்றி ஆய்வு12 ஜனவரி 2025 மனித ஆயுளை நீட்டிப்பது குறித்த விவாதங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கிரையோனிக்ஸ் என்பது, அதிகரித்து வரும் 'மனித ஆயுள் நீட்டிப்பு' குறித்த விவாதங்களின் ஒரு பகுதியாகும். நீண்ட ஆயுளைப் பற்றிய விஷயத்தில் இப்போது விவாதங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் அதிக ஆண்டுகள் வாழ முடியும் என அவை உறுதியளிக்கின்றன. ஆனால் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நன்றாக சாப்பிடுவதைத் தாண்டி, நடைமுறை ஆராய்ச்சி இந்த விஷயத்தில் மிகக் குறைவாகவே உள்ளது. கோயென், கிரையோனிக்ஸ் பற்றிய ஒரு மற்றொரு பார்வையை முன்வைக்கிறார், இது "ஆண்டிஃபிரீஸ் (Antifreeze) தொடர்பாக இருக்கும் ஒரு தவறான நம்பிக்கை மற்றும் உயிரியல், இயற்பியல் மற்றும் இறப்பு ஆகியவற்றின் இயல்பு பற்றிய தவறான புரிதல்" என்று அவர் விவரிக்கிறார். இதயம் துடிப்பதை நிறுத்தியவுடன், நமது செல்கள் சிதைவடையத் தொடங்குகின்றன, இதனால் பெரும் சேதம் ஏற்படுகிறது. "ஒரு உடல் பின்னர் கிரையோப்ரிசர்வ் நிலையில் இருந்து மீண்டும் சாதாரண வெப்பநிலைக்கு வரும் போது, மரணத்திற்குப் பிந்தைய கட்டத்தில் நடந்த அனைத்து சிதைவுகளும் இப்போது மீண்டும் தொடங்கும்" என்கிறார் கோயென். இங்கு கிரையோனிக்ஸ் மீது தான் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். அதாவது திசுக்கள் மற்றும் உறுப்புகள் போன்றவற்றை மிகக் குறைந்த வெப்பநிலையில் நீண்டகால கிரையோபிரசர்வேஷன் மூலம் சேமித்து, பின்னர் பயன்படுத்தலாம். டுமாரோ பயோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் உடல்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளையில் சேமிக்கப்படுகின்றன, இது உடல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கெண்ட்சியோரா கூறுகிறார். ஆனால் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் ஒரு சந்ததியினருக்கு, நீண்டகாலமாக உறையவைக்கப்பட்ட அவர்களது மூதாதையர் சடலத்தின் பொறுப்பை திடீரென்று கொடுப்பது என்றால், அந்த சூழ்நிலையைக் கற்பனை செய்வது விசித்திரமாக உள்ளது அல்லவா? செயல்முறைக்கான அதீத செலவு பற்றிய கவலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் பணம் இத்தகைய இறுதி செயல்முறைக்கு செலவழிக்கப்படுவதைப் பற்றி அதிகம் மகிழ்ச்சியடையவில்லை கிரையோனிக்ஸின் ஆதரவாளர்கள் நோயாளியின் இறப்புக்கு காரணமான நோய்க்கான ஒரு சிகிச்சை எதிர்காலத்தில், அவர்கள் மீண்டும் உயிர்பிக்கப்படும் போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை அல்லது அதேபோல இரண்டாவது முறையாக உயிர் பெற்றாலும் அது நீடிக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. இந்த செயல்முறைக்கான அதீத செலவு பற்றிய கவலையும் உள்ளது, பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் பணம் இத்தகைய இறுதி செயல்முறைக்கு செலவழிக்கப்படுவதைப் பற்றி அதிகம் மகிழ்ச்சியடையவில்லை. "ஒன்றை தேர்வு செய்வதற்கான உங்களது சுதந்திரம், அதுவே மற்ற அனைத்து சாத்தியமான நெறிமுறை பரிசீலனைகளையும் முறியடிக்கிறது என்று நான் வாதிடுவேன்" என்று கெண்ட்சியோரா கூறுகிறார். "சிலர் தங்களது 85 வயதில் கூட சொகுசுப் படகுகளை அதிக விலைக்கு வாங்குகிறார்கள். அவர்களுக்கு அதை அனுபவிக்க குறைவான காலமே இருக்கலாம், உதாரணமாக மூன்று ஆண்டுகள். எனக்குத் தெரியவில்லை. அந்த அடிப்படையில், மீண்டும் உலகிற்கு திரும்ப 2,00,000 டாலர்கள் முதலீடு என்பது ஒரு நியாயமான ஒப்பந்தம் போல் தெரிகிறது" என்று அவர் கூறுகிறார். தங்களின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் 60 வயது மற்றும் அதற்கும் குறைவானவர்கள் என்றும், ஆயுள் காப்பீடு மூலம் செயல்முறையின் கட்டணங்களுக்கு நிதியளிப்பதாகவும் அவர் கூறுகிறார் (இது நிறுவனம் மூலமாகவோ அல்லது சுயாதீனமாகவோ ஏற்பாடு செய்யப்படலாம்). '9 ஆண்டுகள், 3 முறை ஐ.வி.எஃப், 2 கருக்கலைப்புகள்' - சிகிச்சை தரும் உடல், மன வலியை பகிரும் பிபிசி செய்தியாளர்10 ஜனவரி 2025 பேனிக் அட்டாக்: சில நிமிடங்கள்தான்; ஆனால் உயிர் பயம் ஏற்படும் - சமாளிப்பது எப்படி?10 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சமீபத்திய கொரோனா பெருந்தொற்று, மரணம் மற்றும் உடலைப் பாதுகாப்பதற்கான உந்துதல் குறித்து மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன 51 வயதான லூயிஸ் ஹாரிசனைப் பொறுத்தவரை, அவர் இந்த செயல்முறைக்கு கையெழுத்திட்டது 'ஒரு ஆர்வத்தால் உந்தப்பட்டு'. "எதிர்காலத்தில் ஒரு புதிய வாழ்க்கைக்கு, மீண்டும் உயிர்பிக்கப்படலாம் என்ற யோசனையால் நான் ஈர்க்கப்பட்டேன். இது காலப் பயணத்தின் ஒரு வடிவம் போல் தோன்றியது," என்று அவர் கூறுகிறார். "இதில் திரும்பி வருவதற்கான ஒரு சிறிய வாய்ப்பு இருப்பது கூட ஒரு தர்க்கரீதியான தேர்வாகத் தோன்றியது." என்கிறார் ஹாரிசன். உறுப்பினர் கட்டணம் மற்றும் ஆயுள் காப்பீட்டிற்காக மாதத்திற்கு சுமார் $87 (7,535 ரூபாய்) செலுத்தும் ஹாரிசன், தனது முடிவு பலரை ஆச்சரியப்படுத்தியதாகக் கூறுகிறார். "மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், 'மீண்டும் வருவது எவ்வளவு கொடுமையானது, நமக்கு தெரிந்த அனைவரும் இருக்கமாட்டார்கள் அல்லவா' என்று. ஆனால் அது என்னைத் தடுக்கவில்லை. நாம் வாழ்நாள் முழுவதும் தெரிந்த, நெருக்கமான மனிதர்களை இழக்கிறோம், ஆனாலும் தொடர்ந்து வாழ ஒரு காரணத்தை தேடுகிறோம் அல்லவா?" என்கிறார் ஹாரிசன். சமீபத்திய கொரோனா பெருந்தொற்று, மரணம் மற்றும் உடலைப் பாதுகாப்பதற்கான உந்துதல் குறித்து மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அந்த காரணத்திற்காக தான் டுமாரோ பயோ நிறுவனம் சில லட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகத் தெரிகிறது. ஒருவரின் நினைவகம், அடையாளம் மற்றும் ஆளுமை ஆகியவற்றின் நரம்பியல் கட்டமைப்பை இந்த வருடத்திற்குள் பாதுகாப்பது, பின்னர் 2028க்குள் பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையில் இருந்து மீட்டுக் கொண்டுவருதல். "திட்டமிட்டபடி அனைத்தும் நடக்குமா என என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. இருப்பினும், குறைந்தபட்சம் தகனத்துடன் ஒப்பிடும் போது, இந்த செயல்முறையில் உயிர்ப்பித்தலுக்கான வாய்ப்பு அதிகம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்கிறார் கெண்ட்சியோரா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cge775gjd3zo
  5. ஆமை புகுந்த வீடும், அப்புக்காத்து புகுந்த கட்சியும்…. உருப்பட்ட மாதிரித்தான். 😂 🤣
  6. இந்தக்கட்சியின் கூட்டத்தொல்லை தாங்க முடியவில்லை ஜயா
  7. சுனாமியால் களுத்தறை முதல் - கற்கோவளம் வரை பாதிக்கப்படவில்லை. ஆனால் கற்கோவளம் முதல் காலி வரை பாதிப்பு இருந்தது இதற்கு நீங்கள் சொல்லும் கண்டமேடை தான் காரணம். சமூககல்வியில் இதை பற்றி படித்துள்ளோம். இந்த பகுதியில் சீற்றம் குறைவு, சூரிய ஒளி ஊடுவல் அதிகம் என்பதால் கடல்வாழ் உயிரி வளமும் அதிகம். ஆனால் இது தனியே அலைகளுக்கு மட்டுமே பொருந்தும். காற்று அடிக்கும் போது கடல்சீற்றம் இந்த பகுதியையும் தாக்கும். தனுஸ்கோடி அழிவு இப்படித்தான் ஏற்பட்டது. விஜயன் நீரோட்டத்தின் வழியே அன்றி, காற்றின் தாக்கத்தினால்தான் இலங்கையின் வடமேற்கில் இறங்கியதாக நம்பபடுகிறது. ஒரிசாவில் இருந்து புறப்பட்ட ஒரு இயந்திரமற்ற படகு கூட்டத்துக்கு இப்படி நடக்க வாய்புண்டு என்றே நான் நினைக்கிறேன்.
  8. அவர் இந்த தோல்வியை எதிர்பார்க்கவில்லை சிங்களம் எப்படியும் சுத்து மாத்து பண்ணி தன்னை வெல்ல வைத்து விடும் என்று கடைசி வரை நம்பி இருந்தார் ஆனால் தமிழ் மக்களின் முழு ஆதரவை இழந்த இவருக்கு உதவி செய்வதால் தமது அரசியலுக்கு ஆபத்து என்று அனுரா தரப்பு புரிந்து வைத்து இருக்கு அதனால் தமிழ் சிங்கள தரப்புஇரண்டு பக்கமும் கைவிடப்பட்ட அரசியல் அனாதையாகி விட்டார் கடைசியில் ஸ்டாலினின் செல்பியும் ஊத்தி கொண்டு விட்டது ஒரு இன அழிப்பை இல்லை என்று அவரின் சுத்து மாத்துகளால் நிறுவலாம் ஆனால் அந்த உண்மையிலே அழிந்து போன ஆத்மாக்கள் மன்னிக்க மாட்டார்கள் காலம் ஒரு பாட சாலை போன்றது யராவது மகிந்த குடும்பம் சிங்களவர்களால் திரத்தபடும் என்று 2௦௦9களில் சொன்னால் நம்பி இருப்பார்களா ? அதே போன்று இந்த சுத்து மாத்து சுமத்திரனின் கடைசி கால வாழ்க்கையும் இருக்கும் .
  9. காணி மாபியா ஒன்று இயங்கிக் கொண்டு வருகின்றது பரம்பரையாக மேய்ச்சல் தரைகாணியாக பயன்படுத்திவந்த காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தமது கால்நடைகளையும் மேய்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் உள்ள மேய்ச்சல் தரைகளை கொண்டுள்ள பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைக்காணிகளில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கை மற்றும் குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் களவிஜயம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் சுதாகர்,உதவி பிரதேச செயலாளர்,பிரதேச காணி உத்தியோகத்தர்,திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள்,பண்ணையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர் அங்கு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோருடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது. இங்கு சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்களின் அத்துமீறிய செயல்பாடுகள் காரணமாக கால்நடை மேய்ச்சல் தரை அழிக்கப்படுவதாகவும், அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் பகுதிக்குள் கால்நடைகள் சென்றால் பண்ணையாளர்களை தாக்குவதாகவும் சிலரை பிடித்து பணம் கேட்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். அத்தோடு வன பாதுகாப்புத் திணைக்களத்தினர் மற்றும் மங்கலகம பொலிஸார் தங்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தாக்கல்களை செய்வதாகவும், லஞ்சமாக பணம் மற்றும் மதுசாரம் கேட்பதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர். கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகளை சுருக்கு வைத்து பிடிப்பதாகவும் சில சமயங்களில் கால்நடைகளை கொல்வதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் சுமார் 150, 000 இற்கும் மேற்பட்ட தங்களது கால்நடைகளை கொண்டு செல்வதாகவும் தாங்கள் பரம்பரை பரம்பரையாக இப்பகுதியிலே கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வருவதாகவும் கடந்த சில வருடங்களாக இவ்வாறானவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தனர். பண்ணையாளர்கள் சிறிய கத்தியினை கையில் வைத்திருந்தாலும் கூட வன பாதுகாப்பு திணைக்களத்தினர் அவர்களை பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதுடன் தங்களுக்கான தற்காலிக கொட்டில்களை கூட அமைப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை எனவும் ஆனால் பெரும்பான்மை சமூகத்தினருக்கு இயந்திரங்களைக் கொண்டு காடுகளை அழிப்பதற்கும் கட்டிடங்களை அமைப்பதற்கும் எதுவித தடைகளும் விதிப்பதில்லை எனவும் இதன் போது பண்ணையாளர்கள் தெரிவித்தனர். குறித்த கலந்துரையாடலின் போது அப்பகுதியில் அத்துமீறி பயிற்சிகள் ஈடுபடும் நபர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியபோது தங்களிடம் உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் அவற்றை வைத்துக் கொண்டு தாங்கள் இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர். இதன் போது பிரதேச செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இருவரும் இணைந்து அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் ஆவணங்களை பரிசீலனை செய்வதற்காக அவற்றை எதிர்வரும் வாரம் கிராம சேவகர்களின் ஊடாக வழங்கி அவற்றை உறுதி செய்ய வேண்டுமென பயிர்ச்செய்கையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டதுடன், பண்ணையாளர்கள் மீது அத்துமீறிய செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடாது எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது. “உடனடியாக சட்டவிரோதமாக குடியேறி இருக்கின்றவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் இது மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்பட வேண்டும். மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற அரசாங்கம் என நம்பிக்கை வருவதாக மேய்ச்சல்தரைக்காணியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகளை இதனை ஒரு முதலாவது சவாலாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் என்.பி.பி அரசுக்கு முன்பாக நான் இந்த சவாலை முன்வைக்க தயாராக இருக்கின்றேன்” என இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியே இந்த கெவிலியாமடு இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை பெயர் தெரியாதவர்கள் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து அடைத்து விவசாயம் செய்து கட்டிடங்களை அமைத்து பாரிய அளவில் பண்ணைகளாக மாற்றி செய்து கொண்டிருக்கின்றார்கள். இவை அனைத்தும் வன பரிபாலன சபைக்கு சொந்தமான காணிகள். இன்று வட கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளுக்குள் தமிழ் பண்ணையாளர்கள் மற்றும் தமிழ் விவசாயிகள் சிறிய கத்தியை எடுத்துக்கொண்டு சென்றாலும் கூட உடனடியாக அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்து பாரிய நெற்குவாரங்களை கொடுக்க வன பாதுகாப்பு திணைக்களம் இந்த பிரதேசத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை தனியார் ஒருவர் யானை வேலி கூட அமைத்து வைத்திருக்கின்றார். இவை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சொந்தமான காணிகள். பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து பட்டிப்பளை எல்லையிலே இந்த காணி அவகரிப்பு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதனை தொடர்ச்சியாக பேசிக் கொண்டு வந்து விடையங்கள். அந்த நேரத்தில் நாங்கள் வந்து பார்வையிட்டத்தின் பின்பு ஒரு சில விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட்டாலும் கூட அந்த நேரத்தில் இருந்து பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் இந்த விடயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முழுமையாக மறுத்தார்கள். ஏனென்றால் பெரும்பான்மை சமூகத்தினுடைய குடியேற்ற திட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. இன்று புதிய அரசாங்கம் வந்திருக்கின்றது அண்மையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் கூட இந்த மேய்ச்சல் தரைக்குள் இவ்வாறான அடாவடித்தனமாக பயிர்கள் செய்வார்களா இருந்தால் கால்நடை வைத்திருக்கின்ற பண்ணையாளர்கள் அடுத்த கட்டமாக எங்கே போவது. அநுரகுமார திசாநாயக்க அவர்களுடைய அரசாங்கத்தின் கீழே இந்த விடயங்கள் தொடருமாக இருந்தால் இன்று வடக்கு கிழக்கிலும் சரி இனி இடங்களிலும் சரி அனைத்து மக்களையும் சரிசமமாக பார்த்து செயல்படுவார் என நினைத்து வாக்களித்தாலும் கூட அவருடைய ஆட்சிக்காலத்திலும் இந்த விடயங்கள் தொடர்கின்றது. சிலர் கூறலாம் அவர் ஆட்சிக்கு வந்து இப்போது தான் இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதங்கள் என்று ஆனால் இந்த விடயங்கள் குறித்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசப்பட்டு. இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக சொல்லியும் கூட இந்த விடயம் இன்று வரை அவ்வாறாகவே கண்முன்னாக இருக்கின்றது. அந்த வகையில் இது உடனடியாக சட்டவிரோதமாக குடியேறி இருக்கின்றவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் இது மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தால் போடப்பட்ட யானை வேலிக்கு உள் காணியினை சுத்தப்படுத்தி விவசாயம் செய்கின்றார்கள். யானை வேலி போடுவதன் நோக்கமே இதற்கு மறுபக்கம் வன பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தம் என்பதனால். இந்த யானை வேலைக்கு உட்பகுதியில் வந்து அவர்கள் விவசாயம் செய்திருப்பதனால் தாங்களாகவே யானை வேலிகளை அமைத்திருக்கின்றார்கள். எமக்கு இங்கே இருக்கின்ற பண்ணையாளர்கள் கூறுகின்றார்கள் இந்த காட்டுப் பகுதிக்குள் ஒரு எஸ்கவேட்டர் இயந்திரத்தினையும் ஒளித்து வைத்திருப்பதாக. அதனை வைத்து தான் காட்டை ஒதுக்குகிறார்கள். சாதாரணமாக தமிழர்கள் ஒருவர் ஒரு சிறிய கத்தியை காட்டுப்பகுதிக்குள் கொண்டு போக முடியாத நிலையிலே இன்று எஸ்கவேட்டர் இயந்திரத்தின் மூலம் காடுகளை அழித்து பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை இல்லாமல் செய்து காணிகளை அபகரிப்பு செய்யும் வரைக்கும் இவர்கள் என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று எமக்கு பாரிய சந்தேகம் இருக்கின்றது. இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக நாங்கள் கேள்வி எழுப்பி வன பாதுகாப்பு திணைக்களம் தூங்குகின்றதா என்ற கேள்வியையும் நாங்கள் எழுப்ப வேண்டும். பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வன பாதுகாப்பு திணைக்களத்தின் நீதி ஒரு மாதிரியாக செயற்படுகின்றது. இங்கே இருப்பவர்கள் மாபியாக்கள். இங்கு இருப்பவர் ஒருவர் கூறுகின்றார் இந்த பகுதியில் தனக்கு பல ஏக்கர் காணிகள் இருப்பதாகவும் இப்பகுதியில் மாமரம் மற்றும் கொய்யா மரம் போன்றவை பயிரிட்டு இருப்பதாகவும் வயல் செய்வதாகவும் கூறுகின்றார் ஒரு தனி நபர். இவர் அம்பாறையில் இருந்து வந்து இங்கு செய்கின்றார். இங்கு சிங்களவர்கள் வந்து 10 அல்லது 15 பேர்ச் எடுத்து செய்யவில்லை. இந்த பிரதேசத்தில் காணிமாபியா ஒன்று இயங்கிக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் மூன்று மாடி கட்டிடம் கூட அமைத்திருக்கின்றார்கள். இந்த கட்டிடம் அமைக்கும் வரைக்கும் வன பாதுகாப்பு திணைக்களம் எதனை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் உடனடியாக சட்டவிரோதமான செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்கு அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற அரசாங்கம் என நம்பிக்கை வருவதாக இருந்தால் இதனை ஒரு முதலாவது சவாலாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் என்.பி.பி அரசுக்கு முன்பாக நான் இந்த சவாலை முன்வைக்க தயாராக இருக்கின்றேன் என தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=308400
  10. யார் கொடுத்தால் என்ன யார் வாங்கினால் என்ன எல்லா பார்களையும் ஒட்டு மொத்தமாக இழுத்து முடாமல் விட்டால் சரி.😂
  11. மக்களிடம் இழந்துபோன தன் மதிப்பை இதன் வழியாக உயர்த்தலாமென நினைக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் ஒன்றை உணர மறுக்கிறார், சிறிதரனை பார் சிறியர் என்று பலகாலமாக பேச்சு அடிபடுகிறது, அவரை பெரும்பாலான மக்கள் அழைப்பதும் அப்படியே. இருந்தும் தேர்தல் காலத்தில் உச்சஸ்தாயில் கத்தி வெளிப்படுத்தினவரும் இவர்தான். ஆனால் மக்கள் அவரையே தம் பிரதிநிதியாக தெரிந்தெடுத்துள்ளனர். இவரை நிராகரித்து மக்கள் சொல்லும் செய்தி; இதைவிட பெரிய, மன்னிக்க முடியாத துரோகி சுமந்திரன் என்பதை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். அது அவருக்கு விளங்கவில்லை, அவ்வளவு பதவியாசை, அதிகார வெறி அறிவை மயக்கி வைத்திருக்கிறது. அது தெளிய வேண்டுமானால்: மக்கள் இவரை சிறப்பு விருந்தினராகவோ, விருந்தினராகவோ எங்கும் அழைக்கக்கூடாது, ஊடகங்கள் இவரை பேட்டியெடுப்பதை தவிர்க்க வேண்டும், நீதிமன்றம் இவர் தொடுத்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்போது; கட்சியை முடக்கி, செயற்படாமல் தடுத்ததற்காக இவரை எச்சரிக்க வேண்டும். அப்போது கொஞ்சம் சுய நினைவு வர வாய்ப்புண்டு.
  12. நீங்கள் மேலே குறிப்பிட்ட தமது பார்வையில் இருப்பது போல உலகம் இயங்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் 1940 களிலேயே படித்த சைவர்களுக்கோ அல்லது இன்றும் பல கிறிஸ்தவ குடும்பங்களிலோ ( சில தலைமுறையாக இருப்பவர்கள் ) இருப்பதாக சொல்ல முடியாது. காரணம் அவர்கள் தமது சுற்றம், வட்டம் மதம், கலாசாரம் தாண்டி இன்னும் அதிகமானவற்றை உள்வாங்கியத்தோடு மட்டும் அல்லாமல் அவற்றில் நடைமுறைக்கு உகந்ததை தமது வாழ்வியலாகவும் கொண்டு விட்டார்கள். மறுபுறம் மற்றவர்களோ யாழ்ப்பாணம் தாண்டி போனது கிடையாது, மட்டக்களப்பு, திருகோணமலை கூடப் போனது இல்லை. ஆகக் கூடியது கதிர்காமத்துக்கு ஒரு நடை. பிள்ளைகளை யாழ் பல்கலைக்கழகம் தான் அனுப்புவார்கள், கொழும்பு அல்லது கண்டிக்கு அனுப்பினால் பிள்ளைகள் கெட்டு விடுமாம், ஆக இவர்களின் பிள்ளைகள் நிலையும் அதுதான், வெளிநாடு வந்த பின்னரும் சேரும் கூட்டமும் அதே தமிழ்க் கூட்டம் தான், குமிஞ்சு போய் ஒரே இடத்திலேயே போய் இருப்பது, அதே சாப்பாட்டை தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பது என்று. இவர்களை திருத்தவே முடியாது, கேள்வி கேட்டால் இனம் கூடித்தான் வாழ வேண்டும் என்று கதையளப்பு. உழைத்துப் பொருள் சேர்த்தவர்களிலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை படிப்பும், கொஞ்சம் செல்வமும், மேலை நாட்டு நாகரிகமும் எமக்கு கொஞ்சம் பிந்திக் கிடைத்து இருந்தால் எங்களுக்கும் எதியோப்பியா எரித்திரியர்களுக்கும் வித்தியாசம் இருந்திருக்காது
  13. வியட்நாமில் உள்ள மீனவர்கள் மற்றும் உணவகங்களில் இருந்து ஓட்டுமீன்களை வாங்கிய பின்னர், உள்ளூர் சுவையான உயிரினங்களின் பிரபலமடைந்து வருவதை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் புதிதாக ஒரு "சூப்பர்ஜெயண்ட்" கடல் பிழை இனத்தை அடையாளம் கண்டுள்ளனர். ஆழ்கடல் உயிரினம், இப்போது பாத்தினோமஸ் வதேரி என்று அழைக்கப்படுகிறது, அதன் தலை "ஸ்டார் வார்ஸ்" வில்லன் டார்த் வேடர் அணிந்திருந்த ஹெல்மெட்டுடன் ஒத்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்ததை அடுத்து அதன் பெயர் வந்தது. விஞ்ஞானிகள் செவ்வாயன்று ZooKeys இதழில் புதிய உயிரினங்களை அதிகாரப்பூர்வமாக விவரித்தனர், B. வதேரியின் உடல் அமைப்பின் சில கூறுகள் தென் சீனக் கடலில் காணப்படும் மற்ற பாத்தினோமஸ் மாதிரிகளிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது. https://www.cnn.com/2025/01/17/science/giant-sea-bug-darth-vader-vietnam/index.html
  14. ரணில் இப்போ ஆட்சியில் இல்லை. தவிர அவர் செய்த இலஞ்சத்தை வெளிகொணரும்படி அவரையே கேட்டு என்ன பயன். பாரும் தமிழ் மக்கள் பிரச்சனைதான். சுமந்திரன் மீதுள்ள கடுப்பில், எமது தலையில் நாமே மண்ணை வாரி கொட்ட கூடாது. யார் கேட்டாலும், டக்ளசே கேட்டாலும் -பார் உரிமை பற்றிய கேள்வி நியாயமானது, மிக தேவையானது.
  15. ஏலே தல அசித்து…. இத நீங்க படம் நடிக்க வந்த ஆரம்பத்தில சொல்லி இருந்தா அது அக்கறை, நியாயம். அத்தனை ரசிககுஞ்சுகளையிம் உசுப்பேத்தி, மன்றம் வைத்து, பற்பல கோடிகள் சம்பாதித்து செட்டில் ஆகி, இனி ரிட்டையர் ஆகி கார் ரேஸ் ஓட்டும் நேரம் சொல்லுவதில் ஒரு பயனும் இல்லை. ரசிகனை மொக்கனாக்கி உழைக்கும் வரை உழைத்துவிட்டு, இப்ப கழட்டி விடப்பாக்கிறார்🤣
  16. ஒரு காலத்தில் உதயகுமாரன் அவர்களை அமெரிக்காவின் கைக்கூலி என்று எழுதப்பட்ட கட்டுரைகளை பார்த்திருக்கின்றேன். இடதுசாரிகளுக்கு அவரை ஏற்றுக் கொள்வது சற்றுச் சிரமம் தான்..............😌. அமெரிக்காவிலிருந்து கூடங்குளம் வரை வந்து களத்தில் நின்று போராடிய உதயகுமாரின் போராட்டத்துடன், இன்று தினமும் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களை ஒப்பிட்டால், போராளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையேயான இடைவெளியின் ஆழம் தெரிகின்றது................
  17. அதானே..குடுத்தவர் அவர்..கூடநின்று குடுபித்தவர் இவர்...பிறகேன் அனுரவை இழுக்க வேண்டும்..கனிமொழியோட கதைத்தது..கண்ண கட்டுதோ
  18. இந்தாள் தொடர்ந்து இதையே தூக்கி கொண்டு திரிவதை பார்த்தால் ஏதோ இருக்கிறது. ஆனால் தன்னை தெரிவு செய்த மக்கள் பிரச்சினைகளுக்கு கூட இந்தளவுக்கு காவியதோ தேடியதோ கிடையாது.
  19. அப்படியெல்லாம் நேரடியாக நெஞ்சில் சுடுவது போல் கேட்கக்கூடாது. இப்படிக் கேட்டால் பள்ளிக்கூட வாத்தியாரின் ரசிகர் குஞ்சுகளாம் தீவிர தமிழ் தேசியவாதிகளின் திடீர் மாரடைப்புக்கு நீங்கள் காரணமாகி விடுவீர்கள்.
  20. அந்த ஊரில் செத்தவீட்டுக்கு வைச்ச படையல் போலிருக்குது.
  21. நாங்கள் கேட்கும் கேள்வி புலம்பெயர் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டு கேட்கும் கேள்வி..புலம் பெயர் நாட்டில் கூலி தொழில் செய்யும் நானே அப்படி கேள்வி, அவதூறு செய்து சக மனிதனிடம் கேட்க மாட்டேன் ..ஆனால் அர்ஜுனா மருத்துவராக இருந்து கொண்டு கீழ்தரமாக வீடியோ போடும் ஒருவர்...பெண் ..சலம் என பேசுபவர் ...அந்த பெண்ணும் இதற்கு மறுப்பு தெரிவித்து கண்டனம் தெரிவிக்கவில்லை ...இந்த எம்.பி மக்களுக்கு என்ன செய்ய போகிறார் .."டை" கட்டி கொண்டால் ஒருத்தன் டிசன்ட என நம்ப கூடாது ...
  22. காற்றில்லாத பையில் அடைக்கப்பட்ட மனிதர்கள்!
  23. நீங்க சீம்பால் என்ட இஞ்ச கனபேர் சீமான் என்டு வரப் போகினம்🤣
  24. இலங்கையில் மகியங்கனை என்ற ஊரில்உள்ள குகை ஒன்றில் இராவணனின் உடல் இன்றும் அழியாது இருப்பதாகவும், அதற்குள் செல்வதற்கான உதவிகளை அரசு வழங்கினால் அவரது உடலைக் காண்பிப்பேன் என சிறிமாவோ பிரதமராக இருந்த காலத்தில் ஒரு புத்தபிக்கு தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்ததைப் படித்த ஞாபகம் உள்ளது. ஆனால் அது உண்மையானால், தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிகள் என்பது உறுதியாகிவிடும் என்பதால் அரசு அதில் தீவிரம் காட்டவில்லை என்ற விமர்சனங்களும் வந்ததாக ஞாபகம். இன்றுவரை அந்தப் பிக்குவுக்கு என்ன நடந்ததோ, ஏதுநடந்ததோ யாமொன்றும் அறியோம் பராபரனே. இதுபற்றி யாழ்கள உடவுகள் யாரேனும் ஒரு துரும்பளவாவது அறிந்திருந்து பதிந்தால்…..எனது இந்தப் பதிவு என் கனவோ, கற்பனையோ அல்ல என்று நானே என்னைப் பாராட்டி மகிழ்வேன்.😌

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.