இது எமது சமூகத்தில் படித்தவர்கள் என்றவுடன் அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை நிமித்தம் எமது சமூகத்தில் மட்டும் நிலவுகிற நிலை காணப்படுகிறது.
எமது கல்வி காலனித்துவ நிர்வாக அடிப்படை நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறேன், பெரும்பாலும் இந்த கல்வியின் பிரச்சினை பெட்டிக்கு வெளியே நின்று சிந்திப்பதனை தவிர்த்து சிறிய மாற்றம் வழமையான வேலையில் ஏற்பட்டால் கூட என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலை உள்ளவர்களாகவும், உறுதியான முடிவெடுக்க தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
இது ஓர் ஆட்ட்டு மந்தை போல சிந்திக்க மட்டும் வைப்பதற்கான கல்வி முறையாக இருக்கின்றது, குறிப்பிட்ட வேலையினை மிக சரியாக செய்தால் போதுமானது.
ஒரு தவறு நிகழ்ந்தால் அது தவறு என்பதனை உணர்ந்து திருத்துவதற்கு பதிலாக பெரிய அளவிற்கு நிலமையினை மாற்றிவிடுகின்ற நிலை காணப்படுகிறது, இதற்கு காரணம் பரீட்சையில் கேள்விக்கு சரியான விடையினை வழங்கி வந்த ஒருவர் பரீட்சையில் ஏற்படும் பெறுபேறு குறைகள் அவர்களை பாதிக்கிறது, அது போல நடைமுறை வாழ்க்கையிலும் தாம் மிக சரியாக இருக்க எதிர்பார்க்கிறார்கள் அதனால் தவறுகளை ஏற்றுகொள்ளும் பக்குவம் அவர்களிடம் இருப்பதில்லை.
எனக்கு எதியோப்பிய, எத்ரித்திய நண்பர்கள் கிடைக்கவில்லை ஆனால் சூடான், சோமாலிய நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் சிந்தனை மிக சிறப்பாகவும் இருக்கும் ஆனால் சில விடயங்களில் விடாப்பிடியாக பிற்போக்குவாதிகளாக இருப்பார்கள் (பெண்கள் விடய்ததில்) அதற்கு மதம் ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் அதனை தவிர்த்து பார்த்தால் எம்மவர்களை விட அவர்கள் சிலபடி கூட என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).
வேலையிடத்தில் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பயிற்சி நிகழ்வில் ஒரு எழுத்து மூலமான செய்தி குறிப்பினை முதலாவதாக உள்ளவரிடம் கொடுத்து அதில் உள்ள விடயத்தினை அப்படியே அடுத்தவருக்கு வாய் மூலமாக சொல்லுமாறும், அதன் பின்னர் அந்த செய்தியினை கேட்டவர் அதே செய்தியினை அடுத்தவருக்கு வாய் மூலமாக சொல்லுமாறு கூறப்பட்டது, இது ஒரு பல் சமூகம் கொண்ட ஒரு அணியில் நிகழ்ந்தது இறுதியாக அந்த செய்தியினை கேட்டவர் அதனை பகிரங்கமாக செய்தியினை தெரிவிக்க வேண்டும்.
அந்த செய்தியினை கூறியவர் மிக குறைந்த வரியில் சுருக்கமாக ஒரு செய்தியினை கூறினார் அதனை கேட்ட பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியாக இருந்தது ஒரு சாதாரண செய்தி ஒரு மோசமான செய்தியாக மாறியிருந்தது, எழுத்து மூலமாக கொடுக்கப்பட்ட செய்தியிலிருந்து முற்றிலும் வேறுபாடாக அந்த செய்தியிருந்தது.
இந்த விடயத்தில் பெரிய பங்கை வகித்தது அந்த அணியில் இருந்த ஒவ்வொருவரின் Perception தான் காரணம்.
அவர்களே அறியாமல் தமது புரிதல்களை செய்தியாக்கியுள்ளார்கள், எமது சமூகத்தில் உள்ள அடிப்படையான விடயங்களையே படித்தவர்களும் என கூறிகொள்ளப்படும் தர்ப்புகளும் தொடர்கின்றனர்.
அதிக கல்வி அறிவுகொண்ட சமூகம் என எம்மை நாமே கூறிக்கொண்டாலும் அந்த கல்வி அவர்களது சமூக பண்பாட்டு வளர்ச்சிக்கு எனத வகையிலும் உதவவில்லை.
தமது சரி பிழைகளை கூட உணரமுடியாத சிந்தனையற்றவர்களாகவே படித்தவர்களும் இருக்கிறார்கள், ரசோதரன் கூறுவது போல வெறும் தொழில்கல்வியாகவே எமது கல்வி உள்ளது, மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதனை அமைதியாக உள்வாங்க முடியாமல், தாங்களாகவே ஒரு அனுமானத்துடன் முடிவிற்கு வந்து தவறான புரிதல்களுடன் இருக்க்கிறார்கள், இதற்கு எல்லாம் தெரியும் எனும் மாயையினை தாமாகவே உருவாக்கி அதனை நம்புகின்றவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.
எமது சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தும் அதனை பற்றி கவலை கொள்ளாமல் மற்ற சமூகத்தில் உள்ள குறைபாடுகளை எள்ளி நகையாடுவதில் இன்பம் காணுபவர்களாக இருக்கிறோம், ஆனால் எமது சமூக மாற்றத்திற்கு இந்த கற்றவர்களின் பங்களிப்பு முற்று முழுதாக இல்லாத நிலையே காணப்படுகிறது,
"மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே,. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" எமது சமூகத்தின் இந்த இழி நிலை சங்க காலத்திலிருந்து இருக்கின்றது என தெளிவாக தெரிகின்றது.