Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்15Points87988Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்13Points3052Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்10Points20010Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்8Points19122Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/01/25 in all areas
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Paranji Sankar · மருத்துவமனையில் அப்பா கேட்கிறார் மகனிடம்: "என்னால் மறக்க முடியாத ஒன்று.. நீ ஒன்பதாவது படிக்கும்போது கணக்கு பரீட்சை மார்க்ன்னு 90 காண்பிச்சே.. எனக்கு நம்பிக்கையே இல்ல.. ஒன்பதுடன் நீ பூஜ்யத்தை சேர்த்து விட்டதாக குற்றம் சாட்டினேன்.. நீ உறுதியாக மறுத்தாய் ..." "அப்பா என்ன இதெல்லாம்? முப்பது வருஷ கதையை சொல்லிண்டு?" "இல்ல ரொம்ப நாளா என்னை உறுத்தற விஷயம் இது... நான் உன்னை அடிச்சு கேட்டும் நீ பூஜ்ஜியத்தை சேர்க்கலை என்ற சொல்லிண்டிருந்தே.. என்னால் அதை நம்பவும் முடியல.. இப்ப கேக்கறேன் உண்மையை சொல்லு? பூஜ்யத்தை சேர்த்தது நீ தானே?" "நீங்க எப்ப கேட்டாலும் என் பதில் ஒண்ணுதான்பா.. நான் பூஜ்யத்தை சேர்க்கவேயில்லை.." " ஆனா நீ 90 மார்க் வாங்கற மாணவன் இல்லையே?'" "சரிப்பா.. நீங்க நினைத்ததும் சரி.. நான் சொன்னதும் சரி" "அது எப்படி?' "நான் சேர்த்தது 9ஐ.........!"4 points
-
நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
4 pointsபடங்கள் உபயம் தமிழ் சிறி. நன்றி @தமிழ் சிறி4 points
-
டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?
3 pointsநான் இதை இப்போதைக்கு தரவிறக்கம் செய்யப் போவதில்லை. வேறு ஏதாவது வழிகளில் உபயோகித்து பார்க்க முடியும் என்றால் பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கின்றேன். ஆனால் இதன் source code ஐ எடுத்துப் பார்ப்பதாக உள்ளேன். சீனாவிற்கு என்னுடைய தகவல்கள் எல்லாம் போய்விடும் என்ற பயமில்லை.................. என்னிடம் எதுவுமே இல்லை என்ற விபரம் சீனாவிற்கு தெரிந்து போய் விடுமே என்ற கவலையில் தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை..................🤣.3 points
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
இந்தப் பாடல் சில நாட்களாகவே பின் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.......... ஏன் என்று இப்பொழுது காரணம் புரிகின்றது...................🤣. இங்கே களத்தில் இருந்த/இருக்கும் நட்புகள் சிலர், அதிலும் அவர்கள் செயற்பாட்டாளர்கள், இன்று நாங்கள் சொல்ல வருவதை களத்திலும், பொதுவெளியிலும் நீண்ட காலமாக சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள் என்பது ஆறுதல் தரும் ஒரு விடயம்..................👍. அறிந்ததும், தெரிந்ததும், அனுமானித்ததும், அனுபவமும் என்பவற்றைக் கொண்டு, இருக்கும் சிறிய நுண்ணுணர்வையும் உபயோகித்து, பொய்யை பொய்யென்று என்று கருத்துகளை எழுதினால், கடைசி ஆயுதமாக 'நீங்கள் என்ன பங்களிப்பு செய்தீர்கள்.................' என்று கேட்கப்படுகின்றது. சரி, என் போன்றோரின் கருத்துகளை விட்டு விடலாம்............. செயற்பாட்டாளர்களின் கருத்துகளையாவது கேட்டுப் பார்க்கலாம் தானே...............3 points
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
இதன் அர்த்தம் நமக்கு பெரியாரையும் தெரியல பிரபாகரனையும் தெரியல (அவரும் 8 தான்)☹️2 points
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
அண்ணா, இப்படி ஒன்றைச் சொல்லி திக்குமுக்காட வைத்து விட்டீர்களே............. எண் சாத்திரம் மட்டும் இல்லை, எல்லா சாத்திரங்களுமே இட்டுக்கட்டிய பொய்கள் அல்லவா..............2 points
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
யாழ் களத்தின் இன்னொரு உறவு சபேசன் விகடனுக்கு அளித்த பேட்டி. @goshan_che2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
2 pointsஎந்த அரவணைப்பில் ஆறுதல் கிடைக்கிறது....தீர்மானியுங்கள்...2 points- நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
2 pointsகல்லோ புத்தா முதலீடு முதலீடு முதலீடு.2 points- பாட்டுக் கதைகள்
1 pointமனதில் சில பாடல்களுடன் சில சம்பவங்கள் இணைந்தே இருக்கும். பாடலைக் கேட்டவுடன், பாடலின் முதல் ஓரிரு வரிகளின் பின், பாடல் பின்னால் ஒலிக்க மனம் அந்தப் பழைய நினைவில் மூழ்கிவிடும். மீண்டு இன்றைய உலகத்திற்கு திரும்பி வருவதே சிலவேளைகளில் பெரும் சிரமம்தான். பழைய நினைவுகளை மீட்பது என்பது தேன் தடவிய விசம் போன்று என்று ஒரு இடத்தில் எழுதப்பட்டிருந்ததை பார்த்திருக்கின்றேன். ஊக்கத்தை கெடுத்து விடும் என்ற பொருளில் சொல்லியிருப்பார்கள் போல. ஆலால கண்டன் போல விசம் முழுவதும் உள்ளிறங்காமல் இடையிலேயே தடுத்து நிறுத்தி விட்டு, நினைவுகளை இடையில் கலைத்து விட்டு, ஊக்கமது கைவிடேல் என்று வாழ வேண்டும் போல...............😜. *********************************************************************************** பாடல் ஒன்று - கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் -------------------------------------------------------------------------- எத்தனை தடவைகள் தான் ஊரின் ஒரு எல்லையிலிருந்து மற்ற எல்லைக்கு நடப்பது. என்னதான் தெருவெங்கும் குழாய் மின்விளக்குகள் பத்து அடிகளுக்கு ஒன்று என்று இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டு, அவை பளிச்சென்று பகல் போல எரிந்து கொண்டிருந்தாலும், சூடான தேநீர் கோப்பி மற்றும் குளிரான இனிப்பு பானங்கள் என்று தாராளமாக, இலவசமாகவே, பல இடங்களில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், கால்கள் போதும் போதும் என்று கெஞ்ச ஆரம்பித்திருந்தது. அக்காவின் கால்களின் நிலைமையும் அதுவே தான். ஆனால் அக்காவிற்கு பாடல்கள் மேல் இருக்கும் ஆசை பூமிக்குள் கொதித்து எரிந்து கொண்டிருக்கும் எரிமலை போன்றது. அன்று அது வெளியே வந்து ஆகாயம் வரை பரவிக் கொண்டிருந்தது. பாடல்களை கேட்பதில் மட்டுமே அவரின் கவனம் குவிந்திருந்தது. அந்த இரவில் ஊரின் பிரதான வீதியில் பத்து இசைக்குழுக்கள் பாடிக் கொண்டிருந்தன. இரண்டு மைல்கள் நீண்ட வீதியில் ஓரளவிற்கு சரியான இடைவெளிகள் விட்டு இசைக்குழுக்களின் மேடைகள் இருந்தன. ஒரு இசைக்குழுவின் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் அக்கா, 'சரி வா, அடுத்ததிற்கு போவோம்.............' என்று சொல்லிக் கொண்டே, என் பதிலை எதிர்பார்க்காமலேயே, எழும்பி நடந்து கொண்டிருந்தார். அவர் பின்னால் நான் ஓடிக் கொண்டிருந்தேன். அக்காவிற்கும் எனக்கும் ஒரு வயது தான் இடைவெளி. ஆனால் அக்கா எங்களிருவருக்கும் இடையில் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது போல நடந்துகொள்வார். அவருக்கு எல்லாமே தெரிந்தும் இருந்தது. எனக்கு எதுவுமே தெரியாது என்று தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். அதனாலோ என்னவோ ஒரு நசிந்த விரலை கவனமாக பொத்திப் பொத்தி பார்ப்பது போல அக்காவும் அம்மாவும் என்னைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மண்டைதீவிலிருக்கும் ஒரு சாத்திரியார் தான் வீட்டில் எல்லோருக்கும் குறிப்புகள், ஜென்ம பலன், எழுதி இருந்தார். என்னைத் தவிர மற்ற எல்லோருடைய குறிப்புகளிலும் அவர்கள் ஆஹா, ஓஹோ என்று வருவார்கள் என்று இருந்தது. என்னுடைய குறிப்பு மட்டும் படு மோசமாக இருந்தது. வீட்டில் எல்லோருக்கும் நல்ல குறிப்புகளும், எனக்கு மட்டுமே மோசமாகவும் இருந்தபடியால் வீட்டில் எல்லோரும் எல்லா குறிப்புகளையும் சரியே என்று நம்பியும் இருந்தனர். மண்டைதீவு சாத்திரியார் எழுதிய குறிப்பின் படி நான் கடைசியாக படிக்கும் வகுப்பு பத்தாம் வகுப்புத்தான். அத்துடன் கல்வி முடிந்து விடும் என்று தெளிவாக எழுதி இருந்தார். நான் அந்தக் குறிப்பை பல தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்திருக்கின்றேன். திருமணம் அந்நிய வழியில் நடக்கும் என்றும் ஜென்ம பலனில் எழுதப்பட்டிருந்தது. அந்நிய வழி என்றால் என்னவென்ற சந்தேகம் எப்போதும் இருந்தது, ஆனால் நான் எவரையும் இது சம்பந்தமாக இன்று வரை விசாரிக்கவில்லை. அக்காவும் நானும் ஊரின் ஒரு எல்லையில் நடந்து கொண்டிருக்கும் இசைக்குழுவின் மேடை போடப்பட்டிருந்த பாடசாலை மைதானத்தின் முன் மீண்டும் வந்து விட்டிருந்தோம். இது நாலாவது தடவை. இதற்கு மேலால் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது, இங்கேயே இருப்போம் என்று நான் அக்காவிடம் கெஞ்சினேன். அக்கா என்னைக் கவனிக்கவில்லை. அவர் மேடையையே பார்த்துக் கொண்டிருந்தார். கிழக்கு மேற்காக நீண்ட மைதானத்தில் மேடை வடக்குப் பக்கமாக அமைக்கப்பட்டிருந்தது. மைதானத்தின் மேற்குப் பக்கத்தில் ஒரு வரிசை வீடுகள், அதன் பின்னர் இராணுவ முகாம். மைதானத்தின் வடக்குப் பக்கமாக, மேடையின் பின்னால், பனைமரங்கள், அதன் பின்னால் கடல். தெற்குப் பக்கத்தில் வீதி, அதன் பின்னர் பாடசாலை. அக்கா மைதானத்திற்குள் கால் வைக்காமல் வீதி ஓரத்திலேயே நின்று கொண்டிருந்தார். திரும்பி நடந்து விடுவாரோ என்று நான் ஏங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தேன். இராணுவ முகாமில் இருந்து பல இராணுவ வீரர்கள் அங்கங்கே வந்து நின்று இசைக்குழு பாடுவதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கைகளில் எதுவும் இல்லை. அவர்கள் எல்லோரும் சாதாரண உடையிலேயே இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வேறு, நாங்கள் வேறு என்றும், எங்களுக்கிடையில் ஏதோ சில அடையாள வித்தியாசங்கள் இருப்பதும் வெளிப்படையாகவே இருந்தன. மேடையின் பின்னால், கொஞ்சம் மேற்குப் பக்கமாக, முன் நின்ற மிக உயர்ந்த சில பனைமரங்களின் முன்னால் மிகப்பெரிய ஒரு போர்டிகோ கட்டப்பட்டிருந்தது. கட் அவுட்டை நாங்கள் போர்டிகோ என்று சொல்வோம். இன்று நடிகர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வைக்கும் கட் அவுட்டுகளை விட என்னுடைய ஊரில் சிறப்பானதும், பெரியதுமான கட் அவுட்டுகளை அன்றே வைப்பார்கள். ஐம்பது அடிகளில் கூட சாதாரணமாக செய்து வைப்பார்கள். எல்லா கட் அவுட்டுகளும் சாமியின் உருவங்களாகவோ அல்லது அழகிய பெண்ணின் உருவங்களாகவோ மட்டுமே இருக்கும். ஆண் உருவங்களில் கட் அவுட் வைப்பதில்லை போல. நான் பார்த்ததில்லை. அந்த மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட் பிரமாண்டமாக இருந்தது. லவனும் குசனும் ஒரு குதிரையை கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போன்ற மிக உயர்ந்த ஒரு கட் அவுட். பனைமரங்களிற்கு மேலால் லவனும் குசனும் நின்றார்கள். அவர்கள் இருவருக்குமிடையில் ஒரு வெள்ளைக் குதிரை. சீதாப்பிராட்டியின் புத்திரர்களின் அதே அளவு கம்பீரத்துடன் அந்தப் புரவியும் அங்கே நின்று கொண்டிருந்தது. அடுத்த பாடல் 'கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான். கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்..................' என்று அந்த இசைக்குழுவின் அறிவிப்பாளர் அறிவித்தது எதிரொலித்துக் கொண்டிருந்தது. 'சரி............. வா, போய் இருப்பம்...........' என்று அக்கா மைதானத்திற்குள் நடந்தார். நான் அக்காவைப் பின்தொடர்ந்தேன்.1 point- "உயிர் காக்கும் கடவுள்கள்”
1 point"உயிர் காக்கும் கடவுள்கள்” முல்லைத்தீவில் ஒரு இரத்தச் சிவப்பு நிறம் கொண்ட அடிவானத்தின் பின்னால், சூரியன் அன்று மூழ்கியது. தொலைத்தூர எறிகணையிலிருந்து எழும் புகையால் மாலைக் கதிரவனின் ஒளி மறைக்கப் பட்டிருந்தது. காடுகளை அண்டிய ஒரு சிறிய, தற்காலிக மருத்துவமனையில், அண்மையில் திருமணம் செய்த கணவன் மனைவியான, மருத்துவர் மேன்மன் மற்றும் மருத்துவர் தாரகை அருகருகே வேலை செய்தனர். அவர்கள் தங்கள் இளமைக் குடும்ப வாழ்வை மற்றும் அதில் புதைந்து இருக்கும் இன்பத் துளிகளை அனுபவிக்காமல், தம் மக்கள் படும் வேதனைக்கும் துன்பத்துக்கும் ஆதரவாகக் கைகொடுத்து, மருத்துவ உதவிகளை தன்னலமற்று, தங்களால் இயன்றவரை செய்ய முடிவெடுத்து, இன்று அங்கு கடமையாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியாது. தாரகை என்றால் கூட்டமாக ஒளிர்பவை அல்லது விண்மீன்கள் என்று பொருள்படும். அதேபோல மேன்மன் என்பது மேன்மையான ஆக்கம் நிறைந்தவன். இரண்டு பேரின் கூட்டும் சேவையும் அவர்களின் பெயருக்குளே அடங்கிவிட்டன. அவர்கள் இருவரும் யாழ்ப்பாண மருத்துவப் பீடத்தில் தான் முதல் முதல் சந்தித்தனர். நோய்களைக் குணப்படுத்துவதற்கான பகிரப்பட்ட ஏக்கம் கலந்த எதிர்பார்ப்புகளுக்கு [அபிலாஷைகளுக்கு] மத்தியில், அவர்களின் காதல், பல்கலைக்கழக வளாகத்திலும் பண்ணைக்கடல் ஓரத்திலும் நூலகத்திலும் மலர்ந்தது. அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, அமைதியான வீடு மற்றும் குழந்தைகளின் கனவுகள் அவர்களின் உரையாடல்களை நிரப்பின. ஆனால் அவர்களின் தாய்நாட்டில் போர் வெடித்தபோது, எண்ணற்ற அப்பாவி உயிர்கள் சிதைந்தபோது, மேன்மன்னும் தாரகையும் உன்னதமான முடிவை எடுத்தனர். "தாரகை, போரின் கொடூரத்தால், அப்பாவிக் குழந்தைகள் இறக்கும் போது, தாய்மார்கள் தங்கள் மகன்களை இழக்கும் போது, நாம் மருத்துவர்கள் என்று சொல்லிக்கொண்டு குளிரூட்டிய அறையில், எல்லா வசதிகளுடனும் இருந்து சேவை செய்யமுடியாது. எம் மக்களை, நாம் எம்மால் இயன்றவரை, எப்படியும் உதவி செய்யவேண்டும்" என்று மேன்மன், குரலில் உறுதியுடன் அவளுக்குச் சொன்னான். ஆனால், தாரகை தயங்கினாள், அவளுடைய இதயமே உடைந்தது. திருமணம் செய்து சில மாதங்களே, இன்னும் ஒரு குடும்பவாழ்வு துளிர்விடவில்லை. அவளின் கனவுகள், ஆசைகள் ... ஒரு கணம் திகைத்தாள், என்றாலும் அவள் தலையசைத்தாள். ஒன்றாக, அவர்கள் கட்டியெழுப்ப நினைத்த வாழ்க்கையை விட்டுவிட்டு ஒரு புது அடியெடுத்து வைத்தனர். ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்துலக சமூகமும் வன்னியையும் முல்லைத்திவையும் கைவிட்ட நிலையில், வான்படையும் கனரக ஆயுதப்பிரிவும் வைத்தியசாலையையும் விட்டுவிடாமல் தாக்கிய அந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் மேன்மன்னும் தாரகையும் தமது உயிர்களைச் துச்சமென மதித்து, மக்களுக்காக பணியாற்றிட இருவரும் அங்கு புறப்பட்டனர். மருத்துவர்களை இறைவனுக்கு அடுத்த நிலையிலேயே வைத்து மனித சமூகம் கொண்டாடும் இந்த உலகில் தான், அதே மருத்துவர்களும் பல இடர்களையும் ஆபத்துகளையும் அங்கு சந்தித்தனர். எந்தவொரு அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலே உயிர் இழப்புக்களை தடுப்திலும் நோய் கிருமிகள் பரவுவதை தடுப்பதிலும் இவர்கள் சந்தித்த சவால்களை மருத்துவ உளவியல் நிபுணர்களாலேயே வரையறுக்க முடியாதவையாக, அந்தளவு மக்களிற்கு அருகில் இருந்து சாவின் நிமிடங்களையும் மக்களின் வலிகளையும் கதறல்களையும் ஒவ்வொரு மணித்துளிகளும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு, அங்கு இன்னும் சில மருத்துவர்கள், குறிப்பாக சத்தியமூர்த்தி, வரதராஜா, ஷண்முகராஜா, இளம்செழியன் ஆகிய மருத்துவர்கள் கடமையாற்றிக்கொண்டு இருப்பது மேன்மன்னுக்கு மேலும் தெம்பு கொடுத்தது. அவர்கள் இருவரும் முல்லைத்தீவிற்கு கடமையாற்ற சென்ற பொழுது, இடிந்து விழுந்த சுவர்கள் மற்றும் குண்டுகளால் துளைக்கப்பட்ட மேற்கூரைகளால் அந்த மருத்துவமனை இருந்தது. மின்சாரம் இல்லை, மண்ணெண்ணெய் விளக்குகள் மட்டுமே இரத்தக்கறை படிந்த தரையில் ஒளிரும் நிழல்களை வீசியது. மருந்து மற்றும் மற்ற பொருட்கள் குறைவாக இருந்தன; நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அங்கு ஒரு ஆடம்பரமாகவும், சுத்தமான நீர் அங்கு ஒரு புதையல் [பொக்கிஷம்] போலவும் இருந்தது. நோயாளிகள் பாய்கள் அல்லது வெற்று தரையில் படுத்துக் கொண்டு, தாழ்வாரங்களுக்குள்ளும் நிரம்பி வழிந்தனர். ஒரு நாள், ஏழு வயதுக்கு மேல் இல்லாத ஒரு சிறுவன், அவனது உடம்பில் வெடிகுண்டு அல்லது பிற சாதனம் வெடிக்கும் போது சிதறிய சிறிய உலோகத் துண்டுகளால் துளைக்கப்பட்ட காயங்களுடன் அனுமதிக்கப் பட்டான். தாரகை அவனைக் குணப்படுத்த தன்னால் இயன்ற எல்லா வழியிலும் ஈடுபட்டாள், அவள் கண்களில் கண்ணீர் வழிந்தாலும் அவள் கைகள் உறுதியாகச் சிகிச்சை அளித்தது. மேன்மன் அவளுக்கு அருகில் இருந்து சிகிச்சைக்கு உதவினான். அவன் அமைதியான குரலில் அவளுக்கு வழிகாட்டிக்கொண்டு இருந்தாலும், அவன் கண்கள், எதோ ஒரு பயத்தில் இருந்தது. சிறுவனின் தாய் வெளியில் காத்து நின்றது மட்டும் அல்ல, தன் மகனின் புகைப்படத்தை கண்ணீருடன் தடவித் தடவிப் பார்த்துக்கொண்டு நின்றாள். தாரகையும் மேன்மன்னும் கூட தங்களுக்குள் பிரார்த்தனை செய்தார்கள். அங்கு அப்பொழுது இருந்த வசதியில் அவர்களுக்கு ஒரு உறுதியையும் வலிமையையும் கொடுக்க அது ஒன்றே துணை புரிந்தது. அன்று இரவு அந்தச் சிறுவன் உயிர் பிழைத்தான். அவனது தாய் நன்றியுடன் அழுது கொண்டு, மருத்துவர்கள் இருவரினதும் கைகளை முத்தமிட்டாள். ஆனால் தாரகையும் மேன்மன்னும் தங்கள் அறைக்குத் திரும்பிச் செல்லும்போது, தம்பதிகளின் புன்னகை எனோ மறைந்தது. "அவனைப் பற்றி நினைப்பதை இன்னும் என்னால் நிறுத்த முடியாது, மேன்மன்," தாரகை அவனின் கையைப் பிடித்துக்கொண்டு கூறினாள். “நான் காப்பாற்றும் ஒவ்வொரு குழந்தையும் ... என் கண்களில், நமக்கு இன்னும் பிறக்காத, அந்த வாய்ப்பு இல்லாமல் போன குழந்தையாகத் தான் பார்க்கிறேன்." என்று கவலையுடன் தெரிவித்தாள். "படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப் படக் குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி, இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும், நெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும், மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக் குறை இல்லை தாம் வாழு நாளே." பலவகையான செல்வங்களையும் பெற்றுப் பலரோடு உண்ணும் பெருஞ்செல்வந்தராயினும், மெள்ள மெள்ள, குறுகிய அடிகளைவைத்து நடந்து, தன் சிறிய கையை நீட்டி, அதை உணவில் இட்டுத், தொட்டு, வாயால் கவ்வி, கையால் துழாவி, நெய்யுடன் கலந்த சோற்றைத் தன் உடலில் பூசிப் பெற்றோரை இன்பத்தில் மயக்கும் குழந்தைகள் இல்லாதவர்களின் வாழ்நாள்கள் பயனற்றவையாகும். அது தான் தாரகையின் கவலை. மேன்மன் அவளை அருகில் இழுத்துக் கொண்டான். “எனக்குத் தெரியும் தாரகை. ஒவ்வொரு முறையும் நீ சோர்வாக இருப்பதைப் பார்க்கும்போது, நான் உன்னிடம், உன் ஆசையை அறியாமல், என்னுடன் வந்து இந்தச் சேவையை செய்யும்படி கட்டாயப்படுத்தி விட்டேனோ என்று எண்ணத் தோன்றுகிறது" என்றான். ஆனால் அவளுக்கு நன்றாகத் பதில் தெரியும். அவர்களின் வாழ்க்கை, ஒரு உன்னத நோக்கத்துக்கா அர்ப்பணிக்கப் பட்டுள்ளது என்பது! என்றாலும் அவளின் மனம் மற்றும் இளமை இன்னும் எதோ ஒன்றைத் தேடிக்கொண்டு தான் இருந்தது. என்றாலும், தியாகங்கள் எப்பவும் கனமானவை என்பது இருவருக்குமே நன்றாகத் தெரியும். அவர்களின் குடும்பத்தினரின் கடிதங்கள் இன்னும் படிக்கப்படாமல் ஒரு மூலையில் இருந்தது. அவர்களால் ஆற்ற முடியாத காயம் போல், அவர்களின் பெற்றோரிடமிருந்து தூரம் வளர்ந்தது கொண்டே போனது. "அஞ்சு பேர் கூலியைக் கைக் கொள்ள வேண்டாம் அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்" என்று ஆரம்பித்த உலகநாதரின் உலக நீதி: 11, "வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி இன் சொலுடன் இவர் கூலி கொடாத பேரை ஏதேது செய்வானோ ஏமன் தானே!" என்று முடிவடைகிறது. இப்பாடல் நமக்கு இன்றியமையாச் சேவை செய்த ஐந்து வகை மக்களை போற்றிப் பாடுவதுடன், அதில் குறிப்பாக குலம் தழைக்க மகப்பேறு பணியாற்றிய மருத்துவச்சி, நோய் தீர்த்த மருத்துவன் அடங்கி இருப்பதைக் காண்க. மருத்துவம் புரிந்தவர்கள் மருத்துவர்கள் அல்லது வைத்தியர்கள் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டார்கள். இதில் திறன் பெற்ற மருத்துவர்கள் தொல்காப்பியத்தில் “நோய் மருங்கறிஞர்” (தொல்காப்பியம் சொல்: 183) என்று சிறப்பாக அழைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அப்படியான சேவையைத்தான் இருவரும் போர்சூழலிலும், தங்கள் தனிப்பட்ட ஆசைகளை ஒரு புறம் தள்ளிவைத்துவிட்டு, தங்கள் புனித சேவையை அங்கு அர்பணித்துக்கொண்டு இருந்தார்கள். அங்கு வைத்தியசாலையில் பல தட்டுப்பாடுகள் நிலவிய போதிலும், நெருக்கடிகள் இருந்த போதிலும், அவர்களின் கடமையும் நம்பிக்கையும் மற்றும் முடிவில்லாத அவர்களின் ஏக்கமும் குறைந்தபாடில்லை. ஒரு நாள் மாலை, கடும் துப்பாக்கிச் சூட்டு சத்தத்திற்கும் மத்தியில், பிரசவ வலியில் ஒரு பெண் வந்தாள். தாரகையும் மேன்மன்னும், அங்கு இருந்த ஒரே ஒரு மண்எண்ணெய்யில் எரியும்அரிக்கேன் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில், இடிபட்ட குப்பைகளிலிருந்து மீட்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி சிகிச்சை செய்தனர். பல மணிநேர முயற்சிக்குப் பிறகு, குழந்தையின் முதல் அழுகை அங்கு, துப்பாக்கிச் சூட்டு சத்தத்தையும் குண்டு சத்தத்தையும் மீறிக் காற்றை நிரப்பியது. அந்த பெண், பிறந்த குழந்தையின் தாய், நன்றிக் கண்ணீருடன் தாரகையைப் பார்த்தாள். “நீங்கள் எனக்கு நம்பிக்கை கொடுத்து, என் குழந்தையைக் காப்பாற்றிய உங்களுக்கு என்றென்றும் என் நன்றியும் வாழ்த்துகளும்” என்றாள். ஆனால், இது போன்ற தருணங்கள் தான் அவர்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டியது. ஆனால் இத்தனை அவலங்களுக்கும் மத்தியில் போர் நின்றபாடில்லை. ஆசியாவிலே மிகப் பெரிய இரத்தம் நிரம்பிய சேரியாக, கொலையும் மரணமும் மலமும் கண்ணீரும் மிதக்கும் சேரியாக மாறிக்கொண்டு இருந்தது. முப்பதாண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக தமிழ் மக்களின் துயரம் நீண்டுகொண்டே இருந்தது. இது இறுதி போரல்லவா! எனவே அதற்குத் தகுந்த மாதிரியே அழிவும் துயரமும் மிகவும் உச்சத்தில் இருந்தது. ஒரு மோசமான நாள், மருத்துவமனையும் எறிகணைகளால் தாக்கப்பட்டது. நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் காட்டுக்குள் ஓடினர். மேன்மன்னும் தாரகையும் தங்களால் இயன்ற மருத்துவப் பொருட்களை எடுத்துக் கொண்டு, காயமடைந்த குழந்தைகளையும் மற்றவர்களையும் அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு அந்தநேரம் வேறுவழி ஒன்றும் தெரியவில்லை. ஏனென்றால், பாதுகாப்பு வலயங்களாக அரசு அறிவிக்கப்பட்ட இடங்களிலும் எந்தப் பாதுகாப்பும் அங்கு இருக்கவில்லை. உதாரணமாக, பாதுகாப்பு வலையத்திற்குள் சிதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடங்களைக் காட்டும் படம் ஒன்றை, இலண்டனிலிருந்து வெளிவரும் ‘த டைம்ஸ்' எனும் ஆங்கில நாளிதழ் எலிகாப்டரில் இருந்து மே 23, 2009 அன்று எடுத்துள்ளது. சிக்குண்ட மக்கள் மணல் மூட்டைகள், சாக்குப் பைகள், தலையணை உறைகள் மற்றுமுள்ள வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களைக் கொண்டு ஏவுகணை, பீரங்கித் தாக்குதல்களிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காலிகப் பதுங்குக் குழிகளை எவ்வாறு அமைத்திருந்தனர் என்பதை விளக்குகிறது. எரிபொருள் அல்லது ராணுவக் கருவிகள் இல்லாதிருப்பது, முகாம் மற்றும் அதிலுள்ள வசதிகளில் உள்ள, தற்காலிகத் தன்மையின் மூலம், அது பொதுமக்களின் வாழ்விடமே என்பது தெளிவாகிறது என்று குறிப்பிட்டுள்ளது. அன்று இரவு முழுவதும் ஒரு பதுங்கு குழியில் தாரகை மற்றும் மேன்மன் மறைந்திருந்தனர். அப்பொழுது, "எவ்வளவு காலம் இப்படியே இருக்க முடியும்?" என்று தாரகை கிசுகிசுத்தாள். "இங்கு அவலப்படும் மக்களுக்கு, நாங்கள் தேவைப்படும் வரை," என்று மேன்மன் பதிலளித்தான், இருப்பினும் அவனது குரல் சந்தேகத்தால் நடுங்கியது. முல்லைத்தீவில் மேன்மன்னும் தாரகையும் மருத்துவர்களை விட அதிகமாக மக்களால் நேசிக்கப் பட்டார்கள். காயமடைந்தவர்களுக்கு, அவர்கள் தேவதைகள். துக்கமடைந்த தாய்மார்களுக்கு, அவர்கள் நம்பிக்கை விண்மீன் [நட்சத்திரம்]. அனாதைக் குழந்தைகளுக்கு, அவர்கள் குடும்பம். "பேர்ஆ யிரம்பரவி வானோர் ஏத்தும் பெம்மானை, பிரிவிலா அடியார்க்கு என்றும் வாராத செல்வம் வருவிப் பானை, மந்திரமுந் தந்திரமும் மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்துஅருள வல்லான் தன்னை, திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட போரானை, புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே, ஆற்றநாள் போக்கி னேனே." என்று திருநாவுக்கரசு சுவாமிகள், தான் வணங்கும் கடவுளை "மருந்துமாகித் தீராத நோய்களைப் போக்கியருள வல்லானாய்" என்று, ஒரு வைத்தியநாதராகப் பாடுகிறார். அதாவது ஒரு "உயிர் காக்கும் கடவுள்" என்கிறார். மருத்துவர்கள் மேன்மன் மற்றும் தாரகை, அவர்களின் இந்தப் புனித சேவையால், அவர்கள் உயிர்காத்த ஒவ்வொருவர் இதயத்திலும் வைத்தியநாதர்களாகவே, கடவுளாகவே இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- வேதனையில் நீதிபதி இளஞ்செழியன், புரியாத புதிராக நீதித்துறை வாழ்வு முடிவு
தேசிய ஒற்றுமை கருதி உங்களுக்கு இந்த நீதி வழங்கப்பட்டிருக்க வேணும்...ஆனால் அவர்களின் இடதுசாரி கொள்ளகையின்படி ஏனைய இனங்களுக்கு சலுகைகள் கொடுத்து எமது சிங்கள இனத்தை பகைத்து கொள்ள விரும்ப மாட்டார்கள்1 point- டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?
1 pointநீங்கள் வெறும் அப்பாவியாக இருக்கிறீர்கள்.🙂1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
ஐ…சீண்டிப்பாக்கிறியள் போல🤣. எனக்கென்னமோ இந்த திமிர் வீரம் விளைந்த மண் வாழைச்சேனையில் புடம்போட பட்டதாகவே படுகிறது🤣1 point- டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?
1 pointஅமெரிக்காவுக்கு குண்டு போடுகில் ...உங்கடை வீட்டை தவிர்த்தே போடுவார்கள்...☺️1 point- தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
1 pointஇவருக்கும் ஒரு காணி இருக்கிறது.அதற்குள் வீடு கட்டப் போகிறேன் என்றார். அந்தக் காணிக்குள் விகாரையை கட்டிவிட்டு 10 வருடத்தின் பின் அதற்கான நஸ்டஈடு வழங்க வேண்டும். காச்சலும் தலையிடியும் தனக்கு தனக்கு வந்தாலே தெரியும்.1 point- தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
1 point30 ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்டிருந்த தம்புள்ள நகரிலிருந்து பத்ரகாளி அம்மன் கோவில் 2013 ஆம் ஆண்டு முற்றிலுமாக இடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக பௌத்த பிக்குகள் முறைப்பாடுகள் செய்த நிலையில் ஒரே இரவில் ஆலயம் முழுமையாக இடிக்கப்பட்டது. கோவிலை மூடுவதற்கு முன்னர் சில மதச் சடங்குகள் செய்ய முயற்சித்த ஆலய நிர்வாகம் அவகாசம் கேட்ட போதும் அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு ஆலயம் இடிக்கப்பட்டிருந்தது. அதே நாட்டில் உயர் பாதுகாப்பு வலயம் என்கின்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் திருட்டுத்தனமாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரையை சட்டபூர்வமாக முயலுகின்றார்கள். அதாவது கோட்டாபய ராஜபக்சே அதிகாரத்திலுருந்த போது ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் கட்டப்பட்ட 100 அடி உயரமான தூபி (Stupa) மற்றும் மைத்திரி-ரணில் காலத்தில் ஆளுநராகவிருந்த ரெஜினோல்ட் குரே தலைமையில் கட்டப்பட்ட விகாரை (Vihara) ஆகிய இரு சட்டவிரோத கட்டுமானங்களையும் நியாயம் செய்கின்றார்கள். குறிப்பாக சிங்கள நிலபரப்புகளில் நிறுவப்பட்டுள்ள ருவன்வெலிசாய (338 அடி), ஜெதவனாராமய (400 அடி) அபயகிரி (246 அடி), மிரிசவெட்டி (197 அடி), தூபாராமய (66 அடி) ஆகிவற்றுக்கு இணையாக தமிழ் நிலப்பரப்பில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு சின்னமாக 100 அடியில் தூபியை நிறுவி உரிமை கோருகின்றார்கள் இது போதாதென்று தனியாருக்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள மேற்படி கட்டுமானங்களுக்கு பௌத்த சாசன அமைச்சு ஊடக நிதி உதவி பெற்று பெற்று இருக்கின்றார்கள் இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த விகாரை அமைந்துள்ள பகுதியில் 406 சிங்களக் குடும்பங்கள் வசித்ததாகவும் அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களுடைய காணி என்று உரிமை கோருவதை ஏற்க முடியாது என இராணுவத்தினர் நாடாளுமன்ற மேற்பார்வை குழுவில் நியாப்படுத்துகின்றார்கள் இது போதாதென்று பௌத்த சாசன அமைச்சு அந்த நிலம் முழுமையாக விகாரைக்குரியது என வாதிடுகின்றது. ஆனால் நியத்தில் எந்தக் காலத்திலும் அங்கு பௌத்த கட்டுமானங்கள் இருந்தற்குரிய எந்தவித ஆவணங்களும் கிடையாது. அதே நேரம் அந்த பகுதி தமிழ் மக்களின் நிலம் என உறுதிப்படுத்தி அதற்குரிய ஆதன உறுதிகளை கூட திரு கஜேந்திரகுமார் பாராளமன்றத்தில் முன்வைத்து இருக்கின்றார் இந்த நிலையில் தற்போது தமிழ் ஆளுநர் திரு வேதநாயகன் ஊடாக சட்டவிரோத ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக முயலுகின்றார்கள். சில வாரங்களுக்கு முன் சட்டபூர்வமற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு இருப்பதாக அறிவித்த திரு வேதநாயகன் தற்போது சட்டவிரோத விகாரையை நியாயம் செய்கின்றார். தனது அதிகாரத்தை தக்க வைக்க பௌத்த சிங்கள அதிகாரத்திற்கு துணை போகின்றார். சட்டவிரோதமான முறையில் ஒரு மதில் காட்டினாலே அகற்ற அப்பாவி பொது சனம் மீது சட்டங்களை ஏவி விடும் இவர்கள் சட்டவிரோத விகாரையை எப்படி நியாயப்படுத்துகின்றார்கள் என தெரியவில்லை. சட்டவிரோத கட்டுமானங்களை நியாயப்படுத்தி ஒருபோதும் இன நல்லிணக்கத்தையோ மாற்றத்தையோ ஏற்படுத்த முடியாது. அதே நேரம் சட்டவிரோத விகாரையை ஏற்றுக்கொண்டால் தையிட்டியில் மற்றுமொரு சிங்கள குடியேற்றத்தை தவிர்க்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நாவற்குழியில் நிர்மாணிக்கப்பட்ட சட்டவிரோத விகாரையை தேச வீடமைப்பு அதிகார சபையூடாக சட்டபூர்வமாக்கி அந்த சூழலில் குடியேற்றப்பட்ட சிங்கள குடியேற்றத்தை காணி உரிமம் பெற்று கொடுத்து சட்டபூர்வமாக்கி இருப்பது போல தையிட்டியில் இராணுவம் வாதிடுவது போல சிங்களவர்களை குடியேற்றுவார்கள். அதாவது தையிட்டி ஒரு போதும் முடிவாக இருக்க போவதில்லை. தொல்லியல் திணைக்களம் பௌத்த ஆலயங்கள் இருப்பதாக உரிமை கோரும் காங்கேசன்துறை , பலாலி, நயினாதீவு, நாவற்குழி, நெடுந்தீவு, வல்லிபுரம் ஊர்காவத்துறை, வலிகாமம், மட்டுவில், நிலாவரை, சுன்னாகம்,உடுவில், புலோலி கந்தரோடை,உட்பட்ட பகுதிகள் தோறும் நிறுவ முயற்சிக்கும் பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கான ஆரம்பமாக தையிட்டி இருக்கும். Kunalan Karunagaran1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
கட்டாயம் அனைவரும் பார்க்க மட்டும் அல்ல பகிரவும் வேண்டிய காணொளி. 1. பெரியார், பிரபாகரன் - ஒத்த கருத்து, வேறுபட்ட அணுகுமுறைகள் - அருமையான ஒப்பிலக்கணம். 2. சீமான் தலைவரின் தத்துவத்தை கடத்தவில்லை. கவர்ச்சியையே கடத்தினார். 3. தத்துவத்தை கடத்தினால் சீமானை வழிநடத்துபவர்கள் (நான் றோ என்கிறேன், விகடன் டிவியில் அப்படி சொல்ல முடியாது) சீமானை அரசியல் செய்ய விடமாட்டார்கள். 4. தமிழக இளைஞர்கள் 2009 இல் இந்திய மத்திய அரசு மீது கொள்ள வேண்டிய கோவத்தை சீமான் மடைமாறினார். 5. இன்னும் பல அருமையான கருத்துக்கள். 8ம் நம்பருக்கு அகாலமரணமாமே? காத்திருக்கிறேன்.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
@shanthy அக்கா கண்டது சந்தோசம். ஆரம்பம் முதலே யாழில் பல அவதூறுகளை எதிர்கொண்டு ஆமைவதம் செய்தவர் நீங்கள். ஒரு பெரிய வேண்டுகோள். யாழில் எப்படி சீமான் கழுவி ஊத்தபடுகிறார் என்பதையும், ஈழத்தமிழர்கள் சீமான் பின்னால் இல்லை, அவர்களும் அவரின் பிராடுத்தனத்தை கண்டு கொண்டார்கள் என்பதையும் உங்கள் தமிழ்நாட்டு அரசியல், இலக்கிய வட்டங்களுக்கும் இந்த நெறியாளர் போன்றோருக்கும் யாழின் திரிகளை உதாரணமாக காட்டி பரப்பி விடுங்கள். ஈழத்தமிழரின் எதிர்காலத்துக்கு இது மிக முக்கியமான பணி. @sathiri @வல்வை சகாறா போன்ற தமிழ்நாட்டில் பெயர் தெரிந்த இலக்கியவாதிகளிடமும் இதே கோரிக்கையை வைக்கிறேன்.1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
யாழ் களத்தின் சக உறவான நேசக்கரம் சாந்தி அவர்கள் தமிழ் கேள்விக்கு பேட்டியளித்துள்ளார். புலம் பெயர் தமிழ் சமூகத்தில் சீமான் செய்த நாசகார செயல்களை விளகியதுடன் சீமானுக்கு துணையாக புலம் பெயர் நாடுகளில் இயங்கும் சிலரின் வண்டவாளங்களும் செவ்வியில் தெளிவாக எடுத்து கூறி உள்ளார்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இந்தியா - இங்கிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
IND vs ENG: இந்திய அணி டி20 தொடரை வென்றது எப்படி? ராணாவை களமிறக்கியது சர்ச்சையாவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் புனேவில் நேற்று நடந்த நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியது. சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியில் இதுவரை தொடரை இழக்காமல் இந்திய அணி பயனித்துள்ளது. அது மட்டுமின்றி 2019ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இரு நாடுகளுக்கு இடையிலான டி20 தொடரைத் தொடர்ந்து 17வது முறையாக இந்திய அணி வென்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய அணி ஒரு கட்டத்தில் 12 ரன்களுக்கு 3 விக்கெட், 79 ரன்களுக்கு 5 விக்கெட் என இக்கட்டான நிலையில் இருந்தபோது, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே இடையிலான பார்ட்னர்ஷிப்தான் அணியை பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றது. ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உள்பட 53 ரன்களும், ஷிவம் துபே 33 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உள்பட 53 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இருவரும் சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்து பெரிய ஸ்கோருக்கு உதவினர். பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்சித் ராணா, ரவி பிஸ்னோய் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர். குறிப்பாக களத்தில் வலுவாகக் காலூன்றிய ஹேரி ப்ரூக் ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பியபோது, அவரின் விக்கெட்டை வருண் வீழ்த்தியதோடு, அதே ஓவரில் கார்ஸ் விக்கெட்டை சாய்த்து ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தியபோது இங்கிலாந்து தோல்விப் பாதைக்குள் பயணிக்கத் தொடங்கியது. மேலும், 19வது ஓவரின் இறுதிவரை களத்தில் நின்று 53 ரன்கள் சேர்த்த ஷிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விராட் கோலி: ரஞ்சி கோப்பை போட்டியில் க்ளீன் போல்ட் – சாம்பியன்ஸ் கோப்பையில் தொடர வேண்டுமா? ஜஸ்பிரித் பும்ரா வேகத்தில் எதிரணிகளை கலங்கடித்த மறக்க முடியாத 10 தருணங்கள் வருண் வித்தியாசமான சாதனை: இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியை பறித்த 'மோசமான முடிவுகள்' இந்தியா த்ரில் வெற்றி: ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய வாஷிங்டன் சுந்தர் விமர்சனத்திற்கு உள்ளாகும் இந்திய அணியின் வெற்றி ஆனால், இந்திய அணி வெற்றி பெற்றதில்தான் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஓவர்டன் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்டபோது, 143 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட 5வது பந்து ஷிவம் துபேவின் தலைக் கவசத்தில் பட்டு பந்து தெறித்தது. இதுபோன்ற நேரத்தில் உரிய முதலுதவியும், தேவைப்பட்டால் வீரரின் உடல்நிலைக்கு ஏற்ப மாற்று வீரர் விளையாடுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும் என்பது ஐசிசி விதி. இன்னிங்ஸ் முடிந்து பெவிலியன் சென்றபின் ஷிவம் துபேவுக்கு ஃபீல்டிங் செய்ய முடியாததால் அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா கன்கசன் மாற்றுவீரராகக் களமிறக்கப்பட்டு பந்துவீச வைக்கப்பட்டார். ராணா எடுத்துக் கொடுத்த 3 விக்கெட்டுகளும் வெற்றிக்கு முக்கியமானவையாக, திருப்புமுனையாக மாறின. ஐசிசி விதிப்படி, காயமடைந்த ஒரு வீரர் எந்தத் தகுதியில் இருக்கிறாரோ அதே தகுதியில்தான் கன்கசன் மாற்றுவீரரையும் களமிறக்க வேண்டும். ஒரு பேட்டர் கன்கசனில் வெளியேறினால் பேட்டரை களமிறக்கலாம், பந்துவீச்சால் காயமடைந்தால் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரையும், ஆல்ரவுண்டருக்கு பதிலாக ஆல்ரவுண்டரையும் களமிறக்கலாம். இந்நிலையில் ஷிவம் துபே ஒரு பேட்டர், ஆனால், அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரான ஹர்சித் ராணாவை களமிறக்கி விளையாட வைத்து இந்திய அணி பெற்ற வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என வர்ணனையாளர்களும், இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்டென் மெக்கலமும் போட்டி முடிந்தபின் நடுவர்களுடன் மைதானத்தில் நீண்ட ஆலோசனை நடத்தினார். அமெரிக்கா: வெடித்துச் சிதறிய விமானம், குழந்தை நோயாளியுடன் சென்றபோது விபரீதம் - நிலவரம் என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று பட்ஜெட் தாக்கல்: வேலைவாய்ப்பு, பணவீக்கம் - இந்திய அரசு முன் உள்ள சவால்களும் எதிர்பார்ப்புகளும்6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "எங்கள் தோல்விக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், கன்கசனில் லைக் டூ லைக் மாற்றுவீரர் சரியானதாக எனக்குத் தெரியவில்லை, அதில் விருப்பமும் இல்லை," என்று தெரிவித்தார். அதோடு, "இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஷிவம் துபேவால் 25 கி.மீ வேகத்தில்கூட பந்துவீச முடியாது. ஆனால், ஹர்சித் ராணா 145 கி.மீ வேகத்தில் பந்துவீசக் கூடியவர், பேட்டிங் சரியாக வராது. ஆனால், துபே சிறந்த பேட்டர். எப்படி இது சரியான கன்கசன் மாற்று வீரராக இருக்கும். இந்த ஆட்டத்தில் நாங்கள் உண்மையாக வென்றிருக்க வேண்டும். கன்கசனில் மாற்று வீரராகச் சேர்க்கப்பட்ட முடிவை நாங்கள் ஏற்கவில்லை," என்றும் கூறினார். மாற்று வீரராக இதுபோன்ற வீரரைக் களமிறக்கும் முன்பாக எதிரணியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் ஆனால் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை எனவும் ஜோஸ் பட்லர் குறிப்பிட்டார். "நான் பேட்டிங் செய்ய வந்தபோது, திடீரென ஹர்சித் ராணா பந்துவீச வருகிறார். இவர் எப்படி பந்து வீசுகிறார் என்று எனக்கு குழப்பம் ஏற்பட்டது. இது உண்மையில் ஏற்க முடியாத முடிவு. சரியான மாற்று வீரர் முடிவும் அல்ல. இது போட்டி நடுவர் ஸ்ரீநாத் எடுத்த முடிவு என்று இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் போட்டி நடுவரிடம் சில கேள்விகளை எழுப்பி நாங்கள் எங்கள் நிலையைத் தெளிவுபடுத்துவோம். எங்களுக்கு வெற்றி பெறுவதற்குப் பல வாய்ப்புகள் இந்த ஆட்டத்தில் இருந்தன. ஆனால், பயன்படுத்த முடியாததற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அதில் இதுவும் ஒன்று" எனத் தெரிவித்தார். மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி?8 மணி நேரங்களுக்கு முன்னர் கோவையில் ஒரே இமெயிலில் 3,000 பேரை வேலையை விட்டு நீக்கிய அமெரிக்க நிறுவனம் – என்ன நடந்தது?31 ஜனவரி 2025 இந்திய அணி கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் மோர்கல் கூறுகையில், "இது முற்றிலும் எங்களின் முடிவல்ல. கன்கசன் மாற்றுவீரராக ராமன்தீப் சிங், ஹர்சித் ராணா இருவர் பெயரைக் கொடுத்தபோது, போட்டி நடுவர் ஸ்ரீநாத் தேர்வு செய்ததுதான் இறுதி முடிவு. ராணாவின் பெயரைத் தேர்வு செய்தபோது, அவர் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார் உடனடியாகக் களமிறங்க அவரை அவசரப்படுத்தினோம். இந்த முடிவு எங்களை மீறியது, பெயரை மட்டுமே நாங்கள் அளிக்க முடியும், முடிவெடுப்பது போட்டி நடுவர்தான்" எனத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி வர்ணணனையாளர்களாக இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் கெவின் பீட்டர்சன், நிக் நைட் இருவரும், இந்திய அணி கன்கசன் மாற்றுவீரராக துபேவுக்கு பதிலாக ஹர்சித் ராணா களமிறங்கியது குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பி விமர்சித்தனர். கன்சனில் செல்லும் வீரரின் தகுதிக்கு நிகரான மாற்றுவீரரைக் களமிறக்க வேண்டும், மாற்றுவீரரை களமிறக்கும் முன் எதிரணியினரிடம் ஆலோசிக்கலாம் என்ற இரு ஐசிசி விதிகளுமே நேற்று கடைபிடிக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுகின்றன. ஒருவேளை ஐசிசி விதியின்படி துபேவுக்கு மாற்றாக ராமன்தீப் சிங் அல்லது பேட்டரை களமிறக்கி இருந்தால், நேற்றைய ஆட்டம் இங்கிலாந்து அணியின் பக்கம் திரும்பியிருக்கக் கூடும். ஏனென்றால், ஹர்சித் ராணா கடைசி நேரத்தில் எடுத்துக் கொடுத்த 3 விக்கெட்டுகள்தான் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தது. அப்படியிருக்கையில் ஹர்சித் ராணாவால் வெற்றி பறிபோனதை, இங்கிலாந்து வீரர்கள் ஏற்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்திய அணி வெற்றி பெற்ற விதம் சரியானதா, இது நேர்மையானதா என்ற கேள்விகள், விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா: திமுக-வில் அரசியலை தொடங்கியவர் விஜய் உடன் இணைந்தது எப்படி?31 ஜனவரி 2025 சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - ஈலோன் மஸ்க், டிரம்ப் கூறியது என்ன?31 ஜனவரி 2025 இந்திய அணியின் டாப் ஆர்டர் தோல்வி பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் பேட்டிங்கில் நேற்றும் வழக்கம்போல் டாப் ஆர்டர் தோல்வி அடைந்தனர். சாம்ஸன் தொடர்ந்து 4வது போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினாலும் 29 ரன்களில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரில் இரண்டாவது முறையாக டக்அவுட்டில் வெளியேறினார், இவரின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. ரிங்கு சிங் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி, 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இழந்து மோசமான நிலையில் இருந்தது. 6வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே இருவரும் சேர்ந்து ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கி இருவரும், சரிந்திருந்த ரன்ரேட்டை உயர்த்தினர். ஹர்திக் 27 பந்துகளிலும், துபே 31 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தநிலையில் பாண்டியா 53 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிவரை களத்தில் இருந்த துபே 53 ரன்களில் ரன்அவுட் ஆனார். கடைசி ஓவரில் மட்டும் இந்திய அணி அக்ஸர் படேல், அர்ஷ்தீப், துபே ஆகிய 3 விக்கெட்டுகளை இழந்தது. 180 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என இருந்த இந்திய அணி ஒரு ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆட்டம் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து பக்கம் இருந்தது. 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என இக்கட்டான நிலையில் இருந்தபோது, ஹர்திக், துபேவின் ஆட்டம்தான் திருப்புமுனையாக மாறியது. அதேநேரம் இருவரும் பிரிந்த பிறகு களமிறங்கிய எந்த பேட்டரும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. இந்தத் தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட அக்ஸர் படேல் இதுவரை ஒரு போட்டியில்கூட பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. 'சரியான திசையில் செல்கிறோம்' வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், "அணியில் உள்ள ஒவ்வொருவரும் தொடக்கம் முதல் கடைசி வரை சிறப்பாகச் செயல்பட்டோம். 12 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த தருணத்தில்கூட நம்பிக்கையை இழக்காமல் அதிரடியாகவே பேட் செய்தோம். துபே, பாண்டியா தங்களின் அனுபவத்தை இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தியது சிறப்பு. இதைத்தான் வலைப்பயிற்சியில் பேசினோம், அதைச் செய்துள்ளனர். சரியான திசையில் நாங்கள் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பவர்ப்ளேவுக்கு அடுத்து வரும் ஓவர்கள் முக்கியமானவை என்று எனக்குத் தெரியும், அந்த நேரத்தில் ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. சில விக்கெட்டுகளை வீழ்த்தினோம், ராணா 3வது பந்துவீச்சாளராக வந்து சிறப்பாகப் பந்துவீசினார்" எனத் தெரிவித்தார். உங்களால் இரவில் தூங்க முடியவில்லையா? - நீங்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் என்ன?31 ஜனவரி 2025 சியரா ஸ்பேஸ்: காற்றே இல்லாத நிலவில் ஆக்சிஜன் தயாரிக்க உதவும் கருவி - எப்படி செய்யும்?30 ஜனவரி 2025 இங்கிலாந்து தோல்விக்கு என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் அற்புதமாக இருந்தது, நடுவரிசையில் ஹேரி ப்ரூக்கின் ஆட்டமும் வெற்றியின் அருகே கொண்டு சென்றது. ஆனால், முக்கியமான தருணத்தை கைப்பற்றத் தவறியதே இங்கிலாந்து அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. பென் டக்கெட், பில் சால்ட் இருவரும் அருமையான தொடக்கத்தை அளித்தனர். இந்தத் தொடரில் இதுவரை அதிரடியாக ஆடாத சால்ட் இந்த ஆட்டத்தில் நிதானமாக ஆடி பவுண்டரிகளை அடித்தார். பவர்ப்ளே முடிவில் 62 ரன்கள் சேர்த்து ட்கெட்(39) விக்கெட்டை பிஸ்னாயிடம் இங்கிலாந்து இழந்திருந்தது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு 120 ரன்கள் தேவைப்பட்டது, 14 ஓவர்கள் இருந்தன, கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன. அந்த நிலையில், அக்ஸர் படேல் வீசிய 7வது ஓவரில் சால்ட்(23) போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பட்லர் 2 ரன்னில் பிஸ்னாய் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 62 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த இங்கிலாந்து 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லிவிங்ஸ்டோன், ஹேரி ப்ரூக் இருவரும் களத்தில் நிலைக்கத் தொடங்கினர். ஹேரி பரூக் வழக்கத்துக்கு மாறாக இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக ராணா பந்துவீச்சில் சிக்ஸர்கள், பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்து, 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். ராணா பந்துவீச்சில் 9 ரன்னில் லிவிங்ஸ்டோன் ஆட்டமிழந்தார். விக்கெட் சரிந்தபோதிலும் இங்கிலாந்து அணியை ஹேரி ப்ரூக் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். வருண் 15-வது ஓவரை வீசினார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. களத்தில் செட்டில் ஆன பேட்டர் ஹேரி ப்ரூக்கை(51) வீழ்த்தி, அதே ஓவரில் பிரைடன் கார்ஸும் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து சற்று ஆட்டம் கண்டது. அதன் பிறகு கடைசி வரிசை வீரர்கள் பெரிதாக பேட்டிங்கில் பங்களிக்கவில்லை, ஓவர்டன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்த பின், யாரேனும் ஒரு பேட்டர் பொறுப்பெடுத்து பேட் செய்திருந்தால் வெற்றி இங்கிலாந்து அணியின் கையிலிருந்து நழுவிச் சென்றிருக்காது. கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 36 ரன்களும், கடைசி 2 ஓவர்களில் 25 ரன்களும் தேவைப்பட்டன. இது டி20 போட்டிகளில் நிச்சயமாக அடைந்துவிடக்கூடிய ஸ்கோர்தான். ஆனால், இங்கிலாந்து அணியில் கடைசி வரிசை பேட்டர்கள் பொறுப்பெடுத்து பேட் செய்யாமல் இருந்தது தோல்விக்கான காரணங்களில் ஒன்று. பந்துவீ்ச்சில் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியின் 5 விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்திய நிலையில் அதன் பிறகு நெருக்கடி கொடுக்கத் தவறியதும் தோல்விக்கான காரணங்களில் ஒன்று. ஹர்திக் - துபே பார்ட்னர்ஷிப்பை தொடக்கத்திலேயே உடைத்திருந்தால், நிச்சயமாக இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c07k57l34l7o1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
இதன்பொருள், அதாவது கழுவி, கழுவி ஊத்தினால் கழுவப்பட்ட பொருள் துலங்கும், கழுவி வந்ததும் பயிர்களுக்கு உரமாகும் ஐயா.🤪1 point- நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
1 pointமூவினத்தவர்களும் கொண்டாட புதிய விழா! இலங்கையில் உள்ள அனைத்து இனங்களின் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்களை குறிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். “தமிழர்கள், சிங்களவர்கள், பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் என நாம் அனைவரும் ஒன்றாகக் கொண்டாடும் ஒரு நாள் நமக்கு வேண்டாமா? இந்த அனைத்து சமூகங்களின் கலாச்சாரங்கள், உணவு முறைகள், வாழ்க்கை முறைகள், ஆடை பாணிகள் மற்றும் இசை ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஒக்டோபரில் ஒரு பிரமாண்டமான தேசிய விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். நாம் பிரிந்திருந்தாலும் நம் குழந்தைகளை பிரிந்து இருப்பதற்கு இடமளிப்பது நல்லதல்ல. எங்கள் தலைமுறை யுத்தம் செய்ததிற்கு, எங்கள் குழந்தைகளின் தலைமுறை யுத்தம் செய்ய அனுமதிக்க மாட்டோம். “வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கின் அனைத்து குழந்தைகளும் ஒன்று சேரும் அரசாங்கமாக இந்த அரசாங்கத்தை நாங்கள் மாற்றுவோம்.” http://www.samakalam.com/மூவினத்தவர்களும்-கொண்டா/1 point- நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
1 pointஈழப்பிரியன்…. இந்தப் படங்களை, வேறு ஒரு யாழ். கள உறவு அனுப்பியிருந்தார். ஆகவே… நன்றி அவருக்குத்தான் சேர வேண்டும். 🙂1 point- அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஒழுங்கமைப்பாளர்களை வெளிப்படுத்துங்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
நேற்று, மாவையரின் வீட்டில் கல்லுளி மங்கன் போல் அமர்ந்திருந்த அவரைப் பார்த்து நானும் அதைத்தான் நினைத்தேன். மாவையரின் இரத்த அழுத்தம் அதிகரித்ததற்கு இந்த பதவியாசை பிடித்த தலையாட்டிகளே காரணம். மாவையர் ஒன்றும் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேனென அடம் பிடிக்கவில்லையே. தர்மப்படி, கொள்கைப்படி, சட்டப்படி தலைவருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரை பதவியை பொறுப்பெடுக்கும்படியே கேட்டுக்கொண்டார். அதை மறுத்து காரணமில்லாமல் நீதிமன்றத்திற்கு கொண்டுசென்று முடக்கி வைத்திருப்பது யார்? அந்த தீர்ப்பு வரும்வரை மாவையர்தான் தலைமைபொறுப்புக்கு உரியவர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்தால்; கட்சியின் முடிவை ஏற்காமல், எதை எதிர்பார்த்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தீர்கள், என்று நீதிபதி கேட்டால்; சட்டமேதை என்று சொல்லிக்கொள்பவர் என்ன பதில் சொல்வார்? நான் தலைவனாகும்படி தீர்ப்பு சொல்லுங்கள் என்பாரா?1 point- நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
1 pointகடைசியாக உள்ளது நிஜம்.1 point- சங்கியாக முடியாது ! நாதகவிலிருந்து ஜெகதீச பாண்டியன் அவுட்
இப்ப முள்ளம்பன்றி சிகைஅலங்காரிகள் சார்பாக ஒரு கொம்பிளைன்ட் வரும்🤣.1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
இதுக்கு பேர்தான் கழுவி, கழுவி ஊத்துவது🤣1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
நீங்கள் சொல்வது அத்தனையும் சரியானதே....1 point- சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - ஈலோன் மஸ்க், டிரம்ப் கூறியது என்ன?
1 pointடிரம்ப்பிற்கு தேவை popularity, மஸ்கிற்கு தேவை வியாபாரம. பிரத்தியோகமாக ஒரு விண்கலத்தை ஏவி அந்த விண்வெளிவீர்ர்களை பூமிக்கு கொண்டு வருவதென்பது மஸ்கிற்கு அதிக வருமானத்தை கொண்டுவரும், டிரம்பின் ஆதரவாளர்கள் நனைப்பார்கள் டிரம்ப் எவ்வளவு நல்லவர் வல்லவர் எல்லோரிலும் அக்கரையானவரென்று ஆனால் அந்த பயணம் ஒரு விரயாமன பயனம் ஏனேனில் Marchஇல் மற்ற வீர்ர்கள் திரும்பிவரும் போது இவர்களை அழைத்து வருவதுமான் cheapest option.1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
நான் சீமானை கழுவி கழுவி ஊத்தவில்லை ..... இலங்கை தமிழர்களின் விடுதலை போரை பயன்படுத்தி தமிழ்நாட்டில் அரசியல் செய்வதை எதிர்க்கிறேன். மிக கடுமையாக எதிர்க்கிறேன். சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம் நான் முதல்வர் ஆக வந்தால் அல்லது தெரிவு செய்யப்பட்டால் அனைவருக்கும் கல்வி வேலைவாய்ப்பு மருத்துவம் கூலி தொழிலளாருக்கும். ஓய்வு ஊதியம் இப்படி பல வாக்குறுதிகளை கொடுத்து தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கலாம். ஆட்சிக்கு வரலாம். சீமானுக்கு தன்னில் நம்பிக்கை இல்லை அதாவது தன்னம்பிக்கை இல்லை எனக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்கு போட்டு முதல்வர் ஆக்குவார்களோ என்ற ஐமிச்சம். சீமானிடமுண்டு ஆகவே தான் பிரபாகரனின் பெயரை சொல்லி பல பொய்களை சொல்லி தமிழ்நாட்டில் மக்களின் வாக்குகளை. பெற்று முதல்வர் ஆகலாம் எனக் கனவு காண்கிறார். .....இவர் பிரபாகரனின் படத்தை பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். இப்படி படம் வைப்பதால். தமிழ் ஈழம் கிடைத்து விடாது எங்கள் போராட்டம் தொடர்கிறது என்று பொருள் இல்லை தமிழ்நாட்டிலுள்ள. ...வாழ்கின்ற ஒவ்வொருவரும் தலைவரின் படத்தை வைத்திருத்தல் கூட. போராட்டம் தொடராது தமிழ் ஈழம் கிடைக்காது இந்தியா அரசை மத்திய அரசை சீமான் கட்டி போடுவார். என்றால் இலங்கையில் தமிழர்கள் பிரச்சனை கண்டிப்பாக தீரும். இந்தியா தான் தடையாக இருக்கிறது இந்தியன் சீமானால். அந்த தடைகளை அகற்ற முடியுமா???????? 🙏1 point- 'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
1 pointஓணாண்டியார், விடயம் மிகவும் எளிமையானது, இதைப் பெரிதாக்க வேண்டாம்! இதைப் பற்றி யாரும் இனிப் பேசப் போவதில்லை! ஒணாண்டியாரின் கருத்துக்கு எப்போதும் நம்பகத் தன்மை இருக்கும். தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும்.1 point- யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் - ஜனாதிபதி பங்கேற்பு
தமிழ் உயர் அதிகாரிகளை உருவாக்கி மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வையுங்கள் சுதந்திரமாக மக்களுடன் உரையாட விடுங்கள் ...1 point- சங்கியாக முடியாது ! நாதகவிலிருந்து ஜெகதீச பாண்டியன் அவுட்
அப்படிதான் நானும் நினைத்தேன், வாய் மூடி மௌனியாய் இருந்தேன், ஆனால் சீமான் போன்ற தகுதி அற்ற வாய்ச்சொல்லில் வீரர்கள் ஈழத்தமிழர் பெயரைச் சொல்லியே அங்கே அரசியல் செய்து எமது போராட்டம் மற்றும் எங்கள் மதிப்பை இழக்காரப்படுத்தும் பொழுதும், எங்களுக்காக உண்மையாகவே போராடிய வைகோ போன்ற தலைவர்களை விட தான் உயர்ந்தவர் என்று காட்டிக்கொள்ளும் பொழுதும் எப்படி இனிமேலும் அப்படியே இருப்பது? நாங்கள் இனியும் சீமான் போன்ற நாலாம்தர அரசியல் வாதிகளை எங்கள் பெயரைச் சொல்லி அங்கே கடிவாளம் அன்றி அரசியல் செய்ய அனுமதித்தால் அது அங்கே எங்களுக்காக மனமுவந்து போரடிய சிறை சென்ற,குடும்பத்தை கரை ஏற்ற முடியாமல்ப் போன,அரசியலில் தன் நிலையை இழந்த மனிதர்களுக்கும், தலைவர்களுக்கும் செய்யும் அவமரியாதை. இப்பொழுதும் நாம் அங்கே எந்த அரசியல் நிலைபாடும் எடுக்க வேண்டியதில்லை, ஆனால் அங்கே யார் எம்மை கேலிப்பொருள் ஆக்குகின்றார்களோ அவர்களின் உண்மை நிறத்தை வெளிக்கொணர வேண்டிய தேவை வந்துள்ளது1 point- 'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
1 pointயோவ், லூச்சா கதை எல்லாம் வேண்டாம். அதான் கூற்றை வாபஸ் வாங்கியாச்சே… நில்லும் ஐயா…. வெட்கெம் கெட்ட எத்தனையோ பேர் என்ன என்னமோ தில்லாலங்கிடி எல்லாம் செய்து போட்டு ஒண்டும் இல்லாதமாதிரி திரியும் போது … இதுக்காக யாழை விட்டு போறதெல்லாம் ஓவர். அதுவும் நான் ஆரம்பித்த திரி… போட்டோக்களை எடுத்து பகிர்ந்தது எல்லாம் பெரிய லெவல் ரிஸ்க். தயவு செய்து தொடரவும். நீங்கள் சொன்ன விளக்கம் நானுட்பட பலருக்கு ஏற்புடையதே.1 point- தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
1 pointஐய்.. நல்லா கனவு காண்கின்றீர்கள். இனவாத ஜேவிபி அகற்றுவதற்கு பதிலாக நிதி கொடுத்து மேலும் கட்டுமானத்தை அதிகரிக்கும்.1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
யாழ்களத்தில் மூன்று அணிகள் உள்ளது வாஸ்தவம்தான். 1. சம்பளம் வாங்காமல் தமிழ் இனத்துக்காக வேறுபட்ட கருத்துக்களை எதிரும், புதிருமாக எழுதும் ஆட்கள். கிட்டதட்ட யாழில் அனைவரும் இந்த அணிதான். Team Tamils. 2. சம்பளம் வாங்கி கொண்டு றோவுக்கு ஆடும் one man army - Team India 3. சம்பளம் வாங்கியோ அல்லது சுயவிருப்பிலோ இலங்கைக்கு ஆடும் two men army - Team Sri Lanka. யாழில் நடப்பது பழைய பென்சன் அண்ட் ஹெஜ்டெஸ் கப் போல ஒரு முத்தரப்பு ஆட்டம்🤣. Team Tamils v Team India v Team Sri Lanka1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஒழுங்கமைப்பாளர்களை வெளிப்படுத்துங்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
சம்பந்தன்.... சுமந்திரனை கட்சியில் சேர்த்த நன்றிக் கடனையும் மறந்து, சம்பந்தனின் பதவிக்கு, ஆப்பு அடித்தவர்தான் சுமந்திரன். அது மட்டும் அல்லாது... சம்பந்தனின் அந்திமக் காலத்தில், அவருக்கு இல்லாத தொல்லைகளை... மறை முகமாக தனது ஆட்கள் மூலம் செய்து சம்பந்தனின் உயிர் போக, ஒரு வகையில் காரணமாக இருந்ததும் சுமந்திரன்தான். சென்ற வருடம் சம்பந்தர், இந்த வருடம் மாவை, வாற வருஷம் சி***ம் என்று ஊரில் சொல்கிறார்கள். சுமந்திரன்...இந்தக் கட்சியில் இருந்து எல்லோரின் உயிரையும் பறித்துக் கொண்டு இருக்கும் எருமை வாகனத்தின் சொந்தக்காரன்.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Tirunelveli Pasanga La · ஆயிரம் பேரு வரலாம், போகலாம். ஆனால் காலத்துக்கும் அளவும் மாறாம, சுவையிலும் தனக்கு ஈடு இணை இல்லாத ஒருத்தன் உண்டு எனில் அவன் இவன் தான். இவன் முள்ளெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. வறுத்தா அப்படியே சாப்பிடலாம், குழம்புல போட்டா, கையை வச்சதும் தனியா வரும் சதை, முள்ளை பிரிச்சு முழுசா ரசிச்சு ருசிக்கலாம். கவளை, 4 மீனும் கொஞ்சம் குழம்பும் சட்டி சோறும் சட்டுனு மாயமாகும். இவன் கூட வெந்த ஒரு துண்டு மாங்காய்க்கு இன்னும் ஒரு சட்டி சோறு கேட்கும் மனசு. இவனை குளிப்பாட்டி அழக்காக்க கொஞ்சம் மெனக்கெடனும், ஆனால் சாப்பிடும்போது அத்தனை அலுப்பும் போய் ஆனந்த......! 😂1 point- அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஒழுங்கமைப்பாளர்களை வெளிப்படுத்துங்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
மைத்திரி, ரணில் ஆகியோர் ஜனாதிபதிகளாக இருக்கும் போது... பின்கதவால் சென்று அவர்களை சந்திக்கும் அளவிற்கு நட்பாக இருந்த, சுத்துமாத்து சுமந்திரனுக்கு.... அப்போது இவற்றை கேட்டு சவால் விட, சுமந்திரனின், முதுகெலும்புதான்.... கூனிக் குறுகி வளைந்து இருந்தது. 😂1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
யார் இவர்? புலிகளின் பொறுப்பாளர் என்ற பதவியை இவருக்கு யார் கொடுத்தது. புலிகள் ஆயுதங்களை மௌனித்தபின் இவர் தலைமையில் என்ன அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை இதை இணைத்தவர் தருவாரா??1 point- பாட்டுக் கதைகள்
1 pointஅப்படியென்றால் இலட்சிய நாவல்கள் எழுதிய நா. பார்த்தசாரதிதான் சிறந்த இலக்கியப் படைப்பாளி! சமூக சிந்தனை என்பதை விட பக்கச்சார்பின்றி பாத்திரங்களை படைக்கவேண்டும். ஒரு உலகத்தை கற்பனையில் கொண்டுவந்து வாசகனை உள்ளே இழுக்கவேண்டும்.. ஒருவரின் எழுத்து நூறாண்டுகளுக்கு மேல் விரும்பிப் படிக்கப்பட்டும் பேசப்பட்டும் இருந்தால் அவரது எழுத்து சிறந்ததாகத்தான் இருக்கும். புதுமைப்பித்தன் வறுமையில் வாடி எழுதிய கதைகள் இன்றும் நிலைத்துநிற்கின்றன. ஆனால் இலக்கியம் அவருக்கு சோறு போடவில்லை. அவரும் எதிர்பார்க்கவும் இல்லை.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மேலுள்ளது வசதி உள்ளவர்களது உற்சாக பானம் .கீழுள்ளது வறியவர்கள்/நடுத்தரவர்க்கத்தின் உற்சாக பானம்.1 point- பாட்டுக் கதைகள்
1 point- பாட்டுக் கதைகள்
1 point👍.................. 'பத்துப்பாட்டு' என்று தலைப்பு வைத்து பத்து சினிமாப் பாடல்களில் சுற்றி இருக்கும் பழைய நினைவுகளை எழுத வேண்டும் என்று தான் இதை ஆரம்பித்தேன், அக்கா. சினிமாப் பாடல்களுக்கும், என்னுடைய நினைவுகளுக்கும் பத்துப்பாட்டு என்று சங்க இலக்கியங்கள் சொல்வதை தலைப்பாக வைப்பது என்று வந்த அந்த எண்ணத்தை பின்னர் தலையில் ஒரு குட்டுக் குட்டி தடுத்து நிறுத்தினேன்.................🤣. ஆனாலும் பத்து பாடல்கள் எழுதுவதாகத்தான் இருக்கின்றேன். சீமானின், திராவிடத் திரிகளிலேயே எழுதக் கிடைக்கும் பொழுதெல்லாம் போய்விட்டது, அக்கா..................🤣. இன்றைக்கு முடிந்தால் இரண்டாவது நினைவை எழுதுவதாக உள்ளேன்.............. சிலராவது தொடர்ந்து அவர்களின் அனுபவங்களை பகிர்வார்கள் என்றும் நினைக்கின்றேன்............. பலதும் பத்துமாக வேறு சில விடயங்களும் வந்து போகும் போல..............👍.1 point - நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.