Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    19134
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87990
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  4. செவ்வியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    138
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/03/25 in all areas

  1. நான்... முதல் வெடி விழ முதல் வெளிக்கிட்ட ஆள். 😎 இன்னும்... என் காதால், ஒரு துப்பாக்கி சூட்டுச் சத்தத்தையும் "லைவ்" ஆக நேரில் கேட்கவில்லை. எனக்குத் தெரிந்த தொழில் அதிபர் எல்லாம்... மில்க் வைற் சோப்.... அமரர் கனகராஜா, அண்ணா கோப்பி முதலாளி, யானை மார்க் சோடா முதலாளி, மலிபன் பிஸ்கட் முதலாளி, கன்டோஸ் சொக்லேட் முதலாளி மட்டுமே. 😂 பிற் குறிப்பு: இதில் கூறப்பட்டுள்ள தரவுகளை இந்தத் திரியுடன் மறந்து விட வேண்டும். பூனை... குட்டியை காவின மாதிரி, எல்லா திரிகளுக்கும் காவிக் கொண்டு திரியுறேல்லை. படித்தவுடன் கிழித்து விடவும். ஓகே.... 🤣
  2. நான் அமெரிக்கப் படைத்தளம் ஒன்றில் வேலைபார்த்த நேரத்தில் ஈராக் சடாம்உசைனை அடிபணியவைக்க தன் படையில் ஒருபகுதியை அமெரிக்கா ஈராக்கிற்கு அனுப்பியது. என்னுடன் ஒரு நண்பனைப்போல் பழகிவந்த, என்னுடன் வேலைபார்த்த படைவீரர் ஒருவருக்கும் அங்கு போகும்படி கட்டளை வந்தது. அதனால் கலக்கமடைந்த அவரிடம், அவரது கைரேகையைக் காட்டச்சொல்லி, அதில் அவரது ஆயுள்ரேகை துலக்கமாக நீண்டு இருப்பதுகண்டு, நான் அறிந்த அரைகுறை ரேகைசாஸ்திர அறிவுடன், “கவலைப்படாதே நீ திரும்பவந்து எனக்குக் கைலாகு கொடுப்பாய்” என்று ஆறுதல் கூறினேன். சில நாட்களில் திரும்பப் பாதிப்புகள் ஏதுமின்றி ஆயுளோடு வந்த அவர், என்னை ஒரு கைரேகை சாஸ்த்திர நிபுணர் என்று நம்பிவிட்டார். நம்பியதோடு மட்டுமல்ல, நம்பித் தனது சக நண்பர்களை ரேகைபார்க்க என்னிடம் அழைத்தும் வந்துவிட்டார். நான்….??😳
  3. சம்பந்தருக்கு சற்றும் சளைக்காத கள்ளந்தான் மாவை. தன் மகனுக்கு சீட் கேட்டு கட்சியை சீரழிச்சதும், மாவிட்டபுரத்தில் மாட மாளிகை கட்டியதும், மட்டும் அல்லாது சாகும் வயசிலும் பதவி ஆசையில் நொடிக்கு ஒரு கதை, நொடிக்கு ஒரு பக்கம் தாவி, தமிழரசு கட்சியை நாசம் பண்ணியதில் மாவையின் பங்கு மிக பெரியது. மாவை இந்தியாவில் பல சொத்துக்களை உடையவர் அதனால் இந்தியா கிழித்த கோட்டை தாண்டதவர் என்பதும் உண்மையே. இங்கே சுமந்திரனை (பார் சிறி சார்பாக) தாக்குவதற்காக பார் சிறி அடிபொடிகள் மாவையை ஏதோ மாமனிதர் ரேஞ்சுக்கு உயத்தினம்🤣. இதே ஆட்கள் இதே யாழில் மாவையை பற்றி எழுதினதை தூக்கி போட்டால் - ஊர் சிரிக்கும். பிகு அடிப்படை மாண்பு கருதி மாவையின் சாவு வீட்டின் பின்பே அவர் பற்றிய விமர்சனம் எழுதப்படுகிறது. சம்பந்தன் சாவு பற்றிய திரியிலேயே வந்து கிரியை செய்த சவகிரிகை குருக்கள்கள்மார் எவரும் எனக்கு அட்வைஸ் பண்ண நினைக்க வேண்டாம் 🙏.
  4. இதிலிருந்து நான் புரிந்துகொள்வது, நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எவ்வளவு கேவலமாகவும் பேசலாம் ஆனால் புலி கொடியை மட்டும் வைத்திருந்தால் உன் சொல்லும் செயலும் மதிக்கப்படும். இயக்கத்தின் செயல்பாடுகளையும், நோக்கத்தையும் இதைவிட தாழ்த்துவதற்கு என்ன இருக்கிறது?
  5. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு (Seeman), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடபில் அமெரிக்காவின் (United States) நியூயார்க்கில் (New York) இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமரன் (Visvanathan Rudrakumaran) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். தமிழீழ மக்கள் இது தொடர்பாக விசுவநாதன் ருத்ரகுமரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தந்தை பெரியாரையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் எதிர்த்துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானால் கட்டியமைக்கபடும் பொய்விம்பத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இத்தகைய அணுகுமுறை தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் வழங்கும் ஆதரவுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதனையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தேசியத் தலைவர் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியற் சூழலைக் கடந்து, ஒட்டு மொத்தத் தமிழ்நாடு மக்களும் அரசியற் கட்சிகளும் ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர். விடுதலை இயக்கம் நமது விடுதலை இயக்கத்துக்கு கடினமான நேரங்களில் உறுதுணையாக நின்றவர்களுக்கு என்றும் மரியாதையுடன் மதிப்பளித்து வந்தவர். தமிழ் உணர்வுடனும் தமிழீழ விடுதலைப் பற்றுடனும் திராவிட இயக்க வழிவந்த தோழர்கள் போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பும் பணியும் என்றும் தேசியத் தலைவரதும் தமிழீழ மக்களதும் மனங்களை நெகிழச் செய்தவை. இத்தகைய நமது சொந்தங்களுக்கு எதிரான தளத்தில் நமது தேசியத் தலைவரை நிறுத்தும் முயற்சியினை சீமான் கைவிட வேண்டும் எனவும் நாம் அவரைக் கோருகிறோம். தேசியத் தலைவரால் தனது மாவீரர் நாள் உரைகளிலும் அறிக்கைகளிலும் கடிதங்களிலும் செவ்விகளிலும் அவரால் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் மட்டுமே அவரது கருத்துகளாகக் கருதப்படும். இவற்றை விட அவர் சார்பில் கருத்துரைக்கவோ அல்லது அவரது கருத்துகளை தமது அரசியற் தேவைக்கேற்ப வளைத்துத் திரித்துப் பயன்படுத்தவோ எவரும் முனையின் அது அரசியல் அறம் அற்ற ஒரு போக்காகும். தேசியத் தலைவர் இத்தகைய அணுகுமுறை தேசியத் தலைவர் கடைப்பிடித்த அறநெறிக்கு முரணானது ஆகும். தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினையும் தமிழ்நாட்டு மக்களின் தேசியப்பிரச்சினையும் வேறுபட்டவை, தனித்துவமானவை. தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தமிழீழ மக்களே தலைமை தாங்க முடியும் தலைமை தாங்க வேண்டும். சிங்களத்தின் தமிழின அழிப்பில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ்நாட்டில் இருந்து கட்சி வேறுபாடு கடந்து பரந்து பட்ட ஆதரவைத் தமிழீழ மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய சூழலில் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளுக்குள் தமிழீழத் தேசியத் தலைவரையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இழுத்து விடும் முயற்சிகளை சீமான் உட்பட எந்த அரசியற்கட்சித் தலைவர்களும் மேற்கொள்ளக்கூடாது என்பதே நமது வேண்டுதல்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/gov-of-tamil-eelam-based-abroad-condemns-seeman-1738583911
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 2 பிப்ரவரி 2025, 08:01 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ் மொழியையும் ஜப்பானிய மொழியையும் புதிதாகக் கேட்கும் ஒருவருக்கு அவை முற்றிலும் வேறுபட்டதாகத் தோன்றலாம். ஆனால், இரு மொழிகளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருப்பதாக, அதுகுறித்து ஆய்வு செய்து வரும் மொழி அறிஞர்கள் கூறுகின்றனர். கடந்த 1970களில் இரு மொழிகளுக்கான ஒலி ஒற்றுமை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பிறகு தமிழ் அறிஞர்களும், ஜப்பானிய அறிஞர்களும் இரு மொழிகளின் ஒப்பீட்டு ஆய்வுகளை அவ்வப்போது செய்து வந்துள்ளனர். எனினும் பெருமளவில் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது இரு மொழிகளுக்கும் இடையிலான இலக்கண ஒற்றுமையை ஆராய்ந்து வருகிறார் ஜப்பானில் வசிக்கும் தமிழர் கமலகண்ணன் சண்முகம். "தமிழ் மொழிக்கும் கொரிய மொழிக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமைகள் குறித்து நிறைய ஒப்பீட்டு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஜப்பானிய மொழியுடன் ஒப்பிடும் ஆய்வுகள் நிறைய இல்லை. மூன்று மொழிகளையும் தெரிந்த அறிஞர்கள் இருந்தால், மேலும் சுவாரஸ்யமான ஒப்புமைகள் கிடைக்கும்," என்கிறார் கமலகணணன். நிலவின் பரப்பில் உள்ள மண், பாறை மூலமே அங்கு ஆக்ஸிஜன் உருவாக்க முடியுமா? டீப்சீக்: செயற்கை நுண்ணறிவு உலகில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு 'செக்' வைத்த சீன செயலி கே.எம்.செரியன்: இஸ்லாமிய பெண்ணுக்கு இந்துவின் இதயத்தை பொருத்திய கிறிஸ்தவர் கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை தமிழ்நாட்டில் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அவர், ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மொழியின் மீது கொண்ட ஆர்வத்தால் ஜப்பான் மொழியைக் கற்றுக்கொண்டு, பெரியாரின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட தமிழ் நூல்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். ஆறாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான ஜப்பானின் அரசர்கள் எழுதிய 100 செய்யுள்களை தமிழில் மொழிபெயர்த்து 'பழங்குறுநூறு' என்ற நூலாக வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் புலம்பெயர் தமிழர்களுக்கான விருதையும் அவர் சமீபத்தில் பெற்றுள்ளார். ஜப்பானிய மற்றும் தமிழ் மொழிகளைப் படிக்கும் போதே அவற்றின் ஒற்றுமை தெரியும் என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய கமலகண்ணன். "தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளுக்கான இலக்கணம் 90% ஒரே மாதிரியாக இருக்கும். இரு மொழிகளையும் படிக்கும்போதே நாம் அதை உணர முடியும். இரு மொழிகளின் வாக்கிய அமைப்பு ஒரே மாதிரியானதாக இருக்கும்" என்கிறார் அவர். வருமான வரி: பட்ஜெட்டில் அறிவித்த மாற்றங்கள் மூலம் யார் பயனடைவார்கள்?7 மணி நேரங்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி?1 பிப்ரவரி 2025 தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்குமான இலக்கண ஒற்றுமை தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்குமான இலக்கணத் தொடர்புகளில் முக்கியமான சிலவற்றைப் பற்றி கமலகண்ணன் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES வாக்கிய அமைப்பு வாக்கிய அமைப்பு இரு மொழிகளிலும் ஒரே மாதிரியானதாக இருக்கும், வாக்கியங்கள் வினைச் சொற்களில் முடியும். ஆங்கிலத்தில் I am eating an apple என்ற வாக்கியத்தை அதே வரிசையில் தமிழில் மொழிபெயர்த்தால், "நான் சாப்பிடுகிறேன் ஆப்பிள்" என்று எழுத வேண்டும். ஆனால், தமிழில் இந்த வாக்கியத்தை "நான் ஆப்பிளை சாப்பிடுகிறேன்" என்ற எழுதுவதே சரியாகும். இந்த வாக்கியம் "சாப்பிடுகிறேன்" என்ற வினைச் சொல்லுடன் முடிகிறது. ஜப்பானிய மொழியில் இந்த வாக்கியத்தை "வத்தாஷி வா ரிங்கோ ஒ தபேத்தே இமாசு (Watashi wa ringo o tabete imasu)" என்று மொழிபெயர்க்கலாம். இந்த வாக்கியத்தைப் பகுத்து பார்த்தால், தமிழை போன்று இருப்பதைக் காணலாம். நான் – watashi wa ஆப்பிள் - ringo ஐ - o சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் – tabete imasu மனித முகங்களைக் காண முடியாததால் சோகத்தில் வாடிய சூரிய மீன் - மீண்டும் புத்துணர்வு பெற வைத்த விநோத யோசனை24 ஜனவரி 2025 ஜப்பான்: 56 ஆண்டு கால போராட்டம்; தம்பியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய 91 வயது அக்கா16 ஜனவரி 2025 வார்த்தைக் கட்டமைப்பு படக்குறிப்பு, கமலகண்ணன் சண்முகம் தமிழில் 'செலுத்தப்படாததா' என்ற வார்த்தையைப் பிரித்து பார்த்தால், அது வினை, பிறவினை, செயபாட்டு வினை, எதிர்மறை, வினாவெழுத்து ஆகிய ஐந்து இலக்கணக் கூறுகளைக் கொண்டிருக்கும். ஜப்பானிய மொழியிலும் இதே கூறுகள் கொண்டதாக இந்த வார்த்தை உள்ளது. இது, இந்த வார்த்தைக்கு மட்டுமானது அல்ல. இரு மொழிகளின் வார்த்தைக் கட்டமைப்பில் உள்ள ஒற்றுமையைக் குறிக்கிறது. செல்(தமிழில்) – வினை – இகு(ஜப்பானிய மொழி) செலுத்த(தமிழில்) - பிறவினை (அதாவது விஷயம் அல்லது ஒருவரை வேறொரு விஷயம் அல்லது ஒருவர் செய்யச் செய்தல் என்று பொருள்) – இக சே(ஜப்பானிய மொழி) செலுத்தப்பட(தமிழில்) - செயபாட்டு வினை – இக சே ராரே(ஜப்பானிய மொழி) செலுத்தப்படாத(தமிழில்) – எதிர்மறை – இக சே ராரே நய்(ஜப்பானிய மொழி) செலுத்தப்படாததா?(தமிழில்) – வினாவெழுத்து- இக சே ராரே நய் கா(ஜப்பானிய மொழி) தமிழில் கேள்வியைக் குறிக்கும் வினா எழுத்து கடைசியில் வருவது போலவே ஜப்பானிய மொழியிலும் கடைசியில் வருகிறது. யாரை பழிவாங்க இவர்கள் இரவு 2 மணி வரை கண் விழிக்கிறார்கள்? ஆண், பெண்ணில் என்ன மாற்றம் நிகழும்?15 ஜனவரி 2025 நீரிழிவு நோயாளிகள் 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனை செய்வது அவசியம் ஏன்?12 ஜனவரி 2025 பயன்பாட்டு ஒற்றுமை பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு வார்த்தையை நாம் தமிழில் எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதே போல ஜப்பானிய மொழியிலும் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். உதாரணமாக 'பார்' என்ற வார்த்தை எந்தெந்த பொருள்களில் தமிழில் பயன்படுத்தப்படுகிறதோ அதே போலவே 'மிரு' என்ற சொல் ஜப்பானிய மொழியில் பயன்படுத்தப்படுகிறது. 'கேள்' என்ற சொல்லுக்கு தமிழில் கேள்வி கேட்பது, பாடல் கேட்பது, ஒருவரின் வார்த்தைகளின்படி நடப்பது எனப் பல்வேறு பயன்பாடுகள் உள்ளன. இவற்றுக்கு ஆங்கிலத்தில் ask , listen, hear என வெவ்வேறு வார்த்தைகள் உள்ளன. ஆனால் ஜப்பானிய மொழியில் தமிழ் போலவே 'கிகு' என்ற ஒரே சொல் பயன்படுத்தப்படுகிறது. கேள்வி கேள்(தமிழில்) – ask – கிகு(ஜப்பானிய மொழி) உரையைக் கேள்(தமிழில்) –listen – கிகு(ஜப்பானிய மொழி) ஒலியைக் கேள்(தமிழில்)-hear- கிகு(ஜப்பானிய மொழி) அதே போன்று 'பார்' என்ற தமிழ் சொல்லுக்கு இணையாக 'மிரு' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. பூவைப் பார்(தமிழில்) – see – மிரு(ஜப்பானிய மொழி) படத்தைப் பார்(தமிழில்) - watch – மிரு(ஜப்பானிய மொழி) உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்?30 ஜனவரி 2025 சென்னை போல 4 மடங்கு பெரிய பிரமாண்ட பனிப்பாறை ஒரு தீவின் மீது மோதும் அபாயம் - என்ன நடக்கும்?27 ஜனவரி 2025 எண்களைக் குறிப்பதிலும் ஒற்றுமை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னையில் ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருவதாக மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர் தமிழிலும் ஜப்பானிய மொழியிலும் எண்களைக் குறிக்கும் விதத்திலும் ஒற்றுமைகள் உள்ளன. உதாரணமாக பதினொன்று என்பது பத்து + ஒன்று ஆகும். அதேபோல ஜப்பானிய மொழியில் ஜூ (பத்து) + இச்சி (ஒன்று) எனப்படும். அதே மாதிரி பன்னிரண்டு – பத்து + இரண்டு என்று எழுதுவது போல, ஜப்பானிய மொழியில் ஜூ (பத்து) + நி (இரண்டு) எனப்படும். இதே ஆங்கிலத்திலும் வட மொழியிலும் வெவ்வேறாக இருக்கும். வேற்றுமை உருபுகளைப் பொறுத்தவரையிலும்கூட, தமிழில் இருக்கும் ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகியவற்றுக்கு இணையாக ஜப்பானிய மொழியில் வேற்றுமை உருபுகள் உள்ளன. தமிழ் மூலம் ஜப்பானிய மொழியை அறியலாம் "தமிழில் ஒரு வாக்கியத்தை எப்படி எழுதுகிறோமா, அதே மாதிரி ஜப்பானிய மொழியிலும் எழுதிவிடலாம். உதாரணமாக 'கண்ணன் கடைக்குச் சென்றான்' என்ற வாக்கியத்தை ஜப்பானிய மொழியில் உள்ள 'க்கு' இணையான வேற்றுமை உருபைப் பயன்படுத்தி அதேபோல எழுதிவிடலாம். எனவே தமிழர்களுக்கு ஜப்பானிய மொழி கற்றுக் கொள்வது எளிதாக இருக்கிறது" என்கிறார் தமிழ் மொழியை ஜப்பானிய மொழி மூலமும், ஜப்பானிய மொழியை தமிழ் மொழி மூலமும் 25 ஆண்டுகளாக கற்றுக் கொடுத்து வரும் சென்னையில் வசிக்கும் டாக்டர் வி.கணேசன். "நான் கடைக்குப் போகிறேன்' என்ற வாக்கியத்தில் அப்படியே ஜப்பானிய சொற்களைக் கொண்டு மாற்றி எழுதினாலே அது சரியாக இருக்கும். இதுவே ஆங்கிலத்தில் அப்படி எழுத முடியாது" என்கிறார் அவர். "பல வார்த்தைகள் தமிழிலும் ஜப்பானிய மொழியிலும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. தமிழ் தெரிந்தவர்களுக்கு ஜப்பானிய மொழி கற்றுக் கொள்வது மிகவும் எளிதாக இருக்கும். உதாரணத்துக்கு தமிழில் 'காரம்' என்பதற்கு ஜப்பானிய மொழியில் 'கராய்' என்று சொல்லப்படுகிறது. அதே போன்று 'அண்ணன்' என்பதற்கு 'அனி' என்று சொல்லப்படுகிறது. இது போன்று நூற்றுக்கணக்கான வார்த்தைகள் உள்ளன," என்று விளக்கும் கணேசன், ஜப்பானிய மொழியைப் பொறுத்தவரை அதன் எழுத்துகளைக் கற்றுக் கொள்வதே கடினமாக இருக்கும் என்கிறார். 'உலகிலேயே முதன் முதலில் தமிழ்நாட்டில்தான் இரும்பு பயன்பாடு தொடங்கியது' - இரும்புக் காலம் ஏன் முக்கியம்?25 ஜனவரி 2025 ஈர்ப்பு விசை விதிகளை மீறும் கல் சிற்பக் கலையில் அசத்தும் மகாராஷ்டிரா இளைஞர்24 ஜனவரி 2025 படக்குறிப்பு, டாக்டர் வி கணேசகணேசன் "ஜப்பானிய மொழியில் மூன்று விதமான எழுத்துகள் இருப்பதால், அதன் எழுத்துகளை அறிந்துகொள்வது சற்று கடினமாக இருக்கலாம். ஜப்பானிய மொழி வேற்று மொழிகளில் இருந்து பெறப்பட்ட வார்த்தைகளை எழுதத் தனியாக எழுத்துகளைக் கொண்டுள்ளது." என்கிறார். ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ள அவர், தமிழின் கதைகளிலும் ஜப்பானிய கதைகளிலும் கருப்பொருள்கள் ஒன்று போலவே இருப்பதாகக் கூறுகிறார். "தமிழ்நாடு, ஜப்பான் இடையே கலாசார ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. நாட்டுப்புறக் கதைகள் மக்களின் வாழ்க்கை முறை, நீதி ஆகியவற்றைச் சொல்லும் கதைகளாக இருக்கின்றன. காஞ்சிபுரத்தை மிகவும் முக்கியமான ஆன்மீக தலமாகக் கருதும் ஜப்பானியர்கள் உள்ளனர்." ஜப்பான் மொழி கற்றுக் கொள்வதற்கான ஆர்வம் தமிழர்களிடம் அதிகமாக இருப்பதாக டாக்டர் கணேசன் தெரிவிக்கிறார். "ஜப்பானில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாகி வருகின்றன. சென்னையைச் சுற்றி 450 ஜப்பானிய நிறுவனங்கள் உள்ளன. ஏனெனில், ஜப்பான் நாட்டவர் சென்னையில் வந்து வசிக்கும்போது அவர்களுக்கும் தமிழ் மொழி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது" என்கிறார். தமிழ்-ஜப்பானிய மொழிகளின் ஒப்பீடு குறித்த ஆய்வுகள் 'தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்குமான ஒலி ஒற்றுமை (Sound correspondences between Tamil and Japanese)' என்ற நூலை டாக்டர் சுசுமு ஒஹ்னோ எழுதியுள்ளார். கடந்த 1979ஆம் ஆண்டு ஜப்பானில் வெளிவந்த இந்த நூலை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பு செய்திருந்தது. ஜப்பானிய மொழி அறிஞரான அவர், சென்னை பல்கலைகழகத்தில் 1979ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை தமிழ் மொழி, அதன் மொழியியல், திராவிட மொழியியல் ஆகியவற்றைப் பயின்றார். அவரது ஆய்வுகளில், தமிழ் - ஜப்பானிய மொழி ஒப்புமையில் முக்கிய ஆய்வாகக் கருதப்படுகிறது. சென்னை பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பொன்.கோதண்டராமன் இரு மொழிகளின் ஒப்பீட்டு ஆய்வை வெளியிட்டுள்ளார். இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்த மனோன்மணி சண்முகதாஸ் இரு மொழிகளுக்கும் இடையிலான இலக்கணத் தொடர்புகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். 'நம்புவது கடினம்': 6 வயதிலேயே பருவமடையும் பெண்கள் - என்ன காரணம்?24 ஜனவரி 2025 வயதாக ஆக ஆரோக்கியம் கூடும் அதிசய மீனுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து என்ன?23 ஜனவரி 2025 தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்குமான தொடர்புகளுக்கு காரணம் என்ன? புத்த மத பரவல் தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்குமான தொடர்புகளுக்குக் காரணமாக இருப்பதாகக் கூறுகிறார் கமலகண்ணன். "தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலும் ஜப்பானில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியிலும் உள்ள பொருட்கள் ஒரே மாதிரியானவையாக இருந்தன. டம்ளர், ஈமச் சடங்குப் பொருட்கள் போன்றவை இரண்டிலும் கிடைத்தன. பேராசிரியர் சுசுமு ஒஹ்னோ தமிழின் சங்க இலக்கியங்களுக்கும் அதே காலகட்டத்தில் ஜப்பானிய மொழியில் வெளிவந்த இலக்கியங்களுக்கும் ஒற்றுமை இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்" என்கிறார் அவர். ஜப்பானிய மொழி, சீன மொழியைப் போல சித்திரங்களைக் கொண்டு எழுதப்பட்டாலும் இரண்டு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல என்று இரு மொழிகளுக்கும் இடையிலான ஒப்பீட்டு ஆய்வைச் செய்துள்ள, சென்னைப் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பொன். கோதண்டராமன் கூறுகிறார். அவர் எழுதிய நூலில், "சீன மொழியும் ஜப்பானிய மொழியும் ஒரே மூலத்தைக் கொண்டவை அல்ல. ஜப்பானிய மொழி வகைப்படுத்தப்படாத மொழியாகக் கருதப்பட்டது. ஜப்பானிய மொழியில் ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆவணங்கள் உள்ளன. ஜப்பானிய மொழியில் உள்ள 'மான்யோஷு' என்ற தொன்மையான பாடல் தொகுப்பு, தமிழில் உள்ள சங்க இலக்கியத்துடன் நெருங்கிய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்குமான ஒப்பீட்டு ஆய்வின் மூலம், திராவிட மொழிகளும் ஜப்பானிய மொழியும் ஒரே மூலத்தில் இருந்து வந்தவை என்று கூற முடியும். இரு மொழிகளுக்கும் இடையிலான தொடர்பு என்பது, ஒரு மொழி பிற மொழியிலிருந்து பெற்றுக்கொண்ட அம்சங்கள் எனக் கருத முடியாது. அதேபோன்று, அவை தற்செயலானவை என்றும் கருதிவிட முடியாது. அதற்குக் காரணம் இரு மொழிகளும் ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை என்ப்தே" என்றும் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce854x9gggno
  7. நானும் மாவையை விமர்சித்திருக்கிறேன்.அது சம்பந்தர்>சுமத்திரனின் ஆட்டத்திற்கு தலையாட்டிய காரணத்தால் மட்டுமே. மேலும் மாவை எல்லோரையும் அனுசரித்துப் போகக் கூடிய தலைவராக இருந்தார். 70 களில் தமிழர் விடுதலை சம்பந்தமாக பல பேராட்டங்களில் கலந்து கொண்டவர். இன்றைய அரசியல் தலைவர்களில் அதிக காலம் சிறையில் இருந்தவர் அவர் மட்டுமே. விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவருடைய பங்களிப்பு இருந்தது.சம்பந்தரைப்போல் எடுத்த எடுப்பிலேயே எம்பியாகவில்லை. அல்லது சுமத்திரன் போல் பேராட்டம் முடிவுக்குப் வந்தபின்னர் பின்கதவால் அரசியலுக்குள் நுழைந்தவருமல்ல. தமிழர் விடுதலைக்கூட்டணியின் உருவாக்கத்தின் பின் செயலற்ற நிலையில் இருந்த தமிழருச்கட்சியின் பதிவைத் தொடந்து பேணிவந்தவர் அதனால்தான் சமபந்தர் உதயசூரியன் சின்னத்தை முடக்கிய பொழுது புதிய சின்னத்திற்கு கால அவகாசம் கிடைக்காத நிலையில் தமிழரசுக்கட்சியை தூசுதட்டி எடுத்து தமித்தேசியக் கூட்டமைப்பின் சின்னமாகப் பயன்படுத்தினார்கள்.அப்படித் தமிழரசுக்கட்சியை கட்சியை கட்டிக்காத்த மாவையை தூக்கி எறிந்து விட்டு கட்சியைும் வழக்கில் மாட்டிவிட்ட சுமத்திரனின் துரோகத்தை தமிழர்கள் இலகுவில் மறக்க மாட்டார்கள். தமிழ்மக்கள் அமைதியாக எல்லாவற்றையும்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் யார்யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை அவர்கள் செயலில் காட்டுவார்கள். சம்பந்தர் மாவை இருவரினதும் இறுதிச்சடங்கை அவதானித்தாலே எல்லாம் புரியும்.
  8. அண்மையில் தம்பி இராமையா ஒரு பேட்டியில் கூறி இருந்தார், 27/02/2010 அன்று நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற கருணாநிதிக்கான பாராட்டு விழாவில், கருணாநிதியை ஆகோ, ஓகோ, வாழும் பெரியார் என புகழும் இந்த மேடை நாடகத்தை எழுதியவர் சீமான் என்று. முள்ளிவாய்க்கால் நடந்து கிட்டதட்ட ஓராண்டுக்கு பின் சீமான் கருணாநிதியை, அண்ணாவை, பெரியாரை எப்படி பாராட்டியுள்ளார் என பார்க்கவும். இதே சீமான் சொல்கிறார்ர் - 2008 முதல்தான் திராவிட எதிர்ப்பாம்.
  9. 👆இப்படி சங்கி-தம்பிகள் சொல்லுவது பொய். ஏன் என்றால் சங்கி-மானே 2009 க்கு பின் கருணாநிதியை, அண்ணாவை, பெரியாரை புகழ்ந்து மேடை நாடகம் எழுதியுள்ளார். (தம்பி இராமையா பேட்டியில் கடைசி 5 நிமிடங்களை பார்க்கவும்) நாடகம் இந்த திரியில். நிகழ்சியின் பெயர் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா 🤣🤣🤣. இதெல்லாம் மே 2009 க்கு பின்…. 2011 இல் சுப முத்துகுமார் ரோவினால் படுகொலை செய்யப்பட்டு…. சங்கிமான் ரோவின் பிடிக்குள் போவதற்கான இடைபட்ட காலத்தில் நடந்த கூத்துகள்.
  10. கலையாத கல்வியும் . .......! 🙏
  11. மகனும்... தந்தையும். அலுக்காமல் பார்க்கக் கூடிய... அழகிய படம்.
  12. இந்த கேள்விக்கு பதில். இலங்கை சட்டப்படி (இந்தியாவிலும் என நம்புகிறேன்) தமிழர் மரபுவழி திருமணம் (கோவிலில் வைத்து தாலி கட்டுவது) பதிவு திருமணத்துக்கு நிகராக ஏற்று கொள்ளப்படுவது. ஆகவே ஒரு தமிழர் பதிவு திருமணம் செய்ய முடியாதவிடத்து இந்த முறையில் திருமணம் செய்தாலும் அது சட்டபடி செல்லும். போரும் சமாதானமும் புத்தகம் இந்த திருமண சூழலை விபரிக்கிறது. மேலே கேணல் கிட்டுவிடம் கூட தலைவரின் மத நம்பிக்கை பற்றி கேட்கப்படுகிறது. ஜெகத் கஸ்பரிடம் கூட தலைவர் அவரே என்ன சொன்னார் என்பது நமக்கு தெரியும். எத்தனையோ சந்தர்பங்கள் இருந்தும் - அவர் ஒரு போதும் தன்னை இந்து/சைவர் என அடையாளப்படுத்தியதோ, ஒரு நாள் தன்னும் கோவிலுக்கு போய் அதை படம் பிடித்து வெளியிட்டதோ இல்லை. இது அவரின் தனிப்பட்ட மதம் சம்பந்தமான நிலைப்பாடு. ஆனால் அமைப்பாக இதைவிட சமயம் சாரா நிலையில்தான் புலிகள் இருந்தார்கள். மீண்டும் கேணல் கிட்டு சொல்வதை கேளுங்கள் - எனக்கு நம்பிக்கை குறைந்து கொண்டு போகிறது, ஆனால் நான் இப்போதும் சாமி கும்பிடுகிறேன், புலிகளில் உறுப்பினருக்கு தனி மனித மத சுதந்திரம் உள்ளது. ஆனால் ஒரு அமைப்பாக, எமக்கு கிறிஸ்தவமும், இந்து/சைவமும் அடக்குமுறையாளர் புகுத்திய மதங்கள். சுதந்திர தமிழீழத்தில் தனி மனித மதசுதந்திரம் மதிக்கப்படும் ஆனால் பிரச்சாரம் மூலம் அறிவூட்டல் நிகழ்த்தப்படும். இதுதான் ஒரு அமைப்பாக மதம் பற்றிய புலிகளின் நிலைப்பாடு. எப்போதும். பிகு இந்த பதில் உங்களுக்கும். தான் வாழ்நாள் பூராக ஆதரித்த இயக்கத்தின் அடிப்படை கொள்கை ஒன்றை பற்றிய தெளிவு இல்லாத நன்றி குறியிட்ட அண்ணைக்கும்.
  13. சம்பந்தர் மற்றவர்கள் போல் நெருக்கடியான கால கட்டத்தில் இறக்கவில்லை . அதை முதலில் புரிந்து கொள்ளுங்க இயல்பான நாளில் இறந்த ஒரு அரசியல் தலைவரை மக்களே இல்லாமல் அநாதை பிணம் போல் தகனம் செய்தார்கள் அதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட தமிழ் மக்களின் இறுதி மரியாதையும் பழி வாங்கலும் . ஆனால் அதே கட்சி தான் மாவையருக்கு தமிழ் மக்கள் கொடுத்த இறுதி மரியாதை பார்த்தீர்கள் தானே ? ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்றதை அவனின் இழவு வீடு சொல்லிவிடும் .
  14. ஆரியர்களையும் அதன் பார்ப்பனர்களையும் எதிர்ப்பவன் நான். ஐயர்களையும் அவர் தம் சமஸ்கிருதத்தையும் எதிர்ப்பவன் நான். திராவிடத்தை எதிர்க்க முக்கிய காரணம் அதன் தவறுகள். எனவே நான் தமிழனாகவே இருக்க விரும்புகின்றேன். அதிலும் சைவத்தமிழனாக பெருமிதம் அடைகின்றேன். ஆரியமோ திராவிடமோ எம் அழிவுகளை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. முயற்சிக்கவும் இல்லை.மகிந்தவுடன் தட்டு மாற்றிக்கொண்டதை தவிர வேறேதுமில்லை.
  15. புலிக்கொடியை பெரியார் - பிரபாகரன் என்று தமிழக மக்களைப் பிளவுபடுத்தி தங்கள் சுயநல உள்ளூர் அரசியலுக்கு சீமானின் நாம் தமிழர் கட்சி பாவிப்பதை தடுக்கமுடியாமல் அதற்கு ஒரு முட்டுக்கொடுப்பு வேறு. புலிகளின் அடையாளங்களை வைத்து பிழைப்பு நடாத்துவோரிடம் இருந்து வேறு எதனை எதிர்பார்க்கமுடியும்?😡 புலிகளின் தத்துவத்தை அடுத்த சந்ததிகளுக்கு கடத்த ஈழத்தமிழருக்கும், புலம்பெயர் ஈழத் தமிழருக்கும் இயலவில்லையா? தூய்மையான இனம் என்று வெறுப்பரசியல் செய்யும் சீமானிடம் புலிக்கொடியை குத்தகைக்குக் கொடுத்துவிட்டதால் சீமானைக் கழுவி ஊத்தமுடியாதுதான்.
  16. இப்பேட்டியில் தமிழர்கள் திராவிடர்கள் என்று கிட்டு கூறியுள்ளதுடன் பெரியாரையும் பாராட்டியுள்ளார்.
  17. தில்லை ஐயாவின் அசாத்தியமான எழுதுதும் வீதம் கண்டு நான் வியக்காத நாளில்லை. எனக்குள் நான் ஒரு speed reader என்ற தற்பெருமை இருந்தது - என் வாசிக்கும் கதியை விட தான் வேகமாக எழுதுவேன் என காட்டி அதை சுக்கலாக்கியவர், எழுதும் இயந்திரம் ஐயா. யாழுக்கு அண்மையில் வந்து சேர்ந்த இன்னுமொரு பொக்கிசம்.
  18. இலக்கில்லா சிறுகுருவி ------------------------------------- இந்த குருவியை எழுத எழுத என்று நினைத்து எழுதாமலேயே போய்க் கொண்டிருக்கின்றேன் இது ஒரு சின்ன சிட்டுக் குருவி தான் கொய்யா மரத்தின் கீழ் கொப்பில் நின்று அப்படியே பறந்து முருங்கையின் ஒரு கொப்பிற்கு அது போகின்றது அங்கிருந்து கண்ணாடி யன்னலில் பாய்ந்து அப்படியே அது சறுக்கி கீழே விழுகின்றது எழும்பி அது மீண்டும் பறந்து கொய்யா மரம் போகின்றது இப்படியே செய்து கொண்டு இடையிடையே நின்று செட்டைகளை விரித்து நீவி விடுகின்றது தன் வாலையும் அப்பப்ப ஆட்டிக் கொள்கின்றது அதையும் இழுத்து நீவியும் விடுகின்றது சில நேரங்களில் காற்றுப் போன ஒரு சின்ன பலூன் போல ஒரு உருண்டையாகி கண்களை மூடி தியானத்தில் இருக்கின்றது திடீரென பாய்ந்து மண்ணைக் கொத்தி எதையோ சாப்பிடுகின்றது பொழுது செக்கலாகி சிவந்து கறுக்க அது எங்கோ போய் விடுகின்றது வானத்தில் வெகு மேலே உச்சத்தில் கழுகுகள் ஒரு சோடியாக ஓய்வே இல்லாமல் வட்டம் போட்டபடியே சுற்றிக் கொண்டிருக்கின்றன.
  19. ஓம் நான் அந்தப் பருந்துகளைப் பற்றி யோசிச்சனான், ஆனால் குருவிகளே மனம் முழுதும் ஆக்கிரமித்து விட்டன. நாம இலக்கில்லாமல் இருந்திட்டுப் போவம் 🤣.
  20. சென் ஜோன்ஸ் பெடியள் சப்பாத்தோட பிறந்தவங்கள்🤣. மாட்டு வண்டியும் சப்பாத்து போட்டுத்தான் ஓடினார்களோ🤣
  21. புலிகள் பகுத்தறிவாளர்கள் என யாரும் எப்போதும் கூறவில்லை. அவர்கள் மதசார்பின்மையாளர்கள். Rationalism வேறு secularism வேறு. இது மீண்டும் நான் என்ன ஆயுத்தை எடுப்பது என்பதை என் எதிரி தீர்மானிக்கிறான் என்ற தலைவரின் விருப்பமான மேற்கோளின் படி அமைகிறது. பெரியாரின் எதிரி - பிராமணியம் அது மதத்தை, வேதத்தை தன் ஆயுதமாக்கியது. அதை எதிர்க்க பெரியார் கடவுள் மறுப்பை கையில் எடுத்தார். தலைவரின் எதிரி - பெளத்த-சிங்கள பேரினவாதம் - அதன் ஆயுதம் சமயம்சேர்-இன அடையாளம் - எனவே அதன் எதிர் ஆயுதமாக தலைவர் சமயம் சாரா தமிழ் இன அடையாளத்தை நிறுத்தினார். பிகு கடவுள் விடயத்தில் என்னை விபரிக்க ஓரளவு தோதான வார்த்தை agnostic . நிச்சயமாக நான் கடவுள் மறுப்பாளனோ, பகுத்தறிவுவாதியோ அல்ல. இந்த நிலைப்பாடு கூட பெரியாரை அல்லது தலைவரை பார்த்து வந்தது அல்ல. அது தானாக வந்தது.
  22. தலைவர் கோவிலுக்கு போனார் என்ற ஊக கதைகளுக்கு அப்பால் (அவரிடம் நேரடியாக கஸ்பர் கேட்ட போது அவர்தான் ஒரு இயற்கைவாதி என்பதை மட்டுமே கூறினார் / நான் தாந்தோறி ஈஸ்வரனின் பக்தன் என கூறவில்லை) புலிகள் இயக்கத்துள் தனி மனித மத வழிபாட்டு சுதந்திரம் இருந்தது. ஆனால் அமைப்புக்குள் மதம் இருந்ததில்லை. பல சண்டை கொப்பிகள் பார்த்திருபீர்கள் - எந்த சண்டைக்கும் முன் உறுதிமொழி எடுத்தல், தாக்குதல் திட்ட விளக்கம் தளபதிகள் பேச்சு மட்டுமே இருக்கும். கோவிலில் போய் அர்ச்சனை செய்வதும் இல்லை ஐயர் வந்து நூல் கட்டுவதும் இல்லை. ஆனால் இலங்கை படைகள் பிக்குவை கூப்பிட்டு பிரித் ஓதுவார்கள். தளபதிகள் கையில் ஒரு நூல் கடையையே சுத்தி கொள்வார்கள்.
  23. ❤️.................... மிக்க நன்றி. ஆயத்தமாகி விடுகின்றோம்.................👍.
  24. கெலி வந்து இடம் வலம் என்று மாறிமாறி போய் விமானத்தில் முட்டியதைப் பார்த்தால் சந்தேகமாகவே இருக்கிறது. எலானின் அறிவுரையில் பல வேலைத் திட்டங்கள் நடக்குது. இருவரும் சேர்ந்து தளம்பப் போகிறார்கள் போல. குடியேறிகளை நாடு கடத்துவதற்கு எதிராக பல மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் @ரசோதரன் @நீர்வேலியான் இருவரும் களத்தில் உள்ளார்கள்.
  25. @kandiah Thillaivinayagalingam தில்லை ஐயா இங்கு களத்தில் மிகவும் பயனுள்ள, சிந்திக்கத் தூண்டும், தெளிவைக் கொடுக்கும் கட்டுரைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றார். அவர் எழுதியதில் ஒன்று - 'சோதிடமும் அசட்டு நம்பிக்கையும்'. இதே போலவே 'பண்டைய தமிழர்களின் மூட நம்பிக்கைகள்' என்ற தலைப்பில் பல கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கின்றார். அவைகளில் பல இன்றும் தொடருகின்றது, இன்றைய தமிழர்களின் மூட நம்பிக்கைகளாக, என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. மோகன் அண்ணாவும் இந்தக் கட்டுரைகளை 'Our Picks' என்ற தெரிவில் சரியாக முதன்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றார். மாற்றுச் சிந்தனைகள், வேறு நம்பிக்கைகள் உள்ளவர்களும் வாசிக்க வேண்டிய ஆக்கங்கள் இவை. உதாரணமாக, சில மாதங்களின் முன், இங்கு களத்தில் ஒரு பால் திருமணம் பற்றிய ஒரு உரையாடலில் தில்லை ஐயா நீண்ட விளக்கங்களை கொடுத்திருந்தார். அவருடைய கருத்துகளுடன் முற்று முழுதாக ஒத்துப் போக முடியாவிட்டாலும், பல விடயங்களை அவருடைய எழுத்தில் இருந்து அறியமுடிந்தது...............
  26. 03 Feb, 2025 | 02:58 PM அமெரிக்காவின் தேசிய கீதமிசைக்கப்பட்டவேளை உரத்து கூச்சலிட்டுள்ள கனடாவின் ஹொக்கி இரசிகர்கள் தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை கொள்வனவு செய்யப்போவதாக உறுதிமொழியெடுத்துள்ளனர். ஒட்டாவாவில் அமெரிக்க கனடா ஹொக்கி அணிகளிற்கு இடையிலான போட்டியின் போது அமெரிக்க தேசியகீதம் இசைக்கப்பட்டவேளை கனடா ரசிகர்கள் உரத்த குரலில் கூச்சலிட்டுள்ளனர். கனடாவிற்கு எதிராக டிரம்ப் வரிகளை அறிவித்து ஒரு சில மணித்தியாலங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரு நாடுகளினதும் அணிகளிற்கும்இடையில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியின் போதும் கனடா ரசிகர்கள் அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை கூச்சலிட்டுள்ளனர். வழமையாக அமைதியான முறையில் நடந்துகொள்ளும் கனடா ரசிகர்கள் கூச்சலிட்டு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளமை,டிரம்பின் வரிகள் குறித்து அவர்கள் அதிருப்தியடைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றது என பிபிசி தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு கனடா ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களிற்கும் டிரம்ப் விதித்துள்ள ஏற்றுமதி செவ்வாய்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றது. வலுச்சக்தி பொருட்களிற்கு டிரம்ப் பத்துவீத வரியை விதித்துள்ளார். இந்த வரிகள் அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் எச்சரித்துள்ள பொருளாதார நிபுணர்கள் இந்த வரிகள் பல மாதங்களிற்கு தொடர்ந்தால் அமெரிக்கா பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளவேண்டிவரும் என தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியின் இந்த வரிகள் குறித்த சீற்றம் கனடாவில் அதிகரித்து வருகின்றது அதேவேளை அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து போராடவேண்டும் என்ற மனோநிலையும் காணப்படுகின்றது. கனடா பிரதமர் இந்த மனோநிலையை வெளிப்படுத்தியுள்ளார். எங்களில் பலர் இந்த புதிய வரிகளால் பாதிக்கப்படுவோம்,சில கடினமான காலங்களை நாங்கள் எதிர்கொள்வோம்,ஏனையவர்கள் குறித்து அக்கறை கொண்டு செயற்படுங்கள் என நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன் என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் தற்போது கனடாவை தெரிவு செய்யும் தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கியப்படுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை கனடாவின் சிலர் ஏற்கனவே செவிமடுத்துள்ளனர். கனடாவின் சமூக ஊடகங்களில் அமெரிக்க பொருட்களை எவ்வாறு தவிர்ப்பது என்ற வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளன. சிலர் அமெரிக்காவிற்கான பயணங்களை இரத்து செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர். டிரம்பின் வரிவிதிப்பினால் கனடாவில் சீற்றம் - அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை கூச்சல் | Virakesari.lk
  27. கடந்த வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம் பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலில்... தமிழரசு கட்சியை சேர்ந்த சிறிதரன், சி.வி.கே.சிவஞானம் போன்றோரும் கலந்து கொண்டார்கள். அவர்கள் எதிர்த்து குரல் கொடுக்காததால்... தையிட்டி விகாரையை தமிழரசு கட்சி வரவேற்கின்றதா? இவ்வளவு தூரம் கட்டிய விகாரையை, இடிக்க மாட்டார்கள் என்று குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும். ஆனால் கஜேந்திரமாருக்கு தமது தார்மீக ஆதரவை வழங்கி, தமது எதிர்ப்பை ஜனாதிபதிக்கு முன் பதிவு செய்யாமல் விட்டது மாபெரும் தவறு. தமிழனின் பொது விடயத்தில் ஒன்றாக நிற்க முடியாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழனின் சாபக்கேடுகள்.
  28. தற்போதய தாராள மய பொருளாதார கொள்கைக்கு வழி வகுத்த பிரட்டன் வூட் தீர்மானத்திற்கு முன்னர் இவ்வாறு ஏட்டிக்கு போட்டியாக நிகழ்த்திய வர்த்தக போர் 1930 இதுவரை காலமும் சந்திராத பொருளாதார பேரிடரினை உருவாக்கியது. அப்பொது உலக வர்த்தகத்தில் முதன்மை பங்காளியான அமெரிக்கா இருந்தது (20% களில் இருந்ததாக நினைவுள்ளது 27%?) தற்போதய நிலை முற்றிலும் மாற்பட்டுள்ளது. அமெரிக்கா அப்போது ஏற்றுமதி இறக்குமதி இரண்டிலும் அதிகளவில் ஈடுபட்ட நாடு தற்போது ஏற்றுமதியில் சீனா முன்னிலை வகிக்க அமெரிக்க தனது உற்பத்தியில் பெரும் பகுதியினை தானே பயன்படுத்துவதனால் அமெரிகாவிற்கு ஏற்றுமதி செய்பவர்களுக்குத்தான் நட்டம் அதிகம் இந்த ட்ரம்பின் வரி விதிப்பினால், ஆனால் அந்த நாடுகளும் பதிலுக்கு இறக்குமதி வரி விதித்தால்? தற்போதய பொருளாதாரம் வலய மயப்படுத்தப்பட்ட பொருளாதாரமாக மாற்றம் பெற்றுவிட்டது அதனால் ஐரோப்பிய ஒன்றியம் மத்திய கிழக்கு எரிபொருள் வழங்கள் மையங்கள் என, ஆனால் இந்த மையங்களினுடனும் அமெரிக்க அதிபர் போர் தொடுப்பதாக கூறுகின்றார். உக்கிரேன் இரஸ்சிய போரில் பொருளாதாரத்தினை ஆயுதமாக பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் இழுத்து விட்ட சனி தீர முன்னர் இன்னொரு உலக பொருளாதார பேரிடரை வரலாற்றில் இரண்டாவது தடவையாக உருவாக்க அமெரிக்கா முனைகிறது. இது மூழ்கிறவன் தன்னுடன் மற்றவனை இழுத்துக்கொண்டு மூழ்கும் திட்டம், இதனை உணர்ந்து நாடுகள் அமெரிக்க தவிர்த்த பொருளாதார நடைமுறை ஒன்றினை உருவாக்க மேலும் வலயமயப்படுத்தப்பட்ட பொருளாதார உலக கட்டமைப்பை உருவாக்க வேண்டும், வலய கட்டமைப்பு பொருளாதாரம், பொருளாதார வளர்ச்சிக்கு நெருக்கடியான ஒன்றாக இருந்தாலும் இவ்வாறான சட்டாம்பிள்ளைகளின் கையில் உலக பொருளாதாரம் சிக்கி சீரழிவதனை தடுக்கலாம்.
  29. பாரதியார் மரணமடைந்த பொழுது சாவு வீட்டில் இருந்தவர்கள் எத்தனை? பிரபாகரன் இறந்த பொழுது அவரின் மரண நிகழ்வு எப்படி நிகழ்ந்தது? மரண வீட்டுக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்றெல்லாம் கணக்கு எழுதி வரலாறு ஆட்களை ஞாபகம் வைப்பதில்லை
  30. புதிதாக இன்னொரு விளக்கமும் வந்திருகின்றது அதாவது கிட்டு கொல்டியாம்
  31. சைவம், மதம் தொடர்பான புலிகளின் உத்தியோக பூர்வ நிலைப்பாடு இது இல்லை. இங்கு ஈ வே ராமசாமிக்கு முட்டு குடுப்பதற்காக விடுதலைப் புலிகள் சைவத்திற்கு எதிரானவர்கள் என்று கிட்டுவின் காணொளியை கொண்டு திரிபவர்கள் தலைவரின் திருமணம் எங்கு நடந்தது என்று கூறுங்கள் பார்கலாம் 😀(இது யாருக்கோ.எவ்வளவோ சப்பைக்கட்டு கட்டி போட்டம் இதுக்கு கட்டமாட்டமா?)😀
  32. ஆமென். மிளகு தூக்கலாக.
  33. தடிமல் காய்ச்சலுக்கு கோழி சூப் சுடச்சுட குடித்தாலும் உடல் அமைதிப்படும். சொந்த அனுபவமாக்கும்.🙂
  34. உங்களுக்கு கொஞ்சம் வருத்தம் தானே..இப்படி ஏதாவது செய்து தரச் சொல்லி சாப்பிட்டு பாருங்கள்..கொஞ்சம் காச்சல், தடுமலுக்கு வித்தியாசமாக இருக்கும்..எனக்கு தெரியும் நீங்கள் மச்சம் ஒண்ணுமே சாப்பிடுறது இல்லை என்று, ஆக்கம் ஒன்றில் படித்திருக்கிறேன்.வருத்தமான நேரத்தில் ஏதாவது சாப்பிடலாம் தானே.பிளீஸ்.
  35. கடலிலே தனிமையில் போனாலும்.. கண்மணி உன் நினைவில் களைப்பாறுவேன்.. அலைகளில் தத்தளித்தாலும்.. உன் நினைவில் முக்குளிப்பேனே.. அடியே அமுதே இதுவே போதும்.. சிட்டு நீ... காதோரம் சேர்க்காதோ காத்து.. நித்தம் உனை காணாது.. நித்திரையும் தோணாது.. சித்திரமே முத்து ரதமே.. எட்டி எட்டி போனாலும்.. கெட்டு மனம் போகாது.. அற்புதமே அன்னக்கிளியே..
  36. மாவையின் உடல் தகன மயானத்தில் தடை விதிக்கப்பட்ட 19 நபர்கள்: சர்ச்சையை கிளப்பிய பதாகை By Sajithra 11 hours ago இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பதாகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அந்த பதாகையில், மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசுக் துரோகிகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mavai-death-ban-poster-showed-up-1738493675
  37. வடகிழக்கு தமிழர் களுக்காக 7 வருடத்துக்கு மேல் சிறையில் இருந்த ஒரு தமிழ் அரசியல்வாதியை உங்களால் சுட்டி காட்ட முடியுமா ? அனாதை பிணமாக சம்மந்தர் போனது போலத்தான் சுமத்திரன் இறந்தாலும் என்ன கொஞ்ச சிங்கள இனவெறியர்கள் சுமத்திரன் பிணத்துக்கு காவல் காப்பார்கள் அவ்வளவுதான் 😀
  38. ஞானப்பற்கள் 4 என்று உள்ளதே! கணக்குப் பிழைக்கிறதே?😳
  39. நன்றி….. இது ஒரு வரலாற்று ஆவணம். @நன்னிச் சோழன் பார்வைக்கு. ————- இங்கே இரு வருடங்கள் முன் புலிகளின் மதம் சாரா கொள்கை நிலைப்பாட்டை நான் கருத்தாக எடுத்து சொல்லியபோது @குமாரசாமி அண்ணை உட்பட பலர் அது அப்படியில்லை என்றார்கள். புலிகள் இனவாத அரசுக்கு எதிராக மட்டுமே போராடினார்கள், சாதி மதம் இட்டு போராடவில்லை என அவர்களின் பல்பரிமாண போராட்டத்தை ஒற்றை பரிமாண போராட்டமாக சுருக்கினார்கள். குறிப்பாக தலைவரின் மத நம்பிக்கை அற்றதன்மையை, அவர் இயற்கையைதான் எப்போதும் உயர் சக்தியாக சுட்டினார் என சொன்ன போது @MEERA அதை மறுத்தார். அதே போல் புலிகள் பெரியார் மீதும் அவர் சாதித்த விடயங்கள் பற்றியும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்கள் என நான் எழுதியபோதெல்லாம், @Nathamuni போன்றோர் அதை மறுத்துரைத்தனர். இந்த பாதி-உண்மைகள், பொய்கள் எல்லாவறின் மீதும் சம்மட்டியடிகாக வீழ்ந்துள்ளது கேணல் கிட்டுவின் இந்த பேட்டி. 1989 இல் இந்தியாவிடனான போருக்கு பின், இலண்டனில் கொடுத்த பேட்டி இது. இதில் இந்து/சைவ மதம் எமது எதிரி, பெரியார் அதை மெட்டிராசோடு தடுத்தார் என சொல்லி விட்டு. நாம் திராவிடர்கள் எனவும் சொல்கிறார் கேணல் கிட்டு. அவர் இருக்கும் வரை தலைவருக்கு அடுத்து புலிகளின் குரல் என்றால் அது கேணல் கிட்டுதான். மேலே அவர் சொல்லியுள்ளதுதான் மதம், திராவிடம் பற்றிய புலிகளின் நிலைப்பாடு தொடக்கம் முதல் முடிவு வரை. கேணல் கிட்டுவை விட கொள்கை விடயத்தில் தாம் தான் புலிகளின் பேச்சாளர்கள் என கிளம்பி வரும் துணிவு இங்கே எவருக்கும் இல்லை என நினைக்கிறேன் (சொல்ல முடியாது). ——— @வீரப் பையன்26 உங்கள் புலிகளின் கொள்கை நிலைப்பாடு பற்றிய தேடலை வளர்க்க இது உதவலாம்.
  40. அக்காலத்தில் சோழ மன்னாகிய சுபதேவன் என்பான் தன் பட்டத்தரசி கமலவதி என்பவளுடன் திருத்தில்லை சார்ந்து கூத்தப்பெருமானை வழிபட்டிருந்தனன். நெடுங்காலமாக மக்கட் பேறில்லாத அவ்விருவரும் இறைவரை வழிபட்டுப் போற்றிய நிலையில் இறைவர் அவர்கட்கு அருள் புரிந்தார். அதன் பயனாகக் கமலவதி கருவுற்றாள். திருவானைக்காவிற் பெருமானுக்கு பந்தரிழைத்த சிலந்தி மகவாய்ச் சார்ந்தது. கருமுதிர்ந்து மகவு பெறும் வேளை வந்த போது, ‘இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறக்குமானால் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும்’ எனச் சோதிடர்கள் கூறினர். அவ்வாறு ஒருநாளிகை கழித்துப் பிறக்கும் படி என்காலைப் பிணித்துத் தலைகீழாக மேலே தூக்கி நிறுத்துங்கள்’ என்று சொல்ல அவ்வாறே செய்தனர். குறித்த வண்ணம் ஒரு நாளிகை கழித்து ஆண்குழந்தை பிறந்தது. கால நீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன, ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு ‘என் கோச் செங்கணானனே’ என அருமை தோன்ற அழைத்து உடனே உயிர் நீங்கினாள். மன்னன் தன் குழந்தையைத் தன் உயிரெனக் காத்து வளர்த்து உரிய பருவத்தில் நாடாள் வேந்தனாக முடிசூட்டித் தன் தவநெறியைச் சார்ந்து சிவலோகங் சார்ந்தான். https://ta.wikipedia.org/wiki/கோச்_செங்கட்_சோழ_நாயனார்
  41. தில்லை அண்ணா….உங்களின் இளைய மகளுக்கு, உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 🙏
  42. அதை நானும் கொஞ்சம் முன்புதான் பார்த்தேன் . ....... நன்றி பிரியன் . .......!
  43. உங்களின் பார்வையில் தவறு இல்லை, வசீ, அது இன்னொரு வகையானது என்று தான் சொல்லப்பட அல்லது வகைப்படுத்தப்பட வேண்டும். 'இப்படி எழுதும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது...........' என்று ராஜாஜி புதுமைப்பித்தனின் எழுத்துகள் குறித்து கேள்வி எழுப்பியதாகச் சொல்லப்படுகின்றது. 'சாபவிமோசனம்' கதையைப் படித்த பின்னர், அவருக்கு அப்படி தோன்றியது போல. ஆற்றில், நீரில் மிதந்து வரும் மனிதக் கழிவுகளுக்கு ஒப்பானது என்று சாருவின் எழுத்தை சொன்ன இலக்கியவாதிகளும் உண்டு. இன்றைய ஈழத்து படைப்பாளிகளில், முத்துலிங்கத்தை ஷோபா சக்தி ஏற்றுக்கொள்வதில்லை. இப்படியான பல உதாரணங்கள் உண்டு. எந்த நவீன படைப்புகளையுமே, படைப்பாளிகளையும் உலகம் ஒற்றுமையாக ஏற்றுக் கொள்ளாது போல. தமிழில் மொழிபெயர்ப்பில் இருக்கும் சிக்கல்கள் என்றுமே அப்படியே இருக்கின்றது. பெரும்பாலும், இரண்டு மொழிகளும் தெரிந்த, ஆனால் இலக்கியத்தில் பயிற்சி இல்லாதவர்களே மொழிபெயர்ப்பாளர்களாக இருப்பதே அதற்குக் காரணம். கோவிட் காலத்தில் 'அன்னா கரேனினா' இன் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு வாட்ஸ்அப் குழுமங்களில் வந்தது. அதைக் கொடுமை என்று சாதாரணமாக சொல்லிவிட்டுப் போக முடியாது, அது ஒரு பெரிய அவமதிப்பு என்றும் சொல்லவேண்டும். இந்த மொழிபெயர்ப்பாளார்கள் மூலப் பிரதியை உள்வாங்காமலேயே ஏதோ ஒன்றைச் செய்கின்றார்கள். நாளைய உலகை உருவாக்குபவர்கள் இன்று வாழ்பவர்களில் மிகமிகச் சிறிய ஒரு பகுதியினரே. இலக்கியவாதிகள், இலட்சியவாதிகளும் அதற்குள் வருகின்றனர் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகச்சரியே.
  44. அப்படிதான் நானும் நினைத்தேன், வாய் மூடி மௌனியாய் இருந்தேன், ஆனால் சீமான் போன்ற தகுதி அற்ற வாய்ச்சொல்லில் வீரர்கள் ஈழத்தமிழர் பெயரைச் சொல்லியே அங்கே அரசியல் செய்து எமது போராட்டம் மற்றும் எங்கள் மதிப்பை இழக்காரப்படுத்தும் பொழுதும், எங்களுக்காக உண்மையாகவே போராடிய வைகோ போன்ற தலைவர்களை விட தான் உயர்ந்தவர் என்று காட்டிக்கொள்ளும் பொழுதும் எப்படி இனிமேலும் அப்படியே இருப்பது? நாங்கள் இனியும் சீமான் போன்ற நாலாம்தர அரசியல் வாதிகளை எங்கள் பெயரைச் சொல்லி அங்கே கடிவாளம் அன்றி அரசியல் செய்ய அனுமதித்தால் அது அங்கே எங்களுக்காக மனமுவந்து போரடிய சிறை சென்ற,குடும்பத்தை கரை ஏற்ற முடியாமல்ப் போன,அரசியலில் தன் நிலையை இழந்த மனிதர்களுக்கும், தலைவர்களுக்கும் செய்யும் அவமரியாதை. இப்பொழுதும் நாம் அங்கே எந்த அரசியல் நிலைபாடும் எடுக்க வேண்டியதில்லை, ஆனால் அங்கே யார் எம்மை கேலிப்பொருள் ஆக்குகின்றார்களோ அவர்களின் உண்மை நிறத்தை வெளிக்கொணர வேண்டிய தேவை வந்துள்ளது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.