Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்18Points19123Posts -
putthan
கருத்துக்கள உறவுகள்8Points14676Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்8Points38756Posts -
Kandiah57
கருத்துக்கள உறவுகள்7Points4042Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/04/25 in Posts
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
மிக மோசமான வரலாற்று திரிப்பு. மூன்றரை ஆண்டுகளுக்கு முன் இதை பற்றி நான் யாழில் எழுதியது இன்னும் இருக்கிறது - தேடி வாசிக்கவும். நா.த.க குப்பாடிகளும், இன்னும் கொஞ்சம் பகிடி சொல்லும் “முள்ளம் பன்றி தலை” புலம்பெயர் குப்பாடிகளும் சேர்ந்து கருணாநிதி நினைவுநாளில் தேவையில்லாமல் கருணாநிதி தெலுங்கன், பிரபாகரந்தான் தமிழின தலைவன் என எழுதி… ஒரு வலிந்த சண்டையை மூட்டினர்… அதன் பிரதிபலனாக தேவையில்லாமல் புலிகளை பற்றிய விமர்சனமும், விமர்சன காணொளிகளும் இதுவரை அது பற்றி அறியாத தமிழ்நாட்டு மக்களிடம் எடுத்து செல்லப்பட்டது. இது சீமான்+ரோ விற்கு பலத்த வெற்றி. புலிகளை, போராட்டத்தை நேசிப்பவர்களுக்கு பலத்த தோல்வி. சீமான்+ரோ செய்யும் எதிர் புரட்சி மிக நூதனமானது …இதை இன்னும் சில அண்ணைமார் விளங்கி கொள்ளவில்லை என்பது புரிகிறது. எனக்கும் ஒரு அட்வான்ஸ் சிவப்பு பிளீஸ். நான் இன்னும் ஒரு படி மேலே போவேன்…. ஆதாரத்தோடு சீமான்+ரோ உறவை எடுத்து சொன்ன பின்னும், கார்த்தி, உருத்திரகுமார் இன்னும் பல சம்பந்தமில்லாதவர்கள் குரல் கொடுத்த பின்னும்… இன்னும் சீமானுக்கு முட்டு கொடுக்கும் இப்படியானவர்கள்… மூடர்கள் அல்ல… Addicts - போதைக்கு அடிமையானவர்கள்…. சீமான் புலிகொடியையிம், தலைவர் படத்தையிம் போட்டால் - இவர்கள் addiction க்கு அதுபோதும்.4 points
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற புலம்பெயர் அமைப்புக்கள் வாய் மூடி மெளனிகளாக இருப்பதனால் நாம் தமிழருக்கும் திமுகவும் இடையேயான உள்ளூர் அரசியலுக்கு தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோதவிட்டுள்ளனர். இந்த புலம்பெயர் அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாமையால்தான் சீமானின் அடிப்பொடிகள் தமக்கேற்றவாறு சமூக ஊடகங்களில் பதிவுகளையும், வீடியோக்களையும் பகிர்கின்றார்கள். பதிலுக்கு திமுக, பெரியார் சார்பானவர்கள் தலைவரையும், புலிகளையும் இழிவுபடுத்துகின்றனர். இந்த நிலைக்கு கொண்டுவந்த நாம் தமிழர் கட்சியையும், சீமானையும் இன்னமும் ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் உண்மையில் முழு மூடர்கள் அல்லது புலிகளின் சித்தாந்தத்தைக் கடத்துகின்றோம் என்று நம்பி அதனை அழிக்க துணைபோகின்றவர்கள். நாடு கடந்த தமிழீழ அரசு பெரிதாக எதனையும் கிழிக்கவில்லை என்றாலும், தமிழ்நாட்டு அரசியலில் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்தவேண்டாம் என்று அறிக்கை விட்டது நல்ல விடயம்தான்.4 points
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
ஓஓஓஓ அதுதான் சோதனை பெயிலோ? நல்லா படித்திருந்தா என்னை தூக்கிய மாதிரி உங்களையும் தூக்கி கொண்டு வந்து நாசாவில் விட்டிருப்பார்கள்.4 points
-
ஈழப்போரில் தமிழகம் செய்த உதவிகளின் பட்டியல்
எழுத்தாளர்: அறியில்லை. 10 July 2014 https://www.facebook.com/photo.php?fbid=392315390872120&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 1970 களில் இருந்து 1982 வரை புலிகள் இயக்கம் வளர ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழகம் அவர்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். அது தொடர்பான ஒரு விளக்கமான பதிவு. பழ.நெடுமாறன் அவர்களின் பங்களிப்பு முதன்மையானது: பலமுறை புலிகளுக்கும், தலைவருக்கும் உணவு, இடம் என பல ஆதரவுகளை வழங்கியவர். 25- 6- 82ல் உமாமகேசுவரனும் பிரபாகரனும் சென்னை பாண்டிபசாரில் மோதிய வழக்கில் அவர்கள் கைதாக, நெடுமாறன் வீட்டில் விசாரணை நடந்த போது "ஆமாம், அவர்கள் ஆயுதப் போராளிகள் என்று தெரிந்துதான் உதவினேன்; தமிழனாக நான் செய்த கடமைக்கு எந்த விளைவையும் சந்திக்க ஆயத்தமாயிருக்கிறேன்." என்று உறுதியாகக் கூறிவிட்டு அவர்களைப் பிணையில் எடுக்கப்போன போதுதான் தாம் உதவி வந்த இளைஞர்களில் ஒருவர்தான் பிரபாகரன் என்று தெரியவருகிறது. அந்த வழக்கை நடத்தி மதுரையில் தமது வீட்டிலும் தமது உறவினர்கள் வீட்டிலும் பிரபாகரன், ரகு, தங்கவேலாயுதம், அன்ரன், மாத்தையா, செல்லக்கிளி ஆகியோரைத் தங்கவைத்தவர். போராளிகளை பிடித்துச் செல்ல சிங்கள அரசு ஆளனுப்ப 1- 6 82 ல் 20கட்சிகளைக் கூட்டி தீர்மானம் போட்டு அதை பிரதமரான இந்திரா காந்திக்கு அனுப்பி போராளிகளைக் காத்தவர். கிட்டு, ரஞ்சன், பண்டிதர், சீலன், புலேந்திரன், பொன்னம்மான், இளங்குமரன் போன்ற முக்கிய போராளிகளை பாபநாசத்தில் தமது இல்லத்தில் மறைத்து வைத்தவர். மதுரையில் தமது வீட்டிலும் ஒன்றுவிட்ட தம்பி திரவியம் வீட்டிலும் பிரபாகரனைத் தங்கவைத்தவர். காங்கிரசு பிரமுகர் வி.கே.வேலு அம்பலம் என்பவர் வீட்டில் இளங்குமரன் மற்றும் தோழர்கள் தங்கவைத்தவர். தமது தம்பியின் மாமனார் ஊரான அவினாபுரியில் புலிகளுக்கு முகாம் அமைத்து தந்தவர். தமது தோழர் சந்திரபால் என்பவர் வீட்டில் சீலனுக்கு சிகிச்சை. உறவினர் பாண்டியன் என்பவர் வீட்டில் இந்திய-புலிகள் போரின்போது முக்கிய ஆவணங்களை மறைத்துவைத்தவர். பிரபாகரனின் தாய்தந்தையரை தம்மோடு வைத்துகொண்டவர். அ.அமிர்தலிங்கம் அவர்களுக்கும் பிரபாகரனுக்கும் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியையும் புலிகளையும் இணைக்க முயன்றவர். ரஞ்சன், பஷீர்/காகா, சந்தோசம், புலேந்திரன் ஆகியோருக்கு பிரபாகரன் தலைமையில் திருப்பங்குன்றம் அருகேயுள்ள காடுகளில் பயிற்சிக்கு உதவியவர். 1985ல் புலிகள் பாதுகாப்பில் ஈழத்தில் சுற்றுப்பயணம் செய்து தமிழர் நிலையை நேரடியாக 'சுதந்திரக் காற்று' என்ற பெயரில் ஆவணப்படமாக்கி இந்தியா முழுவதும் தடையை மீறித் திரையிட்டவர். 1983 ஜூலைக் கலவரம் நடந்தபோது 5000இளைஞர்களைத் திரட்டி மதுரையிலிருந்து மக்கள் பேராதரவுடன் நடை ஊர்வலமாக இராமேசுவரம் வந்து எவர் தடுத்தும் நிற்காமல் அங்கிருந்து பல படகுகளில் கடலில் ஈழம்நோக்கி பாதி தூரம் வந்து இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டவர். திலீபன் உண்ணோநோன்பிருந்தபோது நேரில் சென்றவர் . என இவரைப் பற்றி தனி புத்தகமே போடலாம்! இவை தவிர இன்னபிறரின் வெளித்தெரியா பங்களிப்புகள் பின்வருமாறு: 1970களிலேயே தமிழர் மாணவர் பேரவை நிறுவனர் சத்தியசீலன் போன்ற பல போராளிகளுக்கு உதவியதோடு நில்லாமல் ஆன்டன் பாலசிங்கம் மற்றும் புலிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அறைகள் வழங்கிய மத்திய இணையமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன். அந்த சமயத்தில் போராளிகளுக்கு அருகேயிருந்து உதவிய புலமைப்பித்தன். உமாமகேசுவரன் விடுதலைப் புலிகள் இயக்கப்பெயருக்கு உரிமைகொண்டாடியபோது அவரை சரிசெய்து புளட் இயக்கம் தோற்றுவிக்கக் காரணமாயிருந்த அருகோ (எழுகதிர் ஆசிரியர்). சென்னை தெற்குப்பகுதியில் கடற்கரைக்கு சற்று தொலைவில் உள்ள சவுக்குத் தோப்புகளில் புலிகள் பயிற்சிபெற உதவிய சென்னைத் தமிழர் பலர் (திருமதி.அடேல் பயிற்சி பெற்ற இடம்). டெலோ சிறீசபா ரத்தினம் சில பெண்களை பயிற்சிக்காக சென்னை அழைத்து வந்தபோது டெலோ இயக்கம் பெண் போராளிகள் மீது ஆர்வம் காட்டாதபோது சென்னையில் தாழ்த்தப்பட்ட கத்தோலிக்கர் அவர்களைப் புலிகளுடன் சேர்த்துவிட்டனர் (முதல் பெண்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்களில் சோதியா, சுகி, தீபா, இமெல்டா, வசந்தி போன்றோர் இதில் அடங்குவர்). 1984ல் திருவான்மியூரில் பெண் போராளிகளுடன் தங்கியிருந்த ( தொடர்ச்சி பின்னூட்டத்தில்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ப.மாணிக்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் என்.டி.வானமாமலை பிரபா-உமா வழக்கை நடத்தினார். அமைச்சர் காளிமுத்து பிரபாகரனுக்கு நேரடியாக பல உதவிகள் செய்தவர். மருத்துவக் கல்லூரி மாணவனான திண்டுக்கல் சந்திரன் தோழமையுடன் பிரபாகரனுக்கு பல உதவிகள் செய்தவர். நெடுமாறன் அவர்களின் தோழர்கள் மீனாட்சி சுந்தரம், ஜெயப்பிரகாசம், தமிழ்க்கூத்தன் ஆகியோரும் உள்ளூருக்குள் பல உதவிகள் செய்தனர். புலிகளின் இலச்சினையில் சில மாற்றங்கள் செய்து கொடியாக மாற்றி தந்த ஓவியர் நடராசன். புலிகளின் உடையை வடிவமைத்த மதுரை தங்கராசு. முதல் மாவீரன் சங்கருக்கு மதுரையில் தோட்டா நீக்கி சிகிச்சை போன்ற பல முக்கிய மருத்துவ உதவிகளைச் செய்த புலிகளுக்காகவே ரகசிமாக இயங்கிய மருத்துவமனையின் பொறுப்பாளர் மரு.என்.எஸ்.மூர்த்தி. இசைநிகழ்ச்சி நடத்தி புலிகளுக்கு நிதி திரட்ட உதவிய இளையராஜா. 1980ல் சீரணியரங்கில் முதன்முதலாக புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் கூட்டிய பழநி பாபா. 1995ல் யாழ்இடப்பெயர்வு மக்களை தமிழகம் ஏற்றுக்கொள்ள முதன்முதலாகத் தீக்குளித்த அப்துல் ரவூப். புலிகளுக்கும் தமிழக விடுதலை இயக்கங்களுக்கும் பாலமாக விளங்கிய அமரர் சுப.முத்துக்குமார். 2009ல் முத்துக்குமார் உட்பட தீக்குளித்த 17 ஈகிகள். ராஜீப் காந்திக்கு உயிருடன் இருக்கும் போதே அறம்பாடிய, தனுவுக்கு கவியாரம் சூட்டிய பெருஞ்சித்திரனார். Tகெ Hஇச்டொர்ய் ஒf Tகமிரபர்னி எனும் ஈழத்தமிழர்களின் வரலாற்றை எழுதிய, தனி ஈழத்துக்காக தீவிரமாகப் போராடிய, புலிகளால் மாமனிதர் பட்டம் அளிக்கப்பட்ட ஆ. இராசரத்தினத்துக்கு 1973லிருந்து கடைசிவரை அடைக்கலம் வழங்கிய திரு இரா.ஜனார்த்தனம் மற்றும் மணவைத்தம்பி. புலிகளின் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடித் தந்த தேனிசை செல்லப்பா. சிறுமலை என்ற ஊரில் பயிற்சிக்கு தன் இடத்தை வழங்கிய திண்டுக்கல் அழகிரிசாமி. அப்போது முகாமுக்கு உணவு வழங்கிய திண்டுக்கல் வணிகர் சங்கத் தலைவர் மணிமாறன். ஈழத்திற்கு சென்று மரணப்படுக்கையில் இருந்த பிரபாகரனின் தாயாரைப் பல தடைகளை மீறி சந்தித்த வழக்கறிஞர் அங்கயற்கண்ணி. 1986ல் சார்க் மாநாடு பெங்களூரில் நடைபெற்றபோது ஜெயவர்த்தனாவுக்கு ஆயிரக்கணக்கானோரோடு கறுப்புக்கொடி காட்டிய கர்நாடகத் தமிழ்ப்பேரவைப் பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம். 1996ல் புலிகளுக்கு ஜீப் வண்டி நன்கொடையளித்த பி.எல்.ராமசாமி (திராவிடர் கழகம்). இந்திய அமைதிப்படை அட்டூழியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க 1988ல் கொடைக்கானல் குண்டுவெடிப்பு நடத்தி சிறைசென்ற தோழர்.பொழிலன். அடேல் மீது தவறான சந்தேகத்தோடு கூடி வந்து தாக்க முற்பட்ட அந்தப் பகுதி தமிழர்கள். அங்கே பொன்னம்மான் தாங்கள் ஈழப்போராளிகள் என்று கைத்துப்பாக்கியை எடுத்துக்காட்ட மன்னிப்பு கேட்டு வருந்தியபடி கலைந்துசென்றனர். பாலா-அடேல் தங்கியிருந்த வீட்டில் குண்டுவெடித்தபோது அக்கம்பக்கத்து தமிழர்கள் வந்து நலம் விசாரித்தனர். வேறொரு இஸ்லாமியத் தமிழ்க்குடும்பம் துணிந்து வீடுகொடுத்தது. எம்ஜிஆர் காவல்துறையை முடுக்கிவிட காரணமானவர் இலங்கை அமைச்சர் லலித் அதுலத் முதலி என தெரியவர அவர்மீது வழக்குபோடவிடாமல் இந்திய அரசாங்கம் தடுத்துவிட்டது. பயிற்சிக்கு தமது சொந்த இடத்தைக் கொடுத்த கொளத்தூர் மணி. கொளத்தூரில் பயிற்சி நடந்தபோது 150 போராளிகளுக்கு மூன்று ஆண்டுகள் சகலதேவைகளையும் நிறைவேற்றியதோடு மட்டுமன்றி தம்மோடு பழகிய பொன்னம்மான் ஈழத்தில் இறந்தபோது நினைவிடம் அமைத்த கொளத்தூர் தமிழக மக்கள். அதே நேரத்தில் திருவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் உள்ள முகாமுக்கு உதவிகளனைத்தும் செய்த அப்பகுதி தமிழர். அமைச்சராக இருந்தபோது புலிகளுக்கு உதவியதால் 1992ல் தடா'வில் கைது செய்யப்பட்ட சுப்புலட்சுமி, அவரது கணவர் செகதீசன். கௌதமி, கலாராம், குமார் என்ற மூன்று ஊனமுற்ற ஈழவர் தடாவில் கைது செய்யப்பட்டபோது போராடி விடுதலை பெற்ற வழக்கறிஞர் கே.சந்துரு (தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி). பிரபாகரன், மாத்தையா உள்ளிட்ட முதல் பிரிவு இந்தியாவுக்கு பயிற்சிக்கு வந்தபோதும், இந்திய-இலங்கை-ஈழப்போராளிகள் பேச்சுவார்த்தையின் போதும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்த எஸ்.சந்திரசேகரன் (றோ உயரதிகாரி). புலிகளின் ஆயுதங்கள் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டபோதும், புலிகள் இந்தியாவிடம் பயிற்சி பெறவும் பல உதவிகள் செய்த தமிழக காவல்துறை உயரதிகாரி அலெக்சாண்டர். 1983ல் ஐநா பேரவைக் கூட்டத்தில் 70நாட்கள் பன்னாட்டு தலைவர்களுடன் பேசி, உரையாற்றி ஐநா பொதுச்செயலர் ஃபெரஸ் டி.கொய்லர் இலங்கை தமிழர் பிரச்சனை மனித உரிமை மீறல் தொடர்பானது என்று ஒப்புக்கொள்ளவைத்த பண்ருட்டி.ராமச்சந்திரன். 1985ல் திம்பு மாநாட்டில் ஈழ ஆயுதக்குழுக்கள் ஒன்றிணைந்ததைக் கெடுக்க இந்திய அரசு பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா ஆகியோரை நாட்டைவிட்டு வெளியேறச் சொன்னபோது பொங்கியெழுந்த தமிழகம் போராடி அதைத் தடுத்தது. கறுப்பு யூலையின்போது அதுவரை தமிழகத்தில் நடக்காத அளவு முழுஅடைப்பும், பல்வேறு போராட்டங்களும் நடந்தன. ராசீவ் காந்தியால் வெளியுறவுத்துறை அமைச்சரான ஏ.பி.வெங்கடேசன் தமிழர் ஆதரவு செயல்பாட்டால் பதவி விலக்கப்பட்டார். ஆலோசகரான ஜி.பார்த்த சாரதி தமிழர் ஆதரவு செயல்பாட்டினால் ஜெயவர்த்தனாவால் குற்றம்சாட்டப்பட்டு பதவி விலகினார். கவிஞர்.காசிஆனந்தனுக்கு ஆதரவும் அடைக்கலம் தந்துள்ளது தமிழகம். இந்திய அமைதிப் படை ஈழத்தில் நடத்திய கொடுமைகள் பற்றி புலிகள் வெளியிட்ட 'சாத்தானின் படைகள்' நூலுக்கு ஓவியம் வரைந்துகொடுத்ததற்காக இந்திய உளவுத்துறையால் கைது செய்யப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளான ஓவியர்.வசந்தன். ஈழ- இந்தியப் போரில் தப்பிவந்த அத்தனை பேருக்கும் தமிழகம் உதவியதுய (காட்டாக அப்போது பாலசிங்கம் தம்பதி தப்பி தமிழகம் வந்து வீட்டுக்காவலில் இருந்த கிட்டுவை சந்தித்துவிட்டு காலாவதியான கடவுச்சீட்டு மூலம் வேறு பெயரில் பயணச்சீட்டு எடுத்து சென்னையிலிருந்து இலண்டன் சென்றனர்). போர் நடந்தபோது அங்கே களநிலவரம் அறிய மத்திய ரிசர்வு போலீசு உயரதிகாரி கார்த்திகேயன் என்பவரை இந்திய டி.என்.சேஷன் அனுப்பினார், 1989ல் ரகசியமாக போர்ப்பகுதியில் சுற்றிவிட்டு தமிழர்கள் கேட்கும் உரிமைகளைத் தருவதே தீர்வென்றும், புலிகளின் பலத்தையும், இந்தியப் படையினரின் மனமொடிந்த நிலையையும் கூறி போர் முடிவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தார். 1988ல் சிறிலங்க அரசில் அமைச்சராக இருந்த பக்ருதீன் முகமது தலைமையில் இலங்கை இஸ்லாமியர் பற்றி பேச சென்னையில் கிட்டுவை சந்திக்க வந்தபோது அப்துல் சமத் என்ற இந்திய முஸ்லீம் லீக் தமிழகக் கிளை தலைவர் அந்தப் பேச்சுவார்த்தையை பழ.நெடுமாறன் கேட்டுக் கொண்டதன்பேரில் நடத்தி புலிகளுக்கு ஈழத்தமிழ் இஸ்லாமியர் பக்கபலமாக இருக்க உதவியவர். இந்திரா கொல்லப்பட்டபோது நடந்த சீக்கியப்படுகொலை போல் இரஜீவ் படுகொலையின்போது தமிழர் படுகொலை போன்ற தீவிர நடவடிக்கை வராமல் பார்த்துக்கொண்டவர் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன். 2002ல் சென்னை ஆனந்த் திரையரங்கில் புலிகள் ஆதரவு கூட்டம் நடத்திய தமிழ் முழக்கம் சாகுல் அமீது, பழ.நெடுமாறன், மரு.தாயப்பன், பாவாணன் ஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 1990களில் புலிகள் கல்வித்திட்டத்தில் தமிழக கல்வியாளர்கள் பாடத்திட்டம், புத்தகங்கள், பயிற்சி என பல வகைகளில் உதவினர்; இராணுவ விஞ்ஞானம் பற்றிய பாடத்திட்டங்களை தீட்டி அளித்தவர் சென்னையில் இதே துறையின் தலைவராக இருந்த பேரா.மனோகரன்; நுண்கலைக் கல்லூரி ஒன்றை புலிகள் ஆரம்பிக்க பேரா.விசயகோபால் திட்டவரைவு வழங்கினார்; நீர்மேலாண்மை பற்றிய பாடத் திட்டம் நெடுமாறனின் தம்பி முனைவர்.பழ.கோமதிநாயகம் என்பவர் தீட்டியது; இவர், தமிழ் பாடத்துக்கு கடையம் பேரா.அறிவரசன், ஆங்கிலத்துக்கு பேரா.அ.அய்யாச்சாமி போன்றோர் ஈழத்திற்கே சென்று ஆண்டுக்கணக்கில் தங்கி உதவினர். புலிகள் மீதான பல்வேறு வழக்குகளை தாமே முன்வந்து நடத்தியவர் தடா எஸ்.சந்திரசேகரன், இவரும் இவரது உதவி வழக்கறிஞர் கோபிகிருஷ்ணனும் 2004ல் தலைவரை சந்தித்தனர். இயக்குநர்கள் பாரதிராசா, மகேந்திரன், மணிவண்ணன் போன்றோர் தலைவரைச் சந்திக்கச் சென்று தமிழீழக் கலை பண்பாட்டுத் துறை நடத்தும் பூலித்தேவன் நாடகம், இலக்கிய விருதுகள், முத்தமிழ் விழா, பொங்கல் விழா போன்றவை கண்டு வியந்து வாழ்த்துகளும், ஆலோசனைகளும் வழங்கினர். புலிகள் 1995ல் வேலூர் கோட்டையிலிருந்து தப்பி காட்டுக்குள் தப்பியபோது கொளத்தூர் மணி மற்றும் நெடுமாறன் போன்ற பலரின் உதவியால் ஈழம்போய்ச்சேர்ந்தனர் (இவர்கள் சேலம் காடுகளில் பதுங்கியிருந்தபோது எதேச்சையாக வீரப்பனார் அவர்களைச் சந்திக்க மிகவும் மகிழ்ந்து வேண்டிய உதவிகளைச் செய்தார், இவர்களில் பிடிபட்டவர் மாறன் தற்போது லண்டனில் வசிக்கிறார்). பிரேமா என்ற பெண்புலிக்கு குண்டு அகற்றி தமது பொறுப்பில் பாதுகாத்த பழ.நெடுமாறனின் தோழர் மரு.பொ.முத்துசெல்வம். சமரச முயற்சிகளை முன்னெடுத்த நீதியரசர்.வி.ஆர்.கிருஸ்ணய்யர். மேலும் சீமான், வைகோ, ஜெகத் கஸ்பர், எம்ஜிஆர் போன்றவர்களின் பங்களிப்பு பலருக்கும் தெரியுமாதலால் அவற்றை விளக்கவில்லை.4 points
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
நான்... முதல் வெடி விழ முதல் வெளிக்கிட்ட ஆள். 😎 இன்னும்... என் காதால், ஒரு துப்பாக்கி சூட்டுச் சத்தத்தையும் "லைவ்" ஆக நேரில் கேட்கவில்லை. எனக்குத் தெரிந்த தொழில் அதிபர் எல்லாம்... மில்க் வைற் சோப்.... அமரர் கனகராஜா, அண்ணா கோப்பி முதலாளி, யானை மார்க் சோடா முதலாளி, மலிபன் பிஸ்கட் முதலாளி, கன்டோஸ் சொக்லேட் முதலாளி மட்டுமே. 😂 பிற் குறிப்பு: இதில் கூறப்பட்டுள்ள தரவுகளை இந்தத் திரியுடன் மறந்து விட வேண்டும். பூனை... குட்டியை காவின மாதிரி, எல்லா திரிகளுக்கும் காவிக் கொண்டு திரியுறேல்லை. படித்தவுடன் கிழித்து விடவும். ஓகே.... 🤣4 points
-
அறிவித்தல்: யாழ் இணையம் 27 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2025 அன்று யாழ் இணையம் 26 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 27 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 27 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 27 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 27 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்3 points
-
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
3 pointsகனடிய மக்கள் கண்டிப்பாக ட்றம்ப் இற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள். ட்றம்பின் வரி விதிப்பு நடவடிக்கையை கனடிய மக்கள் தம் மீது அவர் bullying செய்கின்றார் என்ற வகையிலேயே எடுத்துக் கொண்டு உள்ளார்கள். இது உறங்கிக் கிடந்த கனடிய தேசியவாதத்தை முதுகில் படீர் என்று ஒரு போடு போட்டு எழுப்பி விட்டுள்ளது. அமெரிக்க பொருட்களை புறக்கணிக்குமாறு அரசியல் தலைவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக செவி சாய்க்கத் தொடங்கியுள்ளனர். சமூகவலைத்தளங்களில் தீவிரமாக இது பற்றிய விளக்கங்களும், அமெரிக்க பொருட்களுக்கு நிகரான கனடிய பொருட்களின் பட்டியல்களும் வெளியாகிக் கொண்டு இருக்கின்றனர். சாதாரண பலசரக்கு கடைகளில் இருந்து, Costco போன்ற பிரமாண்டமான பல்பொருள் அங்காடிகளில் கூட அமெரிக்க பொருட்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சியை நான் நேற்று அவதானித்தேன். நான் நேற்றுடன் நெட்பிளிக்ஸ் கான என் எக்கவுண்டை கான்சல் செய்து விட்டேன். ஆயிரக்கணக்கானோர் என்னைப் போன்றே நெட்பிளிக்ஸ் இல் இருந்து விலகியுள்ளனர். அமேசன் கனடாவில் பெருமளவு முதலிட்டுள்ளதாலும் ஆயிரக்கணக்கான கனடியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதாலும் அதை தொடர்கின்றேன். கனடாவின் அதிரடியான பதில் நடவடிக்கைகள் தான் ட்றம்ப் இற்கு அழுத்தம் தந்து, ஒரு மாதத்துக்கு வரி விதிப்பை நிறுத்தி வைக்கும் அவசியத்தை கொடுத்தது. இந்த ஒரு மாதம் என்பது கூட ஒரு வகையான black mail தான். வரி விதிப்பை முற்றாக கைவிட்டால் கூட, கனடா வர்த்தகத்தில் அமெரிக்காவில் தங்கி இருக்கும் இன்றைய நிலையில் இருந்து முற்றாக விடுபட்டு, ஐரோப்பா, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தகளை உருவாக்க வேண்டும் என்ற குரல் கனதியாக வெளிப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. ஒன்று மட்டும் நிச்சயம். அமெரிக்காவை நம்பினார் கைவிடப் படுவார்!3 points
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
இல்லை அண்ணா O/L. படிக்கும் போது விடிய 6 மணிக்கு ரீயூசன் இருக்கும் போய் திரும்பி வரும் போது கைதடி சந்தியில் உள்ள அந்த வட்ட வடிவம் கொண்ட கொங்றீற். தலைமையில் பின் பக்கம் பலந்த. தாக்குதல் அதன் பின்னர் காதுகள். கேட்பது குறைவு இப்பவும் தொலைபேசியில் கதைப்பது கடினம் ஆனால் நேரில் கதைக்க முடியும் ...அது இல்லை எனில் நான் இங்கே பல்கலைக்கழகம் போய் இருப்பேன் ஆனால் 2021 இருந்து கார் வைத்து ஒடுகிறேன். 🤣. பிள்ளைகள் இருவரும் பொறியியலாளர்கள். மகள் திருமணமும் முடிந்து வேலை செய்கிறார் மகன் மெக்கானிக் பொறியியலாளர் மாஸ்டர் செய்கிறான் அவனுக்கு திருமணம் முடிந்த பிறகு நானும் ஒன்றை பார்க்கலாம் என. நினைக்கிறேன் 🤣🤣🤣🤣 நீங்கள்???3 points
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
இது ஒரு டெலிகேற் பொசிசன் அண்ணை… எல்லாரையிம் சாக்கில் போட கூடாது என்பது சரிதான், ஆனால் இதை பயன்படுத்தி கள்ளரும் சாக்கில் இருந்து தப்பி விடுவார்கள். ஆகவே இதற்கு நான் ஒரு பொறிமுறையை கண்டு பிடித்துள்ளேன். அதுதான் விடயம்-சார் அணுகுமுறை. Issue based approach. உதாரணமாக சீமான் ஆதரவு - என்பது விடயம். அதில் யார் சீமான்-ஆதரவு நிலை எடுத்தாலும் - முதலில் விளக்கி பார்ப்பது, இல்லை எண்டால் சாக்கில் போட்டு வெளுக்க வேண்டியதுதான்.2 points
-
கிளிநொச்சியில் இடம் பெற்ற சுதந்திரதின எதிர்ப்பு போராட்டம்!
நாங்கள் அகதி அந்தஸ்து கோரி வெளிநாடுகளில் தஞ்சம் அடையும் பொழுது ...சிறிலங்கா இராணுவம் எங்களை துன்புறுத்துகின்றது மீண்டும் நாட்டுக்கு போனால் எங்களை கொலை செய்து விடுவார்கள் என கூறி வெளிநாடுகளில் குடியுரிமை எடுத்து விட்டு அதற்கு அடுத்த ஆண்டு சிறிலங்காவுக்கு போன உத்தமர்கள் தானே நாங்கள் ...அதே போல எமது அரசியல் வாதிகளும் ...உரிமைக்கு குரல் கொடுக்கும் இடத்தில் குரல் கொடுக்க வேணும் ....அரசாங்கத்திடம் சிலவற்றை இப்படி போராட்டங்கள் ஊடாகத்தான் தெரியப்படுத்த வேணும்... தமிழ் தேசியம் தொடர வேறு வழி ...2 points
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
2 pointsஇரண்டு விதமான பயிற்சிகளிலும் இவர்கள் ஈடுபடுகின்றார்கள். இராணுவ விமான நிலையங்கள் மற்றும் தளங்களிலும், சில பயணிகள் விமான நிலையங்களிலும். யுத்த விமானங்களின் பயிற்சிகளையோ அல்லது யுத்த விமானங்களைக் கூட நாங்கள் வருடத்தில் ஓரிரு நாட்கள் தவிர்த்து இங்கே பார்ப்பது கிடையாது. வருடத்தில் ஒன்றோ இரண்டோ நாட்கள் ஒரு 'Air Show' நடத்துவார்கள், அதுவும் நகரை விட்டுத் தள்ளி இருக்கும் இராணுவ விமான தளத்திற்கு அருகில். அங்கே தான் இந்த வகையான விமானங்களை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும். என்னுடைய முதலாவது வேலை இப்படியான ஒரு தளத்திற்கு வெளியே இருந்தது. அப்பொழுது நான் குடியுரிமை பெற்றிருக்கவில்லை, ஆதலால் ஒரு எல்லை தாண்டி நான் போகவே முடியாது. அந்த எல்லைக்கு பின்னல், பல மைல்கள் தள்ளி, ஓடுபாதைகள் இருக்கின்றன. ஆனால், சில பயிற்சிகள் பயணிகள் விமான நிலையங்களின் அருகில், அந்த சூழ்நிலையில், மிகத் தாழ்வான உயரங்களில் நடத்தப்பட வேண்டியிருக்கின்றது. Real life conditions........... மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட விதிகளும், வெளிகளும் இருக்கின்றன என்கின்றனர். மீறும் போது விபத்துகள் நடந்துவிடுகின்றன. சமீபத்திய லாஸ் ஏஞ்சலீஸ் நெருப்பின் போது இதையொட்டிய ஒரு சிக்கல் வந்தது. விமானங்கள் மூலம் தீயணைக்கும் நடவடிக்கைக்கு லாஸ் ஏஞ்சலீஸில் இருக்கும் ஐந்து விமான நிலையங்களுக்கும் வந்து போகும் பயணிகள் விமானங்கள், இராணுவ விமானங்கள், தனியார் விமானங்கள், ட்ரோன்கள் என்று பல வகையானவர்களுடன் தீயணைக்கும் விமானங்கள் அனுசரித்துப் போகவேண்டி இருந்தது. அப்படி இருந்தும் ஒரு ட்ரோன் ஒரு தீயணைக்கும் விமானத்தின் இறக்கையுடன் மோதி, அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.2 points
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
அடி முட்டாளாக இருந்துவிட்டுப் போகின்றேன்😜 எனது கருத்தில் மாற்றமில்லை @விசுகு ஐயா! 50,000 போராளிகளின் தியாகத்திலும், பல இலட்சம் மக்களின் இழப்பிலும் நடந்த போராட்டத்தை, தலைவர் தன் குடும்பத்தையே பலிகொடுத்த போராட்டத்தை தமிழ்நாட்டு உள்ளூர் அரசியலுக்கு சீமானும் நாம் தமிழர் கட்சியும் சுயநலத்தோடு பாவிப்பதை நியாயப்படுத்த அல்லது கண்டுகொள்ளாமல் இருக்க ஒரு தேசியச் செயற்பாட்டாளாரால் முடிகின்றது என்றால் அவருக்கும் ஒரு சுயநலம் இருக்கும். சில சுயநலன்கள் பணம், பொருள் ஈட்டுவதில் இல்லை. நாளை ஒரு “நாட்டுப்பற்றாளர்” என புலிக்கொடி போர்த்தப்படவேண்டும் என்ற விருப்பமாகவும் இருக்கலாம்.2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
தில்லை ஐயாவின் அசாத்தியமான எழுதுதும் வீதம் கண்டு நான் வியக்காத நாளில்லை. எனக்குள் நான் ஒரு speed reader என்ற தற்பெருமை இருந்தது - என் வாசிக்கும் கதியை விட தான் வேகமாக எழுதுவேன் என காட்டி அதை சுக்கலாக்கியவர், எழுதும் இயந்திரம் ஐயா. யாழுக்கு அண்மையில் வந்து சேர்ந்த இன்னுமொரு பொக்கிசம்.2 points- இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
அனுதாபங்கள் நானும் இதை நினைத்தேன் நீங்கள் எழுதி போட்டீங்கள்..அதி அதி அதி மேட்டுக்குடி இவையளின்ட பெயர் தமிழாக இருக்கும்...எங்களை மாதிரி லொக்கல் பிபிலுடன் மிங்கில் பண்ண மாட்டினம் ...2 points- அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
2 pointsஎங்களின் மக்களைப் போலவே தான், அண்ணா, இந்த மக்களும். ஒரு வாழ்வைத் தேடி ஓடி வந்தவர்கள். அதில் சிலர் சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்பவர்கள் ஆகவும் இருப்பார்கள் தான். எங்கள் மக்களில் சிலரும் அப்படி நடந்து கொண்டவர்கள் தானே............... அதற்காக எல்லோரையுமா பிடித்து அனுப்புவது.........................😌. ____________________________________ அந்த விமான விபத்து தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது. மிக அருகிலேயே எத்தனையோ தடவைகள் அதே இடத்தில் முன்னர் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. மிகவும் நெருக்கமான வான் மற்றும் பறக்கும் பிரதேசம் அது. அங்கு இராணுவ பயிற்சிப் பறப்புகள மிகவும் கவனமாக இருக்கப்பட வேண்டியவை. 200 அடிக்கு கீழே பறந்திருக்க வேண்டிய பயிற்சி உலங்கு வானூர்தி, 300 அடிகளுக்கு மேலே போய்விட்டது. இந்த மிகக் குறைந்த உயரத்தில், இவ்வளவு கட்டுப்பாடான பிரதேசத்தில், விமானிகளால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது..................... இராணுவ விமானங்களும், சாதாரண விமானங்களும் ஒரே அலைவரிசையில் தொடர்பு கொள்வதில்லை. ஒன்று VHF, மற்றையது UHF. இது எப்போதும், எங்கேயும் உள்ள நடைமுறைதான். ஆகவே அவர்கள் இருவரும் நேரடியாக தொடர்பு கொள்ளவும் முடியவில்லை................2 points- யாழ். பல்கலையில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு போராட்டம்
Published By: DIGITAL DESK 2 04 FEB, 2025 | 01:16 PM யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டு இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 77 ஆவது தேசிய சுதந்திர தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைகழக மாணவர்கள் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/2057781 point- மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
2009 முந்திய விடயங்கள் தவறாக எழுதபட்டால் அவை முடிந்தளவு திருத்தப்பட்டுள்ளன. நீங்களும் “நேரம் மிச்சம்” என லைக் போட்டுள்ளீர்கள். மே 2009 ற்கு பின் எனக்கே யார் கள்ளன், யார் நல்லவன் என தெரியாத நிலை -குறிப்பாக புலத்தின் முன்னைநாள் செயற்பாட்டாளர் இடையே. இதில் எவருக்காகவும் பேச முடியாத நிலையில்தான் என்னை போன்ற பொது மக்கள் உள்ளார்கள்.1 point- மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று " தமிழீழ தேசிய தலைவரை பூச்சியம் " ஆக்குற செயல்பாட்டை முன்னெடுத்தது சமூகவலை தளங்கள் எங்கும் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் , போராடிய விடுதலை புலிகளையும் கொச்சைப்படுத்தி , அதை ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருக்கிற செயல்பாட்டை செய்தார்கள் . தங்கள் சார்பான தொலைக்காட்சிகளில் , யூ டியூப் தளங்களில் எல்லாம் ஈழ தமிழரில் போராட்டத்துக்கு எதிராக இருந்தவர்கள் , போராட்டத்தை காட்டி கொடுத்து இலங்கை அரசோடு ஒன்றாக நின்றவர்கள் என்றெல்லாம் தேடி பிடித்து பேட்டிகள் எடுத்து பரப்புரை செய்து வந்தார்கள் எரிக் சொல்ஹைம் மை கூட்டி வந்து பேட்டி எடுத்து புலிகள் தவறானவர்கள் என்று பரப்புரை செய்தார்கள் மேலே சொல்லப்பட்டுள்ள விடயங்கள் உண்மை. "அரக்கர் கூட்டம்", "ஆயிரம் பூக்கள்", "புதியவன் டீம்", "ஒன்றாக" ... இப்படியான பல பெயர் தாங்கிய குழுக்கள் சேர்ந்து விடுதலை புலிகள் தலைவரையும், போராளிகளையும், குறிப்பாக பெண் போராளிகளை மிகவும் கொச்சையாக விமர்சித்து சில இலங்கை முஸ்லீம் தனி நபர்கள் , ஒட்டுக்குழு நபர்களையும் ஒன்றிணைத்து 2 வருடங்களாக தொடர்ந்து பரப்புரை செய்து வந்தது உண்மை.1 point- மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
ஏன் நாங்கள் தி,மு.க வினரை குற்றம் சொல்வான் ...எங்கன்ட யாழ்களத்திலயே எவ்வளவோ கருத்துக்கள் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது ...1 point- இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
ஒரு காலத்தில் பல கிழக்கு மாகாண மாணவர்கள் மானிப்பாயில் வந்து கல்வி கற்றனர் ...பரீட்சை எழுதும் பொழுது மீண்டும் கிழக்கு மாகாணம் சென்று விடுவார்கள்... நானும் இந்த காலகட்டத்தில் உயர்தரம் படித்தேன்( பாடசாலைக்கு உயர்தர் வகுப்புக்கு சென்று வந்தேன் என்பது சரியானது )..மறைந்த ஹொஸ்டல்(ஜெய...) மாஸ்டரை தெரியுமா?மற்றும் அக்கரைப்பற்று/பொத்துவில் பகுதியில் இருந்து வந்த முஸ்லீம் மாணவர்கள்...இல்மு....,,இக்...போன்ற்வர்கள் ..கல்லடியை சேர்ந்த மாணவி..1 point- மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
மண்டையன் குழுவின் அட்டகாசங்களைப் பார்க்காததால் உங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் எங்களால் சுரேஷை மண்டையன் குழுத்தலைவராகத்தான் பார்க்கமுடியும். புலிகள் சர்வதேச நாடுகளின் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி ஏற்பட்டதாலும், தமிழ் அரசியல் அமைப்புக்களை ஒடுக்கவில்லை என்று காண்பிக்கவும், தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலை இக்கட்சிகள் முன்னெடுக்க விரும்பியதாலும் கூட்டமைப்பினுள் சேர்த்துவிட்டார்கள். ஆனால் சுரேஷ் பிரேமச்சந்திரன் மண்டையன் குழுவின் அட்டகாசங்களுக்கு மன்னிப்புக் கேட்டதாக எனக்கு நினைவில்லை. அதனால் அவரை இப்போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
AI மூலம் எதிர்காலத்தை அறிய நாடவேண்டிய ஒரே நபர்…… ஜோதிகா…சை…ஜோதிட சிகாமணி… கைரேகை கலாநிதி….. உடான்ஸ் சாமியார் MaMa ( master of astrology master of astronomy). இடம்: கிங்ஸ் கிராஸ் ஸ்டேசன் எதிரில், “வடக்கன்ஸ் குட்கா & பீடா கடை” அருகாமையில்.1 point- மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
அப்போ நீங்கள் ஏன் யாழுக்கு வந்து எழுதுகிறீர்கள்? நீங்கள் நாட்டு கத்தல் கத்துவதாலும் எதுவும் மாறாதுதானே? அல்லது ஒரு சில கள உறவுகள் சொல்லுவதற்கு எதிர் கருத்தை எழுதி அவர்களை சீண்டும் ஒரே காரணத்துக்காக யாழில் எழுதுகிறீர்களோ? நீங்கள் செஞசோன்ஸ், மொரட்டுவ அலும்னி, ஆகவே இப்படியான காரணமாய் இராது என நம்புகிறேன். பிகு எறும்பூர கல் தேயும். சிறு துளிதான் பெரு வெள்ளமாகும். இத்தனை வருடங்களாக நாம் ஒரு நாலு பேர்தான் காட்டு கத்தல் கத்தினோம்….ஆனால் அதுதான் இன்று புலம்பெயர் அமைப்புகள் அறிக்கை விடும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. புலம்பெயர் இலக்கியவாதிகள், புலிகளின் நியாத்தை பேசியவர்கள், தமிழகத்தில் அறியப்பட்டவர், தமிழக ஊடகங்களுக்கு உண்மையை சொல்லும் நிலையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சீமான்-றோ கூட்டு சதியை முறியடிக்க ஒரு கதவு திறந்துள்ளது. கட்டையில் போகும் போது நமக்கு யாரும் எந்த கொடியையும் போர்த்த போவதில்லை, அதற்கு நாம் தகுதியானவரும் இல்லை…… ஆனால் ஒரு நச்சு விதைதை இனம் காட்ட, நசுக்க எம்மால் முடிந்ததை செய்தோம் என்ற நிம்மதியில் கண்மூடுவோம்.1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
உங்களுக்கு கைரேகைகளைப்பற்றியும். ரேகைகள் பெயரும் அத்துபடியாய்த் தெரியும் லண்டனில் ரயில் நிலையத்திற்கு முன்னால் ஒரு பெட்டி கடை. போட்டு கைரேகை எண் சோதிடம். குறிப்பு எழுத குறிப்பு பார்க்க தெரிந்த அனுபவமிக்க. சோதிட வல்லுநர் கோசான். அவர்கள் கணணி தொழில்நுட்பம் பவித்து உங்களின் எதிர்காலம் துள்ளியமாக. கணிப்பார். இன்றே முத்துங்கள். என்று ஒரு அறிவிப்பு உடன் ஒரு சோதிட நிலையம் திறந்தால் வருமானம் கூரையை பிரித்து கொண்டு போகும் நாங்களும் லண்டனில் சோதிடம். பார்க்க வருவோம் 🤣😂1 point- காத்தான்குடி பொலீஸ் பிரிவு சுமார் 20 ஊர்களை உள்ளடக்கியுள்ள நிலையில், இப்பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்கள், கைதுகள் அனைத்தையும் காத்தான்குடி ஊரின் சம்பவமாக தலைப்பு, செய்தி வெளியிட வேண்டாம் என ஊடகங்களிடம் வேண்டுகோள்
செய்தது பிழை என்றால் தானே பிழை என சொல்வதற்கு??🙃1 point- காத்தான்குடி பொலீஸ் பிரிவு சுமார் 20 ஊர்களை உள்ளடக்கியுள்ள நிலையில், இப்பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்கள், கைதுகள் அனைத்தையும் காத்தான்குடி ஊரின் சம்பவமாக தலைப்பு, செய்தி வெளியிட வேண்டாம் என ஊடகங்களிடம் வேண்டுகோள்
அவங்க எங்க செய்த பிழைய ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள் சொல்லுங்களன்1 point- மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
😂🤣 சீமான் பின்னால் போனால் இதுக்கும் மேலே சொல்லுவியள்.. காகம் திட்டி மாடு சாவதில்லை😎1 point- அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
1 pointரம்புக்கு வாக்குப் போட்டு பதவியில் உட்கார மக்களே வெறும் ஒரு மாதம் முடிவதற்கிடையில் தவறான தலைவரை தெரிவு செய்து விட்டோமோ என்று பிகிரங்கமாகவே சொல்லத் தொடங்கிவிட்டார்கள். தனது ஆட்சிக்குத் தேவையானவர்களை ஆசிய பாணியிலேயே தெரிவு செய்கிறார். புளோரிடா மாநிலத்தவரையும் தேர்தல் காலங்களில் பெரும்தொகை பணங்களை அன்பளிப்பு செய்தவர்கள் தனக்காக முழக்கமிட்டவர்கள் என்று கூட்டி வைத்திருக்கிறார். காலப் போக்கில் பைடன் பரவாயில்லை என்று சிகப்பு கட்சியினரே சொல்வார்கள் போல உள்ளது.1 point- த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்கம்: தலைவர்களின் சிலைகளை விஜய் இன்று திறந்து வைக்கிறார்
சீமான் பேசுவது தமிழ் தேசியம் அல்ல. முழுக்க முழுக்க சாதிய பெரும்பான்மை வாதம் மட்டுமே தனது பிழைப்புவாதத்திற்கு உதவும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயற்படுகிறார். எந்த பிரதேசத்திற்கு போகிறாரோ அந்த பிரதேசத்தில் யார் பெரும் சமூகமோ அந்த சமூக தலைவரை பாராட்டி அவர் தமிழ்ப் பாட்டன் என்று பேசுவார். அந்த தலைவர் முழுமையான இந்திய தேசியவாதியாக இருப்பார். அந்த வரலாறு கூட சீமானுக்கு தெரியாமல் இருக்கும். இவ்வாறான பித்தலாட்டம் தனக்கு உதவும் என்று நினைக்கிறார். ஈரோடு பிரதேசத்தில் அறிஞர் அண்ணாவின் சமூகத்தினர் அதிகம் இருப்பதால் நேற்று அண்ணாவை பாராட்டி பேசினார். முன்பு ஒருமுறை வேறு பிரதேசத்தில் அண்ணாவை “பிச்சைகாரபயல்” என்று பேசியவர் இதே சீமான். இந்தியாவிலேயே அதிக பொய்களை மேடைகளில் பேசிய பாபெரும் பொய்யன் சீமான் ஆகும்.1 point- சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா
AI போரை தொடங்கியதா சீனா? 😱 China's DeepSeek சம்பவம் | Mr.GK DeepSeek AI is at the forefront of artificial intelligence, developing state-of-the-art models that push the boundaries of what AI can achieve. From advanced natural language processing to AI-powered search and coding, DeepSeek is revolutionizing the way we interact with technology.1 point- பெரியாருக்கும் எம்ஜிஆருக்கும் சீமான் விழா எடுத்தது ஏன்?'-ஈரோட்டில் புகழேந்தி கேள்வி
பெரியாருக்கும் எம்ஜிஆருக்கும் சீமான் விழா எடுத்தது ஏன்?'-ஈரோட்டில் புகழேந்தி கேள்வி பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி ஈரோடு பெரியார் அண்ணா நினைவு இல்லத்தில் பிப்ரவரி 3 மூன்றாம் தேதி இன்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரோடு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ''சீமான் என்பவர் 2008 எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்ததாகவும் அப்போது அவர் உபதேசம் வழங்கியதாகவும் அதற்குப் பின்னர் தான் திராவிடர்கள் திருடர்கள் என தெரிய வந்ததாகவும் அதுவரை தெரியாமல் போனதாகவும் மேடைகளில் பேசி வருகிறார். 2008இல் பிரபாகரன் உபதேசம் கூறிய பின்னர் 2010 ஆம் ஆண்டு பெரியார், எம் ஜி ஆர் கட்டவுட்டுகளை மேடையிலே வைத்து மாபெரும் விழா எடுத்தது ஏன்? உபதேசத்திற்கு பின்னால் அவர்கள் திருடர்களாக தெரியவில்லையா? எப்படி எல்லாம் மக்களை சீமான் ஏமாற்றுகிறார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு'' என அந்த விழா எடுத்த படத்தை நிருபர்கள் மத்தியில் காட்டி அவர் பெரியாரை புகழ்ந்து பேசியதையும் ஒலிபெருக்கி மூலம் போட்டு காண்பித்தார். ''எல்டிடிஇ பிரபாகரன் கடவுளை நம்புவதில்லை. இயற்கையை தான் நம்புகிறோம் என்று சொல்கிறார். அவரின் வலது கரமாக இருந்த கிட்டு அவர்கள் நாங்கள் அனைவரும் திராவிடர்கள் தான். ஆரியர்கள் எங்கள் எதிரிகள். ஆரியர்களை ஒழித்த தந்தை பெரியார் தான் திராவிட இயக்கத்தையும் தமிழர்களையும் வாழ வைத்தவர்' என்று கூறிய ஒலி நாடாவையும் போட்டு காண்பித்தார். மேலும் சீமான் அவரது உயிர் உள்ளவரை பார்ப்பனர் யாரும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக முடியாது என மேடையில் பேசியதையும் ஒலி பெருக்கி மூலம் போட்டு காண்பித்தார். ''தேர்தல் முடிந்த பின்னால் தமிழக முதல்வர் சீமான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகிய தலைவர்கள் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்காக செயல்பட்ட ஈரோட்டு மண்ணில் அவர் வாழ்ந்த வீட்டில் இருந்து உங்களை சந்தித்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெரியாரை இழிவு படுத்தும் சீமானுக்கு ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்'' என்றார். அப்போது குறுக்கிட்ட நிருபர் 'எப்பொழுது சீமான் நாம் தமிழர் கட்சியை தடை செய்வார்கள்' என கேட்டார். ''அமைதி பூங்காவாக விளங்கும் ஈரோடு மண்ணில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வெடிகுண்டு வீசுவதாகவும் தலைவர் கொடுத்த வெடிகுண்டு கையில் இருப்பதாகவும், வீசிய பின்னர் புல் கூட அந்த இடத்தில் முளைக்காது என்றும் தமிழக முழுவதும் தீப்பற்றி எரியும் என்றும் கொலை வெறியில் இருக்கிறேன் என்றும் அவர் பேசிய பேச்சுகளில் இருந்து தப்பவே முடியாது. ஆகவே விசாரணை நடத்தி தேர்தல் ஆணையம் அவர் கட்சிக்கு கொடுத்திருக்க அங்கீகாரத்தை திரும்ப பெரும். தடை செய்யும். நிச்சயமாக அது நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்'' என கூறினார். 'எடப்பாடி பழனிசாமி ஏன் பெரியாரை தாக்கி பேசியதற்கு சரியான கண்டனத்தை தரவில்லை' என நிருபர்கள் கேட்டதற்கு ''அவருக்கு பெரியாரைப் பற்றி தெரியாது. பெரியாரைப் பற்றி தெரிந்த செல்லூர் ராஜு, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்'' என்றார். மேலும் 'ஓபிஎஸ் ஏன் இதை பற்றி பேசவில்லை' என்று கேட்டதற்கு ''அவருக்கு டெல்லியில் இருந்து அனுமதி வந்தால் இதனைப் பற்றி பேசுவார். அதுவரை பேசமாட்டார்'' எனக் கூறினார். ''பாரதிய ஜனதா கட்சி ஆதரவு சீமானுக்கு இருந்தால் ஏன் வெளிப்படையாக அண்ணாமலை ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆகவே எந்த கட்சி ஆதரவும் சீமானுக்கு இடைத்தேர்தலில் இல்லை. அனாதையாக நிற்கின்ற காட்சியை தான் பார்க்கிறோம்'' எனவும் கூறினார். ''விஜய் அரசியலுக்கு வந்த பின்னால் ஏற்பட்ட பயம்தான் சீமானுடைய இன்றைய நடவடிக்கைகள் அவர் அரசியலுக்கு வருவதை நாம் தடுக்க முடியாது. அவர் பெரியார் வழியில் வருவதால் அவரை நான் பாராட்டுகிறேன். சீமானுக்கு விஜய்யை பார்த்து நடுக்கம் ஏற்பட்டு விட்டது .அதன் எதிரொலியாக தான் இப்படி உளறிக் கொண்டிருக்கிறார். சீமான் விஜயைப் பார்த்து பயப்பட ஆரம்பித்து விட்டார்'' என்றார். https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/why-seeman-did-take-festival-periyar-and-mgr-erode-popular-question?amp1 point- அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
1 pointஇவருக்கு வாக்கு போட்ட மக்களுக்கு இது அல்லது இவரைப் பற்றி முன்பே தெரியும் தானே ???? அக்கா கமலாவை வீட்டில் இருத்தி. விட்டார்கள் சோதிடம். சொல்கிறது ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் சனிப்பெயர்ச்சி பணக்காரர்கள். ஆக்கும் என்று அதை தான் டரம்ப்மும். சொல்கிறார் 🤣1 point- அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
1 pointஅண்மையில் திறந்த வெளியில் நிகழ்ந்த அவுஸ்ரேலிய தின நிகழ்வில் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட்டேன் (நிகழ்ச்சி இறுதியில் நிகழ்த்தும் வாணவேடிக்கைக்காக). கடுமையான வெப்பம் பின்னர் சடுதியாக வெப்பம் குறைந்தது, ஆரம்ப பாடசாலையில் படிக்கும் எனது மகன் ஒரு விடயத்தினை சுட்டிக்காட்டினார், மைதானத்தில் இருந்த கொடிகள் கிழக்கு மேற்காக பறந்தன ஆனால் மேகம் வடக்கு தெற்காக நகர்ந்தது அது ஏன் காற்றுக்கள் இரு வேறு திசைகளில் நகர்கிறது என (Windshear). விமான தரையிறக்கம் என்பது இலகுவான விடயமல்ல என கூறுகிறார்கள், விமானத்தில் சில பாதுகாப்பு பொறிமுறைகள் தரையிறங்கும் போது செயற்பாட்டிற்கு வந்து விடும் அதுவே சில சந்தர்ப்பங்களில் பாதகமாக அமைகிறது. காணொளி பயணிகள் விமான நிலையத்தில் எதற்கு விமான படையினர் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்?1 point- அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
1 pointஇப்ப துவங்கியிருப்பது வெறும் ட்ரைலர், மெயின் பிக்சர் இனித்தான் இருக்கு. வரும் நாலு வருடங்கள் எப்பிடிபோகபோகுதோ தெரியவில்லை. சிலர் மூளைக்கும் வாயிற்கும் சம்பந்தம் இல்லாமல் பேசுவார்கள், இவர் அந்த மாதிரி ஒரு கேஸ். தனது கம்பனியை நடத்துவதுபோல், வாறவன் போறவன் எல்லாரையும் மிரட்டி நாட்டை நிர்வாகிக்கலாம் என்று நினைக்கிறார்.1 point- பாட்டுக் கதைகள்
1 pointதமிழில் இருக்கும் பழைய இலக்கியங்கள் சிறந்தது என்று சொல்கின்றோம். ஆனால், இன்றிருக்கும் தமிழர்களில் கம்பரின் கம்பராமாயணத்தில் இருக்கும் பத்து பாடல்களை என்றாலும் எந்த துணையும் இல்லாமல் வாசித்து பொருளும், அதன் அழகும் அறியும் ஆற்றல் எத்தனை பேருக்கு உள்ளது என்பது வருத்தமளிக்கும் ஒரு விடையையே கொடுக்கும். இதுவே தான் இரண்டு வரிகள் உள்ள திருக்குறளுக்கும். 'அகர முதல எழுத்தெல்லாம்.................' என்னும் முதற் குறளையே அதன் அர்த்தத்தில் எத்தனை வீதமானவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று பார்த்தோம் என்றால், அங்கேயும் ஏமாற்றம் தான் மிஞ்சும். இன்றைய தமிழர்கள் மத்தியில் இளங்கோவடிகள் நிலை இன்னும் பரிதாபம். ஆகவே, அன்றைய இலக்கியம் - இன்றைய இலக்கியம் என்பதன் ஊடாக வரும் வேறுபாட்டை விட, அன்றைய தமிழ் சமூகம் - இன்றைய தமிழ் சமூகம் என்பதன் ஊடாக வரும் வேறுபாடே பிரதான ஒரு காரணியாக இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன். தேவாரங்கள், திருவாசகங்கள், அதையொட்டிய பக்தி இலக்கியங்கள், கூட்டுப் பாடல்கள் போன்றவை தான் கடைசி ஆயிரம் வருடங்களிற்கு மேலாக தமிழ் மொழியில் இருந்த பெரும்பாலான இலக்கியச் செயற்பாடுகளாகவும் இருந்தன. இதே கால கட்டத்தில் நாயக்கர்களின் வருகை, முகாலயர்களின் வருகை, ஐரோப்பியர்களின் வருகை என்பனவும் அடங்குகின்றன. மொழியில், இலக்கியத்தில், தனிமனித சிந்தனைகளில் சுதந்திரமான எந்த எழுச்சியும் இந்தக் காலகட்டதில் நடக்கவும் இல்லை. பாரதியார் வரும் வரை இதுவே தான் நிலைமை. தமிழ் மொழியின் உண்மையான இருண்ட காலம் இங்கே தான் உருவாகியது என்று நான் நினைக்கின்றேன். அதன் பின்னர், எங்கேயோ போய் விட்டிருந்த உலகத்தை ஓடிப் பிடிக்க எங்களில் சிலர் முயன்றார்கள். ஆனாலும் மக்களைக் கவர்வதில் சினிமாவும், அரசியலும் ஒரு மாய உலகத்தை உருவாக்கி முழுச் சமூகத்தின் ரசனையையும், தேவையையும் மாற்றிவிட்டார்கள். மிகவும் மேம்போக்கான சிந்தனைகள், கருத்துகள், ரசனைகள் என்பனவே எங்களின் அடையாளமாக மாறிப் போய்விட்டன. இளங்கோவடிகள் இன்றிருந்து இன்னொரு சிலப்பதிகாரத்தையே இன்று, இன்றைய வழக்கில் எழுதினாலும், அதுவும் இருநூறு பிரதிகளே இன்று விற்பனையாகும். ஒரு இரண்டாயிரம் பேருக்கு மட்டுமே அவரைத் தெரியவரும். அவர் வீட்டில் அடுப்பு எரியாது. தமிழில் பாரதிக்கு பின் வந்த ஒரு நூறு எழுத்தாளர்களின் ஆயிரம் படைப்புகளாவது மண்ணையும், மக்களையும், வரலாற்றையும், பண்பாட்டையும் சொல்லி நிற்கின்றது. இவை தமிழில் நவீன உலகத்திற்கான ஒரு உரைநடையை அறிமுகப்படுத்தியும் இருக்கின்றன. ஆனால், தமிழ் மக்கள் மட்டும் இல்லை, தெலுங்கு மக்களும் கூட தொடர்ச்சியாக அவர்களின் மொழியை, அவற்றின் அழகை இழந்து கொண்டே இருக்கின்றார்கள். மேற்கு வங்கமும், கேரளாவும் இந்தச் சுழலுக்குள் அகப்படவில்லை. இது அங்கே இடதுசாரிகள் பலமாகும் முன்னேயே இருந்த நிலையும் கூட. ஹெமிங்வேயையும், 'கிழவனும் கடலும்' பற்றிக் கூட பேசும் தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆனால், ப.சிங்காரம் பற்றியோ அல்லது அவரின் 'புயலில் ஒரு தோணி' பற்றியோ பேசுவோரை எண்ணிவிடலாம். தமிழில் வந்த நாவல்களில் ஆகச் சிறந்தது என்று சொல்லகூடியது 'புயலில் ஒரு தோணி'. சிங்காரம் அப்படியே வெறுத்து ஒதுங்கினார். அவர் கடைசி நாட்களில் எவருடனும் பேசக்கூட விரும்பவில்லை. இன்றும் அதே நிலை தான். 'கொற்றவை' நாவலை மிகவும் பிராயசைப்பட்டே வாசிக்க ஆரம்பித்தேன். முடிவில் பெரும் பிரமிப்பாக அது முடிந்தது. அது ஒரு வாழ்வனுபவமாக இறுதிவரை வரும். எங்களின் சமூகம் ஏன், எப்படி இப்படியாகியது என்று ஆரம்பிப்பதே சரியான கேள்விகளாக இருக்குமோ என்று எனக்குத் தோன்றுகின்றது.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிரச்சனை தீர்ந்த பின்னர் தான்- சிரிப்பேன் என்றால்- உங்களால் கடைசி வரை - சிரிக்கவே முடியாது.1 point- இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
நாங்க சாமத்தில் பேய்கள் வெளியிரங்கும் நேரம் யாளுக்கு வருவதுண்டு இப்படி வயிறு வலிக்க சிரிக்க வைக்க வேணாம் 😄1 point- யாழின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள்!
அதுவம் நடந்திருக்கும் ..போட்டோ போடமாட்டினம்தானே....பிறகு புலத்துக்குப் போய் மனிசிமாரிட்டை உதையெல்லோ வாங்கவேணும்1 point- இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
நான் மானிப்பாய். இந்து இல் படித்து உள்ளேன் ஆறு மாதங்கள் மட்டுமே உயர்தரம். 1979. 1980 இருக்கலாம் போராயிரவர். அதிபர் மட்டக்களப்பு மாணவர்கள் 10. பேர் வரை விடுதியில் இருந்தவர்கள் நானும் அவர்களுடன் இருந்தேன் காது கேட்பது குறைவு [ஒரு விபத்தின். பிற்பாடு ] அதனால் தொடர்ந்து படிக்க முடியவில்லை சாவகச்சேரி மாறிவிட்டேன். அதிபர் சிறந்த சைவப் பழம் யாராவது சாமியார் வந்தால் கூப்பிட்டு வீட்டில் பிரசாங்கம். வைப்பார் மட்டக்களப்பு முஸ்லிம் பெடிகளையும். கூட்டிக் கொண்டு போய் அமர்த்தி விடுவார் எதோ தேவன்’ என்ற பெயருடையவர். தான் விடுதி பெறுப்பாளர். அங்கு சாப்பாடு முழு சைவம் மரக்கறி. மட்டக்களப்பு பெடியள். பொறுப்பளாருடன். கதைத்து களவாக அதிபருக்கு தெரியாது மாட்டு இறைச்சி. சமைப்பதுண்டு ...🙏. குறிப்பு,.....பக்கத்தில் மகளிர் கல்லுரி உண்டு” அதுவும் மிக அருகில் 🤣1 point- இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
ஒரு விலைமதிப்பு அற்ற. தரமான காட்டாயம் செல்ல வேண்டிய ஆலோசனைகள். 🤣🤣1 point- தமிழ் - ஜப்பானிய மொழிகள் இடையே இவ்வளவு ஒற்றுமையா? விளக்கும் மொழியியல் வல்லுநர்கள்
நல்ல கட்டுரை ஏராளன். பகிர்வுக்கு நன்றி.1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
மிகச் சரியாகச் சொன்னீர்கள் அவர் செய்வது சிறப்பான பணி 👍1 point- பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் - நா.வேதநாயகன்
பெற்றோர்கள் தான் பிள்ளைகளை கட்டுப்படுத்த முடியும்...அதற்கு பெற்றோர்களும் முன்னுதாரணமாக செயல்பட வேணும் ....1 point- யாழின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள்!
சென் ஜோன்ஸ் பெடியள் சப்பாத்தோட பிறந்தவங்கள்🤣. மாட்டு வண்டியும் சப்பாத்து போட்டுத்தான் ஓடினார்களோ🤣1 point- "இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025]
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- பாட்டுக் கதைகள்
1 pointஉங்களின் பார்வையில் தவறு இல்லை, வசீ, அது இன்னொரு வகையானது என்று தான் சொல்லப்பட அல்லது வகைப்படுத்தப்பட வேண்டும். 'இப்படி எழுதும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது...........' என்று ராஜாஜி புதுமைப்பித்தனின் எழுத்துகள் குறித்து கேள்வி எழுப்பியதாகச் சொல்லப்படுகின்றது. 'சாபவிமோசனம்' கதையைப் படித்த பின்னர், அவருக்கு அப்படி தோன்றியது போல. ஆற்றில், நீரில் மிதந்து வரும் மனிதக் கழிவுகளுக்கு ஒப்பானது என்று சாருவின் எழுத்தை சொன்ன இலக்கியவாதிகளும் உண்டு. இன்றைய ஈழத்து படைப்பாளிகளில், முத்துலிங்கத்தை ஷோபா சக்தி ஏற்றுக்கொள்வதில்லை. இப்படியான பல உதாரணங்கள் உண்டு. எந்த நவீன படைப்புகளையுமே, படைப்பாளிகளையும் உலகம் ஒற்றுமையாக ஏற்றுக் கொள்ளாது போல. தமிழில் மொழிபெயர்ப்பில் இருக்கும் சிக்கல்கள் என்றுமே அப்படியே இருக்கின்றது. பெரும்பாலும், இரண்டு மொழிகளும் தெரிந்த, ஆனால் இலக்கியத்தில் பயிற்சி இல்லாதவர்களே மொழிபெயர்ப்பாளர்களாக இருப்பதே அதற்குக் காரணம். கோவிட் காலத்தில் 'அன்னா கரேனினா' இன் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு வாட்ஸ்அப் குழுமங்களில் வந்தது. அதைக் கொடுமை என்று சாதாரணமாக சொல்லிவிட்டுப் போக முடியாது, அது ஒரு பெரிய அவமதிப்பு என்றும் சொல்லவேண்டும். இந்த மொழிபெயர்ப்பாளார்கள் மூலப் பிரதியை உள்வாங்காமலேயே ஏதோ ஒன்றைச் செய்கின்றார்கள். நாளைய உலகை உருவாக்குபவர்கள் இன்று வாழ்பவர்களில் மிகமிகச் சிறிய ஒரு பகுதியினரே. இலக்கியவாதிகள், இலட்சியவாதிகளும் அதற்குள் வருகின்றனர் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகச்சரியே.1 point- சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா
AI உலகில் புதுமுகம் DeepSeek DeepSeek (டீப்சீக்) என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு [Artificial Intelligence (AI)] மாடல். இதை உருவாக்கியவர் Liang Wenfeng. இதன் புதிய பதிப்பு ஜனவரி 20 அன்று வெளியாகி AI தொழில்நுட்ப வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. OpenAI போன்ற முன்னணி நிறுவனங்கள் அதிக செலவில் advanced chips-ஐ பயன்படுத்தி AI மாடல்களை உருவாக்குகின்றன. ஆனால் DeepSeek குறைந்த computational resources-ஐ மட்டும் பயன்படுத்தி அதே அளவிற்கு திறமையான AI மாடலை உருவாக்கியிருக்கிறது. இதன் சிறப்பம்சம் மிக குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. DeepSeek மொத்தம் $6 million செலவில் train செய்யப்பட்டது, அதே நேரத்தில் OpenAI-ன் GPT-4 போன்ற மாடல்கள் $100 million செலவாகின்றன. குறைவான memory footprint-ஐ கொண்டதால் இது computational efficiency-யை அதிகரிக்கிறது. இதனால் Nvidia போன்ற chip-making நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. ஜனவரி 27 அன்று Nvidia-வின் பங்கு மதிப்பு $600 billion வரை சரிந்தது, இது அமெரிக்காவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒரு நாள் இழப்பு ஆகும். DeepSeek-ன் தொழில்நுட்ப அடிப்படை DeepSeek ஒரு Generative AI ஆகும், இது ChatGPT போன்ற chatbots போன்றே செயல்படும். இது Natural Language Processing (NLP) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்களைப் போல பதிலளிக்க முடியும். DeepSeek Mixture-of-Experts (MoE) எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது 671 billion parameters கொண்ட ஒரு மாடல் ஆக இருந்தாலும், எந்த ஒரு குறிப்பிட்ட பணிக்காக மட்டும் 37 billion parameters-ஐ செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு: ஒரு மொழிபெயர்ப்பு (Translation) செயலில் MoE System எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்போம். ஆங்கிலத்தில் உள்ள “The weather is pleasant today” என்ற ஒரு வாக்கியத்தை தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு பொதுவான LLM மாடல் அனைத்துப் parameters-ஐ செயல்படுத்தும். ஆனால் MoE அமைப்பில்: ஒரு set of parameters “Weather-related translations”-ஐ கவனிக்கும். இன்னொரு set “Sentence structure”-ஐ பார்க்கும். மற்றொரு set “Context-based translation”-ஐ கவனிக்கும். இதனால் MoE முறை சரியான மொழிபெயர்ப்பை வழங்கும். இதுவே task-specific precision-ஐ மேம்படுத்துகிறது. இதன் மூலம்: கணிப்பொறி திறன் (Computational Efficiency) அதிகரிக்கிறது. சிக்கனமான செயல் முறை (Cost-Effective Processing) உருவாக்கப்படுகிறது. DeepSeek-ன் Multi-Head Latent Attention (MLA) திறமை, இது பல்வேறு தகவல்களை ஒரே நேரத்தில் ஆராய்ந்து நுண்ணிய தொடர்புகளை கண்டறிந்து, சிறப்பான முடிவுகளை வழங்க உதவுகிறது. DeepSeek அதிக நீளமான context-ஐ பாதுகாக்கும் திறனைக் கொண்டுள்ளது. இது 128K tokens வரை விவரங்களை புரிந்துகொள்ள முடியும். இது ஒரு Open-Source AI Model ஆகும், இது GPT-4 போன்ற மாடல்களுக்கு மாற்றாக இருக்கும். இது 95% குறைந்த செலவில் செயல்படுகிறது. DeepSeek-ன் வளர்ச்சி அமெரிக்க நிதி சந்தையை அதிகமாக பாதித்துள்ளது. DeepSeek-ன் வெற்றியால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. Nasdaq Index 3% வீழ்ச்சியடைந்தது. Nvidia-வின் Market Capitalization $3.5 trillion-ல் இருந்து $2.9 trillion-ஆக குறைந்தது. Apple, Microsoft போன்ற நிறுவனங்களும் பங்குச் சந்தையில் பாதிக்கப்பட்டன. DeepSeek இப்போது சீனாவின் AI Renaissance (மறுமலர்ச்சி) எனக் கருதப்படுகிறது. ஆனால் Western market-ல் இது regulatory scrutiny (ஒழுங்குமுறை சோதனை) மற்றும் security concerns-ஐ எதிர்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து, DeepSeek AI உலகளவில் முக்கியமான AI போட்டியாளராக வளருமா என்பது பார்க்க வேண்டிய விஷயம். முனைவர் ப. தமிழ் அரசன் tamilarasanbakthavatchalam@gmail.com https://kaniyam.com/deepseek/1 point- காத்தான்குடி பொலீஸ் பிரிவு சுமார் 20 ஊர்களை உள்ளடக்கியுள்ள நிலையில், இப்பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்கள், கைதுகள் அனைத்தையும் காத்தான்குடி ஊரின் சம்பவமாக தலைப்பு, செய்தி வெளியிட வேண்டாம் என ஊடகங்களிடம் வேண்டுகோள்
காத்தான்குடி கொர்ட் சூட் போட்ட (மன்னிக்கவும் அரபு பாரம்பரிய) படிச்ச செல்வாக்கான ,செல்வந்த மனிதர்கள் வாழும் இடம் ...அப்படியான ஒர் இடத்தில் கஞ்சா பாவனையில் உள்ளது என்றால் கெளரவம் பிரச்சனை தானே... இது ஏனைய சமுகத்தின் திட்டமிட்ட சதியாக இருக்குமா?1 point - ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.