Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்15Points3115Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்14Points88792Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்12Points19639Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்11Points33795Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/19/25 in all areas
-
ஒரு முட்டை ஆயிரம் டாலர்
6 pointsஒரு முட்டை ஆயிரம் டாலர் ------------------------------------------ இப்ப இங்கே பல கடைகளில் முட்டை இல்லை சில கடைகளில் இருக்கின்றது ஆனால் எண்ணி எண்ணித்தான் வாங்கலாம் பலத்த கட்டுப்பாடு தட்டுப்பாட்டால் விலையும் பல மடங்காகிவிட்டது கோழிகளுக்கு காய்ச்சல் வந்தது என்று சும்மா சுகமாக நின்றவைகளையும் அழித்துப் போட்டார்கள் இப்ப புதுதாகக் குஞ்சுகளும் வேண்டாம் என்று அங்கே குடும்பக் கட்டுப்பாடு திட்டமும் வந்துள்ளது இது என்ன கலிகாலம் அமெரிக்காவில் முட்டைப் பொரியல் கூடக் கிடையாதா...... ஊரில் வீட்டில் கோழிகள் இருந்தன அப்பா முதன் முதல் ஒரு கோழி வாங்கித் தந்தார் ஒரு விதமான மஞ்சள் கலரில் வெள்ளைப் புள்ளிகள் போட்ட கோழி அது அது வீட்டுக்கு வரும் போது அதன் வயது நாலு மாதங்கள் இருக்கும் ஒரு நாள் முழுக்க கிளிசரியா மரத்தடியில் கட்டி வைத்து விட்டு அடுத்த நாள் அவிழ்த்துவிட்டேன் அப்படியே வீட்டை சுற்றிச் சுற்றியே நின்றது அடுத்த அடுத்த மாதம் முட்டை போட ஆரம்பித்தது முதல் முட்டை போடு முன் பெரிய எடுப்புகள் எல்லாம் எடுத்தது ஒரு அதிகாலையிலேயே தலைமாட்டில் வந்து பதுங்கியது அது கேரிக்கொண்டு திரியும் போதே முட்டை போடப் போகின்றது என்று ஆச்சி சொன்னார் அதைப் பிடித்து கடகத்தால் கவிழ்த்து வைக்க முட்டை போட்டது சுற்றி இருந்த மூன்று வீட்டுக்கும் அது முட்டை போட்ட விசயம் தெரிந்தது அப்படி ஒரு விடாத கொக்கரிப்பு பன்னிரண்டு முட்டை போட்டு விட்டு அது அடை என்று ஒரு மூலையில் குணுகிக்கொண்டு படுத்துவிட்டது பின்னர் அயலூரில் முட்டை வாங்கி அடை வைத்து குஞ்சுகள் வந்து வந்து அதன் குடும்பம் பெருகியது பின்னர் முட்டை நாங்கள் கடையில் வாங்கவே இல்லை சரி இங்கும் கோழி வளர்ப்போம் என்று விசாரித்தேன் அக்கம்பக்கத்தவர்கள் சம்மதம் சொல்லவேண்டும் முதலில் பின்னர் ஒரு பெரிய கூடு வேண்டும் கோழிகளுக்கு தீனி வாங்க வேண்டும் கடையில் மருத்துவரும் வந்து போவார் அப்பப்ப அந்த செலவும் இருக்கின்றது கோழிக் குஞ்சுகளும் வாங்க வேண்டும் அதை மறந்துவிட்டேன் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் முதல் முட்டை கிடைக்கும் போது செலவு ஆயிரம் டாலர்கள் ஆகி விடும் என்று கணக்கு காட்டுகின்றது கலிகாலம் தான்!6 points
-
சும்மா ஒர் பதிவு
4 pointsஒரு காலத்தில் எமது முன்னோர்கள் வயல்வெளிகளின் அருகாமையில் கோவில் கட்டி அதற்காக,குளங்களை வெட்டினார்கள்,கேணிகளை உருவாக்கினார்கள்..மன்னர்கள் ஆட்சியில் அல்லது வேளான்மை சமுகம் உருவான காலத்தில் இது ஒர் சமுக கட்டமைப்பு ..சகல கிராமங்களிலும் உள்ள பழைய கோவில்களில் இந்த டெம்பிளெட்டை அவதானிக்கலாம்.. இதற்கு பணம் எங்கிருந்து வந்திருக்கும்? ஊர்மக்கள் அல்லது மன்னர்கள் கொடுத்திருப்பார்கள் அநேகமாக பொதுமக்கள் பொதுநோக்குடன் கொடுத்த பணமாக த்தான் இருக்க வேண்டும் ...அந்த பணம் மக்களின் நலன் கருதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை . எமது கண் முன்னே குளங்கள்,கேணிகள்(மருதடி கேணி..காக்கா சுயா),கிணறுகள் இன்றும் சாட்சியாக இருக்கின்றது... இன்று புலம் பெயர் நாடுகளிலிருந்து கிடைக்கு பணம் போன்று அன்றைய காலத்தில் நிச்சயம் பணம் கிடைத்திருக்காது.இருந்தும் உள்ளூர் மக்கள் சொந்த வருமானத்தில் இப்படியான செயல்களை செய்து உள்ளனர் யாழ் மாவட்டம் ஆறுகள்,கங்கைகள்,அருவிகள் நிறைந்த மாவட்டம் அல்ல.... விவசாயத்திற்கு மழை நீரை பெரிதும் நம்பிருந்தார்கள்.மழையும் வருடத்தில் ஒர் குறிப்பிட்ட காலத்தில் தான் பெய்யும்..மழையும் சில நாட்களில் அடித்து பெய்யும் அந்த நீர் வீணாக கடலுக்கு சென்று கலந்து விடும்.இந்த நீரை சேமித்து விவசாயம் செய்யத்தான் குளங்கள்,கேணிகள்,கிணறுகள் கட்டினார்கள். இவை யாவும் பொது நோக்குடன் பொது இடத்தில் பொதுமக்களினால் பொது நன்மைக்கு ...பொது மக்கள் சேர்த்த பணத்தில் ...என நான் நினைக்கிறேன் ...நிச்சயமாக மருதடியான் தனிமனிதனாக இவற்றை(கேணி கட்டுதல்,கிணறு வெட்டுதல்,குளம் அமைத்தல்) செய்திருக்கமுடியாது....அவர் ஓரு சக்தியாக செயல் பட்டிருக்கலாம்...(ஏன் வீணாக் மருதடியானை எங்கன்ட அலட்டலுக்குள்ள பிறகு மனுசன் என்னோட கோபித்து கொண்டால்) ஊர் மக்கள் பணம் கொடுத்து,அந்த பணத்தில் ஊர்மக்கள் பயன் அடையும் வகையில் நல்ல திட்டங்களை அமுல் படுத்தியுள்ளார்கள்.அதற்கு பொதுக்கட்டமைப்பு (கோவில் சபை அல்லது கிராம சபை) துணை புரிந்திருக்கின்றது.. குளம் ... மழை நீர் சேர்ந்து நிற்கும் .நீண்ட நாட்களின் நீரோட்டத்தின் விளைவாக ஊரில் உள்ள மண்,கல்,சகதி மற்றும் கழிவுகள்(வாழைமரம்கள்,தடிகள்,மரங்கள்) யாவும் நீரோடு சென்று அடியில் படிந்து குளத்தின் ஆழத்தை குறைத்து விடும்..நீர் வற்றிய பின்பு, கழிவுகள்,மண் போன்றவற்றை அன்று வாழ்ந்த மக்கள் சிரமதான முறையில் துப்பரவு செய்தார்கள் ...தூர் வாருதல் என சொல்வார்கள் ...பொது நோக்குடன் (கிளீன் சிறிலங்கா 30 நாட்கள்.கிளீன் அப் அவுஸ்ரேலியா நாள் 30 வருடங்கள்)எங்கன்ட சனத்தின்ட கிளீன் அப் குளம் எப்பவோ தொடங்கிட்டுது ...(கிளீன் அப் செய்யும்பொழுது கள்,தேனீர்,வடை,மோதகம்..போன்றவற்றை ஊர்மக்கள் செய்து கொடுப்பார்கள் ஊர்மக்கள் கூடி சேர்த்த பணம்) கிளீன் அப் அவுஸ்ரேலியா செய்யும் பொழுதும் நாலு பேர் சேர்ந்து காசு போட்டு பியர் அடிக்கிறனாங்கள் ..,அதற்காக அவுஸ்ரேலியா அரசு எங்கள் மீது குற்றம் சாட்ட முடியாது , "அரசாங்க காசில பியர் குடிக்கிற எண்டு" இந்த குளங்கள் விவசாயத்துக்கு மட்டுமல்ல கால் நடைகளின் தாகத்தையும் தீர்க்க உதவியிருக்கு,இருக்கின்றது . கேணிகள் இவற்றில் அநேகமானவற்றுக்கு மூன்று பக்கமும் சுவர் கட்டியிருப்பார்கள் ஒரு பக்கம் திறந்த வாறு இருக்கும் படிகள் கட்டியிருக்கும் ,மழை நீர் ஒடிவந்தாலுமொரு பக்கத்தினால் மட்டுமே அடி தளத்துக்கு செல்ல முடியும் ஊர் கழிவுகள் குறைவாக அடித்தளத்திற்கு செல்லும் இதனால் நீண்ட நாட்களுக்கு தூர் வார வேண்டிய அவசியமில்லை ... இன்று கேணிகளை மூடிவிடுகிறார்கள் ,அல்லது தீர்த்தமாடுவதற்காக கேணிக்குள் சிறிய கட்டித்தை கட்டிவிடுகிறார்கள் ...இதை செய்வது ஊரில் உள்ள மேதாவிகள் .. கிணறு. முக்கியமாக தோட்ட கிணறுகள் அதிலும் யாழ் மாவட்ட கிணறுகள் மழை நீர் ஓடுவதற்கு ஏற்ற வகையில் ஒர் பாதை விட்டு கட்டியிருப்பார்கள் .தற்பொழுது இந்த கிணறுகள் முற்றாக மூடி கட்டப்பட்டிருக்கின்றது அதுபோக யாரும் கிணறு வெட்டுவதில்லை ,பணம் அதிகம் வேண்டும் வெட்டுவதற்கு. கேணிகளுக்கு பக்கத்தில் கிணறு வெட்டியிருப்பார்கள் ,முட்டாள்கள் தண்ணீர் கேணியில் இருக்கின்றது வீணாக கிணற்றையும் வெட்டி யிருக்கிறாங்கள் பழசுகள் என திட்டியும் இருக்கின்றேன் .ஆனால் அதன் முக்கியத்துவம் பின்பு தான் அறிந்து கொண்டேன்.கோயில்களுக்கு சற்று தொலைவில் இருக்கும் வீட்டு கிணற்று தண்ணீர் உவர் தன்மையுடன் இருக்கும் ஆனால் கோயில் கிணற்று தண்ணீர் நன்னீராக இருக்கும் .கேணிகளில் சேரும் மழைநீர் கிணற்றுக்கு உள்ளே மண்,சிறுகட்கள் ஊடாக வடிகட்டப்பட்டு ஊற்றாக உட்செல்வதனால் தான் என நினைக்கிறேன். மேலும் தோட்டங்கள் ,வயல்களுக்கு மத்தியில் கிணறுகள் வெட்டியிருப்பார்கள் அங்கும் நன்னீர் தான். குழாய் கிணறு பாவனைக்கு வந்துவிட்டது.அதிக இடம் தேவையில்லை .. மொத்தத்தில் மழை நீரை நிலத்தடியில் சேமித்து வைக்கும் சகல பொறிமுறைகளும் இல்லாமல் போகின்றது. அன்றைய ஊர்மக்கள்,மன்னர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) இருந்த அறிவு ,தற்பொழுது நூறு வீதம் கல்வியறிவு கொண்ட ஊர்மக்களுக்கும் இல்லை ,அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் இல்லை ,கோவில் நிர்வாக சபைக்கு போட்டி போட்டு கொண்டு வரும் தலைவர்கள்,உறுப்பினர்களுக்கும் இல்லை..... கோயில்கள்,பாடசாலைகள் எல்லாம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், தேவைகளை இப்பொழுது வாழும் மக்கள் மறந்துவிட்டனர் போல உள்ளது .4 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, வில் யங், ரொம் லதம் ஆகியோரின் சதங்களுடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 320 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 60 ஓட்டங்களால் வெற்றியீட்டியது நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய 8 பேருக்கும் புள்ளிகள் இல்லை! முதலாவது போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஏராளன் 2 2 வீரப் பையன்26 2 3 சுவி 2 4 அல்வாயன் 2 5 தமிழ் சிறி 2 6 நிலாமதி 2 7 வசீ 2 8 செம்பாட்டான் 2 9 குமாரசாமி 2 10 நியாயம் 2 11 சுவைப்பிரியன் 2 12 எப்போதும் தமிழன் 2 13 புலவர் 2 14 கோஷான் சே 2 15 நீர்வேலியான் 2 16 கந்தப்பு 2 17 ஈழப்பிரியன் 0 18 ரசோதரன் 0 19 நுணாவிலான் 0 20 வாத்தியார் 0 21 நந்தன் 0 22 வாதவூரான் 0 23 பிரபா 0 24 கிருபன் 0 கருத்துக்கள மாற்றம் வர்ணங்களைக் கொண்டுவரவில்லை!4 points
-
ஒரு முட்டை ஆயிரம் டாலர்
4 pointsஎனது நண்பர் ஒருவர் கோழி வளர்த்து அடிச்சுச் சாப்பிட ஆசைப் பட்டு (பெரிய வளவுடன் வீடு ) பக்கத்துக்கு கிராமத்துக்குள் சென்று அஞ்சாறு கோழி வாங்கிவந்து நிலத்தோடு கூடு செய்து விட்டு வளர்த்து வந்தார் . ...... முதல் கோழி சமைக்கும்போது எங்களுக்கும் சாப்பிட சந்தர்ப்பம் கிடைத்தது . .......ஒரு மாதம் வரை நன்றாகத்தான் போச்சு . ...... அன்று சமைப்பதற்கு கோழி பிடிக்க போயிருக்கிறார் ....... உள்ளே ஒரு பாம்பு இருந்து அவரை வரவேற்றிருக்கு . ........ பின் நாங்கள் எல்லாரும் சென்று ஒருமாதிரி அவரை வெளியேற்றி விட்டம் ....... மிச்ச கோழிகளை அன்றே உரித்து குளிர்பெட்டியில் அடக்கம் செய்தாயிற்று . .......!4 points
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
நீங்கள் மேலே குறிப்பிட்ட எதையும் நான் மறுக்கப்போவதில்லை. இவை நடந்தவை தான். ஆனால் நீங்கள் சாட்டும் குற்றச்சாட்டு அனைவரிலும். உங்களுக்கு அந்த நாலு பேரைத்தெரிவதும் எனக்கு மிச்ச நாலாயிரம் பேரை எனக்கு தெரிந்திருப்பதும் தான் வித்தியாசம். தம் வாழ்வையே அர்ப்பணித்து இன்றும் விசா இல்லாமல் வீடில்லாமல் வேலை கிடைக்காமல் எம்மவராலையே வேலை தடுக்கப்பட்டு பிள்ளைகளுக்கு கூட உயர் கல்வி மறுக்கப்பட்ட (பெற்றோர் சிவப்புக்குறி) இருக்கும் நாடுகளில் கூட அடுத்த நகரங்களுக்கு செல்லமுடியாமல் பக்கத்து நாடுகளுக்கு கூட குடும்பத்துடன் செல்ல முடியாமல் கணவன் ஒரு நாட்டிலும் மனைவி பிள்ளைகள் இன்னொரு நாட்டிலும் வாழ்ந்தபடி...... இப்படி பல நூறு பேர் இன்றும். வேண்டும் என்றால் வாருங்கள். சந்திக்க செய்கிறேன். இப்படியானவர்களின் தொடர்பில் நான் இருக்க இங்கே வந்து நாலு பேரை வைத்து அவ்வளவு பைரையும் நாறடிக்கும் போது என்ன பேச வரும்? கிட்டத்தட்ட உங்கள் செயல் முரளிதரன் தவறு செய்தது கிழக்கு மாகாணமே ஊத்தவாளிகள் என்று எழுதுவதற்கு சமன்.3 points
-
கோவையில் 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
பாரதிதாசன் தனது துன்பம் நேர்கையில் பாட்டில் இப்படி எழுதி இருப்பார்…. அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது - யாம் அறிகிலாத போது - தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ இயம்பிக் காட்ட மாட்டாயா? இது ஒரு பெண் குழந்தையை நோக்கி ஒரு வயதானவர் பாடும் பாட்டு. அறம் எது அறமில்லாதது எது? என தெரியாத மனநிலையில் இருக்கும் ஒரு வயதானவருக்கு, திருக்குறளை பாடிக்காட்டி அந்த பெண் பிள்ளை அறத்தை நினைவூட்டுவதாக இதை நான் விளங்கி கொள்வேன். சிலர் எழுதும் எழுத்துகள் அவர்களுக்கு பெண் பிள்ளைகள் இருக்க வாய்ப்பிலை என்றே நினைக்க வைக்கிறது (இந்த திரியிலும், ஏனையதொரு திரியிலும்). பராவாயில்லை - குறைந்த பட்சம் statutory rape என்றால் என்ன என்பதை கூகிள் பண்ணியாவது பாருங்கள். 👆 இங்கே சிவப்படித்திருக்க வேண்டியது இதற்கு மட்டுமே.3 points
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்காவிற்கு ரஷ்யாவிடமிருந்தூ ஏதோ சில பொருட்கள் மிகவும் மலிவு விலையில் அல்லது இலவசமாக கிடைக்கப் போகின்றன.............. ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போகமாட்டார்.... இது எல்லா நாடுகளுக்கும் ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும். ஒரு நாடு, ஒரு இனம் அதன் சுயநிர்ணய உரிமையை இழப்பது கொடுமையான, அநியாயமான ஒரு நிகழ்வு. எங்களுக்கு நடந்தது, இன்று உக்ரேனுக்கு நடக்கின்றது, இதே பலசாலிகளால் நாளை இன்னும் பலருக்கும் இதே நிலைமை வரும்................. பாதிக்கப்பட்டவர்களாவது பாதிக்கப்படுகின்றவர்களுக்கு ஒரு ஆதரவுக் குரலையாவது பதிவு செய்யவேண்டும்.3 points
-
நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் ஏமாற்றிவிட்டார்.. விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு
நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் இமான் ஏமாற்றிவிட்டார்.. பாடகி விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு V VasanthiUpdated: Wednesday, February 19, 2025, 17:01 [IST] ஒரு சில பாடல்கள் கேட்கும் போது நம்முடைய மனதிற்குள் இருக்கும் சந்தோஷங்கள், கவலைகள், பாசம் உட்பட எல்லா உணர்வுகளும் நம்மை மீறி வெளிப்படும் அதுபோல பாடல்களை பாடும் பாடகர்கள் மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் வைக்கம் விஜயலட்சுமியும் ஒருவர். இவர் தமிழில் வெளியான குக்கூ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "கோடை மழை போல" என்ற பாடல் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு கேட்பவர்களை ஆட வைக்கும் "சொப்பன சுந்தரி நான்தானே", "காக்...கா முட்டை... காக்கா முட்டை கண்ணால" என்ற பாடல்களை இவர் பாடி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. அதுபோல "மண்ணிலே ஈரம் உண்டு" என்ற பாடல் பலருடைய பெருந்தன்மையை பறைசாற்றும் இடமாக பாடியிருந்தார். அதற்கு பிறகு பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். வைக்கம் விஜயலட்சுமி பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பலருக்கும் முன்மாதிரியாக தன்னுடைய குரல் மூலம் தனித்து நிற்கிறார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் ஆனது ஆனால் மாப்பிள்ளை வீட்டினர் போட்ட கண்டிஷன் தனக்கு செட் ஆகவில்லை என்று திருமணத்திற்கு மறுத்துவிட்டார். பிறகு குடும்பத்தினரின் வற்புறுத்தலினால் 2018 ஆம் ஆண்டு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண பங்க்ஷனில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர். ஆனாலும் இவர்களுடைய திருமண வாழ்க்கை சில வருடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது தன்னுடைய கணவர் குறித்து பல குற்றச்சாட்டுகளை விஜயலட்சுமி கூறியிருந்தார் அது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு தொடர்ந்து சினிமாக்களில் பாட்டு பாடி கொண்டிருக்கிறார். அதுபோல விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கெஸ்ட் ஆகவும் கலந்து கொண்டு வருகிறார். இதன் நிலையில் பேட்டி ஒன்றில் அவர் பேசும் போது தன்னுடைய வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை குறித்து பேசி இருக்கிறார். அதில் தனக்கு இளையராஜா, ஏ ஆர் ரகுமான், வித்யாசாகர் கூடவும் பாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். அதோடு தன்னை பார்ப்பதற்காக ஜெயச்சந்திரன், மலையாள டைரக்டர் கமல் என பலர் வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதுபோல இமான் சார் தன்னை பார்க்க வருகிறேன் என்று சொன்னார் ஆனால் அவர் இப்போ வரைக்கும் என்னை பார்க்க வரவே இல்லை என்று ஏக்கமாகவும் பேசி இருக்கிறார். https://tamil.oneindia.com/television/singer-vaikom-vijayalakshmi-accuses-music-composer-iman-details-emerge-681381.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி ஓடியாந்திருப்பியளே 🤣2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்பிடி ஒருவரை விடமுடியாது. அது ஒரு பதினாறு தலை ராவணன். அது சேர்ந்து அந்த எட்டுக்கால் பூச்சிய நசிக்கிய தருணம் இது. போடுறா வெடிய. 😉2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்திரா பந்து வீச, ஷியா சென்சுரி அடிக்க… தேர்ட்மானில் விபி சிங் தலையை சொறிந்து கொண்டு நிற்பார்… அதெல்லாம் கிரிகெட்டின் பொற்காலம் அண்ணா🤣2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போகிற போக்கை பார்த்தால் இன்றைக்கு பாபர் விசேட பிரியாணி இருக்கும் போல. பாபரும் துரத்தி அடிப்பதில் வல்லவர். இன்று பிடிகளை தவறவிட்ட பாகிஸ்தான் வீரர்கள், கிளென் பிலிப்சிடம் பாடம் படிக்க போகலாம். ரிஷ்வான் விலக்கி அடித்த அந்தப் பந்தை காற்றில் பறந்து பிடித்தாரே ஒரு பிடி. இந்தச் சுற்றுப்போட்டியின் சிறந்த பிடியாக அது அமையப் போகிறது.2 points
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
நீங்கள் தேவையற்று இந்த மாபியாக்களை புனிதர்களாக்காட்டமுனைகின்றீர்கள். இதில் மறைப்பதற்கு என்ன உள்ளது. 2009 மே மாதம் வரை, மக்கள் சேகவர்கள் போல் வேஷமிட்டு மக்களிடம் நிதி சேகரிப்பதற்காக மக்களிடம் நெருங்கிய தொடர்பில் இருந்து விட்டு, 2009 மே மாதத்தின் பின்னர் சடுதியாக தொலைபேசிகளை கூட நிறுத்தி விட்டு மக்களிடம் இருந்து விலகினார்கள். இந்தத்திருட்டுத்தனத்தை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். மக்கள் ஒப்பு கொண்ட தொகையை விட மிக அதிகமாக மக்களுக்கு கூட தெரியாமல் அவர்கள் நம்பிக் கொடுத்த சம்பள படிவங்களில் மோசடியாக மாற்றங்களை செய்து வங்கிகளில் கடனாக பெற்று மக்களை வருமானத்துக்கு அதிகமாக கடனாளியாக்கிவிட்டு எந்த குற்றவுணர்சசியும் இன்றி அனைத்து பணத்தையும் தாயகத்துக்கு அனுபகி விட்டோம் என்று பொய்யுரைத்த இவர்கள் புனிதர்களா? இவர்களில் யாரும் அனேமதயங்கள் அல்ல. மிக நீண்ட காலமாக தேசிய செயற்பாடாளர்களாக வலம் வந்தவர்களே. தலைவரால் நேரடியாக அனுப்பியவர் என்று சிலரை இறுதி யுத்த காலப்பகுதியில் அறிமுகப்படுத்தி கடன் பெற்று விட்டு பின்னர் எல்லாம் முடிந்த பின்னர் அந்த நபர கள் தலைமறைவாகி விட, தமக்கு ஒன்றும் தெரியாது பணம் முழுவதும் அவர்களிடம் தான் என்று நடித்த இவர்களை நீங்கள் ஏன் புனிதராக்க முனைகின்றீர்கள்? இவர்கள் எல்லோரும் கூட்டு களவாணிகள் தானே! போரட்டத்தின் முடிவை ஏற்கனவே 2009 ன் ஆரம்பத்திலேயே கணிப்பிட்டு அறிந்தும் அதை மறைத்து திட்டமிட்டு மக்களிடம் கொள்ளையில் ஈடுபட்ட இவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதில் எந்த பிரயோசனமும் இல்லை. நீங்கள் என்னை கோடரிகாம்பு என்று திட்டியதை போலவே இந்த மாபியாக்களும் நிதி சேகரிக்கும் போது தர மறுத்த, கேள்வி கேட்ட மக்களை கோடரிகாம்புகள், துரோகிகள் என்று அவர்களுக்கு முத்திரை குத்தியவர்களே. இது இவ்வாறனவர்களின் பழக்க தோசம். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அப்படி தானே இருப்பர். துவாரகாவை அறிமுகப்படுத்தி மீண்டும் பணவேட்டையை நடத்த திட்டமிட்டு அதற்கு ஆதரவான பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்கள் அனைவருமே முன்னாள் பிரபலமான தேசிய செயற்பாட்டாளர்களே. இன்றும் இப்படியான வேலைகளில் பாதாள உலக கும்பல்கள் போல் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்கள். இத்திரியில் பேசப்பட்ட பொஸ்கோ என்ற நபரை பற்றி எனக்கு தெரியது. ஆனால் அவர் நிரபராதி என்றால் நிச்சயம் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- ஒரு முட்டை ஆயிரம் டாலர்
2 pointsசிட்னியியிலும் முட்டை வலு தட்டுப்பாடு தான்..! அண்டைக்கு ஒரு நாள் சுப்பர் மார்க்கட்டில முட்டையைக் கண்டு வாங்கியாச்சு. விலை போட்டிருக்கவில்லை. வீட்டை வந்து மனிசி விலையப் பார்த்தா வழக்கத்தை விடவும் இரண்டு டொலர் கூட. விசாரிச்சுப் பாத்தால் இந்தியாக் காறர் தான் இப்ப மனேச்சராம். எங்க போனாலும் எங்களைக் கலைக்கிறாங்கள் இவனுகள்…! எங்கட கோழிகளுக்கு பேர்ட் புளூவாம்🥱2 points- 'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
Published By: RAJEEBAN 19 FEB, 2025 | 10:36 AM ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைனே காரணம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் யுத்தத்தை ஆரம்பித்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதியை தான் சந்திக்ககூடும் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் மொஸ்கோவின் படையெடுப்பிற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். சவுதிஅரேபியாவில் அமெரிக்க ரஸ்ய அதிகாரிகளின் சந்திப்பு இடம்பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் ரஸ்யாவுடனான யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனிற்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான திறமையும் அதிகாரமும் என்னிடம் இருப்பதாக நான் நினைக்கின்றேன். அது சரியான விதத்தில் இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ள டிரம்ப், எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என தெரிவிக்கின்றார்கள், நீங்கள் மூன்று வருடமாக இருக்கின்றீர்கள், நீங்கள் இதனை முடித்துவைத்திருக்கவேண்டும், என தெரிவித்துள்ளார். நீங்கள் ஒருபோதும் இதனை ஆரம்பித்திருக்க கூடாது, நீங்கள் உடன்பாட்டிற்கு வந்திருக்கவேண்டும் உக்ரைனிற்காக நான் உடன்பாட்டிற்கு வந்திருப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். 'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு1 point- கனடாவும் கண்டறியாத சினோவும். ....
டிங் டிங்....... சிறீ : சாமி அண்ணோய் என்ன சங்கதி நாரியை பிடிச்சு கொண்டு நடக்கிறியள் சாமி : இருந்தா எழும்பே லாமல் கிடக்கு ...ஐயோ ....வந்தனெண்டா .எனக்கு வர கோவத்துக்கு ...உனக்கு பகிடியாய் இருக்கு . சிறீ : ஏன் அண்ணா சினோ வழிச்சு களைச்சு போட்டீங்களா ? இந்தமுறை ஒரு நாளிலேயே கொட்டித்தள்ளி போட்டுது சாமி : பரிமளம் ! ....இவன் தம்பி ஸ்ரீ வந்திருக்கிறான் . கொஞ்சம்கோப்பி போட்டு தாறீரோ ? இவள் கம்ப்யூட்டர் ஐ விட்டு அசையமாடடாள் . ... சிறீ : அப்பவும் சொன்ன நான் பெரிய வாசல் (drive way ) இருக்கிற வீடு வாங்க தீங்க என்று ... பரிமளம் : என்ன தம்பி விசேஷம்.? இந்தாங்கோ காப்பி சாமி : இவள் தான் பெரிய வீடு வேணும் என் இன சனம் எல்லாம் வந்து சேர்ந்தால் ஒன்றாக இருக்கலாம் என்று. .சும்மா சொல்ல கூடாது எல்லோரையும் வரவேற்று (கொஞ்ச ரூம் காசு தந்தவைதான் ) PR (permanent residence ) கிடைச்ச உடனே பறந்திட்டுதுகள். ம் சிறீ : நான் வந்ததென்ன என்றால் ...சினோ வழிச்சு கைவிறைச்சுப்போட்டுது . உங்கட ..snow blower ஐ தாறீங்களோ ? இவள் வேலையால் வரமுன்னம் வழிச்சுப்போட்டு நான் வேலைக்கு இறங்கவேண்டும். சாமி : இன்னும் இரண்டு நாளுக்கு கொட்டுமாம் ...இந்தா வழிச்சுப்போட்டு உடன் கொண்டுவந்து தா...இவன் அமேரிக்கண்ட பிளேன் விழுந்து தலைகீழபோச்சுதாம் .சிறீ : ஓம் ஓம் கேள்விப்படட நான் சாமி : ம் ம் ஊரில் இருந்தா.... இந்த சினோவும் இல்லை வழியல் உம் இல்லை ...ச் சா கை விறைச்சு போச்சு... பெஞ்சன்(pension ) எடுத்தப்புறம் ஊரோடு போய் இருந்திடனும். காலத்துக்கேற்ற உரையாடல். (சாமியாரும் சிறீத்தம்பியும் மன்னிக்கவும். )1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
🤣................. இணைத்தலைமை கேட்பதில் ஓபிஎஸ் போல இருந்தாலும், ஜெயக்குமார் போல நல்ல கலகலப்பாகவும் இருக்கின்றார்......1 point- மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
நியாயமான யோசிக்க வேண்டிய கருத்து. நன்றி விசுகு அய்யா1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எல்லாரும் இந்தியாவை தெரிவு செய்ததால் நான் மிம்ஸ் செய்ய தேவை இல்லை😁 இந்தியா வங்கிளாதேஸ்ச சிம்பிலா வென்று விடுவினம்🙏👍...................1 point- மாற்றி அடித்தார் அர்ச்சுனா எம்.பி
இந்த கலைகளை அவர் தன்னை பாதுகாக்க தான் பயன்படுத்துவார். மாறாக பொதுமக்களை தாக்குவதற்க்கு இல்லை ஆனால் இந்த கலைகள். துப்பாக்கி சுட்டிலிருந்து பாதுகாக்கது1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதிகமாக அலம்பித் தோற்றது என்ற வகையில் நான் தான் கடைசி...... ஆனால் போட்டியில் சேர்ந்த வரிசையிலேயே சமனானவர்களை வரிசைப்படுத்துவதால், இன்று நமக்கு கீழேயும் நட்புகள் இருக்கப் போகின்றார்கள்.................. ஆனால் பாகிஸ்தான் கிணத்துக்குள்ள தலைகீழாகப் பாயும் போல தெரியுதே, நம்மளையும் இழுத்துக் கொண்டு.............🤣.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அட அட. நம்ம ராசி அப்படி. நாம ஒன்டுநினைச்சா பாபர் ஒன்டு நினப்பாரோ. பாகிஸ்தானுக்கு போட்ட அந்த 8 பேருக்கும் ஏதாவது ஆறுதல் சொல்லலாம் என்று பார்த்தன்.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இப்போது நிற்கின்ற இருவரும் அருமையாக ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். வான வேடிக்கைகளுக்கு தயாராகுங்கள். கிரிக்கெட்டில் ஒரு கையளவு சொல்வார்கள். 35வது பந்துப் பரிமாற்றத்தில், ஒரு உறுதியான இணைப்பாட்டம் ஒன்றுடன், அரைவாசி ஓட்டங்களுக்கு மேல் குவித்துவிட்டால், வெல்வதற்கான சாத்தியம் மிக அதிகம். அது இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. பாகிஸ்தானுக்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கின்றது.1 point- சும்மா ஒர் பதிவு
1 pointமழைநீரை அப்படியே கடலுக்குள் ஓடவிடும் பாதகமான நிலை இன்று பல நாடுகளிலும் நகர்ப்புற வளர்ர்சிகளின் பின் வந்துவிட்டது. நிலத்தடி நீரின் மட்டம் மிகவும் கீழே போய் சுத்தமான குடி தண்ணீருக்கு அலையும் மக்கள் தொகை ஒரு பெரிய தொகை என்ற தரவுகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஒரு ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மழை நீரை தேக்கி, நிலத்துக்குள் விடும் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது. இங்கு லாஸ் ஏஞ்சலீஸ்ஸில் பெரிய வெளிகளில் நீரைத் தேக்கி வைக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார்கள்................... அதை ஆரம்பித்த பின் மழை தான் பெய்யவில்லை............1 point- பாம்பும் கீரியும் எப்போதும் சண்டையிடுவது ஏன்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கீரி என்று சொன்னாலே, பாம்பு குறித்த நினைவு நமக்கு வந்துவிடும் அளவுக்கு, இந்த இரண்டு உயிரினங்கள் பற்றிய கதைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. கீரி - பாம்பு இடையே நிகழும் ஆக்ரோஷமான சண்டைகள் இயற்கைச் சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உயிர் பிழைத்திருப்பதற்கான உத்திகள், பரிணாம தகவமைப்புகள், சூழலியல் சமநிலை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த இரண்டு உயிரினங்களுக்கு இடையிலான பகையுணர்வு சுற்றுச்சூழலுக்கு மிக முக்கியமானது. ஆனால், அடிப்படையில் இவையிரண்டுக்கும் இடையே இருக்கும் இயற்கையான பகை மக்களிடையே பிரபலமான அளவுக்கு, அதற்கான காரணம் அதிகமாகப் பிரபலமடையவில்லை. பாம்பு - கீரி இரண்டும் எப்போதும் சண்டையிடுவது ஏன்? அதில் கீரியே பெரும்பாலும் வெற்றி பெறுவது ஏன்? பாம்பின் நஞ்சு கீரியை ஒன்றும் செய்யாதா? இவையிரண்டும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா? குவாம் தீவு: பாம்புகளின் தீரா பசிக்கு மொத்தமாக அழிந்து போன பறவை இனங்கள் வீட்டில் பாம்பை செல்லப்பிராணியாக வளர்க்க முடியுமா? கீரிகள் - அச்சமற்ற பாம்பு வேட்டையாடிகள் கீரிகள், குறிப்பாக இந்திய சாம்பல் நிற கீரிகள், அச்சமற்ற பாம்பு வேட்டையாடிகளாக அறியப்படுகின்றன. இவை நாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் உள்ளிட்ட நச்சுப் பாம்புகளை எதிர்கொள்ளும் திறன் கொண்டவை. ஒரு சில பாம்புகளின் நஞ்சை தாங்கிக் கொள்ளும் எதிர்ப்பாற்றலும் இவற்றுக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கீரிகளின் சுறுசுறுப்பு, வேகம் ஆகியவை, பாம்புகளின் தாக்குதல்களில் இருந்து விரைந்து தப்பித்து, எதிர்த் தாக்குதல் தொடுக்கும் திறனை அவற்றுக்கு வழங்குவதாகக் கூறுகிறார் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தைச் சேர்ந்த உயிரியலாளர் முனைவர் தணிகைவேல். அவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "கீரி அடிப்படையில், எலி, அணில் போன்ற சிறிய வகை பாலூட்டிகளில் ஒன்று. அவற்றின் உடலமைப்பு கிட்டத்தட்ட அணில்களை ஒத்திருக்கும். இருந்தாலும், அளவில் பெரிதாக இருப்பதால், அவற்றால் பாம்புகளை எதிர்த்துச் சண்டையிட முடிகிறது," என்று விவரித்தார். அவரது கூற்றுப்படி, ஒரு பாம்பு தாக்கும் போது, கடிபடாமல் உடலை வளைத்து தப்பிக்கவும், துரிதமாகத் திருப்பித் தாக்கவும் கீரிகளின் உடல் அமைப்பு அவற்றுக்கு ஒத்துழைக்கிறது. இருமொழிக் கொள்கையால் தடைகள் இருந்ததா? தமிழ், ஆங்கிலம் மட்டும் படித்து வாழ்வில் முன்னேறியவர்கள் கூறுவது என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை: உடல் பருமனால் ஏற்பட்ட மன அழுத்தம் - விபரீத முடிவை எடுத்த அண்ணன் தங்கை5 மணி நேரங்களுக்கு முன்னர் பாம்பு - கீரி இடையே சண்டை ஏற்படுவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான சண்டைக்கு அடிப்படைக் காரணம், உயிர் பிழைத்தலுக்கான நிர்பந்தமே என்கிறார் ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்புகள் குறித்து இவர் ஆய்வு செய்து வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இவை இரண்டுமே வேட்டையாடி உண்ணக் கூடியவை. அதோடு, இரண்டுமே நிலவாழ் உயிரினங்களாகவும் இருப்பதால் அடிக்கடி வாழ்விட மோதல்கள் நிகழ்கின்றன. ஆகவே, அவை ஒன்றையொன்று தங்கள் இருப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன," என்றார். அதாவது, ஓரே நிலப்பரப்பில் பாம்பு, கீரி இரண்டுமே வாழ்கின்றன. அதில் வாழும் பூச்சிகள், எலிகள், பல்லி ஆகியவற்றை உணவாகக் கொண்டாலும், கீரிகள் பாம்புகளையும் உணவாகக் கொள்கின்றன. ஆகவே, பாம்புகள் தமது இருப்புக்கு கீரிகளை அச்சுறுத்தலாகக் கருதுகின்றன. பாம்பைக் கண்டாலே கீரி தாக்கும் என்ற கருதுகோள் குறித்துக் கேள்வியெழுப்பிய போது, "பாம்புகள் கீரிகளின் உணவுப் பட்டியலில் இருக்கக் கூடிய ஓர் உயிரினம். அப்படியிருக்கும் போது, ஒரு வேட்டையாடியான கீரி, அதை எதிர்கொண்டால் உணவை விட்டுவிட்டுச் செல்லாதல்லவா!" என்கிறார் முனைவர் தணிகைவேல். நன்கு வளர்ந்த கீரிகளுடன் சண்டையிடுவது ஒரு பாம்புக்கு சவாலாக இருந்தாலும், கீரி குட்டிகளை சில பாம்புகளால் உணவாக்கிக் கொள்ள முடியும். ஆகவே, தனது இருப்புக்கு அச்சுறுத்தலாக பாம்புகளை கீரிகள் கருதுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES "நிலத்தில் குழி பறித்து வாழக்கூடிய உயிரினம் என்பதால், கீரிகளின் குட்டிகளை வேட்டையாடுவது பறவை போன்ற வேட்டையாடிகளுக்கு அவ்வளவு எளிதல்ல. ஆனால், நிலவாழ் ஊர்வன உயிரியான பாம்புகளுக்கு அது எளிதான காரியம். ஆகவே, கீரிகளுக்கு பாம்புகள் இயற்கை எதிரிகளாகி விடுகின்றன," என்று விளக்கினார் ரமேஸ்வரன். இப்படியாக, பாம்பின் இருப்புக்கு கீரியும், கீரியின் இருப்புக்கு பாம்பும் ஆபத்தை விளைவிப்பதால், அந்த அபாயத்தை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவை சண்டையிடுகின்றன. "பரிணாம வளர்ச்சியில் ஒவ்வோர் உயிரினமும் தத்தம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உயிரினத்தைக் கண்டால், உடனடியாக எதிர்செயலாற்றும் தன்மையைப் பெற்றுள்ளன. ஒரு மானுக்கு புலியைக் கண்டால் ஓட வேண்டும் எனத் தெரிகிறது, எலிக்கு பாம்பைக் கண்டால் தப்பிக்க வேண்டும் எனத் தெரிகிறது. இந்த நடத்தைகளை அவற்றுக்கு யாரும் பயிற்றுவிப்பதில்லை. பரிணாமப் பாதையில் அவற்றுக்கு உள்ளுணர்வாகப் பதிவாகியுள்ளன. கீரி, பாம்பு இடையிலான சண்டையும் அப்படிப்பட்டதே. இரண்டுமே வேட்டையாடி உயிரினங்கள். ஒரே வகையான நிலப்பரப்பில் இரண்டுமே வாழ்விடங்களைக் கொண்டுள்ளன. இரண்டுக்குமே ஒன்றுக்கொன்று ஆபத்தை விளைவிக்க கூடிய திறனுள்ளது. ஆகவே, அவற்றுக்கு இடையே சண்டை நிகழ்வது இயற்கையானதுதான்," என்கிறார் ரமேஸ்வரன். காந்தி கேட்டுக்கொண்டதால்தான் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கோரினாரா?2 மணி நேரங்களுக்கு முன்னர் இமயமலை: நூறாண்டுக்கு முன்பே ஆபத்துகளை கடந்து புகைப்படக் கலைஞர் எடுத்த அரிய படங்கள்18 பிப்ரவரி 2025 பாம்பின் நஞ்சு கீரியை ஒன்றும் செய்யாதா? பட மூலாதாரம்,GETTY IMAGES பாம்பு வகைகளில் கீரிகள் சண்டையிடுவது நாகங்களுடன் மட்டுமே அல்ல என்று கூறிய தணிகைவேல், ஒருவேளை நாகப் பாம்புகள் படமெடுத்து நின்று சண்டையிடுவதால் அவற்றுடனான கீரிகளின் சண்டை எளிதில் தென்படுகிறது என்றார். கீரிகள், நாகம் போன்ற நஞ்சுள்ள பாம்புகளை உணவாக உண்ணக் கூடியவை. அவற்றின் நெகிழ்வுத்தன்மை மிக்க உடலமைப்பு, அதிவேகமாகச் செயல்படும் திறன் ஆகியவை பாம்புகளை ஆக்ரோஷமாக வேட்டையாட உதவுகின்றன. அதேவேளையில், கீரிகளின் தற்காப்பு அமைப்பும் பாம்புக் கடி அவற்றின் உடலில் நேரடியாக படுவதைத் தவிர்க்கும் வகையில் இருக்கின்றது. பாம்புடன் சண்டையிடும் போது, தனது ரோமங்களைச் சிலிர்த்துக் கொண்டு உடலைச் சற்றுப் பருமனாகக் காட்டிக் கொள்வதன் மூலம், அவை பாம்புகளை ஏமாற்றுகின்றன. இதன்மூலம், ஒருவேளை பாம்பு தாக்கினால்கூட, அதன் கடி கீரியின் உடலில் நேரடியாக படுவதில்லை. இந்த உத்திகளின் மூலம், கீரியால் பாம்பை நெருங்கவும், அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பகுதிகளில் தாக்குதல் நடத்தவும் முடிகிறது. வயநாடு கடையடைப்பு: காட்டுயானை தாக்குதலால் தொடரும் மரணங்கள் - அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல்15 பிப்ரவரி 2025 ஆழ்துளை கிணறுகளிலிருந்து 40 ஆண்டுகளாக 24 மணி நேரமும் வரும் வெந்நீர் - எங்கே, எப்படி?12 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் பட மூலாதாரம்,GETTY IMAGES இவற்றோடு, கீரிகளின் உடலில், பாம்பின் நஞ்சை எதிர்க்கக் கூடிய தன்மை இருப்பதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த 1872ஆம் ஆண்டில் மூன்று கீரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், இரண்டு கீரிகளுக்கு பாம்புக்கடியால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில ஆய்வுகள், கீரியின் உடலில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக் கூடிய சில பாம்பு நஞ்சுகளின் வீரியத்தை எதிர்க்கும் திறன் கொண்ட அசிடைல்கோலின் ஏற்பி இருப்பதாகக் கூறுகின்றன. 'பாம்பு, கீரியைப் போல் சண்டையிடுகிறார்கள்' என்று ஊர்ப்புறங்களில் ஒரு சொலவடை உண்டு. உண்மையில், பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க இதுவே காரணம். இது உயிர் பிழைத்தலுக்கான சண்டையின் அடிப்படையில் வேரூன்றிய பகை. இந்தத் தொடர்ச்சியான மோதல், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும், பாம்புகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பதிலும், முக்கியப் பங்கு வகிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு பாம்பும் கீரியும் எப்போதும் சண்டையிடுவது ஏன்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?1 point- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
1 point- சும்மா ஒர் பதிவு
1 pointஅன்று எல்லோருடைய மனங்கள் விசாலமாக இருந்தது . ....... இன்று எல்லாம் சுருங்கி விட்டது ........அதுதான் உண்மை . ....... இன்று பொது தொண்டுகள் செய்யவும் அரசு நிதி தரவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றார்கள் . ........ !1 point- இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்?
இந்த விடயத்தில் யாரும் யாரையும் தேற்ற முடியாதுதான் .......... ஆயினும் நாங்கள் எங்கள் குடும்பம் என்று வாழவும் ஓடவேண்டி இருக்கிறதே , ஆகவே நாம்தான் எம்மைத் தேற்றிக்கொண்டு வாழ வேண்டும் . ...... எதோ எனது தாயாரும் மாமியாரும் இங்கு என்கூடவே இருந்ததால் அவர்களை நல்லபடியாக அனுப்பி வைக்க முடிந்தது . .......!1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நீங்கள் பெரியப்பு ஜிந்தாபாத் 🙏😁👍 குருநாதர் ரசோதரன் அல்லா அக்பட் 🙏😁👍...................1 point- கருத்து படங்கள்
1 point1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இது T20 மட்ச் இல்லையே! 50 ஓவர்கள்! பாகிஸ்தான் 🇵🇰 ஜிந்தாபாத்😁1 point- ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவை வாரி வழங்கும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் ஆரம்பம் - சம்பியனுக்கான 71 கோடி ரூபாவுக்கு குறிவைத்துள்ள 8 அணிகள் 19 FEB, 2025 | 10:17 AM (நெவில் அன்தனி) மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவுக்கு மேல் வாரி வழங்கும் 9ஆவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் அத்தியாயம் கராச்சியில் புதன்கிழமை (19) நடைபெறவுள்ள நடப்பு சம்பியன் பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டியில் சம்பியன் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் கிடைக்கவுள்ள 71 கோடி ரூபாவுக்கு குறிவைத்து எட்டு முன்னணி அணிகள் இரண்டு குழுக்களில் போட்டியிடவுள்ளன. துரதிர்ஷ்டவசமாக முன்னாள் சம்பியன்களான இலங்கையும் மேற்கிந்தியத் தீவுகளும் இந்த வருட சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறவில்லை. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் எட்டு இடங்களிலிருந்த அணிகளே சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான முதல் எட்டு அத்தியாயங்களில் விளையாட தகுதி பெற்றன. ஆனால், 2025 சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான தகுதிகாண் சுற்றாக 2023 உலகக் கிண்ணப் போட்டி அமையும் என திடீரென ஐசிசி அறிவித்தது. இதற்கு அமைய இந்தியா, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் முதல் எட்டு இடங்களைப் பெற்று சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. தனது கடைசி நான்கு போட்டிகளில் ஆப்கானிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், நியூஸிலாந்து ஆகிய அணிகளிடம் இலங்கை தோல்வி அடைந்ததால் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் தகுதியை இழந்தது. மேற்கிந்தியத் தீவுகள் 2023 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெற்றிருக்கவில்லை. இந்த சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் பங்களாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் அகிய அணிகள் ஏ குழுவிலும் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் பி குழுவிலும் பங்குபற்றுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் சுற்றில் தலா 6 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் முதல் சுற்று முடிவில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 4 அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும். இந்த வருடப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக நடப்பு சம்பியன் பாகிஸ்தான் விளங்குகிறது. ஆனால், இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் யாவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்த சுற்றுப் போட்டியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி முழு கிரிக்கெட் உலகினாலும் வெகுவாக கவரப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இந் நிலையில் பங்குபற்றும் அணிகளின் தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம். ஏ குழு நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (பங்களாதேஷ்) ஐசிசி போட்டி ஒன்றில் மூன்றாவது முறையாக பங்களாதேஷ் அணியை 26 வயதான ஷன்டோ வழிநடத்துகிறார். பங்களாதேஷ் தங்கள் முதலாவது சம்பியன் பட்டத்திற்கு குறிவைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னேற்றத்தை நோக்கி நகரும் அணி மீது நம்பிக்கையை ஷண்டோ வெளிப்படுத்தியதுடன் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் தமது அணி பலரை ஆச்சரியப்படுத்தும் எனவும் கூறினார். பங்காளதேஷுக்கு இந்தப் போட்டி எத்தகைய முக்கியம் வாய்ந்தது என்பதை விளக்கிய ஷன்டோ, 'இப் போட்டி மிகவும் முக்கியமானது. நாங்கள் இங்கு வருவதற்கு முன்னர் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடாததால் இந்த முறை கிண்ணத்தை வெல்ல விரும்புகிறோம். இந்த முறை எங்களுக்கு மிகச் சிறந்த அணி இருப்பதால் கிண்ணத்தை வென்றெடுக்க முடியும் என நினைக்கிறோம்'என்றார். 'அது கடினமானது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால். நாங்கள் எங்களது திட்டத்தை சரியாக செயற்படுத்தினால் உரிய தினத்தில் எங்களால் வெல்ல முடியும்' என ஷன்டோ மேலும் தெரிவித்தார். குழாம்: நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), சௌம்யா சர்க்கார், தன்ஸித் ஹசன், தௌஹித் ரிதோய், முஷ்பிக்குர் ரஹிம், மஹ்முத் உல்லா, ஜாக்கர் அலி ஆனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசெய்ன், தஸ்கின் அஹ்மத், முஷ்தாபிஸுர் ரஹ்மான், பர்வெஸ் ஹொசெய்ன் ஈமோன், நசும் அஹ்மத், தன்ஸிம் ஹசன் ஷக்கிப், நஹித் ராணா. ரோஹித் ஷர்மா (இந்தியா) தனது மூன்றாவது சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் விளையாடும் ரோஹித் ஷர்மா, முதல் தடவையாக இந்திய அணியின் தலைவராக விளையாடுகிறார். 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இறுதிப் போட்டிவரை சிறப்பாக வழிநடத்திய ரோஹித் ஷர்மா, கடந்த வருடம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவை உலக சம்பியனாக உயர்ந்த நிலையில் இட்டார். எட்டு அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டுவரும் சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் ஏற்கனவே ரோஹித் ஷர்மா வெற்றியை ருசித்துள்ளார். இந்தியா இரண்டாவது முறையாக 2013இல் சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்தபோது இந்தியாவின் துணிச்சல்மிக்க ஆரம்ப வீரராக ரோஹித் தனது வருகையை வெளிப்படுத்தினார். இந்த சுற்றுப் போட்டியில் முன்னிலை அடைய அனுகூலமான அணியாக விளங்கும் இந்தியா, தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையான வெற்றியை ஈட்டியிருந்தது. அந்தத் தொடரில் ரோஹித் உட்பட மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை வேகமாகக் குவித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர். 'ஆடுகளம் நுழைந்து தங்களது வழியில் விளையாடுவதற்கு தேவையான சிறிது சுதந்திரம் குழாத்திற்கு இருக்கிறது' என ரோஹித் ஷர்மா கூறினார். 'உலகக் கிண்ணம் அதற்கு ஒரு சரியான களமாக இருக்கும். அங்கு நாங்கள் அதைத் தொடர்ந்து செய்து அணியை கட்டியெழுப்ப விரும்புகிறோம். சில சமயங்களில் விஷயங்கள் சரியாக அமையாமல் போகலாம், ஆனால் அது பரவாயில்லை' என்றார் ரோஹித் ஷர்மா. குழாம்: ரோஹித் ஷர்மா (தலைவர்) ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், ரிஷாப் பான்ட், ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, மொஹமத் ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவிந்த்ர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி. மிட்செல் சன்ட்னர் (நியூஸிலாந்து) மற்றுமொரு ஐ.சி.சி. போட்டியில் அணித் தலைவராக அறிமுகமாகிறார் சென்ட்னர். இந்த அனுபவம் வாய்ந்த சுழல்பந்துவீச்சாளர், ஏற்கனவே நேர்மறையான அறிகுறிகளை வெளிப்படுத்தி தலைமைப் பொறுப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்பதாக பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடையாத சம்பியன் அணியாக நியூஸிலாந்தை சென்ட்னர் வழிநடத்தியிருந்தார். சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் வெற்றிபெறுவதற்கு நியூஸிலாந்து வீரர்கள் சிலர் சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தனர். இது அணிக்கு நல்ல சமிக்ஞையாகும். 'வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது' என மும்முனை தொடரில் நியூஸிலாந்து வெற்றிபெற்ற பின்னர் சன்ட்னர் கூறியிருந்தார். 'வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வீரர்கள் பிரகாசிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் முதலாவது ஆட்டத்தை விளையாடும் வரை அது ஒன்றுமில்லை' என்றார் மிச்செல் சென்ட்னர். குழாம்: மிச்செல் சென்ட்னர் (தலைவர்), மிச்செல் ப்றேஸ்வெல், மார்க் செப்மன், டெவன் கொன்வே, கய்ல் ஜெமிசன், மெட் ஹென்றி, டொம் லெதம், டெரில் மி ச்செல், வில் ஓ'ரூக், க்லென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்த்ரா, நேதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங், ஜேக்கப் டஃபி. மொஹம்மத் ரிஸ்வான் (பாகிஸ்தான்) சொந்த மண்ணில் சம்பியன் பட்டத்தை தக்கவைக்க முயற்சிக்கும் பாகிஸ்தான் அணியை ஐசிசி போட்டியில் முதல் முறையாக அணித் தலைவராக ரிஸ்வான் வழிநடத்தவுள்ளார். பாகிஸ்தான் அணித் தலைவராக கடந்த வருடம் பொறுப்பேற்ற ரிஸ்வான், ஏற்கனவே அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள் தொடர் வெற்றிகளை ஈட்டிக்கொடுத்துள்ளார். சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்பதாக நடைபெற்ற மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை இறுதிப் போட்டிக்கு ரிஸ்வான் வழிநடத்தியிருந்தார். ஆனால், நியூஸிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட ரிஸ்வான், 'கிரிக்கெட்டை நேசிக்கும் நாடு என்ற வகையில் இந்த வருடம் ஐசிசி சம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். அண்மைக் காலத்தில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டது, இந்த மெகா போட்டியை நோக்கிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. மேலும் எங்கள் சொந்த மைதானத்தில் நடைபெறும் எட்டு அணிகள் கொண்ட இந்த போட்டியில் திறமையாக விளையாட நாங்கள் ஆவலுடன் உள்ளோம்' என்றார். குழாம்: மொஹமத் ரிஸ்வான் (தலைவர்) பாபர் அஸாம், பக்கார் ஸமான், கம்ரன் குலாம், சவூத் ஷக்கீல், தய்யப் தாஹிர், பாஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி அகா, உஸ்மான் கான், அப்ரார் அஹ்மத், ஹரிஸ் ரவூப், மொஹம்மத் ஹஸ்னைன், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி. பி குழு ஹஷ்மத்துல்லா ஷஹிதி (ஆப்கானிஸ்தான்) இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை வெற்றிகரமாக வழிநடத்திய அணித் தலைவர். அவரது வழிநடத்தலில் பலம்வாய்ந்த அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகியவற்றை அதிரவைத்து ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகும் ஆப்கானிஸ்தானுக்கு கடந்த வருடம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரஙகு வெற்றிகரமாக அமைந்தது. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அறிமுக அணியாக பங்குபற்றுகின்றபோதிலும், நாங்கள் ஆதிக்கம் செலுத்தும் நாளில் எத்தகைய அணியையும் வெற்றிகொள்ளும் திறன் கொண்டது என்று ஷஹிதி நம்புகிறார். 'ஒவ்வொரு வடிவத்திலும் ஒவ்வொரு அணியையும் வெற்றிகொள்ளும் திறமை எங்களிடம் இருப்பதால் நாங்கள் முன்னேற முயற்சிப்போம்,' என்று அவர் அண்மையில் கூறினார், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்காக தங்களது திறமையை வளர்துக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 'எங்களது அடுத்த பெரிய சவால் சம்பியன்ஸ் கிண்ணம். இது எங்களுக்கு ஒரு பெரிய போட்டி. எனவே அதனை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்' என்றார் அவர். குழாம்: ஹஷ்மத்துல்லா ஷஹிதி (தலைவர்), இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், சிதிக்குல்லா அத்தல், ரஹ்மத் ஷா, இக்ரம் அலிகில், குல்பாதின் நய்ப், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், மொஹமத் நபி, ராஷித் கான், நங்கேயாலியா கரொத், நூர் அஹ்மத், பஸால்ஹக் பாறூக்கி, பரித் மாலிக், நவீத் ஸத்ரான். ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா) அவுஸ்திரேலிய அணியின் முழுநேர தலைவர் பெட் கமின்ஸுக்குப் பதிலாக, துடுப்பாட்ட நட்சத்திரம் ஸ்டீவன் ஸ்மித் நடப்பு ஒருநாள் உலக சம்பியன் அவுஸ்திரேலியாவை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வழிநடத்துகிறார். சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் அவர் தலைமை வகிப்பது இது இரண்டாவது தடவையாகும். 2017 சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயற்பட்ட ஸ்மித், ஒரு தலைவராக ஏராளமான அனுபவங்களுடன் சம்பியன் கிண்ணத்தை எதிர்கொள்கிறார். அவுஸ்திரேலிய அணியில் பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய முக்கிய வீரர்கள் இடம்பெறாதது அவ்வணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், அவர்களுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட வீரர்கள் மீது ஸ்மித் நம்பிக்கை கொண்டுள்ளார். 'அவர்கள் அனைவருக்கும் அவரவருக்கு ஏற்ற தனித்துவமான திறமைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். நான் அவர்களை வழிநடத்துவது, அவர்களுடன் கலந்துரையாடுவது, சரியான நேரத்தில் அவர்களிடமிருந்து சரியானவற்றைப் பெற முயற்சிப்பது என்பனவே எனது பணி ஆகும். எமது அணியில் அனுபவம்வாய்ந்த வீரர்கள் பலர் இடம்பெறுவதால் எங்களால் சாதிக்க முடியும் என நம்புகிறேன்' ஸ்மித் கூறினார். குழாம்: ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), சோன் அபொட், அலெக்ஸ் கேரி, பென் த்வாஷுய்ஸ், நேதன் எலிஸ், ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க், ஆரொன் ஹாடி, ட்ரவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜோன்சன், மானுஸ் லபுஷேன், க்லென் மெக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மெத்யூ ஷோர்ட், அடம் ஸம்ப்பா. ஜொஸ் பட்லர் (இங்கிலாந்து) 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்தை சம்பியனாக்கிய ஜொஸ் பட்லர், 2019 உலகக் கிண்ண வெற்றியில் ஒரு சிறந்த வீரராகத் திகழ்ந்தவர். அதிரடி ஆட்டக்காரரான பட்லர், தனது மூன்றாவது சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்கிறார். சம்பியன்ஸ் கிண்ணத்தில் முதல் முறையாக சம்பியனாகும் குறிக்கோளுடன் முழு வீச்சில் இங்கிலாந்து களம் இறங்கவுள்ளது. இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வியடைந்த போதிலும், இந்த சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வாய்ப்புகள் குறித்து பட்லர் நம்பிக்கையுடன் உள்ளார். 'நாங்கள் இன்னும் எங்களுக்கு இருக்க வேண்டிய திறமையை அண்மிக்கவில்லை. தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ திறமையாக விளையாடினால் எங்களால் சிறந்த இடத்தில் இருக்க முடியும் என்பதை அறிவோம். சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் நாங்கள் சவால் மிக்க அணியாக இருக்க முடியும் என்று நம்புகிறோம்' என இந்தியாவுக்கு எதிரான தொடருக்குப் பின்னர் பட்லர் கூறியிருந்தார். குழாம்: ஜொஸ் பட்லர் (தலைவர்), ஜொவ்ரா ஆச்சர், கஸ் அட்கின்சன், டொம் பென்டன், ஹரி ப்றூக், ப்றைடன் கார்ஸ், பென் டக்கட், ஜமி ஓவர்ட்டன், ஜமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், ஆதில் ராஷித், ஜோ ரூட், சக்கிப் மஹமூத், பில் சோல்ட், மார்க் வூட். டெம்பா பவுமா (தென் ஆபிரிக்கா) 2023 உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்காவை அரை இறுதிக்கு வழிநடத்திய டெம்பா பவுமா, அதனைத் தொடர்ந்து சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக விளையாடவுள்ளார். அங்குரார்ப்பண சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் 1998இல் சம்பியனான தென் ஆபிரிக்காவுக்கு 27 வருடங்களின் பின்னர் கிண்ணத்தை மீண்டும் வென்று கொடுக்க டெம்பா பவுமா முயற்சிக்கவுள்ளார். உலக கிரிக்கெட் அரங்கில் தென் ஆபிரிக்காவை புகழ்பெறச் செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ள பவுமா, ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தனது அணியை வழிநடத்தியுள்ளமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சவால்மிக்கதாக இருந்தாலும், தென் ஆபிரிக்காவால் சம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்பதில் பவுமா நம்பிக்கையுடன் உள்ளார். 'உலகக் கிண்ணத்தில் போட்டிகள் அதிகம் என்பதால் திட்டங்களை வகுத்து முன்னேறுவதற்கு நேரம் இருக்கிறது. ஆனால், சம்பியன்ஸ் கிண்ணத்தில் முதல் சுற்றில் 3 போட்டிகள் மாத்திரம் இருப்பதால் அப்படி செய்ய முடியாது. எனினும், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் ஒரு படி முன்னே நகர்வோம் என நம்புகிறோம்' என்று தென் ஆபிரிக்க அணித் தலைவர் டெம்பா புவுமா தெரிவித்தார். குழாம்: டெம்பா பவுமா (தலைவர்), டோனி டி ஸோர்ஸி, மார்க்கோ ஜென்சன், ஹென்றிச் க்ளாசன், கேஷவ் மஹராஜ், ஏய்டன் மார்க்ராம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, கெகிசோ ரபாடா, ரெயான் ரிக்ல்டன், தப்ரெய்ஸ் ஷம்சி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், ரசி வென் டேர் டுசென், கோபின் பொஷ் மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவை வாரி வழங்கும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் ஆரம்பம் - சம்பியனுக்கான 71 கோடி ரூபாவுக்கு குறிவைத்துள்ள 8 அணிகள்1 point- வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை மேலும் ஓரங்கட்டிவிடும் - ஐங்கரநேசன்
இந்து மதத்துக்கு உள்ளே பல ஆக்கிரமிப்புக்கள் நடைபெறுகிறது அதையே கண்டு கொள்ளாத நாங்கள் சாப்பாட்டு பண்பாட்டையா கண்டு கொள்ள போகின்றோம் ..1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தப் பெரிய களத்தில் எட்டே எட்டுப் பேர்கள் தான் கேள்வியை விளங்கி பதில் எழுதியிருக்கினம்...................😜.1 point- சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
இது நியாயம் அற்ற செயல். சீமான் மட்டும் வெளிநாடுகளில் இருந்து டொலர்களிலும் பவுண்ஸ்சிலும் பணத்தை அள்ளும் போது திமுக 200 ரூபாய்- 1பவுண்ஸ் 85 பென்ஸ் கோப்பி குடிக்கவும் காணாது. சம்பிரதாயபடி முதல் அண்ணியாக வந்தவர் விஜயலட்சுமி தானே மதிப்பு கூடியவர்1 point- வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை மேலும் ஓரங்கட்டிவிடும் - ஐங்கரநேசன்
உண்மை தாத்தா நாட்டு கோழி சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் எம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் இனி நோய் சாப்பாட்டால் தான் வரும்................அதை இங்கைத்தை டாக்குத்தர் மாரே சொல்லுகினம்................பால் குடிச்சு புற்று நோயை வந்த ஆட்களும் இருக்கினம் அப்படி உணவால் பல கொடுமைகள்..........................1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்படி எல்லாம் சொல்லிவிட்டுப் போனால் இந்தத் திரி சோர்ந்துபோய்விடும். எனக்கும் புள்ளிகள் போட மனம்வராது @வீரப் பையன்261 point- "சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய்" [எமது தந்தை / திரு கணபதிப்பிள்ளை கந்தையா [11/06/1907-18/02/2000]]
1 pointதில்லை அண்ணா, கனத்த மனத்துடன் உங்கள் தந்தையின் 5-ஆம் ஆண்டு நினைவஞ்சலியில் நானும் பங்குகொள்கின்றேன்.1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
சரி, இதைத் தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறேன், மன்னியுங்கள்! ஆனால், இப்படி இருக்கும் அமைப்புகளில் பிளவுகள் ஏற்பட என்ன காரணங்கள் என்று பார்த்தால்: 1. இலக்கு மாறியமை. 2. இலக்கு மாறாமல், அதை அடையும் வழிகள் மாறியமை. 3. சொத்து/வருமானம் பற்றிய பிரச்சினைகள். 4. யார் தலை எனும் ஈகோ இவற்றுள், 1 இனை தனித்தனியாக துரோகமா அல்லது இலக்கு குறுக்கப் பட்டதா என்று ஆராய்ந்து தான் தீர்ப்பெழுத முடியும். எடுத்த வாக்கில் "துரோகி" என்று சொல்ல முடியாது. 2 வது காரணம், என் பார்வையில் துரோகம் அல்ல. சாத்தியமான வழிகள் வெளிச்சூழலுக்கேற்ப மாறிக் கொண்டிருக்கும். இதனை ஏற்றுக் கொள்ளா விட்டாலும், எதிரிகளாகப் பார்க்க வேண்டியதில்லை. சிறந்த உதாரணம், தாயகத்தில் தமிழரசுக்கும், தேசிய முன்னணிக்கும் இடையேயான வேறு பாடு. 3, 4: இது எங்கள் சமூகத்தில் இருந்து அகற்றப் பட வேண்டிய களைகள். இக்காரணங்களால் அமைப்புகளைப் பிரிப்போரை (இவர்களைத் தான் சாந்தி தன் பதிவில் சுட்டியிருந்தார் என நினைக்கிறேன்) ஒற்றுமை வேண்டுமென்பதற்காக சேர்த்து வைத்திருக்க வேண்டியதில்லை. அப்படி வைத்திருப்பது, மட்டத்தேள், கொடுக்கான், பாம்பு ஆகியவற்றை "இயற்கையை நேசிக்கிறோம்" என்ற பெயரில் வீட்டினுள் வைத்திருப்பது போல ஆகும். மேற்கூறிய காரணங்கள் தான் ஒருவரை தமிழ் தேசிய அமைப்புகளில் ஒற்றுமை கருதி வைத்திருப்பதா அல்லது அகற்றுவதா என்று தீர்மானிக்க வேண்டுமென நினைக்கிறேன்.1 point- சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
மீண்டும் ஒரு திரியில் வேலி பாய்ந்தோடினார் வீரப் பையன். இனி என்ன பதுங்கி இருந்து -1 துப்பாக்கியால் சுட வேண்டியதுதான்🤣. பொது நல அறிவிப்பு அறிவித்த படியே என் அடிகள் எல்லாமும் சீமான் மீது மட்டுமே. எந்த கள உறவையும் அடிக்கும் எண்ணம் அறவே இல்லை. தாமாக வந்து வாங்கினால் கம்பெனி பொறுப்பல்ல.1 point- வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு; முல்லை மக்களின் நீண்டகால பிரச்சினையை தீர்த்துவைப்பதில் மகிழ்ச்சி - ரவிகரன் எம்.பி
வட்டுவாகல் பாலம் சுமார் 600 மீட்டர் நீளமுடையது, மேலும் தினமும் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பாலம் இல்லாத நிலையில், மக்கள் போக்குவரத்தில் பெரும் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர், குறிப்பாக மழைக்காலங்களில் நீரில் மூழ்கும் பாலம் காரணமாக பயணம் மிகவும் கடினமாகிறது. இந்தப் பாலம் வன்னி மக்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு முக்கியமானது. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் போன்றோர் தங்கள் பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதற்கு இந்தப் பாலம் தேவையானது. 2009 இறுதி யுத்தத்தின்போது இந்தப் பாலம் பெரும் சேதத்திற்கு உள்ளானது. அதன் பின்னர் இது முறையாக புதுப்பிக்கப்படவில்லை, இது மக்களின் துன்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. புதிய பாலம் அமைப்பது இந்தப் பகுதியின் மீளமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு தேவையானது.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- "கிளீன்......"
1 pointஎதிர்பார்ப்பும் வேண்டும்...உதவியும் செய்யவேண்டும் ..மறுப்பதற்கிலலை ...அது விழலுக்கு இறைத்த நீராகக் கூடாது... அதனைவிட....புலம்பெயர்ந்தவர்கள் ... அன்னிய இனமாமகப் பார்க்கின்ற சூழ்நிலையே அங்கு தோன்றுகின்றது...இது மிகவும் வருத்தப்படவேண்டிய விசயம்...என் அனுபவம் ...நாம் தேவையில்லை எனில் எம் பணம் அவைக்கு ஏன்...நடைமுறைகளைப் பார்க்கும்போது ...விரைவில் கைகழுவி விடப்படுவோம்...முதியோர் இல்லத்தில் வாழும் முதியவர்..நிலைதான் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்படும்1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- ஒரு முட்டை ஆயிரம் டாலர்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.