Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    38754
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    3054
    Posts
  3. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    1223
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87988
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/20/25 in all areas

  1. ரஸ்ஸியாவின் நிலப்பரப்பை உக்ரேன் ஆக்கிரமித்து வைத்திருப்பது போல டிரம்ப் எனும் கோமாளி கருதுகிறது போலும். ஆக்கிரமிப்பவனை ஆதரித்துக்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவனை போரிற்கான காரணம் என்று அழைப்பதற்கு ஒரு முட்டாள்த்தனமான கோமாளியைத் தவிர வேறு எவரால் இயலும்? ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஈழத்தமிழினத்தையோ அதன் உண்மையான பிரதிநிதிகளையோ அழைக்காமல் ஆக்கிரமிப்பாளனுடன் இந்தியா எனும் இன்னொரு ஆக்கிரமிப்பு வல்லரசு 1987 இல் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கும் ஒப்பந்தத்திற்கும் நிகரானது இன்று உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பினை ஏற்றுக்கொண்டு போரினை முடிவிற்குக் கொண்டுவர ஆக்கிரமிப்புச் சர்வாதிகாரியான கொடுங்கோலன் புட்டினுடன் இன்னொரு ஆக்கிரமிப்பாளனான டிரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தை. வெகுவிரைவில் நேட்டோவிற்கு எதிரான போரில் ரஸ்ஸியாவின் பக்கத்தில் நின்றுகொண்டு டிரம்ப் எனும் கோமாளி சண்டையிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போரிடும் எந்தவொரு இனமும் அமெரிக்காவின் தயவில்ப் போரிடக் கூடாது என்பதற்கு உக்ரேனின் அனுபவமும் ஒரு பாடம்தான். இரண்டாம் உலகப் போரில் பிலிப்பைன்ஸை விட்டு அமெரிக்கா வெளியேறியபோது ஜப்பானியப் படை அங்கு செய்த பழிவாங்கல்ப் படுகொலகைளும், ஐஸிஸிற்கு எதிரான போரில் குர்திஸ் போராளிகளுக்கு ஆதரவளித்த அமெரிக்கா, பின்னர் டிரம்பின் ஆட்சியில் குர்திஸ்களை துருக்கியின் ஆக்கிரமிப்பில் கையளித்துவிட்டு அங்கி வெளியேறிச் சென்றதும் நினைவிற்கு வருகிறது.
  2. நல்லா போடுறீங்கள் முடிச்சு. உண்மையிலேயே அவர் நல்லா நிதானமாத்தான் விளையாடினார். சிறப்பான ஆட்டம். அதிரடியா விளையாட இது T20 அல்ல. அவருக்கு ஒரு கூடாத அனுபவம் ஒன்று இருக்கிறது. 2023 ஆசியக்கிண்ணப் போட்டியில், இதே அணிக்கெதிராக இந்தியா தோற்றுவிடும். கில் நூறடிச்சு, 50/60 ஓட்டங்கள் பெற வேண்டிய நேரத்தில், தேவையில்லாமல் தூக்கியடிச்சு, ஆட்டமிழப்பார். கடைசியில் 6 ஓட்டங்களினால் இந்தியா தோல்வியுறும். போட்டியின் பின், கில் தனது தவறை ஒத்துக்கொள்வார். தான் நிதானமா நின்று ஆடி இருக்கவேணும் என்று சொல்வியிருப்பார். இன்றும் அது போலவேதான் ஆட்டம் சென்றுகொண்டிருந்தது. மறு முனையில ஒவ்வொருவராக ஆட்டமிழந்து வெளியேற, இவரின் தலையில்தான் பொறுப்பு விழுந்தது. அவரின் பழைய அந்த அனுபவம் இன்று நன்றாக வேலைசெய்தது. இன்றைய அவரின் பேட்டியில், அவர் அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லக்கூடும். கேட்டுப்பாருங்கள்.
  3. உலகில் பலர் அறம் சார்ந்து இயங்குவதில்லை.. ஆனால் நாம் அறம் எது என்று புரிந்து அதனை விட்டுக்கொடுக்கக்கூடாது. வலியவர்களும் வஞ்சகர்களும் வெல்கின்றார்கள் என்பதற்காக நாம் அறத்தை விட்டுக்கொடுக்கமுடியாது..
  4. இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தாலும், ரவ்ஹிட் ஹ்ரிடொயின் சதத்துடன் 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 228 ஓட்டங்களை எடுத்திருந்தது. முகமட் ஷமி 53 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி சாதரணமான வெற்றி இலக்கை சுப்மன் கில்லின் ஆட்டமிழக்காது எடுத்த சதத்துடன் 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது எல்லோரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் அனைவருக்கும் இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை):
  5. இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே கிறுக்கனாக்கி என்னைக் கிறுங்கச் செய்தவளே சறுக்கியே விழுந்தேனே சண்டாளி உன்நினைப்பில் பொறுக்கியாகி உன்மீது பித்தனாகிப் போனேண்டி! வண்டுகள் மொய்க்கின்ற வண்ண மலரடிநீ வான்மீது மிளிர்கின்ற விண்மீனின் ஒளியடிநீ பல்லவன் வடித்தநல் பருவமங்கைச் சிற்பம்நீ பாவையெந்தன் மனதிற்குள் பாட்டிசைக்கும் சுரங்கள்நீ! தோகை மயிலெனத் தோன்றுதடி உன்னுருவம் வாலைக் குமரியெந்தன் வழித்தடத்தில் நகருகின்றாய் சேலைக்கு அழகான சித்திரப் பெண்ணழகே தூயஎன் காதலாலே துடிக்கின்றேன் உன்னாலே! நெற்றிப் பிறையினிலே நீள்புருவம் கொண்டவளே வேல்விழியால் கணைதொடுத்து வித்தைகள் காட்டுகிறாய் கொவ்வை இதலழகி குண்டுமல்லிச் சிரிப்பழகி ஒளவை மொழியினிலே அருள்வாக்குத் தாவேண்டி! கன்னக் குழியழகும் கலைமமான் விழியழகும் சின்ன இடையழகும் செவ்வந்தி நிறத்தழகும் காதோரம் கதைபேசும் கருங்கூந்தல் குழலழகும் நீயருகே வருகையிலே நெஞ்சை இழுக்குதடி! பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணுகின்ற பெட்டகமே பண்ணிசைத்துப் பாடவல்ல பாக்களின் கவிவடிவே எண்ணங்கள் பரிமாற ஏங்கித் தவிக்கின்றேன் தண்ணீரில் தாமைரையிலையெனத் தவிக்கவெனை விடலாமோ
  6. பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி (21 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 06 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் 18 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ஏராளன் நுணாவிலான் வாத்தியார் நந்தன் சுவைப்பிரியன் நீர்வேலியான் தென்னாபிரிக்கா ஈழப்பிரியன் வீரப் பையன்26 சுவி அல்வாயன் தமிழ் சிறி நிலாமதி ரசோதரன் வசீ செம்பாட்டான் குமாரசாமி நியாயம் வாதவூரான் எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே கந்தப்பு பிரபா கிருபன் இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்?
  7. ஆணவம் இல்லாத மனிதர்கள் யார். அதுவே சிலருக்கு அதிகமான உயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மையாக மாறியும் விடுகின்றது. 'என்னுடைய ஒப்பந்தத்தில் நீ கையெழுத்து இடமாட்டாயோ.........' என்பதே இப்படி மாறி நிற்கின்றது. உக்ரேனை முழுதாகவே கொள்ளை அடிப்பதற்கு ஒரு ஒப்பந்தம் எழுதும் அமெரிக்கா, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் உக்ரேன் என்றொரு நாடே இருக்காது என்ற எச்சரிக்கை. கனடாவிற்கு எச்சரிக்கை, பனாமாவிற்கு எச்சரிக்கை, மெக்சிகோவிற்கு எச்சரிக்கை....... முழு ஐரோப்பாவிற்கும் எச்சரிக்கை. உள்நாட்டு கணக்கு வழக்கை சரிசெய்ய, முழு உலகையுமே அடித்துப் பறிக்க வேண்டுமா...... இது தான் எல்லோரும் எதிர்க்க வேண்டிய ஏகாதிபத்தியம். இன்றும் கூட இலங்கைக்கு எதிராக ஐநாவில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அந்த தீர்மானத்திற்கு எதிராக அதாவது இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஒரு நாடு ரஷ்யா, வாக்களிப்பில் இருந்து விலகி இருக்கும் அல்லது தீர்மானத்திகு ஆதரவாக வாக்களிக்கும் நாடு உக்ரேன். இலங்கைக்கு அதிக ஆயுதங்களை விற்பனை செய்த நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இதில் உக்ரேன் தான் எங்களுக்கு அழிவு செய்தது, ரஷ்யா எங்களைக் காப்பற்றியது என்ற ஈழத்தமிழர்களின் நிலைப்பாடும், அதனால் உக்ரேன் அழிந்து போகட்டும் என்றும் நினைப்பது எங்களை கண்களை எங்கள் விரல்களாலேயே நாங்கள் குத்துவது போல. ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் 2/3 பங்கு ஐரோப்பா வங்கிகளின் பொறுப்பிலேயே இருக்கின்றது. மிகுதி தான் அமெரிக்காவின் வசம் இருக்கின்றது. ரஷ்யாவின் மிகப் பெரிய வியாபார பங்குதாரர் ஐரோப்பாவே, அமெரிக்கா அல்ல. இன்று பலவீனப்பட்டிருக்கும் ரஷ்யாவால் ஐரோப்பாவிற்கு எதிராக இன்னொரு யுத்தத்தை நடத்தவே முடியாது. ஆகவே, முழு ஐரோப்பாவும் ஒன்றிணைந்து, அமெரிக்காவைத் தவிர்த்து விட்டு, உக்ரேனிய மக்களுக்காக ஓரணியில் நிற்கவேண்டும்.
  8. ஒரு காலத்தில் எமது முன்னோர்கள் வயல்வெளிகளின் அருகாமையில் கோவில் கட்டி அதற்காக‌,குளங்களை வெட்டினார்கள்,கேணிகளை உருவாக்கினார்கள்..மன்னர்கள் ஆட்சியில் அல்லது வேளான்மை சமுகம் உருவான காலத்தில் இது ஒர் சமுக கட்டமைப்பு ..சகல கிராமங்களிலும் உள்ள பழைய கோவில்களில் இந்த டெம்பிளெட்டை அவதானிக்கலாம்.. இதற்கு பணம் எங்கிருந்து வந்திருக்கும்? ஊர்மக்கள் அல்லது மன்னர்கள் கொடுத்திருப்பார்கள் அநேகமாக பொதுமக்கள் பொதுநோக்குடன் கொடுத்த பணமாக த்தான் இருக்க வேண்டும் ...அந்த பணம் மக்களின் நலன் கருதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை . எமது கண் முன்னே குளங்கள்,கேணிகள்(மருதடி கேணி..காக்கா சுயா),கிணறுகள் இன்றும் சாட்சியாக இருக்கின்றது... இன்று புலம் பெயர் நாடுகளிலிருந்து கிடைக்கு பணம் போன்று அன்றைய காலத்தில் நிச்சயம் பணம் கிடைத்திருக்காது.இருந்தும் உள்ளூர் மக்கள் சொந்த வருமானத்தில் இப்படியான செயல்களை செய்து உள்ளனர் யாழ் மாவட்டம் ஆறுகள்,கங்கைகள்,அருவிகள் நிறைந்த மாவட்டம் அல்ல.... விவசாயத்திற்கு மழை நீரை பெரிதும் நம்பிருந்தார்கள்.மழையும் வருடத்தில் ஒர் குறிப்பிட்ட காலத்தில் தான் பெய்யும்..மழையும் சில நாட்களில் அடித்து பெய்யும் அந்த நீர் வீணாக கடலுக்கு சென்று கலந்து விடும்.இந்த நீரை சேமித்து விவசாயம் செய்யத்தான் குளங்கள்,கேணிகள்,கிணறுகள் கட்டினார்கள். இவை யாவும் பொது நோக்குடன் பொது இடத்தில் பொதுமக்களினால் பொது நன்மைக்கு ...பொது மக்கள் சேர்த்த பணத்தில் ...என நான் நினைக்கிறேன் ...நிச்சயமாக மருதடியான் தனிமனிதனாக இவற்றை(கேணி கட்டுதல்,கிணறு வெட்டுதல்,குளம் அமைத்தல்) செய்திருக்கமுடியாது....அவர் ஓரு சக்தியாக செயல் பட்டிருக்கலாம்...(ஏன் வீணாக் மருதடியானை எங்கன்ட அலட்டலுக்குள்ள பிறகு மனுசன் என்னோட கோபித்து கொண்டால்) ஊர் மக்கள் பணம் கொடுத்து,அந்த பணத்தில் ஊர்மக்கள் பயன் அடையும் வகையில் நல்ல திட்டங்களை அமுல் படுத்தியுள்ளார்கள்.அதற்கு பொதுக்கட்டமைப்பு (கோவில் சபை அல்லது கிராம சபை) துணை புரிந்திருக்கின்றது.. குளம் ... மழை நீர் சேர்ந்து நிற்கும் .நீண்ட நாட்களின் நீரோட்டத்தின் விளைவாக‌ ஊரில் உள்ள மண்,கல்,சகதி மற்றும் கழிவுகள்(வாழைமரம்கள்,தடிகள்,மரங்கள்) யாவும் நீரோடு சென்று அடியில் படிந்து குளத்தின் ஆழத்தை குறைத்து விடும்..நீர் வற்றிய பின்பு, கழிவுகள்,மண் போன்றவற்றை அன்று வாழ்ந்த மக்கள் சிரமதான முறையில் துப்பரவு செய்தார்கள் ...தூர் வாருதல் என சொல்வார்கள் ...பொது நோக்குடன் (கிளீன் சிறிலங்கா 30 நாட்கள்.கிளீன் அப் அவுஸ்ரேலியா நாள் 30 வருடங்கள்)எங்கன்ட சன‌த்தின்ட கிளீன் அப் குளம் எப்பவோ தொடங்கிட்டுது ...(கிளீன் அப் செய்யும்பொழுது கள்,தேனீர்,வடை,மோதகம்..போன்றவற்றை ஊர்மக்கள் செய்து கொடுப்பார்கள் ஊர்மக்கள் கூடி சேர்த்த பணம்) கிளீன் அப் அவுஸ்ரேலியா செய்யும் பொழுதும் நாலு பேர் சேர்ந்து காசு போட்டு பியர் அடிக்கிறனாங்கள் ..,அதற்காக அவுஸ்ரேலியா அரசு எங்கள் மீது குற்றம் சாட்ட முடியாது , "அரசாங்க காசில பியர் குடிக்கிற எண்டு" இந்த குளங்கள் விவசாயத்துக்கு மட்டுமல்ல கால் நடைகளின் தாகத்தையும் தீர்க்க உதவியிருக்கு,இருக்கின்றது . கேணிகள் இவற்றில் அநேகமானவற்றுக்கு மூன்று பக்கமும் சுவர் கட்டியிருப்பார்கள் ஒரு பக்கம் திறந்த வாறு இருக்கும் படிகள் கட்டியிருக்கும் ,மழை நீர் ஒடிவந்தாலுமொரு பக்கத்தினால் மட்டுமே அடி தளத்துக்கு செல்ல முடியும் ஊர் கழிவுகள் குறைவாக அடித்தளத்திற்கு செல்லும் இதனால் நீண்ட நாட்களுக்கு தூர் வார வேண்டிய அவசியமில்லை ... இன்று கேணிகளை மூடிவிடுகிறார்கள் ,அல்லது தீர்த்தமாடுவதற்காக கேணிக்குள் சிறிய கட்டித்தை கட்டிவிடுகிறார்கள் ...இதை செய்வது ஊரில் உள்ள மேதாவிகள் .. கிணறு. முக்கியமாக தோட்ட கிணறுகள் அதிலும் யாழ் மாவட்ட கிணறுகள் மழை நீர் ஓடுவதற்கு ஏற்ற வகையில் ஒர் பாதை விட்டு கட்டியிருப்பார்கள் .தற்பொழுது இந்த கிணறுகள் முற்றாக மூடி கட்டப்பட்டிருக்கின்றது அதுபோக யாரும் கிணறு வெட்டுவதில்லை ,பணம் அதிகம் வேண்டும் வெட்டுவதற்கு. கேணிகளுக்கு பக்கத்தில் கிணறு வெட்டியிருப்பார்கள் ,முட்டாள்கள் தண்ணீர் கேணியில் இருக்கின்றது வீணாக கிணற்றையும் வெட்டி யிருக்கிறாங்கள் பழசுகள் என திட்டியும் இருக்கின்றேன் .ஆனால் அதன் முக்கியத்துவம் பின்பு தான் அறிந்து கொண்டேன்.கோயில்களுக்கு சற்று தொலைவில் இருக்கும் வீட்டு கிணற்று தண்ணீர் உவர் தன்மையுடன் இருக்கும் ஆனால் கோயில் கிணற்று தண்ணீர் நன்னீராக இருக்கும் .கேணிகளில் சேரும் மழைநீர் கிணற்றுக்கு உள்ளே மண்,சிறுகட்கள் ஊடாக வடிகட்டப்பட்டு ஊற்றாக உட்செல்வதனால் தான் என நினைக்கிறேன். மேலும் தோட்டங்கள் ,வயல்களுக்கு மத்தியில் கிணறுகள் வெட்டியிருப்பார்கள் அங்கும் நன்னீர் தான். குழாய் கிணறு பாவனைக்கு வந்துவிட்டது.அதிக இடம் தேவையில்லை .. மொத்தத்தில் மழை நீரை நிலத்தடியில் சேமித்து வைக்கும் சகல பொறிமுறைகளும் இல்லாமல் போகின்றது. அன்றைய ஊர்மக்கள்,மன்னர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) இருந்த அறிவு ,தற்பொழுது நூறு வீதம் கல்வியறிவு கொண்ட ஊர்மக்களுக்கும் இல்லை ,அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் இல்லை ,கோவில் நிர்வாக சபைக்கு போட்டி போட்டு கொண்டு வரும் தலைவர்கள்,உறுப்பினர்களுக்கும் இல்லை..... கோயில்கள்,பாடசாலைகள் எல்லாம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், தேவைகளை இப்பொழுது வாழும் மக்கள் மறந்துவிட்டனர் போல உள்ளது .
  9. உலகில் அடக்குமுறைகளுக்கு எதிராக, சுரண்டல்களுக்கு எதிராக விடுதலை வேண்டி போராடும் மக்களுக்கு எந்த ஆதிக்கவாதிகளிடமிருந்து உண்மையான ஆதரவு கிடைப்பதில்லை. போராடும் மக்களிடமிருந்தே எதையாவது பறித்து எடுக்கலாம் என்ற சுயநலன்களே ஆதரவு என்று வரும் ஆதிக்கவாதிகளின் உள்நோக்கமாக இருக்கும். கைகள் விலங்குகளால் கட்டப்பட்டிருப்பவர்கள் மட்டுமே ஒருவருக்கு ஒருவர் இதயசுத்தியுடன் கூடிய ஆதரவைக் காட்டமுடியும். என்னுடையது போராட்டம், உன்னுடையது கோமாளித்தனம் என்று அவர்களில் ஒருவர் இன்னொருவரை ஏளனம் செய்தால், ஏளனம் செய்யும் அந்த ஒருவரின் போராட்டமே போலியாகி, அர்த்தம் இழந்து விடுகின்றதல்லவா. ***************************************** கைவிலங்குகள் ------------------------- என் மண்ணிற்காக என் விலங்கை உடைக்க என் காற்றை சுவாசிக்க எந்த மன்னனுக்கும் எதிராக என் வாளை நான் உயர்த்துகின்றேன் புனிதம் கலந்தது என் யுத்தம் வீரம் செறிந்தது என் வரலாறு பெருமை கொண்டது என் இனம் நீ எதற்காக நிமிர்ந்து நிற்கின்றாய் உன் வாள்கள் ஏன் உயருகின்றன உன்னை அடக்க வருபவர்களுடன் உன்னால் சேர்ந்து வாழ முடியாதா அவர்கள் கேட்பதைக் கொடுத்து அவர்கள் கொடுப்பதை அடங்கி ஏற்று அந்த ஆட்சியின் கீழ் இருக்க முடியாதா நீ ஒரு கோமாளி உன் குரல் ஒரு ஈனஸ்வரம் உன் நியாயங்கள் எனக்கு சிரிப்புகள் உன் மக்களுக்கு ஏன் வேண்டும் உரிமைகளும் தெரிவுகளும் இப்படிக் கேட்பவர்கள் அவர்கள் எதற்காக யாரை எதிர்த்து போராடினார்கள்?
  10. ஏனெனில், நீங்கள் குறிப்பிடுகின்றவர்கள் ஒரு போதும் எதிர்த்து போராடாதவர்கள். போராட்டம் நிகழும் போது கிரிக்கெட் மட்ச் பார்ப்பதைப் போன்றே ஆதரவு கொடுத்தவர்கள். பெடியல் நல்லா அடிக்கிறார்கள் என்று பொப்கோர்னை சுவைத்தபடி ரசித்த ரசிகர்கள் இவர்கள். தன் இனத்தின் விடுதலைப் போரை உளமாற ஆதரித்தவர்கள், அப் போராட்டத்துக்கு தன்னாலான உதவிகளை உளமாற கொடுத்தவர்கள் இன்னொரு இனத்தின் விடுதலைப் போர் தோற்றுப் போக வேண்டும் என்றோ, அவ் இனத்தின் விடுதலை போரை முன்னின்று நடாத்த முனைகின்றவரை கோமாளி என்றோ நக்கல் அடிக்க மாட்டார்கள்.
  11. ஓ...அவரா? அவர் அதே இடத்தில நிண்டால் அடியார் மடத்தில ஒரு மாசம் தொடந்து அன்னதானம் 😂
  12. ரஷ்யா மீதான, முக்கியமாக புட்டின் மீதான வசீகரம் என்பது “சுத்தி சுத்தி அடிப்பேன்; ஏயார்ல பாய்ந்து பாய்ந்து அடிப்பேன்” என்ற கதாநாயகனின் மீதான வழிபாடு போன்றது.. தோல்வியால் துவண்ட இனத்திற்கு ஒரு கதாநாயகன் எப்போதும் தேவை! இதில் ஏன் உக்கிரேனுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கவேண்டும் என்று யாழில் பக்கம் பக்கமாக எழுதிக்கிடக்கு. அதற்கு எதிர்ப்பாகவும் பக்கம் பக்கமாகக் கருத்துக்கள் உள்ளன. இப்போது ட்ரம்ப் (ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்டவர்) பின்பற்றுவது முதலாளித்துவம், ஏகாதிபத்யம் என்பதற்குள் எல்லாம் வராது.. வெறும் ரியல் எஸ்டேட் டீல்.. ஒரு கொள்கை எல்லாம் கிடையாது.. அதிகாரம் கொடுக்கும் போதையில் திளைப்பது மட்டும்தான் ட்ரம்ப் செய்வது.. அடுத்த நாலு வருடங்களில் உலகம் எவ்வளவு காலம் பின்னோக்கி நகர்கின்றது என்று பார்ப்போம்.
  13. மேற்கு ஜனநாயகவாதிகள் ஜனநாயகத்திற்க்கா புடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று இங்கு யாழ்களத்தில் புளங்காகிதம் அடைத்துக்கொண்டு இருந்த அரசியல் விற்பன்னர்கள் ...... இப்போ தடுமாறி நிற்கிறார்கள் ......... இங்கிருக்கும் கருத்துக்களை வாசிக்க எனக்கு ஒரே சிரிப்பாக இருக்கிறது. உண்மையில் விழுந்து விழுந்து சிரிக்கிறேன் மீசையில் மண் ஓட்ட போகிறது என்றதும் ....... இப்போ ட்ரம்பை சர்வாதிகாரி ஆக்கிவிடால் மண் ஒட்டிடாது என்று கிளம்பி இருகிறார்கள் என்று எண்ணுகிறேன். சூப்பர் ! பாலஸ்தீனத்தில் ௪௦ஆயிரம் அப்பாவிகளை கொன்று குவித்த நிதன்யாகுவிற்கு யாழ்களத்தில் சிலை வைக்காத குறையாக விக்கிக்கொண்டு இருந்தார்கள் ......... கொக்குவில் தவடியில் சாதியை ஒழிக்க சித்தார்த்தன் என்று ஒரு கோமாளி பெரியாருக்கு சிலை வைக்க போகிறதாம். அது சீமானுக்கு எதிரான செயலக இருக்கும்போது ஏன் அந்த அரிய சந்தர்ப்பத்தை நீங்கள் நழுவ விட வேண்டும்? அவருடன் கூடி நித்தன் யாகுவிற்கும் சேர்த்து சிலை வையுங்கள் புட்டினையும் பழிவாங்கியதாகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்திய புகழும் இருக்கும்
  14. இனி வ‌ரும் போட்டிக‌ளில் த‌மிழ் சிறி அண்ணாவை நான் கொப்பி அடிச்சு சிறு மாற்ற‌ம் செய்தால் உங்க‌ளால் க‌ண்டு பிடிக்க‌ முடியாது லொள் ஹா ஹா............. சும்மா ப‌ம்ப‌லுக்கு எழுதினேன் பெரிய‌ப்பு😁👍....................
  15. முகமட் ஷாமி 5 விக்கெட் எடுத்திருக்கின்றார்.. அதிக விக்கெட் வீழ்த்திய எடுத்தவர் என முகமட் ஷாமியை யார் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று பார்ப்போம்😁 @தமிழ் சிறி ஐயாவுக்கு யோகம் அடிச்சிருக்கு 😃
  16. பாலாவி இப்படியுமா பெயர் வைப்பார்கள்🤣 இல்லையாம்…பின்புர செவ்வந்தியாம்🤣
  17. நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் இமான் ஏமாற்றிவிட்டார்.. பாடகி விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு V VasanthiUpdated: Wednesday, February 19, 2025, 17:01 [IST] ஒரு சில பாடல்கள் கேட்கும் போது நம்முடைய மனதிற்குள் இருக்கும் சந்தோஷங்கள், கவலைகள், பாசம் உட்பட எல்லா உணர்வுகளும் நம்மை மீறி வெளிப்படும் அதுபோல பாடல்களை பாடும் பாடகர்கள் மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் வைக்கம் விஜயலட்சுமியும் ஒருவர். இவர் தமிழில் வெளியான குக்கூ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "கோடை மழை போல" என்ற பாடல் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு கேட்பவர்களை ஆட வைக்கும் "சொப்பன சுந்தரி நான்தானே", "காக்...கா முட்டை... காக்கா முட்டை கண்ணால" என்ற பாடல்களை இவர் பாடி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. அதுபோல "மண்ணிலே ஈரம் உண்டு" என்ற பாடல் பலருடைய பெருந்தன்மையை பறைசாற்றும் இடமாக பாடியிருந்தார். அதற்கு பிறகு பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். வைக்கம் விஜயலட்சுமி பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பலருக்கும் முன்மாதிரியாக தன்னுடைய குரல் மூலம் தனித்து நிற்கிறார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் ஆனது ஆனால் மாப்பிள்ளை வீட்டினர் போட்ட கண்டிஷன் தனக்கு செட் ஆகவில்லை என்று திருமணத்திற்கு மறுத்துவிட்டார். பிறகு குடும்பத்தினரின் வற்புறுத்தலினால் 2018 ஆம் ஆண்டு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண பங்க்ஷனில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர். ஆனாலும் இவர்களுடைய திருமண வாழ்க்கை சில வருடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது தன்னுடைய கணவர் குறித்து பல குற்றச்சாட்டுகளை விஜயலட்சுமி கூறியிருந்தார் அது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு தொடர்ந்து சினிமாக்களில் பாட்டு பாடி கொண்டிருக்கிறார். அதுபோல விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கெஸ்ட் ஆகவும் கலந்து கொண்டு வருகிறார். இதன் நிலையில் பேட்டி ஒன்றில் அவர் பேசும் போது தன்னுடைய வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை குறித்து பேசி இருக்கிறார். அதில் தனக்கு இளையராஜா, ஏ ஆர் ரகுமான், வித்யாசாகர் கூடவும் பாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். அதோடு தன்னை பார்ப்பதற்காக ஜெயச்சந்திரன், மலையாள டைரக்டர் கமல் என பலர் வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதுபோல இமான் சார் தன்னை பார்க்க வருகிறேன் என்று சொன்னார் ஆனால் அவர் இப்போ வரைக்கும் என்னை பார்க்க வரவே இல்லை என்று ஏக்கமாகவும் பேசி இருக்கிறார். https://tamil.oneindia.com/television/singer-vaikom-vijayalakshmi-accuses-music-composer-iman-details-emerge-681381.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி ஓடியாந்திருப்பியளே 🤣
  18. ஒரு முட்டை ஆயிரம் டாலர் ------------------------------------------ இப்ப இங்கே பல கடைகளில் முட்டை இல்லை சில கடைகளில் இருக்கின்றது ஆனால் எண்ணி எண்ணித்தான் வாங்கலாம் பலத்த கட்டுப்பாடு தட்டுப்பாட்டால் விலையும் பல மடங்காகிவிட்டது கோழிகளுக்கு காய்ச்சல் வந்தது என்று சும்மா சுகமாக நின்றவைகளையும் அழித்துப் போட்டார்கள் இப்ப புதுதாகக் குஞ்சுகளும் வேண்டாம் என்று அங்கே குடும்பக் கட்டுப்பாடு திட்டமும் வந்துள்ளது இது என்ன கலிகாலம் அமெரிக்காவில் முட்டைப் பொரியல் கூடக் கிடையாதா...... ஊரில் வீட்டில் கோழிகள் இருந்தன அப்பா முதன் முதல் ஒரு கோழி வாங்கித் தந்தார் ஒரு விதமான மஞ்சள் கலரில் வெள்ளைப் புள்ளிகள் போட்ட கோழி அது அது வீட்டுக்கு வரும் போது அதன் வயது நாலு மாதங்கள் இருக்கும் ஒரு நாள் முழுக்க கிளிசரியா மரத்தடியில் கட்டி வைத்து விட்டு அடுத்த நாள் அவிழ்த்துவிட்டேன் அப்படியே வீட்டை சுற்றிச் சுற்றியே நின்றது அடுத்த அடுத்த மாதம் முட்டை போட ஆரம்பித்தது முதல் முட்டை போடு முன் பெரிய எடுப்புகள் எல்லாம் எடுத்தது ஒரு அதிகாலையிலேயே தலைமாட்டில் வந்து பதுங்கியது அது கேரிக்கொண்டு திரியும் போதே முட்டை போடப் போகின்றது என்று ஆச்சி சொன்னார் அதைப் பிடித்து கடகத்தால் கவிழ்த்து வைக்க முட்டை போட்டது சுற்றி இருந்த மூன்று வீட்டுக்கும் அது முட்டை போட்ட விசயம் தெரிந்தது அப்படி ஒரு விடாத கொக்கரிப்பு பன்னிரண்டு முட்டை போட்டு விட்டு அது அடை என்று ஒரு மூலையில் குணுகிக்கொண்டு படுத்துவிட்டது பின்னர் அயலூரில் முட்டை வாங்கி அடை வைத்து குஞ்சுகள் வந்து வந்து அதன் குடும்பம் பெருகியது பின்னர் முட்டை நாங்கள் கடையில் வாங்கவே இல்லை சரி இங்கும் கோழி வளர்ப்போம் என்று விசாரித்தேன் அக்கம்பக்கத்தவர்கள் சம்மதம் சொல்லவேண்டும் முதலில் பின்னர் ஒரு பெரிய கூடு வேண்டும் கோழிகளுக்கு தீனி வாங்க வேண்டும் கடையில் மருத்துவரும் வந்து போவார் அப்பப்ப அந்த செலவும் இருக்கின்றது கோழிக் குஞ்சுகளும் வாங்க வேண்டும் அதை மறந்துவிட்டேன் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் முதல் முட்டை கிடைக்கும் போது செலவு ஆயிரம் டாலர்கள் ஆகி விடும் என்று கணக்கு காட்டுகின்றது கலிகாலம் தான்!
  19. அல்வாயன் வடித்தெடுத்த…, அழியாத அழகின் மீது, அந்தப் பிரமனுக்கே.., காதல் வரும்..! பிரபஞ்சப் படைப்பின், இரகசியம் புரிந்தவர் நீர் ஐயா…! பொத்தி வைத்திருக்கும்.., முத்துக்களில் சிலதை, சிந்தி விடுங்களேன், எங்களுக்காக…!
  20. அனுரா அரசு வருவதற்கு முதலே இவரை என்கவுன்டரில் போடுவதற்கு தீர்மானித்திருப்பார்கள் ...வாகன விபத்து ஊடாக செய்ய திட்டமிட்டிருப்பார்கள் ... ஆனால் அனுரா அரசுக்கு கரி பூச வேணும் என்ற காரணத்தால் அதை உயர் நீதிமன்றில் வைத்து ஒர் குழு செய்திருக்கலாம் .. ... விசேட அதிரடி படை அதிகம் கவனம் செலுத்துகின்றது ,பொலிசார்in பங்கு இதில் குறைவு ..இறுதியில் கைது செய்ததும்,அவர்கள் தான் ...சந்தேக நபரும் முன்னாள் கொமான்டோ .... எல்லாம் குறுக்கால போன எனது எண்ணம் மட்டுமே...😀
  21. பாதாள உலகை முடிவுக்கு கொண்டுவருவது சாத்தியமாகலாம். ஆனால் பக்கத்தில் இருக்கும் மக்கள் நலம்கருதாத சுயநல இனவாதிகளை அதிகம் கொண்ட எதிர்க்கட்சி உலகானது….. ஆடுவது எப்போ விழும் கௌவித்தின்று ருசிக்கலாம் என்ற பின்னால் திரிகிறதே? அதிலிருந்து தப்பிவர அல்லது அதனை நல்வழிப்படுத்த நடவடிக்கை ஏதும் உள்ளதா?? இரண்டு கொழுத்த பெரிசுகளும் அங்கு இணைய வருவதாகச் செய்திகளும் வருகின்றனவே!.🤔
  22. நானும் இது ஒரு என்கவுண்டரோ என நினைத்தேன்.
  23. மூன்று பேர் விடாப்பிடியா கீழேயே நிற்கப் போகின்றார்கள். கை குடுத்துத் தூக்கி விடவேணும். உபிசியாக🤣
  24. Clean Srilanka ல, அவனும் பங்கெடுக்க நினைத்தானோ..... என்னவோ... அதுவும் ID ல Covid QR code வச்சி அடிச்சான் பாரு.
  25. கைபேசியில் இருந்து இந்த‌ இர‌ண்டு ஆம்பின் மூல‌ம் விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ கிரிக்கேட்டை பார்க்க‌லாம் இந்தியா ஊட‌க‌ம் என்றால் ஒவ்வொரு ஓவ‌ருக்கும் விள‌ம்ப‌ர‌ம் போடுவின‌ம் இது இங்லாந் நாட்டு ச‌ண‌ல் போட்டி தொட‌ங்கி முடியும் ம‌ட்டும் விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ கிளிய‌ரா பார்க்க‌லாம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா............................
  26. நீங்கள் தானே... சிங்களவர்களின் பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும் என்று முன்பு குறிப்பிட்டதாக ஒரு ஞாபகம். அதிலை ஒன்றுதான்... பின்புர செவ்வந்தி 😂
  27. நான் மூன்றாவ‌து அண்ணா😁👍 ஹா ஹா நீங்க‌ள் இர‌ண்டாவ‌து😁 எங்க‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை அண்ணா முத‌லாவ‌து😁👍.....................
  28. இது லொட்ரியில் நம்பர்களை சரியாகக் குறித்துவிட்டு ரிக்கெட் வாங்க மறந்த கதையாகக் கிடக்கு🤣
  29. உலகம் முழுவதும் விடுதலை வீரனாக சித்திரிக்கப்பட்ட ஒருவர் இன்று சர்வாதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.அதுவும் அமெரிக்கா சார்பாக..... இதுதான் உலகம். எனக்கு என்னமோ எப்பிடி இருந்த நான் இப்புடி ஆயிட்டன் பீலிங். 🤣
  30. உக்ரெயின் சோவியத் யூனியனின் ஒரு பகுதி. பிரிந்தபின் சிவனே என்று இருந்திருக்க வேண்டும். நாட்டோவை நாடியதால் நட்டாற்றில் நிற்கிறது. இலங்கையில் தமிழ் சிறார்களை குண்டுபோட்டுக் கொண்ற பழியும் சும்மா விடாது.
  31. இரவைப் பகலாக்கும் திட்டம்: ரஷ்யாவின் பிரமாண்ட விண்வெளி கண்ணாடி பூமிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர், மைல்ஸ் பர்க் பதவி, பிபிசி நியூஸ் 19 பிப்ரவரி 2025 32 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விண்வெளி கண்ணாடியைப் பயன்படுத்தி சைபீரியாவை ஒளிரூட்டுவதற்கான விளாடிமிர் சைரோமியட்னிகோவின் துணிச்சலான முயற்சி சர்வதேச கவனத்தை ஈர்த்தது. 1993, பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பரிசோதனை குறித்து 'பிபிசியின் டுமாரோஸ் வேர்ல்ட்' செய்தி வெளியிட்டது. ஒரு பிரமாண்ட கண்ணாடியை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தி சூரியனின் கதிர்களை கிரகித்து அதை பூமியிலுள்ள ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி திருப்புவது இத்திட்டத்தின் நோக்கம். இது ஏதோ ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வில்லன் கதாபாத்திரம் உருவாக்கிய திட்டம் போல் தோன்றலாம். ஆனால், ரஷ்ய விண்வெளி முகமையான ரோஸ்கோஸ்மோஸ் 1993 பிப்ரவரி 4ஆம் தேதி செய்ய முயன்றது இதைத் தான். ஆனால் ஸ்னாமியா (ரஷ்ய மொழியில் பதாகை எனப் பொருள்) திட்டத்தின் நோக்கம் உலகை மிரட்டி பணம் பறிப்பது போன்ற ஒரு கொடூரமான திட்டம் அல்ல. ஸ்னாமியா ஏவப்படும் முன்னர் பிபிசியின் டுமாரோஸ் வேர்ல்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கேட் பெல்லிங்ஹாம், "இதன் நோக்கம், சைபீரியாவில் உள்ள ஆர்டிக் நகரங்களை இருண்ட குளிர்காலத்தின் போது ஒளிரூட்டுவது. அடிப்படையில் ரஷ்யாவின் துருவப் பகுதிகளில் இரவு கவிழ்ந்த பின்னர் சூரியனை ஒளிரச் செய்யும் முயற்சிதான் இந்த திட்டம்." என்று விவரித்தார். சியரா ஸ்பேஸ்: காற்றே இல்லாத நிலவில் ஆக்சிஜன் தயாரிக்க உதவும் கருவி - எப்படி செய்யும்? 100-வது ராக்கெட் வெற்றி: முதல் தோல்விக்குப் பிறகு அடுத்தடுத்து சிகரம் தொட்ட ஸ்ரீஹரிகோட்டா ஸ்பேடெக்ஸ்: இஸ்ரோ வரலாற்று சாதனை - 'டாக்கிங்' செயல்முறை வெற்றி என அறிவிப்பு விண்வெளியில் இருந்து எரிந்தபடி விழுந்த 'ராட்சத வளையம்' - எங்கிருந்து வந்தது? இன்றுமே கேட்பதற்கு இது ஒரு புதிய திட்டம் போல தோன்றுகிறது. இருப்பினும் ஒளியை பூமியின் மேற்பரப்பை நோக்கி பிரதிபலிக்க விண்வெளியில் கண்ணாடிகளை பயன்படுத்துவது என்ற நோக்கம் உண்மையில் புதுமையான ஒன்றல்ல. 1923இல் ஜெர்மனியின் ராக்கெட் முன்னோடி ஹெர்மன் ஓபெர்த் இதை தனது 'ராக்கெட் இண்டூ பிளானட்டரி ஸ்பேஸ்' என்ற புத்தகத்தில் முன்வைத்தார். மிகவும் சாத்தியமற்றதாக தோன்றுகிறது என்ற காரணத்திற்காக ஹைடெல்பர்க் பல்கலைக் கழகத்தால் நிராகரிக்கப்பட்ட அவரது பி.ஹெச்டி ஆய்வறிக்கையின் அடிப்படையில், அவர் சுயமாக வெளியிட்ட புத்தகம். இது, ஒரு ராக்கெட் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறுவது எப்படி சாத்தியம் என்பதை கணித ரீதியாக காட்டியது. விண்வெளி பயணத்தால் மனிதர்கள் உடலில் ஏற்பட சாத்தியமுள்ள பாதிப்புகள், செயற்கைக்கோள்களை எப்படி சுற்றுவட்டப்பாதையில் செலுத்துவது மற்றும் பூமியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கி ஒளியை குவிக்கும் வகையில் விண்வெளியில் மிகப்பெரிய குழிவான கண்ணாடிகளை அமைப்பது ஆகியன குறித்த தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன. 'டைட்டானிக் மூழ்கியது போன்ற பேரிடர்களை தவிர்க்க உதவும்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,1912, டைட்டானிக் கப்பல் விபத்தைச் சித்தரிக்கும் ஓவியம் இவ்வாறு ஒளிரூட்டுவது 1912-ல் டைட்டானிக் மூழ்கியது போன்ற பேரிடர்களை தவிர்க்க உதவும் அல்லது அதில் உயிர் பிழைத்தவர்களை மீட்க உதவும் என ஓபெர்த் தெரிவித்தார். பனிப்பாறைகளை உருக்குவதன் மூலம் கப்பல்களுக்கு பாதைகளை உருவாக்குவது அல்லது பூமியின் தட்பவெட்ப நிலையை மாற்றக் கூட விண்வெளி கண்ணாடிகளை பயன்படுத்தலாம் என ஓபெர்த் பேசியிருந்தார். விண்வெளியில் கண்ணாடி திட்டம் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய இயற்பியலாளர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஹில்லர்ஸ்லெபனில் இருந்த நாஜி ஆயுத ஆய்வு நிலையத்தில், ஒளியை பிரதிபலிக்கும் ஒரு சூரிய துப்பாக்கியை (சானெங்வெயர் என ஜெர்மன் மொழியில் அறியப்படும்) உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். சூரிய ஒளியை குவியச் செய்து பூமியில் நகரங்களை எரியச் செய்வது அல்லது ஏரிகளில் உள்ள நீரை ஆவியாக்குவதுதான் சானெங்வெயரின் நோக்கம் என்று கைது செய்யப்பட்ட ஜெர்மானிய விஞ்ஞானிகள் அமெரிக்க ராணுவ அதிகாரிகளிடம் கூறியதாக, 1945ஆம் ஆண்டில் டைம் இதழ் செய்தி வெளியிட்டது. அவர்கள் தங்களது தகவல் தொழில்நுட்ப வரைபடங்களை அளித்த பின்னர் அமெரிக்க அதிகாரிகள் நம்பிக்கையின்மை தெரிவித்தாலும், ஜெர்மனிய விஞ்ஞானிகள் தங்களது சூரிய துப்பாக்கி 50 வருடங்களில் செயல்பாட்டிற்கு வரும் என நம்பியதாக நேச நாடுகளின் தொழில்நுட்ப உளவுப்பிரிவின் தலைவர் லெப்டினன்ட் கர்னல் ஜான் கெக் அந்த சமயத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். 1970-களில் மற்றொரு ராக்கெட் பொறியாளர் கிராஃப்ட் எரிக்கே இந்த சாத்தியத்தை ஆராயத் தொடங்கினார். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் வி-2 ராக்கெட் குழுவில் எரிக்கே ஒரு உறுப்பினராக இருந்திருக்கிறார். யுத்தத்திற்கு பிறகு அவர் அமெரிக்காவிடம் சரணடைந்து, ஆபரேசன் பேப்பர்கிளிப் என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்காக பணியாற்ற தொடங்கினார். 1,600 ஜெர்மானிய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மதிப்பு மிக்கவர்கள் என வகைப்படுத்தப்பட்டு, வழக்குகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டு, தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். எரிக்கே அமெரிக்க விண்வெளி திட்டத்தின் ஒரு அங்கமாக மாறி, விண்வெளியில் கண்ணாடிகளை அமைக்கும் திட்டத்தை 1970-களில் தொடங்கினார். பூமியைச் சுற்றிவரும் பிரமாண்ட கண்ணாடிகள் இரவு வானை எப்படி ஒளிரூட்டி, விவசாயிகள் இரவு பகலாக 24 மணி நேரமும் சாகுபடி அல்லது அறுவடை மேற்கொள்ளலாம் அல்லது அந்த ஒளியை சூரிய ஒளி தகடுகளை நோக்கி திருப்பி உடனடியாக மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என விளக்கி 1978-ல் அவர் ஒரு கட்டுரையை வெளியிட்டார். இதை அவர் பவர் சொலெட்டா என அழைத்தார். குழந்தைப் பருவம் முதலே விண்வெளி பயணத்தின் மீது ஆர்வம் கொண்டவரும், பிற கோள்களில் மனிதர்கள் குடியேற வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவருமான எரிக்கே, பவர் சொலெட்டா செயல்பாட்டுக்கு வருவதை பார்க்காமலேயே 1984ஆம் ஆண்டு மரணமடைந்தார். ஆனால் அவருடைய விண்வெளி பயண கனவு அவரது இறப்பிற்கு பிறகு நனவானது. 1984-ல் தகனம் செய்யப்பட்ட அவரது எச்சங்கள், ஸ்டார் டிரெக்கை உருவாக்கிய ஜீன் ராடென்பெர்ரி மற்றும் 1960-களின் முக்கியமான உளவியலாளர் திமோதி லியரி ஆகியோரின் எச்சங்களுடன் சேர்த்து, பூமி சுற்றுப்பாதையில் 1997ஆம் ஆண்டு செலுத்தப்பட்டன. 1980-களில், சோலரெஸ் என்று அழைக்கப்படும் பூமியை சுற்றி வரும் கண்ணாடி அமைப்பு மூலம் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு குறித்து நாசா மீண்டும் மீண்டும் ஆய்வு செய்தது, ஆனால் அரசு ஆர்வம் காட்டினாலும் அந்த திட்டத்திற்கு போதிய நிதியை திரட்ட முடியாமல் போய்விட்டது. ஆனால் அதே நேரம் ரஷ்யாவில் சூரிய கண்ணாடிகள் குறித்த ஆர்வம் வேரூன்றியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பகல் நேரம் மிகவும் குறைவாக இருக்கும் ரஷ்யாவின் வட துருவப்பகுதிகளில் இருள் சூழ்ந்த பகுதிகளில் ஒளியை வழங்க இந்த கண்ணாடிகளை பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டது விண்வெளியில் படகோட்டம் அந்த நேரத்தில் விண்வெளி கலங்களில் மிகப்பெரிய சூரிய ஒளி பாய்களை இணைக்க முடியுமா என விளாடிமிர் சைரோமியாட்னிகோவ் என்ற ரஷ்ய விஞ்ஞானி ஆய்வுகளை மேற்கொண்டார். விண்வெளி பொறியியல் கண்டுபிடிப்புகளில் சைரோமியாட்னிகோவ் ஒரு முன்னோடியாக இருந்தார். சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரினை 1961-ல் விண்வெளிக்கு கொண்டு சென்ற உலகின் முதல் விண்கலமான வோஸ்டாக்ஸ் ராக்கெட்டை உருவாக்குவதில் அவர் பணியாற்றியுள்ளார். ஆண்டோஜைனெஸ் பெரிபெரல் அசெம்பளி சிஸ்டம் (APAS) என அழைக்கப்படும் அற்புத விண்கல தொழில்நுட்பத்தையும் அவர் உருவாக்கினார். இது 1975 ஜூலையில், அப்போதைய பனிப்போர் எதிரிகளான அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இணைந்து செயல்படுத்திய முதல் கூட்டு விண்வெளி பயணமான அப்போலோ- சோயூஸ் சோதனை திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 3 விண்வெளி வீரர்களுடன் சென்ற அமெரிக்க விண்கலம், இரண்டு வீரர்களுடன் இருந்த சோவியத் சோயூஸ் கலத்துடன் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. இதன் பின்னர் அமெரிக்க விண்கலங்கள் ரஷ்யாவின் மிர் விண்வெளி மையத்துடன் இணைவதற்கு APAS பயன்படுத்தப்பட்டது. இன்றும் விண்கலங்கள் சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைவதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஒளி பாய்களை விண்கலங்களுடன் இணைப்பதன் மூலம் கப்பலின் பாய்கள் காற்றை பயன்படுத்திக் கொள்வதைப் போல அவை சூரியனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என சைரோமியாட்னிகோவ் நினைத்தார். இந்த பிரதிபலிக்கும் ஆற்றல் கொண்ட பாய்கள் சரியான கோணத்தில் வைக்கப்பட்டால் சூரியனிலிருந்து வெளியேறும் போட்டான் துகள்கள் அவற்றின் கண்ணாடி போன்ற பரப்பில் பிரதிபலித்து எரிபொருளை எரிக்க வேண்டிய தேவையில்லாமல், கலத்தை விண்வெளியில் முன்னோக்கி செலுத்தும். ஆனால் ரஷ்யாவில், சோவியத் சகாப்தத்திற்கு பிறகு, சைரோமியாட்னிகோவின் விண்வெளி திட்டம் போன்றவற்றால் கிடைக்கும் பொருளாதார பலனை காட்டாவிட்டால் நிதி பெறுவது கடினமானது. எனவே தனது திட்டத்தில் மாற்றங்கள் செய்ய சைரோமியாட்னிகோவ் முடிவு செய்தார். பூமியை சுற்றி வரும் விண்கலத்தின் ஒளியை பிரதிபலிக்கும் சூரிய பாய்கள், ஒரு கண்ணாடி போல் செயல்படலாம் என்றும், சூரிய பாய்கள் எப்போதும் சூரியனை பார்க்கும் வகையில் அவற்றின் கோணத்தை விண்கலத்தின் திரஸ்டர்கள் மூலம் மாற்றலாம் எனவும் அவர் நினைத்தார். பகல் நேரம் மிகவும் குறைவாக இருக்கும் ரஷ்யாவின் துருவப்பகுதிகளில் இருள் சூழ்ந்த பகுதிகளில் ஒளியை வழங்க இந்த கண்ணாடிகளை பயன்படுத்தலாம். கூடுதலாக கிடைக்கும் சூரிய ஒளி விவசாய நிலங்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம். கூடுதலாக கிடைக்கும் சூரியவெளிச்சம் அந்தப் பகுதியில் விளக்குகள் மற்றும் வெப்பத்திற்கான மின்சார செலவுகளை குறைத்து அந்த பகுதி மக்களின் நலனுக்கு வலு சேர்க்கலாம் என அவர் கருதினார். இது அரசு ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு திட்டமாக அமைந்தது. எனவே ரஷ்ய அரசு நிறுவனங்கள் மற்றும் முகமைகள் கொண்ட விண்வெளி ரெகாட்டா கூட்டமைப்பின் நிதி பங்களிப்புடன், ரஷ்ய விண்வெளி முகமை ரோஸ்காஸ்மாஸின் மேற்பார்வையில் ஸ்னாமியா விண்வெளி கண்ணாடியை மெய்ப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார் சைரோமியாட்னிகோவ். தாந்தியா தோபே: சப்பாத்தி மூலம் புரட்சி செய்தியைப் பரப்பிய கிளர்ச்சியாளர் - ஆங்கிலேயர்களை திணற வைத்தது எப்படி?19 பிப்ரவரி 2025 காந்தி கேட்டுக்கொண்டதால்தான் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கோரினாரா?19 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையம் முதலில் உருவாக்கப்பட்ட ஸ்னாமியா-1 மாதிரி விண்வெளிக்கு அனுப்பப்படவில்லை. மாறாக பரிசோதனைகள் மேற்கொண்டு ஏதாவது தொழில்நுட்ப பிரச்னைகள் இருந்தால் அவற்றை சைரோமியாட்னிகோவ் சரி செய்யும் வகையில் பூமியிலேயே இருந்தது. ஸ்னாமியா-2 தான் சுற்றுப்பாதைக்கு செல்லவிருந்த முதலாவது கண்ணாடியாக இருந்தது. அதன் கண்ணாடி, விண்வெளியில் இருக்கும் மோசமான சூழ்நிலையை சமாளிக்கும் அளவு வலுவானது என கருதப்பட்ட பளபளப்பான அலுமினியம் சேர்க்கப்பட்ட மெல்லிய மைலார் இழைகளால் உருவாக்கப்பட்டது. அது மத்தியில் சுழன்று கொண்டிருக்கும் டிரம்மில் இருந்து எட்டு பிரிவுகளாக வட்ட வடிவில் பிரிந்து மையவிலக்கு விசையைப் பயன்படுத்தி அதே வடிவில் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. "பயணத்தின் போது கண்ணாடி விண்கலத்தைச் சுற்றி இறுக்கமாக சுற்றப்பட்டிருக்கும். அதை பிரிக்க விண்கலம் வேகமாக சுழன்று ஒரு குடையை போல் அதை வெளியே தள்ள வேண்டும்," என 1992-ல் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு விளக்கிய பிபிசியின் பெல்லிங்ஹாம், "இந்த 20 மீட்டர் அகல பிரதிபலிப்பான் சாதாரணமாக பூமியை கடந்து செல்லும் சூரிய கதிர்களை அந்த உயரத்தில் ஈர்த்து அவற்றை பூமியின் இருளான பகுதியை நோக்கி திருப்புவது தான் சூட்சுமம்." என்றார். முதலில் செலுத்தப்பட்டதைவிட படிப்படியாக பெரிய கண்ணாடிகளை அனுப்பி அவை பூமிக்கு வரும் போது எரிந்து விடும்படி பல ஸ்னாமியாக்களை ஏவுவதுதான் சைரோமியாட்நிகோவின் திட்டம். ஸ்னாமியாவின் மெல்லிய பிரதிபலிக்கும் தகடுகள் விண்வெளியில் எவ்வாறு செயல்பட்டன என்பதை ரஷ்ய பொறியாளர்கள் ஆய்வு செய்து அவரது மாதிரியை மேலும் மேம்படுத்த முடியும். இதன் தொடர்ச்சியாக நிரந்தரமாக பூமியை சுற்றி வரும் 200 மீட்டர் அகல பிரதிபலிப்பானுடன் கூடிய ஸ்னாமியா அனுப்பப்படும். தமிழுக்காக குழந்தைகளுடன் சிறை புகுந்த 73 பெண்கள் - அறியப்படாத முதல் மொழிப்போர் வரலாறு17 பிப்ரவரி 2025 ஆப்ரகாம் லிங்கனின் மனைவியை சூழ்ந்த சர்ச்சைகள், விமர்சனங்கள் - ஓர் வரலாற்று பார்வை17 பிப்ரவரி 2025 பௌர்ணமி நிலவுக்கு இணையாக ஒளிர்ந்த விண்வெளி கண்ணாடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரதிபலிப்பான்களால் நிலவை விட 50 மடங்கு கூடுதலான ஒளியை பிரதிபலிக்க முடியும் என கணிக்கப்பட்டது சுழலும் ஆற்றல் உள்ள இதுபோன்ற 36 பிரமாண்ட கண்ணாடிகளை விண்ணில் செலுத்தி பிரதிபலிக்கும் ஒளியை குறிப்பிட்ட ஒரு பகுதியில் தொடர்ந்து பாயும் வகையில் வைத்திருப்பதுதான் இந்த திட்டத்தின் உச்சபட்ச நோக்கம். ஒரு சிறிய பகுதியில் ஒளி பாய ஒரே ஒரு பிரதிபலிப்பான் பயன்படுத்தலாம். "ஒரு தெளிவான இரவில் அந்த விண்வெளி பிரதிபலிப்பானால் ஒரு கால்பந்தாட்ட மைதானத்திற்கு இணையான பகுதிக்கு ஒளியூட்ட முடியும். இதன் மூலம் நீண்ட குளிர்கால இரவுகளில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும்," என்றார் பெல்லிங்ஹாம். கூடுதல் வெளிச்சம் அல்லது பெரிய பகுதியில் ஒளி வீச பல பிரதிபலிப்பான்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். ஒருங்கிணைந்த விண்வெளி கிரிட் மூலம் ஒன்றாக செயல்படும் பிரதிபலிப்பான்களால் நிலவை விட 50 மடங்கு கூடுதலான ஒளியை பிரதிபலிக்க முடியும் எனவும் 90 கிலோமீட்டர் பரப்பளவிற்கு ஒளியை பரப்ப முடியும் எனவும் கணிக்கப்பட்டது. 1992ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி, திட்டம் தயாராக இருந்தது. ஆளற்ற புரோகரஸ் எம்-15 விண்கலம், ஸ்னாமியா-2 உடன் கஜகஸ்தானில் உள்ள பைகானுர் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. பொருட்களை ஏற்றிச்சென்ற கலம் ரஷ்யாவின் மிர் விண்வெளி மையத்துடன் இணைந்த போது, விண்வெளி வீரர்கள் பிரதிபலிப்பான்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்த டிரம்மை புரோகரஸ் விண்கலத்தில் பொருத்தினர். ஸ்னாமியா-2 அந்த ஆண்டு இறுதியில் பரிசோதிக்கப்படவிருந்தது. ஆனால் மிர் குழுவினர் வரவிருக்கும் பிற திட்டத்திற்கான பரிசோதனைகளை செய்து கொண்டிருந்ததால் இதை செலுத்துவது தாமதமானது. இறுதியில் 1993ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி அவர்கள் திட்டத்தை செயல்படுத்த தயாராகினர். தானாக செயல்படக் கூடிய புரோகரஸ் விண்கலம், மிர் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்த போது அது சுழல ஆரம்பித்து ஒரு பிரமாண்ட விசிறியை விரிப்பது போல் கண்ணாடியை விரித்தது. அந்த கண்ணாடி சூரியனின் கதிர்களை ஈர்த்து, பூமியை நோக்கி பிரதிபலித்தது. அவ்வாறு பிரதிபலிக்கப்பட்ட ஒளி பெளர்ணமி நிலவுக்கு இணையான பிரகாசத்துடன் ஒளிர்ந்தது. அது பூமியில் 5 கிலோமீட்டர் விட்டத்துடன் ஒரு வெளிச்ச வட்டத்தை உண்டாக்கியது. விநாடிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் அந்த வெளிச்ச வட்டம் தெற்கு பிரான்ஸிலிருந்து, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து மற்றும் மேற்கு ரஷ்யாவை கடந்தது. மிர் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தவர்களால் ஒரு மெல்லிய ஒளி ஐரோப்பாவையும் ரஷ்யாவையும் கடந்ததைக் காண முடிந்தது. அந்த கண்டம் முழுவதும் மேகங்களால் சூழப்பட்டிருந்தாலும், பூமியில் இருந்த சிலர் அதை ஒரு வெளிச்ச கீற்றாக பார்த்ததாக கூறினர். சில மணி நேரங்களுக்கு பிறகு, அந்த விண்வெளி கண்ணாடி சுழற்சிப் பாதையை விட்டு விலகி, கனடாவின் மேல் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த போது எரிந்து போனது. குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது?15 பிப்ரவரி 2025 தோல் அரிப்பு: சொறிவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? புதிய ஆய்வு கூறுவது என்ன?14 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யூரி ககாரினை (புகைப்படத்தில் இருப்பவர்) விண்வெளிக்கு கொண்டு சென்ற உலகின் முதல் விண்கலமான வோஸ்டாக்ஸ் ராக்கெட்டை உருவாக்குவதில் சைரோமியாட்னிகோவ் பங்காற்றினார் ஒரு தொழில்நுட்ப வெற்றி ரஷ்யாவில், ஸ்னாமியா-2 சோதனை ஒரு தொழில்நுட்ப வெற்றியாக பாராட்டப்பட்டது. ஆனால் அது இந்த திட்டத்திற்கான சில குறிப்பிடத்தக்க சவால்களையும் வெளிப்படுத்தியது. ஸ்னாமியா-2 பிரதிபலித்த ஒளி எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான தீவிரத்துடன் இருந்ததுடன், பூமியில் ஒரு பெரிய பகுதிக்கு பயன்படுத்தத்தக்க ஒளியை வழங்க முடியாத வகையில் மிகவும் பரவலாக இருந்தது. சுற்றுப்பாதையில் சுழலும் ஸ்னாமியா-2-ன் நிலைத்தன்மையை பராமரிப்பதும் கடினமாக இருந்தது. மேலும் அதன் வெளிச்ச வட்டம் பூமியின் மேற்பரப்பில் விரைவாகப் பயணித்தது. அதன் உண்மையான பயன்பாடு மிகவும் குறைவு என தோன்றச் செய்தது. ஆனால் இந்த திட்டம் ஊக்கமளிக்கும் முடிவுகளையும் புரிதல்களையும் வழங்கியது. எனவே திட்டமிட்டபடி ஸ்னாமியா-2.5 திட்டத்தை செயல்படுத்த சைரோமியாட்னிகோவ் முனைந்தார். இந்த முறை இது 25 மீட்டர் கண்ணாடியைக் கொண்டிருக்கும் இது ஐந்து முதல் 10 முழு நிலவுகளின் பிரகாசத்தை பிரதிபலிப்பதுடன் 8 கிலோமீட்டார் அகலமுள்ள வெளிச்ச வட்டத்தையும் பெற்றிருக்கும். ஸ்னாமியா-2.5 பூமியைச் சுற்றி வரும் போது, பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பல நிமிடங்களுக்கு பிரதிபலிக்கும் வகையில் ஒளிக்கற்றையின் திசையை கட்டுப்படுத்துவதுதான் நோக்கம். 24 மணி நேர சோதனையின் போது கண்ணாடி பிரதிபலிக்கும் சூரிய கதிரால் ஒளிர வட அமெரிக்காவில் இரண்டு நகரங்கள் மற்றும் ஐரோப்பாவில் சில நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. சைரோமியாட்னிகோவ் தனது குழு அடைந்த முன்னேற்றத்தால் மகிழ்ச்சியடைந்தார். 1998 அக்டோபரில் இதை ஏவ திட்டமிடப்பட்டது. "நாங்கள் இந்த துறையில் முன்னோடிகள்" என்று அவர் ஜூலை 1998இல் தி மாஸ்கோ டைம்ஸிடம் கூறினார். "பரிசோதனை திட்டமிட்டபடி நடந்தால், எதிர்காலத்தில் பல டஜன் விண்கலங்களை நிரந்தரமாக விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்." என்றார். டீப்சீக்: உயர் தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுக்கு சீனா சவால் விட அடிகோலிய பத்தாண்டு திட்டம் பற்றி தெரியுமா?8 பிப்ரவரி 2025 பாரசூட் முதல் கலங்கரை விளக்கம் வரை - சொந்த கண்டுபிடிப்புகளாலேயே கொடூரமாக உயிரிழந்த 5 விஞ்ஞானிகள்13 பிப்ரவரி 2025 வானிலையாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலை ஸ்னாமியா-2.5 புறப்படும் முன்னரே ரஷ்ய விண்வெளி அதிகாரிகளிடம் புகார்கள் வரத் தொடங்கின. விண்வெளி கண்ணாடி, இரவு வானத்தை ஒளியால் மாசுபடுத்தி, அவர்களின் தொலைநோக்கிகள் நட்சத்திரங்களைப் பார்ப்பதை மறைத்துவிடும் என்று வானிலையாளர்கள் கவலைப்பட்டனர். ராயல் வானியல் சங்கம், விண்வெளி ரெகட்டா கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரலிடம் இந்த சோதனை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு சென்றது. விண்வெளி கண்ணாடியின் செயற்கை ஒளி, விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி, வன உயிர்கள் மற்றும் இயற்கை சுழற்சிகளைப் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர். இந்த சந்தேகங்கள் இருந்த போதிலும், ஸ்னாமியா திட்டத்தின் சாத்தியமான விளைவுகள் குறித்து உலகளவில் கணிசமான கவனமும் உற்சாகமும் இருந்தது. "மனித குலத்தின் எதிர்காலத்திற்கு இது என்ன பலனளிக்கும் என்று நினைத்துப் பாருங்கள்," என்று சைரோமியாட்னிகோவ் மாஸ்கோ டைம்ஸிடம் கூறினார். "மின்சார கட்டணங்கள் இல்லை, நீண்ட இருண்ட குளிர் காலங்கள் இல்லை. தொழில்நுட்பத்திற்கு இது ஒரு பெரிய முன்னேற்றம்." என்றார். எனவே, ஸ்னாமியா-2.5 திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டது. மாஸ்கோவில் இருந்து மிஷன் கண்ட்ரோல் கண்காணித்துக் கொண்டிருக்க, முன்பை விட பெரிய விண்வெளி கண்ணாடி பிப்ரவரி 5, 1999 அன்று ஏவப்பட தயாராக இருந்தது. முதலில் அனைத்தும் திட்டமிட்டப்படி நடந்தேறின. மடித்து வைக்கப்பட்டிருந்த விண்வெளி கண்ணாடி புரோகிரஸ் விண்கலத்துடன் இணைக்கப்பட்டு, மிர் விண்வெளி மையத்தில் இருந்து எந்த பிரச்னையும் இன்றி பிரிந்தது. அது விண்வெளி மையத்தை விட்டு விலகி அதற்கான இடத்தில் நிலைகொண்டது. புரோகிரஸின் திரஸ்டர்கள் செயல்பட உத்தரவிடப்பட்டதும், அது சுழன்று கண்ணாடியை விரிக்கத் தொடங்கியது. அதே நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக புரோகிரஸுக்கு கூடுதலாக ஒரு கட்டளை தவறுதலாக பிறப்பிக்கப்பட்டது. விண்கலத்தை விண்வெளி மையத்துடன் இணைப்பதற்கான ஆண்டெனாவை செயல்படுத்தும்படி அதற்கு உத்தரவிடப்பட்டது. மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?3 பிப்ரவரி 2025 மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?10 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் (கோப்புப் படம்) ஆண்டெனா நீளத் தொடங்கிய போது ஸ்னாமியா 2.5 -ன் மெல்லிய பிரதிபலிப்பான்கள் அதில் உடனடியாக சிக்கிக்கொள்ள தொடங்கியது. மிர் விண்வெளி மையத்திலிருந்து வந்த ஆண்டனாவில் கண்ணாடியிழை சிக்கிக்கொண்ட காட்சிகளை மாஸ்கோவில் உள்ள கட்டுப்பாட்டு மையம் வேதனையுடன் பார்த்தது. ஆண்டெனாவை உள்ளிழுக்க அவசர கட்டளைகள் அனுப்பப்பட்டன. ஆனால் இந்த நேரத்திற்குள் பல கஜ நீள கண்ணாடியிழை ஆண்டனாவை சுற்றிக்கொண்டதுடன், கண்ணாடியை பல இடங்களில் கிழித்துவிட்டது. பிரதிபலிக்கும் பரப்பு மேலும் கிழித்துவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்து கட்டளைகள் நிறுத்தப்பட்டன. கண்ணாடியை விரிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு இறுதிக்கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. ஸ்னாமியா-2.5-ன் கிழிந்து கசங்கிய கண்ணாடியை விரிக்க முடியாது என்பதை உணார்ந்த மிஷன் கன்ட்ரோல், புரோகிரஸ் விண்கலத்துடன் இணைந்த நிலையிலேயே அதை பூமியில் விழ அனுமதித்தனர். அது அடுத்த நாள் பசுபிக் பெருங்கடலில் விழுந்தது. "இங்கு மிகவும் சோர்வான மனநிலை உள்ளது," என மாஸ்கோவில் உள்ள மிஷன் கண்ட்ரோலின் செய்தித் தொடர்பாளார் வேலெரி லிண்டின் அப்போது பிபிசியிடம் தெரிவித்தார். ஸ்னாமியா-2.5 பூமியில் விழுந்தது அதை மட்டும் அழிக்கவில்லை. மாறாக சைரோமியாட்னிகோவின் உன்னதமான விண்வெளி கண்ணாடி திட்டத்தின் எதிர்காலத்தையும் அழித்தது. 70 மீட்டர் விட்ட கண்ணாடியுடன் 2001-ல் ஏவ அவர் திட்டமிட்ட ஸ்னமியா 3-க்கு நிதி கிடைக்காததால் அது தயாரிக்கப்படவே இல்லை. தனது தலைமுறையின் தலைசிறந்த விண்வெளி பொறியாளர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட சைரோமியாட்னிகோவ் 2006-ல் சூரிய சக்தி பாய்கள் மற்றும் கண்ணாடிகள் பற்றிய கனவுகள் நிறைவேறாமலேயே உயிரிழந்தார். "இந்த பரிசோதனை உலகளவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது என்பதால் இந்த தோல்வி மிகவும் வேதனையானது," என லிண்டின் 1999இல் பிபிசிக்கு கூறினார். "ரஷ்ய விண்வெளித் திட்டங்களின் பழைய கொள்கையை நாம் மறந்துவிட்டோம். முதலில் ஏதாவது செய்ய வேண்டும், பின்னர் அதைப் பற்றி பெருமை பேச வேண்டும்" என அப்போது அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இரவைப் பகலாக்கும் திட்டம்: ரஷ்யாவின் பிரமாண்ட விண்வெளி கண்ணாடி பூமிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியது எப்படி?
  32. இங்கே சிங்கையில் சீனாவிலிருந்து விலை மாதுக்களை விசிட்டிங் விசாவில் உள்ளெயெடுத்து அவர்களை வைத்து கல்லாகட்டுவது ஒருகாலத்தில் பிரபலம் இதனை சிங்கை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. ஒரு தடவை இப்படியான ரைடில் மாட்டிய சீன பெண் பதினெட்டுவயது வராத மைனர் என்பதை அவரது கடவுச்சீட்டை பரிசீலித்து கண்டு கொண்ட சிங்கை போலீஸ் அவரை பாலியல் தேவைக்கு பயன்படுத்திய அனைவரையும் வீடு புகுந்து தூக்கியது.வீட்டிற்கு நல்ல பையன்கள் உட்பட கிழ போல்ட்டுக்கள் பலர் மாட்டினர். அதாவது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டனர்
  33. Jack of all trades, master of none. (இது காலாகாலம் வழங்கி வந்தது) இப்போது Jack of all trades, master of none, but oftentimes better than master of one. (அந்த பழமொழியின் முடிவு பகுதியாக இருந்தது இதுவரை வழங்கப்படவில்லை என்பது செல்வோரின் விளக்கம்)
  34. ☹️............. சில கழுகுகளின் அளவையும், தோற்றத்தையும் பார்த்தால் பயமாகத்தான் இருக்கின்றது. இங்கு அவை அழிந்து வரும் உயிரினங்கள் என்ற வகையில் மிகவும் பேணிக் காக்கப்படுகின்றன. இப்பொழுது இந்தப் பக்கம் ஏராளமாக நிற்கின்றன.
  35. இருவருக்கும் ஏகாதிபத்திய கனவுகள் போல, நீங்கள் சொல்லியிருப்பது போலவே. மேலதிகமாக, அமெரிக்கா எவ் வழிகளில் என்றாலும் செல்வம் சேர்க்கும் ஒரு முயற்சியில் முன்னை விட தீவிரமாக இறங்கியிருக்கின்றது. ஒரு காலத்தில் இந்தியா இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, எங்களின் மேல் ஒரு தீர்வை திணித்தது. எங்களை, தமிழ் மக்களை, அந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு பக்கமாக ஏற்கவில்லை. மாறாக எங்களை பயமுறுத்தியது. இன்று இந்த அமெரிக்காவும் இதைத் தானே உக்ரேன் மக்களுக்கு செய்கின்றது................. எங்களுக்கு நாடு வேண்டும், சுதந்திரம் வேண்டும், உரிமை வேண்டும் என்று சொல்லும் எங்களால், இதை எப்படி கண்டும் காணாமல் போக முடியும் அல்லது அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஏற்கமுடியும்................. புடின் தப்பிவிட்டார். அமெரிக்காவும், ரஷ்யாவும் சேர்ந்து ஒரு நாட்டை, ஒரு இனத்தை அடிமைப்படுத்துவதை எப்படி நியாயப்படுத்த முடியும்.............. ஏற்கனவே நியூயோர்க் டைம்ஸில் ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவிற்கு கிடைக்கப் போகும் அனுகூலங்கள் எவை என்று ஒரு கட்டுரை வந்துவிட்டது. அதை நான் இன்னமும் வாசிக்கவில்லை. ஐரோப்பிய யூனியன் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டிய தருணம் இது. யுத்தமும், அழிவுகளும் நிற்கவேண்டும், அதில் மாற்றில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவனுக்கு ஒரு குரல் கூட இல்லையா............... உக்ரேன் இல்லாமல் ஒரு உக்ரேனின் தீர்விற்கான ஒரு பேச்சுவார்த்தையா.............🫣.
  36. விசுவாச அரசியல்வாதியின் அறிக்கை மயானம் என்றால் எழும்பு கூடு இருக்கத்தான் செய்யும்...தமிழ் தேசியவாதிகள் சிறிலங்கா தேசியத்தை சிதைக்க இப்படியான அறிக்கைகளை வெளியிடுகின்றனர் ... சிறிலங்கா தேசியவாதிகள் சுத்தமானவர்கள் ,கறை படியாதவர்கள் ,பூலோகில் வாழும் புத்தர்கள் ... மனிதர்களை புதைக்கும்பொழுது குரல் எழுப்பாமல் இப்ப வந்து ஏன் அரசியல் செய்கின்றனர் தமிழர்கள்?அரசாங்கத்துக்கு சொந்தமான காணிகளில் விரும்பிய செயலை செய்ய அரசுக்கு உரிமை உண்டு ...முள்ளிவாய்க்கால் படுகொலையை செய்து போட்டு பயங்கரவாதிகளை கொலை செய்தோம் என பகிரங்காமாக திரியும் எங்களுக்கு இந்த இரண்டு மூன்று எழும்புகூடுகள் ஒன்றும் பெரிய விடயம் அல்ல ...
  37. இவதான் 1948 இலேயே வெளியேறி விட்டாவே. கொஞ்சம் பொறுங்கோ… அது சுமந்திரந்தானாம் எண்டு ஒருவர் தமிழ்வின் இணைப்போடு வருவார்🤣 சில வேளை அஸ்மான் சரிப்தீனின் தங்கம் வைத்தியராய் இருக்க கூடும் 🤣
  38. சத்தியலிங்கம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் விரைவில் துறப்பார் என்று எதிர்பார்க்கலாம். அந்த இடத்துக்கு சுமத்திரன் நியமிக்கப்படுவார். அநேகமாக உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் யாழ்மாநகரசபை மேயர் பதவிக்கு சத்தியலிங்கம் போட்டியிடுவார்.தமிழ்மக்களை வெறும் மாங்காய் மடையர்களாக சுமத்திரன் எண்ணிச் செயற்படுகிறார். இனி சிறிதரனால் ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு சிறிதரனே காரணம். 2019 ஆம் ஆண்டு மாவைக்கு துரோகம்செய்து சுமத்திரனை தூக்கிப்பிடிச்சு அவர்பாலா அண்யையைப் போல ஒரு விண்ணன். என்று புகழந்து அவருக்கு தனது ஆதரவை வழங்கி அவரை வெல்ல வைத்தார். இல்லாவிட்டால் 2019 ஆம் ஆண்டே சுமத்திரன் தோற்றிருப்பார். தேர்தலில் வென்றவுடன் கட்சிக்குள் தனது ஆட்களை நியமித்து கட்சியைத் தனது பூரணகட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.கட்சித்தலமைக்குத் தெரியாமல் மாவைக்குத்கலையரசனை நியமிப்பதற்கும் சிறிதரன் துணை போனார். இப்பொழுது சிறிதரன் தனித்து விடப்பட்டிருக்கிறார். இனி சிறிதரனால் சட்ட ரீதியாக ஒன்றும் செய்ய முடியாது.அவர் அரகலய போராட்டம் போல் தமிழரசுக்கட்சியிலிருந்து விலகியவர்களையும் சேர்த்துக்கொண்டு தற்போதைய தலைமைகளுக்கு எதிராக தமிழ்க்களை ஒன்று திரட்டி ஒரு வெகுசனப் போராட்டம் செய்தால் ஒருவேளை பலனளிக்கலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான். சிறிதரன் தன்தலையிலே தானே மண் அள்ளிப் போட்டு விட்டார்..
  39. என்னது பாக்கிஸ்தான் தோல்வியா சொல்லவே இல்லை 😞
  40. நீங்கள் புள்ளி வைச்சாலே அண்ணை கோலம் போடுவார்!
  41. 🤣.......... இங்கேயும் இதே பிரச்சனை இருக்கின்றது, சுவி ஐயா. பாம்பு, மரநாய் மற்றும் சில சின்ன விலங்குகள் என்று பலதும் வந்து சேர்ந்துவிடும். மேலதிகமாக, இங்கு கழுகுகளும் அதிகம், சரியான பெரிய கழுகுகள், இரண்டு கழுகுகள் சேர்ந்தால் எங்களையே தூக்கிக் கொண்டு போய்விடும் போல.........🤣.
  42. போகிற போக்கை பார்த்தால் இன்றைக்கு பாபர் விசேட பிரியாணி இருக்கும் போல. பாபரும் துரத்தி அடிப்பதில் வல்லவர். இன்று பிடிகளை தவறவிட்ட பாகிஸ்தான் வீரர்கள், கிளென் பிலிப்சிடம் பாடம் படிக்க போகலாம். ரிஷ்வான் விலக்கி அடித்த அந்தப் பந்தை காற்றில் பறந்து பிடித்தாரே ஒரு பிடி. இந்தச் சுற்றுப்போட்டியின் சிறந்த பிடியாக அது அமையப் போகிறது.
  43. படம் அழகாய் உள்ளது ஓவியர். எனது உறவினர். நீண்டகாலம் பலவிதமான உடல் உபாதைகளுக்கு உள்ளாகி 78 வயதில் அமரர்துவம் அடைந்துள்ளார். அஞ்சலிகள்!
  44. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் நிகழ்வு! நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை) நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றதுள்ளது தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்குச் செல்வார்கள். அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூர் கந்தசுவாமிக்கு படையல் வைத்து பூசைகள் செய்வது வழக்கம். அவ்வாறே இம்முறையும் இடம்பெற்ற படையல் பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்கப்பட்டது. இவ்வழிபாட்டு முறை நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மரபுசார் பண்பாட்டு விழாவாக பேணப்பட்டு வருகிறதுடன் இப்புதிர் விழா 291ஆவது ஆண்டாக இவ்வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420606
  45. அல்வாயனையே கவி வாயனாக்கிய அந்த அழகுமங்கை யரோ??🏃🏽‍♀️
  46. அது ஒரு துன்பியல் சம்பவம்- அன்ரன் பாலசிங்கம்.. சரி வாங்கோ பழகலாம்..
  47. இந்த காணொளியில் சுமந்திரனை ஒரு கட்சி விரோதியாக கூறப்பட்டுள்ளது, அதற்காக கூறப்படுகின்ற காரணமாக கட்சியின் அடிப்படை கொளகையான தேசிய கொள்கையிலிருந்து வேறுபட்டுள்ளமையால் அந்த கொள்கை சார்ந்த (தமிழ் தேசிய ) அரசியல்வாதிகளை அகற்றுவதனால் கட்சி பலவீனமாகிறது என்பதாக பொருள்படுகிறது ( காணொளியினை சரியாக புரிந்து கொண்டேனா என தெரியவில்லை). இந்த தமிழ் தேசிய நீக்க அரசியல் என்பதன் மூலம் சுயாட்சி ( இரு அரச நிர்வாக மட்டத்தில் மத்திய அரசு மற்றும் பிராந்திய அரச மட்டத்தில் அதாவது மாகாணசபை ஊடாக) அதிக அதிகாரங்கள் கொண்ட காணி, காவல், நிதி மற்றும் சட்டத்தினை மத்திய மானில அரசுகள் தமக்கிடையே பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு அதிக அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க முடியும் என நம்புகிறார்) இனை பெற முடியும் என கூற முற்படுகிறார் என நினைக்கிறேன் (சுமந்திரன்). இது எந்தளவிற்கு நடைமுறை சாத்தியம் என தெரியவில்லை. அதற்கு விலையாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கிடைக்க வேண்டிய நியாத்தினை விட்டுக்கொடுப்பது, காணாமல் போன தமது உறவுகள் தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலவரம் மற்றும் இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட இனக்கொலையினை வெளிகொணராமல் இருப்பது என்பதனை விலையாக செலுத்துவதுடன், இதற்கு மேலே சென்று உரிமைக்காக போராடிய போராளிகளை பயங்கரவாதிகளாக்குவதன் மூலம் அதனால் இலங்கை அரசின் இனவழிப்பினை நியாப்படுத்த விழைகின்றாரா என கேள்வி எழுகிறது. ஆனால் திரு சுமந்திரன் கூறுவது போல அதிகாரங்களை பெறுவதற்காக இவற்றினை செய்வது என்பது மேலும் அதிகாரத்திற்கான சமரச முயற்சியில் ஒரு பலவீனமான நிலையினையே ஏற்படுத்தும் என கருதுகிறேன். உங்களது இறுதி பேரம் பேசும் விடயங்களாக உள்ளவற்றை கைவிடுவது, மற்றும் இனப்பிரச்சினை இல்லை என்பதான உருவமைப்பு எவ்வாறு தமிழர் உரிமைகளை வென்றெடுக்கும் பேரம் பேசும் ஆற்றலை அதிகரிக்கும்? உரிமையினை பெறுவதற்காக சுமந்திரன் பயன்படுத்தும் உத்தியாக தமிழ் தேசிய நீக்கம் மற்றும் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என இணக்க அரசியலை பயன்படுத்துகிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.