Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    38756
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87988
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19122
    Posts
  4. செவ்வியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    138
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/02/25 in Posts

  1. குழு நிலைப் போட்டிகளின் இறுதியான பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி கடினமான ஆடுதளத்தில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களை எடுத்திருந்தது. நியூஸிலாந்து பந்துவீச்சாளார் மாற் ஹென்றி 8 ஓவர்கள் பந்துவீசி 5 விக்கெட்டுகளை 42 ஓட்டங்கள் கொடுத்துச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, கேன் வில்லியம்ஸின் நிதானமான 81 ஓட்டங்களைத் தவிர பிறரின் ஒத்துழைப்புக் கிட்டாமையால் 45.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. வருண் சக்கரவர்த்தி பத்து ஓவர்கள் பந்து வீசி 42 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். முடிவு: இந்திய அணி 44 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் 20 பேருக்குத் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. நியூஸிலாந்து வெல்லும் எனக் கணித்த மற்றைய 04 பேருக்கும் புள்ளிகள் இல்லை. யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை:
  2. கூட்டிக் கழிக்க இன்னும் நேரம் கிடைக்கவில்லை! விரைவில் வரும்!
  3. நிச்சயம் கதறத்தான் வேண்டும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை மிக எளிதாக பேசும் இந்த வக்கிர மனிதனை தலைவனாக ஏற்றுக்கொண்டு கண்ணெதிரே தெரியும் உண்மைகளை மறுதலிக்கும் போக்கை கண்டு கதறத்தான் முடியும், வேறு என்ன செய்ய முடியும். இந்த குற்றத்தின் உண்மைத்தன்மை எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் இந்த இரு நாட்களாக அவர் பேசிய பேச்சுகளை ஏற்று கொள்கிறீர்களா? ஒரு மாண்பானவன் இந்த குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன், நீதிமன்றத்தில் என் தரப்பு நியாயங்களை தெரிவிப்பேன் என கூறியிருப்பான், ஆனால் இந்த அறமற்ற மனிதர் பெண்களின் பாலியல் குற்றங்களை கேவலமாக பேசிவிட்டு, புலிகள் பின்னால் ஒளிந்து கொள்கின்றார். இந்த சம்பவத்திருக்கும் இயக்கத்திற்கும் என்ன சம்பந்தம்?
  4. விக்னேஸ்வரன் மாகாணசபை முதல்வராக இருந்த போது… சுமந்திரன்… மாகாணசபையிலுள்ள தனது ஆட்கள் மூலம் குடைச்சல் கொடுத்து, அவரை நிர்வாகம் செய்ய விடாமல், கடைசியில் வடக்கு மாகாண சபையையும் கலைக்க வைத்து, விக்னேஸ்வரனை அரசியல் அனாதை ஆக்கியவர்தான் சுமந்திரன். இப்போ…. ஶ்ரீதரனுக்கு, மாகாணசபை முதல்வர் ஆசை காட்டி, அவரை பாராளுமன்ற பதவியில் இருந்து விலக வைத்து… சுமந்திரன் பாராளுமன்றம் போவதுடன், ஶ்ரீதரனின் அரசியல் வாழ்க்கையையும் முடிவிற்கு கொண்டுவர சுமந்திரன் செய்யும்… ஒரு கல்லில் இரு மாங்காய் வீழ்த்தும் சூழ்ச்சியே இது. ஶ்ரீதரனை… மக்கள், பாராளுமன்றதுக்குத்தான் தெரிவு செய்தார்களே ஒழிய மாகாணசபைக்கு அல்ல. வேண்டுமென்றால்…. ஒரு பதவியும் இல்லாமல் இருக்கும் சுமந்திரன், மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆணையை (?) பெற்று முதல்வராக வரட்டும். அதுதான் முறையான செயல். நெடுகவும் சபை குழப்பி மாதிரி… மற்றவர்கள் இருக்கும் பதவியில் கண் வைத்து குடைச்சல் கொடுப்பதை இனியாவது நிறுத்தி, நேர்மையான அரசியல் செய்வதுதான் மனிதருக்கு அழகு.
  5. தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்லவே காய் நகர்த்தியவர், இப்போ வேறொரு துருப்பு கிடைத்ததால் கதையை மாற்றுகிறார். சிறிதரனை முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட வைத்தால், தன்மேலுள்ள விமர்சனம் தடுக்கப்படும், ஏனைய கட்சிகள் தங்களோடு ஒன்றிணைவதில் தடையேதும் இருக்காது என நினைக்கிறார். தேர்தலுக்கு முன்பாக அவசர வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். தேர்தலில் தனித்து நின்று பின்னர் இணைவோம், கட்சி சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்றெல்லாம் பத்திரிகை அறிக்கை மூலம் சக கட்சிகளுக்கு தெரியப்படுத்தியவர், இப்போ மாறி அழைக்கிறார். பின் அவர்களை துரத்த மாட்டார் என்பது என்ன நிட்சயம்? சணம் வாதம், சணம் பித்தம் கொண்ட புத்தியுள்ளவர் இவர். "வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்." சலன புத்தியுள்ளோரின் சகவாசம் வேண்டாம். நான் தேடுவது கள உறவு சிறியரை! அடித்து துரத்திய நாகபாம்பு மீண்டும் படமெடுக்க துடிக்குது.
  6. தயவு செய்து ...சிறியர் எங்கிருந்தாலும் வரவு...(முக்கிய குறிப்பு....சிறிதரன் எம்.பி)
  7. அண்ணைமார் மைன்ட் வாய்ஸ்: இந்த திரி பற்றி எரிகிறது. சீமான் வளர்வதன் அறிகுறி இது 🤣
  8. பதினோராவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 38.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து179 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி, இலகுவான ஓட்ட இலக்கை 29.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 181 ஓட்டங்களை எடுத்து எட்டியது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் 14 பேருக்குத் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த மற்றைய 10 பேருக்கும் புள்ளிகள் இல்லை. யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை:
  9. ஊரில் இருந்த ஒரு வீட்டிற்கு இரண்டு பக்கங்களில் கோவில்கள் இருந்தன. பெரிய அரசமரங்கள் வீட்டின் முன் மூலை ஒன்றிலும், பின் மூலை ஒன்றிலும் நின்றன. ஒரு தடவை வந்த ஷெல் ஒன்று முன் மூலை அரசமரத்தில் பட்டு அரசமரம் சிதறியது. சன்னங்கள் சுற்றிவர பொழிந்தது. நாங்கள் எல்லோரும் தப்பினோம், அந்த அரசமரத்தை பலி கொடுத்து. இதையெல்லாம் கடந்து வந்தது, மூன்றாம் உலகப் போரில் அமெரிக்காவுடன் சேர்ந்து சிதற வேண்டும் என்பதற்காக போல...............🤣. அந்த நேரத்தில் கடைசி ஆசை என்னவென்று கேட்பார்கள் தானே............... சின்னச் சின்னதாக நிறையவே இருக்கின்றன.................🤣.
  10. பூனைகளின் பேச்சுவார்த்தை ----------------------------------------------- எவ்வளவு பெரிய பூனையாலும் எவ்வளவு சின்ன சுண்டெலியையும் அடித்துப் பறிக்க இயலாத ஒரு காலம் பூமியில் வந்திருந்தது அந்த ஒரு நாளில் ஒரு சுண்டெலியை சில பூனைகள் கூப்பிட்டன வரச் சொல்லி சமாதான காலம் தானே என்று கூட்டமும் சுற்றி நிற்கும் தானேயும் என்று துணிந்து உள்ளே வந்தது சுண்டெலி சுண்டெலியின் வீரம் தீரம் போற்றி ஆரம்பித்த பூனைகள் அடுத்ததாக அடித்துப் பறிக்க முடியாததை எழுதிப் பறிக்க ஆயத்தமாகின கேட்கிறதை கொடுக்கின்றேன் ஆனால் இன்னொரு அநியாயப் பூனை அது அங்கே என் வேலியில் எந்நேரமும் நிற்கின்றது அதை பதிலுக்கு தடுங்கள் என்றது பேச வந்த சுண்டெலி 'ராஜதந்திரமாக அணுக வேண்டும்.....' என்றது பெரிய பூனையின் உதவிப் பூனை கொஞ்சம் குனிந்த சுண்டெலி 'எந்த வகை ராஜதந்திரம்..........' என்று உதவிப் பூனையை மெதுவாகக் கேட்டது பூனைக் கூட்டம் துள்ளி விழுந்தன மின்சாரம் அடித்தது போல 'மியாவ் மியாவ்.......' என்று கத்தின நமக்கு இது அவமானம் என்று குறுகின நன்றி கெட்ட சுண்டெலி என்றன ஒரே ஒரு வார்த்தையால் அடிபட்ட பூனைகள் சுண்டெலிக்கு பொறி வைக்க வேலியில் நிற்கும் அந்தப் பூனையுடன் இனிப் பேசும்.
  11. குழு A போட்டியில் இறுதியாக வந்த அணி பாகிஸ்தான். வங்காளதேசமும் பாகிஸ்தானும் ஒரே ஒரு புள்ளி பெற்று இருக்கின்றன. ஆனால் Net run rate இல் பாகிஸ்தான் குறைவாக -1.087 இணை பெற்று இருக்கிறது
  12. 15 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  13. அருமையான ஆக்கம் @ரசோதரன் அண்ணை. எலிக்குப் பல பூனைகள் பல காலமாக பூனை எதிர்ப்பு ஆயுதங்களையும் மற்ற உதவிகளையும் கொடுத்து வருகின்றன என்பதையும் மறுக்க முடியாது.
  14. நாங்கள் யாழில் பிறேக்கிங் நியூஸ் என்று ஏதோ எல்லாம் ஒட்டி விளையாடுவது போல தான் அர்ச்சனாவும் அவ்வப்போது ஏதாவது புரளியை கிளப்பி விடுவது..யாராவது நினைக்கிறீர்களாக பார்ளிமன்டில் கெளசல்யா ஏதாவது ஒரு விடையத்தை தெளிவாக எடுத்துரைப்பார் என்று..செய்ய மாட்டா..அப்படி செய்யக் கூடியவராக இருந்தால் தனது வக்கீல் தொழிலயே நன்றாக செய்யலாம்..இரவா, பகலா இன்னுமொருவருக்கு பின்னால் அலைய வேண்டிய அவசியமே இல்லை.
  15. இது இன்றைய பத்திரிகை மற்றும் வீடியோ செய்தியாளர் என்ற போர்வையில் பெருகிவரும் இணையத்தள உலகால் வரும் சிக்கல். இதையே சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிலும் காண்கிறோம். இதை காயாள்வது மிக மிக கடினமானது. எனக்கு அனுபவ ரீதியாக இதில் சில உண்டு. அதனால் இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி. கருத்துக்களம் மற்றும் கருத்து பரிமாற்றம் என்பது இப்படி இருக்க வேண்டும் இருந்தால் நன்று.
  16. உங்களின் கோபம் எனக்கு முழுமையாக விளங்காவில்லை, கருத்தியல்ரீதயாக வேறுபாடு இருக்கலாம், நாம் வெவ்வேறு பாதையில் பயணிக்கலாம், அது அனைவரது உரிமை. ஆனால் அடிப்படை மனிதத்தன்மை என்பது பொதுவானது, நம் கொள்கைகளுக்கு என்ற தனி மனிததன்மை கிடையாது. பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை, அடக்குமுறை எவ்வித தயக்கமின்றி, வேறுபாடின்றி கண்டிக்கப்பட வேண்டும், அதை எக்காரணம் கொண்டு நியாயபடுத்த முடியாது. அதுவும் நம்மினம் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டு இன்னும் மீளாமல் இருக்கிறோம். நாம் இக்கொடுஞ்செயல் செய்கிறவன் நம்மொழி பேசுகிறான், நம் கொள்கையை தூக்கிபிடிக்கிறான் என்ற காரணத்திற்காக அவன் பின்னால் நின்றால் அது மனிததன்மையற்றது, நம் போராட்டத்தையும், அதன் நியாய குரலையும் நீர்த்து போக செய்வதேயாகும்.
  17. சிங்கன் எல்லா விசயத்திலையும் சாதனை படைக்க நினைக்கிறார் போல...🤣
  18. சந்திரிக்கா மீது ஒரு பாடல் வரி கொஞ்சம் விகல்பமாக இருந்தமைக்கே அதை மாற்ற சொல்லி ஓடர் போட்ட கண்ணியவான் தலைவர். தனது நடத்தையால் - பாலியல் அவதூறு சொல்ல கூட முடியாத இடத்தில் அவர் இருந்தார். ஆனால் பிள்ளைகளை வெளியே படிப்பிக்கிறார், அரண்மனையில் வாழ்கிறார், ஸுவிமிங் பூல் கட்டினார் என அவர் மீது சொல்லபட்ட அவதூறுகள் எதையும் அவர் தானோ, தான் சார்ந்தோரோ பதில் அவதூறால் எதிர்கொள்ளவில்லை. இது யாரின் ஸ்டைல் தெரியுமா? நீங்கள் வாக்கு சேகரித்த கருணாவின் ஸ்டைல் - அவர்தான் போகும் இடமெல்லாம் கிளை போடுபவர்🤣. பாலியல் ஒழுக்ககேட்டால் அமைப்பில் இருந்து துரத்தப்பட்டவர். அல்லது நீங்கள் ஆதரித்து எழுதிய பிள்ளையானின் ஸ்டைல் -அவர்தான் TRO சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்து கொலையும் செய்தவர்.
  19. நீங்கள் விசுகரிடம் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள். "பிரபாகரனை தலையில் வைத்திருக்கிறார்கள்" என்ற ஒரே காரணத்திற்காக விசுகர் இது வரை தடவிக் கொடுத்த அல்லது கண்டிக்காமல் மொள்ளக் கடந்து போன றௌடிகள், கள்ளர்கள், முடிச்சு மாறிகள் பலர் இருக்கிறார்கள். தற்போது சீமான், அவ்வளவு தான். ஒரு எடுகோளுக்காக: நாளை இனப்படுகொலையாளி கோத்தா ரீம் வந்து "பிரபாகரன் எங்களுக்கு வழி காட்டி தெரியுமா?" என்று ஒரு போடு போட்டால், விசுகர் கோத்தாவையும் தடவிக் கொடுக்க வழி தேடுவார்😂! No offense விசுகர்! இது உங்களுக்கே நான் பல முறை நேரடியாகச் சொன்னது தான்!
  20. அண்ணன் சீமான் விஜி அண்ணிக்கு தலைவர் ஸ்டைலில் பதில் கொடுத்திருக்கிறார்( அதாவது சிலருக்கு புரியும் மொழியில் பேசினால் தான் புரியும்), மூன்றாம் தர வசனகர்த்தா விஜயலக்ஷ்மிக்கு மூன்றாம் தரத்திற்கு இறங்கி விளாசுகிறார். மற்றபடிக்கு விசயலக்ஷ்மியின் இந்த நீலிக்கண்ணீரிட்க்கு யாழ்கள சீமான் எதிர்ப்பாளர்கள் இங்கே திரிகளில் மட்டும் நீதிவாங்கிக்கொடுக்கலாம்.
  21. இந்தியா 249/9 இந்தியா வெல்ல சாத்தியம் குறைவு. ஸ்பின்னர்கள் ஏதாவது அதிசயம் நிகழ்த்தினால் இந்தியா வெல்லலாம்!
  22. உண்மைதான்.வாழ்த்துகள் இந்தியா தோற்க வேண்டும்.
  23. சுமந்திரன்.... பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்று, வெளியே இருப்பது.... அவருக்கு தன்மான பிரச்சினை மட்டுமல்ல, அவமானமும் புடுங்கி... தின்பதால், தாங்க முடியாமல்... ஆரையாவது... தள்ளி விழுத்தி, பாராளுமன்றத்துக்குள் நுழைய நிற்கிறார். ஆனால்... எவரும், மசியிற மாதிரி தெரியவில்லை. 😂 அதுதான்... சுமந்திரனுக்கு பெரிய விசராய் இருக்கு. 🤣
  24. சத்தியமூர்த்தி விலகினால் ஒன்றும் கட்சி முழுகிப்போகாது, அவர் ஒரு வவ்வால். அவர் கட்சியில் இருந்து சுமந்திரனுக்கு ஏவல் வேலைதான் பார்ப்பார். ஆனால் சிறிதரன் இவரின் பேச்சுக்கு எடுபடுமளவுக்கு முட்டாளல்ல. ஏற்கெனவே மாவையரை தலைவர் பதவியிலிருந்து விரட்ட சிறிதரனை கையாளாக பாவித்தவர் சுமந்திரன். அதிலிருந்து பாடம் கற்றிருப்பார் சிறிதரன். அந்தப்பாவத்திற்குத்தான் இப்போ அனுபவிக்கிறார். இனி சுமந்திரனால் விரட்டப்படுவது சிவஞானம் அண்ட் சத்தியலிங்கம். வெறி பிடித்து அலைகிறார் என்றும் சொல்லலாம். அது நிறைவேறாவிடில் ஆளுக்கு விசர் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  25. சுமந்திரன்... சுத்துமாத்து செய்பவர் என்று எங்களுக்கே தெரியும் போது.. அவருடன் ஒன்றாக இருக்கும் ஸ்ரீதரனுக்கு தெரியாமல் இருக்குமா? அதுகும்... அண்மையில், இவர்கள் இந்தியாவுக்கு போகும் போது.. ஸ்ரீதரனுக்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்று, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு "பெட்டிசம்" போட்டதாக சுமந்திரன் மீது சந்தேகப் பார்வை உள்ளது என்று பத்திரிகைகளே அம்பலத்துக்கு கொண்டு வந்த பின்... சுமந்திரனை, ஸ்ரீதரன் நம்ப மாட்டார் என்றே நினைக்கின்றேன்.
  26. ஏற்கனவே செலென்ஸ்கி டொனால்ட் ரம்ப் அவர்களை சந்தித்து அடி வாங்காத குறையாக மூக்கேனப்பட்டு திரும்பி வந்தவர். இந்தமுறை என்ன தைரியத்திலை திருப்பியும் ரம்ப் அன்ட் கோ வை சந்திக்கப்போனார் எண்டு தெரியேல்லை? முந்தியே ரம்ப் ரஷ்ய ஆதரவாளர் எண்டு தெரிஞ்சும் போய் சாத்துப்படி வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்.அதை விட கொடுமை என்னெண்டால் பைடன் உக்ரேனுக்கு ஆயுதம் குடுக்கேக்க அமெரிக்கா தங்கப்பவுண் எண்டவர்கள் இப்ப தலைகீழாய் நிக்கினம்.🤣 அமெரிக்காவை யார் ஆட்சி செய்தாலும் ....அமெரிக்கா இல்லாமல் ஐரோப்பாவோ ஏனைய கண்டங்களோ தனித்து நின்று எதையும் செய்ய முடியாது. இதுதான் இன்றைய உலக யதார்த்தம்.அப்படி ஏதும் நடந்தால் அது உலக அதிசயம். பாவம் செலென்ஸ்கி மட்டுமல்ல நம்ம ஜேர்மனியும் தான்...😎
  27. கொகேயின் பாவனையாளர்கள் திருந்த வாய்புகள் அதிகம். வெளிநாடுகளில் வாழ்கின்ற ஈழதமிழ் சீமான் ஆதரவாளர்களின் உண்மை நிலை அது தான். சீமான் கத்திகொண்டு கேட்பாராம் கருணாநிதியின் மகனா ( ஸ்ராலின் ) அல்லது பிரபாகரனின் மகனா ( அது இவர் தானாம் ) பார்ப்போமா பார்ப்போமா உடனே ஈழதமிழர்கள் ஒரு டோஸ் ஏத்திய நிலைக்கு சென்றுவிடுவார்களாம் Island சொன்ன மாதிரி இவர் ஒரு போதுமே ஆட்சி அதிகாரத்துக்கு வரப்போவது இல்லை நஞ்சை விதைத்து பாதிப்பை ஏற்படுத்துகின்றார்.
  28. நாளைக்கு யார் வென்றாலும் முதல்வர் பதவியில் மாற்றம் இல்லை. மழையே, மழையே என் செய்ய நினைத்தாய் கோஷானை 🤣.
  29. என்ன பெரியண்ணன் கோவித்து கொண்டாரோ ?திடிரேன எழுத்து வடிவில் கேட்கினம் ...ஐந்து வருடத்திற்கு கடித போக்குவரத்திலயே காலம் கடத்தி பெரியண்ணையை பேய்கட்டலாம் என நினைக்கினம் போல ..
  30. தலைவர் பிறந்த மண்ணிலயே சிங்கள தேசியவாதிகளுக்கு ஆதரவாக மக்கள் நிற்கும் பொழுது நாங்கள் தமிழக தமிழ் தேசியவாதிகளை குறை சொல்ல முடியாது .. தமிழகத்தில் தமிழ் தேசியம் வளர்ந்தால் நல்லது ஆனால் அதையும் நம்மவர்கள் விரும்பவில்லை போல தெரிகின்றது... புலம்பெயர் தமிழ்தேசியவாதிகள்,தமிழக தேசிவாதிகள் சொல்வது செய்வது எல்லாம் பிழை....சிறிலங்கா சிங்கள தேசியவாதிகள் வடிக்கும் முதலை கண்ணீர் மட்டுமே சிறந்தது என நினைக்கும் மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்வார்கள்
  31. மனம் ஆடுது பாடுது . ......! 😍
  32. பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு (02 மார்ச்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND நான்கு பேர் மாத்திரம் நியூஸிலாந்து அணி வெல்லும் எனவும் மற்றைய 20 பேரும் இந்திய அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நியூஸிலாந்து ஈழப்பிரியன் ஏராளன் வசீ வாத்தியார் இந்தியா வீரப் பையன்26 சுவி அல்வாயன் தமிழ் சிறி நிலாமதி ரசோதரன் நுணாவிலான் நந்தன் செம்பாட்டான் குமாரசாமி நியாயம் வாதவூரான் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே நீர்வேலியான் கந்தப்பு பிரபா கிருபன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
  33. மோடி மாதிரி... "சிங், சக்" போட்டுக் கொண்டு இருக்கிறதுதான் நல்லது போல கிடக்கு.
  34. நாங்கள் இங்கு சீமானுக்காக அல்லது சீமானுக்கு எதிராக கருத்தாடுவதால் எந்த பிரயோசனமும் இல்லை. உண்மையில் நாம் சிந்திக்கவேண்டியது தமிழக மீனவர்களும், தாயக மீனவர்களும் மிகப்பெரும் எதிரியாக மாறிவிட்டார்களே... அதைப்பற்றித்தான் நாம் இப்போது கவலைப்படவேண்டும். ஒருகாலத்தில் தாயகம் தமிழகம் இறுக்கமான உறவை வைத்திருந்ததே இந்த மீனவர்களால்தான் இப்போது அத்திவாரமே தகர்க்கப்பட்டு சிதைவடைந்துள்ளது. இதனை எப்படி சுமூகநிலைக்கு கொண்டு வருவது என்று கலந்துரையாடுவதும் அதனைச் செயற்படுத்துவதுந்தான் காலத்தின் தேவை.
  35. உலகில் உள்ள அனைத்து இராணுவங்களின் மீதான பொதுவான குற்றச்சாட்டு பெண்கள் மீது நடத்தும் பாலியல் தாக்குதல்கள் பற்றியவை, அப்படி எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் ஆட்படாதது எனக்கு தெரிந்தவரை புலிகள் அமைப்பு மட்டுமே. ஆனால் இன்று இந்த பாலியல் குற்றவாளி சைக்கோ சைமனின் குற்றங்களை நியாயப்படுத்த, புலிசின்னத்தோடு அவரது ஐடிவிங் தலைவர் படம் வெளியிட்டுள்ளார். இனத்தை மீட்க போராடிய இயக்கத்தை இன்று பாலியல் பயங்கரவாதியை மீட்க பயன்படுத்த பார்க்கிறார்கள். அதற்கு இங்கு சில கோடாரி காம்புகள் தமிழ் தேசியம் என்ட பெயரில் ஆதரவு வேறு, பெரும் வெட்ககேடு.
  36. எனது சதிக்கோட்பாடு கொஞ்சம் கொஞ்சமாக சதி யை இழந்து, கோட்பாடு ஆகிறது🤣. It’s all part of Putin’s plan. செலன்ஸ்கி கொடுக்க முடியாததை டிரம்ப் கேட்பது, பின்னர் அமெரிக்காவுக்கு கூப்பிட்டு இப்படி சண்டை பிடிப்பது. அதை சாட்டி டிரம்ப் ரஸ்ய சார்பு நிலை எடுப்பது. இப்போ அமெரிக்காவில் டிரம்ப் ரஸ்ய சார்பு நிலை எடுக்க தேவையான political cover ஐ இந்த சந்திப்பு மூலம் ஏற்படுத்தி கொண்டார் டிரெம்ப். வான்ஸ் சண்டையை கிளப்பியது வேணும் எண்டேதான். டிரம்பும் வான்சும் சொல்லி வைத்து செய்தது அது (coordinated attack ).
  37. நான் பிபிசி யில் வந்திருந்த காணொளிகளை பார்த்தேன். உலகில் ஒரு நாட்டின் சனாதிபதியை இன்னொரு நாட்டின் சனாதிபதி இவ்வாறுஅவமதித்ததை காணவும் இல்லை, கேள்விப்படவும் இல்லை. தாம் மிக உயர்ந்தவர்கள் என்றும், தம் உதவியின்றி வாழ முடியாது என்றும் மமதையில் இருக்கும் ஒருவரின் திமிர்தனமான செயல்பாடுகள் தான் ரம்ப் செய்வது. உக்ரைனுக்கு இந்த சந்திப்புக்கு முன்னர் இருந்ததை விட, அன் நாட்டு மக்களினது மட்டுமல்ல, பல நாடுகளில் இருந்தும் தார்மீக ஆதரவு இதன் மூலம் கிடைக்க போகின்றது.
  38. இது வரை யாரும் கண்டிராத ஓவல் அலுவலக சந்திப்பாக இருந்தது😂. கமெராக்களுக்கு முன்னிலையில் வைத்தே செலன்ஸ்கியை அவமானப் படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த போது, இடையே புகுந்த (புண்ணாக்குப் பயல்!) ஜேடி வான்ஸ், செலன்ஸ்கியைப் பார்த்து "நீங்கள் ராசதந்திர வழிகளில் தீர்த்திருக்க வேண்டும்" என்றார். செலன்ஸ்கி அவருக்குக் கிட்டவாகக் குனிந்து "ஜேடி, என்ன வகையான ராசதந்திரத்தைச் சொல்கிறீர்கள்?" என்று கேட்கிறார். அது ஜேடி க்கும், ட்ரம்புக்கும் சுட்டு விட்டது. அடிப்படையில், ட்ரம்ப், ஜேடி வான்ஸ் போன்ற வலது சாரிகளின் ஒரு இயல்பு தங்கள் இமேஜ் பற்றிய ஒரு பாதுகாப்புணர்வின்மை - feeling insecure. உள்மனத்தில் இருக்கும் பாதுகாப்புணர்வின்மை தான் வெளியே பெண்கள், சிறு பான்மையினர், தங்களிடம் சார்ந்திருப்போர் நோக்கி அதட்டலாகவும், அதிகாரமாகவும் வெளிப்படுகிறது என நினைக்கிறேன். கனிம வள ஒப்பந்தம் கைச்சாத்தாகவில்லை, பத்திரிகையாளர் சந்திப்பும் ரத்து. ட்ரம்பின் கனிம வளச் சுரண்டலில் இருந்து தற்போதைக்குஉக்ரைன் தப்பி விட்டது . அடுத்து என்ன செய்யப் போகிறது எனப் பார்க்க வேண்டும்.
  39. பிரித்தானிய நேரப்படி நாளை சனி (01 மார்ச்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 14 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனவும் 10 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். தென்னாபிரிக்கா ஈழப்பிரியன் வீரப் பையன்26 நிலாமதி ரசோதரன் நுணாவிலான் குமாரசாமி நியாயம் வாதவூரான் எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே நீர்வேலியான் கந்தப்பு பிரபா இங்கிலாந்து ஏராளன் சுவி அல்வாயன் தமிழ் சிறி வசீ வாத்தியார் நந்தன் செம்பாட்டான் சுவைப்பிரியன் கிருபன் இந்தப் போட்டியில் புள்ளிகளை யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
  40. பத்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்குத் தாக்குப் பிடித்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி, ராவிஸ் ஹெட்டினது அதிரடியான ஆட்டத்தால் 12.5 ஓவர்களில் 109 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மழை வந்து தடைப்பட்டது. போட்டி மீண்டும் மீள ஆரம்பிக்கமுடியாமையால் அவுஸ்திரேலியா வெற்றியை எட்டமுடியவில்லை. முடிவு: முடிவில்லை! எனவே யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. @goshan_che யின் ஒருநாள் முதல்வர் ஆகும் கனவும் இன்று நிறைவேறவில்லை! யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை):
  41. சரி... வண்டியில ஏறுங்க, பேசிக்கிட்டே போவோம். 😂 🤣
  42. ஆப்கானிஸ்தான் அடித்த ரண்ஸ் காணாது! கோஷானுக்கு ஒரு நாள் முதல்வர் பதவி நிச்சயம்😁 @வீரப் பையன்26 ஐ இந்தப் பக்கம் காணவில்லை! ஐபில் வேறு தொடங்குகின்றது! இன்னொரு போட்டித்திரி திறக்க பையன் வந்து ஆதரவைத் தரவேண்டும்☺️
  43. என்ன செம்பாட்டான், இதுக்கே இவ்வளவு ஆச்சரியப்பட்டால்? நானெல்லாம் ஜெயசூரியா, களுவித்தாரன, டான் அனுராசிரி, ரஸ்ஸல் ஆர்னோல்ட், அவிஷ்கா குணவர்தானா, போன்றோருடன் எதிரணியில் கிரிக்கெட் விளையாடியே இருக்கிறேன். அதெல்லாம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்தபோது!!
  44. நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றாத ரசனை இளமை என்பது நித்திய காதல். இளமை என்பது அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன். தோழா உனக்கு எத்தனை வயசு? தோழி எனக்கு சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.