Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    38771
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87991
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    7054
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46798
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/03/25 in Posts

  1. அம்மா தாயே குஷ்பு! கொஞ்ச நாளாய் 24ம் இடத்திலையே அங்காலை இஞ்சாலை அரக்காமல் அரங்காமல் நிக்கிறவர் முற்பிறவியில என்னென்ன பாவங்களை செய்து தொலைச்சார் எண்டு சொல்லு தாயே...😎
  2. எனக்கு 2016 இல் ட்ரம்ப் ரீம் தந்த பாடம் தான் நான் சீமான் போன்றோரைத் துகிலுரியக் காரணம். அமெரிக்காவில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பெரிய காட்சிப் பலகைகளில் காட்டுவார்கள்: "If you see something, say something" "ஏதும் சந்தேகத்துக்கிடமாகக் கண்டால், உம்மென்றிருக்காமல் வாயைத் திறந்து சொல்லு" என்பது தான் தொனி. இதை அமெரிக்கர்கள் எல்லோரும், எல்லா சூழ்நிலைகளிலும் பின்பற்றியிருந்தால் இன்றைக்கு உலகம் தலைகீழாக மாறியிருக்காது! 2015 இலேயே வெட்டிப் போட்டிருக்க வேண்டிய விஷச் செடியை, சின்னச் சின்ன லாபங்கள், கோபங்களுக்காக சிலர் ஆதரிக்க, ஆதரிக்காதோர் மௌனமாக இருக்க, இன்று அந்த விஷச் செடியே உலகின் சக்தி மிக்க அரசைச் சுற்றி வளைத்திருக்கிறது. பாடம்? சிறிதோ, பெரிதோ - பிழையை, மொள்ளமாறித்தனத்தை சுட்டிக் காட்டவும், போட்டு மிதிக்கவும் வேண்டும்! நாம் மிதிப்பதால் உலகம் மாறிவிடுமா என்று தத்துவம் பேசிக் கொண்டிருக்காமல், அறரீதியில் சரியான பக்கம் நிற்கவும், பேசவும் வேண்டும்!
  3. என்னாலேயே நம்ப முடியவில்லை.இதுதான் முதல்தடவை இடைக்கால முதல்வராக வந்துள்ளேன்.இதுவரை காலமும் என் தெரிவுகளில் என் விருப்பத்துக்கு முன்னுரிமை கொடுத்து பின்வரிசை உறுப்பினராக இருந்தேன்.இம்முறை திறமை அடிப்படிடையில் யதார்த்தத்துக்கு முன்னுரிமைகொடுத்து தெரிவுகளைச்செய்திருந்தேன்.3 உறுப்பினர்களை வைத்திருந்த ஜேவிபி ஆட்சியைப் பிடித்த மாதிரி தேர்தலில் தோற்ற ரணில் ஜனாதிபதியாகிய மாதிரி ஒரு பீலிங்
  4. குழு நிலைப் போட்டிகளின் இறுதியான பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி கடினமான ஆடுதளத்தில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களை எடுத்திருந்தது. நியூஸிலாந்து பந்துவீச்சாளார் மாற் ஹென்றி 8 ஓவர்கள் பந்துவீசி 5 விக்கெட்டுகளை 42 ஓட்டங்கள் கொடுத்துச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, கேன் வில்லியம்ஸின் நிதானமான 81 ஓட்டங்களைத் தவிர பிறரின் ஒத்துழைப்புக் கிட்டாமையால் 45.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. வருண் சக்கரவர்த்தி பத்து ஓவர்கள் பந்து வீசி 42 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். முடிவு: இந்திய அணி 44 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் 20 பேருக்குத் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. நியூஸிலாந்து வெல்லும் எனக் கணித்த மற்றைய 04 பேருக்கும் புள்ளிகள் இல்லை. யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை:
  5. நான் ஒரு சாத்வீகியாகத்தான் இருந்தேன்............. என்னை சரியாக நான்கு தடவைகள் மைனஸ் துப்பாக்கியால் சுட்டார்கள்................... 'நீங்கள் என்ன கிழித்தீர்கள்........ மூடிக் கொண்டு போங்கள்.........' என்றார் இன்னொருவர். இந்த அளவு மரியாதை கூட யாழ் களத்தில் நேரடியாக ஒருமையில் எழுதினால் கூண்டுக்குள் அடைத்து விடுவார்கள் என்ற பயத்தினால் மட்டுமே கிடைத்தது.............. இப்படித்தான் என்னிடம் விசயம் இருக்கின்றது என்ற விசயம் எனக்கு தெரிய வந்தது............😜.
  6. உ்ங்களை தர்க்கத்தில் வெல்லும் நோக்கம் எனக்கில்லை அண்ணை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தகவல்களில் தவறு இருக்கலாம் என கருதியே கைத்துப்பாக்கி அனுமதி தொடர்பான விபரங்களை பகிர்ந்தேன். கைத்துப்பாக்கி அனுமதி உள்ள பாதுகாவலர்களுக்கு சம்பளம் அதிகமாம் என குறிப்பிடுகிறார்கள். சீமானுடைய பேச்சு, முன்னைய செயற்பாடுகளால் அவர் மீது உங்களுக்கு கடும் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது என எனக்கு புரிகிறது, ஆனால் எல்லோருக்கும் அந்த புரிதல் வருகையில் உங்கள் நிலைக்கு எல்லோரும் வருவார்கள். சில வேளைகளில் அவரை திட்டமிட்டு வீழ்த்த செய்கிறார்களோ என்ற எண்ணமும் வருகிறது. எல்லாவற்றையும் விட யாழ் இணையமும் இங்குள்ள ஒவ்வொருவரும் ஒற்றுமையோடு இருக்கவேண்டும். அதற்கு பாதகமாக எந்த ஒரு எழுத்தையும் எழுத விரும்பவில்லை. அளவுக்கு அதிகமாக சிதறிவிட்டோம்.
  7. யானையின் குடும்பம் ஒன்று, நித்திரை கொள்கின்றது.
  8. புலவர் எல்லோரையும் ஏப்பம்விட்டு, வந்துட்டாரையா முதல்வராக. மொத்தமாக 48 புள்ளிகளில் 39 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அவர் மட்டும்தான், இரு குழுக்களிலும் முதலாவது இரண்டாவது அணிகளைச் சரியாகக் கணித்தவர். இங்கிலாந்து இறுதியாக வரும் என்று கணித்தவர், பாகிஸ்தானுடன் கோட்டைவிட்டுவிட்டார் (அந்த ஒரு புள்ளிதான் அவருக்குக் கிடைக்கவில்லை). தரமான சம்பவம் புலவர். 🖖
  9. 18 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  10. 15 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  11. ஐந்து பெண்களுக்கு வாழ்க்கை( பராமரிப்பு ) கொடுத்து 14 குடிமக்களை உலகிற்கு தந்த மனிதரை பாராடட தானே வேண்டும். நம்ம நாட்டில் ஒருத்திக்கு வாழ்கை கொடுத்து 14 க்குமேல் பெற்றும் இருக்கிறார்கள் விண்ணர்கள். 😃
  12. கறுப்பன் குசும்பன்… இன்னொரு புது லுமாலா சைக்கிளுக்கு ரூட் போடுறான்🤣 Johnny English 🕵️‍♂️
  13. பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (04 மார்ச்) முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், இந்திய அணி (குழு A முதல் இடம்) எதிர் அவுஸ்திரேலியா அணி (குழு B இரண்டாவது இடம்) 17 பேர் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். மூவர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக்கணித்துள்ளனர். போட்டியில் இல்லாத வேறு அணிகளைக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் கிடையாது! நாளைய அரையிறுதிப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
  14. Arbitration வழி தீர்க்கும் படி சொல்லியிருக்கிறார்களா? இந்தக் கட்டளையின் எழுத்து வடிவத்தை தேடிப் பார்த்தேன், காணவில்லை! ட்ரம்பிற்கும் சீமானுக்கும் பல ஒற்றுமைகள். அவற்றுள் ஒன்று இவ்வாறு வழக்குகளை இழுத்து, தாமதமாக்கி சகல சந்து பொந்துகளுக்குள்ளாலும் பூந்து ஓடி, ஒழிந்து கொள்வது. இனி அமித்ஷாவின் அண்டர் வேயாருக்குள் இருந்து அடிக்கடி வெளியே வந்து "மானத்திற்காக இறந்தவர்களின் மகன் நான்" என்று வாய் வேட்டு விடுவார் என நினைக்கிறேன், ஆள் மானஸ்தன்😎!
  15. இளங்காத்து வீசுதே இசைஞானி இப்பாடலில் செய்த நுணுக்கங்களை மேற்படி கலைஞர் விளக்குகிறார்.
  16. ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்பு என்பது அவரவர் சொந்த விருப்பம். அதற்கு நீங்கள் இப்படி கதை கதையாக எழுதுவது உங்கள் அனுமானங்கள். அங்கே நிறுவினேன் இங்கே நிறுவினேன் என்பதெல்லாம் உங்கள் சொந்தக்கருத்துகள். எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இணைக்கப்படுவதில்லை எல்லோரும் அதை நம்பத்தான் வேண்டுமென்பது கொஞ்சம் அதிமேதாவித்தனம் என்பது எனது கருத்து!
  17. விதி வலியது.🤣 நான் தனியாள் இல்லை.🤣 கப்பல் மூழ்கும் போது தலைமை மாலுமி மற்றவர்களை அனுப்பிவிட்டு கடைசியாக கப்பலுடன் மூழ்குவாராம், இங்கு தலை அவர்தான் என நிரூபிக்கின்றார்.
  18. அப்படியே ....? அப்போ நாடு நாடாக போய் புலிகள் மீது விமர்சனம் மட்டும் வைத்த லக்ஷ்மன் கதிர்காமரை எதற்கு தலைவர் போட்டுத்தள்ளினார் ...? நானறிந்தவரை கதிர்காமர் எந்த முன்னரங்கிலும் நின்று தமிழர்களுடன் அடிபட்டதாக கேள்விப்படவில்லை. திரியை விட்டு விலகாமல் இருக்க நான் சொல்லவருவது என்னவென்றால் தர லோக்கல் பார்ட்டிக்கு தர லோக்கல் அளவுக்கு இறங்கி சீமான் வெளுப்பதில் எமக்கு பேரானந்தம். மற்றபடிக்கு இந்த கர்மா, மட்டன் குருமா எல்லாம் ஆண்களுக்கு மட்டும் இல்லை பெண்களுக்கும் உண்டு. தனி மனித ஒழுக்கம் என்பதும் ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. விஜயலக்ஸ்மிக்கு அண்ணன் சீமானை அடையவேண்டுமென்பதல்ல நோக்கம் அவருக்கு இந்த விடயத்தை வைத்து எல்லா பக்கமும் கறக்கவேண்டும் என்பது எப்போதோ வெளிவந்துவிட்ட உண்மை. இதிலும் அண்ணன் சீமான் விஜயலஷ்மியுடன் நிறுத்தியிருக்கிறார் விஜயலஷ்மியை போல் விஜயலட்சுமியின் அக்காவையும் இழுத்து தர லோக்கலுக்கு சாத்தியிருந்தால் விஜயலட்சுமியிற்கு குடும்பஉறவுகளையும் இழுத்து தரக்குறைவாக பேசினால் வலி எப்படியிருக்கும் என்று புரிந்திருக்கும்.
  19. @புலவர் என்னையா புலவர் இப்படி பண்ணீட்டீங்களே. வாழ்த்துக்கள். உங்களாலேயே நம்ப முடியலை இல்ல. தம்பீ @கிருபன் எல்லோரும் கைவிட்டுட்டாங்களா?
  20. பிசிறில்லாத லாண்டிங் .......! 😂
  21. ஏன் வீணா காசிப்புக்கு செலவு செய்யுறியள் ..?
  22. பூனைகளின் பேச்சுவார்த்தை ----------------------------------------------- எவ்வளவு பெரிய பூனையாலும் எவ்வளவு சின்ன சுண்டெலியையும் அடித்துப் பறிக்க இயலாத ஒரு காலம் பூமியில் வந்திருந்தது அந்த ஒரு நாளில் ஒரு சுண்டெலியை சில பூனைகள் கூப்பிட்டன வரச் சொல்லி சமாதான காலம் தானே என்று கூட்டமும் சுற்றி நிற்கும் தானேயும் என்று துணிந்து உள்ளே வந்தது சுண்டெலி சுண்டெலியின் வீரம் தீரம் போற்றி ஆரம்பித்த பூனைகள் அடுத்ததாக அடித்துப் பறிக்க முடியாததை எழுதிப் பறிக்க ஆயத்தமாகின கேட்கிறதை கொடுக்கின்றேன் ஆனால் இன்னொரு அநியாயப் பூனை அது அங்கே என் வேலியில் எந்நேரமும் நிற்கின்றது அதை பதிலுக்கு தடுங்கள் என்றது பேச வந்த சுண்டெலி 'ராஜதந்திரமாக அணுக வேண்டும்.....' என்றது பெரிய பூனையின் உதவிப் பூனை கொஞ்சம் குனிந்த சுண்டெலி 'எந்த வகை ராஜதந்திரம்..........' என்று உதவிப் பூனையை மெதுவாகக் கேட்டது பூனைக் கூட்டம் துள்ளி விழுந்தன மின்சாரம் அடித்தது போல 'மியாவ் மியாவ்.......' என்று கத்தின நமக்கு இது அவமானம் என்று குறுகின நன்றி கெட்ட சுண்டெலி என்றன ஒரே ஒரு வார்த்தையால் அடிபட்ட பூனைகள் சுண்டெலிக்கு பொறி வைக்க வேலியில் நிற்கும் அந்தப் பூனையுடன் இனிப் பேசும்.
  23. 1. நீதிமன்ற அழைப்பாணை (Court Summons): • ஒரு நபரை நீதிமன்றத்தில் ஆஜராக அழைக்க நீதிமன்றம் வழங்கும் உத்தரவு. • இது குற்றவியல் வழக்குகளிலும், சிவில் வழக்குகளிலும் வழங்கலாம். 2. போலீஸ் அழைப்பாணை (Police Notice): • CrPC (Criminal Procedure Code) 41A, 160 ஆகிய பிரிவுகளின்படி, போலீஸ் விசாரணைக்கு தேவையான நபர்களுக்கு அழைப்புநோட்டீஸ் (Notice) அனுப்பலாம். • இது நீதிமன்ற ஆணை அல்ல, ஆனால் காவல் நிலைய விசாரணைக்காக அழைக்கும் நோட்டீஸ் ஆகும். முக்கிய வித்தியாசம்: • Summons என்பது நீதிமன்றத்தால் வழங்கப்படும் உத்தரவு. • Police Notice என்பது விசாரணைக்காக போலீசாரால் வழங்கப்படும் அழைப்பே, ஆனால் இது சட்டப்படி கட்டாயமாக ஆஜராக வேண்டிய உத்தரவு அல்ல.. இதில் சீமானுக்கு வழங்கப்பட்டது இரண்டாவது.. கோர்ட் ஓடர் அல்ல..
  24. இந்த விடயத்தில், உயர்நீதிமன்றத்தின் ஏனைய இரு நீதிபதிகள் சொல்வதையும் பாருங்கள்: The HinduJustice G.R. Swaminathan passed orders ‘hastily’ in Savuk...Justice G. Jayachandran of the Madras High Court has said that Justice G.R. Swaminathan has exhibited bias against the State police by “showing interest in passing orders hastily without consulting... “Rarely such [a] thing happens to a judge while discharging the duty. Even if such event happens, past history of this court says, judges used to report it to the Chief Justice and/or take action for interfering in the administration of justice and/or recuse from hearing the case. From the words of the learned judge, he being triggered by approach of two emissaries, has been forced to bypass the normal course.” "இந்த அசாதரணமான, அரிதான தலையீட்டை , தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பது தான் முறையாக இருக்கிறது" தற்போது சீமான் மீது உயர் நீதிமன்றம் வழங்கிய "உரிய முறையில் விசாரித்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள்" என்ற ஆணை, எப்படி சீமானுக்கு எதிரான ஒரு ஆணை என்று விளக்குங்கள்? மைனஸ் துப்பாக்கியெல்லாம் ஜுஜுபி சாரே😂! உங்கள் பச்சை பலன்சைக் கூடப் பாதிக்காது! ஆனால், உங்களிடம் நிஜமாக மரியாதை வைத்திருக்கிறார்கள். கூண்டெல்லாம் பஞ்சு மெத்தை துணிந்தவர்களுக்கு! யாழில் அடிக்கடி எனக்குக் கிடைக்கிற "மரியாதையை" 😎 வைத்துச் சொல்கிறேன்!
  25. யாருக்காவது நீதி வாங்கிக்கொடுக்க வேண்டும் என்றே சீமான் வீட்டு வாசலில் பாயப்போட்டு படுத்திருக்கிறார்கள்... யாரும் சிக்கவில்லை என்றால் அந்த தெருவால் போகும் பால் பக்கட் போடுபவர், காய்கறி வண்டி தள்ளுபவர், பேப்பர் போடுபவர் என்று இப்படி யாரையாவது பிடித்து வந்து நீதி வாங்கி கொடுப்பார்கள்..🤣🤣
  26. 👆 "சீமான் என்ற தமிழக அரசியல்வாதியையும், நா.த.க என்ற தமிழகக் கட்சியையும் கண்டித்தால், கண்டிக்கும் சக கள உறவின் குடும்பத்தை நக்கலடிப்போம்" என்று மிரட்டும் சீமான் தம்பிகளுக்கு இந்தக் கருத்து சிறந்த உதாரணம். "களவிதிகள் பேணல், ஒற்றுமை சிதறுதே!" என்று மூக்குச் சிந்தும் @விசுகு போன்றோரும் கடந்து செல்ல😎 வேண்டிய கருத்துக்கள் இவை! பி.கு: பையனுக்கு சொல்ல எதுவும் இல்லைப் போல, வெறும் "லைக்" தான்!
  27. இதில் மட்டுமல்ல இன்னும்பல இடங்களில் நான் அவதானித்திருக்கிறேன்.. சீமானுக்கெதிரான ஒருசார்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.. பெரியமனம் பண்ணி சீமான் திரிகளில் நம்மள கருத்தெழுத விட்டதே பெரியகாரியம்..🤣 நன்றி நிர்வாகம்..🙏
  28. ஏன் அதை உங்கள் வீட்டிலேயே தொடங்கலாமே!! அப்படி இல்லாவிட்டால் ஈவேராவின் திராவிட கழக வெப் சைட்டில் தொடங்கலாமே!!
  29. ஆதாரம் கட்டி பிரள்வதல்ல - நீங்கள் அருணாவை நம்புகிறேன் என எழுதியது. அருணா சொன்னது என்ன? போலிக்காதான் துவாரகா என. நீங்கள் அதை வஞ்சகம் இல்லாமல் நம்பியதை நான் அப்போதே குறிப்பிட்டேன். அதன்பால் உங்கள் மீது கல்லெறிந்த போது மனம் வருந்தியதையும் எழுதினேன். இப்போதும் அதைத்தான் சொல்கிறேன். போலிகா விடயம் போலவே சீமான் விடயத்திலும், உங்கள் வஞ்சகமில்லாத நம்பிக்கை, மிக ஆபத்தானது.
  30. வெளிநாடு என்ற உடன கேட்பது கிடைக்கும் என எண்ணியிருக்கலாம். உதவி கேட்கும்போது எவ்வளவு காலத்திற்கு என்பதும் என்ன மாதிரியான உதவி எனவும் அறிந்து செய்யவேண்டும் அண்ணை. கல்வி கற்பதற்கான(சூம்) ஸ்மார்ட் போன்கள் 50-60 ஆயிரம் ரூபாவுக்குள் வாங்கலாம், ஆனால் ஐபோன் புதிது புதிய மொடல் எனில் அவர்கள் உழைத்துத் தான் வாங்கவேண்டும் என கறாராக சொல்லவேணும்.
  31. அப் பெண் இவ்வளவு காலமாக சீமானை --- மவனே,------ க்கு பொறந்தவனே என வெளிப்படையாக திட்டும் போது பெண் உரிமைவாதிகளுக்கு வராத கோபம் இன்று சீமானின் வார்த்தை பிரயோகத்திற்கு வருகின்றது என்றால்....? அது அரசியல் சம்பந்தப்பட்டதால் எழுத வேண்டி வந்துவிட்டது. ஆனால் இதே விஜலட்சுமிதான் ஈழதமிழர்களை பயங்கரவாதிகள் என வெளிப்படையாக கூறியவர். எனவே அவர் தன் தனிப்பட்ட வெறுப்புகளுக்காக ஒரு இனத்தின் மீது வன்மத்தை கொட்டியவர்.
  32. குல்டிப்பா ,வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தியா , சிற‌ந்த‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் குல்டிப்புக்கு கொடுத்த‌ வாய்ப்பை வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்திக்கு கொடுத்து இருந்தால் இந்த‌ தொட‌ரில் அதிக‌ விக்கேட் எடுத்த‌ வீர‌ர்க‌ள் ப‌ட்டிய‌லில் முத‌ல் இட‌த்தை பிடித்து இருப்பார்...............நேற்று வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை ப‌ந்து போட்ட‌வ‌ர் ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை ப‌ந்து போடுவ‌து மிக‌ சிர‌ம‌ம் என்று ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு ந‌ங்கு தெரியும் , அப்ப‌டி இருந்தும் ப‌ந்தை இந்திய‌ க‌ப்ட‌ன் வ‌ருன் ச‌க்க‌ர‌வ்த்தியிட‌ம் கொடுக்க‌ சிறு த‌ய‌க்க‌மும் இல்லாம‌ ப‌ந்தை போட்ட‌வ‌ர் கில்டிப் ப‌வ‌ர் பிலே ஓவ‌ர் முடிந்தாப் பிற‌க்கு தான் போட‌ வ‌ருவார் ஹா ஹா மூன்று மைச் விளையாடி கில்டிப் எடுத்த‌ விக்கேட் 4 , ஒரு மைச் விளையாடி வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி எடுத்த‌ விக்கேட் 5💪❤️.........................
  33. புலவருக்கு வாழ்த்துக்கள்! இந்தியாவிற்கு ICC பல சலுகைகளை வழங்கியிருக்கிறது. ஒரே மைதானத்தில் எல்லா மட்சும் விளையாடுவது இதனால் பயணக்களை இல்லை!
  34. எனக்கும் நீன்ட நாளாக அவுஸினை பிடிப்பதில்லை அதற்கு காரணம் அவர்களின் மோசமான நடவடிக்கைகள், ஆனால் தற்போது அந்த இடத்தினை இந்தியா தட்டி பிடித்துவிட்டதால் அவுஸில் இருந்த கடுப்பு இப்போது இல்லை.
  35. தாராளாமாக, முன்னால் போங்கள் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.🤣
  36. இந்த இந்தியணியினை அவுஸ்ரேலியா எப்படி எதிர்கொள்ள போகிறது என தெரியவில்லை, நேற்றைய போட்டியில் வருணின் பந்தினை கணிக்க முடியாமல் நியுசிலாந்து திணறியது, வருண் கரம் போல், லெக் ஸ்பின், ஓப் ஸ்பின், சிலைடர் போன்ற வித்தியாசங்களில் பந்து வீசுகிறார் என் கருதுகிறேன், பந்தினை கணிக்க முடியாவிட்டால் பின் காலில் சென்று விளையாடுவது ஒரு தெரிவாக இருக்கும் ஆனால் வருணின் பந்து வேகமாக வருவது கூட மட்டையாளர்களை குழப்புகின்றது, விலியம்சன் சிறப்பாக வருனை எதிர்கொண்டார் ஆனாலும் பன்ட்கை தவறாக கணித்தால் அதனை ஈடுசெய்யும் வகையில் தனது கால்களை நகர்த்தி விளையாடியமை வில்லியம்சன் கூட வருனை எதிர்கொள்ள சிரமபட்டதனை காட்டுகிறது. மிஸ்ரி ஸ்பின்னர்கள் பலர் இதற்கு முன்னர் இருந்துள்ளார்கள் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் அவர்களில் ஒருவர், ஒரு கால கட்டத்தின் பின்னர் துடுப்பாட்ட வீரர்கள் இவர்களின் வேறுபாட்டினை கண்டுனர்ந்தபின் அவர்களின் பந்து வீச்சு சோபை இழந்து விடும் இது ஒரு பாதகம்.
  37. 23 பேர் இருந்தும் ஒருத்தர் கூட கிருபனுக்கு உதவி செய்யலையே. எத்தனை நாளாக இத்தனை பேரையும் தாங்குவது?
  38. வாழ்த்துகள் புலவர். 48 புள்ளிகளில் 39 இணை பெற்றது சாதனைதான். மிகுதி 9 புள்ளிகளில் 6 புள்ளிகள் மழையினால் தடைபெற்ற ஆட்டங்களினால் புலவருக்கு கிடைக்கவில்லை. இதில் பாகிஸ்தான் வங்காளதேசப்போட்டி நடைபெற்று இருந்தால் புலவருக்கு மேலும் ஒரு புள்ளியும் கிடைத்திருக்கும்.
  39. டெய்லி என்ன சாப்பிடுறார் எண்டதை ஒருக்கால் விசாரிக்க வேணும் 😂
  40. மீண்டும் நினைவுபடுத்துகிறேன். பாலியல் தொழிலாளியே ஆனாலும் அவர்களுக்கும் சட்ட பாதுகாப்பு உள்ளது. ஒரு பாலியல் தொழிலாளியிடம் காசு கொடுத்து சேவையை பெற வேண்டும். இல்லாமல் நான் உன்னை கட்டி கொள்கிறேன் என ஏமாற்றி சேவையை மட்டும் பெற்றதோடு நில்லாமல் அவரின் பணத்தில் சாப்பிட்டும் இருந்தால் - அது குற்றமே. பிகு இது என் அப்பம்மா எனக்கு சொன்னது. நானும் பலருக்கு யாழுக்கு வெளியே சொல்வது. ஒரு பெண்ணின் உள்வீட்டு விடயங்கள் பற்றி நாம் கண்ணால் கண்டால் ஒழிய - கதைக்ககூடாது. நமக்கு பெண்பிள்ளைகள் இல்லாது கூட இருக்கலாம், ஆனால் நாளை மருமக்கள் வருவார்கள், பேரப்பிள்ளைகள் வருவார்கள். #பழிப்பு படலையில் ஏதோ சொல்ல வேண்டும் போல் இருந்தது.
  41. கடைசியில்…. இட்லியையும், பிளாஸ்ரிக் தாளில் அவித்து நோயை உருவாக்குகின்றார்கள். துணி மலிவான பொருளாகவும் எல்லா இடமும் கிடைக்கக் கூடிய பொருளாக இருந்தும்…. ஏன் பிளாஸ்ரிக் மோகம் என்று தெரியவில்லை. நம்மவர்கள்…. இடியப்பத்தை, பிளாஸ்ரிக் இடியப்பத்தட்டில் அவிப்பதை பரவலாக காண முடிகின்றது. அவதானம் தேவை.
  42. நாங்கள் யாழில் பிறேக்கிங் நியூஸ் என்று ஏதோ எல்லாம் ஒட்டி விளையாடுவது போல தான் அர்ச்சனாவும் அவ்வப்போது ஏதாவது புரளியை கிளப்பி விடுவது..யாராவது நினைக்கிறீர்களாக பார்ளிமன்டில் கெளசல்யா ஏதாவது ஒரு விடையத்தை தெளிவாக எடுத்துரைப்பார் என்று..செய்ய மாட்டா..அப்படி செய்யக் கூடியவராக இருந்தால் தனது வக்கீல் தொழிலயே நன்றாக செய்யலாம்..இரவா, பகலா இன்னுமொருவருக்கு பின்னால் அலைய வேண்டிய அவசியமே இல்லை.
  43. அண்ணன் சீமான் விஜி அண்ணிக்கு தலைவர் ஸ்டைலில் பதில் கொடுத்திருக்கிறார்( அதாவது சிலருக்கு புரியும் மொழியில் பேசினால் தான் புரியும்), மூன்றாம் தர வசனகர்த்தா விஜயலக்ஷ்மிக்கு மூன்றாம் தரத்திற்கு இறங்கி விளாசுகிறார். மற்றபடிக்கு விசயலக்ஷ்மியின் இந்த நீலிக்கண்ணீரிட்க்கு யாழ்கள சீமான் எதிர்ப்பாளர்கள் இங்கே திரிகளில் மட்டும் நீதிவாங்கிக்கொடுக்கலாம்.
  44. அமெரிக்க மக்களையும் அமெரிகாவினையும் ஜெலென்ஸ்கி அந்த வெள்ளை மாளிகை சந்திப்பில் அவமானப்படுத்திவிட்டதாக கூறுகிறார்கள், எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை யாருக்காவது தெரிந்தால் கூறவும். ஆனால் கடவுள் புண்ணியத்தில் அமெரிக்காவிற்கிடையே கடல் உள்ளதால் தப்பி விட்டீர்கள் என சந்தடி சாக்கில் ஒரு நக்கல் அடிப்பார் அது ஒரு வேற லெவல், அது அமெரிக்க இராணுவத்தினரை அவமதித்தாக இருக்கலாம், ஆனால் அமெரிக்க மக்களையும் அமெரிக்காவினையும் அவமதித்ததாகத்தெரியவில்லை.
  45. மோடி மாதிரி... "சிங், சக்" போட்டுக் கொண்டு இருக்கிறதுதான் நல்லது போல கிடக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.