Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87988
    Posts
  2. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    1836
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    3054
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20012
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/14/25 in all areas

  1. யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் மலையகத் தமிழர்களை “கப்பலில் வந்தவர்கள்” எனவும், வடக்கு முஸ்லிம்களை “இவங்கள விரட்டினது தவறு; இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும்” எனவும் கூறியுள்ளார்...(இதைவிட நிறைய இனவாதத்தை அவர் வீடியோக்களில் கக்கி உள்ளார்.. அவர் முகநூலில் இன்றும் உள்ளன..) இவ்வாறான கருத்துக்கள் சமூகத்தில் இனவாதத்தை ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது... மலையக தமிழர்கள் மற்றும் வடக்கு முஸ்லிம்கள் பற்றிய மேற்சொன்ன கருத்துக்கள் கடைந்தெடுக்கப்பட்ட இனவாதம்... அருவருப்பான வார்த்தைகள்... தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதத்தை உண்டாக்கும் காரியம்... மலையகத்தமிழர்களை வடகிழக்கு தமிழர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயோக்கியத்தனம் மற்றும் முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுக் காயத்தை மீண்டும் கிண்டி சுயஇன்பம் தேடும் சைக்கோத்தனம்… பாதிக்கப்பட்ட ஒரு இனம் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற ஒரு அசட்டு உற்சாகம் பைத்தியக்காரத்தனமானது... இது தனிப்பட்ட ஒருவருடைய கருத்து என்று கடந்து போக முடியாது, மாறாக, விரும்பியோ விரும்பாமலோ யாழ்ப்பாணத் தமிழர்களை பாராளுமன்றத்தில் பிரிதிநிதிப்படுத்துகிற ஒரு பைத்தியக்காற பாராளுமன்ற உறுப்பினருடைய வார்த்தைகள் இவை… அர்ச்சுனாவின் இக்கருத்துக்கள் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது... பலர் இவரது கருத்துக்களை இனவாத பிதற்றல்கள் எனக் கண்டித்து வருகின்றனர்... இது தமிழர் சமூகத்துக்குள் இனவாத எண்ணங்களை வெளிப்படுத்துவதோடு, முஸ்லிம் மலையக தமிழ் சமூகத்துடன் உள்ள உறவுகளை பாதிக்கும் அபாயமும் உள்ளது… சிங்களவர்களையோ, இஸ்லாமியர்களையோ ‘இனவாதிகள்’ என்று நாம் கூறும் போது ‘நாம் ஒருபோதும் இனவாதிகளாக இருந்ததில்லையா?’ என்கிற ஒரு கேள்வியை நம்மிடம் கேட்டுப்பார்க்கவேண்டும்… இனவாத கருத்துக்களை எதிர்கொள்ளும் போது, அவற்றை கண்டித்து, சமூகத்தில் நல்லிணக்கத்தை பேணுவது முக்கியம்... அர்ச்சுனாவின் கருத்துக்கள் இதற்கு புறம்பாக உள்ளதால, அவற்றை பொதுவெளியில் கண்டிப்பது சமூகத்தின் அறச்செயலாகும்… இவ்வாறான வெறுப்புக்கருத்துக்கள் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடியவை... அவை இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளை பாதிக்கக்கூடும்... எனவே, சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை பேண, இவ்வாறான கருத்துக்களை கண்டிப்பது அவசியம்... இப்படிப்பட்ட அயோக்கியர்களின்,படித்த முட்டாள்களின் இனவாத பிதற்றல்களை கண்டும் காணாமலும் இருப்பது ஆபத்தானது... காரணம் மக்கள் இதை ஏற்றுக்கொண்டார்கள் என்கிற ஒரு முட்டாள்தனமான முடிவுக்கு இப்படி வாந்தி எடுத்து வைப்பவர்கள் வந்துவிடுவார்கள்... வந்துவிடுகிறார்கள்... ஆதலால், குறைந்தபட்சம் இவற்றைப் பொதுவெளியில் கண்டிப்பது ஒரு அறம் கொண்ட சமூகமாக முக்கியமானது... இந்த பைத்தியக்காறனுக்கு எல்லாம் ஒரு காலத்தில் பாராளுமன்றம் போக ஆதரவாக எழுதினேன் என்பதை நினைத்து வெட்கமும் வேதனையும் அடைகிறேன்.. இந்த கடைந்தெடுத்த அயோக்கியனுக்கு யாழ் இணைய சமூகமும் தன் கண்டனங்களை தெரிவிக்கவேண்டும்.. —-—
  2. பார்த்தீனியம் ---------------------- கள்ளியும் முள்ளும் இருந்த வறண்ட நிலத்தில் பச்சையாக ஒன்று புதிதாக வந்தது பார்க்க அழகாகவும் படபடவென்று வளருதே என்றும் இன்னும் வளர்த்தனர் அதில் இருக்கும் முட்கள் அவை என்ன முட்கள் அவை வளர வளர போய்விடும் என்றனர் அதை வளர்த்தவர்கள் கெட்ட வாடை வருகுதே என்றால் ஆனால் பசுமையாக இருக்குதே இது நிலத்தை காக்கும் ஆடு மாட்டைக் காக்கும் இப்படி ஒன்று முன்னர் இருந்ததேயில்லை என்றனர் நாங்கள் மூக்குகளை பொத்தி விட்டால் அதன் வாடை அண்டாது என்றும் சொன்னவர்கள் வாய்களை அடைத்தனர் கள்ளியும் முள்ளும் காணாமல் போனது பச்சை செடியின் சாதனை ஆனது பரந்து வளர்ந்த பச்சை செடி விஷத்தை கொட்டிக் கொட்டி வறண்ட நிலத்தை இன்னும் கெடுத்து அருகில் வருபவற்றை முள்ளாலும் கிழித்து கெட்ட வாடையை பரப்பி சீரழித்துக் கொண்டே இருக்கின்றது இதுவரை மூக்குகளை மூடிக் கொண்டு இருந்தவர்கள் இனி கண்களையும் மூட வேண்டியது தான் விஷத்தை முளையிலேயே கிள்ளாமல் எத்தனை தடவைகள் தான் தவற விடுவது.
  3. பெண்களின் மானத்தைக் காயப்படுத்தும் அவதூறுகள்: சமூக ஊடகங்களில் ஏற்படும் ஆபத்துகள்… சமூக ஊடகங்கள் இன்று தகவல் பரிமாற்றத்திற்கு மிகுந்த பங்களிப்பை வழங்குகின்றன... ஆனால், சிலர் இதை தவறாக பயன்படுத்தி, தனிநபர்களின் உரிமைகளை மீறுவதும் அவதூறு செய்யவும் செயல்படுகின்றனர்... கடந்த 2010-களில் நியூஜஃப்னா என்ற இணைய தளம், பொய்யான தகவல்களையும், ஆபாசமான கட்டுரைகளையும் வெளியிட்டு, பலரின் தனிப்பட்ட வாழ்க்கையை சீரழித்தது... இதில், பலரின் புகைப்படங்களை தவறாக இணைத்து, அவதூறுகளை பரப்பி, அந்த நபர்களின் குடும்பங்களையும் சமூக வாழ்வையும் பாதித்தனர்... அந்தச் செயல்கள் தற்போது மறுபடியும் தோன்றத் தொடங்கியுள்ளன... ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்ற முகநூல் பக்கம், பெண்களின் நிர்வாண படங்களையும் அவதூறுகளையும் வெளியிட்டு, பெண்களின் மானத்தையும் தனியுரிமையையும் உடைத்து வருகின்றது…. இது சமூக ஒழுங்கை சீரழிக்கக்கூடிய மிகப்பெரிய ஆபத்தாகும். சமூக ஊடகங்களில் இவ்வாறான செயல்களை தவிர்க்கும் வகையில், பொறுப்பற்ற சமூக விரோத செயல்களை தடுக்க அரசு மற்றும் பொது அமைப்புகள் களமிறங்க வேண்டும்... இந்த அவதூறுகளுக்கு ஆதரவளிக்கும் முக்கியக் காரணம், சமூகத்தில் பொறுப்பில்லாத சில நபர்களின் செயல்களே... பொய்யான தகவல்களை பகிர்வது, அவற்றுக்கு விருப்பு செய்து பகிர்வது போன்ற செயல்கள், தவறான தகவல்களை விரைவாக பரப்பக் கூடும்... இதனால் பலர் ஆபத்துக்குள்ளாகின்றனர்... நியூஜஃப்னா போலவே, ஊழல் எதிர்ப்பு அணி வன்னி பக்கமும் சமூக சீரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்...எனக்கு தெரிந்து, நியூஜஃப்னாவை விட இந்த பக்கம் நம் சமூகத்தில் ஏற்படுத்தப்போகும் சீரழிவு மிகப்பெரியதாக இருக்கும்… பெண்களின் பாதுகாப்பு, தனியுரிமை, சமூக நெறிமுறைகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்றே எடுக்கப்பட வேண்டும்... சமூகத்தில் பொறுப்பற்ற நபர்கள் பரப்பும் தவறான தகவல்களை தடுக்க, சமூகவிருப்பங்களைப் பகிரும் முன் உண்மையைக் கண்டறியும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்... பெண்களின் பாதுகாப்பிற்கும், தனிமனித உரிமைக்குமான ஆதரவை உருவாக்கும் முயற்சியில் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய கட்டாயம் உள்ளது… இந்த முகநூல் பக்கத்தை யாழ் சைக்கோ எம்பி அர்ச்சுனாவும் தமிழடியான் எனும் யூரியுப்காறரின் தலைமையில் சைக்கோ அர்ச்சுனாவின் சில அடிப்பொடிகளும் நடத்துவதாக நம்பத்தகுந்தவர்களிடம் இருந்து தகவல் கிடைக்கிறது.. குறிப்பிட்ட நபர்களும் அதை அந்த பக்கத்தில் மறைமுக உறுதிப்படுத்தி உள்ளனர்.. ஆயினும்.. நியூஜஃப்னாவில் இருந்து இந்த ஊழல் எதிர்ப்பு வன்னி அணி பக்கம் வரை யார் மூலகாரணம் அர்ச்சுனாவோ அல்லது அவரது ஆதரவாளர்களோ அல்லது அவர்போன்ற சைக்கோக்களோ அல்ல... அர்ச்சுனாவில் பழியை போட்டுவிட்டு எல்லா நேரமும் தப்ப முடியாது:.. அர்ச்சுனாவோ, கிருஷ்ணாவோ, ஊழல் எதிர்ப்பு அணியோ.... எங்கட சனம் எண்ட மூடர்கூடத்தின் ஆதரவு இல்லாமல் ஒருத்தரும் இங்க எதுவும் நகர்த்தமுடியாது... உண்மையான Culprits எந்த சமூக பொறுப்புமற்ற மக்கள்தான்… இவற்றை முளையிலேயே கிள்ள யாழ் இணையம் போன்ற சமூக பொறுப்புள்ள அனைத்து ஊடகங்களும் உறுப்பினர்களும் வாசகர்களும் எதிர்வினை ஆற்றவேண்டும்.. —-—-
  4. புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மூன்றாவது தலைமுறையினை எட்டிவிட்ட நிலையில், இளைய ஈழத்தலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றது. அந்தவகையில் பிரான்சின் மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி கவனத்தை பெற்றுள்ள சுஜீவன் முருகானந்தம் எனும் உயர்நிலை மாணவர் உலகத் தமிழர்களின் தேர்வு வாக்குக்கு அழைப்பு விடுத்துள்ளார். மன இறுக்க உளப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள 4-12 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களின் அக-மன நிலையினை உணர்ந்தறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கை வளையல் கருவியொன்றினை உருவாக்கியுள்ளார். இக்கருவியூடாக அச்சிறார்களுக்கு ஏற்படுகின்ற மன இறுக்க உளப் பாதிப்புக்களை உடனடியாகவே கைபேசி வழியாக எச்சரிக்கும் திறன் கொண்டதோடு ஏற்படுகின்ற பாதிப்புக்களை முறையாக ஆவணப்படுத்தும் திறன்கொண்டதாகவும் இக்கருவி உருவாக்கம் பெற்றுள்ளது. நாடளாவிய ரீதியில் இத்துறைசார்ந்து 81 பேர் இதனை உருவாக்கியிருந்த நிலையில், இவர்களில் 6 பேர் தேசிய அளவிலான இறுதித்தேர்வுக்கு சென்றுள்ளனர். ஒவ்வொருவரது உருவாக்க கருவியின் பயன்பாடு, அதன் அவசியம் குறித்தான ஆய்வுகளின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக இறுதிச்சுற்றில் கருவி தேர்வு செய்யப்படவுள்ளது. இதில் மூன்றாம் நிலையாக பொதுமக்களும் தங்களுக்கு தேவையான கருவியினை தேர்வு செய்ய முடியும். அந்தவகையில் இவர்களில் ஒருவராக சுஜீவன் முருகானந்தம் அவர்கள் “cœur léger ” எனும் பெயரில் தனது கருவியை உருவாக்கியுள்ளார். எதிர்வரும் மார்ச் 14 ம் திகதி வெள்ளிக்கிழமை ஐரோப்பிய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னராக குறித்த https://gpseo.fr/prix-entrepreneur/coeur-leger-le-bracelet-qui-aide-les-enfants-gerer-leurs-emotions இந்த இணையத்தளத்துக்கு தேர்வுக்கான வாக்களிப்பினை மேற்கொள்ள வேண்டும். மின்னஞ்சல் பதிவுடன் சுஜீவன் முருகானந்தம், உருவாக்கியுள்ள “cœur léger ” எனும் கருவியினை தேர்வு செய்யும்பட்சத்தில் ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். 1995 யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு பின்னராக கிளிநொச்சியில் தற்காலிகமாக வாழ்ந்து அங்கிருந்து 2000 ஆம் ஆண்டுகளில் 7 வயதில் பிரான்சில் கால்பதித்த இந்த மாணவரே சுஜீவன் முருகானந்தம் ஆவார். https://thinakkural.lk/article/315975
  5. மூன்று அல்லது நான்கு நாட்களாக சவரம் செய்யாத முகம், கலைந்த தலை மயிர், அழுக்கான ஜக்கெற், நிறைந்த சோகம்... என பஸ் தரிப்பிடத்தில் அவன் நின்றிருந்தான். விரும்பத்தகாத ஒருவித நெடியும் அவனிடம் இருந்து வந்து கொண்டிருந்தது. அவனது முகத்தைப் பார்த்ததும் தமிழன்தான் என்று புரிந்து கொண்டேன். சனிக்கிழமை காலை நேரம், பஸ் தரிப்பிடத்தில் நானும் அவனும்தான் நின்றிருந்தோம். பஸ் வர இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. அவன் என்னைப் பார்ப்பதைத் தவிர்ப்பது எனக்குத் தெரிந்தது. அவனது பிரச்சினைதான் என்ன என்பதை அறிய விரும்பினேன். கொஞ்சம் நெருங்கிப் போனேன். நான் வருவதை உணர்ந்து ஒரு கணம் என்னைப் பார்த்தான் அந்தக் கணம் எனக்குப் போதுமானதாக இருந்தது. “தமிழோ?” குளிரில் வெடித்த அவனது வறண்ட இதழில் தோன்றிய ஒரு சிறிய புன்னகை தமிழன் என்பதை ஒத்துக் கொண்டது. “நீங்களும் பஸ்ஸுக்குத்தான் நிக்கிறீங்களோ?” தலையை ஆட்டி ஒப்புக் கொண்டான். சைகையால் மட்டும்தான் பேசுவான் என்று நினைத்தேன். ஆனால் பேசவும் செய்தான். “உங்களை எனக்குத் தெரியும். அடிக்கடி கண்டிருக்கிறன்” நான் இருக்கும் நகரில் இப்பொழுது பல தமிழர்கள் வசிக்கிறார்கள். எனக்கும் அவர்களுக்குமான தொடர்புகள் மிக மிகக் குறைவு. ஒவ்வொரு வார இறுதியிலும், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா... என்று ஏதாவது நம் மத்தியில் நடந்து கொண்டேயிருக்கும். எல்லாவற்றுக்கும் போய்க் கொண்டிருக்க முடியாது. ஒரு விழாவுக்குப் போய் இன்னொன்றுக்குப் போகாவிட்டால் பிரச்சினை ஆகிவிடுகிறது. எங்களது கொண்டாட்டங்கள் வரம்பு வரையற்றவை. அதனால் இப்பொழுதெல்லாம் தமிழர்களுக்கு நான் வசிக்கும் நகரத்தில் யாரும் மண்டபங்களைத் தருவதில்லை. நாங்களும் விடுவதாயில்லை. எங்கள் நகரத்தில் இருந்து நாற்பது கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இன்னொரு நகரத்தில் கொண்டாட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம். இப்படியான அசௌகரியங்களால் நான் முற்று முழுதாக விழாக்களைத் தவிர்த்துக் கொண்டு வருகிறேன். அதனால் பலரது தொடர்புகள் எனக்கு இல்லாமற் போய் விட்டன.. புதிதாக வருபவர்களும் என்னுடன் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை. அதனால் பலரை எனக்குத் தெரியவில்லை. “வேலையாலை வாறீங்களோ?” “இல்லை அண்ணா. நேற்று ஒரு விசயமா வந்தனான். இப்ப திரும்பப் போறன்” “ அப்ப நீங்கள் இந்த Stadt (நகரம்) இல்லையோ?” “முந்தி இங்கை தான் இருந்தனான். இப்ப கிறைல்ஸ்ஹைம் எண்ட இடத்திலை இருக்கிறன்” “அங்கையோ வேலை செய்யிறீங்கள்?” “இல்லை, வேலை இல்லை” “ஏன்?” ஏதோ சொல்ல நினைத்தான். அதற்குள் பஸ் வந்துவிட்டது. சனிக்கிழமை அதுவும் காலை நேரம் என்பதால் ஆட்கள் இன்றி பஸ் வெறுமையாக இருந்தது. பஸ்ஸுக்குள் எனது இருக்கையைத் தாண்டிப் போக எத்தனித்தவன் என்னை ஒரு தரம் உற்று நோக்கினான். “இதிலை இருங்கோவன்” எனது இருக்கைக்கு நேரெதிரே இருந்த இருக்கையை அவனுக்குச் சுட்டிக் காட்டினேன். இந்த வார்த்தைகளை எதிர்பார்த்தவன் போல் சட்டென்று அதில் அமர்ந்து கொண்டான். “உங்களுக்கு என்னதான் பிரச்சினை? என்னத்துக்கு இந்தக் கோலம்?” “நான் நாட்டுக்குத் திரும்பிப் போறன்” அவன் இதைச் சொன்னதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவோ சிரமங்களைச் சமாளித்து, பல இலட்சங்களைச் செலவழித்து வெளிநாடு போக வேண்டும் என்று நாட்டில் பலர் இருக்கும் போது, இவன் எதிர்மறையாக இருக்கிறானே என எண்ணிக் கொண்டேன். அவனேயே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் தலை குனிந்திருந்தது. கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு அவனே தொடர்ந்தான். “என்னை அவள் டிவோர்ஸ் எடுத்திட்டாள். இப்ப எனக்கு விசாவும் இல்லை” அவனுடைய நிலைக்கான காரணத்தைப் புரிந்துகொண்டேன். ஆனால் எதற்காக விசா இல்லாமல் போனது? என்ற கேள்வி என்னிடம் இருந்தது. ஆனால் அதைப் பற்றி அவனிடம் கேட்கவில்லை. அவன் சொல்ல விரும்பினால் சொல்லட்டும் என்று விட்டு விட்டேன். “அவள்தான் கல்யாணம் கட்டுறதுக்கு ஸ்பொன்சர் பண்ணி என்னை இஞ்சை கூப்பிட்டவள். கலியாணம் கட்டி வேலையும் செய்து கொண்டிருந்தனான். பிறகு இப்பிடி ஆகிப் போச்சு… டிவோர்ஸ்க்குப் போட்டுது…” பெருமூச்சு ஒன்று அவனிடம் இருந்து வந்தது. அவனே தொடர்ந்தான், எனக்கு விசா முடிஞ்சு போட்டுது. விசாவைப் புதுப்பிக்கப் போனால், அங்கை வைச்சே பிடிச்சு அனுப்பிப் போடுவாங்கள் எண்டு வேலையிடத்திலை சொன்னாங்கள்” “யார் சொன்னது? பைத்தியக்காரத்தனமா இருக்கு. நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறீங்கள். உங்களை ஏன் பிடிச்சு அனுப்பப் போறாங்கள்?” கோபத் தொனியில் வந்த என் பேச்சைக் கேட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தான். “என்னோடை வேலை செய்யிற தமிழாக்கள்தான் சொன்னவையள்” யாரை நோவது என்று எனக்குத் தெரியவில்லை. “சரி.. டிவோர்ஸ் கேஸ் என்னாயிற்று?” “அது முடிஞ்சு ஒரு வருசமாச்சு. இப்ப அவள் இந்தியாவுக்குப் போய் கலியாணமும் கட்டிக் கொண்டு வந்திட்டாள். எங்கடை ஊர்க்காரன்தான். பேஸ்புக்கிலை படங்கள் போட்டிருக்கிறாள்” பேச்சை முடித்துக் கொண்டு அமைதியாகிப் போனான். அவனுக்கு உதவ வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பஸ் நகரத்தை அடைந்திருந்தது. என்னை முதலில் இறங்கவிட்டு பின்னால் இறங்கினான். “தம்பி. ஒரு லோயரை வைச்சு உங்களின்ரை விசாப் பிரச்சினையைச் சரி செய்யலாம். டைவோர்ஸ் பிரச்சினையாலை நீங்கள் மன அழுத்தத்திலை இருந்ததாகச் சொல்லலாம். அதாலைதான் விசாவைப் புதுப்பிக்கப் போகேல்லை எண்டு… இன்னும் வழி இருக்கு" “நன்றியண்ணா. இந்தப் பிரச்சினைக்குப் பிறகு, எனக்கு ஒரு இந்தியன்தான் தன்ரை ரெஸ்ரோரண்டிலை வேலை தந்தவன். வேலை களவுதான். அவனின்ரை ரெஸ்ரோரண்டிலைதான் தங்கியிருந்தனான். போதும். ஒரு இடமும் போக வரேலாது. நான் முடிவெடுத்திட்டன். போன கிழமை பொலிஸிட்டைப் போய் நாட்டுக்குப் போகப் போறன் எண்டு சொன்னன். அவையள் வெளிநாட்டு அலுவலகத்துக்குப் போகச் சொல்லிச்சினம். அங்கை போய் அவையளோடை கதைச்சன். தங்கிறதுக்கு கிறைல்ஸ்ஹைமிலை ஒரு இடம் ஒழுங்கு செய்து தந்து வெள்ளிக்கிழமை வரச் சொல்லிச்சினம். நேற்றுத்தான், வெள்ளிக்கிழமை போனனான். சிறிலங்காவுக்குப் போறதுக்கு ரிக்கெற் செய்து தந்திருக்கினம். 18ந்திகதி பிளைற்” “இப்பவும் நீங்கள் இங்கை இருக்கிறதுக்கு வழி செய்ய முடியும். அவசரப்படாதையுங்கோ” “இல்லையண்ணா. போறதெண்டு முடிவெடுத்திட்டன். தாங்ஸ் அண்ணா” இதற்குமேல் நான் அவனை வற்புறுத்த விரும்பவில்லை. “ உங்களுக்குத்தானே கிறைல்ஸ்ஹைமிலை தங்கிறதுக்கு இடமிருக்கு. இஞ்சை, சனிக்கிழமை அதுவும் காலைமை வெள்ளென, என்ன செய்து கொண்டிருக்கிறீங்கள்?” “நான்.. நேற்றே ரிக்கெற்றெல்லாம் அவையிட்ட வேண்டிட்டன். இனி இஞ்சாலை வரமாட்டன். கலியாணம் கட்டின புதுசிலை நானும் அவளும் சுப்பர்மார்க்கெற்றிலை சாமான்கள் வாங்கிட்டு அந்த பஸ்ஸ்ராண்டிலை இருந்துதான் வீட்டுக்குப் போறதுக்கு பஸ் எடுக்கிறனாங்கள். அதுதான் சும்மா நடந்து வந்து அந்த பஸ்ஸ்ராண்டிலை இருந்தனான். அப்பிடியே இரவு முழுக்க அங்கையே வாங்கிலிலை படுத்திட்டன். சரி அண்ணை..” அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். கிறைல்ஸ்ஹைம் போகும் பஸ்ஸை நோக்கி நடந்து கொண்டிருந்தான். பஸ்ஸில் ஏறப் போகும் நேரத்திலேயாவது திரும்பிப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டு நின்றேன். அவன் பார்க்கவேயில்லை.
  6. உயிரியல் பெயரீட்டு முறையின் தந்தையான கார்லோஸ் லினயஸ் கூட இப்படி இனிசிசல் போட்டு பார்தீனியத்தை வகைபசுத்தவில்லை. முன்பு யாழ் நகரில் ஆரிய குளத்தில் மண்டி கிடந்தது…இப்போ திராவிட குள(ல)தில் பரவ முயல்கிறது. பிகு எங்கள் வீட்டில் பார்த்தீனியத்தை இனம் கண்டு வெட்டி விட துடிப்போர் கூட, பக்கத்து வீட்டு பார்தீனியத்தை நீர் ஊற்றி வளர்பதையும் காண்கிறோம்.
  7. கண் கண்ட தெய்வம் ---------------------------------- வரிசை நீண்டு உள் வாசலைத் தாண்டி வெளிவரை வந்திருந்தது. நான் வருவதற்கு கொஞ்சம் சுணங்கிவிட்டது. வேறு வழி இல்லை, இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது, வரிசையில் நின்று கடமையை முடித்து விட்டே போவோம் என்று வரிசையின் முடிவில் நின்றேன். வீட்டுக்கு போய் செய்வதற்கும் வேலைகள் என்றும் ஏதும் இல்லை. தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு அலைவரிசையில் முன்னரே பார்த்த, பிடித்த படம் ஏதாவது ஓடினால், அதை மீண்டும் பார்க்கலாம், அவ்வளவுதான். இப்பொழுது எல்லாம் புதிதாக எந்தப் படத்தையும் பார்ப்பதற்கு பொறுமை இல்லை. மனைவி இருந்திருந்தால் சிவராத்திரிக்கு எப்போதோ கோவிலுக்கு வந்திருப்பார். பின்னர் 'நீங்கள் இப்ப வரலாம்...........' என்று ஒரு செய்தியை கோவிலில் இருந்து சரியான நேரத்துக்கு அனுப்பியிருப்பார். வீட்டிலிருந்து ஒரு பதினைந்து நிமிட நேர தூரத்தில் தான் கோவில் இருக்கின்றது. ஒரு இருபத்து ஐந்து வருடங்களின் முன் இது ஒரு தேவாலயமாக இருந்தது. இப்பொழுது கூட கோவிலின் கூரைக்கு மேலால் நீண்டு நிற்கும் ஒரு மெல்லிய நீண்ட கூம்பு வடிவிலான தேவாலயக் கோபுரத்தை பார்க்கலாம். அன்று இங்கு வர்த்தகம் செய்து வசதியாக இருக்கும் குஜராத் மக்கள் இந்த இடத்தை தேவாலயத்துடன் சேர்த்து வாங்கினார்கள். தேவாலயத்தில் சில மாற்றங்களை செய்து அதை ஒரு கோவிலாக மாற்றினார்கள். அதன் அருகிலேயே இன்னொரு பெரிய கோவிலையும், குஜராத் முறைப்படி, கட்டினார்கள். அதை மந்திர் என்று சொல்லுகின்றார்கள். சிவபெருமான், அம்மன், பிள்ளையார், முருகன் என்று தென்னிந்திய மக்களுக்கு தேவையான கடவுள்களை பழைய கோவிலும், புதிய கோவிலில் வட இந்திய மக்களுக்கு தேவையான கடவுள்களையும் வைத்தார்கள். ஒரே ஒரு தடவை இந்த மந்திருக்குள் போயிருக்கின்றேன். அது ஒரு அயலவரின் மகனின் திருமண நிகழ்வு. அவர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள் தான். மந்திருக்குள் சுவாமியின் முன் பெண்கள் அரைவட்ட வரிசைகளில் அமர்ந்து இருந்தார்கள். அதன் பின் ஒரு சின்ன இடைவெளி விட்டு ஆண்கள் அமர்ந்து இருந்தார்கள். எப்பவுமே, நித்திய பூசையில் கூட, இப்படித்தான் இருப்பார்களாம். பெண்களுக்கும், ஆண்களுக்கும் பின்னால் நான் நின்று கொண்டிருந்தேன். எங்கே போனாலும் பின்னுக்கு நிற்பது அல்லது இருப்பது என்பது சௌகரியமாக இருக்கின்றது. பின் வரிசைக்கு பின்னால் இருந்து எவரும் கவனிக்காமல் இருப்பது ஒரு சுதந்திரமான உணர்வைக் கொடுக்கின்றது போல. தென்னிந்தியக் கடவுள்கள் இருக்கும் கோவிலில் ஆரம்பத்தில் ஒரு வட இந்தியரே பூசை வைத்தார். அப்பொழுதெல்லாம் இங்கு இந்தியர்கள் வெகு குறைவு. ஒரு சிலர் மட்டுமே கோவிலுக்கு வந்து போவார்கள். என்னுடைய மனைவி மிகவும் ஒழுங்காகப் போய் வருவார். அங்கிருந்த கடவுள்களுக்கு அந்த வட இந்திய பூசகருக்கு அடுத்தபடியாக மிகவும் பழக்கமானவர் என் மனைவியே. விசேட நாட்களில் மட்டும் என்னை கோவிலுக்கு வரச் சொல்லுவார். அதுவும் ஒரு குறுகிய நேரத்துக்கு மட்டுமே. இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் நன்றாகத் தெரிந்திருப்பதால், இந்த விடயத்தில் நாங்கள் இருவரும் முட்டி மோதிக்கொண்டதில்லை. பின்னர் ஒரு தமிழ் பூசகர் தென்னிந்தியாவில் இருந்து வந்தார். தமிழ் தான் அவருடைய மொழி என்றாலும் வேறு பல மொழிகளும் கதைப்பார். ஆங்கிலத்தைக் கூட தமிழ் போன்ற ஒரு உச்சரிப்பு மற்றும் நிறுத்தங்களுடன் தயக்கமில்லாமல் நீட்டாக கதைப்பார். நல்ல குரல். அருமையாகப் பாடுவார். எல்லோருக்கும் அவரைப் பிடித்துவிட்டது. அத்துடன் இந்தியர்களும் பெருமளவில் இந்த நாட்டிற்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். வந்தவர்கள் அப்படியே கோவிலுக்கும் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். பூசகருக்கு என்னைத் தெரியாது. ஆனால் நான் மனைவியுடன் போவதால், 'சார் வாங்கோ..............சௌக்கியமா.............' என்று நன்றாகப் பழகியவர் போலக் கேட்பார். ஓரிரு தடவைகள் மனைவியினால் போக முடியாத போது, பாலோ பழங்களோ திரவியங்களோ கொடுக்க நான் போயிருக்கின்றேன். பூசகர் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை. முதல் தடவை ஏமாற்றமாக இருந்தது. அதன் பின்னர் எதிர்பார்ப்பை மிகவும் குறைத்தே வைத்திருந்தேன். மனைவியும், பிள்ளைகளும் இன்னொரு நாட்டிற்கு ஒரு குடும்ப விசேடத்திற்கு போயிருந்தனர். என்னால் போக முடியாத நிலை. தை மாதத்தில் இருந்து சித்திரை நடுப்பகுதி வரை எனக்கு வேலை அதிகம். வேலையில் வேலை இல்லாவிட்டாலும், இந்த நான்கு மாதங்களில் விடுமுறை எடுப்பதை தவிர்க்குமாறு சொல்லியிருக்கின்றார்கள். மற்றைய மாதங்களில் முழுச் சுதந்திரமும் இருப்பதால், இது ஒன்றும் அநியாயமாகத் தெரியவில்லை. இதனால் குடும்ப விசேடத்தில் பல வருடங்களின் பின் காணும் சிலரின் 'என்ன, உங்களுக்கு இப்படி வயதாகிப் போட்டுதே.............' என்ற அழகியல் விமர்சனங்களையும் கேட்க முடியாமலும் போய்விட்டது. வரிசை மெதுமெதுவாக அசைந்தது. நான் கோவிலுக்குள் மண்டபத்துக்குள் வந்திருந்தேன். மண்டபத்தின் நடுவே கொடித்தம்பத்திற்கு அருகில் ஒரு சிவலிங்கத்தை வைத்திருந்தார்கள். அதன் அருகே பால் கலன்கள் பல இருந்தன. இன்று எல்லோருமே பால் கொண்டு வருவார்கள். நான் தனியாக இருப்பதால் பால் கொண்டு வரவில்லை. அடுத்த தடவை ஏதாவது ஒரு காரணம் சொல்லி மனைவியிடம் இரண்டு கலன்களாக கொடுத்து விடுகின்றேன் என்று மனதாரச் சொன்னேன். வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரும் சிவலிங்கத்திற்கு மூன்று தடவைகள் பாலால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் சிவலிங்கத்தை சுற்றிக் கும்பிடுவார்கள். சிலர் அதிக நேரம் எடுப்பார்கள். கூட்டமும் இப்ப மிக அதிகம். அதனால் தான் வரிசை நீண்ட பெரிய மலைப்பாம்பு போல அசைந்து கொண்டிருந்தது. இங்கு வந்து போவர்களுக்கு பல சடங்குகளும், சம்பிரதாயங்களும் நன்றாகவே தெரிந்திருக்கின்றது. மந்திரங்கள் கூட தெரிந்திருக்கின்றது. பூசகருடன் சேர்ந்து வடமொழியில் பலரும் சொல்லுகின்றனர். எனக்கு 'வேதம் புதிது' போன்ற சினிமா படங்களில் வந்த சில வரிகளை மட்டும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது. மற்றபடி சமஸ்கிருதத்தின் ஓசை நல்லாவே இருக்கின்றது என்ற ஒரு பொதுப்படையான அபிப்பிராயம் மட்டுமே இருக்கின்றது. இரவு முழுவதும் தொடர் பூசைகள், யாகங்கள் என்று ஒரே கூட்டமாக இருக்கும். பல பூசகர்களும் வந்திருந்தனர். வழமையான பூசகர் தான் இன்றும் பெரிய ஆள். மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அவரைச் சுற்றி மற்றைய பூசகர்கள் அமர்ந்து யாகம் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே குரலில் மந்திரங்களோ சுலோகங்களோ சொல்லிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சின்னக் கிண்ணத்தில் பாலை வார்த்து சிவலிங்கத்தின் உச்சியில் விட்டேன். அது சிவலிங்கத்தின் எல்லாப் பக்கங்களிலும் வழிந்து ஓடியது. பளிங்கு கறுப்பில் பால் வடிந்து கோடு கோடாக ஓடுவது அழகாக இருந்தது. குனிந்து மூன்றாவது தடவை கிண்ணத்தில் பாலை நிரப்பிக் கொண்டிருக்கும் போது, 'என்ன சார்................ அம்மா எங்கே................' என்றபடியே பூசகர் முன்னுக்கு நின்றார். அம்மா ஊரில் இல்லை என்று தட்டுத்தடுமாறி சொன்னேன். கையில் ஒரு மாலை வைத்திருந்தார். அதை என் கையில் திணித்தார். இதே போன்ற மாலைகளை வீட்டில் இருக்கும் பூஜை அறையில் நான் பார்த்திருக்கின்றேன்.
  8. கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்யும் சேவைக்கு பாராட்டுகளும் நன்றிகளும் அக்கா. பண இழப்பு என கருதாதீங்க அக்கா, உங்கள் மனத்திருப்திக்கு உதவி செய்தீர்கள். தவறான கைகளுக்கு போகாது பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தளவு பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புங்கள். அவர்களோடு நேரடி தொடர்பில் இருக்க முயலுங்கள். உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் மூலமாக நேரடியாக பயனாளிகளைத் தொடர்பு கொள்ளுங்கள். 2011/2012 காலங்களில் இருந்து உதவி ஒழுங்குகள் சிலவற்றில் ஈடுபட்ட அனுபவத்தில் யாரிடமும் 100% சரியாக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. நெடுங்கேணியில் கிணறு கட்ட முப்பதாயிரம் கேட்டு உதவ வெளிக்கிட்டு கட்டி முடிக்கையில் 90ஆயிரம் செலவளித்து முடிந்தது. கணவர் வவுனியா சிறையில் இருக்க 5 பிள்ளைகளுடன் மிகுந்த சிரமத்தில் இருந்த பெண்மணிக்கு நேரடியாக வங்கிக் கணக்கிற்கே பணத்தை அனுப்புவோம். அவவிற்கு வீட்டுத் திட்டமும் கிடைத்திரு்தது என ஞாபகம். கிணறு கட்ட குடுத்த காசை வீட்டு வேலைக்கும் எடுத்துப்போடுவார். இருந்தாலும் வாழ்வாதாரத்திற்கு தோட்டம் செய்ய ஏற்கனவே தோண்டப்பட்ட கிணறை கட்டி முடிக்க லண்டனில் வசித்த உறவுகள் உதவினார்கள்.
  9. எங்களுக்கும் தனித்தனியாக தனியப்போய்ச் சந்திக்க ஆசைதான் ஆனால் அமெரிக்க மற்றும் ஆஸி தூதுவர்களுக்குத் தமிழ் தெரியாதே!😂
  10. இருவரும் சுயமாக சிந்திக்கக் கூடியவர்கள். தனியே உள்ளூராட்சி தேர்தலைக் குறிவைத்து இணையாமல் அடுத்தடுத்த தேர்தல்களையும் ஒன்றாக இருந்து சந்தித்து தேசியத்துக்காக பாடுபடணும்.
  11. சுமந்திரன்உள்ளூராட்சி தேர்தலுக்கு... புலம் பெயர் தேசத்தில், காசு சேர்க்கப் போனால்.... காலில் உள்ளதை கழட்டி அடிக்க வருவார்கள் என்பதால், அமெரிக்க, அவுஸ்திரேலிய தூதுவர்களிடம்... டொலரில் காசு வாங்கப் போயிருக்கிறார் போலுள்ளது. 😂
  12. 13 Mar, 2025 | 04:10 PM யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வசித்துவரும் குடும்பம் தெருவோரங்களில் ஆதரவற்று நிற்கும் நாய்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் இரண்டு நாய்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியானது தற்போது 39 நாய்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நாய்களை தங்களது சொந்த பிள்ளைகள் போலவே வளர்த்து வருகின்றனர். அயல் வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர், குறித்த குடும்பத்தினரால் வளர்க்கப்படுகின்ற நாய் ஒன்றின் மீது தாக்குதல் நடாத்திய நிலையில், அயல் வீட்டில் வசிக்கும் நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்துள்ளனர். அத்துடன், அவர்களது நாய்கள் காணாமல்போகின்ற சந்தர்ப்பங்களில் ஜோசியம் பார்த்தல், சமூக ஊடகங்கள் மூலம் பதிவுகளை பகிர்தல் ஆகியவற்றின் மூலம் நாய்களை கண்டுபிடிக்கின்றனர். குறித்த குடும்பத்தின் தலைவர் எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் நடைபயணம் ஒன்றினை மேற்கொண்டு, பலரது கையொப்பங்களை பெற்று நாய்களின் பாதுகாப்புக்கான சட்டங்களை இயற்றுவதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். யாழில் ஆதரவற்ற தெருநாய்களை வளர்க்கும் குடும்பம் | Virakesari.lk
  13. உற‌வே ஆர‌ம்ப‌த்தில் கிருஷ்னாவை ஆத‌ரித்த‌ உற‌வுக‌ளில் நானும் ஒருத‌ன் கிருஷ்னாவை ம‌ட்டும் அல்ல‌ , அனுஷ‌னை கூட‌ ஆத‌ரிச்சேன் , ந‌ம்பி ந‌ம்பி ஏமாறுவ‌து என‌க்கு தொட‌ர் க‌தை மாதிரி போகுது.................... ஆர‌ம்ப‌த்தில் அவ‌ர்க‌ள் மோட்ட‌ சைக்கில்ல‌ வேக‌மாய் ஓடும் போது ஆண்ட‌வா இந்த‌ பிள்ளைக‌ளுக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ கூடாது க‌வ‌ண‌மாக‌ பார்த்து கொள்ளுங்கோ என்று ஆண்ட‌வ‌ரிட‌ம் கேட்டேன்.................... கிருஷ்னா ஆர‌ம்பத்தில் நேர்மையா ஒழுக்க‌மாய் செய்து கொண்டு வ‌ந்தார் சிறு மாத‌ம் க‌ழித்து பேச்சில் மாற்ற‌ம் , ஆனுவ‌ க‌தை , பெண்க‌ளுட‌ன் த‌ப்பான‌ முறையில் ப‌ல‌ கேள்விக‌ள் கேட்பார் , இப்ப‌டி போக‌ கிருஷ்னாவின் காணொளிக‌ளை பார்க்காம‌ விட்டு இப்ப‌ இர‌ண்டு வ‌ருட‌ம் ஆக‌ போகுது.....................வெளி நாட்டில் இருக்கும் அதுளுக்கு தான் ம‌ன்டை ப‌ழுது என்று பார்த்தால்................கிருஷ்னா அவ‌ர்க‌ளை விட‌ அருவ‌ருக்க‌ த‌க்க‌ ந‌ப‌ர் யாரோ அனுப்பின‌ ஜ‌ட்டிய‌ த‌ன‌து யூடுப் ச‌ண‌லில் காட்டின‌வ‌ர் இதெல்லாம் ச‌ம்மூக‌ சேவை செய்து கொண்டு செய்யும் செய‌லா இது................... விட்டால் நீங்க‌ள் சொல்லுவிங்க‌ள் போல‌ வீர‌ப் பைய‌ன் அல்வ‌ய‌ன் யாயினி இவ‌ர்க‌ள் பொறாமையில் யாழில் எழுதுகின‌ம் என்று....................... என‌க்கோ இந்த‌ இந்த‌ திரியில் க‌ருத்து எழுதித‌ன‌ உற‌வுக‌ளை த‌னிப்ப‌ட்ட‌ முறையில் தெரியும் எங்க‌ளுக்கு பொறாமை என்ற‌து சிறு துளி கூட‌ இல்லை.................... கிருஷ்னா த‌ன்னை ப‌ழைய‌ ப‌டி திருத்தி ஆர‌ம்ப‌த்தில் செய்த‌து போல் செய்ய‌ விரும்பினால் வாழ்த்துவோம் பாராட்டுவோம் சிறையால் வ‌ந்தாப் பிற‌க்கும் பெண்க‌ளை அவ‌ம‌திப்ப‌து , வ‌ய‌து போன‌ அம்மா மார‌ கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌து தொட‌ர்ந்தால் , கிருஷ்னாவை தொட‌ர்ந்து விம‌ர்ச‌ன‌ம் செய்வோம் , கிருஷ்னா ர‌வுடிக‌ளை வைத்து ஆட்க‌ளை மிர‌ட்டுவ‌தை முதல் நிறுத்த‌னும்........................எத்த‌னையோ பேர் ச‌ம்மூக‌ சேவ்வை செய்யின‌ம் யாராவ‌து ர‌வுடிக‌ளை வைத்து செய்யின‌மா😁................... த‌னி ஆளை போய் மோட்ட‌ சைக்கில்ல‌ ச‌ம்முக‌ சேவ்வை செய்த‌ கிருஷ்னா , இப்போது மூன்று பேருட‌ன் போய் செய்ய‌ கார‌ண‌ம் என்ன‌ , ப‌ய‌ம் யாராவ‌து த‌ன‌க்கு கை வைத்தால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து த‌ப்பிக்க‌ தான் வாக‌ன‌த்தில் கூட்டிட்டு போய் வாரார் ச‌ம்மூக‌ சேவ்வை என்றால் நூற்றூக்கு நூறு உண்மையாய் செய்ய‌னும் அதில் குள‌று ப‌டி இருக்க‌ கூடாது.......................ஊழ‌ல் மோச‌டி செய்தால் இல‌ங்கை அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கும் கிருஷ்னாவுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்.................... இப்ப‌டி எழுத‌ நிறைய‌ இருக்கு ஒரு நாள் நீங்க‌ளே உண‌ருவிங்க‌ள் கிருஷ்னாவின் ஊழ‌ல் மோச‌டி இன்னும் வெளிய‌ வ‌ரும் போது....................1500 குடும்ப‌த்துக்கு இவ‌ர் உத‌வ‌ வில்லை புல‌ம்பெய‌ர் நாட்டு ம‌க்க‌ள் கொடுத்த‌ காசை இந்த‌ கிருஷ்னா என்ர‌ த‌ர‌க‌ர் கொண்டு போய் கொடுத்தார் அம்ம‌ட்டும் தான்.......................
  14. கட்சியை உடைக்க கட்சியில் உள்ளவர்களே போதுமானது. வெளியில் இருந்து யாரும் வரத்தேவை இல்லை.
  15. பையா.... நானும் போட்டியில் கலந்து கொள்கின்றேன். 👍 மற்றது.... இந்த கிரிக்கெட் விமர்சகர் என்ற அடைமொழி எல்லாம் எனக்கு ஓவர் பையா. 😂 குருவி தலையில்... பனங்காயை வைக்காதீங்க. 🤣
  16. பாட்டும்...பொழிப்புரையும் நல்லா இருந்தது என்று சொல்லுங்க...
  17. இப்பதான் இந்த பாடலை முதன்முதல் கேட்டேன். நன்றாகவே இருந்தது.
  18. கிருபன், நானும் இம்முறை கலந்து கொள்கின்றேன்.
  19. என் மனைவி கராத்தே பொக்சிங் எல்லாம் பழகிப் பார்ப்பது நான் அடுப்படிப் பக்கம் போய் ஏதாவது கருத்து சொல்லப் போனாத் தான். அதாலை ஏதும் வெட்டிக்கொண்டு இருந்தா அந்தப்பக்கம் போறல்லை 😁.
  20. @Eppothum Thamizhan @சுவைப்பிரியன் @nunaviIan @ரசோதரன் @ஏராளன் @செம்பாட்டான் @புலவர் @நிலாமதி @நீர்வேலியான் @goshan_che என‌து ப‌திவை நாளை ப‌தியிறேன் பெரிய‌ப்பு ம‌ற்ற‌ உற‌வுக‌ளுக்கும் தெரிய‌ப் ப‌டுத்தி இருக்கிறேன்👍.......................
  21. முழிக்கும் மொழி --------------------------- இருமொழிக் கொள்கையா அல்லது மும்மொழிக் கொள்கையா எது சரி, எந்த வழியில் போவது என்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடத்தில் வார்த்தைப் போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது வெறுமனே வார்த்தைப் போர்கள் தான். இந்தப் போர்க் களத்தில் நிற்கும் பெரும்பாலான முன்னணி தளபதிகளின் குடும்பங்களில் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படுகினறன. ஆனாலும் தமிழைக் காப்பதற்காக, தமிழை வளர்ப்பதற்காக தாங்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிரானவர்கள் என்று இவர்கள் வெளியில் சொல்லிக் கொள்கின்றனர். இதில் பலரும் மும்மொழிகளும் படிப்பிக்கும் தனியார் பாடசாலைகளின் உரிமையாளர்களாகவும் கூட இருக்கின்றனர். வழமையான அரசியல் தான் இங்கேயும். மேடையில் ஏறி வாக்குகளுக்காகவும், கைதட்டலுக்காகவும் எதைப் பேச வேண்டும் என்று தெரிந்து அதையே பேசுவது, மேடையிலிருந்து இறங்கிய பின் தங்களின் குடும்ப நலன்களையும், தங்களின் வளமான எதிர்காலத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு, மேடையில் பேசியதற்கு முற்றிலும் எதிரான செயல்களில் ஈடுபடுவது என்பது ஜனநாயக அரசியலின் தவிர்க்க முடியாத ஒரு பக்கம். சர்வாதிகாரிகளுக்கு இந்த இரட்டை நிலைப்பாடுகள் தேவையில்லை. ஊரில் சிறுவயதில் ஒருமொழிக் கொள்கையுடனேயே என் இளமைக்காலம் கழிந்தது. அந்த ஒரு மொழி கூட எந்தப் பாடசாலையிலும் கற்றதால் வந்தது அல்ல. என்னுடைய அம்மாச்சியும், அம்மாவும், அப்பாவுமே அந்த ஒரே மொழியை எனக்கு கொடுத்தார்கள். அம்மாச்சி கதைகள் சொல்வார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கமரூன் போன்றவர்களால் கூட அம்மாச்சியை நெருங்கமுடியாது. அவர் ஒரே சேலையையே தினமும் உடுத்திக் கொண்டே தமிழ் வார்த்தைகளால் பிரமாண்டங்களை உருவாக்கினார். பின்னர் ஊரில் இருந்த வாசிகசாலைகள் அம்மாச்சியின் இடத்தை நிரப்ப முயன்றன. தமிழ் சொற்களும், வசனங்களும் அவ்வாறே உள்ளே புகுந்தன. தமிழையே சொல்லிக் கொடுக்காத பாடசாலைகளில் இன்னொரு மொழியை சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நான் போன எந்தப் பாடசாலையிலும் ஆங்கிலத்தை மருந்துக்கு கூட படிப்பிக்கவில்லை. என்னுடைய பாடசாலை நாட்களில் ஹாட்லிக் கல்லூரியில் படித்தவர்கள் சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடும். ஆனால், பின்நோக்கிப் போய் நிதானமாகப் பார்த்தால், அவர்களுக்கும் உண்மை தெரியவரக்கூடும். அன்று ஆங்கில மொழியில் பரிச்சயம் வருவதற்கு வளரும் சூழலில் ஏதாவது சிறிய அளவில் தன்னும் ஒரு ஆங்கில புழக்கம் இருந்திருக்க வேண்டும் அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போயிருக்க வேண்டும். இவை அமையாவிடத்து ஆங்கிலமும் அமையாது. சிங்கள மொழியின் நிலை இன்னும் பரிதாபம். அதைக் கற்றல் முற்றாகவே தடை செய்யப்பட்டிருந்தது. ஊரில் ஒரு இடத்தில் 'மேக்கட்ட கீயா......' என்று பெரிதாக தமிழில் எழுதப்பட்டிருந்தது. பல வருடங்களின் பின், ஊரை விட்டு வெளியே வந்த பின் தான், இவை சிங்கள மொழிச் சொற்கள் என்பது தெரியவே வந்தது. அது எழுதப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த வீட்டில் ஒரு அக்கா இருந்தார். அப்போது அந்த அக்காவை ஒரு அண்ணன் விரும்பிக் கொண்டிருந்தார். அந்த அண்ணனின் நண்பர்கள் தான் இந்த சிங்கள மொழி வசனத்தை தமிழில் அங்கே எழுதியிருந்தனர். அவர்களுக்கு எப்படி சிங்கள மொழி தெரிய வந்தது என்றால் அவர்களில் சிலர் வெளிநாடு அல்லது கப்பலில் போவதற்காக கொழும்பிற்கு போய் வந்து கொண்டிருந்தார்கள். போகும் வழிப்பாதையில் வழித்துணையாக சிங்கள மொழியில் சில சொற்களையும், வசனங்களையும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். நான் பின்னர் தேவை காரணமாக சிங்கள மொழியையும், ஆங்கிலத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஒரு மொழியை வெறும் மொழியாகவே பார்க்கும் போது அது உண்டாக்கும் ஆச்சரியம் அளவில்லாதது. எப்படி இவை உண்டாகியிருக்கும், எப்படி சத்தங்களை வார்த்தைகளாக உருவாக்கினார்கள், எப்படி உணர்வுகளை வார்த்தைகளாக வெளிப்படுத்தினார்கள் என்பது மனிதர்களின் கூட்டு ஆற்றலுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு. எந்த மொழியையும் மனிதர்களுடன், நிலத்துடன், வரலாற்றுடன், பண்பாட்டுடன் சேர்த்து பார்க்கும் போது பேதங்கள் வர ஆரம்பித்து, அவை பெரும் மோதல்களாவும் ஆகிக்கொண்டிருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை பாடசாலைகளில் புகுத்தும் போது, ஒரு மொழியைக் கொண்டு இன்னொரு மொழியை அழிக்க முற்படுகின்றார்கள் என்பதே இன்று சொல்லப்படும் பெரும் குற்றச்சாட்டு. உதாரணமாக, தமிழ் மொழியை இந்தி மொழியால் அழிக்கப் பார்க்கின்றார்கள் அல்லது தமிழ் மொழியை சிங்கள மொழியால் அழிக்கப் பார்க்கின்றார்கள் என்பன. ஆங்கிலத்திற்கு இந்தக் கட்டுப்பாடு அநேக நாடுகளில் இல்லை. ஆங்கிலம் இன்று உலக இணைப்பு மொழி ஆகிவிட்டது, ஆகவே ஆங்கில மொழியை இரண்டாவது மொழியாகக் கொண்ட இருமொழிக் கொள்கைக்கு பெரும்பாலான நாடுகளில், பிரதேசங்களில் எதிர்ப்புக் காட்டப்படுவதில்லை. கோவாவில் இருக்கும் மக்கள் கொங்கணி என்னும் மொழியைப் பேசுகின்றார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் இப்பொழுது கர்நாடகாவில் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் ஒரு பகுதியில் அந்தப் பிரதேசத்தின் பேச்சு மொழியாக துளு இருக்கின்றது. கன்னடம் கர்நாடக மாநிலத்தின் மொழி. இந்த மக்கள் மூன்று மொழிகளிலும் முதலில் பரிச்சயம் ஆகின்றனர். ஆண்கள் தங்கள் பகுதி பெண்களுடன் துளு மொழியிலும், ஆண்களுடன் கொங்கணி மொழியிலும், பிறருடன் கன்னடத்திலும் உரையாடுகின்றனர். இதைவிட ஆங்கிலமும், இந்தியும் பாடசாலைகளில் கற்றுக்கொள்கின்றார்கள். இந்த தகவல்களை அங்கிருந்த வந்த ஒரு நண்பன் சொன்னான். அவனுடைய ஆங்கில மொழித்திறனும் அபாரம். அவன் இந்தி மொழியையும் மிக நன்றாகப் பேசுகின்றான் என்றே வட இந்திய நண்பர்கள் சொன்னார்கள். அவனுக்கு தமிழும் ஓரளவு தெரிந்திருக்கின்றது. பழைய கன்னட மொழி அப்படியே தமிழ் தான், ஆனால் இதை இங்கு இருக்கும் வேறு எந்த தமிழர்களுக்கும் சொல்லாதே என்று அவன் எனக்கு சொன்னான். எத்தனை மொழிகளை சிறுவயதில் கற்க ஆரம்பிக்கலாம் என்பதில் பெரிய சிக்கல்கள் இல்லை என்றே தெரிகின்றது. மூன்று அல்லது நான்கு மொழிகளை கற்றுக் கொள்ளலாம் என்றே சொல்கின்றனர். இந்த மொழிகள் புழங்கும் சூழல் இருந்தால், இன்னும் மிக இலகுவாக இவைகளை கற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்கின்றனர், என்னுடைய கொங்கணி - துளு - கன்னட - ஆங்கில - இந்தி மொழிகள் தெரிந்த நண்பன் போல. அதிக மொழிகளை தெரிந்திருப்பதால் அது நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை விடவும் பல பயன்கள் உண்டு. உதாரணமாக, அதிக மொழிகள் தெரிந்திருப்பவர்களின் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும், சிக்கல்களுக்கு தீர்வுகளைக் காண்பதில் அதிக நெளிவுத்தன்மை இருக்கும் போன்றன. இலங்கையில் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் சிலர் மும்மொழி வல்லுநர்கள் என்றனர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்றும் தெரிந்த அவர்களால் ஏதாவது நல்லது நடக்கப் போகின்றது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடந்தது போல தெரியவில்லை. ஒரு வேளை அவர்கள் தங்களுக்கு மட்டும் தேவையானவற்றை தங்களின் திறமைகளின் ஊடாக பெற்றுக் கொண்டார்களோ என்னவோ. அரசியலில் பலதும் பொய்த்துப் போகின்றன. எவரும் இன்னும் ஒரு மொழியை அறிந்து கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவற விடுவது சரியென்று தெரியவில்லை. அதுவும் வசதியுள்ளவர்களுக்கு இந்த வசதி கிட்டும் போது, வசதியில்லாதவர்கள் மட்டும் இதை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம். மற்றும் உலகெங்கும் பத்து கோடிப் பேர்கள் வரையும், தமிழ்நாட்டில் மட்டும் ஒன்பது கோடிப் பேர்கள் வரையும் பேசும் தமிழ் மொழி இன்று இன்னொரு மொழியால் அழிந்து போகும் என்றால், பிரச்சனை உள்ளே வரும் அந்த புதிய மொழியால் இல்லை, அது எங்களில் என்று தானே அர்த்தம்.
  22. ம்.... உண்மை. அதில் சிலர், சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளனர். இருக்க ,முன்னுக்கு அமர்வதற்கு எந்த தயக்கமும் காட்ட வேண்டாம். ஏனென்றால் முன்னுக்கு இருப்பவர் முன்னுக்கே பார்ப்பார், நம்மைப்பார்ப்பதென்றால் பக்கத்துக்கோ, பின்னுக்கோ திரும்பியோ தான் பார்க்க வேண்டும். எவ்வளவு நேரம் பார்க்க முடியும் அவர்களால்? அதோடு நேரம், பணம் செலவழித்து நம்மைப்பார்க்கவா வருகிறார்கள் வருபவர்கள்? நமக்கு பின்னிருப்பவர் நமது பின்பக்கத்தையே பார்க்க முடியும். சிலர் முன் ஆசனத்திற்கு அடித்துபிடித்து ஓடுவர். வேடிக்கை பார்ப்பதற்கென்றே வருபவர்கள் எங்கிருந்தாலும் தமது நோக்கத்தை நிறைவேற்றுவர். உங்களைப்போன்ற தன்னடக்கமுள்ள சிலர் பின் ஆசனத்தில் அமர்வர். ஆனால் ஓணாண்டியார், தான் பின் ஆசனத்தில் வரிசையில் அமர்வதற்கான காரணத்தை சொன்னார் பாருங்கள்! அதைத்தான் நம்ப முடியவில்லை. நறுக்கென்று சொல்லால் வெட்டும் இவருக்கா தன்னம்பிக்கையில்லை? சொல்கிறார்.
  23. சீ…பார்தீனிய விசம் பற்றிய கவிதை அருமை…. பூச்சி மருந்தைக்கூட இனிக்க இனிக்க பருக்குவது எல்லாம் வேற நிலை.
  24. 🤣நீங்கள் இப்படியான அறிவு பூர்வமான கேள்விகளை கேட்டு எங்களை கொதிப்படைய வைக்க வேண்டாம என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் சுமோ&அனுரா தேசிய கூட்டமைப்பு😅
  25. இவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். நன்றி பாணபத்திரரே.
  26. எல்லாரும் பார்க்க‌ வேண்டிய‌ 6 நிமிட‌ காணொளி கிருஷ்னாவின் உண்மை முக‌த்தை ந‌ங்கு அறிந்த‌ இந்த‌ ச‌கோத‌ர‌ன் வ‌டிவாக‌ சொல்லி இருக்கிறார்...............கிருஷ்னா எப்ப‌டி ப‌ட்ட‌ ந‌ப‌ர் என்ப‌த‌ இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கோ ஆர‌ம்ப‌த்தில் நான் இந்த‌ திரியில் கிருஷ்னா ஒரு மாபியா என்று எழுத‌ சில‌ர் ந‌ம்பி இருக்க‌ மாட்டின‌ம் அத‌ற்கான‌ உண்மை காணொளி இது................யூடுப்புக்கு வெளியால் கிருஷ்னாவின் ர‌வுடிச‌ம் அதிக‌ம்😡😡😡😡😡😡😡.................. இது கிருஷ்னான்ட‌ தாய்க்கு தெரியுமா , த‌ன்ட‌ ம‌க‌னுக்கு வாய்க்கை வாழைப் ப‌ழ‌த்தை வைச்சாலும் க‌டிக்க‌த் தெரியாது என்று தான் சொல்லுவா😁 வ‌டிவாய் பாருங்கோ காணொளிய‌ இன்னும் இதை ப‌ல‌ருக்கு தெரிய‌ப் ப‌டுத்துங்கோ அப்ப‌ தான் சில‌ருக்கு ந‌ல்ல‌ புத்தி வ‌ரும்.........................................
  27. 🤣............... அண்ணா, இந்தப் பெரிய அமெரிக்க கிணற்றுக்குள் விழ முன், ஊர் என்னும் குட்டிக் கிணற்றுக்குள் எங்களை விட்டால் ஆளே இல்லை என்று இருந்தோம் என்று சொல்லவந்தேன்................ எங்கள் ஒவ்வொருவரினதும் முதல்நாள் வெளிநாட்டு அனுபவங்களை எழுதித் தொகுத்தால், அது நல்லதொரு முழுநீள நகைச்சுவை நாவலாக வரும்............. என்னுடைய முதல்நாளில், அந்த ஊரில் இருக்கும் ஒரு சின்ன விடுதியில் அறை ஒன்றை எடுத்துக் கொடுத்திருந்தார்கள். அது சரியான குளிர் பிரதேசம். காலையில் வகுப்புகள் ஆரம்பிக்கின்றன. நான் வருவதற்கு சில நாட்கள் பிந்திவிட்டன. காலையில் குளிப்பம் என்று போனால், தண்ணீர் விறைக்கும் குளிரில் வந்தது. அன்று அதுகூட எனக்கு தெரியாது............... ஓடிப்போய் சில வேலைகளை முடித்து, வகுப்புகளுக்கும் போய் விட்டு, அங்கிருந்த உணவு விடுதிக்கு சாப்பிடப் போனால், அவர்களின் மொழியே சுத்தமாக புரியவில்லை....... ஆனாலும் இரண்டு பக்கங்களும் ஆங்கிலமே பேசுவதாக நினைத்துக் கொண்டிருந்தன.........🤣. ஒரு கிளாஸ் பாலாவது கொடுங்கள் என்று நான் சொன்னதை தட்டுத்தடுமாறி அவர்கள் புரிந்து கொண்டார்கள். அப்படியே, 'இரண்டு வீதமா, ஒரு வீதமா அல்லது முழுப்பாலா................' என்று கேட்டார்கள்................. ஏற்கனவே இருந்த பசி மயக்கத்தை விட, அந்தப் பால் கேள்வி என்னை அப்படியே சரித்து விழுத்தியது..................🤣.
  28. கஜேந்திரகுமார் , கே.வி. தவராசா இணைவு. தமிழ்த் தேசிய சித்தாந்தத்தினை பலப்படுத்தும் வகையிலும் சிங்கள பேரினவாதத்தின் ஒற்றர்களால் அழிக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை மீள் உருவாக்கம் செய்யும் நோக்கிலும் சனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா அவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் தமிழர் தாயகத்தில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் அதேபோன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமாகவிருந்தால் இக்கூட்டமைப்பின் ஊடாகவே நீதித்துறை சார்ந்த பிரமுகர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் சனநாயக தமிழரசு கட்சியின் பிரமுகரும் , இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞரணி செயலாளருமான ( முன்னாள் ) கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார். பாரம்பரிய கட்சியான இலங்கை தமிழரசு கட்சியில் ஊடுருவியுள்ள சிங்கள பேரினவாத தரப்பின் ஒற்றர்களின் தமிழ்த்தேசிய விரோத செயற்பாடுகளின் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறிவருகின்றவர்கள் கே. வி. தவராசா தலைமையிலான சனநாயக தமிழரசு கட்சியில் தொடர்ச்சியாக இணைந்து வருவதாகவும் திரு.க.குணாளன் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்திற்கு முழுமையாக வலுச்சேர்க்கும் நோக்கில் இணைந்து பயணிக்கவுள்ள இக்கூட்டமைப்பில் நேர்மை மிகுந்த , வெளிப்படையான செயற்பாடுகளை மேற்கொள்கின்ற அனைத்து தமிழ்தேசிய தரப்பினரும் இணைந்து பயணித்து தமிழ்மக்களின் மனதை வெல்லவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். Kunalan Karunagaran
  29. தேல்தலில் வென்றிருந்தால் இவரைப் பிடித்திருக்கேலாது. தற்போது சிறிய கூட்டமைத்திருக்கும் ஆட்களை பிரிப்பது பற்றி மும்முரமாக வேலை நடக்கிறதாம். செல்வத்தையும் சித்தரையும் தட்டித் தூக்கிற அலுவல் நடக்குதாம். எதுக்கு வந்தார்களோ அதை செவ்வனே செய்கிறார்கள்.
  30. 300 ஆண்டுகால சாதிப் பாகுபாடு முடிவுக்கு வந்தது : முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள் March 13, 2025 2:45 pm மேற்கு வங்காளத்தின் கிராமப்புறப் பகுதியில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்த சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் தளைகளை உடைத்து, 130 தலித் குடும்பங்களின் பிரதிநிதிகள் புதன்கிழமை முதல் முறையாக பூர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கிதேஷ்வர் சிவன் கோயிலுக்குள் காலடி எடுத்து வைத்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கட்வா துணைப்பிரிவில் உள்ள கித்கிராம் கிராமத்தின் தஸ்பாரா பகுதியைச் சேர்ந்த தாஸ் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு (நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண்) காலை 10 மணியளவில் கோவில் படிகளில் ஏறி, சிவலிங்கத்தின் மீது பால் மற்றும் தண்ணீரை ஊற்றி, தடையின்றி பிரார்த்தனை செய்தனர். உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் முன்னிலையில், எந்தவொரு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகளைகளும் ஏற்படாத வகையில் மிகுந்த பாதுகாப்பிற்கு மத்தியில் வழிபாடுகள் செய்தனர். ‘தாஸ்’ குடும்பப்பெயர்களைக் கொண்ட தலித் குடும்பங்கள், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாகக் கருதப்படும் கிதேஷ்வர் சிவன் கோயிலில் வழிபடுவதற்கான அடிப்படைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி மகா சிவராத்திரி விழாவின் போது பாரம்பரியத்தை மீறி கோவிலில் பிரார்த்தனை செய்ய திட்டமிட்டிருந்த குடும்பங்கள், “தாழ்ந்த சாதி”யைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் கோவில் வளாகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து கோவிலில் வழிபடுவதற்கான தங்கள் உரிமைய நிறைவேற்ற உள்ளூர் நிர்வாகம் மற்றும் பொலிஸாரின் உதவியை நாடியதைத் தொடர்ந்து, கிராமவாசிகளில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினரிடமிருந்து பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதையும் எதிர்கொண்டனர். “கோவிலில் பூஜை செய்யும் உரிமை எங்களுக்கு வழங்கப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அனைவரின் நலனுக்காகவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்,” என்று கோவில் படிகளில் கால் வைக்க தடை விதிக்கப்பட்ட கிராமவாசி சந்தோஷ் தாஸ் கூறினார். “உள்ளூர் பொலிஸார் மற்றும் நிர்வாகத்திடமிருந்து எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது, அவர்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம்,” என்று மற்றொரு கிராமவாசி எக்கோரி தாஸ் மேலும் கூறினார். கிராமத்திலிருந்து பொருளாதார ரீதியாக விலக்கு அளிக்கும் ஒரு வழிமுறையாக கடந்த சில நாட்களாக தாஸ் குடும்பங்களிலிருந்து பால் கொள்முதல் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு, புதன்கிழமை காலை வரை அமலில் இருந்ததை கிராம மக்கள் உறுதிப்படுத்தினர். “எங்களுக்குச் சொந்தமான வளர்ப்பு கால்நடைகளிடமிருந்து பால் சேகரிக்கத் தொடங்குமாறு பால் கொள்முதல் மையங்களுக்கு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். இன்று மாலைக்குள் சேகரிப்பு மீண்டும் தொடங்கவில்லை என்றால், நாங்கள் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டியிருக்கும்” என்று எக்கோரி தெரிவித்திருந்தார். “கித்கிராமில் உள்ள கோவிலில் வழிபாடு தொடர்பாக இருந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் உள்ள தஸ்பராவில் வசிப்பவர்களும் மற்றவர்களைப் போலவே பூஜை செய்ய முடியும். புதன்கிழமை முதல், அனைவரும் கோவிலில் பூஜை செய்வார்கள். இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்,” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/300-years-of-caste-discrimination-ended-dalits-enter-temple-for-the-first-time/
  31. ஒவ்வொருவர் பின் வரிசையில் அமர்வதற்கு, தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் உண்டு. பின்வரிசையில் யாருக்கும் தெரியாமல் போவோர் வருவோரை விடுப்பும் பாக்கலாம்.
  32. இடதுசாரி முதலமைச்சர் ஜோதிபாசு இருக்கும் காலத்திலும் தாலித்கள் இந்த கோவிலுக்குள் செல்ல முடியவில்லையா? ஒ மை கோட்
  33. ஏன் வாத்தியார்? நெடுந்தீவுக் கரையில நிண்டால், இவையின்ர ரோலர் சத்தம் கேக்கும். இதுக்கு ஏன் கருவி தேவை? சாதாரண கண்கள் கூடப் போதுமே? தெரிந்து தான் செய்கிறார்கள்…!
  34. ரூ சிந்தனை பிடித்துள்ளது. முன்னைய காலங்களில் தமிழர் நாணய குறியீடாக எதை பயன்படுத்தினார்கள்? அப்படி ஏதும் காணப்பட்டால் அதை பயன்படுத்துவது இன்னும் சிறப்பு.
  35. அரசியலுக்கு வேலை செய்வார்கள், கெத்து காட்டுவார்கள், ரவுடிகள் இருப்பார்கள், பார்ட்டிகள் கொடுப்பார்கள், ஊர் சுற்றுவார்கள், சுத்துமாத்தும் செய்வார்கள், பெரிய சமூக வேலை, கைநிறைய காசு. பின்பு ஒரேயடியாக எல்லோராலும் கைவிடப்பட்டு நடுத்தெருவில் நிற்பார். உழைத்து வாழக்கூடிய வயது, இப்படி ஏமாற்றி வாழ்கிறார்கள் புலம்பெயர்ந்தோர் உதவியில். இவர்களை வளர்ப்பதற்கே பல உதவி, தொண்டு நிறுவனங்களை, நபர்களை தடை செய்கிறது அரசாங்கம். உண்மையிலேயே கஸ்ரப்பட்டு வரி ஏய்ப்பு செய்யாமல் உழைக்கும் உறவுகள், உதவி செய்ய விரும்பும் குடும்பங்களின் வங்கி இலக்கம் மூலம் உதவி செய்யலாம் வரையறையோடு. தொழில் ஆரம்பிக்க, கல்வி செயற்பாடு, இப்படி பல முன்னோக்கு உதவிகள் செய்யலாம் அவர்கள். எதிலும் முன்னேறாமல் பணம் பெறுவதிலேயே குறியாய் இருந்தால்; குறிபிட்ட காலத்தின் பின் நிறுத்தி வேறொரு உதவி தேவைப்படும் நபர்களுக்கு செய்யலாம். எனது அனுபவத்தில் பலரை நம்பி ஏமாந்ததால் சொல்கிறேன், நீங்களே நேரில் சென்று செய்யுங்கள் இல்லையெனில் இவர்களுக்கு இவ்வளவு கொடுங்கள் என்னோடு தொடர்பு கொள்ளச்சொல்லுங்கள் என்று அறிவியுங்கள். உங்கள் பணம் எவ்வாறு முன்னேற்றப்பாதையில் செலவிடப்படுகிறது என்பதையும் கவனியுங்கள். "ஆற்றிலே போட்டாலும் அளவறிந்து போடவேணும்." அவ்வளவுதான் சொல்வேன்.
  36. நீங்கள் போயிருந்தது இன்னொரு கோவில் என்று நினைக்கின்றேன், விசுகு ஐயா. அந்தக் கோவிலை பின்னர் மிகப் பெரிதாகக் கட்டினார்கள். அங்கு தான் சுற்றுலா வருபவர்கள் போவார்கள். அதே சுவாமி நாராயணன் கோவில் தான். இந்தப் பெரிய கோவில் என் வீட்டிலிருந்து ஒரு அரை மணி தூரத்தில் இருக்கின்றது. இங்கு குஜராத் மக்கள் மிகவும் வசதியானவர்களாக இருப்பதால், இதே கோவிலை பல இடங்களில் அமைத்திருக்கின்றார்கள். மாலிபு கடற்கரையுடன் இன்னொன்று இருக்கின்றது. மேல் கோவில் வெங்கடாசலபதி, கீழே இருக்கும் கோவில் சிவன். 'ஜீன்ஸ்' படத்திலும், வேறு படங்களிலும் இந்தக் கோவில் வந்திருக்கின்றது. இங்கு சுற்றுலா வருபவர்கள் அங்கேயும் போவார்கள். 🤣................ இந்த வழிபாடு எப்படி ஆரம்பாகியது என்பது தான் எப்போதும் தோன்றும் எண்ணம், அண்ணா....... சிவலிங்கம், சிவனைத் தவிர, எதைக் குறிக்கின்றது என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். இது உலகம் முழுவதும் பல நாடுகளில், பல சமூகங்களில் இருந்த ஒரு வழிபாட்டு முறையே. மனிதர்கள் எப்படி இந்தக் குறியீட்டை தெய்வத்தின் வடிவமாக்கினார்கள் என்று தான் தோன்றிக் கொண்டேயிருக்கின்றது..........
  37. வேறு பல நாடுகளில் வரும் பிரச்சனைகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன், நீங்கள் சொல்லியிருப்பதைப் போலவே............... ஆனால் இங்கே லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் நாங்கள் சிலர் மட்டுமே இருந்து கொண்டு, இங்கேயும் அதே பிரச்சனை வந்தது என்னும் போது, முதலில் நம்ப முடியாமல் இருந்தது, பின்னர் கொஞ்சம் அதிர்ச்சி ஆகவும் இருந்தது........😌 இடையில் சில விடயங்களை தவற விட்டிருந்தேன் என்று பின்னர் தெரிந்து கொண்டேன், வில்லவன். நீங்கள் சொன்ன பின் தான் முடிவிலும் ஒரு நிறைவு இல்லை புரிகின்றது. மனதில் இருந்தது சரியாக வெளியில் வரவில்லை என்று நினைக்கின்றேன். பொதுவாகவே எதையும் எழுத ஆரம்பித்தால் ஒரே மூச்சில் எழுதிவிடுவேன். இதை அவசரம் அவசரமாக எழுதும் போது, எண்ணமும் சொல்லும் வேறு வேறாகிப் போய்விட்டது........ ஐயர் குண்டாக இருக்க வேண்டும் என்று நினைத்து, அதை செயற்கை நுண்ணறிவுக்கு சொன்ன நான், முதலில் கதை முழுவதையும் எனக்கு சொல்லியிருக்க வேண்டும்..........🤣. மிக்கநன்றி வில்லவன். உங்களின் ஓவியங்கள், எழுத்து, வாசிப்பு எல்லாமே மிகக் கூர்மையானவை..........❤️.
  38. அருமையான யதார்த்தமான கருத்துக்கள் கதையும் நல்லாத்தான் போகுது அண்ணா
  39. கவிதை என்பது ஒரு மொழியல்ல, அது ஒரு உணர்வு என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஓணாண்டியார்…!
  40. கவி அருணாச்சலம் அண்ணாவின் இக்கதை, மாறிவரும் சமுதாய அமைப்புகளையும், கலாச்சார வேறுபாடுகளையும் உணர்வுபூர்வமாகப் பிரதிபலிக்கிறது... காஞ்சனாவின் கதையில், பாரம்பரியத்திற்கும் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் இடையே உருவாகும் மோதல் மிகவும் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது... யேர்மனியில் பிறந்து வளர்ந்த காஞ்சனாவுக்கு, பாரம்பரிய தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படையில் திருமணம் என்பது எவ்வளவு சிக்கலானதாக இருக்கிறது என்பதைக் கதையாளர் மிக நுட்பமாகக் காட்டியுள்ளார்... திருமணத்திற்கு பிறகு காஞ்சனா சந்திக்கும் உணர்ச்சிப் போராட்டங்கள், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் கலாச்சார மோதல்கள், அவளது மனநிலை – இவையனைத்தும் நம்மை யதார்த்த உணர்விற்கு கொண்டுசெல்கிறது... காஞ்சனா தனது வாழ்க்கையை தன் விருப்பப்படி அமைத்துக் கொள்ள முடிவெடுப்பது, பெண்களின் வாழ்க்கையில் ஒரு புதிய திசையை குறிக்கிறது... வாழ்க்கை முழுவதும் அடக்குமுறைக்கு உட்பட்டு வாழ்வதை விட, தன்னம்பிக்கையுடன் முடிவெடுத்து, சுயநிறைவை அடைவது என்பது இக்கதையின் முக்கியப் பொருள்... இது, இன்றைய காலத்திற்கேற்ப பெண்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே கட்டுப்படுத்தும் நிலையை பிரதிபலிக்கிறது... அமைதியற்ற வாழ்க்கை மத்தியில், வீட்டுக் கட்டிலில் அமைதியான தூக்கம் கிடைப்பது என்பது, நிம்மதியும் விடுதலையும் குறிக்கும் அழகிய முடிவாகவே பார்க்கப்படுகிறது... காஞ்சனாவின் முடிவு, பெண்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே வழிநடத்தும் காலத்தின் பிரதிபலிப்பாக திகழ்கிறது… முடிவாகச் சொல்லப்போனால், “தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே” என்பது காஞ்சனாவின் மனநிலையை மட்டும் அல்ல, பெண்கள் தங்களின் வாழ்க்கையில் அமைதி பெறும் தருணத்தைக் குறிக்கும் சிறப்பான உவமையாகும்…
  41. ரசோதரன், உங்கள் கதை நடை மிக அழகாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் இருக்கிறது... கோவிலின் வரலாறு, அதில் நிகழ்ந்த மாற்றங்கள், அதனால் ஏற்பட்ட மனிதர்களின் நிலைமைகள் ஆகியவை மிகவும் நுட்பமாக விரித்துரைக்கப்பட்டுள்ளன... “கணவனே கண் கண்ட தெய்வம்” என்பதைக் கொஞ்சம் வேடிக்கையாக எழுதியிருந்தாலும், அதன் பின்னணியில் உள்ள சமூக மாற்றங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகள் ஆழமானவை... அதுவும், வட இந்தியர்களின் பூர்வீக சம்பிரதாயங்கள் தென்னிந்திய சமூகவுடன் எப்படி கலந்துவிட்டன, அந்த கலவையின் தாக்கங்கள், பூசகர் மரபு, அதில் உள்ள ஆண்கள்-பெண்கள் இடையிலான வேறுபாடுகள் போன்றவை நம் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை கண்கூடாக காட்டுகின்றன... இவை அனைத்தும் வாசகனை சிந்திக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது... “பண்பாட்டில் மாற்றம் ஏற்படும் போது, சமுதாயத்தில் ஏற்படும் ஆதிக்கங்களும் சமநிலையின்மை உள்ள உரையாடல்களும் தழுவிக்கொள்ளும்” என்பது உங்கள் எழுத்தின் தீம் என்று தோன்றுகிறது... இது விரிவாக எழுதப்பட வேண்டிய தலைப்பு... //“எங்கே போனாலும் பின்னுக்கு நிற்பது அல்லது இருப்பது என்பது சௌகரியமாக இருக்கின்றது. பின் வரிசைக்கு பின்னால் இருந்து எவரும் கவனிக்காமல் இருப்பது ஒரு சுதந்திரமானஉணர்வைக் கொடுக்கின்றது போல.”// என் இனம் அண்ணை நீங்கள்.. பிளைட்டில்,றெயினில் கூட பின் வரிசையைத்தான் தெரிவு செய்வேன்.. முன் வரிசையில் இருந்தால் எல்லோரும் என்னைப்பார்ப்பது போலவே நெளிவேன்… பின் இருக்கையில் இருக்கும்போது அவ்வளவு கன்பிடன்ஸ் உம் சுதந்திரமும் வரும்.. சிலவேளை நான் தன்னம்பிக்கை இல்லாதவன் அதனால்தான் இப்படியோ என்று என்மேல் நானே கோபப்பட்டதுண்டு.. தொடர்ந்து எழுதுங்கள், வாசகர்கள் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்..!
  42. இதே போன்ற முயற்சிகளில் இந்த துறையில் இப்பொழுது தான் பிரபலமானாலும், இலக்கிய உலகில் இது போல காலத்துக்கு காலம் நடந்து கொண்டேயிருக்கின்றது.சில ஈழப் பின்புலம் உள்ள எழுத்தாளர்கள் உட்பட சிலர் மிகவும் வெளிப்படையாகவும், பல இடங்களில் வேண்டும் என்றே திணித்து எழுதுவது போன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான சொற்களும், விவரணைகளும் இருந்தாலே அது ஒரு உச்சமான இலக்கியம் என்றும் ஒவ்வொரு காலத்திலும் ஒரு பிரிவினரால் கருதப்படுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் வெறும் வார்த்தை ஜாலங்கள், அது எந்த வகை என்றாலும், டி ராஜேந்தர் வகை என்றாலும், அராத்து வகை என்றாலும், தூத்துக்குடி கொத்தனார் வகை என்றாலும், காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போய்விடும். ஒரு உடனடி மனக் கிளர்ச்சியை மட்டுமே கொடுக்கும் எந்த படைப்பும் நீண்ட காலம் தங்கி நிற்பதும் இல்லை. ஒரு மனிதனின் அடிமனதில் போய் தங்கி நிற்பதுக்கு எதுவும் இல்லாத எந்த வகையான படைப்பும் மறைந்து விடும் என்பதே என் அனுபவம்.
  43. " நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசியுமாம் " இதுக்குத்தான் காலாகாலத்தில் கலியாணத்தை செய்து துலையுங்கோ என்று பெற்றோர்கள் பொடியலைப் பார்த்துக் கத்துவது . ...... கோவிலுக்கோ , விழாக்களுக்கோ மனிசியோடு போகவில்லையென்றால் கோயில் மாடும் ஆண்களை மதிக்காது . ........ எப்போதும் அவள்தான் 1 (ஒன்று ) பின்னால் வரும் பூஜ்யங்கள்தான் புருசன்மார் . ........! 😂 நல்லாயிருக்கு கதை ரசோ .......!
  44. பெரியார் தமிழ் மொழியை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறியது ஏன்? பட மூலாதாரம்,DHILEEPAN RAMAKRISHNAN கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பெரியார் மீது அவருடைய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறினார் என்பதுதான். நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் 11ஆம் தேதியன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல், "தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை ஒவ்வொரு அறையிலும் (திமுகவினர்) வைத்திருக்கின்றனர். அவருக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர், திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கின்றனர். ஆனால், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறியுள்ளார்" எனப் பேசினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இத்தகைய விமர்சனத்தைப் பெரியார் மீது வைத்திருக்கிறார். உண்மையிலேயே பெரியார் தமிழ் மொழியை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறினாரா? தமிழ் மொழி குறித்த அவருடைய பார்வை என்ன? பெரியார் கூறியது என்ன? தமிழை 'காட்டுமிராண்டி மொழி' என்று பெரியார் கூறியிருப்பதாகத் தெரிவிக்கிறார், பிபிசி தமிழிடம் பேசிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன். ஆனால், அதை எந்த அர்த்தத்தில் கூறினார் என்பதைப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்கிறார் அவர். "இதிகாசங்கள், புராணங்களைச் சுட்டிக்காட்டி, தமிழ் மொழியில் சாதி, மதத்தைப் பாதுகாக்கும் வகையிலான அம்சங்கள் இருப்பதை பெரியார் பல சந்தர்ப்பங்களில் கோடிட்டுக் காட்டியுள்ளார். மாறாக, மனித வளர்ச்சிக்கும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பதற்கும் தமிழில் எதுவும் இல்லை என்பதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். அந்த அர்த்தத்தில்தான் காட்டுமிராண்டித்தனமான விஷயங்கள் தமிழ் மொழியில் இருப்பதாக பெரியார் கூறினார்" என்கிறார் கலி. பூங்குன்றன். பெரியாரின் நோக்கம், தமிழ் மொழியைக் குறை கூறுவதாக அல்லாமல், விஞ்ஞான ரீதியாக தமிழ் மொழி சீர்திருத்தம் அடைய வேண்டும் என்பதே இதன் பொருள் எனச் சுட்டிக்காட்டுகிறார் அவர். இருப்பினும், மேடைகளில் 'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என்று பெரியார் பிரசாரம் செய்ததில்லை என்றும் ஓரிரு சமயங்களில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகின்றன, பெரியாரிய இயக்கங்கள். தாய் மொழி என்பதற்காகவே அதிலுள்ள பிற்போக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டக் கூடாது என்று அர்த்தம் இல்லை என்பதே பெரியாரின் வாதமாக இருந்ததாக பூங்குன்றன் கூறுகிறார். மேலும், தமிழ் மொழியின் பழம்பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிராமல், புதுமையை நோக்கி நவீனத்துடன் மொழி பரிணமிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே பெரியார் ஒரு குறையாக இதைக் கூறாமல், ஓர் அக்கறையின் வெளிப்பாடாகவே குறிப்பிட்டதாக, திராவிட இயக்கத்தினர் கூறுகின்றனர். இளையராஜாவின் சிம்ஃபொனி வெளியீடு எப்போது? நேரில் கண்டு பரவசமடைந்த ரசிகர்கள் எதிர்பார்ப்பு12 மார்ச் 2025 '100 முறைகூட மன்னிப்பு கேட்கத் தயார்' - பி.எம்.ஶ்ரீ பள்ளி விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் கூறுவது என்ன?12 மார்ச் 2025 தமிழ் மொழி குறித்த பெரியாரின் பார்வை பெரியாரை பொறுத்தவரையில் தனக்கு எவ்விதமான பற்றும் இல்லை என்றே தொடர்ந்து கூறி வந்திருக்கிறார். "எவனொருவன் மனித சமுதாயத்துக்காகத் தொண்டாற்ற வருகிறானோ அவனுக்கு நாட்டுப் பற்று, சாதிப் பற்று, மொழிப் பற்று உள்ளிட்ட எவ்விதப் பற்றும் இருக்கக் கூடாது," என்று அவர் கூறியிருக்கிறார். "மொழி என்பது போர்க்கருவி போல, போர்க் கருவிகளில் மாறுதல் ஏற்பட்டதைப் போல், மொழியிலும் மாறுதல் ஏற்பட வேண்டும்" என்பதே மொழி குறித்த பெரியாரின் பார்வை என்று, 'தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?' என்ற தனது புத்தகத்தில் விளக்குகிறார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. "தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பாய் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. இந்த நோய்க்கு முக்கியக் காரணம், மதச்சார்புடையோரின் கையில் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான்" எனப் பெரியார் கூறியுள்ளதாக, அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பான 'மொழி - எழுத்து' நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.பி. தொகுதி மறுவரையறை: 7 மாநில முதல்வர்களை ஒன்று திரட்டும் ஸ்டாலின் முயற்சி தேசிய அளவில் தாக்கம் செலுத்துமா?3 மணி நேரங்களுக்கு முன்னர் பிஎம் ஸ்ரீ பள்ளி என்பது என்ன? தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுவிட்டு பின் நிராகரித்ததா? முழு பின்னணி12 மார்ச் 2025 தமிழ் மொழி குறித்த தனது கருத்துகளை 'விடுதலை' நாளிதழில் தொடர்ச்சியாகப் பதிவு செய்திருக்கிறார் பெரியார். அவற்றைத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் கி.வீரமணி. 1970ஆம் ஆண்டு, டிசம்பர் 1 விடுதலை நாளிதழில் பெரியார் குறிப்பிட்டுள்ளவை: ''தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சியடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ் மொழி, ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும் பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ் மீது எனக்குத் தனி வெறுப்பு எதுவும் இல்லை.'' ''நான் வீட்டிலும், வெளியிலும் பேசுவது தமிழ், படிப்பது தமிழ், எழுதுவதும் தமிழ், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று சில முறைகளைப் புகுத்தியவனும் நான்தான். தமிழ் வளர்ச்சியடையாத பழங்கால மொழியாக அப்படியே இருந்து வருகிறது. விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை. ஆகையால், தமிழ் மொழியைப் பயிற்சி மொழியாக எடுத்துப் படிக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் சலுகை தருவதாகக் கூற வேண்டியதாகிறது." பெரியாருடன் முரண்பட்ட திமுக அவரது சித்தாத்தங்களை ஆதரிப்பது ஏன்? 1967 தேர்தலுக்குப் பிறகு என்ன நடந்தது? காசிக்கு 'துறவு' போனவர் பெரியார் ஆனது எப்படி? பெரியார் சொன்னதாக சீமான் சர்ச்சை கருத்து - பெரியார் உண்மையில் அப்படி குறிப்பிட்டாரா? பெரியார்: புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர் பெரியார் தமிழுக்காக என்ன செய்தார்? படக்குறிப்பு,பெரியாரின் மொழி குறித்த பார்வையைத் தனது புத்தகத்தில் விளக்கியுள்ளார் கி.வீரமணி "பெரியார் தமிழுக்கான எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். 1930களில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை பெரியார் முன்னின்று நடத்தினார். அப்போதுதான், தமிழ்நாட்டிலேயே தமிழ் மொழியில் மறுமலர்ச்சி வருகிறது. அந்தக் காலகட்டதில் தமிழில் பல வடமொழி வார்த்தைகள் கலந்திருந்தன. அதையெல்லாம் மாற்றி, தமிழ் வார்த்தைகளை அன்றாடம் உபயோகிக்குமாறு செய்தார்," என்று பெரியார் தமிழ் மொழிக்காகச் செய்துள்ளவற்றைப் பட்டியலிட்டார் கலி. பூங்குன்றன். மேலும், தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதை ஊக்குவித்தார். ஊர்களின் பெயர்களில் சமஸ்கிருத ஊடுருவல் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டியதாகவும், கோவிலில் வழிபாட்டு மொழியாக தமிழ் இருக்கக்கூடாதா என்று பெரியார் கேள்வியெழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். பலூச் விடுதலை ராணுவம்: பாகிஸ்தானில் பயணிகளுடன் ரயிலை கடத்தி மிரட்டும் இவர்கள் யார்?12 மார்ச் 2025 யுக்ரேன் போர்: 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஸெலன்ஸ்கி தரப்பு - ரஷ்யாவின் முடிவு என்ன?12 மார்ச் 2025 அதோடு, தமிழ் மொழியின் ஆக்கபூர்வமான விஷயங்களை சுட்டிக் காட்டிய அதே நேரம், அதன் குறைகளையும் எடுத்துரைத்தவர் பெரியார் என்கிறார் கலி. பூங்குன்றன். தான் நடத்திய பத்திரிகைகளுக்கு விடுதலை, குடிஅரசு, உண்மை, பகுத்தறிவு, புரட்சி என தமிழ் பெயர்களையே பெரியார் சூட்டியுள்ளார். இந்தப் பத்திரிகைகளில், ஆயிரக்கணக்கிலான கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். தமிழை அறிவார்ந்த மொழியாக மாற்ற நினைத்தே அனைத்து மேடைகளிலும் பெரியார் திருக்குறளை முன்னிறுத்தி, திருக்குறள் மாநாடுகளை நடத்தியதாக, பெரியாரிய இயக்கத்தினர் கூறுகின்றனர். தமிழ் மொழியை எழுதுவதை எளிமையாக்கி எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார் முன்னிறுத்தியுள்ளார். பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரயிலில் இருந்து தப்பிய பயணிகள் கூறுவது என்ன? - தற்போதைய நிலவரம்4 மணி நேரங்களுக்கு முன்னர் இயேசுவை முடிவெட்டச் சொன்ன டிக்டோக் பிரபலம் - இந்தோனீசியாவில் 3 ஆண்டு சிறை12 மார்ச் 2025 தமிழ் மொழியில் சீர்திருத்தம் தமிழ் மொழியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த பெரியார் பல முயற்சிகளை மேற்கொண்டதாக மூத்த செய்தியாளர் ப. திருமாவேலன் எழுதிய 'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?' எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, "தமிழ்நாட்டு ஆட்சி தமிழில்தான் இருக்க வேண்டும். அது தமிழாட்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார் பெரியார்" எனத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமாவேலன். "தமிழையும் மதத்தையும் பிரித்து, தமிழை அறிவு மற்றும் அறிவியல் மொழியாக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த அடிப்படையில் அனைத்து இடங்களிலும் தமிழ் ஆட்சி செல்ல வேண்டும்" என பெரியாரின் நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார் அவர். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழி வாரி ராஜ்ஜியங்களாக பிரிக்கப்பட்டபோது, 1956ஆம் ஆண்டு திராவிடர் கழகம் தஞ்சையில் நடத்திய மாநாட்டில், சென்னை ராஜ்ஜியம் எனும் பெயருக்குப் பதிலாக தமிழ்நாடு எனும் பெயரை வழங்க வேண்டும் என முதன்முதலில் கூறியது பெரியாரும் திராவிடர் கழகமும்தான் என்று கி.வீரமணி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஹிந்தி, சமஸ்கிருதம் குறித்து பெரியார் கூறியது என்ன? ஹிந்தி எதிர்ப்பில் பெரியார் மிகவும் வலுவாக இருந்ததாக திருமாவேலன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். "பெரியாரின் போராட்ட குணத்தை அதிகமாக்கியது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்தான். 1938ஆம் ஆண்டில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வடிவத்தைக் கொண்டாலும், பெரியார் தமது ஹிந்தி எதிர்ப்பை 1929ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டார். 7.3.1929 நாளிட்ட 'குடிஅரசுவில்' ஹிந்தி எதிர்ப்பைத் தொடங்கினார். 'தமிழிற்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் ரகசியமும்' என்பதுதான் 'சித்திரபுத்தன்' எனும் புனைப்பெயரில் அவர் எழுதிய கட்டுரைக்கு இட்ட தலைப்பு" என்று தனது நூலில் திருமாவேலன் குறிப்பிட்டுள்ளார். ஹிந்தி திணிப்புக்கு எதிராக மட்டுமின்றி சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு எதிராகவும் தொடர்ச்சியாகத் தனது கருத்துகளை பெரியார் பதிவு செய்துள்ளார். "இன்று தமிழ்நாட்டில் 'சமஸ்கிருதம்' என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காகவாவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் எதிலாவது ஒற்றுமை-பொருத்தம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில், தமிழர்களின் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும் ஏதாவது ஒரு காரியத்துக்கு இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா?" என்று பெரியார் கேள்வியெழுப்பியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2gp21gn0vo
  45. போட்டியில் கலந்து கொள்ளுங்கள் ஆர்வம் தீயாக பற்றிக்கொள்ளும், தவறவிட்ட முதல்வர் பதவி கிட்டும் (தெரியாத துறையில் (ஐ பி எல்) தான் முன்னேறலாம்), ஐ பி எல் போட்டி முடியும் வரை மஞ்சள் உடை அணிந்தால் உங்களுக்கு அதிர்ஸ்டம் கிட்டும், தவிர்க்க வேண்டிய நிறம் ஊதா (அதிர்ஸ்ரமற்ற).
  46. ட்ரம்பிற்கு எதிராகத் திரும்பும் ஐரோப்பிய நாடுகள்? கிரீன்லாந்தில் இன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கிரீன்லாந்து மீது அமெரிக்கா நேரடி போருக்கு தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடாக டென்மார்க் உள்ளது. டென்மார்க்கின் ஒருபகுதியாக கிரீன்லாந்து உள்ளது. இது டென்மார்க்கின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிரதேசமாகும். இந்நிலையில் கிரீன்லாந்தை கைப்பற்ற போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருவதால் அங்கு போர் நடத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா போர் தொடுத்தால் அது மாபெரும் போராக மாறலாம். ஏனெனில் கிரீன்லாந்தை உள்ளடக்கிய டென்மார்க் நாடு என்பது நேட்டோவில் உறுப்பினராக உள்ளது. நேட்டோவில் மொத்தம் 29 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் அமெரிக்காவும் ஒன்று. ஆனால் நேட்டோவில் இருந்து அமெரிக்கா வெளியேற உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கூறி வருகிறார். இவ்வாறான சூழலில் அமெரிக்கா, கிரீன்லாந்தில் போர் தொடுத்தால் நிச்சயம் நேட்டோ உறுப்பு நாடுகள் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும். ஏனெனில் நேட்டோவின் விதியின்படி அதில் உறுப்பினராக உள்ள நாட்டின் மீது யாராவது போர் தொடுத்தால் நேட்டோ நாடுகள் ஒன்றிணைந்து பதிலடி கொடுக்க வேண்டும். இதனால் அமெரிக்கா கிரீன்லாந்து மீது போரை தொடங்கும் பட்சத்தில் அது ஐரோப்பா – அமெரிக்கா இடையேயான போராக மாறலாம். நேட்டோவில் ஐரோப்பிய நாடுகள் தான் அதிகம் உள்ளன. ஏற்கனவே உக்ரேன் மீதான ரஷ்யா போர் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் காணப்படுகின்றது. இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா, கிரீன்லாந்தில் போரை தொடங்கினால், நிச்சயம் அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகள் இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். Athavan Newsட்ரம்பிற்கு எதிராகத் திரும்பும் ஐரோப்பிய நாடுகள்?கிரீன்லாந்தில் இன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கிரீன்லாந்து மீது அமெரிக்கா நேரடி போருக்கு தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடாக டென்மார்க் உள்ளது. டெ...
  47. 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR RCB No Result Tie RCB 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH RR No Result Tie SRH 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK MI No Result Tie CSK 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC LSG No Result Tie LSG 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT PBKS No Result Tie GT 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RR KKR No Result Tie KKR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH LSG No Result Tie SRH 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK RCB No Result Tie CSK 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT MI No Result Tie MI 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC SRH No Result Tie SRH 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RR CSK No Result Tie CSK 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI KKR No Result Tie MI 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG PBKS No Result Tie LSG 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB GT No Result Tie RCB 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR SRH No Result Tie KKR 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG MI No Result Tie LSG 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK DC No Result Tie CSK 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS RR No Result Tie PBKS 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR LSG No Result Tie LSG 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH GT No Result Tie SRH 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI RCB No Result Tie MI 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS CSK No Result Tie PBKS 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT RR No Result Tie GT 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB DC No Result Tie RCB 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK KKR No Result Tie CSK 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG GT No Result Tie LSG 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH PBKS No Result Tie SRH 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR RCB No Result Tie RR 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC MI No Result Tie DC 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் LSG CSK No Result Tie LSG 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS KKR No Result Tie PBKS 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC RR No Result Tie DC 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI SRH No Result Tie MI 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB PBKS No Result Tie RCB 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT DC No Result Tie GT 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR LSG No Result Tie RR 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS RCB No Result Tie PBKS 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI CSK No Result Tie MI 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR GT No Result Tie KKR 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG DC No Result Tie LSG 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH MI No Result Tie SRH 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB RR No Result Tie RCB 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK SRH No Result Tie CSK 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR PBKS No Result Tie KKR 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI LSG No Result Tie LSG 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC RCB No Result Tie DC 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR GT No Result Tie RR 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC KKR No Result Tie DC 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK PBKS No Result Tie CSK 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் RR MI No Result Tie MI 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT SRH No Result Tie GT 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB CSK No Result Tie RCB 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR RR No Result Tie KKR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS LSG No Result Tie PBKS 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH DC No Result Tie DC 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI GT No Result Tie MI 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR CSK No Result Tie CSK 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS DC No Result Tie DC 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG RCB No Result Tie LSG 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH KKR No Result Tie SRH 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS MI No Result Tie PBKS 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC GT No Result Tie GT 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK RR No Result Tie CSK 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB SRH No Result Tie RCB 65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT LSG No Result Tie GT 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI DC No Result Tie MI 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR PBKS No Result Tie RR 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB KKR No Result Tie RCB 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT CSK No Result Tie GT 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG SRH No Result Tie LSG 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR Select LSG Select LSG LSG MI Select MI MI PBKS Select PBKS Select RR Select RR Select RCB Select RCB RCB SRH Select SRH Select 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) LSG #2 - ? (3 புள்ளிகள்) CSK #3 - ? (2 புள்ளிகள்) RCB #4 - ? (1 புள்ளி) MI 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! RR 74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team RCB 76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) RR 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shubman Gill 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Pat Cummins 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) RACHIN RAVINDRA 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Matheesha Pathirana 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Nicholas Pooran 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.