Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87988
    Posts
  2. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    1836
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    3054
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20012
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/14/25 in Posts

  1. யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் மலையகத் தமிழர்களை “கப்பலில் வந்தவர்கள்” எனவும், வடக்கு முஸ்லிம்களை “இவங்கள விரட்டினது தவறு; இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும்” எனவும் கூறியுள்ளார்...(இதைவிட நிறைய இனவாதத்தை அவர் வீடியோக்களில் கக்கி உள்ளார்.. அவர் முகநூலில் இன்றும் உள்ளன..) இவ்வாறான கருத்துக்கள் சமூகத்தில் இனவாதத்தை ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது... மலையக தமிழர்கள் மற்றும் வடக்கு முஸ்லிம்கள் பற்றிய மேற்சொன்ன கருத்துக்கள் கடைந்தெடுக்கப்பட்ட இனவாதம்... அருவருப்பான வார்த்தைகள்... தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதத்தை உண்டாக்கும் காரியம்... மலையகத்தமிழர்களை வடகிழக்கு தமிழர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயோக்கியத்தனம் மற்றும் முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுக் காயத்தை மீண்டும் கிண்டி சுயஇன்பம் தேடும் சைக்கோத்தனம்… பாதிக்கப்பட்ட ஒரு இனம் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற ஒரு அசட்டு உற்சாகம் பைத்தியக்காரத்தனமானது... இது தனிப்பட்ட ஒருவருடைய கருத்து என்று கடந்து போக முடியாது, மாறாக, விரும்பியோ விரும்பாமலோ யாழ்ப்பாணத் தமிழர்களை பாராளுமன்றத்தில் பிரிதிநிதிப்படுத்துகிற ஒரு பைத்தியக்காற பாராளுமன்ற உறுப்பினருடைய வார்த்தைகள் இவை… அர்ச்சுனாவின் இக்கருத்துக்கள் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது... பலர் இவரது கருத்துக்களை இனவாத பிதற்றல்கள் எனக் கண்டித்து வருகின்றனர்... இது தமிழர் சமூகத்துக்குள் இனவாத எண்ணங்களை வெளிப்படுத்துவதோடு, முஸ்லிம் மலையக தமிழ் சமூகத்துடன் உள்ள உறவுகளை பாதிக்கும் அபாயமும் உள்ளது… சிங்களவர்களையோ, இஸ்லாமியர்களையோ ‘இனவாதிகள்’ என்று நாம் கூறும் போது ‘நாம் ஒருபோதும் இனவாதிகளாக இருந்ததில்லையா?’ என்கிற ஒரு கேள்வியை நம்மிடம் கேட்டுப்பார்க்கவேண்டும்… இனவாத கருத்துக்களை எதிர்கொள்ளும் போது, அவற்றை கண்டித்து, சமூகத்தில் நல்லிணக்கத்தை பேணுவது முக்கியம்... அர்ச்சுனாவின் கருத்துக்கள் இதற்கு புறம்பாக உள்ளதால, அவற்றை பொதுவெளியில் கண்டிப்பது சமூகத்தின் அறச்செயலாகும்… இவ்வாறான வெறுப்புக்கருத்துக்கள் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடியவை... அவை இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளை பாதிக்கக்கூடும்... எனவே, சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை பேண, இவ்வாறான கருத்துக்களை கண்டிப்பது அவசியம்... இப்படிப்பட்ட அயோக்கியர்களின்,படித்த முட்டாள்களின் இனவாத பிதற்றல்களை கண்டும் காணாமலும் இருப்பது ஆபத்தானது... காரணம் மக்கள் இதை ஏற்றுக்கொண்டார்கள் என்கிற ஒரு முட்டாள்தனமான முடிவுக்கு இப்படி வாந்தி எடுத்து வைப்பவர்கள் வந்துவிடுவார்கள்... வந்துவிடுகிறார்கள்... ஆதலால், குறைந்தபட்சம் இவற்றைப் பொதுவெளியில் கண்டிப்பது ஒரு அறம் கொண்ட சமூகமாக முக்கியமானது... இந்த பைத்தியக்காறனுக்கு எல்லாம் ஒரு காலத்தில் பாராளுமன்றம் போக ஆதரவாக எழுதினேன் என்பதை நினைத்து வெட்கமும் வேதனையும் அடைகிறேன்.. இந்த கடைந்தெடுத்த அயோக்கியனுக்கு யாழ் இணைய சமூகமும் தன் கண்டனங்களை தெரிவிக்கவேண்டும்.. —-—
  2. பார்த்தீனியம் ---------------------- கள்ளியும் முள்ளும் இருந்த வறண்ட நிலத்தில் பச்சையாக ஒன்று புதிதாக வந்தது பார்க்க அழகாகவும் படபடவென்று வளருதே என்றும் இன்னும் வளர்த்தனர் அதில் இருக்கும் முட்கள் அவை என்ன முட்கள் அவை வளர வளர போய்விடும் என்றனர் அதை வளர்த்தவர்கள் கெட்ட வாடை வருகுதே என்றால் ஆனால் பசுமையாக இருக்குதே இது நிலத்தை காக்கும் ஆடு மாட்டைக் காக்கும் இப்படி ஒன்று முன்னர் இருந்ததேயில்லை என்றனர் நாங்கள் மூக்குகளை பொத்தி விட்டால் அதன் வாடை அண்டாது என்றும் சொன்னவர்கள் வாய்களை அடைத்தனர் கள்ளியும் முள்ளும் காணாமல் போனது பச்சை செடியின் சாதனை ஆனது பரந்து வளர்ந்த பச்சை செடி விஷத்தை கொட்டிக் கொட்டி வறண்ட நிலத்தை இன்னும் கெடுத்து அருகில் வருபவற்றை முள்ளாலும் கிழித்து கெட்ட வாடையை பரப்பி சீரழித்துக் கொண்டே இருக்கின்றது இதுவரை மூக்குகளை மூடிக் கொண்டு இருந்தவர்கள் இனி கண்களையும் மூட வேண்டியது தான் விஷத்தை முளையிலேயே கிள்ளாமல் எத்தனை தடவைகள் தான் தவற விடுவது.
  3. பெண்களின் மானத்தைக் காயப்படுத்தும் அவதூறுகள்: சமூக ஊடகங்களில் ஏற்படும் ஆபத்துகள்… சமூக ஊடகங்கள் இன்று தகவல் பரிமாற்றத்திற்கு மிகுந்த பங்களிப்பை வழங்குகின்றன... ஆனால், சிலர் இதை தவறாக பயன்படுத்தி, தனிநபர்களின் உரிமைகளை மீறுவதும் அவதூறு செய்யவும் செயல்படுகின்றனர்... கடந்த 2010-களில் நியூஜஃப்னா என்ற இணைய தளம், பொய்யான தகவல்களையும், ஆபாசமான கட்டுரைகளையும் வெளியிட்டு, பலரின் தனிப்பட்ட வாழ்க்கையை சீரழித்தது... இதில், பலரின் புகைப்படங்களை தவறாக இணைத்து, அவதூறுகளை பரப்பி, அந்த நபர்களின் குடும்பங்களையும் சமூக வாழ்வையும் பாதித்தனர்... அந்தச் செயல்கள் தற்போது மறுபடியும் தோன்றத் தொடங்கியுள்ளன... ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்ற முகநூல் பக்கம், பெண்களின் நிர்வாண படங்களையும் அவதூறுகளையும் வெளியிட்டு, பெண்களின் மானத்தையும் தனியுரிமையையும் உடைத்து வருகின்றது…. இது சமூக ஒழுங்கை சீரழிக்கக்கூடிய மிகப்பெரிய ஆபத்தாகும். சமூக ஊடகங்களில் இவ்வாறான செயல்களை தவிர்க்கும் வகையில், பொறுப்பற்ற சமூக விரோத செயல்களை தடுக்க அரசு மற்றும் பொது அமைப்புகள் களமிறங்க வேண்டும்... இந்த அவதூறுகளுக்கு ஆதரவளிக்கும் முக்கியக் காரணம், சமூகத்தில் பொறுப்பில்லாத சில நபர்களின் செயல்களே... பொய்யான தகவல்களை பகிர்வது, அவற்றுக்கு விருப்பு செய்து பகிர்வது போன்ற செயல்கள், தவறான தகவல்களை விரைவாக பரப்பக் கூடும்... இதனால் பலர் ஆபத்துக்குள்ளாகின்றனர்... நியூஜஃப்னா போலவே, ஊழல் எதிர்ப்பு அணி வன்னி பக்கமும் சமூக சீரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்...எனக்கு தெரிந்து, நியூஜஃப்னாவை விட இந்த பக்கம் நம் சமூகத்தில் ஏற்படுத்தப்போகும் சீரழிவு மிகப்பெரியதாக இருக்கும்… பெண்களின் பாதுகாப்பு, தனியுரிமை, சமூக நெறிமுறைகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்றே எடுக்கப்பட வேண்டும்... சமூகத்தில் பொறுப்பற்ற நபர்கள் பரப்பும் தவறான தகவல்களை தடுக்க, சமூகவிருப்பங்களைப் பகிரும் முன் உண்மையைக் கண்டறியும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்... பெண்களின் பாதுகாப்பிற்கும், தனிமனித உரிமைக்குமான ஆதரவை உருவாக்கும் முயற்சியில் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய கட்டாயம் உள்ளது… இந்த முகநூல் பக்கத்தை யாழ் சைக்கோ எம்பி அர்ச்சுனாவும் தமிழடியான் எனும் யூரியுப்காறரின் தலைமையில் சைக்கோ அர்ச்சுனாவின் சில அடிப்பொடிகளும் நடத்துவதாக நம்பத்தகுந்தவர்களிடம் இருந்து தகவல் கிடைக்கிறது.. குறிப்பிட்ட நபர்களும் அதை அந்த பக்கத்தில் மறைமுக உறுதிப்படுத்தி உள்ளனர்.. ஆயினும்.. நியூஜஃப்னாவில் இருந்து இந்த ஊழல் எதிர்ப்பு வன்னி அணி பக்கம் வரை யார் மூலகாரணம் அர்ச்சுனாவோ அல்லது அவரது ஆதரவாளர்களோ அல்லது அவர்போன்ற சைக்கோக்களோ அல்ல... அர்ச்சுனாவில் பழியை போட்டுவிட்டு எல்லா நேரமும் தப்ப முடியாது:.. அர்ச்சுனாவோ, கிருஷ்ணாவோ, ஊழல் எதிர்ப்பு அணியோ.... எங்கட சனம் எண்ட மூடர்கூடத்தின் ஆதரவு இல்லாமல் ஒருத்தரும் இங்க எதுவும் நகர்த்தமுடியாது... உண்மையான Culprits எந்த சமூக பொறுப்புமற்ற மக்கள்தான்… இவற்றை முளையிலேயே கிள்ள யாழ் இணையம் போன்ற சமூக பொறுப்புள்ள அனைத்து ஊடகங்களும் உறுப்பினர்களும் வாசகர்களும் எதிர்வினை ஆற்றவேண்டும்.. —-—-
  4. புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மூன்றாவது தலைமுறையினை எட்டிவிட்ட நிலையில், இளைய ஈழத்தலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றது. அந்தவகையில் பிரான்சின் மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி கவனத்தை பெற்றுள்ள சுஜீவன் முருகானந்தம் எனும் உயர்நிலை மாணவர் உலகத் தமிழர்களின் தேர்வு வாக்குக்கு அழைப்பு விடுத்துள்ளார். மன இறுக்க உளப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள 4-12 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களின் அக-மன நிலையினை உணர்ந்தறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கை வளையல் கருவியொன்றினை உருவாக்கியுள்ளார். இக்கருவியூடாக அச்சிறார்களுக்கு ஏற்படுகின்ற மன இறுக்க உளப் பாதிப்புக்களை உடனடியாகவே கைபேசி வழியாக எச்சரிக்கும் திறன் கொண்டதோடு ஏற்படுகின்ற பாதிப்புக்களை முறையாக ஆவணப்படுத்தும் திறன்கொண்டதாகவும் இக்கருவி உருவாக்கம் பெற்றுள்ளது. நாடளாவிய ரீதியில் இத்துறைசார்ந்து 81 பேர் இதனை உருவாக்கியிருந்த நிலையில், இவர்களில் 6 பேர் தேசிய அளவிலான இறுதித்தேர்வுக்கு சென்றுள்ளனர். ஒவ்வொருவரது உருவாக்க கருவியின் பயன்பாடு, அதன் அவசியம் குறித்தான ஆய்வுகளின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக இறுதிச்சுற்றில் கருவி தேர்வு செய்யப்படவுள்ளது. இதில் மூன்றாம் நிலையாக பொதுமக்களும் தங்களுக்கு தேவையான கருவியினை தேர்வு செய்ய முடியும். அந்தவகையில் இவர்களில் ஒருவராக சுஜீவன் முருகானந்தம் அவர்கள் “cœur léger ” எனும் பெயரில் தனது கருவியை உருவாக்கியுள்ளார். எதிர்வரும் மார்ச் 14 ம் திகதி வெள்ளிக்கிழமை ஐரோப்பிய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னராக குறித்த https://gpseo.fr/prix-entrepreneur/coeur-leger-le-bracelet-qui-aide-les-enfants-gerer-leurs-emotions இந்த இணையத்தளத்துக்கு தேர்வுக்கான வாக்களிப்பினை மேற்கொள்ள வேண்டும். மின்னஞ்சல் பதிவுடன் சுஜீவன் முருகானந்தம், உருவாக்கியுள்ள “cœur léger ” எனும் கருவியினை தேர்வு செய்யும்பட்சத்தில் ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். 1995 யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு பின்னராக கிளிநொச்சியில் தற்காலிகமாக வாழ்ந்து அங்கிருந்து 2000 ஆம் ஆண்டுகளில் 7 வயதில் பிரான்சில் கால்பதித்த இந்த மாணவரே சுஜீவன் முருகானந்தம் ஆவார். https://thinakkural.lk/article/315975
  5. மூன்று அல்லது நான்கு நாட்களாக சவரம் செய்யாத முகம், கலைந்த தலை மயிர், அழுக்கான ஜக்கெற், நிறைந்த சோகம்... என பஸ் தரிப்பிடத்தில் அவன் நின்றிருந்தான். விரும்பத்தகாத ஒருவித நெடியும் அவனிடம் இருந்து வந்து கொண்டிருந்தது. அவனது முகத்தைப் பார்த்ததும் தமிழன்தான் என்று புரிந்து கொண்டேன். சனிக்கிழமை காலை நேரம், பஸ் தரிப்பிடத்தில் நானும் அவனும்தான் நின்றிருந்தோம். பஸ் வர இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. அவன் என்னைப் பார்ப்பதைத் தவிர்ப்பது எனக்குத் தெரிந்தது. அவனது பிரச்சினைதான் என்ன என்பதை அறிய விரும்பினேன். கொஞ்சம் நெருங்கிப் போனேன். நான் வருவதை உணர்ந்து ஒரு கணம் என்னைப் பார்த்தான் அந்தக் கணம் எனக்குப் போதுமானதாக இருந்தது. “தமிழோ?” குளிரில் வெடித்த அவனது வறண்ட இதழில் தோன்றிய ஒரு சிறிய புன்னகை தமிழன் என்பதை ஒத்துக் கொண்டது. “நீங்களும் பஸ்ஸுக்குத்தான் நிக்கிறீங்களோ?” தலையை ஆட்டி ஒப்புக் கொண்டான். சைகையால் மட்டும்தான் பேசுவான் என்று நினைத்தேன். ஆனால் பேசவும் செய்தான். “உங்களை எனக்குத் தெரியும். அடிக்கடி கண்டிருக்கிறன்” நான் இருக்கும் நகரில் இப்பொழுது பல தமிழர்கள் வசிக்கிறார்கள். எனக்கும் அவர்களுக்குமான தொடர்புகள் மிக மிகக் குறைவு. ஒவ்வொரு வார இறுதியிலும், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா... என்று ஏதாவது நம் மத்தியில் நடந்து கொண்டேயிருக்கும். எல்லாவற்றுக்கும் போய்க் கொண்டிருக்க முடியாது. ஒரு விழாவுக்குப் போய் இன்னொன்றுக்குப் போகாவிட்டால் பிரச்சினை ஆகிவிடுகிறது. எங்களது கொண்டாட்டங்கள் வரம்பு வரையற்றவை. அதனால் இப்பொழுதெல்லாம் தமிழர்களுக்கு நான் வசிக்கும் நகரத்தில் யாரும் மண்டபங்களைத் தருவதில்லை. நாங்களும் விடுவதாயில்லை. எங்கள் நகரத்தில் இருந்து நாற்பது கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இன்னொரு நகரத்தில் கொண்டாட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம். இப்படியான அசௌகரியங்களால் நான் முற்று முழுதாக விழாக்களைத் தவிர்த்துக் கொண்டு வருகிறேன். அதனால் பலரது தொடர்புகள் எனக்கு இல்லாமற் போய் விட்டன.. புதிதாக வருபவர்களும் என்னுடன் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை. அதனால் பலரை எனக்குத் தெரியவில்லை. “வேலையாலை வாறீங்களோ?” “இல்லை அண்ணா. நேற்று ஒரு விசயமா வந்தனான். இப்ப திரும்பப் போறன்” “ அப்ப நீங்கள் இந்த Stadt (நகரம்) இல்லையோ?” “முந்தி இங்கை தான் இருந்தனான். இப்ப கிறைல்ஸ்ஹைம் எண்ட இடத்திலை இருக்கிறன்” “அங்கையோ வேலை செய்யிறீங்கள்?” “இல்லை, வேலை இல்லை” “ஏன்?” ஏதோ சொல்ல நினைத்தான். அதற்குள் பஸ் வந்துவிட்டது. சனிக்கிழமை அதுவும் காலை நேரம் என்பதால் ஆட்கள் இன்றி பஸ் வெறுமையாக இருந்தது. பஸ்ஸுக்குள் எனது இருக்கையைத் தாண்டிப் போக எத்தனித்தவன் என்னை ஒரு தரம் உற்று நோக்கினான். “இதிலை இருங்கோவன்” எனது இருக்கைக்கு நேரெதிரே இருந்த இருக்கையை அவனுக்குச் சுட்டிக் காட்டினேன். இந்த வார்த்தைகளை எதிர்பார்த்தவன் போல் சட்டென்று அதில் அமர்ந்து கொண்டான். “உங்களுக்கு என்னதான் பிரச்சினை? என்னத்துக்கு இந்தக் கோலம்?” “நான் நாட்டுக்குத் திரும்பிப் போறன்” அவன் இதைச் சொன்னதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவோ சிரமங்களைச் சமாளித்து, பல இலட்சங்களைச் செலவழித்து வெளிநாடு போக வேண்டும் என்று நாட்டில் பலர் இருக்கும் போது, இவன் எதிர்மறையாக இருக்கிறானே என எண்ணிக் கொண்டேன். அவனேயே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் தலை குனிந்திருந்தது. கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு அவனே தொடர்ந்தான். “என்னை அவள் டிவோர்ஸ் எடுத்திட்டாள். இப்ப எனக்கு விசாவும் இல்லை” அவனுடைய நிலைக்கான காரணத்தைப் புரிந்துகொண்டேன். ஆனால் எதற்காக விசா இல்லாமல் போனது? என்ற கேள்வி என்னிடம் இருந்தது. ஆனால் அதைப் பற்றி அவனிடம் கேட்கவில்லை. அவன் சொல்ல விரும்பினால் சொல்லட்டும் என்று விட்டு விட்டேன். “அவள்தான் கல்யாணம் கட்டுறதுக்கு ஸ்பொன்சர் பண்ணி என்னை இஞ்சை கூப்பிட்டவள். கலியாணம் கட்டி வேலையும் செய்து கொண்டிருந்தனான். பிறகு இப்பிடி ஆகிப் போச்சு… டிவோர்ஸ்க்குப் போட்டுது…” பெருமூச்சு ஒன்று அவனிடம் இருந்து வந்தது. அவனே தொடர்ந்தான், எனக்கு விசா முடிஞ்சு போட்டுது. விசாவைப் புதுப்பிக்கப் போனால், அங்கை வைச்சே பிடிச்சு அனுப்பிப் போடுவாங்கள் எண்டு வேலையிடத்திலை சொன்னாங்கள்” “யார் சொன்னது? பைத்தியக்காரத்தனமா இருக்கு. நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறீங்கள். உங்களை ஏன் பிடிச்சு அனுப்பப் போறாங்கள்?” கோபத் தொனியில் வந்த என் பேச்சைக் கேட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தான். “என்னோடை வேலை செய்யிற தமிழாக்கள்தான் சொன்னவையள்” யாரை நோவது என்று எனக்குத் தெரியவில்லை. “சரி.. டிவோர்ஸ் கேஸ் என்னாயிற்று?” “அது முடிஞ்சு ஒரு வருசமாச்சு. இப்ப அவள் இந்தியாவுக்குப் போய் கலியாணமும் கட்டிக் கொண்டு வந்திட்டாள். எங்கடை ஊர்க்காரன்தான். பேஸ்புக்கிலை படங்கள் போட்டிருக்கிறாள்” பேச்சை முடித்துக் கொண்டு அமைதியாகிப் போனான். அவனுக்கு உதவ வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பஸ் நகரத்தை அடைந்திருந்தது. என்னை முதலில் இறங்கவிட்டு பின்னால் இறங்கினான். “தம்பி. ஒரு லோயரை வைச்சு உங்களின்ரை விசாப் பிரச்சினையைச் சரி செய்யலாம். டைவோர்ஸ் பிரச்சினையாலை நீங்கள் மன அழுத்தத்திலை இருந்ததாகச் சொல்லலாம். அதாலைதான் விசாவைப் புதுப்பிக்கப் போகேல்லை எண்டு… இன்னும் வழி இருக்கு" “நன்றியண்ணா. இந்தப் பிரச்சினைக்குப் பிறகு, எனக்கு ஒரு இந்தியன்தான் தன்ரை ரெஸ்ரோரண்டிலை வேலை தந்தவன். வேலை களவுதான். அவனின்ரை ரெஸ்ரோரண்டிலைதான் தங்கியிருந்தனான். போதும். ஒரு இடமும் போக வரேலாது. நான் முடிவெடுத்திட்டன். போன கிழமை பொலிஸிட்டைப் போய் நாட்டுக்குப் போகப் போறன் எண்டு சொன்னன். அவையள் வெளிநாட்டு அலுவலகத்துக்குப் போகச் சொல்லிச்சினம். அங்கை போய் அவையளோடை கதைச்சன். தங்கிறதுக்கு கிறைல்ஸ்ஹைமிலை ஒரு இடம் ஒழுங்கு செய்து தந்து வெள்ளிக்கிழமை வரச் சொல்லிச்சினம். நேற்றுத்தான், வெள்ளிக்கிழமை போனனான். சிறிலங்காவுக்குப் போறதுக்கு ரிக்கெற் செய்து தந்திருக்கினம். 18ந்திகதி பிளைற்” “இப்பவும் நீங்கள் இங்கை இருக்கிறதுக்கு வழி செய்ய முடியும். அவசரப்படாதையுங்கோ” “இல்லையண்ணா. போறதெண்டு முடிவெடுத்திட்டன். தாங்ஸ் அண்ணா” இதற்குமேல் நான் அவனை வற்புறுத்த விரும்பவில்லை. “ உங்களுக்குத்தானே கிறைல்ஸ்ஹைமிலை தங்கிறதுக்கு இடமிருக்கு. இஞ்சை, சனிக்கிழமை அதுவும் காலைமை வெள்ளென, என்ன செய்து கொண்டிருக்கிறீங்கள்?” “நான்.. நேற்றே ரிக்கெற்றெல்லாம் அவையிட்ட வேண்டிட்டன். இனி இஞ்சாலை வரமாட்டன். கலியாணம் கட்டின புதுசிலை நானும் அவளும் சுப்பர்மார்க்கெற்றிலை சாமான்கள் வாங்கிட்டு அந்த பஸ்ஸ்ராண்டிலை இருந்துதான் வீட்டுக்குப் போறதுக்கு பஸ் எடுக்கிறனாங்கள். அதுதான் சும்மா நடந்து வந்து அந்த பஸ்ஸ்ராண்டிலை இருந்தனான். அப்பிடியே இரவு முழுக்க அங்கையே வாங்கிலிலை படுத்திட்டன். சரி அண்ணை..” அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். கிறைல்ஸ்ஹைம் போகும் பஸ்ஸை நோக்கி நடந்து கொண்டிருந்தான். பஸ்ஸில் ஏறப் போகும் நேரத்திலேயாவது திரும்பிப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டு நின்றேன். அவன் பார்க்கவேயில்லை.
  6. உயிரியல் பெயரீட்டு முறையின் தந்தையான கார்லோஸ் லினயஸ் கூட இப்படி இனிசிசல் போட்டு பார்தீனியத்தை வகைபசுத்தவில்லை. முன்பு யாழ் நகரில் ஆரிய குளத்தில் மண்டி கிடந்தது…இப்போ திராவிட குள(ல)தில் பரவ முயல்கிறது. பிகு எங்கள் வீட்டில் பார்த்தீனியத்தை இனம் கண்டு வெட்டி விட துடிப்போர் கூட, பக்கத்து வீட்டு பார்தீனியத்தை நீர் ஊற்றி வளர்பதையும் காண்கிறோம்.
  7. கண் கண்ட தெய்வம் ---------------------------------- வரிசை நீண்டு உள் வாசலைத் தாண்டி வெளிவரை வந்திருந்தது. நான் வருவதற்கு கொஞ்சம் சுணங்கிவிட்டது. வேறு வழி இல்லை, இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது, வரிசையில் நின்று கடமையை முடித்து விட்டே போவோம் என்று வரிசையின் முடிவில் நின்றேன். வீட்டுக்கு போய் செய்வதற்கும் வேலைகள் என்றும் ஏதும் இல்லை. தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு அலைவரிசையில் முன்னரே பார்த்த, பிடித்த படம் ஏதாவது ஓடினால், அதை மீண்டும் பார்க்கலாம், அவ்வளவுதான். இப்பொழுது எல்லாம் புதிதாக எந்தப் படத்தையும் பார்ப்பதற்கு பொறுமை இல்லை. மனைவி இருந்திருந்தால் சிவராத்திரிக்கு எப்போதோ கோவிலுக்கு வந்திருப்பார். பின்னர் 'நீங்கள் இப்ப வரலாம்...........' என்று ஒரு செய்தியை கோவிலில் இருந்து சரியான நேரத்துக்கு அனுப்பியிருப்பார். வீட்டிலிருந்து ஒரு பதினைந்து நிமிட நேர தூரத்தில் தான் கோவில் இருக்கின்றது. ஒரு இருபத்து ஐந்து வருடங்களின் முன் இது ஒரு தேவாலயமாக இருந்தது. இப்பொழுது கூட கோவிலின் கூரைக்கு மேலால் நீண்டு நிற்கும் ஒரு மெல்லிய நீண்ட கூம்பு வடிவிலான தேவாலயக் கோபுரத்தை பார்க்கலாம். அன்று இங்கு வர்த்தகம் செய்து வசதியாக இருக்கும் குஜராத் மக்கள் இந்த இடத்தை தேவாலயத்துடன் சேர்த்து வாங்கினார்கள். தேவாலயத்தில் சில மாற்றங்களை செய்து அதை ஒரு கோவிலாக மாற்றினார்கள். அதன் அருகிலேயே இன்னொரு பெரிய கோவிலையும், குஜராத் முறைப்படி, கட்டினார்கள். அதை மந்திர் என்று சொல்லுகின்றார்கள். சிவபெருமான், அம்மன், பிள்ளையார், முருகன் என்று தென்னிந்திய மக்களுக்கு தேவையான கடவுள்களை பழைய கோவிலும், புதிய கோவிலில் வட இந்திய மக்களுக்கு தேவையான கடவுள்களையும் வைத்தார்கள். ஒரே ஒரு தடவை இந்த மந்திருக்குள் போயிருக்கின்றேன். அது ஒரு அயலவரின் மகனின் திருமண நிகழ்வு. அவர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள் தான். மந்திருக்குள் சுவாமியின் முன் பெண்கள் அரைவட்ட வரிசைகளில் அமர்ந்து இருந்தார்கள். அதன் பின் ஒரு சின்ன இடைவெளி விட்டு ஆண்கள் அமர்ந்து இருந்தார்கள். எப்பவுமே, நித்திய பூசையில் கூட, இப்படித்தான் இருப்பார்களாம். பெண்களுக்கும், ஆண்களுக்கும் பின்னால் நான் நின்று கொண்டிருந்தேன். எங்கே போனாலும் பின்னுக்கு நிற்பது அல்லது இருப்பது என்பது சௌகரியமாக இருக்கின்றது. பின் வரிசைக்கு பின்னால் இருந்து எவரும் கவனிக்காமல் இருப்பது ஒரு சுதந்திரமான உணர்வைக் கொடுக்கின்றது போல. தென்னிந்தியக் கடவுள்கள் இருக்கும் கோவிலில் ஆரம்பத்தில் ஒரு வட இந்தியரே பூசை வைத்தார். அப்பொழுதெல்லாம் இங்கு இந்தியர்கள் வெகு குறைவு. ஒரு சிலர் மட்டுமே கோவிலுக்கு வந்து போவார்கள். என்னுடைய மனைவி மிகவும் ஒழுங்காகப் போய் வருவார். அங்கிருந்த கடவுள்களுக்கு அந்த வட இந்திய பூசகருக்கு அடுத்தபடியாக மிகவும் பழக்கமானவர் என் மனைவியே. விசேட நாட்களில் மட்டும் என்னை கோவிலுக்கு வரச் சொல்லுவார். அதுவும் ஒரு குறுகிய நேரத்துக்கு மட்டுமே. இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் நன்றாகத் தெரிந்திருப்பதால், இந்த விடயத்தில் நாங்கள் இருவரும் முட்டி மோதிக்கொண்டதில்லை. பின்னர் ஒரு தமிழ் பூசகர் தென்னிந்தியாவில் இருந்து வந்தார். தமிழ் தான் அவருடைய மொழி என்றாலும் வேறு பல மொழிகளும் கதைப்பார். ஆங்கிலத்தைக் கூட தமிழ் போன்ற ஒரு உச்சரிப்பு மற்றும் நிறுத்தங்களுடன் தயக்கமில்லாமல் நீட்டாக கதைப்பார். நல்ல குரல். அருமையாகப் பாடுவார். எல்லோருக்கும் அவரைப் பிடித்துவிட்டது. அத்துடன் இந்தியர்களும் பெருமளவில் இந்த நாட்டிற்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். வந்தவர்கள் அப்படியே கோவிலுக்கும் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். பூசகருக்கு என்னைத் தெரியாது. ஆனால் நான் மனைவியுடன் போவதால், 'சார் வாங்கோ..............சௌக்கியமா.............' என்று நன்றாகப் பழகியவர் போலக் கேட்பார். ஓரிரு தடவைகள் மனைவியினால் போக முடியாத போது, பாலோ பழங்களோ திரவியங்களோ கொடுக்க நான் போயிருக்கின்றேன். பூசகர் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை. முதல் தடவை ஏமாற்றமாக இருந்தது. அதன் பின்னர் எதிர்பார்ப்பை மிகவும் குறைத்தே வைத்திருந்தேன். மனைவியும், பிள்ளைகளும் இன்னொரு நாட்டிற்கு ஒரு குடும்ப விசேடத்திற்கு போயிருந்தனர். என்னால் போக முடியாத நிலை. தை மாதத்தில் இருந்து சித்திரை நடுப்பகுதி வரை எனக்கு வேலை அதிகம். வேலையில் வேலை இல்லாவிட்டாலும், இந்த நான்கு மாதங்களில் விடுமுறை எடுப்பதை தவிர்க்குமாறு சொல்லியிருக்கின்றார்கள். மற்றைய மாதங்களில் முழுச் சுதந்திரமும் இருப்பதால், இது ஒன்றும் அநியாயமாகத் தெரியவில்லை. இதனால் குடும்ப விசேடத்தில் பல வருடங்களின் பின் காணும் சிலரின் 'என்ன, உங்களுக்கு இப்படி வயதாகிப் போட்டுதே.............' என்ற அழகியல் விமர்சனங்களையும் கேட்க முடியாமலும் போய்விட்டது. வரிசை மெதுமெதுவாக அசைந்தது. நான் கோவிலுக்குள் மண்டபத்துக்குள் வந்திருந்தேன். மண்டபத்தின் நடுவே கொடித்தம்பத்திற்கு அருகில் ஒரு சிவலிங்கத்தை வைத்திருந்தார்கள். அதன் அருகே பால் கலன்கள் பல இருந்தன. இன்று எல்லோருமே பால் கொண்டு வருவார்கள். நான் தனியாக இருப்பதால் பால் கொண்டு வரவில்லை. அடுத்த தடவை ஏதாவது ஒரு காரணம் சொல்லி மனைவியிடம் இரண்டு கலன்களாக கொடுத்து விடுகின்றேன் என்று மனதாரச் சொன்னேன். வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரும் சிவலிங்கத்திற்கு மூன்று தடவைகள் பாலால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் சிவலிங்கத்தை சுற்றிக் கும்பிடுவார்கள். சிலர் அதிக நேரம் எடுப்பார்கள். கூட்டமும் இப்ப மிக அதிகம். அதனால் தான் வரிசை நீண்ட பெரிய மலைப்பாம்பு போல அசைந்து கொண்டிருந்தது. இங்கு வந்து போவர்களுக்கு பல சடங்குகளும், சம்பிரதாயங்களும் நன்றாகவே தெரிந்திருக்கின்றது. மந்திரங்கள் கூட தெரிந்திருக்கின்றது. பூசகருடன் சேர்ந்து வடமொழியில் பலரும் சொல்லுகின்றனர். எனக்கு 'வேதம் புதிது' போன்ற சினிமா படங்களில் வந்த சில வரிகளை மட்டும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது. மற்றபடி சமஸ்கிருதத்தின் ஓசை நல்லாவே இருக்கின்றது என்ற ஒரு பொதுப்படையான அபிப்பிராயம் மட்டுமே இருக்கின்றது. இரவு முழுவதும் தொடர் பூசைகள், யாகங்கள் என்று ஒரே கூட்டமாக இருக்கும். பல பூசகர்களும் வந்திருந்தனர். வழமையான பூசகர் தான் இன்றும் பெரிய ஆள். மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அவரைச் சுற்றி மற்றைய பூசகர்கள் அமர்ந்து யாகம் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே குரலில் மந்திரங்களோ சுலோகங்களோ சொல்லிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சின்னக் கிண்ணத்தில் பாலை வார்த்து சிவலிங்கத்தின் உச்சியில் விட்டேன். அது சிவலிங்கத்தின் எல்லாப் பக்கங்களிலும் வழிந்து ஓடியது. பளிங்கு கறுப்பில் பால் வடிந்து கோடு கோடாக ஓடுவது அழகாக இருந்தது. குனிந்து மூன்றாவது தடவை கிண்ணத்தில் பாலை நிரப்பிக் கொண்டிருக்கும் போது, 'என்ன சார்................ அம்மா எங்கே................' என்றபடியே பூசகர் முன்னுக்கு நின்றார். அம்மா ஊரில் இல்லை என்று தட்டுத்தடுமாறி சொன்னேன். கையில் ஒரு மாலை வைத்திருந்தார். அதை என் கையில் திணித்தார். இதே போன்ற மாலைகளை வீட்டில் இருக்கும் பூஜை அறையில் நான் பார்த்திருக்கின்றேன்.
  8. கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்யும் சேவைக்கு பாராட்டுகளும் நன்றிகளும் அக்கா. பண இழப்பு என கருதாதீங்க அக்கா, உங்கள் மனத்திருப்திக்கு உதவி செய்தீர்கள். தவறான கைகளுக்கு போகாது பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தளவு பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புங்கள். அவர்களோடு நேரடி தொடர்பில் இருக்க முயலுங்கள். உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் மூலமாக நேரடியாக பயனாளிகளைத் தொடர்பு கொள்ளுங்கள். 2011/2012 காலங்களில் இருந்து உதவி ஒழுங்குகள் சிலவற்றில் ஈடுபட்ட அனுபவத்தில் யாரிடமும் 100% சரியாக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. நெடுங்கேணியில் கிணறு கட்ட முப்பதாயிரம் கேட்டு உதவ வெளிக்கிட்டு கட்டி முடிக்கையில் 90ஆயிரம் செலவளித்து முடிந்தது. கணவர் வவுனியா சிறையில் இருக்க 5 பிள்ளைகளுடன் மிகுந்த சிரமத்தில் இருந்த பெண்மணிக்கு நேரடியாக வங்கிக் கணக்கிற்கே பணத்தை அனுப்புவோம். அவவிற்கு வீட்டுத் திட்டமும் கிடைத்திரு்தது என ஞாபகம். கிணறு கட்ட குடுத்த காசை வீட்டு வேலைக்கும் எடுத்துப்போடுவார். இருந்தாலும் வாழ்வாதாரத்திற்கு தோட்டம் செய்ய ஏற்கனவே தோண்டப்பட்ட கிணறை கட்டி முடிக்க லண்டனில் வசித்த உறவுகள் உதவினார்கள்.
  9. எங்களுக்கும் தனித்தனியாக தனியப்போய்ச் சந்திக்க ஆசைதான் ஆனால் அமெரிக்க மற்றும் ஆஸி தூதுவர்களுக்குத் தமிழ் தெரியாதே!😂
  10. இருவரும் சுயமாக சிந்திக்கக் கூடியவர்கள். தனியே உள்ளூராட்சி தேர்தலைக் குறிவைத்து இணையாமல் அடுத்தடுத்த தேர்தல்களையும் ஒன்றாக இருந்து சந்தித்து தேசியத்துக்காக பாடுபடணும்.
  11. சுமந்திரன்உள்ளூராட்சி தேர்தலுக்கு... புலம் பெயர் தேசத்தில், காசு சேர்க்கப் போனால்.... காலில் உள்ளதை கழட்டி அடிக்க வருவார்கள் என்பதால், அமெரிக்க, அவுஸ்திரேலிய தூதுவர்களிடம்... டொலரில் காசு வாங்கப் போயிருக்கிறார் போலுள்ளது. 😂
  12. 13 Mar, 2025 | 04:10 PM யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வசித்துவரும் குடும்பம் தெருவோரங்களில் ஆதரவற்று நிற்கும் நாய்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் இரண்டு நாய்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியானது தற்போது 39 நாய்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நாய்களை தங்களது சொந்த பிள்ளைகள் போலவே வளர்த்து வருகின்றனர். அயல் வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர், குறித்த குடும்பத்தினரால் வளர்க்கப்படுகின்ற நாய் ஒன்றின் மீது தாக்குதல் நடாத்திய நிலையில், அயல் வீட்டில் வசிக்கும் நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்துள்ளனர். அத்துடன், அவர்களது நாய்கள் காணாமல்போகின்ற சந்தர்ப்பங்களில் ஜோசியம் பார்த்தல், சமூக ஊடகங்கள் மூலம் பதிவுகளை பகிர்தல் ஆகியவற்றின் மூலம் நாய்களை கண்டுபிடிக்கின்றனர். குறித்த குடும்பத்தின் தலைவர் எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் நடைபயணம் ஒன்றினை மேற்கொண்டு, பலரது கையொப்பங்களை பெற்று நாய்களின் பாதுகாப்புக்கான சட்டங்களை இயற்றுவதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். யாழில் ஆதரவற்ற தெருநாய்களை வளர்க்கும் குடும்பம் | Virakesari.lk
  13. உற‌வே ஆர‌ம்ப‌த்தில் கிருஷ்னாவை ஆத‌ரித்த‌ உற‌வுக‌ளில் நானும் ஒருத‌ன் கிருஷ்னாவை ம‌ட்டும் அல்ல‌ , அனுஷ‌னை கூட‌ ஆத‌ரிச்சேன் , ந‌ம்பி ந‌ம்பி ஏமாறுவ‌து என‌க்கு தொட‌ர் க‌தை மாதிரி போகுது.................... ஆர‌ம்ப‌த்தில் அவ‌ர்க‌ள் மோட்ட‌ சைக்கில்ல‌ வேக‌மாய் ஓடும் போது ஆண்ட‌வா இந்த‌ பிள்ளைக‌ளுக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ கூடாது க‌வ‌ண‌மாக‌ பார்த்து கொள்ளுங்கோ என்று ஆண்ட‌வ‌ரிட‌ம் கேட்டேன்.................... கிருஷ்னா ஆர‌ம்பத்தில் நேர்மையா ஒழுக்க‌மாய் செய்து கொண்டு வ‌ந்தார் சிறு மாத‌ம் க‌ழித்து பேச்சில் மாற்ற‌ம் , ஆனுவ‌ க‌தை , பெண்க‌ளுட‌ன் த‌ப்பான‌ முறையில் ப‌ல‌ கேள்விக‌ள் கேட்பார் , இப்ப‌டி போக‌ கிருஷ்னாவின் காணொளிக‌ளை பார்க்காம‌ விட்டு இப்ப‌ இர‌ண்டு வ‌ருட‌ம் ஆக‌ போகுது.....................வெளி நாட்டில் இருக்கும் அதுளுக்கு தான் ம‌ன்டை ப‌ழுது என்று பார்த்தால்................கிருஷ்னா அவ‌ர்க‌ளை விட‌ அருவ‌ருக்க‌ த‌க்க‌ ந‌ப‌ர் யாரோ அனுப்பின‌ ஜ‌ட்டிய‌ த‌ன‌து யூடுப் ச‌ண‌லில் காட்டின‌வ‌ர் இதெல்லாம் ச‌ம்மூக‌ சேவை செய்து கொண்டு செய்யும் செய‌லா இது................... விட்டால் நீங்க‌ள் சொல்லுவிங்க‌ள் போல‌ வீர‌ப் பைய‌ன் அல்வ‌ய‌ன் யாயினி இவ‌ர்க‌ள் பொறாமையில் யாழில் எழுதுகின‌ம் என்று....................... என‌க்கோ இந்த‌ இந்த‌ திரியில் க‌ருத்து எழுதித‌ன‌ உற‌வுக‌ளை த‌னிப்ப‌ட்ட‌ முறையில் தெரியும் எங்க‌ளுக்கு பொறாமை என்ற‌து சிறு துளி கூட‌ இல்லை.................... கிருஷ்னா த‌ன்னை ப‌ழைய‌ ப‌டி திருத்தி ஆர‌ம்ப‌த்தில் செய்த‌து போல் செய்ய‌ விரும்பினால் வாழ்த்துவோம் பாராட்டுவோம் சிறையால் வ‌ந்தாப் பிற‌க்கும் பெண்க‌ளை அவ‌ம‌திப்ப‌து , வ‌ய‌து போன‌ அம்மா மார‌ கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌து தொட‌ர்ந்தால் , கிருஷ்னாவை தொட‌ர்ந்து விம‌ர்ச‌ன‌ம் செய்வோம் , கிருஷ்னா ர‌வுடிக‌ளை வைத்து ஆட்க‌ளை மிர‌ட்டுவ‌தை முதல் நிறுத்த‌னும்........................எத்த‌னையோ பேர் ச‌ம்மூக‌ சேவ்வை செய்யின‌ம் யாராவ‌து ர‌வுடிக‌ளை வைத்து செய்யின‌மா😁................... த‌னி ஆளை போய் மோட்ட‌ சைக்கில்ல‌ ச‌ம்முக‌ சேவ்வை செய்த‌ கிருஷ்னா , இப்போது மூன்று பேருட‌ன் போய் செய்ய‌ கார‌ண‌ம் என்ன‌ , ப‌ய‌ம் யாராவ‌து த‌ன‌க்கு கை வைத்தால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து த‌ப்பிக்க‌ தான் வாக‌ன‌த்தில் கூட்டிட்டு போய் வாரார் ச‌ம்மூக‌ சேவ்வை என்றால் நூற்றூக்கு நூறு உண்மையாய் செய்ய‌னும் அதில் குள‌று ப‌டி இருக்க‌ கூடாது.......................ஊழ‌ல் மோச‌டி செய்தால் இல‌ங்கை அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கும் கிருஷ்னாவுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்.................... இப்ப‌டி எழுத‌ நிறைய‌ இருக்கு ஒரு நாள் நீங்க‌ளே உண‌ருவிங்க‌ள் கிருஷ்னாவின் ஊழ‌ல் மோச‌டி இன்னும் வெளிய‌ வ‌ரும் போது....................1500 குடும்ப‌த்துக்கு இவ‌ர் உத‌வ‌ வில்லை புல‌ம்பெய‌ர் நாட்டு ம‌க்க‌ள் கொடுத்த‌ காசை இந்த‌ கிருஷ்னா என்ர‌ த‌ர‌க‌ர் கொண்டு போய் கொடுத்தார் அம்ம‌ட்டும் தான்.......................
  14. கட்சியை உடைக்க கட்சியில் உள்ளவர்களே போதுமானது. வெளியில் இருந்து யாரும் வரத்தேவை இல்லை.
  15. பையா.... நானும் போட்டியில் கலந்து கொள்கின்றேன். 👍 மற்றது.... இந்த கிரிக்கெட் விமர்சகர் என்ற அடைமொழி எல்லாம் எனக்கு ஓவர் பையா. 😂 குருவி தலையில்... பனங்காயை வைக்காதீங்க. 🤣
  16. பாட்டும்...பொழிப்புரையும் நல்லா இருந்தது என்று சொல்லுங்க...
  17. இப்பதான் இந்த பாடலை முதன்முதல் கேட்டேன். நன்றாகவே இருந்தது.
  18. கிருபன், நானும் இம்முறை கலந்து கொள்கின்றேன்.
  19. என் மனைவி கராத்தே பொக்சிங் எல்லாம் பழகிப் பார்ப்பது நான் அடுப்படிப் பக்கம் போய் ஏதாவது கருத்து சொல்லப் போனாத் தான். அதாலை ஏதும் வெட்டிக்கொண்டு இருந்தா அந்தப்பக்கம் போறல்லை 😁.
  20. @Eppothum Thamizhan @சுவைப்பிரியன் @nunaviIan @ரசோதரன் @ஏராளன் @செம்பாட்டான் @புலவர் @நிலாமதி @நீர்வேலியான் @goshan_che என‌து ப‌திவை நாளை ப‌தியிறேன் பெரிய‌ப்பு ம‌ற்ற‌ உற‌வுக‌ளுக்கும் தெரிய‌ப் ப‌டுத்தி இருக்கிறேன்👍.......................
  21. இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம் இறை நம்பிக்கை என்பதே இளம் பிராயத்தில் இருந்து செய்யப்பட்ட மூளைச்சலவை என்பதும், அதனால் அதுவும் ஒரு குருட்டு நம்பிக்கை என்பதுமே பெரும்பான்மை இறை மறுப்பாளர்களின் கருத்தாக இருப்பினும் அவர்கள் அக்கருத்தை அத்துணை ஆணித்தரமாக சமூகத்தில் வெளிப்படுத்துவதில்லை. எந்த சமூகத்திலும் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கையுடையவராய் இருப்பதும், அம்மக்கட் பணியே தம் பணி எனக் கொண்டதும் அதற்குக் காரணமாய் இருக்கலாம். ஆனால் இறை நம்பிக்கை எல்லை கடந்து மூடநம்பிக்கையாய் உருவெடுக்கும்போது இறை மறுப்பாளர் மட்டுமல்லாமல் இறை நம்பிக்கை கொண்டோரிலும் பகுத்தறிவாளர் தமது எதிர்க் குரலை ஆங்காங்கே பதிவு செய்வது உண்டு. மூடநம்பிக்கைகள் அங்கிங்கெனாதபடி எங்கும், எந்த மதத்திலும் ஊடுருவி இருக்கக் காணலாம். தற்காலத்தில் கூட எங்காவது நடைபெற்றுச் செய்தியாகி விடுகிற நரபலியும், பெற்ற குழந்தையை நொடிப்பொழுதேனும் மண்ணில் புதைத்து எடுக்கிற கோரமும், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்து ரத்தம் வடிவதும் நாம் மண் சார்ந்ததாய்க் கொண்டாடும் நாட்டார் தெய்வங்களின் மீது ஏற்றப்பட்ட வன்முறை. தொன்மையான தமிழ் நாகரிகம் மற்றும் கிரேக்க நாகரிகக் காலந் தொட்டு இவை நிலவி வந்திருக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் இதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லையாயினும், குறுந்தொகை போன்ற அக இலக்கியங்களில் தோன்றும் கட்டுவிச்சிகளும் (குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த குறி சொல்பவள்) கணியன்களும் நம்பிக்கைகளுக்கான மெல்லிய ஆதாரங்கள். அவையனைத்தும் இறை நம்பிக்கை சார்ந்தே தோன்றின என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக, குறுந்தொகை 23 இல் " அகவன் மகளே! அகவன் மகளே! மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே! பாடுக பாட்டே; இன்னும் பாடுக பாட்டே! அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!" (குறுந்தொகை 23) என்று தலைவியின் தோழி குறி சொல்லும் கட்டுவிச்சியிடம் இப்பாடல் மூலமாகச் சொல்லும் செய்தியிலும், அது தரும் இலக்கிய இன்பத்திலும் மூழ்கித் திளைத்துப் பாடல் தெரிவிக்கும் மூடநம்பிக்கையை நாம் எளிதில் கடந்து விடுவதுண்டு. இங்கு ஒரு மண் சார்ந்த மூடநம்பிக்கையாக வெளிப்படுகிறதே தவிர இறை சார்ந்ததாய் வெளிப்படவில்லை. மேலும், இது இன்றளவும் தொடரும் நம்பிக்கையே ! இருப்பினும் இயற்கை குறித்தும் வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும் தோன்றிய பயத்தில் பிறந்த இறை நம்பிக்கை பெரும்பாலும் மூடநம்பிக்கையின்பால் இட்டுச்செல்லும் என்பது சமயம், காலம், தேசம் எனும் எல்லைகள் தாண்டியது. தலைவனின் பிரிவாற்றாமையினால் வாடி உடல் மெலிந்திரங்கும் தலைவியின் நிலை பற்றிக் கேட்க வேலன் வெறியாட்டில் குறி கேட்கச் செல்லும் தாயினைப் பற்றி குறுந்தொகை 111 இல் காணலாம். வேலனாக வெறியாடும் குறி சொல்லும் கலைஞன் தலைவியின் வருத்தம் சேயோன் ஆகிய முருகனின் செயல் என்று அளந்து விடுவதும், அதனைத் தாயானவள் நம்புவதும் "பெரும் வேடிக்கை" என்று கூறித் தோழியானவள், "அவ்வேடிக்கை காணத் தலைவன் வருவானாக !" என்று தலைவியிடம் கூறுகிறாள். அன்று சமூகத்தில் நிலவிய அந்தக் குருட்டு நம்பிக்கையைப் புலவர் தீன்மதி நாகனார், போகிற போக்கில், வேடிக்கை (பெருநகை) என்றது நமக்கான ஆறுதல். "மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் அதுவென உணரும் ஆயின் ஆயிடைக் கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன கேழிருந் துறுகற் கெழுமலை நாடன் வல்லே வருக தோழிநம் இல்லோர் பெருநகை காணிய சிறிதே". (குறுந்தொகை 111) பேய் பூதங்கள் பற்றிய பயமும் நம்பிக்கையும் கல் தோன்றி மண் தோன்றாக் காலந் தொட்டே வழங்கி வருவது போலும் ! சங்கப் புலவர்களில் பேயனார், பேய்மகள் இளவெயினி, பக்தி இலக்கியங்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்று சான்றோர் தம் பெயர்களே வழங்கி வந்தமை இதற்கான சான்று. "......................வானத்து வயங்குபன் மீனினும் வாழியர் பலஎன உருகெழு பேய்மகள்" (புறநானூறு 371) என்ற பாடலைப் பாடிய கல்லாடனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்திப் பேய் மகளிர் குரவைக் கூத்தாடுவதாகப் பதிவு செய்கிறார். இத்தனை மூட நம்பிக்கைகள் நிலவிய போதும் நரபலி போன்ற கொடூரமான பதிவுகள் சங்க இலக்கியங்களில் அநேகமாகக் காணப்படவில்லை எனலாம். எனவே அவை அறிவார்ந்த மக்களால் தமிழ்ச் சமூகத்தில் அப்பொழுதும் ஏற்கப்படவில்லை என்றே கொள்ளலாம். பண்டைய கிரேக்க நாகரிகத்தின் வழக்கத்துடன் இது குறித்து நோக்கத்தக்கது. அங்கே அவர்களது கடவுள்களை அமைதிப்படுத்த கொடூரக் கொலைகள் நிகழ்த்துவது அவர்களது இலக்கியங்களில் காணக் கிடைப்பது. எடுத்துக்காட்டாக, கி.மு. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கணிக்கப்படும் ஹோமரின் 'தி இலியட்' எனும் கிரேக்கக் காவியம் கி.மு. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ட்ரோஜான் போர் பற்றியது; அதில் வரும் அகமேம்னன் (Agamemnon) எனும் மைசீனிய (Mycenae) நாட்டு அரசன் ஆர்டிமிசு (Artemis) எனும் தேவதையை அமைதிப்படுத்தத் தன் மகள் இஃபிஜீனியாவைத் (Iphigeneia) தன் கையாலையே பலி கொடுக்கும் கொடுமை அரங்கேறுகிறது. ட்ரோஜான் போருக்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைப்பதால், அப்போரினை அடிப்படையாய்க் கொண்ட கதையாகவே இருப்பினும் அத்தகைய வழக்கங்கள் அச்சமூகத்தில் நிலவியது சுட்டப் பெறுகிறது எனலாம். அதுபோலவே இப்ராஹீம் நபிகள் தமது மைந்தரான இஸ்மாயிலை இறைவனுக்குப் பலியிடத் துணிந்தபோது இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு, "ஆட்டினைப் பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றுக" எனப் பணிக்கப்பட்டார்; இந்நிகழ்வே பக்ரீத் விழாவாகக் கொண்டாடப்படுகிறது என்பதை அறிவோம். இந்நிகழ்வு விவிலியத்திலும் (பழைய ஏற்பாடு) பேசப்படுகிறது - சிறிய மாற்றத்துடன்; ஆபிரகாம் ஆகிய இப்ராஹிம் பலியிடத் துணிந்தது தமது மற்றொரு மகனாகிய ஈசாக்கை எனும் மாற்றத்துடன். அவலம் என்னவோ மாறவில்லை. இத்தகைய கொடிய கூத்துகளில் தமிழ்ச் சமூகம் தாமதமான போதிலும் சோடை போகவில்லை என்பதை ஏறக்குறைய கிபி 12ம் நூற்றாண்டைச் சார்ந்த பெரியபுராணம் பெருமிதத்துடன் (!!!) பதிவிடுகிறது. இதனைச் சற்று விரிவாகச் சொல்லுவதில் இக்கட்டுரை (வெட்கமின்றி) முழுமை பெறும் என்று நம்புகிறேன். நாம் பெரிய புராணத்தில் முதலில் கையிலெடுப்பது சிவனடியார் பரஞ்சோதியார் எனும் சிறுத்தொண்டர் நாயனார் புராணம். சிவனடியார் தொண்டே சிவத்தொண்டு என வாழும் சிறுத்தொண்டரின் பக்தித்திறம் சோதித்திட இறைவனே கயிலாயத்தினின்றும் இறங்கி சிவனடியார் வேடத்தில் 'வைரவர்' எனும் பெயருடன் சிறுத்தொண்டரின் ஊரான திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளுகின்றார். அன்று அமுது செய்விக்க (விருந்தளிக்க) சிவனடியார் எவரையும் காணாமல் வாடி நின்ற சிறுத்தொண்டர், சிவனடியாரான வைரவர் வரவறிந்து இறும்பூதெய்து கணபதீச்சரத்தில் திருவத்தியின் (அத்தி மரத்தின்) கீழ் அமர்ந்திருந்த வைரவரை அமுது செய்யத் தம் இல்லத்திற்கு அழைக்கின்றார். அப்போது தமது நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிறுத்தொண்டரால் தமக்கு அமுது படைக்க முடியுமா எனும் ஐயப்பாட்டை வெளிப்படுத்துகிறார் வைரவர். எந்த நிபந்தனையையும் தம்மால் நிறைவேற்ற முடியும் என்று உறுதியளித்துக் கேட்கிறார் சிறுத்தொண்டர். அந்த நிபந்தனைகளை எண்ணிப் பார்க்கவே நமது உடலும் உள்ளமும் பதறும்போது, அவற்றை மொழிவது மட்டுமின்றி அது நிறைவேற்றப்படும் காட்சியை வெகு சாதாரணமாக ரசனையுடன் சேக்கிழார் பாடிச் செல்வது பேரதிர்ச்சி, பேரவலம் ! அதனைக் கேட்டுச் சிறிதும் மனச்சலனமின்றி மகிழ்வோடு ஏற்று, தம் மனைவியிடம் பகிர்கின்றார் சிறுத்தொண்டர் : "வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர்தாம் உள்ளம் மகிழ அமுதுசெய இசைத்தார் குடிக்கு ஓர்சிறுவனும்ஆய்க் கொள்ளும் பிராயம் ஐந்து உள்ளால் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் பிள்ளைபிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்கப்பெறின் என்றார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 54) பொருள் : வள்ளலார் ஆகிய சிறுத்தொண்டர் தம் மனையாளாகிய திருவெண்காட்டு நங்கையை நோக்கி, "(தாய் தந்தைக்கு) ஒரே மகனாய்ப் பிறந்து எவ்வித உறுப்புக் குறைபாடுமின்றி உள்ள ஐந்து வயது சிறுவனைத் தாய் பிடித்துக் கொள்ள மகிழ்வோடு தந்தை அரிந்து (வெட்டி) சமைக்கப் பெற்றால் உள்ளம் மகிழ்ந்து திருவமுது செய்ய மாதவராகிய வைரவர் இசைந்தார்" என்றார். அடுத்து அக்கொடுமை அரங்கேறுகிறது. எந்த ஒரு உணர்ச்சியும் மிதமிஞ்சிப் போகும்போது மூளைச்சலவை முழுமை பெற்றது என்றே பொருள். கம்பனுக்கு நிகரான கவித்துவம் பெற்ற சேக்கிழார் முதல் சாமானிய இறைப்பற்றாளன் வரை யாரும் இதற்கு விதிவிலக்கில்லை : "இனிய மழலைக் கிண்கிண்கால் இரண்டும் மடியின் புடைஇடுக்கிக் கனிவாய் மைந்தன் கையிரண்டும் கையால் பிடிக்கக் காதலனும் நனிநீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகைசெய்யத் தனி மாமகனைத் தாதையார் கருவி கொடுதலை அரிவார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 63) பொருள் : இனிய மழலையை இசைக்கும் கிண்கிணியை அணிந்த கால்கள் இரண்டினையும் தாயானவள் (!) தன் மடியின் இடையே இடுக்கி, இனிமையான கனி போன்ற வாயுடைய மைந்தனின் கைகள் இரண்டையும் தன் கையால் பிடித்துக் கொள்ள காதற் கணவனும் (சிறுவனின் தந்தை) பெரிதும் உவகை கொண்டார் என ஒப்பற்ற அந்த மகனும் மகிழ்ந்து சிரிக்க, தந்தையானவர் கருவி கொண்டு மகனின் தலையை அரிகின்றார். அக்குரூரத்தை மேலும் வருணிக்கும் அளவு பக்தி முத்திப்போயிற்று : "அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது எனக்கழித்து மன்றத்து நீக்கச் சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு முளை திறத்திட்டுக் கறிக்கு வேண்டும் பலகாயம் அரைத்துக் கூட்டிக்கடிது அமைப்பார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 65) பொருள் : அறுத்த தலையின் இறைச்சி சிவனடியார்க்குப் படைக்கும் திரு அமுதுக்கு ஆகாது எனக் கழித்து அதனை ஒதுக்கும் பொருட்டு சந்தனத்தாரது (சிறுத்தொண்டரது) கையில் கொடுத்து மற்ற உடல் உறுப்புகளின் இறைச்சியைக் கொத்தி அறுத்து எலும்பினைச் சுற்றியுள்ள தசையினைத் திறந்து கறிக்காக இட்டு அக்கறிக்கு வேண்டிய பொருட்களை அரைத்துக் கூட்டி (அத்தாயானவள் !!!) விரைவாக உணவைத் தயாரிக்கிறாள். இறுதியில் இறைவன் சிறுத்தொண்டரையும் அவரது இல்லாள் திருவெண்காட்டு நங்கையையும் ஆட்கொண்டு அவர்களது மகவான சீராளனை மீண்டும் அருளினார் என்ற கதையெல்லாம் ஒரு புறம். சிவனடியார்களிடம், அதன் மூலமாக சிவபெருமானிடம், சிறுத்தொண்டர் கொண்ட நேயம் மற்றும் அர்ப்பணிப்புக்கான சோதனையில் அவர் வென்றிருக்கலாம். ஆனால் இத்தகைய எல்லை தாண்டிய உணர்வு கொண்டாடப்படும்போது, சமூகம் எல்லை தாண்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும். மூடநம்பிக்கையினால் நரபலிகள் நியாயப்படுத்தப்படும். சங்க இலக்கியங்களில் இவை குறிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நமக்குத் தெரிந்த அல்லது கேள்விப்பட்ட பழங்காலத்தில் போருக்குச் செல்லும் முன் போர்த் தெய்வங்களுக்கு (War Deities) நரபலி தரும் வழக்கம், பலியாகும் வீரன் அதனை வீரத்தின் அடையாளமாக மனமுவந்து ஏற்றுக் கொண்ட கொடூரம் பற்றிய நாட்டுப்புறக் கதைகள் நம் காதுகளில் ஈயமாகக் காய்ச்சி விடப்பட்டிருக்கின்றனவே ! இவை கல்லாத சாமானியரின் வழக்கங்கள் என்று ஒதுக்குவதற்கு இல்லை. பெரிய புராணத்தில் சுட்டப்பெறும் அடியார்களும், அவர்களைக் கொண்டாடும் சேக்கிழார் பெருமானாரும், இப்ராஹிம் அல்லது ஆபிரகாம் வரலாறு சொன்னவர்களும் அந்தந்தக் காலத்தின் சான்றோர் பெருமக்கள்தாமே ! இவர்களால் வழிநடத்தப்படும் சாமானியர் எப்படி சான்றோராய் வளர முடியும் ? மதம் எப்படியெல்லாம் மதி மயங்கச் செய்யும் என்பதற்கு மேலும் ஒரு சான்று பெரிய புராணத்தின் இயற்பகை நாயனார் புராணத்தில் காணக் கிடைக்கிறது. மீண்டும் பெரிய புராணந்தானா ? கம்பனில் சம்பூக வதம் போன்ற பிற்போக்குத்தனங்கள் உண்டே ! அது வடக்கில் இருந்து வந்த கதை என்று புறந்தள்ளப் படலாம். பெரிய புராணத்தைப் புறந் தள்ளுவதற்கில்லையே ! உலகின் இயற்கையைப் (நடைமுறையை) பகையாக்கிக் கொண்டமையால் இயற்பகை நாயனார் என்று வழங்கப்படுகிறார். பூம்புகார் நகரத்தின் வணிகர் குலத்தில் பெருஞ்செல்வந்தராய் வாழ்ந்தவர். தம்மை நாடி வந்த சிவனடியார் வேண்டியவை எவையாயினும் இல்லையெனக் கூறா இயல்புடையார். அவரது பக்தியின் திறன் உலகிற்குக் காட்டும் பொருட்டு திருச்சிற்றம்பலத்தில் ஆடும் சிவனார், அடியார் வேடம் பூண்டு நாயனார்தம் இல்லத்திற்கு வருகிறார். "முந்தை எம்பெருந் தவத்தினால் முனிவர் இங்கு எழுந்தருளியது" (இயற்கை நாயனார் புராணம்; பாடல் 5) "என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்றஅக் கைதவ மறையோர் கொன்றைவார் சடையர் அடியார்கள் குறித்து வேண்டிய குணம் எனக்கொண்ட ஒன்றும்நீர் எதிர்மாறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டுநும்பால் ஒன்று வேண்டி இன்றுநான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையல் ஆம்எனில் இயம்பல் ஆம்என்றான்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 6) பொருள் : முற்பிறவியில் யான் செய்த பெருந்தவத்தினால் முனிவர் தாம் இங்கு எழுந்தருளினீர்கள் என்று கூறிய இயற்பகையார் முன் கீழ்மைத்தன்மை உடைய மறையோராய் வேடமேற்று வந்த கொன்றை மலர் சூடிய சடையரான சிவபெருமான், "அடியார்கள் தாங்கள் உம்மிடம் வேண்டியவற்றை நீவிர் நற்குணம் பொருந்தியவை என ஏற்று (அவை நற்குணம் பொருந்தாமல் இருப்பினும்), மறுக்காமல் மகிழ்ந்து அளிக்கும் உண்மையினைக் கேட்டு உம்மிடம் ஒன்று வேண்டி இங்கு யான் வந்தேன். அதற்கு நீவிர் இசைவீர் எனில் யான் இயம்புவேன்" என்று கூறுகிறார். இங்கு முனிவர் பாதகம் ஏதோ இயற்ற வந்தார் என்பதைத் தற்குறிப்பாகச் சொல்ல நினைத்த சேக்கிழார் அவரைக் 'கைதவ மறையோர்' (கீழ்மைத் தன்மை கொண்ட மறையோர்) எனக் குறித்தமை தெளிவு. நடைபெறப் போகும் குற்றத்தைக் கொண்டாடுவதில் சேக்கிழார்க்குப் பங்கில்லை என்பது நமக்கான ஆறுதல். "என்ன அவ்வுரைகேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும்என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயமில்லை நீர்அருள் செயும் என்ன மன்னு காதல்உன் மனைவியை வேண்டி வந்தது இங்குஎன அந்தணர் எதிரே சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 7) பொருள் : முனிவர்தம் உரையைக் கேட்டு இயற்பகையார், "அஃது என்னிடத்தில் இருக்குமானால், அது எம்பிரான் (சிவனார்) அடியவர்க்கு உரிமையானது. எவ்வித ஐயமுமின்றி தயங்காது கேட்டு அருள் செய்க" என்கிறார். அதற்கு அம்மறையோர், "நின்பால் நிலை பெற்ற காதல் கொண்ட நும் மனைவியை எனக்கு வேண்டிப் பெற வந்தேன்" என்று சொல்ல, அதைக் கேட்டு முன்னைவிட மகிழ்ந்து இயற்பகை நாயனார் சொல்ல ஆரம்பித்தார். "இது எனக்குமுன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறுஎனக்கு" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் எட்டு) பொருள் : "என்னிடம் முன்பே உள்ள பொருளைத் தாங்கள் கேட்டது எனக்கான பேறு" என்கிறார் நாயனார். இந்தக் கருமத்தை எங்கே போய்ச் சொல்ல ? அது மகாபாரத யுகம் போல பெண் பலதார மணமுறை (polyandry) நிலவும் சமூகமல்ல. கற்பின் திறம் பேசும் சமூகத்தில் இத்தகைய வெட்கக்கேடு நிகழ்வது பக்தி முற்றி மனம் பேதலித்தமை அன்றி வேறென்ன ? மேலும் அவர்தம் இல்லாளும் கணவனின் இறைப்பணியில் தன் பங்கு ஈதென்று மாறுபாடின்றி ஏற்றுக் கொள்கிறாள். இக்கேவலம் இத்தோடு நிற்கவில்லை. இருவழி சுற்றத்தாரும் (கணவன், மனைவி தரப்பினர்) இந்த மதியீனத்திற்கு எதிராகக் கிளர்ந்து எழுகின்றனர். இயற்பகை நாயனார் அவர்களுடன் போரிட்டு அவர்களை வெட்டிச் சாய்ப்பதாய்க் கதை தொடர்கிறது. "சென்று அவர் தடுத்தபோதில் இயற்பகையார் முன் சீறி வன்துணை வாளே ஆகச் சாரிகை மாறி வந்து துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து வென்றுஅடு புலிஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 21) பொருள் : சுற்றத்தார் வந்து தடுக்கையில் இயற்பகையார் சினமுற்று முன்வந்து வாளையே பெருந்துணையாகக் கொண்டு சுற்றத்தினரை மாறி மாறிச் சுற்றி வந்து அவர்களது தோள்களையும் கால்களையும் தலைகளையும் வெட்டிச்சாய்த்து, எதனையும் கொல்லும் திறன் கொண்ட ஆண் புலியைப் போல் அப்போர் ஆட்டத்தில் ஈடுபட்டார். இறுதியில் இறையனார் இயற்பகையாருக்குக் காட்சி தந்து அவர்தம் துணையொடு வாழ்வாங்கு வாழவைத்து, அவர்தம் சுற்றத்தாரையும் உய்வித்த கதையெல்லாம் 'சுபம்' எனும் நிறைவுத் திரைக்கானது. நமது கட்டுரைக்கான நிறைவுத் திரையை இப்படி அமைப்போமா ? - எந்த மதமானாலும் நிறைவான வாழ்க்கைக்கு வழிகோலுவதாகத்தானே அமைய முடியும் ! குறைபட்ட இறையமைப்பு வாழ்வில் நிறை தருமா ?
  22. பார்த்தீனியத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று தான் வெளியே தெரிகிறது, ஆனால் வேறெதையோ குறிக்கும் உருவகக் கவிதையெனப் புரிகிறது!
  23. இதை அழிப்பதற்கு எவ்வளவு பாடுபடுகிறார்கள். தேவையான ஒரு விடயத்தை அழகாக வடித்துள்ளீர்கள்.
  24. ஏன் தேசியத் தலைவரை சந்தித்த உலக தலைவர்கள் எல்லாம் தமிழ்படித்து பட்டம் வாங்கிய பிற்பாடா போய் சந்தித்தார்கள்?
  25. 🤣................ முன்வரிசைகளில் இருப்பதற்கு மிகத் தெளிவான சில காரணங்களே உண்டு: உயரம் அல்லது முன்னரே ஒதுக்கப்பட்ட இருக்கை, கண் பார்வையின் திறன், எதிலும் கவனமெடுக்கும் ஆர்வம் போன்றன.............. ஆனால் பின்வரிசைகளில் இருப்பதற்கு பின்னால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை வைத்திருக்கின்றார்கள் போல............
  26. மண்ணில்... பசளை போட்டு, நீர் ஊற்றி வளர்த்தாலும் இவ்வளவு செழிப்பான மிளகாய்கள் கிடைக்காது. இது கூரையில் உள்ள ஓட்டில்... எதுவும் இல்லாமல் காய்த்து குலுங்குவது அதிசயம்தான்.
  27. வலிமை அதன் வழியைக் கண்டுபிடிக்கிறது.👏
  28. இவரது கதையைப் பார்த்தால் வெளியில் இருந்து வேறு யாரோ தமிழரசை உடைப்பது போல அல்லவா இருக்கிறது. நீண்டகால அனுபவம் உள்ளவர் சிவஞானம். இவர்களோடு உள்ளவர்களே முதுகில் சொருகுகிறார்கள் என்று எப்போது கண்டுகொள்ளப் போகிறார். சைக்கிளும் மாம்பழமும் ஒன்று சேர முயற்சி நடக்கிறது. கடந்த தேர்தலில் மரணஅடி வாங்கியும் இன்னமும் பிரிந்து போவதையே செய்து கொண்டிருக்காமல் எல்லோரும் ஒன்றாகாவிட்டால் உள்ளூராட்சி சபைகளையும் என்பிபி வசமே போகும். பணத்தை வாரி இறைப்பதாக சொல்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கே ஆளில்லாமல் கஸ்டப்பட்ட தமிழ்கட்சிகள் 2-3 ஆயிரம் வேட்பாளர்களை எப்படித் திரட்டப் போகிறார்கள்? கடந்த தேர்தலில் சைக்கிளில் பயணித்த பெண்ணை வீட்டுக்குள் இழுத்துக் கொண்டோடியது போல பலதும் நடக்கும்.
  29. பையன் தம்பி வணக்கம் 71 வது கேள்விக்கான பதில் நீங்கள் எழுதவில்லை
  30. உண்மை தான்,.....அமெரிக்கா இந்த உலகில் ஒரு பெரிய. கிணறு தான் அங்கே தவளையாக இருப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் 🤣. இன்ரநெற். வந்த பிற்பாடு உலகில் உள்ள அனைவரும் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்கிறோம் இன்றைய நிலையில் கிணற்றில் தவளைகள். உண்டா ??? 🤣🤣🤣. அவை தான் நிறையவே அருமையான கதைகள் எழுதி தள்ளுகின்றனவே. ....
  31. படம்:இதயமலர்(1976) இசை:MSV வரிகள்:புலமைப்பித்தன் பாடியோர்:செயசந்திரன் & வாணி செயராம்
  32. இவர்கள், யாரையும் முன்னேற்ற பணம் அனுப்பவில்லை. இதன் பிறகும் இவர்கள் கிருஷ்ணா பெயரில் பணம் அனுப்புவார்களாக இருந்தால்; இந்த ஏமாற்றுப்பேர்வழிகளை ஊக்குவிக்கிறார்கள், அதற்கு பின்னால் அனுப்புபவர்களுக்கு ஏதும் சுயலாபம் உண்டு, அல்லது சுய புத்தியை இழந்தவர்களாக இருப்பார்கள் என நினைக்கிறன்.
  33. ரூ சிந்தனை பிடித்துள்ளது. முன்னைய காலங்களில் தமிழர் நாணய குறியீடாக எதை பயன்படுத்தினார்கள்? அப்படி ஏதும் காணப்பட்டால் அதை பயன்படுத்துவது இன்னும் சிறப்பு.
  34. உடைக்கிறாரா கொத்தனார்? தமிழ்கூறு நல்லுகம் தன் இயற்கை வாழிடங்களை தாண்டி, உலகெங் பரந்து விட்ட இந்த காலத்திலும் கூட, அது தனக்கென சில விழுமியங்களை, கூட்டு கொள்கைகளை இறுக பற்றி பிடித்துத் கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒன்றுதான் கலைப்படைப்புகளில் “கெட்டவார்த்தை” அல்லது “தூசணம்” என அழைக்கப்படும் அவமரியாதை வழக்கை தவிர்த்தல். ஆங்கிலபடங்களில் சர்வசாதராணமாக வரும் இவை தமிழ்படங்களில் மிக அரிதாகவே வரும். துள்ளிசை பாடல்களிலும் இதுதான் நிலமை. இதற்கு இதுவரை ஒரே விதிவிலக்காக இருந்தது என்றால் அது திண்டுகல் ரீட்டா வகையறாக்கள் மேடையில் ஆடும், “ஆடல் பாடல் நிகழ்வு” என அழைக்கபடும் “ரெக்கோர்ட் டான்ஸ்” மட்டுமே. அங்கேயும் பாடல்களில் ஆபாசம் இராது, நகர்வுகளிலும், வசனங்களிலும்தான். அதுவும் கூட பெரும் பாலும் இரெட்டை அர்த்தம் உள்ள வசனங்களாகவே இருக்கும். நேரடியாக கெட்டவார்த்தை பிரயோகம் அரிது. இதற்கு தணிக்கை மட்டும் காரணம் அல்ல. சுயதணிக்கை செய்யும் யூடியூப் பாடல் வீடியோ உட்பட்ட பலதில் கூட இந்த ஒழுங்கு கடைபிடிக்கவே படுகிறது. பீப் சாங் போல இடைக்கிடை சிலது விதிவிலக்காக வந்தாலும் அவை கடும் கண்டனத்துக்கு ஆளாவதே வழமை. ஆனால் இஸ்டாவும், டிக்டொக்கும் இந்த வழமையை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கிறவனா? என எண்ண தோன்றுகிறது. இந்த இரு தளங்களிலும் பெண்கள் சர்வசாதாரணமாக “ஆடல் பாடல்” ஆடி வருவது கொஞ்ச காலமாகவே நடப்பதுதான். இப்போ இது அடுத்த கட்டத்துக்கு போயுள்ளது. கெட்டவார்த்தை பேசியே யூடியூப்பிலும், இன்ஸ்டாவிலும் பிரபலமானவர் குட்டி மியா. மேற்குலகுக்கு ஒரு மியா கலிபா, எமக்கு ஒரு குட்டி மியா. ஆனால் கலிபா செயலில், குட்டி மியா சொல்லில். இதுதான் வித்தியாசம். இந்த குட்டிமியா ஆபாசமாக வீடியோ போட, அதை பார்த்து ஆபாசமாக பலர் கொமெண்ட்ஸ் போடுவார்கள். குட்டி மியா இந்த கொமெண்ட்சை வாசித்து அதை விட ஆபாசமாக பதில் கூறி இன்னொரு வீடியோ போடுவார், லைக்ஸ் அள்ளும். இப்போ என்னெவென்றால் -எவரோ ஒருத்தர் (ஒரு பிரபல இளவயது இசையமைப்பாளர் என்கிறார்கள் சிலர்) குட்டி மியாவுக்கு வந்த கெட்ட, கெட்ட, மகா கெட்ட கொமெண்ட்ஸை எல்லாம் பாடல் வரியாக்கி ஒரு பாடலை (ஏஐ மூலம் என்கிறார்கள்) உருவாக்கியுள்ளார். அந்த பாடல்தான் “தூத்துகுடி கொத்தனாரு”. சும்மா சொல்ல கூடாது, மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஒரு ஈர்ப்பு அந்த பாடலில் இருக்கிறது. பாடல் டாப்பு டக்கர் ஹிட்டு. சிந்தித்து பார்த்தால் ஆங்கில பாடல்களில் எமினெம்மும், இன்னும் பலரும் எப்போதோ சில தசாப்தங்கள் முன்பே செய்து விட்ட “புரட்சி”தான் இது. தமிழில் பீப் சாங் நேரம் இப்போ இருக்கும் இன்ஸ்டா கலாச்சாரம் இல்லை என்பதால் அதிகம் எடுபடவில்லை. பெரு ஊடகத்தில் எதிர்ப்பும் அதிகமாய் இருந்தது. இப்போ நிலமை அப்படி இல்லை. இன்ஸ்டா என்பதால் யாரை யாரும் எதிர்க்கவும் முடியவில்லை என நினைக்கிறேன். ரொம்ப சாதாரணமான ஒரு இன்ஸ்டா பாடல் - ராஜா, ரஹ்மான் பாடல் போல் ஹிட்டடிக்கிறது. தூத்துகுடி கொத்தனார் - தமிழ் உலகின் நீண்டதொரு நியமத்தை உடைத்து விட்டாரா? பிகு பாடலை கேட்பதாயின் - ஹெட்போன் போடவும்.
  35. @கந்தப்பு ச‌ர்வ‌தேச‌ கிரிக்கேட்டை ப‌ற்றி அதிக‌ம் தெரிந்து வைத்து இருக்கும் க‌ந்த‌ப்பு அண்ணாவுக்கு சிற‌ப்பு அழைப்பித‌ல்🙏👍............... @suvy 2023 ஜ‌பிஎல்ல‌ முத‌ல் இட‌ம் பிடிச்ச‌ என‌து த‌லைவ‌ர் சுவி ஜ‌யாவுக்கும் சிற‌ப்பான‌ அழைப்பித‌ல்...............வ‌ய‌தானாலும் ஜ‌யாவின் க‌ணிப்புக‌ள் ப‌ல‌ ச‌ரியாக‌வே வ‌ரும் இந்த‌ முறையும் அதிக‌ புள்ளிய‌ பெற‌ வாழ்த்துகிறேன் சுவி ஜ‌யாவை🙏👍..................... @வாதவூரான் @நியாயம் @வாத்தியார் @நந்தன் @பிரபா @kalyani உங்க‌ளையும் அன்போடு அழைக்கிறோம்🙏👍................
  36. அது ஊரில் வாழ்ந்த அப்பம்மா கூறியது ஊரில் இருந்து மாப்பிள்ளையை இறக்குமதி செய்வது..... சரியாகப்படவில்லை என்று நினைத்து..... இங்கேயே தெரியாத... அறிமுகம் இல்லாத.... மாப்பிள்ளைகளிடம் மாட்டுப்பட்டவர்களும் இருக்கின்றார்கள்
  37. கவியர் இந்த முரண்பாட்டில் நானும் கொஞ்சம் தடுமாறிவிட்டேன்...திருப்பி திருப்பி வாசித்தேன்....கதைதானே...ஆனால் இதனை கதையென்று ..ஒதுங்கிச் செல்ல முடியவில்லை...நிஜமும்தான்...எனக்கும் பிள்ளைகள் இருக்கினம்...அவர்களுடய விருப்பிக்கு விட்டிருக்கின்றேன்..ஆனால் நூலை கட்டி ஒருவட்டமாக விட்டிருக்கின்றேன்...முக்கியமானது எம்மினமாக இருக்கவேண்டும்.. கதையும் அருமை ...சித்திரமும் அருமை தொடருங்கள்
  38. இதுதான் சார் ஹைலைட்...ஆணுக்கு ஒளிகொடுப்பது பெண்...ஒத்துக்கொண்டீர்கள்..நானும் ஒத்துக்கொள்கின்றேன்...சின்ன கிளூ.. கோயில் அய்யருக்கு மட்டுமில்லை..அங்கைவாற அழகான பெண்களுக்கும் நம்மைகாட்டிக் கொடுப்பது நம்ம மனைவியால் மட்டுமே முடியும்.. உங்கள் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் எனது பழைய நினைவுகளை கிளறுகின்றது ..அருமை தொடருங்கள்
  39. குரங்கு பிடிக்கும் வேலைக்கு..சமரில் போகா யோசிக்கிறேன்..😆
  40. வலிமை அதன் வழியைக் கண்டுபிடிக்கிறது. "பச்சை மிளகாய் செடி தடையை தாண்டிச் சென்று, வரம்புகளை மீறி வானத்தைத் தொடுவது போல."
  41. அங்கீகார மறுப்பால் அகிலத்தை வென்ற இளையராஜா! -சாவித்திரி கண்ணன் உள்நாட்டில் மறுக்கப்பட்ட தனக்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் உருவாக்கிக் கொண்டார் இளையராஜா! இசைமேதை இளையராஜா இயல்பிலேயே ஒரு கலகக்காரர். சிம்பொனியும் கலகக்கார்களால் உருவாக்கப்பட்டதே! கர்நாடக இசை மேடைகளில் அங்கீகாரம் மறுக்கப்பட்ட இளையராஜா மேற்கத்திய இசை மேடைகளை வென்றதை பற்றிய ஒரு அலசல்; இளையராஜா மண்ணின் இசையையும், மக்கள் இசையையும் மரபு வழியாக உள்வாங்கி வளர்ந்தவர். ஒரு கம்யூனிஸ்ட்டாக இசை வாழ்வை தொடங்கிய அவருக்குள் இருந்த சுதந்திர வேட்கை எந்த அமைப்பிற்கும் கட்டுப்பட்டதன்று! எனவே, அது, தன் கட்டற்ற சுதந்திர வெளியை தொடகத்திலேயே கண்டடைந்தது. தன்ராஜ் மாஸ்டருடன் இளையராஜா தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசையை பயின்ற போதே மொசார்ட்டும், பீத்தோவனும் அவரது இதய சிம்மாசனத்தில் வந்தமர்ந்தனர். மயிலாப்பூர் லஸ் கார்னர் சாயி லாட்ஜ் தன்ராஜ் மாஸ்டர் அறையில் தான் அவர் பீத்தோவனையும், மொஸார்ட்டையும், பாஹ்கையும், மேண்டல்ஸனையும், ஷீபர்ட்டையும், சைக்காவ்ஸ்கியையும் அறிந்துணர்ந்தார். ஏனென்றால் ஒரு கலகக்காரனாலேயே இவர்களை கண்டடைய முடியும். மொழிகளின் ஆதிக்கத்தைக் கடந்த இசையின் மீதான அவரது ஆரம்பகால ஈர்ப்பாக வெளியானதே ஹவ் டூ நெம் இட், நத்திங் பட் விண்ட் போன்ற மொழிகளற்ற இசை ஆல்பங்கள்! உலகின் தலை சிறந்த இசை கலைஞர்களைக் கொண்ட ராயல் பிலார்மோனிக் இசைக் குழு லண்டன் மா நகரில் அவரது இசையை இசைக்கிறது. இன்னும் உலகின் 13 நாடுகளில் உலகப் பெரும் இசைக் கலைஞர்கள் அவரது இசை நோட்சை பார்த்து இசைக்க உள்ளனர். உலகத்தில் மதம் சார்ந்தும், மன்னர்களின் அதிகாரம் சார்ந்தும் உருவான இசைகள் காலப் போக்கில் காணாமல் போயின. ஆனால், தமிழகத்தில் மட்டும் மதம் சாதி ஆகியவற்றின் அதிகார பீடமாக அங்கீகாரம் பெற்ற கர்நாடக இசையை இன்னமும் விட்டுக் கொடுக்காமல் பிராமணர்கள் தங்கள் சாதிக்கான இசையாகவே வளர்த்து நிலை நிறுத்தி வருகின்றனர். இதில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் மாற்று சாதியினருக்கு பெரிய அங்கீகாரத்தை தரமாட்டார்கள்! அந்த வகையில் இங்கு தனக்கு மறுக்கப்பட்ட அங்கீகாரத்தைத் தான் இளையராஜா உலக அரங்கில் பெற்றுள்ளார். மக்கள் உணர்வுகளில் இருந்து அவருக்கு எல்லா இசையுமே அத்துப்படி. சிம்பொனி ஒரு இனம் தன்னை தேசியமாக உணர ஆரம்பித்த பிறகான மாற்றங்களின் விளைவாய் கட்டற்று சுதந்திரமாக உணர்கிறது! அவ்வித உணர்வுகளின் வளர்ச்சி போக்கே சிம்பொனி இசையாய் உருக்கொண்டது.! ஒரு வகையில் கி.பி 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியோடு தொடர்புடையது சிம்பொனி இசை! பிரெஞ்சுப் புரட்சியில், கிறித்துவப் பாதிரிகளின் செல்வாக்கிற்கும் கிறிஸ்துவ மதக் குறீயீடான ’லத்தீன்’ மொழி ஆதிக்கத்திற்கும் எதிரான கூறுகள் வெளிப்பட்டன என்பதை நாம் அறிவோம். ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தும் செல்வாக்கை கிறித்துவப் பாதிரிகள் பெற்றிருந்ததையும் எதிர்த்து மக்கள் புரட்சி வெடித்தது. தேவாலய இசை (Church music) ஆதிக்கத்திற்கு எதிராக உருவானதே பல இசைக் கருவிகளை பயன்படுத்தி உருவான சான்சன் (Chanson) இசை வடிவமாகும்! இதை உருவாக்கியவர், குயிலாம் துமாசாத் (Guillame de Machaut) என்ற பிரான்சின் இசை அறிஞராவார்! இதை இந்த மண்ணுக்கான மதச் சார்பற்ற இசை என அவர் பிரகடனப்படுத்தினார்! இதே போல இத்தாலி இசைக் கலைஞன் பிரான்சிஸ்கோ லன்தினி (Francesco Landini) என்ற கண் பார்வையற்ற அறிஞர் தன் தாய் மொழியில், அதன் நாட்டுப் புற இசை அம்சமான மாத்ரிகல் (madrigal) என்ற இசை வடிவதை அறிமுகப்படுத்தி, அதை மதச் சார்பற்ற இசை எனப் பிரகடனப்படுத்தினார். இப்படியாக பிரான்சும், இத்தாலியும் சேர்ந்து சிம்பொனி என்ற புதிய இசை தோற்றத்திற்கான மூலக் கூறுகளை வழங்கின…என்கிறார்கள் இசை ஆய்வாளர்கள்! எதற்காக இதை சொல்கிறேன் என்றால், புறக்கணிக்கப்படும் தேசிய இனத்தின் மக்கள் தங்களுக்கான இசையை தாங்களே உருவாக்கிக் கொள்வர்! அப்படி ஒரு ஆதிக்க மொழிக்கும், மத ஆதிக்கத்திற்கும் எதிராக உருவானதே சிம்பொனியின் தோற்றத்திற்கான அடித்தளமாகும். தன் தாயிடமிருந்தும், தன்னைச் சுற்றி வாழ்ந்த உழைக்கும் மக்களிடம் இருந்தும் இசைப் பாடல்களை கேட்டு வளர்ந்ததால் இயல்பாகவே நாட்டுப் புற இசையில் காலூன்றி மேலெழுந்து வந்தவர் தான் இளையராஜா! அவர் இன்று அடைந்திருக்கும் உயரத்திற்கு எல்லாம் அடித்தளமிட்டது அவர் கேட்டும், பாடியும் வளர்ந்த கிராமிய இசை தான்! ஆனால், இதற்கு பின்னணியில் சில நூற்றாண்டுகள் நடந்த நிகழ்வுகள் இதற்கு முன்னோட்டமாயின. அது கத்தோலிக்க மதத்தில் இருந்து உருவான புரோடஸ்டண்ட் மதத்தின் தோற்றம், ஜெர்மனியில் நடந்த மதப்போர்கள், இங்கிலாந்தில் நடந்த உள்நாட்டுப் போர்கள் (Civil war) ஐரோப்பிய நாடுகளில் உருவான பொருளாதார விடுதலைக்கான குரல்கள் அகியவை மேற்கத்திய இசையில் தாக்கத்தை உருவாக்கி மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்டன. அது ஹைடன் (Haydn), மொசார்ட் (Mozart) போன்ற இசை மேதைகள் சிம்பொனியை படைக்க காரணமாயிற்று! இசை மேதைகள் பித்தோவன், மொசார்ட் சிம்பொனியை அதற்கடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் புரட்சிகரமான சிந்தனையை கொண்டிருந்த பீத்தோவன் என்ற மாபெரும் இசைமேதையாகும். இந்த காலகட்டத்தில் அச்சு ஊடகம் வளர்ந்த நிலையில், இசைக் குறியீடுகளை அச்சிடத் துவங்கியதால் இசையின் வளர்ச்சி அனைவருக்குமானதானது. மொசார்ட், பீத்தோவன் ஆகிய இந்த இருவரும் தான் நம் இளையராஜாவின் இதய ராஜ்ஜியத்தில் பல்லாண்டுகளாக கோலோச்சுபவர்கள்! சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பே நம் இளையராஜா இவர்களின் சமாதிகளை தேடிக் கண்டடைந்து கண்ணீர் உகுத்து அழுது வந்ததை எழுதி உள்ளார். மொழிகளின் ஆதிக்கத்தை கடந்த மனித சுதந்திரத்தின் முழு வெளிப்பாடாக ஒழுங்கமைக்கப்பட்ட இந்த இசை வடிவம் இளையராஜாவை வசீகரித்தது. இதன் விளைவாக நம் இளையராஜா 1993 ஆம் ஆண்டே சிம்பொனியை படைத்தார்! ஆயினும் அந்த இசைக்கு பரிச்சியமல்லாத இந்திய இசைக் கருவிகளையும் அதில் இளையராஜா இணைத்து ஏற்படுத்தியதால் அது மேற்கத்திய இசை உலகின் முழு ஏற்பையும் பெற முடியாமல் போயிற்று! ஆனால், தற்போது முற்றிலும் மேற்கத்திய இசைக் கருவிகளுக்கு மட்டுமே இளையராஜா நோட்ஸ் எழுதி சிம்பொனியை அரங்கேற்றிவிட்டார்! மேஸ்ட்ரோ, ராகதேவன், இசை ஞானி..என பலவாறாக மக்களால் அழைக்கப்பட்டாலும் கர்நாடக இசை விற்பன்னர்கள் இளையராஜாவை கர்நாடக இசை கச்சேரி செய்ய சபா தருவார்களா? ஒரே ஒரு முறை வலிந்து அந்த வாய்ப்பை பெற்ற இளையராஜா வரவேற்பில்லாததால் நிறுத்திக் கொண்டார். ஆனால், அவருக்குள் அந்த ஆசை நிறைவேராத ஆசையாக தொடர்கிறது. இளையராஜா சாதிகளைக் கடந்து சர்வதேச அங்கீகாரம் பெற்றுவிட்டார். எனினும், இங்கே தமிழ் நாட்டில் கர்நாடக சங்கீத வித்வான்கள் நம் இளையராஜாவை ஏற்பார்களா? அவரது நிறைவேறாத நீண்ட நாள் கனவான பெருமளவு பிராமணர்கள் மட்டுமே கோலோச்சும் டிசம்பர் மாத கர்நாடக சங்கீத கச்சேரிக்கு அவரை அழைப்பார்களா? திருவையாற்றில் ஆண்டுதோறும் நடக்கும் தியாகய்யர் ஆராதனைக்கு அழைப்பார்களா..? இசை மும்மூர்த்திகளின் வரிசையில் தன்னையும் நான்காவதாக சேர்க்க வேண்டும் என்ற அவரின் கனவை நினைவாக்குவார்களா? இவை எதுவும் நடக்காவிட்டாலும், இளையராஜா வேறு எவரையும் விட கோடானு கோடி மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு கொலுவிருக்கிறார் என்பது மட்டுமல்ல, இந்த தொடர் மறுப்பே அவரை இன்னும், இன்னும் உயரப் பறந்து மறுத்தவர்களை அண்ணாந்து பார்க்க வைக்கும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/20989/ilaiyaraja-symphony/
  42. ப்ளீஸ் கிவ் அஸ் சம் ரைம் யா வி ஆல் வில் ஜோயின்ட் வித் யு பட் நொவ் வி ஆர் இன் தி டிஸ்கஷன் அபவுட் கொப்பிஅண்ட் பேஸ்டிங் 😂🤣😇
  43. அண்ணை இது என்ன???? அமெரிக்கா பொலிஸாரா. ....?? உலகிலேயே குற்றங்கள் குறைந்த இலங்கையின் பொலிஸார் தொலைபேசி எடுக்க விட்டாலும் கூட 24 மணிநேரத்தில் எந்தவொரு குற்றவாளியையும். கண்டு பிடிக்கும் ஆற்றல் உள்ளவார்கள். குறிப்பு,....குற்றவாளிகள் பெரும்பாலும் முன்னாள் ஆயுதப்படையைச்சேர்ந்தவர்கள் தான் ஆகவே அவர்களுக்கு இந்த குற்றவாளிகளை பிடிப்பது பெரிய வேலை இல்லை பகுதி நேர வேலையாக இன்றைய அரச பாதுகாப்பு துறையினர் கொள்ளை கொலை,......செய்வதும் உண்டு” 🤣
  44. முதலாமிடம் பெற்ற @வீரப் பையன்26 இரண்டாமிடம் பெற்ற @செம்பாட்டான்மூன்றாம் இடம்பெற்ற @Eppothum Thamizhanசகோதரர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்ட 24 போட்டியாளர்களுக்கும் போட்டியை திறம்பட நடத்திய கிருபன் அண்ணைக்கும் எனது வாழ்த்துகள்.
  45. 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR RCB No Result Tie RCB 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH RR No Result Tie SRH 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK MI No Result Tie CSK 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC LSG No Result Tie LSG 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT PBKS No Result Tie GT 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RR KKR No Result Tie KKR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH LSG No Result Tie SRH 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK RCB No Result Tie CSK 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT MI No Result Tie GT 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC SRH No Result Tie DC 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RR CSK No Result Tie CSK 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI KKR No Result Tie MI 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG PBKS No Result Tie LSG 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB GT No Result Tie GT 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR SRH No Result Tie KKR 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG MI No Result Tie LSG 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK DC No Result Tie CSK 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS RR No Result Tie PBKS 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR LSG No Result Tie KKR 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH GT No Result Tie SRH 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI RCB No Result Tie MI 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS CSK No Result Tie CSK 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT RR No Result Tie GT 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB DC No Result Tie RCB 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK KKR No Result Tie CSK 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG GT No Result Tie GT 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH PBKS No Result Tie SRH 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR RCB No Result Tie RR 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC MI No Result Tie MI 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் LSG CSK No Result Tie CSK 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS KKR No Result Tie KKR 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC RR No Result Tie DC 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI SRH No Result Tie MI 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB PBKS No Result Tie RCB 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT DC No Result Tie GT 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR LSG No Result Tie RR 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS RCB No Result Tie RCB 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI CSK No Result Tie CSK 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR GT No Result Tie GT 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG DC No Result Tie LSG 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH MI No Result Tie MI 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB RR No Result Tie RCB 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK SRH No Result Tie CSK 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR PBKS No Result Tie KKR 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI LSG No Result Tie MI 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC RCB No Result Tie DC 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR GT No Result Tie GT 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC KKR No Result Tie KKR 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK PBKS No Result Tie CSK 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் RR MI No Result Tie MI 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT SRH No Result Tie GT 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB CSK No Result Tie CSK 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR RR No Result Tie KKR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS LSG No Result Tie LSG 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH DC No Result Tie SRH 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI GT No Result Tie MI 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR CSK No Result Tie CSK 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS DC No Result Tie DC 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG RCB No Result Tie LSG 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH KKR No Result Tie SRH 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS MI No Result Tie MI 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC GT No Result Tie GT 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK RR No Result Tie CSK 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB SRH No Result Tie RCB 65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT LSG No Result Tie GT 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI DC No Result Tie MI 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR PBKS No Result Tie RR 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB KKR No Result Tie RCB 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT CSK No Result Tie CSK 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG SRH No Result Tie LSG 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR Select LSG Select LSG LSG MI Select MI MI PBKS Select PBKS Select RR Select RR Select RCB Select RCB RCB SRH Select SRH Select 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) LSG #2 - ? (3 புள்ளிகள்) CSK #3 - ? (2 புள்ளிகள்) RCB #4 - ? (1 புள்ளி) MI 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! PBKS 74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team RCB 76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PBKS 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shubman Gill 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) GT 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) VARRUN 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) RACHIN RAVINDRA 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSKK 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Matheesha Pathirana 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) JADEJA 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK
  46. பெயருக்கு ஏற்ற பேராசிரியர் ராஜன் குறை. இவர் ஒரு சங்கி எதிர்ப்பாளர். சங்கிகள் ஆதரிக்கிறார்கள் என்பதாலேயே யூதர்களின் இருப்பை, சுய நிர்ணயத்தை, நில உரிமையை மறுத்து, முடிந்தளவு அவர்கள் வரலாற்றை மறைத்து கட்டுரை வரைகிறார். உண்மை என்னவெனில் யூதர் முற்று முழுதாக அந்த மண்ணை விட்டு ஒரு போதும் நீங்கவில்லை. அங்கே மட்டும் அல்ல, யேர்மன் தொட்டு, சிரியா, துருக்கிவரை அரபுலகம் எங்கும் அவர்கள் வாழ்ந்தார்கள் (தனியே ஐரோப்பாவில் அல்ல). இஸ்ரேல் உருவாக்கத்தின் பின் எழுந்த வெறுப்புணர்வு அவர்களை இஸ்லாமிய நாடுகளில் இருந்து இஸ்ரேல் நோக்கி விரட்டியது. புராணத்தை மட்டுமே இஸ்ரேல் வரலாறாக கொண்டுள்ளது என்பது அப்பட்டமான பொய். அப்பட்டமான பொய். இஸ்ரேல் ஒரு யூத மத அரசு என எங்கும் குறிப்பிடப்படவில்லை. யூத இனவழி தேசிய அரசு அது. எப்படி ஆங்கிலேயருக்கு இங்கிலாந்து, லத்வியருக்கு லத்வியாவோ, அப்படி யூத இன நாடு இஸ்ரேல். பேரா குறைக்கு Islamic republic of Iran, Islamic republic of Pakistan எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் இனவழி தேசியமாக கட்டி எழுப்பபட்டுள்ள இஸ்ரேலை மதவழி நாடு (theocracy) என பொய்யுரைக்கிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.