Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    19134
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87990
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3061
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/15/25 in all areas

  1. இந்த பாடலை கர்ணன் படத்தில் வரும் கண்டா வரச்சொலுங்க பாடல் மெட்டில் பாடவும். கண்டா வரச் சொல்லுங்க மாடி வீட்டில் பிறந்த புள்ள செல்வத்துக்கு பஞ்சமில்ல மாடி வீட்டில் பிறந்த புள்ள செல்வத்துக்கு பஞ்சமில்ல நாயக்கரு பெத்த புள்ள நல்லவழி சொன்ன புள்ள கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க ********* அரசாங்கம், பள்ளிகூடம் அத்தனையும் மனுவின் வசம் அரசாங்கம், பள்ளிகூடம் அத்தனையும் மனுவின் வசம் தடி கொண்டு அடிச்சான் பாரு தகர்ந்து போச்சு நூலின் பலம் கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க ********* ஊரெல்லாம் கோயிலப்பா போக வழி இல்லையப்பா ஊரெல்லாம் கோயிலப்பா போக வழி இல்லையப்பா ஒத்தையா துணிஞ்சு நின்னு பாதை செஞ்சு தந்தானப்பா கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க *********** ஆட்சியிலும் அமரவில்லை அதிகாரம் சுவைக்கவில்லை அவன் செஞ்ச புரட்சியினை அசைக்க இங்க எவனுமில்லை அவன் செஞ்ச புரட்சியினை அசைக்க இங்க எவனுமில்லை கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க கோஷான் சே
  2. சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் செய்துக்கொண்டேன். அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்திருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட் நிறுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது. பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது. 2011 இல் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன். சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரெண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது. ஆனால் இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது. நுரையிரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சு திணறல் ஏற்பட்டது. ஒரு பிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை செலுத்தினால் தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்கிற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுகுழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்து கொண்டார்கள். இதை எப்படி சரிசெய்வது? வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது. மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது. வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு நாட்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்போதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும் படி ஒரு அவஸ்தை. ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத்தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும் படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை ஜீரம் இல்லை. ஆனால் ஆக்சிஜன் குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது உண்ண முடியாது எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்தது போன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன். ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக் கொண்டேன். அப்படி புகைத்தால் தான் கதை எழுத வரும் என்று முட்டாள் தனமாக நம்பியதை நொந்து கொண்டேன். மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால் மூச்சு திணறி இதோஸ.. இதோஸ என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பராவாயில்லை. மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல் வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள். - எழுத்தாளர் பாலகுமாரன் - Jeeva Murugesan ·
  3. யாரார்க்கு என்ன வேஷமோ இங்கே யாரார்க்கு எந்த மேடையோ ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும் நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா…. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேளை நெருங்குதம்மா….. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா (தமிழ் தேசிய) தாய் கொண்டு வந்ததை…. (தம்பிகள்) தாலாட்டி வைத்ததை (பிஜேபி) நோய் கொண்டு போகும் நேரமம்மா….
  4. பார்த்தீனியம் ---------------------- கள்ளியும் முள்ளும் இருந்த வறண்ட நிலத்தில் பச்சையாக ஒன்று புதிதாக வந்தது பார்க்க அழகாகவும் படபடவென்று வளருதே என்றும் இன்னும் வளர்த்தனர் அதில் இருக்கும் முட்கள் அவை என்ன முட்கள் அவை வளர வளர போய்விடும் என்றனர் அதை வளர்த்தவர்கள் கெட்ட வாடை வருகுதே என்றால் ஆனால் பசுமையாக இருக்குதே இது நிலத்தை காக்கும் ஆடு மாட்டைக் காக்கும் இப்படி ஒன்று முன்னர் இருந்ததேயில்லை என்றனர் நாங்கள் மூக்குகளை பொத்தி விட்டால் அதன் வாடை அண்டாது என்றும் சொன்னவர்கள் வாய்களை அடைத்தனர் கள்ளியும் முள்ளும் காணாமல் போனது பச்சை செடியின் சாதனை ஆனது பரந்து வளர்ந்த பச்சை செடி விஷத்தை கொட்டிக் கொட்டி வறண்ட நிலத்தை இன்னும் கெடுத்து அருகில் வருபவற்றை முள்ளாலும் கிழித்து கெட்ட வாடையை பரப்பி சீரழித்துக் கொண்டே இருக்கின்றது இதுவரை மூக்குகளை மூடிக் கொண்டு இருந்தவர்கள் இனி கண்களையும் மூட வேண்டியது தான் விஷத்தை முளையிலேயே கிள்ளாமல் எத்தனை தடவைகள் தான் தவற விடுவது.
  5. யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் மலையகத் தமிழர்களை “கப்பலில் வந்தவர்கள்” எனவும், வடக்கு முஸ்லிம்களை “இவங்கள விரட்டினது தவறு; இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும்” எனவும் கூறியுள்ளார்...(இதைவிட நிறைய இனவாதத்தை அவர் வீடியோக்களில் கக்கி உள்ளார்.. அவர் முகநூலில் இன்றும் உள்ளன..) இவ்வாறான கருத்துக்கள் சமூகத்தில் இனவாதத்தை ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது... மலையக தமிழர்கள் மற்றும் வடக்கு முஸ்லிம்கள் பற்றிய மேற்சொன்ன கருத்துக்கள் கடைந்தெடுக்கப்பட்ட இனவாதம்... அருவருப்பான வார்த்தைகள்... தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதத்தை உண்டாக்கும் காரியம்... மலையகத்தமிழர்களை வடகிழக்கு தமிழர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயோக்கியத்தனம் மற்றும் முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுக் காயத்தை மீண்டும் கிண்டி சுயஇன்பம் தேடும் சைக்கோத்தனம்… பாதிக்கப்பட்ட ஒரு இனம் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற ஒரு அசட்டு உற்சாகம் பைத்தியக்காரத்தனமானது... இது தனிப்பட்ட ஒருவருடைய கருத்து என்று கடந்து போக முடியாது, மாறாக, விரும்பியோ விரும்பாமலோ யாழ்ப்பாணத் தமிழர்களை பாராளுமன்றத்தில் பிரிதிநிதிப்படுத்துகிற ஒரு பைத்தியக்காற பாராளுமன்ற உறுப்பினருடைய வார்த்தைகள் இவை… அர்ச்சுனாவின் இக்கருத்துக்கள் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது... பலர் இவரது கருத்துக்களை இனவாத பிதற்றல்கள் எனக் கண்டித்து வருகின்றனர்... இது தமிழர் சமூகத்துக்குள் இனவாத எண்ணங்களை வெளிப்படுத்துவதோடு, முஸ்லிம் மலையக தமிழ் சமூகத்துடன் உள்ள உறவுகளை பாதிக்கும் அபாயமும் உள்ளது… சிங்களவர்களையோ, இஸ்லாமியர்களையோ ‘இனவாதிகள்’ என்று நாம் கூறும் போது ‘நாம் ஒருபோதும் இனவாதிகளாக இருந்ததில்லையா?’ என்கிற ஒரு கேள்வியை நம்மிடம் கேட்டுப்பார்க்கவேண்டும்… இனவாத கருத்துக்களை எதிர்கொள்ளும் போது, அவற்றை கண்டித்து, சமூகத்தில் நல்லிணக்கத்தை பேணுவது முக்கியம்... அர்ச்சுனாவின் கருத்துக்கள் இதற்கு புறம்பாக உள்ளதால, அவற்றை பொதுவெளியில் கண்டிப்பது சமூகத்தின் அறச்செயலாகும்… இவ்வாறான வெறுப்புக்கருத்துக்கள் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடியவை... அவை இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளை பாதிக்கக்கூடும்... எனவே, சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை பேண, இவ்வாறான கருத்துக்களை கண்டிப்பது அவசியம்... இப்படிப்பட்ட அயோக்கியர்களின்,படித்த முட்டாள்களின் இனவாத பிதற்றல்களை கண்டும் காணாமலும் இருப்பது ஆபத்தானது... காரணம் மக்கள் இதை ஏற்றுக்கொண்டார்கள் என்கிற ஒரு முட்டாள்தனமான முடிவுக்கு இப்படி வாந்தி எடுத்து வைப்பவர்கள் வந்துவிடுவார்கள்... வந்துவிடுகிறார்கள்... ஆதலால், குறைந்தபட்சம் இவற்றைப் பொதுவெளியில் கண்டிப்பது ஒரு அறம் கொண்ட சமூகமாக முக்கியமானது... இந்த பைத்தியக்காறனுக்கு எல்லாம் ஒரு காலத்தில் பாராளுமன்றம் போக ஆதரவாக எழுதினேன் என்பதை நினைத்து வெட்கமும் வேதனையும் அடைகிறேன்.. இந்த கடைந்தெடுத்த அயோக்கியனுக்கு யாழ் இணைய சமூகமும் தன் கண்டனங்களை தெரிவிக்கவேண்டும்.. —-—
  6. முழிக்கும் மொழி --------------------------- இருமொழிக் கொள்கையா அல்லது மும்மொழிக் கொள்கையா எது சரி, எந்த வழியில் போவது என்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடத்தில் வார்த்தைப் போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது வெறுமனே வார்த்தைப் போர்கள் தான். இந்தப் போர்க் களத்தில் நிற்கும் பெரும்பாலான முன்னணி தளபதிகளின் குடும்பங்களில் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படுகினறன. ஆனாலும் தமிழைக் காப்பதற்காக, தமிழை வளர்ப்பதற்காக தாங்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிரானவர்கள் என்று இவர்கள் வெளியில் சொல்லிக் கொள்கின்றனர். இதில் பலரும் மும்மொழிகளும் படிப்பிக்கும் தனியார் பாடசாலைகளின் உரிமையாளர்களாகவும் கூட இருக்கின்றனர். வழமையான அரசியல் தான் இங்கேயும். மேடையில் ஏறி வாக்குகளுக்காகவும், கைதட்டலுக்காகவும் எதைப் பேச வேண்டும் என்று தெரிந்து அதையே பேசுவது, மேடையிலிருந்து இறங்கிய பின் தங்களின் குடும்ப நலன்களையும், தங்களின் வளமான எதிர்காலத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு, மேடையில் பேசியதற்கு முற்றிலும் எதிரான செயல்களில் ஈடுபடுவது என்பது ஜனநாயக அரசியலின் தவிர்க்க முடியாத ஒரு பக்கம். சர்வாதிகாரிகளுக்கு இந்த இரட்டை நிலைப்பாடுகள் தேவையில்லை. ஊரில் சிறுவயதில் ஒருமொழிக் கொள்கையுடனேயே என் இளமைக்காலம் கழிந்தது. அந்த ஒரு மொழி கூட எந்தப் பாடசாலையிலும் கற்றதால் வந்தது அல்ல. என்னுடைய அம்மாச்சியும், அம்மாவும், அப்பாவுமே அந்த ஒரே மொழியை எனக்கு கொடுத்தார்கள். அம்மாச்சி கதைகள் சொல்வார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கமரூன் போன்றவர்களால் கூட அம்மாச்சியை நெருங்கமுடியாது. அவர் ஒரே சேலையையே தினமும் உடுத்திக் கொண்டே தமிழ் வார்த்தைகளால் பிரமாண்டங்களை உருவாக்கினார். பின்னர் ஊரில் இருந்த வாசிகசாலைகள் அம்மாச்சியின் இடத்தை நிரப்ப முயன்றன. தமிழ் சொற்களும், வசனங்களும் அவ்வாறே உள்ளே புகுந்தன. தமிழையே சொல்லிக் கொடுக்காத பாடசாலைகளில் இன்னொரு மொழியை சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நான் போன எந்தப் பாடசாலையிலும் ஆங்கிலத்தை மருந்துக்கு கூட படிப்பிக்கவில்லை. என்னுடைய பாடசாலை நாட்களில் ஹாட்லிக் கல்லூரியில் படித்தவர்கள் சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடும். ஆனால், பின்நோக்கிப் போய் நிதானமாகப் பார்த்தால், அவர்களுக்கும் உண்மை தெரியவரக்கூடும். அன்று ஆங்கில மொழியில் பரிச்சயம் வருவதற்கு வளரும் சூழலில் ஏதாவது சிறிய அளவில் தன்னும் ஒரு ஆங்கில புழக்கம் இருந்திருக்க வேண்டும் அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போயிருக்க வேண்டும். இவை அமையாவிடத்து ஆங்கிலமும் அமையாது. சிங்கள மொழியின் நிலை இன்னும் பரிதாபம். அதைக் கற்றல் முற்றாகவே தடை செய்யப்பட்டிருந்தது. ஊரில் ஒரு இடத்தில் 'மேக்கட்ட கீயா......' என்று பெரிதாக தமிழில் எழுதப்பட்டிருந்தது. பல வருடங்களின் பின், ஊரை விட்டு வெளியே வந்த பின் தான், இவை சிங்கள மொழிச் சொற்கள் என்பது தெரியவே வந்தது. அது எழுதப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த வீட்டில் ஒரு அக்கா இருந்தார். அப்போது அந்த அக்காவை ஒரு அண்ணன் விரும்பிக் கொண்டிருந்தார். அந்த அண்ணனின் நண்பர்கள் தான் இந்த சிங்கள மொழி வசனத்தை தமிழில் அங்கே எழுதியிருந்தனர். அவர்களுக்கு எப்படி சிங்கள மொழி தெரிய வந்தது என்றால் அவர்களில் சிலர் வெளிநாடு அல்லது கப்பலில் போவதற்காக கொழும்பிற்கு போய் வந்து கொண்டிருந்தார்கள். போகும் வழிப்பாதையில் வழித்துணையாக சிங்கள மொழியில் சில சொற்களையும், வசனங்களையும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். நான் பின்னர் தேவை காரணமாக சிங்கள மொழியையும், ஆங்கிலத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஒரு மொழியை வெறும் மொழியாகவே பார்க்கும் போது அது உண்டாக்கும் ஆச்சரியம் அளவில்லாதது. எப்படி இவை உண்டாகியிருக்கும், எப்படி சத்தங்களை வார்த்தைகளாக உருவாக்கினார்கள், எப்படி உணர்வுகளை வார்த்தைகளாக வெளிப்படுத்தினார்கள் என்பது மனிதர்களின் கூட்டு ஆற்றலுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு. எந்த மொழியையும் மனிதர்களுடன், நிலத்துடன், வரலாற்றுடன், பண்பாட்டுடன் சேர்த்து பார்க்கும் போது பேதங்கள் வர ஆரம்பித்து, அவை பெரும் மோதல்களாவும் ஆகிக்கொண்டிருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை பாடசாலைகளில் புகுத்தும் போது, ஒரு மொழியைக் கொண்டு இன்னொரு மொழியை அழிக்க முற்படுகின்றார்கள் என்பதே இன்று சொல்லப்படும் பெரும் குற்றச்சாட்டு. உதாரணமாக, தமிழ் மொழியை இந்தி மொழியால் அழிக்கப் பார்க்கின்றார்கள் அல்லது தமிழ் மொழியை சிங்கள மொழியால் அழிக்கப் பார்க்கின்றார்கள் என்பன. ஆங்கிலத்திற்கு இந்தக் கட்டுப்பாடு அநேக நாடுகளில் இல்லை. ஆங்கிலம் இன்று உலக இணைப்பு மொழி ஆகிவிட்டது, ஆகவே ஆங்கில மொழியை இரண்டாவது மொழியாகக் கொண்ட இருமொழிக் கொள்கைக்கு பெரும்பாலான நாடுகளில், பிரதேசங்களில் எதிர்ப்புக் காட்டப்படுவதில்லை. கோவாவில் இருக்கும் மக்கள் கொங்கணி என்னும் மொழியைப் பேசுகின்றார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் இப்பொழுது கர்நாடகாவில் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் ஒரு பகுதியில் அந்தப் பிரதேசத்தின் பேச்சு மொழியாக துளு இருக்கின்றது. கன்னடம் கர்நாடக மாநிலத்தின் மொழி. இந்த மக்கள் மூன்று மொழிகளிலும் முதலில் பரிச்சயம் ஆகின்றனர். ஆண்கள் தங்கள் பகுதி பெண்களுடன் துளு மொழியிலும், ஆண்களுடன் கொங்கணி மொழியிலும், பிறருடன் கன்னடத்திலும் உரையாடுகின்றனர். இதைவிட ஆங்கிலமும், இந்தியும் பாடசாலைகளில் கற்றுக்கொள்கின்றார்கள். இந்த தகவல்களை அங்கிருந்த வந்த ஒரு நண்பன் சொன்னான். அவனுடைய ஆங்கில மொழித்திறனும் அபாரம். அவன் இந்தி மொழியையும் மிக நன்றாகப் பேசுகின்றான் என்றே வட இந்திய நண்பர்கள் சொன்னார்கள். அவனுக்கு தமிழும் ஓரளவு தெரிந்திருக்கின்றது. பழைய கன்னட மொழி அப்படியே தமிழ் தான், ஆனால் இதை இங்கு இருக்கும் வேறு எந்த தமிழர்களுக்கும் சொல்லாதே என்று அவன் எனக்கு சொன்னான். எத்தனை மொழிகளை சிறுவயதில் கற்க ஆரம்பிக்கலாம் என்பதில் பெரிய சிக்கல்கள் இல்லை என்றே தெரிகின்றது. மூன்று அல்லது நான்கு மொழிகளை கற்றுக் கொள்ளலாம் என்றே சொல்கின்றனர். இந்த மொழிகள் புழங்கும் சூழல் இருந்தால், இன்னும் மிக இலகுவாக இவைகளை கற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்கின்றனர், என்னுடைய கொங்கணி - துளு - கன்னட - ஆங்கில - இந்தி மொழிகள் தெரிந்த நண்பன் போல. அதிக மொழிகளை தெரிந்திருப்பதால் அது நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை விடவும் பல பயன்கள் உண்டு. உதாரணமாக, அதிக மொழிகள் தெரிந்திருப்பவர்களின் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும், சிக்கல்களுக்கு தீர்வுகளைக் காண்பதில் அதிக நெளிவுத்தன்மை இருக்கும் போன்றன. இலங்கையில் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் சிலர் மும்மொழி வல்லுநர்கள் என்றனர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்றும் தெரிந்த அவர்களால் ஏதாவது நல்லது நடக்கப் போகின்றது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடந்தது போல தெரியவில்லை. ஒரு வேளை அவர்கள் தங்களுக்கு மட்டும் தேவையானவற்றை தங்களின் திறமைகளின் ஊடாக பெற்றுக் கொண்டார்களோ என்னவோ. அரசியலில் பலதும் பொய்த்துப் போகின்றன. எவரும் இன்னும் ஒரு மொழியை அறிந்து கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவற விடுவது சரியென்று தெரியவில்லை. அதுவும் வசதியுள்ளவர்களுக்கு இந்த வசதி கிட்டும் போது, வசதியில்லாதவர்கள் மட்டும் இதை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம். மற்றும் உலகெங்கும் பத்து கோடிப் பேர்கள் வரையும், தமிழ்நாட்டில் மட்டும் ஒன்பது கோடிப் பேர்கள் வரையும் பேசும் தமிழ் மொழி இன்று இன்னொரு மொழியால் அழிந்து போகும் என்றால், பிரச்சனை உள்ளே வரும் அந்த புதிய மொழியால் இல்லை, அது எங்களில் என்று தானே அர்த்தம்.
  7. சிறி நான் 14 வயதில் புகைக்க பழகி அதற்கு அடிமையாகி 97ம் ஆண்டு இருதயநோய் வரும்வரை புகைத்துக் கொண்டே இருந்தேன். எனக்கு புகையால்த் தான் நெஞ்சுவலியே வந்திருக்கிறது. இதை ஒரு சவாலாக எடுத்து புகைக்கவே மாட்டேன் என்று எண்ணி இன்றுவரை புகைப்பதில்லை. அதேபோல அந்த வயதிலேயே ஆனைக்கோட்டை பனம் கள்ளு என்று தொடங்கி காலப்போக்கில் ஒரு குடிகாரனாகவே மாறிவிட்டேன்.குடிக்காக நாளே இல்லை என்றே சொல்லலாம். 1987இல் காய்ச்சல் வந்து மாறவே மாட்டேன் என்றது.ஆனைப்பந்தியில் இருந்த தனியார் வைத்தியசாலையில் பலநாட்கள் இருந்தேன். இரத்த சோதனையில் குடியினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதாக சொன்னார்கள். அதோடு விட்ட குடி இப்போதும் தொடுவதில்லை. இத்தனைக்கும் எனது நண்பர்கள் அங்கும் சரி இங்கும் சரி எல்லோருமே குடிப்பார்கள்.அவர்களுக்கு மத்தியில் இருப்பேன். இதை மிகவும் வேதனையுடனே எழுதுகிறேன்.
  8. 2000க்கு மேல தான் தொடக்கம். அத்தோடு காலை பிற்பகல் பணிஸ் தேநீர் மதியம் சாப்பாடு. இடைஇடை தொலைபேசி உரையாடல். எல்லாம் பார்த்துக் கொண்டு கம் என்று இருக்கணும்.
  9. நான் பத்து வருடங்கள் புகை பிடித்து அதை விட்டு பத்து வருடங்கள் ஆகிய பின்னர் மீண்டும் புகைத்தலுக்கு அடிமையாகி 20 வருடங்கள் ஆகிய பின்னர் இப்போது பத்து மாதங்களாக பிடிப்பதில்லை எனக்குப் பத்தொன்பது வயதாகி இருந்த போது முதன் முதலில் புகை பிடிக்க ஆரம்பித்தேன் . இப்போது முக்கியமான கேள்வி..... எனக்கு எத்தனை வயது இப்போது ? 😄
  10. ஒரு நாள் வரும் அந்த நாள் நானும் @goshan_che சந்தித்த நாள். யாழ் களம் அதிரும். இவர்கள் எப்படி கட்டியணைத்து முத்தம் கொடுக்கலாம் கொடுக்க முடியும் என்று.? அண்ணன் தம்பிடா ராசாக்கள் அண்ணன் தம்பிடா. ❤️🤣
  11. பது தவறானது. அ.அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களும் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். நீங்கள் ஒப்பிட்ட விடயங்கள் வேறு ஒரு category என்பது அரசியல் படுகொலைகள் சார்ந்தது. ராஜபக்சக்களின் இனபடுகொலையோ , ரணிலின் படுகொலைகளோ ஜேவிபின் அல்லது ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் நடத்திய ஈவிரக்கமற்ற படுகொலைகளோ இந்த திரியின் பேசு பொருள் அல்ல. நான் இங்கு அர்ஜூனாவுக்கு ஆதரவாக பேசவில்லை ..அவரையும் சரி அவரது அடிமை சிங்கள அடியானையும் எங்கும் ஆதரவிக்கவில்லை ஆதரிக்க போவதுமில்லை. அர்ஜூனா சாவகச்சேரி வைத்தியசாலையில் நடை பெற்ற முறைகேடுகளை வெளிகொண்டு வந்த விதமே பிழை ,அப்பொழுதே சில வைத்திய அதிகாரிகள் இது பற்றி சுட்டி காட்டினார்கள் ஆனால் "ஊழல் ஒழிப்பு "என்ற மாயை சுயமாக சிந்தித்து செயல் படும் எங்களுடைய‌ ஆற்றலை மறைத்து விட்டது... அன்று தொடக்கம் இன்று வரை அவர் செய்யும் செயல்கள் யாவும் முட்டாள் தனமாகவும்,விசமதனமாகவும் வக்கிரமாகவும் இருக்கின்றது. மக்களுக்கான பொது சேவையில் ஈடுபடும் ஒருவருக்கு/ஒருத்திக்கு சுய ஒழுக்கம் முக்கியமானது .இதை பற்றி தெரிந்திருந்தாலும் "தனி மனித சுதந்திரம்"என்ற ஒர் அதிபுத்திசாலிதனத்தை சொல்லி மறைத்து விடுகின்றோம். "இலவச மருத்துவம்,இலவச கல்வி" இவை யாவற்றையும் இல்லாமல் பண்ணி தனியார் துறைக்கு மாற்றுவதற்கு முயற்சி எடுப்பதற்கு "ஊழல்"என்ற மாயை பயன்படுத்தி வேறு சக்திகளுடன் செயல் படுகின்றாரோ என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ...வடமாகாணத்தில் ஊள்ளூராட்சி மன்றங்கள்,வடமாகாணசபை போன்றவற்றை கைப்பற்றி அங்கு தனியார் கல்வி,மருத்துவ துறைபோன்றவற்றை ஊக்கப்படுத்தும் முயற்சியோ தெரியவில்லை. அயல்நாட்டில் கல்வி,மருத்துவம் போன்ற்வை பெரிய மாபியா வியாபாரம் ..அந்த நிலையை இங்கு கொண்டுவர முயற்சிகள் நடை பெகின்றதோ தெரியவில்லை... இவர் பாராளுமன்றம் சென்று இதுவரை செய்த நல்ல காரியம் எது?ஒன்றுமில்லை ஆயிரம் தடவை பிரபாகரனின் பெயரை சொல்லி அவருக்கும் அவர் சார்ந்த அமைப்புக்கும் இனம்,அமைப்புக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விடயத்தை தவிர.. யூ டியுப்பர்கள்,வாகன விபத்துகள்,விபச்சாரம் போன்றவற்றை பாராளுமன்றம் சென்று பேசும் ஒர் ...தியம் தான் ... அவருக்கு முட்டு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை...அவரின் அரசியல் பிரவேசத்தை ஆதரித்தவர்கள்,அவரின் "ஊழல் ஒழிப்பு"நாடகத்தை உண்மை என நம்பியவர்கள் முட்டு கொடுக்கலாம் ...இவனுக்கு முட்டு கொடுத்து எனக்கு ஒர் லாபமும் கிடைக்க போவதில்லை .. அமிர்தலிங்கத்துடன் இவரை ஒப்பிடவே முடியாது .அவருடைய கால் தூசிக்கு கூட ஏன் அவரின் செருப்பு தூசுக்கு கிட்ட வரமுடியாது ..அந்த விளக்கம் எனக்கு இருக்கு ... இவர் பேசுவதும் அரசியல் ,நான் கூறியதும் அரசியல் வ்...விவாதம் என்ற பெயரில் சில கருத்துக்களை மட்டும் மெய் என நிருபிக்க முயல்வதும் அரசியல்...சில இனங்களுக்கு முட்டு கொடுப்பதற்கு சில இனக்களின் அழிவுகளை மறைத்து ,விவாதம் திசை திரும்புகின்றது என்பதும் அரசியல் ...
  12. பரமசிவன் (ஸ்ராலின்), பாத்திமா (பாத்திமா பாபு) கதையைத்தான் உல்டா பண்ணுகின்றார்கள் என நினைக்கின்றேன். வெளியிட்ட இருவரையும் பார்க்க… அப்படித்தான் எனக்கு தோன்றுகின்றது.
  13. திட்டம் போட்டு திருடிற கூட்டம்… திருடிக்கொண்டே இருக்கும்…. அதற்கு திட்டமில்லாமல் பலியாகும் கூட்டம்…. பலியாகி கொண்டே இருக்கும்… புலம்பெயர் மொக்கராய் பார்த்து திருந்தாவிட்டால்…. திருட்டை ஒழிக்க முடியாது.
  14. தரமான கருத்து. 👍 நாம் எமது கடையை மூடினால் அவர்களும் தமது கடையை தாமாகவே மூடுவர். பனங்காய் பணியாரம் சுடுவது எப்படி என தங்கள் காணொளிகளை காட்டட்டும்.
  15. ஒழுக்கமற்றவர்களிடம் இருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்? தங்கள் எண்ணத்திலிருப்பதே வெளியில் வரும். தங்களையும் சமூகத்தில் முதன்மைப்படுத்துவதற்கு வேறேது அவர்களிடமுண்டு? அவர்களிடமுள்ளதை கொடுக்கிறார்கள்.
  16. அரச்சனாவுக்கு ஆதரவு கூடிக்கொண்டு போகிறது என்றால், யாழ்பாண மாவட்டத்தில் மடையர்களும் காவாலிகளும் மனநிலை பாதிக்கபட்ட சைக்கோகளும் அதிகரித்து சென்று கொண்டிருப்பதை உணர்ததுகிறது. அவரது பாராளுமன்ற உரைகள் அனைத்துமே தமிழர்கள் அனைவரும் வெட்கி தலைகுனியவேண்டிய கேவலமான உரைகள் இவரை ஊக்குவிக்கும் இவரது ஆதரவாளர்கள் நிச்சயம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். அல்லது அரசியல் அறிவு, பொது அறிவு அற்றவர்களாகவே இருப்பார்கள்.
  17. ‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை Published:14th Mar, 2025 at 6:20 PM பரமசிவன் பாத்திமா படம். செய்திகள் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரைலரை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக தலைவர் அண்ணாமலையும் இணைந்து வெளியிட்டுள்ளனர். Updated:14th Mar, 2025 at 6:20 PM ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரைலரை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக தலைவர் அண்ணாமலையும் இணைந்து வெளியிட்டுள்ளனர். விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் பரமசிவன் பாத்திமா. இதில் விமலுக்கு ஜோடியாக சாயா தேவி கண்ணன் நடித்துள்ளார். மேலும் படத்தில் சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், கூல் சுரேஷ், காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கார்வண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே சேரன் நடித்த 'தமிழ்க்குடிமகன்' படத்தை இயக்கி உள்ளார். தீபன் சக்கரவர்த்தி இசையமைக்க எம். சுகுமார் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தின் கதை காதலை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. https://www.dinamani.com/amp/story/cinema/cinema-news/2025/Mar/14/paramasivan-fathima-movie-trailer டிஸ்கி #கருடா செளக்கியமா🤣
  18. 1 வெளிநாட்டு காசுல சொகுசா வாழ பழகிவிட்டினம் 2. உடலைவளைச்சு வேலை செய்ய விருப்பமில்லை. 3. இப்ப பெண்கள்க்கு சமைக்க விருப்பமில்லை ஓடர் பண்ணி பிள்ளைகளுக்கு கொடுத்திட்டு சாப்பிட பழகிவிட்டினம் 4. டிக் டொக் க்கும் செல் போன் உம கெடுத்துவிட்ட்து .
  19. பரமசிவன் அங்கால ஒரு டீசரை வெளியிட்டு இருக்க இங்கால பாத்திமா ஒரு புது டீசரை வெளியிட்டு இருக்காங்க! 😂
  20. உங்களுடைய மன உறுதிக்கு பாராட்டுக்கள் ஈழப்பிரியன். இங்கு பல தமிழர்கள் வந்த ஆரம்பத்தில் குடிக்க ஆரம்பித்து, அதனை நிறுத்த முடியாமல் மொடா குடிகாரர்களாகி செய்த வேலையையும் இழந்து நோயாளிகளாகி, குடும்பத்தையும் பிரிந்தவர்கள், இறந்தவர்கள் என்று நிறைய உதாரணம் சொல்லலாம். ஒரு நல்ல விடயம்… இப்போ அப்படியான செய்திகளை கேள்விப் படுவதில்லை. அடுத்த தலைமுறை இந்த விடயத்தில் முன் எச்சரிக்கையாக இருக்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன்.
  21. ஸ்டாலினை அடிக்க வேண்டும் என்பதற்காக அநாவசியமாக பாத்திமா பாவுவை அவதூறு செய்வது ஏற்புடையதல்ல. பாத்திமா பாபு பொது வெளியில் இதை மூன்று தரம் மறுத்துள்ளார். அதன் பின் ஜெ ஆட்சியில் ஜெ க்கு நெருக்கமாக இருந்த போதும் கூட பாத்திமா இதை உண்மை என சொன்னதே இல்லை. அவரே இல்லை எனும் போது இதை நாம் காவி திரிவது அவர் மீதான அவதூறுதான். அதேபோல், தமிழின் முன்னணி வார இதழான குமுதம், 1989ம் ஆண்டு பாத்திமா பாபுவிடம் ஒரு பேட்டியை எடுத்து வெளியிட்டுள்ளது. அதில், மு.க.ஸ்டாலின் தொடர்பாக பரவும் செய்தி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்ததே கிடையாது. அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. இந்த வதந்தி சமாசாரம் முழுவதும் யாரோ ஒருவரின் கற்பனையில் பிறந்துள்ளது. என்னென்னமோ நடந்ததாக எழுதி, மேலும் மேலும் மற்றப் பத்திரிகைகளில் அதை விரிவுபடுத்தி, அரசியல்வாதிகள் அதை மேடையில் பேசி, மேடையில் பேசியதை திரும்பப் பத்திரிகையில் போட்டு… இப்படியே வளர்த்துக்கொண்டே போய்விட்டார்கள். மக்கள் மத்தியில் டி.வி மூலம் நன்கு அறிமுகமாகி, மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்தி வரும் என்னைப் போல ஒரு பெண்ணையா அனாவசியமாகச் செய்திகளில் பெயர் அடிபடும்படி செய்திருக்க வேண்டும் என்று நினைக்கும்போது ரொம்பவும் வேதனையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். குமுதம் இதழில் வெளியான கட்டுரையின் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இதன்படி, மேற்கண்ட வதந்திக்கு, 1989ம் ஆண்டிலேயே இருவர் தரப்பிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. எனினும், சோஷியல் மீடியா வருகைக்குப் பிறகு இந்த வதந்தி புதுப் புது அவதாரம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. இது குறித்து கடந்த 2018ம் ஆண்டு கூட பாத்திமா பாபுவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் , “எத்தனை ஆண்டுகள்தான் விளக்கம் அளிப்பது. அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிவிட்டேன். என்னைப் பற்றி நான் சொல்வதுதான் உண்மை. அதைத்தான் நீங்கள் நம்ப வேண்டும். அதை விட்டுவிட்டு வெளியில் பலரும் கதைகட்டுவதைப் போல, மசாலா தடவிய கற்பனைப் பொய்யைத்தான் நம்புவீர்கள் என்றால், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது உங்கள் இஷ்டம். இதற்கு மேல் இதைப் பற்றி கேள்வி வந்தால் நான் பதில் சொல்வதாக இல்லை” என்று கூறினார். இது தொடர்பாக தினமணி நாளிதழில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். மேலும், பாத்திமா பாபு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் தன்னுடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் மத்தியில் பேசியுள்ளார். அதன் ஆடியோ விவரம் கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள். Archived link தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பாத்திமா பாபு என இருவர் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும் தி.மு.க எதிர்ப்பாளர்கள் ஸ்டாலினை பற்றி தொடர்ந்து வதந்தி பரப்பி வருவது தொடர்ந்து கொண்டே இருப்பதாக, நமது ஆய்வில் தெரியவந்தது. 1) 30 ஆண்டுகளுக்கு முன்பு நக்கீரனில் வெளியான ஸ்டாலின் பேட்டி 2) 30 ஆண்டுகளுக்கு முன்பு குமுதத்தில் வெளியான பாத்திமா பாபுவின் பேட்டி 3) கடந்த ஆண்டு ஃபேஸ்புக்கில், பாத்திமா பாபு அளித்த நேரலை ஒலிபரப்பு மேற்கண்ட ஆதாரங்கள் அடிப்படையில் இந்த தகவல் போலிதான் என்பது தெளிவாகிறது. பாலியல் அத்துமீறல் சம்பவம் நிகழவே இல்லை என்று, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாத்திமா பாபுவே விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அவரது விளக்கமே இறுதியானது. முழு கட்டுரையின் லிங்க்👇 Fact Crescendo Tamil | The leadi...பாத்திமா பாபுவை கடத்தினாரா ஸ்டாலின்? 30 ஆண்டுகளாகத் துரத்...30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபுவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பேச ஸ்டாலினுக...தினமணியில் பாத்திமா பாபுவின் விளக்கம்👇. Dinamaniஸ்டாலின், பாத்திமாபாபு தொடர்பாக பல்லாண்டுகளாகப் புகைந்து...திமுக செயல்தலைவர் ஸ்டாலின், இளமையில் அப்போது தூர்தர்ஷனில் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளராக விளங்கிய பாத்திமா பாபுவை கடத்திச் சென்று மிரட்டினார் என்பதாக ஒரு வதந்த
  22. அருமையான எழுத்தாளர் . ......... பல இடங்களில் தனது வாழ்க்கையையும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்திருக்கிறார் . ........ யோகி ராம்சுரத்குமாரின் பக்தனுமாவார் . ........!
  23. @Kandiah57 கந்தையர், உங்களை போலவே எனது மனநிலையும். மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவிடம் திறமை/ஆளுமை உள்ளது. உட்கிடக்கையை வெளிப்படுத்தாமல் பம்மிக்கொண்டு நிற்பவர்கள் மத்தியில் விடயங்களை வெளிப்படையாக தெளிவாக துணிந்து கூறக்கூடியவர். அவர் பேசுபவை எல்லாம் சரி என்று இல்லை, ஆனால் அவர் உத்வேகம் பிடித்துள்ளது. போர் நிறைவடைந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. இளவு காத்த கிளிபோல் மக்கள், ஏமாற்றப்பட்டார்கள். புதியன புகுதலும், பழையன கழிதலும் நடந்தேறலாம். அவரும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளினுள் வருகின்றார். தந்தை விடயத்தில் அவருக்கு நீதி கொடுக்கப்பட்டதா? இங்கு அவருக்கு எதிராக குத்தி முறிபவர்களை கவனித்தால் அவர்களுக்கிடையில் பல விடயங்களில் ஒற்றுமைகள் உள்ளன. நல்லதை எடுக்கலாம். அல்லாதவைகளை விடலாம்.
  24. ❤️............... அப்படியே வந்தார் என்றால் முதலில் அந்த தடியுடன் நிர்மலா சீதாராமனிடம் கூட்டிப் போகவேண்டும். அந்த அம்மா பாராளுமன்றத்திலேயே அடியும் நுனியும் தெரியாமல் பேசுகின்றார். இணையத் தளங்களில் அடித்து விடப்படும் ஒற்றை வரிகளை பாராளுமன்றத்திலுமா, அதுவும் நிதி அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், அடித்து விடுவது...................🫣. அதற்கப்புறம் நிறைய பார்த்தீனியங்களை அவர் சுத்தப்படுத்த வேண்டும்............. இந்தச் சொல் அவரை விட்டுப் போகாது போல...............🤣.
  25. அண்மையில் இத்தாலிய விஞ்ஞானிகள் ஒளியை “சூப்பர்சொலிட்” (Supersolid) எனப்படும் அதிசயமான திண்ம நிலையாக மாற்றியுள்ளனர்… இது குவாண்டம் இயற்பியலில் (Quantum Physics) ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது... இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் பல தொழில்நுட்ப புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது... மேலும், இது ஒளியின் நடத்தை பற்றிய புதிய புரிதல்களை வழங்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.. சரி இப்போ “சூப்பர்சொலிட்” என்றால் என்னவென்று பார்ப்போம்.. “சூப்பர்சொலிட்” என்பது ஒரு விநோதமான திண்ம நிலை… இது ஒரு பொருள் திண்மமாக (solid) இருக்கும் போதும், அதே நேரத்தில் திரவமாக (liquid) பாயும் தன்மை கொண்டிருக்கும்.. சூப்பர்சொலிடில் உள்ள அணுக்கள் (atoms) ஒழுங்காக (crystalline) ஒருங்கிணைந்து இருக்கும் போதிலும், அவை எந்த தடையுமின்றி (without friction) நகர முடியும்... சூப்பர்சொலிட் தன்மை 1969 ஆம் ஆண்டு முதலில் முன்மொழியப்பட்டது... ஆனால், இதை ஆய்வகத்தில் உருவாக்கி, கண்கூடாக காண்பது கடினமானது... இதை வெற்றிகரமாக உருவாக்கும் முயற்சியில்தான் இத்தாலிய விஞ்ஞானிகள் அண்மையில் வெற்றி கண்டுள்ளனர்… அதுவும் ஒளியை.. சாதாரணமாக, சூப்பர்சொலிட் நிலை, குறைந்த வெப்பநிலையிலான அணுக்கள் (ultracold atomic gases) மூலம் உருவாக்கப்பட்டன… ஆனால், இத்தாலிய விஞ்ஞானிகள் இதை ஒளி (light) மூலம் உருவாக்கியுள்ளனர் என்பது ஒரு புரட்சிகர கண்டுபிடிப்பு ஆகும்... சரி இப்போ இவர்கள் எப்படி ஆய்வுகூட மட்டத்தில் இதைச் சாதித்தார்கள், அதுவும் தன்னைவிட இந்த பிரபஞ்சத்தின் உள்ளே யாரும் வேகமாக போகமுடியாது என்று அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கும் ஒளியை என்பதைப் பார்ப்போம்… சூப்பர்சொலிட் உருவாக்கத்தில் பயன்படுத்திய உயர் துல்லிய படமெடுப்புக் கருவி(high resolution imaging system) சூப்பர்சொலிட் தன்மை கொண்ட ஒளியின் ஒழுங்கமைப்பு… விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு செய்யும் தருணம்… விஞ்ஞானிகள் ஒளியை ஒரு சிறப்பான செமிகண்டக்டர் (semiconductor) கட்டமைப்பில் சிறப்பாக கட்டுப்படுத்தினர்… ஒளியின் துகள்கள் (photons) ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் (interact) விதமாக அமைக்கப்பட்டது… இதன் விளைவாக, ஒளி திண்மமாகவும் (solid-like) திரவமாகவும் (fluid-like) நடந்துகொள்ளும் நிலை உருவானது... இவ்வாறு ஒளி “சூப்பர்சொலிட்” ஆக மாறியது... இதை முதன்முறையாக வெற்றிகரமாக உருவாக்கியுள்ள இத்தாலிய விஞ்ஞானிகள், இது எதிர்காலத்தில் குவாண்டம் இயற்பியலுக்கு (quantum physics) புதிய வாசல்கள் திறக்கும் என நம்புகின்றனர்... இந்த கண்டுபிடிப்பு மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள்..👇 1. குவாண்டம் கணிப்பொறிகள் (Quantum Computing): சூப்பர்சொலிட் ஒளி (supersolid light) புதிய வகை குவாண்டம் பிட்டுகள் (qubits) உருவாக்க உதவும்… இது மிகுந்த செயல்திறன் கொண்ட குவாண்டம் கணிப்பொறிகளை உருவாக்க வழிவகுக்கும்... 2. அளவீட்டு கருவிகள் (Precision Measurement): சூப்பர்சொலிட் ஒளியின் தன்மை, மிகுந்த துல்லியத்துடன் (high precision) அளவீடுகளை மேற்கொள்ள உதவும்…இது அடிப்படை இயற்பியல் மாறிலிகளை (physical constants) கண்டறியவும், gravitational waves களை கண்டறியவும் உதவும்... 3. புதிய பொருட்கள் (Advanced Materials): ஒளியை சூப்பர்சொலிட் நிலை வரை கட்டுப்படுத்தும் திறன், புதிய வகை பொருட்கள் (materials) உருவாக்க உதவும்… இது புதிய மெக்கானிக்கல் (mechanical) மற்றும் ஒளி (optical) பண்புகளைக் கொண்ட பொருட்களை உருவாக்க வழிவகுக்கும்... இந்த கண்டுபிடிப்பின் எதிர்கால தாக்கம்.. இது குவாண்டம் கணிப்பொறிகள், தகவல் தொடர்பு, மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத்தில் (medical technology) புதிய புரட்சிகளை ஏற்படுத்தும்… புதிய அளவீட்டு கருவிகள் மற்றும் அதிக செயல்திறனுள்ள தகவல் தொடர்பு முறைகளை உருவாக்கும்… விஞ்ஞான உலகத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது… ஆக மொத்தத்தில் அறிவியல் உலகில் ஒளியின் புதிய வடிவம் – இது ஒரு புதிய அதிசயம்..! இத்தாலிய விஞ்ஞானிகள் சாதித்துள்ள இந்த கண்டுபிடிப்பு, எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… இது ஒளி பற்றிய மனிதரின் புரிதலை முற்றிலும் மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை…! -பாலபத்திரஓணாண்டி
  26. Ivoire · Le golfe d'Alaska, le seul endroit où deux océans se rencontrent mais ne se mélangent pas ...........!
  27. எல்லோரும் கிளி ஜோய்ஸம்தான் பார்க்கின்றவர்கள்! T20 இல் ஒன்றிரண்டு பந்துகளே மட்சை மாற்றிவிடும்! எல்லா ரீமும் கப்படிக்கவே விளையாடுகின்றார்கள்! எனவே யானையைக் கீற முயற்சிப்பதில் பிரச்சினை வராது! நிறைய statistics எல்லாம் பாவித்து இந்தப் போட்டியில் வெல்லமுடியாது. பின்வாங்காமல் கலந்துகொள்ளுங்கள்!
  28. நன்றி வீரப்பையா.....செய்தி போட்டாலும்...கருத்து எழுதினாலும்...காழ்ப்புணர்ச்சி ..பொறாமை என்ற பதங்களல் சாடப்படுகின்றோம்...இங்கு நான் செய்தது...வீரகேசரி, ஆதவன் போன்ற பத்திரிகைகளீல் இருந்து செய்தியை இணைப்போர் போல் நானும் இந்த காணொளியை இணைத்தேன்...இதற்கான கருத்துக்கள் வரும் என பார்ப்பதற்கே...இதனை வைத்து சம்பந்தப்பட்ட நபரின்மீது எரிச்சல் பொறமை என்றூ கருத்தே வந்தது....எனக்கு அவர்களை தனிப்பட்ட ரீதியில் தெரியவே தேரியாது...கனடாவில் 35 வருடம் இருக்கும் நான் அவரைப்பார்த்து எரிச்சல் படும் கீழ்நிலைக்கு செல்லவில்லை...இதனவிட படம்காட்டி ..பாடம்படி என்ற இழிநிலை உடையவனும் நானல்ல...இந்த விடையத்தை நீண்டநாள் பார்த்து ...நடப்பது அநியாயம் என்றுணர்ந்தபடியாலேயே இதனை இணைத்தேன்...நன்றி ..
  29. இது உண்மையான தமிழ் படம் தான் வெளிப்படையாகவே தாங்கள் பாஜாக தான் என்பதை சொல்ல தொடங்கிவிட்டார்
  30. 👍........... இன்று ஓணாண்டியார் விஷச்செடி என்று ஒரு திரி ஆரம்பித்திருந்தார். அந்த திரியின் தொடர்ச்சி இது............. சீ. பார்த்தீனியம் அ. பார்த்தீனியம் T. பார்த்தீனியம் என்று என்னை/எங்களைச் சுற்றி மூன்று இருக்கின்றன.................🤣.
  31. பார்த்தீனியம் பற்றி சிறு வயதில் ஒரு கட்டுரையை எங்கேயோ வாசித்திருந்தேன். இந்தப் பெயரே புதுமையாக இருந்தது, அப்படியே மனதில் அது ஒட்டியும் விட்டது. பின்னர் தான் இந்தச் செடியை/களையை அதன் பெயருடன் சேர்த்து அடையாளம் கண்டுகொண்டேன். இந்த ஆக்கத்தில் இன்றைய உலகில் இருக்கும் சில அரசியல்வாதிகளை பார்த்தீனியங்களாக உருமாற்றி விட்டுள்ளேன்.............
  32. இவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். நன்றி பாணபத்திரரே.
  33. 🤣............... அண்ணா, இந்தப் பெரிய அமெரிக்க கிணற்றுக்குள் விழ முன், ஊர் என்னும் குட்டிக் கிணற்றுக்குள் எங்களை விட்டால் ஆளே இல்லை என்று இருந்தோம் என்று சொல்லவந்தேன்................ எங்கள் ஒவ்வொருவரினதும் முதல்நாள் வெளிநாட்டு அனுபவங்களை எழுதித் தொகுத்தால், அது நல்லதொரு முழுநீள நகைச்சுவை நாவலாக வரும்............. என்னுடைய முதல்நாளில், அந்த ஊரில் இருக்கும் ஒரு சின்ன விடுதியில் அறை ஒன்றை எடுத்துக் கொடுத்திருந்தார்கள். அது சரியான குளிர் பிரதேசம். காலையில் வகுப்புகள் ஆரம்பிக்கின்றன. நான் வருவதற்கு சில நாட்கள் பிந்திவிட்டன. காலையில் குளிப்பம் என்று போனால், தண்ணீர் விறைக்கும் குளிரில் வந்தது. அன்று அதுகூட எனக்கு தெரியாது............... ஓடிப்போய் சில வேலைகளை முடித்து, வகுப்புகளுக்கும் போய் விட்டு, அங்கிருந்த உணவு விடுதிக்கு சாப்பிடப் போனால், அவர்களின் மொழியே சுத்தமாக புரியவில்லை....... ஆனாலும் இரண்டு பக்கங்களும் ஆங்கிலமே பேசுவதாக நினைத்துக் கொண்டிருந்தன.........🤣. ஒரு கிளாஸ் பாலாவது கொடுங்கள் என்று நான் சொன்னதை தட்டுத்தடுமாறி அவர்கள் புரிந்து கொண்டார்கள். அப்படியே, 'இரண்டு வீதமா, ஒரு வீதமா அல்லது முழுப்பாலா................' என்று கேட்டார்கள்................. ஏற்கனவே இருந்த பசி மயக்கத்தை விட, அந்தப் பால் கேள்வி என்னை அப்படியே சரித்து விழுத்தியது..................🤣.
  34. ஓணாண்டி டாக்ரருக்கு இன்னம் இன்னும் ஆதரவுகள் கூடிக் கொண்டு போகிற மாதிரியே தெரிகிறது. அவரது நடவடிக்கைகள் கொந்தல் மாம்பழம் போல. கொந்தலைத் தவிர்த்தால் மற்றையவை மிகவும் சுவையாக இருக்கும். கடந்த பாராளுமன்றில் அவர் பேசியவைகளை கொந்தலைத் தவிர்த்து மற்றையவைகளை மிகவும் வரவேற்கிறார்கள். உள்ளூராட்சி தேர்தல்களிலும் கணிசமான ஆதரவுகள் இருக்கும் போலவே தெரிகிறது. உங்களைப் போலவே நானும் மிகுந்த ஆவலுடன் இருந்தேன். தமிழ்கட்சிகளின் வங்குரோத்து இவர்களை தூக்கி வைக்கிறது.
  35. நானும் அவருடை இந்த மாதிரியான கருத்துக்களை வன்மையாக் கண்டிக்கின்றேன் அவருக்கான எனது ஆதரவையும் வாபஸ் பெற்றுவிட்டேன் நாங்கள் தமிழர்களும் இனவாதம் பேசுபவர்கள் தான் என்பதற்கு அண்மையில் இவர் பேசும் உரைகள் ஆதாரம். இஸ்லாமியர்கள் மீது இவர் மிகவும் காட்டமாக உள்ளார் என்பது கவலைக்குரியதும் கண்டனத்துக்குரியதுமே
  36. இவர் தமிழ்நாட்டில் ஸ்டாலினை 1௦௦௦ பேரில் கூட்டதோடு கூட்டமாய் நின்று செல்பி எடுத்து விட்டு இங்கு வந்து தமிழர் பிரச்சனையை பற்றி முதல்வர் ஸ்டாலினுடன் கதைத்தோம் என்று அடித்து விட்ட தமிழர்களை ஏமாற்றும் சோணகிரி . அங்கு அமெரிக்க அவுஸ் தூதரங்களில் டொய்லெட் அடைப்பு எடுத்து இருக்கும் இவர் விழுந்தடித்து நாலு பிளம்பருடன் போய் அடைப்பெடுத்து விட்டு விட்டு வெளியாலை வந்து சமகால தமிழர்களின் விடயம் பற்றி கதைத்தேன்என்று அடித்து விட்டுருப்பார் .
  37. ஒவ்வொருவர் பின் வரிசையில் அமர்வதற்கு, தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் உண்டு. பின்வரிசையில் யாருக்கும் தெரியாமல் போவோர் வருவோரை விடுப்பும் பாக்கலாம்.
  38. சட் ஜீ பி டி, டீப் சீக் எல்லாம் நம்மளை எழுத்தில் விஞ்சுகின்றது. இனி நாங்கள் எதைத்தான் எழுதுவது? செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் படைப்புக்களை தமது எழுத்துருவாக்கமாக யாராவது பிரசுரம் செய்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. என்னதான் செய்ய முடியும்? செயற்கை நுண்ணறிவு மூலம் நடாத்தப்படும் கருத்துக்களம் ஒன்று வரவேண்டியதுதான் பாக்கி.
  39. போட்டியில் கலந்து கொள்ளுங்கள் ஆர்வம் தீயாக பற்றிக்கொள்ளும், தவறவிட்ட முதல்வர் பதவி கிட்டும் (தெரியாத துறையில் (ஐ பி எல்) தான் முன்னேறலாம்), ஐ பி எல் போட்டி முடியும் வரை மஞ்சள் உடை அணிந்தால் உங்களுக்கு அதிர்ஸ்டம் கிட்டும், தவிர்க்க வேண்டிய நிறம் ஊதா (அதிர்ஸ்ரமற்ற).
  40. போட்டியில் வெற்றி பெற்ற முதல் அறுவருக்கும் இரண்டாம் இடத்தைப் பிடித்த அடுத்த இருவருக்கும் மூன்றாம் இடத்தைப் பிடித்த அந்த நால்வருக்கும் வாழ்த்துக்கள் . கிருபர் ஜீ மீண்டும் சளைக்காமல் போட்டியைத் திறம்பட கொண்டு நடாத்தியுள்ளார் 🙏 வாழ்த்துக்கள் பந்து போட்டவர்கள் சமனாக விக்கெட்டுக்களை கைப்பற்றி அத்துடன் சமனான ஓட்டங்களை கொடுத்ததால் ஓட்ட விகிதம் தான் கணக்கில் எடுக்கப்பட்டிருக்கின்றது. இது எப்போதும் நடைமுறையில் உள்ளதா அல்லது இந்திய அணியினர் அதை தங்களுக்குச் சாதகமாகப் பாவித்துள்ளார்களா
  41. போட்டியில்... முதலிடத்தை பெற்றுக் கொண்ட முதல்வர் @வீரப் பையன்26 க்கும், அதே 42 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட... @செம்பாட்டான், @Eppothum Thamizhan, @புலவர், @நீர்வேலியான், @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் உரித்தாகட்டும். புதிதாக நுழைந்து முன்னிடம் வகிக்கும் செம்பா டடான்க்கு விசேட வாழ்த்துக்கள். உங்கள்பெயரை பார்த்தாலே ஒரே மாம்பழ ஞாபகமாய் வருகுது 😃 பெயரை மாற்ற கேட்கலாமோ ? ?
  42. போட்டியை மிகச் சிறப்பாக நடத்திய @கிருபன் கிருபனுக்கு மிக்க நன்றி. @வீரப் பையன்26 பையன் சார், சொல்லி அடித்து விட்டீர்களே......... வாழ்த்துகளும் மிக்க மகிழ்ச்சியும்...........❤️. முதலிடத்தை பகிர்ந்து கொண்ட செம்பாட்டான், எப்போதும் தமிழன், புலவர், நீர்வேலியான் மற்றும் கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள். @செம்பாட்டான் செம்பாட்டான், முதல் போட்டியிலேயே தூள் கிளப்பியது மட்டும் அல்ல, போட்டிகளை கலகலப்பாக வைத்திருந்தமைக்கும் மிக்க நன்றி..........👍. பிற்குறிப்பு: இங்கு வல்லுநர்களால் கூறப்பட்ட பல தகவல்களை தொகுத்து சுருக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனத்திற்கு அனுப்புவதாக உள்ளேன்.................🤣.
  43. போட்டியில்... முதலிடத்தை பெற்றுக் கொண்ட முதல்வர் @வீரப் பையன்26 க்கும், அதே அளவு 42 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட... @செம்பாட்டான், @Eppothum Thamizhan, @புலவர், @நீர்வேலியான், @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
  44. யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வீரப் பையன்26 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம்வரை சமநிலையான புள்ளிகளுடன் இருக்கும் @செம்பாட்டான் , @Eppothum Thamizhan , @புலவர் ஐயா, @நீர்வேலியான் , @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். ஏழாம், எட்டாம் இடங்களில் சமமான புள்ளிகளுடன் இருக்கும் @nunavilan , @நியாயம் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றி பல.
  45. மலையகத்தில் முத்துமாரியம்மன் எனும் பெண்தெய்வ வழிபாடு: நாவலப்பிட்டி பிரதேசத்தை முன்வைத்து பெண் தெய்வ வழிபாட்டு மரபு பெண்தெய்வ வழிபாட்டு மரபு புதிய கற்காலம் தொட்டே உலகளாவிய ரீதியல் நிலைபெற்றிருந்தமையை அறியலாம். அகழ்வாராய்வுகளில் பெண் தெய்வங்களின் உருவச்சிலைகள் கிடைக்கப்பெற்றமை தக்க சான்றுகளாகும். எகிப்தில் ‘இசிஸ்’, ‘சிபிஸ்’ போன்ற பெண் தெய்வ வழிபாடுகள், சிரியாவில் ‘அஸ்தாத்’ எனும் பெண் தெய்வ வழிபாடு போன்ற பாரம்பரியங்களும் குறிப்பிடத்தக்கவைகளாகும். “நதிக்கரை நாகரிகங்களில் நிலவிய தாய்வழிச் சமூக அமைப்பின் காரணமாகவே பெண் தெய்வ வழிபாட்டு மரபு தோன்றியிருக்கிறது” என்பர் ஆய்வாளர்கள். திராவிடர்களின் முக்கிய தடமான சிந்துவெளி நாகரிகத்தை ஆய்வு செய்த ஆய்வாளரான சேர் ஜோன் மார்சலின் “சிந்துவெளிக் கால மக்கள் தாய்த் தெய்வ வழிபாட்டு மரபினையே கொண்டிருந்தார்கள்” என்ற கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கீழடி ஆய்வுகள் தொடர்பான முடிவுகளும் இதற்கு வலிமை சேர்க்குமாற்றை அவதானிக்கலாம். வேதங்களில் உசை, இராத்திரி, அதிதி போன்ற பெண் தெய்வங்களும், பிற்பட்ட காலங்களில் உமா, அம்பிகா, ஹிமாபதி, பார்வதி, துர்க்கா, காளி போன்ற பெண் தெய்வங்களும் செல்வாக்குப் பெற்று விளங்கின. ஆரியப் பண்பாட்டிலுள்ள பெண் தெய்வங்களுக்கும், திராவிடப் பண்பாட்டிலுள்ள பெண் தெய்வங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்பட்டன. ஆயினும், வேத காலத்தின் பின்னர் இவை இரண்டிற்கும் இடையில் ஒற்றுமைகள் ஏற்பட்டன என்ற கருத்தும் கவனிக்கத்தக்கதாகும். சைவசமயத்துடன் தொடர்புபட்ட தொண்ணூறுக்கும் மேற்பட்ட பெண் தெய்வங்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் வரையறுப்பர். இயற்கையின் ஆற்றல்களையும் சீற்றங்களையும் அனுபவித்த மனிதகுலம் அதன் ஊடாக படிப்பினைகளைத் தனதாக்கிக் கொண்டது. அவர்கள் பெற்ற அனுபவங்கள் அச்சத்தை ஏற்படுத்தலாயின. பெற்றுக்கொண்ட அச்ச அனுபவத்தின் காரணமாக புதிய தெய்வங்களை உருவாக்கிக்கொண்டார்கள். சங்ககாலம் குறிப்பிடும் சூர், அணங்கு ஆகியவற்றின் உருவாக்கமும் இத்தகைய அனுபவத்தின் வாயிலானதாகும். காலப்போக்கில் சூரும் அணங்கும் மனித வடிவில் கொற்றவையாக உருப்பெறுகிறது. கொற்றவையே தமிழர்களின் புராதன வழிபாட்டிற்குறிய மூல பெண் தெய்வமாகிறது. ‘கொற்றவை’ பழையோள், பெருங்காட்டுக் கொற்றி, காடுகிழாள், காடுகொழு செல்வி, கானமர் செல்வி, சூலி, துணங்கையஞ் செல்வி என்ற பெயர்களாலும் படிம வளர்ச்சி காண்கிறாள். இப்படிம வளர்ச்சி உமை, துர்க்கை என்ற பெண் தெய்வங்களுடனும் இணைத்து நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அம்மன் என்பதை ‘சீமாட்டி’, ‘உயர்வான பெண்’ எனும் பொருள்களோடும் நோக்குவர். இதற்குச் சமானமாக ‘செல்வி’ என்ற பெயரும் அமைகிறது. கொற்றவையின் படிம வளர்ச்சியில் இப்பெயர் பல இடங்களில் பிரயோகத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. திராவிடப் பண்பாட்டு மரபுடன், ஆரியப் பண்பாட்டு மரபு கலந்த நிலையிலேயே தமிழும், தமிழர் சமயமும் கலப்புற்றமை கவனிக்கத்தக்கது. பெண் தெய்வங்களின் தோற்றத்திற்குப் பின்னணியாக அமைந்த காரணங்கள் சமூகம் ஏற்றத்தாழ்வுகளுடனேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவ் ஏற்றத்தாழ்வுகள் நிகழ்வதற்கு பல காரணிகள் ஏதுவாக அமைகின்றன. ‘நாகரிக விளக்கின் ஒளியைப்பெறும் மேல்நிலை மக்களை மேற்கத்திய சமூகவியலாளர்கள் மேலோர் என்று குறிப்பிடுகின்றனர்.’ அவர்கள் கருத்துப்படி இம்மேலோர்கள் சமுதாய மேலடுக்கில் இருந்துகொண்டு, சமுதாயத்தினை ஆள்வோர்களாக அமைகின்றனர். ‘இவர்கள் பரம்பரை பரம்பரையாக மேலோர்களாக இருக்கலாம், அல்லது அடிமட்டத்திலுள்ள ஒரு மனிதன் காலப்போக்கில் மேலோனாக மாறலாம்’ என்ற ஆ. சிவசுப்ரமணியத்தின் கூற்று கவனிக்கத்தக்கது. அவ்வாறே இந்தியச்சூழலில் அடித்தள மக்கள் பற்றிய அவரது பின்வரும் கருத்துநிலையும் குறிப்பிடத்தக்கதாகும். ‘சாதி, செய்யும் தொழில், அரசியலாதிக்கம், பாலியல்நிலை, பொருளாதார நிலை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அல்லது அனைத்து நிலைகளிலும் தாழ்ந்திருக்கும் மக்களே அடித்தள மக்கள்.’ தமிழ்நாட்டில் பெரும்பாலும் மக்களால் வணக்கத்திற்குரிய தெய்வங்களாகப் போற்றப்படுபவர்கள் கொலையுண்ட மானிடர்களாகவே காணப்படுகின்றனர். பொதுநலனில் வேறுபாடுகளைக் களைய முற்பட்டவர்கள் கொலையுண்டதன் பின்னரே இந்நிலைக்கு உயர்த்தப்பட்டனர். அதனடிப்படையில் பெண்தெய்வங்கள், பாலியல் தொல்லைகளில் இருந்து தன்னை மீட்டுக்கொண்ட நிலையிலேயே உருப்பெறுகின்றனர். மேலோர், அடித்தள மக்களாகிய பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை பிரயோகித்த வரலாற்றை தமிழ்ச் சமூகம் தொடர்ச்சியாகவே அனுபவித்து வந்துள்ளது. பெண் தெய்வங்களை தாய்த் தெய்வங்கள், கன்னித் தெய்வங்கள் என வரையறுப்பர். மேலாதிக்கத்தைச் செலுத்தும் தரப்பினர் அடித்தட்டு மக்களான பெண்களை பாலியல் இச்சைக்கான பொருளாகப் பிரயோகிக்கும் விடயத்தில் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டுள்ளனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மூன்று வழிகளில் ‘கற்புநிலை’ பாதுகாக்கப்பட்டிருக்கிறது. பாதிப்பு நடக்கும் ஊரில் இருந்து வேறு ஊருக்குத் தப்பிச்செல்லும் முயற்சி இடம்பெற்றுள்ளது. அம்முயற்சி, வெற்றியளிப்பதுமுண்டு; தப்பிச்செல்லும் பெண்கள் கொலையாவதும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் அவ்வாறான பாதிப்பு நிலையை அறிந்து, உறவினர்களே பெண்ணைகளைக் கொலை செய்வதுமுண்டு. இல்லாவிட்டால் அப்பெண்களைத் தற்கொலை செய்வதற்குத் தூண்டுவதுமுண்டு. இதனால் தங்கள் குலப்பெருமை பாதுகாக்கப்பட்டதாக எண்ணித் திருப்தியடைந்து, மறைந்த பெண்களுக்கு நடுகல் வைத்து அடையாளப்படுத்தி, தெய்வங்களாக மாற்றிய வரலாற்றைச் தமிழ்ச்சமூகம் கொண்டுள்ளது. இதனை பொன்னு மாரியம்மன், போத்தி அம்மன், புதுப்பட்டி அம்மன் ஆலய வரலாறுகள் புலப்படுத்துவதைக் காணலாம். இலங்கையில் மலையகம் எனும் சமூக உருவாக்கம் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்குப் புலம்பெயர்ந்து இருநூறு வருடங்கள் (1823-2023) நிறைவாகியுள்ளன. பிரித்தானியர்களதும், சுதந்திர இலங்கையினதும் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாய் இம்மக்களே திகழ்ந்துள்ளார்கள். 1823இற்கு முன்னரே புலப்பெயர்வுகள் இடம்பெற்றிருந்தாலும், இவ்வருடமே அவை முனைப்புப் பெறுவதாக அமைந்தன. நீண்ட காலமாக, இந்த மக்கள் வெறும் உழைப்பிற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனர். டொனமூர் மற்றும் சோல்பரி அரசியலமைப்புகள் அளித்த சில நிவாரணங்கள் ஓரளவு திருப்தியை ஏற்படுத்தினாலும், பின்னர் நடந்த வாக்குரிமைப் பறிப்பு, பிரஜாவுரிமைப் பறிப்பு, 1964 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் போன்ற கடுமையான அனுபவங்கள், இவர்களின் வாழ்வியல் மீது தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தின. ஐக்கிய நாடுகள் சபை தோன்றி, உலகளவில் மனித உரிமை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்ட காலகட்டத்திலும், இந்த மக்களின் நிலைமை மோசமாகவே இருந்தது. பெரும்பான்மையினச் சமூகத்தின் ஆத்திரத்திற்கு இலக்காகி, பல்வேறு அநீதிகளுக்கும் உட்பட்ட சமூகமாக இவர்கள் இருந்து வந்துள்ளனர். அறுபதுகளுக்குப் பிறகு, எஞ்சியிருந்த மக்கள் கூட்டம் மீளெழுச்சிக்கான உந்துதலைப் பெற்றது. ஏக்கங்கள் ஒரு வகை உந்துதலாக மாறி, பாதிப்புகள் குறித்துப் பேசவும், எழுதவும் மக்கள் முனைந்தார்கள். அதன் தொடர்ச்சியாக, ‘மலையகம்’ எனும் சமூக உருவாக்கம் நிலைபெற்றது. தொழிலாளர்கள் என்ற நிலையைத் தாண்டி, வர்த்தகத் துறை, நகர வளர்ச்சி, நகரம் நோக்கிய புலப்பெயர்வு, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் போன்ற தளங்களிலும் இவர்களின் சமூக அசைவியக்கம் விரிவடைந்தது. ‘இந்திய வம்சாவளித் தமிழர்கள்’ என்ற சட்டரீதியான பெயர் இருந்தபோதும், ‘மலையக மக்கள்’ என்ற அடையாளத்தை அவர்கள் தாமாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். சட்டரீதியான அடையாளத்தை விட, சமூகம் சார்ந்த அடையாளப் பெயருக்கு அவர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். ‘மலையகம்’ என்ற சொல்லின் அர்த்தம், புவியியல் வரையறையைத் தாண்டி, எண்ணக்கரு சார்ந்த அடையாளமாக மாறுகிறது. தோட்டங்களைத் தாண்டி, நகரங்களைத் தாண்டி, பிரதேசங்களைத் தாண்டி, தேசங்களைக் கடந்து, ‘மலையகம்’ ஒரு எண்ணரீதியான வலையமைப்பாக விரிவடைந்து வருகிறது. மலையக மக்களில் பெண் தெய்வ வழிபாடு தொடர்பான அவதானம் சங்ககாலம் தொடக்கம் பெண் தெய்வங்கள் வழிபாட்டிற்குரியதாக அமையப்பெற்றதை அறிகிறோம். அது போலவே மலையக மக்களின் நீண்ட காலப் பயில்நிலைக்குரிய கூத்துகளாக விளங்கும் காமன் கூத்து, அருச்சுனன் தபசு, பொன்னர் – சங்கர் ஆகிய கூத்துகளிலும் பெண் பாத்திரங்கள் அங்கம் வகிப்பதையும், அவற்றுள் வழிபாட்டிற்குரிய பெண் தெய்வங்களும் உள்ளடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சோழர் காலத்திற்குரிய ‘பொன்னர் – சங்கர்’ வரலாற்றோடு ‘செல்லாண்டி அம்மன்’ வழிபாட்டிற்கும் தொடர்பு உள்ளதைக் காணலாம். பின்னாளில் இக்கூத்தின் பிரதான பாத்திரமான தங்காள், ‘தங்காயி’ (அருக்காணி) என்ற வழிபாட்டிற்குரியவராக உயர்த்தப்படுகின்றமை கவனிக்கத்தக்கது. காமன் கூத்தில் மாரியம்மன், காளியம்மன், ரதி, சீதை, வள்ளி, தெய்வானை, உமை போன்ற பெண்கள் பாத்திரங்களாக்கப்படுவதுடன் அப் பாத்திரங்களும் வழிபாட்டிற்குரிய அந்தஸ்தைப் பெற்று நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே அருச்சுனன் தபசில் திரௌபதி அம்மன், காளி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்கள் தொடர்புபடுகின்றமையும், ‘பாஞ்சாலி’ என்ற பாத்திரம் பின்னாளில் வழிபாட்டிற்குரிய பாத்திரமாக மாறுகின்ற நிலைமையும் குறிப்பிடத்தக்கது. இக்கூத்துகளோடு மோகினி, ஊர்வசி, ஏலக்கன்னி, குறத்தி, வேங்கை கன்னி, பேரண்டச்சி ஆகிய சிறு பெண் பாத்திரங்களும் தொடர்புபடுமாற்றைக் காணலாம். இவ்வாறான பாத்திரங்கள் கூத்துகளில் பிரதான பாத்திரங்களுக்கு உதவி செய்கின்ற அல்லது பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் பங்கெடுக்கின்றமை கவனிக்கத்தக்கது. தொழிலாளர்களின் நகர்வும் வழிபாட்டு இடங்களின் அமைவும் இருநூறு வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த இந்நிய வம்சாவளித் தமிழர்கள், மன்னார் தொடக்கம் மாத்தளை ஊடாக கால்நடையாக மலையகப் பிரதேசங்களுக்கு வருகைத் தந்தார்கள். பல சிரமங்களுக்கு மத்தியில் தப்பிப் பிழைத்தவர்கள் மாத்திரம் இலங்கையில் பெருந்தோட்டப் பொறிமுறைக்கு இரையாகி பிரித்தானியர்களுக்கும் சுதந்திர இலங்கைக்கும் செல்வத்தைப் பெற்றுக்கொடுத்தார்கள். இப்பிரயாணத்தில் பெற்ற கசப்பான அனுபவங்களை கண்டிச்சீமையிலே, பஞ்சம் பிழைக்க வந்த சீமை ஆகிய நாவல்கள் உட்பட கண்டிச் சீமை எனும் ஆய்வு நூலும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அடர்ந்த காடுகளுக்கு நடுவே கால்நடையாக வருகைதந்த மக்கள் அந்தியாகும் பொழுதுகளில் உறங்கிக் களைப்பைப் போக்கி வந்துள்ளார்கள். இவர்களது வரவில் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைந்தே காணப்பட்டன; தெய்வ நம்பிக்கையும் அவற்றோடு தொடர்புபட்ட சம்பிரதாயங்களும் காணப்பட்டன. தமது தாயக பூமியில் இருந்து நம்பிக்கையோடு வழிபட்ட சிலைகளையும், சிலைகளுக்கு ஒப்பான கற்களையும் எடுத்து வந்துள்ளார்கள். ‘பிடிமண்’ என்பது மலையக மக்களோடு சமகாலத்திலும் மிக நெருங்கிய தொடர்பினையும் நம்பிக்கையினையும் கொண்டுள்ளது. இப் பிடி மண்ணை பொட்டலமாக்கிய நிலையில் அதனையும் எடுத்துக் கொண்டே அவர்கள் பயணம் செய்துள்ளனர். சிலநேரங்களில், காலை வேளையில் பயணத்தைத் தொடங்கும் போது மேற்குறித்த நம்பிக்கை வடிவங்களை வைத்த இடத்திலிருந்து எடுக்க முடியாதநிலை ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறான இடங்களில், ‘அம்மன் இப்பிரதேசத்தில் தோட்டம் அமைப்பதற்கு ஆணை வழங்கிட்டாள்’ எனக் கருதி, தோட்டங்களை உருவாக்கியுள்ளனர். கல், சிலை அல்லது பிடிமண் இயல்பாகவே மண்ணோடு ஒட்டிக்கொண்ட இடங்களே அம்மன் ஆலயங்களாக உருப்பெற்றன. அவ்வாறு உருவான முதலாவது ஆலயமாக பண்ணாகாமம் முத்துமாரியம்மன் ஆலயம் கருதப்படுகிறது. பண்ணாகாமம் எனும் தோட்டமே பின்னாளில் மாத்தளை என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இவ் ஆலயத்தைச் சூழ தேயிலைத் தோட்டங்களும் ஆலயங்களும் உருவாக்கப்பட்டன. இவ்வாறே மலையக மாவட்டங்களில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் நிலைகொள்கிறார்கள். சமகாலத்திலேயே, மாத்தளை ஊடாக கண்டியைச் சூழவும், நாவலப்பிட்டி வழியாகவும் குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன. நாவலப்பிட்டிக்கு அண்மையிலுள்ள கம்பளை சிங்கப்பிட்டியில் கோப்பி பயிர்ச்செய்கை ஆரம்பம், லூல்கந்துரையைத் தொடர்ந்து தேயிலை பயிர்ச்செய்கையின் தீவீரம், இரயில் போக்குவரத்தின் கேந்திர நிலையமாக நாவலப்பிட்டி புகையிரத நிலையம் அமைந்தமை போன்றன இப்பிரதேசத்தில் மலையக மக்களது ஊடாட்டம் அதிகரிக்க முக்கிய காரணமாகின்றன. இப்பிரதேசங்களில் காணப்படும் அம்மன் ஆலயங்கள் பிரதான வீதிகளுக்கு அருகில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான ஆலயங்களில் நாவலப்பிட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம், இம்புல்பிட்டி, கல்லாறு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம், கடியன்லென கருமாரியம்மன் ஆலயம், கட்டபுலா ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம், கொலபத்தனை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் போன்றவை குறிப்பிடத்தக்கவைகளாகும். கொலபத்தனை தோட்டத்தை அடுத்து அமைந்துள்ள குயின்ஸ்பெரி தோட்டம் மலையக மக்களின் வரலாற்றோடும் வாழ்வியலோடும், ஆன்மீக நம்பிக்கையோடும் மிக நெருக்கமான தொடர்பினைக் கொண்டமைந்துள்ளது. மலையகத்தோடு தொடர்பு கொண்ட ஆன்மீக அடையாளமாக ‘நவநாதர் சித்தர்’ எனும் பெயர் விளங்குகிறது. நவநாதர் சித்தரின் அற்புதங்கள் மலையக மக்களின் வரலாற்றோடு தனித்துவமாக நோக்கப்படுகிறது. மாரியம்மன் வழிபாட்டுடனும் நம்பிக்கையுடனும் தொடர்புபடுகின்ற தொன்மங்களோடும் இதற்கு நெருங்கிய தன்மையை உணடு. பெண் ஆளுமைகளை அடையாளப்படுத்தும் களம் குயின்ஸ்பெரி தோட்டம் மலையகத்தின் முதலாவது பெண் பெரியகங்காணியைக் கொண்டிருந்த தோட்டமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அம்மன் வழிபாட்டில் கொண்டிருந்த நம்பிக்கைகள் குறித்த தொன்மக் கதைகளோடு இப்பிரதேசச் செயற்பாடுகள் தொடர்புறுவதைக் காணலாம். “தொன்மங்கள் பொய்மையின் புகலிடம் அன்று, அவை வாழ்க்கை அனுபவங்களின் குறியீடுகளாகும்.” என்ற சூசன்லாங்கரின் கருத்து குறிப்பிடத்தக்கதாகும். நவநாதர் சித்தரின் அற்புதங்கள், மாரியம்மன் ஆலயத்தோடு தொடர்புபட்டதாகவும் அமைந்துள்ளன. ஆலய உற்சவங்களில் வருடாந்தம் வழங்கும் அன்னதானத்தில் மீதமாக உள்ளதைக் குழி தோண்டிப் புதைத்து, அடுத்த வருட உற்சவத்தில் புதைக்கப்பட்ட உணவை மீளவும் எடுக்கும் போது, புதைத்த நிலையிலேயே அவ் உணவு இருக்கும் என்ற நம்பிக்கை இங்கு காணப்படுகிறது. அது நவநாதர் சித்தரின் சமாதியோடு தொடர்புபட்ட நடவடிக்கையாகவே பிரதானப்படுத்தப்படுகிறது. அம்மன் ஆலயங்களிலும் இவ்வாறு நடப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. பிரதான பாதைகள் ஊடாக அமைந்த குடியேற்றங்கள் காரணமாகக் கட்டமைக்கப்பட்ட தோட்டங்களில் பல உப பிரிவுகள் உள்ளன. அப் பிரிவுகளிலும் அம்மன் ஆலயங்களைப் பிரதானப்படுத்தியே பெண் தெய்வ வழிபாடுகள் இடம்பெறுகின்றன. நாவலப்பிட்டி பார்க்கேப்பல் தோட்டத்தில் மரண இறுதிச் சடங்கை கல்யாணி என்ற பெண்மணியே தற்போதும் ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பெண் தெய்வங்களில் பிரதானியாக முத்துமாரியம்மன் மலையக சமூக உருவாக்கத்தில் வழிபாட்டு மரபுகளும் பெரிதும் துணைநின்றமை கவனிக்கத்தக்கது. தொழிற்களங்களைவிட மக்கள் ஒன்று கூடும் தலமாகவும், கலந்துரையாடும் களமாகவும் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. சமூக வேற்றுமைகள் வெளிப்பட்ட இடங்களாக வழிபாட்டுத் தலங்கள் இருந்தபோதிலும், சமூக ரீதியிலான தீர்மானங்களை நிறைவேற்றும் முக்கியத் தலங்களாகவும் அவை அமைகின்றன. தென்னிந்தியப் பெண்தெய்வ வழிபாடுகளில் முத்துமாரியம்மன் வழிபாடு முதன்மையானதாகும். இலங்கைக்குப் புலம்பெயர்ந்த மக்களும் அதையே முதன்மையாக்கி வழிபட்டனர். மலையகத்தில் கொற்றவை, காளி போன்ற தெய்வங்களுடன் தொடர்புடைய ஏனைய தெய்வங்களும் வழிபடப்படுகின்றன. ஆயினும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முத்துமாரியம்மன் ஆலயங்கள் உள்ளன என்பதால், இவ்வழிபாடு இங்கு மேலோங்கிக் காணப்படுகிறது எனலாம். கிராமியத் தெய்வமாகவே வழிபடப்படும் மாரியம்மன், கருமாரியம்மன், கங்கையம்மன் எனும் பெயர்களிலும் அடையாளப்படுத்தப்படுகிறார். ‘மாரி’ என்பது மழை அல்லது அம்மை நோய் எனப் பொருள் பெறும். அம்மை நோயைப் போக்கும் அவதாரமாகவும், மழையைப் பெறும் சக்தியாகவும் மாரியம்மனை வழிபடுவது இவ்வழிபாட்டின் சிறப்பம்சமாகும். வெப்பு நோயை ஏற்படுத்தும் அம்மனின் கோபம் குறித்த இம்மக்களின் நம்பிக்கையும் கவனிக்கத்தக்கது. செல்வி, செல்லி, ஆத்தாள், செல்லியாத்தாள், செல்லாண்டியம்மன், ஆயிரம் கண்ணுடையாள், ஆயி, மகமாயி போன்ற பல பெயர்களாலும் அவர் அழைக்கப்படுகிறார். முத்துமாரியம்மன் பற்றிய தொன்மங்கள் அம்மன் வழிபாட்டுடன் தொடர்புடைய பல தொன்மக்கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில் மாத்தளை வடிவேலன் குறிப்பிட்ட இரேணுகாதேவி பற்றிய கதை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. அபிதான சிந்தாமணி நூலில், இரேணுகாதேவி ஜமதக்னி மாமுனிவரின் துணையாகச் சித்திரிக்கப்படுகிறாள். இரேணுகையின் கணவன் மறைந்தபோது, அவள் உடன்கட்டை ஏறினாள். அந்த நேரத்தில், இந்திரன் வருணனை ஏவிப் பெருமழை பெய்வித்தான். இதனால் உடலிலிருந்த ஆடைகள் எரிந்து போயின; உடலெங்கும் தீக்கொப்பளங்கள் தோன்றின. உடையின்றிய நிலையில், அவள் அருகிலிருந்த வேப்பிலைகளைப் பறித்து உடையாக அணிந்துகொண்டாள். பின்னர், அருகிலுள்ள ‘புலையச் சேரி’ எனப்படும் ஒடுக்கப்பட்டோர் வாழும் இடத்திற்குச் சென்று உணவு கேட்டாள். அங்கேயுள்ள மக்கள் சமைத்த உணவை வழங்காமல், பச்சரிசி, வெல்லம், மா, இளநீர் போன்றவற்றைக் கொடுத்தனர். அவற்றை உண்டவுடன், ‘வண்ணார்’ வீதிக்குச்சென்று உடை பெற்றுக்கொண்டு, காலை வேளையில் கணவனை எரித்த இடத்திற்கு சென்றாள். அப்போது, சிவனின் அசரீரிக் குரல் கேட்டது: “நீ நம் சிவசக்தியின் அம்சமாக பூமியில் பிறந்தவள். கிராம தேவதையாகத் திகழ்ந்து மக்களின் துயரை நீக்கி, அவர்களுக்கு அருள் புரிக. நீ இனி ‘மாரி’ என அறியப்படுவாய். உன் உடலில் தோன்றிய தீப்புண் கொப்பளங்களே ‘அம்மை’ நோயாகப் பரவும். நீ தரித்த வேப்பிலை, அந்த நோய்க்கு மருந்தாக அமையும். பச்சரிசி, மா, வெல்லம், இளநீர், கூழ் ஆகியவையே உனக்கான நைவேத்தியமாக இருக்கும். உன்னைப் போற்றி வழிபடுபவர்கள் துயரமின்றி வாழ்வார்கள்.” இவ்வாறு, சிவனின் ஆசியினால் இரேணுகை ‘மாரி’ என்ற தெய்வீக நிலையை அடைந்தாள். ஜமதக்னி முனிவரின் கட்டளையின்படி, இரேணுகையின் தலையை பரசுராமர் வெட்டி, அதை புலையர் குலப் பெண்ணின் உடலோடு இணைத்ததாகவும், புலையர் குலப் பெண்ணின் தலையை இரேணுகையின் உடலோடு பொருத்தியதாகவும் நம்பப்படுகிறது. இதன் விளைவாக, சில மாரியம்மன் கோயில்களின் கருவறையில், மாரியம்மனின் தலையை மட்டும் வைத்து வணங்கும் மரபு ஏற்பட்டுள்ளது. மாரியம்மன் பிராமணப் பெண்ணின் தலையையும், புலையர் குலப் பெண்ணின் உடலையும் கொண்டிருப்பதால், ‘உயர்’ சாதியினர் இரேணுகைதேவியாகிய மாரியம்மனை வழிபடலாம் என்பதோடு, புலையர் குலப் பெண்ணான மாதங்கி அல்லது கங்கம்மாவையும் வழிபடலாம் என முனிவர் அறிவித்ததாகத் கூறப்படுகிறது. மக்களிடையே நிலவும் சாதிய வேறுபாடுகளை நீக்கும் கைங்கரியமாகவும் இக்கதை விளங்குகிறது. மாரியம்மன் திருவிழாவில் எல்லா சாதியினரும் பங்கெடுக்கும் வகையில் கிரியைகள் கட்டமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரேணுகைக்கு உடை வழங்கி உதவிய ‘வண்ணார்’ குலத்தை அடையாளப்படுத்தும் வகையில், ஆலயங்களிலும் திருவிழாக்களிலும் மாத்துக் கட்டும் பொறுப்பை ‘வண்ணார்’ சமூகத்தினர் வகிக்கின்றனர். அதேவேளை, மாரியம்மன் மற்றும் மாதங்கி வழிபாடுகளில் வேறுபாடுகள் காணப்படுவதும் அவதானிக்கத்தக்கது. நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி தோட்டத்தில் நிலவும் முத்துமாரியம்மன் தொடர்பிலான ஒரு தொன்மக்கதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குயின்ஸ்பெரி பெரியங்கங்கானி, தென்னிந்தியாவிற்குச் சென்று பெண் தொழிலாளர்களை அழைத்து வந்தார். அந்தப் பெண்களில் ஒருத்தி மிகவும் அழகானவராக இருந்தாள். அவள் அழகில் மயங்கிய பெரியகங்காணி, அவள் மீது இச்சை கொண்டார். ஆனால், அவள் ஒத்துழைக்கவில்லை. ஒரு நாள், கம்பளி மற்றும் கூடையை வழங்காமல் அவளை மலைக்கு அனுப்பிவைத்தார். அந்த நாளில், ஏனைய பெண்கள் ஆறு இறாத்தல் மாத்திரம் கொழுந்து பறித்தனர். ஆனால் அந்தப் பெண் அறுபது இறாத்தல் கொழுந்து பறித்தாள். பின்னர், அவள் மலை உச்சியை நோக்கி வேகமாக நடந்துசென்றாள். அவளை கங்காணியோடு மற்றும் சிலரும் பின்தொடர்ந்தனர். மலையின் உச்சியில், வேப்பமரத்தடியில் அமர்ந்துகொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும், அவர்கள் அவளை அணுகிப் பேச முயற்சித்தனர். ஆனால், அருகில் சென்று பார்த்தபோது, அந்தப் பெண் சிலையாக மாறிவிட்டாள். இதன் பின்னர், அவள் மாரியம்மன் என்று அடையாளப்படுத்தப்பட்டாள். தனது தீச்செயலுக்காக மனம் வருந்திய பெரிய கங்காணி, தன் தவறை உணர்ந்து, மனம் திருந்தி, அம்மனுக்கு ஆலயம் அமைத்து வழிபட்டதாக நம்பப்படுகிறது. மாரியம்மனின் சிறப்புகளை எடுத்துச்சொல்லும் பல தொன்மக்கதைகள் நிலவுகின்றன. சிவபெருமானுக்கே அம்மை நோயை ஏற்படுத்திய கதை, தலையில் ஆயிரம் கண்களையுடைய கதை, தன் பிள்ளைகளை சகோதரியான மாரியம்மனுக்குக் காட்டாமல் ஒழித்தமையால் சோதனைக்குள்ளான காளியின் கதை போன்றன சில உதாரணங்களாகும். காளியோடு கொண்ட சோதனையாலேயே முன்னடியான் என்ற வழிபாட்டு உருவம் கட்டமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாவலப்பிட்டி முத்துமாரியம்மன் ஆலயத்துடன் தொடர்புபடும் மாரியம்மன் குறித்த செவிவழிக்கதைகள் 1823ஆம் வருடத்தின்பின் ஏற்பட்ட மலையக மக்களின் புலப்பெயர்வு காலத்திலேயே நாவலப்பிட்டியில் முத்துமாரியம்மன் ஆலயம் அமைக்கப்பட்டதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 1870 காலப்பகுதியில் கிழக்குப் பார்த்த நிலையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கொரக்காவத்தை தோட்டத்தின் தொழிலாளர்களும் நகர வர்த்தகர்களும் இணைந்து அமைத்த அவ் ஆலயத்திற்கு முன்னால் ஒரு வைத்தியசாலையும் அமைக்கப்பட்டது. குஷ்டரோக நோயினால் அவதியுற்ற நோயாளி ஒருவரைக் கண்ட நவநாதர் சித்தர் ‘வைத்தியசாலைக்கு முன்பு இருக்கும் அம்மனின் அருளால் இது குணமாகும். என்னுடன் வாருங்கள்’ என்றுகூறி, அவரை குயின்ஸ்பெரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரது பேச்சைக் கேட்டுச்சென்ற குறிப்பிட்ட நோயாளிக்கு குயின்ஸ்பெரி செல்லும் முன்பே நோய் குணமாகியது. 90களின் முற்பகுதியில் சன்னியாசி ஒருவர் நாவலப்பிட்டிக்கு வருகை தந்துள்ளார். அவர் இவ் ஆலயத்தின் செயற்பாடுகளில் பொறுப்பாக இருந்த அப்பாவு ஆச்சாரி, வேலு ஆச்சாரி ஆகியோரைச் சந்தித்து தான் சமயபுரத்தில் இருந்து வருவதாகக் கூறியுள்ளார். மேலும் அவர், ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் சமயபுரத்தில் இருந்து கொண்டுவந்த அம்மனின் திருமுகத்தை ஆலயத்தில் வைத்துவிட்டு, தான் சுகவீனமடைந்திருப்பதாகவும் வைத்தியசாலையில் சிகிச்சை பெறப்போவதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அவர் கொடுத்த விக்கிரகத்திற்குரிய பூசைகளை உரியவாறுசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய அதனை வேலு ஆச்சாரியினுடைய வீட்டின் பூசை அறையில் வைத்துப் பூசித்துள்ளார்கள். பின்னர், ஆச்சாரிகள் இருவரும் குறித்த சன்னியாசியைத் தேடி வைத்தியசாலைக்குச் சென்றபோது, அவ்வாறு ஒருவர் வரவில்லை என வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஒரு நாளில் மீளவும் வருகைத்தந்த அச்சன்னியாசி வேலு ஆச்சாரியின் வீட்டில் அச்சிலை பூசிக்கப்பட்ட முறையை அவதானித்து மகிழ்ச்சியுற்று, அதனை ஆலயத்தில் வைத்துப் பூசை செய்யுமாறு ஆலோசனை வழங்கிச்சென்றதாகக் கூறப்படுகிறது. சமயபுர அம்பாளின் அனுக்கிரகத்தால் அம்மனே இயல்பாக இங்கு அருள்பாலிக்க வந்துள்ளாள் என்ற நம்பிக்கை இப்பிரதேசத்தில் நிலவுகிறது. குறித்த அம்மனின் தலை உருவம் இன்னமும் இவ் ஆலயத்தில் பூசிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அதன் பின்னர் ஆச்சாரிகள் இருவர் உட்பட, பிரமுகர்கள் சிலர் இணைந்து அவ் ஆலயத்தை நிரந்தரக் கட்டடமாக அமைக்க முற்பட்டுள்ளார்கள். கோப்பிப் பயிர்ச்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்திய நோய், பிளேக் நோய் போன்றவற்றால் நாவலப்பிட்டி மலையக மக்கள் பாதிக்கப்பட்டனர். நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ள கொத்மலை வீதியிலுள்ள கடைகள், வீடுகள் பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால், அப்பகுதியில் வசித்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டவர்கள் ஐ.டீ.எச் பிரதேசத்தில் வைத்தே பராமரிக்கப்பட்டார்கள் (இப்பகுதிக்கு அக்காலத்தில் வைக்கப்பட்ட பெயரே இன்றுவரை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது). கொத்மலை வீதியில் அப்புறப்படுத்தவேண்டிய பட்டியலில் கோயில் கட்டடமும் உள்வாங்கப்பட்டிருந்தது. கோயிலை இடிக்க வேண்டும் என ஆங்கிலேய பொதுசுகாதார உத்தியோகத்தர் பணித்திருந்தார். மக்கள், கோயிலை இடிக்க வேண்டாம் என மன்றாடினர். வேலையாட்கள் ஒதுங்கிய நிலையில், அப்பணியை பொதுசுகாதார உத்தியோகத்தரே செய்வதற்குத் துணிந்துள்ளார். கதவு உடைக்கப்பட்ட போது, அதிசயிக்கும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு மாதமளவில் மூடிவைக்கப்பட்டிருந்த கருவறையில், காலையில்தான் வைக்கப்பட்டது போன்றிருந்த பூவும், இரண்டு மாதத்திற்கு முன்னர் ஏற்றிவைத்த எரிந்துக்கொண்டிருந்த விளக்கும் பார்த்தவர்களை வியப்பிலாழ்த்தியது. குறித்த பொது சுகாதார உத்தியோகத்தரும் கோயிலை உடைக்க வேண்டாம் எனக்கூறி வழிபட்டுள்ளார். வழிபாட்டு முறையும் நம்பிக்கை சார்ந்த விடயங்களும் இயற்கையுடன் கூடிய நெறிமுறையுடனேயே மாரியம்மன் வழிபாட்டு மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன. தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான வறட்சி மற்றும் பஞ்ச நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, அந்த நிலைமையைச் சமாளிக்கவும், புதிய வாழ்வியல் வழிகளை உருவாக்கவும், இலங்கைக்குப் புலம்பெயர்ந்த மக்கள் மாரியம்மனை வழிபட்டனர். இந்த வழிபாட்டின் மூலம் அவர்கள் இயற்கையின் அருளையும், மழையையும், அந்த நிலையை எதிர்கொள்வதற்கான ஆன்மிக வலிமையையும் பெற்றனர். ‘மாரி’ என்ற சொல், மழையை வழங்கும் அம்மனின் அடையாளமாக அமைந்துள்ளது. கடும் வெப்பநிலையை எதிர்கொள்ளுவதோடும், அதைச் சமாளிப்பதோடும் இவ்வழிபாட்டு மரபுகள் தொடர்புறுகின்றன. பஞ்சம் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலும் மாரியம்மனை இவர்கள் வேண்டுவது குறிப்பிடத்தக்கது. வருடம் முழுவதும் வெள்ளி, செவ்வாய் தினங்களிலும் மற்றும் விசேட தினங்களிலும் பூசைகள் இடம்பெற்று வருகின்றன. வருடாந்தம் இடம்பெறும் திருவிழா உற்சவம் மார்கழி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரை இடம்பெறுகின்றது. இக்காலப்பகுதியின் வறட்சிநிலை, பெருந்தோட்ட உற்பத்தியில் தாக்கத்தைச் செலுத்துகின்றது. மேலும் இக்காலப்பகுதியில் தொழில் நடவடிக்கைகளுக்கும் ஓய்வு வழங்கப்படுவதால் தோட்ட நிர்வாகத்திற்குப் பாதிப்பு ஏற்படாது என்ற காரணத்தினால் தோட்டங்களில் மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் என்றவாறு திருவிழாக்கள் இடம்பெறுவதுண்டு. நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாசி மாதம் பத்து நாட்கள் ஆகம முறைப்படி திருவிழா இடம்பெறுகின்றது. இங்கு மரபு ரீதியிலான அணுகுமுறைகள் தவிர்க்கப்படாமல் பின்பற்றப்படுகின்ற போக்கும் காணப்படுகின்றது. பொதுவாக தோட்டப்புறங்களில் திருவிழா தொடங்கும் தினத்தில் முகூர்த்தக்கால் ஊன்றுதல் கிரியையோடு ஊர் எல்லைகளுக்கு எல்லைக்காப்புக் கட்டப்படும் (காப்புக் கட்டியவுடன் ஊர் எல்லையைத் தாண்டுதல் கூடாது என்ற ஐதீகம் முக்கியமானது). பூசாரி அன்றிரவு குறி சொல்லுதல் (கிராமத்துக் கேள்வி), ஊரின் தொடக்க எல்லையிலுள்ள நீரூற்றில் கரகம் பாலித்தல், சக்தி கரகம் உட்பட காளி, மாரி தெய்வங்களை அடையாளப்படுத்தும் கரகங்களை அமைத்தல், கரகத்தைத் தூக்குபவர்களை மதிப்பெடுத்தல் அல்லது பூக்கள் கட்டிப்போட்டுத் தெரிவு செய்தல் அல்லது திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்தல் ஆகிய நடவடிக்கைகள் இதன்போது முக்கியத்துவம் பெறுகின்றன. கூழ் ஊற்றுதல், அன்னதானம் வழங்குதல், சப்பரத்தில் அம்மனின் ஊர்ப்பவனி, அம்மன் ஊர்வலத்துடன் மலையக மக்களுக்கே உரித்தான கலைகளின் அரங்கேற்றம், அம்மன் குரவை இசைத்தல், அம்மன் தாலாட்டுப்பாடுதல், கும்மி அடித்தல், நாடகங்களின் அரங்கேற்றம், மாவிளக்குப் பூசை, தீ மிதித்தல், பரவைக் காவடி, மஞ்சள் நீர் உற்சவம், ஊர் எல்லையில் கரகம் குடி விடுதல், கட்டுச்சோறு (கருவாடு கலந்த புளிச்சோறு) கட்டுதல், கரகம் குடி விட்டதும் எட்டு நாட்கள் கோயிலை அடைத்தல், எட்டாம் நாள் பலிப் பூசை, தப்பிசை – உடுக்கை – பம்பை ஆகியவற்றை இசைத்தல் போன்ற செயற்பாடுகள் திருவிழாக்காலத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் இயற்கை நேசிப்பும் இயற்கைக்கு நன்றி செலுத்துவதும் கவனிக்கத்தக்கன. சமகாலத்தில் ஆகம முறையினால் இவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கொடியேற்றம், சப்பரத்தில் அம்மன் பவனி, தேரோட்டம், உயிர்ப் பலிக்குப் பதிலாக பூசணிக்காய் பலியிடல் போன்ற மாற்றங்கள் அவதானிக்கத்தக்கன. அம்மன் வழிபாட்டில் நம்பிக்கைக்குரிய அம்சங்களாக பின்வரும் அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன: அம்மை நோய் பல வகைகளில் அடையாளப்படுத்தப்படுகின்றது. பெரியம்மா, சடையம்மா, கொத்தமல்லி அம்மா, மணல் அம்மா, தொட்டியம்மா, கஞ்சியம்மா, சொரக்கா அம்மா, அரச இலை அம்மா, தவிட்டம்மா, மண்ணாங்கட்டி அம்மா என்றவாறு வகைப்படுத்தப்படும் அம்மை நோய்க்கு வேப்பிலையும் குளிர்ச்சியான உணவு வகைகளுமே மருந்தாகின்றன. நீர் ஊற்றுதல், எண்ணையும் நீரும் ஊற்றுதல், மாரியம்மன் தாலாட்டுப் படித்தல் போன்ற அணுகுமுறைகள் இந்நோயை குணப்படுத்துவதாக நம்பப்படுகின்றன. மாரி என்றால் மழை எனப் பொருள்படும். கடுமையான வெயிலின் காரணமாக தேயிலைத் தொழிற்துறை பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஊர்ப் பெண்கள் ஒன்று சேர்ந்து ஈரச்சேலையுடன் நிறைகுடமாக தண்ணீர் எடுத்து வந்து அம்மன் சிலையில் அல்லது கோயில் கூரையில் ஊற்றுவார்கள். இவ்வாறு செய்தால் மழை வரும் என்பது நம்பிக்கையாகும். பிள்ளைவரம் (மகப்பேற்று), பால் கட்டியாதலுடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் குறித்த நேர்த்திக்கடன்களும் அம்மனில் சுமத்தப்படும். அம்மனை நினைத்துப் பூசாரிகள் நூல் மந்திரித்துக் கட்டினால் கெட்ட ஆவிகள் நெருங்காது என்பது நம்பிக்கையாகிறது. ஒரு முடிவினை எடுப்பதற்கு அம்மனின் சிலை முன்னால் அல்லது ஆலய வளாகத்தில் பூக்கட்டிப் போடும் வழக்கம் காணப்படுகிறது. தொழில் விருத்தி, பொருளாதார முன்னேற்றம், கல்வி முன்னேற்றம் குறித்த நேர்த்திக்கடன்களும் அம்மனில் சுமத்தப்படுகின்றன. மாரியம்மனோடு ஊரிலுள்ள ஏனைய சிறுதெய்வங்களும் சகோதரி, சகோதரன் என்ற உறவுமுறைகளுடன் தொடர்புபடுகின்றன. உதாரணமாக காளி, மாடசாமி, மதுரை வீரன் ஆகிய சிறுதெய்வங்களைக் குறிப்பிடலாம். மலையகப் பகுதிகளில் நிலவும் இராமர் வழிபாடு, ஆரியவாதத்தின் ஊடுருவலாக உற்றுநோக்கப்பட வேண்டியுள்ளது. அதன் கட்டாயத்தன்மையில், அம்மனின் அண்ணனாக இராமர் சித்திரிக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராயவேண்டியது அவசியமாகிறது. தாழ்த்தப்பட்டவர்களே மாரியம்மன் கோயில்களில் பூசகர்களாக இருந்துள்ளனர். காலப்போக்கில் பிராமணர்கள் பூசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அம்மை நோயுடன் தொடர்புறும் சீதளாதேவி, மகாமாரி, கருமாரி ஆகியனவும் மாரியம்மனின் வேறு பரிமாணங்களாகவே நோக்கப்படுகின்றன. ஆகம அடிப்படையில் அமைந்த கோயில்கள், சிறுதெய்வ வழிபாட்டு மரபின் அம்சங்களுக்கு முரணான அணுகுமுறைகளைக் கொண்டதாக அமைகின்றன. பிராமணர் அல்லது பிராமணத்தை தழுவிய பூசகர் இல்லாத நிலை, உயிர்ப்பலி நடைமுறை, கோயிலுக்குரிய அமைப்பின்மை, கொடூரமான உருவம், அருள்வாக்குக் கூறல் போன்ற சிறுதெய்வ வழிபாட்டு அம்சங்கள் மாரியம்மன் வழிபாட்டில் குறிப்பிடத்தக்கவையாகும். மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயம், நாவலப்பிட்டி முத்துமாரியம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்கள் உட்பட எல்லா மாரியம்மன் ஆலயங்களிலும் சிறுதெய்வ மரபிற்கு அமைவான அணுகுமுறைகளே பின்பற்றப்பட்டன. அண்மைக்காலத்தில், மேற்குறித்த கோயில்கள் உட்பட நகர்ப்புறங்களில் அமைந்துள்ள அம்மன் ஆலயங்களில், முழுமையான ஆகம விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமங்களில் (பெருந்தோட்டப் பொறிமுறை கைவிடப்பட்ட இடங்கள்) அமைந்துள்ள அம்மன் ஆலயங்களில் ஆகமமுறைகள் பின்பற்றப்பட்டாலும், அவை சிறுதெய்வ வழிபாட்டு மரபில் இருந்து முழுமையாக விலகமுடியாத நிலைக்கு உட்பட்டுள்ளன எனலாம். குடிப்பரம்பல் சிதைவும் வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டமையும் 1987ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், தோட்டப்பகுதித் தொழிலாளர்கள் சிறு குழுக்களாக வேறு தோட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். கொத்மலை நீர்த்தேக்கம் அமைப்பதற்காக, மல்லாந்தை, திஸ்பனை, மொச்சக்கொட்டை, கிளசக்லை, அலுகல்லை ஆகிய தோட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டன. தோட்டங்கள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டதால் பாடசாலைகள் கைவிடப்பட்டன; வழிபாட்டிடங்கள் முற்றிலும் சிதைக்கப்பட்டன. இந்தப் பகுதியில் காணப்பட்ட மாரியம்மன் ஆலயங்களில் ஒன்று பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையாக மாற்றப்பட்டது. இதேபோல், நாவலப்பிட்டியிலும் கனபதி, மாவிலை, மாவத்துரை, தெம்பிலிலை போன்ற தோட்டங்கள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான தோட்டப் பிரிவுகளில் அம்மன், காளியம்மன், கங்கை அம்மன் ஆலயங்கள் இருந்தன. ஊசியிலைக் காடுகள் வளர்ப்பும், சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கான ஊக்குவிப்பும் மாறிமாறி ஆட்சிபுரிந்த அரசாங்கங்களின் பெருந்தோட்டங்களைச் சிதைக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளாக முன்னெடுக்கப்பட்டன. 1964ஆம் ஆண்டு ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி கணிசமானோர் தாயகம் திரும்பியதால், இந்தப் பகுதிகளில் மலையகத் தமிழர்களின் மக்கள் தொகை குறைந்தது. பெரும்பான்மை இனத்தவரின் குடியேற்றத்திற்குப் பிறகு, முத்துமாரியம்மன் உள்ளிட்ட பெண் தெய்வ ஆலயங்கள் ‘பத்தினியம்மன்’ ஆலயங்களாக மாற்றப்பட்டன. இப்பிரதேசத்தில் முனைப்புப்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர தலைமையிலான கிளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் அதற்கு எதிரான பாதுகாப்புத் தரப்பினரின் செயற்பாடுகள் என்பன தமிழ் மக்களின் சிதைவிற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. பின்னாளில், கட்சி அரசியலைப் பலப்படுத்தும் நோக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களும் அதில் முக்கிய பங்கை வகித்தன. மலையகத்தின் பாதுகாப்புக் கவசமாக அம்மன் வழிபாடு அதிகாரச் சாதியினரான கங்காணிகள், கங்காணித்தனத்திற்கு ஆதரவானவர்கள் போன்றோரின் பாலியல் இச்சைகளால் மலையகப் பெண்கள் பாதிக்கப்பட்டனர். பிரித்தானியக் காலனித்துவ நிர்வாகிகளும் மலையகப் பெண்களை இக்கண்ணோட்டத்துடன் அணுகினர். துரைமார்களின் ஆதிக்கநிலை அதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது. இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பற்றவர்களாயினர். இதனால் இவ் அம்மன் வழிபாடு, பாதுகாப்புப் பொறிமுறையாகவும் கவசமாகவும் பிரயோகிக்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது. அம்மன் எந்தப் பெண் உருவத்திலும் இருப்பாள் என்ற பயம் ஆண்களிடத்தில் நிலைகெண்டது. இம்மக்களால் நேசிக்கப்படுகின்ற காமன் கூத்து, எல்லாக் கூத்துகளிலும் தலைசிறந்ததாக விளங்குகிறது. அக்காலத்தில் நிகழ்ந்த பலதார மணம், பாலியல் ஒழுக்கமின்மை போன்றவை காரணமாக, காமன் கூத்து ஓர் ஒழுக்கக் கோவையாக, காமத்தை முறையாகக் கைக்கொள்ள வேண்டிய பாடத்திட்டமாக அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் மதிப்பிற்குரியவர்கள் என்பதை ஆண்கள் உணர்வதற்கும், ஆண்களுக்கு உணர்த்துவதற்கும், அம்மன் வழிபாடு பயன்பட்டது. மலையகத்தில் அவ்வப்போது நிகழ்ந்த இனக்கலவரங்களின் போதும், இவ் நம்பிக்கை மலையக மக்களுக்கு உளரீதியான பலத்தைக்கொடுத்தது. இவை மட்டுமல்லாது, சமூக – பொருளாதார – கல்வி – கலாசார அம்சங்களிலும் அம்மன் குறித்த நம்பிக்கைகள் பரவி நிலைபெற்றுள்ளன எனலாம். உசாத்துணைப் பட்டியல் வடிவேலன், பெ. (2007). மலையக நாட்டுப்புறவியலில் மாரியம்மன். மாத்தளை தமிழ் இலக்கிய வட்டம். ஆனந்தகுமார், பா. (2017). இலங்கை மலையக தமிழ் இலக்கியம். காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம். முரளிதரன், சு. (2002). வரவும் வாழ்வும் – மலையக நாட்டாரியல் சிந்தனைகள். சாரல் வெளியீட்டகம். சிவதம்பி, கா. (1993). இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும். உதயம் நிறுவனம். சந்தரா, சு. (2013). தொண்மவியல் கட்டுரைகள். அறிவுப்பதிப்பகம். சண்முகலிங்கம், க. (1995). தமிழ் நாட்டார் வழக்காற்றியல். இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம். ராஜப்பா, எம். (1985). மாரியம்மன் உற்பத்தி. நாவலப்பிட்டி, ராஜா அச்சகம். பொன்னுத்துரை, கே. (1996). சக்தி தத்துவ மலர். நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம். சாரல் நாடன் (2003). மலையகத் தமிழர் வரலாறு. இந்து கலாசார அமைச்சு, மத்திய மாகாணம். சிவலிங்கம், மு. (2010). ஒப்பாரிக் கோச்சி. நாவலப்பிட்டி தமிழ்ச் சங்கம். சடகோபன், இரா. (2014). கண்டிச் சீமையிலே. எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் பிரைவட் லிமிடெட். புதிய தேர் வெள்ளோட்ட சிறப்பு மலர் (2016). நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம். மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு (1997). இந்து கலாசார அமைச்சு, மத்திய மாகாணம். About the Author அருணாசலம் லெட்சுமணன் ‘ம.மா - கொத் - உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயத்தின்’ அதிபரான அருணாசலம் லெட்சுமணன், 'நிகர்' சமூக - கலை - இலக்கிய அரங்கத்தின் பிரதம அமைப்பாளருமாவார். தேசிய, பன்னாட்டு ஆய்வரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்து வருகிறார். 2023இல் மலேசியாவில் இடம்பெற்ற பதினோராவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஓர் ஆய்வுக்கட்டுரையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய, பன்னாட்டு இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். பயண இலக்கியங்கள், சமூக, கலை, இலக்கிய, கல்வித்துறைச் செயற்பாடுகளில் ஆர்வம் மிக்கவர். இவர் ஒரு கவிஞருமாவார். சிறுவர் பாடல்கள், சிறுவர் இலக்கியம் தொடர்பான விமர்சனங்கள், ஆய்வுகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சிறுவர் கதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். https://www.ezhunaonline.com/article/worship-of-the-goddess-muthumariamman-in-malaiyagam-focusing-on-the-nawalapitiya-region/?fbclid=IwY2xjawI65PlleHRuA2FlbQIxMAABHXKvNwb5Pjy-jfh6ap7speXgLPVSzTsFYoecJhXS08Ek6G98MNtT6844Hg_aem_BYWMfZ4iqGWhKASUSDz0rw
  46. https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-tasmac-liquor-scam-three-day-ed-raid-in-chennai-concludes-686211.htmlதமிழகம் அதிர்ந்த டாஸ்மாக் மதுபான முறைகேடு:சென்னையில் 3 நாட்கள் நீடித்த அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு By Mathivanan Maran Updated: Sunday, March 9, 2025, 17:04 [IST] Subscribe to Oneindia Tamil சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக சென்னையில் கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை தற்போது முடிவடைந்துள்ளது. சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. AD தமிழக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்து வருகிறார். இந்த துறையில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்பட்டு வந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் உள்ள மதுபானம் கொள்முதல் மற்றும் விற்பனையில் ரூ1 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கடந்த 2023-ம் ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகாரும் தந்திருந்தார். Also Read விருச்சிகத்தின் ஆட்டம் ஆரம்பம்.. அஷ்டம சனி ஓவர்.. சனிப்பெயர்ச்சி பலன்கள் முழு விவரம் இதோ இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் மதுபான கொள்முதல், விற்பனை தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை தயாரிப்பு நிறுவனம் உட்பட மொத்தம் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். AD அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு நிலுவையில் இருக்கிறது; தற்போது ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மதுபான கொள்முதல், விற்பனை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை களமிறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தற்போது முடிவடைந்துள்ளது. இந்த சோதனையில் பெருமளவு பணம் மற்றும் ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. Recommended For You "டாஸ்மாக்கில் ரூ.1லட்சம் கோடி ஊழல்?அமலாக்கத்துறை ரெய்டுக்கு காரணம் ஆளுநரிடம் 'டாக்டர்' தந்த பட்டியல்? " அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகிக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் மதுபானம் கொள்முதல் மற்றும் விற்பனை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக வந்த தகவலின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழகமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நள்ளிரவுக்கும் பின்னும் தொடர்ந்தது. டாஸ்மாக் அலுவலகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-tasmac-liquor-scam-three-day-ed-raid-in-chennai-concludes-686211.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.