Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19134
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    10209
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/17/25 in all areas

  1. இந்த பாடலை கர்ணன் படத்தில் வந்த “கண்டா வரச்சொல்லுங்க” மெட்டில் பாட/வாசிக்கவும். தலைவரை கண்டா வரச்சொல்லுங்க வல்லையிலே பிறந்த புள்ள இனம் வாழவென வந்த புள்ள… வல்லையிலே பிறந்த புள்ள இனம் வாழவென வந்த புள்ள… வேலுப்பிள்ளை பெத்த புள்ள.. விடுதலைய தந்த புள்ள… கண்டா வரச்சொல்லுங்க…. தலைவரை கையோட கூட்டி வாருங்க… அவர கண்டா வரச்சொல்லுங்க தலைவரை கையோட கூட்டி வாருங்க… ******* ஊரெங்கும் ரத்தவாசம் ஒடுங்கி போச்சு நம்ம இனம்…ஊரெங்கும் ரத்தவாசம் ஒடுங்கி போச்சு நம்ம இனம்… வீர்கொண்டெழுந்தார் பாரு விரிந்ததங்கு தமிழர் தேசம்… கண்டா வரச்சொல்லுங்க…. தலைவரை கையோட கூட்டி வாருங்க… அவர கண்டா வரச்சொல்லுங்க தலைவரை கையோட கூட்டி வாருங்க… ********* ஊரு நம்ம ஊரு அப்பா.. துண்டுபட்டு போனதப்பா.. ஊரு நம்ம ஊரு அப்பா.. துண்டுபட்டு போனதப்பா.. வேங்கையவர் வந்த பின்னே எங்கள் வேற்றுமைகள் ஒழிந்ததப்பா… கண்டா வரச்சொல்லுங்க…. தலைவரை கையோட கூட்டி வாருங்க… அவர கண்டா வரச்சொல்லுங்க தலைவரை கையோட கூட்டி வாருங்க… ******* ஆட்சியிலும் அமரவில்லை எந்த அதிகாரமும் சுவைக்கவில்லை… தேசம் எனும் பெருங்கனவை என்றும் விலகி அவர் நடந்ததில்லை… தேசம் எனும் பெருங்கனவை என்றும் விலகி அவர் நடந்ததில்லை… கண்டா வரச்சொல்லுங்க…. தலைவரை கையோட கூட்டி வாருங்க… அவர கண்டா வரச்சொல்லுங்க தலைவரை கையோட கூட்டி வாருங்க… -கோஷான் சே-
  2. பரியோவான் கல்லூரி பழைய மாணவனும், என் நண்பனும், Yarl IT hub இன் முதுகெலும்பாகவும் இருக்கும் ரமோஷனின் வாழ்க்கை பயணம் பற்றிய காணொளி / பேட்டி. தான் மட்டும் முன்னேறியதுடன் வடக்கில் உள்ள இளையவர்களையும் முன்னேற்ற முயற்சிகளை எடுக்கும் ஒருவர் இவர். இக் காணொளியை தயாரித்து வெளியிட்ட Saho Creation இற்கு நன்றி.
  3. அலுவல் நடந்துகொண்டிருக்கு.....👁‍🗨
  4. இலங்கையில் திருமண வயது 18 வரம்பு வயதாக அனைவருக்கும் இருக்கின்ற போது முஸ்லிம் மதம் சொல்கின்றபடியால் அவர்களுக்கு குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட கூடாது. இலங்கையின் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் ஐநாடுகள் சபையிடம் உறுதி அளித்தபடி பெண்கள் சிறுமிகளின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும் பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதற்கும் அநுரகுமார திசாநாயக்க அரசு செயல்பட வேண்டும்.
  5. வாஸ்தவமான உண்மை சுவியர். 🙂 இப்பதிவை பார்த்து மனம் பின்னோக்கி பாய்ந்தது. நன்றி.
  6. ஒரே ஒரு இழையில் தொங்கியபடி ஒரு சிலந்தி இருந்தது. எங்கிருந்தோ யாரோ சொன்னார்கள், சிலந்தி இருப்பது கூட்டுக்கு நடுவில் அல்லவா? சிலந்தியும் ஊடுபாவாக கூடு கட்டத் துவங்கிற்று. போதாக்குறைக்கு உலக வலைப்பின்னலிலும். ... இப்போதெல்லாம் அது கட்டிவிட்ட கூட்டிலிருந்து தப்பிவிடத் தான் எத்தனிக்கிறது ஆனால் சிக்கலுக்கு மேல் சிக்கலாகி இழைகளே அதை நெரிக்கின்றன அதன் கூக்குரலோ வலைப்பின்னல்களில் எதிரொலித்தாலும் யாருக்கும் கேட்பதாயில்லை. சுற்றும் முற்றும் பார்த்தால் தன்னைப் போலவே பல சிலந்திகள்... சிலதோ ஏதோ ஒரு உத்வேகத்தோடு, கழுத்தை நெரித்தாலும் - மேலும் மேலும் வலைகளைப் பின்னுவதும் தெரிகிறது. இப்போது சிலந்திக்குச் சிரிப்பும் வருகிறது வலையைப் பின்னப்போய் வாழ்க்கையை இழந்து விட்டேனே.
  7. 'இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்' - பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள் பட மூலாதாரம்,JAYARAJ S படக்குறிப்பு,பழனியம்மாள் அதிகாலையில் 2 மணிக்கெல்லாம் எழுந்து செங்கல் சூளையில் வேலை செய்ய வேண்டும் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 17 மார்ச் 2025, 05:55 GMT புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர் அதிகாலை 2 மணிக்கெல்லாம் ஜெயராஜின் அம்மா பழனியம்மாளுக்கு விடிந்துவிடும். இரவு எத்தனை மணிக்குத் தூங்கினாலும் 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பது, செங்கல் சூளையில் வேலை பார்க்கும் அவருக்கு ஓர் அனிச்சை செயல். தலைப்பாகை அணிந்து சேறும் சகதியுமான ஆடையுடன் நாள் முழுக்க தன் அம்மா வேலை செய்வதை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார், 12ம் வகுப்பு படிக்கும் ஜெயராஜ். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சின்னத்தம்பிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ், ஈரோடு அரசு மாதிரிப் பள்ளியில் படித்துவருகிறார். "நானும் செங்கல் சூளையில் அம்மாவுடன் வேலை செய்திருக்கிறேன். மண்ணைக் குழைத்து, செங்கலை உருவாக்குவது வரை கடுமையான வேலை அது. தலையில் மண்ணை சுமந்து, குழைத்து அதனை செங்கல்லாக உருவாக்க வேண்டும். மதியம் வெயிலில் அதிக வேலைகளை பார்க்க முடியாது என்பதால் அதிகாலையிலேயே அம்மா வேலை பார்ப்பார். அவரை புகைப்படம் எடுப்பதற்காக அதிகாலை 2 மணிக்கு ஒருமுறை எழுந்தேன். ஒரேயொரு புகைப்படம் எடுத்துவிட்டு தூக்கம் வருகிறது என வந்துவிட்டேன். ஆனால், அம்மாவுக்கு அது தினசரி செயல்பாடு." பட மூலாதாரம்,SHEIK HASAN K ஜெயராஜ் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சுமார் 17 அரசு மாதிரிப் பள்ளிகளில் படிக்கும் 40 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் செய்யும் வேலைகளையும் தங்கள் சுற்றத்தில் உழைக்கும் மக்கள் பலரையும் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளனர். உழைக்கும் மக்களின் வலியை உணர்த்தும் வகையிலான படங்களாக அவை உள்ளன. துப்புரவு பணி, கட்டுமான தொழில், கல் குவாரி, செருப்பு தைத்தல், மஞ்சள் ஆலை, பனை மரம் ஏறுதல், பேருந்து ஓட்டுநர், தையல் தொழிலாளி என, கடும் உழைப்பை கோரும் வேலைகளைச் செய்யும் தங்கள் பெற்றோர்களை லென்ஸ் வாயிலாக புகைப்படம் எடுத்துள்ளனர். வெட்டுக் காயங்கள், சிமெண்ட், மண் ஊறிய கை, கால்களை பிரதானமாக அவர்களின் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. அவர்கள் பெற்றோரின் உழைப்பு அந்த படங்களில் பிரதிபலிக்கிறது. "செங்கல் சூளையில் வேலை பார்க்கும் போது கால் பாதம் வெடித்துப் புண்ணாகிவிடும். தலைவலி, கால்வலி, மயக்கம், இடுப்பு வலி அடிக்கடி ஏற்படும். கேமரா வழியே புகைப்படம் எடுக்கும் போதுதான் அம்மாவுடைய வலி எனக்குப் புரிகிறது. புகைப்படங்கள் மூலம் அம்மாவின் வலியை மற்றவர்களுக்குக் கடத்த முடியும் என நினைக்கிறேன்." என்கிறார் ஜெயராஜ். அப்பாராவை 20 ஆண்டுகள் கொத்தடிமையாக நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட அண்ணாதுரை சொல்வது என்ன? இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் அன்று ஓய்வறியாத மாஞ்சோலை எஸ்டேட்டில் இன்று பேரமைதி - தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள்? தேசிய அளவில் 42%: ஜவுளி முதல் கார் உற்பத்தி வரை தமிழ்நாட்டுப் பெண்கள் நுழைந்து சாதித்தது எப்படி? "அம்மா முதலில் அவரை புகைப்படம் எடுக்க ஒத்துக்கொள்ளவில்லை. நான் எவ்வளவோ கேட்ட பிறகுதான், 'சரி நான் வேலை பார்க்கிறேன், நீ எடுத்துக்கோ'ன்னு சொன்னாங்க. புகைப்படத்தைக் காண்பித்ததும் 'நல்லா இருக்குன்னு' சொன்னாங்க." அரசு மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புகைப்படக் கலை, அரங்கக் கலை, மைமிங், நிகழ்த்துக் கலைகள் என பலவும் கற்றுத்தரப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கலையை கற்பதன் மூலம், நான்கு ஆண்டுகளில் நான்கு வெவ்வேறு கலைகளை அவர்களால் கற்க முடியும் என்பதே இதன் நோக்கம். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையால் இது செயல்படுத்தப்படுகிறது. பட மூலாதாரம்,GOVARTHANAN L S படக்குறிப்பு,இந்த புகைப்பட கண்காட்சி கடந்த பிப்ரவரி மாதம் 3 நாட்கள் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது 'அப்பா ஒரு ஹீரோ' அப்படி புகைப்படக் கலையை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு 6-7 மாதங்களாக பயிற்சியளித்து, 'உழைக்கும் மக்கள்' எனும் தலைப்பில் அவர்கள் எடுத்த புகைப்படங்கள், கடந்த பிப். 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. அரசு மாதிரி பள்ளிகள் என்பது உண்டு உறைவிட பள்ளிகளாகும். எனவே, வார விடுமுறையில்தான் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வார்கள். அப்போதுதான் இந்த புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். மதுரை அரசு மாதிரிப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவரும் கோபிகா லெட்சுமியின் தந்தை முத்துகிருஷ்ணன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருடைய ஒரு சிறுநீரகம் செயலிழந்த காரணத்தால் வாரத்துக்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்துவருகிறார். பட மூலாதாரம்,GOPIKA LAKSHMI M படக்குறிப்பு,கோபிகாலெட்சுமியின் தந்தை டயாலிசிஸ் செய்த நிலையிலும் வாகனத்திலேயே சென்று பலசரக்குகளை விற்பனை செய்துவருகிறார் "அப்பா ஒரு சிறிய நான்கு சக்கர வாகனத்திலேயே பல சரக்கு வியாபாரம் செய்துவருகிறார். அருகிலுள்ள கிராமங்களுக்கு வாகனத்திலேயே சென்று சரக்குகளை விற்பார். டயாலிசிஸ் செய்தும் அப்பா எங்களுக்காக கடினமாக உழைக்கிறார். டயாலிசிஸ் செய்துவிட்டு வீட்டில் ஓய்வெடுப்பதற்கு எங்களுக்கு வசதி இல்லை. இந்த நிலையிலும் அப்பா எப்படி உழைக்கிறார் என்பதை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என நினைத்தேன். நாம் எடுக்கும் படங்கள் நம் வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க வேண்டும்." என்கிறார் தா. வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபிகாலெட்சுமி. அவரை பொறுத்தவரை இந்த புகைப்படங்களில் அவருடைய அப்பா 'ஒரு ஹீரோ போன்று இருக்கிறார்." அறக்கட்டளை மூலமாக இலவசமாக டயாலிசிஸ் செய்யும் முத்துக்கிருஷ்ணனுக்கு, மாதந்தோறும் ரூ.3,000 வரை மாத்திரைகளுக்கு செலவாகிறது. பட மூலாதாரம்,MUKESH படக்குறிப்பு,கல்குவாரியில் டிரில்லிங் வேலை செய்யும் கதிர்வேலுக்கு ஒருநாள் சம்பளம் ரூ.500-600 தொழில்முறையிலான டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலம் புகைப்படம் எடுப்பது ஆரம்பத்தில் இந்த மாணவர்களுக்குக் கடினமானதாக இருந்தாலும், தொடர் பயிற்சியின் வாயிலாக இக்கலை சாத்தியமாகியிருக்கிறது. இம்மாணவர்களுக்கு ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள புகைப்படக் கலை பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்துள்ளனர். "மாணவர்களை சமூக பொறுப்புள்ளவர்களாக உருவாக்குவதுதான் இதன் நோக்கம். குழந்தைகள் என்ன புகைப்படங்கள் எடுக்கின்றனர் என பார்க்க நினைத்தோம். உழைக்கும் மக்கள் அவர்களை சுற்றியே இருக்கின்றனர், அதை ஆவணப்படுத்தியிருக்கின்றனர். அவர்களை பற்றி தெரிந்து கொள்வதுதான் சமூக மாற்றத்தின் தொடக்கம்." என்கிறார், மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள முத்தமிழ் கலைவிழி. இவர், நீலம் அறக்கட்டடளை நிறுவனராகவும் உள்ளார். பட மூலாதாரம்,SARAN R படக்குறிப்பு,இம்மாணவர்களை பொறுத்தவரை இயற்கை காட்சிகளைவிட மற்றவர்களின் உழைப்பை புகைப்படங்களாக பதிவு செய்வதன் மூலம் அக்கலையின் நோக்கம் நிறைவேறுகிறது கடின உழைப்பும் சொற்ப வருமானமும் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்த முகேஷ் அம்மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவருகிறார். அவருடைய அப்பா கதிர்வேல், திருத்தணியில் உள்ள கல்குவாரி ஒன்றில் வேலை பார்க்கிறார். "புகைப்படங்கள் எடுப்பதற்காக அப்பாவுடன் கல்குவாரியிலேயே நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். அப்போதுதான் அப்பா கல் குவாரியில் எப்படியான வேலைகளை செய்கிறார் என்பதை முதன்முறையாக பார்த்தேன். அப்பா அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார்." என்கிறார் முகேஷ். அதிகாலை 3 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையும் பின்னர் சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரையும் தன் தந்தை கல் குவாரியில் 'டிரில்லிங்' வேலைகளை பார்ப்பதாகக் கூறுகிறார் அவர். 'விதிகளை வளைத்து ரூ.300 கோடி முறைகேடு' - உணவுத்துறை மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்14 மார்ச் 2025 கோவையில் மத்திய அரசுப் பணிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் - வட மாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?13 மார்ச் 2025 பட மூலாதாரம்,MUKESH K படக்குறிப்பு,தங்களை சுற்றி இருப்பவர்களின், பலராலும் அறியப்படாத அவர்களின் உழைப்பை ஆவணப்படுத்த வேண்டும் என்பதே இந்த மாணவர்களின் நோக்கமாக உள்ளது "அவர்கள் தங்கும் அறையில் கட்டில், மெத்தையெல்லாம் இல்லை. குவாரியில் உள்ள காலி அட்டைப் பெட்டிகள் மீதுதான் அப்பா படுத்திருப்பார். அப்பாவுக்கு கடும் வெயிலில் வேலை செய்வதால், கடந்தாண்டு சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டது." இந்த டிரில்லிங் வேலையில் ஒரு நாளைக்கு 500-600 ரூபாய் கிடைக்கும் எனக்கூறுகிறார் முகேஷ். இந்த மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர், விளிம்புநிலை குழந்தைகள். தினசரி கூலி வேலைகளையே இவர்களின் பெற்றோர்கள் செய்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை பிரதானப்படுத்த வேண்டும் என்பது இந்த புகைப்படங்களின் நோக்கமல்ல, மாறாக, "தங்கள் பெற்றோரின் கடின உழைப்பை சமூகம் அறிய செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம்;" என்பது இந்த புகைப்படங்களை பார்க்கும்போது புரிகிறது. பட மூலாதாரம்,KEERTHI S படக்குறிப்பு,சரக்குகளை வாங்க தன் அம்மா முத்துலட்சுமி பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார் கீர்த்தி தென்காசி மாவட்டம் மாயமான்குறிச்சியை சேர்ந்த கீர்த்தி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் முன்பு சிறியதாக பெட்டிக் கடை வைத்திருக்கும் தன் அம்மா முத்துலட்சுமி, சரக்குகளை வாங்க பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார். "அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை. அம்மாதான், கடை, வீடு இரண்டையும் கவனிக்கிறார். காலை 4 மணிக்கு எழுந்து இரவு 11 மணி வரை அவருக்கு வேலை இருக்கும். குழந்தைகளை முன்னேற்ற ஒரு பெண் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை புகைப்படங்கள் வாயிலாக காண்பிக்க வேண்டும் என நினைத்தேன்." என்கிறார் கீர்த்தி. "அம்மா வேலை செய்வதை கேமரா லென்ஸ் வழியாக பார்க்கும்போது புதிதாக இருந்தது. புரொபஷனல் கேமராவை பிடிப்பது ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும் பின்னர் பழகிவிட்டது. இரவு நேரத்தில் எப்படி படம் எடுப்பது, ஷட்டர் ஸ்பீடு, அபெர்ச்சர் எப்படி சரிசெய்வது என எல்லாம் தெரியும்." பட மூலாதாரம்,SHEIK HASAN K படக்குறிப்பு,தங்கள் பெற்றோர்களின் கை, கால்களை புகைப்படம் எடுப்பதன் வாயிலாக அவர்களின் கதைகளை சொல்ல முயல்கின்றனர் இந்த புகைப்பட கண்காட்சியை புகைப்படக் கலைஞர் எம். பழனிக்குமார் ஒருங்கிணைத்துள்ளார். "நம் கதைகளை எப்படி ஆவணப்படுத்துவது என்பதை இந்த மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம்." என்கிறார் அவரர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்போரின் மரணங்களை தொடர்ச்சியாக தன் புகைப்படங்கள் வாயிலாக ஆவணப்படுத்தி வருகிறார் பழனிக்குமார். வேலை செய்யும் அம்மாவின் கைகள் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும் அம்மாக்களையும் சில மாணவர்கள் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். " வெளியில் சென்று வேலை பார்ப்பது மட்டும் உழைப்பு அல்ல, வீட்டில் காலை முதல் இரவு வரை என் அம்மாவின் கைகள் வேலை செய்துகொண்டேதான் இருக்கிறது" என தன் அம்மாவின் கைகளை மட்டுமே புகைப்படமாக எடுத்துள்ளார் மாணவி ஒருவர். "இம்மாணவர்களின் அப்பாவோ அம்மாவோ எப்படிப்பட்ட சூழல்களில் வேலை பார்க்கின்றனர் என்பதை முன்பு பெரும்பாலும் பார்த்திருக்க மாட்டார்கள். அதை நேரடியாக பார்க்கும்போது அந்த உழைப்பை உணருகின்றனர். அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. புகைப்படக் கலையில் அவர்களின் திறமையை அவர்களின் புகைப்படங்களை பார்த்தாலே புரியும்" என்றார். பட மூலாதாரம்,RASHMITHA T படக்குறிப்பு,பீடி சுற்றும் தொழில் செய்பவர்களின் வீடு முழுவதும் புகையிலை வாசனையே நிரம்பியிருக்கிறது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ரக்‌ஷ்மிதா, தங்கள் பகுதியில் பீடி சுற்றும் தொழிலாளர்களை புகைப்படங்கள் எடுத்துள்ளார். "வீட்டு வாசல் முன்பு அமர்ந்துதான் பீடி சுற்றுவார்கள். அவர்களுடைய வீட்டில் புகையிலை வாசனை அதிகமாக இருக்கும். கொஞ்ச நேரத்துக்கு மேல் அங்கு இருக்க முடியாது. இவர்கள் ஆயிரம் பீடி சுற்றினால்தான் 250 ரூபாய் கிடைக்கும். மிக வேகமாக பீடி சுற்றுபவர்களுக்கே ஆயிரம் பீடி சுற்ற ஐந்து நாட்களாகும். அவர்களுக்கு காசநோய், நுரையீரல் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. இவர்கள் என்ன வேலை செய்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. சொல்லப்படாத இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்." என்கிறார் ரக்‌ஷ்மிதா. சமூகத்தில் அதிகம் அறியப்படாத எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் பிள்ளைகளாலேயே புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70elj406yzo
  8. எனது உறவினர் ஒருவர் தனியாள், கணவரின் ஓய்வூதியம் இருபதினாயிரம், சொந்த வீடு, நீரழிவு நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ரோல் இப்படி பல வருத்தம், நடக்க முடியாது, போசாக்கான உணவு இல்லை, மிக சிக்கனமாக வாழ்கிறார், கூடுதலான மருந்து மாத்திரை தனியார் மருந்தகங்களிலேயே வாங்குகிறார், அதிகமாக மரக்கறி சாப்பாடு. அவர் படும் கஸ்ரத்தை பார்த்து நான் நினைக்கிறன், எந்த ஒரு வருமானமும்மில்லாமல் வாழும் குடும்பங்கள் என்ன செய்வார்கள்? முன் ஆயிரம் ரூபா ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்திற்கு போதுமானதாக இருந்தது. இப்போ ஆயிரம் ரூபா ஒரு மூலைக்குபத்தாது.
  9. ஜெ.வி.பி அரசாங்கம் காணும் கனவு வாழ்க்கைக்கு இது சரியாக இருக்கலாம்... ஒரு இறாத்தல் பாணை 4 துண்டுகளாக வெட்டி ஒரு துண்டு பானும் பொல் சம்பலும் காலையிலும். மதியம் கிறிபத்தும் அதே பொல் சம்பலும் ,கருவாடும். இரவுக்கு மரவள்ளி கிழங்கும் பொல் சம்பலும் ... மக்டொனால்ட்,பிசா,கெ.எஃப்.சி போன்ற முதலாளிகலின் கடைகளை அடுத்த தேர்தலுக்கு முதல் பூட்ட வேண்டும் 😅
  10. நீங்கள் தப்பாக நினைக்கிறீர்கள்😅...கடாபி ,கஸ்ரோ போன்றவர்களும் தங்களது மெய்பாதுகாவலர்களாக பெண்களை வைத்திருந்தார்கள் ..காரணம் பெண்கள் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் ..😂.
  11. ஓஷோ வின் புத்தகத்தை கையில் வைதிருக்க வேணும் ஏதாவது சந்தேகம் வந்தா ஓஷோவை துணைக்கு இழுக்கலாம்..
  12. கலியாணம் கட்டி பிள்ளை குட்டியளோட வாழ்ந்தாலும் அந்த ஏக்கம் இருக்கும்.
  13. நான் மேசைக் கணணியில் இருந்துதான் எழுதுவது ....... எங்காவது சென்றால் லேப்டாப்பில் எழுதுவது , கைபேசியில் ம்கூம் சுத்தம் . .......! 😂
  14. நான் குளிர்காலத்தில் சிகரட்டை தொடவும் மாட்டேன். இளவேனில் காலம், இலையுதிர்காலம் மற்றும், கோடை காலத்தில் மாதம் ஒன்றுக்கு 10 இல் இருந்து 15 சிகரெட்டுகள் புகைப்பேன். சிகரட் Pack வாங்கி, அதை முடிக்க முடியாமல், காற்றுப் பட்டு இளவாலித்து போய் பல தரம் பாதியில் எறிந்தும் இருக்கின்றேன். டிசம்பர் 15 இன் பின், நேற்றுத்தான் இந்த வருடத்தின் முதல் சிகரட்டினை புகைத்தேன். முதல் சிகரெட் புகைத்தது இன்னும் நினைவில் உள்ளது. க.பொ.த சாதாரண தரத்தின் இறுதி பரீட்சையை எழுதிவிட்டு, சுண்டிக்குளி மகளிர் கல்லூரிக்கு சரியாக முன்னால் நின்று, அருகில் இருந்த கடையில் சிகரட் ஒன்றை வாங்கி, 'கலர்ஸ்' காட்ட என் முதல் சிகரட்டினை புகைத்தேன். ஊரெல்லாம் சுற்றிவிட்டு, 3 மணியளவில் வீட்டை போக, எவனோ ஒரு பயல் இந்த விடயத்தை அம்மாவுக்கு அதற்கிடையில் போட்டுக் கொடுக்க, அம்மா வேப்பங் கம்புடன் பத்திரகாளியாகி நின்று கொண்டிருந்தார்..
  15. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் செய்த உருப்படியான வேலை இது ஒன்றுதான். இந்த போக்கிரிகளை எந்த விசாவிலும் அனுமதிக்க கூடாது.
  16. போட்டி ப‌திவு ப‌தியும் போது சில‌ கேள்விக‌ளுக்கான‌ அணிய‌ நான் கூட‌ தெரிவு செய்யாம‌ ம‌ற்ற‌ கேள்விக‌ளுக்கு ச‌ரியா செய்து இருக்கிறேன்...................90கேள்விக்கு அணிக‌ளை தெரிவு செய்யும் போது சில‌ அணிக‌ளை நான் தொட்டு சில‌ உற‌வுக‌ள் அவ‌ர்க‌ளும் ஒரு இரு அணிக‌ளை தெரிவு செய்யாம‌ விட்டு விடுகின‌ம் த‌லைவ‌ரே................. அதுவும் கைபேசியில் இருந்து தெரிவு செய்வ‌து மிக‌ சிர‌ம‌ம் க‌ண‌ணியில் இருந்து செய்வ‌து மிக‌ ஈசி நான் க‌ண‌ணி பாவிக்காம‌ விட்டு 9வ‌ருட‌ம் ஆக‌ போகுது..............................
  17. தூங்காத கண்ணென்று ஒன்று ...........! 😍
  18. LSG என்று பதிவிடுங்கள் . ........... கிருபன் ........! 😁
  19. பத்திரமாக இருக்கவும் . .......... ! 😁
  20. வைத்தியசெலவு, மருந்துச்செலவு, போக்குவரத்துக்கு செலவு தவிர்த்து. இது குறைந்த பட்சம்.
  21. யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யூத எழுத்தாளர் ஆகிய ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூறுங்கள் என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார், மந்தர்களே-mediocres- எல்லா இடங்களிலும் முதன்மை வகிப்பார்கள் என்று. அவர் எதைக்கருதி அவ்வாறு சொன்னார் என்பது தெளிவில்லை. ஆனால் இப்போதுள்ள சமூக வலைத்தள ஊடகச் சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது அது ஒரு தீர்க்கதரிசனமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. சமூக வலைத்தளங்களின் பயன்பாடு என்பது இரண்டு புறமும் கூரான கத்தி போன்றது. ஒருபுறம் சமூக வலைத்தளங்கள் சாதாரண மக்களைப் பொறுத்தவரையில்அதிகம் ஜனநாயகமானவை. பாரம்பரிய ஊடகங்களுக்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் எவயுமின்றி யாரும் விரும்பியதைக் கூறலாம். அதை விரைவாகப் பரப்பலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நலிவுற்ற பிரிவினர் தங்கள் கருத்துக்களை உடனடியாகவும் விரைவாகவும் பரவலாகவும் பரப்பக்கூடிய வாய்ப்புகள் முன்னெப்பொழுதையும் விட அதிகரித்துள்ளன. இது முக்கியமான நன்மை. அவ்வாறு சமூக வலைத்தளங்களை உச்சமாகப் பயன்படுத்திய ஒரு மருத்துவர் தமிழ் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதேசமயம் பாரம்பரிய ஊடகங்கள் போலல்லாது சமூக வலைத்தள ஊடகச் சூழல் என்பது துறை சார்ந்த நிபுணத்துவம், துறை சார் அறம் என்பவற்றை அதிகம் மதியாத ஒன்றாகவும் மாறி வருகிறது. எப்படியென்றால் அது பொதுப் புத்தியை அதிகம் பிரதிபலிப்பது.பொதுப் புத்தி எப்பொழுதும் விஞ்ஞானபூர்வமானதாக அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று இல்லை. அது பெரும்பாலும் இனம் சார்ந்து, மதம் சார்ந்து மொழி சார்ந்து, சாதி சார்ந்து, ஊர் சார்ந்து, பால் சார்ந்து… என்று பல்வேறு சார்பு நிலைகளுக்கு ஊடாகவும் வெளிப்படுவது. அது பெரும்பாலும் ஒரு குழு மனோநிலை. அதனால், சமூக வலைத்தள சூழல் எனப்படுவது, மற்றொரு சமூகத்துக்கு அல்லது சமூகத்தின் மற்றொரு பிரிவினருக்கு அல்லது மற்றொரு நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பரவலாக்கப்படுவதற்கா னவாய்ப்புகளை ஒப்பீட்டுளவில் அதிகமாகக் கொண்டிருக்கின்றது. அதனால்தான் ஐநாவின் வெறுப்புப் பேச்சுகளுக்கான சிறப்புத் தூதுவர்கள் சமூகவலைத்தளச் சூழலானது இன ரீதியான, மத ரீதியான, நிற ரீதியான, வெறுப்புப் பேச்சுக்களை பரப்புகின்றன என்று விமர்சிக்கின்றார்கள். குறிப்பாக பர்மாவில் ரோகியங்கா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில் முகநூல் ஒரு கருவியாகத் தொழில்பட்டது என்று ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகிறது. அதுபோலவே சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் கண்டி, திகன ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு,ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைகளின்போது, முகநூல் தடை செய்யப்பட்டது. இப்போதுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பொழுது, ருவிட்டர் தளத்தை அதிகம் பயன்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன. அதாவது சமூக வலைத்தளச் சூழல் என்பது ஒருபுறம் சமானிய மக்களின் பொதுப் புத்தியை பிரதிபலிக்கின்றது. இன்னொரு புறம் அவ்வாறு பொதுக் புத்தியை பிரதிபலிப்பது என்பதினாலே பொது புத்திக்குள் காணப்படும் இனம், மொழி,மதம், நிறம் சாதி சார்ந்த வெறுப்புகளை பரவலாக்கும் களமாகவும் மாறி வருகிறது. அதனால்தான் சமூக வலைத்தள சூழல் என்பது நிபுணர்களை வெளித்தள்ளுகின்றது என்று பொதுவாக அவதானிக்கப்பட்டுள்ளது. துறை சார் ஞானம் இல்லாதவர்கள் கருத்துக்கூறும் ஒரு பொதுத் தளத்தில் துறை சார் நிபுணர்கள் கருத்துக் கூறி அவமதிக்கப்பட விரும்ப மாட்டார்கள். எனவே அவர்கள் விலகி நிற்பார்கள்.இதனால் ஒரு குறிப்பிட்ட கருத்து விஞ்ஞானபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அணுகப்படும் சூழலை அங்கே முழுமையாக உத்தரவாதப்படுத்த முடிவதில்லை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக, 2009க்குப் பின்னரான ஈழத் தமிழ் அரசியல் சூழலிலும் அதைக் காண முடியும். வெறுப்பர்களே அதிகம் விளைந்து விட்டார்கள். எதையும் ஆழமாக வாசிப்பதில்லை. ஒரு கைபேசியும் இணைய இணைப்பும் இருந்தால் காணும். யாரும் எதையும் சொல்லலாம் என்ற ஒரு நிலை. இதில் ஜனநாயகம் உண்டு. அதேசமயம் எனது நண்பர் ஒருவர் கூறுவதுபோல, தனக்குத் தெரியாத ஒன்றைப்பற்றிக் கருத்துக் கூறும் துணிச்சலை அது வழங்கி விட்டது. இந்தத் துணிச்சல் மனித குலம் இதுவரை கண்டடைந்த அறிவியல் மகத்துவங்களுக்கு எதிரானது. எனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்துக் கூறும் துணிச்சல் என்பது அறிவியலின் வீழ்ச்சி. பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் குறிப்பாக யுடியூப்கள் பொதுப் புத்தியை கவரும் பொருட்டு காணொளிகளை வெளியிடுகின்றன. அதனால் பொது புத்தியின் பலவீனம் எதுவென்று கண்டு அதனைச் சுரண்டி காசு உழைக்கின்றன. ஒரு சமூகத்துக்கு நல்லதையும் உன்னதமானதையும் எடுத்துக்காட்டி அந்த சமூகத்தின் உளவியல் கூர்ப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டியதுதான் ஊடகப் பணியாகும். மாறாக அந்த சமூகத்தின் பலவீனம் எதுவோ அல்லது அந்த சமூகத்தை எங்கே இலகுவாகச் சுரண்டலாமோ அதை விற்பது என்பது சமூகக் கூர்புக்கு எதிரானது. மனித குலத்துக்கு எதிரானது. குறிப்பாக ஈழத் தமிழர்களைப் பொருத்தவரை 2009க்கு பின்னரான கூட்டு உளவியல் என்பது அதிகம் கொந்தளிப்பானது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காத; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத; தலைமைத்துவ வெற்றிடம்; புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதிக்கம்.. போன்ற பல காரணிகளும் கடந்த 15 ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கூட்டு உளவியலைத் தீர்மானிக்கின்றன. இக்கூட்டு உளவியலைத் தீர்க்கதரிசனமாகக் கையாளவல்ல தலைமைகள் கடந்த 15 ஆண்டுகளாக மேலுயரவில்லை. கூட்டுக் காயங்களிலும் கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்துக்கு, கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல அரசியலை, விழுமியங்களை முன்வைத்துத் தலைமை தாங்கவில்லை பொருத்தமான தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தில், சமூக வலைத்தளங்களால் திறந்து விட்டிருக்கும் கட்டுப்பாடற்ற,கட்டற்ற சூழலானது வெறுப்பவர்களுக்கும் மந்தர்களுக்கும் கயவர்களுக்கும் பொய்யர்களுக்கும் அதிகம் வாய்ப்பானதாக மாறி வருகிறது. பொதுவாக ஒரு சமூகத்தின் பொதுப் புத்தியானது சீரியஸானதாக அறிவுபூர்வமானதாக விஞ்ஞானபூர்வமானதாக இருப்பது குறைவு. சீரியஸானதுக்கும் ஜனரஞ்சகத்துக்கும் இடையிலான இடைவெளி என்பது எல்லாச் சமூகங்களிலும் காணப்படுவது. ஆனால் ஈழத் தமிழ் சமூகத்தில் அந்த இடைவெளி ஆழமானது.யூரியுப்பர்களின் காலத்தில் அந்த இடைவெளி மேலும் ஆழமாகிக் கொண்டே போகிறது. சீரியஸான, அறிவுபூர்வமான சமூக விலைத்தலங்களையும் காணொளித்தளங்களையும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்கள்தான்.சீரியஸ் இல்லாத,மந்தமான, உணர்ச்சிகரமான, விஞ்ஞான பூர்வமற்ற, பொழுதுபோக்கான,எல்லாவற்றையும் காசாக்க முற்படும் யூரியுப்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம்.சில சமயங்களில் அந்தத் தொகை மில்லியன் கணக்கானது. இவ்வாறு அறிவுபூர்வமானதுக்கும் மந்தமானதுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்லுமோர் சமூகப் பொருளாதார அரசியல் சூழலில், அண்மை வாரங்களாக யூடியூபர்களின் மோசடிகள் தொடர்பாகவும் குற்றச்செயல்கள் தொடர்பாகவும் அதிகம் செய்திகள் வெளி வருகின்றன. ஒருபுறம் நிதிப்பலம் மிக்க புலம்பெயர்ந்த சமூகம். அது தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு உதவுவதற்குக் காத்திருக்கின்றது. இன்னொரு புறம் தாயகத்தில் உதவிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள். இந்த இரண்டு தரப்பையும் அதாவது தேவையையும் வளங்களையும் இணைப்பவர்கள் யார் என்று பார்த்தால், ஒன்றில் தனி நபர்கள் அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்கள் அல்லது சில தொண்டு நிறுவனங்கள் போன்றவைதான். இதில் தனி நபர்களாக இருப்பவர்களில் ஒரு பகுதியினர் அரசியல்வாதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஒரு பிரிவினர் தான் கண்ணீரையும் வறுமையையும் காணொளியாக்கிக் காசாக்குகிறார்கள். இதில் ஒரு சிறு தொகையினர்,ஒருகை கொடுப்பது மறு கைக்குத் தெரியாமல் தொண்டு செய்கிறார்கள்.அதை அவர்கள் விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால் அவர்கள் மிகச் சிறிய தொகையினர். யாருக்கெல்லாம் பிரபல்யம் வேண்டுமோ, யாரெல்லாம் பிரபல்யத்தைக் காசாக்க விரும்புகின்றார்களோ, அவர்கள்தான் இப்பொழுது குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறார்கள். இது ஒரு உலகப் பொதுவான ஒரு போக்குத்தான்.ஆனால் ஈழத் தமிழ் அரசியற் சூழலில் இதன் விளைவுகள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாரதூரமானவை. 2009க்குப் பின்னரான ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் உளவியல் எனப்படுவது கொந்தளிப்பானது. தலைமைத்துவம் இல்லாதது. இந்த வெற்றிடத்துக்குள் யூடியூபர்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.நேரலையில் தோன்றி ஒரு மருத்துவர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிவிட்டார். எனவே இந்த விடயத்தில் 2009க்குப் பின்னரான தமிழ்க் கூட்டு உளவியலை வெற்றிகரமாகக் கையாளவில்லை, ஒரு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல, அரசியலை முன்னெடுக்க விரும்பும் தரப்புகள் ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சிக்குத் தலைமைதாங்கத் தயாராக இருக்கவேண்டும்.புத்திசாலிகளும் அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர்களும் துறை சார்ந்த ஞானம் உடையவர்களும் அரசியலில் மேலோங்கும் பொழுது, மந்தர்கள் பின்வாங்கி விடுவார்கள்.இல்லையென்றால் மந்தர்களே எல்லா இடங்களிலும் மேலெழுவார்கள். https://athavannews.com/2025/1425347
  22. கவனம் சாரே...எதுக்கும் கையிலை போனை வைத்திருங்க...அடிகடி யாழிலும் விளாசவேணுமில்லே
  23. பாராட்டுக்கள் ரமோஸ்
  24. ஒருவர் மன்னிப்பு கேட்டால், அவர்தான் குற்றவாளி என்பது சிலரின் சித்தாந்தம். அதை சொல்லிச்சொல்லியே தம்மை குற்றமற்றவர் என காண்பிப்பார்கள். மன்னிப்பு கேட்பது என்பது தவறு செய்து விட்டோம் என்பது பொருளல்ல பல இடங்களில். அதன் பொருள், தவறுகளை மறந்து இணக்கமாக வாழ்வோம் என்பதே பொருள். தமிழரை பொறுத்தமட்டில் பல பக்கத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள், இழப்புகளை சந்தித்தவர்கள், ஆதரவு கொடுக்க யாருமில்லாமல் தனித்து விடப்பட்டவர்கள். ஆகவே சுமுகமாக வாழுவதற்காக மன்னிப்பு கோருகின்றனர். அவர்கள் திட்டமிட்டு யாரையும் அழிக்கவில்லை, தம்மை தற்காத்துக்கொள்வதற்காகவே தாக்குதலை நடத்த வற்புறுத்தப்பட்டனர். ஆனால் தாம் செய்ததெல்லாம் சரியென நிரூபிப்பது தமிழர் கோரிய மன்னிப்பு அவர்களுக்கு சாதகமாகிறது. அவர்களுக்கு மன்னிக்கவும் தெரியாது, மன்னிப்பு கேட்கவும் தெரியாது. இவர்களிடம் அதை எதிர்பார்ப்பது நம்ம முட்டாள்த்தனம். நிஞாயமாக உரிமைகளை பகிர்ந்து வாழுங்கள் என்றால், நல்லிணக்கம் கெட்டுவிடும், நாட்டில் இன கலவரம் வெடிக்கும் என்கிறார்கள். இவர்களின் அறிவு எத்தகையது? மதம் என்பது சக மனிதனை மதித்து, அன்பு செய்து, பகிர்ந்து வாழ வலியுறுத்துகிறது. இங்கு, மதம் அடுத்தவனை கொன்று, அவர்களின் சொத்துக்களை அபகரித்து வாழ போதிக்கிறது. இவர்களுடன் நாம் விவாதிப்பதால் என்ன லாபம்? வெள்ளையை கறுப்பு என நிறுவும் கூட்டம். அவர்களை பொறுத்த வரையில், கறுப்பு என்றால் அதுதான் வெள்ளை. நீதி, நல்லிணக்கம் என்றால், அடுத்தவரை துன்புறுத்துவது.
  25. வரிகளை மாற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். இன்று எல்லோரும் வணங்கும் எந்தக் கடவுள் என்றாலும் வீரதீரங்கள் நிறைந்தவர்களாகவே இருந்ததாக சொல்கிறார்கள். இந்த ரீதியில் எம் கண்முன்னே தமிழினத்தின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய வீரன் உலக தமிழினத்தின் தலைவன் தேசியத் தலைவரை ஒரு கடவுளாகவே பார்க்கிறேன்.
  26. சரி இங்கே புகை பிடிக்கும் பழக்கத்தையும் அதை நிறுத்தியதையும் பகிர்ந்து கொள்கின்றோம். நான் இந்தப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்து பல முறை தோல்வி அடைந்தவன் இரண்டு தடவைகளுக்கும் கிட்டத்தட்ட ஒரு மாதம் எனது ஜாக்கெட் பாக்கெட்டில் சிகரெட்டை வைத்திருந்தேன் ஆனால் பிடிப்பதில்லை ஒவ்வொரு முறையும் பத்து நிமிடங்கள் தள்ளி வைத்தேன் பின்னர் அதை ஒரு மணித்தியாலம் தள்ளி வைத்தேன் அப்படியே மணித்தியாலங்கள் நாட்களாகி கிழமைகளாகி மாதம் ஆகியதும் அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன் ஆனாலும் அந்த ஒரு மாதம் வந்த ஆத்திரம் கோபம் மன உழைச்சல் இத்தியாதி என நானே என்னுடன் ஒரு பெரும் போரை நடத்தியிருந்தேன். வீட்டில் அந்த நேரம் எப்போது எரிந்து விழுந்து கொண்டேயிருந்தேன் .
  27. காமத்தை வென்றவர் உண்டோ! | இடைவிடாத நகைச்சுவை காணொளி | புலவர் சண்முக வடிவேல் அவர்களின் நகைச்சுவை உரை
  28. வருந்தத்தக்க நிலைமை. கிட்டடியில் தான் நோயல் நடேசன் எழுதியிருந்தார், கலைவாணி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து கிழக்கே போய்க் குடியேறி விட்டாள் என்று. அங்கேயாவது வாழ்ந்தால் சந்தோசம் தான்.
  29. நல்ல மனிதர் . ......... பூரண குணமாகி வரவேண்டும் ........!
  30. வ‌வுனிய‌வில் வ‌சிக்கும் ஜ‌யா ப‌ல‌ ஏக்க‌ரில் தோட்ட‌ம் செய்கிறார் வேலைக்கு ஆட்க‌ள் தேவையாம் , வேலைக்கு வார‌ ஆட்க‌ள் இர‌ண்டு நாள் தொட‌ர்ந்து வ‌ருவாங்க‌ள் பிற‌க்கு சொல்ல‌ம‌ கொள்ளாம‌ வேலைக்கு வ‌ர‌மாட்டின‌ம் , எப்ப‌டி இவையை ந‌ம்பி நான் தோட்ட‌த்தை கொண்டு ந‌ட‌த்த‌ முடியும் என்று அந்த‌ வ‌ய‌து போன‌ ஜ‌யா வேத‌னை ப‌ட்டார்...............அப்ப‌டி இருந்தும் த‌ன‌க்கு வேலைக்கு ஆட்க‌ள் இன்னும் தேவையாம்........................எங்க‌டை ஈழ‌ ம‌க்க‌ளுக்கு உழைச்சு முன்னுக்கு வ‌ர‌த் தெரியாது ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.........................மாத‌த்தில் 31 நாளில் 27 நாள் த‌ன்னும் வேலை செய்தால் 54ஆயிர‌ம் ரூபாய் உழைக்க‌லாம்................... ந‌ல்ல‌ காசு அதோட‌ ம‌னைவி மார் சில‌ரின் வீட்டு வேலைக்கு போனால் 4 , 5 ம‌ணித்தியால‌ம் செய்தால் 700ரூபாய் கொடுப்பின‌மாம்..............அப்ப‌டி எங்க‌ட‌ ஈழ‌ ம‌ண்ணில் ப‌ல‌ வ‌ச‌தி இருக்கு.................................
  31. யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களது நிலைமையை காணொளியாக வெளியிட்டு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக காட்டும் வலையொளியாளர் (YouTuber) தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeevan Jeyachandramoorthy) கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கின்ற விடயம் அடிக்கடி செய்திகள் வாயிலாக வெளியாகின்றன. நேற்று முன்தினம் (7) கூட ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அந்த காணொளியில் மக்களது வறுமையை காட்டி அதை வைத்து உழைப்பை பெறும் வகையில் யாழ்ப்பாண யூடியூப்பர் ஒருவரது அடாவடித்தனங்களை நாங்கள் கண்டு கொண்டோம். சமூக விரோத செயற்பாடு இது சம்பந்தமாக சமூக ஊடகங்களிலும் வலையத்தளங்களிலும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் தமது மக்களை பல்வேறு விதத்திலும் பிரச்சினைகளுக்கு உள்ளாக்குகின்றன. இந்த விடயம் தொடர்பாக நாங்கள் உடனடியாக மகளிர் விவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம். வெளிநாட்டில் வாழ்கின்றவர்களுக்கு இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை காண்பித்து அதன் மூலம் பணத்தை திரட்டி பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களின் சிறப்பு உரிமை பெண்கள், சிறுவர்கள் எமது நாட்டின் முதுகெலும்புகள் அவர்களை காக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அவர்களின் வறுமை என்ற கருவியை பயன்படுத்தி பல்வேறு தரப்பினரும் பணம் சுரண்டலில் ஈடுபட்டு வருகின்றனர். இது பெண்களின் சிறப்பு உரிமைகளை மீறுகின்ற செயற்பாடாக அமைகிறது. இவ்வாறானவர்கள் சமூகத்திலிருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டி இருக்கின்றது. எனவே இவ்வாறான செயற்பாடுகளை ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக அதனை எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த பிரச்சனைக்கு நாங்கள் பொலிஸார் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து தீர்வு காண்பதற்கு முயற்சிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/
  32. நமக்கு எக்கச்சக்கமாய் சோலிகள் இருக்கெண்டு தெரிஞ்சும்..... 😎
  33. ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை நாசுக்காக முன்னெடுக்கும் நோக்கம், அதுதான் போராடிப் பிரியோசனமில்லை, அரசியல் எல்லாம் இனிமேல் எடுபடாது, இலங்கையராக எல்லாரும் வாழுவோம் என்று சுலோகங்கள் ஓதப்படுகின்றன. இந்த இரு பகுதியினரும் ஒன்றிணையும் புள்ளிதான் புலிகளை வசைபாடல். முதலாமவருக்கு வசைபாடலுடன் எல்லாம் முற்றுப்பெற்றுவிடும். மற்றைய இருவருக்கும் புலி வசைபாடல் ஊடாக அவர்களை கரெக்டர் அஸாசினேஷன் செய்வதன் மூலம் தாங்கள் ஏலவே நடத்திவரும் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் வழிகளை மேலும் பலப்படுத்துவது. அந்த இருவரையும் பொறுத்தவரையில் இத்திரி வெறுமனே புலிகளை விமர்சிப்பதுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. மாறாக அதற்கும் அப்பால்ச் சென்று, அவர்களின் நிகழ்ச்சி நிரலான தமிழருக்கான தீர்வை மறந்துவிட்டு இலங்கையராக ஒன்றுபடுங்கள், பேரினவாதத்திற்குள் உள்வாங்கப்படுங்கள் என்று பரப்புரை செய்யவும் பயன்படுகிறது. முதலாமவருக்கு நடப்பது தெரிந்தும், புலிகளை வசைபாட ஒத்தூதிகள் இருவர் கிடைத்த களிப்பில் அவர் அந்த இருவரினதும் ஏனைய நோக்கங்களைக் கண்டும் காணாதது போல விட்டு விடுகிறார். அதுசரி, நீலன் கொல்லப்பட்டது 1999 இல் அல்லவா? முள்ளிவாய்க்காலின் பின்னரான மனமாற்றம் என்பது 2009 இற்குப் பின்னர்தானே? இடைப்பட்ட 10 வருடத்தில் நீலனின் கொலைபற்றி முதலாமவர் என்ன நிலைப்பாட்டிலிருந்திருப்பார் என்று யோசிக்கிறேன். எனக்கெதற்குத் தேவையில்லாத வேலை??
  34. அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை. ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவார்த்தப் பித்துக்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும்.. வேலை செய்யாது. என்ன அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு கொன்று குவிக்க துணை நின்று.. சுகபோகம் சந்திச்சவன்.. கூடிய விரைவில் போய் சேர்ந்து விடுகிறான்.. சிலது தப்பிப்பிழைச்சிருப்பதற்கு இறைவன் தான் பதில் சொல்லனும். என்ன மரணம் என்பது கர்ணனிற்கும் உண்டு.. கருணாக்களுக்கும் உண்டு. அதனால்.. கர்ணனும் கருணாவும் ஒன்றாகிட முடியாது. இரண்டு மரணங்களிக்கிடையேயும் வேறுபாடுண்டு. அடிப்படையில் இரண்டும் மரணங்கள் ஆகினும்.
  35. ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி! இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (16) காலை நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். காலை 7:30 மணியளவில் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டடதாகவும், அங்கு வைத்தியர்கள் ECG மற்றும் எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகளை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படலாம் என்று வைத்தியசாலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1425303
  36. முஸ்லீம்கள் அல்லாவை பயந்து கொள்ளுங்கள் என சொல்வார்கள். யாழ்கள சீமானியர்கள் இந்த வீடியோவை பார்த்த பின்… விஜயலட்சுமி சொல்வது எல்லாமும் பொய் ஆக இருக்கவேண்டும் என கடவுளை வேண்டி கொள்ளுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.