Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87990
    Posts
  2. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    34974
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    5
    Points
    15791
    Posts
  4. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    16477
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/20/25 in Posts

  1. அண்மையில் ஊரில் நடந்த திருமணம் ஒன்றிற்கு பரிசாக பணம் அனுப்பியிருந்தேன். பெண்ணின் தகப்பனார் பெயருக்கே பணத்தை அனுப்பி அவருடன் தொலைபேசியில் சொன்னேன். பணம் அனுப்பி இருக்கிறேன். மணமக்களுக்கு திருமண பரிசாக கொடுங்கள் என்றேன். பக்கத்தில் நின்ற எனது மனைவி மறக்காமல் கொடுங்கள் என்றார். அவருக்கு அது கேட்க கூடாது என்று உடனேயே தொலைபேசியில் இருந்து விடை பெற்றுக் கொண்டேன். மனைவியிடம் அவ்வாறு சொல்லக் கூடாது சொல்ல காரணம் என்ன என்று கேட்டபோது அவர் பிள்ளைகளுக்கு பணத்தை கொடுப்பதில்லையாம். பிள்ளைகளின் சம்பளத்தில் பெரும் பகுதியைக் கூட அவரே வாங்கிக் கொள்கிறாராம் என்றார். எனக்கு தெரிந்து அவர் கமத்தை தோட்டத்தை நம்பி மட்டுமே வாழ்பவர். எந்தவகையான கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்.. மிகுந்த நாட்டுப்பற்றாளர். எனவே பெரிதாக வருமானம் அற்றவர். எனக்கு தெரிந்து அவர் தனக்கு என்று எதையுமே இதுவரை சேர்த்து வைக்கவில்லை. நான் உட்பட அநேகமான அப்பாக்களின் நிலை இது தான். எமக்கென்று எதுவும் நாம் செய்வதில்லை. சேர்ப்பதில்லை. எமக்கென்று எந்த தனிப்பட்ட சுய தேவைகளோ ஆசைகளோ விருப்பு வெறுப்புகளோ ஏன் தனிப்பட்ட சேமிப்புகளோ கூட இருப்பதில்லை இருக்கவும் முடியாது. ஆனால் மாத முடிவில் வரக் கூடிய கட்டணங்கள் பணக்கொடுப்பனவுகள் செலவுகள் என்று அத்தனையையும் சமாளித்தபடி அத்தனைக்கும் முகம் கொடுத்தபடி அவற்றை எவருக்கும் காட்டிக் கொள்ளாமல் மௌனமாக அழும் அப்பாக்கள் இவ்வுலகில் அதிகம். அதற்கு நன்மை சொல்லாவிட்டாலும் இதனைப் போல் வார்த்தைகளை கேட்கும் போது நெஞ்சு வெடிக்கக்கூடும். அப்பாக்களுக்கு சமர்ப்பணம். முற்றும்.
  2. ஒன்று எனக்குச் சொந்தமா ஒரு வீடு இருந்தது. என் கணவருக்கு தோட்டக்காணியும் உண்டு. 2012 வரை அந்த நாட்டுக்குப் போய் வாழமுடியும் என்ற எண்ணம் பலருக்குமே இருக்கவில்லைத்தானே. அதனால அந்த வீட்டை விற்பம் விற்பம் என்று என் கணவர் ஒரே கரைச்சல். அம்மாவும் அப்பாவும் கஸ்ரப்பட்டுக் கட்டின வீட்டை விற்க எனக்கு விருப்பமும் இல்லை. ஆனால் கணவர் கரைச்சல் கொடுத்ததுக்கும் ஒரு காரணம் இருந்தது. அம்மாவின் தங்கை ஒருத்தி. அவவுக்கு அக்காவின் பிள்ளைகள் இனி இங்கு வந்து இருக்கப் போவதில்லை. தன் பிள்ளைகளுக்குத் தான் அக்காவின் வீடுகளும் வந்து சேரும் என்ற பேராசை. புலிகள் முன்னர் சில வீடுகளில் வசித்தபோது தொலைபேசி வசதிகள் இல்லாத காலத்தில் “புலிகள் உன் வீட்டைத் தரும்படி கேட்டார்கள். நான் என் நகையை விற்று ஐம்பதாயிரம் கொடுத்து வீட்டை மீட்டுள்ளேன்” என்று என சித்தியிடம் இருந்து ஒரு கடிதம் வர, உடனே நான் என்னைக் கேட்காது நீங்கள் ஏன் பணம் கொடுத்தீர்கள். வீட்டைப் புலிகளிடம் கொடுத்துவிட்டு உங்கள் பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு கடிதத்தை எழுதிவிட்டு அப்பா அம்மாவுடன் கதைக்க, அப்பா “அவசரப்படாதை நான் விசாரிக்கிறேன்” என்று கூறி விசாரித்தால் அப்படி ஒரு விடயம் நடக்கவே இல்லை என்று தெரியவர, அம்மாவுக்கு அப்பதான் தான் தன் தங்கையின் நாடகம் புரிகிறது. மற்றப்பக்கம் கணவரின் மூத்த சகோதரர் குடும்பம் எங்கள் வீட்டில் இடப்பெயர்வின்போது சில ஆண்டுகள் குடும்பத்துடன் வந்து வசித்தனர். அம்மாவின் தங்கைக்கோ அட இந்த வீட்டை நாம் எடுக்கலாம் என்று பார்த்தால் இவர்கள் ஆட்டையைப் போட்டுவிடுவார்கள் போல என எண்ணி என் அம்மாவுக்கு போன் செய்து உங்கள் மருமகன் வீட்டைத் தமயனுக்குக் கொடுக்கப் போறாராம் என்று உசுப்பேற்ற, அம்மா எனக்கு போன் செய்து நாங்கள் கஷ்டப்பட்டுக் கட்டிய வீட்டை உன் மச்சான் குடும்பத்துக்கா கொடுக்கப் போகிறாய் என்று ஒரே கரைச்சல். அவர்களுக்குச் சொந்தவீடு இருக்குத்தானே. இப்ப பிரச்சனை முடிஞ்சுதுதானே. உன் மச்சானை வீட்டைவிட்டு எழுப்பு என்று அம்மா தொணதொணக்க எனக்கு இரு பக்கத்தாலும் தலைவலி வர நானும் பேசாமல் வீட்டை விற்றுவிட முடிவுசெய்து புரோக்கர்களிடம் கூறி ஆட்களை ஒழுங்கு செய்யச் சொன்னேன். அந்த நேரம் வீட்டின் பெறுமதி 90 இலட்சம் என்று புரோக்கர் கூற எனக்கோ வீட்டை வைத்திருப்போம் என்ற எண்ணம் தலை தூக்கத்தொடங்க, மீண்டும் கணவரிடம் வீட்டை வைத்திருப்போம் என்கிறேன். கணவரோ நாங்கள் அங்கை போய் இருக்கப் போவதில்லை. விசர்க் கதை கதைக்காமல் வில் என்கிறார். போகும் நேரம் எங்கே நிற்பது என்கிறேன். என் தங்கை வீடு இருக்குத்தானே. நான் தானே அவளுக்கு வீடு கட்டிக் குடுத்தனான். ஐந்து அறைகள் உள்ள வீட்டில ஒருமாதம் தங்க ஒரு அறை தரமாட்டாளா என்கிறார். ஏன் உங்கடை காணியை மட்டும் விக்காமல் என் வீட்டை விக்கச் சொல்கிறீர்கள் என்றதற்கு வெறும் காணி கிடந்தால் ஒரு காலத்தில போய் இருக்கப்போறம் எண்டால் பிறகு நிலமைக்கு ஏற்றமாதிரி சின்ன வீடு ஒன்றைக் காட்டிக் கொள்ளலாம் என்று ஆசை காட்ட நானும் சரி என்று சொல்கிறேன். மனிசன் ஒன்றை நினைத்தால் முடிக்கும் மட்டும் விடாப்பிடியாய் நிப்பார். அதனால ஒரு யோசனை வர எல்லாச் சகோதரர்களுடனும் வீட்டை விற்பது பற்றிக் கூறி யாராவது வாங்கப்போகிறீர்களா என்று கேட்க, ஒரு வீட்டையே பாதுகாக்க ஏலாமல்க் கிடக்கு. இதுக்குள்ள உதை வாங்கி என்ன என்கின்றனர். ஒரு தங்கை மட்டும் கணவருடன் கதைத்துவிட்டுச் சொல்வதாகக் கூற மனம் நிம்மதி அடைகிறது. தங்கை ஒரு வாரத்தின் பின்னர் தம்மிடம் இவ்வளவு காசு இப்ப இல்லை. நாற்பத்தைந்து இலட்சம் என்றால் நான் உடனே வாங்க முடியும் என்கிறாள். கணவருக்கு புரோக்கர் சொன்ன விலையைச் சொல்லாமல் ஐம்பது இலட்சம்தான் வீட்டின் பெறுமதி என்று கூறுகிறேன். அப்போது நாம் கடை நடத்திக்கொண்டு இருந்தபடியாலும் கணவருக்கு தொலைபேசியில் கதைக்க நேரம் இல்லை என்பதனாலும் கணவர் தன் தங்கையிடமோ தங்கையிடமோ தமையனிடமோ காணிவிலை குறித்து விசாரிக்க நேரம் இருக்கவே இல்லை. இவ்வளவு குறைவாக இருக்கு. வேறு இரண்டு மூன்று பேரிடம் சொல்லி விக்கப்பார் என்கிறார். இது நாங்கள் வளர்ந்த வீடு. வேறை ஆருக்கு விற்றாலும் மீண்டும் போக முடியாது. தங்கைக்குக் கொடுத்தால் நாம் போகும் நேரம் போய் நிக்கலாம் என்று கணவரின் மண்டையைக் கழுவிக் காதும் காதும் வைத்ததுபோல் கணவரின் சகோதரர்கள் காதுக்கு விடயம் போகாமல் வீட்டைத் தங்கைக்குக் எழுதியாச்சு. அதன் பின்னர் கணவர் மட்டும் 2015 இல் நாட்டுக்குச் சென்றபோது நாட்டிலும் மனிதர்களிடமும் பல மாற்றங்கள். கணவருக்கே தங்கை வீட்டில் தங்கி இருந்தது மகிழ்வைத் தரவில்லை. நான் விற்ற தங்கையின் வீட்டில் அம்மாவின் திருமணமாகாத தங்கை – தலைமை ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் - தன் வீட்டைத் தங்கையின் ஒரு மகளுக்குக் கொடுத்துவிட்டு எம் வீட்டில் இருந்தார். அவரைத்தான் அந்த வீட்டுக்குப் பொறுப்பாகத் தங்கை தங்கும்படி கூறியிருந்தாள். அவர் தனியாக இருப்பதனால் உதவிக்காக இராமநாதன் அக்கடமியில் கல்வி கற்கும் வெளி மாநிலப் பிள்ளைகள் சிலரை குறைந்த வாடகையில் வீட்டில் வைத்திருந்தார். எனவே கணவர் பெண்கள் மட்டும் இருக்கும் வீட்டில் நான் இல்லாது அங்கு சென்று தங்க மானமின்றிப்போக கணவருக்கு அந்த விடுமுறை மகிழ்வாக இருக்கவில்லை. நாடு திரும்பிய கணவர் எமக்கு என்று ஒரு வீடு இருக்கவேணும். ஆற்றையன் வீடு ஆற்றையன் வீடுதான் என்று புலம்ப, கூட இருந்த மகளும் “எங்கள் வீட்டை விக்காமல் இருந்திருந்தால் நாங்கள் இணுவிலுக்குப் போற நேரம் நிம்மதியா நிண்டிருக்கலாம்” என்று கூற மனிசன் ஒண்டுமே கூறவில்லை. சரி பிரச்சனை இல்லை. அப்பாவின் காணி இருக்குத்தானே. அதில ஒரு வீட்டைக் கட்டுவம் என்று ஆறுதலுக்காய்க் கூறினாலும் நாட்டில போய் வாழக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும்பட நாட்டில் போய் இருக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.
  3. ஏனப்பா வேற ஆரும் கிடைக்கேல்லையே? நான் மற்றப்பக்கம் பார்க்க......நீங்கள் இந்தப்பக்கம் பார்க்க🤣
  4. பார்த்தீனியம் ---------------------- கள்ளியும் முள்ளும் இருந்த வறண்ட நிலத்தில் பச்சையாக ஒன்று புதிதாக வந்தது பார்க்க அழகாகவும் படபடவென்று வளருதே என்றும் இன்னும் வளர்த்தனர் அதில் இருக்கும் முட்கள் அவை என்ன முட்கள் அவை வளர வளர போய்விடும் என்றனர் அதை வளர்த்தவர்கள் கெட்ட வாடை வருகுதே என்றால் ஆனால் பசுமையாக இருக்குதே இது நிலத்தை காக்கும் ஆடு மாட்டைக் காக்கும் இப்படி ஒன்று முன்னர் இருந்ததேயில்லை என்றனர் நாங்கள் மூக்குகளை பொத்தி விட்டால் அதன் வாடை அண்டாது என்றும் சொன்னவர்கள் வாய்களை அடைத்தனர் கள்ளியும் முள்ளும் காணாமல் போனது பச்சை செடியின் சாதனை ஆனது பரந்து வளர்ந்த பச்சை செடி விஷத்தை கொட்டிக் கொட்டி வறண்ட நிலத்தை இன்னும் கெடுத்து அருகில் வருபவற்றை முள்ளாலும் கிழித்து கெட்ட வாடையை பரப்பி சீரழித்துக் கொண்டே இருக்கின்றது இதுவரை மூக்குகளை மூடிக் கொண்டு இருந்தவர்கள் இனி கண்களையும் மூட வேண்டியது தான் விஷத்தை முளையிலேயே கிள்ளாமல் எத்தனை தடவைகள் தான் தவற விடுவது.
  5. பரியோவான் கல்லூரி பழைய மாணவனும், என் நண்பனும், Yarl IT hub இன் முதுகெலும்பாகவும் இருக்கும் ரமோஷனின் வாழ்க்கை பயணம் பற்றிய காணொளி / பேட்டி. தான் மட்டும் முன்னேறியதுடன் வடக்கில் உள்ள இளையவர்களையும் முன்னேற்ற முயற்சிகளை எடுக்கும் ஒருவர் இவர். இக் காணொளியை தயாரித்து வெளியிட்ட Saho Creation இற்கு நன்றி.
  6. புரித‌ல் இல்லாத‌ எம் ஈழ‌த்து உற‌வுக‌ள் இந்த‌ ர‌வுடிய‌ போய் க‌ட‌வுள் என்று சொல்லுகின‌ம் பையன் சொல்வது தான் சரி . கள்வன் என்று தெரிந்த பின்தான் சொல்லமுடியும். அது வரை விளையாடுவார். இவற்ற வாய் ...சரியில்லை பகிடி என்றபெயரில் ... டபுள் மீனிங். ஒருவன் படிப்படியாய் உயரலாம் அசுர வளர்ச்சி என்றால் ...திடீர் பணக்காரனானால் ...சந்தேகம் வரத்தான் செய்யும்.தானும் வளர்ந்து தன் உறவுகளையும் அக்கா தங்கை மாம ன் மச்சான் ....வளர்த்து விட்டிருக்கிறார்.
  7. என்ன தம்பீ உங்களை விளையாடக் கூப்பிட்ட மாதிரி கதை போகுதே? இதை எழுதிய நேரத்துக்கு படிவத்தை நிரப்பி அனுப்பியிருக்கலாம். உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கள்மிறங்க போன மாதிரி இருக்கே? எந்த தொகுதியில் இறங்குகிறீர்கள்? இப்படி சொல்லி சொல்லியே ரசோதரனின் கையை உடைத்து புட்டீங்களே. சாப்பாடு கூட தீத்தித் தான் விடுறதாம் என்றா பாருங்கோவன்.
  8. வசி வருவார். அவர் வந்து மணிக்கடைச் சுத்த ரசோதரன் தடுத்து ஆட, கோசான் துள்ளிப் பிடிக்க, ஈழப்பிரியன் கமட்டுக்க சிரிக்க, கந்தப்பு அவரோட உரச, எல்லாம் இனிதே நடக்கும். நாம குப்பையைக் கொட்டுவம். விடுமுறையில்தான் நல்லா நேரம். ஒரு தட்டுத் தட்டி விடுங்க. ஒன்றுமே தெரியாது என்று சாம்பியன் கிண்ணத்தில போட்டுத் தாக்கினீங்களே. வாங்க சீக்கிரமா.
  9. ஓ அப்பிடியா. தொடர்ந்து களத்தில இருக்கிறார். அதுதான் நினைத்தேன் கடும் புத்துணர்ச்சியோடு வந்துவிட்டார் என்று. அப்ப இன்னும் "புத்துணர்ச்சி" ஏற்றிக்கொண்டிருக்கிறார் போல. அதுவும் ஆப்பிரிக்காவில கிடைக்காதது இல்லை.
  10. கேட்டுக்கொண்டவர்களுக்கு நன்றி. நான் தற்போது விடுமுறையில் இலங்கையில் உள்ளேன், என்னால் இம்முறை பங்குபற்ற முடியவில்லை.அடுத்த முறை பார்ப்போம்
  11. அனேகமாக அவர்கள் வாழும் நாடுகளில் குளிர் காலமாக இருக்கும் போது இப்படியான நினைவு அதிகமாக வருவதுண்டு…!
  12. புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மூன்றாவது தலைமுறையினை எட்டிவிட்ட நிலையில், இளைய ஈழத்தலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றது. அந்தவகையில் பிரான்சின் மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி கவனத்தை பெற்றுள்ள சுஜீவன் முருகானந்தம் எனும் உயர்நிலை மாணவர் உலகத் தமிழர்களின் தேர்வு வாக்குக்கு அழைப்பு விடுத்துள்ளார். மன இறுக்க உளப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள 4-12 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களின் அக-மன நிலையினை உணர்ந்தறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கை வளையல் கருவியொன்றினை உருவாக்கியுள்ளார். இக்கருவியூடாக அச்சிறார்களுக்கு ஏற்படுகின்ற மன இறுக்க உளப் பாதிப்புக்களை உடனடியாகவே கைபேசி வழியாக எச்சரிக்கும் திறன் கொண்டதோடு ஏற்படுகின்ற பாதிப்புக்களை முறையாக ஆவணப்படுத்தும் திறன்கொண்டதாகவும் இக்கருவி உருவாக்கம் பெற்றுள்ளது. நாடளாவிய ரீதியில் இத்துறைசார்ந்து 81 பேர் இதனை உருவாக்கியிருந்த நிலையில், இவர்களில் 6 பேர் தேசிய அளவிலான இறுதித்தேர்வுக்கு சென்றுள்ளனர். ஒவ்வொருவரது உருவாக்க கருவியின் பயன்பாடு, அதன் அவசியம் குறித்தான ஆய்வுகளின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக இறுதிச்சுற்றில் கருவி தேர்வு செய்யப்படவுள்ளது. இதில் மூன்றாம் நிலையாக பொதுமக்களும் தங்களுக்கு தேவையான கருவியினை தேர்வு செய்ய முடியும். அந்தவகையில் இவர்களில் ஒருவராக சுஜீவன் முருகானந்தம் அவர்கள் “cœur léger ” எனும் பெயரில் தனது கருவியை உருவாக்கியுள்ளார். எதிர்வரும் மார்ச் 14 ம் திகதி வெள்ளிக்கிழமை ஐரோப்பிய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னராக குறித்த https://gpseo.fr/prix-entrepreneur/coeur-leger-le-bracelet-qui-aide-les-enfants-gerer-leurs-emotions இந்த இணையத்தளத்துக்கு தேர்வுக்கான வாக்களிப்பினை மேற்கொள்ள வேண்டும். மின்னஞ்சல் பதிவுடன் சுஜீவன் முருகானந்தம், உருவாக்கியுள்ள “cœur léger ” எனும் கருவியினை தேர்வு செய்யும்பட்சத்தில் ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். 1995 யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு பின்னராக கிளிநொச்சியில் தற்காலிகமாக வாழ்ந்து அங்கிருந்து 2000 ஆம் ஆண்டுகளில் 7 வயதில் பிரான்சில் கால்பதித்த இந்த மாணவரே சுஜீவன் முருகானந்தம் ஆவார். https://thinakkural.lk/article/315975
  13. பம்மாத்து (Pretensions) - சுப.சோமசுந்தரம் உலகில் பம்மாத்து அல்லது பாசாங்கிற்கு எக்காலத்தும் பஞ்சம் இருந்ததில்லை. இவற்றில் நன்மை விளையும் பம்மாத்தும் உண்டு - பொய்மையும் வாய்மையிடத்த என்பது போல. யானறிந்து தமிழ்நாட்டிற்கு நன்மை விளைவித்த ஒரு தலைசிறந்த பம்மாத்து, நான் பெரிதும் போற்றும் அறிஞர் அண்ணா அவர்கள் திருமூலரை எடுத்தாண்டு "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பறைசாற்றியது. சமூகத்திற்காகப் போராடுவதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட திராவிடர் கழகத்தில் இயங்கிய அண்ணாவும் அவர்தம் தம்பிமார் சிலரும், மக்களுக்கான திட்டங்களை இயற்றுவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் மட்டுமே கைகூடும் என்ற உயரிய நோக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்துக் களம் கண்டனர். மக்களிடம் தேர்தல் வாக்குக்காக கையேந்தும்போது சமரசம் எனும் தீமைக்குள் வந்துதானே ஆக வேண்டும் ? கையேந்தாத பெரியார், "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்று முழங்கும் போது, கையேந்திய அண்ணா, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பம்மிக் கொண்டார். மக்களுக்காக அதே மக்களிடம் பம்மிக் கொண்டார். அவ்வாறு பம்முகிற ஒவ்வொரு தருணத்திலும், "ஆனால் எனக்குத் தெரியும் அந்த ஒரு தேவனும் கிடையாது" என்று அண்ணா தமக்குள் முணுமுணுத்திருப்பார் என்பதை அண்ணாவை அறிந்தவர் அறிவர். அந்தப் பம்மாத்தில் மக்களுக்கு நன்மைகள் விளைந்தன என்பதை அறிவார்ந்தோர் அறிவர். பெரியார் மற்றும் பெரும்பாலான திராவிட கழகத்தினரைத் தவிர்த்து ஏனைய திராவிட இயக்கங்களிலும், இடதுசாரி இயக்கங்களிலும் நமக்குத் தெரிந்த ஒரு பிம்மாத்து உண்டு; அதாவது, நமக்குப் பம்மாத்தாகத் தோன்றுகிற ஒன்று உண்டு. அது "நாங்கள் பார்ப்பனியத்தை எதிர்க்கிறோமே தவிர பார்ப்பனர்களை அல்ல" என்பதுவேயாம். பார்ப்பனியத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை எதிர்க்கும் பார்ப்பனர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கலாம். விதிவிலக்குகள் விதி யாது என்பதைச் சொல்பவைதாமே ! அவ்விதிவிலக்குகள் பார்ப்பனியத்தை உதறியவர்கள்; எனவே அவர்கள் பார்ப்பனர் அல்லர் என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே ?முடிவு செய்துவிட்டு நியாயங்களைத் தேடிக் கற்பிதம் செய்ய அறிவு ஜீவிகளுக்குச் சொல்லியா தர வேண்டும் ? பெரியார் வேறு எந்த சாதிக்காரர்களையும் விமர்சிக்கவில்லையே ! மேற்கூறியது போலவே திராவிட இயக்கத்தினர் மற்றும் இடதுசாரிகள், "நாங்கள் இந்திய எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பையே எதிர்க்கிறோம்" என்பதுவும். நீங்கள் வேறு எந்த மொழியையும் எதிர்க்கவில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே ! ஆனால் ராஜஸ்தானி, போஜ்புரி, மைதிலி, அவந்தி என்று எத்தனையோ மொழிகளைத் தின்று செரித்து விட்டு, அடுத்து மராத்தி, ஒரியா, பெங்காலி என்று காவு கொள்ளத் துடிக்கும் இந்தியை எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும் ? நமது பம்மாத்து ஜோடிகளில் அடுத்து வருபவை காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளும். தமிழ்நாட்டில் (தமிழகத்தில் என்று நம்மைப் பேச விடாமல், எழுத விடாமல் செய்த ஒரு கிராதகனை என்னவென்று சொல்வது !) இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்த அறுபதுகளில் ஒன்றிய அரசான காங்கிரஸ் பணிந்தது. "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் திகழும்" என்று அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரவாதம் அளித்ததன் பேரிலேயே போராட்டத் தீ அணைந்தது. இடதுசாரிகள் தங்களது அகில இந்திய மாநாடுகளில் மொழி பற்றிய விவாதங்களில், 'தமிழ்நாட்டு மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழி, மற்றபடி இந்தியே இணைப்பு மொழி' என்ற நிலைப்பாடு கொள்வது வழக்கம். "மக்கள் விரும்பும் வரை" என்பதன் பொருள் "நாங்கள் விரும்பவில்லை; என்றாவது ஒரு நாள் நீங்கள் ஏற்பீர்கள். அதுவரை நாங்கள் அடக்கி வாசிப்போம்" என்பதே !. இது ஒரு சூளுரை அல்லது கெக்கலிப்பு. தேசியம் எனும் நீரோடையில் கரைந்து போன கட்சிகளுக்கு இந்தப் பிரச்சினை எப்போதும் உண்டு. அந்நீரோடையில் மூழ்காமல் நீந்தக் கற்றுக் கொண்ட எங்களுக்கு என்ன பிரச்சினை ? காங்கிரஸ் தேசியத்தில் கரைந்தது என்றால், இடதுசாரிகள் ஒரு படி மேலே போய் உலகவியத்தில் கரைந்தவர்கள். நேற்றைய சோவியத் யூனியனில் பெரும்பான்மையின ரஷ்ய மொழியின் தாக்குதலினால் பல சிறுபான்மையின மொழிகள் தொலைந்து போனதை லாவகமாகக் கடந்து வந்தவர்கள் ஆயிற்றே ! அது நமக்குத் தான் ரணம்; வர்க்கப் போராட்டத்தில் அவர்களுக்கு அதெல்லாம் சாதா'ரணம்' தோழர் !தமிழ்நாட்டில் அன்றைக்குப் போராடிய மக்களிடம் காங்கிரசின் சமரசம் என்பது "உங்களுக்கு இனி இந்தி கிடையாது" என்பதாகத்தானே இருக்க முடியும் ? "நீ செத்த பின்பு பார்த்துக் கொள்கிறேன்" என்பது சமரசமா ? மும்மொழித் திட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடு விலக்களிக்கப்பட வேண்டும் என்பதுதானே இடதுசாரிகளின் மண்ணுக்கேற்ற மார்க்சியமாய் அமையும் ? அப்படி விலக்கு அளிக்கப்பட்டாலும் மதவாத , பாசிச பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அடாவடித்தனமாய் ஜம்மு - காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியதைப் போல பின்னர் வரும் அரசுகள் நடந்து கொள்ளா என்பதற்கு உத்திரவாதம் இல்லைதான். ஆனால் சொல்லும்போதே 'தற்காலிகமாக' என்று பொருள்படச் சொல்வது ஒரு பம்மாத்து வேலை. இப்போது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எதிராகத்தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்று பொருள். இப்போது ஒன்றியத்தில் உள்ள பாசிச பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழித் திட்டத்தை முன்வைத்து விட்டு, "மும்மொழித் திட்டம் என்றுதானே சொன்னோம் ? இந்தி படி என்று எங்கே சொன்னோம் ?" என்று சொல்வதுதான் உலக மகா பம்மாத்து. ஒரு திரைப்படத்தில் வருவது போல, "நீ எப்படியெல்லாம் டைப் டைப்பா முழியை மாத்துவே !" என்று எங்களுக்குத் தெரியாதா ? நான் கேரளாவில் வேலை கிடைத்துச் சென்றால், தேவை அடிப்படையில் அப்போது மலையாளம் தெரிந்து கொள்வேன். அதுவரை நான் என் மொழியையும், வெளியுலக இணைப்பு மற்றும் கணினி பயன்பாட்டிற்காக நமது அடிமை வரலாறு நமக்களித்த வரமான ஆங்கிலத்தையும் படிப்பேன். நீ உன் மொழியையும் ஆங்கிலத்தையும் படி. அப்போது மொழியில் கூட சமநீதி, சமூக நீதி எல்லாம் உருவாகுமே ! எனவே உலகீரே ! மக்கள் நலனுக்காக பம்மாத்து அரசியல் செய்ய வேண்டுமென்றால், அறிஞர் அண்ணா போன்றோரிடம் படித்துவிட்டு வாருங்கள். அப்புறம் பேசுவோம். பின் குறிப்பு : "ஒன்றே குலம் ஒருவனே தேவன்", "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பவற்றிற்கு மாற்றுச் சிந்தனையை ச.தமிழ்ச்செல்வன், தொ.பரமசிவன் ஆகியோரிடம் வாசித்த நினைவு. பழம் பாடல்களின் அவ்வரிகள் இன்று தமிழனின் பெருமையாகக் கொண்டாடப்படுவதை அவர்கள் மறுதலிக்கவில்லை. எனினும் அவர்கள் மாற்றுச் சிந்தனையைப் பதிவிடாமலும் விடவில்லை. அந்த அடிப்படையில் அக்காலச் சமூக, அரசியல் சூழல் கருதி மக்கள் நலனுக்காக திருமூலர், கணியன் பூங்குன்றனார் ஆகியோரின் பம்மாத்தாக அவ்வரிகளைப் பார்க்கலாமோ எனத் தோன்றுகிறது. இப்பார்வை நம் கற்பனையாகவே இருக்கலாம். பல நேரங்களில் கற்பனையும் ரசனைக்குரியதுதானே ! பேரரசுகள் மருத நிலங்களைச் சுற்றியே தோன்றியிருக்கும். நிலவுடமைச் சமூகங்களும் அங்கேதான் உருவாகி அமைந்திருக்க முடியும். அவர்களுக்கான உழைக்கும் வர்க்கத்தினர் குறிஞ்சி, முல்லை நிலங்களில் இருந்தே வந்திருப்பர் அல்லது கொண்டு வரப்பட்டிருப்பர். தன் நிலத்தில் தன் சாமியை விட்டு வந்திருப்பவன் கொண்ட ஏக்கம் தீர, "இங்குள்ள சாமியும் உன் சாமிதானய்யா" என்று அவனை ஆற்றுப்படுத்துவதே "ஒன்றே குலம் ஒருவனே தேவ"னாய் முகிழ்த்திருக்கலாம். அன்றைய தேவைக்கேற்ப, பன்முகத்தன்மையை உடைத்து ஓர்மையை உருவாக்கும் பம்மாத்தாக (அன்றைய பாசிசம் எனக் கொள்ளலாமா ?") இதனைப் பார்க்கலாமோ ! மேலும் அவனது நிலத்தில் சாமியின் அருகிலிருந்து பிடி மண் எடுத்து வந்து அவன் புலம்பெயர்ந்த இடத்தில் அதே சாமியை உருவாக்கும் வழக்கம் அப்போது உருவாகியிருக்கும் அல்லது உருவாக்கப்பட்டிருக்கும். அதேபோல் வந்த இடத்துடன் அவன் மனம் ஒன்றியிருக்கச் செய்ய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" !
  14. அவளைத் தொடுவானேன்...? சிறு வயதில் இருந்தே இசை நாடகம் பாடல்களில் ஈடுபாடு அதிகம் எனக்கு. சாதாரண தரப் பரீட்சையில் சங்கீதத்தில் செய்முறை அதாவது பாடி 60 க்கு 58 புள்ளி எடுத்து அதி சித்தி (D) எடுத்திருந்தேன். அத்துடன் நகைச்சுவை என்னோடு கூடப் பிறந்தது. இதனால் என்னை சுற்றி எப்பொழுதும் ரசிகர்கள் மற்றும் கலைஞர்கள் கூட்டமும் நான் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாகவும் இருக்கும். அந்த நேரத்தில் தான் தென் பகுதியில் படித்து கொண்டு இருந்தவள் எங்கள் ஊருக்கு வந்தாள். அவள் நடக்கும் போது காலடிகளில் இரத்தம் பொக்களிப்பது தெரியும் அந்த அளவுக்கு அவள் வெள்ளையாக இருந்தாள் அத்துடன் தென் பகுதியில் படித்ததால் அவள் தமிழ் இன்னொரு வகை தேனாக இனிக்கும். கேட்க கேட்க கேட்க தோன்றும். அவள் என்னிடம் பாடச்சொல்லி கேட்பாள். நான் அவளை பேசு என்பேன். இப்படி தான் அறிமுகமானோம். அவள் என் கையை எப்பொழுதும் பிடித்துக் கொள்வாள். இதற்கு மேல் தாங்காது நான் அவளை தொட்டேன்..... காலம் என்னை தூக்கி கொழும்பில் போட்டது. தொடர்பு அறுந்தது. தொடரும்.....
  15. வழக்கு போட்டது சிங்கம்தானே. ஒண்டில் நாம் சமைத்து கொடுக்கணும் , முடியாட்டி அவங்களையாவது சமைச்சு சாப்பிட விடணும்.
  16. யூரியுப்பர்கள் யூரியூப்பர்களாகவே இருக்கட்டும்.😎 இதற்குள் ஈழமக்களுக்கான உதவிகளுக்கும்,அவர்களுக்கான மறுமலர்ச்சி உதவிகளாகட்டும் யூரியூப்பர்களை சம்பந்தப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.🙂 அந்த யூரியூப்பர்கள் வழமை போல் சுற்றுலா இடங்களை காட்டுவதும்,உணவு விடுதிகளில் வயிறு புடைக்க உண்வதையும், தங்கள் தனிப்பட்ட விடயங்களை காணொளியாக பகிர்வதையும் தொடர்ந்து செய்யட்டும்.🤣
  17. [ட்ரம்ப் வீட்டிலே இருப்பது நல்லது அக்கா கமலா நல்ல ஆட்சி தருவார்கள் 🙏 கண்ணை மூடிக்கொண்டு போடுவது இவர் வந்தால் இது எல்லாம் நடக்கும் என்பது முன்பே தெரியும் ஏன் பொது சொத்துக்களை எரிக்க வேண்டும் காருகளை எரித்து. வளிமண்டலத்தில் ஏன் CO2 இன். வீதத்தை அதிகரிக்க வேண்டும்??? மனிதன் சுவாசிக்க. O2 இல்லை காருகளை எரித்து. வளிமண்டலத்தில் ஏன் CO2 இன். வீதத்தை அதிகரிக்க வேண்டும்??? ] 👍 நல்ல நோக்கம் கொண்ட நல்ல கருத்து அமெரிக்காவில் என்றால் என்ன யேர்மனி அவுஸ்ரேலியா கனடா இலங்கை என்றால் என்ன தனியார் சொத்துக்கள் பொது சொத்துக்களை எரிக்கவோ அழிக்கபடவோ கூடாது. இனவெறி கொண்ட மோசமானவர்களுக்கு வாக்களிக்க முதல் சிந்திக்க வேண்டும்
  18. அதாவது மருத்துவர் சொல்லுறார் அந்த வயசில கலவியில் ஈடுபடுலாம் கர்ப்பம் வேண்டாம் என்று ....பாதுகாப்பான கலவி... நீங்கள் அம்மம்மாவின் வயசையும் அறிந்து வைத்திருக்கின்றீர்கள் பலே கில்லாடி😅
  19. 🤣 இந்திய கோவில் சிற்பங்களிலேயே இருக்கு என எங்கோ பார்த்த நினைவு. மனிதன்/மனிசி பாசையை கண்டுபிடிக்க முதலே இதை கண்டு பிடித்திருப்பார்கள்.
  20. அவரின் எழுத்தினூடக முதலில் அறிமுகமாகி, இப்போது ஒரு நல்ல நண்பியாகவும் உள்ளார் எனக்கு. அவர் முகனூலில் எழுதும் எழுத்துகள் / குறிப்புகள் கூட அருமையாக இருக்கும். நான் விரும்பி வாசிக்கும் நாவல்களில் / சிறுகதைகளில் பல ஈழத்து மற்றும் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகளும் அடங்கும். யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதும் யதார்த்தனின் நாவலான 'நகுலாத்தை' தான் நான் வாசித்த அனைத்து நாவல்களிலும் மிகவும் பிடித்த நாவல். முடிந்தால் வாசியுங்கள் அதை. எம் மண்ணில் இருக்கும் குல தெய்வ / பெண் தெய்வ வழிபாடு, வன்னி மண்ணில் புதைந்து கிடக்கும் ஆயிரமாயிரம் கதைகளில் சில, இறுதிப் போர் போன்றவற்றின் பின்னனியில் எழுதப்பட்ட நாவல் அது. யாழிலும் அது பற்றிய குறிப்பை எழுதியிருந்தேன்.
  21. ஆகா சாப்பாடு மட்டுமல்ல சோப்பு போட்டு குளிக்க வார்த்தும் விடுவார்கள்.
  22. 🤣........... ஒரு கை உடைந்து போனால் என்ன, அடுத்த கை இருக்குதே என்று அதையும் உடைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்.................😜. போன வருடம் வாலிபாலில் இடது முழங்கால் சில்லு வெடித்தது. எக்ஸ்ரே எடுத்த போது, செலவு ஒன்று தான் வலதுகாலையும் எடுப்போம் என்று சொன்னார்கள். சரி என்று நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தபடியே மெதுவாக தலையை ஆட்டினேன். இடக்கால் வெடிப்பை உறுதி செய்த மருத்துவர், வலக்கால் எப்படி இருக்கிக்கின்றது என்று பார்த்தார்........ வலக்கால் சில்லு ஏற்கனவே வெடித்து, ஆனால் இப்ப ஒட்டியிருக்கின்றது என்று சொன்னார்.......🫢. அன்று வீட்டில் என்னை மிதிக்காமல் விட்டதே பெரிய விசயம்.........🤣.
  23. நான் நினைக்கிறேன் கிருஷ்னாவின் மூன்றாவ‌து அக்காவின் திரும‌ண‌த்துக்கு 4வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஒரு ல‌ச்ச‌ம் காசுக்கு ப‌ல‌ வீடு வாச‌ல் போய் கேட்டு வாங்கி தான் திரும‌ண‌த்தை செய்து வைச்ச‌வை இப்ப‌ இவைக்கு எல்லாம் ஒரு ல‌ச்ச‌ம் காசு கால் தூசு மாதிரி நான் சொல்வ‌து பொய் என்றால் கிருஷ்னாவின் மூன்றாவ‌து அக்காவின் திரும‌ண‌த்தை எப்ப‌டி ந‌ட‌த்தின‌வை என்று ப‌ருத்திதுறையில் உங்க‌ளுக்கு தெரிந்த‌ உற‌வுக‌ளிட‌ம் விசாரித்து பாருங்கோ நிலாம‌தி அக்கா.................... நான் இவ‌யை ப‌ற்றி நூற்றுக்கு நூறு வ‌டிவாய் ஆராச்சி ப‌ண்ணி விட்டுத் தான் யாழில் வ‌ந்து எழுதுவ‌து............................
  24. இந்த பார்த்தீனியம் இந்திய படையால் அல்லவா யாழ்ப்பாணம் மற்றும் தமிழ் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டது? ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி 'பார்த்தீனியம்' என்ற நாவலை, இந்திய படையின் வருகையையும், அவர்களின் அட்டூழியங்களையும் பின்புலத்தில் வைத்து படைத்துள்ளார். ஈழத்தமில் இலக்கியத்தில் பார்த்தீனியம் நாவலும் ஒரு சிறு வரலாற்று ஆவணம். தமிழ்நதி மிகச் சிறந்த ஈழத்து படைப்பாளிகளில் ஒருவர். அண்மையிலும் தங்க மயில்வாகனம் எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்
  25. இது எனக்கு தெரியும் 🤪🤣
  26. அமெரிக்காவில் என்னவும் செய்யலாம் அது அவர்களின் பிரச்சனை ஜேர்மனியில் ஏன் எரிக்க வேண்டும்?? தேர்தலில் வாக்களிக்கும் போது யோசித்து புள்ளடி போடுவதிலலை நமக்கு என்ன செலவாகிவிடும் என்ற மனநிலையில் கண்ணை மூடிக்கொண்டு போடுவது இவர் வந்தால் இது எல்லாம் நடக்கும் என்பது முன்பே தெரியும் ஏன் பொது சொத்துக்களை எரிக்க வேண்டும் மனிதன் சுவாசிக்க. O2 இல்லை காருகளை எரித்து. வளிமண்டலத்தில் ஏன் CO2 இன். வீதத்தை அதிகரிக்க வேண்டும்??? இதனாலெல்லாம் எந்தவொரு பிரயோஜனம் இல்லை போசாமால். ட்ரம்ப் வீட்டிலே இருப்பது நல்லது அக்கா கமலா நல்ல ஆட்சி தருவார்கள் 🙏
  27. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியைத் தான் வெளிநாட்டு ஊடகங்களில் இருந்து அப்படியே கொப்பி செய்து போடும் போது பூனெரின் (Pooneryn) எனப் போட்டிருக்கிறது. செய்தி கூட முழுவதும் கூகிள் மொழி பெயர்ப்பி மூலம் செய்யப் பட்டிருக்கிறது என ஊகிக்கிறேன். 👇இது தான் ஆதவன் கொப்பி செய்த செய்தியின் மூல வடிவம்! The Times of India'Misleading': Adani Group denies report on Sri Lanka revo...India Business News: Adani Group has debunked rumors about the cancellation of their 484 MW wind power projects in Sri Lanka, asserting the deal is still on. The Sri Lankaகொப்பி பேஸ்ற் ஊடகங்களின் நிலை இது தான்😂!
  28. தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனையிட்ட போது 1009 மதுபான போத்தல்கள், ஒரு துப்பாக்கி, இரண்டு ஆப்பிள் ரக தொலைபேசிகளை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
  29. இல்லையே,......இன்னும் எத்தனை பேரை தொட்டீர்கள். ??? என்று கேட்பது நாகரிகம் இல்லை ஆகையால் தான் தொடருங்கள் தொடருங்கள்,......என்று நாகரிகமாக. எழுதுவது இடையில் நீங்கள் வந்து எல்லாத்தையும் குழப்பி விட்டீர்கள் 🤣🤪
  30. உணர்வுகளை வார்த்தைகளாக அழகாக கோர்த்து எழுதிய பதிவு . நீண்டநாட்களுக்குப்பின் ஒரு கதைப் புத்தகம் வாசித்த உணர்வு, சிறப்பாக இருக்கிறது பாராட்டுக்கள் நன்றி .
  31. ஆண்மை என்பது ஆண்கள் பல பெண்களை தொடுவது என்று தான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்?? என் அனுபவத்தில் கண்ட உண்மை என்னவென்றால் சந்தர்ப்பம் கிடைத்தும் எவன்/எவள் அதை தவிர்க்கிறானோ அதுவே ஆண்மை.
  32. 90 கேள்விய‌ தெரிவு செய்யும் போது சில‌ கேள்விக‌ளை தெரிவு செய்யாம‌ விட்டு விடுகிறோம் ந‌ண்பா...................எல்லாம் ச‌ரியா தானே ப‌திந்து விட்டேன் என்று இணைத்தால் ப‌ல‌ கேள்விக்கு ப‌தில் நான் தெரிவு செய்ய‌ வில்லை.....................................................
  33. கையேந்தாத பெரியார், "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்று முழங்கும் போது, கையேந்திய அண்ணா, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பம்மிக் கொண்டார். மக்களுக்காக அதே மக்களிடம் பம்மிக் கொண்டார். ] அண்ணாவை பற்றி பலர் நன்றாக சொல்லி அவர் பற்றி படித்த போது அவர் இல்லாத ஒருவரை ஒருவனே தேவன் என்று சொன்னது உறுத்தலாக இருந்தது உங்கள் மூலம் விளக்கம் கிடைத்தது
  34. அந்த பதவியை கைப்பற்ற தான் இங்க ஒருத்தர் இந்த திரியில். படுத்து கிடக்கிறார். 🤣🤣🤣🤣
  35. நன்றி தமிழ் சிறி அவர்களே ! நான் நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்ய Messages ல் சென்று பார்த்தேன். அதனை யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற விவரம் தெரிவிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
  36. வானத்தையும் பூமியையும் ஒரே நேரத்தில் தொடுவதுபோல் பண்டைய நவீன இலக்கியங்களைத் தொட்டு எழுதியுள்ளீர்கள். சமூகப் பிரச்சனையைக் கருவாகக் கொண்ட கதை தீர்வின்றி சோகமாக முடிவடைந்தது உறுத்தலாக உள்ளது.
  37. அவளின் பரிசம் பட்டதும் உடல் முழுவதும் சில்லிடுகிறது. கண்களை இறுக மூடி திறந்து அவளது கண்களை பார்க்கிறேன் அது கலங்கி இருக்கிறது. அவள் வாய் திறக்கிறாள். அதே என்னை மயக்கிய குரல் அழகு தமிழ். அவள் பேசும் விடயத்தை என் மூளை உணராத அளவுக்கு அந்த குரலுக்குள் அவளின் தமிழுக்குள்ளும் உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர்ந்து நான் 80 களுக்கு சென்று மூழ்கத்தொடங்கினேன்..... திடீரென ஒரு பொறி மனதில் நீ யார் இப்பொழுது என்று? கனவில் எங்கோ சென்று மீண்டும் முழிப்போமே அதைப் போன்றதொரு பதட்டம். அவள் கைகளை பிடித்துக் கொண்டு இருப்பதால் அதை பிடுங்கவும் முடியாமல் கனவை தொடரவும் முடியாமல்...... இந்த மனித மூளையின் வேகம் மற்றும் ஞாபக சேமிப்பு கண்டு வியந்ததுண்டு. ஒரு சில செக்கன்களில் 25 வருடங்கள் பின்னால் அழைத்து சென்று அத்தனையும் படங்கள் மற்றும் உணர்வுகளுடன் இரைமீட்டிவிட்டு ஒரு சில செக்கன்களில் மீண்டும் களத்தில் வந்து நிற்கும் விந்தையை என்னவென்று வர்ணிப்பது? எதனுடன் ஒப்பிடுவது? மீண்டும் அவளது கண்களை பார்க்கிறேன் அதில் எந்த வித சலனமோ சபலமோ இல்லை. ஒரு வித ஆழ்ந்த நட்பு மட்டுமே எனக்கு தெரிகின்றது. என் கண்களை பார்த்தவள் நான் கைகளை விடுவிக்க நினைப்பதை புரிந்து கொண்டாள் என்று நினைக்கிறேன். கைகளை விட்டு விட்டு என் குடும்பத்தை பார்க்கணும் என்றாள். அழைத்து சென்று காட்டினேன். எனது மனைவிக்கு இவளைப் பற்றி திருமணத்திற்கு முன்பே சொல்லி இருந்தேன். இருவரும் நட்பாக சுகம் விசாரித்து கொண்டார்கள். பிள்ளைகளையும் அரவணைத்து கொஞ்சி மகிழ்ந்தாள். இங்கே ஒன்றை சொல்ல வேண்டும். பிள்ளைகளை கண்காணிப்பவர்களாக அல்லது வழி நடாத்துபவர்களாக பெற்றோர்கள் இருப்பார்கள் இருக்கிறார்கள். அப்படியானால் பெற்றோரை கண்காணிப்பது வழி நடாத்துபவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை எங்கள் சமூகம் அதன் கட்டுப்பாடுகள் மதிப்பு மரியாதை எல்லாமே தான். இந்த சமூக கட்டமைப்பை எல்லோராலும் உதறிவிட முடியாது. இதற்கெல்லாம் கட்டுப்பட தேவையில்லை என்பவர்கள் கூட சில முடிவுகளை எடுக்க முன் நிதானிப்பர். ஏனெனில் நாம் செய்யும் தவறுகள் அல்லது சமூகம் ஏற்காத முடிவுகள் எமது பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்படும். இந்த சமூக கட்டமைப்பு பல தவிர்க்க வேண்டியதை தன்னுள் இன்றும் சுமந்து கொண்டு இருந்தபோதும் நன்மைகளும் இருக்கின்றன. அவை எம் வாழ்க்கையை நல்வழிப்படுத்தி வருகின்றன. இது தமிழர்களுக்கானது என்று இல்லை ஐரோப்பியர்கள் ஏன் உலகுக்கே பொருந்தும். அவள் விடைபெறும் முன் தனது இன்றைய வாழ்க்கை நிலைமை பற்றி சொன்னாள். மிகவும் அடிமட்ட நிலை. முன் பின் முகமே தெரியாத எத்தனையோ மக்களுக்கு உதவி இருக்கிறேன். தூக்கி விட்டிருக்கிறேன். துணையாக இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு நாள் என் உயிரில் கலந்த இவளுக்கு என்னால் எதுவும் செய்து தர முடியவில்லை. தரவும் கூடாது. இங்கே எனது பள்ளித் தோழிகள், வகுப்புத் தோழிகள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் என்னை கண்டதும் ஓடி வந்து கட்டியணைத்து முத்தம் தருவார்கள். எனக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்வார்கள். அதில் என் வகுப்புத் தோழி ஒருத்தி டேய் என்று என்னை கூப்பிடுவாள். ஆரம்பத்தில் எனது மனைவி பிள்ளைகள் இதனைக் கேட்டு முகம் சுழித்தபோது அவள் கொஞ்சம் பின் வாங்கினாள். ஆனால் பின்னர் என் மனைவி மக்களே அவளை மீண்டும் மீண்டும் அப்படி கூப்பிடும்படி சொல்வார்கள். இவரை டேய் என்று கூப்பிட்டு நாங்கள் கேட்பது நீங்கள் மட்டும் தான் என்பார்கள். அவை எதுவும் என் மனைவி பிள்ளைகள் உட்பட எவராலும் தவறாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் இவளுடன் அப்படி பேசமுடியாது முத்தம் கொடுக்க முடியாது உட்கார்ந்து சாப்பிட முடியாது அவளது தொலைபேசியை எடுத்து அவளுடன் தொடர்பு கொள்ள முடியாது. எந்த நேரத்திலும் அவளுக்கு உதவ முடியாது. காரணம் தொட்டது. அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன்....????? முற்றும் (யாவும் கற்பனை அன்று)
  38. இதே கல்வி முறைதான் ஜேர்மனியில் உள்ளது. ஐந்தாம் வகுப்பில்... பிள்ளைகளை ஏற்ற கல்விக்கு பிரித்து அனுப்பி விடுவார்கள். நன்றாக படிக்கும் பிள்ளைகளை ஒரு பாடசாலைக்கும், நடுத்தரமானவர்கள் மற்றைய பாடசாலைக்கும், அதற்கு கீழானவர்கள் வாகனம் திருத்துதல், கட்டிடிட வேலை போன்ற தொழில் கல்விக்கும் தயார் படுத்தத் தொடங்கிவிடுவார்கள். அந்த வகுப்புகளில், இரண்டு வருடங்களில் தமது திறமையை காட்டினால் நன்றாக படிக்கும் பாடசாலைக்கும் அவர்களின் விருப்பத்துடன் அனுப்பி வைப்பார்கள். இது... மாணவர்களுக்கு சிறந்த பலனை தருகின்றது. தொழில் கல்வி பயின்ற பல மாணவர்கள்... தமது சொந்தக்காலில் பலரை வைத்து வேலை வழங்கும் முதலாளிகளாகவும் பரிணமித்து உள்ளார்கள்.
  39. உண்மைதான் ஏராளன். பொலிஸ்காரன் இன்னுமொரு போலிஸ்காரனை காட்டிக் கொடுக்க மாட்டான். அவர்கள் தமிழர்களைப் போல்... கோடாலிக் காம்புகள் அல்ல. 😂
  40. முகநூலில் இருந்து.. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பவர் மக்கள் பிரதிநிதி என்ற பொறுப்பு வாய்ந்த பதவியை வகிக்கிறேன் என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். சக பா.உ சந்திரசேகரன் அவர்களை சீண்டி மலையக மக்களை இழிவுபடுத்தினார் டாக்குத்தர் அர்ச்சுனா. படிச்சவன் எல்லாம் அறிவுஜீவி என்ற கணக்கில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நீ என்ன படிச்சனி? பல்கலைக்கழகம் போனனியா? உன்ரை கல்வித் தகைமை என்ன? என அசல் யாழ்ப்பாண கல்விப் பவுசு மனநிலையின் கைதியாக உழல்கிறார் அவர். இப்போ பெண் அரசியல் செயற்பாட்டாளரை "விபச்சாரி" என விளித்து ஒரு ஆணாதிக்க ஒழுக்கவாதியாகி தாக்குதல் தொடுக்கிறார். அந்த பெண் செயற்பாட்டாளரின் அரசியல் அறிவுக்கும் தத்துவார்த்த அறிவுக்கும் ஈடுகொடுக்க அவரது டாக்குத்தர் சான்றிதழினதும் மும்மொழி அறிவினதும் போதாமையானது மனித இழிவுபடுத்தலை அவரிடமிருந்து முன்தள்ளுகிறது. நமது இயக்கங்கள் ஒழுக்கவாதங்களை கேள்விக்கு உட்படுத்தி முன்னேறாமல் அதற்குள் சுழன்று திரிந்தவர்கள். வறுமை துரத்தி பால்வினைத் தொழிலுக்குள் தள்ளிய பெண்களை 'சமூக விரோதி' என மின்கம்ப தண்டனை வழங்கியவர்கள். அந்த நிலைக்கு தள்ளிய அரசியல் பொருளாதார சமூக காரணிகளை கட்டவிழ்த்து செயற்பட வக்கில்லாமல் தேங்கிய அறிவுடன் இருந்தது மட்டுமன்றி, பால்வினை செயற்பாட்டை நுகரும் ஆண் பட்டாளமின்றி பால்வினைத் தொழில் எவ்வாறு இயங்குநிலையில் இருக்கும் என்ற தர்க்க அறிவுகூட இல்லாமல் இருந்தனர். அதிகாரத்தாலும் ஆயுதத்தாலும் சட்டத்தாலும் பெண்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்தியதற்கு அப்பால் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்தியல் போராட்டம் புலிகளின் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் காத்திரமாக இருந்ததில்லை. வளர்ச்சி அடையவுமில்லை. அதனாலேயே தப்பிப் பிழைத்த புலிப் பெண் போராளிகளை இயக்கத்தவர் மட்டுமல்ல சமூகமும் கீழ்நிலைக்கு தள்ளி வாழ்வாதாரத்துக்கு வழியற்றவர்களாக ஆக்கியது. ஆணாதிக்க கற்பிதங்களை நொருக்கிக் காட்டிய அவர்களை பெருமையாக கொண்டாட வேண்டிய சமூகம், போரின் பின் அதே போர்க்குணத்தை 'பெண்மை'க்கு எதிரானதாக நிறுத்திய அவலம் நடந்தது. அவர்களை திருமணம் செய்ய சமூக ஆண்கள் உட்பட ஆண் போராளிகள்கூட பின்னின்றனர். இதன்வழி வந்த இன்றைய கலாச்சார காவலர்கள் யூரியூப் தொடக்கம் பாராளுமன்றம் வரை பேசுகிற பேச்சுகளில் அறிவு கிழிந்து தொங்குகிறது. 'பாலியல் வல்லுறவு' என்ற வார்த்தையை பாலியல் வன்புணர்வு, பாலியல் வல்லுறவு எனவும் 'விபச்சாரம்' என்பதை பாலியல் தொழில், பால்வினைத் தொழில் எனவும் இலங்கையின் தமிழ் செய்திப் பத்திரிகைகள்கூட எழுதத் தொடங்கி மூன்று தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது. புகலிட மாக்சியர்கள் ஒருசிலர் கூட இப்போதும் 'பாலியல் வல்லுறவு', 'விபச்சாரம்' (அரசியல் விபச்சாரம்) என எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க மொழி, ஆணாதிக்க ஒழுக்கவாதம் என்பவற்றை தாண்ட முடியாமல் அவதிப்படுகிற நிலை அவர்களது. சக மனிதரை உடல் அவமதிப்பு அல்லது அறிவு அவமதிப்பு செய்கிற நிலை இன்னொருபுறம் பெரும்பாலானவர்களிடமும் இருக்கிறது. மிருகங்களை உருவகப்படுத்தி பேசுகிற நிலை காணப்படுகிறது. ஒருவேளை நாயோ குரங்கோ பேசும் வல்லமை கொண்டிருந்தால் மனிதர்களுக்கு அவை -தமது தனித்துவம் குறித்து- வகுப்பெடுக்க வேண்டி வந்திருக்கும். இந்த எல்லா கசடுகளையும் மூளைக்குள் வைத்துக்கொண்டு மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் போய்வருவதற்கு டாக்குத்தருக்கும் வேறு பலருக்கும் கோட்டும் சூட்டும் வெள்ளை வேட்டியும் பவுசும் வேறு தேவைப்படுகிறது. Ravindran Pa நன்றி https://www.facebook.com/share/p/15vnSeGRsx/?
  41. உண்மையில் பாரதூரமான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களா? இது பற்றிய செய்தியில் சிறிதளவு காணொளி பார்த்தேன். மண்டை காய்ந்தது. தற்செயலாக இவர்களில் நிரபராதிகள் காணப்பட்டால்? சி.என். என் பொக்ஸ் வெவ்வேறு திசைகளில். முதலில் அமெரிக்கர்கள் தங்களுக்குள் ஒரு பொதுவான ஒருமித்த கருத்தை எட்டும் காலம் வருமா? வொயிஸ் ஆவ் அமெரிக்காவுக்கு மூடுவிழாவாமே? உண்மைதானா?
  42. நல்ல ஒரு மனிதர், அத்துடன் சிறப்பான வகையில் தமது செயற்றிட்டங்களை முன்னெடுக்கிறார். 🙏 வன்னி ரெக் பற்றிக் குறிப்பிட்டதில் சந்தோசம். இவரைப்போல இன்னும் பலர் எம்மண்ணில் நிலையான பொருளாதார அபிவிருத்தி முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும், அது தான் அங்கிருக்கும் மக்களைக் கையேந்தும்நிலையிலிருந்து வெளிக்கொணரும்.
  43. இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழ் சிறிக்கும், அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய நுணாவுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
  44. ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே! நண்பர் @பாலபத்ர ஓணாண்டி எனக்கு மிகவும் பிடித்த கருத்தாளர். அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். என்னை யாழில் வா தல, போ தல என உரிமையோடு ஒருமையில் எழுதும் ஒரே ஒருவர், நான் அப்படி ஒருமையில் விளிக்கும் ஒரே ஒருவர். அண்மையில் ஒரு கருத்தை சொல்லி விட்டு அதை நிறுவ முடியாமல் போய் விட, தன் credibility உடைந்து விட்டதென கூறி யாழில் கருத்து எழுதுவதை விட்டு விட்டார் (படங்கள் இணைக்கிறார்). இதெல்லாம் சப்பை மேட்டர், எல்லோருக்கும் நடந்ததுதான் என அவருக்கு நன்கு தெரியும். அத்தோடு என்னை போலவே குப்புற படுத்து கிடந்து இந்த பெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒரு தூசு கூட இல்லை என அடிக்கடி உணர்பவர் ஓணாண்டி. ஆகவே இந்த சப்ப மேட்டரை தூக்கி போட்டு விட்டு ஓணாண்டி மீண்டும் கருத்துகளம் மீள வேண்டும் என்பதை வலியிறுத்தி…. குணா பட பாடலை உல்டாவாக்கி கீழே வெளியிடுகிறேன். பாடல் பெற்ற தலம் போல், பாடல் பெற்ற கருத்தாளர் ஆகிறார் ஓணாண்டி. பாடலை ஒரிஜினல் மெட்டில் வாசிக்கவும்/பாடவும். ———— ஓணாண்டி அன்போட கோஷான் நான்… நான்… எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசி வெச்சிக்கலாமா? வேணா கடிதமே இருக்கட்டும், படி…. ஓணாண்டி அன்போடு கோஷான் நான் எழுதும் கடிதமே… ஹ்ஹ பாட்டாவே படிச்சிட்டியா அப்ப நானும்…. மொதல்ல ஓணாண்டி சொன்னேன் இல்ல.. இங்க பேராண்டி போட்டுக்க…. பேராண்டி சாவச்சேரியில் சௌக்கியமா நான் இங்க சௌக்கியம்… பேராண்டி சாவச்சேரியில்… சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே….. ஆஹ… உன்ன நினைச்சு பாக்கும் போது வாண்டை, வாண்டையா…கெட்டவார்த்தை கொட்டுது… ஆனா அத எழுதனும்னு உக்காந்தா…. அந்த எழுத்து தான், ஹும் வார்த்த ஹு… உன்னை எண்ணி பார்க்கையில் வார்த்தை கெட்டது (அதான்)… அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது… அதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை, படி…. ஓணாண்டி அன்போடு கோஷான் நான் எழுதும் கடிதமே…. பேராண்டி சாவச்சேரியில் சௌக்கியமா…. நான் இங்கு சௌக்கியமே… உன்னை எண்ணி பார்க்கையில் வார்த்தை கெட்டது… அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது…. ————————— ம், என்னை யாழ்களத்தில பிராண்டுற காயம் அது தன்னால ஆறிடும்….. அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல…. எனக்கு ஒண்ணுமே ஆவரது இல்ல, இதையும் எழுதிக்க…. நடுவுல நடுவுல மாப்பு, ஆப்பு, கொய்யாலா. யோவ்…. இதெல்லாம் போட்டுக்கணும் ஹும்….. தோ பாரு என்னை கும்பலா சேர்ந்து கும்மினாலும் உடம்பு தாங்கிடும் உன் மனசு தாங்குமா? தாங்காது. ஓணாண்டி, ஓணாண்டி, ஓணாண்டி…. (அதையும் எழுதனுமா?) ஹ்-ஹ்ன், அது நட்பு ஹஹ், என் நட்பு என்னன்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது… ஆனா நான் அழுது அதனால சீமான் குரூப் சந்தோசப்பட்டிடுமோ அப்படின்னு நினைக்கும் போது வர்ற அழுக கூட நின்னுடுது….. ஹ்-ஹஹ-ஹ-ஹஹ-ஹ மனிதர் உணர்ந்து கொள்ள யாழ் சாதாரண கருத்துக்களம் அல்ல…. கருத்துக்களம் அல்ல….(4 எக்ஹோ) அதையும் தாண்டி புனிதமானது புனிதமானது புனிதமானது புனிதமானது.. பிராண்டி வைத்த காயம் இங்கு தன்னாலே மாறிப் போன மாயம் என்ன கொய்யால, கொய்யால… என்ன காயம் ஆனபோதும் என் மேனி தாங்கி கொள்ளும் உந்தன் மேனி தாங்காது மாப்புள்ள… எந்தன் நட்பு என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது…. சீமான் குருப் சந்தோசப்படும் என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது… மனிதர் உணர்ந்து கொள்ள யாழ் கருத்து களம் அல்ல…. அதையும் தாண்டி புனிதமானது…. ஓணாண்டியே நீ மீண்டும் வாடியேய், என் பாட்டு உனக்கு கேட்குதா… ஓணாண்டியே யாழில் நீ பேராண்டியே… அதுவும் உனக்கு புரியுமா…. சுபலாலி லாலியே லாலி லாலியே லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா லால-லால-லால-லா, லால-லால-லா லல-லால-லால-லா-லால-லால-லா ஓஹோ லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.