Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    38770
    Posts
  2. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    1223
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  4. மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8557
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/24/25 in all areas

  1. ஐபிஎல் 2025 இன் நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மிச்சல் மார்ஷினதும் நிக்கொலஸ் பூரனினதும் அதிரடியான அரைச் சதங்களுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவும் நிலையில் இருந்தபோதும் இடைவரிசை வீரர்களான ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸ், விப்ரஜ் நிகம், ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களை எடுத்த அஷுரோஷ் சர்மா ஆகியோரின் அதிரடியான ஆட்டங்களால் வெற்றி இலக்கை 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட்டால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 8 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: ஐபிஎல் போட்டிகளை இரசிக்க ஆரம்பித்துள்ள @செம்பாட்டான் முதல்வராக அவையமைந்துள்ளார்!
  2. நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதிர் RCB 14 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள்! 09 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் ரசோதரன் நந்தன் புலவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றியீட்டியதால் 09 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 19 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள்! 04 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் சுவி சுவைப்பிரியன் வாதவூரான் ஏராளன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றியீட்டியதால் 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI 19 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்திருந்தார்கள்! 04 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்திருந்தார்கள். மும்பை இந்தியன்ஸ் வாத்தியார் சுவி ரசோதரன் கோஷான் சே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியீட்டியதால் 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. முதல் மூன்று போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  3. உஷ் . ........டெல்லி வென்றதா இல்லையா . .......... வடக்கு வீதியில் தட்ஷணாமூர்த்தி + பழனி + சின்ராசு சமா எப்படி . .........! 😂
  4. முதல்வன் படத்தில கடைசியில அர்ஜுன் சொல்லுவார் " என்னையும் கடைசியில அரசியல்வாதி ஆக்கிவிட்டீங்களேடா" என்று. அதுமாதிரி, என்னையும் கடைசியில ஜபில் பாக்க வச்சிட்டீங்களே ஜயா. நான் ஒருமுறை கூட இவ்வளவு ஆர்வமாய்ப் பார்ததில்லை. @கிருபன் செய்த வேலை.
  5. ஓவியரே, இப்போது நாங்கள் என்னதான் செய்யவேண்டும்? பழசை எல்லாம் மறக்கலாம், மன்னிக்கலாம் ஒன்றாக கைகோர்த்து நடக்கலாமா? சைவ சமய பாடத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆரம்பம் தொட்டு இப்படி கதைகள் கூறித்தானே மண்டையை கழுவினார்கள்? எங்கள் கலாச்சாரம், வாழ்க்கை முறை அறிவை விட அதிகம் உணர்ச்சி - பற்றின் பாற்பட்டது. பக்தி வழிமுறையின் மூலம் கடவுளையே அடையலாம் என்று கற்பிக்கப்பட்டதே.
  6. நான் எதிர்பார்த்தேனே. இதில ஒரு அதிர்ச்சியும் இல்லையே. எல்லாம் முறைப்படி நடந்திருக்கு. அத்தனைக்கும் ராகுலும் விளையாடேல்ல. கருண் நாயரும் விளையாடேல்ல. பாவம் நம்ம @வீரப் பையன்26 நிலைமை. பார்த்தா, ஆறுதலா இரண்டு வார்த்தை சொல்லி விடுங்க. புலம்பிட்டு இருக்கார். தான் சொன்னதையே இப்ப மாற்றி சொல்லிட்டிருக்கார். இதுக்கு பதில் சொல்ல வேணுமா. அவசரப் பட்டுட்டீங்களே. அவளைத் தொடுவானேன். 🤣
  7. தோட்டம் செய்யிற புரோக்கிறாம் கேன்சல் பண்ணியாச்சு...
  8. உள்ளம் கொள்ளை போகுதே நீல மலை திருடனில் இருந்து.... அபூர்வ குரலாள் ஜிக்கி
  9. வரலாறுகள் சரியாக இருந்தாலும் ஏன் இப்போது விகாரைகளை கட்டி சிங்கள குடியேற்றங்களை செய்கின்றார்கள்? இலங்கையின் கிழக்கு பகுதிகளில் தமிழர் பிரதேசங்களாக இருந்த கந்தளாய் திருகோணமலை பறி போவதைப்பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை. கோண்டாவில கோண்டாவில் ஆக மாறியது கொக்குவில கொக்குவில் ஆக மாறியது இணுவில இணுவில் ஆக மாறியது யாப்பன யாழ்ப்பாணம் ஆக மாறியது கொடிகாம கொடிகாமம் ஆக மாறியது மிருசுவில மிருசுவில் ஆக மாறியது....இப்பிடியே சொல்லிக்கொண்டு போக வேண்டியதுதான்.🤣 கனக்க வேண்டாம் சும்மா இருந்த கதிர்காமத்தை எப்படி மாற்றி விட்டார்கள் என பாருங்கள்? சிங்களம் ஒரு சேர்ந்து வாழக்கூடிய இனமும் அல்ல. அதன் அரசியல் போக்கும் சேர்ந்து வாழ நினைக்கவில்லை. விட்டுக் கொடுத்த இராமநாதன் குணம் கொண்டவர்கள் இனியும் விட்டுக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கப்போகின்றார்கள்.
  10. ஜிக்கியின் குரலில் எனக்கு ஒரு மயக்கம் இருக்கிறது. தமிழ்ப் படங்களில் பாடுவதை கணவனுக்காக இடையில் நிறுத்திவிட்டார். “சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும் சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால் தாவி அணைத்தே படர்ந்திடும்….” பட்டுக்கோட்டையார் ஆரம்பத்தில் இசையில் மனம் துள்ளும் என்பார், இறுதியில் காதல், இன்பத் தேனையும் அள்ளும் என்பார். நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று. கணவர் ஏ.எம். ராஜா இறந்தபின் ஐரோப்பிய மேடைகளிலும் இவர் பாடியிருந்தார். அப்பொழுது இவர் பாடிய, “ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்…” பாடலைப் பாடும் போது அவர் உணர்ச்சி மிகுந்து உச்ச தொனியில் பாடிய இந்த வரிகள் கண்கலங்க வைத்தன “கைகொடுத்த தெய்வம் இன்று எங்கு சென்றதோ-என்னை காத்திருக்க வைத்துவிட்டு எங்கே நின்றதோ வாழ்கவென்று நீங்கள் சொன்னால் வாழும் என் மனம் இல்லை மறைக என்று வரம் கொடுத்தால் மறையச் சம்மதம்”
  11. இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம் இறை நம்பிக்கை என்பதே இளம் பிராயத்தில் இருந்து செய்யப்பட்ட மூளைச்சலவை என்பதும், அதனால் அதுவும் ஒரு குருட்டு நம்பிக்கை என்பதுமே பெரும்பான்மை இறை மறுப்பாளர்களின் கருத்தாக இருப்பினும் அவர்கள் அக்கருத்தை அத்துணை ஆணித்தரமாக சமூகத்தில் வெளிப்படுத்துவதில்லை. எந்த சமூகத்திலும் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கையுடையவராய் இருப்பதும், அம்மக்கட் பணியே தம் பணி எனக் கொண்டதும் அதற்குக் காரணமாய் இருக்கலாம். ஆனால் இறை நம்பிக்கை எல்லை கடந்து மூடநம்பிக்கையாய் உருவெடுக்கும்போது இறை மறுப்பாளர் மட்டுமல்லாமல் இறை நம்பிக்கை கொண்டோரிலும் பகுத்தறிவாளர் தமது எதிர்க் குரலை ஆங்காங்கே பதிவு செய்வது உண்டு. மூடநம்பிக்கைகள் அங்கிங்கெனாதபடி எங்கும், எந்த மதத்திலும் ஊடுருவி இருக்கக் காணலாம். தற்காலத்தில் கூட எங்காவது நடைபெற்றுச் செய்தியாகி விடுகிற நரபலியும், பெற்ற குழந்தையை நொடிப்பொழுதேனும் மண்ணில் புதைத்து எடுக்கிற கோரமும், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்து ரத்தம் வடிவதும் நாம் மண் சார்ந்ததாய்க் கொண்டாடும் நாட்டார் தெய்வங்களின் மீது ஏற்றப்பட்ட வன்முறை. தொன்மையான தமிழ் நாகரிகம் மற்றும் கிரேக்க நாகரிகக் காலந் தொட்டு இவை நிலவி வந்திருக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் இதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லையாயினும், குறுந்தொகை போன்ற அக இலக்கியங்களில் தோன்றும் கட்டுவிச்சிகளும் (குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த குறி சொல்பவள்) கணியன்களும் நம்பிக்கைகளுக்கான மெல்லிய ஆதாரங்கள். அவையனைத்தும் இறை நம்பிக்கை சார்ந்தே தோன்றின என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக, குறுந்தொகை 23 இல் " அகவன் மகளே! அகவன் மகளே! மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே! பாடுக பாட்டே; இன்னும் பாடுக பாட்டே! அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!" (குறுந்தொகை 23) என்று தலைவியின் தோழி குறி சொல்லும் கட்டுவிச்சியிடம் இப்பாடல் மூலமாகச் சொல்லும் செய்தியிலும், அது தரும் இலக்கிய இன்பத்திலும் மூழ்கித் திளைத்துப் பாடல் தெரிவிக்கும் மூடநம்பிக்கையை நாம் எளிதில் கடந்து விடுவதுண்டு. இங்கு ஒரு மண் சார்ந்த மூடநம்பிக்கையாக வெளிப்படுகிறதே தவிர இறை சார்ந்ததாய் வெளிப்படவில்லை. மேலும், இது இன்றளவும் தொடரும் நம்பிக்கையே ! இருப்பினும் இயற்கை குறித்தும் வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும் தோன்றிய பயத்தில் பிறந்த இறை நம்பிக்கை பெரும்பாலும் மூடநம்பிக்கையின்பால் இட்டுச்செல்லும் என்பது சமயம், காலம், தேசம் எனும் எல்லைகள் தாண்டியது. தலைவனின் பிரிவாற்றாமையினால் வாடி உடல் மெலிந்திரங்கும் தலைவியின் நிலை பற்றிக் கேட்க வேலன் வெறியாட்டில் குறி கேட்கச் செல்லும் தாயினைப் பற்றி குறுந்தொகை 111 இல் காணலாம். வேலனாக வெறியாடும் குறி சொல்லும் கலைஞன் தலைவியின் வருத்தம் சேயோன் ஆகிய முருகனின் செயல் என்று அளந்து விடுவதும், அதனைத் தாயானவள் நம்புவதும் "பெரும் வேடிக்கை" என்று கூறித் தோழியானவள், "அவ்வேடிக்கை காணத் தலைவன் வருவானாக !" என்று தலைவியிடம் கூறுகிறாள். அன்று சமூகத்தில் நிலவிய அந்தக் குருட்டு நம்பிக்கையைப் புலவர் தீன்மதி நாகனார், போகிற போக்கில், வேடிக்கை (பெருநகை) என்றது நமக்கான ஆறுதல். "மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் அதுவென உணரும் ஆயின் ஆயிடைக் கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன கேழிருந் துறுகற் கெழுமலை நாடன் வல்லே வருக தோழிநம் இல்லோர் பெருநகை காணிய சிறிதே". (குறுந்தொகை 111) பேய் பூதங்கள் பற்றிய பயமும் நம்பிக்கையும் கல் தோன்றி மண் தோன்றாக் காலந் தொட்டே வழங்கி வருவது போலும் ! சங்கப் புலவர்களில் பேயனார், பேய்மகள் இளவெயினி, பக்தி இலக்கியங்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்று சான்றோர் தம் பெயர்களே வழங்கி வந்தமை இதற்கான சான்று. "......................வானத்து வயங்குபன் மீனினும் வாழியர் பலஎன உருகெழு பேய்மகள்" (புறநானூறு 371) என்ற பாடலைப் பாடிய கல்லாடனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்திப் பேய் மகளிர் குரவைக் கூத்தாடுவதாகப் பதிவு செய்கிறார். இத்தனை மூட நம்பிக்கைகள் நிலவிய போதும் நரபலி போன்ற கொடூரமான பதிவுகள் சங்க இலக்கியங்களில் அநேகமாகக் காணப்படவில்லை எனலாம். எனவே அவை அறிவார்ந்த மக்களால் தமிழ்ச் சமூகத்தில் அப்பொழுதும் ஏற்கப்படவில்லை என்றே கொள்ளலாம். பண்டைய கிரேக்க நாகரிகத்தின் வழக்கத்துடன் இது குறித்து நோக்கத்தக்கது. அங்கே அவர்களது கடவுள்களை அமைதிப்படுத்த கொடூரக் கொலைகள் நிகழ்த்துவது அவர்களது இலக்கியங்களில் காணக் கிடைப்பது. எடுத்துக்காட்டாக, கி.மு. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கணிக்கப்படும் ஹோமரின் 'தி இலியட்' எனும் கிரேக்கக் காவியம் கி.மு. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ட்ரோஜான் போர் பற்றியது; அதில் வரும் அகமேம்னன் (Agamemnon) எனும் மைசீனிய (Mycenae) நாட்டு அரசன் ஆர்டிமிசு (Artemis) எனும் தேவதையை அமைதிப்படுத்தத் தன் மகள் இஃபிஜீனியாவைத் (Iphigeneia) தன் கையாலையே பலி கொடுக்கும் கொடுமை அரங்கேறுகிறது. ட்ரோஜான் போருக்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைப்பதால், அப்போரினை அடிப்படையாய்க் கொண்ட கதையாகவே இருப்பினும் அத்தகைய வழக்கங்கள் அச்சமூகத்தில் நிலவியது சுட்டப் பெறுகிறது எனலாம். அதுபோலவே இப்ராஹீம் நபிகள் தமது மைந்தரான இஸ்மாயிலை இறைவனுக்குப் பலியிடத் துணிந்தபோது இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு, "ஆட்டினைப் பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றுக" எனப் பணிக்கப்பட்டார்; இந்நிகழ்வே பக்ரீத் விழாவாகக் கொண்டாடப்படுகிறது என்பதை அறிவோம். இந்நிகழ்வு விவிலியத்திலும் (பழைய ஏற்பாடு) பேசப்படுகிறது - சிறிய மாற்றத்துடன்; ஆபிரகாம் ஆகிய இப்ராஹிம் பலியிடத் துணிந்தது தமது மற்றொரு மகனாகிய ஈசாக்கை எனும் மாற்றத்துடன். அவலம் என்னவோ மாறவில்லை. இத்தகைய கொடிய கூத்துகளில் தமிழ்ச் சமூகம் தாமதமான போதிலும் சோடை போகவில்லை என்பதை ஏறக்குறைய கிபி 12ம் நூற்றாண்டைச் சார்ந்த பெரியபுராணம் பெருமிதத்துடன் (!!!) பதிவிடுகிறது. இதனைச் சற்று விரிவாகச் சொல்லுவதில் இக்கட்டுரை (வெட்கமின்றி) முழுமை பெறும் என்று நம்புகிறேன். நாம் பெரிய புராணத்தில் முதலில் கையிலெடுப்பது சிவனடியார் பரஞ்சோதியார் எனும் சிறுத்தொண்டர் நாயனார் புராணம். சிவனடியார் தொண்டே சிவத்தொண்டு என வாழும் சிறுத்தொண்டரின் பக்தித்திறம் சோதித்திட இறைவனே கயிலாயத்தினின்றும் இறங்கி சிவனடியார் வேடத்தில் 'வைரவர்' எனும் பெயருடன் சிறுத்தொண்டரின் ஊரான திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளுகின்றார். அன்று அமுது செய்விக்க (விருந்தளிக்க) சிவனடியார் எவரையும் காணாமல் வாடி நின்ற சிறுத்தொண்டர், சிவனடியாரான வைரவர் வரவறிந்து இறும்பூதெய்து கணபதீச்சரத்தில் திருவத்தியின் (அத்தி மரத்தின்) கீழ் அமர்ந்திருந்த வைரவரை அமுது செய்யத் தம் இல்லத்திற்கு அழைக்கின்றார். அப்போது தமது நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிறுத்தொண்டரால் தமக்கு அமுது படைக்க முடியுமா எனும் ஐயப்பாட்டை வெளிப்படுத்துகிறார் வைரவர். எந்த நிபந்தனையையும் தம்மால் நிறைவேற்ற முடியும் என்று உறுதியளித்துக் கேட்கிறார் சிறுத்தொண்டர். அந்த நிபந்தனைகளை எண்ணிப் பார்க்கவே நமது உடலும் உள்ளமும் பதறும்போது, அவற்றை மொழிவது மட்டுமின்றி அது நிறைவேற்றப்படும் காட்சியை வெகு சாதாரணமாக ரசனையுடன் சேக்கிழார் பாடிச் செல்வது பேரதிர்ச்சி, பேரவலம் ! அதனைக் கேட்டுச் சிறிதும் மனச்சலனமின்றி மகிழ்வோடு ஏற்று, தம் மனைவியிடம் பகிர்கின்றார் சிறுத்தொண்டர் : "வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர்தாம் உள்ளம் மகிழ அமுதுசெய இசைத்தார் குடிக்கு ஓர்சிறுவனும்ஆய்க் கொள்ளும் பிராயம் ஐந்து உள்ளால் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் பிள்ளைபிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்கப்பெறின் என்றார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 54) பொருள் : வள்ளலார் ஆகிய சிறுத்தொண்டர் தம் மனையாளாகிய திருவெண்காட்டு நங்கையை நோக்கி, "(தாய் தந்தைக்கு) ஒரே மகனாய்ப் பிறந்து எவ்வித உறுப்புக் குறைபாடுமின்றி உள்ள ஐந்து வயது சிறுவனைத் தாய் பிடித்துக் கொள்ள மகிழ்வோடு தந்தை அரிந்து (வெட்டி) சமைக்கப் பெற்றால் உள்ளம் மகிழ்ந்து திருவமுது செய்ய மாதவராகிய வைரவர் இசைந்தார்" என்றார். அடுத்து அக்கொடுமை அரங்கேறுகிறது. எந்த ஒரு உணர்ச்சியும் மிதமிஞ்சிப் போகும்போது மூளைச்சலவை முழுமை பெற்றது என்றே பொருள். கம்பனுக்கு நிகரான கவித்துவம் பெற்ற சேக்கிழார் முதல் சாமானிய இறைப்பற்றாளன் வரை யாரும் இதற்கு விதிவிலக்கில்லை : "இனிய மழலைக் கிண்கிண்கால் இரண்டும் மடியின் புடைஇடுக்கிக் கனிவாய் மைந்தன் கையிரண்டும் கையால் பிடிக்கக் காதலனும் நனிநீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகைசெய்யத் தனி மாமகனைத் தாதையார் கருவி கொடுதலை அரிவார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 63) பொருள் : இனிய மழலையை இசைக்கும் கிண்கிணியை அணிந்த கால்கள் இரண்டினையும் தாயானவள் (!) தன் மடியின் இடையே இடுக்கி, இனிமையான கனி போன்ற வாயுடைய மைந்தனின் கைகள் இரண்டையும் தன் கையால் பிடித்துக் கொள்ள காதற் கணவனும் (சிறுவனின் தந்தை) பெரிதும் உவகை கொண்டார் என ஒப்பற்ற அந்த மகனும் மகிழ்ந்து சிரிக்க, தந்தையானவர் கருவி கொண்டு மகனின் தலையை அரிகின்றார். அக்குரூரத்தை மேலும் வருணிக்கும் அளவு பக்தி முத்திப்போயிற்று : "அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது எனக்கழித்து மன்றத்து நீக்கச் சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு முளை திறத்திட்டுக் கறிக்கு வேண்டும் பலகாயம் அரைத்துக் கூட்டிக்கடிது அமைப்பார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 65) பொருள் : அறுத்த தலையின் இறைச்சி சிவனடியார்க்குப் படைக்கும் திரு அமுதுக்கு ஆகாது எனக் கழித்து அதனை ஒதுக்கும் பொருட்டு சந்தனத்தாரது (சிறுத்தொண்டரது) கையில் கொடுத்து மற்ற உடல் உறுப்புகளின் இறைச்சியைக் கொத்தி அறுத்து எலும்பினைச் சுற்றியுள்ள தசையினைத் திறந்து கறிக்காக இட்டு அக்கறிக்கு வேண்டிய பொருட்களை அரைத்துக் கூட்டி (அத்தாயானவள் !!!) விரைவாக உணவைத் தயாரிக்கிறாள். இறுதியில் இறைவன் சிறுத்தொண்டரையும் அவரது இல்லாள் திருவெண்காட்டு நங்கையையும் ஆட்கொண்டு அவர்களது மகவான சீராளனை மீண்டும் அருளினார் என்ற கதையெல்லாம் ஒரு புறம். சிவனடியார்களிடம், அதன் மூலமாக சிவபெருமானிடம், சிறுத்தொண்டர் கொண்ட நேயம் மற்றும் அர்ப்பணிப்புக்கான சோதனையில் அவர் வென்றிருக்கலாம். ஆனால் இத்தகைய எல்லை தாண்டிய உணர்வு கொண்டாடப்படும்போது, சமூகம் எல்லை தாண்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும். மூடநம்பிக்கையினால் நரபலிகள் நியாயப்படுத்தப்படும். சங்க இலக்கியங்களில் இவை குறிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நமக்குத் தெரிந்த அல்லது கேள்விப்பட்ட பழங்காலத்தில் போருக்குச் செல்லும் முன் போர்த் தெய்வங்களுக்கு (War Deities) நரபலி தரும் வழக்கம், பலியாகும் வீரன் அதனை வீரத்தின் அடையாளமாக மனமுவந்து ஏற்றுக் கொண்ட கொடூரம் பற்றிய நாட்டுப்புறக் கதைகள் நம் காதுகளில் ஈயமாகக் காய்ச்சி விடப்பட்டிருக்கின்றனவே ! இவை கல்லாத சாமானியரின் வழக்கங்கள் என்று ஒதுக்குவதற்கு இல்லை. பெரிய புராணத்தில் சுட்டப்பெறும் அடியார்களும், அவர்களைக் கொண்டாடும் சேக்கிழார் பெருமானாரும், இப்ராஹிம் அல்லது ஆபிரகாம் வரலாறு சொன்னவர்களும் அந்தந்தக் காலத்தின் சான்றோர் பெருமக்கள்தாமே ! இவர்களால் வழிநடத்தப்படும் சாமானியர் எப்படி சான்றோராய் வளர முடியும் ? மதம் எப்படியெல்லாம் மதி மயங்கச் செய்யும் என்பதற்கு மேலும் ஒரு சான்று பெரிய புராணத்தின் இயற்பகை நாயனார் புராணத்தில் காணக் கிடைக்கிறது. மீண்டும் பெரிய புராணந்தானா ? கம்பனில் சம்பூக வதம் போன்ற பிற்போக்குத்தனங்கள் உண்டே ! அது வடக்கில் இருந்து வந்த கதை என்று புறந்தள்ளப் படலாம். பெரிய புராணத்தைப் புறந் தள்ளுவதற்கில்லையே ! உலகின் இயற்கையைப் (நடைமுறையை) பகையாக்கிக் கொண்டமையால் இயற்பகை நாயனார் என்று வழங்கப்படுகிறார். பூம்புகார் நகரத்தின் வணிகர் குலத்தில் பெருஞ்செல்வந்தராய் வாழ்ந்தவர். தம்மை நாடி வந்த சிவனடியார் வேண்டியவை எவையாயினும் இல்லையெனக் கூறா இயல்புடையார். அவரது பக்தியின் திறன் உலகிற்குக் காட்டும் பொருட்டு திருச்சிற்றம்பலத்தில் ஆடும் சிவனார், அடியார் வேடம் பூண்டு நாயனார்தம் இல்லத்திற்கு வருகிறார். "முந்தை எம்பெருந் தவத்தினால் முனிவர் இங்கு எழுந்தருளியது" (இயற்கை நாயனார் புராணம்; பாடல் 5) "என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்றஅக் கைதவ மறையோர் கொன்றைவார் சடையர் அடியார்கள் குறித்து வேண்டிய குணம் எனக்கொண்ட ஒன்றும்நீர் எதிர்மாறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டுநும்பால் ஒன்று வேண்டி இன்றுநான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையல் ஆம்எனில் இயம்பல் ஆம்என்றான்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 6) பொருள் : முற்பிறவியில் யான் செய்த பெருந்தவத்தினால் முனிவர் தாம் இங்கு எழுந்தருளினீர்கள் என்று கூறிய இயற்பகையார் முன் கீழ்மைத்தன்மை உடைய மறையோராய் வேடமேற்று வந்த கொன்றை மலர் சூடிய சடையரான சிவபெருமான், "அடியார்கள் தாங்கள் உம்மிடம் வேண்டியவற்றை நீவிர் நற்குணம் பொருந்தியவை என ஏற்று (அவை நற்குணம் பொருந்தாமல் இருப்பினும்), மறுக்காமல் மகிழ்ந்து அளிக்கும் உண்மையினைக் கேட்டு உம்மிடம் ஒன்று வேண்டி இங்கு யான் வந்தேன். அதற்கு நீவிர் இசைவீர் எனில் யான் இயம்புவேன்" என்று கூறுகிறார். இங்கு முனிவர் பாதகம் ஏதோ இயற்ற வந்தார் என்பதைத் தற்குறிப்பாகச் சொல்ல நினைத்த சேக்கிழார் அவரைக் 'கைதவ மறையோர்' (கீழ்மைத் தன்மை கொண்ட மறையோர்) எனக் குறித்தமை தெளிவு. நடைபெறப் போகும் குற்றத்தைக் கொண்டாடுவதில் சேக்கிழார்க்குப் பங்கில்லை என்பது நமக்கான ஆறுதல். "என்ன அவ்வுரைகேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும்என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயமில்லை நீர்அருள் செயும் என்ன மன்னு காதல்உன் மனைவியை வேண்டி வந்தது இங்குஎன அந்தணர் எதிரே சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 7) பொருள் : முனிவர்தம் உரையைக் கேட்டு இயற்பகையார், "அஃது என்னிடத்தில் இருக்குமானால், அது எம்பிரான் (சிவனார்) அடியவர்க்கு உரிமையானது. எவ்வித ஐயமுமின்றி தயங்காது கேட்டு அருள் செய்க" என்கிறார். அதற்கு அம்மறையோர், "நின்பால் நிலை பெற்ற காதல் கொண்ட நும் மனைவியை எனக்கு வேண்டிப் பெற வந்தேன்" என்று சொல்ல, அதைக் கேட்டு முன்னைவிட மகிழ்ந்து இயற்பகை நாயனார் சொல்ல ஆரம்பித்தார். "இது எனக்குமுன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறுஎனக்கு" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் எட்டு) பொருள் : "என்னிடம் முன்பே உள்ள பொருளைத் தாங்கள் கேட்டது எனக்கான பேறு" என்கிறார் நாயனார். இந்தக் கருமத்தை எங்கே போய்ச் சொல்ல ? அது மகாபாரத யுகம் போல பெண் பலதார மணமுறை (polyandry) நிலவும் சமூகமல்ல. கற்பின் திறம் பேசும் சமூகத்தில் இத்தகைய வெட்கக்கேடு நிகழ்வது பக்தி முற்றி மனம் பேதலித்தமை அன்றி வேறென்ன ? மேலும் அவர்தம் இல்லாளும் கணவனின் இறைப்பணியில் தன் பங்கு ஈதென்று மாறுபாடின்றி ஏற்றுக் கொள்கிறாள். இக்கேவலம் இத்தோடு நிற்கவில்லை. இருவழி சுற்றத்தாரும் (கணவன், மனைவி தரப்பினர்) இந்த மதியீனத்திற்கு எதிராகக் கிளர்ந்து எழுகின்றனர். இயற்பகை நாயனார் அவர்களுடன் போரிட்டு அவர்களை வெட்டிச் சாய்ப்பதாய்க் கதை தொடர்கிறது. "சென்று அவர் தடுத்தபோதில் இயற்பகையார் முன் சீறி வன்துணை வாளே ஆகச் சாரிகை மாறி வந்து துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து வென்றுஅடு புலிஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 21) பொருள் : சுற்றத்தார் வந்து தடுக்கையில் இயற்பகையார் சினமுற்று முன்வந்து வாளையே பெருந்துணையாகக் கொண்டு சுற்றத்தினரை மாறி மாறிச் சுற்றி வந்து அவர்களது தோள்களையும் கால்களையும் தலைகளையும் வெட்டிச்சாய்த்து, எதனையும் கொல்லும் திறன் கொண்ட ஆண் புலியைப் போல் அப்போர் ஆட்டத்தில் ஈடுபட்டார். இறுதியில் இறையனார் இயற்பகையாருக்குக் காட்சி தந்து அவர்தம் துணையொடு வாழ்வாங்கு வாழவைத்து, அவர்தம் சுற்றத்தாரையும் உய்வித்த கதையெல்லாம் 'சுபம்' எனும் நிறைவுத் திரைக்கானது. நமது கட்டுரைக்கான நிறைவுத் திரையை இப்படி அமைப்போமா ? - எந்த மதமானாலும் நிறைவான வாழ்க்கைக்கு வழிகோலுவதாகத்தானே அமைய முடியும் ! குறைபட்ட இறையமைப்பு வாழ்வில் நிறை தருமா ?
  12. செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் பூரானின் கேட்சை விட்டு போட்டியை சுறுசுறுப்பாகிய ரிஸ்விக்கும் ஒரு கேட்ச், ஒரு ஸ்டாம்பிங்க்கையும் கோட்டைவிட்டு தனது பழைய அணிக்கு வெற்றியை தேடிக்குடுத்த றிஷாப் பான்டிற்கும் நன்றிகள்!!
  13. நான் இப்ப‌ வாய் திற‌க்க‌ மாட்டேன் நாளைக்கு விளையாட்டு முடிந்த‌ பின் தான் வாய் திற‌ப்பேன்.................என்ர‌ நாற‌வாயால் எது சொன்னாலும் அது வினையா என‌க்கே அமையுது லொள்😁.......................................
  14. இந்த பெயரைச் சொன்னாலே அதிருதில்ல. பிள்ளைகளுக்கு கூட இந்தப் பெயரை இனி வைக்க மாட்டார்கள்.
  15. புதிய முதல்வர் செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள்
  16. உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளித்ததற்கு நன்றி. உங்களைப் போன்றோர்தான் துணை முதல்வராக இருக்க வேண்டும். 🥰
  17. "உயிருடன் விலகாத நட்பு, சில பொருளுடன் உறவாட கெடும்." சாமியார் புத்திசாலி.
  18. கடந்த போட்டியில் கிருபன் சுமைதாங்கியாக இருந்தது போல இந்தப் போட்டியில் @goshan_che சுமைதாங்கியாக உள்ளார்.
  19. புதிய முதல்வர் செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் நான் வரேல்லை நான் வரேல்லை எண்டு இருந்த செம்பாட்டானை துணை மூத்தவர் தான் இழுத்துக் கொண்டு வந்தவர் 😂
  20. இது மறு பதிப்புத்தான்
  21. இந்திய‌ தேசிய‌ அணியில் விளையாடின‌ வீர‌ர்க‌ள் ம‌ற்றும் வெளி நாட்டு ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் விளையாடின‌ வீர‌ர்க‌ளை பார்த்து தான் ல‌க்னோவை தெரிவு செய்தேன் இன்று டெல்லியின் வெற்றிக்கு பெரிய‌ அறிமுக‌ம் இல்லாத‌ இந்திய‌ மானில‌த்தை சேர்ந்த‌ வீர‌ர்க‌ள் தான் வெற்றிக்கு கார‌ன‌ம்.......................
  22. லக்னோ ஆதரவாளர்கள் யாராவது அவசரமாக ஆஸ்பத்திரிக்கு போக வேண்டுமா....................
  23. அங்கால போட்டுவர விடமாட்டியல் போல. பூரானத் தூக்கியாச்சு. இனி...... இதில கடைசியா இருக்கிற பிள்ளையை கண்டா வரச்சொல்லுங்க. ஓம். அவர் விளையாடவில்லை. எல்லாப் பக்கத்தாலும் அடி.
  24. 65 வயதுவரை உழைத்தவர் பென்ஷனுக்கு விண்ணப்பிக்க கச்சேரிக்கு போகமுதல் மாச்சுவரிக்கு போயிடுவர் ....... அரசு நோகாமல் நுங்கெடுத்துக் கொண்டிருக்கும் . ..........! 😂
  25. இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான இருவரின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்! 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டுக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதிபெற்று மீள எடுக்கப்பட்டு நேற்று சமய முறைப்படி தகனக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் நோக்கி மேற்கொண்ட படை நடவடிக்கைகயில், கண்டி வீதியில் வீடொன்றில் இருந்த தாயும் அவரது மகனும் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தனர். உயிரிழந்தவர்களுக்கு சமய முறைப்படி கிரியைகள் செய்து தகனம் செய்வதற்கு அப்போது அனுமதி மறுக்கப்பட்டிருந்தநிலையில், கணவர் வேறு வழியின்றி தனது மனைவியினதும், மகனினதும் உடலை வீட்டு வளவிலேயே அடக்கம் செய்துள்ளார். பின்னர் அங்கு கல்லறை ஒன்றைக் கட்டிவிட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் ஏனைய பிள்ளைகளுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனது ஏனைய பிள்ளைகளுக்கு அவர் தெரிவித்திருந்ததுடன், மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு சமய முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நாடு திரும்பிய ஏனைய பிள்ளைகள் தாய் மற்றும் சகோதரனின் உடல்களை மீளத் தோண்டியெடுத்து கிரியைகள் செய்வதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்தனர். நீதிமன்று அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு இந்து சமயக் கிரியைகள் நடத்தப்பட்டு அவர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/இந்திய_இராணுவத்தின்_துப்பாக்கிச்_சூட்டில்_படுகொலையான_இருவரின்_உடல்கள்_38_ஆண்டுகளின்_பின்_தீயுடன்_சங்கமம்!
  26. உக்ரேன் போர்; அமெரிக்கா – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை ஆரம்பம்! உக்ரேனில் ஒரு பரந்த போர் நிறுத்தத்தை நோக்கி முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க, ரஷ்ய அதிகாரிகள் திங்களன்று (24) சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். கடந்த வாரம் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இருவருடனும் பேசிய பின்னர், மூன்று ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன. பேச்சுவார்த்தைகளுக்கான திட்டமிடல் குறித்து விளக்கப்பட்ட ஒரு வட்டாரம், அமெரிக்கத் தரப்பை வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த பணிப்பாளர் ஆண்ட்ரூ பீக் மற்றும் வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி மைக்கேல் ஆண்டன் ஆகியோர் வழிநடத்துவதாக உறுதிபடுத்தியுள்ளனர். கருங்கடலில் கடல்சார் போர் நிறுத்தத்தை எட்டுவதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் என்று வெள்ளை மாளிகை கூறுகிறது. இது கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக நடைபெற அனுமதிக்கிறது. ரஷ்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் முன்னாள் இராஜதந்திரி கிரிகோரி கராசின், தற்போது ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேல் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவராக உள்ளார். மேலும் சோவியத் சகாப்த கேஜிபியின் முக்கிய வாரிசு நிறுவனமான ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் பணிப்பாளரின் ஆலோசகர் செர்ஜி பெசெடா ஆகியோரும் உள்ளனர். உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பலமுறை அழைப்பு விடுத்த ட்ரம்ப், பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் விதம் குறித்து பரந்த திருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இதுவரை புட்டின் இந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஆனால், 2022 ஆம் ஆண்டில் உக்ரேனுக்கு பல்லாயிரக்கணக்கான வீரர்களை அனுப்பியதிலிருந்து மாறாத அவரது அதிகபட்ச கோரிக்கைகளாக புட்டின் அர்த்தமுள்ள விட்டுக்கொடுப்புகளைச் செய்யத் தயாரா அல்லது கடைப்பிடிப்பாரா என்பது குறித்து முக்கிய ஐரோப்பிய சக்திகளிடையே சந்தேகம் உள்ளது. அமைதியைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாக புட்டின் கூறுகிறார். ஆனால் உக்ரேன் அதிகாரப்பூர்வமாக அதன் நேட்டோ அபிலாஷைகளைக் கைவிட்டு, ரஷ்யாவால் உரிமை கோரப்பட்டு பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படும் நான்கு உக்ரேனியப் பகுதிகளின் முழுப் பகுதியிலிருந்தும் அதன் வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். https://athavannews.com/2025/1426285
  27. கிடைக்கும் உணவைப் பகிர்ந்து உண் ..........! 😍
  28. தந்தையின் எண்ணத்தை நிறைவேற்றி தாய் சகோதரத்தின் சிதைகளுக்கு கிரியைகள் செய்த பிள்ளைகள் பாராட்டுக்குரியவர்கள் . ........!
  29. இப்பவே சொல்லி வைக்கிறன். எனக்கும் கனக்கவேண்டாம் ஒரு கோடி கடன் தாங்கோ.
  30. // மற்றது, தையிட்டி விவகாரம், அங்கே பெளத்த வழிபாடு போன்றவை எப்போது தொடங்கியது என்று தெரியுமா உங்களுக்கு?// தையிட்டியில் பவுத்த வழிபாடு சரியாக 1345 ம் ஆண்டு , பங்குனி மாதம் இரண்டாம் திகதி தொடங்கியது . ஆனபடியால் , தையிட்டியில் , அங்கினேக்கு அக்கம் பக்கத்தில இருக்கிற உறுதிக்காணிகளையெல்லாம் பிடிச்சு , பன்சல , மண்டபம் , இத்தியாத்தி ஐடம்ஸை கட்டிக்கொள்வது சாலச்சிறந்ததவும் பொருத்தமானதும் ஆகி நிற்கின்றது
  31. கனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை சிவதாசன்இன்னும் 36 நாட்களில், ஏப்றில் 28 அன்று கனடிய பொதுத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனடாவின் அதி குறைந்த ஆயுட்காலத்தைக்கொண்ட பிரதமர் என மார்க் கார்ணி வரலாற்றில் இடம்பெறுகிறார். அவரின் இன்றைய தேர்தல் அறிவிப்பை வானொலி மூலம் கேட்க முடிந்தது. அக்டோபர் 2025 மட்டும் அவகாசமிருக்க கார்ணி ஏந் இவ்வளவு அவசரமாகத் தேர்தலை அறிவித்தார் என ரொறோண்டோ ஸ்டார் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார். பதில் மழுப்புதலாக இருந்தாலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவின் ‘கீறல் விழுந்த ரெக்கோர்ட்’ பதிலாக இருக்காதது வித்தியாசமாக இருந்தது. கனடிய அரசியலில் மிகவும் அதிர்ஷ்டம் குறைந்தவர் என்றால் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவ் தான். இரண்டு, மூன்று தடவைகளில் சந்தித்துப் பேசும் சதர்ப்பமும் கிடைத்தது. ‘அவ்வளவு பிழையான ஆளில்லை’ என்று ஊர் சொல்லக்கூடிய ஒருவர் தான். இருப்பினும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை. அடுத்த 36 நாட்களுக்குள் கிரகங்கள் ஏதாவது சடுதியாக மாற்றப்பட்டாலே தவிர ராஜாவுக்குச் சாண்சே இல்லைப் போலிருக்கிறது. ட்றம்ப் உளறத் தொடங்கியவுடனே டக் ஃபோர்ட் கொடுக்கைக் கட்டியதை பொய்லியேவ் ந்திருப்பாரோ அல்லது அவரது வாய்க்குப் பூட்டுப் போடப்பட்டதோ தெரியாது. அன்றே அவரிடமிருந்த ஒரேயொரு நட்பான கிரகமும் வீடு மாறிவிட்டது. எல்லாம் இந்த கருத்துக் கணிப்பாளர்கள் செய்யும் வேலை. தெருவில் திரிந்த சாதாரண மனிதரைப் பாப்பாவில் ஏற்றிவிட்டு சனத்தை உசுப்பேத்திவிட அவரைச் சுற்றியிருந்த ஆலோசக சேனை அவரது கண்ணாடியைக் கழற்றிவிட்டு அப்பிளைக் கொடுத்து கடித்துக் கடித்து ஊடகருக்குப் பதில் சொல்ல வைக்க உசுப்பேத்தப்பட்ட மகாஜனங்கள் கைதட்டி ரசிக்க ஏறியவர் இறங்க மறுத்துவிட்டார் – அது ட்றம்ப் குளறும்வரை. பப்பா மரத்திலிருந்து இறங்கியபோது கைதட்டிய மகாஜனங்களில் பலபேர் துண்டைக் காணோம் துணியைக் காணோஈம் என்று ஓடிப்போய் எதிரியின் கூடாரத்துக்குள் ஒளிந்துகொண்டனர். கருத்துக்கணிப்பாளர் பாவம். அவர்கள் தமக்குக் கிடைத்த கட்டளைகளை நிறைவேற்றத்தானே வேண்டும். கார்ணியின் வரவு தற்செயலானதல்ல. தேவை கருதி அவசரமாகக் களமிறக்கப்பட்ட ஒருவர் அவர். அவரது வரவால் சிறகொடிக்கப்பட்ட கிறிஸ்டினா ஃபிறீலாண்ட் ஒரு திருப்பலி. இதுவரை மேற்கு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக இருந்து கோலோச்சிய அமெரிக்காவும் ஒரு நாள் தடம் புரளும் என்பதை ட்றம்ப் நிரூபித்த பிறகு, மேற்கு தனக்கான ஒரு புதிய தலைமையை உருவாக்கத் தீர்மானித்துவிட்டது. ஐரோப்பாவை மையமாகக் கொண்டிருக்கும் இப்புதிய தலைமையின் உருவாக்கத்தில் கனடாவுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அந்த அவசிய பயணத்தை முன்னெடுக்கக்கூடிய தலைமை பொய்லியேவுக்கு இல்லை. அதற்குத் தேவையான ‘ஆங்கிலோ சக்ஸன்’ மரபணு அவரிடம் இருப்பத் போலத் தெரியவில்லை. அந்த establishment இனால் முன்தள்ளப்பட்ட மாமணியே கார்ணி. கார்ணியின் முன்தள்ளலுக்குப் பின்னால் இருக்கும் establishment எனப்படும் இம்மர்ம விசையில் கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி பங்காளியாய் இல்லைப் போலத் தெரிகிறது. இதற்குக் காரணம் பொய்லியேவா அல்லது கட்சி இயந்திரமோ தெரியவில்லை. ஐரோப்பா தலைமையில் ஆரம்பமாகும் இப்புதிய ஒழுங்கிற்கான பின்னரங்கச் சந்திப்புகளில் பொய்லியேவ் ஒதுக்கப்பட்டு டக் ஃபோர்ட்டுக்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளமை தெரிகிறது. இதற்கு ட்றூடோவின் பங்களிப்பும் இருந்திருக்கலாம். மாகாண பொதுத் தேர்தலில் டக் ஃபோர்ட் அமோக வெற்றி பெற்றதும் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அப்போதைய பிரதமர் ட்றூடோ தொலைபேசியில் அழைத்து டக் ஃபோர்ட்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியாகவிருந்தும் தன் சக கட்சித் தலைவருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்க பொய்லியேவுக்கு 18 நாட்கள் எடுத்திருக்கின்றது. ஃபோர்ட்டுக்கும் பொய்லியேவுக்குமிடையில் பனிப்போர் இருக்கிறதென்பது தெரிகிறது. ஆனால் அது எப்போ, எதற்காக அல்லது யாருக்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு விளக்கமில்லை. டுத்தார். இருவருக்கும் அதிக நேரம் பேசத் தேவை இருக்காதவாறு உறவு புளித்துப் போயிருந்தது. ஆனாலும் டக் ஃபோர்ட் தனது பழிவாங்கலை வேறு வடிவங்களில் கச்சிதமாக முடித்துவிட்டார். தனது முடிசூடலுக்கு கிறிஸ்டியா ஃபிறீலாண்டுக்கு அழைப்பு விடுத்ததுடன் கார்ணியுடன் காலையுணவுக்கும் ஒழுங்குசெய்து விட்டார். ஃபோர்ட்டுக்கு சில வேளை தூரப்பார்வை அதிகமாக இருக்கலாம். வரப்போகும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வி கண்டால் அதன் தலைமை ஆசனத்தில் அடுத்த தலைவராகத் தான் அமர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணமும் பொய்லியேவை உதாசீனம் செய்யக் காரணமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஃபோர்ட்டின் தேர்தல் வெற்றியை உடனடியாக வாழ்த்த விரும்பாத பொய்லியேவின் முடிவு சுயமானதா அல்லது தூண்டப்பட்டதா தெரியாது. ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலருக்கு இது அதிர்ச்சியானது என ரொறோண்டோ ஸ்டார் எழுதியிருக்கிறது. தூரத்தில் வைத்திருப்பது கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் புதிய விடயமல்ல. 2019 இல் ஃபோர்ட்டின் செல்வாக்கு சரிந்தபோது அப்போதைய மத்திய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அண்ட்றூ ஷியர் ஃபோர்ட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருந்தார். 6 வருடங்களில் இந்த வன்மம் வளர்ந்திருக்க வாய்ப்புண்டு. கனடாவின் 41 மில்லியன் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஒன்ராறியோவில் இருக்கிறது. மொத்தம் 343 ஆசனங்களில் 122 ஆசனங்கள் ஒன்ராறியோவில் மாத்திரம் இருக்கின்றன. அப்படியிருந்தும் ஃபோர்ட்டைப் புறந்தள்ளும் யோசனை கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வருகிறதென்றால் சாணக்கியம் என்பது இவர்களுக்கு அன்னியமானதொன்று என்றுதான் பார்க்க வேண்டும். இப்படியான ஒரு கட்சியால் ட்றம்ப் போன்றவர்களை எப்படிச் சமாளிக்க முடியும்? என வாக்காள மகாஜனங்கள் யோசித்து, தீர ஆலோசித்து வாக்குகளை அளிக்க கார்ணி அதிக அவகாசம் கொடுக்காமல் அவசர தேர்தலுக்கு – ஒரு வகையில் preemptive- அறிவிப்பை விடுத்திருக்கிறார். ட்றம்பின் பலத்தை முன்வைத்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டதை விட பொய்லியேவின் பலவீனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டதாகவே பார்க்கப்படவேண்டியிருக்கிறது. அடுத்த 36 நாட்களில் ட்றம்பின் சிறிய இரைச்சல்களையும் பெரிதாக amplify பண்ணுவதுதான் லிபரல் கட்சியின் strategy ஆகவிருக்குமென எதிர்பார்க்கலாம். நேரடடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஃபோர்ட் இதற்கு உதவி செய்வார். பொய்லியேவ் கட்சியில் ஊதுவதற்குப் புதிய விடயமுமில்லை. அதை முன்னெடுப்பதற்கான இரண்டாம் நிலை charismatic தலைவருமில்லை. லிபரல் கட்சியை அதிகமாக இடதுபக்கம் தள்ளிச்சென்ற ட்றூடோ கட்சியில் விட்டுச் சென்ற சிவப்புச் சாயத்தைக் கழுவி கொஞ்சமேனும் வலது பக்கம் நோக்கித் தள்ளும் முயற்சியை கார்ணி ஏற்கெனவே வெளிக்காட்டிவிட்டார். அதற்கு மாறாக வலது பக்கமிருந்த கன்சர்வேட்டிவ் கட்சியைக் கொஞ்சம் இடதுபக்கம் நகர்த்த பொய்லியேவ் முயற்சிப்பதும் தெரிகிறது. திடீரென அவர் தொழிலாளர்களைப் பின்வரிசையில் நிறுத்தி அவர்களின் தோழராகப் படம் காட்டுவது அப்பட்டமாகத் தெரிகிறது. அந்தளவிற்கு கட்சியில் மூளை வறுமை இருக்கிறது. பாவம் பொய்லியேவ். நல்ல மனிசன். சுற்றம் சரியில்லை. veedu.comகனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை -...சிவதாசன் இன்னும் 36 நாட்களில், ஏப்றில் 28 அன்று கனடிய பொதுத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனடாவின் அதி குறைந்த ஆயுட்காலத்தைக்கொண்ட பிரதமர் என
  32. காதல் தோல்வியை தழுவியவர்கள் ரசித்து கண்ணீர் மல்கி இரத்தக் கண்ணீர் விட்ட காட்சி. 🙂 https://youtu.be/LOy6iA28XVc?si=McQzU0R77L2_nJpN
  33. நான் ஒரு சாதாரண தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் 😂 முதல்வர் பதவியெல்லாம் சரிவராது நாளைக்கும் அய்யா அமெரிக்கன் துரை தான் முதல்வர் அவற்றை அட்டூழியங்களை பொறுத்தே ஆக வேண்டும் நேரம் பார்த்து கீழை இழுத்து விழுத்துவம் 😅
  34. போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள் கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன் பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞாற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி - நீர்ப்படைக் காதை 130 நியாயத்தின் சாம்பல் மேற்குறிப்பிட்டநிகழ்வு சங்க காலத்தியது தான். பத்தினியின் பசி தீர ஆயிரம் பொற்கொல்லர்களை நரபலி கொடுத்தமை, சங்க காலத்தின் முதன்மைக்காப்பியாமாம் சிலப்பதிகாரத்தில் பச்சைத் தமிழன் பாண்டியன் செய்வித்ததாகத் தான் உள்ளது. பொதுவாக இறை வழிபாடுகள் நம்பிக்கை சார்ந்தவை, அதனால் எத்தனையோ மூடநம்பிக்கைகள் அதனுள்ளே இயல்பாக ஊடுருவ முடியும். பல காலங்களாகவே சமயக் கோட்பாடுகளை அறியாமலே மேலோட்டமாகவே சடங்குகள் சம்பிரதாயங்களைப் பின்பற்றியே அனேகமானோர் அவற்றைக் கைக்கொண்டு வருவதால், அச் (ச+ச) களைத் தாக்கி அவற்றிலிருக்கும் மூடப் பழக்கவழக்கங்களைத் தாக்கி அதன் மூலம் அவையைப் பிழை என நிறுவும் போக்கும் எதிர்க்கோட்பாடு கொண்டவர்களின் ஆயுதமாகும். இதைத் தேர்ந்து அறிவதே அறிவார்ந்தவர் கடமையாகும்.
  35. பட்டிலந்த விவகாரம் பேச முடியும் என்றால்,சிங்கள பயங்கரவாத ஜெ.வி.பி யினரின் செயல்களை அங்கிகரிக்க முடியும் என்றால் இனஅழிப்பும் பேசப்பட வேண்டும்...இவற்றை பேசாமல் பக்க சார்பாக பேசுவது என்பது சிங்கள அதிகார வர்க்கத்தின் அதிகார போக்கு ... எனது பார்வையில் ...இடதுசாரிகள் செய்தால் சரி மற்றவர் செய்வது எல்லாம் பிழை என வாதாட வேண்டிய வசியமில்லை... மலையக தமிழர்,சாதி வேறுபாடு,வர்க்க வித்தியாசம் என கூறுவது முப்போக்கு என இலங்கை கொம்னிஸ்ட் கட்சி காலத்திலிருந்து இன்று வரை சொல்லிகொண்டே இருக்கின்றோம் ..ஆனால் இன சுத்திகரிப்பில் எந்த வித மாற்றமும் இல்லை ...
  36. யாழ்பாணத்தின் வரலாறு கூறும் நூலான “யாழ்பாண வைபவமாலை” என்னும் நூலில் புத்த கோவில்களை எல்லாம் இடித்து சிங்களவரை துரத்திய வரலாறு உள்ளது. மதம் மாறினார்கள் என்பதற்காக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராது அனைவரையும் சங்கிலியன் வெட்டி கொலை செய்த வரலாறும் உள்ளது. ஆகவே இனவாத விடயத்தில் நாமும் சிங்களவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர். இற்றைக்கு 250 வருடங்களுக்கு முன்பு 1750 களில் இந்நூல் எழுதப்பட்டது.
  37. சந்திரசேகரர் இன்று நேற்று அல்ல ஜேவிபி யில் இணைந்து, எனக்கு தெரிந்தே இவர் கடந்த 30 வருடங்களாக இருக்கின்றார். மலையக தமிழரான இவர் பல ஜேவிபி சார்பான நூற்றுக்கணக்கான போராட்டங்களில் ஈடுபட்டவர். ஜேவிபி ஒரு கடும் இனவாதக் கட்சி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனால் தான் சங்குக்கு வாக்களிப்பதன் மூலம் ஜேவிபியிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும், ஈற்றில் தமிழ் தேசிய கட்சிகளை மக்கள் நிராகரிப்பர் என கடந்த ஆண்டு பெப்ரவரியில் இருந்து எழுதி வந்தேன். ஆனால் இன்று இவர் வடக்கில் செய்யும் பல விடயங்கள், முக்கியமாக இந்திய கடல் கொள்ளைக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை. வடக்கு தமிழனான டக்கிளஸை விட பல மடங்கு சிறப்பாக உள்ளார். இவர் மட்டுமல்ல, எந்த தேசியக் கட்சிகளும், அரசுகளும் இனப்படுகொலை பற்றி பேசப்போவதில்லை. போர்க் குற்றம் புரிந்ததாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இது தான் யதார்த்தம். இதனை அங்குள்ள தமிழ் மக்களும் நன்கு புரிந்து கொண்டமையால் தான் தேசியக் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க தொடங்கி உள்ளனர். ஆனால் இந்த யதார்த்தை புரிந்து கொள்ளாமல் வெறுமனே சந்திரசேகரனை குறிப்பிட்டு திட்டுவது அவர் மலையகத்தமிழர் என நன்கு தெரிந்த பின்னும் சந்திரசேகர என்று சிங்கள பெயர் சூட்டி விமர்சிப்பது யாழ்பாணிகளின் மலையக தமிழர் மீதான வழக்கமான குறும் பார்வையின் அம்சமாகவே தெரிகின்றது. மற்றது, தையிட்டி விவகாரம், அங்கே பெளத்த வழிபாடு போன்றவை எப்போது தொடங்கியது என்று தெரியுமா உங்களுக்கு?
  38. வேட்புமனு தாக்கல் செய்த போது கெளசல்யா கையெழுத்திடவில்லையாம். இவர்களுக்கு உதவி செய்வதற்காக தனிஒரு மேசைபோட்டு ஒருவரை உட்கார வைத்துள்ளார்கள். கெளரவம் கருதி யாருமே இந்த மேசைப்பக்கம் போகவே இல்லையாம். ஒருஒருத்தர் டக்லஸ் மாத்திரம் இவரின் அறிவுரையைக் கேட்டு திருத்திய பின்பு வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். நானொரு வக்கீல் சாதாரண கிளாக்கிடம் போய் சரிபிழை பார்ப்பது அவமானம் இல்லையா? அத்துடன் முக்கியமாக யார்யார் வேட்பாளர்கள் என்பது பரமரகசியம். சரிபிழை பார்க்கப் போய் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் வெளிவந்துடுமே?
  39. மேலே படத்தில் உள்ளது Tags போன்று பந்தி பந்தியாக இணைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10000 Tags இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அதில் 80-90 வீதம் Tags அழித்தால் தான் சரிப்படுத்த முடியும். அழிப்பதும் இலகுவல்ல. பல நாள் வாரம் மினக்கிட வேணும்.
  40. கனம் மோகன் அண்ணா, இணையவன் அண்ணா, நிர்வாகிகளே, Tags ஐ அழுத்தினால் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பெயர்களே Tags ல் காட்டுகிறது. இதனை நாங்கள் விரும்பிய பெயர்/விபரங்களை Tags செய்யக் கூடியதாக மாற்றலாமா?
  41. இதற்கு திரைமறைவில் உழைத்தவர்கள் யாரோ? அயல்நாட்டு ராஜதந்திரிகள் தான் அண்மைக் காலங்களில் குறுக்கும் நெடுக்குமா ஓடுப்பட்டுத் திரிந்தார்கள்.
  42. முதல் qualifier இல் வெற்றிபெறும் அணி நேரடியாக பைனலுக்கு போய்விடும். அதே அணி இரண்டாவது qualifier இல் வெல்லமுடியாது!! இரண்டிற்கும் நீங்கள் SRH என்று தெரிவுசெய்திருக்கிறீர்கள்!! அதனால்தான் மாற்ற விரும்பினால் மாற்றும்படி சொன்னேன்! அகஸ்தியன் , கேள்விகள் 71 , 72 இற்கான விடைகளை சரிபார்க்கவும்!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.