இன்னொன்று👇😂
”
யமனாக நிழலியும், சித்திரகுப்தனாக தமிழ் சிறியும், யமதூதர்களாக தூயவன்,நிர்மலன்,புத்தன்,தும்பளையான்,ஜீவா ஆகியோரும் நந்தனாக நந்தனும் கலந்து சிறப்பிக்கும்... எமலோகத்தில் நந்தன் நாடகம் இதோ...[/size]
______________________________________________________________________________________________________________________________
2054 ஆம் வருடம்,மார்கழி மாதம்,அதிகாலையில் தூக்கத்தில் ஆழ்ந்துருந்திருக்கிறார் நந்தன்.அப்போது பார்க்க பயங்கரமான,விகாரமான தோற்றம் உடைய சிலர் அவரிடம் வருகிறார்கள். அவர்கள் "வா எங்களுடன்", என்று கூறி நந்தனை தர தரவென இழுத்துச் செல்கிறார்கள். (உரையாடல் முழுதும் வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்).
காட்சி௧ள் (வானவீதியில்)
நந்தன்: ஆமாஆஆஆ நீங்கெல்லாம் யாருப்பா..?
யமதூதர்கள்: நாங்கள் யமதூதர்கள். உன் உயிரைப் பறித்துப் போகின்றேம்.
நந்தன் : என்னாது... என் உயிரை எடுத்துட்டீங்களா,சொல்லவேயில்லை.
யமதூதர்கள்: சொல்லிட்டுச் செய்ய நாங்க என்ன தமிழ் சினிமா ஹீரோவா, பஞ்ச் டயாலக் பேசி உயிரை எடுக்க...பொத்திக்கொண்டு இருடா டுபாக்கு...
நந்தன் : ஆமா யமதூதா..., ரம்பா,ஊர்வசி,மேனகா எல்லாம் அங்கிட்டு நல்லா இருக்காங்களா.
யமதூதர்கள் : நீ கொஞ்ச நேரம் வாயை அடைத்துக் கொண்டு வருகின்றாயா கிராதகா..?
நந்தன் : என்னது நீங்க மட்டும் வந்துருக்கிங்க, தேவதூதர்கள்,புஷ்பக விமானம் எல்லாம் நமக்கு வராதா?
யமதூதர்கள்: அடேய் நீ பண்ணிய பாவங்களுக்கு,கெட்ட கேட்டுக்கு அவங்க எல்லாம் வரனுமா?.சும்மா பிணாத்தாம வாடா.
நந்தன்: ஆமா எவ்வளவு தூரம் போகனும்?...இப்பிடி ரொம்பத்தூரமின்னு தெரிஞ்சிருந்தா வரும்போது வீட்டிலிருந்து கொஞ்சம் வொட்காவை எடுத்துவந்திருப்பனே..
யமதூதர்கள்: அடேய்,எங்க பொறுமையை சோதிக்காதே. பேசாம வருகிறாயா நரனே.
நந்தன்: இங்கை திண்ணையும் இல்லை..போகின்ற வழிக்கு பொழுது போகனும் இல்லை...
யமதூதர்கள்: சூலாயுத்தால் வாயில் இடித்து,இப்ப நீ வாயை மூடலைன்னா,அடிச்சே கிழிச்சுடுவேம்.எப்பிடி வசதி.
நந்தன் : அய்யோ, ஆத்தாடி, என்று கப்சிப்.
காட்சி - 2 (எமலோகத்தில் எமனது இறுதி தீர்ப்பு வாசிக்கப்படுகின்றது).
சித்ரகுப்தன்: மன்னா,இவன் ஒரு ஜெகஜாலக் கில்லாடி, நல்லவன் போல நடிப்பவன். இவனை எமலோகத்தில் விட்டு அனைத்து தண்டனைகளும் தரவேண்டும்.
யமன்: அது என் வேலை, நீ முதலில் இவனது குற்றங்களைப் படி.
நந்தன் : அடப்பாவிகளா, இங்கனயும் பதவிப் போட்டியா?.
யமதூதர்கள்:உஷ் வாயை மூடிக்கொள். இல்லை என்றால் உன் தண்டனை இரு மடங்கு ஆகிவிடும்.
நந்தன் : சரி அப்பு.
சித்ரகுப்தன்: மன்னா சொல்ல அசிங்கம், இவன் பள்ளியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது.....
யமன் : சரி,சரி, இரகஸ்யங்களை சப்தம் போடாதே. வாலிபக் குறும்பு. இதுக்கு தண்டனையா, இவனை தகிக்கும் தங்க பதுமையைக் கட்டி அனைக்கச் சொல்லி வறுத்து எடுப்போம்.
நந்தன் : அடப்பாவமே, நான் எப்பவும் தங்கம் என் உடம்பில் கூடப் போட்டதே கிடையாது. கட்டிக்க தங்கப் பதுமையா?. பூலோகத்தில் அப்புறம் ஏன் தங்கம் விலை ஏறாது. சரி இங்கனயாவது போட்டுக்குவேம்.
யமதூதர்கள்: அடேய் அது சூடான கொதிக்கும் தங்கப் பதுமைடா.
சித்ரகுப்தன்:அதுமட்டும் இல்லை இவன் திண்ணையில் குடித்துவிட்டு, ஒருமுறை.......
யமன்: அடேய்,கஸ்மாலம், கேப்மாரி,முடிச்சவிக்கி, உன்னை....
சித்ரகுப்தன்: மன்னாஆஆஆ.. என்ன ஆச்சு தங்களுக்கு உளறுகின்றீர்கள்.
யமன்(சுதாரித்து): ஒன்றுமில்லை,திண்ணை என்றவுடன் அங்கு இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் வெறியில் பேசிக்கொள்ளும் பாசை ஒட்டிக் கொண்டது.இதுக்கு தண்டனையாக இவனை நாலு யமதூதர்களை விட்டு முள்ளுச் சவுக்கால் பரேட்டாவைப் போல அடித்து புரட்டி எடுங்கள்.
சித்ரகுப்தன்: மன்னா இதையும் கேளுங்கள்,லண்டனில் இவன்........
யமன்: அடேய் போதும், போதும் இந்தக் குற்றத்திக்கே இவன் நரகத்தில் பல ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.இதுக்கு தண்டனையாக இவனை எண்ணைச் சட்டியில் போட்டுப் பொறிக்க வேண்டும்.
சித்ரகுப்தன்:இது மட்டும் அல்ல மன்னா, யாழில் இவன் பதில் எழுதுறன் எண்ட பெயரில் கண்டதையும் எழுதி,தானும் குழம்பி,மற்றவர்களையும் குழப்பி உள்ளான்.ஒரு முறை இவன் களௌறவுகளிடம்......
யமன் : அடேய்ய்ய், மேலே சொல்லதே,என் வாயில் கெட்ட வார்த்தை வந்துவிடும்,இதுக்கு இவன் நாவை அறுத்துச் வறுவல் பண்ணுங்கள்.
நந்தன்: என்னது இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு. இதுக்கு முன்னால இவரு புரோட்டாக் கடையில் மாஸ்டரா இருந்தாரா?. வறுக்கனும்,பொறிக்கனும்,வடகம் போடனும்,வறுவல் போடனும் அப்படின்னு தீர்ப்பு சொல்றார்....?
யமன் : அடேய் நரனே. என்ன தைரியம் இருந்தால் என்னை புரோட்டா மாஸ்டர் என்பாய். இதுக்கு உனக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
யமதூதன்: கேட்டாயா, வாயை வைச்சுக் கிட்டு சும்மாயிருந்தா,இப்படி நடக்குமா?
நந்தன் : இல்லைனாலும்,அடப்போய்யா.. நாங்க எல்லாம் எத்தனை பேரைப் பார்த்துருக்கேம்.
சித்ரகுப்தன்: மன்னா,என்ன ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்து விட்டீர்கள்.
யமன்: இந்த நரனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும், என்ன தண்டனை என்ற குழப்பத்தில் உள்ளேன்.
நந்தன்: அப்பாடா, வந்த வேலை முடிஞ்சது. எதே நம்மளால முடிஞ்சது. குழம்பி தீர்வதுக்குள் எஸ் ஆகனும். எப்படிய்ய்ய்.
சித்ரகுப்தன்: மன்னா, இந்த மூன்று தண்டனைகளும் ஒரே காலத்தில் கொடுப்போம். அல்லது தண்டனைக் காலத்தை இன்னமும் அதிகரிப்போம்.
நந்தன்: அடடா, மன்னர் குழம்பினாலும் இந்த அல்லக்கைகள் விடாது போல இருக்கே. சரி சமாளிப்போம். எவ்வளவோ பார்த்துட்டேம்,இது என்ன..
யமன்: மிக மிக கடுமையான தண்டனையாக இருக்கவேண்டும்,அதைப் பார்த்து எவனும் என் முன் வாயைத் திறக்கக் கூடாது.
நந்தன் : பேசாமல் எல்லாரையும் மன்மோகன் ஆக்கிடுங்க...யாரும் வாயைத் தொறக்க மாட்டாங்க...
யமதூதன்: அடேய் உன் தப்புக்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகின்றது.வாயை மூடு.
யமன்: ஆகா கண்டுபிடித்து விட்டேன், மிக கொடுமையான தண்டனை, யாரும் வழங்காத தண்டனை. அற்புதமான, ஆளைப் பையித்தியம் பிடிக்க வைக்கும் தண்டனை.
சித்ரகுப்தன் : ஆவலுடன் மன்னா என்ன அது மன்னா, சொல்லுங்கள்.
நந்தன்: அடாடா,வில்லங்கமா இருக்கும் போல, சரி பொறிக்கறது வீட பெரிசா என்ன தண்டனையைத் தரப்போறானுங்க.
யமன்: டேய் நரனே, அடுக்கடுக்காய் பாவங்கள் பண்ணியது இல்லாமல்,என்னையே கிண்டல் பண்ணத் துனிந்த உனக்கு அதிக பட்ச தண்டனை வழங்குகின்றேன். இதை அனுபவித்து நீ பைத்தியம் பிடித்து அனு அனுவாய் சித்தரவதைப் படுவாய்.
நந்தன் : என்ன தண்டனைன்னு சொல்லாம, புதிர் போட்டா எனக்கு என்ன ஜோசியமா தெரியும்.
யமன்: கோபமாக,சத்தமாக எழுந்து நின்று, அடேய் நரனே, உனக்கு இந்த தண்டனைதான் பொருத்தம். நீ இங்கு இருக்கும் காலம் எல்லாம் தினமும், நீ நெடுக்காலபோவான் எழுதிய பதிவுகள் எல்லாத்தையும் நீயே உக்காந்து படிக்க வேண்டும். இதுதான் நான் உனக்கு வழங்கும் தண்டனை.
நந்தன் : பதட்டமாக, சத்தம் போடத்துவங்கியபடி....அய்யோ அய்யோ அது மட்டும் வேண்டாம், நீங்க சொன்ன எல்லா தண்டனைகளும் ஒட்டு மொத்தமாக தாருங்கள், ஆனா இந்த தண்டனை மட்டும் வேண்டாம் என்று கத்திக்கொண்டு கண்விழிக்கிறார்....
_____________________________________________________________________________________[size=6] [/size]
[size=6]நந்தன் கண்விழிக்கவும்..நாடகம் இனிதே நிறைவேறுகிறது...நன்றி வணக்கம் உறவுகளே..நிழலி மட்டும் தான் போட்டிருக்கும் வாடக்கைக்கு எடுத்த எமதர்மன் உடுப்புகளை தரமாட்டன் என்டு மண்டபத்தின் பின்னால் அடம்பிடிக்கிறார்..இப்பிடியே இருந்து யாழுக்கை வெட்டப்போறாராம்... [/size] “