Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    3054
    Posts
  2. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    5417
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38756
    Posts
  4. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1223
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/03/25 in Posts

  1. ஐபிஎல் 2025 இன் 15வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை 16 ஓட்டங்களிலேயே இழந்திருந்தாலும் பின்னர் வந்த வீரர்களாக அய்ங்கியா ரஹானே, அரைச் சதங்களை எடுத்த அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டங்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர்கள் எல்லோரும் மிகவும் குறைந்த ஓட்டங்களிலேயே விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பவிலியனுக்குத் திரும்பியதால் 16.4 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 120 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 80 ஓட்டங்களால் வெற்றியீட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. நெருப்புடா.. நெருங்குடா.. பார்ப்போம்… நெருங்கினா… பொசுக்கிற கூட்டம்… முடியுமா 💪💪💪🤣
  3. நாளைக்கு 17 கட்சிகள் சேர்ந்த மெகா கூட்டணியோடு களத்தில் இறங்குகின்றோம்............. லக்னோவை உண்டு இல்லை என்று செய்கின்றோம்.............. இந்த மும்பை இன்டியன்ஸூம், சென்னை சூப்பர் கிங்ஸ்ஸும் கிரிக்கெட் விளையாடுவதை விட படம் காட்டுவதில் தான் முன்னுக்கு நிற்கின்றார்கள்........... அது தான் ஒரு சின்ன யோசனை............🙂. யார் கண் பட்டதோ, இன்றைக்கு கதையை ஹைட்ராபாத் முடிச்சிட்டார்களே.............🤣. நாக்கில் கறுப்பு இருக்கும் சில உறவுகள் இங்கு களத்தில் இருக்கின்றார்கள்............😜.
  4. இந்த வருடம் ஒவ்வொரு அணியும் முதலில் தக்கவைக்கிற வீரருக்கு 18 கோடியும், 2 வது வீரருக்கு 14 கோடியும், 3 வது வீரருக்கு 11 கோடியும், 4 வது வீரருக்கு 18 கோடியும் 5 வது வீரருக்கு 14 கோடியும் வழங்க வேண்டும் என விதி இருந்தது. சென்னை அணி 4 capped players தக்கவைத்தார்கள். 4 பேரை தக்கவைப்பதினால் 18+ 14 +11+ 18 = 61 கோடிகளை சென்னை செலவு செய்தது. 18 , 18 கோடிகளுக்கு ஜடேஜா, கைக்வார்ட் ஆகியோரையும், மிகுதி 25 கோடிக்கு ( 14+11) பதிரானா, துபேயினை தக்கவைத்தார்கள். மற்றைய அணிகளில் பல இவ்வாறே வீரர்களை தெரிவு செய்தார்கள். ஆனால் கொல்கத்தா அணி தெரிவு செய்த 4 capped வீரர்களுக்கு 49 கோடி மட்டுமே செலவு செய்ய முன் வந்தது. மிகுதி 12 கோடி ( 61- 49) அவர்கள் செலவு செய்யவில்லை. உபயோகிக்காத 12 கோடியும் ஏலத்திலும் செலவு செய்ய முடியாது . 49 கோடியில் 4 வீரர்களை (13,12,12,12) ரிங்கு சிங், ரசல், சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தியினை வாங்குவதற்கு செலவு செய்தார்கள். இந்த 4 வீரர்களும்தான் இந்த விலையை ஏற்றுக்கொண்டார்கள். சென்னை, மும்பாய், ராஜஸ்தான், SRH போல வீரர்களை தக்கவைக்க செலவு செய்திருந்தால் ஷிரேயாஸ் அய்யர், மிச்சல் சார்க், குல்தீப் ஜாதவ் போன்றவர்களை தக்க வைத்திருக்கலாம். 2022 இல் நடந்த மெகா ஏலத்திலும் இவ்வாறே தக்க வைத்த வீரர்களுக்கு குறைந்த பணத்தினையே KKR செலவு செய்தது. குறைந்த பணத்துக்கு ஏற்று கொண்டவர்கள் தக்கவைக்கபட்டார்கள்.
  5. K என்ற வார்த்தை நாம் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றிப் பல விஷயங்கள் நடந்தாலும் அதனைக் கவனிக்காமல் கடந்து செல்கிறோம். உதாரணத்திற்குப் புதிதாக கார் ஓட்ட கற்று கொள்வார்கள் வண்டியின் பின்னாடி 'L' என்று சிவப்பு நிறத்தில் போர்டு ஒட்டப்பட்டு இருக்கும். அதற்கு என்ன அர்த்தம் என்று நம்மில் பலருக்குத் தெரியாது. ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க! | அதனை அறிந்து கொள்ளவும் விரும்புவதும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மையும் கூட. அதுபோன்று 1000 என்ற எண்ணிற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாகவே சமூக வலைத்தளங்களிலும் சரி பணத்திலும் சரி, மில்லியன் என்ற எண்ணிற்கு 'M' என்ற எழுத்தும், பில்லியன்-க்கு 'B என்ற குறியீடும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ‘1000’ என்ற எண்ணிற்கு மட்டும், ஏன் 'K' பயன்படுத்தப்படுகிறது. சரியாகச் சொல்லப்போனால் ஆயிரம் (Thousand) என்பதன் சுருக்கத்தை T என்று தானே குறிப்பிட வேண்டும். ஆனால் ஏன் ‘K’ என்று குறிப்பிடுகின்றோம்.இதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கிரேக்கம் மொழியில் 'chilioi' என்றால் ஆயிரம் (1000) என்று பொருள். கிரேக்க வார்த்தையான Chilioi என்பது பிரெஞ்சுக்காரர்களால் கிலோ(Kilo) என்று சுருக்கப்பட்டது. அதன் பின் கிலோ மீட்டர், கிலோ கிராம் போன்றவை கணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கணிதத்தில் "K" என்ற எழுத்து ஆயிரத்தைக் குறிக்கிறது. எனவே, "1K" என்பது 1,000 க்கு சமம் ஆகும். இதன் காரணமாகத் தான் 'Kilo' என்பதற்காகத் தான் ‘K' என்ற குறியீடு கொடுக்கப்படுகிறது. எனவே ஆயிரம் என்பதற்கு 'T' என்ற எழுத்து பயன்படுத்துவதில்லை படித்ததில் பிடித்தது
  6. தனிய அதுமட்டும் குற்றமில்லையாம் ..வாழ் வெடூகுழுவுடன் தொடர்பு..மோசடி.பிரபலமான வக்கீல்கள் வைத்தும் முடியவில்லை என்று வேறு வேறு செய்திகள் சொல்கின்றன ..அரசியல் காரணம் இருக்காது
  7. பஞ்சபாண்டவர்கள் போல நாங்கள் ஐந்தே ஐந்து பேர்கள் தான்............ அந்தப் பக்கம் பெரிய சேனையே நிற்குது போல............... தர்மம் வெல்லும்............😜.
  8. 🤣 இன்னும் நிறைய போட்டிகள் இருக்குது தானே........... எல்லோரும் மேலே போய், கீழேயும் வருவோம்......... சாம்பியன் ட்ராபி போட்டிகளில் பாகிஸ்தானை நம்பி இறங்கி, முதலாவதாக நட்டாற்றில் மூழ்கியதற்கு இது பரவாயில்லை....................🤣. முதலமைச்சர் தான் வேண்டும் என்றில்லை, அண்ணா............ உள்துறை, நிதித்துறை என்று கிடைத்தாலும் சந்தோசமே..............🤣.
  9. Offensive ? So What ? - சோம.அழகு நீங்கள் எந்த வயதினராகவும் இருக்கலாம். ஏற்கெனவே உங்களுள் ஊறிப் போன கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் தாண்டி ஏரணம் மிகுந்த நியாயமான கேள்விகளுக்கு உங்கள் மனதில் இடமளிக்கும் அளவிற்குப் பக்குவம் பெற்றவராயின் தொடரலாம். அறிவைத் தக்கனூண்டு அளவில் பயன்படுத்தினாலே உள்ளம் துக்கப்பட்டு துயரப்பட்டு காயப்பட்டு புண்பட்டு உழல்வோராயின் இப்புள்ளியிலேயே விடை பெற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உணவு, உறைவிடம் ஆகியவற்றைத் தேடிக் கொள்வதும் நமது பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்வதும் உள்ளுணர்வாக இருக்கையில் இறை என்பது இயற்கையான உள்ளுணர்வாக ஏன் இல்லை? அல்லது இறைவன் ஏன் அதை உள்ளுணர்வாக இயற்றவில்லை? இறை போதிக்கப்படாவிட்டால் திணிக்கப்படாவிட்டால் முற்றிலும் மறைந்து விடும் தன்மையானதாக ஏன் இருக்கிறது? ஒரு குழந்தை ஐரோப்பா/இந்தியா/இஸ்ரேல்/ சவுதி அரேபியாவில் பிறக்குமாயின் அது பெரும்பாலும் கிறித்தவ/இந்து/யூத/இசுலாம் மதத்தைச் சார்ந்ததாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். எனில் மதம் என்பது முற்றிலும் புவியியல் சார்ந்தது. எனவே இறை நம்பிக்கை என்பது தானாகக் கிட்டும் தெய்வீக அனுபவமோ ஒரு நிலையான உண்மையோ அல்ல. எனவே ஒரு குறிப்பிட்ட தலைமுறையில், அனைத்து குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களான பின் சுமாராக இருபது வயதிற்குப் பின்னர் தான் அவர்களுக்கு மதமும் கடவுள் நம்பிக்கையும் சொல்லித்தரப் பட வேண்டும் என உலகம் முழுக்க ஒரு தீர்மானம் கொண்டு வரப் பட்டால் அத்தலைமுறையோடு அனைத்து மதங்களும் அழிந்துவிடும். ‘ஓர் ஆசுவாசத்தைத் தருகிறது’, ‘மன அமைதியைக் கொடுக்கிறது’… என பிறருக்குத் தொல்லை தராத வரை ஒரு தனிநபரது கடவுள் நம்பிக்கையில் எப்பிரச்சனையும் இல்லை. ஆனால் உடன்பாடு இல்லாத பிறர்மீதும் அர்த்தமற்ற சடங்குகளைத் திணிக்கும் போதும் பெரும்பாலான பக்திப் பரவச உரையாடல்களில் “அப்டிங்களா… ரொம்ப சந்தோசம்… நன்றி” என்று வெறுமனே கடந்து செல்ல முனையும் என்னைக் கிட்டத்தட்ட ‘சண்டைக்கு வா’ என அழைப்பு விடுக்கும் போதும் அவர்களின் மடமையை நான் பரிகசிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். அதிலும் சிலர் வம்படியாக வந்து என்னுள் கடவுள் நம்பிக்கையை விதைக்கும் நற்பொறுப்பை ஏற்று அதை ஏதோ தாம் இறைவனுக்கு ஆற்றும் தொண்டாகக் கருதி அதில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு, பின்னர் மலங்க மலங்க முழித்தவாறே திரும்பிச் சென்ற சுவாரஸ்யமான தருணங்கள் சில உண்டு. அவ்வப்போது வாசிக்கக் கிடைத்த பெரும் ஆளுமைகள் பதிலுரைக்கும் போது மிகச் சரியாக வந்து கை கொடுத்திருக்கிறார்கள்! “நம்மை மீறிய அற்புத சக்தி ஒன்று நிச்சயம் இருக்கிறது. நம்பு, நம்பிக்கைதானே எல்லாம்” “சரி. நிரூபியுங்கள்” “உனக்குத்தானே சந்தேகம்? நீ இல்லைன்னு நிரூபி, பார்ப்போம்” “ஓ! நீங்க அப்பிடி வர்றீங்களா? அப்ப சரி. நான்தான் அந்த அற்புத சக்தி” “அது எப்படி?” “உங்கள் தர்க்க படி, உங்களுக்கு சந்தேகம்னா இப்போ நீங்கதான் நிரூபிக்கணும், நான் அற்புத சக்தி இல்லனு!” “கடவுள் சர்வ வல்லமை படைத்தவர்” “நானும்தான்” “உன்னால கடவுள் செய்யுறத எல்லாம் செய்ய முடியுமா?” “நடக்குறதெல்லாம் பாத்துட்டு கம்முன்னு கல்லாட்டம் இருக்கணும்தான? கொஞ்சம் கஷ்டம்தான்” “பகுத்தறிவாளர்கள் ஏன் கடவுளைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” “மருத்துவர்கள் ஏன் நோய்களைப் பற்றிப் பேசுகிறார்கள்?” “இறையின் இடத்தை எதைக் கொண்டு சமன் செய்வாய்?” “புற்றுநோய்க் கட்டியை அகற்றிய பின் அவ்விடத்தை எதைக் கொண்டும் நிரப்ப வேண்டியதில்லை” “கடவுள் நம்பிக்கையே இல்லாவிட்டால் வாழ்வின் அர்த்தம்தான் என்ன?” “ ‘எஜமானர்களே இல்லாவிட்டால் நான் யாருக்கு அடிமையாக இருப்பது?’ என கவலைப்படுகிறீர்களா?” (உபயம் : Dan Barker) “பொதுவுடைமை, பகுத்தறிவாதம்லாம் கேட்க நல்லாருக்கும்; நடைமுறைக்கு சரி வராது” “முதலாளித்துவம், மதம்லாம் கேட்கவே நல்லா இல்லையே” “ ‘ஒரு’ கடவுளின் மீது கூடவா நம்பிக்கை இல்லை?” “மடமை எவ்வுருவில் எப்பெயரில் வந்தால் என்ன?” “என்ன நடந்தால் நம்புவாய்?” “பெரியார் சொன்னதைப் போல் நேரில் வந்தால் நம்பி விடுவேன்” “நம்பிக்கையற்ற உனக்கு ஏன் தரிசனம் தர வேண்டும்?” “என்னை நம்ப வைக்க!” “அதீத பக்தியுடன் இருக்கும் எங்களுக்கே தரிசனம் கிட்டியதில்லை” “Exactly. அப்புறம் எதுக்கு நம்பிகிட்டு?” “புனித நூல்களைக் கொஞ்சம் வாசி. அப்போதாவது உன்னில் மனமாற்றம் வருகிறதா, பார்க்கலாம்” “பேசும் பாம்புகள், ஏழு தலை உயிரினங்கள், சூரியனை விழுங்கும் குட்டி குரங்கு, எலியின் மீது அமர்ந்து வலம் வரும் யானை, மலையைச் சுமக்கும் பறக்கும் குரங்கு…. – இவை இடம் பெற்றிருப்பவற்றை புனித நூல்கள் என்பதை விட ‘புனைவுகள்’ என்று கூறினால் சாலப் பொருத்தமாயிருக்கும். அவற்றைக் கொஞ்சம் வாசித்த பிறகுதான் கடவுள் இருப்பு குறித்த சந்தேகங்கள் முற்றிலும் அகன்று, ‘கருப்பு’ மனதிற்கு நெருக்கமாகிப் போனது” “ப்ச்… எவ்வளவு நன்னெறி ஒழுக்கங்கள் மதிப்பீடுகள் கற்றுக்கொள்ளலாம் தெரியுமா?” “அதற்கெல்லாம் உங்களுக்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறதா? சரி எது தவறு எது என்று பிரித்தறியக் கூடவா தெரியாது?” “இவ்வளவு பெரிய அண்டம் இத்தனை அற்புதங்களுடன் தானாக உருவாகியிருக்கவே இயலாது. அனைத்து உயிரினங்களும் தாமாக உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை” “ஹ்ம்ம்… பூமியை உருவாக்கி பரிணாம வளர்ச்சிக்கான ஆதாரத்தையும் அதிலேயே விட்டு அதை கண்டறியும் அறிவையும் நமக்குத் தருவானேன்? நாம் சந்தேகம் கொண்டு இறையின் இருப்பைக் கேள்வி கேட்டு நரகத்திற்குச் செல்ல வேண்டியா? நமக்குச் சிந்திக்கும் ஆற்றலைத் தந்து அதைப் பயன்படுத்துவதற்குத் தடையும் விதித்து வினோதமான வழிமுறைகளுடன் இயங்குகிறார் கடவுள்” “கடவுள் அன்பே உருவானவர். நீ ஏன் அவரை வெறுக்கிறாய்?” “முதலாவதாக நீங்கள் இந்த உருவகத்தின் மூலம் அன்பைக் கொச்சைப்படுத்துகிறீர்கள். இரண்டாவதாக, இல்லாத ஒன்றை எப்படி நான் வெறுக்க இயலும்? கடவுள் என்னும் பெயரில் உலவும் கருத்தாக்கத்தைத்தான்(concept) வெறுக்கிறேன்” “நீ அவரது அன்பை உணர மறுக்கிறாய்” “ஆமாமா! இஸ்ரேலியர்கள் மனிதத் தன்மையுள்ளவர்கள்; இந்திய ஒன்றிய அரசு இஸ்லாமியர்களை நேசிக்கிறது; பார்ப்பனர்கள் சனாதனத்தை அடியோடு வெறுப்பவர்கள்;…. கடவுளும் அன்பானவர்தான். உணர்ந்துட்டேன்” “சரி! உன்னைப் பொறுத்த வரை கடவுள்னா என்ன?” “பசியில் வாடும் குழந்தைகளின் முனகல்கள், புற்றுநோயுடன் போராடும் குழந்தைகளின் வலி மிகுந்த அழுகைகள், வன்புணர்வு செய்யப்படும் குழந்தைகளின் ஓலங்கள், காஸாவில் தனது ஏழு வயது மகனின் தலை மட்டும் தனியாகக் கிடைக்க அதைக் கையில் ஏந்தியபடி வெளிப்பட்ட ஒரு தந்தையின் கேவல்கள், பிரசவித்த மறுநொடியே தன் குட்டியைச் சிங்கக் கூட்டத்திடம் இருந்து காப்பாற்ற முயன்று போராடி இறுதியில் இயலாமல், தாயும் (நிற்கப் பழகுவதற்குக் கூட நேரம் கிட்டாத) மான்குட்டியும் இரையாகிப் போகும் போது காடு அதிர கேட்கும் வெற்றி கர்ஜனை - இவை அனைத்தும் விண்ணை முட்டி வெளியை (space) அடையும் போது இவற்றிற்குப் பதிலாகக் கிடைக்கும் காதைக் கிழிக்கும் குரூரமான அமைதியின் பெயர்தான் ‘கடவுள்’!” இவற்றுக்கெல்லாம் உச்சகட்டமாக எரிச்சலூட்டும் ஒரு வாதம் உண்டு. “நானும் ஒரு காலத்தில் உன்னை மாதிரிதான் இருந்தேன்” - “மொதல்ல தெளிவாதான் இருந்தேன்; அப்புறம்தான் மண்ட கோளாறு வந்துச்சு” என்பதில் என்ன பெருமை? இப்படிச் சொல்வதன் மூலம் தமது மடமையை இன்னும் அதிகப்படுத்திக் கொள்கிறார்களே அன்றி வேறென்ன? ஏதோ இப்போது உலகம் புரிந்துவிட்டதாகவும் தான் ஞானி ஆகி விட்டதாகவும் நம்மை நம்ப வைக்கும் பரிதாப முயற்சிகள் எதற்கு? கொள்கை பிடிப்புள்ள பகுத்தறிவாளர் யாரும் எந்தக் கட்டத்திலும் மனமாற்றம் அடைந்து இறையைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். எனவே இவ்வாறு பேசுபவர்களுள் துவக்கத்திலிருந்தே ஆத்திகமும் ஒருபிடி அடிப்படைவாதமும் உறைந்தே இருந்திருக்கிறது என்றுதான் பொருள். “நானும் (சிறுவயதில்) உங்களைப் போல்தான் இருந்தேன். நீங்கள் பொய்களை நம்பத் தொடங்கிய காலத்தில் நான் அதைக் கைவிடத் துவங்கியிருந்தேன்” என பதிலுக்குச் சொல்லச் சொல்லி அரித்தெடுக்கும் மனதைப் பல முறை அமைதிபடுத்தியிருக்கிறேன். எல்லாரும் நாத்திகர்களாகத்தான் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள் - பயமும் மதமும் விதைக்கப்படும் வரை. “வளர வளர புரியும்” என்கிறார்கள். வளர வளர என்னிடம் கேள்விகள்தாம் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அடுத்ததாக இன்னும் ஒரு படி மேலே சென்று சிலர் “கடைசி காலத்தில் இறையை உணருவாய்” என்று சாபம் விடும் தொனியில் கூறும் போதுதான் சிரிப்பை அடக்க இயலாது எனக்கு. என் மரணப் படுக்கையில் இல்லாத கடவுளைப் பற்றி ஏன் எண்ணிக் கொண்டிருக்கப் போகிறேன்? அப்பாவிடம் இன்னும் ஒரு ரசனையான சங்கப் பாடலைச் சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கலாம்; அம்மாவின் கையால் இன்னும் ஒரு நெய் தோசை சாப்பிட்டிருக்கலாம்; என் மகளை இன்னும் ஒரு முறை இறுக அணைத்து அன்பைப் பொழிந்திருக்கலாம்; என்னவனுடன் இன்னும் ஒரு பயணம் சென்றிருக்கலாம்; இன்னும் ஒரு புத்தகம், ஒரு நல்ல சினிமா, இசைக்கோர்வை என ரசித்திருக்கலாம்… இப்படித்தான் நீளும் என் சிந்தனைகள். மேலும், ஒருவேளை உண்மையாக இருந்தாலும் கூட (வாய்ப்பில்லை! சும்மா ஒரு பேச்சுக்கு) அத்தருணத்தில் இறையை உணார்ந்துதான் என்ன ஆகப் போகிறது? You have the right to believe in what you want; I have the right to believe it’s ridiculous – Ricky Gervais ஒரு முறை வீட்டில் நான் தலை சீவிக் கொண்டிருக்கையில் சாமி கும்பிட வரச் சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே என்ன தோன்றியதோ? விளையாட்டாக இவ்வாறாக பதில் கூறினேன் – “இச்சீப்பின் வழியாக ஆண்டவனாகிய கடவுளிடம் எல்லாம் வல்ல இறைவனிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்”. “பைத்தியம்! சீக்கிரம் வா” என்று சிரித்தவாறே சென்றுவிட்டார் அழைக்க வந்தவர். அவ்வாக்கியத்தில் ‘சீப்பு’ என்ற சொல் ஒன்றுதான் பிரச்சனையாகப் பட்டிருக்கிறது, பாருங்களேன்! மற்றபடி அடுத்த அறைக்கு சென்று சில வண்ண வண்ணப் படங்களைப் பார்த்துப் பேசுவது, கல்லைப் பார்த்துப் பேசுவது, உத்திரத்தை நோக்கிப் பேசுவது, சுவற்றுடன் பேசுவது, நெடுஞ்சாண் கிடையாகவோ மண்டியிட்டோ விழுந்து தரையுடன் பேசுவது – இவையெல்லாம் நல்ல மனநிலையில் உள்ளவர் செய்வதற்கு ஏற்றவைதானாம். “நீங்கள் மனமுருகி பிரார்த்தனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள்; நான் அவ்வாறு செய்வதாக நடிக்கிறேன்” – இரண்டிற்குமான பலன்களில் என்ன வித்தியாசம் என்று காண விருப்பம். கோவில் வாசலில் இரப்பவனின் தட்டில், உள்ளே செல்லும் சாமானியன் இடும் அதே அலட்சியமும் மௌனமும் கருவறையில் வீற்றிருக்கும் கல்லிடம் இருந்து அச்சு பிசகாமல் அப்படியே சாமானியனுக்கும் கிட்டுவதுதான் இயற்கையின் சமநிலை! “எனது நம்பிக்கையால் நான் இதைச் செய்கிறேன்/செய்ய மாட்டேன்” என்ற அளவில் இருப்பது “எனது நம்பிக்கையால் நீ இதையெல்லாம் செய்/செய்யாதே” என்றாகும் போதுதான் பிரச்சனையே! ஒரு கட்டத்தில் ‘சரி! செய்துவிட்டுத்தான் போவோமே! இச்செய்கைகள் என்னில் என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து விடப் போகின்றன?’ என பிறரது நம்பிக்கைகளை மதிக்கும் பொருட்டு விளக்கேற்றி பூஜை செய்தாலும் ‘கடமைக்குன்னு செய்றதுக்கு எதுக்கு செய்யணும்?’ என்ற அஸ்திரம் வரும். பகுத்தறிவாத நங்கைகளிடம் “உன் நம்பிக்கையில் நான் தலையிட மாட்டேன்” என்று கூறும் ஆத்திகர்களை ஓரளவு முற்போக்குவாதிகளாக நான் அனுமானித்து வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. அதாகப்பட்டது ஓர் இறை மறுப்பாளரின் நம்பிக்கையைத் தவறென்று நேரடியாகப் பழித்துரைக்காது இச்சமூகம். சடங்குகள், வழிபாட்டு முறைகள் என எல்லாவற்றையும் அவர் ஒழுங்காகப் பின்பற்றிவிட வேண்டும் என்று மட்டுமே எதிர்ப்பார்க்கப்படும். (என்னே உங்கள் சனநாயகம்!) அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் எனது பிம்பம் கண்ணாடியில் எதிரொளிக்கும் போது எனக்கு ஊன்றுகோலாயிருக்கும் பகுத்தறிவுப் பகலவனின் கைத்தடியும் என் பார்வையை விசாலமாக்கித் தெளிவுபடுத்தித் தரும் அன்னாரது கண்ணாடியும் கொஞ்சம் கொஞ்சமாக என்னில் இருந்து தூரமாக விலக ஆரம்பித்தது போல் இருந்தது. மீண்டும் மீண்டும் அவற்றை இறுகப் பற்றிக் கொள்வதில்தான் புதைந்திருக்கிறது என் ஆளுமை! ஒரு தனிமனிதனின் மதிப்பீடுகள் வாழ்வியல் நெறிமுறைகள் ஒழுக்கங்கள் ஆகியவற்றை இறை நம்பிக்கையோடு சிக்கலான முடிச்சு போட்டே பார்த்துப் பழகிய சமூகத்திற்குப் புரியாத புதிராக விளங்கும் ஒன்று – இறை மறுப்பாளர்களால் எவ்வித கண்காணிப்பு சாதனமும் இன்றி தாமாகவே நல்லவர்களாகவும் கற்பனையான உந்துதலின்றி தன்னம்பிக்கையாளர்களாகவும் இயங்க இயலும் என்பதே! எவ்வித ஆதாரங்களும் இன்றி நம்பப்படுவது எனில் மதத்திற்கும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட பொய்களால் ஆன ஒரு ஸ்தாபனத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன? மதம் என்பது மனிதத்திற்கும் மனித குலத்தின் மதிநுட்பத்திற்கும் இழைக்கப்பட்ட துரோகம், மாபெரும் அவமதிப்பு. அறிவுக்கு நேர்மையாக நடந்து கொள்வதன் இயற்கை விளைவாகிய பகுத்தறிவாதம் என்பது உண்மையும் நம்பிக்கையும் ஒரே புள்ளியாகி ஒன்றாக சங்கமிக்கும் இடம். நாம் முன்வைக்கும் ஒரு வாதத்திற்கு ஏரணத்திற்குட்பட்ட ஒரு சரியான எதிர்வாதம் இல்லாதவர்களின் கடைசி புகலிடம் - ‘It’s offensive’. இதன் பின்னால் ஒளிந்து கொண்டால் தாம்தான் சரியென்றும் ஒரு படி மேலே சென்றுவிட்டதாகவும் இவர்களுக்கு யார் சொல்லித் தந்தது? ‘That’s offensive’ is not an argument – Christopher Hitchens இனி ‘offensive’ஐ தூக்கிக் கொண்டு வருபவர்களுக்கு எனது பதில், “So What?” "One day Atheism will disappear as a concept. Instead there will be normal people and some weirdo believers" – Frank Zappa நன்றி - 'கீற்று' இணைய இதழ். https://www.facebook.com/share/r/1AaTbmWWi1/
  10. இன்றைய அதிசயம் ------------------------------ பிள்ளையார் இயேசு பெருமான் புத்த பெருமான் இப்படி பல தெய்வங்களில் இருந்து நீர் பால் இரத்தம் கூட உலகில் அங்கங்கே வடிந்து கொண்டிருக்கின்றது இது அதிசயம் ஒரு துளி ஈரமும் வருடங்களாக காணாமல் வறண்டு வெடித்து ஒரு இடம் அங்கே ஒரு வெள்ளைக் கொக்கு ஓடின ஓணாணை பிடித்து அப்படியே முழுங்கியது இதுவும் அதிசயம் கடுங்குளிர் காலத்திலும் நெருப்பாக வெயில் எரிய அனல் காற்றும் சேர அந்த இடமே பற்றி எரிந்தது இது அவலமான அதிசயம் இன்று மொட்டை மரம் ஒன்றில் கண்களை மூடியிருந்த குருவிகள் 'இது என்ன அதிசயம் தண்ணீர் மேலே இருந்தும் விழுமா............' என்று என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே உறைந்து நிற்கின்றன வானம் பிளந்து கொட்டும் மழையில் இங்கு இன்றைய அதிசயம் இதுதான்.
  11. எல்லோரும் எங்கட கட்சி ஆட்கள் தான். வேவு பார்க்க அனுப்பியுள்ளோம்.
  12. அதுதான் எனக்கும் ஆசை.லக்னோ வெல்லும் @alvayan முதலமைச்சரென்ன பிரதமரே ஆகலாம் ஆக்குவோம். அதுசரி பாதயாத்திரை போகலையோ? செருப்பு என்ன மாதிரி? அல்வாயன் உங்க காலைகாலையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
  13. முதல்வர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.
  14. GMT நேரப்படி நாளை வெள்ளி 04 ஏப்ரல் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG எதிர் MI 06 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 17 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் அல்வாயன் பிரபா நந்தன் புலவர் அகஸ்தியன் மும்பை இந்தியன்ஸ் வசீ வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  15. ஏழு கணவரை வரும்படி கேட்டால் மனிசன் கணக்குப் பார்த்திட்டு நீ மட்டும் போட்டுவா. நான் நெடுக லீவு எடுக்கேலாது என்றுவிட, எனக்கு மட்டும் ஏர் லங்காவில் டிக்கற் போடுகிறேன். நேரம் அதிகம் என்றாலும் 40 கிலோ கொண்டு போகலாம். அங்கு வருவதாக மச்சாளுக்கும் அன்ரிக்கும் மட்டும் சொல்கிறேன். ரதி அக்காவுக்கோ வீட்டில் இருக்கும் பெடிக்கோ எதுவும் சொல்லவில்லை. விடியக் காலை ஐந்து மணிக்கு இணுவிலில் போய் இறங்கி குளித்து மச்சாள் வீட்டில் சென்று உணவருந்திவிட்டு ஓட்டோவில் மச்சாளிடம் திறப்புகளை வாங்கிக்கொண்டு என் வீட்டுக்குச் செல்கிறேன். கேற் பூட்டாமல் சாத்தியிருக்க திறந்துகொண்டு ஓட்டோக்காரரையும் உள்ளே வரும்படி கூறிவிட்டு செல்கிறேன். வீட்டுத்திண்ணையில் இருவர் கதைத்துக்கொண்டு இருக்கின்றனர். இதில் எவர் வீட்டில் இருப்பவர்? அனேகமா இவராகத்தான் இருக்கும் என்று எண்ண, அக்கா நீங்கள் வீட்டுக்காற அக்காவா வாங்கோ என்று மற்றவர் என்னை எழுந்து வரவேற்கிறார். இவர் என் நண்பர் அஜந்தன் என்று அறிமுகம் செய்தும் வைக்கிறார். “இவர் வேலைவெட்டிக்குப் போறதில்லையோ” “நான் வேலைக்குப் போறதில்லை அக்கா. எட்டு மாடுகள் வளர்க்கிறன். அதோடையே நேரம் போயிடும்” “ஓ அப்பிடியே” ரஜிதன் – அவர்தான் என் வீட்டில் இருப்பவர், கதிரை ஒன்றைக் கொண்டுவந்து போட நான் ஓட்டோக்காரருக்கும் ஒரு கதிரை கொண்டு வாங்கோ என்கிறேன். ஒரு கதிரை தானக்கா இருக்கு என்கிறார். ஏன் நான் இரண்டு கதிரைகளை வெளியே வைத்துவிட்டுத்தானே சென்றேன் என்கிறேன். நான் இதிலேயே இருக்கிறேன் என்று திண்ணையில் அமர்கிறார் ஓட்டோக்காரர். அவர் எம்மூரவர். அவரின் ஓட்டோவில் தான் நாம் எப்போதும் திரிவது. கொஞ்சநேரம் வீட்டைப் பார்த்துவிட்டு அவருடனேயே திரும்பிப் போவதாக எண்ணம். ரஜிதன் தேநீர் போட்டுக்கொண்டு வருவதாகக் கூற வேண்டாம் என்கிறேன். பரவாயில்லை அக்கா குடியுங்கோ என்று என்வீட்டிலேயே என்னை உபசரிக்க, நான் சுற்றிவரப் பார்க்கிறேன். முன்பக்க வளவு சுத்தமாக இருக்க நான் என் பூங்கன்றுகள் மற்றும் வளவைச் சுற்றிப் பார்க்கிறேன். மீண்டும் வரத் தேனீரைக் கொண்டுவந்து எல்லோருக்கும் தருகிறார். நீங்கள் வந்தது ரதி அன்ரிக்குத் தெரியுமோ என்கிறார். இன்னும் சொல்லவில்லை. போகும்போது அவவிடம் போய்விட்டுத்தான் போவேன் என்கிறேன். அவர் ஊற்றிய தேநீர் நன்றாக இருக்கிறது. ஓட்டோவை அனுப்பிவிடுங்கோவன் அக்கா என்கிறார். நான் ரதி அக்காவோட கதைச்சிட்டுப் போகபோறன். நாளை வாறன் என்கிறேன். நான் காலை ஆறரைக்கு வேலைக்குப் போய் 11 மணிக்கு வருவன். பிறகு 3 மணிக்குத் திரும்ப வேலை. 2.30 இக்கு போயிடுவன் என்கிறார். நீங்கள் உங்கள் அலுவலைப் பாருங்கோ. என்னட்டைத் திறப்பு இருக்கு. நான் என்பாட்டில வருவன் என்கிறேன். தனிய நிக்கப் பயம் இல்லையோ என்கிறார். என் வீட்டில் நிக்க என்ன பயம் என்றுவிட்டு தேநீர் கோப்பைக் கழுவ சமையலறைக்குச் செல்ல, என்னட்டைத் தாங்கோ அக்கா என்கிறார். நான் குடித்த கப்பை நானே கழுவிகொள்கிறேன் என்றபடி குசினுக்குள் செல்கிறேன். குசினி சுத்தமாக இருக்க மனம் நிம்மதியாகிறது. அதன் பின்னர் ரதி அக்காவிடம் சென்று அவருடன் பேசிவிட்டு நாளை வருவதாகக் கூற, பெடியன் என்ன மாதிரி என்கிறா. ஒரு அரை மணித்தியாலம் பாத்து முடிவு செய்ய ஏலாது தானே அக்கா என்றுவிட்டுக் கிளம்புகிறேன். நாம் லண்டன் வரும்போது மனிசன் ஸ்கூட்டியின் பற்றியைக் கழற்றிவிட்டு வந்தார். முன் வீட்டில் இரண்டு ஆண்கள் இருக்கின்றனர். அவர்களை பற்றியைப் பூட்டித் தரும்படி கேட்க, தமக்குத் தெரியாது என்கின்றனர். தாயார் முன்னால் வந்து ஓடுற வாகனம். அரைகுறையாய்ப் பூட்டி ஏதும் நடந்தாலும் வீண்பழி. எதுக்கும் மெக்கானிக் ஆரையன் கூப்பிட்டுப் பூட்டுங்கோ என்கிறா. எனது ஸ்கூட்டியின் மெக்கானிக் சுண்ணாகத்தில் இருக்கிறார். அவருக்குப் போன் செய்ய, தான் எலெக்சன் வேலையில் மும்மரமாக இருப்பதாகக் கூற, எந்தப் பார்ட்டிக்கு ஆதரவாக வேலை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு “நான் சுயேட்சையா நிக்கிறன் அக்கா. அதனால வேறு யாரையும் கூப்பிடுங்கோ” என்கிறார். அடுத்தநாள் மீண்டும் ஓட்டோவை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்கிறேன். போகும் வழியில் மருதனார் மடத்தில் உள்ள கடையில் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு செல்கிறேன். ஓட்டோவை மீண்டும் மாலை 5 மணிக்குவரும்படி கூறிவிட்டு கேற்றைத் திறந்து மீண்டும் பூட்டால் பூட்டிக்கொண்டு வீட்டையும் திறந்து உள்ளே செல்கிறேன். சுவாமி அறை, மற்ற அறை எல்லாம் சுத்தமாகவே இருக்கு. எங்கள் அறையைத் திறக்கிறேன். அது பூட்டி இருந்தபடியால் கொஞ்சம் காற்றோட்டம் இன்றி இருக்க யன்னல்களைத் திறந்துவிட்டு கூட்டுகிறேன். கட்டில் விரிப்பை அலம்பி வெளியே காயவிடச் சென்றால் நாம் கட்டியிருந்த கயிற்றைக் காணவில்லை. ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துவிட்டு 11.00 இக்கு பெடிப்பிள்ளை வருவார் தானே கேட்போம் என்றுவிட்டு அலுவல்களைப் பார்க்கிறேன். எமது இரண்டாவது அறையையும் திறந்து யன்னல்கள் எல்லாம் திறந்துவிட்டு மேலோட்டமாகப் பார்க்க எல்லாம் வைத்தது வைத்தபடி இருக்கிறது. மீண்டும் கதவைப் பூட்டிவிட்டு வெளியே சென்று கன்றுகளைப் பார்க்க இரண்டு தென்னங்கன்றுகளை மாடு கடித்து மொட்டையாக்கிவிட்டிருக்கு. இரண்டு வாழைகள் குலையுடன் முறிந்துகிடக்கின்றன. பின்பக்கம் முழுதும் புற்கள் காடாய் வளர்ந்துபோய் கிடக்கின்றன. 11.30 மணி போல் பெடியன் வருகிறார். அக்கா என்ன சாப்பிடுறியள்? நானே சமைக்கிறன் என்கிறார். நான் வரும்போதே இடியப்பம் உமக்கும் சேர்த்து வாங்கி வந்தனான் என்கிறேன். நான் மத்தியானம் சோறுதான் சாப்பிடுறனான் என்கிறார். சரி நீர் உமக்கு மட்டும் சமையும். எனக்கு வேண்டாம் என்கிறேன். ”நாளைக்கு கட்டாயம் என்ர கையாலதான் நீங்கள் சாப்பிடவேணும்” “எனக்கு நான் சமைத்து சாப்பிடுவதுதான் விருப்பம்” “அக்கா நான் லீவு எடுத்துவிட்டு உங்களை எங்க வேணுமெண்டாலும் என்ர ஸ்கூட்டியில கூட்டிக்கொண்டு போறன்” “அதுக்கு அவசியமே இல்லை. என்னட்டையும் ஸ்கூட்டி இருக்கு” “அப்ப உங்கட ஸ்கூட்டியிலேயே போவம்” நான் மனிசனைத் தவிர வேறை யாருக்கும் ஸ்கூட்டியைக் குடுக்கமாட்டன். அதோடை எனக்கு ஒரிடமும் போகத் தெரியாது எண்டு நீர் எனக்கு ஊர் சுத்திக்காட்டப் போறீரோ? என்னைப் பற்றி உமக்குத் தெரியேல்லை” “இல்லை அக்கா நீங்கள் வெளிநாட்டிலை இருந்து வந்திருக்கிறியள்.. அதுதான்” “அதுசரி பிலாமரத்துக்கும் மாமரத்துக்கும் இடையில கட்டியிருந்த கொடியைக் காணேல்லை. நான் பெட்சீற்றை அலம்பிப்போட்டுப் பார்த்தால் ஒண்டும் இல்லை” “எனக்கு அதைப்பற்றித் தெரியாது அக்கா. நான் அந்தக் கறாச்சுக்குள்ளதான் கொடி கட்டி காயப் போடுறன்” நான் கறாச்சுக்குள் போய் பார்க்கிறேன். இரு பக்கத் தூண்களிலும் வயர் கட்டியபடி இருக்கு. இந்த வயரை எங்கிருந்து எடுத்தீர் என்று கேட்க உதில் கொழுவி இருந்தது என்கிறார். என்னை ஒருக்காக கேட்டிருக்கலாமே. உது கமராவுக்குப் போடுற வயர். உதின்ர விலை தெரியுமே உமக்கு. அருமந்ததை வீணாக்கிப்போட்டீர். அப்பவும் உள்ளே கொண்டுபோய் வையுங்கோ எண்டு இந்த மனிசனுக்குச் சொன்னனான் என்கிறேன் கடுப்புடன். அவர் எதுவும் பேசாமல் அப்பால் செல்ல நான் சீற்றைக் காயவிட்டுவிட்டு உள்ளே வருகிறேன். வரும்போது பார்த்தால் மாமரத்தில் ஊஞ்சலையும் காணவில்லை. ஊஞ்சல் எங்கே என்று கேட்கத் தனக்குத் தெரியாது என்கிறார். முன்பு இருந்த சனங்கள் அதையும் அறுத்துக்கொண்டு போய்விட்டார்கள் போல என்று சொல்ல, இருக்கும் அக்கா என்கிறார். சரி தம்பி நீர் உம்மடை சமையல் அலுவலைப் பாரும் நான் ரதி அக்காவிடம் போட்டு வாறன் என்று சொல்லிவிட்டுக் கிளம்ப, அவருக்கு ஒரு போன் வருகிறது. “அக்கா வந்து நிக்கிறபடியால் நான் இண்டைக்கு வரேலாது. இப்ப நான் சமைக்கப்போறன் என்று அவர் சொல்வது எனக்குக் கேட்கிறது.
  16. நம்ம அமைச்சர் ..யூடுயூபர் கிருஸ்ணாவின் டைப்பு மாதிரித்தான்....நல்லது செய்யிறமாதிரி செய்து....மிரட்டல் விட்டு அடாவடி செய்து நம்ம சனத்துக்கு அரசியல் செய்கின்றார்...இது நம்ம சனத்துக்கு விளங்கினால்தானே....கிராமசபைத் தேர்தலை பார்லிமெந்து...தேர்தல்போல் பார்க்கும் சனம் இருக்கும்போது...இன்ம் என்னவென்று உருப்படும்
  17. கிடாய் அடிச்சாச்சு. பங்கு எங்க. ஒரு பங்கு எவ்வளவு போகுதாம். 😁
  18. இல்லை குரு KKR அணி தான் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ குறைந்த‌ ர‌ன்ஸ் எடுத்து இருக்கின‌ம் 116..................................
  19. கே.கே.ஆர்..200 முதல் ஓவரின் 2 வ்து பந்தில் ..காவ்யாவின் தலை கழண்டுவிட்டது 2வ்து ஒவரில் அபிசேகம் முடிந்துவிட்டது வேகப் பந்துக்கு அடித்துத்தான் இருவர் போய் விட்டினம்
  20. நீங்கள் ஜயருட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே. அவசரப் பட்டுட்டிங்களே.
  21. நேற்று மழை பெய்தபோது மண்வாசம் வீசியது அண்ணை.
  22. மனம் ஆடுது பாடுது பூவைத் தேடி ..........! 😍
  23. உண்மைதான். 27 கோடி என்றால் சும்மாவா. அவரின் விளையாட்டு அப்பிடித்தான். இன்னும் பொறுப்பு வரவில்லை. எல்லாப் பந்தையும் சுத்துறார். எப்பத்தான் அணியின் நிலை அறிஞ்சு விளையாடப் போறாரோ. அதுக்காக இப்பிடி பொது இடத்தில கதைக்கிறது நல்லாயில்லை.
  24. "உண்மை விளம்பும்"😂 ஸ்புட்னிக் செய்தியை நீங்கள் பகிடி பண்ண உங்கள் கூட்டாளிகளுக்கு கோபம் வரப்போகுது கவனம்! ஆனால், ஒரு கறுப்பு வெள்ளையான விடயத்தில் கூட "சரி பிழை" என்று சொல்ல முடியாமல், இனப்பிரச்சினைக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டு "நாங்கள் திறம்" எண்டு சாதிக்க அனுபவம் அவசியமில்லை. இதைக் கற்றுத் தராத "அனுபவம்" இருந்தாலும் ஒரு பயனுமில்லை😎!
  25. நன்றீங்க. இப்ப நீங்களும் கதவைத் தட்டத் தொடங்கிட்டீங்க. தொடக்கத்தில ஒருத்தர் முன்னுக்கு நிண்டார். அவரப் போட்டுத்தான் மேலே வந்தேன். பிறகும் இரண்டு நாள் பின்னாலேயே நன்று தட்டிக் கொண்டு இருந்தார். இப்ப எங்க இருக்கிறார் என்று தேடி கழுத்து வலிதான் வருகுது. அவ்வளவு கீழே. 🤣 வாங்க சேர்ந்தே போவம். கவனம். உங்களுக்குப் பின்னாலும் மூவர் நிக்கினம். 😁 உண்மைதான். ஜபில் கழிச்சு விட்ட ஆக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் குடுக்குது. அவ்வளவுதான். PSLலால நினைத்துக்கூட பார்க்க முடியாது. பணம் எடுக்கினமா, இழக்கினமா. சரியாச் சொன்னீங்க. நான் இப்போ அடுத்தடுத்து இரண்டு தோத்துவிட்டேன். என் "அதிஷ்டம்" எங்கே போச்சுதோ.
  26. எங்கன்ட தோழர் அனுராவும் அவரின் தோழர்களும் நடந்தும்,நீந்தியும்,பறந்தும் (ஞானிகள் அந்த காலத்தில் செய்தவையாம்) தங்கள் கடமைகளை செய்யும் பொழுது உங்களுக்கு ஏன் ரயில் அரச அதிகாரிகளே? நீங்களும் இதேபோன்று கடமையை செய்யுங்கள் ....உங்களுக்கு அவசரம் தேவை என்றால் புலம்பெயர் அனுரா கட்சியனருக்கு கடிதம் போடுங்கள் பெட்டிகளுடன் இயந்திரத்தை உடனே அனுப்பி வைப்பார்கள் ...அப்பே ரட்ட அப்பட்ட...ஜெயவேவா..என்ற கோசத்துடன்.. இல்லையென்றால் நாலு யூ டியூப்பர்களை அனுப்பி அனுராதபுரத்தில் சிங்கள மக்களிடம் பேட்டி காணுங்கள் ரயில் தேவையா தமிழருக்கு எண்று அவர்கள் விரும்பும் தீர்ப்பை நடைமுறை படுத்தலாம்
  27. வெளிநாடு வந்த போது அவன் முதன் முதலாக வெளிநாடு வந்த போது (துபாய்) அங்கிருந்த ஊரவர் கேடடார் . துபாய் எப்படி இருக்கு? என்று ....இவன் சொன்னான் "பெரிய பெரிய கட்டிடங்களுக்கு முன்னும் , வேறு ஒருவரின் காருக்கு முன்னும் நின்று படங்கள் எடுத்து போட்டிராவிடால் என்னைபோன்றவர்கள் இங்கு வந்திருக்க மாடடார்கள். நீங்கள் தங்கியிருக்கும் இடத்தையும் அடிப்படை வசதிகளையும் படம் பிடித்து இருந்தால் பலரின் சிந்தனையை அது மாற்றி இருக்கும். ஒரு சமுதாயத்தையே " படங்காட்டி " வெளிநாட்டு வாழ்க்கை என குட்டிச்சுவராய் ஆக்கி இருக்கிறீர்கள்.
  28. ஐபிஎல் 2025 இன் 14வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக விக்கெடுக்களை இழந்து வெளியேறியதால், பின்னர் ஆடவந்த லியம் லிவிங்ஸ்டனின் அரைச் சதத்துடனும், ஜிதேஷ் ஷர்மா, ரிம் டேவிட் போன்றோரின் அதிரடி ஆட்டத்துடன் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன், ஷேர்ஃபான் ரதஃபோர்ட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்துடனும், ஜொஸ் பட்லரின் மின்னல் அடியுடன் ஆட்டமிழக்காமல் எடுத்த 73 ஓட்டங்களுடனும் 17.5 ஓவர்களில் இரு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  29. மனிதத்துவம் தங்களிடமிருந்து மரணித்தது தெரிந்தும்கூட, சில மனிதர்கள் வாழ்கிறார்கள் தங்களை மனிதர் என்று சொல்லிக்கொண்டு இன்னும் மரணிக்காமல்.
  30. இல்லை! இத்தகைய "பகிடிவதைகள்" என்ற பெயரில் நிகழும் வக்கிரங்களுக்கு போதை அவசியமில்லை. புதிய மாணவர்களை பகிடியாகக் கலாய்த்து வரவேற்று அவர்களை சமூகத்தினுள் உள்வாங்க என்று மேற்கு நாடுகளில் உருவான முறைகளை, எங்களுடைய ஆசியத் தரத்திற்கு மாற்றி உள்வாங்கியிருக்கிறார்கள். இந்த இடத்தில் பேச்சு வாங்கினாலும் பரவாயில்லையென்று ஒன்று சொல்ல வேண்டும்: நான் அவதானித்த வரையில், சிங்களப் பகுதிகளில் சிங்கள மாணவர்கள் செய்யும் பகிடிவதையை விட தமிழ் மாணவர்கள் செய்யும் பகிடி வதைகள் மிகக் கேவலமானவையாக இருக்கும். இப்படியான ஒரு வன்முறை கலந்த பகிடிவதையின் போது தான் வரப்பிரகாஷ் என்ற பேராதனை மாணவன் சிறு நீரகம் செயலிழந்து இறந்தான். அந்தப் பகிடி வதை செய்த பிரதான நபர், வரப்பிரகாஷின் நிலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மோசமாகிறது என்று தெரிந்த காலையிலேயே சிங்கப்பூர் சென்று அங்கிருந்து பின்னர் கனடா குடிபெயர்ந்து இப்போது அங்கே பெரிய முதலாளியாக இருக்கிறார். பக்கத்தில் வேடிக்கை பார்த்து நின்ற சிலர் (இவர்கள் தடுத்திருக்க வேண்டும், எனவே கூட்டுப் பொறுப்பாளிகள் தான்!), வரப்பிரகாஷ் கொலைக்காக சிறை சென்று வந்தனர். இந்த வன்முறையாளர்களை பல்கலையை விட்டு நீக்கி விடுவது தான் ஏனையோர் இத்தகைய வன்முறைகளை நினைத்தும் பார்க்க இயலாமல் செய்யும் ஒரே வழி!
  31. எவ்வளவோ சவால்களுக்கு மத்தியில் படித்து, பல்கலைக்கழக அனுமதி பெற்று படிக்க வரும் சக மாணவர்களை பகிடிவதை எனும் பெயரில் சித்திரவதை செய்யும் இந்த காட்டுமிராண்டிகள் தான் நாளைக்கு மருத்துவர்களாகவோ, வழக்கறிஞர்களாகவோ, ஆசிரியர்களாகவோ சமூகத்தில் வலம்வரப் போகின்றனர். அல்லது, அரச வேலை தா என்று அரசிடம் பிச்சை எடுக்க போகின்றனர். எத்தனை அரசுகள், கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் திருந்தாத காட்டுமிராண்டிக் கூட்டங்களைத் தான் இலங்கை கல்வி அமைப்பு உற்பத்தி செய்து அனுப்புகின்றது.
  32. ImgBBbeachroad-bali hosted at ImgBBImage beachroad-bali hosted in ImgBB கடற்கரை சாலை - பாலி
  33. வாழ்த்துக்கள் தணிகாசலம் தொடர்ந்து உழையுங்கள். நான் கனடாவில் இருந்து இருந்தால் எனது வாக்கு உங்களுக்கு தான் ......லண்டன் மற்றும் அவுஸ்திரேலிய இலும். இதேபோல் சட்டம் இயற்றப்பட வேண்டும்
  34. தனியார் பள்ளிகளில் (மாநில) அரசு உதவி பெறும் பள்ளிகள் உண்டு. சுயநிதிப் பள்ளிகளும் உண்டு (அதாவது, உயரிய கல்விக் கட்டணம் வசூலித்து நடைபெறுவன. எனவே சுயநிதி என்பது மாணவர் தம் சுயநிதி எனக் கொள்க; பள்ளியை நடத்துவோரின் நிதி அல்ல). அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழிகள் மட்டுமே. இந்த இரண்டு மொழிப் பாடங்கள் தவிர ஏனைய பாடங்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ நடைபெறும். சுயநிதிப் பள்ளிகளை நடத்தும் தனியார் பெரும்பாலும் CBSE (ஒன்றிய அரசின் Central Board for Secondary Education) பாடத்திட்டத்திலேயே நடத்துகின்றனர். அங்கே மும்மொழி என்ற பெயரில் தமிழ், ஆங்கிலம், இந்தி சொல்லித் தரப் படுகின்றன. சில இடங்களில் சமஸ்கிருதமும் (!!!), ஃபிரெஞ்சும் இருக்கலாம். ஏனைய பாடங்கள் ஆங்கிலத்தில் நடைபெறும். வேடிக்கை என்னவென்றால், எங்கெல்லாம் மூன்றுக்கு மேற்பட்ட மொழிகள் உள்ளனவோ, அங்கே பெரும்பாலான பெற்றோர் தமிழை விடுத்து மூன்று மொழிகள் தேர்ந்தெடுப்பர். கேட்டால், "தமிழ்தான் வீட்டில் பேசுகிறார்களே !" என்ற அறிவார்ந்த பதில் வரும். எந்த மக்கள் திரளிலும் பெரும்பாலானோர்க்குத் தாய்மொழி கூட ஒரு தகவல் பரிமாற்ற ஊடகமே ! சமீப காலத்தில் அரசுப் பணிக்கு - குறிப்பாக அரசு மருத்துவர் பணிக்கு - தமிழ்த் தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்பதால், போனால் போகிறது என்று தனியார் பள்ளிகளிலும் தமிழ் மொழி கற்போர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாகக் கேள்வி. இந்த லட்சணத்தில் ஒன்றிய அரசுப் பள்ளிகளும் சிலவுண்டு. அவற்றில் தமிழ் ஆசிரியர்களே இல்லை என்பது கூடுதல் தகவல். இதற்கு அந்த அரசை மட்டும் குறை சொல்வானேன் ? பெரும்பாலான பெற்றோர் தமிழை விரும்பத் தயாரில்லையே ! சுருக்கமாகச் சொல்வதானால், மாநில அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் மட்டுமே தமிழ்நாட்டில் தமிழ் உயிர்ப்புடன் இருக்கும் (மற்றபடி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் தமிழ் வாழும். எதையோ இழந்தவன்தான் அந்தப் பொருளுக்காக ஏங்குவானோ !) மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தொழில் சார்ந்து அடுத்து வரும் படிப்புகளுக்கான தயாரிப்பிலேயே கவனம் செலுத்துவதால், பெரும்பாலானோர் எந்த மொழியையும் உருப்படியாகப் படிப்பதில்லை. எனவே அந்த வேற்று மொழிகளின் தாக்கத்தினால் தமிழ் தேய்ந்து விடப் போவதில்லை என்ற அற்ப மகிழ்ச்சியுண்டு. தாய்மொழி குறித்த சாமானியரின் மனநிலையை வைத்து முன்னர் ஒரு கட்டுரை எழுதியதுண்டு. இங்கு அது ஓரளவு பொருந்தி வரலாம் :
  35. "ஏனிந்தக் கோலம்" "ஏனிந்தக் கோலம் வாலைக் குமரியே ஏமாற்றிப் பிழைப்பதும் ஒரு வாழ்க்கையா ஏராளம் வேடம் ஏன் உனக்கு ஏக்கத்தில் இனியும் தவறு செய்யலாமா?" "பெண்ணியம் சொல்லுவது எல்லோரும் சமம் கண்ணியம் காக்கும் செயல் பாடுகளே மண்ணும் பெண்ணும் இயல்பில் ஒன்றே எண்ணமும் கருத்தும் ஒன்றாய் இருக்கட்டும்!" "அன்பும் நீதியும் ஒருங்கே நின்றால் அழகு பெண்ணும் மகிழ்ச்சி அடைவாள் அடிமைச் சங்கிலியை உடைத்து எறிந்து அச்சம் மடம் நாணம் ஒழியட்டும்!" "உண்மையை உணர்ந்து உலகை அறிந்து பண்பாட்டு நிலையில் சமநிலை போற்றி கண்கள் போகும் வழிகளில் போகாமல் பெண்ணே உங்கள் கைகள் சேரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  36. நான் அவுஸ்ரேலியா வந்த போது மழை பெய்து கொண்டேயிருந்தது, அப்போது கூறினார்கள் மழை இல்லாமல் தண்ணீருக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்களாம் என, நான் அவர்களிடம் கூறுவதுண்டு நான் வந்ததனால் அவுசில் மழை பெய்ததது என இன்றுவரை தண்ணீருக்கு கட்டுப்பாடில்லாமல் மழை பெய்து கொண்டே இருக்கிறது, ட்ரம்ப் அழைத்தால் அமெரிக்கா வருவது பற்றி சிந்திக்கலாம்.😁
  37. யசோதரன்..! இந்த இடத்தில் தான் ஊரை மிஸ் பண்ணுறது..! கன நாளைக்குப் பிறகு மழை பெய்யும் போது மண்ணிலிருந்து ஒரு வாசனை வருமே..! அந்த வாசம் வேறு எந்த நாட்டிலுமே …ஊர் வாசம் வராது..! கவிதையின் கரு அழகு..!
  38. இன்னொன்று👇😂 ” யமனாக நிழலியும், சித்திரகுப்தனாக தமிழ் சிறியும், யமதூதர்களாக தூயவன்,நிர்மலன்,புத்தன்,தும்பளையான்,ஜீவா ஆகியோரும் நந்தனாக நந்தனும் கலந்து சிறப்பிக்கும்... எமலோகத்தில் நந்தன் நாடகம் இதோ...[/size] ______________________________________________________________________________________________________________________________ 2054 ஆம் வருடம்,மார்கழி மாதம்,அதிகாலையில் தூக்கத்தில் ஆழ்ந்துருந்திருக்கிறார் நந்தன்.அப்போது பார்க்க பயங்கரமான,விகாரமான தோற்றம் உடைய சிலர் அவரிடம் வருகிறார்கள். அவர்கள் "வா எங்களுடன்", என்று கூறி நந்தனை தர தரவென இழுத்துச் செல்கிறார்கள். (உரையாடல் முழுதும் வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்). காட்சி௧ள் (வானவீதியில்) நந்தன்: ஆமாஆஆஆ நீங்கெல்லாம் யாருப்பா..? யமதூதர்கள்: நாங்கள் யமதூதர்கள். உன் உயிரைப் பறித்துப் போகின்றேம். நந்தன் : என்னாது... என் உயிரை எடுத்துட்டீங்களா,சொல்லவேயில்லை. யமதூதர்கள்: சொல்லிட்டுச் செய்ய நாங்க என்ன தமிழ் சினிமா ஹீரோவா, பஞ்ச் டயாலக் பேசி உயிரை எடுக்க...பொத்திக்கொண்டு இருடா டுபாக்கு... நந்தன் : ஆமா யமதூதா..., ரம்பா,ஊர்வசி,மேனகா எல்லாம் அங்கிட்டு நல்லா இருக்காங்களா. யமதூதர்கள் : நீ கொஞ்ச நேரம் வாயை அடைத்துக் கொண்டு வருகின்றாயா கிராதகா..? நந்தன் : என்னது நீங்க மட்டும் வந்துருக்கிங்க, தேவதூதர்கள்,புஷ்பக விமானம் எல்லாம் நமக்கு வராதா? யமதூதர்கள்: அடேய் நீ பண்ணிய பாவங்களுக்கு,கெட்ட கேட்டுக்கு அவங்க எல்லாம் வரனுமா?.சும்மா பிணாத்தாம வாடா. நந்தன்: ஆமா எவ்வளவு தூரம் போகனும்?...இப்பிடி ரொம்பத்தூரமின்னு தெரிஞ்சிருந்தா வரும்போது வீட்டிலிருந்து கொஞ்சம் வொட்காவை எடுத்துவந்திருப்பனே.. யமதூதர்கள்: அடேய்,எங்க பொறுமையை சோதிக்காதே. பேசாம வருகிறாயா நரனே. நந்தன்: இங்கை திண்ணையும் இல்லை..போகின்ற வழிக்கு பொழுது போகனும் இல்லை... யமதூதர்கள்: சூலாயுத்தால் வாயில் இடித்து,இப்ப நீ வாயை மூடலைன்னா,அடிச்சே கிழிச்சுடுவேம்.எப்பிடி வசதி. நந்தன் : அய்யோ, ஆத்தாடி, என்று கப்சிப். காட்சி - 2 (எமலோகத்தில் எமனது இறுதி தீர்ப்பு வாசிக்கப்படுகின்றது). சித்ரகுப்தன்: மன்னா,இவன் ஒரு ஜெகஜாலக் கில்லாடி, நல்லவன் போல நடிப்பவன். இவனை எமலோகத்தில் விட்டு அனைத்து தண்டனைகளும் தரவேண்டும். யமன்: அது என் வேலை, நீ முதலில் இவனது குற்றங்களைப் படி. நந்தன் : அடப்பாவிகளா, இங்கனயும் பதவிப் போட்டியா?. யமதூதர்கள்:உஷ் வாயை மூடிக்கொள். இல்லை என்றால் உன் தண்டனை இரு மடங்கு ஆகிவிடும். நந்தன் : சரி அப்பு. சித்ரகுப்தன்: மன்னா சொல்ல அசிங்கம், இவன் பள்ளியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது..... யமன் : சரி,சரி, இரகஸ்யங்களை சப்தம் போடாதே. வாலிபக் குறும்பு. இதுக்கு தண்டனையா, இவனை தகிக்கும் தங்க பதுமையைக் கட்டி அனைக்கச் சொல்லி வறுத்து எடுப்போம். நந்தன் : அடப்பாவமே, நான் எப்பவும் தங்கம் என் உடம்பில் கூடப் போட்டதே கிடையாது. கட்டிக்க தங்கப் பதுமையா?. பூலோகத்தில் அப்புறம் ஏன் தங்கம் விலை ஏறாது. சரி இங்கனயாவது போட்டுக்குவேம். யமதூதர்கள்: அடேய் அது சூடான கொதிக்கும் தங்கப் பதுமைடா. சித்ரகுப்தன்:அதுமட்டும் இல்லை இவன் திண்ணையில் குடித்துவிட்டு, ஒருமுறை....... யமன்: அடேய்,கஸ்மாலம், கேப்மாரி,முடிச்சவிக்கி, உன்னை.... சித்ரகுப்தன்: மன்னாஆஆஆ.. என்ன ஆச்சு தங்களுக்கு உளறுகின்றீர்கள். யமன்(சுதாரித்து): ஒன்றுமில்லை,திண்ணை என்றவுடன் அங்கு இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் வெறியில் பேசிக்கொள்ளும் பாசை ஒட்டிக் கொண்டது.இதுக்கு தண்டனையாக இவனை நாலு யமதூதர்களை விட்டு முள்ளுச் சவுக்கால் பரேட்டாவைப் போல அடித்து புரட்டி எடுங்கள். சித்ரகுப்தன்: மன்னா இதையும் கேளுங்கள்,லண்டனில் இவன்........ யமன்: அடேய் போதும், போதும் இந்தக் குற்றத்திக்கே இவன் நரகத்தில் பல ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.இதுக்கு தண்டனையாக இவனை எண்ணைச் சட்டியில் போட்டுப் பொறிக்க வேண்டும். சித்ரகுப்தன்:இது மட்டும் அல்ல மன்னா, யாழில் இவன் பதில் எழுதுறன் எண்ட பெயரில் கண்டதையும் எழுதி,தானும் குழம்பி,மற்றவர்களையும் குழப்பி உள்ளான்.ஒரு முறை இவன் களௌறவுகளிடம்...... யமன் : அடேய்ய்ய், மேலே சொல்லதே,என் வாயில் கெட்ட வார்த்தை வந்துவிடும்,இதுக்கு இவன் நாவை அறுத்துச் வறுவல் பண்ணுங்கள். நந்தன்: என்னது இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு. இதுக்கு முன்னால இவரு புரோட்டாக் கடையில் மாஸ்டரா இருந்தாரா?. வறுக்கனும்,பொறிக்கனும்,வடகம் போடனும்,வறுவல் போடனும் அப்படின்னு தீர்ப்பு சொல்றார்....? யமன் : அடேய் நரனே. என்ன தைரியம் இருந்தால் என்னை புரோட்டா மாஸ்டர் என்பாய். இதுக்கு உனக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். யமதூதன்: கேட்டாயா, வாயை வைச்சுக் கிட்டு சும்மாயிருந்தா,இப்படி நடக்குமா? நந்தன் : இல்லைனாலும்,அடப்போய்யா.. நாங்க எல்லாம் எத்தனை பேரைப் பார்த்துருக்கேம். சித்ரகுப்தன்: மன்னா,என்ன ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்து விட்டீர்கள். யமன்: இந்த நரனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும், என்ன தண்டனை என்ற குழப்பத்தில் உள்ளேன். நந்தன்: அப்பாடா, வந்த வேலை முடிஞ்சது. எதே நம்மளால முடிஞ்சது. குழம்பி தீர்வதுக்குள் எஸ் ஆகனும். எப்படிய்ய்ய். சித்ரகுப்தன்: மன்னா, இந்த மூன்று தண்டனைகளும் ஒரே காலத்தில் கொடுப்போம். அல்லது தண்டனைக் காலத்தை இன்னமும் அதிகரிப்போம். நந்தன்: அடடா, மன்னர் குழம்பினாலும் இந்த அல்லக்கைகள் விடாது போல இருக்கே. சரி சமாளிப்போம். எவ்வளவோ பார்த்துட்டேம்,இது என்ன.. யமன்: மிக மிக கடுமையான தண்டனையாக இருக்கவேண்டும்,அதைப் பார்த்து எவனும் என் முன் வாயைத் திறக்கக் கூடாது. நந்தன் : பேசாமல் எல்லாரையும் மன்மோகன் ஆக்கிடுங்க...யாரும் வாயைத் தொறக்க மாட்டாங்க... யமதூதன்: அடேய் உன் தப்புக்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகின்றது.வாயை மூடு. யமன்: ஆகா கண்டுபிடித்து விட்டேன், மிக கொடுமையான தண்டனை, யாரும் வழங்காத தண்டனை. அற்புதமான, ஆளைப் பையித்தியம் பிடிக்க வைக்கும் தண்டனை. சித்ரகுப்தன் : ஆவலுடன் மன்னா என்ன அது மன்னா, சொல்லுங்கள். நந்தன்: அடாடா,வில்லங்கமா இருக்கும் போல, சரி பொறிக்கறது வீட பெரிசா என்ன தண்டனையைத் தரப்போறானுங்க. யமன்: டேய் நரனே, அடுக்கடுக்காய் பாவங்கள் பண்ணியது இல்லாமல்,என்னையே கிண்டல் பண்ணத் துனிந்த உனக்கு அதிக பட்ச தண்டனை வழங்குகின்றேன். இதை அனுபவித்து நீ பைத்தியம் பிடித்து அனு அனுவாய் சித்தரவதைப் படுவாய். நந்தன் : என்ன தண்டனைன்னு சொல்லாம, புதிர் போட்டா எனக்கு என்ன ஜோசியமா தெரியும். யமன்: கோபமாக,சத்தமாக எழுந்து நின்று, அடேய் நரனே, உனக்கு இந்த தண்டனைதான் பொருத்தம். நீ இங்கு இருக்கும் காலம் எல்லாம் தினமும், நீ நெடுக்காலபோவான் எழுதிய பதிவுகள் எல்லாத்தையும் நீயே உக்காந்து படிக்க வேண்டும். இதுதான் நான் உனக்கு வழங்கும் தண்டனை. நந்தன் : பதட்டமாக, சத்தம் போடத்துவங்கியபடி....அய்யோ அய்யோ அது மட்டும் வேண்டாம், நீங்க சொன்ன எல்லா தண்டனைகளும் ஒட்டு மொத்தமாக தாருங்கள், ஆனா இந்த தண்டனை மட்டும் வேண்டாம் என்று கத்திக்கொண்டு கண்விழிக்கிறார்.... _____________________________________________________________________________________[size=6] [/size] [size=6]நந்தன் கண்விழிக்கவும்..நாடகம் இனிதே நிறைவேறுகிறது...நன்றி வணக்கம் உறவுகளே..நிழலி மட்டும் தான் போட்டிருக்கும் வாடக்கைக்கு எடுத்த எமதர்மன் உடுப்புகளை தரமாட்டன் என்டு மண்டபத்தின் பின்னால் அடம்பிடிக்கிறார்..இப்பிடியே இருந்து யாழுக்கை வெட்டப்போறாராம்... [/size] “
  39. நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடித்தது.. வேலை வாழ்க்கை என்று எல்லா துன்பங்களிலும் உழன்றுவிட்டு எனக்கென்று இருக்கும் கொஞ்ச நேரத்தில் மனதை இறுக்கத்தை போக்கி சந்தோசமாக இருக்க கிடைத்த இடம் யாழ்.. அதில் கிடைக்கும் நேரம் எல்லாம் இனிமேல் நெடுகமூஞ்சைய தூக்கிகொண்டு இருக்காமல் சந்தோசமா இருப்பம் எண்டு அப்பப்ப நகைச்சுவையாக எழுதுவன்.. அதுவும் எனது பழைய ஜடியில் என்ன கூத்து எல்லாம் அடிச்சு இருப்பன்.. உதாரணதூக்கு ஒண்டு..👇 // நெடுக்ஸ் நிகழ்ச்சியில் வாசித்த உரை...[/size] [size=4]அனைவருக்கும் வணக்கம்.[/size] [size=4]பெண்கள் பக்கம் இருந்து வணக்கம் சுணக்கமாக வருவதை கண்டித்துக்கொண்டு நான் எனதிந்த சிற்றுரையை ஆரம்பிக்கிறேன்.[/size] [size=4]பெண்கள் என்றால் யார்..? சாறி உடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..? சட்டை போட்டால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..? தோடு குத்தினால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வளையல் போட்டால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வகுடெடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வாய்க்கால் கட்டினால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வரப்பெடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?நாத்து நட்டால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?இல்லை [size=4]வயலில் களை எடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..? [/size][/size] [size=4][size=4]மானங்கெட்டவளவையே..உங்களுக்கு மஞ்சல் அரைத்து கொடுப்பது யார்..? அஞ்சு முளத்தில் பூ வாங்கிக்கொடுப்பது யார்..? பிஞ்சிலையே உங்களால் வெம்பிப் பழுப்பது யார்..?கெஞ்சவும் கொஞ்சவும் கடையில் நல்லாய்த் திங்கவும் வைப்பது யார்..?திண்ட பின் உங்கள் நண்பிகளுக்கும் சேத்து பில் கட்டுவது யார்..?இதையெல்லாம் செய்வது யார்..? யார்..? யார்...? [/size][/size] [size=4][size=4]( என்று நெடுக்ஸ் உணர்ச்சிவசப்பட்டு எப்பவோ கேட்ட கட்டபொம்மன் வசனங்களை எல்லாம் பிளைபிளையாய் பேசி முடிக்க பெண்களால் நொந்து போய் இருந்த சுண்டால் கூட்டத்தில் இருந்து பாய்ஞ்சு வந்து மேடையில் ஏறி நெடுக்ஸை கட்டிப்பிடித்து எங்கள் தன்மான சிங்கம்,எங்கள் அடிமைத்தனம் ஒளிக்க வந்த கட்டப்பொம்மன் 2 வாழ்க வாழ்க என்று கத்துகிறார்.. இவற்ரை அவதானித்துக்கொண்டிருந்த கனடா மகளீர் அணித்தலைவி சகாற கடும் சினத்துடன் தன் தலையில் குத்தியிருந்த கிளிப்பை கழட்டி நியக்கிளிப்பை எறிவதாக நினைத்துக்கொண்டு வாயால் டமார் எண்டு சத்தம்போட்டபடி சுண்டலை நோக்கி எறிகிறார்.. [/size][/size] [size=4][size=4]சகாறாவை பின்பற்றி பெண் உறுப்பினர்கள் எல்லாம் தங்கள் கொண்டையில் குத்தியிருந்த கிளிப்பையும் கொண்டை வைக்காத இளம்பெண்கள் தங்கள் கைகளில் போட்டிருந்த வளையல்களையும் சுண்டலையும் நெடுக்ஸையும் நோக்கி கூச்சல் இட்டபடி வீசி எறிகின்றனர்.. [/size][/size] [size=4][size=4]நெடுக்ஸ் தான் பேசிக்கொண்டிருந்த மைக் இருந்த ரேபிலுக்கு பின்னால் நிலையெடுத்து இந்த தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள சுண்டலோ இவற்றை பற்றி எல்லாம் கவலைப்படாமல் வந்து விழுந்த கிளிப்புகளுக்கும்,வளையல் துண்டுகளுக்கும் நடுவே இளம்பெண்களின் வளையல்களை மட்டும் முமுரமாக பொறுக்கி சேகரித்துக்கொண்டிருக்கார்.. [/size][/size] [size=4][size=4]நிலமை கட்டுக்கடங்காமல் போவதை அவதானித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ்சிறி மைக்கை கையில் எடுத்து பெண்கள் அனைவரும் நிகழ்ச்சி முடியும் வரை அமைதியாக இருந்தால் போகும்போது எல்லாருக்கும் ஏசியன் கடையில் எடுத்த சாறியும் யன்னல் வைத்த பிளவுசும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்க பெண்கள் பக்கம் இருந்து குண்டூசி விழுந்தால் கூட கேட்கும அளவுக்கு அமைதி நிலவுகிறது... [/size][/size] [size=4][size=4]இதனால் சந்தோசம் அடைந்த தமிழ்சிறி நெடுக்ஸ் பக்கம் திரும்பி "இப்பதாண்ட ஒருமாதிரி நிலமையை கட்டுக்கை கொண்டுவந்திருக்கன் அதைக்கெடுத்துப்போடதையெடாப்பா"என்ன்று கெஞ்சுவது போல் பார்க்கிறார்..எதைப்பற்றியும் கவலைப்படாமல் நெடுக்ஸ் மைக்கை எடுத்து தொடர்கிறார்..)[/size] [/size] [size=4]நண்பர்களே,தோழர்களே...இந்தப் பெண்களைப் பேய்கள் என்றும் சொல்லலாம்..பெண்களை பேய்கள் இல்லை என்றும் சொல்லலாம்..பேய் என்று சொல்வதெல்லாம் பேயாகிவிடாது..அங்கு பெண்களும் இருக்கின்றனர்..அதே போல் பெண் என்று சொல்வதெல்லாம் பெண் ஆகிவிடாது..அங்கு பேய்களும் இருக்கின்றன..பேய்களிடம் இருந்து ஆண்களை காப்பாற்றுவதே தற்பொழுது எனது முதல் பணியாக எடுத்து செய்து கொண்டிருக்கிறேன்.. [/size] [size=4]இந்தப் பணியில் நான் பல சவால்களையும்,தடைகளையும் எதிர்கொண்டாலும் முருங்கை மரத்தில் இருந்து விழுந்த விக்கிரமாதித்தன் போல பேய்களை எதிர்த்து யாழ் உள்ளவரை நான் கீ போட்டில் போராடிக்கொண்டிருப்பேன்..இது என் கீபோட்டின் மேல் சத்தியம்..சத்தியம்..சத்தியம் [/size] [size=4]( எண்டு ஆவேசம் கொண்டவரைப் போல் நெடுக்ஸ் ஒலிவாங்கி மேசையில் கையால் அடித்துக் கத்துகிறார்.. ஆண்கள் பக்கம் இருந்து பலத்த கரகோசமும் விசில் சத்தமும் வானைப்பிளக்கிறது..[/size] [size=4]சுண்டல் பொறுக்கமுடியாமல் கூட்டத்தின் நடுவே தான் மட்டும் தனிய எழுந்து நிண்டு கைதட்டுகிறார்..இதை தூரத்தே மேடையின் பின்னால் இருந்து அவதானித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ்சிறி குறுக்காலபோவான் திரும்ப கூட்டத்தை குழப்பபோறான் போல கிடகே எண்டு பதற்றத்துடன் காணப்படுகிறார்.. [/size] [size=4]ஆனால் ஏசியன் சாறியையும் யன்னல் வைத்த யாக்கெட்டையும் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்த பெண்கள் அணி இவற்றினால் எந்த சலனமுமடையாமால் சாறியே குறி என்று அமைதியாக இருக்கின்றனர்.. நெடுக்ஸ் இந்த அமைதியை வாய்ப்பாக பயன்படுத்தி தொடர்கிறார்..) [/size] [size=4]நாங்கள் கேட்கிறோம்..தெளிவாகக் கேட்கிறோம்...பெண்களை ஏன் இந்த மூடர்கள் கண்கள் என்கிறார்கள்..? ஆண்களுக்கும் கண்கள் இருக்குத்தானே..? எங்கள் கண்கள் மிக அழகானவை..அவற்றின் மூலமே நாம் வண்டுகளையும் பூக்களையும் பார்க்கிறோம்..[/size] [size=4]நான் பல காலத்துக்கு முன்னரே பூக்களை நின்று பார்க்க வெளிக்கிட்டிட்டன்.ஆனால் என்னைப் பிடிக்காத எனது எதிரிகள் சிலர் நான பூக்களை பார்க்கும் சாட்டில் பெண்களையும் பார்ப்பதாக அபாண்டமாக சொல்லித்திரிகிறார்கள்..!அவர்களின் கண்கள் அழுகிப்போக..[/size] [size=4]பூக்களைத்தான் பறிக்காதீங்க[/size] [size=4]என் பூக்காதலைத்தான் பிரிக்கதீங்க..[/size] [size=4](என்று கோரசாக இழுத்து பாடுகிறார்.. அப்பொழுது அவர் கண்ணில் இருந்து சிலதுளிகள் விழுகின்றன..எல்லோரும் பார்க்கும் வகையில் கைக்குட்டையை எடுத்து தன் கண்ணீரை துடைத்துவிட்டு நான் யாரும் பார்க்க என் கவலைகளை நினைத்து அழுவதில்லை என்று சொல்லிவிட்டு தன் பேச்சை தொடர்கிறார்.. ) [/size] [size=4]பூக்கள் அழகானவை..பூக்களைமொய்க்கும் வண்டுகள் அதைவிட அழகானவை..ஆகையால் பூக்களை இந்தக்கண்களலேயே ரசிக்கிறோம்..பிறகெதற்கு இந்த மாங்காய் மடையர்கள் கவிதை என்ற பேரில் பெண்களை மட்டும் கண்கள் என்கிறார்கள்..?இது சுத்த ஆணடிமைத்தனமே அன்றி வேறுதுவும் இல்லை.. ஆகையால் இனிமேல் கவிஞர்கள் ஆண்களையும் கண்கள் என்று சொல்லவேண்டும் என்று ஆண்களின் சார்பில் இந்த இடத்தில் வன்மையாகக் கேட்டுகொள்கிறேன்.. [/size] [size=4]சிலபலவருடங்களுக்கு முன்னர் நானும் ஓடினேன்.. பெண்கள் இருகண்கள் என்று பாடினேன்..அவள் ஒரு ரோசாப்பூ..வாடாத ரோசாப்பூ..எங்கள் காதல் ஒரு கைபடாத சீடி.. ஆனால் கடைசியில் போடா போடி.. ஆதலால் சொல்கிறேன் ஆண்களே கரண்டுக்காரன் வெட்டி வைத்த குழியில் விழுந்தாலும் காதலில் விழுந்துவிடாதீர்கள்.. [/size] [size=4]உங்களுக்கு காதலிக்கவேண்டுமென்றால் என்னைப்போல் பூக்களை கதலியுங்கள்..இல்லையெண்டால் புழுவையெண்டாலும் காதலியுங்கள்.. ஆனால் பெண்களை மட்டும் காதலித்துவிடாதீர்கள்..காதலித்துவிடாதீர்கள்..காதலி....த்..து(எனும்போது நெடுக்ஸிற்கு உணர்ச்சிவசப்பட்டதால் பேச்சுவருகிறது இல்லை..கூட்டத்தில் எல்லாரும் அமைதியாக இருப்பதை அவதானித்த குட்டி உடனே எழுந்து நின்று நான் இதை லைக் பட்டினை அமத்தி லைக் பண்னுறன் எண்டு பெரிதாக சொல்லவும் நெடுக்ஸ் உற்சாகம் அடைந்தவராக தொன்டையை சரி செய்துகொடு மீண்டும் பேசத் தொடங்குகிறார்..) [/size] [size=4]நண்பர்களே..எனக்கு நீண்டகாலமாக ஒரு சந்தேகம் இருக்கிறது..சோத்து ஆன்ரிகள் சோத்தை சாப்பிட்டதால் அன்ரிகள் ஆனார்களா இல்லை அன்ரிகள் ஆனதால்தான் சோற்ரை சாப்பிடுகிறார்களா என்பதுதான் அது... இதை நான் எங்கள் யூனியில் இருந்த எல்லாப் புத்தகங்களிலும் தேடிப்பார்த்துவிட்டேன்..ஆன்ரிகள் நிறையப்பேர் சிக்கிவிட்டனர்.. ஆனால் விடைதான் சிக்கவில்லை...என் தலையில் இருக்கும் முடி எல்லாம் போனாலும் இதற்கு நான் விடைகாணாமல் ஓயமாட்டேன்.. [/size] [size=4](அப்பொழுது ரதி தன் கான்ட் பாக்கில் இருந்த உதட்டுச்சாயத்தை எடுத்து உதட்டில் நன்றாக அப்பிவிட்டு எழுந்து நின்று நெடுக்சின் கருத்துக்கு தான் சிவப்பு புள்ளி குத்துவதாகவும் இதை யாழின் பதிவில் இருந்து தூக்கும்படி இணையவனுக்கு றிப்போட் பட்டினை அமத்தி றிப்போட் பண்ணுவதாகவும் தெரிவிக்கிறார்.. அப்பொழுது பக்கத்தில் இருந்த அலைமகள் ரதியை இழுத்துப்பிடிச்சு கீழே இருத்தி அநியாயமாக ஏசியன் கடை சாறியை மிஸ்பண்ணவேணுமோ எண்டு கேட்க ரதி நான் சாறி கட்டுவதில்லை ஒன்லி குட்டைப்பாவாடைதான் அதாலை தனக்கு கவலை இல்லை எண்டு கூறி மீண்டும் உதட்டு சாயத்தை சரிபார்க்கிரார்.. [/size] [size=4]ரதியைக் கண்ட உற்சாகத்தில் கிருபன் பக்கத்தில் இருந்த இன்னுமொருவனின் காதில் "நட்பார்க்கும் நட்பாய நட்பல்ல நட்பாகும் நிப்பார்க்கும் போவார்க்கும் நடுவில் போகாமல் எப்போதும் நிண்டு" என்று புதுக்கவிதை சொல்கிறார். .ரதியைக் கன்ட நெடுக்காலபோவானுக்கும் புது வேகம் பிறக்க தன் சிற்ருரையை தொடர்கிறார்..) [/size] [size=4]என்னைப்பொறுத்தளவில் பெண்கள் பாதிக்கண்கூட இல்லை..பிறகு எதற்கு வெட்டியாக இருகண்கள் மூண்டு கண்கள் எண்டு பேசிக்கொண்டு..கண்கள் எப்பவும் நாங்கள்தான்..நாங்கள் கண்ணெடுத்து சுட்டால் பெண்கள் காணாமல் போய்விடுவார்கள்..எப்பவும் பேரில் முன்னெழுத்து நாங்கள்தான்..பெண்கள் கார் போல..அதை ஓட்ட எப்பவும் ஒரு ட்ரைவர் வேணும்..அதுதான் நாங்கள்..எங்களின் துணையில்லாமல் பெண்களால் வாழவும் முடியாது சாகவும் முடியாது..ஆனால் நாங்கள் தனியே வாழமுடியும் [/size] [size=4]( என்று நெடுக்ஸ் சொல்லவும் ஆத்திரம் கொண்ட சகாரா ஏசியன் சாறியும் மயிரும் என்று கத்தியபடி எழும்பி தன்ர குதி உயர்ந்த செருப்பை கழட்டி கையில் எடுத்துகொண்டு மேடையை நோக்கி ஓடிவரவும் மற்ர பெண்களும் சகாறாவை பின் தொடர்ந்து மேடைக்கு ஓடுகின்றனர்.. [/size] [size=4]இதைக்கண்ட தமிழ் சிறி அப்படியே பாய்ந்து வந்து நெடுக்ஸை பிடித்து இழுத்துக்கொண்டு மேடைக்கு பின்னால் ஒடுகிறார்...நெடுக்ஸ் கையில் அகப்படாத ஏமாற்றத்துடன் பெண்கள் அணி திரும்பிச்செல்ல தமிழ் சிறி நெடுக்ஸை பாதுகாப்பாக ஒருகாரின் பின்னால் ஒளித்துவைத்துவிட்டு வந்து மைக்கை பிடித்து இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்..நிகழ்ச்சிகள் சிறிய இடைவேளையின் பின் அறிவித்தபடி தொடரும் என்று சொல்லிவிட்டு பெல்ற்றை அவிட்டுக்கொண்டு பல்லை நெருமியபடி மேடையை விட்டு விறுக்கு விறுக்கெண்டு இறங்கி நெடுக்ஸிடம் செல்கிறார்.. ) [/size] // அது ஒரு காலம்.. ஒரே பகிடிதான்.. இனிமேல் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இயன்றளவு அரசியலை விட்டு யாழில் நகைச்சுவையாக எழுதவேணும் எண்டு முடிவெடுத்திருக்கிறன்.. அதுகும் உந்த கோதாரிவிழுவான் அர்ச்சுனாவை ஏன்ரா ஆதரிச்சன் எண்டுற அளவுக்கு ஆனதுக்கு பிறகு அரசியலே வேண்டாம் எண்டாகிப்போச்சு.. விழுவான் அண்மையில் மலையக மக்களை பற்றி சொன்ன கருத்துக்கு பிறகு அந்த பரதேசியை இனிமேல் ஆதரிப்பது இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்கிறேன்.. இந்த வருசம் பிறந்தது எனக்கு அரசியல் விடயங்கள் சரிவராது போல கிடக்கு.. ஒரே அசிங்கமா இருக்கு.. இனி காமெடிதான் இயன்றளவு.. எனிவே.. என்றைக்கும் என்னை மறக்காமல் நியாபகம் வைத்திருக்கும் தலைவர் கோசானுக்கு என்ன கைமாறு செய்வனோ தெரியா.. அந்த அன்புக்கு என்றும் நன்றியும் பாசமும்.. அதேபோல் ரசோ அண்ணாவுக்கும் சுவி அண்ணவுக்கும்.. ஜ லவ்யூ..
  40. "மனமே கலங்காதே!" & "இயற்கையின் இன்ப அழகில்" "மனமே கலங்காதே!" "மனமே கலங்காதே உறுதியாக இருந்திடு தினமும் நடப்பதை விழிப்புடன் கவனித்திடு! ஈனப் பிறவிகளென யாரும் இல்லை இனம் சார்ந்த நடவடிக்கைகள் ஒழியட்டும்!" "குணம் நாடிக் குற்றமும் ஆராய்ந்து மணம் வீசும் செயல்கள் தொடரட்டும்! எண்ணம் எல்லாம் மனிதம் வளர்க்க பண்பாடு நிலைத்து மனது மலரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................................... "இயற்கையின் இன்ப அழகில்" "இயற்கையின் இன்ப அழகில் மலர்ந்தவளே மயக்கத்தின் பிடியில் உலகை மறந்தவளே தயக்கம் கொண்டு வெட்கப் படுபவளே அயலவர் உள்ளங்களில் அன்பு விதைத்தவளே வியக்க வைக்கும் விழிகள் கொண்டவளே பயம் வேண்டாம் மனம் கலங்காதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  41. "நான் வரைந்த முதல் ஓவியம்" & "உள்ளமெனும் ஊஞ்சலிலே" "நான் வரைந்த முதல் ஓவியம்" "நான் வரைந்த முதல் ஓவியம் நாணம் கொண்ட அவளின் உடல் நாட்டிய தாரகையின் தாமரை முத்திரை நாடித் தேடி கீறிய படம்!" கோடு போட்டு அளந்து பார்த்து ஏடு வாசித்து மனதில் பதித்து நாடு எங்கும் காணாத அழகு ஆடு மகளின் வண்ணக் கோலம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................... "உள்ளமெனும் ஊஞ்சலிலே" "உள்ளமெனும் ஊஞ்சலிலே ஆடும் ஆட்டியே கள்ளமற்ற நெஞ்சைத் தேடும் தேவதையே வெள்ளமாக பாயும் அன்பின் அணங்கே குள்ளப்புத்தி உனக்கு வந்தது எனோ?" "மெல்ல நடந்து விலகிப் போறவளே சொல்ல மறந்த வார்த்தைகள் எதுவோ நல்ல இதயம் கொண்ட கோதையே இல்லம் அமைக்க என்னைத் தழுவாயா?" "காதணி இரண்டும் மின்னி ஒளிர காம விழிகள் வித்தைகள் காட்ட கால்கள் நான்கும் பின்னிப் பிணைய காதல் இணைய தாலாட்ட வருவாயா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  42. "கலாச்சாரம்" & "துடிக்கும் இதயங்கள்" "கலாச்சாரம் தமிழா தலைசுத்துது எனக்கு கலப்பு இல்லா ஆதி மொழியே கலை மூன்றும் தந்த பெருமையே!" "பகலோனாக உலகிற்கு ஒளி ஏற்றிவவனே பகுத்தறிவு சித்தர்களின் பிறப்பு இடமே பண்பு என்பது பாடறிந்து ஒழுகுதலே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ "துடிக்கும் இதயங்கள்" "துடிக்கும் இதயங்கள் தேடுது அன்பு அடிக்கும் கைகள் அணைக்குது பாசம் இடிக்கும் வார்த்தைகள் வாட்டுது நெஞ்சம் குடிக்கும் மதுபானம் சிதைக்குது உடலை கெடுக்கும் செயல்கள் குறைக்குது நற்பெயரை!" "உள்ளம் மலர்ந்தால் மகிழ்வு பிறக்கும் கள்ள நட்பு மானம் கெடும் பள்ளிப் படிப்பு அறிவை வளர்க்கும் குள்ளப் புத்தி அநியாயம் செய்யும் துள்ளும் ஆசை வெட்கம் அறியாது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.