Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20018
    Posts
  3. வாத்தியார்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    11884
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    38770
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/07/25 in all areas

  1. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 20வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களான விராட் கோலி, டேவ்டத் படிக்கல் ஆகியோரின் மின்னல் வேக அரைச் சதங்களுடனும், ஜிதேஷ் ஷர்மாவின் ஆட்டமிழக்காமல் எடுத்த 40 ஓட்ட விளாசலுடனும் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை அடைய ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடமுனைந்தாலும் வீரர்கள் நிலைத்து நிற்காமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். திலக் வர்மாவும், ஹார்டிக் பாண்டியாவும் வெற்றியை நோக்கி வேகமாக அடித்தாடி செல்ல முனைந்தபோது விக்கெட்டுகளை இழந்தமையால் பின்னர் வந்தவர்களும் வேகமாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ஓட்டங்களை எடுத்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. மாமன்னரும் அவரின் பாதுகாப்புக்கு கவசமாக வலம் வரும் படைத் தளபதியும் முன்னேறி வரும் நிலையில் மன்னரைப் பாடிப் புகழ புலவர்களும் பின் தொடர்வது மாமன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கனின் பெருமையை காட்டி நிற்கின்றது 😂 இங்கே மன்னரின் படையணியில் இருந்து ஒரு வீரனைக் காணவில்லை என்று நாங்கள் தெடிக் கொண்டிருக்கின்றோம் 😂
  3. ரோகித் அவர் வீட்டில் ஒரு பெரிய கோழிக்கூடு வைத்திருக்கின்றார் போல............. அவரைத் தேடிப் போவர்களுக்கு ஆசையாக அள்ளிக் கொடுக்கின்றார்.................🤣.
  4. பையா அவசரப்பட வேண்டாம்.அவருக்கு என்ன பிரச்சனையோ ஆனாலும் அவரும் நகைச்சுவை பேர்வழி தானே.உதுகளை எல்லாம் பெரிசு படுத்தமல் தொடரந்து வாங்கோ.இல்லாட்டால் பசிக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.அந்தப் பழி உங்களுக்கு தேவையா.
  5. பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழப்பு.
  6. மத்தேயு 6 : 3 - சோம.அழகு “கயலு… உனக்கு சுண்டல் அவிச்சு வச்சிருக்கேன். அந்தச் சின்ன சம்படத்துல வடையும் வாங்கி வச்சிருக்கேன். பசிச்சா சாப்பிடு தங்கம். விளையாண்டு முடிச்சுட்டு எழில் அக்கா வீட்டுல இரு. நான் வந்து கூப்பிட்டுக்குறேன். சரியா?” – அவ்வளவு நேரம் தொடுத்த பூச்சரங்களையும் மாலைகளையும் கூடையினுள் எடுத்து வைத்து வழமையான மாலை வியாபரத்திற்குக் கிளம்பியவாறே தன் மகளிடம் வாஞ்சையாகக் கூறினாள் மலர். என்ன ஒரு பெயர் பொருத்தம்! “யம்மா… நானும் கூட வாரனே!” – கிட்டத்தட்டக் கெஞ்சினாள் கயல். இது வாராவாரம் நடக்கும் கதைதான். வார நாட்களில் கயலின் வீட்டுப் பாடத்தைக் காரணம் காட்டி உடன் அழைத்துச் செல்ல மறுத்துவிடுவாள் மலர். வார இறுதியில் சில சமயம் பிள்ளையின் ஆசைக்கு வளைந்து கொடுக்க வேண்டி வரும். “வேணாங்கண்ணு… படிக்குறதுனா படி; இல்லனா பக்கத்து வீட்டுக்குப் போய் விளையாடக் கூட செய். எதுக்குப் போட்டு அந்தக் கூட்டத்துல வந்து….?” “ம்மா… ப்ளீஸ் மா…” - மறுதலிக்கவே முடியாத ஒரு முகத்தை எங்கிருந்துதான் கொண்டு வருவாளோ? வேறு வழியில்லாமல் அந்த வெகு சில நாட்களில் இன்றும் ஒன்றாகிப் போனது. மிகவும் பொறுப்பாக ஒரு சிறிய கூடையைத் தானாக எடுத்து வந்து, “ம்ம்.. எனக்கும்” என்று மலரிடம் நீட்டினாள். “சொன்னா கேட்க மாட்டா… இந்தா.... ஆனா கொஞ்சந்தான் தருவேன்” என்றபடி வெறும் நான்கைந்து பூச்சரங்களை மட்டுமே அக்குட்டிக் கூடையினுள் இட்டாள். அம்மாவைப் போலவே கூடையை இடுப்புப் பக்கத்தில் வைத்துப் பிடித்தவள் தன் வயதிற்கே உரிய களிப்புடன் ஒவ்வொரு காலாக மாற்றி மாற்றி துள்ளிக் குதித்தவாறே தன் குதிரைவால் இடமும் வலமும் ஆட குதூகலமாகச் சென்றாள். தன் மகளைப் பார்த்துப் பார்த்துப் பூரிப்படைந்தவாறே மென்புன்னகையுடன் உடன் நடந்து வந்தாள் மலர். அந்தத் தெருமுனையில் வறுத்த கடலைப் பொட்டலங்களுடன் நின்று கொண்டிருந்த எழிலும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். மூவரும் கோவில் தெருவை நோக்கி நடந்தார்கள். கோயிலுக்கு வருபவர்கள், அதைச் சுற்றி இருக்கும் ஏராளமான கடைகளுக்கு வருபவர்கள் என மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மிக அகலமானதும் நீண்டதுமான ரத வீதி அது. எனவே ஆளுக்கு ஒரு புறமாக விற்பனை செய்து கொண்டிருப்பார்கள். “படிக்குற புள்ளைகள்லாம் என்னத்துக்கு என் கூட வாரீக?” என்று செல்லமாக அதட்டினாள் மலர். “சும்மா வா அக்கா” என்று சிரித்த எழில் இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படிப்பவள். “அம்மா! இப்பிடி ஏதாவது வெளிய வந்தாதான் உண்டு. நாங்க பாட்டுக்கு எங்க சோலிய பாக்கப் போறோம். உனக்கு என்ன எடைஞ்சலாம்?” – தனது அணியில் எழில் வந்துவிட்ட தைரியத்தில் கயலின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்தது. ஆளுக்கு ஒரு கடலைப் பொட்டலத்தைக் கையில் திணித்துத் தானும் ஒன்றைப் பிரித்துச் சாப்பிட்டவாறே நடந்தாள் எழில். கடைவீதியை வேடிக்கை பார்ப்பது பிடித்தமான பொழுதுபோக்கு கயலுக்கு. எல்லாவற்றையும் கண்கள் விரிய பார்ப்பளே தவிர ஒரு நாளும் அம்மாவிடம் எதையும் வாங்கித் தரச் சொல்லிக் கேட்கவே மாட்டாள். “நாங்கதான் படிக்கல. உங்களுக்கு இருக்குற ஒரே வேலை – படிக்குறது. அத மட்டும் பாக்குறதுதானே? அதுக்குத்தான கெடந்து இப்பிடி கஸ்டப்படுதோம் நாங்க” என்றள் மலர். வீட்டில் சில சமயம் பூ தொடுத்துக் கொண்டிருக்கும் போது கயல் படிப்பதை ஆசையாய்ப் பார்க்கையில் மலரின் கண்களே பூக்களாய் மாறிப் போகும். பத்தொன்பது வயதில் மணமாகி இருபது வயதிலேயே கயலுக்குத் தாயாகிவிட்டாள். நன்கு படிக்கும் ஆற்றல் பெற்றிருந்தாலும் கல்லூரியின் முதலாமாண்டோடு படிப்பைத் தூக்கிப் போட வேண்டிய குடும்பச் சூழல். இப்போது அவளது உலகம், உயிர், மூச்சுக்காற்று என எல்லாமே கயல்தான். ஆனாலும் உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேகத்திற்கு முற்றிலும் ஈடு கொடுக்கும் வகையில் அனைத்து உலக நடப்புகளையும் அறிந்து கொள்ள முயல்வாள். கற்றுக் கொள்ளும் ஆர்வம் மட்டும் மலரை விட்டுப் போகவே இல்லை. கோயிலில் அம்மன் சன்னதிக்கென்று தனி நுழைவுவாயில் உண்டு. கயல் உடன் வரும் நாட்களில் மட்டும் உள்ளே செல்வாள். ஐயருக்காகக் காத்திருக்கவும் மாட்டாள். அர்ச்சனையும் செய்ய மாட்டாள். வேண்டிக்கொள்ளுதல் என்பதும் அவளுக்குத் தெரியாது. சாமி கும்பிடுதல் என்பது அவளைப் பொறுத்த வரை சில நொடிகள் அக்கற்சிலையைக் கூர்ந்து நோக்கியவாறு மனதினுள் கயல் படித்துப் பெரிய ஆளாக வருவாள் என தனக்குள் வைராக்கியமாக சொல்லிக் கொள்வது. சொல்லிக் கொள்வது என்பதையும் தாண்டி அம்மனிடம் கயலைப் பெரிய கெட்டிக்காரியாகக் கொண்டு வரப்போவதாகச் சூளுரைப்பது போல இருக்கும். அதன் வீரியம் எப்படி இருக்குமென்றால் அவளது மனதிற்குக் காலமே செவி சாய்த்து அதை நிகழ்த்தித் தரும் முயற்சியில் அர்ப்பணிப்போடு ஈடுபடத் துவங்கும் அளவிற்கு இருக்கும். பின்னர் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அந்த இசைத்தூணில் கொட்டப்பட்டிருக்கும் குங்குமத்தை மோதிர விரலால் எடுத்து கயலின் நெற்றியில் இருக்கும் சிறிய கருப்புப் பொட்டிற்கு மேல் மெலிதான கோடாக இடுவாள். சட்டென்று யாரும் நெட்டி முறிக்கும் அழகைப் பெற்றுவிடும் அம்முகம். உடனே கண்களை இறுக மூடி புருவங்களையும் மூக்கையும் சுருக்கிச் சுளித்தும் விரித்தும் இரண்டு மூன்று முறை வேண்டுமென்றே விளையாடுவாள் கயல். குங்குமம் லேசாக கண்களுக்குக் கீழேயும் மூக்கின் மேலேயும் மகரந்தத்தைப் போல் சிதறிப் படியும். அதைத் துடைத்து விட்டவாறே மலரிடம் இருந்து பரிசாகக் கிடைக்கும் ஒரு முத்தத்திற்குத்தான் இந்தக் குறும்பெல்லாம். “ரொம்ப தூரம் போய்டாதீங்க… நான் பாக்குற தூரத்துலயே இருங்க ரெண்டு பேரும்” – ரத வீதியை அடைந்ததும் இரண்டு பேரையும் பார்த்துச் சொன்னாள் மலர். சரியென்றவாறே கூட்டத்தினுள் பிரிந்து சென்றனர். கோயில் ஒலிப்பெருக்கியில் உரத்துப் பாடிக் கொண்டிருந்த எஸ்.பி.பி, ஒவ்வொரு கடை வாசலிலும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மக்கள், வாகன இரைச்சல்கள் ஆகியவற்றுடன் “பூவு… பூவு… மல்லிப் பூவு… அக்கா பூ வாங்கிக்கோங்க”, “கடல… கடல… வறுத்த கடல… அண்ணா ஒரு பொட்டலம் அஞ்சு ரூபாதான்… வாங்கிக்கோங்கண்ணா” ஆகியவையும் போட்டி போட்டன. அவ்வளவு கூட்டத்திலும் வேக வேகமாகத் தன் கண்களால் துழாவி அவ்வப்போது இருவரின் இருப்பையும் உறுதி செய்தவாறே பூ விற்றுக் கொண்டிருந்தாள் மலர். கயலை உடன் அழைத்து வரும் போதெல்லாம் ஒரு வித பதற்றத்திலேயேதான் பொழுது கழியும் மலருக்கு. “சீக்கிரம் பூக்கள் விற்றுத்தீர்ந்து விடாதா?” என்றிருக்கும். கண்ணை விட்டு கயல் ஒரு நொடி மறைந்து விட்டாலும் மீதமிருக்கும் மொத்தப் பூக்களையும் சட்டை செய்யாமல் கயலைத் தேடிக் கண்டடைந்து வீட்டிற்குக் கூட்டி வந்துவிடுவாள். கூடையில் இருக்கும் பூக்களையும் அவர்கள் வரும் நேரத்தையும் பார்த்து அக்கம்பக்கத்தினர், “ஏங் கயலு? அம்மைய விட்டுத் தள்ளிப் போனியோ?” என்று விளையாட்டாகக் கேட்டுச் சிரிக்கும் அளவிற்கு அத்தனை பேருக்கும் கயலின் மீதான மலரது பேரன்பு பரிச்சயம். “ஏஞ் சிரிக்க மாட்டீங்க? வச்சுருக்குறது ஒத்த புள்ள… அதைக் காணாம ஒரு நிமிசம் உசுரே போயிருது. இன்னைக்கு யாவாரத்துல கொட்டுனது போதும். இந்தப் பூவையெல்லாம் ஆளுக்கு ஒண்ணா எடுத்து வச்சுக்கிடுங்க” என்பாள். அன்று சனிக்கிழமை ஆதலால் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. விற்பனையும் நன்றாக நடந்தது மூவருக்கும். கிட்டத்தட்ட எல்லாமே விற்றுத் தீரப் போகும் சமயம். கயலைக் காணவில்லை. லேசான பதற்றம் தொற்றிக் கொண்ட போதிலும் ‘வழக்கம் போல் எங்கேனும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பாள்’ என மனம் ஆசுவாசப்படுத்த முயன்றது. கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் அவ்வீதியை இரண்டு முறை கால்களால் அளந்து அலசி விட்டாள். கண்கள் இருப்பு கொள்ளவில்லை. சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டே இருந்ததில் இப்போது நிஜமாகவே பீதியடையத் தொடங்கினாள். “மலரக்கா… என்னாச்சு? ஏன் இப்பிடி அங்கயும் இங்கயுமா ஓடிகிட்டு இருக்க? உன்ன தேடிக் கண்டுபிடிக்குறதே பெரும்பாடா போச்சு. கயல எங்க?” – எழில் “அவளதான் காணும்னு தேடிட்டு இருக்கேன்” “பயப்படாத… இங்கதான் எங்கயாவது வாய் பார்த்துட்டு நிப்பா. அடுத்த தெருவுல போய் பாப்போமா?” “இல்ல… கண்டிப்பா இந்த ரத வீதிய விட்டு எங்கயும் போகக்கூடாதுன்னு அவளுக்குத் தெரியும்” – பரபரத்தாள் மலர். “சரி. வா… தேடுவோம்” என்று எழிலும் மீண்டும் ஒரு முறை அத்தெரு முழுக்க சல்லடை இட்டுத் தேடினாள். யாரிடமேனும் விசாரிக்கத் துவங்கும் அளவிற்குச் சூழல் கையை மீறிச் சென்றுவிட்டதாக நம்பும் திராணி அற்றவளாக மாறிப் போயிருந்தாள் மலர். ஒவ்வொரு நொடியும் கொடூரமாகக் கழிந்தது. “வர வேண்டாம்னு சொன்னா எங்க கேக்குறா… கழுத” என்று கோபம் கோபமாக வந்தது மலருக்கு. நேரம் ஆக ஆக அழுகை வரும் போல் இருந்தது. இருவருக்கும் என்னென்னவெல்லாமோ தோன்றியது. ஆனால் வாய்விட்டுச் சொல்ல விரும்பாமல் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது என மனதினுள் வேண்டிக்கொண்டிருந்தார்கள். “கோயில் வாசல்ல ட்ராஃபிக் போலீஸ் நிப்பாரு. அவர்கிட்ட சொல்லிப் பார்ப்போமா?” என்று கேட்டாள் எழில். நிலைமை மோசமடைந்து கொண்டிருப்பதை அவளது வார்த்தைகள் சட்டென வெளிச்சம் போட்டுக் காட்டியதைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. அதற்குப் பதில் கூறுவதற்குக் கூட பயந்து போனவளாக மருண்டு நின்றிருந்தாள் மலர். செய்வதறியாமல் இருவரும் தவித்துக் கொண்டிருந்தனர். கால்கள் நிலைகுத்தி நின்றன எனினும் கண்கள் ஓய்வொழிச்சல் இல்லாமல் கூட்டத்தினுள் ஊடுருவி அலைந்தபடியே இருந்தன. கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழிந்து விட்டது. திடீரென ஒரு இரு சக்கர வாகனத்திற்கும் சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்தவருக்கும் நடுவில் தென்பட்ட இடைவெளியில் பத்து வயதுப் பெண் குழந்தை ஒன்று அவ்வீதியில் இருந்த பெரிய ஓட்டல் ஒன்றின் உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது தெரிந்தது. மஞ்சள் பூ போட்ட சிகப்புச் சட்டை… கயலேதான்! “யக்கா… அங்க பாரு… கயலு!” கூட்டத்தைப் பிளந்து கயலை நோக்கிப் பாய்ந்து சென்றாள் மலர். கையில் ஒரு ஜிகிர்தண்டா கோப்பையுடன் சிரித்தவாறே அம்மாவைப் பார்த்ததும் ஓடி வந்தாள் கயல். “என்ன கயலு? எத்தன தடவ சொல்லிருக்கேன்? நீ பாட்டுக்கு எங்கயாவது போகாதன்னு” – பதற்றம் தணியாத குரலில் படபடத்தாள். “இங்கதாம்மா இருந்தேன். இந்த அண்ணாதான் வாங்கித் தந்தாங்க. சூப்பரா இருக்குமா. இந்தா நீ ஒரு வாய் சாப்பிட்டுப் பாரேன்” – கோப்பையைத் தூக்கிக் காண்பித்தாள். மகள் கிடைத்துவிட்ட ஆறுதலில் அந்த இளைஞனைப் பார்த்துப் புன்னகை புரிந்தவாறே நன்றி கூற வாய் எடுத்தாள். ஆனால் அவன் கைகளில் முளைத்திருந்த கண்கள் அவளைக் கொஞ்சம் உறுத்தின. “என்ன தம்பி பண்றீங்க?” “ஒண்ணும் இல்லையே” என்றவாறே தோள்களைக் குலுக்கினான். மலரது பார்வையில் கோபம் மெல்லமாக ஏறத் துவங்கியிருந்ததை அவளது நெரிந்த புருவங்கள் காட்டிக் கொடுத்தன. உடனே அவளைச் சமாதானப் படுத்தும் பொருட்டு, “அட! நெஜமாவே ஒண்ணும் இல்லீங்க. குழந்தை பூ வித்துட்டு இருந்தா. சும்மா பேசிட்டு இருந்தேன். ‘என்ன படிக்குற?’, ‘என்ன பாடம் பிடிக்கும்?’, ‘என்னவாகப் போற?’, ‘அம்மா என்ன பண்றாங்க?’… வழக்கமா கேக்குறதுதான். ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு தோணுச்சு… அதான்” “அதுக்கு எதுக்கு ஃபோன்ல படம் புடிக்கிறீங்க?” “என்னோட வலைதளத்துல போடுறதுக்கு” – இப்படிச் சொல்லும் போது அலைபேசியை அணைத்துச் சட்டைப் பையினுள் வைத்து விட்டிருந்தான். “அதான் எதுக்குன்னு கேக்கேன்” அவனிடம் சரியான பதில் இல்லை. அல்லது பளிச்சென உண்மையைப் போட்டு உடைக்க தைரியம் இல்லை. “அது… வந்து… நெறைய பேரு பாப்பாங்க” “பாத்து? ஆமா… நீங்க போடுற இந்த வீடியோவ எப்படி உண்மைன்னு நம்புவாங்க?” “அதுலாம் நம்புற மாதிரி பண்ணிடலாம்” – விளையாட்டாகச் சிரித்தான். “எப்படி? பிண்ணனியில ஒரு சோக பாட்டு இல்லேனா உத்வேகத்த கெளப்புற மாதிரியான பாட்ட சேர்த்தா?” – அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த எழில் கொஞ்சம் காட்டமாகக் கேட்டாள். “ஏதோ இந்தக் குழந்தைக்கு வாங்கிக் குடுக்கணும் போல இருந்துச்சு. அதுக்குப் போய் இவ்வளவு….” என்று பம்மினான். இதற்குள் அந்தச் சிறு சலசலப்புக்கு ஏற்ற சிறு கூட்டம் ஒன்று கூடிவிட்டது. அதில் ஒருவன் அந்த இளைஞனைப் பார்த்து, “டூட்! நீங்க… சமூக வலைதளத்துல… அந்த genz_idiots பக்கத்தோட…” என அடையாளம் கண்டு கொள்ள முனைய அவனுக்கு அது இன்னும் ஏந்தலாய் இருந்தது. அவனைப் பின் தொடரும் 2 மில்லியன் தலைகளும் அவனுக்காக அங்கு ஆஜர் ஆனதாகவே உணர்ந்தவன் தன் தொனியைச் சற்றே மாற்றினான். “நல்ல மனசோட உதவி பண்ண நெனச்சேன் பாருங்க. என்னைச் சொல்லணும். தெரியாம பண்ணிட்டேன். போதுமா? ஆள வுடுங்க. நல்லதுக்கே காலம் இல்ல” என்று எரிச்சலடைந்தான். “தம்பி! நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது. நான் உங்கிட்ட வந்து உதவியும் கேட்கல. நீங்க உதவி பண்ணனும்னு நெனச்சதயும் நான் தப்புன்னு சொல்லல. அத படம் புடிச்சு ஒளிபரப்பணும்ங்கிற ஈன புத்தியைத்தான் தப்புன்னு சொல்றேன்” – மலர் நிதானமாக சொல்ல முயன்றாலும் அந்த ஒரு வார்த்தையில் கோபம் கொப்பளிக்கத்தான் செய்தது. “ஈன புத்தியா? என்ன வாய்க்கு வந்தபடி பேசுற? Ungrateful bi**h” “ஏய்! இந்த புடுங்கித்தனத்தலாம் வேற யார்கிட்டயாவது காட்டு…. எங்களுக்கும் பேசத் தெரியும்… You imbecile ba****d” – எழிலும் பதிலுக்கு எகிறினாள். சண்டை முற்றத் துவங்க, யாரோ ஒருவர் அதைத் தன் கைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அதைக் கவனித்துவிட்ட அந்த இளைஞன் இணைய உலகில் தன் பிம்பம் கலைந்து விடுமோ என்று அஞ்சி, “ஹலோ! ஃபோன ஆஃப் பண்ணுங்க. யார கேட்டு ரெக்கார்டு பண்றீங்க? டெலீட் பண்ணுங்க. It’s an invasion of privacy” என்று குதித்தான். “ஹய்ய்ய்! உனக்கு வந்தா இரத்தம். எங்களுக்கு வந்தா மட்டும் தக்காளிச் சட்னியா? இல்லாதப்பட்டவங்கன்னா கேக்காம கொள்ளாம உன் இஷ்டத்துக்கு என்ன வேணா பண்ணுவியா? எங்க கூட பேசுறதயே ஏதோ தாராள மனசுக்காரன் மாதிரி எடுத்துப் போட்டுட்டு இருக்க?” என்று கடுகடுத்தாள் எழில். “நான் நல்லது பண்ணததான் வீடியோ எடுத்தேன். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு” “நல்லது பண்ணனும்னு நெனைக்குறவன் சத்தங்காட்டாம செஞ்சுட்டுப் போவான். இப்பிடி பெரும பீத்தீட்டு இருக்க மாட்டான். ஒரு 20 ரூபாய்க்கு ஜிகிர்தண்டா வாங்கி குடுத்தது நீ கட்டை விரல் பிச்சை எடுக்கத்தானே? நீ நோகாம சம்பாதிக்குறதுக்கு நாங்கதான் கெடைச்சோமா?” – தான் நினைப்பதை எவ்வாறு வார்த்தைகளில் வடிப்பது எனத் தெரியாமல் தவித்து நின்ற மலருக்கும் சேர்த்து எழிலே பேசினாள். “What nonsense? இதைப் பாத்து இன்னும் நெறைய பேருக்கு உதவணும்னு தோணும் இல்லையா?” “உதவி பண்ணனும்னு நினைக்குறதும் நீ பண்றதும் ஒன்னா? மனுசனா பொறந்த ஒவ்வொருத்தனும் தன்னால முடியும்னா கண்ணு முன்னால பசிச்சுக் கெடக்குறவனுக்குச் சாப்பாடு வாங்கிக் குடுக்கத்தான் செய்வான். நீதான் ஏதோ பெரிய சமூக சேவை செஞ்ச மாதிரி அனத்தீட்டு திரியுற” – அவ்வளவு பெரிய விஷயத்தை அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள் எழில். வசமாக மாட்டிக் கொண்டதாக உணர்ந்தவனிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. “வா எழிலு… போலாம்” என்று அவ்விடத்தை விட்டுக் கிளம்ப முயன்ற மலரின் கைப்பிடியிலிருந்து மெல்ல தன்னை விடுவித்துக் கொண்ட எழில், “இருக்கா… அதான் பேச்சு இவ்ளோ தூரம் வந்துட்டுல்ல… இரு, கொறையையும் பேசீட்டு வந்துருதேன்” என்றவாறு அவனை நோக்கித் திரும்பினாள். “நீ மலரு அக்காட்ட பேசிட்டு இருக்கும்போதுதான் உன் வீடியோல சிலத பாத்தேன். போன வாரம் ஒரு வீடியோ போட்டுருக்கியே? அவரு பிச்சைக்காரரா? சொல்லு?” என்று அவனைப் பார்த்துக் கத்தியவள், கூட்டத்தைப் பார்த்துச் சொன்னாள் – “நாலாவது தெருவுல இருக்க எங்க சித்தப்பா போன வாரம் மில்லு வேலை முடிஞ்சு களைப்பா இருக்குன்னு காட்சி மண்டபத்துல உட்கார்ந்து இருந்திருக்காங்க. இவன் ‘உங்கள ஆளையே மாத்துறோம்’னு சொல்லி சித்தப்பாவுக்கு முகச்சவரம் செய்து முடிவெட்டி குளிப்பாட்டி புதுத்துணி சாப்பாடுன்னு வாங்கி குடுத்து அனுப்பியிருக்கான். அவரும் ஏதோ ஷூட்டிங்னு நெனச்சுட்டு சிரிச்சுட்டே வந்துருக்கார். இப்போ பாத்தாதான் புரியுது”. மீண்டும் அவன் பக்கம் திரும்பி, “நேத்து கூட அந்த நாய்க்குட்டியையும் நீதான் வேணும்னு சாக்கடைக்குள்ள வீசிட்டு காப்பாத்துறாப்புல வீடியோ போட்டுருப்ப. இந்த லட்சணத்துல உன்ன நம்ப வேற செய்யணுமா?” என்றவள் ஒரு சிறிய இடைவெளி விட்டு தொடர்ந்தாள். “நீ பண்றது பேரு என்ன தெரியுமா? Pandering. Emotional Prostitution. You are just feeding your bloody ego” என்று முகத்திற் அறைந்தாற் போல் வார்த்தைகளை வீசினாள் எழில். அவற்றின் வெப்பம் பொறுக்க முடியாமல், சுற்றி நிற்பவர்களின் அருவருப்பான பார்வை தன் மீது நெளிவதைச் சகிக்க முடியாமல் நழுவப் பார்த்தான். இதற்குள் கூட்டத்தில் இருந்த ஒருவர் “சரி, விடும்மா! புள்ளைக்கு அவன் வாங்கிக் குடுத்ததுக்கு நன்றி சொல்லிட்டு அத அத்தோட விட்டுட்டுக் கலைஞ்சு போங்க” என பெரியதனமாகக் கூறவும், கோபம் பொத்துக் கொண்டு வந்தது எழிலுக்கு. “போன வருசம் அஞ்சு பேருக்கு அன்னதானம் பண்ணிட்டு அத அம்பது தெருவுக்கு போஸ்டர் அடிச்சு ஒட்டுன மகாபிரபுதானே நீங்க? நியாயம் சொல்ல வர்ற மூஞ்சியெல்லாம் பாரேன்” அதன் பிறகு ஒருவரும் வாயைத் திறக்கத் துணியவில்லை. “வீடியோவ டெலீட் பண்ணு” என்று மட்டும் சொன்னாள் மலர். அந்த இடத்தை விட்டுக் கிளம்பினால் போதும் என்ற மனநிலையில் அவசர அவசரமாக அலைபேசியைத் தட்டிக் கொண்டிருந்தான். சட்டென அவனிடம் இருந்து பிடுங்கி அந்தக் காணொளியை அழித்தாள் எழில். பின்னர் Recently deletedக்கும் சென்று அழித்துவிட்டுச் சொன்னாள், “இவ்வளவுக்கு அப்புறமும் இப்போ எடுத்தத மீட்டெடுத்து ஒளிபரப்புனேனா நீ மனுசனே இல்ல!” அலைபேசியைத் திரும்பப் பெற்றவன் தனது இருசக்கர வாகனத்தில் சிட்டாகப் பறந்தே விட்டான். மூவரும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். கடைத்தெருவின் அவ்வளவு சத்தமும் அவர்களது அமைதியில் அமிழ்ந்து போனது. ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை அவர்கள். என்ன பேசுவது என்று தெரியவில்லை. கயலுக்கு என்ன நடந்தது என்று சுத்தமாகப் புரியவில்லை. அவர்களின் கோபத்திற்குத் தான்தான் காரணமோ என்று அவள் வயதிற்கே உரிய யோசனையில் கொஞ்சம் பயந்து கூட போயிருந்தாள். அவர்களின் மௌனத்தில் கல் எறியும் பொருட்டு அருகில் வேகமாக வந்து நின்றது அவர்கள் தெருவில் வசிக்கும் இஸ்மாயிலின் சைக்கிள். சைக்கிளில் இருந்து இறங்கி அவர்களுக்கு நடைத்துணையாக சைக்கிளை உருட்டிக் கொண்டே வந்தவர் அந்த இறுக்கமான சூழலைத் தளர்த்த எண்ணி மெல்ல பேச்சை ஆரம்பித்தார். “எழிலு… ஏன்டா அவ்வளவு கோவம் உனக்கு?” “சும்மா இருங்க பெரியப்பா… அங்க என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரிஞ்சா இப்படிப் பேச மாட்டீங்க” என்று மலர் பதிலுரைத்தாள். “லாரில இருந்து மூட்டை எறக்கிட்டு அங்கனதான்டா இருந்தேன். முதலாளி இருந்தனால வர முடில. அதான் கேக்கேன்… அவன் ஏதோ இந்தக் காலத்து வழக்கத்துக்கு ஏத்தாப்புல… எல்லாரும் எங்கன பாத்தாலும் ஃபோனும் கையுமாத்தான் திரியுதாங்க. இப்போல்லாம் இது சகஜம்தான?” “என்ன பெரீப்பா நீங்களும்? அவன் செஞ்சது தப்பில்லையா? புள்ள ஏதோ பிச்சைக்கு நின்ன மாரியும் இவன் கொடை உள்ளத்தோட உதவுற மாரியும்… பெரிய வள்ளல்னு நெனப்பு. உணர்வுப்பூர்வமா உதவி பண்றவன், அவசர உதவி பண்றவன்… எல்லாவனுக்கும் அத ஆவணப்படுத்தியே ஆகணுமோ? அதெப்படி உதவி பண்ற இக்கட்டான நேரத்துலயும் வறட்டுத்தனமா பொறுமையா படம் பிடிக்க முடியுது? இது பேரு உதவிலாம் இல்ல. தன்னை எல்லோரிடமும் இரக்க குணமுள்ள நல்லவனாகக் காட்டிக் கொள்ள முனையும் அசட்டுத்தனம்” – எழில் “என்னமோ உலகத்துல ஒருத்தர் விடாம இதத்தான் பாத்துட்டு இருக்கப் போற மாதிரி… விட்டுத் தள்ளு கழுதைய!” என்று அவர்களை அதை உதாசீனப்படுத்த வைக்கும் எண்ணத்தில் கூறினார் இஸ்மாயில். “உலகத்துல ஏதோ ஒரு மூலையில கூட அவளைப் ‘பாவம்’ன்னு யாரும் பரிதாபப் பார்வை பார்த்துடக் கூடாதுன்னுதானே இப்பிடி ஓடி ஓடி ஓடா தேயுறேன்?” வழக்கமற்ற குரலில் கூறினாள் மலர். இதைச் சொல்கையில் அவள் குரல் தழுதழுத்திருந்ததா உடையத் துவங்கியிருந்ததா எனத் திருத்தமாகக் கூற இயலவில்லை. “இதுல இவ்ளோ உணர்ச்சிவசப்பட என்ன இருக்கு?” - இஸ்மாயில் “உணர்ச்சி வசப்படல பெரியப்பா. சரி - தப்பு பத்திதான் இங்க பேச்சே. இப்பவும் பெத்தவங்கள ‘அம்மா’, ‘அப்பா’ன்னுதானே கூப்பிடுறோம்? இரத்தல் இன்றைக்கும் பழிக்கக்கூடிய நாணக்கூடிய தொழிலாகத்தானே இருக்கு? சில விஷயங்கள் மாறாது; மாறவும் கூடாது. நாம ஒருத்தருக்கு உதவி பண்ணும் போது உதவி பெறுபவர் இரத்தல் தொழிலே செய்பவராயினும் அவர் கண்ணியத்தையும் தன்மானத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. நல்ல பெயர் எடுக்கணும்ங்கிறதுக்காக உலகின் கண்களில் ஒரு தனிமனிதரின் இயலாமையைச் சாதமாகப் பயன்படுத்தி அவரைக் கூனிக் குறுக வைக்கக் கூடாது. இதையெல்லாம் செய்யாமல் நல்ல பெயர் எடுத்து என்னத்துக்கு?” – தீர்க்கமாகப் பேசி முடித்தாள். எழில் பேசுவதையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு வந்தார் இஸ்மாயில். அவரது நரைத்துப் போன தாடிக்குள் இருந்து ஒரு புன்னகை, “யம்மாடி! எவ்ளோ வெவரமா பேசுதா?” என்ற ஆச்சரியத்துடன் வெளிப்பட்டது. வழியில் இருந்த தேவாலயத்தை அவர்கள் கடந்து செல்கையில் மிகச் சரியாக மத்தேயு 6 : 3 வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நன்றி 'திண்ணை' இணைய வார இதழ்.
  7. 1. அம்மா 9 மாதம் சுமக்கிறார், அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார், இருவரும் சமம், ஏன் அப்பா பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 2. அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பம் நடத்துகிறார், அப்பா தனது சம்பளத்தை எல்லாம் குடும்பத்திற்காக செலவு செய்கிறார், இருவருமே சமமான உழைப்பு, இன்னும் அப்பா ஏன் பின் தங்குகிறார் என்று தெரியவில்லை. 3. அம்மா உனக்கு என்ன வேண்டுமானாலும் சமைப்பார், அப்பா உனக்கு என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருவார், அவர்களின் அன்பு சமமானது, ஆனால் தாயின் அன்பு மேன்மையாகக் காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்னால் இருக்கிறார் என்று தெரியவில்லை. 4. போனில் பேசினால் முதலில் அம்மாவிடம் பேச வேண்டும், கஷ்டத்தில் இருக்கும் போது அம்மா என்று அழுவாள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள், ஆனால் மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில் கொள்ளவில்லை என்று அப்பா ஒருபோதும் வருத்தப்படவில்லையா? குழந்தைகளின் அன்பைப் பெறுவதில் தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 5. அலமாரியில் கலர்புல் புடவைகள், நிறைய குழந்தைகளின் உடைகள் இருக்கும் ஆனால் அப்பாவின் உடைகள் மிகக் குறைவு, அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, இன்னும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. 6. அம்மாவுக்கு நிறைய தங்க ஆபரணங்கள் உள்ளன, ஆனால் தந்தைக்கு திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட ஒரே ஒரு மோதிரம் மட்டுமே உள்ளது. இன்னும் குறைந்த நகைகள் பற்றி அம்மா புகார் செய்யலாம் மற்றும் அப்பா இல்லை. அப்பா ஏன் பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 7. அப்பா தன் வாழ்நாள் முழுவதும் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள கடினமாக உழைக்கிறார், ஆனால் அங்கீகாரம் என்று வரும்போது, அவர் ஏன் எப்போதும் பின்தங்குகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. 8. இந்த மாதம் காலேஜ் டியூஷன் கட்ட வேண்டும் என்று அம்மா சொல்கிறார், பண்டிகைக்கு எனக்கு புடவை வாங்கித் தாருங்கள், ஆனால் அப்பா புது உடை பற்றி யோசிக்கவே இல்லை. இருவருக்கும் சமமான அன்பு இருக்கிறது, அப்பா ஏன் பின்தங்குகிறார் என்று இன்னும் தெரியவில்லை. 9. பெற்றோர்கள் வயதாகிவிட்டால், குழந்தைகள் சொல்கிறார்கள், அம்மா வீட்டு வேலைகளைக் கவனிக்க குறைந்தபட்சம் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவர்கள் அப்பாவுக்கு பயனில்லை. 10. குடும்பத்தின் முதுகெலும்பு என்பதால் அப்பா பின்னால் இருக்கிறார். மேலும் நமது முதுகெலும்பு நம் உடலுக்குப் பின்னால் உள்ளது. ஆனால் அவரால் நாம் தனித்து நிற்க முடியும். ஒரு வேளை, இதனால்தான் அவர் பின்வாங்குகிறார்...!!!! யார் எழுதியது என்று தெரியவில்லை, ஆனால் அருமை. அனைத்து தந்தையர்களுக்கும் சமர்ப்பணம்* Jay R Jayakumar
  8. ஒரு கோழி ஒரு முட்டை முட்டைக்குள் இரண்டு கரு.
  9. தமிழ் எங்கள் தாய் மொழி நாங்கள் தமிழில் தான் கையெழுத்து வைப்போம் மோடி தமிழ் மொழியை அளிக்கிறார். தமிழ் மொழி உலகத்தில் முதல் மொழி தமிழ் பழைமையானது தமிழ் முதல் தோண்றிய மொழி ........... ] 🖕 இதை சீமான் எப்படி பேசுவார் என்று நினைத்து பார்த்தேன் நெருப்பு பறக்கும் எல்லோ தமிழ்நாட்டில் பாடசாலை கல்வியையே சீமானின் மகன்களே தமிழ் மொழியில் கற்று கொள்ள விரும்பவில்லை
  10. எட்டு ரதி அக்கா வீட்டுக்குப் போகிறேன். அவரின் முகத்தைப் பார்த்தாலே கடுகு போட்டால் வெடிக்கும் போல இருக்கு. அவருக்கு என்ன பிரச்சனையோ என எண்ணியபடி அவருக்காகக் கொண்டுபோன Nescafe போத்தலையும் சொக்ளற் பிஸ்கற் அடங்கிய பையையும் நீட்டுகிறேன். அதன் பின்தான் இருங்கோ என்கிறார். “ரஜிதன் என்னவாம்” “அவர் எனக்கும் சேர்த்து தான் சமைக்கப் போறன் எண்டவர். நான் வேண்டாம் எண்டிட்டன்” “அவன் மூண்டு நேரமும் சாப்பிடுறதில்லை. ஒருநேரச் சாப்பாடுதான். “ஏனக்கா ஆள் வேலை செய்யிது தானே” “ஓ மாதம் 40 ஆயிரம்தான் குடுக்கிறாங்கள்” “சம்பளம் பத்தாட்டில் வேற வேலையும் செய்யப்போறதுதானே? வெளிநாட்டில ஓராள் இரண்டு மூன்று வேலைகள் கூடச் செய்கிறார்கள்” “ஆளை வீட்டில இருத்துற முடிவில இருக்கிறியளோ” “இன்னும் நான் முடிவு செய்யேல்லை அக்கா. எதுக்கும் ஒரு கிழமை பாக்கிறன். கட்டியிருந்த கொடியைக் கூடக் காணேல்லை” “முந்தி இருந்ததுகள் அறுத்துக்கொண்டு போட்டுதுகளே? “ஆர் அறுத்தது எண்டு தெரியேல்லை” “ஏன் நீங்கள் கமராவில பாக்க ஏலாதே” இந்த நாள் நடந்தது எண்டால் சுத்திப் பார்க்கலாம். எப்ப அறுத்தவை எண்டு தெரியாமல் உந்த நயிலோன் கயிறுக்காக இருந்து இரண்டு மாதக் கமராவைப் பார்க்க ஏலுமே. மாமரத்தில கட்டியிருந்த ஊஞ்சால் கயிறும் இல்லை” “கள்ளச் சனங்கள். நாங்கள் போய் பாற்கேக்குள்ளையும் கயிறு இருக்கேல்லை” “அந்தப் பெடியும் விஷயம் தெரியாமல் கமறாவுக்குப் போடுற வயரை எடுத்துக் கொடி கட்டி வச்சிருக்கு” “அவன் பாவம். அவனுக்குத் தெரியாதுதானே, நீங்கள் எல்லாத்தையும் வடிவாச் சொல்லிக் குடுத்தால் அப்பிடியே செய்வன். அவனுக்கொரு எலெற்றிக் கேற்றில் வாங்கிக் குடுங்கோ. அவன் இப்ப வச்சிருக்கிறது நான் குடுத்தது” “நான் நாளை வரேக்குள்ள உரும்பிராயில் உள்ள கடையில் வாங்கிவந்து குடுக்கிறன்” “சரி அக்கா நாளை வாறன்” என்றபடி என் வீட்டுக்குச் செல்கிறேன். சமையல் வாசனை வீதிவரை வருகிறது. அக்கா சாப்பிடுங்கோவன் என்கிறார். நான் முதலே எனக்குச் சாப்பாடு வேண்டாம் எண்டு சொன்னான்தானே. இடியப்பத்தை எறியிறதோ? என்றுவிட்டு நான் என் கன்றுகளுடன் ஐக்கியமாகிவிடுகிறேன். திரும்ப வரும்போது “அக்கா நல்ல புல்லு இருக்கக்கா விளவில. என்ர மாட்டைக் கொண்டுவந்து கட்டட்டே அக்கா” “ஏற்கனவே 2 தென்னங்கன்றுகளைக் கடிச்சுவச்சிருக்கு. மாட்டை உள்ளுக்குள்ள கொண்டுவர ஏலாது” “அப்ப புல்லுகளை உப்பிடியே வளர விடப் போறியளோ” “இல்லை. ஆரும் இருந்தால் சொல்லும். மருந்தை வாங்கி அடிப்பம்” “இப்ப மருந்தை அடிக்க ஏலாது அக்கா. மழை நல்லாப் பெய்தால்தான் மருந்து வேரில சுவறும்” “சரி அப்ப உமக்கு ஆரையும் புல்லுப் பிடுங்குகிற ஆட்களைத் தெரிந்தால் கூட்டிவாரும். நானும் ரதி அக்காட்டை கேட்டுப் பாக்கிறன்” “இல்லை அக்கா நானே இரண்டு பேரைக் கூட்டிவாறன்” சரி என்று நான் கிணற்றைப் பார்க்கப் போனால் கிணற்றின் மேலே கட்டியிருந்த உழண்டியை மட்டுமல்லாமல் கயிற்றையும் வாளியையும் கூடக் கிணற்றடியில் காணவில்லை. நான் திரும்பி வீட்டின் வாசலைப் பார்க்க ரஜிதன் என்னைப் பார்த்தபடி நிற்பது தெரிய, “எங்க உழண்டியும் கயிறும் வாளியும்? கழற்றி வைத்திருக்கோ? “எனக்குத் தெரியாது அக்கா. நான் வரேக்குள்ள ஒண்டும் இருக்கேல்லை. இருந்த சனங்கள் கொண்டு போட்டுதுகள் போல” “இன்னும் என்னென்ன காணேல்லை எண்டு போகப் போகத்தான் தெரியும். எழிய சனங்கள். கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லை” அதன் பின்னர் அவரைப்பற்றி விசாரித்தபின் நான் என் ஓட்டோவை அழைக்கிறேன். ஓட்டோவில் சென்றுகொண்டிருக்கும்போது ஸ்கூட்டிக்கு பற்றி கொழுவ வேண்டும். யாரையாவது தெரியுமா என்று கேட்க, தானே பூட்டிவிடுவதாகக் கூறுகிறார். வீட்டுக்குச் சென்று பற்றியைக் கொழுவியபின் அவரே ஸ்டார்ட் செய்து பார்த்துவிட்டு நீங்கள் நாளை இதிலேயே போகலாம் என்கிறார். அவர் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல நான் 1000 ரூபாய்களைக் கொடுக்கிறேன். அடுத்தநாள் மச்சாளிடம் மிளகாய்த் தூளையும் கடையில் பலசரக்குப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தபின் நான் சமைப்பதற்கு ஆயத்தங்களைச் செய்கிறேன். தேநீர் ஒன்று போட்டுக் குடிப்போம் என்று கேற்றிலை எடுத்துக் கழுவி நீரை ஊற்றும்போது பார்த்தால் எமது கேற்றில் போலவே இருக்கிறது. அட அக்காவும் எமது கேற்றில் போலவே வாங்கியிருக்கிறா என்று எண்ணியபடி தேனீரை ஊற்றிக்கொண்டு வெளியே வந்து அமர்கிறேன். கேற்றில் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்திருக்கலாம். நாளைக்குக் கட்டாயம் வாங்கிக்கொண்டுவந்து அக்காட கேற்றிலைக் குடுத்திடவேணும் என எண்ணிக்கொள்கிறேன். நான் கடந்த தடவை வாங்கியது உள்ள கிடக்குத்தான். அது விலைகூடியது. அது நாம் வந்து இருக்கும்போது மட்டும் பாவிக்கலாம். இவர் பெடிபிள்ளைக்கு வேறு ஒன்றை வாங்கிக் குடுப்பம் எனவும் எண்ணிக்கொள்கிறேன். புலுனிக் கூட்டம் ஒன்று சத்தமிட்டபடி பறந்துவந்து கீழே எதையோ பொறுக்குகின்றன. தேங்காய்ப் பாலுக்காக தேங்காயை எடுத்துக்கொண்டு வந்தால் எப்படி உரிப்பது என யோசனை ஓடுகிறது. மனிசனை நித்திரையால் எழுப்பிக் கேட்க, அந்தப் பெடியன் வரும்வரை பொறு என்கிறார். ரஜிதன் வந்ததும் நான் சமைக்கப்போறன். தேங்காய் உரிக்கத்தான் உங்களைப் பார்த்துக்கொண்டு நிக்கிறன் என்றவுடன் உரித்துத் தந்துவிட்டு நான் சமைக்கட்டோ அக்கா என்கிறார். நானே சமைக்கிறேன் என்றுவிட்டு எமது அடுத்த அறையைத் திறந்து கடுகு சீரகம் போன்றன போட்டு வைக்கும் வட்டமான சில்வர் பாத்திரத்தை எடுத்துவந்து கழுவிவிட்டு துடைத்து எல்லாவற்றையும் போட்டு முடிய அவரின் திருவுபலகையை எடுத்து வைத்து தேங்காய் துருவி முடிக்கிறேன். எமக்காக வைத்திருந்த இரண்டாவது அறையுள் அனைத்துப் பொருட்களையும் வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றிருந்தோம். அந்த அறையைத் திறந்து வைத்திருந்த காஸ்சிலிண்டர், அடுப்பு என்பனவற்றைக் கொண்டுவந்து சமையலறையில் வைத்துப் பொருத்தி விடுங்கோ தம்பி என்றால் “அக்கா நான் மண்ணெண்ணை அடுப்புத்தான் பாவிக்கிறனான். இதுபற்றித் தெரியாது என்று சொல்கிறார். அன்ரிக்கு போன் செய்து எப்படிப் பூட்டுவது என்று கேட்டுப் பூட்டி முடிய, கடந்தமுறை நானும் கணவரும் சென்றிருந்தபோது வாங்கிவந்த கிறைண்டறை எடுத்து தேங்காய்ப் பூவைப் போட்டு அடிப்போம் என்று அறைக்குள் சென்று தேடுகிறேன். அதைக் காணவில்லை. ரஜிதனும் வந்து அறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டு இவ்வளவு சாமான்கள் வைச்சிருக்கிறியளோ என்கிறார். எல்லாம் வச்சிருக்கத்தானே வேணும். பக்கத்து வீட்டுக்கு கடன் வாங்கப் போறதோ என்றபடி தேட என்ன அக்கா தேடுகிறீர்கள் என்று கேட்க கிறைண்டர் வாங்கி வச்சனான் காணேல்லை என்கிறேன். என்னுடன் சேர்ந்து அவரும் தேடிவிட்டு “ஒரு இடமும் காணேல்லையே அக்கா. வடிவா யோசிச்சுப் பாருங்கோ. நீங்கள் வாங்கினதுதானோ என்கிறார். நாம் இந்தியாவில் இருந்து இரண்டை வாங்கிவந்து ஒன்றை அங்கு வைத்துவிட்டு மற்றதை லண்டனுக்குக் கொண்டுவந்ததாக நினைவுவர அதை அவருக்குச் சொல்கிறேன். சிலவேளை ஒண்டுதான் வாங்கினீர்களோ? அண்ணனிட்டை ஒருக்காகக் கேளுங்கோ என்கிறார். சரி இப்ப உதைத் தேடாமல் கையால பிழிவம் என்றபடி சமையலை ஆரம்பிக்கிறேன். சமைத்து முடிய அவரையும் உண்ணவைத்து உண்டுமுடிய நாளை புற்களைப் பிடுங்க இருவர் வருகிறார்கள் என்று சொல்லிவிட்டு அவைக்கு நாளை சமைத்து கொடுப்போம் அக்கா என்கிறார். என் னால் முடியாது என்று கூற தானே சமைக்கிறன் அக்கா என்கிறார். கடையில வாங்கிக் குடுப்பம் என்றதற்கு சாப்பாடு குடுக்காட்டில் அவை வரமாட்டினம் அக்கா என்கிறார். அப்ப அவையை வரவேண்டாம் எண்டு சொல்லுங்கோ. கடைசச் சாப்பாடு சாப்பிட உடன்படுறவையைக் கூப்பிடுவம் என்றவுடன், நான் இன்னொருக்காக கதைக்கிறான் என்றுவிட்டு அவர் வெளியே செல்ல, நான் எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட்டு என் அறையைத் திறந்துகொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தபடி கணவருக்கு போன் செய்கிறேன். நாங்கள் இரண்டு கிறைண்டர்கள் தான் வாங்கி ஒன்றை உங்கே வைத்துவிட்டு மற்றதை இங்கு கொண்டுவந்தோம் என்கிறார் கணவர். மீண்டும் அறையைத் திறந்து மேசைக்குக் கீழே எல்லாம் பார்த்தால் கிரைண்டர் இல்லை. கணவருக்கு போன் செய்ய கணவர் ஒவ்வொன்றாகச் சொல்கிறார். “சாச்சபிள் டோச் லைட் இரண்டும் கிடக்கோ பார்” என்று கூறத் தேடிப் பார்த்தால் காணவில்லை. “ஐக்கியாவில் வாங்கிய கத்தி செட் இருக்கோ பார்” அதையும் காணேல்லை. “டாய்லெட் கதவைத் திற” அதுக்குள்ள மூன்று மண்வெட்டிகள், ஒரு புத்துவெட்டி, ஒரு அலவாங்கு, சுவருக்கு துளையிடும் கருவி எல்லாம் இருக்கோ பார். அவையெல்லாம் இருக்கு. நாங்கள் வடிவா டாய்லெட் திறப்பையும் பூட்டி எங்கள் அறையுள் வைத்ததனால் அதெல்லாம் அப்படியே இருக்கு என்கிறேன். “உந்த அறை திறந்து கிடந்ததா? “இல்லையே” அப்ப எப்பிடிக் காணாமல் போயிருக்கும் பொருட்கள் என்று கேட்க எனக்கு எப்பிடித் தெரியும் என்றுவிட்டு முன்பு இருந்தவர்களைக் கூட்டி வந்த எம்மூரவரிடம் விடயத்தைச் சொல்லி போலீசுக்குப் போகப்போகிறேன் என்கிறேன். நான் ஒருக்கா அவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன். ஆனால் அவை கதவை எப்பிடி அக்கா திறந்து எடுக்க முடியும் என்கிறார். அந்த நேரம் பார்த்து ரதி அக்கா போன் செய்கிறார். நான் கவலையுடன் எமது பொருட்கள் களவு போனது பற்றிக் கூறுகிறேன். ஆர் உவையைக் கொண்டுவந்து இருத்தினாரோ அவரைத்தான் கேளுங்கோ. உவையை நம்பி இருக்க விட்டதுக்கு உங்களுக்கு இந்த வேலை செய்யிறதே என்கிறா. சரி அக்கா நான் பிறகு வாறன் என்றுவிட்டு ரஜிதன் வேலைக்குச் சென்றபின்னர் மீண்டும் எமது அறைகள் இரண்டிலும் தேடுகிறேன். எங்கள் படுக்கை அறையுள் ஒரு சிறிய பொருட்கள் வைக்கும் அலுமாரியும் உண்டு. அதைத் திறந்து பார்க்க அங்கு கிறைண்டரின் மூன்று அரைக்கும் கப்புகளில் ஒன்றுமட்டும் கிடக்கிறது.
  11. ஆமாம் அதனை நானும் ஒத்துக் கொள்கிறேன்,...மோடி தமிழ் மொழியில் கையெழுத்து வைக்க கூடாது என்று சொல்லி இருப்பாராயின். ...தமிழர்கள் என்ன சொல்லி இருப்பார்கள் ??? இப்ப சொல்வதற்கு. நேர் எதிராக கருத்துகள் சொல்லி இருப்பார்கள் தமிழ் எங்கள் தாய் மொழி நாங்கள் தமிழில் தான் கையெழுத்து வைப்போம் மோடி தமிழ் மொழியை அளிக்கிறார். தமிழ் மொழி உலகத்தில் முதல் மொழி தமிழ் பழைமையானது தமிழ் முதல் தோண்றிய மொழி ...........இப்படி நிறைய சொல்லி இருப்பார்கள் அரசியல்வாதிகள் அரசியல் செய்வது இயல்பானது மோடி தமிழனை கொண்டு நாங்கள் தமிழில் கையெழுத்து இடமாட்டோம். என்று சொல்ல வைத்தது அரசியல் ....அது ஒரு சிறந்த அரசியல் இதோ மோடி தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் பல்கலைகழகத்தில் தமிழ் மொழியில் மருத்துவம் படிப்பிக்கும்படி தமிழ்நாடு அரசை கேட்டு உள்ளார் படிபிக்கலாம். இல்லையா?? ஏன் ஆங்கிலத்தில் படிபிக்க. வேண்டும் ?? அல்லது தமிழ் மொழியில் தமிழ்நாட்டில் மருத்துவம் படிப்பிக்கிறார்களா. ???
  12. இது ஒரு மடைமாற்றும் நிகழ்வு...அதாவது நாமலின்..அல்லது ச்கோதரர்களின் விசாரணைச் செய்திகளை வெளிவராமல் செய்ய பரப்பப்படும் செய்தி
  13. உங்களுக்கு கோழி எங்களுக்கு முட்டை. பாருங்க எப்படி வஞ்சகம் செய்கிறார்.
  14. இன்று மும்பையின் விளையாட்டு சூப்பர் ........ நியாயமான தோல்வி . ........ பெங்களூருக்கு தண்ணி காட்டிவிட்டது . ........ இப்படி லக்னோவுடன் விளையாடி இருந்தால் திலக்கைத் திட்ட வேண்டிய தேவையே வந்திருக்காது . ........! 😂
  15. முதலமைச்சர் @suvy மேலே மேலே போகிறார். வாழ்த்துக்கள். 17 முட்டைக் கோப்பி பிளீஸ்.
  16. ஸ்டாலின் எந்த மொழியிலும். கையெழுத்து வைக்கலாம் மோடி கவலைப்பட போவதில்லை ஆனால் மோடி ஏன் சொன்னார் தமிழ்லில். கையெழுத்து வையுங்கள் என்று மோடிக்கு நன்கு தெரியும் மோடி சொல்வதை எல்லாம் ஸ்டாலின் எதிர்ப்பார். சரி பிழை பார்ப்பது கிடையாது அனைதையும் எதிர்க்க வேண்டும் சரியை சரி என்று சொல்ல போனால் ...மக்கள் மோடியை ஆதரிக்க தொடங்கி விடுவார்கள் எனவேதான் மோடி செய்வது அனைத்தையும் பிழை என்று சொல்ல வேண்டும் ..... இது மோடிக்கும் தெரியும் அதாவது மோடி செய்யும் சொல்லும் சரியானவற்றையும். ஸ்டாலின் பிழை என்று தான் சொல்லுவார் மோடிக்கு தமிழ் மீது காதல் இல்லை இவர்கள் என்ன மொழிகளில் கையெழுத்திட்டாலும். மோடிக்கு கவலையில்லை,....ஆனால் நாங்கள் தமிழர்கள் என்று சொல்லும் இவர்களின் வாயால் நாங்கள் தமிழில் கையெழுத்திட்டா மாட்டோம். என்று சொல்ல பண்ண வேண்டும் அதற்கு என்ன செய்யலாம்?? அதாவது மோடி தமிழில் கையெழுத்து இடுங்கள் என்று சொன்னால் ..இல்லை இல்லை நாங்கள் தமிழில் கையெழுத்து இடமாட்டோம். அதை நீங்கள் சொல்ல. சட்டம் இல்லை என்பார்கள் ......இங்கே மோடி புத்திசாலியா?? இல்லை தமிழர்கள் புத்திசாலிகளா. ?? நான் சொல்கிறேன் தமிழனை நாங்கள் தமிழில் கையெழுத்து இடமாட்டோம். என்று சொல்ல வைத்த மோடி அதி புத்திசாலி தமிழில் கையெழுத்து வையுங்கள் என்று மோடி சொல்ல வேண்டிய அவசியம் என்ன ??
  17. பத்தைக்குள்ளும் ,பனமரத்துக்கும் பின்னால் ...விசயம் செய்தாக்கள் வெளிநாடு வெளிக்கிட்டால் இதுதானே நடக்கும்
  18. ம் எல்லாமே ஒரு கையெழுத்தால் வந்தவினை. இதை முதலே சொல்லியிருக்கலாமே?
  19. கருணாநிதி தொடக்கம் உதயநிதி வரை... மினைக்கெட்டு, முத்திரை ஒட்டி எழுதிய கடிதம் எல்லாம், குப்பைத் தொட்டிக்குள் போய் விட்டது. ஐயோ... பாவங்கள். 🤣
  20. மோடி கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை ஒருநாளும் பார்ப்பதில்லை. கடிதம் திறந்தவுடன் யார் போட்டது?கையெழுத்து தனது மொழியில் போட்டிருக்கிறாரா? இல்லை என்றால் குப்பைத் தொட்டிக்குள் போடு. இதனால தான் இதுவரை தமிழ்நாட்டு தலைவர்கள் எழுதும் கடிதங்களுக்கு மோடியிடமிருந்து பதிலேதும் இல்லை.
  21. இன்று மும்பை அணிவீரர்கள் எல்லாம் சோதனைக்குட்படுத்தப்பட்டு அடைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் ஓட்டைகள் அடைக்கப்பட்டும் 😂 பிடுங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு கட்டப்பட்டும் 🤣களத்தில் இறக்கப்படுவார்களாம் ஆகவே மும்பை இன்று வெல்லுது நாங்கள் புள்ளியை அள்ளுது🤩
  22. புலம்பெயர் அண்ணைமார், தமது உத்தியோகபூர்வ கையெழுத்தை என்ன மொழியில் போடுவார்கள்? தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி மொழி, ஆனால் ஆங்கிலம் இணைப்பு மொழி என்பதே தமிழக தலைவர்கள் நிலைப்பாடு. ஆகவே தமிழில் அல்லது ஆங்கிலத்தில் போடலாம். ஹிந்தியில் போட்டால்தான் பிழை. இங்கே N M என ஆங்கிலத்தில் கையெழுத்து போடுவது எந்த பானிபூரிவாயன்? https://commons.m.wikimedia.org/wiki/File:Signature_of_Narendra_Modi_(English).svg
  23. அடுத்த முறையாவது... ஸ்ராலின், தமிழில் கையெழுத்து வைத்து கொடுத்தால்... மோடி நிச்சயம் இவரின் கோரிக்கையை நிறைவேற்றுவார். பிழைகளை தங்கள் பக்கம் வைத்துக் கொண்டு, மோடியை குற்றம் சாட்டுவது சரியல்ல.
  24. இரண்டு வருடங்களுக்கு முன்பு... இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவரும், விமான கதவை... ரொய்லற் கதவு என நினைத்து திறக்க முயற்சித்தவர். இவ்வளவிற்கும்... அவர் கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றவர். அந்த மோட்டு சிங்களவனுடன் ஒப்பிடும் போது... ஜோர்தானிய பிரஜை, எவ்வளவோ திறம். 😂
  25. ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 5 capped players இனை தக்கவைக்கமுடியும் . ஏற்கனவே நான் எழுதியது போல இம்முறை 18,14,11,18,14 = 70 கோடி இவர்களுக்கு செலவு செய்யவேண்டும். சென்ற ஐபிஎல்இல் SRH 2 ஆம் இடத்தை பிடித்தது. இதற்கு காரணமானவர்களை SRH தக்கவைக்க விரும்பியது. க்ளாசன் 23 கோடிக்கும் அணித்தலைவர் கம்மின்ஸ் 18 கோடிக்கும் சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட சோடிகளான ஹெட், அபிஷேக் சர்மாவை தலா 14 கோடிக்கும் தக்கவைத்தனர். மிகுதி 6 கோடிக்கு உடன்பட்ட நடிஸ்ஜ் குமார் ரெட்டி தக்க வைக்கப்பட்டார். ஏலத்தில் SRH இடம் இருந்த மிகுதி தொகை 50 கோடி மட்டுமே ( 120- 70 =50) இதில் மீதி 20பேரை வாங்க வேண்டும் . அணிகள் தக்கவைக்காத ஏலத்தில் வரும் வீரர்களை ஒவ்வொரு குழுவாகப்பிரித்து குழு 1 இல் இருந்து 79 குழுக்களாக பிரித்தார்கள். குழு1 இல் இருந்து ஆரம்பித்து வீரர்களை ஏலம் விடுவார்கள். முதல் 2 குழுவில் சிறந்தவீரர்கள் இருப்பார்கள் முதல் குழுவில் 6 பேர் இருந்தார்கள். இதில் இருந்தவர்களை எல்லா அணிகளும் அடிபட்டு அதிக விலை குடுத்து வாங்கினார்கள் . இந்த குழுவில் இருந்த ரிஷப் பாண்ட், சிரேஷ அய்யர், ஆர்சிப் சிங் போன்றவர்கள் அதிக விலைக்கு போனார்கள். வாசிங்டன் சுந்தர் 14 வது குழுவில் இருந்தார். 96 வது வீரராக இவருக்கு ஏலாத்தின் இலக்கம் வழங்கப்பட்டது. அஸ்வின் 4 வது குழுவில் இருந்தார் வாஷிங்டன் சுந்தர் 4 வது குழுவில் இருந்தால் சென்னை சிலவேளை வாசிங்டன் சுந்தருக்கு போட்டியிட்டு இருக்கும்
  26. நீங்கள் சென்ற லக்னோ vs மும்பை விளையாடடைப் பார்த்தால் ஒன்று புரியும் . ......நியாயமாய் மும்பை வெல்ல வேண்டியது ........முதல் 10ஓவர் வரை நன்றாக விளையாடியவர்கள் . ......பின் திலக்கின் சொதப்பல் எல்லாம் நம்புகிறமாதிரி இல்லை . ...... விளையாடித் தோற்கவில்லை . ........ தோல்விக்காகவே விளையாடியது போல் இருந்தது . ......... தோற்றுப் போகும்போது கூட பாண்டியா உட்பட யாருடைய முகத்திலும் சோகத்தின் சாயல் துளியும் இல்லை . ....... ஒரு பார்வையாளனாக என் நிணைப்பு இவை யாவும் ஒரு நாடகம் . ........ நாங்கள் சும்மா குத்தி முறிந்து எதுவும் பிரயோசனமில்லை . ........ இங்கே வெறும் பம்பல் + சந்தோசம் அவ்வளவுதான் . .......! 😁
  27. பையா, ஒரு அணியோ அல்லது ஒரு வீரரோ பிழையாக ஆடும்போது அதை விமர்சனம் செய்வதில் எந்தத்தவறும் இல்லை. குறிப்பாக CSK கேப்டன்சி, டோனியின் ஆடவரும் வரிசை, மட்சை கடைசி ஓவர்வரை எடுத்துச்செல்லும் யுக்தி என்பவற்றை விமர்சிப்பதில் தவறில்லை! ரூடராஜ் ஆரம்ப ஆட்டக்காரராக இறங்கவேண்டும். அதேபோல் SRH இந்த தொடக்கவீரர்களின் அணுகுமுறையும் விமர்சிக்கப்படவேண்டியதே! குறிப்பாக க்ளாஸனின் ஷாட் செலெக்க்ஷன் மிக மோசமாக உள்ளது! அதனாலேயே முன்பு தென்னாபிரிக்க பல மட்ச்களை தோற்கவேண்டியதாக இருந்தது! பத்து போட்டியில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே சோபிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை. அதனால் மற்றவர்களுக்காக நாங்கள் எமது விமர்சனங்களை மாற்றவேண்டியதில்லை! ஆனால் வார்த்தை பிரயோகங்களை கவனிக்க வேண்டும்! அவ்வளவே!!
  28. 07 APR, 2025 | 10:56 AM இலங்கை இராணுவத்தோடு இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு ஜனாதிபதி அனுரா திசநாயகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். மேலும் இந்தியா - இலங்கை இடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதில் முக்கியமானது இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும். இதன் அடிப்படையில் இந்திய ராணுவம் மற்றும் இலங்கை ராணுவத்திற்குமிடையே கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பும் உதவியும் வழங்கும். இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேரை கொன்று குவித்தது இலங்கை இராணுவம்தான். ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிங்கள இராணுவம் கொன்றது. தங்கள் மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்து தாயகத்தை மீட்பதற்குப் போராடிய விடுதலை இயக்கத்தைக் கருவறுத்தது சிங்கள ராணுவம். யுத்தக் களத்தில் போராடிய தமிழ் வாலிபர்கள் எட்டு பேரை நிர்வாணப்படுத்தி கைகளைக் கட்டி பின்னந்தலையில் சிங்கள ராணுவ வெறியர்கள் சுட்டுக் கொன்றதையும் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்ரியாவை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி சிதைத்து சின்னாபின்னமாக்கி சுட்டுக் கொன்றதையும் இங்கிலாந்தின் சேனல் -4 தொலைக்காட்சி வெளியிட்டு உலகின் மனசாட்சியை உலுக்கியது. இந்தக் கொடூர காட்சிகளைக் கண்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்ணீர் விட்டுக் கதறினர். இனப்படுகொலை நடத்திய சிங்கள ராணுவத்தை ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இலங்கை இராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி இராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகம் ஆகும். தமிழ் இனத்தை வஞ்சித்திருக்கும் பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷன்’ விருது வழங்கப்பட்டிருப்பதும் பொருத்தமானது என்றுதான் தமிழ் மக்கள் கருதுவார்கள். https://www.virakesari.lk/article/211367
  29. அப்படி என்றால் மோடிக்கு ஏன். கடிதம் எழுதுகிறீர்கள் ?? மோடிக்கு கடிதம் எழுதியபடியால் தான் அவர் கதைக்கும் சந்தர்ப்பம் வந்தது ...அவருக்கு கடிதம் எழுதும் போது உங்கள் சொந்த மொழியில் கையெழுத்திடும்படி சொல்ல ஒரு பிரதமருக்கு பூரண உரிமையுண்டு அவரை நாட்டின் பிரதமர் எங்களது பிரதமர் என்று சொல்லி தான் கடிதம் எழுதுகிறீர்கள் அதை தா. இதை தா. கச்சதீவை மீள். என்றெல்லாம எப்படி கடிதம் எழுத முடியும் ??
  30. அதேவேளை வேற்று மொழியில் கையெழுத்தை எல்லோரும் வைக்கும் பகுதியில் இருந்து வேற்று மொழி தேவையற்றது என்பதும் அர்த்தமற்ற வேண்டுகோளே.
  31. என்ன இவை ஒரு ஐந்தாறு பேர் கூட்டு சேர்ந்திருக்கினம். இது நல்லதுக்கில்லை. இதை உடைக்கோணும். முதல்வர் @suvy க்கு வாழ்த்துக்கள்.
  32. ஆமாம் இங்கு கதைப்பது சொந்த மொழியில் கையெழுத்திட்டதில்லை என்பது பற்றி மட்டுமே படித்தது படியாதது பற்றி இல்லை இந்த விடயத்தில் மோடியின் கேள்வி சரியாகும் தமிழ்நாட்டு தலைவர்கள் மத்திய அரசிடமிருந்து என்ன உரிமையை கேட்டு அல்லது போராடி பெற்று உள்ளார்கள்?? போராடவில்லை என்றால் இவர்கள் சகல உரிமைகளுடனும். வாழ்கிறார்களா???
  33. பல மொழிகளை பேசும் மக்கள் வாழும் நாட்டில் ஒரு தலைவர் அவர் பேசும் மொழியில் அவரது கையெழுத்தினை இடுவதால் அவரது இனம் அந்தப் பிரதேசத்தில் தனது சுதந்திரத்தை அனுபவிக்கும் என்று அர்த்தம் இல்லை கையெழுத்து என்பது ஒரு தனிப்பட்டவரின் அடையாளம் அதற்கு மொழிக்காப்பு முலாம் பூச நினைப்பது மோடியாரின் தேர்தல் காழ்ப்பு பேச்சு அவ்வளவே
  34. எல்லாம் கொப்பி அடியா இருக்குமோ புல‌வ‌ர் அண்ணா லொள்.............................................
  35. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 19வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடத் திணறி விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்ததனால் இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. மொஹமட் சிராஜ் 17 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி இரு விக்கெட்டுகளை 16 ஓட்டங்களில் இழந்திருந்தாலும், சுப்மன் கில்லின் அதிரடியுடன் ஆட்டமிழக்காமல் பெற்ற 61 ஓட்டங்களுடனும், பந்துகளை எல்லைக்கோட்டைத் தாண்டி பறக்கவைத்த வாஷிங்டன் சுந்தரின் 49 ஓட்டங்களுடனும் 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @suvy ஐயா தொடர்ந்தும் முதல்வராக நிலைக்கின்றார். கூடவே @நந்தன் உம் இரண்டாம் இடத்தில் சமமான புள்ளிகளுடன் நிற்கின்றார்.
  36. தனது காணியில் விளைந்த முருங்கைக் காய்களை, சந்தைக்கு கொண்டு செல்லும் பெண்.
  37. இந்தியா... சிங்கள அரசியல்வாதிகளை மதிக்கின்ற அளவிற்கு, தமிழ் அரசியல்வாதிகளை கால் தூசிற்கும் மதிப்பதில்லை. சும்மா... சம்பிரதாயத்துக்காக சந்தித்து, படம் எடுத்துவிட்டு போய் விடுவார்கள். பல வருடங்களாக இவர்கள் இந்தியாவை சந்தித்தும், இதனை உணர்ந்த மாதிரி தெரியவில்லை. இவர்களை இந்தியனை நம்பி மோசம் போனதைவிட சீனாகாரனை நம்பி இருந்தாலாவது, ஏதாவது பிரயோசனமாக இருந்திருக்கும். முட்டாள் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை படுகுழியில் தள்ளி விட்டார்கள். இதற்குள் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு... சுத்துமாத்து செய்து கொண்டு திரிகிறதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.
  38. கிழக்கில்… நாலு பாராளுமன்ற உறுப்பினர்களை எடுத்துத் தந்த சாணக்கியன், மோடிக்குப் பக்கத்தில் நிற்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால்… சுமந்திரன் தானும் தோற்று, தமிழரசு கட்சி தோற்பதற்கும் காரணமான ஆளுக்கு, இந்தச் சந்திப்பிற்கு போவதற்கே அருகதை இல்லை. வெட்கம் இல்லாமல் போய் பல்லை காட்டிக் கொண்டு நிற்கிது.
  39. முன்பு தமிழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் எரித்து நாசமாக்கிய சிவப்பு புரச்சியாளர்கள் போன வருடம் ஆட்சிக்கு வரும்வரை கடுமையான இந்திய எதிர்ப்பை தான் கடைபிடித்தனர்
  40. உண்மையில் இந்த வரவேற்பு...கொண்டாட்டம் அனைத்தையும் பார்க்க..இது இலங்கையில் நடந்த நிகழ்வாக தெரியவில்லை..தனியாக போறார் ..இந்திய மக்களை சந்திக்கிறார்..கைகுடுக்கிறார்...குழந்தைப் பிள்ளையை தூக்கிறார்...தமிழான குறளில் பேசுகிறார்.. எக்ஸ் தளத்தில் தமிழில் நன்றி சொல்கிறார்..போதாக்குறைக்கு முசுலிம்களூம் குல்லாவும் ...முட்டாக்கும் போட்டு நாமளும் உங்கடையாக்கள் என்று .கைகுடுக்கினம் ...அப்ப எங்கையப்பா சிங்களவர்.. இலங்கையா ..இந்தியாவா
  41. இந்த குழப்பம் இன்னும் புதிய பணக்காரர் களை உருவாக்கி தள்ளபோகுது ஒரு பிரச்சனை வருகிறது என்றால் சந்தர்ப்பங்களையும் காவி கொண்டே வரும் .
  42. சுமாவை யாரும் சும்மா வெறுக்கவில்லை , அதனால் என்ன பயன் .... ரணில் செய்யும் நரி வேலையை அவரின் வழி வந்தவர் நன்றாக செய்துவிடடார் .....சுக்கு நூறாகிவிட்டார் ....இதனை விட இந்த நரியை சிறப்பிக்க வேறு என்ன வேண்டும் ....நல்ல வார்த்தைகளில் இவரை சொல்வது கடினம் ....இது பொது வெளி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.