Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்14Points87990Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்10Points20012Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்7Points38756Posts -
nunavilan
கருத்துக்கள உறவுகள்6Points53011Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/09/25 in all areas
-
நானும் ஊர்க் காணியும்
4 pointsபத்து அடுத்தநாள் காலை வழமைபோல வீட்டுக்கு வரும் போது மருதனார் மடத்துக்கும் சுண்ணாகத்துக்கும் இடையே உள்ள பூங்கன்றுகள் விற்கும் கடைக்குச் சென்று விதவிதமாக பூத்திருந்த செவ்வரத்தங் கன்றுகளில் 15 ஐ வாங்கி ஓட்டோவில் அனுப்பிவிட்டு நானும் வீட்டுக்குப் போகிறேன். கன்றுகளை இறக்கி வைத்தவர் நீங்களோ நடப்போகிறீர்கள்? என்கிறார். எனக்கு ஏலாது இவ்வளவும் நட. வீட்டில் ஒருத்தர் இருக்கிறார். அவரைக்கொண்டுதான் நடவேணும் என்கிறேன். உங்களுக்கு உப்பிடியான வேலைகளுக்கு ஆரும் தேவை என்றால் சொல்லுங்கோ. தெரிந்த பெடியன் இருக்கிறான். நான் அனுப்பிவைக்கிறன் என்கிறார். தேவையென்றால் உங்களுக்கு போன் செய்யிறன் என்றுவிட்டு காலை உணவை உண்டு முடிய பத்து மணிக்கு இரண்டு பெண்களும் வருகின்றனர். அவர்களோடு கதைத்துப் பயன் இல்லை என்று புரிய, அடுத்த பக்கத்துப் புற்களைப் பிடுங்கும்படி கூறிவிட்டு கதிரையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். பதினொரு மணிக்கு ரஜிதன் வருகிறார். “என்னக்கா நிறையப் பூக்கண்டுகள் வாங்கிவந்திருக்கிறியள்” “நல்ல வித்தியாசமான நிறங்கள். அதுதான் நடுவம் என்று வாங்கினனான்” “நேற்றே வாங்கியிருந்தால் வேலை செய்தவங்களைக் கொண்டே நட்டிருக்கலாம் அக்கா” “அதனால என்ன? நான் கொண்டுவந்து தாறன். நீங்கள் நடுங்கோ” “நான் உந்தச் சேத்துக்குள்ள இறங்கமாட்டன் அக்கா. எனக்குக் காலில புண். அது பெருத்திடும் அக்கா” “என்ன சின்னப் பிள்ளைக்குக் கதை சொல்லுற மாதிரிச் சொல்லுறீர்” “என்னால கிடங்கு வெட்ட ஏலாது அக்கா” “சரி நீர் போய் உம்மடை அலுவலைப் பாரும்” நான் வீட்டுக்குள் சென்று புத்துவெட்டியை எடுக்கும்போது பார்த்தால் இரண்டு மண்வெட்டியையும் காணவில்லை. “ரஜிதன், மண்வெட்டியளை எங்க வச்சனீங்கள்” “நான் எடுக்கேல்லை அக்கா. நேற்று வேலை செய்தவங்கள் கொண்டுபோட்டாங்களோ” “ அவர்கள் எனக்கு நல்ல நம்பிக்கையான வேலையாட்கள். அவை கொண்டுபோகாயினை” “எனக்குத் தெரியாது அக்கா. அவங்கள் உங்கை எங்காலும் மறைச்சு வச்சிட்டு எடுத்துக்கொண்டு போயிருப்பங்கள்” “வாயை மூடும். அவை கழுவித் தர நான் மூன்றையும் குசினி மூலையில வச்சிட்டுப் போனனான். அதுக்குப் பிறகு நீர் மட்டும்தான் உள்ளுக்குள்ள வந்தனீர்” “நான் என் மண்வெட்டியைத்தான் விடிய வேலைக்குப் போக்கேக்குள்ள கொண்டுபோனனான்” “உம்மைத் தவிர மண்வெட்டியை ஆரும் எடுத்திருக்க முடியாது. மரியாதையா என் மண்வெட்டிகளைக் கொண்டுவாரும்” என்று கோபமாகச் சொல்லிவிட்டு வர, “அக்கா, ரதி அன்ரி உங்களில சரியான கோபத்தில இருக்கிறா” “என்ன கோபம் அவவுக்கு? “தான் தானாம் என்னைக் கூட்டிவந்தது. என்னை இருத்திறது பற்றி நீங்கள் அவவோடை ஒண்டுமே கதைக்கேல்லையாம்” “நான் ஒவ்வொருநாளும் அவவிட்டைக் கதைக்கிறன் தானே, என்னட்டையே சொல்லியிருக்கலாமே? எதுக்கு உம்மட்டைத் தூதுவிடுறா? நான் பிறகு அவவோடை கதைக்கிறன்” “அவ இனிமேல் உங்களோடை கதைக்கமாட்டாவாம். தன்னை மதிக்கேல்லையாம்” “கிரைண்டர் கப் தனக்குத் தரேல்லை எண்ட கோபமோ” “நீங்கள் வந்த நாள் தொடக்கம் நான் அவைக்குப் போய் உதவி ஒண்டும் செய்யேல்லை” “எனக்கு விளங்கேல்லை. என்ன உதவி செய்யிறனீர்? “அவையின்ர வாழைக் குலைகள் சந்தைக்குக் கொண்டுபோய் குடுப்பன், கறக்கிற பால் பண்ணைக்குக் கொண்டுபோறது, மில்லு க்குப் போறது எண்டு ஒவ்வொரு நாளும் ஏதாவது வேலை இருக்கும். நீங்கள் வந்தபிறகு நான் அங்க போறேல்லை. இண்டைக்கு நான் வாற நேரம் பாத்து றோட்டில வந்து மறிச்சு சப்பல் பேச்சுப் பேசிப்போட்டு இனி எனக்கும் உனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை எண்டு ஏசிப்போட்டுப் போட்டா” “நான் பிறகு போய் அவவோடை கதைக்கிறன். நீர் முதல்ல போய் என்ர மண்வெட்டிகளைக் கொண்டுவாரும்” நான் வீட்டை போட்டு வாறன் என்றபடி அவர் ஸ்கூட்டியக் கிளப்ப நான் ஓட்டோக்காரருக்கு போன் செய்து கன்றுகள் நட அந்தப் பையனை அனுப்பும்படி கூறுகிறேன். பதினைதே நிமிடங்களில் அந்தப் பையன் கேற்றைத் திறந்துகொண்டு சயிக்கிளில் வருகிறார். பார்த்தால் சிறிய வயது. நல்ல மொடேணாக ஆடை உடுத்தி, தலைவாரி பார்த்தால் பள்ளியில் படிக்கும் மாணவன் போல் தெரிய, பள்ளிக்கூடம் போறேல்லையோ என்கிறேன். இல்லை நான் பத்தாம் வகுப்போடை விட்டிட்டன் என்கிறார். உங்கடை வயதுக்குப் படிச்சா நல்ல வேலை செய்யலாமே என்றவுடன், என்ன அன்ரி நடவேணும் என்கிறார். நான் புத்துவெட்டியைக் கொடுத்து நல்ல ஆழமாக் கிண்டுங்கோ. நான் கன்றுகளை வைக்கிற இடத்தில கிடங்கு எடுத்து வையுங்கோ என்றபடி இடங்களைப் பார்த்துப் பார்த்துக் கொண்டுபோய் வைத்துவிட்டு திரும்பி வர நான்கு கன்றுகளை நட்டுமுடித்திருக்க, எனக்கோ இத்தனை விரைவாக வேலை செய்கிறாரே என்று ஆச்சரியம். பொலித்தீனை எங்கே போட்டீர்கள்? என்றபடி தேடினால் ஒன்றையும் காணவில்லை. நான் பொலித்தீனைக் கழட்டேல்லை. அப்பிடியே நட்டிட்டன் என்றவுடன் வந்த கோபத்தை அடிக்கியபடி நீங்கள் ஒருநாளும் கன்றுகள் நடேல்லையா என்று கேட்க இல்லை என்கிறார். பொலித்தீனுடன் நட்டால் வேரோட ஏலாமல் கன்று பெரிதாய் வளராது. திரும்பக் கன்றுகளை வெளியே எடுங்கோ என்று கூற திரும்ப வெளியே எடுக்கிறார். அவருடன் கூடவே நின்று அனைத்துக் கன்றுகளையும் நட்டு முடிய அவருக்குப் பணத்தைக் குடுத்து அனுப்பிவிட்டு பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போனால் நின்று கதைத்துச் சிரிக்க, வேலையைப் பாருங்கோ என்று கூறிவிட்டு நகர, தேத்தண்ணி இன்னும் தரேல்லை என்று கூற, அட மறந்திட்டன் என்றபடி தேநீர் ஊற்றிக் கொடுத்து பாகோடாவும் கொடுக்க அவர்கள் மாமர நிழலில் அமர்ந்துகொள்கின்றனர். தன் வீட்டுக்குப் போன ரஜிதன் ஒரு மண்வெட்டியுடன் வந்கிறங்குகிறார். எங்கே மற்ற மண்வெட்டி என்றதற்கு இது என் மண்வெட்டி அக்கா. நீங்கள் என்னில சந்தேகப்படுறியள் என்று வீட்டை போய் எடுத்து வாறன் என்கிறார். நான் மண்வெட்டியைப் பார்த்தால் அது எனது மண்வெட்டிதான். ஒரு மூலை கல்லில் பட்டுச் சிறிது நெளிந்திருந்தது. நான் அதைக் கூறி இது என்னுடையதுதான் என்றாலும் அவர் விடுவதாக இல்லை. இரண்டாவதும் உம்மட்டைத்தான் கிடக்கு. நாளை அதையும் கொண்டுவாரும் என்றுவிட்டு அதை உள்ளே எடுத்துக்கொண்டு சென்று வைத்துப் பூட்டுகிறேன். “அக்கா எனக்கு 10 வருசத்துக்கு அக்றிமென்ற் போட்டுத் தாங்கோவன். நான் உங்கடை வீட்டையும் வளவையும் வடிவாப் பார்க்கிறன்” “நாங்களே 10 வருஷம் உயிரோடை இங்க இருப்பமோ தெரியாது. அதுக்குள்ள உமக்குப் பத்து வருஷம் எழுதி பிறகு வீடு உமக்கே சொந்தமாகவோ? “நீங்கள் மாதம் 10 ஆயிரம் எனக்குத் தாறன் எண்டு ரதி அன்ரிக்குச் சொன்னனீங்களோ? “எனக்கு என்ன விசரா? “அவ உங்களோடு கதைத்ததாகச் சொன்னாவே அக்கா” “நான் அப்பிடி ஒண்டும் கதைக்கவில்லை. நான் போக்கேக்குள்ள அவவிட்டை என்ன சுத்துமாத்துக் கதை என்று கேட்கிறன், நீர் போய் இவைக்கும் உமக்கும் எனக்கும் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வாரும்” என்று பணத்தைக் கொடுக்கிறேன். உணவு வந்தவுடன் நான் உணவுகளைக் கொண்டுபோய் இரு பெண்களுக்கும் கொடுத்துவிட்டு நீரும் சாப்பிடும் என்று கூற, தாங்கோ அக்கா நான் ஃபிரிஜ் இல் வைத்து இரவு சாப்பிடுகிறேன். இப்ப பசிக்கவில்லை என்கிறார். அவரின் பொதியைக் கொடுத்துவிட்டு உள்ளே இருந்த சிறிய மேசை ஒன்றில் என் உணவுப்பொதியை கொண்டுசென்று வைக்கும்போது எனது சாச் செய்யும் டோச் லைற் மேசையில் கிடக்கிறது. ஒருபக்கம் மகிழ்ச்சியும் மறுபுறம் வியப்புமாக அதை எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறேன். அது என்னுடையதுதான். உடனே ரஜிதன், இது எனது லைற் எல்லோ. எங்க இருந்தது? என்கிறேன். இது நேற்று என்ர மாடு அறுத்துக்கொண்டு போட்டுது. இருட்டினதால அன்ரிதான் இதைத் தந்து தேடு எண்டவ என்கிறார். எதுக்கும் என்னட்டையே இருக்கட்டும். நான் அவவோடை கதைக்கிறேன் என்றவுடன் என் கையில் இருந்த டோச் லைற்றை லபக் என்று பறிக்கிறார். அன்ரி என்னட்டைத் தந்தவ. நான் அவவிட்டைக் குடுக்கிறன். நீங்கள் அவவிட்டை வாங்கிக்கொள்ளுங்கோ என்றபடி தன் ஸ்கூட்டியினுள் கொண்டுபோய் வைக்க, நான் அதிர்ந்துபோகிறேன். கோபத்தை வெளியே காட்டவில்லை. ரஜிதன் வேலைக்குப் போட்டு வாறன் என்று கிளம்ப பெண்களின் வேலைமுடியும் வரை பொறுமையாக இருந்துவிட்டு கதவு கேற் எல்லாம் பூட்டிவிட்டுக் கிளம்புகிறேன். ரதி அக்காவின் வீட்டுக்குச் சென்று அக்கா என்று கூப்பிட, கதிரையில் இருந்த அக்கா விசுக்கென எழுந்து உள்ளே போகிறார். எனக்கு முதலில் விளங்கவில்லை. ஏதோ எடுக்கப் போகிறார் என நினைத்து ஒரு இரண்டு நிமிடம் நிற்கிறேன். அவர் வரவேயில்லை. நான் என் ஸ்கூட்டியைத் திருப்பிக்கொண்டு இணுவிலுக்குச் சென்று கணவர், மச்சாள், அன்ரி எல்லோரிடமும் நடந்தவற்றைக் கூற உவை இருவரும் சேர்ந்துதான் பொருட்களை எடுத்திருக்கினம். அவ முதல் சில பொருட்களை எடுக்க பெடிப்பிள்ளை மிச்சத்தை எடுத்திருக்கிறார் என்கின்றனர். அடுத்தநாள் என் இரு அன்ரிமாரையும் ஓட்டோவில் வரும்படி கூறிவிட்டு நான் முன்னே செல்கிறேன். பதினொரு மணிக்கு ரஜிதன் சிரித்தபடி வருகிறார். ஆரிவை என்றதும் நான் என் சித்திமார். நாங்கள் இன்று இங்குதான் தங்கப்போறம். அதுதான் இவையும் வந்தவை என்கிறேன். நான் மனிசனோடை நேற்று உங்களை இருத்துவது பற்றிக் கதைச்சனான். அவர் தனிய ஒருவர் வேண்டாம். ஒரு குடும்பம் என்றால் இருத்திவிட்டு வா எண்டவர்” என்று கூற அவரின் முகம் இருண்டுபோகிறது. “என்னக்கா உப்பிடிச் சொல்லுறியள். நான் எல்லாச் சாமான்களையும் உங்களை நம்பிக் கொண்டுவந்திட்டன்” “நானும் உங்களை நம்பித்தானே மண்வெட்டிகளை வைத்துவிட்டுப் போனனான். முதல்நாள் வைச்சிட்டுப் போனதையே இல்லை எண்டு சொல்லுற உங்களை நம்பி எப்பிடி நான் வீட்டில வச்சிருக்கிறது? “அப்ப எத்தினை நாளில கிளம்பவேணும்” “இப்பவே கிளம்புங்கோ “ “இப்பவேவா? உவ்வளவு பொருட்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு போக வேணும். ஒரு மூண்டு நாள் எண்டாலும் வேணும்” “நீங்கள் ஒரு லாண்ட்மாஸ்டர் பிடிச்சு ஒரேயடியா எல்லாத்தையும் ஏற்றுங்கோ” “அதுக்கு 1500 ரூபா வேணும். என்னட்டை அது இல்லை” “அந்தக் காசை நான் தாறன்” “இரண்டு பேரும் சேர்ந்து என்னை நடுத்தெருவில விட்டிட்டியள்” “நீர் நடுத்தெருவில நிக்கிறதுக்குக் காரணம் நீர் தான். நான் நம்பி உம்மை வீட்டுக்குள்ள விட, என்ர வீட்டிலேயே களவெடுத்திட்டு என்னையே ஏமாத்தின உம்மடை எளிய புத்திதான் நீர் வெளிய போகக் காரணம்” முதல்ல போலீசுக்குப் போகத்தான் நினைச்சனான். பிறகும் அங்க இங்க எண்டு இழுபடப் பிடிக்காமல் தான் சும்மா விடுறன். அதன் பின்னர் அவர் எதுவும் பேசவில்லை. லாண்ட்மாஸ்டர் வந்தவுடன் பொருட்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு செல்ல என் மனம் நீண்ட பெருமூச்சுடன் நிம்மதி அடைகிறது. முடிந்தது4 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
21 போட்டி….8 புள்ளிகள்….🤣 நம்ம மனநிலை எப்படி இருக்கும் என ஒரு செகண்ட் யோசிக்காமல் வார்த்தைய விட்டுடீங்க இல்ல ஜி🤣. யாழில் போட்டியை யார் வெல்வார்கள் என்பதை விட…. தொடர் முடிய முன்னம் கோஷான் double figures அடிப்பாரா என்பதே சுவாரசியமான கேள்வி🤣🤣🤣.4 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சீமான் பற்றிய அரசியல் திரிகளுக்குள் என்னை அறியாம ஏதோ எல்லாம் கண்ட மேனிக்கு எழுதின நான்😋...................... விளையாட்டு திரியில் பம்பலா தான் எழுதுவேன்..................என்னில் ஒரு பிழையும் இல்லை சுவி ஜயா தப்பு செய்தால் உண்மையை ஒத்துக் கொள்ளுவேன் , நான் விளையாட்டு திரிகளில் வழமை போல் எழுதுவதையே கடை பிடித்து எழுதினேன்...................... இவளவு காலமும் விளையாட்டு திரியில் நீங்களும் நானும் எவளவத்தை மாறி மாறி பம்பலா எழுதி இருப்போம்................... கடந்த கால போட்டிகளில் உங்கள சிரிக்க வைக்க நான் செய்த மிம்ஸ் இப்பவும் எனது போனில் இருக்கு இதோ அந்த மிம்ஸ் மீண்டும் உங்கள் பார்வைக்கு............................. இப்படி ஏகப் பட்ட மிம்ஸ் கடந்த காலங்களில் ஈழப்பிரியன் அண்ணாவை வைச்சும் செய்து இருக்கிறேன்👍.......................3 points
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
3 pointsஇனமொன்றின் குரல்8h · பிள்ளையான் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டிய மிக மோசமான கிரிமினல் குற்றவாளி என்பதில் யாருக்கும் மாற்று கருத்திருக்க முடியாது ஆனால் பிள்ளையான் தென்னிலங்கை பயன்படுத்திய வெறும் கருவி மட்டுமே என்பதை நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் பிள்ளையானை குற்றசெயல்களில் ஈடுபடுத்திய கோட்டாபய ராஜபக்சேவின் "Triploli Platoon" என்கிற புலனாய்வு வலையமைப்பிற்கு பொறுப்பாகவிருந்த மேஜர் பிரபாத் புலத்வத்தே இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றார் விசேடமாக பிள்ளையானுக்கு அடைக்கலம் வழங்கி ராஜபக்சே குடும்பத்தின் நலன்களுக்காக இயக்கிய மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண முதல் பிரிகேடியர் அமல் கருணாசேன வரையான பிரதானிகள் பாதுகாக்கப்படுகின்றார்கள் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்படும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சுதந்திரமாக நடமாடுகின்றார் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என கத்தோலிக்க திருச்சபை அடையாளம் காட்டியுள்ள பிரிகேடியர் சூலா கொடிதுவாக்கு, கேணல் அன்சார், கேணல் கெலும் மத்துமகே உட்பட்ட பிரதானிகள் என யாரும் இதுவரை விசாரணை வலயத்திற்குள் கொண்டுவரப்படவில்லை தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் ஒன்றில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய லொறியொன்றை தடுக்காது விடுவித்தது தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்படவில்லை இந்த லொறியானது கோட்டாபய ராஜபக்சவிற்கு மிக நெருக்கமான அவன்ட் கார்ட் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமானதாக இருந்ததாக அடையாளம் காணப்பட்டு இருந்தது தொடர்பாக நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் விசாரிக்கவில்லை இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சின் துணைப்படையாக மாதம்தோறும் 35 லட்சம் பிள்ளையானுக்கு அரச பொது நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது கிழக்கின் இராணுவ முகாம்களான கபரண இராணுவ முகாம் , இருதயபுரம் இராணுவ முகாம் , வெலிங்கந்த இராணுவ முகாம் உட்பட பல முகாம்களிலிருந்து செயற்பட பிள்ளையானுக்கு அனுமதி வழங்கப்பட்டிருகின்றது தமிழ் வர்த்தகர்கள் உட்பட பொதுமக்களை கடத்தி பணம் வசூலிக்க கோட்டாபய ராஜபக்சே அவர்கள் பிள்ளையான் உட்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கியமையை அமெரிக்கா தூதுவராலயம் அம்பலப்படுத்திருக்கின்றது அதே போல கபரண உட்பட்ட இராணுவ முகாம்களில் இந்த பணம் இராணுவ அதிகாரிகளுக்கு மத்தியில் பகிரப்பட்டத்திற்கும் ஆதாரம் இருக்கின்றது விசேடமாக 'கன்சைட்-Gun Site’ வதை முகாம் பொறுப்பதிகாரியாக இருந்த சுமித் ரணசிங்க அவர்களுக்கு தமிழ் பெண்களை கடத்தி பிள்ளையான் வைத்த விருந்து வரை பொதுவெளியில் தரவுகள் உண்டு இது தவிர வெளிநாடுகளிருந்து இராணுவ புலனாய்வாளர்களுக்கு பணியாற்றும் புளொட் அமைப்பை சேர்ந்த ஸ்டாலின் ஞானம் உட்பட்ட இந்தியன் இராணுவ காலத்தின் ஒட்டு குழுக்களும் பிள்ளையானை பயன்படுத்திருக்கின்றன அதாவது இராணுவம் செய்ய முடியாத வேலைகளை செய்து முடிப்பதற்கு கோட்டாபய ராஜபக்சவின் ஒழுங்கமைப்பில் இராணுவ புலனாய்வு கட்டமைப்பு பிள்ளையானை பயன்படுத்திருக்கின்றது ஆனால் எந்த கிரிமினல் குற்ற செயல்கள் தொடர்பாகவும் கோட்டாபய ராஜபக்சே முதல் இராணுவ புலனாய்வு கட்டமைப்புயை சேர்ந்த யாரிடமும் வாக்கு மூலம் கூட பதிவு செய்யப்படவில்லை ஆனால் தேர்தலை முன்னிட்டு மிக தெளிவாக பிள்ளையான் பேரில் சகல கணக்குகளையும் எழுதி முடிக்க தென்னிலங்கை தயாராகி விட்டது சொந்த இலாபங்களுக்காக வேறு தரப்புகளிடம் தங்கள் சொந்த இனத்தை விலை பேசியவர்கள் அந்த தரப்புகளின் தேவைகள் முடிவடைய அவர்களாலேயே பலியிடப்படுவார்கள் என்பதற்கு பிள்ளையான் நவீன சான்றாகி இருக்கின்றார்3 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னையில் 6 பந்து வீச்சாளர்கள். இவர்களில் Khaleel Ahamed பவர் பிளே ஓவர்களில் சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். பெரும் பாலும் இவர் முதல் 6 ஓவர்களில் 3 ஓவர்கள் வீசுவார். மற்றைய 3 ஓவர்களில் ஜடேஜா, பதிரானா போன்றவர்கள் ப ந்து வீசுவதில்லை . முன்பு வீசி பல ஓட்டங்களை விட்டு கொடுத்திருக்கிறார்கள். பதிரானா இறுதி ஓவர்கள் சிறப்பாக வீசக்கூடிய death bowler. முன்பு மேற்கிந்தியா வீரர் பிராவோ சென்னை அணியின் death blower ஆக இருந்தார். பதிரனவுடன் பெரும்பாலும் கடைசி ஓவர்கள் வேகப்பந்து விச்சளார்கள்தான் பந்து வீசுவார்கள். சுழல் பந்து /மெதுவாக வீசுபவர்கள் வீச்சாளர்கள் வீசினால் எதிரணி வீரர்கள் பல ஓட்டங்கள் பெறுவார்கள். ( பங்களூர் அணியின் கருணால் பாண்டியா சில போட்டிகளுக்கு வீசி இருக்கிறார்.இதில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோனி கடைசி ஓவரில் இரண்டு 6 ஒட்டங்களும், 1 நான்கு ஓட்டமும் பெற்றார். ரித்து சிங் (KKR) நேற்று கடைசி ஓவரில் ரவி பிஷ்னோய்க்கு எதிராக 4,4,6 என ஓட்டங்கள் பெற்றார்). khaleel அஹமத் மிகுதியாக இருந்த 4 வது ஓவரையும் இறுதி ஓவர்களில் வீசினார் சென்னையின் Khaleel Ahamed பவர் பிளேயில் 3 ஓவர்கள் போட மிகுதி 3 ஓவர்களில் 2 ஓவர்கள் முகேஷ் சவுத்திரி வீசினார் . அவருடைய 2 வது ஓவரில் அதிக ஓட்டங்களை எதிர் அணியினர் எடுத்ததினாலே அஸ்வினை 6 ஓவருக்கு அழைக்கப்பட்டார். (பவர் பிளே ஓவரில் சுழல் பந்து வீச்சாளர்களில் முன்பு இலங்கை வீரர் திக்சனா பந்து வீசுபவர். அஸ்வினும் வேறு அணியில் இருந்தபோதும், முன்பு சென்னைக்காக விளையாடியபோதும் வீசியிருக்கிறார். அத்துடன் பவர் பிளே ஓவர்களில் ஜடேஜா, பத்திரான போன்றவர்கள் பந்துவீசுவதில்லை.) 6 ஓவரில் அஸ்வின் 20 க்கு மேற்பட்ட ஓட்டங்களை வழங்கினார். பவர் பிளே முடிந்த 8 வது ஓவரில் அஸ்வின் 2 விக்கேற்றுக்களை பெற்றார் . kahaleel ahamed, பத்திரனா தலா 4 ஓவர்கள் எல்லபோட்டிகளிலும் வீசுவார்கள். ஆக இவர்களின் 8 ஓவர்கள் பவர் பிளே, இறுதி ஓவர்களில் உபயோகிக்கப்படும். 2 ஓவர்கள் மகேஷ் சவுத்திரி வீசியதினால் மிகுதி 10 ஓவர்களில்தான் சென்னை அணி, சுழல் பந்து வீச்சாளர்களை பயன் படுத்தி இருக்கிறார்கள். இவர்களில் அஸ்வின் 4 ஓவர் வீசியதால் மற்றைய இருவருக்கும் தலா 3 ஓவர்கள் வழ்ங்கப்பட்டது . முன்பு சென்னை அணியில் தீக்சனா, மொயின் அலி, ஜடேஜா என இருந்தபோதும் ஒரு முறையும் 12 ஓவர்கள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சென்னை அணியில்தான் பிரபல்யமான 3 சுழல் பந்து விச்சளார்கள் இருக்கிறார்கள். மற்றைய அணியில் அதிக பட்சம் 2 பிரபல்யமான சுழல் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.3 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாம ரணிலின் ஆட்கள். கண் வைத்தால் பிரித்தே விடுவம்.2 points
-
44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
இலங்கை வரி இல்லை, இது அமெரிக்ககாவின் இலங்கை மீதான வரி, ஏற்றுமதி இறக்குமதி நிலுவையினடிப்படையில். அமெரிக்க இரண்டு வகையான வரிக்கொள்கையினை தற்போதய ட்ரம் அரசு பின்பற்றுகிறது. அனைத்து இறக்குமதிகளின் மீதும் 10% வரி மற்றது அதிகமாக அமெரிகாவிற்கு ஏற்றுமதி செய்வோருக்கு பிரத்தியேகமான வரி. இலங்கையின் அமெரிக்க இறக்குமதி $368 மில்லியன். இலங்கையின் அமெரிக்க ஏற்றுமதி $3000 மில்லியன். அமெரிகாவிற்கு இலங்கையினுடனான வர்த்தகத்தில் ஏற்படும் நட்டம் $2632 மில்லியன். வரி = (வர்த்தக நிலுவை 2632/ அமெரிக்காவின் மொத்த இறக்குமதி 3000)*100 இதன் பிரகாரம் 87.73% வரி, அதனுள் முறையற்ற நாணய கொள்கை என்பவற்றுடன் 88% வரியினை இலங்கை பெறுகிறது அதில் 50% தள்ளுபடியாக 44% வரியினை இலங்கை மீது அமெரிக்கா நிர்ணயித்துள்ளது.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது பழைய மேற்கிந்தியதீவுகள் அணி மாதிரி. சுவி நந்தன் ஆரம்பத் துடுப்பாட்டம் டெஸ்மன் கெயின்ஸ் கோர்டன் கிறீனிட்ச் மாதிரி. பின்னால ரசோதரன் விவியன் ரிச்சட்ஸ் மாதிரி. ஒருத்தரும் உடைக்கேலாது. ஏலுமென்டா பந்து போட்டுப் பாருங்க 😁2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுவி ஐயா தலைமையில் இது நல்ல கூட்டு அண்ணா.............. ஆறும் அசல் தங்கங்கள் அண்ணா (நாளை இந்தப் போட்டி முடியும் வரை).............😜. மூன்று கூட்டாளிகள் அநேகமாக சேர்ந்து தான் வருவினம், போவினம்.......... நாங்கள் ஒன்று இரண்டு பேர்கள் அப்பப்ப அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றோம்..............🤣.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் @suvy க்கு வாழ்த்துக்கள். இந்தக் கூட்டு சரியில்லையே?2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை வியாழன் 10 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB எதிர் DC 17 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் 06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் சுவி கந்தப்பு ஏராளன் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 23வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சனின் அதிரடியான 82 ஒட்டங்களுடனும், வேகமாக அடித்தாடிய ஜொஸ் பட்லர், ஷாரூக் கான், ராகுல் தெவதியா, ரஷீட் கான் ஆகியோரின் பங்களிப்புடனும் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்களை எடுதது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களில் ஷிம்ரொன் ஹெட்மயரைத் தவிரப் பிறர் நிலைத்து ஆடமுடியாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @goshan_che இரட்டை இலக்கப் புள்ளிகளை எடுத்திருந்தாலும் முதல் எட்டு, கடைசி எட்டு நிலைகளில் மாற்றங்கள் இல்லை!2 points
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
சீமான் இப்படியான வழக்கை நிச்சயம் வித்தியாசமாகத் தான் கையாண்டிருப்பார். 1. வழக்கைப் போட்டிருக்க மாட்டார். 2. பின்கதவால் ஆளுனரிடம் டீல் பேசி, ஏதாவது செய்ய முயன்றிருப்பார். 3. ஆளுனர் அதை எதிர்த்து வழக்குப் போட்டிருப்பார். 4. நீதி மன்றம் அழைத்தால் போகாமல், ஊர் ஊராக சுற்றித் திரிவார். 5. அழைப்பாணையை வாங்காமையால் அவர்கள் கதவில் ஒட்டினால் "தூள் தூளாகக் கிழித்து" சீமான் குழு ஆணையை வாசிக்க முற்படும்😂. 6. பிறகு வழக்கைத் தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் போவார், யாராவது பிரபல வட இந்திய வழக்கறிஞர்கள் உதவுவர்! 7. கேஸ் ஓவர்! Trivia: இதே போல நடந்து கொள்ளும் இன்னொரு பிரபலம் மேற்குலகில் இருக்கிறார், யார் சொல்லுங்கோ பார்க்கலாம்😂?2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பையா அவர் வெல்லும் போது ஜாலியாக இருந்தார். நிலமை கொஞ்சம் கீழே இறங்கும் போது கடுப்பாகிவிட்டார். வீட்டில என்றால் மனைவியிடம் காட்டியிருப்பார்.சொறி சொறி பிள்ளைகளிடம் காட்டியிருப்பார். இதை நண்பர்களிடம் தானே இறக்கிவிடணும். எனவே நீங்க வழமை போலவே எழுதுங்கள். நீங்க தான் கட்டத்தையே தாங்க கூடிய ஆளாச்சே. டோன் வொறி2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வீரப்பையன் - நான் நகைச்சுவைக்காகவே எழுதினேன். நீங்கள் அழைத்தினால்தான் போட்டியில் கலந்து கொண்டேன். கலந்து கொண்டது மகிழ்ச்சி. போட்டியில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அடுத்தமுறையும் கட்டாயம் கூப்பிடுங்கோ. நிச்சயம் கலந்து கொள்வேன். நீங்கள் கருத்துகள் எழுதுவதினால்தான் இந்த திரி கலகலப்பாக இருக்கிறது. அவர் 8 புள்ளிகளுடன் இருப்பதினால்தான் 10 புள்ளிகளுடன் ஓரளவு நிம்மதியாக இருக்கிறேன் 😀2 points
-
44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
எனது புரிதல்களில் அமெரிக்கா இரண்டு வகையான வரி விதிப்புகளை மேற்கொள்கிறது. அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களுக்கும் 10% வரிவிதிப்பது முதலாவது வகை(Non trade deficit). இரண்டாவது வகை அமெரிக்க ஒரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதனை விட இறக்குமதி அதிகமாக உள்ள நாடுகளின் மேல் விதிக்கப்படும் வரி இரண்டாவது வகைப்படும் (Trade deficit). அவுஸ்ரேலியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதனை விட பல மடங்கு இறக்குமதி செய்கின்றது, இருப்பினும் முதலாவது அடிப்படை வரி மூலம் அவுஸ்ரேலிய பொருள்களுக்கு 10% வரியினை அவுஸ்ரேலியா செலுத்துகிறது. இலஙையின் நிலவரம் வேறானது, இலங்கை அமெரிக்காவிற்கு $3000 மில்லியன் ஏற்றுமதி செய்கிறது, ஆனால் இறக்குமதி $368 மில்லியன் (கடந்த ஆண்டு) இந்த வர்த்தகத்தின் மூலம் அமெரிக்காவிற்கு $2632 மில்லியன் வர்த்தக நிலுவை ஏற்படுகிறது. வரி = (வர்த்தக நிலுவை 2632/ அமெரிக்காவின் மொத்த இறக்குமதி 3000)*100 இதன் பிரகாரம் 87.73% வரி, அதனுள் முறையற்ற நாணய கொள்கை என்பவற்றுடன் 88% வரியினை இலங்கை பெறுகிறது அதில் 50% தள்ளுபடியாக 44% வரியினை இலங்கை பெறுகிறது. இதில் இலங்கையினால் எதுவும் செய்ய முடியாது, இலங்கையின் பொருள்களின் ஏற்றுமதி பெருமளவிலான தாக்கம் ஏற்படும் ஆனால் அமெரிக்காவின் புதிய வரி கொள்கை அவர்கள் நாட்டில் நலிந்து போகும் உற்பத்தி துறையினை வளப்படுத்தும் முயற்சி என கூறுகின்ற நிலையில் இலங்கையின் பெருமளவான ஏற்றுமதி விவசாயதுறை ஏற்றுமதியாக இருக்கும் என கருதுகிறேன் அதனால் இந்த வரிகளால் உற்பத்தி துறைக்கு எந்த நலனும் இல்லை மறுவளமாக சாதாரண அமெரிக்க குடிமக்களின் வாழ்க்கை செலவு அதிகரிப்பே ஏற்படும், ஏனெனில் இந்த வகையான விவசாய பொருள்கள் பெருமளவான அத்தியாவசிய ஆனால் மாற்றீடற்ற பொருள்களாக இருக்கும். அத்தியாவசிய பொருள்களின் விலை மாற்றம் அதன் கேள்வியில் தாக்கம் செலுத்துவதில்லை (விலை நெகிழ்ச்சி தன்மை 1 குறைவாக இருக்கும்).2 points
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
அனுர… சிங்களவர். அவர் சிங்களத்தில் தான் மேலே கையெழுத்து வைத்துள்ளார். தமிழக, ஈழத் தமிழர்தான்… தாங்கள் பிரிட்டிஷ்காரர் என்ற நினைப்பில் ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடுவார்கள்.2 points
-
நானும் ஊர்க் காணியும்
2 pointsஒன்பது உடனே ரதி அக்காவுக்கு போன் செய்து, “கிறைண்டரின் ஒரு கப் எமது படுக்கை அறையில் உள்ள அலுமாரியுள் கிடந்தது அக்கா” என்றுவிட்டு எடுத்துக்கொண்டு போனவர்கள் பற்றி அவருக்குத் திட்டுகிறேன். நீங்கள் டென்ஷன் ஆகாதேங்கோ நிவேதா. பிச்சைக்காரக் கூட்டத்தைக் கொண்டுவந்து இருத்தியிருக்கிறியள் என்கிறா. எப்பிடிக் கதவைத் திறந்ததுகள். நீங்கள் பூட்டாமல் போட்டியளோ என்கிறா. முதல் வந்து இருந்த சனங்கள் எந்தப் பொருளையுமே எடுத்துக்கொண்டு போகேல்லை என்றுவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டு மீண்டும் அந்த அறைக்குள் சென்று எப்படித் திறந்து எடுத்திருப்பார்கள் என்று ஆராய எனக்குப் புரிய ஆரம்பிக்க, கதவுகளை கொண்டியை எல்லாம் பூட்டிவிட்டு வெளியே வந்து கதிரை ஒன்றை எடுத்துக்கொண்டு போய் கதவுக்கு அருகில் வைக்கிறேன். கதவுக்கு அண்மையில் ஒரு காற்றோட்டமாக இருப்பதற்காக ஒரு சிறிய யன்னல் உயரத்தில் உண்டு. இரண்டு பக்கமும் திறக்கும்படியான ஒரு அமைப்பு உள்ள யன்னல். கதிரையில் ஏறி நின்று அதைத் திறக்கப் பார்க்கிறேன் எனக்கு எட்டவில்லை. அந்தநேரம் பார்த்துக் கணவர் போன் செய்கிறார். ஆரும் இல்லாதபோது ஏன் தேவையில்லாத வேலை பார்க்கிறாய். விழுந்தாலும் தூக்க ஆட்கள் இல்லை என்று திட்டுகிறார். நான் என் கண்டுபிடிப்பைச் சொல்ல கணவருக்கு விளங்குகிறது. கடந்த தடவை கணவருடன் சென்றபோது மூன்று அறைகளுக்கு மாபிள் பதித்திருந்தோம். இந்த அறைக்கு மேலே திறாங்கு இருந்ததுதான். கீழே புதிதாக ஓட்டை போடவேண்டும். அதைப் போடக் கணவர் மறந்துவிட்டார். அவர்கள் எனியை வைத்து மேலே உள்ள சிறிய யன்னலை எப்படியோ திறந்து கம்பியை விட்டுத் திறாங்கையும் மேலே இழுத்துவிட்டு கதவைத் தள்ள கதவு திறந்திருக்கும். பொருட்களை எடுத்துவிட்டு மீண்டும் பூட்டைப் பொருத்தி வைத்து இழுக்கக் கதவு பூட்டியிருக்கும் என்று கணவர் சொல்ல நானும் அப்படியே செய்து பார்க்க, பூட்டிய கதவு திறந்து மீண்டும் பூட்டு அதேபோல் நன்றாகப் பூட்டுகிறது. சரி இப்படித்தான் எடுத்திருப்பார்கள் என்று தெரிந்துவிட்டது. ஆனால் ஆர் எடுத்திருப்பினம் என்று நானும் கணவரும் கதைத்துக் களைத்து, வீட்டுக்குள்ள சரி வெளியில hose பைப் மூன்று வைத்துவிட்டுச் சென்றது. அதைவிட 25 ஆயிரம் பெறுமதியான முள்ளுக் கம்பி ரோள். அதுகள் இருக்கோ பார் என்கிறார். சென்று பார்த்தபோது ஒரு 12 மீற்றர் நீளமான பைப்பும் முள்ளுக்கம்பிகளும் இல்லை. கணவரிடம் சொல்ல “எல்லாம் எங்கடை பிழை. கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பெறுமதியான பொருட்கள் எடுத்திருக்கினம். போலீசில சொன்னாலும் அவங்கள் வெளிநாடு எண்டதும் எங்களிட்டைக் காசு கறக்கப் பார்ப்பார்கள். இனி என்ன செய்யிறது. பேசாமல் விடு. உடன அந்த தச்சப் பெடியைக் கூப்பிட்டு ஓட்டை போட்டுத் திறாங்கைப் போடு” என்றவுடன் அவருக்கு போன் செய்கிறேன். அடுத்தநாள் புல்லுப் பிடுங்க இருவர் வருகின்றனர். அதைவிட இன்னும் சில மரங்களும் நடுவோம் என்று முன்னர் எனக்கு அடிக்கடி வேலை செய்பவர்கள் இருவரையும் வரும்படி சொல்கிறேன். ஊரெழுவில் இருக்கும் லங்கா பார்மில் கொஞ்ச மரக் கன்றுகளையும் வாங்கி அவர்கள் அழைத்த ஓட்டோவில் கன்றுகளை கொண்டுவந்து வீட்டில் இறக்கிவிட்டு இணுவிலுக்குச் செல்கிறேன். அடுத்தநாள் காலை எழுந்து எனக்கும் அன்ரிக்கும் இடியப்பம், சொதி, சம்பல், பருப்பு சமைத்துவிட்டு சாப்பாட்டுப் பெட்டியில் கொண்டு செல்கிறேன். போகும் போது கடலை வடைகளும் றோள்ஸ்களும் எல்லாருக்கும் வாங்கிச் செல்கிறேன். ஒன்பதரை ஆகியும் யாருமே வேலைக்கு வந்து சேரவில்லை. ரஜிதனுக்கு போன் செய்ய அவை பத்து மணிக்குத்தான் வருவினம் அக்கா என்கிறார். தோட்ட வேலைக்கும் 10 மணிக்குத்தான் போறவையோ என்கிறேன். அவை வந்திடுவினம் அக்கா. நான் 11 இக்கு வந்திடுவன் என்கிறார். நான் போனை வைக்கவும் நான் வேலைக்கு அழைத்தவர்கள் வந்துவிட கன்றுகளைக் கொண்டுசென்று அந்த அந்த இடங்களில் வைத்துவிட்டு எப்படி நடுவது என்று மீண்டும் அவர்களுக்கு அறிவுறுத்த “ என்னம்மா எங்களுக்குச் சொல்லுறியள். எங்கள் வேலையே இதுதானே என்கின்றனர். அவர்கள் கேட்ட மண்வெட்டிகள் இரண்டைக் கொண்டுவந்து கொடுத்தபடி “உங்கள் வேலை உதுதான். ஆனால் கடந்த ஆண்டு நீங்கள் பின்பக்கக் கரையில் ஊன்றிய எந்தக் கிளுவையும் முளைக்கவில்லை. பார்த்தபோது எல்லாக் கிளுவையும் பட்டுப்போய் இருந்தது. ஒன்றை இழுத்துப் பார்க்க சும்மா கையோடை வருது. ஏனெண்டால் நீங்கள் ஆழமாய் கிடங்கு எடுத்து நடவில்லை. அதுதான் திருப்பவும் சொல்லுறன். எந்த நேரமும் பக்கத்தில நிண்டு சொல்ல ஏலாது. ஒழுங்காக நடுங்கோ” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு பக்கத்திலேயே நிற்க, அவர்கள் நான்கு கன்றுகளை நட்டு முடிக்க இரண்டு பெண்டுகள் வருகிறார்கள். எத்தினை மணிக்கு வரச் சொன்னது. ஆடிப்பாடி வருகிறீர்கள் என்றுவிட்டு அவர்களுக்குப் புற்களைப் பிடுங்கவேண்டிய இடங்களைக் காட்டுகிறேன். 11.15 இக்கு ரஜிதன் வருகிறார். அக்கா இவைக்குச் சமைக்க வேண்டாமே என்கிறார். எல்லாருக்கும் கடையில வாங்கிக் கொடுப்பதாகத்தானே கதைத்தது. பிறகென்ன என்று கொஞ்சம் காரமாகச் சொல்லிவிட்டு, பெரிய hose பைப்பைக் காணவில்லை. எங்கே என்கிறேன். எனக்குத் தெரியாது அக்கா என்கிறார். நான் லண்டனில் நின்றபோது நீங்கள் கேற் வரை கொண்டுபோய் தண்ணீர் விட்டீர்களே? இல்லை அக்கா அது சின்னனாலதான் விட்டனான் என்கிறார். அவர் பொய் சொல்கிறார் என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தாலும் மேற்கொண்டு எதுவும் கதைக்காது அவர் சொன்னதை நம்பியதுபோல் அப்பால் சென்று மரங்கள் நடுபவர்களைப் பார்க்கிறேன். கன்றுகளை நட்டுவிட்டு வந்த ரங்கன் அம்மா ஒரு தேத்தண்ணி தாறியளே என்று கேட்க குசினிக்குச் சென்று எல்லாருக்கும் தேநீர் ஊற்றிவந்து ரோலஸ்சும் கொடுக்கிறேன். அம்மா பின்னால வேலை செய்யிறவையிலையும் ஒரு கண் வச்சிருங்கோ. ஒராள் பிடுங்க மற்றவ நிழலுக்குள்ள போய் நிக்கிறா என்று எனக்கு மட்டும் கேட்பதுபோல் சொல்கிறார். அதன்பின் அவர்கள் ஒரு பதினைந்து நிமிடத்தில் மீண்டும் வேலையை ஆரம்பிக்க இரண்டு பெண்டுகளும் எழும்பாது மரக் குற்றிமேல் இருக்க "என்ன வேலை செய்யிற நோக்கம் இல்லையா? எழும்புங்கோ" என்கிறேன். ஆடி அசைந்து அவர்கள் எழுந்து செல்ல சிறிதுநேரம் அவர்கள் வேலை செய்வதை நின்று பார்க்கிறேன். ரதியக்காவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வர அவவுடன் கதைத்தபடி முன்பக்கம் வர ரஜிதன் பின்பக்கமாகச் செல்கிறார். வேலை செய்ய வந்தவர்கள் பற்றிக் கூற வடிவா பாக்கவேணும் நிவேதா. சும்மா நேரத்தைக் கடத்துவினம் என்கிறா. எல்லாம் கதைத்து முடிய “ நிவேதா உங்களிட்டைக் கிடக்கிற கிறைண்டர் கப்பை எனக்குத் தாங்கோ. நான் ஒரு விலை போட்டு எடுக்கிறன்” என்கிறா. எனக்கு யோசனை ஓட அது எல்லாத்துக்கும் பொருந்தாதே அக்கா என்கிறேன். என்னட்டை இரண்டு பழைய கிறைண்டர் இருக்கு. ஏதாவது ஒன்றுக்குப் பொருந்தும் தானே என்கிறார். பார்ப்போம் அக்கா என்றபடி போனை வைக்க “அக்கா என்னவாம்” என்றபடி ரஜிதன் வருகிறார். கிறைண்டர் கப்பை அக்கா தனக்குத் தரட்டாம் என்றவுடன் “அப்ப அக்கா வீட்டினர் தான் எல்லாத்தையும் எடுத்தவையோ” என்கிறார். எனக்குத் தெரியேல்லை என்றுவிட்டு அப்பால் நகர்க்கிறேன். மதிய உணவு நேரம் வர முன்னரே ரங்கனிடம் உணவு வாங்கிவருமாறு கூற தான் சென்று வாங்குவதாக ரஜிதன் கூற அவரிடம் பணத்தைக் கொடுக்கிறேன். அவர் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு செல்ல பக்கத்தில் வந்த ரங்கன் “அம்மா குறை நினையாதேங்கோ, உவரைப் பார்த்ததால் சரியில்லைப் போலத் தெரியிது. உவரை இருத்திறதெண்டால் ஒண்டுக்கு இரண்டுதரம் யோசியுங்கோ என்கிறார். நானும் அதைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறன் என்றுவிட்டு பெண்களைப் பார்க்கிறேன். அவர்கள் ஆடிப்பாடிப் புற்களைப் பிடுங்க, நான் எதுவும் கூறாது பார்த்துவிட்டு சாப்பாடு வாங்கப் போயிருக்கிறார். வந்ததும் கூப்பிடுறன் என்றுவிட்டு உள்ளே செல்கிறேன். உணவுப் பொதிகள் வந்ததும் எல்லோரும் உண்ண ஆரம்பிக்க, அவர்களுக்கு தண்ணீர் கொண்டுசென்று கொடுத்துவிட்டு நான் உள்ளே சென்று உண்ண ஆரம்பிக்கிறேன். ரஜிதனை உண்ணச் சொல்ல தனக்கு ரோள்ஸ் சாப்பிட்டது பசிக்கவில்லை என்கிறார். உங்கள் உணவு பழுதாகப் போகிறதே என்கிறேன். "அக்கா நீங்கள் ஃபிரிஜ் வாங்கேல்லையோ" என்கிறார். "எனக்கு எதற்கு இப்ப ஃபிரிஜ். நான் வந்து இருக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்" என்கிறேன். “அக்கா என்னட்டை வீட்டில ஒரு ஃபிரிஜ் இருக்கு. அதைக் கொண்டுவரட்டோ? “அதுக்கென்ன கொண்டுவாரும், ஆனால் எனக்குத் தேவை இல்லை” “லாண்ட் மாஸ்டருக்கு 1500 வேணுமக்கா” “சரி அதை நான் தாறன்” உடனேயே வீட்டுக்குச் சென்று ஃபிரிஜ்சைக் கொண்டுவந்து குசினியில் வைக்கிறார். “அக்கா விரும்பினதெல்லாம் நீங்கள் வைக்கலாம்” “எனக்கு அதற்குள் வைக்க ஒன்றும் இல்லை” “உங்களுக்காகத்தான் கொண்டுவந்தனான்” “நான் முதலே சொன்னானதானே எனக்கு வேண்டாம் என்று, பிறகென்ன புதுக் கதை. உம்மடை வீட்டில இருந்தால் ஆரும் களவெடுத்துக்கொண்டு போயிடுவினம் என்றுதானே இங்கு கொண்டுவந்தனீர், பிறகென்ன எனக்காக கொண்டு வந்தது என்ற கதை. உப்பிடியான கதையள் எனக்குப் பிடிக்காது என்றுவிட்டு எழுந்து வெளியே சென்றால் இன்னும் வேலையை ஆரம்பிக்காமல் திண்ணையில கதைத்துக்கொண்டு இருக்கினம் பெண்டுகள். வந்ததே பிந்தி. நான் சொல்லாட்டில் வேலை செய்ய மாட்டியளோ? சாப்பிட்டு முடிச்சு ஒரு மணித்தியாலமாப் போச்சு என்றவுடன் எழுந்து செல்கின்றனர். ரஜிதன், நான் தென்னைக்கு பொச்சுத் தாக்கிறவையை பார்த்திட்டு வாறன். உவையை ஒழுங்கா வேலை செய்யச் சொல்லுங்கோ என்றுவிட்டு சென்று அவர்களைக் கவனித்துவிட்டு வர பின்பக்கத்திலிருந்து வந்த ரஜிதன், அக்கா நீங்கள் இருக்க நிக்க விடாமல் வேலை வாங்கிறியளாம் என்றவுடன் “வாறது பத்து மணிக்கு. ரோஸ் சாப்பிட்டு தேத்தண்ணி குடிக்க அறை மணித்தியாலம், மத்தியானச் சாப்பாட்டுக்கு ஒரு மணித்தியாலம். உப்பிடித்தான் மற்ற இடங்களிலையும் வேலை செய்யிறவையாமோ? சம்பளத்தைக் குறைச்சுத் தரட்டோ என்று அவையைக் கேளுங்கோ என்று கோபமாகச் சொல்ல, சரி அக்கா விடுங்கோ என்றுவிட்டு நான் வேலைக்குப் போட்டுவாறன் அக்கா என்றுவிட்டுக் கிளம்ப நான் பின்னால் சென்று புல்லுப் பிடுங்குவதைக் கண்காணிக்கிறேன். இன்னும் கொஞ்ச இடத்துக்குப் புல் பிடுங்க இருக்கு. நான்கு மணியானதும் வீட்டுக்குச் செல்லக் கிளம்ப இன்னும் ஒரு மணிநேரத்தில இவ்வளவையும் பிடுங்கிவிட்டுப் போங்கோ என்று கண்டிப்புடன் சொல்ல வேண்டா வெறுப்பாக செய்கின்றனர். அவர்களுக்குத் தேனீரும் கடலைவடையும் கொடுக்க உண்டு விட்டு புல்லைப் பிடுங்க எழுகின்றனர். ஐந்து மணியானதும் கைகால்களைக் கழுவிக்கொண்டு வர நான் அவர்கள் சம்பளத்தைக் கொடுக்க நாளைக்கும் வாறதோ என்கின்றனர். நாளை வாறதெண்டால் ஒன்பது மணிக்கு நிக்கவேணும். இல்லை என்றால் வரவேண்டாம் என்கிறேன். மற்றவர்களின் வேலையும் முடிய இரண்டு மண்வெட்டிகளையும் புத்துவெட்டியையும் கழுவிக் கொண்டு வந்து தர, நான் உள்ளே எடுத்து குசினி மூலையில் வைத்துவிட்டு அவர்களுடனே கதவுகளைப் பூட்டிவிட்டு வெளியே வர, நான் ஸ்கூட்டியை எடுத்து வந்து கேற்றைப் பூட்டும் வரை என்னுடன் நின்று, நான் பிரதான பாதைக்கு வரும்வரை எனக்கு முன்னால் மெதுவாக ஸ்கூட்டியை ஒட்டிக்கொண்டுவந்து கவனமாப் போங்கோ என்று சொல்லிவிட்டு வேகமெடுக்கின்றனர்.2 points
-
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க மாட்டோம் - ஜனாதிபதி
இரண்டு ,மூன்று தேசிய இனக்களுடன் ஒற்றுமையாக வாழதெரியவில்லை ....இதில 40 க்கு மேற்பட்ட இந்திய தேசியங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து அந்த நிலைக்கு சென்றுள்ளனர் என்பதை பறந்திட்டார் தோழர் அவர் கைது செய்யபட்டால் ,இவர்(அனுரா தோழர்) எப்படி ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும்....? மகிந்தா நேர்சிங் ஹோமுக்கு போகும் பொழுது சில சமயம் கைது நாடகம் நடக்கும்...பிறகு ராஜமரியாதையுடன் அங்கு வாழ்வார்...1 point
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
தமிழ் நடிகைகள் சீக் சீக் .வத்தலும் சொத்தலுமா?...சிங்கள நடிகைகள், மலையாள நடிகைகள் போல இருப்பினம் 6 மாத பயிற்சியை ஒரு வருடம் நீடித்து படிக்கலாம்1 point
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
இல்லை என நினைக்கிறேன். எத்தனையோ சிங்களவர்கள் கைது செய்யப்பட வேண்டிய நிலையில் வியாழேந்திரனும் பிள்ளையானும் தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.1 point
-
நடனங்கள்.
1 pointஎன்ன இப்படிக் கேட்டுட்டேள் ......... இப்பிடியான நடனங்கள்தான் பார்ப்பது . ......... ! 😂1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@நிலாமதி உங்கள் பதில்களை மீளவும் பார்த்தேன். சரியாகவே கூகிள் சீற்றில் தரவேற்றியுள்ளேன். நீலவர்ணப் பதில்களும், ஊதா வர்ணப் பதில்களும் இனி வரவுள்ள போட்டிகளுக்கான பதில்கள் 😄1 point
-
சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!
உந்த விசயத்தில குளிர் காய்ஞ்சு ஜாலியா இருக்கிறது நம்ம ரஷ்ய அண்ணன் தான்.....சொல்லி வேலையில்லை.🤣1 point
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
விக்கிபீடியாவில் இருந்து எடுத்தேன். அமெரிக்காவுக்கு அனுப்பிய பிரதி எனக்கு அனுப்பப்படவில்லை.🙂1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுவே சென்னை, மும்பை என்றால் கலைத்து பிடிக்கின்றோம் என்று ஓட ஆரம்பித்து, எப்படியும் இடையில் களைத்துப் போய், சரி அடுத்த போட்டியில் பார்ப்போம் என்று விட்டு விடுவார்கள் என்று நம்பிக்கையாகச் சொல்லலாம்..................🤣.1 point
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
யாரோ? யாரோ? இவரோ! https://www.facebook.com/share/r/1AJ2mUXGG1/?mibextid=wwXIfr1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point
-
சிரிக்க மட்டும் வாங்க
1 point1 point
- நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
நாம் தமிழர் ஐடி விங் பொய் செய்தியை அப்பாவி போல் நீங்கள் பரப்புவது இதுதான் முதல் முறை அல்ல. அதை நான் வெளிகொணர்வதும் இதுதான் முதல் முறை அல்ல 🤣. பிகு இதை fact check பண்ணாமலே எழுதுகிறேன் - உங்கள் நம்பகதன்மை மீது அப்படி ஒரு நம்பிக்கை🤣.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்களை மட்டும் அல்ல இன்னும் பலரை தொலைபேசி மூலம் தொடர்வு கொண்டு போட்டியில் கலந்து கொள்ளுங்க என்று கேட்டு இருந்தேன் அவர்களும் எனது அழைப்பை ஏற்று போட்டியில் கலந்து கொண்டவை................... வெறுமன 13, 16 பேர் போட்டியில் கலந்து கொண்டால் போட்டியில் பம்பல் இருக்காது அதனால் கூடுதல் உறவுகளை நான் தான் இதற்க்குள் கூட்டி வந்தேன், இந்த எளிய பிள்ளைய மன்னித்துக் கொள்ளுங்கோ...............இனி நான் யாரையும் அழைத்து வர மாட்டேன் மற்றும் யாழ் ஊடாக மற்ற உறவுகளுக்கும் அழைப்பும் கொடுக்க மாட்டேன்.................... நான் 14வருடமாய் விளையாட்டு திரியில் எப்படி எழுதி வந்தேனோ அப்படி தான் இப்ப வரை எழுதுகிறேன்....................நேற்று வந்தவர் அது சரி இல்லை இது சரி இல்லை என்று சட்டம் போடும் போது , இது எனக்கான இடம் இல்லை என நினைத்து நானாகவே ஒதுங்கி நான்...................மற்றவர்களை பற்றி தெரியாட்டி பல விளையாட்டு போட்டி திரிகள் யாழில் அப்படியே அழியாம இருக்கு அதை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் மற்றவர்கள் தொடர்ந்து அந்தக் காலம் தொட்டு இப்ப வரை எப்படி எழுதி இருக்கிறார்கள் என்று......................உங்களுக்கு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன் கந்தப்பு அண்ணா 2012ம் ஆண்டு யாழில் நான் தான் முதல் எழுதினது , அப்பாகிஸ்தான் அணிக்கு நல்ல எதிர் காலம் இருக்கு அவர்கள் மெது மெதுவாய் வளந்து கொண்டு வருகினம் என அப்ப பழைய உறவுகள் பம்பலுக்கு என்னை பார்த்து நக்கல் அடிச்சினம் தம்பி உவங்கள் பந்துக்கு பதில் குண்டை கொண்டு வந்து விளையாட மாட்டாங்கள் தானே என்று😁👍.................அப்பாகிஸ்தான் அணி அப்போது சின்ன அணி இப்போது பெரிய அணிகளை வென்று பலமான அணியா வளந்து விட்டது எனது கணிப்பு பிழைக்க வில்லை...................... அதே காலப் பகுதியில் நீங்கள் நடத்தின உலக கிண்ண கிரிக்கேட் போட்டியில் நான் இரண்டாம் இடம் வந்தேன் , எனது முகவரிக்கு நீங்கள் அனுப்பி வைச்ச பரிசு கிடைச்சதையும் இந்த திரியில் நினைவு படுத்த விரும்புகிறேன் கந்தப்பு அண்ணா...................... மனம் இடம் கொடுத்தால் 2026 T20 உலக கிண்ண போட்டியில் சந்திப்போம் இதே மன நிலையில் இருந்தால் சும்மா பார்வையாளரா இருப்பேன்👍.............................. நேரத்துக்கு நேரம் வடிவாய் சாப்பிடுங்கோ சுவை அண்ணா................. உங்கட அன்புக்கு நன்றி நான் இனி இந்த திரிக்குள் எழுத மாட்டேன் , இது சும்மா பொழுது போக்கு திரி ஆனால் , மன உளைச்சல் ஏற்ப்பட்டால் எல்லாமே எனக்கு வெறுத்துப் போய் விடும்😞☹️......................... Take care Anna👍.....................1 point- காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
எனது விருப்பமும் அதுவே. இந்த உலகம் முழுவதும் தன்னினம் தன்னலம் என சிந்திக்கும் போது தமிழினத்திற்கும் தமிழ் என சொல்லி ஒரு தலைவன் வரட்டும்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத் அணி தொடராக சிறப்பாக செயல்படுவர், ராஜஸ்தான் அணி எப்படி இவர்களால் இப்படி சொதப்பமுடிகிறது என்பதனை கணிக்கவே முடியாத அணி, ராஜஸ்தான் அணி வெல்ல சுவியும், நந்தனும் நேரடியாக களத்தில் இறங்கினாலேயே வாய்ப்புள்ளது🤣 (நகைசுவகைக்காக கூறியது கோவிக்க வேண்டாம்).1 point- டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
தமிழ் மொழி .........யா. ?? உங்களுக்கு சிங்களமும் தெரியுமா ?? தமிழ் சிங்களம் ஜேர்மன் ....மூன்று மொழிகள் தெரியும்,......பல்மொழி புலமையாளன். தான் 😂 எனக்கு தமிழ் தவிர வேறு மொழிகள் தெரியாது ஜேர்மன் இல். Ja. Nein. மட்டுமே தெரியும் 🤪1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மறுபடியும் கூட்டா?இன்று இந்த குழு வெற்றி பெற்றால் சுவியர் நந்தனும்உச்சிக்குப் போய் விடுவார்கள்1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உலக அளவில் ஒரு பந்து வீச்சாளரோ அல்லது துடுப்பாட்டக்காரரோ அல்லது அணிதலைமையோ சோபை இழந்து காணப்படும் போது இலங்கைஉடன் ஒரு போட்டித்தொடருக்கு போனால் அவர்களது ஆட்டம் வழமைக்கு திரும்பும், ஐ பி எல்லி சென்னை அணி தற்போது இலங்கை அணியின் கடினமான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது போல தெரிகிறது.🤣 ரியான் பராக் அணித்தலையில் குழறுபடிகளுடனிருந்தவர் சென்னையுடனான போட்டியின் பின் சிறப்பாக செயல்படுகிறார், ஆர்ச்சர், ரான, தீக்சனா, கசரங்க , ரானா என ஒரே அணியிலே பலர் தமது சோவை இழந்து கஸ்ரப்பட்டுக்கொண்டிருந்த ராஜஸ்தான் அணியுடன் ஒரே ஒரு போட்டியில் விளையாடி அனைவரையும் வளமைக்கு கொண்டு வந்த சென்னை அணியினர். 🤣 இன்றைய போட்டியில் ராயஸ்தான் அணி வென்றால் அந்த புகழ் சென்னைக்கே.1 point- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
2006 டிசம்பர் 15 இல், கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத், கொழும்பில் விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு மட்டக்களப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டார். இந்தக் கடத்தல் தொடர்பாகவே இன்று பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பிள்ளையான் குழு 2006-2009 காலப்பகுதிகளில் அரசின் தேவைகளுக்காக எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிவோம். திருகோணமலையில் வர்ஷா என்கிற 6 வயதுக் குழந்தையின் கொடூர மரணம் இன்னும் நினைவிருக்கிறது. 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13 ஆம் திகதி கண்கள், வாய், கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகின்றார் இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் பொலீசாரால் கொல்லப்படுகின்றார்கள், இவர்களின் பூரணமான விசாரனை நடத்தியிருந்தால் இதன் சூத்திரதாரியை அன்றே கைது செய்திருக்க முடியும். பிள்ளையானை இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இயக்கியது என்பதை சனல் 4 உறுதிப்படுத்தியது. பல கொலைகள் அந்தக் காலத்தில் சர்வ சாதாரணமாக நிகழ்ந்தன. ஆனால் இவற்றை இயக்கிய இதன் பின்னணியில் இருந்த மஹிந்த தரப்பு இது தொடர்பாக விசாரிக்கப்படுமா? அதே போல் இன்று கைது செய்த குற்றம் இடம்பெறும் போது மஹிந்தவோடு JVP அரசில் அங்கம் வகித்தது. அதற்கான பொறுப்புக்கூறலை நேர்மையாக செய்ய முடியுமா ? எங்களால் என்றுமே மறக்க முடியாத வர்ஷாவின் உடல் கண் கொண்டு பார்க்க முடியாத நிலையில் பார்த்த இடம் இதுவே. Malaravan Uthayaseelan1 point- கருத்து படங்கள்
1 point1 point- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
அனுர திசநாயகக்க… ஜானாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது, கிழக்கு மாகாணத்தில் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில்… பிள்ளையானிடம் சட்ட விரோத ஆயுதங்கள் உள்ளதாகவும் அதனை வைத்து மற்றவர்களை அச்சுறுத்தி அரசியல் செய்கின்றார் என்றும், தாம் ஆட்சிக்கு வந்தால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவார் என்றும் முன்பே கடுமையான தொனியில் கூறி இருந்தார். அந்தச் செய்தி யாழ். களத்திலும் வந்திருந்தது. ஜனாதிபதி தேர்தலில் அனுர வென்ற பின்…. பிள்ளையான் தலைமறைவாகி இருந்தமையும், அவர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார் என்றும்… சில செய்திகள் வந்திருந்தது. பின் பிள்ளையான் அசட்டு துணிச்சலில் வெளியே தலை காட்ட ஆரம்பித்து, அண்மையில் “கிழக்கு மாகாண தமிழ் கூட்டமைப்பு” என்ற கட்சி ஒன்றை… கருணா, வியாழேந்திரன் ஆகியோருடன் ஆரம்பித்து உள்ளூராட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகி வந்த நிலையில் பிள்ளையான் கைது செய்யப் பட்டுள்ளார். வியாழேந்திரன் ஏற்கெனவே கைது செய்யப் பட்டு விளக்க மறியலில் உள்ளார். தொடர்ச்சியாக கருணாவும் கைது செய்யப்படலாம். இப்போ… பிள்ளையானுக்கு ஏழரை ஆரம்பித்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.1 point- டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
1 point- நானும் ஊர்க் காணியும்
1 pointகதையின் கதாசிரியை ஏதோ மாஸ்டர் பிளானோட ஊருக்கு திரும்பி போயிருக்கிறார். ஆனால் எல்லாம் சறிக்கீட்டுது. கதை கரைச்சல் பட்ட கதையாய் போகுது. ஜேர்மனியிலையும் ஒழுங்காய் இருக்கேல்லை லண்டனிலையும் அப்பிடி தெரியேல்லை சொந்த இடத்துக்கு திருப்பி போய் சிக்கலை தவிர வேற ஒரு கோதாரியையும் காணேல்லை...😂1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக அடித்தாடி சிறந்த அடித்தளத்தைக் கொடுத்ததால், எய்டன் மார்க்கத்தின் 47 ஓட்டங்கள், மிச்சல் மார்ஷின் 81 ஓட்டங்கள் மற்றும் நிக்கொலஸ் பூரனின் ஆட்டமிழக்காமல் எடுத்த 87 ஓட்டங்களுடன் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் சவாலான வெற்றி இலக்கை நோக்கி வேகமாக அடித்தாடியதால் வெல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. சுனில் நாரயேனின் 30 ஓட்டங்கள், அய்ங்கியா ரஹானேயின் 61 ஓட்டங்கள், வெங்கடேஷ் ஐயரின் 45 ஓட்டங்கள், ரிங்கு சிங்கின் 38 ஓட்டங்கள் இலக்கை அண்மிக்க உதவின. எனினும் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்ததால் இறுதியில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 4 ஓட்டங்களால் வெற்றியீட்டியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பிரியன்ஷ் ஆர்யாவின் மின்னல் வேக சதத்துடனும், விக்கெட்டுகள் சரியச் சரிய பின்னர் வந்த ஷஷாங் சிங்கின் அதிரடியான ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்கள் மற்றும் மார்கோ ஜென்ஸெனின் வேகமான ஆட்டமிழக்காமல் எடுத்த 34 ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ரச்சின் ரவீந்திராவும், 69 ஓட்டங்கள் எடுத்த டெவொன் கொன்வேயும் சிறந்தச் அடித்தளத்தைக் கொடுத்த போதிலும் பின்னர் வந்த வீரர்களில் ஷிவம் டுபேயின் 42 ஓட்டங்களையும், வாணவேடிக்கை காட்டிய தோனியின் 27 ஓட்டங்களும் வெற்றி இலக்கை அடைய உதவவில்லை. இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:1 point- இலங்கையின் சனத்தொகை விபரம் வெளியீடு : வடக்கில் குறந்தளவு சனத்தொகை!
காத்தான் குடியை பற்றித் தெரியாது. ஆனால் மாவட்ட ரீதியில் யாழ் மாவட்டம் சனத்தொகையில் மாபெரும் வீழ்சசியை கண்டுள்ளது. 1963 ல 612,596 ஆக இருந்தது. 1971 ல் 696,664 ஆக இருந்த யாழ் மாவட்ட சனத்தொகை 1981 ல் 830552 ஆக அதிகரித்தது. அதாவது 10 ஆண்டுகளில் 133,888 அதிகம். 34 ஆண்டுகளின் பின்னர் 2025 யாழ் மாவட்ட சனத்தொகை 594,333. கிளிநொச்சி மாவட்டம் 136,434. 1981 ல் மொத்த இலங்கையின் சனத்தொகையில் 5.59 வீதமாக இருந்த யாழ் மாவட்ட சனத்தொகை 2025 ம் ஆண்டு 2.7 வீதமாக குறைவடைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை 1963 ல் 196,189. 1971 ல் 256,721 ஆக இருந்த சனத்தொகை 1971 ல் 330,333 ஆக அதிகரித்து 2025 ல் 595,435 ஆக அதிகரித்துள்ளது. மாகாண ரீதியில பார்ததால் வட மாகாணத்தின் சனத்தொகை 1963 ல் 741,341. 1971 ல் இது 874626 ஆகவும் 1981 ல் 1109, 404 ஆக தொடர்ந்து அதிகரித்தது. 34 வருடத்தின் பின்னர் 2025 ல் வடமாகாணத்தின் குடித்தொகை 1149,240. வளர்சசி வீதம் கிட்டத்தட்ட பூச்சியம். கிழக்கு மாகாணத்தின் குடித்தொகை 1963 ல் 546,474. 1971 ல் 717,571. 1981 ல் 1081,481. 2025 ல் 1782,050. ( இந்த புள்ளிவிபரங்கள் அனைத்தும் ஶ்ரீலங்கா சனத்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரவியல் தினைக்களத்தின் (Department of census and statistics) இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டவை.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
ஆமாம் அதனை நானும் ஒத்துக் கொள்கிறேன்,...மோடி தமிழ் மொழியில் கையெழுத்து வைக்க கூடாது என்று சொல்லி இருப்பாராயின். ...தமிழர்கள் என்ன சொல்லி இருப்பார்கள் ??? இப்ப சொல்வதற்கு. நேர் எதிராக கருத்துகள் சொல்லி இருப்பார்கள் தமிழ் எங்கள் தாய் மொழி நாங்கள் தமிழில் தான் கையெழுத்து வைப்போம் மோடி தமிழ் மொழியை அளிக்கிறார். தமிழ் மொழி உலகத்தில் முதல் மொழி தமிழ் பழைமையானது தமிழ் முதல் தோண்றிய மொழி ...........இப்படி நிறைய சொல்லி இருப்பார்கள் அரசியல்வாதிகள் அரசியல் செய்வது இயல்பானது மோடி தமிழனை கொண்டு நாங்கள் தமிழில் கையெழுத்து இடமாட்டோம். என்று சொல்ல வைத்தது அரசியல் ....அது ஒரு சிறந்த அரசியல் இதோ மோடி தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் பல்கலைகழகத்தில் தமிழ் மொழியில் மருத்துவம் படிப்பிக்கும்படி தமிழ்நாடு அரசை கேட்டு உள்ளார் படிபிக்கலாம். இல்லையா?? ஏன் ஆங்கிலத்தில் படிபிக்க. வேண்டும் ?? அல்லது தமிழ் மொழியில் தமிழ்நாட்டில் மருத்துவம் படிப்பிக்கிறார்களா. ???1 point- 44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
அமெரிக்க பொருட்கள் இலங்கையில் குறைந்தளவே இறக்குமதியாகிறது. ஆனபடியால் அந்த இறக்குமதி வரியை 20-30 வீதமாக மாற்றினால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வீதத்தை அதன் அரைவாசியாக்குவார்கள். இதனால் இன்னும் இன்னும் ஆடைத்தொழிலை முன்னேற்றலாம். மற்றைய நாடுகளுடனும் போட்டி போடலாம். இப்போது இந்தியா பங்களாதேஸ் போன்ற நாடுகள் இலங்கையை விட குறைவான வரியே விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை தனது இறக்குமதி வரியை குறைக்காவிட்டால் ஆடைத்தொழில் மூடப்படும் அபாயம் இருக்கிறது. இதுபற்றி @vasee யின் கருத்துக்களை அறிய ஆவல்.1 point- கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் சொத்துக்கள் பறிமுதல்!
இவரது தகவல்கள் சிலவற்றை இப்போது தேடி வாசித்தேன். அரசியலில் இறங்கியது தவறான முடிவு போல் தெரிகின்றது. ஆக 38 வயதுதான் இப்போது.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தகவலுக்கு நன்றி @கந்தப்பு . மாற்றிவிடுகின்றேன். பிஸியில் ராமநவமியைக் கவனிக்கவில்லை! கவனிக்கின்றேன்! கூகிள் ஷீற்றை மாற்றாமல் இவற்றை ஒழுங்கில் போடுகின்றேன்!1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி பார்த்ததற்கு நன்றி @vasee @கிருபன் இரு போட்டிகள் செவ்வாய்க் கிழமை நடக்க இருக்கின்றன. ஞாயிறு - ஒரு போட்டி SRH vs GT திங்கள் - ஒரு போட்டி RCB vs MI செவ்வாய் - இரு போட்டிகள் KKR vs LSG, PBKS vs CAK1 point- இயற்கையிலிருந்து ஒரு வேதனையான உண்மை.
🌾இயற்கையிலிருந்து ஒரு வேதனையான உண்மை. 🦂 பிரசவத்திற்குப் பிறகு, ஒரு தாய் தேள் தனது குழந்தைகளைப் பாதுகாக்க முதுகில் சுமந்து செல்கிறது. இந்த நேரத்தில், அது சாப்பிடுவதில்லை, ஆனால் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது. நாட்கள் செல்லச் செல்ல, அது பலவீனமாகி, தனது குட்டிகள் உயிர்வாழ்வதை உறுதி செய்வதற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் அர்ப்பணிக்கிறது. குழந்தை தேள்கள் போதுமான அளவு வலிமையாக இருக்கும்போது, அவை தங்கள் தாயை விட்டு வெளியேறி தங்கள் சொந்த வாழ்க்கையைத் தொடங்குகின்றன. அதற்குள், அவள் பெரும்பாலும் சோர்வடைந்து பாதிக்கப்படக்கூடியவள் - அவர்களுக்காக தன்னை முழுமையாக தியாகம் செய்துவிட்டாள். அமைதியான தியாகத்தின் இந்த உருவம் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக என்ன செய்கிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது. நாம் பிறந்த தருணத்திலிருந்து, அவர்கள் நமக்கு எல்லாவற்றையும் தருகிறார்கள் - நேரம், சக்தி, ஆறுதல், கனவுகள் - பதிலுக்கு கொஞ்சம் கேட்கிறார்கள். இருப்பினும், அவர்கள் வயதாகி பலவீனமாகும்போது, பலர் பின்தங்குகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள் அல்லது மறக்கப்படுகிறார்கள். நாம் நமது சொந்த இலக்குகளைத் தொடர்கிறோம், பெரும்பாலும் அவற்றை சாத்தியமாக்கியவர்களை மறந்து விடுகிறோம். ஆனால் வாழ்க்கை எப்போதும் முழு வட்டத்தில் வருகிறது. ஒரு நாள், நாமும் அவர்கள் இப்போது இருக்கும் இடத்தில் இருப்போம். அவர்களை மதிக்க மிகவும் தாமதமாகும் வரை காத்திருக்க வேண்டாம். அவர்கள் நமக்குக் கொடுத்த அன்பையும் அக்கறையையும் அவர்களுக்குக் கொடுப்போம் - நம்மால் முடியும் வரை. Vincent Raj1 point - நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.