Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  2. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    16477
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38770
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19134
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/13/25 in all areas

  1. பையன் இல்லாத இந்தத்திரி கலகலப்பாக இல்லை. பையன் எங்கிருந்தாலும் உடன் களத்துக்கு வந்து கருத்துகளளைப் பதிவிட்டு களத்தைக் கலகலப்பாக்கவும்.யாழ்களத்தில் முகம்தெரியாத உறவுகள் ஏதாவது எழுதிவிட்டார்கள் என்பதற்காக சின்னப்பிள்ளை போல் கொவித்துக்கொண்டு போகவேண்டாம். எங்களையெல்லாம் போட்டியில்கலந்து கொள்ள உற்சாகம் கொடுத்து வி;டு பையன் ஒதுங்கி இருக்கக்கூடாது. யார்என்ன சொன்னால் நாம் கேபகும் பாதை தெளிவாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் மீண்டும் களத்திற்கு வந்து கருத்து எழுத இந்த அன்பு அண்ணனின் அன்பு வேண்டுகொள்.
  2. த‌மிழ் நாட்டுக்கு போக‌ த‌யார் ப‌டுத்திட்டு இருக்கிறேன் அண்ணா...................போய் வ‌ந்த‌தும் உற‌வுக‌ளுட‌ன் இணைந்து இருக்கிறேன் இந்த‌ திரியில்👍..............................
  3. நாங்கள் ஒரு வேலைக்கு போனால்; மனச்சாட்சிக்கு பயந்து, சரியாக, வாங்கும் சம்பளத்துக்குஉண்மையாக, சம்பளம் தருபவர் மனநிறைவடையும் படி உழைக்கிறோம். அப்படித்தான் மற்றவர்களும் என நினைப்பது தவறு. அவர்கள் ஓம் என்று ஒத்துக்கொள்வார்கள், பிறகு ஏதேதோ சொல்லி இடையில் சென்றுவிடுவார்கள். அவர்கள் விட்ட குறை வேலையை வேறொருவர் தொடர மாட்டார். காரணம், அவர்களுக்குள் ஒரு கொள்கை. அதனால் அவர்கள் வேண்டுமென்றே இழுத்தடித்து தாங்கள் நினைப்பதை சாதித்து விடுகிறார்கள். ஒன்று, நீங்களும் அவர்களோடு களத்தில் இறங்கி நின்று வேலை செய்ய வேண்டும், எல்லா வேலைகளும் முடியாது. புல்லுபிடுங்கல், கூட்டல், துடைத்தல் வேலைகளில். மற்ற வேலைகளில் அவர்களோடு கூட நிற்பது நல்லது. நாங்களும் எங்கள் உறவினர்களை வேலைக்கு அழைத்தே நிறைய இழந்துவிட்டோம், இதனால் அவர்கள் நினைப்பது; நம்மை எப்படியென்றாலும் ஏமாற்றலாம், அவர்களை விட எங்களுக்கு வேலைக்கு வேறு கதி இல்லையென்றே. வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி ஏமாற்ற கற்றுக்கொண்டு விட்டார்கள். நாமே நம் வேலை செய்ய முயற்சித்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.
  4. GMT நேரப்படி நாளை திங்கள் 14 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் LSG எதிர் CSK 04 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 19 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் சுவி செம்பாட்டான் அகஸ்தியன் சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  5. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெஸ்வாலின் அதிரடியான 75 ஓட்டங்களுடன் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஃபில் சால்ட்டின் சிக்ஸர்ஸ், பவுண்டரிகளுடனான 65 ஓட்டங்கள் மழையெனப் பொழிந்ததாலும், விராட் கோலியின் நிதானமான ஆட்டமிழக்காமல் பெற்ற 62 ஓட்டங்களுடனும் 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் அதிகமான ஓட்டங்களைக் குவிக்கும் நோக்குடன் வேகமாக அடித்தாடும் உத்தியுடன் விளையாடியதால் திலக் வர்மாவின் 59 ஓட்டங்களின் உதவியுடன் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை அடையும் நோக்கோடு ஆரம்பத்தில் இருந்தே வேகமாக அடித்தாடி விளையாடினர். குறிப்பாக கருண் நாயர் 89 ஓட்டங்களை மின்னல் வேக அடியின் உதவியுடன் எடுத்திருந்தார். எனினும் கேஎல் ராகுலின் விக்கெட் விழுந்ததோடு வெற்றிபெறும் வாய்ப்பை இழந்து இறுதி மூன்று பந்துகளின் மூன்று பேர் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்ததால் 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 193 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @சுவைப்பிரியன் உம், @Eppothum Thamizhan உம் @goshan_che க்கு உதவியாக அருகணைந்து இறுதிப் படிகளில் நிற்கின்றனர்!
  6. https://www.facebook.com/reel/1328336208380912
  7. கிழக்குக் கடற்கரை சாலையில் கோடிகளில் சொகுசு பங்களா வாங்குவதற்கு அவர் ஈழதமிழர்களை வைத்து திரள்நிதி அரசியல் செய்யவில்லை.
  8. ஞாயிறு 13 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR எதிர் RCB 11 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 12 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் ஏராளன் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC எதிர் MI 07 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 16 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் ஈழப்பிரியன் சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் நுணாவிலான் அகஸ்தியன் மும்பை இந்தியன்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  9. நான் வேண்டவில்லை ....வாலி. சில சமயம் வேறு யாழ் கள. உறவுகள் வேண்டியிருக்கலாம். கோஷான். வேண்டி இருப்பார் 🤣😀
  10. அப்படி அன்பாய்க் கதைக்கவேண்டியதில்லை. அதட்டியும் கதைக்கவேண்டியதில்லை. ஒருவரின் வேலையை அவர் முன்னர் செய்த இடத்தில் எப்படிச் செய்தார் என்று பார்க்கவேண்டும். நன்கு நம்பிக்கையானவர்களின் சிபார்சு என்றாலும் முழு நம்பிக்கை வைக்காமல் அவர்கள் வேலை செய்வதைப் பார்த்து பிடிக்காவிட்டால் உடனேயே அனுப்பிவிடவேண்டும். ஆட்களைப் பிடிப்பது கடினம் என்பதற்காக சொட்டை வேலைக்காரரை வைத்து அவர்கள் சொறி வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனக்கும் ஊரில் போய் இருக்கும் ஐடியா இருக்கு. இன்னும் பல வருடங்கள் ஆகலாம்!
  11. இதுக்கு பெயர் ஜெயிலோ-போபியா. இந்த நோய் தாக்கம் ஆளுக்கு ஆள் மாறுபடும். நோயாளியை ஊழல் வழக்கில் மத்திய அரசு நிர்வாகம் திரத்தினால் - ஆஸ்பத்தியில் போய் படுக்க வேண்டி வரும். நோயாளியை பாலியல் வன்கொடுமை வழக்கில் மாநில அரசு நிர்வாகம்/ஹைகோர்ட் துரத்தினால் சுப்ரீம்கோர்ர்ட்டுக்கு சில பாஜக வக்கீல்கள் சகிதம் போய் தோஷ நிவர்த்தி செய்ய வேண்டி வரும் 🤣. ஆனால் தோழன் பாலனுக்கு இதில் ஒருவகை மட்டும்தான் தெரியும். ஏன் என்றால் அவருக்கு செலக்டிவ்-மாலைகண்🤣
  12. இந்த நால்வரும், சுவியின் தலைமையில், போராடித்தான் ஆகவேணும்.
  13. I am okay baby🤣 தமிழ் தேசியம் வளர்ந்தால் அது உலக பொருளாதாரத்துக்கும் ,சிறிலங்கா தேசியத்துக்கும் பெரிய சவாலாக மாறிவிடும் அதுதான் அந்த கருத்து🤣
  14. நான் எங்கேயாவது சீமான் சொக்கத்தங்கம் என எழுதியதற்கான ஆதாரங்களை காட்டவும். சீமான் ஒரு அரசியல்வாதி. அதிலும் இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர் விடயத்தில் அதிக கரிசனை காட்டுபவர். மற்றும் படி சீமானுக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள். ஈழ தமிழர்கள் அல்ல.
  15. உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் வீரப்பையன்👍 மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன்🙏 தனது படைத்த தளபதியின் வீர தீர சாதனைகளால்😇 எதிரிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார் வாழ்க மன்னர் புகழ் 😂
  16. கெயில் அடிச்ச‌ 175 அந்த‌ விளையாட்டை பார்த்தேன் முர‌ட்டு த‌ன‌மாய் அடித்தார் அந்த‌ அன்று.........................அப்போது இல‌ங்கை வீர‌ர் தில‌க‌ர‌ட்னா டில்ஷானும் கெயிலும் தான் தொட‌க்க‌ வீர‌ர்க‌ளாய் அந்த‌ மைச்சில் விளையாடின‌வை...............இடையில் ம‌ழை வ‌ர‌ விளையாட்டு சிறு நேர‌ம் த‌டைப் ப‌ட்ட‌து..........................போட்டி மீண்டும் தொட‌ங்க‌ கெயில் வான‌ வேடிக்கை காட்டினார்......................
  17. அபிஷேக் ஷர்மா ப‌ஞ்சாப் மானில‌த்தை சேர்ந்த‌ இளைஞ‌ன் இவ‌ரின் அன்மைக் கால‌ ச‌ர்வ‌தேச‌ விளையாட்டை பார்த்து தான் மூன்று கேள்விக்கும் இவ‌ரை ம‌ன‌தில் வைச்சு ப‌திவிட்டேன் குரு🙏👍................ இவ‌ரின் கிரிக்கேட் க‌ட‌வுள் யுவ‌ராஜ் சிங் , இவ‌ர் யுவ‌ராஜ் சிங்கின் விளையாட்டை சிறு வ‌ய‌தில் இருந்து பார்த்து வ‌ள‌ந்த‌ சிறுவ‌ன் யுவ‌ராஜ் சிங் 6ப‌ந்துக்கு 6 சிக்ஸ் அடிச்ச‌வ‌ர் 2007ம் ஆண்டு T20 உல‌க‌ கோப்பையில்👍............................
  18. ந‌ன்றி குரு🙏👍.................... ர‌ம் நினைப்ப‌து போல் கிரீன்லாந்தை அமெரிக்காவோடு இணைப்ப‌து சிர‌ம‌ம் என‌ நினைக்கிறேன்..................... டென்மார்க் காற்றுப் போன‌ ப‌லுன்.................ஹிட்ல‌ர் வ‌ர‌ வெள்ளை கொடிய‌ தூக்கின‌ நாடு 😁, அமெரிக்கா போர் செய்து கிரீன்லாந்தை பிடிக்க‌னும் என்று இற‌ங்கினால் அதை சிம்பிலா பிடித்து விடுவின‌ம்...............அப்ப‌டி ந‌ட‌ந்தால் நேட்டோ அமைப்புக்குள் விரிச‌ல் வ‌ரும்.......................
  19. நாண்பா நீங்க‌ பேசின‌து அபிஷேக் ஷர்மாவின் காதுக்கு கேட்டு விட்ட‌து போல் இருக்கு😁.............உங்கட‌ போட்டி ப‌திவை பார்த்தேன் ஏதாவ‌து ஒரு போட்டியில் அதிக‌ ர‌ன்ஸ் அடிக்கும் வீர‌ர் பெய‌ருக்க்கான‌ கேள்விக்கு , நீங்க‌ தெரிவு செய்த‌து அபிஷேக் ஷர்மாவை இந்த‌ ஜ‌பிஎல்ல‌ அபிஷேக் ஷர்மா அடிச்ச‌ 141 பெரிய‌ ஸ்கோர் இதை இனி வ‌ரும் போட்டிக‌ளில் யாரும் அடிக்க‌ முடியாது🙏🥰................. என‌து தெரிவு எல்லாமே அபிஷேக் ஷர்மா தான்🙏🙏🙏..................பெடிய‌ன் இனி வ‌ரும் போட்டிக‌ளில் நேற்று விளையாடின‌ மாதிரி விளையாடினால் ஒரேஞ் தொப்பி அபிஷேக் ஷர்மாவுக்கு தான்💪👍 குண்ட‌க்கா ம‌ண்டாக்கான‌ கேள்விக்கு இதுவ‌ரை என‌து க‌ணிப்பின் ப‌டி 14புள்ளி கைவ‌ச‌ம் இருக்கு 286ஸ்கோர‌ ம‌ற்ற‌ அணிக‌ள் அடிக்க‌ வாய்ப்பில்லை................... அதில் SRH அணி தான்💪 வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி இன்னும் கூடுத‌ல் விக்கேட் எடுக்க‌னும் எடுத்தால் இன்னும் கூடுத‌ல் புள்ளி கிடைக்கும்👍 போட்டி முடிவில் கீழ‌ நிண்ட‌வை மின்ன‌ல் வேக‌த்தில் மேல‌ வ‌ருவின‌ம்😁😁😁😁😁😁 சென்னை அணியால் வந்த‌ சோத‌னை வார்த்தையால் சொல்ல‌ முடியாது....................ஆர‌ம்ப‌த்தில் சொன்னேன் தீப‌க் கோடா ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார் என்று , இப்போது நீரே ஒத்து கொள்ளுகிறீர் அவ‌ர் ச‌ரி இல்லை என‌😁..............................
  20. ஐயா சுவி ...தமிழ்க் கொலை பாப்பா அல்ல பப்பாசி 😃
  21. ஒரு போட்டியில் வென்றால் இரண்டு போட்டி சறுக்குதே.
  22. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙏
  23. ஞாபக சத்தியை இழக்க மருத்துவம் செய்கிறார்கள் அடித்த. கொள்ளைகள். எல்லாத்துக்கும் தெரியாது என்று பதிலளிப்பார்கள். இலட்சிமிகளிடமிருந்து திருடி. இருப்பார். திருடுவதற்க்கு ஆட்சியில் இருக்க தேவையில்லை ஆட்சியில் பங்கு கொள்ளவும் தேவையில்லை 😀
  24. அவர்கள் இருவரும் கள்ளர் நான் கேட்டா, சொல்லவா போறாங்க🤣. அதே போல, ஆனால் இன்னும் வாய்ப்பில்லாதபடியால் சின்ன லெவல் களவு செய்பவர் சீமான் என்கிறீர்களா? ஓம் செம்ம அடி அடித்த ஊழல் மன்னன். அது மட்டும் இல்லை தலைவரை தூக்கில் போடவேணும் என தீர்மானம் இயற்றிய சட்டசபை சபாநாயகர்.
  25. பயணம் இனிதாக அமையட்டும், பையன் சார்...................👍. மிரட்டல் குறிப்பு: இங்கு நான் வாழும் நாட்டில் ஒருவர் கிரீன்லாந்தை பிடிக்கப் போவதாக மிரட்டிக் கொண்டிருக்கின்றார். நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து திரும்பிய பின்னும் இந்த திரியில் இணையாவிட்டால், டென்மார்க்கையும் போய்ப் பிடியுங்கோ என்று அவரிடம் சொல்லி விடுவேன்............🤣.
  26. பையா முடிவை மீள் பரிசோதனை செய்யவும்.
  27. படித்தவர் கூடிய மாநிலம் கேரளா என்பார்கள் அதனால் கேட்டேன். நன்றி.
  28. காலையில் முட்டைக் கோப்பி உடம்புக்கு நல்லது. புதிதாக திருமணமானவர்களுக்கு அதிவிசேசம். கல்லோ கிருபன் 11 முட்டைக் கோப்பி பிளீஸ்.
  29. பயப்படாதீங்கள். பகிடிக்கு எழுதினேன் .....
  30. ஐயையோ... நான் இந்த விளையாட்டுக்கு வரேல்லை. 😂
  31. தமிழ் நாட்டில் வறுமை கோர்ட்டுக்கு கீழ் 2.2% சதவீதம். பீஹாரில் 34#. குஜராதில் 12%. அண்ணளவாக. ஆந்திரா, தெலுங்கானா 6%. கர்நாடகா 7.5. பல வட இந்திய மாநிலங்கள் 27,22, 15 க்கு மேல். https://en.m.wikipedia.org/wiki/Poverty_in_India
  32. காலையில் எழுந்ததும் மைதிலி பர பர ப்பானாள். பிள்ளைகளை பள்ளிக்கு பஸ் வண்டியில் ஏற்றி விட்டு, அவசர அவசரமாக சமையலை முடித்து விட்டு அந்த தொடர் மாடிக் கட்டிடத்தின் நாலாம் மாடிக்கு செல்ல கையில் சொக்கலேருக்கள் அடங்கிய சிறு பையுடன் மின் தூக்கி முன் காத்திருந்தாள் . இரவு கணவரிடம் தனது இரண்டாவது அண்ணா இத்தாலியில் இருந்து வந்திருப்பதாகவும் (அண்ணாவின் மனைவி அண்ணி இவளது வகுப்பு த்தோழி ) அவரைப் பார்க்க செல்வதாகவும் கூறி இருந்தாள். மின் தூக்கி வரும் வரை காத்திருந்தாள் , மனமெல்லாம் பத்து வருடங்கள் பின்னாடி சென்றது. இரவிரவாக தலையணை நனைய உறக்கமற்று இருந்தவள், இன்று வாழ்க்கையின் ஒரு பெரும் திருப்பம் அந்த கட்டிட தொகுதியில் வாழும் அண்ணாவின் வகுப்பு தோழன் சென்ற வாரம் செய்தி சொல்லி இருந்தா. .நண்பன் விடுமுறைக்காக வரப்போவதாக , அவள் செய்த ஒரு பிழை இவ்வளவு பிரச்சனை வரும் என்று எண்ணவில்லை. அவள் பள்ளிக்கால காதல னை அந்தஸ்து வேறுபாட்டினால் வீட்டிற்கு தெரியாமல், பதிவு திருமணம் செய்து விட்டாள். விஷயம் ஊரில் தெரியவரவே வீட்டுப்பக்கம் வரக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டனர். அவளும் அதே ஊரில் வெளிநாட்டில் வந்த காதலனை முறைப்படி கோவிலில் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி பின்னும், அவளது பெற்றோர்களும் இப்படி செய்து விட்டால் எனும் கோபத்தில் , காலப் போக்கில் நாட்டு பிரச்சனையும் வரவே அண்ணா வேறு நாட்டுக்கு சென்றுவிட்டார். ஊர் எள்ளிநகையாடும் என எண்ணி இவளது உறவை பெற்றோர் தவிர்த்தாலும் இவள் அம்மா வீட்டுக்குபோய் வருவாள். தாயார் பேசுவார். பிறந்தநாளில் குழந்தைகளைக் கொண்டு போய்க் காட்டுவாள். ஊரில் மிகவும் பெரிய ராணுவ ஆக்கிரமிப்பால் ஊர் விட்டு ஊர் மாறிச் சென்ற போது கடைசியாக பெற்றோரைப் பார்த்து குழந்தைகளை காண்பித்து தாயருடன் கண்ணீரோடு விடை பெற்றுக் கொண்டாள். சில சமயம் அவசரப்பட்டு பதிவு திருமணம் செய்து விட்டோமோ என்று எண்ணியதுண்டு. மறுபக்கம் அவன் வெளிநாடு போக வேண்டிய நிர்பந்தம் அவளை அந்த முடிவு எடுக்க தூண்டியது . பின்னர் பெண்கள் விடுதியில் தங்கி ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். மின்தூக்கி வரவே நாலாம் மாடியை அடைந்து , அண்ணி வரவேற்றார். நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவர் கைகளைப் பற்றினாள் . . பொலபொலவென கண்கள் தாரையாக கொட்டியது. அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். எழு வயது ஐந்து வயது.சின்னவன் சொக்கலேற் பையை வாங்கி கொண்டு அத்தை மடியில் உட்கார்ந்து கொண்டான். எங்கிருந்து அவனுக்கு அந்த பாச உணர்வு வந்தது ?....சிலமணி நேரம் பேசிய பின் , அவர்களையும் வீட்டுகார அண்ணா குடும்பத்தினரையும் சனிக்கிழமை இரவு தன் வீட்டுக்கு வர அழைத்து விட்டு தன் இருப்பிடம் சென்றார் . மறுநாள் அவர்கள் வந்தது கணவனையும் தன் குழந்தைகளையும் பேச விட்டு விருந்துண்டு திங்கட்கிழமை அவர்கள் உறவுக்கார மூதாட்டியை பார்க்க நேசிங் ஹாம் க்கு செல்ல திட்டம் போட்டார்கள் . மைதிலியின் கணவனுக்கு உடனே லீவு எடுக்க முடியாது. குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல வேண்டும். அவர்கள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு இவளும் அவர்களுடன் இணைந்து. அது ஒரு முப்பது நிமிட பஸ் பயணம். பஸ் தரிப்பு அருகே உள்ள தமிழ்க்கடையில் கிறீம் கிரக்கர் பிஸ்கட்டும் நெஸ்டமோல்ட் டின் உம் அண்ணா வாங்கினார். நான் ஏதும் வாங்க என்று அவள் மணிபர்சை திறக்க " நாங்க வேறு நீ வேறா " என்றார் அண்ணா . பளீர் என முகத்தில் அறைந்தது வார்த்தைகள். பஸ் உம் வரவே முண்டியடித்து ஏறிக்கொண்டார்கள். சின்னவர் மீண்டும் அத்தை மடிக்கு வந்து உட்கார்ந்தான் சில நிமிடங்களில் இறங்கி அவ்விடத்தை அடைந்து மூதாட்டியைப் பார்த்தும் அவர் மிகவும் சந்தோஷப் பட டார். என்னிடம் திரும்ப திரும்ப உனக்கு எத்தனை பிள்ளைகள் என கேட்டுக் கொண்டிருந்தார். பேசிக்கொண்டு இருக்கும் போது அங்குள்ள ஒருவர் கா தில் கையை வைத்துக் கொண்டு " கலோ" "கலோ " என அழைத்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் "என்னை வீட்டுக்கு போக விடு" என தமிழில் ஆங்கில உதவியாளரிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.வயோதிபத்தில் வாழ்க்கை இப்படித்தான் போலும். தமிழ் தெரிந்த உதவி ஆல் சிறார்களை இங்கு கூடிக் கொண்டு வருவது நல்லதல்ல என்றார். அதற்கு அண்ணா சாகும் முன்னர் அவரை பார்த்துவிடவேண்டும். இவர்களை விட்டு விட்டு வர முடியாது ,எனவும் விடுமுறையில் வந்ததாகவும் சொல்லிக் கொண்டார். மீளவும் பஸ் பயணம். வரும் வழியெங்கும் " நான் வேறு நீ வேறா ? என ஒலித்து கொண்டே இருந்தது. மறுபடி வீட்டை அடைந்ததும் அன்று முழுவதும் என்ன இருந்தாலும் அண்ணாவின்" ரத்தபாசம் "மனம் முழுவதும் நிறைந்து கொண்டது. அண்ணவுடன் சொந்தம் கொண்டாடி ஆயிற்று. "நீரடித்து நீர் விலகுமா ? " இனி என் பெற்றோர் ஆன்மா மகிழ்வோடு நீள் துயில் கொள்ளும். Blood is thicker than Water
  33. கிழக்குக் கடற்கரைச் சாலையில் கோடிகளில் பங்களா வாங்குமளவு பொருளாதாரம் மேம்பட்டிருக்கின்றது!
  34. பம்மல் கே சம்பந்தம் இன்றைக்கு கையை விட்டிட்டுது, அண்ணா........ நாளைக்கு பஞ்ச தந்திரத்துடன் வருகின்றேன்................🤣. தெனாலியில் நாய் கலைக்க கமல் பயத்தில் ஓடிப் போய் ஓட்டப் போட்டியில் முன்னுக்கு வந்தது போல என் நிலை அச்சு அசலாக.......... எத்தனை அணிகள், எத்தனை வீரர்கள், எத்தனை நிற பிட்சுகள்.......... பஞ்சாப் அணியில் விளையாடுகின்ற சிம்ரன் மட்டும், ஏனோ தெரியல்ல, மனதில் அப்படியே நிற்கின்றார்..........😜. சென்னையே வெண்ணை என்று கூப்பிடக் கூடிய நிலையில் இருந்த ஹைட்ரபாத் இப்படி அடிப்பார்கள் என்று யார் நினைத்தது................ இப்ப சென்னை தான் கடைசியா............🫣.
  35. தனித்து வெல்லும் கட்சி என்று நினைத்திருக்க, கடைசியில் தவெக போல தனியவே நில் என்று விட்டிட்டார்கள்...........🤣. ஒரு பிள்ளைக்கு மட்டும் புள்ளி கிடைக்காத அநீதி இன்றைக்கு உங்கள் எல்லோரின் நினைவுகளிலும் நடுச்சாமத்தில் வந்து, அது உங்களின் நித்திரைகளை குழப்பட்டும்...............🤣🤣.
  36. ஏதாவது நடக்கிற விசயங்களை கதையுங்கோ... வாய் கூசாமல் பொய் சொல்றான் சிங்களவன், குறிப்பாக தமிழர் விடையத்தில்.
  37. எனக்கு மரம் வெட்ட பாத்திகள் கட்ட வந்தவர்கள் மூவர் நல்ல வேலைக்காரர்கள் தான். ஆனால் அவர்களும் நாம் பக்கத்தில் நின்று சொன்னால்த்தான் நன்றாகச் செய்கின்றனர். அந்தப்பக்கம் போனால் ஏனோதானோ என்றுதான். பொது அறிவைப் பயன்படுத்தி செய்யும் வேலைகளைக் கூடத் தவராகச் செய்தால் என்ன செய்வது. நாம் போய் இருந்தால் மட்டுமே சரியானவர்களைத் தெரிவுசெய்ய முடியும். எல்லோரும் தம் வேலைகளை எல்லா இடமும் தக்கவைத்துக்கொள்ள அங்கொருகால் இங்கொருகால் என மனச்சாட்சியின்றி ஒழுங்காக ஒரு வேலையை முடிக்காமல் அழைக்கழிக்கின்றனர்.
  38. உறவோ புதுமை , நினைவோ இனிமை ......... ! 😍
  39. நான் தமிழர் பகுதி என குறிப்பிட்டது இலங்கையை வைத்து.... அதில் விளக்கமாக எழுதாமல் விட்டது எனது தவறு.
  40. சஜித் பிரேமதாச... ஒற்றைக்கண் சிவராசனை நினைவூட்டும் விதமாக, ஒற்றைக்கண் புலியின் படத்தை, நரேந்திர மோடிக்கு அன்பளிப்பு செய்ததற்கு விளக்கம் கேட்கப் போகிறார்கள் போலுள்ளது. 😂 ஒற்றைக்கண்... யானை, மான், குரங்கு, கழுகு, புறா எல்லாம் இருக்க, புலியை அன்பளிப்பு செய்தால்... கோவம் வரும்தானே. 🤣
  41. ஐடியா சொல்லிட்டியள் எல்லே...இனி கொத்தார் துலைஞ்சார் 😁
  42. அண்ணை ஆர் யூ ஓக்கே? 🤣 பாஜக ஆட்சி மாறும் போது அதுவரை ரவி உயிருடன் இருந்தால் கிளறப்படலாம்.
  43. நன்றாக இருக்கும் அரசியல்வாதிகளும் அவர்களது குடும்பத்தினரும், விசாரணைக்கு அழைத்ததும் உடனே மருத்தவமனையில் போய் சிகிச்சை பெறுவது ஏன்? அப்படி அவர்களுக்கு மட்டும் ஏற்படும் அந்த நோயின் பெயர் என்ன? யாருக்காவது தெரியுமா?😂 தோழர் பாலன்
  44. சிறிமாவோ காலத்தில் பாணுக்குக் கூப்பன் காட்டை அடுக்கி வைத்து விட்டுக் காவல் இருந்த நாங்கள் தன்னிறைவு இன்மையும் இறக்குமதித் தடையும் தான் காரணம் தன்னிறைவு இல்லாவிட்டால் இறக்குமதி கட்டாயம் தேவை ட்ரம்பின் வரிக் கொள்கையால் அமெரிக்க துரைமார் குளித்துவிட்டு மாத்த ஜட்டி இல்லாமல் போட்டதையே காய போட்டுக் காவல் இருக்க வேண்டி வரப்போகின்றது 😂😇
  45. தாத்தாவும் பேரனும் ஒரே கேள்வியை கேட்டதால் ஒன்றாக பதில் சொல்கிறேன். ஸ்டாலினும் கனிமொழியிம் திருடர்கள், நிம்மியை சந்திக்கிறார்கள். அதே போல் சீமானும் திருடன் என நீங்கள் ஒத்து கொண்டால்…. யாரும் பொங்கி எழ மாட்டார்கள்.
  46. நான் ஏன் இந்த இயற்கை விவசாய ஆட்களை கிண்டல் செய்றேனா... இதான். ஆறேழு வருடங்கள் முன்பு ஐடி வேலையை விட்டுட்டு ஆர்கானிக் விவசாயம் செய்யப்போறேன்னு ஒரு நண்பர் போனார். நான் கொஞ்சம் ஏமாந்திருந்தால் என்னையும் வேலையை விடவைத்து அதில் கோர்த்துவிட்டிருப்பார். திருவள்ளூர் தாண்டி செம்மண் நிலம் வாங்கிப்போட்டு ஆர்கானிக் விவசாயத்துடன் கூடவே பரண்மேல ஆட்டுப் பண்ணை வைத்தார். பரண்மேல ஆட்டுப்பண்ணை வைப்பதால் தினமும் கூட்டிப் பெருக்க வேண்டாம். வாரம் ஒருமுறை கூட்டலாம். ஆடுகளும் வரிசையாக ஐடி கம்பெனிபோல அதனதன் கேபினில் உட்கார்ந்திருக்கும். வேலைப்பளு இல்லை என்று ஏழு லட்சம் செலவு செய்து பரண்போட்டார். பக்கத்தில் அரை ஏக்கருக்கு வேலிமசால் போட்டார். இரண்டு வருடம் கழித்து ஆர்கானிக் முறையில் லாபம் இல்லை. பூச்சி நிறைய வருதுன்னு ஆர்கானிக்கை கைவிட்டு சாதாரண விவசாயத்துக்கு மாறினார். காலை போன் செய்து விசாரித்ததில் கோவிட்டுக்குப் பிறகு ஆட்கள் வேலைக்கு வரமாட்டேங்கிறாங்க. நானே எல்லா வேலையும் செய்யவேண்டி இருக்கு. மனைவி, பிள்ளைகளைக் கூப்பிட்டால் உதவிக்கு வரமாட்டேங்கிறாங்க. இதுக்கு பேசாம ஐடி வேலையியிலேயே இருந்திருக்கலாம் என்று புலம்புறார். என்னங்க செய்றது? நாம வளர்க்குற ஆடு, மாடு எல்லாம் அதுங்களே ஓரமா போய் சாணியைப் போட்டுட்டு அதுங்களே தண்ணியை ஊற்றி குளிச்சு சுத்தமா பால்கறந்துட்டு வேளைக்கு தீவனம் சாப்பிட்டு மாசமானா அதுங்களே இறைச்சிக்கடைக்கு போய் வெட்டுவாங்கிட்டு நம்ம கூகிள் பேவுக்கு பணத்தை மட்டும் அனுப்பி வச்சா நல்லாத்தான் இருக்கும். ஆனா, இயற்கை அப்படி படைக்கலையேன்னு சொன்னேன். இது என் சொந்த கற்பனை ..... . . . . . . . . . . . . . .இல்லை அங்கதாங்க ..முகநூல் அங்கதான் சாத்தியமா சுட்டேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.