Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87988
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38756
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19122
    Posts
  4. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1223
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/29/25 in Posts

  1. பிக்கரிங் இல் ஜுனித்தா நாதன் எனும் தமிழ் பெண்ணும் வெற்றி. டிரம்பின் புண்ணியத்தில் மீண்டும் ஆட்சியில் அமர்கிறது லிபரல் கட்சி. நிழலி, வாலி செம அப்செட்டில் இருப்பார்கள் என நினைக்கிறேன்🤣. ரிருடோ வைவிட கார்னி கெட்டிக்காரன் நாட்டை வளப்படுத்துவார் என நினைக்கிறேன். இங்கிலாந்து வங்கியின் ஆளுனரக இருந்த போது நன்றாக செயல்பட்டார்.
  2. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 48வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும் அரைச் சதம் அடிக்கவில்லை எனினும் அவர்களின் வேகமான கமியோ ஆட்டங்களினால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஃபவ் டுபிளெஸிஸ் 62 ஓட்டங்களையும் பின்னர் வந்த அக்ஷர் பட்டேலும் விப்ராஜ் நிகமும் வேகமாக அடித்தாடினாலும், பிற வீரர்கள் கைகொடுக்காததால் இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  3. GMT நேரப்படி நாளை புதன் 30 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK எதிர் PBKS 21 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் 21 பேருக்கு முட்டைகள் கிடைக்க வாய்ப்பு அதிகமா அல்லது முதல் இருவருக்கும் மாத்திரம் முட்டைகள் கிடைக்குமா?
  4. இன்றைக்கு சென்னை தனது சகாக்கள் போல விளையாடும் (கொல்கத்தா, ராஜஸ்தான்)😂
  5. 🤣.................. உங்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் எப்படி சென்னையை தெரிவு செய்துள்ளார்கள் என்று புரியவில்லையா.............. போட்டிகள் ஆரம்பிக்கும் முன், சென்னை அணி 'அப்பாக்கள்' விளையாடும் அணி என்று தெரியாமல் தெரிவு செய்துவிட்டோம்...................🤣. 14 வயது பிள்ளை எப்படி விளையாடுகின்றான்............ 41 வயதுக்காரர்கள் இருக்கும் சென்னையால் இவ்வளவு தான் முடியும் போல................ உங்களை எவராலும் இனி இங்கே எட்டிப் பிடிக்கவே முடியாது போல.........👍.
  6. உங்களை போல டுருடோ காலத்தில் மிக கடுமையாக லிபரலை எதிர்த்த பலர், டிரம்பின் வருகை, கோமாளித்தனத்தின் பின் அதற்கு கானி ஆற்றிய எதிர்வினையின் பின் மாறி வாக்கு போட்டுள்ளனர் என்பதைதான் கடந்த மாதங்களில் ஏபட்ட கருத்துகணிப்பு, நேற்றைய தேர்தல் முடிவுகள் காட்டுகிறன. ஜி 7 நாடுகளி கார்னியும், மேர்ஸும் டிரம்ப்பை டீல் பண்ணும் விதமே சரியானது. மெக்ரொனும் கொஞ்சம் இந்த வழிக்கு வருகிறார். ஸ்டாமர் கழுவிற நீரில் நழுவுற மீனாய் இருந்து சாதிக்க முயல்கிறார். ஆனால் டிரம்ப் ஒரு playground bully. அவரது மட்டையை வாங்கி அவருக்கே மண்டையில் ஒண்டு போட்டால்தான், எதிராளியை மதிப்பார். பழைய உறவு ஓவர் என துணிந்து மேர்சை, கார்னியை போல சொன்னால்தான் டிரம்புக்கு உறைக்கும். புத்தி கூர்மை வேறு, எந்த விதத்திலும் கார்னிக்கு கிட்டவும் நிற்க முடியாத ஆள் டிரம்ப். கார்னியை கையாள டிரம்ப் கஸ்டப்படுவா.
  7. "தம்பு" அமெரிக்காவில் பதவிக்கு வந்தமையால் ஏற்பட்ட நன்மைகள் எவையென்று கேட்டால் கஷ்ட பட்டுத் தேடித் தான் பொறுக்கியெடுக்க வேண்டும். ஆனால், கனடாவிலும், ஐரோப்பாவிலும் இருந்து உருவாகும் டீசண்டான தலைவர்கள் தான் இந்த இருண்ட அத்தியாயத்தின் silver lining என்று கருதுகிறேன். புதிய வரவுகளாக பிரிட்டனின் ஸ்ராமர், ஜேர்மனியின் மெர்ஸ், தற்போது கனடாவின் கார்னி, இப்படியான "நட்டு லூசாகாத" தலைவர்களை நோக்கி உலகத்தின் மரியாதை நகர்வது இயல்பானது. "பல் துருவ உலகு உருவாகிறது" என்று புரின் யுத்தம் ஆரம்பித்து டசின் கணக்கான ஆபிரிக்க நாடுகளை தன் வசம் இழுத்த போது எழுதினார்கள். பல துருவங்கள் உருவானால், இப்படியான முன்னேற்றகரமான, அமெரிக்காவிற்கு மாற்றான துருவங்கள் தான் உருவாக வேண்டும். புரினும் ட்ரம்பும் வேண்டுமானால் இனி அலாஸ்காவின் வழியாக நிலங்களை இணைத்து விட்டு "தனித்துருவமாக" நடந்து கொள்ளலாம்😂!
  8. இரண்டு பேரோடும் சேர்ந்தேனே. எந்தேனே. விடுறீங்கள் இல்லையே. நாம போட்ட பூசையில நம்பிக்கை இருக்கு.
  9. லிபரல் தான் ஆட்சிக்கு வருவார்கள் என தெரியும். இதனை நான் மார்ச் 16 இலேயே எழுதியிருந்தேன். இந்த திரியில் நான் எழுதிய ஒரு விடயத்தை மட்டும் இறுதி நேரத்தில் செய்யவில்லை. அதாவது பழமைவாத கட்சிக்கு வாக்களிக்கவில்லை. நானும் தாரளவாத கட்சிக்கே வாக்களித்தேன். காரணம், பக்கத்து நாட்டில் இருக்கும் வலதுசாரி பைத்தியகாரனை சமாளிக்கும் வல்லமை கார்னேக்கு அதிகம் இருக்கலாம் எனும் நம்பிக்கையில்.
  10. "தம்புவின்" ஆட்சியில் 100 வது நாள் நிறைவுக்கான பரிசு, கனடாவிடமிருந்து😂!
  11. அதுவேதான் எனது எண்ணமும்! இன்று அவரது நாள், அதனால் மட்டை விளிம்பில் பட்ட பந்துகளெல்லாம் வீரர்கள் இல்லாத இடத்தில் விழுந்து எல்லைக்கோட்டை தாண்டியது! இன்னொருநாளில் அது நேர ஒருவீரரின் கைகளுக்கு செல்லலாம்! அதனால் எல்லா பந்துகளும் கண்டபடி அடிக்காமல் தனது எல்லைக்குள் வரும் பந்துகளை மாத்திரம் (balls within his arc) தெரிவுசெய்து அடிக்க வேண்டும்! ஆனால் இந்த வயதில் கைகளிலும், தோள்பட்டையிலும் இவ்வளவு பலமிருப்பது பிரமிப்பாகத்தான் இருக்கிறது! சிறுவன் மென்மேலும் வளர்ந்து இன்னொரு லாராவாக வரவேண்டும்!
  12. வணக்கம், யாழ் இணையம் 27 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 94 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைகின்றது. எனவே அதன் பின்னர் புதிய சுய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். (suvy) "கரை கடந்த புயல்" (kandiah Thillaivinayagalingam) காற்றாடி ( ரசோதரன்) "கலாச்சாரம்" & "துடிக்கும் இதயங்கள்" (kandiah Thillaivinayagalingam) இன்னொரு சக்கரவர்த்தி ( ரசோதரன்) "நான் வரைந்த முதல் ஓவியம்" & "உள்ளமெனும் ஊஞ்சலிலே" (kandiah Thillaivinayagalingam) "மனமே கலங்காதே!" & "இயற்கையின் இன்ப அழகில்" (kandiah Thillaivinayagalingam) கர்ண பரம்பரையின் கனவு ( ரசோதரன்) "அன்புடன் தேன்மொழி" (kandiah Thillaivinayagalingam) "ஏனிந்தக் கோலம்" (kandiah Thillaivinayagalingam) "வாழ்வில் வசந்தம்" & "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல" ( kandiah Thillaivinayagalingam) ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே! (goshan_che) இன்றைய அதிசயம் ( ரசோதரன்) "உனக்காக் காத்திருக்கேன் [14 பெப்ரவரி 2025 ]" [காதலர் தினம் கொண்டாடும் உறவுகளுக்காக] (kandiah Thillaivinayagalingam) இறை குறைபடுமோ ? - (சுப.சோமசுந்தரம்) காதலர் தினக் கதை ( ரசோதரன்) காதலர் தினத்தில் கனவொன்று கண்டேன்... (alvayan) "கும்மிருட்டில் நடனம்" (kandiah Thillaivinayagalingam) "அன்பு வலிமையானது" & "ஓடுகிற தண்ணியிலே" (kandiah Thillaivinayagalingam) ஒரு காரின் கடைசி வாக்குமூலம் ( ரசோதரன்) இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே (alvayan) "சொல்ல துடிக்குது மனசு" & "பாலகன்பிறந்தார்" (kandiah Thillaivinayagalingam) இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்? (ஈழப்பிரியன்) ஒரு முட்டை ஆயிரம் டாலர் ( ரசோதரன்) சும்மா ஒர் பதிவு (putthan) "இதுவும் கடந்து போகட்டும்" & "மாற்றங்கள்" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) "நெஞ்சோடு நிழலாடுதே" & "ஒளிரட்டும் புத்தாண்டு மிளிரட்டும் நம்வாழ்வு" (kandiah Thillaivinayagalingam) கைவிலங்குகள் ( ரசோதரன்) நியாயத்தின் சாம்பல் (villavan) "உன்னோடு வாழ்வது உவப்பானதே" & "புது விடியல்" (kandiah Thillaivinayagalingam) ஓயும் ஊசல் ( ரசோதரன்) ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம் (goshan_che) "பிள்ளை நிலா" (kandiah Thillaivinayagalingam) "செருக்கு” [தன்முனைக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) குறள்மொழி இன்பம் / "குறள் 1265" (kandiah Thillaivinayagalingam) மூன்று கோழிக்குஞ்சுகள் ( ரசோதரன்) "யாரொடு நோக" [அந்தாதிக் கவிதை] & "நடை பயிற்சி" (kandiah Thillaivinayagalingam) விதியற்றவர் (மெசொபொத்தேமியா சுமேரியர்) ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" & "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) "நீயில்லா வாழ்வு" (kandiah Thillaivinayagalingam) பூனைகளின் பேச்சுவார்த்தை ( ரசோதரன்) "தனிமையை இனிமையாக்கிய கனிமொழியே" (kandiah Thillaivinayagalingam) “ஏனடி இந்த வேதனை..?” (kandiah Thillaivinayagalingam) "பனியில் நனையலாமா? .. நிலவிலே காயலாமா?" & "என்றுமே முதலாளி" (kandiah Thillaivinayagalingam) ராணுவ ரகசியம் ( ரசோதரன்) "எது தான் சரி...?" [அந்தாதிக் கவிதை] & "மாங்கல்ய கனவுடன்" (kandiah Thillaivinayagalingam) அமைதி மணம் (villavan) "மன்னிப்பாயா என்னை", தாய்மை & "தாத்தா" (kandiah Thillaivinayagalingam) "பாலியல் வன்கொடுமை" (kandiah Thillaivinayagalingam) முழிக்கும் மொழி ( ரசோதரன்) பிட்டுக்கு மனம் சுமந்து (மெசொபொத்தேமியா சுமேரியர்) தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே (Kavi arunasalam) "நீயில்லை நிழலில்லை" (kandiah Thillaivinayagalingam) அவளைத்தொடுவானேன்....??? (விசுகு) "மூன்றும் உடையது", குறள் 1085 & "பனிப்பொழிவு" (kandiah Thillaivinayagalingam) "பணம் படுத்தும் பாடு", "தைப்பொங்கல்” [ஹைக்கூ கவிதை] & "மரியாதை" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) "தைமகளே வருக" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) கண் கண்ட தெய்வம் ( ரசோதரன்) தூத்துகுடி கொத்தனாரு…. (goshan_che) "வாழ்ந்து காட்டுவோம்" & "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!” (kandiah Thillaivinayagalingam) வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam) பார்த்தீனியம் ( ரசோதரன்) கிழவனை கண்டா வரச்சொல்லுங்க (goshan_che) "கிராமியக் கலைஞன்" (kandiah Thillaivinayagalingam) தலைவரை கண்டா வரச்சொல்லுங்க (goshan_che) மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்? (villavan) "தை மகளே வருக" (kandiah Thillaivinayagalingam) பம்மாத்து (சுப.சோமசுந்தரம்) அப்பா...... (விசுகு) நானும் ஊர்க் காணியும் (மெசொபொத்தேமியா சுமேரியர்) "உழவர் திருநாள்" & "தித்திக்கும் பொங்கல் திருநாள்" (kandiah Thillaivinayagalingam) "எங்கே எனது ஒளி" & "காளையை அடக்கு கன்னியை மடக்கு " (kandiah Thillaivinayagalingam) செவ்வந்தியில் செவ்வந்தி ( ரசோதரன்) இரத்த சொந்தம் (நிலாமதி) “காலம் எல்லாம் உனக்காகக் காத்திருப்பேன்” (kandiah Thillaivinayagalingam) "தை பிறந்தால்" & "பரோபகாரம்" (kandiah Thillaivinayagalingam) ஏழரைக்கனவு (தனிக்காட்டு ராஜா) யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது. (தமிழ் சிறி) "புதிய ஆரம்பம்" (kandiah Thillaivinayagalingam) "வாடகை வீடு..!" (kandiah Thillaivinayagalingam) "உன்னைச் செதுக்கு" (kandiah Thillaivinayagalingam) "பொறுப்பற்ற ஒரு ஊதாரி கணவன்" (kandiah Thillaivinayagalingam) "எங்களுக்கும் காலம் வரும்" (kandiah Thillaivinayagalingam) "கந்துவட்டி" (kandiah Thillaivinayagalingam) "சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிகிறதே!" (kandiah Thillaivinayagalingam) "இளங்கவியும் 'ஏடிஎச்டி' யும் [ADHD]" (kandiah Thillaivinayagalingam) கூடுவேம் என்பது அவா / குறள்1310 (kandiah Thillaivinayagalingam) "தனிக் குடித்தனம்" (kandiah Thillaivinayagalingam) "மௌனம் சம்மதமா?" (kandiah Thillaivinayagalingam) “போராடி வென்றவள்" (kandiah Thillaivinayagalingam) "உயிர்பெறுமா ஓவியம்" (kandiah Thillaivinayagalingam) "வீட்டு வேலைக்காரி" (kandiah Thillaivinayagalingam) "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்" (kandiah Thillaivinayagalingam) "மீட்டாத வீணை.." (kandiah Thillaivinayagalingam) பதியப்பட்ட 94 ஆக்கங்களில் களஉறுப்பினர்கள் @kandiah Thillaivinayagalingam 53 ஆக்கங்களையும் @ரசோதரன் 16 ஆக்கங்களையும் பதிந்துள்ளனர். கள உறுப்பினர்கள் கந்தையா தில்லைவிநாயகலிங்கம், ரசோதரன் ஆகியோருக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு: யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  13. அதெல்லாம் மூளாது. வேணுமெண்டால் கல்லாலை எறிந்து விளையாடுவினம்
  14. வாழ்க்கை பையனை அந்த அடி அடித்திருக்கு , அதில் இருந்து எழுந்தவன் இந்த அடி அடிக்கிறான் .......... ! 👍
  15. 62 வது போட்டியின் கணிப்புக்களை வெளியிடும்போது புரியும்😜
  16. நாளைக்கு புரியும். முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
  17. அவ்வளவு கடுப்பா இருக்கா. அடுத்த வருசம் 94 போட்டிகளோடு 3 மாதம் ஓட்டுறதுக்கு ஒரு அலசல் போய்க்கொண்டிருக்காம். இத எப்பிடி?
  18. தந்தை மகள்களுக்கு கூறிய அறிவுரை அருமையானது . ......... ! 👍
  19. வெறுமனே வாய்ப்பேச்சு கூடாது. சும்மா ஒருக்கா சீனாவை சீண்டிப் பார்த்து விட்டு, சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமா இல்லை உளுத்தம் மா கொடுக்க முடியுமா என இந்தியா சொல்ல வேண்டும்.
  20. இனி நானும் ஓடப் போறன். முடியல.
  21. "டிரம்ப் எங்களை சிதைக்க முயல்கின்றார், அமெரிக்காவுடனான பழைய உறவு முடிவிற்கு வந்துவிட்டது" - கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி Published By: RAJEEBAN 29 APR, 2025 | 12:34 PM அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முடிவிற்கு வந்துவிட்டதாக கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி எங்களை சிதைக்கப்பார்க்கின்றார், அதன் மூலம் அமெரிக்கா எங்களை உரிமையாக்கலாம் என அவர் கருதுகின்றார் என தெரிவித்துள்ள மார்க் கார்னி இது ஒருபோதும் நடக்காது என தெரிவித்துள்ளார். அமெரிக்கா எங்கள் வளங்களை நாட்டை தனதாக்கிக்கொள்ள முயல்கின்றது என நான் பல மாதங்களாக எச்சரித்து வந்தேன் என அவர் தெரிவித்துள்ளார். கனடா தற்போது வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் உள்ளது, அமெரிக்காவுடான எங்களின் பழைய உறவு முடிவிற்கு வந்துவிட்டது என தெரிவித்துள்ள அவர் இது பெரும் துன்பியல் நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் துரோகத்தினால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு சுதந்திர, இறைமையுள்ள தேசங்களின் எதிர்காலம் குறித்து நான் விரைவில் அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசுவேன். உலகிற்கான தலைமைத்துவத்தின் முன்னணியில் இருப்பதற்கு அமெரிக்கா விரும்பாவிட்டால் கனடா அதனை செய்யும் நாங்கள் வலுசக்தி வல்லரசாக மாறுவோம் எனவும் கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கார்னி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/213241
  22. இதில் Juanita Nathan வெற்றி பெறக்கூடாது என்று NCCT (National Council of Canadian Tamils) அமைப்பினர் தீயா வேலை செய்தனர். Juanita முதலில் தனக்கு பரிச்சயமான மார்க்கம் - தொன்ஹில் (Markham - Thornhill) பகுதியில் தான் தேர்தலில் நிற்க முயன்றார். ஆனால் NCCT அமைப்பினர் பழமைவாத கட்சியில் செல்வாக்கு செலுத்தி அங்கு இன்னொரு தமிழரான லயனல் லோக நாதனை (Lionel Loganathan) தேர்தலில் நிறுத்தினர். இரு தமிழர்கள், தமிழர்கள் வாழும் தொகுதியில் தேர்தலில் நின்றால், வாக்குகள் சிதறும் என்பதை புரிந்து கொண்ட லிபரல் கட்சி, Juanita இனை பிக்கரிங் இல் நிற்க வைத்து வெல்ல வைத்துள்ளனர். NCCT அமைப்பினர் தான் பழைய உலகத் தமிழர் அமைப்பினர். இவர்கள் தான் கடந்த வரும் தமிழ் கனடிய காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த வீதித் திருவிழாவையும் குழப்பி அடித்தவர்கள். Juanita பிக்கரிங்கில் கூட வெல்ல கூடாது என சித்து வேலைகள் செய்தார்கள் என கூறுகின்றனர். Juanita நல்ல ஆளுமை உள்ள ஒரு தமிழ் பெண்மணி. தனிப்பட்ட ரீதியில் இவருடன் சில தடவைகள் உரையாடியிருக்கின்றேன். எனக்கு தெரிந்த ஒரு சிறுவனுக்கு ஆட்டிசம் இருப்பதால், அவனுக்கான சிறந்த சேவைகளை, கல்வியை எப்படி தெரிவு செய்வது தொடர்பாக கதைத்து இருக்கின்றேன். இங்குள்ள தமிழ் எப் எம் வானொலியிலும் அடிக்கடி பல பிரச்சனைகள் தொடர்பாக உரையாடி இருக்கின்றார். இவர் வென்றது மிக மகிழ்ச்சி.
  23. இதெல்லாம் புரியாமல் நாங்கள் சு.க, ஐ.தே.க, ம.வி.மு என்று தேர்தல் நேரம் இலங்கையில் அடிபாடு! பா.ஜ.க, காங்கிரஸ் என்று இந்தியாவில் அடிபாடு! பிறகு "பச்சைச் தமிழ் கட்சி, மஞ்சள் தமிழ் கட்சி" என்று தமிழ் நாட்டில் புடுங்குப் பாடு! எல்லாமே ephemeral காகங்கள், "பனம் பழம்" சும்மா எழுந்தமானமாக விழுந்து கொண்டிருக்குது🤣😂!
  24. மேற்கு ஊடகங்கள் தவறான பிரசாரத்தை செய்கின்றன. இந்த பகுதிகள், சீனாவில் தேசியவாத அரசர்கள் இருக்கும் போதே உரிமை கொண்டாடின. அப்போது அது எல்லா மேற்கு அரசுகளும் உண்மையில் ஏற்பாக இருந்தது, ஏனெனில் சீன அரசு, அரசாங்கம் அவர்களின் பக்கமும், அவர்களின் செல்லவாக்குக்கு கீழும். சீனாவில், கம்னிஸ்ட் மோவோ தலைமையில் ஆட்சியை பிடித்தவுடன், மேற்கு நிலைப்பாடு மாறியது. எனவே, சீன நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. UNCLOS ஐ சீன ற்றுக்கொண்டதாயினும், இந்த பகுதிகளுக்கு அதில் இடம் இல்லை என்றே அதன் நிபந்தனை. மேட்ற்கு அரசுகள் அவற்றின் வழமையான நிலைப்பாட்டை மாற்றம் திருகுதாளத்தை விடுகின்றன, அனால், சேனா அதை அசட்டை செய்யும் பலம் உள்ளது. இது வெப்பியாரமாகமாக இருந்து குமுறுகிறது மேற்கு அரசுகளுக்கு.
  25. முதுகு வலிப்பு காரணமாக அணித்தலைவர் கில் ராஜஸ்தான் துடுப்பாடும் போது விளையாடவில்லை. இதனால் உபதலைவர் ரஷித் கான் அணிக்கு தலைமை தாங்கினார்
  26. விட மாட்டீங்கள் போல. பயம் வேண்டாம். எல்லாம் நமதே இப்போ.
  27. வாய்ப்பில்லை ராஜா! இன்று நானுமல்லவா சேர்ந்திருக்கிறேன்!!
  28. வைபவ் சூர்யவன்ஷி: 14 வயதில் உலக கிரிக்கெட்டை திரும்பிப் பார்க்க வைத்த விவசாயி மகன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி வாங்கப்படும்போது அவருக்கு 13 வயதுதான் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் வைபவ் சூர்யவன்ஷி. 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் டி20 தொடரில் அறிமுகம், தான் சந்தித்த முதல் பந்திலேயே சர்வதேச பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூரின் பந்தில் சிக்ஸர், முதல் ஆட்டத்தில் சேர்த்த 34 ரன்களில் 26 ரன்கள் சிக்ஸர், பவுண்டரிகளாக சேர்த்து ஆட்டமிழந்தபோது கண்ணீருடன் பெவிலியன் நோக்கிச் சென்றார் அந்தச் சிறுவன். ஆனால் நேற்று (ஏப்ரல் 28) 17 பந்துகளில் அரைசதம், 35 பந்துகளில் சதம் அடித்து ஐபிஎல் தொடரில் உச்சம் தொட்டு ஆட்டமிழந்தபோது, எதிரணி வீரர்கள் (குஜராத் டைட்டன்ஸ்) அனைவரும் கை கொடுத்து, தலையிலும், தோளிலும் தட்டிக் கொடுத்து வழியனுப்பினர். அரங்கமே எழுந்து நின்று கரகோஷத்தோடு அந்தச் சிறுவனுக்கு வரவேற்பு கொடுத்தது. 13 வயதில் ஐபிஎல் அறிமுகம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.10 கோடிக்கு போட்டி போட்டு வாங்கப்பட்ட சூர்யவன்ஷிக்கு அடிப்படை விலையாக ரூ.35 லட்சம்தான் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவரின் பேட்டிங் திறமையைப் பார்த்து டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் போட்டியிட்டபோது ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் வாங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த வருடம் துபையில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி வாங்கப்படும்போது அவருக்கு 13 வயதுதான். 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்து ராஜஸ்தான் அணி என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி பலதரப்பிலும் எழுந்தது. ஆனால், 13 வயது சிறுவன் சூர்யவன்ஷிக்கு இப்படியொரு அபாரமான பேட்டிங் திறமை ஒளிந்திருப்பதைக் கண்டறிந்து அவரைக் காத்திருந்து தூக்கியது ராஜஸ்தான் அணி. உலக கிரிக்கெட்டின் கவனம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் இலக்கை 15.5 ஓவர்களில் சேஸ் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சூர்யவன்ஷியின் மிரட்டலான சதம்தான். ஜெய்ஸ்வாலுடன் முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்தபோதே ஏறக்குறைய ராஜஸ்தான் வெற்றியை உறுதி செய்து கொடுத்துவிட்டு 38 பந்துகளில் 101 ரன்கள் (11 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) எடுத்து சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார். 265 ஸ்ட்ரைக் ரேட்டில் சூர்யவன்ஷி பேட் செய்தார். சூர்யவன்ஷி நேற்றைய ஒரே ஆட்டத்தில் உலக கிரிக்கெட்டின் கவனத்தைத் தன்மீது குவியச் செய்துவிட்டார். உலகளவில் விளையாடப்படும் டி20 லீக் தொடர்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமானது. அதில் 14 வயது சிறுவன் 35 பந்துகளில் அடித்த சதம் உலக கிரிக்கெட்டை ஈர்த்துள்ளது. ஐபிஎல்லில் இது பழிவாங்கும் வாரம் - ராகுலின் காந்தாரா கொண்டாட்டத்தை கிண்டல் செய்த விராட் கோலி28 ஏப்ரல் 2025 சிஎஸ்கே தொடர் தோல்வி – சொதப்பிய அணி மீது தோனியின் கடும் அதிருப்தி என்ன?26 ஏப்ரல் 2025 வின்டேஜ் நினைவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டி20 போட்டியில் மிக இளம் வயதில் 50 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி பெற்றார் சர்வதேச அளவில் 100 டெஸ்ட்களுக்கும் மேல் ஆடிய அனுபவமுள்ள இஷாந்த் ஷர்மா ஓவரில் 28 ரன்கள், ஆப்கானிஸ்தான் வீரர் கரீம் ஜனத் (நேற்றுதான் அறிமுகமானார்) ஓவரில் 30 ரன்கள் மற்றும் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ரஷித் கான் ஓவரில் பெரிய சிக்ஸரை விளாசித்தான் சூர்யவன்ஷி சதத்தையே எட்டினார். குஜராத் அணியின் 7 சர்வதேச பந்துவீச்சாளர்களையும் சூர்யவன்ஷி ஓடவிட்டு அவருக்கு யார் பந்துவீசுவது என்ற குழப்பத்தை ஏற்படுத்தினார். வின்டேஜ் மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர்களின் பேட்டிங்கை பார்த்த நினைவுகளும், பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் அப்துல் காதிரின் பந்துவீச்சை சச்சின் டெண்டுல்கர் இளம் வயதில் வெளுத்த நினைவுகளும் நேற்று சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்தபோது ஏற்பட்டது. வைபவ் சூர்யவன்ஷி டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 தொடரிலும் ஏராளமான சாதனைகளைச் செய்துள்ளார். சூர்யவன்ஷியின் சாதனைகள் உலக டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் 14 வயது 32 நாட்களில், 35 பந்துகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன் விஜய் ஜோல் (18 வயது, 118 நாட்கள்) வைத்திருந்த சாதனையையும் சூர்யவன்ஷி முறியடித்தார். ஐபிஎல் தொடரில் அதிவிரைவாகவும், இளம் வயதிலும் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன் யூசுப் பதான் 37 பந்துகளில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 2010இல் சதம் அடித்திருந்தார். அதையும் அவர் தற்போது முறியடித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஐபிஎல் டி20 தொடரில் அதிவேகமாக சதம் அடித்த வகையில் கிறிஸ் கெயிலுக்கு (30 பந்துகள்) அடுத்ததாக 35 பந்துகளில் சதம் அடித்த 2வது வீரராக சூர்யவன்ஷி இடம் பெற்றார். டி20 போட்டியில் மிக இளம் வயதில் 50 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன் ஆப்கன் வீரர் முகமது நபியின் மகன் ஹசன் இஷகில் 15 வயது 360 நாட்களில் அரைசதம் அடித்திருந்ததுதான் சாதனையாக இருந்தது. சூரியவன்ஷி 17 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் ராஜஸ்தான் அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். சூர்யவன்ஷி நேற்றைய ஐபிஎல் (ஏப்ரல் 28) ஆட்டத்தில் மட்டும் 11 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் டி20 தொடரில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய தமிழக வீரர் முரளி விஜயின் சாதனையைச் சமன் செய்தார். சூர்யவன்ஷி நேற்று அடித்த சதத்தில் 93 சதவீத ரன்கள் பவுண்டரி, சிக்ஸர் மூலமே கிடைத்தன. ஐபிஎல் தொடரில் இளம் வயதில் சதம் அடித்த வீரர்களில் 4வது வீரராக வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றார். இளம் வயதில் சதம் அடித்தவர்களில் மணிஷ் பாண்டே (19 வயது, 253 நாட்கள்), ரிஷப் பந்த் (20 வயது 218 நாட்கள்), தேவ்தத் படிக்கல் (20 வயது 289 நாட்கள்) இவர்கள் வரிசையில் சூர்யவன்ஷி உள்ளார். சொந்த மண்ணில் ஆர்சிபிக்கு முதல் வெற்றி - ராஜஸ்தானின் வெற்றியை ஒரே ஓவரில் பறித்த ஹேசல்வுட்25 ஏப்ரல் 2025 ஃபார்முக்கு வந்த ரோஹித், உருக்குலைந்த சன்ரைசர்ஸ் - இஷான் கிஷன் அவுட் ஆகாமலே வெளியேறியது ஏன்?24 ஏப்ரல் 2025 யார் இந்த சூர்யவன்ஷி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் சமஸ்திபூர் மாவட்டத்தில் மோதிபூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் வைபவ் சூர்யவன்ஷி. கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி சூர்யவன்ஷி பிறந்தார். இவரின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி ஒரு விவசாயி. தனது மகனின் கிரிக்கெட் கனவுக்காகத் தனக்கு இருந்த நிலத்தையும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விற்று, அந்தக் கனவுகளை நனவாக்க உழைத்தவர். சஞ்சீவ் சூர்யவன்ஷி பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "சூர்யவன்ஷி என் மகன் மட்டுமல்ல, பிகார் மாநிலத்தின் மகன். என் மகன் கடினமான உழைப்பாளி, 8 வயதிலேயே கிரிக்கெட் மீது தீவிரமாக இருந்தார். எட்டு வயதிலேயே மாவட்ட அளவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிக்கு சூர்யவன்ஷி தேர்வானார். 12 வயதிலேயே ரஞ்சிக் கோப்பையில் ஆடினார். என் மகனின் கனவை நனவாக்க என் நிலத்தையே விற்றேன்" என்று தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தால் அமெரிக்கா யாரை ஆதரிக்கும்?5 மணி நேரங்களுக்கு முன்னர் எல்க் மான்களின் வலசைப் பயணம் - இயற்கை அதிசயத்தை 24 மணிநேரமும் ஒளிபரப்பும் சுவீடன்6 மணி நேரங்களுக்கு முன்னர் விவிஎஸ் லட்சுமண், திராவிட் பார்வை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'ஐபிஎல் தொடரில் ராகுல் திராவிட் தலைமையின் கீழ் சென்ற பிறகு சூர்யவன்ஷியின் பேட்டிங் திறமை பன்மடங்கு மெருகேறியது' கடந்த 2023-24 ரஞ்சிக் கோப்பை தொடரில் பிகார் அணிக்காக 12 வயது 284 நாட்கள் ஆகியிருந்தபோது வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகி விளையாடினார். வினூமன்கட் கோப்பையில் பங்கேற்ற சூர்யவன்ஷி 5 இன்னிங்ஸ்களில் 96 ரன்களை விளாசினார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான சாலஞ்சர் முத்தரப்பு தொடரில் இங்கிலாந்து, வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார். இந்தத் தொடர்தான் சூர்யவன்ஷியை திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தத் தொடரில் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்து விவிஎஸ் லட்சுமண் மெய்சிலிர்த்துப் போனார். அதன் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்டோர் 4 நாட்கள் ஆட்டத்தில் 58 பந்துகளில் சூர்யவன்ஷி அடித்த சதம், ராஜஸ்தான் அணியைக் காந்தம் போல் ஈர்த்தது. இந்த ஆட்டத்துக்குப் பிறகு சூர்யவன்ஷியை எப்படியாவது ஐபிஎல் ஏலத்தில் வாங்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு இறங்கி, இவரை வாங்கியது ராஜஸ்தான் அணி. ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் திராவிட்டிடம் வைபவ் சூர்யவன்ஷியின் திறமையைக் கூறி அவரை ஏலத்தில் எடுக்கக் கோரியது விவிஎஸ் லட்சுமண்தான். சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுத்த பிறகு ராஜஸ்தான் அணியின் தலைமை செயல் அதிகாரி ஜேக் லஷ் மெக்ரம் கூறுகையில், "நாக்பூரில் உள்ள எங்கள் உயர் பயிற்சி மையத்துக்கு சூர்யவன்ஷியை அனுப்புகிறோம். அங்கு எங்களுடைய பயிற்சி அவரை மேலும் சிறப்பாக்கும். சூர்யவன்ஷி அற்புதமான திறமை கொண்டவர், அவரைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, ஐபிஎல் விளையாட நம்பிக்கையளிக்க வேண்டும். வரும் மாதங்களில் சூர்யவன்ஷிக்கு தீவிரமான பயிற்சியளிப்போம். அவரது திறமையை மெருகேற்றுவோம். எங்கள் அணிக்கு சூர்யவன்ஷி வந்தது உற்சாகமளிக்கிறது" எனத் தெரிவித்தார். சுறுசுறுப்பாக இருக்க இந்த காலை உணவு உதவுமா? எப்படி சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்?28 ஏப்ரல் 2025 தமிழ்நாட்டில் பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைசுக்கு தடை ஏன்?24 ஏப்ரல் 2025 விவிஎஸ் லட்சமணின் பரிந்துரை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூர்யவன்ஷி நேற்றைய ஐபிஎல் (ஏப்ரல் 28) ஆட்டத்தில் மட்டும் 11 சிக்ஸர்களை விளாசினார் வைபவ் சூர்யவன்ஷியின் பயிற்சியாளர் மனோஜ் ஓஜா ஸ்போர்ட்ஸ்டார் தளத்துக்கு அளித்த பேட்டியில், "வைபவ் சூர்யவன்ஷி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான முத்தரப்புத் தொடரில் விளையாடியபோது அவரது ஆட்டத்தைப் பார்த்த விவிஎஸ் லட்சுமண் மெய்சிலிர்த்துவிட்டார். அவர்தான் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் திராவிட்டிடம் கூறி ஏலத்தில் சூர்யவன்ஷியை எடுக்குமாறு பரிந்துரைத்தார். முதல் ஆட்டத்தில் 36 ரன்களில் சூர்யவன்ஷி ஆட்டமிழந்து வந்தபோது அழுதுகொண்டே பெவிலியன் திரும்பினார். இதைப் பார்த்த விவிஎஸ் லட்சுமண், சூர்யவன்ஷியியிடம் சென்று அழுகையைத் தேற்றிவிட்டு, இங்கு யாரும் உன்னுடைய ரன்களை பார்க்கவில்லை, நீண்டகாலத்திற்கு விளையாடக்கூடிய ஒரு வீரரின் திறமையைப் பார்க்கிறார்கள் என்றார்" எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "சூர்யவன்ஷியின் திறமையை விரைவாக லட்சுமண் புரிந்துகொண்டார், பிசிசிஐ அமைப்பும் சூர்யவன்ஷிக்கு ஆதரவு அளித்தது. சூர்யவன்ஷியின் தந்தை ஒரு விவசாயி. மகனின் கிரிக்கெட் பயிற்சிக்காக தினமும் என் பயிற்சி மையத்துக்கு அழைத்து வருவார். காலை 7.30 மணிக்கு பயிற்சியைத் தொடங்கும் வைபவ், மாலை வரை தொடர்ந்து பேட்டிங்கில் ஈடுபடுவார். கடந்த 4 ஆண்டுகளாக சூர்யவன்ஷிக்கு பயிற்சி அளித்து வருகிறேன். சூர்யவன்ஷியின் எதிர்காலத்துக்காக பெற்றோர் அதிக தியாகம் செய்துள்ளனர். சூர்யவன்ஷியின் தாயார் அதிகாலை 4 மணிக்கு எழுந்து உணவு தயாரித்துக் கொடுத்த அனுப்புவார். எங்கு போட்டி நடந்தாலும் சூர்யவன்ஷியுடன் அவரின் தந்தையும் வருவார். சூர்யவன்ஷி தந்தையும் கிரிக்கெட் விளையாட விரும்பினார். அவரின் காலத்தில் குடும்பச் சூழலால் முடியவில்லை, தனது கனவை மகன் மூலம் நிறைவேற்றினார்" என்று கூறினார். அமைச்சரவை மாற்றம்: அரசியல் நெருக்கடியா? தேர்தல் வியூகமா?28 ஏப்ரல் 2025 கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை: குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்28 ஏப்ரல் 2025 'சூர்யவன்ஷியை ஒரு கட்டத்தில் மறுத்த பிசிசிஐ' பட மூலாதாரம்,GETTY IMAGES "பிகார் மாநிலத்தில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்குச் சரியான ஆதரவு இருக்காது என்பது தெரியும். இதனால் பிசிசிஐ அமைப்பும் ஒரு கட்டத்தில் இவரைக் கவனிக்க மறந்துவிட்டது, சூர்யவன்ஷிக்கு இது அதிர்ச்சியாக இருந்தது" என்று கூறியுள்ளார் அவரது பயிற்சியாளர் மனோஜ் ஓஜா. "இதனால் உடனடியாக சூர்யவன்ஷியை வேறு மாநிலத்துக்கு விளையாட வைக்க முடிவு செய்தேன். பல மாநிலங்களில் ரஞ்சி அணியை அணுகி சூர்யவன்ஷிக்காக வாய்ப்பு தேடினேன். வேறு மாநிலத்துக்காக சூர்யவன்ஷி ஆடினால் நிச்சயம் பார்க்கப்படுவார், வளர்க்கப்படுவார், ஆதரவு கிடைக்கும் என நம்பினேன். ஐபிஎல் தொடரில் ராகுல் திராவிட் தலைமையின் கீழ் சென்ற பிறகு சூர்யவன்ஷியின் பேட்டிங் திறமை பன்மடங்கு மெருகேறியது. சிறப்பான பயிற்சியை திராவிட் அளித்து வருகிறார். சக வீரர்களும் சூர்யவன்ஷியை உற்சாகப்படுத்துகிறார்கள். நிச்சயமாக சூர்யவன்ஷிக்கு இது புதிய அனுபவமாக இருக்கும். விவிஎஸ் லட்சமணுடன் சந்திப்பு, ராகுல் திராவிட் பயிற்சி சூர்யவன்ஷிக்கு பெரிய எதிர்காலத்தை அளித்துள்ளது" எனத் தெரிவித்தார். தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லும் அவசியமே வராதா?23 ஏப்ரல் 2025 தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் உயிருக்கே ஆபத்து - ஏன் தெரியுமா?22 ஏப்ரல் 2025 அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள் இன்றைய ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடம்: டெல்லி நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சிஎஸ்கே-வின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 30 இடம் – சென்னை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் நாள் – மே 1 இடம் – ஜெய்பூர் நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs சிஎஸ்கே நாள் – மே 3 இடம் – பெங்களூரு நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)- 456 ரன்கள் (9 போட்டிகள்) விராட் கோலி (ஆர்சிபி) 443 ரன்கள் (9 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) 427 (10 போட்டிகள்) நீலத் தொப்பி ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள் (10 போட்டிகள்) பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 17 விக்கெட்டுகள் (9 போட்டிகள்) நூர் அகமது (சிஎஸ்கே) 14 விக்கெட்டுகள் (9 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy8ed10jrymo
  29. ஆம்' நாம்பன் -ஆண் .நாகு பெண். எம்மக்கள் பொதுவாக நாகு கன்று பிறப்பதையே விரும்புவார்கள் காரண் பால். இதுவே ஆடு என்றால் கிடாயக் குட்டியைத்தான் விரும்புவார்கள். காரணம் இறைச்சிக்காக நல்வ விலை போகும். நம்மவரகள் பொதுவாக வளர்க்கும் கிடைhய்களை உண்பதில்லை. பக்கத்து வீட்டு கிடாய்களை விடமாட்டார்கள்.
  30. கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக் குட்டியும் 0 கதையாசிரியர்: தி.ஞானசேகரன் தின/வார இதழ்: வீரகேசரி 1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதிரி தனது பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டி ருக்கிறாள். வியர்வைத் துளிகள் அவளது நெற்றியில் அரும்பி யிருக்கின்றன. பின் வளவைக் கூட்டித் துப்புரவாக்கிக்கொண்டிருந்த அவளிடம், அழுது அடம்பிடித்து வெற்றியடைந்துவிட்ட களிப்பில் அந்தச் சிறுவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். பால் கொடுப்பதிலே ஏதோ சுகத்தைக் காண்பவள்போல கதிரி கண்களை மூடிய வண்ணம் சுவரோடு சாய்ந்திருக்கிறாள். அவளது மடியில் முழங்கால்களை அழுத்தி, தலையை நிமிர்த்தி, தன் பிஞ்சுக் கரங்களால் தாயின் மார்பில் விளையாடிக் கொண்டே அவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். சில வேளைகளில் தனது சிறிய கால்களை நிலத்திலே உதைத்துத் தாயின் மார்பிலே தலையால் முட்டுகிறான். அப்படிச் செய்வது அவனுக்கு ஒரு விளையாட்டோ என்னவோ. கண்ணாடியின் முன்னால் நின்று கண் புருவத்துக்கு மைதீட்டிக் கொண்டிருந்த வசந்தியின் பார்வை, கோடிப்புறத்து யன்னலின் ஊடாகக் கதிரியின் மேல் விழுகிறது. மைதீட்டுவதை நிறுத்திவிட்டு அவள் மெதுவாக யன்னலின் அருகில் வந்து கம்பிகளைப் பிடித்தவண்ணம் கதிரி பால் கொடுப்பதையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள். அவளது பார்வை சிறிதுநேரம் கதிரியின் மார்பிலே மேய்கிறது. கதிரியின் உடலமைப்பைக் கவனித்தபோது வசந்திக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. வளவு கூட்டுவதற்காக மாதத்தில் இரண்டு தடவையாவது கதிரி இங்கு வருவாள். நெல் குத்துதல், மாவு இடித்தல் போன்ற வேறு வேலை களிலிருந்து சொல்லியனுப்பினாலும் அவள் வந்து செய்து கொடுப்பாள். வசந்தி கொழும்பிலிருந்து ஊருக்கு வந்திருந்த வேளைகளில், கதிரி அங்கு வேலைக்கு வரவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படாமல் போய் விட்டன. அதனால் கதிரியை ஐந்தாறு வருடங்களாக வசந்தியால் பார்க்க முடியவில்லை. வசந்தி கல்யாணஞ் செய்து கணவனுடன் கொழும்புக்கு போவதற்கு முன் கதிரியை அடிக்கடி பார்த்திருக்கிறாள். அப்போது இருந்த அவளது இறுக்கமான உடலமைப்பும், அழகும் இன்றும் மாறாமல் அப்படியே இருக்கின்றன. ‘நறுக்’கென்று அந்தச் சிறுவன் கதிரியின் மார்புக்காம்பில் கடித்து விடுகிறான். ‘ஆ’ என்று ஒருவித வேதனையோடு அந்தச் சிறுவனைத் தூக்கி நிமிர்த்திய கதிரி, “ஏன்ரா கள்ளா கடிச்சனி?” என அவனிடம் செல்லமாகக் கடிந்து கொள்ளுகிறாள். அவன் தாயைப் பார்த்துச் சிரிக்கிறான். அவனது கடை வாய்களிலிருந்து பால் வழிகிறது. கதிரி தன் சேலைத் தலைப்பினால் அந்தச் சிறுவனின் வாயைத் துடைத்துவிட்டு, நெஞ்சை மறைத்துக் ‘குறுக்குக் கட்டு’க் கட்டிக்கொள்ளுகிறாள். இப்போது அந்தச் சிறுவன் எழுந்து நிற்கிறான். அவனது உடல் முழுவதும் புழுதி படிந்திருக்கிறது. அவனது மெலிந்த உடலின் நெஞ்சு எலும்புகள் பளிச்சென்று தெரிகின்றன. அவனது தோற்றத்துக்குக் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாமல் வயிறு மட்டும் முட்டிக்கொண்டு பெரிதாக இருக்கிறது. கொழும்பிலிருக்கும் மாதர்சங்கம் ஒன்றிற்கு வசந்தி அடிக்கடி செல்வாள். அந்தச் சங்கத்தில் அங்கத்தவர்களாக இருக்கும் அவளது சிநேகிதிகளில் பலர், குழந்தை பிறந்த ஒரு சில மாதங்களிலேயே பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். பால் கொடுப்பதனால் உடலுறுப்புகளின் இறுக்கமும் கவர்ச்சியும் குறைந்து விடுவதைப்பற்றி அவளுடைய சிநேகிதிகள் அடிக்கடி கதைத்துக்கொள்வார்கள். சிறிது காலத்துக்கு முன்பு மாதர் சங்கத் தலைவி பால் கொடுப்பதை நிறுத்துவதற்கு இலகுவான முறைகள் எவை என்பதைப்பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தாள். இவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வசந்தியின் நினைவில் வந்துகொண்டிருந்தன. வசந்தியின் மனது துருதுருக்கிறது. வளர்ந்துவிட்ட குழந்தை யொன்றுக்குப் பால் கொடுக்கும் கதிரியின் உடல் எவ்வளவு அழகாக இருக்கிறது! வசந்தி கதிரியிருக்கும் இடத்திற்கு வருகிறாள். “பிள்ளை, எப்ப கொழும்பாலை வந்தது?” வசந்தியைக் கண்டதும் ஆச்சரியத்தோடு கேட்கிறாள் கதிரி. “காலைமைதான் வந்தனான்; நான் வந்ததைப் பற்றி அம்மா உன்னட்டைச் சொல்லேல்லையோ?” “இல்லைப் பிள்ளை, நான் வரேக்கை அவ அடுப்படியிலை வேலையாயிருந்தா, அவவையேன் குழப்புவான் எண்டு நான் பின்வளவுக்குக் குப்பை கூட்டப் போட்டன்.” அந்தச் சிறுவன் இப்போது வசந்தியை ஆச்சரியமாகப் பார்க்கிறான். பின்பு பயத்துடன் தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறான். “இவன்தான் பிள்ளை என்ரை கடைசிப் பெடியன், ஆள் வலு சுட்டியன். பிள்ளையை ஒரு நாளும் பார்க்கேல்லையெல்லே; அது தான் பயப்பிடுகிறான். அந்தச் சிறுவனின் தலைமயிர்களைத் தன் விரல்களினால் கோதியபடியே கூறுகிறாள் கதிரி. “உவனுக்கு எத்தனை வயசு?” “ஓ, இவன் பிறந்தது பிள்ளைக்குத் தெரியாது தானே. இந்த முறை எங்கடை அன்னமார் கோயில் வேள்வி வந்தால் இரண்டு முடிஞ்சு போம்.” “இப்பவும் நீ உவனுக்குப் பால் கொடுக்கிறாய். ஏன் நிற்பாட்டேல்லை? நெடுகப் பால் கொடுத்தால் உன்னுடைய உடம்பு பழுதாய்ப் போமெல்லே.” “என்ன பிள்ளை உப்பிடிச் சொல்லுறாய்? உவன் வயித்திலை வாறவரைக்கும் முந்தினவன் மூண்டரை வரியமாய்க் குடிச்சவன். பால் நிற்பாட்ட ஏலாமல் வேப்பெண்ணை பூசித்தான் நிற்பாட்டினனான். என்ரை நடுவிலாளும் அப்பிடித்தான்; இரண்டு வரியமாய்க் குடிச்சவள். பெத்த பிள்ளையளுக்குப் பாலைக் குடுக்காமல் அப்பிடியென்ன எங்கடை உடம்பைக் கட்டிக்காக்க வேணுமே?” கதிரி சொல்லுவது வசந்திக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவள் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு மூன்று வருடங்களுக்குக் குறையாமல் பால் கொடுத்திருக்கிறாள்!. வீட்டினுள்ளேயிருந்து குழந்தையின் அழுகைக் குரல் கேட்கிறது. “பிள்ளைக்கும் போன பொங்கலுக்கையெல்லோ குழந்தை பிறந்தது. கொழும்பிலை ஆசுப்பத்திரியிலை தான் பிறந்ததெண்டு கொம்மா சொன்னவ. இப்ப குழந்தைக்கு ஏழு மாசமிருக்குமே?” “இல்லை ஆறு மாசந்தான்” “எடி வசந்தி, குழந்தை அழுகிறசத்தம் உனக்குக் கேக்கல் லையோ? அதுக்குப் பசிக்குதுபோலை. உங்கை கதிரியோடையிருந்து என்ன கதைச்சுக்கொண்டிருக்கிறாய்?” வசந்தியின் தாய் அன்னம்மா, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் இடத்திற்கு வருகிறாள். “ஏதோ கனாக்கண்டு அழுகுதாக்கும். காலைமை எட்டு மணிக்குத்தானே பால் கொடுத்தனான். இனி பன்னிரண்டு மணிக்குத்தான் கொடுக்கவேணும்.” வசந்தி தான் கூறுகிறாள். “இந்தா குழந்தையைப் பிடி, நீ என்னத்தையாவது செய். நான் போய்க் கதிரிக்குத் தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வாறன்.” வசந்தியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அன்னம்மா திரும்புகிறாள். குழந்தையை இறுக அணைத்து, அதன் தொடைகளைத் தட்டி அழுகையைக் குறைக்க முயலுகிறாள் வசந்தி. குழந்தை வசந்தியின் மார்பிலே முகத்தைப் புதைத்துக்கொண்டு வீரிட்டு அழுகிறது. “அம்மா தொட்டிலுக்கை சூப்பி இருக்கு, அதையும் எடுத்துக் கொண்டு வாங்கோ.” அன்னம்மா கதிரிக்குத் தேநீர் கொண்டு வரும்போது சூப்பியையும் மறக்காமல் எடுத்து வருகிறாள். வசந்தி அதனை வாங்கி குழந்தையின் வாயில் வைத்தபின்புதான் ஒருவாறு அதன் அழுகை ஓய்கிறது. குழந்தை தாயின் முகத்தைப் பார்த்தபடி அந்த றப்பரை ஆவலுடன் உமியத் தொடங்குகிறது. கதிரி எழுந்து கோடிப்புறத்து வேலியிலே செருகியிருந்த தனது சிரட்டையை எடுத்துத் துடைத்து, அதிலே படிந்திருந்த தூசியை நிலத்திலே தட்டி நீக்கி விட்டு அன்னம்மாவிடம் நீட்டுகிறாள். அந்தச் சிரட்டையிலே செம்பு முட்டிவிடக்கூடாதே என்ற கவனத்துடன் அன்னம்மா அதற்குள் தேநீரை வார்க்கிறாள். “பிள்ளை, குழந்தைக்குப் பசிக்குதுபோலை; பாலைக் குடுமன்” வசந்தியைப் பார்த்துக் கதிரி கூறுகிறாள். “அழுகிற நேரமெல்லாம் பால் கொடுக்கப்படாது. பிறகு பால் நிற்பாட்டிறது கரைச்சல். நான் இப்ப பால் கொடுக்கிறதைக் குறைச்சுப் போட்டன்; வாற மாசத்தோடை நிற்பாட்டப்போறன். நேரத்தின்படிதான் பால் கொடுக்கவேணும்.” அதைக் கேட்டபோது கதிரியின் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைக்குப் பசிக்கிறது, அதற்குப் பால் கொடுக்காமல் ஏமாற்றுகிறாள் தாய். கதிரியின் தொண்டைக்குள் ஏதோ அடைப்பதைப் போல இருக்கிறது. தேநீர் உள்ளே இறங்க மறுக்கிறது. “ஏன் கதிரி தேத்தண்ணியைக் குடிக்காமல் வைச்சுக் கொண்டிருக்கிறாய்? சுறுக்காய்க் குடிச்சிட்டுப் போய்க் குப்பையைக் கூட்டன். கையோடை ஒரு கத்தை வைக்கலையும் எடுத்துக்கொண்டு போய் மாட்டுக்குப் போட்டு விடு. காலைமை தொடக்கம் அது கத்திக் கொண்டு நிற்குது.” கதிரியிடம் கூறிவிட்டு அன்னம்மா வீட்டுக்குள் செல்கிறாள். அவளைத் தொடர்ந்து வசந்தியும் குழந்தையுடன் செல்கிறாள். கதிரியால் தேநீரைக் குடிக்க முடியவில்லை; அவள் அதனை வெளியே ஊற்றிவிட்டு சிரட்டையை வேலியில் செருகுகிறாள். பின்பு கோடியில் அடுக்கியிருந்த வைக்கோற் போரில் ஒரு கற்றை வைக்கோலை எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டிலுக்குச் செல்லுகிறாள். அவளைப் பின் தொடர்ந்து அந்தச் சிறுவனும் செல்லுகிறான். கதிரியைப் பார்த்ததும் அந்தப் பசுமாடு உறுமுகிறது. கொட்டிலின் மறுபுறத்தில் கட்டப்பட்டிருந்த அதன்கன்று, பால்குடிப்பதற்காகக் கயிற்றை இழுத்துக் கொண்டு தாய்ப்பசுவின் அருகே வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. தாய்ப்பசு கன்றின் முகத்தைத் தன் நாவினால் நக்குகிறது. இப்போது பசுவின் முலைக் காம்பிலிருந்து பால் சுரந்து சொட்டுச் சொட்டாக நிலத்திலே சிந்துகிறது. கதிரி அதனை உற்றுப் பார்க்கிறாள். அந்தப் பசு நல்ல உயர்சாதிப் பசுவாகத்தான் இருக்க வேண்டும். கதிரி வைக்கோலைத் தொட்டிலுக்குள் போட்டு உதறி விடுகிறாள். பின்பு அதன் கன்றை ஆதரவாகத் தடவிவிட்டு அதற்கும் சிறிது வைக்கோலைப் போடுகிறாள். வெயில் உக்கிரமாக எறிக்கிறது. கதிரிக்குக் களைப்பாகவும் ஆயாசமாகவுமிருக்கிறது. தொடர்ந்தும் வேலைசெய்ய அவளால் முடியவில்லை. அருகிலிருக்கும் வேப்ப மரநிழலின் கீழ் தனது சேலைத் தலைப்பை விரித்து அதிலே சாய்ந்து கொள்ளுகிறாள். அவளது சிறுவன் தூரத்திலே விளையாடிக் கொண்டிருக்கிறான். வசந்தி தன் தோழி ஒருத்தியின் கல்யாணத்திற்குச் செல்வ தற்காகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். வெகுநேரமாகக் கண்ணாடியின் முன்னால் நின்று ஒரு புதிய ‘பாஷன்’ கொண்டையைப் போடுவதில் அவள் முனைந்திருக்கிறாள். அந்தக் கொண்டை அவளது தோற்றத்துக்கு மிகவும் எடுப்பாகவிருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஒரு நாள் அந்தக் கொண்டையோடு அவள் மாதர் சங்கத்துக்கு போயிருந்தபோது, அங்கிருந்த எல்லோரும் ஒருமுகமாக அவளது அழகைப் புகழ்ந்தார்கள். அன்று அந்தக் கொண்டையை அடுத்த வீட்டிலிருக்கும் அவளது தோழிதான் போட்டுவிட்டாள். கொண்டை போட்டு முடிந்துவிட்டது. ஆனாலும் வசந்திக்கு அது திருப்தியை அளிக்கவில்லை. ஒருவாறாகத் தனது அலங்காரத்தை முடித்துக்கொண்டு அவள் புறப்பட்டுவிட்டாள். வெகு நேரமாகத் தூங்கிக்கொண்டிருந்த வசந்தியின் குழந்தை அழத் தொடங்குகிறது. அன்னம்மா ஓடிச்சென்று குழந்தையைத் தூக்குகிறாள். அவளைப் பார்த்ததும் குழந்தை வீரிட்டு அழுகிறது. அதன் அழுகையை நிறுத்த எண்ணிய அன்னம்மா, சூப்பியை எடுத்து அதன் வாயிலே வைக்கிறாள். குழந்தையின் அழுகை சிறிது நேரம் அடங்குகிறது. அதனைத் தன் தோளிற் சாய்த்து, முதுகிலே தட்டி நித்திரையாக்க முயலுகிறாள் அன்னம்மா. குழந்தை மீண்டும் வீரிட்டு அழுகிறது. அன்னம்மா எவ்வளவோ முயற்சி செய்தபோதும் அதன் அழுகையை நிற்பாட்ட முடியவில்லை. குழந்தை மீண்டும் மீண்டும் அழுது கொண்டிருக்கிறது. அதன் வாயிலிருந்த சூப்பி நிலத்திலே விழுகிறது. கண்ணயர்ந்திருந்த கதிரி எழுந்து உட்காருகிறாள். ஏன் அந்தக் குழந்தை வெகுநேரமாக அழுதுகொண்டிருக்கிறது? குழந்தையின் அழுகை கதிரியின் நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. அவளால் பொறுமையாக இருக்க முடியவில்லை. “ஏன் கமக்காறிச்சி குழந்தை அழுகுது? பிள்ளையைக் கூப்பிட்டு பாலைக் குடுக்கச் சொல்லுமன்”அன்னம்மாவிடம் கூறுகிறாள் கதிரி. “இனி ஆறு மணிக்குத்தான் பால் குடுக்கவேணுமெண்டு சொல்லிப்போட்டு அவள் எங்கையோ கலியாணத்துக்குப் போட்டாள். இங்கை குழந்தை கிடந்து பசியிலை துடிக்குது. அப்பவும் நான் சொன்னனான், குழந்தையையும் கொண்டுபோகச்சொல்லி; அவள் கேட்டால் தானே. பால் குடுக்கிற நேரத்துக்கு வருவனெண்டு சொல்லிப் போட்டுப் போட்டாள். இப்ப என்ன செய்யிறது? அழுதழுது இதுகின்ரை தொண்டையும் அடைச்சுப்போச்சு”. அன்னம்மாவின் குரலையும் மீறிக்கொண்டு துடித்துத் துடித்து அழுகிறது குழந்தை. அன்னம்மா விளையாட்டுப் பொருட்களைக் காட்டிக் குழந் தையின் அழுகையை அடக்க முயற்சிக்கிறாள். ஆனாலும் அதன் அழுகை அடங்கவில்லை. அன்னம்மாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வெகு நேரமாக அழுது களைத்துப்போன அந்தக் குழந்தைக்கு இப்போது அழுவதற்கே சக்தியிருக்கவில்லை. அது இப்போது முனகிக் கொண்டிருக்கிறது. அன்னம்மாவின் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கொட்டிலில் கட்டியிருந்த பசுமாடு ‘அம்மா அம்மா’ என்று குரல் கொடுக்கிறது. பால் கறக்கும் நேரம் வந்துவிட்டால் அது கத்தத் தொடங்கி விடும். மாட்டுடன் சேர்ந்து இடையிடையே கன்றும் குரல் கொடுக்கிறது. இப்போது முனகுவதற்குக் கூடச் சத்தியில்லாமல் குழந்தை அன்னம்மாவைப் பரிதாபமாகப் பார்க்கிறது. “கமக்காறிச்சி, குழந்தை இனித் தாங்கமாட்டுது; பசுப் பாலையாவது குடுமன்.” கதிரி அன்னம்மாவிடம் கூறுகிறாள். “குழந்தையைக் கொஞ்சம் பார்த்துக்கொள் கதிரி, நான் ஓடிப்போய்ப் பாலைக் கறந்து கொண்டுவாறன். ” முற்றத்து விறாந்தையிலுள்ள திண்ணையில் பாயொன்றை விரித்துக் குழந்தையை அதிலே கிடத்திவிட்டு, செம்பை எடுத்துக் கொண்டு மாட்டுக்கொட்டில் பக்கம் போகிறாள் அன்னம்மா. குழந்தை மீண்டும் அழத் தொடங்குகிறது. அது தன் பிஞ்சுக் கால்களால் நிலத்தில் உதைத்து, உடலை நெளித்துத் துடிக்கிறது. கதிரி ஒரு கணம் கண்களை மூடிக்கொள்ளுகிறாள். அவளால் குழந்தைபடும் வேதனையைப் பார்க்க முடியவில்லை. துடித்துப் புரண்டுகொண்டிருந்த குழந்தை திண்ணையின் ஓரத்திற்கு வந்து விடுகிறது. ஐயோ! குழந்தை விழப்போகிறதே ! கதிரி ஓடிச்சென்று, திண்ணையின் நடுவிலே குழந்தையைக் கிடத்துவதற்காகத் தன் இரு கைகளாலும் அதைத் தூக்குகிறாள். “அம்….. மா” குழந்தை அவளது முகத்தைப் பார்த்து வெம்புகிறது. குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி நிலத்திலே உட்கார்ந்து விடுகிறாள் கதிரி. குழந்தை அவளது நெஞ்சிலே முகத்தைப் புதைத்துக் கொண்டு முனகுகிறது. தன் பிஞ்சுக் கரங்களால் அவளது நெஞ்சை விறாண்டுகிறது. நெஞ்சை மறைத்துக் குறுக்குக்கட்டுக் கட்டியிருந்த அவளது சேலை அவிழ்ந்து விடுகிறது. “அ….. ம்மா, அம்… மா ” கதிரி தன்னை மறக்கிறாள். கதிரியின் மார்புக் காம்புகள் நனைந்துவிடுகின்றன. மறுகணம் அந்தக் குழந்தை அவளது மார்பில் கைகளால் அளைந்தபடி வாயை வைத்து உமியத் தொடங்குகிறது. “ஐயோ கதிரி, மாடெல்லோ கயித்தை அறுத்துக் கொண்டு கண்டுக்குப் பாலைக் குடுத்துப் போட்டுது”. மாட்டுக் கொட்டிலில் இருந்தபடியே அன்னம்மா பலமாகக் கூறுகிறாள். அவள் கூறுவதைக் கேட்கக்கூடிய நிலையில், அப்போது கதிரி இருக்கவில்லை. கல்யாண வீட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வசந்தி, இப்போது தனது ‘ஹான்பாக்’கைத் திறந்து அதற்குள்ளிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்து, கலைந்திருந்த தனது அலங்காரத்தைச் சரிசெய்து கொள்ளுகிறாள். – வீரகேசரி 1973 – கால தரிசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஏப்ரல் 1973, கணேச சனசமூக நிலையம், புன்னாலைக்கட்டுவன். https://www.sirukathaigal.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9/
  31. இரண்டும் நாம்பன். கொடுப்பது என்றால் ஒரு வண்டிலும். சேர்த்து கொடுப்பது நல்லது 🤣 இல்லாவிட்டால் ஒன்று நாம்பனும். ஒரு பசுவும். கொடுத்தால் சந்ததி வளரும் பசுவுக்கு நாகு என்று சொல்வது உண்டா??? இன்றைய நிலையில் பெரும்பாலும் காதல் திருமணம் பொருத்தம் பார்க்கும் சந்தர்ப்பங்கள். குறைவு,.....ஆனால் உடலுறவு பற்றிய அறிவு இருபாலருக்குமுண்டு அந்த காலத்தில் இந்த அறிவு இல்லை
  32. ரணில் விக்ரமசிங்க ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.
  33. ஓம். எனக்கும் இந்த அனுபவம் உண்டு. இரண்டு முறை போய் பார்த்துள்ளேன். சேவல், முயல், நாம்பன் மாடுகள், கிடாய் ஆடுகள் போன்றவை மிக குறைவான நேரமே உடலுறவு கொள்பவை என நினைக்கின்றேன். நாயும், மனிதனும்தான்…. உடலுறவுக்கு அதிக நேரம் எடுத்து, அனுபவித்து செய்கிறார்கள் போலுள்ளது. 😂 உங்கள் பதிவில்….நம்பன் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். நாம்பன் என்றே கந்தர்மடத்தில் சொல்வார்கள். நம்பனா, நாம்பானா… என்று விசயம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும். 😁
  34. மனம் தளராமல்…. இரண்டாம் முறை பெரும் வெற்றி பெற, விசேட வைராக்கியம் வேண்டும். அதனை சிறப்பாகவே செய்துள்ளீர்கள். 👍🏽
  35. முடிவுகள் எல்லாம் நன்றாகத்தான் உள்ளன!
  36. உண்மையஜலே இன்றைய போட்டி இரண்டு அணிகளும் நன்றாக விளையாடினர் சின்னப்பையன் எந்தவித பயமுமில்லாம் சரமாரியாக வாணவேடிக்கை காட்டினான். தோனிபோல் கிழடுகள் எல்லாம் விளைளயாடிக் கொண்டீந்தால் எத்தனையோ இளம் வீரர்கள் வெளிச்சத்திற்கு வராமலே போய் விடுவார்கள். https://www.iplt20.com/video/61991/ipl-2025-m47-rr-vs-gt---match-highlights?tagNames=2025?utm_source=video&utm_medium=onebox&utm_campaign=ipl2025
  37. விளையாட்டு இரசிகனின் வார்த்தைகள். எனக்கு இரட்டிப்புச் சந்தோசம்.
  38. நான் முதல் தடவை தோற்றிய போது, நாலு பாடங்களும் F எடுத்த ஆளாக்கும்.😄 இரண்டாம் தடவை 2 A யும் 2 C யும்.
  39. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 47வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சுப்மன் கில்லும், ஜொஸ் பட்லரும் வேகமாக அடித்தாடி எடுத்த அரைச் சதங்களுடனும் பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி 11 சிக்ஸர்கள், 7 நாலுகள் என 35 பந்துகளில் புயல்வேகத்தில் அடித்த கன்னிச் சதத்துடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் வேகமாக அடித்தாடி ஆட்டமிழக்காமல் எடுத்த 70 ஓட்டங்களுடனும் சவாலான வெற்றி இலக்கை இலகுவாக 15.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 212 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. சூர்யவன்ஷி இரண்டாவது வேகமான ஐபிஎல் சதத்தை எடுத்து சாதனை புரிந்துள்ளார். கிறிஸ் கெயில் 30 பந்துகளில் அடித்த வேகமான சதம் இன்னமும் முறியடிக்கப்படாமல் உள்ளது. முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  40. freehit.eu சாய் சுதர்ஷன் இன்றைக்கு கனக்க பந்துகளை தின்றுவிட்டார்!!
  41. நம்ம சிம்ரன தொடக்க ஆட்டக்காரரா அனுப்பி விடலாம். ஒருக்கா விட்டு அடிச்சுப் பாரக்கலாம். இன்றைக்கு அடிச்சாகனும். நம்மளுக்காக.
  42. https://mob.touchcric.com/ https://crichd.tv/sky-sports-cricket-live-stream-me-1 கைபேசியைவிட்டு கணனியில் பார்க்கவும். தம்பி நான் யன்னலால ஏற்கனவே துண்டைப் போட்டுவிட்டேன்.
  43. எனது ராஜசபையிலே ஒரே சங்கீதம் ........ ! 😍
  44. இந்தியனாவது சண்டை பிடிக்கிறதாவது. சும்மா குறுக்கும் மறுக்கும் போர் விமானங்களை ஓட்டி விட்டு சண்டை முடிந்ததாக அறிவிக்கப்படும்.😆 துருக்கியில் இருந்து ஆயுதங்கள் பாகிஸ்தானில் வந்து இறங்கி உள்ளதாம்.
  45. நீங்கள் யாழ்ப்பாணத்தானை பனங்கொட்டை தமிழன் எண்டு நக்கலடிக்கலாம்.ஆனால் நாங்கள் எங்கட உப்பை ஆனையிறவு உப்பெண்டு சொல்லக்கூடாதாக்கும் 🧐
  46. இவர் மட்டுமல்ல உலகம் முழுக்க இருந்து கர்தினால்மாரை எடுப்பார்கள் கிடட தடட 142 பேர் அதில் தான்( ஒட்டு போட்டு )தெரிவு செய்யப்படுவார். முன்பு அதிகம் ஐரோப்பா காரர் தான் தெரிவுசெய்யப்படுவார்கள் கடைசியாக லத்தீன் அமெரிக்கரை எடுத்தார்கள். அடுத்தவர் யாரோ ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.