Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    39336
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88812
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19667
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8975
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/06/25 in Posts

  1. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 56வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறியபோதும் வில் ஜாக்ஸின் அரைச் சதத்துடனும், சூர்யகுமார் யாதவின் 35 ஓட்டங்களுடனும் 10.4 ஓவர்களில் 97 ஓட்டங்களுடன் நல்ல நிலையில் இருந்தது. எனினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களில் சுப்மன் கில்லின் நிதானமான 43 ஓட்டங்களுடனுன், ஜொஸ் பட்லரின் 30 ஓட்டங்களுடனும், புயல்வேகத்தில் அடித்தாடிய ஷேர்ஃபேன் ரதஃபோட்டின் 28 ஓட்டங்களுடனும் வெற்றி இலக்கை நோக்கி விரைவில் முன்னேற மழைவந்து குழப்பியது. திரும்பவும் ஆட்டம் ஆரம்பித்தபோது விக்கெட்டுகள் சரிய போட்டி விறுவிறுப்பானது. இன்னுமோர் மழைத் தடைக்குப் பின்னர் இறுதி 19வது ஓவரில் 15 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் தீபக் சாகர் இறுக்கமாகப் பந்துபோடததால் கடைசிப் பந்தில் ரண் அவுட் சந்தர்ப்பத்தை நழுவவிட்டதால் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை எடுத்து DLS முறையில் வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி DLS முறையில் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: மீளவும் @Ahasthiyan எல்லோரையும் தாங்கிப் பிடிக்க கீழே நகர்ந்துள்ளார்!
  2. நந்தனுக்கு வாழ்த்து சொல்பவ்கள் எனக்கும் வாழ்த்து சொல்ல வேணும்.அது தானே மரபு.😂
  3. மகிழ்ச்சி ராமலிங்கம் சந்திரசேகரும் இளங்குமரனும் கஷ்டபட்டு பாட்டு எழுதி மியூசிக் போட்டு முகநூலில் பதிவேற்றிய முயற்ச்சிகள் எல்லாம் வீணாகிவிட்டதே 😂
  4. இது தனிப்பட்ட ஒருவரின் கருத்து. 2009 இற்குப் பின்னர் புலிகள் மீது ஏற்பட்ட வெறுப்பினால் உமிழப்படுவது. ஆகவே இதனை சரியா தவறா என்று அமிலப் பரிசோதனை செய்து உங்களின் நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை. தமிழர் நலனில் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக அக்கறை கொண்டவர்கள் எமதினதில் முன்னரும் இருக்கவில்லை, இனிமேலும் இருக்கப்போவதில்லை.
  5. தவறான முடிவினால் எடுக்கப்பட்ட உயிர். இதனைச் செய்திருக்கத் தேவையில்லை. அமெரிக்கச் சார்பு நீலன் அமெரிக்க நலன்களை முன்னிறுத்தியே தீர்வினை வரைய உதவியிருக்கலாம், இதுகூட அனுமானம் தான். இவரைக் கொன்றதால் எமக்கு சர்வதேசத்தில் ஏற்பட்ட அவப்பெயரும், பாதிப்பும் மிகக் கடுமையானது. கதிர்காமர் கொல்லப்பட்டதைக் காட்டிலும் நீலனின் கொலை பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சிலவேளைகளில் கதிர்காமை சந்திரிக்காவிற்கு அறிமுகம் செய்துவைத்தவர் நீலன் என்பதாலேயே இவரை புலிகள் குறிவைத்தார்களோ என்றும் நினைப்பதுண்டு. எதுவாகவிருந்தாலும் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய கொலை. ஒரு விவாதத்திற்கு இவரைக் கொன்றதாலேயே அமெரிக்கா புலிகளை அழித்தது அல்லது அழிக்கத் துணை நின்றது என்று எடுத்துக்கொண்டாலும், அமெரிக்கா எப்போதுமே தர்மத்தின்பால் நின்றிருக்கிறதா என்கிற கேள்வியும் வருகிறதே? 1980 களின் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா சிங்கள ஆக்கிரமிப்பிற்குத் துணையாகவே நின்றிருக்கிறது. புலிகளை அழிப்பதே இலங்கையுடனான தனது வெளியுறவுக் கொள்கை என்றளவிற்குச் செயற்பட்டு வந்திருக்கிறது. ஆகவே அமெரிக்கா, நீலனின் இறப்பின் பின்னர்தான் புலிகளை அழிக்க எண்ணியது என்று நான் நினைக்கவில்லை. தமிழர் போராட்டத்தை எவர் முன்னெடுத்திருப்பினும் அதனை அமெரிக்கா எதிர்த்தே இருக்கும். நீலனின் கொலை இதில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் என்று நான் கருதவில்லை.
  6. பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை.. இலங்கையிலிருந்து 1990களிலிருந்து தான் தமிழர்கள் அதிகளவாக புலம்பெயர ஆரம்பித்தார்கள் ஐரோப்பா,கனடாவை நோக்கி.. நான் ஐரோப்பா வந்தது 2002ல், வெற்றிகரமாக 23 ஆண்டுகள் ஐரோப்பாவில் பல நாடுகளில் காலம் தள்ளியாச்சு.. சரி நான் சொல்ல வந்த விசயம்.. புலம் பெயர்ந்து வந்த முதலாவது தலைமுறையில் 50-60% வீதமானவர்கள் இப்போது ஓய்வூதியம் பெறும் வயதில் இருக்கிறார்கள்.. இவர்களைப் பற்றிய ஒரு சில தகவல்கள்.. 🔗புதிதாக வந்த நாட்டில் மொழி தெரியாமல், கல்வி தகமை அதிகம் தேவையில்லாத தொழில்கள் (துப்பரவு,உணவகம்) மூலம் தங்கள் வாழ்க்கையை தொடங்கியவர்கள். முதலாவது தலமுறையில் இங்கு முதல் வந்தவர்கள் 90% ஆண்கள் தான். (ஒவ்வொரு நாடுகளிலும் குறிப்பிட்ட சிலரே மொழி படித்து, மேற்கொண்டு படித்து வேறு வேலைகளுக்குள் சென்றவர்கள்) மேலும் சிலர் ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு சொந்த தொழில் தொடங்கி அதில் ஈடுபட்டார்கள். ஆனால் இன்றும் பலர் ஆரம்பத்தில் என்ன வேலையில் இருந்தார்களோ இன்று வரை அதே தொழிலில் தான் இருக்கிறார்கள். 🔗பல பேர் வந்து அகதி அந்தஸ்து கிடைத்தபின் மனைவிமாரை இலங்கையிலிருந்து கூப்பிட்டார்கள். 🔗பல பேர் சகோதரர்களை, ஒரு சிலர் மனைவிமாரை பல லட்சங்கள் கட்டி இலங்கையிலிருந்து கூப்பிட்டார்கள். 🔗பின் மனைவிமாரின் சகோதரங்களையும் கூப்பிட உதவி செய்தார்கள். 🔗வெளிநாடு வராத நாட்டிலிருக்கும் பெற்றோர்,சகோதரங்கள், சகோதரங்களின் பிள்ளைகள் என எல்லோருக்கும் உதவி செய்தார்கள். இப்படி தனது இளமைக்காலம் முழுவதும் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர்கள் தான் இந்த பெரும்பாலான முதலாம் தலைமுறையினர்.. இவர்களில் பெரும்பாலானோரை இன்றுவரை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவர்களின் உறவுகள் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரி இலங்கையிலிருக்கும் உறவுகள் தான் இவர்களை பயன் படுத்துகிறார்கள் என்றால், இங்கு பிறந்து, நன்றாக கல்வி கற்று, பெற்றோரை விட நல்ல வேலையில், நல்ல சம்பளத்தில் இருக்கும் சொந்த பிள்ளைகளும் இதை தான் செய்கிறார்கள்.. 🔗 இங்கு பிறந்தவர்கள் தங்களது முதல் வீடு வாங்குவதற்க்கு வங்கிக்கு கட்ட வேண்டிய 10-15% வீத முன் பணத்தை பெற்றோரிடம் தான் எதிர் பார்க்கிறார்கள்.(பெற்றோர் எந்த உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த முயற்சியில் தான் வீடு வாங்கியிருப்பார்கள்) 🔗தங்களின் ஆடம்பர கல்யாணத்திற்க்கும் பெற்றோர்களை தான் எதிர்பார்க்கிறார்கள்.. 🔗அவர்களை வளர்துவிட்டது காணது என்று அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் இவர்கள் தான் கவனித்துக்கொள்கிறார்கள்.. இப்படி சொல்வதற்க்கு ஏராளம் இருக்கின்றது.. ஒரு சில பிள்ளைகள் இதற்கு விதிவிலக்காகவும் இருக்கிறார்கள்.. இப்ப சொல்லுங்கள் இந்த முதலாம் தலைமுறையினர் பாவப்பட்டவர்கள் தானே??😔 https://www.facebook.com/share/p/18ohX1u8m1/?mibextid=wwXIfr
  7. நீலமானின் மாயப்பொதிகள் நீலனும் ஜி.எல்.பீரிஸும் 1995ம் ஆண்டு கொண்டுவந்த தீர்வுப் பொதியானது (அரசமைப்பு திருத்த வரைபுகள்) பல்வேறு மாறுதல்கள், சுரண்டல்களுக்கு உட்பட்டு சந்திரிக்கா மாமியின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் நான்கு விருத்துக்களான (Version) தீர்வுப்பொதிகளாக (1995, 1996, 1997, 2000 முறையே), பல்வேறு காலகட்ட சிங்களப் படைத்துறையின் சமர்க்கள முன்னேற்றங்களுக்கு ஏற்ப, கொண்டுவரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அஃது முதன் முதலில் ஓகஸ்ட் 3 1995 அன்று சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவால் முன்மொழியப்பட்டது. (முன்மொழிவு) எவ்வாறெயினும் இது தனது மெய்யான முன்மொழியப்பட்ட மிளிர்வில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. பல சுரண்டல்களுக்கு உட்பட்டு அதனது தொடக்கப் பொலிவான தீர்வுகளை எல்லாம் இழந்துதான் முழுமையடையாத வரைவுச் சட்டம் 1996 ஜனவரி 16 அன்று சிங்கள நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்காக வெளியிடப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்திற்கு போன போது, மார்ச் 1997ம் ஆண்டு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் வடிகட்டல்களின் இறுதி அறிக்கை நிலுவையில் இருந்த நிலையில், சிறிலங்கா அதன் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு வரைவை வெளியிட்டது. பின்னர் ஒக்டோபர் 1997 அன்று முழுமையடைந்த வரைபு வெளியானது. 7 ஓகஸ்ட் 2000ம் ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இறுதித் தீர்வுப் பொதியானது (நீலன் சாக்கொல்லப்பட்ட பின்னர் வந்தது) அரைகுறையான ஒன்றாகும். அதையும் கூட சிங்களம் நிறைவேற்றவில்லை. மட்டுமின்றி சந்திரிக்காவின் முதன்மை அமைச்சரான ரட்ணசிறி விக்கிரமநாயக்க இதிலுள்ள ஒவ்வொரு வரியையும் மகாநாயக்க தேரர்களின் கருத்திற்குட்படுத்தியே செய்வோம் என்றார், 13 ஓகஸ்ட் 2000ம் ஆண்டு அன்று. இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் "சமச்சீரான சமஸ்டி" என்ற நன்மை பயக்கக்கூடிய இதனது மூல வடிவம் என்றுமே தமிழரின் நிகராளிகளாக இருந்த விடுதலைப்புலிகளிடம் அலுவல்சாராக கையளிக்கப்படவில்லை. வெறும் நாளேட்டு செய்திகளாகவும் வாய்மொழி அறிவிப்புகளாகவுமே வெளியாகின. அவற்றையும் புலிகளும் தம் போக்கிற்கு அலுவல்சார் ஊடக வெளியீடுகள் மூலம் மறுதலித்தனர். ஆயினும் போர் நிறுத்தத்தை சிங்கள அரசு செய்தால் தொடர் பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்பதை அப்போதே தெரிவித்துவிட்டனர். புலிகளால் ஏன் நிராகரிக்கப்பட்டதெனில்; குறிப்பாக இப்பொதிகளின் வரிசையில் முதல் பொதியின் அறிவிப்பு அலுவல்சாராக (official) வெளியாக முன்னரே சந்திரிக்கா மாமியை அப்போதைய சிங்கள அஸ்கிரிய பீடாதிபதி சிறி சந்தானந்த மகாநாயக்க தேரர் சந்தித்தார். அவர் இப்பொதியின் அலுவல்சார் அறிவிப்பினை வெளியிட முன்னர் விடுதலைப்புலிகளை தோற்கடித்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு சந்திரிக்கா மாமியும் புலிகளை படைய நடவடிக்கை மூலம் "மண்டியிட" செய்த பின்னரே இத்தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்! இது புலிகளுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் இதனை "படைய வடிவமைப்புகளை மறைக்க ஒரு அரசியல் முகமூடி" என்று 14 ஓகஸ்ட் 1995இல் அழைத்தனர். (இத்தகவல் அவர்களின் ஊடக வெளியீட்டில் உள்ளது). (1997 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எந்தவொரு முன்மொழிவும் அரசாங்கம், பிரதான சிங்கள எதிர்க்கட்சி மற்றும் புலிகள் ஆகிய மூன்று முக்கிய கன்னைகளின் அங்கீகாரத்துடனேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பீரிஸ் தெரிவித்தார். எனினும் சில மாதங்களுக்குப் பிறகு புலிகள் சட்டத்திற்குப் புறம்பான மற்றும் பயங்கரவாத அமைப்பாக சாற்றாணைப் படுத்தப்பட்டதால் அதனுடன் எந்தவிதமான நடவடிக்கைகளும் குற்றமென வரையறைப்படுத்தப்பட்டு விட்டதாலும் இந்தப் பொதியை நடைமுறைப்படுத்துவது சிக்கலாகியது.) முன்மொழிவை புலிகளின் மதியுரைஞரான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தொடக்க கட்டத்தில், 1995 ஓகஸ்ட் 11, மறுத்தாலும் போர்நிறுத்த மற்றும் அமைதி உடன்படிக்கை ஒன்றிற்கு ஓமென்றிருந்தார். பின்னாளில் ,மார்ச் 13, 2003 ஆம் ஆண்டு,வணிகக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது தொடர்பில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் வழங்குகையில் இவ்வரைபின் "தொடக்க வடிவம்" ஏற்கக்கூடியது என்றார் (உதயன் 13/03/2003 பக் - I). அப்போது கூறியதாவது: உந்த மூலப் பொதி நாடாளுமன்றத்தில் அதன் மிளிர்வான வடிவத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டிருப்பின் எப்படியும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அதன் தமிழருக்கு நன்மை பயக்கக்கூடிய கூறுகளை நீக்கியிருக்கும் (1997ம் ஆண்டு செய்தது போன்றே). அதையும் தாண்டினால் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளை பெற்றால்தான் மக்களிடம் இதனைக் கொண்டுசெல்ல வேண்டும். சிங்கள மக்களிடம் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது செல்லுபடியாகும். இதெல்லாம் காற்றில் கோட்டை கட்டும் விடையங்களாகும். மேலும், இதில் தனி இனக்குழுவான முஸ்லிம்களின் தனியான வகிபாகம் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. தமிழரோடு ஒன்றிணைந்த தீர்வொன்றிற்கு முஸ்லிம்கள் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் (ஜெனிவா பேச்சுவார்த்தையினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்). தமக்கான தனி அலகு ஒன்றை எப்படியும் கேட்டிருப்பார்கள். அந்த விடயம் தொடர்பில் இத்தீர்வில் எதுவும் குறிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், எந்த நீலனின் செல்வாக்கால் அரசமைப்பு திருத்த வரைபு கொண்டுவரப்பட்டதோ அதே நீலன் உயிருடன் இருக்கையில் அவர் கண்முன்னே தான் சில மாதங்களிலேயே அந்த அரசமைப்பு திருத்த வரைபு நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. பின்னர் அவர் கைலாயம் கண்டவுடன் அது குப்பையில் தூக்கியெறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உண்மையிலேயே தமிழருக்கு நன்மை செய்ய விரும்பியிருப்பின் தான் வரைந்ததை முற்றாக நிறைவேற்ற பாடாவது பட்டிருக்க வேண்டும். மாறாக அதை வைத்து சிங்களவர் ஏலுமான வழிகளில் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிட மறைமுக ஆதரவு நல்கினார். அடுத்து, இதை வைத்து ஜி.எல். பீரிஸ் மற்றும் கதிர்காமர் ஆடிய திரு விளையாடல்கள் பற்றிப் பார்ப்போம்: இந்தத் தீர்வுப் பொதியின் மிளிர்வான வடிவம் 1995ம் ஆண்டு வெளியானதும் கதிர்காமர் நாடு நாடாக சென்று தவறுத்தகவல் (disinformation) பரப்புரையில் ஈடுபட்டார். வெளிநாடுகளில் இருந்த தவிபு இன் வெளிநாட்டுக்கிளை அலுவலகங்களை மூட வைக்குமாறு அந்நாடுகளிடம் கோரிக்கை விடுத்தார்: புலிகளை தடை செய்யவும் கோரிக்கை விடுத்தார். தானொரு தமிழர் என்றும் சிங்கள அரசாங்கம் தமிழரிற்கான தீர்வினைக் கொண்டுவரப் போவதாகவும் எனவே இனிமேல் புலிகள் தேவையில்லை என்றும் பரப்புரை செய்தார். தமக்கு அமைதிக்கான முறைமை ஒன்றைக் கொண்டுவர போர் வேண்டுமென்றும் புலிகளுடனான நெடுங்கால போரிற்கு தேவையான போர்த்தளவாடங்களை வழங்குமாறும் கோரிக்கைகளை விடுத்தார். அதே நேரம் சிங்கள ஊடகங்களும் போர் முழக்கமிட்டுக்கொண்டிருந்தன. இவ்வாறு கதிர்காமர் ஆயுத திரட்டலிற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க இங்கால் பீரிஸோ (இதை தயாரித்தவர்களில் ஒருவர்) இந்த தீர்வுப் பொதியை பின்னடிக்க வைக்கும் தந்திரங்களை முன்னெடுத்தார். இப்பொதிக்கு ஒற்றையாட்சி சிறிலங்காவிற்குள் சிறுபான்மையினரின் கட்சிகள் அரசிற்கு ஆதரவு கொடுக்க பீரிஸோ அதை ஏலுமானவரை பிற்போடச்செய்ய எத்தனித்தார். குறிப்பாக 1999ம் ஆண்டில் இவர் எதிர்க்கட்சியான ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, பொதி முதலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் மிளிர்விழந்துவிட்ட தீர்வுப் பொதி வெளிவருவதற்கான கால அமையத்தை இவர் மேலும் நீடிக்கச் செய்தார். இவ்வாறாக தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க கொண்டுவரப்பட்ட இம்மாயப் பொதியை தோற்றுவித்த "கோழைத்தனமன வன்முறையாளரான" 😉 (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999, எஸ்.கே. ரத்தினம்) நீலன் திருச்செல்வம் என்பவர் இறுதிவரை எந்தவொரு நன்மையையும் தமிழருக்கு பெற்றுத்தவில்லை. மாறாக பொதி மூலம் சிங்களப் படைத்துறைக்கு போர்த்தளபாடங்கள் பெற்றுக்கொடுத்தலையும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தாக்காட்டுதல் மூலம் சிங்களப் படைதுறைக்கு போதிய கால அமையம் வழங்கல் என்ற அரசியலையுமே தனது காலத்தில் செய்தார். மேலும் நேரடியில்லாமல் புலிகளின் படிமத்திற்கு உலக அரங்கில் சேறு பூசுவதில் பங்காற்றினார். நிறைவேறும் அச்சட்டத்தை புலிகள் ஏற்காமல் மறுக்க வெளிக்கிடும் போது அரசாங்கம் ஏற்கனவே மேலை நாடுகளில் செய்து கொண்டிருந்த இத்தீர்வு தொடர்பான பரப்புரையால் (இத்தீர்வு வெற்றுக் காகிதம் ஆகிய பின்னரும் மூல வரைபை காட்டியே கதிர்காமர் பரப்புரை மேற்கொண்டார்) ஆட்கொள்ளப்படும் நாடுகள் புலிகளுக்கு தடைவிதித்தும் சிங்கள அரசிற்கு போர்த்தளவாட உதவிகளை செய்தும் (அதைத்தான் கதிர்காமர் நாடு நாடாக சென்று கேட்டார்) புலிகளை அழிக்க துணை நிற்கும். அதாவது அரசு கொடுக்கும் "விடியல் தீர்வை" கிளர்ச்சியாளர்கள் ஏற்க மறுக்கின்றனர் என்ற பரப்புரையை உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளும் வழியை உண்டாக்கிக்கொண்டிருந்தார்! புலிகள் படைய வகையில் வலுவாக எழும்பிவிட்டிருந்த போது இத்தீர்வு முற்றாகவே நீர்த்து போயிருந்தது. உப்பச்சப்பில்லாத பயனற்ற ஒன்றைத்தான் எமக்கு தீர்வெனத் தர சிங்களவர் முன்வந்தனர். எனவே தான் அது நிறைவேறும் முன்னர் நீர்த்துப்போன இம்மாயத் தீர்விற்கு காரண கர்த்தாவாக தொடர்ந்தும் உழைத்துக்கொண்டிருந்த நீலனை புலிகள் அகற்றினர். இவர் சிங்களவர் வெற்றுச் சட்டம் ஆக்கிய பின்னராவது அதிலிருந்து பின்வாங்கி மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்தி எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. மாறாக அவ்வெற்றுச் சட்டத்திற்கு சாகும்வரை ஆதரவு கொடுத்து விடுதலைப் போரை நீர்த்துப் போகச்செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தார். அதனால் தான் இவர் செத்தவுடன் தமிழர் தரப்பு கண்டுகொள்ளாததும், சிங்களவர் நீலிக்கண்ணீர் வடித்ததும் குறிப்பிடத்தக்கது. வாழ்ந்த வரை சிங்கள அரச அதிபரை காப்பாற்றும் வேலையையே செய்து வந்தார். இவரது "செல்வாக்கான" என்ற காலத்திலேயே, 1996, யாழில் 812 தமிழர்கள் காணாமல் போயும் தீவெங்கும் பல்லாயிரம் தமிழர் கொத்துக்கொத்தாக செத்தொழிந்த போதும் வாயே திறக்காத இந்த நீலமானின் சாவால் தமிழராகிய நாங்கள் ஒன்றையும் இழந்துவிடவில்லை. அதற்கு இவரது இழவு வீட்டிற்கும் தமிழர் பெருமெடுப்பில் செல்லவில்லை என்பதுவே சிறந்த சான்று. மேலும், இவரது சாவிற்கு கூறப்படும் இன்னுமொரு காரணம்; இவர் அமெரிக்கவிற்கு ஏதோ ஒரு தேவைக்காக பயணப் பட காத்திருந்தாராம், 1999 ஓகஸ்ட்/ செப். அது பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றுகைக்கானது என்று கூறப்படுகிறது, அதே நேரம் இவர் நேரில் சென்று புலிகளுக்கு எதிரான செய்ய வேண்டிய பரப்புரையே அப்பயணத்தின் மெய்யான நோக்கம் என்றும் மறுத்துக் கூறப்படுகிறது. மொத்தத்தில் திரு. லக்ஸ்மன் குணசேகர என்ற சிங்களவர் கூறியது போன்று "தமிழரின் கண்களில் நீலன் சிங்களவருடன் சேர்ந்த ஒரு 'உடனுழைப்பாளர்' " (Collaborator) ஆவார் (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999) . அவர்களிடமிருந்து நல்லவன் என்ற பெயரை மட்டும் உழைத்துக்கொண்டார். உலகெங்கிலும் உடனுழைப்பாளர்கள் அவரது சொந்த இனத்தாலேயேதான் கைலாயம் அனுப்பப்பட்டனர் என்பது வரலாறு! பாவிக்கப்பட்ட முதன்மை உசாத்துணை: https://tamilnation.org/conflictresolution/tamileelam/cbkproposals/ ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  8. உவர் நாய் பூனைகளுக்கெண்டு விக்கிற நெத்தலி கருவாட்டை கத்தரிக்காயோட சேர்த்து சமைச்ச கதைய சொல்ல வாறார்....... உந்த கதைய வளர விடக்கூடாது.
  9. இந்தியா 9 இடங்களை தாக்கியது என்கிறது பிபிசி. விழுந்தது பாக்கின் F16 என்கிறன இந்திய கணக்குகள். ஜம்மு அருகில் விழுந்துள்ளதாம். பிகு இரெண்டு ரபேல், ஒரு F16 விழுந்தாலும் எனக்கு ஓக்கேதான்🤣
  10. Valvetithurai Urban Council ACTC Members 7 41.85% 1558 ITAK Members 5 34.89% 1299 NPP Members 3 18.16% 676 EPDP Members 1 2.42% 90
  11. ஐ ஜாலி…. அப்ப இன்னொரு அபினந்தன் டீவியில் தோன்றி தேத்தணி விளம்பரம் செய்வார் என எதிர்பார்க்கலாம்🤣.
  12. iPl என்றால் என்ன கொக்கா என்று நினைக்கக் கூடாது அவர்கள் நினைப்பது மட்டுமே இங்கே செல்லுபடி ஆகும்: அதற்கேற்றவாறே விதிகளை அமைத்துள்ளார்கள் எல்லாம் ரசிகர்களின் தலைவிதி முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள் அவரைப் பின்தொடரும் அடியார்க்கும் வாழ்த்துக்கள்
  13. என்னது உங்களுக்கு இரண்டு புள்ளியா. அப்பிடிச் சொன்னாப்போல கிருபன் புள்ளி குடுப்பார் என்று நினைச்சீங்களோ. வாங்க நாளைக்கு சென்னையை வெல்ல வைப்பம். அப்பவாவது புள்ளி கிடைக்குதா பார்ப்போம்.
  14. GMT நேரப்படி நாளை புதன் 07 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR எதிர் CSK 10 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் 13 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரப் பையன்26 நிலாமதி பிரபா வாதவூரான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு ரசோதரன் நுணாவிலான் நந்தன் புலவர் அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  15. இச் சிறுமி ராமநாதன் மகளீர் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளை அங்குள்ள கணித ஆசிரியரால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார். அங்குள்ள கணித ஆசிரியர் (பெயர்: சங்கரன்) தன் ஆணுறுப்பை இச் சிறுமிக்கு காட்டியது தொடக்கம் மேலும் பல வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார். இச் சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோருக்கு கூற, அவர்கள் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர். அந்த பெண் அதிபரோ இச் சிறுமிக்கு நிகழ்ந்த அநியாயத்திற்கு குரல் கொடுக்காமல் கணித ஆசிரியரை பாதுகாக்க முனைந்ததுடன், இச் சிறுமியையே குற்றவாளியாக்க முனைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு கல்வி கற்றால், பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அஞ்சிய பெற்றோர், அப் பிள்ளையை கொட்டாஞ்சேனையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கும் இச் சிறுமிக்கு முன்னைய பாடசாலையில் நிகழ்ந்த பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் தொடர்பான தகவல் பரவியதால் மனரீதியாக கடும் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்திருக்கின்றார். இதற்கிடையில் கொட்டாஞ்சேனையில் உள்ள ராஜேஸ்வரி தனியார் ரியூசன் சென்ரரிற்கும் இம் மாணவி ரியூசன் கிளாஸ்களுக்காக சென்று கொண்டு இருந்திருக்கின்றார். இவ் தனியார் ரியூசன் சென்ரரின் அதிபர் / நடாத்துபவரான நாராயணபிள்ளை சிவானந்த ராஜா இவ் மாணவியை கேலி பண்ணியதுடன், இனி இங்கு வரக்கூடாது என திட்டி அனுப்பியுள்ளார். இதனால் மனம் உடைந்த இச் சிறுமி தற்கொலை செய்துள்ளார். இந்த சிறுமியை திட்டி வெளியே அனுப்பிய நாராயணபிள்ளை சிவானந்த ராஜா கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் சார்பாக தேர்தலில் நின்று தோற்றவர். இன்றும் இவர் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மீது கடும் அழுத்தங்களை பிரயோகின்றார் என அறிய முடிகின்றது. தகவல்களை தொகுத்தது: நிழலி
  16. தலைப்பில் ஐரோப்பிய யூனியன், கனடா கொடிகள் இருக்கின்றன. பிரித்தானியாவின் கொடி இல்லை! பிரித்தானியாவில் முன்னேற நிறைய வாய்ப்புக்கள் உள்ளன என்பதால் பலர் தும்படியில் இருந்து வெளியேறிவிட்டனர். ஆனால் இதே நிலை எல்லா நாடுகளிலும் இங்குள்ள வீதத்தில் இல்லை!
  17. நல்லா சொல்லுறியல். நல்லா உருண்டு பிரலலாம் வாங்க. என்ன அங்கின இங்கின அடி விழும் சரியா. ஒரு புள்ளி வரேலை என்டு, நாம படுற பாடு நாய் பாடாக் கிடக்கு. இப்பிடி ஏதேன் மழை கிழை வந்தாத்தான் நிம்மதி. ஒன்டில நாம மேல போகணும் இல்லாட்டி ஒருத்தனுக்கும் இல்லை.
  18. இன்று நடந்த 51வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலாவது பந்தில் கருண் நாயரின் விக்கெட்டைப் பறிகொடுத்து மிக மோசமாக ஆட்டத்தைத் தொடங்கியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 12.1 ஓவர்களில் 62 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தது. எனினும் ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸும் அஷுதோஷ் ஷர்மாவும் தலா 41 ஓட்டங்களுடன் இணைப்பாட்டத்தைக் கொடுத்து, இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலகுவாக வெல்லலாம் என்று நினைத்திருக்க வருணபகவான் எதிர்நிலை எடுத்ததால் மழை பொழிந்து தள்ளி ஆட்டம் கைவிடப்பட்டது. முடிவு: முடிவில்லை! இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவரும் “முடிவில்லை” என்று கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை!
  19. பாவம் ஆரோ ஒருத்தர் தன்ர சுய அனுபவம் = சமூகத்தின் அனுபவம் என நினைத்து எழுத அதை ஜி யும் பகிர்ந்துள்ளார் 🤣. நானறிய யூகேயில் 90-2000 இடையே வந்து அதே வேலையில் எவருமே இல்லை. படித்தவர்கள் அந்த வழியிலும், படியாதவர்கள் முதலாளிகளாயும், குறைந்த பட்சம் சுய சம்பாத்திய தரும் ஊபர் ஓட்டிகளாயாவது ஆகி விட்டார்கள். அதுவும் வீடு - பலர் இருந்த நல்ல கவுன்சில் வீட்டையே அதீத விலை கழிவுடன் வாங்கி விட்டார்கள். இலண்டனில் இப்படி 90 களில் வந்து, இப்போ சராசரி தொழிலில் இருக்கும் பலருக்கு இருக்கும் வீடுகளை, இப்போ படித்து வெளி வரும் ஒரு மருத்துவரால் வாங்க முடியாது. சந்தை விலை அப்படி.
  20. இந்தக் கட்டுரையானது தொடர்ந்தும் நீலன் திருச்செல்வம் என்ற உடனுழைப்பாளரால் கொணரப்பட்டதாகக் கூறப்படும் கொணரப்படாத தீர்வுப் பொதி பற்றி என்றும் கொக்கரித்துக் கொண்டிருக்கும் புலி எதிர்ப்புவாத தமிழர்களிற்கு அறிவூட்டும் வகையில் எழுதப்பட்டது. இவரை புலிகள் "துரோகி/ வஞ்சகன்" என்று அவர்களின் அலுவல்சார் ஊடக வெளியீடுகளிலும் அவர்களின் நேரடி கண்காணிப்பிலிருந்த இதழ்களிலும் அழைத்ததாக எங்கும் தெரியவுமில்லை. என்னால் காணவும் இயலவில்லை! (வெளிநாடுகளிலிருந்து வெளியான தமிழர் ஆதரவு இதழ்களில் இச்சொல் தாராளமாக காணக்கிடைக்கிறது) எங்கினும் இருந்தால் எனக்கும் வாசகர்கள் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
  21. எனக்கும்.... ரண்டு பக்கமும் குத்து வாங்கோனும்... இந்தியன் கொஞ்சம் கூட வாங்கினால் நல்லம்
  22. பயங்கரவாதிகளை முற்றாக அழிக்க வேண்டும் இந்தியா ,இஸ்ரேல் அமெரிக்கா,ரஸ்யா கூட்டு வெற்றியடைய வாழ்த்துக்கள்
  23. இன்று எல்லாமே ஒரே திரில்லரா தான் இருக்கு. IPL முடிய சாம்பியன் லீக் உதைபந்தாட்டத்திற்கு போனால் அங்கே இன்டெர் மிலான் 4 - பாசிலோனா 3 . ( Aggregate 7 - 6). இந்த வருடத்தில் மிகச்சிறந்த போட்டி!
  24. சந்தோசம் ... எமது வெற்றியை நாளைய ...பாட்டை போடுவோமா? கடுப்பில நல்ல திட்டு கிடைக்கும்....🤣
  25. முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
  26. Thunukkai Pradeshiya Sabha Polling District - Mullaitivu Local Authority Final Result ITAK 1,594 29.31% Members 4 ACTC 1,082 19.9% Members 3 DTNA 804 14.78% Members 2 SJB 605 11.13% Members 1 NPP 492 9.05% Members 1 IND1 388 7.13% Members 1 SLLP 254 4.67% Members 1 IND2 219 4.03% Members 0 TOTAL MEMBERS 13 VALID 5,438 98.09 % REJECTED 106 1.91 % POLLED 5,544 64.02 % ELECTORS 8,660 Local Authorities Election 2025 Results - Sri Lanka | Adaderana
  27. உண்மைதான். கண்ணதாசன் சபையினிலே இரவும் இல்லை பகலும் இல்லை ஒரே கொண்டாட்டம்தான்.
  28. "என்ன சார் இப்படி சொல்லிப் போட்டீங்க?" முகநூலில் அவர் குறிப்பிட்டிருப்பது தொன்னூறுகளில் நடந்த இடம் பெயர்வுகளைப் பற்றியதாக இருந்தது. ஆனால் அதற்குமுன்பே, எண்பதுகளில் பெரிய அளவில் இடம் பெயர்வுகள் நடந்திருந்தன. பல சிரமங்களின் மத்தியில் தான் அந்த வாழ்க்கை இருந்தது. 1983, 1984 காலப்பகுதியில் பலருக்கும் யேர்மனி ஒரு இடைநிலையாக இருந்தது. இங்கிருந்து தான் பலர் பிற நாடுகளுக்குப் போனார்கள். 1985-இல் இங்கிலாந்து ஈழத் தமிழர்களுக்காக கதவைத் திறந்தபோது, பலர் எளிதாக அங்கு சென்றுவிட்டார்கள். ஆனால் இது தொடர்ந்தால் கட்டுக்குள் இருக்காது, முழுத் தமிழர்களும் வந்துவிடுவார்கள் என்ற பயத்தில், அந்தத் திறந்த கதவை இங்கிலாந்து மெதுவாக மூடிக் கொண்டது. மற்ற நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் யேர்மனியில் அந்த நேரத்திலிருந்த வாழ்க்கை எளிதானதல்ல. சிலரால் ஒரு மாதம் கூடத் தாங்க முடியாமல் திரும்பிப் போய்விட்டார்கள். "நான் அவனைப்போல திரும்பப்போக ஏலாது. காணி வித்து அம்மா அனுப்பியிருக்கிறா? நகை வித்து அனுப்பினவையள்…" என்று பலர் புலம்பிக்கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன். யேர்மனியில் அகதிகளை ஏற்றுக் கொள்வதில் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி கொள்கைகளைக் கொண்டிருந்தன. நான் இருந்த Baden-Württemberg மாநிலத்தில், அகதிக்கான விசாரணையை நேரத்தில் நடத்தாமல் இழுத்தடித்தார்கள். விசாரணை நடந்த பிறகும் முடிவுகள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால், சுமார் இரண்டு வருடங்கள் அகதிகள் முகாம்களிலேயே நான் இருந்தேன். சாப்பாடு, உடை ஆகியவையுடன், மாதச் செலவுக்கு கையில் 60 மார்க்குகள் தந்தார்கள். என்னுடன் பழகிய சிலர் கனடா, பரீஸ், கொலண்ட், டென்மார்க், லண்டன் போன்ற நாடுகளுக்குப் போய்விட்டார்கள். அவர்களில் சிலர் யேர்மனியின் வடமாநிலங்களில் அகதிகளைக் ஏற்றுக் கொண்டு வேலை செய்ய அனுமதிக்கிறார்கள் என்ற செய்தியை நம்பி அங்கே போய் புதிய விண்ணப்பம் செய்தார்கள். ஆனால் கைரேகையில் மாட்டிக்கொண்டு, மீண்டும் முகாமுக்குத் திரும்பி வந்தார்கள். ஒருவாறு, 1986 இலையுதிர் காலத்தில் வசந்தம் வீசத் தொடங்கியது. அகதிகளுக்கு வேலை செய்ய அனுமதி அப்போது கிடைத்தது. வேலை கிடைத்தவர்கள் முகாமைவிட்டு தனியாக வீடு எடுத்துக்கொண்டு வசிக்கலாம் என்ற ஒளி மின்னத் தொடங்கியது. ஆனால், ஒருவர் அகதிக்கான உரிமை பெறும்வரைக்கும், அவர் வசிக்கும் நகரத்தைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்ற அறிவுறுத்தலும் அப்போது இருந்தது. இன்னும் பல சிரமங்களும் அதனோடு சேர்ந்த நல்ல அனுபவங்களும் கிடைத்திருக்கின்றன. இன்றுவரை அவை நினைவில் இருக்கின்றன. கோசான் சார், இப்போ சொல்லுங்கள். நாங்கள் அனுபவித்த சிரமங்கள் கூடுதலா இல்லையா?
  29. இதைத் தான் சொல்லுறது சாமி விடை கொடுத்தாலும் பூசாரி விடை கொடுக்க மாட்டார் என்று. எதிரணியின் நேர்த்தி ரொம்ப ஸ்ரோங்காம். ஓரிரு நாட்கள் முகத்தைக் காட்டினால் சரிவராது தம்பீ. @goshan_che மாதிரி தொடர்ந்தும் நின்று இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டும். நேற்றைய போட்டி முடிவில் தனது அணி வீரர்களை நொங்கு நோண்டுவது போல நோண்டி எடுத்து விட்டது இந்த அம்மா.குறிப்பா ராகுலுக்கு.
  30. திட்டீட்டால் போச்சு! சுவியரை நான் புகழவில்லை! அவருக்கு செய்வினை சூனியம் வைத்தது செம்பா!!😜 அந்த நேரத்தில் ரஸ்ஸல்ஸிடம் கொடுக்கவேண்டிய ஓவரை மோயீனிடம் கொடுத்தது ரஹானேயின் தவறு! என்னை பொறுத்தமட்டில் ரஹானேயைவிட சுனில் நாராயண் நல்ல கேப்டன்!
  31. சீனாக்காரன் இருக்கும் வரைக்கும் பாக்கிஸ்தான் காரனும் பயப்பிடமாட்டான். சிங்களவனும் பயப்பிட மாட்டான். ஏன் ஜேர்மன்காரனும் பயப்பிட மாட்டான்.
  32. அண்ணை. உண்மையில் இந்த “அமல் படுத்துடா தீர்வை” கோரிக்கைக்கு நான் மேலே இரு தரம் பதில் எழுதிவிட்டேன். மூன்றாவது தடவையாக: பிக்குகளும், பாராளுமன்றமும், இந்தியாவின் குறை அதிகாரப்பகிர்வும், இந்திய மத்திய அரசின் எதிர்ப்பும் இருக்கும் வரை - இலங்கையில் சிங்களவர் எமக்கு நியாயமான தீர்வை தரமாட்டார்கள். இது கனம் கந்தையா அண்ணை மட்டும் கண்டு பிடித்த விடயம் அல்ல. 99% சதவீதமான இலங்கை தமிழர் ஏற்று கொள்ளும் கள யதார்த்தம். நானே அண்மையில் என் பி பி வெற்றியில் பல யாழ் உறவுகள் குதூகலித்த போதும், இதற்கு முன் பல தடவையும் இதை எழுதியுள்ளேன். ஆனால் இதுதான் யதார்த்தம் என்பதால் -வட்டுகோட்டை தீர்மானத்தை தலைக்கு வைத்து படுக்கவில்லை. திம்பு கோரிக்கையை போர்த்தி படுக்கவில்லை. 87 உடன்படிக்கையை ஏற்றுகொள்கிறோம் என அறிவிக்காமல் விடவில்லை. மங்கள முனசிங்க தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் அளிக்காமல் விடவில்லை: பிரேமதாச, சந்திரிக்கா, ரணில் உடன் தனியே யுத்த தவிர்ப்பு மட்டும் அல்ல, சமாதான பேச்சுவார்த்தையும் கூட பேசாமல் விடவில்லை. ஓஸ்லோ பிரகடனத்தை ஏற்று கொள்ளாமல் விடவில்லை. இலங்கையில் பிக்குகள் தீர்வை தரமாட்டார்கள் என்பதால் இவற்றை எதையும் முயலாமல் விடவில்லை. அதே போல் இன்னொரு முயற்சிதான் நீலன் பங்களித்த தீர்வு திட்டமும். புலிகளை தவிர ஏனைய அனைத்து ஈழத்தமிழர் அமைப்புகளும் தனி நாட்டு கோரிக்கையை கைவிட தயாராகவே இருந்தார்கள். அல்லது கைவிட்டார்கள். புலிகள் கூட 87 இலும், 2002-2007 வரையான காலத்திலும் கைவிட்டார்கள், அல்லது கைவிட்டதாக போக்கு காட்டினார்கள். பாலா அண்ணை இதை கைவிட வேண்டிய காலம் வந்து விட்டது என்பதை தலைவருக்கு சொன்னார் எனவும், அதனாலேயே அவர் பொறுப்புகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் படி பணிக்கப்பட்டார் என்றும் யாழில் சில கட்டுரைகளை வாசித்தும் உள்ளோம். ஆகவே நீலன் எழுத உதவிய தீர்வு திட்டம், ஒன்றும் தமிழர் தரப்பு இதுவரை ஏற்க மறுத்த விடயம் அல்ல. அப்படி ஒரு திட்டத்தை எழுத உதவியதால் தமிழர் போராட்டத்தின் கற்பு ஒன்றும் களங்கப்படவும் இல்லை. ஒரே விடயத்தை நீலன் முன்வைத்தால் அது விடுதலை போராட்டத்துக்கு செய்யும் துரோகம். அதையே புலிகள் ஒஸ்லோவில் உடன்பட்டால் அது யதார்த்தத்தை புரிந்துகொண்டு அரசியல் செய்தல் என நீங்கள் வியாக்கியானப்படுத்த விழைவது, தர்க்க கேடானது. பிகு கொஞ்சம் தலைப்பில் இருந்து விலகி. தமிழர் அரசியல் அபிலாசைகளை வட்டு கோட்டை பிரகடனத்தின் முன், வட்டு கோட்டை பிரகடனத்தின் பின் என பிரியுங்கள். வ.கோ.பி.மு நாம் கோரி நின்றது - எம்மை சம இலங்கையராக நடந்துங்கள், இன ஒதுக்கலை கைவிடுங்கள், இன வன்முறையை தவிருங்கள், மொழிக்கு சம அந்தஸ்து கொடுங்கள் - இவைதான். 50:50 காலம், பின் தனி சிங்கள காலம் அனைத்திலும் இவைதான் எமது கோரிக்க்கைகள். அப்போதைய எமது கோரிக்கைகள், இந்திய மாநிலங்களை ஒத்த அதிகாரபகிர்வு என்பது கூட இல்லை, இணைந்த வடகிழக்கு மாகாண சபை கூட இல்லை. பின்னாளில் ஜே ஆர் தர முனைந்த மாவட்ட சபைக்கு நிகரான. ஒற்றையாட்சி இலங்கைக்குள் சம பிரசைகளாக நடத்துங்கள், பிராந்திய சபைகளை தாருங்கள் என்பதே பண்டா-செல்வா ஒப்பந்த அடிப்படை. வ.கோ.பி.பி தான் தனிநாடு என்ற கோரிக்கை, சுயநிர்ணயம், பாரம்பரிய வாழிடம், காணி அதிகாரம், குடியேற்றத்தை தடுத்தல், பொலீஸ் அதிகாரம் என எமது அபிலாசைகள் அடுத்த கட்டதுக்கு போனது. அதன் வழி வந்ததுதான் திம்பு கோட்பாடுகள். ஏன் நாம் முதல் கட்ட அபிலாசைகளில் இருந்து இரெண்டாம் கட்ட அபிலாசைக்கு போனோம்? முதல் கட்ட அபிலாசைகளை கூட இலங்கை எமக்கு தராது என்பதால். ஆனால் நீலன் காலத்தில் அரச கருமமொழி பிரச்சனை ஒழிந்து விட்டது. சிறி இல்லை. எமது பழைய கோரிக்கைகளையும், திம்பு கோரிக்கையாக உருவெடுத்து நிற்கும் எமது புதிய அபிலாசைகளையும் பலன்ஸ் பண்ணி, மண்டேலாவை விட அதிக சதவீத வாக்கில் வென்ற சந்திரிக்காவுக்கு சிங்களவர் மத்தியில் இருந்த நன்மதிப்பையும் பயன்படுத்தி, சிங்கள மக்களும் ஏற்கும் ஒரு தீர்வை பெறலாம் என்று நீலன் முயன்றிருக்கலாம். நீலனின் இந்த முயற்சியை பிக்குகளும், புலிகளும் அனுசரித்து நடந்து - அதை அமல்படுத்த ஒரு வெளியை உருவாக்கி இருந்தால் - இன்று ஜேவிபி உருவாக்கி விட்டதாக சொல்லும் ஒப்பீட்டளவில் இன ஒதுக்கல் அற்ற இலங்கை அன்றே உருவாகி இருக்கவும் கூடும். 1995 க்கு பின் இழக்கப்பட்ட அத்தனையையும் இழக்காது தவிர்த்திருக்கலாம். இது இப்படித்தான் நடந்திருக்கும் என நான் சொல்லவில்லை. பொருளாதார சிதைவுக்கு பின் சிங்கள கூட்டு மனோநிலை மாறியது போல் 1995 இல் நிலமை இருக்கவில்லை. ஆனால் - மாறும், மாற்றலாம், வெளிநாட்டு அளுத்தத்தை தகுந்த முறையில் பயன்படுத்தலாம் என நினைத்து ஒரு மனிதன் ஒரு திட்டத்தை தயாரிக்க உதவுவது அப்படி ஒண்டும் பாரிய குற்றம் இல்லை.
  33. நான் நினைக்கிறேன் இவருடைய இயலாமையின் வெறுப்பை தான் அவரது சீ.*வி புரியாணியில் காட்டி உள்ளார். இப்ப சீ*வி க்கு இரண்டு மாங்காய்
  34. சீ இண்டைக்கு எண்டு பாத்து இந்த மழை வந்துச்சா 🙂 விளையாட்டு தொடர்ந்து நடந்திருந்தால்..... இந்தச் செம்பாட்டான் மேலை ஏறி விழுந்து உருண்டு பிரண்டு சிரிச்சிருக்கலாம்-🤣🤣 மழையும் அவங்க பக்கமே நிக்குதே 😇
  35. இவங்கள் சூனியம் வைப்பாங்கள் என்றுதான்.... சீனாக்காரன் வேலியை உயர்த்தி போட்டிருக்கின்றான் போலுள்ளது. அப்ப ... இவை மினைக்கெட்டு வைத்த சூனியத்துக்கு பவர் இல்லாட்டிலும் காரியமில்லை, ரிட்டர்ன் ஆகி விட்டது என்றால் ஆபத்து அல்லவா. இதைப் பார்த்துத்தான்... "சொந்த செலவில் சூனியம் வைக்கிறது" என்ற பழமொழி தமிழில் வந்தது என நினைக்கின்றேன். ஆய்வாளர் மணி, ரவீந்திரன் துரைசாமி, மாரிமுத்து, சவுக்கு சங்கர் எல்லாரும் இப்ப எங்கே. அவர்களின் காணொளிகளை பார்த்து வருடக் கணக்காகி விட்டது. இன்னும் அவித்துக் கொட்டிக் கொண்டு இருக்கின்றார்களா அல்லது சாயம் வெளுத்து.. ஓய்விற்கு போய் விட்டார்களா. 😂🤣
  36. இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்... சீன எல்லையில், சூனியம் வைத்த மாதிரி... பாகிஸ்தான் எல்லையில் சூனியம் வைக்க முடியாதா...? 😂
  37. உடான்ஸ் சாமியாரிடம் வாட்சாப்பில் கேட்டதில் - யாக குண்டத்தில் அமித்ஷா குடும்ப தலைபிள்ளையை இறக்கி அளப்பெரும் சோதியில் கலக்கவிட்டால் - பாகிஸ்தான் பலநூறாக சிதறும், சர்வதேச கிரிகெட்டும் தப்பிக்கும் என்கிறார்🤣.
  38. மனைவி சமைக்கும் பிரியாணி சரியில்லை என்றால்... கணவன் பிரியாணியை... தனக்கு ருசியாய் சமைக்க வேண்டியதுதானே. 41 வயது கணவனுக்கு 27 வயது மனைவி. இதுவே... போதும் என்று சந்தோசப் படுடா... மூ*வி.
  39. மயிலே... மயிலே... என்றால், இறகு போடாது. 😂 உடான்ஸ் சாமியார்தான்... ஏதாவது யாகம் நடத்தி, இவங்களை சண்டை பிடிக்க வைக்க வேண்டும். 🤣
  40. 🎤 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும்... இந்த விளையாட்டில் கலந்து கொண்டு, உலகச் சாதனை படைக்க ஊக்கம் கொடுக்க வேண்டும். 😂
  41. ஒரே தராசில் வைக்கவில்லை. ஆனால் முன்பே இன்னொரு திரியில் எழுதி இருந்தேன்…. வெள்ளை மாளிகைக்கு செலன்ஸ்கி போகும் முன்பே எழுதினேன்… அந்த வெள்ளமாளிகை சந்திப்பும், தலைவரின் அசோக்கா ஹோட்டல் சந்திப்பும் ஒன்றே என. சந்திப்பின் போதும், பின்னும் இந்த இரு தலைவர்களும் எடுத்த முடிவுகள், அணுகுமுறைகள், அவர்கள் தலைமைதாங்கும் தேசிய இனங்களின் எதிர்காலத்தை தீர்மானித்தன, தீர்மானிக்கும். ரஜிவின் (அநியாய) இந்தியா மீது தலைவர் எடுத்த அணுகுமுறையை ஒத்த அணுகுமுறையை டிரம்பின் (அநியாய) அமெரிக்கா மீது கோமாளி செலன்ஸ்கி எடுத்தால் - உக்ரேனியர்களுக்கு முள்ளிவாய்க்கால் நிச்சயம். இதை செலன்ஸ்கி உணர்ந்து, மிக மோசமான தனிப்பட்ட அவமானத்யும் தாங்கி கொண்டு, நயமாக செயல்படுகிறார் என நான் நினைக்கிறேன்.
  42. ஜனாதிபதி பாய் டின் (Bai Dinh) விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்; ஜனாதிபதிக்கு வியட்நாம் மக்களின் அமோக வரவேற்பு Published By: VISHNU 04 MAY, 2025 | 09:16 PM வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை (04) தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பௌத்த விகாரைகளில் ஒன்றான பாய் டின் (Bai Dinh) விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார். இலங்கை மற்றும் வியட்நாம் தேசியக் கொடிகளை ஏந்திய வியட்நாம் மக்களால் ஜனாதிபதிக்கு அதன் நுழைவாயிலில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. விகாரை வளாகத்தை சுற்றிப் பார்த்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை காண வீதியின் இருபுறமும் ஏராளமானோர் கூடியிருந்தனர், மேலும் அவர்கள் இரு நாடுகளின் தேசியக் கொடிகளையும் அசைத்து தமது மரியாதையை செலுத்தினர். ஜனாதிபதி, விகாரையில் வழிபாடு நடத்திய பிறகு, தேரர்கள் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியை ஆசிர்வதித்தனர். பின்னர், ஜனாதிபதி விகாரை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா போதியை வழிபட்டதுடன், இந்த போதி, 2023 ஆம் ஆண்டு பாய் டின் (Bai Dinh) விகாரை வளாகத்தில் நடுவதற்காக இலங்கையிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட அநுராதபுரம் ஸ்ரீ மகா போதியின் ஒரு கிளையாகும். இலங்கை மத்திய கலாசார நிதியத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போதியை சுற்றி நிர்மாணிக்கப்பட்ட மதிலையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திறந்து வைத்தார். பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விகாரை வளாகத்தில் சால் மரக்கன்றை நட்டார். இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகையையும் பார்வையிட்டார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விகாராதிபதி தேரருக்கு நினைவுப் பரிசும் வழங்கிவைக்கப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/213674
  43. @Sasi_varnam எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம்.
  44. திருச்செந்தூரின் கடலோரத்தில் ......... ! 🙏
  45. தமிழில் கற்கைகளை நடத்தினாலும் ஆங்கில கல்வியையும் பல்கலைக்கழகம் ஊக்குவிக்க வேண்டும். பட்டம் பெறுபவர்கள் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். ஏனெனில் இயற்கை வைத்தியம் என்பது உலகம் முழுவதும் நீண்ட காலமாக உள்ளன. அதுலும் பல வகைகளை உலகின. பல்வேறு நாடுகளில் உள்ளன. ஆகவே அந்த வைத்திய முறைகளையும் கற்றறிந ஆங்கில தேர்சசி உதவியாக இருக்கும். அப்போது தான் இவர்கள் தமது துறையில் முழுமை பெறலாம். தனியே தமிழில் மட்டும் கற்றுவிட்டு உலகத்துக்கே வைத்தியத்தை கொடுத்தவர்கள் நாம் என்பது போல லூசுத்தனமான கிணற்று தவளை கருத்துகளை கொண்டவர்களாக இருப்பர்.
  46. வீட்டிலே முட்டை வறுத்த சோறு கிளறினால் எவ்வளவு செலவு ஆகும் ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.