Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87988
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38754
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  4. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    16477
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/21/25 in all areas

  1. அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.
  2. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 63வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமாரின் ஆட்டமிழக்காது எடுத்த 73 ஓட்டங்களுடனும், நமன் டீரின் 8 பந்துகளில் புயல்வேகத்தில் எடுத்த 24 ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் விரைவிலேயே ஆட்டமிழந்து பவிலியனுக்குத் திரும்பியதால் 18.2 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜஸ்பிரிற் பும்ராவும், மிச்சல் சன்ரெனரும் தலா 3 விக்கெட்டுகளை மிகக் குறைந்த ஓட்டங்களைக் கொடுத்து வீழ்த்தியிருந்தனர். முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 59 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அடுத்த கட்ட play-off ஆட்டங்களுக்குத் தெரிவாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: போட்டியின் ஆரம்ப நாட்களில் பல நாட்கள் முதல்வராக இருந்த @suvy ஐயா 20வது இடத்திற்கு வீழ்ந்துள்ளார்!
  3. மீண்டும் இந்த‌ கூட்ட‌னியா😁👍.................. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வாத்தியார் சுவி சுவைப்பிரியன் ரசோதரன் நந்தன் புலவர்
  4. சரி 5000 கூட என்றால் 2500£. இந்தியாவில் இருப்பது 20,000 குடும்பங்கள். அதில் அரைவாசி திரும்பி வந்து, அவர்களை நாட்டில் நிலை நிறுத்த தலா £2500 கொடுத்தால் - மொத்த செலவு £25 000 000. இதை உலகளாவிய தமிழ் அமைப்புகள், மாணவர் மன்றங்கள், தொழிலதிபர்கள், கோவில்கள் ஒரு வருடத்தில் திரட்ட முடியும். சரியான செயன்முறை இருப்பின், அகதி அமைப்புகள், மேற்குநாட்டு மீள்குடியேற்ற அமைச்சுகளை கூட அணுகலாம். தனியே காசாக கொடுக்காமல் - கல்வி அல்லது தொழில் முயற்சி அல்லது ஒரு தொழில் பழக எனும் வகையில் கொடுக்கலாம். IOM என்ற அமைப்பு செய்வது போல. பெரிய எடுப்பில் முடியாவிட்டால் - புலம்பெயர் ஊர் ஒன்றியங்கள் தமது ஊரில் இருந்து இப்படி போனவர்களையாவது மீள் அழைக்க முயலலாம். இஸ்ரேல் ஒரு தேசமாக உருவாக முன்னர், கிபுட்ஸ் எனும் பண்ணைகளை உருவாக்கி, அங்கே யூதர்கள் பல நாடுகளில் இருந்தும் மீள் குடியேறினார்கள். இந்த நிலங்கள் அரபிகளிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்டன. இந்த விலையை “நீலப்பெட்டிகள்” என்ற மக்கள் நிதிசேகரிப்பின் மூலமும் ஏனைய வழிகளிலும் ஒரு இனமாக அவர்களால் திரட்ட முடியுமாய் இருந்தது.
  5. முடியல. நம்மளால முடியல. இப்ப மூன்று பேராச் சேர்ந்திட்டினம். இரண்டு பேரா இருக்கேக்கையே, அவைக்கு தொட்டதெல்லாம் துலங்கும். இப்போ குருவிச்சாத்திரம் வேற. லக்னோவுக்கு என்ன ஒரு லக்.
  6. இதனை முதலில் யே.வி.பீ(JVP) வந்தால் தேனும் பாலும் ஓடித் தமிழினத்தின் கோரிக்கைகள் தங்கத்தட்டில் வைத்துச் சிவப்புக்கம்பள விரிப்பில் பவனியாக எடுத்துவந்து கையளிப்பர் என்ற தமிழருக்கும், யூரூப்பற்மாருக்குமே வெளிச்சம். ஆட்சிக்குவருவோரின் முகங்களும் கட்சிக்கொடியின் நிறங்களுமே வேறேதவிரக் கடைந்தெடுத்த பச்சை இனவாதத்தில் சற்றும் குறையாதோர் என்பது தெரிந்ததே. ஆனால், அவர்களுக்கு ஆலவட்டம் பிடித்தோருக்கு இவளவு விரைவாக நாமம் போடுவார்களென எதிர்பார்த்திருக்கார். கட்டுரையாளர் பல்வேறு தடவைகள் தமிழின அரசியல் குறித்து யேவிபீ(JVP)யின் நிலைப்பாட்டைச் சுட்டியிருந்தார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. GMT நேரப்படி நாளை வியாழன் 22 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 64) வியாழன் 22 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT எதிர் LSG 17 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் ஆறு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வீரப் பையன்26 நிலாமதி பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ஏராளன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வாத்தியார் சுவி சுவைப்பிரியன் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  8. ஈழத்தமிழர் விவகாரத்தில் தொடர்ந்தும் வெறுப்பை வெளிப்படுத்தி வரலாற்று துரோகங்களை அரங்கேற்றி வரும் இந்தியா தம்மை நம்பி வந்த ஈழ தமிழர்களை 30 ஆண்டுகளுக்கு மேல் அகதிகளாகவே நடாத்துகின்ற அவலம் நேற்று இந்திய உச்சநீதிமன்றத்தில் ஈழ அகதி ஒருவர் தொடர்பான தீர்ப்பின் மூலம் மீளவும் தன்னை ஒரு ஈழத்தமிழர்களுக்கு எதிரான ஒரு நாடாக அடையாளப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் காந்தி சதுக்கம் ,காந்தி பூங்கா , மகாத்மா காந்திக்கு சிலை என்று இலங்கையர்கள் இந்தியாவின் மீதான ஆதரவை வெளிப்படுத்தினாலும் இந்தியாவோ ஒரு எதிரியை பாவிப்பது போலவே பாவித்து வருகிறது. இந்த நிலையில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியா இதுவரை என்ன செய்திருக்கிறது என்று கேட்டால் உண்மையில் இதுவரை எதுவுமே செய்யவில்லை என்பதுதான் பதில். இந்தியாவின் ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடுகளை பற்றியும் தமிழரின் தேசிய வேட்கையை சிதைத்த இந்திய நகர்வுகள் தொடர்பாகவும் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு. வணக்கம். இன்றைய நாளும் மற்றுமொரு ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வின் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று 2052025 இன்றைய நாளை பொறுத்தவரை நாங்கள் பேச வேண்டிய விடயம் அல்லது பேசுகின்ற மிக முக்கியமான ஒரு விடயமாக மாறியிருப்பது ஒரு அகதியினுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பது மாத்திரமல்லாமல் அதற்கு சொல்லப்பட்டிருக்கக்கூடிய காரணம் என்பது ஈழத்தமிழ் மக்களிடையே அவர்களுடைய மனங்களில் இவ்வளவு காலமும் இந்தியா தன்னுடைய தந்தைய நாடு என்பதும் இந்தியா எங்களுக்கு ஆதரவாக இப்போதாவது ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கையோடும் இருந்த மக்களுக்கு மிகப்பெரிய அதிர்வலைகளையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைய தினம் இந்தியாவிலிருந்து ஒரு செய்தி வெளிவந்தது. அந்த செய்தியை நான் உங்களோடு இப்போது பகிர்ந்து கொள்கிறேன். 140 கோடி மக்கள் தொகையுடன் ஏற்கனவே போராடி வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள அகதிகளுக்கு இடமளிக்கக்கூடிய இந்தியா ஒன்றும் தர்மசாலை அதாவது இலவச தங்குமி இடம் அல்ல என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாகவும் இலங்கை தமிழகதியினுடைய தங்குமிடத்திற்கான அனுமதி கோரிக்கையை நிராகரித்திருப்பதாகவும் அந்த செய்தி வெளிவந்தது. தமிழில் விடுத்தலை புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்ததாக இலங்கை தமிழரான ஒரு மனுதாரர் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தனிநபர் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் யுஏபிஏ என்று சொல்லக்கூடிய சட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தினால் அந்த நபர் குற்றவாளி என தீர்ப்பாளிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அவரது சிறைதண்டனையை 10 ஆண்டுகளில்ிருந்து ஏழு ஆண்டுகளாக கடந்த 2022 ஆம் ஆண்டு குறைத்திருந்தது. அதன் அத்தோடு அவரது சிறைதண்டனை முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டது. மேலும் மூன்று வருடங்களாக அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த நபர் இலங்கைக்கு திரும்பினால் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எனவே தன்னை இலங்கைக்கு நாடு கடத்து விளைதை தடுத்து நிறுத்த கூறியும் உச்ச நீதிமன்றத்திலே மனுதாக்கல் செய்திருந்தார். தான் முறையான விசாவின் மூலமாக இந்தியா வந்ததாகவும் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் இப்போது இந்தியாவிலே குடியேறி விட்டனர் எனவும் அந்த மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளான தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு உலகம் முழுவதிலும் இருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? நாங்கள் 140 கோடியுடன் போராடுகிறோம். இது எல்லா இடங்களிலும் இருந்து வரும் வெளிநாட்டினரை மகிழ்விக்க கூடிய தர்மசாலை அல்ல. இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என கூறி இந்த மதுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டிருக்கிறது என்பதை சொல்லிக்கொள்ளலாம். அதே நேரம் குறிப்பாக ஒரு விடயத்தையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். கடந்த 2024ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்திலே ஒரு இலங்கை தமிழர்களுடைய குடியுரிமை மனைவை பரிசலித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அதனை விரைவாக தீர்மானிக்குமாறு நீதிமன்றம் உத்திரவெற்றிருந்த ஒரு வழக்கையும் நான் உங்களுக்கு மேற்கொள் காட்டி விடுகிறேன். ஆக இந்த வழக்கினுடைய தீர்ப்பில் நான் இறுதியாக கூறியது. இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுருந்தார்கள். ஆக இந்தியா எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஈழத்ததமிழர்களுக்கான தீர்வுக்காகவோ அல்லது ஈழத்ததமிழர்களுடைய பிரச்சனையிலோ தலையிட போவதில்லை. அவர்களுக்காக பரிந்து பேச போவதில்லை என்ற ஒரு விடயத்தை மிக் தெளிவாக இந்திய நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. ஆக இந்த விவகாரத்திலே இன்று ஒரு நாள் இந்தியா எங்களுக்காக ஒரு தீர்வை பெற்று தரும். இந்தியாவால் தான் எங்களுக்கு விடிவு கிடைக்கும் என்று சொல்லி நம்பி இருக்கக்கூடிய ஆயிரம் ஆயிரம் ஈழ தமிழ் உள்ளங்களை இந்தியா இந்த தீர்ப்பின் மூலமாக மாற்றி இருக்கிறது. குறிப்பாக சொல்லக்கூடிய வேண்டுமாக இருந்தால் நான் ஏழவே குறிப்பிட்டிருக்கக்கூடிய ஒரு விடயம்தான். இந்த இந்தியாவினுடைய அமைதிப்படை இலங்கைக்கு வந்தது. அப்போது அந்த அமைதிப்படை இலங்கைக்கு வந்த நாளினை மிக கோலாகலமாக கொண்டாடினார்கள். அவர்களை தலையிலே தூக்கி வைத்து கொண்டாடினார்கள் ஈழத்தின் தமிழ் மக்கள். அதாவது எங்களை காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம் வந்திருக்கிறது. ஸ்ரீலங்க அரசினுடைய தொடர் நடவடிக்கைகளில் இருந்து ஈழ தமிழ் மக்களாக எங்களை காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம் வந்திருக்கிறது என்று சொல்லி அவர்கள் சந்தோஷப்பட்டார்கள் ஊர்வலங்க செய்தார்கள் மகிழ்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த நிலைமை முற்றாக மாறி ஈழ தமிழ் மக்கள் கண்டு அஞ்சி ஒழிக்கின்ற ஒரு ராணுவமாக இந்திய ராணுவம் இருந்தது. இந்திய ராணுவம் படுகொலைகளை செய்தது பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்டது. இன்னும் இன்னும் சொல்லிக்கொள்ள வேண்டுமாக இருந்தால் மிக காடைனமாக வைத்திய சாலைக்குள் புகுந்து நோயாளர்களை சுட்டு கொண்டது. இப்படியான நடவடிக்கைகளை செய்தது. அந்த நிலைமையிலும் கூட அதன் பின்பதாகவும் கூட இளதமிழ் மக்கள் இன்றுவரை இந்தியா எங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்யும் என்று சொல்லி நம்புகிறார்கள். அன்பான தமிழக உறவுகளே என்னுடைய இந்த பேச்சை கண்டு நீங்கள் கொதைத்து எழலாம். உங்களுடைய ஆக்ரோசமான கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் நான் சில விடயங்களை உங்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் இந்தியாவை விரோதிகளாக பார்த்தது இல்லை. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சண்டை வருகிற போது பெரும்பாலான இழத்து தமிழ் மக்களுடைய மனநிலை இப்போதும் ஆகியிருக்கிறது பாகிஸ்தானுடைய பக்கமாக என்று சொல்லி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் துடுப்பாட்டம் அதாவது கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெற்றால் கூட எங்களுடில் பலரினுடைய ஆதரவு என்பது இந்தியாவினுடைய பக்கமாக இருக்கும். ஏனென்று சொன்னால் இந்தியாவினுடைய எதிரிநாதரி பாகிஸ்தான். ஆகவே எங்களுக்கு பாகிஸ்தான் மீது விருப்பமில்லை. பாகிஸ்தானோடு உடன்பட நாங்கள் தயாரில்லை என்று மனநிலையில் தான் இளத்தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். எங்களுடைய ஒவ்வொரு வீதிகளிலும் ஒவ்வொரு ஊர்களிலும் வடக்குக்கிழக்கில் இருக்கக்கூடிய பெரும்பாலான இடங்களிலே மகாத்மா காந்திக்கு சிலை வைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம் இருக்கக்கூடிய ஒவ்வொரு இடங்களிலும் ஒரு வீதிக்கு காந்தி வீதி என்று பெயரிட்டிருப்பார்கள். அதேபோல காந்தி சதக்கம் என்று சொல்லி ஒரு சதக்கத்தை ஒதுக்கி இருப்பார்கள். அதை தாண்டி மகாத்மா காந்தி பூங்கா என்று சொல்லி பூங்காவை வைத்திருப்பார்கள். இப்படி நிறையவே இந்தியாவினுடைய விவகாரங்களிலும் இந்தியாவை சார்ந்தவர்களையும் அவர்கள் தூக்கி எறிந்ததாகவோ நிராகரித்ததாகவோ அல்லாமல் பெருமைப்படுத்தக்கூடிய வகையிலே செயல்பட்டிருக்கிறார்கள். எங்களுடைய பலரினுடைய ஒரு தலைமுறைக்கு முற்பட்ட பெயர்களை பார்க்கிற போது இந்திரா சந்திரபோஸ் இப்படியான பெயர்களை எங்களுடைய மக்கள் சூடி இருந்தார்கள். அந்த அளவுக்கு நாங்கள் இந்தியாவோடு மிக நெருக்கமாக எங்களுடைய உணர்வுகளை பேணி இருந்தோம். ஆனால் இந்தியா தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்கிறது? பெரும்பாலான உறவுகள் குறிப்பிடக்கூடிய விடயம் இந்தியா வீடு கட்டி கொடுத்திருக்கிறது. சந்தோஷமாக வைத்திருக்கிறது ஈழத்ததமிழர்களுக்கு நன்றி இல்லை என்பது. இந்தியா வீடு கட்டி கொடுத்திருக்கிறது என்பது ஈழதமிழர்களுடைய தேவை வீடு கட்டி தருவது அல்ல. எங்களால் உழைத்து எங்களுக்கான வீடுகளை கட்ட முடியாமல் இல்லை. ஆக இந்த விவகாரத்திலே வீடு கட்டி கொடுத்தது இந்தியா தமிழர்களுக்கு நன்றி இல்லை என்ற வார்த்தைகளை சொல்லுகின்றவர்கள் நீங்கள் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். குறிப்பாக ஒரு விடயத்தை நான் இங்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஈழ தமிழர்கள் தங்களுடைய கடந்த கால யுத்தத்தின் காரணமாக உலகமங்கிலுமே பரவிச் சென்றார்கள். அப்படி அவர்கள் பதவி சென்ற நாடுகளிலே ஒவ்வொரு நாடுகளிலும் அவர்களுக்கான அங்கீகாரம் என்பது எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்று சொன்னால் அந்த நாடுகளிலே நாடாளுமன்ற உறுப்பினர்களாக அந்த நாடுகளினுடைய அமைச்சர்களாக மாறும் அளவுக்கு இருந்திருக்கிறது. கனடாவிலே இப்போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். பிரதானியாவுக்கு பார்க்கிற போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். உமாகுமரன் என்று சொல்லக்கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். ஆவஸ்திரேலியாவிலே ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். அவர்கள் எல்லாம் ஆவஸ்திரேலியாவிலேயும் பிரதானியாவிலும் கனடாவிலும் பிறந்து விளந்தவர்கள் அல்ல. இந்த நாட்டில இருந்து அகதியாக சென்றவர்கள் அந்த நாட்டிலே இருந்து அகதியாக சென்றவர்களுடைய பிள்ளைகள் அவர்களுக்கு அந்த நாடுகள் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. பிரதானியாவை பொறுத்தவரை ஒரு ஐந்து ஆண்டுகள் அந்த நாட்டிலே அகதியாக இருந்தால் பெர்மனன்ட் ரெசிடன்ட் என்று சொல்லக்கூடிய பிஆர் வழங்குவார்கள். அதேபோல 10 ஆண்டுகளிலே அந்த நாட்டினுடைய குடியுரிமை வழங்குவார்கள். ஆனால் இந்த இந்தியாவிலே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 84ஆம் ஆண்டுக்கு பின்பதாக நிறைய பேர் எங்களுடைய தமிழ் மக்கள் இந்தியாவிலே தஞ்சம் கூறினார்கள். அவர்கள் 30 35 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அகதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக யாரோ யாரோ எல்லாம் அநிய நாடுகள் எல்லாம் இந்த தமிழர்களுக்குரிய உரிமையையும் அவர்களுக்கான அகதி அந்தஸ்தை நீக்கி அவர்களை தங்களுடைய குடிமக்களாக அரவணைத்துக் கொள்கிற போது நாங்கள் முழுவதுமாக நம்பி இருந்த இந்தியா எங்களை அகதிகளாக வைத்து பார்க்கிறது 30 ஆண்டுகள் கடந்தும் அகதி முகாம்களிலே அடிப்படை உரிமைகள் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு நிலைமை இருக்கிறது. நிச்சயமாக ஒரு விடயத்தை நாங்கள் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த இலங்கையில் இந்திய தமிழர்கள் இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு குடியுரிமை இருக்கிறது. ஒரு காலத்திலே அவர்களுடைய குடியுரிமை கேள்விக்கு உட்படுத்தப்பட்டபோது இதே ஈழத்ததமிழர் சமூகம் அவர்களுக்காக பின்னின்றது. தந்தை செல்வநாயகம் அவர்கள் எதிர்த்து நின்றார். அந்த தமிழர்களுக்காக பேசினார். அவர்களும் எங்களுடைய மக்கள் என்று பேசினார். ஆனால் இந்தியா அப்படியாக பேசுவதற்கான வாய்ப்பையே நிராகரித்திருக்கிறது. இப்படி இருக்கக்கூடிய சூழலில் அன்பான தமிழக உங்களிடம் விரயமாக வேண்டுகின்ற விடயம். உங்களைப் போலவே நாங்களும் இருக்கிறோம். உங்களை போல உங்களை மீது நாங்கள் பற்றுத்தி கொண்டிருக்கிறோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம். உங்களின் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறோம். நீங்கள் எங்களுடைய உணர்வுகளில் கலந்து எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளாக நாங்கள் உங்களை பார்க்கிறோம். இந்தியா எங்களுடைய தந்தையர் தேசம் என்று சொல்லி நாங்கள் அடிக்கடி சொல்லி கொள்வோம். அப்பா என்று அழைத்து ஒரு பிள்ளையை தள்ளிவிட்டு நீ மாற்றான் பிள்ளை என்று சொல்வதுதான் நியாயமாக இருக்கிறதா இந்தியாவுக்கு என்ற ஒரு கேள்வி இருந்து கொண்டிருக்கிறது. ஈழ தமிழர்கள் இன்று ஒரு நாள் இந்தியா எங்களுடைய விவகாரத்தில் தலையிடும் எங்களுக்காக ஒரு தீர்வை பெற்று தரும் நாங்கள் சுதந்திரமாகவும் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ வழி அமைத்து தரும் என்று சொல்லி எதிர்பார்ப்போடுதான் இருந்தார்கள். ஆனால், இப்போது அந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த தீர்வு மிகப்பரிய அதிர்வலைகளையும், மிகப்பெரிய மாற்றங்களையும் உண்டு பண்ணும் என்பதை மறந்து விடாதீர்கள். ஆக அன்பான சொந்தங்களே எங்களுடைய தமிழ்நாட்டு சொந்தங்கள் எங்களுக்காக பேசுகிறார்கள். அவர்கள் எங்களுடைய வரலாறுகளை கடத்துகிறார்கள். எங்களுடைய கருத்துக்களை எங்களுடைய கதைகளை பேசுகிறார்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் அவர்களை குற்றம் சொல்லவில்லை. ஒரு ஒன்றிய நாடாக ஒருமித்த நாடாக இந்தியாவிடம் இதனை வலியுறுத்துங்கள் அன்பான உறவுகளே ஈழ தமிழர்கள் நம்முடைய சொந்தங்கள் நம்முடைய மக்கள் இந்த நிலைப்பாட்டை அவர்களுக்கு தெளிவுபடுத்துங்கள். அவர்கள் நிச்சயமாக இந்தியா எங்களுக்கு என்ன செய்தது என்ற கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். குறிப்பாக இந்த இளத்தமிழர்களுடைய போராட்ட வரலாற்றை பொறுத்தவரை அன்றைய காலகட்டத்திலே இந்தியாவில் இருந்து பயிற்சி பெற்று வந்த போராளிகளினுடைய மொத்த எண்ணிக்கை 40,000ஆக இருந்தது. அந்த நேரத்தில் ஸ்ரீலங்காவினுடைய ராணுவ எண்ணிக்கை வெறும் 9,000ஆக இருந்தது. அந்த நேரத்தில் நினைத்திருந்தால் தமிழ் தரப்புகள் எந்த வகையான போராட்டங்களை எந்த வகையான நகர்வுகளை மேற்கொண்டிருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள். ஆனால் இந்தியா ஒற்றுமைக்கு கொஞ்சம் விளைவிக்க முடியாது என்ற அடிப்படையில் அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. அதேபோல பிரட் என்று சொல்லக்கூடிய அமைப்புக்கு வந்திருக்கக்கூடிய அந்த காலப்பகுதியிலே ஆயுதம் ஏakே47 என்று சொல்லக்கூடிய ஆயுதங்கள் வந்தது. அதனை பறைத்துக் கொண்டதுமே இந்தியா. இப்படியாக நிறைய சம்பவங்களை செய்தது. ஒற்றுமையாக இருந்து அந்த 40,000 போராளிகளை பிளவுபடுத்தி அவர்களுக்குள் ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டு ஒருவர் ஒருவர் தங்களுடைய இனத்தினுடைய கூடாரை காம்புகளாக அவர்களை மாற்றிய பெருமை இந்தியாவை சார்ந்ததாக இருக்கிறது. ஆகவேதான் இந்த விவகாரத்திலே நாங்கள் தொடர்ச்சியான அதிர்வனைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. வேந்த புண்ணிலே வேல் பாற்றுவது போலவே இந்தியா நடந்து கொண்டே இருக்கிறது. இந்தியா ஈழ தமிழர்களுடைய சுய நிர்ணயத்தை மறக்கிறது. ஈழ தமிழர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கக்கூடிய இனப்படுகொலையை நிராகரிக்கிறது. உலக நாடுகள் எல்லாம் இலங்கையிலே இனப்படுகொலை இடம்பெற்றது என்று சொல்லுகிற போது இந்தியா அது தொடர்பாக வாயை துறக்கவில்லை. யாரோ யாரோ என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் எங்களுக்காக பரிந்து பேசுகிற போது எங்களுடைய உணர்வோடு தொடர்புபட்டு எங்களுடைய உறவுகளாக இருக்கக்கூடிய இந்தியா இந்த விவகாரத்தில் இப்படியான ஒரு நிலைப்பாட்டையில் இருப்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் ஒவ்வொரு ஈழ தமிழனின் கேள்வியுமாக இருக்கிறது. குறிப்பாக சொல்லிக்கொள்ள வேண்டுமாக இருந்தால் இந்த விவகாரத்திலே தமிழ்நாட்டு தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளையும் கருத்துக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் நாங்கள் எப்போதுமே இந்த தமிழ்நாட்டு தமிழர்களை நாங்கள் குற்றம் சாட்டியதில்லை. அவர்கள் எங்களுக்காகவே தங்களுடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுடைய சுயநிர்மை உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் 21க்கும் அதிகமான தமிழ்நாட்டு தலைவர்கள் தங்களினுடைய உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களை நாங்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டோம். அவர்கள் எங்களுடைய நினைவுகளில் கலந்தவர்கள். ஆனால் இந்தியா என்று ஒருமித்த நாடு என்று வருகிற போது இந்தியா எங்களுக்காக செய்கின்றது விடயங்களை பற்றிதான் நாங்கள் பேசுகின்றோம். எங்களினுடைய உரிமைகளை பறைக்கிறது எங்களுடைய இறப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. மீண்டும் மீண்டும் இப்படியான சம்பவங்களை இடம் பெறுகிறது. குறிப்பாக இளத்தமிழனே ஒரு சோகத்தின் வடுக்களிலே தாங்கி தங்களுடைய இழப்புகளை பேசி கொண்டிருக்கக்கூடிய காலப்பகுதியில் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜியா கென்றிக்கு சென்று அங்கே இருக்கக்கூடிய மகாநாயக தேர்களை சந்தித்து அவர்களுக்கு தன்னை அவர்களிடம் அரசு தன்னுடைய எதிர்காலத்திற்காக தன்னுடைய நாட்டினுடைய எதிர்காலத்திற்காக அவர்களிடம் ஆசி பெற்று வந்ததாக செய்தி வெளியிடுகிறார்கள். ஆக ஒரு பக்கமாக ஈழத்ததமிழ் மக்கள் தங்களுடைய உறவுகளை தொலைத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக வீதிகளில் காத்திருக்கிறார்கள். கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி ஒரு பக்கமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் தனக்கு ஏதும் சம்பந்தம் இல்லை என்பது போல இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒரு பக்கமாக இருந்தால் கூட போதும். ஆனால் மீண்டும் மீண்டும் ஈழ தமிழர்களுடைய மனதில் வெஞ்சினத்தை பாற்றி வெந்த புண்ணிலே வேலை பாற்றுவது போன்ற நகர்வுகளை எப்படி ஏற்றுக்கொள்வது என்ற ஒரு கேள்வி இருந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இந்த விவகாரத்திலே திமுகாவினுடைய தலைவர் முக ஸ்டாலின் ஒரு அதிர்விலைகளை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல இன்னும் சொல்லக்கொள்ள வேண்டுமாக இருந்தால் அன்புமணி ராமதாஸ் இதனை கண்டித்திருக்கிறார். இப்படிக்காக சில கருத்துக்கள் இப்போது வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பாஜாகா தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பை வரவேற்றி இருப்பதாக சோதி இருக்கிறார்கள். இந்தியாவினுடைய சட்டங்களை மதிக்க வேண்டும் என்று சொல்லியும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான சட்டங்களை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லியும் அவர் சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம் எந்த அளவுக்கு பாரதரமான நிலைமை ஏற்படுத்துகிறது என்று பாருங்கள். ஒரு தமிழனாக தமிழனுடைய உணர்வை புரிந்து கொள்ள முடியாத நிலையில் எங்களுடைய தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறார்களா என்ற கேள்வியையும் நான் இந்த நேரத்தில் முன்வைத்து விடுகிறேன். அதே நேரம் நான் உங்களோடு இன்னும் சில விடயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கு துருவான செய்தி வெளியிடப்பட்டிருக்கக்கூடிய ஒரு செய்தி தளத்திலே சில தமிழ்நாட்டு உறவுகள் இப்படி கருத்துக்களை இட்டிருந்தார்கள். இதனை வாசிக்கின்ற போது எங்களுடைய மனம் எந்த அளவுக்கு வெந்திருக்கும் என்று சொல்லி நீங்கள் ஊகித்து கொள்ளுங்கள். அதாவது இந்த சில மேற்கொள் காட்டக்கூடிய கருத்துக்களை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அப்போ இதுக்கு அகதிகள் முகாம் கட்டி இலங்கை அகதிகளை தங்க வைத்திருக்கிறீர்கள். அடிச்சு துரத்த வேண்டியதுதானே. ஒருவேளை இங்கே அகதிகள் முகாம் இருப்பது இந்த நீதிபதிகளுக்கு தெரியாதா? அடுத்தது சம்மட்டி வழக்கி பதிவு செய்யும்போது இந்த மாதிரியான தீர்ப்பை உடனே வழங்கி விட வேண்டும். இன்னும் ஒரு கருத்து இந்தியாவில் இலங்கை குடிமகன் தங்க சட்டபூர்வ உரிமை இல்லை. சட்டபூர்வ விதி அதிகாரம் இல்லாத கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞன் வனுவாக தாக்கல் செய்வது சட்ட விரோதம். நீதிபதி கருத்தும் தீர்வும் சரியானது அப்படிங்கற கருத்து. அதேபோல திருட்டு ரயிலே வந்த வினைதான் இலங்கை அகதிகள் அனுபவிக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன். திருட்டு ரயிலேறி வந்த வினைதான் இலங்கை அகதிகள் மீண்டும் அனுபவிக்கிறார்கள். இப்போதாவது நீதிபதிகள் உணர்ந்தார்களே இதை போல தட்டி வைத்து கொள்ள வேண்டும் அவர்களை அப்படியும் கருத்துக்கள். ஆனால் சில கருத்துக்கள் வந்திருக்கிறது. கேள்விகள் கேட்கும் உரிமை இந்த நீதிமன்றத்திற்கு இருக்கும் என்று சொன்னால் இனப்படுகலக்கு இந்திய ராணுவத்தை அனுப்பியது சரியா? ஒதுங்கி இருந்தால் அவர்கள் அங்கேயே இருந்திருப்பார்கள் இந்த விடயத்தை நாங்கள் ஒரு முக்கியமான விடயமாக பார்க்கலாம். கனம் நீதிபதி அவர்களே ஏற்கனவே நமது சத்திரத்தில் பல டோகங்கியாக்கள் இருக்கிறார்கள். அவர்களை என்ன செய்ய போகிறீர்கள் என்று சொல்லி ஒரு கேள்வி இருக்கிறது. சில கருத்துக்களைதான் நான் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதாவது எங்களுடைய விவகாரத்திலே நீங்கள் தலையிடாமல் இருந்திருந்தால் உங்களுடைய அமைதிப்படை என்ற போர்டையில் அட்டூடிய படை இலங்கைக்கு வந்து வடக்கு கிழக்கிலே எங்களுடைய மக்களை இருப்பை அவர்களின் மீது துப்பாக்கி சூடுகளை அவர்களுடைய இருப்பின் மீதான ஆயுத பிரயோகத்தை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் எங்களுடைய மக்கள் எங்களுடைய நாட்டில் ஏதோ ஒன்று செய்து கொண்டிருந்திருப்பார்கள். எங்களுடைய மக்களுக்கான போராட்டம் அவர்களுக்கானதாக இருந்திருக்கும். நீங்கள் ஆயுதம் கொடுத்து படையினரை அனுப்பி 2009லே முள்ளிவாய்க்காலிலே அந்த பேரவலத்தை நிகழ்த்தாமல் இருந்திருந்தால் எங்களுடைய மக்கள் உங்களிடம் வந்து அகதிகளாக இருந்திருக்க மாட்டார்கள். இந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய சுய நிர்ணய ஆட்சியை நிரூபித்திருப்பார்கள். நான் ஒரே ஒரு விடயத்தை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திவிட்டு வருகிறேன். அதாவது 2009க்கு முற்பட்ட காலப்பகுதியிலே வடக்கிலே குறிப்பாக இந்த புதுக்குடியி இருப்பு வந்திரி பிராந்தியத்திலே ஒரு யாசகம் பெறுகின்ற நபரை கூட நீங்கள் அடையாளம் காட்ட முடியாது. அந்த அளவுக்கு எங்களுடைய நிலமும் எங்களுடைய மக்களும் எங்களை காப்பாற்றிக் கொண்டவர்களும் எங்களுடைய காவலர்களாக இருந்தவர்களும் இருந்திருந்தார்கள். இந்த தேசம் தன்னிறைவான ஒரு தேசமாக எங்களுடைய தேசம் இருந்தது. நாங்கள் யாருக்கு இடமும் சோற்றுக்காக பிச்சை எடுக்கவில்லை. அரிசிதாரங்கள் பரப்பு தாருங்கள் என்று சொல்லி வீதிக்கு செல்லவில்லை. நாங்கள் நிறைவானவர்களாக இருந்தோம். ஆனால் அந்த அத்தனை விடயங்களையும் மாற்றியதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. நீங்கள் செய்த இந்த வினைகளின் பாரதூரங்களை உணர்ந்து என்றாலும் எங்களுடைய மக்களினுடைய இருப்பின் மீதான கேள்விக்கு உட்படுத்தலை தொடர்ந்து தவிர்த்து விடுங்கள். இது ஒரு அன்பான வினயமான வேண்டுகோள். மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுக்கிறேன். எங்களுடைய தமிழ்நாட்டு உறவுகளின் மீது எங்களுக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. உங்களிடம் அன்பான வேண்டுகோள். எங்களுடைய ஈழத் தமிழ் மக்களினுடைய அந்த இறப்புக்காக உங்களுடைய பிராந்திய ஒன்றிய அரசுகளை வலியுறுத்துங்கள். அன்பான உறவுகளே நாளை மற்றுமொரு இன்றைய அதிர்வினோடாக உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் அதுவரை வணக்கம் https://tamilwin.com/
  9. ஈழத்தமிழர்களை ஒடுக்க இந்தியா எடுத்த புதிய ஆயுதம்: நம்பி நம்பி ஏமாறும் தமிழர்கள். ஈழத்தமிழர் விவகாரத்தில் தொடர்ந்தும் வெறுப்பை வெளிப்படுத்தி வரலாற்று துரோகங்களை அரங்கேற்றி வரும் இந்தியா தம்மை நம்பி வந்த ஈழ தமிழர்களை 30 ஆண்டுகளுக்கு மேல் அகதிகளாகவே நடாத்துகின்ற அவலம் நேற்று இந்திய உச்சநீதிமன்றத்தில் ஈழ அகதி ஒருவர் தொடர்பான தீர்ப்பின் மூலம் மீளவும் தன்னை ஒரு ஈழத்தமிழர்களுக்கு எதிரான ஒரு நாடாக அடையாளப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் காந்தி சதுக்கம் ,காந்தி பூங்கா , மகாத்மா காந்திக்கு சிலை என்று இலங்கையர்கள் இந்தியாவின் மீதான ஆதரவை வெளிப்படுத்தினாலும் இந்தியாவோ ஒரு எதிரியை பாவிப்பது போலவே பாவித்து வருகிறது. இந்த நிலையில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியா இதுவரை என்ன செய்திருக்கிறது என்று கேட்டால் உண்மையில் இதுவரை எதுவுமே செய்யவில்லை என்பதுதான் பதில். இந்தியாவின் ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடுகளை பற்றியும் தமிழரின் தேசிய வேட்கையை சிதைத்த இந்திய நகர்வுகள் தொடர்பாகவும் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு. வணக்கம். இன்றைய நாளும் மற்றுமொரு ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வின் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று 2052025 இன்றைய நாளை பொறுத்தவரை நாங்கள் பேச வேண்டிய விடயம் அல்லது பேசுகின்ற மிக முக்கியமான ஒரு விடயமாக மாறியிருப்பது ஒரு அகதியினுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பது மாத்திரமல்லாமல் அதற்கு சொல்லப்பட்டிருக்கக்கூடிய காரணம் என்பது ஈழத்தமிழ் மக்களிடையே அவர்களுடைய மனங்களில் இவ்வளவு காலமும் இந்தியா தன்னுடைய தந்தைய நாடு என்பதும் இந்தியா எங்களுக்கு ஆதரவாக இப்போதாவது ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கையோடும் இருந்த மக்களுக்கு மிகப்பெரிய அதிர்வலைகளையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைய தினம் இந்தியாவிலிருந்து ஒரு செய்தி வெளிவந்தது. அந்த செய்தியை நான் உங்களோடு இப்போது பகிர்ந்து கொள்கிறேன். 140 கோடி மக்கள் தொகையுடன் ஏற்கனவே போராடி வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள அகதிகளுக்கு இடமளிக்கக்கூடிய இந்தியா ஒன்றும் தர்மசாலை அதாவது இலவச தங்குமி இடம் அல்ல என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாகவும் இலங்கை தமிழகதியினுடைய தங்குமிடத்திற்கான அனுமதி கோரிக்கையை நிராகரித்திருப்பதாகவும் அந்த செய்தி வெளிவந்தது. தமிழில் விடுத்தலை புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்ததாக இலங்கை தமிழரான ஒரு மனுதாரர் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தனிநபர் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் யுஏபிஏ என்று சொல்லக்கூடிய சட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தினால் அந்த நபர் குற்றவாளி என தீர்ப்பாளிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அவரது சிறைதண்டனையை 10 ஆண்டுகளில்ிருந்து ஏழு ஆண்டுகளாக கடந்த 2022 ஆம் ஆண்டு குறைத்திருந்தது. அதன் அத்தோடு அவரது சிறைதண்டனை முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டது. மேலும் மூன்று வருடங்களாக அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த நபர் இலங்கைக்கு திரும்பினால் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எனவே தன்னை இலங்கைக்கு நாடு கடத்து விளைதை தடுத்து நிறுத்த கூறியும் உச்ச நீதிமன்றத்திலே மனுதாக்கல் செய்திருந்தார். தான் முறையான விசாவின் மூலமாக இந்தியா வந்ததாகவும் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் இப்போது இந்தியாவிலே குடியேறி விட்டனர் எனவும் அந்த மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளான தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு உலகம் முழுவதிலும் இருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? நாங்கள் 140 கோடியுடன் போராடுகிறோம். இது எல்லா இடங்களிலும் இருந்து வரும் வெளிநாட்டினரை மகிழ்விக்க கூடிய தர்மசாலை அல்ல. இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என கூறி இந்த மதுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டிருக்கிறது என்பதை சொல்லிக்கொள்ளலாம். அதே நேரம் குறிப்பாக ஒரு விடயத்தையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். கடந்த 2024ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்திலே ஒரு இலங்கை தமிழர்களுடைய குடியுரிமை மனைவை பரிசலித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அதனை விரைவாக தீர்மானிக்குமாறு நீதிமன்றம் உத்திரவெற்றிருந்த ஒரு வழக்கையும் நான் உங்களுக்கு மேற்கொள் காட்டி விடுகிறேன். ஆக இந்த வழக்கினுடைய தீர்ப்பில் நான் இறுதியாக கூறியது. இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுருந்தார்கள். ஆக இந்தியா எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஈழத்ததமிழர்களுக்கான தீர்வுக்காகவோ அல்லது ஈழத்ததமிழர்களுடைய பிரச்சனையிலோ தலையிட போவதில்லை. அவர்களுக்காக பரிந்து பேச போவதில்லை என்ற ஒரு விடயத்தை மிக் தெளிவாக இந்திய நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. ஆக இந்த விவகாரத்திலே இன்று ஒரு நாள் இந்தியா எங்களுக்காக ஒரு தீர்வை பெற்று தரும். இந்தியாவால் தான் எங்களுக்கு விடிவு கிடைக்கும் என்று சொல்லி நம்பி இருக்கக்கூடிய ஆயிரம் ஆயிரம் ஈழ தமிழ் உள்ளங்களை இந்தியா இந்த தீர்ப்பின் மூலமாக மாற்றி இருக்கிறது. குறிப்பாக சொல்லக்கூடிய வேண்டுமாக இருந்தால் நான் ஏழவே குறிப்பிட்டிருக்கக்கூடிய ஒரு விடயம்தான். இந்த இந்தியாவினுடைய அமைதிப்படை இலங்கைக்கு வந்தது. அப்போது அந்த அமைதிப்படை இலங்கைக்கு வந்த நாளினை மிக கோலாகலமாக கொண்டாடினார்கள். அவர்களை தலையிலே தூக்கி வைத்து கொண்டாடினார்கள் ஈழத்தின் தமிழ் மக்கள். அதாவது எங்களை காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம் வந்திருக்கிறது. ஸ்ரீலங்க அரசினுடைய தொடர் நடவடிக்கைகளில் இருந்து ஈழ தமிழ் மக்களாக எங்களை காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம் வந்திருக்கிறது என்று சொல்லி அவர்கள் சந்தோஷப்பட்டார்கள் ஊர்வலங்க செய்தார்கள் மகிழ்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த நிலைமை முற்றாக மாறி ஈழ தமிழ் மக்கள் கண்டு அஞ்சி ஒழிக்கின்ற ஒரு ராணுவமாக இந்திய ராணுவம் இருந்தது. இந்திய ராணுவம் படுகொலைகளை செய்தது பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்டது. இன்னும் இன்னும் சொல்லிக்கொள்ள வேண்டுமாக இருந்தால் மிக காடைனமாக வைத்திய சாலைக்குள் புகுந்து நோயாளர்களை சுட்டு கொண்டது. இப்படியான நடவடிக்கைகளை செய்தது. அந்த நிலைமையிலும் கூட அதன் பின்பதாகவும் கூட இளதமிழ் மக்கள் இன்றுவரை இந்தியா எங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்யும் என்று சொல்லி நம்புகிறார்கள். அன்பான தமிழக உறவுகளே என்னுடைய இந்த பேச்சை கண்டு நீங்கள் கொதைத்து எழலாம். உங்களுடைய ஆக்ரோசமான கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் நான் சில விடயங்களை உங்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் இந்தியாவை விரோதிகளாக பார்த்தது இல்லை. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சண்டை வருகிற போது பெரும்பாலான இழத்து தமிழ் மக்களுடைய மனநிலை இப்போதும் ஆகியிருக்கிறது பாகிஸ்தானுடைய பக்கமாக என்று சொல்லி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் துடுப்பாட்டம் அதாவது கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெற்றால் கூட எங்களுடில் பலரினுடைய ஆதரவு என்பது இந்தியாவினுடைய பக்கமாக இருக்கும். ஏனென்று சொன்னால் இந்தியாவினுடைய எதிரிநாதரி பாகிஸ்தான். ஆகவே எங்களுக்கு பாகிஸ்தான் மீது விருப்பமில்லை. பாகிஸ்தானோடு உடன்பட நாங்கள் தயாரில்லை என்று மனநிலையில் தான் இளத்தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். எங்களுடைய ஒவ்வொரு வீதிகளிலும் ஒவ்வொரு ஊர்களிலும் வடக்குக்கிழக்கில் இருக்கக்கூடிய பெரும்பாலான இடங்களிலே மகாத்மா காந்திக்கு சிலை வைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம் இருக்கக்கூடிய ஒவ்வொரு இடங்களிலும் ஒரு வீதிக்கு காந்தி வீதி என்று பெயரிட்டிருப்பார்கள். அதேபோல காந்தி சதக்கம் என்று சொல்லி ஒரு சதக்கத்தை ஒதுக்கி இருப்பார்கள். அதை தாண்டி மகாத்மா காந்தி பூங்கா என்று சொல்லி பூங்காவை வைத்திருப்பார்கள். இப்படி நிறையவே இந்தியாவினுடைய விவகாரங்களிலும் இந்தியாவை சார்ந்தவர்களையும் அவர்கள் தூக்கி எறிந்ததாகவோ நிராகரித்ததாகவோ அல்லாமல் பெருமைப்படுத்தக்கூடிய வகையிலே செயல்பட்டிருக்கிறார்கள். எங்களுடைய பலரினுடைய ஒரு தலைமுறைக்கு முற்பட்ட பெயர்களை பார்க்கிற போது இந்திரா சந்திரபோஸ் இப்படியான பெயர்களை எங்களுடைய மக்கள் சூடி இருந்தார்கள். அந்த அளவுக்கு நாங்கள் இந்தியாவோடு மிக நெருக்கமாக எங்களுடைய உணர்வுகளை பேணி இருந்தோம். ஆனால் இந்தியா தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்கிறது? பெரும்பாலான உறவுகள் குறிப்பிடக்கூடிய விடயம் இந்தியா வீடு கட்டி கொடுத்திருக்கிறது. சந்தோஷமாக வைத்திருக்கிறது ஈழத்ததமிழர்களுக்கு நன்றி இல்லை என்பது. இந்தியா வீடு கட்டி கொடுத்திருக்கிறது என்பது ஈழதமிழர்களுடைய தேவை வீடு கட்டி தருவது அல்ல. எங்களால் உழைத்து எங்களுக்கான வீடுகளை கட்ட முடியாமல் இல்லை. ஆக இந்த விவகாரத்திலே வீடு கட்டி கொடுத்தது இந்தியா தமிழர்களுக்கு நன்றி இல்லை என்ற வார்த்தைகளை சொல்லுகின்றவர்கள் நீங்கள் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். குறிப்பாக ஒரு விடயத்தை நான் இங்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஈழ தமிழர்கள் தங்களுடைய கடந்த கால யுத்தத்தின் காரணமாக உலகமங்கிலுமே பரவிச் சென்றார்கள். அப்படி அவர்கள் பதவி சென்ற நாடுகளிலே ஒவ்வொரு நாடுகளிலும் அவர்களுக்கான அங்கீகாரம் என்பது எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்று சொன்னால் அந்த நாடுகளிலே நாடாளுமன்ற உறுப்பினர்களாக அந்த நாடுகளினுடைய அமைச்சர்களாக மாறும் அளவுக்கு இருந்திருக்கிறது. கனடாவிலே இப்போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். பிரதானியாவுக்கு பார்க்கிற போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். உமாகுமரன் என்று சொல்லக்கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். ஆவஸ்திரேலியாவிலே ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். அவர்கள் எல்லாம் ஆவஸ்திரேலியாவிலேயும் பிரதானியாவிலும் கனடாவிலும் பிறந்து விளந்தவர்கள் அல்ல. இந்த நாட்டில இருந்து அகதியாக சென்றவர்கள் அந்த நாட்டிலே இருந்து அகதியாக சென்றவர்களுடைய பிள்ளைகள் அவர்களுக்கு அந்த நாடுகள் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. பிரதானியாவை பொறுத்தவரை ஒரு ஐந்து ஆண்டுகள் அந்த நாட்டிலே அகதியாக இருந்தால் பெர்மனன்ட் ரெசிடன்ட் என்று சொல்லக்கூடிய பிஆர் வழங்குவார்கள். அதேபோல 10 ஆண்டுகளிலே அந்த நாட்டினுடைய குடியுரிமை வழங்குவார்கள். ஆனால் இந்த இந்தியாவிலே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 84ஆம் ஆண்டுக்கு பின்பதாக நிறைய பேர் எங்களுடைய தமிழ் மக்கள் இந்தியாவிலே தஞ்சம் கூறினார்கள். அவர்கள் 30 35 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அகதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக யாரோ யாரோ எல்லாம் அநிய நாடுகள் எல்லாம் இந்த தமிழர்களுக்குரிய உரிமையையும் அவர்களுக்கான அகதி அந்தஸ்தை நீக்கி அவர்களை தங்களுடைய குடிமக்களாக அரவணைத்துக் கொள்கிற போது நாங்கள் முழுவதுமாக நம்பி இருந்த இந்தியா எங்களை அகதிகளாக வைத்து பார்க்கிறது 30 ஆண்டுகள் கடந்தும் அகதி முகாம்களிலே அடிப்படை உரிமைகள் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு நிலைமை இருக்கிறது. நிச்சயமாக ஒரு விடயத்தை நாங்கள் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த இலங்கையில் இந்திய தமிழர்கள் இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு குடியுரிமை இருக்கிறது. ஒரு காலத்திலே அவர்களுடைய குடியுரிமை கேள்விக்கு உட்படுத்தப்பட்டபோது இதே ஈழத்ததமிழர் சமூகம் அவர்களுக்காக பின்னின்றது. தந்தை செல்வநாயகம் அவர்கள் எதிர்த்து நின்றார். அந்த தமிழர்களுக்காக பேசினார். அவர்களும் எங்களுடைய மக்கள் என்று பேசினார். ஆனால் இந்தியா அப்படியாக பேசுவதற்கான வாய்ப்பையே நிராகரித்திருக்கிறது. இப்படி இருக்கக்கூடிய சூழலில் அன்பான தமிழக உங்களிடம் விரயமாக வேண்டுகின்ற விடயம். உங்களைப் போலவே நாங்களும் இருக்கிறோம். உங்களை போல உங்களை மீது நாங்கள் பற்றுத்தி கொண்டிருக்கிறோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம். உங்களின் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறோம். நீங்கள் எங்களுடைய உணர்வுகளில் கலந்து எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளாக நாங்கள் உங்களை பார்க்கிறோம். இந்தியா எங்களுடைய தந்தையர் தேசம் என்று சொல்லி நாங்கள் அடிக்கடி சொல்லி கொள்வோம். அப்பா என்று அழைத்து ஒரு பிள்ளையை தள்ளிவிட்டு நீ மாற்றான் பிள்ளை என்று சொல்வதுதான் நியாயமாக இருக்கிறதா இந்தியாவுக்கு என்ற ஒரு கேள்வி இருந்து கொண்டிருக்கிறது. ஈழ தமிழர்கள் இன்று ஒரு நாள் இந்தியா எங்களுடைய விவகாரத்தில் தலையிடும் எங்களுக்காக ஒரு தீர்வை பெற்று தரும் நாங்கள் சுதந்திரமாகவும் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ வழி அமைத்து தரும் என்று சொல்லி எதிர்பார்ப்போடுதான் இருந்தார்கள். ஆனால், இப்போது அந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த தீர்வு மிகப்பரிய அதிர்வலைகளையும், மிகப்பெரிய மாற்றங்களையும் உண்டு பண்ணும் என்பதை மறந்து விடாதீர்கள். ஆக அன்பான சொந்தங்களே எங்களுடைய தமிழ்நாட்டு சொந்தங்கள் எங்களுக்காக பேசுகிறார்கள். அவர்கள் எங்களுடைய வரலாறுகளை கடத்துகிறார்கள். எங்களுடைய கருத்துக்களை எங்களுடைய கதைகளை பேசுகிறார்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் அவர்களை குற்றம் சொல்லவில்லை. ஒரு ஒன்றிய நாடாக ஒருமித்த நாடாக இந்தியாவிடம் இதனை வலியுறுத்துங்கள் அன்பான உறவுகளே ஈழ தமிழர்கள் நம்முடைய சொந்தங்கள் நம்முடைய மக்கள் இந்த நிலைப்பாட்டை அவர்களுக்கு தெளிவுபடுத்துங்கள். அவர்கள் நிச்சயமாக இந்தியா எங்களுக்கு என்ன செய்தது என்ற கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். குறிப்பாக இந்த இளத்தமிழர்களுடைய போராட்ட வரலாற்றை பொறுத்தவரை அன்றைய காலகட்டத்திலே இந்தியாவில் இருந்து பயிற்சி பெற்று வந்த போராளிகளினுடைய மொத்த எண்ணிக்கை 40,000ஆக இருந்தது. அந்த நேரத்தில் ஸ்ரீலங்காவினுடைய ராணுவ எண்ணிக்கை வெறும் 9,000ஆக இருந்தது. அந்த நேரத்தில் நினைத்திருந்தால் தமிழ் தரப்புகள் எந்த வகையான போராட்டங்களை எந்த வகையான நகர்வுகளை மேற்கொண்டிருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள். ஆனால் இந்தியா ஒற்றுமைக்கு கொஞ்சம் விளைவிக்க முடியாது என்ற அடிப்படையில் அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. அதேபோல பிரட் என்று சொல்லக்கூடிய அமைப்புக்கு வந்திருக்கக்கூடிய அந்த காலப்பகுதியிலே ஆயுதம் ஏakே47 என்று சொல்லக்கூடிய ஆயுதங்கள் வந்தது. அதனை பறைத்துக் கொண்டதுமே இந்தியா. இப்படியாக நிறைய சம்பவங்களை செய்தது. ஒற்றுமையாக இருந்து அந்த 40,000 போராளிகளை பிளவுபடுத்தி அவர்களுக்குள் ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டு ஒருவர் ஒருவர் தங்களுடைய இனத்தினுடைய கூடாரை காம்புகளாக அவர்களை மாற்றிய பெருமை இந்தியாவை சார்ந்ததாக இருக்கிறது. ஆகவேதான் இந்த விவகாரத்திலே நாங்கள் தொடர்ச்சியான அதிர்வனைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. வேந்த புண்ணிலே வேல் பாற்றுவது போலவே இந்தியா நடந்து கொண்டே இருக்கிறது. இந்தியா ஈழ தமிழர்களுடைய சுய நிர்ணயத்தை மறக்கிறது. ஈழ தமிழர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கக்கூடிய இனப்படுகொலையை நிராகரிக்கிறது. உலக நாடுகள் எல்லாம் இலங்கையிலே இனப்படுகொலை இடம்பெற்றது என்று சொல்லுகிற போது இந்தியா அது தொடர்பாக வாயை துறக்கவில்லை. யாரோ யாரோ என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் எங்களுக்காக பரிந்து பேசுகிற போது எங்களுடைய உணர்வோடு தொடர்புபட்டு எங்களுடைய உறவுகளாக இருக்கக்கூடிய இந்தியா இந்த விவகாரத்தில் இப்படியான ஒரு நிலைப்பாட்டையில் இருப்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் ஒவ்வொரு ஈழ தமிழனின் கேள்வியுமாக இருக்கிறது. குறிப்பாக சொல்லிக்கொள்ள வேண்டுமாக இருந்தால் இந்த விவகாரத்திலே தமிழ்நாட்டு தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளையும் கருத்துக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் நாங்கள் எப்போதுமே இந்த தமிழ்நாட்டு தமிழர்களை நாங்கள் குற்றம் சாட்டியதில்லை. அவர்கள் எங்களுக்காகவே தங்களுடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுடைய சுயநிர்மை உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் 21க்கும் அதிகமான தமிழ்நாட்டு தலைவர்கள் தங்களினுடைய உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களை நாங்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டோம். அவர்கள் எங்களுடைய நினைவுகளில் கலந்தவர்கள். ஆனால் இந்தியா என்று ஒருமித்த நாடு என்று வருகிற போது இந்தியா எங்களுக்காக செய்கின்றது விடயங்களை பற்றிதான் நாங்கள் பேசுகின்றோம். எங்களினுடைய உரிமைகளை பறைக்கிறது எங்களுடைய இறப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. மீண்டும் மீண்டும் இப்படியான சம்பவங்களை இடம் பெறுகிறது. குறிப்பாக இளத்தமிழனே ஒரு சோகத்தின் வடுக்களிலே தாங்கி தங்களுடைய இழப்புகளை பேசி கொண்டிருக்கக்கூடிய காலப்பகுதியில் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜியா கென்றிக்கு சென்று அங்கே இருக்கக்கூடிய மகாநாயக தேர்களை சந்தித்து அவர்களுக்கு தன்னை அவர்களிடம் அரசு தன்னுடைய எதிர்காலத்திற்காக தன்னுடைய நாட்டினுடைய எதிர்காலத்திற்காக அவர்களிடம் ஆசி பெற்று வந்ததாக செய்தி வெளியிடுகிறார்கள். ஆக ஒரு பக்கமாக ஈழத்ததமிழ் மக்கள் தங்களுடைய உறவுகளை தொலைத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக வீதிகளில் காத்திருக்கிறார்கள். கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி ஒரு பக்கமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் தனக்கு ஏதும் சம்பந்தம் இல்லை என்பது போல இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒரு பக்கமாக இருந்தால் கூட போதும். ஆனால் மீண்டும் மீண்டும் ஈழ தமிழர்களுடைய மனதில் வெஞ்சினத்தை பாற்றி வெந்த புண்ணிலே வேலை பாற்றுவது போன்ற நகர்வுகளை எப்படி ஏற்றுக்கொள்வது என்ற ஒரு கேள்வி இருந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இந்த விவகாரத்திலே திமுகாவினுடைய தலைவர் முக ஸ்டாலின் ஒரு அதிர்விலைகளை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல இன்னும் சொல்லக்கொள்ள வேண்டுமாக இருந்தால் அன்புமணி ராமதாஸ் இதனை கண்டித்திருக்கிறார். இப்படிக்காக சில கருத்துக்கள் இப்போது வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பாஜாகா தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பை வரவேற்றி இருப்பதாக சோதி இருக்கிறார்கள். இந்தியாவினுடைய சட்டங்களை மதிக்க வேண்டும் என்று சொல்லியும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான சட்டங்களை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லியும் அவர் சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம் எந்த அளவுக்கு பாரதரமான நிலைமை ஏற்படுத்துகிறது என்று பாருங்கள். ஒரு தமிழனாக தமிழனுடைய உணர்வை புரிந்து கொள்ள முடியாத நிலையில் எங்களுடைய தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறார்களா என்ற கேள்வியையும் நான் இந்த நேரத்தில் முன்வைத்து விடுகிறேன். அதே நேரம் நான் உங்களோடு இன்னும் சில விடயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கு துருவான செய்தி வெளியிடப்பட்டிருக்கக்கூடிய ஒரு செய்தி தளத்திலே சில தமிழ்நாட்டு உறவுகள் இப்படி கருத்துக்களை இட்டிருந்தார்கள். இதனை வாசிக்கின்ற போது எங்களுடைய மனம் எந்த அளவுக்கு வெந்திருக்கும் என்று சொல்லி நீங்கள் ஊகித்து கொள்ளுங்கள். அதாவது இந்த சில மேற்கொள் காட்டக்கூடிய கருத்துக்களை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அப்போ இதுக்கு அகதிகள் முகாம் கட்டி இலங்கை அகதிகளை தங்க வைத்திருக்கிறீர்கள். அடிச்சு துரத்த வேண்டியதுதானே. ஒருவேளை இங்கே அகதிகள் முகாம் இருப்பது இந்த நீதிபதிகளுக்கு தெரியாதா? அடுத்தது சம்மட்டி வழக்கி பதிவு செய்யும்போது இந்த மாதிரியான தீர்ப்பை உடனே வழங்கி விட வேண்டும். இன்னும் ஒரு கருத்து இந்தியாவில் இலங்கை குடிமகன் தங்க சட்டபூர்வ உரிமை இல்லை. சட்டபூர்வ விதி அதிகாரம் இல்லாத கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞன் வனுவாக தாக்கல் செய்வது சட்ட விரோதம். நீதிபதி கருத்தும் தீர்வும் சரியானது அப்படிங்கற கருத்து. அதேபோல திருட்டு ரயிலே வந்த வினைதான் இலங்கை அகதிகள் அனுபவிக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன். திருட்டு ரயிலேறி வந்த வினைதான் இலங்கை அகதிகள் மீண்டும் அனுபவிக்கிறார்கள். இப்போதாவது நீதிபதிகள் உணர்ந்தார்களே இதை போல தட்டி வைத்து கொள்ள வேண்டும் அவர்களை அப்படியும் கருத்துக்கள். ஆனால் சில கருத்துக்கள் வந்திருக்கிறது. கேள்விகள் கேட்கும் உரிமை இந்த நீதிமன்றத்திற்கு இருக்கும் என்று சொன்னால் இனப்படுகலக்கு இந்திய ராணுவத்தை அனுப்பியது சரியா? ஒதுங்கி இருந்தால் அவர்கள் அங்கேயே இருந்திருப்பார்கள் இந்த விடயத்தை நாங்கள் ஒரு முக்கியமான விடயமாக பார்க்கலாம். கனம் நீதிபதி அவர்களே ஏற்கனவே நமது சத்திரத்தில் பல டோகங்கியாக்கள் இருக்கிறார்கள். அவர்களை என்ன செய்ய போகிறீர்கள் என்று சொல்லி ஒரு கேள்வி இருக்கிறது. சில கருத்துக்களைதான் நான் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதாவது எங்களுடைய விவகாரத்திலே நீங்கள் தலையிடாமல் இருந்திருந்தால் உங்களுடைய அமைதிப்படை என்ற போர்டையில் அட்டூடிய படை இலங்கைக்கு வந்து வடக்கு கிழக்கிலே எங்களுடைய மக்களை இருப்பை அவர்களின் மீது துப்பாக்கி சூடுகளை அவர்களுடைய இருப்பின் மீதான ஆயுத பிரயோகத்தை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் எங்களுடைய மக்கள் எங்களுடைய நாட்டில் ஏதோ ஒன்று செய்து கொண்டிருந்திருப்பார்கள். எங்களுடைய மக்களுக்கான போராட்டம் அவர்களுக்கானதாக இருந்திருக்கும். நீங்கள் ஆயுதம் கொடுத்து படையினரை அனுப்பி 2009லே முள்ளிவாய்க்காலிலே அந்த பேரவலத்தை நிகழ்த்தாமல் இருந்திருந்தால் எங்களுடைய மக்கள் உங்களிடம் வந்து அகதிகளாக இருந்திருக்க மாட்டார்கள். இந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய சுய நிர்ணய ஆட்சியை நிரூபித்திருப்பார்கள். நான் ஒரே ஒரு விடயத்தை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திவிட்டு வருகிறேன். அதாவது 2009க்கு முற்பட்ட காலப்பகுதியிலே வடக்கிலே குறிப்பாக இந்த புதுக்குடியி இருப்பு வந்திரி பிராந்தியத்திலே ஒரு யாசகம் பெறுகின்ற நபரை கூட நீங்கள் அடையாளம் காட்ட முடியாது. அந்த அளவுக்கு எங்களுடைய நிலமும் எங்களுடைய மக்களும் எங்களை காப்பாற்றிக் கொண்டவர்களும் எங்களுடைய காவலர்களாக இருந்தவர்களும் இருந்திருந்தார்கள். இந்த தேசம் தன்னிறைவான ஒரு தேசமாக எங்களுடைய தேசம் இருந்தது. நாங்கள் யாருக்கு இடமும் சோற்றுக்காக பிச்சை எடுக்கவில்லை. அரிசிதாரங்கள் பரப்பு தாருங்கள் என்று சொல்லி வீதிக்கு செல்லவில்லை. நாங்கள் நிறைவானவர்களாக இருந்தோம். ஆனால் அந்த அத்தனை விடயங்களையும் மாற்றியதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. நீங்கள் செய்த இந்த வினைகளின் பாரதூரங்களை உணர்ந்து என்றாலும் எங்களுடைய மக்களினுடைய இருப்பின் மீதான கேள்விக்கு உட்படுத்தலை தொடர்ந்து தவிர்த்து விடுங்கள். இது ஒரு அன்பான வினயமான வேண்டுகோள். மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுக்கிறேன். எங்களுடைய தமிழ்நாட்டு உறவுகளின் மீது எங்களுக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. உங்களிடம் அன்பான வேண்டுகோள். எங்களுடைய ஈழத் தமிழ் மக்களினுடைய அந்த இறப்புக்காக உங்களுடைய பிராந்திய ஒன்றிய அரசுகளை வலியுறுத்துங்கள். அன்பான உறவுகளே நாளை மற்றுமொரு இன்றைய அதிர்வினோடாக உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் அதுவரை வணக்கம் https://tamilwin.com/ நன்றி: @பெருமாள் ################# ####################### இந்தியாவை நம்பி ஏமாறும்... @Kandiah57 அண்ணை போன்றவர்கள், நேரம் ஒதுக்கி இந்தக் கட்டுரையை வாசிக்க பரிந்துரை செய்கின்றேன். 🙂
  10. இங்கே பலர் நீதிபதியை திட்டுவது எய்தவன் இருக்க அம்பை நோகும் செயல். நீதிபதியின் வார்த்தை பிரயோகம் தவறானது ஆனால் தீர்ப்பல்ல. வழக்கு போட்டவர் இந்திய சட்டப்படி பயங்கரவாதிகளுக்கு துணையானவர். அதற்காக சிறையிடப்பட்டவர். இப்படியானவர்களை மேற்கில் இருந்து கூட நாடு கடத்துவர் (1951 அகதிகள் சாசனம் இவர்களுக்கு செல்லாது, ஆனால் ஐரோப்பிய மனித உரிமை சாசனம் செல்லும்). இந்திய CAB சட்டம் மிக தெளிவாக வெளிநாட்டவர் ஆகினும், யாருக்கு குடி உரிமை வழங்காலாம் என சொல்கிறது. அதில் இலங்க தமிழர் இல்லை. அண்டை நாடுகளில் இருக்கும் முஸ்லிம்களும் இல்லை. இதை இந்திய நாடாளுமன்றம் மிக தூர நோக்குடன், இந்தியாவை சூழ உள்ள ஆப்கானிஸ்தான், பங்களதேஷ், பாகிஸ்தான் நாடுகளில் இருக்கும் இந்துக்கள், சீக்கியர், ஜைனர் போன்றோர் மத ஒதுக்க்கலுக்கு உள்ளாகும் போது அனுமதிக்கலாம் என்றே சட்டம் ஆக்கியுள்ளது (இதுவும் இன்னுமொரு ஆர் எஸ் எஸ் கொள்கை). ஆகவே இந்த சட்டத்தைத்தான் நீதிபதி நடைமுறைபடுத்தி உள்ளார். இதற்கு ஒரே வழிதான் உள்ளது. தமிழ்நாட்டில் - திமுக அல்லது அதிமுக வில் மத்திய அரசு தங்கி இருக்கும் ஒரு நிலை மீள வரும் போது, இந்த சட்டத்தில் 2009 ற்கு முன் பதிந்த இலங்கை அகதிகளையும் சேர்க்க வேண்டும் என்பதை ஆட்சிக்கு ஆதரவு தர ஒரு நிபந்தனையாக முன்வைக்கலாம். அதற்கு முதல்படியாக நாம் இவ்விரு திராவிட கட்சிகளையும் இப்போ சீண்டாமல் இருக்க வேண்டும். நடக்கிற காரியாமா…
  11. அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்! 19 May 2025, 7:24 PM உலக நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு அடைக்கலம் தருவதற்கு இந்தியா ஒன்றும் ‘தர்ம சத்திரம்’ அல்ல என்று ஈழ அகதி சுபாஷ்கரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2015-ம் ஆண்டு ஈழத் தமிழரான சுபாஷ்கரன் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுபாஷ்கரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், சுபாஷ்கரனின் தண்டனை காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைத்தது சென்னை உயர்நீதிமன்றம். 2022-ம் ஆண்டு தண்டனைக் காலம் முடிவடைந்ததால் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட சுபாஷ்கரை, விரைவாக இலங்கைக்கு நாடு கடத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சுபாஷ்கரன் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை இன்று நீதிபதிகள் திபாங்கர் தத்தா, வினோத் சந்திரன் அமர்வு விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது சுபாஷ்கரன் தரப்பில், இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது; ஆகையால் சுபாஷ்கரன், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை இந்தியாவில் குடியேற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தத்தா, வினோத் சந்திரன் ஆகியோர், உலக நாடுகளில் இருந்து அகதிகள் வந்து குடியேறுவதற்கு இந்தியா தர்ம சத்திரம் (Dharamshala) கிடையாது; 140 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா ஏற்கனவே திணறிக் கொண்டு இருக்கிறது; இந்தியாவில் குடியேறுவதற்கு என்ன உரிமை உள்ளது? என கேள்வி எழுப்பினர். மேலும், இலங்கைக்கு திருப்பி அனுப்பும் போது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாடுகளை அணுகலாம் என்றும் தெரிவித்து சுபாஷ்கரனின் மனுவை தள்ளுபடி செய்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். https://minnambalam.com/india-is-not-a-dharamshala-to-grant-asylum-to-all-supreme-court-in-eelam-refugee-case/#google_vignette
  12. அமைச்சர் விஜித ஹேரத்தின் கவனத்துக்கு--- ”இன அழிப்பு“ என்று கூறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேர்காணல் ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள். சரி- ஏற்கிறோம்-- A) ஆனால், யாழ்ப்பாணம் -நகதீவ எனவும் திருகோணமலை -பெற்றிக்கோட்டை என்றும் தமிழ் வரலாற்று பாடநூலில் சிங்களப் பெயர்களாக ஏன் மாற்றினீர்கள்? B) சிங்கள இனவாதம் பாடநூலில் ஆரம்பிக்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா? C) வரலாற்று பாடநூலை பௌத்த தேரர்கள்தான் எழுதுகின்றனரே! தமிழ் வரலாற்று பாடநூலுக்கும் அது மொழி பெயர்க்கப்படுகிறதே! D) இன அழிப்பு என்பது மக்களை கொல்வது மாத்திரமல்ல. அந்த மக்களின் மரபுரிமைகளை அழித்தல், இன விகிதாசாரத்தை மாற்றும் திட்டமிட்ட குடியேற்றங்கள், வரலாற்றுத் திரிபுகள், சமயத்தை வரலாற்று பாடநூலில் புகுத்தல் உள்ளிட்ட அனைத்துமே இன அழிப்புத்தான். கீழே சில கேள்விகள் - விளங்கங்கள் உண்டு. பதில் தருமாறு தாழ்மையுடன் கேட்கிறேன். ------ ----- நீங்கள் உட்பட சிங்களத் தலைவர்களின் நிலைப்பாடு என்வென்றால், விடுதலைப் புலிகளுடன் நடத்த போரை மாத்திரம் வைத்தே இனப் பிரச்சினை விகாரத்தை நோக்குகின்றீர்கள். ஆனால், தமிழர்கள் கோருகின்ற “இன அழிப்பு” நீதி விசாரணை என்பது, 1956 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் கல்லோயா படுகொலையில் இருந்து 1958 ஆம் ஆண்டு கொழும்பு கலவரம் உள்ளிட்ட 2009 முள்ளிவாய்க்கால் வரையும் நீடித்து, பின்னர் கடந்த 15 வருடங்களில் காணி அபகரிப்பு - சிங்கள குடியேற்றம் - தமிழ் வரலாற்று பாடநூல்களில் பௌத்த சமய வரலாற்று மற்றும் சிங்களச் சொற்கள் திணிப்பு போன்ற விவகாரங்களில் இருந்து வர வேண்டும். குறிப்பாக 1920 இல் இலங்கைத் தேசிய இயக்கம் உடைந்து, 1921 இல் தமிழர் மகாசபை உருவானதில் இருந்து, ஏறத்தாள நூறு வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல் போராட்டம் இது. ஆனால், நீங்கள் உட்பட சிங்கள தலைவர்கள் அனைவருமே, இந்த விவகாரத்தை மிக இலகுவாக ”தமிழ் இனவாதம்” என்றும் புலிகளின் பயங்கரவாதம் எனவும் சித்தரித்து மூடி மறைக்கின்றீர்கள். 2019 ஆம் ஆண்டில் இருந்து நடைபெறுகின்ற கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயரில் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. A) யாழ்ப்பாணம் - நகதீவ B) திருகோணமலை - பெற்றிக்கோட்டை C) யாழ். ஊர்காவற்துறை -சூக்கிரசித்த, D) யாழ். கந்தரோடை - கந்துருகொட. E) காங்கேசன்துறை - ஜம்புகோள பட்டுன F) கதிர்காமம் - கஜராஜகம அல்லது கத்தரகம. அதேவேளை ---- 1) அரச செயற்பாடுகள் - ரஜகரிய 2) கிரமாத் தலைவன் - தமிக 3) குடும்பத் தலைவன் - குர்கபதி 4) கிராம சேகவர் - கிராம நிலதாரிய ---- என்ற சிங்கள சொற்கள் தமிழ் வரலாற்று பரீட்சை வினாத் தாளில் உண்டு. ஐ.நா.கல்வித் திட்ட யுனெஸ்கோ விதிகளின் பிரகாரம், பாடநூல்கள் அந்த அந்த மொழிகளிலேயே எழுதப்பட வேண்டும். அதுவும் வேறொரு இனத்தின் வரலாற்று பாடநூலில், இன்னொரு சமய வரலாற்றை புகுத்த முடியாது. ஒரு நாட்டில் எத்தனை தேசிய இனங்கள் வாழ்ந்தாலும், ஒவ்வொரு தேசிய இனங்களின் வரலாறுகளும் சமநிலையில் பாடநூலில் வர வேண்டும். ஆனால் இலங்கைத்தீவில் அப்படியல்ல. அதுவும் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் குறிப்பாக 2015 மைத்திரி - ரணில் என்று மார்தட்டிய, நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசாங்கமே, வரலாற்று பாடநூல்களில் சிங்கள சொற்களை புகுத்தியது. எழுத இன்னும் ஏராளம் உண்டு. இவை சில உதாரணங்கள் மாத்திரமே. ஆனாலும் மேலும் சில குறிப்புகள்-- 1) யாழ்ப்பாண இராஜியம், வரலாற்று பாடநூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 2) திருகோணமலை கந்தாளாய் குளம் குளக்கோட்ட மன்னன் கட்டியது. ஆனால் அக்கபோதி மன்னன் கட்டியதாக பாடநூலில் மாற்றப்பட்டுள்ளது. -- சோழகங்க தேவன் என்ற இயற்பெயரையுடைய குளக்கோட்டன் என்ற மன்னன், இலங்கைத்தீவின் மட்டக்களப்பு அம்பாறை உள்ளிட்ட கிழக்குப் பிரதேசத்தை ஆட்சி செய்தான். --- திருக்கோணேச்சரம் ஆலயத்துக்குத் திருப்பணி செய்தவன் என்று கோணேசர் கல்வெட்டில் உண்டு. ஆகவே எக் காரண - காரிய அடிப்படையில் அக்கேபோ மன்னன் என்று மாற்றினீர்கள்? ---- சரி - யாழ்ப்பாணம் என்ற வரலாற்று பெயரை - நகதீவ என்றும், தமிழர்களின் புராதன நகரமான திருகோணமலை என்ற பெயரை பெற்றிக்கோட்டை எனவும் யாரைக் கேட்டு மாற்றினீர்கள்? 1983 ஆம் ஆண்டு அமரர் ஜேஆர் சிங்கள அரச அதிபரை திருகோணமலைக்கு நியமித்தது முதல் இன்று வரை அங்கு எத்தனை சிங்களக் குடியேற்றங்கள்? சில்வா என்ற அரச அதிபர் திருகோணமலையின் தமிழ் இன விகிதாசாரத்தை மாற்ற வரைபடம் வரைந்தவர். சில்வா பற்றி அமரர் சம்பந்தன் 2006 இல் நாடாளுமன்ற உரை ஒன்றில் விளக்குகிறார். நன்றி- அ.நிக்ஸன் பத்திரிகையாளர் கொழும்பு-
  13. என் தலைமையில் ஒரு புரட்சியா 🤣 ஒரு நாளும் நடக்காது என்று பலரும் நினைக்கின்றார்கள் 😅 ஆனால் விளையாட்டே நடக்குமா ஏன்ற கேள்விக்கு யாரும் பதில் தரவில்லை -------😂
  14. முதலில் இந்த காறித் துப்பும் கேவலமான பழக்கம் இலங்கை தமிழர்களிடமோ சிங்கலவர்களிடமோ இல்லை இந்தியர்களின் பழக்கமாகும் இந்திய தமிழ் படங்கள் பார்ப்பதனால் ஈழதமிழர்கள் இது பற்றி பேசுகின்றனர் நல்லகாலமாக அதை பழகவில்லை ஈழதமிழர்கள் இந்தியாவை திட்டுவதால் இந்தியாவுக்கு ஏதாவது பாதிப்புகளுண்டா - கிடையாது பாகிஸ்தானை ஆதரிப்பதால் புகழ்வதால் ஈழதமிழர்களுக்கு ஏதாவது நன்மை உண்டா - கிடையாது இந்தியர்களின் வெறுப்பை மட்டும் பெற்று கொள்ள முடியும்
  15. சின்ன பிரச்சினைக்கும் மூக்கை நுழைத்து ஊதிபெரிதாக்குவதே இவர் வேலையாய்ப் போச்சு, நா டுகளுக்கிடையேயும், வீட்டுக்குள்ளேயுமா ? குடடையை குழப்பி மீன் இல்லை பெரிய திமிங்கிலத்தையே பிடிப்பார் .
  16. சமூகவலைத்தள உலகம் பகுதியில் பகிரப்பட்ட நா.த.க கட்சி சார்பான காணோளி நீக்கப்பட்டது. யாழ் களத்தில் கட்சி சார்பான, கட்சி கூட்டங்களின் மற்றும் பிரச்சார ரீதியிலான எந்த ஒரு காணோளியும் இணைக்கப்படுதல் கள விதிகளை மீறும் செயல் என்பதை கவனத்தில் எடுக்கவும்.
  17. அம்மோய்... இன்னுமொரு நீத்துப் பெட்டி புட்டு வை.
  18. நான் மறிக்கவில்லை நீங்கள் உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம்,முடியும் இப்படி பலர் செய்கிறார்கள் ...என்னுடைய கருத்துகளை மட்டும் எழுதினேன் ..அது பிழை என்றால் அதற்கான வாதங்களை முன் வையுங்கள் .....மேலும் நீங்கள் காறித் துப்புவதால். ..இந்தியாவுக்கு ஏதாவது பாதிப்புகளுண்டா ?? இல்லை இலங்கை தமிழர்களுக்கு ஏதாகினும் நன்மைகள் உண்டா ??,. இல்லை எந்தவித நன்மைகளுமில்லை ஆகவே இந்தியா இலங்கை தமிழருக்கு நன்மைகளை செய்யாமல் இருக்க முடியும் இப்படி நடந்து கொள் என்று இந்தியாவை எப்படி கோர முடியும்????
  19. உங்களுடைய கொள்கை அது, எனக்கு வேஷம் போடத் தெரியாது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம், இந்தியாவை காறித் துப்பி விட்டு, போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
  20. ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம் . ......... ! 😍
  21. இந்திய சட்டத்தை பார்க்கும்போது, நீண்டகாலத்தில் சரி என்று வரும். இந்தியாவில் ஈழத்தமிழர் அகதியாக குடியேறி குடியுரிமை கோரலாம் என்றால், இப்பொது இருப்பதிலும் பார்க்க எம் சனத்தொகை குறைந்து இருக்கும். அத்துடன் சிங்களம் எம் சனஹோக்கையை குறைக்க எத்தனிப்பதும். (1983 இல் பிரித்தானிய open visa கொடுத்த போது, சிங்களம் உள்ளுக்குள் அரேவேற்றது.1990 களில் சிங்களம் பார்த்தும் பாராமல், காசும் வருகிறது முகவர்களால் என்று, உண்மையில் திறந்த்து விட்டது. சனத்தொகை குறைப்புக்கு.) ஆ னல் , நாங்கள் மலையகத் தமிழரை (அந்த நேரத்தில்) வேறுபடுத்தி கொண்டு, இந்தியா அவர்களை ஏற்றுக்கொண்டது பிழை என்கிறோம். அதாவது சனத்தொகையாக தேவை , எமது நலனுக்கு எதிராகவும் இருப்பதால். அனால் ஈழத்தமிழருக்கு வரும் போது இந்தியா ஏற்கவேண்டும் என்கிறோம். இந்திய சட்டத்தை வெளியில் பார்க்கும் போது பாகுபாடு தன்மை இருப்பதாக தோன்றினாலும் , அதன் நோக்கம் நன்மைக்கே, ஆழ்ந்து (வரலாற்றுடன்) பார்க்கும் போது அப்படி இல்லை. (இது ஏற்கனவே சென்றவர்களை பாதிக்கிறது என்பது உண்மை) இந்தியாவுடன் நில எல்லையை கொண்ட நடுகல் முஸ்லிம் நாடுகள். திபெத் பௌத்தம் (மகாஞன பௌத்தத்தில் ஒர வடிவமான வஜ்ராயண பௌத்தம், ஆனால் அதில் தேரவாத அம்சங்களும் இருக்கிறது. ) திபெத்தில் சீன வெளிக்கிட விடாது. அத்துடன், சீன திபெத் இல் அதனோடு இணக்கங்க கூடிய லாமா என்றால் பௌத்தத்துக்கு உண்மையில் விருத்தி செய்கிறது. (ஏனெனில் சீனாவில் ஏனெனில் சீனாவில் கம்யூனிச, அ தாவது cpc ஆட்சிக்கு வந்த போதே சமயம் ( அதாவது பௌத்தம் உட்பட , கிறிஸ்தவமும் சிறுபான்மையாக இருந்தது ) உத்தியோகபூர்வமாக இல்லாமல் செய்யப்பட்டது, அனால், வரலாற்று அடிப்படையில் அது பௌத்தம் , அதாவது ஹான் பௌத்தம். இதுவும் மகாஞன பௌத்தத்தில் ஒர வடிவம. சீன வாழ்கை, அரச தத்துவ அம்ஸங்களான தாவோஸ்ம் (Taoism), கொன்பியூசிநிஸ்ம் (Confucianism) அம்ஸங்கள் உள்ளடக்கியது. சீனாவில் பௌத்தமே மிகப்பெரிய நிறுனமயப்பட்ட சமயம்.) (மாறாக, சிங்களம் திறந்து விடும், இப்போதும் சிங்களம் இப்போதும் சொல்வது அது தானே. தமிழ்நாடே உங்கள் தாயகம் அங்கு செல்லுங்கள். இது சிங்களத்துக்கு சிறுவயதில் இருந்தே மகாவம்சம் வழியாக ஊட்டப்படுவது). மியன்மார் முஸ்லீம் இன் வரலாறு - பெங்காலிகள் என்பதில் இருந்து அராக்கன் இராகிய பூர்வீக குடிகள், அதாவது ராக்கின் பிரதேச பூர்வீகம். அத்துடன் அந்த பிராந்தியத்தில் 2 முஸ்லீம் நாடுகள். பாகிஸ்தான் (UN கோட்பாடே அந்த நேரத்தில் (பாகிஸ்தான்) முஸ்லிகளுக்கு, பெரும்பான்மை இந்து நிலத்தில் அரசு. இதே கோட்பாடு இஸ்ரேல் க்கும், யூதருக்கு பெரும்பான்மை முஸ்லீம் நிலத்தில் அரசு. சொல்லப்படும் வரலாறை கருத்தில் எடுக்கவில்லை 2 க்கும் UN. இதனால் தான் பாகிஸ்தான், இஸ்ரெல் UN இல் மிகவும் நெருங்கிய காலத்தில் உருவாக்கப்பட்டது. அப்படி வரலாற்றை எடுத்து இருந்தால் UN இந்த 2 அரசுகளையும் உருவாக்கி இருக்க முடியாது. பாகிஸ்தானில் இஸ்லாம் பின்பு வந்தது. இஸ்ரேல் க்கு , விவிலியபடியே Arabs ஆபிரகாமின் முதல் பிள்ளை Ishmael இன் அடிகள், பலஸ்தீனியர் ஒரு அரபி குழுமம், அரசு கொடுக்க முடியாது என்று வந்து இருக்கும். இதை அறிந்தே மேற்கு, தென்னமெரிக்க நாடுகள் (எல்லாமே விவிலிய அடிப்படையில் சமயம்) அந்த நேரத்தில் வரலாற்றை தவிர்த்து, பெரும்பான்மை நிலத்தில், சிறுபான்மை பாதுகாப்புக்கு சிறுபான்மைக்கு அரசு என்ற கோட்பாட்டை வைத்தது. சிலர் இங்கு தெரியாமல் கதைப்பது). பங்களாதேஷ் 77 இல் சமய சார்பு அற்ற பன்முக தன்மை (secularism) இராணுவ சட்டத்தின் கீழ் யாப்பில் இருந்து நீக்கி, பின் 88 இல் இஸ்லாமை அரச மதம் ஆக்கியது. அதில் இருந்து முஸ்லீம் அல்லாத (சமய) சிறுபான்மைக்கு - இதுவும் சுலபம் அல்ல - முஸ்லீம் அல்லாத (சமய) சிறுபான்மை என்று நிரூபிக்க வேண்டும். எவ்வளவு கடினம் அகதியாக வரும் போது - அநேகமாக முடியாது. உ.ம். பாகிஸ்தானில் இருக்கும் மிகவும் சிறிய தமிழ் சமூகம் சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள். முஸ்லீம் என்று விட்டால் - பொருளாதார அகதிகள் மற்றும் தீவிரவாத, புலனைக்கு அபைப்பு ஊடுருவல் சாத்திய கூறுகள். முஸ்லிகளுக்கு முஸ்லீம் நாட்டில் துன்புறுத்தல் (persecution) என்று எவ்வாறு ஏற்றுக்கொள்வது? இதில் எல்லா பக்கத்தையும் பார்க்க வேண்டும்.
  22. இப்ப‌டியான‌ அடி விளையாட்டையே மாற்றி விடும்👍.......................
  23. இது உண்மையானால் ...நீதிபதிகளின் தீர்ப்பில். என்ன பிழை உண்டு ?? இப்படி தீர்ப்புகள் வரக் காரணம் .....இதே மாதிரியான எங்கள் கருத்துகள் தான் உங்கள் இந்த கருத்தின் விளைவுகள் என்ன??? ...குறைந்த பட்சம் ஒரு பத்து இந்தியன். இதை வாசித்து கோபமடைந்து இருப்பார்கள் அதாவது எங்களுக்கு ஆதரவாக. இருந்தவர்கள. எதிரிகள் ஆக்குகிறீர்கள். எனவே இப்படியான கருத்துகள் பிரயோஜனமற்றது தேவையற்றது எனக்கு உங்கள் மாதிரி உணர்வு கவலை உண்டு ஆனால் இந்தியாவுக்கு ஆதரவு தரவிடினும். எதிர்ப்புகள் தெரிவிக்க விரும்பவில்லை ஏனென்றால் அது பிரயோஜனம் அற்றது நன்மைகள் தரமாட்டாது மாறாக தீமைகள் தரும்” அவர்கள் 150 கோடி நாங்கள் வெறும் 1/4 கோடி மட்டுமே நன்றி வணக்கம்… 🙏🙏🙏 அருமையான பயன்படும் கருத்துகள் வாழ்த்துக்கள்
  24. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ......... பிரீத்தி & காவ்யா நொட் அவைலபிள் ......... வெரி சாரி .........! 😂
  25. இந்தியாவின் உண்மை முகத்தை உரித்துக் காட்டிய கட்டுரை. பகிர்விற்கு நன்றி பெருமாள்.
  26. முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
  27. நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கும் உடன்பாடே, ஆனால் நீங்கள் அதைச் சொல்லியிருக்கும் விதம் குத்திக் கிழிப்பது போன்று இருக்கின்றது. ஊரில் நான் சிறு வயதில் இருந்த ஒழுங்கையின் தொடக்கத்தில், வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியில் அவர்கள் ஒரு குடும்பமாக வந்து கடை ஒன்றை சொந்தமாக நடத்தினார்கள். அவர்கள் எங்கள் ஒழுங்கையிலேயே ஒரு வீட்டில் வசித்தார்கள். அங்கு பலரும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்தப் பெயரிலேயே அவர்களை பேச்சில் குறிப்பிடுவார்கள். நாங்கள் என்ன ஒரு சமூகமாக இருந்திருக்கின்றோம் என்று இப்பொழுது வேதனையாக இருக்கின்றது. அவர்களின் வீட்டில் என் வயதை உடைய ஒருவரும் இருந்தார். அந்த வீட்டுக்கார அக்காவின் தம்பி. சில காலத்தில் நானும் அவனும் நல்ல நண்பர்கள் ஆனோம். அவன் பள்ளிக்கூடம் போகவில்லை. அவர்களின் கடையிலேயே வேலை செய்தான். பின்னர் ஊரை விட்டுப் போய்விட்டார்கள்................. நான் இங்கு யாழில் ஒரு வருடத்தின் முன் இணைந்த போது எழுதிய குறுங்கதை ஒன்று கீழே உள்ளது. இது இன்னொரு நிகழ்வு. இது கற்பனையில்லை. தலைப்பே தலைவிதியாக மாறியது போல இருக்கின்றது....................
  28. 🤣................. சென்னை இந்த சீசனில் விளையாடியதைப் பார்த்த ஜக்கம்மா கிரிக்கெட் பார்க்கிறதை கைவிட்டு விட்டாராம்.............. ஆகவே நீங்கள் தற்செயலாக சத்தியத்தை மீற வேண்டிய ஒரு நிலை வந்தாலும் ஒரு பாதகமும் இல்லை, ஜக்கம்மா கண்டுக்கமாட்டார் ......................😜.
  29. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 62வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஆயுஷ் மாத்ரே புயல்வேகத்தில் 43 ஓட்டங்களை எடுத்தாலும் பிற ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் ஆடவந்த டெவால்ட் ப்ரெவிஸ் அதிரடியாக 42 ஓட்டங்களையும் ஷிவம் டுபே 39 ஓட்டங்களையும் எடுத்து இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ஓட்டங்களை எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யஷஸ்வி ஜெஸ்வாலும் வைபவ் சூர்யவன்ஷியும் மின்னல் வேகத்தில் ஆடி முறையே 36 ஓட்டங்களையும், 57 ஓட்டங்களையும் எடுத்து அடித்தளம் போட்டுக் கொடுத்ததால் பின்னர் ஆடவந்து சஞ்சு சாம்சனின் 41 ஓட்டங்களுடனும் துருவ் ஜுரேலின் மரண அடியான 12 பந்துகளில் 31 ஓட்டங்களுடனும் 17.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த மூவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல் இரு நிலைகளில் இருக்கும் இரட்டையர்கள் ஜோடி @நந்தன் க்கும் @புலவர் ஐயாவுக்கும் வெள்ளி திசை என்பதால் புள்ளிகள் அள்ளிக் கொட்டுகின்றன.
  30. உண்மையில் சிவசங்கர் அப்படி மணிக்கட்டு பகுதியை கீறி இரத்தத்தால் திலகம் இடும் போது மயங்கிவிட்டார். (அதில் வேறு சிலரும் அப்படி மணிக்கட்டை கீறி இரத்தத்தால் திலகம் இட்டனர்.) அதனாலேயே பொட்டு என்ற பெயர் வந்தது. சில வரலாறுகளை இபோதைக்கு அமைதியாக க விடுவது நல்லது. ஜெயராஜ் க்கு தெரியாததும் நல்லது.
  31. இவ‌ருக்கு ர‌சிக‌ர்க‌ளாய் இருப்ப‌து 2கே கிஸ் அண்ணா..............................
  32. எங்களையெல்லோ சவட்டி விட்டாங்கள்.
  33. ரசனிகாந்த்... தனது கையால், சோறு சாப்பிட்டார்.😂
  34. அகதிகளை வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்றால், அது இன்னும் பலர் வந்து குவிவதற்கு வழி அமைத்துக் கொடுத்தது போல் ஆகிவிடும். வரவே கூடாது, போங்கள் போங்கள் என்று கழுத்து பிடித்து தள்ளினால் அங்கே மனிதாபிமானம் மரணித்தே போய்விடும். அகதி என்ற நிலையை ஒருவன் தானே விரும்பி ஏற்படுத்திக் கொள்வது அல்ல. அவன் மீது வலிய வலிய திணிக்கப்படுவது. அவர்களின் துயரைப் போக்கி நிலையை மாற்றி மீள்குடியேற்றத்திற்கு வழி வகுப்பதே அறிவார்ந்த செயல். இதெல்லாம் சட்டத்திற்கும் அப்பால் வரவேண்டிய சிந்தனைகள். உச்ச மன்றத்திற்கு அத்தகைய சிந்தனைகள் வராமல் போவது துரதிஷ்டம். Ezhumalai Venkatesan
  35. இன்று நீங்கள் அனைவரும் பிரபாகரனாக... https://www.facebook.com/share/r/19izBZyeP3/
  36. பிகு என்னை பொறுத்தமட்டில் இந்த மக்கள் இலங்கை திரும்பவேண்டும். அதற்கு புலம்பெயர் அமைபுகள் குடும்பதுக்கு £5000 வரையில் உதவி தொகை வழங்கவேண்டும்.
  37. 😁😁😁😁😁😁😁..................
  38. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ........... ! 😂
  39. தமிழர்களை அழித்து அவர்களை ஏதிலிகளாக்கும்போது இந்தியா இதை உணர்ந்திருக்க வேண்டும். அடைக்கலம் கொடுக்க முடியாதவர்கள் ஏன் அவர்களை அழிக்க தூண்டினர், உதவி செய்தனர்? எங்களது இன்றைய கையறுநிலைக்கு, இந்தியா, பிரிட்டன், ஐ.நா, இன்னும் சர்வதேச நாடுகளே பொறுப்புக்கூறவேண்டும், பொறுப்பெடுக்க வேண்டும். இந்த லட்ஷணத்தில காசா மக்களை லிபியாவில் குடியேற்ற போகிறாராம் ஒருவர். அப்போ நினைத்தேன், தமிழரை இந்தியாவில் குடியேறுங்கள் என்று சொன்னாலும் சொல்வார் என்று. அதற்குள் இந்தப்பதில் கிடைத்துள்ளது. அவர்களை தங்கள் நாட்டில் அமைதியாக வாழ விட்டிருந்தால், அவர்கள் ஏன் பிறநாடுகளில் தஞ்சமடைய வேண்டும். தமது நாட்டில் இருபத்தாறு பேர் கொலைசெய்யப்பட்டபோது, போர் முரசு கொட்டியவர்கள், லட்ஷம் பேரை காலத்திற்கு காலம் கொன்றபோது தம்மைப்பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்தியவர்களை கூடி அழித்தது எந்த வகையில் நிஞாயம்? அதற்கும் இந்த நீதிபதிகள் பதில் சொல்ல வேண்டும்!
  40. சிங்க கொடியின் நிழலில் நாட்டை ஆள்வது முக்கியமல்ல. அனைத்து இனங்களும் தத்தமது பாதுகாப்பை உணரும் ஒரு அரசியல் பொறிமுறையை கொண்ட அரசியலமைப்பை உருவாக்காதது இவரது பாரிய தோல்வியாகும். இதுவே ஶ்ரீலங்கா நாட்டின் படிப்பினை. இப்போதைய ஆட்சியளர்கள் உணர வேண்டிய மிக முக்கிய விடயம். தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வெற்று கோஷங்களை விடுத்து இதை வலியுறுத்தி நடைமுறை சாத்தியமான அரசியலுக்கு வரவேண்டும்.
  41. நம்மெல்லோரைப் போலவே அவனுக்குமொரு குடும்பம் இருந்தது. அதுவும், மதிவதனி என்றால், மதி(நிலவு) போல வதனம்(முகம்) உடையவள் என்று பொருள். அப்பேர்ப்பட்டவளை ஆசையாசையாய் காதலித்துக் கரம்பிடித்து, அவள் அமைத்துக்கொடுத்த அழகான குடும்பம் அது. ஆஸ்திக்கொன்று. ஆசைக்கொன்று. இரண்டும் கலந்தவொன்று என மூன்று மொட்டுகளால் மலர்ந்த குடும்பம் அது. அவன் நினைத்திருந்தால், தானுண்டு தன் குடும்பமுண்டு என்றிருந்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், தன் காதல் மனைவியை ஒரு மஹாராணி போல் வாழ வைத்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், உள்ளூரிலேயே விலைபோய் தன் குடும்பத்தோடு சுகவாசியாய் இருந்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், குடும்பத்தோடு புலம்பெயர்ந்து ராஜாவைப்போல் வாழ்ந்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், இந்நேரம் மந்திரிசபையோ மாகாணப் பதவியோ ஏற்றுக்கொண்டு குழந்தைகளை பெரும் பதவிகளில் அமர வைத்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், குறைந்தபட்சம் குடும்பத்தோடு உயிரோடாவது இருந்திருக்க முடியும். ஆனால் அவன் நினைத்ததெல்லாம்... தமிழ்த்தேசியம். அவனுக்கொரு பெரும் கனவு இருந்தது. தமிழ்மண் தமிழருக்கானது என்ற ஒரே கனவு. அவனது இலக்கும் வெறியும் இலட்சியமும் அதுவொன்றே. முப்பது வருடகாலமும்-தினமும் முழிப்பது கூட மரணத்தோடு என்றிருந்தவன் மண்ணுக்குள் போவதற்குள்-தமிழ் மண்ணை அடைந்திட நினைத்தான். அதற்குள் மாவீரனாகி விண்ணை அடைந்தான். நம்மெல்லோரின் மன்னை அடைந்தான்.! 'அவன் நினைத்திருந்தால்' என்பதிருக்கட்டும். இத்துயர் தடுக்கப்பட்டிருக்கலாம். இம்முடிவு மாற்றப்பட்டிருக்கலாம். இவனோடு சேர்த்து இலட்சோப இலட்சம் உயிர்கள் இன்றிருந்திருக்கலாம். நாம் நினைத்திருந்தால். நம்மை ஆள்வோர் நினைத்திருந்தால்.! ------------------ குறிப்பு: இரண்டுநாள் ஈழத்து பகிர்வு செய்ததற்கு ரீச் குறைந்து "தம்பி, நோ தீவிரவாதம்..!" என்று நோட்டிஃபிகேஷன் வந்தது. இதோடு மொத்த ரீச்சும் அம்பேல் ஆகுமென்று தெரியும். 'நான் நினைத்திருந்தால்' லேசாக வேறொன்று எழுதியிருக்கலாம். மனம் வரவில்லை. Writer Charithraa's

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.