Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19109
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    7044
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87988
    Posts
  4. Sasi_varnam

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    2165
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/23/25 in all areas

  1. இங்கே வேலன் விசிறிகளாக இருப்போருக்கு விளங்காத ஒரு விடயம்: தனி மனித எல்லைகள் - boundaries. மற்றவன் உணவு, மற்றவனின் மத நம்பிக்கை/ நம்பிக்கையின்மை, மற்றவனின் படுக்கையறையில் யார் போன்ற விடயங்களில் மூக்கை நுழைக்கும் பிற்போக்குத் தனத்தின் இன்னொரு குணங்குறி தான் இந்த நல்லூர்க் கோவில் எல்லையை தனியார் காணிக்குள்ளும் நீட்டிக்கிற செயல். பரிஸ்ரா தன் வியாபார வெற்றி கருதி இவர்களுக்குப் பணிந்திருக்கிறது. இது அவர்களின் வியாபார முடிவு, அவர்கள் உரிமை. ஆனால், பரிஸ்ராவின் பணிந்து போதல் - compliance என்பது ஒரு தவறான முன்னுதாரணம்.எதிர்காலத்தில் ஏற்கனவே இருக்கும் ஒரு இறைச்சிக் கடைக்கு அருகில் ஒரு கருங்கல்லைப் பொட்டுப் போட்டு, சரிகை கட்டி வைத்து விட்டு "இறைச்சிக் கடையை அகற்ற வேண்டும்" என்று வேலன் ரீம் பதாகை பிடிக்கக் கூடும். அந்தத் துணிவை பரிஸ்ராவின் வியாபார வெற்றி கருதிய முடிவு வேலன் ரீமுக்குக் கொடுத்திருக்கும். இவர்களுக்கும், அரச மரத்தைக் கண்டால் வேலி போட்டு "பௌத்த பூமி" என்று பிரகடனம் செய்யும் பௌத்த மேலாண்மை வாதிகளுக்கும் இடையே எந்த வேறு பாடுகளும் இல்லை😂!
  2. இப்பொழுதுதான் Barista நிறுவனத்தின் தலைமை நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்துப்பேசினேன். என்னுடன் பேசிய விளம்பர பகுதியின் இயக்குனர் Ms.திலந்தி ஏற்கனவே தாங்கள் இந்த நிகழ்வு பற்றி அறிந்து கொண்டதாகவும், நல்லூர் Barista கிளையில் உணவு தெரிவுகளில் இருந்து மாமிசத்தை நீக்குவதாக தாங்கள் முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார். நடக்குதா பார்ப்பம்.
  3. கந்தையா அண்ணை... சொல்லுறன் என்று குறை நினைக்கப்படாது, எண்டாலும் சொல்ல வேண்டி இருக்கு. நமது கோவில்களுக்கு என்று சில விதிமுறைகள், வரைமுறைகள் உண்டு. அதனை மீறாமல் ஒழுக்கமாக செய்து முடிப்பதே ஆறறிவு மனிதருக்கு அழகு. கோவில் திருவிழாவுக்கு மேளம் அடிக்க வந்தவனுக்கு... ஆடு வெட்டி... இரத்த வறையும், ஆட்டுக் கறியும் வைத்து கொடுப்பதும், அவனுக்கு சாராயம் கொடுப்பதும் ஒழுக்கமான செயல் அல்ல. அப்படியான மனப்பிறழ்வு உள்ளவர்கள் திருவிழாவை செய்யாமல்.... அந்தத் திருவிழாவை ஆச்சாரமாக செய்பவர்களிடம் ஒப்படைத்து விடுவதே புண்ணியமானதும், பண்பானதுமான செயல். அதை விட்டுட்டு.... செய்த கூடாத செயலை, பெருமையாக வேறு சொல்லிக் கொண்டு திரிவதை என்னவென்று சொல்ல. பொதுவாக தமிழர்கள்.... எந்த ஒரு செயலையும் விதிமுறைகளை மீறி செய்துவிட்டு, அதனை பெருமையாக நினைப்பவர்கள். அதனை கெட்டித்தனம் என நினைத்துக் கொண்டு விஞ்ஞான விளக்கமும் கொடுப்பதை பார்க்க சகிக்க முடியாது. ஒரு முஸ்லீம் பன்றி இறைச்சி சாப்பிட்டு விட்டு, பெருமையாக பீத்திக் கொண்டு திரிவதில்லை. முற்ற வெளியில் தமன்னாவின் நிகழ்ச்சி பார்க்க காசு கொடுத்து ரிக்கற் வாங்காமல் பனைமரத்தில் ஏறி நின்று பார்த்த இனமும், 50 ரூபாய் ரிக்கற் வாங்கி விட்டு 5000 ரூபாய் ரிக்கற் எடுத்தவர்களுக்கான கதிரையில் இருந்து கொண்டு... சண்டித்தனம் விட்ட இனத்திடம், வேறு நல்ல விடயங்களை எதிர்பார்க்க முடியாதுதானே. 😂 உங்களுக்கு இதனை தனிப்பட சொல்லவில்லை. இங்கு மாமிசக் கடை வைப்பதற்கு முட்டுக் கொடுத்த எல்லோருக்கும் பொதுப்படையாக சொல்லப் பட்டது. நன்றி. 🙏
  4. இணைப்பிற்கு நன்றி நுணா. (சக கருத்தாளர்களுக்கு) 25 ஆவது நிமிடத்தில் இருந்து இவர் சொல்லும் விடயங்களைக் கேட்கும் போது, இந்தியாவில் பாப்ரி மசூதியை இடிக்கத் தூண்டிய சிவசேனா சங்கிகள் போலவே சிந்தனை இருப்பதாகத் தோன்றுகிறது. "நல்லூர் கோவிலின் கோபுரம் கண்ணுக்குத் தெரியும் இடம் வரை அதிர்வு இருக்கும், எனவே அங்கே மாமிசம் விற்பது கூடாது" என்கிறார். இப்படிப் பார்த்தால் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை மாமிச தவிர்ப்பு வலயம் போட வேண்டிய இடங்கள் இருக்கும் போல தெரிகிறதே😂? இவையெல்லாம் பல மத/நாத்திகர்கள் வாழும் ஒரு நகரத்தில் சாத்தியமா? மாநகர சுகாதாரத் துறை கவனிக்க வேண்டுமென்கிறார். சுகாதாரத் துறை நான் அறிந்த வரை உணவுகள் பொதுச் சுகாதாரத்தை பேணும் வகையில் தயாரிக்கப் படுகின்றனவா என்று மட்டும் தானே சோதிப்பார்கள்? மாமிசம், சைவம் எல்லாம் பொதுச் சுகாதாரத்தோடு எப்படித் தொடர்பாகும்? இது என்ன புதுக் கூத்தாக இருக்கிறது? எப்ப இருந்து இவர் போன்ற ஆட்கள் தாயகத்தில் குரல் தர வல்ல பேர்வழிகளானார்கள்😂?
  5. வேம்படி அருகில் என்றால் ஓக்கே… ராட்சசிகளுக்கு ரத்தமும் சதையும்தான் பிரியம்🤣 அடுத்த முறை போகும் போது அருகில் உள்ள கடைகளில் முட்டை, டின் மீன் விற்கிறார்களா என நோட்டம் விட உள்ளேன்… வித்தால் வேலனுக்கு ஒரு போனை போட்டு விட வேண்டியதே🤣
  6. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 65வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர் இஷான் கிஷானின் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் எடுத்த 94 ஓட்டங்களுடனும், அபிஷேக் ஷர்மா, ஹென்றிக் க்ளாஸன், அனிகெற் வேர்மா ஆகியோரின் கமியோ ஆட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஃபில் சோல்ற்றினதும் (62 ஓட்டங்கள்), விராட் கோலியினதும் (43 ஓட்டங்கள்) புயல்வேக ஆட்டத்தினால் ஆரம்பத்தில் வெற்றி இலக்கைத் துரத்துவதில் முன்னுக்கு நின்றாலும், இருவரினதும் விக்கெட்டுகள் பறிபோன பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து ஆடத் திணறியதால் இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 42 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  7. புத்தகத்தின் 91 பக்கத்தில் “சோனகர்” என்ற தலைப்பின் கீழ் இருக்கின்றது.
  8. முற்போக்கு போர்த்திய முடிச்சவிக்கீஸ் + நடுநிலை நக்கிகள் தங்கள் சல்லித்தன புத்தியில் எதை எதையாவது பேசி விட்டு போகட்டும். அப்படியே Barista எதுவித மாற்றங்கள் இல்லாமல் இயங்கினாலும் தமிழ் தாலிபான்ஸ் வெஜ்ஜி ரோல்ஸ் சாப்பிட்டு காப்பூச்சினோ குடிப்பார்கள். இந்த நடுநிலை நக்கீஸ் எஞ்சி இருக்கும் மாமிச சாப்பாடுகளை ரசிச்சு திங்கலாம் புளிச்ச ஏவரை விடலாம். No questions asked!!
  9. இப்பவும் செம்பக பெருமாள் என்ற யாழ்பாணத்தை சூறையாடிய சிங்கள மன்னன் சபுமல்குமாரயா எனப்படும் புவனேகபாகு (6ம்?) மன்னனுக்கு கட்டியம் கூறித்தான் திருவிழாவே தொடங்குவது என கேள்விப்பட்டேன். நல்லூரில் இப்போ ஒரு 50 வருடமாக இருப்பது எல்லாம் வந்தான், வரத்தாந்தானே? பெரும்பாலும் தீவக மக்கள். அவர்களுக்கு நல்லூரின் வரலாறு அதிகம் தெரியாது இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
  10. கண்ணைக் கவரும் அழகில் ஆபத்தும் இருக்கும் என்று சும்மாவா சொன்னார்கள் 😃
  11. கள்ளி மலர் கண்ணைக் கவருது எட்டி முத்தமிட முயன்றால் முட்கள் முன்னால் வருகுது ........ ! 😂
  12. உப்பு கொண்டு வரும் கப்பலை... இன்னும் காணவில்லை.
  13. இந்த உரிமையாளரை முதலிலேயே அணுகி இதை செய்திருக்கலாம். இதில் மக்கள் அதிகம் அலட்டவில்லை என்பது “வேலனும் பத்து மொக்கராசுகளும்” நிற்கும் படத்தை பார்தாலே புரியும். அத்துகிரிய பரிஸ்டாவின் மெனு கீழே. ஒரே ஒரு ஐட்டம் மட்டுமே மாடு. அதை மாற்றுவதில் அதிக சிக்கல் இருக்காது என நினைக்கிறேன். மூன்று சிக்கன் அயிட்டம் உள்ளது. https://barista.lk/menu/ மாட்டும் வரை விவேகானந்தா.. மாட்டினா நித்யானந்தா🤣. அண்மையில் இதே போல் இன்னொரு மதிப்புக்குரியவரை இலண்டன் கோர்ட் பாலியல் வன் புணர்வு குற்றவாளி என உள்ளே போட்டது. பாப்பம் வேலனுக்கும் ஒரு லெனின் இருப்பார்தானே🤣.
  14. நான் என்ன செய்வது என்றால்…இப்படி சொல்லி…ஒரு அறை நிமிட கேப் விட்டு… ஆனாலும் சீனா இல்லை எண்டால் இந்தியா உங்களை ஊதி தள்ளி இருக்கும் எண்டும் சொல்லி விடுவன். கோல் அடிப்பது எண்டு முடிவாகிவிட்டால் இரெண்டு பக்கமும் அடிக்கவேண்டும் 🤣 ஆள் வர பிந்துகிறது… பாரிஸ்டாவில் கோப்பி குடித்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.
  15. அறுபது நாட்களாக எம்மை அடக்கி வைத்திருந்த அந்த அடிமைச் சங்கிலி இன்று உடைத்தெறியப்பட்டு::::: விடுதலை::: விடுதலை::::🤣 என்ற கோசம் மட்டுமே என் காதில் கேட்கின்றது:😂 அந்த இரண்டு வெள்ளைத் துரைமார்களும் இப்போது என்பின்னால் :::😇 இப்போதும் நான் அழைக்கிறேன் வாருங்கள் சேர்ந்தே பயணிப்போம் 😅
  16. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 64வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்கள் சூறாவளி போன்று பந்துகளை மைதானத்தின் எல்லைக் கோட்டைத் தாண்டி தொடர்ச்சியாக அடித்தாடியதாலும், மிச்சல் மார்ஷின் 64 பந்துகளில் எடுத்த 117 ஓட்டங்களுடனும், நிக்கொலஸ் பூரனின் ஆட்டமிழக்காது 27 பந்துகளின் எடுத்த 56 ஓட்டங்களுடனும் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 235 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் சவாலான வெற்றி இலக்கை எட்டும் நோக்கில் வேகமாக அடித்தாட முயன்றபோது நட்சத்திர ஆரம்பத் துடுப்ப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்து டக்அவுட்டுக்குத் திரும்பினர். ஷாருக்கான் 29 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும் வெற்றி இலக்கை அடையக் கூடிய ஓட்ட விகிதத்தில் தொடர்ச்சியாக ஆடாததால் இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 33 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  17. GMT நேரப்படி நாளை சனி 24 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 66) சனி 24 மே 2:00 pm GMT ஜெய்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 13 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா வாதவூரான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு ஏராளன் ரசோதரன் நுணாவிலான் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  18. தீவார் என்று குறிப்பிட்டு அவர்களுக்கு நல்லூரைப் பற்றி அறிய வாய்ப்பில்லை என்ற பொது எனக்கும் மதியத்தில் இருந்து ஒரு கொந்தளிப்பு என்னுள்ளே ஏற்பட்டது தான் . பின்னர் யோசித்தால் இலங்கையே ஒரு தீவு அதற்குள்ளும் தீவாரா ஏன்று நட்பு ரீதியாக எதிர்க்க கருத்தை வைக்கவில்லை. ஆனாலும் தீவானாக நாங்கள் ..... வேண்டாம் ........நட்பு சேர்ந்தே பயணிப்போம்
  19. சும்மா கதையைப் புகட்டி சொல்லக்கூடாது நல்லூர்க் கோயில் இருந்த இடத்தின் அருகில் முசுலீம்கள் குடியேறியதால் அந்தக் கோயிலின் விருத்தியை தடை செய்வார்கள் என்ற நோக்கில் பேரம் பேசி அது நடைபெறாததால் பன்றி உள்ளே வந்து அவர்கள் வெளியே சென்றது தான் வரலாறு. ஆக நல்லூர்க் கந்தன் அங்கேயேதான் அப்போதும் இருந்தார் குடியேறிய முஸ்லீம்களால் கோயிலின் வளர்ச்சி தான் தடைபட்டது நீங்கள் கூறுவது போல முஸ்லீம்கள் இருந்த இடத்தில் கோயில் கட்டப்படவில்லை . விருத்தி செய்யப்பட்டு உள்ளது
  20. நல்லூர் முன் காணாமல் போணோரின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடாத்த தடைவிதித்த நிர்வாகம், இப்போது தன் பிழைப்பிற்கு ஆர்ப்பாட்டம் நடாத்துவது ஏன்?
  21. ஒரு சாதாரண கருத்தாடலில் "தமிழ் தலிபான்ஸ்", "நல்லூரில் வந்தான் வரத்தான்", "தீவார்", "ஐயரின் கை ஜூஸ்" இப்படி பேசுவது இவருக்கு நாகரிகமாக தெரியுதாக்கும்... சும்மா போங்கோ ஐயா காமெடி பண்ணாம... :)
  22. நாகரிகமான கருத்தாடல்களுக்குரிய அறிவில் வரட்சி ஏற்படும் போது இருக்கவே இருக்கின்றது எதிர் கருத்தாடல் செய்கின்றவர்களை தரக்குறைவான, மலினமான வார்த்தைகளால் தூற்றி சந்தோசமடைவது. இவ்வாறு செய்வதன் மூலம் தம் தரப்பில் இருக்க கூடிய நியாயங்களை கூட ஏளனப்படுத்தி மலினப்படுத்தி விடுகின்றனர்.
  23. 7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை! ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயது ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார். குறித்த குற்றவாளிக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, அதனை செலுத்தத் தவறினால் ஒரு வருட கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 இலட்சம் ரூபாவும், அவளது தாய்க்கு 10 இலட்சம் ரூபாவும் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த இழப்பீடு செலுத்தப்படாவிட்டால் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. தண்டனை விதிக்கப்படுவதற்கு முன், அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், குற்றவாளி ஐந்து பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது ஐந்து பிள்ளைகளும் பெண் குழந்தைகள் எனவும் கூறினார். இவ்வாறு பெண் குழந்தைகளை கொண்ட ஒரு தந்தை இத்தகைய பாலியல் துஷ்பிரயோகம் செய்தது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவருக்கு சட்டத்தால் வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையை விதிக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி கோரினார். குற்றவாளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குற்றவாளி 62 வயதுடையவர் எனவும், அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக காசநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். அவரது இளைய மகள் 14 வயதுடையவர் எனவும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு லேசான தண்டனை விதிக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி கோரினார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், தனது மகளுக்கு ஏற்பட்ட அநீதி இன்னொரு குழந்தைக்கு ஏற்படாதவாறு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என கோரினார். முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி, குற்றவாளியின் குற்றத்தின் தன்மையை பரிசீலிக்கையில், குற்றவாளி தொடர்பில் மென்மையாக செயல்பட முடியாது என சுட்டிக்காட்டினார். ஐந்து பெண் குழந்தைகளின் தந்தையாக இருந்தும், பெண் குழந்தைகளின் மதிப்பை உணர்ந்திருக்க வேண்டிய குற்றவாளி, ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது கடுமையான குற்றம் என நீதிபதி குறிப்பிட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று சமூகத்தில் வலுவான குரல் எழுப்பப்படும் இந்த காலகட்டத்தில், இவ்வாறான சம்பவங்களை சமூகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எனவே குற்றவாளி தொடர்பில் மென்மையாக செயல்பட முடியாது எனவும் கூறி, இந்த தண்டனையை நீதிபதி அறிவித்தார். https://athavannews.com/2025/1432991
  24. நன்றி நல்ல வேளை உங்கள் சந்ததி தப்பியது. கோவில் கள்ளர் கனபேருக்கு அடுத்த சந்ததியில் தீர்ப்பு எழுதபட்டதை கண்டுள்ளேன். எப்பவும் எங்கட ஆட்கள் சிலருக்கு மலையாளிகள் மீது ஒரு தனிப்பாசம்தான்🤣.
  25. நல்லூர் கோயில் திருவிழாக்காலங்களில் கட்டியம் சொல்லும் போது “சிறீ சங்கபோதி புவனேகபாகு” என்று சொல்லுவார்கள்.
  26. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 23 மே 2025, 04:42 GMT உலகம் முழுவதும், வாய் சுகாதாரம் தொடர்பான நோய்கள் கிட்டத்தட்ட 350 கோடி மக்களைப் பாதிக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. ஆனால், 'நான் தினமும் பல் துலக்குகிறேன், அது போதாதா வாய் சுகாதாரத்தைப் பேண, பற்களைப் பாதுகாக்க' என நீங்கள் கேட்டால், ஆம் போதாது. நம்மை அறியாமல் நாம் அன்றாடம் செய்யும் சில செயல்கள் பற்களை மிகவும் பாதிக்கின்றன. அதில், சில உங்களை ஆச்சரியப்படுத்தலாம், அதைக் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 1. அதிக அழுத்தம் கொடுத்து பல் தேய்ப்பது பட மூலாதாரம், GETTY IMAGES சிலருக்கு காலை எழுந்தவுடன் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நேரம் எடுத்து, நன்கு அழுத்தி பல் தேய்ப்பது என்பது வழக்கமாகவே இருக்கும். நன்கு அழுத்தி தேய்த்தால் தான் பற்கள் சுத்தமாகும் என்ற நம்பிக்கையுடன், தேய்த்து முடித்துவிட்டு கண்ணாடியைப் பார்த்து சோதித்துக் கொள்வார்கள். ஆனால், உண்மையில் அவ்வாறு அழுத்தித் தேய்ப்பது பற்களுக்கு ஆபத்தாக தான் முடியும் என்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி. "அழுத்தி தேய்த்து பல் பிரஷ் செய்தால் அல்லது அதிக நேரம் பிரஷ் செய்தால், அனைத்து கிருமிகளும் அழிந்துவிடும் என்ற எண்ணம் தவறு. உண்மையில் எந்த முறையில் பிரஷ் செய்கிறீர்கள் என்பதே முக்கியம். மேலும் கீழும் அல்லது ஒரு பக்கமாக தேய்ப்பது பற்களை சேதப்படுத்தும். வட்ட இயக்க (Circular motion) முறையில், மெதுவாக பற்களை தேய்க்க வேண்டும்" என்கிறார் அவர். அதிக அழுத்தம் கொடுப்பதால், எனாமல் (Enamel) தேய்மானம் ஏற்பட்டு, ஈறுகளில் எரிச்சல் ஏற்படலாம் என்கிறார் தாரிணி. "இது தொடர்ந்தால், காலப்போக்கில் ஈறுகள் தேய்ந்து பற்களின் வேர்கள் வெளிப்படத் தொடங்கும். பல் சென்சிட்டிவிட்டி (Sensitivity) பிரச்னையும் ஏற்படும்" என்று அவர் எச்சரிக்கிறார். 'சாஃப்ட்' அல்லது 'அல்ட்ரா- சாஃப்ட்' பிரிஸ்டில் பிரஷ்களை பரிந்துரைக்கும் அவர், "2-3 நிமிடங்கள் பல் துலக்கினால் போதும். ஆனால் ஒரு நாளுக்கு இருமுறை என்பது அவசியம். பற்பசை அளவு கூட ஒரு பட்டாணி அளவுக்கு இருந்தால் போதும்" என்கிறார். 2. பற்களை கருவியாக பயன்படுத்துவது பட மூலாதாரம்,GETTY IMAGES பற்களை கொண்டு ஒரு பாட்டிலை திறப்பது, ஒரு கவரைப் பிரிக்க முடியவில்லை என்றால் உடனடியாக பல்லைக் கொண்டு கிழிப்பது, நகம் கடிப்பது, இதெல்லாம் காலப்போக்கில் பற்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் இம்பிளான்டாலஜிஸ்ட், மருத்துவர் அபினவ். "உணவை மெல்வதற்கு தான் பற்கள். அவை கத்தரிக்கோலுக்கோ, பிளேடுக்கோ அல்லது பாட்டில் ஓபனருக்கோ மாற்று அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பற்களை ஏதோ கருவிகளைப் போல பயன்படுத்துவது அவற்றில் விரிசலை ஏற்படுத்தலாம், சில நேரங்களில் பற்கள் உடையக்கூட செய்யலாம்." என்று எச்சரிக்கிறார் அபினவ். நகம் கடிப்பதன் ஆபத்தை விளக்கிய அபினவ், "பலரும் நகம் கடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அது பற்களின் வடிவத்தையே மாற்றிவிடும். அதிக அழுத்தம் கொடுத்து நகம் கடிப்பது, தாடையை சேதப்படுத்தும்" என்கிறார். 3. அடிக்கடி காபி/தேநீர் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பது பட மூலாதாரம்,GETTY IMAGES பலர் சோடா, பழச்சாறுகள், காபி, தேநீர் அல்லது குளிர்பானங்களை அடிக்கடி பருகுகிறார்கள். அவற்றின் அதிக அமிலத்தன்மை பற்களை படிப்படியாக அரிக்கும் என்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி. பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், காபி மற்றும் தேநீரில் இருக்கும் அதிகளவு சர்க்கரை, காஃபின் போன்றவை பற்களை சேதப்படுத்தும் எனக் கூறுகிறார் அவர். "அடிக்கடி சோடா நிறைந்த குளிர்பானங்கள், காபி/தேநீர் குடிப்பது உடலில் நீர் வற்றச் செய்யும். அதன் விளைவு, உமிழ்நீர் சுரப்பது குறையும். உமிழ்நீர் என்பது வாய் சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, கேவிட்டிகள் மற்றும் ஈறு பாதிப்பைத் தடுக்கிறது. அது குறைந்தால், பற்கள் பாதிப்பு மட்டுமல்லாது வயிறு சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும்" என்கிறார் தாரிணி. மேலும், "இத்தகைய பானங்களை குடித்தவுடன் வாயைக் கொப்பளிப்பது மிகவும் முக்கியம். தண்ணீரும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்" என அறிவுறுத்துகிறார். படக்குறிப்பு, பானங்களை முடித்தவுடன் வாயைக் கொப்பளிப்பது மிகவும் முக்கியம் என்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி 4. அடிக்கடி நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது "ஏதாவது கொறித்துக் கொண்டே இருப்பது என்பதன் அர்த்தம், பற்களில் எப்போதும் உணவுத் துகள்கள் இருக்கும் என்பதே. அது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தும். மேலும் அவை பற்களில் துளைகள், விரிசல்களை ஏற்படுத்தும் (Cavities)" என்கிறார் பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி. இதற்கு தீர்வு, ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே, குறைவான அளவில் நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது தான் என்றும் அவர் கூறுகிறார். "அதிலும் சர்க்கரை குறைவானவை என்றால் இன்னும் சிறந்தது. அதிக சர்க்கரை உடலின் பிற பாகங்களுக்கு மட்டுமல்ல, பல்லுக்கும் ஆபத்து தான். சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் அல்லது மவுத்-வாஷ் பயன்படுத்தி வாயைக் கொப்பளிப்பது நல்லது" என்கிறார் தாரிணி. 5. பற்களைக் கடிப்பது படக்குறிப்பு,பற்களை ஆயுதங்களாக பயன்படுத்தக் கூடாது என்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் இம்பிளான்டாலஜிஸ்ட், மருத்துவர் அபினவ் கோபம் வந்தால் பற்களைக் கடிப்பது என்பது பொதுவான ஒரு விஷயமாக உள்ளது. ஆனால், அது பற்களை நிச்சயம் சேதப்படுத்தும் என்கிறார் மருத்துவர் அபினவ். பதற்றம், மன அழுத்தம் என மனரீதியான காரணங்களாலும் பற்களைக் கடிக்கும் பழக்கம் வரலாம் என்கிறார் அவர். "சிலர் தூக்கத்தில் கூட பற்களை அவ்வாறு கடிப்பார்கள். இது பற்களை பலவீனப்படுத்தும், அவற்றின் வடிவம் மாறும், பல் கூச்சம் ஏற்படும், தாடை வலியைக் கூட ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில் வாயை திறந்து, மூடுவது கூட வலியை ஏற்படுத்தும். பல் மருத்துவரிடம் ஆலோசித்து, 'டென்டல் நைட்கார்டு' (Dental nightguard) பயன்படுத்துவது தீர்வாக இருக்கும்" என்கிறார் அபினவ். 6. புகை பிடிப்பது/புகையிலை பயன்பாடு பட மூலாதாரம்,GETTY IMAGES "புகையிலை பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் முதல் சிக்கலே பற்களில் கறை படிவது. அதன் தொடர்ச்சியாக, வாய் துர்நாற்றம், ஈறுகள் பலவீனமடைவது மற்றும் வாய் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும்" என எச்சரிக்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி. "புகையிலை பயன்பாட்டின் காரணமாக பற்களை எடுக்கும் நிலைகூட வரலாம். ஆனால், மருத்துவ சிகிச்சை எடுத்த பிறகும் புகையிலை பயன்பாட்டை விடவில்லை என்றால், அது சிகிச்சையின் விளைவுகளை மட்டுப்படுத்தும்." என்கிறார். புகையிலை பயன்பாட்டை கைவிடுவது வாய் சுகாதாரம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பெரிதும் மேம்படுத்தும் என அவர் வலியுறுத்துகிறார். 7. பல் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் இருப்பது பட மூலாதாரம்,GETTY IMAGES பல் வலி வந்தால் மட்டுமே பல் மருத்துவரிடம் செல்வேன் என்ற எண்ணம் தவறு என்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம் எனக்கூறும் அவர், "கையில் எலும்பு முறிவு என்றால் கையை சரிசெய்யத் தானே நினைப்போம், ஆனால் பற்களை மட்டும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திவிட்டு, கடைசியில் பிரச்னை என்றால் எளிதாக பிடுங்கிவிட்டு செயற்கைப் பல் மாட்டிக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். ஒரு பல்லை எடுத்தால், மற்ற பற்களும் காலப்போக்கில் பாதிக்கப்படும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார். "பல் சிதைவு, ஈறு தொற்றுகள் மற்றும் வாய்வழி புற்றுநோய் கூட குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இல்லாமல் அமைதியாக வளரும்" என எச்சரிக்கும் தாரிணி, "வெறுமனே பல் தேய்ப்பது மட்டுமே போதாது. ஏனென்றால், பற்களின் ஆரோக்கியமே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் அறிகுறி" என்கிறார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg71qv9l28o
  27. செண்பகப்பெருமாள் என்பவன் ஒரு மலையாளி, அவனது சிங்களப் பெயர்தான் சப்புமல்குமாரயா! மற்றும்படி நீங்கள் சொல்வது சரி!
  28. இவ‌ர் 2012ம் ஆண்டு 19வ‌யதுக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் ந‌ல்லா விளையாடின‌வ‌ர் த‌னி ஒருவ‌னாய் அவுஸ்ரேலியா அணிய‌ பின‌ல் வ‌ரை கொண்டு வ‌ந்து இந்தியாவிட‌ம் தோத்த‌வை.................விக்வாஸ் தொட‌ர்க‌ளில் ந‌ல்லா விளையாடினாலும் அவுஸ்ரேலியா அணியில் 22வ‌ய‌தில் தான் அறிமுக‌ம் ஆனார் , இடையில் அவுஸ்ரேலியா அணியில் இருந்து சிறிது கால‌ம் நீக்க‌ப் ப‌ட்டு இப்போது த‌ன‌க்கேன‌ ஒரு இட‌த்தை பிடித்து இருக்கிறார்................ப‌ல‌ கிரிக்கேட்டுக்க‌ளை பார்ப்ப‌தால் சிறு குழ‌ப்ப‌ம் , அது தான் மாறி எழுதி விட்டேன்..................தவ‌றுக்கு ம‌ன்னிக்க‌வும்👍....................................
  29. ம‌ன்னிக்க‌னும் நான் த‌வ‌றுத‌லாக‌ எழுதி விட்டேன் ஆம் அந்த‌ தொட‌ரில் இவ‌ர் தான் கூட‌ ர‌ன்ஸ் அடிச்ச‌து இவ‌ர் ஜ‌பிஎல்ல‌ அறிமுக‌ம் ஆன‌து 2016 ஆண்டு , பிற‌க்கு 7வ‌ருட‌ம் க‌ழித்து தான் போன‌ வ‌ருட‌ம் மீண்டும் ஜ‌பிஎல்லுக்கை வ‌ந்த‌வ‌ர்....................
  30. 100% உண்மை. கோவிலில் இருந்து கணிசமான தூரத்தில் இருக்கும் கடை என தெரிந்தும், தகவல் கூகிளில் இருந்தும், கனடாவாழ் பரந்த மனது கருத்தாளர் கூட, தண்ணீர்பந்தல் போடும் இடத்தில் உள்ளது, சைக்கிள் பார்க் வைக்கும் இடத்தில் உள்ளது என்ற ரேஞ்சில் எழுதியது… இவர்களின் முற்போக்கு எல்லாம் வெறும் மேற்பரப்ப்பில் படிந்து கிடக்கும் superficial தூசி என்பதையும், உள்மனதில் இவர்கள் அனைவரும் தமிழ் தாலிபான்கள்தான் என்பதையும் காட்டி நின்றது.
  31. இந்த கூகிள் படத்தில் சில விருந்தினர் விடுதிகளும் பரிஸ்ரா அளவு தூரத்திலேயே இருக்கின்றன போல தெரிகின்றன. அங்கேயும் சைவச் சாப்பாடு தானாமா? இந்தப் பிரச்சினை தெரிய வந்தது பயனர்களுக்கு நன்மையான விடயம் தான்😂!
  32. சுண்டுக்குளி மகளீர் கல்லூரிக்கு அயலில் வீடு வாங்கியிருப்பின், அசைவம் சமைப்பதை தவிர்க்க சொல்லுங்கள். ஏனெனுல் தேவதைகளுக்கு அசைவம் பிடிக்காதாம்.😍
  33. தொடர்ந்து அடிக்கவேண்டும் அடிக்கலாம் என்ற அவனது ஆவலில் பெற்றோள் ஊத்துவது மட்டுமே தற்போதைக்கு குருவியின் கழுத்து....😂
  34. நான் செய்யவில்லை பார்த்ததை சொன்னேன் உண்மை தான் உங்கள் இனத்தைத் தானே சொல்கிறீர்கள் 😀
  35. ஆமாம் ...நான் செய்யவில்லை எங்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சி அல்லது செயல்கள் மிக சிறந்த மேளக்காரன். கைதடியை சேர்ந்தவர் தான் அவருடைய பெயர் பழனி அந்த காலத்தில் இந்தியாவில் நடந்த போட்டியில் பங்கு பற்றி முதலாவது இடம் பெற்றவர் தமிழ்நாட்டில் முதலமைச்சரிடம். பரிசு பெற்றவர் முதலமைச்சர் பெயர் தெரியாது கைதடி சந்தியில் வந்து நின்றால் அவரை சுற்றி ஒரு கூட்டம் கூடி விடும் பொதுவாக மேளகாரர். எல்லாம் மச்சம். சாப்பிடுவார்கள் ஆனால் கோயில் மேளக்காரர். மதிப்பு இல்லாதவர்கள் சோம்பேறிகள். அவர்கள் சாப்பிடுவதில்லை மக்கள் மச்சம். சாப்பிடுவார்களா ?? இல்லையா?? என்று பார்ப்பதில்லை .....நன்றாக மேளம் அடிப்பாரா. ?? என்று தான் பார்ப்பார்கள் யாராக இருக்கும் ....🤣 பெயரை குறிப்பிட்டு எழுதவும் அங்கை சாப்பிட்டு விட்டு கோவிலுக்குள் வரலாம்” இல்லையா???
  36. என் அறிவுக்கு எட்டிய வகையில் சைவ கோயில் விதிமுறைகளில், எல்லா இடமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பெரும்பாலான கோயில்கள் ஆகம விதிமுறைப்படியும், ஒரு சொற்ப கோயில்கள் ஆதி குடிகளின் (சரியான பதமோ தெரியாது) பாரம்பரிய நம்பிக்கையின் அடிப்படையிலும் வழிபாடுகள் நடாத்தப்பட்டுகின்றன. அதன் அடிப்படையில் தான் ஒரு சில (சிறுதெய்வ, குலதெய்வ) கோயில்களில் உயிர் பலிகள், வேள்விகள் நடத்தப்படுகின்றன. இப்படியான உயிர் பலிகளை பிரத்தியேகமாக நான் விரும்பவில்லை. ஆனாலும் அந்த பாரம்பரிய முறையை பின் பற்றுபவர்களின் விருப்பத்துக்கு குறுக்கே நான் போக முடியாது. ஆகவே அப்படி வழிபாடுமுறைகளை வைத்திருக்கும் கோயில்களையும், நல்லூர் கோயில் நடைமுறைகளையும் ஒப்பிடுவதை தவிர்க்கலாம்.
  37. மக்களை தலைவன் இல்லா மந்தைகளாக்கி, கட்சியை கூறு போட்டு வைத்திருக்கிறார். இதற்கு மேல் என்ன கேடு வரப்போகிறது? ஒன்று கட்சி அழியும் அல்லது இவர் பலாத்காரமாக வெளியேற்றப்படுவார். கட்சியால், மக்களால் நிராகரிக்கப்பட்டும் தலைமைக்கு அடிபட்டு, அடுத்தவர் பதவியை கவர்ந்து இதல்லாம் ஒரு பிழைப்பு? இதை சட்டம் தெரிந்த சாணக்கியன் என்று புகழ்ச்சி வேறு. இவர் பாராளுமன்றம் போனாலும் ஏளனப்படுத்தப்படுவார். அதற்குத்தான் இவ்வளவு அவசரம். பதவிக்காக நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு அலைபவர்கள், கிடைக்கவில்லையென்றவுடன் கட்சியை பிரிந்து சென்றுவிட்டார்கள் என்று சொன்ன சுமந்திரனும், இங்கு சிலரும் கவனிக்க வேண்டும்; கட்சியின் அடாவடி, தன்னலம், ஓரங்கட்டல், குடைச்சல் தாங்காமல் மரியாதையாக வெளியேறினார்கள். ஆனால் மற்றவர்களை குறை சொல்லி, கட்சியை முடக்கி, உறுப்பினர்களை செயற்படவிடாமல் தடுத்து வைத்திருப்பதற்கு என்ன பெயர் சூட்டலாம்?
  38. எங்கடை சில ஆட்களுக்கு…. கோயிலுக்கு பக்கத்தில் இருந்து தான் இறைச்சி தின்ன வேண்டும் என்ற குறுக்குப் புத்தி ஏன் வந்தது என்று தெரியவில்லை. விட்டால்… பூணூல் போட்டுக் கொண்டு பூசை செய்யவும் வெளிக்கிட்டு விடுவார்கள் போலுள்ளது. யாழ்ப்பாணத்தில் எத்தனையோ மாமிசக் கடைகள் “ஈ” ஓட்டிக் கொண்டு இருக்க, கோவிலடிக்கு வந்துதான் இறைச்சி சாப்பிட வேண்டும் என்ற கீழ்த்தரமான சிந்தனையை என்னவென்பது. சிலருக்கு…. சைவம் என்றால், அதற்குள் சம்பந்தம் இல்லாமல் வந்து கருத்து கந்தசாமி போல்… எதையாவது உளறிக் கொட்டி விட்டு போவதை வழக்கமாகவே வைத்திருக்கின்றார்கள். புதன்கிழமை மதிப்பிற்குரிய வேலன் சுவாமிகள் குறிப்பிட்ட Barista கடையின் முன் நடாத்திய போராட்டத்தின் போது…. அளவுக்கு அதிகமான பொலிசார் கடைக்குப் பாதுகாப்பு கொடுக்கும் போதே… இது ஒரு அரசியல்வாதியின் பினாமியின் கடையாக இருக்கலாம் அல்லது அன்னிய மதத்தை சேர்ந்தவரது கடையாக இருக்கலாம் என யோசித்தேன். நீங்கள் அவர் தென்னிலங்கையை சேர்ந்த சிங்களவர் என குறிப்பிட்ட போது… பொலிசாரின் அதிகப் படியான பாதுகாப்பின் அர்த்தம் புரிந்தது. எப்படியோ… கடை அகற்றப் பட்டது சந்தோசம்👍🏽. அதற்காக அழுது வடிபவர்கள்… சோனக தெருவில் உள்ள “மொக்கன் கடையில்” புட்டும், மாட்டு இறைச்சிக் கறியும் சாப்பிட்டு ஆறுதல் அடையட்டும். 😂 🤣
  39. எனது தாயாரிடம் ஒரு தவில் அடிப்பவரின் மகன் படித்தார். பேச்சுவாக்கில் ஒரு நாள் எங்கள் வீட்டில் நேற்று குடல் கறி என சொல்லி விட்டான்🤣. அவனின் அப்பாதான் எங்கள் ஊர் கோவிலில் தினமும் மேளம். அப்பா நேற்று கோவிலுக்கு போகவில்லையா என கேட்க, போனவர். எங்கள் வீட்டில் வழமையாக நாங்கள் மச்சம் சாப்பிட்டு விட்டே கோவிலுக்கு போவோம், அப்போதுதான் உசாராக மேளம் அடிக்கலாம் எண்டு வேறு சொல்லிவிட்டான். அடுத்த நாள் காலை அவனோடு அவன் தாயும் வந்து, மகன் நேற்று சோயா மீட்டை, இறைச்சி என தவறாக சொல்லி விட்டார் என ஒரு விளக்கம் கொடுத்தார்🤣. இது எங்கும் நடப்பது என நினைக்கிறேன். மேற்கு வங்க பிராமணர் மீனை சைவம் என சொல்லி அடிப்பார்கள்.
  40. 🫢.............. உண்மையாகவா அண்ணா..................... எங்களூர் அம்மன் கோவில் திருவிழா நாட்களில் நாங்கள் ஊர்க் கட்டுப்பாடு, அம்மன் கண்ணைக் குத்துவார் என்று சொல்லி வளர்க்கப்பட்டு, 15 நாட்களும் கிழங்கு ரொட்டி தான் சாப்பிட்டுக் கொண்டு திரிந்தோம். அம்மன் திருவிழாவின் போது ஊரில் எல்லா ரொட்டிக் கடைகளிலும் கிழங்கு ரொட்டி மட்டுமே போடுவார்கள். உங்கள் இடத்தில் மேளம் அடிப்பவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்................ என்னுடைய ஊரில் கோவிலில் இருந்து 300 மீட்டர், 400 மீட்டர் என்று அளந்தால் அடுத்த ஊர் வந்துவிடும். அந்த நாட்களில் கோவிலின் முன் பக்க அருகாமையில் (சிவாஜிலிங்கத்தின் வீட்டருகே), பின் பக்க அருகாமையில் (தலைவர் வீட்டருகே) என்று ஏராளமான ரொட்டிக் கடைகள் இருந்தன. இந்தப் பதினைந்து நாட்களும், வெள்ளிக்கிழமைகளையும் தவிர்த்து, ஏனைய நாட்களில் நல்ல கொத்துரொட்டி போடுவார்கள். கோவிலின் முன்பக்கம் இருந்த ரொட்டிக்கடை மிகவும் பிரபலம். 25 மீட்டர் தூரம் அல்லது குறைவாக வரும் என்று நினைக்கின்றேன். இதுவரை நல்லூரைச் சுற்றி அருகாமையில் இப்படியான கடைகள் இல்லாமல் இருப்பது ஆச்சரியம் தான்............ அங்கிருக்கும் மக்களின் மனம் புண்படுகின்றது என்றால், கொஞ்சம் தள்ளி கடையை போட்டுக் கொள்ளுங்கள்................ ஈழம் ஒரு சிவபூமி, சைவர்களின் ராஜ்யம் என்று சொல்லப்படும் மற்றும் எழுதப்படும் போது, அவர்கள் வேறு ஒரு பிரதேசத்தை சொல்லுகின்றார்கள் என்ற உணர்வே இன்றுவரை ஏற்படுகின்றது. சிவசேனாவும், வேலன் சுவாமிகளும் அதைவிட அந்நியமாகத் தெரிகின்றார்கள்.
  41. நல்லூரில் உற்சவ எல்லை என்ற ஒன்றை வரையறுத்து காலம் காலமாக இருக்கும் ஒரு நடைமுறையை மீறி இப்படி ஒரு செயலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? கடை சரியாக கோயில் முற்றத்தில் இருந்து >3௦௦ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கே தான் தண்ணீர் பந்தல், மோர் பந்தல், காவடிகள் இளைப்பாறல் எல்லாம் ஆரம்பமாகும். இந்த இடத்தில் ஒரு மத நல்லிணக்கத்தை பேணினால் தான் என்ன? ரிக்கோ முதல் mango வரை மாமிச உணவு பரிமாறப்படுவதில்லை. Barista உரிமையாளர் தெற்கை சேர்ந்தவர் சிங்களவர், அவர் தான் கடைபிடிக்கும் சமய, சம்பிரதாய எதிர்பார்ப்புகளை ஏற்றுக்கொண்டு வழிநடப்பவர். நல்லூர் ஆலய சூழல் பற்றி, அங்குள்ள வழமைகள் பற்றி எடுத்துக் கூறினால் புரிந்துகொள்வார். அவரின் மெனு கார்டில் சில மாற்றங்களை கொண்டும் வருவார். உங்கள் வீட்டில் உள்ள ஸ்வாமி அரையிலேனுள்ளே மாட்டுக்கறியையும் , மீன் குழம்பையும் தட்டிலே போட்டுக்கொண்டு கொண்டு போய் சாப்பிடுவீர்கள்? அப்படித்தான் இதுவும். ஒரு புரிந்துணர்வு, நம்பிக்கை. இதையும் ஒரு சங்கித்தனமாக, யாழ்ப்பாண மேட்டுக்குடி மேலாதிக்கமாக எப்படி பார்க்க முடிகிறது? நாளைக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கும் எதோ ஒரு பள்ளிவாசல் பக்கத்தில் பன்றி இறைச்சிக்கடை வந்தாலும் இப்படித்தான் நான் யோசிப்பேன்.
  42. GMT நேரப்படி நாளை வெள்ளி 23 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 65) வெள்ளி 23 மே 2:00 pm GMT லக்னோ - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB எதிர் SRH 18 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் ஐந்து பேர் மாத்திரம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி பிரபா செம்பாட்டான் வாதவூரான் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் சுவைப்பிரியன் கந்தப்பு ஏராளன் நுணாவிலான் எப்போதும் தமிழன் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  43. என்னால் முடியாது… இது மலையாளம் போல தமிழில் இருந்து உருவாகிய இன்னொரு மொழியில் எழுதபட்டிருக்கிறது. தமிழ் எழுத்துரு, தமிழ் சொற்கள் போல இருக்கும் சொற்கள் பாவிக்கபடும்…ஆனால் வாசித்தால் விளங்காது. French இல் இருந்து creole ஆங்கிலத்தில் இருந்து Pigeon English உருவானதை போல இது தமிழில் இருந்து உருவாகியுள்ளது. உலகில் இதை ஒரே ஒருவர்தான் பாவிக்கிறார் என்பது மேலதிக தகவல். # நம்பினால் நம்புங்கள்
  44. நீங்கள் சொல்வது தியரி. அண்ணனின் “நடைமுறை”படி அதை இந்தோனேசியாவில் சேர்திருக்கிறார்.. நீங்கள் புரிந்துகொள்ள சிரமப்படுவாதால் மட்டும், அண்ணன் கஞ்சா கப்ஸா கதை சொல்லிகிறார் என ஆகிவிடாது. ஆதாரம் ? அண்ணன் 1965 ம் ஆண்டு குப்பி விளக்கில் ஆங்கிலோ அமேரிக்கன் டிரிபியூனில் வாசித்தார். தேடிப்பாருங்கள்.
  45. உங்களுக்கு விளங்கினால் தயவுசெய்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்து எழுதவும்! நானும் எல்லாப்பக்கத்தாலையும் கோர்த்து வாசித்துப்பார்த்தாலும் ஒன்றுமே புரியுதில்லையே!
  46. சீனா ஒரு போதும் தன் பட்டுச்சாலையிலிருந்து விலகாது. சீனாவிவிற்கு மேற்கத்தையவர்களின் நரி விளையாட்டுக்களில் நல்ல பரிட்சயம் உண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.