Leaderboard
-
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்8Points46783Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்7Points87988Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்4Points31956Posts -
Kandiah57
கருத்துக்கள உறவுகள்4Points4036Posts
Popular Content
Showing content with the highest reputation on 05/26/25 in all areas
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கோவில் திருவிழாவிற்கு வந்த மேளகாரருக்கு, ஆடு வெட்டி விருந்து வைத்த பரம்பரையில் வந்த ஆட்களுக்கு, பதில் சொல்லுறது இல்லை. 😂 🤣3 points
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இங்கே எல்லோரும் சொல்வதில் கொஞ்சம் நியாயம் உள்ளது என்றே நினைக்கின்றேன் யார் எதை உண்பது என்பதை வேறொருவர் தீர்மானிக்கக் கூடாது இன்னொருவர் உணர்வினை மற்றொருவர் மதிக்க வேண்டும், காயப்படுத்துவது தவறு. இது இரு பக்கமும் சரியான விகிதத்தில் நடைபெறும் பொழுது பிரச்சனைகள் வலுப்பது குறையும் வலது மற்றும் இடது சாரிகள் விசித்திரமானவர்கள், அமெரிக்காவில் மாட்டு இறைச்சியை முறையே ஆதரித்தும் எதிர்த்தும் போராடும் அவர்கள் இலங்கை இந்தியாவில் அதை மாற்றிச் செய்கிறார்கள்.உணவை அரசியல் ஆக்குவதால் அவர்கள் அதிகாரம் அடைக்கிறார்கள் கனவு காணும் போழுது மிருகம் துரத்துவது போலோ அல்லது கிழே விழுவது போன்றோ வரும் காட்சிகள் எல்லாம் பல ஆயிரம் வருடம் முன் எம் முன்னோர்கள் வாழ்ந்த, பட்ட, வாழ்வின் நினைவுகள் என்று சொல்வார்கள், அது போல் நாமும் ஆதி காலத்தில் உண்ட இறைச்சி வத்தலை விட்டுவிட்டு விடாப் பிடியாக சைவ உணவோடு மட்டும் வாழ்ந்து விட்டு போக முடியாது, நான் 20 வயது வரைக்கும் மச்சம் சாப்பிட வில்லை, இன்று மச்சம் இல்லாமல் உணவு இறங்குவதும் இல்லை. நீங்கள் மாறா விட்டாலும் உங்கள் பிள்ளைகள் மாறி விடும். ஆகவே விடாப் பிடியாக ஒரே பிடியில் நிற்பது தோல்வியையும் விரக்தி நிலையையும் உருவாக்கும். ஒரு மனிதன் தான் பிறந்து வளர்ந்த சமூகம், சாதி, மனநிலை, உண்ட உணவு, அவனுக்குள் காலா காலமாக ஊட்டி வளர்க்கப்பட்ட நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கடந்து உடனடியாகவெல்லாம் வந்து விட முடியாது. அதற்கு காலம் எடுக்கும். சில நேரம் பரம்பரைகள் தாண்டித் தான் தாம் இதுவரை நம்பியதில் கோளாறு உண்டு என்று தெரிய வரும். சமூகத்தை திருத்தி எடுக்கின்றேன் என்று புறப்படும் புரட்சியாளர்களுக்கு இந்தப் புரிதல் முக்கியம். உடனடிப் புரட்சி வன்முறையில் முடியும். அரசியலில் மதம் கலக்கக் கூடாது. வேலன் சுவாமிக்கு இது தேவை இல்லாத வேலை. அவரே பார்க்க காட்டுக்கு வேட்டை நாயோடு உடும்பு பிடிக்கப் போகும் ஆள் போல் உள்ளார். அவரின் உடம்புக்கும் முக லட்ஷணத்துக்கும் அவர் எடுத்த அரசியல் தேவை இல்லாத ஆணி. சரி இது போன்ற பிரச்சனைகளுக்கு எது தான் தீர்வு? இது போன்ற பிரச்சனைகள் இடைக்கிட நடப்பதே தீர்வு.2 points
-
வவுனியாவில் விபத்து; கணவன் பலி; மனைவி, மகன், மாமனார் படுகாயம்
இலங்கையில் நாளாந்தம் பலர் விபத்துகளில் கொல்லப்படுகின்றனர். அதில் அரைவாசிக்கும் மேல் சாரதி நித்திரையாகி விடுவதால் நிகழ்கின்றது. அண்மையில் இடம்பெற்ற இ.போ.ச வண்டியின் கோர விபத்துக்கும் சாரதி நித்திரையாகிப் போனதே காரணம் என கண்டறிந்துள்ளனர். அதிகாலையில் வாகனத்தை செலுத்த வேண்டி வரும் எனில், அதற்கு முன்னர் நல்ல ஓய்வை எடுத்து இருக்க வேண்டும். 7 மணித்தியாலங்களாவது நித்திரை கொண்டு இருக்க வேண்டும். நான் நீண்ட தூரத்துக்கு வாகனம் செலுத்த வேண்டி வரும் போது, இடையில் நித்திரை வருகின்ற மாதிரி இருந்தால் உடனே அருகில் இருக்கும் Parking Area விற்கு இடத்துக்கு சென்று 15 நிமிடங்களாவது Nap எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆயுஷ் மாத்ரேயின் 17 பந்துகளில் புயல்வேகத்தில் பெற்ற 34 ஓட்டங்களுடனும், டெவால்ட் ப்ரெவிஸின் 23 பந்துகளில் மரண அடியில் பெற்ற 57 ஓட்டங்களுடனும், டெவொன் கொன்வேயின் அதிரடியான 52 ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த விக்கெட்டுகள் அடுத்தடுத்துச் சரிய ஆரம்பித்தன. சாய் சுதர்சன் மாத்திரம் அதிரடியாக 41 ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் எல்லோரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியதால், இறுதியில் 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களுடன் சுருண்டது. முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ஓட்டங்களால் வெற்றியீட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே மின்னல்வேகத்தில் அடித்தாடினர். அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் 32 ஓட்டங்களும், ட்ராவிஸ் ஹெட் 40 பந்துகளில் 76 ஓட்டங்களும், ஹென்றிக் க்ளாஸன் ஆட்டமிழக்காது 39 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் என மைதானம் எங்கும் பந்தைச் சிதறிடித்துப் பெற்ற 105 ஓட்டங்களுடனும், பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து ஐபிஎல் போட்டிகளில் மூன்றாவது அதிஉச்ச ஓட்ட எண்ணிக்கையான 278 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் மிகவும் சவாலான வெற்றி இலக்கை அடைய அடித்தாட ஆரம்பித்தபோது விக்கெட்டுகள் வேகமாக விழ ஆரம்பித்தன. சுனில் நாரைனின் 16 பந்துகளில் 31 ஓட்டங்களும், மனிஷ் பாண்டேயின் அதிரடியான 37 ஓட்டங்களும், ஹர்ஷித் ராணாவின் 34 ஓட்டங்களும் வெற்றி இலக்கிற்கு கிட்டவும் போகப் போதவில்லை. இறுதியில் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 168 ஓட்டங்களுடன் சுருண்டது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 110 ஓட்டங்களால் வெற்றியீட்டியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 8 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: இறுதி நிலையில் நிற்கும் @Ahasthiyan க்கு விமோசனம் கிட்ட வாய்ப்பு குறைவாகவே உள்ளது!2 points
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
புரிந்து கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ முடியாது என நான் எழுதவில்லை. இப்படியாக புதிதாக வதவர்கள் “வரலாறை, வழமையை சரிவர அறிந்து கொள்ளாமல் இருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை” என்றே எழுதினேன். உண்மையில் நல்லூரின் வழமை அறியாமல் “எனது சகோதரம், உறவினர் வீட்டில் மச்சம் இல்லை” எனவே அதுதான் நல்லூரில் வழமை என நீங்கள் எழுதியதே நான் அப்படி எழுத காரணமாகியது. நீங்கள் நல்லூருக்கு அயலான், உங்கள் உறவினர் வந்தான் வரத்தான். அவரின் வீட்டில் நடப்பதே நல்லூரின் வழமை என அவர் உங்களுக்கு சொல்லி இருப்பார் (நீங்களாக இட்டு கட்டவில்லைதானே). ஆக, இதுதான் ஒரு வந்தான் வரத்தான் நல்லூரின் வழமையை அறியாமல் இருப்பதற்கான சான்று. அவர் புதியவர் என்பதால் அவருக்கு வழமை தெரியாமல் இருப்பது ஆச்சரியமில்லை என்றே நான் எழுதினேன். உண்மையில் உங்களுக்கும் சகபாடிகளுக்கும் என்னதான் பிரச்சனை🤣. தீவக மக்கள் என எழுதினால்…ஐயோ தீவான் என எழுதுகிறார் என பொய்யாக victim card ஐ பிளே பண்ணுகிறீர்கள். இல்லை என்பதை மேற்கோளோடு நிறுவினாலும்…இல்லை “நீ என்ன எழுதினாலும், நாங்கள் அதை தீவார் என்றே வாசிப்போம், விளங்குவோம்” என எழுதுகிறீர்கள். அதே போல் வந்தான் வரத்தானுக்கு ஊர் வழமை தெரியாது இருப்பதில் ஆச்சரியம் இல்லை என எழுதினால், வந்தான் வரத்தானால் ஊர் வழமையை தெரிந்து கொள்ளவே முடியாது என எழுதினேன் என இல்லாத இன்னொன்றை சொல்லி மாய்மாலம் போடுகிறீர்கள். சில கறுப்பினத்தவர், முஸ்லிம்கள் - பொலிஸ் காரை நிப்பாட்டின உடனேயே “ஐயோ என்னை இன, மத அடிப்படையில் வஞ்சிக்கிறார்கள்” என race card ஐ பாவிப்பது போல இருக்கிறது இந்த செய்கைகள். பிகு இத்தனைக்கும் உங்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத தமிழ்நாட்டில் 600 வருடம் முன் வந்தவன் தமிழனே இல்லை, ஆளக்கூடாது என நடக்கும் வெறுப்பரசியலின் தற்போது யாழ் கால நம்பர் 1 cheer leader நீங்கள் 🤣.2 points
-
NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும் — கருணாகரன் —
NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும் May 24, 2025 — கருணாகரன் — மிகச் சிறப்பான மக்கள் அங்கீகாரத்தையும் அரசியல் ஆணையையும் பெற்றிருக்கும் NPP, தீர்மானங்களை எடுப்பதில் குழப்பத்துக்கு – தடுமாற்றத்துக்கு- உள்ளாகியிருப்பது ஏன்? இன்றைய இலங்கையில் அனைத்துச் சமூகத்திலும் ஜனவசியம் மிக்க ஒரே தலைவராக இருக்கிறார் அநுரகுமார திசநாயக்க. ஆனாலும் அந்த மக்களுடைய நம்பிக்கைகளை நிறைவேற்ற முடியாதிருப்பது எதற்காக? NPP க்குப் பின்னிருக்கும் அல்லது அநுரகுமார திசநாயக்குவுக்குப் பின்னுள்ள சக்திகள் எவை? யாருடைய நிகழ்ச்சி நிரலில் NPP இயங்குகிறது? அல்லது அநுரகுமார திசநாயக்க இயங்குகிறார்? ஜே.வி.பி தவிர்ந்த வெளிச்சக்திகளின் பின்னணியோ பிடியோ இல்லாமல் தனித்துச் சுயாதீனமாக NPP இயங்குவதாக இருந்தால், அந்த அடையாளம் என்ன? இவ்வாறான கேள்விகள் NPP அரசாங்கத்தைக் குறித்தும் அநுரகுமார திசநாயக்கவைக் குறித்தும் எழுகின்றன. இவ்வாறான கேள்விகள் எழும் என்பதை NPP யும் புரிந்து கொள்ள வேண்டும். அநுரகுமார திசநாயக்கவும் புரிந்து கொள்ள வேண்டும். NPP யின் ஆதரவாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். 00 இலங்கையின் சீரழிந்த அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் சக்தியாகவே -மாற்றுச் சக்தியாகவே NPP ஐ மக்கள் பார்த்தனர்; இன்னமும் பார்க்கின்றனர். மக்கள் மட்டுமல்ல, வெளியுலகமும் அப்படித்தான் எதிர்பார்க்கிறது. NPP யும் அப்படிச் சொல்லித்தான் அதிகாரத்துக்கு வந்தது. குறிப்பாக முறைமையில் மாற்றம் (System Change) செய்வதாக. முறைமையில் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே நடைமுறையில் மாற்றம் ஏற்படும். இதனால்தான் முறைமையில் மாற்றம் செய்வதற்கான அதிகார பலத்தை, மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் மூலம் NPPக்கு மக்கள் கொடுத்தனர். இல்லையெனில் 60 ஆண்டு வரலாற்றில் அப்படியொரு வெற்றியை NPP யோ JVP யோ பெற்றிருக்க முடியாது. இதனை JVP யும் NPP உம் புரிந்து கொள்வது அவசியம். ஆகவே முறைமை மாற்றத்தின் (System Change) மூலம் நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வையும் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பையும் NPP செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முறைமை மாற்றத்தை (System Change) செய்வதற்குத் தயக்கம் கொள்கிறது NPP. அப்படியென்றால் இதைச் செய்யக் கூடிய ஆற்றல் NPP க்கு இல்லையா? அல்லது அதிகாரத்துக்கு வந்த பிறகு முறைமை மாற்றத்தை NPP விரும்பவில்லையா? அல்லது முறைமை மாற்றம் (System Change) தொடர்பாக NPP க்குள் குழப்பங்களும் இழுபறிகளும் நிகழ்கின்றனவா? NPP க்குள் குழப்பங்கள் நிகழ்கின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. என்பதால்தான் ஜனாதிபதியின் கருத்துகளுக்கும் நிலைப்பாட்டுக்கும் மாறான முறையில் அமைச்சர்களின் கருத்துகளும் நடவடிக்கைகளும் உள்ளன. ஜனாதிபதி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்போடு உள்ளதாகக் காட்டுகிறார். அநுரவின் உரைகளும் முயற்சிகளும் இதைச் சொல்கின்றன. அவரிடம் நிதானமும் மென்போக்கும் யதார்த்தத்தைப் புரிய வைக்கும் முனைப்பும் உள்ளது. பௌத்த பீடங்களுடன் அநுரகுமார நெருக்கத்தைக் காட்டுவது கூட தன்னுடைய கடினமான நோக்கினை நிறைவேற்றுவதற்கான ஒரு வகையான அரசியல் உத்தியாகவே படுகிறது. அதாவது தனக்கும் சிங்கள பௌத்தத்துக்கும் இடையில் இடைவெளி இருப்பதாக அந்தத் தரப்பினர் உணரக் கூடாது. அப்படி உணர்ந்தால் அது தன்னுடைய மாற்று அரசியலை – முறைமை மாற்றத்தோடு கூடிய அரசியலை மேற்கொள்வதற்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தக் கூடும் எனக் கருதியே பௌத்த பீடங்களுடன் நெருக்கத்தைக் காட்டுவதாக தெரிகிறது. ஏறக்குறைய பிரதமர் ஹரிணியும் இந்த அலைவரிசையில்தான் உள்ளார். NPP யின் முகமே பிரதானமாக இவர்கள்தான். ஆனால், அரசாங்கத்தரப்பிலுள்ள ஏனையவர்கள் (NPP யின் ஏனைய ஆட்கள்) JVP யின் அடையாளத்தையே பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் இன்னும் இனவாதச் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை. என்பதால்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணும் உளநிலை (கரிசனை) NPP க்கு இல்லை என்பதை அமைச்சர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வரும் கருத்துகள் சொல்கின்றன. இது எவ்வளவு கவலைக்கும் வெட்கத்துக்கும் உரியது! இனவாதத்தைத் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கும் வரையில் JVP யினால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியவில்லை. இனவாதத்துக்கு வெளியே வந்து NPP யாக அது முகம் காட்டியபோதுதான் அதற்கு அங்கீகாரமும் அதிகாரமும் கிடைத்தது. தமிழ் பேசும் மக்களுடைய ஆதரவை NPP பெற்றதும் இனவாதமற்ற போக்கை அது கொண்டிருக்கிறது என்றபடியாற்தான். JVP யினர் NPP யைப் பிடித்துப் பின்னோக்கி இழுப்பதற்குக் காரணம், அவர்கள் இயல்பில் இனவாத சிந்தனையில் ஊறியவர்கள் என்பதே. ஆனால், அதிலிருந்து விலகி, மீறி வரவேண்டும் என்பதே வரலாற்றின் நிபந்தனையாகும். ஆனாலும் இந்த விடயத்தில் கடந்த கால ஆட்சியாளர்களின் வழித்தடத்திலேயே NPP யும் பயணிக்க முயற்சிக்கிறது. அல்லது NPP ஐ அப்படிப் பயணிக்க வைக்க JVP முயற்சிக்கிறது. தன்னுடைய நிறைவேற முடியாதிருந்த நீண்டகாலக்கனவுகளை NPP யின் மூலம் நிறைவேற்றுவதற்கு JVP விரும்புகிறது. அதனால் அது NPP யில் அழுத்தத்தைப் பிரயோகிக்க முயற்சிக்கிறது. என்பதால்தான் NPP க்குள் குழப்பங்களும் தடுமாற்றங்களும் நீடிக்கின்றன. NPP க்குள் குழப்பங்களும் தடுமாற்றங்களும் உள்ளவரை அதனால் முறைமை மாற்றத்தை (System Change) மட்டுமல்ல மக்கள் எதிர்பார்க்கின்ற எதையும் செய்யவே முடியாது. இதுதான் இப்போது NPP மீதான விமர்சனங்களாகவும் நம்பிக்கையீனமாகவும் மேற்கிளம்புகின்றன. இதொரு புறமிருக்க, தமிழ் பேசும் சமூகத்தினர் நம்பிக்கை கொள்ளக் கூடிய அளவுக்கு NPP யின் எந்தச் செயற்பாடுகளும் அமையவில்லை. பதிலாக அவர்களுடைய நம்பிக்கையைச் சிதைக்கும்படியாகவே அமைச்சர்களின் பேச்சுகளும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் உள்ளன. இதனால்தான் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது தமிழ் பேசும் மக்களிடம் NPP க்கான ஆதரவில் இறக்கம் நிகழ்ந்தது. ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஆதரவையும் விட உள்ளுராட்சித் தேர்தலில் கூடுதலான ஆதரவு கிட்டும் என்றே NPP எதிர்பார்த்தது. இதற்காக வடக்குக் கிழக்கு மற்றும் மலையகமெங்கும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் எனப் பலரும் கிராமங்களுக்குக் கூடச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் 17 சபைகளையும் NPP யே கைப்பற்றும் என்று அமைச்சர் சந்திரசேகரன் உள்பட NPP பலரும் வெளிப்படையாகவே சொன்னார்கள்; நம்பினார்கள். ஆனால், ஒரு சபையைக் கூட NPP யினால் கைப்பற்ற முடியவில்லை. (இதற்குப் பிரதான காரணம் அமைச்சர் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் போன்றோரின் பொறுப்பற்ற அதிகாரத்தனமான பேச்சுகளும் கேலிக்குரிய நடத்தைகளுமாகும் என்று சொல்கிறார்கள் வடக்கிலுள்ள NPP ஆதரவாளர்கள்). வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் வெவ்வேறு விதமாக NPP மீதான கேள்விகள் எழுந்துள்ளன. இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை NPP க்கு. இதனால்தான் தாம் ஆட்சியமைக்கக் கூடிய சபைகளில் தாம் ஆட்சியமைப்பதற்கு யாராவது இடையூறு விளைவித்தால் – இடைஞ்சலாக இருந்தால் –கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி நிதானமிழக்க நேர்ந்தது. இந்த நிதானமிழப்பை NPP யின் அமைச்சர்கள் பலரிடத்திலும் கூடக் காண முடிகிறது. அவர்கள் நிதானமிழந்தால் அவர்களுக்கும் NPP க்கும்தான் நட்டம்; பாதிப்பு. மக்களுக்கும் பாதிப்புண்டுதான். ஆனால், அவர்கள் வரலாற்றின் ஓட்டத்தில் இன்னொரு மாற்றத்துக்காக முயற்சிப்பார்கள். ஒரு காலம் ராஜபக்ஸக்களை ஏற்றுக் கொண்ட மக்கள், இன்னொரு காலச் சூழலில் அவர்களை விரட்டி அடித்த்தைப்போல, NPP யை விட்டு விட்டு இன்னொரு சக்தியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். ஆகவே மக்களைத் தம்மோடு வைத்துக் கொள்வதா இல்லையா என்பதை NPP தான் முடிவு செய்ய வேண்டும். மக்களைத் தம்முடன் வைத்துக் கொள்வதென்றால், அவர்களுடைய நியாயமான தேவைகளை நிறைவேற்ற வேண்டும். நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். இதற்கு முறைமை மாற்றம் (System Change) அவசியம். அதைச் செய்வதற்கு காலம் தாழ்த்தவே கூடாது. காலம் தாழ்த்தினால் எதிர்த்தரப்புகள் பலமடையும். இலங்கை போன்ற நாடுகளில் எளிதாக மாற்றத்தை உருவாக்கி விட முடியாது. அதற்கான வரலாற்றுச் சூழல் எப்போதும் அமைவதல்ல. NPP அது கிடைத்துள்ளது. நாட்டுக்கும் அது வாய்த்திருக்கிறது. இப்பொழுது – கடந்த ஆறு மாதங்களுக்குள்ளேயே -எதிர்த்தரப்புகள் தம்மைச் சுதாகரித்துக் கொண்டு மேலெழத் தொடங்கி விட்டன. மறுவளத்தில் NPP எதிர்த்தரப்புகளின் அரசியல் அழுத்த்ததிற்குப் பணியும் நிலையில் உள்ளது. தடுமாற அல்லது குழம்பத் தொடங்கி விட்டது. அதனால்தான் லால்கந்த, விஜித ஹேரத், ஹந்துன் நெத்தி போன்றவர்களெல்லாம் இனவாதத்தைத் தூக்க முற்படுகிறார்கள். இனவாதத்தைத் தூக்கினால்தான் ஆட்சியில் நீடிக்க முடியும் என்று நம்புகிறார்கள். இனவாதத்தை தமது அரசியலாக – அரசியல் முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்திய சுதந்திரக் கட்சி, ஐ.தே.க மற்றும் ராஜபக்ஸக்களின் பெரமுன போன்ற சக்திகளை வரலாறு புறமொதுக்கித் தோற்கடித்து விட்டது. மட்டுமல்ல, இனவாதத்தை அரசியல் மூலதமாக்கியதால்தான் அந்தக் கட்சிகள் தோற்றதோடு, நாடும் அழிவடைந்தது. பல்லாயிரம் மக்கள் உயிரிழக்க நேர்ந்தது. பல்லாயிரம் பேர் அங்கவீனர்களாயினர். பெருமளவு சொத்துகளும் இயற்கை வளமும் அழிந்தது. நாடு தாங்கவே முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. அந்திய சக்திகளிடத்திலும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் கால்களில் விழ வேண்டியேற்பட்டது. வரலாறு இதை JVP க்கும் NPP க்கும் மக்களுக்கும் தெளிவாக உணர்த்தியுள்ளது. இதை JVP – NPP புரிந்து கொள்ளத் தவறினால் இவர்களும் வரலாற்றின் குப்பைக்குள்தான் வீசப்படுவர். முடிவாக, அரசியலமைப்பு மாற்றம் உள்பட அனைத்திலும் திருத்தங்களை NPP தாமதிக்காமல் செய்ய வேண்டும். இலங்கையில் இப்போதுள்ளது காலனித்துவ ஆதிக்கச் சிந்தனைமுறையும் கட்டமைப்புகளுமேயாகும். இதை மாற்றியமைப்பதைப் பற்றி அரசாங்கமும் எதிர்த்தரப்புகளும் சிந்திக்க வேண்டும். அதாவது காலனித்துவச் சிந்தனையிலிருந்தும் கட்டமைப்புகளிலிருந்தும் (Decolinize) விடுபட வேண்டும். இதற்கான ஒரு புதிய அரசியற் பண்பாட்டைக் கொண்ட முன்னெடுப்பும் அதற்கான கட்டமைப்பும் அவசியமாகும். எதிர்ச்சக்திகள் ஏற்படுத்தும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் மீறி எழுந்து, நாட்டுக்குத் தேவையானதை, சரியானதைச் செய்வதே அரசியல் ஆளுமையின் பணியாகும். அநுரகுமார திசநாயக்க அந்தத் தலைமைப் பாத்திரத்தை வகிக்க வேண்டும். அதற்கான அங்கீகாரத்தை மக்கள் அவருக்கு வழங்கிருக்கிறார்கள். மக்களுடைய ஆணைக்கும் அங்கீகாரத்துக்கும் மதிப்பளிப்பதே ஜனாதிபதிக்கான முதற்கடமை. அதற்குப் பின்புதான் அவர் தன்னுடைய கட்சிக்கான இடத்தை அளிக்க வேண்டும். கட்சியைத் திருப்திப்படுத்துவதற்காக மக்கள் வழங்கிய வாய்ப்பையும் அங்கீகாரத்தையும் பாழடிக்கக் கூடாது. வரலாறு எப்போதும் ஒரு சுழலுக்குள் நிற்பதில்லை. அப்படி நின்றிருந்தால் உலகில் முன்னேற்றமோ வளர்ச்சியோ, மாற்றமோ ஏற்பட்டிருக்காது. ஒரு காலம் மேற்கு நாடுகளில் மிக மோசமான பிற்போக்குத்தனமும் வெறித்தனமும் இருந்தது. விளைவாகப் பெரும் போர்கள் கூட நடந்தன. பேரழிவுகள் ஏற்பட்டன. அதிலிருந்து படித்துக் கொண்ட பாடங்களின் அடிப்படையில்தான் அவர்கள் முன்னேற்றத்தை அடைந்தனர். மாற்றங்களை உருவாக்கினர். எனவே NPP செய்ய வேண்டியது அறுவைச் சிகிச்சையே தவிர, புண்ணைத் தடவிக் கொடுத்தல் அல்ல. அதாவது தற்காலிக சுகமளித்தல் அல்ல. JVP யின் உருவாக்கம், அதனுடைய 60ஆண்டுகால அரசியல் முன்னெடுப்பு, NPP யின் 10ஆண்டுகால அரசியல் எல்லாம் System Change ஐ அடிப்படையாகக் கொண்ட அரசியல் மாற்றம் – ஆட்சி மாற்றமே. மக்களின் ஆணையும் அதற்கானதே. அதைச் செய்யவில்லை என்றால் எதற்காக NPP? ரணில், மைத்திரி, சஜித் போன்றவர்கள் போதுமே. அவர்களுடைய போதாமை – தவறுகளுக்கு – மாற்றுத்தானே அநுரவும் NPP யும். https://arangamnews.com/?p=120411 point
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
மேளகாரருக்கு விருந்து வைத்தது நான் இல்லை எனது அப்பா என்பதை மீண்டும் மீண்டும் பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🤪. குறிப்பு,.....அப்படி தப்பித்தேன் 🤣1 point
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நீங்க வேற, இதை அறிந்ததில் இருந்து எனக்கு கந்தையா அண்ணை மேல் உள்ள மதிப்பு பலமடங்கு எகிறி உள்ளது. மேளகாரருக்கே இந்த உபசரிப்பு எண்டால் நாங்கள் விருந்தினராக போனால் தடல்புடல் பண்ணி விடுவார் என நினைக்கவே வாயூறுது🤣. உண்மையிலேயே கிடுக்கு பிடி கேள்வி. இரெண்டு பேரும் எங்களுக்கு விருந்து வையுங்கோ, சாப்பிட்டு பார்த்து ஆர் பெரிய கிடா வெட்டி எண்டு நாங்கள் சொல்லுறம்🤣1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 69வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவின் அதிரடியான 57 ஓட்டங்களுடனுன் ரியான் ரிக்கெல்ரன், ஹார்டிக் பாண்டியா, நமன் தீர் ஆகியோரின் கமியோ ஆட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியன்ஷ் ஆர்யாவின் புயல்வேகத்தில் எடுத்த 62 ஓட்டங்களுடனும், ஜொஷ் இங்கிலிஸின் அதிரடிவேகத்தில் எடுத்த 73 ஓட்டங்களுடனும், ஷ்ரேயஸ் ஐயரின் கமியோ ஆட்டத்துடனும் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:1 point
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
எனக்கு சொல்ல வேண்டாம் ......குமாரசாமி அண்ணைக்கு மட்டும் சொல்லுங்கப்பா 🙏🤣1 point
-
NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும் — கருணாகரன் —
பெரும் நம்பிக்கை சிறுத்து சிறுத்து தேய்பிறையாக நிற்கிறது, அமாவாசையா பௌர்ணமியா வரும் எனத்தெரியவில்லை! உண்மை. இன்னும் ஓராண்டில் தெரியவரும்.1 point
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
தாவரங்கள் உயிர் உள்ளவை என்று இந்தியா விஞ்ஞானி ஒருவர் எப்போது என்று தெரியாது பிரித்தானியாவில் நிறுவி உளளார். அதை அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக கொண்டுள்ளார்கள் ஆகவே உயிர் உள்ளவை எல்லாம் அசைவம. தான் பிடுங்கி வைத்த கீரைகள் கூட. வளர்ச்சி அடைகிறது காரணம் அதற்கு உயிர் உண்டு உயிரை கொல்வது பாவம் காய்கறிகள் கொன்று தான் சாப்பிடுகிறோம். இல்லையா ???????????? எனவே காய்கறிகளை. சைவம் சைவச் சாப்பாடு என்று சொல்ல முடியாது 🙏 உங்களின் பதிவுகளை மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது1 point
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இஹில், சட்ட பிரயோகத்தில் அந்த நிலையற்ற தன்மை இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பக்கத்துக்கு இருந்தால் - வேல ண் சமிக்கோ அல்லது அந்த போக்கை எதிர்பவர்களுக்கோ வாய்ப்பாகி விடும். அதாவது , நல்லோருக்கு வந்தால் (அல்லது இல்லை என்று நீதி மன்றம் தீர்ப்பு அளித்தால்), மற்ற கோயிகள், இடங்களுக்கும் வருமோ, வராதோ என்பதை சொல்லமுடியாத நிலை இருக்க வேண்டும். வரும் என்று வந்தால் - வேளாண் சாமி போன்றவர்கள், உ.ம். கள்ளியங்காடு சந்தையை , அகில் உள்ள வைரவருக்கு அந்த குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் தள்ள வேண்டும் என்று நிற்பார்கள். அல்லது கோயில்களில் இருந்து குறிப்பிட்ட தூரதத்துக்குள் (அசைவ) கடைகள் வைக்க கூடாது என்று நிற்பார்கள் (அதனால் தான் தூரம் போன்ற (நிச்சயமான தன்மை) உள்ள அடிப்படைகளை வைத்து இது போன்றவற்றுக்கு முடிவுக்கு வரக் கூடாது.) சுமந்திரன் போன்றவர்கள் அரசியலுக்காக வழக்கை கையில் எடுப்பார்கள்.1 point
-
ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு ஃபீலிங்... பறவைகளின் உள்ளுணர்வும், சில சுவாரஸ்யங்களும்!
அங்குமிங்கும் ஆர்ப்பரித்துப் பறக்கும் பறவைகள், வேலையும் இல்லை; நிற்க நேரமுமில்லை என்பதுபோல் பரபரப்பாகத் திரியும் நாய்கள், அசைபோட்டுக் கொண்டே அமர்ந்திருக்கும் கால்நடைகள், பொழுதுக்கும் தூங்கும் பூனைகள் இவையெல்லாம் இரை தேடுதலைத் தாண்டி தம் மனதில் என்ன யோசிக்கும் என்று எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்து சிரித்துச் சென்றிருப்போம். சில நேரங்களில் விளையாட்டாக அதற்கு ‘வாய்ஸ் ஓவர்’ கொடுத்து கிண்டலும்கூட செய்து மகிழ்ந்திருப்போம். இப்போதைய ஏஐ உலகில், பூனை, நாய்கள் பேசுவது போல் ரீல்ஸ் கூட நாம் டூம்ஸ்க்ரால் செய்யும்போது பார்த்து அடடே நல்லாயிருக்கே என்று லைக்ஸ் போட்டுக் கடந்திருப்போம். ஆனால், உண்மையிலேயே பறவைகள் என்ன நினைக்கின்றன என்பதை, அவற்றின் உணர்வு நிலை எத்தகையது என்பதை முழுவீச்சில் ஆராய்ச்சியாக செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் விஞ்ஞானிகள். அதுமட்டுமல்லாது, 1980-களில் தொடங்கி 2003-ம் ஆண்டில் தனது இறப்பு வரை டொனால்டு க்ரிஃபின் என்ற விஞ்ஞானி, விலங்குகளின் உணர்வு நிலை (Animal Consciousness ) பற்றி ஆய்வு செய்துள்ளார். இந்தத் துறையில் டொனால்டு க்ரிஃபினை ஒரு முன்னோடி என்றே துறையினர் விதந்தோதுகின்றனர். அவர் தனது இறுதி மூச்சு வரை வலியுறுத்தியது, பறவைகள், விலங்குகளின் உணர்வு நிலை பற்றி அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் பெரியளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே. அதை சுட்டிக்காட்டி இந்தக் கட்டுரையில், சில வாதங்களை, சுவாரஸ்யமான ஆய்வு விவரங்களைப் பகிர்ந்துள்ளனர் இரண்டு பேராசிரியர்கள். ஹீதர் பிரவுனிங், பேராசிரியர், சதாம்ப்டன் பல்கலைக்கழகம் மற்றும் வால்டர் வெய்ட், பேராசிரியர் ரீடிங் பல்கலைக்கழகம் ஆகிய இருவரும் ‘தி கான்வர்சேஷன்’ தளத்தில் எழுதியுள்ள கட்டுரையின் சாரம்சம் வருமாறு:இந்த உலகை ஒரு தத்துவ ஞானி பார்க்கும் பார்வை இருக்கும், அது சமூக நலன் சார்ந்ததாக இருக்கும். அதுவே இந்த உலகை பறவைகளும், விலங்குகளும் எப்படிக் காண்கின்றன, அணுகுகின்றன என்ற பார்வையும் இருக்கும் அல்லவா? அது சூழழியல் சார்ந்ததாக இருக்கும். அந்தப் பார்வையை அறிந்து கொள்வது சூழலைப் பேணுவதில் அவசியமானது என்கின்றனர் இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர். ஆற்றலில் தனித்து நிற்கும் காக்கை இனம்: காகம், மனிதர்கள் மத்தியில் வாழும் மிகப் பொதுவான ஒரு பறவை இனம். காக்கை இனத்துக்குள் அடங்கும் ரேவன்ஸ், க்ரோஸ், ஜேஸ், மேக்பைஸ் போன்ற பறவையினங்கள் மத்தியில் மேற்கூறிய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக புத்திசாலித்தனம் குறைவாக இருப்பவர்கள் பறவை மூளைக்காரன் என்று வசைபாட அடைமொழியாக்குவதுண்டு. நம்மூரில் வாத்துமூளைக் காரன், மடையன் என்றெல்லாம் வசவு மொழிகள் உண்டு. ஆனால் காக்கை வகையறாக்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அவற்றை ‘ஃபெதர்ட் ஏப்ஸ்’ (feathered apes), அதாவது நமக்கான முன்னோடி என்று அழைக்கின்றனர். காக்கை இனத்தைச் சேர்ந்த பறவைகளுக்கு கூர்மையான பார்வைத் திறன் உண்டு. வேகமாகப் பறக்கும்போது கூட அதன் இரையை கூர்மையாக கவனித்துவிடும் திறன் கொண்டவை. அவற்றின் செவித்திறன் அபாரமானது. ஓசைகளில் இருந்தே எச்சரிக்கையாக இருந்து கொள்ளக் கூடியவை. அதேபோல் அவற்றிற்கு நினைவாற்றலும் அதிகம். இந்த வகைப் பறவைகள் தாங்கள் சேகரிக்கும் உணவை பதுக்கிவைக்கும் திறன் கொண்டவை. இதை ஆங்கிலத்தில் கேச்சிங் (caching) என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எந்த உணவை எங்கு பதுக்கி வைத்தோம் என்பது மட்டுமல்லாது, அதை எப்போது பதுக்கிவைத்தோம் என்பது வரை அவை நினைவில் கொள்கின்றன. அதன்மூலம் புழு, பூச்சிகள் போன்ற சீக்கிரம் அழுகிப்போகும் உணவை எங்கு, எப்போது வைத்தோம், நீண்டகாலம் இருக்கக் கூடிய தானியங்களை எங்கே வைத்தோம் என்று நினைவில் கொண்டு பயன்படுத்திக் கொள்கின்றன. அதுமட்டுமல்லாது ஒருவேளை அந்த உணவுப் பொருளை வேறொரு பறவையிடமிருந்து திருடியிருந்தால் ஒளித்து வைத்த இடத்தையும் அவ்வப்போது மாற்றிக் கொள்கின்றன. அதேபோல் பறவைகளுக்கு ஆழமான நுகர்ச்சியுணர்வும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தியும் மறைத்துவைத்த உணவை கண்டு கொள்கின்றன.இது மட்டுமல்லாது இந்த வகைப் பறவைகள் மனிதர்களைப் போல் உணர்ச்சிகளையும் கொண்டுள்ளன. உதாரணத்துக்கு எதிர்மறை எண்ணங்கள் இவற்றிற்கு எழுகின்றன. சக பறவை வாட்டமாக இருந்தால் அதையே தானும் பிரதிபலிக்கக் கூடியவையாக இருக்கின்றன. மனிதர்களைப் போலவே புதிய பொருட்களிடம் எச்சரிக்கையாக இருக்கின்றன. அறிமுகமில்லாத மனிதர்கள் ஏதேனும் உட்கொள்ள கொடுத்தால் அதைப் பெறுவதில் தயக்கம் காட்டுவதும் இந்த நியோஃபோபியாவால் தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பொதுவாக பாலூட்டி விலங்குகளிடம் இதுபோன்ற உணர்வுகள் இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் காக்கை வகை பறவைகளில் காணப்படும் இந்த வகையிலான உணர்ச்சிகள் பறவைகளின் உணர்வுகள், மனம் பற்றி மேலும் ஆராய்ச்சிகளைத் துண்டுவதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஜே (jay bird) என்ற காக்கை வகையறா பறவைகளில் ஆண் பறவை தன் இணையைத் தேர்வு செய்ய பெண் பறவையின் உணவுப் பழக்கவழக்கத்தை கூர்ந்து கண்காணித்து, அதற்குப் பிடித்தமான உணவை சேகரித்துச் சென்று கொடுத்து அத்துடன் இணையும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. இதுபோன்ற சமூக திறன்கள் பாலூட்டி விலங்குகளிடமே பெரும்பாலும் தென்படும் நிலையில் ஜே பறவைகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன. இதுபோன்ற ஆராய்ச்சிகள் கோர்விட் (Corvidae) இன பறவைகளின் நலனைப் பேண உதவும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அவற்றுக்கு எது உகந்தது, எது ஒப்பாதது என்பதை அறிந்து கொள்வது அவற்றிற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் நலன் சேர்க்கும் என்கின்றனர் கட்டுரையாளர்கள். இயற்கையின் சமநிலைக்காகவே...! - இந்தக் கட்டுரை குறித்த பார்வையை ‘இறகுகள் அம்ரிதா இயற்கை’ அறக்கட்டளை நிறுவனரான ரவீந்திரன் நடராஜன் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பறவைகள் ஆய்வாளரான அவர் கூறுகையில், “பறவைகளின் அறிவுத்திறன் என்பது அதன் உயிர்வாழ்தலை உறுதி செய்து கொள்வதற்கானதும், அதன் அடுத்த தலைமுறைக்காக தான் வாழும் சூழலை சரியாக தகவமைத்துக் கொள்வதற்குமாகவே இருக்கிறது. காகங்களின் வாழ்க்கை அதை நமக்கு தெளிவாக உணர்த்தும். காகங்கள் நம் மத்தியில் சர்வ சாதாரணமாக, மிக அதிகமான அளவில் இருக்கக் கூடியவை. அவற்றின் உயிர்வாழ்தலும் பாதிக்கப்படக் கூடாது, அதே வேளையில் அவற்றின் இனப்பெருக்கமும் அதிகமாகிவிடக் கூடாது. ஏனெனில் காகங்கள் மிக வேகமாக இனப்பெருக்கும் செய்து கொண்டே இருக்கக் கூடிய பறவைகள். அப்படியிருக்க, இயற்கையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த இயற்கையே அதற்கு ஒரு வழியும் செய்து வைத்திருக்கிறது. அதுதான் குயில்கள். குயிலினங்கள் கூடு கட்டாது, காக்கைக் கூட்டில் முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கச் செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் பின்னணியில் இந்த இயற்கை சமநிலையைப் பேணும் தன்மை தான் மறைந்திருக்கிறது என்பதே பலரும் அறியாதது. காகங்கள் கூடு கட்ட குச்சிகள் சேர்க்கும் போதே, குயில்கள் இணை சேர திட்டமிட்டு சேர்ந்துவிடும். காகம் கூடு கட்டி முட்டையிட்டதும், ஆண் குயில் அந்தக் கூட்டிலிருந்து முட்டையை தள்ளிவிட்டு உடைத்துவிடும். பொதுவாகவே கூட்டில் முட்டையிட்டுவிட்டால் ஆண், பெண் காகங்கள் மாற்றி மாற்றி அதற்கு காவலாக இருக்கும். ஆனால் அதையும் தாண்டி அந்தக் கூட்டில் பெண் குயில் முட்டையிட ஆண் குயில் மிகப் பெரிய வேலைகளைச் செய்யும். விளையாட்டாகச் சொல்வதென்றால் கில்லாடி வேலைகளைச் செய்யும். ஆண் குயில் காகங்களிடம் வேண்டுமென்றே சண்டையிழுத்து அவற்றை அங்குமிங்கும் அலைக்கழித்து அவற்றின் கவனத்தை திசை திருப்பிவிடும். அந்த நேரத்தில் பெண் குயில் வந்து முட்டையிட்டுச் சென்றுவிடும். இப்படி அந்த முட்டையை வளர்க்கும் காகம் ஒரு கட்டத்தில் அது தன்னுடையது அல்ல என்பதைத் தெரிந்தவுடன் கூட்டிலிருந்து விரட்டிவிடும். பறவைகள் ஆய்வாளர்/ ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் இப்படித்தான் பல்கிப் பெருகக்கூடிய ஒரு பறவையினத்தை, கூடுகட்டும் திறனில்லாத இன்னொரு பறவையினம் சர்வைவலுக்காக கட்டுப்படுத்துகிறது. இதைத்தான் இயற்கை சமநிலைக்கு இயற்கையே அளித்த திறமைகள் என்று கூறுகின்றேன். காகங்கள் அனைத்துண்ணிகளாக இருந்து நகரத் தூய்மையைப் பண்ணுவதாக இருந்தாலும் கூட அவற்றின் எண்ணிக்கை அதிகமானால் மனிதர்களுக்கு தொல்லையாகிவிடும். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் காகங்களை தீங்கினமாகவே காண்கின்றனர். அங்கே காகங்களை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆய்வுகளை செய்துள்ளனர். அதன்படி சில வழிமுறைகளையும் பின்பற்றி காகங்களின் எண்ணிக்கையை கட்டுக்குள்ளும் வைத்திருக்கின்றனர். காகங்கள், குயில்களின் நெஸ்டிங் முறையை கூர்ந்து கவனித்து ஆய்வு செய்ததுபோல், வாத்துகளையும் நான் உற்று நோக்கி ஆய்வு செய்துள்ளேன். வாத்துகளை அறிவற்ற பறவைகள் என்று நாம் சொல்வதுண்டு. மடை எனப்படும் குறுகிய நீரோட்டங்களில் வாழும் சின்ன அளவிலான வாத்துகளை மடை வாத்து என்றழைப்போம். அதுவே மருவி மடவாத்து என்ற வார்த்தையாகிவிட்டது. அவை எப்போதும் கூட்டமாக வாழக்கூடியவை. சம்பை புல்களுக்கு இடையே வாழும் ஸ்பாட் பில்ட் டக்ஸ் என்ற வாத்துகளை ஒருமுறை நெருங்கி ஆய்வு செய்ய முடிந்தது. அப்போது அருகிலிருந்து வயலில் பறவைகள் வந்து பயிர்களை நாசம் செய்யக்கூடாது என்று வெடி வெடித்துக் கொண்டிருந்தனர். அதற்கு பயந்துபோன சம்பை வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் வெளியே வந்தது. வெளியே வந்ததும் அந்த வாத்து குஞ்சுகளை சுற்றிச்சுற்றி வந்தது. அது எத்தனை வாத்துகள் இருக்கின்றன என்று எண்ணுவதுபோலவே இருந்தது. பின்னர் மீண்டும் அந்த புல் பகுதிக்குச் சென்று சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. நீண்ட நேரத்துக்குப் பின் வெடிச்சத்ததால் பயந்து பதுங்கியிருந்த இன்னொரு வாத்துக் குஞ்சு வெளியே வந்தது. உடனே மற்ற வாத்துகளுடன் அதையும் சேர்த்துக் கொண்டு வேறிடத்துக்குச் சென்றது அந்த வாத்து. இப்படி, வெளிநாடுகளிலும் கூட வாத்துகளின் எண்ணும் திறனை ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர். கடல் ஆலா பறவைகள் பல மைல்கள் கடந்து ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் இருந்து எப்படி இடம்பெயர்ந்து வருகிறது என்ற சூட்சமம் இன்றுவரை முழுமையாக ஆராய்ச்சிகளால் கண்டு கொள்ள முடியாததாகவே இருக்கிறது. குறிப்பிட்ட கழுகு வகைகள் அதன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு இணையோடு மட்டுமே வாழும், இன்னொரு பறவையினம் தனது இணை இறந்துவிட்டால், பட்டினியிருந்து அதுவும் உயிர் துறந்துவிடும். இப்படி இயற்கை நிறைய சுவாரஸ்யங்களை உள்ளடக்கியுள்ளது. இவையெல்லாம் இயற்கையின் சமநிலையைப் பேணவே நடைபெறுகிறது. பறவைகள் தம் உயிர் வாழ்தலை உறுதி செய்து கொள்ள சமநிலையைப் பேண ஒவ்வொரு விதமான உணர்வு நிலைகளுடன் இயங்குகின்றன. பறவைகளின் உணர்வு நிலைகளை, உள்ளுணர்வுகளை ஆய்வு செய்தல் சுவாரஸ்யமானதே.” என்றார். ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு ஃபீலிங்... பறவைகளின் உள்ளுணர்வும், சில சுவாரஸ்யங்களும்! | What’s going on inside the mind of an animal or a bird explained - hindutamil.in1 point
-
தமிழரின் தொன்மை கூறும் கீழடி ஆய்வறிக்கையை கேள்வி எழுப்பும் இந்திய தொல்லியல் துறை - என்ன நடக்கிறது?
1 pointஇலங்கையில் தமிழர் பற்றிய பிராமிக் கல்வெட்டுக்கள் – ஓர் அறிமுகம் September 28, 2022 | Ezhuna இலங்கைத் தமிழர்களுக்கு 2500 ஆண்டுகளுக்குக் குறையாத வரலாறு மற்றும் வழிபாட்டு பாரம்பரியம் உள்ளது. பண்டைய இலங்கைத் தமிழர் பற்றி இதுவரை பலரும் அறிந்திராத, இதுவரை வெளிச்சத்துக்கு வராத, அரிய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் எனும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக இலங்கையில் ‘பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர்’ எனும் இவ்வாய்வு அமைகிறது. இலங்கையில் வாழ்ந்த தமிழர் பற்றிய முக்கிய சான்றாக விளங்குவது 2300 ஆண்டுகளுக்கு முன்பு கற்குகைகளில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களாகும். இவ்வாறான ஐந்து பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் காணப்படுகின்றன. அந்த கல்வெட்டுக்களில் தமிழர்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்களை இக்கட்டுரைத்தொடர் வெளிப்படுத்துகின்றது. அத்தோடு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு வேலைத் திட்டத்தில், இலங்கையில் காணப்படும், 1500 பிராமிக் கல்வெட்டுகளை மீள்வாசிப்பு செய்ததன் பயனாக வெளிக்கொணரப்பட்ட பல்வேறு அம்சங்களை ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்துவதாகவும் இத்தொடர் அமைகிறது. இவ் ஆய்வில் தமிழர் பற்றி கூறும் மேலும் பல பிராமிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அத்துடன் சோழர் காலத்திற்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 600 சிங்களக் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து அவற்றிலும் தமிழர் பற்றிக் கூறப்பட்டுள்ள பல விபரங்கள் பற்றியும் இத்தொடர் கட்டுரை கூறுகிறது. இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழும் தமிழரும் இலங்கையில் கல்மேல் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவற்றில் முதலாவதாக எழுதப்பட்டவை பிராமிக் கல்வெட்டுக்கள் என அழைக்கப்படுகின்றன. இவை பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை கல்வெட்டு ஆய்வாளர்கள் முற்காலப் பிராமி, பிற்கால பிராமி என இரு வகையாக பிரித்துள்ளனர். இலங்கை முழுவதிலும் சுமார் 2500 பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கல்வெட்டுக்கள் தெற்காசியாவில் இலங்கையைத் தவிர வேறெந்த பிரதேசங்களிலும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை இங்குள்ள இயற்கையான கற்குகைகளிலும், கற்பாறைகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1500 கல்வெட்டுக்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 1000 கல்வெட்டுக்கள் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இவற்றில் தமிழர் மற்றும் இந்து சமயம் தொடர்பான கல்வெட்டுகள் பல உள்ளதாகத் தெரிய வருகிறது. இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 1500 கல்வெட்டுக்களில் தமிழர் பற்றிய 5 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. மேலும் இந்து தெய்வங்கள் சம்பந்தமான 300 கல்வெட்டுக்களும் உள்ளன. இவற்றைத்தவிர முனிவர்கள் அல்லது சித்தர்களின் பெயர்கள் பொறிக் கப்பட்ட சுமார் 250 பிராமிக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. தமிழர் என்ற பெயரைத் தவிர இலங்கையில் வாழும் ஏனைய இனங் களின் பெயர் பொறிக்கப்பட்ட எந்த ஒரு பிராமிக் கல்வெட்டேனும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. “தமெத” (தமிழ்) எனப் பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் கிடைக்கப் பெற்ற பிராமிக் கல்வெட்டுக்களில் 5 கல்வெட்டுக்களில் “தமெத” எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் என்பதன் பிராகிருத வடிவமாகும். இவற்றில் வட மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்தில் 2 கல்வெட்டுக்களும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் 1 கல்வெட்டும், கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் 1 கல்வெட்டும், வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்தில் 1 கல்வெட்டும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு சான்றுகள் மூலம் 2000 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதியாகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கும், தமிழ் மொழி பேசப்பட்டுள்ளது என்பதற்கும் இக்கல்வெட்டுக்கள் முக்கிய சான்றுகளாக விளங்குகின்றன. இது பற்றி இலங்கையின் மூத்த வரலாற்று பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்கள் சில முக்கிய குறிப்புக்களை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரின் குறிப்பு பின்வருமாறு. “கி. மு. மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையிலே தமிழ் ஒரு பேச்சு மொழியாக வழங்கியமைக்கு ஆதாரமாய் அமைகின்ற பிராமிச் சாசனங்கள் தமிழர் பற்றியும் தமிழர் சமுதாயப் பிரிவுகளைப் பற்றியும் குறிப் பிடுகின்றன. அவற்றிலே பல இனங்களைச் சேர்ந்த சமூகங்களின் பெயர்களும், சமுதாயப் பிரிவுகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. தமிழர், நாகர், முருண்டி, காபோஜி என்னும் இனப் பெயர்கள் அவற் றில் உண்டு. பரதர், பதர், பிராமணர் என்போர் பற்றியும் அவற்றிலே குறிப்புகள் உண்டு. இரண்டாயிரத்துக்கும் மேலான பிராமிச் சாசனங்கள் காணப்படுகின்ற பொழுதிலும் அவற்றிலே சிங்களர் பற்றிய குறிப் பெதுவும் காணப்படவில்லை. “சிங்களர்” எனும் இனம் பிராமிச் சாசனங்கள் எழுதப்பட்ட காலத்தில் உருவாகியிருக்கவில்லை என்று கருத வேண்டியுள்ளது. சிங்க உருவம் பொறித்த மிகப் புராதனமான நாணயமும் நாகராசன் ஒருவனின் பெயரையே குறிப்பிடுகிறது.” என பேராசிரியர் எஸ். பத்மநாதன் தனது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் “வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழரின் குடியிருப்புகளும், சமுதாயமும் பிராமிச் சாசனங்களின் காலம் முதலாக உற்பத்தியானவை என்று கொள்ள முடிகிறது” எனக் கூறியுள்ளார். தமிழர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள இக்கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் இந்திரபாலா பின்வருமாறு கூறியுள்ளார். “இலங்கையில் வாழ்ந்த தமிழ் இனக்குழு பிராமிக் கல்வெட்டுக்களில் தமெட என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் கல்வெட்டுக்கள் அநுராதபுரத்தில் மட்டுமன்றி, அப்பால் இன்று தமிழர் வாழும் இடங்களாகிய வவுனியா மாவட்டம் (பெரிய புளியங்குளம்), மட்டக்களப்பு மாவட்டம் (ஸேருவில)மற்றும் அம்பாறை மாவட்டம் (குடிவில்) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.” “இலங்கையில் தமிழ் மக்கள் பற்றிக் கிடைக்கும் மிகப்பழைய எழுத்து மூலாதாரங்கள் பொ. ஆ. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுக்களாம். எனினும் அதற்கு முன் அவர்கள் இலங்கையில் இருந்திருக்கக்கூடும் என்று கொள்ளத் தொல்லியல் சான்றுகள் உள்ளன. அத்துடன் பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே, தமிழ் பேசுவோர் பரவலாகத் தமிழ் நாட்டிலும் மற்றும் அயல் இடங்களிலும் இருந்தனர் என்று கொள்ள இடமுண்டு எனக் கொண்டால் இலங்கைக்கும் அதே காலமளவில் அவர்கள் வந்திருக்கலாம் என்று கூறலாம். தமிழ் பேசுவோர் மட்டுமன்றி வேறு திராவிட மொழிகளைப் பேசுவோரும் அங்கு இருந்திருக்கலாம்”. இவ்வாறு பேராசிரியர் இந்திர பாலா தனது “இலங்கைத் தமிழர்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் சில முக்கிய விடயங்களை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரின் குறிப்பு பின்வருமாறு, “தென்னாசியாவில் பெளத்த மதம் பரவிய நாடுகளில் எல்லாம் அம்மத மொழியான பிராகிருதம் கல்வெட்டு மொழியாக இருந்தபோது இலங்கையில் தான் பிராகிருத மொழியில் தமிழ் மொழியின் செல்வாக்கு கூடுதலாகக் காணப்படுகிறது. இதில் அவதானிக்கக் கூடிய சிறப்பம்சம் ஆரம்பகாலக் கல்வெட்டுக்களில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிராகிதம் மற்றும் தமிழ் மொழிக்குரிய பெயர்கள், சொற்கள் காலப்போக்கில் தமிழ் மயப்படுத்தப்பட்ட நிலையில் எழுதப்பட்டிருப்பதாகும்.” “இந்த மாற்றத்திற்கு இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த மக்கள் புதிதாக பெளத்த மதத்துடன் அறிமுகமான பிராகிருத மொழியை அம்மொழிக்குரிய வடபிராமி எழுத்தில் எழுதிய போதும், காலப்போக்கில் தமக்குப் பரிச்சயமான தமிழ் பிராமியிலும் பிராகிருத மொழியை எழுத முற்பட்டமை காரணம் எனலாம்”. இவ்வாறு பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் பரமு புஷ்பரட்னம் தனது இன்னுமோர் நூலில் கூறியுள்ள சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு: “இக்கல்வெட்டுக்கள் பெளத்த சங்கத்திற்கு அக்கால சமூகத்தின் பல தரப்பட்ட மக்கள் அளித்த நிலம், குளம், கால்வாய், குகை, கற்படுக்கை, பணம், உணவு போன்ற தானங்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றில் பலவற்றில் தானமளித்தவர் பெயரோடு அவரின் வம்சம், பட்டம், பதவி, தொழில், மதம், இனம் போன்ற தரவுகளும், அவர்கள் வாழ்ந்த இடம், ஊர், நாடு போன்ற செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இதனால் இக்கல்வெட்டுகள் இலங்கையின் குறிப்பிட்ட காலப்பகுதிக்குரிய மொழி, எழுத்து, மதம், பண்பாடு, சமூகம், இடப்பெயர் என்பவற்றை அறிந்துக்கொள்ளவும், சமகாலப் பாளி இலக்கியங்கள் கூறும் வரலாற்றின் நம்பகத் தன்மையை மதிப்பிடவும் உதவுகின்றன.” பக்கத்தில் ஏன் கத்தரிக்கோல் வைக்கிறன் என்றால் தவறாக இருந்தால்..வெட்டி விடவும்.✂️🖐 https://www.ezhunaonline.com/brahmic-inscriptions-on-tamils-in-ceylon-an-introduction/1 point
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இது சமயம் மட்டும் அல்ல, சூழல், கலாசாரத்துடன் சம்பந்தப்ப விடயம், வெளிப்படை. உ,ம். முன்பு நல்லூரில் பலியிடும் வழக்கம் இருந்தது (சமய நம்பிக்கை கொல்லாமை என்று இருந்த போதும்). சமூக நம்பிக்கை, பார்வை மாறி காலப்போக்கில் கைவிடப்பட்டது. அதேபோல முருகவழிபாடிலும். இதனால், மேற்கு கோயிகள், அங்கு உள்ள கோயிகள்களை ஒப்பிட முடியாது. மறுவளமாக மேர்க்கிலும், அருமையாக, தனியே எந்த அசைவ உணவும் வளாகத்துக்கு அருகில் இருக்க கூடாது என்று இருக்கிறது - உ.ம். wales camarthen இல், எல்லாமே அந்தந்த சூழல், கலாசாரம், அமையப்பெற்ற வரலாறுகள் போன்றவற்றை பொறுத்தது. அதுக்காக, நல்லூர் - camarthen ஒப்பிட முடியாது, கூடாது. ஏனெனில் அவை இருக்கும் பரந்த சூழல், கலாசாரம், நாடு போன்றவை. இதில் உள்ள பிரச்சனை, வேலன்சாமி மாநகர சபை எல்லையை இழுத்து இருப்பது.1 point
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் பிறந்த 5 குழந்தைகள்..!
Published By: DIGITAL DESK 3 26 MAY, 2025 | 11:04 AM யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. சனிக்கிழமை (24) யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கே ஒரே சூழில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. 3 ஆண்குழந்தைகளையும் 2 பெண் குழந்தைகளையும் குறித்த தாயார் பிரசவித்துள்ளார். தாயும் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்களென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/2157021 point
-
உக்ரேன் மீது ரஷ்யா வான் தாக்குதல்: புடின் மற்றும் செலன்ஸ்கியை விமர்சித்த ட்ரம்ப்
இதைத்தானே உக்ரேன் போர் தொடங்கின நாளிலை இருந்தே சொல்லிக்கொண்டு வாறம்.செலென்ஸ்கி பிள்ளையருக்கு வாய் சரியில்லை எண்டு....எதுக்கெடுத்தாலும் சண்டித்தன கதையும்,புட்டின் மீதான நக்கல் கதைகளும்.... எல்லாம் ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் பெரிய பிரித்தானியாவும் தனக்கு பின்னாலை நிக்கிது எண்ட தைரியம் தான்1 point
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஜேர்மனியின் முருகனும் நல்லூர் முருகனும் வேறு வேறு ஆட்களா நியாயம்?1 point
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஏன் கொழும்பை தவிர்த்து விட்டீர்கள்? முன்பு கொழும்பில் பல சைவ உணவகங்கள், பயணிகள் தங்கும் விடுதிகள் கூட புங்குடு தீவாருடையதாம். இப்போ பிரான்ஸிலுள்ள தமிழரில் பாதிக்குமேல் பெரும் பணக்காரர் அவர்கள்தானாம். எனது தூரத்து உறவினர்கள் கூட புங்குடுதீவில் காதல் திருமணம் செய்துள்ளார்கள். பணத்துக்காக அல்ல பழக்கம். நாங்கள் இடம்பெயர்ந்து இருந்தபோது, பல குடும்பங்கள் எமது வீட்டை சுற்றி வசித்தார்கள். அவர்களும் இடம்பெயர்ந்தவர்களே. அருமையான, இரக்கமுள்ள குடும்பம் ஒன்று. அவர்கள் இப்போ பிரான்சில் இருப்பார்கள் என நினைக்கிறன். அப்பவே அவர்களது பெரும்பாலான உறவினர் பிரான்சில் இருந்தார்கள், இவர்களும் அங்கு போகப்போவதாக கூறியிருந்தார்கள். கந்தையர், இனிமேல் நீங்கள் எத்தனை தடவை வேண்டுமானாலும் புங்குடுதீவை குறிப்பிடலாம் அவர் கோவிக்கமாட்டார் பெருமைப்படுவார்.1 point
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சுண்டிக்குளி நகரம் சார்ந்த மேட்டுக் குடிகளின் இடம். ஆனால் வேலணை அப்படி அல்ல. பலரால் கொஞ்சம் குறைத்து மதிக்கப்படும் தீவகத்தை சேர்ந்த இடம். அதனால் தன்னை முன்னிலைக்கு நகர்த்த போராட வேண்டிய தேவையுள்ள, மூர்க்கம் உள்ள இடம். எனவே நான் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பதற்கு அந்த மூர்க்கம் தான் காரணம் என நம்புவதால் இந்த எண்ணம் வந்திருக்கலாம். இதே போன்ற ஒன்றைத்தான் நான் இளையராஜாவிடமும் அவர் சமூகம் சார்ந்து எதிர்பார்த்தேன்.1 point
-
1958ம் ஆண்டு தமிழர் இனக்கலவரத்தை நினைவுகூருதல்
Published By: RAJEEBAN 23 MAY, 2025 | 02:39 PM tamilguardian 67 ஆண்டுகளிற்கு முன்னர் இந்த நாளில் இலங்கையில் சிங்கள காடையர்கள் தமிழர்களை தாக்கதொடங்கினார்கள், பாலியல்வன்முறைகளில் ஈடுபட்டார்கள், கொலை செய்தார்கள். தமிழ் மக்களிற்கு எதிரான தொடர்ச்சியான பயங்கரமான இனவன்முறைகளில் ஒன்றாக இந்த வன்முறை வரலாற்றில் பதிவாகயிருந்து. தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் அன்றைய நாட்களில் 300 முதல் 1500 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது. பலர் காயமடைந்தனர், சூறையாடல்கள் தமிழர்களின் வீடுகளை வர்த்தக நிலையங்களை அழித்தல் போன்றனவும் இடம்பெற்றன. 1958ம் ஆண்டு மே மாதம் 27 திகதி இலங்கை அரசாங்கம் அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது. 1956ம் ஆண்டில் சுதந்திர இலங்கையில் முதலாவது இன அடிப்படையிலான கலவரம் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் இந்த வன்முறைகள் இடம்பெற்றன. முதலில் 22ம் திகதி பொலனறுவையிலேயே வன்முறைகள் ஆரம்பமாகின. வவுனியாவில் இடம்பெறவிருந்த சமஸ்டி கட்சிக்கு சென்றுகொண்டிருந்த தமிழர்களை சிங்கள காடையர்கள் தாக்கியதை தொடர்ந்தே இந்த வன்முறைகள் வெடித்தன.. அதன் பின்னர் வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கு பரவின. கொழும்பில் இந்து மதகுரு ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார். கொழும்பு வீதிகளில் அலைந்து திரிந்த சிங்கள காடையர்கள் தங்களை கடந்து செல்பவர்களால் சிங்கள செய்தித்தாள்களை வாசிக்க முடியுமா என பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சிங்கள செய்தித்தாள்களை வாசிக்க முடியாதவர்கள் தாக்கப்பட்டனர்/கொல்லப்பட்டனர். அரசாங்கம் ஐந்து நாட்கள் காத்திருந்துவிட்டு அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது அரசியல் வாழ்க்கையை தீர்மானித்தது 1958ம் ஆண்டு இனக்கலவரம் என ஒருமுறை தெரிவித்திருந்தார். மார்ச் 1984 இல் பேட்டியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். 'நான் பாடசாலை மாணவனாகயிருந்தவேளை இடம்பெற்ற 1958ம் ஆண்டு இனக்கலவரம் என் மீது கடும் தாக்கத்தை செலுத்தியது. சிங்கள இனவாதிகளால் எங்கள் மக்கள் எப்படி ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் கேள்விப்பட்டேன். "எனது நண்பரின் குடும்பத்தை சேர்ந்த விதவைபெண் ஒருவரை ஒருமுறை நான் சந்தித்தேன், அவர் இனவெறியர்களின் படுகொலை குறித்து விபரித்தார். இனக்கலவரத்தின் போது சிங்கள காடையர்கள் கொழும்பில் உள்ள அவரது வீட்டை தாக்கினார்கள். அவர்கள் கணவனை கொலை செய்தார்கள், வீட்டிற்கு தீ வைத்தார்கள். அவரும் அவருடைய பிள்ளைகளும் கடும் காயங்களுடன் தப்பினார்கள், அவரது உடலில் காணப்பட்ட காயங்களை பார்த்தவேளை நான் கடும் அதிர்ச்சியடைந்தேன்." "சுடுதாரில் குழந்தைகளை வீசியது குறித்து நான் கேள்விப்பட்டேன். அவ்வாறான ஈவிரக்கமற்ற இதுபோன்ற கொடுமையான கதைகளைக் கேட்டபோது என் மக்கள் மீது எனக்கு ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்த இனவெறி அமைப்பிலிருந்து என் மக்களை மீட்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வம் என்னை ஆட்கொண்டது. நிராயுதபாணிகளான அப்பாவி மக்களுக்கு எதிராக ஆயுத பலத்தைப் பயன்படுத்தும் ஒரு அமைப்பை எதிர்கொள்ள ஆயுதப் போராட்டம் மட்டுமே ஒரே வழி என்பதை நான் உறுதியாக உணர்ந்தேன்" என விடுதலைப்புலிகளின் தலைவர் தெரிவித்திருந்தார். எமர்ஜென்சி '58: சிலோன் இனக் கலவரங்களின் கதையில் படுகொலை பற்றி எழுதுகையில் டார்சி விட்டாச்சி இவ்வாறு குறிப்பிட்டார். கலவரங்கள் தன்னிச்சையாக நடக்கவில்லை என்று கவர்னர் ஜெனரல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்தார் என குயின்ஸ் மாளிகையிலிருந்து செய்தி கசிந்தது. அவர் கூறியது: ‘ஜென்டில்மேன் இது தன்னிச்சையாக வகுப்புவாதத்தின் வெடிப்பு என்று உங்களில் யாருக்காவது தெரிந்தால் அதை உங்கள் மனதில் இருந்து நீக்கிவிடலாம். இதை கவனமாகத் திட்டமிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சரியாக அறிந்தவர்களின் பின்னால் இருந்த ஒரு சூத்திரதாரியின் வேலை இது. இது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட ஒரு டைம்- பொம், இப்போது வெடித்துவிட்டது. 1958 மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கை மக்கள் அனுபவித்த பயங்கரமும் வெறுப்பும் அந்த அடிப்படைத் தவறின் விளைவாகும். நம்மிடம் என்ன மிச்சம்? இடிந்து விழுந்த ஒரு தேசம் நாம் மறக்க முடியாத சில கொடூரமான பாடங்கள் மற்றும் ஒரு முக்கியமான கேள்வி: சிங்களவர்களும் தமிழர்களும் பிரியும் நிலையை அடைந்துவிட்டார்களா? https://www.virakesari.lk/article/2155001 point
-
1958ம் ஆண்டு தமிழர் இனக்கலவரத்தை நினைவுகூருதல்
Amirthanayagam Nixon அமரர் ஜேஆர், சந்திரிகா, மகிந்த சமரசிங்க, அமரர் மங்கள சமரவீர, ஜி.எல்.பீரிஸ், மிலிந்த மொறகொட மற்றும் ரணில் ஆகிய ஏழு பேரையும் நான் சிங்கள அரசியல்வாதிகளாக ஒருபோதும் எனது புவிசார் அரசியல் கட்டுரைகளில் குறிப்பிட்டது இல்லை. ஏனெனில், இந்த ஏழு பேரினதும், கட்சி அரசியல் வெவ்வேறாக இருந்தாலும், ”சுயநிர்ணய உரிமை” வடக்குக் கிழக்கை ”சிங்கள மயப்படுத்தல்” மற்றும் “தமிழ்த் தேசியம்” என்ற கோட்பாட்டை சிதைத்தல் போன்ற உத்திகளை வகுப்பதில் இவர்கள் சிறந்த இராஜதந்திரிகள். தமிழர் பகுதிகளில் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் ”இலங்கை இராணுவக் கட்டமைப்பு“ என்ற பொறிமுறையை இந்த ஏழு பேரும், காலத்துக்கு ஏற்ப பாதுகாத்தனர். தமிழர் பகுதிகளில் “இராணுவ பொறிமுறை“ நிர்வாகத்தை மொசாட் உதவியுடன் ஆரம்பித்தவர் ஜேஆர். 2009 இல் போரை வென்றது மகிந்தவாக இருக்கலாம். அந்த நேர புவிசார் அரசியல் சாதகமாகவும் இருந்திருக்கிறது. ஆனால்-- -- மேற்படி சுட்டிக்காட்டப்பட்ட அந்த ஏழுபேருமே சிங்கள உண்மையான பௌத்த தேசிய காவலர்கள். புலிகளை பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதமே பிரச்சினை எனவும் மிக நுட்பமாக சித்தரித்து சர்வதேசத்தை நம்பவைத்தார்கள். புலிகளுக்கு எதிரான மனநிலையுள்ள ஆங்கிலம் தெரிந்த படித்த தமிழர்களை தமக்குச் சாதகமாக பயன்படுத்தியதும் இந்த ஏழு பேரும் தான். (அமரர் லக்ஸ்மன் கதிர்காமரின் சர்வதே விவகார அறிவுத் தரத்தை (Sophistication) மிக நுட்பமாக பயன்படுத்தியவர் சந்திரிகா) ஆனால் ஜேவிபி, சந்திரிகாவை தவிர ஏனைய ஆறு பேரையும் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் எனவும் இலங்கைத்தீவை பிளவுபடுத்தவுள்ளனர் என்று பொய்யான பரப்புரை மேற்கொண்டு, சிங்கள மக்களின் அனைத்துக் கவனத்தையும் திசை திருப்பியுள்ளனர். இந்த அறுவடைதான் தற்போதைய JVP - NPP அரசாங்கம். ஆனால் மேற்படி சுட்டிக்காட்டிய சிறந்த இராஜதந்திரிகள், JVP - NPP அரசாங்ககத்தில் இல்லை. ஆதரவாக இருக்கும் தமிழர்கள் சிலருக்கும், அந்தளவு நுட்பமான அறிவு இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் சர்வதேச அரங்கில் ஏழு பேராலும், தமிழர்களுக்கு எதிராக வகுக்கப்பட்ட இராஜதந்திர வியூகங்களை JVP - NPP சாதகமாக பயன்படுத்த முற்படுகிறது. இராணுவ பொறிமுறை பரிந்துரைகள் மூலமே வடக்கில் ஐயாயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானி அறிவித்தல் கடந்த வாரம் வெளியானது. அம்பாறை உடந்தை முருகன் கோவிலுக்கு அருகில் அமைக்கப்பட்ட புத்தர் நிலையும் இந்த இராணுவ பொறிமுறை அறிவுறுத்தல் தான். 2024 நம்பவர் இடம்பெற்ற தேர்தலில் சஜித் அல்லது ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தாலும், இந்த வர்த்தமானி அறிவித்தலும் புத்தர் சிலை வைப்பும் நடத்துதான் இருக்கும். 1949 இல் கிழக்கு மாகாணம் கல்லோ குடியேற்றத் திட்ட செயற்பாட்டுக்கு 1983 இல் ஜேஆர் நுட்பமாக செதுக்கிய உத்தியின் வளர்ச்சிதான் இவை. இடையில் நடந்த 30 ஆண்டு கால போர் அதற்குத் தடையாக இருந்தது. ஆனால் 2009 மே மாததத்துக்குப் பின்னர், இலகுவாக சிங்கள மயப்படுத்தல் நடக்கிறது. அதுவும் 2015 நல்லாட்சி என்று தூக்கிப் பிடித்த மைத்தி - ரணி அரசாங்கம், தொல்பொருள் திணைக்களம், காணி திணைக்களம், வனஇலாக திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றின் மூலம் சட்டரீதியான முறையில் குடியேற்றங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது. 2009 இற்குப் பின்னர் இவை பற்றி விஞ்ஞான ரீதியாக விளக்கமளிக்க வேண்டியது யாருடைய பொறுப்பு? . அநுரகுமார அல்ல, ஜேஆர் காலத்தில் இருந்து வகுக்கப்பட்ட இராணுவ பொறிமுறை இயங்குகின்ற முறைமை பற்றிய விளக்கங்கள் முக்கியமானவை. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்.1 point
-
ரப் பாடகர் வேடன்
1 point
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஜேமனியும் நல்லூரும் ஒன்றா கந்தையர்?1 point
-
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி
உக்ரேனில் மனிதாபிமானத்தை தேடும் மேற்குலகும் அதன் விசுவாசிகளும் காசா அழிவில் மட்டும் காணாமல் போய் விடுவார்கள். அக்கிரம போர்களில் இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு அடுத்த பிறவி என ஒன்றிருந்தால் குறைந்த பட்சம் மேலைத்தேய நாடுகளில் நாயாக ஆவது பிறந்து தொலையுங்கள்.வசதியுடனும் பாதுகாப்புடனும் வாழ்வீர்கள்.☹️1 point
-
1958ம் ஆண்டு தமிழர் இனக்கலவரத்தை நினைவுகூருதல்
சிங்கள இனவாதிகளால் சந்ததிக்கு சந்ததியாக, போகத்திற்கு போகம் நடத்தப்பட்ட ஒவ்வொரு இனக்கலவரத்திற்கும்/இன அழிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நினவுத்தூபிகள் அமைக்கப்பட வேண்டும்.இப்படியான நெருக்கடிகளும் உலக அரங்கில் சிங்களத்தை தலை குனிய வைக்கும் என நினைக்கின்றேன்.1 point
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நன்றி அண்ணா நான் உங்களிடம் கேட்டிருக்க கூடாது தான்.1 point
-
”அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்த பசில்” : மீண்டும் நவம்பரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !
1 pointஏனுங்கோ! உவர் பசில் சிறிலங்காவுக்கு வரி கட்டாமல் உங்கை வந்து ஒளிச்சிருக்கிறார் எண்டு சிங்கன் டொனால்ட் ரம்புக்கு பெட்டீசம் எழுதினால் எப்பிடியிருக்கும்?1 point
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
என்ன?? இந்து சமயத்தை காட்டயப்படுத்தி தான் கடைபிடிக்க வைக்க வேண்டுமா ?? மனத்தைக் புற நிகழ்வுகள் பாதிக்கும் என்றால் அவர் உண்மையில் பக்தர் இல்லை மனம் இறைவனை பற்றி சிந்திக்கவில்லை அதாவது நம்பிக்கையீனம். உண்மையில் இது கடவுள் தானா ?? என்ற நிலை நான் ஒரு பேக்கரியில். வேலை செய்தேன் ஒரு முஸ்லிம் விடிய 4 மணிக்கு பாண். எடுக்க வருவன். மொத்தமாக தனது கடைக்கு .....சில நேரம் பாண். சுட்டுவது பிந்தி விடும் ...அவனுக்கு தொழுகை நேரம் வந்து விடும் பேக்கரிக்காரனிடம். அனுமதி பெற்று ஒரு துவாய்யை நிலத்தில் போட்டு விட்டு பத்து நிமிடங்கள் தொழுவன். அவனை எந்தவொரு புறச்சூழழும். பாதிப்பதில்லை நாங்கள் சிரிப்பாதை கூட. அவன் கருத்தில் எடுப்பதில்லை1 point
-
ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்!
உண்மையில் ஜேர்மனியின் காவல்துறைனர்க்கு போதுமான அதிகாரங்கள் இல்லை.கூடுதலான வெளிநாட்டவர்கள் ஜேர்மன் பொலிசாரை நாய்க்கும் மதிக்க மாட்டார்கள். கெட்ட வார்த்தைகளில் கூட திட்டுவார்கள்.அவர்கள் பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.பார்க்கவே பாவமாக இருக்கும். Afd கட்சியினர் எதை தேர்தல் விஞ்ஞாபனமாக முன் வைத்து பெரு வெற்றி பெற்றார்களோ அவற்றை சட்டமாக்க இன்றைய அரசு முயற்சி செய்கின்றது.1 point
-
ரப் பாடகர் வேடன்
1 pointஎப்படித்தான் கூட்டிக்கழிச்சு பார்த்தாலும்....அண்மைக்கால செய்திகள் இனவாத சிங்களத்திற்கு நெஞ்சில் உதைப்பது போலவே இருக்கும்.1 point
-
ரப் பாடகர் வேடன்
1 point🙏என்னை நிராகரித்தவர்களுக்கும், என்னுடன் நின்றவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள். நான் தொடருவேன்...?1 point
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
விசுகர், கருத்து வறட்சி ஏற்படும் போது... கண்டபடி அடித்து விடுவதை எல்லாம், கணக்கில் எடுக்கக் கூடாது. சிலரின் கடந்த கால கருத்துக்களை அவதானித்துப் பார்த்தால்... பல இடங்களில், சாணி அடித்த வேலைகளையே இங்கும் செய்வதால்.... இதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கத் தேவை இல்லை. கை உழையும் மட்டும், தொண்டை தண்ணி வற்றும் மட்டும்... "அலட்டி" விட்டு போகட்டும் என்று கடந்து செல்லுங்கள் விசுகர். 😂1 point
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அந்த மூல காரணத்தை ஆராயாமல் மதம் சம்பந்தமான வெறுப்புகளை மூட நம்பிக்கைகள் எனும் பெயரில் புத்திசாலிதனமாக ஆராய்கின்றார்களாம்.1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஒரு சாதாரண கருத்தாடலில் "தமிழ் தலிபான்ஸ்", "நல்லூரில் வந்தான் வரத்தான்", "தீவார்", "ஐயரின் கை ஜூஸ்" இப்படி பேசுவது இவருக்கு நாகரிகமாக தெரியுதாக்கும்... சும்மா போங்கோ ஐயா காமெடி பண்ணாம... :)1 point- "முள்ளிவாய்க்கால் கஞ்சி"
1 pointக.தில்லைவிநாயகம் அவர்களே, நினைவுகளைப் பகிர்தல் ஒருவகை. அதனைக்காணாது உணர்தல் என்பது அந்த மண்மீது, அந்த மண்ணின் உரித்தாளர்கள் கொள்ளும் பாசஉணர்வும், அந்த மண்மணத்தின் நுகர்வின் நினைவுகளின் கலப்பால் விளைவதும் ஒரு பிரித்தறிய முடியாத உணர்வு. உங்கள் ஆக்கம் மீண்டுமொருதடவை 2009 மே18க்கு முந்திய இறுதிநாட்களை எம்முள்ளே அழுத்திச் செல்கிறது. இதுபோன்ற படைப்புகள் அல்ல உண்மைகள் தொடர்ந்து எழுதப்பட வேண்டும்.உறவே தொடரட்டும் உங்கள் பணி. நன்றியும் பாராட்டும் உரித்தாகுக. இந்த ஆக்கத்தை உள்சென்று உணரும்போது உள்ளம் கலங்கிக் கவிழ்கிறது.1 point- நம்பிக்கை துளிர்க்கிறது
1 pointநம்பிக்கை துளிர்க்கிறது வீணையின் தந்தியை மீட்டினால் இனிய இசை பிறக்கும் வரலாற்றுப் பக்கங்களை புரட்டினால்-எம் இனத்தின் வலி தெரியும். இனத்தின் வலி உணராமல் இளந்தலைமுறை சென்றால் எம்மின அடையாளம் எங்கோ தொலைந்து போகும் இதற்காகவா எம் அன்பு உறவுகள் இளம் பருவத்து கனவுகளை உள்ளுக்குள் பூட்டி வைத்து உறுதியுடன் போராடி தம் இன்னுயிரைக் கொடுத்து மண்ணுக்கு உரமாகினார்கள்? எண்ணத்தில் ஏக்கமும் கவலையும் இணைந்து வருத்திய வேளையில் ‘இல்லை நாம் மறக்க மாட்டோம்’ என இளையோர் செயலில் காட்டுகிறார்கள் நம்பிக்கை துளிர்க்கிறது கொத்துக் கொத்தாக எம் மக்கள் கொன்றழிக்கப்பட்டதை நினைக்க மறந்து எப்படி எம்மால் வாழ முடிகிறது காலங்காலமாக எம்மினம் வதைக்கப்பட்டதும் துடிக்கத்துடிக்கக் கொல்லப்பட்டதும் அறிந்து கொள்ளாமலே எங்கள் இளையோர் நகரப்போகிறார்களா? என்ற தவிப்பு வேண்டாமே என உறுதிப்படுத்துகிறார்கள் இளையோர். இன அடையாளம் தெரியாத வெறுமையான மனிதர்களாக எங்கள் எதிர்கால தலைமுறையை தனித்து தவிக்க விட்டுச் செல்லப்போகின்றோமா? என்ற வேதனைக்கு விடைசொல்கிறார்கள் மீட்டப்பட வேண்டியது எம்மினத்தின் வலிகள் சொல்லும் வரலாற்றின் பக்கங்கள். ஊட்டப்பட வேண்டியது உயிர்ப்புடன் இனம் எழவேண்டும் என்ற உண்மைகள் தமிழின வரலாற்றுத் தந்திகள் மீட்டப்படுகின்றன இனத்தின் உயிர்ப்பு உறுதியாக்கப்படும் என்ற நம்பிக்கை விதைகள் மெல்ல மெல்ல முளைவிடுகின்றன. மந்தாகினி1 point- கேரளாவில் சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து!
கேரளாவில் கடலில் மூழ்கிய கப்பல்; கரை ஒதுங்கும் ஆபத்தான கொள்கலன்கள் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை 26 MAY, 2025 | 11:24 AM கேரள கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்த லைபீரியக் கொடியுடன் கூடிய எம்.எஸ்.சி எல்சா 3 (MSC ELSA 3) சரக்குக் கப்பலில் இருந்த கொள்கலன்கள் கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன. இன்று (மே 26) கொல்லம் மற்றும் ஆலப்புழாவில் நான்கு கடலோரப் பகுதிகளில் இந்த கொள்கலன்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகையப் பொருட்களிலிருந்து மக்கள் குறைந்தபட்சம் 200 மீட்டர் தூரம் விலகி இருக்குமாறு அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை கப்பலில் 640 கொள்கலன்கள் கண்டெய்னர்கள் இருந்ததாகவும் அவற்றில் 13 "அபாயகரமான சரக்குகளையும்" 12 கால்சியம் கார்பைடையும் கொண்டிருந்ததாகவும் கடலோர காவல்படை தெரிவித்திருந்தது. மேலும்கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசலும் 367.1 மெட்ரிக் டன் ஃபர்னஸ் ஆயிலும் இருந்தன. இதையடுத்து மூழ்கிய கப்பலில் இருந்து வரும் கொள்கலன்கள் பலத்த காற்று மற்றும் நீரோட்டங்களுடன் மத்திய மற்றும் தெற்கு கேரளக் கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதால் மாநில அரசு கடற்கரையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தவிர கப்பலில் இருந்து கசியும் எண்ணெய் கேரளக் கடற்கரையின் எந்தப் பகுதியையும் அடையலாம் என்பதால் அது குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் கசிந்த எண்ணெய்யின் மாசு வெளியான 36-48 மணி நேரத்திற்குள் ஆலப்புழா அம்பலப்புழா ஆற்றுப்புழா மற்றும் கருநாகப்பள்ளி ஆகிய கடலோரப் பகுதிகளை அடையலாம் என்று கூறியிருந்தது. "இந்தக் கடலோரப் பகுதிகள் மாசுபடும் அபாயத்தில் உள்ளன. சாத்தியமான சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்றும் அது குறிப்பிட்டது. கரைக்கு ஒதுங்கிய கொள்கலன்களுக்கு அருகில் செல்பவர்களுக்கு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. சில கொள்கலன்களில் அபாயகரமான பொருட்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதால் மக்கள் அவற்றில் இருந்து குறைந்தபட்சம் 200 மீட்டர் தூரம் விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதனுள் என்ன இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த சுங்கத்துறை அவற்றை ஆய்வு செய்யும். தெற்கு மற்றும் மத்திய கேரள மாவட்டங்களில் தலா இரண்டு துரித குழுக்களையும் ( வடக்கு மாவட்டங்களில் தலா ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருக்க தொழிற்சாலைகள் மற்றும் கொதிகலன்கள் துறைக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் எண்ணெய் கசிவு கரைக்கு வரும் பட்சத்தில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெற்கு மற்றும் மத்திய கடலோர மாவட்டங்களில் தலா இரண்டு துரித குழுக்களையும் வடக்கு மாவட்டங்களில் தலா ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/2157040 points- வவுனியாவில் விபத்து; கணவன் பலி; மனைவி, மகன், மாமனார் படுகாயம்
ஓமந்தையில் விபத்து – இந்திய துணைத்தூதரக அதிகாரி பலி! உயிரழந்தவர் யாழ் பல்கலை விரிவுரையாளரின் கணவர்! adminMay 26, 2025 கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை (26.05.25) 4.30க்கு ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளார். காரில் பயணித்த மூன்று பயணிகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. காரை ஓட்டிச் சென்றவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காரில் பயணம் செய்துள்ளனர், மேலும் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் உட்பட இருவர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்க யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா (கரவெட்டி தற்போது நல்லூர்) என தகவல் வெளியாகி உள்ளது இந்நிலையில், சம்பவம் குறித்து ஓமந்தை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://globaltamilnews.net/2025/216001/0 points- வவுனியாவில் விபத்து; கணவன் பலி; மனைவி, மகன், மாமனார் படுகாயம்
மிகவும் அதிர்ச்சியானதும் துயரம் மிகுந்ததுமான தகவல். எமது ஹாட்லிக் கல்லூரி வகுப்பு நண்பன் ஐயர் பிரபா அண்மையில்தான் வட இந்தியாவிலுள்ள புனித இந்து ஆலயங்களையும், புனித நதிகளின் சங்கமங்களையும் தரிசித்த பதிவுகளை முகநூலில் போட்டுக்கொண்டிருந்தார். இப்படி ஓர் கோரமான விபத்தில் சிக்கி உயிரை இழந்தார் என்பதை ஏற்க மனம் துணியவில்லை. ஆழ்ந்த அஞ்சலிகள். காயப்பட்ட ஐயர் பிரபாவின் மனைவியும் சக பயணிகளும் விரைந்து குணமடையவேண்டும்.0 points- ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்!
- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.