Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38754
    Posts
  2. வாத்தியார்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    11881
    Posts
  3. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    4036
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    87988
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/28/25 in all areas

  1. அர்த்தமேயில்லாமல் அல்ல, பொய் என்றால் சைமன், சைமன் என்றால் பொய்!!!
  2. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி! திருத்தியுள்ளேன்.😁 அஹஸ்தியன் கிரிக்கெட் விளையாடுபவர். சும்மா உணர்ச்சி மேலீட்டினால் CSK ஐ தெரிவுசெய்யமாட்டார்😃
  3. அகஸ்திய முனிவர் 🙏 கடும்கோபம் கொண்டு கமண்டலத்தையும் எடுத்துக் கொண்டு மலை மீது ஏறி விட்டார் போல் உள்ளது 😇😂
  4. நாளை வியாழன் (29 மே) முதலாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 74) வியாழன் 29 மே 2:00 pm GMT முலான்பூர் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS எதிர் RCB இருவர் மாத்திரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை! மற்றையோர் வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்துள்ளமையால் அவர்களுக்குப் புள்ளிகள் எதுவும் கிடையாது! நாளைய போட்டியில் இருவருக்கு மூன்று புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்குமே முட்டைகளா?
  5. இது கலாசாரம். சமயம் அல்ல. (சும்மா நாவலரின் பேய்க்காட்டும் கதை.) சைவசமயம் பிள்ளைக்கறி, மாமிச நைவேத்தியதுக்கு இடம் அளிக்கிறது. அப்படி உண்ணாதவர்கள் சைவசமயிகளாக இருப்பது வேறு விடயம். அப்படி உண்ணாதவர்கள் சைவசமயிகளாக இருப்பது வேறு விடயம். சைவம் (உணவு அல்லது உணவு கலாசாரம் என்பதால் ), சைவ சமயம் என்று ஒரு சமயமே இல்லை என்று வரும். சைவம் குறிப்பது சிவத்தை. (சிவனும் ஆரம்ப ஒரு வடிவத்தில் சுடலையில் போசிப்பவன், பூசிப்பவன் - இது இப்போதும் இருப்பது அகோரிகளில்.)
  6. அடாவடி இல்லாமல் இருக்கவேணும் என்று வாத்தியாரே சொல்லிப் போட்டார். ஒன்றும் சொல்லாமலே இருக்கவேண்டும் போல. ஊரில சொல்லுலினம். எவ்வளவு அமைதியான பிள்ளை என்று.
  7. நெல்லியடி IIS இல் O/L எடுத்த பின்னர் இவரிடம் கணனி படித்திருக்கிறேன். அநியாயச் சாவு. ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். மனைவியினதும் மகனினதும் நிலை மிகவும் கவலைக்கிடம் என கேள்விப்பட்டேன். பூரண சுகமடைய வேண்டுகிறேன். விமானத்தால் இறங்கி காரை எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டிருக்கிறார்கள். கட்டுநாயக்க பகுதியிலேயே பல அறைகள், சிறிய கொட்டல்கள் மலிவாக எடுக்கலாம். தங்கி வெளிக்கிட்டிருக்கலாம். யாழ் கொழும்பு தனி வாகனப் பயணங்கள் இரவில் கூடவே கூடாது. இங்கிருந்து போகும் எம்மவர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வான் எடுப்பிச்சு உடனேயே கிளம்புவார்கள். வான் சாரதி அப்போது தான் யாழில் இருந்து எட்டு மணித்தியாலம் ஓடி வந்திருப்பார். இன்னொரு எட்டு மணித்தியாலத்துக்கு அவரால் எப்படி ஓட முடியும்?
  8. குழுநிலைப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் கேள்விகள் 1-73 வரையான பதில்களின் அடிப்படையில் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: தொடர்ந்து முதல் நிலையில் இருக்கும் @நந்தன் க்கு வாழ்துக்கள்
  9. முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள் 🙏 எந்த அடாவடியும் இல்லாமல் மக்களோடு மக்களாக தலமைப் பதவியில் அமர்ந்து நல்லாட்சி செய்பவரே எங்களுக்குத் தேவை . 😇 ஆதலால் தொடர்ந்தும் முதல்வர் பதவியை உங்கள் கையில் ஒப்படைக்க நாம் தயார்.😂
  10. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த குழுநிலைப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர் மிச்சல் மார்ஷின் அதிரடியான 67 ஓட்டங்களுடனுன் ரிஷப் பந்தில் புயல்வேக சதத்துடனும் (ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்கள்) 3 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சவாலான ஓட்ட இலக்கை எட்டும் நோக்கில் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆட்டத்தில் இறங்கினர். விராட் கோலியின் 54 ஓட்டங்களுடனும், மயங் அகர்வாலின் 41 ஓட்டங்களுடனும், ஜிதேஷ் ஷர்மாவின் மின்னல்வேகத்தில் 33 பந்துகளில் எடுத்த 85 ஓட்டங்களுடனும் 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 230 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  11. ஓ....ராகு கேது பெயர்ச்சியெல்லாம் பார்க்கிறீங்கள் போல.... 😲 புரியவில்லை சொல்லுங்கள். 😁
  12. நீங்கள் இந்த அணிகளை இறுதிப்போட்டியில் தெரிவு செய்துள்ளீர்கள் போல் உள்ளது சரியான தெரிவுதான், சில வேளை பெங்களூர் தென்னாபிரிக்கா போல் இறுதிப்போட்டியில் சொதப்பினால்?
  13. ஒரு படத்துக்கு இலவச விளம்பரம் காலா காலமாய் மணி ,கமல் கூட்டம் செய்யும் இலவச விளம்பர அந்தர் பல்டி . அப்ப Suhasini Mani Ratnamஎன்ன வெள்ளி பார்த்து கொண்டு இருக்கறாங்க போல் உள்ளது அவங்க பூர்வீகம் கர்நாடக தானே ?
  14. அட இரண்டு பேர் தானா. பிறகென்ன, RCB வெல்வது உறுதி. எல்லாருக்கும் வணக்கம்!!
  15. சைவசமயத்தில் - சைவம் என்று ஒரு தெய்வமும், கடவுளும் இல்லை (அப்படி உணவு முறை, கலாசாரமே இருக்கிறது). அதில் - சைவசமயத்தில் - சைவம் குறிப்பது சிவத்தை. நாவலர் குழப்பியதால் வந்த விளைவு.
  16. தமிழர்கள் பின்பற்றும் சமயங்கள் ஒன்றல்ல. இந்துசமயம், சைவசமயம், கிறித்தவ சமயம் என்று பல்வேறு சமயங்களை அவர்கள் பின்பற்றுகின்றனர். அவைகளில் சைவசமயத்தை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் மச்சம், மாமாமிசம் உண்பதில்லை. இருந்தும் தமிழர்கள் எந்தமதத்தவரின் கோவில்களையும் கடந்து செல்லும்போதும் அவைகளுக்குரிய கடவுள்களை வெளிப்படையாக இல்லாவிடினும் நெஞ்சில் கைவைத்து மானசீகமாக வணங்கிச்செல்வார்கள். அந்த வழக்கம் அனேகமாகத் தமிழர் அனைவரிடத்தும் உறைந்து உள்ளது .🙏
  17. 28 MAY, 2025 | 10:50 AM மிகவும் இயற்கையான நிகழ்வான பெண்களின் மாதவிடாய் சுழற்சி தொடர்பில் சமூகத்தில் இருந்து எழும் களங்கம் காரணமாக பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். "மாதவிடாய் வறுமைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கான திட்டம்" என்ற தலைப்பில் மே 27 அன்று கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற 'Period Pride 2025' மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பெண்களின் மாதவிடாய் என்பது அவமதிக்கப்படக்கூடிய ஒரு விடயமல்ல, இது ஒரு இயற்கையான நிகழ்வு. மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் வறுமை ஆகியவை வெறும் சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்லாது, கண்ணியம், சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயமாகும். திருகோணமலை, கண்டி மற்றும் கொழும்பு பிரதேசங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட அண்மைய ஆராய்ச்சியின்படி, பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்கள் இல்லாததால் பல பாடசாலை மாணவிகள் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. பல பெண்கள் பாதுகாப்பற்ற தெரிவுகளை நாடுகின்றனர். இது மிகவும் ஆபத்தானதாகும். பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியம் தொடர்பில் சமூகத்திலிருந்து எழும் களங்கம் காரணமாக பல பெண்கள் அமைதியாக அவதிப்படுகிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும் என்றும் மாதவிடாய் எவருடைய உடல்நலம், கல்வி அல்லது கண்ணியத்திற்கும் இடையூறாக அமையக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கு விரைவான மற்றும் முறையான திட்டம் ஒன்று தேவை. 13 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும் திட்டத்தை கல்வி அமைச்சு ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது. குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மாதவிடாய் காரணமாக எந்த ஒரு பெண் பிள்ளையும் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்கக்கூடாது என்பது தனது தனிப்பட்ட கருத்து. அடுத்த ஆண்டு முதல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சுகாதார நப்கின்களை வழங்கும் திட்டத்தை செயற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளன. பெண்களுக்கான சுகாதார நாப்கின் மீதான அனைத்து வரிகளையும் நீக்க கோரிக்கைகள் கிடைத்துள்ளன. இந்த விடயத்தில் சில சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அதை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு விரிவான கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் அவசியம். இந்த விடயம் தொடர்பாக நிதியமைச்சுடன் கலந்துரையாடி வரியினை நீக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எதிர்ப்பார்த்துள்ளோம். இதற்காக சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையின் ஆதரவை எதிர்பார்ப்போம் என்றார். இந்த நிகழ்வில் பிரான்ஸ் நாட்டின் தூதுவர் ரெமி லம்பேர்ட், இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/215872
  18. இல்லை ஏனெனில் அவர்கள் இலங்கையில் ஒரு இடத்திலுருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து உள்ளார்கள் அதாவது தங்களுடைய நாட்டிலுள். அவர்களின் நாடு இப்போதும் இலங்கை தான் கைதடியில். வடக்கிலிருந்து தெற்க்கும். மேற்கிலிருந்து கிழக்கும் குடிபெயர்வது வநதன்வரத்தான் ஆகுமா ?? இல்லை. அவர்கள் கைதடியில் தான் இருக்கிறார்கள் இதோ போல் இலங்கைக்குள். இடம்பெயர்ந்தாலும் அவர்கள் இலங்கையர்கள். அவர்களை வநதன்வரத்தன் என்று எப்படி அழைக்க முடியும்??
  19. அவர்களும் சேர்ச்சை தாண்டி தலையிட முடிந்தால், வாய்ப்பு இருப்பின் கலையிடுவார்காள்…அண்மையில் கூட சில தனிமனித சுதந்திர விடயங்களில் இலங்கையில் பிக்குகளும், மெளலவிகளும், மல்கம் ரஞ்சித்தும் ஒரே குரலாக ஒலித்ததை கண்டோம். மதம் என்பதே by definition தனிமனித சுதந்திரத்துக்கு எதிரான ஒரு பிற்போக்குவாத கட்டமைப்பே. ஆகவேதான் அவரவர் மதங்களின் பிற்போக்கை அவரவர் எதிர்ப்பதும், அதற்கு ஏனையோர் துணை நிற்பதும் அவசியமாகிறது. குறிப்பாக இல்லாத ஒன்றை உருவாக்கி, அதை ஊர் வழமை என காதில் பூவைக்க முனைந்தால் - அந்த பின்னோக்கி செல்லும் முயற்சியை, அல்லது தமிழ் சங்கி மயப்படுத்தலை, அல்லது தமிழ் தாலிபான்களின் செய்கையை எதிர்க்க வேண்டியது நாகரீகம் அடைந்து விட்ட ஒவ்வொரு தமிழனதும் கடமை.
  20. நீண்ட காலம் முதல்வர் பதவியில் வீற்றிருக்கும் நந்தன் அண்ணைக்கு வாழ்த்துகள்.
  21. அப்பிடியாங்க. அப்ப சரி.😁
  22. நிஸாம் காரியப்பர் 🙏 அத்தனை ஆணித்தரமாக இந்தச் சட்டம் மீழப் பெறப்பட வேண்டும் என்று பாராளுமன்றில் சகல தமிழ்ப் பா ஊக்களுக்கும் எடுத்துரைத்தது மறக்கப்படக் கூடிய செயல் அல்ல. இவரைப் போன்ற மனிதர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.
  23. பக்கத்தில் நின்றபெண்ணுக்கு கிஸ் அடிச்சிருப்பார் போல ...அது தந்த கோபமாக்கும் . இருந்தாலும் மனுஷன் சமாளிக்கிறார் .😃
  24. இறுதிக் காலங்களில் புலிகளால் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் இந்த விடயங்கள் தொடர்பாக நீங்கள் எவ்வாறு மறுதலித்து அது ஒரு கீழ்த்தரமான சிந்தனை என்று குறிப்பிடுகின்றீர்களோ, அதே போன்று தான் சிங்களவர்களும் தம் ரணவிருவாக்களை பற்றிய குற்றச்சாட்டுகளை தெரிவிப்பவர்களை, விமர்சிப்பவர்களை, அவர்கள் ரணவிருவாவாக ஏற்றுக் கொள்ளாதவர்களையிட்டும் குறிப்பிடுகின்றார்கள். இங்கு யார் அதிகம் குற்றச்சாட்டுகளுக்கு உரியவர், யார் குறைந்த குற்றச்சாட்டுகளுக்கு உரியவர் என்ற கணக்கீடுகளுக்கு அப்பால், இரு தரப்புமே (சிங்களவர் / தமிழர்) என்றுமே தம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவிதமான பொறுப்புக் கூறல்களுக்கு விரும்புவதில்லை. விருப்பமோ, விருப்பம் இல்லையோ, இலங்கை நாட்டில் இவ் இரு இனங்களும் இணைந்தே தான் வாழ வேண்டிய சூழ்நிலையில் இரு தரப்புமே தாம் எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் உரியவர்கள் இல்லை என்று மறுத்துக் கொண்டே இருக்கும் வரைக்கும் ஒரு போதும் அங்கு அமைதி ஏற்படப் போவதும் இல்லை, முன்னேற்றம் வரப் போவதும் இல்லை.
  25. இதில் தனிப்பட்ட தடுப்பு இல்லை. பொதுக அங்கு இருப்பவர்கள் திருவிழா காலத்தில் சமைப்பது இல்லை. கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வீட்டில் உண்பதை ஒருவரும் தடுப்பது இல்லை. அனால், பொதுவாக அவர்களும் அப்படியே. ஒன்றும் வலுக்கட்டாயமாக இல்லை. அப்படி திருவிழா காலத்தில் சமைப்பது இல்லை என்பது, மிகவும் பெரிய பிரதேசம், இருபாலையையும் தாண்டி அந்த (பொது) வழக்கம் இருக்கிறது. அதே போல அங்கேயே பூர்வீகம் என்றால் திருமணம் கூட செய்வது இல்லை. முருகனுக்கு பூங்காவனத்தில் திருமணம் முடிந்ததே திருமணம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை. ஒன்றில் திருவிழா ஆரம்பம் ஆக முதல் அல்லது திருவிழா முடிந்து திருமணங்கள் நடப்பது. வெளியில் இருந்து வந்தவர்களுக்கு அந்த நம்பிக்கைகள் இல்லாமல் இருக்கலாம். சொன்னது போல, சமயம், கலாசாரம், சூழல், நம்பிக்கை கலந்த பிரச்சனை.
  26. ஆரம்பத்தில் இருந்தே இதனை சாத்தியமான வழிகளில் எதிர்த்து வந்த தமிழரசுக் கட்சிக்கும் சுமந்திரனுக்கும் பாராட்டுகள். இந்த வர்த்தமானியை பிரசுரிக்கும் வரைக்கும் அரசுக்கு முடிந்தளவு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும். விமல் வீரவன்சவுக்கு இன்னொரு விடயம் கிடைத்து விட்டது இனவாதத்தை கக்குவதற்கு.
  27. சீனாவின் கடந்த ஆண்டிற்குரிய மொத்த தேசிய உற்பத்தி 18.2 (2024)டிரில்லியன் கொண்டுள்ளது. 17.79 டிரில்லியன் 2023 ஆண்டிற்கான மொத்த தேசிய உற்பத்தி உள்ளது எனகருதுகிறேன், சீனாவின் இந்த ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி விகிதம் 5% ஆக வரலாம் என கருதப்படுகிறது. அவ்வாறாயின் மொத்த தேசிய உற்பத்தி 19.11 டிரில்லியனாக வர வாய்ப்புள்ளது. 2023 சீனாவின் தனிநபர் வருமானம் 12.614 அமெரிக்க டொலராகவும் இந்தியாவின் தனிநபர் வருமானம் (GDP Capita) 2480 அமெரிக்க டொலராக உள்ளது.
  28. உலகில் அதிக மக்களைக் கொண்டுள்ள இந்தியா மொத்த உற்பத்தியில் நான்காம் இடத்துக்கு வருவது வியப்பானதல்ல. இந்திய மக்கள் ஒவ்வொருவரினதும் மொத்த உற்பத்தித் திறனைக் கணக்கிட்டால் இந்தியா முதல் 100 நாடுகளில் வருமா என்பது சந்தேகம். அதாவது இந்தியா உலகில் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கும். செய்தியில் சொல்லப்படாத விடயம், இந்தியா தன்னைச் சீனாவுடன் ஒப்பிட்டிருக்க வேண்டும். சீனாவின் நடப்பு நிதியாண்டின் மொத்த உற்பத்தி 22600 டிரிலியன்களைத் தாண்டும். இந்த எல்லையை இந்தியா ஒருபோதும் எட்ட முடியாது.
  29. அங்குமிங்கும் ஆர்ப்பரித்துப் பறக்கும் பறவைகள், வேலையும் இல்லை; நிற்க நேரமுமில்லை என்பதுபோல் பரபரப்பாகத் திரியும் நாய்கள், அசைபோட்டுக் கொண்டே அமர்ந்திருக்கும் கால்நடைகள், பொழுதுக்கும் தூங்கும் பூனைகள் இவையெல்லாம் இரை தேடுதலைத் தாண்டி தம் மனதில் என்ன யோசிக்கும் என்று எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்து சிரித்துச் சென்றிருப்போம். சில நேரங்களில் விளையாட்டாக அதற்கு ‘வாய்ஸ் ஓவர்’ கொடுத்து கிண்டலும்கூட செய்து மகிழ்ந்திருப்போம். இப்போதைய ஏஐ உலகில், பூனை, நாய்கள் பேசுவது போல் ரீல்ஸ் கூட நாம் டூம்ஸ்க்ரால் செய்யும்போது பார்த்து அடடே நல்லாயிருக்கே என்று லைக்ஸ் போட்டுக் கடந்திருப்போம். ஆனால், உண்மையிலேயே பறவைகள் என்ன நினைக்கின்றன என்பதை, அவற்றின் உணர்வு நிலை எத்தகையது என்பதை முழுவீச்சில் ஆராய்ச்சியாக செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் விஞ்ஞானிகள். அதுமட்டுமல்லாது, 1980-களில் தொடங்கி 2003-ம் ஆண்டில் தனது இறப்பு வரை டொனால்டு க்ரிஃபின் என்ற விஞ்ஞானி, விலங்குகளின் உணர்வு நிலை (Animal Consciousness ) பற்றி ஆய்வு செய்துள்ளார். இந்தத் துறையில் டொனால்டு க்ரிஃபினை ஒரு முன்னோடி என்றே துறையினர் விதந்தோதுகின்றனர். அவர் தனது இறுதி மூச்சு வரை வலியுறுத்தியது, பறவைகள், விலங்குகளின் உணர்வு நிலை பற்றி அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் பெரியளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே. அதை சுட்டிக்காட்டி இந்தக் கட்டுரையில், சில வாதங்களை, சுவாரஸ்யமான ஆய்வு விவரங்களைப் பகிர்ந்துள்ளனர் இரண்டு பேராசிரியர்கள். ஹீதர் பிரவுனிங், பேராசிரியர், சதாம்ப்டன் பல்கலைக்கழகம் மற்றும் வால்டர் வெய்ட், பேராசிரியர் ரீடிங் பல்கலைக்கழகம் ஆகிய இருவரும் ‘தி கான்வர்சேஷன்’ தளத்தில் எழுதியுள்ள கட்டுரையின் சாரம்சம் வருமாறு:இந்த உலகை ஒரு தத்துவ ஞானி பார்க்கும் பார்வை இருக்கும், அது சமூக நலன் சார்ந்ததாக இருக்கும். அதுவே இந்த உலகை பறவைகளும், விலங்குகளும் எப்படிக் காண்கின்றன, அணுகுகின்றன என்ற பார்வையும் இருக்கும் அல்லவா? அது சூழழியல் சார்ந்ததாக இருக்கும். அந்தப் பார்வையை அறிந்து கொள்வது சூழலைப் பேணுவதில் அவசியமானது என்கின்றனர் இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர். ஆற்றலில் தனித்து நிற்கும் காக்கை இனம்: காகம், மனிதர்கள் மத்தியில் வாழும் மிகப் பொதுவான ஒரு பறவை இனம். காக்கை இனத்துக்குள் அடங்கும் ரேவன்ஸ், க்ரோஸ், ஜேஸ், மேக்பைஸ் போன்ற பறவையினங்கள் மத்தியில் மேற்கூறிய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக புத்திசாலித்தனம் குறைவாக இருப்பவர்கள் பறவை மூளைக்காரன் என்று வசைபாட அடைமொழியாக்குவதுண்டு. நம்மூரில் வாத்துமூளைக் காரன், மடையன் என்றெல்லாம் வசவு மொழிகள் உண்டு. ஆனால் காக்கை வகையறாக்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அவற்றை ‘ஃபெதர்ட் ஏப்ஸ்’ (feathered apes), அதாவது நமக்கான முன்னோடி என்று அழைக்கின்றனர். காக்கை இனத்தைச் சேர்ந்த பறவைகளுக்கு கூர்மையான பார்வைத் திறன் உண்டு. வேகமாகப் பறக்கும்போது கூட அதன் இரையை கூர்மையாக கவனித்துவிடும் திறன் கொண்டவை. அவற்றின் செவித்திறன் அபாரமானது. ஓசைகளில் இருந்தே எச்சரிக்கையாக இருந்து கொள்ளக் கூடியவை. அதேபோல் அவற்றிற்கு நினைவாற்றலும் அதிகம். இந்த வகைப் பறவைகள் தாங்கள் சேகரிக்கும் உணவை பதுக்கிவைக்கும் திறன் கொண்டவை. இதை ஆங்கிலத்தில் கேச்சிங் (caching) என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எந்த உணவை எங்கு பதுக்கி வைத்தோம் என்பது மட்டுமல்லாது, அதை எப்போது பதுக்கிவைத்தோம் என்பது வரை அவை நினைவில் கொள்கின்றன. அதன்மூலம் புழு, பூச்சிகள் போன்ற சீக்கிரம் அழுகிப்போகும் உணவை எங்கு, எப்போது வைத்தோம், நீண்டகாலம் இருக்கக் கூடிய தானியங்களை எங்கே வைத்தோம் என்று நினைவில் கொண்டு பயன்படுத்திக் கொள்கின்றன. அதுமட்டுமல்லாது ஒருவேளை அந்த உணவுப் பொருளை வேறொரு பறவையிடமிருந்து திருடியிருந்தால் ஒளித்து வைத்த இடத்தையும் அவ்வப்போது மாற்றிக் கொள்கின்றன. அதேபோல் பறவைகளுக்கு ஆழமான நுகர்ச்சியுணர்வும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தியும் மறைத்துவைத்த உணவை கண்டு கொள்கின்றன.இது மட்டுமல்லாது இந்த வகைப் பறவைகள் மனிதர்களைப் போல் உணர்ச்சிகளையும் கொண்டுள்ளன. உதாரணத்துக்கு எதிர்மறை எண்ணங்கள் இவற்றிற்கு எழுகின்றன. சக பறவை வாட்டமாக இருந்தால் அதையே தானும் பிரதிபலிக்கக் கூடியவையாக இருக்கின்றன. மனிதர்களைப் போலவே புதிய பொருட்களிடம் எச்சரிக்கையாக இருக்கின்றன. அறிமுகமில்லாத மனிதர்கள் ஏதேனும் உட்கொள்ள கொடுத்தால் அதைப் பெறுவதில் தயக்கம் காட்டுவதும் இந்த நியோஃபோபியாவால் தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பொதுவாக பாலூட்டி விலங்குகளிடம் இதுபோன்ற உணர்வுகள் இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் காக்கை வகை பறவைகளில் காணப்படும் இந்த வகையிலான உணர்ச்சிகள் பறவைகளின் உணர்வுகள், மனம் பற்றி மேலும் ஆராய்ச்சிகளைத் துண்டுவதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஜே (jay bird) என்ற காக்கை வகையறா பறவைகளில் ஆண் பறவை தன் இணையைத் தேர்வு செய்ய பெண் பறவையின் உணவுப் பழக்கவழக்கத்தை கூர்ந்து கண்காணித்து, அதற்குப் பிடித்தமான உணவை சேகரித்துச் சென்று கொடுத்து அத்துடன் இணையும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. இதுபோன்ற சமூக திறன்கள் பாலூட்டி விலங்குகளிடமே பெரும்பாலும் தென்படும் நிலையில் ஜே பறவைகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன. இதுபோன்ற ஆராய்ச்சிகள் கோர்விட் (Corvidae) இன பறவைகளின் நலனைப் பேண உதவும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அவற்றுக்கு எது உகந்தது, எது ஒப்பாதது என்பதை அறிந்து கொள்வது அவற்றிற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் நலன் சேர்க்கும் என்கின்றனர் கட்டுரையாளர்கள். இயற்கையின் சமநிலைக்காகவே...! - இந்தக் கட்டுரை குறித்த பார்வையை ‘இறகுகள் அம்ரிதா இயற்கை’ அறக்கட்டளை நிறுவனரான ரவீந்திரன் நடராஜன் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பறவைகள் ஆய்வாளரான அவர் கூறுகையில், “பறவைகளின் அறிவுத்திறன் என்பது அதன் உயிர்வாழ்தலை உறுதி செய்து கொள்வதற்கானதும், அதன் அடுத்த தலைமுறைக்காக தான் வாழும் சூழலை சரியாக தகவமைத்துக் கொள்வதற்குமாகவே இருக்கிறது. காகங்களின் வாழ்க்கை அதை நமக்கு தெளிவாக உணர்த்தும். காகங்கள் நம் மத்தியில் சர்வ சாதாரணமாக, மிக அதிகமான அளவில் இருக்கக் கூடியவை. அவற்றின் உயிர்வாழ்தலும் பாதிக்கப்படக் கூடாது, அதே வேளையில் அவற்றின் இனப்பெருக்கமும் அதிகமாகிவிடக் கூடாது. ஏனெனில் காகங்கள் மிக வேகமாக இனப்பெருக்கும் செய்து கொண்டே இருக்கக் கூடிய பறவைகள். அப்படியிருக்க, இயற்கையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த இயற்கையே அதற்கு ஒரு வழியும் செய்து வைத்திருக்கிறது. அதுதான் குயில்கள். குயிலினங்கள் கூடு கட்டாது, காக்கைக் கூட்டில் முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கச் செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் பின்னணியில் இந்த இயற்கை சமநிலையைப் பேணும் தன்மை தான் மறைந்திருக்கிறது என்பதே பலரும் அறியாதது. காகங்கள் கூடு கட்ட குச்சிகள் சேர்க்கும் போதே, குயில்கள் இணை சேர திட்டமிட்டு சேர்ந்துவிடும். காகம் கூடு கட்டி முட்டையிட்டதும், ஆண் குயில் அந்தக் கூட்டிலிருந்து முட்டையை தள்ளிவிட்டு உடைத்துவிடும். பொதுவாகவே கூட்டில் முட்டையிட்டுவிட்டால் ஆண், பெண் காகங்கள் மாற்றி மாற்றி அதற்கு காவலாக இருக்கும். ஆனால் அதையும் தாண்டி அந்தக் கூட்டில் பெண் குயில் முட்டையிட ஆண் குயில் மிகப் பெரிய வேலைகளைச் செய்யும். விளையாட்டாகச் சொல்வதென்றால் கில்லாடி வேலைகளைச் செய்யும். ஆண் குயில் காகங்களிடம் வேண்டுமென்றே சண்டையிழுத்து அவற்றை அங்குமிங்கும் அலைக்கழித்து அவற்றின் கவனத்தை திசை திருப்பிவிடும். அந்த நேரத்தில் பெண் குயில் வந்து முட்டையிட்டுச் சென்றுவிடும். இப்படி அந்த முட்டையை வளர்க்கும் காகம் ஒரு கட்டத்தில் அது தன்னுடையது அல்ல என்பதைத் தெரிந்தவுடன் கூட்டிலிருந்து விரட்டிவிடும். பறவைகள் ஆய்வாளர்/ ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் இப்படித்தான் பல்கிப் பெருகக்கூடிய ஒரு பறவையினத்தை, கூடுகட்டும் திறனில்லாத இன்னொரு பறவையினம் சர்வைவலுக்காக கட்டுப்படுத்துகிறது. இதைத்தான் இயற்கை சமநிலைக்கு இயற்கையே அளித்த திறமைகள் என்று கூறுகின்றேன். காகங்கள் அனைத்துண்ணிகளாக இருந்து நகரத் தூய்மையைப் பண்ணுவதாக இருந்தாலும் கூட அவற்றின் எண்ணிக்கை அதிகமானால் மனிதர்களுக்கு தொல்லையாகிவிடும். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் காகங்களை தீங்கினமாகவே காண்கின்றனர். அங்கே காகங்களை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆய்வுகளை செய்துள்ளனர். அதன்படி சில வழிமுறைகளையும் பின்பற்றி காகங்களின் எண்ணிக்கையை கட்டுக்குள்ளும் வைத்திருக்கின்றனர். காகங்கள், குயில்களின் நெஸ்டிங் முறையை கூர்ந்து கவனித்து ஆய்வு செய்ததுபோல், வாத்துகளையும் நான் உற்று நோக்கி ஆய்வு செய்துள்ளேன். வாத்துகளை அறிவற்ற பறவைகள் என்று நாம் சொல்வதுண்டு. மடை எனப்படும் குறுகிய நீரோட்டங்களில் வாழும் சின்ன அளவிலான வாத்துகளை மடை வாத்து என்றழைப்போம். அதுவே மருவி மடவாத்து என்ற வார்த்தையாகிவிட்டது. அவை எப்போதும் கூட்டமாக வாழக்கூடியவை. சம்பை புல்களுக்கு இடையே வாழும் ஸ்பாட் பில்ட் டக்ஸ் என்ற வாத்துகளை ஒருமுறை நெருங்கி ஆய்வு செய்ய முடிந்தது. அப்போது அருகிலிருந்து வயலில் பறவைகள் வந்து பயிர்களை நாசம் செய்யக்கூடாது என்று வெடி வெடித்துக் கொண்டிருந்தனர். அதற்கு பயந்துபோன சம்பை வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் வெளியே வந்தது. வெளியே வந்ததும் அந்த வாத்து குஞ்சுகளை சுற்றிச்சுற்றி வந்தது. அது எத்தனை வாத்துகள் இருக்கின்றன என்று எண்ணுவதுபோலவே இருந்தது. பின்னர் மீண்டும் அந்த புல் பகுதிக்குச் சென்று சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. நீண்ட நேரத்துக்குப் பின் வெடிச்சத்ததால் பயந்து பதுங்கியிருந்த இன்னொரு வாத்துக் குஞ்சு வெளியே வந்தது. உடனே மற்ற வாத்துகளுடன் அதையும் சேர்த்துக் கொண்டு வேறிடத்துக்குச் சென்றது அந்த வாத்து. இப்படி, வெளிநாடுகளிலும் கூட வாத்துகளின் எண்ணும் திறனை ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர். கடல் ஆலா பறவைகள் பல மைல்கள் கடந்து ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் இருந்து எப்படி இடம்பெயர்ந்து வருகிறது என்ற சூட்சமம் இன்றுவரை முழுமையாக ஆராய்ச்சிகளால் கண்டு கொள்ள முடியாததாகவே இருக்கிறது. குறிப்பிட்ட கழுகு வகைகள் அதன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு இணையோடு மட்டுமே வாழும், இன்னொரு பறவையினம் தனது இணை இறந்துவிட்டால், பட்டினியிருந்து அதுவும் உயிர் துறந்துவிடும். இப்படி இயற்கை நிறைய சுவாரஸ்யங்களை உள்ளடக்கியுள்ளது. இவையெல்லாம் இயற்கையின் சமநிலையைப் பேணவே நடைபெறுகிறது. பறவைகள் தம் உயிர் வாழ்தலை உறுதி செய்து கொள்ள சமநிலையைப் பேண ஒவ்வொரு விதமான உணர்வு நிலைகளுடன் இயங்குகின்றன. பறவைகளின் உணர்வு நிலைகளை, உள்ளுணர்வுகளை ஆய்வு செய்தல் சுவாரஸ்யமானதே.” என்றார். ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு ஃபீலிங்... பறவைகளின் உள்ளுணர்வும், சில சுவாரஸ்யங்களும்! | What’s going on inside the mind of an animal or a bird explained - hindutamil.in
  30. இலங்கையில் நாளாந்தம் பலர் விபத்துகளில் கொல்லப்படுகின்றனர். அதில் அரைவாசிக்கும் மேல் சாரதி நித்திரையாகி விடுவதால் நிகழ்கின்றது. அண்மையில் இடம்பெற்ற இ.போ.ச வண்டியின் கோர விபத்துக்கும் சாரதி நித்திரையாகிப் போனதே காரணம் என கண்டறிந்துள்ளனர். அதிகாலையில் வாகனத்தை செலுத்த வேண்டி வரும் எனில், அதற்கு முன்னர் நல்ல ஓய்வை எடுத்து இருக்க வேண்டும். 7 மணித்தியாலங்களாவது நித்திரை கொண்டு இருக்க வேண்டும். நான் நீண்ட தூரத்துக்கு வாகனம் செலுத்த வேண்டி வரும் போது, இடையில் நித்திரை வருகின்ற மாதிரி இருந்தால் உடனே அருகில் இருக்கும் Parking Area விற்கு இடத்துக்கு சென்று 15 நிமிடங்களாவது Nap எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
  31. பிகு எனக்கு எந்த ஊர்ரை இட்டும் எந்த கெத்தும் இல்லை. சாதி/மாவட்ட கெத்தை போல ஒன்றுதான் இந்த ஊர் கெத்தும். யாழில் அந்த ஊரான், இந்த ஊரான் என அல்லது ஏதோ ஒருவகையில் தம் ஊரை இணைத்து பெயர் வைப்போரை பார்க்க சிரிப்பாகவே இருக்கும். விசுகு அண்ணா என்னை அவமானபடுத்துவதாக நினைத்து சொல்லிய வார்த்தைப்படி… நான் வந்தான் வரத்தான்களின் ராஜாவாக்கும்🤣. அதனால்தான் இன்றுவரை என் சொந்த ஊர், மாவட்டம் பற்றி எதுவும் சொல்வதில்லை. யாழ் உறுப்பினருக்கும் எனக்கும் இடையான ஒரே பந்தம் நான் ஈழத்தமிழன் என்பது மட்டுமே. அதுவும் கெத்தாக அல்ல. ஒரு அடையாளமாக.
  32. இந்த செய்தியில் இந்த " மனிதாபிமான உணவு வினியோகம்" 😎 என்பதன் பின்னணியைச் சரியாக அடையாளம் காட்டவில்லை. காலாகாலமாக, காசாவிற்கு உணவு வினியோகம் செய்வது ஐ.நாவின் தொண்டு அமைப்புகள் தான். இஸ்ரேல், காசாவின் மீதான தாக்குதலை ஆரம்பித்த பின்னர், இந்த உணவு வினியோகத்தை மிகவும் குறைத்து விட்டது (ஒரு நாளைக்கு 500 லொறிகள் என்பதில் இருந்து 5 லொறிகள் என்ற நிலை தற்போது). உணவை ஆயுதமாகப் பிரயோகிக்கும் இந்த மிருகத் தனத்திற்கு பைடன் ஆட்சியில் ஆதரவு இருக்கவில்லை. எனவே, கொஞ்சமாவது லொறிகளின் எண்ணிக்கையை உயர்வாக வைத்திருந்தார்கள். இப்போது ட்ரம்ப் ஆட்சி வந்தவுடன், புதிதாக மீண்டும் தாக்குதலையும், உணவுத் தடுப்பையும் அமல் படுத்தி விட்டார்கள். இந்தப் பட்டினிப் பின்னணியில், பணம் பார்க்கும் ஆசையில் அலையும் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக் காரர்களும் (security contractors), சில உணவு முகவர்களும் ட்ரம்பை அணுகியிருப்பார்கள் என ஊகிக்கிறேன். அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான் அமெரிக்க ஒப்பந்தக் காரர்களால், இஸ்ரேல் படையின் பாதுகாப்புடன் உணவை வினியோகிக்கும் GHF என்ற அமைப்பு. பெயரில் "மனிதாபிமானம்" இருந்தாலும், இது ஈராக்கிலும், ஆப்கானிலும் செய்தது போல, அமெரிக்க ஒப்பந்தக் காரர்களுக்கு வருமானம் தேடும், காசா மக்களை மந்தைகள் போல அலைய விடும் ஒரு திட்டம் என்பது பலருக்கும் தெரியும். எனவே, ஐ.நா அமைப்புகள் இதற்கு ஒத்துழைக்க மறுத்து விட்டன. "செய்து காட்டுகிறோம் பார்" என்று நேற்று ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் நாளே இப்படியாக ஆகி விட்டது. என்றாலும் மீண்டும் மீண்டும் இப்படி செய்வார்கள், காசா மக்கள் அள்ளுப் படுவர், இஸ்ரேல் படைகள் சுடும். இறுதியில் "காசா மக்களின் பட்டினிக்கு அவர்கள் இப்படி நடந்து கொள்வது தான் காரணம்" என்று பிரச்சார வீடியோக்களை வெளியிட்டு விட்டு, கடையை மூடி விட்டுப் போவார்கள்! இந்த GHF பற்றிய மேலதிக தகவல்கள்: https://www.bbc.com/news/articles/cev41em3r9lo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.