Leaderboard
-
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்9Points46783Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்9Points33600Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்8Points19109Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்7Points38754Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/02/25 in all areas
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது அதுவும் இல்லை அடுத்த போட்டியில் சந்திக்க ஆ(அ)வலுடன் காத்து இருப்பார்கள் 😇4 points
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
3 points‘`இந்தத் தலைமுறையைவிட, எங்கள் தலைமுறை, குறைவாகவே மூடநம்பிக்கை கொண்டிருந்தது. நகரத்தில் வாழும் மக்கள், டெக்னாலஜி அணுகல் உள்ள மக்கள் அனைவரையும் சேர்த்தேதான் சொல்கிறேன். ஜோதிடத்திலும், சாமியார்கள் மீதும் இன்றைய தலைமுறையின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மீடியாவை எடுத்துக் கொள்ளுங்கள். சூரிய கிரகணம் என்றால், அவர்கள் வானியல் அறிஞர், ஜோதிடர் என இருவரிடமும் பேசுகிறார்கள். ஆனால், ஜோதிடருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்!’’ - சமீபத்தில் மறைந்த, இந்தியாவின் தலைசிறைந்த வானியற்பியல் அறிஞர் ஜயந்த் விஷ்ணு நர்லிகரின் (Jayant Vishnu Narlikar) வார்த்தைகள் இவை. அந்த வருத்தம் அவருக்கு இருந்ததால்தான், தனது அறிவியல் ஆராய்ச்சிகள் தாண்டியும், மக்களின் மூட நம்பிக்கைகளைக் களையெடுத்து பகுத்தறிவை வளர்க்கவும், அடிப்படை அறிவியல் ஊட்டவும் அவர் அதிக ஆர்வம் காட்டினார். அறிவியலை தனது கட்டுரைகள், புத்தகங்கள், உரைகள், மீடியாவின் மூலம் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணி, அப்படியே வாழ்ந்தார். ‘ஜோதிடம், திருமண ஜாதகப் பொருத்தம் எல்லாம் பொய்’ என ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு அடித்து நொறுக்கிய இவருடைய பகுத்தறிவுவாதி முகம், வலிமை வாய்ந்தது. அதனால்தான், இந்தியாவில் வானியற்பியல் மற்றும் அண்டவியல் (Cosmology) உலகில் தனக்கென ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்ற அவர், சமீபத்தில் (மே 20) தனது 87 வயதில் மறைந்தபோது, அறிஞர்கள் வட்டம் தாண்டி, பகுத்தறிவுவாதிகளும் பொதுமக்களும் பகிர்ந்துவருகின்றனர் அவருக்கான புகழஞ்சலியை. மகாராஷ்டிரா டு கேம்பிரிட்ஜ் பட்டம்! 1938-ம் வருடம் மகாராஷ்டிராவில் பிறந்த நர்லிகர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். புகழ்பெற்ற வானியலாளர் ஃபிரெட் ஹோய்ல் (Fred Hoyle)-ஐ தன் மென்டாராக ஏற்று, அவருடன் இணைந்து பணியாற்றினார். இவர்கள் உருவாக்கிய ஸ்டடி ஸ்டேட் கோட்பாடு’ (Steady State Theory), அவர்களை உலகப் புகழ் பெற வைத்தது. அதாவது, பிரபஞ்சம் பிறந்தது, வளர்ந்தது என்றில்லாமல், எப்போதும் அது ஒரே நிலைமை மற்றும் அடர்த்தியில் இருக்கிறது’ என்றனர். ஜயந்த் நர்லிகர் தலைமைப் பண்பும், தன்னிச்சை ஆய்வுகளும்! இந்தியா திரும்பிய நர்லிகர், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தில் இணைந்து, கோட்பாட்டு வானியற்பியல் குழுவை தனது தலைமையில் சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தினார். தொடர்ந்து, வானியல் மற்றும் வானியற்பியலுக்கான இன்டர் - யுனிவர்சிட்டி மையத்தின் (IUCAA - The Inter-University Centre for Astronomy and Astrophysics) நிறுவன இயக்குநரானார். நர்லிகர், தன்னிச்சையான பல ஆய்வுகளை மேற்கொண்டார். சார்பியல் கோட்பாடுகள், கருந்துளைகள், காந்தக் களங்கள், கோள்களின் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானக் கொள்கைகளில் இவர் மேற்கொண்ட ஆய்வுகள், `நேச்சர்' (Nature) உள்பட பல சிறப்பான அறிவியல் ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன. மூடநம்பிக்கைக்கு எதிராக... ஆய்வு! பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற நர்லிகர், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்பு உணர்வை சமூகம் அடைய வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதற்காக பேசியது, எழுதியதோடு நிறுத்தவில்லை அவர். ஜோதிட மூட நம்பிக்கையைத் தகர்க்க, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பகுத்தறிவு செயற்பாட்டாளரான மருத்துவர் நரேந்திர தபோல்கருடன் இணைந்து, முறையாக ஆய்வுகள் மேற்கொண்டு, முடிவுகள் வெளியிட்டு, ஜோதிடப் பொய்களை வெளிப்படுத்தினார். ஜாதகம் பொருந்தியவர்கள் எல்லாம் சூப்பராக வாழ்கிறார்களா?! நம் இந்திய திருமணங்களில், ஜாதகப் பொருத்தம் பெரும் பங்கு வகிக்கும் ஒன்று. உண்மையில், ஜாதகம் பார்த்து திருமணம் செய்துவைக்கப்படும் தம்பதிகள் அனைவரும் அந்தப் பொருத்தங்கள் உறுதிப்படுத்தும் சிறப்பான வாழ்வை வாழ்கிறார்களா என்று, நர்லிகரும் நரேந்திர தபோல்கரும் சேர்ந்து பல தம்பதிகளிடம் ஆய்வு நடத்தினர். முடிவில், ஜாதகப் பொருத்தம் உள்ள தம்பதிகள், அந்தப் பொருத்தம் இல்லாத தம்பதிகள் என இரு தரப்புமே ஒரே சதவிகிதத்தில்தான் சேர்ந்து வாழ்கின்றனர் என்று தரவுகளுடன் வெளியிட்டனர். அதாவது, கணவனும் மனைவியும் இணைந்து வாழ ஜாதகப் பொருத்தம் அவசியமில்லை எனத் தரவுகளுடன் நிரூபித்தனர். அதேபோல, திருமண முறிவு ஏற்பட்ட தம்பதிகளின் ஜாதகத்தைப் பரிசோதித்து, ஜாதகப் பொருத்தம் உள்ளவர்களும் இல்லாதவர்களும் சற்றேறக்குறைய அதே சதவிகிதத்தில்தான் திருமண முறிவு செய்து கொள்கின்றனர் என்றும் ஆதாரபூர்வமாக இவர்கள் நிறுவினார்கள். குணம், திறன், முன்னேற்றம்... ஜாதகத்தின்படி அமையாது! அடுத்தாக இந்த ஜோடி, ஒருவரின் ஜாதகத்தின் அடிப்படையில் அவரது குணம், திறன், முன்னேற்றம் அமையும்’ என்ற மூட நம்பிக்கைகளையும் உடைத்தது. இந்த ராசி, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்றாகப் படிப்பார்கள்... அதுவே இந்த ராசி, நட்சத்திரம் உடையவர்களுக்குப் படிப்பே வராது’ என்று ஜோதிடர்கள் சொல்வது உண்டு. அதை நம்பி, சிலர் அதீத தன்னம்பிக்கையில், ‘எல்லாம் நம்ம ஜாதகம் பார்த்துக்கும்’ என உரிய உழைப்பைக் கொடுக்காமல் இருப்பார்கள். சிலரோ, ‘என்ன பண்ணுறது, கட்டம் சரியில்ல...’ என்று தங்கள் முன்னேற்ற மின்மைக்கு ஜாதகத்தை சாக்குச் சொல்லி உழைப்பு, முனைப்பில் இருந்து விலகுவார்கள். `ஜாதகம் ஒருவரின் அறிவை தீர்மானிப்ப தில்லை’ என்பதை புள்ளி விவரங்களுடன் வெளிப்படுத்த, நர்லிகரும் நரேந்திர தபோல்கரும் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். அறிவார்ந்த மாணவர்கள் மற்றும் படிப்பில் சுணக்கமாக உள்ள மாணவர்கள் என 200 மாணவர்களின் ஜாதகங்கள் தொகுக்கப்பட்டு, 53 ஜோதிடர்களிடம் அவை கொடுக்கப் பட்டன. அவர்கள் ’சூப்பராக படிப்பார்கள்’, ‘சுமாராகப் படிப்பார்கள்’ என்று கணித்த ஜாதகங்கள், முரணாக இருந்தன. இவ்வாறு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தாங்கள் ஏற்படுத்தி வந்த பகுத்தறிவு விழிப்புணர்வும், பிரசாரமும் அவர்களுக்குப் பல எதிர்ப்புகளையும், அச்சுறுத்தல்களையும் பெற்றுத்தந்தன. 2013-ம் ஆண்டு அடிப்படைவாத கொடூர்களால் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். வாஸ்து நன்மை, தீமை... எந்த லாஜிக்கும் இல்லை! நர்லிகர், வாஸ்து சாஸ்திர மூட நம்பிக்கைகளுக்கும் எதிராகப் பேசினார். ‘`வாஸ்து என்பது வீட்டின் உள்கட்டமைப்பை அதன் சூழலுடன் இணைக்கும் விதிகளால் ஆனது. ஆனால், அதனால் வாழ்க்கையில் நன்மைகள் ஏற்படும், தீமைகள் விளையும் என்று சொல்லப்படுவதில் எந்த லாஜிக்கும் இல்லை’’ என்று விளக்கினார். வழி காட்டும் ஒளி! நர்லிகர், மாணவர்களுடன் தான் உரையாடும் சந்தர்ப்பங்களை மிகுந்த விருப்பத்துடன் உருவாக்கிக்கொண்டார். அவர்களின் கடிதங்கள், இ-மெயில்களுக்கு பதில் அளிப்பது, பள்ளி கண்காட்சிகளில் கலந்துகொண்டு அவர்களுடன் உரை யாடுவது, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் உரை நிகழ்த்துவது என... எதிர்கால இந்தியாவின் மீது அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அறிவியல் ஆசிரியர்கள், மாணவர்கள், பகுத்தறிவு வாதிகள் எனப் பலருக்கும் அவரது ஆராய்ச்சிகளும் கருத்துகளும்... வழி காட்டும் ஒளி! Vikatan Plus - 08 June 2025 - ``ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர் | discussion about astrology3 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெங்களூர் அணி பலமான அணிதான் ஆனால் அவர்கள் இறுதி போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிராக மட்டும் விளையாடவில்லை யாழ்கள ஒட்டு மொத்த நண்டுகளுக்கு எதிராக விளையாடுகிறார்கள்.3 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
3 points
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
திரும்பவும் மூன்று பேர் தானா. ஆனா இம்முறை, அந்தக் கிளியுடன். எல்லாம் பிரகாசமாக இருக்கே. 5 புள்ளிகளை அள்ளுறம். எல்லா நண்டும், அமைதியாகவே இருங்க!!!!2 points- ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
முதலில் ஒப்பந்தங்களில் "எழுதாத" விடயங்களை வைத்துக் கொண்டு ஒப்பந்த மீறலைக் கண்டறியும் "தங்க மலை இரகசியத்தைச் சொல்லி விட்டு, மற்றவர்களுக்கு தெனாலி கதை சொல்லுங்கள்😂. வரலாற்று நூல் என்றால் நான் மார்க்கோ போலோ எழுதிய வரலாற்றைச் சொல்லவில்லை. 1991 இல் ரஷ்யா உடைந்த கதை 2010 இல் வரலாறாக வெளி வந்திருக்கிறது (இதை 1992 இல் ராணி கொமிக்ஸ் போல யாரும் எழுதியுமிருக்கலாம், ஆனால் அதை யாரும் சீரியசான வரலாறாகக் கற்பதில்லை). நான் முன்னரே சொன்னது போல, உங்களுக்கு வாசிப்பு மிகவும் குறைவு. ஆனால், வாசிக்காத, இல்லாத விடயங்களை வைத்துக் கொண்டு பெட்டி, கடகம், பாய் என்று பின்னும் திறன் அதீதம்😎!2 points- ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
இல்லை. அப்போ இராணுவத்திடம் புலிகளை விட மேலதிகமாக இருந்தது சியாமாசெட்டி, அவ்ரோ ரக விமானங்களும், ஹெலிகாப்டர்களும், ராடார் கருவிகளும், ரன்வேக்களும், முக்கியமாக வெளிநாட்டு உள்நாட்டு இராணுவ கல்லூரிகளில் கிடைத்த பயிற்சியிம். இதில் பலதும் இனாமாக வேறு நாடுகள் கொடுத்தவை. இவை எதையும் வாங்கும் திறன் எந்த ஈழத்தமிழரிடமும் அப்போ இருந்ததில்லை. புலம்பெயர்ந்தோரே மிக சொற்பம் அவர்களும் கூட நிரந்தரமற்ற நிலையில்தான் இருந்தனர். அதே போல் பணம் இருந்திருந்தாலும், அதை மனமுவந்து கொடுத்திருந்தாலும் - நான் மேலே சொன்ன வளங்கள எதையுமே வெளியார் சந்தையில் வாங்க முடிந்திராது, அப்படி வாங்கி இருந்தாலும் அதை இலங்கக்கு கொண்டு வர முடிந்திராது, அப்படி கொண்டு வந்திருந்தாலும் அதை பாதுகாத்திருக்க முடியாது, அப்படியே பாதுகாத்து விட்டாலும் தனியே கேணல் சங்கரை மட்டும் வைத்து கொண்டு ஒரு விமான படையணிதை அமைத்திருக்க முடியாது. புலிகள் ஏன் கரும்புகளில் நம்பி இருக்கும் நிலை வந்தது என்பதற்கு பல புறச்சூழல் காரணிகளே முக்கிய பங்காற்றின. பணம்/மனம் இல்லை. புலிகள் கடைசிவரை ஒரு சமச்சீர் அற்ற நிலையில் இருந்து கொண்டே - ஒரு வலுசமநிலை தோற்றப்பட்டை உருவாக்கினார்கள். அதுதான் அவர்களின் பெரும் சாதனைகளில் ஒன்று. அதை அவர்களே நம்ப ஆரம்பித்தது வீழ்சியின் காரணிகளில் ஒன்று.2 points- ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
நீங்கள் இணைத்த எக்ஸ் தள வீடியோவைப் பார்த்தவுடன் ஒருகணம் உண்மையென்று எண்ணிவிட்டேன். ஆனால் அது வீடியோ கேம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி என்று பின்னர்த்தான் படித்து அறிந்தேன். என்றாலும் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் வீடியோ கேமின் இப்பகுதிக்கும் அதிக வேறுபாடில்லை. ஒருவேளை இதனை வைத்துத்தான் இத்தாக்குதலை அவர்கள் திட்டமிட்டிருக்கலாம். ரஸ்ஸியாவின் நீண்டதூர குண்டுவீச்சு விமானங்களின் பலத்தில் 34% வீதம் அழிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான விமானங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றரை வருடங்களாகத் திட்டமிட்டு, சிறிய ட்ரோன்களை ரஸ்ஸியாவினுள் கடத்திவந்து, அங்கிருந்தே அவற்றினை இயக்கி அழித்திருக்கிறார்கள். கில்லாடிகள்தான். புலிகளின் தாக்குதல் உத்திகளும் உக்ரேனியர்கள், பலம்பொறுந்திய ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடத்தும் தாக்குதல்களும் ஒரேமாதிரியானவை. குண்டு நிரப்பிய படகுகளால் மோதுவது, குண்டுநிரப்பிய ட்ரோன்கள் (இது புலிகளுக்குக் கிடைக்கவில்லை) கொண்டு அழிப்பது என்று தமக்குக் கிடைக்கும் வளங்களைப் பாவித்து எதிரியை திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். ரஸ்ஸியாவுக்கு விழுந்த அடியைப் பார்த்து ரஸ்ஸியர்கள் என்ன சொல்கிறார்களோ எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்தியாவில் பலர், "ஏன் ரஸ்ஸியா தனது விஸ்வரூபத்தைக் காட்டவில்லை, ஏன் புட்டின் ஐயா பொறுமை காக்கிறார்? ஏன் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையை முழுப்போராக மாற்றவில்லை? ஏன் அணுவாயுதத்தைப் பாவிக்கவில்லை?" என்று கோபம்கொண்டு கேள்விக்கு மேல் கேள்வியெழுப்பி வருகிறார்கள். விட்டால் புட்டின் ஒரு கையை பின்னால் மடித்துக்கொண்டு, மற்றைய கையினால் மட்டுமே போராடி வருகிறார் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஏனென்றால், இந்திய அமைதிப்படை அப்படித்தான் இலங்கையில் போராடியதாம்! நெல்லியடி மத்திய கல்லூரித் தாக்குதலில் பாரவூர்தியை கல்லூரிக் கட்டடத்தின் உட்பகுதிக்குள் செலுத்திவிட்டு சாரதி வெளியேறியேறி வந்துவிடவேண்டும் என்பதே ஆரம்பத்தில் இருந்த திட்டமாம். ஆனால் பாரவூர்தி உள்ளே வருவதைப் பார்த்துவிட்ட இராணுவத்தினர் அதன்மீது தாக்குதல் நடத்தவே அதனை எப்படியாவது உள்ளே செலுத்திச் செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு, சாவு வருமென்று தெரிந்துகொண்டே மில்லர் அவர்கள் தொடர்ந்து உள்ளிருந்தார் என்று அறிந்தேன். இதுபற்றித் தெரிந்தவர்கள் கூறலாம்.2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வேற browserஅ பயன்படுத்திப் பாருங்க. இல்லாட்டி, உங்கட internet historyஅ அழிச்சுப் பாருங்க. Modemத நிப்பாட்டிப் போட்டு திரும்பவும் தொடக்கியும் பாருங்க. VPN பாவிக்கிறீங்களா. அதுவும் சிலவேலை அலுப்படிக்கும். தளத்தில பிரச்சினை இல்லை. நமக்கெல்லாம் தடை இல்லாம வேலை செய்தது. செய்கிறது.2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 pointsதாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை ....அருமையான காடசி. நன்றி2 points- மத நிகழ்ச்சியில் பங்கேற்காத ராணுவ அதிகாரி பணிநீக்கம் - உயர்நீதிமன்றம் கூறியது என்ன?
கேவலமான தீர்ப்பு. இராணுவத்தினரிடம் மதச்சார்பின்மை இருக்க வேண்டும் என்பது சரி. ஆனால் ஒரு மத வழிபாட்டு நிகழ்ச்சியில் எவ்வாறு ஒருவரை வற்புறுத்த முடியும் ? ஒரு இராணுவத்தினரின் மனம் நோகக் கூடாது என்பதற்காக இன்னொரு இராணுவத்தினரை மனம் நோக வைப்பது நியாயமற்றது. மதச் சார்பின்மை என்றால் மத வழிபாடுகளை இராணுவத்திலிருந்து ஒதுக்க வேண்டும். தனிப்பட்ட ஒருசிலர் வழிபாடு செய்ய விரும்பினால் அவர்கள் குறித்த தலங்களில் வழிபடலாமே ?2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
ஒரு கால கட்டத்தில் இயக்க வேற்றுமை இல்லாமல் எல்லா புலம்பெயர் உறவுகளும் கொடுத்தார்கள் என நினக்கின்றேன். நான் சொல்ல வருவது பண பற்றாக்குறையாலும் மனமின்மையாலும் போராட்டம் தடைப்படவில்லை என்பதை மட்டுமே.2 points- ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
புலம்பெயர் நாடுகளில் இறுதிக்கட்ட போருக்கென குடும்பத்திற்கு 2000 என சேகரித்த நிதிகள் எங்கே போனது? அந்த பணம் சேகரித்த பின்னர் பெரிய எதிர்ப்பு சண்டைகள் எதுவுமே நடக்கவில்லை.2 points- UK national league football match வெற்றி பெற்ற நிலையில் அந்த அணியின் வீரர் திரு விமல் அவர்கள் TAMIL EELAM JUSTICE என்ற பாதாதையை 52 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் wembley மைதானத்தில் தூக்கிப் பிடித்தவாறு வலம் வந்தது அனைத்து பார்வையாளர்களின் கவனத்தையும
2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைய மூன்றாவது Play-off Qualifier 2 போட்டி மழை காரணமாகத் தாமதமாக ஆரம்பித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ஜொனி பெயிர்ஸ்ரோ, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், நமன் தீர் ஆகியோரின் அதிரடியான ஆட்டங்களினால் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை விரைவில் இழந்தாலும், ஜொஷ் இங்கிலிஸினதும், நெஹால் வதேராவினதும் அதிரடியான ஆட்டங்களுடனும், 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என நாலா பக்கமும் பந்தை சிதறடித்து ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்கள் எடுத்த அணித்தலைவர் ஷ்ரேயஸ் ஐயரின் மரண அடியுடனும் 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதவுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் வெல்லும் என ஒருவரும் கணிக்காததாலும், மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியதாலும், போட்டியில் இல்லாத ஏனைய அணிகளை வெல்லும் கணித்ததாலும் யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! பஞ்சாப் கிங்ஸ் அணியின் புரவலர் பிரீத்தி ஸிந்தா எல்லோருக்கும் புஷ்டியான முட்டைகளைப் பரிமாறியுள்ளார்! இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் இல்லை):2 points- எட்டாவது திரை - தெய்வீகன்
1 pointஎட்டாவது திரை - தெய்வீகன் அடைமழை பொழிவது எல்லாத் திரைகளிலும் தெரிந்தது. ஒரு சில துளிகள் கமராக்களின் கண்களில் தெறிந்து விழுந்து வீங்கிப் பின் வடிந்தன. நகரத்தின் வாகன நெரிசல் பெரும்பாலும் அத்தனை திரைகளிலும் நிறைந்திருந்தது. எனக்கருகிலிருந்த தொலைத்தொடர்பு ரேடியோ கருவண்டு போல அவ்வப்போது இரைந்து முனகியது. பாதுகாப்பு அதிகாரிகளின் குரல்கள், அந்த ரேடியோவில் விழுவதும் ஓய்வதுமாயிருந்தன. களத்திலிருந்து உத்தியோகத்தர்கள் அறிவித்த சங்கேதக் குரல் வழியான செய்திகளுக்குப் பதில் கொடுத்தேன். அதனை பதிவேட்டில் நேர விவரத்தோடு எழுதினேன். “Spring Street Security vehicle moving” கட்டுப்பாட்டு அறையிலுள்ள பெருந்திரைக்கு மேலுள்ள மணிக்கூட்டில் சரியாக மாலை ஐந்து மணி காண்பித்தது. முன்னைய இரவுப் பணியின் சோம்பலை பகல் தூக்கம் ஓரளவு துடைத்தெடுத்திருந்தாலும், மிதமான அசதி உடம்பில் இன்னும் மீதமிருந்தது. கட்டுப்பாட்டு அறைக்குள் வருவதற்குச் சற்று முன்னர், தயாரித்த சூடான தேனீர், ஆவியை எந்தியபடி மேசையில் வீற்றிருந்து உற்சாகமளித்தது. மெல்பேர்ன் நகரின் கிரிக்கெட் மைதானத்திற்கு முன்னாலுள்ள அத்தனை கமராக்களும் காட்சிகளின் துரிதத்தை எனது கண்களுக்குள் வார்த்தபடியிருந்தன. கமரா 1 – ஜொலிமென்ற் ரயில் நிலைய வாயில் கமரா 2 – புல்மென் ஹோட்டல் வாயில் கமரா 3 - ஸ்பிறிங்க வீதி (தெற்கு நுழைவாயில்) கமரா 4 – திறைசேரிப்பூங்கா நுழைவாயில் கமரா 5 – திறைசேரிப்பூங்கா விருந்தினர் மேடை கமரா 6 – திறைசேரிப்பூங்கா நிகழ்வரங்கு கமரா 7 – ட்ராம் தரிப்பிடம் - இலக்கம் 174 மெல்பேர்ன் பெருநகரின் பாதுகாப்பிற்காகப் பல்லாயிரக்கணக்கான கமராக்கள், ஒவ்வொரு மூலையிலும் பொருத்தப்பட்டிருந்தாலும், நகர் மையத்திலுள்ள ‘அக்மி’ மண்டபத்தின் கட்டுப்பாட்டு அறையில் எட்டுக் கமராக்களின் வழியாக, கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியிலுள்ள பகுதியின் வெளிக்கள நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான மெல்பேர்ன் நகர் கவுன்ஸிலின் பிரதான உத்தியோகத்தர்களில் ஒருவனாக நான் பணியாற்றி வந்தேன். என் முன்னாலிருக்கும் இந்த எண்-திரைகள் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தின் சுற்றாடலில் பொருத்தப்பட்டிருக்கும் கமராக்களின் வழியான காட்சிகளை நேரடியாகத் தருபவை. நகரின் மத்திய பிரதான தெருக்கள், அங்காடிகளுடன் ஒப்பிடும்போது நெரிசல் மிக்கவை இல்லாவிட்டாலும், இந்தக் கமராக்கள் ஒவ்வொரு நொடியும் புதிய காட்சிகளை திரைக்கு அனுப்பிக்கொண்டிருப்பவை. மெல்பேர்ன் எனும் பெரு நகரின் ஒரு துண்டை, இந்தக் கமராக்களின் வழியாகக் காவல் காக்கும் நான், இருளுக்குள் ஒளி மேயும் பசு. வாழ்வின் அசதியான காலங்கள் என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்த நாட்களில் இந்த வேலையில் இணைந்தேன். பதினைந்து வருடங்களை நிறைவுசெய்துவிட்டேன். திரைகளுடன் நானும் என்னுடன் இத்திரைகளும் பேசுகின்ற முடிவுறாப் பயணமாய் இந்தப் பணி ஆண்டுக் கணக்கில் விரிந்து பரந்தது. பின் அந்திப்பொழுதில் நகர் கலையும் மணித்துளிகளை நரைவிழுந்த இந்தத் திரைகள் ஆக்ரோஷமாகக் காண்பிக்கும். இந்தக் கமராக்களின் கண்களையும் அவற்றின் களைப்பையும்கூட நான் அறிவேன். இந்தப் பெருந்திரையின் முன்னால் இரவெனும் இனிய புலர்வுக்காகத் தினமும் காத்திருப்பேன். தவிர்க்கப்பட்டத் தெருக்களில் தரித்து நிற்கும் வாகனங்களை அகற்றும்படி களத்தில் பணிசெய்யும் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்வேன். காட்சிகளில் ஏதாவது புதிராய் நிகழ்ந்தால், அவற்றை எழுதிவைப்பேன். அவற்றின் தன்மை குறித்து மேலதிகாரிகளிடம் தகவல் சொல்வேன். இரவுச் சோதனைகளை மேற்கொள்ளும் களப்பணியாளர்களின் தகவல்களை எழுதிவைப்பேன். களத்திலுள்ள பணியாளர்கள் தொடர்ச்சியாக ரேடியோ மூலம் எனக்கு அனுப்புகின்ற தகவல்களைக் குறிப்பதும், தேவையேற்படும்போது பதிலளிப்பதும், அவர்களைக் குறிப்பிட்ட இடங்களுக்கு நகர்த்தும் அறிவுறுத்தல்களை அனுப்புவதுமாக - ஒரு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கொண்டு அலைவரிசைகளில் சஞ்சரிக்கும் அரூப அடையாளம் நான். கட்டடக் காடுகளுக்கு இடையில் பூத்திருக்கும் இந்தப் பெருநகரின் ஒவ்வொரு இரவும் புதிய இரவே. அவை முன்னைய இரவோடு ஒத்திருப்பதில்லை. இந்த இருளின் பெரு நடனம் மந்தகாசமானது. அடர் இருளில் ஒளித்திவலைகளாய் இடர்படும் மனிதர்களின் அழகும் வித்தியாசமானது. திரையில் காணும் அவர்களது அவசரமற்ற அசைவுகளையும் நிதானத்தையும் வியப்பேன். இருளுக்கு அவர்கள் அழிக்கும் மதிப்பையும் இருளால் அவர்கள் அடையும் அச்சத்தையும் கண்டு ரசிப்பேன். திறைசேரிப்பூங்காவில் ஓங்கி நிற்கும் ஒலிவ் மரங்களின் அசைவும், வீதி விளக்குகளின் அசையாமையும், நேரம் தவறாத ரயில் - ட்ராம் வண்டிகள் என நகரில் இடர்படும் வாகனங்கள் என்று சகல காட்சிகளும் என்னைச் சலிப்பின்றித் தாலாட்டுபவை. திரை ஒளியில் பூக்கின்ற என் விழிகள் இரண்டும் ஒவ்வொரு இரவையும் பத்திரமாய் ஏந்தும். பகல் பொழுதில் தூங்கும். மனிதர்கள் எனக்கு எப்போதும் திரையில் மாத்திரம் தோன்றும் உறவுடையவர்கள். என் தனிமையான வாழ்வுக்குத் தூரமானவர்கள். வீட்டிலிருந்து காரில் கிளம்பும்போதும் மனிதர்கள் கண்ணாடிக்கு வெளியில் தெரிபவர்கள். அவர்களுக்கான எனது பெறுமதி அவர்களது உருவங்கள் மாத்திரமே. இரவுப் பணியை ஆரம்பிக்கும்போது மாத்திரம், பகல்பணியை முடித்து வெளியேறும் ஹரால்ட்டைச் சந்திப்பேன். அவனைப் பார்க்கும்போது எனக்கு விநோதமாக இருக்கும். நான் திரைகளில் பார்க்கும் மனிதர்களுக்கு சற்று விநோதமானவனாக, பெரிய மூக்கும் வீங்கிய காதுகளும் உடையவன் அவன். அவனது கண்கள் மிகவும் அகன்றவை. அவன் அருகில் நிற்கும்போது சிலவேளைகளில் அச்சமாகவுமிருக்கும். இவன் ஏன் கமராக்களில் தெரிபவர்களைப்போல இயல்பானவனாக இல்லை என்றெண்ணுவதுண்டு. வாரத்தில் ஆறு நாட்கள் இரவுப்பணி செய்யும் ஒருவனுக்கும் இந்த மானிட ஆராய்ச்சி தேவையற்றது என்று என்னை நானே சமாதானம் செய்துகொள்வேன். ஆனால், எனது இருளில் இதழ் விரிக்கும் ஏழு கமராக்களும் எனக்கு ஏழு வகையான உலகைப் படைக்க வல்லவை. இந்த அறை எனக்கு ஒரு கருந்தடாகம் போன்றது. என் முன்னால் மலர்ந்திருப்பவை ஏழு கரு மலர்கள். ஒரு கமரா மாத்திரம் கரிய திரை. அது இயங்குவதில்லையா, அல்லது அதன் கண்களின் முன்னால் ஏதாவது நிரந்தர மறைப்பா? கடந்த பதினைந்து வருடங்களில் எத்தனையோ தடவைகள் எனது மேலாளரிடம் கேட்டுவிட்டேன். கவலைப்படவேண்டியதில்லை என்பதுதான் பதிலாகக் கிடைத்தது. அந்த எட்டம் திரை என் இரவுக்கு அப்பாலுள்ள ஏதோ மர்மமானது என்று விட்டுவிட்டேன். 2017 ஆம் ஆண்டு ஜூன் ஏழாம் திகதி. எனது பதினைந்து வருட நிறைவில் - தொடர் இரவுப் பணியைப் பாராட்டி – கட்டாயப் பணி ஓய்வு அறிவிக்கப்பட்டது. அது எனது உடல்நலத்தைக் கருத்திற்கொண்ட மேலிடத்தின் முடிவு. பணி செய்யும்போது வழங்கப்பட்ட அதேயளவு பணம் ஓய்வூதியமாக அறிவிக்கப்பட்டது. எனது பணியின் நேர்த்தியும் நேர்மையும் மெச்சப்பட்டது. ஆனால் என் உலகினால் அதனை ஓய்வாக ஏற்கமுடியவில்லை. நான் ஒரு புதிய இருளுக்குப் புலம்பெயர்ந்தேன். அங்கேயும் விழித்திருந்தேன். புத்தகங்கள் படித்து எனக்குள் புதிய திரைகளைத் திறந்தேன். என் முன்னால் கமராக்களற்ற இரவு எனக்கு அச்சத்தைத் தந்தது. நிகரில் நான் கண்ட இரவின் கருமை எரிச்சலாயிருந்தது. என் வீட்டின் ஜன்னலின் வழி தெரிந்த புதிய இருளை நாள்தோறும் காணப் பயின்றேன். இரவெல்லாம் அதில் புதிய வாசம் கிளர்ந்தது. என் படுக்கை அறையைத் தழுவிச் சரிந்திருக்கும் தைல மரக்கிளைகளின் அசைவுகளை கட்டிலில் உட்கார்ந்து பார்த்தேன். அவை திறைசேரிப்பூங்காவிலுள்ள கமராக்களில் தெரிந்த சிறிய கிளைகளைவிட மிகப்பெரியவை. விசித்திரமான ஒலிகளை எழுப்பக்கூடியவை. போகப்போக, பின் அந்திப்பொழுதில் தூக்கம்விட்டு எழுந்தபோது, நான் பல நாட்களாகக் காணாத ஜொலிமென்ற் ரயிலின் நினைவுகளால் தொந்தரவானேன். ஸ்பிறிங்க வீதியில் நேரம் தவறாது ஊர்ந்து வரும் ட்ராம் வண்டியின் முகத்தைக் காணாது துயருறத் தொடங்கினேன். சிறிய கை - கால்களை வீசியெறிந்து நகரிலோடும் மனிதர்களைக் காணாது எனது நினைவுகள் கொந்தளிக்கத் தொடங்கின.. அனைத்தும் என் முன்னால் திரண்ட காட்சிகளாய் கூடி நில்லாதது பெரும் களைப்பை ஏற்படுத்தியது. இரவு எனக்குள் கோபங்களால் கூடுகட்டத்தொடங்கியது. இரவின் வாசத்தை நுகர்வதற்காக, நடுநிசி தாண்டிய பிறகு வீட்டிலிருந்து இறங்கி வெளி வீதியில் கருமை அடர்ந்த பாதையில் நடைபோனேன். காலடியில் மிதிபட்ட சருகுகளின் சத்தம் முதலில் அச்சமூட்டின. மரங்களின் அசைவும் அதில் வளைந்து வீழ்ந்த காற்றும் அரியண்டமாயிருந்தது. இரவுக்குருவியொன்று தீடீரென்று வெட்டி வெட்டிக் கத்திக்கொண்டு தலைக்கு மேல் பறந்துபோனது. உடல் நடுங்கிப்போனேன். தூரத்தில அடர்ந்த வெளிச்சமும் மின்கம்ப ஒளிவிளக்குகளும் தெரிந்தன. ஜீரணிக்க மறுத்த ஒளிப்பந்துகள் பெருந்திரளாய் நெஞ்சை அழுத்தின. மீண்டும் வீட்டை நோக்கி நடந்தேன். வழி காட்டும் ஏழு திசைகளுமற்ற ஒரு வெட்டவெளியில் நான் நின்றுகொண்டிருப்பதாக உணர்ந்தேன். அன்றிரவு கண்ட அடர் வெளிச்சம் வெளியே செல்வதற்கு பயங்கர அச்சத்தைத் தந்தது. அந்த நினைவிலிருந்து மீண்ட ஒருவாரத்தின் பிறகு, பின்னிரவுப்பொழுதில் மீண்டும் நடைபோனபோது அவளைக் கண்டேன். எனது வீட்டுக்கு அடுத்த தெருவிலிருந்து பிரியும் சிறு ஒழுங்கையிலுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தின் வெளி விறாந்தையில் தற்செயலாக அவள் எதிர்ப்பட்டாள். அவள் மெல்லிய வெளிச்சத்தில் ஒல்லியான உடலை அசைத்து அசைத்து தன் நினைவை நெட்டுருக்கும் இசையோடு நடனமாடிக்கொண்டிருந்தாள். அவளை எனக்குக் காண்பித்த சிறு வெளிச்சம் அந்த வீட்டில் எங்கிருந்து ஒளிர்ந்தது என்று தெரியவில்லை. ஆனால், அது அவளுக்கென அளவாக உருவான ஒளியின் ஒத்தடம். நான் பணியிலிருந்து ஓய்வடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், ஐந்தாவது கமராவில் ஒரு நாளிரவு திறைசேரி விருந்தினர் மேடையில் கண்ட அழகிய பெண்ணின் முகத்தை ஒத்திருந்தது அவள் சாயல். அன்று அவள் அந்த விருந்தினர் மேடையில் தனியாக இருந்தாள். மங்கிய ஒளியில் அங்குமிங்கும் மெதுவாக நடந்தாள். நீண்ட யோசனையில் ஆழ்ந்தவளாகத் தெரிந்தாள். எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது. அன்றிரவு நான் வேறு எந்தத் திரையையும் பார்க்காமல், அவள் மீது லயித்திருந்தேன். ஒரேயொரு திரையில் மாத்திரம் ஒளிர்ந்துகொண்டிருந்த அவளது உருவம், அதுவரை நானறியாத புது ரேகைபோல் ஒருகணம் எனக்குள் பதிந்தது. திடீரென அவள் மறைந்துபோனாள். என் கண்கள் அவசர அவசரமாக மிகுதி அனைத்துத் திரைகளைப் பாய்ந்து பாய்ந்து தேடின. எங்கேயும் காணவில்லை. எட்டாவது கருந்திரைக்குள் வீழ்ந்துவிட்டாளா? எப்படிப் பார்ப்பது? இதயம் வேகமாக அடித்தது. அவள் மறைந்துவிட்டாள். அங்கு மறைந்தவள் இங்கெப்படித் தோன்றினாள். வீட்டிற்கு மிக அருகில் சென்றேன். அவள் தன்னை மறந்து தொடர்ந்து நடனமாடியபடியே இருந்தாள். ஒளி விரல் தீண்டிய இருளின் இதழ்கள்போல நாணிச் சரிந்தாள். பின் எழுந்தாள். அவள் அசைவில் இசை அசைந்தது. மெல்லிய விரல்கள் சூடிய கைகளைத் தலைக்கு மேல் அசைத்து அசைத்து, அபிநயத்தோடு ஆடினாள். மெல்ல மெல்ல அவ்விசை எனக்குள்ளும் கேட்கத் தொடங்கியது. கரகரப்பில்லாமல் தொடர்ச்சியாக இசைக்கும் மெல்லிய ஒலி. இரவின் கருமையை ஒளியெனும் சிறு வாளால் ஓசையின்றிச் சீவுகின்ற அசாத்தியமான ஒலி. ரேடியோக்களின் இரைச்சலினால் துருப்பிடித்திருந்த எனது செவித்திரைகளை ஊடுருவிய அவ்வொலி, பாறைகளில் வழுக்கி விழுகின்ற சிறு நதியாய் எனக்குள் நிறைந்து குளிர்ந்தது. திடீரென அங்கு ஒரு இருள் வீழ்ந்தது. எதையும் காணமுடியவில்லை. மேலே அழகிய கருஞ்சுடராய் அசைந்துகொண்டிருந்தவளைக் காணவில்லை. அவளின் பின்னால் நாணத்தோடு ஒளிர்ந்துகொண்டிருந்த மெல்லிய வெளிச்சம் அணைந்துவிட்டது. இசையும் அஸ்தமித்துவிட்டது. என்னைச் சூழ இருட்டிருந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த இருட்டு எங்கேயும் வியாபித்திருந்தது. அவள் எங்கே? அவளை இரண்டாவது தடவையும் தவறவிட்டுவிட்டேனா? மறுபடியும் எட்டாம் திரைக்குள் அவள் வீழ்ந்துவிட்டாளா? எனக்காக ஒரு கணம் - ஒரேயொரு கணம் - இவ்வுலகு ஒரு துளி வெளிச்சம் தாராதா? அண்ணாந்து பார்த்தபோது, அருகிலிருந்த கம்பத்தில் ஒரு கமரா என்னையே உற்றுநோக்கியபடியிருந்தது. "கலைமுகம்” இதழின் 2025 - ஜனவரி - மார்ச் பதிப்பில் இச் சிறுகதை வெளியானது. https://www.theivigan.co/post/10017?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR57gaY84h7_qVGGUphN678Y6GsJ__YhKIGRLn4xgNEJTGXD-yZ4PyPX31Ck4w_aem_mctltdFu3dl1rkZqRBtwng1 point- ரப் பாடகர் வேடன்
1 pointஅறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவ்வளவு காலம் இழுத்துவிட்டு இறுதி போட்டியை ஏன் அவசரமாக முடிக்கின்றார்கள்? இறுதி போட்டியை ஒரு போட்டியாக இல்லாமல் மூன்றாகவோ ஐந்தாகவோ வைக்கலாமே. 😁1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣............... இதுவரை கொஞ்சமாக அதர்மத்தின் பாதையில் போய் நண்டுக் குழாமாக இருந்தவர்கள் எல்லோருக்கும் திருந்துவதற்கு கிடைத்திருக்கும் கடைசி சந்தர்ப்பம் இது. எங்களில் மூன்று பேருக்காவது புள்ளிகள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்............. கிளி நண்டைத் தூக்கிக் கொண்டு போய் கறிச்சட்டிக்குள் போட்டும் விடும்..................🤣.1 point- ஆதரவாளரை சந்திப்புக்கு அழைத்து விட்டு படம் பார்க்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்!
ஆதரவாளரை சந்திப்புக்கு அழைத்து விட்டு படம் பார்க்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்! http://seithy.com/siteadmin/upload/suthan-020625-seithy.jpg தேசிய மக்கள் சக்தியும் ஏனைய கட்சிகளை போன்றுதான் செயற்படுவதை காணக் கூடியதாக உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் பொன்.சுதன் தெரிவித்துள்ளார். நேற்று சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி அவற் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “இது தொடர்பாக நான் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் பலருடன்,அமைச்சர் சந்திரசேகரனுடன் கலந்துரையாடினேன். நேற்று முன்தினம் பிற்பகல் 02.00 அமைச்சர் தன்னை சந்திப்பதற்கான அனுமதியை எனக்கு வழங்கியிருந்தார். தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு வாருங்கள்,அங்கு நாம் மேற்கொண்டு கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். பிற்பகல் 02.00 மணிக்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு சென்ற நான் மாலை 06.00 கடந்தும் அமைச்சரை சந்திப்பதற்காக அங்கேயே காத்திருந்தேன் 02.00 மணிக்கு வருமாறு கூறிய அமைச்சர் அலுவலகத்தில் இல்லாததால் அவரது உதவியாளர்களிடம் பல முறை தெரிவித்தும் சந்திப்பதற்கு தான் வருவதாக கடசிவரை அவர் கூறவில்லை. பின்பு அவர் இன்னொரு கலந்துரையாடலுக்கு சென்றுவிட்டதாக அழைப்பு வந்தது. ஆனால் அமைச்சர் எங்கு சென்றார் என்பதனை தேடி அறிந்த போது யாழ் தியேட்டர் ஒன்றில் அந்த நேரத்தில் அமைச்சர் படம் பார்த்துக் கொண்டிருந்தார்” என குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=334084&category=TamilNews&language=tamil1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளை செவ்வாய் (03 ஜூன்) எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 77) செவ்வாய் 03 ஜூன் 2:00 pm GMT அஹமதாபாத் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB எதிர் PBKS மூன்று பேர் மாத்திரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் 2025 சம்பியன்ஸ் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி சம்பியன்ஸ் எனக் கணிக்கவில்லை. போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! நாளைய இறுதிப் போட்டியில் ஐந்து புள்ளிகள் பெறுபவர்கள் யார்?1 point- “ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
1 pointபகிர்விற்கு நன்றி அண்ணா. சிந்திக்க வேண்டிய கருத்துகள் அண்ணை. இதில் பாலியல் மூலமாக தொற்றக் கூடிய நோய்கள் சம்பந்தமான அறிவூட்டல் முக்கியம் என கருதுகிறேன்.1 point- இந்தி எதிர்ப்பும், இளையராஜாவும் - தமிழ்த் திரையிசையின் மறுமலர்ச்சி நாயகன் ஆனது எப்படி?
பட மூலாதாரம்,ILAIYARAAJA_OFFL/INSTAGRAM கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஐம்பதாண்டுகளில், தமிழ்த் திரையிசையில் இளையராஜா தொட்டிருக்கும் உயரங்கள் இதுவரை யாரும் தொடாத ஒன்று. தமிழ்த் திரையுலகில் அவர் ஏன் ஒரு மகத்தான சாதனையாளர்? தமிழ்த் திரையுலகில் எம்.எஸ். விஸ்வநாதனின் தீவிரம் குறைய ஆரம்பித்த 1970களில், இந்தித் திரைப்படப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்த காலகட்டம். 'தம் மரோ தம்' (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா), "ப்யார் திவானா ஹோதா ஹை" (கடி பதங்), 'சுரா லியா ஹை தும்னே ஜோ தில் கோ' (யாதோங் கி பாரத்) போன்ற பாடல்களின் மூலம் ஆர்.டி. பர்மன் தமிழ் மனங்களைக் கொள்ளை கொள்ள ஆரம்பித்திருந்த நேரம். தமிழ்த் திரையுலகிலும் பல மறக்க முடியாத பாடல்கள் வெளிவந்துகொண்டிருந்தாலும், சட்டென ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக ஏதும் இல்லை. இந்த நிலையில்தான் 1976ஆம் ஆண்டில் அன்னக்கிளி திரைப்படம் வெளிவந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள், தமிழ்நாட்டின் திரைப்பட ரசனையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. ரசிகர்களை கட்டிப்போட்ட 'அன்னக்கிளி' அந்த காலகட்டத்தில் இந்த மாற்றம் எப்படியானதாக இருந்தது என்பதை, ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய 'தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்' நூலில், இளையராஜா பற்றிய ஒரு கட்டுரையில், பேராசிரியர் ஒருவர் நினைவுகூர்ந்திருந்தார். "நாங்கள் அப்போது தீவிர தமிழ் உணர்வோடு இருந்தோம். இந்தி எதிர்ப்புணர்வு கொண்டவர்கள். ஆனால், பாடல்கள் கேட்பதென்றால் இந்திப் பாடல்கள்தாம். தஞ்சாவூரில் நாங்கள் இருந்த பகுதியில் என் வயதைச் சேர்ந்தவர்கள் வழக்கமாகக் கூடும் டீக்கடையில் இந்திப் பாடல்களே போடுவார்கள். நாங்கள் அவற்றின் ரசிகர்கள். திடீரென ஒரு நாள் அலைபோல, 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' என்ற பாடல் வந்தது. அன்னக்கிளி படம் வந்து ஒரு சில நாட்கள் ஓடிய பின் எடுத்துவிட்டார்கள். ஆனால், பாடல்கள் பிரபலமானதையொட்டி, அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் திரையிட்டார்கள். படம் நூறு நாட்களைத் தாண்டியது. இப்பாடல்கள் வந்த பிறகு ஒரே நாளில் இந்திப் பாடல்களைவிட்டு, தமிழ்ப் பாடல்களைக் கேட்கும் பழக்கத்துக்கு மாறிப்போனோம், அந்த அளவுக்கு அப்பாடல்கள் மாற்றத்தைக் கொண்டுவந்தன" என அந்தப் பேராசிரியர் கூறியிருந்தார். பட மூலாதாரம்,THEODORE BASKARAN/FACEBOOK படக்குறிப்பு, தியோடர் பாஸ்கரன், திரைப்பட ஆய்வாளர் அன்னக்கிளி படத்தைப் பொறுத்தவரை, 70களுக்கே உரிய வழக்கமான கதையைக் கொண்ட திரைப்படம் அது. ஆனால், அந்தப் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தை வேறு தளத்தில் நிறுத்தின. "எதிர்பார்க்கக்கூடிய சம்பவங்களைக் கொண்ட வழக்கமான இந்தத் திரைப்படத்தில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கதாக இருந்தன. ஒன்று, இந்தப் படம் முழுக்க முழுக்க தெங்குமரகடா என்ற அழகிய கிராமத்தில் படமாக்கப்பட்டிருந்தது. செட் ஏதும் போடப்படாமல், இருந்ததால் அந்த நிலப்பரப்பை அப்படியே திரையில் கொண்டுவந்தது இந்தப் படம். இரண்டாவதாக, இளையராஜா என்ற இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியது. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே' என்ற பாடல் வெளிவந்த சில வாரங்களிலேயே தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெங்கும் எதிரொலிக்க ஆரம்பித்தது. இந்தப் படத்தின் பாடல்கள், அடுத்த சில ஆண்டுகளுக்கு மிகப் பிரபலமாக இருந்தன," என தன்னுடைய The Eye of the Serpent நூலில் குறிப்பிடுகிறார் பிரபல திரைப்பட ஆய்வாளரான தியோடர் பாஸ்கரன். இந்தப் படம் இளையராஜாவுக்கு மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகுக்கே ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழ்த் திரையிசையின் அசைக்க முடியாத நாயகனாக உருவெடுத்தார் இளையராஜா. ஒரு இசையமைப்பாளரின் அன்னக்கிளிக்குக் கிடைத்த வெற்றியால், இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இளையராஜாவை நோக்கிப் படையெடுக்க, அடுத்த சில ஆண்டுகளுக்கு நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துக் குவித்தார் இளையராஜா. 1979ஆம் ஆண்டில் மட்டும் 29 படங்கள் அவரது இசையில் வெளிவந்தன. மௌனத்தை ரசிக்க வைத்த ராஜா இந்த காலகட்டத்தில் இளையராஜாவின் இசை இருந்தால் போதும், படம் வெற்றிப் படமாகிவிடும் என்ற நிலை உருவாகியது. 70களிலும் 80களிலும் பிரபலமாக இருந்த இயக்குனர் மகேந்திரன் இதற்கு சில உதாரணங்களை தன்னுடைய 'சினிமாவும் நானும்' கட்டுரையில் சொல்கிறார். பட மூலாதாரம்,TWITTER படக்குறிப்பு, "இளையராஜாவின் உன்னத இசைப் புலமை உதவியிராவிட்டால், எனது படங்களின் மௌனத்தை நீங்கள் ரசித்திருக்கவே முடியாது" - இயக்குநர் மகேந்திரன் அதாவது, ரஜினிகாந்த் நடித்த 'முள்ளும் மலரும்' படத்துக்கு பின்னணி இசையைச் சேர்ப்பதற்கு முன்பாக, படத்தை பார்த்த தயாரிப்பாளர்கள் மகேந்திரனைத் திட்டித் தீர்த்துவிட்டனராம். இதற்குப் பிறகு இளையராஜாவின் பின்னணி இசை சேர்க்கப்பட்டு, படம் ரிலீஸானதும் மாபெரும் வெற்றிபெற்றது. இதற்குப் பிறகு, தொகையைக் குறிப்பிடாமல் காசோலையை எழுதி மகேந்திரனிடம் கொடுத்தார்களாம் தயாரிப்பாளர்கள். படத்தின் வெற்றிக்குக் காரணமே இளையராஜாதான் என்கிறார் மகேந்திரன். அதேபோல, 'உதிரிப்பூக்கள்' படத்துக்கு அவரது இசை கிடைத்திருக்காவிட்டால் அது எதிரிப்பூக்களாகியிருக்கும் என்கிறார் அவர். "முள்ளும் மலரும் தொடங்கி எனது படங்களை எல்லாம் நீங்கள் மனதார உணர்ந்து, நுகர்ந்து பாராட்டுவதற்கு உண்மையான காரணம் இளையராஜாதான். என் மனம் எண்ணியதையெல்லாம் பார்வையாளனிடம் இசை அலைகளாகக் கொண்டுபோய் சேர்த்தவர் இளையராஜா. அவரது உன்னத இசைப் புலமை உதவியிராவிட்டால், எனது படங்களின் மௌனத்தை நீங்கள் ரசித்திருக்கவே முடியாது" என்கிறார் மகேந்திரன். ஐந்து ஆண்டுகளில் 100 படங்கள் ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசையமைத்தாலும், இதில் பெரும்பாலான பாடல்கள் மனதைக் கவரும் வகையில் இருந்தன. படத்திற்கு ஒரு பாடலாவது எல்லோரும் முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது. 1975ல் அறிமுகமான இளையராஜா, 1980லேயே 100 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். பாலுமகேந்திராவின் மூடுபனிதான் அவரது நூறாவது படம். 1983ல் 200வதுபடமான ஆயிரம் நிலவே வா வெளியானது. 1989 - 90ல் ஐநூறு படங்களுக்கு இசையமைத்து முடித்திருந்தார் இளையராஜா. 2016ல் அவரது 1000வது படமாக தாரை தப்பட்டை படம் வெளியாது. இந்தப் படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது, அறிமுகமாகி நாற்பதாண்டுகளுக்குப் பிறகும் அவரது இசையில் நீடித்துவரும் உன்னதத்தைக் காட்டுவதாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இளையராஜாவின் 1000வது படமான தாரை தப்பட்டை படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது படம் ஓடும் தியேட்டருக்கு வெளியே நின்றபடியே அவரது பின்னணி இசையின் மூலம், "இதோ இங்கே அந்தக் கதாபாத்திரம் வருகிறது... அந்த. இருவர் இப்போது சந்திக்கிறார்கள்... இந்த இசையின்போது அந்த கேரக்டரின் மெளனம் திரையில் வருகிறது..." என்று நம்மை உணர வைக்கும் அசாத்திய இசை ஆளுமை ராஜாவினுடையது. இளையராஜாவுக்கு முன்னும் பின்னும் எத்தனையோ இசைமேதைகள் திரையுலகில் கோலோச்சினர். ஆனால், பின்னணி இசையில் இளையராஜாவுக்கு மட்டுமே ஒரு தனித்துவம் உள்ளது. அது அவருக்கே உரித்தான சிம்மாசனம். அவரைத் தவிர வேறு யாரும் அதில் அமர முடியாது எனக் குறிப்பிடுகிறார் மகேந்திரன். இசையில் மறுமலர்ச்சி திரையிசையின் மறுமலர்ச்சி நாயகனாக அவர் அறியப்படுவதற்கு மற்றுமொரு காரணம் "அரண்மனைகளிலும் அக்ரஹாரத்திலும் இருந்த தமிழ் சினிமா அவர் காலத்தில் கிராமத்தை நோக்கிக் கிளம்பியதுதான். கண்ணுக்கெட்டும் தூரம்வரை நிலப்பரப்பைக் காட்டும் கேமராக்களும் கலர் ஃபிலிம்களும் அதிகப் பயன்பாட்டுக்கு வந்தபோது அதற்குரிய இசையை இளையராஜா வைத்திருந்தார்" என்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி. பட மூலாதாரம்,YUGHABHARATHI/INSTAGRAM படக்குறிப்பு, திரையிசையின் மறுமலர்ச்சி நாயகனாக இளையராஜா அறியப்படுவதாகக் கூறுகிறார் பாடலாசிரியர் யுகபாரதி இது குறித்து பிபிசியிடம் பேசிய யுகபாரதி, தமிழ் மீது அவருக்கு இருந்த புலமை அதற்கு முக்கியமான காரணம் என்கிறார் அவர். "தமிழின் பிரபல இசையமைப்பாளர்களில் பலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இல்லை. ஆனால் இளையராஜா தமிழின் வளமான சந்தக் கட்டுமானத்தை உள்வாங்கியவர். தமிழ் நிலப்பரப்போடு நேரடிப் பரிச்சயம் கொண்டவர். இதனால்தான் இளையராஜாவின் இசை தமிழரின் இசையாக மலர்ந்தது" என்று கூறும் யுக பாரதி, எளிய சந்தங்களையும் மக்களின் வழக்கில் உள்ள வார்த்தைகளையும் பாடல்களில் தந்தவர் இளையராஜா என்கிறார். "60களின் துவக்கத்தில் வெளிவந்த குலமகள் ராதை திரைப்படத்தில், உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லிக் குற்றமில்லை என்று ஒரு பாடல் இருக்கிறது. அதே போன்ற பாடல், இளையராஜாவின் இசையில் வரும்போது 'உன் குத்தமா, என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல' என்று மாறிவிடுகிறது. அதேபோல, அருணகிரி நாதரின் 'ஏறுமயிலே ஏறி விளையாடும் முகம் ஒன்று, ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று' என்ற சந்தம், இளையராஜாவின் இசையில் 'மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு' என்று மாறிவிடுகிறது. அதாவது, செவ்வியல் சந்தங்களை மக்கள் வழக்கில் உள்ள சந்தங்களாக மாற்றினார் இளையராஜா." என்கிறார் யுகபாரதி இளையராஜா சிம்ஃபொனியின் பின்னணி என்ன? 5 கேள்விகளும் பதில்களும் 1400 படங்கள், 7000 பாடல்கள்: அன்னக்கிளி முதல் சிம்ஃபொனி வரை இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் இளையராஜா இசையமைத்த பாடல்கள் மீதான காப்புரிமை யாருக்கு? சட்டம் சொல்வது என்ன? காற்றில் வரும் கீதமே: பவதாரிணி பாடிய மறக்க முடியாத 10 பாடல்கள் இதே கருத்தை எதிரொலிக்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம். "இளையராஜா பொதுவாக மெலடி, காதல், சோகப் பாடல்களுக்காக சுட்டிக்காட்டவும் பாராட்டவும் படுகிறார். ஆனால், அவரிடம் இயல்பாகவே ஒரு நாட்டுப்புற மரபும் எளிமையும் உண்டு. இளையராஜா தமிழ் சினிமாவுக்கு வந்த பிறகுதான் மாற்றம் என்பது இசையில் மட்டுமில்லாமல், பாடல்களிலும் தென்பட ஆரம்பித்தது. எளிமையான வார்த்தைகள், நேரடித்தன்மை கொண்ட பாடல்கள் இவரது வருகைக்கு பின் தமிழ் சினிமாவில் அதிகம் தென்பட ஆரம்பித்தது. இளையராஜாவும் அவரது சகோதரர் பாவலர் வரதராஜனும் இடதுசாரி மேடைகளில் எளிய, பிரசாரத்தன்மை கொண்ட பாடல்களைப் பாடியவர்கள். இளையராஜா திரைப்படங்களுக்கு இசையமைக்கத் துவங்கியபோது அந்த அம்சம் வெளிப்பட ஆரம்பித்தது. அப்படி நேரடித் தன்மை கொண்ட பல பாடல்களை இளையராஜாவின் இசையில் எழுதியவர் அவரது சகோதரரான கங்கை அமரன் என்பதும் இதில் குறிப்பிடத்தக்க அம்சம்" என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். பட மூலாதாரம்,STALINRAJANGAM/INSTAGRAM படக்குறிப்பு, இளையராஜாவிடம் இயல்பாகவே ஒரு நாட்டுப்புற மரபும் எளிமையும் உண்டு என்கிறார், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் மொழிப் பார்வை இளையராஜாவைப் பொறுத்தவரை, மொழிசார்ந்த பார்வையும் கூர்மையாக இருந்ததால் தமிழ் வார்த்தைகளைச் சிதைக்காத அளவில் அவரால் இசையமைக்க முடியும். பாபநாசம் சிவனுக்குப் பிறகு இளையராஜாவுக்குத்தான் சந்தங்களுடன் செய்யுள் இயற்றும் ஆற்றல் இருந்ததாகக் கருதுகிறேன் என்கிறார் யுகபாரதி. மேலும் ஒரு ராகத்தை எப்படியெல்லாம் பாடலாக மாற்ற முடியும் என்பதில் அவர் யாரும் அடைய முடியாத உயரங்களை அடைந்திருந்தார் என்கிறார் யுகபாரதி. இது தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் நினைவுகூர்கிறார் அவர். "ஒரு படத்திற்காக பாடல் எழுத வேண்டியிருந்தது. மூன்று ட்யூன்கள் அடங்கிய கேஸட்டை என்னிடம் கொடுத்து, மூன்றாவது ட்யூனுக்கு பாட்டெழுதும்படி சொல்லப்பட்டது. நானும் எழுதிவிட்டேன். அடுத்த நாள் இளையராஜாவை பாடலுடன் போய்ப் பார்த்தேன். அவர் பாடல் ஒலிப்பதிவுக்காக சேர்ந்திசைக் குழுவுடன் தயாராக இருந்தார். பிறகு பாடலை வாசித்துப் பார்த்தவர், அது ட்யூனுடன் பொருந்தவில்லையே என்றார். எனக்குக் குழப்பமாகிவிட்டது. பிறகுதான் நேர்ந்த குழப்பம் புரிந்தது. அதாவது, கேஸட்டை என்னிடம் கொடுத்தவர், இரண்டாவது ட்யூனுக்கு பாட்டெழுத வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக மூன்றாவது ட்யூனுக்கு எழுத வேண்டும் என்று சொல்லிவிட்டார். இதனை இளையராஜாவிடம் விளக்கிவிட்டு, இரண்டாவது ட்யூனுக்கு நாளை எழுதிவருவதாகச் சொன்னேன். ஆனால், இளையராஜா என்னைக் கையமர்த்தினார். பிறகு உள்ளே சென்று தனது இசைக் குழுவினரிடம் சில மாற்றங்களைச் சொன்னார். பிறகு நான் எழுதிவந்த பாடலையே, இரண்டாவது ட்யூனில் பொருத்தினார். அதாவது அவரைப் பொறுத்தவரை எல்லா இசையும் ஒன்றுதான். கேட்பவர்களுக்குத்தான் அது வேறு,வேறு. இந்த சம்பவத்தை நேரில் பார்க்காவிட்டால் யாராலும் நம்பவே முடியாது" என்கிறார் யுகபாரதி. அழகர்சாமியின் குதிரை படத்தில் இடம்பெற்ற "பூவைக் கேளு, காத்தைக் கேளு" என்ற பாடல்தான் அது. திரையிசையைத் தவிர்த்து, இளையராஜா மேற்கொண்ட, தனியான ஆல்பங்கள், சிம்பனி உள்ளிட்ட பிற முயற்சிகளும் கவனிக்கத்தக்கவைதான். ஆனால், கடந்த அரை நூற்றாண்டாக தமிழ் பேசும் ஒவ்வொருவரது காதலிலும் சோகத்திலும் பிரிவிலும் மகிழ்ச்சியிலும் கேட்க சில இளையராஜா பாடல்களாவது உண்டு. இது வேறு யாரும் நிகழ்த்தாத சாதனை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgeg84x8q15o1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நக்கல் நல்லாருக்கு. இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக..... உண்மைதானே. தொலைக்காட்சிக்காக ஆடப்படும் ஜபில்.1 point- ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
மில்லர் தாக்குதல் நடத்தியது 87 இல் அல்லவா? அந்த நேரம் மேற்கு நாடுகளிலேயே robotics வளர்ந்திருக்கவில்லை. அமெரிக்காவின் முதலாவது ஆளில்லா விமானம் (Predator) 1995 வரை பாவனைக்கு வரவில்லை. நிலைமை இப்படி இருக்க புலிகள் போன்ற அமைப்புகளுக்கு இவையெல்லாம் பணம் இருந்திருந்தால் கிடைத்திருக்கும் என்பது நம்பக் கூடியதாக இல்லை.1 point- ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
மேலோட்டமாக வாசித்ததிலிருந்து, நேரடியான சோதனைகள் (Onsite Inspections) பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்மதிக் கண்காணிப்புக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று உள்ளது. அதற்காக விமானங்களை வெளியே நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது பற்றித் தெளிவாக எதுவும் இல்லை. விடயம் அதுவல்ல. நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஒப்பந்தம் இருந்தாலும் ரஸ்யா தனது விமானங்களை வெளியில் நிறுத்த ஒப்பந்தம் காரணமில்லை. இந்த ஒப்பந்தத்தால்தான் ரஸ்யா பாதிக்கப்பட்டது என்பது போல் நீங்கள் எழுதிய தகவல் தவறானது. நீங்கள் மீண்டும் தாக்குதலுக்குத் தொடர்பற்ற இந்த அறிக்கையை இழுத்து எழுதினால் அதற்குப் பதில் தரப்போவதில்லை. அதுமட்டுமில்லை, இந்த ஒப்பந்தம் இன்னும் சில மாதங்களில் காலாவதி ஆகிறது.1 point- ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
தவறான தகவல். இவ்வாறான ஒப்பந்தம் இருக்குமோ தெரியவில்லை. அப்படி இருந்தாலும் ரஸ்யா அதனை நடைமுறைப் படுத்துவதற்காக விமானங்களை வெளியே வைத்திருக்காது. இதற்கு வேறு முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது, வல்லரசு நாடு தனது அணுவாயுதங்களைக் கொண்டு செல்லக் கூடிய விமானங்கள் எப்போது தயார் நிலையில் உள்ளன என்பதை எதிரிக்குக் காட்ட வேண்டும். இவற்றின் அசைவுகள் எதிரி நாடுகளினால் செய்மதி மூலம் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். அடுத்தது, வெளியில் நிற்கும் விமானங்கள் விரைவாகக் கிளம்பி தாக்குதலை மேற்கொள்ளலாம். ஒரு விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று அறிந்தால் விரைவாக இவற்றை நகர்த்தவும் முடியும். Tu-160, Tu-95 போன்ற பாரிய விமானங்களை பங்கருக்குள் வைப்பதில் செலவும் அதிகம். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே இவ் விமானங்கள் வெளியில் வைக்கப்பட்டிருந்தனவே தவிர ஒப்பந்தத்தால் அல்ல.1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
சிறிய அளவிலான தந்திரோபாய அணு ஆயுத பாவிப்பு கூட இருக்கும் என பல மேற்கில் இருக்கும் புட்டின் ஆதரவு ஆட்கள் எழுதுகிறார்கள். அதேபோல் இஸ்தான்புல் பேச்சுகளும் இன்று தொடருமாம்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குண்டக்க மண்டக்க கேள்விகளுக்கு கிடைக்கும் புள்ளிகள் நிலைகளை மாற்றலாம்! @வீரப் பையன்26 ஐ இந்தப் பக்கம் காணோம்.1 point- ‘சமர்க்கள நாயகன்’ பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு
‘சமர்க்கள நாயகன்’ பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு May 21, 2025 தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக, “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர்” என்று தேசியத்தலைவர் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர். ஒப்பற்ற இராணுவத் தலைமைத்துவம், கடுமையான உழைப்பு என்பவற்றின் ஊடாக விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவை ஒரு மரபுவழி இராணுவமாக மாற்றிய பெருமைக்குரியவர். வெற்றி நாயகனாய் வலம் வந்த அந்த தளபதி வித்தாகி மூன்று ஆண்டுகள் மறைந்து விட்டாலும் அவருடன் நீண்டகாலமாக பயணித்த அந்த நாட்களின் நினைவுகள் என்றைக்குமே அழியாதவை. ஒவ்வொரு கணமும் வந்து போகும் அவரைப்பற்றிய நினைவுகள், தொடர் துன்பங்களால் துவண்டுபோன உணர்வுகளின் அடிநாளத்தை உரசிச் செல்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் அழகிய கரையோரக் கிராமங்களில் ஒன்றான கொக்குத்தொடுவாய்தான் வீரத்தளபதி பால்ராஜ் அவர்களை எமக்குக் கொடுத்தது. ஒருபக்கம் பெருங்கடல் மற்றைய பக்கம் சிறுகடல் சூழ்ந்திருக்க, வயல் வெளிகள் தென்னைத்தோப்புகள் அதனைத் தொடர்ந்து காடு என அழகான அமைதியான அந்தக் கிராமத்தில் கந்தையா கண்ணகி தம்பதியினருக்கு 1964 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27 ம் திகதி (தமிழீழ மாவீரர் தினம் கொண்டாடும் நாள்) பிறந்த இவர் ஆரம்பகல்வியை கொக்குத்தொடுவாயிலும் பின்னர் புல்மோட்டையிலும் படித்தார். அவரது வாழ்வியல் சூழல் இளவயது முதலே வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவராக ஆக்கியது. அதனால் அப்பகுதி காடுகள், பிரதேசங்களை முழுமையாக தெரிந்து வைத்திருந்தார். வேட்டையாடுவதற்கு தேவையான அடிப்படை விடயங்களான அவதானிப்பு, கடுமையான முயற்சி, கடினங்களை தாங்கும் தன்மை, அலைந்து திரிதல், மிருகங்களின் தன்மைகளுக்கேற்ப தந்திரோபாய ரீதியல் வேட்டையாடல், பொறுமை, மிருகங்களின் தடையங்களை பின்தொடர்ந்து செல்லுதல் போன்ற பண்புகள் சிறுவயது முதல் இயற்கையாகவே அவருக்கு அமைந்திருந்தன. அது மட்டுமல்லாமல் வேட்டைக்கு சென்றால் ஒருபோதும் வேட்டையில்லாமல் திரும்பமாட்டார் என்னுமளவிற்கு ஓர்மம் மிக்க குணாதியசம் கொண்டவர். இவர் பிறந்து வளர்ந்த மணலாறு என அழைக்கப்படும் சிலோன் தியட்டர், மண்கிண்டிமலை முந்திரைக்குளம், கென்பாம், டொலர்பாம் கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் போன்ற தொழில் வாய்ப்புள்ள, வளம் மிக்க விளைநிலங்களை கொண்ட பகுதிகளில் இருந்த தமிழ்மக்களை விரட்டியடித்து, திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்குடன் இலங்கை அரசானது செயற்பட்டது. இதனால் அவரது குடும்பம் உட்பட அங்கு வாழ்ந்த மக்களும் அவரது உறவினர்கள் பலரும் வாழ்விடங்கள் சொத்துக்களை இழந்து ஓரிரவில் அகதிகளாக்கப்பட்டனர். இச்சம்பவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக ஆயுதப் போராட்டத்தினுடாகவே எமது பிரதேசங்களை பாதுகாக்க முடியும் என்று முடிவெடுத்தார். இவரது போக்கை உணர்ந்த தந்தையார் “நீ போராட தீர்மானித்தால் பிரபாகரன் இயக்கத்தில் இணைந்து போராடு, அந்த இயக்கம் தான் சரியான வழியில் போராடும்” என சொல்லி வழிகாட்டியதை பால்ராஜ் அவர்கள் நினைவுகூருவார். அவர் 1983ம் ஆண்டு விடுதலைப் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டார். கொக்குத் தொடுவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட அவருக்கு மணலாறு, தென்னமரவடி, புல்மோட்டை உள்ளடங்கலாக அப்பிரதேசங்கள் முழுதும் பரிச்சயமாக இருந்தது. ஆரம்பத்தில் உள்ளுர் பயிற்சியுடன் வழிகாட்டியாகத் தனது பணியை செய்து கொண்டிருந்த காலத்தில் 1984ம் ஆண்டு ஒதியமலையில் உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்தபோது இலங்கை இராணுவத்தின் பதுங்கித் தாக்குதலில் லெப் காண்டிபன் உட்பட 09 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதில் தோள்பட்டையில் காயமடைந்து சிகிச்சைக்காக இந்தியா சென்றார். அதன் பின்னர் இந்தியா-09 பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். மேஜர் பசீலன் அவர்களுடன்: நாடு திரும்பிய அவர் வன்னி அணியுடன் இணைந்து அணிக்கான சமையல் பணிகளை செய்து வந்தார். இவரது பல்வேறுபட்ட திறமைகளை அறிந்த முல்லைத்தீவு மாவட்ட தளபதியாகவிருந்த பசீலன் அவர்கள் முல்லைத்தீவு அணியுடன் இணைந்து பணியாற்ற அழைத்துச் சென்றார். அவரது செயற்பாடுகளினால் சில நாட்களிலேயே பசீலன் அவர்களின் நம்பிக்கைக்குரியவரானார். முந்திரிகைக்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல், கிளிநொச்சி திருநகர் முறியடிப்புத் தாக்குதல், என பல தாக்குதல்களில் பசீலன் அண்ணையுடன் பங்கெடுத்திருந்தார். அது மட்டுமன்றி இந்திய இராணுவத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் கோப்பாயில் நடந்த சமரில் ஆர்.பி.ஜி யால் டாங்கி ஒன்றை தகர்த்து பன்முக ஆற்றலை வெளிப்படுத்தினார். 1987 ம் ஆண்டு முல்லைத்தீவு முகாமிலிருந்து நந்திக்கடற்கரை வெளியினூடாக, தண்ணீரூற்று நகரப்பகுதியை கைப்பற்றும் நோக்குடன் நகர்ந்த இந்தியப்படைகளை வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டிருந்த போது பசீலன் அண்ணை வீரச்சாவடைந்தார். தளபதியை இழந்த நிலையில் உடனடியாக அக்களமுனை கட்டளையை பொறுப்பெடுத்த பால்ராஜ் அவர்கள், தனக்கேயுரிய தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தி தாக்குதலைத் தொடர்ந்து வழிநடத்தினார். பல சண்டைகளில் தனது சண்டைத்திறனை வெளிப்படுத்தினாலும் இச்சண்டையே அவரது தனித்துவமான தலைமைத்துவ ஆற்றலையும் சண்டைத்திறனையும் தலைவருக்கு வெளிக்காட்டியது. தளபதி பசீலன் அண்ணையின் இழப்பினால் துயரமும் கோபமும் அடைந்த தளபதியும் போராளிகளும், பசீலன் அண்ணைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தாக்குதல் ஒன்றை செய்யும் நோக்குடன் ஓய்வின்றி திரிந்தனர். அவர்களின் முயற்சி வீணாகவில்லை. பழம் நழுவி பாலில் விழுவதைப்போல பசீலன் அண்ணையின் இழப்பிற்கு காரணமான இருந்த இந்திய அணியே தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால் ரோந்தில் சென்று கொண்டிருந்த போது இவர்களின் தாக்குதல் எல்லைக்குள் வந்தது. கோபத்துடன் இருந்த போராளிகள் அனைவரும் ஆவேசமாக தாக்குதலை மேற்கொண்டு வந்த படையை நிர்மூலமாக்கினர். அத்துடன் உதவிக்கு வரும் அணியையும் அழிக்க வேண்டும் என பொருத்தமான இடத்தில் நிலையெடுத்துக் காத்திருந்தனர். எதிர்பார்த்ததைப் போலவே உதவிக்கு வந்த அணியையும் அழித்து மொத்தமாக இருபந்தைத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தை கொன்று இழந்த தளபதிக்கு அஞ்சலியைச் செலுத்தினார்கள். பசீலன் அண்ணை “எல்லோரையும் மிரளவைக்கும் துணிச்சல்காரன், சிறந்த திட்டமிடலான பல தாக்குதல் உத்திகளையும் அவரிடம் அறிந்து கொண்டேன் அவருடனிருந்த நாட்கள் பசுமையானவை” என பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் கூறுவார். தலைவருடன்: தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பால்ராஜ் அவர்கள் இந்தியப்படையினர் மணலாற்றுக் காட்டை முற்றுகையிட்டு தலைவரை குறிவைத்துப் பல இராணுவ நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருந்தபோது தலைவரைப் பாதுகாக்கும் நடவடிக்கையிலும், தலைவரைச் சந்திக்க வருபவர்களை முற்றுகைக்குள்ளால் நகர்த்தும் பணிகளையும் செய்து வந்தார். இச்சமயத்தில், தலைவர் காட்டிலிருப்பது பாதுகாப்பில்லை எனவே வெளியேறி வேறு நாட்டுக்கு செல்லுமாறு சில விடுதலை விரும்பிகள் கேட்டபோது “என்ர இனத்தின்ற கௌரவத்தையும் என்னையும் விற்கவேண்டாம் எனக்கு என்ன நடந்தாலும் அது இங்கேயே நடக்கட்டும்; பிரபாகரன் தப்பி ஓடியதாக இருக்கக்கூடாது; போராடி வென்றான் அல்லது வீரமரணமடைந்தான் என்றுதான் வரலாற்றில் இருக்க வேண்டும்” என்ற செய்தியை சொல்லும்படி தலைவர் ஆக்ரோசமாக கூறியதை போராளிகளுடன் பகிர்ந்து கொள்வார். வன்னிப்பிராந்திய தளபதியாக: முல்லைத்தீவு, நெடுங்கேணி பாடசாலையில் அமைந்திருந்த இந்தியப்படையினர் முகாம் மீதான தாக்குதல் நடவடிக்கையில் தளபதி லெப்.கேணல் நவம் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இதன் பின்னர் பால்ராஜ் அவர்களை அழைத்த தலைவர் “இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை மேலும் பரவலாக்கும் போது தான் கூடுதலாக இராணுவத்தை மணலாற்றை நோக்கி ஒன்று சேர்க்கமுடியாது. அது தான் மணலாற்றை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள்ளிருந்து தளர்த்துவதற்கான வழிமுறை” எனவே முல்லைத்தீவில் மட்டுமல்ல வன்னியெங்கும் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் எனக்கூறி, வன்னி பெருநிலப்பரப்பின் தளபதியாக நியமித்தார். பால்ராஜ் அவர்கள் பசீலன் அண்ணையிடம் கற்றுக்கொண்ட சண்டை அனுபவம் மற்றும் தலைவருடன் இருந்த காலத்தில் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட தலைமைத்துவம், சண்டைத் தீர்மானங்கள், நிர்வாகம், அரசியல், போன்றன அவரின் தலைமைத்துவத்தை மேலும் செம்மைப்படுத்துவதற்கு வாய்ப்பளித்தது. பொறுப்பை ஏற்ற தளபதி பால்ராஜ் அவர்கள் முதலில் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்குடன், அம்மாவட்டங்களில் இருந்த போராளிகளை சந்தித்து தலைவரின் எண்ணத்துடன் புதிய தாக்குதல் உத்திகளையும் அறிவுரைகளையும் வழங்குவதற்காக நடைப்பயணம் ஒன்றை மேற்கோண்டார். ஆனாலும் வெறும் நடைப்பயணம் என்ற நோக்கைத் தாண்டி சென்ற இடங்களிலெல்லாம் தென்படும் இராணுவத்தின் மீது உடனடி தாக்குதல்களை மேற்கொண்டார். இத்தாக்குதல்கள் போராளிகளுக்கு மேலும் தெம்பைக் கொடுத்தது. பால்ராஜ் அவர்களை தனது போர் ஆசானாக கொண்ட தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் இந்திய இராணுவத்துக்கு எதிரான தாக்குதல் பற்றி தெரிவிக்கும் போது: “மணலாற்றில் தலைவரிடத்தில் இருந்து வந்து மூன்று மாவட்டங்களிற்கும் நடைப்பயணம் செய்து போராளிகளைச் சந்தித்து ஊக்கப்படுத்தி, தாக்குதல் திட்டங்களையும் கொடுத்து, தலைவரின் கட்டளைகளையும் வழங்கி ஒரு பம்பரம் போல் சுழன்று திரிந்தார். “அவர் நடந்து போய் வருகின்றாரா! வாகனத்தில் போய் வருகின்றாரா! என்று எங்களுக்குள் பேசுவது வழமை. அந்தளவுக்குப் பயணத்தில் வேகம், வேலை முடிந்ததும் உடனடியாகவே அடுத்த பயணம், அவரின் முகத்தில் சோர்வோ களைப்போ தெரிவதில்லை. “படையினர் மீதான தாக்குதல் என்று வரும் போது வேவு பார்த்து – திட்டமிட்டுத் தாக்குவது வழமை. எதிரிப்படை எதிர்ப்படும் போது உடனடியாகவே திட்டம் தீட்டித் தாக்குதல்களை நடாத்துவது கடினம். ஆனால் இது கடினமானது என்பதால் தவிர்க்கப்பட வேண்டியது என்று பால்ராஜ் நினைப்பதில்லை. எதிரி தென்பட்டால் உடனடியாகத் தாக்கு என்பது அவரின் கருத்து,” என்று கூறியுள்ளார். இந்திய அதிரடிப்படைகளின் பதுங்கித் தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்: தளபதி பால்ராஜ் அவர்களைப் பொறுத்தவரையில் சண்டைகளை சவாலாக எடுத்துச் செய்வது இயல்பு. மணலாற்றை இந்திய இராணுவம் இறுக்கமான முற்றுகைக்குள் வைத்திருந்த காலப்பகுதியில் முக்கிய பயணம் ஒன்றை மேற்கொண்டு நெடுங்கேணி பழம்பாசி காட்டுப்பகுதியில் சிறு அணியுடன் சென்று கொண்டிருந்தார். நகர வேண்டிய காட்டுப்பாதையில் இருந்த தடயங்களை வைத்து இந்தியப்படையின் விசேட கொமாண்டோக்களின் தடயம் என்பதை ஊகித்துக் கொண்டார். நாங்கள் செல்ல வேண்டிய பாதையில் ஏதோ ஒரு இடத்தில் எதிரி நிலையெடுத்திருப்பான் என்பதை புரிந்து கொண்ட தளபதி பயணத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தாக்குதலை மேற்கொள்பவனுக்கெதிராக தாக்குதலை மேற்கொள்வோம் என முடிவெடுத்தார். எதிரியின் பதுங்கித்தாக்குதலை எதிர்கொள்ளக்கூடிய வகையில் உடனடித்திட்டம் ஒன்றை வகுத்தார். அதன்படி அணிகளை இரண்டாக பிரித்து, முன்னே லெப்.கேணல் நவநீதன் தலைமையில் ஒரு அணியும் குறிப்பிட்ட இடைவெளியில் மறுஅணியும் நகர வேண்டும். எதிரி எந்தப்பக்கத்திலிருந்தும் தாக்குதலை மேற்கொள்ளலாம். எனவே எதிரி தாக்குதலை மேற்கொண்டால் முன்னால் செல்லும் அணி தாக்குதலை எதிர்கொள்ள மறு அணி பக்கவாட்டால் காட்டுக்குள் இறங்கி, வளைத்து பின்பக்கத்தால் தாக்க வேண்டும் என்பதை விளக்கிவிட்டு, எதிரியின் தாக்குதலை எதிர்பார்த்துக் கொண்டு அவதானமாகவும் மெதுவாகவும் நகரத் தொடங்கினார்கள். திடீரென, இயல்புக்கு மாறாக இருந்த பற்றைகள் மரங்ககளிற்கிடையில் எதிரி நிலையெடுத்திருப்பதை லெப்.கேணல் நவநீதன் திடீரென்று நின்று அவதானித்ததை குறிப்புணர்ந்த தளபதி மறுஅணியை பக்கவாட்டால் வளைக்குமாறு சைகை காட்ட, நவநீதன் தனக்கு அருகே இருந்த இராணுவத்தை சுட்டுக்கொண்டு வேகமாக எதிரிக்குள் நுழைந்து தாக்குதலை தொடர, மறு அணியும் பக்கவாட்டால் வளைத்து பின்பக்கமாக தாக்குதலை செய்தனர். எதிரி சுதாகரிப்பதற்குள் முழு இராணுவத்தையும் அவர்கள் நிலையெடுத்திருந்த இடங்களிலேயே கொன்று மயிர்கூச்செறியும் தாக்குதலை நடாத்தி முடித்தனர். இந்திய இராணுவத்தின் பதுங்கித்தாக்குதலை முறியடித்த சண்டையானது பால்ராஜ் அவர்களினது துணிவு, போர் உத்தி, சண்டையிடும் திறனை வெளிப்படுத்திய முக்கியமான சண்டைகளில் ஒன்று. குறிப்பாக இந்திய இராணுவத்தை அதிர்ச்சி, வியப்புக்குள்ளாக்கிய சண்டையாகும். ஏனெனில் பதுங்கித்தாக்குதலை மேற்கொள்ளும் போது நகரும் பாதை, எதிராளிகளின் ஆயுதபலம், ஆட்கள் தொகை போன்ற தகவல்களின் அடிப்படையில் பதுங்கித்தாக்குதல் திட்டமிடப்படும். பின்னர் தாக்குதலிற்கான கொலைவலயத்தை உருவாக்கி, பொருத்தமான ஆயுதங்களுடன் உருமறைத்து, நிலையெடுத்து தாக்குதலை மேற்கொள்வதுதான் தாக்குதலிற்கான அடிப்படை உத்தி. அத்துடன் உலகத்தின் நான்காவது வலிமையான இராணுவம் தனது சிறப்புப்படைகளை வைத்து திட்டமிடும் பதுங்கித்தாக்குதலை சாதாரண விடயமாக எடுத்து விட முடியாது. பல பதுங்கித் தாக்குதல்களை வெற்றிகரமாக செய்த அனுபவம் மிக்க பால்ராஜ் அவர்கள் அதிலிருக்கும் ஆபத்தை உணர்ந்து அப்பாதையைத் தவிர்த்து வேறுபாதையால் சென்று இருக்கக்கூடிய வாய்ப்பிருந்தது. அப்படியிருந்தும் இந்தசந்தர்ப்பத்தில் பதுங்கித்தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை செய்வோம் என்று (அவருடைய மொழியில் இன்டைக்கு ரென்டில ஒன்டு பாப்பம் அவனா? நானா? எண்டு) தீர்க்கமாகவும் தற்துணிவாகவும் முடிவெடுத்து அப்பதுங்கித் தாக்குதலுக்கான முறியடிப்புத் தாக்குதலை எதிர்கொண்டு, வென்று காட்டி தனக்கென்று ஒரு தனிமுத்திரை பதித்தார். இத்தாக்குதல் நடவடிக்கை விடுதலைப்புலிகள் மீது இந்திய இராணுவத்திற்கு மேலும் அச்சத்தை கொடுத்ததுடன் போராளிகளுக்கு மேலதிக தெம்பையும் உத்வேகத்தையும் கொடுத்தது. இது போன்ற பல தாக்குதல் நடவடிக்கைகள் பால்ராஜ் அவர்களை சிறந்த தளபதியாக தனித்துவமாக அடையாளம் காட்டின. இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின்னர், வன்னியின் இராணுவம், அரசியல், அபிவிருத்தி போன்ற எல்லா பணிகளையும் ஒருங்கிணைத்தார். இந்திய இராணுவ காலத்தில் தங்களுக்கு உதவி செய்த வீடுகளுக்கெல்லாம் சென்றதுடன் அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து இயன்றளவு அவர்களிற்கு உதவிகள் செய்தார். மக்களின் பிரச்சனைகள் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை அறிந்து உதவி செய்தார். அந்தளவிற்கு மக்களை நேசித்த தளபதி அவர். கொக்காவில் முகாம் வலிந்ததாக்குதல்:- இலங்கை இராணுவத்துடனான ஈழப்போர்-02, 1990 ம் ஆண்டு மத்தியில் தொடங்கியது. முதலில் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அம்முகாமின் ஒரு பகுதி வீழ்ந்தாலும் சண்டையை தொடர்ந்து நடாத்துவதிலுள்ள பாதக நிலையை உணர்ந்து உடனடியாக சண்டையிலிருந்து பின்வாங்கினர். பின்னர் கிளிநொச்சி படைமுகாம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் முயற்சியும் கைகூடவில்லை. தொடர்ந்து முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. இந்த முகாம்கள் அழிக்கப்படாவிட்டால் வன்னி பெருநிலப்பரப்பின் மேலாதிக்கம் விடுதலைப்புலிகளிடம் இல்லாமல் போவது மட்டுமல்லாமல் மக்களும் பாரிய சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி நேரிடும். அத்துடன் ஏற்கனவே மூன்று முகாம் தாக்குதல்களும் வெற்றியளிக்காத நிலையில் இந்த முகாமை எப்படியும் கைப்பற்றியே தீரவேண்டும் என்ற உறுதியான முடிவுடன் கொக்காவில் முகாமைத் கைப்பற்றுவதற்காக தாக்குதலை ஆரம்பித்தார். முதல் நாள் கடுமையான சண்டை, சில பகுதிகள் கைப்பற்றப்பட்டது அதேவேளை துணைத்தளபதியாகவிருந்த தளபதி தீபன் அவர்களும் வேறு சில தளபதிகளும் காயமடைந்திருந்தனர். கடுமையான சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. நிலைமையினை உணர்ந்த பால்ராஜ் அவர்கள் ஏற்கனவே மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு முகாம்களை கைப்பற்றமுடியவில்லை, இதிலும் தோல்விகண்டால் போராளிகளின் உளவுரண் பாதிப்படையலாம். அதுமட்டுமன்றி இராணுவத்தின் உளவுரண் அதிகரிக்கலாம். அத்தகைய வாய்ப்பை வழங்கக்கூடாது என்ற உத்வேகத்துடன் போராடினார். கொக்காவில் முகாமை எப்படியாவது கைப்பற்றியே தீர வேண்டும் என்ற தீர்மானமான முடிவிலிருந்தார். தளபதி தீபன் அவர்கள் காயமடைந்ததுடன் களமுனைக்கே சென்று அணிகளை மீள் ஒழுங்குபடுத்தி, கட்டளைகளை வழங்கிக் கொண்டு தானும் ஒரு பக்கமாக இறங்கி சண்டையில் ஈடுபட்டார். பால்ராஜ் அவர்களும் இறங்கிச் சண்டையிடுகின்றார் என்றவுடன் போராளிகள் மேலும் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொள்ள, சில மணிகளில் முகாம் முற்றாக அழிக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் முதன்முதலாக கைப்பற்றி அழிக்கப்பட்ட முகாம் தாக்குதலாக அது பதிவாகின்றது. மாங்குளம் முகாம் வலிந்ததாக்குதல்: இதனைத் தொடர்ந்து மாங்குளம் முகாமை மீள தாக்கியழிக்க வேண்டும் என்று நோக்குடன் களப்பணிகளை முடுக்கிவிட்டார். ஏற்கனவே தாக்குதலை மேற்கொண்டு பின்வாங்கிய முகாம் என்பதால் அடுத்த முயற்சி தோல்வியடையக்கூடாது என்ற முடிவுடன் தாக்குதல் திட்டம் தயாரிக்கப்படுகின்றது. அம்முகாமின் இரு முனைகளில் தாக்குதலை நடாத்தி எதிரியை பலவீனப்படுத்தி கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு முகாமை கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகின்றது. பசீலன் எறிகணை தாக்குதலுடன் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலின் முகாமைச் சுற்றியிருந்த காவலரண்கள் முதலில் வீழ்ச்சியடைந்தன. அதன் பின்னர் கரும்புலித் தாக்குதலை கரும்புலி லெப்.கேணல் போர்க் மேற்கொள்ள, காவலரண்களையும் மினிமுகாம்களையும் உடைத்துக் கொண்டு முன்னேறிய அணிகள் பிரதான முகாமிற்கு அருகிலிருந்த ‘வானூர்தி’ இறங்குதளத்திற்கு அருகில் பலமான எதிர்த்தாக்குதலுக்கு முகம்கொடுத்தன. ஏனெனில் வானூர்தி தளத்தை தாம் இழந்தால் மேலதிக உதவியை எடுக்க முடியாமல் அழிந்துவிடுவோம் என்ற நிலைப்பாட்டில் இராணுவம் மூர்க்கத்தனமாக மோதியது. அதேவேளை முகாமின் தென்பகுதி வயல் வெளியால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் இழப்பின் காரணமாக பின்வாங்கப்படுகின்றது. அகோர விமானத்தாக்குதல்களிற்கு மத்தியிலும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. இழப்புகளின் அளவும் கணிசமாக உயர்ந்து கொண்டிருந்தது. நிலைமைகளை அறித்த தலைவர் விரைவாக முகாமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு அறிவுறுத்தினார். சண்டையின் வியூகத்தை மாற்ற நினைத்த தளபதி, துணைத்தளபதி தீபன் அவர்களை கட்டளைமையத்தில் சண்டையை ஒழுங்குபடுத்தும்படி விட்டு விட்டு, வானூர்தித் தளத்தில் சண்டையிடும் எதிரியை சுற்றி வளைத்து தாக்கியழிக்க வேண்டும் என முடிவெடுத்தார். லெப்.கேணல் நவநீதன் தலைமையில் சிறப்பு அணியொன்றை ஒழுங்குபடுத்திக் கொண்டு சென்றார். பகல் வேளையாக இருந்த போதிலும் பொருத்தமான இடத்தில் தாக்குதலை மேற்கொண்டு வானூர்தித் தளத்தை கைப்பற்றினார். வானூர்தி தளம் கைப்பற்றப்பட்டவுடன் தமது தோல்வியை உணர்ந்த எஞ்சியிருந்த இராணுவத்தினர் பின்வாங்கி வவுனியாவில் அமைந்திருந்த இராணுவ முகாம் நோக்கி தற்பாதுகாப்புத் தாக்குதலை மேற்கொண்டு கொண்டு ஓடத்தொடங்கினர். அவர்களும் ஆங்காங்கே கொல்லப்பட்டனர். இச்சமரில் பெருந் தொகையான இராணுவத்தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குறிப்பாக 50 கலிபர் துப்பாக்கி முதன்முதலில் இத்தாக்குதலின் போது கைப்பற்றப்பட்டது. சாள்ஸ் அன்ரனி படையணியின் தலைமைத்தளபதியாக: இரண்டாம் கட்ட ஈழப்போரில் இவரது தாக்குதல் வெற்றிகள் இராணுவ ரீதியில் பரிமாண வளர்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்ததுடன் போராளிகளின் உளவுரன், மனோதிடத்தை வளர்த்து சிங்களப்படையை கதிகலங்க வைத்தது. அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இராணுவத்தை ஒர் மரபுவழி இராணுவமாக வளர்த்தெடுக்க தீர்மானித்த தலைவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது மரபுவழிப்படையணியான சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையை 1991 ம் ஆண்டில் உருவாக்கினார். சண்டைகளின் தன்மைகளிற்கேற்ப புதிய புதிய உத்திகளை வகுக்கும் பண்பு, சண்டையிட்டுக்கொண்டே தாக்குதலை தலைமை தாங்கும் தலைமைத்துவப்பண்பு, தாக்குதலின் போது எல்லா களச்சூழல்களையும் தனக்கு சாதகமாக மாற்றும் திறமை, சிறந்த வேவு ஆற்றல், திட்டமிடல், நிர்வாகம் போன்றன அடிப்படை ஆற்றல்களைக் கொண்ட பால்ராஜ் அவர்களை சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதியாக்கினார். துணிவு, தந்திரம், கடும்பயிற்சி போன்றவற்றை தாரக மந்திரமாக கொண்டு தலைவரின் எதிர்பார்ப்பிற்கமைவாகவும், ஆலோசனைக்கமைவாகவும் வலிமை மிகுந்த படையணியாக உருவாக்க தலைவரது சிந்தனைகளையும் தனது போர் அனுபவங்களையும் போராளிகளுடன் பகிர்ந்து, சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியை ஒரு வலிமை மிகுந்த படையணியாக உருவாக்கினார். மரபுவழிப்படையணியாக உருவாக்கிய அப்படையணியிடம் இருந்த இலகு மற்றும் கனரக ஆயுதங்களை மட்டும் வைத்தே பல வெற்றிகரமான தாக்குதல்களையும் புதிய உத்திகளுடன் கூடிய மூலோபாயத் தாக்குதல்களையும் செய்து காட்டினார். குறிப்பாக வன்னி விக்கிரம எதிர்தாக்குதலில் 50 கலிபர் துப்பாக்கியை பயன்படுத்தி உலங்குவானூர்தி அழிக்கப்பட்டது. 1991 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பினால் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதல் நடவடிக்கையான ஆ.க.வெ தாக்குதல் நடவடிக்கையில் கிளிநொச்சி உப்பளப்பக்கத்தால் தாக்குதலை வழிநடத்தும் பொறுப்பை ஏற்று வெற்றிகரமாக செய்து முடித்தார். பின்னர் மணலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மின்னல் எதிர்ச்சமர், அளம்பில் ஒப்பிறேசன் 7 பவர் எதிர்ச்சமர், கொக்குத்தொடுவாயில் இருந்து முன்னேறிய இராணுவத்தை தாக்கி பின்வாங்க வைத்ததுமல்லாமல் முதன்முதலில் ஆர்.சி.எல் கைப்பற்றிய சமர் போன்ற பல சமர்களை வெற்றிகரமாக நடாத்தினார். மூலோபாயத் தாக்குதல்கள்: தலைவர், தளபதியிடம் சண்டைகள் பற்றி ஆலோசித்துக்கொண்டிருக்கும் போது “இப்படியே ஒவ்வொரு காவலரணாக மட்டும் தாக்கியழித்துக் கொண்டிருந்தால் எப்படி நாம் இராணுவத்தை அப்புறப்படுத்த முடியும். பாரியளவில் இராணுவத்தை தாக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும்,” எனத் தெரிவித்தார். இதனைப் புரிந்து கொண்ட தளபதி கிளிநொச்சி, தட்டுவன்கொட்டியில் இருந்த இராணுவ காவலரண்களை வேவு பார்த்தார். இராணுவத்தின் பாதுகாப்பு நிலைகளை விரைவாக தாக்குவதற்கான புதிய மூலோபாயத்தை வகுத்து அதனடிப்படையில், இருபத்துநான்கு காவலரண்களைத் தாக்கியழிப்பதற்கான திட்டத்தை வகுத்துப் பயிற்சிகளை வழங்கினார். இத்தாக்குதலுக்கு செல்வதற்கு முன் போராளிகளை சந்தித்த தலைவர் அவர்கள் “புதிய மூலோபாயத்திட்டத்தில் தாக்குதலை ஒன்றை செய்யப் போகின்றீர்கள் இத்தாக்குதல் வெற்றி எதிர்காலத் தாக்குதல்களிற்கு அடிப்படையாக அமையும்,” என்று கூறி வாழ்த்தியனுப்பினார். தாக்குதல் திட்டத்தின்படி இரகசிய நகர்வை மேற்கொண்டு நகர்ந்த அணிகள், எதிரியின் காவலரணுக்கு மிக அண்மையாகச் சென்று தாக்குதலை தொடங்கின. தாக்குதல் ஆரம்பித்த வேகத்திலேயே வேகமாக காவலரண்களை ஊடறுத்து பின்பக்கமாகச் சென்று இராணுவத்தை அழித்து ஆயுதங்களையும் கைப்பற்றினர். அத்தாக்குதல் உத்தியானது, குறைந்த இழப்புடன் விரைவாக எதிரியைத் தாக்கியழிப்பதற்கான மூலோபாய வெற்றியையும் நம்பிக்கையும் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் நடந்த பல தாக்குதல் வெற்றிகளுக்கு அந்த உத்தி அடிப்படையாக அமைந்தது. 1991ம் ஆண்டு காரைநகர் பொன்னாலை பிரதான பாதையில் அமைந்திருந்த காவலரண்களை தாக்கியழித்த சமர் இன்னுமொருவகையான புதிய தாக்குதல் உத்தியாகும். ஏனெனில் காவலரண் வீதியில் அமைந்திருந்தது. வீதியின் இரண்டு பக்கமும் கடல். தாக்குதலை மேற்கொள்ள எந்த விதமான காப்பும் மறைப்பும் இல்லாத குறைந்த தண்ணீர் உள்ள கடற்பிரதேசம். அக்காவலரணை தாக்கி அழிக்க வேண்டும் என முடிவெடுத்து மேஜர் கிண்ணியின் தலைமையில் வேவு பார்த்து, தண்ணீருக்குள்ளால் காவலரணின் பின்பக்கமாக அணிகளை நகர்த்தி வெற்றிகரமாகத் தாக்குதலை செய்து முடித்தார். எப்போதுமே சவாலான சண்டைகளை தேர்ந்தெடுத்து வெற்றி கொள்வதும் இறுக்கமாக போர்க்களங்களில் செயற்பட்டு வெல்வதும் இவருடைய குணாதிசயங்களில் ஒன்று. அதன் பின்னர் 1992 ன் ஆரம்பகாலப்பகுதியில் பூநகரி முகாமின் முன்னணி காவலரண்களில் அறுபத்து நான்கு காவலரண் தாக்கியழித்த தாக்குதல், அதனைத் தொடர்ந்து 1992 ன் பிற்காலப்பகுதியில் பலாலி வளலாய் பகுதியில் 150 காவலரண்களை அழித்த தாக்குதல் போன்றவற்றை தலைமையேற்றுச் செய்தார். குறிப்பாக 1992 ம் ஆண்டு பயிற்சித் தேவைகளுக்காக தலைவரிடம் ரவைகள் வேண்டும் என தளபதிகள் கேட்டபோது “சண்டைகளுக்கு மட்டுமே ரவைகள் இருக்கு, இப்ப உங்களுக்கு தேவையான ரவைகள் இராணுவத்திட்ட இருக்கு, அங்க போய் எடுங்கோ என கூறினார்” இதுவே பலாலி – வளலாயில் இருந்த 150 காவலரண்களை அழித்து ஒன்றறை இலட்சத்திற்கும் மேற்பட்ட ரவைகள் பல ஆயுத, வெடிபொருட்களையும் கைப்பற்ற அடிப்படையானது. காவலரண்களை உடைத்துக் கொண்டு உட்சென்று பின்பக்கத்தால் தாக்குதலை நடாத்தும் முறை, தரையால் படைகளை நகர்த்தும் சமநேரத்தில் கடலாலும் படைகளை நகர்த்தி எதிரியின் விநியோகம், ஆதரவுப்படைகளை அனுப்பும் வழிகளை தடுத்தல், கட்டளைமையங்கள் தகர்த்தல், தரைவழித் தாக்குதல் படையணிகள் உள் நுழைவதற்காக காவலரண்களை பின்பக்கத்தால் தகர்த்து பாதையேற்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கிய ஈரூடக தாக்குதல் முறை மூலம் எமது தாயகத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அழித்தொழிக்க முடியும் என்ற உத்தியை தனது முன்னுதாரணமான செயற்பாட்டினூடாக வெளிப்படுத்தினார். 1990 ஆண்டு ஈழப்போர் – 02 ஆரம்பித்திலிருந்து 1992 ம் ஆண்டு வளலாய் தாக்குதலை வரை தலைவரின் இராணுவ சிந்தனைக்கு உரியவடிவமும் அதற்கு பொருத்தமான மூலோபாயங்களையும் உத்திகளையும் வகுத்து பல பாதுகாப்பு, வலிந்த தாக்குதல்களை செய்து விடுதலைப்புலிகளின் இராணுவ பலத்தை மேன்மைப்படுத்தினார். இதுவே இவரை விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவின் துணைத்தளபதியாக 1992 ம் ஆண்டு தலைவர் நியமிக்க காரணமாகியது. யாழ்தேவி முறியடிப்புத் தாக்குதல்: பின்னர் 1993 ல் பூநகரி முகாம் வேவு நடவடிக்கைகளை விசேட வேவு அணியை வைத்து செய்து முடித்தார். தொடர்ந்து அதைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல் திட்டத்தை வகுத்து, அணிகளை ஒன்றிணைத்து பயிற்சிகளையும் அதற்கான ஏனைய ஒழுங்குபடுத்தல்களை தயார்ப்படுத்துவதில் தீவிரமாக செயற்படடுக்கொண்டிருந்தார். இச்சமயத்தில் யாழ் குடாநாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்குடன், ஒரேயொரு போக்குவரத்து பாதையாக இருந்த கிளாலி கடற்கரை பாதையை மூடுவதை இலக்கு வைத்து ஆனையிறவிலிருந்து இராணுவம், ‘யாழ்தேவி’ என்ற இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப்போகின்றது என்ற செய்தி கிடைக்கின்றது. தலைவரின் ஆலோசனைக்கமைவாக, தயார்ப்படுத்துவதற்கு கிடைத்த குறுகிய நேரத்தில் தந்திரோபாயத் தாக்குதல் திட்டத்தை வகுத்து, இராணுவத்தின் நகர்வை தடுப்பதற்கான தாக்குதலை மேற்கொண்டார். இராணுவத்திற்கெதிரான தாக்குதல் மிக மூர்க்கத்தனமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது களமுனையிலிருந்து தொடர்களில் சிக்கலடைந்தது. இச்சமயத்தில் நேரடியாக களமுனைக்குச் சென்று தாக்குதலை வெற்றி நோக்கி வழிநடத்தியபோது காலில் காயமடைந்தார். இந்த நடவடிக்கையில் படுதோல்வியுடன் இராணுவம் பின்வாங்கியது. காயத்திலிருந்து மீண்டாலும் காலில் பாதிப்பிருந்தது. அப்படியிருந்தும் மீண்டும் தனது இராணுவப் பணிகளைத் தொடர்ந்தார். மண்டைதீவு தாக்குதலுக்கான வேவு, கொக்குத்தொடுவாய் 05 முகாம்களின் தாக்குதலுக்கான வேவு நடவடிக்கை மற்றும் தாக்குதலுக்கான களத்தலைமை, முன்னேறிப்பாய்தல் முறியடிப்புத் தாக்குதல், சூரியகதிர் ஒன்று தாக்குதல் நடவடிக்கை என பல இராணுவ நடவடிக்கைகளில் பங்கு கொண்டார். முல்லைத்தீவு முகாம் வலிந்ததாக்குதல்: 1996ம் ஆண்டு யாழ் குடாநாட்டிலிருந்து தந்திரோபாய ரீதியில் பின்வாங்கி வன்னி பெருநிலப்பரப்பிற்குள் புலிகள் வந்த தருணத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமை தொடர்பான பல வினாக்கள் முன்வைக்கப்பட்டன. சிங்களப்படைகள் விடுதலைப்புலிகளை விரைவில் அழித்துவிடுவோம் என மார்தட்டிக் கொண்டிருந்தவேளை விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமையை மீளநிரூபித்து இராணுவ வெற்றியினூடாக சிங்களத்திற்கு பதில் சொல்ல தீர்மானித்த தலைவர், முல்லைத்தீவு முகாமை அழிக்க முடிவெடுத்தார். இத்தாக்குதல் நடவடிக்கையை தளபதி பால்ராஜ் அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து தாக்குதலுக்கான மூலோபாயத்தையும் வகுத்துக்கொடுத்தார். தலைவரின் சிந்தனைக்கமைவாக அத்தாக்குதல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். துல்லியமான திட்டமிடலுடன் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. வேகமாக கடற்கரைப்பகுதி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது பிரதான திட்டங்களில் ஒன்று. அதன்படி வெற்றிகரமாக நடைபெற்றதுடன் 122 கனரகப் பீரங்கிகளும் கைப்பற்றப்பட்டன. இருப்பினும் கடற்கரைப் பிரதேசத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கடற்கரையில் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே தம்மால் உதவியை பெற முடியும் என்பதால் தேவாலயம் அமைந்திருந்த கடற்கரைப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இராணுவம் கடுமையாகப் போரிட்டது. அப்பகுதியை கைப்பற்றும் நோக்குடன் தாக்குதல் நடவடிக்கைகள் முனைப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அளம்பிலில் இராணுவத்தை தரையிறக்கி, முகாமிற்குள் போரிட்டுக் கொண்டிருக்கும் படையினருக்கு உதவ இராணுவம் முயன்றது. இச்சந்தர்ப்பத்தில் களத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்ட பால்ராஜ் அவர்கள் தலைவரிடம் நிலைமையும் உடனடித்திட்டத்தையும் தெரிவித்தார். தலைவர் அவர்கள் தளபதி பிரிகேடியர் பானு அவர்கள் தலைமையில் மேலதிக அணியை அனுப்பி வைத்தார். அத்திட்டத்தின்படி தேவாலயத்தின் முன்பக்கமாக நிலையெடுத்திருந்த படையினர் மீது விடுதலைப்புலிகளிடம் இருந்த டாங்கியால் தாக்குதலை ஆரம்பிக்க எதிரி நிலைகுலைந்தான், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய படையணி எதிரியின் பகுதியில் உள்நுழைந்து தாக்குதலை மேற்கொண்டு, கடற்கரையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, முகாம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. அத்துடன் அளம்பிலில் தரையிறங்கிய இராணுவமும் எதிர்த்தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பாரிய இழப்புகளுடன் கடல்வழி தப்பி ஓடியது. சத்ஜெய முறியடிப்புத் தாக்குதல்: முல்லைத்தீவு படைமுகாம் வீழ்ச்சியை தொடர்ந்து ஆனையிறவில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவம் சத்ஜெய ஒன்று இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் பகுதியை கைப்பற்றியது. முன்னேறிய சிங்களப்படையைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைக்கான தலைமையை தலைவர் பால்ராஜ் அவர்களிடம் கொடுத்தார். உடனடியாகப் படையணிகளை வேகமாக நிலைப்படுத்தினார். அத்துடன் இராணுவம் எமது நிலைகளை உடைத்து நகர்ந்தால் உடையும் பகுதியில் உள்ள படையணிகளை மட்டும் மீள் ஒழுங்குபடுத்தி, காவலரண்களை மீளக் கைப்பற்றினால் உடைத்த பாதையால் உள்வரும் இராணுவம் எமது பிடிக்குள் அகப்படும் இதனால் எதிரிக்கு பாரிய இழப்பை ஏற்படுத்த முடியும் என்ற திட்டத்தை வகுத்து, படையணிகளுக்கு விளக்கி, பயிற்சி கொடுத்து தயார்நிலையில் வைத்திருந்தார். சிங்களப்படை சத்ஜெய இரண்டு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. ஏ-09 பாதைக்கு வலதுபக்கமாகவும் இடதுபக்கமாகவும் தாக்குதலை தொடங்கிய இராணுவத்தின் தாக்குதல் முனையாக ஏ-09 பாதைக்கு வலதுபக்கம் பிரதானப்பட்டிருந்தது. டாங்கிகளுடன், துருப்புக்காவிகளில் இராணுவத்தை நகர்த்தி முன்னேறிய இராணுவம் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து உள்நகர்ந்தது. நிலைமையை உணர்ந்த தளபதி, லெப்.கேணல் தனம், லெப்.கேணல் ராகவன் தலைமையில் அணிகளை மீள்ஒழுங்குபடுத்தி இரண்டு பக்கத்தாலும் எமது காவலரண் பகுதியால் தாக்குதலை தொடுத்து மீண்டும் பாதுகாப்பு நிலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இராணுவம் பாரிய இழப்பை சந்தித்துப் பின்வாங்கியது. விடுதலைப்புலிகளின் காவலரண்களுக்கு முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் டாங்கிகள் அழிக்கப்பட்டு இருந்தது இந்த தாக்குதல் தந்திரோபாய, மனோதிட வெற்றிக்கு எடுத்துக்காட்டாகும். கிளிநொச்சி நகர் வலிந்த தாக்குதல்: ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த இலங்கை இராணுவம் மாங்குளத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. அதேவேளை கிளிநொச்சியில் உள்ள இராணுவத்துடன் இணைந்து கொள்ள குறிப்பிட்ட தூரமே இருந்தது. இந்த நேரத்தில் கிளிநொச்சி நகரை மீளக் கைப்பற்ற தலைவர் முடிவெடுத்தார். இத்தாக்குதல் திட்டத்தில், கிளிநொச்சி நகரப்பகுதியை கைப்பற்ற வேண்டுமாயின் இராணுவத்திற்கு உதவி வருவதையும் இராணுவத்தின் பின்வாங்கி செல்வதையும் தடுக்க வேண்டும் என்பது பிரதான திட்டமான இருந்தது. எனவே பரந்தனுக்கும் கிளிநொச்சி நகரத்திற்க்குமிடையில் ஊடறுத்து மறிப்பு நடவடிக்கையை செய்யும் பொறுப்பை பால்ராஜ் அவர்களிடம் ஒப்படைத்த தலைவர் “உனது நடவடிக்கை தாக்குதலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப்போகின்றது. அத்துடன் இது உனக்கு ஒரு பரீட்சார்த்த தாக்குதல் நடவடிக்கையும் கூட” என தெரிவித்தார். தாக்குதல் நடவடிக்கையை பொறுப்பொடுத்த தளபதி மிகத்துல்லியமாகத் திட்டமிட்டு கடுமையாக பயிற்சிகளைக் கொடுத்து படையணிகளைத் தயார்ப்படுத்தினார் ஏனெனில் காவலரண்களை ஊடறுக்கின்ற சமநேரத்தில் கிளிநொச்சியிலிருந்து எதிரி ஓடாமலும் பரந்தனிலிருந்து எதிரியின் ஆதரவு கிடைக்கமாலும் இருக்கக்கூடிய வகையில் அணிகளை நிலைப்படுத்தி தாக்குதலுக்கு முகங்கொடுக்கின்ற அதேவேளை, அணிகளை நிலைப்படுத்தும் பகுதிக்கிடையில் இருக்கும் மினிமுகாம்கள், சிக்குப்படும் படையினரை அழித்து அப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தயார்நிலையில் நிற்க வேண்டும். மற்றும் கிளிநொச்சி வெற்றியின் பிரதான பங்கு இவரது நடவடிக்கையில் தங்கியிருந்தது. தாக்குதல் தொடங்கியவுடனேயே ஏ-09 வீதிக்கு அருகில் அதாவது களத்தில் மையத்திற்கு சென்ற பால்ராஜ் அவர்கள் அங்கிருந்து தாக்குதலை நெறிப்படுத்தினார். ஆனையிறவு பரந்தன் பகுதியிலிருந்த இராணுவத்தினர் கிளிநொச்சியில் சிக்குண்ட படையினருக்கு உதவ பல புதிய படையணிகள் டாங்கிகள் சகிதம் கடும் முயற்சியை மேற்கொண்டனர். முயற்சிகள் எதுவும் பலனளிக்காது போனது. மற்றும் தளபதி பால்ராஜ் தங்களிற்கு பின்னால் வந்து மறித்து நிற்கின்றார் அதனால் உதவி கிடைக்கவில்லை. இச் செய்தி கிளிநொச்சி நகரப்பகுதியில் சண்டையிட்ட சிங்களத்தளபதிகளுக்கு கிடைக்கின்றது. திகைத்த தளபதிகள் தப்பியோடுவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுத்தனர். இராணுவம் எந்த வித ஒழுங்குபடுத்தலுமின்றி தப்பியோடத் தொடங்கியது. அங்கு ஓடும் இராணுவத்தை தடுக்கும் நோக்குடன் நிலைப்படுத்தப்பட்ட அணிகளின் உக்கிர தாக்குதலை எதிர்கொண்டது. இத்தாக்குதலை எதிர்பார்க்காத இராணுவம் முன்செல்பவர்கள் சாகச்சாக தப்பியோடும் முயற்சியில் மட்டும் ஈடுபட்டனர். குடாரப்பு ஊடறுப்புத்தாக்குதல்: இத்தாவில் பெட்டிச் சண்டையைப்பற்றி தளபதி கூறும் போது “ஆனையிறவுக்கான சண்டையை நீதான் நடத்தப்போகிறாய், நீ சண்டியன், எத்தனையோ சோதனைகளை உனக்குத் தந்திருக்கிறேன் இது நான் உனக்கு வைக்கின்ற பெரிய சோதனை இதற்கான பரீட்சார்த்தத்தை ஏற்கனவே கிளிநொச்சியில செய்து பாத்திட்டேன். எனவே நீ இதையும் வென்று தருவாய் என நம்பிறேன் 1200 பேருடன் தரையிறங்கி கண்டி வீதியை மறிச்சு விநியோகத்தை தடுத்து நிறுத்து, ஆனையிறவு தானாக விழும். சூசை உன்னை கடலால் இறக்கி விடுவான் நீ தரையால் தான் திரும்பி வரவேண்டும்” என்ற தலைவரின் திட்டத்தை நிறைவேற்றி ஆனையிறவின் வெற்றிக்கு வழிவகுத்தார். இத்தாவில் பெட்டிச் சண்டை என்பது தமிழ்மக்களின் வீரத்தின் வெளிப்பாடு உலக வரலாற்றில் முதன்மைத் தரையிறக்கச் சண்டையாக பதிவு செய்யுமளவிற்கு, உலக இராணுவ வல்லுனர்களையே வியக்க வைத்தது குடாரப்பு தரையிறக்க தாக்குதல் நடவடிக்கை ஆகும். இலங்கை இராணுவத்தின் ஆகாய விமானங்கள், நவீன கடற்படை, கனரக ஆயுதங்கள், டாங்கிகள் போன்றவற்றைக் கொண்ட பலம் வாய்ந்த 40,000 சிங்களப்படைகளின் நடுவே 1200 போராளிகளுடன் 34 நாட்கள் எதிரியை ஊடறுத்து நின்று துவம்சம் செய்தனர். சிங்களத்தின் முக்கிய இராணுவத்தளபதிகளையும் அவர்களின் தந்திரோபாயங்களையும் வெறும் இலகு, கனரக ஆயுதங்கள் மற்றும் ஆட்லறி பிரங்கிகளின் ஆதரவுச்சூட்டுடன் மட்டும் எதிர்கொண்டு வெற்றி பெற்று, தமிழ்மக்களின் போரிடும் ஆற்றலின், துணிச்சலின், வீரத்தை சர்வதேசம் வியக்கும் வகையில் வெளிப்படுத்தினார். இது தமிழ்மக்களின் வீரத்திற்கும் போர்க்குணத்திற்கும் கிடைத்த மகுடமாகும். சுனாமி ஆழிப்பேரலையின் போது: 2004 ம் ஆண்டு வாகரையில் அமைந்திருந்த கடற்கரை முகாமில் இருந்தார். திடீரென கடல் உள்வாங்கப்பட்டு அலைகள் உயர்ந்து வேகமான வருவதை பார்த்த பால்ராஜ் அவர்கள், ஏதோ ஆபத்து வரப்போகின்றது என்பதை உணர்ந்து, உடனடியாக வானத்தை நோக்கிச் சுடுமாறு போராளிகளிடம் சொன்னார். திடீரென துப்பாக்கிச் சத்தத்தை கேட்ட மக்கள் பலர் வீட்டுக்கு வெளியே வந்து பார்க்க கடல் உள்நோக்கி வருவதை கண்டு ஓடித்தப்பினர் இதனால் பலர் காப்பாற்றப்பட்டனர். அதேவேளை கடற்கரையில் உள்ள முகாமில் நின்ற அவர் கடல் அலைகளுடன் கடுமையாக போராடி உயிர்தப்பினார். அத்துடன் உடனடியாக போராளிகளை ஒழுங்குபடுத்தி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவிகளை செய்தார். பால்ராஜ் அவர்களின் தலைமைத்துவப் பாங்கு: பால்ராஜ் அவர்கள் எப்போதும் களமுனையில் ஒவ்வொரு காவலரணுக்கும் சென்று போராளிகளிற்கு சண்டையிடும் முறையை சொல்லிக்கொடுப்பார். அடிக்கடி அவர்களை சென்று சந்தித்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி வைத்து போராளிகளை எப்போதும் உச்ச மனோதிடத்துடன் வைத்திருப்பார். இதனால் பால்ராஜ் அவர்கள் சண்டையை பொறுப்பெடுக்கின்றார் என்றால் போராளிகளிற்கிடையே தனித் தெம்பு ஏற்படுமளவிற்கு நம்பிக்கையான தளபதியாக விளங்கினார். திட்டமிட்ட சண்டைக்கான வேவு நடவடிக்கையை முழுமைப்படுத்த முன் வேவுகள் அனைத்தையும் நேரடியாக பார்த்தே தலைவரிடம் சண்டைத்திட்டத்தை கொடுப்பார். குறிப்பாக அவரது கால் சீராக இயங்காத போதும் கைத்தடியுடன் எதிரியின் முட்கம்பி வரை சென்று இந்த இடம் சண்டைக்கு பொருத்தமானதா என முடிவெடுப்பது அவரது வழக்கம். சிலர் அவரிடம் ஏன் நீங்கள் போய் பார்க்கிறீர்கள் நாங்கள் பார்த்து வருகிறோம் என்றால் அதற்கு அவர், “சண்டையை தலைமைதாங்கும் போது தாக்குதலிடங்களும் தாக்குதல் பிரதேசம் தொடர்பான பூரண விளக்கம் மற்றும் நிலவரம் தெரிந்தாலே சண்டைக்கான கட்டளையை துல்லியமாக வழங்கலாம், அடுத்தது நான் நினைப்பதைப்போல ஒவ்வொரு தாக்குதல் இடமும் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றதா என எனக்கு தெரியவேண்டும். பாரிய படையை கொண்டு செல்லும் பாதையில் என்னை கொண்டு செல்ல முடியாது என்றால் எப்படி படையணிகளை சரியாக கொண்டு செல்வீர்கள்? அத்துடன் நான் உறுதிப்படுத்தி முடிவுகளை தலைவருக்கு சொல்லவேண்டும் எனவே நானும் பார்க்கவேண்டும்,” என்பதே போர் அனுபவமும், போரியலில் மாற்றத்தையும் ஏற்படுத்திய தளபதியின் பதிலாக இருக்கும். தளபதி பால்ராஜ் அவர்களைப்பற்றி அவருடைய பல தாக்குதல்கள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். தேசியத்தலைவர் அவர்களால் என்னையும் விஞ்சிய போராளி என்று பாராட்டப்பட்ட தளபதி, உலக இராணுவ வல்லுனர்களின் தந்திரோபாயங்களை எல்லாம் இத்தாவில் பெட்டிச்சண்டையில் நிர்மூலமாக்கியவர் மற்றும் பால்ராஜ் ஒரு இடத்தில் வந்து இருந்திட்டால் அவரை வீழ்த்துவது அல்லது அப்புறப்படுத்துவது கடினம் என சிங்களப்படைகளின் மனோதிடத்தையே பலவீனப்படுத்திய தளபதி, போர்க்கலை வல்லுநர் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். இந்நினைவு நாளில் தமிழ்மக்களின் கவனத்திற்காக… தழிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் பல வீரத்தளபதிகளும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் வீரச்சாவடைந்துள்ளனர். பல வியக்கத்தக்க மகத்தான போரியல் சாதனைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்தது. போர்க்குணம் மிக்க தமிழினத்தின் வெற்றிகளே இவையாகும். ஆனால் முள்ளிவாய்க்கால் பின்னடைவு என்பது சர்வதேச நாடுகள் வழங்கிய தொழில்நுட்ப உதவி, ஆயுத வெடிபொருள் உதவி, மறைமுக இராணுவ உதவி மற்றும் புலனாய்வு உதவிகளின் விளைவாகவும், பூகோள அரசியல் போட்டி காரணமாக சிங்களத்திற்கு கிடைத்த உதவிகளின் அடிப்படையிலும் ஏற்பட்ட பின்னடைவே அன்றி, சிங்களம் தனித்து நின்று விடுதலைப்புலிகளை அழிக்கவில்லை. அவர்களால் அழிக்கவும் முடியாது. மேற்குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தையும் தாண்டி இப்பின்னடைவின் அடிப்படை வெடிபொருள் விநியோகம் தடைப்பட்டமையும் மலிந்து போன துரோகத்தனங்களுமே ஒழிய வேறு ஒன்றுமல்ல. தாயக விடுதலையையும், தமது உயிர்களை விடுதலைக்காக நம்பிக்கையுடன் அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் கனவுகளையும், மக்களின் பேரிழப்புகளையும் மனதில் நிறுத்தி நம்பிக்கையிழக்காமல், எம்மால் முடியும், எமது அரசியல் விடுதலைக்காக இறுதிவரை உழைப்போம் என சிந்தனையில் நிறுத்துவதே இந்நாளில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களிற்கும் மற்றும் மாவீரர்களிற்கும் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களிற்கும் ஆத்மார்த்தமாக வழங்க வேண்டிய வாக்குறுதி. https://www.uyirpu.com/?p=195941 point- ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
1 point- ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
வாசிப்பதில் பிரச்சனையா? கிரகிப்பதில் பிரச்சனையா? எமது பிரச்சனையை உக்ரேனோடு ஒப்பிடவில்லை ( ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கி ஒரு ஒப்பிலக்கணம் எழுதலாம் - ஆனால் அதுவல்ல இங்கே எழுதப்பட்டது). இங்கே இரு வேறு காலங்களில் நடந்த தாக்குதல் வியூகங்களே ஒப்பிடபட்டன. புலிகளின் பிரசுரங்களிலேயே நோமண்டி, குடாரப்பு தரையிறக்கள் ஒப்பிட பட்டுள்ளன. அதன் அர்த்தம் ஈழ யூத்தமும் இரண்டாம் உலக யுத்தமும் ஒருமாதிரியான பிரச்சனைகள் என்பதல்ல. இது உண்மைதான். ஆயுத பற்றாகுறை ஒரு பெரிய காரணி. ஆனால் அது வாங்குதிறன் இன்மையை விட , வாங்க முடியாமை, வாங்கியதை வழங்க முடியாமைதான் ஏற்பட்டது.1 point- ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
போராட்டம் தோல்வியடைந்து விட்டது எனும் போது அதுவும் பேசப்பட வேண்டும்.1 point- நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
https://www.facebook.com/share/v/12Kykzpo6yy/?mibextid=wwXIfr1 point- ரப் பாடகர் வேடன்
1 pointபாணர் பண்டைக்காலந்தொட்டு இசைக்கலையில் ஈடுபட்ட மரபினராக பாணர் விளங்கியுள்ளனர் என்பதை சங்க இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகின்றது. இவர்களின் குலப்பெருமையினையும் பழமையினையும் ‘பாணன் பறையன் கடம்பன் துடிய’ என்ற புறநானூற்று அடிகள் புலப்படுத்துவதைக் காணலாம். மேலும், துடி அடிப்பவன் துடியன் என்றும், பறை கொட்டுபவன் பறையன் என்றும் குறிப்பிடப் பெற்றது போல பண் இசைப்பவன் பாணன் என்று அழைக்கப் பெற்றான் என்பதை அறிய முடிகின்றது. பாணர்களில் ஆடவரை சென்னியர், வயிரியர், செயிரியர், மதங்கர், இன்னிசைகாரர், பாணரென்ப (வாழ்வியற் களஞ்சியம், தொகுதி.12, ப.329) என்கிறது பிங்கல நிகண்டு. பாணருள் இசைப்பாணரும், யாழ்ப்பாணரும், மண்டைப்பாணரும் (வாழ்வியற் களஞ்சியம், தொகுதி.12, ப.329) இருந்தனர் என்பதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இவர்களில் இசைப்பாணர் பாடற்பாணர், அம்பணவர், அகவர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணர் யாழிசைத்துப் பாடுபவராவர். அவர்கள் வாசித்த யாழில் பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் ஆகியவை சிறப்பாகக் கூறப்படுகின்றன. இந்நால்வகை யாழுள் பேரியாழ் வாசித்த பாணர் பெரும்பாணர் என்றும், செங்கோட்டியாழ் என்ற சீறியாழ் வாசித்த பாணர் சிறுபாணர் என்றும் அழைக்கப்பட்டனர். யாழ்ப் பாணர் யாழேயன்றிக் குழலையும் இசைக்கருவியாகக் கொண்டு தம் கலைத் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது. இதனை, “குழலினும் யாழினும் குரல்முத லேமும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறன் மரபிற் பெரும்பாண் இருக்கை” (சிலப்.35௩7) என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. https://www.muthukamalam.com/essay/literature/p239.html1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முட்டைக்கோப்பியை விட நண்டுக்குழம்பு சுவை அதிகமோ?1 point- கொஞ்சம் ரசிக்க
1 point1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஸ்ரேயாஸ் வெறி கொண்டு அடித்த மாதிரி பொளந்து கட்டிட்டார் ......... சும்மா சொல்லக்கூடாது அருமையயான விளையாட்டு .......! 😂 பிரீத்தி ஹாப்பி அண்ணாச்சி ....... ! 😂1 point- யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி.
யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி. Posted on June 1, 2025 by சமர்வீரன் யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 44 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் – யேர்மனியில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் நினைவுவேந்தல் தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 44 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும். மேற்படி நூலக எரிப்பின் 44 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனியில் பேர்லின் நகரில் ஹிட்லர் ஆட்சியில் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட நினைவிடத்தின் (Bebelplatz) முன்றலில் 01.06.2025 அன்று மதியம் நடைபெற்றது. “எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்” எனும் வாசகம் பதாதையில் பொறிக்கப்பட்டு, 44 ஆண்டுகளை நினைவுபடுத்தும் முகமாக தமிழ் இளையோர் அமைப்பால் கண்காட்சி வைக்கப்பட்டது பல்லினமக்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்தது. பிரசித்திபெற்ற நினைவிடத்தில் வித்தியாசமான முறையில் இக் காட்சிப்படுத்தல் நடைபெற்றதால் பல்லின மக்கள் அதிகம் ஆர்வத்தோடு கவனித்ததோடு, மட்டும்மல்லாமல் மேலதிகமான விளக்கங்களை பெற்றுக்கொள்ள உரையாடல்களிலும் ஈடுபட்டனர். அத்தோடு ஆர்வம் கொண்டவர்களுக்கு ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. https://www.kuriyeedu.com/?p=6773491 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1 point- தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு
தடை செய்யப்பட்டோர் பெயர் பட்டியலில் குமாரசாமி @குமாரசாமி குமாரசாமி @குமாரசாமி என ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சேர்க்கை செய்து உள்ளார்கள். இவர் @குமாரசாமி யோ ஊருக்கு போய் தோட்டம் செய்யப்போறன், கடை வைக்கப்போறன், ஓய்வு எடுக்கப்போறன் என்று எழுதிக்கொண்டு திரிகிறார். அவ்வப்போது இங்கு லைக்ஸ் போட்டது, பதில் கருத்து கூறியது தவிர இவருடன் எனக்கு எதுவித தொடர்பும் இல்லை என கூறிக்கொள்கின்றேன்.1 point- ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
இதை தலைவரே சொல்லி உள்ளார் - வளமில்லாத நலிந்த இனமொன்றின் மிகபெறுமதியான, ஆயுங்கள் கரும்புலிகள் என. இன்றுவரை மேற்கில் நான் பேசும் பலருக்கு இதை விளங்கவைக்க என்னால் முடியவில்லை. அவர்கள் தற்கொலை என்ற வட்டத்தை தாண்டி சிந்திக்க தயாரில்லை. ஆனால் சாவு நிச்சயம் என தெரிந்தும் முன்னேறிய தாக்கிய தம் வீரர்களை மெச்சுவார்கள். இரெண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பது உறைப்பதே இல்லை.1 point- தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு
இங்கே கூவித்திரியுற ஒரு கோழியின் பெயர் கூட இருக்காது.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- ரப் பாடகர் வேடன்
1 pointமாறாக ஊரை சொன்னீர்களாயின்…வடக்கோ தெற்கோ, எத்தனையாம் குறிச்சி, கோவிலுக்கு எந்த பக்கம் என கேள்விகள் தொடரும். நீங்கள் எங்க வாறியள் எண்டு தெரியும், ஏனக்கு கல்யாணம் பேச போறியளோ எண்டு கேட்டால் இன்னொரு லோடு அசடு வழியும். ஆனாலும் விடமாட்டார்கள்🤣. இவர்களோடு விளையாட எனவே நான் ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு ஊரை சொல்லி வைப்பேன் 🤣.1 point- விஞ்ஞானிகள் விளக்க முடியாமல் தவிக்கும் வினோதமான விண்வெளி வெடிப்புகள்
பட மூலாதாரம்,PHILIP DRURY/ UNIVERSITY OF SHEFFIELD கட்டுரை தகவல் எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகன் பதவி, 2 மணி நேரங்களுக்கு முன்னர் வானியலாளர்கள் விசித்திரமான, அரிய வகை வெடிப்புகள் பலவற்றைக் கண்டறிந்துள்ளனர். அவை சிறந்த கருந்துளை வகைகளின் அறிகுறிகளாக இருக்க முடியுமா? வானியலாளர்கள் இதுபோன்ற ஒன்றை முன்னெப்போதும் கண்டதில்லை. விண்வெளியின் ஆழத்தில் இருந்த ஒரு பெரிய பொருள் திடீரென வெடித்தது. அதைத் தொடர்ந்து, பூமியில் உள்ள தொலைநோக்கிகள் 2018ஆம் ஆண்டு வியக்கத்தக்க வகையில் பிரகாசமாகவும் விசித்திரமாகவும் காணப்பட்ட வெடிப்பைக் கண்டுபிடித்தன. இந்த வெடிப்பு 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் எவ்வாறு நடந்தது என்பதை வானியலாளர்கள் உற்று நோக்கினர். அந்த வெடிப்பு ஒரு சாதாரண நட்சத்திர வெடிப்பைவிட வேகமாகவும் பிரகாசமாகவும் இருந்தது. அது சூப்பர்நோவாவாக இருக்கும் எனக் கருதப்பட்டாலும், அதன் தன்மை மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்த அதிநவீன விண்மீன் வெடிப்பு AT2018cow என அழைக்கப்பட்டது. இதில் உள்ள "cow" என்பது ஒரு சீரான குறியீட்டின் ஒரு பகுதி மட்டுமே. அதற்கும் பசுவைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான 'cow' என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எளிய பயன்பாட்டிற்காக மட்டுமே இது உலகமெங்கும் சுருக்கமாக "தி கௌ" (The Cow) என அறியப்படுகிறது. இந்த பிரமிக்க வைக்கும் நிகழ்வுக்குப் பிறகு, வானியலாளர்கள் பேரண்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதே போன்ற சில வெடிப்புகளைக் கண்டறிந்துள்ளனர். இவை "ஒளிரும் வேகமான நீல ஒளியியல் நிலையற்ற வெடிப்புகள்" (Luminous Fast Blue Optical Transients - LFBots) என விவரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான தன்மைகளைக் கொண்டுள்ளன. "அவை மிகவும் பிரகாசமாக இருக்கின்றன" என்கிறார் நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழக வானியலாளர் அன்னா ஹோ. அதனால்தான் LFBot எனும் சுருக்கத்தில் உள்ள 'L' என்பது 'luminous' (ஒளிர்வான) என்பதைக் குறிக்கிறது. இந்த வெடிப்புகளின் நீல நிறம், சுமார் 40,000°C (72,000°F) என்ற அதீத வெப்பத்தால் ஏற்படுகிறது. இந்த வெப்பம் ஒளியை நிறமாலையின் நீல நிறப் பகுதிக்கு மாற்றுகிறது. அந்த LFBot எனும் சுருக்கத்தின் கடைசி எழுத்துகளான 'O' மற்றும் 'T' என்பவை இந்த நிகழ்வுகள் கண்ணுக்குத் தெரியும் ஒளி நிறமாலையில் (optical) தோன்றி, மிகக் குறுகிய நேரத்தில் மறையும் (transient) தன்மையைக் குறிக்கிறது. வெற்றிகரமாக வெடித்துச் சிதறாத சூப்பர் நோவாக்களா இந்த LFBots? தொடக்கத்தில், LFBots என்பது வெற்றிகரமாக வெடிக்க முடியாமல் போன சூப்பர்நோவாக்களாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதினர். அதாவது, வெடிக்க முயன்ற நட்சத்திரங்கள், உட்புறமாக வெடித்து, அவற்றின் மையத்தில் ஒரு கருந்துளையை உருவாக்கி, பின்னர் அதன் வெளிப்புறத்தை உள்நோக்கி விழுங்கும் செயல்முறை. இருப்பினும், இவை குறித்த மற்றொரு கோட்பாடு தற்போது பிரபலமடைந்து வருகிறது. இடைநிலை நிறை கருந்துளைகள் (intermediate mass black holes) எனப்படும் நடுத்தர அளவிலான கருந்துளைகளின் கண்டுபிடிக்கப்படாத ஒரு வகை, அவற்றுக்கு மிக அருகில் செல்லும் நட்சத்திரங்களை விழுங்கும்போது "கௌ" (Cow) எரிப்புகள் தூண்டப்படுகின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான ஒரு புதிய ஆய்வுக் கட்டுரை, இந்தக் கோட்பாட்டுக்குப் புதிய ஆதாரங்களை விவரித்தது. இது இப்போது பொருந்தக்கூடிய விளக்கமாகக் கருதப்படலாம். "பொதுவான நிலைப்பாடு இப்போது அந்தத் திசையை நோக்கி நகர்கிறது" என்று லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் வானியலாளர் டேனியல் பெர்லி கூறுகிறார். இது சரியானது என நிரூபிக்கப்பட்டால், பிரபஞ்சத்தில் காணப்படும் மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய கருந்துளைகளுக்கு இடையே காணாமல் போன இணைப்புக்கும், பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றான இருண்ட பொருள் (dark matter) குறித்துப் புரிந்து கொள்வதற்கும் ஒரு முக்கியமான ஆதாரங்களை இது வழங்கக்கூடும். எப்போது இத்தகைய வெடிப்பு பதிவு செய்யப்பட்டது? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,வெடிப்பதற்காக முயன்ற நட்சத்திரங்கள் வெடிக்காமல், மையத்தில் ஒரு கருந்துளையை உருவாக்கி, பின்னர் அவற்றை வெளிப்புறத்தை உள்நோக்கி இழுத்து விழுங்குகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த முதல் "தி கௌ" (The Cow) வெடிப்பு, ரோபோ ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு, பூமியை அடிப்படையாகக் கொண்ட தொலைநோக்கியான அட்லஸ் (Asteroid Terrestrial-impact Last Alert System) மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த வெடிப்பு, பூமியிலிருந்து சுமார் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு விண்மீன் மண்டலத்தில் பதிவானது. வழக்கமான சூப்பர்நோவாவைவிட இது 100 மடங்கு அதிகமாகப் பிரகாசித்தது. மேலும், தோன்றிய சில நாட்களிலேயே மறைந்தும்விட்டது. சாதாரண சூப்பர்நோவாக்கள் முழுமையாக நிகழச் சில வாரங்கள் அல்லது மாதங்கள்கூட ஆகும். இத்துடன், பிரிட்டனில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அவதானிப்புகளின்படி, இந்த வெடிப்பு ஒரு விசித்திரமான மற்றும் தட்டையான வடிவமைப்பைக் கொண்டிருந்தது என்பதையும் வெளிப்படுத்துகின்றன. அதன் பிறகு, வானியலாளர்கள் இதேபோன்ற சுமார் 12 நிகழ்வுகளைக் கண்டறிந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை அவற்றை முதலில் கண்டறிந்த வானியல் ஆய்வுகளின் விளைவாகத் தரப்படும் எழுத்துக் குறியீடுகளின் அடிப்படையில், விலங்குகளை மையமாகக் கொண்ட புனைப்பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவை, ZTF18abvkwla, 2018-ல் கண்டறியப்பட்டது – இது "கோலா" என அழைக்கப்படுகிறது. ZTF20acigmel, 2020-ல் கண்டறியப்பட்டது – "ஒட்டகம்" எனப்படுகிறது. AT2022tsd, 2022-ல் கண்டறியப்பட்டது – "டாஸ்மேனிய டெவில்" என்று அழைக்கப்படுகிறது. AT2023fhn, 2023-ல் கண்டறியப்பட்டது – "ஃபின்ச்" அல்லது "ஃபான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்தகைய வெடிப்புகளைத் தேடும் முயற்சியில் வானியலாளர்கள் தொலைநோக்கியின் மூலம் செய்யப்பட்ட ஆய்வுகளைப் பயன்படுத்தி வானத்தின் பெரிய பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வகையான நிகழ்வுகளைக் கண்டறிய வானியலாளர்கள் தற்போது விண்வெளியின் பரந்த பகுதிகளை ஆய்வு செய்யும் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய ஒரு வெடிப்பு எப்போது நிகழ்ந்தாலும், அதைப் பற்றி மற்ற வானியலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்க Astronomer's Telegram எனப்படும் ஆன்லைன் தளத்தில் அவர்கள் தகவல் அனுப்புகின்றனர். இது மற்ற தொலைநோக்கிகளை உடனடியாக அந்த நிகழ்வை உற்றுநோக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நவம்பரில், ஹோ மற்றும் பெர்லி மற்றொரு புதிய LFBot வெடிப்பைக் கண்டறிந்தனர். இது AT2024wpp என அழைக்கப்படுகிறது. ஆனால் இதுவரை இதற்குப் புனைப்பெயர் வைக்கப்படவில்லை. "நாங்கள் இதற்கு 'குளவி' (Wasp) என்ற பெயரை யோசித்தோம்," என்கிறார் ஹோ. இந்த வெடிப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனெனில் இது "தி கௌ" வெடிப்புக்குப் பிறகு கண்டறியப்பட்ட மிகவும் பிரகாசமான LFBot. மேலும், இது தனது பிரகாச நிலையின் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டதால், வானியலாளர்கள் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி உள்படப் பல தொலைநோக்கிகளை அதை நோக்கித் திருப்பி, அதிகமாகக் கவனிக்க முடிந்தது. "தி கௌ வெடிப்புக்குப் பிறகு இதுவே சிறந்தது" என பெர்லி கூறுகிறார். பூமியில் மின்சார துண்டிப்பை ஏற்படுத்தும் சூரிய எரிப்பு என்றால் என்ன? மனிதர்களுக்கு ஆபத்தா?23 மே 2025 மழையில்லா வானவில்! விண்வெளியில் நாசா கண்ட அற்புதம்22 மே 2025 'இவை அனைத்தும் ஆரம்பக் கால கண்டுபிடிப்புகளே' பட மூலாதாரம்,PERLEY ET AL படக்குறிப்பு,பூமியில் இருந்து சுமார் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நிகழ்ந்த "தி கௌ" வெடிப்பு 2018இல் கண்டறியப்பட்டது ஆரம்பக்கால கண்டுபிடிப்புகள், 'குளவி' வெடிப்பு என்பது தோல்வியடைந்த சூப்பர்நோவாவால் ஏற்படவில்லை என்பதைக் குறிக்கின்றன. அந்தக் கோட்பாட்டின்படி, ஒரு நட்சத்திரம் வெடிக்க முயலும்போது தானாகவே சரிந்துவிடும். அதன் வெளிப்புற ஓட்டுக்குள் ஒரு கருந்துளை அல்லது அடர்த்தியுள்ள நியூட்ரான் நட்சத்திரம் உருவாகி, அந்த ஓட்டைக் கிழித்து வெளியில் கதிர்வீச்சுகளைச் சுழற்றும். இதுதான் மைய இஞ்சின் எனப்படும் நிலையை உருவாக்கும். இது பூமியில் காணக்கூடிய சுருக்கமான 'கௌ' வெடிப்பை விளக்குகிறது. ஆனால் அந்த வெடிப்பில் இருந்து பொருட்கள் வெளியே செல்லும் எந்தத் தடயமும் 'குளவி'யில் காணப்படவில்லை என்று பெர்லி கூறுகிறார். இதுபோன்ற நிகழ்வுகளில் அப்படிப்பட்ட தடயங்கள் இருக்குமென விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பார்கள். இருந்தாலும், இப்போது கிடைத்துள்ள தகவல்கள் அனைத்தும் ஆரம்ப காலகட்டத்தைச் சேர்ந்தவை மட்டுமே. "நாங்கள் இன்னும் அந்தத் தரவுகளை விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்," என்கிறார் பெர்லி. கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில், நெதர்லாந்து விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஜெங் காவ் மற்றும் அவரது குழுவினர் முதன்முதலில் கண்டறியப்பட்ட LFBot வெடிப்பை மீண்டும் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், தோல்வியடைந்த சூப்பர்நோவா என்ற கோட்பாட்டை சவால் செய்யும் புதிய ஆதாரங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த நிகழ்வின் எக்ஸ்-கதிர் தரவுகளை ஆய்வு செய்ததில், வெடிப்பைச் சுற்றி வட்டத்தட்டு வடிவில் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். அதன் பின்னர், அந்த வெடிப்பின் கணினி மாதிரியை உருவாக்கிப் பார்த்தனர். அதில், அது இடைநிலை நிறை கருந்துளையால் விழுங்கப்படும் நட்சத்திரத்தின் எச்சங்கள் போல் இருப்பதாகத் தெரிந்தது. அந்த வகையான கருந்துளைகள், நமது சூரியனின் நிறையைவிட நூறு முதல் ஒரு லட்சம் மடங்கு வரை அதிகமாக இருக்கக்கூடும். மற்றொரு பக்கம், சில பெரிய கருந்துளைகள் சூரியனைவிட மில்லியன் கணக்கிலும, பில்லியன் கணக்கிலும் அதிக நிறை கொண்டதாக இருக்க முடியும். நட்சத்திரம், கருந்துளையால் உண்ணப்படும்போது, அதன் பெரிய துண்டுகள் கருந்துளையைச் சுற்றி விழுந்து, கருந்துளையின் பிரகாசத்தை திடீரென அதிகரிக்கச் செய்யும். இதனால் பூமியில் வானியலாளர்கள் கண்ட 'கௌ எரிப்புகள்' நிகழ்கின்றன. "எங்கள் ஆய்வு AT2018cow மற்றும் அதேபோன்ற LFBots வெடிப்புகளின் இடைநிலை நிறை கருந்துளைகளின் தன்மையை ஆதரிக்கிறது என்று நான் நம்புகிறேன்," என்கிறார் ஜெங் காவ். கோவை ஆனைமலையில் ஒளிரும் காளான் - இரவில் பச்சை நிறத்தில் ஒளிர்வது ஏன்?14 மே 2025 உணவுகளை அளவுக்கு மீறி பதப்படுத்தினால் உயிருக்கே ஆபத்தா? எந்த அளவுக்கு பதப்படுத்தலாம்?6 மே 2025 LFBots பற்றி நிலவும் மற்றொரு கருத்து பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூப்பர்நோவா வெடிப்பு மற்றொரு கருத்து என்னவெனில், LFBots என்பவை உண்மையில் வுல்ஃப்-ரேயெட் (Wolf-Rayet) எனப்படும் ராட்சத நட்சத்திரங்களின் ஒரு வகை. அவை நமது சூரியனோடு ஒப்பிடும்போது 10 முதல் 100 மடங்கு குறைவான நிறையுள்ள சிறிய கருந்துளைகள் மூலம் உடைக்கப்படுகின்றன. நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தத்துவார்த்த வானியற்பியல் வல்லுநரான பிரையன் மெட்ஸ்கர் இந்த யோசனையை ஆதரிப்பவர்களில் ஒருவர். இவை உருவாகும் விதம், ஈர்ப்பு அலைகளை உண்டாக்கி கண்டறியப்பட்ட ஜோடி கருந்துளைகள் உருவாகும் முறைக்கு ஓரளவு ஒத்ததாக இருக்கலாம். ஆனால் இங்குள்ள முக்கிய வித்தியாசம் என்னவெனில், இதில் பல நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றுதான் கருந்துளையாக மாறுகிறது. இடைநிலை நிறை கருந்துளைகள் பற்றிய கோட்பாடு தற்போதைய நிலையில் மிகவும் கவர்ச்சிகரமாகவும், விரும்பத்தக்க கருத்தாகவும் இருக்கலாம். இது உண்மையாக இருந்தால், LFBots நமக்கு மர்மமான நடுத்தர அளவிலான கருந்துளைகளை ஆய்வு செய்யும் ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருக்கும். பிரபஞ்சத்தில் இடைநிலை நிறை கருந்துளைகள் இருப்பதாக வானியலாளர்கள் பெரும்பாலும் நம்புகின்றனர். ஆனால் அவற்றுக்கான உறுதியான ஆதாரம் இதுவரை எவராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவை மிகவும் முக்கியமானவையாக இருக்கலாம், ஏனெனில் இவை அண்டத்தில் உள்ள சிறிய கருந்துளைகளுக்கும், நமது விண்மீனின் மையத்தில் உள்ள பெரிய கருந்துளைகளுக்கும் இடையில் காணாமல் போன இணைப்பாகச் செயல்படுகின்றன. LFBots மூலம் இடைநிலை நிறை கருந்துளைகள் எங்கே இருக்கின்றன மற்றும் அவை எவ்வளவு பரவலாக உள்ளன என்பதை அறிய முடியும். "இடைநிலை நிறை கருந்துளையின் மாதிரி மிகவும் சுவாரஸ்யமானது" என்கிறார் பெர்லி. "இடைநிலை நிறை கருந்துளைகள் உண்மையில் உள்ளதா என்பது ஒருவித விவாதமாகவே உள்ளது. இதற்கு ஆதாரங்கள் இன்னும் வரையறுக்கப்படவில்லை." LFBots என்றால் உண்மையில் என்ன என்பதை உறுதியாக அறிய, அவற்றின் மாதிரிகள் அதிக எண்ணிக்கையில் நமக்குத் தேவை. "துரதிர்ஷ்டவசமாக, அவை மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன," என்று பெர்லி கூறுகிறார். "அவற்றில் குறைந்தது 100 மாதிரிகள் குறித்த தரவுகள் கிடைத்தால், அது எங்களுக்கான அடுத்த முக்கியப் படியாக இருக்கும்," என்றும் அவர் கூறுகிறார். அடுத்த ஆண்டு இஸ்ரேலிய சுற்றுப்பாதை தொலைநோக்கி அல்ட்ராசாட் (அல்ட்ரா வயலட் டிரான்சியன்ட் வானியல் செயற்கைக்கோள்) ஏவப்பட உள்ளதால், தோராயமாக நூறு மாதிரிகளின் தரவுகள் கிடைக்கக்கூடும். தொலைநோக்கியின் பார்வை பரப்பளவு 204 சதுர டிகிரியாக இருக்கும். இது ஒரே நேரத்தில் 1,000 முழு நிலவுகளைப் பார்ப்பதற்குச் சமம். எனவே, இது விண்வெளியில் நடைபெறும் பிற நிகழ்வுகளுடன் சேர்த்து, மேலும் பல LFBots வெடிப்புகளைக் கண்டறியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (JWST) போன்ற தொலைநோக்கிகளால், LFBot வெடிப்பு பிரகாசமாகும் தருணத்தில் அதன் திசையில் கவனம் செலுத்த முடிந்தால், அந்த நிகழ்வைப் பற்றிய மேலதிக தகவல்களைச் சேகரிக்க உதவக்கூடும். "ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (JWST) இதற்காக மிகச் சிறந்ததொரு கருவியாக இருக்கும்," என்கிறார் மெட்ஸ்கர். ஆனால், இதுபோன்ற அவதானிப்புகளைச் செய்ய நேரம் கிடைப்பது சுலபமல்ல. "நான் இருமுறை முயன்றேன், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை, இந்த ஆண்டில் மீண்டும் முயலப் போகிறேன்" என்று ஹோ கூறுகிறார். கூடுதல் தரவுகள் கிடைக்கும் வரை, இந்த விசித்திரமான வெடிப்புகள் பற்றிய மர்மம் தொடரும். LFBots யாரும் எதிர்பார்த்ததைவிட மிகவும் அசாதாரணமானது என்பது தெளிவாகிறது. "இதுவொரு சுவாரஸ்யமான, ஒருமுறை நிகழும் சம்பவம் என நினைத்திருந்தேன். ஆனால் இது முற்றிலும் வேறு வகையான நிகழ்வாக மாறியது. மேலும் இவை நாளுக்கு நாள் இன்னும் சுவாரஸ்யமானதாகவே மாறிகொண்டிருக்கின்றன," என்கிறார் பெர்லி. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdr531z8md3o1 point- நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
திமுக மகனுக்கு எம்பி சீட் கொடுத்து வென்றும் விட்டார். கட்சியில் பழைய பெரும்புள்ளிகள் எல்லோரும் போய் சேர்ந்து விட்டார்கள், அல்லது போய்விட்டார்கள். இருக்கும் ஒரே ஆள் மல்லை சத்யா - அவருடன் துரை பகிரங்கமாக மோதி வைகோ இருவரையும் சமாதானம் செய்தார். 82 வயதாகிறது - பழைய கம்பீரம் அடியோடு போய்விட்டது. அடிக்கடி கோபம் வருகிறது. வார்த்தை தவறுகிறது. ஓய்வு கட்டாயம். வைகோவுக்கு பின் கட்சியை துரை மீண்டும் திமுகவில் சேர்க்கலாம். லெட்டர்பாட் செலவாவது மிஞ்சும். இப்போதே செய்யாலம் - ஆனால் வைகோ பிரிந்த நேரம் உயிர்நீர்த்தோர் நினைவு அதை தடுக்கும். வைகோ இறந்தபின் அப்படி ஒரு நெருடலும் இராது. திமுக திட்டமிட்டு காயடித்த ஒரு அருமையான ஆளுமை வைகோ. அவரின் அரசியல் தகிடுதத்தங்களும் வீழ்ச்சிக்கு துணை போயின. அரசியலில் தரவுகளை விரல் நுனியில் வைத்து கொண்டு, அரங்கத்தை கட்டிபோடும் பேச்சாற்றல் கொண்டிருப்பது மட்டும் தலைவனாக வெல்ல போதுமானதாக இராது, துண்டு சீட்டை வைத்து பேசும் ஆட்களிடம் கூட தோற்று போக வேண்டி வரும் என்பதன் வாழும் உதாரணம் வைகோ. அமெரிக்காவில் அல் கோரை the President we never had என்பார்கள். அதேபோல் தமிழ் நாட்டில் வைகோ the CM they never had. ஈழத்தமிழரின் நன்றி வைகோவுக்கு எப்போதும் உண்டு.1 point- வவுனியாவில் விபத்து; கணவன் பலி; மனைவி, மகன், மாமனார் படுகாயம்
இலங்கையில் நாளாந்தம் பலர் விபத்துகளில் கொல்லப்படுகின்றனர். அதில் அரைவாசிக்கும் மேல் சாரதி நித்திரையாகி விடுவதால் நிகழ்கின்றது. அண்மையில் இடம்பெற்ற இ.போ.ச வண்டியின் கோர விபத்துக்கும் சாரதி நித்திரையாகிப் போனதே காரணம் என கண்டறிந்துள்ளனர். அதிகாலையில் வாகனத்தை செலுத்த வேண்டி வரும் எனில், அதற்கு முன்னர் நல்ல ஓய்வை எடுத்து இருக்க வேண்டும். 7 மணித்தியாலங்களாவது நித்திரை கொண்டு இருக்க வேண்டும். நான் நீண்ட தூரத்துக்கு வாகனம் செலுத்த வேண்டி வரும் போது, இடையில் நித்திரை வருகின்ற மாதிரி இருந்தால் உடனே அருகில் இருக்கும் Parking Area விற்கு இடத்துக்கு சென்று 15 நிமிடங்களாவது Nap எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.