Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    31956
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46783
    Posts
  3. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    10206
    Posts
  4. Sasi_varnam

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    2165
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/05/25 in all areas

  1. முதல் காட்சி படம் பார்த்தாச்சு... படம் செம மொக்கையா இருக்கு. எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு கமல், மணிரத்னம், ரஹ்மான், சிம்பு, திரிஷா... இந்த பட்டியல் கூட்டணியோடு வரும் படமாக இருப்பதால், பேசப்படும் படமாக இருக்கும் என்ற நினைப்பில் தான் போனேன். படத்தை சிம்பு மட்டுமே தூக்கி பிடித்து இருக்கிறார். வேறு பிரமாதமாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. திரைக்கதை - அப்படி எதுவும் இருந்ததாக தெரியவில்லை. பின்னணி இசை - ரஹ்மான் இந்த படத்தில் வேலை செய்தாரா என்று நினைக்க தோணுகிறது. பாடல்கள் - ஆடியோவில் கேட்ட எதுவும் திரையில் சோபிக்கவில்லை. முக்கிய பாடல் "முத்த மலை" படத்திலேயே இல்லை. விண்வெளி நாயகா ... வயலில் களைபிடுங்கும் போது ஒரு பாடலாக வருகிறது... பால் டபா பாடிய மாறா பாட்டு ஒரு சண்டை காட்சிக்கு BGM ஆகா போட்டு தொலைத்து இருக்கிறார்கள். திரிஷா 2 ஆண்களால் அவர்கள் இச்சைக்கு தொட்டுக்கொள்ள பயன்படும் பிச்சையாக இருக்கார். பார்த்து பார்த்து எடிட் செய்து வெளியிடப்பட்ட படமாக தோணவில்லை. சீரியஸ் வசனங்கள் கமல் பேசும் போது தியேட்டரில் சிரிப்பு சத்தம் தான் கேட்டது... "கமல் சொல்ல என்ன இருக்கு .... நீ திரிஷா ஹூக்கை கலட்டு..." கன்னடா ரசிகர் காசு தப்பியது, அப்பாவி கனடாகாரன் மாட்டிக்கிட்டான்.
  2. யாழ் மருத்துவமனை குருதிப்பெருக்கின் மத்தியில் ஒரு கலங்கரை விளக்கம் - யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம் Published By: RAJEEBAN 04 JUN, 2025 | 04:33 PM A beacon amidst the bleeding: What Jaffna’s doctors taught me about life — Abbi Kanthasamy malay mail எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் பொருட்களை தேடுவதில் செலவிட்டுள்ளேன். வணிகம் பிராண்ட்கள் வீடுகள் வாக்குவாதங்கள் - எப்போதும் எதனையாவது துரத்துவது, துரத்திக்கொண்டேயிருப்பது. அடுத்த இலக்கு அடுத்த ஒப்பந்தம் மைல்கற்கள் இலாபங்களை வைத்து மதிப்பிடும் இந்த உலகில். ஆனால் கடந்தவாரம் இலங்கையின் வடபகுதியில் உள்ள சிறிய மருத்துவனையொன்றில் எனது தாயார் உயிருக்காக போராடுவதை பார்த்தபின்னர் எனக்கு ஒரு விடயம் நினைவிற்கு வந்தது - எல்லா வீரர்களும் கதாநாயர்களும் எப்போதும் எதனையும் துரத்திக்கொண்டிருப்பவர்கள் இல்லை எதன் பின்னாலும் ஓடிக்கொண்டிருப்பவர்கள் இல்லை. அது குமுழமுனையில் ஆரம்பமானது. மாரடைப்பு, உண்மையானது அமைதியானது ஆனால் கடும் ஆபத்தானது. நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எனது தாயார் முழுமையான அடைப்பினால் பாதிக்கப்பட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். வலது தமனியில் கிட்டத்தட்ட 99 வீத அடைப்பு காணப்பட்டது. அவர் பல நாட்களாக ஆபத்தான நிலையைநோக்கி அமைதியாக சென்றுகொண்டிருந்தார். மருத்துவ நூல்களில் - புத்தகங்களில் தெரிவிக்கப்படும் அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. ஒரு ஆபத்தான பாறையின் நுனியை நோக்கி அமைதியான பயணம். முல்லைத்தீவு மருத்துவமனையின் வைத்தியர்கள் குழுவினர் வேகமாகவும் உறுதியாகவும் செயற்பட்டனர். அவர்கள் ஒரு த்ரோம்பொலிடிக்கை அம்மாவிற்கு செலுத்தினர். நாங்கள் இதனை இரத்த ஓட்டத்தை தடுக்கும் இரத்த கட்டிகளை கரைக்க உடைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் என இதனை அழைப்போம். அம்மாவிற்கு தேவையாகயிருந்த மிகவும் விலைமதிப்பற்ற் நேரத்தை முல்லைத்தீவு மருத்துவர்கள் வழங்கினார்கள். பின்னர் அம்மாவை யாழ்ப்பாண மருத்துவமனைக்கு மாற்றினார்கள்.அங்கு போதுமான கையுறைகள் கூட இல்லாத மருத்துவர்கள் மற்றும் தாதிமார் குழுவினர் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட அம்மாவிற்கு அஞ்சியோபிளாஸ்டி சத்திரசிகிச்சையை செய்தனர். ஒரு ஸ்டெண்டை வைத்து உயிரை காப்பாற்றினார்கள். அவர்களின் வாயிலிருந்து 'மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம்" என்ற வார்த்தையை ஒரு தடவை கூடநான் கேட்கவில்லை. அந்த மருத்துவர்களின் திறமை குறித்து ஒருமுறை கூட எனக்கு சந்தேகம் எழவில்லை. எனக்கு கடும் ஆச்சரியத்தை அளித்த விடயம் இதுதான் - கடந்த மூன்றுவருட காலப்பகுதியில் இரண்டாயிரம் மருத்துவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் பிரிட்டன், அவுஸ்திரேலியா மத்திய கிழக்கிற்கு சென்றுவிட்டனர். சிறந்த ஊதியத்தை வழங்கும் சிறந்த நேரத்தை வழங்கும் சிறந்த விடயங்கள் அனைத்தையும் வழங்கும் எல்லா இடங்களிற்கும் அவர்கள் சென்றுவிட்டனர். இலங்கையிலிருந்து வெளியேறாமலிருந்த மருத்துவர்கள் - பிடிவாதக்காரர்கள் சுயநலமற்றவர்கள் - ஊதியம் சலுகைகளை விட குறிக்கோளிற்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள். நான் அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிட்டேன். அவர்கள் தங்கள் பணிகளை இடைநிறுத்தாமல் ஆரவாரம் இல்லாமல் புகார் சொல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தனர். ஒரு இருதயநோய் நிபுணர் ஒருவர் ஒரு நோயாளிக்கு (முதியவர்) அருள்பாலிக்கும் நினைப்பு எதுவுமின்றி சரளமாக தமிழிலில் விளங்கப்படுத்திக்கொண்டிருந்ததை பார்த்தேன். ஒரு மருத்துவதாதியொருவர் தனது சொந்த குழந்தையை போல தலையணையை கவனமாக சரிசெய்வதை பார்த்தேன். குணப்படுத்துதலில் அவர்கள் மகிழ்ச்சியடைவதை பார்த்தேன். உண்மையான மகிழ்ச்சி. நான் ஒன்றை உணர்ந்தேன் - இந்த மக்கள் எங்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். நோக்கத்திலேயே அமைதி உள்ளது நோக்கமே அமைதியை ஏற்படுத்துகின்றது. எண்ணிக்கையில் காணமுடியாத செல்வம் ஆனால் கௌரவத்தில் காணக்கூடிய செல்வம். அது இங்கு தாரளமாக கிடைக்கின்றது. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் எனது தாயார் கனடாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உயர் இரத்த அழுத்தம் கவலையளிக்கும் அறிகுறிகள். ஆனால் நெறிமுறைகள் மற்றும் அதிகளவான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் சுகாதார கட்டமைப்பு எனது தாயார் மாரடைப்பினால் பாதிக்கப்படலாம் என்பதை தவறவிட்டுவிட்டது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள அரசமருத்துவமனை ஆபத்தை உடனடியாக இனம் கண்டு ஒரு சத்திரசிகிச்சையின்; துல்லியத்துடன் சிகிச்சையளித்தது. https://www.virakesari.lk/article/216581
  3. படம் பார்த்து நொந்து நூலாகிப் போன சசி வர்ணம், அடுத்து படம் பார்த்து வந்து விம்மி விம்மி அழப் போகும் கிருபன் போன்றோருக்கும் ஒரு ஆறுதலாக இருக்க ஏதோ என்னால் முடிந்தது,
  4. இப்படியான செயல்களை நவநாகரீக மேற்குலகத்தினர் சர்வ சாதாரணமாகத்தானே செய்கின்றனர்? அங்கே தலை வெட்டோ அல்லது கைகால் முறிப்புகளே இல்லை. ஒருவருக்கு பிடிக்கவில்லை இல்லையே ஒத்து போகவில்லை என்றால் விலகி போகின்றார்கள். மறு வாழ்வை,மறு துணையை தேடுகின்றார்கள். துணைவிக்கு தன்னை பிடிக்கவில்லை. இன்னோருவருடன் தொடர்பு என்றால் தலையெடுப்பது தீர்வல்ல.அது காட்டுமிராண்டித்தனம் என்பது என் கருத்து.
  5. இப்போது வடக்கில் எங்கு(நீண்ட தூரங்களில்) ஆபத்தான நிலையில் நோயாளிகள் இருந்தாலும் யாழ் போதனா வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகிறார்கள். நீண்டகால நோக்கில் மாங்குளம் பகுதியில் சகல வசதிகளுடன் மற்றும் பிரிவுகளுடன் கூடிய வடமாகாணத்துக்கான பெரிய ஒரு மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும். இது வன்னிப்பிரதேச அபிவிருத்தியின் அடிநாதமாக இருக்கும். இது எதிர்கால யாழ்ப்பாணத்திற்குள்ளே மக்களின் வாழ்விட நெருக்கடிகளை குறைக்கலாம் என்பது எனது கருத்து. அத்தோடு காலநிலை மாற்றங்களால்(துருவப்பனிக்கட்டிகள் வேகமாக உருகி கடல்மட்டம் உயரும்போது) யாழ்ப்பாணம் கடலால் மூழ்கடிக்கப்படும்போது எமக்கு கைகொடுக்கும்.
  6. மாம்பழத்தை ஏலம் எடுக்க குடுத்த காசை ஏதாவது சிறு பிள்ளைகளை முதியவர்களை பராமரிக்கும் இல்லங்களுக்கு குடுத்திருக்கலாம்.
  7. மேற்படி கொலைச் சம்பவம் நேற்று சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. ஆனால் பெரும் பாலான மக்களின் பின்னூட்டங்களில் இந்த மோசமான வன்முறை கலாச்சாரத்தை கண்டிக்காமல் நியாயப்படுத்தி எழுதி இருந்ததை காணக்கூடியமதாக இருந்தது. சிலர் குற்றசெயல் என்பதன் வீரியத்தை குறைத்து குடும்ப ஆலோசனை கருத்துகளை/ ஒருவனுக்கு ஒருவன் தமிழ் கலாச்சார பெருமைகளை தெரிவித்திருந்தனர். கணவனுக்கு துரோகம் நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று கூட சில கருத்துக்கள் வந்திருந்தன. துரோகத்தின் வலியை விட கொலை பெரிதல்ல என்று கூட கொலை செய்தவருக்கு ஆதரவான கருத்து ஒன்று வந்திருந்தது . அவற்றை வாசித்த போது எமது சமூகம் மூடப்பட்ட தலிபான் மனநிலையில் வாழ்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு திரியில் @goshan_che கூட இதையே தெரிவித்திருந்தார். நடந்தது உணர்சசி வசப்பட்ட படு மோசமான கொலை. எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாத ஒரு விடயம்ஆனால் இதை நியாயப்படுத்தும் பின்னூட்டங்களை என்னெ கூறுவது? இவற்றை வாசிக்கும் சிறுவர்/ சிறுமியர் கூட இப்படியான கொலைகளை ஏற்றுக்கொள்ளும் , இதை முன்மாதிரியாக கொள்ளும் மனநிலையை இது ஏற்படுத்தாதா?
  8. இந்தக் கொலை மூலம் தனது மனைவி இன்னொரு ஆணுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்பதை உலகம் முழுவதும் பறைசாற்றியுள்ளார். இப்போது அந்தத் தன்மானம் எங்கே போனது ? இன்று போட்டோக்களைச் செயற்கை நுண்ணறிவு மூலம் இலகுவாக உருவாக்கிக் கொள்ளலாம். இறந்தவரின் கருவின் டிஎன்ஏ அப்குப்பாய்வு மூலம் இக் குழந்தை கணவரினுடையது தான் என்று நிரூபித்தால் மனைவிக்கு உயிர் கொடுக்க முடியுமா ? கோபத்தில் நிலைகுலைந்து ஒரு கொலை செய்வது வேறு. தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போகுமளவுக்குக் குரூரமான இந்தத் தன்மானத்தான் ஒரு மிருகமே.
  9. அது மட்டுமின்றி Usaid மூலம் வறிய நாடுகளுக்குக் கிடைத்த உதவிகளும் 90 வீதம் நிறுத்தப்பட்டுள்ளது. பூமி மாசுபடுதல், வெப்பமாகுதலுக்கு எதிரான வேலைத்திட்டங்களுக்கும் டிரம்ப் அவர்கள் முட்டுக்க்கட்டை போட்டுள்ளார். வரி அதிகரிப்பினால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள அபிவிருத்தித் தேங்கல் பற்றிச் சொல்லவே வேண்டாம். டிரம்ப் ஆட்சி வந்தால் உலகத்துக்கே நல்லது என்று எங்கோ எதிரொலி கேட்கிறது. 😂
  10. அவர்களின் வளங்களை சுரண்டி அவர்களை பிச்சைக்கார நாடாக மாற்றியதே இவர்கள்தானே!
  11. நீங்கள் சொல்வது போல் யாராவது எதற்காவது உதவுவோம் என்று பேச முற்பட்டாலும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் (சத்தியமுர்த்தியர்)மற்றவர்களின் முகத்தை முறிப்பது போல் தான் நடந்து கொள்கிறார்.தனக்கு வேண்டப்பட்டவர்கள் யாராவது அங்கிள் அது, இது என்று சொன்னால் அவர்களுக்கு பதில் கொடுக்கிறார்.அதே நேரம் உண்மையாக ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று எழுதினால் அதற்கு பதில் தரப்படுவது இல்லை.முக்கியமாக ஏதும் கேட்டால் , சொன்னால் அந்த வைத்தியருக்கு பிடிப்பதில்லை.ஆனால் ஒரு விடையம் செய்திருக்கிறார்கள்.வார்ட்டுகளுக்கு கேர்ட்டின் போட்டால் நன்று என்பதை சுட்டிக் காட்டியதும் அதை செய்திருக்கிறார்கள்.
  12. காயப்பட்டவனுக்குத்தான் அதன் வலி தெரியும். திருமண உறவு முறிக்கப்படாத நிலையில் இன்னொரு ஆணிடம் சோரம்போனது சரியா? உன்னுடைய மனைவி என்னுடன் படுத்து எனக்கு பிள்ளை பெறப்பேகிறாள் என்று ஆதாரத்துடன் அந்தக் கயவன் படங்களை அனுப்பினால் ஒரு தன்மானமுள்ள ஆணின் ஆன்மா உடைந்து உலுங்கிகிப்போய்விடாதா? அந்தக் கணமே அவன் செத்துப்போய்விடுகின்றான். தரையில் குனிந்து எழுதிக்கொண்டிருக்க அவனொன்றும் இயேசுநாதரல்ல.
  13. பாடப்புத்தக அறிவை விட சமூக அறிவூட்டல் வேண்டும் என நினைக்கிறேன். ஒத்துவரவில்லையா, கணவன் மீதோ மனைவி மீதோ சந்தேகமா நேரடியாகவே இருவரும் பேசி இன்ன காரணத்திற்காக உன்னைப் பிரிகிறேன் என்று தெளிவுபடுத்தி விவாகரத்து வாங்கி புதிய வாழ்க்கையை தொடங்கலாம். கொலையோ தற்கொலையோ தீர்வாகாது.
  14. முருகனும் பிள்ளையாரும் மாம்பழத்ததுக்கு தம்முள் சண்டையிட்ட போது சிவன் பேசாமல் ஏலத்துக்கு விட்டு யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவருக்கு பாம்பழம் என்று விட்டிருக்கலாம்.😂
  15. ‘நாயகன்’ என்ற ஒரு க்ளாசிக் படம் வெளியாகி சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பே இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளறிவிட்டது. பிறகு டைட்டில் டீசர், ட்ரெய்லர், சமூக வலைதளங்களில் ஹிட் அடித்த பாடல்கள் என இப்படத்துக்கு பெரிய ஓபனிங்கை கொடுத்தது. இந்த பெரும் எதிர்பார்ப்பை கமல் - மணிரத்னம் கூட்டணி பூர்த்தி செய்துள்ளதா? டெல்லியில் கேங்ஸ்டராக இருக்கும் ரங்கராய சக்திவேலுக்கும் (கமல்ஹாசன்), போலீஸுக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் பேப்பர் போடும் ஒருவர் தவறுதலாக சுடப்பட்டு இறக்கிறார். இதனால் அவரது மகனான சிறுவன் அமரன் (சிலம்பரசன்) ஆதரவின்றி நிற்கிறார். அவருடைய தங்கை சந்திராவும் காணாமல் போகிறார். பின்னர் அமரனை தத்தெடுத்து தன் சொந்த மகன் போல வளர்க்கிறார். தன் அண்ணன் மாணிக்கத்தின் (நாசர்) மகளின் தற்கொலைக்கு காரணமானவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்கிறார் சக்திவேல். இதனால் தன்னுடைய பொறுப்புகளை (?) அமரனிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறார். ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன பிறகு தன்னை விட மற்றவர்கள் அமரனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சக்திவேலுக்கு நெருடுகிறது. தன் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதலுக்கும் கூட அமரன் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார். இது இருவருக்கும் இடையே மோதலை உருவாக்குகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பதே ‘தக் லைஃப்’ படத்தின் திரைக்கதை. (படத்தில் இடம்பெறும் சிறிய ஸ்பாய்லர்கள் இதில் அலசப்பட்டுள்ளதால் படம் பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்ளவும்.) சில நேரம் நாம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செல்லும் படங்கள் நம்மை மிகுந்த ஆச்சர்யத்துக்குள்ளாக்கி நமக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விடும். வேறு சில படங்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் செல்லும் பார்வையாளர்களை ஏமாற்றி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதில் ‘தக் லைஃப்’ இரண்டாவது வகை. காரணம், கமல்ஹாசன் - மணிரத்னம் என்ற இந்திய சினிமாவின் இரு பெரும் ஆளுமைகள் இப்படத்தில் இருந்தும் இப்படத்தை ஓரளவுக்கு கூட பார்வையாளர்கள் ரசிக்கும்படி கொடுக்க முடியாமல் போனது பேரதிர்ச்சி. படம் ஒரு ஃப்ளாஷ்பேக் உடன் தொடங்குகிறது. படத்தின் ஒரு சில நல்ல அம்சங்களில் இந்தக் காட்சியும் ஒன்று. கமலுக்கான டீஏஜிங் தொழில்நுட்பம் அசத்தலான ஆச்சர்யம். இதற்கு முன்பு வந்த படங்களில் இல்லாத நேர்த்தியும், துல்லியமும் இதில் இருந்தது. இளவயது சிம்புவுக்கும் கமலுக்கும் இடையிலான காட்சிகளும், பின்னணியில் ஒலிக்கும் ‘அஞ்சுவண்ண பூவே’ பாடலும் நன்று. ஆனால், இதன்பிறகு சமகாலத்துக்குப் படம் வந்ததும் திரைக்கதை எந்தவித சுவாரஸ்யமும் இன்றி தட்டையாக நகரத் தொடங்குகிறது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. மணிரத்னம் படங்கள் என்றாலே வசனங்கள் மூலமாக கதையை சுவாரஸ்யமாக நகர்த்துவதில் வல்லவர் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் அறிவர். ஆனால், அதற்காக ‘போதும் போதும்’ என்று சொல்லும் அளவுக்கு எல்லா காட்சியையுமே வசனத்திலேயே நகர்த்தி இருக்கிறார். கமலுக்கும் சிம்புவுக்குமான பிணைப்பு, அதன் பிறகு இருவருக்குள்ளும் எழும் சின்ன ஈகோ, சிம்பு மீது கமலுக்கு ஏற்படும் பொறாமை, நாசருக்கும் கமலுக்கும் அப்படி என்ன பகை என எந்த காட்சியிலும் அழுத்தமோ, மெனக்கெடலோ இல்லை. போகிற போக்கில் வசனத்திலேயே அவரவர் தங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினையை சொல்லிவிட்டு போகிறார்கள். த்ரிஷா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. த்ரிஷா வீட்டில் இருந்து கமல் தன் வீட்டுக்குச் செல்லும் ஒரு காட்சியில் முகத்தில் வெறுப்பை காட்டுகிறார் த்ரிஷா. அதன் பிறகு இரண்டாம் பாதி முழுக்க கமலை நினைத்து உருகுகிறார். உண்மையில் அந்த கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன, அவர் யார் என எதிலும் தெளிவில்லை. இதே கதைதான் அபிராமி - கமல் இடையிலும். கணவன் இன்னொரு பெண்ணுடன் இருந்துவிட்டு வந்து கொஞ்சம் எமோஷனலாக பேசியதுமே விழுந்து விடுகிறார் அபிராமி. திடீரென சம்பந்தமே இல்லாமல் நேபாளம் செல்கிறார் கமல். அங்கு இடைவேளை வைக்கவேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்ட ஒரு காட்சி. அடிபட்டு, குண்டடி வாங்கி, மலையிலிருந்து கீழே விழுந்து எதுவுமே ஆகாமல் மீண்டும் விழுந்து, பனிப்புயலில் இருந்து தப்பித்து… உஸ்ஸ்ஸ் என்று ஆகி விடுகிறது. ஒருகணம் நாம் பார்த்துக் கொண்டிருப்பது மணிரத்னம் படம்தானா என்ற சந்தேகமும் பல இடங்களில் சற்று அதிகமாகவே வருகிறது. நேபாளத்தில் இரண்டு வருடம் கமல் தற்காப்புக் கலைகள் கற்றுக் கொள்வதாக காட்டுகிறார்கள். (அதுவும் வசனத்திலேயே வந்துவிடுகிறது) அதற்காக போகும் இடங்களுக்கு எல்லாம் அந்த தற்காப்பு உடையையே அணிந்துதான் செல்ல வேண்டுமா? முதல் பாதியில் ரங்கராய சக்திவேலாக இருந்த கமல், இரண்டாம் பாதியில் ‘இந்தியன்’ தாத்தா மோடுக்கு மாறிவிடுகிறார். படத்தில் இருந்த வெகுசில நல்ல காட்சிகளில் ஒன்றாக கமலும் ஐஸ்வர்யா லட்சுமியும் பேசிக் கொள்ளும் காட்சியை சொல்லலாம். ஒரு படத்தின் திரைக்கதை சொதப்பிவிட்டால், அதில் இடம்பெறும் நல்ல விஷயங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் போய்விடும் என்பதற்கு இந்தப் படமே சரியான உதாரணம். கமலின் நடிப்பு, சிம்புவின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், ரஹ்மானின் பாடல்கள், ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு என பாசிட்டிவ் அம்சங்கள் இருந்தும் இவை எதுவும் நம்மை படத்துக்குள் இழுக்கவில்லை. இந்தப் படத்தில் எதற்காக ஜோஜு ஜார்ஜ், ‘மிர்சாபூர்’ அலி ஃபஸல், அசோக் செல்வன், சேத்தன் போன்ற நல்ல நடிகர்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை. வழக்கமாக நன்றாக சென்று கொண்டிருக்கும் படத்தில் பாடல்கள் ஸ்பீடு பிரேக்கர்களாக வருகின்றன என்று சொல்வோம். ஆனால், இங்கு ஏற்கெனவே தொங்கி துவண்டு போயிருக்கும் படத்தில் ஆங்காங்கே வரும் பாடல்கள்தான் சற்று நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ‘ஜிங்குச்சா’, ‘அஞ்சுவண்ணப் பூவே’ பாடல்கள் சிறப்பு. சின்மயி வெர்ஷனா, தீ வெர்ஷனா என்ற ரசிகர்கள் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்த நிலையில், உங்களுக்கு இந்த இரண்டு பாடலுமே கிடையாது என்று அதை தூக்கி கடாசியிருக்கிறார் இயக்குநர். மற்றொரு வைரல் பாடலான ‘விண்வெளி நாயகா’ பாடலும் வீணடிக்கப்பட்டிருக்கிறது. முன்பே குறிப்பிட்டத்தை போல கமல் - மணிரத்னம் என்ற இருபெரும் ஆளுமைகள் இருந்தும் கூட இப்படத்தை காப்பாற்ற முடியாமல் போனது சோகம். ‘க்ளாசிக்’ அந்தஸ்தை பெற்றுவிட்ட ‘நாயகன்’ அளவுக்கு இல்லையென்றாலும் கூட ஓரளவு ஜனரஞ்சகமான முறையில் ரசிகர்களை திருப்திபடுத்தி இருந்தால் படத்துக்கு செய்த பிரம்மாண்ட விளம்பரங்களுக்கு நியாயம் கிடைத்திருக்கும். ‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா? | Thug Life Movie Review - hindutamil.in
  16. Published By: VISHNU 05 JUN, 2025 | 07:53 PM உலக சுற்றாடல் தினமான வியாழக்கிழமை (05) சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka செயலகம் ஆகியவை இணைந்து செயல்படுத்தியுள்ளன. இந்த குப்பைத் தொட்டிகள் உக்கும் பொருட்கள் மற்றும் பொலிதீனை தனித்தனியாக இடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிபெட்கோ முதல் கட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 150 பீப்பாய்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் தேவைக்கேற்ப குப்பை மற்றும் பொலிதீனை இடக்கூடிய பீப்பாய்களை வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர் இசுரு அநுராத மற்றும் Clean Sri Lanka செயலகம் மற்றும் சிபெட்கோ அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து, முத்துராஜவெல பகுதியில் இன்று (05) மரம் நடுகை நிகழ்வொன்றையும் நடைமுறைப்படுத்தியது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே.ஏ.எஸ். ராஜகருணா, முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயுர நெத்திகுமாரகே, பதில் பிரதிப் பொது முகாமையாளர் சமந்த குணவர்தன, உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் Clean Sri Lanka செயலகத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/216723
  17. 05 Jun, 2025 | 12:17 PM ஈ.பி.டி.பி. உடனோ அல்லது பேரினவாத சக்திகளோடு புதிய கட்டமைப்பின் அனுமதியின்றி யாராவது பேசவோ செயற்படவோ முனைந்தால் அவர்கள் தாமாகவே வெளியேறலாம் அல்லது விலக்கப்படுவார்கள் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய பேரவை சுயாதீனமாகவும் இயங்கும். நாற்காலிகளை அலங்கரிப்பது நோக்கமல்ல. சித்தார்த்தன் டக்ளஸை அணுகியது எம்முடன் கூட்டில் உள்ள எவருக்கும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈ.பி.டி.பி. உடனோ பேரினவாத சக்திகளோடு பேச முற்படுபவர்கள் தாமாக வெளியேறலாம் அல்லது புதிய கட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் - கஜேந்திரகுமார் | Virakesari.lk
  18. வெளிநாட்டிலை இருந்து தங்கடை ஊர் திருவிழாவுக்கு போறவையள் அர்ச்சனைக்கு வைச்ச ஒரு மாம்பழத்தை லச்சக்கணக்கிலை காசு குடுத்து ஏலத்திலை எடுக்கினம்.கழுத்திலை தங்கச்சங்கிலி வேற மினுங்குது.....உதுகளை பார்க்கிற அங்கை இருக்கிற சனம் ஐயோ நாங்களும் கனடாவுக்கு லண்டனுக்கு சுவீஸ்க்கு போகப்போறம் எண்டு துடிப்பினம் தானே? 😄 இதுக்குள்ள..... இஞ்சை புலம்பெயர் நாடுகளிலை இருக்கிறவையள் கடவுளே இஞ்சை ஒருத்தரும் வராதேங்கோ.....இஞ்சை சரியான கஷ்டம்...நிம்மதியில்லாத வாழ்க்கை எண்ட புலம்பல் வேற....😂
  19. உங்கள் அபிப்பிராயத்திற்கு நன்றி அண்ணா. அரசியல் எனக்கு சரிவராது அண்ணை. உடல்நிலை அதற்கு ஒத்து வராது. எனது எண்ணங்களை பொருத்தமான வகையில் வெளிப்படுத்தி சரியான இடங்களிற்கு தெரியப்படுத்த முயல்கிறேன். தனியார் மருத்துவமனைகள் நியாயமான கட்டணத்தில் தரமான மருத்துவத்தை வழங்கினால் மேற்கு நாடுகளில் தாமதமாகும் மருத்துவ சிகிச்சைகளை இங்கே பெற்று பயனடையலாம். இன்று நண்பர்களுடன் கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் சிசேரியன் மூலமான பிரசவத்திற்கு கோழிகுறஸ் மருத்துவமனையில் 3.5 லட்ச ரூபா வாங்கியுள்ளார்கள். இணுவிலில் உள்ள தனியார் மருத்துவமனை சுகப்பிரசவத்திற்கு 5 லட்ச ரூபா வாங்கியுள்ளார்கள். அரச மருத்துவமனையை ஏன் நாடவில்லை என வினவியபோது அங்குள்ள தாதியர்களின் அணுகுமுறை தவறாக உள்ளதாகவும், ஒரே நேரத்தில் 5 - 6 அம்மாக்கள் பிரசவத்திற்கு கட்டில்களில் வரிசையாக இருக்க விடப்படுவார்களாம். ஒருத்தரை ஒருத்தர் பார்க்காத வண்ணம் மறைப்பு(தனியுரிமை) இல்லையாம்.
  20. அப்படித்தானே பொதுவாக இருக்கிறது 9 எண்ணுக்கும் வேறு வேறு குணங்கள் எழுதப்பட்டு இருக்கிறது அதுபோலவேதானே அவர்கள் குணாமாசங்களும் இருக்கிறது? ஒரே மாதிரி வாழக்கை இருக்கவேண்டும் என்பதன் பொருள் சரியாக புரியவில்லை அவர் அவர் வாழ்வு அமையும் இடத்திற்கு ஏற்பத்தானே வாழக்கை இருக்கும் அந்த குறிப்பிடட பகுதியில் வாழும் மக்கள் கூடடத்தில் அவர்கள் தமக்கான குணாம்சங்களை கொண்டிருப்பார்கள். பணக்காரர் ஆவார்கள் என்று சொன்னால் எல்லோரும் எலன் மாஸ்க் ஆகுவார்கள் என்று அர்த்தம் ஆகுமா? பெயருக்கான பலன்கள் இராசிபலன் கைச்சாத்திரம் போன்றவை பலவீனமான மனங்களை ஏமாற்றுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் அதில் எண்பது வீதம் என்றாலும் ஏமாற்று வேலை இருப்பதை ஓரளவுக்கு உணர முடியும். ஆனால் இந்த திகதியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை நான் மிக நீண்ட நாட்களாக கவனித்து வருகிறேன் ஓரளவு உண்மை இருக்கிறது அல்லது அதை பொய் என்று நிறுவ கூடிய எதையும் நான் இன்னமும் காணவில்லை. மேல பலர் காலண்டர் முறைமையை கூறி இருக்கிறார்கள் எந்த காலண்டர் இருந்தாலும் பூமி ஒருமுறை சுற்றுவது ஒரு நாள் அதை காலண்டரை வைத்து மறுக்க முடியாது. ஆகவே அந்த குறிப்பிடட தேதி அல்லது நாள் என்பது அது அதுவாகத்தான் இருக்க போகிறது நாம் அடையாள படுத்தும் முறைமை வேண்டுமானால் வேறாக இருக்கலாம். இவற்றில் எனக்கும் பெரிதான நம்பிக்கை இல்லை அனால் குறித்த இராசியில் உள்ள பொது குணாம்சங்கள் குறித்த திகதியில் பிறந்தவர்களின் குணாம்சங்கள் ஒன்றாக இருப்பதை நான் கவனித்து வருகிறேன். அது எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கு இங்கும் யாரும் சரியான பதில் எழுதி அதை பொய் என நிரூபிக்கவில்லை வேறு இடங்களிலும் நான் வாசிக்கவில்லை
  21. செய்திகளின் பிரகாரம் இன்னொருத்தரின் மனைவியுடன் தொடர்புவைத்து பிள்ளையையும் உருவாக்கிவிட்டு, அதை அந்த பெண்ணின் கணவனிடமும் தெரிவித்து இரண்டு உயிர்களின் கொலை வரை செல்வதற்கு வழிவகுத்த 21 வயது நபருக்கு உங்கள் அறிவுரை என்ன? இவருக்கு என்ன தண்டனை? இவர் சமூகத்தின் முன் அறியப்படவேண்டிய தேவை இல்லையா? இவ்வளவும் நடந்த பின்னர் இன்னோர் பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடாத்த போகின்றாரா? இவரது வாக்குமூலம் அறியப்படும்போதே மிகுதி உண்மைகள் புலப்படும்.
  22. போட்டியில் வெற்றியீட்டிய முதல்வர் நந்தனுக்கும் துணை முதல்வர் ரசோதரனுக்கும் வாழ்த்துக்கள். வேலைப்பளுக்களுக்கும் மத்தியில்போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு மிக்க நன்றி.3 மாதங்களும் ஒவ்வொருநாளும் போட்டி முடிவுகளை உடனுக்குடன் அறிவித்து எதிர்பார்ப்பை எகிற வைத்த கிருபன்ஜீயைப் பாராட்ட வாரத்தைகள் இல்லை. போட்டிக்கு உறவுகளை கூவிக்கூவி அழைத்துப் போட்டியயை கலகலப்பாக்கிய பையனுக்கும் பையன் விடுமுறையில் போனபோது புதிதாக இணைந்து போட்டியை தொய்வில்லாமல் கலகலப்பாக்கிய செம்பாட்டானுக்கு வாழ்த்துகள். கிரிக்கட் ஜாம்பவானான பையனுக்கு இந்தப் போட்டியில் பெரும்சறுக்கல் வந்து விட்டது .கொப்பி யடிப்பதற்கு புதிய கிரிக்கட்ஜாம்பவான் செம்பாட்டான் வந்துள்ளார். சென்னைப்பாசம் காரணமாக பல புள்ளிகளை இழந்த விட்டேன்.இனிப் பாசமாவது பந்தமாவது.மேலும் இந்தப் போட்டியில் இணைந்து சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் வாழத்துகளும் நன்றிகளும்.
  23. பார்ரா கடைசி இடத்தைக் கூட தக்க வைத்து கிருபன் வாயால் ஒரு பாராட்டு வாங்க முடியாத பாவியாகிட்டேன்.☹️அடுத்த முறை அது மகளாக இருந்தாலும் கூட்டனி கிடையாது தனத்தவில் தான்.😂மற்றும் நிரந்தர முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள். கிருபனுக்கு எவ்வளவு பாராட்டுக்களை சொன்னாலும் தகாது. வேலைப்பழுக்களின் மத்தியிலும் போட்டியை திறமையாக நடாத்தி முடித்த கிருபனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும் போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.
  24. இப்போ இப்படி எல்லாம் எழுத, சொல்லப் போனால் யாரு தாத்தா ஏற்றுக் கொள்வார்கள்..சொல்லியும், எழுதியும்.இனி வேணாம் என்றே போய் விடுகிறது..
  25. இதை ஒத்த இன்னொரு சம்பவத்துக்கான எம்மவர்களின் பின்னூட்டங்களும், செய்தியை உள்வாங்கிய விதமும் எனக்கும் அண்மையில் கவலையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு தமிழ் இளைஞன் (21 வயது என நினைக்கின்றேன்), நீரில் மூழ்கி இறந்து விட்டார். அந்த செய்தியைக் கேட்டவுடன், அவரது காதலியும் தற்கொலை செய்துவிட்டார். எம்மவர்களின் பின்னூட்டங்களில் 90 சதவீதமானவை, அப் பெண்ணை மிகவும் பாராட்டியும், இது தான் உண்மையான காதல் , காவியக் காதல், புனித காதல், என்றெல்லாம் மெய்சிலிர்த்து இருந்தனர். தாலிபானிசம் என்பது கொலைகளை மட்டுமல்ல, தற்கொலைகளையும் ஆதரிக்கும் (தற்கொடைகளை அல்ல). இப்படியான சமூகத்தில் போலி மதிப்பீடுகளின் மூலம் தான் ஒருவரை எடை போடுகின்றனர்.
  26. உங்கள் மீம்ஸில் இருக்கும் முருகன் பிரான்ஸ் நாட்டு குடிமகனுக்குத்தான் நன்றி சொல்லவேணும், கனடாவுக்கு அல்ல.
  27. இதே மாதிரி சம்பவம் ஒன்று கனடாவிலும் பல வருடங்களுக்கு முன் நடந்ததாக ஞாபகம் இருக்கு.அதை செய்ததும் தமிழர் தான். ஏன் தான் இப்படியான காட்டுமிராண்டி வேலைகளை செய்கின்றார்களோ தெரியவில்லை.
  28. போட்டியை திறம்பட நடாத்திய கிருபனுக்கும் , போட்டியில் வெற்றி பெற்ற நந்தனுக்கும், போட்டியில் முன்னிலை பெற்ற ரசோதரன் , புலவர், செம்பாட்டன் ஆகியோருக்கு பாராட்டுகள். சென்ற வருடம் கிருபன் நடாத்திய ஐபிஎல், T20 உலகக்கோப்பை போட்டி இரண்டிலும் 3 ம் இடம் பெற்றேன். இந்த வருடம் சாம்பியன் கிண்ணம், ஐபிஎல் இரண்டிலும் 5 ம் இடம் பெற்றேன். அடுத்த வருடம் நடைபெற்றவுள்ள T20 உலக கிண்ணப் போட்டி, ஐபிஎல் இரண்டிலும் 7 ம் இடம் கிடைக்கும் போல. 🤔 நேற்றைய போட்டியில் பஞ்சாப் வென்று இருந்தால் நான் 3 இடத்தை பெற்று இருப்பேன்.
  29. முதல் மூவர் உட்பட பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் . .........! கிருபனின் உழைப்பை நன்றி என்னும் ஒரு சொல்லில் சொல்லிட முடியாது ....... மிக மிக நன்றி கிருபன் . ....... ! இந்தத் திரியை கலகலப்பாக வைத்திருந்த உறவுகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் . ....... ! இந்தக் கொண்டாட்டத்துக்கு களம் அமைத்துத் தந்த நிர்வாகத்துக்கும் மிக நன்றி . .........! அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ........... ! இப்படிக்கு : பிரீத்தி ஜிந்தா & அவரின் குடும்பம் ........! 😂
  30. இருவரின் வாழ்வும் தொலைந்தது. எமது சமூகத்தில் பெண் ஒழுக்கமீறலில் ஈடுபடக்கூடாது. ஆண் ஈடுபட்டால் பெரிதுபடுத்தமாட்டார்கள்!
  31. முதலிடம் பெற்ற @நந்தன்அண்ணைக்கும் இரண்டாமிடம் பெற்ற @ரசோதரன்அண்ணைக்கும் மூன்றாமிடம் பெற்ற @புலவர்அண்ணைக்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடத்திய @கிருபன்அண்ணைக்கு வாழ்த்துகள். போட்டியில் பங்குபற்றிய 23 உறவுகளுக்கும் வாழ்த்துகள்.
  32. இதில் தாங்கள் கல்வி சமூகம் என்று வேறு சொல்லி கொள்வது.
  33. முதல்வர் நந்தனுக்கும், இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்த ரசோதரன், புலவருக்கும் வாழ்த்துக்கள்!👏💐 போட்டியை மிக சிறப்பாக நடத்திய கிருபனுக்கும், இந்த திரியை கலகலப்பாக வைத்திருந்த செம்பாட்டான், வசீ, கந்தப்பு, பையன், ரசோதரன், ஈழப்பிரியன், வாத்தியார் ஆகியோருக்கும், மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்!! 🙏 மீண்டும் கோஷானின் போட்டியில் சந்திப்போம்❤️
  34. ஆண்கள் எல்லோரையும் உங்களமாதிரியே நினைத்துவிட்டீர்கள்போல இருக்கு! ஆனால் உங்களுக்குத்தான் அந்தப்பிரச்சனையே இல்லையே. மூன்றுதரம் தலாக் சொல்லீட்டு நாலுபேரோட இருக்கலாமே!
  35. இது உங்களுக்கு தெரியும் அல்லது நிச்சயம்நிச்சயம் கேள்விப்பட்டாவது இருப்பீர்கள் . அனால் , நடந்ததை , அந்த ஒழுங்கில் சொல்லும் போது, தொடர்புபடுத்த முடியாமல் இருக்கிறது. அது தான் செய்தவர்களின் திறமை. செய்தவார்கள் US / மேற்கு அவர்களின் நோக்கத்தை (பெருமளவு) அடைந்து உள்ளனர். ஒரு சொல்லில் Indo-Pacific (சொல் 1947 இலேயே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது) சற்று விரிவாக Indo-Pacific geopolitical and geographical construct. பொதுவாக பூகோள அரசியலும், புவியியல் பிரதேசமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து ஒரே அமைப்பாக இருப்பதில்லை இருப்பதில்லை. இதில் தான் (அநேகமாக முதல்தடவையாக) அப்படி இருக்கிறது. இதில் தான் புலிகள் அகப்பட்டது, அந்த திட்டத்தின் முக்கிய அம்சமா அரசுகளின் மீதான செல்வாக்கு - அரசுகளுக்கு எதிராக எந்தவித ஆயுத அச்சுறுத்தலும் இருக்க கூடாது. ஏனெனில், அரசுகள் மீது செலுத்துவதற்கான பிடிகள் மிகவும் கூட. அது இந்தியாவுடன் ஒத்து போனது, இந்தியாவுக்கு வசதியாக இருந்தது மேலும் வசதி. (அப்படியே பார்த்தல், அங்கு இருந்த அனைத்து ஆயுத குழுக்கள் ஒன்றின் ஆயுதத்தை கைவிட்டு அரசியலுக்கு வந்தனர் , ஆச்சே, நேபாளம் உட்பட, அழிவு (புலிகள்), அல்லது பாரிய அழிவின் பின் பேச்சுவார்த்தை பிலிப்பைன்ஸில், US எதிர் மியான்மாருக்கு கூட இந்த கொள்கை. இவை நான் சொல்லாதவை) பொதுவாக ஆப்பிரிக்காவிலும் அதுவே. மத்தியகிழக்கில் இந்த 4 அரசுகள் / தலைமைகள் மேற்கு / US எதிர், ருசியா, சீன கூட்டாளிகள். மிகுதி எல்லாம் மேற்கு சார்பு வெளியில் சொல்லாவிட்டாலும். 4 இன் அகற்றமும் மேற்றக் எதிர் அரச தலைமைகள் நீக்கம் , அரசு சாரா குழுக்களை ஆக குறைந்தகாது பலவீனம் ஆக்கும் (ஒரே கல்லில் இரு மாங்காய்கள்). செய்தது பயங்கரவாத எதிர்ப்பு என்ற திரையுடன். சுருக்கமாக.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.