Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    31956
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    2951
    Posts
  3. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    53011
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/08/25 in all areas

  1. வாங்கோ வாங்கோ. 'தக் லைப்' இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய 'முத்தமழை' பாடல் ரசிகர்களை வெகுவா கவர்ந்துள்ளது 'தக் லைப்' ஆல்பத்தில் சின்மயி பா...'தக் லைப்' ஆல்பத்தில் சின்மயி பாடிய 'முத்தமழை' பாடல் இணைப்பு'தக் லைப்' இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய 'முத்தமழை' பாடல் ரசிகர்களை வெகுவா கவர்ந்துள்ளது.சின்மயிவுடன் “முத்தமழை” பாடலை பாடிய இந்த பாடகி யார் தெரியுமா? பலரும் தேடிய தகவல் முத்த மழை பாடலை சின்மயி பாடிய பொழுது அவருடன் இணைந்து பாடிய பிண்ணனி பாடகி பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முத்த மழை பாடல் 38 ஆண்டுகளுக்கு பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் தக் லைஃப். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவர் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக தக் லைஃப் திரைப்படத்தில் வரும் “முத்த மழை” பாடலை தமிழில் பாடகர் தீ பாடியிருந்தார். அந்த பாடலை அண்மையில் நடைபெற்ற “தக் லைஃப்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடி ரசிகர்களை தன்வசப்படுத்தியிருந்தார். சின்மயி குரலில் கேட்கும் பொழுது முத்த மழை பாடல் முற்றிலும் வேறுவிதமாக மாறியுள்ளது. இந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவில் “முத்த மழை” பாடலை சின்மயி பாடிக்கொண்டிருந்த பொழுது அவருக்கு கோரஸ் கொடுக்கும் குழு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அமீனா ரஃபீக் யார்? அந்தக் குழுவில் பாடிய பாடகர்கள் யார் என ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அமீனா ரஃபீக். பற்றிய பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது. கோரஸ் குழுவில் நடுவில் கருப்ப நிற ஆடை அணிந்து கொண்டு பாடிய அமீனா ரஃபீக் பின்னணி பாடகி. இவர், தனியிசை கலைஞராகவும் நிறைய ஆல்பம் பாடல்களில் பணியாற்றியுள்ளார். அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர் என்பதால் ரஹ்மானின் பாடல்களை கேட்டு வளர்ந்தவர் மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான “மைதான்” திரைப்படத்தில்வரும், என் தலைவன் சேர்ந்தான் என்னை.. என்ற பாடலையும் பாடியுள்ளார். அதே வேளையில், “காதலிக்க நேரமில்லை” படத்திலும் பாடல்கள் பாடியிருக்கிறார். அமீனா ரஃபீக் தனி யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் தானே பாடிய தனியிசை பாடல் ஆல்பங்களையும் பதிவிட்டு ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://manithan.com/article/mutha-mazhai-song-singer-amina-rafiq-details-1749191377
  2. இரும்பு டுசல்டோர்ப் என்டாலும் கட்டின கொத்தனார் தூத்துகுடி எல்லோ🤣🤣🤣… “இதுவரை சுட்டு வீழ்த்தப்படாத” ரபேலுக்கும் நடந்தது தெரியும்தானே🤣.
  3. ரசோதரன், உங்களின் இந்த வரிகளை வாசிக்கும் போது, எழுபதுகளின் பிற்பகுதியில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது. அவருக்கு என்னைவிட இருபது வயது அதிகம். வாழ்க்கையில் ஒருமுறையாவது அபின் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கிருந்தது. "உமக்கு கனக்க ஆட்களைத் தெரியும்தானே, கொஞ்சம் எடுத்துத் தாருமன்" என்று என்னைக் காணும் போதெல்லாம் கேட்பார். நீண்ட நாட்களாக அவர் நச்சரித்துக் கொண்டிருந்ததால், ஒரு நாள் அவருக்கு அது கிடைக்க ஏற்பாடு செய்தேன். "இலந்தைப் பழம் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக எடுத்து விடாதீர்கள்" என்ற எச்சரிப்புடன் தான் அவருக்கு அது கொடுக்கப்பட்டது. மனுஷன் நல்ல திடகாத்திரமான பேர்வழி. அன்று அவர் வீட்டில் பங்கு இறைச்சிக் கறி. சொன்ன மாதிரியே, இலந்தைப் பழ அளவிலான அபினை மதிய உணவுக்கு முன் எடுத்துக் கொண்டார். அவருக்கு எந்தவித மாற்றமும் தெரியவில்லை. "அபின்னு ஏதோ லேகியத்தைத் தந்து ஏமாத்திட்டான்" என்று அவரது மனைவிக்குச் சொல்லிக் கொண்டிருந்தாராம். மனுஷன் அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. இன்னொரு இலந்தைப் பழ அளவிலானதை விழுங்கிக் கொண்டார். அங்கேதான் பிரச்சனைகள் ஆரம்பமானது. "காத்தில மிதக்குற மாதிரி இருக்கு... விழப்போறேன்... அழுத்திப் பிடிங்கோ... தலையெல்லாம் சுத்துது. வேர்க்குது, தொண்டை வறண்டு போச்சு" என்று சத்தம் போட ஆரம்பித்தார். அவரது மனைவியும், பிள்ளைகளும் அவரது கை கால்களைப் பிடித்துக் கொண்டார்கள். மூத்த மகன் இரண்டு செவ்விழநீர் வெட்டிக் கொடுக்க, அதை மனுஷன் ‘மடக் மடக்’ என்று குடித்தார். இப்பொழுது இன்னும் அந்தரத்தில் வேகமாக பறப்பது போன்ற பிரமை ஏற்பட, மனுஷன் வீட்டையே கலவரப் பூமியாக மாற்றி விட்டிருந்தார். இவ்வளவு அமளிகளுக்கு மத்தியிலும், "என்னைக் கொள்ளுறதுக்குத்தான் இதைத் தந்திருக்கிறான், ராஸ்கல்!" என்றும் சொல்லிக் கொண்டாராம். அன்று சாராயக் கடை இருந்தது. கள்ளுத் தவறணை இருந்தது. கசிப்பு, கஞ்சா, அபின் ஆகியவையும் இருந்தன. ஆனாலும் அவை, தம்பாட்டில் சிலருடன் மட்டுமே இருந்தன. காவல்துறை எதுவுமே தெரியாதது போல் கண்களை மூடிக் கொண்டு தங்களது பிழைப்பைப் பார்த்துக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கு எங்கே சமூகப் பொறுப்புக்கள் இருக்கின்றன?
  4. இப்படியான செயல்களை நவநாகரீக மேற்குலகத்தினர் சர்வ சாதாரணமாகத்தானே செய்கின்றனர்? அங்கே தலை வெட்டோ அல்லது கைகால் முறிப்புகளே இல்லை. ஒருவருக்கு பிடிக்கவில்லை இல்லையே ஒத்து போகவில்லை என்றால் விலகி போகின்றார்கள். மறு வாழ்வை,மறு துணையை தேடுகின்றார்கள். துணைவிக்கு தன்னை பிடிக்கவில்லை. இன்னோருவருடன் தொடர்பு என்றால் தலையெடுப்பது தீர்வல்ல.அது காட்டுமிராண்டித்தனம் என்பது என் கருத்து.
  5. ஊரில் விவாகரத்து இலகுவாக்கப்பட வேண்டும். புனிதப் படுத்துதல்கள் தவிர்க்கப் பட வேண்டும்
  6. இரும்பின் பயன்பாடு கிமு 3000 முதல் கிமு 1200 வரையிலான காலத்தில் தொடங்கியது. இது இரும்பு யுகம் (Iron Age) எனப்படும், ஆனால் இரும்பு முதலில் வெண்கல யுகத்திலேயே (Bronze Age) சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டது. மெசொப்பொத்தேமியா மற்றும் அனத்தோலியா (தற்கால துருக்கி) போன்ற பகுதிகளில் கிமு 3000க்கு முன்பே இரும்பு பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இந்தியாவில், இரும்பு யுகம் கிமு 1800 முதல் கிமு 1200 வரை தொடங்கியது. தமிழகத்தில், இரும்பு பயன்பாடு சங்க காலத்திற்கு முன்னர் (கிமு 600 - கிமு 300) இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. எனவே, தோராயமாக 5000 வருடங்களுக்கு முன்பு இரும்பு பயன்பாட்டில் இருந்துள்ளது.
  7. மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள் adminJune 8, 2025 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டைத்தீவு பகுதியில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் போது, பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை கட்டுப்படுத்தல் பற்றி விழிப்புணர்வும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, சுற்றாடல் தினம் பற்றிய உரைகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரர், யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2025/216534/
  8. இது ஒரு நல்ல கேள்வி நந்தன் . .........! நான் இந்தத் தாவரம் பற்றி பொதுவாக சொல்லியிருக்கிறேன் . .......... ! மண்டைதீவு கடலிலும் அலையுண்டு . ...... பனியில்லாத மார்கழி இருக்கலாம் ஆனால் அலையில்லாத கடல் இருக்காது . ........ கோல்பேஸ் போல 24 /24 நேர அலைகள் இல்லை . ...... ஆனால் மாரிகாலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் பொழுது அலைகள் புரண்டு வந்து பண்ணை வீதியில் மோதும் . ........ அக்காலத்தில் அக்கடலேரியின் கீழே இருக்கும் ஓரா மீன்கள் கூட்டம் கூட்டமாக கிளம்பி மேலே வரும் நிறைய மீன்கள் அப்போது கல்லுகளில் மோதுண்டு வீதிகளில் கூட தெறித்து விழுவதுண்டு . ...... சில இளைஞர்கள் அப்போது வெட்டுத் தூண்டில் போட்டு மீன் பிடிப்பார்கள் ....... சிலர் மீன் கூட்டத்தைப் பார்த்து வெடி எறிந்து விட்டு (இது தடை செய்யப்பட்டது ) உடனே குதித்து பைகளில் செத்து மிதக்கும் மீன்களை அள்ளிக் கொண்டு வருவார்கள் . ...... இப்படிப் பல சம்பவங்கள் உண்டு . ........!
  9. வளைவுப் பாலமோ வளைவில்லாத பாலமோ, சீனா 625 மீற்றர் உயரமான பாலம் ஒன்றினை விரைவில் திறக்கவுள்ளது. இந்தச் சிறிய இடைவெளிச் சந்தில் மோடி சிந்து பாடியுள்ளார் போலுள்ளது. https://en.wikipedia.org/wiki/Huajiang_Canyon_Bridge
  10. @ஏராளன் இணைத்துள்ள தமிழ்வின் கட்டுரை தகவலின்படி பார்த்தால் கொலையை செய்தவர் அடிபிடி கோஸ்டி போல் தோன்றுகின்றது. மனைவியின் தந்தையிடம்/மானனாரிடம் கொலையை செய்வதற்கு முன்தினம் கொலையை செய்வதற்கு பயன்படுத்திய கத்தியை பெற்று மறுநாள் அதை பயன்படுத்தி தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார் என்பதை பார்க்கும்போது அவரது குரூர புத்தி தென்படுகின்றது. இவருக்கு ஏற்கனவே வாள்வெட்டுக்கள், ஆட்களை வெட்டுவதில் பரீட்சயம் உள்ளதோ எனவும் சந்தேகம் ஏற்படுகின்றது. ஆத்திரகாரனுக்கு புத்தி மத்திமம் என்பது ஒருபுறம் போக இப்படி குரூரமாக கொலையை இவர் செய்தமைக்கு ஏற்கனவே பரீட்சயமான வாள் வெட்டு அனுபவம் ஏதாவது இவரில் தாக்கம் செய்ததோ எனவும் எண்ண வேண்டி உள்ளது.
  11. மக்கள் இவைக்கும் பெரும்பான்மை வழங்கலையே?! (ஜெயா அம்மையார் சொல்வது போல மைனோரிட்டி திமுக அரசு என குறிப்பிடுவார்!) இவர்களும் மைனோரிட்டி ஆட்சி அமைக்கலாம்! எதிர்க்கட்சிகள் ஒற்றுமையானால் ஆட்சி அம்போ தான்!!
  12. இவர்கள் தினம் ஒரு புத்தகம் அறிமுகம் செய்து வைக்கிறார்கள் ஏன்று நினைக்கிறேன்...புத்தக இணைப்பிற்கு மிக்க நன்றி கிருபண்ணா.✍
  13. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு வருகை தரவிருப்பதை முன்னிட்டு, அவரை சந்திக்க அனுமதிக்குமாறு கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், கடிதம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தைக் குறைத்து அதிகாரங்களை நிதியமைச்சு மற்றும் வலுசக்தி அமைச்சுக்கு மாற்ற முயற்சி! - சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி பயன்படுத்தி பட்டியலில் இல்லாத பலர் விடுவிக்கப்பட்டமை விசாரணையில் அம்பலம்! விடுவிக்கப்பட்ட 323 சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் தொடர்பில் இலங்கையின் சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
  14. Sudharshan Subramaniam's post Thug life ஒன்பது பாடல்களில் எனக்கு மிகப்பிடித்த பாடல், முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ! முல்லை இரவுகள் பற்றி எரியாதோ! பழைய ரஹ்மான் ❤️" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> சூஃபி வடிவத்தின் அழகு இழைந்து ஓடும் பாடல். ரஹ்மான் இப்படி ஏராளமான அழகான பாடல்கள் தந்திருக்கிறார். இது Dhee குரலில் இன்னும் அழகாக இருக்கிறது. கடவுளைப் போல காதலையும் தொழலாம். கடவுளை அறியோம். ஆனால் காதலும் காமமும் இருத்தலின் கொண்டாட்டமல்லவோ! தொழுதலுக்கு உரியதல்லவோ! பொல்லா இரவோ! சொல்லா உறவோ! இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ! காலைக் கனவினில் காதல் கொண்டேன். கண்விழித்தேன் அவன் காணவில்லை.. கண்விழித்தேன் அவன் காணவில்லை. (Chant. மந்திரம் போல repeated lines) என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை என்ன செய்தும் வலி தீரவில்லை. ஓ பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன். மோகப் பனிப்போர்வையில் கரம் கோர்க்கையில் காதல் சொல்வேன். காதல் காதல் சொல்வேன். தீ குரலில் இறுதியில் தபேலா, இடைவெளியில் clap sound போலொரு ஓசையுடன் கீழ்வரும் வரிகள், அதில் காதல் எனும் இடத்தில் Dhee யின் வார்த்தை அழகுபடுத்தல். இன்னும் ஒருமுறை எந்தன் கதை சொல்லவா! காதில் விழும் வரை காதல் பாடவா. பொல்லா இரவோ சொல்லா உறவோ. இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ. கண்ணாளா. நான் காதலி. காதலன் நீ. வேறு எல்லாம் வேஷம் என்பேன். வெறும் வேஷம் என்பேன். காதல் தான் அச்சு. மையப்புள்ளி. அதிலிருந்துதான் உலகம் விரிகிறது. Sufi whirling மாதிரி. Devinity. Beautiful 🖤" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t0/1/16/1f5a4.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> (பாடல் இணைப்பு முதலாவது கமென்டில். நல்ல Sound system இல் கேளுங்கள்) https://www.facebook.com/sudha001/posts/thug-life-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/9762230997218221/ பாடகி தீயின் குரலில் முத்தமழை பாடல்.
  15. "சாம்பலாகிய யாழ் பொது நூலகமும் [01/06/1981] காதலும்" 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண கோடையின் ஈரப்பதமான அரவணைப்பில், ஆனந்த் என்ற கூச்ச சுபாவமுள்ள, கண்ணாடி அணிந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் பிரமாண்டமான யாழ்ப்பாண பொது நூலகத்தின் சாளரத்தின் அருகில் நின்று, வெளியே, தான் படித்த பாடசாலை, யாழ் மத்திய கல்லூரியையும், தான் விளையாடிய அதன் மைதானத்தையும் பார்த்துக் கொண்டு நின்றான். ஆனால், அவன் விரல்கள் நீலத் துணியால் கட்டப்பட்ட, 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில், எழுதப்பட்ட, சிங்கள மற்றும் தமிழர் வரலாற்றின் நெருங்கிய தொடர்புகளையும் யாழ்ப்பாணத்தின் பெருமையையும் அதன் பாரம்பரியத்தையும் வரலாற்று ரீதியாக கூறும் 'யாழ்ப்பாண வைபவமாலை' என்ற புத்தகத்தின் விளிம்புகளைப் மகிழ்வுடன் தேடின. அதில் அவனுக்கு ஒரு மகிழ்வு! பல பண்டைய தமிழர் மற்றும் இலங்கைத் தமிழர் வரலாற்று நூல்களை வாசித்த அவனுக்கு, இதையும் வாசிக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்படுவது இயற்கைதானே! என்றாலும் அது உசாத்துணை அல்லது குறிப்பு பகுதியில் இருப்பதால், அங்கிருந்து தான் வாசிக்கவேண்டும். அது தான் அவனுக்கு பிரச்சனையாக இருந்தது. தமிழர் பண்பாட்டு மரபின் பெருமையை பிரதிபலிக்கும் திராவிட மற்றும் கிழக்கத்திய கலையின் ஒருங்கிணைப்புடன் கட்டப்பட்டு வெள்ளை வர்ணத்தில் ஒளிரும் அதன் முகப்புடன் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட தூண்கள் மற்றும் பரந்த வளைந்த நுழைவுகள் கொண்ட நுழைவாயில், துல்லியமாக வடிவமைக்கப்பட்ட மரக்கதவுகள் மற்றும் முல்லை இலைகள், வளைந்த அலங்காரங்கள் மற்றும் நுணுக்கமான மலர் வடிவ சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட, கோரிந்திய தூண்கள் (Corinthian Columns) கொண்ட பெரிய படிகளால் அலங்கரிக்கப்பட்டு, உயரமான சாளரங்கள், நுட்பமான மர வேலைப்பாடுகள், வெளிச்சம் நிறைந்த உள்வடிவமைப்பு, வாசகர்களுக்கு ஒரு அமைதியான வாசிப்பு சூழலை வழங்கும் அந்த பெருமைமிக்க நூலகத்திற்குள், அவன் யோசித்துக் கொண்டு நின்றான். நூலகத்தின் உள்ளே, 97,000 நெடுங்கால அரிய நூல்கள், பண்டைய கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள், பத்திரிகைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு இருந்தன. தரையில் பிரதிபலிக்கும் அளவுக்கு மென்மையாகப் மெருகேற்றப்பட்ட பளபளப்பான தரை, மேற்கூரை வழியே மெல்லிய ஒளியை உள்வாங்கும் திறமையான கட்டமைப்புடன் இருந்தது. நூலகத்தின் மையத்தில் பெரிய குவிமாடம் (குவிந்த கூரை / dome) அமைக்கப்பட்டிருந்தது, தமிழர் அறிவு மற்றும் பண்பாட்டு பெருமையின் சின்னமாக அது உயர்ந்து காட்சியளித்தது. கட்டிடத்தைச் சுற்றிய வளவில் [நிலத்தில்] பரவி வளர்ந்த மல்லிகைப் பூக்களின் மென்மையான நறுமணத்துடன் பழங்கால நூல்களின் மெல்லிய வாசனையும் அவ்விடத்தை நிரப்பியது. இது ஒரு புனிதமான தலமாகவும் கனவுகளின் பீடமாகவும் இருந்தது. முதிர்ந்த பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் மற்றும் கவனமாக பட்டியலிடப்பட்ட புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையில், தமிழர் வரலாறு அங்கு கிசுகிசுத்துக் கொண்டு இருந்தன. அந்த கிசுகிசு அவன் காதில் கேட்டுதோ என்னவோ, வேம்படி மகளீர் பாடசாலை உயர்வகுப்பு மாணவி மாலினியின் கிசுகிசுப்பு மட்டும் அவனுக்கு கேட்டது. அவன் திரும்பி பார்த்தான். அவள் இன்னும் பள்ளி சீருடையுடனே, எதோ ஒரு ஆய்வில், உதவி நூலகர் சயந்தியுடன் அலசிக்கொண்டு இருந்தாள். அவன் அங்கே மெல்லச் சென்று, எதாவது உதவி வேண்டுமா என்று கேட்டான். அவளும் ஆமாம் என்று, சி. கணேசையார் 1939 ஆம் ஆண்டில் வெளியிட்ட "இலங்கைத் தமிழ்ப் புலவர்களின் வரலாறு" என்ற நூலில், பக்கம் ஆறில், நல்லூர் சரஸ்வதி மகாலயம் நூலகம் ஒரு சிங்கள அரசன் மூலம் தீ வைத்து எரிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருப்பது பற்றிய செய்தியின் உண்மைத்தன்மை பற்றிய விளக்கம் கேட்டாள். இது பதின்மூன்றாம் நூற்றாண்டளவில், யாழ்ப்பாணத்தில் நல்ல நிலையில் செயற்பட்டது என்றும், இந்த நூலகத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பழைய நூல்கள் காணப்பட்டன என்றும், தற்போது நாயன்மார்கட்டு என அழைக்கப்படும் இடமே முன்னர் சரஸ்வதி மகாலயம் இருந்த இடமென என்றும், அறியப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும். அப்பத்தான் அவன், அவளை நெருக்கமாக அருகில் பார்த்தான். ஒரு சிங்கள அரசன் நெருப்பு வைத்தானோ இல்லையோ, அல்லது போர்த்துக்கீசர் 17ஆம் நூற்றாண்டில் இதைச் செய்தனரோ இல்லையோ, இப்ப அவன் நெஞ்சத்தில், அவள் ஈவுஇரக்கமின்றி நெருப்பு வைத்துவிட்டாள்! அவன் இதயம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது!! அழகிய கண்களை ரசிப்பதாலும், அழகிய கண்களுடைய பெண்களை வர்ணிப்பதாலும் தான் நான் என் பெயரை கண்ணதாசன் என மாற்றிக் கொண்டேன் என்றான் ஒரு கவிஞன். இவனோ அதைவிட ஒரு படி மேலே போய்விட்டான். காலுக்கு கீழ் பஞ்சு போல ஒரு உணர்வு, கொஞ்சம் சலங்கைச் சத்தம், மிதப்பது போல் உணர்வு, ஏன், பிரபஞ்சமே காதலியாக மாறி விட்டது, அவ்வளவுக்கு காரணம் சுட்டும் விழிச்சுடர்களான, அந்த அழகிய, அவளின் காந்தக் கண்கள்தான்! ”நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல் இணை தாக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன, வீக்கிய கணை கழல் வீரன் செங்கண்ணும் தாக்கணங் கணையவள் தனத்தைத் தைத்ததே..!” மாலினியின் வேல் போன்ற கண்கள் ஆனந்த்தின் அகன்ற தோளில் நிலைத்து நிற்க, ஆனந்த்தின் கண்கள் மாலினியின் தனங்களைத் தைத்து நின்றன, வாய்கள் பேசவில்லை, கேள்வியும் மறுமொழியும் மறைந்து விட்டன. விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்தது போன்ற ஒரு பிரமையில் இருவரும் மௌனமாக நின்றனர். சயந்தி, ஒரு புன்முறுவலுடன் தன் வேலையைக் கவனிக்க அங்கிருந்து அகன்றுவிட்டாள்! அமைதியான, அழகான மாலினியின் சந்திப்பு முன்னறிவிப்பு இல்லாமல், அவனது உலகத்தைத் திருப்பிய அச்சாக மாறியது. அவள் அடிக்கடி உயரமான, வளைந்த ஜன்னல்களுக்கு அருகில், பிந்திய மதியம் பாடசாலை முடிய இரண்டு மணித்தியாலம் அளவு, தனது வேம்படி பாடசாலைக்கு அருகிலேயே அமைந்து இருக்கும் யாழ்ப்பாண பொது நூலகத்தில், தன் தந்தை யாழ்ப்பாண மாநகரசபையில் வேலை முடிந்து வரும் வரை, அங்கு படிப்பது வழமை. அப்படியான ஒரு நாள் தான் அது. அவள் எனோ விடையை அறியாமலே, தான் முன்பு இருந்த இடத்தில் போய் அமர்ந்துவிட்டாள். அவளுடைய நீண்ட சடை அவள் தோளில் பட்டும் படாமலும் விழுந்து இருந்தது. அவளுடைய உதடுகள் தனக்குள் பழங்கால வசனங்களை முணுமுணுப்பது போல் அமைதியாக எதோ சொல்லிக் கொண்டு இருந்தது. ஆனால், சத்தம் வரவில்லை! யாழ்ப்பாண பொதுநூலக உசாத்துணை பகுதிக்கு அடிக்கடி வருவது ஒரு பிரச்சனையாக முன்பு நினைத்தவன், இப்ப தவறாமல் ஓய்வு கிடைக்கும் பொழுது வரத் தொடங்கி விட்டான். ஒருநாள், எதிர்பாராத மழையால் அவர்களின் முதல் உண்மையான உரையாடல் தொடங்கியது. அன்று மாலினியின் பொன் நிற உடல், அவளின் வேம்படி கல்லூரி சீருடையின் வெண்ணிறத்துடன் இணைய, மருட்சி தேங்கி நின்ற அவளின் விழிகள் அலைபாய, இரட்டைப் பின்னல்கள் அவளது நடையின் சீரான தாளப் போக்கிற்குப் ஏற்ப அசைந்தாட, பாடப் புத்தகங்களை மார்புக்கு நேராகப் பிடித்துக் கொண்டு அவள் நடந்து வந்த அழகு அப்படியே அவன் மனதில் எதோ ஒன்றைத் தோற்றுவித்தது. என்றாலும், அதை வெளியே காட்டாமல், ஆனால், அவளை இலகுவாகப் பார்க்கக் கூடியதாக அமர்ந்தான். இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சலம் தருகுதே! சக்கர தோடு கழுத்தைத் தொட சடை பின்னல் அவிழ்ந்து விழ சலங்கைக் கால் இசை எழுப்ப சங்காரம் செய்யுதே இள நகை! சங்கீதம் பொழியும் அவள் குரல் சந்தனம் மணக்கும் அவள் உடல் சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து சங்கடம் தருகுதே அவளின் பார்வை! மாலினி ஒரு குறிப்பிட்ட நூலைத் தேடும் அவசரத்தில், தனக்கு அருகில் இருந்த சாளரத்தை எட்டி மூட எத்தனிக்கும் பொழுது, மறுகையில் இருந்த சில புத்தகங்கள் நழுவப் பார்த்தன, அதற்குள் சில மழைத் துளிகள் உள்ளே விழுந்துவிட்டன. விலைமதிப்பற்ற அந்த நூல்கள் ஈரமான கல் தரையைத் தொடமுன், ஆனந்த், அவள் பக்கம் விரைந்து சென்று, தன் இயல்பான கூச்சத்தையும் மறந்து, அவள் கையைப்பற்றி, அந்த புத்தகங்களை கவனமாக எடுத்துவிட்டான். என்றாலும் அவற்றை அவளிடம் திருப்பி அவளிடம் கொடுக்கும் பொழுது அவன் கைகள் கொஞ்சம் நடுங்கின. அவள் 'அது பரவாயில்லை' என்று சிறு புன்னகையுடன் கூறி, அவ்வற்றைப் பெற்றாள். புத்தகங்களை அந்தந்த இடங்களில் திருப்பி வைத்துவிட்டு, அவன் அருகில் சென்று "நன்றி," சொல்லிவிட்டு, அங்கேயே பக்கத்து நாற்காலியில் அமர்ந்தாள். அவளுடைய கயல்மீன் போன்ற, கரும் மையிட்ட கண்கள் முதல் முறையாக மிக நெருக்கமாக நேரடியாகச் சந்தித்தன. "இந்த நூல்கள் ... என் தாத்தாவின் படைப்புகள். அவர் நமது வரலாற்றைப் பாதுகாப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்" என்று தனது உரையாடலை ஆரம்பித்தாள். "இவரின் பேத்தியா நீங்கள்? அவன் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான். ஆமாம் உங்கள் தாத்தாவின் நூல்கள் உண்மையில் மிகவும் விலைமதிப்பற்றவை, காலத்தின் தேவை " என்று அவன் பதிலளித்தான், அவனது குரல் ஒரு கிசுகிசுப்பை விட அதிகமாக இருந்தது. "நான் அடிக்கடி அவரது படைப்புகளைப் படிப்பேன். அவை நமது கடந்த காலத்தை மிகவும் உயிரோட்டமாக உணர வைக்கும் புதையல்கள்." என்றான். அந்த நாளிலிருந்து, அவர்களின் பாதைகள் அடிக்கடி குறுக்கிடுவது போல் தோன்றியது, யாழ்ப்பாண பொது நூலக புத்தக அலமாரிகளின் வரிசைகளுக்கு இடையே அவர்களின் அமைதியான ஒப்புதல் தலையசைப்புகள் படிப்படியாக நீண்ட உரையாடல்களாக வளர்ந்தன. அவர்கள் யாழ்பாணம் வைபவமலையிலிருந்து பல பகுதிகளைப் பகிர்ந்து கொண்டதுடன் மற்றும் தத்துவஞானி ஆனந்த குமாரசாமி, பேராசிரியர் டாக்டர் ஐசக் தம்பையா போன்ற குறிப்பிடத்தக்க நபர்களின் படைப்புகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளையும், அதேநேரம் ஆரம்பகால தமிழ் செய்தித்தாள்களின் பதிவுகள், குறிப்பிடத்தக்க பொருட்களின் மைக்ரோஃபிலிம்கள் [microfilms] மற்றும் காலனித்துவ சகாப்தத்தின் ஆவணங்களுடன் பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் என எல்லாவற்றிலும் மேலோட்டமாக, தங்களுக்கு தேவையான பகுதிகளை இருவரும் ஒன்றாக அலசி, இலங்கை தமிழ் மக்களின், தமிழ் மொழியின் நீண்ட வளமான வரலாற்றைப் பற்றி விவாதித்தனர். மேலும் தங்கள் பாரம்பரியம் போற்றப்பட்டு பாதுகாக்கப்படும் எதிர்காலத்தைக் கனவு கண்டனர். நாட்கள் செல்லச் செல்ல, அவர்களின் பிணைப்பு ஆழமடைந்தது. நூலகத்திற்குப் பின்னல் காணப்படும் ஒதுக்குப்புறமான பூந் தோட்டத்தில் அவர்கள் சிலவேளை நீண்ட இருக்கையில் [bench] அமர்ந்து தங்கள் தனிப்பட்ட விடயங்கள் கதைப்பதும் உண்டு, அங்கு பிந்திய மதிய வெயிலிலும் கூட கல் பெஞ்சுகள் குளிர்ச்சியாக இருக்கும். அதில் அவள் அமர்ந்து, மலர்களை வட்டமிடும் வண்டுகளை மற்றும் வண்ணாத்திப் பூச்சிகளைப் வேடிக்கை பார்ப்பாள். இடுப்பிலிருந்து இறங்கிவிடுவேன் எனப் பயமுறுத்திக்கொண்டிருந்த அரைக் காற்சட்டையை இறுகப் பற்றியபடி கடையிலிருக்கும் மிட்டாயை ஆசை பொங்கப் பார்க்கும் சிறுவனைப் போல, அவன் அவளைப் பார்ப்பான். இப்படி சிலவேளை அவர்கள் அமைதியாக கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தனர், நேரத்தைக் களித்தனர். ஒரு நாள், ஆனந்த் அவளிடம் கிசுகிசுத்தான். அவள் முன்னோக்கி சாய்ந்து அவன் வார்த்தைகளைப் உற்றுக் கேட்கும் போது, அவள் இடையின் மென்மையான வளைவில் அவன் கண்கள் பதிந்தன. அதைக்கண்ட அவள் அதிசயித்தாள். அவள் கடை இதழில் ஒரு புன் முறுவல் புறப்பட்டது. அவன் அப்படியே சொக்கிப்போனான்! கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர் உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும் மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய். உசாத்துணை பகுதியில், இடைவெளிவிட்டு தள்ளி இருந்தாலும், இருவர் கண்களும் அமைதியாக ஒருவரை ஒருவர் எண்ணங்களில் நெருங்கினர். அவன் கண்களால் அவளிடம் 'உன் சகோதரர்கள் கடலில் சென்று மீன்களை பிடித்து (கொன்று) வாழ்கிறார்கள். நீயோ என் உடலின் உள் சென்று என் உயிரை எடுத்து (கொன்று) வாழ்கிறாய். உன் வலிமையான மார்புகளின் பாரத்தில் உன் சின்ன இடை துன்பப் படுவதை என்னால் பார்க்க முடியவில்லையே என்றான்! ஆனால் அதை அவள் பொருட்படுத்தவில்லை, அவள் தன் நாற்காலியை கொஞ்சம் விலத்தி வைத்து, தரையில் எதோ விழுந்ததை பொறுக்குவது போல குனிந்து, இடையை மேலும் காட்டி, அங்குமிங்கும் கண்களைச் சுழட்டி, தலையை நிமிர்த்தி, அவனை தன் மான் விழியால் சுட்டாள். கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும் வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய். உன் தந்தை மீன் பிடிக்கும் கொடுமையான வலையால் உயிர்களை கொல்லுகிறான். நீயோ, உன் கண் என்ற வலையால் என் உயிரைக் கொல்லுகிறாய். மாலை அணிந்த உன் மார்பால் மழை நேர மின்னலைப் போன்ற உன் இடை எவ்வளவு சங்கடப் படுவதை எப்படி நான் பொறுப்பேன் என்றான். அவள் தன் குறும்புத்தனத்தின் பின், தன் விரல்களால் பழைய உசாத்துணை புத்தகங்களின் சிதைந்த விளிம்புகளை தற்செயலாகத் தேடினாள். "நம் பெயர்கள், நம் கதைகள், இந்தப் பக்கங்களிலும் ஒரு காலம் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன். அதனால் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு யாராவது அவற்றைப் படிக்கும் போது, நாம் வாழ்ந்தோம், நாம் நேசித்தோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்." என்றாள். சாளரத்தின் வழியாக ஊடுருவி வந்த மங்கலான சூரிய ஒளியில் அவன் கண்கள் மின்னின, மாலினி திரும்பி பார்த்தாள். அங்கு ஒருவரும் இல்லை. அவள் கை நீட்டி, அவன், தன் விரல்களை லேசாகத் தடவ அனுமதித்தாள். "ஒருவேளை அவை ஏற்கனவே இருக்கலாம்," என்று அவள் மீண்டும் கிசுகிசுத்தாள், "இந்த இடத்தின் காற்றில் அது இன்று எம் இருவரின் விரல்களால் ஒன்றாக இணைந்து எழுதப்பட்டு விட்டதே." என்றாள். அவர்களின் பகிரப்பட்ட தருணங்கள் யாழ்ப்பாண பொது நூலகத்துக்குள் மீண்டும் மீண்டும் தினம் தினம் தொடர்ந்தன - பிரதான மண்டபத்தின் குறுக்கே ஒருவருக்கு ஒருவர் திருடப்பட்ட பார்வைகள், நாற்காலியில் அமரும் பொழுது விரல்கள் பட்டும் படாமலும் உராய்வது. பண்டைய அல்லது அண்மைய காதலர்களின் குறிப்புகளைப் புரட்டும் போது, அவர்களுக்கிடையிலான அமைதியான சிரிப்புகள் எனத் தொடர்ந்தன. அவர்கள் ஒருவருக் கொருவர் சிறிய குறிப்புகளை, உதாரணமாக, கவிதை வரிகள், பண்டைய காதல் பாடல்களின் சில வரிகள் மற்றும் வாக்குறுதிகள் அல்லது பொன்மொழிகள் போன்றவற்றை ஒரு சிறு காகித தாளில் எழுதி, அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களின் பக்கங்களில் மறைத்து வைத்து, அதில் ஒரு சுகம் கண்டனர். தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் அதிகரித்து வரும் விரோதம், யாழ்ப்பாணத்தை கொதிநிலை பயம் மற்றும் வெறுப்பின் கொப்பரையாக மாற்றி, தமிழர் தாயகத்தில் அமைதியின்மை மற்றும் வன்முறையின் நிழல்கள் பரவியிருந்த இந்த நேரத்தில் தான், இன்று அவர்களின் காதல் முழுமையாக மலர்ந்தது. அது ஒரு வெள்ளிக்கிழமை, மே மாதம் 29,1981 ஆம் திகதி. 1971 ஆம் ஆண்டு, இலங்கை சுதந்திரக் கட்சி (SLFP) தலைமையிலான இலங்கை அரசாங்கம், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக, குறிப்பாக கல்வி மற்றும் மொழியில் பாகுபாடு காட்டும் கொள்கைகளை அமல்படுத்தியது. இது, ஏற்கனவே இருந்த இனப் பதட்டங்களுடன் சேர்ந்து, தமிழ் இளைஞர்களிடம் எழுச்சிக்கு வழிவகுத்து, இறுதியில், 1972 இல் போராளிக் குழுக்கள் உருவாக வழிவகுத்தது. அதைத்தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் பற்றி முழுமையாக இருவரும் தற்செயலாகக் இன்று கதைத்தனர். 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'.என்பார்கள். அப்படியான ஒன்றைத்தான், கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரீகத்தை படைத்த மாயன் மக்களை துன்பத்தில் இருந்து மீட்பவர் [இரட்சகர்] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார். அமாம் வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர். மாயன்கள் எழுதி வைத்திருந்த ஆயிரக்கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா. இவரால் அழிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற, மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும். அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா? அவன், அவள் முகத்தைப் பார்த்து கேட்டான. ஆனால், அதற்கிடையில் தந்தை வரும் நேரம் வந்ததால், விடை கொடுக்காமல், விடை பெற்று மாலினி போனாள். இனி ஜூன் ஒன்று திங்கள் தான், அவளை மீண்டும் காணமுடியும் என்ற ஏக்கத்துடன் அவனும் வீடு திரும்பினான். மே 31, 1981 அன்று மாலை, ஞாயிறுக்கிழமை ஆனந்த் நூலகப் படிகளில் நின்று, பழைய நகரத்தில் உள்ள ஒரு சிறிய புத்தகக் கடையில் கண்டெடுத்த தமிழ் காதல் கவிதைகளின் மெல்லிய தொகுதி ஒன்றை மாலினிக்கு ஜூன் 1, திங்கள் கிழமை பரிசாக கொடுக்க வேண்டும் என்று, அதை கையில் வைத்துக் கொண்டு கொஞ்ச நேரம், கல்வியின் தெய்வம் சரஸ்வதியை பார்த்துக் கொண்டு நின்றான். அந்தப் புத்தகம் ஆழமான மெரூன் நிறத் தோலால் கட்டப்பட்டிருந்தது. அதன் பக்கங்கள் பல நூற்றாண்டுகளாக ஏக்கத்தையும் காதலையும் பேசும் வசனங்களால் நிரப்பப்பட்டு இருந்தன. மே 31 1981 இரவு நாச்சிமார் கோயிலடியில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, நாச்சிமார் கோவிலடிக்கு காவல்துறையினரும், துணை இராணுவக் குழுக்களும் சீருடை அணிந்தவர்களாகவும், சீருடை அணியாதவர்களுமாக அங்கு விரைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர். அருகில் இருந்த மூன்று வீடுகள், இயந்திர ஈருளிகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களும் தாக்கப்பட்டனர். இவ்வகையான பதட்டங்களால் சோர்வடைந்த யாழ் மக்கள், வீடுகளில் நேரத்துடன் முடங்கினர். யாழ்ப்பாண பொது நூலகமும், சந்திரனின் கண்காணிப்புக் கண்களின் கீழும், கடல் காற்றின் கிசுகிசுப்பின் கீழும், அதன் பிரமாண்டமான கதவுகள் உறுதியாக மூடிய நிலையில் அமைதியாக நின்றது. ஆனால் ஜூன் 1, 1981 ஆம் தேதி அதிகாலையில், மே 31 இன் நள்ளிரவுக்குப் பிறகு, யாழ்ப்பாண பொது நூலகம் அருகில் அமைதி சிதறியது. சிங்கள வன்முறைக் குழு ஒன்றால் இந்நூலகம் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. அடர்த்தியான கருப்பு புகை வானத்தில் சுழன்று, எரியும் காகிதத்தின் கடுமையான வாசனையையும் பல நூற்றாண்டுகள் பழமையான பனை ஓலைகளையும் சுமந்து சென்றது. அரை மைல்களுக்கு அப்பால் இருந்த ஆனந்த் மற்றும் பலர் தொலைதூரக் கூச்சல்களின் சத்தத்திற்கும், அடிவானத்தை வரைந்த ஆரஞ்சு நிற ஒளிக்கும், விழித்தனர். உடனடியாக அவனும் அவனைப் போல சிலரும் துணிந்து நகர மையத்தை அடையும் போது, மிகவும் தாமதமாகி விட்டது. இரவு முழுவதும் காலியாக இருந்த நூலகம், இடிந்து விழும் எலும்புக்கூடாக மாறியிருந்தது, அதன் விலைமதிப்பற்ற சேகரிப்புகள் இருண்ட வானத்தில் எரிந்து கருகின. யாழ்பாணம் வைபவமலை மற்றும் பல நூற்றாண்டுகளாகத் திரட்டப்பட்ட அறிவு உள்ளிட்ட விலைமதிப்பற்ற கையெழுத்துப் பிரதிகள் சாம்பலாகின. அடுத்த நாட்களில், யாழ்ப்பாணம் சாம்பல் நகரமாக இருந்தது. ஒரு காலத்தில் தமிழ் கலாச்சாரத்தின் கலங்கரை விளக்கமாக இருந்த நூலகம், புகைந்து கொண்டிருக்கும் இடிபாடுகளில் கிடந்தது, அதன் கருகிய எலும்புக்கூடு அதைச் சூழ்ந்திருந்த வன்முறைக்கு ஒரு கொடூரமான சான்றாகும். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், ஆனந்த் சில நாட்களுக்கு மாலினியைச் சந்திக்கவில்லை. மற்றும் மாலினியின் வீடு, நாச்சிமார் கோவிலடி என்பதாலும், அது தான் முதலில் தாக்கப்பட்ட இடம் என்பதாலும், அவளுக்கு, அவளின் குடும்பத்துக்கு என்ன நடந்தது என்பதை அறிய, அவன் ஆவலாக இருந்தான். என்றாலும் அதன் பின் அவன் அவளைக் காணவே இல்லை. பாடசாலைக்கும் வரவில்லை என்பதை அவளின் பாடசாலை தோழி ஒருவள் மூலம், இரண்டு கிழமையின் பின், அறிந்தான். அதன் பின், அவன் விசாரித்ததில், அவளின் குடும்பம் கொழும்புக்கு அல்லது வெளிநாடு ஒன்றுக்கு இடம்மாறி விட்டனர் என்பதை அறிந்தான். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. அன்றைய காலத்தில் கைத்தொலை பேசி அல்லது வலைத்தளங்கள் இல்லை. பின்னர் 1984 ஆம் ஆண்டு நன்கொடைகளுடன், யாழ்ப்பாண பொது நூலகம் ஓரளவு மீண்டும் பகுதியாக கட்டப்பட்டது. ஆனந்த் இன்னும் அவளை மறக்க வில்லை. ஆனந்த் இன்னும் அந்த - பகுதியாக திறக்கப்பட்ட - நூலகத்தின் காலியான அரங்குகளில் அலைந்து திரிந்தான். இழந்த கட்டிட தொகுதிகளுக்காகவும், நூல்களுக்காகவும் மற்றும் காற்றில் சாம்பலைப் போல, அவனது பிடியிலிருந்து நழுவிய காதலுக்காகவும், அவனது இதயம் இன்னும் வலித்துக் கொண்டே இருக்கிறது! "நீ இன்னும் இங்கே இருக்கிறாய், மாலினி," அவன் கிசுகிசுத்தான் "நாம் இழந்த அனைத்தின் நினைவுகளிலும். நான் படித்த ஒவ்வொரு வசனத்திலும், மீதமுள்ள பக்கங்களின் ஒவ்வொரு கிசுகிசுப்பிலும், நீ இன்னும் இங்கே இருக்கிறாய். வாழ்கிறாய்! " என்று அவன் முணுமுணுக்க என்றும் மறக்கவில்லை! நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்
  16. 2,3ம் வகுப்புகளில், வட்டவடிவமான மஞ்சள் சிவிலிக்கூட்டில் பொன்சில் தீட்டும் போது அதில் எழுதியிருக்கும் made in Germany என்பதை வாசிக்கும் போது அந்த நாட்டை பற்றி கற்பனை செய்வேன். அந்த நாட்டில் வசிக்க வாய்ப்பு வரும் என்பது அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. உண்மைதான் குமாரசாமி. யேர்மனிய உற்பத்திகளுக்கு உலக நாடுகளில் நல்ல மதிப்பிருக்கிறது. கொத்தனார் சுத்துமாத்து செய்து யேர்மனியின் பெயரைக் கெடுக்காமல் இருந்தால் போதும்😜
  17. புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) Bookday தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 8 புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) அ. குமரேசன் 1958ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரு நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago). ஆனால் அதை உருவாக்கிய எழுத்தாளர் விருதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். நோபல் பரிசுத் தேர்வுக் குழுவின் அரசியல் நோக்கத்திற்கு இரையாவதைப் புரிந்துகொண்டு, அல்லது உலகில் அப்போது நடந்த ஏதேனும் அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மனசாட்சியின்படி மறுத்தாரா? அல்லது நாவலுக்கு சொந்த நாட்டில் எழுந்த எதிர்ப்புக்குப் பணிந்தாரா? கதையையும், கதை வெளியான கதையையும் தெரிந்துகொண்டால் இந்த வினாக்களுக்கு விடை கிடைக்கும். ரஷ்ய நாட்டவரான போரிஸ் லியோனிடோவிச் பாஸ்டர்நாக் (Boris Pasternak) (1890–1960) ‘தடை வேலிகளுக்கு மேலே மேகங்கள்’, ‘மேகங்களின் நடுவே இரட்டை நட்சத்திரம்’, ’இரண்டாவது பிறப்பு’, ‘கருத்துகளும் வெவ்வேறு வகைகளும்’ ஆகியவை உள்ளிட்ட கவிதை நூல்களை எழுதியவர். தனது காலகட்டத்தில் ரஷ்யாவில் ஜார் மன்னராட்சியின் கொடுங்கோன்மை, மக்களின் அவலம், முதலாம் உலகப் போர், ஜார் சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்களின் எழுச்சி, ஆட்சியைத் தூக்கி எறிந்து சோசலிச சோவியத் யூனியன் ஆட்சிக்கு அடிப்படை அமைத்த புரட்சி, கொண்டுவரப்பட்ட புதிய மாற்றங்கள், இரண்டாம் உலகப் போர், சமுதாயத்தில் ஏற்பட்டிருந்த அசைவுகள் ஆகியவற்றின் தாக்கங்களை நேரடி அனுபவங்களாக உள்வாங்கினார். அவற்றில் அவருக்கு மாறுபட்ட சிந்தனைகளும்இருந்தன. அந்தச் சிந்தனைகளை வெளிப்படுத்தி அவர் முதலாவதாகவும் கடைசியாகவும் எழுதிய நாவல் இது. 1950ஆம் ஆண்டுகளில் நாவலைப் பகுதி பகுதியாக எழுதி, அப்போதைய வழக்கப்படி இலக்கிய மேடைகளில் வாசித்து வந்தார். முழுப் புத்தகமாகத் தொகுக்கப்பட இருந்த நிலையில் சோவியத் அரசு அதை அச்சிடவும் வெளியிடவும் தடை விதித்தது. ஜார் அரசின் கீழ் நாட்டு மக்கள் வறுமையிலும் பல்வேறு ஏற்றத்தாழ்வான நிலைமைகளிலும் மூழ்கடிக்கப்பட்டிருந்தது, அதற்கு எதிராக ஆவேசத்துடன் போராட்டங்கள் வெடித்தது. இவற்றைத் தொடக்கப் பகுதியில் சரியாகப் பதிவு செய்த நாவல், பின்னர் புரட்சி என்றாலே கொடூரமான வன்முறைகள் என்றும், மாற்றங்களுக்கான திட்டங்களை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றும், அரசாட்சியிலும் சமூக வாழ்விலும் கட்டுப்பாடுகளின் பெயரால் கிறிஸ்துவத் திருச்சபைகள் ஆதிக்கம் செலுத்திய காலத்திற்குத் திரும்பிச் செல்வதன் மீது மோகத்தை ஏற்படுத்துகிறது என்றும், சோசலிசக் கட்டுமானத்தின் மேல் மனநிறைவின்மையை வளர்க்கிறது என்றும் தடைக்கான காரணம் கூறப்பட்டது. கடத்தப்பட்டு வெளியீடு சில நண்பர்களின் உதவியோடு தொகுப்பு இத்தாலிக்குக் கடத்தப்பட்டது. அங்கே புத்தகமாக அச்சிடப்பட்டு 1957இல் வெளியிடப்பட்டது. இதில் ஒரு கவனிக்கத்தக்க ஒரு தகவல் – நாவலை வெளியிட்ட ஜியாங்கியாகோமோ ஃபெல்ட்ரினெல்லி ஒரு இடதுசாரிப் பதிப்பாளர், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். இயக்கத்தின் லட்சியங்களுக்கு எதிரானதாகவும் எழுதப்பட்ட நாவலை வெளியிட்டதற்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நூலை அச்சிட்டு வெளியிட வைப்பதற்கு சிஐஏ வேலை செய்தது. சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்க அரசு நடத்தி வந்த கெடுபிடிப் போரில் நாவலும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. பல மொழிகளிலும் கொண்டுவரப்பட்டது. நாவலுக்குப் பல நாடுகளிலும் வரவேற்பளிக்கப்பட்டது. அரசியல், சமூக, பண்பாட்டுத்தள நிலைமைகளைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது, சோவியத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது என்று பாராட்டுகள் குவிந்தன. இலக்கியப் படைப்பு என்ற முறையில் எதிர்க் கருத்துகளும் வந்தன. முன்னும் பின்னுமாகப் போகும் கதையின் நடை குழப்பத்தைத் தருகிறது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. ஏராளமான கதாபாத்திரங்கள், ஒவ்வொரு முக்கியக் கதாபாத்திரத்திற்கும் மூன்று பெயர்கள், பல இடங்களில் அவர்கள் வருகிறபோது ஒவ்வொரு முறையும் ஒரு பெயரில் குறிப்பிடப்படுகிறது, அது வாசிப்புக்குத் தடையாக இருக்கிறது என்றும் விமர்சிக்கப்பட்டது. மனித உணர்வுகளும் உறவுகளும் தொடர்பான சித்தரிப்புகள் சிறப்பாக இருக்கின்றன என்ற அங்கீகாரத்துடன், வரலாற்றைத் திரித்துக்கூறுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. ஆயினும், 1958இல் கூடிய நோபல் பரிசுத் தேர்வுக்குழு ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) மிகச் சிறந்த நாவல் என்று அறிவித்தது. நாவலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதில், இலக்கியத் தகுதிகளுக்கு அப்பாற்பட்டு, மேற்கத்திய நாடுகளுக்கு சோவியத் யூனியன் மேல் இருந்த அரசியல் காழ்ப்பு ஒரு முக்கிய பின்னணியாக இருந்தது என்று கூறலாம். சோவியத் யூனியனில் உயர்ந்து பறந்த செங்கொடியும், அங்கே மேற்கொள்ளப்பட்ட முற்போக்கான நடவடிக்கைகளும் தங்களுடைய நாடுகளிலும் சுரண்டல் அமைப்புக்கு எதிராக மக்களைத் திரட்டும் என்ற அச்சம் முதலாளித்துவக் கும்பல்களுக்கு இருந்தது. ஆகவே சிவப்புச் சிந்தனையைத் தாக்கக்கூடிய எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கப்பட்டது. போரிஸ் பாஸ்டர்நாக் (Boris Pasternak) இன்னொரு பக்கத்தில், பாஸ்டர்னாக் தன் சொந்தக் கருத்தின் அடிப்படையில் அல்லது திட்டமிட்ட உள்நோக்கத்துடன் எழுதியிருந்தாலும் கூட, அதற்குத் தடை விதித்திருக்கக்கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. நாவலைப் பற்றிய கூர்மையான விமர்சனங்களை நிகிதா குருசேவ் அரசாங்கமோ, கம்யூனிஸ்ட் கட்சியோ, இலக்கிய அமைப்புகளோ வலுவாகச் செய்து மக்களின் முடிவுக்கு விட்டிருக்கலாம். மாறாகத் தடை விதித்ததால், சோசலிசத்தில் கருத்துச் சுதந்திரம் இருக்காது என்ற எண்ணத்தைப் பரப்புவதற்குத் தோதான சூழல் ஏற்பட்டதையும் மறுப்பதற்கில்லை. மருத்துவக் கவிஞன் ‘டாக்டர் ஷிவாகோ’ நாவலின் கதைச்சுருக்கம் வருமாறு: மருத்துவரான யூரி ஷிவாகோ ஒரு கவிஞனும் கூட. மன்னராட்சிக் கொடுமைகளைக் கண்டு வளர்ந்தவன் உள்நாட்டுப் போரின் கொந்தளிப்பையும் சந்திக்கிறான். மக்களின் கிளர்ச்சி பெரும் புரட்சியாக மாறுவதையும் காண்கிறான். டோன்யா என்ற பெண்ணை மணந்துகொள்கிறான். முதல் உலகப்போரின்போது ராணுவ மருத்துவராகப் பணியாற்ற ஆணையிடப்படுகிறது. மருத்துவ முகாமில் லாரா என்ற பெண்ணின் மீது ஈர்ப்பு கொள்கிறான். ஒரு புரட்சிகர இளைஞனின் மனைவி லாரா. அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாமல் அவனை தேடுகிறவளான அவள் ஷிவாகோ மீதும் அன்பு வைக்கிறாள். புரட்சியை நிலைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஷிவாகோவின் வாழ்க்கையை பாதிக்கின்றன. அந்த நடவடிக்கைகளை ஏற்க மறுக்கிறான். தன் மனைவியையும் குடும்பத்தையும் நேசிக்கிற அவன் தன் காதலைப் பாதுகாக்கவும் போராடுகிறான். கொந்தளிப்பான நிலைமைகளால் துரத்தப்பட்டவனாக வேறோர் இடத்தை அடையும் அவன் தன் எழுத்தாக்கங்களில் ஆறுதல் கொள்கிறான். கவிதைகளை வெளியிட முயல்கிறான். அதற்குத் தடை விதிக்கப்படுகிறது. லாரா–ஷிவாகோ இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும், சூழ்நிலைகள் அவர்களைப் பிரிக்கின்றன. லாரா தனது கணவனைத் தேடிச் செல்கிறாள், ஷிவாகோ தனது குடும்பத்துடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. (இதனிடையே நாட்டின் அரசியலிலும் சமுதாயத்திலும் பல வேகமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மத நிறுவனங்களின் பிடியிலிருந்து அரசு அமைப்புகள் விடுவிக்கப்பட்டன. சமுதாயத்திலும் தலையீடுகள் கட்டுப்படுத்தப்பட்டன.ஆனால், அவற்றை எதிர்மறையாகவே நாவல் சித்தரிக்கிறது). பல்வேறு உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தொடர்கின்றன. சோவியத் படையிலிருந்து வெளியேறும் யுரி ஷிவாகோ இறுதியில் மாஸ்கோ நகருக்குத் திருமபுகிறான். மனைவியும் மகனும் வேறெங்கோ இருக்க, இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்கிறான், அவர்களுக்குக் குழந்தை பிறக்கிறது. ஆனால் யுரி மகிழ்ச்சியாக இல்லை. 1929ஆம் ஆண்டில், உடல்நலம் குன்றிய நிலையில் ஒருநாள் சாலையில் செல்லும்போது டிராம் விபத்தில் இறக்கிறான் ஷிவாகோ. பல ஆண்டுகளுக்குப் பிறகு யூரியின் சிறுவயது நண்பர்கள் அவனது கவிதைகளைத் தேடியெடுத்து புத்தகமாக வெளியிடுகிறார்கள். அந்தக் கவிதைகள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காதலும் ஏக்கங்களும் நிறைந்த அவனுடைய வாழ்க்கை ஒரு சோகமான காவியமாகப் பேசப்படுகிறது. இலக்கியத்துக்காகவா அரசியலுக்காகவா? ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) சோவியத் அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் எழுதப்பட்ட ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பாக மேற்கத்திய நாடுகளின் அரசுகளாலும் திறனாய்வாளர்களாலும் பார்க்கப்பட்டது. சோவியத் இலக்கியத்திற்கே எதிரான ஒரு குரலாகவும் இந்த நாவலுக்கான பரிசு கருதப்பட்டது. அரசின் அழுத்தத்தை மீறி பாஸ்டர்நாக் தனது படைப்புக்காக நின்றார் என்று போற்றும் குரல்கள் ஒலித்தன. அதில் ஒரு பகுதி உண்மையும் இருந்தது, மறுபகுதி உள்நோக்கமும் இருந்தது. “நோபல் பரிசு வழங்கப்பட்டதில் அரசியல் காரணிகளுக்கு முக்கியப் பங்கு இருந்தாலும், அதன் ஆழமான தத்துவார்த்த சிந்தனைகள், கவித்துவமான மொழி மற்றும் மனித உணர்வுகளை சித்தரிக்கும் விதம் ஆகியவை இலக்கியப்பூர்வமாகப் பாராட்டுக்குரியவை. அன்று நிலவிய உலகளாவிய அரசியல் சூழல் நாவலின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கலாம்,” என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நாவல் புரட்சியின் உன்னத நோக்கங்களை சிறுமைப்படுத்தியது, சுரண்டல் சக்திகளுக்கும் மத நிறுவனங்களுக்கும் ஆதரவாகப் பேசியது என்ற விமர்சனமும் முன்னுக்கு வந்தது.தனிமனிதனின் உணர்வுகள், காதல் மற்றும் ஆன்மீகத் தேடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிற நாவல் புரட்சியின் பொதுவான இலக்குகளை விட தனிமனிதனின் சுதந்திரம் முக்கியமானது என்ற கருத்தை மறைமுகமாக முன்வைக்கிறது. இது புரட்சியின் கூட்டு உணர்வுக்கு எதிரானது என்று போராட்டக்களத்தில் நின்றவர்களால் பார்க்கப்பட்டது. நாவலின் கதாநாயகனான ஷிவாகோவின் கவிதைகளில் மதத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இது சோவியத் அரசு வளர்க்க முயன்ற அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக அமைந்தது. அதே போல், நிலப்பிரபுத்துவ கால சமூக அமைப்பின் மீதான ஒரு ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்று மாற்றங்களுக்காக நிற்பவர்கள் கூறினார்கள். நம் ஊரில் கூட, எதற்கெடுத்தாலும் “அந்தக் காலத்திலேயெல்லாம்” என்று காலாவதியாகிப் போன கலாச்சார, சமூக நிலைகள் மறுபடியும் வர வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறவர்ளையும், பழைய சடங்குகளை நியாயப்படுத்திப் புதுப்பிக்க விருமபுகிறவர்களையும் பார்க்கிறோம் அல்லவா?. முடிவுரையாகச் சொல்வதென்றால், படைப்புச் சுதந்திரம் மிக முக்கியமானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) நாவலை அன்றைய சோவியத் அரசு தடை செய்தது ஒரு தவறான முன்னுதாரணம். அவர்கள் நாவலை கடுமையாக விமர்சித்திருக்கலாம், அதன் கருத்துக்களை மறுத்திருக்கலாம், ஆனால் தடை நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலானது..அதே நேரத்தில் ஒரு பெரிய சமூக மாற்றத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, தனிமனித நோக்கங்களை மட்டும் முதன்மைப்படுத்துவது புரட்சிக்கு எதிரானவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமைந்தது. பிற்காலத்தில் சோவியத் யூனியனும் அதன் மாண்புகளும் தகர்க்கப்பட்டதற்கு ஆதரவான மனநிலையை வளர்த்ததில் இப்படிப்பட்ட சிந்தனைப் போக்குகளுக்கும் பங்கிருக்கிறது எனலாம். போரிஸ் பாஸ்டர்நாக் (Boris Pasternak) மறைந்தபிறகு, 1965இல் ஓமர் ஷெரீப் மையப்பாத்திரத்தில் நடிக்க, டேவிட் லீன் இயக்கத்தில் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) திரைப்படமாகவும் வந்தது. உலகின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்று பல அமைப்புகளும் சான்றளிக்க, திரையரங்க வசூலிலும் உலக சாதனை நிகழ்த்திய படங்களில் ஒன்றாக தன்னைப் பதித்துக்கொண்டது. நாவலுக்குச் சற்றும் குறையாமல் சோவியத் அரசைக் குறைகூறியது. ஒரு நாவலை வெற்றிகரமான திரைப்படமாக்கிய முயற்சிகளில் ஒன்றாகவும் அடையாளம் பெற்றது. https://bookday.in/books-beyond-obstacles-boris-pasternak-doctor-zhivago-novel-oriented-article-written-by-a-kumaresan/
  18. கிருபனுக்குப் பிடித்த பாட்டு
  19. நன்றி ஏராளன் ......... பல தகவல்கள் உங்களின் விரல் நுனியில் . .......... ! 😁
  20. ஜேர்மன் இரும்புகள் கறள் புடிக்காது. 😎 made in Germany எண்டதுக்கு உலகிலேயே தனி மதிப்பிருக்கு.
  21. பெருமைக்குரிய பிணந்தின்னிகள்! http://aalumaisirpi.com/wp-content/uploads/2025/01/animal.jpg திரு.முகில் குள்ளநரி திருடக்கூடாது. குள்ளநரி திருடக்கூடாது. குள்ளநரி திருடவே கூடாது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த வசனம் டோராவின் குரலில் ஒலித்தே தீரும். எல்லோருக்கும் நன்மைகள் செய்யும் டோரா – புஜ்ஜி பாத்திரங்களுக்குத் தீமைகள் விளைவிப்பது குள்ளநரி. அந்தக் கார்ட்டூனில் மட்டுமல்ல. காலம் காலமாக நரியை நெகட்டிவ் உயிரினமாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். பாட்டி வடை சுட்ட கதையிலும் நரியே வில்லன். நரிக்கு உபதேசம் செய்தாற்போல. நரி நக்கி கடல்நீர் வற்றுமா? நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும். நரி இடம் போனாலென்ன, வலம் போனாலென்ன. கடிக்காமல் போனால் சரி. பாழான ஊருக்கு நரி ராஜாவாம். சிங்கம் இல்லாத இடத்தில் நரி சிம்மாசனம் ஏறும். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. இப்படி நம் பழமொழிகளில்கூட பெரும்பாலும் நரிமீது ‘கருப்பு ஒளியே’ பாய்கிறது. நரி அவ்வளவு மோசமான விலங்கா? அதன் வாழ்க்கை எப்படிப்பட்டது? மனிதனுக்கும் நரிக்குமான உறவு எப்படிப்பட்டது? இந்தப் பூமியில் நரியின் பங்களிப்பு என்ன? நரியைவிட மோசமான உயிரினம் எது? எல்லாவற்றையும் பார்ப்போம். நரிகள் (Fox), பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. இவை அனைத்துண்ணிகள். ஆசியா, ஐரோப்பா, வட ஆப்ரிக்கா, வட அமெரிக்கா நாடுகளில் காணப்படுகின்றன. பொதுவாக ஒரு நாட்டு நாயின் அளவில் நரிகள் இருக்கின்றன. அதைவிடச் சிறிய அளவு கொண்ட நரி வகைகளும் உண்டு. மண்ணுக்கடியில் வளைகள் அமைத்து வாழும் இயல்புடையவை. உணவு சேமித்து வைக்கவும் உறங்கவும் வளைகளைப் பயன்படுத்துகின்றன. அதில் ஆபத்துக் காலத்தில் தப்பித்து வெளியேறுவதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட வாசல்களை அமைத்துக் கொள்கின்றன. தந்திரம்! நரிகள் கூட்டமாக வாழும் இயல்புடையவை. இரவு நேரங்களில் அவற்றால் தெளிவாகப் பார்க்க இயலும். ஆகவே, அப்போது வேட்டையாடுகின்றன. இதன் காதுகள், பூமிக்கடியில் எலி போன்ற உயிரினங்கள் எழுப்பும் சத்தங்களைக்கூட உணரும் திறன் கொண்டவை. அதேபோல, நரிகள் வெவ்வேறு வகையான குரல்களை அடையாளம் காணக்கூடியவை. மணிக்கு சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. சுறுசுறுப்பு! ஒரு பெண் நரியானது பொதுவாக இரண்டு முதல் ஏழு குட்டிகள் வரை ஈனும். குட்டிகளைத் தாயும் தந்தையும் சேர்ந்து பராமரிக்கின்றன. மூத்த சகோதர, சகோதரி நரிகளும் உணவு தேடி வந்து கொடுத்து உதவுகின்றன. பாசம்! பொதுவாக நரிகள் மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. மிருகக்காட்சிச் சாலையிலோ, மனிதனின் பராமரிப்பிலோ இருந்தால் சுமார் 10 ஆண்டுகள்கூட உயிர் வாழ்கின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் நரிகள் செழித்து வாழ்ந்திருக்கின்றன. நரியிற்கு ஊண் நல் யாண்டும் தீ யாண்டும் இல் – முன்றுரையனார் என்ற புலவர் எழுதிய பழமொழி நானூறு பாடல், நரியை வில்லனாகவே காட்டுகிறது. நரிக்கு உணவு உண்பதில் நல்ல காலம், கெட்ட காலம் என்றெல்லாம் கிடையாது. அது எப்போதும் வஞ்சகக் குணத்துடனேயே இருக்கும். நரியைப் போலவே பண்புகளைக் கற்றுக் கொள்ளாத கயவர்கள், வறுமை உள்ள காலத்திலும் தீமைகள் செய்வார்கள். வளமாக இருக்கும்போதும் தீமைகள் செய்வார்கள். அவர்களுக்கு நல்ல வழியே தெரியாது. மனிதனின் கெட்ட புத்திக்காக, நரிக்குக் குட்டு வைத்திருக்கிறார் முன்றுரையனார். சங்க இலக்கியத்தில் ‘கணநரி’ வலம் வருகிறது. ஆங்கிலத்தில் Jackal. குறுநரி, குழிநரி, குள்ளநரி என்ற பெயர்களும் இதற்கு உண்டு. இவை கூட்டமாகக் காணப்படும். கும்பலாகச் சென்றே வேட்டையாடும். கோரஸாக ஊளையிடும். கணநரிகள் போர்க்களத்தில் இறைந்து கிடக்கும் பிணத்தின் கொழுப்பைத் தின்றதாகச் சங்கப் பாடல்கள் காட்சிப்படுத்துகின்றன. கணநரிகள் காடுகளிலும் பாலைவனங்களிலும் தோட்டங்களிலும் வீடுகளின் அருகிலும் வாழும். பகல்களில் இவற்றைப் பெரும்பாலும் பார்க்க இயலாது. இரவுகளில் ஊளையிடும் சத்தம் மூலமாக இவற்றின் இருப்பை அறியலாம். இரவெல்லாம் திரிபவை, விடியற்காலையில் பதுங்கி விடும். அப்படியும் ஒன்றிரண்டு மனிதர்கள் பார்வைக்கு அரிதாகத் தென்படும். அதைத்தான் ‘நரி முகத்தில் விழித்ததுபோல’ என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள். இதைக் காலப்போக்கில் அதிர்ஷ்டத்தோடு இணைத்துக் கொண்டார்கள். இன்னிக்கு நரி முகத்துல முழிச்சிருக்கேன்! ‘‘நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி’’’ என்கிறது நற்றிணை. போரினில் வீழ்ந்து கிடக்கின்ற மனிதர்களின் பிணங்கள். நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய எருவைக் கழுகு அவற்றைத் தின்ன வருகிறது. அவற்றுடன் போராடி விரட்டிவிட்டு, சதைகளைத் தானே தின்கின்றன நரிகள். பின்பு உண்ண நீர் கிடைக்காமலும், உறங்க நிழலிடம் கிடைக்காமலும் அலைந்து வருந்துகின்றன என்பதாக இந்தப் பாடல் பொருள் தருகிறது. பேயும் கணங்களும் நரியும் திரிகின்ற இந்தப் போர்க்களத்திலே, ஊன் தின்று சிவந்த செவியுடைய கழுகுகளும் காண்பது அச்சம் தருவதாக இருக்கிறது என்று காட்சிப்படுத்துக்கிறது புறநானூறு. பிணம் தின்னும் உயிரினங்கள் எப்போதும் கொடூரமான ஒன்றாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றுக்குச் சங்க இலக்கியங்களும் விதிவிலக்கல்ல. ஆனால், அந்த உயிரினங்களால்தாம் இந்த மண்ணின் சுற்றுச்சூழலானது பாதுகாக்கப்படுகிறது. நரியோடு எப்போதும் தொடர்புபடுத்திப் பேசப்படும் பிணந்திண்ணிக் கழுகுகள் குறித்தும் சில வார்த்தைகள் இங்கே, அவற்றின் தன்னிகரற்றச் சேவைக்காக. பாலை நிலத்தின் அடையாளப் பறவை, பிணந்தின்னிக்கழுகுகள். இவற்றுக்கு மஞ்சள் பாறு, மஞ்சள் முகப் பாறு, திருக்கழுக்குன்றக் கழுகு, எகிப்திய பிணந்தின்னிக்கழுகு, வெள்ளைக் கழுகு எனப் பல பெயர்கள் உண்டு. அசிங்கமான, அருவருப்பான, கொடூரமான பறவையாக இவை அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆனால், இவையே பாலை நிலத்தின் பிரதான தூய்மைப் பணியாளர்கள். இந்தப் பிணந்தின்னிக்கழுகுகளுக்கும் பார்சி மக்களுக்குமான உறவு, தனித்துவமானது. பார்சி இனத்தைச் சார்ந்தவர்கள் இயற்கையை நேசிக்கும் இயல்பைக் கொண்டவர்கள். இறந்த பிறகுகூட, அவர்களது உடலானது இயற்கையான முறையிலேயே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். அதற்காகவே ‘டோக்மா’ என்ற கோபுரங்களைக் கட்டினார்கள். மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து சற்றே தள்ளி, உயரமான, வட்ட வடிவமான, கூரைகளே இல்லாத இந்த ‘இறுதிச் சடங்கு கோபுரங்கள்’ அமைக்கப்பட்டன. இறந்த ஒரு பார்சியின் உடல் இந்தக் கோபுரத்தில் வைக்கப்படுகிறது. அங்கே பிணந்தின்னிக் கழுகுகள், செம்பருந்துகள் வருகின்றன. அவை உடலின் சதைகளைத் தின்ன ஆரம்பிக்கின்றன. உடலானது அழுகும் முன்பே வேகமாகத் தின்று முடிக்கின்றன. இந்தக் கழுகுகளிலும் வகைகள் இருக்கின்றன. ஒரு வகைக் கழுகுகள் சதையை மட்டும் உண்கின்றன. இன்னொரு வகைக் கழுகுகளோ தோலை உண்கின்றன. இன்னொன்று எலும்பைச் சாப்பிடுகின்றன. வேறோரு வகைக் கழுகுகளோ மிச்சம் மீதியை உண்கின்றன. இப்படியாக ஓர் உடலின் ஒவ்வொரு பகுதியையுமே உண்டு, அகற்றி, அந்தச் சூழலைச் தூய்மைப்படுத்தும் உயிரினங்களாக இந்தக் கழுகுகள் தொடர்ந்து சேவை ஆற்றிக் கொண்டே இருக்கின்றன. இந்தக் கழுகுகள் வருடத்துக்கு ஒரு முட்டைதான் இடும். அந்தக் குஞ்சும் பிரச்னையின்றி வெளியே வந்து பிழைத்து வாழ்வது சவாலான காரியம்தான். அதனால்தான் இந்தக் கழுகு இனம் பெருகுவதைவிட, அழியும் வேகம் அதிகமாக இருக்கிறது. சூழல் மாற்றங்களும் அதற்கு முக்கியக் காரணம். மனிதனும் இந்தக் கழுகு இனத்தை மறைமுகமாக அழித்துக் கொண்டிருக்கிறான். மாடுகளுக்கு, Diclofenac என்ற வலிநிவாரண மருந்து சில மருத்துவக் காரணங்களுக்காகக் கொடுக்கப்படுகிறது. அந்த மாடு இறந்தபின் அதன் சடலத்தை மனிதன் ஆளற்ற பகுதிகளில் போடும்போது, கழுகுகள் அதை உண்ண வருகின்றன. அதை உண்ணும்போது Diclofenac மருந்தால், கழுகுகளின் சிறுநீரகங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அதன்பின் அவை இறந்து போகின்றன. பிணந்தின்னிக்கழுகுகளின் வேகமாக அழிவதற்கு முக்கியமான காரணமாக இது கருதப்படுகிறது. https://aalumaisirpi.com/?p=6477
  22. உண்மை. விருப்பமில்லாவிட்டால் அவர் விலகிப் போயிருக்க வேண்டும்.
  23. அந்த பெண் தவறு செய்தாரா இல்லையா என்பது இங்கு பிரச்சனை அல்ல. கணவனின் வாக்குமூலத்தின் பிரகாரம், அந்த பெண் செய்தது ஒரு தவறு என்றால், கணவன் செய்தது கொடூர குற்றச்செயல். (Crime) அந்த கொடூர க்கொலையை இனத்தின் கூட்டு உளவியல் கொண்டாடும் மனநிலை கேவலமானது என்பதே இங்கு முக்கியமானது இறந்த பின்னர் தலையை வெட்டி சென்ற கொடூர கொலை பெருமளவு மக்களால் கொண்டாடப்படுகிறது என்பதும் அந்த கொலையை செய்தவன் கதாநாயகனாக புகழப்படுவது என்பதும் ஒரு சைக்கோ மனநிலை. அந்த சமூகத்தில் வளர்ந்துவரும் குழந்தைகள் கொடூரக் கொலைகளை ஒரு முன்மாதிரியாக பார்கக தொடங்குவர். தலைவர் இருந்திருந்தால் எதை செய்திருப்பாரோ அதை அந்த வீரத்தமிழன் செய்து தமிழரின் வீரத்தை மானத்தை காப்பாற்றி உள்ளார் என்பதான பல பதிவுகள் சமூக வலைத்தளமெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. இது எமது இனத்திற்கே அவமானம் இல்லையா? அதற்கு பல லைக்குகள் வேறை. இந்த கொலையை கண்டிபவர்களை நோக்கி உனது மனைவியும் இவளைப் போன்ற வே … தானே என்று அவர்களது குரல்களை அடக்கும் யுக்தி எவ்வளவு வக்கிரமானது. இதை ஒரிருவர் மட்டுமல செய்தால் கடந்து போகலாம். ஆனால் இவ்வாறானவர்களே எமது மக்களின் சமூக வலைதளங்களில் பெரும்பான்மையினர். அத்துடன் ஒருவர் தனது முகநூலில் கொலை செய்யப்பட்ட சுவர்ணலதாவின் இறுதிக்கிரிகைகளில் எடுக்கப்பட்ட உடலின் புகைப்படத்தை பகிர்ந்து தனது பிரதேசமான ஆலையடி வேம்பு பிரதேசத்திலும் விரைவில் இப்படியான ஒரு சம்பவம் நிகழவேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ( இந்த முகநூல்பதிவின் Screenshot ல் அந்த பெண்ணின் உடலும் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்று அவரால் சுட்டிக்காட்டப்பட்ட பெண்கள் பற்றிய சில தனிநபர் விபரங்களும் இருப்பதால் அதை இங்கு இணைப்பது உசிதமல்ல) அடுத்த கொலையை ஆவலுடன் எதிர்பார்ககும் அவருக்கும் பல லைக்குகள் வந்திருந்தன என்றால் இந்த சைக்கோ மனநிலை அதிகளவான எமது மக்களுக்கு இருப்பதானது இவர்களுக்கெல்லாம் சட்டவாக்க அதிகாரம் கிடைத்தால் ஷரியா சட்டம் போன்ற காட்டுமிரண்டி சட்டங்களை உருவாக்குவர் என்பதை காட்டுகிறது.
  24. நல்லகாலம் , பாலம் வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் கட்டபட்டிருப்பது சிறப்பு . ..........! 😁
  25. விசாரணயின் பின்பே எதையும் சொல்ல முடியும் என்பது சரியே. ஆனால் தலையோடு பொலிஸ் நிலையம் போய் கொலையை ஒப்பு கொண்டதால் - கொலையை இன்னார், இன்ன காரணதுக்காக செய்தார் என்பது வெள்ளிடமலை ஆகவே அந்த கொலையை கண்டிப்பதில் தவறில்லை என நினைக்கிறேன். அந்த இளைஞர் இப்படி போட்டோக்களை அனுப்பி சீண்டி இருந்தால் கொலையில் அவரின் பங்கும் உள்ளது. ஆனால் அவர் கொலையாளியை கொலை செய் என நேரடியாக தூண்டியிராத விடத்து, அவர் வழக்கில் ஒரு சாட்சியே ஒழிய குற்றவாளி அல்ல. நீங்கள் கூறியது போல் அவருக்கு அறிவுரை செய்ய மட்டுமே முடியும். வாசித்த சம்பவங்கள் உண்மையானல் - திருமணம் முடித்து விட்டு கொழும்பில் தனியாக போய் இருந்த கணவன் கணவனிடம் மணவிலக்கு பெறாமல் அவர்களை விட வயது குறைந்த இளைஞரிடம் உறவு வைத்து, கருவையும் உருவாக்கி கொண்ட மனைவி அப்படி ஒரு உறவில் இருந்தது மட்டும் அல்லாமல் கணவனுக்கே போட்டோ அனுப்பி சீண்டிய காதலன் இவர்கள் யாருமே சுத்தம் இல்லை. ஆனால் கணவன் பல நாட்களாக திட்டமிட்டு கொலை செய்தது இதை வேறு கட்டத்துக்கு கொண்டு போய்விட்டது. ஒரு நல்ல நண்பன் இருந்து - அவனிடம் மனம் விட்டு பேசி இருந்தால் கூட “தூக்கி போட்டு விட்டு, உன் வாழ்க்கையை பார்” என அவன் சொல்லி இருந்தால் கொலையை தடுத்திருக்கலாம். ஆனால் சமூகமே “வெட்டுடா, கொல்லுடா, உன் மானத்தை மீள பெறுடா” என பினூட்டம் இடுகிறதெனில் அந்த சமூகத்தில் இப்படி ஒரு அறிவுரை கணவனுக்கு கிடைக்கவும் வாய்ப்புகள் குறைவு. பிகு இங்கே பலர் சொல்வது போல இந்த மனைவி முழு அப்பாவியாகவும் இருக்கலாம். இவை எல்லாம் கணவனின் கட்டுகதைதாகவும் இருக்கலாம்.
  26. இங்கேதான் ஆணவ கொலைகளின் (dis-honour killings) இன் இயங்கு விதியே இருக்கிறது. மனைவி இன்னொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததால் - இவரின் தன்மானம் பாதிக்கப்பட்டதல்லவா? மனைவியை கொலை செய்து அந்த தன்மானத்துக்கு ஏற்பட்ட அழுக்கை, மனைவியின் ரத்தத்தால் கழுவி நீக்கி உள்ளாராம். இதே கான்செப்ட்தான் தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளிலும் பயன்படுகிறது. அல்பேனியாவில் இரத்த- சண்டை blood feud என பரம்பரை பரம்பரையாக மாறி மாறி கொல்லுவார்கள். ஒரு குடும்பத்தின் உறுப்பினரை மறு குடும்பம் கொன்றதால் அந்த அகெளரவத்தை போக்க, மறு குடும்ப ஆணில் ஒருவரை கொல்வது. இப்படி சங்கிலி போல் மாறி மாறி கொல்வது. இதை நடைமுறை செய்ய அங்கே கானூன் எனும் மரபுவழி சட்டம் கூட உள்ளது. மாபியாங்கள், காங்குகள் மாறி மாறி கொல்வது கூட இப்படி ஒரு அடிப்படையில்தான். இப்படி ஒரு தனிநபர் கொல்லுவது அவரின் மனநிலை சம்பந்த பட்ட விடயம் என கருதி கடந்து போனாலும், இதை சமூகமாக பெருமளவில் ஆதரிக்கும் போக்கு - அந்த சமூகம் தாலின்பானிய படுத்தபடுகிறது என்பதன் அறிகுறியே.
  27. நல்வரவு செந்தமிழாளன்25.
  28. கேட்க மிக மிக இனிமையாய் இருக்கு . ......... இசைப்புயல் ம் . ........ சொல்லி வேல இல்ல ...... ! 👍 நன்றி செந்தமிழாளன் .......... !
  29. இது மிகவும் தவறான அபாயகரமான கருத்து, ஆணோ பெண்ணோ திருமண ஒப்பந்தத்தை மீறும் போது உரிய சட்ட நடவடிக்கையோ அல்ல விவாகாரத்தையோ பெற்று அவரவர் வாழ்க்கையை வாழ முயல வேண்டும். இதில் சிலருக்கு மனக்காயங்கள், பொருளாதார சங்கடங்கள் ஏற்படும் ஆனால் அதற்கு ஒருவரது உயிரை பறிப்பது பெரும் குற்றம் மற்றும் யாருக்கும் எவ்வித பயனும் ஏற்படப்போவதும் இல்லை. அப்பெண்ணின் பக்க உண்மைகளோ, நியாயமோ இனி தெரியப்போவதில்லை, உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கும் இம்மாதிரியான குற்றநடவடிக்கைகளுக்கு என்றும் ஆதவளிக்ககூடாது மாறாக கண்டிக்கப்படவேண்டும்.
  30. 'ரஷ்ய அதிபர் புடினும், உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியும் சிறுவர்கள் போல சண்டை போட்டுக் கொள்கின்றார்கள். அவர்கள் இருவரையும் சில காலம் சண்டை பிடிக்க விட்டுவிட்டு பின்னர் வழிக்கு கொண்டு வருகின்றேன்.................' என்பது போல அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முந்தாநாள் சொல்லியிருந்தார். ட்ரம்ப் சொல்பவைகளுக்கு மூன்று நாட்கள் ஆயுள் இருந்தாலே அதிசயம். அதனால் தான் அவருடைய புதிய பெயரான TACO என்பது மிகப் பிரபலமாக வந்துவிட்டது. ஆனால் இரு சிறுவர்கள் தெருவில் சண்டை பிடிப்பது என்பது சில நாட்களாவது நிலைத்து நின்று விடும் போல. ஒரு சிறிய மாற்றம் - எலானும் ட்ரம்பும் தான் அந்த இரு சிறுவர்கள். எலானின் அந்த சல்யூட்டையோ, மரம் அரியும் வாளை மேடையில் தூக்கிக் காட்டியதையோ, அரச வேலைகளில் பணி நீக்கம் செய்ததையோ, தொண்டு நிறுவனங்களை இல்லாமல் ஆக்கியதையோ, எப்போதும் எடுத்தெறிந்து பேசும் இயல்புகளையோ, இன்னும் பல விடயங்களை இங்கு எவரும் மறந்துவிடப் போவதில்லை. எலான் தற்போது ட்ரம்பிற்கு எதிராக சொல்லும் கருத்துகள் தன் நலன் சார்ந்ததே அன்றி, ஒரு துளியேனும் அமெரிக்க மக்களின் அல்லது உலக மக்களின் நன்மை கருதி இல்லை. தன்னைத்தானே stable genius என்று சொல்லிக் கொள்ளும் ட்ரம்ப் எலானை mediocre Musk என்று இறுதியில் சொல்ல வேண்டிய ஒரு நிலைமை இவ்வளவு விரைவாக வந்துவிட்டது. அமெரிக்காவை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன் என்று எலானை கொண்டாடிய ட்ரம்பின் மஹா (MAGA) குழுமம் இன்று எலானை நீ செவ்வாய் கிரகத்துக்கு பின்னர் போகலாம், நீ இப்பொழுது முதலில் ஆபிரிக்காவிற்கு திரும்பி போ என்று சொல்லுகின்றார்கள். நேற்று எடுத்த கெட்டமைனின் தாக்கம் இறங்க, எலான் இன்று பணிய ஆரம்பித்துவிட்டார். எலான் கலிஃபோர்னியாவிலிருந்து டெக்சாஸ் போகலாம். நீலத்திலிருந்து சிவப்பாக மாறலாம். ஆனால் அவர் அமெரிக்காவிலிருந்து வேறு எங்கும் போகமுடியாது. ட்ரம்புடன் சேர்ந்து நிற்கும் போது அவருடைய நிறுவனங்கள் சந்தையில் தளம்பின. வெளியேறி ட்ரம்பை எதிர்க்கும் போது இன்னும் அதிகமாக தளம்புகின்றன. மொத்தத்தில் இவை எதுவுமே இவருக்கு தேவையில்லாத விடயங்கள். நிகோலா டெஸ்லா அவருடைய தாயாருக்கு எழுதிய கடைசிக் கடிதம் நன்கு பிரபலமானது. டெஸ்லா என்னும் பெயரையே எலானும் தொடர்கின்றார்.
  31. புத்தியுள்ள மனிதரெல்லாம் .......... ! 😂
  32. இப்படியான சம்பவங்கள் ஒரு சமூகத்தையே விளிம்பு நிலைக்கு கொண்டு வருகின்றது. இங்கு சிலர் அவதானித்தது போல் சமூக ஊடகங்களில் கொலை செய்தவருக்கு வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள் தெரிவிக்கும் பல கருத்துக்கள் பரவலாக உள்ளன. சில தினங்கள் முன் அல்சகீராவில் ஒரு செய்தி பார்த்தேன். அதில் 17 வயதான சமூக ஊடகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சிறுமி பாகிஸ்தானில் அவரது வீட்டில் வைத்து நெஞ்சில் இரு தடவைகள் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். 22 வயது மதிக்கத்தக்க கொலையாளி பாகிஸ்தானின் இன்னோர் இடத்தில் வசிப்பவர் மிக நீண்ட பிரயாணம் செய்து சிறுமியை சந்திக்க வந்து கொலையை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். காவல்துறையினர் அவரை பிடித்துள்ளதாக கூறியுள்ளார்கள். எவ்வளவு சாதாரணமாக கொலையை செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சி ஏற்படுகின்றது. கொலை குற்றங்களுக்கு மரண தண்டனை இலங்கையில் நிறைவேற்றப்படுவது கொலை குற்றங்கள் செய்யப்படுவதை குறைக்கலாம்.
  33. இந்தக் கொலை மூலம் தனது மனைவி இன்னொரு ஆணுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்பதை உலகம் முழுவதும் பறைசாற்றியுள்ளார். இப்போது அந்தத் தன்மானம் எங்கே போனது ? இன்று போட்டோக்களைச் செயற்கை நுண்ணறிவு மூலம் இலகுவாக உருவாக்கிக் கொள்ளலாம். இறந்தவரின் கருவின் டிஎன்ஏ அப்குப்பாய்வு மூலம் இக் குழந்தை கணவரினுடையது தான் என்று நிரூபித்தால் மனைவிக்கு உயிர் கொடுக்க முடியுமா ? கோபத்தில் நிலைகுலைந்து ஒரு கொலை செய்வது வேறு. தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போகுமளவுக்குக் குரூரமான இந்தத் தன்மானத்தான் ஒரு மிருகமே.
  34. முதல்வர் நந்தனாருக்கும் அரசவைப் புலவர்கள் மற்றும் தளபதிகளுக்கும் வாழ்த்துக்கள்.👍 போட்டியை திறமையாக நடாத்தி முடித்த கிருபனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.🙏 போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும் போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.🙏
  35. போட்டியில் வெற்றியீட்டிய முதல் மூவர்களான நந்தன், ரசோதரன், புலவருக்கு வாழ்த்துக்கள். போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு மிக்க நன்றி. போட்டியை சுவாரசியமாக்க கருத்துக்களை வழங்கியவர்களுக்கும், மற்றும் பங்கு பற்றியவர்களுக்கும் நன்றி. மீண்டுமொரு போட்டியில் சந்திக்கலாம்.
  36. போட்டியில் பங்குபற்றியவர்களுக்கும் போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்த கிருபனுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
  37. ஒருமாதிரி அகஸ்தியனின் புண்ணியத்தில் கடைசிக்கு முதல் இடம்.நிறையக் கேள்வி மற்றதுநிறைய புது வீரர்கள் என்பதால் பையனைக்கொப்பி பண்ணி சில மாற்றங்கள் செய்து போட்டேன் ஈயடிச்சான் கொப்பியென்று வரக்கூடாதென்று. ஆனால் என்னே ஆச்சரியம் மாற்றியதில் 90 வீதமானவை தப்பாத்தான் வந்திருக்கு. அண்மைக்காலமாக ஐபிஎல் சுவாரசியம் குறைந்ததால் எந்தப்போட்டியும் பார்ப்பதில்லை. வெற்றி பெற்றவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் போட்டியை திறம்படநடாத்திய கிருபன் அண்ணாவுக்கும்நன்றிகள்.
  38. பார்ரா கடைசி இடத்தைக் கூட தக்க வைத்து கிருபன் வாயால் ஒரு பாராட்டு வாங்க முடியாத பாவியாகிட்டேன்.☹️அடுத்த முறை அது மகளாக இருந்தாலும் கூட்டனி கிடையாது தனத்தவில் தான்.😂மற்றும் நிரந்தர முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள். கிருபனுக்கு எவ்வளவு பாராட்டுக்களை சொன்னாலும் தகாது. வேலைப்பழுக்களின் மத்தியிலும் போட்டியை திறமையாக நடாத்தி முடித்த கிருபனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும் போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.
  39. பாடப்புத்தக அறிவை விட சமூக அறிவூட்டல் வேண்டும் என நினைக்கிறேன். ஒத்துவரவில்லையா, கணவன் மீதோ மனைவி மீதோ சந்தேகமா நேரடியாகவே இருவரும் பேசி இன்ன காரணத்திற்காக உன்னைப் பிரிகிறேன் என்று தெளிவுபடுத்தி விவாகரத்து வாங்கி புதிய வாழ்க்கையை தொடங்கலாம். கொலையோ தற்கொலையோ தீர்வாகாது.
  40. நன்றி கிருபன். பங்குனி 7ம் திகதி இந்தத் திரியைத் திறந்ததில் இருந்து, இன்றுவரை சிறப்பாக வழிநடத்திச் சென்று, சிறப்புற கிருபனின் உழைப்பை நன்றி என்னும் ஒரு சொல்லில் சொல்லிட முடியாது ....... மிக மிக நன்றி கிருபன்முடித்து வைத்தமைக்கு மிக்க நன்றி. மூன்று மாதங்கள் கிருபன். எப்படித்தான் பொறுமையாக இருந்தீர்களோ தெரியவில்லை.
  41. இதை ஒத்த இன்னொரு சம்பவத்துக்கான எம்மவர்களின் பின்னூட்டங்களும், செய்தியை உள்வாங்கிய விதமும் எனக்கும் அண்மையில் கவலையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு தமிழ் இளைஞன் (21 வயது என நினைக்கின்றேன்), நீரில் மூழ்கி இறந்து விட்டார். அந்த செய்தியைக் கேட்டவுடன், அவரது காதலியும் தற்கொலை செய்துவிட்டார். எம்மவர்களின் பின்னூட்டங்களில் 90 சதவீதமானவை, அப் பெண்ணை மிகவும் பாராட்டியும், இது தான் உண்மையான காதல் , காவியக் காதல், புனித காதல், என்றெல்லாம் மெய்சிலிர்த்து இருந்தனர். தாலிபானிசம் என்பது கொலைகளை மட்டுமல்ல, தற்கொலைகளையும் ஆதரிக்கும் (தற்கொடைகளை அல்ல). இப்படியான சமூகத்தில் போலி மதிப்பீடுகளின் மூலம் தான் ஒருவரை எடை போடுகின்றனர்.
  42. எண் சோதிடம் பற்றி பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதிலும் இந்தியர்கள் / தமிழர்கள் / இந்துக்கள் அதிகம் எண் சோதிடத்தை நம்புகின்றனர். உண்மையில் எனக்கு ஆச்சரியம் தரும் விடயமும் இதுதான். இவர்களால் எவ்வாறு இதனை நம்ப முடிகின்றது என. ஏனெனில் எண் சோதிடம், நாம் பிறந்த திகதியின், மாதத்தின்,ஆண்டின் அடிப்படையில் கணிக்கப்படுவது. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் காலண்டரின் அடிப்படையில் இது கணிக்கப்படுகின்றது. நாம் இன்று பயன்படுத்தும் இந்த காலண்டர் Gregorian Calendar ஆகும். இது 1582 இல் போப்பாண்டவர் Gregory XIII இனால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆரம்பத்தில் ஐரோப்பியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின் உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட காலண்டர். இவ்வாறான ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரிய (கத்தோலிக்கர்கள்) முக்கிய தலைவர் ஒருவரால், அதுவும் இற்றைக்கு 400 வருடங்களுக்கு முன்னர் தான் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு காலண்டரின் அடிப்படையில் கணிக்கப்படுவது எப்படி சரியாகும்? ஒரு இந்துவோ, ஒரு சைவரோ,ஒரு பெளத்தரோ, ஒரு நாத்திகரோ, ஒரு ஆத்திகரோ இதனை எப்படி நம்புகின்றனர்? இவர்கள் தம் காலண்டரின் அடிப்படையில் அல்லவா எண் சாத்திரத்தை கணிக்க வேண்டும்? உதாரணமாக இந்து ஒருவர், இந்துக் காலண்டரின் அடிப்படையில் அமைந்த திகதியை அல்லவா, கணிப்பீட்டுக்கான திகதியாக கொள்ள வேண்டும்? நான் எண் சாத்திரத்தை நம்புகின்ற சக சைவர்களை நோக்கி கேட்கும் கேள்வி "நீங்கள் இந்து மதம் சார்ந்த சாஸ்திரத்தையும் நம்பிக் கொண்டு எவ்வாறு கத்தோலிக்க மதத்தை சார்ந்த காலண்டரின் அடிப்படையில் கணிக்கப்படும் எண் சாத்திரத்தையும் நம்புகின்றீற்கள் என. யாராவது இதற்கு பதில் தர முடியுமா?
  43. யாழ்களத்தில் விளையாட்டுப்போட்டி என்றால் அதில் கிருபன் பெயர் தான் முன்னிலையில் வரும். சளைக்காமல் வருடாவருடம் போட்டியை நடத்திவரும் கிருபனுக்கு நன்றி எனும் ஒற்றைச்சொல் போதாது . விளையாடடை கலகலப்பாக்கும் உறவுகளுக்கும் , முதல்வர் நந்தனுக்கு முன்னிலையில் நிற்கும் ரசோதரன், புலவர் ,செம்பாட டன் ஆகியோருக்கும் எல்லோ ருக்கும் அழைப்பு விடுக்கும் வீரப்பையனுக்கும் வாழ்த்துக்களும் என் நன்றிகளும். ( கடைசியாக கிடந்து மிதிப்படாமல் ஒருவாறு 18 ம் இடத்துக்கு வந்து விட்டேன்.)😃
  44. இருவரின் வாழ்வும் தொலைந்தது. எமது சமூகத்தில் பெண் ஒழுக்கமீறலில் ஈடுபடக்கூடாது. ஆண் ஈடுபட்டால் பெரிதுபடுத்தமாட்டார்கள்!
  45. முன்னூற்றுக்கு மேற்பட்ட பயணிகளையும், பொதிகளையும் ஏற்றிக்கொண்டு 45,000 அடி உயரத்தில் பறக்கக்கூடிய விமானத்தை கடலுக்கு மேலால் 1,500 அடி உயரத்தில் பாணந்துறை தொடக்கம் கட்டுநாயக்கா வரை பறப்பது புத்திசாலித்தனமான ஒரு செயலா?
  46. எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தை யார் வடிவமைதார்கள் என்று தெரியுமா? ஏனெனில், இஸ்லாமிய கட்டிட அமைப்பு செல்வாக்கும் ஊடுருவி உள்ளது. சீக்கிய பொற்கோயிலின் கட்டிட அமைப்புக்கும், இந்த நூலகத்துக்கு ஒற்றுமை இருக்கிறது, கட்டிட அமைப்பில். சீக்கியருக்கு, குருநானக், இந்து , மற்றும் இஸ்லாம் சமய நம்பிக்கைக்கு அடிப்படையில் சீக்கிய மத நம்பிக்கைகளை உருவாக்கினார். இந்துவில் உள்ள சாதி அமைப்பை புறந்தள்ளி.
  47. காமம்தான் காதலுக்கு அத்திவாரம் என்ற ரீதியில் பல கவிஞர்களும், அறிஞர்களும் கூறியுள்ளார்கள், எழுதியம் வருகிறார்கள. ஆனால் மனித அறிவுப் பசியும் காதலுக்கு உரமாகி அத்திவாரம் இடும் என்ற உண்மையை கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்களின் இந்தப் பதிவு துல்லியமாக உணர்த்துகிறது. நூலகத்தை மனித மிருகங்கள் எரித்துத் தமிழினத்தை உலகில் அழித்துவிட முயன்றாலும், அது சாம்பல் ஆகியபின்பும், தமிழினத்தின் நெற்றியில் அமர்ந்து உலகம் உள்ளளவும் துலங்கி, அந்த இனம் அழியாது காப்பாற்றிவரும். இந்த உண்மையை எவராலும் மறுக்கவோ, மாற்றவோ முடியாது நம்பலாம்.😠
  48. காயப்பட்டவனுக்குத்தான் அதன் வலி தெரியும். திருமண உறவு முறிக்கப்படாத நிலையில் இன்னொரு ஆணிடம் சோரம்போனது சரியா? உன்னுடைய மனைவி என்னுடன் படுத்து எனக்கு பிள்ளை பெறப்பேகிறாள் என்று ஆதாரத்துடன் அந்தக் கயவன் படங்களை அனுப்பினால் ஒரு தன்மானமுள்ள ஆணின் ஆன்மா உடைந்து உலுங்கிகிப்போய்விடாதா? அந்தக் கணமே அவன் செத்துப்போய்விடுகின்றான். தரையில் குனிந்து எழுதிக்கொண்டிருக்க அவனொன்றும் இயேசுநாதரல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.