Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31956
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7044
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/18/25 in all areas

  1. @வீரப் பையன்26 , @தமிழ் சிறி அண்ணை, @ஈழப்பிரியன் அண்ணை @suvy அண்ணை மற்றும் முன்னாள் ஐபிஎல் சாம்பியன் @நந்தன் அண்ணை இந்நாள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன் @கிருபன் அண்ணை ஆகியோரையும் களமிறங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
  2. இவர் இங்கு வந்து எல்லோருடனும் முறுக்குவதைப் பார்த்தாலே உங்களுக்குப் புரிஞ்சிருக்கும் ....... அண்ணாத்தைக்கு டீ .வீ ....ரிமோட்டும் கையில் கிடைப்பதில்லை . ........ ! 😂
  3. போட்டியில் கலந்து கொள்ள தயார், துணிச்சலிருந்தால் யாராவது இந்த போட்டியினை நடத்தலாம் (செம்பாட்டான்).🤣 போட்டியில் கலந்து கொண்டால் அனைவரும் ஆர்வமாக பார்ப்பார்கள், அதனால் போட்டியினை ஆரம்பித்து வைத்தால் நன்றாக இருக்கும்.
  4. போட்டியை நடாத்தும் படி கேட்டதற்கு நன்றிகள். ஆனால் மகளிர் போட்டியினை ஒருபோதும் பார்த்ததில்லை . வீராங்கனைகளின் பெயர்களும் தெரியாது. போட்டியை நடத்தினாலும் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்பது யோசனையாக இருக்கிறது.
  5. அண்ணா, ஈரான் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்று மேற்குநாடுகள் சிலவற்றை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நீண்டகாலமாக தொடரும் தவறுகள், குறுகியகாலத்தில் நடந்த தவறுகள் என்று இரண்டாகப் பார்க்கலாம். நீண்டகாலம்: ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல். ஈரானிடம் அணு ஆயுதப்பலம் கிடைக்கும் என்பது இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளுக்கு மிக ஆபத்தானது, இஸ்ரேல் என்னும் நாடே இல்லாமல் போகலாம் என்ற, உண்மையோ பொய்யோ, ஒரு கருத்து இவர்களிடையே உள்ளது. ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் சிரியா, ஈராக், யேமன் என்று பல நாடுகளில் ஈரான் ஆயுதக் குழுக்களை வளர்த்து வைத்திருக்கின்றது. இந்தக் குழுக்கள் இஸ்ரேல் மீது இடைக்கிடையே தாக்குதலை மேற்கொள்ளுகின்றன. குறுகியகாலம்: ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை மிகவும் நெருங்கி விட்டது என்னும் தகவல். இது உண்மையில்லாமல் கூட இருக்கலாம். ஈராக்கின் இரசாயன ஆயுதங்கள் போன்ற ஒரு அவசரமான, ஆனால் பிழையான தகவலாகவும் இது இருக்கலாம். முன்னர் ஈராக்கின் அணு ஆயுத முயற்சிகளையும் இஸ்ரேல் அழித்திருந்தது. அதிபர் ட்ரம்ப் ஈரானுடன் அணு ஆயுதம் தொடர்பாக பேச்சுவார்த்தை ஆரம்பித்தார். 60 நாட்கள் கெடு என்றார். ஈரான் எந்த உடன்பாட்டிற்கும் வரவில்லை. 61ம் நாள் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. அமெரிக்கா முதலில் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் கிடையாது என்றது. ட்ரம்ப் முற்றிலுமாக உறுதித்தன்மை அற்றவர். மற்றும் பழிவாங்கும் இயல்பும் கொண்டவர். ஈரான் மீதான் எந்த விதமான தாக்குதலுக்கும் மிகவும் வெளிப்படையாகவே இஸ்ரேலை ஆதரிப்பது மட்டும் இல்லை, உதவிகளும் செய்வார். ஈரானிடம் மொத்தமாகவே இரண்டாயிரம் ஏவுகணைகள், ballistic missiles, தான் உள்ளன என்கின்றனர். முதல் நாள் அன்று ஈரான் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது. இப்பொழுது இன்னும் சிலவற்றை ஏவிக் கொண்டிருக்கின்றது. இதே வேகத்தில் போனால் இரண்டு வாரங்களுக்குள் அவை முடிந்துவிடும். ஈரானுக்கு ரஷ்யாவோ அல்லது சீனாவோ உடனடியாக எந்த உதவியும் செய்யப் போவதில்லை. வெறும் வார்த்தைகள் மட்டுமே அவர்களின் ஆதரவு. வெளியே பலமான ஒன்றாக தெரியும் ஈரான் உண்மையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நீண்ட ஒரு சண்டைக்கு தயாராகவில்லை என்பதே இன்றைய நிலை. இஸ்ரேல் ஈரானுக்குள் எந்த இடத்தையும், எந்த வேளையிலும் தாக்கி அழிக்கலாம் என்பது ஈரானியர்கள் உட்பட எல்லோருக்குமே ஒரு அதிர்ச்சி.
  6. இந்த காபன் 14 இனை அளவிடும் இயந்திரம் (Accelerator Mass Spectrometer) இலங்கையில் இருப்பதாக நான் அறியவில்லை. இருப்பதானால் கொழும்பு பல்கலையில் இருக்க வேண்டும். ஆனால், மிகவும் விலையுயர்ந்த, பராமரிப்பு தேவையான இயந்திரம். எனவே இன்னும் இல்லை என நம்புகிறேன். இந்தியாவில் சில உயர் நிலை ஆய்வு நிறுவனங்களில் இந்த இயந்திரங்கள் இருக்கின்றன. அவற்றை தொல்லியல் மாதிரிகளை பரிசோதிக்க மட்டும் பாவிக்க முடியும். அண்மைக் கால உடல்களை காபன் 14 காலம் கணிக்க, சட்ட மருத்துவ (forensic) அனுபவம் உள்ள அமெரிக்க அல்லது ஐரோப்பிய ஆய்வகங்களுக்குத் தான் அனுப்ப வேண்டும். புளோரிடாவில் இருக்கும் Beta Analytics என்ற நிறுவனம் இதைச் செய்ய வேண்டிய உணர் திறன் மிக்க இயந்திரத்தை வைத்திருக்கிறது (இங்கே தான் திருக்கேதீஸ்வர அகழ்வு எச்சங்கள் அனுப்பப் பட்டன). இந்தக் காலக் கணிப்பை செய்வதற்கு முன்னர் (அல்லது சம காலத்தில்) இலங்கையில் செய்யக் கூடிய சில சட்ட மருத்துவ பரிசோதனை முறைகளை முன்னிறுத்த வேண்டுமென்பது என் அபிப்பிராயம். எச்சங்களின் பௌதீக பரிசோதனைகள் மூலம் தோட்டாக்கள், தாக்குதல், வெட்டுக்கள் என்பவற்றை ஒரு முறையான forensic pathologist மூலம் ஆராய வேண்டும். அத்தோடு ஒவ்வொரு உடலில் இருந்தும் டி.என்.ஏ யை எடுத்துப் பாதுகாக்க வேண்டும். காணாமல் போனவர்களின் பெற்றோர், சகோதரர், பிள்ளைகளின் டி.என்.ஏ மாதிரிகளோடு இவற்றை ஒப்பிடலாம். இந்த டி.என்.ஏ பரிசோதனை செய்யும் வசதி கொழும்பில் இருக்கிறது.
  7. கார்பன் வயது கணிப்பைப் பற்றி ஏன் பேசுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. மேலதிக தகவலுக்காக கீழே இருக்கும் கட்டுரையை வாசிக்கலாம். University of Chicago NewsCarbon-14 dating, explainedFirst developed in the late 1940s at UChicago, carbon dating can determine the age of organic materials as old as 60,000 years. ஆனால் சுருக்கமாக இது தான் காபன் திகதி கணித்தல்: 1. காபன் 14 (C14) என்கிற மூலக்கூறு கதிரியக்கத்தை வெளியிடும். எனவே, ஒரு மாதிரியில் இருக்கும் காபன் 14 இன் அளவை கதிரியக்கத்தை அளக்கும் கருவிகள் கொண்டு அளக்கலாம். 2. ஒரு உயிர் சுவாசிக்காமல் விட்ட கணத்தில், அதனுள் காபன் 14 புதிதாகச் சேர்வதும் நின்று விடும். 3. இறந்த அந்த உயிரியின் உடலில் அது வரை சேர்ந்த காபன் 14 மெதுவாக அழிய ஆரம்பிக்கும் (decay). இந்த அழிவு எவ்வளவு மெதுவாக நிகழும்? காபன் 14 இனைப் பொறுத்த வரை அதன் அரைவாசி அழிவடைய ~5,700 ஆண்டுகள் எடுக்கும். இதனை காபன் 14 இன் அரை வாழ்வுக் காலம் (half-life) என்பார்கள். 4. இவ்வளவு மெதுவாக அழிவடையும் காபன் 14 இனை வைத்துக் கொண்டு மிக அண்மையில் (1990 என்று வைத்துக் கொண்டாலும்) இறந்த உடல் எச்சங்களின் வயதைக் கணிப்பது மிகவும் கடினமானது. எனவே, சாதாரணமாக காபன் 14 வயது கணித்தல் சில நூறு ஆண்டுகள் முதல் 50,000 ஆண்டுகள் வரையான வயதைக் கணிப்பதற்கே பயன்படுகிறது. ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டும், காபன் 14 இனை வித்தியாசமாகப் பயன்படுத்தி 1980 இல் இறந்த உடல்களின் வயதைக் கணிக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதைப் பற்றிய சுவாரசியமான கட்டுரை கீழே இருக்கிறது. https://www.science.org/doi/10.1126/science.321.5895.1434 ஆனால், இந்த முறை இலங்கையில் இருந்து எடுக்கப் படும் உடல்களில் பயன்படுத்தக் கூடியதா என்பது இன்னும் தெரியாது.
  8. பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிப்பதற்கான விதிகளில் மாற்றம் - ஐசிசி புதிய விதிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 17 ஜூன் 2025, 03:51 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வப்போது புதிய விதிகளையும், ஏற்கெனவே இருக்கும் விதிகளையும் காலத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாற்றி, இன்னும் உயிர்ப்புடன் கிரிக்கெட்டை வைத்திருக்கிறது. ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த வேண்டி விதிகளில் மாற்றம் செய்வது, புதிய விதிகளைப் புகுத்துவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரிக்கெட் விளையாட்டின் அம்சங்களை மறுஆய்வு செய்து, விமர்சனங்களுக்கு ஏற்ப விதிகளில் மாற்றத்தையும், புதிய விதிகளையும் ஐசிசி அவ்வப்போது அறிவிக்கும். இது உலகக் கோப்பைத் தொடக்கம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முக்கியத் தொடர்களுக்கு முன்பாக ஐசிசி அறிவிக்கும். அந்த வகையில், ஏற்கெனவே இருக்கும் இரு விதிகளில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்து ஒப்புதல் அளித்துள்ளது. ஐசிசி அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஜூன் 17ம் தேதி (இன்று) நடைமுறைக்கு வருகிறது. ஒருநாள் போட்டிகளில் ஜூலை 2ம் தேதியும், டி20 போட்டிகளில் ஜூலை 10ம் தேதியும் சர்வதேச அளவில் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய விதிகள் என்ன? அவை யாருக்கு சாதகமாக அமையும்? ஐசிசி கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்ன? சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியிலும், அனைத்து சர்வதேச போட்டிகளிலும் கன்கசனில் (தலையில் அடிபடும் வீரர்) வெளியேறும் வீரருக்குப் பதிலாக மாற்று வீரரைச் சேர்க்கும் விதியிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்துள்ளது. ஒருநாள் போட்டியில் இரு பந்துகளை பயன்படுத்துவதில் மாற்றம் தற்போது ஒருநாள் போட்டிகளில் பந்துவீசும் அணி 50 ஓவர்கள் வீசுவதற்கு இரு பந்துகளைப் பயன்படுத்துகிறது. ஒரு முனையிலிருந்து வீசுவதற்கு ஒரு புதிய பந்தும், மறுமுனையில் இருந்து வீசும்போது ஒரு புதிய பந்தும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, தலா 25 ஓவர்களுக்கு ஒரு புதிய பந்து, பந்துவீசும் அணியால் பயன்படுத்தப்படுகிறது. இந்த விதியில் ஐசிசி மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி, இன்னிங்ஸ் தொடக்கம் முதல் 34 ஓவர்களுக்குள் இரு புதிய பந்துகளையும் பந்துவீசும் அணி பயன்படுத்த வேண்டும். அதாவது 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும், அடுத்த 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும் பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட இரு பந்துகளில் இருந்து ஏதாவது ஒரு பந்தையே கடைசி 15 ஓவர்களுக்கு பயன்படுத்த வேண்டும். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சமநிலையைக் கொண்டுவரும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டால் என்னாகும்? மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாகவோ அல்லது அதற்கும் குறைவாக குறைக்கப்பட்டால், பந்துவீசும் அணி ஒரு புதிய பந்து மட்டுமே பயன்படுத்தி பந்துவீச வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. வழக்கமாக 2 பந்துகள் பயன்படுத்தும் விதி இதற்குப் பொருந்தாது. ஐசிசி கன்கசன் விதியில் கொண்டுவந்துள்ள மாற்றம் என்ன? கன்கசன் (தலையில் அடிபடும் வீரர்) முறையில் ஒரு பேட்டர் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், அல்லது விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக எந்த மாற்று வீரரைக் கொண்டுவருவது குறித்து ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, போட்டி தொடங்கும் முன்பே இரு அணிகளும் கன்கசனுக்கான மாற்று வீரர் குறித்த பட்டியலை போட்டி நடுவரிடம் வழங்க வேண்டும். அந்த 5 வீரர்களில் ஒரு விக்கெட் கீப்பர், ஒரு பேட்டர், ஒரு வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர், ஒரு ஆல்ரவுண்டர் இருக்குமாறு வீரர்கள் பெயரை வழங்க வேண்டும். கன்கசனில் எந்த மாதிரியான வீரர் வெளியேறுகிறாரோ, அதற்கு ஏற்றபடியே மாற்று வீரரை களமிறக்க வேண்டும். ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கு தலையில் அடிபட்டு கன்கசனில் வெளியேறும் நிலையில், அவருக்குப் பதிலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர்தான் வர வேண்டும். ஒரு பேட்டர் தலையில் அடிபட்டு கன்கசனில் சென்றால் அவருக்குப் பதிலாக பேட்டர்தான் வர வேண்டும் என்று ஐசிசி கட்டுப்பாடு விதித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது கன்கசன் விதியில் திருத்தம் செய்ய என்ன காரணம்? கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி செய்த செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுதான் காரணம். கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தனர். அவரும் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார். கன்கசன் மாற்று வீரருக்கு பேட்டிங் ஆல்ரவுண்டருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சேர்க்க போட்டி நடுவர் ஒப்புதல் அளித்தது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து, கன்கசனில் மாற்று வீரராகக் களமிறங்குவோருக்கு குறிப்பிட்ட ரோலில் களமிறங்க வேண்டும் என்ற விதியை ஐசிசி கொண்டுவர திட்டமிட்டது. அதாவது, பந்துவீச்சாளர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம், விக்கெட் கீப்பர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக மாற்றுவீரராக விக்கெட் கீப்பரை விளையாட அனுமதிக்கலாம் என்று விதிகளைக் கொண்டுவந்துள்ளது. பவுண்டரி எல்லையில் கேட்ச் விதிகளில் மாற்றம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்கும் "பன்னி ஹாப்" (bunny hop) முறைக்கு, அதாவது பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்தால் அதை வானில் தூக்கிப் போட்டோ அல்லது தட்டிவிட்டோ பீல்டர் பவுண்டரி எல்லைக்குள் வந்து கேட்ச் பிடிக்கும் முறைக்கு எம்சிசி (மெர்ல்போர்ன் கிரிக்கெட் கிளப்) தடை விதித்துள்ளது. ஆட்டத்தில் முக்கியத் திருப்புமுனையாக சில கேட்சுகள் அமையக்கூடும். அதில் பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்து அல்லது கேட்ச் பிடிக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து ஒரு பீல்டர் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும்போது பந்தை வானில் தூக்கி வீசியோ அல்லது மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசியோ கேட்ச் பிடிக்கிறார்கள். இந்த கேட்சில் பல்வேறு சந்தேகங்களும், பீல்டிங்கில் இருக்கும் நேர்மைத் தன்மையும் கேள்விக்குள்ளாகிறது. இதையடுத்து, முற்றிலுமாக பன்னிஹாப் கேட்சுக்கு எம்சிசி தடை விதித்துள்ளது. இதன்படி, ஒரு பீல்டர் பவுண்டரிக்கு வெளியே செல்லும் பந்தை கேட்ச் பிடிக்க பந்தை ஒருமுறை மட்டுமே தட்டி பிடிக்க வேண்டும், பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும் பந்தை பிடிக்க முற்பட்டு, வானில் பலமுறை தட்டிவிட்டு மீண்டும் பவுண்டரி எல்லைக்குள் பீல்டர் வந்து பிடிக்கும் முறை இனி செல்லாது. அவ்வாறு 2வது முறையாக பந்தை கையால் தட்டிவிட்டு பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது. பந்தை தட்டிவிட்டு கேட்ச் பிடிக்கும் முன்பாக, பீல்டர் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும், பந்தை பிடித்த பின்பும் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். பந்தை தொட்ட பின் பீல்டர் பவுண்டரி எல்லைக்கு அப்பால் சென்றாலோ அல்லது பவுண்டரி எல்லையைக் கடந்து பந்தை பலமுறை அந்தரத்தில் தட்டிவிட்டு பவுண்டரி எல்லைக்குள் வந்தபின் பீல்டர் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது. அது சிக்ஸராக அல்லது பவுண்டரியாக கருதப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐபிஎல் ஆட்டம் ஒன்றில் சிஎஸ்கே வீரர் பிரேவிஸ் அபாரமாக கேட்ச் பிடித்த காட்சி மாற்றம் கொண்டுவர என்ன காரணம்? ஆஸ்திரேலியாவில் 2023 சீசன் பிக்பாஷ் லீக் டி20 போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்ஸர் இடையிலான போட்டியில் பிடிக்கப்பட்ட கேட்ச்-தான் விதியில் திருத்தம் செய்ய காரணமாக அமைந்தது. சிட்னி சிக்ஸர் அணி வீரர் ஜோர்டான் சில்க் லாங் ஆன்திசையில் அடித்த ஷாட்டை பிரிஸ்பேன் வீரர் நீசர் கேட்ச் பிடித்தார். நீசர் கேட்ச் பிடித்தபோது, பவுண்டரி எல்லைக்கு வெளியே அந்தரத்தில் பறந்துகேட்ச் பிடித்தார், கேட்ச் பிடித்த அடுத்த நொடியே பந்தை வானில் தூக்கி வீசி பவுண்டரி எல்லைக்குள் நீசர் வந்து, மீண்டும் அந்தரத்தில் குதித்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார். நீசர் கேட்ச் பிடித்தபோது அவரின் இரு கால்களும் பவுண்டரிக்கு வெளியே அந்தரத்தில் இருந்ததே தவிர தரையில் படவில்லை, கேட்ச் பிடித்த பிறகு அவர் தனது காலை பவுண்டரி எல்லைக்குள் வைத்தார் என்பதால் இது கேட்சாக அறிவிக்கப்பட்டது. இந்த முறையில் நீசர் கேட்ச் பிடித்தது பெரிய சர்ச்சையானது, பன்னி ஹாப் முறையில் பிடிக்கும் கேட்சுக்கு தடை விதிக்க கோரிக்கை எழுந்த நிலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. தென் ஆப்ரிக்க அணியில் இட ஒதுக்கீடு ஏற்படுத்திய மாற்றம் என்ன? ஒரு சாம்பியன் உருவான கதை 'சோக்கர்ஸ்' தென் ஆப்ரிக்கா சாம்பியனாக மாறிய கதை - கேப்டன் பவுமா கூறியது என்ன? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பலமான ஆஸ்திரேலியாவை தென் ஆப்ரிக்கா வீழ்த்தியது எப்படி? 'தோல்வியே தெரியாத தலைவன்' - தென் ஆப்ரிக்காவின் கனவை நனவாக்கிய கேப்டன் பவுமா யார்? ரிலே கேட்சில் வந்துள்ள மாற்றம் என்ன? பழைய விதியின்படி, ஒரு பீல்டர் கேட்ச் பிடித்த தருணத்தில் அவர் பந்துடன் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்ல முயலும்போது, பந்தை மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசும்போது அந்த பீல்டரும் பவுண்டரி எல்லைக்குள் இருந்தவாறே அந்த பந்தை பிடித்தால் அது கேட்சாக கருதப்படும் ஆனால், புதிய விதியின்படி முதல் பீல்டர் அல்லது பந்தை இரண்டாவதாக பிடிக்கும் சகவீரர் பந்தை கேட்ச் பிடித்து முடிக்கும்போது கண்டிப்பாக பீல்டிங் எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். ஒருவேளை பந்தை கேட்ச் பிடிப்பதற்கு முன்பே, கேட்ச் பிடிக்கும் வீரர் பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று கேட்ச் பிடித்து, அதை தூக்கி வீசி மற்றொரு வீரருக்கு வீசி எறிந்து அவரும் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது, அது பவுண்டரி அல்லது சிக்ஸராகவே கருதப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20rlz01j8ko
  9. அனேகமான வீரர்களின் கைகள் சேதமடைகின்றன.
  10. பேஸ்போலுக்கான வேகத்துடன் கிறிக்கட் பந்தின் வேகம் குறைவு என்பது எனது ஊகம். அதனால் பேஸ்போலில் கையுறை பாவிக்கப்படுகிறது. இருந்தும் கிறிக்கட்டுக்கான மரப்பந்து நோகாமல் இருக்கும் என சொல்வதற்கில்லை. யாராவது பாரதூரமாக காயப்பட்டால் கிறிக்கட்டில் கையுறை பாவிக்க வேண்டி வரலாம். பாதுகாப்பு என வரும் போது முற்பாதுகாப்பு முக்கியம் என்பதை நான் மறுக்கவில்லை.
  11. இறப்பது பொதுமக்கள்தான். நிச்சயமாக 3 ஆம் உலக போர் நிகழாது என கருதுகிறேன், தோற்கும் அணியினை (ஈரானை) எவரும் ஆதரிக்கமாட்டார்கள் ஆனால் ஈரானில் ஏற்பட போகும் மனித பேரழிவினை உலகம் வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்கும், இந்த அழிவிற்கு ஈரானிற்கு அருகில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளும் உடந்தையாக இருக்கும்.
  12. 18 JUN, 2025 | 02:54 PM (எம்.நியூட்டன்) வடக்கு மாகாணத்திற்கு ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி சுற்றுலாத்துறை ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை முன்வைத்தார். வடமாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன், யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, புதன்கிழமை (18) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த பரிந்துரைகளை முன்வைத்தார். கொழும்பில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில், வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், வடமாகாணமே, இலங்கையின் அடுத்தபட்ட சுற்றுலா மையமாக வளரக்கூடிய வளமான பகுதி. யாழ்ப்பாணம் –கிளிநொச்சி பகுதிகள் பண்பாட்டு பாரம்பரியம், இயற்கை அழகு மற்றும் ஆன்மீக ஆழம் கொண்டவை. திறமையான திட்டமிடலும், சரியான விளம்பர முயற்சிகளும், முதலீடுகளும் இடம்பெற்றால், இது இலங்கையின் வடக்கு சுற்றுலா மையமாக மாறும். தற்போது வடக்கு மாகாணம், இலங்கையில் வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் சுமார் 3-5% மட்டுமே ஈர்க்கிறது. இது கொழும்பு, கண்டி, காலி, நுவரெலியா, தம்புள்ளை போன்ற பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். இவ்வாறு ஒப்பீட்டளவில் பின்னடைவில் இருக்கும் வடமாகாணத்தின் சுற்றுலா துறையை முன்னேற்ற, பல தளங்களில் மேம்பாட்டு நடவடிக்கைகள் அவசியம். குறிப்பாக ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தனியார் முதலீடுகளுடன் ஹோட்டல் மற்றும் விடுதி வசதிகள், நவீன விளம்பரங்கள், சமூக ஊடக விளம்பரங்கள், சிறப்பான இளைஞர் பயிற்சிகள், கிராமப்புற அனுபவத்துடன் வீட்டு விடுதிகள், யாழ் உணவுப் பாதைகள், நல்லூர் திருவிழா போன்ற திருவிழாக்களை சர்வதேச நாட்காட்டியில் இணைத்தல் போன்றவற்ரை நடைமுறைப்படுத்தவேண்டும் இவை யாவும் இணைந்து மேற்கொள்ளப்பட்டால், 2030ஆம் ஆண்டுக்குள் யாழ் மற்றும் வடமாகாணத்தில் மொத்த சுற்றுலா பங்கு 15-18% வரை உயரலாம். மேலும் வடமாகாணத்தில் தற்போதைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒரு விசேட உபக்குழுவை அமைத்து வடக்கு அபிவிருத்திக்காக திட்டமிட வேண்டும் என்றார். குறித்த விடயங்களை கேட்டறிந்த அமைச்சர் இவை தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/217826
  13. கையில் 50 ரூபா கீல்ஸ் சொப்பிங் பேக், மற்றும் 120 ரூபா வெள்ளை மாஸ்க் அணிந்து கொண்டு... கோடிக்கணக்கு மோசடி வழக்கில் குடும்பம் சகிதம் ஜெயில் செல்லும் முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் இன்றைய (18) காட்சிகள்! Vaanam.lk
  14. தம்பி IPLல் பிடிச்ச கட்டெறும்பு இப்ப உயிரோட இருக்குதோ தெரியேல்ல,🤔 இருந்தா பார்ப்போம்.
  15. ❤️........... நானும் பங்குபற்றுகின்றேன்.
  16. போட்டியை நடத்தினால் நிச்சயம் பங்கு கொள்வதோடு முடிந்தளவு ஈடுபாடும் காட்ட முனைவேன்.
  17. இங்கு உண்மையான பிரச்சனை கள் உடலுக்கு நல்லதா கெட்டதா என்பது அல்ல. ஒரு வேளை தமிழ் நாடு அரசு கள் தவறணைகளை திறந்திருந்தால், பனை, தென்னையில் இருந்து எவ்வளவு நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்கள. செய்யலாம். மக்களை குடிக்கப்பழக்க அரசு கள்ளை உற்பத்தி செய்கிறது. கள்ளிறக்கும் பனை தென்னை அதன் மற்றைய நல்ல பயன்பாடுகளை கெடுத்துவிடும் என்றறெல்லாம் செபஸ்ரியன் சைமன் புலம்ப தற்குறி தம்பிகளும் அதற்கு ஆமாம் சாமி போடுவார்கள். அத்தோடு ஏதாவது சிறிய எளிதில் வெளியே வரக்கூடிய போரா ட்டம் செய்து சில நாள் உள்ளே இருந்தால் நான் பெருய ஆளா வந்திடுவனில்ல என்ற அடி வாங்கி அவுந்த வேட்டியை கட்டும் வடிவேலு பாணியும் இந்த போராட்டதுக்கு காரணம். என்ன தான் இப்படி சர்க்கஸ் காட்டினாலும் அடுத்த தேர்தலில் டெபாசிற் கிடைக்கப்போவதில்லை. 😂
  18. இத அடுத்தவன் சொன்னா கசக்கும் கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும் இதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இருக்கு அத்தனையும் சொல்லி போடு
  19. நேற்று கொஞ்சம் நேரம் இருந்ததால் சில நாட்களுக்கு முன் அறுந்த எனது செருப்பு ஒன்றை ஒட்டுவதற்காக பசை குப்பி ஒன்றை தேடி எடுத்து கொண்டுவந்தேன் ....... அதில் இது பேப்பர் , பிளாஸ்ட்டிக், மெட்டல் போன்ற எல்லாவற்றையும் ஒட்டலாம் என எழுதி இருந்தது ........ ஆஹா . ....நல்லது என நினைத்து செருப்பை ஒட்டினேன் ....... பின் அதை மூடியால் மூடும்போது " எல்லாவற்றையும் ஒட்டும் என்றால் எப்படி இந்த முடியும் குப்பியும் இதுவரை ஓட்டாமல் இருக்கு " என்னும் யோசனை வந்தது . ......! இன்று இந்த பதிவு கண்ணில் பட்டது ........ எதிர்பாராது சில நிகழ்வுகள் இந்தப் பிரபஞ்சத்தில் நடந்து கொண்டுதான் இருக்கு . ....... ! 😂
  20. மன்னிக்கவும் முன்னர் கூறியது போல குட்டிப்பையன் 64 கிலோ. குண்டு மனிதன் 6.2 கிலோ எடை என கூறப்படுகிறது.
  21. நான் சிறுவனாக இருந்த போது எனக்கு கணச்சூடு இருக்கிறது என்பதால் எமது வீட்டு தென்னையில் இறக்கப்படும் கள்ளில் எனது தகப்பனார் எனக்கு தருவது வழமை. ஆனால் நான் எனது மூத்த மகளை திருமணம் செய்து வைக்கும் வரை எந்த மதுவையும் தொட்டதில்லை. இத்தனைக்கும் மதுபானம் விற்கும் இடத்தில் தான் வேலையே.
  22. வல்வெட்டித்துறை தமிழ் தேசிய பேரவை வசம்! adminJune 18, 2025 வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவாகியுள்ளார் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (18.06.25) வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. 16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தவமலர் சுரேந்திரநாதனுக்கு 7 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் ஆதரவு வழங்கினர். தேசிய மக்கள் சக்தியின் மூன்று பேரும் வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர் https://globaltamilnews.net/2025/216970/
  23. கண்டிப்பாக! அதோடு சேர்த்து ஒரு கதையும் புனைவார்கள். அப்போ, அவர்கள் படையில் குழந்தைகளும் இருந்தனர் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். நிர்வாணப்படுத்துவது சிங்களவரின் மரபு. அதை அப்படியே நிலைநிறுத்தி, தம்மை அடையாளப்படுத்த ஒரு துப்பை விட்டுச்சென்றுள்ளனர். அவர்கள் எத்தனை கதையெழுதினாலும் அவை, தம்மை மறைப்பதற்கும் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்குமே உதவும். இன்று அந்த உடல்கள் வெளிவந்தனவென்றால்; அவை வெறும் உடலங்கள் மட்டுமல்ல, அவற்றோடு சேர்ந்து உண்மையும் வெளிவந்துள்ளன. அவற்றை மறைக்க யராலும் முடியாது. வேண்டுமென்றால் என். என். பியின் முகத்திரை கிழியும். இந்த லட்ஷணத்தில சர்வதேசம் போர்க்குற்ற விசாரணை செய்ய வேண்டாமென கூற இவர்களுக்கு தகுதியில்லை. இவர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியோ நிவாரணமோ கிடைக்காது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் நீதியமைச்சர்.
  24. 17 JUN, 2025 | 08:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் இராணுவ ஒட்டுக் குழுத் தலைவருமாக இருந்தவரான டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது மண்டைதீவு செம்பாட்டுத் தோட்டம், புனித தோமையார் ஆலயத்தின் அருகாமை, திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு குமுழுமுனை, கொக்குத்தொடுவாய் யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவின் கவனத்திற்கு கொண்டு வந்து கேள்வி எழுப்புகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியில், 1990களில் வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவுப் பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட சிறுவர்களும் இளைஞர்களுமே புதைக்கப்பட்டார்கள் என வடக்கு மற்றும் கிழக்கு மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுகின்றன. 3ஆம் வட்டாரம், மண்டைதீவைச் சேர்ந்த சூசைதாஸ் யேசுரட்ணம் தர்மராணி என்ற தாயார், தனது இரு பிள்ளைகள் உட்பட்ட 84 பேர் மண்டைதீவில் காணாமலாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நீதியைப் பெற்றுத்தருமாறும் 2025.04.30 ஆம் திகதி ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, அதன் பிரதியை எனக்கும் கிடைக்கச் செய்துள்ளார். இப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் வெளிவந்த அறிக்கைகள் உள்ளன. மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவுப் பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட சிறுவர்களும், இளைஞர்களுமே படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள். இவர்களை இராணுவத்தினர் அழைத்து சென்ற போது பெற்றோர், உறவினர்கள் அப்போது தீவுப்பகுதியில் இராணுவ ஒட்டுக்குழுவின் தலைவராகவிருந்த டக்ளஸ் தேவானந்தாவிடம் ஓடிச்சென்று அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மன்றாடியபோது இராணுவத்தினர் விசாரித்து விட்டு விடுவிப்பார்கள் என டக்ளஸ் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் எவரும் விடுவிக்கப்படாது படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள். எனவே மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் இராணுவ ஒட்டுக் குழுத் தலைவருமாக இருந்தவரான டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/217728
  25. ஒட்டுக்காக மனுசன் இங்கே மரத்தில் ஏறுறான் பாரு! ஏறிக் குடிச்சுட்டு இறங்கி வந்தால் கட்டுப்பணம் கூட காலி. 😂😂😂😂😂😂
  26. ரஸ்யா - உக்ரேன் இஸ்ரேல் - பலஸ்தீன் ஈரான் - இஸ்ரேல் (+மேற்கு)
  27. உக்ரெய்னில் அமெரிக்கா தனது இராணுவ தளபாட வழங்கலைக் குறைத்துக் கொண்டு அவற்றை ஈரானை நோக்கி நகர்த்துவதாக இரு வாரங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே ட்றம்ப் உக்ரெயின் போரை நிறு த்த முயற்சித்தது இதற்காகவும் இருக்கலாம். தேர்தலின் முன் உக்ரெயின் மற்றும் பலஸ்தீன போர்களை நிறுத்துவேன் என்று கூறிய ட்றம்ப், இரண்டாக இருந்த போர் முனைகளை இப்போது மூன்றாக்கியுள்ளார்.
  28. சுக்ரோசு (sucrose) என்பது நாம் கரும்பில் இருந்து எடுக்கும் சீனியில் (sugar) இருப்பது. இந்த சுக்ரோசில் ஒரு குளுக்கோஸும் (glucose) ஒரு பிரக்ரோசும் (fructose) இருக்கும். உணவுக் கால்வாயில் சுக்ரோசு குளுக்கோசாகவும், பிரக்ரோசாகவும் உடைத்துத் தான் உடல் உறிஞ்சிக் கொள்ளும். குளூக்கோசை உடல் கலங்கள் பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ளும். பிரக்ரோசை ஈரல் மட்டும் பயன் படுத்திக் கொள்ளும். ஈரல், பிரக்ரோசைப் பயன்படுத்தி கொழுப்பை உற்பத்தி செய்து தன்னிடம் சேமித்துக் கொள்ளும், சில சந்தர்ப்பங்களில் இரத்தம் வழியாக ஏனைய உறுப்புகளுக்கும் அனுப்பி வைக்கும். இப்போது இதை யோசித்துப் பாருங்கள்: சீனியை அதிகம் எடுத்துக் கொண்டால், சுகர் வருத்தம் எனப்படும் நீரிழிவு உருவாக சீனியில் இருக்கும் குளூக்கோஸ் முதன்மைக் காரணமாக இருக்கிறது. ஆனால், சீனியில் இருக்கும் பிரக்ரோசு கொழுப்பை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவுக்கு துணைக் காரணமாகவும், உடல் பருமன் அதிகரிப்பிற்கு (obesity) முதன்மைக் காரணமாகவும் இருக்கிறது. எனவே, பிரக்ரோசு "தீங்கற்றது" என்று சொல்வது சரியாகப் படவில்லை. ஆனால்: பழங்களில் இருக்கும் பிரக்ரோசை எடுத்துக் கொள்ளும் போது, அது நார்த்தன்மையோடு சேர்ந்து உள்ளெடுக்கப் படுவதால், குடலின் ஊடாக மெதுவாக நகர்ந்து செல்லும். உடலினுள் உறிஞ்சப் படும் வேகமும் குறைவாக இருக்கும். இதனால் பழங்களில் இருந்து கிடைக்கும் பிரக்ரோசு அளவாக எடுக்கப் படும் போது தீங்குகள் குறைவு. அளவாக எடுத்துக் கொள்வது முக்கியமானது. இதை நீரிழிவு நோயாளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
  29. இந்த சம்பவத்தை வைத்து Sully எனும் படம் 2016 இல் வெளியானது. மிகவும் சுவரசியமான படம். Netflix இல் உள்ளது. வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கவும்.
  30. அன்பே வா அழைக்கின்றதென்தன் மூச்சே .......... ! 😘
  31. கண்மூடும் வேளையிலும் ......... ! 😍
  32. உங்களின் அனுபவம் போலவே எனக்கும் இந்த விடயத்தில் சில அனுபவங்கள், அதே காலப்பகுதியில், கிடைத்திருக்கின்றன, கவிஞரே. மேலும், நீங்கள் சொல்லியிருப்பது போலவே இப்படி ஒரு உலகம் இருந்தது பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒரே ஊரில் கூட என் நண்பர்கள் பலருக்கும் கூட தெரிந்திருக்கவில்லை. எழுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஒரு நாள் அயல்வீட்டு அண்ணா ஒருவர் எங்களின் வீட்டு தலைவாசலில் ஏறி நின்று கொண்டு, 'நான் பறக்கின்றேன்................ பறக்கின்றேன்............' என்று சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு நாள் முழுவதும். அம்மாவிடம் என்னவென்று கேட்டேன், 'அவன் கறுப்பைத் தின்றிருக்கின்றான். தெளியட்டும்.......... நாலு போட்டால் இனித் தொடவேமாட்டான்...........' என்றார் அம்மா. அந்த அண்ணாவின் தந்தையார் சும்மாவே அவர் வீட்டில் ஆட்களை நொறுக்கித் தள்ளுவார். பின்னர் 80ம் ஆண்டுகளின் முடிவில் மிகவும் பரிதாபமாக முடிந்தது இந்த அண்ணனின் வாழ்க்கை. 70ம் மற்றும் 80ம் ஆண்டுகளின் ஆரம்பங்களில் இந்தப் பொருட்களை வாங்கிச் செல்ல இலங்கையில் தென்பகுதிகளில் இருந்து சில வியாபாரிகள் வருவார்கள். குருணாகல் பகுதியில் இருந்து வரும் இருவரின் முகங்கள் இன்றும் என் மனதில் இருக்கின்றது. 90 - 94ம் ஆண்டுகளில் பேரூந்தில் கண்டியிலிருந்து குருணாகல் போய், அங்கு புகையிரதத்தில் ஏறி வவுனியா போய் வருவேன். குருணாகல் புகையிரத நிலையத்திலிருந்து குருணாகல் பேரூந்து நிலையம் தள்ளியே இருந்தது. நடந்தே போவேன். அப்படி நடக்கும் போது அந்த இருவரும் எங்காவது தென்படுவார்களா என்ற யோசனையும் வந்திருக்கின்றது. இன்னும் சிக்கலான, நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் சிலவும் உண்டு. 80ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் என்று நினைக்கின்றேன். வரும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த ஒருவர் இருந்தார். ஒரு இளைஞன் அப்படியே பலிக்கடாவாகிப் போன நிகழ்வுகள் அவை. அப்படியே காணாமல் போனவர்களின் கதைகளும் உண்டு.
  33. அவர்களின் வளங்களை சுரண்டி அவர்களை பிச்சைக்கார நாடாக மாற்றியதே இவர்கள்தானே!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.