Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87988
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    8907
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3054
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    7048
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/24/25 in all areas

  1. என்ன கடஞ்சா நீங்கள்.................. மற்றவர்களுக்கு பரந்த சிந்தனை, அகண்ட பார்வை கிடையாது என்று சொல்லுகின்ற நீங்கள் எழுமானமாகவே தொடர்புகளை உண்டாக்குகின்றீர்கள். மலைக்கும், மண்ணுக்கும் மேல் தங்கள் இஷ்டப்படி குண்டுகள் போட்டவர்களுக்கு, அங்கே இருக்கும் இராணுவ கட்டமைப்புகள் மேல், அரச கட்டமைப்புகள் மேல், மக்களை வெளியேற சொல்லிவிட்டு பெரும் நகரங்கள் மேல் குண்டுகள் போடமுடியாதா? வெற்றி - தோல்வி - செருக்கு என்பதையும் தாண்டி, ஏதோ கொஞ்சமாவது மனிதம் இன்னும் வாழ்கின்றதே என்று ஆறுதல் அடையவேண்டியிருக்கின்றது. டோக்கியோ மீது அணுகுண்டை வீசவில்லை. ஹிரோசிமா மற்றும் நாகசாகி மீதே அணுகுண்டுகள் வீசப்பட்டன. அந்த இரு நகரங்களின் மேல் கூட வீசாமல், ஜப்பானில் இருக்கும் பொட்டல் வெளிகளிலோ அல்லது மலைகளிலோ வீசி இருக்கலாம். அதற்குப் பின்னும் ஜப்பான் பணிய மறுத்து இருந்தால், கடுமையான மிகக் கவலையான முடிவை அமெரிக்கா எடுத்திருக்க வேண்டும் என்று தானே இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். கத்தாரில் இருக்கும் அமெரிக்க தளத்தின் மீது ஈரான் நடத்தியது ஒரு தாக்குதலா........ என்ன சேதம் விளைந்தது............. எங்கள் ஊர் அம்மன் கோவில் வேட்டைத் திருவிழாவில் விட்ட எலி வாணத்தாலாவது சில சேலைகள் பற்றி எரிந்தன....................
  2. மத அடிப்படைவாதம் உலகில் எங்கு இருந்தாலும் அது ஒழிக்கப்படல் வேண்டும். இஸ்லாமிய நாடுகளான ஈரான், சவுதி போன்ற நாடுகளில் நேரடியாகவும் மேலும் பல இஸ்லாமிய நாடுகளில் மறைமுகமாகவும் உள்ள அடிப்படைவாதத்தை எதிர்தது மாற்றங்களை கொண்டுவரும் முயற்சிகள் வரவேற்கப்படவேண்டதே. ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் பொஸ்னியா மற்றும் துருக்கிக்குள் நுளைந்தவுடனேயே மத அடிப்படைவாதத்தின் வாசனை மெல்ல மெல்ல ஆரம்பித்துவிடும். நாடுகளின் வளங்களை ஒரு குறிப்பிட்ட வர்ககம் தம்வசப்படுத்தி அனுபவிப்பதற்கே இப்படியான அடிப்படை வாதங்கள் மக்களிடையே தூண்டப்படுகின்றன. இலங்கையில் பௌத்த மேலாண்மை புத்த மதத்துக்கான முன்னுரிமை எந்தளவுக்கு தவறானதோ அதேயளவுக்கு ஈழம் சிவபூமி என்ற கூக்குரலும் தவறானதே. அண்மைக்காலத்தில் தமிழ் தேசியவாதிகள் என்று தம்மை அழைப்பவர்களிடமும் இவ்வாறான மத அடிப்படைவாதங்களை ஆதரிக்கும் போக்கை காணலாம்.
  3. பையன் சார், நீங்கள் சொன்னது போலவே நடந்தது. இது போலவே உங்களுக்கு வேறு பல உலக விளையாட்டுகளில் இருக்கும் பரிச்சயமும், தெரிந்திருக்கும் தகவல்களும் ஆச்சரியமானவை..........👍. அரசியல் மற்றும் வரலாறு என்று வரும் போது பலரும் ஏற்கனவே ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருப்பார்கள், நான் உட்பட. பார்வைகளும் அவரவர் நிலைப்பாட்டின் வழியே தான் பெரும்பாலும் செல்லும். சிலருக்கு பரந்த வாசிப்பு இருக்கும். சிலரிடம் மிக அதிக ஞாபகசக்தி இருக்கும். இன்னொரு பார்வையில் ஒரு உறுதியான கருத்து சரியான தரவுகளுடன் வரும் போது அதையிட்டு அமைதியில்லாமல் தவிக்க வேண்டிய அளவிற்கு நாங்கள் ஒருவரும் தொழில்முறை அரசியல்வாதிகள் இல்லைத்தானே..................... மாற்றுக் கருத்துகளையும் இலேசாகக் கடந்து போவது தான் சிறப்பு. இதற்காக எங்களின் உடல், மன ஆரோக்கியத்தை இழப்பது தேவையற்றது. சரியான தரவுகளின் பின்புலம் இல்லாமல் வரும் கருத்துகள்/காணொளிகள் அம்புலிமாமா கதைகள் போல, வாசித்தவுடன்/பார்த்தவுடன் மறந்துவிடவேண்டும்................🤣.
  4. இங்கு கேள்வி கேட்கிறீர்களா அல்லது எழுந்தமானமாக நீங்களே சிலவற்றைக் கற்பனை செய்துகொண்டு பின்னர் அவற்றினை நான் நினைப்பதாக எழுதுகிறீர்களா என்று தெரியவில்லை. இருந்தபோதிலும் இவற்றினைக் கேள்வியாக எடுத்துக்கொண்டு பதிலளிக்க முயல்கிறேன். வெள்ளையினம் கும்பலாக இன்னொரு இனத்தை அடித்தல் எனும் கூற்று. இங்கு வெள்ளையென்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? இஸ்ரேலியர்களையும் அமெரிக்கர்களையுமா? அமெரிக்கர்கள் வெள்ளையர்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் யூதர்கள் வெள்ளையர்களா? அவர்களின் தோலின் நிறத்தை வைத்துச் சொல்கிறீர்கள் போலும். உண்மையென்னவென்றால் யூதர்களில் கறுப்பினத்தவர்களும், எம்மைப்போன்ற நிறமுடையவர்களும் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால் வெள்ளையினத்தவர்கள் கும்பலாக அடிக்கிறார்களே என்று கேட்கமாட்டீர்கள். அது சரி, ஈரானியர்களும் வெள்ளையினத்தவர்கள் தானே, தோலின் நிறத்தின் அடிப்படையில் பார்த்தால். சரி, அதை விடலாம், ரஸ்ஸியர்களும், உக்ரேனியர்களும் தோலின் நிறத்தால் ஒருவரையொருவர் ஒத்தவர்கள். ஆனால் நீங்களோ ரஸ்ஸியர்களை ஆதரிக்கிறீர்கள். பலஸ்த்தீனர்கள் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்படுவதைப் பொறுத்துக்கொள்ளாது மிகுந்த சினம் கொண்டு வெகுண்டெழும் நீங்கள், உக்ரேனியர்கள் மீதான ரஸ்ஸியர்களின் ஆக்கிரமிப்பை இன்றுவரை சரியென்று வாதாடுவதுதான் புதிராக இருக்கிறது. சரி, இந்தப் புரிதலில் உங்களுக்கு இருக்கும் கோளாற்றினை நீங்களே சரிசெய்துகொள்வீர்கள் என்கிற நம்பிக்கையில் அதனை இப்போதைக்கு விட்டு விடுகிறேன். உக்ரேன் எனும் சிறிய நாட்டினை ஆக்கிரமித்து அழித்துவரும் ரஸ்ஸியாவை நீங்கள் எந்தவிதமான மனச்சாட்சியும் இல்லாமல் ஆதரிக்கும்போது, இஸ்ரேலினை அழிப்பதே எமது ஒரே இலட்சியம் என்று கூவிக்கொண்டு இஸ்ரேலைச் சுற்றியிருக்கும் தனது அடிப்படைவாத முகவர்களான ஹமாஸ், ஜிஹாத், ஹூத்தீக்கள், ஹிஸ்புள்ளா , சிரியா, ஈராக் ஆகிய நாடுகளின் அடிப்படைவாதிகளைப் பயிற்றுவித்து, ஆயுதம் கொடுத்து, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை கொடுத்து போசித்துவரும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்கும்போது மட்டும் நான் மனச்சாட்சியுடன் நடக்கவேண்டும் என்று கேட்கிறீர்கள். உங்களுக்கே இது அபத்தமாகத் தெரியவில்லையா? முல்லாக்களின் அதிகாரம் நிச்சயமாகப் பிடுங்கப்பட்டு, அவர்களின் காட்டாட்சி அழிக்கப்பட வேண்டும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 1979 இல் இஸ்லாமியப் புரட்சி என்கிற பெயரில் முல்லாக்கள் ஆரம்பித்து இன்றுவரை செய்துவருவது இஸ்லாமிய அடிப்படைவாதக் காட்டாட்சிதான். இங்கே மக்களின் கருத்துக்களோ, உரிமைகளோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இன்றுவரை முல்லாக்களுக்கு எதிராகப் பேசுவோர், எழுதுவோர், பிரச்சாரம் செய்வோர் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டே வருகிறார்கள். நீங்கள் வேண்டுமென்றே மறைக்க முனைந்தாலும் ஈரானில் பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் உலகம் அறியாதது அல்ல. தலைகளை மூடி ஹிஜாப் அணியமாட்டோம் என்று போராடிய பல பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் நீங்கள் அறியாமல் இருக்கலாம். முல்லாக்கள் தமது அதிகாரத்தைக் கைவிட்டு, வெளிப்படையான தேர்தல் ஒன்றிற்குச் செல்லட்டும், அப்போது பார்க்கலாம் மக்கள் எம்மாதிரியான‌ ஆட்சியினை விரும்புகிறார்கள் என்று. சர்வாதிகரத்தனமான அடிப்படைவாதிகளின் கீழ் மக்கள் வேறு வழியின்றி வாழ்வதை, மக்கள் விரும்பித்தான் வாழ்கிறார்கள் என்று நினைப்பதும், ஆட்சிமாற்றம் ஒன்று அவசியம் என்று கூறுவோரை, உனது வேலையைப் பார் என்று கூறுவதும் முல்லாக்களுக்கு ஆதரவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது. ஈரானிய முல்லாக்களும், தலிபான்களும், அல்கயிடாவும், ஐஸிஸ்களும் ஒரே மாதிரியானவர்கள். மத அடிப்படைவாதத்தால் உந்தப்பட்டு ஏனைய மதத்தவர்களை, சிறுபான்மையினங்களை அழிப்பவர்கள். அல்கயிடாக்களின் கையிலோ அல்லது ஐஸிஸ்களின் கையிலோ அணுவாயுதம் ஒன்று கிட்டுமாயின் அவர்கள் என்ன செய்ய விரும்புவார்களோ அதையே ஈரானின் முல்லாக்களும் செய்வார்கள். ஆகவேதான் அவர்களின் கைகளில் அணுவாயுதம் இருக்கக் கூடாதென்று நான் நினைக்கிறேன்.
  5. மிகவும் எழுந்தமானமாக, சாட்சியங்களின் அடிப்படையில் இல்லாது, உணர்வின்பால் உந்தப்பட்டு எழுதிய கருத்து. இஸ்ரேலினால் பணம் கொடுக்கப்பட்டு ஈரான் மீது ஏவி விடப்பட்ட குழுக்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தீர்களென்றால் இதுகுறித்து மற்றவர்களும் அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும். அடுத்தது இப்போர் ஏன் இவ்வளவு பெரிதானது எனும் விளக்கம். தன்னை அழுத்திப் பணியவைத்து, முற்றுகைக்குள் கொண்டுவந்து, முடக்க ஈரான் பாவித்த ஏவலாளிகளே ஹமாஸ், ஹிஸ்புள்ளா, ஹூத்தீக்கள் மற்றும் ஈராக்கிலும் சிரியாவிலும் இயங்கும் ஜிஹாதிகள். ஆகவேதான் ஒவ்வொன்றாக ஈரானின் அம்புகளை அழித்த இஸ்ரேல் இறுதியாக ஏவியவனான ஈரானின் மீது தனது கவனத்தைத் திருப்பியது. அடுத்தது பலஸ்த்தினார்களின் தனிநாடு எனும் கோரிக்கை. சரியான கோரிக்கைதான், மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஈரான் பலஸ்த்தீன விடயத்தில் தலையிடுவது உண்மையாகவே அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிடவேண்டும் என்பதற்காகவா? நிச்சயமாக இல்லை. பலஸ்த்தீன ஆயுதக் குழுக்களை வைத்து இஸ்ரேலினை தொடர்ச்சியான முற்றுகைக்குள் வைத்திருக்க வேண்டுமென்பதற்காகத்தான். சியாக்களான ஈரானிய முல்லாக்களுக்கு தாம் பின்பற்றும் இஸ்லாத்தின் பரம வைரியான சுன்னி பலஸ்த்தீனர்களுக்கு நண்மை செய்யவேண்டிய தேவையென்ன என்பதைச் சிந்தித்தால் ஈரான் இவ்விடயத்தில் ஏன் தலையிடுகிறது என்பது புரியும். உங்களின் புரிதலிற்காக ஒன்றைக் கூறுகிறேன், ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா தலையிட்டது எமக்குத் தனிநாடு பெற்றுத்தரத்தான் என்று நீங்கள் நம்பினால், ஈரானும் பலஸ்த்தீனர்களுக்கு தனிநாடு கொடுக்கவே தலையிடுகிறது என்பதை தாராளமாக நீங்கள் நம்பலாம். ஏனென்றால் ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா செய்ததையே பலஸ்த்தீனர்கள் விடயத்தில் இன்று ஈரான் செய்கிறது.
  6. அமெரிக்க மூத்திரம். இடிபாடுகளுக்குள் இருந்து சிலிர்த்துக் கொண்டு எழுந்து வரும் அக் குழந்தைக்கு கைளும் இல்லை; கால்களும் இல்லை நிலைத்த அதன் விழிகளுக்குள் உறையும் பொருள் அறிபவர் யாரும் இல்லை. அக் குழந்தைக்கு முன் நீங்கள்விரித்து வைக்கும் உலகம் இதுதான் : வற்றிய முலையுடன் சிதறிய பேரன்பு, மண்ணுடன் கலந்த கோதுமை மாவை பிரித்தெடுக்கச் சென்று பிணமான அரவணப்பு, தகர்ந்து சிதறிய கட்டிக்குவியலுட் சிக்கிய உடன்பிறந்த பொம்மைகள், சுற்றிச் சுற்றி திசை அழிந்த சுடுமணற்காற்று அன்றில் குளிர் உறையும் கூடாரம் அலையும் சிறு நிலம். அக்குழந்தைக்கு கந்தகக்காற்று வாக்களிக்கப்பட்டது. அதன் நிலம் பறிக்கப்பட்டது. பசியையும் தாகத்தையும் புறக்கணித்து கொடும் அதிர்வுகளும் கொலைவெறிப் பேச்சுக்களும் இல்லாத ஒரு பிரபஞ்சத்தைத் தேடி அது நடக்கிறது. நெடும் பாலைவனம் அதற்கு வழிவிடுகிறது. பெரும் பருந்தின் நிழலில் ஒட்டகங்களை வளர்க்கும் மன்னர்களின் கூடாரங்களுக்குள் தேநீர்க் கலசம் கொதிக்கிறது. பேரீச்சம் பழக் கூடை கனக்கிறது. இரந்துண்ணாக் குழந்தை. வழிநெடுகிலும் ஒட்டகங்களை மேய்க்கும் கறுத்துலர்ந்த மானுடர், முக்காடு இட்டு முகம் மூடிய பெண்கள். சாவீடுகளின் ஒப்பாரி. கொலைத் தொழிலை வரிந்து கொண்ட நெத்தன் யாகு கொக்கரிக்கிறான். பாரசீக நிலத்தின் கலாசாரச் காவலர்கள் யூரானியத்தைக் கொண்டு மலை முகடுகளுக்கிடையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். வண்ணக் கம்பளங்கள் மூடிய நகரத்தில் மரணவீடுகளும் சிதறுகின்றன. கணைகளின் மொழியொன்றே பழம்பெரும் தேசத்தில எஞ்சுகிறது. கணிதமும் கவிதையும் பிரபஞ்சமும் அறிந்தவனின் புதை மேட்டில் தடக்கிய குழந்தை சொல்கிறது: தந்தையே உனது கல்லறையின் மீது ஒவ்வொரு ஆண்டும் மரங்கள் இரு முறை மலர்களைச் சொரியும் என்றாய் உன் மீது பூச் சொரிவதற்கு எப் பிணம் தின்னியும் தருவொன்றையும் உயிருடன் விடமாட்டான். உன் மீது ஒலிவம் பழங்களைச் சொரிவதற்கு என்னிடமும் ஒரு மரம் கூட இல்லை. ஆனால், ஒரு நாள் உன் கல்லறை மீது பிணந் தின்னிகளின் மனித முகமூடி கழன்று விழும். பெண்களின் முக்காடுகளும் உருமறைப்புக்களும் உதிரும். சிதறிய நகரங்களின் மேல் உன் பிள்ளைகள் வண்ண வண்ணக் கம்பளங்களால் கூடாரம் அமைப்பர் எனக்குக் கைகளும் கால்களும் முளைக்கும் பசியும் தாகமும் எடுக்கும். நேத்தன் யாகுவின் கல்லறை மீது ஒவ்வொரு வருடமும் இரு முறை மானுடம் காறி உமிழும். சொல்லிய கணத்தில் பாரசீக முகட்டில் குண்டுகள் பெரும் துளைகளை இட்டன. அத்துளைகளில் அமெரிக்க மூத்திரம் நிரம்பியது. தேவ அபிரா 23-06-2025
  7. அவர் செயற்கை மழைக்கு யூரோப்பில் உலாவும் மேகங்களைத்தான் தள்ளிக்கொண்டு போவார் ...... நீங்கள் ஒரு ஐடியாவும் குடுக்காமல் "கம் " என்று இருக்கவும் . ......... மனுசன் நோபல் பரிசுக்கு வேற அலையுது . .......! ☹️
  8. கடந்து செல்லுங்க (எனக்கு வேறு வழி தெரியல ஆத்தா)
  9. நேற்றிலிருந்து 4 நாட்களுக்கு முழு அமெரிக்காவும் மிகவும் வெப்பநிலையாக உள்ளது. கனடாவும் இதே காலநிலையாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். எமது ஏரியாவில் நேற்று 160000 குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை. இரவு 12-1 மணி போல நின்ற மின்சாரம் 12 மணிநேரம் கழித்து தான் மீண்டும் வந்தது. இப்போதும் எமது பகுதியில் பல வீதி சமிக்கைகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை. நேற்றைய நாளைவிட இன்று அதிக வெப்பமாக உள்ளது. 100 காட்டுகிறது37-38.ஆனாலும் இதைவிட கூடுதலாக இருக்கும் என்றே சொல்கிறார்கள். இன்னும் 2நாட்கள் இதே காலநிலை.
  10. என் அவதானிப்பில், சில ஆதரவு நிலைப்பாடுகள் முழுமையான முட்டாள் தனத்திலிருந்து தான் உருவாகின்றன. பெரும்பாலானோரால் புரிந்து கொள்ள முடியாத இந்த முட்டாள் தனம் தான் இந்த ஈரான் முல்லாக்களுக்கான ஆதரவும், மக்களைப் பட்டினி போட்டு தான் தின்று கொழுக்கும் கிம்மை "தலைவா!" என்று பணியும் நிலைப்பாடும். அடிப்படை வாத இஸ்லாமியப் பயங்கரவாதிகள் ஆபத்தானவர்களாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் இந்த பூமியில் இழப்பதற்கு எதுவும் இல்லையென்று வாழ்வோர். வானத்தை நோக்கி ஒற்றை விரலைக் காட்டி விட்டு, செத்தால் "சாஹிட்" ஆவோம், விண்ணுலகில் தமக்கு எல்லாம் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கையில் இருப்போர் இவர்கள். இவர்களிடம் போய் அணு குண்டு கிடைத்தால் அல்லது கொஞ்சம் யுரேனியம் கிடைத்தால் கோசான் சொல்வது போல "நம் ஒவ்வொருவர் பிருஷ்டத்திற்கு அடியிலும்" அது வெடிக்கும்😂! இந்த ஆபத்தைப் புரிந்து கொள்ள, ஒரு மனிதனுக்கு எத்தனை நியூரோன்கள் தேவை?
  11. மத்திய கிழக்கின் விடயங்கள் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அறிவைப் பரிசோதிப்பதற்காக ஒரு கேள்வியினைக் கேட்டுக்கொண்டே உங்களுக்கான பதிலை வழங்கலாம். இஸ்ரேலுக்கும் ஈரானிற்கும் இடையிலான அண்மைக்காலப் பிணக்கு எப்போது ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகிறீர்கள்? ஈரானின் இஸ்லாமியப் புரட்சி பற்றித் தேடிப்பார்த்தால் இதுபற்றிய‌ புரிதல் உங்களுக்கு ஓரளவிற்கேனும் கிடைக்கலாம். சரி, விடயத்திற்கு வருகிறேன். 1979 ஆம் ஆண்டுவரை ஈரானும் இஸ்ரேலும் மிகவும் சுமூகமான நட்புறவினைக் கொண்டிருந்தன என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை. 1979 ஆம் ஆண்டு ஆயொதொல்லா கொமேனியின் தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் புரட்சியின் பின்னரே இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பகையுணர்வு ஆரம்பிக்கப்பட்டது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் அதுவரையில் ஈரானிய இராணுவத்திற்கு இஸ்ரேல், அமெரிக்கா உட்பட பல மேற்குநாடுகளே ஆயுதங்கள் கொடுத்து உதவின. ஆனால் கொமேனியின் ஆட்சியில் இஸ்ரேல் முற்றாக அழிக்கப்படவேண்டும் எனும் கொள்கை அரச மட்டத்திலும், ராணுவ மட்டத்திலும், சாதாரண மக்கள் மட்டத்திலும் திணித்துப் பரவப்பட்டது. இதில் கடும்போக்குவாதிகள், மென்போக்குவாதிகள் என்கிற வித்தியாசம் இல்லாமல் அனைவருமே இஸ்ரேலின் இருப்பை இல்லாதொழிக்கவேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டு வருகிறார்கள். அடுத்ததாக 1979 ஆம் ஆண்டு ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் அமைந்திருந்த அமெரிக்காவின் தூதரகத்தில் பணியாற்றிய 52 ஊழியர்களை பணயக் கைதிகளாக சுமார் ஒருவருட காலத்திற்கு அடிப்படைவாதிகள் வைத்திருந்தமை. ஈரானின் அன்றைய மன்னரும், மக்கள் விருப்பிற்கு எதிராக நடந்துகொண்டவர் என்றும் அறியப்பட்டவரை அமெரிக்கா ஆதரித்தமைக்காகவே ஊழியர்களை பணயக் கைதிகளாக்கினோம் என்று கொமேனியின் புரட்சிக் குழு நியாயப்படுத்தியிருந்தது. இங்கிருந்தே அமெரிக்க ஈரானிய பகை ஆரம்பமாகியது. இஸ்ரேலை சின்னச் சாத்தான் என்றும் அமெரிக்காவை பெரிய சாத்தான் என்று அழைத்த கொமேனி, இஸ்ரேலினை உலக வரைபடத்தில் இருந்து நீக்குவேன் என்று சாகும்வரை கூறிவந்ததோடு, அவருக்குப் பின்னால் வந்தவர்கள் அதனையே தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகிறார்கள். இதில் ஆன்மீகத்தலைவர்கள், ஜனாதிபதிகள், அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் என்று வேறுபாடின்றி உறுதியாக‌ நிற்கிறார்கள்.
  12. போரினை தொடரும் நிலை சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் அதற்கான வசதிகள் இல்லை என கருதுகிறேன், ஈரானிடமும் இல்லை, இரண்டு வார போரில் இஸ்ரேல், ஈரான் இரு தரப்பிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது பெரிதாக உயிரிழப்புக்கள் இல்லை, அணு நிலைகளில் கூட பெரிதாக எந்த அணுக்கசிவுகளும் ஏற்படவில்லை, இத்துடன் போரினை முடித்து கொண்டால் இருதரப்பும் தமது கவுரவத்தினை இழக்க வேண்டிய நிலை இல்லாததால் போரினை முடித்து கொள்வார்கள். https://www.politico.com/news/2025/06/21/iran-says-strikes-did-not-cause-nuclear-contamination-00416469 Bulletin of the Atomic ScientistsThe radiation risks of Iran’s nuclear program, with or wi...Israel’s attacks create significant risks at Iran's nuclear sites. What could go wrong?https://www.samaa.tv/index.php/2087335313-iaea-reports-no-rise-in-radiation-after-us-strikes-on-iran-nuclear-sites
  13. House speaker praises Trump-announced Iran-Israel ceasefire. House Speaker Mike Johnson reacted to President Donald Trump’s announcement of a ceasefire between Israel and Iran by praising the president’s leadership, saying that “this is what peace through strength looks like.” “It’s a really remarkable achievement. President Trump deserves all the credit. This is what peace through strength looks like. We haven’t seen this in a while, and it’s really a big sigh of relief here on Capitol Hill,” Johnson told reporters at the US Capitol on Monday, shortly after Trump announced the ceasefire on Truth Social. Calling it “a really, really big day,” and “historic,” Johnson also said that calls from other lawmakers for a War Powers resolution potentially limiting the president’s authority to issue further strikes on Iran was “kind of a moot point now, isn’t it?” And Johnson said that he expected to be briefed on the developments tomorrow, saying that a briefing had already been planned but “it’ll be a little different in its in its tone I suspect now.” https://www.cnn.com/world/live-news/israel-iran-us-strikes-06-23-25-intl-hnk
  14. ஈரான், சிரியா, இராக், லிபிய இல் இருந்து மிகவும் வேறுபட்டது. கடைசி மூன்றுக்கும் இணையில் ஒற்றுமை ஒரேயொரு இறுக்கமான (தனிமனித) தலைமை . ஷா இன் ஆட்சியில் ஈரான் அப்படியே இருந்தது, வெளியார் (cia, moosad, அமெரிக்கா. மேட்ற்கு, இஸ்ரேல்) மிகவும் ஆதரவு அளித்தும் அப்படி ( சிரியா, இராக், லிபிய போல ) இருஙக ஷாவின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. (உண்மையில் ஷாவின் ஆட்சி அப்படி தூக்கி எறியப்படும் என்று கனவில் கூட cia நம்பவில்லை. (உண்மையில் ஷாவின் ஆட்சி அப்படி தூக்கி எறியப்படும் என்று கனவில் கூட cia நம்பவில்லை. இதை முன்பு அறிவேன் வேறு ஏதோ ஒரு வரலாற்று குறிப்பில் வாசித்த நினைவு. அனால் இப்பொது வந்துள்ள ஊடக பதிவு உறுதி செய்கிறது. https://www.theguardian.com/world/2025/jun/22/iran-israel-us-alliance-and-enemies) இபோஹையா ஈரான் அப்படி இல்லை ஆட்சியில். ஒரு பக்கம் இஸ்லாமிய புரட்சி, அதை பாதுகாப்பது, ஆனால் யாப்பின் வழியாக, மறு பக்கம் அதிபர் தேர்தலில் ஹெரிவு செய்யப்படுவது, அதாவது அதிகாரம் குவிக்கப்படாமல் பகிர, பரவப்படுவது. (இஸ்லாமிய (அரசாங்க / அரசு) பக்கம் கிட்டத்தட்ட முடியை போல, அனால் வேண்டுமாயின் அரசாங்கத்தில் தலையிடலாம்) இஸ்லாமிய அரசாங்க பக்கத்தில் கூட, moderates, hardliners என்று. ஈரானின் அதிபர் அண்மையில் ஒரு உயர் நிலை அதிகாரியை கூட பாகவி நீக்கி இருந்தார், ஏனெனில் இப்படியாக கடின காலத்தில் அவர் உல்லாச பிரயாணம் செய்தற்காக. (இஸ்லாமிய புரட்சி பக்கம் அதிபர் பீடத்தில் தலையிடாது. அதிபர் பீடம் இஸ்லாமிய புரட்சியை மதிக்கவேண்டும் என்பதே நிபந்தனை. இது பொதுவாக பிரச்சனை இல்லை) BBC NewsIranian president sacks deputy for 'lavish' Antarctic cruisePresident says trip by Shahram Dabiri, the vice-president for parliamentary affairs, was "indefensible" while Iran's economy suffers. இதனால்பெரும்பாண்மை மக்கள் அரசாங்கத்தில் இருந்து எதோ ஒரு விதத்தில் பயனை பெறுவது. இதே போலவே, IRGC (நோக்கம் இஸ்லாமிய புரட்சியை பாதுகாப்பது) , மரபுவழி இராணுவம் (Artesh, நிலப்புல ஒருமைப்பாட்டை பாதுகாப்பது) ஈரானில், இரண்டும் வேறு, வேறு அமைப்புகள். இப்படியான அமைப்பு இருந்ததாலேயே இரான் 24 மணித்தியாலத்தில் முதல் அடியில் இருந்து மீண்டதன் ஒரு முக்கிய காரணம். (வேறு திரியில் சொல்லி இருக்கிறேன், ஒவ்வொரு அரசும் அவற்றின் அரச /அரசங்க தேவைக்கு ஏற்ப ஆகி கொள்ளும் என்று, மேற்கின் வழிதான் இருக்க வேண்டும் என்று இல்லை) இவை எல்லாம் இணங்குவது அணுத்துறையில். ஹாமெனி தனக்கு எதாவது நடந்து இல்லை என்றால், அடுத்த படி எது என்பதை கூட இரான் முடிவு எடுத்துவிட்டது. இது காட்டுவது, இரான் அரசாங்கம் அமைப்பு அடிப்படையில், தனிமனித அடிப்படடையில் இல்லை (அது மேற்கின், us , இஸ்ரேல் இந்த பிரச்சாரம், அதை இங்கே சிலர் காவுவது, முல்லாக்கள் என்று). என்னவென்றால் இதை மேற்கு , இஸ்ரேல் ஐ அடிக்க விதன் மூலம் முழு ஈரானுக்கும் மானப் பிரச்சனை ஆக்கி விட்டது. காரணம், எந்தவித வெளி உதவியும் இல்லாமல் இரான் அணுத்துறையை கட்டி எழுப்பியது, சும்மா விளையாட்டு இல்லை அத்துடன், covid இல் மேற்கு நடந்து கொண்ட விதத்தை இரான் நினைவு ஊட்டினாலே போதும், மேற்கை, us இஸ்ரேல் ஐ எதிர்க்க. இது எனது தனிப்பட்ட புரிவு.
  15. உண்மை முல்லாக்கள் ஆறாம் நூற்றாணடின் இருண்ட காலத்திற்கு ஈரானிய பெண்களையும் மக்களையும் கொண்டு சென்றனர்.
  16. ட்ரம்ப் ஐயா.... ஈரானுக்கு குண்டு போடுவதை விட, செயற்கை மழை உருவாக்கி, அமெரிக்க மக்களை காக்க வேண்டும். 😂
  17. பங்குபற்றிய மூன்று நாடுகளும் தங்களுக்கு வெற்றி என்று கொண்டாடிக் கொண்டே அப்படியே கலைந்து போங்கள். நேரடியாக பங்குபற்றாமல் மறைகரங்களாக இருந்தவர்களும் வென்றவர்களே. ஆனால் சில விசயங்கள்: இப்பொழுதும் அதிபர் ட்ரம்பின் சமூகவலைப் பதிவுகளை, பேட்டிகளை, பேச்சுகளை இந்த உலகில் எவராவது நம்புகின்றார்கள் என்றால், அவர்களின் தலைகள் மேல் ஜிபியூ - 57 இராட்சதக்குண்டை போடுவதில் தப்பேயில்லை. அதிபர் கமேனிக்கு இஸ்ரேலையும், அமெரிக்காவையும் நன்கு தெரியும். அவசரப்பட்டு தலையை வெளியே காட்டாமல் இருக்கும் இடத்தில் அப்படியே இருந்து கொண்டால் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கும் 94 வயதுகள் வரை அவர் அதே இடத்தில் வாழக்கூடும். இந்த 94 என்பது ஒரு மாஜிக் நம்பராக பல இடங்களிலும் பேசப்படுகின்றது. அது ஏன் 94............. ஈரான் அணுகுண்டு செய்வதற்கு முன்னர் அதன் ஆகாயத்தை காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பக்கத்தால் எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் போகின்றவர்களே ஈரானுக்கு கல்லால் எறிவார்கள். மிக முக்கியமானது: இன்று உலகச் சந்தையில் எண்ணெயின் விலை நன்றாகச் சரிந்துவிட்டது. இந்த சண்டை ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த விலையை விட இன்று குறைவாகிவிட்டது. இறந்தவர்களும், இழந்தவர்களும் தவிர, ஏனையோர் குறைந்த விலை எண்ணெ வாங்கி மகிழலாம். 'ஒரு கலன் எட்டு டாலர்கள் ஆகியது........... கலிஃபோர்னியா கவிழ்ந்தது.............' என்ற யூடியூப் தலைப்பு அடுத்த மத்திய கிழக்கு சண்டை வரை காத்திருக்கவேண்டும். 'மூன்றாவது உலக மகாயுத்தம் ஆரம்பாகிவிட்டதா..............' - கமேனி 94 வயதில் போய்விடுவார், ட்ரம்ப் கூட போய்விடுவார், ஆனால் இந்த தலைப்பு சாகாவரம் பெற்றது. இப்பொழுது 12 நாட்களுக்கு முன்னர் விட்ட இடத்திற்கு உலகம் போகவேண்டும், அதாவது ரஷ்யா - உக்ரேன் எல்லைக்கு.
  18. ஈரானுக்குச் செய்த துரோகங்கள். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைக் கூறுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். இதைவிடவும் வேறு "துரோகங்கள்" இருந்தால், நீங்கள் தான் கூறவேண்டும். சரி, ஏன் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது? 1979 ஆம் ஆண்டு அடிப்படைவாதிகள் மேற்கொண்ட புரட்சியின்போது அமெரிக்க தூதரகப் பணியாளர்களில் 52 பேரை ஒருவருடம் பணயக் கைதிகளாக வைத்திருந்தமை தொடங்கி, அணுவாயுத உற்பத்தியைக் கைவிட மறுத்தமை, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தியை நிறுத்த மறுத்தமை, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குத் தொடர்ச்சியாக உதவி வருகின்றமை உட்பட பல நாசகாரச் செயல்களில் ஈடுபட்டு வந்தமையினாலேயே இப்பொருளாதாரத் தடைகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டன. ஏன் ஈரான் அணுவாயுதத்தை தயாரிக்கக் கூடாது என்று கூறுகிறேன்? இஸ்ரேலினை முற்றாக அழித்துவிடவேண்டும் எனும் தாரக மந்திரம் ஈரானின் அனைத்து மட்டங்களிலும் ஆளமாக வேரூன்றி அரச, இராணுவ, பொதுத் தளங்களில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஈரானின் கைகளுக்குக் கிடைக்கும் அணுவாயுதம் எந்தநாட்டின் மீது ஏவப்படலாம் என்பதை அனுமானிப்பது உங்களுக்கு கடிணமாக இருக்கப்போவதில்லை என்று நான் நம்புகிறேன். ஈரான் அப்படிச் செய்யாது என்று நீங்கள் சத்தியம் செய்யுமளவிற்கு ஈரான் ஒன்றும் புத்திஜீவிகளால் ஆளப்படும் நாடல்ல. மாறாக மத வன்மம் தலைக்கேறி இன்னொரு மதத்தை, ஒரு இனத்தை அழிக்கக் கங்கணம் கட்டிநிற்கும் அடிப்படைவாதிகளால் ஆளப்படும் நாடு. ஆகவேதான் இவர்களுக்கு அணுவாயுதம் கிடைக்கக் கூடாது என்று கூறுகிறேன். இஸ்ரேலோ, அமெரிக்காவோ ஈரானை உலக வரைபடத்திலிருந்து அழித்தே தீருவோம் என்று சூளுரைக்கவில்லை. ஆகவே அவர்கள் வைத்திருக்கும் அணுகுண்டுகள் ஈரானை அழிக்கப் பயனபடுத்தப்படப்போவதில்லை. ஆனால் ஈரான் அப்படியல்ல. அது தயாரிக்க விரும்பும் அணுவாயுதம் தனது பாதுகாப்பிற்காக அல்ல, மாறாக இஸ்ரேலை அழிப்பதற்கு.ஆகவேதான் அது எப்பாடு பட்டாவாது தடுக்கப்பட வேண்டியதாகிறது. ஈரான் அணுவாயுதத்தினை வேறு எவருக்கும் கொடுக்காது, அப்படிக் கொடுத்தால் அதனைத் தனிமைப்படுத்திவிடலாம் ‍ ஆகா, என்னே ஒரு அருமையான வாதம். ஈரான் அணுவாயுதத்தை இன்னொரு நாட்டிற்கோ அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கோ கொடுத்து, அதனை யாரோ ஒருவர் பாவித்தபின்னர் ஈரானைத் தனிமைப்படுத்தினால் என்ன, இல்லாவிட்டால் என்ன? ஈரான் எந்தெந்த ஆயுதங்களை, ஏவுகணைகளை ஹிஸ்புள்ளாவிற்கும், ஹமாஸிற்கும் கொடுத்தது என்பதை அருகில் இருந்து பார்த்த நீங்கள் கூறுவதை நம்புவதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை.
  19. ட்ரம்ப் தன்பாட்டுக்கு போர் நிறுத்தத்தை அறிவிக்கிறார்.ஈரான் கண்டும் காணாததுபோல் இஸ்ரேல் மீது சரமாரித் தாக்குதலை நிகழ்த்தி விட்டுதான் ஓய்ந்திருக்கிறது.25 வருட பொருளாதார தடைக்கு மத்தியிலும் ஈரான் நின்று பிடித்தது ஆச்சரியம்தான்.இந்திய பாகிஸ்தான் போரிலும் இஸ்ரேல் ஈரான் போரிலும் ஒரு மறைகரம் இருக்கின்றது.பின்பலம் தெரிந்தே ட்ரம்ப் போர்நிறுத்ததுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
  20. இப்போ இருப்பவர் கமேனி. இதற்கு முன் இருந்தவர் கொமேனி. நீங்கள் நினைப்பது போன்ற வகையில் ஈரானில் தனிமனித ஆட்சி நடப்பதில்லை. அதிஉச்ச தலைவர் என வாழ்நாளுக்கு ஒருவரை தெரிவு செய்தாலும், அவரை நியமிப்பது நிபுணர்கள் குழு எனும் குழாமே. இந்த தலைவர் எப்பொதும் revolutionary guardsஎனும் படையின் தலைவரிலேயே தங்கி இருப்பார்கள். ஈரானின் ஆட்சியை தக்க வைக்கும் பலம் RG யிடம்தான் உள்ளது. அயதுல்லாக்கள் மக்களால் வெறுக்கப்படும் நிலை வந்தால் பங்களாதேசில் நடந்தது போல் படைகள் ஓடி விடும். இஸ்ரேல் அடிப்பதால் மக்கள் கிளர்ச்சிக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஸ்டாலினின், லெனினின் கடைகாலத்தில் என்ன நடந்தது, அவர்கள் விரும்பிய ஆட்களுக்கு அடுத்த தலைமை கிடைத்ததா என்பதை எல்லாம் பார்த்தால் கமேனியின் ஈரானின் மீதான பிடி அத்தனை வலுவானது அல்ல என புரியும். அதே போல் ஈரானின் வான் பரப்பு முழுவதும் இஸ்ரேலின் ஆதிக்கம். ஈரானின் ஒரே ஆயுதம் டிரோன், ஏவுகணைகள் மட்டுமே. இதில் சீனா இறங்கினால் மட்டுமே ஈரானால் நீடித்து நிற்க முடியும். அதே போல் டிரம்பின் போர் நிறுத்தம் ஒரு நாடகம் என்றே நான் நினைக்கிறேன். டிரெம்பிற்கு இடியப்ப சிக்கல். அவரின் MAGA மோட்டு கூட்டம் நவ நாஜிகள், யூத வெறுப்பாளர். ஆனால் எப்ஸ்டீன் பைல்கள் உட்பட டிரம்பின் பல பிடிகள், புட்டினை போலவே, இஸ்ரேலிலும் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த யூத வெறுப்பாளரை பேய்க்காட்டி, வேறு வழியில்ல்லை, அதான் அமேரிக்கா முழு வீச்சில் இறங்கியது என காட்ட டிரம்ப் ஆடும் நாடகமே இந்த மோதல் தவிர்ப்பு. பிகு ஈரான் கத்தாரில் இருந்த அமரிக்க தளத்தை தாக்கியதும், அமேரிக்கா பயந்து, மறுவினை காட்டாமல் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது என நான் நம்பவில்லை.
  21. ஒருகணம் உங்களின் இக்கருத்தைப் பார்த்ததும் நெகிழ்ந்துவிட்டேன். என்னைப்பற்றி என்னைவிட அதிக ஆளமாக நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்கள், இல்லாவிட்டால் "நிச்சயமாக" என்று சொல்வீர்களா, என்ன? சரி, அதை விடலாம். உங்களின் கூற்றிற்கே வரலாம். "முஸ்லீம்களில் உள்ள இனவாதிகளானவர்கள்" ‍ இவ்வாறு உங்களால் அடையாளப்படுத்தப்படுவோர் யார்? இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எடுத்துக்கொண்டு இக்கூற்றிற்கான பதிலை எனக்குத் தெரிந்த வகையில் தர முயல்கிறேன். ஏனென்றால் முஸ்லீம்கள் என்று ஒரு இனம் இல்லை. இஸ்லாம் என்பது அவர்களின் மதம். இஸ்லாமிய அடிப்படைவாதிகளில் மற்றைய மதத்தோரை ஏற்றுக்கொண்டு, சகித்துக்கொண்டு, சமாதானமாக வாழ முயல்வோர் என்று ஒரு பகுதியினர் இருக்கிறார்களா? அப்படியிருந்தால் அவர்கள் மத அடிப்படைவாதிகளாக இருக்கமுடியாது. சரி, மத அடிப்படைவாதிகளாக இருப்போர் மீது இன்னொரு பகுதியினர் (உங்களின் "நிச்சயமான" கருத்தின்படி, என்னால் முண்டுகொடுக்கப்படும் "வெள்ளையினத்தவர்") தாக்குதல் நடத்தினால் அது எவ்வாறு தவறாக இருக்கமுடியும்? அடிப்படைவாதிகளால் உலகிற்குக் கிடைக்கும் நண்மைகள் என்னவென்பதை இங்கே பட்டியலிட்டீர்கள் என்றால் நான் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தவறென்று ஏற்றுக்கொள்கிறேன். தலிபான்களோ, அல்கயிடாவோ, ஐஸிஸோ அல்லது வேறு எந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்போ எவரால்த் தாக்கப்பட்டபோதும் நான் ஆதரவளித்தேன், இனியும் செய்வேன். ஏனென்றால் அவர்களால் இந்த உலகிற்கு கிடைக்கப்போகும் நண்மையென்று எதுவும் இல்லை. மூளைச்சலவை செய்யப்பட்ட மத அடிப்படைவாதிகள் ஏனையவர்களைக் கொல்லுமுன்னர் அவர்களின் முயற்சி தோற்கடிக்கப்படவேண்டும் என்பது எனது அசைக்கமுடியாத் நம்பிக்கை. இறுதியாக, உங்களின் சிந்தனைக்கு ஒன்றை விட்டுச் செல்கிறேன். சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் குடியரசாக இருந்த செச்சென்னியாவை, அம்மாநிலத்தின் பெரும்பான்மையினத்தவர்களான முஸ்லீம்கள் சுதந்திர பிரதேசமாக அறிவித்தபோது உங்களின் நாயகனான புட்டின் அவர்கள் இருமுறை மிகக்கொடூரமான போர்களை அங்கே கட்டவிழ்த்து விட்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், தலைநகர் குரொஸ்னி எரித்துச் சாம்பலாக்கப்பட்டும், அம்மக்களின் விடுதலைப்போராட்டத்தை"இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போர்" என்று கூறியே புட்டின் அழித்தார். உங்களிடம் நான் முன்வைக்கும் கேள்வி என்னவென்றால், செச்சென்னியர்களான முஸ்லீம்கள் மீது புட்டின் நடத்திய போரை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா என்பதுதான். முடிந்தால் பதிலளியுங்கள். பின்னர் தொடர்ந்து பேசலாம்.
  22. என்ன செய்வது…நேட்டோ நாட்டில் வந்து குடி ஏறி - சாலை முதல், மருத்துவம் வரை இந்த களவில் வந்த சுகத்தை அனுபவித்து கொண்டே…அதாவது கள்ள சோத்தை சாப்பிட்டு கொண்டே, களவை, கள்வனை வெறுப்பதாக என்னால் virtue signaling மாய்மாலம் போட முடிவதில்லை. இருந்துட்டு போங்க 🤣 2013 க்கு முன் நான் யாழில் எழுதவில்லை. உக்ரேனுக்கு, ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய போருக்கு ஆதரவு சொந்த மக்களை அடக்கும் முல்லாக்களுக்கு இஸ்ரேல் அடிக்க முன்பே நான் எதிர்ப்பு. ஹமாசை சாட்டி, இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என நீங்கள் கேட்க முன்பே எழுதி விட்டேன். ஆனால் நீங்கள் உடைந்த ரெக்கோர்ட் போல அதையே ஆயிரம் தடவை கேட்டால் என்ன செய்ய முடியும்?
  23. நீங்கள் வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் அப்பாவியாக தெரிகிறது. சே எனக்கு பிடித்த தலைவர்தான். ஆனால் நான் கம்யூனிஸ்டும் இல்லை, என் பெயரில் உள்ள சே அவரும் இல்லை. ஒரு கண்ணியமான தளத்தில், வரம்புக்கு உட்பட்டு உரையாடல் நடக்கும் போது ஒரு நிர்வாகியே இப்படி கண்ணிய குறைவாக எழுதலாமா? அண்மையில் ஒருமுறை உங்கள் சார்பில், நீங்கள் என்னிடம் நடந்து கொண்ட முறைக்கு நிர்வாகம் மன்னிப்பு கேட்டது. அதை தொடர்ந்து மிக அண்மையில் நீங்களாகவே ஜஸ்டின் அண்ணாவுக்கு ஒருமன்னிப்பு கடிதம் எழுதி இருந்தீர்கள். இப்படி பல இடங்களில் நடந்துள்ளது. ஏன் இப்படி நீங்களும் அவமானப்பட்டு, நிர்வாகத்தையும் தர்மசங்கடத்துக்கு ஆக்குகிறீர்கள்? வீரப்பையன் போன்றோரை பார்த்தாவது கண்ணியமாக எழுத பழகலாம்.
  24. உங்களது மட்டும் அல்ல தலையால் சிந்திக்கும் எந்த மனிதரதும் கருத்து இதுவாகவே இருக்கும். புட்டினுக்கு மண் சுமந்ததை கூட மன்னித்து விடலாம், ஆனால் முல்லாக்களுக்கு முதுகுசொறியும் அளவுக்கு, சில தமிழ் உள்ளங்கள் சீழ் கட்டி இருப்பது மிகவும் கவலைக்குரியது. நான் போட்ட படத்தில் கிளி முல்லா அல்ல. செத்த கிளி படத்திலேயே இல்லை🤣.
  25. நீங்கள் "not mutually exclusive" என்ற சொற்றொடரைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இரண்டு விடயங்கள் ஒரே நேரத்தில் உண்மையாக இருக்க முடியும்: இஸ்ரேல் பலஸ்தீனர்களுக்கு செய்வது அநியாயம் என்பதும் உண்மை. இஸ்ரேல், ஈரான் அணுவாயுதம் அடையாமல் வைத்திருக்கும் உரிமையைக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் ரஞ்சித்திடம் இருப்பதால் எழுதியிருக்கிறார் என்கிறீர்கள். போன ஆண்டு ட்ரம்பிற்கு ஆதரவாக எழுதிய போது, ஒபாமாவையும், பைடனையும் அவர்களுடைய லிபரல் கொள்கைகளுக்காக சில சமயங்களில் போலி வீடியோக்களை இணைத்து நீங்கள் எழுதிய போது யாருக்கெதிரான வாதம் உங்களை இயக்கியது? குடியேறிகள்? முஸ்லிம்கள்? பெண்கள்? அல்லது யாருடைய அடிமையாக இருந்தீர்கள்?
  26. இஸ்ரேலின் சண்டித்தனம் பற்றி உங்களின் புரிதல் என்ன என்பதை அறிய விரும்புகிறேன். பலஸ்தீனிய மக்கள் முஸ்லிம்கள் என்பதால் அவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என் கிறீர்களா? அல்லது காத்தான் குடி முஸ்லீமும் பலஸ்தீன முஸ்லீமும் ஒன்றென கருதுகிறீகளா? அல்லது வெள்ளை இனம் கும்பலாக ஒரு நாட்டுக்க அடித்தால் அதனை சரியென எந்த வித மனச்சாட்சியும் இல்லாமல் ஆதரவளிப்பீர்களா? ஆகவே முல்லாக்களின் அதிகாரம் முற்றாகப் பிடுங்கப்பட்டு, நாடு மீளவும் மக்களாட்சிக்குள் செல்லவேண்டும் இது அந்நாட்டு மக்கள் அல்லவா முடிவெடுக்க வேண்டும். மோறான் ட்றம்பா ஏனைய நாடுகளின் அரசாட்சியை முடிவெடுப்பது? நிச்சயமாக எனக்கு தெரியும் முஸ்லிம்களிள் உள்ள இனவாதிகளானவர்கள் உலகின் எங்கு தாக்கப்பட்டாலும் வெள்ளை இனத்தவர்களுக்காக (சில வேளை அடிமை புத்திகளாகவும் இருக்க வாய்ப்புண்டு) முண்டு கொடுப்பவர்களாக இருக்கிறீர்கள். ஏற்கனவே உங்களிடம் கேட்கப்பட்டது எப்படி துருக்கிய ஊடகவியலாளர் தூக்கில் தொங்க விடப்பட்டார் சவூதியிலென்று. இதற்கு முன்பும் இதே சம்பவம் நடைபெற்றது. அவர்களும் முல்லாக்கள் தான். ஏன் யாழ் களத்தில் யாராலும் நியாயம் சொல்ல முடியவில்லை?
  27. பேச்சுவார்த்தையின் போதே குண்டுகளை போட்டு விட்டு இப்போ போர் நிறுத்தம் என்பது நகைச்சுவையின் உச்சக்கட்டம். நத்தனியாகுவின் சொல்லை கேட்டு கூத்தாடி விட்டு இப்போ போர் நிறுத்தம் என்பது எவ்வளவு சாத்தியமானது? கொண்டு போய் மண்ணுக்கு மேல் போட்டு இஸ்ரேலை ஏன் சந்தோசப்படுத்த வேண்டும்? அமெரிக்காவில் எத்தனை பேர் இஸ்ரேலின் சொல்லை கேட்டு ஈரானுடன் மோதாமல் இருக்கும் படி கேட்டும் மண்ணுக்கு /மலைக்கு மேல் குண்டுகளை போட்டு எதிரிகளை வீணாக உருவாக்குவது எப்படி பொருளாதார ரீதியில் அமெரிக்காவை மேம்படுத்தும்?
  28. இதே கருத்து தான் எனதும். ஈரான் அரசு பலவீனமாக்கப்பட்டு முல்லாக்களின் அதிகாரம் முற்று முழுதாக செயலிழக்க செய்யப்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருக்கும் அணு சக்தி ஆற்றல் பூரணமாக அழித்தொழிக்கப்பட வேண்டும்.
  29. மன்னிக்க வேண்டும் இதைச் சொல்வதற்கு: உங்களுடைய புலம்பலுக்கு பதில் எழுதி நேர விரயம் செய்ய முடியாது. ஆனால், "உலக சமாதான தேவதை" ட்ரம்ப் என்று வரலாற்றை ரிக் ரொக்கில் வாசித்து விட்டு 2024 நவம்பர் வரை இங்கே எழுதிய உறவுகளிடம் தான் நீங்கள் "எங்கே என்ன பிசகியது?" எனக் கேட்க வேண்டும் (போன் போட்டும் கேக்கலாம், தப்பில்லை😎!) ஆனால், இணையவன் ஏற்கனவே கேட்டுக் கொண்டது போல, செயற்கை நுண்ணறிவு தயாரித்த போலி வீடியோக்கள், படங்களை இங்கே இணைத்து யாழ் களத்தைக் குப்பைத் தொட்டியாக்காமல் இருங்கள். குப்பை கொட்டுவதற்குரிய போதிய இடத்தை எக்ஸ், முகநூல் போன்றவை உங்கள் போன்றோருக்குத் தந்திருக்கும் நிலையில், தமிழர்களுக்கென்று இருக்கும் ஒரே தளத்தில் வந்து குப்பை கொட்டுவது கண்டிக்கத் தக்கது!
  30. எந்த மொழியானாலும் பசியின் மொழி அழுகை.
  31. ஈரானுக்கு ஆதரவாக கொழும்பு தூதரகம் சென்ற இலங்கையின் புத்த, கத்தோலிக்க சமயத் தலைவர்கள்.
  32. மூடித்திறந்த இமையிரண்டும் ........ ! 😍
  33. செத்த கிளிகள் பிரமிப்பை ஏற்படுத்கின்றன... 🤣
  34. ரஞ்சித் பகிர்ந்த சொந்த கதை முன்பு வாசித்துள்ளேன். சில விடயங்கள் கிரகிப்பதற்கு கடினமானவை. இப்படியும் நடக்குமா என எண்ண தோன்றும் அதேசமயம் தந்தையார் என்ன மன/உள பாதிப்பு அடைந்தாரோ எனவும் சிந்தித்தேன். உலகில் எமது பெற்றோரின் அன்புதான் முதன்மையானது. அவர்கள் அரவணைப்பிற்கு பின்னர்தான் மிகுதி எல்லாம் வருகின்றது. ஆனால் முதன்மை நிலை அன்பு/அரவணைப்பு மறுக்கப்படும்போது ஒருவரின் வாழ்க்கையே சூனியமாகிவிடும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்துவமானது. மிகவும் கடினமான, கரடு முரடான பாதையை கடந்து வந்துள்ளீர்கள். உங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த பரிசுத்த ஆத்துமன் அமைதியில் இளைப்பாறட்டும்!
  35. பூரண கும்பத்திற்கு பொட்டு வைத்தது போல்.... இந்த திரியின் ஒட்டுமொத்த கருத்துக்களுக்கும் தடாலடி கருத்து .👍
  36. @வீரப் பையன்26 ஈரானிடம் சவுண்ட் விட்ட அளவிற்கு சரக்கு ஏதும் இல்லை. சரக்கு இல்லாமல் சவுண்ட் விட்டது பெரிய தவறு. இது மற்றைய பல நாடுகளுக்கும் நல்லதொரு படிப்பினை. வான் எல்லை பாதுகாக்கபட முடியாத நிலையில் அணுவாயுதமும் பயன் அற்றது.
  37. மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு இந்திய புராணக் கதைகளால் பின்னப்பட்ட சரித்திரத்தை மறுதலிக்கக் கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது. ஆனாலும் இது மிகக் கடினாமானது. ஆயிரம் வருடங்களாகளாகப் புரையோடியுள்ள இந்துக் கடவுள்களின் நம்பிக்கையைப் பொய் என்று மக்கள் இலகுவாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். புராணங்கள் பொய்யாக இருந்தால் புராணக் கதாநாயகர்களான கடவுள்களும் பொய் என்றாகும். இதேபோல் இலங்கையிலும் என்றாவது ஒருநாள் மகாவம்சம் கூறும் பொய்களும் உடையும்.
  38. எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு நாடி அறுந்து இரத்தம் வேகமாக வெளியேறும் போது அதிர்ச்சியடைந்து சிலர் மயக்கமாவதும் உண்டு அது தவிர அந்த காயம் பற்றிய மிகைப்படுத்தலான எண்ணம் ஏற்படுதல் என மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் சரியான வலி நிவாரணி இல்லாத மருத்துவ வசதியற்ற நாட்டில் சிறு குழந்தைகள் இந்தப்போரிற்கு இரையாக போகிறார்கள் அவர்கள் பலர் அவயங்களை கூட இழக்க நேரிடும். இந்த அழிவினால் எப்போதும் சாதாரண மக்கள்தான் பாதிப்படைகிறார்கள், கடைசியாக அந்த மக்களையே மனித கேடயமாகெளம் பாவிப்பார்கள். இந்த போர் சிலருக்கு இலாபமக இருக்கலாம், இந்த போரினால் எமக்கென்ன இலாபம், எதற்காக இந்த கொண்டாட்டம்? பொதுவாக போரின் வலிகளை உணராதாவர்களும் அல்லது பார்க்காதவர்களும் கொண்ட்டாடலாம், ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இனமாக இருந்து இவ்வாறான மனித குல அழிவினை கொண்டாட முடியுமா? எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு நாடி அறுந்து இரத்தம் வேகமாக வெளியேறும் போது அதிர்ச்சியடைந்து சிலர் மயக்கமாவதும் உண்டு அது தவிர அந்த காயம் பற்றிய மிகைப்படுத்தலான எண்ணம் ஏற்படுதல் என மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் சரியான வலி நிவாரணி இல்லாத மருத்துவ வசதியற்ற நாட்டில் சிறு குழந்தைகள் இந்தப்போரிற்கு இரையாக போகிறார்கள் அவர்கள் பலர் அவயங்களை கூட இழக்க நேரிடும். இந்த அழிவினால் எப்போதும் சாதாரண மக்கள்தான் பாதிப்படைகிறார்கள், கடைசியாக அந்த மக்களையே மனித கேடயமாகெளம் பாவிப்பார்கள். இந்த போர் சிலருக்கு இலாபமக இருக்கலாம், இந்த போரினால் எமக்கென்ன இலாபம், எதற்காக இந்த கொண்டாட்டம்? பொதுவாக போரின் வலிகளை உணராதாவர்களும் அல்லது பார்க்காதவர்களும் கொண்ட்டாடலாம், ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இனமாக இருந்து இவ்வாறான மனித குல அழிவினை கொண்டாட முடியுமா? அணுவாயுதம் ஏவுகணை என்பதெல்லாம் ஒரு சாட்டாக கருதுகிறேன், ஈரானின் வளம்தான் குறியாக உள்ளதாக கருதுகிறேன்.
  39. அனைவருக்கும் நன்றி! உண்மை! ஆனால், மனிதர்களுக்குச் சுடும். அவர்கள் பூனைகள். இன்றுகூட டீ.எல்.எவ் DeutschlandFunk வானொலியில் காலையில் 5:30மணிக்கு இளம் யூத அமைப்பின் தலைவரையும், 15:30க்கு ஈரான் புலம்பெயரமைப்பின் ஒருங்கிணைப்பாளரையும் செவ்விகண்டு ஒலிபரப்புகிறார்கள். இந்த ஊடகங்கள் 2009இல் சிங்களம் இன அழிப்பில் ஈடுபட்டபோது, எமது மக்கள் தினம்தோறும் வீதிகளில் நின்று அவலக் குரலெழுப்பியபோது திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. உலக அமைதியை ஒரு முனையில் வட அத்திலாந்திக் கூட்டாண்மையின் நாட்டாண்மைத்தனம் உரசிப்பார்க்கத் தீப்பற்றிய நிலை. மறுபுறத்தே மிகப்பெரும் இனவழிப்பை இஸ்ரேல் மேற்கொள்வதன் ஊடாக மத்திய கிழக்கைக் கொதிநிலையாக்கியதோடு, அனைத்துலக விதிகளுக்கு முரணாக ஈரான் மீது அத்துமீறிய தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதற்கு முட்டுக்கொடுப்பதில் அதிதீவிரமாக யேர்மனியும் ஈடுபட்டிருப்பதன்வாயிலாக, அதனது சனநாயக முகமூடி கிழிந்து தொங்குகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி நீங்கள் கூறுவதைப் பார்த்தால் ஊர்ச் சண்டியர்களின் நினைவுதான் வருகிறது. அதாவது பார்த்ததற்காகச் சண்டைக்குப்போதல். தர்க்கரீதியாக யோசித்தால் அமெரிக்காவும் இஸ்ரேலியர்களும் செய்த, செய்கின்ற அத்துமீறிய அநியாயங்களின் முன் இவர்களால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகள் அணுகுண்டை ஏன் வைத்திருக்கக் கூடாது. யப்பானியர்களை எலிகளாக எண்ணி அணுகுண்டைப் போட்டழித்த அமெரிக்காவுக்கு ஈரானை அணுகுண்டு செய்யாதே என்று உத்தரவிடும் தார்மீக உரிமை இருக்கிறதா? 90 அணுகுண்டுகளை வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு ஈரானைத் தாக்க என்ன அருகதை இருக்கிறது போன்ற வினாக்களுக்கு விடைகாண முடியுமா? நிகழ்தகவைக் குறைத்தல் என்பது முதலில் 5000க்கு மேல் அணுகுண்டுகளை வைத்திருக்கும் அமெரிக்காவிலிருந்து தொடங்க வேண்டும். தமது அணுகுண்டுகளை அழித்தொழித்துவிட்டல்லவா ஏனைய நாடுகளைக் கேட்கவும் தாக்கவும் வேண்டும். ஐ.நா. என்று ஒரு நிறுவகம் உலகில் இருக்கிறதா? அப்படி இருந்தால் அடாத்தாக ஆபிரிக்க நாடுகளுள் இறங்கும் ஐ.நா. படைகள் இலங்கைத் தீவிலோ அல்லது இஸ்ரேலிலோ இறங்கி இன அழிப்பைத் தடுக்க முனையவில்லை. அமெரிக்கா ஆப்கான் முதல் லிபியா வரை வளர்த்தவிட்ட தீவிரவாதத்தைவிட வேறொருநாடும் செய்துவிட முடியாது. ப.வி. இயக்கத்தைப் பலவீனப்படுத்த இஸ்ரேல் உருவாக்கிய பல குழுக்களில் கைமாறிக் கட்டுமீறியதே கமாஸ். " இந்த உலகம் நீதியின் அச்சில் சுழலவில்லை. தார்மீகச் சட்டநெறிகளோ, மக்களின் உரிமைகளோ அல்ல, பொருளாதார வணிக நலன்கள்தான் தற்போதைய உலகப் போக்கைத் தீர்மானிக்கின்றன..." என்ற மேதகு அவர்களின் கூற்று 17 ஆண்டுகளைக் கடந்தும் பொருந்திப் போகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி அதனை மாற்றியமைக்க முனைந்தவர்களை உலக வல்லாதிக்க சக்திகள் அழித்து வரும் நிலை தொடர்வதால் உலகம் தொடர்ந்தும் நசிந்தழிகிறது. ஆனால், பல சர்வாதிகாரிகளை இந்த உலகம் கடந்து நிமிர்வதும் நடந்துள்ளது. இனியும் நடக்கும் என நம்புவோம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  40. இப்போது மேற்கத்தைய ஊடகங்களில் ஈரானும் ரஷ்யாவும் மட்டுமே உலக அமைதியை கெடுத்துக்கொண்டிருக்கின்றன என்றொரு பிரமாண்டத்தை உருவாக்கிக்கொண்டு வருகின்றார்கள். ஆனால் இந்த மேற்குலகு தாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என திரும்பியும் பார்ப்பதில்லை.முன்னோக்கியும் பார்ப்பதில்லை.
  41. பாப்பா பாப்பா கதைகேளு . ...... ! 😍
  42. இலங்கை அரசாங்க தரப்பு, புளோரிடா அனுப்பி கார்பன் டேட்டிங் செய்யும் பின்னணியை நாங்கள் சற்று அவதானிப்பது அவசியம் என்று நினைக்கிறன். ஏற்கனவே சிங்களத் தரப்பால் அமெரிக்காவுக்கு அனுப்பி கார்பன் டேட்டிங் செய்யப்பட்ட யாழ் மனித புதைகுழி தடயங்கள் போர்த்துக்கீசர் காலத்து மனித எலும்புகள் என்று உல்டா கதையை சிங்கள மக்களிடையே செய்தி பரப்பப்படுகிறது. சிங்களம் தன்னை காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யும் என்பது நாம் அறிந்தது தானே.
  43. செய்தி தகவல்களை பார்த்தால் ஈரானியர்களில் ஒரு பகுதியினர் இஸ்ரேலுடன் இணைந்து செயற்படுகின்றார்கள் போல் தென்படுகின்றதே. மிகவும் துல்லியமான தகவல்கள் இஸ்ரேலுக்கு தொடர்ந்து கிடைக்கின்றது. ஈரானில் உள்ளே நின்று ஈரானியர்களே தகவல்களை அனுப்புகின்றார்கள் என்றே தோன்றுகின்றது. அணுவாயுதம் அமைக்கும் ஆசையில்/வெறியில் முழு நாட்டையுமே ஈரானிய அரசு நாசமாக்கின்றது என எண்ண தோன்றுகின்றது. ஈரானின் ***யில் அடி விழுந்துள்ளது. இனி எழுந்து நடக்க முடியுமா என்பதே சந்தேகம். ஆன்மிக தலைவர் காலங்காலமாக எச்சரிக்கை அனுப்புகின்றார். இதைவிட பலமான ஆயுதம் அவர்களிடம் வேறு ஏதும் உள்ளது போல் தெரியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.