Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87988
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19109
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7044
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/22/25 in all areas

  1. இது ஒருவகையில் முற்போக்கு சிந்தனை வடிவம் தான். இளவயது மகப்பேறு, பாலியல் துஸ்பிரயோக விளைவு போன்ற இக்கட்டான நிலையை சந்திக்கும் பெண்ணுக்கு இது அனுகூலமாக கூட அமையலாம். குழந்தையின் வளர்ச்சியில், பராமரிப்பில் நேரத்தை, செலவுகளை பகிர்ந்து கொள்ளாத ஒரு ஆண்வெறும் பத்திரத்தில் மட்டும் தன்னுடைய பெயரை போட்டு "ஆண்மையை" காட்டுவதில் என்ன பலன். இது ஒருவகையில் முற்போக்கு சிந்தனை வடிவம் தான். இளவயது மகப்பேறு, பாலியல் துஸ்பிரயோக விளைவு போன்ற இக்கட்டான நிலையை சந்திக்கும் பெண்ணுக்கு இது அனுகூலமாக கூட அமையலாம். குழந்தையின் வளர்ச்சியில், பராமரிப்பில் நேரத்தை, செலவுகளை பகிர்ந்து கொள்ளாத ஒரு ஆண்வெறும் பத்திரத்தில் மட்டும் தன்னுடைய பெயரை போட்டு "ஆண்மையை" காட்டுவதில் என்ன பலன். சமூகம் எல்லாவற்றிட்கும் எதோ ஒரு பெயர் வைத்து அழகு பார்க்கும்... அது அவர்கள் மனப் பிறழ்வு. இது என்னுடைய தாழ்மையான கருத்து.
  2. இலங்கையில் இனப் பிரச்சனை நாட்டையே இரண்டாக்கும் முன் இருந்த காலத்தில், வடக்கில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே சாதியப் பாகுபாடுகள் உச்சத்தில் இருந்தது. அன்றைய நாட்களில் சில தமிழ் வியாபாரிகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் வியாபாரங்களும் செய்து கொண்டிருந்தனர். பெண்கள் மீதான கட்டுப்பாடுகளும் மிகவும் அதிகமாக இருந்த காலகட்டம் அது. ஆனாலும் அன்று சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே திருமண உறவு மிகக் குறைவாக இருந்தது. காவல்துறை தலைவர் நடேசன் போன்ற ஓரிருவரே அப்படிச் செய்ததாக தெரிந்திருந்தது. போராட்டம் தீவிரமாக இருந்த காலம் வேறு. முற்று முழுதான சந்தேகமே இரண்டு பக்கங்களிலும் இருந்தது. இனப் பாகுபாட்டை மீறி எந்த விதமான உறவுகளையும் ஏற்படுத்தும் ஒரு சாதகமான நிலை இருக்கவில்லை. மிகவும் சிலவே நடந்தன. இன்றைய போக்கு மாறி இருந்தால், அதற்கான பிரதான காரணம் வடக்கு மக்களின் பரம்பலே பிரதான காரணமாக இருக்கவேண்டும். வடக்கிலிருந்து வெளியேறிய மக்கள் நாட்டின் வேறு பகுதிகளில் நிரந்தரமாக , முக்கியமாக கொழும்பு போன்ற இடங்கள், வாழ ஆரம்பித்துவிட்டனர். அங்கு அவர்கள் வேறு இன மக்களுடன் அதிக இணக்கத்துடன், முன்னருடன் ஒப்பிடும் போது, இருக்கின்றார்கள் போல. இது இன்று உலகின் பல பெரு நகரங்களிலும் காணும் ஒரு நடைமுறையே. சென்னையில் கூட அவர்களின் மிகவும் இறுக்கமான சாதியக் கட்டுப்பாடுகளையும் மீறி புதிய உறவுகள் அதிக அளவில் உருவாகிக் கொண்டிருக்கின்றன. கிழக்கு மாகாணமோ மூவினங்களும் ஒரே அளவில் வாழும் ஒரு பிரதேசமாக மாறிவிட்டது. காலப்போக்கில் இன மற்றும் வேறு அடையாளங்களை தாண்டிய உறவுகள் அங்கே அதிகமாவது தவிர்க்க முடியாத ஒன்றே.
  3. அண்ணன் பார்த்தாலே ஆம்பிளை கூட கர்ப்பம் கன்பர்ம்டா 🔥🔥🔥 இவ்வண், தம்பிகள்
  4. அரசு இந்த முடிவு எடுக்க காரணம். யாரோ ஒரு பெண் குழந்தையை பெற்று வயல் வெளியில் வீசி விட்டு சென்றதினால் தான். மிருகங்கள் கூட இப்படி செய்யாதே. ஆண்சிங்கம், பெண்சிங்கம் என்ன்றில்லை. கிறிமினல் வேலை செய்ய ஆண் பெண் இருபாலரிலும் இருக்கின்றார்கள்.
  5. சீமானைச் சந்தித்தால் தலை கட்டாயம் சுத்தும்! இந்தப் பின்விளைவுக்குப் பயந்து தான், மூளையை off செய்து விட்டு பின்னால் செல்லும் ஆட்கள் மட்டும் சீமானைச் சுற்றி இருக்கிறார்கள்😎!
  6. நான் பஸ் லைன்சன்ஸ் எடுத்ததை அந்த காலத்தில் செய்தியா போட்டிருக்கலாம், வட போச்சே🤣
  7. யாழ்ப்பாணத்தில் தமிழ் பெண்கள் சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரித்து வருவதாக ஒரு செய்தியைப் பார்த்தேன். அதன் உண்மைத் தன்மை தெரியவில்லை. ஆனால் அதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளது . ஒரு தமிழ் பெண் தமிழரை திருமணம் முடிப்பதை விட ஒரு சிங்களவரை திருமணம் முடிக்கும் பொழுது திருமணத்தின் பின் அவளுக்குக் கிடைக்கின்ற சுதந்திரம் அதிகமானது. ஒப்பீட்டளவில் தமிழ் ஆணை மணமுடிக்கும் பொழுது வருகின்ற சீதனப் பிரச்சனை, சாதிப் பிரச்சனை போன்றவை ஒரு சிங்களவரை மணம் முடிக்கும்போது போது குறைவாகத்தான் வரும். ஜாதகம் பார்ப்பது சிங்களவர்களிடேயும் இருந்தாலும் இறுக்கத்தன்மை மிகக் குறைவு. முக்கியமாக மணமகன் வீட்டில் இருக்கும் பெண்களால் மணப்பெண்ணுக்கு வருகின்ற அழுத்தங்கள் சிங்கள குடும்பங்களிலே மிக மிகக் குறைவு. ஒரு தமிழ் பெண் மனமுடிக்கும் பொழுது கணவனின் தங்கை ,அக்கா , அம்மா எல்லோரும் அந்த பெண்ணை ஒரு அடிமை மனநிலையிலேயே பார்க்கின்றார்கள். அண்மையில் இந்தியாவில் ஒரு ஆடியோ பதிவு லீக்காகி இருந்தது அதிலே ஒரு கணவன் தன் மனைவியை சீதனம் கேட்டு எவ்வாறு அடித்து கொடுமைப்படுத்துவேன் என்று தங்கையிடம் பேசும் பொழுது, அந்தத் தங்கை கணவனை பாராட்டி அவளுக்கு அப்படித்தான் இன்னும் அடிக்க வேண்டும் என்று செல்கிறார். இலங்கையில் அவ்வாறான ஓடியோக்கள் இல்லாவிட்டாலும் பல குடும்பங்களில் அவ்வாறு நடக்கின்ற ஆதாரங்கள் என்னிடமே இருக்கின்றன. அவர்களின் அடையாளம் வெளிப்படும் என்பதற்காகவும் , சில விவாகரத்து வழக்குகள் இப்பொழுது நிலுவையில் இருப்பதாலும், சிலவேளை அந்த ஆண் மகன்கள் மனசு மாறி மீண்டும் சேர்ந்து வாழலாம் என்ற சின்ன நம்பிக்கையிலும் அவை எதையும் நான் வெளியிடுவதில்லை. நான் சிங்களவர்களோடு பழகி அவர்களின் திருமணங்களுக்கு சென்ற பொழுது பார்த்த விடயம், திருமணத்தை தம்பதியினரே பிளான் பண்ணுகிறார்கள். அங்கு அவர்களுடைய பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் இருக்கின்ற அழுத்தம் தமிழ் பெற்றோருக்கு இருக்கின்ற அழுத்தத்தை விட மிகக் குறைவு. குறிப்பாக சிங்கள இளைஞர்கள் அது பெண்ணாக இருக்கட்டும், ஆணாக இருக்கட்டும் தங்கள் துணையை தாங்களே தீர்மானித்து கொள்ளவே விரும்புகிறார்கள். குறிப்பிட்ட வயது வந்ததும், குறிப்பாக பல்கலைக்கழகம் வந்ததும் அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளவே விரும்புகின்றார்கள். அங்கு புரோக்கர், சாதி, ஜாதகப் பொருத்தம் போன்றவை மிக குறைவாகவே செல்வாக்கு செலுத்துகிறது. திருமணத்துக்கு பிறகு அந்த தம்பதியினரின் வாழ்க்கையில் மண மகனின் குடும்பத்தார் அளவுக்கு அதிகமாக செல்வாக்கு செலுத்துவதில்லை. அவர்கள் புதுமணத் தம்பதிகளை தனித்து சுதந்திரமாக வாழ அனுமதி கொடுப்பது தமிழர்கள் விட சிங்களவர்களிடம் அதிகமாக இருக்கின்றது. அக்காவுக்கு சீதனம் கொடுக்க வேண்டும், தங்கச்சிக்கு சீதனம் கொடுக்க வேண்டும் என்று மணப்பெண்ணை கொடுமை படுத்துவதும் அங்கு ஒப்பிட்டளவில் மிக மிகக் குறைவு. இந்தச் சுதந்திரங்களை அறியும் பொழுது நிச்சயமாக தமிழ் பெண்கள், தமிழ் மணமகனை மணமுடிப்பதை விட சிங்கள மணமகனை மணமுடிப்பதை விரும்புகின்ற போக்கு அதிகரிக்கும். Sivachandran Sivagnanam ·
  8. ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்! மன்னார் – விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். 1998ஆம்ஆண்டு பிறந்த அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது உயர் கல்வியினை அவர் பின்லாந்து தேசத்தில் தொடர்ந்துள்ளார். அங்கு மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். பின்னர் ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் (EASA) விமானங்களுக்கான வணிக விமானி உரிமம், EASA CPL(A) MULTI-ENGINE PISTON (MEP) மற்றும் கருவிகளின் மதிப்பீடு ( (IR), செயல்திறன் அடிப்படையிலான வழிநடத்துதல் (PBN) மற்றும் ADVANCED UPRT தடுப்புமுறை மற்றும் மீட்பு பயிற்சி அதாவது விமான கட்டுப்பாட்டு இழப்பிலிருந்து மீட்பு பயிற்சி ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இதனையடுத்து ATPL ஏர்லைன் போக்குவரத்து விமானி ஒருவர் பெறக்கூடிய விமான உரிமத்தை பெற்றுள்ளார். இது ஒரு விமானி பெறக்கூடிய அதிக தரம்வாய்ந்த உரிமமாகக் கருதப்படுவதுடன் இவ்வுரிமத்தை கொண்டு ஒருவர் வணிக விமானங்களில் தலைமை விமானியாக (Captain)பணியாற்ற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440041
  9. டென்மார்க் காரர் இப்போது பேனையை தூக்கி எறிந்து பிடித்து செய்தி வாசிப்பதில் பிசியாக இருக்கிறார்🤣 அவரது குறும்படம் ஒன்றின் தெரிவின் போது அவருக்கு பலமாக குட்ட வேண்டியதாயிற்று. அப்புறம் வரதரின் மகளும் தான் தான் முதலாவது ஈழத்து விமானி என்று சொன்னதாக ஞாபகம்.
  10. GDP படி பார்த்தால் இந்தப் பட்டியல் சரி. நான்காவது நிரலில் இருக்கும் GDP per capita படி பார்த்தால், சுவிஸ் முதலாமிடம், நோர்வே மூன்றாமிடம் (அமெரிக்காவிற்கு அடுத்து). கடஞ்சா சொல்வது போல இது ஒரு பரிமாணத்தை மட்டும் காட்டும் ஒரு அளவீடு. ஒரு தேசத்தின் பல பரிமாணங்களைக் கருதி எடுக்கப் படும் அளவீடு மனித அபிவிருத்திச் சுட்டெண் (HDI) எனப்படுகிறது. HDI படி பார்த்தால், முதலிடம் ஐஸ்லாந்து, அமெரிக்காவிற்குப் 17 வது இடம். இந்தியா 130 வது இடம், இலங்கையின் 89 வது இடத்திலும் கீழே தான் இந்தியா😂! https://hdr.undp.org/data-center/country-insights#/ranks
  11. வர வர "The Onion" மாதிரி செய்திகள் போடுகிறது ஆதவன். ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், இந்த நையாண்டிப் பத்திரிகையை பல்கலையினுள் ஓடித் திரியும் உள்ளகப் பேருந்தில் இலவசமாக வாசிக்கக் கிடைக்கும். ஒரு தடவை "ஜனாதிபதி புஷ் அவரது பாரியாரின் ஜனன உறுப்பிற்கு விஜயம் செய்தார்" என்று ஒரு பெரிய தலையங்கம் போட்டு அசத்தியிருந்தார்கள்😂!
  12. வேற என்ன. அண்மையில் விடத்தல் தீவில் சர்வதேச மாநாடு என்று ஒரு தலைப்பு…பறந்து விழுந்து போய் பார்த்தால், ஒவ்வொரு நாட்டிலும் இருந்து விடத்தல் தீவை சேர்ந்த புலம்பெயர் புண்ணியாவான்களின் ஒன்று கூடலாம். அடுத்த முறை எங்கள் அகண்ட குடும்பம் சாமத்திய வீட்டில் சந்தித்தால் அதை சர்வதேச மாநாடு என போடும்படி ஆதவனுக்கு சொல்ல போறேன்🤣.
  13. "மார்க்சிஸ்ட் தலைமையை மீறி கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு" - அச்சுதானந்தன் கண்ட போராட்ட களங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்த வி.எஸ். அச்சுதானந்தன், மாநில எல்லைகளைத் தாண்டியும் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் ஆர்வம் காட்டியவர். கட்சியின் நிலைப்பாட்டைத் தாண்டியும் கூடங்குளம் அணு உலை போராட்டத்துக்கு ஆதரவு அளித்தவர். கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான வேலிக்ககத்து எஸ். அச்சுதானந்தன், முதுமையின் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஜூலை 21ஆம் தேதி உயிரிழந்தார். கடைசி சில நாட்கள் வரை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருந்த அச்சுதானந்தன், மூச்சுத் திணறல் காரணமாக ஜூன் 23ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள கடற்கரையோர கிராமமான புன்னப்ராவில் 1923ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி சங்கரன் - அக்கம்மா தம்பதிக்குப் பிறந்தார். தாயை நான்கு வயதிலும் தந்தையை பதினொரு வயதிலும் இழந்த அச்சுதானந்தன் ஏழாம் வகுப்போடு கல்வியை நிறுத்திக்கொண்டு, 11 வயதிலேயே வேலைக்குச் செல்லும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். அந்த தருணத்தில் தீவிரமாக இருந்த இந்திய விடுதலைப் போராட்டம், தொழிலாளர் இயக்கங்கள் அவரைத் தீவிரமாக ஈர்த்தன. 1940ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சில ஆண்டுகள் சிறையில் இருந்தார். பல தருணங்களில் தலைமறைவு வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தது. 1946ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த புன்னப்புரா - வயலார் இடதுசாரி இயக்கத்தினரின் போராட்டத்தில் பங்கேற்ற வி.எஸ். அச்சுதானந்தன் காவல் துறையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானவர். பட மூலாதாரம்,GETTY IMAGES 1964ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுபட்டபோது, தேசிய கவுன்சிலில் இருந்து வெளியேறிய 32 பேரில் அச்சுதானந்தனும் ஒருவர். புதிதாக உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். மக்கள் ஆதரவை பெற்ற அச்சுதானந்தன் ஊழல், நில மாஃபியா உள்ளிட்ட பல விவகாரங்களில் தீவிரமான நிலைப்பாடுகளை எடுத்த வி.எஸ். அச்சுதானந்தனுக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு இருந்துவந்தது. கேரள மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக பல ஆண்டுகள் இருந்த வி.எஸ். அச்சுதானந்தனுக்கு 82வது வயதில்தான் கேரள மாநிலத்தின் முதலமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. 2006ஆம் ஆண்டில் முதலமைச்சரான வி.எஸ். அச்சுதானந்தன், தனது ஆட்சிக் காலத்தில் அதிரடியான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். மூணாறில் இருந்த ஆக்கிரமிப்புகளை எதிர்ப்புகளை மீறி அகற்றினார். இது கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் ஐடி துறைக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "வி.எஸ். அச்சுதானந்தன் கட்சியின் தலைமைக் குழுவில் இருந்தபோது நான் மத்தியக் குழுவுக்கு தேர்வானேன். இதனால், பல ஆண்டுகள் அவரோடு இணைந்து செயல்படும் வாய்ப்புக் கிடைத்தது. அர்ப்பணிப்பு, தன்னடக்கம், தான் கொண்ட கொள்கையில் மன உறுதி, மக்கள் நலனே பிரதானமானது போன்ற விஷயங்களில் அவர் ஒரு முன்னுதாரணமாக இருந்தார்." என நினைவுகூர்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும் மூத்த தலைவருமான ஜி. ராமகிருஷ்ணன். 1964ல் அப்போதைய கல்கத்தாவில் நடந்த 7வது மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அந்த மாநாடு புதிய மத்தியக் குழுவை தேர்வுசெய்தது. சுந்தரைய்யா பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். அந்த மாநாட்டில் என். சங்கரய்யாவும் வி.எஸ். அச்சுதானந்தனும் மத்தியக் குழுவுக்கு தேர்வுசெய்யப்பட்டார்கள் என கூறுகிறார் ஜி.ராமகிருஷ்ணன். பட மூலாதாரம்,GETTY IMAGES "சமீபத்தில் என். சங்கரய்யா காலமான நிலையில், வி.எஸ். அச்சுதானந்தன் தற்போது காலமாகியிருக்கிறார். இதன் மூலம், முதல் முதலில் உருவான மத்தியக் குழுவில் இடம்பெற்று, நீண்ட காலம் அதில் பணியாற்றிய ஒரு உறுப்பினராக அச்சுதானந்தனைச் சொல்ல முடியும். ஒரு சாதாரண விவசாய தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, சுதந்திரப் போராட்ட காலத்தில் புன்னப்புரா - வயலார் போராட்டம் என்ற நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் கிருஷ்ணப்பிள்ளையின் வழிகாட்டுதலில் கலந்துகொண்டார். இடதுசாரி இயக்கத்தில் ஒரு பெருமிதமிக்க வரலாற்றைக் கொண்டவர் அச்சுதானந்தன்" என தெரிவித்தார் ஜி. ராமகிருஷ்ணன். தமிழ்நாட்டின் சூழல் போராட்டங்களில் ஆர்வம் காட்டியவர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெரிய அளவிலான தொடர்புகள் இருந்ததில்லை. இருந்தாலும், தமிழ்நாட்டில் நடந்த சூழல் போராட்டங்களில் அவர் ஆர்வம் காட்டினார். தமிழ்நாட்டில் 2012ஆம் ஆண்டில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது, அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். 2011- 2012ஆம் ஆண்டுகளில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் தீவிரமடைந்தபோது, கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் வி.எஸ். அச்சுதானந்தன். அவர் கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இத்தனைக்கும் அவர் சார்ந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அணு உலைத் திட்டத்துக்கு எதிராக இல்லாத நிலையிலும் வி.எஸ். அச்சுதானந்தன் அத்தகைய நிலைப்பாட்டை எடுத்தார். இந்த நிலையில், 2012ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருந்த நிலையில், அந்தப் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதற்காக செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி கூடங்குளத்துக்கு வர முடிவுசெய்தார் அச்சுதானந்தன். அதேபோல, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். நியூட்ரினோ ஆய்வுக்கூடம் பற்றியும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். ஆய்வுக்கூடத்துக்காக பூமிக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணியை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் குரல் கொடுத்தார். "பக்கத்து மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத்தான் இருந்தாலும்கூட, தமிழ்நாட்டில் மக்கள் போராடும் ஒரு பிரச்சனைக்காக வி.எஸ். அச்சுதானந்தன் குரல் கொடுத்தார். கட்சியின் மாநில அமைப்பும் சரி, தேசிய அளவிலும் சரி அணு உலைக்கு ஆதரவாக இருந்தும்கூட, அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் வி.எஸ். அச்சுதானந்தன். போராடும் மக்கள், தமிழர்களா மலையாளியா என்று பார்க்காமல் அவர்களுக்காக நின்றார். நெருக்கடியான அந்த காலகட்டத்தில் போராடிவந்த மக்களுக்கு இது மிக முக்கியமானதாக இருந்தது. பல முறை அவரை அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். எளிதில் அணுகக்கூடியவராகவும் மனம்விட்டுப் பேசக்கூடியவராகவும் இருந்தார்" என்கிறார் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப. உதயகுமார். குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியது ஏன்? ஜெகதீப் தன்கரை சூழும் ஊகங்கள் பிரிக்ஸை மிரட்டும் டிரம்ப்: இந்தியா, சீனா, ரஷ்யா ஓரணியில் திரளுமா? இந்தியாவில் ஐரோப்பிய வல்லரசுகளின் விதியை தீர்மானித்த 'வந்தவாசிப் போர்' பிரம்மபுத்திரா ஆற்றில் சீனா அணை கட்டுவதால் இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு? ஆனால், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எல்லா கேரள அரசியல்வாதிகளைப் போலவேதான் அவருடைய நிலைப்பாடும் இருந்தது. முல்லைப் பெரியாறு அணை மிகுந்த அபாயத்தில் உள்ளது என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். பல தருணங்களில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இருந்தபோதும், கேரள மாநிலத்தின் கடந்த 80 ஆண்டு கால அரசியலை வி.எஸ். அச்சுதானந்தனைத் தவிர்த்துவிட்டு விவாதிக்க முடியாது என்ற பாரம்பரியத்தை விட்டுச் சென்றிருக்கிறார் வி.எஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czey475denlo
  14. எந்தக் கொரியா ? இரண்டும் குடியரசுதான். படத்தில் உள்ள கொடிக்குச் சொந்தக்கார கொரியா பரவாயில்லை. மற்றக் கொரியாவை நம்பினால் ரஸ்யாவில் 'வேலை' செய்ய வேண்டி வரலாம் 😀.
  15. சீமான், விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி! தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. குறிப்பா அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அதிமுக-பாஜக கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ்இ ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள்இ கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. தற்போது கூடுதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதேபோல் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி. மு.க. இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 2026-ல்தமிழக மக்கள் ஒற்றைக் கட்சி ஆட்சியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். திமுகவை தோற்கடிக்க அனைத்து ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளும் அதிமுகவுடன் கைகோர்க்க வேண்டும். ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என்ற கருத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பொருந்தும். இதுவரை தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மக்களின் துன்பங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ளவில்லை. ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூறவில்லை. அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வந்ததற்கு பதிலளிக்கவே அப்படி பேசினேன்” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1440105
  16. காசா விவகாரம்: இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் ! காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காசாவின் முக்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் ஐக்கிய இராச்சியம்,பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள், இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. நிலைமை சீராகாவிட்டால் ‘தக்க நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்த நாடுகள் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் அமெரிக்கா, இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடாக இருந்தாலும், காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றார். காசா போர் 21 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் 57,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும்,1,700க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பல உலக நாடுகள், இந்த மனிதாபிமான பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. காசாவில் ஒரு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், பிராந்தியத்தில் அமைதி திரும்புவது கடினம் என்பதே சர்வதேச சமூகத்தின் பொதுவான கருத்தாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440098
  17. இறுதியாக வந்த அமெரிக்கநுகர்வோர் விலை சுட்டெண் மீண்டும் அதிகரித்த போக்கினை காட்டுகிறது, இதனிடையே வட்டி விகிதத்தினை குறைக்கவேண்டும் என்பதற்காக மத்திய வங்கி ஆளுநருடன் முன்னர் ட்ரம்ப் முரண்பட்டிருந்தார், தற்போது மீண்டும் பணவீக்கம் அதிகரிக்கும் போக்கில் உள்ளது, அரச பாதீட்டின் பற்றாக்குறை 6.7% GDP உள்ள நிலையில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள நிதிக்கொள்கைகளால் அரச வருமானம் குறைந்து, அதே நேரம் அரச செலவு குறைவதால் பொருளாதாரம் QT போன்ற பொருளாதார சூழ்நிலையினை உருவாக்கி பொருளாதார சுருக்கம் ஏற்படும், தற்போதய ட்ரம்பின் பெரிய அழகிய திட்டத்தின் மூலம் பெரும் நிறுவனங்கள் அதிகளவான நன்மையினை பெற சாதாரண மக்களின் நலன் ஒப்பீட்டளவில் மிக குறைவாக காணப்படுவதால் பொருளாதாரத்தினை தூண்டும் சாதரண மக்களின் செலவு குறைவாக இருப்பதுடன் அரச செலவு குறையும் போது அதிக பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது. பல உலக நாடுகள் இதே போல ஒரு இக்கட்டான பொருளாதார நிலைக்கு செல்கின்ற நிலை தொடருகிறது, மக்கள் பற்றிய சிந்தனை அற்ற தலைவர்கள் உலக பொருளாதாரத்தினை பாதிப்பிற்குள்ளாக்க உள்ளார்கள்.
  18. அதானியின் திட்டங்களை நிறுத்தியமைக்கு ரூ. 500 மில்லியனை இலங்கை செலுத்த வேண்டும்.
  19. சென்னை ஆப்பலோ மருத்துவமனியில் எங்கள் முதல்வர் தங்கிஇருந்து சிகிச்சைபெறும் இடத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கமேராக்களையும் இயக்கநிலையில் வைக்கும்படி கேட்டுகொள்கிறேன்.
  20. எனக்கும் வவுனியாவில் தான் முதன் முதலில் சலக்கடுப்பு என்றால் என்னவென்று அனுபவம் வந்தது. அதற்கு முதல் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் காட்டு வெய்யிலில் சைக்கிளில் நாளாந்தம் அலைந்திருக்கிறேன். எதுவும் வரவில்லை. ஆனால், இந்த கொதித்தாறிய நீர் எப்படி சலக்கடுப்பை தடுக்கிறதென தெரியவில்லை, அல்லது உண்மையில் தடுக்குமா என்றும் தெரியவில்லை. ஈகோலையையும், ஏனைய பக்ரீரியாக்களையும் அழிப்பது இலகு. குளோரின் ஒரு வழி, கொதிக்க வைப்பது இன்னொரு வழி.
  21. இன்றைய பரிதாப நிலை! புலிகள் மீள எழுகிறார்கள் என காண்பிப்பதற்காக நடத்தப்பட்ட நாடகமா?
  22. மஹா குழுமத்தை இந்த கணக்குகளும், தொகைகளும் பாதிப்பதே இல்லை, வசீ. மிகவும் அடிப்படையான சில தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பாதிப்புகள் நேரடியாக அங்கு தாக்கத்தை ஏற்படுத்தினால் அவர்களின் மனநிலையில் மாற்றம் வரலாம். ஆனால் இன்று அவர்கள் வெற்றி பெற்று விட்ட, அவர்களின் அமெரிக்காவை மீண்டும் கொண்டு வந்து விட்ட ஒரு மனநிலையிலேயே இருக்கின்றார்கள். மற்றைய அமெரிக்கர்களின் நிலை, அதிகமாக மேற்கு மற்றும் கிழக்குக் கரைகளில் இருக்கும் மக்கள், ஒரு நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கியபடியே இருக்கின்றது. புதிய முதலீடுகளை தவிர்த்து, பாதுகாப்பான வழிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இது ஒரு மூன்றரை வருடங்கள் மட்டுமே என்றும் நம்புகின்றனர். புதிய வேலைவாய்ப்புகளில் ஒரு தேக்கம் ஏற்பட்டு, அதனால் ஒரு சிக்கல் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக புதிதாக கல்லூரிப் படிப்புகளை முடித்தவர்கள். இந்த வகையினர் கொஞ்சம் அவநம்பிக்கையுடனேயே இன்று இருக்கின்றனர். இதற்கு செயற்கை நுண்ணறிவால் உண்டாகிக் கொண்டிருக்கும் தொழில்துறைச் சுனாமியும் ஒரு பிரதான காரணம்.
  23. மேற்கு நாட்டு குடியுரிமை சட்டங்கள் கூட ஒரு காலத்தில் தகப்பன் சார்பாகவே இருந்தன. இப்போ எல்லாமும் ஒன்றே. எமது சமூகத்தில் முன்னர் கூட மிக அரிதாகவே தாயார் கைவிட்ட பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் இனிசலுக்கு மட்டுமே உபகோகப்பட்ட “ஆண் சிங்கங்கள்” அதிகம் இருந்தார்கள். இவர்களை எல்லாம் பிறப்பு சான்றிதழில் இருந்து தூக்கினால் கூட ஒன்றும் குடி மூழ்கிபோகாது🤣.
  24. சரோ அக்கா முன்மொழிவுகள் எல்லாம் வரவேற்கத்தக்கன. ஆனால் தன் கட்சிகார நண்பர் பெண் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அக்கா வழமையான இலங்கை அரசியல்வாதி போலவே நீதிக்கு புறம்பாக நடந்து கொண்டார். ஊருக்குத்தான் உபதேசம்.
  25. மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சரோஜா சாவித்திரி போல்ராஜ் முன்மொழியும் திட்டங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான விடயங்களாக இருக்கின்றன. இன்றே இவற்றை முன்மொழிந்து சட்டங்கள் ஆக்கினால், இனிவரும் காலங்களில் இவை பயன்களைக் கொடுக்கும். ஒரு மரத்தை நடுவது போல. ஆண்களால் சிலவற்றை சீரணிக்க முடியாமலேயே இருக்கப் போகின்றது. மனங்களை விசாலமாக்கி, இவற்றை ஏற்றுக் கொள்வது தான் இங்கிருக்கும் ஒரே வழி. சில வருடங்களின் முன் என்று நினைக்கின்றேன். கனடாவில் ஓரு பெண் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தார். அந்த திருமணம் ஒரு திருமண விழாவாகவே நடந்தது. ஆனால் சமூக ஊடகங்களில் வந்த எதிர்ப்பு மிகப் பெரியது. ஆண்களின் எதிர்ப்புக் குரல்களே அதிகமாக இருந்தன. நாங்கள் அப்படியே அங்கங்கே தேங்கி நின்று விட்டோம் என்று தோன்றியது. ஆனால் காலம் தேங்கி நிற்பதில்லை, பின்னுக்கும் போவதில்லை. நாங்கள் தான் ஓடிப் போய் பிடிக்கவேண்டும். அந்த திருமணத்தில் நான் உணர்ந்த ஒரு விடயம்: அந்த இரு பெண்களுக்கும் உலகெங்கும் இருந்து எம் பெண்கள் கொடுத்த ஆதரவு. பிறப்புச் சான்றிதழில் ஏன் ஆணின் பெயர் அவசியமில்லை என்பதற்கான தேவைகளில் இதுவும் ஒன்று.
  26. ஓ.... உத்தரவின்றி, திறந்த வீட்டிற்குள் நுழைந்து இருக்கின்றார். மனைவி ஏதாவது சதி செய்து... ஆளை, மேல்லோகம் அனுப்பினாரோ என்ற கோணத்திலும் விசாரிக்கப் பட வேண்டும்.
  27. உலக நாடுகள் என மோடி குறிப்பிட்டவை, சோமாலியா, நைகர், எத்தியோப்பியா, மொசாம்பிக், புருண்டி, சியாரா லியோன் (சன்னி லியோன் அல்ல) மாலாவி போன்ற நாடுகள்.
  28. ஒரு மலையகத்தை சேர்ந்த பெண்களின் முன்னேற்றத்துக்கான பாதை என்பது கடினமான பாதை. ஒரு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணின் முன்னேற்றத்துக்கான வழிகளை விட மிக கடினமானதும் தடைகள் நிறைந்ததும் ஆகும். அவ்வாறான நிலையிலும் இப் பெண் தன் திறமையினால் மட்டும் முன்னேறி வரும் போது, அவரை மிகவும் மோசமாக விமர்சித்தவர்களில் யாழ்ப்பாணத்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அத்துடன் கொழும்பு மற்றும் தெற்கைச் சேர்ந்த முஸ்லிம்களும் சமூக வலைத்தளங்களில் இவரை மிக மோசமாக விமர்சித்து இருந்தனர். இலங்கையின் பொருளாதாரத்தின் ஆணி வேர்களில் ஒன்றாக இருக்கும், அதே நேரம் சமூக, கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய சமூகமாகவும் இருப்பவர்களில் இருந்து தன் திறமையினால் முன்னேறத் துடிப்பவரைக் கூட பின் தள்ளி குப்புற வீழ்த்தி சுகம் காணுகின்றவர்களாக எம் மக்களில் பலர் மாறி விட்டனர்.
  29. கோழிக்கு அரிசி போட்டது போல அப்பப்ப சொல்லிக் கொண்டே இருங்கள். முதலில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள்.
  30. " அடி " என்னும் இரெண்டெழுத்து .......... ! 👍
  31. பறவைகளுக்கு பிரிவினை இல்லை
  32. Gary இதைவிடாது போராட வேண்டும். தனது வாக்காளர் ஒருவருக்கு பா ஊ இப்படியான கடிதங்கள் வழங்குவது மிக சாதராணவிடயம். அல்லாமல் இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. பாஉ வாக செயல்படும் போது அது சட்டமீறல் இல்லை எனில் இப்போதும் இல்லைத்தான். இது இலங்கையின் சதி. ஆங்கிலேய வழி வந்த நாடுகளில் the PM has full confidence என சொல்லிய பலர், அநேகமாக சில வாரங்களுக்குள் வீட்டுக்கு போவதே அதிகம். இவருக்கு இப்படி நிகழாது இருக்க வேண்டும். ஊரில் உள்ள தமிழ் எம்பிகள் கூட்டாக ஒரு ஆதரவு கடிதத்தை கனேடியன் ஹைகொமிசனரிடம் கொடுக்கலாம்.
  33. ஹரி ஆனந்தசங்கரி ஒருவருக்கு உதவி செய்யப் போய், சிக்கலில் மாட்டிக் கொண்டது தூரதிஷ்டவசமானது. என்றாலும்… கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் நம்ப்பிக்கை ஆறுதலான விடயம். 🙂 இப்படியான உயர் பதவிகளில் இருக்கும் தமிழர்களை குறி வைத்து சிங்கள அரசே பின்னுக்கு இருந்து காய் நகர்த்திக் கொண்டிருக்கும் என்பது ஊரறிந்த இரகசியம்.
  34. அவலத்தை விவிலியம், சிலம்பு, கலித்தொகை என்று கலந்து அளித்த தங்களின் சான்றாண்மையை எடுத்து இயம்புதல் எளிதன்று. தங்களின் சொல்லாட்சியிலும், கருத்துச் செறிவிலும், அவற்றின் வழி கடத்தப்படும் அவலச் சுவையிலும் அசைவற்ற சிலையாகிறோம்.
  35. தினம் ஒரு தமிழ்ப் பாடல் - சுப.சோமசுந்தரம் "தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்! தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!" --------------திருமந்திரம் பாடல் 3065. பாடற் குறிப்பு : புற வழிபாட்டை விட அக வழிபாட்டுச் சிறப்பைக் கூறும் திருமூலரின் மற்றொரு பாடல். எளிமையான வரிகள். இப்பாடலுக்கான எந்த உரையும் பாடலை விட எளிமையாக அமைய முடியாது. இருப்பினும்.... பாடற் பொருள் : தேனின் சுவை கறுப்பா சிவப்பா ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியற்றோரே ! (இங்கு வான் என்பது புறவுலகிற்கான குறியீடு). தேனுக்குள் அதன் சுவை காட்சிப்படுத்த முடியாமல் ஒன்றறக் (inherent) கலந்ததைப் போல், இந்த ஊனுடம்புக்குள்ளேயே ஈசன் ஒளிந்துள்ளான். அஃதாவது அழிந்து போகும் மனிதனுக்குள்தான் (அல்லது எந்த ஜீவனுக்குள்ளும்) அழியாப் பரம்பொருளான இறைவன் ஒன்றறக் கலந்துள்ளான்; எனவே அங்கே தேடு என்பதே பொருள். சீவனில் சிவத்தைத் தேடு, Love thy neighbour, அன்பே சிவம் என்று பலவாறு சொல்லிக் கொள்ளலாம். பின் குறிப்பு : மெய்யெண்கள் கணத்தை (set of real numbers), (0,1) என்ற இடைவெளியில் (interval) இருவழிக் கோப்பின் (bijective map) மூலமாகப் பொருத்திய பின், என் கணிதப் பேராசிரியர் இத்திருமந்திரப் பாடலைச் சுட்டியது நினைவில் நிழலாடுகிறது. எல்லையில்லாத இறைவன் எல்லையுள்ள மனிதனில் அடக்கம் - மெய்யெண் கணம் (0,1) என்ற இடைவெளியில் அடங்கியதைப் போல். எண் படித்தாலே எழுத்தும் வரும் போல.
  36. திருமந்திரப் பாடலும் அதன் பொழிப்புரையும் அருமை ஐயா ......... ! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.