Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87988
    Posts
  2. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    34971
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    8907
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/24/25 in all areas

  1. இனக்கலவரம் யூலை 1983 - ஒரு சாட்சி ஆமர்வீதிச்சந்தியில் கீழே அண்ணரின் உணவகம் மேலே நாலாம் மாடியில் எனது வசிப்பிடம். யூலை 23 இல் தெற்கின் பல பாகங்களிலும் கலவரம் உச்சமடைந்த போதிலும் இதன் முன்னர் பல இனக் கலவரங்கள் வந்தபோதிலும் எமது உணவகமோ எமது கட்டிடமோ தாக்கப் பட்டிருக்கவில்லை என்ற அதீதமான நம்பிக்கை கைகொடுக்க யூலை 24 அதிகாலை வரை நாம் இருப்பிடத்தில் இருந்து நடப்பவைகளை அவதானித்தபடி.... யூலை 24 அதிகாலையில் மொட்டை மாடியில் நின்றபடி பார்த்தபோது தெமட்டகொட பக்கமாக இருந்து சில குழுக்கள் (அநேகமான பதின்ம வயதினர்) வீதியில் இருந்த தமிழ் கடைகளை உடைத்தும் நெருப்பு வைத்தபடியும் ஆமர்வீதி சந்தி நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆனாலும் எமக்கு எந்த பயமோ பதட்டமோ ஏற்படவில்லை. காரணம் எமக்கு கீழே ஆமர்வீதி சந்தியில் இருந்து பொலிஸ் நிலையம் வரை வீதியின் நடுவில் 30க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் காவலில் இருந்தனர். அத்தனை பேரும் தெரிந்தவர்கள் அனைவரும் எமது உணவக இலவச வாடிக்கையாளர்கள். ஆமர்வீதிச்சந்தியில் இருந்து ஒரு நூறு மீட்டர் தூரத்தில் குழுக்கள் வந்து கொண்டிருந்த போது அவர்கள் எம்மை நோக்கி வர வழி விடும்படியாக காவலுக்கு நின்ற காவல் துறையினர் திரும்பி செல்ல திரும்பி காவல் நிலையம் நோக்கி நகரத் தொடங்கிய போது தான் நெஞ்சு சுவாசம் ஓங்கி அடிக்க தொடங்கியது. தப்பி ஓடக்கூட நேரம் சுருங்கி விட்டிருந்தது. நாலாம் மாடியில் இருந்து கீழே இறங்கி வருகிறோம் கீழே இரும்பு கதவை உடைத்து தோற்ற கூட்டம் முதலாம் மாடிக்கு பெற்றோல் குண்டுகளை வீசிக் கொண்டிருக்கு அங்கே தீப்பிடிக்க ஆரம்பிக்கிறது.. முதலாம் மாடியின் பின் புறத்திற்கு ஓடி வருகிறோம் அருகில் இருந்த மரக்கடை எரியத் தொடங்கி இருந்தது. உடுத்தியிருந்த சறம் மற்றும் சேட்டை சிங்களவன் அணிவது போல் மாற்றி கட்டியபடி எங்கள் முதலாம் மாடியில் இருந்து பக்கத்து வீட்டு கூரைகளின் நடந்து பின்னால் இருந்த சிங்கள பாடசாலைக்குள் குதித்து அதே குழுக்களுடன் கலந்து வெளியேறி இன்று உயர் வாழ்கிறேன். ஆனாலும் எப்படி தப்பினேன் என்பது இன்றும் அதிசயமாகவே...... அன்று தெரிந்து கொண்டவை. இது எனது நாடல்ல இது எனது அரசல்ல இது எனது காவல்படை அல்ல. சிங்களவர்கள் எமது சகோதரர்கள் அல்ல.
  2. நான் இருக்கும் தென் கலிஃபோர்னியாவில் கடந்த பத்து வருடங்களில் நடந்த எம்மவர்களின் திருமணங்களில் மணமக்கள் இருவரும் தமிழர்களாக இருந்த ஒரு திருமணம் கூட நடக்கவில்லை என்று சமீபத்தில் ஒரு நண்பர் சொல்லியிருந்தார். உண்மை பொய் தெரியவில்லை, ஆனால் எனக்கு தெரிந்த சில திருமணங்கள் மாற்று வழிகளிலேயே நடந்திருக்கின்றன. தாயகத்தில் இன்று இப்படி நடக்கின்றது என்றவுடன் எங்களில் பலர் அங்கலாய்க்கின்றார்கள் போல. உண்மையில் தாயகத்தில் இப்படி அதிகமாக நடக்கின்றது என்பதற்கு தரவுகள் ஏதாவது இருக்கின்றதா தெரியவில்லை. ஒருவரின் அபிப்பிராயமாகக் கூட இருக்கலாம். 'திருமதி. பெரேரா' என்னும் அருமையான சிறுகதை ஒன்று உள்ளது. இஸுரு சாமர சோமவீர எழுதியது. தமிழ் மொழிபெயர்ப்பு அகழ் இதழில் வந்தது. @satan எழுதியிருந்த 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்பதை அங்கே பார்க்கலாம். ஆனால் இந்த சிறுகதை சொல்ல வந்த விடயம் அதுவல்ல................... https://akazhonline.com/?p=2817
  3. விடுதலைப்புலிகள் மீண்டும் நாட்டில் தாக்குதலை நடத்துகிறார்கள் என்று பிரச்சனையை திசை திருப்புவது, அல்லது அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு பிள்ளையானை போட்டுத்தள்ளி அதை புலிகளின்மேல் சுமத்துவது, ஏதோ ஒரு பயங்கரத்திடம் தீட்டப்பட்டிருக்கிறது இதன் பின்னணியில். இப்போ எதிரிகளுக்கு எதிராக நாளாந்தம் சாட்சிகளும் ஆதாரங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கிழக்கில் ஊர்காவல் படை, ஹிஸ்புல்லா செய்த அட்டூழியங்களும் வருகின்றன. என்ன செய்து தம்மை காப்பாற்றலாம் என்கிற நிலையில் பலர் அறிவிழந்து விசர் பிடித்த ந** போல ஓடுகிறார்கள். அதற்கு வக்காலத்து வாங்க அதன் ஏவல்களும், இந உணர்வாளர்களும் சிலதை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். புலிகள் சிறாரை போராட்டத்தில் இணைத்தார்கள் என்று குற்றம் சுமத்தியவர்கள், செம்மணியில் பொம்மைகளோடும் பள்ளி பைகளோடும் இணைந்த சிறுவர்களின் உடல்களை இராணுவத்தினரின் உடல்கள் என்று உரிமை கொண்டாடுவது எந்த வகையில் ஏற்றுக்கொள்ளலாம்? சிங்களம் எது வேண்டுமானாலும் சொல்லும் செய்யும். அதனை சார்ந்தவர்களும் அதனை ஆமோதிப்பார்கள். இங்கு வயது முக்கியமல்ல அதன் பின்னால் உள்ள செயலே முக்கியம்!
  4. விசுகர் ஏற்கனவே தன் பிள்ளைகளின் ஒவ்வொரு படிமுறை வளர்ச்சியையும் பற்றிப் பெருமைப் படும் ஒரு தந்தை தான். அவர் மட்டுமா? நாம் எல்லோரும் அப்படித் தான். ஆனால், அதைப் பற்றியா இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்? இதை ஏன் பத்திரிகையில், அல்லது இணைய செய்தித் தளத்தில் போட வேண்டிய தேவை வருகிறது எனப் பேசிக் கொண்டிருக்கிறோம். தனிப் பட்ட விருப்பு, வெறுப்பு என்று கடந்து போகலாம். ஆனால், இது கருத்துக் களம், எனவே வாழ்த்தும் சொல்லி விட்டு, "இது பெரிய செய்தி அல்ல" என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறோம். மற்றபடி , அனுஜன் எந்தக் குற்றமும் செய்யவில்லை, அவரை யாரும் கண்டிக்கவும் இல்லை. அவர் படிப்படியாக முன்னேறி, அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து, அமெரிக்க Naval Academy இல் பயிற்சி விமானியாகி, விண்கலத்தைச் செலுத்தும் விண்வெளி வீரராகவும் வரக் கூடும். அது செய்தியாகும்! அப்படி வளர வேண்டுமென்பது தான் எங்கள் வாழ்த்தும்.
  5. 2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு 2006 ஆம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கெப்பிட்டிக்கொல்லாவையில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது நடத்தப்பட்ட இரு கிளேமோர்த் தாக்குதல்களில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் நாற்பது பேர்வரையில் காயமடைந்தனர். இத்தாக்குதல் நடத்தப்பட்டு 30 நிமிடங்களிலேயே இப்பகுதிக்கு விஜயம் செய்த மகிந்த ராஜபக்ஷெ, பொதுமக்களுடன் பேசியதோடு இத்தாக்குதல்களுக்குக் காரணமான புலிகளை முற்றாக அழிப்பேன் என்றும் சபத‌மிட்டிருந்தார். ஆரம்பத்தில் இத்தாக்குதலை புலிகள் செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறிய யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு இரு நாட்களின் பின்னர் தனது சுருதியை மாற்றி புலிகள் செய்திருக்கலாம் என்று கூறியிருந்தது. புலிகளோ இத்தாக்குதலுக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தனர். இலங்கை காவல்த்துறை உடனடியாகவே இத்தாக்குதலை புலிகள் மீது சுமத்தியிருந்ததுடன் சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் இச்செய்தி மிகப்பிரபலமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. சமாதானப் பேச்சுக்களில் அதிகாரம் அற்ற அதிகாரிகளுடன் தாம் இனிமேல் பேசப்போவதில்லை என்று புலிகள் அறிவித்த மறுநாள் இத்தாக்குதல் நடத்தப்பட்டமையினால் புலிகளுக்கெதிரான மேற்குலகின் நிலைப்பாட்டினை இத்தாக்குதல் மேலும் உறுதிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது கொழும்பிலிருந்து கெப்பிட்டிக்கொல்லாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ உலங்குவானூர்தியில் மகிந்த இருந்திருக்கின்றார். அதாவது தாக்குதல் நடத்தப்பட்டவேளை மகிந்தவின் வானூர்தி கெப்பிட்டிக்கொல்லாவை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறது. அதாவது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து மகிந்த அறிந்திருக்கிறார். ஆகவேதான் தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகிலிருந்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வருகை தந்த நேரத்தில் மகிந்தவும் அப்பகுதிக்கு வந்திருக்கிறார். தாக்குதல் நடந்தவிடத்தில் உடனடியாகவே மகிந்த பிரசன்னமாகியிருந்தமை அன்றைய இராணுவ மற்றும் காவல்த்துறை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தபோதிலும் எவரும் அதுகுறித்தும் பேசும் திராணியைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இனி இத்தாக்குதல் குறித்து தற்போதைய அரசின் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செயலாளர் என்ன கூறுகிறார் என்பதைப் பார்க்கலாம்.
  6. ஜஸ்ரின்... அதிகப் பிரசங்கித்தனமும், தேவையில்லாத அலட்டல்களும் வேண்டாம். *** ################### ################### போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கைதுசெய்யப்பட்டு காவலில் இருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு 22 வயது. போர் முடிவடையும் போது 06 வயது பையன் தவழ்ந்து கொண்டு இருந்தபோதே அந்தச் சிறுவன் விடுதலைப் புலிகள் அமைப்பால் பயிற்சி பெற்றிருக்க வேண்டும், இல்லையா? Selvanajakam Nijanthan Kunalan Karunagaran
  7. நல்ல வேளையாக நீங்கள் முந்தி கொண்டீர்கள். அல்லது இந்த விளக்கத்தை கஸ்டபட்டு எழுத வேண்டி வந்திருக்கும். நன்றி. கேள்வியை யார் இப்பெல்லாம் கவனிக்கிறார்கள். மாடு, மரம், கட்டுதல் ரகத்தில்தான் பதில்கள் பெரும்பாலும். தமிழர்கள் ஏன் விமானியாக போவதில்லை (கேள்வி குறைவு, வழங்கல் அல்ல) என நியாயத்துக்கு நான் சொன்னமைக்க்கான வாழ்க்கை உதாரணம். பிகு எவரேனும் பிள்ளைகள் இந்த துறையை விரும்பினால் Air Traffic Controller நல்ல வேலை. ரிஸ்க் குறைவு. குடும்ப வாழ்வும் குலையாது. 8 மணி நேரம் பெட்டிக்குள் இருந்து விட்டு, அங்கே போய் படுத்தெழும்பி, மீண்டும் 8 மணி நேரம் பெட்டிக்குள் இருக்கும் அலுப்புகள் இல்லை. ஆனால் விமானியை விட stress அதிகம்.
  8. ஆடு, மாடு, கோழி, மீன், முட்டை என்று மனிதர்கள் உண்ணும் ஊர்வன, பறப்பன, நடப்பன அனைத்துக்குமே உயிருண்டு. அத்துடன் மாமிசம் மட்டுமல்ல நாங்கள் உண்ணும் தாவரங்கள் அனைத்துக்குமே உயிருண்டு என்பதை இன்றல்ல அன்றே மனிதர்கள் அறிந்துள்ளனர். அதிலும் சைவசமயத்தைப் பின்பற்றும் தமிழர்கள் ஒரு சிலர் மாமிசம் உண்டாலும். உயிர்கொலை மகா பாவம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆகவேதான் வருடத்தில் ஒருமுறையாவது, மிகக் கசப்பான. உண்ணவே வயிற்றைக் குமட்டும் காத்தோட்டிக்காயை பொரித்து உண்டு அதன் கசப்பால் துன்பத்தை அனுபவித்து, உயிர்களைக் கொல்லும் பாவத்திலிருந்து சற்று விடுபடுவதாக ஒரு நம்பிக்கையும் அவர்களிடம் உள்ளது. ஆகவேதான் அந்த நம்பிக்கையை வருடத்தில் ஒருமுறை வரும் ஆடி அமாவாசையன்று கடைப்பிடித்துப் பாவத்தைப் போக்கிக் கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சொல்லக் கேட்டுள்ளேன்.
  9. இதுவரை சிம்மாசனத்திலிருந்து சுகபோகங்களை அனுபவித்து வந்த தாய்லாந்து அரசர் இனிமேல் களத்தில் இறங்கிப் போர் செய்ய வேண்டிய வேளை வந்துவிட்டது.
  10. எல்லாரும் சண்டை பிடிக்கிறாங்கள். நாங்களும் சண்டை பிடிப்பம் எண்டு வெளிக்கிட்டினம் போல....😂
  11. அரசில் அதிகாரத்தில் இன்று உள்ளவர்களும், அன்றிருந்த சில புலநாய்வார்களும் கெப்பிட்டிக்கொல்லாவை மற்றும் வெலிக்கந்தைத் தாக்குதல்களை மகிந்தவுக்காக பிள்ளையானே நடத்தினான் என்று கூறும்போதும் எம்மவர்களில் சிலர் இதனை நம்பத் தயாராக இல்லை. அதாவது புலிகளே இதனைச் செய்யக் கூடியவர்கள், அவர்களுக்கே இத்தேவை இருந்தது எனும் புலிகள் குறித்த தமது இயல்பான கணிப்பீட்டில் இருந்து இவற்றினை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பவில்லை என்பதற்காக இவை நடைபெறவில்லை என்பது ஒன்றும் கட்டாயம் இல்லை. 2019 இல் தாம் மீண்டும் பதவிக்கு வருவதற்காக 270 அப்பாவிகளைக் கொன்றவர்கள் 2006 இல் தமது யுத்தம் மூலமான தீர்விற்கு நாட்டையும், சர்வதேசத்தையும் தயார்ப்படுத்துவதற்காகவே தமது இனத்தில் பலரைக் கொன்றார்கள் என்பதை எம்மவர்களில் பலருக்கு நம்பக் கடிண‌மாக இருப்பது வியப்பே. நீங்கள் கேட்டுக்கொண்டமையினால் தமிழ் கார்டியன் இணையத்தில் வந்த இணைப்பினைத் தருகிறேன். இத்தாக்குதல்கள் குறித்து செய்தியாளர் நிலாம்டீன் இரு யூடியூப் காணொளிகளை அண்மையில் பதிந்திருக்கிறார். அவற்றையும் முடிந்தால் இணைத்துவிடுகிறேன். கேளுங்கள். Sri Lankan presidential media official questions LTTE’s role in 2006 massacres | Tamil Guardian https://youtu.be/uiR9yw5W3Q4?si=38FeGveyJXsjyX1V https://youtu.be/ujr1w3faxEo?si=b5hIBMPgv0md2ngl
  12. 2009´ல் இவர் ஆறு வயது சிறுவன். தற்போது புனர்வாழ்வு அளிக்கப் பட்ட முன்னாள் போராளியாம். கேட்கிறவன் கேனையன் என்றால்......
  13. எனது இரண்டாவது மகன் இதில் பறக்க விரும்பி படிக்க கேட்டான். மறுத்து விட்டேன். அதற்கு நான் சொன்ன காரணம் அவனுக்கு அதிசயமாக இருந்தது. அப்பா இப்படி எல்லாமா யோசிப்பீங்க என்றான். இப்பொழுது வேறு துறையில் படித்து குடும்பம் குழந்தை என்று நல்ல நிலையில் உள்ளான். இப்ப அப்பா அன்று சொன்னது சரி என்று உணர்ந்து உள்ளான். நான் சொன்னது : விமானிகளுக்கு குடும்பம் பிள்ளை குட்டிகள் சரிவராது. நீ படித்து திருமணம் செய்து பேரப் பிள்ளைகளை பெத்து தரும் எல்லைக்குள் இருந்தால் போதும் என்பது.
  14. யாழ்களத்தில் தயா, அமரர் சோழியன் போன்றவர்களின் யூலை கலவர அனுபவங்கள் பல இருக்கின்றன.
  15. அடப்பாவி இரட்டை கொலைக்கேஸ் செய்தியில் எனது பெயரை டாக் செய்துவிட நான் பயந்தே போய்விட்டேன். நாம ஒரு ஓரமா உட்கார்ந்து நாலு வரியில் எதையோ சொல்லிவிட்டு போகின்றோம். அதற்காக இப்படி எல்லாம் பயம் காட்டக்கூடாது சிறியர்.
  16. 77 ....83 ..இரண்டிலும் உயிர் பிழைத்திருக்கின்றேன்...தப்பியது அரும் தப்பு
  17. அது என்றால் முழுக்க உண்மை தான். பிற்போக்கான விடயங்களில் இவர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமையை கண்டு கொண்ட பெரியவர்கள் தமிழ் தலிபான்கள் என்ற பொருத்தமான பெயரை வைத்தனர்.
  18. இல்லை சிறி, அவர்கள் எல்லோருக்கும் சுமந்திரனை தெரியும், தெரிந்துதான் கூட்டுச்சேர்ந்தார்கள். ஏனெனில் அவர்களும் பதவிகளுக்காக தொழுது பின் திரிபவர்கள் தான். நேற்று வந்த சாணக்கியன், அதுவும் சிங்களத்தின் பாசறையில் இருந்து வந்தவர், வரலாறு தெரியாதவர், நஸீருடன் நடந்த நேர்காணலில் அதை ஏற்றுக்கொண்டவர், வந்ததுமுதல் முஸ்லிம்களோடு ஒட்டிஉறவாடுபவர், தமிழர் மத்தியில் வாய் வீச்சு மட்டும் காட்டுபவர், ஆரம்ப உறுப்பினர்களை பரிகசிப்பவர், கட்சியின் தலைமைக்கு ஆசைப்படுவது தமிழரை எந்தளவுக்கு காப்பாற்றும் என்று தெரியவில்லை.
  19. நானும் பார் சிறியைப் பிடிச்சு ஒரு பார் லைசன்ஸ் எடுக்கப்போறன். என்னை வாழ்த்துவீங்களா பிரண்ட்ஸ்?!😎
  20. ஜனாதிபதி ஊடகப்பிரிவின் இயக்குநர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி 2006 ஆம் ஆண்டு சிங்களப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களான கெப்பிட்டிக்கொல்லாவை பேரூந்து மீதான கிளேமோர் தாக்குதல் மற்றும் வெலிக்கந்தை விவசாயிகள் மீதான தாக்குதல்கள் குறித்து அன்றைய அரசாங்கம் வெளியிட்ட தகவல்கள் குறித்து தமக்குக் கடுமையான சந்தேகங்கள் இருப்பதாகக் கூறுகிறார். மேலும் இத்தாக்குதல்களின் பின்னணியில் அரச உயர்மட்டத்தின் சில புள்ளிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிள்ளையான் போன்றோர் இருக்கலாம் என்று கூறியிருப்பதுடன், இத்தாக்குதல்களால் புலிகள் அடைந்த நலன்களைக் காட்டிலும் மகிந்தவும் பிள்ளையானும் மிக அதிகளவான நலன்களை அடைந்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். "எல்லையோர பிரதேசத்தின் பேய்கள்" எனும் தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது குற்றங்களுக்கான தண்டனைகள் அனைத்திலும் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த பிள்ளையானின் வன்முறைகள் குறித்து பேசியிருக்கும் அநுருத்த, இப்படுகொலைகளுக்கான காரணத்தை ஆராய்வதோடு இக்கொலைகளை நீண்டகாலமாகவே மகிந்த அரசு புலிகள் மீது சுமத்தியிருந்தமை குறித்தும் தனது கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறார். ஜனாதிபதி அநுரவின் சர்வதேச ஊடகத்துறையின் இயக்குநராகவும், மூலோபாய தொலைத்தொடர்புப் பிரிவின் ஆலோசகராகவும் அநுருத்தை மிக அண்மையிலேயே நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. "இப்படுகொலைகள் இரண்டுமே உடனடியாக புலிகள் மீது சுமத்தப்பட்டன. மகிந்த ராஜபக்ஷ அப்போது வரிந்திருந்த முற்றான போர் எனும் முயற்சிக்கு மிகுந்த வலுச்சேர்க்கும் காரணியாக இத்தாக்குதல்கள் அமைந்திருந்தன. ஆனாலும் இருபது வருடங்களுக்குப் பின்னர் மகிந்தவின் இத்தாக்குதல்கள் தொடர்பான விவரணங்கள் மீது மிகக் கடுமையான சந்தேகங்களையும் கேள்விகளையும் நாம் எழுப்பவேண்டியிருக்கிறது.இத்தாக்குதல்களை உண்மையாகவே திட்டமிட்டது யார்? போரிற்குப் பின்னரான அரசியல் கட்டமைப்பில் இக்கொலைகளின் உண்மையான சூத்திரதாரிகளுக்குத் த‌ண்டணைக்குப் பதிலாக அரசியற் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது எங்கணம்?" என்று அவர் கேள்வியெழுப்புகிறார்.
  21. கால்பந்தில் முத்திரை பதித்தவர்களை தேசிய முத்திரையில் பதித்துள்ளார்கள் .......... ! 👍
  22. சிறியர் @தமிழ் சிறி தமிழ் - சிங்கள திருமணங்கள் புதிய விடயங்கள் இல்லை. நான் அறிந்தவரை ஒரு சிலவற்றில் முறிவு ஏற்பட்டாலும் பெரும்பாலான தம்பதிகள் வெற்றிகரமாக வாழ்ந்துள்ளார்கள், வாழ்கின்றார்கள். காவல்துறை பொறுப்பாளர் நடேசன் ஐயாவின் துணைவியாரும் பெருன்பான்மை இனத்தை சேர்ந்தவர் என நினைக்கின்றேன். தமிழ் பெடியள் சிங்கள பெட்டைகளுக்கு பின்னால் எப்படி உருண்டு பிரண்டு திரிந்தார்கள் என யாராவது அனுபவப்பட்டவர்கள் கூறலாம். எனக்கு தெரிந்த ஒரு திருமண உறவு சில வருடங்களில் முறிந்தது. இங்கு பெண் தமிழ் ஆண் சிங்களம். முறிவுக்கான காரணம் அந்த ஆண் பார்ட்டி கை. அதாவது சோமபானம், சொகுசு, கொண்டாட்டம் என வாழும் பேர்வழி. பொறுப்பான ஆள் இல்லை என பெண் பிரிந்துவிட்டார். தமிழ் ஆண்களை மணம் முடித்த பல சிங்கள பெண்கள் பிறப்பில் தமிழாக பிறந்த பெண்களை விடவும் கோயில், கடவுள் பக்தி என அதிகம் ஐக்கியமானவர்களும் உண்டு. இவ்வாறே திருமணத்தின் பின் முழு சிங்கள பண்பாட்டில் மூழ்கிய தமிழ் பெண்களும் உண்டு. வெளிநாடுகளுக்கு கல்விகற்கவும், புலம் பெயர்ந்தும் சென்ற தமிழர்கள் ஆண், பெண் வேறுபாடின்றி எல்லா சமூகத்தினுள்ளும் புகுந்து விளையாடுகின்றார்கள். இதில் பலரது திருமண உறவு வெற்றிகரமாகவே உள்ளது.
  23. சுமந்திரன் தவறானனவர் என்று…. ஊரிலும், புலம்பெயர் தேசத்திலும், யாழ் களத்திலும் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும் போது… “ரியூப் லைற்” சாணக்கியனுக்கு இப்பவாவது தெரிந்தது பெரிய விடயம். இல்லாட்டி…. சாணக்கியனுக்கும், சுமந்திரன் சுத்துமாத்து வேலையை காட்டியிருக்கும். தலை தப்பினது தம்பிரான் புண்ணியம். சி.வி. சிவஞானத்துக்கும்… சுமந்திரனின் சுயரூபம் புரிய கனநாள் எடுக்காது.
  24. அப்பலோ தனது வேலையை சரியாகவே செய்து முடிக்கும். நல்ல செய்திக்கு இடமுண்டு.
  25. அடுத்த முதல்வர் யார்.... கனிமொழியா, உதயநிதியா. நாளைக்கு... பங்காளி சண்டை வரக்கூடாது என்பதற்காக, இப்பவே உயில் எழுதி வைப்பது நல்லது.
  26. செத்தவன் செய்திக்கு அஞ்சலி செலுத்தாத முதல் திரி இதுவோ. சரி... நான் ஒரு பாட்டை போடுகிறேன்... காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான் பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவுகொண்டேன்…..
  27. முதல்வர் 3இட்லி சாப்பிட்டதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.சீமானைச் சந்தித்த பின் ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் வந்ததாகத் தகவல்.
  28. மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காசா - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Published By: Rajeeban 24 Jul, 2025 | 10:54 AM மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி நிலையால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். பெரும்பட்டினி நிலை என இதனை அழைப்பதை தவிர வேறு எப்படி இதனை அழைப்பீர்கள் என எனக்கு தெரியாது,ஆனால் இது மனிதனால் உருவாக்கப்பட்டது அது மிகத்தெளிவான விடயம் என அவர் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான உணவுவிநியோகம் மக்கள் உயிர்வாழ்வதற்கு தேவைப்படுவதை விட குறைவானதாக காணப்படுகின்றது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மிகப்பெருமளவு மக்கள் பட்டினியில் சிக்குண்டுள்ளனர்,காசாவின் போர்க்களத்தில் சிக்குண்டுள்ள 2.1 மில்லியன் மக்கள் குண்டுகள் துப்பாக்கிரவைகளிற்கு அப்பால் மற்றுமொரு கொலைகாரனை எதிர்கொள்கின்றனர் அது பட்டினி என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் தற்போது போசாக்கின்மையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துவரும் நிலையை பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். மருத்துபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களில் 20 வீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் மிக மோசமாக என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220785

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.