Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31956
    Posts
  4. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    16468
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/31/25 in all areas

  1. இயற்கையின் மாற்றங்கள் இயல்பானது, இந்த கண்ட மேடை நகர்வுகள் ( டெக்டோனிக் பிளேட்) தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது இதனாலேயே மலைகளும் மடுக்களும் உருவானது, மயோசின் காலத்தில் கடலின் கீழே இருந்த யாழ்ப்பாணம் தரையுயர்தல் மூலம் உருவாகியது இதனாலேயே கடல் வாழ் உயிரினங்களின் எச்சங்களின் தோற்றுவாயாக சுண்ணாம்புக்கல் நிலப்பிரதேசமாக யாழ்ப்பாணம் இருந்து வருகிறது, இயற்கை இவ்வாறிருக்க அங்கு வாழும் மனிதர்கள் ஆளுக்கொரு சாதியினை எவ்வாறு உருவாக்கினார்கள், வானத்திலிருந்து குதித்தார்களா? அல்லது வந்தேறு குடிகளா?
  2. 31 JUL, 2025 | 01:00 PM ஏற்றுமதியை அதிகரிக்காமல் வருமானத்தை உயர்த்த முடியாது ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டுமானால், வடக்கு மாகாணத்தின் மிகச்சிறந்த வளமாக உள்ள விவசாயம் மற்றும் கடற்றொழிலின் உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும். தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவதன் ஊடாக எமது வேலைவாய்ப்பு பிரச்சினையையும் தீர்க்கக் கூடியதாக இருக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், றொட்டரி – யாழ்ப்பாணத்துடன் இணைந்து வட மாகாணத்தில் ஏற்றுமதிக்குத் தயாரான உற்பத்தியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அரியாலை விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (30) காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், எமது பிராந்தியத்தின் ஏற்றுமதி சுற்றுச்சூழலை வலுப்படுத்த ஒரு பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வையுடன் ஒன்றிணைந்த இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், யாழ்ப்பாண மேலாளர்கள் மன்றம், வடக்கு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வட மாகாணம், மனிதத் திறமை, விவசாய பன்முகத்தன்மை, பாரம்பரிய கைவினைத்திறன் மற்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் தளத்தால் நிறைந்துள்ளது. இருப்பினும், சந்தை அணுகல், தரச் சான்றிதழ் மற்றும் சிறு உற்பத்தியாளர்களை வெற்றிகரமான ஏற்றுமதியாளர்களாக மாற்றக்கூடிய வெளிப்பாடு ஆகியவற்றில் நாங்கள் நீண்ட காலமாக சவால்களை எதிர்கொண்டுள்ளோம். இந்த முயற்சி ஒரு மாற்றத்தக்க வாய்ப்பைக் குறிக்கிறது. இந்த வியாபாரத்திலிருந்து வியாபாரம் (Business 2 Business (B2B) மூலம் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், ஆதரவு நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்களை ஒன்றிணைப்பதன் மூலம், நாங்கள் பின்வரும் அடிப்படைகளை அமைத்துக்கொடுக்க முயல்கின்றோம். நேரடி வணிக இணைப்புகள், அறிவுப் பகிர்வு மற்றும் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஏற்றுமதி - தயார்நிலை ஆதரவு. இத்தகைய இலக்கு தலையீடுகள் தற்போதுள்ள இடைவெளிகளைக் குறைக்கும் மற்றும் வடக்கில் உற்பத்தியாளர்கள் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்ய, செயற்பாடுகளை அதிகரிக்க மற்றும் அவர்களின் சந்தைகளை பல்வகைப்படுத்த உதவும். இது பொருட்களை ஏற்றுமதி செய்வது மட்டுமல்ல - இது மீண்டும் கட்டியெழுப்பவும் செழிக்கவும் உறுதிபூண்டுள்ள ஒரு பிராந்தியத்திலிருந்து நம்பிக்கை, புதுமை மற்றும் மீள்தன்மையை ஏற்றுமதி செய்வது பற்றியதாகவும் அமைகின்றது. விவசாய வணிகம் முதல் கடல்வளம் வரை, பாரம்பரிய கைவினைப்பொருட்கள் முதல் தொழில்நுட்ப சேவைகள் வரை, நமது உள்ளூர் தொழில்களின் வலிமையை பயன்படுத்திக்கொள்ளுமாறு வருகைதரும் அனைத்து ஏற்றுமதியாளர்களையும் முதலீட்டாளர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வழிகாட்டுதல், நிபுணத்துவம் மற்றும் தொடர்பாடல்கள் மூலம், வடக்கில் ஒரு துடிப்பான ஏற்றுமதி சமூகத்தை உருவாக்க முடியும். இந்தச் செயற்பாட்டுக்கு எமது மாகாணசபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என உறுதிப்பட இங்கு நான் தெரிவிக்கின்றேன். தடைகளை நீக்கவும், உள்கட்டமைப்பை வழங்கவும், ஒரு உகந்த கொள்கை சூழலை உருவாக்கவும் தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் நாங்கள் கைகோர்த்து செயற்படுவோம். நிகழ்வின் ஆரம்பத்தைத் தொடர்ந்து ஏற்றுமதியாளர்களுக்கான நூல் ஒன்றும் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், தேசிய ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் றொட்டரி கழகத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஆளுநரும் ஆகியோரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/221441
  3. இருக்கும் போதே அனுபவித்து விடுங்கள். இப்படிக்கு சந்தோசம்
  4. பிரிட்டனின் இஸ்ரேல் மீதான நிபந்தனை போர் நிறுத்தம் மட்டுமல்ல. "இரு தேசங்கள் தீர்வு" என சர்வ தேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்ட (பின்னர் ட்ரம்ப் ஆதரவுடன் நெரன்யாஹுவினால் நிராகரிக்கப் பட்ட) தீர்வு நோக்கி இஸ்ரேல் நகர வேண்டும் என்றும் நிபந்தனை இருக்கிறது. இதை நெரன்யாஹு ஆட்சியில் இருக்கும் வரை செய்யப் போவதில்லை என்பதால் பலஸ்தீனர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறேன். என் அபிப்பிராயம்: இஸ்ரேல் மீது பிரிட்டன், பிரான்ஸ், கனடாவை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் அழுத்தம் கொடுக்கப் பட வேண்டும். ஆயுதத் தடை போன்ற இஸ்ரேலை அச்சம் கொள்ளச் செய்யும் தடைகள் கொண்டு வந்தால் தான், நீண்டகாலம் தாக்குப் பிடிக்க இயலாது என்ற புரிதலில் காசா படுகொலையை நிறுத்துவர்.
  5. ரகசியக் காவலர்களையும் எதற்காகப் பரகசியப் படுத்துகிறார்கள் ......... அவ்வளவு படத்துக்கு முகம் காட்டும் ஆசையா ....... ! 😀
  6. தலைவர் இருந்திருந்தால் இப்ப அவருக்கு 71 வயதாகி இருக்கும். இலங்கையில் ஆண்களின் சராசரி ஆயுள் 73. அவரோ சுகர் வருத்தகாரன். கட்டுப்பாட்டிலும் இருக்கவில்லை என்பார்கள். 2009 இல் தப்பி இருந்தால் கூட அவர் இப்போ இயற்கை மரணம் எய்தி இருப்பார். இன்னும் இதை வைத்து வண்டி ஓட்டாமல் - நடக்கிற காரியத்தை பார்க்கலாம்.
  7. வேலையிலிருந்து இளைப்பாறினால் பரிசாக கிடைப்பது நேரம் மட்டுமே.முப்பதைந்து வருடங்களுக்கு மேலாக‌ முழுநேர பணியில் இருந்தவனுக்கு , தற்பொழுது முழுநேரம் சும்மா இருக்கும் வாய்ப்பு கிடைத்து."சும்மா இருந்து சுகம் காணு" என யோக சுவாமிகளின் வாசகம் ,எங்கயோ படித்த ஞாபகம் வரவே இது தானே சும்மா இருந்து சுகம் காணுதல் என நினைத்து இரண்டு நாள் வீட்டிலிருந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தான் .சும்மா இருந்தா சுகம் காணலாம் என சுவாமிகள் சொன்னார்,ஆனால் அவனுக்கு சும்மா இருந்தா சுகம் கிடைப்பது போல தெரியவில்லையே தொல்லை தான் வருகிற‌தே இதற்கு என்ன தீர்வு என சிந்திக்க தொடங்கினான். சும்மா இருந்து சுகம் காணுதலின் அர்த்தம் என்ன என கூகிள் ஆண்டவனிடம் கேட்டான் .கேட்டதும் கொடுப்பவர் அவர் ஒருவரே..கூகிள் ஆண்டவர் கூறியதை இவனால் கடைப்பிடிக்க முடியாததும் மட்டுமல்ல அது புரியவுமில்லை. என்ன செய்வது எனதெரியாமல் மண்டையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தான் அவனின் மென்டோர் கந்தரின் ஞாபகம் வரவே தொலைபேசியை எடுத்தான். போனை எடுத்து நம்பரை டச் பண்ண "இஞ்சயப்பா யாருக்கப்பா போன் பண்ண போறீயல் "இளைப்பாறிய பின் 24/7 அவனை கமரா கண் கொண்டு அவதானிக்கும் அவனது மனைவி கேட்க, "வேற யார் என்ட குரு கந்தருக்கு தான்" "சும்மா எந்த நேரமும் அவருக்கு போன் பண்ணிகொண்டிருந்தா அவற்ற வீட்டில மனிசி என்ன நினைப்பா" போனில் நம்பரை டச் பண்ணுவதை நிறுத்திய கந்தர் "எல்லாரின்ட மனிசிமாரும் உம்மை மாதிரி இருக்க மாட்டினம்,அவரின்ட மனிசி தங்கம்" "தங்கத்தோட எப்ப நீங்கள் கடைசியா கதைச்சனீங்கள்,ஆட்களை கண்டா கதைக்க மாட்டியள் ,சும்மா ஒர் வோமலிட்டிக்கு சிரிப்பும் சிரிக்க மாட்டியல் வந்திட்டியல் அவரிட மனிசி தங்கம் எண்டு கொண்டு" "ஆட்களை பார்த்தாலே தெரியுமப்பா நல்லவரோ கெட்டவரோ " "நீங்கள் பெரிய உளவியல் நிபுனர் ,சாமியார் ,சாத்திரியார்,குறி சொல்பவர்" மனிசி இப்படி உலகத்தில் உள்ள நிபுணர்களை துணைக்கு இழுத்து திட்ட அவனுக்கு புரிந்து விட்டது இதற்கு மேல கதைத்தால் வீடு ஜூலை கலவரமாக‌ மாறிவிடும் எண்டு..அமைதியாக இருந்து மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டான்.கோபம் வந்தா இப்படிசெய்யுங்கள் என யூடியுப் டாக்டர்களின் ஆலோசனப்படி .அவன் மூச்சை உள் இழுத்து வெளியே விடுவதை அவதானித்தவள் ,வயசு போன நேரத்தில் இரத்த கொதிப்பை கொடுத்து மனுசனுக்கு என்னாவது நடந்திட்டா என நினைத்து அமைதியாக அங்கிருந்து சென்று விட்டாள். கலவரத்தை அமைதியாக இருந்து தடுத்து விட்டதாக நினைத்து ரிமோர்ட்டை எடுத்தவன் டி.வியை ஒன் செய்தான். "மொர்னிங் அப்பா"சொல்லி கொண்டே மூத்தவள் வேலைக்கு போக தயாராக வந்தாள் . "மொர்னிங் மகள்" "டூ டே வட்ஸ் யூ பிளான்,என்ன பிளான் இன்றைக்கு" ""பெரிய பிளான் ஒன்றுமில்லை சும்மா தான் இருப்பன், ஏன்" "வோசிங்மெசினை ஒருக்கா போட்டு உடுப்புக்களை காய போட்டுவிடுறீங்களே" "ம்ம்ம்...."என டி.வியை பார்த்த படி சொன்னான். "இஞ்சயப்பா மகள் சொன்னது கேட்டதே" "ஒம் ஒம் சொன்னது கேட்டது ,ஆனால் எனக்கு மெசினை ஓன் பண்ண தெரியாது ,நீர் ஒருக்கா ஒன் பண்ணிவிடும் நான் எடுத்து காயப்போடுறேன்" "இங்க வாங்கோ காட்டிதாரன் எப்படி ஒன் பண்ணுவது எண்டு" "உதெல்லாம் பொம்பிளைகளின்ட, வேலை நான் ஏன் பழகவேணும்?"என புறுபுறுத்து கொண்டே லொன்றி அறைக்கு சென்றான். "அம்மா ,அப்பா என்னவாம்" "மெசின் ஓன் பண்ணி உடுப்பு காயப்போடுறது பொம்பிளைகலின் வேலையாம்" "‍ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன் மான்" என மகள் குரலை உயர்த்தி பேச,பயந்து போன அவன் மனையிடம் "ஏன் இப்ப என்னை மாட்டி விடுகிறீர் ,மெசின் ஒன் பண்ண தெரியாது என்று தானே சொன்னனான்" "எப்ப தான் நான் சொல்லுற‌ வேலைகளை மறுப்பு தெரிவிக்காமல் செய்திருக்கிறீயல்" "ஏன் செய்ய வேணும் ,நான் பனங்காட்டு ஆண் சிங்கம், சொல்லு கேட்காது" "பெரிய ஆண் சிங்கம் அதுவும் பனங்காட்டில, சும்மா வாய்க்கு வந்ததை எடுத்து விடுறது, இதில வீராப்பு வேற,தள்ளுங்கோ நானே ஒன் பண்ணி காயப்போடுறேன்." "
  8. ஜெருசலேமை யாரும் விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. அதை உலக நகரமாக பிரகடனம் செய்து ஐ.நா வே நிர்வகிக்கலாம். இதற்கு முன்னுதாரணம் முதல் உலகப் போர் காலத்தில் இருந்திருக்கிறது. டான்சிக் (Danzig) என்ற நகரம் இப்படி உலகப் பொது நகரமாக இருந்திருக்கிறது. இறுதியில் ஜேர்மனி அதை ஆக்கிரமித்து ஏற்பாட்டை மீறியது. தற்போது போலந்தில் இருக்கும் Gdansk தான் பழைய டான்சிக். இஸ்ரேல் ஜெருசலேமைக் கேட்பது யூதர்கள் எதிர்பார்த்திருக்கும் "மீட்பர் - Messiah" அங்கே வரக் கூடும் என்று தான் என நினைக்கிறேன். இஸ்ரேல் தற்போது செய்து கொண்டிருக்கும் அநியாயங்களைக் கண்டால், அப்படியொரு மீட்பர் எங்கேயும் வந்து இறங்கப் போவதில்லை!
  9. Published By: DIGITAL DESK 2 31 JUL, 2025 | 04:13 PM விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியானது எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவு ஏ-35 பிரதான வீதியின் அருகே தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸார் வியாழக்கிழமை (31) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது. பொலிஸார், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்ட போது எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் குறித்த அகழ்வுப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221464 கிணறு வெட்டும் தேவை உள்ளவர்கள் யாரோ விளையாட்டு காட்டிட்டாங்க!
  10. நீங்க சொல்வது சரி தான் @suvy அண்ணை. 6 போக வழியில்லை, குழாயை அடைத்துவிட்டார்கள்.
  11. படம்:கருப்பு பணம்(1964) இசை:விசுவநாதன் - ராமமூர்த்தி
  12. பிரதமர் கார்னி (Carney) எடுத்த நல்ல முடிவுகளில் இதுவும் ஒன்று. கனடிய அரசு மெல்ல மெல்ல அமெரிக்கா வின் செல்வாக்கில் இருந்து தன்னை விடுவித்து ஐரோப்பியா பக்கம் சாயத் தொடங்கி விட்டதன் இன்னுமொரு அறிகுறி இது.
  13. அவன்: என்ன பாட்டு பாடுறாய். அவள்: அது பாட்டு இல்லை, இருமல் சத்தம். அவன்: ஓ... இருமலா, நான் பாட்டு என நினைத்தேன்.
  14. வருஷம் மாதம் தேதி பார்த்து ........... ! 😍
  15. அடுத்தவ புருசன களவெடுத்ததெல்லாம் யாழ்பாணம் வருதுகள் உசார் மக்களே..
  16. வழமையா சரக்கு உள்ளே போனால்தான் "..." என்டு திட்டுவினம்
  17. 30 JUL, 2025 | 03:50 PM வடக்கில் யாழ். போதனா வைத்தியசாலை தற்போது சகல பிரிவுகளையும் கொண்டு இயங்குகின்றது. இருப்பினும் வைத்தியசாலையின் மேலும் கட்டட வசதிகளும் உபகரண மற்றும் ஆளணி வசதிகளும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ விடுதிகளுக்காக இரண்டு கட்டில்களும் சில உபகரணங்களும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்திருந்த அன்பரினால் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது. போதனா வைத்தியசாலையில் சில விடுதிகள் அண்மையில் திறக்கப்பட்டதும் மற்றும் இவ்வாறு புதிய உபகரணங்கள் வழங்கப்படுவதும் வைத்திய சேவையை மேலும் வலுப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/221375
  18. கான்டீன் காரர் அடிக்கிற கொள்ளைக்கு ஒரு முடிவு கட்டனும், நோயாளர் நலன்புரிச்சங்கம் என்ற பெயரில் எத்தனை பேரின் பாக்கெட் நிறைகிறதோ தெரியல. காலைல சுடுதண்ணி கேட்க போனால் சுடுதண்ணீர் தரமாட்டினம் தங்களின் டி வியாபாரம் படுத்திடுமாம் காலை ஆறு மணிக்கு போய் நின்றால் 6:30 பிறகே கூப்பிடுவார்கள் எந்த பொருளுக்கும் பில் இல்லை water dispenser (hot &கூல்) சிலவற்றை ஆங்காங்கே பொருத்திவிட்டால் புண்ணியமாக போகும் வைத்தியசாலையின் முன்னாடி உள்ள கழிவு வாய்க்கால் கழிவுகளால் நிரம்பி தூர் வாரப்படாமல் உள்ளது வைத்தியசாலை நிர்வாகம் மாநகரசபைக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் மாதம் ஒரு தடவையாவது அதனை சீர்படுத்தி பராமரிக்கலாம் யாழ்நகரின் பிரதான பாதையும் கூட அது
  19. ஊரில் உள்ள முன்னாள் போராளிகள் எல்லோரும் வீரச்சாவை உறுதிசெய்கின்றனர். ஆனால்இறுதி நேரத்தில் தலைவரை விட்டு வந்த விட்டோடிகள்மட்டும் வயிறு வளர்க்க பல முயற்சிகளில்.....
  20. பிரான்ஸின் மானத்தையே வாங்கி விட்டு கதை வேற. இந்திய இராணுவத்தின் வலிமையைப் பற்றிஈழத்தமிழர்களைத்தவிர யாருக்கும் புளுகலாம்.
  21. பிரபாகரனின் இறந்த உடலின் காணொளி மட்டும் தான் "ஆதாரம்" என்ற வகைக்குள் வருகிறது எனக் கருதுகிறேன். எனவே எந்த ஆதாரமும் இல்லை என்பது சரியல்ல. அந்தக் காணொளியில் இருப்பதை நம்ப மறுப்பவர்கள் இருக்கலாம், ஆனால் அது தான் முடிவு செய்ய உதவியாக இருக்கும் ஒரே ஆதாரம்.
  22. சில குறிப்பிட்ட உறவினர்கள்/சொந்தக்காரர்கள் வருவது தடை செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்படுவது பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன். வைத்தியசாலைக்கும் வந்து பார்க்க முடியாதபடி கூறிவைக்க முடியும் என நினைக்கின்றேன். நான் இப்படியான கோணத்தில் சிந்திக்கவும் இல்லை தேவையும் இல்லை. ஆனால், ஒரு வினா என்ன என்றாலும் போய்ச்சேரும் இடத்தில் எப்படியான சோலிகள், இறப்புக்கு பிறகும் வாழ்வு வேறு ஒரு பரிமாணத்தில் தொடரும் என்றால், வரும், யார் யாருடன் எல்லாம் டீல் பண்ண வேண்டும் என தெரியாதே.
  23. மிக அழகான நடனம். அதிலும் இப்படியான பெண் குழு நடனங்களில் ஆண் முதன்மையாக காட்சிப்படுத்தப்படுவது அபூர்வம். சிறப்பு 👍
  24. அதெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது! எங்களுக்கு 30 - 16 = 14 எண்டுமட்டும்தான் நிறுவத்தெரியும். அதோட அவன் புலிகளால்தான் நாசமாய்ப்போனவன். ஆமிக்காரன் நல்லவிதமா புனர்வாழ்வு கொடுத்தபின்னும் புலிதான் வந்து இப்படி மாத்திப்போட்டாங்கள் என்று வன்னியில் மதக்கடியில இருந்து கதைச்சப்பொடியன்கள் சொன்னவங்கள் என்றும் கணித பௌதீக விஞ்ஞான முறையில் பகுத்தறிஞ்சு சொல்லத்தான் தெரியும். இதுகள் படிக்காத ஆட்களுக்கெல்லாம் விளங்காது கண்டியளோ!!
  25. ஹா ஹா..... இப்படித்தான் சிலர் எதையோ எதிர்பார்த்து எழுதுவதும், மற்றவர்களை எடை போடுவதும் நடைபெறுகிறது. நாம் நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறோம். சிறியர் ஒன்றும் கணக்கு தெரியாத, படிப்பறிவு இல்லாதவரல்லர். சிங்களம் போடும், காட்டும் கணக்குகளை வைத்தே எழுதியிருக்கிறார் என்று நான் நினைக்கிறன். அவரது முன்னைய பதிவுகள் கூட சிங்களத்தின் கணக்கு பிழைகளை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏளனமாக குத்திக்காட்டியிருக்கிறார். இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என எனக்கு விளங்கவில்லை? உள்ளே உள்ள வக்கிரம் வெளிப்பட சமயம் பார்த்து காத்திருக்கிறது போலுள்ளது!
  26. ஒரு தவறை சுட்டிக்காட்ட ஒரு பண்பு இருக்கிறது. அது உங்கள் சுட்டிக்காட்டலில் அறவே இல்லை. தவறை சுட்டிக்காட்டுவதை விட அதை வைத்து ஒருவரை கோபப்படுத்துவது அல்லது குத்திக் குத்திக் காட்டுவது அல்லது சறுக்கி விட்டார் என்பதை வைத்து அவரது தேசியம் சார்ந்த பக்கத்தை பந்தாடுவது மட்டுமே இங்கே நான் காண்பது. யாழ் களத்தை அறிவூட்டுகிறோம் அல்லது தவறை சுட்டிக்காட்டி நேர்வழிப்படுத்துகிறோம் என்றபடி யாழில் தற்போது படித்தவர்கள் என்ற ஒரு சிலரது கம்பு சுத்துதல் மட்டுமே என்னால் காணக்கிடைக்கிறது. அதனால் தான் நானே யாழை விட்டு தள்ளிச்சென்று கொண்டிருக்கிறேன். இது தொடர்வதை காண்கிறேன். என் கண்முன்னே இது நடப்பதால் ஒரு அளவுக்கு மேல் கடந்து செல்ல முடியவில்லை
  27. பத்து வகையான போலி ரெசிபி செய்வது எப்படி .... பருப்பு போலி (Chana Dal Poli / Puran Poli) தேவையான பொருட்கள்: பூரணத்திற்குப்: கடலை பருப்பு – 1 கப் வெல்லம் – 1 கப் ஏலக்காய் பொடி – ¼ மேசைக்கரண்டி மாவிற்குப்: மைதா – 1 கப் மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை எண்ணெய் – 2 மேசைக்கரண்டி உப்பு – சிட்டிகை செய்முறை: 1. மாவுக்கான பொருட்கள் சேர்த்து மென்மையாக பிசைந்து ஓய விடவும். 2. கடலை பருப்பை வெந்து வெல்லத்துடன் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். 3. சிறிய உருண்டைகளாக உருட்டி, மாவால் மூடி, வட்டமாக தேய்க்கவும். 4. தாவாவில் நெய் விட்டு போலி சுடவும். --- 2. தேங்காய் போலி (Coconut Poli) தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் – 1 கப் வெல்லம் – ¾ கப் ஏலக்காய் – சிறிதளவு மைதா – 1 கப் மஞ்சள் தூள், உப்பு – சிறிதளவு நெய் – தேவையான அளவு செய்முறை: 1. வெல்லம் உருக்கி தேங்காயுடன் சேர்த்து பாகு தயாரிக்கவும். 2. மாவை பிசைந்து உருண்டை எடுத்து மேலே தேங்காய் பூரணம் வைத்து தேய்க்கவும். 3. நெய்யில் சுட்டு பரிமாறவும். --- 3. சக்கரை பொங்கல் போலி (Sweet Pongal Poli) செய்முறை: 1. வெல்லம், பாசிப்பருப்பு, அரிசி சேர்த்து சக்கரை பொங்கல் போல தயார் செய்யவும். 2. அதனை பூரணமாக வைத்து போலி போன்று பரிமாறலாம். --- 4. சக்கரை போலி (Sugar Poli) தேவையானவை: சர்க்கரை – 1 கப் மைதா – 1 கப் தேங்காய் (விருப்பம்) – ¼ கப் ஏலக்காய் – சிறிது செய்முறை: 1. சர்க்கரை, தேங்காய், ஏலக்காய் சேர்த்து பாகு தயாரிக்கவும். 2. பூரணமாக வைத்து மாவில் மூடி தேய்த்து சுடவும். --- 5. பால் போலி (Milk Poli) செய்முறை: 1. பால் கொதிக்க வைத்து சர்க்கரை, தேங்காய், சிறிது ரவை சேர்த்து கொழுக்கட்டு போலக் கெட்டியாக செய்யவும். 2. அதை பூரணமாக வைத்து போலி செய்யவும். --- 6. கொதுமை மாவு போலி (Wheat Flour Poli) மாற்றம்: மைதா பதிலாக கோதுமை மாவு பயன்படுத்தலாம். இதனால் fibre அதிகமாக இருக்கும், ஆரோக்கியமானது. --- 7. பீடருட் போலி (Beetroot Poli) செய்முறை: 1. பீட்ரூட்டை உரித்து அரைத்துப் பாகு தயாரிக்கவும். 2. அதனை பூரணமாக வைத்து போலி செய்யலாம். அழகான ரோஸ் கலர் கிடைக்கும். --- 8. சோயா போலி (Soy Poli) செய்முறை: 1. சோயா கிரான்யூல்ஸ் வேக வைத்து பிசைந்து வெல்லத்துடன் கிளறி பூரணமாக்கவும். 2. போலி வடிவத்தில் செய்து சுடவும். --- 9. முந்திரி போலி (Cashew Poli) செய்முறை: 1. முந்திரியை நன்கு அரைத்து, வெல்லத்துடன் சேர்த்து பாகு செய்து பூரணமாக்கவும். 2. போலி சுடவும் – இது ரொம்ப ரிச் ஸ்வீட் போலி ஆகும். --- 10. பாசிப்பருப்பு போலி (Moong Dal Poli) செய்முறை: 1. பாசிப்பருப்பை வேக வைத்து வெல்லத்துடன் சேர்த்து பூரணமாக்கவும். 2. சாதாரண போலி போலச் செய்யலாம். --- பொதுவான குறிப்புகள்: எல்லா போலிக்கும் மைதா அல்லது கோதுமை மாவை மென்மையாக பிசைந்து 30 நிமிடம் ஓய வைக்க வேண்டும். நெய் அல்லது நெய்+எண்ணெய் கலந்தது சுட வழிகிறது. சுடும்போது தீயை மிதமாக வைத்தால் மென்மையான போலி கிடைக்கும். திண்டுக்கல் சமையல்
  28. காற்றாய்ப் பறந்த என் ஆசைகள் சிதறி விழுந்ததே, கனவுகள் போன வானில் நிழலாய் மறைந்ததே. உயிர் தந்த பாசம் இன்று ஓர் ஓலமாய் ஒலிக்குதே, அழுது நிற்கும் என் மனம், நிலவாய் நீயே கேள்! இரவில் தூங்காது என் கண்ணீர் தலையணையில் உறங்குது, உன் நினைவுகள் மட்டுமே வாழ்வின் இருட்டில் தெளிவது. மேகங்கள் கூட உன் பெயரை மழையாய் அழைக்குது, அழிந்த விமானம் போல என் மனம்கூட உடைகுது. காலம் கொஞ்சம் நின்றிருந்தால் என் பேச்சைக் கேட்கலாமா? கடைசி வார்த்தை கூட இழந்தேன், வருத்தம் நீங்காதம்மா. வீட்டின் வாசலில் இன்னும் உன் சிரிப்பு காத்திருக்கு, வெறுமையே மிச்சமாய், தினமும் துயரம் சூழ்ந்தது. வீணான வினாடிகள் பசுமையாய் உன்னைத் தேடுதே, உயிரோடு இருந்தால் சிரிப்பு இன்னும் கேட்டிருப்பேன். பறந்த குரல்கள் ஓய்ந்து நின்றன, பதில் தராத வானம் உன் முகத்தை மறைத்தது. நீதான் வருவாய் என்று கதவுகள் திறக்கின்றன, ஆனால் ஒவ்வொரு சத்தமும் உன்னைத் துயரமாய்ப் பேசுகின்றன. உன் பெயர் சொல்லும் போது இதயம் சிதறுகின்றது, எழுதிய கடிதங்கள் வாசிக்க யாரும் இல்லை. ஓ நியாயமே! ஏன் இத்தனை அவசரம்? ஒரு பசுமை நினைவை ஏன் கொண்டு சென்றதேன்? உன் இல்லாத காலம் சுவாசிக்க முடியாது, ஒவ்வொரு மூச்சும் வேதனையை பேசும். 👍🔔
  29. இதற்காக ஒரு நோபல் பரிசை கேட்டுப் பார்ப்பமோ என்றும் ஒரு ஐடியா உள்ளுக்குள் வருகின்றது.........🤣.
  30. 77 ....83 ..இரண்டிலும் உயிர் பிழைத்திருக்கின்றேன்...தப்பியது அரும் தப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.