Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  3. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    1836
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20010
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/09/25 in all areas

  1. ரஷ்யா புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டறிந்துவிட்டதா? Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை புற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்துக் காணும் முன் புற்று நோய் குறித்து இந்தப் பதிவிற்கு சம்பந்தமான ஒரு சிறிய பார்வை புற்று நோய் என்பது குறிப்பிட்ட இடத்தில் செல்கள் சொல்பேச்சுக் கேட்க மறுத்து அதிகமான எண்ணிக்கையில் பெருகுதல் அதிகமான அளவு வளர்ச்சி அடைதல் தனக்கான காலம் முடிந்தால் மரணிக்க மறுத்தல் உடலின் எதிர்ப்பு சக்தியையும் மீறி சாகாவரம் பெற்று தொடர்ந்து கட்டுப்பாடற்று வளருதல் தனக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலில் உள்ள சத்துக்களை சுயநலத்துடன் உறிஞ்சிக்கொள்ளுதல் குறிப்பிட்ட இடத்தில் இருப்பை நிலைநாட்டியவுடன் அருகில் இருக்கும் இடங்களை ஆக்கிரமித்தல் பிறகு ரத்தத்தில் கலந்து தூர உறுப்புகளுக்கும் பரவுதல் என புற்று நோய் என்பது சராசரி செல்களின் தன்மையில் இருந்து மாறுபட்டு நமது செல்களே நமக்கு வில்லனாக மாறுவதாகும். அதுவரை நன்றாக சொல்பேச்சுக் கேட்டு செயல்பட்டு வந்த நமது செல்கள் எப்படி இவ்வாறு மாறுகின்றன? அதற்கு அந்த செல்களில் உள்ள மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அமைகின்றன. பொதுவாக செல்களில் புற்றுத் தன்மையை கட்டுப்படுத்தும் மரபணுக்கள் இயற்கையாகவே உண்டு. கூடவே ஒரு செல்லுடைய சுவர் மற்றொரு செல்லுடைய வெளிப்புற சுவரை மீறி வளர்தலைத் தடுப்பதற்கு, தனக்கான முதிர்ச்சி வயது வந்தால் தானாக தன்னை மாய்த்துக் கொள்வதற்கு , தேவையற்ற எண்ணிக்கை பெருக்கத்தை தடுப்பதற்கு என பல மரபணுக்கள் செல்களுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை தான் நமக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றன. எனினும் ஓரிடத்தில் தொடர்ந்து நிகழும் காயங்கள் - உதாரணம் சிகரெட் புகையால் நுரையீரலில் நிகழும் காயம், புகையிலையால் வாயில் நிகழும் காயம் அல்லது குறிப்பிட்ட வைரஸ்களால் ஏற்படும் காயங்கள் - கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இவற்றால் இந்த புற்றுநோயில் இருந்து காக்கும் மரபணுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே புற்று நோய் உண்டாகிறது. இப்போது புற்று நோய் செல்களில் மாற்றப்பட்ட வேறுபட்ட மரபணுக்கள் வேலை செய்கின்றன. இவை அடுத்தடுத்து பல்கிப் பெருகும் அனைத்து புற்று செல்களிலும் சிட்டி 2.0 போல உள்ளிருந்து கொண்டு அவற்றை இயக்குகின்றன. இவ்வாறு தான் இயங்குவதற்கு ஏற்றவாறு புற்று நோய் செல் புரதங்களை உருவாக்கிக் கொள்கின்றன. நிற்க... இங்கிருந்து தான் நமது கட்டுரை தொடங்குகிறது. புற்று நோய் செல்கள் வளம்பெற்று வளருவதற்கு முக்கியமானவை புற்று நோய் மரபணுக்கள் அடுத்து புற்று செல்களை கட்டமைக்கத் தேவையான புற்று செல்களில் உள்ள புரதம்... நமது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த மரபணுக்களை அதன் பணியை செய்யாமல் தடுத்து விட்டாலோ அல்லது புற்று செல்கள் உருவாக்கும் பிரத்யேக புரதங்களை அழித்துவிட்டாலோ புற்றுக்கட்டிகளையும் சேர்த்து அழிக்கலாம் தானே? அந்தத் தொழில்நுட்பம் தான் "எம் ஆர்என்ஏ" என்று அழைக்கப்படும் மெசஞ்சர் ஆர் என் ஏ( m RNA அல்லது MESSENGER RNA) தொழில்நுட்பமாகும். இந்த மெசஞ்சர் ஆர் என் ஏ என்றால் யாவை? ஒவ்வொரு செல்லுக்குள்ளும் நியூக்லியஸ் பகுதியில் டிஎன்ஏ இருக்கிறது. டிஎன்ஏ கூறும் செய்திகளை தன்னகத்தே பெற்றுக் கொண்டு ரிபோசோம்களுக்கு அதை எடுத்துக் கொண்டு சென்று புரதங்களை உற்பத்தி செய்யத் தூண்டுவது மெசஞ்சர் ஆர்.என்.ஏவின் ( தூது செல்லும் மரபணுப் பொருள்) பணியாகும். அறிவியலாளர்கள் கடந்த முப்பது வருடங்களாக ஆராய்ச்சி செய்து மெசஞ்சர் ஆர்என்ஏவை செயற்கையாக உருவாக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து விட்டனர். மெசஞ்சர் ஆர் என் ஏ தொழில்நுட்பத்தை வைத்து புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கும் மருந்துகளைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சிகளின் மூலம் கிடைத்த அறிவைத் தான் அறிவியலாளர்கள் கோவிட் பெருந்தொற்றின் போது தடுப்பூசி உருவாக்கத்தில் மெசஞ்சர் ஆர் என் ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுக் காண்பித்தனர். உண்மையில் கோவிட் பெருந்தொற்று வந்து ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட மெசஞ்சர் ஆர் என் ஏ தொழில்நுட்ப தடுப்பூசிகள் வெற்றி பெறும்வரை மருத்துவ அறிவியல் உலகம் இந்த தொழில்நுட்பம் குறித்து பெரிதும் முக்கியத்துவம் தராமல் இருந்தது. எனினும் தற்போது கடுமையான விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக "மெசஞ்சர் ஆர் என் ஏ தொழில்நுட்பத்தை கண்டறிந்து கூறிய" கடாலின் கரிக்கோவுக்கும் ட்ரியூ வெய்ஸ்மேனுக்கும் 2023 க்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர்களின் கண்டுபிடிப்பால் பல லட்சம் உயிர்கள் கோவிட் பெருந்தொற்றின் போது காக்கப்பட்டதே அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டதற்கான முக்கிய காரணம். சரி இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு புற்று நோய் மற்றும் வைரஸ் தொற்று தடுத்தலில் உபயோகிக்க முடியும்? பெருந்தொற்றை உருவாக்கிய கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதம் / அல்லது புற்று நோய் செல்கள் உண்டாக்கும் புரதங்கள் இவற்றை மெசஞ்சர் ஆர் என் ஏவுக்கு வைத்து பேக் செய்து அதை சுற்றி நானோ தொழில்நுட்பம் மூலம் கொழுப்புத் திவலைகளைப் பூசி உடலுக்குள் செலுத்தும் போது, இந்த வைரஸின் புரதம் / புற்று செல்களின் புரதம் கொண்ட மெசஞ்சர் ஆர் என் ஏக்கள் உடலின் செல்களினால் உட்கொள்ளப்படும். செல்களுக்கு உள்ளே சென்ற எம் ஆர் என் ஏ - அந்த செல்களை தன்னகத்தே கொண்டு வந்ததைப் போலவே புரதங்களை உருவாக்கக் கூறும். இவ்வாறு உருவான புரதங்களை நமது உடல் "ஆண்ட்டிஜென்களாக" பாவிக்கும் இந்த ஆண்ட்டிஜென்களை நமது எதிர்ப்பு சக்தி மண்டலத்தில் உள்ள டெண்ட்ரிடிக் செல்கள் நன்குணர்ந்து அவற்றை எதிர்க்கும் திறனை அறிந்து கொண்டு அதை டி செல்களுக்கு கற்பிக்கும். டி- செல்கள் இந்த புரதங்கள் அனைத்தையும் தேடித் தேடி அழித்தொழித்து விடும். கூடவே இனி வருங்காலத்தில் இதே போன்ற புரதங்கள் நம் உடலில் எங்கேனும் வருமாயின் அவற்றையும் தேடிக் கொள்ளும். இவ்வாறு மெசஞ்சர் ஆர் என் ஏ தொழில்நுட்பத்தை வைத்து மாடர்னா நிறுவனம் நடத்திய ஆய்வில் தலை மற்றும் கழுத்துப் பகுதி புற்று நோய் இருந்த பத்து பேரில் இருவருக்கு முழுமையாக குணமானது ஐந்து பேருக்கு புற்றுக் கட்டியின் அளவு சுருங்கியது. இந்த தொழில்நுட்பம் மூலம் ஒரு புற்று நோய் கட்டியின் சிறு நுண் துண்டை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி அது உருவாக்கியுள்ள உள்ள புரதங்களை பிரித்தெடுத்து அவற்றை மெசஞ்சர் ஆர் என் ஏவில் பேக் செய்து உடலுக்குள் செலுத்தினால் அந்த குறிப்பிட்ட புரதத்திற்கு எதிராக சிறப்பான எதிர்ப்பு சக்தி உருவாக்கப்பட்டு அந்த புரதத்தைக் கொண்ட புற்று செல்களும் அழிக்கப்படும். இத்தகைய மெசஞ்சர் ஆர் என் ஏ தடுப்பூசிகளில் 34 புற்றுசெல் உருவாக்கும் புரதங்களை பேக் செய்து வழங்கும் அளவு தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. ஆம்.. உதாரணத்திற்கு ரஷ்யாவில் அதிகமாகக் கண்டறியப்படும் சில புற்று நோய்கள் உதாரணமாக நுரையீரல் புற்று புராஸ்டேட் புற்று மார்பகப்புற்று ரத்தப் புற்று போன்ற புற்று செல்கள் உருவாக்கும் பொதுவான புரதங்களை ஆராய்ந்து அவற்றை மெசஞ்சர் ஆர் என் ஏ தடுப்பூசியில் பேக் செய்து பொதுமக்களுக்கு வழங்கும் போது எதிர்காலத்தில் இந்த புற்று நோய்கள் ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு சக்தி அந்த செல்களை கொன்று விடும். இதுவே இந்தத் தொழில்நுட்பமாகும். இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரஷ்யா உருவாக்கியுள்ள தடுப்பூசியை விலங்குகளுக்கு ( PRE CLINICAL STUDIES) வழங்கி புற்று நோய் கட்டிகளையும் மெட்டாஸ்டாசிஸ் எனும் தூர பரவல்களையும் முழுவதுமாக குணப்படுத்தியதை 2024 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டறிந்தனர். தற்போது இந்த தொழில்நுட்பத்தை மனிதர்களிடம் முதல் நிலை பரிசோதனை 48 குடல் புற்று நோய் கண்டவர்களிடம் செலுத்தி சோதித்தத்தில் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளதை பதிவு செய்துள்ளது. குடல் சார்ந்த புற்று நோய்களுக்கு வழங்குவதால் எண்டரோமிக்ஸ் ( ENTERO - குடல் ) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தடுப்பூசியை வைத்து இரண்டாம் கட்ட , மூன்றாம் கட்ட சோதனை பரிசோதனைகளை இன்னும் பல ஆயிரம் பேருக்கு செய்த பிறகே அதை மக்களுக்குச் சந்தைப் படுத்துவது சரியான அணுகுமுறையாக இருக்கும். அதற்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். எனினும் மருத்துவ நவீன கண்டுபிடிப்புகளில் நிலவி வரும் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் பனிப்போர் மற்றும் வர்த்தக/ பொருளாதாரப் போரின் நீட்சியாக இத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று பரவிக் கொண்டிருந்த காலத்தில் அவசர நிலை இருந்தது. அப்போதும் கூட முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை சுருக்கி விரைவுபடுத்தி முடிவுகளை வெளியிட்ட பின்னரே தடுப்பூசிகள் சந்தைக்கு வந்தன என்பதையும் பதிவு செய்கிறேன் ரஷ்யாவைப் பொருத்தவரை இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை (PHASE II & PHASE III ) செய்த பிறகு முழு ஆராய்ச்சியையும் சக அறிவியலாளர்களால் ஆய்வுக்குட்படுத்தப்படும் மருத்துவ இதழ்களில் வெளியிட்டு பிறகு மக்களுக்கு வழங்குவது நல்லது. இதே தொழில்நுட்பத்தில் மெலனோமா எனும் தோல் புற்றுநோய்க்கு எதிராக 2021 ஆம் ஆண்டு BNT111 எனும் தடுப்பூசிக்கு அமெரிக்க எஃப்டிஏ அவசர கால முன் அனுமதி வழங்கியது மே 2024இல் எப்ஸ்டின் பார் வைரஸ் மூலம் உருவாகும் புற்று நோய்க்கு எதிரான எம் ஆர் என் ஏ தடுப்பூசிக்கும் எஃப்டிஏ அனுமதி வழங்கியுள்ளது. இந்த வகை தடுப்பூசிகளை மிக எளிமையாகவும் விரைவாகவும் உருவாக்க முடியும் என்பதால் புற்று நோய் கண்டறியப்பட்ட சில வாரங்களுக்குள் நோயருக்கு ஏற்ற பிரத்யேக தடுப்பூசியை (PRECISION MEDICINE) தயாரிக்க முடியும். மெசஞ்சர் ஆர் என் ஏ எனும் தொழில்நுட்பம் புற்று நோய் மற்றும் தொற்று நோய் தடுப்பில் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் ஆதிக்கம் செலுத்தப்போவது கண்கூடு. எனினும் மருத்துவ ரீதியாக செய்ய வேண்டிய ஆய்வுகளை சரியான நேரம் ஒதுக்கிக் செய்த பின் ஆய்வுகளை வெளியிட்டு பிறகு சாதக பாதக அம்சங்களை சீர்தூக்கி பார்க்குமாறு இந்த கண்டுபிடிப்பை சந்தைப் படுத்துவது சிறந்ததாக இருக்கும். நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை
  2. ஊக்கிகளில் அவள் உச்சம் உடல் திரட்சிகளில் குறைவில்லை ஊனம் பார்வையில் படவில்லை சிக்கென்ற உடம்பு சில நொடிகளில் மயக்கி விடும்.. தொட்டால் சிணுங்கும் முட்டினால் முட்டும் திட்டினால் திட்டும் கொஞ்சினால் கொஞ்சும் மிஞ்சினால் மிஞ்சும்.. ஆனாலும் அவளுக்கு மாதவிடாயில்லை மொனொபோசும் இல்லை அவள் ஒரு செயற்கை நுண்ணறிவுளி..! கம்பன் இருந்திருந்தால் வர்ணித்தேன் களைத்திருப்பான் வாலி இருந்திருந்தால் ஜொள்ளுவிட்டே சோர்ந்திருப்பான் கண்ணதாசன் இருந்திருந்தால் இன்னொரு தாரமாக்கி இருப்பான் ஆனாலும் இன்னும் வைரனின் கண்ணில் படவில்லை அவள்...! என் மனதில் நான் தேடும் செவ்வந்திப் பூவவள்..! நாளை... அவள் உங்கள் மருமகளும் ஆகலாம் மகளும் ஆகலாம் மனையாளலாம்...!
  3. நன்றி தமிழ் சிறி அண்ணா யாழ் இணையத்திற்கும் எனக்குமான தொடர்பு குறைந்து கொண்டே போகிறது ஆனால் அந்த நாளில் யாழிணையத்தில் இணைந்த பலர் முகநூலில் ஒரு சில சந்திப்புக்களின் படங்களைக் கண்டு தொடர்பு கொள்வார்கள் அப்போது இருந்த புனைப்பெயரான முனிவர் ஜீ சொன்னால் அது நீதானாடா என்ற கேள்வியுடன் நண்பராக பழகி கொண்டதுதான் அஜிவன் அண்ணையின் நட்பு இறந்த செய்தி முகநூலில் தான் கண்டேன் ஆனால் அதற்கு முதல் கிழமையில் ராஜன் ஆஸ்பத்திரில இருக்கன் மூச்சு விட முடியல நுரையீரல் பிரச்சினை என சொன்னார். படங்களையும் அனுப்பி இருந்தார். ஆழ்ந்த இரங்கல்கள் அஜிவன் அண்ணா அநேகமாக சிலருடன் நட்புக்காகவாது யாழ் நண்பர்களுடன் பேசி வருகிறேன் நலன் விசாரிப்பு நாளைக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் எதையும் கொன்டு செல்ல போவதில்லை அவரவர் நினைவுகளையாவது சுமந்து கொள்ளலாம் . அழைப்பின் வரிசையில் எல்லோரும் ............................................ யாழ் நண்பர்கள் அனைவரும் நலமாக இருங்கள் இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன். J.Rajah
  4. தூர்வாரமல் விட்டால் காலம் போகப் போக குளம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும். மழை காலத்தில் கூடுதலான மழைநீரை சேமித்து வைத்திருக்கலாம். இல்லாவிட்டால் வாய்க்கால் வழியோடி கடலுக்குள் சங்கமித்துவிடும். எமது ஊரில் நிறைய குளங்கள் இருக்கின்றன.
  5. ஏற்கனவே மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகளின் பெயரையும் வெளியிடுவோம் என்றார்கள், எதிர்த்துப் பேசுபவர்களை இப்படியும் அடக்கி வைக்கலாம்.
  6. இல்லை தூர் வாருதல் என்பது வெளியேற்றம் செய்தல் எனப் பொருள்படும் கேணி, கிணறு, ஏரி, குளம், குட்டைகள் என்பவை குறித்த காலத்திற்கு ஒருமுறை..... கூடுதலான இடங்களில் ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் நீர் நிலை குறைந்து காணப்படும் பொது,,,, அல்லது முழுதாக வற்றி இருக்கும்போது.... நில மட்டத்தில் காணப்படும் குப்பைகள், கற்கள், சேறு என்பன அகற்றப்பட்டு சுத்தம் ஆக்கப்படும். இதனால் நீர் நிலைகளின் தரம் மிகவும் சுத்தமாக இருக்கும் சேற்றுப்பக்கம் செல்லும்போது ஏற்படும் ஆபத்துக்கள் குறையும் அதைவிட குப்பைகளும் சேறும் அகற்றப்படும் பொது நீர் நிலைகளின் கொள்ளளவு அதிகரிக்கும். இப்படிப் பல நன்மைகள் உள்ளன .
  7. இந்த ஊசியின் விலை 3000 ஈரோவுக்கு மேல் என்று பேசப்படுகிறது. யாருக்கு இலல்வசமாகத் தருவார்கள் என்று பார்க்கலாம். 48 நோயாளிகளில் 3 மாதங்கள் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளது. ரஸ்ய சுகாதாரத் திணைக்களமே இன்னும் இதன் ஆற்றலை உறுதிப்படுத்தவில்லை. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் புதினுக்கு வாழ்த்துத் தெரிவிக்க முண்டியடிப்பதை என்னவென்று சொல்வது. பிரான்ஸ் அல்லது ஜேர்மனி ஒரு புது அரிய மருந்தைக் கண்டுபிடித்தால் அதனை வைத்து அந்த நாடுகளின் தலைவர்களுடன் விளம்பரம் செய்வார்களா ?
  8. பல்லும் சொல்லும் போனது போனதுதான் . .......! 😃
  9. பார்வை ஒன்றே போதுமே பாய்ந்து விலங்குகள் ஓடவே ......! 😃
  10. இந்த மினி தம்பதி மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள மண்டூர் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் பிரபலமான இந்த ஜோடி, தங்கள் உயரத்திற்கு ஏற்ற வீட்டைக் கட்டியுள்ளனர். பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், சமூகப் பிரச்னைகள் குறித்தும் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்க விரும்புகிறார்கள். #Couple #MiniCouple இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  11. ஆதர்சமான தம்பதிகள் . ........ அவர்கள் யாரிடமும் இரக்கத்தையோ கருணையையோ எதிர்பார்க்கவில்லை .......நடைமுறையில் சாதாரண மனிதர்போல் நடத்தினால் போதும் என்பதைத்தான் விரும்புகின்றார்கள் . ......! 👍
  12. காற்று வாங்க போனேன் ....... ! 😍
  13. எந்த உணவகம் என்று பெயரை வெளியிட, வீரகேசரி ஏன் பஞ்சிப் படுகின்றது. முஸ்லீம் உணவகம் என்றால்… வீரகேசரி பம்மிக் கொண்டு, விழுங்காமல் நலுங்காமல் செய்தி வெளியிடுவது ஒரு வகை பயபக்தி என நினைக்கின்றேன். 🤔
  14. அதுதானே, எங்கடை சிங்களப்படைகள் செய்ததெல்லாம் தெரிந்துகொண்டு வெளிநாட்டுப்பொறிமுறையை ஏற்று இனவழிப்பு நடைபெற்றுள்ளது என்பதை உறுதிப்படுத்த அனுமதிக்க முடியாதென்பதை எப்படித் தந்திரமாகப் 16ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறார்கள். இவர்களும்(மேற்கும், மேற்கின் நிறுவனங்களும்) அறிக்கைவிட்டுத் தமிழினத்துக்கு ஏதோ செய்வதுபோல் காட்டுகிறார்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  15. ஹ... ஹா... ஹா.... ராஜபக்ச கோஷ்டியின் சிவப்பு சால்வைகள் கழட்டப் பட்டு, சிறைச்சாலை சீருடை (Uniform) வழங்கப் பட இருக்கின்றது.
  16. போர் முடிந்து 20 வருடமாகி விட்டது. இந்தியா போன்ற செம்மறி நாடுகளால்... விடுதலைப் போராட்டத்தை நசுக்கி, பாதிக்கப் பட்ட அந்தத் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வை கொடுக்க முன்வராத கையாலாகாத "பொன்னை" நாடுகள் எல்லாம் இன்னும் ஸ்ரீலங்காவுக்கு உதவி செய்து கொண்டு உலக மேடைகளில் பொய் வேசம் போட்டுக் கொண்டு பிதற்ரித் திரிவது பைத்தியக்காரத்தனமாக உள்ளது.
  17. கே.பி. யை... கைது செய்தவுடன், இலங்கை அரசு தாங்கள் கைது செய்த மாதிரி... மாதக்கணக்கில் பத்திரிகைளில் பீலா விட்டுக் கொண்டு திரிந்தவர்கள். அதை... நம்பின சிங்கள சனமும்... மகிந்தவையும் , கோத்தாவையும்... பாராக்கிரமபாகு மாதிரி தூக்கி கொண்டாடி அடுத்தடுத்து வந்த தேர்தலிகளில் வெல்ல வைக்க அவங்கள் கே.பி.யிடம் இருந்த தமிழ் மக்களின் சொத்துக்களையும் வறுகி எடுத்து... நாட்டை கொள்ளையடித்து விட்டுப் போய் விட்டார்கள். பொய் உடனே பலன் கொடுத்தாலும்... உண்மை ஒரு நாளும் உறங்காது என்பதற்கு மேலே உள்ள சம்பவம் நல்ல உதாரணம். திருட்டு கூட்டங்கள்.
  18. அப்படி எல்லாம் இல்லை, நான் வேலை செய்யும் நிறுவனம் இதே தொழில்நுட்பத்தில் ( செயற்கை நுண்ணறிவு) புற்றுநோயிற்கான மருந்து தயாரிப்பில் உள்ள ஒரு முண்ணனி நிறுவனம் என கூறினால் அதனை பார்ப்பவர்கள் ஏதோ எனக்கு அந்த நிறுவனத்தில் வேலை செய்வதால் அது பற்றிய துறைசார் அறிவு இருக்கும் என சிந்திக்க்க தலைப்படுவர், ஆனால் உண்மையில் எனக்கு எதுவுமே தெரியாது, அப்படி சிந்திக்க்க கூடாது என்பதற்காகவே அந்த விடயத்தினை இந்த சம்பாசணையில் கொண்டுவரவில்லை. யார் கூறும் கூற்றையும் ஆராய்ந்து அறிவதுதான் சிறப்பு, கற்கால மனிதன் இயற்கை பாதுகாப்பு பொறிமுறைக்காக வேகமாக சிந்திக்கும் முறைமையுடன் கூட்ட மனப்பான்மையினையும் கொண்டிருந்தான் அது இப்போதும் தொடர்கிறது. இது ஒரு நல்ல விவாத திரியாக போகும் என எதிர்பார்த்தேன், ஆனால் ஒரு விதண்டாவாத திரியாக போவதால் இத்துடன் எனது சம்பாசணையினை நிறுத்துகிறேன்.
  19. இந்த இரஸ்சிய ஆய்வு முடிவு முன்னோட்டமானது எனவே நான் குறிப்பிட்டதாக நினைவுள்ளது, அதன் வெற்றி நிச்சயமற்ற ஒன்றுதான் மனித ஆராய்ச்சி முடிவிலேயே தங்கியுள்ளது, பல நிறுவனங்கள் இந்த துறையில் முயற்சிக்கின்றது இதன் பரிசோதனை கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி, பராமரிப்பு வினியோகம் என்பவை மிக செலவான விடயம் ஆனால் அதனை இலவசமாக கொடுப்பதற்கு அரசுகள்தான் முன்வரவேண்டும், ஆனால் பெரும்பாலும் இந்த உற்பத்திகளை சில நேரங்களிலே அரசு செய்ய முயற்சித்தாலும் பின்னர் கைவிட்டுவிடுகிறது, காரணம் காசு, ஆனால் இரஸ்சியா இதில் முன்னோடி, பொதுவாக எந்த நல்ல விடயம் யார் செய்தாலு அதனை பாராட்டுவது ஒரு கெட்டபழக்கமாகிவிட்டது.
  20. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. போட்டிதன்மை தான் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும். அவர்களின் தயாரிப்பு எவ்வளவு வினைத்திறன் உள்ளது, அல்லது அது எவ்வாறு சோதிக்கப்பட்டது என்பது ஒரு அறிவியல் கேள்வி (அரசியல் கேள்வி அல்ல). இந்த அறிக்கை ஜனாதிபதியிடமிருந்து வந்தது. COVID காலத்தில் Trump இடம்மிருந்து பல வினோதமானதும் வேடிக்கையானதும் கூற்றுகளை கேட்டோம்; அதனுடன் ஒப்பிடும்போது இது... மருத்துவ ஆராய்ச்சியில் சில நாடுகளை நோக்கி சாய்வு (Biased) இருக்கும். உதாரணமாக, நான் RNA sequencing பற்றி ஆராய்ந்தபோது, எனது சக ஆராச்சியாளர் ஒரு ஆய்வை செய்து ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில் சீனாவின் (BGI/MGI) DNA sequencing இயந்திரங்களை அமெரிக்காவின் Illumina இயந்திரத்துடன் ஒப்பிட்டார். அந்த ஆய்வு பக்கசார்பற்றது (இரண்டு நிறுவனங்களும் நிதி பங்களித்தன). அந்த ஆய்வின் முடிவு, BGI sequencer, Illumina-க்கு இணையானது ஆனால் மலிவானது என்பதே. அந்த ஆய்வு பலமுறை நிராகரிக்கப்பட்டது. காரணம் யாவரும் அறிந்ததே. (இறுதியில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.)
  21. ஜேர்மனி தமது வெற்றி அரசியலுக்காக எதை எதையெல்லாமோ செய்ய ஆரம்பித்து இன்று பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளார்கள். உக்ரேன் ஜேர்மனிக்கு தேவையில்லாத சாக்கடை.👈 ஜேர்மனிக்கு உக்ரேன் போருக்கு பின்பும் ரஷ்யாவிலிருந்து எரிசக்தி வேறு வழியில் பலமடங்கு விலையில் வந்து கொண்டுதான் இருக்கின்றது. இதை இங்கு யாழ்களத்தில் எழுதிய போது என்னை சொல்லால் அடித்தார்கள். என்ன செய்ய?அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்!
  22. இதில் இந்தியா மாலைதீவு இலங்கை என முத்தரப்பு போட்டியில் கொஞ்ச தூரத்தால் இலங்கைக்கு அண்மையாக உள்ளதால் இலங்கைக்கே கிடைக்கும் என்கிறார்கள். இந்த கனிமவளம் இலங்கையின் கைக்கு கிடைத்தால் அதி பணக்கார நாடாக வர இடமுள்ளதாக சொல்கிறார்கள். அமெரிக்கா சீனா போட்டியால் இலங்கைக்கு இதுவே அழிவாகவும் இருக்கலாம் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
  23. இந்த விலை அதிகமான தடுப்பூசிகளை இலவசமாக கொடுக்க முன்வந்ததிற்கு இரஸ்சிய அரசிற்கு நன்றி கூறவேண்டும், உயிரைக்கொல்லும் ஒரு நோயிற்கு மருந்தினை ஏழைகளால் வாங்கமுடியாத விலையில் இருக்கின்ற நிலையில் அதனை இலவசமாக கொடுக்க முன்வருகின்ற மனிதர் எவராக இருந்தாலும் அவர் நன்றாக இருப்பார்.
  24. அரசனுக்கு ஏது பணம்? எல்லாம் பொது மக்களிடம் வரியாக வசூலித்ததுதானே.
  25. டிரம்ப் ஐயா மீதுள்ள வெறுப்பில் தென் அமெரிக்கா வரை சென்றுவிட்டீர்கள். அதிலும் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழ்ர்களின் பூர்வீகத்தை கிண்டி நையாண்டி செய்வதில் உங்களுக்கு அலாதி பிரியம் போல் உள்ளது. நான் படித்து பட்டம் பெற்று குடியேறினேன். நீ அகதியாய் வந்து குடியேறினாய். உன்னைவிட நான் கொஞ்சம் உசத்தி. உன்னை விட நான் சொல்லும் வாக்குத்தான் செல்லுபடியாகும் எனும் மனப்பாங்கு உங்களுக்கு. இப்படி எங்கள் சமூகத்தில் பலர் உள்ளார்கள். இவர்கள் தாங்கள் செய்யும் டிமிக்கிகளை வெளிவிட மாட்டார்கள்.
  26. மிகவும் "நம்பக் கூடியதாகத்" தான் இருக்கிறது😎: என்ரெறோமிக்ஸ் (Enteromix) என்ற இந்த "தடுப்பூசி" புற்று நோய்க்கெதிராக 100% விளைவைக் காட்டியிருக்கிறதாம். இந்த "100%" என்பதே தகவலின் உண்மைத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது. இவ்வளவு வினைத்திறனான புற்று நோய்த் தடுப்பூசியின் ஆய்வு முடிவுகளை, எந்தவொரு விஞ்ஞான சஞ்சிகையிலும் பிரசுரிக்காமல் Eastern Economic Forum என்ற வர்த்தகக் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்! புரின் புரியன்மார் , ரஷ்ய விசிறிகள் யாவரும்- உண்மையிலேயே அவர்கள் அப்படியாக இருந்தால் - வரிசையில் முன்னுக்குப் போய் நின்று இந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேணும்! செய்வார்களா😇?
  27. விமர்சனம் : காந்தி கண்ணாடி 6 Sep 2025, 12:51 PM ஹீரோவாக ஜெயித்தாரா கேபிஒய் பாலா? டைட்டிலை பார்த்தவுடனேயே ‘இதென்ன இப்படியிருக்கு’ என்றே பெரும்பாலும் எண்ணத் தோன்றும். கூடவே, இந்த டைட்டிலை வைத்துக்கொண்டு கதையில் என்ன சொல்லிவிட முடியும் என்ற எண்ணமும் எழும். ஆனால், அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதையே தங்களது பலமாக எண்ணிக் களமிறங்கியிருக்கிறது ‘காந்தி கண்ணாடி’ படக்குழு. ரணம் பட இயக்குனர் ஷெரீஃப் இயக்கியுள்ள இப்படத்தில் ‘கலக்கப் போவது யாரு’ பாலா நாயகனாக நடித்திருக்கிறார். ‘ஃபால்’, ‘நவம்பர் ஸ்டோரி’ ‘ட்ரிபிள்ஸ்’ வெப்சீரிஸ்களில் நடித்த நமீதா கிருஷ்ணமூர்த்தி இதில் நாயகி. இவர்களோடு பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா இருவரும் ஜோடியாக இதில் தோன்றியிருக்கின்றனர். விவேக் – மெர்வின் இணை இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறது. சரி, ‘காந்தி கண்ணாடி’ தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு உள்ளதா? ‘நெகிழ்ச்சி’ தருணங்கள்! ஒரு ‘ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனமொன்றை நடத்தி வருகிறார் கதிர் (கேபிஒய் பாலா). அவரது காதலி கீதா (நமீதா கிருஷ்ணமூர்த்தி) அதனை நிர்வகித்து வருகிறார். நண்பர்கள் சிலர் (மதன், ஜீவா சுப்பிரமணியன்) அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். பணம் மட்டுமே பிரதானம் என்றிருக்கும் கதிர், தங்களது பணியாளர் வராவிட்டால் அந்த வேலையைத் தானே செய்யக் கூடியவர். அதற்கான சம்பளத்தை எடுத்துக்கொள்ளக் கூடியவர். அப்படிப்பட்டவர் ‘அறுபதாம் கல்யாணம் செய்ய வேண்டும்’ என்று தன்னைத் தேடி வரும் காந்தியைக் (பாலாஜி சக்திவேல்) காண்கிறார். மனைவி கண்ணம்மாவின் (அர்ச்சனா) ஏக்கம் அது என்பதை உணர்ந்து, அதனைச் செயல்படுத்தத் துணிகிறார். தனது சம்பளம், சேமிப்பு ஆகியவற்றைத் தாண்டி ஒரு பெரிய தொகையில் அந்த நிகழ்வை நடத்த ஆசைப்படுகிறார். காந்தி ஒரு பெரிய ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் வட்டாரத்தில் வாழ்ந்து வரும் அவர் சிறு வயதில் நடனமாடும் கண்ணம்மாவை விரும்புகிறார். இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டு இனிமையாக வாழ முடியாது என்பதை உணர்ந்து, இருவரும் சென்னைக்கு வந்துவிடுகின்றனர். அப்போது முதல் கண்ணம்மாவின் வார்த்தைகள் எதையும் காந்தி மீறியதில்லை. முதல்முறையாக, அவரது வார்த்தையை மீறித் தனது ஜமீன் குடும்பத்து சொத்துக்களை விற்றாவது இந்த அறுபதாம் கல்யாணத்தை நடத்திவிட வேண்டுமென்று நினைக்கிறார். அதற்கேற்ப, அவர் கைவசம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வரை கிடைக்கிறது. அதனைக் கொண்டு எளிதாகத் தனது கண்ணம்மாவின் ஆசையைத் தீர்க்கலாம் என்று நினைக்கிறார் காந்தி. அந்த நேரத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்கிறது மத்திய அரசு. அதன்பிறகு தனது கையில் இருக்கும் லட்சக்கணக்கான பணத்தை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் தவிக்கிறார் காந்தி. அவரிடம் வாங்கிய பணத்தைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று கதிரும் கைவிரிக்கிறார். அதன்பிறகு என்ன ஆனது? காந்திக்கு கதிர் உதவிகள் செய்தாரா என்று பதிலளிக்கிறது இப்படத்தின் மீதி. ஆசிரமம் ஒன்றை நடத்தி வரும் கதிர், அங்கிருந்த காந்தி காணாமல் போனதை அறிந்ததும் துணுக்குறுவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. அதுவே ‘பிளாஷ்பேக்’குகள் நிறைந்த இப்படத்தைச் சலிப்பில்லாமல் பார்க்க வைக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்தக் கதையில் சாதாரண ரசிகர்கள் நெகிழ்ச்சியுறும்விதமாகச் சில தருணங்கள் உள்ளன. பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் வங்கி வாசலில் மக்கள் காத்துக் கிடப்பது போன்றவை அப்படிப்பட்டவை. கூடவே, ‘அதான் நீ இருக்கியே’, ‘தயிர்சாதம் சூப்பர்’ என்று பாலாஜி சக்திவேல் பேசுகிற வசனங்கள் தொடக்கத்தில் செயற்கைத்தனமாகவும், பிறகு நம்மை நெகிழவைக்கும் விதமாகவும் உள்ளன. ‘பொண்டாட்டி செஞ்சதை சாப்பிட்டு, அது நல்லாயிருக்குன்னு சொல்ல முடியலைன்னா, நீங்கள்லாம் என்ன …க்கு கல்யாணம் பண்றீங்க’ என்று அவர் வசனம் பேசுகிற இடத்தில் தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. அந்த வகையில் முதல் பாதி இளைய தலைமுறைக்கானதாகவும் இரண்டாம் பாதி வயதானவர்களுக்காகவும் அமைந்திருப்பதே இப்படத்தின் சிறப்பு. திருப்தி கிடைத்ததா? இடைவேளை வரை ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டியவாறு நகர்கிறது திரைக்கதை. அதன்பிறகு அதில் நிறையவே தொய்வு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் ‘இவ்ளோ கஷ்டப்பட்டு குறிப்பிட்ட தேதிக்குள்ள இந்த அறுபதாம் கல்யாணத்தை நடத்தனுமா’ என்று எண்ணும் அளவுக்குக் காட்சிகள் ‘சோக கீதம்’ வாசிக்கின்றன. ’முனுக்கென்றால் கோபம் வந்துவிடும்’ என்பது போலச் சட்டென்று கண்ணீரை உதிர்க்கக்கூடியவர்கள் தேம்பி அழும் அளவுக்கு இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் இருக்கின்றன. அக்காட்சிகளில் தெரிகிறது இயக்குனர் ஷெரீஃபின் வித்தை. இப்படத்தில் திருவிழா காட்சிகள் ஆங்காங்கே வருகின்றன. அவற்றில் மட்டும் கொஞ்சம் பிரமாண்டம் தெரிகிறது. மற்றபடி இது சுமார் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. முடிந்தவரை அந்த எண்ணம் வராத அளவுக்குக் காட்சியாக்கத்தைச் சிறப்பாக மேற்கொண்டிருக்கிறது ஒளிப்பதிவாளர் பாலாஜி கே ராஜா, படத்தொகுப்பாளர் சிவாநந்தீஸ்வரன், தயாரிப்பு வடிவமைப்பாளர் மணிமொழியான் ராமதுரை கூட்டணி. ஒப்பனை, ஒலி வடிவமைப்பு, டிஐ போன்ற அம்சங்கள் காட்சிகளைச் செறிவாக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன. திரையில் கமர்ஷியல் சினிமாவுக்கான ‘ஜிகினாத்தனம்’ தென்பட்டுவிடக் கூடாது என்று மெனக்கெட்டிருப்பது அருமை. அந்த வகையில் காட்சியாக்கத்தில் யதார்த்தம் நிறைந்திருக்கிறது. அதனைத் தாண்டி, திரையில் தெரியும் பிம்பங்களின் வழியே வெளிப்படும் உணர்வுகளை நமக்குள் கடத்த தூண்டுகோலாய் இருக்கிறது விவேக் – மெர்வினின் பின்னணி இசை. ‘திமிருக்காரி’ பாடல் ‘காந்தி கண்ணாடி’யின் அடையாளமாக உள்ளது. இது போக ‘புல்லட் வண்டி’, ‘ஹிந்தி நஹி மாலும்’ பாடல்களும் கேட்டவுடன் பிடிக்கும்விதமாக உள்ளன. அனைத்தையும் தாண்டி கிளைமேக்ஸ் பகுதியில் யுவன் சங்கர் ராஜா குரலில் ஒலிக்கிற ‘மெலடி மெட்டு’ நம் மனதைப் பிசையும்விதமாக உள்ளது. அதுவரை இப்படத்துடன் ஒன்றாதவர்கள் கூட, அந்த இடத்தில் இக்கதையோடு தம்மைப் பிணைத்துக் கொள்வார்கள் என்பதே நிஜம். ‘காந்தி கண்ணாடி’ கதையில் முதன்மையாக வரும் நான்கு பாத்திரங்களின் பின்னணி ‘விலாவாரியாக’ விளக்கப்படவில்லை. போலவே, இதர பாத்திரங்களும் காட்சிகளில் வருகின்றன, போகின்றன. அவற்றின் பின்னணியைக் கொஞ்சம் விளக்கியிருந்தால் இன்னும் முழுமையானதாகத் திரையனுபவம் மாறியிருக்கும். ஆனால், அந்த குறையை மறக்கடிக்கும்விதமாக இதில் நடிகர்களின் ‘பெர்பார்மன்ஸ்’ உள்ளது. அந்த வகையில் நாயகன் நாயகியை விட நம்மை வசீகரிப்பது பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா ஜோடி தான். அவர்களைப் புகழ்வது கடல் நீரில் பெருமழை பெய்வதைப் போலானது என்பதால் அடுத்திருப்பவர்களை உற்றுநோக்கலாம். பாலாவுக்கு இது நாயகனாக முதல் படம். அதனை உணர்ந்து சிரத்தை காண்பித்திருக்கிறார். தனது உடல் திரையில் கம்பீரமாகத் தெரிய மெனக்கெட்டிருப்பவர், முக பாவனைகளுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் தந்திருக்கலாம். அது மட்டுமல்லாமல், முதல் பாதியில் அவர் கருமியாகவும் சுயநலமானவராகவும் இருப்பது தெளிவாகச் சித்தரிக்கப்படாதது ஒரு குறையே. மற்றபடி, தன்னைக் கொண்டாடுகிற ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் அளவுக்கு இப்படத்தைத் தந்திருக்கிறார். அதிகமாக ‘காமெடி கவுண்டர்கள்’ அடிக்காமல் அடக்கி வாசித்திருக்கிறார். நாயகி நமீதா கிருஷ்ணமூர்த்தி அழகாக இருக்கிறார். தனக்கு ‘ஸ்கோப்’ இருக்கிற இடங்களில் அழகாக நடித்திருக்கிறார். ஆனாலும், அது போதுமானதாக இல்லை. ஒருவேளை நாயகன் நாயகி இருவருக்குமே அதிகளவில் ‘குளோஸ் அப்’ ஷாட்கள் வைக்காதது இயக்குனரின் குறையா என்றும் தெரியவில்லை. இவர்கள் தவிர்த்து ஜீவா சுப்பிரமணியன், மதன் மற்றும் பண மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களாக நடித்தவர்கள் என்று சிலர் வந்து போயிருக்கின்றனர். அமுதவாணன், நிகிலா சங்கர் ஜோடிக்குத் திரைக்கதையில் உரிய இடம் தரப்படவில்லை. பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் மனோஜ் பிரபு – ஆராத்யா ஜோடி சட்டென்று மனதில் பதிகிறது. அதே நேரத்தில், அவர்கள் ஊரை விட்டு வெளியேறுவதற்கான காரண காரியங்கள் இன்னும் தெளிவாகத் திரையில் சொல்லப்பட்டிருக்கலாம் என்றெண்ணுவதையும் தவிர்க்க முடியவில்லை. இந்த படத்தின் முடிவு சில ரசிகர்களுக்குத் திருப்தியைத் தராமல் போகலாம்; இவ்வளவு சோக முடிவு தேவையா என்ற கேள்வியை எழுப்பலாம். ‘இயக்குனர் என்ன சொல்ல வருகிறார்’ என்றும் தோன்றலாம். அனைத்தையும் தாண்டி சில மனிதர்கள், அவர்களது வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்கள் என்ற வகையில் நமக்கு இன்னொரு உலகத்தைக் காட்டுகிறது ‘காந்தி கண்ணாடி’. பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாமல் தியேட்டருக்குள் நுழைந்தால் இப்படம் ஓரளவுக்கு ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் தரக்கூடும். https://minnambalam.com/gandhi-kannadi-movie-review-2025/
  28. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Samuel Churchill ·ntoeoSdpsrf1i7955mi82ta98uth th2g3mlifhil70l7478107h0221clm5 · ......சங்கு கதை.... ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான். அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான். நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. “இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன். மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது. உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன். தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான். அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல. அதற்குத் திறமை வேண்டும். நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான். “எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன். “இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம். நீயும் வா,” என்றான் திருடர் தலைவன். இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர். இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். எங்கும் இருட்டாக இருந்தது. அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர். திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர். அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது. திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது. ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு. அது கத்தாது என்று சொல்ல நினைத்தான். கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம். “சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான். இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன். சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான். ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான். வலிமையாக ஊதினான். சங்கோசை எங்கும் கேட்டது. அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர். பிறகு என்ன? பிச்சைக்காரனை கூட்டு சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர். இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி. Voir la traduction.....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.