Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3049
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19109
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    31956
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    3
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/17/25 in all areas

  1. 1. ஆளில்லா விமானம் --------------------------------- அன்று ஒரு நீண்ட வார விடுமுறையின் நடுநாள். பலரும் அன்று விமானப் பயணமோ அல்லது எந்தப் பயணமுமோ செய்ய மாட்டார்கள் என்பதை அனுமானித்தேயிருந்தோம். ஆனாலும் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில், திருவிழா முடிந்து வெறுமனே காற்று வாங்கும் கோயில் போல, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரின் நடமாட்டமே இருந்தது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. தேர்த் திருவிழா போல எப்போதும் உள்ளேயும், வெளியேயும் கூட்டமும், இரைச்சல்கள் நிறைந்திருக்கும் இடம் இது. இந்த விமான நிலையத்தால் வந்து போகும் வெளிநாட்டவர்கள் நிறையவே குறைகள் சொல்லுவார்கள். அதனால் நான் சொல்லாமல் விடுகின்றேன், அத்துடன் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. எங்கள் கண்களுக்கு தெரிவது போல காகங்களின் இறகுகள் கறுப்பு அல்ல, அவை வண்ணங்கள் நிறைந்தவை என்று சமீபத்தில் ஒரு கட்டுரை வாசித்திருக்கின்றேன். வண்ணங்கள் எங்களின் கண்களுக்கு தெரியவில்லை என்பதே உண்மை என்கின்றார்கள். உள்ளவற்றில் குறைவான விலையில் உள்ள விமான பயணச் சீட்டை நாங்கள் வாங்கியிருந்தோம். ஆதலால் அவர்களே இருக்கைகளை தெரிவு செய்து கொடுப்பார்கள். கொடுத்தார்கள். மூன்று இருக்கைகள் ஒன்றாகவும், மற்றைய இருக்கை அந்த வரிசைக்கு பின் வரிசையிலும் இருந்தன. ஒரு பொல்லாப்பும் இல்லை. நான் பின் வரிசையில் இருக்கலாம், மற்ற மூவரும் ஒன்றாக இருங்கள் என்றேன். அப்படியான ஒரு முடிவையும் உடனேயே எடுக்கத் தேவையில்லை என்றது குடும்பம். இன்றைய உலகம் எந்த அவசர உடன்படிக்கைக்கும் தயாராக இல்லாதது. காத்துக் கொண்டிருக்கும் போது 'பயணிகள் கவனிக்கவும்.................' என்று ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது. பாலகுமாரனின் ஒரு நாவலின் தலைப்பு இது. அவரை விழுந்து விழுந்து வாசித்த ஒரு காலம் இருந்தது. அது பதின்ம வயதுகள். அன்று வாசித்த அவரின் கதைகள் பலவும் இன்றும் சாராம்சமாக ஞாபகத்தில் இருக்கின்றன. சாராம்சமாக இருப்பதால் எல்லாமே ஒரே ஒரு கதை தான் என்றும் தோன்றுகின்றது. பின்னர் பெரிய இடைவெளி. அந்த இடைவெளியில் அவர் ஒரு சித்தர் ஆக மாறியிருந்தார். எழுத்துச் சித்தரோ அல்லது அப்படி ஏதோ ஒன்று சொன்னார்கள். புஷ்பா தங்கத்துரை கூட ஒரு பக்தி இதழில் எழுதுவதாகவும் பார்த்திருந்தேன். நாங்கள் ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகள் வாழ்ந்து தான் முடிப்போம் போல. 'விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால்.............' என்று தொடர்ந்தது அறிவிப்பு. வீட்டுக்கு திரும்பி போகச் சொல்லப் போகின்றார்களா என்று படபடத்தோம். சில வாரங்களின் முன் கனடா போகும் பொழுதும் இதே டெல்டா விமான நிறுவனம் தான். அவர்கள் எங்கேயோ மழையோ புயலோ என்று அன்று எங்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஒரு நாள் பிந்தியே கனடா போயிருந்தோம். ஆஸ்திரேலியா பயணத்தை மிகக் குறுகியதாகவே திட்டமிட்டிருந்தோம். அதில் ஒரு நாள் அநியாயமாகப் போய் விடுமோ என்பதே படபடக்க வைத்தது. பிரபஞ்சத்தில் ஒளியின் வேகமே மிக அதிகமானது என்கின்றார்கள். ஆனால் மனதின் வேகம், எண்ணங்களின் வேகம் ஒளியின் வேகத்தை விட மிகவும் அதிகம் என்பதே என் அனுபவம். பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், விமானம் மேலே எழும்பும் போதும், அது கீழே இறங்கும் போதும், விமானத்தின் சமநிலையைப் பேணுவதற்காக எல்லோரும் ஒதுக்கப்பட்ட இருக்கைகளிலேயே இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் சொன்னார்கள். இருக்கைகள் அந்த ஒழுங்கிலேயே ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் சொன்னார்கள். மேலும் சில வரிசைகள் இதன் காரணமாக முற்றிலும் வெறுமனே இருக்கும் என்றார்கள். இது புதிது, நான் முன்பின் அறிந்திராதது. விமானம் கிடையாக பறக்க ஆரம்பித்த பின் எங்கேயும் இருக்கலாம் என்றார்கள். எங்கள் நால்வரில் யார் பின் வரிசையில் இருப்பது என்ற உடன்படிக்கை ஏறக்குறைய தேவை இல்லை என்றாகியது. அந்த வரிசையில் வேறு எவருமே இல்லை. எல்லாமே எங்களுக்கு மட்டும் தான் என்றாகியது. அந்த அதிகாலைப் பொழுதில் சிட்னி விமான நிலையத்தில் ஆட்களையும் பார்க்கவில்லை, கொண்டு போகும் பொருட்களையும் எவரும் பார்க்கவில்லை. ஒரே ஒரு அதிகாரி வெளியேறும் வாசலில் நின்றார். ஏதாவது தடைசெய்யப்பட்ட பொருட்கள் எடுத்துக் கொண்டு போகின்றீர்களா என்று கேட்டார். நாங்கள் நால்வரும் மொத்தமாக நான்கு பெரிய பொதிகளும், நான்கு சிறிய பொதிகளும் வைத்திருந்தோம். கனடா மில்லில் அரைக்கப்பட்ட மஞ்சள் தூள் மற்றும் சில பொருட்களும் இருந்தன. சிட்னி விமான நிலையத்தில் முன்னரும் பல விதமான அனுபவங்கள் எங்களுக்கு இருக்கின்றன. இருபது வருடங்கள் அல்லது அதற்கு முன்னர் முதல் தடவையாக அங்கு போயிருந்த போது, எங்கள் நால்வரையும் ஒரு அதிகாரி விசேடமாகப் பார்த்தார். எங்களின் கடவுச்சீட்டுகளின் மீதே அவருக்கு பெருத்த சந்தேகம் இருந்தது போல. அதன் பின்னரும் சில அனுபவங்கள். ஆஸ்திரேலியாவை மிகவும் சிரமப்பட்டே காப்பாற்றுகின்றார்கள் என்று தெரிந்தது. காற்றே புகாத இடத்தில் கூட இலங்கையர்களும், இந்தியர்களும், சீனர்களும் புகுந்து விடுவார்கள் என்ற தகவல் இவர்களுக்கு காலம் பிந்தியே தெரிய வரும். சிட்னிக்கும், லாஸ் ஏஞ்சலீஸூக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. சீதோசன நிலை முக்கியமான ஒன்று. பெரும்பாலும் குளிர் இல்லாத இடங்கள் இந்த இரு நகரங்களும். மேலும் சிட்னி அமெரிக்க நகர்களின் சாயலிலேயே அமைக்கப்பட்டும் இருக்கின்றது. உதாரணமாக சியாட்டில் நகரம். சிட்னி விமான நிலையத்தில் இருந்து சிட்னி முருகன் கோவில் இருக்கும் பகுதிக்கு போவதற்கு நேரடியாக ஒரு பெருந்தெரு இப்பொழுது இருக்கின்றது. இது முன்னர் இருக்கவில்லை. கட்டணம் உண்டு, ஆனால் ஒரு இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்களில் வீட்டுக்கு போய்விட்டோம். ' பெருந் தெருக்களை கட்டு, போய் வர கட்டணம் அறவிடு................' என்பது அண்ணன் காட்டிய வழி போல. வழி நெடுகிலும் பல புதிய உயர்ந்த குடியிருப்புகள் புதுதாகத் தோன்றியிருந்தன. ஏராளமானவை. பல வருடங்களின் முன் கனடாவில் நம்மவர்கள் இருக்கும் பகுதிகளில் இப்படி இருந்தன. ஆஸ்திரேலியாவில் இந்தக் குடியிருப்புகளில் யார் இருக்கின்றார்கள் என்று கேட்டேன். 'இந்தியர்கள்...........புதிதாக வந்தவர்கள்.........' என்று சொன்னார்கள். காற்றுப் புக முடியாத இடமென்றாலும், நல்ல இடமென்றால் நாங்கள் குடியேறி விடுவோம் என்பது சரிதானே. சிட்னி விமான நிலையத்தில் எங்களை ஏன் அதிகாரிகள் எந்தச் சோதனைகளும் இல்லாமலேயே வெளியே விட்டார்கள் என்பதும் புரிந்தது. அந்த அதிகாரிகள் வேறு யாருக்காகவோ காத்துக் கொண்டு நிற்கின்றார்கள் போல. (தொடரும்...............) ** செயற்கை நுண்ணறிவிடம் ஒரு படம் வரையச் சொன்னேன். அதன் பூகோள அறிவு கொஞ்சம் அப்படி இப்படித்தான் போல. அதன் தவறைச் சுட்டிக்காட்டினேன். அதன் பிறகு அதனிடம் இருந்து வந்தது இன்னும் கொடுமை............. அதனால் இதுவே போதும், மனிதர்கள் புரிந்து கொள்வார்கள் என்று அப்படியே இங்கு போட்டுள்ளேன்.
  2. கருணா ஒரு தீர்க்கதரிசி…. (டக்கெண்டு பாய்ந்து பிராண்ட வேண்டாம், கீழே வாசிக்கவும்) கருணா மோடங்கள் என சொல்லியது…. 2009 இல் தலைவர் வீரச்சாவை அடையவில்லை என, 2025, 2055 இலும் நம்பி கொண்டு இருக்க போகும் புலம்பெயர் தமிழர் சிலரை.
  3. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1982ம் ஆண்டில் பிரபாகரன் முதலும் கடைசியுமாக அப்போதைய மெட்ராஸுக்கு வந்தார் கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி ஹிந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில விவரிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம். 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களில் ஒருபிரிவினர் இன்றும் அதனை ஏற்க மறுக்கின்றனர். இப்படியான சூழலில், பிரபாகரனின் கடைசி தருணங்கள் குறித்து இந்த கட்டுரை அலசுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் 2008ம் ஆண்டு, நவம்பர் 27-ஆம் தேதி மாவீரர் தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையே அவருடைய கடைசி உரையாக பதிவாகியுள்ளது. அதற்கடுத்த சில மாதங்களில் அவருடைய வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று யாரும் நினைக்கவில்லை, ஆனால் அவருடைய வாழ்வின் கடைசி தருணம் வரை அவருடைய மனோபாவம் மாறவே இல்லை. 1976-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை தொடங்கினாலும் கூட பிரபாகரன் நீண்ட காலமாக பெரிதும் அறியப்படாத ஒருவராகவே திகழ்ந்தார். 1982 மே மாதம் சென்னையில் முதலும் கடைசியுமாக பிரபாகரன் பிடிபட்ட போது, இந்திய அரசு அவர் மீது அதிக கவனம் செலுத்தவில்லை. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவத்திற்கு சவால் விடுவதற்கும் தயங்காத வகையில், பிரபாகரனின் செல்வாக்கு மற்றும் நம்பிக்கை அபரிமிதமாக அதிகரித்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவின் ராணுவ சக்திக்கு சவால் விடுக்கும் அளவுக்கு பிரபாகரனின் செல்வாக்கு இருந்தது பிரபாகரனின் பாணி இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தில் சிங்களர்கள் கொலைக்குப் பிறகு, பிரபாகரன் குறித்து பெரும் விவாதம் எழுந்தது. அதன்பிறகு, இலங்கையில் போட்டி தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இது, தமிழர்கள் மத்தியில் தனிப்பெரும் தலைவராக உருவாவதற்கான முயற்சியாகவே நம்பப்பட்டது. பிரபல பத்திரிகையாளர் எம்கே நாராயண் சுவாமி தன்னுடைய 'தி ரௌட் ஆஃப் பிரபாகரன்' (The Route of Prabhakaran) எனும் புத்தகத்தில், "பிரபாகரனின் ஒவ்வொரு வார்த்தையும் சட்டம் போன்றது. அவரை யாரும் சவால் செய்ய முடியாது. அவருக்கு முன் தலை தாழ்ந்து, அவர் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, உங்களால் தமிழ் ஈழத்துக்காக போராட முடியும்," என எழுதியுள்ளார். "அவருடன் உடன்படவில்லையென்றால், ஒன்று நீங்கள் விடுதலைப் புலிகளை விட்டு வெளியேற வேண்டும், அல்லது உலகை விட்டு நீங்க வேண்டும். அவரை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர் 'துரோகி' என அறிவிக்கப்படுவார். சோவியத் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தன்னுடைய எதிரிகளை எப்படி நடத்தினாரோ, அவர் அப்படி நடத்தப்படுவர்." பட மூலாதாரம், konark படக்குறிப்பு, பிரபல பத்திரிகையாளர் எம்கே நாராயண் சுவாமி எழுதிய 'தி ரௌட் ஆஃப் பிரபாகரன்' புத்தகம் அடுத்தடுத்து நடந்த கொலைகள் விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் குறிப்பிட்ட சிலருக்கு குறிவைத்தது. பிரபாகரனுக்கோ அல்லது விடுதலைப் புலிகள் அமைப்புக்கோ சில சமயங்களில் உதவியிருந்தவர்களும் கூட இலக்காயினர். பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அனிதா பிரதாப், தன்னுடைய 'ஐலாண்ட் ஆஃப் பிளட்' (Island of Blood) எனும் புத்தகத்தில், "பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை குறித்து புத்தகம் எழுத திட்டமிட்டிருந்த நபர் ஒருவர், பாரிஸில் தன்னுடைய இல்லத்தின் முன்பாக சுட்டு கொலை செய்யப்பட்டார்." என எழுதியுள்ளார். இலங்கை பாதுகாப்பு அமைச்சர் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டார். வெளியுறவு அமைச்சர் (தமிழர்) ஒருவர் நீச்சல் குளத்தில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இலங்கை ஜனாதிபதி ஒருவரும் மே தின பேரணியில் உரையாற்றியபோது கொலை செய்யப்பட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது தற்கொலை தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ராஜிவ் காந்தி கொலையிலும் பிரபாகரன் தொடர்புபடுத்தப்படுகிறார். பிரபாகரனின் சரிவு ஒரு கட்டத்தில், இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரபாகரனின் கட்டுப்பாடு ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு சுருங்கும் நேரம் வந்தது. "முதன் முறையாக விடுதலைப் புலிகள் அமைப்பு போராளிகளின் கண்களில் நான் பயத்தை பார்த்தேன். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளை நெருங்கி பார்த்துவரும் எனக்கு இது முற்றிலும் புதிய விஷயமாக இருந்தது," என பெயர் குறிப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறினார். "மே 17 அன்று, பிரபாகரன் தன் நெருங்கிய கூட்டாளிகளிடையே, தான் போர்க்களத்திலிருந்து ஓடவோ அல்லது ஆயுதங்களை கைவிடவோ மாட்டேன் என்றும், யாராவது போராட்டத்திலிருந்து விலகிக்கொள்ள விரும்பினால், அதை அவர்கள் தாராளமாக செய்யலாம் என்றும் கூறினார். குடிமக்களுடன் இணைய யாராவது விரும்பினால், அவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அங்கே செல்லலாம். எதிரியின் கைகளால் வீழ்த்தப்படுவதை தவிர்க்கும் விதமாக யாரேனும் இறக்க விரும்பினால், சயனைடை உட்கொண்டு இறக்கலாம்." சூரிய கடவுளின் அவதாரம் என்றும் யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர் என்றும் தன் ஆதரவாளர்களால் அழைக்கப்பட்ட ஒருவருக்கு இது மோசமான பிரியாவிடையாக இது இருந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தான் விரும்பிய அனைத்தையும் சொல்வதற்கு மே 17-ஆம் தேதியை பிரபாகரன் தேர்ந்தெடுத்தது தற்செயல் நிகழ்வு அல்ல. பிரபாகரனும் எட்டாம் எண்ணும் தான் விரும்பிய அனைத்தையும் சொல்வதற்கு மே 17-ஆம் தேதியை பிரபாகரன் தேர்ந்தெடுத்தது தற்செயல் நிகழ்வு அல்ல. பிரபாகரனின் பழைய கூட்டாளியான ராஜேஷ் குமார் பிரிட்டனில் வசிக்கிறார், அவர் தற்போது ராகவன் எனும் பெயரில் அறியப்படுகிறார். அவர் கூறுகையில், "பிரபாகரன் 8 எனும் எண்ணை துரதிருஷ்டவசமான எண்ணாக கருதினார். பிரபாகரன் எந்தவொரு வேலையையும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் செய்வதை தவிர்ப்பார், அது எதிர்காலத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என கருதினார். இந்த நாட்களில் மறைவிடத்திலேயே நாள் முழுவதும் பதுங்கியிருந்து அடுத்த நாளே வெளியில் வரும் அளவுக்கு அவருக்கு அதன் மீது வலுவான மூடநம்பிக்கை இருந்தது" என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மெய்க்காப்பாளருடன் பிரபாகரன் தோல்விகளால் குலைந்த மன உறுதி 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மன்னார் மாவட்டம் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதன்பின், நவம்பர் மாதத்தில் விடுதலைப் புலிகள் வியூக ரீதியாக தங்களின் முக்கிய இடங்களான பூநகரி மற்றும் மாங்குளத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. 2008-ஆம் ஆண்டு மே மாதம், விடுதலைப் புலிகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த தளபதி கந்தையா பாலசேகரன் எனும் பால்ராஜ் மாரடைப்பில் இறந்தது பிரபாகரன் பெரும் பின்னடைவாக அமைந்தது. பாலசேகரனின் நினைவாக மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்தது. பாலசேகரன் இறந்திருக்காவிட்டால், இலங்கை ராணுவத்துடனான போரின் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும் என, அந்த அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் நம்புகின்றனர். 2009-ஆம் ஆண்டுவாக்கில் பிரபாகரன் மேலும் அதிகமான பின்னடைவுகளை சந்திக்க ஆரம்பித்தார். இலங்கை அரசுப் படைகள், முதலில் பரந்தன் நகரத்தையும் பின்னர் அதன் அருகிலுள்ள கிளிநொச்சியையும் கைப்பற்றின. இதில், கிளிநொச்சி, விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்படும் பகுதிகளின் தலைநகரமாக கருதப்பட்டது. கிளிநொச்சியில் தோல்வியடைந்தது, விடுதலைப் புலிகள் அமைப்பினரின் மன உறுதியை கடுமையாக குலைத்தது. இந்த நகரத்தில் தான் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை பிரபாகரன் சந்தித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, விடுதலைப் புலிகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த ராணுவப் பிரிவு தலைவராக கந்தையா பாலசேகரன் இருந்தார். இலங்கைக்கு அமெரிக்கா நெருக்கடி விடுதலைப் புலிகளின் முக்கியமான ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த வேலாயுதன் தயாநிதி எனும் தயா மாஸ்டர் மற்றும் பிரபாகரனின் உரைகளை மொழிபெயர்த்த குமார் பஞ்சரத்னம் எனும் ஜார்ஜ் இருவரும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததால் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. அப்போது ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸவும், அவரது இளைய சகோதரர் கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஸ தலைமை வகித்தார். எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்காவிடமிருந்து கோட்டாபய ராஜபக்ஸ பெரும் அழுத்தத்தை சந்தித்தார். அமெரிக்க குடியுரிமையையும் கொண்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸ, பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க பிரதிநிதிகளிடம் எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை. எனினும், இதுதொடர்பான தன்னுடைய கவலைகளை ராணுவ தளபதிகளிடம் மே 14-ஆம் தேதி பகிர்ந்துகொண்டார்," என எழுதியுள்ளார். "இன்னும் எவ்வளவு காலம் இந்த போர் தொடரும் என அவர் கேள்வியெழுப்பினார். இந்த போர் கூடிய விரைவில் வெற்றியுடன் முடிவுற வேண்டும், இல்லையெனில், அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்கொள்வது கடினமாகிவிடும்." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அப்போது கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் சண்டையை தொடர பிரபாகரன் முடிவு மே 16 அன்று, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளின் கடைசி கட்ட பாதுகாப்பையும் அழித்தது. ஜி-11 மாநாட்டில் பங்கேற்றிருந்த நிலையில், இந்த செய்தியை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, விடுதலைப் புலிகளை ராணுவம் வெற்றி கொண்டதாக முன்கூட்டியே அறிவித்தார். விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்கள் தலைவர் குமரன் பத்மநாதன் எனும் கேபி, கோலாலம்பூரில் அதே நாள், "சண்டை இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. எங்களது துப்பாக்கிகளை கைவிடுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்." என தெரிவித்தார். பிரபாகரன் இந்த சண்டையை தொடர முடிவெடுத்ததால், மஹிந்த ராஜபக்ஸவும் குமரன் பத்மநாதனும் இவ்வாறு பேசியதாக தெரிகிறது. விடுதலைப் புலிகள் பல நாட்களாக குளிக்கக் கூட முடியாத அளவுக்கு சண்டை கடுமையானதாக இருந்தது. அவர்களுக்கான உணவுப் பொருட்கள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன. விடுதலைப் புலிகளின் கொரில்லா படையினர் (எதிரிகள் மீது திடீர் தாக்குதல் நடத்துபவர்கள்) சிலர், இலங்கை படையினரால் பிடிக்கப்படக் கூடாது என்பதற்காக, தற்கொலை செய்துகொண்டனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மே 17 அன்று இரவு, விடுதலைப் புலிகளின் கடைசிப் படைகளை 1600 சதுர மீட்டருக்குள் இலங்கை ராணுவம் நெருக்கியது. கடைசியாக உயிருடன் பார்க்கப்பட்டது எப்போது? மே 17 அன்று இரவு, விடுதலைப் புலிகளின் கடைசிப் படைகளை 1600 சதுர மீட்டருக்குள் இலங்கை ராணுவம் நெருக்கியது. இலங்கை ராணுவம் மூன்று புறங்களில் சூழ்ந்திருந்தது. நான்காவது பக்கத்தில், இலங்கை கடற்படை தொடர்ந்து கண்காணித்து வந்த நந்திக்கடல் இருந்தது. மே 17 அன்று விடுதலைப் புலிகளின் பல தளபதிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதையடுத்து, அந்நாள் அந்த அமைப்புக்கு மிகவும் துரதிருஷ்டவசமான நாளாக அமைந்தது. விடுதலைப் புலிகளின் கொரில்லா படையை சேர்ந்த 'எஸ்கே' பின்னொரு நாளில் அளித்த நேர்காணலில், "மே 17 அன்று கடைசியாக பிரபாகரன் உயிருடன் காணப்பட்டார். 6 மணிக்கு பிரபாகரன் இருந்த இடத்தை நான் அடைந்தேன். எங்களுடைய உணவு முழுவதும் தீர்ந்துவிட்டது" என்றார். "நம்பினால் நம்புங்கள், தமிழ் ஈழம் எனும் கனவு சிதைய போகிறது என்பதை உணர்ந்திருந்த போதிலும், பிரபாகரன் மிகவும் சாதாரணமாகவே காணப்பட்டார்." பட மூலாதாரம், Getty Images பிரபாகரனின் மகன் மரணம் அடுத்த நாள், மீதமுள்ள விடுதலைப் புலிகள், ராணுவ முற்றுகையை தகர்க்க முயற்சித்தனர். அதில் அவர்கள் வெற்றியடைந்தனர், ஆனால், 30 நிமிடங்களில் இலங்கை படையினர் மீண்டும் குழுக்களாக இணைந்தனர். இந்த முறை இலங்கை படையின் எதிர் தாக்குதலில், விடுதலைப் புலிகள் படையை சேர்ந்த தளபதிகள் பலரும் பிரபாகரனின் 24 வயது மகன் சார்லஸ் ஆண்டனியும் கொல்லப்பட்டார். ஆண்டனியின் உடலை இலங்கை படையினர் தேடியபோது, அவரிடம் 23 லட்சம் இலங்கை பணம் இருந்ததை கண்டறிந்தனர். 53வது பிரிவின் படைத்தளபதியாக இருந்த கமல் குணரத்ன, அச்சமயத்தில் பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் சூசை தவிர விடுதலைப் புலிகளின் தலைமை பொறுப்பில் இருந்த பலரும் அழிக்கப்பட்டதாக கூறினார். இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரன் குறித்த செய்தி வரும் வரை சண்டை தொடரும் என தெளிவாக கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி (வலதுபக்கம் உள்ளவர்) பிரபாகரன் மரணம் குறித்த செய்தியை பெற்ற குணரத்ன மே 19 அன்று வரை பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ற செய்தி மேஜர் குணரத்னவுக்கு சிறிதும் தெரியவில்லை. இதையடுத்து, நந்திக்கடல் பகுதியின் சேறு நிறைந்த உவர் நீரில் கடுமையான சண்டை வெடித்ததாக இளநிலை அதிகாரி ஒருவர் அவரிடம் தெரிவித்தார். விடுதலைப் புலிகளை சேர்ந்த பலரும் அங்கே சிக்கியிருந்தனர். அவர்களுள் யாரும் ஆயுதத்தைக் கைவிட தயாராக இல்லை. இறுதியில் சண்டை முடிந்து ஒரு மணிநேரம் கழித்து, தான் காத்திருந்த செய்தி குணரத்னவுக்கு கிடைத்தது. தன்னுடைய 'தி கேஜ், தி ஃபைட் ஃபார் ஸ்ரீ லங்கா அண்ட் தி லாஸ்ட் டேஸ் ஆஃப் தமிழ் டைகர்ஸ்' (The Cage, The Fight for Sri Lanka and the Last Days of the Tamil Tigers) எனும் தன் புத்தகத்தில் கார்டன் வெய்ஸ், "கர்னல் ரவிப்ரியா மேஜர் ஜெனரல் குணரத்னவிடம், 'சார், நாங்கள் பிரபாகரனை கொலை செய்துவிட்டோம்'. என கூறினார்," என எழுதியுள்ளார். ஆச்சர்யமடைந்த குணரத்ன, 'உறுதியாக கூறுகிறீர்களா' என கேட்டதற்கு, 'ஆமாம், உறுதியாக,' என பதிலளித்துள்ளார். ஆனால், குணரத்ன இதனை உறுதியாக அறிய விரும்பியதால், கர்னல் லலிந்த கமகேவை சம்பவ இடத்துக்கு அனுப்பினார். சில நிமிடங்களிலேயே கமகேயின் குரல் ராணுவ தொலைபேசியில் ஒலித்தது: 'சார், அது சரியான செய்திதான், பிரபாகரன் தான்.' என தெரிவித்தார். பிரபாகரனின் உடல் கண்டறியப்பட்டது பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜெனரல் சரத் பொன்சேகா முற்றிலும் உறுதிப்படுத்திய பின் குணரத்ன இந்த செய்தியை ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அனுப்பினார். அதற்கு முன்பு, பிரபாகரனின் உடலை கொண்டு வருமாறு படையினரை கேட்டுக்கொண்டார். எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "அந்த சமயத்தில் இலங்கை படையினர் சுமார் மூவாயிரம் பேர் பிரபாகரனின் உடல் கிடத்தப்பட்டிருந்த இடத்தில் திரண்டிருந்தனர். சேறு நிறைந்த ஆழமற்ற நீரில் இறங்கி படையினர் உடலை வெளியே எடுத்தனர்." என குறிப்பிட்டுள்ளா. "பிரபாகரனின் உடலை படையினர் பார்த்த உடனேயே, அவர்கள் வானத்தை நோக்கி சுட ஆரம்பித்தனர். படையினரை ஒருங்குபடுத்த அதிகாரி முயற்சி மேற்கொண்டார், ஆனால் அவரின் வார்த்தைகளுக்கு பயனில்லாமல் போனது." ஜெனரல் பொன்சேகா இந்த செய்தியை அறிந்தபோது இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்தார். பொன்சேகாவிடம் குணரத்ன சிங்கள மொழியில் தொலைபேசியில், 'மஹா எஸ் இவராய்' என்றார், அதாவது, 'பெரியவன் முடிந்து விட்டான்'. அடையாள அட்டை பட மூலாதாரம், Ministry of Defence Sri Lanka படக்குறிப்பு, பிரபாகரனின் அடையாள அட்டை பிரபாகரன் சுமார் 9.15 மணியளவில் இறந்தார். அவருக்கு அப்போது வயது 54. எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "அவருடைய நெற்றியில் பெரிய காயம் இருந்தது, இதனால் அவருடைய தலை இரண்டு பாகங்களாக பிளவுபட்டிருந்தது. அவருடைய வாய் திறந்திருந்தது, அவருடைய கண் மேல் நோக்கி இருந்தது. அவருடைய தாடி வெள்ளை நிறத்தில் இருந்தது." என எழுதியுள்ளார். "குணரத்ன அவருடைய உடலை தொட்ட போது, அது இன்னும் சூடாக இருந்தது. அவருடைய நெற்றி தவிர வேறெங்கும் துப்பாக்கி குண்டு காயம் இல்லை. பிரபாகரன் அப்போது ராணுவ உடையில் இருந்தார். அவருடைய பாக்கெட்டில் தேடியபோது, 001 எனும் வரிசை எண்ணுடன் விடுதலைப் புலிகளின் அடையாள அட்டை கண்டறியப்பட்டது, அந்த அடையாள அட்டை ஜனவரி 1, 2007 அன்று வழங்கப்பட்டது." இதுதவிர, நீரிழிவு மருந்துகள் சிலவும் கண்டறியப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து வாங்கப்பட்ட திராட்சை மணத்துடன் கூடிய லோஷனும் (hand lotion) இருந்தது. அவரின் தலையில் இருந்த காயம் நீல நிற துணியால் மூடப்பட்டிருந்தது. கார்டன் வெய்ஸ் எழுதுகையில், "12.7 எம்எம் தோட்டாவால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்." என குறிப்பிட்டுள்ளார். இலங்கை ராணுவத்தின் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரனின் ராணுவ உடையை கழற்றுமாறு உத்தரவிட்டார். இலங்கை படையினரை தவிர, ராணுவ உடையணிய யாருக்கும் உரிமை இல்லை என்பது அவரின் வாதமாக இருந்தது. பிரபாகரனின் உடல் அடையாளம் காணப்பட்டது நாராயண் சுவாமி எழுதுகையில், "பிரபாகரனின் உடலை அடையாளம் காண கர்னல் கருணா மற்றும் தயா மாஸ்டர் எனும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களை அனுப்புவதாக பொன்சேகா குணரத்னேவிடம் தெரிவித்தார்." என குறிப்பிட்டுள்ளார். "இருவரும் ராணுவ விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அந்த உயிரற்ற உடலை அடையாளம் காண அவர்கள் ஒரு நொடி கூட எடுத்துக்கொள்ளவில்லை." பிரபாகரனின் மரணத்தால் தமிழ் ஈழத்துக்கான ஆயுத போராட்டமும் இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gvrppzdgno
  4. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மானியர்கள் தங்களது நாட்டிற்கான புதிய சட்டதிட்டங்களை உருவாக்கினார்கள் அதி முதலாவது சட்டம் எந்த ஒரு மனிதனது தனிமனித உரிமையையும் எந்தக்காரணத்திற்காகவும் கேள்விக்குட்படுத்த முடியாது என்பது. இன. மத. நிற. தோற்றம். மற்றும் அடையாளங்கள் காரணமாக யாரையும் தனிமைப்படுத்தல் ஆகாது அத்துடன் தாங்கள் போர்க்காலங்களில் எப்படியெல்லாம் தஞ்சம் தேடி அலைந்தோமோ அதே போல வேறு யாரும் தஞ்சம் தடி அலையக் கூடாது..... அப்படித் தஞ்சம் தேடி வரும் மக்களுக்கு ஜெர்மனி தன்னாலான சகல உதவிகளையும் அளிக்கவேண்டும் என அகதிகள் சார்பாக ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதன் அடிப்படையில் தான் பழைய அகதிகள் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது இப்போது அந்த அடிப்படையில் மாற்றங்கள் வந்துள்ளன
  5. ADHD (Attention deficit/hyperactivity disorder) என்பது நியூரோ டெவெலப்மென்டைல் கண்டிஷன் (Neuro developmetal condition) ஆகும். அதாவது மூளையோடு தொடர்புடைய பிரச்னை! ADHD வகைகள் 1. இன்அட்டென்டிவ் (inattentive) - இதில் கவனித்தல் பிரச்னைதான் முக்கிய காரணமாக இருக்கும். 2. இம்பல்சிவ் ஹைப்பர் ஆக்டிவ் (impulsive hyperactive) - இதில் அதிகமான இயக்கம், படப்படப்பு மற்றும் அமைதியின்மை அதிகமாக இருக்கும். மேலும் இவர்கள் யோசிக்காமல் முடிவுகளை உடனுக்குடன் (இம்பல்சிவ் டெசிஷன்ஸ்) எடுப்பார்கள். 3. இரண்டும் கலந்த வகை (combined) - இது கடுமையான பிரச்னை எப்படிக் கண்டறிவது? • கவனம் இல்லாமை • நிலையில்லாத மனது • அதிகப்படியான உடல் இயக்கம் • உடல் சோர்வு மற்றும் படப்படப்பு போன்ற அறிகுறிகளை வைத்து அறியலாம். இவர்கள் எப்போதுமே அசைவில் இருக்கவே விரும்புவார்கள். இவர்களின் மூளைக்கு அது அவசியமாகப்படும். சில நேரங்களில் உடல் அசைவுகள் இல்லாத போது 'ஃபிட்ஜெட் ஸ்பின்னர்' போன்ற பொம்மைகள் இவர்களுக்கு உதவும். அதைக் கையில் வைத்துச் சுற்றிக்கொண்டே இருக்கும்போது உடல் அசைவினில் இருப்பதாக எண்ணி மூளை அமைதியடையும். எந்த வயதில் இது வெளிப்படும்? பொதுவாகக் குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே இதன் அடையாளங்களைக் கண்டறிய முடியும். சிலருக்கு 'ஹைப்பர் ஆக்ட்டிவிட்டி' இல்லாமல் மற்ற அனைத்து அறிகுறிகளும் இருக்கும். இது ADD (Attention deficit disorder) ஆகும். இதை கண்டறிவது சிரமமே! ADHD-ஐ அதீத சுறுசுறுப்பு, படப்படப்பு போன்றவற்றை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் ADD இருக்கும் குழந்தைகள் இயல்பாக இருப்பதுபோலத்தான் தெரிவார்கள். அவர்களுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்துவதில் பிரச்னை வரும். 5 முதல் 6 வருடங்களுக்குப் பிறகே இவர்களுக்கு பிரச்னை இருப்பதே தெரியவரும். ADD - ADHD ADHD மற்றும் ADD-ஆல் வரும் பாதிப்புகள்: ~ எந்த விஷயத்தையும் முறையாக நிர்வகிக்க முடியாது ~ மறதி ~ நேர மேலாண்மை இல்லாமை ~ இடத்தைக் குப்பையாக வைத்திருப்பது ~ பொருட்களை அடிக்கடி தொலைப்பது சிறு வயதிலேயே இந்த ADHD வரும்போது குழந்தைகள் ஹைப்பராகச் செயல்படுவார்கள். குதிப்பது, ஓடுவது என ஓர் இடத்தில் உட்காரவே மாட்டார்கள். முக்கியமாக வகுப்பறையில் உட்கார்ந்து பாடம் கவனிக்கவே முடியாது. அருகில் அமர்ந்திருப்பவர்களைத் தொந்தரவு செய்வார்கள். இதெல்லாம் நாளுக்கு நாள் நடக்கக் கூடிய பாதிப்புகள்! இதைக் கண்டறியாமல் விட்டால் பெரியவர்கள் ஆனபிறகும் தொடரும். ADHD-ஐ சரி செய்ய முடியுமா? இந்த ADHD-ஐ சரி செய்ய முடியாது. ஆனால், அதைச் சமாளித்து அதோடு ஒன்றிணைந்து வாழ முடியும். சீக்கிரமே கண்டறிந்தால் அதிகமாகாமல் தடுக்க முடியும். இதைப் பெரியவர்களாக இருக்கும்போது கண்டறியும் பட்சத்தில் அவர்களின் தன்னம்பிக்கை, வாழ்க்கைத் தரம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. மருத்துவரிடம் ஆலோசித்து, பிரச்னை எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அதைச் சமாளிக்கும் வழிகளைக் கற்றுக்கொண்டால் நிம்மதி பிறக்கலாம். இவர்களை வழிநடத்த, தேவையானபோது நினைவூட்ட எனச் சில செயலிகளும் இப்போது உள்ளன. இதனால் அவர்களின் நிர்வகிப்பு திறன் மற்றும் நேர மேலாண்மை மேம்படும். ADHD இருப்பவர்கள் ஒரு மருத்துவரை அணுகுவது அவசியமா? சுயமாகவே சமாளிக்க முடியுமா? முதலில் நமக்கு உண்மையாகவே ADHD இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டும். சில சமயங்களில் சிலர் உண்மையாகவே அதீத ஆற்றல் கொண்ட குழந்தையாகக் கூட இருக்கலாம். இதை மனநல மருத்துவர் அல்லது உளவியலாளர்களால் மட்டுமே கண்டறிய முடியும். இதைக் கண்டறிந்த பின்னரே பாதிப்பின் அளவும் நமக்குத் தெரிய வரும். ஏனென்றால், இந்த ADHD அனைவருக்கும் ஒரே அளவில் இருக்காது. குறைவான, நடுத்தரமான மற்றும் அதிகமான என மூன்று அளவுகளில் இது இருக்கும். அதிகமான அளவு இருப்பவர்களுக்குக் கண்டிப்பாக மருந்து மற்றும் மாத்திரைகளின் தேவை இருக்கும். இவர்களைப் பெற்றோர்களால் தனியாகச் சமாளிக்க முடியாது. நடுத்தர அளவு பாதிப்புள்ளவர்கள் மருத்துவரை அணுகி, அதைச் சமாளிப்பதற்கான வழிகளைத் தெரிந்துகொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும். குறைவான அளவு பாதிப்புள்ளவர்கள் பெற்றோரின் உதவியோடு இதைச் சமாளிக்க முடியும். இதைப் பற்றி நிறையப் புத்தகங்களும் உள்ளன. அவற்றை வாசித்து பிரச்னை குறித்துத் தெரிந்துகொண்டால், இந்த குறைவான அளவு ADHD பாதிப்பை நீங்களே சமாளிக்கலாம். ஆனால் பாதிப்பு அளவைக் கண்டறிய மருத்துவரின் உதவி அவசியமானது. இவர்களால் தினசரியாக ஒரு வழக்கத்தை (Routine) பின்பற்ற முடியுமா? இவர்களுக்குச் சொந்தமாக ஒரு வழக்கத்தை உருவாக்கி அதைப் பின்பற்றுவது கடினமாகவே இருக்கும். வெளியிலிருந்து ஒரு நபர் உதவி, இவர்களை வழிக்குக் கொண்டுவர வேண்டும். அதேபோல் அது கடினமான வழக்கமாக இல்லாமல் எளிமையாக, பின்பற்றக் கூடிய ஒன்றாக இருக்கவேண்டும். இவர்களுக்கு அதிகப்படியான திட்டமிடல் தேவைப்படும். எளிமையான வழக்கம், முன்கூட்டியே திட்டமிடல் மற்றும் ஒருவரின் உதவி என இந்த மூன்று விஷயங்களும் இருந்தால் இந்தப் பிரச்னையை சமாளிப்பது அவர்களுக்கு எளிதாகிவிடும். மனநல மருத்துவர் மற்றும் விளையாட்டு சிகிச்சை நிபுணர் மீனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நண்பர்கள் எவ்வாறு உதவலாம்? நண்பர்கள் முதலில் இவர்களுக்கு என்ன பிரச்னை உள்ளது, எதனால் வருகிறது, எப்படியெல்லாம் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து, புரிந்துகொண்டால் இவர்கள் கொஞ்சம் ஆதரவாகவும் ஆறுதலாகவும் உணருவார்கள். மேலும் இவர்கள் மறக்கும் விஷயத்தைக் கடுமையான முறையில் வெளிப்படுத்தாமல் மெதுவாக நினைவுபடுத்த வேண்டும். சின்னசின்ன விஷயங்களில் நண்பர்களும் சுற்றியிருக்கும் உறவினர்களும் ஆதரவாக இருக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக இவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்." விரிவாக எடுத்துரைத்த மருத்துவர் மீனா, நம்முடன் அவருடைய தனிப்பட்ட கதையையும் பகிர்ந்துகொள்கிறார். "என்னுடைய மகனுக்கும் இந்த ADHD உள்ளது. அதனால்தான் நான் இந்த துறைக்கே வந்தேன். என் மகனுக்கு உட்கார்ந்து ஒரு பாடம் படிப்பது என்பதே கடினமாக இருந்தது. அதைப் புரிந்துகொண்டு, அவன் ஓடி ஆடி விளையாடும் போது அந்த பாடத்தை அவனுக்கு வாசித்துக் காட்டி அவனைப் படிக்க வைத்தேன். அப்படி படித்துத்தான் அவன் ஸ்கூல் டாப்பர ஆனான். அவனுக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் இருப்பது தெரிந்து அதற்கும் ஊக்கப்படுத்தினோம். உடல் இயக்கம் இவர்களுக்கு ரொம்ப முக்கியம். என் பையன் ஒரு மாரத்தான் ஓடும் அளவுக்குச் சிறந்து விளங்குகிறான். கல்லூரியில் கூட உடற்பயிற்சி உடலியல்தான் படிக்கிறான். அவன் இப்போது இந்த ADHD-ஐ பிரச்னையாக பார்க்கவில்லை. அதை தன் பலமாகக் கருதுகிறான்!" என்றார் பெருமையாக! ADHD: இது பெரிய பிரச்னையா? எப்படிக் கண்டறிவது? மருத்துவ உதவியில்லாமல் சமாளிக்க முடியுமா? | Explained | A complete guide on ADHD and how to control it - Vikatan
  6. 🤣............ ஏற்கனவே அல்வாயன் அலவாங்கு, கத்தியுடன் நிற்கின்றார்...............🤣. தொடர்பான நிகழ்வொன்றை எழுதும் போது பதிந்து விடுகின்றேன், ஏராளன்.
  7. பதியப்பட காத்திருக்கிறது அண்ணோய்....
  8. ஜப்பான் அமெரிக்காவின் நவீன காலனி. ஜப்பான் அதன் யாப்பை கூட மாற்ற முடியாது அமெரிக்காவின் அனாமதேய அனுமதி இன்றி. ஜப்பான், யாப்பின் படி, ஒரு அரசின் மிகவும் முக்கிய இறைமை அம்சமான யுத்தத்தை பிரகடனப்படுத்த அல்லது பாவிக்க முடியாது, யாப்பின் 9 வது சரத்தின் படி அதை நடைமுறைப்படுத்துவது, ஜப்பான் இடம் தாக்குதல் திறன், வசதிகள் இல்லை. ஜப்பான் தாக்கப்பட்டால், பாதுகாக்கும் வசதிகளே இருக்கிறது. அதனால் தான் ஜப்பானின் படை self defence force எனப்படுவது. இதையும் கொண்டு தான் ஜப்பானின் பொருளாதார வளச்சியை அமெரிக்கா 80 களில் முடக்கியயது பிளாசா ஒப்பந்ததை ஜப்பானை வலொற்காரமாக ஏற்கவைத்து. அதை போலே, இப்பொது சீனாவுக்கு செய்ய முயற்சிக்கிறது, அனல் சீனா ஜப்பான் அல்ல, (அதனால், இப்போது சீனாவுடன் யுத்தத்தை தூண்ட அமெரிக்கா முயற்சிக்கிறது இஸ்ரேல் ஐ கொண்டு.) அனால் இது அமெரிக்காவின் / மேற்றுகின் பரம்பரியங்களில் ஒன்று. இதையும் அடிப்படையாக கொண்டு தான் ஜப்பானின் பொருளாதார வளச்சியை அமெரிக்கா 80 களில் முடக்கியயது பிளாசா ஒப்பந்ததை ஜப்பானை வலொற்றுகாரமாக ஏற்கவைத்து. அதை போலே, இப்பொது சீனாவுக்கு செய்ய முயற்றசிக்கிறது, அனல் சீனா ஜப்பான் அல்ல, அதனால், இப்போது சீனாவுடன் யுத்தத்தை தூண்ட அமெரிக்கா முயற்சிக்கிறது இஸ்ரேல் ஐ கொண்டு. அனால் இது அமெரிக்காவின் / மேற்றுகின் பரம்பரியங்களில் ஒன்று எனது நினைக்கு வரும் சிறிய உதாரணம் GPS. GPS இல் சீன ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து பாங்கெடுத்ததை தடுத்தது அமெரிக்கா. இது சசுருக்கமாக . சீன அதன் பங்குக பணத்தை ஐரோப்பிய நாடுகள் இப்போதும் சீனாவிடம் திருப்பி கொடுக்கவில்லை. பின் சீன, தன பைடு செய்மதி வழிகாட்டி திட்டத்தை விருத்தி செய்ய தொடகங்கியது, அப்போது அமெரிக்கா அது தாக்கி அழிக்கப்படும் என எச்சரித்தது. அதனால் , சீன முதலில் (2007) புவியில் இருந்து செய்மதியை சுட்டு விழுத்தும் ஏவுகணையை செய்து, பகிரங்கமாக அதன் செயல் இழந்த செய்மதியை சுட்டு விழுத்தி, அமெரிக்காவை எச்சரித்த பின்பே, பைடு செய்மதி வழிகாட்டி திட்டத்தை விருத்தி செய்ய ஆரம்பித்தது.
  9. "ஜேர்மனி அமெரிக்காவின் மடிக்குள் இருக்கும் நாடு" என்பதை விட, மேற்குலகின் பாரம்பரியத்திற்குள் இரண்டாம் உலகப் போர் முடிவின் பின்னர் மீள வந்து இணைந்து கொண்ட, அதனால் பலன் பெற்ற நாடு என்பது தான் சரியாக இருக்கும். இதற்கு ஒரு காரணம், மேற்கு, கிழக்கு என பிரிந்திருந்த வேளையில், மேற்கினை நன்கு அமெரிக்காவும் மேற்குலகும் உதவி செய்து வளர்த்தன. வெளியே இருந்து அகதிகளாக வந்தோர் கூட, கிழக்குப் பாதியில் சற்றுத் தங்கி, பின்னர் பளபளப்பாக இருந்த மேற்கு ஜேர்மனிக்குள் தான் நிரந்தரமாக வாழ வந்தார்கள் - இந்த சொந்த அனுபவத்தை மறந்தவர்கள், நித்தி புகைக்கும் அதே வஸ்துக்களைப் புகைக்கும் ஆட்களாக இருப்பார்கள் என சந்தேகிக்கிறேன்😎. ஜேர்மனி, குடியேறிகளை வரவேற்கும் நாடாகச் செய்த ஒரு தவறு, தன்னுடைய ஜனநாயகப் பாரம்பரியங்களோடு ஒத்து வராத, ஒன்றிணைய விரும்பாத மக்களையும் பிரஜைகளாக ஏற்றுக் கொண்டமை தான். அது புதிதாக வந்த இஸ்லாமியர்களாகவும் இருக்கலாம், சில தசாப்தங்கள் முன்னர் வந்த இலங்கையர்களாகவும் இருக்கலாம்!
  10. சுமந்திரன் அவர்கள் தமிழர்களின் ஏகோபித்த அபிமானமும் ஆதரவும் உள்ள கட்சியில் சுயலாபத்திற்காக இணைந்து கொண்டவர். அவர் அக்கட்சியினை வளர்த்தெடுக்கவில்லை. அதற்காக பாடுபடவும் இல்லை. மற்றவர்கள் கட்டி பாதுகாத்த கோட்டையில் சுலபமாக புகுந்த கருநாகம் சுமந்திரன் என்பவர். சீமான் அப்படியல்ல.அவர் உருவாக்கி வளர்ந்துவரும் கட்சி அது.எந்த/எவர் முதலீடும் இல்லாமல் கொள்கை ஒன்றை மட்டும் வைத்து முன்னேறி வரும் கட்சி அது. வாக்குக்கு பணம் செலுத்தாத கட்சி அது. கட்சி கூட்டங்களுக்கு பணம் செலுத்தி மக்களை கூட்டாத கட்சி அது. 😃சும்மா எதற்கெடுத்தாலும் சொப்பன சுந்தரி விஜயலச்சுமி மாதிரி உளறப்படாது.🤣😂
  11. ரயில்வே பாலத்தை விட அதற்கு நடந்து செல்லும் ஒற்றையடி மலைப்பாதை மிக அருமை. நானு ஓயாவில் இருந்து எல்ல வரை ரயிலில் தொங்கி கொண்டு பயணம் சுக அனுபவம்.
  12. 8) திரு திருமதி செல்வராசா ராணி குடும்பம் (சுழிபுரம் கிழக்கு) சுவிஸ் 35000 ரூபா வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர். திரு திருமதி செல்வராசா ராணி குடும்பத்தினருக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
  13. கூடியம் குகைகள் ( vikatan ) இதுநாள்வரை நாம் படித்துக்கொண்டிருந்த மானுட வரலாறு என்பது, ஆப்பிரிக்காவில் இருந்துதான் தொடங்குகிறது. 60 லட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு குரங்கு இனத்தின் தொடர்ச்சிதான் மனிதர்கள். படிப்படியாக பரிணாமம் அடைந்து, நிமிர்நிலை மனிதர்கள் உருவானார்கள். வாலற்று, நிமிர்ந்து நின்ற உலகின் முதல் மானுடன் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகவும், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அவன் பிற நிலப்பரப்புகளுக்குப் பரவினான் என்றுமே இதுவரை படித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டியிருக்கிறது. இந்தக் கற்குகைகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த மனிதர்கள் பயன்படுத்திய ஏராளமான கற்கருவிகள் மீட்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் நிலவியல் ஆராய்ச்சியாளர்களும், இந்திய தொல்லியல் துறையும் இதன் பழைமையை உறுதி செய்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பல்வேறு அறிவியல், வரலாற்று ஆய்விதழ்கள் இதுகுறித்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. லெமூரியா, கீழடி என நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிற அத்தனை ஆதார வரலாறுகளுக்கும் முந்தைய, பரிணாமத்தின் தொடக்கநிலை மனிதர்கள் வாழ்ந்த அந்தக் குகைகள், தமிழ் நிலத்தின் தொன்மைக்குச் சான்றுசொல்லி அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருக்கின்றன. கூடியம் குகைகள் உலகில் எழுத்துச்சான்றுகள் தோன்றுவதற்கு முந்தைய வரலாற்றை, 'தொல் பழங்காலம்' அல்லது 'பழங்கற்காலம்' என்பார்கள். எழுத்துச்சான்றுகள் தோன்றிய பிறகான காலம் வரலாற்றுக்காலம். கற்காலத்துக்கும் வரலாற்றுக்காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவில் பல்வேறு படிநிலைகளை எட்டினார்கள். உலோகங்களின் பயன்பாட்டை உணர்ந்து பயன்படுத்தினார்கள். மனிதர்கள், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 'Paleolithic Age' எனப்படும் கற்காலத்தின் தொடக்கத்தில்தான் தங்கள் அறிவைப்பயன்படுத்தத் தொடங்கினார்கள். கைகளில் கிடைத்த கற்களை எரிந்து விலங்குகளை வீழ்த்துவதில் இருந்த சிக்கலைக் கலைய, அவற்றைக் கூர்மையாகச் செதுக்கி, கோடரிகளாக மாற்றிப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதுதான் மானுட குல வரலாற்றில் நிகழ்ந்த மிகமுக்கிய பரிணாமம். அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கும் கருவிகளைக் கொண்டே அப்பகுதியில் வாழ்ந்த மனித இனம் பற்றியும் காலம் பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் இடங்களில் செய்யப்பட்ட அகழ்வுகளில் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தின் கொசஸ்தலை ஆற்றைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள், அல்லிக்குழி மலைப்பகுதிகளில் செய்யப்பட்ட அகழ்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதை ஆங்கிலேயர்களின் ஆராய்ச்சிகளும், இந்திய தொல்லியல் துறையின் ஆராய்ச்சியும் உறுதி செய்திருக்கிறது. ஆதிமனிதர்களின் வாழ்விடங்கள் அமைந்துள்ள அல்லிக்குழி மலையில், இன்னும் பல ஆயிரம் கற்கருவிகள் மறைந்து கிடக்கின்றன. சாதாரணமாக நாம் கொஞ்சம் கூர்ந்து நோக்கிக் கற்களைத் துளாவினாலே ஐந்தாறு கற்கருவிகளைக் கண்டெடுத்து விடமுடிகிறது. கூடியம் குகைகள் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் பிரதான சாலையில், 18 கி.மீ தொலைவில் உள்ளது சித்தஞ்சேரி. இங்கிருந்து, பிளேஸ்பாளையம் செல்லும் இடதுபுறச் சாலையில் திரும்பி 12 கி.மீ பயணித்தால் மரங்களடர்ந்த 'கூடியம்' என்ற கிராமம் வரும். இதுதான் அல்லிக்குழி மலையின் வாசல். கூடியம் கிராமமே அமானுஷ்யமாக இருக்கிறது. பிரதான சாலையில் இருந்து ஊருக்குள் நுழைய கரடுமுரடான மண்சாலைதான். உள்ளே 20 வீடுகள் மட்டுமே உள்ளன. பெரும்பகுதியாக இங்கு இருளர் பழங்குடிகள் வசிக்கிறார்கள். இந்தக் கிராமத்திலிருக்கும் வீடுகளே மிகப்பழைமையானவையாக இருக்கின்றன. வட்ட வடிவத்தில் புல்கூரை வேயப்பட்டு மண்ணால் பூசப்பட்ட அந்த வீடுகளின் தன்மையே நம்மை தொன்ம வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன. கூடியம் கிராமம் வரைதான் வாகனங்கள் செல்லும். அதற்குமேல் நடந்துதான் போகவேண்டும். 6 கிலோ மீட்டர். இருபுறமும் செடிகளடர்ந்த ஒரு ஒற்றையடிப்பாதை. தொடக்கத்தில், சற்று அகலமாக இருக்கிறது. கீழே முனை நீட்டி நிற்கும் சரளைக்கற்கள். ஒரு கிலோ மீட்டரில் இந்தப் பாதை முடிவுக்கு வருகிறது. எரிமலை வெடித்துக் கொதித்தெழுந்து வந்து உறைந்து நிற்பதைப் போல ஆங்காங்கே பெரிய பெரிய கற்குவியல்கள்... பார்க்கவே பிரமிப்பாக இருக்கின்றன. இடையிடையே கூழாங்கற்கள் பொதிந்திருக்கின்றன. கூடியம் குகைகள் பரபரப்புக்குத் தொடர்பில்லாத, உறைந்த நிலப்பரப்பில் நிற்பதுபோன்ற உணர்வு... அந்த இடமே அமானுஷ்யமாக இருக்கிறது. மனதை மெல்லிய அச்சம் கவ்வுகிறது. அந்த இடத்திலிருந்து தொடங்குகிறது, சாகசப் பயணம். செடிகளை விலக்கி, விலக்கி மனிதர்கள் நடந்த தடமறிந்து கால் வைக்க வேண்டும். ஓரடி விலகினாலும் முற்கள் கால்களைக் கோர்த்துக்கொள்கின்றன. 'பின்செல்...', 'பின்செல்...' என்று கால்களைத் தள்ளுகின்றன கூர்முனைகொண்ட சரளைக்கற்கள். கூடியம் குகைகள் காட்டுப்பன்றிகள், முயல்கள், பாம்புகளின் தடங்கள் ஆங்காங்கே அச்சமூட்டுகின்றன. வளைவுகளும் நெளிவுகளும் கொண்ட, நுழைந்தும் தவழ்ந்தும் செல்லக்கூடிய ஒற்றைக்காலடிப் பாதையில் 4 கிலோ மீட்டர் நடந்தால் முதல் குகை கண்முன் விரிகிறது. உயர்ந்த மலையிலிருந்து ஒரு பகுதி, கிருஷ்ணருக்குக் காளிங்கன் விரித்த தலைபோல அகலக் குவிந்து நிற்கிறது. 200 பேர் வசதியாக அமரலாம்; உண்ணலாம்; உறங்கலாம். எங்கும் காணவியலாதப் பாறை அமைப்பு. சரளைக்கற்களை உள்ளே வைத்து மண் கொண்டு இறுக்கிப்பூசி இயற்கை நெய்த விசித்திர மலை. மேலே ஆங்காங்கே நீட்டிக்கொண்டிருக்கிற கற்கள் பெயர்ந்து தலையில் விழுந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. ஆனால் 13 கோடி ஆண்டுகளாக அதன் நிலையிலேயே நிற்கின்றன கற்கள். கோடரி கொண்டு வெட்டினாலும் சிதையாத உறுதி. குகையின் முன்னால் சாம்பல் குவிந்திருக்கிறது. நம் மக்கள் சமைத்துச் சாப்பிட்ட தடம். 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மூதாதைகளுக்குக் குடிலாக இருந்த இந்தக் குகையின் மகத்துவம் அறியாமல் குகையெங்கும் தங்கள் பெயர்களை எழுதிவைத்து சிதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் இளைஞர்கள். குகையின் ஒரு பகுதியில் மத்திய தொல்லியல்துறை அகழ்வு செய்த தடம் தெரிகிறது. தன் நண்பர்களோடு குகையைக் காண வந்த, பாறை ஓவிய ஆராய்ச்சியாளர் காந்திராஜன், இந்தக் குகை குறித்து சிலாகித்துப் பேசினார். கூடியம் குகைகள் "மானுட வரலாற்றையே மாற்றி எழுதும் அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொல்சின்னம் இது. உலகின் மிகத் தொன்மையான இடங்களில் ஒன்று. மானுட வரலாறு என்பது, அவர்கள் பயன்படுத்திய கருவிகளைக் கொண்டே வகைப்படுத்தப்படுகிறது. முதல் கற்காலம் என்பது, 5 லட்சம் ஆண்டுகள் முதல் 2.50 லட்சம் ஆண்டுகள்வரை. இந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களை 'ஹோமினாய்ட்' (Hominid) என்று அழைப்பார்கள். இவர்கள், கற்களை ஆயுதமாகப் பயன்படுத்திய முதல் தலைமுறை மனிதர்கள். கென்யா, கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் கிடைத்துள்ளன. அதே காலக்கட்டத்தைச் சேர்ந்த கற்கருவிகள் இந்தக் குகைகளிலும், அருகில் கொற்றலை ஆற்றுப்படுகையில் உள்ள அதிரம்பாக்கம் கிராமத்திலும், பல்லாவரத்திலும் கிடைத்துள்ளன. 'கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் உலகெங்கும் பரவினார்கள்' என்பதுதான் இதுவரை நம்மிடமிருக்கும் தியரி. ஆனால். இந்தக் குகையில் கிடைக்கும் தரவுகள், 'இங்கிருந்தே ஆப்பிரிக்கா போன்ற இடங்களுக்கு நகர்ந்திருக்க வேண்டும்' என்ற புது வரலாற்றை உருவாக்குகின்றன. அல்லது ஆப்பிரிக்காவில் மனிதர்கள் உருவான அதேக் காலக்கட்டத்தில் இங்கும் மனிதர்கள் உருவாகியிருக்க வேண்டும். தொல் பழங்காலத்தில் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் ஒரே கண்டமாக இருந்ததாக நிலவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அதன்படிப் பார்த்தால் இந்தக்கருத்து இன்னும் வலுப்படும். தற்போது டி.என்.ஏ சோதனைகள் நடந்து வருகின்றன. அதன் முடிவுகள் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்க்கும்..." என்கிறார் அவர். கூடியம் குகைகளை முதன்முதலில் கண்டறிந்து உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தவர், ராபர்ட் ப்ரூஸ் பூட் (Sir.Robert Bruce Foote). 'தொல்லியலின் தந்தை' என்று இவரைக் கொண்டாடுகிறார்கள். பிரிட்டிஷ் இந்தியாவில் நிலவியலாளராகப் பணியாற்றிய ப்ரூஸ்க்கு, தென்னிந்தியாவில் நிலக்கரி, கனிம வளங்கள் உள்ள பகுதிகளைக் கணக்கெடுக்கும்பணி தரப்பட்டது. தொல்லியல் ஆய்வுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட ப்ரூஸ், பல்லாவரம் பகுதியில் ஆய்வுசெய்தபோது, உலகின் ஆதி தொல்குடி பயன்படுத்திய கல் ஆயுதம் ஒன்றை கண்டுபிடித்தார். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் வட்டாரத்தில் ஆய்வுசெய்தபோது, இந்தக்குகையின் வடிவம் அவரை ஈர்த்தது. அல்லிக்குழி வனப்பகுதியில் தங்கி தீவிரமாக ஆய்வுசெய்து, 'தொல் மனிதன் வாழ்ந்த இடம் இதுதான்' என்பதையும் இந்தக்குகை, 'டைனோசர்கள் வாழ்ந்த ஜூராசிக் காலத்தைச் சேர்ந்தது' என்றும் பதிவு செய்தார். இது நடந்தது 1864-ல். ஆனால் பிரிட்டிஷ் இந்திய அரசு, தொடர்ச்சியாக இதுகுறித்து ஆய்வு செய்ய விரும்பவில்லை. வி.டி.கிருஷ்ணசாமி, பீட்டர்சன், எச்.டி.சங்காலியா போன்ற தொல்லியாளர்கள் தன்னார்வத்தில் சிறுசிறு ஆய்வுகளை மேற்கொண்டார்கள். அதன்பிறகு, 1962 முதல் 1964 வரை, மத்திய தொல்லியல்துறை சார்பில், ஆர். டி. பானர்ஜி இந்தக் குகையின் ஒரு பகுதியை அகழ்ந்து ஆய்வுசெய்தார். அதில், ஏராளமான கல் ஆயுதங்கள் கிடைத்தன. கூடியம் குகைகள் அவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்து, 'இது தொல்மனிதர்கள் பயன்படுத்திய குகைதான்' என்பதை உறுதி செய்தது மத்திய தொல்லியல் துறை. கற்கருவிகளின் பழைமையும் உறுதி செய்யப்பட்டது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள் 'சென்னைக் கோடரிகள்' (மெட்ராஸ் ஆக்ஸ்) என்று வகைப்படுத்தபட்டன. மேலும் அருகில் உள்ள பூண்டி நீர்தேக்கம் அருகே ஒரு அருங்காட்சியகம் அமைத்து மாநில தொல்லியல்துறை அவற்றையெல்லாம் பாதுகாக்கிறது. இந்தியாவிலேயே பழங்கற்கால அகழ்வுப் பொருள்களைக் கொண்டிருக்கும் ஒரே அருங்காட்சியகம் இதுதான் என்கிறார்கள். ஆனால், குகையை கைவிட்டுவிட்டது மத்திய தொல்லியல் துறை. மாநில அரசும் இதில் ஆர்வம் காட்டவில்லை. வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது. வனத்துறை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, எளிதில் செல்லவியலாதவாறு கட்டுப்பாடுகளை விதித்துவிட்டது. பத்தோடு பதினொன்றாகிப் போனது இந்த மலையும் குகையும். பாலித்தீன் குப்பைகளாலும், மதுப்பாட்டில்களாலும் நிறைந்திருக்கிறது குகை. குகைக்கு மேலே கரடுமுரடான பாறைகளின் வழி ஏறினால், நடுவில் அழகிய ஒரு சுனை. எக்காலமும் இதில் நீர் வற்றுவதேயில்லையாம். அடர்மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் அருந்த சுவையாக இருக்கிறது. அதைக்கடந்து மேலே ஏறினால், உலகின் ஒரு அரிய நிலக்காட்சி கண்முன் விரிகிறது. நான்கு புறமும் பச்சை... எதிரில் புதர்களால் மறைந்துபோன ஒரு பிரமாண்ட குகையின் தோற்றம். ஒரு சிறுகோடாக மனிதத்தடம் தெரிகிறது. மேலே விதவிதமான கற்கள். எல்லாம் கனிமங்கள். நான்கைந்து வண்ணங்கள் கொண்டவை, சுட்ட செங்கலைப் போல செக்கச் சிவப்பாக இருப்பவை, பளீரென்ற வெள்ளைக்கல் என திறந்தவெளிக் கண்காட்சியைப் போல இருக்கிறது. ஆங்காங்கே நுனி கூராகவும், அடி கனத்தும் காணப்படும் கோடரிக்கற்கள். லேசாக பட்டாலே கிழித்துவிடும் அளவுக்கு கூராக்கப்பட்ட சிறு சிறு கல் ஓடுகள்... என ஒரு கல்லாயுதத் தொழிற்சாலை போலவே இருக்கிறது. "உண்மைதான். இதை 'கல்லாயுதத் தொழிற்சாலை' என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சாதாரணமாக கீழே குனிந்தபடி நடந்தால் பத்து கோடரிகள், ஐந்து கிழிப்பான்களை கண்டுபிடிக்கலாம். கூடியம் குகைகள் இந்த மாதிரிப் பாறைகள் தமிழகத்தில் வேறெங்கும் இல்லை. இந்த மலைகளும், குகைகளும் எரிமலை வெடிப்பில் உருவாகியிருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நிலவியலாளர்கள், பெருமழைக்காலத்தில் ஏற்பட்ட தொடர் வெள்ளப்பெருக்கின் விளைவாக பாறைகள் திரண்டுவந்து இறுகியே குகைகளும் கற்களும் மலையும் உருவானது என்று தீர்க்கமாக கண்டறிந்து பதிவு செய்திருக்கிறார்கள். வெறும் கல்லை விட்டெரிந்து விலங்குகளை வேட்டையாடப் போராடிய மனிதன், அறிவு விருத்தியடைந்து கல்லைச் செதுக்கி, கூராக்கி ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியது ஒரு முக்கியமான பரிணாம வளர்ச்சி. தங்களுக்குத் தேவையான ஆயுதங்களைச் செய்யும் கற்கள் இங்கே கிடைப்பதால்தான் இந்தப்பகுதியை தங்கள் வாழிடமாக தொல்மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். இதன் முக்கியத்துவம் நமக்குப் புரியவில்லை. அல்லிக்குழி மலையில் 16 குகைகள் இருப்பதாக பிரிட்டிஷ் குறிப்புகளில் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இரண்டு குகைகளுக்குத்தான் நாம் செல்லமுடிகிறது. அந்தக் குகைகளையும் கண்டறிந்து, ஆய்வு செய்தால் இன்னும் பல ஆதாரங்கள் கிடைக்கும்..." என்கிறார் ரமேஷ் யந்த்ரா. சென்னை ஓவியக்கல்லூரியில் படித்த ரமேஷ், கூடியம் குகைகள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். அந்தப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவில், குரும்படப் பிரிவில் திரையிடப்பட்டது. அதன்பிறகே ஊடகங்கள் இந்தக் குகைகளை ஏறெடுத்துப் பார்த்தன. இன்றும் தீவிரமாக இந்தக்குகைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார் ரமேஷ். முதல் குகையிலிருந்து, இரண்டாவது குகைக்குச் செல்லும் பாதை இன்னும் சவாலானது. மிகவும் குறுகலாகவும் முற்கள் அடர்ந்ததாகவும் இருக்கிறது. விதவிதமான பூரான்கள், பாம்புகள், சிலந்திகள், தேள்கள், செய்யான் போன்ற ஆபத்தான பூச்சிகள் ஊர்ந்து பீதி கிளப்புகின்றன. வழியில் பெரிய உருண்டைக்கல். மஞ்சள், குங்குமமிட்டு அதை வழிபடுகிறார்கள், கூடியம் மக்கள். கோழி அறுத்துப் பலியிட்டதற்கான சான்றுகள் தெரிகின்றன. அதைக்கடந்து, நடந்தால் பிரமாண்டமான இரண்டாவது குகை. 500 பேர் வசதியாகத் தங்கலாம். அகன்று விரிந்து, குடை மாதிரி நிற்கிறது. ஆங்காங்கே நீர் சுரந்து சொட்டுச்சொட்டாக வழிகிறது. ஒரு சூலாயுதம் நட்டு, அம்மன் சிலையை வைத்து வழிபடுகிறார்கள். கூடியம் குகைகள் - மணாச்சியம்மன் மணாச்சியம்மன் என்கிறார்கள். அவ்வப்போது வந்து கிடா வெட்டி பூஜை போடுவார்களாம். ஆனால், மலையின் அமைப்பும், அந்த நிலக்காட்சியும் பிரமிப்பூட்டுகின்றன. நம் மூதாதைகள் நடந்து திரிந்த அந்தத் தடத்தின் நிற்க சிலிர்ப்பாக இருக்கிறது. சுற்றிலும் அடர்ந்த காடு. பாறைகளில் கண்படும் இடமெல்லாம் தேன்கூடுகள். தேனிக்களின் ரீங்காரமும், தேன்கூடுகளில் அலகு நுழைந்து உரிஞ்சத் துடிக்கும் தேன்கிளிகளின் குதியாட்டமும் அந்த சூழலை வாழ்வின் உன்னதமான தருணமாக்குகின்றன. இந்த மலையின் தொடர்ச்சியாக, உயர்ந்து நிற்கிற கூழாங்கல் மலைகள் அதிசயமாக இருக்கின்றன. அடுத்த குகைக்கு நடக்கும் முயற்சியை தேனிக்களும், விதவிதமான பூச்சியினங்களும், குத்தீட்டி போல நீட்டி நின்று கொக்கி போல குத்தியிழுக்கும் முட்களும் கைவிடச் செய்கின்றன. தேனீக்களின் சத்தமும், பறவைகளின் ஒலியையும் தவிர ஓர் இறுக்கமான மௌனம் அந்த வெளியைச் சூழ்ந்திருக்கிறது. அங்கு உலவும் அதிசுத்தக் காற்றில் ஆதிமனிதனின் அழியாத ஆன்மா உறைந்திருப்பதை உணரமுடிகிறது. 'ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இண்டியா' நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் குமரகுரு, பல்வேறு நிலவியல் ஆய்வுகளின் முடிவில் இந்தக் குகை 13 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். மத்திய தொல்லியல் துறையில் மேற்கு மண்டல கண்காணிப்பாளராக இருந்த ஆர்.டி.பானர்ஜியும் அதையே கூறியிருக்கிறார். காலங்களைத் தின்று செரித்துவிட்டு சிறிதும் பங்கமின்றி உறுதியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு நிற்கிறது இந்தக்குகை. இந்தக் குகையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அத்திரம்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் உள்ள இந்தக் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தி பப்பு ஒரு அகழ்வாய்வு மேற்கொண்டார். அங்கு 3000 கல்லாயுதங்கள் கிடைத்தன. அவற்றை அமெரிக்காவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்தபோது 16 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெரியவந்தது. இதுபற்றி அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஆராய்ச்சி இதழ்களில் எழுதினார். அதன்பிறகே உலகம் அறிவியல்பூர்வமாக இந்தக்குகையின் பழைமையை உணர்ந்தது. உலகெங்கும் வெளியிடப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட மானுட வரலாற்று ஆராய்ச்சி நூல்களில் இந்தக் குகைகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழில் தொல்லியல் துறை வெளியிட்ட மிகச்சிறிய நூலைத்தவிர இதுபற்றிப் படிக்க எதுவுமே இல்லை. கூடியம் குகைகள் "70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் மனிதக்குடியேற்றம் நடந்தது என்று உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் மைக்கேல் வுட் தெரிவித்திருந்தார். கூடியம் குகைகளும் அத்திரம்பாக்கத்தில் கிடைத்த கற்கருவிகளும் அந்த தியரியை மாற்றுகின்றன. கூடியம் குகைகளைப் போல தமிழகத்தில் ஏராளமான தொன்மையான இடங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஆய்வு செய்தால் வரலாறு மாறும்" என்கிறார் தொல்லியலாளர் சாந்தி பப்பு. "இவ்வளவு பழைமையான இடம் இருக்குன்னு இந்தப் பகுதியில இருக்கிற பலபேருக்குத் தெரியாது. அப்பப்போ வேண்டுதல் வச்சு கிடாவெட்டு நடத்துறதுக்காக குகைக்குப் போறதோட சரி. எப்பவாவது ஒன்னு ரெண்டு பேரு, 'குகை எங்கேயிருக்கு'னு கேட்டு வருவாங்க. இதுவே அமெரிக்காவுலயோ, இங்கிலாந்திலயோ இருந்திருந்தா இதை உலகத்தோட வரலாற்றுச் சின்னமா மாத்தி கண்காட்சியே வச்சிருப்பாங்க. நாம அதை குடிக்கிற இடமா மாத்தி வச்சிருக்கோம். பொழுதுபோக்காக வர்ற பசங்க, குகையில பெயின்ட்ல பேரு எழுதி வச்சுட்டுப் போயிடுறாங்க. நாங்க வாழ்ந்துக்கிட்டிருக்கிற இந்த மண்ணுல உலகத்தோட முதல் மனுஷன் நடந்து திரிஞ்சிருக்கான்னு நினைக்கிறபோதே நெகிழ்ச்சியாயிருக்கு. இதை அரசுகள் பாதுகாக்கணும்..." என்கிறார் இந்தப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் கமலக்கண்ணன். இரண்டாயிரமாண்டு இலக்கியங்களையும் ஆயிரமாண்டு கல்வெட்டுகளையுமே சான்றாகக் காட்டி நம் தொன்மையைப் பேசிக்கொண்டிருக்கிறோம். இதோ, நமக்கு அருகாமையில், தலைநகரலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரலாற்றுச்சான்று இருக்கிறது. அதைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதோடு வரலாற்றை மீட்டிருவாக்கம் செய்ய வேண்டிய பணியை எவரும் முன்னெடுக்கவில்லை. உலகின் முதல் ஆதிப்பெருங்கலை, ஆயுதத் தயாரிப்புதான். கூடியம் மலைப்பகுதி மிகப்பெரிய ஆயுதத் தொழிற்சாலையாக இருந்துள்ளது. குழந்தைகளுக்கு, பெண்களுக்கு, வலது கைப் பழக்கமுள்ளவர்களுக்கு, இடது கையாளர்களுக்கு என வகைவகையாக இங்கே கற்கருவிகள் செய்திருக்கிறார்கள். தகுதிவாய்ந்த கற்களைத் தேர்வுசெய்து சூடாக்கி தட்டிப் பெயர்த்து கைபிடி அகன்றும் முனைப்பகுதி கூர்மையாகவும் அவ்வளவு நுட்பமாக வடிவமைத்திருக்கிறார்கள். அந்த வடிவத்தில் ஏராளமான ஆயுதங்கள் இங்கே கிடக்கின்றன. கூடியம் குகைகள் சில பெரிய கற்களில் ஒருவித குறியீடுகள் இருக்கின்றன. இவை காலம் கிறுக்கியதா, ஆதி மனிதன் கிறுக்கியதா என்று தெரியவில்லை. இன்னும் 10க்கும் மேற்பட்ட குகைகள் இருப்பதாக பதிவுகள் இருப்பதால் எல்லா இடங்களிலும் ஆய்வு செய்தால் ஆதி மனிதனின் எலும்புகள், கிறுக்கல்கள்கூட கிடைக்க வாய்ப்புண்டு. அப்படிக் கிடைக்கும்பட்சத்தில், 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றியது தமிழ்நிலமும் தமிழ்க்குடியும் என்பது வெறும் வார்த்தைகளில்லை... வரலாறு என்பது தெளிவாகும்...! கூடியம் குகைகள் : ஒரு திக் திக் பயணம்! | Know the history and secrets of the Gudiyam Cave - Vikatan
  14. யாழ்ப்பாணத்தில் கோயில்களுக்குக் கோடிக் கணக்கில் செலவிடும் தமிழர்கள் இந்த வரலாற்றுச் சின்னத்தைக் கம்பிகளால் முட்டுக் கொடுத்து வைத்துளனர். மீதியாக இருக்கும் பகுதிகளாவது உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
  15. Vancouver Island Whale Watch Ssenoopdrtmue8iht1tcebpa8l:0trg51h09 7u5t007 ll1e,g1t51sg391 · T002C1 Rocky was "flying" during one of our recent trips! This massive male orca wowed us with a full-on breach, pectoral fins spread wide as he soared through the air! 🐋" 📸 Kohlman
  16. படம் என்ன படம் . ..... அது என்ன செய்யும் உண்மையான அழகைக் காட்டும் . ......அது எங்களுக்குப் பிடிக்காது ......... அது கிடக்கட்டும் விடுங்கோ ............மிகவும் ரசனையான எழுத்து உங்களுடையது . ..... அதில் குறைவில்லாமல் தொடருங்கள் . .......! 😃
  17. தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கபட்ட சீமானுக்கு என்றால் நீதி சாஸ்திரங்கள் எல்லாம் ... சாப்பிட சென்றுவிடும்.
  18. அந்த சிங்களவரே அந்த நாட்டிக்கு வந்தேறு குடி நாளை அங்குள்ள வெள்ளைகள் கறுப்பர் களை தேடி அடிக்கும் போது அவரின் தோல் கடைசி மட்டும் வெள்ளை ஆகாது என்பதை மறந்து ஆட்டம் ஆடுகிறார் .
  19. முழு விமானநிலையத்துக்கும் (ரேமினல்ஸ்)வண்டிகள் உள்புக ஒரேஒரு பாதை. முதலில் உள்ள ரேமினல்கள் கொஞ்சம் கூடுதலான வாகனங்கள் நின்றால் பின்னால் வரும் வாகனங்கள் உள்நுழையவே முடியாது. 2015 இல் கொழும்பில் இருந்து சிட்னி கொழும்பு எயர்ஏசியாவில் மிகக் குறைந்த விலையில் எடுத்திருந்தோம். இரவு 11 மணிக்கு விமானம். அங்கே போனபின் அவுஸ் விசா எங்கே என்றார்கள். அமெரிக்கா புத்தகத்துக்கு விசா தேவையில்லையே. இப்போது புதிய சட்டம் எலக்ரோனிக் விசா எடுக்க வேண்டும்.உடனேயே எடுக்கலாம்.எடுத்ததும் லைனில் நிற்காமல் நேராக இங்கே வாருங்கள் என்றார்கள். போனை நோண்டினால் சரியாக வேலை செய்யவில்லை. பிள்ளைகளுக்கு விபரத்தைச் சொல்லி எடுத்து அனுப்பியிருந்தனர். விமானம் புறப்படும் நேரம் வந்தும் புறப்படுவது போல தெரியவில்லை.இயந்திர பிரச்சனை என்றார்கள்.கடைசியில் இரண்டு மணிபோல கொழும்பு கில்டன் கோட்டலில் சாப்பாட்டு வவுச்சருடன் தூங்கினோம். அடுத்த நாள் இரவு விமானநிலையத்துக்கு பேரூந்தில் கொண்டு போய் விட்டார்கள். அடுத்த நாளும் இதே பிரச்சனை.சனம் கூயா மாயா என்று கத்தி குளறி எதுவும் ஆகவில்லை. மீண்டும் கொட்டல். அடுத்த நாளே ஒரு மாதிரி புறப்பட்டோம். அந்த விமானத்தில் பச்சைத் தண்ணீராலும் பணம் கொடுத்தாலே கிடைக்கும். எந்த ஒரு தமிழனும் விரும்பி பறக்காத விமானத்தில் ரிக்கட் எடுத்த போதே இப்படி ஏதாவது நடக்கலாம் என எண்ணினோம் என்று நையாண்டி பண்ணினார்கள். 2 சொட்டை வாங்கி ஊத்திப் போட்டு நீட்டி நிமிர்ந்து மற்ற சீற்றிலும் படுக்க வேண்டியது தானே.
  20. முதல்வரி சரியாகிக்கொண்டு வருகிறது....இந்த இரண்டாவது வரிதான்.... இதிலை நம்மட பும்பெயர் உறவுகள் 70 வீதம் வரும் ...எல்லாம் கோவில் நேர்த்திதானே....அது சரிகோவில்லை..விக்கிறா மாம்பழக் காசுகள் அர்சாங்கத்திற்கோ ...அல்லது அய்யருக்கோ
  21. வழி நெடுகிலும் பல புதிய உயர்ந்த குடியிருப்புகள் புதுதாகத் தோன்றியிருந்தன. ஏராளமானவை. பல வருடங்களின் முன் கனடாவில் நம்மவர்கள் இருக்கும் பகுதிகளில் இப்படி இருந்தன. இருந்திட்டு வந்து கதை விடையிக்கை ....இலங்கைத் தமிழனை அடிக்கிறது என்றுதான் இருக்கிறியள்.... என்ராலும் ஆரம்பம் நல்லயிருக்கு...உந்த பிளேன் சீற்றுக்கதைதான் ...கொஞ்சம் வயிற்றை கலக்குது
  22. தேர்தலில் மக்கள் நிராகரித்தால் விலகி போகும் வழக்கம் தமிழ்நாட்டுக்கு பொருந்தாதா🤣
  23. சிங்களவன் சுழியன். # புரிஞ்சவன் பிஸ்தா
  24. எனக்குத் தெரிந்த ஒருவர், இளைஞர், பொறுப்பானவர், பார்க்க ஆரோக்கியமாகத் தெரிபவர். அவருக்குத் திடீரென மூளைக்குச் செல்லும் தமனியில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் வரும் நிலை ஏற்பட்டது. அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அடுத்து ஓராண்டில் அவருக்கு மூளைக்கும் முதுகெலும்புக்கும் இடைப்பட்ட பகுதியில் கட்டி வந்தது. அதையும் அறுவை சிகிச்சையால் சரி பண்ணினார்கள். அவருக்கு அதன் விளைவாக பக்கவாதம் வந்தது. அதிலிருந்து மீண்டு வந்ததும் மீண்டும் கட்டி ஏற்பட்டு அது புற்றுநோய் என உறுதிப்படுத்தினார்கள். ஊடுகதிர் சிகிச்சை, வேதிச்சிகிச்சை ஆகியவனவற்றை எடுத்துக் கொண்டு வருகிறார். அவர் மிகவும் மனம் நொந்து போயிருக்கிறார். நானும் செய்தியறிந்து மனம் வருந்தினேன். ஆனாலும் என்னிடம் அவர் சொன்ன ஒரு செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது - மருத்துவர்கள் தன்னை டய்ட் உணவு மேற்கொள்ளச் சொல்லியிருப்பதாகவும், குறிப்பாக மாவுச்சத்தை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியிறுத்தியிருப்பதாகவும் சொன்னார். இது ஒரு முக்கியமான நகர்வு - ரொம்ப காலமாக மருத்துவர்கள் இதை ஏற்கத் தயங்கினார்கள். இருபதாண்டுகளுக்கு முன் என் அப்பா புற்றுநோயால் அவதிப்பட்டு இச்சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட போது மருத்துவர்கள் கொழுச்சத்து அதிகமான மாமிசம், குறிப்பாக மாட்டுக்கறி, காரம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கவும் குறைக்கவும் சொன்னார்களே தவிர மாவுச்சத்துதான் புற்றுநோய் அணுக்களுக்கு தூண்டுதல் அளிப்பது எனும் புரிதல் அவர்களுக்கு இருக்கவில்லை. இன்று மெல்லமெல்ல அந்த இடத்துக்கு மருத்துவர்கள் வந்திருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் இதை அவர்கள் பொதுவெளியில் முன்வைத்து மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும். ஏனென்றால் என் நண்பருக்கு முதலில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டபோதே அவரிடம் டயட் விசயத்தை அறிவுறுத்தியிருந்தால் புற்றுநோயால் முழுக்க பாதிக்கப்பட்டிருக்க மாட்டார். புற்றுநோய் குறித்து atavistic கோட்பாடு ஒன்றுள்ளது - அதாவது இந்த புற்று அணுக்கள் நம் உடலில் ஏற்படும் கடும் அழுத்தத்தால் அணுக்களின் ஆதி நினைவைத் தூண்டப்படுவதால் தோன்றுபவை என்று. ரெண்டரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவியில் உயிர்வளி குறைவாக இருந்த காலத்தில் பெருகியிருந்த ஒற்றை அணு உயிரிகள் காற்றிலி (aneorobic) உயிரிகள் என அழைக்கப்பட்டன. இவை மாச்சர்க்கரையை (குளூகோஸை) உயிர்வளி இன்றி உடைத்து ஆற்றலை உருவாக்கின. ஆனால் உயிர்வளியைக் காற்றில் பெருக்குகிற கிருமிகள் தோன்றி அவை புதுவகையாக (உயிர்வளியைப் பயன்படுத்தி) ஆற்றலை உற்பத்தி பண்ண ஆரம்பித்தன. பழைய ஓரணு உயிரிகள் (உயிர்வளி தேவையற்றவை) அருகிட, அல்லது புதிய வகை கிருமிகளுடன் கலந்து புதுவகையான கிருமிகள் தோன்றிட நம் பிரபஞ்சமே மாறியது. பல்லணு உயிரிகள் தோன்றிப் பெருகி, மனித இனமும் தோன்றிட நமது அணுக்களுக்குள் கிருமிகளின் மரபணுக்கள் உறைந்திருந்தன. இந்த மரபணுவுக்குள் ரெண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான காற்றிலி உயிரிகளின் நினைவுகளும் இருக்கின்றன. எப்போதெல்லாம் நாம் தொடர்ச்சியாக மாவுச்சத்து மிகுந்த துரித உணவுகளை உட்கொண்டும், வேதியல் நச்சுக்களால், மாசுக்களால் பாதிக்கப்பட்டும் உடலைப் படுத்தி எடுக்கும்போது இந்த உடலால் இனிப் பயனில்லை என அணுக்கள் முடிவெடுக்கின்றன. அவை உடனே ஒரு பக்கம் தற்கொலை செய்கின்றன, இன்னொரு பக்கம் அவை வேகமாகத் தமக்குள் பிரிந்து இந்த உடலுக்குத் தேவையில்லாத சுயாதீனக் குழுமங்களாகின்றன. அவையே புற்று அணுக்கள். உடல் அழியுமுன் வேகமாகத் தோன்றி வளர்ந்து அழிவதே அவற்றின் நோக்கம். உதாரணமாக, இந்த புற்று அணுக்கள் மூளையில் தோன்றினால் அவை மூளையின் பணியைச் செய்து உடலுக்கு உதவாது. மூழ்கும் கப்பலில் உள்ள எலிகளைப் போல அவை நடந்துகொள்ளும். சீக்கிரமாகத் தின்று பெருகிவிட்டு தப்பித்து ஓடப் பார்க்கும். ஆனால் உயிர்வளியைப் பயன்படுத்தி ஆற்றலை உற்பத்தி பண்ணும்போது வேகமாக இந்த அணுக்களால் தோன்றவோ வளரவோ முடியாது. அதற்காக இவை காற்றிலி உயிரிகளின் மரபணு நினைவை மீட்டெடுக்கின்றன. அவை பல்லணு உயிரிகளாக அல்லாமல் ஒற்றை அணு உயிரிகளாகத் தம்மைக் கருதிச் செயல்படுகின்றன. உயிர்வளி இன்றியே குளூகோஸைக் கொண்டு ஆற்றலை உற்பத்தி பண்ணுகின்றன. ஆற்றலைக் குறைவாகவே அவ்வாறு பெருக்க முடியும் என்பதால் அவற்றுக்கு மிக அதிகமாக குளோகோஸ் தேவைப்படுகிறது. புற்று அணுக்களில் நாம் காணும் முக்கியமான பண்பு அவற்றில் உயிர்வளி மிகக்குறைவாகவும் குளோகோஸ் அதிகமாகவும் உள்ளன என்பது. இதை 1920களில் ஓட்டோ வார்பெர்க் என்பவர் கண்டறிந்ததால் இது வார்பெர்க் விளைவு என்று அழைக்கப்படுகிறது. முதுமரபை நோக்கிப் பின்னோக்கிச் செல்லும் இந்தப் போக்குக்கும் புற்றுநோயின் வளர்ச்சிக்குமான தொடர்பைப் பற்றி இந்த ஆகையால்தான் இப்போது மருத்துவர்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மருத்துவ சமூகம் ஒட்டுமொத்தமாக வளர்ச்சிதை மாற்றம் சார்ந்த புற்றுநோய் சிகிச்சையை இன்னும் முழுக்க ஏற்கவில்லை என்றாலும் இது கூட ஒரு கவனிக்கத்தக்க மாற்றம்தான். இந்தப் புதிய அணுகுமுறையைக் குறித்து Travis Christofferson எழுதியுள்ள நூலும் (Tripping Over the Truth: The Return of the Metabolic Theory of Cancer) பால் டேவிஸ் பேசியுள்ள கருத்துக்களும் முக்கியமானவை. வாயைக் கட்டுப்படுத்தி, குடலில் நல்ல நுண்ணுயிர்களை வளர்த்து, சரியாக ஓய்வெடுத்து மனத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டாலே புற்றுநோய் அருகிவிடும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் காலம் ஒன்று விரைவில் வரும். Posted Yesterday by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/09/blog-post_14.html @Justin அண்ணை உங்கள் கருத்துகளையும் சொல்லுங்க.
  25. என்னுடன் வேலை பார்த்த 55 வயதான பெண்மணிக்கு சுவாசப் புற்றுநோய் வந்தது. அவர் சிகரெட் இனை ஒருக்காலும் தொடாதவர். சிகிச்சையின் பின் குணமாகி விட்டார். அவருக்கு மருத்துவர்கள் மாப்பொருளை பெருமளவுக்கு குறைக்குமாறு கடுமையாக அறிவுறுத்தினார்கள். அரிசி, உருளைக்கிழங்கு போன்றவற்றுக்கு மாற்றீடாக கின்வா (Quinoa) வினை பரிந்துரைத்தார்கள்.
  26. சுவியர்! எனக்கு பில்லியனும் வேண்டாம்.மில்லியனும் வேண்டாம்.😂 ரஜனி காட்டுற மாதிரி ஒன்று இருந்தால் போதும். தத்துவங்கள் அருவியாய் கொட்டும்.😍
  27. பிரணவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  28. சீனத் தூதுவர்.... மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சேனநாயக்க போன்ற முன்னாள் ஜனாதிபதிகளை சந்திக்க, இருப்புக் கொள்ள முடியாத இந்தியத் தூதுவர்... ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை மாதிரி, நாமலை சந்தித்து... தமது "அரிப்பை" போக்கியுள்ளார்.
  29. அது பிரபாகரனே என்று அறிவித்த சிங்களப்படை அதிகாரிகளை.
  30. ஆனால், ஒருவரே தலைவர். ஒருவரே உறுப்பினர் உள்ள கட்சிகளும் இலங்கைத்தீவில் உள்ளனவாமே. சனநாயகத்தில் இதெல்லாம் இல்லாதவையா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  31. அப்போ, இவர் கட்சியின் கட்டுப்பாட்டை, விதிமுறைகளை மீறி கருத்துச்சொல்லும்போது, பதவிகளை இறுக்கப்பற்றிக்கொண்டிருக்கும்போதும், தனக்காக இல்லாத புது பதவிகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்போதும் இவருக்கெதிராக யார் நடவடிக்கை எடுப்பது? ஒன்று, உவர் தானாக கட்சியை விட்டு வெளியேற வேண்டும், இல்லையேல் உவரை விட்டு மற்றவர்கள் வெளியேறவேண்டும். கறையான் புற்றெடுக்க விஷ கரு நாகம் இடையில் புகுந்திருந்து புற்றையே கலைக்குது. இவ்வளவு அவமானப்பட்டும் திருந்தவில்லை, என்ன ஜென்மமோ? இதில சட்டத்தரணி வேற.
  32. இது முஸ்லிம் மதத் தலைவர்களையும் அழைக்கலாம் தானே !!
  33. ஒரே இடத்தில் தொடர்ந்து நிற்பீர்களாயின் இப்படித்தான் உங்களை அசிங்கப்படுத்துவார்கள். சொந்த அனுபவமாக்கும் 😎
  34. எங்காவது இந்தியர்களுக்கு அடி விழுந்தால் அது எமக்கும் விழுந்த அடி தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.