Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    12678
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87988
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    3
    Points
    46783
    Posts
  4. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    1223
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/30/25 in all areas

  1. இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈழப்பிரியன் 15)வீரப்பையன்
  2. போட்டி நேரம் முடிவடைந்து விட்டது. வினா 1 இல் கேட்கப்பட்ட விருப்பமான அணியாக இந்தியாவை ஆறு போட்டியாளர்களும், அவுஸ்திரேலியா, இலங்கையை தலா மூவரும் தென்னாப்பிரிக்கா அணியினை இருவரும், இங்கிலாந்து அணியை ஒருவரும் தெரிவு செய்துள்ளார்கள். 1) ஏராளன் - 1 புள்ளி 2) ஆல்வாயன் - 1 புள்ளி 3) வாத்தியார் - 1 புள்ளி 4) வசி - 1 புள்ளி 5) சுவி - 1 புள்ளி 6) கிருபன் - 1 புள்ளி 7) புலவர் - 1 புள்ளி 8) செம்பாட்டான் - 1 புள்ளி 9) வாதவூரான் - 1 புள்ளி 10) கறுப்பி - 1 புள்ளி 11)அகஸ்தியன் - 1 புள்ளி 12)நியூபேலன்ஸ் - 1 புள்ளி 13)ரசோதரன் - 1 புள்ளி 14)ஈழப்பிரியன் - 1 புள்ளி 15)வீரப்பையன் - 1 புள்ளி
  3. ஆரம்பத்தில் இருந்தே விஜய் ஒரு அரசியல் கட்சி தலைவர் போல் நடந்து கொள்ளவில்லை. வெறும் பஞ்ச் டயலாக்கள், வெற்று சுலோகங்கள் என தனது திரைப்பட ஹீரோயிசத்தை மட்டுமே காட்டினார். தனது திரை ரசிகர்களை வைத்து திரைப்பாணியில் தனக்கு விசிலடிக்கும் கூட்டத்தை கட்டியமைக்கவே தனது சக்தி முழுவதையும் செலவிட்டார். அவரது கட்சி மகாநாடுகள், கூட்டங்கள் அவரது திருப்படம் வெளியாகும் வேளை திரையரங்குகள் எப்படி ரசிக பட்டாளங்களின் கும்மாளம் இருக்குமோ அப்படியே இருந்தன. அதன் விளைவே இந்த அனர்ததம். ஐரோப்பிய நாடாக இருந்திருந்தால் விஜய் மற்றும் கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படிருக்கும். விஜய் இவ்வேளை கைது செய்யப்பட்டிருப்பார். விஜய் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது அல்லது மென் நடவடிக்கை என்பது இந்திய தேர்தல் அரசியல் பலவீனங்களில் ஒன்று. எல்லா கட்சிகளும் இந்த விடயத்தில் எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் தமது அரசியல் அஜெண்டாவுக்காக இது உபயோகின்றனரேயொழிய, பொறுப்புணர்வு அற்று செயற்பட்டு இத்தனை உயிர் இழப்புக்கு காரணமான விஜய் மீது நேர்மையான கடுமையான சட்ட நடவடிக்கைக்கு தயக்கம் கொள்கின்றனர். மத்திய மாநில அரசுகள் தமது குறுகிய அரசியலை ஒதுக்கி விட்டு இணைந்து விஜய் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஒன்றில் விஜய பொறுப்பான அரசியல் தலைவராக அரசியல் செய்ய வேண்டும் இல்லையெனில் மார்கெட் இருக்கும் வரை தனது ரசிகர்களை மகிழ்விக்க படங்களில் நடிக்க வேண்டும்.
  4. 41வது கேள்விக்கு இல்லை என்றும் பதில் வந்துள்ளதா. வடிவேலு சொல்வது போல் "சாக்காயிட்டன்". 😁
  5. கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள் ------------------------------------------------------------------- மேய்ந்து கொண்டும் சாணம் இட்டும் புரண்டு விட்டு சரிந்து தூங்கி எழும்பிக் கொண்டிருக்கும் ஆநிரைகளைப் பார்க்க கடவுள்கள் சில நாட்களில் வருகின்றார்கள் அன்று கடவுளே நேரே வருகின்றார் என்று குட்டிகளுடனும் கருக்களுடனும் ஆடாமல் அசையாமல் கடவுள் வரும் வழியில் ஆநிரைகள் அப்படியே நிற்கின்றன நாள் முழுதும் காவலர்களுடன் வரும் கடவுள்கள் கையை அசைப்பார்கள் எழுதி வைத்து வாசிப்பார்கள் இனி எங்களின் ராஜ்ஜியம் என்பார்கள் மற்றயவை பொய்க் கடவுள்கள் என்றும் சொல்கின்றார்கள் கடவுள்களின் முன்னேயே ஏதோ நடந்து ஆநிரைகள் சில குட்டிகள் சில கருக்களில் சில எரிந்து நசிந்து மூச்சடக்கி என்று இறந்து போகின்றன அன்று வந்த கடவுள் ஓடித் தப்பி மறைந்து விடுகின்றார் மிச்சமான கடவுள்கள் தங்களுக்கு மிகவும் வேண்டாத ஒரு கடவுளே கொன்று குவித்தது என்கின்றார்கள் கடவுள்களின் போதகர்களும் தங்களின் கடவுள்களின் சொற்களையே போதிக்கின்றார்கள் இது தான் தருணம் என்று ஆநிரைகளின் இடம் வரும் சில கடவுள்களிடம் 'அவங்கள சும்மா விடாதீங்க................' என்று கதறுகின்றன எரியாமல் நசியாமல் மூச்சுடன் இன்று உயிர் தப்பிய ஆநிரைகள் அடுத்த கடவுள் வருகையிலும் இன்று தப்பிய ஆநிரைகள் சில இறக்கப் போகின்றன சும்மா விடப் போவதில்லை இந்தக் கடவுள்கள்.
  6. வினா 2) 59 ஓட்டங்களினால் இந்தியா அணி இலங்கையை தோற்கடித்து இருக்கிறது. 11 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1) ஏராளன் - 4 புள்ளிகள் 2) ஆல்வாயன் - 4 புள்ளிகள் 3)கிருபன் - 4 புள்ளிகள் 4)புலவர் - 4 புள்ளிகள் 5)செம்பாட்டான் - 4 புள்ளிகள் 6)வாதவூரான் - 4 புள்ளிகள் 7)அகஸ்தியன் - 4 புள்ளிகள் 8)நியூபேலன்ஸ் - 4 புள்ளிகள் 9)ரசோதரன் - 4 புள்ளிகள் 10)வீரப்பையன் - 4 புள்ளிகள் 11) சுவி - 3 புள்ளிகள் 12) கறுப்பி - 2 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 2 புள்ளிகள் 14)வாத்தியார் - 1 புள்ளி 15)வசி - 1 புள்ளி இதுவரை வினாக்கள் 1, 2, 41 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  7. விகடனின் இந்த கட்டுரையை முன்பு வாசித்தேன். ஐபில் வெற்றிவிழாவின் போது இடம்பெற்ற சனநெரிசல் சாவும் நினைவுகூறத்தக்கது. இந்தியா போன்ற சனத்தொகை நிறைந்த நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்குரிய சாத்தியங்கள் அதிகம். விஜய் அவர்கட்கு தனது பகுதியால் மன்னிப்பு கேட்கும் பெருந்தன்மை இல்லை என்பது ஒருபுறம் போக அல்லது அவரது வழக்கறிஞர்கள் அறிவுரையாகவும் அமையலாம்; இந்தியா போன்ற ஒரு நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மக்களை சென்றடைய இப்போது நவீன தொழில்நுட்ப உலகில் வேறு பல அம்சங்கள், வழிமுறைகள் உள்ளன. நேரடி ஒன்றுகூடல்களுக்கு பதிலாக இதர மாறீடுகள் பயன்படுத்தப்படுவது அவசியம்.
  8. விஜய் வீடியோவும் சில கேள்விகளும்: "உங்களின் கிரீடத்தை முதலில் கழற்றி வையுங்கள் விஜய்!" கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறேன் என வசனம் பேசுகிறார். கரியரின் உச்சத்தை விட்டாரே ஒழிய உச்ச நட்சத்திரம் என்கிற கிரீடத்தை விஜய் இன்னும் இறக்கி வைக்கவில்லை. கரூர் பெருந்துயர் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கழித்து தவெக தலைவர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவரைக் காண வந்து உயிரைப் பறிகொடுத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறார். அதில், 'இரண்டு வாரங்களாகப் பல ஊர்களுக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். விஜய் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? உண்மைகள் விரைவில் வெளியே தெரிய வரும்' என அரசின் மீதும் காவல்துறையின் மீதும் விஷயத்தைத் திருப்பிவிடுகிறார். 'தைரியத்தோடு மீண்டும் வருவோம்' என்கிறார். எல்லாம் சரிதான். ஆனால், அத்தனை உயிர்கள் பறிபோனதற்கு எதோ ஒரு விதத்தில் தானும் காரணம் என்கிற தார்மீக பொறுப்பை விஜய் எங்கேயும் ஏற்கவில்லை. தன்னையும் பாதிக்கப்பட்டவனாகவே காட்டிக் கொள்கிறார். உயிர்களைப் பறிகொடுத்து நிற்கும் குடும்பங்களோடு சேர்ந்து பரிதாபம் தேடிக்கொள்ள முயல்கிறார். ஆனால், அந்தப் பரிதாபத்தைப் பெற்றுக்கொள்ள விஜய் தகுதியானவர்தானா? கரூர் சம்பவத்துக்கு தவெக-தான் காரணம், காவல்துறைதான் காரணம் என இரண்டு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எது எப்படியோ இந்தப் பெருந்துயருக்கு தவெக கட்சியும் விஜய்யுமே தார்மீக பொறுப்பைக் கட்டாயம் ஏற்றிருக்க வேண்டும். சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்த பிறகும் தன்னை ஒரு நட்சத்திரமாக மட்டுமே முன்னிறுத்திக் கொள்ள முயலும் அவரின் பொறுப்பற்றத் தன்மையை இங்கே கேள்வி கேட்டே ஆக வேண்டும். அரசியல் ஒரு அன்றாட செயல்பாடாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். அதை இது நாள் வரைக்கும் விஜய் உணரவில்லை. பனையூரில் அவ்வபோது நிர்வாகிகள் கூட்டமென ஒன்றை விஜயை நடத்துவார். பெரிதாக தகவல் வெளியே தெரியாது. நிருபர்கள் மட்டும் பனையூர் அலுவலகத்துக்கு வெளியே நிற்போம். எப்படியோ விஷயத்தைத் தெரிந்துகொண்டு விஜய்யைப் பார்க்க நூறு, இருநூறு தொண்டர்கள் கூடியிருப்பார்கள். பவுன்சர்கள் சூழ விஜய் வருவார். தளபதி... தளபதி... கடவுளே... கடவுளே... எனத் தொண்டர்கள் தொண்டைக் கிழிய கத்துவார்கள். எந்தக் குரலும் விஜய்க்குக் கேட்காது. கார் கண்ணாடியைக் கூட இறக்கமாட்டார். கண்ணாடியில் கருப்பு கவர் வேறு போட்டிருப்பார். உள்ளே இருப்பது விஜய்தானா என்பது கூட தெரியாது. அந்த காரைப் பார்த்து கும்பிட்டுவிட்டு முடிந்தால் அந்த கார் மீது பாய்ந்து தொட்டுப் பார்த்து விட்டு அந்தத் திருப்தியோடு பனையூர் கடல் காற்றைச் சுவாசித்துவிட்டு தொண்டர்கள் ஊருக்குக் கிளம்பிவிடுவார்கள். நிர்வாகிகள் கூட்டத்துக்குள் செல்லும் விஜய் அங்கே, 'மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள்' என அண்ணா கூறியதைப் பின்பற்ற போகிறேன் என வசனம் பேசுவார். மீண்டும் கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு பனையூர் அலுவலகத்திலிருந்து நீலாங்கரை வீட்டுக்குக் கிளம்பிவிடுவார். கட்சி அலுவலகத்தின் வெளியே நிற்கும் தொண்டனைப் பார்த்து கையசைத்தால் கூட தன்னுடைய நட்சத்திரத்தன்மை மங்கிவிடும் என நினைப்பவர் எப்படி மக்கள் தலைவனாக மாற முடியும்? வினோதமாக சனிக்கிழமைகளில் மட்டுமே அவர் பிரசாரத்தை வகுத்ததும் அந்த நட்சத்திரத்தன்மையைக் காக்க வேண்டும் என்பதற்காகத்தான். TVK Vijay விஜய் எப்போது வருவார் எப்போது வருவார் என அவரின் பட ரிலீஸைப் போல அவரின் அரசியல் உரைக்கும் மக்கள் காத்திருக்க வேண்டும் என நினைக்கிறார். அந்தக் காத்திருப்பு மீதான எதிர்பார்ப்பை ஏற்றி, ஏற்றி ஒரு நாள் வெளியே வரும் போது கூட்டம் திமிறிக் கொண்டு வரும். தொண்டர்கள் விஜய்யை கடவுளைப் போல பார்ப்பார்கள். அதுதான் விஜய்க்குத் தேவை. கால்ஷீட் ஒதுக்கி மக்களைச் சந்திக்காமல், அரசியலை மதித்து அன்றாடம் மக்களைச் சந்தித்து மக்களோடு நின்றிருந்தால் அவரைப் பார்க்கக் கூடும் கூட்டத்திடம் இத்தனை வெறித்தனம் இருக்காது. நட்சத்திரத்தன்மையை நம்பாமல் கொள்கையை நம்பி மக்களை நம்பி களத்தில் இறங்கும் நம்பிக்கை விஜய்க்கு இல்லை. அதற்காக ஒரு நட்சத்திரத்துக்காக சாமானியன் இரையாவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. தங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதைப் போல விஜய் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். கரூர் பெருந்துயர் நிகழ்ந்ததற்கு அவரின் காலதாமதமும் மிக முக்கிய காரணம். விஜய் நாகப்பட்டினத்தில் காலை 8:45 மணிக்கும், கரூரில் மதியம் 12 மணிக்கும் பேசுவார் என தவெக தரப்பில் பத்திரிகைகளுக்கு அதிகாரப்பூர்வமாக செய்தி அனுப்பப்பட்டது. அதையே தங்களின் ட்விட்டர் பக்கங்களிலும் வெளியிட்டனர். ஆனால், விஜய் சென்னையிலிருந்தே 8:45 மணிக்கு மேல்தான் தனி விமானத்தில் திருச்சி கிளம்பினார். நாமக்கலில் விஜய் மைக் பிடிக்கையில் மணி 2:30-யைத் தாண்டிவிட்டது. 12 மணி எனக் கூறிய கரூருக்கு விஜய் 7 மணிக்குதான் வந்து சேர்ந்தார். தவெக 12 மணிக்கு விஜய் வருவார் எனக் கூறியதைக் கேட்டு காலை 9 மணியிலிருந்தே அந்த வேலுசாமிபுரத்தில் கூட்டம் கூட தொடங்கிவிட்டது. கட்டுச்சோறு கட்டிக்கொண்டு விஜய்யைப் பார்க்க வந்த கூட்டங்கள் தண்ணீரின்றி விக்கி மூச்சுத்திணறி இறந்த பரிதவிப்பு கதைகளை களத்தில் கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். இந்தக் கால தாமதத்துக்கும் மாநில அரசும் காவல்துறையும் மட்டும்தான் பொறுப்பேற்க வேண்டுமா விஜய்? மக்களோடு நெருங்கி வந்து அன்றாடம் மக்கள் பிரச்னையைப் பேசுவதில்லை. பத்திரிகையாளர்களைக் கண்டாலே அலர்ஜி. சரி, உங்கள் கட்சி நிர்வாகிகளிடம் நீங்கள் நெருக்கம் காட்டினால் கூட களத்திலுள்ள பல தகவல்கள் தெரியவரும். சுற்றுப்பயணங்களையும் முறையாக ஒருங்கிணைக்க முடியுமே. திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் என விஜய் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கும் எந்த மாவட்டத்திலும் மா.செக்களை அழைத்து அவர் தனியாகப் பேசியதில்லை. மா.செக்களும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று விஜய்யை நோக்கி துண்டை வீசிக்கொண்டிருக்கின்றனர். இதுதான் கட்சியா? இதுதான் கட்டமைப்பா? 'இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நியமித்துவிட்டோம். திமுக, அதிமுகவுக்கு இணையான கட்டமைப்பு எங்களிடம் இருக்கிறது' என மார்தட்டிக் கொள்ள மட்டுமே பயன்படுகிறது. '10-15 வருசத்துக்கு முன்னாடி நாங்க நினைச்சா விஜய்யைச் சந்திக்க முடியும். இப்போலாம் அப்படி இல்ல...' என எத்தனையோ மா.செக்கள் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டிருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகளின் தொண்டர்களின் எண்ணத்தைக் கூட அறியமுடியாமல் எப்போதுமே ஒரு தனி வட்டத்துக்குள் அரியணையில் ஏறி அமர்ந்துகொள்ளும் ஆள் எப்படி தலைவனாக இருக்க முடியும்? அவரிடம் எப்படி நாம் தார்மீக பொறுப்பை எதிர்பார்க்க முடியும்? நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் என எல்லா தரப்பும் எப்போதும் உங்களின் அருளுக்காகக் காத்திருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கு விருப்பப்பட்ட தோதுவான நேரத்தில் மட்டும் வெளியில் வந்து மேம்போக்கான ஒரு அரசியலைப் பேசிவிட்டு ஓடிவிடுவீர்கள். இந்த வியூகங்களை வகுத்து கொடுக்க, கூடவே வியூக வகுப்பாளர்களும் வேறு!கரூர் பெருந்துயருக்கு இரங்கல் தெரிவிக்கும் அந்த வீடியோவில் கூட, 'சிஎம் சார் உங்களுக்குப் பழி வாங்கணும்னா என்னை என்ன வேணா பண்ணுங்க. நான் ஆபிஸ்லயோ வீட்லயோதான் இருப்பேன்' எனச் சினிமா வசனம் பேசுகிறார். அதிலும் ஒரு பிராண்டிங். திமுக vs தவெக, ஸ்டாலின் vs விஜய் எனக் களத்தைத் திருப்ப இந்த இரங்கல் வீடியோவையும் பயன்படுத்திக் கொள்கிறார். இப்படி இரங்கல் வீடியோவிலும் வியூக வகுப்பாளர்களின் சொல்படி தன்னுடைய அரசியலை பொசிஷன் செய்துகொள்வீர்களா விஜய்? தன்னை அத்தனைப் பேரும் வழிபாட்டு மனநிலையோடு பார்க்க வேண்டும். தன்னை தெய்வமாகப் பார்க்கும் மக்களை மூலதனமாகக் கொண்டு தேர்தல் அரசியலில் அறுவடை செய்ய வேண்டும். இப்படிப்பட்டவர் தனக்குப் பின்னால் கூடும் கூட்டத்தை எப்படி அரசியல் ரீதியாகப் பக்குவப்படுத்துவார்? கரூர் பெருந்துயரின் பழி மொத்தத்தையும் விஜய் மீது சுமத்த முடியாது. அரசும் காவல்துறையும் இதில் பொறுப்பேற்க வேண்டும்தான். ஆனால், அதற்காக விஜய் தன்னையும் பாதிக்கப்பட்டவனைப் போல சித்தரிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறேன் என வசனம் பேசுகிறார். கரியரின் உச்சத்தை விட்டாரே ஒழிய உச்சநட்சத்திரம் என்கிற கிரீடத்தை விஜய் இன்னும் இறக்கி வைக்கவில்லை. பகுத்தறியும் சிந்தனையை மலுங்கடித்து ரசிக வெறி ஊட்டப்பட்ட ஒரு பெரும் கும்பலோடு அரசியலிலும் நட்சத்திரமாகவே உச்சத்தில் இருக்க விரும்புகிறார். அரசியல்வாதிகள் தெருவில் நிற்க வேண்டும். மக்களின் பிரச்னைகளைத் தன்னுடைய பிரச்னைகளாக தோளில் சுமக்க வேண்டும். கரூர் பெருந்துயர் மூலம் விஜய் அந்தப் படிப்பினையைப் பெற வேண்டும். சினிமா வசனம் மட்டும் பேசாமல் இனியாவது கள அரசியலைப் படிக்க முயலுங்கள் விஜய்! TVK Vijay speech: 'மக்களோடு மக்களா நில்லுங்க விஜய்!' - கரூர் மரணங்களும் சில கேள்விகளும்! | TVK: 'Stand With the People, Vijay!' – Karur Deaths Raise Tough Questions - Vikatan
  9. இந்தத் திரி நடந்த அவலம் பற்றிய தகவல்களைத் தரும் திரியாக அல்லாமல், அவலத்தை வைத்துக் கொண்டு அரசியல் பிரச்சாரம் செய்ய முயலும் சோசியல் மீடியா சேற்றில் புரளும் பன்றிக் கூட்டங்களின் "கூச்சல்" திரியாக மாறி வருகிறது. விசாரணைக்கு என்ன நடக்கிறது என அறிவதற்காக அடிக்கடி வந்து வந்து பார்த்தால், யூ ரியூப் அலட்டல்களும், முகனூல் வசவுகளும் தான் புலவர் முழு நேரமாக இணைத்துக் கொண்டிருக்கிறார்😂. இது ஈழத்தமிழர்களின் வழமையல்ல புலவர்! இந்தக் குப்பைகளைக் கொஞ்சம் குறைத்து ஈழத்தமிழர்களின் கண்ணியமான பரிமாற்றப் பண்பைக் காக்க உதவுங்கள்!
  10. அமெரிக்காவில் வருடம் முழுவதும் ஏதாவதொரு விளையாட்டு இருக்கும். விளையாட்டுக்களில் மூழ்கி இருப்பார்கள். அதே மாதிரி தமிழ்நாட்டில் டாஸ்மார்கும் திரைப்படங்களும் மகு;களை மூழ்க வைத்துள்ளது. கடவுளே யோசிப்பார் என்னைப் பார்க்க வரும் போதே எத்தனையோ பேர் உயிரை விடுகிறார்கள். ஓரு நடிகனைப் பார்க்க போய் மக்கள் இறந்ததற்கு இப்படி முறைப்பாடு கொடுக்கிறார்களே என்று.
  11. இந்தியா 269 ஒட்டங்களை இலங்கைக்கு எதிரான போட்டியில் எடுத்திருந்தது. 41 வது கேள்வியில் இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? என்று கேட்டிருந்தேன். 12 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1) ஏராளன் - 2 புள்ளிகள் 2) ஆல்வாயன் - 2 புள்ளிகள் 3)கிருபன் - 2 புள்ளிகள் 4)புலவர் - 2 புள்ளிகள் 5)செம்பாட்டான் - 2 புள்ளிகள் 6)வாதவூரான் - 2 புள்ளிகள் 7)கறுப்பி - 2 புள்ளிகள் 8)அகஸ்தியன் - 2 புள்ளிகள் 9)நியூபேலன்ஸ் - 2 புள்ளிகள் 10)ரசோதரன் - 2 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 2 புள்ளிகள் 12)வீரப்பையன் - 2 புள்ளிகள் 13)வாத்தியார் - 1 புள்ளி 14) வசி - 1 புள்ளி 15) சுவி - 1 புள்ளி இதுவரை வினாக்கள் 1, 41 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  12. தலைவன் எனப்படுகின்றவன் எல்லாருக்கும் முன்னே செல்ல வேண்டியவன், கோழை மாதிரி பயந்து மூன்று நாட்கள் ஒழிந்து இருந்து விட்டு மக்களை நேரில் சந்திக்காமல் வீடியோவில் வந்து நடிப்பவன் அல்ல.
  13. இப்போதைய காலத்தில் கலியாணம் கட்டும் மாப்பிள்ளைமார் பாடு திண்டாட்டம் தான் போல. ஐந்து அரை பவுண் தாலி எடுப்பது என்றாலே பதினைஞ்சு இலட்சத்துக்கு மேல் வேண்டும் போல் உள்ளதே.
  14. நிம்மதியாய் நீரருந்தக்கூட முடியாத காட்டு வாழ்க்கை .......... ஒருவாய் நீரருந்தும் போது கூட எவ்வளவு உசாராய் இருக்க வேண்டி இருக்கு ........! 😗
  15. ஆண்கள் துடுப்பாட்ட போட்டிகள் போல , மகளிர் துடுபாட்ட போட்டிகளை பலர் பார்ப்பது இல்லை என்பதினால் சில இலகுவான கேள்விகளை கேட்டு இருந்தேன்( வினா இலக்கங்கள் 1, 41.42) . போட்டியாளர்களின் பெயர்களை வைத்தும் கேள்விகள் கேட்கவில்லை. அதிக ஒட்டங்கள், விக்கெட்டுக்கள் பெறுபவர்களின் நாடுகள் பற்றிய கேள்விகளுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் விடை வரும்படியும் கேட்டிருந்தேன்.
  16. வாத்தியார் அவர் வெளியேறியது சரி. ஆனால் இன்னமும் வெளியே வராமல் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருப்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
  17. உறவு ஒரே பக்தி மயமாக வந்திருக்கின்றார் 😃
  18. இதே போல் சீமான் நடத்தும் கூட்டங்களில் இப்படி சிறு அசம்பாவிதம் நடந்தாலும் உங்கள் கேலிச்சித்திரமும் கருத்தும் எப்படியிருந்திருக்கும் என ஒருகணம் சிந்தித்தேன். சிரித்தேன். இருந்தாலும் சீமானுக்கு மட்டும் வரும் கேலிச்சித்திரம் விஜய் என்றவுடன் ஒரு கேலிச்சித்திரமும் வராதது ஏனோ தானோ என அவரை அவமானப்படுத்தி விட்டீர்கள்.
  19. எதற்கெடுத்தாலும் மற்றவனை நோக்கி குற்றம் சாட்டுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. கட்சி ஒன்று ஆரம்பித்தால் அதற்கான கட்டுமானங்களும் விதிகளும் இருக்க வேண்டும்.அப்படி ஒன்று விஜய் கட்சிக்கு இருப்பதாக தெரியவில்லை. தனியே தன் ரசிகர்களை மட்டும் நம்பி திறக்கப்பட்ட தேனீர் கடை போல் அவர் கட்சி அமைந்து விட்டது.
  20. என் டி ராமராவ் தொடக்கம் குஷ்பு என பல திரைக்கவர்ச்சி மனிதர்களை தெய்வமாக கொண்டாடும் பூமியாக அது அமைந்தது மொழிக்கும் இனத்திற்கும் ஒரு துர்ப்பாக்கியம். இது முடிவிற்கு வருமா என்றால் இல்லை என்பதுதான் என் கருத்து. ஏனென்றால் அந்த அரசியலை தூக்கி நிறுத்தி வைத்திருப்பது அந்த கவர்ச்சி சினிமாதான். நல்ல சிந்தனைக்கவிதையும் அதன் சொற்றாடல்களும்.... நன்றி ரசோதரன்.
  21. இங்கே நான் விஜய்க்கு செம்பு தூக்க வரவில்லை ஆனாலும் எல்லாமே அறிந்த..... அறிந்து கொண்டிருந்த.... அல்லது இப்படி நடக்கலாம்..... ஆபத்தாக முடியலாம்.... என்று எச்சரிக்கை செய்த அந்தக் காவல் துறை.... எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் த வெ க பொறுப்பாளர்களிடம் மட்டுமே மேற்கூறிய பரிந்துரைகளையும் எச்சரிக்கைகளையும் செய்திருப்பது சரியா? தாமாகவே ஒரு நடவடிக்கையை எடுத்திருக்க முடியாதா? அந்த இடத்தின் கொள்ளளவு தெரிந்தும் மேலதிகமான அளவிற்கு மக்களை அனுமதித்த காவல் துறையின் செயல் சரியானதா? விஜய் கரூரில் தொடர்ந்தும் தங்கியிருந்தால்..... (மக்களுடன் மக்களாக நிற்கிறேன் என்ற நிலையில்) இன்னும் பல இழப்புக்கள் அங்கே ஏற்பட்டிருக்கலாம் சமயோசிதமாக அவர் கரூரில் இருந்து வெளியேறியதால் இன்னும் பல உயிர்களும் அழிவுகளும் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. காவல்துறை மக்களுக்கானது
  22. அததெரண கருத்துப் படம்
  23. பச்சை வெற்றிபெறும் அணி 2)இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6)அவுஸ்திரேலியா - இலங்கை 7)இந்தியா - பாகிஸ்தான் 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11)இந்தியா - தென்னாபிரிக்கா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் 13)இலங்கை - இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16)இலங்கை - நியூசிலாந்து 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19)இலங்கை - தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் 21)இங்கிலாந்து - இந்தியா 22)இலங்கை - வங்களாதேசம் 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25)இந்தியா - நியூசிலாந்து 26)இலங்கை - பாகிஸ்தான் 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம்
  24. 1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? இங்கிலாந்து ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2) இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4) பாகிஸ்தான் - வங்காளதேசம் 5) இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6) அவுஸ்திரேலியா - இலங்கை 7) இந்தியா - பாகிஸ்தான் 8) நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9) இங்கிலாந்து - வங்காளதேசம் 10) அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11) இந்தியா - தென்னாபிரிக்கா 12) நியூசிலாந்து - வங்காளதேசம் 13) இலங்கை - இங்கிலாந்து 14) அவுஸ்திரேலியா - இந்தியா 15) தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16) இலங்கை - நியூசிலாந்து 17) பாகிஸ்தான் - இங்கிலாந்து 18) அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19) இலங்கை - தென்னாபிரிக்கா 20) நியூசிலாந்து - பாகிஸ்தான் 21) இங்கிலாந்து - இந்தியா 22) இலங்கை - வங்களாதேசம் 23) பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24) அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25) இந்தியா - நியூசிலாந்து 26) இலங்கை - பாகிஸ்தான் 27) அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28) இங்கிலாந்து - நியூசிலாந்து 29) இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? - பாகிஸ்தான் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா தென்னாபிரிக்கா 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34) இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா 41, 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41, 42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? கொழும்பு 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? இந்தோர் 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38) இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? பாகிஸ்தான் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 46) இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இங்கிலாந்து
  25. “கும்பலைக் கூட்டுறான் கொடியை நாட்டுறான் கொஞ்சநேரம் நின்று பாத்தால் உண்டியலை நீட்டுறான்…” கட்சி வளர்ச்சிக்காக உண்டியலை நீட்டியவர் கருணாநிதி அல்லவா?
  26. 1) இந்தியா 2) இலங்கை 3) அவுஸ்திரேலியா 4) பாகிஸ்தான் 5) தென்னாபிரிக்கா 6) அவுஸ்திரேலியா 7) இந்தியா 8) நியூசிலாந்து 9) இங்கிலாந்து 10) அவுஸ்திரேலியா 11) இந்தியா 12) நியூசிலாந்து 13) இங்கிலாந்து 14) - இந்தியா 15) தென்னாபிரிக்கா 16) நியூசிலாந்து 17) இங்கிலாந்து 18) அவுஸ்திரேலியா 19) தென்னாபிரிக்கா 20) நியூசிலாந்து 21) இந்தியா 22) இலங்கை 23) தென்னாபிரிக்கா 24) அவுஸ்திரேலியா 25) இந்தியா 26) இலங்கை 27) அவுஸ்திரேலியா 28) நியூசிலாந்து 29) இந்தியா 30) அவுஸ்திரேலியா 31) வங்காளதேசம் 32) தென்னாபிரிக்கா,அவுஸ்திரேலியா,இந்தியா ,நியூசிலாந்து 33) அவுஸ்திரேலியா 34) அவுஸ்திரேலியா 35) மும்பை 36) கொழும்பு 37) பாகிஸ்தான் 38) வங்காளதேசம் 39) இந்தியா 40) வங்காளதேசம் 41) ஆம் 42) ஆம் 43) அவுஸ்திரேலியா 44) இந்தியா 45) அவுஸ்திரேலியா 46) இந்தியா 47) அவுஸ்திரேலியா
  27. 1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? ( இக்கேள்விக்கு போட்டியிடும் அணிகளில் ஒன்றினை தெரிவு செய்தால் 1 புள்ளி வழங்கப்படும்) இலங்கை ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6)அவுஸ்திரேலியா - இலங்கை 7)இந்தியா - பாகிஸ்தான் 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11)இந்தியா - தென்னாபிரிக்கா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் 13)இலங்கை - இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16)இலங்கை - நியூசிலாந்து 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19)இலங்கை - தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் 21)இங்கிலாந்து - இந்தியா 22)இலங்கை - வங்களாதேசம் 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25)இந்தியா - நியூசிலாந்து 26)இலங்கை - பாகிஸ்தான் 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? இந்தியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்களாதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) இந்தியா , அவுஸ்ரேலியா , இங்கிலாந்து , இலங்கை 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) இந்தியா , அவுஸ்ரேலியா 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா . 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? விசாகப்பட்டினம் 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? கௌகாத்தி 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? தென்னாபிரிக்கா 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? வங்களாதேசம் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்ரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இலங்கை 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்ரேலியா 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா
  28. நம்பி நம்பி ஏமாந்து ஏமாந்து ஏமாற்றப் பட்டு நிற்கும் இனம். நம்பத் தகுந்த முறையில் தீர்வுகள் வைக்கப் படும் வரை.....???
  29. நம்மளையும் சேர்த்துக்குங்க 1) இலங்கை - சாமரி அத்தப்பத்துவுக்காக ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இந்தியா 3) நியூசிலாந்து 4)பாகிஸ்தான் 5)இங்கிலாந்து 6)அவுஸ்திரேலியா 7)இந்தியா 8)நியூசிலாந்து 9)இங்கிலாந்து 10)அவுஸ்திரேலியா 11)இந்தியா 12)நியூசிலாந்து 13)இலங்கை 14)இந்தியா 15)தென்னாபிரிக்கா 16)இலங்கை 17)இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா 19)தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து 21)இங்கிலாந்து 22)இலங்கை 23)தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா 25)இந்தியா 26)இலங்கை 27)அவுஸ்திரேலியா 28)இங்கிலாந்து 29)இந்தியா 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? இந்தியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? பாகிஸ்தான் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) இந்தியா நியூசிலாந்து அவுஸ்திரேலியா இங்கிலாந்து 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? மும்பை 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? கௌகாத்தி 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? நியூசிலாந்து 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? பாகிஸ்தான் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஓம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஓம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இங்கிலாந்து 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா
  30. 1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? தென்னாபிரிக்கா ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2) இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4) பாகிஸ்தான் - வங்காளதேசம் 5) இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6) அவுஸ்திரேலியா - இலங்கை 7) இந்தியா - பாகிஸ்தான் 8) நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9) இங்கிலாந்து - வங்காளதேசம் 10) அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11) இந்தியா - தென்னாபிரிக்கா 12) நியூசிலாந்து - வங்காளதேசம் 13) இலங்கை - இங்கிலாந்து 14) அவுஸ்திரேலியா - இந்தியா 15) தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16) இலங்கை - நியூசிலாந்து 17) பாகிஸ்தான் - இங்கிலாந்து 18) அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19) இலங்கை - தென்னாபிரிக்கா 20) நியூசிலாந்து - பாகிஸ்தான் 21) இங்கிலாந்து - இந்தியா 22) இலங்கை - வங்களாதேசம் 23) பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24) அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25) இந்தியா - நியூசிலாந்து 26) இலங்கை - பாகிஸ்தான் 27) அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28) இங்கிலாந்து - நியூசிலாந்து 29) இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்காளதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா தென்னாபிரிக்கா இந்தியா நியூசிலாந்து 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34) இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) அவுஸ்திரேலியா 41, 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41, 42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? விசாகப்பட்டினம் 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? இந்தோர் 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38) இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? வங்காளதேசம் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 46) இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா பதில்கள் தடித்த கறுத்த எழுத்துக்களில் தந்துள்ளேன். கறுப்புத்தான் எனக்குப் பிடித்த கலரு!
  31. இளம் வயதிலேயே சிறு நீரகப் பிரச்சினை... பாவம். வாழ்வு தொடங்கிய வேளையிலேயே முடிந்து விட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.