Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்18Points87988Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33600Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்7Points38754Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்5Points19109Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/04/25 in all areas
-
யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
சக மாணவிகள் விலகி இருந்தனரா? அல்லது bullying செய்தனரா என்றும் விசாரிக்கவேண்டும். யாழ்ப்பாணத்தில் பெருமையும் திமிரும் பிடித்தவர்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நன்றாகப் படித்தால், விளையாட்டுக்களில் முன்னிலையில் இருந்தால் அல்லது பெரிய பதவிகளில் இருந்தால் (அமைச்சர் சந்திரசேகர், யாழ்.போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ) பொறாமை கொள்ளுவது காலம் காலமாக இருந்துவருகின்றது. இப்படியான ஊத்தைப் பழக்கங்களை பாடசாலையில் வளரவிடக்கூடாது. பாதிக்கப்பட்ட மாணவி மனதைரியத்தை வளர்த்து, மீண்டும் நலமாகி ஓட்டத்தில் முதலாவதாக வரவேண்டும்.7 points
-
இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது - அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம்
இனப்படுகொலை போர்க்குற்றமாகி, பின் போர்க்குற்றம், இனப்பிரச்சினை ஆகி, இப்ப இனப்பிரச்சினை வெறும் மோதல் என்ற நிலைக்கு வந்துள்ளது. நாளை இதுவும் நீர்த்துப் போய் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக எந்த விடயமும் நிகழவில்லை எனும் நிலைக்கு வந்து விடும்.3 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார்
ரஸ்யாவை நோக்கிய நகர்வுகளின் தோல்வியைச் சரிசெய்து கொள்ளவும் அனைத்துலகிற்கெதிராக எடுத்த வர்த்தகப் போர் மற்றும் கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் சவூதி அரேபியா போன்ற நாடுகள் பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் எனப் புதிய கூட்டுகளைத் தேடும் முடிவெனப் பல்வகமைகளிலும் வீழ்ந்துள்ள தனது செல்வாக்கை உயர்த்திவிட எடுக்கும் முயற்சி. அதனூடாக நோபலும் இலக்கு. ஆனால், நெத்தன்யாகுவும் கமாசும் அமைதி முயற்சிகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டுமே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி2 points- யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
அந்த மாணவி விளையாட்டுப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்று இருந்தால்… மற்றைய மாணவிகள் அவரை பாராட்டி இருப்பது தான், நல்ல ஒரு பண்பாக இருந்திருக்கும். அதனை விடுத்து எரிச்சல், பொறாண்மை பட்டு… வெற்றி பெற்ற மாணவியை ஒதுக்கி வைத்தது எவ்விதத்திலும் நியாயம் அல்ல. இந்தப் பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுத்து தற்கொலை வரை செல்ல முன்…. பாடசாலை அதிபரும், ஆசிரியர்களும், பெற்றோரும் அந்த மாணவிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்த அவசரகதியில் முன்வர வேண்டும்.2 points- இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது - அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம்
எல்லாம் நமது தமிழ் அரசியல்வாதிகளின் நீண்டகால குறிக்கோள் அற்ற சிந்தனைகளாலும், அவர்களின் சுயநல அரசியல் நகர்வுகளாலும், தமது இனத்தின் நலன் கருதி ஒற்றுமையாக தமது குரலை சர்வதேசத்திற்கு ஆணித்தரமாக சொல்ல முன்வராமையாலும் ஏற்பட்ட விபரீதம் இது. இன்னும்… இந்தியா தீர்வு பெற்றுத் தரும் என்று, கிணத்துத் தவளை மாதிரி நம்பிக் கொண்டு இருக்கும் மர மண்டை அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு… தமிழ் இனத்தின் விடிவு என்பது எட்டாக்கனிதான். இத்துப்போன இவர்களை வைத்துக் கொண்டு இனி பிரயோசனம் இல்லை. ஈழத் தமிழ் இனம் மாற்றுவழிகளை யோசிக்க வேண்டும்.2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
பிராமணரான ஸ்ரீதர் வேம்பு தனது தகவல் பரிமாற்ற செயலிக்கு 'அரட்டை' என்று தமிழில் பெயர் வைக்கிறார். தமிழைப் பேசிப் பிழைத்த திராவிடவாதியான கருணாநிதி குடும்பம் தங்களின் தொலைக்காட்சிக்கு சன் டிவி என்று பெயர் வைத்தது. சங்க காலத்திலிருந்து தமிழ் வளர்க்கும் பிராமணர்களை தமிழர்கள் அல்லாதவர்கள் என்று போலியாகக் கட்டமைக்கும் ஆரிய திராவிட இனவாத அரசியல் ஒழிக்கப்படவேண்டும்.2 points- பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
@ரசோதரன் அண்ணை உங்கை முந்தி பயிற்சி செய்தவர் தானே, அவர் சொன்னாக் கேட்பினம் சில நேரம். வடமராட்சி கிழக்கு எனக்குத் தெரிஞ்ச காலம் முதல் எல்லா அரச திணைக்களங்களாலையும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடேயே அணுகப்பட்டு வந்திருக்குது. இ.போ.ச மட்டும் என்ன விதி விலக்கா?1 point- கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள் ------------------------------------------------------------------- மேய்ந்து கொண்டும் சாணம் இட்டும் புரண்டு விட்டு சரிந்து தூங்கி எழும்பிக் கொண்டிருக்கும் ஆநிரைகளைப் பார்க்க கடவுள்கள் சில நாட்களில் வருகின்றார்கள் அன்று கடவுளே நேரே வருகின்றார் என்று குட்டிகளுடனும் கருக்களுடனும் ஆடாமல் அசையாமல் கடவுள் வரும் வழியில் ஆநிரைகள் அப்படியே நிற்கின்றன நாள் முழுதும் காவலர்களுடன் வரும் கடவுள்கள் கையை அசைப்பார்கள் எழுதி வைத்து வாசிப்பார்கள் இனி எங்களின் ராஜ்ஜியம் என்பார்கள் மற்றயவை பொய்க் கடவுள்கள் என்றும் சொல்கின்றார்கள் கடவுள்களின் முன்னேயே ஏதோ நடந்து ஆநிரைகள் சில குட்டிகள் சில கருக்களில் சில எரிந்து நசிந்து மூச்சடக்கி என்று இறந்து போகின்றன அன்று வந்த கடவுள் ஓடித் தப்பி மறைந்து விடுகின்றார் மிச்சமான கடவுள்கள் தங்களுக்கு மிகவும் வேண்டாத ஒரு கடவுளே கொன்று குவித்தது என்கின்றார்கள் கடவுள்களின் போதகர்களும் தங்களின் கடவுள்களின் சொற்களையே போதிக்கின்றார்கள் இது தான் தருணம் என்று ஆநிரைகளின் இடம் வரும் சில கடவுள்களிடம் 'அவங்கள சும்மா விடாதீங்க................' என்று கதறுகின்றன எரியாமல் நசியாமல் மூச்சுடன் இன்று உயிர் தப்பிய ஆநிரைகள் அடுத்த கடவுள் வருகையிலும் இன்று தப்பிய ஆநிரைகள் சில இறக்கப் போகின்றன சும்மா விடப் போவதில்லை இந்தக் கடவுள்கள்.1 point- பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
குமாரசாமி, இந்த விடயத்துக்கு எதுக்கு ‘புலம்ஸ்’ஸை கேட்டுக்கொண்டு? பேசாமல் அமைச்சர் ஐயா இராமலிங்கம் சந்திரசேகரருக்கு ஒரு போன் போட்டு சொன்னால், அவர் கவனிச்சுக் கொள்வார்😛1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நான் நினைத்தேன் பாக்கிஸ்தானுக்காகத்தான் இலங்கையில் போட்டிகள் வைத்தார்கள். மழைகாலம் இன்னும் முழுதாக ஆரம்பிக்கவில்லை. ஆனால் என்னமோ தெரியேல, போட்டி வைக்கிற அன்று சரியாகப் பெய்யும்.1 point- பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
தரமான பேரூந்து வண்டிகளை மட்டுமல்ல தரமான வண்டி ஓட்டிகளையும் தெரிவு செய்ய வேண்டும். தற்போது விமான ஓட்டிகளை பரிசோதனையின் பின்பு விமானப் பறப்புக்கு அனுமதிப்பது போல பேரூந்து வண்டி ஓட்டிகளையும் பரிசோதனையின் பின்புதான் ஓட்டவிட வேண்டும்.1 point- கரூர் மரணங்கள்: "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை; ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்" - உயர் நீதிமன்றம்
1 pointஇது மிக நியாயமான சந்தேகம்👍. அதான் அப்படி கறார் காட்டி இருக்கார் ஜட்ஜ் ஐயா.1 point- பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
யாருக்காவது உதவும் பகிருங்கள் இலங்கை போக்குவரத்து சபை CTB 🔴திருகோணமலை 0262222201 ⭕️பேருந்து நிலையங்கள் யாழ்ப்பாணம் 0212222281 கிளிநொச்சி 0212283637 ⭕️முகாமையாளர்கள் யாழ்ப்பாணம் 0771058150 / 151 கிளிநொச்சி 0771058170 / 171 முல்லைத்தீவு 0771058190 / 191 வவுனியா 0771058160 / 161 மன்னார் 0771058140 / 141 ⭕️இ.போ.ச - வட பிராந்தியம் 0212222877 ⭕️பிரதம பிராந்திய முகாமையாளர் Chef Regional Manager (CRM) 07715058100 ⭕️பிராந்திய முகாமையாளர்கள் Operation Manager 0771058101 ⭕️சாலை யாழ்ப்பாணம் (கோண்டாவில்) 0212222207 காரைநகர் 0212283637 பருத்தித்துறை 0212262188 முல்லைத்தீவு 0212290139 தற்போது நாட்டு சூழ் நிலையினை கருத்தில் கொண்டு பயணம் தொடர்பான தகவல்களுக்கு பொது போக்குவரத்து தொடர்பான தொடர்பு இலக்கங்களை உங்கள் தொலைபேசியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். என்ன நேரம் பஸ் இருக்கு, இல்லை என்பதை அறிய அடுத்தவரை call எடுத்து அடிக்கடி தொந்தரவு செய்யாமல் நீங்களே உரிய சேவை தரப்பிடம் கேட்டு கொள்ளுங்கள். தகவல் தொகுப்பு: த. கிருஷ்ணா ஏனயவர்களுக்கும் உதவும் தகவல் என்பதால் இங்கே பகிர்ந்துள்ளேன்.1 point- பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
@கிருபன் @பெருமாள் @ரசோதரன் @alvayan உடனடியாக செயல்படவும்.1 point- பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
எல்லாருக்கும் முன்னுதாரணமாய் வெளிநாட்டில் வசிக்கும் வடமராட்சி மக்கள் பணம் சேர்த்து இரண்டு பேரூந்துகளை வாங்கி அன்பளிப்பு செய்தால் என்ன?😎1 point- யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
புலம்பெயர் தேசங்களில் இன்றும் மணமகன் மணகள் இன்ன இன்ன சாதி என்று குறிப்பிட்டுத்தான் வரன் தேடுகின்றார்கள். நாகரீகமடைந்த நாடுகளில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளே இந்த மனநிலையில் இருக்கும் போது......அந்த மண்வாசனை சும்மா விடுமா?1 point- நாம் செல்போன்களை அடிக்கடி மாற்றுவது ஏன்? ஒரு விரிவான அலசல்
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் பரத் ஷர்மா பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 'ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இந்த மொபைலை வாங்கினேன், இப்போது ஹேங் ஆகத் டொடங்கிவிட்டது.' 'கேலரி நிரம்பிவிட்டது, இந்த போனில் ஸ்டோரேஜில் பிரச்னை உள்ளது.' 'என்ன செய்வது என தெரியவில்லை, பழுதுநீக்கம் செய்ய வேண்டுமா?' 'இப்போது தள்ளுபடியில் மொபைல் கிடைக்கிறது, புதிதாக ஒன்றை வாங்கிவிடு.' 'இந்த பழைய மொபைலை என்ன செய்வது?' 'பாட்டிக்கு கொடுத்துவிடு அல்லது புதிய மொபைல் வாங்கும்போது கொடுத்துவிட்டால் எக்சேஞ்ச் ஆஃபரில் குறைந்த விலையிலேயே மொபைல் வாங்கிவிடலாம்.' டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இருவரிடையே நடந்த இந்த உரையாடல், இந்தியாவில் மொபைல் போன் சந்தை குறித்த வெவ்வேறு சித்திரங்களை உணர்த்துகிறது. ஆனால், இது எப்போதும் இப்படி இருந்ததில்லை. ஜூஐ 31, 1995. இந்தியாவில் முதன்முறையாக மொபைல் போன் அழைப்பு ஒலி கேட்ட நாள் இது. அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் சுக் ராம் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதி பாசு இடையிலான முதல் மொபைல் அழைப்புக்கும் தற்போது 85.5% இந்திய குடும்பங்களில் குறைந்தது ஒருவராவது மொபைல் போன் வைத்துள்ளதற்கும் இடையில், இந்த சாதனம் இந்தியாவில் நீண்ட பயணத்தை சந்தித்துள்ளது. இந்த சாதனம் பேசுவதற்கு மட்டும் இப்போது பயன்படவில்லை. பலருக்கும் அது வங்கி சேவை, கேமரா, விளையாட்டு, வீடியோ அழைப்பு, வகுப்பறை மற்றும் தொலைக்காட்சியாகவும் உள்ளது. உலகளவில் மொபைல் போன் உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது, 300 தொழிற்சாலைகள் மொபைல் போன்களை உற்பத்தி செய்கின்றன என அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 33 கோடி போன்கள் உற்பத்தியாகின்றன, இதில் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. தற்போது, இந்தியாவில் சுமார் 100 கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன. உலகளவில் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா தற்போது உள்ளது. மலிவு விலை போன்கள் மற்றும் விலை அதிகமான பிரீமியம் போன்கள் வரை சந்தையில் விற்பனையாகின்றன. மொபைல் போன் மலிவாகிவிட்டதா? பட மூலாதாரம், Getty Images வாடிக்கையாளர்கள் ஏன் தங்கள் மொபைல் போன்களை அடிக்கடி மாற்றுகின்றனர் என்ற கேள்வி மனதில் எழுகிறது. மொபைல் போன்களின் விலை மலிவாகிவிட்டதா? மொபைல் போன்கள் நீடித்து உழைக்கக் கூடியதாக இல்லையா? பழைய மாடல் போன்களை போன்று வலுவானதாக இல்லையா? சாஃப்ட்வேர் அப்டேட்டுகள் மற்றும் ஹார்டுவேர் மாற்றம் ஆகியவற்றால் மொபைல் போன்களை மாற்றுவது அவசியமாகிறதா? வாடிக்கையாளரின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டதா? அல்லது இந்த அனைத்து விஷயங்களுமே உண்மையா? தொழில்நுட்ப நிபுணர் முகமது ஃபைசல் அலி கவுசா, இதை பெரிய மாற்றத்துடன் தொடர்புபடுத்துகிறார். அவர் கூறுகையில், "எலெக்ட்ரானிக் பொருட்கள் மீதான வாடிக்கையாளர்களின் நடத்தை குறிப்பிடத்தக்க அளவு மாறியுள்ளது. முன்பு, தந்தையோ அல்லது சில சமயங்களில் தாத்தாவோ தொலைக்காட்சியை வாங்குவர், அதையே மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உபயோகிப்பார்கள். ஆனால், இப்போது ஒவ்வொரு தலைமுறைக்கும் பல தொலைக்காட்சிகள் உள்ளன. இது ஒரு தலைமுறை மாற்றம், அவர்களால் அதனை வாங்கவும் முடிகிறது" என்றார். மொபைல் போன்களை அடிக்கடி ஏன் மாற்றுகிறோம்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, செல்லுலார் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், மொபைல் போன்களை மாற்றுவதற்கான ஒரு முக்கிய காரணமாகும். இதுகுறித்து கவுசா கூறுகையில், "ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரையில், அதன் தொழில்நுட்பம் தொடர்ந்து மாறிவருகிறது. 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி ஆகியவை உள்ளன, இன்னும் சில ஆண்டுகளில் 6ஜி வந்துவிடும். இதுதான் மொபைல் போன்களை மாற்றுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. போனில் ஏதேனும் பிரச்னை இருக்கும், பேட்டரி சார்ஜ் சரியாக இருக்காது. இத்தகைய காரணங்களால் வாடிக்கையாளர்கள் மொபைல்களை மாற்ற வேண்டும் என கருதுகின்றனர்." என்றார். ஆனால், ஏன் இந்த பிரச்னை ஏற்படுகிறது? மொபைல் போன் பயன்பாடு மிக அதிகமாவதால், அது விரைவிலேயே செயலிழந்துவிடுகிறதா? கவுன்ட்டர்பாயின்ட் ரிசர்ச் எனும் உலகளாவிய தொழில்நுட்ப சந்தை ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு இயக்குநர் தருண் பதக் இதை சுட்டிக்காட்டுகிறார். அவர் கூறுகையில், "முன்பு, நாம் போனை பேசுவதற்கும் ஒருசில கேம்கள் விளையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தினோம், சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மட்டுமே பயன்படுத்தினோம். ஆனால், இப்போது, இந்தியாவில் சராசரியாக மொபைல் போன் உபயோகிக்கும் நேரம் ஆறு முதல் ஆறரை மணிநேரமாக உள்ளது, அதாவது மும்மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது ஒருநாளில் கால்வாசி நேரத்தை மக்கள் போன்களில் செலவழிக்கின்றனர். அதனால், பல ஆபத்துகளுக்கும் அவர்கள் ஆட்படுகின்றனர்," என்றார். கவுசா கூறுகையில், "ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து பயன்பாட்டிலேயே உள்ளன. எப்போதும் அவை உங்கள் கைகளிலேயே உள்ளதால், அவை கீழே விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, இதனால் அவை சேதமாகின்றன. போனை உபயோகிக்கும்போது 19-20 நொடிகள் தாமதமானால் கூட, அதுகுறித்து புகார் கூறுகின்றனர்." என்றார். 2017ம் ஆண்டில், உலகளவில் 140-150 கோடி போன்கள் விற்பனையாகி, ஸ்மார்ட்போன் சந்தை விரிவடைந்தது. அது பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இப்போது, உலகளவில் 120 கோடி ஸ்மார்ட்போன்கள் என்ற அளவில் உள்ளது. தருண் பதக் பிபிசியிடம் கூறுகையில், "மக்கள் அதிகளவில் போனை பயன்படுத்துகின்றனர் என அர்த்தம். " என்றார். எனினும், வாடிக்கையாளர்கள் மொபைல் போன்களை மாற்றுவதற்கு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து மதிப்பீடு செய்பவரும், சிஎன்பிசி-டிவி18 தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஷிபானி கரத் கூறுகையில், சாஃப்ட்வேர் அப்டேட், பேட்டரி செயலிழப்பு மற்றும் ஹார்டுவேர் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் மொபைல் போன்கள் "பயனற்றதாகி” விடுகின்றன என்கிறார். ”ஆப்கள் மற்றும் செயல்பாட்டு அமைப்புகளுக்கு நாளடைவில் அதிக ஆற்றலும், ஸ்டோரேஜும் தேவைப்படுகின்றன, எனவே பழைய மொபைல் போன்கள் நீடித்து உழைப்பதில்லை" என்றார். ஷிபானியின் கூற்றுப்படி, பழைய மொபைலுக்கு புதிய மொபைலை வாங்குவது அல்லது புதிதாக மொபைல் வாங்குவது என்பது முற்றிலும் இயல்பானது அல்ல, நீண்ட ஆயுளை விட புதிய நவீன வடிவமைப்பை நுகர்வோர் விரும்புவதும் காரணமாகும். வாஷிங் மெஷின் அல்லது மைக்ரோவேவ் போன்றவை பத்தாண்டுகளுக்கு ஒருமுறையே வாங்கப்படுகின்றன, மாறாக, மொபைல் போன் தயாரிப்பு என்பது லாபத்தைத் தொடர்ந்து பெறும் சாதனமாக உள்ளது. "மொபைல் போன்கள் தொடர்ந்து வேலை செய்தாலும், அப்டேட் நின்றுவிட்டால் அவை பயனற்றதாகிவிடுகின்றன," என ஷிபானி பிபிசியிடம் கூறினார். "சில நிறுவனங்கள் ஆறு ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் பாதுகாப்பு இணைப்புகளை வழங்குகின்றன, ஆனால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானது. பலரும் தங்கள் போன்களை 3-5 ஆண்டுகளுக்கு வைத்துக்கொள்கின்றனர். ஆனால், முன்பு போன்களை வாங்குவது செலவுகரமானதாக கருதப்பட்டது, இப்போது அப்படியல்ல." ஷிபானி கருத்துடன் தருண் பதக்கும் ஒப்புக்கொள்வதாக தெரிகிறது. அவர் கூறுகையில், "ஒரு விஷயம் உண்மை: பேட்டரிகளைப் போன்று போனும் நிறைய மாறிவிட்டது. வேகமாக சார்ஜ் ஏற்றும் வசதிகள் வந்துவிட்டன. பேட்டரியை சார்ஜ் செய்யும் சுழற்சிகள் மாறிவிட்டன. பேட்டரி செயல்பாடு 3-4 ஆண்டுகளில் குறைந்துவிடும். சில நிறுவனங்கள் மட்டுமே 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் அல்லது பாதுகாப்பு அப்டேட்டுகளை வழங்கும். போன்களின் ஸ்டோரேஜ் தீர்ந்துபோகும் அளவுக்கு அவற்றில் தரவுகள் உள்ளன." என்றார். மொபைல் போன்களை சரிசெய்வது ஏன் அதிக செலவு பிடிக்கிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மொபைலை நீடித்து உழைக்கச் செய்வதற்காக, அது ஒற்றை உடலமைப்பைக் கொண்டதாக மாற்றப்படுகிறது, இதன் காரணமாக அதன் பழுதுபார்ப்பு கடினமாகி வருகிறது. போன் பழுதானால், அதை அந்நிறுவனத்திற்கு சென்று சரிசெய்ய நினைத்தால், அதன் விலையை கேட்கும்போது புதிய போனே வாங்கிவிடலாம் என்று தோன்றுவதாக பலரும் சொல்கின்றனர், இது உண்மையா? ஷிபானி இந்த கேள்விக்கு பதிலளிக்கையில், "போனின் உடைந்த திரையை மாற்றுவதற்கான செலவு, புதிய போனின் விலையில் பாதி இருக்கிறது, அதனால் புதிய மொபைல் ஏன் வாங்கக்கூடாது என வாடிக்கையாளர் நினைக்கிறார். ஆனால், மொபைல் நிறுவனம் கூறும் விலையை விட 10% குறைவான விலையில் சரிசெய்யும் கடைகள் இந்தியாவில் உள்ளன. ஆனால், ஒரு மொபைலுக்கு 1,50,000 ரூபாய் செலவிடுபவர்கள், அதை அம்மாதிரியான கடைகளுக்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள். " என்றார். மொபைல் பாகங்களின் அதிக விலையை தருண் பதக் சுட்டிக்காட்டுகிறார். அவர் கூறுகையில், "மொபைல் பழுதுநீக்கம் செய்வது ஏன் செலவுகரமானது? ஏனெனில், செமிகண்டக்டர் (semiconductors) விலை அதிகமாக உள்ளது. முன்பு மொபைல் போன்கள் எல்சிடி திரைகளுடன் இருந்தன, இப்போது 60-70% போன்கள் OLED திரைகளுடன் உள்ளன, அவை அதிக விலை கொண்டவை. மொபைல் போன் பாகங்கள் விலை மிகவும் அதிகம். பிராஸசர்கள் மற்றும் கேமராக்களுக்கும் இதே நிலைதான். செலவை பொறுத்து பார்க்கையில், இந்த போக்கு அதிகரித்து வருகிறது." என்றார். எனினும் சில கட்டுப்பாடுகளும் இருப்பதாக பதக் கூறுகிறார். ”போன் ஹார்டுவேர்களில் புதுமையை புகுத்துவது மட்டுப்படுத்தப்பட்டது. கேமராக்களிலும் இதே நிலைதான். அளவு மற்றும் வடிவமைப்பு என சில மாற்றங்களே உள்ளன.” போனை நீடித்து உழைக்கும் வகையில் மாற்றும்போது, அதை சரிசெய்வது மிகவும் கடினமாகிறது. அவர் கூறுகையில், "மக்கள் முன்பு போன்களை எளிதில் கழற்றி, அதன் பேட்டரிகளை அகற்றுவார்கள். ஆனால், இப்போது அப்படியல்ல. பாகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாக உள்ளன. மொபைல் போன்கள் நீடித்து உழைப்பது மற்றும் பழுதுநீக்கம் செய்வது இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். பாகங்களை பொறுத்து அதன் ஆயுட்காலத்தை நிறுவனங்கள் குறைப்பதாக கூறுவது தவறானது" என்றார். கவுசா இதனை லேப்டாப் உதாரணத்துடன் விளக்குகிறார். லேப்டாப்களில் முன்பு எளிதில் அகற்றக்கூடிய வகையிலான RAM மற்றும் ஸ்டோரேஜ் இருந்தன. RAM மற்றும் ஹார்ட் டிரைவ் ஆகியவை பழுதடைந்தாலும் அவற்றை தனியே மாற்ற முடியும், இப்போது மதர்போர்டுடன் இணைக்கப்பட்டதாகவே அவை வருகின்றன. ஒன்று பழுதானால், மொத்த அமைப்பையும் மாற்ற வேண்டிவரும். வடிவமைப்பை பொறுத்து, பழுது நீக்கத்தைவிட மொத்தமாக மாற்றுவதை நோக்கி வாடிக்கையாளர்கள் நகர்கின்றனர். பழைய மொபைல் போன் சந்தையின் வளர்ச்சி பட மூலாதாரம், Getty Images மக்களின் பழக்கங்கள் மாறிவிட்டதாகவும், மொபைல் போன்களை அடிக்கடி மாற்றுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இது உண்மை, ஆனால் ஒரு போனின் ஆயுட்காலம் குறைந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. தருண் பதக் கூறுகையில், "மக்கள் இப்போது பழைய போன்களை வாங்குகின்றனர், அதற்கான சந்தையும் வேகமாக வளர்ந்துவருகிறது. அதை பயன்படுத்திய பின் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கின்றனர், அல்லது விற்றுவிடுகின்றனர், அல்லது மாற்றிவிடுகின்றனர். இது போனின் ஆயுட்காலத்தை அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில், போன் முதலில் வாங்கியவரிடத்தில் இருக்கும், பின்னர் அந்த பழைய போனை வாங்கியவர்கள் இரண்டு ஆண்டுகள் உபயோகிப்பார். மக்களின் நடத்தை மாறியுள்ளது, ஆனால் போன்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது." என்றார். 5ஜி நெட்வொர்க் வந்தவுடன், இந்தியாவில் பழைய மொபைல்களுக்கான சந்தை திடீரென அதிகரித்தது, அந்த வளர்ச்சி இன்றும் தொடர்கிறது. சிசிஎஸ் இன்சைட்ஸ் நிறுவனத்தின் ஏக்தா மிட்டல் எழுதுகையில், "உலகளவில் பழைய மொபைல் போன்களுக்கான மூன்றாவது பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. சீனாவும் அமெரிக்காவுமே இதில் இந்தியாவைவிட முன்னணியில் உள்ளன. 2024ம் ஆண்டில் 10% என்ற அளவில் இதன் வளர்ச்சி விகிதம் இருந்தது. புதிய போன்களை வாங்குவது இந்தாண்டு குறைந்தாலும் பழைய போன்களின் விற்பனை சந்தை நன்றாகவே உள்ளது" என்கிறார். கவுசா கூறுகையில், போனை பழுதுநீக்கம் செய்வது செலவுகரமானது என்றாலும், இந்த போக்கை வாடிக்கையாளர் நடத்தையுடன் அவர் தொடர்புப்படுத்துகிறார். விற்பனை எனும் பெயரில் ஒவ்வொரு சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு வரும் புதிய மொபைல் போன்கள், தொழில்நுட்ப அளவில் மாற்றங்களுடன் வருகின்றனவா? ஷிபானி பதிலளிக்கையில், "கேமரா டிஸ்பிளே, ஏஐ வசதிகள், பேட்டரி திறன் ஆகியவற்றில் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளன, ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகமாகும் போன் மாடல்கள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றத்தை உணர்த்துவதாக இல்லை." என்கிறார். தருண் பதக் கூறுகையில், "பட்டன் முதல் தொடுதிரை வரையிலான மாற்றங்களை பெரிய மாற்றங்களாக மொபைல் போன் உலகில் கருதலாம். ஆனால், தொழில்நுட்பம் மாறுவதில்லை, மாறாக வடிவமைப்பு மட்டுமே மாறுகிறது. போன்கள் மெல்லியதாகவும், கையடக்கமாகவும், வண்ணமயமாகவும் மடிக்கக்கூடியதாகவும் மாறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் போனின் கேமராவை பார்க்கையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான போனின் கேமராவும் இப்போதுள்ள கேமராக்களுக்கு இணையாக போட்டியிட முடியும். சாஃப்ட்வேரை பொறுத்தவரையில் இப்போது ஏ.ஐ. வசதி வந்துள்ளதை மாற்றம் எனலாம், யு.ஐ. (user interface) அளவிலும் சில மாற்றங்கள் வந்துள்ளன" என்றார். இந்த கட்டுரை ஆரம்பிக்கப்பட்ட இடத்திற்கு செல்லலாம். கவுன்ட்டர்பாயின்ட் இந்தியாவில் வெளியான ஸ்மார்ட்போன் நீடிப்புதன்மை குறித்த ஆய்வில், "79% பயனர்கள் மொபைல்கள் நீடித்திருக்கும் தன்மை மிகவும் முக்கியம் என கூறியுள்ளனர். அதிகம் சூடாகுதல் (41%), பேட்டரி குறைந்துபோதல் (32%) மற்றும் தற்செயலாக சேதமடைதல் (32%) ஆகியவற்றை முக்கிய குறைகளாக கருதுகின்றனர். மேலும், மூன்றில் ஒருவர் ஸ்மார்ட்போன் பழுதுநீக்கம் செய்வதற்கு ரூ. 5,000க்கும் அதிகமாக செலவிடுகிறார். தங்களுடைய போன்கள் செயலிழக்கும்போது தங்களின் தனிப்பட்ட தரவுகள் குறித்து 89% பேர் கவலைகொள்கின்றனர், தங்களின் குடும்பப் புகைப்படங்கள், வங்கி தகவல்களை இழந்துவிடுவோமோ என அவர்கள் நினைக்கின்றனர்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gjyl09q39o1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- கருத்து படங்கள்
1 point- குட்டிக் கதைகள்.
1 point🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sundhari S ·tedrspoSnolf0u 1hi33l4aa5e àilha7l,clg8u1ahH8270l1t:fr1013ma · ஒரு கஞ்சன் தனது மனைவியுடன் ஒரு நகருக்கு வந்தான். ஒரு இடத்தில் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது. நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர். கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை. அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க, அவர்கள் வேண்டாம் என்றனர். அவரும் விடாமல்,”நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள். நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது. சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம். ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்,”என்றார். உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர். ஹெலிகாப்டர் இயக்குபவர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார். குட்டிக் கரணம் போட்டார். வேகமாக இயக்கினார். ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே இறக்கியதும் அவர் அந்தக் கஞ்சனிடம், ”எப்படிங்க, நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?” என்று வியப்புடன் கேட்டார். அந்தக் கஞ்சனும் பெருமையாக, ”எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது. ஆனாலும் சமாளித்து விட்டேன்,” என்றான். அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க, கஞ்சன் சொன்னான், ”என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.”.......! Voir la traduction1 point- யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
அந்த மாணவி கொஞ்சம் அவசரப்பட்டு விட்டாற்போல் இருக்கிறது ......... இதற்காக அவரை ஒதுக்கி வைத்த மாணவிகள் தான் வெட்கப்பட வேண்டும் . .........!1 point- தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
முடிந்த அளவு எண்டால் அது எந்த அளவு? 😂 உங்கட வீட்டு சாவியை ஒருக்கால் தரமுடியுமா? ஒருக்கால் வீட்டுக்குள்ள இருக்கிற தட்டுமுட்டு சாமான்களை செக் பண்ணி பார்க்க வேணும். 🤣1 point- யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
இதன் வேர் சாதி என்று நான் நினைக்கிறேன். மாணவ மாணவிகள் விளையாட்டின் ஊடாக மனவுறுதி மற்றும் வெற்றி தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் பெறுவார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை அரவணைத்து ஊக்குவிப்பவர்களாக இருக்கவேண்டும்.1 point- கருத்து படங்கள்
1 point- காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார்
ஆக மொத்தத்தில் நெத்தன்யாஹுவும், ஹமாஸும்.... ட்ரம்பின் ஆசையில் மண் அள்ளிப் போடப் போகிறார்கள் போலுள்ளது. 😂 அப்படி நோபல் பரிசு ட்ரம்பிற்கு கிடைக்காமல் போனால், ட்ரம்ப் தன்னிச்சையாக சில நாடுகளை சேர்த்துக் கொண்டு அமெரிக்க மேற்பார்வையில் (தற்போது ஐ.நா. சபை ஒப்புக்கு சப்பாணியாக உள்ளது போன்று) நோபல் பரிசிற்கு இணையான ஒரு சர்வதேச நிறுவனத்தை ஆரம்பித்து... தனக்கு சமாதானத்துக்குரிய 🥇 பரிசை பெற்றுக் கொண்டாலும் ஆச்சரியம் இல்லை. 🎖️ 🙂 ஏனென்றால்... இது ட்ரம்பின் தனிப்பட்ட தன்மானப் பிரச்சினை. "தனது தோல்வியை... இலகுவில் ஜீரணிக்க முடியாத ட்ரம்ப்... "பேட்டை ரவுடி" மாதிரி எந்த அடி மட்டத்திற்கும் இறங்கி, "நாத்தல்" வேலை செய்யக் கூடியவர்தான் ட்ரம்ப்". 🤣1 point- காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார்
ட்ரம்பின் உத்தரவை…. இஸ்ரேல் கணக்கில் எடுக்குமா? அப்படி எடுத்து… இஸ்ரேல் போரை நிறுத்தினால்… !!! ? எப்படியும் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசை வாங்கியே தீருவேன் என்று பல வழிகளிலும் “அடாத்தாக அடம் பிடித்துக் கொண்டு நிற்கும் ட்றம்பிற்கு” நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புகள்!? உள்ளதாகவே தெரிகின்றது. அடுத்த மாதம் நவம்பரில்…. நோபல் பரிசு அறிவிப்பற்கான நேரம் நெருங்கிக் கொண்டுள்ளது. அது…. ட்றம்பிற்கு கிடைக்காவிட்டால், நோபல் பரிசு அறிவிக்கும் குழுவிற்கு அட்டமத்து சனி ஆரம்பம்தான். 😂 ட்றம்பிற்கு சமாதானத்துக்குரிய, நோபல் பரிசு கொடுத்தால்…. நோபல் பரிசுக்கு அவமானம். கொடுக்காமல் விட்டால்…. ட்றம்பிற்கு அவமானம். எப்படிப் பார்த்தாலும்… இன்னும் ஒரு மாதத்தில் நல்ல கூத்து ஒன்று இருக்கின்றது. 🤣1 point- கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
அட… பந்தயம் எண்டது வரேல்ல என சொல்லிவிட்டு போனவர் விசுகு அண்ணா. பந்தயமா எண்டு கேட்ட திரியில் படுத்த பாய்கும் சொல்லாமல்…..எஸ் ஆன அண்ணைக்கு தன்னை சொல்லேல்ல எண்டு கோவமாக்கும்🤣1 point- பிளாஸ்டிக், குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்கள் குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு
குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல் அங்கீகாரம் பெற்றதா என சாதாரண மக்கள் அறிந்துகொள்வது எப்படி? பரிசு பொருட்களாக பாலூட்டும் போத்தல்களை குழந்தைகளுக்கு வழங்குகின்றார்கள். பரிசாக கிடைத்த அங்கீகாரம் பெறாத பாலூட்டும் போத்தலை சாதாரண மக்களால் கண்டுபிடிக்க முடியுமா?1 point- ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
பேரதானிய,மொரட்டுவ,கொழும்பு பல்கலைகழகத்தில் படிக்கும் பொழுது அடிவாங்கி சிவப்பு சிந்தனையுடன் ஒடிவந்த பலர் இப்ப கூவி கொண்டு திரியினம் ... உவையல் யார் அரியனையில் ஏறினாலும் தொப்பி மாற்றி போடுவினம் ...கேட்டா தீவாராம் தாங்கள் என புலம்பல் வேற...1 point- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
1 point1 point- கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
நீங்கள் வெள்ளை பெயின்ற் வாளியும் கையுமாய் திரிஞ்சாலும் அப்பப்ப பல்டி அடிக்கிறது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...பிடிச்ச பிடியை விடாதேங்கோ 😂 பெயின்ற் வாளிய சொன்னனான்..😎1 point- கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
ஆனால் அந்த மண் குதிரைக்கு பயந்து நீங்கள் பந்தயத்துக்கு வரவில்லை என்பது எனக்கும் தெரியும் என நான் சொல்ல மாட்டேன்🤣. பிகு பந்தையம் சீமான் 15% க்கு மேல் எடுக்க மாட்டார் என்பது என நினைக்கிறேன் (எத்தனை சதவீதம் என்பது மறந்து போய்விட்டது, ஆனால் இரெட்டை இலக்கம்). அதில் இப்போதும் மாற்றம் இல்லை. ஆனால் பந்தயத்தில் கலந்து கொள்ளும் கால எல்லை முடிந்து விட்டது. நானா…. வாத்தியார் அண்ணாவா… 🤣🤣🤣 ரோமபுரி கிளேடியேட்டர்ஸ் போல, யாழ்கள கிளேடியேட்டர்ஸ் இருவரில் யார் சிங்கத்து இரையாக போகிறார் என்பதே இப்போ கேள்வி🤣.1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தம்பி உங்கள் அரிச்சனைச் சீட்டில் எனது பெயரையும் சின்னனா எழுதிவிடுங்கள். 1)ஏராளன் - 9 புள்ளிகள் முதலமைச்சர் ஏராளனுக்கு வாழ்த்துக்கள்.1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 5) 10 விக்கேற்றுக்களினால் இங்கிலாந்து அணி தென்னாபிரிக்கா அணியை தோற்கடித்தது. 10 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1)ஏராளன் - 11 புள்ளிகள் 2)கிருபன் - 11 புள்ளிகள் 3)அகஸ்தியன் - 11 புள்ளிகள் 4)ஆல்வாயன் - 9 புள்ளிகள் 5)வாதவூரான் - 9 புள்ளிகள் 6) ரசோதரன் - 9 புள்ளிகள் 7) வீரப்பையன் - 9 புள்ளிகள் 8)சுவி - 8 புள்ளிகள் 9)புலவர் - 7 புள்ளிகள் 10)செம்பாட்டன் - 7 புள்ளிகள் 11) நியூபலன்ஸ் - 7 புள்ளிகள் 12)வாத்தியார் - 5 புள்ளிகள் 13) வசி - 5 புள்ளிகள் 14)கறுப்பி - 5 புள்ளிகள் 15)ஈழப்பிரியன் - 5 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 5, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.1 point- கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
மரத்தின் உச்சாணிக்கொம்பில் ஏறிக்குந்தியிருந்துகொண்டு இந்த உலகமே எனக்கு கீழே என்று ரீல்ஸ் போடும் காக்கா கூட்டத்திற்கு காவல் துறையால் பாதுகாப்புக்கொடுத்திருக்க முடியாது. இந்திய விமானப்படை வேண்டுமென்றால் முயற்சிசெய்து பார்த்திருக்கலாம். அணில்குஞ்சுகளின் ஒவ்வொரு சதிக்கோட்பாட்டிற்குமான counter காணொளிகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவர்கள் எப்படியான ஒரு சமூக குப்பைகள் என்பதும் இப்படியான கும்பலிடம் ஒரு ஆட்சியதிகாரம் சென்றால் அதன் நிலை எப்படியிருக்குமென்பதும் நடுநிலையான மக்களுக்கு விளங்க ஆரம்பித்திருக்கிறது. மிகவிரைவில் இவர்கள் காணாமல் போவதுடன் இவர்களது தலைவர் பெரிய அணில் இப்போது head down coalition எவருடனாவது போனாலொழிய இனி அவருக்கு அரசியலெதிர்காலம் இல்லை. இந்த கும்பல் மிகவிரைவில் சினிமாவில் தனது அடுத்த நாயகனை தேடிப்போய்விடும். உண்மையில் பாவம் பெரிய அணில் சினிமாவும் அரசியலும் இரண்டு எதிரெதிர் தளங்கள் என்பதை புரியாமல் காலை விட்டுவிட்டார். சினிமாவில் மக்களை அதிகமாக சந்திக்காமல் கற்பனையான கதாபாத்திரங்கள் மூலம் மாஸ் காட்டி மக்கள்மனதில் இடம் பிடிக்கும் கனவுத்தொழிற்சாலை அது. அங்கே மக்களை நேரே சந்திக்காமல் திரைப்படம் மூலம் சந்திக்க சந்திக்க கிரேஸ் ஏறும். அரசியல் அப்படியே நேரெதிர் தன்மை கொண்டது இங்கே மக்களை நேரடியாக சந்த்தித்தால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் அதே நேரம் நடிகனாக உருவாக்கிய வேற்றுப்பிம்பம் மக்களை சந்திக்க சந்திக்க கலைய ஆரம்பிக்கும் பாவம் விஜய் 4 வது சந்திப்பிலேயே காலி. இனி என்ன பாஜகவை கூப்பிட்டு சம பந்தியில் உட்காரவைக்க வேண்டியதுதான்1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
என்ன சொல்கிறீர்கள். தேவையான ஓய்வை எடுங்கள். யாழ் களம் இங்கேயே இருக்கும். இந்தப் போட்டியெல்லாம் சும்மா முசுப்பாத்திக்குத் தானே. உங்கள் நலம்தான் முக்கியம். இங்கு வருவது உங்கள் மனதுக்கு ஆறுதல் என்றால் மகிழ்ச்சி. ஆனால் சிரமமாக இருந்தால், தேவையான ஓய்வை எடுத்து முழு ஆரோக்கியத்துடன் திரும்பி வாருங்கள். உங்கள் ஆரோக்கியத்துக்கு.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இந்த தொடரில் தமிழக வீரர் வஸ்சின்டன் சுந்தர் சிறப்பாக விளையாடினார் வஸ்சின்டன் சுந்தர் அடிச்ச ரன்ஸ்சும் முன்னனி வீரர்களின் விக்கேட்டை எடுத்த படியால் தான் விளையாட்டு 2/2 என முடிஞ்சது யாழில் ஜபிஎல் திரியில் கூட எழுதி இருந்தேன் வஸ்சின்டன் சுந்தர் சிறந்த வீரர் என , கிடைச்ச வாய்ப்பை சரிய பயன் படுத்தினார் வஸ்சின்டன் சுந்தருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்🙏👍.........................1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- சிரிக்கலாம் வாங்க
1 pointஅவசரத்திற்கு என்னை பயன்படுத்துங்கள்...☝ ஆரோக்கியத்திற்கு என் குருநாதரை பயன்படுத்துங்கள்...👇1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இன்று வந்த இந்த மயக்கம் ......... சசிகுமார் & ஜெயகுமாரி .........! 😍1 point- கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
கடவுள் பற்றிய அருமையான புரிந்துணர்வு. இன்றைய தொலைத் தொடர்புப் பரிமாற்ற வசதி இல்லையென்றால் இன்றைய ஹீரோக்களும் நாளைய உண்மையான கடவுள்களே. விரதமிருந்து காவடி எடுத்துக் கொண்டாடப்படுவார்கள்.1 point- ஒரு பயணமும் சில கதைகளும்
1 pointமுகராசி போல................. நீங்களே முன்னர் சொல்லியிருக்கின்றீர்கள்...........🤣. ஆபத்தில்லாதவன் என்று தெரிந்து தான் அருகில் வருகின்றார்களாக்கும்.1 point- ஒரு பயணமும் சில கதைகளும்
1 pointDolphinக்கு என்ன தமிழி சொல் என்று நான் யோசிச்சதுண்டு. நான் சின்னனாக இருந்த போது, ஒரு Dolphin (இறந்ததாக இருக்கலாம்) முனையில் கரை ஒதுங்கியது பற்றி ஈழநாதம் அல்லது உதயன் இல் பார்த்தது ஞாபகம். ஆனால் எந்தத் தமிழ் பெயரை பயன்படுத்தினார்கள் என்று நினைவில் இல்லை. பல ஆண்டுகள் கழித்து நான் ஓங்கில் என்ற சொல்லை மீண்டும் கேட்க்கிறேன். ஊரில் ஓங்கில் மீன் என்று சொல்லுவார்கள். ஆனால் என் ஊரில் Dolphin பார்த்ததேதில்லை, அதனால் அது என்ன மீன் எண்டே தெரியாமல் போயிட்டுது. ஓங்கில் என்பது ஒரு காரண பெயராக இருக்கலாம் — "ஓங்கி பாயும்" என்பதில் இருந்து வந்திருக்கலாம்.1 point- கரூர் நெரிசலில் 11 குழந்தைகளை பறிகொடுத்த குடும்பங்கள் இப்போது என்ன சொல்கின்றன?
படக்குறிப்பு, விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 குழந்தைகள் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்) செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய ரோட் ஷோவை ஒட்டி ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 11 பேர் குழந்தைகள். இம்மாதிரியான ஒரு நெரிசல் மிகுந்த கூட்டத்திற்கு குழந்தைகள் எதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்? குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்? தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது தொண்டர்கள் மத்தியில் பேசிவந்தார். பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பேருந்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட இடத்திற்கு இதற்காக வரும் விஜய், அந்த வாகனத்தில் இருந்தபடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். முதலில் திருச்சியிலும் பிறகு நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல், கரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல்லில் பிற்பகலில் தனது நிகழ்ச்சியை முடித்துக் கொண்டுவந்த விஜய், அன்று மாலை 7 மணியளவில் கரூருக்கு வந்துசேர்ந்தார். ஆனால், இந்த கரூர் கூட்டத்தில், விஜய் வரும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் குழந்தைகள் என்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படக்குறிப்பு, ஒன்றே முக்கால் வயதே ஆன குழந்தை துருவிஷ்ணு கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தது. அழக்கூட முடியாத மாற்றுத்திறனாளி தாய் இவ்வளவு நெரிசல் மிகுந்த, ஒரு அரசியல் கூட்டத்திற்கு எப்படி குழந்தைகள் சென்றனர், எதற்காகச் சென்றனர்? இந்தக் கேள்விகளுக்கு பதிலைத் தெரிந்துகொள்ள இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் பிபிசி நேரில் சந்தித்தது. நொறுங்கிப்போன மனதோடு பெற்றோரும் உறவினர்களும் குழந்தைகள் சென்ற பின்னணியை விவரித்தனர். திங்கட்கிழமை. கரூர் நெரிசல் சம்பவம் நடந்த மூன்றாவது நாள். அந்த நிகழ்வு நடந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் இருக்கிறது வடிவேல் நகர். அந்தப் பகுதிக்குள் நுழையும்போதே, ஒரு மூதாட்டியின் கதறல் காதில் விழுகிறது. ஒன்றே முக்கால் வயதேயான பேரன் துருவிஷ்ணுவை இழந்த துக்கத்தில் மூன்றாவது நாளாக கதறி அழுதுகொண்டிருந்தார் அவர். அந்த வீட்டின் வாசலில் குற்ற உணர்வே வடிவெடுத்ததைப்போல அமர்ந்திருக்கிறார் லல்லி. குழந்தையின் அத்தையான இவருடன்தான் அந்தக் கூட்டத்திற்கு துருவிஷ்ணு சென்றிருந்தான். "நான்தான் கூட்டிட்டு போய் வாரிக் கொடுத்துட்டேன்.. நான்தான் கூட்டிட்டுப்போய் வாரிக் கொடுத்துட்டேன்" என்று கதறிக் கொண்டிந்தார் லல்லி. சனிக்கிழமையன்று விஜய் வேலுசாமிபுரத்திற்கு வருகிறார் என்றவுடன் அவரைப் பார்க்க விரும்பினார் லல்லி. ஆகவே தனது குழந்தைகள் மதுமிதா, பரத், தனது சகோதரர் விமலின் குழந்தை துருவிஷ்ணு, தனது கணவர் ஆகியோருடன் சென்றார் லல்லி. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கரூர் நிகழ்வில் உயிரிழந்த 41 பேரில் 11 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். "அவனுக்கு விஜய்னா ரொம்ப பிடிக்கும். விஜய் பாட்டைக் கேட்டாலே ஓடிவந்து டான்ஸ் ஆடுவான். என்னை மாதிரியே என் தம்பி பையனும் விஜய் ரசிகனா இருக்கிறானேனு, அவங்க அப்பாகிட்ட சொல்லிட்டு தூக்கிட்டு போனேன். ஐந்து மணிக்கு போனதிலிருந்து தலையில துண்டு கட்டி போட்டோவெல்லாம் எடுத்தான். அப்பவே கூட்டம் இருந்தது. விஜய் வந்த பிறகு மேலே ஏறினார். எல்லோரும் கத்தினார்கள். நான் அவனுக்கு விஜய்யைக் காட்டினேன். டக்குனு கரண்ட் ஆஃப். ஜெனரேட்டர் உடனே போட்டுட்டாங்க. அதுக்குள்ள இப்படி ஒரு நிலவரத்தைக் கொடுக்கும்னு யாரும் நினைச்சுப்பார்க்கல. எனக்கு முன்னாடி இருந்த இருசக்கர வாகனம் கீழே விழுந்துவிட்டது. நானும் விழுந்துட்டேன். எனக்கு மேல் எத்தனை பேர் விழுந்தாங்கன்னு தெரியலை. ஏன்டா இந்தக் கூட்டத்துக்கு வந்தோம்னு ஒரு செகண்ட் யோசிச்சேன். நாமதான் வந்தோம், குழந்தையை ஏன் கூட்டிவந்தோம் என யோசித்தேன். என் அருகில் இருந்த ஒரு பெண், குழந்தையைக் கொடுக்கும்படி சொன்னார். அவர் இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டார். அப்போதெல்லாம் குழந்தை நன்றாக இருந்தான்" என அந்தத் தருணத்தை நினைவுகூர்கிறார் லல்லி. ஆனால், பிறகு தன் சகோதரரின் குழந்தையை அவரால் அரசு மருத்துவமனையில் சடலமாகத்தான் பார்க்க முடிந்தது. குழந்தையின் தாய் மாதேஸ்வரி காது கேட்காத, பேச முடியாத மாற்றுத்திறனாளி. அவரால் குழந்தை இறந்த சோகத்தைச் சொல்லி அழக்கூட முடியவில்லை. "இவ்வளவு துயரத்திலும் எங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் மிக மோசமாக எழுதுவது பெரும் வேதனையளிக்கிறது" என்கிறார் குழந்தையின் தந்தையான விமல். "உண்மைக்கு தொடர்பே இல்லாத வகையில் எழுதுகிறார்கள். குழந்தையை இழந்த குடும்பம் என்ற ஒரு சிறு கரிசனம்கூட அவர்களிடம் இல்லை. நான் குழந்தையை இழந்தது ஒருபுறமிருந்தாலும் வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சியில்தான் வாழப் போகிறாள் என் சகோதரி. எப்படி இந்தத் துயரிலிருந்து மீளப்போகிறோம் எனத் தெரியவில்லை" என்கிறார் விமல். படக்குறிப்பு, சிறுமிகள் சாய் ஜீவா (இடது) மற்றும் சாய் லக்ஷணா (வலது) சாய் ஜீவா - சாய் லக்ஷணா இந்தத் துயர நிகழ்வில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்திருக்கிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அப்படி ஒரு துயரைச் சந்தித்த குடும்பம்தான் ஹேமலதா - ஆனந்தஜோதியின் குடும்பம். இவர்கள் தங்கள் குழந்தைகள் இருவருடன் இந்தக் கூட்டத்திற்கு வந்தனர். கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஹேமலதா, குழந்தைகள் சாய் லக்ஷணா, சாய் ஜீவா என மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர். இதில் சாய் லக்ஷணாவுக்கு எட்டு வயது. சாய் ஜீவாவுக்கு நான்கு வயது. ஆனந்தஜோதியும் அவரது குடும்பத்தினரும் இந்த நிகழ்வைப் பற்றி ஊடகங்களிடம் பேசவே விரும்பவில்லை. "ஊடகங்களிடம் நாங்கள் சொல்வது ஒன்றாக இருக்கிறது, ஆனால், வெளியாவது வேறாக இருக்கிறது" என மனமுடைந்து பேசுகிறார்கள் அவர்கள். 'ஒரே இடத்தில் 11 பேர் பலி' படக்குறிப்பு, 13 வயது சனுஜ் தனது சித்தியுடன் கூட்டத்திற்குச் சென்றுள்ளார். கரூர் அரசு மருத்துவமனையை ஒட்டியுள்ள காந்தி கிராமம் பாரதியார் தெருவைச் சேர்ந்த சனூஜுக்கு 13 வயதுதான். எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். சனூஜ் தனது சித்தி வைசூர்யா உள்ளிட்ட மூன்று பேருடன் விஜய்யைப் பார்க்கச் சென்றார். "நண்பகல் 12 மணிக்கே கிளம்பிவிட்டோம். டான்ஸ் எல்லாம் ஆடினோம். அங்கே ஒரு மளிகைக்கடை இருந்தது. அதன் அருகில் நின்றுகொண்டிருந்தோம். விஜய் வண்டி உள்ளே வந்தபோது பெரிய நெரிசல் ஏற்பட்டது. மல்லாந்து விழுந்துவிட்டோம். என்னுடன் இருந்த குழந்தைகளில் ஒரு குழந்தை ஷட்டரில் ஏறிவிட்டது. இன்னொரு பிள்ளையை கொடுக்க முடியவில்லை. அந்த இடத்தில் முதலில் இருவர் விழுந்தனர். அதற்குப் பிறகு பையன் (சனுஜ்) விழுந்தான். அதுக்கு மேல் இரண்டு பேர் விழுந்தார்கள். அதற்கு மேல் அடுக்கடுக்காக விழுந்தார்கள். அரை மணி நேரம் கழித்துத்தான் பிள்ளையைத் தூக்க முடிந்தது. அப்பவே இறந்துவிட்டான். அந்த இடத்தில் மட்டும் 11 பேர் இறந்துவிட்டார்கள்" என்கிறார் வைசூர்யா. சனுஜின் தாயார் திருவளர்செல்வியால் பேசவே முடியவில்லை. இந்த நிகழ்வில் வைசூர்யாவுக்கும் லல்லிக்கும் ஒரே நிலைதான். அதாவது, தன் உடன் பிறந்தவர்களின் குழந்தையை கூட்டத்திற்குக் கூட்டிவந்து பறிகொடுத்தவர்கள். இதன் காரணமாகவே கடுமையான குற்றஉணர்ச்சியில் ஆழ்ந்திருப்பவர்கள். படக்குறிப்பு, ஒரே குடும்பத்தை சேர்ந்த பழனியம்மாளும் (இடது), கோகிலாவும் (வலது) இறந்துவிட்டனர். 'விஜயை பார்க்கவே இல்லை' விஜயைப் பார்க்கச் சென்றவர்கள் தங்களுடன் குழந்தைகளையும் கூட்டிச் சென்றது குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு எதற்காக குழந்தைகளை அழைத்துச் செல்கிறார்கள் என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. ஆனால், குழந்தைகளுடன் சென்றவர்களில் பலர் விஜயின் ரோட் ஷோ நடந்த வேலுசாமிபுரம் அல்லது அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள். வேறு சிலர், சில கிலோ மீட்டர் தூரத்தில் வசிப்பவர்கள். அவர்கள் தங்கள் பகுதியில் இவ்வளவு பெரிய நிகழ்வு நடப்பது குறித்து தொடர்ந்து ஊடகங்கள் செய்திகளை வழங்கிவரும் நிலையில், அதனை தவறவிட விரும்பாமலேயே இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்கள். அவர்களில் ஒருவர்தான் செல்வராணி. பட மூலாதாரம், Getty Images செல்வராணியும் அவரது கணவர் பெருமாளும் வேலுசாமிபுரத்தை ஒட்டியுள்ள கோதூர் பகுதியில் வசித்து வருபவர்கள். இந்தத் தம்பதிக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் என நான்கு குழந்தைகள். தங்கள் பகுதிக்கு விஜய் வருவதைக் கேள்விப்பட்டவுடன் செல்வராணி அனைவருடனும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றார். அந்த நெரிசலில் சிக்கி அவருடைய 14 வயது மகள் கோகிலாவும் 11 வயது மகள் பழனியம்மாளும் இறந்துவிட்டனர். காயங்களுடன் உயர் பிழைத்திருக்கிறார் செல்வராணி. உயிரிழந்த தங்கள் இரு குழந்தைகளின் சடலங்களையும் சொந்த ஊரான புங்கம்பட்டியில் அடக்கம் செய்துவிட்டு, மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கிறது இந்தக் குடும்பம். உயிரிழந்த இரு குழந்தைகளும் விஜயின் தீவிர ரசிகர்கள். "விஜய் இந்தப் பகுதிக்கு வருகிறார் என செய்தி வந்ததிலிருந்தே அங்கு போயாக வேண்டுமென குழந்தைகள் அடம்பிடித்தார்கள். அவர் வரும் இடம் தூரமாக இருந்தால் போக முடியாது என்றேன். ஆனால், அருகிலிருக்கும் வேலுசாமிபுரத்திற்கு வருகிறார் என்றவுடன், அது வீட்டிற்குப் பக்கம்தான் என்பதால் கண்டிப்பாக போகவேண்டும் என்றார்கள். எவ்வளவோ சொன்னேன். கேட்கவில்லை. போயே ஆகனும் என்றார்கள். கடைசியில கூட்டிட்டு போய் பறிகொடுத்ததுதான் மிச்சம். விஜய் வண்டி வந்ததுதான் தெரியும். நாங்கள் அவரைப் பார்க்கவேயில்லை. அவர் பேசியதையும் கேட்கவில்லை. கால் மணி நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது. என் கணவர் போக வேண்டாம் என்றுதான் சொன்னார். இவர்களுடைய பிடிவாதத்தால்தான் கூட்டிப்போனேன். கூட்டிப்போகமால் இருந்திருந்தால் என் பிள்ளைகள் எங்கேயும் போயிருக்காது. அங்கே போயிருக்கவே கூடாது. போகாமல் இருந்திருந்தால் இந்நேரம் விளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள்" என்கிறார் செல்வராணி. படக்குறிப்பு, 7 வயதான க்ருத்திக் ஆதவ் ஒரே கிராமத்தில் மொத்தம் ஐந்து பேர் கரூரின் ஐந்து ரோடு பகுதியைச் சேர்ந்த சரவணன் வெல்டராக வேலைபார்த்து வருகிறார். அவர்களுடைய மகன் 7 வயதேயான க்ருத்திக் ஆதவும் மனைவி சந்திரகலாவும் கூட்டத்திற்குச் சென்றனர். நெரிசலில் சிக்கி க்ருத்திக் ஆதவ் அங்கேயே உயிரிழந்துவிட, படுகாயமடைந்து மீண்டிருக்கிறார் சந்திரகலா. திரும்பத் திரும்ப இதைப் பற்றிப் பேசி ஓய்ந்துபோன சரவணனும் அவரது குடும்பத்தினரும் இது குறித்து பேசவே விரும்பவில்லை. இந்த நெரிசல் மரண சம்பவத்தில் பெரும் இழப்பைச் சந்தித்த பகுதி என்றால் அது ஏமூர் கிராமம்தான். ஒரே கிராமத்தில் மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் இரண்டு பேர் குழந்தைகள். வேலுசாமிபுரத்திற்கு விஜய் வருவதைக் கேள்விப்பட்டவுடன் ஏமூரில் இருந்த பலர் ஒன்று சேர்ந்து ஒரு வாகனத்தை அமர்த்தி விஜயைப் பார்க்கச் சென்றிருக்கின்றனர். படக்குறிப்பு, எட்டாண்டுகள் கழித்துப் பிறந்த தரணிகா உயிரிழந்தார். அந்த கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் டாஸ்மாக்கில் கண்காணிப்பாளராக இருக்கிறார். இவருடைய மனைவி ப்ரியதர்ஷினி. இந்தத் தம்பதிக்கு திருமணமாகி, எட்டாண்டுகள் கழித்துப் பிறந்தவர் தரணிகா. ஒரே மகள். 13 வயதான தரணிகா 9ஆம் வகுப்பு படித்துவந்தார். சனிக்கிழமையன்று சக்திவேல் வேலைக்குச் சென்றுவிட்டார். ப்ரியதர்ஷிணியும் மகள் தரணிகாவும் ஏமூரைச் சேர்ந்த மற்றவர்களுடன் இணைந்து விஜயைப் பார்க்கச் சென்றனர். மாலை ஐந்து மணியளவிலேயே அங்கு கூட்டம் அதிகரித்ததை தொலைக்காட்சிகளில் பார்த்த சக்திவேல், மனைவியைத் தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார். விஜய் வரவிருந்த பகுதியில் கூட்டம் வெகுவாக இருந்ததால் அவரால் ப்ரியதர்ஷினியுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த நேரத்தில் ப்ரியதர்ஷினி தாங்கள் விஜயைப் பார்த்துவிட்டு வருவதாகவும் சக்திவேலை வீட்டிற்குச் சென்று சாப்பிடும்படியும் ஒரு பதில் குரல் பதிவை அனுப்பியிருக்கிறார். அதனைக் கேட்ட சக்திவேல் கூட்டம் அதிகமாக இருப்பதால் அந்த இடத்திலிருந்து புறப்படும்படி குரல் பதிவு ஒன்றை அனுப்பினார். அந்த குரல் பதிவை ப்ரியதர்ஷினி கேட்கவேயில்லை. அதற்குள் ப்ரியதர்ஷினியும் குழந்தை தரணிகாவும் நெரிசலில் சிக்கி இறந்துவிட்டனர். ஏற்கெனவே மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஒரு மகள் இறந்த நிலையில், தரணிகா மீது உயிரையே வைத்திருந்தார் சக்திவேல். "இப்போது என் குடும்பமே அழிந்துவிட்டது. நான் யாரைக் குறைசொல்வது?" என தழுதழுக்கிறார் சக்திவேல். படக்குறிப்பு, பொறியியல் கல்லூரி மாணவர் கிஷோர் (இடது), தனது தாயுடன் சென்றபோது உயிரிழந்த பத்து வயது சிறுவன் ப்ரித்திக் (வலது) 'விஜயின் வாகனத்தை நெருங்கிச் சென்றார்' அதே கிராமத்தைச் சேர்ந்த பத்து வயது ப்ரித்திக்கும் தனது தாயுடன் சென்றபோது உயிரிழந்திருக்கிறான். குழந்தையுடன் தனியாக வசித்துவந்த அவனுடைய தாயார் தற்போது இருந்த ஒரு பிடிமானத்தையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார். இவர்களைச் சந்தித்த போது, காட்சிகளைப் பதிவு செய்ய அனுமதித்தாலும் பேச விரும்பவில்லை. குழந்தைகள் மட்டுமல்லாமல் சுயமாக சென்ற பதின்பருவத்தினரும் தங்கள் உயிரை விலையாகக் கொடுத்துள்ளனர். காந்திகிராமம் வடக்குப் பகுதியைச் சேர்ந்த கிஷோர், ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தார். கிஷோருக்கு சிறு வயது முதலே விஜய் மீது பெரும் விருப்பம் உண்டு. தீவிரமான விஜய் ரசிகர் அவர். தனது அபிமானத்திற்குரிய விஜய் கரூருக்கு வருவதைக் கேள்விப்பட்டதும் அவரும் அவருடைய பெரியம்மா மகன் மிதில் பாலாஜியும் வேறு சில நண்பர்களும் வேலுசாமிபுரத்திற்குச் சென்றனர். விஜய் வரும்போது ஏகப்பட்ட நெரிசல் ஏற்பட, அவருடைய அண்ணன், கூட்டத்திலிருந்து விலகிச் சென்றுவிட முடிவெடுத்தார். ஆனால், கிஷோர் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. தொடர்ந்து முன்னேறி விஜயின் வாகனத்தை நெருங்கிச் சென்றார். பிறகு அவருடைய அண்ணனால் கிஷோரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. "ஏழு மணியளவில் விஜய் வந்தார். அவரைப் பார்த்தவுடன் நாங்கள் வெளியே வந்துவிட்டோம். அவன் வெளியே வராமல் உள்ளே சென்று மாட்டிக்கொண்டான். என்னால் மூச்சுவிட முடியவில்லை. எட்டரை மணிவரை வராததால் அவனுக்கு போன் செய்தோம். போன் ரீச்சாகவில்லை. பிறகு ஊரிலிருந்து ஒரு அக்கா போன் செய்து, ஆஸ்பத்திரிக்குச் சென்று பார்க்கச் சொன்னார். சென்று பார்த்தால் கிஷோர் மார்ச்சுவரியில் இருந்தான். என் கூடவே வந்திருந்தால் இப்போது உயிரோடு இருந்திருப்பான்" என அழுகிறார் மிதில் பாலாஜி. படக்குறிப்பு, 15 வயது ஸ்ரீநாத் மிகத் தீவிரமான விஜய் ரசிகர். '200 ரூபாயுடன் சென்றவர் வீடு திரும்பவில்லை' மேட்டூரைச் சொந்த ஊராகக் கொண்ட 15 வயது ஸ்ரீநாத்தின் குடும்பம் கரூரில் வசித்துவந்தனர். ஸ்ரீநாத் மிகத் தீவிரமான விஜய் ரசிகர். சனிக்கிழமையன்று காலையில் தானே காலை உணவைச் செய்து சாப்பிட்டுவிட்டு, தாய் கொடுத்த 200 ரூபாயுடன் விஜயைப் பார்க்க புறப்பட்டார் ஸ்ரீநாத். ஆனால், மாலையில் வீடுதிரும்பவில்லை. "அந்த சமயத்தில்தான் அவனுடைய டியூஷன் டீச்சர் போன் செய்து ஸ்ரீ எங்கே என்று கேட்டார். எதற்காகக் கேட்கிறீர்கள் என்றேன். விஜயின் கூட்டத்தில் மயங்கி விழுந்த ஒரு பையனைப் பார்க்கும்போது ஸ்ரீ மாதிரியே இருக்கிறது, எனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றார். அவர் சொன்ன வண்ணத்தில்தான் ஸ்ரீ கால்சட்டை அணிந்திருந்தான். இருந்தாலும் என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், விரைவிலேயே எங்களுக்குத் தெரிந்த ஒரு போலீஸ்காரர், செய்தியைச் சொல்லிவிட்டார். இப்ப வரைக்கும் எங்கே போனான், விஜயைப் பார்த்தானா, பார்க்கவில்லையா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அன்று காலையில் அவ்வளவு சந்தோஷமாக இருந்தான். எத்தனை மணிக்கு இப்படி ஆச்சுன்னு தெரியவில்லை" என்கிறார் ஸ்ரீநாத்தின் தாயார் கோமதி. இதற்கு முந்தைய சம்பவங்கள் தமிழ்நாட்டின் சமீப கால வரலாற்றில் இதற்கு முன்பாக இவ்வளவு பெரிய அளவில் இரண்டு முறை நெரிசல் மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 1992ல் கும்பகோணம் மகாமகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சுமார் 50 பேர் வரை உயிரிழந்தனர். அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதாவும் அவருடைய தோழி வி.கே. சசிகலாவும் மகாமக குளத்தில் நீராட வந்ததே இந்த நெரிசலுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதற்குப் பிறகு, 2005ஆம் ஆண்டு டிசம்பரில் கனமழையை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதற்கான டோக்கன் டிசம்பர் 18ஆம் தேதி காலை வழங்கப்படும் என செய்திகள் பரவிய நிலையில், அந்த டோக்கனைப் பெற மக்கள் முண்டியடித்ததில் 42 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 25 பேர் பெண்கள். இந்த இரு நிகழ்வுகளிலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் குழந்தைகள் சிக்கவில்லை. கரூர் நிகழ்வில் உயிரிழந்த 41 பேரில் 11 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். குழந்தைகளை இழந்த குடும்பத்தினரில் ஒரு சிலர் நடுத்தர வர்க்கத்தினர் என்றாலும் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியில் மிகமிக சாதாரண நிலையில் இருப்பவர்கள். குடும்பத் தலைவர்கள் சாதாரண ஒரு வேலையைச் செய்து குடும்பத்தை பாதுகாத்து வந்திருக்கிறார்கள். உயிரிழந்த குழந்தைகளில் சிலர் பெற்றோருடன் சென்றவர்கள். சில குழந்தைகள் தங்கள் உறவினர்களுடன் சென்றிருக்கிறார்கள். குழந்தைகள் உயிரிழந்துவிட, பெற்றோரும் அழைத்துச் சென்ற உறவினர்களும் மீள முடியாத குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்தக் கூட்டங்களுக்கு குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர்? விஜயைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தவிர வேறு காரணங்கள் ஏதும் இல்லை. "வீட்டிற்கு பக்கத்திலேயே விஜய் வந்தா யாருதான் போகமாட்டாங்க? டிவியிலேயே பார்ப்பவரை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைச்சா, யாருதான் தவறவிடுவாங்க.. அதுதான் நான் செய்த தப்பு. என் தம்பி குழந்தையை தூக்கிட்டு போனது தப்புதான். அப்ப ஒரு செகண்ட் யோசிச்சிருக்கலாம்" என்கிறார் சகோதரனின் ஒன்றரை வயது குழந்தையை பறிகொடுத்த லல்லி. இந்தத் தருணத்தில் குழந்தைகளை இழந்தவர்கள் பெரும்பாலும் யாரையும் குறைசொல்லும் நிலையில் இல்லை. வாழ்நாள் முழுவதும் மீள முடியாத இந்தத் துயரத்தை எப்படிக் கடப்பது என்பதே அவர்களது மனதை இப்போது அரித்துக் கொண்டிருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20vy8njgzzo0 pointsImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.