Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    2951
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    7044
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/09/25 in all areas

  1. எல்லோரும் முட்டை எடுத்தால் எனக்கு கைத்தொலைபேசி மூலம் யாழில் புள்ளி வழங்குவது இலகு 😀
  2. இல்லை. சாப்பட்டு கோப்பைக்கு மேல் பொடும் மிக மெல்லிய பொலித்தீன் தாள். தடை நல்ல விடயம். சூழலுக்கு ஆபத்தனது. பூனை நாய் சப்பிட்டுட்டு சரியாய் கஷ்டபடும். சின்னனைலை 50 சதத்துக்கு 10 லஞ்ச் சீற்றை கொத்துரொட்டி கடையில வாங்கி பரசூட் விடுவம்.
  3. யாழ்.செம்மணி அணையா விளக்கு மீண்டும் புனரமைக்கப்பட்ட செய்தி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அந்த விளக்கு வெறும் ஒளி அல்ல — அது யாழ்ப்பாணத்தின் கலாச்சார அடையாளம், வரலாற்று நினைவுச் சின்னம், மேலும் அந்த மண்ணின் மக்களின் மன உறுதியின் சின்னமாகும். அது சேதமாக்கப்பட்டபோது பலருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டது, ஆனால் இன்று அது மீண்டும் எழுந்திருப்பது யாழின் உயிர்ப்பையும், ஒருமைப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்வு ஒரு முக்கியமான செய்தியை தெரிவிக்கிறது: அணையா விளக்கு போல், யாழின் ஒளியும் — அதன் பண்பாடும், அதன் மக்கள் உறுதியும் — எந்த விசமத்தாலும் அணைய முடியாது.
  4. 🤣கொஞ்சம் அலட்சியமாக இருந்தால், "சீமான் தான் விஜயலட்சுமி மீது வழக்குப் போட்டார்!" என்றும் புதுக் கதை பின்னுவீர்கள் போல இருக்கிறதே😂? 2011 இல் சீமான் மீது சென்னைக் கோர்ட்டில் கொண்டு FIR வரப் பட்டு, ஒரு நீதிபதியினால் முறைப்பாட்டாளரின் வாக்குமூலமும் பதிவு செய்யப் பட்டபின்னர், விஜயலட்சுமியை மிரட்டி 2012 இல் வாபஸ் வாங்க வைத்தார்கள். 2023 இல் மீண்டும் அவர் அந்தக் கேசைத் திறக்க முனைகிறார். சீமான் இதைத் தடுக்கக் கோரி (விசாரிக்கக் கோரி அல்ல!) சென்னை உயர் நீதி மன்றை நாடுகிறார். "வாக்குமூலம் பதிவாகி விட்டது, எனவே குற்றம் சாட்டியவர் இல்லாவிட்டாலும் கூட வழக்கை தடுக்க முடியாது" என சென்னை நீதி மன்றம் மறுத்து விட்டது. கீழே இணைப்பு. The HinduMadras High Court dismisses Seeman’s plea to quash rape caseMadras High Court dismisses Naam Tamilar Katchi chief Seeman's petition to quash actor vijayalakshmi rape case, directs police to complete investigation in 12 weeks.பெப்ரவரி 2025 இல் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்த உடனே, சீமான் உச்ச நீதிமன்றிற்கு மார்ச் 2025 இல் சென்று "தள்ளுபடி செய்யுங்கள்" என்றே மனுப் போட்டார் (விசாரித்து முடித்து வையுங்கள் என்று அல்ல!). இரு தரப்பையும் "மன்னிப்புக் கேட்டால் வழக்கை தள்ளுபடி செய்யலாம்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அப்படியே கேட்டிருக்கிறார். ஏதோ சீமான் விசாரித்துத் தன் குற்றமற்ற தன்மையை நிரூபிக்கப் போராடியதாகத் தான் இனி சீமான் விசிறிகளும், தம்பிகளும் எழுதுவார்கள் என ஊகித்தேன். இன்று நீங்கள் தொடங்கியே விட்டீங்கள்😂!
  5. உண்மைதான் Suvy, பழைய பாடலில் நான் ரசித்துக் கேடகும் பாடலில் இதுவும் ஒன்று. நல்லதொரு அமைதியான பாடல். திருச்சி லோகநாதனின் அருமையான குரலில் அமைதி தரும் நல்லதொரு பாடல்.
  6. சின்ன அரும்பு மலரும் படம் பங்காளிகள்
  7. விஜய் 41 குடும்பங்களையும் பனையூருக்கு வரச் சொல்லவில்லையே என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.....................🫣. 'ரசிகர்களா, நடிகர்களா.............. தமிழ்நாட்டில் இதில் எவருக்கு அதிக உளவியல் ஆலோசனைகள் தேவை..........' என்று ஒரு வழக்காடு மன்றமே வைக்கலாம் போல............... முழுச்சட்டையையும் கிழிக்காமல் விடமாட்டார்கள்............
  8. தமிழரின் வாழ்வாதாரத்தை அழித்து, குடும்பங்களை கலைத்து, நிற்கதியாக்கியதே இந்தியாதான். அனைத்தையும் செய்து ரசித்துவிட்டு, இப்போ உதவியாம். அதற்கு சுமந்திரனுடன் பேச்சாம். தமிழரசுக்கட்சியை இல்லாமல் செய்து, அவர்களுக்குரிய தீர்வை நீத்துப்போகச்செய்தவர் சுமந்திரன். தமிழர் எழுந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்து குட்டுகிறார்கள். தமிழரின் துயரில், எழுச்சியில் எந்த பங்கும் பாகமும் வகிக்காத சுமந்திரனுடன் பேச்சா? அல்லது சுமந்திரனே வலியப்போய் சந்தித்து படம் காட்டுகிறாரா? பாடின வாயும் ஆடின காலும் சும்மா கிடவாது. தமிழரின் விடிவிற்காக உழைத்ததை விட, ஓடியோடி பின்கதவால் சந்திப்புகளை நடத்தி படம் காட்டினதுதான் இவர் சாதித்தது.
  9. வினா 10) 107 ஓட்டங்களினால் அவுஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 21 புள்ளிகள் 2) ஏராளன் - 19 புள்ளிகள் 3) கிருபன் - 19 புள்ளிகள் 4) ரசோதரன் - 19 புள்ளிகள் 5) வீரப்பையன் - 19 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 17 புள்ளிகள் 7) வாதவூரான் - 17 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 17 புள்ளிகள் 9) சுவி - 16 புள்ளிகள் 10)புலவர் - 15 புள்ளிகள் 11)செம்பாட்டன் - 15 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 15 புள்ளிகள் 13)வாத்தியார் - 13 புள்ளிகள் 14)வசி - 13 புள்ளிகள் 15)கறுப்பி - 13 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 10, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  10. மிக மிக அழகிய மரம் . .......! 🙏
  11. Published By: Digital Desk 1 09 Oct, 2025 | 07:45 AM இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் தங்கள் அமைதித் திட்டத்தின், முதற்கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதற்கமைய, அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக்கு திரும்பப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கப்படுகிறது. "இது அனைத்துப் பணயக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும், ஒரு வலிமையான, நீடித்த மற்றும் நிரந்தரமான சமாதானத்திற்கான முதல் படியாக இஸ்ரேல் தமது படைகளை ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைக் கோட்டிற்குள் விலக்கிக் கொள்ளும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்தியில், அர்த்தப்படுத்துவதாக குறிப்பிடப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம், காஸாவில் போரை நிறுத்துவதற்கும், குறைந்தது சில பணயக் கைதிகளையும், கைதிகளையும் விடுவிப்பதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால், பணயக் கைதிகள் விடுவிப்பு மற்றும் போர் நிறுத்தத்தை உடனடியாக அமுல்படுத்த இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான இரு வருட காலப்போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/227268
  12. மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இந்தியா…. ஏலையா க.முருகதாசன் October 9, 2025 0 இந்தியா இலங்கைக்குப் பக்கத்து நாடாக இருப்பதில் சாதகமான சூழ்நிலையைவிட அரசியல் ரீதியான பாதகமான சூழ்நிலையே அதிகரித்து வருகின்றது. இந்தியா, இலங்கைத் தமிழரை வைத்து எவ்வாறு பகடைக்காய் உருட்டியது என்பதும்,அதே சம ஆட்டமாக இலங்கை அரசை தமிழருக்கெதிராக தூண்டியது என்பதை அறிந்து கொள்ள இலங்கைத் தமிழர்கள் எவரும் சதியரசியலில் கலாநிதிப் பட்டம் பெற வேண்டியதில்லை. எல்லாருக்கும் அது புரியும். தமிழர்களில் பெருமளவாக இல்லாவிட்டாலும் தாம் கூறவந்த அரசியல் சூட்சும அறிவினை விளங்கப்படுத்திய விபரப்படுத்திய கணிசமான தமிழர்கள், தமிழ்த் தலைவர்கள் தமீழீழ உணர்ச்சிக் கயிறுகளால் தமிழர்களைக் கட்டி ஒரு திசைநோக்கி இழுத்தக் கொண்டு சென்றதைத் தவறென்று சுட்டிக்காட்டிய போது அதனை யாரும் காதுகொடுத்துக் கேட்கவும் இல்லை,.மாற்றுக்கருத்தினர் அப்படி என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பதைக் கவனத்தில் எடுக்கவும் இல்லை. இந்தியாவின், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் அரசியல் தந்திரமுறையில் மிகமகிழ்ந்து உச்சி குளிர்ந்து எல்லாமே நீங்கள்தான் எனத் தமிழ்த் தலைவர்கள் புளகாங்கிதம் அடைந்தனர். நாம் பேசியிருக்கிறோம்,அவர்கள் இலங்கையரசுடன் பேசுவதாக உறுதியளித்திருக்கிறார்கள் எனப் பத்திரிகைகளில் அறிக்கைகளைவிட்டு இந்தியப்பயணம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது என்ற முற்றுப்புள்ளியுடன் இந்திய இராஜதந்திர அரசியலாளர்களைச் சந்தித்த புகைப்படங்களுடன் தவணை நகர்வு நிறைவுபெறும். தமிழ்த் தலைவர்கள் அனைவருமே மிகப் படித்தவர்கள்.அரசியல் அனுபவங்கள் நிறைந்தவர்கள்.எனினும் இத்தலைவர்களுக்கு இந்தியாவின் மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் தந்திரத்தை ஏன் ஊகிக்க முடியாமல் போனது என்பது தெரியவில்லை. இறுதியில் ஆயுதப் போரில் தவனை நகர்வு நிறைவுபெற்ற போது இலங்கையை என்றுமே குழப்பத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதில் தண்ணீர் ஓடுகிற திசையில் வாய்க்காலை வெட்டியது போல தமிழீழ விடுதலைப் போருக்கு ஆயுத வழியே சரியென்று பலபக்கத்தாலும் மூளைச்சலவை செய்யப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளை வைத்தே இலங்கையைச் சீரழித்ததை உணர முடிகின்றது;அதுதான் உண்மையும்கூட.தமிழீழ விடுதலை ஆயதப் போராட்டம் புலிகளின் பெயரால் இந்தியாவால் நடத்தப்பட்டது அல்லது புலிகளைக் கொண்டு இந்தியாவல் நடத்தப்பட்டது என்றும் கூறலாம். இன்றைய அரசின் நடவடிக்கையும் இலங்கை ஜனாதிபதி திரு.அநுர குமார திஸநாயக்காவின் நுட்பமான நகர்வும் இந்தியாவுக்கு பெரும் ஐமிச்சத்தைக் கொடுத்துள்ளது.தமிழர்கள் ஜனாதிபதியை காலப்போக்கில் ஏற்றுக் கொண்டு விடுவார்களோ அது நடக்கக்கூடாது என்பதில் அடுத்து என்ன செய்யலாம் எனச் சிந்திக்கத் தொடங்கியுள்ளது இந்தியா. ஜனாதிபதி அவர்கள் எல்லா நாடுகளுக்கும் இராஜதந்திர பயணங்களை மேற்கொள்வதைப் பார்த்து அவரை எடைபோட போட முடியாத நிலைக்கு வந்துள்ளது இந்தியா. ஒரு நாடு என்பது அந்நாட்டு மக்களோடு இணைந்த ஒன்றாகும்.நாட்டை நிர்வகிப்பதற்கான அரசைத் தெரிவு செய்கின்ற மக்கள் தமக்கான தேவைகளை அரசு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்புடனேயே அரசைத் தெரிவு செய்கின்றனர். உலகம் நாடுகளாகி,மக்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்த போது,இனக் குழுமங்களில் தானாக உருவாகிய தலைவர்கள் காலப்போக்கில் மக்களால் தெரிவு செய்யப்படம் தலைவராக மாறினார்கள். ஒரு காலகட்டம் வரையும் ஒரு நாட்டினது செயல்பாடுகள் யாவும் அந்நாட்டின் உள்ளகச் செயல்பாட்டை மட்டுமே கொண்டதாக இருந்து வந்தது. தொடர் வளர்ச்சிநிலையில் ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் தொடர்பு கொண்டது.அத்தொடர்புகள் இன்னும் வளர்ந்து செல்கையில் நாடுகள் ஒவ்வொன்றும் இன்னொரு நாட்டின் விவகாரங்களில் தலையிடத் தொடங்கின. உளவாளிகளை நியமித்து மற்றைய நாடுகளை கண்காணிக்கும் செயலுக்கு வழிவகுத்தது. மேலே கூறப்பட்ட விடயங்களால் பல நாடுகளில் உள்ளநாட்டுக் கிளர்ச்சிகளும்,ஆட்சி மாற்றங்களும் முரண்பாடுகளும் தோன்றவே செய்தன. ஒரு நாட்டில் இன்னொரு நாட்டினது தலையீட்டினால் ஏற்படும் விளைவகள் அந்தந்த நாடுகளின் அரச பலத்தைப் பொறுத்ததாவிருக்கும். இதுவே காலப் போக்கில்இன முரண்பாடுகளைச் சில நாடுகள் தமக்குச் சாதகமாகப் பாவிக்கத் தொடங்கின.அது ஒரு சூழ்ச்சி,திட்டமிட்ட சதி.அத்தகு நிலையே இந்தியா இலங்கையை கையாள முயற்சிக்கின்றது. ஒரு நாட்டினது தலைவனோ அமைச்சகர்களோ தமது நாட்டு மக்களின் வளமான வாழ்வுக்காக உலக நாடுகள் எங்கும் சென்று உதவிகளைப் பெறுதல் பரஸ்பரம் பண்டமாற்றினை செய்து கொள்ளல் என்பது இயல்பான ஒன்று அதில் எந்த ஒரு நாட்டுக்கும் அறிவுரை சொல்லவோ கருத்துச் சொல்லவோ உரிமையில்லை. இந்தியா,இலங்கை கொண்டுள்ள பல நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது.இலங்கையில் ஏற்பட்ட இன முரண்பாடுகளுக்கு இந்தியாதான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றைய ஜனாதிபதி எந்த நாட்டுக்குப் பேகிறார் என்பதையோ,இந்தெந்த நாடுகளுக்கு போவதை தாங்கள் விரும்பவில்லை சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறோம் என இந்தியா நினைக்கவும் சொல்லவும் அவர்களுக்கு உரிமையே இல்லை. இதுவரையில் எந்தவொரு ஜனாதிபதிக்கும் கொடுக்காத ஒத்துழைப்பை இன்றைய ஜனாதிபதியான மான்புமிகு திரு.அநுரகுமார திஸநாயக்காவுக்கு தமிழர்கள் கொடுத்துவருவதை இந்தியாவால் ஜீரணிக்க முடியவில்லை. சிங்களவர்களையும் தமிழர்களையும் இனவாதத்தின் மூலமும் இனக்கலவரங்களை ஆரம்பித்து அதன் மூலமும் முரண்பட வைத்து அது தொடர்ச்சியாக வளரவேண்டும் என்பதற்காக ஆயதப் போராட்டத்தை வளர்த்தும் தமிழர்களையும் அழித்து இலங்கையைச் சீரழித்ததும் இந்தியாதான் இந்தியாவேதான். https://akkinikkunchu.com/?p=343999
  13. புலவர், கோசான் சொல்லியிருக்கும் "சொ.செ.சூனியம்" என்ன என்று புரியவில்லையா? 2025 இல் சென்னை உயர் நீதிமன்று வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று வழக்கைத் துவக்கி, அது சீமானுக்குத் தான் ஆப்பானது. 12 வாரங்களுக்குள் விசாரிக்க வேண்டும், தள்ளுபடி செய்ய முடியாதென சென்னை கோர்ட் சொன்னது. இதை மறுக்கிறீர்களா? ஆதாரங்கள் பல உண்டே? அதன் பிறகு தானே வடக்கில் பிரபலமான வக்கீலைப் பிடித்து உச்ச நீதி மன்றம் போனார்? இதையும் மறுக்கிறீர்களா? ஏன்?
  14. சாருகேசி இராகங்களில் பாடல்கள் .......! 😍
  15. நடிகர் அஜித்தை பாதித்துள்ள 'தூக்கமின்மை' பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா? அறிகுறிகளும் தீர்வுகளும் பட மூலாதாரம், X/Ajithkumar Racing கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 8 அக்டோபர் 2025, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 8 அக்டோபர் 2025, 02:44 GMT தூக்கம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் விவாதப்பொருளானது. நடிகர் அஜித்குமார் தற்போது 'அஜித் குமார் ரேஸிங்' என்கிற பெயரில் கார் பந்தயப் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார். சமீபத்தில் இந்தியா டூடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தனக்கு தூக்கமின்மை பிரச்னை இருப்பதாகத் தெரிவித்தார். தன்னால் அதிகபட்சமாக 4 மணி நேரம் தான் தொடர்ந்து தூங்க முடிவதாக தெரிவித்த அஜித் குமார், "எனக்கு திரைப்படங்கள், வெப் சீரிஸ் பார்ப்பதற்கு நேரம் இல்லை. நான் விமானத்தில் தான் உறங்குகிறேன். எனக்கு தூக்கம் சார்ந்த பிரச்னை இருக்கிறது. தூங்குவது எனக்கு கடினமாக உள்ளது." என்றும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டார். தூக்கம் வருவது எப்படி? இதுகுறித்து ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநரான குழந்தைசாமி பேசுகையில் "இது இன்சோம்னியா (Insomnia) என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதானது, இதனை சிகிச்சைகள் மூலம் சரி செய்துவிட முடியும். ஆனால் தூக்கமின்மை என்பது பெரும்பாலும் நமது செயல்களினால் உருவாவதே." என்றார். தூக்கப் பற்றாக்குறை அல்லது தூக்கமின்மை என்பது நீண்ட கால நோக்கில் ஆயுட்காலத்தை பாதிக்கும் என்கிறார் குழந்தைசாமி. நம் உடல் சார்ந்த பல விஷயங்களை உயிரியல் கடிகாரம்தான் (circadian rhythm) தீர்மானிக்கிறது என்கிறார் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் புல்மனாலஜியின் இயக்குநரும் மூத்த நுரையீரல் நோய் மருத்துவருமான கௌசிக் முத்துராஜா. இதுகுறித்து விவரித்த அவர், "நம் கண்கள் வழியாக ஒளி மூளைக்குச் செல்கிறது. வெளிச்சமாக இருந்தால் நமது மூளை இது விழித்திருக்க வேண்டிய நேரம் என உணர்ந்து கொள்ளும். அதேவேளையில் இருட்டாக இருந்தால் இது தூங்குவதற்கான நேரம் என உணர்ந்து கொண்டு மெலடோனின் என்கிற ஹார்மோனை சுரக்கச் செய்யும். இந்த ஹார்மோன் தான் தூக்கத்தை ஏற்படுத்துகிறது." என்றார். "59% இந்தியர்களுக்கு தூக்கமின்மை பிரச்னை" பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 59% இந்தியர்கள் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தடையற்ற தூக்கத்தை பெறுகின்றனர். 2025-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 59% இந்தியர்களுக்கு 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தடையில்லாத, நல்ல தூக்கம் கிடைப்பதாகத் தெரியவந்துள்ளது. லோகல்சர்கிள்ஸ் என்கிற நிறுவனம் இந்தியா முழுவதும் 348 மாவட்டங்களில் சுமார் 43,000 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. தூக்கப் பற்றாக்குறையை போக்க பவர் நேப்பிங் (குறுகிய நேர தூக்கம்), வார இறுதி நாட்களில் காலை தாமதமாக எழுந்திருப்பது, அல்லது மதியம் தூங்குவது போன்றவற்றை பலரும் கையாள்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. குறைவான தூக்கத்தால் பாதிக்கப்பட்ட 38% இந்தியர்கள் விடுமுறை நாட்கள் அல்லது வார இறுதி நாட்களில் அதனை சரி செய்து கொள்ள முடிவதில்லை எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஒரு வயது வந்த நபர் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். அதில் 6 மணி நேரமாவது இடையூறு இல்லாத தூக்கம் இருக்க வேண்டும். அது தான் ஆரோக்கியமானது. மனிதன் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்தில் செலவிட வேண்டும். அது ஒரே நாளில் தான் இருக்க வேண்டும். தவணை முறையில் வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில் கூடுதலாக தூங்குவது என்பது இதற்கு தீர்வாகாது." என்கிறார் குழந்தைசாமி. தூக்கமின்மைக்கான அறிகுறிகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு வயது வந்த நபர் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும் அமெரிக்க அரசின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.ஹெச்) பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவை இருந்தால் தூக்கப் பற்றாக்குறை என்று வகைப்படுத்துகிறது. அவை போதிய தூக்கம் கிடைக்காமல் இருப்பது தவறான நேரத்தில் தூங்கச் செல்வது நன்றாக தூங்காதிருப்பது அல்லது உடலுக்குத் தேவையான தூக்கத்தின் அனைத்து கட்டங்களையும் அடையாமல் இருப்பது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் தூக்கம் வருவது போதிய நேரம் கிடைத்தாலும் ஆழ்ந்த தூக்கம் வராதிருப்பபது தூக்கமின்மையின் பாதிப்பு குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்கள் இடையே வேறுபடுகிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்படும் குழந்தைகள் கவனம் செலுத்துவதில் பிரச்னைகளை எதிர்கொள்வார்கள் என என்.ஐ.ஹெச். கூறுகிறது. "தூக்கம் என்பது நான்கு கட்டங்களாக நடக்கும். தூக்கத்தின் இந்த ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்ல முடியாமல் நீண்ட காலமாக இருப்பது இதய நோய், எடை அதிகரிப்பு, டைப்-2 நீரிழிவு போன்ற பாதிப்புகளுடன் தொடர்புடையது," என லோகல் சர்க்கிள்ஸ் ஆய்வு கூறுகிறது. தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள் என்.ஐ.ஹெச்-ன்படி தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை? வயது தூங்கும் முறை வளர்சிதை மாற்றம் இரவு உணவு எடுத்துக் கொள்ளும் நேரம் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக திரை(கணினி, செல்போன்) பயன்பாடு மது அருந்துவது தூக்கமின்மையுடன் தொடர்புடைய நோய்களையும் என்.ஐ.ஹெச் பட்டியலிட்டுள்ளது. அவை இதய நோய் சிறுநீரக நோய் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் பக்கவாதம் உடல் பருமன் மன அழுத்தம் உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பெண்கள் மற்றும் முதியவர்களிடையே தூக்கமின்மை பிரச்னை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் கடந்த 2012-ஆம் ஆண்டு தூக்கம் சார்ந்த சிக்கல்களை வளர்ந்து வரும் பொது சுகாதார பிரச்னை என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 50 வயதுக்கு அதிகமான 43,935 பேர் கலந்து கொண்டனர். அதில் 16.6% பேர் தீவிரமான இரவு நேர தூக்கமின்மை பிரச்னைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதில், பெண்கள் மற்றும் முதியவர்களிடையே தூக்கமின்மை பிரச்னை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வயது வந்தவர்கள் அதிக அளவில் தூக்கமின்மை பிரச்னைகளை எதிர்கொள்வதாக அந்த ஆய்வு கூறுகிறது. உடல் செயல்பாடு குறைவது, மன அழுத்தம் மற்றும் கவலை உணர்வு வலுவாக இருப்பதும் தூக்கமின்மைக்கு காரணிகளாகக் கூறப்பட்டுள்ளது. தூக்கமின்மை யாரை, எவ்வாறு பாதிக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தூக்கமின்மையால் குழந்தைகளிடம் ஞாபக மறதி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படுகிறது. பெரும்பாலும் ஓட்டுநர்கள் அல்லது பயணத்தில் இருப்பவர்களுக்குத் தான் இந்த பாதிப்பு அதிகம் என்று குறிப்பிடுகிறார் குழந்தைசாமி. "தூக்கம் இல்லையென்றால் மூளை சிறிது நேரம் தானாக செயலிழந்துவிடும். அது சில வினாடிகள் தான் என்றாலும் அதன் விளைவு மோசமானதாக இருக்கும். இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்கும் தூக்கமின்மை ஒரு முதன்மை காரணியாக உள்ளது." என்று அவர் தெரிவித்தார். வெவ்வேறு வயதினரை தூக்கமின்மை எவ்வாறு பாதிக்கிறது என்பது மருத்துவர் கௌசிக் முத்துராஜா பட்டியலிடுகிறார். குழந்தைகளிடையே ஏற்படும் பாதிப்புகள்? கற்றல் குறைபாடு ஞாபக மறதி கல்வியில் ஈடுபாடு குறைவது நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது வளர்ச்சி ஹார்மோன் பாதிப்பு நடுத்தர வயதினரிடையே ஏற்படும் பாதிப்புகள்? மன அழுத்தம் மனச்சோர்வு ரத்த அழுத்தம் சிந்திக்கும் திறன் குறைவது வாகனம் ஓட்டுவதை சிரமமாக்குவது முதியவர்களிடையே ஏற்படும் பாதிப்புகள்? ஞாபக மறதி அதிகரிக்கும் இரவு நேர தடுமாற்றங்கள் ஏற்படும் இதயம் மற்றும் நரம்பியல் நோய் தாக்கும் சாத்தியம் அதிகரிக்கும் தூக்கமின்மை பிரச்னைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? புகைப் பழக்கத்தை கைவிடுவது, மாலை 5 மணிக்கு மேல் தேநீர், காபி பருகுவதை தவிர்ப்பது மற்றும் தூங்குவதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்கு முன்பாவது கணினி/செல்போன் திரைகளைப் பார்ப்பதை தவிர்ப்பது போன்ற பரிந்துரைகளை முன்வைக்கிறார் மருத்துவர் குழந்தைசாமி. தூக்க ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான சில வழிகளை முன்வைக்கிறார் கௌசிக் முத்துராஜா. தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, எழ வேண்டும், வார இறுதி நாட்களிலும் அதை கடைபிடிக்க வேண்டும் தூக்கம் வந்தால் மட்டுமே படுக்கைக்குச் செல்ல வேண்டும் தூங்க செல்லும் முன்பாக 10 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம் காலை, மதிய வேளைகளில் தூங்கக்கூடாது 20 - 30 நிமிடங்கள் பவர் நாப் (குறுகிய நேர தூக்கம்) எடுக்கலாம். உடற்பயிற்சி தூக்கத்திற்கு உதவும். ஆனால் தூங்குவதற்கு 2, 3 மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி கூடாது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2knejj9p18o
  16. நாம் சில சமயங்களில் கேள்விப் படும் இளவயது மட்ட மாரடைப்பு மரணங்களோடு சில கதைகளும் சேர்ந்து கேள்விப் படுவோம்: ஆள் ஓடியாடித் திரிந்தவர், சாப்பாட்டில் கவனம், அவ்வளவு குடி இல்லை..இப்படியான நல்ல விடயங்கள் சொல்வார்கள். ஆனால், இறந்தவரின் வாழ்க்கையை உற்றுக் கவனித்தால் மனப் பதற்றம் (stress) அதிகரித்த வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பது தெரியவரும். இந்த மனப்பதகளிப்பு இதய குருதிக் கலன் நோய்களுக்கு மூன்றாவது முக்கியமான காரணி (முதல் இரண்டும் ஆரோக்கியமற்ற உணவு, உடல்பயிற்சியின்மை என்பன). சுவாரசியமான விடயம், தூக்கக் குறைவும் மனப்பதகளிப்பும் உடலில் ஒரே மாதிரியான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. எனவே, தூக்கம் ஒழுங்காக இல்லாதோரில் இதய குருதிக் கலன் நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பது ஆச்சரியமில்லை. எனவே, தூக்கத்தை முறையாகக் கையாள்வதின் மூலமும் இதய குருதிக் கலன் நோய்கள் வராமல் சிறிது தடுக்கலாம். இதன் நரம்பியலைப் புரிந்து கொண்டால் தூக்கத்தை குழப்பாமல், உரியமுறையில் கையாளுவது இலகுவாக இருக்கக் கூடும். எங்கள் உடலில் பதகளிப்பிற்குக் காரணமாக இருக்கும் நரம்புத் தொகுதி பரிவு (sympathetic) நரம்புத் தொகுதி. இது தூண்டப் பட்டால் இதயம் வேகமாகத் துடித்தல், சுவாசக் குழாய்கள் விரிவடைதல், அதிக விழிப்பு நிலை போன்ற மாற்றங்கள் ஏற்படும். நாம் அறியாமலே, ஒரு ஆபத்தும் எங்களை நோக்கி வராத போது கூட உணர்வுகளால் மூளை இந்த பரிவு நரம்புத் தொகுதியைத் தூண்டி இந்த மாற்றங்களைத் தூண்டும். உதாரணமாக ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் தூங்குவதற்கு முதல் வீட்டில் சி.என்.என் செய்தியைப் பார்த்தால், என் பரிவு நரம்புத் தொகுதி உச்சமாக தூண்டப் படுவது நான் அவதானித்த ஒன்று😂. இந்த பரிவு நரம்புத் தொகுதிக்கு எதிராக வேலை செய்யும் இன்னொரு நரம்புப் பிரிவு, பரபரிவு (parasympathetic) நரம்புத் தொகுதி எனப் படுகிறது. நாம் ஓய்வாக இருக்கும் போது, இந்த நரம்புத் தொகுதி வேலை செய்து, இதயத் துடிப்பைக் குறைத்து, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து (இதனால் தான் தூங்கும் போது ஒரு கட்டத்தில் ஆண் குறி தானாகவே எழுச்சி நிலையை அடைவது நடக்கிறது), கண்ணைச் சுழட்ட வைக்கும். எனவே, மன-உடல் ஓய்வு நிலையை எந்த வழியிலாவது தூண்டுவதால் பரபரிவு நரம்புத் தொகுதியைத் தூண்டினால் தூக்கம் வருவதற்கு ஏதுவான நிலை ஏற்படும். தம்பதிகளாக இருப்போர் உடலுறவில் ஈடுபடும் போதும் இதே பரபரிவு நரம்புத் தொகுதி தூண்டப் படுவதால், அதுவே கூட தூக்கத்திற்கு ஏதுவான நிலையை உருவாக்கும் (@பிழம்பர் இப்ப நிமிர்ந்து உக்கார்ந்திருப்பார் என நினைக்கிறன்! 😂)
  17. இது இந்தியாவுக்கு ஒரு பின்னடைவுதான். இதிலிருந்து மீண்டு வரவேணும். வருவார்களா.
  18. :) சீமானுக்கு யாழ்களம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் யாழ் களத்துக்கு சீமான் செய்தி போட்டாலே ஒரு 18 நாள் திருவிழா தான் , அண்ணி காவடிகள், கச்சான் கடைகள், பிக்பாகெட் காரர்கள், இப்படி பல பக்கங்களை தாண்டும் கருத்துகள், வண்ண வண்ண மீம்ஸ், வடிவான கார்ட்டூன்ஸ்... இப்படியாவது இந்த தளம் இங்கே தெம்பாக இயங்குவது சந்தோசம்.
  19. ஹலோவீன் நேரம் போய்த் தங்குவதற்கு நல்ல இடமாக இருக்கும், இப்படி மூடி விட்டார்கள்😂!
  20. இன்றும் அதே போல்தான். யார் அடிப்பார். யார் உருட்டுவார் என்றே தெரியாமல் போய்க்கொண்டிருக்கு. ஆனால் என்ன கடைசியில் ஒருவர் போட்டு பிளந்துவிடுகிறார். இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை மிக நீளம்.
  21. தம்பி வரவர எனது காலடி பார்த்து கழிவோயிலை ஊத்துறார் யுவர் ஆனர்.
  22. அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து இள‌ம் ப‌ருவ‌ தோனி😁👍.............அந்த‌ ம‌க‌ளிர் உண்மையில் அடித்து ஆட‌க் கூடிய‌ ம‌க‌ளிர் , அவான்ட‌ இர‌ண்டு கைச்சை தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் விட்ட‌ ப‌டியால் தான் 250ர‌ன்ஸ்ச‌ க‌ட‌க்க‌ முடிந்த‌து👍............................
  23. நல்லது. 3ம் தீவு வரை அலை தாழும் நேரம் (low tide) நடந்தே போகலாம். அலை மீளமுதல் திரும்பி விட வேண்டும். பெரிய அழகு என்றில்லை, ஆனால் ஒரு திரில் அனுபவமாக இருக்கும். வெறும் கூகிள் மேப், போகும் வழியில் கிடைத்த இரு வழிகாட்டிய சிறுவர்களுடன் போய் - வந்தேன். தலைமன்னாரில் ஒரு குடிசைகள் போன்ற தங்குமிடத்தில் தங்கினேன். அதன் உரிமையாளர்+நடத்துபவர் ஒரு ஜேர்மானிய வெள்ளை இனத்தவர். தங்குமிடம் போய் சேர இருட்டி விட்டது. அவர் ஒரு tree house மரத்தில் அமைத்து வாழ்ந்தார். நல்ல சாப்பாடு, கொண்டு போன ஒரு வெளிநாட்டு போத்தலை கொடுத்ததும் அவர் முகத்தில் அளவுகடந்த சந்தோசம். சாப்பாட்டுக்கு காசு வாங்கவில்லை. எல்லாமுமே மிக அடிப்படையான வசதிகள். பாம்புகள் ஓடிய அடையாளம் எங்கும். படுத்தெழும்பி காலையில் பார்த்தால் …. தங்குமிடத்தை ஒரு முன்னாள் சவக்காலையில் அமைத்துள்ளார்🤣.
  24. World of Creatures “A tree gives the same gift to all — shade, peace, and life. Whether it shelters people or sheep, its kindness never changes.” 🌳"
  25. கோசான் , 1967க்குப் பிறகு தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டின் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது 'தமிழ்நாடு வெற்றிக் கழகம்' (தவெக) ‘ஆட்சியில் பங்கு’ என்று முன்வத்திருப்பது கண்டிப்பாக தேசியக் கட்சிகளை நிச்சயம் கவர்ந்திருக்கும். ஆட்சியில் பங்கு என்றாலும் கடிவாளம் தவெக விடம்தான் இருக்கும். எல்லோருமே பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையே கவனிக்கின்ற நேரத்தில், காங்கிரஸ் சத்தமின்றி தவெகவுடன் கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விஜய்க்குச் சேரும் கூட்டத்தைப் பார்த்து திமுக திகைத்திருக்கிறது. அதேநேரம் அவருக்குச் சேரும் கூட்டம் மற்றக் கட்சிகளை அவர்பால் இழுத்துச் செல்லலாம். தை பிறக்கட்டும். காட்சிகள் தெரியும்
  26. “சங்கு சுட்டாலும் வெண்மைதரும்” சுடச் சுட சீமானும் வெண்மையாவதுபோல் தெரிகிறது.🤩 நன்றாகப் பெரும் போறனையில் போட்டு சுடுங்கள். நற்றுணையாவது நமச்சிவாயவே.🙏
  27. வழக்கை விசாரித்து முடித்து வையுங்கள் என்று வழக்கிட்டவரே சீமான் தான். எனவே தன்னிடம் எதை கேட்டாலும் செய்ய தயாராகவே வழக்கை தொடர்ந்து இருப்பார். போன தடவை விஜயலட்சுமி முரண்டு பிடித்து தொடர விரும்பினார். ஆனால் நீதிபதி அவருக்கு குட்டு வைத்து வழக்கை சமமாக்கினார். அடுத்த தடவை விஜயலட்சுமி இறங்கி வந்து நீதிபதியின் கோரிக்கையை ஏற்று சீமான் விரும்பியபடி கேட்டபடி இனி என்னை தொந்தரவு செய்ய கூடாது என்று வழக்கை முடித்து மூடிவிட்டார். இதை வைத்து கூத்தாட்டம் போட்ட அனைவருக்கும் வாயில் பூட்டு. இனி வெறும் வாயில் கூட சீமான் என்று வரக்கூடாது என்பது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். ஆனால் கம்பி எண்ண முடியாது அல்லவா.
  28. தம்பி newbalance நான் இவ்வளவுநாள் இணைத்த பாடல்களை இந்த ஒரு பாடல் சுனாமிபோல் வந்து அடித்துக் கொண்டு போய் விட்டது ........நன்றி தம்பி . .....! காரணம் வல்லினமாய் வில்லனாகவே பார்த்த m .r . ராதா இந்த இடத்தில் மெல்லினமாய் மாறி அருமையாய் நடித்திருப்பார் . ...... சொல்லி வேல இல்ல .......! இதை சுசிலாவின் குரலில் அஞ்சலிதேவி அருமையாய் நடித்திருப்பார் .....படகாட்சிகளுடன் அருமையாய் இருக்கும் . .....! இந்தப்பாடலில் பெண் பாடுவதை நானும் இணைக்கிறேன் .....அதைவிட நீங்கள் இணைத்ததுதான் மாஸ்ட்டர்பீஸ் .....! கவி அருணாசலமும் நன்றாக ரசிப்பார் என்று நினைக்கிறேன் .......!
  29. என்னைப்பார் என் அழகைப் பார் . .......... நான் அழகாய் இருக்கேனா மம்மி ..........! 😍
  30. முன்பு அசைவ கடைகள் தவிர்ந்த ஏனைய சாப்பாடுகடைகளில் வாழை இலை , வாழைத்தட்டு , தாமரை இலை போன்றவைதான் கடைகளில் இருந்தன ........! நான் அடிக்கடி வாகன உதிரிபாகங்கள் எடுக்க கொழும்பு செல்வது வழமை ........ அப்போதெல்லாம் வாழையிலையில் குண்டு தோசையை தேங்காய் சம்பலில் முக்கி வைத்து கட்டிக்கொண்டு செல்வதுண்டு ........பிரயாணத்துக்கு இது ஒரு நல்ல உணவு . ...... ஓரிரு மணித்தியாலத்தின் பின் நன்றாக ஊறி இருக்கும் சாப்பிட அந்தமாதிரி இருக்கும் . ......அருகில் இருப்பவர்களுக்கும் குடுத்து சாப்பிடலாம் . ....... கை கழுவ என்று தண்ணி செலவழிக்க தேவை வராது ....... இங்கும் அநேகமாய் தூரப்பயணங்களுக்கு செய்து கொண்டு போவதுண்டு .........! 😇
  31. உங்கள் விளக்கத்திற்கு நன்றி. சாப்பட்டு கோப்பைக்கு மேல் ஒரு பொலிதீன் போட்டு தான் சாப்பிடுவார்களா என்ன கூத்து இது 🙄 நீங்கள் சொன்னது முழுக்க சரி. நான் சாப்பாட்டு கோப்பை பிளேட்டுக்கு தடை என்று நினைத்துவிட்டேன்.
  32. காசா போர் நிறுத்தம், பணயக்கைதிகளை திருப்பி அனுப்ப இஸ்ரேலும் ஹமாஸும் உடன்பாடு. 67,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று மத்திய கிழக்கை மறுவடிவமைத்த காசாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்டமான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டன. காசா மீதான இஸ்ரேலின் பேரழிவுகரமான தாக்குதலைத் தூண்டிய ஹமாஸ் போராளிகளின் எல்லை தாண்டிய தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளுக்கு ஒரு நாள் கழித்து, எகிப்தில் நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தைகள், பாலஸ்தீனப் பகுதியில் அமைதியைக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் 20-அம்ச கட்டமைப்பின் ஆரம்ப கட்டத்தில் ஒரு உடன்பாட்டை எட்டின. இந்த ஒப்பந்தம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், பிராந்திய மோதலாக உருவெடுத்த போரை நிறுத்துவதற்கான முந்தைய எந்த முயற்சியையும் விட இரு தரப்பினரும் நெருக்கமாக அமைதிருக்குத் திரும்புவார்கள். இந்த ஒப்பந்தம் பற்றிய செய்தி இஸ்ரேல், காசா மற்றும் அதற்கு அப்பால் கொண்டாட்டங்களைத் தூண்டியது. இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்கள் பட்டாசுகளை வெடித்தன, பாலஸ்தீனியர்கள் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நம்பிக்கையில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். எனினும், புதன்கிழமை (08) தாமதமாக ட்ரம்ப் அறிவித்த ஒப்பந்தம் விவரங்கள் குறைவாகவே இருந்தது. மேலும் முந்தைய அமைதி முயற்சிகளில் நடந்தது போல, அதன் சரிவுக்கு வழிவகுக்கும் பல தீர்க்கப்படாத கேள்விகளை விட்டுச் சென்றது. இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்பது குடியரசுக் கட்சி ஜனாதிபதிக்கு ஒரு குறிப்பிடத்தக்க வெளியுறவுக் கொள்கை சாதனையாக இருக்கும். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை (09) தனது அரசாங்கத்தை கூட்டி இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதாகக் கூறினார். திட்டத்தின் முதல் கட்ட ஒப்புதலுடன், எங்கள் அனைத்து பணயக்கைதிகளும் நாட்டிற்கு கொண்டு வரப்படுவார்கள் என்றதுடன், இது இஸ்ரேல் அரசுக்கு ஒரு இராஜதந்திர வெற்றி என்றார். அதேநேரம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டை எட்டியதாக ஹமாஸ் உறுதிப்படுத்தியது, இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலியர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறுவது மற்றும் பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் ஆகியவை அடங்கும் என்று கூறியது. 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவ பதிலடி கொடுக்கத் தொடங்கியதிலிருந்து 67,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான பகுதி தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் காசா அதிகாரிகள் கூறுகின்றனர். சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் காசாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 48 பணயக்கைதிகளில் 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. எவ்வாறெனினும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நம்பிக்கைகள் எழுந்துள்ள போதிலும், நேரம், காசா பகுதிக்கான போருக்குப் பிந்தைய நிர்வாகம் மற்றும் ஹமாஸின் தலைவிதி உள்ளிட்ட முக்கியமான விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. https://athavannews.com/2025/1449915
  33. திரும்பவும் கற்காலத்துக்கே போறமா? கடைகாரர்களுக்கு சாப்பாட்டுக் கோப்பையை ஒழுங்கா சுத்தமா கழுவி பயன்படுத்தணும் என்று அறிவுறுத்தலுடன் அதை செய்ய கற்றுகுடுங்கப்பா. வாழை இலையை அறுத்து எடுத்துவந்து சுத்தம் பண்ணும் செலவுக்கு ஒரு சாப்பாட்டுக் கோப்பையை சுகாதராமான முறையில் இலகுவாக சுத்தம்பண்ணி மீண்டும் பயன்படுத்தலாம். இந்த லஞ்ச் சீற் ஒரே கோப்பையை திரும்ப திரும்ப பலர் பாவிக்கும் போது சுகாதார பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவதாக எண்ணுகிறேன். நான் படித்த காலத்தில் வாழை இலையைப் பயன்படுத்தி சாப்பிட்டதாக ஞாபகம்.
  34. வாழை மரம் அவ்வளவுக்கு தற்பொழுது யாழில் கிடைக்குமா என்பது கேள்விக்குறி....வாழை இலையில் சைவர்கள் சாப்பிடுவார்கள். யாழ் வாழ் இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள் எப்படி சாப்பிட முடியும்?
  35. இத்தனை வருடங்கள் தோற்றாகி விட்டது, அப்படியே இந்த வருடமும் இந்தியா தோற்று, அகஸ்தியனை அரியணையில் ஏற்ற வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்..........🤣. இன்றைக்கு Mooney அடித்தார்........... அடுத்த போட்டியில் Sunny என்று ஒருவர் வந்து அடிப்பார்............ இப்படித்தானே போட்டிகள் தாறுமாறாக போய்க் கொண்டிருக்கின்றன..........ஆனால் ஃபைனலில் எதுவுமே மாறாது............🤣.
  36. ஜோர்ஜ் சோரோஸ் எவ்வாறு இந்திய மோடியின் முதலாவது எதிரியானார் என அல்ஜசிராவில் ஒரு ஆக்கம் உள்ளது, அவரது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அடிப்படையாக இருக்கும் அவரது தாராளவாத பொருளாதார கொள்கை தற்போது மேற்கில் கூட இல்லை, தாராளாவாத கொள்கைக்கு ஆரம்பத்தில் எதிரியாக இருந்த இடது சாரி கொள்கைகளும் தேசிய உணர்வு நிலைப்பாடுகளும் (தேசிய சொத்துக்கள் அந்தந்த தேசமக்களுக்கே) எனும் நிலையில் இருந்து தற்போது உலகம் முழுவதும் தாராளாவாத கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உலகம் செல்கிறது. 2023 இல் இரஸ்சிய உக்கிரேன் போரின் பின்னரான காலகட்டத்தில் ஐ எம் எப் இன் தரவுகளினடிப்படையில் உலகம் வெவ்வேறுபட்ட தொகுப்புகளாக (நாடுகளின்) மாறி தங்கு தடையற்ற பொருளாதாரத்திற்கேதிராக மாறியமையால் உலக பொருளாதாரம் 7 சத விகித வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது என கூறியிருந்தது. ஐரோப்பிய உற்பத்திகளுக்கு ஆதரவாக இருந்த மலிவு விலை எரிசக்தியின் வழங்கலை தடை செய்தல், தென் சீன கடல், மத்திய கிழக்கு கடல் வழிப்பாதை, கிழக்காசிய ஐரோப்பிய வழங்கல் பாதை (போலந்து தனது எல்லையினை மூடியமை) ட்ரம்பின் புதிய வரிக்கட்டுப்பாடு என மேலும் புதிய அழுத்தங்கள் இந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. இவை அனைத்திற்கும் பின்னணியாக இருப்பது அமெரிக்கா, இதில் ஆட்சியாளர்கள் மாறினாலும் அதன் வெளியுறவு கொள்கை மாறாது என்பதற்கு இது நல்ல உதாரணம். ஜோர்ஜ் சோரோஸ் ஒரு தாராளவாத கொள்கை உடையவராக இருப்பதால் அவரது முதலாவது எதிரியாக அமெரிக்காவே இருக்க வேண்டும், அதன் பின்னரே மற்ற நாடுகள் வரும் என கருதுகிறேன். உண்மையில் ஜோர்ஜ் சோரோஸின் அடிப்படை நோக்கம் தெரியவில்லை, ஆனால் இரண்டாம் உலக யுத்ததின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட போரற்ற பொருளாதார வளமான உலகு என்பதனை சில பொருளாதார முதலாளிகளின் பேராசையால் மிக மோசமான பேரழிவும் அனர்த்தமும் ஏற்படும் ஒரு உலகு நோக்கி செல்வதற்கு ஜோர்ஜ் சோரோஸும் ஒரு காரணியாக இருந்திருப்பாரோ என தோன்றுகிறது. இந்தியாவின் மோடிக்கு ஜார்ஜ் சோரோஸ் எப்படி 'எதிரி நம்பர் 1' ஆனார் இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கில் மோடியை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கோடீஸ்வரர் நிதியுதவி செய்வதாக ஆளும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.யில் நடைபெற்ற IMF-உலக வங்கி ஆண்டு கூட்டங்களில் ஒரு மன்றத்தின் போது சொரெஸ் நிதி மேலாண்மைத் தலைவர் ஜார்ஜ் சொரெஸ் [கோப்பு: மானுவல் பால்ஸ் செனெட்டா/ஏபி புகைப்படம்] யாஷ்ராஜ் சர்மா எழுதியது 26 டிசம்பர் 2024 அன்று வெளியிடப்பட்டது26 டிச., 2024 சமூக ஊடகங்களில் பகிர இங்கே கிளிக் செய்யவும் பகிர் சேமிக்கவும் புது தில்லி, இந்தியா — நவம்பர் மாத இறுதியில் இந்திய நாடாளுமன்றம் அதன் குளிர்காலக் கூட்டத்தொடருக்காகக் கூடியபோது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக்கும் இடையே சூடான வாக்குவாதங்களுக்குத் தயாரானது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் இன்னும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது , ஒரு வருடத்திற்கும் மேலாக இன மோதல்கள் உள்ளூர் பாஜக அரசாங்கத்தால் அதிகரித்துள்ளதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டினர்; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி குறைந்துள்ளது ; மேலும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி அமெரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டின் மையத்தில் உள்ளார். மோடியின் வருகையின் போது இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. பட்டியலின் முடிவு ஆனால் டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் ஒரு குளிர்ச்சியான மற்றும் இருண்ட நாளில், பாஜக தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தின் வழியாக பேரணியாகச் சென்றனர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைத் தடுக்கும் நோக்கில், காங்கிரஸை அவர்களின் பார்வையில் ஒரு சாத்தியமற்ற வில்லனுடன் இணைத்துள்ளனர்: ஜார்ஜ் சோரோஸ். 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஹங்கேரிய-அமெரிக்க நிதியாளர்-கொடையாளர், பாஜகவின் சொல்லாட்சியின் மைய இலக்காக உருவெடுத்துள்ளார். சோரோஸ் நாட்டின் எதிர்க்கட்சியை ஆதரிப்பதாகவும், இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மற்ற மோடி விமர்சகர்களை ஆதரிப்பதாகவும் குற்றம் சாட்டுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அந்தக் குற்றச்சாட்டுகள் கூர்மையடைந்தன. அந்தத் தேர்தலில் இந்து பெரும்பான்மை பாஜக ஒரு தசாப்தத்தில் முதல் முறையாக பெரும்பான்மையை இழந்தது, இருப்பினும் அது ஒரு கூட்டணி அரசாங்கத்தை ஒன்றிணைக்க போதுமான இடங்களைப் பெற்றது. ஆனால் சமீபத்திய நாட்களில் பிரச்சாரம் உச்சத்தை எட்டியுள்ளது, மோடியை குறைமதிப்பிற்கு உட்படுத்த அமெரிக்க வெளியுறவுத்துறை சோரோஸுடன் கூட்டுச் சேர்ந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி தொடர்ச்சியான பதிவுகளில், பாஜக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் ஜனநாயகம் தொடர்பான கேள்விகளில் மோடி அரசாங்கத்தை குறிவைக்க, சோரோஸின் அறக்கட்டளை மற்றும் வெளியுறவுத்துறையால் ஓரளவு நிதியளிக்கப்பட்ட புலனாய்வு பத்திரிகையாளர்கள் குழுவின் பணியைப் பயன்படுத்தியதாக X இல் பதிவிட்டுள்ளது. பிரெஞ்சு ஊடகமான மீடியாபார்ட் வெளியிட்ட கட்டுரையை மேற்கோள் காட்டி, சோரோஸின் திறந்த சமூக அறக்கட்டளைகள் மற்றும் வெளியுறவுத்துறை ஆகியவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டத்திற்கு (OCCRP) நிதியளித்ததாகக் கூறும் ஒரு கட்டுரையை பாஜக மேற்கோள் காட்டியது. பின்னர், மோடி அரசாங்கத்தால் பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், அதானி குழுமத்தின் செயல்பாடு குறித்த விசாரணைகள் மற்றும் இந்தியாவில் மத சுதந்திரம் குறைந்து வருவது குறித்த அறிக்கைகள் குறித்து OCCRP வெளியிட்ட அம்பலப்படுத்தல்கள் குறித்து கவனத்தை ஈர்த்தது, இந்த செய்தி சேகரிப்புக்குப் பின்னால் சோரோஸும் பைடனும் நிர்வாகமே இருந்ததாகக் கூறுகிறது. "பிரதமர் மோடியை குறிவைத்து இந்தியாவை சீர்குலைப்பதே ஆழமான அரசுக்கு தெளிவான குறிக்கோளாக இருந்தது," என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார், "இந்த நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் எப்போதும் அமெரிக்க வெளியுறவுத்துறை உள்ளது [மேலும்] OCCRP ஆழமான மாநில நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கான ஊடகக் கருவியாகச் செயல்பட்டு வருகிறது" என்றும் கூறினார். அமெரிக்காவின் நெருங்கிய மூலோபாய கூட்டாளிகளில் ஒன்றாக அமெரிக்கா இருப்பதால், வெளியுறவுத்துறையை குறிவைத்து வெளியிடப்பட்ட கருத்துக்கள் பல ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆனால் சில நிபுணர்கள் இந்த நடவடிக்கை உள்நாட்டு அரசியல் தோரணையைப் பற்றியது என்றும், மோடி அரசாங்கத்தை வரவிருக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் "ஆழ்ந்த அரசு" ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த சதி செய்கிறது என்ற வலியுறுத்தலுடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளனர். "மேற்கத்திய விமர்சனங்களை உள்நாட்டு அரசியல் தளமாக மாற்றுவது மோடியின் இந்தியாவில் ஒரு புதிய நிகழ்வைக் குறிக்கிறது" என்று அரசியல் ஆராய்ச்சியாளரான அசிம் அலி கூறினார். "ஒரு 'மேற்கத்திய ஆதரவு கூட்டணி' மற்றும் 'மக்கள் ஆதரவு பெற்ற தேசியவாத கூட்டணி' ஆகியவற்றுக்கு இடையேயான மோதலின்" கதையை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியை இது பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். உங்கள் ஆர்வங்களின் அடிப்படையில் உடனடி விழிப்பூட்டல்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெறுங்கள். பெரிய செய்திகள் நடக்கும்போது முதலில் தெரிந்துகொள்ளுங்கள். ஆமாம், எனக்கு புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள். ஒரு 'எளிதான இலக்கு' ஜனவரி 2023 இல், அமெரிக்காவை தளமாகக் கொண்ட தடயவியல் நிதி ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ஒரு அறிக்கையில், அதானி குழுமம் "பல தசாப்தங்களாக வெட்கக்கேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி திட்டத்தில்" ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியது. அறிக்கை வெளியான பிறகு, அதானி குழுமத்தின் பங்குகள் சுமார் $112 பில்லியன் சரிந்தன, பின்னர் அடுத்தடுத்த நாட்களில் மீட்சியடைந்தன. அதன் பிறகு நிறுவனம் கூட்டு நிறுவனத்தின் வணிக நடைமுறைகள் குறித்து மேலும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொண்டுள்ளது. அதானி குழுமம் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இதற்குப் பதிலாக, இந்திய மூலதனச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து (SEBI) ஹிண்டன்பர்க் ஒரு காரணம் கேட்கும் அறிவிப்பைப் பெற்றது. அதானி குழுமத்திற்கு எதிராக குறுகிய நிலைகளை உருவாக்குவதற்கு அந்தக் குழு பொதுவில் அல்லாத தகவல்களைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியது. ஆனால், அப்போது நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் மோடி மற்றும் அதானிக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான பிரச்சாரத்தின் மையப் பொருளாக மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மாறின. காங்கிரஸ் தலைவர் காந்தி பிப்ரவரி 2023 இல் நாடாளுமன்றத்தில், "அரசாங்கக் கொள்கைகள் அதானி குழுமத்திற்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன" என்று குற்றம் சாட்டினார். பிரதமரும் கோடீஸ்வரரும் ஒரு தனியார் ஜெட் விமானத்தைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டு புகைப்படங்களையும், 2014 தேசியத் தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரத்திற்காக மோடி அதானி குழும ஜெட் விமானத்தில் புறப்படும் இரண்டு புகைப்படங்களையும் அவர் காட்சிப்படுத்தினார். பிப்ரவரி 2023 இல், அதானி மீதான இந்திய அரசியல் போரில் சொரெஸ் ஈடுபட்டார். முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், அதானி நெருக்கடி இந்திய அரசாங்கத்தின் மீதான மோடியின் "பிடியை" "கணிசமாக பலவீனப்படுத்தும்" என்று கூறினார். இதற்கு மோடி கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது . அப்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் நிறுவனர் "[இந்தியாவின்] ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதற்கான தனது தீய நோக்கங்களை இப்போது அறிவித்துள்ளார்" என்றார். இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கோடீஸ்வரரை "ஒரு வயதான, பணக்கார கருத்துடைய ... ஆபத்தான நபர்" என்று வர்ணித்தார். பாஜக மற்றும் மோடி அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அல் ஜசீரா ஓபன் சொசைட்டி ஃபவுண்டேஷன்களிடமிருந்து பதில்களைக் கோரியுள்ளது, ஆனால் இன்னும் பதில் கிடைக்கவில்லை. இருப்பினும், செப்டம்பர் 2023 இல், இந்தியாவில் அதன் செயல்பாடுகள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில், "2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, இந்தியாவில் எங்கள் மானியங்கள் வழங்குவது உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களுக்கான எங்கள் நிதியுதவி மீதான அரசாங்கக் கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறியது. ஆனால், சோரோஸ் மீதான சமீபத்திய விமர்சனம், அந்த கோடீஸ்வரரைப் பற்றியது அல்ல என்று புது தில்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தின் (CPR) அரசியல் விஞ்ஞானி நீலஞ்சன் சிர்கார் கூறினார். "சோரோஸ் ஒரு எளிதான இலக்கு: அவர் நிறைய பணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், மோடியை விமர்சிக்கும் ஒரு பதவியை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், மேலும், நிச்சயமாக, பலவற்றிற்கு நிதியளிக்கிறார்," என்று சிர்கார் கூறினார். "ஆனால், அனைவரும் வெறுக்கத்தக்க ஒரு சுருக்கமான அமைப்பாக அவரைப் பற்றி அல்ல - மாறாக, இந்தியாவில் உள்ள ஒரு சில சமூக மற்றும் அரசியல் நடிகர்களுடனான அவரது தொடர்பு என்று கூறப்படுவதை பாஜக அவமதிக்க முயற்சிக்கிறது." இந்தியாவில் லஞ்சம் வாங்கியதாக அதானி மீது அமெரிக்கா சமீபத்தில் குற்றம் சாட்டியதை அந்தக் குழு மறுத்ததிலிருந்து, மோடியின் கட்சி காங்கிரஸ் மற்றும் சோரோஸ் மீதான தாக்குதல்களை கூர்மைப்படுத்தியுள்ளது, இருவருக்கும் இடையிலான ஆழமான தொடர்புகளை சித்தரிக்க முயற்சிக்கிறது. ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தியை இணைத் தலைவராகக் கொண்ட ஆசிய பசிபிக் ஜனநாயகத் தலைவர்கள் மன்றத்தின் (FDL-AP) சோரோஸ் நிதியுதவி செய்ததாகக் கூறப்படுவதை பாஜக தனது கூற்றை வலுப்படுத்த மேற்கோள் காட்டியது. "சோரோஸ் இந்த நாட்டின் குடிமகன் அல்ல, அவர் நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க விரும்புகிறார்" என்று பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜக்தம்பிகா பால் கூறினார். இருப்பினும், காங்கிரஸ் எந்த வெளிநாட்டு நடிகராலும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் கருத்துக்களை நிராகரித்துள்ளது. மேலும், மணிப்பூர் நெருக்கடி, இந்தியாவின் பொருளாதார சவால்கள் மற்றும் அதானியின் மீது லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆகியவற்றிலிருந்து நாட்டைத் திசைதிருப்புவதே பாஜகவின் சோரோஸ் எதிர்ப்பு பிரச்சாரத்தின் நோக்கமாகும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பாஜக தலைவரும் செய்தித் தொடர்பாளருமான விஜய் சௌதைவாலா, சோரோஸ் மீதான கட்சியின் தாக்குதல்கள் குறித்த விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு அல் ஜசீரா விடுத்த கோரிக்கையை மறுத்தார். இதற்கிடையில், பிரெஞ்சு ஊடகமான மீடியாபார்ட் ஒரு பொது அறிக்கையில் , “பாஜகவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்வதற்கும் பத்திரிகை சுதந்திரத்தைத் தாக்குவதற்கும் OCCRP பற்றிய சமீபத்தில் வெளியிடப்பட்ட புலனாய்வுக் கட்டுரையை கருவியாகப் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறது” என்று கூறியது. சொரெஸ் எதிர்ப்புக் கதை வலதுசாரி இயக்கங்கள் சோரோஸை குறிவைத்து தாக்குதல் நடத்திய ஒரே நாடு இந்தியா மட்டுமல்ல, 94 வயதான அவரை உலகளாவிய சதித்திட்டங்களின் மையத்தில் வைத்துள்ளன . ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன், ஐரோப்பாவிற்குள் குடியேறிகளை தள்ள சோரோஸ் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார், மேலும் ஒரு சட்டமன்ற மசோதா மூலம் நாட்டில் உள்ள குழுக்களுக்கு கோடீஸ்வரரின் ஆதரவை நிறுத்த முயன்றுள்ளார். அமெரிக்காவில், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள், முதல் டிரம்ப் நிர்வாகத்தின் போது பிளாக் லைவ்ஸ் மேட்டர் போராட்டங்கள் மற்றும் அமெரிக்காவிற்குச் செல்லும் புலம்பெயர்ந்தோரின் கேரவன்களுக்கு சோரோஸ் நிதியளித்ததாக - ஆதாரங்கள் இல்லாமல் - அடிக்கடி குற்றம் சாட்டினர் . பெரும்பாலும், இந்த சதித்திட்டங்கள் யூத-விரோத சாயல்களையும் கொண்டுள்ளன என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தியாவில் பிரச்சாரம் வேறுபட்டது என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான ஜோயோஜீத் பால் மேற்கொண்ட ஆராய்ச்சி தெரிவிக்கிறது. சோரோஸைச் சுற்றியுள்ள X இல் உள்ள பதிவுகளை பகுப்பாய்வு செய்ததில் , அவரைப் பற்றிய சதி கோட்பாடுகளை முன்வைக்கும் இந்திய செல்வாக்கு செலுத்துபவர்கள் பொதுவாக "யூத எதிர்ப்பு தந்திரங்களைப் பயன்படுத்தாமல் கவனமாக இருக்கிறார்கள்" என்றும், மாறாக அவரது "முஸ்லிம்கள் மீதான மென்மையான நிலைப்பாட்டில்" கவனம் செலுத்துகிறார்கள் என்றும் பால் அல் ஜசீராவிடம் கூறினார். நீட்டிப்பாக, அது "இந்துக்கள் மீதான வெறுப்பு" என்று மொழிபெயர்க்கிறது, இந்தக் கதையின்படி, பால் கூறினார். அதானி மற்றும் மோடி குறித்த சோரோஸின் கருத்துகளுக்கு எதிராக பாஜக பின்வாங்கியபோது, அவருக்கு எதிரான "முக்கிய உள்ளடக்கத்தை வெளியிடுவதில் பாஜக அரசியல்வாதிகளுக்கு வெளிப்படையாகச் சொந்தமான சில சமூக ஊடகக் கணக்குகள் முக்கியமானவை" என்று பாலின் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. "இருப்பினும், உள்ளடக்கத்தை பெருக்கிக் கொண்ட முக்கிய நபர்கள் [மோடிக்கு ஆதரவான] செல்வாக்கு செலுத்துபவர்கள் ... அதை வைரலாக்க தீவிரமாக மறு ட்வீட் செய்வதன் மூலம்." சில அரசியல் இயக்கங்களுக்கு, சொரெஸை ஒரு நிழல் பொம்மையாகக் காட்டுவது "மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது" என்று பால் கூறினார், ஏனெனில் அது "ஒரு பரந்த சதித்திட்டத்தைக் குறிக்கிறது", அவர்களின் எதிரிகள் "ஒரு வெளிநாட்டு சூழ்ச்சியாளரிடமிருந்து உத்தரவுகளைப் பெற வேண்டிய அளவுக்கு பலவீனமாக" இருப்பதைக் காட்டுகிறது. இந்தியாவில், சோரோஸுக்கு எதிரான தாக்குதல்கள் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களிலிருந்து வாட்ஸ்அப் அரட்டைகள் மற்றும் பிரதான தொலைக்காட்சிகளில் அதிகரித்து வரும் நிகழ்ச்சிகளுக்கு நகர்ந்துள்ளன, அங்கு அவர் பாஜக செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களால் குறிவைக்கப்படுகிறார். இதன் விளைவாக, "இந்தியாவை குறிவைக்கும் சோரோஸ் என்ற ஒரு நிறுவனம் இருப்பதை கிராமங்கள் வரை உள்ள மக்கள் அனைவரும் அறிவார்கள், ஆனால் அவர்களில் யாருக்கும் இந்த நபர் யார் என்று சரியாகத் தெரியாது" என்று பால் கூறினார். "ஒரு தெரியாத எதிரி, நீங்கள் பார்த்து மதிப்பிடக்கூடிய ஒருவரை விட மிகவும் பயங்கரமானவர்." 'தொனி காது கேளாததா' அல்லது 'தோரணை'யா? இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை அவதானிக்கும் பலருக்கு, சமீபத்திய நாட்களில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், மோடி அரசாங்கத்திற்கு எதிராக சோரோஸ் தலைமையிலான சதித்திட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறையை ஒரு தரப்பாக சித்தரிக்க பாஜக எடுத்த முடிவுதான். டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற ஊடக சந்திப்பில், பாஜக செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பித் பத்ரா, “OCCRP இன் நிதியில் 50 சதவீதம் நேரடியாக அமெரிக்க வெளியுறவுத்துறையிலிருந்து வருகிறது... [மேலும்] ஒரு ஆழமான மாநில நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கான ஊடக கருவியாகவும் செயல்பட்டு வருகிறது” என்று வலியுறுத்தினார். டிசம்பர் 7 அன்று, பாஜகவின் குற்றச்சாட்டுகள் "ஏமாற்றமளிப்பதாக" வெளியுறவுத்துறை கூறியது, மேலும் அமெரிக்கா "உலகம் முழுவதும் ஊடக சுதந்திரத்திற்கு நீண்ட காலமாக ஆதரவாக இருந்து வருகிறது" என்றும் கூறியது. பாஜகவின் குற்றச்சாட்டுகளை நிபுணர்களும் கேள்வி எழுப்பினர். "இந்திய தாக்குதல் குரல் மழுங்கடிப்பதாகவும், யதார்த்தத்திற்குப் புறம்பாகவும் தெரிகிறது, ஏனெனில் அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவதில் அதிக முயற்சி எடுத்துள்ளது" என்று வாஷிங்டன், டி.சி.யை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான தி வில்சன் மையத்தின் தெற்காசிய நிறுவன இயக்குனர் மைக்கேல் குகல்மேன் கூறினார். "நாட்டை அவதூறு செய்து ஸ்திரமின்மைக்கு ஆளாக்க விரும்புவதற்கு இது முற்றிலும் எதிரானது." பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் முதல் கல்வி வரை பல துறைகளில் "இந்தியாவுடன் கூட்டாண்மைக்கு அவர்கள் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைக் காட்ட அமெரிக்க அரசாங்கம் உண்மையில் பின்தங்கியிருக்கிறது" என்று அவர் கூறினார். ஆனால், "பாஜகவின் நிலைப்பாடு, வரவிருக்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கு ஆதரவாக இருக்கலாம், ஏனெனில் அது அடிப்படையில் அமெரிக்காவின் ஆழமான அரசு என்று அழைக்கப்படுவதற்கு எதிராக அதே வகையான வாதங்களை முன்வைத்துள்ளது" என்று குகல்மேன் குறிப்பிட்டார். இதற்கிடையில், சிர்கார் மற்றும் அலி இருவரும், சோரோஸை ஒரு வில்லனாக பாஜக கவனம் செலுத்துவது - அவர்களின் பார்வையில் - அடிப்படையில் உள்நாட்டு அரசியலில் வேரூன்றியுள்ளது என்று கூறினர். "இந்து தேசியவாதத்தின் கவர்ச்சியை எதிர்க்கும் இந்தியாவின் சில பகுதிகளில் மேற்கத்திய எதிர்ப்பு தேசியவாதத்தை ஒரு கவர்ச்சிகரமான தேசியவாத தளமாக" மோடி பயன்படுத்த விரும்புகிறார் என்று அலி கூறினார். மேலும் சொரோஸில், இந்தியாவின் ஆளும் கட்சி அதன் டார்ட்போர்டில் வைக்க முகத்தைக் கண்டறிந்துள்ளது. https://www.aljazeera.com/news/2024/12/26/how-george-soros-became-enemy-number-1-for-indias-modi
  37. முதலமைச்சர் அகஸ்தியனுக்கு வாழ்த்துக்கள்.
  38. இன்று யாழ்ப்பாணத்தில், தென்னிலங்கை புகைப்படவியலாளர் Thilina Kaluthotage என்பவரால் பிடிக்கப்பட்ட புகைப்படம். Shanmugarasa Vadivelu
  39. "இரவில் மட்டும் தானே?" என்று திருப்தியோடு வாழாமல், இதைப் பற்றியெல்லாம் கோர்ட்டுக்குப் போய் கொண்டு!
  40. எனக்கு... அமைதிக்கான நோபல் பரிசு தாராவிடில், நோபல் பரிசு கொடுபவர்களுக்கு... அமைதி இருக்காது. ஆமா.... இப்படிக்கு, தம்பர். 😂
  41. டாஸ்மாக்கும்…. சத்து டானிக்தான். 😂 ஆனால் என்ன அதை குடிக்கிறவன் சத்தம் இல்லாமல் மேல்லோகம் போகிறான். 😜 அதற்குள் விசச் சாராயம் குடித்து இறந்தவனுக்கு… 10 லட்சம் ரூபாய், பம்பர் பரிசு. 😂 இது தெரியாமல்… இங்கை நின்று குப்பை கொட்ட வேண்டி இருக்கு. 🤣
  42. பெரியவர் 16 வயதில் வேலைக்கு சேர்ந்துள்ளார். முதலே இளைப்பாறி இருந்தால் 100 வயதுவரை வாழ்ந்திருக்க மாட்டார். இருந்தாலும் சுயநலம் பிடித்த மனிதன். எத்தனையோ பேர் வேலை இல்லாமல் தெருத்தெருவாக திரியும் நேரத்தில் 84 வயதுவரை வேலை செய்துள்ளார். அரசியல்வாதிகள் போல இவரும் குந்திய இடத்தைவிட்டு நகலாமல் இருந்துள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.