Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்8Points19102Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்6Points33600Posts -
கந்தப்பு
கருத்துக்கள உறவுகள்6Points12678Posts -
vasee
கருத்துக்கள உறவுகள்4Points3311Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/11/25 in all areas
-
மீண்டும் மீட்டுப் பார்க்க வேண்டிய காலம்
மீண்டும் மீட்டுப் பார்க்க வேண்டிய காலம் – நாகராசா லக்சிகா. adminOctober 10, 2025 பாடசாலை முடிந்ததும் உடுப்பு மாற்றி உணவு அருந்துவதற்கே தற்கால மாணவர்களுக்கு நேரமில்லை. குறிப்பாக முன்பள்ளி தொடக்கம் தரம் ஐந்து மாணவர்கள் வரை காலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை பாடசாலை, பாடசாலை முடிந்ததும் மேலதிக வகுப்புகள் என ஓடிக்கொண்டே உள்ளனர். வீட்டுக்கு வந்தும் பாடங்களுக்கான வீட்டுப் பயிற்சிகள், கற்றல் நடவடிக்கைகள் என்று ஓய்வே இல்லாத ஒரு இயந்திரத்தை போல இயங்கிக் கொண்டே உள்ளனர். ஜாடி, கபடி, எல்லே, கிட்டி புல்லு, பல்லாங்குழி, எவடம் எவடம் புலியடி, கெத்தி போன்ற பல விளையாட்டுகளே இப்போது மறைந்து போன நிலையில், ஜாடி என்றால் என்ன? கபடி என்றால் என்ன? என்று வாய்மொழி ரீதியாக ஆய்வு செய்யும் புதிய தலைமுறையினராகவே தற்போதைய சிறுவர்கள் காணப்படுகின்றனர். இப்படிப்பட்ட ஒரு காலத்தில் இருந்து கொண்டு நான் பயணம் செய்து வந்த பாதையை சற்று திரும்பி பார்த்தால் மீண்டும் வராதா அந்த அழகிய நாட்கள் என உள்ளம் ஏங்குகின்றது. ஆவணி மாதம் பிறந்ததும் எப்போது முதல் மழை பெய்யும், எப்போது வீட்டிலிருந்து சேனைப் பயிற்ச்செய்கைக்காக அம்மாவும் அப்பாவும் போவார்கள் என்ற காத்திருப்பு, அவர்கள் போகும்போது பாடசாலை விடுமுறை நாட்களில் அவர்களுடன் நானும் சேனைக்காட்டிற்கு செல்வதும் ஓடி ஆடி விளையாடுவதும் என்ற அழகிய நினைவுகள். எப்போது பாடசாலை விடும் என்று காத்திருந்து பாடசாலை விட்டதும் சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுப் பிள்ளையும் என்னோடு இணைத்துக்கொண்டு பின் கரியலில் மூன்று குட்டி பிள்ளைகளையும் ஏற்றி எடுத்து போற பாதையில் உள்ள சின்னக்கடையில் பக்கெட் ஐஸ்பழம், குச்சிமிட்டாய் எல்லாம் வாங்கி சைக்கிள் கூடைக்குள் போட்டு பாதை நீட்டுக்கும் சாப்பிட்டு விளையாடிக் கொண்டு பல கதைகள் பேசிய படி காட்டுப்பாதை வழியாக சேனைக்காடு சென்ற காலம். போற பாதையில் நாவல், இளந்தை, கூழா, விழாத்தி, கிலா, சூரை போன்ற மரங்களில் பழங்களைக் கண்டால் மரத்தில் ஏறி பழம் பறித்த காலம். அது மட்டுமா போற பாதையில் உள்ள குளக்கட்டுக்களுக்கு போகாமல் போன சரித்திரமே இல்லை. குளக்கட்டில் எல்லாரும் கொஞ்ச நேரம் இருந்து அங்கு உள்ள நாரை, கொக்கு, நீர்க்காகம் போன்ற பல பறவைகளையும் அங்கு காணப்படும் ஆடு, மாடு போன்ற விலங்குகளையும் பார்த்து ரசித்து மீண்டும் பயணத்தை தொடர்ந்த காலம். செல்லும் வீதி ஏற்றம் இறக்கம் கூடிய வீதியாகும். அந்த ஏற்றத்தால் மூச்சுப்பிடிக்க மிதித்து சைக்கிளை கஷ்டப்பட்டு ஏற்றிய பின் அப்பாடா இறக்கம், இறக்கத்தில் சத்தமிட்டு கூச்சல் போட்டுக்கொண்டு பறவையாய் பறந்து சென்ற காலம். அந்த மரத்துல பேய் இருக்காம் இந்த பற்றை குள்ள பேய் இருக்காம் என்று பயந்து பயந்து சென்று புளியங்காய் பறித்து உண்டு பயணத்தை தொடர்ந்த காலம். இப்படியாக ஒரு மாதிரி 30 நிமிட சைக்கிள் ஓட்டத்தை 1:30 மணி நேர ஓட்டமாக நீடித்து சேனைக்காட்டை வந்து அடைந்ததும், காரல் கீரை சொதி, கானந்தி கீரை சொதி, ஆரல் கீரை சொதி, குமிட்டி கீரை கடையல், திராய்கீரை சுண்டல் என்பவற்றில் கட்டாயமாக ஒரு கீரை கறியாவது அம்மா சமைத்து வைத்திருக்க அதை சோறுடன் வைத்து அதோடு மீன் பொறியலும் வைத்து உண்ட பின்னர், சேனைக்காட்டு வெட்டையில் ஏதாவது விளையாடி களைப்பாறிய பின் குளத்துக் கரை நோக்கி அனைவரும் சென்று அங்கு மண்வெட்டியால் மண்புழுவை வெட்டி எடுத்து தூண்டிலில் குத்தி குளத்துக்கரை நீரோடை ,ஆரைப்பற்றை நீரில் மீன் பிடித்து விளையாடிய காலம். வயல் வெட்டையில் குட்டிக் குளம் கட்டி மீன் குஞ்சுகளை ஓடையில் இருந்து பிடித்து வந்து கட்டிய குளத்தினுள் இட்டு விளையாடிய காலம். காய்ந்த மாட்டு சாணிகளைத் தூக்கி ஆட்காட்டியின் முட்டைகளை தேடி திரிந்து அழைந்து திரிந்த காலம். இப்படியாக பின்னேரம் ஐந்து மணி ஆகிவிடும். எப்படியாவது காட்டுப்பாதையில் யானை வருவதற்கு முன்னர் அப்பாவின் காவலில் அவசர அவசரமாக வீடு திரும்பிய காலம். இவ்வாறாக பாடசாலை முடிந்த பின்னும், சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் விளையாடிய என் நினைவுகள் கண்களில் கண்ணீரை சிந்த வைக்கின்றது. அதுமட்டுமா வேளாண்மை விதைப்புக்கு முதல் உழவு செய்யும்போது வயளோடு வயலாக நானும் விளையாடிய நாட்கள், வயல் விதைப்பன்று குடும்பம் குடும்பமாக வந்து சமைத்து வயல் விதைப்பில் ஈடுபட்டவர்களுடன் உணவருந்தி அவர்களின் பழங்கால கதைகளை கேட்டு சிரித்த காலம். இவ்வாறாக வயல் விதைப்பு முடிந்ததும் குருவிக்காவல், ஆகா என்ன ஒரு சந்தோசம் கிழிந்த தகரத் துண்டு ஒன்றை எடுத்து வயல் வரம்பில் காணப்படும் சிறிய ஆத்தி மரத்தை வளைத்து அதில் இருக்கை கட்டி அமர்ந்து அதில் தகரத் துண்டை கட்டி தடியால் அடித்து காய் கூய் என குருவி, புறா துறத்திய காலம். இடையிடையே விளாத்தியடி பிள்ளையாரடிக்கு சென்று விளாங்காய் ஆய்ந்து சாப்பிட்ட நினைவுகள், பின்னர் வாகைத் தண்டுகளை முறித்து அதை படுக்கை போல் பரவி அதன் மேல் குளத்துக் காற்றில் எண்ணையே மறந்து நித்திரை செய்த காலம். ஆரைப் பற்றை மணலை எடுத்து வந்து பரவி ஆரைப் பற்றையில் பிள்ளையார் போன்ற கல்லை எடுத்து வந்து சாமி வைத்து விளையாடிய காலம். இவ்வாறாக ஆரைப்பற்றை நீரில் குதித்து குதூகலமாக விளையாடி பின்னர் மழை பெய்ததும் அதில் நனைந்து விளையாடிய காலம். கச்சான் அறுவடை, சோளன் அறுவடை என்றால் அது இதைவிட விஷேசம் வீடுகளில் இருந்து சின்ன மிஷின், மாட்டு வண்டி என்பவற்றில் அனைவரும் குடும்பமாக வந்து, கச்சான் என்றால் அனைவரும் வட்டமாக இருந்து பல கதைகளையும் கதைத்துக் கொண்டு கச்சான் ஆய்வார்கள், ஒரு கொத்து ஆய்ந்தால் பத்து ரூபாய் என்ன ஒரு சந்தோசம் ஒரு கொத்து கச்சான் ஆய்ந்து அப்பாவிடமே பத்து ரூபாய் வாங்கும் போது. பின் பெரிய பானை ஒன்று வைத்து கச்சான் அவிய விட கச்சான் அவிய முதலில் ஒவ்வொரு கட்டம் கட்டமாக ருசி பார்க்கும் அனுபவம் இருக்கே மறக்கவே முடியாது. பானை சூடே ஏறி இருக்காது அதுக்கு முதலே எடுத்து சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று சண்டை. இவ்வாறாக சோளன் சேனைக்குள் கிளி, குரங்கு வராமல் காவல் பார்த்துக் கொண்டே சோளன் கதிரை முறித்து அடுப்பில் சுட்டு சாப்பிட்டு மகிழ்ந்த காலம். மழை அதிகமாக பெய்து வெள்ளம் . இந்நேரம் என்னோட குட்டி நண்பர்களை கூட்டிக்கொண்டு குளம் வான் போறது பார்க்க போன நினைவு. அது என்ன ஒரு அழகிய காட்சி. இப்படியாக நான் நடந்து வந்த பாதையை கூறப்போனால் கூறிக்கொண்டே போகலாம் ஆனால் இப்போதைய சிறுவர்களிடம் கேட்டுப் பாருங்கள் நீ வந்த பாதையை திரும்பிப் பார்த்து கூறு என்றால். நான் அந்த இடத்தில் மேலதிக வகுப்பிற்குச் சென்றேன் இங்கு மேலதிக வகுப்புக்குச் சென்றேன் என்ற ஒரு கவலையான ஒரு பதிலையே கூறுவார்கள். ஆனால் எனது பாதை ஒரு சிட்டுக்குருவி எப்படி ஒரு சுதந்திரமான பாதையில் பறந்து வந்து உயர பறந்ததோ. அதேபோன்று நானும் அழகான நினைவுகள் பலவற்றை கூறக்கூடிய நீண்ட பாதையால் பறந்து வந்து பல்கலைக்கழகத்தை அடைந்துள்ளேன். இப்போது எண்ணுகின்றேன் அந்த அழகிய காலம் மீண்டும் வருமா என்று. ஆம் கட்டாயம். என்னை எப்படி சுதந்திரமாக எனது தாய் தந்தையர் வளர்த்தார்களோ அதே போன்று எனது குழந்தையையும் நான் பல அழகிய கதைகள் கூறக்கூடிய பாதையால் சுதந்திரமாகப் பறந்து வரச் செய்வேன். நாகராசா லக்சிகா கிழக்கு பல்கலைக்கழகம் https://globaltamilnews.net/2025/221345/3 points
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 13) 88 ஓட்டங்களினால் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை தோற்கடித்தது. 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 25 புள்ளிகள் 2) ஏராளன் - 23 புள்ளிகள் 3) கிருபன் - 23 புள்ளிகள் 4) ரசோதரன் - 23 புள்ளிகள் 5) வீரப்பையன் - 23 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 21 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 21 புள்ளிகள் 8) சுவி - 20 புள்ளிகள் 9) புலவர் - 19 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 17 புள்ளிகள் 11) வாதவூரான் - 17 புள்ளிகள் 12) கறுப்பி - 17 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 17 புள்ளிகள் 14) வாத்தியார் - 15 புள்ளிகள் 15) வசி - 15 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 13, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.3 points
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
என்னுடன் வேலை செய்யும் வெள்ளைக்காரர்களுக்கு, வேறு இனத்தவர்களுக்கு நான் இலங்கையில் பிறந்த தமிழராகவே அடையாளப்படுத்தி இருக்கிறேன். தமிழர்கள் என்பதினால் பிறந்த மண்ணில் தமிழர்கள் அடைந்த அவலங்களை ஓரளவு சொல்லி இருக்கிறேன். பலருக்கு நான், இலங்கையில் கிடைக்காத சுதந்திரத்தை எனக்கு தந்த அவுஸ்திரேலியாவுக்கு ஆதரவு என்பதும் தெரியும்.2 points
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஆடுகள அறிக்கை பார்க்கவில்லை, ஆனாஅல் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதான ஆடுகள நிலவரத்தினடிப்படையில் எனது தனிப்பட்ட அபிப்பிராயம் இது ஒரு கறுப்பு நிற ஆடுகளம், அதனால் இலங்கை அணி சுழற்பந்து வீச்சிற்கு முன்னுரிமை அளித்தாலும், முதலில் பந்து வீச்சினை தெரிவு செஉதிருப்பட்கு ஆச்சரியமாக உள்ளது. ஆடுகளம் ஆரம்பத்தில் ஈரமாக இருகக்கும் அத்துடன் மேக மூட்டமான நிலையில் வேக பன்ட்கு வீச்சிற்கும் சாதகமாக இருக்கும், பந்து முதலில் துடுபாடுபவர்களுக்கு இலகுவாக வரும் பின்னர் ஆடுகளம் மெதுவாக தொடங்கும் போது இரண்டாவது இனிங்ஸ் கடினமாக இருக்கும், புதிய பந்தில் இலகுவாக ஓட்டங்களை எடுத்தாலும் பந்து மெட்குவாக தொடங்கும் போது ஓட்டம் எடுப்பட்கு கடினம், இந்த ஆடுகளம் 250 ஆடுகளம் போல இருக்கின்றது ஆனால் இங்கிலாந்து அதனை விட அதிகமாக எடுக்கும் போல உள்ளட்கு இலங்கை அணி இரண்டாவதாக ஆடுவதால் மிக கடினமான சூழ்நிலையினை எதிகொள்ள வேண்டி ஏற்படலாம், பந்தை நேர்கோட்டில் விளையாட வேண்டும் ரிவர்ஸ் சுவீப், சுவீப் போன்ற சுழல் பன்ட்கு வீச்சு அடிகளை இந்த ஆடுகளத்தில் பந்து மெட்குவான பின்னர் விளையாடுவது கடினமாக இருக்கும், அத்துட இரண்டாவட்கு இனிங்ஸிலும் நிலமை பந்தினை குறுக்காக ஆடுவது கடினமாகிவிடும் என க்ருதுகிறேன்.2 points
-
ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து
ஜேவிபியும் ஏனைய சிங்கள கட்சிகள் போலத்தான். ஒரே வித்தியாசம் - நீங்கள் அவர்களோடு வர்க்க போரில் துணை நின்றால் உங்களை பாதுகாப்பார்கள். அதே நேரம் குழுவாக சேர்ந்து தமிழரை தாக்குவதில் ஒரு கை போடாவும் பின் நிற்க மாட்டார்கள். கொள்கை ரீதியில் தமிழரை ஒடுக்குவதில் ஏனைய கட்சிகள் “ஒரே இலங்கையர்” எனும் ஈரச்சாக்கை கையில் எடுத்தால்… ஜேவிபி…நாம் எல்லோரும் உழைக்கும் வர்க்கம் என்ற ஈரச்சாக்கை கையில் எடுப்பார்கள். ஆனால் வடக்கு-கிழக்கை பிரிக்க வழக்கு போட்டு வெல்வார்கள். இத்தனை வருட இழப்பின் பின் தமிழருக்கு கிடைத்த ஒரே சிறிய நன்மை வடக்கு-கிழக்கு தற்காலிக இணைப்பு. எந்த இனவாத கட்சியும் அதை நீக்க துணியவில்லை. அதிகாரத்தில் இல்லாத போதும் கோர்ட்டுக்கு போய் ஜேவிபி நீக்கியது. அதே போல் முள்ளிவாய்க்கால்… நடப்பது மிக பெரும் அழிவு என தெரிந்தும்…மாட்டி கொண்ட தமிழர் பலர் உழைக்கும் வர்க்கம் என அறிந்தும்…: போரை, மேற்கின் வேண்டுதலுக்கு பணியாமல், விரைந்து முடிக்க மகிந்தவுக்கு அழுத்தம் கொடுத்தார் அனுர. யூ என் பி, சுக, ஹெல உறுமய முகத்துக்கு நேரே இனவாதிகள் - சையனைடு. ஜேவிபி ஆசனிக்.2 points
-
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
இந்த அரட்டை அப்பை நான் தவிர்கிறேன் இது வாட்சப்பின் மார்கெட்டின் ஒரு பங்கையாவது பிடிக்க இறக்கப்பட்ட இந்தியாவின் அப். முடிந்தளவு made in India வை நான் தவிர்ப்பதுண்டு. இதில் தகவல் பாதுகாப்பு உத்தரவாதம் எப்படி இருக்கும் ? இந்திய தயாரிப்பு தரம் நாம் அறிந்ததே. நாளைக்கே உங்கள் தகவல் முழுவதும் dark web இல் கூவி, கூவி விற்கப்படும். இந்த வேம்பு மாமா ஒரு அக்மார்க சங்கி. தமிழர்கள் நஞ்சை கூட நஞ்சு என தமிழில் பெயர் வைத்தால் முண்டியட்டித்து வாங்கி குடிக்கும் கூட்டம் என்பதை அறிந்தோ என்னமோ அரட்டை என்ற பெயரோடு வருகின்றனர். தூக்கி எறிவோம் அரட்டையை.2 points
-
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
1 pointஎதிரிக்கு எதிரி நண்பர்கள் என்ற ரீதியில்.... பா ஜ க அதை புரிந்துகொண்டு அதிமுக NDA இலிருந்து வெளியேறுவதைக் கண்டும் காணாமலும் விட்டால் மட்டுமே விஜய் அதிமுக கூட்டணி உருவாகும் என நினைக்கிறேன். விஜய் + அதிமுக + பா ஜ க வுடன் இணைந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்தாலும் அந்தக் கூட்டணி விஜயின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடும். இந்த உங்களின் கருத்தில் வேறுபாடு இல்லை. இதை விட விஜய் தனித்தோ அல்லது இந்திரா காங்கிரசுடனோ கூட்டணி வைத்து போட்டியிட்டு தி முக வை தோற்கடிக்கலாம் ஆனால் எடப்பாடியார் தான் முதல்வராவார். இதற்காக விஜய் அரசியலுக்கு வரவில்லை ஆகவே இன்னும் காலம் இருக்கின்றது. ஆலோசனைகள் செய்து தனித்து நிற்பதென்ற முடிவை விஜய் எடுத்தால் அவருடை எதிர்கால அரசியல் பிரகாசமாக இருக்கும்.1 point
-
சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.
சீனாவில் சில விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன! அவர்கள் மிகவும் விரோதமாக மாறி, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு கடிதங்களை அனுப்பி, அரிய பூமி தொடர்பான உற்பத்தியின் ஒவ்வொரு கூறுகளின் மீதும், சீனாவில் உற்பத்தி செய்யப்படாவிட்டாலும் கூட, அவர்கள் நினைக்கும் வேறு எதன் மீதும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க விரும்புகிறார்கள். இதுபோன்ற எதையும் யாரும் இதுவரை பார்த்ததில்லை, ஆனால், அடிப்படையில், இது சந்தைகளை "அடைத்துவிடும்", மேலும் உலகின் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக சீனாவிற்கு வாழ்க்கையை கடினமாக்கும். எங்கிருந்தோ வந்த இந்த பெரிய வர்த்தக விரோதத்தால் மிகவும் கோபமாக இருக்கும் பிற நாடுகளால் நாங்கள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளோம். கடந்த ஆறு மாதங்களாக சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் சிறப்பாக இருந்தது, இதன் மூலம் வர்த்தகத்தில் இந்த நடவடிக்கை இன்னும் ஆச்சரியமான ஒன்றாக அமைந்தது. அவர்கள் எப்போதும் காத்திருந்ததாக நான் உணர்ந்தேன், இப்போது, வழக்கம் போல், நான் சொல்வது சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது! சீனா உலகையே "சிறைப்பிடித்து" வைத்திருக்க அனுமதிக்கப்படக்கூடாது, ஆனால் அதுதான் நீண்ட காலமாக அவர்களின் திட்டமாகத் தெரிகிறது, "காந்தங்கள்" மற்றும் பிற கூறுகள் தொடங்கி, அவர்கள் அமைதியாக ஓரளவு ஏகபோக நிலையில் குவித்து வைத்திருக்கிறார்கள், இது மிகவும் மோசமான மற்றும் விரோதமான நடவடிக்கை என்று சொல்லலாம். ஆனால் அமெரிக்கா ஏகபோக நிலைகளையும் கொண்டுள்ளது, சீனாவை விட மிகவும் வலுவானது மற்றும் தொலைநோக்குடையது. நான் அவற்றைப் பயன்படுத்தத் தேர்வு செய்யவில்லை, நான் அவ்வாறு செய்ய ஒரு காரணமும் இல்லை - இப்போது வரை! அவர்கள் அனுப்பிய கடிதம் பல பக்கங்கள் நீளமானது, மேலும் விவரங்கள், மிகுந்த குறிப்பிட்ட தன்மையுடன், மற்ற நாடுகளிடமிருந்து அவர்கள் மறைக்க விரும்பும் ஒவ்வொரு கூறுகளும். வழக்கமாக இருந்த விஷயங்கள் இனி வழக்கமானவை அல்ல. அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லாததால் நான் ஜனாதிபதி ஜியிடம் பேசவில்லை. இது எனக்கு மட்டுமல்ல, சுதந்திர உலகின் அனைத்து தலைவர்களுக்கும் ஒரு உண்மையான ஆச்சரியமாக இருந்தது. தென் கொரியாவில் உள்ள APEC இல் இரண்டு வாரங்களில் ஜனாதிபதி ஜியை நான் சந்திக்கவிருந்தேன், ஆனால் இப்போது அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை. மூவாயிரம் ஆண்டுகாலப் போராட்டம் மற்றும் சண்டைக்குப் பிறகு, மத்திய கிழக்கில் அமைதி நிலவிய நாள் இது என்பதால் சீன எழுத்துக்கள் குறிப்பாக பொருத்தமற்றவை. அந்த நேரம் தற்செயலாக நிகழ்ந்ததா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட விரோதமான "ஒழுங்கை"ப் பற்றி சீனா சொல்வதைப் பொறுத்து, அமெரிக்காவின் ஜனாதிபதியாக, அவர்களின் நடவடிக்கையை நிதி ரீதியாக எதிர்கொள்ள நான் கட்டாயப்படுத்தப்படுவேன். அவர்கள் ஏகபோகமாக வைத்திருக்க முடிந்த ஒவ்வொரு உறுப்புக்கும், நமக்கு இரண்டு உள்ளன. இது இப்படி வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, ஆனால், எல்லா விஷயங்களையும் போலவே, நேரம் வந்துவிட்டது. இறுதியில், வேதனையாக இருந்தாலும், இறுதியில், அமெரிக்காவிற்கு இது மிகவும் நல்ல விஷயமாக இருக்கும். இந்த நேரத்தில் நாம் கணக்கிடும் கொள்கைகளில் ஒன்று, அமெரிக்காவிற்குள் வரும் சீனப் பொருட்கள் மீதான வரிகளை பெருமளவில் அதிகரிப்பது. இதேபோல், பல எதிர் நடவடிக்கைகளும் தீவிர பரிசீலனையில் உள்ளன. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி! டொனால்ட் ஜே. டிரம்ப், ஐக்கிய மாகாணங்களின் தலைவர். நவம்பர் 1, 2025 முதல், தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும், சிலவற்றை அவர்களால் தயாரிக்கப்படாத பொருட்களின் மீதும் பெரிய அளவிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக உலகிற்கு மிகவும் விரோதமான கடிதத்தை அனுப்புவதன் மூலம் சீனா வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. இது விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது, மேலும் இது பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்களால் வகுக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது சர்வதேச வர்த்தகத்தில் முற்றிலும் கேள்விப்படாதது, மேலும் பிற நாடுகளுடன் கையாள்வதில் ஒரு தார்மீக அவமானம். சீனா இந்த முன்னோடியில்லாத நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பதன் அடிப்படையில், நவம்பர் 1, 2025 முதல் (அல்லது விரைவில், சீனாவால் எடுக்கப்பட்ட கூடுதல் நடவடிக்கைகள் அல்லது மாற்றங்களைப் பொறுத்து) இதேபோல் அச்சுறுத்தப்பட்ட பிற நாடுகளுக்காக அல்ல, அமெரிக்காவிற்காக மட்டுமே பேசுகிறது, அமெரிக்கா தற்போது செலுத்தும் எந்தவொரு கட்டணத்திற்கும் மேலாக சீனா மீது 100% வரியை விதிக்கும். மேலும் நவம்பர் 1 ஆம் தேதி, எந்தவொரு மற்றும் அனைத்து முக்கியமான மென்பொருட்களிலும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்போம். சீனா இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருக்கும் என்று நம்புவது சாத்தியமில்லை, ஆனால் அவர்கள் எடுத்திருக்கிறார்கள், மற்றதெல்லாம் வரலாறு. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி! டொனால்ட் ஜே. டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது முதலாவது பதிவில் சீனா விசித்திரமாக நடக்கிறது என பணச்சந்தை மூடுவதற்கு 6 மணித்தியாலத்திற்கு முன்னர் கூறினார், அப்போது அவுஸ்ரேலிய டொலரினை விற்று ஜப்பான் ஜென் வாங்கியிருந்திருந்தேன் ஒரு குறிப்பிட்ட சதவிகித இலாபத்தில் இருந்த எனது வர்த்தகம் இந்த அறிக்கை வெளியான பின்பு அதிகளவில் சாதக போக்கினை காட்டியது வார இறுதி என்பதால் வர்த்தகத்தினை மூடிவிட்டேன், பணச்சந்தை மூடிய பின் 6 மணி நேரத்தின் பின்னர் இரண்டாவது 100% வரி அறிவிப்பினை மேற்கொண்டுள்ளார். இவரது கடந்த ஆட்சிக்காலத்திலும் இவ்வாறு அறிவுப்பகளை விட்டு (Bull trap, Bear trap) சந்தையினை புரட்டி போடுபவர் (இதில் அவருக்கு ஆதாயம் உண்டு என கருதுகிறேன்). வார ஆரம்பத்தில் ஜப்பானிய ஆளும் கட்சிக்கு ஒரு பெண்மணி தலைவராகிறார் எனும் செய்தியால் அவுஸ் ஜப்பான் இணை எகிறியது வார இறுதியில் மீண்டும் அதே நிலைக்கு ட்ரம்ப் கொண்டு வந்து விட்டார், தற்போது வெளியிட்ட இரண்டாவது அறிவுப்பு வரும் வாரத்தில் சந்தையினை என்ன செய்யபோகிறது என தெரியவில்லை. அவுஸ்ரேலியாவின் மூலப்பொருள் ஏற்றுமதி பெருமளவில் சீன இறக்குமதியில் தங்கியிருப்பதால், பெரும் தாக்கம் ஏற்படும் என கருதுகிறேன்; அல்லது முதலாவது அறிவிப்பே அதற்கான விளைவை ஏற்கனவே ஏற்படுத்தியுமிருக்கலாம்.1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அவர் எல்லோரையும் அண்ணா அய்யா என்றழைப்பதிலேயே தெரிகிறது அவர் எவ்வளவு இளசு என்று. மகளிர் அணிகள் எல்லாம் இன்னும் நீண்டதூரம் போகவேண்டியுள்ளது. கடந்த பத்து வருடத்தில் அவர்களின் வளர்ச்சி அளப்பெரியது. அடுத்த பத்து வருடத்தில் இன்னும் அமர்க்களமாய் இருக்கும். பணம் ஒரு தடையாக இல்லாவிட்டால் சரி.1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அப்போதிருந்த இலங்கை 83 இல் உலக கோப்பையினை வென்ற இந்தியணி போன்றது என நினைக்கிறேன், ஆனால் இப்போதுள்ள இந்தியணி மிக பலமான அணி ஆனால் இதே இந்தியணியினை 2000 இலிருந்த அவுஸ் அணியுடன் ஒப்பிட முடியாது, 2000 இலிருந்த அவுஸ் அணி போல இந்தியணி உருவெடுக்குமா என தெரியவில்லை. தற்போதய இலங்கை அணி திறமையான அணி, ஆனால் ஏனோ மோசமாக விளையாடுகிறார்கள் (விளையாட்டு ஒழுக்கமின்மை?), இந்த அணி பழைய அணிக்கு எந்த விதத்திலும் திறமையில் குறைவில்லை, ஒரு போட்டியில் மகேல 77 (முதலாவது போட்டி?) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்து, வீரர்கள் தங்கும் அறைக்கு செல்லும் போது அவரை ரணத்துங்க அவரது மோசமான அடி தேர்வினால் ஆட்டமிழந்தமைக்காக அவரை திட்டினதாகவும் அவர் உள்ளே போகாமல் படிக்கட்டிலே இருந்ததாகவும் கூறியிருந்தார், அதே போல் ஜெயசூரியாவும் தனது சம்பவம் ஒன்றைனை கூறியிருந்தார். இலங்கையிலிருக்கும் போது வெளிநாடு வருவதில்லை என நினைத்திருந்தேன், ஆனால் வெளிநாடு வந்த பின்பு நினைத்தேன் எனது வாழ்வின் பெரும்பகுதியினை இலங்கையில் வீணாக்கிவிட்டேன் என, ஆனாலும் இலங்கை ஒரு நல்ல நாடுதான், முட்டாள் அரசியல்வாதிகளினால் இந்த நிலைக்கு வந்துவிட்டது. இலங்கை அணி மைதான ஈரலிப்பு வரும் என நினைத்து தவறான முடிவு எடுத்திருப்பார்களோ? நீங்கள் என்ன நினைகிறீர்கள்? மழை வந்ததால் மைதான ஈரலிப்பு வராது என தெரிந்திருந்தாலும் மழையின் பின்னர் ஏற்படும் ஒரு சூழல் மாற்றத்தினை தவறாக புரிந்து கொள்ளவாய்ப்பு உள்ளது என கருதுகிறேன். காற்றின் வெப்பத்திற்கேற்ப அது கொள்ளும் ஈரப்பதன் கொள்ளவில் மாற்றம் ஏற்படும், அதிக வெப்பமான காற்று அதிகமான ஈரப்பதனை கொண்டிருக்கும், இரவு நேரத்தில் காற்று குளிராகும் போது காற்று கொண்டிருந்த ஈரப்பதனில் ஒரு பகுதியினை கைவிடுகிறது (Dew), குளிர்பான போத்தில், டின் இவற்றுக்கு வெளியே நீர்த்துளிகள் தோன்றுவது போல, ஆனால் மழை காற்று ஒடுங்கும் போது (பாரம்) மழை உருவாகிறது, அதனால் மழையின் பின்னர் அந்த மழை கொண்டிருந்த வெப்பம் சுற்றாடலில் மறை வெப்பமாக வெளிவிடப்படும், அது ஒரு வெக்கையான உணர்வினை தரும், ஆனால் காற்றில் அதிகரித்த ஈரப்பதன் மேலதிகமாக ஈரப்பதனை கொள்ள முடியாமல் ஏற்படும் புழுக்கம் போன்ற உணர்வு இரு வேறுபட்ட விடயம் (மழை மற்றும் மைதான ஈரப்பதன்). இது ஒரு தவறான உள்ளுணர்வு முடிவாக இருந்திருக்கலாமோ என தோன்றுகிறது. எல்லோரும் வைத்தியராகவும் பொறியலாளராகவேணும் என நினைத்தால் மற்ற வேலைகளை யார் செய்வது?🤣1 point
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point😂😂உருட்டுதான் எங்கள் சொத்து🤗🤗❤❤ · Sivasubramanian Sankaralinganadar ·osntSodpre2hihiH1hgaf8g 04r43132mu1 i5feu2:3u027l10a,9ammmcà · (அதனால்தான் டாடா பெரும் கோடீஸ்வரர்) JRD Tata விடமிருந்து அமிதாப் கற்றுக் கொண்டார் அமிதாப் சொல்கிறார்... எனது வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன். எனக்கு அருகில் இருந்த பயணி, ஒரு சாதாரண சட்டை,பேண்ட் அணிந்து அமர்ந்திருந்தார். வயதான மனிதர், நடுத்தர வர்க்கம், நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார். நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள். என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி கை கொடுத்தனர். ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை. என்னை கண்டு கொள்ளவும் இல்லை. ஒருவேளை, அவர் நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால், என்னை கவனிக்கவில்லையோ என எண்ணினேன். தேநீர் வழங்கப்பட்ட போது, அமைதியாக அதை எடுத்து, ரசித்து பருக ஆரம்பித்தார். என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா? என்னால் பொருத்து கொள்ள முடியாமல், அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை பார்த்து சிரித்தேன். அந்த மனிதரும் புன்னகை செய்து, 'ஹலோ' என்று சொன்னார். நாங்கள் பேச ஆரம்பித்தோம். சமூகம், பொருளாதாரம், அரசியல், என்று பல விஷயங்களை பற்றி பேசினோம். அவரின் பேச்சில், ஒரு லயிப்பும் ஈர்ப்பும், தேர்ந்த ஒரு நேர்த்தியும் இருந்ததை நான் உணர்ந்தேன். சினிமா மற்றும் திரைப் படங்கள் சம்பந்தமான விஷயங்களை நான் வேண்டுமென்றே கொண்டு வந்தேன். நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பீர்களா என வினவினேன். ஓ, மிக சில. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்திருக்கிறேன் என அந்த மனிதர் பதிலளித்தார். நான் திரைப்பட துறையில் தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டேன். அப்படியா? ரொம்ப நல்லது. நீங்கள் அந்த துறையில் என்ன செய்கிறீர்கள் என கேட்டார். நான் ஒரு நடிகர் என பதிலளித்தேன். அவரிடமிருந்து எந்த வித சலனமும் இல்லை. அதன் பின் நாங்கள் இறங்கி வெளியேறும் போது, உங்களுடன் பயணம் செய்தது மிக்க மகிழ்ச்சி. நல்லது, என் பெயர் அமிதாப் பச்சன் என்றேன். அந்த மனிதரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே, உங்களை சந்தித்த இந்த நாள், நல்ல நாளாக இருக்கட்டும் என கூறி: என் பெயர்: JRD டாட்டா. மோட்டார் தொழில் செய்கிறேன் என்றார் பணிவுடன். நான் விக்கித்து நின்று விட்டேன். அன்றுதான் நான் கற்றுக் கொண்டேன் பணிவை பற்றி. பேரையும், புகழையும் வைத்து, நாம் தான் பெரிய ஆள், என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நம்மை விட வசதியிலும், அறிவிலும், படிப்பிலும் உயர்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். எப்போதுமே பணிவாய் பேசுங்கள். நல்ல நடத்தை, பண்பு என்பது அறிவை விட மேலானது. வாழ்க்கையில் பல கால கட்டங்களில், அறிவு, பணிவிடம் தோற்றுப் போய் உள்ளது. பணிவும் நல்ல நடத்தையும், எல்லா இடத்திலும் வென்றுள்ளது. எந்த சூழ்நிலையிலும், பணிவுடனும், அடக்கத்துடனும் நடந்து கொள்ளுங்கள். அது உங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் கொண்டு போய் வைக்கும். Voir la traduction.......! "அடக்கம் அமரருள் உய்க்கும் " .......!1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நான் எப்போதும் நடுநிலை தவறாதவன் என்று புரிந்து கொண்டால் மகிழ்ச்சி .........! 😃1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
@suvy தலைவர் 8வது இடத்தில் நிப்பதை பார்க்க மகிழ்ச்சியா இருக்கு சில பிழைகள் தெரியாம விட்டாலும் நல்ல புள்ளியோட நிக்கிறீங்கள்👍.....................1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நான் சும்மா சொல்ல வில்லை அண்ணா 19வயதுக்கு உள் பட்ட இலங்கை மகளிர் நல்லா விளையாடுகினம் , அன்மையில் அவுஸ்ரேலியா மகளிருக்கும் இலங்கை மகளிருக்கும் போட்டி நடந்தது அனைத்து போட்டிகளிலும் இலங்கை மகளிர் அவுஸ்ரேலியா மகளிர வென்றவை......................40வயது மகளிர்கள் இளம் மகளிருக்கு வழி விடனும் அண்ணா......................நான் ஒரு விளையாட்டு பையித்தியம் ஒன்றையும் விட்டு வைக்க மாட்டேன் எல்லாத்தையும் மேல் ஓட்டமாய் பார்ப்பேன் லொள்😁👍...........................1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இலங்கை அணியில் யார் விளையாடினாலும், அது தோற்கத்தான் போகின்றது.............. ஆனால் 'இளசா போடுங்கோ, இளசா போடுங்கோ ...........................' என்று பையன் சார் கேட்கிறதிலயும் ஒரு நியாயம் இருக்குது....................😜.1 point
-
சிவவாக்கியம் எனும் தேன்
1 pointசித்தர்களில் சூப்பர் ஸ்டார் சிவவாக்கியர் 😎…… பெண்ணடிமை, சாதி, மூடநம்பிக்கை….. என பல இழிவுகளை 9ம் நூற்றண்டில் லெப்டு ரைட்டு வாங்கியிருக்காப்பல 🤣1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣............... வளவுக்குள்ள வாழைக்குலை ஒன்றை பழுத்திட்டுதே என்று இப்ப கிட்டடியில் வெட்டினோம்........... இந்தப் பிள்ளைகளை பார்க்க அந்த பழுத்த வாழைக்குலை தான் ஞாபகத்தில் வருகின்றது............ வர வர என்னுடைய போக்கே சரியில்ல............ காய்களை பார்க்க வேண்டிய இடத்திலும் பழங்கள் தான் கண்ணுக்குத் தெரியுது.............. ஒரு துறவியாக, ஞானியாக மாறிக் கொண்டிருக்கின்றேன் போல..............😜.1 point
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
1 pointஉங்களை போல் நான் எங்கும் பாஜக இருக்கும் கூட்டணி வெல்வதை வரவேற்று எழுதவில்லை. அப்படி ஒரு உடன்பாட்டுக்கு விஜை போனால் அவரும் போலியே.1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இப்பவே கண்ண கட்டுது என்ன அழகு எத்தனை அழகு @ரசோதரன் ரசோதரன் அண்ணா இந்த காணொளிய பார்த்தால் உடன மனசை பறி கொடுக்க போகிறார்🥰😁👍.........................1 point
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- குட்டிக் கதைகள்.
1 pointதினமும் ஒரு வரி தத்துவம் · காலம் மாறும் போது.. சிறுகதை. அரசன் ஒருவன் அமைச்சனோடு தனது நாட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தான். அங்கே ஓரிடத்தில் உழவன் ஒருவன் மண்வெட்டியால் நிலத்தைக் கொத்திக் கொண்டிருந்தான். அவன் அருகே பாம்பு ஒன்று படம் எடுத்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த அரசன் “உழவனே! உன் அருகே பாம்பு. ஒடு, ஓடு” என்று குரல் கொடுத்தான். எதுவுமே நடவாதது போல இயல்பாகத் திரும்பிப் பார்த்த உழவன் எந்தப் பரபரப்பும் காட்டாமல் அந்தப் பாம்பைக் கையால் பிடித்துத் தூக்கி எறிந்தான். அதிர்ச்சி அடைந்த அரசன், “கொடிய பாம்பு அது. நீ பிடித்தபோது கொத்தி இருந்தால் உன் உயிர் போய் இருக்குமே” என்றான். “அரசே! இந்த நிலத்தில் வேலை செய்யும்போது இப்படி எத்தனையோ ஆபத்துகளைச் சந்திக்கிறேன். அவற்றிற்கு அஞ்சினால் நானும் என் குடும்பமும் பட்டினி கிடக்க வேண்டியதுதான்” என்றான் அவன். அந்த விவசாயிக்கு உதவி செய்ய நினைத்த அரசன் வளமான நிலங்களையும் பொற்காசுகளையும் அவனுக்கு வழங்கினான். செல்வந்தனாக ஆனான் அவன். ஆண்டுகள் பல கழிந்தன. அரசனும் அமைச்சனும் மீண்டும் அந்த வழியாக வந்தார்கள். அந்த உழவன் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து இருந்தான். அவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்று வணங்கிணான். அவன் கையில் பெரிய கட்டுப் போட்டிருநத்து: “கையில் என்ன கட்டு?” என்று கேட்டான் அரசன். “அரசே! ஒரு முள் கீறி அது பெரிய புண்ணாகி விட்டது. அதற்குக் கட்டுப் போட்ட மருத்துவர் ஒரு வாரம் ஓய்வு எடுக்கச் சொன்னார். இங்கே அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் உழவன். ‘ இதைக் கேட்டு வியப்படைந்த அரசன், “அப்படியா உன் உடம்பைப் பார்த்துக்கொள்” என்று அவனிடம் சொல்லிவிட்டு அகன்றான். வழியில், “அமைச்சரே! அன்று இவன் கொடிய பாம்பைத் தூக்கி எறிந்தான். இன்றோ முள் குத்தியதற்குக் கையில் கட்டுப் போட்டுக் கொண்டு ஓய்வு எடுக்கிறான். தலை கீழ் மாற்ற மாக உள்ளதே” என்று கேட்டான். “அரசே! அன்று அவன் ஏழை. உழைத்துப் பிழைத்ததால் எதற்கும் அஞ்சவில்லை. இன்றோ செல்வந்தனாகி உழைப்பே இல்லாமல் இன்பத்தை அனுபவிக்கிறான். “காலமும் சூழ்நிலையும் மாறும் போது எல்லாம் மாறத்தானே செய்யும்” என்றார் அமைச்சர்........! 😃 Voir la traduction1 point- 17 போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள்: 24 மணிநேரமும் மீனுக்கு இராணுவ பாதுகாப்பு- ஏன்?
வங்காளதேச அரசு, ஹில்சா மீனின் இனப்பெருக்க காலத்தில் அதனை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹில்சா வங்காளதேசதத்தின் தேசிய மீன் என்பதால், இம்முறை 17 போர்க்கப்பல்கள், ட்ரோன்கள், ரோந்து படகுகள், ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பயணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 22 நாட்கள் கொண்ட இந்த தடைக்காலம், அக்டோபர் 4 முதல் 25 வரை கடைபிடிக்கப்படுகிறது. வங்காள விரிகுடா மற்றும் பத்மா, மேக்னா மற்றும் ஜமுனா போன்ற முக்கிய நதி அமைப்புகள் உட்பட நியமிக்கப்பட்ட இனப்பெருக்க மண்டலங்களில் உள்ள அனைத்து கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை ஹில்சா மேலாண்மை பிரிவின் துணை இயக்குநர் ஃபிரோஸ் அஹமது, "ஹில்சா மீனின் பாதுகாப்புக்காக நாங்கள் விரிவான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இது அதன் இனப்பெருக்கத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை" என கூறியுள்ளார். வங்காளதேசதத்தின் தெற்கு பகுதியில் உள்ள பரிசால் மற்றும் சட்டோகிராம் மாவட்டங்களில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில், கடற்படை, கடலோர காவல் படை மற்றும் விமானப்படை உள்ளிட்ட 4 சிறப்பு படைகள் ஈடுபட்டுள்ளன. கடந்த சில நாட்களில், தடை காலத்தில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடி வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்காளதேசம் உலகின் மிகப்பெரிய ஹில்சா உற்பத்தி நாடக இருந்தாலும், உள்ளூர் தேவை அதிகமாக இருப்பதால் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், துராக் பூஜை காலத்தில் இந்தியாவுக்கு சிறப்பு அனுமதியுடன் ஹில்சா மீன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் 1,200 டன் ஹில்சா மீனை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் ஏற்றுமதி குறைவாகவே இருந்தது. Lankasri News17 போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள்: 24 மணிநேரமும் மீனுக்கு...வங்காளதேச அரசு, ஹில்சா மீனின் இனப்பெருக்க காலத்தில் அதனை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஹில்சா வங்காளதேசத...1 point- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
1 pointசேகுவாராவின் கொடியையும் தூக்கி அவர் கொள்கையையையும் கடைப்பிடித்து இனக்கொலை செய்தவர்களையும் இனத்திற்கு எதிராக நிற்பவர்களையும் கண்டு கொள்ளாமல் கடல் கடந்து உங்களுக்கு பிடிக்காதவர்களிடம் புனித்தை தேடுகின்றீர்கள்?! அதே போல் கம்யூனிசத்தை கடைப்பிடிப்பவர்கள் கூட இன வெறியை வாந்தி வாந்தியாக எடுக்கின்றார்கள். அங்கே உங்கள் புனிதம் தேடும் மூளை வேலை செய்யவில்லை.சிங்கள பாதிரியார்கள் உட்பட..... சீமான் செய்த தவறை(என் பார்வையில் தவறு அல்ல) விட பலம் வாய்ந்த கட்சிகாரர்களும் பணபலம் மிக்கவர்களும் இன்றும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அங்கே எல்லாம் புனிதர்களை தேடவும் மாட்டார்கள்.சித்திரங்களும் வரைய மாட்டார்கள். காரணம் பணபலம் மக்கள் பலம் அதிகார பலம் வாய்ந்தவர்கள். போட்டு தள்ளிவிடுவார்கள் என்ற பயம். கொள்கை பலம் அறவே இல்லாத அரசியல் கூட்டங்கள்.1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பெண்கள் அணிகளைப் பற்றி பெரிதாக இங்கு ஒருவருக்கும் தெரிவதில்லை தானே. அதனால் நமக்குத் தெரிந்ததை, சிலவற்றை அங்கு இங்கு பொறுக்கி, சொல்லுவோம் என்று ஒரு முனைப்பு தான். இலங்கை ஆண்கள் அணி உண்மைதான், கடந்த ஒரு பத்து வருடமாக இலங்கை அணி அவ்வளவு வலிதானதாக இல்லை. அத்தோடு இந்திய அணி இன்னும் வலுப் பெற்றுக் கொண்டே இருக்கின்றது. 90களிலும் 2000 ஆண்டுகளிலும், இலங்கை அணி ஒரு நெருப்பு. ஒரு நாள் போட்டிகளில் வெளுத்து வாங்குவார்கள். பல ஒரு நாள் தொடர்கள், முக்கோணத் தொடர்கள், மற்றும் பலவாறான தொடர்கள் எல்லாவற்றிலும் இலங்கை அணி ஜொலித்திருக்கிறது. முக்கியமாக பல இறுதி போட்டிகளில் இலங்கை அணி இந்தியாவை ஓட விட்டிருக்கிறது. சரியாக ஞாபகமில்லை, நான் நினைக்கிறேன், ஒரு 15-16 இறுதிப் போட்டிகளில், இலங்கை அணி இந்தியாவை அடித்துத் துவைத்திருக்கிறது. இப்போ எல்லாம் மாறி நடக்கின்றது. இந்திய அணி எப்படி இவ்வளவு வலிவானதாக இருக்கிறதோ, அதேபோல் இலங்கை அணியும் அப்போ இருந்தது. அது ஒரு பொற்காலம்.1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1) அகஸ்தியன் - 23 புள்ளிகள் தொடர்ந்தும் முதலமைச்சர் நாற்காலியை தக்க வைத்துக் கொண்டிருக்கும் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 12) 100 ஓட்டங்களினால் நியூசிலாந்து அணி, வங்காளதேசம் அணியை தோற்கடித்தது. 13 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 23 புள்ளிகள் 2) ஏராளன் - 21 புள்ளிகள் 3) கிருபன் - 21 புள்ளிகள் 4) ரசோதரன் - 21 புள்ளிகள் 5) வீரப்பையன் - 21 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 19 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 19 புள்ளிகள் 8) சுவி - 18 புள்ளிகள் 9) புலவர் - 17 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 17 புள்ளிகள் 11) வாதவூரான் - 17 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 17 புள்ளிகள் 13) வசி - 15 புள்ளிகள் 14) கறுப்பி - 15 புள்ளிகள் 15) வாத்தியார் - 13 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 12, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.1 point- ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து
சங்ககார குடும்பம் கூட இப்படி செய்தனர். கொழும்பு நெல்சன் பிளேஸின் பல தமிழ் குடும்பங்கள் இன்று உயிர்வாழ டாக்டர் ஜெயதில வீடுதான் காரணம். ஆனால் இவர்கள் விதிவிலக்குகள். 1948-2009 முதல் இப்படியான விதிவிலக்குகளை தவிர்த்து விட்டு பார்த்தால் - ஒட்டுமொத்த சிங்கள இனத்தின் கூட்டு மனோநிலையும்….. எந்த எல்லைக்கும், எந்த மோசமான அடக்குமுறையையும் பாவித்து தமிழர்களை அடக்கி விட வேண்டும் என்பதாகவே இருந்தது. 2009 -2021 வரை கூட அது மாறவில்லை. …. அடக்க வேண்டும் என்ற வெறி…அடக்கி விட்டோம் என்ற இறுமாப்பாக மாறி இருந்தது. 2021 ற்கு பின் கூட்டு மனோநிலை மாறிவிட்டதா? தெரியவில்லை.1 point- ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து
ஜேவிபி, என் சொந்த அனுபவத்தில் ஆளவந்தான் கமல்ஹாசன் போல "கடவுள் பாதி மிருகம் பாதி" கலவை என்று சொல்லலாம்😂! முதன் முதல் ஜேவிபி அமைப்பின் தீவிர உறுப்பினர்களோடு பரிச்சயமானது சந்திரிக்கா ஆட்சிக்கு வந்த பின்னரான, பேராதனைப் பல்கலையில். அவர்களது நிலைப்பாடு "தமிழர்களுக்கு என்று விசேடமான பிரச்சினை இல்லை, இருப்பது வர்க்கப் பிரச்சினை (class struggle), அதைத் தீர்த்தால் தமிழர் பிரச்சினையும் தீர்ந்து விடும்" என்ற இடது சாரி (சோசலிச) வாதமாக இருந்தது. பின்னர், இந்திய எதிர்ப்பும், மேற்கு எதிர்ப்பும், சில ஜேவிபி தரப்புகளின் சிங்கள இனவாதமும் சேர்ந்து நான் கண்ட ஜேவிபி 90 களில் "தேசிய சோசலிசம் - National socialism" என்ற நிலைக்குப் போனார்கள் - இது தான் தமிழர்களுக்கு பாதகமான நிலைப்பாடு. ஆனால், பேராதனையில் மாணவர் சங்க தலைமையில் இருந்த ஜேவிபி உறுப்பினர்களால் தமிழ் மாணவர்கள் பெரும்பாலும் பாதுகாக்கப் பட்டார்கள் என்பது என் அபிப்பிராயம். பொலிஸ் கெடுபிடி அதிகம். தமிழ் மாணவர்களைச் சும்மா பிடித்துக் கொண்டு போய் பேராதனைப் பொலிஸ் நிலையத்தில் வாங்கில் உக்கார்த்தி வைத்து விடுவார்கள். தகவல் கிடைத்ததும், உடனே பொலிஸ் நிலையம் போய் அவர்களோடு முரண்டு பிடித்து தமிழ் மாணவர்களைக் கூட்டி வருவது ஜேவிபி மாணவர் சங்கத் தலைவர், செயலாளராக இருப்பார்கள். தலதா மாளிகை தாக்கப் பட்டதற்கு அடுத்த சில நாட்கள். நான் ஹில்டா விடுதியில் இருந்தேன். நமக்குத் தான் வவுனியா கடப்பதற்குப் பாஸ் வேண்டுமே? எனவே வார இறுதியாகிய போதும் நான் விடுதியிலேயே இருந்தேன். எந்த அசுமாத்தமும் தாக்குதலுக்கு அடுத்த நாள் இருக்கவில்லை. ஆனால், அதற்கடுத்த நாள் பொலிஸ் வந்து அனைத்து தமிழ் முஸ்லிம் மாணவர்களின் அறைகளைச் சோதித்து விட்டுச் சென்றார்கள். மரியாதையாக நடந்து கொண்டார்கள். அன்று மாலை தான் நமக்குத் தெரியாமல் நடந்த சில விடயங்கள் தெரியவந்தன. சிஹல உறுமய அமைப்பின் மாணவர்கள் குழு, ஹில்டாவில் இருக்கும் தமிழ் மாணவர்களைத் தாக்குவது என்று முடிவெடுத்து தயார் செய்த போது, விடயமறிந்த ஜேவிபி மாணவர்கள் உறூமய மாணவர்களுக்கு வன்முறை அச்சுறுத்தல் விடுத்துத் தடுத்திருக்கிறார்கள். அதே வேளை, உறுமய தரப்போடு ஒரு உடன்பாட்டிற்கு வந்து கண்டி பொலிஸ் வந்து தமிழ் மாணவர்களின் அறைகளைச் சோதனையிடலாம் என்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அப்ப இவங்கள் நல்லவங்களா?...வெயிற் போர் இற்😂.... தலதா மாளிகை தாக்கப் பட்ட அதே நாளில், கண்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இருக்கும் கட்டுக்கல பிள்ளையார் கோயில் ஒரு கும்பலால் தாக்கப் பட்டு பாரிய சேதத்திற்குள்ளானது. இந்தத் தாக்குதல் குழுவில், ஹில்டாவில் தமிழ் மாணவர்களைக் காப்பாற்றிய அதே ஜேவிபி மாணவர்கள் சிலரும் இருந்திருக்கிறார்கள். எனவே தான், ஜேவிபியை இன்னும் என்னால் ஒரு பானைக்குள் போட முடியாமல் இருக்கிறது! ஆனால், தமிழர்களின் தாயகக் கனவிற்கு வன்முறை சாராத நீதிமன்ற வழிமுறை மூலம் முதல் சவப்பெட்டி ஆணியை அடித்தது ஜேவிபி என்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை!1 point- ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து
அடடா.. அது மனோரஞ்சனா? காற்றுள்ள பக்கம் சாயும், நேரத்துக்கு ஒரு நிறம் மாறும் மனிதர். அப்படி சாய்ந்து சாய்ந்து தமிழர்களின் நலனை அடகுவைக்கும் அரசியல் புரோக்கர். நான் சரிநிகரில் எழுதிக்கொண்டு இருந்த காலத்தில் சில தடவைகள் இவரை சந்தித்து இருக்கின்றேன். சந்திரிக்காவுக்கு வால் பிடித்துக் கொண்டு, புலிகளை தூற்றிக் கொண்டு திரிந்தார்.1 point- ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து
இந்த காலப்பகுதியில் கண்டி / கம்பளை பகுதியில் வசித்த எங்களுக்கு தெரிந்தவகையில் இது ஆளும் ஐக்கிய தேசிய கட்சி (UNP)அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், கட்சிக்கென்றே வளர்க்கப்பட்ட ரௌடி கூட்டங்களால் தான் இது நடாத்தப்பட்டது. சிங்கள பொதுமக்கள் அடித்து நொறுக்கப்பட்ட தமிழர் உடைமைகளை உரிமையோடு அள்ளிச் சென்றார்கள். 😉 இந்த காலப்பகுதியில் JVP வெளியில் இயங்கியதாக ஞாபகம் இல்லை. ஆனால் அவர்கள் 1983 July / Aug மாதங்கள் அளவில் தடைசெய்யப்பட்டார்கள். கொசுறுத் தகவல் - 1977 , JVP பொது தேர்தலில் Bell சின்னத்தில் போட்டியிட்டது. ரோஹன விஜேவீர எங்கள் வீட்டுக்கு முன்னால் இருக்கும் விக்ரமபாஹு பள்ளி திடலில் உரையாற்றினார். நான் அவரை நேரில் பார்த்து இருக்கிறேன்.1 point- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
1 point"இறுதியாக மூலையில் மாட்டிக் கொண்ட பின்னர் மன்னிப்புக் கேட்பதற்கு ஒரு உதாரணம்" என்று முதல் வரியிலேயே சுட்டிய பின்னர், கோம்ப்ஸ் பற்றி எழுதியிருக்கிறேன். அவர் செய்த குற்றமும் சீமான் மீது சாட்டப் பட்டதும் ஒரே வகையான குற்றங்கள் என்ற கதையாடலை நான் முன்னகர்த்தவில்லை. வாத்தியாருக்கே இது விளங்கவில்லையென்கிற போது ஏனைய சீமான் அபிமானிகளுக்கு இது விளங்குமென்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை😎! இந்த "எல்லாரும் கள்ளர்" என்ற வாதத்தை நீங்களும் நூறு தடவை எழுதியிருப்பீர்கள். பதிலாக, இங்கே பலரும் உங்களிடம் திருப்பிக் கேட்டிருக்கிறார்கள்: கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்ராலின், உதயநிதி போலத் தான் சீமானும் "ஸ்தீரிலோலனாக" இருந்தார் என்றால் அதைத் துணிவாக வெளியே சொல்லி எதிர்கொள்ள அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் ஏன் தயக்கம்? புலிகளின் கொடியைத் தூக்கிப் பிடிப்பதால், பிரபாகரனின் படத்தின் முன்னால் நின்று தன் கட்சியின் அரசியல் பிரச்சாரத்தைச் செய்வதால் மட்டும் சீமானுக்கு "றோயல் பமிலி" போன்ற மரியாதையை நாம் கொடுக்க வேண்டுமா? எல்லா தமிழக அரசியல் வாதிகள் போலவும் பெண் விடயங்களின் சாதாரணமாக ஈடுபடும் சீமான், அப்படியே இன்னொரு அரசியல் வாதியாக இருந்து விட்டுப் போகட்டும்!1 point- ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து
மீண்டும் மீண்டும் நாம் உரத்து சொல்லவேண்டிய கருத்து. ஜூலை கலவரமல்ல... இனஅழிப்பு வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நிகழ்வில் முக்கிய சில JVP சூத்திரதாரிகள் இருந்ததாக சிங்கள பத்திரிகையாளர் (நந்தன வீரரத்தின) கருத்துகளை வாசித்துள்ளேன்.1 point- கருத்து படங்கள்
1 point- ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து
83 ஜூலைக் கலவரத்தில் ஜே.வி.பியின் பங்கு தொடர்பாக இன்று வரைக்கும் உறுதியான ஆதாரங்களை நான் காணவில்லை. ஜே.ஆர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினரின் வன்முறை கும்பல்களாலும், ரவுடிகளாலும், பொலிசாராலும், இராணுவத்தினராலுமே இவை நிகழ்த்தப்பட்டன என்றும், அந்த பழிகளை எல்லாம் ஜேவிபி மீது போட்டு அவர்களை தடை செய்தனர் என்றுமே அறிந்துள்ளேன்.1 point- ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து
டில்வின் ப்ரோ, 1983 இல் முன்னுக்கு நிண்டு தமிழர்களை அடித்ததில் ஜேவிபிக்கு என்ன பங்கு என்பதை மறந்து விட்டீர்களா ப்ரோ? ஜே ஆர் அதன் சூத்திரதாரி… ஆனால் அதில் ஜேவிபியின் பங்கும் கணிசமானது. 52 தொடக்கம் நடந்த திட்டமிட்ட இன வன்முறைகளின் உச்ச புள்ளியே 83. அது கலவரம் அல்ல. கலவரம் என்றால் இரு பகுதிகள் மாறி மாறி அடித்து கொள்வது. 83 ஒரு இனம், இன்னொரு இனத்தை தாக்கிய இனவன்முறை (pogrom). அதற்கு ஒட்டு மொத்த சிங்கள இனமுமே பாத்திரவாளிகள்.1 point- குட்டிக் கதைகள்.
1 pointதினமும் ஒரு வரி தத்துவம் · வக்கீல் ஒருவர் ரயில்ல சென்று கொண்டு இருந்தார்... அப்போ சூப்பர் பிகர் ஒன்னு அவருக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து உட்கார்ந்தால்.. நம்மாளுக்கு செம குஷி... அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால லைட்டா நம்மாளு அந்த சூப்பர் பொண்ண நோட்டம் உட்டார்... அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவர பாக்க... இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க அப்டியே வானத்துல பறக்கற பீலிங்ல இருந்தார்... கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணு இவர் இருந்த சீட் பக்கம் வந்து ஒக்கார... நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு இருந்தார்... அந்த பொண்ணு இவர்கிட்ட... ஒழுங்கு மரியாதையா உங்கிட்ட இருக்ற வாட்ச், மோதிரம், செயினு, பர்ஸ், கிரடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு....இல்லேனா நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம்போட்டு எல்லாரையும் கூப்டுருவேனு சொல்லிச்சாம் அந்த சூப்பர் பிகர்... அவர் தான் வக்கீல் ஆச்சே... அதுக்கு நம்ம வக்கீல்.. பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர எடுத்து, எனக்கு காது கேக்காது, வாய் பேச வராது... நீங்க என்ன சொல்றிங்கனே எனக்கு புரில... நீங்க சொன்னத இதுல எழுதி காட்டுங்கனு எழுதி காட்டினார்... அந்த பொண்ணும் பேப்பர வாங்கி அவ என்ன சொன்னாலோ.... அதே மாதிரி அப்படியே எழுதி காட்டினாளாம்... அத வாங்கி பாக்கெட்ல வச்ச பின்னாடி நம்மாளு மெதுவா சொன்னாரு.... இப்போ கத்துடி பாக்கலாம்...!!! 😜" நீதி:" *PROOF OF DOCUMENTATION IS VERY VERY IMPORTENT*" எதுக்குமே ரெக்கார்டு தான் ரொம்ப முக்கியம். படித்ததில் பிடித்தது. Voir la traduction1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !
இவ்வளவு காலத்துக்கு பின் 13 பற்றி கதைக்க பலரையும் இந்தியா களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள்.1 point- வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!
மேற்குலகில் உணவு,அன்றாட பாவனை பொருட்கள் எனும் விடயங்களில் கற்காலத்தை நோக்கியே போகின்றார்கள். பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தடை.இரசாயனம் கலந்த உணவுகளுக்கு தடை விதிக்கப்போகின்றார்கள். நீங்கள் குறிப்பிடும் காலம் கற்காலமல்ல.நற்காலம். அந்த கோப்பயை கழுவ பயன்படுத்தப்படும் இரசாயன அழுக்கு நீக்கியின் பக்க விளைவுகள்,எதிர் வினைகள் பற்றி ஏதாவது தெரியுமா?பெரிய ஹொட்டல்களில் கோப்பை கழுவப்படும் அல்லது பாத்திரங்கள் கழுவ பயன்படுத்தப்படும் அந்த கெமிக்கல் மருந்துகள் கையில் பட்டாலே எரிக்கும் தன்மை கொண்டவை. எப்படி கழுவினாலும் அந்த கெமிக்கல்கள் பாத்திரங்களை விட்டு அகலாது.எல்லாம் சாப்பாடுடன் சேர்ந்து எமது வயிற்றுக்குள் தான் போகும். ஊர்களில் ஒரு குடும்பத்தில் பத்து பேர் இருந்தாலும் அவரவற்கு என சொந்த கோப்பை இருக்கும். அதில் அண்ணன் தம்பியானாலும் சரி அக்கா தங்கச்சியானாலும் சரி ஒருவர் கோப்பைய மற்றவர் தொடமாட்டார்.அவ்வளவிற்கு சுத்த பத்தம். கோப்பைய சாம்பல் போட்டு கழுவினாலும் பழப்புளி போட்டு மினுக்கினாலும் சொந்தக்கோப்பை சொந்த கோப்பை தான் அதை யாருக்கும் விட்டுக்குடுக்க மாட்டம்.😂1 point- 'தூக்கமின்மை' பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா? அறிகுறிகளும் தீர்வுகளும்
நடிகர் அஜித்தை பாதித்துள்ள 'தூக்கமின்மை' பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா? அறிகுறிகளும் தீர்வுகளும் பட மூலாதாரம், X/Ajithkumar Racing கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 8 அக்டோபர் 2025, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 8 அக்டோபர் 2025, 02:44 GMT தூக்கம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் விவாதப்பொருளானது. நடிகர் அஜித்குமார் தற்போது 'அஜித் குமார் ரேஸிங்' என்கிற பெயரில் கார் பந்தயப் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார். சமீபத்தில் இந்தியா டூடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தனக்கு தூக்கமின்மை பிரச்னை இருப்பதாகத் தெரிவித்தார். தன்னால் அதிகபட்சமாக 4 மணி நேரம் தான் தொடர்ந்து தூங்க முடிவதாக தெரிவித்த அஜித் குமார், "எனக்கு திரைப்படங்கள், வெப் சீரிஸ் பார்ப்பதற்கு நேரம் இல்லை. நான் விமானத்தில் தான் உறங்குகிறேன். எனக்கு தூக்கம் சார்ந்த பிரச்னை இருக்கிறது. தூங்குவது எனக்கு கடினமாக உள்ளது." என்றும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டார். தூக்கம் வருவது எப்படி? இதுகுறித்து ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநரான குழந்தைசாமி பேசுகையில் "இது இன்சோம்னியா (Insomnia) என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதானது, இதனை சிகிச்சைகள் மூலம் சரி செய்துவிட முடியும். ஆனால் தூக்கமின்மை என்பது பெரும்பாலும் நமது செயல்களினால் உருவாவதே." என்றார். தூக்கப் பற்றாக்குறை அல்லது தூக்கமின்மை என்பது நீண்ட கால நோக்கில் ஆயுட்காலத்தை பாதிக்கும் என்கிறார் குழந்தைசாமி. நம் உடல் சார்ந்த பல விஷயங்களை உயிரியல் கடிகாரம்தான் (circadian rhythm) தீர்மானிக்கிறது என்கிறார் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் புல்மனாலஜியின் இயக்குநரும் மூத்த நுரையீரல் நோய் மருத்துவருமான கௌசிக் முத்துராஜா. இதுகுறித்து விவரித்த அவர், "நம் கண்கள் வழியாக ஒளி மூளைக்குச் செல்கிறது. வெளிச்சமாக இருந்தால் நமது மூளை இது விழித்திருக்க வேண்டிய நேரம் என உணர்ந்து கொள்ளும். அதேவேளையில் இருட்டாக இருந்தால் இது தூங்குவதற்கான நேரம் என உணர்ந்து கொண்டு மெலடோனின் என்கிற ஹார்மோனை சுரக்கச் செய்யும். இந்த ஹார்மோன் தான் தூக்கத்தை ஏற்படுத்துகிறது." என்றார். "59% இந்தியர்களுக்கு தூக்கமின்மை பிரச்னை" பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 59% இந்தியர்கள் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தடையற்ற தூக்கத்தை பெறுகின்றனர். 2025-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 59% இந்தியர்களுக்கு 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தடையில்லாத, நல்ல தூக்கம் கிடைப்பதாகத் தெரியவந்துள்ளது. லோகல்சர்கிள்ஸ் என்கிற நிறுவனம் இந்தியா முழுவதும் 348 மாவட்டங்களில் சுமார் 43,000 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. தூக்கப் பற்றாக்குறையை போக்க பவர் நேப்பிங் (குறுகிய நேர தூக்கம்), வார இறுதி நாட்களில் காலை தாமதமாக எழுந்திருப்பது, அல்லது மதியம் தூங்குவது போன்றவற்றை பலரும் கையாள்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. குறைவான தூக்கத்தால் பாதிக்கப்பட்ட 38% இந்தியர்கள் விடுமுறை நாட்கள் அல்லது வார இறுதி நாட்களில் அதனை சரி செய்து கொள்ள முடிவதில்லை எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஒரு வயது வந்த நபர் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். அதில் 6 மணி நேரமாவது இடையூறு இல்லாத தூக்கம் இருக்க வேண்டும். அது தான் ஆரோக்கியமானது. மனிதன் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்தில் செலவிட வேண்டும். அது ஒரே நாளில் தான் இருக்க வேண்டும். தவணை முறையில் வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில் கூடுதலாக தூங்குவது என்பது இதற்கு தீர்வாகாது." என்கிறார் குழந்தைசாமி. தூக்கமின்மைக்கான அறிகுறிகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு வயது வந்த நபர் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும் அமெரிக்க அரசின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.ஹெச்) பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவை இருந்தால் தூக்கப் பற்றாக்குறை என்று வகைப்படுத்துகிறது. அவை போதிய தூக்கம் கிடைக்காமல் இருப்பது தவறான நேரத்தில் தூங்கச் செல்வது நன்றாக தூங்காதிருப்பது அல்லது உடலுக்குத் தேவையான தூக்கத்தின் அனைத்து கட்டங்களையும் அடையாமல் இருப்பது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் தூக்கம் வருவது போதிய நேரம் கிடைத்தாலும் ஆழ்ந்த தூக்கம் வராதிருப்பபது தூக்கமின்மையின் பாதிப்பு குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்கள் இடையே வேறுபடுகிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்படும் குழந்தைகள் கவனம் செலுத்துவதில் பிரச்னைகளை எதிர்கொள்வார்கள் என என்.ஐ.ஹெச். கூறுகிறது. "தூக்கம் என்பது நான்கு கட்டங்களாக நடக்கும். தூக்கத்தின் இந்த ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்ல முடியாமல் நீண்ட காலமாக இருப்பது இதய நோய், எடை அதிகரிப்பு, டைப்-2 நீரிழிவு போன்ற பாதிப்புகளுடன் தொடர்புடையது," என லோகல் சர்க்கிள்ஸ் ஆய்வு கூறுகிறது. தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள் என்.ஐ.ஹெச்-ன்படி தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை? வயது தூங்கும் முறை வளர்சிதை மாற்றம் இரவு உணவு எடுத்துக் கொள்ளும் நேரம் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக திரை(கணினி, செல்போன்) பயன்பாடு மது அருந்துவது தூக்கமின்மையுடன் தொடர்புடைய நோய்களையும் என்.ஐ.ஹெச் பட்டியலிட்டுள்ளது. அவை இதய நோய் சிறுநீரக நோய் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் பக்கவாதம் உடல் பருமன் மன அழுத்தம் உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பெண்கள் மற்றும் முதியவர்களிடையே தூக்கமின்மை பிரச்னை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் கடந்த 2012-ஆம் ஆண்டு தூக்கம் சார்ந்த சிக்கல்களை வளர்ந்து வரும் பொது சுகாதார பிரச்னை என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 50 வயதுக்கு அதிகமான 43,935 பேர் கலந்து கொண்டனர். அதில் 16.6% பேர் தீவிரமான இரவு நேர தூக்கமின்மை பிரச்னைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதில், பெண்கள் மற்றும் முதியவர்களிடையே தூக்கமின்மை பிரச்னை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வயது வந்தவர்கள் அதிக அளவில் தூக்கமின்மை பிரச்னைகளை எதிர்கொள்வதாக அந்த ஆய்வு கூறுகிறது. உடல் செயல்பாடு குறைவது, மன அழுத்தம் மற்றும் கவலை உணர்வு வலுவாக இருப்பதும் தூக்கமின்மைக்கு காரணிகளாகக் கூறப்பட்டுள்ளது. தூக்கமின்மை யாரை, எவ்வாறு பாதிக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தூக்கமின்மையால் குழந்தைகளிடம் ஞாபக மறதி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படுகிறது. பெரும்பாலும் ஓட்டுநர்கள் அல்லது பயணத்தில் இருப்பவர்களுக்குத் தான் இந்த பாதிப்பு அதிகம் என்று குறிப்பிடுகிறார் குழந்தைசாமி. "தூக்கம் இல்லையென்றால் மூளை சிறிது நேரம் தானாக செயலிழந்துவிடும். அது சில வினாடிகள் தான் என்றாலும் அதன் விளைவு மோசமானதாக இருக்கும். இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்கும் தூக்கமின்மை ஒரு முதன்மை காரணியாக உள்ளது." என்று அவர் தெரிவித்தார். வெவ்வேறு வயதினரை தூக்கமின்மை எவ்வாறு பாதிக்கிறது என்பது மருத்துவர் கௌசிக் முத்துராஜா பட்டியலிடுகிறார். குழந்தைகளிடையே ஏற்படும் பாதிப்புகள்? கற்றல் குறைபாடு ஞாபக மறதி கல்வியில் ஈடுபாடு குறைவது நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது வளர்ச்சி ஹார்மோன் பாதிப்பு நடுத்தர வயதினரிடையே ஏற்படும் பாதிப்புகள்? மன அழுத்தம் மனச்சோர்வு ரத்த அழுத்தம் சிந்திக்கும் திறன் குறைவது வாகனம் ஓட்டுவதை சிரமமாக்குவது முதியவர்களிடையே ஏற்படும் பாதிப்புகள்? ஞாபக மறதி அதிகரிக்கும் இரவு நேர தடுமாற்றங்கள் ஏற்படும் இதயம் மற்றும் நரம்பியல் நோய் தாக்கும் சாத்தியம் அதிகரிக்கும் தூக்கமின்மை பிரச்னைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? புகைப் பழக்கத்தை கைவிடுவது, மாலை 5 மணிக்கு மேல் தேநீர், காபி பருகுவதை தவிர்ப்பது மற்றும் தூங்குவதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்கு முன்பாவது கணினி/செல்போன் திரைகளைப் பார்ப்பதை தவிர்ப்பது போன்ற பரிந்துரைகளை முன்வைக்கிறார் மருத்துவர் குழந்தைசாமி. தூக்க ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான சில வழிகளை முன்வைக்கிறார் கௌசிக் முத்துராஜா. தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, எழ வேண்டும், வார இறுதி நாட்களிலும் அதை கடைபிடிக்க வேண்டும் தூக்கம் வந்தால் மட்டுமே படுக்கைக்குச் செல்ல வேண்டும் தூங்க செல்லும் முன்பாக 10 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம் காலை, மதிய வேளைகளில் தூங்கக்கூடாது 20 - 30 நிமிடங்கள் பவர் நாப் (குறுகிய நேர தூக்கம்) எடுக்கலாம். உடற்பயிற்சி தூக்கத்திற்கு உதவும். ஆனால் தூங்குவதற்கு 2, 3 மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி கூடாது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2knejj9p18o1 point- 'தூக்கமின்மை' பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா? அறிகுறிகளும் தீர்வுகளும்
நாம் சில சமயங்களில் கேள்விப் படும் இளவயது மட்ட மாரடைப்பு மரணங்களோடு சில கதைகளும் சேர்ந்து கேள்விப் படுவோம்: ஆள் ஓடியாடித் திரிந்தவர், சாப்பாட்டில் கவனம், அவ்வளவு குடி இல்லை..இப்படியான நல்ல விடயங்கள் சொல்வார்கள். ஆனால், இறந்தவரின் வாழ்க்கையை உற்றுக் கவனித்தால் மனப் பதற்றம் (stress) அதிகரித்த வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பது தெரியவரும். இந்த மனப்பதகளிப்பு இதய குருதிக் கலன் நோய்களுக்கு மூன்றாவது முக்கியமான காரணி (முதல் இரண்டும் ஆரோக்கியமற்ற உணவு, உடல்பயிற்சியின்மை என்பன). சுவாரசியமான விடயம், தூக்கக் குறைவும் மனப்பதகளிப்பும் உடலில் ஒரே மாதிரியான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. எனவே, தூக்கம் ஒழுங்காக இல்லாதோரில் இதய குருதிக் கலன் நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பது ஆச்சரியமில்லை. எனவே, தூக்கத்தை முறையாகக் கையாள்வதின் மூலமும் இதய குருதிக் கலன் நோய்கள் வராமல் சிறிது தடுக்கலாம். இதன் நரம்பியலைப் புரிந்து கொண்டால் தூக்கத்தை குழப்பாமல், உரியமுறையில் கையாளுவது இலகுவாக இருக்கக் கூடும். எங்கள் உடலில் பதகளிப்பிற்குக் காரணமாக இருக்கும் நரம்புத் தொகுதி பரிவு (sympathetic) நரம்புத் தொகுதி. இது தூண்டப் பட்டால் இதயம் வேகமாகத் துடித்தல், சுவாசக் குழாய்கள் விரிவடைதல், அதிக விழிப்பு நிலை போன்ற மாற்றங்கள் ஏற்படும். நாம் அறியாமலே, ஒரு ஆபத்தும் எங்களை நோக்கி வராத போது கூட உணர்வுகளால் மூளை இந்த பரிவு நரம்புத் தொகுதியைத் தூண்டி இந்த மாற்றங்களைத் தூண்டும். உதாரணமாக ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் தூங்குவதற்கு முதல் வீட்டில் சி.என்.என் செய்தியைப் பார்த்தால், என் பரிவு நரம்புத் தொகுதி உச்சமாக தூண்டப் படுவது நான் அவதானித்த ஒன்று😂. இந்த பரிவு நரம்புத் தொகுதிக்கு எதிராக வேலை செய்யும் இன்னொரு நரம்புப் பிரிவு, பரபரிவு (parasympathetic) நரம்புத் தொகுதி எனப் படுகிறது. நாம் ஓய்வாக இருக்கும் போது, இந்த நரம்புத் தொகுதி வேலை செய்து, இதயத் துடிப்பைக் குறைத்து, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து (இதனால் தான் தூங்கும் போது ஒரு கட்டத்தில் ஆண் குறி தானாகவே எழுச்சி நிலையை அடைவது நடக்கிறது), கண்ணைச் சுழட்ட வைக்கும். எனவே, மன-உடல் ஓய்வு நிலையை எந்த வழியிலாவது தூண்டுவதால் பரபரிவு நரம்புத் தொகுதியைத் தூண்டினால் தூக்கம் வருவதற்கு ஏதுவான நிலை ஏற்படும். தம்பதிகளாக இருப்போர் உடலுறவில் ஈடுபடும் போதும் இதே பரபரிவு நரம்புத் தொகுதி தூண்டப் படுவதால், அதுவே கூட தூக்கத்திற்கு ஏதுவான நிலையை உருவாக்கும் (@பிழம்பர் இப்ப நிமிர்ந்து உக்கார்ந்திருப்பார் என நினைக்கிறன்! 😂)1 point- நவம்பருக்குள் பெண் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்
1 point- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
1 pointஒவ்வொரு தேர்தல்கள் வரும்போதும் எங்காவது இருக்கும் இந்த அம்மாவை இழுத்துவிட்ட திருத்த முடியாத கழுதைகளுக்கு மாபெரும் தோல்வி.1 point- மருத்துக் கடையில் தமிழாசிரியர்
1 pointமருத்துக் கடையில் தமிழாசிரியர். :கடைக்காரரே ! என் பாவங்களை தூக்கி எறியும் மருந்து தாருங்கள் கடைக்காரர் : என்ன கேட்க்கிறீர்கள் புரியவில்லையே ? அப்படி ஒருமாத்திரை இருக்கா? ஆசிரியர் ..: எனக்கு ஆங்கிலம் பிடிக்காது இருந்தாலும் சொல்கிறேன் எரித் தொரோ மை சின்..( Erythromycin eye ointment: ) படித்து சிரித்தது ( அதிகம் படித்த ஆசிரியர் ).1 point- முத்தமிட ஏற்ற இடம் எது? - கலவி மொழி கற்போம்
முட்டி செத்துப்போன காலத்தில் இதெல்லாம் தேவையா பிழம்பு சார்1 point- சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.
வெள்ளிக்கிழமை, நவம்பர் 1 முதல் சீனா மீது "அவர்கள் தற்போது செலுத்தும் எந்தவொரு வரிக்கும் மேலாக" 100% வரியை விதிக்கப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார் - இது அரிய மண் தாதுக்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த சூடான சர்ச்சைக்கு மத்தியில் தனது வர்த்தகப் போரை பெருமளவில் தீவிரப்படுத்துகிறது. ட்ரூத் சோஷியல் பதிவில், சீனா "உலகிற்கு மிகவும் விரோதமான கடிதத்தை அனுப்புவதன் மூலம் வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது, நவம்பர் 1, 2025 முதல், அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும், சிலவற்றால் கூட தயாரிக்கப்படாத பொருட்களின் மீதும் பெரிய அளவிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாகக் கூறுகிறது" என்று டிரம்ப் எழுதினார். "இது விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது, மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்களால் வகுக்கப்பட்ட ஒரு திட்டமாகும்" என்று அவர் எழுதினார். "இது சர்வதேச வர்த்தகத்தில் முற்றிலும் கேள்விப்படாதது, மற்ற நாடுகளுடன் கையாள்வதில் ஒரு தார்மீக அவமானம்." "சீனா எடுக்கும் எந்த கூடுதல் நடவடிக்கைகள் அல்லது மாற்றங்களைப் பொறுத்து, நவம்பர் 1 அல்லது அதற்கு முன்னதாகவே" புதிய வரியை விதிப்பதாக டிரம்ப் கூறினார். முந்தைய நாள், முக்கியமான அரிய மண் தாதுக்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க சீனாவின் தீவிர முயற்சிகள் குறித்து சமூக ஊடகங்களில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் கடுமையாக சாடினார், பொருளாதார பழிவாங்கலை அச்சுறுத்தினார், மேலும் இந்த மாத இறுதியில் பிராந்தியத்திற்கு திட்டமிடப்பட்ட விஜயத்தின் போது ஜியை சந்திக்க எந்த காரணத்தையும் அவர் இனி காணவில்லை என்றும் கூறினார். அந்த நேரத்தில், டிரம்ப் சீனாவிற்கு எதிராக பொருளாதார அபராதங்களை அச்சுறுத்தினார், "அவர்கள் இப்போது பிறப்பித்துள்ள விரோதமான 'உத்தரவு' குறித்து சீனா என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து, அமெரிக்க ஜனாதிபதியாக, அவர்களின் நடவடிக்கையை நிதி ரீதியாக எதிர்கொள்ள நான் கட்டாயப்படுத்தப்படுவேன்" என்று எச்சரித்தார். "அவர்கள் ஏகபோகமாக வைத்திருக்க முடிந்த ஒவ்வொரு உறுப்புக்கும், எங்களிடம் இரண்டு உள்ளன," என்று அவர் மேலும் கூறினார். வியாழக்கிழமை, அரிய மண் ஏற்றுமதிகள் மீதான கட்டுப்பாடுகளை பெய்ஜிங் தீவிரப்படுத்தியது, கட்டுப்பாட்டில் உள்ள கனிமங்களின் பட்டியலை விரிவுபடுத்தியது மற்றும் அவற்றின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் இராணுவ மற்றும் குறைக்கடத்தி பயன்பாடுகள் உட்பட அவற்றின் வெளிநாட்டு பயன்பாட்டை இலக்காகக் கொண்ட கட்டுப்பாடுகளை நீட்டித்தது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு கடுமையான பாதிப்பை இலக்காகக் கொண்டன - இது சமீபத்திய மாதங்களில் சுரங்கம் மற்றும் உற்பத்தி திறனை அடையாளம் காணவும் விரைவாக அதிகரிக்கவும் டிரம்ப் நிர்வாகத்தின் குறிப்பிடத்தக்க முயற்சியைத் தூண்டியுள்ளது. மேலும் இது உடனடியாக டிரம்ப் நிர்வாகத்திற்குள் எச்சரிக்கை மணிகளை எழுப்பியதாக பல நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாத இறுதியில் தென் கொரியாவில் நடைபெறும் APEC உச்சிமாநாட்டின் போது ஜி மற்றும் டிரம்ப் இடையே எதிர்பார்க்கப்படும் சந்திப்புக்கு முன்னதாக, அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் பெய்ஜிங் தனது செல்வாக்கை அதிகரிக்க முயன்றதால் இந்த நடவடிக்கை வந்தது. சில நிர்வாக அதிகாரிகள் இதை டிரம்ப் உடனான திட்டமிடப்பட்ட நேரடி சந்திப்பிற்கு முன்னதாக ஜியின் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கான தெளிவான முயற்சியாகக் கருதினர், மற்றவர்கள் சீனாவின் பதிலைத் தூண்டியிருக்கக்கூடிய அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினர். டிரம்ப் ஆரம்பத்தில் Truth social இல் சந்திப்பு இப்போது ஆபத்தில் இருப்பதாகக் கூறினார். "நான் ஜனாதிபதி Xi உடன் பேசவில்லை, ஏனெனில் அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை," என்று அவர் எழுதினார். "இது எனக்கு மட்டுமல்ல, சுதந்திர உலகின் அனைத்து தலைவர்களுக்கும் ஒரு உண்மையான ஆச்சரியமாக இருந்தது. இரண்டு வாரங்களில் தென் கொரியாவில் உள்ள APEC இல் ஜனாதிபதி Xi ஐ நான் சந்திக்கவிருந்தேன், ஆனால் இப்போது அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை என்று தெரிகிறது." ஆனால் அது உண்மையில் ரத்து செய்யப்பட்டதா என்று பின்னர் கேட்டபோது, டிரம்ப் பதிலளித்தார்: "நான் ரத்து செய்யவில்லை, ஆனால் நாங்கள் அதைச் செய்யப் போகிறோமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அதைப் பொருட்படுத்தாமல் அங்கு இருக்கப் போகிறேன், எனவே நாங்கள் அதைச் செய்யக்கூடும் என்று கருதுகிறேன்." டிரம்ப் சமூக ஊடகங்களில் பகிரங்கமாக அச்சுறுத்தலை விடுப்பதற்கு முன்பே, இந்த வாரம் சீனாவின் நடவடிக்கையை ஒரு வியத்தகு விரிவாக்கமாகக் கருதியதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஒரு மூத்த நிர்வாக அதிகாரி மற்றும் இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த மாத இறுதியில் அமெரிக்க வர்த்தகத் துறை ஏற்றுமதி கட்டுப்பாடுகள் பின்தங்கிய பட்டியலில் சீன நிறுவனங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்திய பின்னர் வெள்ளை மாளிகையில் தனிப்பட்ட விரக்திகளும் உள்ளன, இது சீனாவை விரக்தியடையச் செய்திருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. https://www.cnn.com/2025/10/10/politics/rare-earths-china-trump-threats0 points- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வசி அண்ணா செம்பாட்டன் அண்ண வாதாவூரன் சகோ ஈழப்பிரியன் அண்ணா............. இலங்கை வெல்லும் என தெரிவு செய்து இருக்கிறீங்கள் 11 உறவுகள் இங்லாந்தை தெரிவு செய்து இருக்கினம்.....................................0 points - குட்டிக் கதைகள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.