Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87988
    Posts
  2. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    12678
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    38754
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    19112
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/12/25 in all areas

  1. கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை! October 10, 2025 சமீபத்தில் கனடாவில் வாழும் தமிழ்த் தேசிய உணர்வாளப் பெண்மணி சிவவதனி பிரபாகரன் என்பவர் தனது மகளான திவ்யாவின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். மேலும் அவர் தனது முகநூல் பதிவில் “இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது” என்றும் பதிவிட்டுள்ளார். ஒரு தாயார் தனது மகளின் திருமணத்தையிட்டு பேருவகை கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சமூக வலைத்தளத்திலேயே குடும்பம் நடத்தும் இக்காலத்தில், சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமையும் ஒன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் திருமதி சிவவதனி பிரபாகரன் தனது சம்ந்தக்குடி பற்றி தெரிவித்த தகவல்களே சமூக வலைத்தள தமிழ்த் தலிபான்களுக்கு சும்மா மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்தமாதிரி ஆகிவிட்டது. சிவவதனி அம்மா மகள் திவ்யா காதலித்த ஆபிரிக்க நாடான கொங்கோ நாட்டு இளைஞனை திருமணம் செய்து வைத்தமையை பொறுக்காத தமிழ்த் தலிபான்கள் பின்னூட்டலில் வந்து வசை மாரி பொழிகிறார்கள். அடுத்தவர் வீட்டு படுக்கையறையை எட்டிப் பார்க்க கூடாது என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாத பண்பற்ற தமிழ் ஆண்களும் பெண்களும் புதுமணத் தம்பதிகளுக்கு சாபங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள். சம்பந்தப்பட்ட குடும்பத்தின் அனுமதியின்றி தம்பதிகளின் திருமணப் படங்களை பல்வேறு சமூக வலைத்தள போலிக் கணக்குகளில் பகிர்ந்து தமது காழ்ப்புணர்வை உமிழ்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் வேற்று நாட்டவர்களை மணம் புரிதல் என்பது புதிதல்ல. இரண்டாவது தலைமுறையை கடந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் இடையே வேறு இனத்தவர்களில் ஆண் மற்றும் பெண் எடுத்தல் சகஜமாக நடந்து தான் வருகிறது. அவ்வாறான திருமணப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன. பெரும்பாலான அத்திருமணங்கள் வெள்ளையினத்தவர்களுடான தமிழ்க் கலியாணங்களாக இருக்கின்றன. வெள்ளையினத்தவர்களுடனான கலப்புத் திருமணங்களுக்கு வராத விமர்சனங்கள், கறுப்பு நிற ஆபிரிக்க இனத்தவர்களுடான திருமணங்களுக்கு வருகின்றன. இது தமிழர்களின் நிற வெறியை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் பளுப்பு நிறமுடைய தமிழர்கள் தங்களை ஆபிரிக்கர்களை காட்டிலும் உயர் இனமாக கருதுகின்றனர். அதனாலேயே வெள்ளை நிறத்தவர்களிடையே ஏற்படும் கலப்பு திருமண பந்தங்களை வரவேற்று கொண்டாடுகின்றனர். அதேநேரம் ஆபிரிக்க இனத்தவரையோ அல்லது வெள்ளையினம் சாராத ஏனைய கலப்புத் திருமணங்களை எள்ளி நகையாடுகின்றனர். இன அடக்குமுறைக்கு எதிராக விடுதலை வேண்டிப் போராடிய இனமான ஈழத்தமிழர்கள் நிறவெறி, சாதிவெறி, மதவெறி, பிரதேச வாதம் மற்றும் பெண்ணடிமைத் தனம் என்ற பிற்போக்குத் தனங்களில் இன்னமும் உழல்வது வெட்கக்கேடானது. தாயகத்தை காட்டிலும் புலத்தில் வாழும் தமிழர்களிடையே இவ்வாறான பிற்போக்குத் தனங்கள் மிகுதியாக காணப்படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தின் வரையறை தெரியாத காட்டுமிராண்டி சமூகமாக ஈழத்தமிழ்ச் சமூகம் புலம்பெயர் நாடுகளில் வாழ்வது தலைகுனிவானது. சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனது மகள் கலப்புத் திருமணம் செய்ததை ஆதரித்தது உண்மையில் வரவேற்க்கத்தக்க செயலாகும். அவர் சொல்ல வந்த செய்தி கணியன் பூங்குன்றனாரின் “ யாதும் ஊரே யாவரும் கேளிர் “ என்பதன்படி தமிழர்கள் சர்வதேசவாதிகள். உலகில் வாழும் அனைவரும் எமது உறவுகளே. அதேநேரம் உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமதே என்பதாகும். சிவவதனி அம்மையாரின் தூரநோக்கு சர்வதேசப் பார்வையை புரிந்து கொள்ள திராணியற்ற கூட்டமொன்று சமூக வலைத்தளங்களில் குத்தி முறிகிறது. பாலியல் வக்கிரமான சொற்றாடல்களில் பின்னூட்டல்களை இடுகின்றது. அவ்வாறான பின்னூட்டல்களில் பெரும்பாலானவை ஆபிரிக்க மணமகனின் ஆண்குறியை மையமாக கொண்ட வக்கிர கருத்துக்களாக உள்ளன. பெரும்பாலும் இப் பின்னூட்டல்களை இடுபவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஆண்களாகவே உள்ளனர். அவர்களுக்கு தமது ஆண்மையில் இருக்கின்ற குறைபாடுகள் காரணமாகத் தான் ஆபிரிக்க மணமகன் மீது காழ்ப்புணர்வு கொண்டு பாலியல் வக்கிரமான பின்னூட்டல்களை இடுவதாகத் தான் கருத வேண்டியுள்ளது. ஒரு பெண் யாரைத் திருமணம் செய்ய வேண்டும். யாருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் தீர்மானிக்க முடியும். பெண்களின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் பாதுகாப்பில் கூடுதல் முன்னுரிமை கொடுக்கும் மேற்கு நாடுகளில் அகதிகளாக வந்து தஞ்சம் பெற்று வாழும் தமிழ் ஆண்களுக்கு மேற்கூறிய விடயங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பெண்கள் மீதான அத்துமீறல்களில் மற்றும் வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களுக்கு புலம்பெயர் நாடுகளில் எத்தகைய தண்டனைகள் வழங்கப்படும் என்பதும் தெரிந்திருக்கும். அல்லது தெரிந்து வைத்திருக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மட்டுமல்ல தாயகத்திலும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் பல்வேறு சட்டங்கள் மற்றும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளில் ஒழிந்து கொண்டு வெட்டி வீராப்பு மற்றும் அவதூறு பரப்புகிறவர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படுவார்கள். எழுதியவர்: கங்கா ஜெயபாலன், சமூக சேவைப் பணியாளர், கல்வி: Social Work & Education (University of Niederrhein), சர்வதேச உறவுகள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), அரசியல் விஞ்ஞானம் (கொழும்புப் பல்கலைக்கழகம்). https://www.thesamnet.co.uk/?p=113593
  2. பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு! மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறுகிறது. இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைகள் இதன்போது வழங்கப்படுகிறது. நிகழ்வில் ஜனாதிபதியுடன் இணைந்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய பிரதிநிதிகள் குழு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். https://athavannews.com/2025/1450145
  3. வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன் - 25 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 23 புள்ளிகள் 5) கிருபன் - 23 புள்ளிகள் 6) வீரப்பையன் - 23 புள்ளிகள் 7) புலவர் - 21 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 21 புள்ளிகள் 9) சுவி - 20 புள்ளிகள் 10) வசி - 17 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 17 புள்ளிகள் 12) வாதவூரான் - 17 புள்ளிகள் 13) கறுப்பி - 17 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 17 புள்ளிகள் 15) வாத்தியார் - 15 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 14, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  4. மாவீரர் தளபதி விதுசா அவர்கள் மற்றும் விதுசான் ஆகிய இரு மாவீரர்களின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா அவர்கள் இன்று (12.10.2025) மதியம் இவ்வுலக வாழ்வினை நீத்துள்ளார்.. அவருக்கு எமது புகழ் வணக்கம் ஐயாவின் இறுதி கிரியைகள் நாளை (13.10.2025) காலை பொன்னாலையிலுள்ள மகனின் இல்லத்தில் நடைபெற்று காலை 11.00 மணியளவில் #கப்புது #சனசமூக நிலையத்தில் இறுதி அஞ்சலிக்கூட்டம் நடைபெற்று உடலம் தீயுடன் சங்கமமாகும்... போராளிகள் நலன்புரிச் சங்கம்
  5. இன்று களத்தினை இறுதியாக வந்த பதிப்பிற்குப் புதுப்பித்துள்ளேன். அதில் உள்நுழையும் பகுதியில் மாற்றங்கள் செய்யப்பட்டு உங்களுக்கு சரியாகப் காண்பிக்கவில்லையோ தெரியவில்லை. நான் மூன்று வெவ்வேறு உலாவிகளில் (Chrome, Brave, Firefox) முயற்சிக்கும் போது சரியாகத்தான் காண்பிக்கின்றது. பதிவின் முன் உள்ள புள்ளியினை அழுத்திப்பார்க்கலாம்
  6. இஞ்சை பாருங்கோ கிரிக்கெட்டிலை நிறையத் தெரிந்த ஒருவருடைய நிலையும் ஒன்றுமே தெரியாத ஒருவருடைய நிலையும் இப்ப ஆருக்கு வெற்றி😂
  7. இதை விட இலங்கை அரசிடம் முறைப்படி அரசியல் தஞ்சம் கேட்டு விண்ணப்பியுங்கள்.
  8. இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (12) பண்டாரவளையில் இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார். இதேவேளை, 200 வருடகாலமாக வாழும் ஒரு சமூகத்தினருக்கு குறைந்த பட்சம் சிறிய அளவிலான காணி கூட இல்லாமல் இருக்கின்றனர். எனவே அவர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தமக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். இந்த வருடத்தில் அந்த தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வறுமை, ஊட்டச் சத்து குறைபாடு, சுகாதார ரீதியான பாரிய பின்னடைவை மலையக மக்களே அதிகளவில் எதிர்நோக்கியுள்ளனர். எனவே அதில் கவனம் செலுத்தி சிறந்த சுகாதார சேவையினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் நாட்டில் சுத்தமான குடிநீரை வழங்க புதிய திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும். வறுமைக்கும், கல்விக்கும் பாரிய தொடர்பு உள்ளது. எனவே மக்களை வறுமையில் இருந்து மீட்டு எடுப்பதற்கு சிறந்த கல்வி திட்டத்தை உறுதி செய்வோம். மலையக மக்களின் கௌரவம் அடிமட்டத்தில் உள்ளது என்பதை அறிவோம். எனவே அவர்களது கலாச்சாரத்திற்கு மதிப்பளித்து அவர்களது சமூகத்தை வளர்ச்சியடைவதற்கு அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmgnbia9400y3qplpzn52d1sl
  9. இயன் ஹீலியின் மருமகள், மிச்சல் ஸ்டாக்கின் மனைவி, இன்று போட்டு அடி அடி என்று அடிச்சுவிட்டிருக்கிறா. ஆஸ்லி ஹீலிதான் இன்றைய நாயகி.
  10. இல்லாததை இருப்பதாக கனவு காணமுடியாதே அண்ணை! இயற்கையானதை ஏற்றுக்கொள்ளத் தானே வேணும். முழு மனித உலகத்தோரும் ஆபிரிக்க வழித்தோன்றல்களே எனின் உயர்வு தாழ்வு ஏது?
  11. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 12 அக்டோபர் 2025, 01:34 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியர்கள் தங்கள் தினசரி ஆற்றல் தேவைகளில் 62 சதவீதத்தை கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து பூர்த்தி செய்துகொள்வதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கூறுகிறது. வளர்சிதை மாற்றம் தொடர்பான பிரச்னைகள் குறித்த ஆய்வுக்குப் பின் ICMR இதனை தெரிவித்துள்ளது. இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் ஆற்றலுக்காக சோறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைச் சார்ந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது. உலகில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட கால்வாசி பேர் இந்தியாவில் உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மற்ற நாடுகளை விட அதிகமாகும். இந்தியர்கள் தங்கள் அன்றாட ஆற்றல் தேவைகளுக்காக உட்கொள்ளும் உணவில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாகவும், புரதம் குறைவாகவும் இருப்பதாக மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு 22% அதிகம் கார்போஹைட்ரேட்-க்கும் நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கும் என்ன தொடர்பு? குறைந்த கார்போஹைட்ரேட்டை உட்கொள்பவர்களை விட அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் நபர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் அதிகமாக இருக்கலாம் என நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. இவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு 22 சதவீதமும், தொப்பை போடுவதற்கான வாய்ப்பு 15 சதவீதமும் அதிகமாக உள்ளது. மறுபுறம் கோதுமை, அரிசி அல்லது சோளம் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்குப் பதிலாக பதிலாக முழு கோதுமை அல்லது சிறுதானிய மாவை பயன்படுத்தினாலும், டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறையாது என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கார்போஹைட்ரேட் பயன்பாடு அதிகமாக இருப்பதை ஆய்வின் சான்றுகள் எடுத்துரைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "நாடு முழுவதும் உள்ள மக்களின் உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் அவர்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் ஆற்றலில் 62.3 சதவீதம் பங்களிக்கின்றன. பெரும்பாலான கார்போஹைட்ரேட்டுகள் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் அரைக்கப்பட்ட முழு தானியங்களில் இருந்து கிடைப்பவை" என்று இந்த ஆய்வின் ஆராச்சியாளர் குறிப்பிடுகிறார். "சுத்திகரிக்கப்பட்ட தானியங்களின் பங்கு 28.5 சதவீதமாகவும், முழு தானியங்களின் பங்கு 16.2 சதவீதமாகவும் உள்ளது. மொத்த கொழுப்பு 25.2 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. அதே நேரம் புரதச் சத்து வெறும் 12 சதவீதம் மட்டுமே." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாட்டின் மக்கள் தொகையில் 27% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வதை தடுப்பது எப்படி? மக்களின் உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளின் அளவைக் குறைப்பதும், பால் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்வதை அதிகரிப்பதும் வளர்சிதை மாற்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சுமார் 61 சதவீதம் பேர் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லை, அதாவது அவர்கள் எந்த வகையான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வதில்லை என்று ஐசிஎம்ஆர் குழு கண்டறிந்துள்ளது. இதில் 43 சதவீதம் பேர் அதிக உடல் எடையும், 26 சதவீதம் பேர் உடல் பருமனும் கொண்டுள்ளனர். உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை மேம்படுத்துவதால், டைப் 2 வகை நீரிழிவு நோயை 50 சதவீதம் வரை குறைக்கலாம் என முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன. நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கிற்கு அதிகமானவர்கள், அதாவது 27% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக, கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 83 சதவீதம் பேர் குறைந்தது ஒரு வளர்சிதை மாற்ற நோய்க்கான அபாயத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின்படி, ஒட்டு மொத்த நாட்டையும் விட கிழக்கு இந்திய மக்கள் நல்ல நிலையில் உள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தினசரி ஆற்றல் தேவையில் 62% கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து கிடைக்கிறது. நிபுணர்கள் சொல்வது என்ன? இந்திய உணவுப் பழக்கத்தில் அதிகளவிலான கார்போஹைட்ரேட்களை உட்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து நிபுணர்களிடம் கேட்டது பிபிசி. "சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் எளிய கார்போஹைட்ரேட்டுகள் (சர்க்கரை) இரண்டும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பது உண்மை." என டெல்லியில் உள்ள மனித நடத்தை மற்றும் கூட்டு அறிவியல் நிறுவனத்தின் மூத்த உணவியல் நிபுணர் மருத்துவர் விபுதி ரஸ்தோகி கூறினார். "ஆனால் குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது விரைவான பாதிப்பை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார். "இந்திய உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன, அதனால்தான் இந்தியர்களிடையே நீரிழிவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான உடல்நலப் பிரச்னைகள் அதிகம் காணப்படுகின்றன." என்றார். "நீரிழிவு போன்ற பிரச்னைகளை தடுக்க, உணவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருக்க வேண்டும். உடல் அசைவுகளை அதிகரிப்பதும் முக்கியம்" என்று அறிவுரை கூறுகிறார். நீங்கள் சோறு எடுத்துக்கொண்டாலும் சரி, சப்பாத்தி எடுத்துக்கொண்டாலும் சரி, இரண்டிலும் கார்போஹைட்ரேட்கள் உள்ளன. பட மூலாதாரம், Getty Images சோற்றை விட சப்பாத்தி சிறந்ததா? சோற்றை விட சப்பாத்தியில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதாகவும், அதனால் சப்பாத்தி உடலுக்கு நல்லது என்று பொதுவாக நம்பப்படுகிறது. "நீங்கள் அதிக நார்ச்சத்துள்ள சப்பாத்தியை சாப்பிட்டால் பரவாயில்லை, ஆனால் நீங்கள் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தியை சாப்பிட்டால், அதுவும் அரிசியைப் போன்றதுதான். இதை சாப்பிட்ட பிறகும் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும்," என 'டயட்டிக்ஸ் ஃபார் நியூட்ரிஃபை டுடே'வின் தலைவரும் மும்பையைச் சேர்ந்த உணவியல் நிபுணருமான நஸ்னீன் ஹுசைன் கூறினார். அதிகம் செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, ஆனால் செறிவூட்டப்படாத சிறிய அரிசி இந்த விஷயத்தில் சிறந்தது என்றும் அவர் கூறுகிறார். நார்ச்சத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவர்கள் அல்லது உணவியல் நிபுணர்கள் பெரும்பாலும் பழுப்பு நிற அரிசி அல்லது செறிவூட்டப்படாத அரிசியை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். சோற்றை இறைச்சி, முட்டை, பருப்பு, தயிர், காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவது மற்றொரு முக்கிய அறிவுரை ஆகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1mxmejj58vo
  12. விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியா எடுத்த 330 இனை பிடிக்க இதுவரை அவுஸ்திரேலியா விக்கெட் எதுவும் இழப்பின்றி 9.5 ஓவரில் 81 ஓட்டங்கள் எடுத்து இருக்கிறது. இதே விசாகப்பட்டணத்தில் நடைபெற்ற போட்டியில் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் 251 ஒட்டங்களை தென்னாப்பிரிக்கா அணி அடித்து வென்று இருக்கிறது.
  13. கடைசிச் சனி எள்ளுச்சட்டி எரித்தது எனக்கு வேலை செய்யுதோ செய்யவில்லையோ ...இந்தியன் பெட்டையளுக்கு நல்லா வேலை செய்யுது (பெட்டையள்_..எழுத்து சுவராசியத்துக்கு பாவித்த சொல்... மன்னிக்கவும்) வந்தவள் ...நிண்டவள் ...எல்லோரும்..அடிதான்.. அட அதைவிட கண்ணுக்கு மைபூசியும் வந்து .. வெளுத்து வாங்குகினம்...
  14. கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி ........ ! 😍
  15. மெய்மறந்த காதல் .........! 😂
  16. நான் சீமானின் அனைத்துக்கருத்துக்களையும் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதில்லை. சீமான் மீது சில விடயங்களில் முரண்பாடு உண்டு.முன்ஆயத்தம் இன்றி தினமும் பத்திரிகையாளர்களை எதிர்கொள்ளும் போது சில பத்திரிகையாளர்களின் விசமத்தனமான கருத்துக்களுக்கு பதலளிக்கப் போய் சிக்கலில் மாட்டுப்படுவார். நான் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் மிகத்தெளிவானது தமிழ்த்தேசியத்தை நீர்த்துப் போகமால் அடுத்த சந்ததிக்கு கடத்துகிறார்.அதுவும் ஒரு வெகு ஜன அரசியல் இயக்கமாய் கட்டமைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். சீமானுக்கு முதல் அரசியல் கட்சி தொடங்கியவர்கள் ஒருசிலரைத்தவிர எல்லோரும் தங்கள் கட்சியின் பெயரில் திராவிடத்தை சேரத்து விடுவார்கள். நாம்தமிழர்கட்சி உருவாகிய பின்பு யாரும் திராவிடத்தை தமது கட்சிப்பெயரில் சேர்ப்பது கிடையாது.அந்த அளவுக்கு தமிழத்தேசியத்தின் எழுச்சி அவர்களை அச்சுறுத்துகிறது.விஜய் கூட கட்சிப்பெயரில் திராவிடத்தைச் சேர்க்காமல் கொள்கையில் திராவிடத்தையும் தமிழ்த்தேசியத்தையும் சேர்த்திருக்கிறார். இது ஒரு முரண்நகையாக இருந்த போதிலும் அவருக்கு மலையாள கன்னட தெலுங்கு அரசிகர்கள் கணிசமான அளவு இப்பதால் அந்தவாக்குகளைத் தக்க வைக்கவே திராவிடத் தேசியததையும் தூக்கிப் பிடிக்கிறார்.இதற்கு முதல் ஆதித்தனார் மாபொசி போன்றவர்கள் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் செய்து அதில் வெற்றி காணமுடியாமல் திராவிடத்துக்குள் கரைந்து போனார்கள். வெற்றி என்பது சட்டசபை உறுப்பினர்களையோ பாரளுமன்ற உறுப்பினர்களையோ பெற்று விடுவது மட்டுமல்ல ஒரு பெரிய சனத்திரளை ஒரு சித்தாந்தத்தை நோக்கி அணிதிரள வைப்பது. அதில் சீமான்தனித்துவமாகச் செயற்படுகிறார்.மற்றவர்களின் சித்ததாந்ததில் தனித்தும் இல்லாத கூட்டுக்கலவையாக இருக்கிறது. ஒருகாலத்தில் இந்தியாவின் எதிர்க்கட்சியாக இருந்த கம்னியூஸட்டுகள் அப்போது சித்தாந்ததில் உறுதியாக இருந்தார்கள். இப்போது எல்லாவற்றையும் கைவிட்டு கூட்டுக்கலவையாகி திமுகவுக்கும் காங்கரசுக்கும் முரட்டு முண்டு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.முன்பு ஜனதா தளம் பல கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரசுக்கு எதிராக கூட்டணி ஆட்சி அமைத்திருந்தது. பலதரப்பட்டமக்களின் பிரதிநிதிகள் அந்த ஆட்சியில் பங்கு பெற வசதியாக இருந்தது.இப்போது அந்த இடத்தை பாஜக பிடித்து விட்டது.
  17. வாத்தியார் உங்களின் காதால புகை போறது தெரிகிறது .....எதற்கும் அந்த (8) நம்பர் ஆளையும் ஒருக்கால் பாருங்கோ ....அவர் இன்றுவரை ஒரு மகளிர் ஆட்டத்தைக் கூட பார்த்ததில்லை . ...... யாருடைய பெயரும் தெரியாது .......! 😂
  18. நீங்களும் என்னமோ கனக்க எதிர்பார்க்கிறீர்கள் போல. கிடைத்ததா. 😁
  19. எதற்கு, கடத்துபவர்கள் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காகவா? இத்தனை சட்ட விரோத செயல்களுக்கும் காரணமானவர்களே போலீசார்தானே! போதைப்பொருளுடன் போலீசார் கைது, கொலையில் போலீசார் கைது, ஊழல், கொள்ளை, கடத்தல் போன்றவற்றுடன் போலீஸ் அதிகாரிகள் தொடர்பு. இவர்கள் எப்படி அவற்றை தடுக்க முடியும்? நாமாக நம் வளங்களை பாதுகாக்காவிடின் இவர்கள் அழிக்கவென்றே அனுப்பப்பட்டவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்களா? இவற்றை ஊக்குவிப்பதன்மூலமே அவர்கள் மேலதிக வருமானம் ஈட்டுகிறார்கள்.
  20. காதலனா, கள்வனா அவன்? இப்போவெல்லாம் எல்லாவற்றிலும் புதுமை! கலியாணம் செய்தாலும் வரதட்ஷணை என்கிற பெயரில் கொள்ளையிடுகிறார்கள். ஆண்கள் மட்டுமா? இப்போ, பெண்கள் கலியாணம் என்கிற பெயரில் செய்துவிட்டு வரதட்ஷணை கொடுமை, வீட்டு வன்முறை என்கிற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள். காதலும் வேண்டாம், கலியாணமும் வேண்டாம் என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள் சில இளையவர்கள்.
  21. இல்லை. அதுவும் தமிழ்நாட்டு அரசியலில் நான் கோபப்படுவதே இல்லை. சரி மன்னிப்பும் தேவையில்லை. அந்த நடிகனை தேடி வந்தவர்கள் உயிரிழந்ததிற்கு உடனடியாக அனுதாபங்களை தெரிவித்திருக்கலாம். இதற்கும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்க்கும் உங்களைப்போன்ற விஜய் ரசிகர்கள் மீதுதான் கோபம் வருகின்றது. கரூர் மரணத்திற்கான காரணங்கள் வரும் வரைக்கும் அனுதாபங்களும் அஞ்சலிகளும் காத்திருக்கட்டும். இதற்கும் தமிழ்நாட்டு பட்டிமன்ற பாணியில் பாட்டு வேற போடுகின்றீர்கள்?!?!?!?! அது சரி உங்கள் அபிமான நடிகர் ஜோசப் விஜய் அரசியலுக்கு வருவதற்கான காரணம் என்ன? அவரின் மாற்று அரசியல் கொள்கை என்ன? ஒவ்வொரு கட்சியிலிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனங்களை பொறுக்கி எழுதி வைத்து அரசியல் மேடை விண்ணாணம் செய்கின்றார். இதில் கொடுமை என்னவென்றால் சீமானின் அரசியல் வசனங்களைத்தான் திரைப்பட பாணியில் பேசுகின்றார் இந்த ஜோசப்பு விஜய்.
  22. வினா 13) 88 ஓட்டங்களினால் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை தோற்கடித்தது. 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 25 புள்ளிகள் 2) ஏராளன் - 23 புள்ளிகள் 3) கிருபன் - 23 புள்ளிகள் 4) ரசோதரன் - 23 புள்ளிகள் 5) வீரப்பையன் - 23 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 21 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 21 புள்ளிகள் 8) சுவி - 20 புள்ளிகள் 9) புலவர் - 19 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 17 புள்ளிகள் 11) வாதவூரான் - 17 புள்ளிகள் 12) கறுப்பி - 17 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 17 புள்ளிகள் 14) வாத்தியார் - 15 புள்ளிகள் 15) வசி - 15 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 13, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  23. என்னக்கு Trump இன் அனேகமனா கொள்கைகள் மீது உடன்பாடு இல்லை ( சிலவற்றில் உடன்பாடு). ஆனால் அவரது 5 வருட ஆட்ச்சியில் எதுவித யுத்தத்தையும் தொடங்காதற்க்காக அவருக்கு Nobel பரிசு கொடுக்கலாம். ஒபமவுக்கு கொடுத்தது ஒரு நகைப்புக்கு உரியது எனநினைக்கிறேன். (நான் தவறாக இருக்கலாம்)
  24. ஜேவிபியும் ஏனைய சிங்கள கட்சிகள் போலத்தான். ஒரே வித்தியாசம் - நீங்கள் அவர்களோடு வர்க்க போரில் துணை நின்றால் உங்களை பாதுகாப்பார்கள். அதே நேரம் குழுவாக சேர்ந்து தமிழரை தாக்குவதில் ஒரு கை போடாவும் பின் நிற்க மாட்டார்கள். கொள்கை ரீதியில் தமிழரை ஒடுக்குவதில் ஏனைய கட்சிகள் “ஒரே இலங்கையர்” எனும் ஈரச்சாக்கை கையில் எடுத்தால்… ஜேவிபி…நாம் எல்லோரும் உழைக்கும் வர்க்கம் என்ற ஈரச்சாக்கை கையில் எடுப்பார்கள். ஆனால் வடக்கு-கிழக்கை பிரிக்க வழக்கு போட்டு வெல்வார்கள். இத்தனை வருட இழப்பின் பின் தமிழருக்கு கிடைத்த ஒரே சிறிய நன்மை வடக்கு-கிழக்கு தற்காலிக இணைப்பு. எந்த இனவாத கட்சியும் அதை நீக்க துணியவில்லை. அதிகாரத்தில் இல்லாத போதும் கோர்ட்டுக்கு போய் ஜேவிபி நீக்கியது. அதே போல் முள்ளிவாய்க்கால்… நடப்பது மிக பெரும் அழிவு என தெரிந்தும்…மாட்டி கொண்ட தமிழர் பலர் உழைக்கும் வர்க்கம் என அறிந்தும்…: போரை, மேற்கின் வேண்டுதலுக்கு பணியாமல், விரைந்து முடிக்க மகிந்தவுக்கு அழுத்தம் கொடுத்தார் அனுர. யூ என் பி, சுக, ஹெல உறுமய முகத்துக்கு நேரே இனவாதிகள் - சையனைடு. ஜேவிபி ஆசனிக்.
  25. வினா 12) 100 ஓட்டங்களினால் நியூசிலாந்து அணி, வங்காளதேசம் அணியை தோற்கடித்தது. 13 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 23 புள்ளிகள் 2) ஏராளன் - 21 புள்ளிகள் 3) கிருபன் - 21 புள்ளிகள் 4) ரசோதரன் - 21 புள்ளிகள் 5) வீரப்பையன் - 21 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 19 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 19 புள்ளிகள் 8) சுவி - 18 புள்ளிகள் 9) புலவர் - 17 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 17 புள்ளிகள் 11) வாதவூரான் - 17 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 17 புள்ளிகள் 13) வசி - 15 புள்ளிகள் 14) கறுப்பி - 15 புள்ளிகள் 15) வாத்தியார் - 13 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 12, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  26. சங்ககார குடும்பம் கூட இப்படி செய்தனர். கொழும்பு நெல்சன் பிளேஸின் பல தமிழ் குடும்பங்கள் இன்று உயிர்வாழ டாக்டர் ஜெயதில வீடுதான் காரணம். ஆனால் இவர்கள் விதிவிலக்குகள். 1948-2009 முதல் இப்படியான விதிவிலக்குகளை தவிர்த்து விட்டு பார்த்தால் - ஒட்டுமொத்த சிங்கள இனத்தின் கூட்டு மனோநிலையும்….. எந்த எல்லைக்கும், எந்த மோசமான அடக்குமுறையையும் பாவித்து தமிழர்களை அடக்கி விட வேண்டும் என்பதாகவே இருந்தது. 2009 -2021 வரை கூட அது மாறவில்லை. …. அடக்க வேண்டும் என்ற வெறி…அடக்கி விட்டோம் என்ற இறுமாப்பாக மாறி இருந்தது. 2021 ற்கு பின் கூட்டு மனோநிலை மாறிவிட்டதா? தெரியவில்லை.
  27. ஜேவிபி, என் சொந்த அனுபவத்தில் ஆளவந்தான் கமல்ஹாசன் போல "கடவுள் பாதி மிருகம் பாதி" கலவை என்று சொல்லலாம்😂! முதன் முதல் ஜேவிபி அமைப்பின் தீவிர உறுப்பினர்களோடு பரிச்சயமானது சந்திரிக்கா ஆட்சிக்கு வந்த பின்னரான, பேராதனைப் பல்கலையில். அவர்களது நிலைப்பாடு "தமிழர்களுக்கு என்று விசேடமான பிரச்சினை இல்லை, இருப்பது வர்க்கப் பிரச்சினை (class struggle), அதைத் தீர்த்தால் தமிழர் பிரச்சினையும் தீர்ந்து விடும்" என்ற இடது சாரி (சோசலிச) வாதமாக இருந்தது. பின்னர், இந்திய எதிர்ப்பும், மேற்கு எதிர்ப்பும், சில ஜேவிபி தரப்புகளின் சிங்கள இனவாதமும் சேர்ந்து நான் கண்ட ஜேவிபி 90 களில் "தேசிய சோசலிசம் - National socialism" என்ற நிலைக்குப் போனார்கள் - இது தான் தமிழர்களுக்கு பாதகமான நிலைப்பாடு. ஆனால், பேராதனையில் மாணவர் சங்க தலைமையில் இருந்த ஜேவிபி உறுப்பினர்களால் தமிழ் மாணவர்கள் பெரும்பாலும் பாதுகாக்கப் பட்டார்கள் என்பது என் அபிப்பிராயம். பொலிஸ் கெடுபிடி அதிகம். தமிழ் மாணவர்களைச் சும்மா பிடித்துக் கொண்டு போய் பேராதனைப் பொலிஸ் நிலையத்தில் வாங்கில் உக்கார்த்தி வைத்து விடுவார்கள். தகவல் கிடைத்ததும், உடனே பொலிஸ் நிலையம் போய் அவர்களோடு முரண்டு பிடித்து தமிழ் மாணவர்களைக் கூட்டி வருவது ஜேவிபி மாணவர் சங்கத் தலைவர், செயலாளராக இருப்பார்கள். தலதா மாளிகை தாக்கப் பட்டதற்கு அடுத்த சில நாட்கள். நான் ஹில்டா விடுதியில் இருந்தேன். நமக்குத் தான் வவுனியா கடப்பதற்குப் பாஸ் வேண்டுமே? எனவே வார இறுதியாகிய போதும் நான் விடுதியிலேயே இருந்தேன். எந்த அசுமாத்தமும் தாக்குதலுக்கு அடுத்த நாள் இருக்கவில்லை. ஆனால், அதற்கடுத்த நாள் பொலிஸ் வந்து அனைத்து தமிழ் முஸ்லிம் மாணவர்களின் அறைகளைச் சோதித்து விட்டுச் சென்றார்கள். மரியாதையாக நடந்து கொண்டார்கள். அன்று மாலை தான் நமக்குத் தெரியாமல் நடந்த சில விடயங்கள் தெரியவந்தன. சிஹல உறுமய அமைப்பின் மாணவர்கள் குழு, ஹில்டாவில் இருக்கும் தமிழ் மாணவர்களைத் தாக்குவது என்று முடிவெடுத்து தயார் செய்த போது, விடயமறிந்த ஜேவிபி மாணவர்கள் உறூமய மாணவர்களுக்கு வன்முறை அச்சுறுத்தல் விடுத்துத் தடுத்திருக்கிறார்கள். அதே வேளை, உறுமய தரப்போடு ஒரு உடன்பாட்டிற்கு வந்து கண்டி பொலிஸ் வந்து தமிழ் மாணவர்களின் அறைகளைச் சோதனையிடலாம் என்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அப்ப இவங்கள் நல்லவங்களா?...வெயிற் போர் இற்😂.... தலதா மாளிகை தாக்கப் பட்ட அதே நாளில், கண்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இருக்கும் கட்டுக்கல பிள்ளையார் கோயில் ஒரு கும்பலால் தாக்கப் பட்டு பாரிய சேதத்திற்குள்ளானது. இந்தத் தாக்குதல் குழுவில், ஹில்டாவில் தமிழ் மாணவர்களைக் காப்பாற்றிய அதே ஜேவிபி மாணவர்கள் சிலரும் இருந்திருக்கிறார்கள். எனவே தான், ஜேவிபியை இன்னும் என்னால் ஒரு பானைக்குள் போட முடியாமல் இருக்கிறது! ஆனால், தமிழர்களின் தாயகக் கனவிற்கு வன்முறை சாராத நீதிமன்ற வழிமுறை மூலம் முதல் சவப்பெட்டி ஆணியை அடித்தது ஜேவிபி என்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை!
  28. அவர்களுடைய அந்த புத்தகத்தில் வாழை மரம் பற்றி ஏதாவது சொல்லபட்டிருக்கின்றதா அப்படி சொல்லபட்டிருந்தால் வாழை மரத்தின் நிலை பரிதாபம் தான் ☹️
  29. யாழ்ப்பாணத்தில் வெட்டுறம் ...விழுத்திறம் என்று திரியிர 3 எம்பிமாரும் அனுரவின்ர கண்ணில் படவில்லையோ
  30. இந்திய நீதி துறையின் இலட்சணம் - சந்தி சிரிக்கிறது. இரெட்டை கொலை. ஒருவர் அருகில் உள்ள குழந்தை, மற்றது தாய். வழக்காடிய நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அப்படி என்ன கண்மூடித்தனமாகவா இருந்திருப்பார்கள்? இவரை விடுதலை செய்த உச்ச நீதிமன்றம் மீள் விசாரணைக்கு கூட ஆணையிட்டதாக தெரியவில்லை. பாலியல் வன்கொடுமை புகாரை விசாரிக்காமல் தடுத்து, குற்றம் சுமத்தபட்டவரும், சுமத்தியவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆணையிட்ட “சாத்தப்பன் பஞ்சாயத்து” தானே இந்திய உச்ச நீதிமன்றம். கோமிய குடுக்கிகள் நீதிபதியானால், மைனர் குஞ்சுகளுக்கு கொண்டாட்டம்தான். அண்மையில் ஒரு சங்கி வக்கீல் தலைமை நீதிபதி மீது சப்பாத்தை வீசி தாக்கியுள்ளார். அந்தளவுக்கு சங்கிகளின் காலில் கிடக்கிறது இந்திய நீதித்துறை.
  31. எம்ஜீஆர் ரோடு ஜெயலலிதா சேர்ந்த மாதிரி விஜேயோடு தேர்தல் வரமுதலே திரிசா கூட வரப் போறாவாம்.
  32. எல்லாம் ஓகேதான். ஆனால் கதையோட கதையாய் ஒண்டு சொல்லுறன். சீமானால் இப்ப நிம்மதியாய் இருக்கிற மனிசன் ஆர் எண்டால் இவர்தான்.....😂 இல்லாட்டி ஜோசப்பு விஜய் படுற அவஸ்தையை இவரும் பட்டிருப்பார். தலையில இருக்கிற மிச்ச சொச்சமும் போயிருக்கும்.🤣 இல்லையோ ஓமோ? 😎
  33. முடிச்சு விட்டாங்கள். இந்தியாவுக்கு இரண்டாவது பாரிய இழப்பு. இந்த உலக கிண்ணம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. இனி ஓட்ட விகிதம் முக்கியமாக போகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.