Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3049
    Posts
  2. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    12678
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20010
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/18/25 in all areas

  1. தன்னறம் -------------- நீங்கள் எல்லோரும் நலமா, ஒரு கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது, எப்படி எழுதுவது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. நான் இதற்கு முன்னர் ஏதாவது கடிதம் எழுதி இருக்கின்றேனா என்றும் ஞாபகமில்லை. கடிதங்களை அவரே தான் எழுதினார். வந்த கடிதங்களை வாசித்தது கூட அவரேதான். சில வேளைகளில் சில கடிதங்களில் இருந்த ஒன்று இரண்டு சமாச்சாரங்களை சுருக்கமாகச் சொல்லியிருக்கின்றார். அவர் என்னை எதையும் வாசிக்க விடவில்லை என்றில்லை, உண்மையில் எதையாவது வாசி வாசி என்று எனக்கு அவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். நான் தான் எதையும் வாசிக்கவில்லை. எனக்கு ஒரு இடத்தில் இருந்து வாசிப்பதற்கு நேரம் இருக்கவில்லை என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அது பொய், நானே உருவாக்கிய ஒரு காரணம் என்று இப்பொழுது எனக்குப் புரிகின்றது. இப்பொழுது இந்தச் சிறிய அறை தான் என்னுடைய உலகத்தின் மிகப் பெரும் பகுதி. இந்த அறையை சிறிது என்பதற்கு மேல் எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. என்னுடைய வீட்டில், ஆமாம் அது என்னுடைய வீடு தான், ஐந்து அறைகள் இருந்தன. முதலில் நான்கு அறைகள் மட்டுமே இருந்தன, பின்னர் நாங்கள் ஒரு பெரிய அறையை வீட்டுடன் இணைத்துக் கட்டினோம். நான் சிறிய அறை, பெரிய அறை, சாமி அறை என்று இப்படித்தான் சொல்லுவேன். அவர் தான் யாரும் கேட்டால் ஒவ்வொரு அறைகளின் அளவையும் ஒரு பெருக்கல் வாய்ப்பாடு போல சொல்லுவார். இங்கு ஒவ்வொருவருக்கும் இதே போன்ற சிறிய அறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டில், ஒரு வசதியான கதிரை, இரண்டு சின்ன அலுமாரிகள், சின்ன மேசை மற்றும் நானும் சேர்ந்து இந்த அறையை நிரப்பிவிட்டோம். ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் கொடுப்பார்கள். நான் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எதையாவது வாசி வாசி என்று அவர் சொன்னபடி புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் என் அறையைத் திறந்தால், உங்கள் வலதுகைப் பக்கம் இருக்கும் அலுமாரிக்குள் இருப்பது அவ்வளவும் புத்தகங்களே. என்னுடைய சின்ன மகள் ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக வாங்கி அடுக்கிவிடுகின்றார். எங்களுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண்கள். ஆண், பெண், ஆண், பெண் என்று அடுத்தடுத்துப் பிறந்தார்கள். இப்பொழுது ஆறு பேரப் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இங்கிருப்போர் பலருக்கும் இப்படியே பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் வெளியே அவரவர்களின் வீடுகளில் இருக்கின்றார்கள். பிள்ளைகள் மேல் கோபமோ அல்லது ஒரு மன விலக்கலோ இருந்தாலும் கூட, பேரப் பிள்ளைகளின் மேல் ஒரு இம்மியளவு கூட குறையாத பாசமே இங்கிருப்போர் எல்லோரிடமும் இருக்கின்றது. இந்த வராந்தாவில் முதல் அறையில் இருக்கும் அவர் ஒரு சரியான முசுடு. அவரின் மனைவி சில வருடங்களின் முன் போய்ச் சேர்ந்துவிட்டார். சில மாதங்களிலேயே அவரை அவரது பிள்ளைகள் இங்கு கொண்டு வந்து விட்டதாகச் சொல்கின்றார்கள். அவர் எவருடனும் முகம் கொடுத்து கதைப்பதில்லை. ஆனால் அவருடைய பேரப் பிள்ளைகள் வரும் நாட்களில் அவர் முழுதாக மாறி, மிகவும் உற்சாகமாக இருக்கின்றார். அப்படியான ஒரு நாளில் என்னைப் பார்த்து சிரித்தும் இருக்கின்றார். மீண்டும் கோவிட் வைரஸ் பரவுகின்றது என்று இப்பொழுது அறைக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். இந்த யன்னல் ஊடாக தெரிவது தான் நிலம், நீலம் என்றாகிப் போய்விட்டது. முன்னரும் முதலாவது கோவிட் தொற்றுக் காலத்தில் இப்படி இருந்திருக்கின்றேன். அப்பொழுது நான் இங்கு வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தது. அந்த நாட்களில் அவருக்கு முன்னால் நான் போய்ச் சேர்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் சில தடவைகள் வந்தது. ஆனாலும் அவர் இவற்றை, இந்த தனிமையை தாங்கமாட்டார். எது நடக்க வேண்டுமோ, அதுவே நடந்தது போல. முதல் தொற்றுக் காலத்தில் அடிக்கடி இங்கு இழப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது எனக்கு இங்கிருக்கும் எவரையும் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் மனமெங்கும் ஒரு வலி இருந்து கொண்டிருந்தது. அது இல்லாமல் போய்க் கொண்டிருந்தவர்களைப் பற்றியதா, அல்லது என்னைப் பற்றியதா என்ற சந்தேகம் இன்றும் இருக்கின்றது. புத்தகங்கள் வாசித்தால் இப்படியான கேள்விகள் அதுவாகவே உள்ளுக்குள் வரும் போல. அவர் கதைக்கும் சில விடயங்கள், கேட்கும் சில கேள்விகள் அன்று எனக்கு விளங்காமல் முழித்துக் கொண்டு நின்றிருக்கின்றேன். அவர் வர வர கொஞ்சம் பைத்தியமாகிக் கொண்டிருக்கின்றாரோ என்று நான் நினைத்தாலும், நல்ல காலம், நான் அதை எவரிடமும் சொல்லவில்லை. சில சம்பவங்கள் நடந்த பின்னரே அவை நடந்து விட்டன என்ற உணர்வும், அதையொட்டிய விளைவுகளும் ஏற்படுகின்றது. அப்படியான சம்பவங்கள் உலகில் எப்போதும் நடந்து கொண்டேயிருக்கின்றன என்றோ, அவை எங்களுக்கும் நடக்கக் கூடுமோ என்ற பிரக்ஞை அற்றே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர் இறந்தது, நான் இங்கே வந்தது மற்றும் இடையில் நடந்த சம்பவங்கள் இவை எதுவுமே புதிதல்ல. இவை ஆயிரம் ஆயிரம் தடவைகள் இப் பூமியில் இப்படியே ஏற்கனவே நடந்து இருக்கின்றன. முதுமை என்றாலே துன்பம் என்று நான் வாசித்த ஒரு புத்தகத்தில் இருந்தது. அப்படி ஒரேயடியாகச் சொல்லி விடலாம் என்று நான் நம்பவில்லை. ஆகக் குறைந்தது, அதை நான் இன்னமும் நம்பவில்லை. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு கடமை எப்போதும் இருக்கின்றது தானே. முதுமையில், தனிமையில் கூட அப்படி ஒரு கடமை ஒன்று இருக்கத்தானே வேண்டும். நேற்று என்னைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவர் வேறு ஒரு நாட்டில் இருந்து இங்கே விடுமுறைக்கு குடும்பத்துடன் வந்திருக்கின்றார். அப்படியே என்னையும் பார்க்க வந்தார். என்னை விட வயதில் மிகவும் இளையவர். உறவு முறையில் சொந்தக்காரரும் கூட. அவர்களின் வீட்டில் நாங்கள் இருவரும் இரண்டு தடவைகள் தங்கியிருக்கின்றோம். அப்பழுக்கற்ற ஒரு மனிதனாகவே அவர் தெரிந்தார். கோவிட் தொற்று என்பதால் ஒருவரையும் அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கின்றார்கள். பின்னர் வேறு நாட்டில் இருந்து வந்தவர் என்று தெரிந்து, முகத்தை மறைத்து சில நிமிடங்கள் மட்டுமே உள்ளே அறைக்கு வர அனுமதி கொடுத்தார்கள். கதவைத் திறந்த அவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்படித்தான் நிற்கச் சொல்லியிருக்கின்றார்கள். நான் எதிர் மூலையில் நின்றேன். மௌனமாகவே நின்றவர் 'என்னைத் தெரிகின்றதா ............' என்று மெதுவாகக் கேட்டார். முகத்தின் பெரும்பகுதி மூடப்பட்டிருந்தாலும் அந்தக் கண்கள் எனக்கு நன்கு தெரிந்தவையே. ஆனாலும் அந்தக் கண்களை ஒரு கணத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு எவரின் பரிதாபமும் தேவையில்லை. 'அழும் போது ஒரு பெண் அபலையாகின்றாள்.................' என்ற ஒரு கவிதை வரியை என் கணவர் அவரது கடைசி நாட்களில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றார். அந்த முழுக் கவிதையையும் நான் இன்னமும் தேடி வாசிக்கவில்லை. நான்கு பிள்ளைகளும் அவர்களின் குடும்பங்களுடன் இடைக்கிடையே வந்து விட்டுப் போவார்கள். வரும் போது ஏதேதோ வாங்கி வருவார்கள். அவர்கள் வந்து போன பின், அவர்கள் வராமலே இருக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு. நான் சிறு வயதில் கோழிக்கு அடை வைப்பேன். ஒரு தடவை 15 முட்டைகள் வைத்து 14 குஞ்சுகள் பொரித்தன. அந்தப் 14 குஞ்சுகளையும் தாய்க் கோழி கவனமாகப் பார்த்துக் கொண்டது. ஒரு நாள் தாய்க் கோழி மட்டும் படுத்திருந்தது. ஒரு குஞ்சுகளையும் காணவில்லை. குஞ்சுகளுக்கு என்ன நடந்தது என்று பதறிப் போய் தாய்க் கோழிக்கு அருகே போனேன். மெதுவாக செட்டைக்குள்ளிருந்து ஒரு குஞ்சு எட்டிப் பார்த்தது. 14 குஞ்சுகளும் உள்ளேயே இருந்தன. எப்படி ஒரு கோழியால் இது முடிகின்றது என்று ஆச்சரியமாகவே இருந்தது. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்து, வீட்டு முற்றத்தில் நின்ற மாமரத்தில் அவைகளாகவே பறந்து ஏற ஆரம்பித்தவுடன், தாய்க் கோழி குஞ்சுகளை மெதுவாகக் கொத்திக் கலைக்க ஆரம்பித்தது. அதுவும் ஆச்சரியமே. நான் விரும்பியே இங்கே வந்தேன் என்று நேற்று என்னைப் பார்க்க வந்தவருக்கும் சொன்னேன். அவர் அதை நம்பவில்லை என்பதும் எனக்குத் தெரிந்தது. ஆனாலும் எனக்கென்று ஒரு கடமை இருக்கின்றதல்லவா. 'நீங்கள் இனிமேலும் கஷ்டப்படாமல் போங்கள்............. நான் இருக்கும் வரை பிள்ளைகளுக்கு குறை குற்றம் எதுவும் வராமல், என்னால் முடிந்த வரை, பார்த்துக் கொள்கின்றேன்..................' என்று அவருக்கு ஒரு வாக்கும் கொடுத்து இருக்கின்றேன்.
  2. வினா 20) மழை காரணமாக பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் வழங்கப் படுகிறது. 1) அகஸ்தியன் - 40 புள்ளிகள் (95.24%) 2) ரசோதரன் - 38 புள்ளிகள் (90.48%) 3) ஏராளன் - 36 புள்ளிகள் (85.71%) 4) ஆல்வாயன் - 36 புள்ளிகள் 5) கிருபன் - 34 புள்ளிகள் 6) புலவர் - 34 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 34 புள்ளிகள் 8) வீரப்பையன் - 34 புள்ளிகள் 9) சுவி - 33 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 30 புள்ளிகள் 11) வாதவூரான் - 30 புள்ளிகள் 12) கறுப்பி - 30 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 30 புள்ளிகள் 14) வசி - 28 புள்ளிகள் 15) வாத்தியார் - 26 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 20, 32(1/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 42)
  3. யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு – விசேட தபால் தலை வெளியீடு written by admin October 18, 2025 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு சேவையை நினைவு கூர்ந்து, விசேட தபால் தலை (Commemorative Stamp) இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. அஞ்சல் திணைக்களத்தின் உதவி அஞ்சல் அத்தியட்சகர் நாயகம், வட மாகாண உதவி அஞ்சல் அத்தியட்சகர் நாயகம் மற்றும் அஞ்சல் துணைக் கிளை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த விசேட தபால் தலையை வெளியிட்டனர். அந்நிகழ்வில் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராசா , சி.சிறிதரன் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபன் , வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ,வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, 1850ஆம் ஆண்டு “ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை” என்ற பெயரில், அந்த காலத்திய அரசாங்க அதிபர் மற்றும், அவருடைய நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் நிறுவப்பட்டது. பின்னர், 1907ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலைக்கு “யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலை” என்ற புதிய பெயர் வழங்கப்பட்டு, அதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன. அதற்குப் பிறகு, 1956ஆம் ஆண்டு, இது “யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை” என மாற்றப்பட்டது. 1980ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலை “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை” (Jaffna Teaching Hospital) என பெயர் மாற்றம் பெற்று, அன்றிலிருந்து அதே பெயரில் தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், எதிர்காலத்தில் “தேசிய வைத்தியசாலை” (National Hospital) என்ற அடிப்படையில் இந்த வைத்தியசாலை உயர்த்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு சேவையை நினைவு கூர்ந்து, பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் வைத்தியசாலையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/221685/
  4. 🤣................ நீங்கள் சொல்வது சரியே, பையன் சார்.............. எங்களுக்கு போட்டி இன்னமும் முடியவில்லை, ஆனால் இலங்கை அணிக்கு முடிந்து விட்டது போல...............🤣. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் விளையாடி, ஆஸ்திரேலியா இந்தியாவை அடித்து துவைத்து காயப் போடும் என்று தான் நான் தெரிவு செய்திருக்கின்றேன். அப்படியே நடந்தால் அது உலகக் கோப்பை........... ஏதோ ஒரு வழியில் இந்தியா வென்றால், அது ஒரு ஊழல் கோப்பை என்று ஒரு சதிக் கோட்பாட்டை அவிழ்த்து விடுவதாக உள்ளேன். இப்போதைக்கு இந்த சதி விடயம் எங்களுக்கிடையில் மட்டுமே இருக்கட்டும்......................🤣.
  5. கைக்கூ வடிவில்... நீண்ட இடை வெளிக்குப் பின் "அன்பு இதயங்களை" சந்திப்பதில் மகிழ்வடைகின்றேன்.நன்றி ஐஸ் மழை கொட்டுகிறது நனைந்தவர்கள் எரிந்து சாகிறார்கள். “போதை” ************************************************* ஜாலியாக பஸ்களில் ஏறும் பிரயாணிகள் ஆவியாக்கி இறக்கப்படுகிறார்கள். “விபத்து” *************************************************** பட்ட மரமும் துளிர் விடுகின்றது பார்ப்பதற்கு யாருமில்லை. “முதியவர்கள்” ***************************************************** எரிவோம் என்று தெரிந்தும்நெருப்பை தலையில் கொட்டுகிறார்கள். “வடி” **************************************************** நச்சு மருந்து கடைகளாக மாறிவிட்டன “மரக்கறிச் சந்தை” ***************************************************** தற்போது காமத்துக்கே முதலிடம் கொடுக்கிறது. “காதல்” ********************************************************** பருவமழை பெய்யாவிட்டாலும் விதைக்கிறார்கள் “காமம்” ***************************************************** மீன் பிடிக்க வலைபோடுகிறார்கள்- அதில் தாங்களே மாட்டிக்கொள்ளுகிறார்கள். “இந்தியமீனவர்கள்” **************************************************** ஒழிந்திருந்தாலும் உன் வாழ்வை உயர்த்தும்,தாழ்த்தும் அளவுகோல். “நாக்கு” ***************************************************** பழய அரசுகளால் செயற்கையுரத்தை தடைசெய்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டது. “மனித எலும்புக்கூடுகள்” தொடரும்… அன்புடன்-பசுவூர்க்கோபி.
  6. சில கேள்விகள் - சில புரிதல்கள் ----- -------- ------ *13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா? * 2009 இற்குப் பின்னர் 13 ஐ கோருமாறு தமிழர்களை மாத்திரம் வற்புறுத்துவது ஏன்? *ஜெனிவாவின் மடைமாற்றல்! -------- --- ------ இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உரியது. 13 ஐ தமிழர்கள் நிராகரிக்கின்றனர் என்பது வேறு. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, தனது மனட்சாட்சியுடன் நேர்மையாக இயங்கினால், இனப் பிரச்சினை விவகாரத்தை 24 மணி நேரத்துக்குள் தீர்க்க முடியும் என்ற ஒரு பொதுக் கருத்து உண்டு. ஆனால் --- ஜேஆர் முதல் மகிந்த ரணில் வரையும் அதனை செய்யவில்லை. சமாதான தேவதை என்று மார்தட்டிக் கொண்டு வந்த சந்திரிகாவும் போரை நாடினார். இடதுசாரி - சோசலிசம் என்றெல்லாம் புனை கதை சொல்லி வந்த அநுர, இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமான 60/1 ஜெனிவா தீர்மானத்தைக் கூட நிராகரித்துவிட்டார்... ஆகவே ------ A) 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும். அல்லது அவர்கள் ஒத்துழைக்கிறார்கள் இல்லை என்று ஏன் இலங்கை அரசாங்கம் உலகம் எங்கும் சொல்லித்திரிய வேண்டும்? B) அதனை இந்திய ஏன் நியாயப்படுத்த வேண்டும்? அப்படியானால் ---- 13 இல் இருந்து மிக முக்கியமான அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு அல்லது அவர்களுடன் பேசப்பட்டதா? இல்லையே? 1) ஒரு இரவில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் மூலம், 15 இற்கும் மேற்பட்ட அதிகாரங்கள் தன்னிச்சையாக (Arbitrarily) மீளப் பெறப்பட்டிருக்கிறதே? 2) அதைவிடவும் இருக்கின்ற அதிகாரங்களை இயங்க விடாமல் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தடுக்கிறதே? இப் பின்னணியில் யதார்த்த அரசியல் பற்றிப் பேசும் சில போலியான முற்போக்குத் தமிழர்கள், 13 பற்றி தரும் விளக்கம் வேடிக்கையானது. நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட இன முரண்பாட்டை முப்பது வருட ஆயுதப் போராட்டத்துடன் சமப்படுத்தி போர்க் குற்றங்கள் - மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று மாத்திரம் ஜெனீவா வரையறை செய்திருக்கிறது... அது மாத்திரமல்ல --- ஒரு நாளில் அதுவும் ஒரு மணி நேர இடைவெளியில் நடைபெற்று முடிந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், முப்பது வருட ஆயுதப் போராட்டத்தையும் ஒரே தராசில் போட்டு, ஒட்டுமொத்தமாக தனி நபர் பொறுப்புக் கூறல் என்றும் ஜெனீவா வரையறை செய்வது தான் மாபெரும் அரசியல் வேடிக்கை... உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய விவகாரத்தை மற்றொரு நிகழ்ச்சி நிரலில் உட்புகுத்தி ஆராய முடியும். பொருத்தமான நிகழ்ச்சி நிரல் ஜெனிவாவில் உண்டு. ஆனால் அவ்வாறு செய்யாதது ஏன்? அத்துடன் ---- ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களின் மனித உரிமை மீறல் விவகாரம் எனவும், 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொருளாதார குற்றங்கள் எனவும், அதிகாரத் துஷ்பிரயோகம் - ஊழல் மோசடி எனவும், இனப் பிரச்சினை விவகாரம் சுருக்கப்பட்டுள்ளது. இந்த மடைமாற்றங்கள் --- ஈழத்தமிழர்களின் ”சுயநிர்ணய உரிமை” ”இன அழிப்புக்கான சர்வதேச நீதி” ஆகியவற்றுக்கு எதிரான சதி அரசியல் என்று தானே பொருள் கொள்ள முடியும்? புவிசார் அரசியல், குறிப்பாக இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் நோக்கில், அமெரிக்க - இந்திய அரசுகளை மையப்படுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின், இலங்கை குறித்த அணுகுமுறை உள்ளது. ஆகவே ----- ஜெனிவாவுக்கும் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கும் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என விருப்பினால்----- -------குறைந்த பட்சம் 13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களுக்கு கட்டளையிட முடியுமா?------ அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக 13 ஐ கோருமாறு, 2009 இற்குப் பின்னரான சூழலில் பலவீனமாகவுள்ள தமிழர்களை மாத்திரம் ஏன் வலிந்து இழுக்கிறார்கள்? அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid02zEDUjWq26S1UhUSbMU4QE1kQoQ8MFHDVaZo9eVZ5zciM76pRk1dK8mK8FJQZ5M8wl/?
  7. வரும் முன்பே விஜய்க்கு எவ்வளவு சனம் நிற்கிறது என்று தெரிந்து இருக்கும். காவல்துறை விஜயை எச்சரித்து இருக்கிறது. அதை மீறியே அவர் வலது புறமாக தான் போகவேண்டிய இடத்துக்கு சென்று இருக்கிறார். நீங்கள் சொன்னது போல தடை செய்திருந்தால் விஜயின் குரங்கு கூட்டம் பேயாட்டம் போட்டிருக்கும். அழிவுகள் பல மடங்காக இருந்து அத்தனைக்கும் அரசே காரணம் என்று முடிந்திருக்கும்.
  8. Mujeeb New se sent super bien à Trinquemalay, Province de l'Est, Sri Lanka. · தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி, ஒற்றைத் தாயின் மகள். அவளது அம்மா அவளை ரொட்டி வாங்க கடைக்கு அனுப்பினாள். அவள் திரும்பி வரும் வழியில், ஒரு அந்நியன் அவளை புகைப்படம் எடுத்தான். அந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. பொது அழுத்தத்தின் கீழ், ரொட்டி நிறுவனம் அவரை பிராண்ட் தூதராக மாற்றியது. அவரது புகைப்படம் இப்போது தென்னாப்பிரிக்கா முழுவதும் ரொட்டி விளம்பரப் பலகைகளில் உள்ளது. அதற்கு ஈடாக, தாய்-மகள் இருவருக்கும் இரண்டு அறைகள் கொண்ட வீட்டைப் பெற்றுக் கொடுத்ததுடன், பட்டப்படிப்பு வரை பெண்ணின் கல்விச் செலவை நிறுவனம் ஏற்கும். இப்படியும் நடக்கும் . ( புகைப்படத்தில் பதிவான ) ஒரு அற்புதமான தருணம் ஒருவரின் வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக மாற்றும் என்பதற்கான உதாரணம் . புகைப்படம் பிடிப்பாளர்களும் சாதாரணமானவர்கள் அல்ல பலம் வாய்ந்தவர்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் . ©mujeeb Voir la traduction
  9. புலிகள் புறக்கணித்த மாகாணசபையை நாமும் புறக்கணிப்போம் என்று கோஷம் எழுப்பினால் பாராளுமன்ற் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என று எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை. மக்கள் திரும்பிக் கூடப் பார்ககவில்லை. இனி இந்த தந்திரத்தை நம்புவது வேலைகாகாது கடைசியில் அதுவும் இல்லை இதுவும் இல்லை என்று இருக்காமல் ஜதார்த்தமக சிந்தித்து இரண்டு பதவிகளையும. பெறுவதே புத்திசாலித்தனமானது என்று இந்த முடிவுக்கு வந்தினர். தமது முதலுக்கு நட்டம் என்றால் மட்டும் இந்த தீவிர தமிழ் தேசிக்காய்கள் ஜதார்த்தமாக சிந்திப்பது வழமை தானே.
  10. கடைசி இடத்துக்கு வராமல் இருக்க போராடினாலே காணும்.
  11. 1 point
    அடுப்பங்கரையில் வைக்கப்பட்டிருக்கும், அதன் கழுத்தில் கயிறு கட்டப்பட்ட சாராய போத்தலில் சொர்ர்ர்ரென்ற சத்தத்துடன் கருப்பு தேநீர் ஊற்றப்படுகிறது. வாசலில் நிழல் அசைய அவள் தனது கையில் உள்ள தேநீர் சாயத்தை வேறு ஒரு ஜொக்கில் ஊற்றிகிறாள். சாரய போத்தலில் ஊற்றப்பட்ட சாயம் போத்தல் வாயில் வழியாக புகையை வெளியே பரப்பபுகிறது. சூடு ஆறி விட கூடாது என்பதால் அதை ஒரு சாரய மூடியில் இறுக்கமாக மூடுகிறாள் அவள். “தேயிலை துாளையா தராங்கங்க.. ஒரு மண்ணுக்கும் புரோஜம் படாது..தேயிலையே கெதினு கெடக்கும் நமக்கு எங்க நல்ல சாயம் கிடைக்கிறது..” அம்மாவின் சத்தம் கேட்டு அன்பரசு எழந்து வருகிறான். தேத்தண்ணிய ஆற்றியபடி அவனிடம் தருகிறாள். கூதல் காய அடுப்பில் மிலாறு தனலில் முன் கிடந்த பலாக்கட்டையில் அவன் உட்காந்து, பிளேன்டீயை உறிஞ்சி குடிக்கிறான். அதன் சுவை அவனுக்கு ஏதோ செய்ய அம்மாவிடம் திரும்பி. “அம்மாவோ.. தேத்தண்ணி கசப்பா இருக்ககும்மா.பால் டீ தாங்க..” ”அட போடா தம்பி.. பால் டீக்கு நான் எங்க போவேன்.. அப்பா ஸ்டோருலாதான் வேலை செய்யிது. … என்னத்துக்கு பிரயோஜம்.. ஒரு நாளாவது நல்ல தேத்தண்ணி குடிச்சிருப்பமா.” பச்ச தண்ணியில் முகப் கழுவிய குளிர் நடுக்கத்தில். கட்டியிருந்த சாரத்தில் முகத்தை துவட்டிக் கொண்டு அவள் கையில் இருந்த தேத்தண்ணிய வாங்கி குடித்தவன். முகம் கோணம் மாறியவனாக வாசலில் சென்று துப்பிவிட்டு. கெட்ட வார்த்தையில் தேத்தண்ணிய திட்டினான்.. “ராஜி..ஓய் ராஜி. அட என்னாப்பா செய்ற.. டைம் போச்சி..ஓடியா..போகலாம். “ செல்வராஜை அழைத்தப்படி பெருமாள் வாசலில் நிற்கிறான். ”ஏய் தேத்தண்ணி கொஞ்சம் ஊத்துப்புள்ள.” செல்வராஜ் பெருமாளை ஏக்கமாக பார்த்தவன். “ஆத்தா அய்யாவுக்கு அந்த தண்ணிய ஊத்து..” என்று நக்கலாக சொல்கிறான். அவள் சிரிப்பை அடக்க முடியாது மீதமாக இருந்த சாயத்தை பிளாஸ்டிக் ஜொக்கில் ஊற்றி பெருமாளிடம் தந்தவள்.. “மச்சான்.. குடிச்சிப்புட்டு ராங்கி பேச கூடாது-‘ பெருமாள் முகம் மாறும் என்ற எண்ணத்தில் அவர்கள் பார்க்க, ”த்து?” என்று துப்பிவிட்டு அவன் அவர்களை முறைக்க. அவள் உடனே, “இந்த மொறப்பு எல்லாம் ஒண்ணும் ஆகது மச்சான்…ஏமச்சான்… உனக்கு ஒரு பிடி தேயிலை துாளை கொண்டு வந்து தர துப்பில்ல. ஸ்டோரு பெக்டறியிலதான் வேலை ஆனால் சொணைய குடிச்சி குடிச்சி சொறனையே இல்லாம போயிருச்சி.” “நாம நட்டு நாம நம்ம பிள்ளளைகளை போல காத்து பார்த்து நட்ட தேயிலை நமக்கு சொந்தமில்லலை- அட்டை கடியில வேகாத வெயிலில மழையில நாம காலத்திற்கும் கஸ்டம் பட்டாலும் கடசியில நமக்கு அந்த கழிச்சி கட்டின சொணையதான் குடிக்கனும்.. தலைவரு மாறுக இதெல்லாம் கேட்க மாட்டாங்க… போ மச்சான் சாகுறதுக்குள்ள ஒரு நாளாவது நல்ல தேயிலை துாள்ள தேதண்ணி குடிச்சிடனும்.” செல்வராஜிம் பெருமாளும் அவள் உண்மையாகவே பேசுகிறாள் என்ற ஆதங்கத்தை உணர்ந்தவர்களாக அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்த பார்வையில் ஏதோவொன்று இருந்தது. இந்த தேயிலை ஆலையின் சத்தம் அவனுக்கு பழகி போயிருந்தது. ஆனாலும் இன்று அந்த ஆலையின் சத்தங்களை விட அவன் உள் மனதில் மனைவியின் ஆதங்கமான வார்த்தையின் சத்தம் அவனை சதா நேரமும் சங்கடமாக மாற்றியது. நினைவு தெரிந்த நாளில் இருந்து அவன் இந்த தேயிலை ஆலையின் தொழிலாளியாக இருக்கிறான். இதுவரை ஒரு நாள் கூட ஒரு பிடி தேயிலை அவன் அங்கே இருந்து திருடினது இல்லை, அவனுக்குள் ஏதோவொரு அறம் அவனை அப்படி செய்ய தூண்டியது இல்லை. அவன் அதைப்பற்றி யோசிப்பது கூட இல்லை. “மச்சான் என்ன யோசிக்கிற. நாம அந்த பெக்டறியில ஒரு பிடி தேயிலை துாளை எடுக்கிறது திருட்டு இல்ல மச்சான்.. கீலோ கிலோ அய்யா மாறுக திடுடுறாங்க… ஆனால் நாம கொஞ்சோண்டு எடுக்கறது குத்தம் இல்ல. அது நமக்கு உள்ள உரிமை மச்சான்..” பெருமாள் சாக்கு மலையயை கடந்து வரும் போது சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது. எப்படியோ அவன் மனது ஒரு தீர்மானத்திற்கு வந்தது. ஆனாலும் அவனுக்குள் உள்ள ஒருவன் வேண்டாம், இதேல்லாம் நல்லது இல்லை. நேர்மையா இருந்திட்டு போயிருனும் தம்பி. தனது தகப்பன் பேசும் நீதி கதைகளை நினைத்து கொண்டான் அவன். அதிகாலையின் குளிரான வேளையில் அவர்கள் இருவரும் நெருக்கமாக படுத்திருக்கிறார்கள். அருகில் சிறுவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.. அவள் சிணுங்கும் குரலில்.. “மச்சான்….” “ம்..” ”லேபர் டஷ்ட்டுனா என்னா மச்சான்..?” ”சொணதான் டஷ்ட்டு தேயிலை.. கழிவுதான் அது..” ”நாம குடிக்கும் டீ. கழிவுதான்..” ”நமக்கெல்லாம் தொறமாறு குடிக்கிற தேயிலை கிடைக்காதா.. நாம என்ன நாக்கு செத்த ஜென்மங்களா.. எப்ப மச்சான் நாமளும் அது மாதிரியான தேத்தண்ணியை குடிப்போம்..” என அவனது காதுகளில் முணுமுணுக்கிறான்.. வெறித்த பார்வையோடு மோட்டுவளையை பார்த்து அவன் படுத்திருக்கிறான். இருண்ட திரையில் கதவு திறக்கும் ஒலி கேட்கிறது. மெல்லிய காலை பொழுது கதவின் ஊடாக வீட்டுக்குள் வெளிச்சம் பாய்ச்சுகிறது. மெல்ல முன்பு நகர்ந்து வாசலின் ஊடாக அப்படியே தேயிலை தோட்டம் நிரம்பி ததும்பும் மலைவெளியில் பரவுகிறது. மஞ்சு மூட்டங்கள் தூரத்து சிகரங்களில் தழுவ, அப்படியே அந்த அதிகாலை நேரத்து மலைப் பிராந்தியத்தை மெல்ல வலம் வருகிறது. தொலைவில் வெள்ளை வண்ணம் பூசப்பட்ட அந்த தேயிலை தயாரிப்பு ஆலை அமைந்திருப்பது தெரிகிறது. அப்படியே வெண்பனியின் ஊடாக குளிர் கொட்டி கிடக்கின்றது, வெண்மை பரவுகிறது வாசல் சுதவை திறந்து கொண்டு செல்வராஜ் வெளியில் வருகிறான். தூக்க கலக்கத்தில் வெளியே வரும் அவனது மனதில் ஏதோவொரு விரக்தி தெரிகிறது. வீட்டுக்கு முன்புறம் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் இருந்த நீரை எடுத்து வாயை கொப்பளித்து, முகத்தை கழுவி ஆசுவாசமடைகிறான்.. அப்படியே தோளில் போட்டிருந்த புதிய துண்டால் முகத்தை துடைத்தபடியே அண்ணாந்து வானத்தை பார்க்கிறான். அருகில் மரங்களின் ஊடாக பாயும் வெளிச்சம் அவனது முகத்தில் ஒளி கோடுகள் தீட்டுகிறது. அவன் அண்ணாந்து பார்க்கையில் வானத்தில் மேகங்கள் அலைகின்றன.காலை நேர வெளிச்ச ரேகைகள் அப்படியே மஞ்சள் நிறத்தில் ஒளிர்கின்றன. லயத்தின் ரேடியோ சத்தம் பேச்சி சத்தம், காலை நேர பரப்பரப்பு தெரிகிறது. இன்றைய பொழுதாவது நல்லபடியா விடியனும் என மனதுக்குள் முணுமுணுத்தபடியே வாசலை நோக்கி திரும்பி நடக்கிறான். இதற்கிடையில் வீட்டுக்குள்ளிருந்து அன்பரசு படியிலிருந்து இறங்கி வலப்புறமாக ஓடுகிறான். வீட்டின் அழுக்கு படிந்த மங்கிய நிறம் கொண்ட சன்னலில் இருந்து அடுப்பின் புகை ஒரு பாம்பை போல வளைந்து நெளிந்து மெல்ல வெளியே பரவுகிறது. ஏக்க பெருமூச்சை விட்டபடியே அப்படியே அக்காடவென வாசலில் வந்து அமர்கிறான். அவன் லேசாக வலது புறம் திரும்ப, அங்கே சிறுவன் விட்டிலோ அல்லது வண்ணத்துப்பூச்சியோ எதுவோ பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் மறுபடியும் மகன் ஏதோ விளையாடுகிறான் என்று நினைக்க திரும்புகையில் அவள் வந்து பிளாஸ்டிக் ஜொக்கில் கருப்பு தேனீரை கொண்டு வந்து வைக்கிறாள். “டேய் அன்பரசு இங்க வா.” என சிறுவனை அழைத்தபடியே மீண்டும் உள்ளே சென்று மறைந்து விடுகிறாள். அவன் அந்த தேநீரை வெறித்து பார்க்கிறான். அவன் நினைவு மெல்ல தேநீரை நோக்கி குவிகிறது. காலையில் அவனது காதுகளில் கிசுகிசுத்த எப்ப மச்சான் நல்ல தேத்தண்ணிய நாம குடிக்க போறோம்– என்ற அவளது குரல் எதிரொலிக்கிறது. அவன் தேநீரை எடுத்து பருகியதும், அதை மீண்டும் மனதுக்குள்ள சொல்லியபடியே அடுத்த வாய் பருகுகிறான். சிறுவனும் திடுதிடுவென வீட்டுக்குள் ஓடுகிறான். படியில் குடித்து முடித்த காலி ஜொக்கை வைக்கிறான்…அப்படியே அந்த மஞ்சல் நிற ஜொக்கை பார்த்தப்படி உட்காந்திருக்கிறான். அரையின் இருட்டிலிருந்து டப்பென்ற ஓசையுடன் பெட்டி மூடிகிறது… சிறுவன் கையில் எதையோ எடுத்துக் கொண்டு வெளியில் ஓடுகிறான். அவனது கையில் மறைத்து வைத்திருக்கும் டொபி காகிதத்தால் தனது ஒரு கண்ணை மறைத்துக் கொண்டு அப்படியே சுற்றி சுற்றி பார்க்கிறான்…சிவப்பு வண்ணத்தில் அந்த தேயிலை தோட்டமும், மலை பிராந்தியமும், வீடும், கட்டிடங்களும் சுழன்று சுழன்று வருகின்றன அன்பரசு கையில் உள்ள டொபி தாள்கள் அடர் பிரவுண் நிற திரையாக மாற்றி மாற்றி மெல்ல பின்னோக்கி நகர்கிறது. சாராய போத்தலில் ஊற்றப்பட்ட கருப்பு தேநீர் அடுப்பங்கரையில் வைக்கப்பட்டிருக்கிறது. சாராய போத்தல் இப்போது அன்பரசு பார்வையில் நீல வண்ணமாக தெரிகிறது. அன்பரசை அந்த தோற்ற மாற்றம் ஒரு பரவச நிலைக்கு கொண்டு செல்கின்றது, செல்வராஜ் சட்டையை சரி செய்த படி மாட்டுகிறான். அவள் கண்ணாடியை பார்த்து தனது முகத்தை சரி செய்து கொள்கிறாள்…தலைக்கு போடும் முக்காட்டு துணியை எடுத்துக் கொள்கிறாள். அவனும் சாரத்தை மடித்து கலுசன் தெரியும் வகையில் கட்டிக் கொள்கிறான். இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை வெயில் மெல்ல ஏறிக் கொண்டிருக்கிறது. அந்த கருப்பு தேநீர் ஊற்றப்பட்ட சாராய போத்தலை எடுத்துக் கொண்டு இருவரும் வெளியில் கிளம்புகின்றனர். இருவரும் வெளியில் வந்து கதவை பூட்டப் போகும் நேரத்தில் சிறுவன் இருவரையும் இடித்துக் கொண்டு உளளே ஓடிப் போகிறான். பெட்டியை திறந்து சில பொருட்களை எடுத்து தனது கால்சட்டை மற்றும் சட்டை பைகளுக்குள் திணித்துக் கொள்கிறான். அன்பரசு மற்றொரு டொபி காகிதத்தால் பார்த்தபடியே நடந்து செல்கிறான. முற்றிலும் மாறுபட்ட வண்ணத்தில் அந்த மலை பிராந்தியம் ஒளிர்கிறது. செடிகள், மரங்கள் அனைத்தும் முற்றிலும் வேறு வண்ணத்தில் காட்சி அளிக்கின்றன. அங்குள்ள அனைத்துமே மாறுபட்ட வண்ணத்தில் தெரிகின்றன. அது மெல்ல மெல்ல ஊஞ்சாலாடியபடியே அந்த காட்சி செல்கிறது. அன்பரசின் பார்வையில் அது ஒரு சினிமா திரை போவே உள்ளது. அன்பரசு கடந்த இரண்டு நாட்களாகவே பாடசாலை போவில்லை. இன்று வெள்ளிக்கிழமை அவன் வீட்டில் இருக்கட்டும் என்று அம்மாவும் சரி என்று சொல்லி விட்டாள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவன் எப்போதும் தேயிலை மலையில் அப்பா வேலை செய்யும் டீ பெக்டறி பக்கம்தான் விளையாடுவான். இன்று அவன் தனியாகதான் விளையாட வேண்டும். கூட்டாளிகள் எல்லாம் ஸ்கூல் போய்விட்டர்கள். செல்வராஜிக்கு இருப்பது ஒரே மகன் இவன் மட்டுமே. அன்பரசு தான் வழமையாக விளையாடும் சைக்கிள் ரிம்மை விறகு காம்ராவில் இருந்து எடுத்துக் கொண்டான். அவர்கள் மூவரும் ஒற்றையடி பாதையில் நடந்து தார்ரோட்டில் நடக்க தொடங்கினார்கள். அன்பரசின் சைக்கிள் ரிம் சத்தம் மலைப்பகுதியில் ஒலிக்க தொடங்கியது. அவன் உற்சாகமாக சைக்கிளை செலுத்தினான். அந்த சத்தம் அவனுக்குள் கிளர்ச்சியை தந்தது. வெயில் நன்றாக ஏறிவிட்ட பொழுதில் தேயிலை தோட்டத்தின் மலைச் சரிவுகளில் மேடும் பள்ளமுமாக வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளில் இரண்டு பேரும் நடக்கிறார்கள். அவர்களை அன்பரசு பின் தொடர்கிறான் சைக்கிள் ரிம்முடன்.. அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு இழுக்க மாட்டாத குறையாக வெறுக் வெறுக் கென அந்த பிராந்தியத்தை வெற்று கால்களால் கடந்து கொண்டிருக்கின்றனர்., பாதை பிரியும் ஓரிடத்தில் நிற்கிறது. இருவரும் ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல் இடமும் வலமுமாக பிரிந்து நடக்கிறார்கள். தேயிலை தயாரிப்பு ஆலையை நோக்கி அவன் நடக்கிறான். அவனுடன் அன்பரசும் கூடவே செல்கிறான். கொழுந்து பறிக்கும் மலைச் சரிவை நோக்கி அவள் நடக்கிறாள். செல்வராஜ் பெக்டறி வாசலில் காலலுக்கு நிற்கும் சிவாவிடம் அன்பரசை பார்க்க சொல்லி விட்டு உள்ளே செல்கிறான். அன்பரசு தேயிலை கழிவுகள் கொட்டப்படும் சொணை உள்ள பகுதியில் வண்டியை ஓட்டி விளையாடுகிறான்.அங்கே தேயிலை ஆலையில் கழிவுகளாக ஒதுக்கப்பட்ட தேயிலை சொண மலை போல கொட்டப்பபட்டு கிடக்கிறது. அதன் நறுமனம் சுகமாக இருக்கின்றது. அதன் ஈரகசிவு தரையில் வழிந்து போனதன் அடையாளங்கள் அங்கே தெரிகின்றது. பயங்கர சத்தத்துடன் தேயிலை தயாரிப்பு கூடம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்கள் பரபரவென வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். லாரியில் வந்து கொழுந்துகள் கொட்டப்படுகின்றன. தரம் பிரிக்கப்படுகின்றன…உலர வைக்கப்படுகின்றன. வகை பிரிக்கப்படுகிறது. தனித்தனியாக அரவைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவற்றின் ஊடாக அவன் வேலை செய்து கொண்டே பக்கவாட்டில் அடிக்கடி திரும்பி திரும்பி பார்த்துக் கொள்கிறான். மிகவும் உயரிய ரக தேயிலை தயாரிக்கும் அந்த எந்திரம் ஒடிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து வரும் இசை லயமிக்க ஒலியும், வாசனையும் அப்படியே அவனை மெய் மறக்கச் செய்கின்றன.. அதையே வெறித்து பார்க்கிறான். திடீரென அலறல் சத்தம் கேட்கிறது.. சத்தம் கேட்ட திசையை நோக்கி தொழிலாளர்கள் அனைவரும் ஓடுகின்றனர். கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவனும் ஓடுகிறான். அங்கே கையில் ரத்தம் சொட்ட சொட்ட சக தொழிலாளி வலியால் துடித்தபடி நிற்கிறான். ஆனால் கொழுந்து ஏற்றும் லொறி அவசர நேரத்தில் இல்லாத போது. அவன் வாசலில் தேயிலை பெட்டிகளை கொழும்புக்கு ஏற்றும் சிங்கள டைவர்கள் பரபரப்பாக நிற்க. செல்வராஜ் முறைப்பாக டிமேக்கரை பார்த்துவிட்டு காயம் பட்டவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக அங்கும் இங்கும் பரபரப்பாக ஓடுகிறான் — ஆனால் வேறு வாகனம் ஏதும் கிடைக்காத காரணத்தால் அங்கு ஓரமாக நிற்கும் சிவாவின் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அவன் காயப்பட்டவனுடன் செல்கிறான்.. வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலையில் வேர்க்க விறுவிறுக்க செல்வராஜ் ஆட்டோவை செலுத்துகிறான். விரல்கள் துண்டிக்கப்பட்ட ரத்த கறை படிந்த கையின் மீது மருந்து தடவி வெள்ளை நிற பாண்டேஜ் கட்டப்படுகிறது. அங்கு ஆஸ்பத்திரியில் டாக்டர் இவர்களை இரக்கத்துடன் பார்த்தபடி சிகிச்சை அளிக்கிறார். இவ்வளவு லேட்டாவாவே வருவீங்க. என கண்டிக்கும் குரலில் இனிமையாக கேட்கிறார். இருவரும் உறைந்த மவுனத்துடன் நிற்கின்றனர். தரையில் ரத்தம் சிந்திய இடத்தை சிப்பந்தி ஒருவன் துடைக்கிறான் தொலைவில் மலையில் தூரத்து சரிவுகளில் அவள் உள்பட பலர் கொழுந்துகளை பறித்து தங்களது முதுகுப்புறம் தொங்கவிட்டுள்ள கூடையில் போட்டப்படி இருக்கின்றனர். தங்களுக்குள் பேசியபடியும், பாடியபடியும் வேலையில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. அவள் கொழுந்து பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறாள். அவளும் சக பெண்களும் கொழுந்து பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது யாரோ ஒருவர் பார்த்து வேலை பாருங்கள், பயங்கரமா அட்டைப் பூச்சி இருக்கு என்று எச்சரிக்கின்றனர். ஆமா அக்கா என்று இவள் பதில் அளிக்கும் போதே யாரோ அலறும் சத்தம் கேட்கிறது. அனைவரும் போய் பார்க்கிறார்கள்.. அவளை மறைவாகக் கொண்டு சென்று அட்டையை எடுத்து போடுகிறார்கள். கொழுந்து இலைகளின் மீது ரத்தம் படிகிறது. அதை ஏதோ ஒரு கை பறித்து கூடைக்குள் போடுகிறது. அவன் உள்பட சக பணியாளர்கள் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். தற்போதும் அவன் அந்த உயரிய தேயிலை எந்திரத்தை வெறித்து பார்க்கிறான். லாரிகளில் கொழுந்து இலைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். ஒரு தேயிலையில் உறைந்த ரத்தம் இருக்கிறது.-கொட்டிய தேயிலைகளை அள்ளி தேயிலை அரைக்க மூடைகளில் கொண்டு செல்கிறார்கள். எந்திரத்தின் அருகே அவன் வேலை செய்து கொண்டிருக்கும் போது ரத்த கறை படிந்த அந்த தேயிலை அவளை கடந்து எந்திரத்துக்குள் செல்கிறது. அதை அவன் கவனிக்க வில்லை. சுற்று முற்றும் பார்த்தபடியே மெல்ல உயரிய தேயிலை ரக எந்திரத்தை நோக்கி மீண்டும் அவன் நடக்கிறான். யாரும் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு இரு கைகளாலும் தேயிலையை அள்ளிக் கொண்டு சட்டையின் கை மடிப்புகளில் மறைக்க முயற்சிக்கிறான். அப்போது யாரோ வரும் சத்தம் கேட்கவே கையை உதறிக் கொண்டு அங்கிருந்து சற்று நகர்ந்து வேறு திசையில் திரும்ப முயலும் போது எதிரில் டிமேக்கர் அய்யா வந்து நிற்கிறான். அய்யாவை கண்டதும் இவனுக்கு வேர்த்து கொட்டுகிறது. அவனை கண்டதும் அய்யாவின் முகம் கடுகடுப்பாக மாறுகிறது. பயங்கரமாக கெட்ட சொற்களால் அவனை ஏசுகிறான். அங்கே மற்றவர்கள் கூடி விடுகின்றனர். இன்னொரு தரம் இப்படி செஞ்ச போலிஸில் பிடித்து கொடுத்து விடுவேன் என மிரட்டுகிறாள். அனைவரும் அவளை கூடி கேலியும் இரக்கமுமாக பார்க்கின்றனர். அவன் அப்படியே அவமானத்தால் கூனி குறுகி நிற்கிறான். அவள் வேகமாக மலைப் பாதைகளில் நடந்து வருகிறாள், அப்படியே வெறித்து பார்த்தவளாக நடந்து வந்தவள் ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்து வெறித்து பார்க்கிறாள். பின்னர் குலுங்கி குலுங்கி அழுகிறாள். இயற்கை அப்படியே அசைவற்று அவளை நோக்குகிறது. பின்னர் சற்றெக்கெல்லாம் ஆசுவாசமடைந்து வீட்டை நோக்கி நடக்கத் தொடங்குகிறாள். மதுபானக்கடையிலிருந்து வெளியில் தள்ளாடியபடியே வெளியில் வருகிறான் அவன். “டேய்..எங்களுக்கெல்லாம் நல்ல டீ குடிக்க வக்கில்லையாடா.. நாங்களும் மனுசங்கதானடா.” என்றபடியே… ஏதேதோ புலம்புகிறான்…அப்படியே சாலையின் ஓரத்தில் போதையில் சரிந்து விழுகிறான், அப்போது உயரிய தேயிலை ரகங்களை ஏற்றிக் கொண்டு நகரங்களுக்கு விரையும் லாரிகள் அவனை கடந்து செல்கின்றன.. மூன்று பேரும் படுக்கையில் படுத்து கிடக்கின்றனர். அவள் இடது புறமும், இவன் வலது புறமும் நடுவில் மோட்டு வளையை பார்த்தபடி சிறுவனும் படுத்து கிடக்கின்றனர். சிறுவன் தனக்கு தானே ஏதோ பேசிய படியும், கதை சொல்லிய படியும் தூங்க முயற்சிக்கிறான். காட்சியில் இருள் பரவுகிறது. இருட்டில் கதவு தடதடவென தட்டப்படும் ஓசை கேட்கிறது.” மச்சான்.. வெளியில் வாய்யா…ஒரு செமத்தியான விருந்து… யோவ் மச்சான்…”இவன் தூக்க கலக்கத்தில் எழுந்து சென்று கதவை திறக்கிறான். அப்படியே வெளிச்ச வெள்ளம் வீட்டுக்குள் பாய்கிறது. வெளியிலிருந்து தேவதூதன் போல தோன்றச் செய்யும் வகையில் அந்த வெளிச்ச வெள்ளத்தின் ஊடாக அவனது சக பணியாளன் வருகிறான்.. இவனை கையை பிடித்துக் கொண்டு இழுத்து செல்லாத குறையாக அழைத்து செல்ல முயல்கிறான். சட்டையை அணிந்ததும், அணியாததுமாக அவனுடன் கிளம்பி செல்கிறான். அந்த மலை பிராந்தியமே மிகவும் அற்புதமாக ஜொலிக்கிறது. நாம் இத்தனை நாளாக பார்க்கும் மலை தானா இது என்பது போல அதிசயமாக அதை பார்க்கிறான்…வந்தவன் அங்கிருந்து அவனை அங்குள்ள துரையின் மாளிகைக்கு அழைத்து செல்கிறான். மேலாளர் மாளிகை அப்படியே பங்களா போல ஜொலிக்கிறது. உயர் ரக பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மிகவும் நளினமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு விருந்து தயார் செய்யப்பட்டுள்ளது. சீருடை அணிந்த நட்சத்திர பணியாளர்கள் அனைவருக்கும் மிகவும் பணிவாக விருந்து பரிமாறுகின்றனர். அந்த உயரிய ரசு தேநீருக்காக இவன் ஆவலுடன் காத்திருக்கிறான். அவளை நோக்கி தேவதைகள் போல வரும் அவர்கள் மிகுந்த வேலைப்பாடு கொண்ட கண்ணாடி கோப்பையில் தேநீரை ஊற்றுகின்றனர். திராட்சை ரசத்தை நினைவு கூறும் விதமாக அதனை வியந்து பார்த்தபடியே எடுத்து பருகுகிறான். வீடு திரும்பும் வழியில் பறவைகள் ஆனந்த ஒலி எழுப்புகின்றன. மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மலை முகடுகளை மேகங்கள் முத்தமிடுகின்றன. ஓடை இசையோடு சலசலத்து ஓடுகிறது. இவனது கையில் மேலாளர் கொடுத்த பையில் மனைவி மற்றும் குழந்தைகளுக்கான துணிகள், பரிசு பொருள்கள் கனக்கின்றன. அவளது நடையில் உற்சாக துள்ளல் மிளிர்கிறது. அணில் தாவி ஓடி மரத்தின் மீது ஏறி இவனை பார்க்கிறது. வெட்டுக்கிளிகள் கிறீச்சிடுகின்றன. அவன், அவள், சிறுவன் 3 பேரும் சிறிய டூர் செல்கின்றனர். வெளிப்புறத்தில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டு, உயரிய உணவுகளை சாப்பிடுகின்றனர். அருகில் விலையுயர்ந்த பொம்மைகளை, சிறு வண்டிகளை வைத்துக் கொண்டு சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. நெருப்பின் சிவந்த ஒளியில் அவளது முகம் ரத்தினமாய் ஜொலிக்கிறது. ஒரு வகை வசீகரம் அவளது முகத்தில் தெரிகிறது. மெல்ல அவனது கை வந்து அவளது தோளை அழுத்துகிறது. அவள் விரகத்தில் புன்முறுவலித்தபடியே நிமிர்ந்து அவனை பார்க்கிறாள். தொலைவில் புத்தாடை அணிந்த சிறுவன் மகிழ்ச்சியாக உறங்கிக் கொண்டிருக்கிறான்.. அவனது வீடு அப்படியே மிகவும் கலை ரசனையுடன் வண்ணப்பூச்சில் ஜொலிக்கிறது. ஜன்னல்களில், சுவரில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. வீட்டின் முற்றம் மிகவும் சுத்தமானதாக உள்ளது. தண்ணீர் தொட்டி வெள்ளை வண்ணம் பூசப்பட்டு புதிதாக மிளிர்கிறது. வீட்டின் மீது ஓட்டு கூரையின் மீது அமர்ந்து அதை சரி செய்து கொண்டிருக்கிறான். அவ்வப்போது திரும்பி அவளை காதலுடன் பார்த்தபடியே பணியில் ஈடுபட்டிருக்கிறான்… அவ்வாறு ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு கையை ஓட்டின் மீது வைக்கப் போக, தடுமாறி மேலிருந்து தடால்புடாலென் கீழே விழுகிறான். சடசடவென சத்தம் கேட்கிறது. வியர்த்து விறுவிறுத்து தூக்கத்திலிருந்து எழுந்து அமர்கிறான். அவனை சுற்றிலும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. திக் பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருக்கிறான். கதவு தட்டப்படும் ஒலி கேட்கிறது. அவன் கண்டது எல்லாம் கனவு என்று ஏற்றுக்கொள்ள வெகு நேரம் அவனுக்கு தேவைப்படுகிறது. வியர்த்து விறுவிறுத்து தூக்கத்திலிருந்து எழுந்து அமர்கிறான். அவனை சுற்றிலும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. திக் பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருக்கிறான். கதவு தட்டப்படும் ஒலி கேட்கிறது. எழுந்து சென்று கதவை திறக்கிறான். உன்னை தொரை பங்களாவில் பைப் ரிப்பேர் பார்க்க வரச் சொன்னார் என்கிறான் வந்தவன். முன்பு அவனை விருந்து அழைத்துச் செல்ல வந்த அவனே தற்போதும் வந்திருக்கிறான். இவன் திரும்பி பார்க்கிறான். சற்றே விழித்த நிலையில் அவளும், அரைகுறை உறக்கத்தில் சிறுவனும் படுக்கையில் புரண்டு கொண்டு இருக்கிறார்கள். சட்டையை அணிந்தபடியே அவனுடன் சேர்ந்து அந்த வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் நடந்து செல்கிறார்கள். மேலாளரின் வீட்டின் பின்புறம் மழை நீர் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டபடியே அந்த வீட்டை நோட்டமிடுகிறான். அந்த வீட்டம்மாள் உயரிய தேநீரை அவரது கணவரான மேலாளருக்கு ஊற்றி கொடுக்கிறாள். அவர் முன் புற அறையில் உள்ள மேஜையின் மீது வைத்து விட்டு கணக்கு வழக்குகளை பார்த்தபடியே தேநீரை உறிஞ்சி குடிக்கிறார். அந்த ஒலி அவனை தொந்தரவு செய்கிறது. குழாயை டம்டம்மென்று போட்டு அடிக்கிறான். ணங்ணங் என்ற அந்த ஒலி அந்த பிராந்தியம் முழுவதும் சுழல்கிறது. சத்தம் தாங்காமல் முகத்தை சுளித்துக் கொண்டே மேலாளர் தேநீரை பருகுகிறார். இடையில் எழுந்து வந்து இவனை முறைத்து பார்த்து விட்டு செல்கிறார், அப்போது எங்கிருந்தோ வந்த டிமேக்கர் அய்யா, மேலாளர் காதில் ஏதோ கிசுகிசுக்கிறார். இதை கேட்டதும் பதறி அடித்துக் கொண்டு மேலாளர் அங்கிருந்து ஓடுகிறார். சத்தம் கேட்டு எட்டி பார்த்த இவன் வாசலுக்கு வந்து முன் அறையை பார்க்கிறான். அங்கே மேஜையில் மேலாளர் பாதி குடித்த தேநீர் கண்ணாடி குவளையில் தளும்பிக் கொண்டிருக்கிறது. இவனது மனம் ஊசலாட்டத்தில் ஆடுகிறது. மெல்ல அந்த கண்ணாடி குவளையை நோக்கி செல்கிறான். அந்த பாதி நிரம்பிய தேநீர் குவளையை நோக்கி குவிகிறது. மெல்ல அருகில் சென்று அதை எடுத்து குடித்து விடலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் அதை பார்த்தபடியே திக் பிரமை பிடித்தவன் போல நிற்கிறான். அப்போது அந்த அம்மாளின் குரல் கேட்கிறது. சட்டென சுயநினைவு வந்தவனாக தனது கையில் இருக்கும் எச்சில் கோப்பையை அருவருப்புடன் பார்க்கிறான். ஒரு கணம் முகம் அப்படியே சுருங்கி கருத்துவிடுகிறது. கோப்பையை டக்கென மேஜையில் வைத்து விட்டு, அந்த மாளிகையை பார்க்கிறான். மாளிகை பேய் மாளிகை போல இருண்டு தெரிகிறது. அவமானத்தால் குன்றி வெளியே வருகிறான். வானம் கருத்து அந்த மாளிகையின் மேற்புறத்தில் வானத்தில் மேகங்கள் திரள்கின்றன. அப்படியே திடும்மென இடியும் மின்னலும் வெட்டி சரிகின்றன. சற்றைக்கெல்லாம் மழை வெடித்து கிளம்புகிறது. அப்படியே இறுகிய அவமானமுற்ற மனதுடன் மழையில் நனைந்தபடியே மலைப்பாதைகளில் விறுவிறுவென நடந்தபடியே வீட்டை நோக்கி நடக்கிறான். மழை விடாமல் பெய்கிறது. இவன் வீட்டை நெருங்கும் வேளையில், பக்கத்து வீட்டிலிருந்து தேயிலை இரவல் வாங்கிக் கொண்டு மழையில் மெலிதாக நனைந்தபடியே அவள் வீட்டுக்கு வருகிறாள். இவன் அப்படியே இறுக்கமான முகத்துடன் வாசலில் அமர்ந்து மழையை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவள் இவனை விநோதமாக பார்த்தபடியே வீட்டுக்குள் செல்கிறாள். அடுப்பில் தேநீர் தயாராகும் ஒலி கேட்கிறது. தலையை துவட்டுவதற்காக லுங்கியை கொண்டு வந்து கொடுத்து விட்டு போகிறாள் அவனருகில் கிடக்கும் லுங்கியுடன் தலையை துவட்டாமலேயே அவன் வெறித்து பார்த்தபடியே இன்னும் இருக்கிறான். அவள் வழக்கம் போல தேனீரை தயாரித்து கொண்டு வந்து வாசல் படியில் வைக்கிறாள். இவனை ஒருமாதிரி பார்த்து விட்டு மீண்டும் போய் விடுகிறாள். கருப்பு தேநீரை வெறித்து பார்த்தபடியே அதை எடுத்து ஒரு மிடறு பருக முயற்சிக்கிறான். முகம் மாற்றம் அடைந்து தூவென.. துப்புகிறான்.. குவளையை ஆத்திரத்தோடு தூர வீசி எறிகிறான். அவனது உறைந்த முகத்தில் கோபம் இயலாமை தெரிகிறது. மறுநாளும் மேலாளரின் வீட்டில் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளான். என்ன செல்வராஜ்.. வேல எல்லாம் முழுசா முடிஞ்சிருச்சா என்று கேட்டபடியே மேலாளர் வீட்டுக்குள் சென்று தனது மனைவியிடம் ஏதோ கிசுகிசுக்கிறார். சிறிது நேரத்தில், யேய் செல்வம் இங்க வா.. இந்த தேத்தண்ணிய குடிச்சுட்டு வேலய பாருல, இது சாதாரண டீ இல்லல..ஹைகிளாசு..வாழ்க்கை ஒருவாட்டியாவது நீறு குடிச்சிருப்பயாடே குடிச்சுப் பாரு”அப்படியே சொர்க்கத்துக்கு போய்ருவ– அவனது கண்களில் ஆர்வமும், தாகமும் ஒருசேர மின்னுகிறது. வெள்ளை நிற தகர குவளையில் ஊற்றப்பட்ட அந்த கருப்பு தேநீரை பருகுகிறான்— அவனது கண்கள் அப்படியே சந்தோஷத்தில் மலர்கிறது. முகம் பிரகாசமாக ஜொலிக்கிறது. வீட்டுக்குள் கால் நீட்டி அமர்ந்திருக்கிறான். அவள் அடுப்பில் ஏதோ வேலையாக இருக்கிறாள்–நிஜமாத்தான்டி சொல்ரேன்..நம்ம புள்ளதாண்ட ஆணை, என்றபடியே அந்த ஆளு என்ன வீட்டுக்குள்ள கூப்பிட்டு அந்த நல்ல டீய கொடுத்தாருடி அவள் எழுந்து வந்து அவனது அருகில் அமர்ந்து கொள்கிறாள் என்னய்யா எப்டிய்யா இருந்துச்சு அந்த தேத்தண்ணீ நம்மத விட ரொம்ப ருசியா இருந்துச்சுய்யா.. சொல்லுய்யா.. என சிணுங்கினாள்.. அது டீ இல்லடி ” அமுதம்.. அதோட பார்த்த நம்ம வீட்டு டீ கழனி தண்ணிய வீட மோசம்.. என்ன செய்ரது கால கிரகம் இல்லாட்டி நாம வாங்கி வந்த வரம்— இதெல்லாம் எப்போ மாறும்னு தெரியல என கவலை தோய்ந்த முகத்துடன் சொல்கிறாள்.. அவளும் அவனது வாடிய முகத்தை கண்டு கவலை கொள்கிறாள்.நம்ம மகனுக்கு அது கிடைக்கும்மாய்யா.. என தனது ஆசையை மறைத்துக் கொண்டு குழந்தையின் பேரை சொல்லி தனது கோரிக்கையை வைக்கிறாள். அவன் ஆயாசத்துடன் பெருமூச்சு விடுகிறான். அப்படியே வெளிவாசலை பார்க்கிறான். காலை நேரம். மூன்று பேரும் கிளம்பி செல்கின்றனர். வழக்கம் போல செல்லும் பாதையில் வளைந்து நெளிந்து நடந்து செல்கின்றனர். இன்றைக்கு உச்சிக்கு வேலைக்கு செல்வதால், அவனுடன் சிறுவனை அழைத்துச் செல்லும்படி சொல்கிறாள். தந்தையும் மகனும் இப்போது இடது புறமாகவும், அவள் வலதுபுறமாகவும் பிரிந்து நடக்கின்றனர். தேயிலை தயாரிக்கும் ஆலை. வளாகத்தில் ஒரு இடத்தை காண்பித்து அங்கேயே விளையாடும்படி சிறுவனிடம் சொல்கிறான். சிறுவனும் புது இடம் என்ற மகிழ்ச்சியில் உற்சாகமாக தலையாட்டுகிறான். பரபரவென வேலைகள் நடந்தேறுகின்றன. சிறுவன் தனது லென்சால் அங்குள்ளவற்றவை உருப்பெருக்கி பார்த்து விளையாடிக் கொண்டிருக்கிறான். இம்முறை எப்படியும் உயரிய ரக தேயிலையை திருடி, தனது குழந்தைக்கும், மனைவிக்கும் தந்து விட வேண்டும் என்ற எண்ணம் அவனுள் விபரீதமாக தோன்றுகிறது. உயர் ரக தேயிலை தயாரிக்கும் எந்திரத்தை பார்த்தபடியும், அவ்வப்போது ஜன்னலின் வழியே சிறுவன் மற்றும் மனைவியை பார்த்தபடியும் வேலையில் ஈடுபடுகிறான். மதிய வேளை. ஆள் அரவமற்ற பொழுது, எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருக்கிறது. மின் வெட்டாக இருக்கலாம். சுற்றும் முற்றும் பார்க்கிறான். யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட அவன் மெல்ல அடுத்த பகுதிக்கு சென்று, கைகளில் உயரிய ரக தேயிலையை அள்ளி சட்டையின் மடிப்புகளில் மறைத்துக் கொள்கிறான். அங்கே இரு ரகசிய விழிகள் அவனை வேவு பார்க்கின்றன. சற்று நேரத்தில் பணியாளர்கள் அங்கு வரவும், டிமேக்கர் கிளார்க் காவலாளி அனைவரும் அங்கு வருகின்றனர். வேகவேகமாக வந்த அய்யா அனைவரின் முன்பாகவும் அவளை கன்னத்தில் அறைகிறான். அவனது சட்டையை கொத்தாக பிடித்து தரதரவௌ முற்றத்தை நோக்கி இழுத்து வருகிறான். சிறுவன் பயந்தபடியே ஓடி தடுப்பின் பின்னால் மறைந்து கொண்டு நடப்பதை பார்க்கிறான். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படியா சூழல் மாறுகின்றது. தொலைபேசியில் எண்கள் சுழல்கின்றன. ஜீப்பின் ஒலி கேட்கிறது. சரசரவென இரண்டு மூன்று மூட்டைகள் அவனுக்கு அருகில் வந்து அவன் மீதாக வீசி யெறியப்படுகின்றன. தரையில் மண்டியிட்டு அவன் கையெடுத்து கும்பிட்டு இறைஞ்சுகிறான். போலீஸார் வந்து விசாரிக்கின்றனர். யார் அதை கண்ணால் பார்த்த சாட்சி என கேட்கின்றனர். அவனை அய்யா வீட்டுக்கு அவனை அய்யா வீட்டுக்கு அழைத்து சென்றவன் முன்னால் வருகிறான். அனைவரின் முன்பாகவும், செல்வராஜின் கை மடிப்பு விரிக்கப்படுகிறது அதிலிருந்து உயரிய ரக தேயிலை தூள் அப்படியே கொட்டி காற்றில் பரவுகிறது. கூட்டத்திலிருந்து விலகி அடர்ந்த நிற சட்டை அணிந்த பெருமாள் வெளியேறி வேகமாக ஓடிச் செல்கிறான். போலீஸார் செல்வராஜையும், அவனது அருகே வீசப்பட்ட தேயிலை மூடைகளையும் ஜீப்பில் ஏற்றுகின்றனர். அவனை சுமந்து கொண்டு ஜீப் கிளம்புகிறது. ஜீப் கிளம்பியதும் அதை துரத்திக் கொண்டு ஓட முயலும் சிறுவனை அங்கிருப்பவர்கள் தடுக்கின்றனர். மலைப்பாதையின் ஊடாக ஜீப் சிவப்பு விளக்குடன் பயணிக்கிறது. தொலைவில் பச்சை கம்பளம் விரித்தது போன்ற தேயிலை செடிகளின் ஊடாக அவள் சாலையை நோக்கி வேகமாக தொலைவில் ஓடி வருகிறாள். பச்சை மலை பிராந்தியத்தின் நடுவில் அந்த தேயிலை தயாரிப்பு ஆலை வெள்ளை நிறத்தில் இருக்கிறது. அதன் வளாகத்தில் புள்ளிகளாய் சிலர் திரண்டு நிற்பதும், அந்த சிறுவன் அழுதபடியே கையை நீட்டி அழுவதும், அன்பரசு கால் சட்டை பையில் உள்ள டொபி பேப்பர்கள் பல வண்ணத்தில் அங்கே சிதறி காற்றில் பற்க்கின்றது.அவள் விடாமல் ஓடிக் கொண்டிருப்பதும், மலைச்சாலையில் வளைந்து வளைந்து நெளிந்து செல்லும் ஜீப்பும் என காட்சி அப்படியே மங்கி மறைகிறது – 22.07.2023 மலையகம் 200 – விம்பம் லண்டன் அமைப்பு நடத்திய சிறுகதை போட்டியில் இரண்டாம் இடம் பரிசு 30 ஆயிரம் பணபரிசு பெற்ற கதை. மாரி மகேந்திரன் மாரி மகேந்திரன் சினிமா கவிதை மற்றும் சிறுககைகள் புத்தகம் தமிழில் வந்துள்ளது. பிரசன்ன விதானகே திரைப்படத்தில் பனி ஆற்றி உள்ளார். தமிழகத்தில் தமிழ் சினமாவில் உதவி இயக்குனராகவும் பனி ஆற்றியுள்ளார். இவர் தற்போது வசிப்பது பொகவந்தலா என்ற நகரத்தில். காட்சி மொழி என்ற உலக சினிமா இதழ் ஆசிரியர். https://www.sirukathaigal.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a3/
  12. இல‌ங்கை ம‌க‌ளிர் சொந்த‌ மைதான‌ங்க‌ளில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ல்லா விளையாடின‌வை அதை வைச்சு தான் இல‌ங்கையை தெரிவு செய்தேன் , இந்தியா இப்ப‌டி சுத‌ப்ப‌ல் விளையாட்டு விளையாடும் என‌ நான் எதிர் பார்க்க‌ வில்லை பின‌லில் இந்தியா வ‌ந்தால் அவ‌ர்க‌ள் நேர்மையான‌ முறையில் கோப்பை வெல்ல‌னும் ந‌டுவ‌ர் மார் இந்தியா ம‌க‌ளிருக்கு ஆத‌ர‌வ‌ய் செய‌ல் ப‌ட‌ முடியாது அப்ப‌டி செய்தால் இந்த‌ உல‌க‌ கோப்பை அசிங்க‌ கோப்பையாய் தான் இருக்கும் அண்ணா..............................
  13. 1) அகஸ்தியன் - 40 புள்ளிகள் முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்.
  14. 👍................ நன்றி அல்வாயன். உண்மையில் நடந்த இரண்டு விடயங்களில் பலவற்றை, தனிப்பட்ட விடயங்களை, தவிர்த்து விட்டு பொதுவாக எழுத முயன்றிருக்கின்றேன்...................
  15. 🤣................. மண்புழுக்கள், சிலந்திகள், பல்லிகள், குருவிகள், பூனைகள், மனிதர்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றின் ஊடாகவே நான் என்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை பார்க்கின்றேன்......... என்னால் முடிந்த வரை எந்தப் பக்கமும் சாயாமல் அப்படியே சொல்லவும் முயல்கின்றேன்........ வேலை வெட்டி இல்லாதவன் போல என்ற ஒரு புரிதல் வருவதில்லைதானே.............🤣.
  16. புதிய வரவு. வாழை இலையில் தீபாவளி உடுப்பு. 😍
  17. உதாரணம் சரியாக இல்லை வெறும் விஜய் எதிர்ப்பு கருத்தாக முடியாது
  18. இந்தியவையும் அதன் அடிவறுடிகளையும் தவிர யாருமே 13 ஏற்க்கவில்லை. 13 என்ன நடந்தது எண்டு தெரியுமோ?
  19. அண்ண‌ இன்னும் போட்டி முடிய‌ல‌ ந‌ம‌ப்ப‌ர் 2பாருங்கோ எவ‌ள‌வு மாற்ற‌ம் என்று லொள்........................
  20. இந்த உலகமே தன்னறம் இல்லாமல்தான் ஆகிக்கொண்டிருக்கின்றது. சுயநலம் கூடிக்கொண்டே போகின்றது. உங்கள் கதையில் நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லியே வாழ்க்கையும் முடிஞ்சுடுமோ என்றும் யோசினையாக் கிடக்கு.
  21. அனுமதி 10 ஆயிரம் பேருக்கு. ஆனால் காவல்துறையினர் 20 ஆயிரம் பேர் வரக் கூடும் என்று தகவல் அறிந்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததாகவும் அதையும் மீறி சனம் கூட நெருசல் ஏற்பட விஜய் தான் காரணம் என்றும் அந்த தாமதத்தை அவர் வேண்டும் என்றே தனது செல்வாக்கை நிரூபிக்க செய்ததாகத் தான் இவர்கள் மட்டுமல்ல நீதிமன்றம் மற்றும் அனைத்து தமிழக ஊடகங்களும் சொல்கின்றன. இங்கே பல ஊர்வலங்கள் மற்றும் மாநாடுகள் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்கிறோம். காவல்துறை மற்றும் அரசா பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை செய்கிறது?????
  22. ஒரு தொட்டியில்சிறிய கல்லுகள் மணல் போன்றவற்றை மாறி 2 3 அடுக்குகளாக போட்டு வ டி கட்டி எடுத்த மழைநீரை அருந்தலாம் என்று நினைக்கிறேன். முதல் மழைநீரைச் சேகரிக்கக் கூடாது. இது வழிமண்டலத்தில் இருக்கும் ஆழுக்குகள் தூசிகள் புகைகள் போன்றவற்றைக் கொண்டு வரும். அதனால்தான் நீண்டகாலத்திற்கு பிறகு பெய்யும் முதல் மழையில் நனையக் கூடாது வருதம் வரும் சட்டையில் கரம்பேன் பிடிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள் மழை நல்லா அடிச்சு ஊத்தி விட்ட பின்னர் அடிக்கும் வெய்யில் கடுமையாகச் சுடுவதும் வானம் தெளிவாக இருப்பதும் வளிமண்டலத்தில் உள்ள மாசுக்கள் கழுவப்படுவதால்தான். ஆகவே தொடர்சியாக மழை பெய்யும் பொழுது 2வது 3வது அல்லது அதற்குப் பிந்திய மழைநீரைச் சேகரித்து வடிகட்டி எடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். இது எனது சொந்த விளக்கம்.எதற்கும் துறை சார்ந்தவர்களிடம் அறிவுரை கேட்டு சேமிப்பது நல்லது.
  23. எனக்கும் தெரியாது (சும்மா அடிச்சு விட்டது), சும்மா சொல்றதுதானே அதுக்கேன் இவ்வளவு பந்தா காட்டுகீறீர்கள், இது ஒரு விளையாட்டு பொழுது போக்கு திரி நீங்களும் தாராளாமாக அடிச்சு விடுங்கோ, ஒரே மாதிரி எழுதினா சலிப்பு ஏற்படும்.🤣 இலங்கை அணியினை வெல்லும் அணி என ஏன் தெரிவு செய்தேன் என தெரியவில்லை, பரீட்சை பல தெரிவு வினா கேள்விக்கு மாறி மாறி குத்துவது போல இலங்கை அணியினையும் குத்தியுள்ளேன் என்பது தெரிகிறது, அடுத்த போட்டியில் கவனமாக இலங்கை அணியினை ஓரமாக வைத்து விட்டு குத்தவேண்டும்.
  24. நல்ல காத்திரமான கைகூக்கள் நிகழ்காலத்தில் .......... தொடருங்கள் . .........! 👍
  25. 🤣........... அதுவாக நடக்கிற விசயத்துக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்............. இலங்கை மோசமாகத் தோற்கும், ஆஸ்திரேலியா அமோகமாக வெல்லும் என்று நினைத்து, அதன்படியே தெரிவுகள் போட, இந்த இரண்டு நாடுகளும் எனக்காக விளையாடுவது போலவே விளையாடுகின்றன................🤣. எல்லா நண்பர்கள் கூட்டங்களிலும் ஓரிரு நண்பர்கள் மற்றவர்களுக்கு பாடங்களில் உதவி செய்வார்கள். கடைசியில் பரீட்சை முடிவுகளைப் பார்த்தால், உதவி செய்தவர்களுக்கு பி அல்லது சி தான் வந்திருக்கும்; உதவி கேட்டவர்கள் ஏ எடுத்திருப்பார்கள்........... இது வழமை போல..................🤣.
  26. இரெட்டை வரி ஒரே அடி ஹைக்கூ —-கவிஞர் அல்வாயான்—
  27. வினா 19) 10 விக்கெட்டுகளினால் தென்னாப்பிரிக்கா அணி இலங்கை அணியை தோற்கடித்தது. 10 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 38 புள்ளிகள் ( 95%) 2) ரசோதரன் - 36 புள்ளிகள் ( 90%) 3) ஏராளன் - 34 புள்ளிகள் (85%) 4) ஆல்வாயன் - 34 புள்ளிகள் 5) கிருபன் - 32 புள்ளிகள் 6) புலவர் - 32 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 32 புள்ளிகள் 8) வீரப்பையன் - 32 புள்ளிகள் 9) சுவி - 31 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 28 புள்ளிகள் 11) வாதவூரான் - 28 புள்ளிகள் 12) கறுப்பி - 28 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 14) வசி - 26 புள்ளிகள் 15) வாத்தியார் - 24 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 19, 32(1/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 40)
  28. இரட்டை வரியில் ஒற்றை அடி...மிக நன்றாக உள்ளது ..தொடருங்கள்
  29. அருமை கோபி, அருமை. குறிப்பாக, ஐஸ், நஞ்சாகும் உணவு, புதைகுழிகள் பற்றிய கவிதைகள் அபாரம். ஆனால் இவை ஹைகூவின் வரைவிலக்கணத்துள் பொருந்துமா என்பது தெரியவில்லை, இதை ஒத்த சென்ரியு வகை கவிதை போலவே இருக்கிறது.
  30. மீள் வரவுக்கு நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள் எம்முடன்.
  31. மீண்டும் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி, கோபி. கைக்கூக்கள் நன்றாக இருக்கின்றன................❤️.
  32. 17 Oct, 2025 | 05:02 PM தீவகத்தின் அடையாளத்தை பாதுகாத்து பசுமையை உருவாக்கவும், பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து நன்னீர் வளங்களைப் பாதுகாக்கவும் வேலணை பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன. குறித்த திட்டம், இன்று காலை வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. அல்லையூர் இளைஞர்களின் ஏற்பாடில் வேலணை பிரதேச செயலகம் மற்றும் வேலணை பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையுடன் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் , பிரதேச சபையின் உறுபினர்கள், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டு பனம் விதைகளை நாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அடையாளத்தை பாதுகாக்க வேலணையில் நாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான விதைகள்! | Virakesari.lk
  33. அததெரண கருத்துப் படம். https://adaderanatamil.lk/cartoons/f5604ae3-2940-494c-950b-db153a1dd5bc
  34. அவுஸ்திரேலியா 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இனிவரும் ஆரம்ப சுற்று போட்டிகளில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா , இந்தியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே 9 அல்லது 9 க்கு மேல் புள்ளிகள் பெற முடியும். இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கு இடையில் ஒரு போட்டி நடைபெறவுள்ளது. இதனால் இந்தியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஒரு நாடு மட்டுமே 9 புள்ளிகள் பெறமுடியும். (இந்தியாவால் அதிகபட்சம் 10 புள்ளிகள் பெற முடியும்). இதனால் அவுஸ்திரேலியா அரை இறுதிக்கு செல்லும் (அரை இறுதிக்கு செல்லும் 4 நாடுகள்) வாய்ப்பினை பெற்றுள்ளது. வினா 32) அரையிறுதிக்கு தெரிவாகும் முதலாவது நாடு அவுஸ்திரேலியா அணி அரை இறுதிக்கு தெரிவாகும் என எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 36 புள்ளிகள் 2) ஏராளன் - 34 புள்ளிகள் 3) ரசோதரன் - 34 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 32 புள்ளிகள் 5) கிருபன் - 32 புள்ளிகள் 6) வீரப்பையன் - 32 புள்ளிகள் 7) புலவர் - 30 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 30 புள்ளிகள் 9) சுவி - 29 புள்ளிகள் 10) வசி - 26 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 26 புள்ளிகள் 12) வாதவூரான் - 26 புள்ளிகள் 13) கறுப்பி - 26 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 26 புள்ளிகள் 15) வாத்தியார் - 24 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 18, 32(1/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 38)
  35. வினா 18) 10 விக்கெட்டுகளினால் அவுஸ்திரேலியா அணி வங்காளதேசம் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 35 புள்ளிகள் 2) ஏராளன் - 33 புள்ளிகள் 3) ரசோதரன் - 33 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 31 புள்ளிகள் 5) கிருபன் - 31 புள்ளிகள் 6) வீரப்பையன் - 31 புள்ளிகள் 7) புலவர் - 29 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 29 புள்ளிகள் 9) சுவி - 28 புள்ளிகள் 10) வசி - 25 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 25 புள்ளிகள் 12) வாதவூரான் - 25 புள்ளிகள் 13) கறுப்பி - 25 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 25 புள்ளிகள் 15) வாத்தியார் - 23 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 18, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 37)
  36. பட மூலாதாரம், Duif du Toit/Gallo Images/Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் மணி நேரங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் இன்று அரைசதம் அடித்திருக்கிறார். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து ஏரியாக்களிலும் ஜொலித்த அவருக்கு இன்றோடு ஐம்பது வயது ஆகிறது. சுமார் 19 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் விளையாடிய அவரது பயணத்தை எண்களின் வாயிலாக அலசுவோம். ஏனெனில், "நம்பர்களை வைத்துப் பார்த்தால் ஒரு முழுமையான கிரிக்கெட்டர் என்பதற்கு மிக அருகில் வருவது காலிஸ்தான்" என்று டிராவிட்டே கூறியிருக்கிறார்! பட மூலாதாரம், Cameron Spencer/Getty Images டெஸ்ட் கிரிக்கெட்டில் காலிஸ் 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் காலிஸ், 55.37 என்ற சராசரியில் 13289 ரன்கள் குவித்திருக்கிறார். சச்சின், ஜோ ரூட், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு அடுத்து டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்தவர் இவர்தான். அதிக டெஸ்ட் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு (51) அடுத்து 45 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். "டெஸ்ட் பேட்டர் காலிஸை உடைப்பதென்பது சாதாரண விஷயமில்லை. எத்தனை திட்டங்கள் வேண்டுமானால் தீட்டுங்கள், நாளின் முடிவில் அவர் ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்பார்" என்று ஒருமுறை புகழ்ந்திருந்தார் ரிக்கி பாண்டிங். ஆனால், அவரது சாதனைகள் பேட்டிங்கோடு நின்றுவிடவில்லை. பேட்டிங் போல் பந்துவீச்சிலேயும் காலிஸ் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். 32.65 என்ற சராசரியில் 292 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் அவர். அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 43வது இடத்தில் இருக்கும் காலிஸ், ஹர்பஜன் சிங், இஷாந்த் ஷர்மா, ஜஹீர் கான், ஸ் ரீவ் ஹார்மிசன் (steve harmison) போன்ற முன்னணி பௌலர்களுக்கு இணையான சராசரி வைத்திருக்கிறார். 148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10000 ரன்களுக்கு மேலும் 250 விக்கெட்டுகளுக்கு மேலும் எடுத்த ஒரே வீரர் காலிஸ்தான். ஏன், 5000+ ரன்கள் & 250+ விக்கெட்டுகள் என்ற பட்டியலில் இருப்பவர்களே மூவர்தான். அதில் காலிஸோடு இருப்பவர்கள் கபில் தேவ் மற்றும் சர் இயான் போத்தம் ஆகியோர் மட்டுமே. இது மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருதுகள் (23) வென்றவரும் இவர்தான். 9 முறை தொடர் நாயகன் விருது பெற்று, அஷ்வின் & முரளிதரன் (இருவரும் 11) இருவருக்கும் அடுத்து அந்தப் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் காலிஸ். பட மூலாதாரம், Graham Crouch-ICC/ICC via Getty Images ஒருநாள் போட்டிகளில்... ஒருநாள் ஃபார்மட்டைப் பொறுத்தவரை 328 போட்டிகளில் 44.36 என்ற சராசரியில் 11579 ரன்கள் விளாசியிருக்கிறார். அதிக ஒருநாள் ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் எட்டாவது இடம். அதேபோல் 31.79 என்ற சராசரியில் 273 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இந்தப் பட்டியலில் 19வது இடம். தென்னாப்பிரிக்காவின் மிகச் சிறந்த பௌலராகக் கருதப்படும் ஆலன் டொனால்டை விடவும் அதிக விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். ஆல்ரவுண்டராகப் பார்க்கும்போதும், ஒருநாள் போட்டிகளில் 5000+ ரன்களும் 250+ விக்கெட்டுகளும் எடுத்திருக்கும் ஐந்து பேரில் இவரும் ஒருவர். முன்பொருமுறை காலிஸின் ஒருநாள் போட்டி அணுகுமுறையைப் புகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங், "காலிஸ் ஒருநாள் கிரிக்கெட்டை செஸ் போட்டி போல் மாற்றிவிடுவார். வியூகங்கள் வகுப்பார், நிதானமாகக் காத்திருப்பார், கருணை காட்டமாட்டார். ஆர்ப்பாட்டமே இருக்காது. ஆனால், முடிவுகள் கிடைக்கும்" என்று கூறியிருந்தார். பட மூலாதாரம், Carl Fourie/Gallo Images/Getty Images மூன்று ஃபார்மட்களிலும் சேர்த்தால்? கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு ஃபார்மட்களிலுமே 10,000 ரன்களுக்கு மேல் எடுத்தவர்கள் மொத்தமே ஆறு பேர் தான் - சச்சின், டிராவிட், பான்டிங், ஜெயவர்தனே, சங்கக்காரா, காலிஸ். இவர்களுள் பந்துவீச்சிலும் கலக்கியது சச்சினும், காலிஸும் மட்டும்தான். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மட்களிலும் சேர்த்து 25534 ரன்கள் (ஆறாவது இடம்) & 519 விக்கெட்டுகள் (31வது இடம்) எடுத்துள்ள இவர், அதிக 50+ ஸ்கோர்கள் (211) எடுத்ததில் ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறார். இவ்வளவு ஏன் ஐபிஎல் அரங்கிலும் கூட சிறப்பாகவே செயல்பட்டார். 2010 சீசனில் 572 ரன்கள் விளாசி இரண்டாம் இடம் பிடித்தார். 2012 சீசனில் 409 ரன்கள் குவித்ததோடு 15 விக்கெட்டுகளும் கைப்பற்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக விளங்கினார். பட மூலாதாரம், Duif du Toit/Gallo Images/Getty Images நீண்ட காலம் சீராக ஆடியவர்! காலிஸ் இன்னும் அதிகளவு புகழப்படுவதற்கு இன்னொரு காரணம் அவர் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பது. வேகப்பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கும்போதே கிரிக்கெட் வீரர்கள் காயத்துடனான போராட்டத்துக்கும் தயாராகிவிடுவார்கள். பேட்டர்கள் போல், ஸ்பின்னர்கள் போல் அவர்களால் அனைத்து போட்டிகளிலும் விளையாடிவிட முடியாது. அதேபோல், எந்தவொரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராலும் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் விளையாடிட முடியாது. இன்றைய காலகட்டத்தில் ஹர்திக் பாண்டியா தொடங்கி ஆண்ட்ரே ரஸல் வரை அவர்கள் காயத்தோடு போராடுவதை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், சர்வதேச அரங்கில் 519 போட்டிகளில் விளையாடியிருக்கிறார் காலிஸ். அனைத்து ஃபார்மட்களிலும் சேர்த்து அதிக போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 45346 பந்துகளை சந்தித்திருக்கும் காலிஸ், பௌலராக 31258 பந்துகள் வீசியிருக்கிறார். வக்கார் யூனுஸ், டேல் ஸ்டெய்ன், பிரெட் லீ போன்ற ஜாம்பவான் பௌலர்களை விடவும் அதிக பந்துகள் வீசியிருக்கிறார். மொத்தம் 76604 பந்துகளில் நேரடியாக காலிஸின் பங்களிப்பு இருந்திருக்கிறது. அதாவது சுமார் 10026 ஓவர்கள் அந்த 22 யார்டு பிட்சுக்கு நடுவே உழைத்திருக்கிறார். தொடர்ந்து போட்டிகளில் விளையாடியது மட்டுமல்லாமல், அந்தப் போட்டிகளில் அவர் சீரான செயல்பாட்டையும் கொடுத்திருக்கிறார். 1999 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் ஒரே ஒரு ஆண்டு மட்டும்தான் (2008) அவரது ஆண்டு பேட்டிங் சராசரி நாற்பதுக்கும் குறைவாக இருந்திருக்கிறது. காலிஸ் பற்றி ஒருமுறை பேசிய இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார, "தென்னாப்பிரிக்க அணிக்கு ஒரு டிராவிட்டும், கபில் தேவும் இருந்திருந்து, அவர்களை ஒன்றிணைத்தால் என்ன வருமோ அதுதான் காலிஸ். அவரது திறன், ஒழுக்கம், நீண்ட காலம் ஆடிய தன்மையெல்லாம் அசாத்தியமானது" என்று புகழ்ந்தார். ஃபீல்டிங்கிலும் அசத்துபவர்! பட மூலாதாரம், Getty Images பேட்டிங், பௌலிங் மட்டுமல்ல, காலிஸ் ஃபீல்டிங்கிலும் அசத்தும் முழுமையான 3D வீரர். சர்வதேச அரங்கில் அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் 338 கேட்சுகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார் அவர்! இத்தனைக்கும் பெரும்பாலான கேட்ச்களை கடினமான ஸ்லிப் பகுதியில் நின்று பிடித்திருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஜாய் பட்டச்சார்யா காலிஸின் ஃபீல்டிங் திறனை வெகுவாகப் பாராட்டி சில ஆண்டுகளுக்கு X தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், "2011ம் ஆண்டு டெல்லிக்கு எதிரான போட்டியில் பௌண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார் காலிஸ். அங்கு மூன்று முழு நீள டைவ்கள் அடித்து 3 பௌண்டரிகளைத் தடுத்தார் காலிஸ். அணியின் ஃபிசியோ அவருக்கு உதவி செய்வதற்காக கிளம்பியபோது வேண்டாம் என்று காலிஸ் மறுத்துவிட்டார். அந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்களில் வென்றது. டிரஸிங் ரூமில் காலிஸ் அவர் உடையைக் கழற்றியபோது அனைவரும் உரைந்து போனார்கள். ஏனெனில் உடல் முழுக்க காயம் பட்டிருந்தது. ரத்தம் ஒழுகியது. இளம் வீரர்கள் அர்ப்பணிப்பின் அர்த்தத்தை அன்று உணர்ந்து கொண்டார்கள்" என்று குறிப்பிடிருந்தார் ஜாய் பட்டாச்சார்யா. இந்த நிகழ்வு நடந்தபோது காலிஸின் வயது 35. ஓய்வுப் பிறகான சர்ச்சைகள் ஓய்வு பெறும் வரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு பெரும் பங்களிப்பைக் கொடுத்த காலிஸ், ஓய்வுக்குப் பிறகு சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். 2016ம் ஆண்டு இட ஒதுக்கீடு இலக்குகளை எட்டாததற்காக தென்னாபிரிக்க விளையாட்டு சங்கத்தை அந்நாட்டு அரசு கலைத்தது. அதை விமர்சித்து அப்போது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் காலிஸ். அது விமர்சனத்துக்குள்ளனதும், "நான் அரசியில் தலையீட்டைத்தான் விமர்சித்தேனே ஒழிய, சமத்துவத்துக்கு எதிராக கருத்து சொல்லவில்லை" என்று விளக்கம் கூறிவிட்டு அந்தப் பதிவை நீக்கினார். 1995ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்காக அறிமுகம் ஆனவர் 2014 வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். சாதனைகள் பல படைத்திருந்தாலும், தென்னாப்பிரிக்க அணிக்காக ஒரு உலக கோப்பையை வெல்ல முடியாதது குறித்து எப்போதுமே வருந்தியிருக்கிறார். காலிஸைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல, ஜாம்பவான் பிரயன் லாரா ஒருமுறை சொன்னதையே பயன்படுத்தலாம் "ஒரு அணியில் பேட்டராக மட்டும் காலிஸால் இடம்பெற முடியும். ஒரு அணியில் பௌலராக மட்டுமே அவரால் இடம்பெற முடியும். ஒரு அணியில் ஸ்லிப் ஃபீல்டராக மட்டுமே அவரால் இடம்பெற முடியும். காலிஸ் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்". இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg4z00w6gqo
  37. கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை! October 10, 2025 சமீபத்தில் கனடாவில் வாழும் தமிழ்த் தேசிய உணர்வாளப் பெண்மணி சிவவதனி பிரபாகரன் என்பவர் தனது மகளான திவ்யாவின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். மேலும் அவர் தனது முகநூல் பதிவில் “இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது” என்றும் பதிவிட்டுள்ளார். ஒரு தாயார் தனது மகளின் திருமணத்தையிட்டு பேருவகை கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சமூக வலைத்தளத்திலேயே குடும்பம் நடத்தும் இக்காலத்தில், சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமையும் ஒன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் திருமதி சிவவதனி பிரபாகரன் தனது சம்ந்தக்குடி பற்றி தெரிவித்த தகவல்களே சமூக வலைத்தள தமிழ்த் தலிபான்களுக்கு சும்மா மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்தமாதிரி ஆகிவிட்டது. சிவவதனி அம்மா மகள் திவ்யா காதலித்த ஆபிரிக்க நாடான கொங்கோ நாட்டு இளைஞனை திருமணம் செய்து வைத்தமையை பொறுக்காத தமிழ்த் தலிபான்கள் பின்னூட்டலில் வந்து வசை மாரி பொழிகிறார்கள். அடுத்தவர் வீட்டு படுக்கையறையை எட்டிப் பார்க்க கூடாது என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாத பண்பற்ற தமிழ் ஆண்களும் பெண்களும் புதுமணத் தம்பதிகளுக்கு சாபங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள். சம்பந்தப்பட்ட குடும்பத்தின் அனுமதியின்றி தம்பதிகளின் திருமணப் படங்களை பல்வேறு சமூக வலைத்தள போலிக் கணக்குகளில் பகிர்ந்து தமது காழ்ப்புணர்வை உமிழ்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் வேற்று நாட்டவர்களை மணம் புரிதல் என்பது புதிதல்ல. இரண்டாவது தலைமுறையை கடந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் இடையே வேறு இனத்தவர்களில் ஆண் மற்றும் பெண் எடுத்தல் சகஜமாக நடந்து தான் வருகிறது. அவ்வாறான திருமணப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன. பெரும்பாலான அத்திருமணங்கள் வெள்ளையினத்தவர்களுடான தமிழ்க் கலியாணங்களாக இருக்கின்றன. வெள்ளையினத்தவர்களுடனான கலப்புத் திருமணங்களுக்கு வராத விமர்சனங்கள், கறுப்பு நிற ஆபிரிக்க இனத்தவர்களுடான திருமணங்களுக்கு வருகின்றன. இது தமிழர்களின் நிற வெறியை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் பளுப்பு நிறமுடைய தமிழர்கள் தங்களை ஆபிரிக்கர்களை காட்டிலும் உயர் இனமாக கருதுகின்றனர். அதனாலேயே வெள்ளை நிறத்தவர்களிடையே ஏற்படும் கலப்பு திருமண பந்தங்களை வரவேற்று கொண்டாடுகின்றனர். அதேநேரம் ஆபிரிக்க இனத்தவரையோ அல்லது வெள்ளையினம் சாராத ஏனைய கலப்புத் திருமணங்களை எள்ளி நகையாடுகின்றனர். இன அடக்குமுறைக்கு எதிராக விடுதலை வேண்டிப் போராடிய இனமான ஈழத்தமிழர்கள் நிறவெறி, சாதிவெறி, மதவெறி, பிரதேச வாதம் மற்றும் பெண்ணடிமைத் தனம் என்ற பிற்போக்குத் தனங்களில் இன்னமும் உழல்வது வெட்கக்கேடானது. தாயகத்தை காட்டிலும் புலத்தில் வாழும் தமிழர்களிடையே இவ்வாறான பிற்போக்குத் தனங்கள் மிகுதியாக காணப்படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தின் வரையறை தெரியாத காட்டுமிராண்டி சமூகமாக ஈழத்தமிழ்ச் சமூகம் புலம்பெயர் நாடுகளில் வாழ்வது தலைகுனிவானது. சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனது மகள் கலப்புத் திருமணம் செய்ததை ஆதரித்தது உண்மையில் வரவேற்க்கத்தக்க செயலாகும். அவர் சொல்ல வந்த செய்தி கணியன் பூங்குன்றனாரின் “ யாதும் ஊரே யாவரும் கேளிர் “ என்பதன்படி தமிழர்கள் சர்வதேசவாதிகள். உலகில் வாழும் அனைவரும் எமது உறவுகளே. அதேநேரம் உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமதே என்பதாகும். சிவவதனி அம்மையாரின் தூரநோக்கு சர்வதேசப் பார்வையை புரிந்து கொள்ள திராணியற்ற கூட்டமொன்று சமூக வலைத்தளங்களில் குத்தி முறிகிறது. பாலியல் வக்கிரமான சொற்றாடல்களில் பின்னூட்டல்களை இடுகின்றது. அவ்வாறான பின்னூட்டல்களில் பெரும்பாலானவை ஆபிரிக்க மணமகனின் ஆண்குறியை மையமாக கொண்ட வக்கிர கருத்துக்களாக உள்ளன. பெரும்பாலும் இப் பின்னூட்டல்களை இடுபவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஆண்களாகவே உள்ளனர். அவர்களுக்கு தமது ஆண்மையில் இருக்கின்ற குறைபாடுகள் காரணமாகத் தான் ஆபிரிக்க மணமகன் மீது காழ்ப்புணர்வு கொண்டு பாலியல் வக்கிரமான பின்னூட்டல்களை இடுவதாகத் தான் கருத வேண்டியுள்ளது. ஒரு பெண் யாரைத் திருமணம் செய்ய வேண்டும். யாருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் தீர்மானிக்க முடியும். பெண்களின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் பாதுகாப்பில் கூடுதல் முன்னுரிமை கொடுக்கும் மேற்கு நாடுகளில் அகதிகளாக வந்து தஞ்சம் பெற்று வாழும் தமிழ் ஆண்களுக்கு மேற்கூறிய விடயங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பெண்கள் மீதான அத்துமீறல்களில் மற்றும் வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களுக்கு புலம்பெயர் நாடுகளில் எத்தகைய தண்டனைகள் வழங்கப்படும் என்பதும் தெரிந்திருக்கும். அல்லது தெரிந்து வைத்திருக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மட்டுமல்ல தாயகத்திலும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் பல்வேறு சட்டங்கள் மற்றும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளில் ஒழிந்து கொண்டு வெட்டி வீராப்பு மற்றும் அவதூறு பரப்புகிறவர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படுவார்கள். எழுதியவர்: கங்கா ஜெயபாலன், சமூக சேவைப் பணியாளர், கல்வி: Social Work & Education (University of Niederrhein), சர்வதேச உறவுகள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), அரசியல் விஞ்ஞானம் (கொழும்புப் பல்கலைக்கழகம்). https://www.thesamnet.co.uk/?p=113593
  38. தமக்குப் பிடித்த துணையுடன் வாழ முடிவு எடுத்த… தம்பதிகளுக்கு, இனிய திருமண வாழ்த்துக்கள். குடும்பப் படங்களை…. சமூக வலைத்தளங்களில் பதியும் போது, ஏற்படும் ஆபத்தான விடயங்களில்… மேற்படி சம்பவமும் ஒன்று. பெண்ணின் தாய்… தமது மகிழ்ச்சிக்காக இயல்பாக பதிந்த படத்திற்கு இவ்வளவு விமர்சனம் வைத்தமை மிகவும் அருவருப்பான செயல். மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை… விமர்சிக்கும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது. வாழ்த்த விருப்பம் இல்லாவிடில்… ஒதுங்கி இருந்திருக்கலாம். இது…. அந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு மன உழைச்சலை கொடுத்திருக்கும் என்பதை, சம்பந்தப் பட்டவர்கள் சிந்தித்து இருந்திருக்க வேண்டும். நாளைக்கு இது… அவர்களின் குடும்பத்திலும் நடக்கலாம்.
  39. பல தினங்களுக்கு முன்னர் பல இணைய ஊடகங்களில் காறித்துப்பப்பட்ட செய்தி.😂 புது நெல்லு புது நாத்து என்பதற்கமைய.... திருமணம் என்பதை விட மனப்பொருத்தம் முக்கியம் என்பதை பலர் ஏன் ஏற்க மறுக்கின்றார்கள் என தெரியவில்லை? என்னிடமும் இன விசுவாசம் உண்டு.மாற்று கருத்துக்களும் உண்டு. அதை எப்படி கையாள வேண்டும் என்ற சிந்தனையும் உண்டு. நிற்க... கீழ் வரும் காணொளிகளில் வருபவர்களுடன் சிறு தொடர்புகள் உண்டு. அவர்களது காணொளிகளில் என் கருத்துக்களும் உண்டு. அவர்களது காணொளிகளில் எங்கும் தமிழ்மானத்தை விட்டுக்கொடுக்கவேயில்லை. மாறாக தமிழை முன்னெடுத்து செல்கின்றார்கள்.
  40. சமூகம் சார்ந்த நல்லதொரு இணைப்பு. விவசாயியாக வாழ்ந்தாலும் இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என நினைத்ததுண்டு.அதாவது யாரையும் கையேந்தி வாழாத வாழ்க்கை வாழ வேண்டும் என்பது.❤️ மற்றும் படி..... நானறிந்த வரையில் ஐரோப்பிய நாடுகளில் நிலத்தடி நீரை அதிகம் உபயோகப்படுத்துவதில்லை.சில நாடுகளில் தடையும் உண்டு. கூடுதலாக மழைநீரை நீர்த்தேக்கங்களில் சேகரித்தே நாட்டு மக்களுக்கு விநியோகம் செய்வார்கள்.சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு கூரையிலிருந்து வழிந்து வரும் மழை நீரை சேகரித்து வீட்டுத்தோட்டம் மற்றும் பூ மரங்களுக்கு பாவிப்பார்கள். அது சரி.... சேகரித்த மழை நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக குடிக்க முடியுமா?
  41. நாங்கள் ( தமிழர்கள்) எம்மு வரலாறுகளை பாதுகாக்கமுடியாத முழு முட்டாள்கள். எவ்வளவு வரலாற்று சின்னங்கள்…. அந்த காலத்திருந்நு இந்தகாலம் வரை இது தொடருகிறது…. அல்லது சோழனின் கோட்டை, பாண்டியனின் கோட்டை மாளிகைகள் எல்லாம் இருந்திருக்கு்ம்
  42. "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"/ பகுதி: 05 வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையிலான பகுதியில் சம்புக வதம் விவரிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் திடீரென இறந்து விடுகிறான். மகனை இழந்த பிராமணன் இராமனிடம் நீதி கேட்டு வருகிறான். அந்நேரத்தில் அங்கு வரும் நாரதமுனி, சூத்திரன் ஒருவன் உனது நாட்டில் தவம் இயற்றிக் கொண்டிருப்பதாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்கிறார். சம்புகனைத் தேடிச் சென்ற இராமன், ஒரு மலைச்சாரலில், ஒரு ஏரிக்கு அருகில், ஒரு சாது ஒரு மரத்தின் கிளையில் தலைகீழாய்த் தொங்கியபடி கடுந்தவம் புரிந்து கொண்டு இருப்பதை கண்டார். அவன் அருகில் சென்ற ராமர், ' நீ பிராமணனா, சத்ரியனா அல்லது நான்காம் வருணத்தைச் சேர்ந்தவனா? நிஜத்தைச் சொல்' என்று கேட்க, அவன், 'மகாராஜா, நான் நான்காம் வருணத்தைச் சேர்ந்தவன். சம்பூகன் என்று எனக்குப் பெயர்' என விடையளித்தான். உடனே ராமர் வேறு எது குறித்தும் கேட்காமல், மின்னல் வேகத்தில் உறையிலிருந்து தன் வாளை உருவிச் அங்கேயே அவனைத் தனது வாளால் தலை வேறு முண்டம் வேறாக வெட்டி கொன்றான். தவம் இயற்றிய சூத்திரன் என்ற ஒரு காரணத்தால் மட்டும் இராமனால் கொல்லப்பட்டான் ?விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை - நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றிச் சம்புகனின் தலையைச் சீவிவிட்டான் இராமன். இராமனின் காரியத்தைப் பார்த்தீர்களா? தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டி ருந்ததைத் தடுத்துத் தண்டித்துச் சம்புகனைக் கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக பார்ப்பனர்கள் மகிழ்ந்தார்களாம்? கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன் தோன்றி அவன் செய்த இந்நற்காரியத்திற்காக ? அவனைப் பாராட்டி னார்களாம்? எப்படி இருக்குது ராமன் கதை? இவனுக்கு தான் இந்த தீபாவளி? இவனைத்தான் கடவுளாம்? இவன் மாதிரி உத்தம புருஷனுக்காக அலைகிறார்களாம் இன்றைய சீதைகள்? எப்படியிருக்குது வேடிக்கை? திருவிளையாடல் புராணத்தில் 26 வது கதையாக 'மாபாதகம் தீர்த்த படலம்' வருகிறது. அதில், அவந்தி நகரத்தில் வாழ்ந்த ஒரு பார்ப்பனரின் மனைவி மிகவும் அழகானவள். அந்தப் பெண்ணுக்கும், அவள் கணவனுக்கும் பிறந்த மகன் தாயின் மீதே விருப்பம் கொள்கிறான். தாயை நிர்ப்பந்தப்படுத்தினான். இந்தக் கொடுமை கண்டு மனம் தாளாத அவனது தந்தை, அவனைத் தடுத்தார், ஆனால் அவன் தந்தையையே கொன்று விட்டு, தனது காம பசி தீர்க்க, தாயை இழுத்துச் சென்று விட்டான். காமுகனாகத் திரிந்ததால் அவனது உடலில் கொடிய நோய் ஏற்பட்டது. என்றாலும், இறுதியில், அவன் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து இறைவன் அவனுக்கு அருள் பாலிக்கின்றார். இப்போது இரு கதைகளிலும் இடம் பெற்றுள்ள மகாபாவங்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தாயை மணந்து, தந்தையைக் கொன்ற மகாபாதகம் இறைவனால் மன்னிக்கப் படுவதோடு, அவனுக்கு இறைவன் அருளும் கிடைக்கிறது. ஆனால் எந்தக் குற்றமும் புரியாமல் தவம் புரிந்த சம்பூகனைக் கடவுளின் அவதாரமான ராமரோ வாளினால் வெட்டி வீழ்த்துகிறார். எத்தனை பெரிய கயமைத்தனங்களைச் செய்தாலும், அவன் பார்ப்பனனாக இருந்தால் இறைவன் அருள் பாலிப்பார்; எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், ஒரு சூத்திரன் தவம் செய்தால் இறைவன் அவன் தலையைக் கொய்து விடுவார் என்பதுதானே இவ்விரு கதைகளும் நமக்குக் கூறும் நீதி? இந்த அறிவுரை எமக்கு தேவைதானா? இப்படியான கடவுளும் எமக்கு வேண்டுமா? பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், விளக்கீட்டு விழா என்னும் விழாக்கள் பற்றிய செய்திகள் உள்ளன. கார்காலம் முடிந்தபின் அறுவடையை எதிர்நோக்கிய காலத்தில் அறுமீன் சேரும் முழுநிலா மாலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்த ஒரு விழாவை அகநானூறு-141 கூறும். இந்த நிகழ்வு பிற்காலத்தில், ஆரியரின் நாகரிகக் கலப்பால், தீபாவளியுடன் இணைந்தது என்பார்கள். இதனால் கார்த்திகை தீபத் திருநாள்தான் தமிழர் தீபாவளி யானாலும் அதை தீபாவளி எனக் கூறுவதில்லை. விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலும் (14 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை) பிறகு நாயக்கர் ஆட்சியிலும் (16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை) மதுரை நாயக்கர்களா லும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருநாள் இது எனலாம்? மேலும் தீபாவளிப் பண்டிகை, கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை அவ்வளவு முக்கியத்துவம் பெற வில்லை. ஆனால் அங்கு ‘ஓணம்’ பண்டிகை மிகச் சிறப்பாக நடை பெறுகிறது. "உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி மழைகால் நீங்கிய மாக விசும்பில் குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு உடன் அயர வருக தில் அம்ம துவரப் புலர்ந்து தூ மலர் கஞலித் தகரம் நாறுந் தண் நறுங்கதுப்பின் புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர் பெருஞ்செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்துப் பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக் கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு தீங்குலை வாழை ஓங்கு மடல் இராது நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும்" [அகநானூறு 141] உழவுத் தொழில் முடிந்துவிட்டதால் உழும் கருவியான கலப்பை வேலையின்றிக் கிடக்கிறது. உழவுக்கு உதவியாக மேகமும் தக்கவாறு மழை பொழிந்து ஓய்ந்து விட்டதால் ஆகாயம், கருமேகம் சூழாத நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது. ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் காயும் முழு நிலாவானது இருளை நீக்கி வானில் காணப்படுகிறது. இந்நாளில் வீடுகள்தோறும் மக்கள் பூமாலைகளைத் தொங்கவிட்டு விளக்குகளை ஏற்றி வைத்துக் கூட்டமாகக் கூடி விழா கொண்டாடு வார்கள். இக்கார்த்திகை விளக்கு நாளில் புது மணமகன் உண்பதற்காக பசிய அவலாலான இனிப்புப் பொருள் செய்வதற்காக வீட்டிலுள்ள பெண்கள் நெல்லின் கதிர்களைப் பறித்து அவற்றை உரலில் இட்டு உலக்கையால் குத்திப் பக்குவப்படுத்து கிறார்கள். அங்ஙனம் குத்தும் உலக்கையின் ஒலியைக் கேட்டுப் பயந்தப் பறவை தானிருந்த வாழை மரத்தை விட்டு வேறொரு பெரிய மரத்தில் தங்கி தன் குஞ்சுப் பறவைகளைக் கூவுகின்றன என்கிறது இந்தப்பாடல். உலகின் எங்கும் மரணம் கொண்டாடப் படுவதில்லை. ராமன் பெருமைக்குரிய மனிதனாக இருக்கலாம், ஆனால் அவன் சீதைக்கு செய்தது என்ன? சீதையின் வாழ்க்கை தனிமையில் வீணாகியது. அவள் அனுபவித்தது எல்லாம் துக்கமே. ராவணன் அரக்கனும் அல்ல, கடவுளும் அல்ல. அவன் ஒரு சாதாரண மனிதன். அவன் தவறுகள் விட்டுள்ளான். நான் அவனை மூடிமறைக்க முயலவில்லை. நான் பாரம்பரிய ராமாயணத்தை, அப்படியே, ராவணன், ராமனை சித்தரிக்க கையாளுகிறேன். அவ்வளவுதான். கடவுளாக கருதப்படும் ராமனையும் அரக்கனாக சித்தரிக்கப்படும் ராவணனையும் ஒப்பிடும் போது , ராமன் பல பல குற்றங்கள் புரிந்து உள்ளான். மிகப்பெரிய கொடுமை தன் மனைவியையே சந்தேகித்தது. அதனால் அவள் அடைந்து துன்ப வாழ்வு! இருவருமே நல்ல தீய செயல்கள், பண்புகள் கொண்டுள்ளனர். ஆனால் எப்படி ஒருவர் கடவுளானார்? மற்றவர் அரக்கன் ஆனார்? ராமாயணத்தில் உள்ள உண்மைகளை அப்படியே சிந்தியுங்கள். ஒரு மனிதனின் இறப்பை நாம் கொண்டாடலாமா? இல்லை ராமனைத்தான் கடவுளாக்கலாமா? கடவுள் என கருதுபவர் மக்களுக்கு, எங்களுக்கு தார்மீக பிடிப்பை உண்டாக்கக் கூடியவராக இருக்கவேண்டும். அவர்கள் நாம் பின்பற்றக் கூடிய முன்மாதிரியாக இருக்கவேண்டு? இதையாவது நம்புகிறீர்களா? ராமர் கதையில் அவரின் ஒரு பண்பு மட்டுமே மாறாமல் கதை முழுவதும் அப்படியே தொடருவதை காண்கிறோம். இதைத்தான் நாம் அவரிடம் இருந்து கற்கலாம். கண்மூடித்த தனமான கீழ்ப்படிதல் அல்லது பணிவு! அது மட்டுமே அவரிடம் இருந்து நாம் பெறலாம்? ராமன் குழந்தையாக இருக்கும் பொழுது அவர் ஒரு நன்றாக நடந்து கொள்ளும் அன்பான குழந்தை, மற்றும் படி ஒரு சிறப்பும் அங்கு காணப்பட வில்லை! இளைஞனாக இருக்கும் பொழுது, அவர் ஒரு தந்தை சொல் தட்டாத பிள்ளை, ஆனால் மீண்டும் ஒரு நடுத்தர வயது மனிதனாக, யாரோ ஒரு வழிப்போக்கன் தனது அன்பு மனைவியின் 'கணவன் மனைவி' விசுவாசத்தை சந்தேகப்பட்டான் என்பதால் ஒரு அரசனாக தனது கடமையை, 'மக்கள் எவ்வழி அரசனும் அவ்வழி' என்ற கண்மூடித்த தனமான கீழ்ப்படிதலை திடீரென்று நினைவுக்கு கொண்டு வருகிறேன். இதனால் கர்ப்பணி சீதை பிரிந்து, காடு சென்று, இறுதியாக தற்கொலை செய்கிறாள். அவனின் பண்பில் நிலைத்து நின்று மாறாதது, 'மாற்றான் சொல்' கேட்டு நடக்கும் பண்பு மட்டுமே! தனக்கு என ஒரு புத்தி அவனிடம் என்றுமே காணப்படவில்லை? அவன் வாழ் நாள் முழுவதும், பண்பான, இணக்கமான, கீழ்ப்படிதல்' நபராகவே, எந்த கேள்வியும் கெடுக்காமல் பிறர் புத்தி கேட்டு நடக்கும் ஒரு மனிதனாகவே வாழ்ந்து விட்டான்!! அவ்வளவுதான்!!! [இதுவரையில் நாம் அறிந்ததிலிருந்து, ஆரியரின் தந்திரமான புராண செருகலின் விளைவாக, தமிழரின் தொன்மை வாய்ந்த தீப ஒளியேற்றும் விழா [விளக்கீட்டு விழா] என்பதின் பாதையையும், கருத்துக்களையும், அது அடியோடு மாற்றிவிட்டன என உணர்கிறோம். எனவே, உறவுகள் கூடி, எண்ணங்களில் நல்லொளி ஊட்டித் தீபம் ஏற்றித் தமிழ்த் 'தீப + ஆவளி', அதாவது, 'தீப' (என்னும் வடசொல்லும்) + 'ஆவளி' என்ற இரு சொற்கள் இணைந்து வெளிப்படும் 'தீபங்களின் வரிசை' என பொருள்படும், தீப ஒளித்திருநாளை கொண்டாடுவோம்! எங்கள் 'தீபாவளி' வேறு என ஆரிய தீபாவளிக் குப்பைகளை எறிந்திடுவோம்!!] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [முற்றிற்று]
  43. Published By: Vishnu 17 Oct, 2025 | 08:37 PM மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு, காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். வலி, வடக்கில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மக்களின் காணிகளை மக்களுக்கே கையளிப்போம் என ஆட்சி அமைத்தவர்கள், இன்று ஆட்சி அமைத்து ஒரு வருட காலம் கடந்து காணிகளை மக்களிடம் கையளிக்கவில்லை. கடந்த அரசாங்கம் கையளிக்க தயாராக இருந்த காணிகளையே அவர்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் மக்களிடம் கையளித்தனர். யாழ்ப்பாணம் - பலாலி வீதியை முழுமையாக திறந்து விட்டதன் ஊடாக உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள பலாலி காணிகளை விடுவித்தது போன்று காட்டுகின்றனர். பலாலி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களின் சொந்த இடங்கள் இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. அவர்கள் தங்கள் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ந்து போராடி வருகின்றனர். பலாலி இராணுவ வைத்தியசாலையை சூழவுள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி வைத்தியசாலை கட்டடங்களை இராணுவத்தினர் கட்டி வருகின்றனர். தற்போது போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த கீரிமலையில் ரேடார் அமைக்க போவதாக கூறி 2 ஏக்கர் தனியார் காணியை கடற்படை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கிறது. ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியது போன்றே மக்களின் காணி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/228027

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.