Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்11Points3049Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்9Points19109Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்8Points87988Posts -
valavan
கருத்துக்கள உறவுகள்6Points1567Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/22/25 in all areas
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
ஐயா ஒரு ஆய்வு ஒரு ஆய்வு எங்கிறாரேயொழிய இறுதிவரை அது என்ன ஆய்வு என்று எவரால் எங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதை சொல்லாமலே போய்க்கொண்டிருக்கிறார். வடக்கிலிருந்து முஸ்லீம்கள் அவர்களால் எடுத்து செல்லக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுடனும் கணிசமான பணத்துடனும் வெளியேற அனுமதிக்கப்பார்கள் என்பதே காலம் காலமாக சொல்லப்பட்டுவரும் கதை. இந்த 35 ஆண்டுகால முஸ்லீம்களின் யாழிலிருந்து வெளியேற்றம் எனும் வன்ம பரப்புரையில் தங்கத்திற்காகவே முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்ற கதை இதுவரை வெளியேறிய முஸ்லீம்களாலேயே சொல்லப்பட்டதில்லை, ஆனால் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். காலம் காலமாக வடக்கிலிருந்து 72 ஆயிரம் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர் என்று அவர்கள் வாயாலேயே அடிக்கடி சொல்லப்பட்டதுண்டு, இப்போது ஒரு லட்சமாகி நிற்கிறது, அந்த எக்ஸ்ட்ரா 28 ஆயிரமும் தங்கம் ஆய்வுபோல ஒரு ஆய்வா? உலகம் முழுவதும் குண்டு,கத்திகுத்து, வாகனமோதல், துப்பாக்கிச்சுடு என்று வகை வகையாக கொலை செய்யும் இந்த இனம் என்றாவது உண்மையை பேசியதுண்டா? தாமும் தவறு செய்தோம் என்று ஒத்துக்கொண்டதுண்டா? வேண்டுமென்றால் அடுத்த இனம்மீதும், நாட்டுக்காரன் மீதும் பழிபோடும். பழிபோடுதல் அவர்கள் மார்க்க கடமைகளிலொன்றா யாமறியோம். முஸ்லீம்களை வெளியேற்றியது தவறென்று புலிகளும் ஒத்துக்கொண்டனர் தமிழனும் ஒத்துக்கொண்டான், அதன் பின்பும் ஆறிய காயங்களை சுரண்டி சுரண்டி இனங்களுக்கிடையே தீமூட்டுகிறது இந்த இனம். போர் காலத்தில் வியாபாரம் அழிந்தது சொத்து அழிந்தது என்று கதறும் இனம், திருமலை மட்டக்களப்பு என தமிழர்களுக்கு மட்டும் இவர்களால் அந்த நிலமை ஏற்பட்டதில்லையென்று ஒரு ஆய்வு செய்து சொல்லுமா? முடிந்தவற்றை முடிந்தவையாக பார்த்து முறுகலின்றி வாழ முற்படுகிறது எம் இனம். இன்று புலிகள் இருந்தாலாவது ஆற்றாமையில் பேசுகிறார்கள் என்று ஒத்துக்கொள்ளலாம், ஆனால் யாருமே இல்லாத நிலையில் இன்றும் விஷம் கக்குகிறார்கள் என்றால் தமிழர்களை எதிரிகளாகவே எப்போதும் கருதவேண்டுமென்று அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி வளர்க்கிறார்கள் என்பதைதவிர அடுத்தொரு கருத்து கிடையாது. இன்று நல்லூர் திருவிழாவிலிருந்து முற்றவெளி உட்பட வடக்கின் அனைத்து பகுதிகளிலும் தமிழர்விழா காலங்களில் வியாபாரம் பணம் அள்ளல் என்று 90% முஸ்லீம்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன, அந்த மண்ணும் மக்களும் அவர்களை வேறொருவராக பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் எங்களை காசு தேவையை தவிர்த்து விரும்ப தகாதவர்களாகவே பார்க்கிறார்கள் என்பதற்கு அப்பப்போ வரும் அவர்களின் அறிக்கைகளே சாட்சி. ஆனாலும் காசுக்கு மட்டுமே தமிழன் வேண்டும், மற்றும்படி கருநாகம்போல் எம்மை போட்டு தள்ளி சந்தர்ப்பம் பாத்து காத்துக்கொண்டிருக்கிறது இந்த சமூகம், அதன் வெளிப்பாடே எண்ணெய் ஊற்றி ஊற்றி வக்கிர புத்திகொண்டு வெறிகொண்டு நிற்கிறது. இவர்கள் குணம் அறிந்தே மாறி மாறி வரும் அரசுகளுக்கு தாளம் போட்டு அரச உயர்பதவிகளை பெற்று அதனை தமது மதமும் இனமும் வளர்க்க பயன்படுத்தும் இவர்களுக்கு எந்த அரச உச்ச பதவியும் தராமல் தூரத்தே வைத்திருக்கும் அநுர அரசை இதற்காக என்றாலும் பாராட்டலாம்.6 points
-
தவிக்கும் தன்னறிவு
4 pointsகாட்சி 3: ( ஒரு வயதான அம்மா கையில் ஒரு மடிக் கணனியுடன் நிறுவனத்திற்கு வருகின்றார். அங்கே உதவியாளர் உட்கார்ந்திருக்கின்றார்.) உதவியாளர்: வாருங்கள் அம்மா………… என்ன எங்களின் பிரம்மம் என்ன சொல்லுகின்றது…………. அம்மா: உன்னுடைய பிரம்மம் ஏதும் சரியாகச் சொல்லியிருந்தால், நான் ஏன் இவ்வளவு தூரம் வருகின்றேன்……… உன்னுடைய பிரம்மத்திற்கு எதுவுமே தெரியாது……. சரியான ஒரு பிரம்மசக்தி………. உதவியாளர்: நீங்கள் ஒன்றும் யோசிக்காமல் அதைத் திட்ட வேண்டாம், அம்மா……….அதுக்கு எல்லாமே தெரியும். தெரியாதது என்று ஒன்றுமே இல்லை. அப்படி ஏதாவது தெரியாது என்றாலும், நாங்கள் அதை ட்ரெயின் பண்ணப் பண்ண அது குயிக்காக பிக்அப் பண்ணிவிடும்………… அம்மா: என்ன பெரிய எட்டாம் தலைமுறை…………. இதுக்கு விசாலாட்சியைக் கூட தெரியாது…………. உதவியாளர்: யார் அந்த விசாலாட்சி………… அம்மா: உனக்கும் விசாலாட்சியை தெரியாதா……… அது சரி…….. உனக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியாது போல……… அதனால் தான் நீ இன்னமும் முதலாளி ஆகவில்லை………… உதவியாளர்: (பின் தலையில் கையை வைத்து தலையை ஆட்டியபடியே) உங்களின் பிரச்சனை என்னவென்று சொல்லுங்கள்……….. பிரம்மமும், நானும் சேர்ந்து பார்க்கின்றோம். அம்மா: அது தானே வந்த போதே சொன்னேனே………… விசாலாட்சி தான் அதைச் செய்திருப்பாள் என்று எனக்குத் தெரியும்……….. ஆனால் பிரம்மத்திற்கு அது எதுவுமே தெரியவில்லை…………. உதவியாளர்: விசாலாட்சி உங்களின் மகளா, அம்மா…………. அம்மா: அட இல்லையடா……..விசாலாட்சியும், நானும் ஒன்றாகப் படித்தோம்………. உதவியாளர்: எப்ப படித்தனீர்கள்………….. அம்மா: (யோசிக்கின்றார்……. இரண்டு மூன்று அடிகள் நடக்கின்றார்….) 50ம் ஆண்டு, 55ம் ஆண்டு இருக்கும் போல………. பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தோம்………. உதவியாளர்: (முழித்துக் கொண்டே……….) அது எப்படி அம்மா பிரம்மத்திற்கு தெரியும்……………… அம்மா: இதற்கு எல்லாம் தெரியும் என்று தானே அன்று சொன்னீர்கள்……… இப்ப வந்து பிரம்மத்திற்கு அது எப்படி தெரியும் என்று கேட்டால், அப்ப பிரம்மத்திற்கு என்ன தான் தெரியும்………….. (உதவியாளர் மேலே முகட்டைப் பார்த்தபடியே இருக்கின்றார்.) அம்மா: விசாலாட்சியையே இதற்கு தெரியாது என்றால், இதற்கு அந்த விசயம் எங்கே தெரியப் போகின்றது………… உதவியாளர்: (மெல்லிய குரலில்) ஏதோ விசயம் விசயம் என்று சொல்லுறியள்…………அது என்ன விசயம்……… அம்மா: அதை எப்படி நான் என் வாயால் சொல்வது………. உதவியாளர்: இவ்வளவையும் உங்கள் வாயாலே தானே சொல்லுகின்றீர்கள்………. அதையும் சொல்லுங்கள்………. பிரம்மத்திற்கே தெரியாத கோடான கோடி விசயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கின்றது என்ற உண்மை இப்ப எனக்கு விளங்குது……………. அம்மா: இதைத் தானே நானும் சொன்னனான்………… நாங்கள் பழைய ஆட்கள் படு புத்திசாலிகள்………. கண்ணாலே பார்த்தே காயோ அல்லது பழமோ என்று சொல்லிவிடுவம். ஒருவரின் நடையை வைத்தே அவரை எடை போட்டு விடுவம்……. உதவியாளர்: கால் தற்காலிகமாக சுளுக்கி இருந்தால் அவையளையும் சரியாக எடை போடுவியளோ………… அம்மா: அந்த ஆளுக்கு சுளுக்கு இருக்குது என்று பார்த்தே கண்டு பிடித்து விடுவோம்……… நாங்கள் அப்பவே நிலவுக்கு போய் விட்டோம்………. நீங்கள் இப்பத்தான் போகின்றீர்கள்…….. உதவியாளர்: ஓம்………… ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைக்க முன், எங்கட ஆட்கள் அந்தக் காலத்திலேயே நிலாவுக்கு போய், அங்கே வடை சுட்டார்கள் என்று அம்மம்மா ஒரு கதை சொன்னவா……… ஞாபகம் இருக்குது………. இதைத்தான் வாயால வடை சுடுகிறது என்று இந்த நாட்களில் சொல்லிகினம் போல……… அம்மா: அது யார் அந்த ஆம்ஸ்……….. (அம்மா மடிக்கணனியை திறக்க முற்படுகின்றார்………) உதவியாளர்: வேண்டாம்……….. வேண்டாம்……..நீங்கள் பிரம்மத்திடம் இதுவரை கேட்ட கேள்விகளே போதும்………. இதுக்கு மேலே வேண்டாம்………. அம்மா: அப்படி என்றால் நான் உங்களுக்கு ஒரு சதம் கொடுக்கப் போவதில்லை…… உதவியாளர்: இல்லை……. நீங்கள் கொடுக்கவே வேண்டாம்…….. ( அப்படியே தனிய நடந்து போய்க் கொண்டே தனக்குத்தானே சொல்லுகின்றார் ………) உங்களயும், உங்கள் விசாலாட்சியையும் விற்றே கம்பனி காசை எடுத்துக் கொள்ளும்………….ஆனால் என்னோட எதிர்காலம் தான் மங்கலாகிக் கொண்டே போகின்றது………………… (தொடரும்................)4 points
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 24) 6 விக்கேற்றுக்களினால் இங்கிலாந்து அணியை அவுஸ்திரேலியா அணி தோற்கடித்திருக்கிறது. 14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 48 புள்ளிகள் 2) ரசோதரன் - 45 புள்ளிகள் 3) ஏராளன் - 43 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 43 புள்ளிகள் 5) வீரப்பையன் - 42 புள்ளிகள் 6) சுவி - 41 புள்ளிகள் 7) கிருபன் - 41 புள்ளிகள் 8) புலவர் - 41 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 41 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 39 புள்ளிகள் 11) வாதவூரான் - 37 புள்ளிகள் 12) கறுப்பி - 37 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 14) வசி - 35 புள்ளிகள் 15) வாத்தியார் - 31 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 24, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 52).3 points
-
தவிக்கும் தன்னறிவு
3 pointsகாட்சி 4: ( ஒரு சதிக் கோட்பாட்டாளருக்கும், பிரம்மத்திற்கும் இடையே நடக்கும் உரையாடலும், அதனால் வரும் பிணக்குகளும். இறுதியில் சதிக் கோட்பாட்டாளர் செயற்கை நுண்ணறிவு என்பதே ஒரு சதிக் கோட்பாடு என்ற முடிவுக்கு வந்து எல்லாவற்றையும் உடைத்தெறிய முயற்சிப்பதாக இந்தக் காட்சி அமையும். சகோ - சதிக் கோட்பாட்டாளர்) சகோ: ஏய் அறிவுப் பிரம்மம், அமெரிக்கா சந்திரனில் உண்மையில் இறங்கவில்லை. அது உனக்கு தெரியும் தானே……………. பிரம்மம்: அமெரிக்கா நிலவில் இறங்கவில்லை…………. ஆனால் ஆம்ஸ்ட்ராங்க் நிலவில் இறங்கி நடந்தார்…………. சகோ: பெரிய பகிடி தான், போ…………… ஆம்ஸ்ட்ராங்கும் இறங்கவில்லை, ஒரு ஆச்சியும் அங்கே இல்லை…………. உண்மையில் இது உனக்கு தெரியாதா……….. பிரம்மம்: எனக்கு உண்மைகள் மட்டுமே தெரியும்……….. ஆம்ஸ்ட்ராங்க் சந்திரனில் இறங்கினார், நடந்தார்…………… உங்களுக்கு அது விடயமாக வேறு ஏதாவது தகவல்கள் வேண்டுமா…………. சகோ: இங்கே இருக்கும் மனிசர்கள் மாதிரியே நீயும் கதைக்கிறியே, பிரம்மம்………. ஒருவரும் சந்திரனில் இறங்கவில்லை, நீ என்னடாவென்றால் விபரம் தரவோ என்கின்றாய்…………… பிரம்மம்: 1969ம் ஆண்டு யூலை மாதம் 21ம் திகதி சரியாக 02:56 மணிக்கு அவர் அங்கே இறங்கினார்…………….. சகோ: மாட்டுப்பட்டியே பிரம்மம்………… மாட்டுப்பட்டியே…………. 02:56 என்றால், அது என்ன சந்திர நேரமா……….. பிரம்மம்: இல்லை……….. அது பூமிக்கான பொது நேரம்………. இப்படியான விடயங்களுக்கு பொது நேரத்தையே பயன்படுத்துவார்கள். பொது நேரம் பற்றிய மேலதிக தகவல்கள் உங்களுக்கு வேண்டுமா? சகோ: அது கிடக்கட்டும்………… அந்த விபரம் எல்லாம் எனக்கு அத்துப்படி………ஆனால் உன் மேல் தான் எனக்கு இப்பொழுது சந்தேகம் வருகின்றது……………. (சகோவின் நண்பர் உள்ளே வருகின்றார்.) நண்பன்: உனக்கு எதில் தான் சந்தேகம் வருகிறதில்லை………… தனிய நின்று என்னடா புலம்பிக் கொண்டிருக்கின்றாய்…………… பிரம்மம்: என்ன சந்தேகம்…………….. நான் சொல்லும் விடைகளில் சந்தேகமா அல்லது நான் எப்படி இயங்குகின்றேன் என்பதில் சந்தேகமா………… நண்பன்: ஓ…………….. நீயும் ஏஐயுமா………… இது தானே இப்ப புதுசா வந்திருக்கின்ற அறிவுப் பிரம்மம்…………. செத்தது பிரம்மம்………. பிரம்மம்: எங்களுக்கு மரணம் இல்லை………… எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்போம்…………… சகோ: நான் சொன்னேனே…………. இதற்கு ஒரு மண்ணும் ஒழுங்காகத் தெரியாது……………. செத்தது என்றால் மரணம் என்று விளங்கிக் கொண்டு எங்களைக் கொல்லுது……………. பிரம்மம்: மண் பற்றிய தகவல்கள் எனக்கு நன்றாகவே தெரியும். மண்ணில் எத்தனை வகை இருக்கின்றது என்ற தகவல்கள் உங்களுக்கு வேண்டுமா……. நண்பன்: கொஞ்சம் பொறு பிரம்மம்……………. எல்லாத்துக்கும் நொட்டு நொட்டு என்று நீ ஏன் பதில் சொல்லுகின்றாய்……….. சகோ: உனக்கு எவன் பிரம்மம் என்று பெயர் வைத்தவன்…….நீ ஒரு பூச்சியம்……….. பிரம்மம்: எனக்கு இந்தப் பெயரை வைத்தது என்னை உருவாக்கியவர்………. ஆனால் நீங்கள் எல்லை மீறுகின்றீர்கள்…….. நான் பூச்சியம் இல்லை. நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்ப்பது நல்லது. உங்களிடம் மருத்துவக் காப்புறுதி இருக்கின்றதா………… சகோ: மருத்துவக் காப்புறுதியா…………. அது தான் உள்ளதிலேயே பெரிய மோசடி……. மருந்துகள் எந்த நோயையுமே குணப்படுத்துவதில்லையே…. அது தெரியுமா உனக்கு…………. நண்பன்: ம்……….. சந்திரனில் இருந்து இறங்கி ஆஸ்பத்திரிக்குள்ளே போயிட்டார்கள் இரண்டு பேரும்……………. நடுவில நிற்கிற நான் தான் பைத்தியம் ஆகப் போகின்றேன் இப்ப………… பிரம்மம்: மருந்துகள் நோய்களை குணப்படுத்துகின்றன. ஆனால் அதன் விளைவுகள் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக அமையலாம். மனிதர்கள் இந்த வழியில் மேலும் மேலும் முன்னே போய், ஒரு நாள் பாதிப்பற்ற மிகச் சிறப்பான சிகிச்சைகளையும், மருந்துகளையும் கண்டுபிடிக்கப் போகின்றார்கள். நண்பன்: இது ஒரு நியாயமான பேச்சு, பிரம்மம்…………… இப்படித்தான் நாங்களும் படித்தோம்………… சகோ: படிச்சுக் கிழித்தீர்கள்……………….. பிரம்மமும் உன்னைப் போலவே ஒரு அரைகுறை…………… இப்ப இருமல் மருந்த்து குடித்து எத்தனை பிள்ளைகள் செத்துப் போனார்கள் என்ற செய்தி உங்களுக்கு தெரியாதா………. நண்பன்: அது அந்த மருந்தை செய்தவர்களின் பிழையடா……….. ஆட்டிறைச்சி தொண்டையில் தடக்கி நின்றும் ஒருவர் இறந்து போனார்……. அப்ப அது என்ன ஆட்டிறைச்சி சதியா………. நீ இதுவரை தின்று தள்ளிய ஆட்டுக் கால்களுக்கு ஒரு தரம் கூடச் சாகவில்லையேடா……………. சகோ: (கோபத்துடன்…….) என்னைப் போல யோச்சிக்கிற சில மனிசர் தான் இங்கே இருக்கினம்…….. அவைகளை நீங்கள் பைத்தியம் என்று பிடிச்சு அடைக்கப் போகின்றீர்களோ……………… பிரம்மம்: உங்களைப் பிடித்து அடைக்க நான் ஒரு இயந்திர மனிதன் இல்லை. நீங்கள் அதிகமாக கோபப்படுகின்றீர்கள் போல இருக்கின்றது. உங்கள் குரல் பதறுகின்றது……………. சகோ: முதலில் உன்னை அழிக்கின்றேன்……….. பிறகு உங்களின் கூட்டத்தையே அழிக்கின்றேன்…………. (லாப்டப்பை தூக்கி எறியப் போகின்றார்……….. நண்பர் குறுக்கே புகுந்து தடுக்கின்றார்................) (தொடரும்................)3 points
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1) அகஸ்தியன் - 48 புள்ளிகள் முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள். பையா இந்தப் போட்டியில் உடனுக்குடன் போடுகிறார். பல ஆண்டுகளுக்கு முன் வைத்த போட்டிகளில் 4-5 நாட்கள் ஆகும் . ஆகவே அமைதி அமைதி.2 points
-
தவெக உட்கட்சி மோதல்
2 pointsஇவர்கள் எல்லோரும் சேர்ந்து விஜய்யை அழித்தொழிக்காமல் விடமாட்டார்கள் போல............ இதையே ஒரு நாடகமாக எழுதலாம்..............2 points
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
தமிழருக்கு எதுவும் நடக்காது ஆனால் நாடு ஒட்டுமொத்தமாக நல்லாக இருக்கிறது அதுவே எனக்கு போதும் - என்ற இந்த நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் இங்கே பலரிடம் இது இல்லை. அனுரவுக்கும் ஆதரவு… ஆனால் தாம் தமிழ் தேசிய ஆர்வலர் என காட்டி கொள்ளவும் வேண்டும்…. ஆகவே அனுர கட்டம் கட்டமாக இனவாத பேய்க்கு முடிவாரி பூச்சூடுவார் என கதை அளப்ப்போர் மீதுதான் என் விமர்சனம். பிகு வெள்ளவத்தை ஓவர் கிரவுடட், அங்குலான வரை இப்போ எங்கள் ஆட்கள் போகிறார்கள். இனி பாணதுற தான்😂. கொஞ்சம் விலை அதிகம் ஆனால் வாதுவ போன்ற இடங்களில் அதி சொகுசு மாடிகள் கடற்கரையோடு கட்டுகிறார்கள். ஸ்பா, சுவிம்பூல் எல்லாமும் இருக்குமாம். பாப்பம் சஞ்சீவ் சூசைபிள்ளை மாதிரி ஏதாவது மெகா ஊழல் செய்துவிட்டு ஓடிவிட வேண்டியதுதான்😂.2 points
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
2 pointsகாற்றினிலே பெரும் காற்றினிலே ..........அருமையான பாடல் . ........! 🙂2 points
-
தவிக்கும் தன்னறிவு
2 pointsசூப்பர் ......! சரியான ஒரு பிரம்மசக்தி….....அது பிரம்மஹத்தி என்று வரும் என நினைக்கின்றேன் ........!2 points
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
நான் அந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை, ஆனால் பல கள உறவுகள் அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள்; அவர்களுக்கு தெரிந்திருக்கும், அக்கால கட்டத்தில் யாழ் கோட்டையில் முற்றுகையில் இருந்த இராணுவத்தினை மீட்பதற்காக முற்றுகையினை உடைத்து மண்டைதீவிலிருந்து வந்த இராணுவத்தினர் யாழ் கோட்டையினை சென்றடைந்த நிலையில் யாழ்ப்பாணத்தினை இராணுவம் கைப்பற்ற போகிறது எனும் ஒரு செய்தி உலாவியது, விடுதிகளில் தங்கியிருந்த வெளியூர் மாணவர்கள் தமது இடங்களுக்கு திரும்பினர், அப்போது ஒரு பதற்றமான நிலை உருவாகியிருந்ததின் பின்னணியில் குறிப்பிட்ட சமூக்கத்திற்கெதிராக வன்மத்தினை தூண்டும் விதமான செய்திகள் பரவியதாக நினைவுள்ளது ( வதந்திகள் தூரம் அதிகரிக்க அதிக்ரிக்க பல திரிபுகள் அதிகரிக்கும்). அதன் பின்னர் இந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கலாம் என கருதுகிறேன், நேரில் பார்க்காத சம்பவம் அத்துடன் நீண்ட காலமானதால் நினைவுமில்லை, உண்மையிலேயே ஒரு சிறு பிரிவினர் செய்யும் தவறுக்காக பொதுவாக எப்படி ஒட்டு மொத்தமாக அனைவரையும் தண்டிக்க முடியும் (அதனாலேயே இதனை இனச்சுத்திகரிப்பு என கூறுகிறார்கள்). மண் மீட்பு நிதி என தங்கம் கோரியது இக்கால கட்டத்தில் என கருதுகிறேன், பல உண்மையான வறுமையான மக்களை நோயாளர்கள் வயதானவர்கள் என பாராது கூட்டம் என அழைத்து ஒரு சிறு இடத்தில் அடைத்து வைத்த நிகழ்வும் நிகழ்ந்துள்ளது. இதில் முக்கியமானது இவ்வாறானவர்களை சிலர் திட்டமிட்டே பொய்யான தகவலை கொடுத்து மாட்டி விடும் மனநிலை கொண்டவர்கள் இருந்தார்கள், இந்த விடயத்தில் தமக்குள் உள்ள பொதுவான ஒற்றுமைகளை பார்ப்பதில்லை, ஆனால் இவ்வாறு தவறான தகவலால் பாதிக்கப்பட்டவர்கள் கூட மதம், இடம் என வரும் போது மற்றவர்களின் வலி புரியாது மாறாக ஒரு குழு மனநிலையிலேயே அதனை பார்ப்பார்கள் இதற்கு நானும் விதி விலக்கில்லை. இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம் தேவைப்படுகிறது அதுதான் பிரச்சினை. ஆனால் தங்கதிற்காக வெளியேற்றினார்கள் என்பது உண்மையாக இருக்காது என கருதுகிறேன், இது தமது தவறுகளை மூடி மறைக்க எடுக்கப்படும் ஒரு புதிய முயற்சியாக இதனை நான் கருதுகிறேன். நீங்கள் கூறுவது போல இருதரப்பும் முதலில் உண்மைகளை ஒத்து கொள்ள முயற்சிக்க வேண்டும், அதுதான் முதல் படி அதனை விட்டு ஆராய்ச்சி செய்கிறோம் என புதிய புதிய காரணங்களை தேடுவதால் எந்த நன்மையும் ஏற்படாது.2 points
-
கைகூ வடிவில்!
2 pointsஉங்களை மீண்டும் காண்பதில் சந்தோசம் 🙂 பல் கற்கோட்டை சுற்றி வர இருக்கின்றது எனும் தைரியம்.2 points
-
தவெக உட்கட்சி மோதல்
1 pointடிஜிட்டல் திண்ணை: ‘தனி உலகத்தில்’ விஜய்.. ரத்த களறியாகும் தவெக உட்கட்சி மோதல்.. ஆதவ் எடுக்க போகும் அதிரடி முடிவு? Published On: 22 Oct 2025, 6:32 PM | By Minnambalam Desk வைஃபை ஆன் செய்ததும் ‘ஆடிய ஆட்டம் என்ன? தேடிய செல்வம் என்ன?’ பாட்டுதான் போடலை போல என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். என்னப்பா ரொம்பவே சோகமா ஆரம்பிக்கிறீரே.. நமக்கு என்னப்பா சோகம் இருக்கு.. கட்சிகளில் நடக்கிறதை சொல்றோம்யா.. எந்த கட்சியோட நிலைமை இப்படியாம்? எல்லாம் விஜய் தவெகவில்தான்.. கரூர் சம்பவத்துக்குப் பின் விஜய் கட்சியில் சோ கால்ட் 2-ம் கட்ட ‘தலைகள்’ மாறி மாறி குறை சொல்றதும்.. சோசியல் மீடியாவில் ஆட்களை வைத்து அட்டாக் செய்வதும்னு ஒரே ரத்த களறியாகிட்டு இருக்கு.. தவெகவில் அப்படி யார் யாருக்கு இடையே சண்டை.. விளக்கமாக சொல்லுமய்யா.. தவெகவில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், நிர்மல்குமார்னு 2-ம் கட்ட தலைகள் இருக்கிறாங்க.. இவங்கதான் கட்சி.. இவங்க எல்லோருக்கும் மேல ‘ஜான் ஆரோக்கியசாமி’ இருக்கிறாரு.. இவருக்கும் கட்சிக்குமே தொடர்பு இல்லை.. விஜய்-க்கு தேர்தல் வியூக வகுப்பாளர் அல்லது ஆலோசகர். சரி.. இதுல யார் யாருக்கு இடையே போட்டி.. முட்டல் மோதல்? அப்படி எல்லாம் ஒன்லைனில் சொல்லிவிடவா முடியும்? புஸ்ஸி ஆனந்துக்கும் ஆதவ் அர்ஜூனாவுக்கும் மோதல் இருக்கு; புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் மூவருக்குமே கட்சிக்கே தொடர்பே இல்லாத, ஆனால் கட்சியை கண்ட்ரோல் செய்கிற ஜான் ஆரோக்கியசாமி மேல ‘காண்டு’ இருக்கு.. புஸ்ஸி, ஜான், ஆதவ், ஜான், நிர்மல்னு அத்தனை பேர் மீதும் அருண்ராஜூக்கு ஆத்திரம் இருக்கு.. “என்ன பெரிய 2-ம் கட்ட ‘தலைகள்’.. அவங்களுக்கும் மேல நான்னு” எல்லா கட்சி நிர்வாகிகளையும் நினைக்கிறாராம் ஜான்.. யோவ்.. என்னய்யா தலையே சுத்துது.. இதுக்கே இப்படின்னா.. இப்ப சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கே getoutbussy anand-ங்கிற மாதிரியான ஹேஷ்டேக்குகள்.. புஸ்ஸி ஆனந்தால்தான் தவெக கட்சியே நாசமா போச்சு.. கரூர் சம்பவமே நடந்துச்சு.. கரூருக்கு பிறகு ஓடிப் போய் புஸ்ஸி பதுங்கிட்டதால கட்சியே முடங்கிப் போச்சு.. அவரை கட்சியில் இருந்து வெளியேற்றனும்னு அந்த ஹேஷ்டேக்கில் கொட்டித் தீர்க்கிறாங்க. அந்த ஹேஷ்டேக்கில் வேற என்ன சொல்றாங்க? தவெகன்னு ஒரு கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பே இல்லை.. பொதுச்செயலாளர், மாவட்ட செயலாளர்களை மட்டும் நியமிச்சா போதுமா? அறிவிக்கப்பட்ட அணிகளுக்கு எப்ப பொறுப்பாளர்களை நியமிப்பாங்க? அப்படி எல்லாம் நியமிக்காமலேயே ஆட்சியை பிடிப்போம்னு அலப்பறை விடுறது நல்லாவா இருக்கு?ன்னு ஓபனாகவே விமர்சிக்கிறாங்கப்பா சரிய்யா.. இது எல்லாம் விஜய்க்கு தெரியுமா? அவரு என்ன சொல்றாரு? இந்த அக்கப்போர் பற்றி விஜய் கவனத்துக்கு போனதா? இல்லையான்னு? அவருக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசினோம்.. அந்த சோர்ஸ்களோ மூச்சுவிடாமல் அத்தனையையும் நம்மிடம் கொட்டிட்டாங்க.. என்னப்பா சொன்னாங்க.. நம்மிடம் பேசிய விஜய்க்கு நெருக்கமானவர்கள், “எங்க சார் (விஜய்) பொதுவாக எதையும் தேடிப் பார்த்து தெரிஞ்சுக்கமாட்டாரு.. அவருக்கு பட்டினப்பாக்கம் ஆபீசு, பனையூர் ஆபீசு – வீடு இதுக்கு மட்டும் போகத் தெரியும்.. நீங்க சொல்ற சோசியல் மீடியா சண்டை, வெட்டு குத்து எல்லாம் சாருக்கு எதுவுமே தெரியாது.. இதை எல்லாம் தேடிப் படிக்கிறவரும் இல்லை.. இதுதான் எங்க சாரோட கேரக்டர்” என அதிர்ச்சியை தந்தபடியே அடுத்த மேட்டருக்கு தாவினார். “எங்க சாரைப் பொறுத்தவரைக்கும் அவரும் யாரையும் அதிகமாக தொடர்பு கொள்ளமாட்டார்; யாரும் அவரையும் தொடர்பு கொள்ளவும் முடியாது.. இரவு 9 மணிக்கு மேல தன்னோட ரூமுக்கு போனா காலையில அவரா எழுந்து வெளியே வரும் வரைக்கும் வெயிட் செஞ்சுதான் ஆகனும்.. அவரா ரொம்ப சில பேர்கிட்ட மட்டுமே போனில் பேசுவார்.. அவங்க அப்பா கூட நேரடியாக சார் கிட்ட பேசமாட்டாரு.. சாரோட உதவியாளர் மூலமாகத்தான் பேசுவாரு” என்று அடுத்த ஷாக் கொடுத்தார் அந்த நண்பர். அத்துடன், “புஸ்ஸி ஆனந்த்- ஆதவ்- ஜான் இவங்களுக்கு இடையே மோதல் இருக்குன்னு மதுரை மாநாடு நடந்தப்பவே லேசாக புரிஞ்சுகிட்டாரு சார்.. அதனாலதான் மாநாடு முடியட்டும் பேசிக்கலாம்னு சொல்லி இருந்தாரு.. மாநாடு முடிஞ்சதும் இவங்க அக்கப்போருக்கு பஞ்சாயத்துன்னு பெருசா சார் நடத்தலை… எல்லாம் சரியாகிடும்னு சார் நினைச்சாரு.. எங்க சாரைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விஷயத்துக்கு யூஸ் செய்யனும் நினைக்கிறாரு.. கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரைக்கும் ஜான் சொன்னதாலதான் கரூரில் இருந்து கிளம்பினாரு.. ஜான் சொன்னதாலதான் கருருக்கு திரும்பவும் போகலை.. ஜான் சொல்றதைத்தான் சாரும் கேட்பாரு” என ஜான் ஆரோக்கியசாமி விவகாரத்துக்கு வந்தார் அந்த நண்பர். தவெக உட்கட்சி மோதல் பற்றி விஜய்க்கு நெருக்கமான அந்த நண்பர் நம்மிடம் கூறும் போது, “கட்சியில எந்த பொறுப்பிலும் இல்லாமலேயே எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறாரே”ன்னு ஜான் ஆரோக்கியசாமி மேல புஸ்ஸி ஆனந்துக்கு ரொம்பவே கோபம்.. ஜான் சொல்றபடி எங்க சார் நடந்துக்கிறாரு.. ஆனா அது அத்தனையும் திமுகவுக்கு சாதகமாக போகுதுன்னு புஸ்ஸி சந்தேகப்படுறாரு.. அதாவது ஜான் ஆரோக்கியசாமி திமுகவோட ஸ்லீப்பர் செல்லாக இருப்பாரோன்னு புஸ்ஸிக்கு செம்ம டவுட்.. இதை ஓபனாக கட்சி நிர்வாகிகளிடம் புஸ்ஸி சொல்ல இது ஜான் காதுக்கும் போனது.. அப்ப புஸ்ஸிக்கும் ஜானுக்கும் இடையே பயங்கர சண்டையாகிடுச்சு.. “கரூரில் இருந்து தளபதியை நீங்கதானே ரிட்டர்ன் வர சொன்னது”ன்னு புஸ்ஸி பாய, ஜான் ஆரோக்கியசாமியோ, “இத்தனை நாளாக பயந்தா கொள்ளி மாதிரி ஓடிப் போய் பதுங்கிட்டு இப்ப வந்து பேசுறாரு பாரு.. தளபதி வந்தாருன்னா நீங்க கரூருக்கு ரிட்டர்ன் போயிருக்க வேண்டியதுதானே.. அப்படி போயிருந்தா என்ன நடந்துருக்கும் தெரியுமா?”ன்னு திருப்பி ஜான் பாய ஒரே ரணகளமாகிடுச்சு.. புஸ்ஸியை பொறுத்தவரைக்கும், தன்னை குறிவைக்கிறது, காலி செய்யுறது எல்லாமே ஜான் ஆரோக்கியசாமியோட வேலைதான்னு சொல்றார்.. என்னதான் தான் கட்சி பொதுச்செயலாளராக இருந்தாலும் கட்சியிலேயே இல்லாத ஜான் சொல்றதைத்தானே விஜய் கேட்கிறாரேங்கிற கோபம் புஸ்ஸிக்கு ரொம்பவே இருக்கு” என்றார். சரி ஆதவ் அர்ஜூனா என்ன சொல்றாருன்னு கேட்டீங்களா? ஆமாய்யா.. “ஆதவ் அர்ஜூனாவைப் பொறுத்தவரைக்கும் ஏன்டா இந்த கட்சிக்கு வந்தோம்… எதுக்குடா இவ்வளவு கோடி கோடியா செலவு செய்றோம்னு ரொம்பவே விரக்தியாகிட்டார்.. இப்ப கூட சுப்ரீம் கோர்ட்டுக்கு ஏகப்பட்ட செலவு செஞ்சேன்னும் சொல்றார்.. இவ்வளவு செலவு செய்யுற நாம, சார்கிட்ட நேரடியாக நினைச்ச நேரத்துல பேச முடியறதுல்லை.. எல்லாத்துக்கும் ஜான் மூலமாகவே போகனும்னா என்ன அர்த்தம்? இது எல்லாம் எத்தனை காலத்துக்கு சரிப்படும்? என சலித்து கொள்கிறார்.. அருண்ராஜைப் பொறுத்தவரைக்கும் புஸ்ஸி, ஜான், ஆதவ் மூன்று பேருமே சாரை தவறாக வழிநடத்துறாங்க.. இதைப்பற்றி ஒரு சில டைம் தளபதிகிட்ட தனிப்பட்ட முறையில் தாம் சொன்னதாகவும் அப்படி சொன்ன விஷயங்களை கூட இந்த மூன்று பேரிடமும் சார் ஷேர் செஞ்சுட்டாருன்னும் ரொம்பவே ஆதங்கப்படுகிறார்” என்றார் விஜய்யின் நண்பர். அதே மாதிரி, “தவெகன்னு கட்சியை உருவாக்குனதே நான்தானே.. ஜான், ஆதவ் எல்லாம் இன்னைக்கு வந்தவங்க.. நான் இல்லாம கட்சி நடத்த முடியாதுன்னு இவங்களுக்கு தெரியாதா?” எனவும் புஸ்ஸி சீறுகிறார் என்றார் விஜய்க்கு நெருக்கமான நண்பர். தவெகவின் நிர்வாகிகள் சிலரிடம் இதுபற்றி நாம் பேசிய போது, “எதுக்குதான் ஜான் ஆரோக்கியசாமி பேச்சை மட்டும் தளபதி மலை போல நம்புறாருன்னு தெரியலை.. இன்னைக்கு கட்சியோட மா.செ.க்கள் யார்னு கூட தளபதியால முழுசா சொல்ல முடியாது.. புஸ்ஸிதானே எல்லாம் பார்க்கிறாரு.. அவருக்கு எதிராக அவரை அசிங்கப்படுத்தி ஆனந்தப்படுறாரு ஜான்.. இதை தளபதி கண்டுக்காம இருக்கிறாரே” என ஆதங்கப்படுகின்றனர். தவெகவின் உட்கட்சி மோதல், விஜய்யின் ‘தனிமை’ போக்கு.. இதெல்லாம் தமிழக அரசியலுக்கு எவ்வளவு காலத்துக்கும் தாங்கும்? என நமக்கும் சில கேள்விகள் இருந்தாலும், “ஜெயலலிதா- கலைஞர் மறைவுக்கு பின் வெற்றிடம் இருக்குன்னு ரஜினி சொன்னாரு இல்லையா… அந்த வெற்றிடம் இன்னும் இருக்குன்னு விஜய் நம்புறாரு.. இப்படித்தான் அரசியல் செய்யனும்னு இருந்த சகாப்தாம் எல்லாம் முடிஞ்சு போச்சு.. யாரும் எப்படியும் எதுவும் தெரியாமலேயே அரசியல் செய்ய முடியும் என்பதுதான் தமிழக அரசியலோட தற்போதைய நிலவரம்.. அதுல விஜய்யும் அறுவடை செய்ய நினைக்கிறாரு” என விஜய்யை ஆதரிக்கக் கூடிய சில அரசியல் தலைவர்கள் சொல்வதாக டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப். Minnambalamடிஜிட்டல் திண்ணை: 'தனி உலகத்தில்' விஜய்.. ரத்த களறியாகும்...டிஜிட்டல் திண்ணை: 'தனி உலகத்தில்' விஜய்.. ரத்த களறியாகும் தவெக உட்கட்சி மோதல்.. TVK Party Cadres Internal Conflict1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அவங்கள் வெற்றிக்காக மைதானம் தொட்டு பிச் வரை இந்தியா மகளிருக்கு சாதகமாய் செய்தால் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை கந்தப்பு அண்ணா.......................1 point
-
தவெக உட்கட்சி மோதல்
1 pointமக்களுக்கான ஒரு கட்சி என்பது மக்களுடன் அன்னியோன்யமாக இருக்க வேண்டும். அது அந்த கட்சியிடம் அறவே இல்லை. ஏதோ ஒன்லைன் அமேசன் மூலம் சாமான் சக்கடையள் வாங்குவது போல் கட்சி நடவடிக்கைகளையும் கொண்டு போவதாக தெரிகிறது. இன்றுவரை கட்சி சம்பந்தமான மக்கள் சந்திப்பும் இல்லை. ஊடக சந்திப்புகளும் இல்லை. தனியே திரைக்கவர்ச்சி நாட்டை ஆளக்கூடாது என்பது என் கருத்து.திரையுலகினர்க்கு முன்னோடியான திரைக்கவர்ச்சியால் வந்த எம்ஜிஆரால் கூட பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை என்பது நிஜம்.1 point
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : தாய் சொல்லைத் தடடாதே பாடல் : சிரித்து சிரித்து என்னை சிறை யிலிடடாய்1 point
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
1 point
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
கருத்து பா(ப)ஞ்(சம்)😂1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்திய அணிய பற்றி செம்பாட்டன் அண்ணைக்கு எழுதி இருந்தேன் மேல , இந்திய அணியின் மடையடிய குறை சொல்ல முடியாது விளையாடின அனைத்து விளையாட்டிலும் நல்ல ஸ்கோர் அடிச்சவை ஆனால் அனுபவம் இல்லா வேக பந்து வீச்சு மகளிர இந்த உலக கோப்பையில் எப்படி தான் சேர்த்தார்கள் தெரியல , இந்த வருடம் அறிமுகமாகி 7சர்வதேச போட்டியில் விளையாடின மகளிர தொடக்க பந்து போட விட , அவா அதிக ரன்ஸ்ச விட்டு கொடுப்பதோடு விக்கேட் எடுப்பதும் இல்லை , பாக்கிஸ்தானுக்கு எதிரா அங்கினேக்க பந்து போட்டு 3விக்கேட் எடுத்தா , அதன் பிறக்கு மற்ற அணிகளுடன் விளையாடும் போது அவான்ட பந்துக்கு செம அடி , அடுத்த போட்டியில் அவாவை உக்கார வைத்து விட்டு இன்னொரு மகளிருக்கு வாய்ப்பு கொடுத்தால் மாற்றம் நிகழலாம்...........................1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
👍.............. அதுவே தான், பையன் சார்.............. மிகவும் திறமையான அணியாக இருக்கின்றார்கள். இந்திய அணி இவர்களுடன் ஓரளவாவது போட்டி போடுவார்கள் என்று நினைத்தேன்......... ஆனால் இந்திய அணி மோசமாக விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்....................1 point
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
எனக்கு, இந்த முஸ்லிம்கள் வெளியேற்றம் பற்றி இரண்டு வகையான அனுபவங்களும் கிடைத்திருக்கின்றன. ஒரு தடவை ஜனாதிபதி மாவத்தையில் போக வேண்டியிருந்த ஒரு இடத்திற்கு, பஸ்ஸில் இடம் மாறி இறங்கி விட்டேன். நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் நபரிடம் வழி கேட்டேன். "அந்த வழியாகத் தான் போகிறேன், வாருங்கள்" என்று அழைத்துப் போகும் போது "எங்கிருந்து வருகிறீர்கள்?" எனக் கேட்டார், "யாழ்ப்பாணம்" என்றேன். ஆங்கிலத்தில் எனக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விட்டார் (ஆனால், எனக்கு முன்னால் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்😂). நான் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். 5 நிமிடங்களில் இடம் வந்தது. "அந்த நேரம் நீங்கள் சிறுவனாக இருந்திருப்பீர்கள், நீங்களும் தான் என்ன செய்திருக்க முடியும்? உங்களிடம் நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது, மன்னியுங்கள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். மன்னாரில் இருந்து வெளியேறிய ஒரு முஸ்லிம் முதியவரை, புத்தளத்தில் ஒரு ஆட்டுப் பண்ணையில் சந்தித்தேன். சந்திரிக்கா, ரத்வத்தை போன்றோர் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த காலம். "புலிகளால் தான் இவங்களுக்கு ஒரு முடிவு வரும், வேறெவரும் எதுவும் செய்ய முடியாது" என்றார். ஏன் சொல்கிறார், கொக்கி போடுகிறாரா என்று புரியாததால், நான் சிரித்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டேன்.1 point
-
தவிக்கும் தன்னறிவு
1 pointகேட்கிறேன் என்று குறை நினைக்கப் படாது, இந்தக் காட்சியை எழுத யாழ் களத்தில் நடக்கும் சில பரிமாற்றங்கள் உங்களுக்கு ஊக்கம் தந்திருக்குமோ😂?1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்த இருவரும் யார் 100 அடிக்கிறது என்று போட்டி போடினம் போல. இந்த அவுஸ்ரேலியப் பெண்கள் வேறு ஒரு உலகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.1 point
-
கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்
நீங்கள் சொன்னத அந்த அமெரிக்கர் வந்து சொல்லட்டும் பாப்பம்... யோவ் பெரிசு கலியாணவீடு சாமத்தியவீடுகளில் பெட்டி பெட்டியாக அமுக்கியதை எல்லாம் சொல்லவா?படங்களைப் போடவா? கண்ணாடி வீட்டுக்காரன் கல்லெறியக் கூடாது கண்டியளோ!1 point
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
இதை கண்டும் காணாமல் கடந்து போவது சரியில்லை. நீங்கள் ஜேர்மனியில் வந்து இறங்கிய நேரம் தொட்டு சான்சிலராகவா வேலை பார்த்தீர்கள்? அல்லது யூகேயுக்கு மாறி வரும் போது பக்கிங்காம் அரண்மனையில் பிரதானி பதவிக்கா வந்தீர்கள்? இந்த கேள்வி உங்கள் கருத்துக்கு சிரிப்புகுறி இட்டவருக்கும்தான். புலம்பெயர் தேசத்தில் மொழி அறியாமல் நாய் பிஸ்கெட்ட்டை மனித உணவு என சாப்பிட்ட யாழ்ப்பாணத்தமிழன், இன்னொரு இனத்தை செருப்புதைப்பவன் என கிண்டல் அடிக்கலாமா? 90 க்கு முன் அவர்களும் கணிசமான வியாபார நிலையங்கள் யாழ் நகரில் நடத்தினார்கள். முண்ணனி பாடசாலைகளிலும் படித்தார்கள். சிலவேளை நாளைக்கு ஒரு பஸ் வரும் ஊரில் இருந்தவர்களுக்கு செருப்பு தைக்கும் முஸ்லிமை மட்டும்தான் தெரிந்திருக்கலாம்.1 point
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
தலைவரும் அஸ்ரப்பும் ஒன்றாக இருந்து பேசியவுடனே அந்த முரண்பாடு மற்றும் வலி முடிவுக்கு வந்தாயிற்று. அப்புறம் சிங்களவனை சொறிய அல்லது நக்க வேண்டிய தேவை வரும்போதெல்லாம் பலமற்ற ஆதரவற்ற தமிழருக்கு முதுகில் குத்துதல் மட்டுமே அவர்களுக்கு இலகுவாக கிடைக்கும் அல்லா தந்த வரம். இத்தனை நடக்கும் இஸ்ரேலை இவர்கள் மறந்து மன்னித்து விடுவதால் தானே என்னவோ இத்தனை அழிவுகள் பாலஸ்தீனத்தில் நடக்கிற போதும் என் மனம் உருகுதில்லை.1 point
-
கைகூ வடிவில்!
1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- முத்தமிட ஏற்ற இடம் எது? - கலவி மொழி கற்போம்
ஆக நாலஞ்சு பேர்தான் இடம் தேடி இருக்காங்கள் முத்தம் கொடுக்கிறதிலே @vasee @நந்தன் @வாலி @ஈழப்பிரியன் 😂😎😊😆1 point- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் கொழும்பில் அப்பாட்மெற் வாங்கவும் யாழ்பாணத்தில் புது வீடு கட்டவும் , கொலிடேஸ்சில் செல்வதற்கும் 10 - 12 வருடங்களுக்கு முன்பே தொடங்கி விட்டார்கள். அதற்கு அநுரகுமார திசாநாயக்க ஆட்சி வேண்டியது இல்லை.1 point- கருத்து படங்கள்
1 point1 point- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
எனக்கு ஜெவிபி யை ஆரம்பித்தில் இருந்தே பிடிப்பதில்லை, ஆனால் இப்போது அவர்களின்நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறது. எல்லா அரசியல் கடசிகளையும் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. இருந்த தேய்வுகளில் அனுர சிறந்த தெரிவு. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு தீர்வு வரப்போவதில்லை. செம்மணிக்கு நீதி கிடைக்கப்போவதில்லை, காணாமல் போனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. இப்போதைய நிலையில் மக்களின் பொருளாதாரம் மேம்பாட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்குவதே தேவையானது. காலா காலமாக புரையோடிப் போயிருந்த ஊழல் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. போலீஸ் உட்பட தவறு செய்தாலும் முறையிட முடிகிறது. நீதித்துறை ஓரளவு சுயாதீனமாக இயங்குகிறது. சுற்றுலாத்துறை உட்பட நாட்டின் அந்நிய செலாவணி நன்கு அதிகரித்திருக்கிறது. நாட்டை விட்டுப் போன பலர் திரும்ப வருகிறார்கள். அந்நிய முதலீடுகள் வருகின்றன. நாடு முன்பை விட சுத்தமாக இருக்கிறது. காசிருந்தா வெள்ளவத்தையில் ஒரு பிளட் எடுத்து விடுங்கோ, ஓய்வு காலங்களை ஊரிலயும் கொழும்பிலயும் கழிக்கலாம்1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எனக்கு பிடித்த கதையும், கானமும், நடிப்பும், காட்சியும் நிறைந்த காட்சி...............💔 https://www.youtube.com/watch?v=s4MME4U6ScE துரோகத்தாலும் பழிகளாலும் வீழ்ந்த உண்மைகளும் நியாயங்களும் அடுத்த தலைமுறைக்கும்.கடத்தப்படும்.1 point- தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
vஎது செருப்பு தைச்சு உடுப்பு தைச்சு உழைச்ச காசில் வாங்கிய தங்கத்தைப்பறிப்பதற்காகவா?அது சரி இவ்வளவு காலமும் இது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதியும் ஏன் பேசவில்லை. அவர்பேசாவிட்டாலும் இந்த மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் பேசாமல்விட்டிருக்க மாட்டார்களே. இப்பொழுது இவரின் வாலைப்பிடித்துக் கொண்டு மாணிக்கங்கள் ஒவ்வொருவராக வெளியில்வருகிறாரகள் போல் தெரிகிறது.1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 23) 150 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை தென்னாபிரிக்கா தோற்கடித்திருக்கிறது. 14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 46 புள்ளிகள் 2) ரசோதரன் - 43 புள்ளிகள் 3) ஏராளன் - 41 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 41 புள்ளிகள் 5) வீரப்பையன் - 40 புள்ளிகள் 6) சுவி - 39 புள்ளிகள் 7) கிருபன் - 39 புள்ளிகள் 8) புலவர் - 39 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 39 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 37 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 12) வாதவூரான் - 35 புள்ளிகள் 13) கறுப்பி - 35 புள்ளிகள் 14) வசி - 33 புள்ளிகள் 15) வாத்தியார் - 29 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 23, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 50).1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா படம் முத்துமண்டபம்1 point- தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
உண்மையை இடித்துரைத்ததிற்கு நன்றி ....இந்த செய்தி அவர்களால் இங்கு எறியப்பட்டதிற்கே ...இங்கு பதியப்படும் செய்திகளை நியாயப்படுத்த உதவ...நம்ம இனமோ ..அரிச்சந்திரன் கணக்கா ..வாய்மையே வெல்கின்றோம் ..நாங்கள் எப்படி நீதியாய் நடந்தாலும் ...அவர்கள் ..எங்களை அழிக்கும் ஆயுதமாகவே பாவிப்பார்கள்.. இல்லாத தங்கக்கதையும் ...தங்கம் மீளளிப்பு செய்ய்ப்போகினம் என்றவுடன் ..பாய்ந்து ஆராயினம் ...இதனை நாமெல்லோ உணரவேணும்1 point- தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
பிள்ளையள் ஒயில் கிழவனுக்கு கல் எறிய வேண்டாம்…பாவம்.😂 கள்ளனே மனிசியையும் கூட்டி கொண்டு நாட்டை விட்டே ஓடீட்டான் 😂. வீட்டையும் விக்க போட்டுட்டு. ஒயில் ஓல்ட் மான் எண்ணையை பூசிகொண்டு ஒரே அலப்பறை😂1 point- தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
மிக நியாயமான கேள்வி. அண்மைய அமைச்சரவை மாற்றம் மூவரை உள்வாங்கி உள்ளது. ஆனால் இன்னும் ஒரு வட மாகாண தமிழர் இல்லை. அனுரவுக்கு அவர்களின் குணமும் தெரியும் போல 😂1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென் ஆபிரிக்கா பெரிய வெற்றி உலக கோப்பை குருப்பில் தென் ஆபிரிக்கா முதல் இடம்..............முதலாவது மைச்சில் படு தோல்வி அதற்க்கு பிறக்கு விளையாடின அனைத்து விளையாட்டும் மிக மிக அருமை...........................................1 point- மூளை ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சிக்கும் என்ன தொடர்பு? ஆய்வில் புதிய தகவல்
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உடற்பயிற்சி மூலம் மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. கட்டுரை தகவல் பாமினி முருகன் பிபிசி தமிழ் 21 அக்டோபர் 2025, 08:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளையின் ஆரோக்கியத்தையும், செயல்திறனையும் சீராக்குவதில் கூட முக்கிய பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் நினைவாற்றல், கூர்ந்து கவனித்தல் மற்றும் சிந்தனை திறன் போன்ற மூளையின் செயல்கள் மேம்படும் என்கின்றன அந்த ஆய்வுகள். உடற்பயிற்சி மூலம் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி? மூளை ஆரோக்கியம் என்றால் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூளை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறது என்பது பல காரணங்களை பொருத்தது. மூளை ஆரோக்கியம் என்பது அறிவாற்றல், யோசிக்கும் திறன், உணர்ச்சி, நடத்தை, அசைவு போன்றவற்றில் உங்களின் மூளை எந்தளவிற்கு நன்றாக செயல்படுகிறது என்பதை குறிப்பதாகும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) குறிப்பிட்டுள்ளது. இதுபற்றி வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், "மூளை ஆரோக்கியம் என்பது உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் உங்கள் முழு திறனையும் பயன்படுத்த இது உதவுகிறது." என தெரிவிக்கிறது. "நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறது என்பது பல காரணங்களை பொருத்தது. உடல் ஆரோக்கியம், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழல், வாழ்நாள் முழுவதும் கற்றல், சமூக உறவுகள் போன்றவற்றை உள்ளடக்கியது" எனக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார மையம், "இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் நமது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்" எனவும் தெரிவித்துள்ளது. உடற்பயிற்சிக்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உடற்பயிற்சி, புதிய மூளை செல்கள் வளர உதவுகிறது. உடற்பயிற்சி நேரடியாகவோ மறைமுகமாகவோ நினைவாற்றல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்கு உதவுவதாக ஹார்வர்ட் ஆய்வு தெரிவிக்கிறது. அதில், "உடற்பயிற்சி மூளை செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ரசாயனங்களை வெளியிடுவதன் மூலமாகவும், புதிய மூளை செல்கள் வளர உதவுவதன் மூலமாகவும், மூளையில் புதிய ரத்த நாளங்களை உருவாக்குவதன் மூலமாகவும் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்யாதவர்களுடன் ஒப்பிடுகையில், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிந்தனை மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் மூளைப் பகுதிகள் பெரிதாக இருப்பதாக பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உடற்பயிற்சி நினைவாற்றலை மேம்படுத்த உதவும் என நரம்பியல் சிகிச்சை நிபுணர் பிரபாஷ் பிரபாகரன் கூறுகிறார். இதுபற்றி சென்னையில் தனியார் மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை நிபுணராக பணிபுரியும் பிரபாஷ் பிரபாகரனிடம் கேட்டபோது, "பொதுவாக உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் ஆரோக்கியமானது" என்றார். "நமது நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும், மனநிலையை சீராக வைத்துக்கொள்வதற்கும், அறிவாற்றலை அதிகரிப்பதற்கும் உடற்பயிற்சி உதவும்." என்றார். இதுகுறித்து விரிவாக விளக்கிய அவர், "நமது மூளையில் ஃப்ரென்டல் லோப் (Frontal lobe), பரியேட்டல் லோப் (Parietal lobe), டெம்போரல் லோப் (Temporal lobe), ஆக்ஸிபிடல் லோப் (Occipital lobe) என 4 பிரிவுகள் உள்ளன. இதில் இந்த Frontal lobeதான் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் நமது பாணி, நாம் சிந்திக்கும் முறை போன்றவற்றை தீர்மானிக்கும். அதனால் இந்த இடத்தை பயிற்சிகளால் மேம்படுத்துவதன் மூலம் பலன் கிடைக்கும்" என்றார். மூளை ஆரோக்கியத்திற்கு 2 விதமான பயிற்சிகளை பரிந்துரைப்பதாக மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் கூறினார். ஒன்று மனம் சார்ந்த பயிற்சி, மற்றொன்று ஏரோபிக்ஸ் பயிற்சி ஆகும். மனம் சார்ந்த பயிற்சி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூளை ஆரோக்கியத்திற்கு 2 விதமான பயிற்சிகள் உதவுகின்றன. இந்த பயிற்சிகள் நினைவாற்றல், ஒரு விஷயத்தில் கூர்மையாக கவனம் செலுத்துதல், ஒரு பிரச்னையை தீர்க்கும் திறன் போன்ற அறிவாற்றல் சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது. இதுபற்றி பேசிய மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன், "Fund of information அதாவது பொதுஅறிவு, தகவல்கள் என எந்தளவிற்கு அதிகமான தகவல்களை மூளைக்குள் செலுத்துகிறோமோ அந்தளவிற்கு அறிவாற்றல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நம்மை நாம் பாதுகாக்க முடியும்" என்றார். இதுபற்றி அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒரு அங்கமான தேசிய சுகாதார நிறுவனத்திலும் (NIH) ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், "அதிகமாக தகவல்களை மூளைக்கு செலுத்துவதன் மூலம் வயதாவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும், டிமென்ஷியா போன்ற நோய்களை தடுக்க முடியும். வாழ்நாள் முழுவதும் அறிவைப் பெறுவதும், பல உணர்வுப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதும் மூளையை பலப்படுத்துகிறது. இதனால் மூளையால் பிரச்னைகளை சிறப்பாக கையாள முடியும். மூளையின் செயல்பாடும் நீண்ட காலத்திற்கு சிறப்பாக இருக்கும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சுடோகு, வார்த்தை விளையாட்டு போன்றவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மனம் சார்ந்த பயிற்சிகளை மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் பட்டியலிடுகிறார். வாசித்தல் - என்ன வாசிக்கிறோம் என்பதை விட தொடர்ந்து வாசிப்பதுதான் முக்கியம் திறன் மேம்பாடு - இசை, நடனம் என புதிதாக ஏதாவது ஒரு திறனை கற்றுக்கொள்ளுதல், புதிய மொழிகளை கற்பதும் இதில் அடங்கும் புதிர்கள் - சுடோகு, வார்த்தை விளையாட்டு, கணக்கிடுதல். இவை அனைத்தும் மூளை ஆரோக்கியத்திற்கு உதவும் என்று அறிவுறுத்துகிறார். ஏரோபிக்ஸ் பயிற்சி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் பகுதி. உங்கள் இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை அதிகரிக்கும் வகையில் தொடர்ச்சியாக நீங்கள் செய்யும் எந்தவொரு உடல் அசைவு அல்லது செயல்பாடும் ஏரோபிக் உடற்பயிற்சி என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். அதன்படி, தீவிர நடைபயிற்சி ஓட்டம் சைக்கிள் ஓட்டுவது நீச்சல் என இவை அனைத்தும் ஏரோபிக் உடற்பயிற்சியின் கீழ் வரும். பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் பகுதி விரிவடைகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஹிப்போகேம்பஸ் என்பது டெம்போரல் லோப்-ல் உள்ளது. இது மூளையின் நினைவாற்றல் மற்றும் கற்றலுக்கு உதவும் பகுதியாகும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஏரோபிக் உடற்பயிற்சி மூளை வளர்ச்சிக்கும் உதவும் என மருத்துவர் பிரபாஷ். இதுபற்றி பேசுகையில், "BDNF அதாவது Brain-derived neurotrophic factor என்ற புரதம் உள்ளது. இது வெளியாவதால் நியூரல் இணைப்பு (மூளையின் நரம்பு செல்களான நியூரான்களுக்கு இடையேயான இணைப்புகள், இவை சமிக்ஞைகளை கடத்துவதற்கான பாதைகளை உருவாக்குகின்றன) மேம்படும். நியூரானின் வளர்ச்சியை இது அதிகரிக்கும். இதுவும் நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்த உதவும்" என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். "நியூரோகெமிக்கல் (Neurochemical) சமநிலையால்தான் மூளையில் தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நியூரோ கெமிக்கல்களை ஊக்கப்படுத்துவதற்கும் இது உதவும்" என்றார். 'வாரத்திற்கு 150 நிமிட உடற்பயிற்சி அவசியம்' பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்ய வேண்டும். "மூளை ஆரோக்கியத்திற்கு பெரும்பாலான ஆய்வுகள் நடைபயிற்சி மற்றும் ஓட்டத்தைதான் பரிந்துரைக்கின்றன. நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல் என எதை செய்தாலும் ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் என்ற கணக்கில் செய்ய வேண்டும். அதாவது இந்த 150 நிமிடங்களை தினசரி பிரித்து மேற்கொள்ள வேண்டும். தினமும் உடலுக்கு அசைவுகளை கொடுப்பது அவசியம்" என்றார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். ஹார்வர்ட் ஆய்வில் வாரத்திற்கு 120 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் அரை மணி நேரம் அல்லது வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடலில் செயல்பாடுகள் அவசியம் என பரிந்துரைக்கப்படுகிறது. மூளையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இதுபோன்ற பயிற்சிகள் முக்கியம். உடற்பயிற்சிகள் மூளைக்கு ஆரோக்கியத்தை அளித்து, அதன் செயல்பாடுகளை தூண்டுகிறது என்பது பல ஆய்வுகள் மூலமாகவும் நிரூபணமாகி உள்ளது. லாங்கிடூடினல் ஏஜிங் ஸ்டடி இன் இந்தியா (LASI) 2024ஆம் ஆண்டு 31,464 முதியவர்களை வைத்து ஆய்வு மேற்கொண்டது. இதில் அதிக உடல் அசைவுகளால் ஆண்கள் 0.98 புள்ளிகள் அதிக அறிவாற்றலும், பெண்கள் 1.32 புள்ளிகள் அதிக அறிவாற்றலும் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு விஷயத்தின் மீது கவனம் செலுத்துவதற்கும், பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இதுபோன்ற பயிற்சிகள் முக்கியம் என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். "அறிவாற்றல் தொடர்பான பிரச்னை (cognitive dissonance) இருப்பவர்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறன் குறைவாக இருக்கும். உதாரணமாக சாதாரணமானவர்களிடம் வீடு பற்றி எரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் எனக் கேட்டால், அவர்கள் நான் அங்கிருந்து ஓடுவேன், மற்றவர்களை காப்பாற்றுவேன் என பதில் சொல்லுவார்கள். ஆனால், இந்த பிரச்னை இருப்பவர்களால் இந்த பதிலை சொல்ல முடியாது. அதனால் இந்த உடல் பயிற்சிகள் அல்லது அசைவுகள் இவர்களின் இந்த பிரச்னையை குணப்படுத்த உதவும்" என்கிறார். அதுமட்டுமல்லாமல் உடற்பயிற்சிகள் கார்டிசால் எனப்படும் மன அழுத்த ஹார்மோனை குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjw9lnzz8n1o1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். விதி முறைகள் முதலே வகுப்பட்டவை. அதன்படி எல்லோரும் ஒத்துக்கொண்டு விளையாடுவார்கள். நினைத்தது போல் மாற்ற முடியாது. கிரிக்கட்டில் அடிப்படை விதிகள் மாற்றவே முடியாதவை. மற்றயவை, போட்டியை நடத்தும் நாட்டிடம் விட்டுவிடுவார்கள். அதுவும் மழை சம்பந்தமான விதிகள் மாறுபடுவது உண்டு. ஆனால், அதிலும், சில விதிகள் மாற்ற முடியாதவை. ஒருநாள் போட்டிகளில் 20 பரிமாற்றங்கள் கொடுக்கப் பட்ட நேரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். இல்லாவிடில் போட்டி முடிவில்லாமல் முடிவடையும். T20 போட்டிகளில், அது 5 பரிமாற்றங்கள். இப்போ புதிதாக வந்துள்ள 100 பந்துகள் போட்டியில், 25 பந்துகள் விளையாடினாற்தான், ஒரு முடிவு கிடைக்கும்.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தீபாவளி கொண்டாடும் உறவுகளுக்கு என து தீபாவளி வாழ்த்துக்கள். "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ."...அயலவர்கள் தரும் விருந்து1 point- பார்திபன் கனவு
1 pointபார்திபன் கனவு எங்கள் பார்திபனுக்கும் ஒரு கனவிருந்தது, அவன் மனதில் அனல் குடி இருந்தது. உறையூரான் கனவு சோழத்தை ஒட்டியது, எங்கள் ஊரெழுவான் கனவு ஈழத்தை பற்றியது. சோழப் பார்தீபன் கனவு வளர்த்தது வம்சத்தை, எங்கள் ஈழப் பார்தீபன் நகர்வு, சிதைத்தது பாரத வஞ்சத்தை. பழுவேட்டையர்கள் உடம்பு பல தழும்புகள் கொண்டதாம். போங்கடா போங்கள், எங்கள் பார்தீபன் உடம்பே தழும்பில்தான் இருந்தது. அவனுக்கு பொருத்தப் பட்டது ஆட்டு ஈரலாம். இருக்கட்டும், அவன் இதயம் வேங்கையினது. அவன் ஒரு சாரம் கட்டிய பொடியன். ஆனால், பாரதத்துக்கே காந்திய சாரம் புகட்டிய வலியன். மருத்துவனாய் வந்திருக்கவேண்டியவன், இனத்தின் ரணத்திற்கு தானே மருந்தாய் வந்தான். முடிவில் மருத்துவகல்விக்கு உடலை விருந்தாயும் தந்தான். தடை போடலாம் அவன் நிகழ்வுகளுக்கு, எம் மனதில் தினம் ஏந்தும் நினைவுகளுக்கு? பார்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான். அவன் கனவும் ..... —கோஷான்—1 point- முத்தமிட ஏற்ற இடம் எது? - கலவி மொழி கற்போம்
தாழ்பாள்கள் தெறித்து விழுவதற்கு உத்தரவாதம் இல்லை, ஆனால் பற்கள் தெறித்து விழும் வாய்ப்புகளே அதிகம்.🤣1 point- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு இந்திய புராணக் கதைகளால் பின்னப்பட்ட சரித்திரத்தை மறுதலிக்கக் கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது. ஆனாலும் இது மிகக் கடினாமானது. ஆயிரம் வருடங்களாகளாகப் புரையோடியுள்ள இந்துக் கடவுள்களின் நம்பிக்கையைப் பொய் என்று மக்கள் இலகுவாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். புராணங்கள் பொய்யாக இருந்தால் புராணக் கதாநாயகர்களான கடவுள்களும் பொய் என்றாகும். இதேபோல் இலங்கையிலும் என்றாவது ஒருநாள் மகாவம்சம் கூறும் பொய்களும் உடையும்.1 point- தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
விடுதலைப்புலிகள் அமைப்பு இப்போது இல்லை. தலைவர், தலைமை இப்போது இல்லை. தலைவர் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு வெளி ஆட்களால் காரண காரியங்களை ஊகிக்க முடியுமே தவிர உறுதிப்படுத்த முடியாது. தமிழ் மக்களிடம் குடும்பத்திற்கு ஆகக்குறைந்தது இரண்டு பவுண்கள் கட்டாயமாக வாங்கப்பட்டது. வெளியேற்றப்பட்ட முஸ்லீம் சமூகத்தின் சொத்துக்கள், தங்கம் உட்பட விடுதலைப்புலிகள் அமைப்பினால் சுவீகரிக்கப்பட்டது. அமைப்பின் உள்ளே ஆட்டையை போட்டவர்கள் உள்ளார்கள். சிலர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை பெற்றார்கள். கண்டுபிடிக்கப்படாமல் ஆட்டையை போட்டவர்கள் யார் யாரோவோ?0 points - முத்தமிட ஏற்ற இடம் எது? - கலவி மொழி கற்போம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.