Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 11/27/25 in all areas
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
3 pointsநேற்று 25 கார்த்திகை அன்று தம்பி தமிழ்சிறியை அவர் மகள் யாழினி தாத்தாவாக்கிவிட்டார். அவர் குடும்பத்தில் உதித்த முதல் பேரப்பிள்ளை, பேத்தியின் பெயர் சிவானி. பேத்தி சிவானி வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!!🙌3 points
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
2 points❤️தமிழ் சிறீ தாத்தாவிற்கும், பேத்திக்கும் இனிய வாழ்த்துகள் நீடூழி வாழ்க..!2 points
-
ஆயிரங்களில் ஒன்று
2 pointsமிகவும் நன்று ...இலகு நடை...ஈழத் தமிழர் என்றால் ...இதுதான் விதி.. இந்த அடையாள அட்டை விதி... இந்திராணி (ஊறணி ) ஆஸ்பத்திரியில் பிறந்த எம்மை பிறந்த இடம் பொலிகண்டி .. என்று காட்டியது ... அடையாள அட்டை.... இது நம்ம இருவருக்கும் பிடித்த இடமெல்லாம் பிரித்து மேய்ந்தார்கள் .. அடி அவ்வளவும் பிடிக்காத நாட்டில் இருப்பதை விட பிடித்த நாடு கனடாவில் ...இப்ப.2 points
-
மாவீரர்நாள் ....2025 .... அஞ்சலிப்போம்.. கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை
கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை கண்ணீரும் செந்நீரும் கலந்திடும் கார்த்திகை இருபத்தியேழு சொல்லில் அடங்காச் சோகங்கள் சூழக் கண்சிமிடித் தமிழரை கைநீட்டி அழைக்கும் கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை கார்த்திகை மைந்தர்கள் காவிய நாயகர் போர்க்களம் கண்டு புனிதர்கள் ஆகியே தூய்தமிழ் அன்னையின் தாய்மடித் தழுவித் தமிழர்தம் மனங்களில் தண்ணொளி வீசினர் கருத்தினில் தலைவன் கொள்கையை ஏற்றவர் கந்தக குப்பியைக் கழுத்தினில் சுமந்தவர் தரைப்படை கடற்படை தரணியில் கண்டவர் வையம் வியந்திட வான்படை அமைத்தவர் வரிப்புலி வடிவாகி வீரத்தில் திளைத்தவர் உணவு உறக்கம் உறைவிடம் மறந்தவர் காடுகள் களனிகள் கூடிடும் காப்பனர் வெடிகள் சுமந்தே வெந்தணல் ஆகினர் அன்னையும் அப்பனும் அன்புச் சகோதரரும் ஆசை மனைவியும் அருமைக் குழந்தையும் ஏக்கம் கொண்டவர் எண்ணத்தில் தவிக்க களப்பலி கண்டுமே கல்லறையில் தூங்குகின்றார்…2 points
-
இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கு மா? படித்ததும் பகிர்ந்ததும்
இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*. “ சென்னை பெசண்ட் நகரில் அமைந்திருந்தது அந்த பங்களா! காலை 8மணி என்பதால் சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது..! சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன் நகரின் பிரபலமான மருத்துவமனைக்குசொந்தமான ஆம்புலன்ஸ் வந்து நின்றது..! அதிலிருந்து ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடலை மருத்துவமனை ஊழியர்கள் இறக்கி வீட்டிற்குள் வைத்துவிட்டு பணத்தைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்..!ஆம்!! அநத குடும்பத்தலைவர் சுப்பிரமணிதான் நேற்றிரவு மாஸிவ் அட்டாக்கில் உயிர் விட்டிருந்தார்... பிணத்தின் கால்மாட்டில் வந்து நின்ற அவர் மனைவி மாலா முகத்தைப்பார்த்து கண் கலங்கினாள்..,.! மணி 8.45- நகரின் பிரபலமான பிரௌசிங் சென்டரிலிருந்து வந்த இரு நபர்கள் கேமிராவை பொருததி வீடியோ கான்பரன்சில் அவரது உடல் உலகெங்கும் தெரியச்செய்துவிட்டுச்சென்றனர்!! பக்கத்துவீட்டு ராவ் வந்து துக்கம் விசாரித்துவிட்டுசென்றார்....! ஆஸ்திரேலியா- சிட்னியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்த அநத வீட்டின் வீடியோ கான்பரன்சிங்கில் தெரிந்த தன் தந்தையின் உடலைப்பார்த்து விசும்பினாள் சுப்பிரமணியத்தின் மகள் மஞ்சு..! மதியம் 1மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த அவள் கணவன் ஈஸ்வரன் " என்ன? Body தெரியறதா? சரிசரி, எனக்கு சாப்பாடு போடு. நான் அர்ஜெண்டா போகணும்" என்று கூறிய படியே சாப்பாடு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்... சிங்கப்பூர் நகரின் சற்றே ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்தது கோபாலன் வீடு..! சுப்பிரமணியத்தின் இரணடாவது புத்திரன்!! "ஏண்டி! நாம ஒரு எட்டு போய்ட்டு வந்திருக்கலாமோ?" என்றான் கோபாலன், சற்றே கவலையுடன்..! " சும்மா இருங்க! போன வருஷம்தானே போய்ட்டு வந்தோம்? நாம போனா மட்டும் போன உயிர் வந்திடவா போகுது? பேசாம நெட்லயே பார்த்துக்கங்க!" என அழகாகப்பேசினாள் அவனது சகதர்மினி பாமா.. கோபாலன் மௌனமானான்!! USAவில் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள ஏஞ்சல்ஸ் அபார்ட்மெண்டில் 45 வது மாடியில் இருந்தான் சீனிவாசன்..! சுப்ரமணியத்தின் ஜேஷ்ட குமாரன்!! காலை செய்தியை கேட்டபோதிருந்தே கலங்கிப்போயிருந்தான்.! கிருஷ்ணனின் மனைவி லிண்டா அவன் அருகே வந்து நின்று அவனது கையைப்பிடித்துகொண்டாள்.. "Don't worry dear! You know, we can't do anything against the nature!!" என்று ஆறுதல் கூறினாள்..! அவளைத்திருமணம் செய்துகொண்டதால்தான் இன்று அவன் கிரீன்கார்டு சிட்டிசனாக அங்கே நிரந்தரமாகி இருக்கிறான்!! " why are you looking sad dad? Is anything going wrong? " என்று அவனைப்பார்த்து பாசத்துடன் கேட்டாள் அவனது 5வயது மகள் ரோஸலின்..! அவனது கண்கள் மானிட்டர் மீதே நிலைத்திருந்தது.......!! ன்னையில் காலை 10.30..! பெசண்ட் நகரில் சுப்பிரமணியம் உடல் மீது ஒரு பெரிய மாலையைக்கொண்டுவந்து போட்டார் ராவ்..! வெளியே யாரோ வரும் அரவம் கேட்டது..! தான் போனவாரம் புதிதாய் வாங்கிய BMW ல் சம்பந்தி சாந்தமூர்த்தியுடன்(யெஸ், தட் பாமாவின் அப்பா) வந்து இறங்கினார் நீலகண்ட சாஸ்திரிகள்..! அவரது கையில் லேப்டாப்பும் சிலபல எலக்ட்ரானிக் டிவைஸ்களும் இருந்தன....! சுப்பிரமணியத்தின் உடலைப்பார்த்ததும் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் அவர் தன்னிடம் கூறியது சாஸ்திரிகள் நினைவுக்கு வந்தது. " எப்படியாவது என் பெரிய மகன் கையால எனக்கு கொள்ளி வைக்கணும்! அதுதான் எனக்கு கடைசி ஆசை சாஸ்திரிகளே!" என்று தம்மிடம் கூறியதை நினைவு கூர்ந்து நீண்ட பெருமூச்சு விட்டார்!... நேரம் பிற்பகல் 3மணியைத்தாண்டியது..! இறுதி ஊர்வலத்திற்கு சாஸ்திரிகள் ஏற்பாடு செய்தபடி அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய தனியார் வாகனம் வந்து நின்றது. காரியங்கள் மளமளவென நடந்தன.! ஓரிரு சடங்குகளைச்செய்தபின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது..! BMWகாரில் வந்திருந்த நான்கைந்து உறவினர்கள் ஏறிக்கொள்ள அடுத்த பத்தாவது நிமிடம் சடலம் சுடுகாட்டை அடைந்தது... மணி 4.30 சுடுகாட்டில் இருந்த உதவியாளன் "என்ன சாமி, இந்தக்காலத்துல யாருமே விறகு வெச்சி பொணத்தை எரிக்கறதே இல்ல! கரண்ட்லயும் gasலயும் தான் எரிக்கறாங்க! , நீங்க என்னடான்னா வெறகே வேணும்னு கேக்கறீங்க!" என்றான் சாஸ்திரிகளிடம்..! "நீ தொணதொணன்னு பேசாம வேலையைப் பாருப்பா!" என்றார் சாஸ்திரிகள். விறகுக்கட்டைகள் அடுக்கப்பட்டு அதன்மீது சுப்பிரமணியம் உடல் வைக்கப்பட்டது.. சிலபல எலக்ட்ரானிக் வேலைகளைச்செய்தபிறகு தனது லேப்டாப்பை ஆன் செய்து யாருடனோ வீடியோவில் பேசினார். உடலைச்சுற்றி பெட்ரோல் ஊற்றினார். பெட்ரோல் மீது பட்டாசு போன்ற ஒரு டிவைசை வைத்தார். வீடியோ காமிராவில் சில மந்திரங்களை சொல்லியபடி "சரி சீனிவாசன், நீ இக்னிட்டரை ஆன் பண்ணு!" என்றார். திரையில் தெரிந்த அமெரிக்காவிலிருந்த சீனிவாசன் தன் கையிலிருந்த கேஸ் அடுப்பின் லைட்டர் போன்ற ஒரு வஸ்துவை கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கி கண்களில் கண்ணீருடன் அழுத்த அடுத்த கணம் சென்னை பெசண்ட் நகரில் சுடுகாட்டில் கிடத்தப்பட்டிருந்த சுப்பிரமணியத்தின் உடலின் மீது ஊற்றியிருந்த பெட்ரோல் குபுக்கென பற்றியது..! ஒரு இரண்டு நிமிடம் அமைதியாக நின்றிருந்த அனைவரும் பின் ஒவ்வொருவராக கலைந்தனர்.. கொள்ளி வைத்த சீனிவாசன் தன் தந்தையின் மீது பாசம் மேலிட அமெரிக்காவில் குமுறிக்குமுறி அழுதான்... இண்டர்நெட்டில் அப்பாவின் முகம் பல பழைய நினைவுகளை அவன் கண் முன் கொண்டு வந்தது...! சுப்பிரமணியத்தின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனநிறைவுடன் தானும் வீட்டுக்கு கிளம்பினார் சாஸ்திரிகள்..” படித்ததும் பகிர்ந்ததும்2 points
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
2 pointsதாத்தா அவதாரம் எடுத்திருக்கும் சிறித்தம்பிக்கு என் வாழ்த்துகள்.☘ தாயும் சேயும் நலமுடன் வாழ அன்போடு வாழ்த்துகின்றேன். 💐2 points
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
2 pointsஆகா தாத்தா சிறி வாழ்த்துக்கள். சிவானிகுட்டி நலமோடு வாழ வேண்டுகிறேன்.2 points
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
2 points
-
பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
அவன் அவனுக்கு அவன் பிரச்னை 😁🤣1 point
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point❤️தமிழ் சிறீ தாத்தாவிற்கும், பேத்திக்கும் இனிய வாழ்த்துகள் தாயும் சேயும் நலமுடன் வாழ அன்போடு வாழ்த்துகின்றேன். 💐1 point
-
பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
ரசோ பாபா!! நல்லா தான் இரிக்கி😂1 point
-
ஆயிரங்களில் ஒன்று
1 pointஆயிரங்களில் ஒன்று ------------------------------ எப்படி மறைந்தார்கள் என்று தெரியாத ஆயிரம் ஆயிரம் மனிதர்களில் ஒரு குடும்பத்தின் கதை இது ஊரில் அழகான பெண்களில் அவர் ஒருவர் தெரிந்தவர் தான் பலர் கவனம் கொண்டிருந்தார்கள் அந்த நாட்களில் அடிக்கடி ஊரையே துலாவித் தேடும் இலங்கை இராணுவமும் காவல்துறையும் அடிக்கடி ஊரில் கொன்றும் குவித்தது ஒரு முறை அகப்பட்டவர்களை ஒரு கான்கிரீட் கட்டடத்துக்குள் அடைத்து அதற்கு குண்டு வைத்து அப்படியே கொன்றது இன்னொரு முறை எங்கள் கடற்கரையில் முழங்காலில் வரிசையில் இருக்கச் சொல்லி சுட்டுக் கொன்றது நாட்டில் எங்கு தாக்குதல் நடந்தாலும் எங்கள் ஊரையே திருப்பி அடித்தார்கள் எங்கு கண்டாலும் எங்களை இறக்கி அடையாள அட்டை பார்த்து அடித்தார்கள் ஊரே உயிர் காக்க சிதறி ஓடியது கடலே தாயென்று வாழ்ந்தவர்கள் அதைத் தாண்டி ஓடினர் கடல் மேல் ஓடும் போது தாண்டு மாண்டு போனவர்களும் ஏராளம் ஒரு நாள் இந்தப் பெண் அக்கரை போய்ச் சேர்ந்தார் அங்கே உறவினர் ஒருவரை மணம் முடித்தார் அந்த நாட்டில் நடந்த அனர்த்தம் ஒன்றுக்கும் இந்த ஊரவர்களையே தேடித் தேடிப் பிடித்தார்கள் அவர்கள் கொண்டு போன கணவரை அவர்களே பிணமாக கொண்டு வந்து அவரின் நடு வீட்டில் தூக்கினார்கள் அந்தப் பெண்ணையும் அவரின் மாமியையும் விசாரணை என்று பின்னர் அவர்களில் யாரோ கொண்டு போனார்கள் 35 வருடங்களுக்கு மேல் ஆகியும் விசாரணை இன்னும் முடியவில்லை யார் எங்கே என்ன விசாரிக்கின்றார்கள் என்றும் எவருக்கும் தெரியாது.1 point
-
ஆயிரங்களில் ஒன்று
1 pointமிக்க நன்றி அல்வாயன். இந்த வாரம் முழுவதும் ஊரின் பெயர் எங்கேயும் இருக்கும். உங்களின் கவிதை ஒன்றில் கூட இருந்தது. அவை பல நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தன. ஒரு மீன் தொட்டிக்குள் வாழும் மீன் போல நான் அங்கே இருந்த காலங்கள் அவை. மீன் தொட்டியின் சுவரில் முட்டி முட்டி, அதை விட்டு வெளியேறாமல் அங்கேயே சுற்றித் திரிந்த ஒரு காலம். ஒவ்வொரு நாளும் நான் கண்டதும் ஒரே மனிதர்களையே. அத்துடன் இந்த வாரம் 'Satanic Force' என்ற ஆவணப் புத்தகத்தில் கிடைத்த பகுதியை வாசித்துப் பார்த்தேன்........................ என்ன கொடுமைகள்............ அதில் இல்லாதவை கூட நடந்து இருக்கின்றன............ அதில் ஒன்று இது..............1 point
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
எல்லாம் அருமை . ........ சூப்பர் ........! 😂1 point
-
தாயைப் போல பிள்ளை
1 pointஅவனுக்கு எந்த வேலையும் இல்லை. வீட்டில் சும்மா இருந்தான். ஆனால் அவன் தாய் இறந்ததும், அவனுக்கு “ஒரு வேலை” கிடைத்துவிட்டது. அது, தனது தாயைப் போல வேடமிட்டு வாழும் வேலை. வேசம் எவ்வளவு நீண்ட காலம் நீடிக்கும்? ஒருநாள் அது கலைந்து உண்மை வெளிவராமல் இருக்காது. 56 வயது மதிக்கத்தக்க அவன், தனது 82 வயதான தாய் இறந்தபின், அவரது உடலை மம்மி போல ஒரு sleeping bagஇல் சுற்றி வீட்டிலேயே மறைத்து வைத்தான். பின்னர் தாயைப் போல் ஆள்மாறாட்டம் செய்து, மாதந்தோறும் அவனது தாயின் ஓய்வூதியத்தையும் வருமானங்களையும் பெற்றுக் கொண்டிருந்தான். மூன்று வீடுகளின் உரிமையாளரான தாயின் பெயரில் வருடத்துக்கு சுமார் 60,000 யூரோ வருமானம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. தனது தாயின் அடையாள அட்டையை அரச அலுவலகத்தில் புதுப்பிக்கப் போனபோது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தப்பித்துவிட்டான். ஆனால் ஒரு விற்பனை நிலையத்தில். ஒரு ஊழியரின் கழுகுக் கண்களுக்குள் மாட்டிக் கொண்டான். தடித்த கழுத்து, குரல், ஆண் உடலமைப்பு,எதுவும் பெண்ணை ஒத்திருக்காததால், ஊழியர் அவன் வேஷத்தை உடனே சந்தேகித்தார். போலீசார் அவன் வீட்டை சோதனை செய்ய வந்தபோது அவன் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. தற்போது அவன் மீது ஆள்மாறாட்டம் செய்தது, உடலை மறைத்து வைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.1 point
-
தாயைப் போல பிள்ளை
1 pointஅவனவன் வெளியே சென்று சிரமப்பட்டு களவெடுக்கிறான் ...... இவர் வீட்டுக்குள் இருந்து கொண்டே "நோகாமல் நுங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார் " . ......... மனிசிதான் பாவம் செத்தும் பிள்ளையை போஷித்துக் கொண்டிருந்திருக்கு ......! 🙂1 point
-
இனித்திடும் இனிய தமிழே....!
1 point💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰❤🥰 Best Friends For Ever💐💐💐 பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்! அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை- மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும். போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும். தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள். மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும், தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான். அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள். குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது. தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன. மரியாதை விழாச் சடங்குகள் ஆரம்பமாயின. தர்மனுடைய தேரின் முறை முடிந்தபின், பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான். பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான் பீமன். மேலும், பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான். வெற்றி கோஷங்கள் வானைப் பிளந்தன. அடுத்தது, அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன். 'யாருக்கும் கிட்டாத மாபெரும் பேறு தனக்குக் கிடைக்கப்போகிறது. பகவான் கிருஷ்ணனே தன்னை வணங்கிப் பாராட்டப் போகிறான்’ என்று எண்ணி, ஒரு கணம் தன்னை மறந்த நிலையில் இறுமாப்போடு, அந்த அற்புத தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அர்ஜுனன். ஆனால், கண்ணன் தேரைவிட்டு இறங்கவில்லை. அர்ஜுனன் திகைத்தான். 'பெருமையோ சிறுமையோ பாராது, கடமையை நிறைவேற்ற வேண்டும்’ என்று கீதையில் தனக்கு உபதேசித்த கண்ணன், தேர்ப் பாகனுக்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்க வேண்டும் என்று நினைத்தான் அர்ஜுனன். அப்போது பகவான் கிருஷ்ணன், அர்ஜுனனின் அறியாமையை எண்ணி நகைத்தார். "அர்ஜுனா! இந்தத் தேர் மட்டும் இந்தச் சடங்குக்கு விதிவிலக்கு. முதலில் நீ இறங்கு!'' என்று கட்டளையிட்டார். கண்ணனின் வார்த்தையை மீறி அறியாத அர்ஜுனன், அக்கணமே தேரில் இருந்து கீழே இறங்கினான். அதேநேரம், 'தன் சகோதரர்களுக்குக் கிடைத்த கௌரவம் தனக்குக் கிடைக்கவில்லையே’ என ஒரு கணம் ஏங்கினான். "கர்மயோகம்’ என்ற பகுதியாகக் கடமையைப் பற்றி அத்தனை தத்துவங்களைச் சொன்ன கண்ணன், ஒரு தேர்ப்பாகனாக பணியாற்றுவதற்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்குகிறான்? இதனால் மஹாரதனான எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏன் அவன் எண்ணிப் பார்க்கவில்லை? நான் கண்ணனை என்னுடைய தேர்ப்பாகனாக ஏற்றுக்கொண்டதால்தானே, எல்லோர் முன்னிலையிலும் எனக்கு இந்தச் சிறுமை ஏற்பட்டுள்ளது?' என்று எண்ணி, மனம் குமுறினான் அர்ஜுனன். அர்ஜுனனின் மனோநிலையைத் தன் ஞானத்தால் அறிந்தார் ஸ்ரீகண்ணன். அடுத்த விநாடியே தேரிலிருந்து கீழே இறங்கினார். அதே விநாடியில், தேர்க் கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகி மறைந்தார். கண்ணன் தேரைவிட்டு இறங்கிய மறுவிநாடியே அர்ஜுனனின் தேர் குபீரென்று தீப்பிடித்து, அக்னி ஜுவாலையுடன் எரிய ஆரம்பித்தது. எல்லோரும் திகிலோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை. ''அர்ஜுனா! இந்த பாரத யுத்தத்தில் உன் எதிரிகள் அனைவரின் தாக்குதல்களும் உன் ரதத்தின் மீதுதான் குறிவைத்து நிகழ்த்தப்பட்டன. அவர்கள் போரில் எய்த அஸ்திரங்கள், ஏவிவிட்ட தீய மந்திரங்கள், அனுப்பிய தீய சக்திகள் அத்தனையையும் தடுத்து நிறுத்தி, யுத்தம் முடியும்வரை இந்தத் தேருக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன். நான் சாரதியாக அமர்ந்துகொண்டிருந்ததால்தான், இந்தத் தீய சக்திகள் இதுவரை செயலற்றிருந்தன. படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு. இந்தத் தேரின் முடிவு ஏற்படும் தருணம் வந்ததை உணர்ந்தேன். நான் முதலில் இறங்கினால் இந்தத் தீய சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும். அந்த விநாடியே தேர் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகும் என்பதையும் அறிந்தேன். இப்போது புரிகிறதா, நான் முதலில் இறங்கியிருந்தால், நீ இந்தத் தீயில் சிக்கியிருப்பாய். இப்போதும் உன்னைக் காப்பாற்றவே இந்தத் தேரை விதிவிலக்காக்கி, உன்னை முதலில் இறங்கச் சொன்னேன்! தேர்ப் பாகனாகப் பணிபுரிந்த நான் உன்னை வணங்கி, வாழ்த்தி, நீ தரும் சன்மானத்தைப் பெறத் தயங்குவதாக நீ நினைத்தாய். என் எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம்- காரியம் உண்டு என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நீ அறிய வாய்ப்பளித்து இருக்கிறேன். இருந்தாலும், உன்னுடைய சுயகௌரவத்தால் உன் சிந்தனை சற்று நேரம் கலங்கி இருந்தது. அது தவறு. இதோ... உன்னை வணங்க நான் சித்தமாயிருக்கிறேன்'' என்று, நீண்ட விளக்கம் தந்தார் ஸ்ரீகண்ணன். அவர் கூறிய கடைசி வார்த்தைகள் அர்ஜுனன் காதில் விழவில்லை. காரணம் அவர் கால்களில் அர்ஜுனன் வேரற்ற மரம் போல விழுந்துகிடந்தான். வாழ்க்கை எனும் ரதத்தினில், கடவுளை சரணடைந்தால், இறுதி வரை துன்பத்தையும் தடைகளையும் களைந்து, பிறவிப்பிணியினை கடந்தேற, சாரதி போல் நம்மை நடத்தி செல்வார். எனவே அவனை கேள்வியேயில்லாமல் சரணடைவோம். *மனதை கவர்ந்த பதிவு* 👉" சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!* 👉" பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!* 👉"தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!* 👉"பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!* 👉" இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!* *👉"பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!* 👉" செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!* 👉" வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!* 👉" பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.! *👉" இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!* *🙇" ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!* *🙏" மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!*1 point
-
பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
வேண்டாம். இருக்கிறவர்கள். போதும். அவர்கள். சொல்வதில். 10%. தான். சரியாக. நடக்கிறது. இதை. ஒரு. குழந்தை. கூட. சொல்லும். படிக்க. தேவையில்லை.1 point
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி ......... இரவிச்சந்திரன் & ஜெயலலிதா ........! 😍1 point
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
சிம்பாவே அணி இலங்கையணிக்கு சவாலாக உருவெடூத்துள்ளது, சிம்பாவே அணியும் இலங்கை அணி போல நிண்டகாலமாக விளையாடும் அணிதான், புதிதாக வரும் அணிகள் வெகு வேகமாக முன்னேறிவருகிறார்கள் சில அணிகள் பின் தங்கி விடுகிறன்றன, இல்லங்கை அணி தகுதி சுற்றினை இலகுவாக கடந்து விடும் என கருதுகிறேன்,1 point
-
கருத்து படங்கள்
1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- சத்திய சாய் பாபா – 100வது பிறந்தநாள் சிறப்பு ஆய்வு / SATHYA SAI BABA AT 100 — FAITH, POWER, CONTROVERSY AND REASON
சத்திய சாய் பாபா – 100வது பிறந்தநாள் சிறப்பு ஆய்வு / SATHYA SAI BABA AT 100 — FAITH, POWER, CONTROVERSY AND REASON சத்திய சாய் பாபா – 100வது பிறந்தநாள் சிறப்பு ஆய்வு [பக்தி, அதிகாரம், சர்ச்சை மற்றும் அறிவியல்] சத்திய சாய் பாபா யார்? சத்திய சாய் பாபா (1926–2011) இந்தியாவின் புட்டபர்த்தி என்ற கிராமத்தில் சத்தியநாராயண ராஜு என்ற பெயரில் பிறந்தவர். தன்னை சீரடி சாய் பாபாவின் மறுபிறவி என்று அறிவித்தார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களை உருவாக்கினார். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், குடிநீர் திட்டங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவை அவர் பெயரில் உருவாக்கப்பட்டன. அவர் போதனை: "அனைவரையும் நேசி. அனைவருக்கும் சேவை செய். எப்போதும் உதவு. ஒரு போதும் காயப்படுத்தாதே" பக்தர்கள் அவர் இது போன்ற அற்புதங்களைச் செய்ததாகக் கூறினர்: புனித சாம்பல் (விபூதி), மோதிரங்கள் மற்றும் பதக்கங்களை உருவகப்படுத்துதல் நோய் குணப்படுத்தல் எதிர்காலம் கூறுதல் ஒரேநேரத்தில், இரு இடங்களில் தோன்றுதல் பக்தர்களுக்கு – கடவுள் அறிவியலாளர்களுக்கு – வெறும் மனிதர் / மாயாஜால கலைஞர் டாக்டர் ஆபிரகாம் கோவூர் மற்றும் சாய் பாபா டாக்டர் ஆபிரகாம் கோவூர் (1898–1978) ஒரு விஞ்ஞானி, முற்போக்குச் சிந்தனையாளர் மற்றும் நான் கல்விகற்ற யாழ் மத்திய கல்லூரி விஞ்ஞான ஆசிரியர். போலி சாமியார்களையும் மூடநம்பிக்கையையும் எதிர்த்தவர். கோவூர் சாய்பாபாவிடம் வெளிப்படையாக சவால் விடுத்தார்: "அறிவியல் கண்காணிப்பின் கீழ் ஒரு பொருளை உருவாக்கினால் மட்டுமே உங்களைக் கடவுள் என ஏற்கிறேன்" சாய் பாபா இதற்கு ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை, ஓடி ஒழித்துவிட்டார் கோவூர் கூறியது: இதுவெல்லாம் மாயாஜாலக் கலை – தெய்வ சக்தி அல்ல அவரின் கருத்துகள் இன்றும் பல முற்போக்குச் சிந்தனைகளுக்கு அடிப்படையாக உள்ளன. நானும் இன்னும் நம்புகிறேன். பாபாவின் தோல்வியடைந்த கணிப்புகள் 1. தனது இறப்பு காலம் சாய் பாபா கூறினார்: "நான் 96 வயது வரை வாழ்வேன்" ஆனால் அவர் இறந்தது: தேதி: 24 ஏப்ரல் 2011 வயது: 84 அவர் தனது இறப்பைத் தவறாகக் கணித்தார். அவர் தன்னை கூட குணப்படுத்த இயலவில்லை. கோவூர் கூறியது உண்மை ஆனது: "தன்னை காப்பாற்ற முடியாதவர் கடவுள் அல்ல, நோயாளி மட்டுமே" 2. மறுபிறவி – பிரேமா சாய் அவர் கூறியது: சீரடி சாய் → சத்திய சாய் → பிரேமா சாய் ஆனால்: 14 வருடங்களாக எந்த உறுதியான பிறவியும் இல்லை பல போலிகள் நிராகரிக்கப்பட்டனர் பாபாவின் அமைப்புகளும் இப்போது இதைப் பற்றி மௌனம் இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும் எவராவது இந்த உலகில், நான் இவரின் மறுபிறவி என்று சொன்னதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? சிலவேளை யாரையாவது ஒருவர், அவர் இவரின் மறுபிறவி என்று ஒருவேளை சொல்லி இருக்கலாம் ? அவ்வளவுதான்! உங்களுக்கு தெரியும் உலகம் பெரியது, மொழிகள், பண்பாடு பல,பல. அப்படி இருக்கையில் சாய்பாபா மிக குறுகிய மனப்பான்மையுடன், தனது மறுபிறவி, தான் பிறந்த தென் இந்தியாவிலேயே நடக்கும் என்று கூறியிருப்பதைக் காண்க. பாலியல் குற்றச்சாட்டுகள் & மறைமுகம் சில முன்னாள் பக்தர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டினர். அவரது ஆசிரமத்தில் நடந்தது: 1993 துப்பாக்கிச்சூடு மறைமுக நிதி மேலாண்மை அரசியல் பாதுகாப்பு சுயாதீன விசாரணை இல்லை இவை எல்லாம் பெரிய சந்தேகங்களை உருவாக்கின. பணக்காரர்களும் வெளிநாட்டவர்களும் ஏன் இன்றும் கொண்டாடுகிறார்கள்? இது ஒரு உளவியல் மற்றும் சமூகவியல் நிகழ்வு: உணர்ச்சி ரீதியான பிணைப்பு மற்றும் ஏக்கம் புலம்பெயர்ந்தோருக்கான கலாச்சார அடையாளம் சங்கங்களால் சமூக அந்தஸ்து நன்கொடை வலையமைப்புகள் மற்றும் செல்வாக்கு பழைய நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்த பயம் சமூக அழுத்தம் பல தசாப்தங்களாக நற்பெயரின் முதலீடு சாய்பாபாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆதாரம் மருத்துவமனைகள் & பல்கலைக்கழகங்கள் தொண்டு திட்டங்கள் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் பக்தி அனுபவங்கள் மனிதாபிமான பணிகள் சாய்பாபாவுக்கு எதிராக தோல்வியுற்ற மரண கணிப்பு வெளிப்படுத்தப்பட்ட மந்திர தந்திரங்கள் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் அறிவியல் ஆதாரம் இல்லை நிதி ரகசியம் மருத்துவமனைகள் பல்கலைக்கழகங்கள் இருக்கலாம் – அதனால் ஒருவர் கடவுள் ஆகிவிட மாட்டார். இறுதி தீர்மானம் சாய் பாபா: ✅ மக்களுக்கு ஆறுதல் அளித்தார் ✅ நிறுவனங்கள் உருவாக்கினார் ❌ தன் கணிப்பில் தோல்வியடைந்தார் ❌ தன்னை காப்பாற்ற முடியவில்லை ❌ அறிவியலால் நிரூபிக்கப்படவில்லை அவர் கடவுள் அல்ல. அவர் ஒரு மனோவியல் ஆளுமை. அவ்வளவுதான்! உண்மையான ஆன்மீகம் – சத்தியம், வெளிப்படை தன்மை, பொறுப்பு. இதில் எது சாய்பாபாவிடம் இருந்தது? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] SATHYA SAI BABA AT 100 — FAITH, POWER, CONTROVERSY AND REASON [A rational, historical and ethical re-examination] Who was Sathya Sai Baba? Sathya Sai Baba (1926–2011), born as Sathyanarayana Raju in Puttaparthi, India, was one of the most influential spiritual leaders of the 20th century. He claimed to be the reincarnation of Shirdi Sai Baba and later announced that a third incarnation, “Prema Sai Baba”, would be born after his death. He gathered millions of followers around the world, including politicians, judges, scientists, industrialists, artists and diaspora communities. His organisation built hospitals, universities, water supply projects and schools — all of which still function today. His central teachings were simple: “Love all. Serve all. Help ever. Hurt never.” Devotees claimed he performed miracles such as: Materialising sacred ash (vibhuti), rings and pendants Healing incurable diseases Predicting the future Appearing in two places at once To his followers, he was God. To critics, he was a charismatic magician. Dr Abraham T. Kovoor vs Sai Baba Dr Abraham T. Kovoor (1898–1978) was a Sri Lankan-born Indian scientist and one of South Asia’s most famous rationalists. A former Professor of Zoology, he dedicated his life to exposing fake godmen, miracle-workers and superstition using science. Kovoor openly challenged Sai Baba: “If Sai Baba can materialise an object under controlled scientific conditions, I will accept him as divine.” Sai Baba never accepted this challenge. Kovoor repeatedly stated that Sai Baba’s miracles were simple sleight-of-hand tricks, no different from stage magic. After Kovoor’s death, many of his ideas became the foundation for modern rationalist movements in India. The Failed Prophecies 1. Sai Baba’s own death prediction Sai Baba repeatedly told his followers: “I will live until the age of 96.” Born in 1926, this meant he should have lived until 2022. But he died on 24 April 2011, at the age of 84 — around 8 to 12 years earlier than his own prediction. He also failed to cure himself, despite suffering from kidney failure and respiratory illnesses. He was put on life support and treated by specialist doctors in his own hospital. A being who claimed to cure others could not cure himself. This is a powerful contradiction. As Kovoor once said: “A god who cannot save himself is not a god, but a patient.” 2. Rebirth prophecy – the missing “Prema Sai” Sai Baba declared: Shirdi Sai Baba → Sathya Sai Baba → Prema Sai Baba (future incarnation) He said Prema Sai would be born in a village in Karnataka. More than a decade after his death: No verified incarnation has appeared Many false claimants were rejected Even his own institutions avoid mentioning it This is another failed prophecy. Sexual abuse & other serious allegations Several former male devotees accused him of sexual abuse, saying he used spiritual authority to exploit them. Documentaries, testimonies and investigative journalists reported these claims.Although Sai Baba was never legally convicted, the number, consistency and seriousness of the allegations cannot be ignored. There was also: A mysterious shooting incident in his ashram in 1993 Secretive financial management Political protection at the highest level No open independent investigation His inner circle remained closed, powerful and untouchable. Then why do rich people and diaspora still celebrate him (even his 100th birthday)? This is a psychological and sociological phenomenon: Emotional attachment and nostalgia Cultural identity for diaspora Social status by association Donation networks & influence Fear to question old beliefs Community pressure Investment of reputation over decades For many, it is no longer about truth — It is about identity, memory and belonging. Proof FOR and AGAINST For Sai Baba Hospitals & universities Charity projects Millions of followers Devotional experiences Humanitarian works Against Sai Baba Failed death prediction Exposed magic tricks Sexual abuse allegations No scientific proof Financial secrecy Important distinction: A person can do charity — yet not be divine. Hospitals do not prove godhood. Final balanced conclusion Sathya Sai Baba was: A powerful communicator A master of psychology A builder of institutions A symbol of faith A source of both comfort and controversy But he failed: To prove his divinity scientifically To fulfil his own prophecies To answer serious accusations To escape death like an ordinary human History will remember him not as a proven God, but as one of the most mysterious and disputed figures of modern India. True spiritual greatness does not need miracles. It needs truth, transparency and accountability. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] துளி/DROP: 1918 [சத்திய சாய் பாபா – 100வது பிறந்தநாள் சிறப்பு ஆய்வு / SATHYA SAI BABA AT 100 — FAITH, POWER, CONTROVERSY AND REASON https://www.facebook.com/groups/978753388866632/posts/32561918190123407/?1 point- இனித்திடும் இனிய தமிழே....!
1 pointMagudeswaran Govindarajan · Suivre sdSntrooepm07i4fgtu5l85hc0i542919ull402la2clm1l0m0u2u2 16682 · இரு சொற்களுக்கிடையே எல்லா இடங்களிலும் வலிமிகுதல் இல்லை. வலிமிகவேண்டிய இடங்களில் தவறுமாயின் பொருள் வேறுபாடு தோன்றிவிடும். சந்திப் பிழைக்கான தலையாய அறியாமை இந்நுணுக்கம் அறியாமல் இருப்பதுதான். ஒரே சொற்றொடர்தான். அவ்விரு சொற்களுக்கிடையே ஓரிடத்தில் வலிமிகும். ஓரிடத்தில் வலிமிகாது. என்ன காரணம் ? அவ்விரு சொற்களுக்குமிடையே தோன்றும் பொருள் வேறுபாடுதான். அவ்விரு சொற்களும் சொற்றொடராகி அடுத்தடுத்து வருகையில் தாம் உணர்த்த விரும்பும் பொருளுக்கேற்ப வலிமிகுத்தோ மிகாமலோ வரும். சொற்றொடர் அமைப்புகளின் பொருளுணர்ச்சிக்கேற்றவாறு/பொருள் நோக்கத்திற்கேற்றவாறு வலிமிகுவிக்கவேண்டும், அல்லது வலிமிகுவிக்காமல் விடவேண்டும். ஒரே சொற்றொடர் அமைப்புக்குள் பொருள் வேறுபாடுகள் தோன்றும் அமைப்புகளை எடுத்துக்காட்டுகளாக எழுதியுள்ளேன், காண்க :- இரவு முழுவதும் பெய்த மழையினால் சாலைகளில் நீர் தேக்கம். மேட்டூரில் இருப்பது நீர்த்தேக்கம். 00 கற்ற கலை பொருள் செய்யப் பயன்படவில்லை. கலைப்பொருள் செய்து பெரிதாக ஈட்டியவர்கள் பலர். 00 அவர்களுக்கிடையே இருந்த உறவு சிக்கலாகிவிட்டது. உறவுச்சிக்கல் ஏற்படாதபடி வாழப் பார். 00 இந்தப் பேருந்து பயணத்திற்கு உதவாது. பேருந்துப் பயணம் அலுத்துவிட்டது. 00 உழவர்க்கு உழவு தொழிலாகும். உயிர்காப்பது உழவுத்தொழில். 00 நீ எடுத்த காட்சி பிழையானது. என்னுடைய பார்வையில் காட்சிப்பிழை உண்டோ ? 00 அன்பு தளையாகக்கூடாது. அன்புத் தளைக்குள் அகப்பட்டதனால் விடுபட முடியவில்லை. 00 கிளி பேசும். கிளிப்பேச்சு கேட்பதற்கு இனிமை. 00 மழை காலந்தவறிப் பெய்கிறது. மழைக்காலம் வந்துவிட்டது. 00 வளர்ச்சி தடைபடக்கூடாது. வளர்ச்சித்தடை ஏற்படாமல் பார்த்துக்கொள். 00 இரு சொற்களுக்கிடையே தோன்றும் இருவகையான பொருட்பயன்பாடுகள் இவை. இவற்றை நினைவிற்கொண்டால் வலிமிகல், மிகாமை குறித்துத் தெளிவடையலாம். - கவிஞர் மகுடேசுவரன் Voir la traduction1 point- சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து!
1 point1 point- எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
தலைவன் மேதகு பிரபாகரனுக்கு தேசவிடுதலைக்காய் தியாகங்கள் செய்தீர் வாழி! தேசமக்களின் தெய்வம் ஆனீர் வாழி! தேசக்காற்றின் சிந்தையில் நிறைந்தீர் வாழி! தேசியத்தை உயிராக நினைத்தீர் வாழி! தேசியத்தலைவராகத் திக்கெட்டும் திகழ்கின்றீர் வாழி! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!🎂"1 point- எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
அண்ணை 71 ‘அண்ணை’ என்கிற அந்த வார்த்தை. அதை உச்சரிக்கும்போதே தேகமெல்லாம் சிலிர்க்கும். தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த வரலாறும் இந்த ஒரேஒரு வார்த்தைக்குள் அடக்கம்..! “அண்ணைக்காக போறன்” “அண்ணைய பார்த்துக்கொள்ளுங்கோ” “அண்ணைமேல சத்தியமா” “அண்ணை பார்த்துக்கொள்வார்” “அண்ணையே சொல்லிட்டார்” இப்படி எங்கள் வாழ்க்கையே அண்ணைதானே..! இந்த உலகத்தில் அண்ணையைப் போல கொள்கைப் பற்றுக்கொண்ட ஒரு தலைவன் உண்டா? அண்ணையைப் போல நிதானம்மிக்க ஒரு மனிதன் உண்டா? அண்ணையைப் போல உறுதிகொண்ட இன்னொரு வழிகாட்டி உண்டா? யாராலும் மிரட்டி அண்ணையைப் அடக்க முடியவில்லை. பேரம்பேசி பணியவைக்க முடிந்திருக்கவில்லை. பணத்தைக் காட்டி, இன்னபிற சலுகைகளைக் காட்டி அவரை விலைக்குவாங்க முடியவில்லை. அதுதான் அண்ணை..! எல்லாவற்றையும்விட அண்ணை எங்களுக்குத் தந்த பாதுகாப்பு இருக்கிறதே..! இந்த உலகத்தில் எங்குமே கிடைக்காத பாதுகாப்பு. சாமம் 3 மணிக்குகூட பெண்கள் தன்னந்தனியாக வீதியில் போகமுடியும். யாரும் கேட்கமாட்டார்கள். கத்தியைக் காட்டி மிரட்டுவார்களோ, நகைகளை அறுப்பார்களோ, வாகனத்தில் வந்து கடத்துவார்களோ என எந்த அச்சமும் இல்லாத காலம் அது. போதைப்பொருள் கடத்தல் - கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. வீடுபுகுந்து தாக்குவது.. பெற்றோல் குண்டு வீசுவது.. ஆளைவிட்டு மிரட்டுவது.. கட்டப்பஞ்சாயத்து.. இதெல்லாம் “கிலோ என்ன விலை?” என்று கேட்ட காலம் அது. வீதி ஒழுங்கை உங்களால் மீற முடியுமா அன்று? காவல்துறைக்கு லஞ்சம் கொடுக்க முடியுமா? குற்றம் செய்துவிட்டு தப்ப முடியுமா? எதுவுமே முடியாது. ஒற்றைப் பார்வையாலேயே ஒரு தேசத்தைக் கட்டியாண்டவர் அண்ணை. அது அண்ணையின் காலம்..! பொற்காலம்! அந்தக் காலத்தில் அண்ணையின் பாதுகாப்பின்கீழ் வாழக்கிடைத்ததே தமிழர்களுக்குப் பெரும் பாக்கியம். அதைவிட வேறென்ன பெருமை இருந்துவிடப் போகிறது எமக்கு..? அண்ணையின் புகழ் என்றென்றும் நீடித்திருக்கும்! அண்ணைக்கு வாழ்த்துக்கள்..!❤️ ~~ யாரோ எழுதிய வரிகள்...🙏1 point- சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து!
1 pointஅவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கூறவில்லை. சங்கர் கலவியில் முக்கியமாக கணித பாடத்தில் மிக திறமையானவராக இருந்தார். அவரைப் போன்ற கல்வியில் மிக திறமையானவர்கள்களின் தியாகம் எல்லாம் வீணாகியதுடன், இன்று புலம் பெயர் அடாவடிகளின் கையில் சிக்கி தமிழரின் அரசியல் பாழ்படுவதால் வந்த கடுப்பில் கூறப்பட்ட கருத்து. அவமானப்படுத்தும் தொனியில் அது தெரிந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதை மீளப்பெற்றுகொள்கிறேன். மன்னிக்கவும்.1 point- எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
பொங்கிடும் கடற்கரை ஓரத்தில், மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்தில், மங்களம் தங்கிடும் நேரத்தில், பிறந்த எங்கள் ஒரே தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! நீங்கள் விட்ட சுவாசம் கலந்த காற்றை நான் சுவாசித்ததும், உங்கள் காலடித் தடம் பதித்த கோண்டாவில் முகாமில் சுவடுகள் காயும் முன் நானும் நடந்ததும், உங்களின் குரலை கேட்டதும் என் வாழ்வில் கிடைத்த மிகச் சிறந்த அனுபவங்கள். நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே ஒரு பெரும் பாக்கியம் ஆயிரம் விமர்சனங்கள் உங்கள் மீது எனக்கும் இருக்கலாம். ஆயினும் நீங்கள் ஒருவரே என் தலைவன். என்னைப் போன்றோரிற்கான ஒப்பற்ற ஏக தலைவன். இறந்தும் இறவாமல் நீக்கமற நிறைந்து இருக்கும் தலைவன்! -நிழலி1 point- எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
ஏன் அவர் ஒப்பற்ற தலைவர் : ஜெரா November 26, 2025 இலங்கை தீவில் இழந்துவிட்ட தம் இறைமையை மீட்கவே முடியாது என்ற பெருங்கவலையோடு ஈழத்தமிழர்கள் பல சந்ததிகளைக் கடந்தனர். இடையிடையே எல்லாளன், சேனன், குத்திகன், பண்டாரவன்னியன், கயிலைவன்னியன், செகராசசேகரன், பரராசசேகரன், சங்கிலியன் எனப் பலர் அந்தக் கனவை ஏந்தி வரலாற்றில் வந்துபோயினர். ஆனால் எவராலும், விஜயனிடம் இழந்த ஈழத்தமிழர் இறைமையை முழுமையாக அடைய முடியவில்லை. ஒரே ஒருவரால் அது முடிந்தது. வெறுங்கனவாக மாத்திரமிருந்த ஈழத்தமிழர் இறைமையை ஆட்சி சிம்மாசனத்தில் ஏற்றி 30 வருடங்களாக அழகுபார்க்க முடிந்தது. அவரே நம் தலைவர். அவரே இன்றைய நாளுக்குரியவர். அதுவரைக்குமான உலகில் கண்டுபிடிக்கப்படாதிருந்த அனைத்துவித அறவழிப்போராட்டங்களிலும் ஈடுபட்டு, தோற்றுப்போயிருந்த தருணத்தில்தான் தலைவர் வந்தார். பெற்றோரின், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்றி முடிவெடுக்க முடியாத வயதில், இனத்தையே வழிநடத்தத் துணிந்தார். தம்மிடமிருக்கும் ஆயுதங்களை வைத்து ”எவ்விதமான” காரியங்களையும் செய்யத்துணியும் வயதில், அனைத்துவித பாசங்கள் மீதான பற்றுக்களையும் அறுத்தெரிந்தார். இனவிடுதலை ஒன்றே தாம் ஏந்தியிருக்கும் ஆயுதத்தின் ஒரே இலக்கு என்பதைத் தன்னைச் சூழ்ந்திருந்த இளையோருக்குப் போதித்தார். இன்றைய உலக அனுபவங்களை வைத்துக் கற்பனை செய்துபாருங்கள், ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் கனரக ஆயுதங்களும், வெளியுலகத் தொடர்புகளற்ற ஒரு பிராந்தியத்தை நிர்வகிக்கவல்ல அதிகாரமும் கிடைத்தால் என்ன செய்திருப்பர். உலக அனுபவங்களைப்போன்று எதுவும் நடக்கவில்லை. இனவிடுதலை என்கிற இலக்கு ஒன்றிற்காக ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் அவர் தலைமையில் விதையாகி வீழ்ந்தபோதிலும் யாரை நோக்கியும் ஒரு தீயசொல் பாயவில்லை. ”அவரின் எத்தனையோ படங்களை மீட்டோம். ஒரு படத்தில்கூட மது போத்தல்களைக் காணவில்லை” என எதிரிகளே புகழுமளவிற்கு உலகின் மிகஉன்னதமான சுய ஒழுக்கமிக்க இயக்கமொன்றைக் கட்டமைத்தார் அவர். அதனை இம்மியளவும் வழிபிசகாமல் இறுதிவரையில் வழிநடத்தினார். அதனால்தால் அவர் தலைவர். விடுதலை கோரி போராடத்தை ஆரம்பிக்கும் ஆயுத இயக்கங்கள், வெகுவிரைவிலேயே திசைமாறிப் போவது உலக வழக்கம். உலகநாடுகளின் சதிகளில் சிக்கி தான் வந்த வழியையே மறந்து, விடுதலை இயக்கங்களின் மறைந்துபோவதும் பொதுப்போக்கு. தலைவரை நோக்கியும் உலக வல்லரசு நாடுகள் அந்த வலையை தொடர்ச்சியாக முப்பதாண்டுகள் வீசிவந்தன. ”நான் இனவிடுதலை என்கிற இலட்சியத்திலிருந்து விலகினால் என் மெய்பாதுகாவலரே என்னை எவ்வேளையிலும் சுட்டுக்கொல்லலாம்” என்கிற கொள்கையில் தலைவர் துளியளவும் விடாப்பிடியாக இருந்தார். அவருக்கென்று தனிப்பட்ட வாழ்வொன்றிருந்தது. ஒரே மகள், இரண்டு ஆண் மகன்கள் என்கிற அரியதொரு குடும்பமிருந்தது. அன்பிற்கே அடையாளமான தாய், தந்தையர் இருந்தனர். ஒரு மனிதனின் வாழ்க்கை வரம்பின் உச்சமெதுவெனில் இப்படியொரு அன்பான குடும்பம்தானே. ஆனால் இந்த இனவிடுதலைக்காக தன் மொத்தக் குடும்பத்தையும் தியாகித்தார் தலைவர். தானும் தன் பிள்ளைகளும், தன் உறவினர்களும் ஏழேழு தலைமுறையாக செழித்து வாழவேண்டியளவுக்கு நாட்டைச் சூறையாடி சொத்துச் சேர்க்கும் தலைவர்கள் மத்தியில், ஒரு ரூபாயைக்கூடத் தனக்காகவோ, தன் குடும்பத்திற்காகவோ எடுத்துச்செல்லாத – தன் மொத்தக்குடும்பத்தையும் இனத்திற்காக வித்தாக்கிய ஒப்பற்ற தலைவர் உலகில், இந்தப் பூகோள வரலாற்றில் வேறெந்த இனத்திற்கு வாய்த்திருக்கும். சதாகாலமும் போர் நடத்திக்கொண்டு, கடல், தரை, வான் என எல்லைகளைக் காத்துக்கொண்டு, புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டு ஒரு நிழல் அரசைக் கட்டமைப்பதும், அதனை நேர்த்தியாக வழிநடத்துவதும் கற்பனைகூட செய்துபார்க்கமுடியாத ஒன்று. உலகம் பாதுகாப்புசார் துறைகளில் இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்ட பிறகும்கூட நவீன அரசுகள் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்ற பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள், திட்டமிட்டக் குற்றச்செயல்களுக்காக உருவாகும் குழுக்கள் என எல்லாவற்றையும் 30 ஆண்டுகளாக ஒருவர் கட்டுப்படுத்தினார் எனில் அது தலைவரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்..! எல்லாவற்றுக்கும் மேலாக, படையக் கட்டுமானம்..! சோழர்களுக்குப் பிறகு 30 ஆண்டுகள் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய ஒரே படையக் கட்டமைப்பைத் தலைவர் உருவாக்கினார். அவரின் காலத்தில் இலங்கைத் தீவின் மீதான புவிசார் அரசியல் இன்றிருக்கிற அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தியா, சீனா என எந்நாட்டுக்கும் ஒரு துண்டு நிலம்கூட இத்தீவிலிருந்து விற்கப்படவில்லை. இன்று இந்நாட்டின் தலைநகரில் பெரும்பகுதியைப் பிடித்து சீனா தனக்கான தனிநாடொன்றை உருவாக்கிக்கொள்ளுமளவிற்கு இந்நாடு புவிசார் அரசியல்விடயத்தில் தோல்வியடைந்திருக்கின்றது. இந்தியாவின் தலையீடுகள் சொல்லத்தேவையில்லை. அவர் உருவாக்கிய வலிதான – ஓர்மம் மிக்க படையக் கட்டமைப்புக்களின் வழியே தமிழர்களின் கடல் மற்றும் நிலம் சார் இறைமை மாத்திரமின்றி, முழு இலங்கைத்தீவின் இறைமையும் காப்பாற்றப்பட்டது. ஆனால் அவரற்ற பதினாறு வருடங்கள் கடந்துள்ள இன்றைய நிலை…! இப்படி தன்னினத்திற்கு மாத்திரமல்லாது, இத்தீவில் வாழுகிற எதிர் இனத்திற்குமாகப் போராடியவர் எம் தலைவர். அதனால்தான் குற்றவுணர்வால் உந்தப்படும் எதிரிகள்கூட அவ்வப்போது தலைவர் பற்றிய உண்மையைச் சொல்லிவிடுகின்றனர். உலகில் தோன்றிய ஆச்சரியமிகு – மேன்மைமிகு தலைவர்களின் வரிசையில் நின்றுநிலைத்துவிட்ட தலைவருக்கு இன்று அகவைத் திருநாள். வானும் தன் ஆசி வழங்கி, வாழ்த்தி நிற்கும் இன்நன்நாள் குறித்து நம் தலைமுறைக்கு ஒரு பெருமிதம் உண்டு. அது எதுவெனில், தலைவ…நாம் நின் காலத்தில் வாழ்ந்தோம்..! https://www.ilakku.org/ஏன்-அவர்-ஒப்பற்ற-தலைவர்-ஜ/1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உள்ளதை சொன்னா பைத்தியம்னு உலகம் சொல்லுது . ......... எம் . ஜி .ஆர் . .........! 😂1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- குட்டிக் கதைகள்.
1 pointRAVI MANY · பண்டைய சீனர்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்காக சீனப் பெருஞ்சுவரை நிர்மாணித்தனர். அதன் அதிகபட்ச உயரத்தின் காரணத்தினால் யாருமே அதன் மீது தாவி, ஏறி உள்நுழைய முடியாது என அவர்கள் உறுதியாக நம்பினர். ஆனால் சீனச் சுவர் நிர்மாணிக்கப்பட்டு முதல் நூற்றாண்டு காலப்பகுதிக்குள் மாத்திம் சீனா மூன்று போர்களை சந்தித்தது. அந்த மூன்று முறையும் சீனச் சுவரை ஊடறுத்துச் செல்ல வேண்டிய தேவை எதிரிகளின் காலாற்படைகளுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் வாயிற்காவலுனுக்கு இலஞ்சம் கொடுத்துவிட்டு, வாயிற்கதவினூடாக அவர்கள் நுழைந்தனர். சுவரை கட்டியெழுப்புவதில் சோலியாக இருந்த சீனர்கள், வாயிற்காவலாளியை கட்டியெழுப்ப மறந்து விட்டனர். மனிதனை கட்டியெழுப்புவது வேறு அனைத்தையும் கட்டியெழுப்புதவற்கு முன்னர் செய்ய வேண்டிய விடயமாகும். இன்றைய மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய முக்கிய கருத்து இது. கீழைத்தேய அறிஞர் ஒருவர் சொல்கிறார். ஒரு சமூகத்தின் நாகரீகத்தை அழிக்க விரும்பினால் அங்கே மூன்று வழிமுறைகள் உள்ளன. 1- குடும்பங்களை சீர்குழைத்தல் 2- கல்வியை இல்லாமல் செய்தல் 3- முன்மாதிரிகளையும், மூலாதாரங்களையும் வீழ்த்துதல் குடும்பத்தை சீர்குழைக்க வேண்டுமா? தாயின் வகிபாகத்தை இல்லாமல் செய்யுங்கள். தாய் 'குடும்பத் தலைவி' என்று சொன்னால் அவள் வெட்கப்பட வேண்டும் என்ற அளவில் அவளை ஆக்கிவிடுங்கள். கல்வியை இல்லாமல் செய்ய வேண்டுமா? சமூகத்தில் ஆசிரியருக்கு உள்ள முக்கியத்துவத்தை வழங்காதீர்கள். அவர்களின் அந்தஸ்த்தை குறைத்து, மாணர்களும் அவர்களை பரிகஷிக்கும் அளவுக்கு செய்து விடுங்கள். முன்மாதிரிகளை வீழ்த்த வேண்டுமா? அறிஞர்களை குறைகாணுங்கள். அவர்கள் மீது சந்தேககங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களது மதிப்பை கொச்சைப்படுத்துங்கள். அவர்களை செவிமடுக்கவோ, பின்பற்றவோ யாரையும் விட்டுவிடாதீர்கள். உணர்வுபூர்வ தாய் இல்லாமலாகி, தூய்மையான ஆசிரியரும் இல்லாமலாகி, முன்மாதிரியும், மூலாதாரமும் வீழ்ச்சியுறும் போது பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட தலைமுறையை உருவாக்க யார் இருக்கப் போகிறார்கள்?! Voir la traduction1 point- எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
ஒரு தொட்டியில்சிறிய கல்லுகள் மணல் போன்றவற்றை மாறி 2 3 அடுக்குகளாக போட்டு வ டி கட்டி எடுத்த மழைநீரை அருந்தலாம் என்று நினைக்கிறேன். முதல் மழைநீரைச் சேகரிக்கக் கூடாது. இது வழிமண்டலத்தில் இருக்கும் ஆழுக்குகள் தூசிகள் புகைகள் போன்றவற்றைக் கொண்டு வரும். அதனால்தான் நீண்டகாலத்திற்கு பிறகு பெய்யும் முதல் மழையில் நனையக் கூடாது வருதம் வரும் சட்டையில் கரம்பேன் பிடிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள் மழை நல்லா அடிச்சு ஊத்தி விட்ட பின்னர் அடிக்கும் வெய்யில் கடுமையாகச் சுடுவதும் வானம் தெளிவாக இருப்பதும் வளிமண்டலத்தில் உள்ள மாசுக்கள் கழுவப்படுவதால்தான். ஆகவே தொடர்சியாக மழை பெய்யும் பொழுது 2வது 3வது அல்லது அதற்குப் பிந்திய மழைநீரைச் சேகரித்து வடிகட்டி எடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். இது எனது சொந்த விளக்கம்.எதற்கும் துறை சார்ந்தவர்களிடம் அறிவுரை கேட்டு சேமிப்பது நல்லது.1 point- ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்!
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: 55 பேர் பலி - சேதத்தைக் காட்டும் புகைப்படங்கள் பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து வியாழக்கிழமைக்குள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. 26 நிமிடங்களுக்கு முன்னர் ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமையன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை குறைந்தது 55 பேர் உயிரிழந்ததாகவும், 270க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து வெளிவந்த படங்கள் அதிக அளவு புகை, தீப்பிழம்புகள், அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்கு நிலவும் குழப்பமான சூழ்நிலையைக் காட்டுகின்றன. வியாழக்கிழமை காலைக்குள், எட்டு குடியிருப்பு வளாகங்களில் நான்கில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மீதமுள்ள வளாகங்களில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் காலையிலும் புகையைக் காண முடிந்தது. வியாழக்கிழமை மாலைக்குள் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று தீயணைப்புத் துறை நம்புகிறது. ராய்ட்டர்ஸ் தகவலின் படி, ஹாங்காங்கில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் என்ற குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த வளாகத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் மொத்தம் 2,000 குடியிருப்புகள் உள்ளன. ஹாங்காங் அரசாங்கத்தின் கூற்றுப்படி, புதன்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:51 மணியளவில் வாங் ஃபுக் கோர்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது, அதன் பிறகு தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 45 பேரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி ஜான் லீ தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் தீயணைப்பு வீரர் வை-ஹோவும் ஒருவர். ஹாங்காங் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், "ஹோ வை-ஹோவின் மறைவுக்கு தீயணைப்புத் துறை இயக்குநர் ஆண்டி யங் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்" என்று கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹாங்காங் அரசாங்கத்தின் கூற்றுப்படி, புதன்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:51 மணியளவில் வாங் ஃபுக் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், மற்றொரு தீயணைப்பு வீரரும் தற்போது மருத்துவமனையில் இருப்பதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் சுமார் 800 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் உள்ள தாய் போ ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும்போது, மூக்கைத் துளைக்கும் அளவுக்கு கடுமையான புகை நாற்றம் வீசுவதாக ஹாங்காங்கில் உள்ள பிபிசி செய்தியாளர் ஃபோப் காங் கூறுகிறார். "நாங்கள் சம்பவ இடத்திற்குச் செல்லும் வழியில், தீப்பிழம்புகளால் சூழப்பட்ட கட்டடங்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஏராளமான மக்களைக் கண்டோம். பல்வேறு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன, மேலும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விரைந்துகொண்டிருந்தன. தீயணைப்பு வீரர்கள் அதில் இருந்து ஆக்ஸிஜன் தொட்டிகளை எடுத்துக்கொண்டிருந்தனர்" என்றும் அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். தாய் போ மாவட்ட கவுன்சிலர் முய் சியு-ஃபங் பிபிசி சீன சேவையிடம் கூறுகையில், சுமார் 95 சதவிகித மக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், அருகிலுள்ள மூன்று குடியிருப்புத் தொகுதிகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார். வெளியேற்றப்பட்டவர்கள் அருகிலுள்ள சமூக மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்தது. படக்குறிப்பு, சம்பவ இடத்தில் சுமார் 800 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . அருகிலுள்ள கட்டடங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், காயமடைந்தவர்களுக்கு ஒரு உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் அரசாங்கம் தற்காலிக முகாம்களையும் திறந்துள்ளது என, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஹெர்மன் டியு குவான் ஹோ உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இதற்கிடையில், "பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன, 30க்கும் மேற்பட்ட பேருந்து வழித்தடங்கள் தீ விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து வேறு திசையில் திருப்பி விடப்பட்டுள்ளன" என ஹாங்காங்கின் போக்குவரத்துத் துறை குறிப்பிட்டுள்ளது. தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும் சூழலில், நேரடி போக்குவரத்து நிலையை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, வாங் ஃபுக் வளாகத்தில் வசிப்பவர் ஹாரி சியோங். வாங் ஃபுக் வளாகத்தில் வசிக்கும் ஹாரி சியோங் என்பவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், பிற்பகல் 2:45 மணியளவில் பலத்த சத்தம் கேட்டதாகவும், அருகிலுள்ள கட்டடத்தில் தீப்பிழம்புகள் மிகப்பெரியதாக இருந்ததாகவும் கூறினார். "நான் உடனடியாக திரும்பிச் சென்று என் பொருட்களை பேக் செய்ய ஆரம்பித்தேன். நான் எப்படி உணர்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று அவர் பகிர்ந்து கொண்டார். கட்டடங்களுக்கு இடையிலான தூரம் மிகக் குறைவாக இருந்ததா ? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, குடியிருப்பு வளாகத்தின் எட்டு கட்டடங்களுக்கு இடையே மிகக் குறைந்த தூரம் மட்டுமே இருந்தது. ஹாங்காங்கில் உள்ள குடியிருப்பு பகுதிகள் பொதுவாகச் சிறிய அளவிலான, ஒன்றுக்கொன்று நெருக்கமாக கட்டப்பட்ட வீடுகளுக்குப் பெயர் பெற்றவை. கட்டடங்களுக்கு இடையிலான இடைவெளியும் மிகவும் குறைவாக இருக்கும். நெரிசல் காரணமாக, இந்த தீ விபத்தில் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வாங் ஃபுக் வளாக குடியிருப்புகளில் ஒவ்வொரு வீடும் பொதுவாக 400 முதல் 500 சதுர அடிவரை பரப்பளவு கொண்டவை. இந்த வளாகம் கடற்கரைக்கு அருகில், ஒரு முக்கிய நெடுஞ்சாலையின் அருகில் அமைந்துள்ளது. மேலும் அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, இங்கு மொத்தம் சுமார் 4,600 பேர் வசித்து வருகின்றனர். தீ பரவத் தொடங்கியது எப்படி ? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, கட்டடத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. தீ வேகமாக பரவியதற்குக் காரணமாக, அருகிலுள்ள கட்டடங்களில் நடைபெற்று வந்த பழுது பார்க்கும் பணிகள் குறிப்பிடப்படுகின்றன. கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மூங்கில் கட்டமைப்புகள் இந்த கட்டடங்களின் வெளியே அமைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர்கள், மற்றொருவர் பொறியியல் ஆலோசகர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும், கட்டடங்களில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வந்ததாகவும், ஜன்னல்களில் பொருத்தப்பட்டிருந்த பாலிஸ்டிரீன் பலகைகளின் காரணமாக தீ மிக வேகமாகப் பரவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டடத் தொகுதிகளுக்கு இடையில் மூங்கில் கட்டமைப்புகள் நிறுவப்பட்டதாகவும், இதனால் தீ மற்ற கட்டடங்களுக்கும் பரவியிருக்கலாம் என்றும் நிர்வாகம் கூறுகிறது. இந்த தீ விபத்து எவ்வளவு தீவிரமானது ? இந்த தீ விபத்து 5 ஆம் நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இது தீவிரத்தின் அடிப்படையில் வகை 1 முதல் 5 வரையிலான அளவில் இரண்டாவது மிக உயர்ந்த நிலையாகும். முன்னதாக, 17 ஆண்டுகளுக்கு முன்பு, ஹாங்காங்கில் கிரேடு 5 தீ விபத்து ஏற்பட்டது. அதில் நால்வர் உயிரிழந்தனர். "ஹாங்காங்கின் வாங் ஃபுக் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்" என்று சீனாவின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. டிசம்பர் 7 ஆம் தேதி ஹாங்காங்கில் சட்டமன்றக் கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும், தீ விபத்து காரணமாக பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பரப்புரைகளை ஒத்திவைத்துள்ளன. இதற்கிடையில், வாங் ஃபுக் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, தாய் போ மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகள் வியாழக்கிழமை மூடப்படும் என்று ஹாங்காங்கின் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தீ விபத்தின் கோரத்தைக் காட்டும் புகைப்படங்கள் பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமையன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, வியாழக்கிழமை வாங் ஃபுக் குடியிருப்பு வளாகத்தில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் அடர்ந்த புகை எழுவதை காட்டும் ட்ரோன் படம். பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, ஹாங்காங் அரசாங்கத்தின் கூற்றுப்படி, புதன்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:51 மணியளவில் வாங் ஃபுக் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, தீயை அணைக்க சுமார் 800 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், அவர்கள் தீயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, தை போ மாவட்ட கவுன்சிலர் முய் சியு-ஃபங் பிபிசி சீன சேவையிடம் கூறுகையில், சுமார் 95 சதவிகித மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிகாரிகள் மக்களுக்காக தங்குமிடங்களை அமைத்துள்ளனர், அங்கு மருந்து மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றார். பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் கட்டடத்தில் புதுப்பித்தல் பணிகள் நடந்து வருவதாகவும், மூங்கில் கட்டுமான அமைப்புகள் மற்றும் பாலிஸ்டிரீன் பலகைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதனால் தீ வேகமாக பரவியதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, வாங் ஃபுக் வளாகத்தில் வசிக்கும் ஜேசன் காங், தனது குடும்பத்தினரைப் பற்றி கவலைப்படுவதாக ராய்ட்டர்ஸிடம் கூறினார். "நான் அதிர்ச்சியில் இருக்கிறேன்," என்று அவர் பகிர்ந்துகொண்டார். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு,சேதத்தின் அளவு இன்னும் தெரியவில்லை. உள்துறை அமைச்சகம் தற்காலிக தங்குமிடங்களுக்காக பல சமூக மையங்களையும், சில பள்ளிகளையும் திறந்துள்ளது. பட மூலாதாரம், Phoebe Kong/BBC படக்குறிப்பு, இப்பகுதி எட்டு கோபுர கட்டடங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 31 மாடிகள் உயரம் கொண்டது. 2021 அரசாங்க மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அவை தோராயமாக 4,600 குடியிருப்பாளர்களுக்கு 1,984 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளன. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, இந்த கோபுர வளாகங்கள் 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. மூங்கில் கட்டமைப்புகளை புகைப்படத்தில் தெளிவாக காண முடியும். மேலும் அவை தீ வேகமாகப் பரவுவதற்கு பங்களித்ததாக நம்பப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y2w02vz93o0 points - சத்திய சாய் பாபா – 100வது பிறந்தநாள் சிறப்பு ஆய்வு / SATHYA SAI BABA AT 100 — FAITH, POWER, CONTROVERSY AND REASON
Important Information
By using this site, you agree to our Terms of Use.