Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    2971
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38799
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    88046
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19182
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/18/25 in all areas

  1. உங்களது இந்த வரிகள் எனக்கு இதை எழுத வைத்தது. நன்றி goshan_che அறுபதுகளின் நடுப்பகுதியில், ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில், விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் “படித்த வாலிபர் திட்டம்” என்ற பெயரில் ஒரு முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. இன்று பலருக்கு அது நினைவில் கூட இல்லாமல் இருக்காமல். அந்தக் காலத்தில், படித்து முடித்து வேலைவாய்ப்பில்லாமல் இருந்த இளைஞர்கள் பிரச்சினை ஒரு பெரிய சவாலாக இருந்தது. அந்தச் சூழலில்தான், இளைஞர்களுக்கு நிலம் வழங்கி, விவசாயம் மற்றும் குடியிருப்பின் மூலம் வாழ்வாதாரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய மக்கள் இருந்த விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகள் குடியேற்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. காட்டுநிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு, படித்த இளைஞர்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். இது வேலைவாய்ப்பை சமாளிக்கும் முயற்சியாக மட்டுமன்றி, கிராம அபிவிருத்தியை நோக்கிய அரசின் ஒரு முயற்சியாகவும் பேசப்பட்டது. ஐந்து ஏக்கர் காணிகள், இலவச நீர் வசதி, உலர் உணவுகள், பயிர் செய்வதற்கான பணம் என அரசாங்கம் பல உதவிகளைச் செய்தது. குறிப்பிட்ட சில வருடங்களுக்கு அந்தக் காணிகளை விற்கவோ, குத்தகைக்கு விடவோ முடியாத கட்டுப்பாடுகளும் இருந்தன. பலர் இந்தத் திட்டத்தில் பயன் பெற்றனர். மிளகாய் பயிர் செய்து சில “விவசாய மன்னர்களும்” உருவானார்கள். பணமும் பார்த்தார்கள். ஆனால், இந்த முயற்சி நீண்டகாலம் தொடரவில்லை. அன்றைய அரசியல் மாற்றமும் அதற்கான் காரணமாக இருந்திருக்கலாம். இருந்தாலும், “படித்த வாலிபர் திட்டம்” இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான பாடமாகவே இருக்கிறது. வேலைவாய்ப்பை அரசுப் பணிகளுக்குள் மட்டுப்படுத்தாமல், நிலம், விவசாயம், கிராம அபிவிருத்தி வழியாகத் தீர்வு காண முயன்ற ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாக இதைப் பார்க்கலாம். ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரே, அமைதியான சமூக அபிவிருத்தி முயற்சியாக இது செயல்பட்டது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம். இப்படியான முயற்சிகள் மறக்கப்பட வேண்டியவையல்ல. மீண்டும் சிந்திக்க வேண்டிய விடயங்கள். இதைப் போன்று வெவ்வேறு வடிவங்களில் முயற்சிகள் இருக்கலாம். புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வழங்கும் நிதிகளை சரியான வழிகளுக்குத் திசைதிருப்ப முடியும். விதண்டாவாதங்களிலேயே காலத்தைக் கழித்தால், எதிர்காலத்தில் வடமாமணத்தில் ஒரு தமிழன் பாராளுமன்றம் செல்வதே கேள்வியாகி விடலாம். மலையக மக்களிடம், “வாருங்கள், உங்கள் உறவுகள் நாங்கள் இருக்கிறோம்” என்று சொல்வது வெறும் வார்த்தையல்ல. அது அவர்களுக்கு ஒரு ஆறுதலும், ஒரு நம்பிக்கையும். அழைத்தவுடன் எல்லோரும் பெட்டி, படுக்கையுடன் ஓடிவரப் போவதுமில்லை. ஆனால் இது ஒரு விதை. விதை விதைக்கப்படாவிட்டால் பயிர் எப்படி வரும்? “இது சரிவராது” என்று ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் தள்ளிவிட்டால், கிடைக்கின்ற அனுகூலங்களையும் இழந்து, தமிழினம் வெறுமையாக நிற்கும் அபாயம் இருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம். புலம்பெயர் தமிழர்களின் அடுத்த சந்ததி, தங்கள் பணத்தை ஊருக்கு அனுப்பப் போவதில்லை. ஆகவே, காலத்தில் விதை விதைப்பதே அறிவு. ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.’
  2. ஸ்புட்னிக்கில் ஏறி நிலவில் இருந்து கதைக்கின்ற மாதிரி இருக்கின்றது😂 2014 இல் கிரைமியாவைக் கைப்பற்றியது ரஷ்யா. 2022 பெப்ரவரியில் கியேவை நோக்கி படையெடுத்துப் பின்னர் அடி அகோரத்தால் பின்வாங்கியது ரஷ்யக் கரடி. இது எல்லாம் தெரிந்திருந்தும் நோஞ்சான் உக்கிரேன் பயில்வான் ரஷ்யாவை மிரட்டிப் போருக்கு வெளிக்கிட்டது என்ற கதையாடலை (narrative) எல்லோருக்கும் தீத்தமுடியாது.
  3. ஏன் வரலாற்றை 1954 ஓடு நிறுத்தி விட்டீர்கள்😂? அப்படியே 1922 வரை பின்னோக்கிப் போனால் உக்ரைன் பிரதேசமே சோவியத் ஒன்றியத்தில் இருக்கவில்லை. 1922 இல் வலுக்கட்டாயமாக இணைத்தார்கள். இன்னும் ஒரு 600 ஆண்டுகள் பின்னோக்கிப் போனால் கிரைமியா இன்றைய துருக்கியை உள்ளடக்கியிருந்த ஒட்டோமான் பேரரசின் சொத்து. 1800 களில் ரஷ்ய சாம்ராஜ்ஜியம் கைப்பற்றிக் கொண்டது. இதெல்லாம் தாண்டி 1991 - 94 களில் ரஷ்யா கிரைமியாவை உள்ளடக்கிய உக்ரைன் தேசத்தை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது - இது தான் இறுதியாக எல்லைகள் ஏற்றுக் கொள்ளப் பட்ட சந்தர்ப்பம். "கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் கூட வர மாட்டோம்.." என்ற வாய் வார்த்தையை இங்கே மந்திரம் போல ஓதும் "புரின் புரியன்மார்" எவரும் 90 களில் ஏற்றுக் கொண்ட உக்ரைன் எல்லையை 2014 இல் ஏன் புரின் கிழித்தெறிந்தார் என்று ஆராய முனைய மாட்டார்கள்! ஏனெனில், அவர்கள் தகவல் பெறுவது சந்திரனுக்குப் போன ஸ்புட்னிக்கில் இருந்து😎!
  4. "இதை எப்படிச் செயல்படுத்துவீர்கள்? முன்மொழிவைத் தாருங்கள் முதலில்!" என்று கேட்கும் "புலம் வாழ் பிளானிங் ஒபீசர் மார்"😎 எப்பவாவது இருந்து விட்டு சின்னத்திரையில் தான் தாயகத்தை இங்கிருந்து பார்க்கிறார்கள் என்று தெரிகிறது. இங்கே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில திட்டங்கள் ஏற்கனவே நடை முறையில் இருக்கின்றன. உதாரணமாக மலையக தமிழ் மாணவர்கள் ஒரு தொகையினரை யாழ் மத்திய கல்லூரியின் விடுதியில் இலவசமாகத் தங்க வைத்து கல்விச் செலவையும் புலமைப் பரிசில்கள் மூலம் ஈடு செய்யும் திட்டமொன்று சில ஆண்டுகளாக நடை முறையில் இருக்கிறது. வெளிநாட்டு பழைய மாணவர் சங்கங்கள் தான் இதற்கு நிதி ஆதரவு. இவை பற்றி யூ ரியூப் வீடியோக்கள் வராது, எனவே யூ ரியூப் வழியாக தாயகத்தைத் தரிசிக்கும் நோக்கர்களுக்கு இவை தெரிய வராது. ஆனால், இந்த செயல்படுத்தல் பற்றிய நிஜமான கரிசனை அல்ல இங்கே எதிர்ப்பவர்களின் உண்மைக் காரணம். நமக்குப் பிடிக்காத சுமந்திரன், மனோ கணேசன் சொன்னார்கள், எனவே எதிர்க்க வேண்டுமென்ற குருட்டுத் தனமான காழ்ப்புணர்வு ஒரு காரணம். "நாங்க யாழ்ப்பாணத்தார், எங்கள் றோயல் பிளட் லைன் மலையகத் தமிழர் நிரந்தரமாக வந்து தங்கினால் நஞ்சாகி விடும்"😂 என்ற அச்சம் இரண்டாவது காரணம். இதனால் தான் நானும் ஐலண்டும் சில சமயங்களில் இங்கே சொல்லியிருக்கிறோம்: புலிகள் இருந்த போது கிடைக்காத தமிழ் ஈழம், இப்ப இருக்கும் வால்களிடம் கிடைக்கக் கூடாது! அது தமிழர்களுக்கே ஆப்பாகத் தான் முடியும்!
  5. அதுபாருங்கோ…ஜெப்பணீஸ்க்கு மிகவும் பிடித்தமான டவுசர், சேர்ட் போட்டு அரச அலுவலகங்களில் இருந்து பிளேன் டீ குடிக்கும் வேலைக்குத்தான் வேலையில்லா திண்டாட்டம்😂. மேசன், முட்டாள், விவசாய வேலை, என பல வேலைகளுக்கு வேலையாள் இல்லா திண்டாட்டம். கேட்டுப்பார்த்தேன் - பல முட்டாள்கள் கனடாவில் செட்டில் ஆகி விட்டார்களாம்😂.
  6. முதலில் ரஷ்யா தனது ஆக்கிரமிப்புக்கு சாட்டு சொல்ல இதை சொல்லியிருக்கலாம். பின்பு இதை இந்தியர்கள் -ஹிந்தியர்களும் தமிழர்களும் முகநூல் இணையதளங்கள் மூலம் பரப்ப அதை எங்களது ரஷ்ய விசுவாசிகள் பிடித்து கொண்டனர். இந்திய அரசு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை சரி என்று சொல்லவில்லை இந்தியர்கள் தான்.
  7. உக்ரேன் என்பது அனைத்து வளங்களையும் சொந்த அரசியலையும் நாடு மொழி ராணுவம் ஆட்சியென்று அனைத்தையும், உலகதேவையின் பெரும்பங்கை கொண்ண்ட தானியங்கள், எண்ணெய்வளம், கனிமங்கள், பல்கலைகழகங்கள்,உலகத்திலேயே பெரிய சரக்கு விமானத்தை கொண்ட பெருமை ஆயுத உற்பத்தி என்று பலவற்றை கொண்டு தனியாக இயங்கியநாடு. அத்தனையும் இருந்தும் தனது பாதுகாப்பு என்று சொல்லிக்கொண்டு வேற்று வல்லரசு சக்திகளுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்க்க கிளம்பியதால்தான் இந்த போரே ஆரம்பித்தது. தமிழர்கள் இத்தனை வசதிகள் தம் வசம் இருந்தும் இந்திய வல்லரசுடனும் உலக வல்லரசுகளுடனும் இணைந்து இலங்கையை அழிக்க நினைத்து இறுதியில் தோற்று போனார்களா? அதைதான் கண்ணாடிமுன் நின்றூ கேட்கவேண்டுமென்று நீங்கள் அர்த்தப்படுத்துகிறீர்களா? உக்ரேன் மேற்குலகுடன் இணைந்து ரஷ்யாவை மிரட்ட வேண்டுமென்று போர் செய்த நாடு, தமிழர்கள் எவர் உதவியும் இன்றி சிங்களவனிடம் அடிவாங்கி செத்ததால் வேறுவழியின்றி போர் செய்த இனம் இந்த இரு பிரிவுகளையும் ஒப்பிட்டுபார்க்க எந்தரீதியிலான பெளதீக அறிவு உங்களை தூண்டியது? உக்ரேன் சொந்தநாடு இருந்தும் போருக்கு வழி தேடிய இனம், தமிழர்கள் வேறி வழி இல்லாததால் சொந்தநாடுவேண்டி போராடி தோற்றுபோன இனம் இந்த இரண்டையும் ஒப்பிட்டு எகத்தாளமாய் சிரிக்க உங்கள் ஒரு சிலரால் முடிகிறது அது உலகின் பார்வைக்கு கண்டிப்பாக ஏளனமாய் அமையாது. 1958 ,1977, 1983 வரை எந்த தமிழர்களும் ஆயிரக்கணக்கில் ஆயுதம் ஏந்தி சிங்களவனுக்கெதிராய் போராட நினைத்ததில்லை, அவன் அரசியல் யாப்பையும் ஆயுதபடைகளையும் ஏற்றும், சொல்லபோனால் படைபலத்தை வைத்து சிங்களவன் எங்களை நீங்கள் வேறு நாங்கள் வேறூ என்று மிதி மிதியென்று மிதித்தபோதும் துடைத்துவிட்டு காவல்துறை ராணுவம் கடற்படை விமானபடை என்று சிங்களவனின் படைகளில் சேவையாற்றியும் வாழ்ந்தார்கள். கல்வி சுகாதாரம் பாதுகாப்பு, மொழி, அரசியல் என்று அனைத்திலும் வலிகளை மட்டுமே அவன் எமக்கு தந்தாலும்முடிந்தவரை சிங்கள தேசத்துடன் முரண்படாமலே வாழ நினைத்தார்கள். 83ல் ஜேஆர் எனும் மனிதகுலவிரோதி இலங்கையில் இனக்கலவரம் என்ற ஒன்றை உருவாக்காமல் விட்டிருந்தால் தமிழர் ஆயுத போராட்ட இயங்கங்களின் உறுப்பினர் தொகை இரண்டு இலக்கங்களுக்கிடையே மட்டுமே இருந்து தானாகவே காணாமல் போயிருக்கும். லட்சக்கணக்கான தமிழர்கள் ஆயுதபோராட்ட இயக்கங்களுக்கு பின்னால் போக வைத்த பெருமை சிங்கள இனத்தையும் ஆட்சியாளர்களையுமே சேரும். உக்ரேன் அப்படியா வாழ்ந்துவிட்டு நேட்டோவுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்த்து போர் செய்து பேரழிவின் முடிவில் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்தது? எங்கள் காயங்கள் உங்களுக்கு சிரிப்புக்கிடமானதாக தெரிந்தால் விலகி நில்லுங்கள் அதனை பார்த்து கைகொட்டி சிரிக்காதீர்கள், பிற விலங்குகள் குட்டி ஈன்று கொண்டிருக்கும்போதே தன்பசியாற தாயின் பிறப்புறுப்பிலிருந்து இழுத்தெடுத்து உண்ணுமாம் ஹயினாஸ் எனும் விலங்கு அதுபோல் எமக்கு வசதியென்றால் எது வேண்டுமென்றாலும் பேசலாமென்ற மனபாங்கில் பேசி பழகுவான் மனிதன். அது விலங்குகள் பரவாயில்லை அப்படித்தான் அவற்றின் இயற்கை சுழற்சி இருக்கும், நாம் அப்படியா? அழகானமனிதர்கள். அழகான மனிதர்கள் அந்த கொடூர இனத்தில் சேராமல் சுயமாக சிந்தித்து வாழ்ந்தால் அதில் தவறென்று எதுவும் இருக்க போவதில்லை.
  8. இந்த AI காலத்திலும் எவ்வளவு கருத்து வரடசியில் இருக்கிறார்கள்? தலைப்பு சார்ந்து ஒரு கருத்தை பதிய ஏன் இவர்களுக்கு தோன்றுவதில்லை? இந்த யாழ்களத்தை இப்படி கேவலம் ஆக்கியதை தவிர இதனால் யாருக்கு என்ன லாபம்? சைகொலோஜி ரீதியாக இதை தெளிவாக புரிந்துகொள்ளலாம்
  9. பல கோடி பில்லியன் டாலர் கனிமவள தீவு இலங்கைக்கு கிட்டுமா? அமெரிக்காவின் அண்மைய நகர்வுகள் இதை நோக்கியா? அப்பாவி சுவிசை அமெரிக்கா களமிறக்கியுள்ளதா? இந்தியா என்ன செய்யப் போகிறது?
  10. இங்கே யாரும் மலையக்த் தமிழ் மக்களுக்கு எதிரான விதத்தில் ஒரு கருத்தைத் தன்னும் எழுதவில்லை. ஒரு வேளையில் அவர்கள் வடக்கில் குடியேற்றப்பட்டால் எந்த விதத்தில் அவர்கள் முன்னேற்றம் இருக்கும்..... . வடக்கு மக்கள் அவர்களை எப்படி அனுசரித்துச் செல்வார்கள்....... . அவர்கள் ஒருவேளை அழைத்துவரப் பட்டால்..... தமிழ் அரசியல் வாதிகள் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு உறுதி அளிப்பார்களா ....... அன்றைய கால கட்டத்தில் வீட்டுப் பணிப்பெண்களாக தோட்ட வேலைகளுக்காக வடக்கு மக்கள் அவர்களை அழைத்து வந்து எப்படியான விதத்தில் வேலை வாங்கினார்கள் என்பதையெல்லாம்....... உணர்ந்த வகையில் தான் இந்த அழைப்பை நாங்கள் நிராகரிக்கின்றோம். இதையே மடைமாற்றி அவர்கள் வருவதை இவர்கள் விரும்பவில்லை அவர்கள் வந்தால் இவர்களுக்கு ஒத்துவராது இவர்கள் அவர்களை மதிக்காமல் பார்க்கின்றார்கள் என்ற வகையில் கருத்துக்களைத் திரித்து எழுதுவதால் எல்லாம் சரியென்றாகி விடாது. மலையக மக்கள் மலையகத்தில் சுதந்திரமாக தங்கள் உரிமைகளை அனுபவித்து வாழ வேண்டும் .மலையகம் மலையகத் தமிழர்களுடைய தாயகம் . இதை எந்தக்கொம்பன் வந்தாலும் மாற்ற முடியாது இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வடக்கில் மட்டும் ஒதுக்கி மிகுதி நாடு முழுவதும் சிங்களம் தன் கால்களை அகட்டி வைக்க வசதிகள் செய்து கொடுப்பவர்களை அல்லது அப்படிச் செய்ய நினைப்பவர்களை இனம் கண்டு தமிழர்களின் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைக்க வேண்டும்
  11. நேட்டொவில் இணைந்துகொள்ளும் தனது விருப்பத்தினை உக்ரேன் முழுவதுமாகக் கைவிட்டு விட்டது என்று நான் நினைக்கவில்லை. நடைபெற்றுவரும் பேச்சுக்களுக்கு உக்ரேனின் நேட்டோவில் இணையும் கோரிக்கை தடங்கலாக அமையும் என்பதாலேயே அது அடக்கி வாசிப்பதாக நினைக்கிறேன். மேலும் நடைபெற்று வரும் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு நேட்டோவில் இணையும் தனது விருப்பினை உக்ரேன் கைவிடவேண்டும் என்று நிபந்தனை முன்வைக்கப்பட்டிருந்தாலும், நேட்டோவிற்கு வெளியே இருந்துகொண்டு தனக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்கக்கூடிய ஏற்பாடுகளை நேட்டோ நடுகளிடமிருந்து அது பெற்றிருக்கிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் நேட்டோவில் அங்கத்துவம் வகிக்கும் நாடொன்றின் மீது எதிரி நாடொன்று தாக்குதல் நடத்தும் வேளையில் ஏனைய அங்கத்துவ நாடுகள் அந்நாட்டினைப் பாதுகாக்க போரில் இறங்கும் எனும் சரத்துக்கு இணையான உத்தரவாதத்தினை நேட்டோவிற்கு வெளியில் இருந்து உக்ரேன் பெற்றுக்கொள்ளவிருக்கிறது. இது நேட்டோவில் இணையும் தனது விருப்பத்தினை உக்ரேன் முழுமையாகக் கைவிட்டு விட்டது என்பதற்கு மாறாக, சூழ்நிலைகளுக்கேற்ப தனது தந்திரங்களை உக்ரேன் மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மையாகும். இதைத்தவிரவும் உக்ரேனினை தற்போது நேட்டோவினுள் உள்வாங்குவதன் ஊடாக , ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் புட்டினுடன் நேரடியான மோதல் ஒன்றிற்குச் செல்வதையும் சில நேட்டோ அங்கத்துவ நாடுகள் தற்போதைக்கு விரும்பவில்லை. ஆகவே தன்னை நோக்கி இதுவரையில் நேட்டோவில் இணைவதற்கான அழைப்பினை எந்த நாடும் முன்வைக்காத நிலையிலும், மாறிவரும் உலக சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டுமே உக்ரேன் நேட்டோவில் இணையும் தனது விருப்பினை தற்காலிகமாக மடித்து வைத்திருக்கிறது. இங்கு குறிப்பிடத்தக்க இன்னொரு விடயம் என்ன‌வென்றால், நேட்டோவில் இணையும் தனது விருப்பினை உக்ரேன் தனது அரசியலமைப்புச் சட்டத்தினுள் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது என்பதுடன், அச்சரத்து இன்னமும் உயிர்ப்புடனேயே இருக்கிறது. இதைவிடவும் உக்ரேனின் அரசியல்வாதிகள் இன்றுவரை உக்ரேன் நேட்டொவில் இணைவதையே தாம் விரும்புவதாகக் கூறிவருகின்றனர். ஆக, நேட்டோவில் இணையும் தமது கோரிக்கையினைத் தற்போதைக்குக் கிடப்பில் போட்டாலும் நீண்டகால அடிப்படியில் உக்ரேன் நிச்சயமாக‌ நேட்டோவில் சேரும் அல்லது உள்வாங்கப்படும் என்பது தவிர்க்க முடியாதது. இது இன்னுமொரு 10 வருடங்களிலோ அல்லது நாளை ரஸ்ஸியாவின் சர்வாதிகாரி புட்டினின் மரணத்துடன் நடந்தாலுமோ ஆச்சரியப்படுதற்கில்லை.
  12. அழுங்கோ, பரவாயில்லை😎! ஈழத் தமிழருக்கு எதிரான அநீதிக்கு எதிராக ஈழத்தமிழர் போராடினர், இந்தியா ஆரம்பத்தில் உதவியது. உக்ரைனியர்கள் தம் விருப்பப் படி தங்கள் நாட்டை கொண்டு நடத்த அனுமதிக்காத பெரியண்ணனின் அநீதிக்கெதிராகப் போராடினர். ஐரோப்பிய நாடுகள் உதவுகின்றன. என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது இரண்டிற்குமிடையில்?
  13. இது எப்படி எமது போராட்டத்திற்கு பொருந்தும் நானா? நாம் நேட்டோ போன்று எந்த அமைப்பில் சேரவேண்டும் என்று போராடினோம்? எமக்கு எந்த மேற்குநாடுகள் உதவின? நாம் போராடியது எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக! இதுக்கு லைக் போட்ட கூட்டத்தை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை!!
  14. ஒரு வழியாக 5ம் பக்கதிலாவது கருத்து சரியானது என்பதை ஒத்து கொண்ட அளவில் மகிழ்ச்சி. எனக்கு தெரிந்த சில low profile, கண்ணை குத்தாத நடவடிக்கைகளை பட்டியல் இட்டுள்ளேன். இலண்டன் கோவில்கள் சிலது கூட மலையகத்தில் திட்டங்கள் செய்துள்ளனர். யார் செய்வது? தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிகெட்டு, பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் என்கிறார் பாரதி. அந்த நிலைதான் இப்போ நமக்கும். உங்களை போலவே எனக்கும் விடை தெரியவில்லை. ஆனால் -கொள்கை அளவில் கூட இது நல்ல விடயம் என ஒரு கருத்துகளத்தில் கூட இப்படி தொண்டை தண்ணி வத்த கத்த வேண்டி உள்ள போது…. நடைமுறையில் இந்த இனம் இந்த வேலைக்கு சரிப்பட்டு வராது என்றே எண்ணுகிறேன்.
  15. சிறுகதை: யாதுமானவள்! - ஶ்ரீரஞ்சனி - - ஶ்ரீரஞ்சனி - சிறுகதை 14 டிசம்பர் 2025 இதுதான் நான் தனித்துச் செல்லும் முதல் பயணம். விமானத்தின் பின்பகுதியில்தான் என் இருக்கை இருந்தது. சூட்கேசை என்னுடன் இழுத்துக்கொண்டு சென்ற நான் என் இருக்கையில் கைப்பையை வைத்துவிட்டு, சூட்கேசை மேல் இறாக்கையில் வைப்பதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். எட்டக்கூடிய உயரத்தில் அது இல்லையே என எனக்குக் கவலையாக இருந்தது. என் இருக்கையின் பக்கத்தில் இருந்த இளம் பெண் எழுந்து, உதவிவேண்டுமா என ஆங்கிலத்தில் கேட்டபடி உதவிசெய்ய முன்வந்தா. கேட்காமலேயே உதவிசெய்ய முன்வந்த அவவுக்கு வாயாராவும் மனதாரவும் நன்றிகூறியபடி ஆசுவாசத்துடன் அமர்ந்துகொண்டேன். சற்றுநேரத்தில், “நீங்க சுவிற்சிலாந்திலா இருக்கிறீங்க?” என அவவிடம் கேட்டேன். “ஓம், ஒரு medical conferenceக்காக ரொறன்ரோவுக்கு வந்தனான். நீங்க இங்கையா இருக்கிறீங்க?” அவவும் பேச்சைத் தொடர்ந்தா. “ஓ, ரொறன்ரோ உங்களுக்குப் பிடிச்சிருந்ததா? 20 வருஷமா நான் இங்கைதான் இருக்கிறன். ஆனா, என்ர சொந்த நாடு, இலங்கை. அங்கை எனக்குப் படிப்பிச்ச ஒரு ரீச்சரின்ர 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக உங்கட நாட்டுக்கு வாறன்.” “ரொறன்ரோவுக்கு ஒரு wow சொல்லலாமெண்டால், உங்களுக்கு மிகப் பெரிய wow சொல்லலாம். ஆசிரியர்களுடனான உறவை அவ்வளவு தூரத்துக்கு நீங்க பேணுவீங்களா?” முகத்தில் விழுந்த சுருட்டை மயிரைக் காதோரம் ஒதுக்கியவாறு புருவங்களை உயர்த்தினா அவ. “மிசிஸ் பரம் வித்தியாசமான ஒரு ரீச்சர். அவ என்ர அபிமானத்துக்குரிய ரீச்சர் மட்டுமில்ல, அவ எனக்கொரு role model.” “ஓ!” “சின்ன வயசில இலங்கையின்ர தலைநகரான கொழும்பிலதான் நாங்க இருந்தனாங்க. அங்கை அப்பா ஒரு புடவைக் கடை வைச்சிருந்தவர். 77ம் ஆண்டு நடந்ததொரு கலவரத்தில அவர் கொலைசெய்யப்பட்டிட்டார். அதாலை பிறகு நாங்க யாழ்ப்பாணத்துக்குப் போகவேண்டியிருந்தது. அப்ப நான் ஏழாம் வகுப்பு....” “ஓ, very sad, I am sorry.” “அது ஒரு காலம்... ம்ம், சோகத்தைத்தவிர எதையும் பாத்ததில்லை. புதுப் பள்ளிக்கூடத்தில நான் தனிச்சுப்போயிருந்தன். என்ர பல் அசிங்கமாக இருக்கு, நான் வடிவில்லை எண்டெல்லாம் கேலிபண்ணிச்சினம். பள்ளிக்கூடம் போறதே பெரிய தண்டனை போலிருந்துது.” “எவ்வளவு தூரம் நீங்க பாதிக்கப்பட்டிருந்திருப்பீங்க எண்டு விளங்குது.” மெல்லிய குரலில் சொன்னா அவ. “அம்மா மொத்தத்திலை ஜடமாகவேயிருந்தா. போதாததுக்கு பணக் கஸ்டம் வேறை. அந்த நேரம் மிசிஸ் பரம் இருந்திருக்காட்டி நான் என்ன செய்திருந்திருப்பன் எண்டு நினைச்ச்சா, இப்பகூட எனக்கு நெஞ்சு கனக்கும். நான் பள்ளிக்கூடத்திலை சேந்த சில நாள்களிலைதான் அங்கை அவவுக்கு வேலை கிடைச்சிருந்தது. இளமையாயும் நல்ல வடிவாயும் இருந்த அவவை எல்லாரும் பிரமிப்போடைதான் பாப்பினம். ஒரு கட்டத்திலை என்ர பிரச்சினை அவவுக்கு விளங்கிச்சுதோ என்னவோ, வீட்டை வா, படிக்கலாமெண்டு தன்ர வீட்டுக்குக் கூப்பிட்டு அவ எனக்குப் பாடம் சொல்லித் தரத் தொடங்கினா. அதுக்குப் பிறகுதான் மற்றவையும் கொஞ்சம் கொஞ்சமாய் என்னோடை பழகத் துவங்கிச்சினம். அவவே என்னிலை கரிசனை காட்டுறா எண்டதுதான், அதுக்குக் காரணமா இருந்திருக்கலாமெண்டு நான் நினைக்கிறன்.” “ஓ, விளங்குது. அப்படியொரு ரீச்சர் கிடைக்க நீங்க கொடுத்துவைச்சிருக்கிறீங்க.” “என்ர பிள்ளையளுக்கும் அவவைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கிறன். ஒரு கட்டத்தில எனக்கு எல்லாமா இருந்த அவவைப் பத்தி, என் வேதனையை விளங்கி எனக்கு உயிர்ப்பளித்த அவவின்ர உளவியலைத்த்தான் அங்கை நடக்கவிருக்கிற கூட்டத்தில பேசப்போகிறன்,” என் குரலில் நன்றியும் பெருமிதமும் கலந்திருந்தது. “அப்ப உங்கடை பேச்சு அந்தமாரி இருக்கும்.” அழகான வெண்ணிறப் பற்கள் தெரிய அவ புன்முறுவல் செய்தா. மூன்று மாதமா யோசித்து, யோசித்து எழுதி, எழுதிப் பின் திருத்தித் திருத்தி நான் எழுதினேனா என நானே வியந்துபோன அந்தப் பேச்சை எண்ணிப்பார்த்துக் கொண்டேன். விமானம் பறக்கத் தொடங்கியது. சூரிய உதயம் யன்னலுக்கூடாகத் தெரிந்தது. செந்நிறச் சூரியக் கதிர்கள் வர்ணஜாலம் காட்டிக்கொண்டிருந்தன. மூன்று தசாப்தங்களின் பின்னர் மிசிஸ் பரமைப் பார்க்கப்போகின்றேன் என மூன்று மாதங்களாக மனசுக்குள் பீறிட்டுக்கொண்டிருந்த களிப்பு இப்போது உச்சத்தை அடைந்திருந்தது. இதயம் ஆனந்தத் தாண்டவமாடியது. பல்கலைக்கழகத்துக்காகக் காத்திருந்த காலங்களில் அவ பள்ளிக்கூடம் முடிந்து எங்களின் ஒழுங்கையால் போவதைப் பார்ப்பதற்காக ஒழுங்கையில் தற்செயலாக நிற்பதுபோல, ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விடயம் செய்துகொண்டு நின்றது நினைவுக்கு வர எனக்குள் சிரிப்பு வந்தது. மீளவும் மிசிஸ் பரமோடை உறவைத் தொடர வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்பதில் நிறைவாக இருந்தது. பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால் பொறுப்பில்லை. நிதி நெருக்கடியில்லை. வேலையில் லீவு கிடைக்குமா என யோசிக்க வேண்டியதில்லை. நினைத்ததைச் செய்யமுடிகிறது, முதுமை சில வகைகளில் உதவியாக இருக்கின்றதுதான் என நன்றியுடன் நினைத்துக்கொண்டேன். X X X X விமானம் தரையிறங்கியபோது இரவாகியிருந்தது. செயற்கை ஒளியில் சுவிற்சிலாந்து பிரகாசித்தது. “மிசிஸ் பரமின்ரை புண்ணியத்திலை உன்னைப் பாக்க முடிஞ்சிருக்கு. பாத்து எத்தனை வருஷமாய்ச்சு,” கட்டிக்கொண்டாள் என்னைக் கூட்டிச்செல்ல விமான நிலையத்துக்கு வந்திருந்த என் மைத்துனி அருள். “என்ன செய்ய அருள், இப்பத்தான் நேரம் வந்திருக்கு, இனி அடிக்கடி வருவன்!” “ஓ, மிசிஸ் பரமைப் பாக்கலாம் எண்டபடியால், இனி அடிக்கடி வருவாய்.” “இல்லையடியப்பா, பிள்ளையள் வளர்ந்திட்டுதுகள் இனிப் பொறுப்பில்லையெண்டு சொல்றன்.” “நீ சொன்னாப்பிறகு, அவவின்ர பேச்சுகளைக் கேட்கிறனான். மனிசி அந்தமாரித்தான் பேசுது.” “அவ உண்மையிலேயே ஒரு காந்தமடி.” “வீட்டுக்குப் போய் குளிச்சு உடைமாற்றிக்கொண்டு படுக்கைக்குச்சென்றபோது, “விடியக் கோயிலுக்குப் போவம், என்ன? முதலிலை முருகனைப் போய்த் தரிசிப்பம்.” என்றாள் அருள். “ஓகே, போவம்.” ரொறன்ரோவிலை கோயிலுக்குப் போறனியோ?” “அங்கை போறனானோ, இல்லையோ, நீ போகேக்கே நான் வரத்தானே வேணும்.” “நாளைக்குத் தேர் எண்டபடியால், உனக்குத் தெரிஞ்ச ஆக்களும் அங்கை வரக்கூடும்” “ஆக்களைப் பாக்கத்தானே அந்தக் காலத்திலும் மாவிட்டபுரத்துக்கு, கீரிமலைக்கு எண்டெல்லாம் போறனாங்கள்,” கண்ணடித்தேன் நான். “உனக்கெல்லாம் பகிடிதான். சாமி கும்பிடப் போறம். போற இடத்திலை ஆக்களைப் பாக்கிறம்.” “சரி, சரி. முதலிலை சாமியைக் கும்பிடுவம். பிறகு ஆர் வந்திருக்கினமெண்டு பாப்பம்.” சிரித்தேன் நான். X X X X தேர் வெளிவீதியில் சுற்றிவந்துகொண்டிருந்தது. வீதி மக்கள் வெள்ளத்தால் நிறைந்து வழிந்தது. “பக்க கோடிகளுக்கு எங்கும் குறைவில்லை,” அருளுக்குக் கூறிச் சிரித்தேன். திடீரென என் முகத்தை இரண்டு கைகள் மூடிக்கொள்ள, ‘யாரெண்டு சொல்லும் பாப்போம்,” எனக் குரலொன்று ஒலித்தது. குரலை எனக்கு மட்டுக்கட்டவே முடியவில்லை. தடுமாறிய என் முன்னால் கைகளை எடுத்துவிட்டுச் சிரித்தபடி நின்றிருந்தாள் சொர்ணா. “ஏய் சொர்ணா, நீர் எங்கையிருக்கிறீர் எண்டு நான் இப்ப எத்தனை வருஷமா தேடிக்கொண்டிருக்கிறன். சோசல் மீடியாக்கள் ஒண்டிலும் நீர் இல்லையா?” சொர்ணாவைக் கண்ட மகிழ்ச்சியில் என் மனம் துள்ளியது. எங்களின் பாடசாலையில் எட்டாம் வகுப்பில் வந்துசேர்ந்திருந்த சொர்ணாவும் நானும் பன்னிரண்டாம் வகுப்புவரை உற்ற சினேகிதிகளாக இருந்தோம். 83 கலவரத்தின் பின்னர் சொர்ணா திருமணமாகி வெளிநாடு சென்றுவிட்டதாக அறிந்தேன். அத்துடன் தொடர்பு விட்டுப்போயிருந்தது. “மலேசியாவிலை இருந்தனாங்க, இப்ப இங்கை வந்து மூண்டு வருஷமாகுது. உம்மை இங்கை சந்திப்பனெண்டு நான் நினைக்கவேயில்லை. நீரும் இங்கையா இருக்கிறீர்?” “இல்லை, நான் கனடாவிலை இருக்கிறன். மிசிஸ் பரமுக்கு பவள விழா நடக்குதெல்லோ. கேள்விப்பட்டனீரோ? அதுதான் வந்தனான்.” “ஓ.” சுரத்தில்லாமல் சொன்னாள் சொர்ணா. பின்னர் பரஸ்பரம் எங்களின் வாழ்க்கையைப் பற்றிக் கதைத்தபடி, தொலைபேசி இலக்கங்களைப் பரிமாறிக் கொண்டோம். அருள் என்னைவிட 10 வயது இளையவள் என்பதால் சொர்ணா என் சினேகிதி என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் என் சினேகிதியைச் சந்தித்துக்கொண்டதில் அவளுக்கும் சந்தோஷமாக இருந்தது. பின்னர் அருளுக்குத் தெரிந்தவர்கள், அவர்கள் இவர்கள் எனக் கதைத்துமுடித்து வீட்டுக்குப் போனோம். பயண அலுப்பும், கோவில் அலுப்பும் என்னை நித்திரை மயக்கத்துக்குள் அமிழ்த்திவிட்டது. X X X X வியாழனும் வெள்ளியும் ஊர் பார்ப்பதில் மறைந்துபோனது. மலைகளும் நீர்நிலைகளும் சூழ்ந்த சுவிற்சிலாந்தின் அழகு கண்களுக்குப் பெருவிருந்தாயிருந்தது. ஞாயிற்றுக்கிழமைதான் மிசிஸ் பரமின் பவள விழா. சனிக்கிழமைதான் சொர்ணாவைச் சந்திப்பதாக இருந்தது. அவளைச் சந்திக்கும்போது பவளவிழாவுக்கு அவளும் வருவதை உறுதிப்படுத்த வேண்டுமென நினைத்துக்கொண்டேன். அன்று நான் பேசப்போகும் பேச்சு எப்படியிருந்ததெனச் சொல்வதற்கும் பூசிமெழுகாமல் கதைக்கும் சொர்ணா வருவது நல்லதென நினைத்தேன். அத்துடன் மிசிஸ் பரம் சொர்ணாவினதும் ஆசிரியராக இருந்ததால், சொர்ணா வருவா என்ற நம்பிக்கையும் இருந்தது. இரவுச் சாப்பாட்டுக்கு வரும்படி சொர்ணாவை அருள் அழைத்திருந்தாள். முதல் நாளிரவு தொலைபேசியில் பேசிய சொர்ணா, பகவதியையும் அழைத்து வரட்டுமா, பகவதியும் உம்மைப் பார்க்க ஆசைப்படுகிறா என்றாள். ஓ, நிச்சயமாக, பகவதியும் இங்கேயா இருக்கிறா. எனக்கும் அவவைப் பார்க்க ஆசையாயிருக்கு. கூட்டிக்கொண்டு வாரும் என்றேன், நான். மாலை ஐந்து மணியளவில் பகவதியும் சொர்ணாவும் வந்திறங்கினர். பகவதி அன்று பார்த்தமாதிரியே இருந்தாள். “தனிச்சுச் சுதந்திரமாய் சுத்துற காலம் வசந்திக்கு வந்திருக்கு,” நக்கலடித்தாள் பகவதி. “நீர் மட்டும் என்னவாம்? எங்கை மனிசன், எங்கை பிள்ளையள்?” நானும் பகவதியை வம்புக்கிழுத்தேன். “அவையும் வந்தால் நாங்க என்னெண்டு பழங்கதையள் கதைக்கிறது. அவைக்குப் போரடிக்குமெண்டு விட்டிட்டு வந்திட்டம்,” என்றாள் சொர்ணா சீரியசாக. நேரம் போனதே தெரியாமல் வம்பளந்துகொண்டிருந்தோம். எங்களின் சிரிப்பொலியில் அருளின் வீடு அதிர்ந்தது. “ஏழு மணியாகுது, வாங்கோ சாப்பிடுவம்,” என அருள் கூப்பிட்டாள். தோசை முறுகலாகவும் ருசியாகவும் இருந்தது. தோசை சுடப் பஞ்சிப்பட்டு, கடையில் வாங்குமெனக்கு தோசைகளை ஒவ்வொன்றாக அருள் சுட்டுத் தந்தது, ஒரு காலத்தில் அம்மா சுடச்சுடச் காத்திருந்து சாப்பிடுவதை நினைவுபடுத்தியது. “தோசை சுடுறதுக்காகக் காய்ஞ்ச தென்னோலைகளை ஒண்டொண்டாப் பிரிச்செடுத்து அம்மா கட்டாக்குறதை, பிறகு ஓலைகள் எரியேக்கை சுவாலை உயரமாய் எழுந்து தேயுறதை ... எல்லாத்தையும் பாக்கிறதிலை ஒரு சுகம் இருந்தது. எல்லாம் ஒரு காலம். இப்ப எனக்கு இந்தத் தோசைகள் அம்மாவையும் அவ தோசை சுடுறதையும் ஞாபகப்படுத்துது,” என்றேன் நான். “கொழும்பில இருக்கேக்கையும் அப்படியோ அம்மா தோசை சுட்டவ?” வெகுளித்தனமாகக் கேட்பதுபோல என்னைக் கேலிசெய்தாள் பகவதி. “கொழும்பு வாழ்க்கை ஆருக்கு ஞாபகமிருக்கு. அப்பாவை அழிச்ச அந்தக் கொழும்பு வாழ்க்கையை மறக்கோணுமெண்டு மறந்தனோ, என்னவோ. எனக்கது ஒண்டுமே நினைவில்லை. .ஆனா யாழ்ப்பாணத்துக்கு வந்ததும் மிசிஸ் பரம் செய்ததுகளை வாழ்க்கைக்கு மறக்கேலாது.” சில கணங்கள் பெரும் அமைதி நிலவியது. நான் அதை உடைத்தேன். “It’s okay. அப்பா போய், இப்ப எத்தனை வருஷமாச்சு. மனசிலை வடுவாயிருக்குதான், ஆனா, அந்த நேரத்திலை பட்ட வேதனை இப்ப இல்லை. கொழும்பை ஏன் ஞாபகப்படுத்தினதெண்டு நீர் கவலைப்படத் தேவையில்லை, பகவதி.” “அதில்லை, வசந்தி. நீர் மிசிஸ் பரமை உச்சந்தலையிலை வைச்சிருக்கிறீர். அதுதான் சொல்லலாமோ வேண்டாமோ எண்டு யோசிக்கிறம்,” சொர்ணாவைப் பார்த்தபடி சொன்னாள் பகவதி. “என்னத்தைச் சொல்லலாமோ, வேண்டாமோ எண்டு யோசிக்கிறியள்?” “அவவைப் பத்தித்தான். அந்த நேரத்திலை ஒத்தடமாயிருந்த மிசிஸ் பரமைத்தான் உமக்குத் தெரியும். அவ ஒத்தடமாயிருந்தா, ஏனெண்டால் உங்களுக்கிடையில முரண்கள் இருக்கேல்லை.” தோளைக் குலுக்கியபடி சொன்னாள் அவள். “எனக்கு விளங்கேல்லை.” “நான் என்ன சொல்றன் எண்டால், அவவை முன்னுக்கு வைச்சால், அவவோடை முரண்படாட்டா ஒரு பிரச்சினையும் வராது... அருள், உண்மையிலேயே தோசை சுப்பர். சம்பலும்தான். இஞ்சிபோட்டு அரைச்சிருக்கிறீர், என்ன?” தலையைக் கீழும் மேலுமாக ஆட்டின அருள் “தாங்கஸ்,” என்றாள். எனக்கோ கதை திசைமாறுவது விருப்பமில்லாமல் இருந்தது. “என்ன நடந்தது எண்டு சொல்லுமன்?” அவசரப்பட்டேன் நான். “சொர்ணா இப்ப நடத்துற முதியோர் சங்கத்தை அவதான் முதலில நடத்தினவ. பிறகு கொமிற்றியிலை கருத்து வேறுபாடு வந்தவுடனை எல்லாத்தையும் உதறிப்போட்டுப் போட்டா. கணக்கு வழக்குகளைக்கூடக் குடுக்கேல்லை. கடைசியில சொர்ணா தான் அந்தப் பொறுப்பை எடுக்கவேண்டியிருந்துது. எல்லாத்தையும் சரிப்பண்ணலாமெண்டு அவவின்ர வீட்டுக்கு சொர்ணா நாலைஞ்சு தடவை போய்க் கெஞ்சிக் கேட்டும் பழைய பைல்கள் ஒண்டையும் அவ குடுக்கமாட்டன் எண்டிட்டா. அதாலை ஒடிற்றிங்கிலை சங்கம் பட்டபாடு சொல்லிமுடியாது.” “ஏன் அப்படிச் செய்தவ, எனக்கு நம்பேலாமல் இருக்கு!” குழப்பத்துடன் நான் சொர்ணாவைப் பார்த்தேன். “அதுதான் சொன்னனே, முரண்வரேக்கைதான் ஒராளின்ரை சுயம் தெரியும். இவையின்ர சங்கச் செயலாளர் அவவுக்கு ஆதரவாயிருக்கேல்லை எண்டதாலை அவரின்ர மனிசி செத்ததுக்குக்கூடத் துயரம் விசாரிக்கேல்லையாம் எண்டால் பாருமன்.” “அவ இப்பிடிச் செய்தவ எண்டதை எனக்கு நம்பேலாமல் இருக்கு.” “நீர் இதையும் நம்பமாட்டீர். இங்கை அவ வந்திருந்த துவக்கத்தில பிள்ளையளோடை சரியாய்க் கஷ்டப்பட்டவ. சொல்லிக் காட்டக்கூடாது எண்டாலும், உமக்கு விளங்கட்டுமெண்டதாகச் சொல்றன். நான் அவவுக்கு நிறைய உதவிசெய்திருக்கிறன். ஜக்கற், அது இதெண்டு கணக்குப்பாக்காமல் வாங்கிக்கொடுத்திருக்கிறன். அப்படியிருந்தும், அவ பேசின ஒரு பேச்சிலை இருந்த ஒரு பிழையைச் சுட்டிக்காட்டிட்டன் எண்டு என்னை இப்ப தூரவைச்சிட்டா. சொர்ணாவின்ர பிரச்சினையைத் தீக்கிறதுக்காக நானும் ஏதாவது செய்வமெண்டு பாத்தன். ஆனா அந்த மனுசி கதைச்சால்தானே. அவவின்ர வண்டவாளங்கள் தெரிஞ்சிருந்தால், நீர் இங்கை வந்திப்பீரோ என்னவோ! …. நாங்களும்தான் பிழைவிடுறனாங்கதான், இல்லையெண்டில்லை. ஆனா, பெரிய ஆள்தோரணையிலை மனிசரா வாழோணுமெண்டு மற்றவைக்கு ஆலோசனை வழங்கிற, வழிகாட்டியா இருக்கிறதா பெயரெடுக்கிற இவ இப்பிடி நடக்கலாமோ...?” தலையை மேலும் கீழும் ஆட்டியபடி என் முகத்தைப் பார்த்தாள், பகவதி. “எனக்கு என்னத்தைச் சொல்லுறதெண்டு தெரியேல்லை, பகவதி… நீர் கேட்கிற கேள்வியில அர்த்தமிருக்கு... அவவுக்கு இப்பிடியுயொரு பக்கமிருக்குமெண்டு நான் கனவிலும் நினைக்கேல்லை.” “பகவதி சொன்னதெல்லாம் உண்மை, வசந்தி. ஆனா, அதுக்காண்டி... நீர் அவவை வெறுக்கோணும் எண்டில்லை. உமக்கு அந்த நேரம் அவ எல்லாமா இருந்திருக்கிறா. அதுக்கு நீர் நன்றியாய் இருக்கத்தானே வேணும்.” மென்மையாகவும் உறுதியாகவும் சொன்னாள் சொர்ணா. “எண்டாலும், உங்களுக்கு இப்பிடி நடந்திருக்கேக்கை, எப்படி நான் அவவை உயர்த்திப் பேசுறது?” “இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய். அழைப்பிதழிலை பேரெல்லாம் போட்டாச்சு, பேசத்தானே வேணும்,” என்கிறாள் அருள், தோசையை என் தட்டில் வைத்தபடி. எனக்குத் திடீரெனப் பசி போய்விட்டது. X X X X அந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மண்டபம் மலர் அலங்காரங்களாலும், வண்ண விளக்குகளாலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நண்பர்கள் எல்லோரும் ஆரவாரமாகக் கூடியிருந்தனர். பொன்மஞ்சள் நிறச் சீலையில் மேடையின் நடுவில் மலர்மாலையுடன் மிசிஸ் பரம் அமர்ந்திருந்தா. பக்கத்தில் அவவின் கணவர் பரம் அவவின் சேலை நிறத்துக்குத் தோதான சேர்ட்டுடன் கையில் ஒரு கைத்தடியுடன் இருந்தார். மாணவர்களின் வாழ்த்துகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அவர்களின் வாழ்க்கையில் அவ எவ்வளவு தூரம் பங்களித்திருந்தா என ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டே இருந்தனர். நானும் அருளும் போய் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்து கொண்டோம். என் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. நன்றியைப் பகிர்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் என் சினேகிதிகளின் அனுபவங்களைப் புறக்கணிக்காமல் இருப்பதற்கும் உள்ளதென என் மனம் எனக்கு ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தது. என் பெயர் அழைக்கப்பட்டது. என் இதயம் துடிக்க மறுத்ததுபோல, நெஞ்சுக்குள் அடைத்தது. மூன்று மாதங்களாகத் தயாரித்த பேச்சு கையில் இருந்தது. ஆனால், மனதில் சொர்ணாவும் பகவதியும் கூறிய கதைகள்தான் சுழன்று கொண்டிருந்தன. ‘வசந்தி மோகன்,’ என் பெயரை அழைத்துக்கொண்டிருப்பவரின் குரல் மீளவும் ஒலித்தது. மெதுவாக எழும்பினேன். மேடைக்குப் போகும் படிகளில் இரண்டு படிகளைத் தாண்டிவிட்டேன். ஆனால் அடுத்த படியில் காலடி எடுத்துவைக்க முடியவில்லை. என் தலை என்னையும் அறியாமல் இடமும் வலமும் ஆடியது. ஒருவாறு சமாளித்துக்கொண்டு, ஆழமாக மூச்செடுத்தேன். ‘பேசினால் உண்மை வெளிப்படும். பேசாதே,’ என என் மூளை எச்சரித்தது. தொண்டை காய்ந்து போயிருந்தது. மெதுவாக ஒலிவாங்கிக்கு முன்னால் போய் நின்றுகொண்டேன். “அன்பான மிசிஸ் பரம் அவர்களே, ஆசிரியர்களே, என் அன்புத் தோழர்களே, மிசிஸ் பரம், எனக்கு ஆசிரியர் மட்டுமல்ல. தனிமையிலும் துயரத்திலும் நான் சிக்கித்தவித்தபோது, எனக்கு ஆதாரசுருதியாக இருந்த ஒரு கனிவான மனிதர். ‘நீ முக்கியமானவள்’ எனச் சொல்லும் தோரணையில் அவர் என்னுடன் நடந்த விதமும் அவரின் அன்பும் என் வாழ்க்கையை மாற்றியது. என் வாழ்க்கையின் இருண்ட அந்த நாள்கள் என் நினைவுக்கு வரும்போதெல்லாம், மிசிஸ் பரம் காட்டிய வெளிச்சம் ஒருபோதும் என் நினைவுக்கு வராமல் போனதில்லை. அவர் காட்டிய கருணைக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். ஆனால், நண்பர்களே,” - ஒரு கணம் நிறுத்தினேன். “மனிதர்களைப் பற்றிய ஒரு உண்மையை நாங்களெல்லாம் ஏற்கவேண்டும். மனிதர்களில் எவரும் ஒரு முகம் கொண்டவர்கள் அல்லர். ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் இருக்கின்றன. அதிலும் சிலருக்கு முற்றிலும் எதிரெதிரான முகங்கள் உள்ளன. அதனால், ஒருவருக்குத் தெய்வமாகத் தோன்றுபவர், இன்னொருவருக்கு அரக்கராகத் தெரியலாம். குறித்தவரின் நினைவுகள் ஒருவரை மகிழ்விக்கின்ற அதேவேளையில் இன்னொருவருக்கு வலியைக் கொடுக்கலாம்.” மீளவும் ஒரு கணம் என் பேச்சை நிறுத்திவிட்டு மிசிஸ் பரமைத் திரும்பிப் பார்த்தேன். அவரின் முகத்தில் ஆழ்ந்த சிந்தனையின் ரேகைகள் ஓடுவதுபோல எனக்குத் தெரிந்தது. மண்டபத்தில் ஓரிரு கணங்கள் பெரும் அமைதி நிலவியது. பின் நீண்டதொரு கைதட்டல் ஒலித்தது. நான் தொடர்ந்தேன். “எனவே முழுமையானதொரு மனிதரைப் பற்றிப் பேசுவதற்கு நான் இங்கே வரவில்லை. வாழ்க்கையில் நான் இழந்துபோன பிடிப்பை மீளப் பெற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருந்த ஒருவரைப் பற்றியே பேச வந்திருக்கிறேன்...” “தெல்லிப்பழைச் சைவ வித்தியாசாலையில் மிசிஸ் பரம் ஆசிரியராகப் பதவியேற்றபோது, அவரின் அபிமான மாணவியாக இருந்த வசந்திக்கு நன்றி கூறிக்கொண்டு, இனி அடுத்ததாக....” தலைமை வகித்தவர் பேசிக்கொண்டிருந்தார். அருளின் அருகே வந்தமர்ந்த எனக்கு உடம்பு படபடத்தது. முகத்தில் அனல் அடிப்பது போலிருந்தது. என் கைகளை இறுகப்பற்றிக் கொண்ட அருள், “வீட்டுக்குப் போவோமா” என்றாள். sri.vije@gmail.com https://www.geotamil.com/index.php/2021-02-11-18-01-46/9494-2025-12-14-13-07-25
  16. ஒரு அமைப்பிலே இருந்து விலகும் போது கணக்கு வழக்குகளை தரவில்லை என்று சொல்வதும் பல தடவைகள் கெஞ்சிக் கேட்டும் தரவில்லை என்ற போதும் கதை தடுமாறி விட்டது. சட்டபடி நடவடிக்கை எடுத்தால் விடயம் சரியாகி விடும். அதுவும் சுவிஸில் நடப்பதாக கதை இருப்பதால், கதையோடு ஒன்ற முடியவில்லை.
  17. வரைபடங்களும் மனிதர்களும் ! sudumanalDecember 1, 2025 உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல் image: washington times மூன்று வருடங்களும் எட்டு மாதங்களுமாகிவிட்டதாக சுட்டப்படும் உக்ரைன்-ரசிய போரினை முடிவுக்குக் கொண்டுவர, 28 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் ட்றம்ப் குழாமினால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழாமில் அரச செயலாளர் மார்க்கோ றூபியோ, விசேடதூதுவர் ஸ் ரீவ் விற்கோவ் இருவரும் முக்கியமானவர்கள். இந்த ஒப்பந்தம் ரசியாவுக்கு சார்பானதாக இருப்பதாகவும், உக்ரைனின் இறைமையைப் பாதிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் விமர்சித்து, இந்த ஒப்பந்தத்தை 19 அம்சங்கள் கொண்டதாக மறுவரைவு செய்து ட்றம் இடம் முன்வைத்திருக்கின்றன. இக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த 19 குறித்து விபரமாக எதுவும் தெரியவில்லை. போர் எப்போ தோடங்கியது? உக்ரைன்- ரசியா போர் 2022 பெப்ரவரியில் தொடங்கியதல்ல. உண்மையில் 2014 இல் தொடங்கியது அது. 2010 இல் உக்ரைன் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட யனுகோவிச் (Yanukovych) இன் ஆட்சியை 2014 இல் “மைடான் புரட்சி” என்ற பெயரில் சதி மூலம் அமெரிக்கா கவிழ்த்தது. ரசியாவுடன் நல்ல உறவுநிலையில் இருந்த அவரை இடம்பெயர்த்துவிட்டு, மேற்குலகு சார்பான பொரொசெங்கோவை (Petro Poroshenko) ஆட்சிக்கு கொண்டு வந்தது அமெரிக்கா. (இந்த சதிப்புரட்சி பற்றிய இரகசிய தொலைபேசி உரையாடல் பின்னர் கசிந்து பொதுவெளிக்கு வந்தது). எச்சரிக்கை அடைந்த ரசியா உடடினடியாகவே செயற்பட்டு மூன்று நாட்களுக்குள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததும், பெரும்பான்மை ரசிய மொழி பேசுபவர்களையும் கொண்ட கிரைமியா (Crimea) பகுதியை கைப்பற்றியது. சோவியத் காலத்தில் முக்கிய கடற்படைத்தளம் அங்குதான் இருந்தது. இது நேட்டோவிடம் பறிபோனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற ஒரே காரணத்துக்காக ரசியா அதை கைப்பற்றியது. எழுந்துள்ள நிலைமைகளையும் நேட்டோவின் தலையீடுகளையும் பார்க்கும்போது இனி ஒருபோதும் ரசியா அதை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பது நிச்சயமானது. பொரசெங்கோவின் ஆட்சியில் ரசிய மொழி பேசும் மக்களைக் கொண்ட டொன்பாஸ் இன் 4 மாகாணங்களிலும் ரசிய மொழி தடைசெய்யப்பட்டது. AVOZ என்ற நாசிசப் படைப் பிரிவு உக்ரைன் இராணுவத்தின் ஒரு பகுதியாக செயற்பட்டது. இவர்கள் டொன்பாஸ் க்கு அனுப்பிவைக்கப் பட்டார்கள். இவர்கள் 2014 இலிருந்து தொடக்கி வைத்த படுகொலை 14000 ரசிய மொழி பேசும் டொன்பாஸ் மக்களை கொன்றொழித்தது. துப்பாக்கியை விடவும் வெட்டிக் கொல்லப்பட்டவர்களே பலர். உக்ரைன் அரசின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த இயக்கங்களான டொனெற்ஸ்க் மக்கள் குடியரசு (DPR), லுகான்ஸ்க் மக்கள் குடியரசு (LPR) இனை ரசியா ஆதரித்தது. ஆயுத உதவி வழங்கியது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் மூலகாரணம் 2008 இல் தோற்றுவிக்கப்பட்டது. 2008 இல் ‘புக்காரெஸ்ற்’ (ருமேனியா) இல் நடந்த நேட்டோ மாநாட்டில் ஜோர்ஜ் புஷ் இன் அமெரிக்காவானது உக்ரைனையும் ஜோர்ஜியாவையும் நேட்டோவில் இணைக்க தீர்மானம் கொண்டுவந்தது. இதை அப்போதைய ஜேர்மன் சான்சலர் அங்கலா மேர்க்கலும் (Angela Merkel, பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கொலாஸ் சார்க்கோசியும் (Nicolas Zarkozy) எதிர்த்தார்கள். அங்கலா மேர்க்கல் தெளிவாக ஒன்றை முன்வைத்தார். “நேட்டோ விஸ்தரிப்பை உக்ரைனூடாக ரசிய எல்லைவரை கொண்டு போவதை புட்டின் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். நிச்சயமாக அது போரில் போய் முடியும் ஆபத்தைக் கொண்டது” என்றார். அதன்படி 2022 இல் நடந்திருக்கிறது. சோவியத் யூனியனின் கடைசி அதிபராக இருந்த கோர்ப்பச்சேவ் இன் (கிளாஸ்நோஸ்ற், பெரஸ்றொய்க்கா) கொள்கைகள் 1989 இல் பேர்லின் சுவர் வீழ்த்தப்பட்டு, 1990 இல் கிழக்கு-மேற்கு ஜேர்மனி இணைக்கப்படுவதற்கும், கிழக்கு ஜேர்மனியில் இருந்த சோவியத் படைகள் படிப்படியாக வெளியேறுவதற்கும் வழிவகுத்தது. இந்த பரபரப்பான காலகட்டத்தில் 1990 பெப்ரவரியில் மொஸ்கோவில் வைத்து கோர்ப்பச்சேவ் க்கு நேட்டோ சார்பில் அமெரிக்க அரச செயலாளர் ஜேம்ஸ் பேர்க்கர் ((James Baker) வழங்கிய முக்கிய வாக்குறுதி “நேட்டோ படையானது ஜேர்மனியிலிருந்து ஓர் அங்குலம் கூட கிழக்கு நோக்கி நகராது” என்பதே. 1955 இல் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டாக உருவாக்கிய Warsaw Packt இன் கீழ் இருந்த இராணுப் பிரிவும் 1991 இல் கலைக்கப்பட்டது. சோவியத் யூனியன் என்ற கட்டமைப்பு உதிர்ந்து போனது. அப்போதே நேட்டோவுக்கான தேவையும் இல்லாமல் போனது. இருந்தபோதும் நேட்டோ கலைக்கப்படவில்லை. ஆனால் நேட்டோ விஸ்தரிப்பு குறித்த வாக்குறுதிகளை நேட்டோ கடைப்பிடிக்காமல் ஏமாற்றியது. சோவியத் இலிருந்து பிரிந்து சென்ற நாடுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக இணைத்துக் கொண்டது. பின்னாளில் நேட்டோ விஸ்தரிப்புகள் குறித்து கொர்பச்சேவ் ஜேர்மனியில் பேசும்போது “எம்மை ஏமாற்றிவிட்டீர்கள்” என விமர்சித்துப் பேசினார். 2000 ஆண்டு ஜனாதிபதியாக தெரிவான புட்டின் இந்த நேட்டோ விரிவாக்கம் குறித்து எச்சரித்திருந்தார். பின்னர் உக்ரைனை நேட்டோவில் இணைப்பதானது நேட்டோ தனது எல்லை வரை வர வழிசமைக்கும் எனவும், அது தமது நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக வரும் எனவும் பலமுறை சொல்லியுமிருந்தார். “அது சிவப்புக் கோட்டைத் தாண்டுவதாக அமையும், ரசியா பார்த்துக் கொண்டு இருக்காது” என எச்சரித்தார். இந்த எல்லா எதிர்ப்பையும் எச்சரிக்கைகளையும் மீறி ஜேர்மன் எல்லையிலிருந்து ரசிய எல்லைவரை நேட்டோவை படிப்படியாக நகர்த்தி வந்துவிட்டு, ரசியாவால் ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என சொல்வது எவளவு கோமாளித்தனமானது. அத்தோடு ரசியாவும் ஐரோப்பாதான் என்பதை மறந்து பேசுவது இன்னொரு கோமாளித்தனம் அல்லது வஞ்சகத்தனமானது. இவ்வாறாக அமெரிக்கா தனது பரிவாரமான (32) நேட்டோ நாடுகளுடன் செயற்பட்டு உக்ரைனை போர்க்களமாக்கியதுதான் வரலாறு. இப்போ “அது நான் தொடங்கிய போர் அல்ல. பைடன் தொடங்கிய போர்” என ட்றம்ப் சொல்கிறார். “இது எமது போர் அல்ல, உங்கள் போர்” என ஐரோப்பாவுக்குச் சொல்கிறார். உக்ரைன் ரசிய போர் மோசமான நிலையை நோக்கி நகர்ந்திருக்கிறது. இலகுவில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினை போல் தோற்றமளித்ததற்குக் காரணம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ என்பவற்றின் தலையீடாக இருந்தது. உண்மையில் இந்தப் போர் ரசியாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான நிழற்போர் என்பதே பொருத்தமானது. அதன் களம் உக்ரைன். பலியாடுகள் உக்ரைன் மக்களும் இராணுமும். நேட்டோ/ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு நேட்டோ தனது விஸ்தரிப்புவாதத்தை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. ரசியாவை -இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும்- பலவீனமாக்குவது அவர்களின் மைய நோக்கமாக இருக்கிறது. 2.1) அதற்கான கதையாடல்களை (narratives) உருவாக்கினார்கள். உக்ரைனின் பாதுகாப்பு என்பது ஐரோப்பாவின் பாதுகாப்பு எனவும், ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதத்துக்கு ரசியா அச்சுறுத்தலாக இருக்கிறது எனவும் கட்டமைத்தார்கள். 2.2) ரசியாவுக்கு எதிராக 27000 க்கு மேற்பட்ட பொருளாதாரத் தடையை விதித்தார்கள். 2.3) 300 பில்லியன் வரையான ரசிய நிறுவனங்களின் நிதியை தமது வங்கிகளில் முடக்கினார்கள். அதாவது உறைநிலை ஆக்கினார்கள். 2.4) ஐரோப்பாவுக்கு ‘Nord Stream-2’ கடலடி குழாய் மூலமாக ரசியா எரிவாயுவை ஏற்றுமதி செய்து பொருளீட்டியது. அந்தக் குழாயை அநாமதேயமாக உடைத்தார்கள். அல்லது உக்ரைன் உதவியுடன் உடைத்தார்கள். 2.5) ரசியாவிடமிருந்து பெருமளவு கச்சா எண்ணெயை வாங்கும் சீனா, இந்தியா மீது அழுத்தம் கொடுக்க முயற்சித்தார்கள். ஆனாலும் திரைமறைவில் இன்னமும் 40 வீதமான எரிவாயு ஐரோப்பாவுக்குள் வந்து சேர்கிறது என்பது ஒரு முரண்நகை. அத்தோடு இந்தியாவிடமிருந்து (ரசிய) எண்ணெயை வாங்கினார்கள். இந்த வர்த்தகத்தின் மூலம் சீனாவும் இந்தியாவும் ரசியாவின் ஆக்கிரமிப்புப் போருக்கு முதலிடுவதாக குற்றம் சுமத்திப் பார்த்தார்கள். ட்றம்ப் உம் அதே பாட்டைப் பாடினார். (அவர்களது அழுத்தத்தை இந்த இரு நாடுகளும் புறந்தள்ளின) இந்தப் போரில் தாம் நேரடியாக ஈடுபடாமல் தமது நோக்கம் சார்ந்து உக்ரைனை பலிக்கடாவாக்கினார்கள். போருக்காக பில்லியன் கணக்கிலான நிதியையும், ஆயுதங்களையும் கடனாக வழங்கினார்கள். அத்தோடு இராணுவ தகவல் தொழில்நுட்பத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். உக்ரைன் மக்களும் இராணுவமும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். 4. இவளவு அழிவுக்குப் பின்னரும், ட்றம்ப் பின்வாங்கிய பின்னரும், ஐரோப்பா இந்தப் போர் முடிந்துவிடக்கூடாது என்ற நோக்கில் செயற்படுகிறது. மேற்கு ஐரோப்பா அதுவும் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி நாடுகள் தீவிரமாகச் செயற்படுகின்றன. இதற்கு நான்கு காரணங்கள் உள்ளன. 4.1) காலனிய மனக் கட்டமைப்பு (colonial mindset) அவர்களின் காலனிய மனக் கட்டமைப்பானது ரசியாவிடம் தமது நிழற்போர் தோற்றுவிடக் கூடாது என்ற பதட்டத்தை வழங்கியிருக்கிறது. ரசியாவுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையானது அவர்கள் கணித்ததுக்கு மாறாக ரசியாவை விட அவர்களையே அதிகம் தாக்கியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டு இருக்கிறபோதும் கூட, அந்த காலனிய மனக் கட்டமைப்பானது அவர்களை பின்வாங்கச் செய்ய இலகுவில் விடுவதாக இல்லை. 4.2) போர்ப் பொருளாதாரம் இந் நாடுகளின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இன்னொரு வகையில் ‘போர்ப் பொருளாதாரம்’ பெரும் பக்கபலமாக இருக்கிறது. ‘உக்ரைன் பாதுகாப்பு என்பது ஐரோப்பாவின் பாதுகாப்பு’ என வசனம் பேசும் அவர்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களையோ நிதியையோ அன்பளிப்பாகக் கொடுக்கவில்லை. கடனாகவே கொடுத்திருக்கிறார்கள். ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் அவர்களுக்கு சேரவேண்டிய பணத்தை எதிர்காலத்தில் உக்ரைன் செலுத்தியாக வேண்டும். அத்தோடு பொருளாதாரத் தடையால் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள ரசிய சொத்துகளும் அதன் வட்டியும் அவர்களின் இப்போதைய பொருளாதாரத்துக்கு இன்னொரு பக்கபலமாக உள்ளது. ஐரோப்பிய பெரு நிதிநிறுவனமான Euroclear வெளியிட்டுள்ள கணக்கின்படி, ஐரோப்பிய வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்ட 194 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான ரசிய சொத்துகள் 2025ம் ஆண்டின் அரைப் பகுதியில் மட்டும் 2.7 பில்லியன் யூரோக்களை வட்டியாக பொரித்துள்ளது. 2024 இல் இதே அரையாண்டு காலத்தில் 3.4 பில்லியன் யூரோக்களை பொரித்துள்ளது. 4.3) தத்தமது நாடுகளில் இயன்றளவு தமது பதவியையும் அதிகாரத்தையும் தக்கவைக்கும் முயற்சி இஸ்ரேல் பலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிப்பதற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திய மக்களிடம் முழுமையாக -தத்தமது நாடுகளில்- மேற்கு ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்கள் அம்பலப்பட்டுப் போயின. நெத்தன்யாகுவுக்கு எதிராக மட்டுமன்றி, தமது தலைவர்களுக்கு எதிராகவும் அவர்கள் போராடியதால் தலைவர்கள் அரசியல் செல்வாக்கு இழந்து போயிருக்கிறார்கள். அத்தோடு தோற்றுப் போகிற உக்ரைன் போருக்கு பில்லியன் கணக்கான நிதியை இப்போதும் வழங்கிக் கொண்டிருப்பதால், உள்நாட்டில் பொருளாதார நெருக்கடியும் வேலைவாய்ப்பின்மையும் வரி அதிகரிப்பும் மக்களின் சகிப்புத் தன்மையை சோதித்துப் பார்த்திருக்கின்றன. அதனால் மேற்கு ஐரோப்பிய தலைவர்களின் அரசியல் எதிர்காலமும், அதிகாரமும் கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றன. போர் தோல்வியில் முடிந்தால் அவர்கள் தேர்தல்களில் தூக்கி எறியப்படுவர். அதிகார சுகிப்பை இழந்து போய்விடுவர். இந்த அதிகாரத்தை தக்கவைக்க அவர்களுக்கு உக்ரைன் போர் இப்போ சமாதானத்தில் முடியக் கூடாது. 4.4) அவமானம் ரசியாவை பலவீனப்படுத்தும் நோக்கில் உக்ரைன் மண்ணையும் மக்களையும் பலிகொடுத்து இந்தப் போருக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்த அந்த நோக்கமும் இதுவரை நிறைவேறவில்லை. அது ஒரு சமநிலையில்கூட முடியாமல் தோல்வியை நோக்கி சரிவது மிகப் பெரும் அவமானமாகவும் ஜீரணிக்க முடியாததாகவும் இருக்கிறது. அவர்கள் கையாளும் வழிமுறை ஐரோப்பிய மக்களை போர் அச்சமான சூழல் ஒன்றுக்குள் வைத்திருப்பதன் மூலம் தமது நோக்கங்களை சாதிக்க முயல்கிறார்கள். ரசியாவால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும், உக்ரைன் தோல்வியுற்றால் ரசியா அதனை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றைய ஐரோப்பிய நாடுகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கும் எனவும், புட்டினின் இலக்கு பழைய சோவியத் ஒன்றிய கட்டமைப்பை நோக்கிய ஆக்கிரமிப்புத்தான் எனவும் கதையாடல்களை உருவாக்கி மக்களுக்கு தீத்தும் வேலையில் ஈடுபடுகிறார்கள். டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராணுவ கேந்திர நிலையங்களின் மீது மர்ம ட்றோன்கள் பறந்து உளவு பார்ப்பதாக சொல்லி அச்சமூட்டினர். ட்றோன்களை ஏன் சுடவில்லை என நிருபர்கள் கேட்டதற்கு அதைச் சுட்டால் அதன் உதிரிப் பாகங்கள் மக்களின் தலைகளில் வீழ்ந்துவிடலாம் என்ற காரணத்தை கோமாளித்தனமாக முன்வைத்தனர். தமது நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தக்கூடிய நடவடிக்கையை அவர்கள் இவ்வாறாகவா அணுகுவார்கள். இலங்கையில் கோட்டபாய அரசாங்க காலத்தில் ‘கிறீஸ் பூதம்’ என்ற மர்ம கதாபாத்திரத்தை உருவாக்கி, தமிழ் மக்களை அச்ச நிலையில் வைத்திருந்ததை இந்த மர்ம ட்ரோன்கள் ஞாபகப்படுத்துகின்றன. அத்தோடு பாதுகாப்புக்கு என அதிகளவு நிதியை இந்த நாடுகள் தமது வரவுசெலவுத் திட்டங்களில் ஒதுக்குகின்றன. ஐரோப்பிய ஒன்றியமும் அதே வேலையைச் செய்கின்றது. நேட்டோ தனது உறுப்பு நாடுகள் தத்தமது GDP இலிருந்து ஒதுக்கும் நிதியை இரண்டு வீதத்திலிருந்து ஐந்து வீதமாக அதிகரிக்கக் கோருகின்றது. பிரான்சின் மக்ரோனும், பிரித்தானியாவின் ஸ்ரார்மரும் தத்தமது நாடுகளில் இராணுவ உசுப்பேத்தல்களை வேறு ஆரம்பித்திருக்கிறார்கள். போர்ப் பதட்ட உளவியலை மக்களிடம் உருவாக்க முயல்கிறார்கள். ஆனால் உக்ரைன்-ரசியா இடையில் நிரந்தரமான சமாதானத்தை முயற்சிக்க அமெரிக்கா விரும்புகிறது. அப்படித்தான் சொல்கிறது. அதன் பேரில் பிரச்சினைகளை தமது ஏகாதிபத்திய அதிகார நிலையில் நின்று அணுகி, நாடுகளை மிரட்டி அல்லது அழுத்தம் கொடுத்து டீல் பண்ணும் வேலையை ட்றம் செய்துவருகிறார். அவருக்கு நேட்டோவின் மானப் பிரச்சினை முக்கியமல்ல. அவர் அமெரிக்கா சார்ந்த பொருளாதார நலனின் அடிப்படையிலும், தூர நோக்கான அரசியல் இராஜதந்திரத்தின் அடிப்படையிலும் இச் சமாதான ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர முயல்கிறார். மற்றபடி அவர் ஒரு சமாதான விரும்பியல்ல. சமாதான நடிகன். “நாங்கள் உக்ரைனுக்கு மேலும் பணத்தையும் ஆயுதங்களையும் கொடுப்பதோடு இன்னுமாய் பொருளாதாரத் தடைகளையும் செயற்படுத்தினால் வெற்றி எமது கைகளில் தவழும் என ஒரு ஜனரஞ்சகமான கற்பனை நிலவுகிறது. தோல்வியடைந்த இராஜதந்திரிகளாலோ கனவுலகில் வாழும் அரசியல்வாதிகளாலோ சமாதானம் உருவாகாது. யதார்த்த உலகிலுள்ள ஆளுமையானவர்களால் இதை ஏற்படுத்த முடியும்” என அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறுகிறார். போர்களையே உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டின் சார்பாக சமாதானம் பற்றிய இந்த தத்துவத்தை பேச வான்ஸ் க்கு என்ன அறம் இருக்கிறதோ தெரியவில்லை. இருந்திட்டுப் போகட்டும். இந்த சமாதான ஒப்பந்தத்தின் பிரசவம் புட்டினும் ட்றம்ப் உம் அலாஸ்காவில் சந்தித்த பரபரப்புக் காட்சியின் முன்னரேயே இரு நாட்டு ஆலோசகர்களும் இரகசியமாக சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. அச் சந்திப்பின் போது புட்டின் தனது தரப்பில் உத்தியோக பூர்வமாக திரைமறைவில் கையளித்த நிபந்தனைகள்தான் ட்றம்ப் இப்போது கொணர்ந்த சமாதான ஒப்பந்தத்தின் அடிக்கல் என அதன் உள்ளடக்கத்தைப் பார்க்கிறபோது தெரிகிறது. அது இதுவரை காலமும் இரகசியமாக பேணப்பட்டது என்பதை விடவும், அதன் அம்சங்கள் சாத்தியப்பாடற்றவை என ஓரத்தில் வைக்கப்பட்டது என்பதே பொருத்தமானது. அலாஸ்கா பேச்சுவார்த்தையின் பின் ட்றம் புட்டின் கோருவது சாத்தியமில்லாத விடயங்கள் என பேசியதும், புட்டின் மீதான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தி பத்திரிகையாளாகளின் கேள்விகளுக்கு பதிலளித்ததும் நடந்தது. அதுக்கும் மேலாக ஹங்கேரியில் அந் நாட்டின் தலைவர் விக்ரர் ஓர்பான் அனுசரணையில் நடக்க ஒப்புக்கோண்ட புட்டின்-ட்றம்ப் பேச்சுவார்த்தையை திடீரென ட்றம் இரத்துச் செய்தார். “புட்டினோடு சாத்தியமில்லாதவைகளைப் பேசி பயனில்லை” என்ற காரணத்தையும் முன்வைத்தார். அலாஸ்கா சந்திப்பின் பின்னும் அமெரிக்கா உக்ரைனுக்கு இராணுவ ரீதியில் இராணுவத் தகவல் பரிமாற்றங்களுக்கு உதவியது. பைடன்கூட வழங்க மறுத்த அமெரிக்காவின் சக்தி வாய்ந்த ஏவுகணையான ‘ரோமாஹவ்க்’ (Tomahawk) இனை உக்ரைனுக்கு தருவதாக ட்றம்ப் ஒப்புக்கொண்டார். (பின் மறுத்தார் என்பது வேறு விடயம்). இவையெல்லாம் எதைக் காட்டுகிறது. புட்டினின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என ட்றம் எடுத்த முடிவைத்தான் என்பதை மதிப்பிட முடிகிறது. அப்படியாயின் ஏன் அதை திரும்ப எடுத்தார்கள்? உக்ரைன் தோல்வி அலாஸ்கா சந்திப்பின் பின் ரசியாவின் உக்ரைன் மீதான தாக்குதல் மூர்க்கத்தனமாக இருந்தது. துரிதமான நில ஆக்கிரமிப்பும், உக்ரைனின் தலைநகர் கீவ் உட்பட ஏனைய நகரங்கள் மீதான பெரும் ஏவுகணை மற்றும் ட்றோன் தாக்குதலும், முன்னரங்குகளில் உக்ரைன் இராணுவத்தின் பெருந்தொகை மரணங்களும் சரணடைவுகளும் எல்லாமுமாக தவிர்க்க முடியாமல் புட்டினின் நிபந்தனைகளை பரிசீலிக்க வைத்திருக்கிறது. புட்டின் ஏவிய கொடுந் தாக்குதல்களின் நோக்கமும் இவ்வாறான ஓர் அழுத்தத்தை ட்றம்ப்பிற்குக் கொடுக்கும் நோக்கமாக இருந்திருக்கலாம். உக்ரைனை களமாக வைத்து ஆடிய நேட்டோவின் நிழற்போர் தோல்வியில் முடியப் போகிறது என்பதை ட்றம்ப் கணித்துமிருக்கலாம். அதை அவர் செலன்ஸ்கியிடம் ஏற்கனவே ஓவல் அலுவலகத்தில் வைத்து உக்ரைனுக்கு காட்டமாக தெளிவுபடுத்தியிருந்தார். “விளையாட உன்னிடம் கார்ட்ஸ் ஏதும் இல்லை” என திரும்பத் திரும்ப கூறி செலன்ஸ்கியை அவமானப்படுத்தினார். மூன்றாம் உலகப் போரில் கொண்டுபோய் நிறுத்தப் போகிறாய் என வேறு செலன்ஸ்கியை சொற்களால் தாக்கினார். அது நடந்து பல மாதங்களாகி விட்டது. இப்போ இது தமது போரல்ல. ஐரோப்பாவின் போர். அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என அமெரிக்கா பின்வாங்கியிருக்கிறது. அது தற்காலிகமாகவும் இருக்கலாம். காலம்தான் இந்த சூட்சுமத்தை அவிழ்த்துக் காட்டும். 2. ட்றம்ப் இன் பொருளாதார நோக்கம் உக்ரைனுக்கு தாம் ஆயுதம் இனி வழங்க மாட்டோம். வேண்டுமானால் ஐரோப்பா (இன்னொரு வார்த்தையில் சொன்னால், அமெரிக்கா தவிர்ந்த நேட்டோ) தம்மிடம் அதை வாங்கி உக்ரைனுக்கு வழங்கலாம் என ட்றம் சொன்னார். அது நடக்கவும் செய்தது. குறிப்பாக ஜேர்மனி பெருமளவு நிதியை அதற்காகச் செலவிட்டு வாங்கி உக்ரைனுக்குக் கொடுத்தது. அமெரிக்கா இலாபமடைந்தது. இன்னொரு வழியாலும் அமெரிக்கா வந்தது. நேட்டோ உறுப்பு நாடுகள் தமது GDP இல் 5 வீதத்தை ஒதுக்க வேண்டும் என நிர்ப்பந்தித்ததன் மூலம் இந்தப் பணத்தை தமதாக்க முயற்சித்தார். அதாவது ஐரோப்பாவையும்விட பல மடங்கு உற்பத்தித் திறன் கொண்டதும், தொழில்நுட்ப வளர்ச்சியடைந்ததுமான தமது இராணுவ தளபாடங்களை நேட்டோவுக்கு விற்று காசு பார்க்க ட்றம்ப் திட்டமிட்டார். அது வெற்றிபெறவும் செய்கிறது. இப்போ சமாதான ஒப்பந்தத்திலும் பொருளாதார நோக்கம் பல தளங்களில் வெளிப்படுகிறது. அதில் பின்வரும் நான்கை சுட்ட முடியும் 3.1) ரசியா மீதான பொருளாதாரத் தடையை முன்வைத்து ரசியாவின் சொத்துக்களை ஐரோப்பா முடக்கியது. ரசிய நிறுவனங்களுக்குச் சொந்தமான பல பில்லியன் டொலர் பெறுமதியான சொத்து மட்டுமல்ல, பணமும் ஐரோப்பிய வங்கிகளில் உறைநிலையில் வைக்கப்பட்டது. பெல்ஜியத்தின் வங்கியில் பெருமளவு உறைநிலை நிதி உள்ளது. இதில் 140 பில்லியனை எடுத்து கடனாக உக்ரைன் அரசாங்கம் தன்னை நிர்வகிக்க இரண்டு ஆண்டு காலத்துக்கான உதவியாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சித்தது. அந்தப் பிரேரணையை பெல்ஜியம், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் ஏற்றக்கொள்ளவில்லை. இந்த இழுபறிக்குள்ளால் ட்றம் இன் சமாதான ஒப்பந்தமானது “உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் ரசியாவின் நிதியில் 100 பில்லியன் டொலரை உக்ரைன் அபிவிருத்தி நிதி க்கு ஒதுக்க வேண்டும்” என்ற ஓர் அம்சத்தை உள்ளடக்கியிருக்கிறது. இந்தப் பணத்தை வேகமாக வளர்ச்சியடையும் தொழில்நுட்பம், தரவு வங்கி நிலையங்கள், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் உக்ரைன் முதலிடும் எனவும், அத்தோடு மறுகட்டுமானம், அபிவிருத்தி, எரிவாயு கட்டுமான நவீனமயமாக்கல் என்பவற்றிலும் முதலிடும் எனவும், இவை எல்லாவற்றையும் அமெரிக்காதான் தலைமை ஏற்று செய்யும் எனவும், வரும் இலாபத்தில் 50 வீதம் அமெரிக்காவுக்கானது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரசியாவின் உறைநிலைப் பணத்தை கையாள நினைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முகத்திலறைந்தது போல இது இருக்கிறது. 3.2) யப்பான், அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் Euroclear என்ற பெருநிதி நிறுவன சந்தை போன்றவற்றில் உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் மீதிச் சொத்து அல்லது பணத்தை (300 பில்லியன் வரை வரலாம் என சொல்லப்படுகிறது.) விடுவித்து, அதை வைத்து அமெரிக்கா-ரசியா கூட்டாக முதலீட்டில் ஈடுபடுவது எனவும், அதன் மூலம் இரு நாடுகளுக்குமான நெருக்கம் உண்டாகும் எனவும், அது எதிர்காலத்தில் முரண்பாடுகள் வீரியமாகாமல் தடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி எரிசக்தி, இயற்கை வளம், கட்டுமானம், அண்டாட்டிக் (Antatic) இலுள்ள அரியவகை கனிம வள அகழ்வு என்பவற்றில் ரசியாவும் அமெரிக்காவும் கூட்டாக ஈடுபடும் என்பதெல்லாம் ட்றம்ப் இன் சமாதான ஒப்பந்த சூழ்ச்சித் திட்டமாக எழுதப்பட்டுள்ளது. ரசியா இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளுமா எனத் தெரியவில்லை. 3.3) உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்கும் எனவும் அதற்கான நஷ்ட ஈட்டை உக்ரைன் அமெரிக்காவுக்கு தொடர்ந்து செலுத்த வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3.4) G7 இல் மீண்டும் இணைய ரசியாவுக்கு அழைப்பு விடுகிறது ஒப்பந்தம். அதன் மூலம் (ரசியா உட்பட்ட) பிரிக்ஸ் கூட்டமைப்பின் பொருளாதாப் போட்டியில் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் G7 உடன் ரசியாவின் பொருளாதாரத்தை இணைக்கும் இன்னொரு சூழ்ச்சி ட்றம்ப் இன் ஒப்பந்தத்தில் உள்ளது. ட்றம்ப் இன் தூர நோக்கு அரசியல் சீனாவுடனான எதிர்காலப் போர்!. இன்றைய உலக ஒழுங்கு ஒற்றைத் துருவ உலக ஒழுங்கிலிருந்து பல் துருவ உலக ஒழுங்கை நோக்கி முட்டிமோதல்களுக்கு உள்ளாகத் தொடங்கியிருக்கிற காலம். இரண்டாம் உலகப் போர் வரை முதல் உலக சாம்ராஜ்யமாக திகழ்ந் பிரித்தானியாவின் இடத்தை அமெரிக்கா எடுத்த போதும், ஒற்றைத் துருவ நிலையை முழுமையாகப் பேண முடியவில்லை. சோவியத் யூனியன் இன்னொரு வல்லரசாக அமெரிக்காவுக்கு சகல தளங்களிலும் சவாலாக திகழ்ந்தது. இரு துருவ நிலை என அதை சொல்ல முடியும். ஆனால் 1991 இல் சோவியத் உடைவின் பின் அமெரிக்கா ஒற்றைத் துருவ உலக ஒழுங்கை முழுமையாக நிறுவியது. உலகம் முழுவதும் 750 க்கு மேற்பட்ட இராணுத் தளங்களை 80 க்கு மேற்பட்ட நாடுகளில் அது வைத்திருக்கிறது. பிரேசில், ரசியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்கா என்ற 5 நாடுகளை முதன்மையாகக் கொண்டு எழுந்த பிரிக்ஸ் இன் எழுச்சி அமெரிக்காவுக்கும் G7 பணக்கார நாடுகளுக்கும் சவாலாக எழுந்துள்ளது. அத்தோடு சீனா, ரசியா, இந்தியா என்பவற்றின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பன காலனிய மனக் கட்டமைப்புக் கொண்ட மேற்குலகுக்கு ஜீரணிக்க முடியாத ஒன்று. ரசியா மீதான இவர்களின் அணுகுமுறையில் இந்த மனக் கட்டமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது. முன்னைய சோவியத் போல, அல்லது அதையும்விட சிறப்பாக கடந்த 30 வருடங்களில் சீனா சகல தளங்களிலும் அமெரிக்காவுக்கு சவாலாக எழுந்துள்ளது. எனவே தனது அதிகார நிலையை மேல்நிலையில் வைத்திருக்கும் வேட்கையானது எதிர்காலத்தில் சீனாவுடன் அமெரிக்கா (நேட்டோவின் துணையுடன்) போர் தொடுக்க வேண்டிய புள்ளியில் கொண்டுவந்து நிறுத்தலாம். அது ஏறத்தாழ 2007 இல் நிகழலாம் என சிஐஏ கணித்திருக்கிறது. அதற்கான இன்னொரு உக்ரைனாக தாய்வானை அது குறிவைத்துள்ளது. முன்னர் அமெரிக்காவானது சோவியத் யூனியனை எதிர்கொள்ள சீனாவுடன் நட்புறவு பேணி, சீனாவை தூர இருக்க வைக்க மேற்கொண்ட உத்திபோல, சீனாவுடன் போர் ஒன்று உருவாகும் பட்சத்தில், ரசியாவை சீனாவிடமிருந்து தூரப்படுத்த அல்லது தலையிடாமலிருக்க வைக்க வேண்டிய தூர நோக்கு ஒன்று ட்றம்ப் இடம் இருக்கிறது. இதை ட்றம்ப் க்கும் புட்டினுக்குமான நட்பு என சொல்வது ஓர் அரசியல் பார்வையே அல்ல. அரசியல் காய் நகர்த்தல் என்பதே பொருத்தமானது. எல்லா நாடுகளும் தத்தமது நலனை முன்னிறுத்தியே செயற்படுகின்றன. அதை சாதிக்க இராஜதந்திர அணுகுமுறைகளை ஒரு சதுரங்க ஆட்டமாக ஆடுகின்றன. அவர்களின் முகத்துக்கும் பிடரிக்கும் இடையிலான மொழி ஒன்றாக இருப்பதில்லை. அது அறமற்ற மொழியின் பாற்பட்டது. ட்றம்பின் இந்த அரசியல் சதுரங்கத்தை புட்டின் நன்கு புரிந்தவர் என்பதால், ஆடுகளத்தில் ட்றம்பை வைத்து தனது இலக்கை அடைய அவரும் தன் பங்குக்கு காய் நகர்த்துகிறார். அரசியல் சதுரங்கம் மேற்கூறிய பொருளாதார மற்றும் அரசியல் நலன்களை கருத்தில் கொண்டு ட்றம்பின் ஆலோசகர்கள் 28 அம்ச சமாதான ஒப்பந்தத்தை உக்ரைன்-ரசியா இடையில் முன்வைத்திருக்கிறார்கள். போரில் வெற்றிக்கு அருகாக வந்திருக்கும் ரசியாவுக்கும் தோல்வியை தழுவும் உக்ரைனுக்கும் இடையிலான ஒப்பந்தம் சமச்சீரற்றதாகவே இருக்கும் என்ற யதார்த்தத்தைப் பயன்படுத்தி ட்றம்ப் தனது ஆட்டத்தை ஆடுகிறார். உக்ரைன் இனி ஒருபோதும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பது ஒப்பந்தத்தின் ஓர் அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரசியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக 2022 பெப்ரவரி வரை புட்டின் அமெரிக்காவிடமும் செலன்ஸ்கியிடமும் கேட்டது “நேட்டோவில் இணையாமல் நடுநிலையாக இருக்க வேண்டும்” என்பதே. இதை மறுத்த செலன்ஸ்கி இன்று எந்த இடத்தில் நிற்பாட்டப்பட்டிருக்கிறார். நேட்டோவில் நிரந்தரமாக சேர முடியாது என்பது மட்டுமன்றி, உக்ரைன் இராணுவத்தை ஆறு இலட்சத்துக்கு மேல் வைத்திருக்க முடியாது, அதி தூர ஏவுகணைகளை உக்ரைன் வைத்திருக்க முடியாது, அணு ஆயுதத்தை உருவாக்க முடியாது என்பனவெல்லாம் ஒப்பந்தத்தினூடு உக்ரைன் வந்து சேர வேண்டிய இடமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. நேட்டோவுக்காக உக்ரைன் இழந்தவைகள் இவை மட்டுமல்ல. உக்ரைன் மக்கள் மற்றும் இராணுவம் என பெரும் மனிதப் பேரழிவுகளும், மனித அலைச்சல்களும், உளவியல் நசிவுகளும், கட்டுமான இழப்புகளும் போன்று துயரங்களும் ஆகும். இது மட்டுமா. ரசிய மொழி பேசும் மக்களைக் கொண்ட, உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய, டொன்பாஸ் பிரதேசங்களில் 90 வீதத்தை செலன்ஸ்கி ரசியாவிடம் பறிகொடுத்தும் இருக்கிறார். ரசியாவால் கைப்பற்றப்பட்டிருக்கும் இப் பிரதேசங்கள் ரசியாவிடம் உத்தியோகபூர்வமாக இணைக்கப்படுவதற்கான வாசலையும் இந்த ஒப்பந்தம் திறந்துவிட்டிருக்கிறது. ஆனாலும் இவை தெளிவான வரையறுப்புகளுக்கு உட்படுவதில் அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் ஒத்த கருத்து இல்லை. மறுபுறத்தில் உக்ரைன் தனது பிரதேசமான டொன்பாஸ் மற்றும் கிரைமியா பிரதேசங்களை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. 2002 பெப்ரவரியில் போர் தொடங்கிய போதும், 2002 ஏப்ரலில் ரசியா உக்ரைனை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இஸ்தான்புல்லில் இது நடைபெற்றது. நேட்டோவின் விஸ்தரிப்புவாதத்துக்கு எதிராக ரசிய பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்த “உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது. நடுநிலையாக இருக்க வேண்டும்” என ரசியா உக்ரைனை வலியுறுத்தியதை செலன்ஸ்கி தான் ஏற்றுக் கொள்வதாக சொல்லி மேசைக்கு வந்தார். அது நடந்திருந்தால் உக்ரைன் இப்படி சின்னாபின்னப்பட்டு இருக்காது. பிரதேசங்களை பறிகொடுத்தும் இருக்காது. ஆனால் செலன்ஸ்கியை பேச்சுவார்த்தையிலிருந்து இடைமறித்து “நாம் இருக்கிறோம் உனக்கு உதவ. நீ நேட்டோவில் சேருவதை யாராலும் தடுக்க முடியாது பேச்சுவார்த்தையிலிருந்து வெளியே வா” என்றெல்லாம் நம்பிக்கை கொடுத்து அல்லது உசுப்பேத்தி பேச்சுவார்த்தையைக் குழப்பியது பொரிஸ் ஜெல்சனின் பிரித்தானியாவும் பைடனின் அமெரிக்காவும்தான்!. இவர்களே உக்ரைனின் இன்றைய நிலைக்கு மிகப் பெரும் காரணமானவர்கள். இவர்களுக்குப் பின்னால் இழுபட்டுப் போன ஐரோப்பாவானது இப்போ வலையில் சிக்கியுள்ளது. ட்றம்ப் “இது எனது போர் அல்ல. இது பைடன் ஆரம்பித்த போர்… இப்போ உங்களது போர்” என ஐரோப்பாவுக்கு விரல் நீட்டுகிறார். இன்னொரு கோணத்தில் இது ஒரு படம் காட்டலாகக் கூட இருக்கலாம். அதை எதிர்காலம் வெளிச்சமிடும். தமது பாதுகாப்பு உத்தரவாதத்தை கோரும் ஐரோப்பாவானது ரசியாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தை என்றாவது ஒருநாள் ஏற்று பேசியதுண்டா என்றால், ஒருபோதும் இல்லை. ரசிய எல்லைவரை வந்த ‘நேட்டோ ஜக்கற்’ அணிந்த ஐரோப்பாவானது, தனது பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி உரக்க கத்தும் அதே நேரம், தனது எல்லைக்குள் நின்று தனது பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி பேச ரசியாவுக்கு இருக்கும் உரிமையை மறுக்கிறது. பலஸ்தீன மக்களின் பாதுகாப்பு உத்தரவாதத்தைப் பற்றிப் பேசாமல், இஸ்ரேலின் பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி பேசிய இழிநிலைதான் ஐரோப்பாவின் இறைமை பற்றிய வியாக்கியானத்துக்கான தகுதியாக இருக்க முடியும். தனது பாதுகாப்பு உத்தரவாதத்தை மட்டுமன்றி ரசியாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தையும் கவனத்தில் எடுத்து நேர்மையாக பேச்சுவார்த்தை மேசையில் எல்லோருமாக உட்கார்ந்தால் இப் பிரச்சினையை எப்போதோ முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆக, அமெரிக்கா இன்று பின்வாங்குகிற நிலையில் கூட, ஐரோப்பா பின்வாங்கவில்லை. ஐரோப்பிய நலன் அடிப்படையில் என்பதைவிட ஐரோப்பிய அரசியல் தலைவர்களின் நலன்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ட்றம்பின் 28 அம்ச சமாதான ஒப்பந்தம் உக்ரைனின் இறைமையைப் பாதிக்கிறது என கூறி, ஐரோப்பா இந்த 28 அம்சங்களையும் பிரித்து மேய்ந்து, 19 அம்ச ஒப்பந்தமாக உருமாற்றி ட்றம் இடம் கையளித்திருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் வரை அவை பற்றிய விபரம் தெரியவில்லை. ஆனால் சமாதானம் வர இவர்கள் இலகுவில் விடப்போவதில்லை. குறிப்பாக மக்ரோன், ஸ்ராமர், மேர்ற்ஸ் போன்ற போர்வெறியர்கள் சமாதானத்துக்கு எதிராகவே நிற்கின்றனர். அமெரிக்காவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்ட 32 நாடுகளின் கூட்டணியாக விரிவாக்கம் அடைந்திருக்கும் நேட்டோவுடன் நேரடியாக ரசியா தனியாக போர் புரிவது என்பது முடியவே முடியாத காரியம். நேட்டோவிலுள்ள ஒரு நாட்டைத் தாக்கினால் அது நேட்டோ உறுப்பு நாடுகள் எல்லோரையும் தாக்கியதாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது நேட்டோவின் 5வது சரத்து ஆகும். இந்தவகை பாதுகாப்பு உத்தரவாதம், பெருமளவு கூட்டு இராணுவ எண்ணிக்கை, அமெரிக்காவின் நவீன தொழில்நுட்பங்கள் ஆயுத உற்பத்திகள், நிதி திரட்சி எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு ரசியாவால் ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என பேசுவதை நம்ப மக்கள் கேணையர்களாக இருக்க வேண்டும். ஐரோப்பாவை புட்டின் ஆக்கிரமிக்கும் ஆபத்து உள்ளதாக அடிக்கடி உச்சரிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘ரசிய ஆக்கிரமிப்பு’ கதையாடலை பலமுறை மறுத்த புட்டின், ஐரோப்பிய தலைவர்கள் மாயையில் வாழ்கின்றனர் என்றார். சென்ற வாரம் அவர் பேசுகிறபோது ரசியா ஒருபோதும் ஐரோப்பாவை ஆக்கிரமிக்காது என எழுத்தில் தரக்கூட தான் தயார் என அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை அதுகுறித்து எதுவும் பேசாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. யதார்த்தம் உக்ரைன் வரலாற்றாசிரியரான Marta Havryshko அவர்கள் கூறுகிறபோது, “இலட்சக்கணக்கான உக்ரைன் இராணுவ வீரர்கள் மடிந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோரும் அவர்களின் விருப்பின்றி பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டு முன்னரங்குகளில் விடப்பட்டவர்கள். அவர்களின் குடும்பங்கள் நடுவீதியில் விடப்பட்டிருக்கிறார்கள். ரசியாவின் தாக்குதலில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு இரவிலும் தூங்கச் செல்லும்போது நாளை உயிருடன் இருப்போமா என்ற ஏக்கம் அவர்களை உயிரோடு கொன்று போடுகிறது. உளவியல் சிதைவுகள் அவர்களை தாக்குகிறது. இளஞ் சமுதாயம் நாட்டைவிட்டு களவாக தப்பியோடி பெருமளவில் புலம்பெயர்ந்திருக்கிறது. தமது எதிர்காலம் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள்” என்கிறார். ரசியாவின் ஆக்கிரமிப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் “உக்ரைன் அரசாங்கம் ஊழல் நிறைந்த அதிகாரிகளாலும் அமைச்சர்களாலும் ஆனது. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். போர் வேண்டும் என்பவர்கள் தாமே போய் முன்னரங்கில் நிற்கட்டும்” என்கிறார். அவர் இறுதியாக ஒன்றைச் சொல்கிறார், “இங்கு வரைபடங்கள் அல்ல முக்கியம், மனிதர்கள்தான் முக்கியம். அவர்கள் ஏங்குவது தமது உயிருக்காக, அமைதியான வாழ்வுக்காக” என்கிறார். உண்மைதான். நாட்டுப் பற்று என்பது எளிய மக்களின் தியாகத்தைத்தான் வேண்டுகிறது. அதற்கான கதையாடல்களையும் போரையும் உருவாக்குபவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் வசதியைப் பெருக்கி வாழுகிறார்கள். அது உக்ரைனாக இருந்தாலென்ன ரசியாவாக இருந்தாலென்ன, அமெரிக்கா ஐரோப்பாவாக இருந்தாலென்ன! ட்றம்பின் அமெரிக்கா என்பதும் புட்டினின் ரசியா என்பதும் நிரந்தரமல்ல. அது எதிர்காலத்திலும் தத்தமது நலனுக்கேற்ப ஆடுகளங்களில் நிற்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அரசியலில் நிரந்தரமான நண்பருமில்லை பகைவருமில்லை என்பது இதைத்தான். கண்முன்னே இதற்கான உதாரணங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. அதேபோலவே, இன்றைய ஐரோப்பிய ஒன்றியம் வரைவுசெய்யும் எல்லைதான் ஐரோப்பா அல்ல என்பதும், பூகோள ரீதியில் ரசியாவும் ஓர் ஐரோப்பிய நாடுதான் என்பதையும் கவனம் கொள்ள வேண்டும். அதேநேரம் இந்த இரண்டு முகாம்களுக்கும் இடையிலான பகை என்பது இலகுவில் தீர்க்க முடியாதளவுக்கு வரலாற்று ரீதியிலானது என்பதும் அவற்றின் மனக் கட்டமைப்பு ஒன்றல்ல என்பதும், அவை புறந்தள்ள முடியாதளவு இடைவெளியைக் கொண்டது என்பதும் சிந்தனை கொள்ளத் தக்கது. சீனாவை நோக்கி ரசியாவை தள்ளியது மேற்குலகின் அல்லது நாட்டோவின் அணுகுமுறை மட்டுமல்ல, இந்த மனக் கட்டமைப்பு வேறுபாடும்தான் என்பதை கவனம் கொள்ள வேண்டும். இதை பைடனைப் போலன்றி ட்றம்ப் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார். ஆனாலும் ஐரோப்பாவின் காலனிய மனக் கட்டமைப்பு சமாதானத்துக்கு குறுக்காக வாள் வீசி நிற்கிறது. அதைத் தாண்டி சமாதானம் முகிழ்ப்பது இலகுவானதல்ல என்பது ட்றம்ப் க்கு நன்றாகவே தெரியும். அமெரிக்கா தள்ளி நிற்கிறபோதும், ஐரோப்பாவுடன் இழுபடுகிற செலன்ஸ்கியின் பதவியை கைமாற்றியாவது தனது நோக்கத்தை சாதிக்க ட்றம்ப் தயங்க மாட்டார். அதற்கு ஒத்திசைவாக, செலன்ஸ்கி அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளின் மில்லியன் கணக்கான பண மோசடியும் ஊழலும் பூதமாக வெளிக்கிளம்பியிருக்கிறது. “வரும் ஆனால் வராது, வராது ஆனால் வரும்” என்ற நிலையில் சமாதானம் உக்ரைனின் வாசற்படியில் குந்தியிருக்கிறது!. ravindran.pa 01122025 Thanks: https://marumoli.com/வரைபடங்களும்-மனிதர்களும/ https://sudumanal.com/2025/12/01/வரைபடங்களும்-மனிதர்களும/#more-7502
  18. இடையிலுள்ள. 0. ஒன்றை. மட்டும். எடுத்து. பின்னுக்குப். போட்டு. வாசித்துப் பாருங்கள. சரியாக. இருக்கும்
  19. “ஆசையா கன்னத்தைக் கடிக்கத் தோணுதா?” – காதலில் வரும் ‘செல்லக் கடி’ பின்னால் இருக்கும் சயின்ஸ் இதுதான்! 18 Dec 2025, 6:30 AM காதலிக்கும்போதோ அல்லது மிகவும் பிடித்த ஒருவரைக் கொஞ்சும்போதோ, உங்களுக்கு விசித்திரமான ஒரு உணர்வு ஏற்பட்டதுண்டா? அவர்கள் கன்னத்தைப் பிடித்துப் பலமாகத் கிள்ள வேண்டும், கையை ஓங்கிக் கடிக்க வேண்டும் அல்லது எலும்பு உடையும் அளவுக்குக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று தோன்றுமா? “ஐயோ… பாவம் வலிக்குமே” என்று நினைத்தாலும், அந்த ஆக்ரோஷமான ஆசையைக் கட்டுப்படுத்தவே முடியாது. இதை நினைத்து, “எனக்கு என்னாச்சு? நான் ஏன் இப்படி வன்முறையா நினைக்கிறேன்?” என்று பயப்பட வேண்டாம். இதற்குப் பெயர்தான் ‘கியூட் அக்ரஷன்’ (Cute Aggression). இது ஏன் ஏற்படுகிறது? (The Science Behind It): பொதுவாக நமக்குக் கோபம் வந்தால் அடிப்போம்; சந்தோஷம் வந்தால் சிரிப்போம். ஆனால், அளவுக்கு அதிகமான சந்தோஷம் வரும்போது மூளை குழம்பிவிடும். உளவியல் ரீதியாக இதை ‘டைமார்பஸ் எக்ஸ்பிரஷன்’ (Dimorphous Expression) என்று கூறுகிறார்கள். அதாவது, நாம் தாங்க முடியாத அளவுக்கு ஒரு பாசிட்டிவ் உணர்வை (Overwhelming positive emotion) உணரும்போது, அதைச் சமநிலைப்படுத்த (Balance) நம் மூளை அதற்கு எதிரான ஒரு உணர்வை வெளிப்படுத்துமாம். உதாரணத்திற்கு, அதீத மகிழ்ச்சியில் இருக்கும்போது நமக்குக் கண்ணீர் வருகிறதல்லவா? (Happy Tears). அதுபோலத்தான் இதுவும்! அந்த அன்பைச் சமாளிக்க முடியாமல், மூளை வெளிப்படுத்தும் ஒரு சிறிய ‘வன்முறை’ வடிவம்தான் இந்த ‘கடி’ மற்றும் ‘கிள்ளல்’. காதலில் இதன் அர்த்தம் என்ன? உங்கள் பார்ட்னரைக் கடிக்கத் தோன்றுகிறது என்றால், நீங்கள் அவர்கள் மீது பைத்தியக்காரத்தனமான அன்பில் (Crazy Love) இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பாதுகாப்பு உணர்வு: “இவங்க எனக்கு மட்டும்தான் சொந்தம்” என்ற உள்ளுணர்வின் (Instinct) வெளிப்பாடுதான் இது. டோபமைன் ரஷ் (Dopamine Rush): பிடித்தவர்களைப் பார்க்கும்போது மூளையில் சுரக்கும் ‘டோபமைன்’ என்ற மகிழ்ச்சி ஹார்மோன், இந்தச் செயலைத் தூண்டுகிறது. இது நார்மல்தானா? நூறு சதவீதம் நார்மல்! சொல்லப்போனால், இது ஆரோக்கியமான உறவின் அடையாளம் என்று யேல் பல்கலைக்கழக (Yale University) ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், ஒரே ஒரு கண்டிஷன் – உங்கள் அன்பு அவர்களுக்கு வலி மிகுந்ததாக மாறிவிடக்கூடாது. “செல்லக் கடி” ஓகே… “சதையைப் பிய்க்கும் கடி” நாட் ஓகே! அடுத்த முறை உங்கள் பார்ட்னரைப் பார்க்கும்போது, பற்களை நறநறவென கடிக்கத் தோன்றினால், தயங்காதீர்கள். அது வன்முறை அல்ல; அது அன்பின் உச்சம்! அன்பைக் கொட்டுங்கள்… (லேசாகக்) கடித்துக் காட்டுங்கள்! https://minnambalam.com/cute-aggression-psychology-science-behind-biting-squeezing-in-relationships-love-facts/ இப்படிச் செய்துவிட்டு ஏற்படும் பின்விளைவுகளுக்கு செய்தியை இணைத்த கிருபன் பொறுப்பல்ல!
  20. அகதிகள் மனங்களும் பண்பாட்டு அசைவுகளும்: “நெடிய பனைகள்”- ஓர் வாசிப்பு அனுபவம் 18 Dec 2025, 9:48 AM பேரா. நா. மணி “முப்பது பேரை ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டிய மோட்டார் படகு 63 பேரை ஏற்றிக் கொண்டு மன்னாரிலிருந்து தனுஷ்கோடி புறப்பட்டது.” என்ற நாவலின் முதல் வரியே நெஞ்சில் படபடப்பை உருவாக்கி விடுகிறது. அடுத்து, “மண்டபத்தில் வாழும் மக்கள் உயிர் இருந்தும் உயிரற்றவர்களாக இருந்தனர்.” “இலங்கையிலோ ஒவ்வொரு வீதியிலும் உயிரின் பயம்.” “எந்த வீதியில் எந்த முகமூடி அணிந்தவன் நிற்கிறானோ? அவன் தலை அசைவைப் பொறுத்து நம் தலை தப்புவது இருக்கிறது.” என அடுத்து வரும் வரிகள் நம்மை நாவலுக்குள் சுருட்டி இழுத்துக் கொள்கின்றன. கதை வாசகனை தரதரவென இழுத்துச் செல்கிறது. நாவலைப் படித்து முடித்த பிறகும் வாசகன் அதிலிருந்து வெளிவர முடியாதபடி கட்டிப் போடுகிறது. இலங்கையின் தமிழ் மண் முதலில் இரத்தத்தில் நனைகிறது. பின்னர் அகதிகளாக செல்லும் இடமெல்லாம் கண்ணீர் நிறைகிறது. அகதிகளின் கண்களில் இருந்து வரும் கண்ணீர் நம் நெஞ்சத்தையும் கரைக்கிறது. அகதியானவர்களின் அகம், புறம் இரண்டையும் எழுத்துப் படிமமாக, காட்சிப் படிமமாக புரிந்துகொள்ளத் தக்கதாக ஜீவகுமாரனின் எழுத்து வடிவெடுத்துள்ளது. முதலில் உயிர் பிழைத்தால் போதும் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறோம். உயிர் பிழைத்த பின்னர், உயிருக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கும் உணர்வுகள் சிலிர்த்து எழுந்து விடுகின்றன. நமது உணர்வுகள் பண்பாட்டு விழுமியங்களில் வேர் பதித்து நிற்கின்றன. ஆயிரம் ஆண்டுகளாக உணர்வுகளில் வேர் பதித்து வாழ்கின்றன பண்பாட்டு விழுமியங்கள். சில நேரங்களில் உயிரைவிட பண்பாட்டு விழுமியங்களே மேலானதாகக் கருதப்படுகின்றன. உயிருக்கு உணவு, உடை, தங்குமிடமும் கிடைத்த பின்னர் உணர்வுகள் நம்மை ஆட்கொண்டு விடுகின்றன. அறிவை ஆளுமை செய்யும் அசுர பலமும் பண்பாட்டு விழுமியங்களுக்கு கிடைத்து விடுகிறது. வாழ்வையும் பண்பாட்டு விழுமியங்களையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு அவை வாழ்வோடு பின்னிப் பிணைந்து விடுகின்றன. பண்பாட்டு விழுமியங்களை காக்கவே வாழ்கிறோம் என்பது வாழ்வின் பற்றுக் கோடாக மாறிவிடுகிறது. அதற்குள் சுகம் இருக்கிறது. மகிழ்ச்சி இருக்கிறது. நிம்மதி இருக்கிறது. பெருமிதம் இருக்கிறது. இவையெல்லாம் ஏதும் தெரியாமல், ஆனால் இவையெல்லாவற்றையும் வாழ்வோடு இணைத்து வடிவாக வாழ்ந்து வந்தது தங்கம்மா இராசையா குடும்பம். போரால் சின்னாபின்னமாகிவிட்ட குடும்பங்களில் ஒன்று தங்கம்மா இராசையா குடும்பம். பெயருக்கே இது ஒரு குடும்பம். இந்த குடும்பமும் ஒரு குறியீடே என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது போல் ஆயிரமாயிரம் குடும்பங்கள். அதன் ஓலத்தை தங்கம்மா இராசையா குடும்பத்தை முன்நிறுத்தி ஓர் இலக்கிய வடிவம் தருகிறார் ஜீவகுமாரன். தங்கம்மா என்ற தலைமகளின் நிறைவான, நிம்மதியான குடும்பத்தில் பிறந்தவள் வதினி. இலங்கையில் பற்றி எரிந்த தீயும் எறிந்த குண்டுகளும் வதினியையும் சிவராஜாவையும் நார்வே நாட்டிற்கு தூக்கி வீசுகின்றன. அகதிகள் படும் அக, புற கஷ்டங்களைத் தாண்டி, வதினியும் சிவராஜாவும் வேணி என்ற ஒற்றை மகளோடு பெருவாழ்வு வாழும் பாக்கியம் பெறுகின்றனர். தனக்குக் கிடைத்த வாழ்வை தனது பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டு அழகுபடுத்திப் பார்க்க விரும்புகிறாள் வதினி. இது பண்பாட்டு மோதல்களமே — வதினியின் நார்வே வாழ்க்கை. தங்கம்மாவின் இரண்டாவது மகள் கோமதியின் வழியே அகதி வாழ்வின் வேறொரு பரிமாணத்தை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் ஜீவகுமாரன். கோமதி சுட்டிப் பெண்ணா? சூட்டிகையான பெண்ணா? அறிவாற்றல் நிறைந்தவளா? முறத்தில் புலியை, தமிழ் மங்கையை நினைவூட்டுபவளா? கருணையே வடிவான மதர் தெரேசாவா? எல்லாம் கலந்து கலவை அவள். அவளுக்கு வாய்த்த வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறாள்? ஏற்றம் பெறுகிறாள். ஏணியாக வாழ்கிறாள் — என்பதே இரண்டாவது சாரம். நாவலின் அவலச் சுவை நிறைந்த பாத்திரம் விமலன். அறிவில், சிந்தனையில், செயலில் தற்கால இளைஞர்களின் முன்னுதாரணம். அகதி என்ற ஒரு காரணம். இத்தனைக்கும் இந்தியாவில் அகதி. தமிழ்நாட்டில் உள்ள நம்மில் பலர் அகதிகளின் முகமைக் கண்டு மட்டுமே சப்புக் கொட்டி இருப்போம். அகதிகள் வாழ்வு, அவர்களில் பலருக்கு கொடுக்கப்பட்டுள்ள இடம், அவர்கள் நொறுங்கிப் போகும் தருணங்கள் நாம் அறியாதவை. எத்தனை இருந்தாலும், “இந்தியா எங்கள் இரவல் தாய்நாடு” என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறவும், வாழவும் வைக்கும் இடமாக இந்தியா இருக்கிறது என்பதை பேசும் பாத்திரப் படைப்பு சகானா. தங்கம்மாவும் இன்னும் அநேக தாய்மார்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடத்தி வரும் பண்பாட்டு பாரம்பரியத்தின் கொழுப் பொம்மையாக பாவிக்கப்படும் பாத்திரம் வேணி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வேணி “ஆளாகி விட்டாள். பெரிய மனுஷி ஆகிவிட்டாள். வயதுக்கு வந்து விட்டாள்…” என்று எந்தச் சொல்லில் அழைத்தாலும் அதுவே அபசகுணம். பெண்னை சிறுமைப்படுத்தும் பேதமை, மனித மாண்புகளுக்கு எதிரான செயல் — என்ற நார்வே கலாச்சாரத்தை சுவாசித்து வளர்ந்து வருபவள். இலங்கையிலிருந்து நார்வே சென்று படையெடுக்கும் பண்பாட்டு படையெடுப்பை நார்வே மண்ணின் மாண்பு எப்படி எதிர்கொள்கிறது என்ற சித்திரம் அது. இப்படித்தான் இந்தப் பெருங்கதையை புரிந்துகொள்ள முடிகிறது. அகதிகளின் அவலக் குரலை ஓர் காவியக் குரலாக மாற்றுவதில் ஜீவகுமாரன் வெற்றி கண்டிருக்கிறார். அவரது “நெடிய பனைகள்” வெறும் நாவல் அல்ல — அது யாழ்ப்பாணத்தின் வேரிழந்த மனிதர்களின் இரத்தச் சுவடுகளால் எழுதப்பட்ட ஒரு இனத்தின் வரலாற்று ஆவணம். பனைமரம் போல வறண்ட மண்ணில் வேரூன்றி வானைத் தொடும் உறுதியோடு நிற்கும் வாழ்க்கை சிதைந்து சின்னமாகி, மீண்டும் நிமிர்ந்து நிற்பதை காட்டும் காவியம். “பனையின் எந்தப் பாகமும் பயனற்றதல்ல” என்ற முதல் வரிகள், ஓர் உவமையாகக் கண்முன் நிற்கின்றன. தங்கம்மா இராசையாவின் குடும்பத்தில் ஒரு பிள்ளையும் வீணாகிப் போகவில்லை. ஒரு தந்தையின் உறுதி, ஒரு தாயின் தியாகம், ஒரு மகளின் கனவு — இவை அனைத்தும் நாவலில் மனிதத்தின் நிலைத்தன்மையை காட்டுகின்றன. எழுத்தாளர் ஒவ்வொரு உரையாடலிலும், ஒவ்வொரு சிறு நிகழ்விலும் ஒரு முழு சமுதாயத்தின் மனவியல் நிலையை வெளிப்படுத்துகிறார். வெளிநாட்டு நாகரிகங்களில் மனித விழுமியங்கள், ஜனநாயகம் புதைந்து கிடைப்பதாக சொல்லப்பட்டாலும், மனிதனை பொருளாதாரத்தின் கருவியாக மாற்றியிருப்பதை எழுத்தாளர் நுட்பமாக சித்தரிக்கிறார். “பணம், பணம், பணம் – அனைத்தும் அதுவே தீர்மானிக்கிறது.” இந்த வரிகளில் நவீன உலகின் நெறி நெருக்கடிகள் நம்மை நேரடியாகத் தாக்குகின்றன. ஜீவகுமாரனின் எழுத்து முற்றிய பனைமரத்தின் சேவுக்கு ஒப்பானது. துளிரும் துயரும் ஒன்றாக அதில் துளிர்கின்றன. அவரது மொழி எளிமையானது, ஆனால் அதன் ஒலியில் வலியும் அம்மண்ணின் பெருமையுடன் கலந்து நிற்கின்றன. அவரின் எழுத்து திரைக்காட்சிகளாக நம் கண்முன்பு விரிந்து, சினிமா போல நம்மை நுழைய வைக்கும் உண்மைத் தன்மை கொண்டது. “நெடிய பனைகள்” – ஒரு மரபின் மறு வாசகம். நாவல் முடிந்த பிறகு வாசகனின் உள்ளத்தில் ஓர் இனிமையான நெருப்பு தங்குகிறது. அது பனையின் நிழலோ, அகதியின் நம்பிக்கையோ அல்ல — அது மனித குலத்தின் உயிர்மூச்சு. “நெடிய பனைகள்” அகதியின் கண்ணீரை அரசியலாக அல்ல, மனிதத்தின் நிழலாகப் படைக்கிறது. அது யாழ்ப்பாணத்தின் வரலாற்றையும், தமிழினத்தின் மனஅழுத்தத்தையும், பெண்மையின் உள் சக்தியையும் ஒரே நேரத்தில் நமக்குக் காட்டுகிறது. இந்த நாவல் யாழ் மண்ணின் பனைமரம் போலவே காலத்தால் காய்ந்துவிடாமல் நிமிர்ந்து நிற்கும். ஒருவேளை காய்ந்தாலும் நிமிர்ந்து நிற்கும். குறிப்பு: டென்மார்க் வி. ஜீவகுமாரனின் “நெடிய பனைகள்” இரா.செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை நடத்திய 2025 ஆம் ஆண்டு போட்டியில் வெற்றி பெற்று ரொக்கப் பரிசாக ரூபாய். 25,000 பரிசு பெற்ற நாவல். நாற்கரம் வெளியீடு. கட்டுரையாளர்: நா.மணி கூடுதல் பேராசிரியர் ஜெயின் பல்கலைக்கழகம் பெங்களூரு. https://minnambalam.com/nedhiya-panai-novel-review/
  21. @Kandiah57 அண்ணா, நேரம் எடுத்து படியுங்கள். ரஷ்ய சார்பு வாதங்கள் உள்ள அலசல்.
  22. அத தெரண கருத்துப்படங்கள்.
  23. அண்ணா, சில நாட்களின் முன் கிருபன் ஒரு கட்டுரையை இங்கு இணைத்திருந்தார். பா. ரவீந்திரன் என்பவரால் அது எழுதப்பட்டது. அவர் அதை ரஷ்யாவுக்கு ஆதரவாக ஒரு வக்கீல் வாதம் செய்வது போன்று எழுதியிருக்கின்றார். அதில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. உக்ரேன் நேட்டோவில் இணைய விரும்புவது ஒரு முக்கிய காரணம் அல்ல, பத்தோடு சேர்ந்த ஒன்றே அது என்று அவர் சொல்லியிருக்கின்றார். உக்ரேனியர்கள் உக்ரேனின் வாழும் ரஷ்ய வழி வந்தவர்களை கொடுமைப்படுத்துகின்றார்கள், கொலை செய்கின்றார்கள் என்று கூட அவர் சொல்லுகின்றார். 70 வீதம், 30 வீதம் என்ற ஒரு கணக்கும் அதில் இருந்தது என்று ஒரு ஞாபகம். ஆகவே சொல்லப்படும் காரணங்கள் எதுவுமே நம்பப்பட வேண்டியவை அல்ல என்று நினைக்கின்றேன். நான்கு புள்ளிகள் கண்களுக்குத் தெரிகின்றன, சிலர் அதை ஒரு நாற்கோணி என்கின்றார்கள், சிலர் அதை ஒரு வட்டம் என்கின்றார்கள்......... அதை நாலு டைனோசர்கள் என்றும் சொல்லலாம் போல.............🤣. எனக்கும், உங்களுக்கும் ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமிப்பது போலவே தெரிகின்றது என்று நினைக்கின்றேன்.
  24. நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. இது நான் கண்ட அனுபவம். அது போல் கேம்பிரிச்,ஒக்ஸ்போர்ட்,இம்பிரியால் போன்ற யூனிகளில் படித்தவர்கள் சொல்வதெல்லாம் உண்மையுமல்ல.நியாயங்களும் அல்ல.
  25. சம்பந்தனின் “அடுத்த தீபாவளிக்குள் தீர்வு” ஜவ்வு மிட்டாய் போல… மலையகமக்களை தோட்டங்களிலேயே ராஜாவாக்குவோம்.. என இங்கே சில அறை கூவல்களை கேட்க கூடியதாக உள்ளது. ராசாமார்….உங்களுக்கு சிங்களவன் தமிழ் ஈழம் கூட தருவான்…ஆனால் இதை செத்தாலும் செய்யமாட்டான்…. இது உங்களுக்கும் தெரியும். ஆனால் நேரடியா மலையக மக்கள் எம் ஊரில் வேண்டாம் என சொன்னால் இமேஜ், டமேஜ் ஆகிவிடும் என்பதால், இப்படி ஒரு சம்பந்த வியாக்கியானம் கொடுக்கிறீர்கள். ஆப்கானிய, எகிப்திய, ஜோர்தானிய, லெபனானிய இன்னும் பல நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் துன்புற்ற யூதர்களை இஸ்ரேல், உள்ளே எடுத்து, வீடும் காணியிம், தொழிலும் கொடுத்தத்து. இப்படி செய்யதால் அது இனச்சுத்தீகரிப்பாகிவிடும்…எனவே நீங்கள் அங்கேயே கிடந்து மாளுங்கள் என சக யூதர்களை அவர்கள் விட்டு விடவில்லை. ம்ம்ம்…அவன் யூதன்…கூர்ப்பில் முன்னேறியவன். நாங்கள் பெயருக்குத்தான் ஜப்னா ஜூ 😂. மூலோபாய சிந்தனை அறவே அற்ற கூட்டம்.
  26. மரங்களை பராமரிப்பது கடினமானதும், உடனடிப் பிரயோசனம் அற்றதுமான ஒன்று என்றே பலரும் நினைக்கின்றார்கள் போல. வீடுகளில் முன்னும், பின்னும் இருக்கும் நிலங்களை காங்கிரீட் அல்லது டைல்ஸ் அல்லது அழகான கற்களால் மூடி விடுவதும் இங்கு ஒரு வழமையாகிவிட்டது. நிலமும் மூச்சு விடக்கூடாது.............🤣. இந்தப் பக்கம் முழுவதும் வீட்டுத்தோட்ட வேலைகளை செய்வதும் அவர்களே. அவர்கள் தங்களுக்கு ஆங்கிலம் தேவையில்லை என்று கூடி முடிவெடுத்து இருக்கின்றார்கள் போல. முன்னர் ஒரு அயலவர் இருந்தார். அப்பவே வயதான ஒரு இந்தியர். அவர் எந்த மரத்தை, செடியை அவர் வீட்டில் வைத்தாலும், அது வளருவதேயில்லை. ஆனால் அங்கு தோட்டவேலைகள் செய்பவர் அந்த வீட்டில் எதை வைத்தாலும் அது நன்றாக வளர்ந்தது. அவர்கள் ஒரு செடியை அல்லது மரத்தை தலைகீழாக நட்டாலும் அவை துளிர்க்கும், அவர்களின் கைராசி அப்படி என்று அவர் அடிக்கடி சொல்லுவார். என் வீட்டில் மனைவி சில செடிகளை அங்கிருந்து இங்கு, இங்கிருந்து அங்கு என்று இடம் மாற்றுவார். ஒரு நாள் அந்த அயலவர் என்னைக் கூப்பிட்டு, 'மரங்களும் மனிதர்கள் போலவே. மண்ணுடன் ஒட்டினால் மட்டுமே அவை பிழைக்கும். அடிக்கடி இடம் மாற்றினால் அவை எங்கும் ஒட்டாமல் போய் விடும்................' என்றார். அவர் செடிகளைத் தான் சொன்னார், ஆனால் அதுவே எங்கள் வாழ்க்கையின் பாடமும் கூட.................
  27. பயணிகள் என்ன ஆனார்கள்? வீரகேசரி ஆதவனுக்கு தமிழ் திக்குவது போல டெய்லி மிரருக்கு ஆங்கிலம் திக்கி உள்ளது. இரண்டு பந்தியும் முதலாவது (திரும்பி வந்த) பறப்பைத்தான் சுட்டுகிறன. ஆனால் ஒரு இடத்தில் 202 என்றும் மற்ற இடத்தில் 51 எண்டு அடித்துள்ளனர். டைப்போ என நினைக்கிறேன்.
  28. பாடசாலை படிப்பு மட்டும் வாழ்வைக் கொடுக்காது.
  29. ரஷியா இப்பிடி இருக்கு ..... அசோவ் (Azov) கடல் பகுதிக்குள் எந்த ஆதிக்கமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதே ரசியாவின் இலக்காக இருந்தது அதன் அனைத்து கரையோரங்களையும் கைப்பற்றி அதை பரிபூரணமாக நிறைவேற்றி உள்ளது. தவிர ரசிய கட்டுப்பாட்டுக்குள் வந்த போக்ரோவ்ஸ்க் (Pokrovsk) பகுதியில் ரேர் மட்டேரியல் (Rare Material) கனிம வளம் உண்டு என்றும் சொல்கிறார்கள். அமெரிக்காவிற்கு இப்போ உக்ரைனில் சமாதானம் வருதோ இல்லையோ ரேர் மாற்றியலுக்கான மைனிங்கை தொடங்க வேண்டும் என்ற அவசரம்தான் அதிகம். மேற்கின் அனைத்து பேச்சும் இலக்கம் Goal இப்போ அதை நோக்கித்தான் உள்ளது ட்ரம் அதை வெளிப்படையாகவே பல தடவை சொல்லி உள்ளார் உக்ரைனை மீள கட்டும் செலவுக்கு ஈடாக கனிமவளங்கள் வேண்டும் என்று.
  30. இது உக்ரேன் போர் பற்றிய திரி. இங்கே உக்ரேன் அரசியலையும் தமிழர் அரசியலையும் சேர்த்து பிசைவதால் எந்த பலனும் இல்லை. உலகின் ஒவ்வொரு அரசியலையும் நிறுத்தி நிதானித்து முற்றுப்புள்ளியுடன் விவாதிக்க முயற்சி செய்யுங்கள். உக்ரேனுக்காக ஐரோப்பிய ஒன்றியம் நிற்பதால் மட்டுமே...உக்ரேன் இன்னும் நிமிர்ந்து நிற்கின்றது.இது தான் இங்கு பேசு பொருள். இனி மேலைத்தேய ஊடகங்களில் உக்ரேன்/செலென்ஸ்கி போன்ற செய்திகள் தலைப்பு செய்தியாக வராது என நம்புகின்றேன்.இராணுவ அடி பலம் மட்டுமல்ல அரசியல் அடியும் பலமாக வீழ்ந்து விட்டது போல் தெரிகின்றது. டொன்பாஸ்?????? 😁
  31. விமானம் மலேசியாவில் இருந்து புறப்பட்டாலும் இது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட விமானம் என ஆங்கில எழுத்து N குறிப்பிடுகின்றது. விமானத்தை ஓட்டியவரும் அமெரிக்காவில் விமான ஓட்டி அனுமதி பெற்றவராக விளங்க வேண்டும். நாங்கள் பலாலி விமானத்தளம் என கூறுகின்றோம். ஆனால், பல சர்வதேச விமானத்துறை தகவல் தளங்களில் காங்கேசன்துறை/யாழ்ப்பாணம் விமான தளம் VCCJ என குறிப்பிடப்படுகின்றது.
  32. எவ்வளவுதான் தான் கல்வி அறிவு இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் பட்டறிவு தான் கை கொடுக்கும்....😅 என்ற வசனம் சுமந்திரனின் கருத்திற்குப் பொருத்தமானது என்பதற்கான சில ஆதாரமான விஷயங்களை சொன்னால்...... இவர் கீழே மேலே நடுவிலே என்று ஆர்ப்பரிக்கின்றார்😂
  33. விடுதலை போருக்கும் அடுத்தவன் அரிப்பு போருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எதிரியாய் இருந்தாலும் கோத்தா சொன்னால் சொல்வதை பார்த்து அப்படியே பற்றிக்கொள்ள வேணுமாம். அடுத்தவன் சொன்னால் சொன்னவர்கள் கருத்தை விட்டுவிட்டு எங்கே சுச்சா போனார்கள் எப்போ போனார்கள் எங்கே போனார்கள் என்று என்று பிரிச்சு மேய்ந்து அக்குவேறு ஆணிவேறாக பார்க்கவேண்டும். அப்போதான் அது இனிக்கும்
  34. அது, சும்மா சொன்னால் மட்டும் போதாது செய்தும் காட்டும் தில் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான அரசியல்வாதிக்கு அழகு. மக்களின் அவலநிலையை சாதகமாக்கி அவர்கள் அரசியல் செய்வது. சுமந்திரன் ஏதேதோ சொல்லி, சரிந்துபோன தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தவும், அனுராவை பயமுறுத்தவும் பார்க்கிறார். ஆனால் அவையெல்லாம் அவருக்கு எதிராகவே திரும்புகிறது. ஒருவரின் ஜனாதிபதி கனவு, இருவரின் முதலமைச்சர் கனவு எல்லாம் வெறும் கனவாகவே போகப்போகிறது. காலத்தே பயிர் செய்யவில்லை, காலம் கொடுத்ததும் பயன்படுத்தவில்லை, இப்போ என்னதான் செய்தாலும் இவர்களது வீரப்பேச்சுகள் கள விஜயங்கள் எல்லாம் கிளப்புலி தருப்பை காப்பை வைத்து உபதேசம் செய்வது போன்றதே. அரசியல்வாதிகள் சொல்வதெல்லாம் சும்மா பேச்சுதான். அதை ஒப்புக்கொண்டீர்களே அது போதும். இந்த நேரத்தில் சும்மா பேசும் பேச்சா இதெல்லாம்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதும் உருப்படியா செய்யாமல் விமர்ச்சிப்பதும், சும்மா பேசுவதும் இவர்களது பொழுது போக்கு அரசியல்!
  35. 'மரண ஆபத்து, வேடிக்கை தான்' : ஹாலிவுட் பெண் சண்டை கலைஞர் கிட்டி ஓ'நீல் பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images கட்டுரை தகவல் ஹிஸ்டரி'ஸ் டஃபஸ்ட் ஹீரோஸ் பிபிசி ரேடியோ 4 13 டிசம்பர் 2025 அமெரிக்காவின் வெறிச்சோடிய பாலைவனத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் காது கேளாத ஓ'நீல் எனும் பெண் சண்டை கலைஞரால் உண்மையில் என்ன செய்ய முடியும் என்பதை உலகுக்கு உறுதியாக காட்டியது. அவர் காது கேளாதவர் என்பது அவருக்கு தடையாக இருக்கும் என்ற தவறான கருத்துகளை முறியடித்ததோடு, பெண்களிடையே ரேஸிங் காரை அதிவேகமாக ஓட்டுவதில் மஞ்சள் நிற உடை அணிந்த அந்த சிறிய உருவம் துணிச்சலுடன் சவால் விடுத்து முந்தைய சாதனைகளை முறியடித்தது. ஆனால், இது அசாத்தியமான சாகசங்களை மேற்கொள்ள தூண்டுதலாக அமைந்த ஓ'நீலின் தைரியம் மற்றும் தாங்குதிறனை விவரிக்கும் மற்றுமொரு அத்தியாயம்தான். ஹாலிவுட்டில் 1970களின் வாழ்நாள் சாதனையாளராக திகழ்ந்த ஓ'நீல் பல்வேறு முந்தைய சாதனைகளை முறியடித்த பெண் சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்தார். மேலும், இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்வதன் மூலம் காது கேளாத ஒருவரால் என்ன செய்ய முடியும் என்ற மற்றவர்களின் கற்பிதங்களை தன்னுடைய குழந்தை பருவத்தில் முறியடித்தார். காது கேட்க முடியாதவராக இருந்தபோதிலும், ஓ'நீல் சாகசங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதிலும் வேகம் மீதான தன் ஆர்வத்தை வெற்றிகரமான தொழிலாகவும் மாற்றுவதில் உறுதியானவராக இருந்தார். அக்காலகட்டத்தில், தொலைக்காட்சி திரைகளில் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தக்கூடிய ஆபத்தான சாகசங்களை நிகழ்த்திய மிகச் சில பெண்களில் இவரும் ஒருவர். மேலும் ஸ்டண்ட்ஸ் அன்லிமிடெட் எனும் ஹாலிவுட்டில் மிக சவாலான சண்டை காட்சிகள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்கும் குழுவில் இணைந்த முதல் பெண்ணும் இவரே. ஓ'நீலின் வாழ்க்கை குறித்து படம் ஒன்றும் வெளிவந்திருக்கிறது, மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. தவிர, அவருடைய சண்டைக் கலையை பிரதிபலிக்கும் வகையிலான பொம்மைகளும் உள்ளன. பட மூலாதாரம்,Tom Nebbia / Getty Images படக்குறிப்பு,தரையிலிருந்து 54 மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் ஹெலிகாப்டரிலுருந்து ஏர்பேகில் (airbag - காற்று நிரப்பப்பட்ட ஒரு மெத்தை போன்றது) குதிக்கத் தயாராகும் கிட்டி ஓ'நீல். அந்த ஏர்பேக் அந்த உயரத்திலிருந்து ஒரு தபால் தலை அளவிலேயே இருந்ததாக அவர் கூறினார். காது கேட்காது; ஆனாலும் தோல்வி இல்லை டெக்சாஸில் 1946ம் ஆண்டில் கார்பஸ் க்ரிஸ்டியில் பிறந்தார் ஓ'நீல். ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது அவரின் உடல்நிலை மோசமானது, ஆபத்தான அளவில் உடலின் வெப்பநிலை உயர்ந்தது. அவருடைய அம்மா அவரின் உடலை சுற்றி ஐஸ் கட்டிகளை வைத்தார், அது அவருடைய உயிரை காப்பாற்றியது, ஆனால், கிட்டி வளரவளர அவர் பேச தொடங்கவே இல்லை, அப்போதுதான், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காது கேட்கும் திறனை இழந்துவிட்டதை அவரின் பெற்றோர் அறிந்தனர். அவருடைய அம்மா பேட்சி ஓ'நீல் தன் மகளுக்கு சைகை மொழியை கற்பிக்க மறுத்துவிட்டார், அக்காலக்கட்டத்தில் அது சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டது. ஆனால், தன் மகள் மற்றவர்களுடன் குறைவாக பார்க்கப்படக் கூடாது, அவர் பேச்சு மற்றும் தொடர்பியலை கற்க வேண்டும் என்பதில் பேட்சி ஓ'நீல் பிடிவாதமாக இருந்தார். எனவே, பேட்சி தன் மகளுக்கு வழக்கத்திற்கு மாறான உதட்டசைவுகளை கொண்டு என்ன சொல்கின்றனர் என்பதை புரிந்துகொள்ளும் லிப்-ரீடிங்கை கற்றுக்கொடுத்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வொண்டர் வுமன் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குறிப்பிட்ட நடிகர்களுக்கு பதிலாக சண்டை காட்சிகளை நிகழ்த்துபவராக இருந்தார், ஹோட்டல் ஒன்றிலிருந்து குதிக்கும் அவரின் சண்டைக் காட்சிகளுள் ஒன்று. "அவருடைய அம்மா கிட்டியின் கைகளை பிடித்து அவற்றை அவருடைய குரல் வளையின் மீது வைப்பார்," என்கிறார், ஓ'நீலின் மிக நெருங்கிய நண்பரும் சண்டைப் பயிற்சி கலைஞருமான கய் மைக்கேல்சன். "பின்னர், வார்த்தைகளை மிகவும் சத்தமாக, மெதுவாக திரும்பத் திரும்ப கூறுவார்." பள்ளியில் கிட்டி கேலி செய்யப்பட்டபோது, அவர் கடுமையாக எதிர்த்து சண்டையிடுமாறு அவரின் தாயார் கூறுவார். பேட்சியின் திறன்களை அப்படியே கிட்டி செய்தார். "ஒவ்வொரு வார்த்தைகளின் அதிர்வுகளில் ஏற்படும் நுட்பமான மாற்றங்கள் மூலம் கிட்டி செல்லோ மற்றும் பியானோ வாசிக்கக் கற்றுக்கொள்வதில் ஈடுபட வைத்தார் அவரின் அம்மா," என்கிறார் தற்போது விளையாட்டு இணையதளமான ESPN-யின் துணை ஆசிரியரான எரிக்கா குட்மேன்-ஹூகே. காரில் ரேடியோவில் ஒலிபரப்பாகும் பாடல்களை அதன் அதிர்வுகளை வைத்தே கிட்டி அடையாளம் காண்பார் என மைக்கேல்சன் நினைவுகூர்கிறார். தான் பீட்டிள்ஸ் இசைக்குழுவின் ரசிகர் என்றும், அக்குழுவின் இசை ஒலிபரப்பாகும்போது கிட்டி கூறியிருக்கிறார். பட மூலாதாரம்,CBS via Getty Images படக்குறிப்பு,1970களில் ஒளிபரப்பான பெரும் வெற்றியடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான வொண்டர் வுமனில் (Wonder Woman) நடித்த லிண்டா கார்ட்டரின் சண்டை காட்சிகளில் கிட்டி பதிலியாக(Dupe) நடித்தார். சண்டைப் பயிற்சியில் ஆரம்ப வாழ்க்கை கிட்டிக்கு 11 வயது இருக்கும்போது விமான விபத்து ஒன்றில் அவருடைய தந்தை இறந்துவிட்டார், ஆனால் அவரின் லான்மோவரில் (lawnmower - தோட்டத்தில் உள்ள புல்லை வெட்டிவிடப் பயன்படுத்தப்படும் ஓர் வாகனம் போன்றது) குழந்தையாக வேகமாக பயணித்த சிலிர்ப்பனுபவத்தை அவர் மறக்கவேயில்லை. வளர்ந்தபின்பு, அவர் டைவிங் போட்டிகளில் சிறந்து விளங்கினார். ஆனால், 1964ம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சோதனைகளுக்கு சிறிது காலத்திற்கு முன்பு, அவரின் மணிக்கட்டு உடைந்துபோனது, மேலும் அவருக்கு முதுகெலும்பு மூளைக்காய்ச்சலும் (spinal meningitis) ஏற்பட்டது. அதிலிருந்து குணமான பின்பு, அந்த விளையாட்டுக்கான ஆர்வத்தை தான் இழந்துவிட்டதாக அவருக்கு தோன்றியது. தன் 16 வயதில் அம்மாவின் காரை ஓட்டத் தொடங்கிய உடனேயே, ஓ'நீல் ஸ்கைடைவிங், அதன்பின் வாட்டர்ஸ்கையிங் உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டினார், பெண்களிடையே அதுவரையிலான சாதனை வேகத்தை அவர் முறியடித்தார், மேலும் நாடுகளுக்கு இடையேயான கடினமான மற்றும் ஆபத்தான மோட்டார்பைக் போட்டிகளில் பங்கேற்றார், எல்லாவற்றிலும் ஒருபோதும் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. அவற்றிலிருந்த மரண ஆபத்து, வேடிக்கையின் ஒருபகுதியாக பார்க்கப்பட்டது. ஒரு மோசமான விபத்தில் ஓ'நீல் மோட்டார் பைக்கின் கட்டுப்பாட்டை இழந்து, மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் அவரின் ஒரு கை சக்கரத்தின் ஆரங்களில் சிக்கிக்கொண்டது, இதில் அவர் தன் ஒரு விரலை இழந்தார். இதைத் தாண்டியும் ஓ'நீல் தொடர்ந்து முன்னேறிச் செல்ல விரும்பியதாகவும், அவர் தன் கையுறையை அணிந்துகொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிள் மீது ஏறியதாகவும் அவரின் நண்பர்கள் நினைவுகூர்கின்றனர். இறுதியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு சமாதானம் செய்தனர். பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images படக்குறிப்பு,நெருப்பு தொடர்பான சண்டை காட்சிகள் உட்பட தான் செய்த சண்டைக் காட்சிகளில் 'எந்தவொரு பயத்தையும்' வெளிக்காட்டாதவர் ஓ'நீல் என அவரின் நண்பர்கள் கூறுகின்றனர். மற்றொரு சண்டைப் பயிற்சி கலைஞரான டஃபி ஹேம்பிள்டன் அந்த சமயத்தில் கிட்டியை மருத்துவமனைக்கு மட்டும் அழைத்துச் செல்லவில்லை, மாறாக கிட்டியின் வாழ்க்கையையே வேறு திசைக்குக் கொண்டு சென்றார். கிட்டியிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான சண்டைக் காட்சிகள் தொடர்பாக கூறினார். அது தனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என ஓ'நீல் முடிவெடுத்தார். ஹேம்பிள்டன் ஓ'நீலின் முன்னாள் கணவர் ஆவார். பின்னர் ஓ'நீல் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய விருப்ப புத்தகங்களான நார்மன் வின்சென்ட் பீலே எழுதிய தி பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங் மற்றும் பைபிளுடன் ஆபத்துகளை எதிர்கொள்ள தயாராகி படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தார். 1970களின் ஆரம்பத்தில் 'விக்' அணிந்த ஆண்கள் சண்டைக் காட்சிகளில் ஈடுபடுவது மிகவும் சாதாரணமானது, ஆனால் அந்த உலகம் மாற ஆரம்பித்தது. காது கேளாமல் இருப்பது தடையாக இருக்கும் எனவும் அவர் "பெயரளவில்" மட்டுமே இத்துறையில் இருக்க முடியும் என்றும் மற்றவர்கள் கூறுவதை ஓ'நீல் கேட்க மறுத்தது அவருக்கு உதவியாக இருந்தது. அதற்கு மாறாக, காது கேளாமல் இருப்பது அசாத்திய சக்தி என்றும் திரைப்பட துறை தன்னை சுற்றி சுழலும் போதும், தன் பணியின் மீது முற்றிலும் கவனமாக இருக்க முடியும் என்றும் ஓ'நீல் கூறினார். பிரபலமான சண்டைக் காட்சிகள் வொண்டர் வுமன் தொலைக்காட்சி தொடர்களில் நடிகை லிண்டா கார்ட்டருடன் ஓ'நீல் தொடர்ந்து பணியாற்றியது மிகவும் பிரபலமாக இருந்தது, மேலும் அந்த நிகழ்ச்சிக்காக அதிகளவிலான சண்டைக் காட்சிகளை அவர் செய்தார். இதில் அவரின் தனித்துவமான உடையை அணிந்துகொண்டு ஹெலிகாப்டரிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியும் அடங்கும். அதன் ஒரு இறுதிக்காட்சியில் கலிஃபோர்னியாவின் ஹோட்டல் ஒன்றிலிருந்து 120 அடியிலிருந்து குதித்தார். துல்லியமான கவனம் மற்றும் தைரியத்தைக் கோரும் இந்த சாகசம், ஓர் சாதனை வெற்றியாகும். அதுவொரு முக்கிய தருணமாக அமைந்தது. "ஆம், அவர் பெண்மையை பிரதிநிதித்துவப்படுத்தினார்... ஆனால், பெண் சக்தி என நாம் கருதுவதையும் அவர் பெண்மையுடன் இணைத்தார்," என குட்மேன்-ஹூகே கூறினார். பீப்பிள் (People) இதழுக்கு அச்சமயத்தில் பேட்டியளித்த ஓ'நீல், "நான் ஆண்களுடன் போட்டியிட முயற்சிக்கவில்லை. என்னால் செய்ய முடிந்ததை நான் செய்ய முயற்சிக்கிறேன்." என்றார். பட மூலாதாரம்,Glen Martin/The Denver Post via Getty Images படக்குறிப்பு,முன்னாள் கணவர் ஹேம்பிள்டனுடன் கிட்டி ஓ'நீல், வங்கி அதிகாரியான ஹேம்பிள்டன் பின் சண்டைப் பயிற்சி கலைஞரானார். அதில் எதையும் ஓ'நீல் குறைவாகச் செய்யவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக உடலில் தீயைப் பற்றவைத்துக்கொண்டு உயரத்திலிருந்து குதித்து மற்றொரு சாதனையை முறியடித்தார். மேலும், ஜெட் மூலம் இயங்கும் படகை மணிக்கு 443 கி.மீ வேகத்தில் இயக்கினார். "நான் அவருடன் நடக்கும்போது கூட அவர் என்னைவிட 10 அடிகள் முன்னே இருப்பார்," என மைக்கேல்சன் கூறுகிறார். அவர் தொடர்ந்து எல்லைகளை தாண்டிச் சென்று, வேகமாக செல்ல விரும்பினார் என தெரிகிறது. பின்னர், அவர் தன்னுடைய அனைத்து லட்சியங்களையும் நிறைவேற்றுவதற்கான ஓரிடத்தைக் கண்டறிந்தார். எஸ்எம்ஐ மோட்டிவேட்டர் எனும் சோதனை முயற்சியிலான காரை இயக்க அவர் 1976ம் ஆண்டு அழைக்கப்பட்டார். ஹைட்ரஜன் பெராக்சைடு எஞ்சினால் இயக்கப்படும் அந்த கார், 48,000 குதிரைத்திறனை உற்பத்தி செய்யக்கூடியது. ஓ'நீல் காரை மணிக்கு 1,207 கிமீ (750 மைல்) வேகத்தில் இயக்கி, ஒலியின் வேகத்தை முறியடிக்க விரும்பினார். ஆனால், அதன் ஒருங்கிணைப்பாளர்களுடனான ஒப்பந்தத்தின்படி, ஓ'நீல் பெண்களின் முந்தைய சாதனை வேகமான மணிக்கு 483 கி.மீ என்ற வேகத்தை முறியடிக்க முயற்சிக்கலாம் என கூறப்பட்டது. தனது சிறிய உடலில் மஞ்சள்நிற உடையை அணிந்துகொண்டார். அலுமினிய சக்கரங்கள் கொண்ட, ஊசி வடிவிலான காரை எடுத்துக்கொண்டு, அமெரிக்காவின் ஒரேகானில் உள்ள ஆல்வோர்ட் பாலைவனத்தில் மணிக்கு 988 கிமீ வேகத்தில் இயக்கி பெண்கள் மத்தியில் முந்தைய சாதனைகளை முறியடித்தார். பட மூலாதாரம்,Glen Martin/The Denver Post via Getty Images படக்குறிப்பு,தன் வாழ்நாள் முழுவதும் எல்லைகளை கடந்து, கற்பிதங்களை பொய்யாக்கி பல சாதனைகளை புரிந்தார். அடுத்ததாக அவர் ஆண்களின் சாதனை வேகத்தை முறியடிக்க விரும்பினார், ஆனால் ஒரு பெண் அப்படி செய்வது ஏற்றதல்ல எனக்கூறி, சில ஸ்பான்சர்கள் அதைத் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது, அதுகுறித்து அவர்கள் கருத்து கூற மறுத்துவிட்டனர், ஆனால் ஓ'நீலின் நெருங்கிய நண்பர்கள் கூறுகையில், வரலாறு முழுவதும் பெண்கள் எவ்வாறு பின்தங்கியிருந்தனர் என்பதைக் காட்டும் தருணமாக ஓ'நீல் அந்த தருணத்தை மனதளவில் குறித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மைக்கேல்சன் உடனேயே ஓ'நீலுக்கு இழுவை பந்தயத்தில் மற்றொரு வாய்ப்பை வழங்கினார். அதைத்தொடர்ந்து, நீரில் வேகப்படகை இயக்குவதிலும் அவர் முந்தைய சாதனைகளை முறியடித்தார். "எந்த பயமும் இல்லாத ஒருவரை என் வாழ்க்கையில் இதற்கு முன்பு சந்தித்ததே இல்லை. ஓ'நீலுக்கு எந்த பயமும் இல்லை, என்றாலும் அது நல்ல விஷயம் அல்ல," என்கிறார் மைக்கேல்சன். எப்போதாவது மெதுவாக இயங்கியுள்ளாரா? சாதனைகளை முறியடிப்பது, பல திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய பின்பு, தெற்கு டகோட்டாவில் உள்ள சிறு நகரத்தில் ஓய்வு வாழ்க்கையை கழித்தார். என்றாலும், வேகம் மீதான தன் காதலை அவர் இழக்கவே இல்லை எனக்கூறும் மைக்கேல்சன், பல ஆண்டுகள் கழித்தும்கூட ஒரு காரை உருவாக்குவதற்கான ஆர்வத்தை தொலைபேசி வாயிலாக அவர் வெளிப்படுத்தியதாக கூறுகிறார். 72 வயதில் ஓ'நீல் உயிரிழந்தார். தரையில் பந்தய காரை வேகமாக இயக்குவதில் பெண்களில் இவரின் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. "உண்மையிலேயே அவர் தான் வொண்டர் வுமன்," என்கிறார் மைக்கேல்சன். பிபிசி ரேடியோ 4-ல் வெளியான கிட்டி ஓ'நீல்: ஹாலிவுட்'ஸ் ரியல் வொண்டர் வுமன் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c364977lzzpo
  36. விவிலியத்தைப் படித்தது கிடையாது. தோழர் ஷோபாசக்தி போன்றோ அல்லது எனது நெருங்கிய நண்பன் போன்றோ சிறையில் விவிலியத்தை பலதடவை படித்த அனுபவம் இல்லை! AI ஐக் கேட்டபோது விவிலியத்தில் சிவிங்கி பற்றிய குறிப்பு இல்லை என்றது. ஆனால் மேலே உள்ளதைக் காட்டியது😀 மலையக மக்களும் கிழக்கு, வன்னி மக்களும் கடும் உழைப்பாளிகள். அவர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து சோம்பேறிக் கூட்டமாக மாற்றவேண்டாம்!
  37. சுமந்திரனின் வடையை அடிபட்டு தின்பவர்கள்… அரசியல் வறட்சி உள்ள சுத்த ஞானசூனியங்களாக மட்டுமே இருக்க முடியும். 😂
  38. பாசத்தோடு அவர்களை அழைத்தால் மட்டும் போதாது, எந்தவித பொருளாதார கல்வி வேலைவாய்ப்பு வதிவிடங்கள் இல்லாத மக்களுக்கு இதெல்லாம் ஏற்படுத்தி தர சுமந்திரன் ஐயா தயாராவும் இருக்கணும். இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியே தேயிலை ஏற்றுமதிதான், தேயிலை தோட்ட தொழிலை மலையக தமிழரை தவிர இலங்கயில் வேறு எந்த பிரிவினரும் தேடி சென்று செய்யபோவதில்லை தேடி போனாலும் அவர்களால் அரைவயிறு கஞ்சியுடன் அடுத்து மாற்று துணியும், நாள்முழுக்க உழைத்துவிட்டு வீட்டுக்கு போனால் கால்நீட்டிக்கூட படுக்க முடியாத அளவிற்கு லயன் வீட்டு வாழ்க்கையுடனுமோ வாழ முடியாது. அப்படி எவரும் இலகுவாக செய்யமுடியாத ஆனால் இலங்கைக்கு காசை கொட்டும் ஒரு தொழிலை செய்யும் மக்கள் கூட்டத்தை வேறு இடங்களில் குடியேற விட்டுவிட்டு முதுகில் கூடையை கட்டிக்கொண்டு தேயிலை கொழுந்து பறிக்க சிங்களவன் தயாரா இருப்பான்னா நினைக்கிறீங்க? எக்காரணம் கொண்டும் அந்த மக்களை அந்த நிலத்தைவிட்டும் நகர தொழிலை விட்டும் சிங்களவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டான். வேண்டுமென்றால் ஒரு சில குடும்பங்கள் இடம் பெயரலாம். நிலசரிவில் பாதிக்கப்பட்டு வசிப்பிடம் இல்லாமல் நிப்பது மலையக தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர் முஸ்லீம்களும் அடங்கும். மலையக மக்கள் ஏறக்குறைய இருநூறு வருடங்களாய் வாழ்ந்த புவிசார்பை விட்டு நீங்கமறுத்தால், அங்கு பாதிக்கப்பட்ட சிங்களவரும் முஸ்லீம்களும் மலையக மக்கள் தமிழர்பகுதியில் குடியேறலாம் என்றால் நாங்கள் மட்டும் ஏன் அங்கு குடியேற கூடாது என்று கேள்வி எழுப்புவார்கள், அவர்களுக்கு சிங்கள அரசுகளும் எதிர்கட்சி அமைப்புகளும் முடிந்தவரை உதவி செய்தே ஆவார்கள், ஆனால் தமிழர்களுக்கு அதனை எதிர்பார்க்க முடியாது. அப்போது நிலமை சும்மாபோன தேரை சுமந்திரன் சொரிஞ்சுவிட்டு நடு ரோட்டில இழுத்து விட்டமாதிரி ஆகும் நிலமை.சுமந்திரன் கற்றறிவில் மேலானவரா இருக்கலாம், ஆனால் பட்டறிவில் சுத்த ஞான சூனியம். அதற்கப்பால் வடகிழக்கு மண்ணில் அவர்கள் குடியேறுவதில் எந்த தவறும் இல்லை, ஆனால் குடியேறவிட்டுவிட்டு இவங்கள் ஏசி காரில் தங்கட அலுவல்களை பாத்துக்கொண்டு திரிவார்கள், வாக்களித்த தமிழர்களைபற்றியே நினைக்காத இந்த தத்தி தலைவர்கள் வாழ்வோடு தினமும் போராடும் அந்த மக்கள் தம் காலில் நிக்கும்வரை துணையாக நிப்பார்கள் என்றா நினைக்கிறோம்? அடுத்து பார்க்கவேண்டிய விடயம், ஏற்கனவே கிளிநொச்சி வன்னி, யாழ்ப்பாணத்தில் மலையக மக்கள் வாழ்ந்தார்கள்தான், அவர்களை வடகிழக்கு சமூகம், தோட்ட வேலைக்கும், தேத்தண்ணி கடையில் கிளாஸ் கழுவுற வேலைக்கும், பண்ணைகளை கவனிக்கவும், மேலே ரசோதரன் குறிப்பிட்டதுபோல் மனித மல வண்டிகளை தள்ளுற வேலைகளுக்கும், லொறியில் இருந்து சாமான் இறக்குற வேலைக்கும் அமர்த்தி இன்று மலையக மக்கள் அரசிடம் இருந்து பெறும் மாத வருவாயில் பாதிகூட வருஷ வருவாயாக கொடுக்காது, ஒரு வேட்டி சேலை, ஒரு சில ஆயிரம் அவர்களின் இரத்தத்தை உறிஞ்சியதுக்கு கூலியாக கொடுத்து போதாக்குறைக்கு வீட்டுக்கு வெளியே நிக்க வைத்தும் , வயசு முதிர்ந்தவர்கள் பெண்களாக அவர்கள் இருந்தாலும் மரியாதையே துளியும் கொடுக்காமல் ஒருமையில் வாடா போடி என்று அழைத்தும் அவமானபடுத்தியும் மனித குலத்தில் என்னமோ அவர்கள் இவர்களுக்கு சேவகம் செய்ய பிறந்தவர்கள் போல் நடத்தும் அடிமைதன வாழ்வை வடக்கு கிழக்கில் பெறுவதைவிட சொந்த நிலத்தில் தமக்கு தெரிந்த தொழிலை செய்து வாழ்வதே அவர்களுக்கு சுய கெளரவம். வடக்கு கிழக்கில் குடியேறிய மலையக மக்கள் இன்றுவரை தமது சொந்த உழைப்பில் கல்வி பொருளாதாரத்தில் முன்னேறி வெற்றிபெற்ற தமிழர்களாக வாழ்ந்த ஒரு குடும்பத்தை கண்டதுண்டா? அதற்கு பிளடி வடகிழக்கு தமிழன் அவர்களை அனுமதித்ததுண்டா? மலையமக்கள் தொழிலை பார்க்கும் இடத்திற்கு செல்லகூடிய வகையில் பாதுகாப்பான இடங்களில் குடியேறுவதே சிறப்பானதாக இருக்கும். மறுபார்வையில் மலையக எம் தமிழ்மக்கள் தமது இடத்தைவிட்டு லட்சங்களில் வெளியேறினால் தமிழர்கள் வாழ்ந்த அப்பிரதேசம் முற்றுமுழுதாக சிங்கள முஸ்லீம்களால் நிரப்பபட்டுவிடும், வடக்க்கு கிழக்கில் எம் நிலங்களை பறிகொடுத்தது போதாதென்று இலங்கை முழுவதும் தமிழர் இருப்பை முற்றுமுழுதாய் கைவிட்டு போகவேண்டுமா? நாலு நல்ல வார்த்தையா பேசி பழகு சுமந்து.
  39. இரண்டு மாதத்திற்கு முன்... இதே மிருகக் காட்சி சாலையில் இருந்து 32 புறாக்கள் காணாமல் போயிருந்த நிலையில்... அதனை திருடியவரை அண்மையில் 15 புறாக்களுடன் கைது செய்து இருந்தார்கள்.
  40. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sundhari S ·tpdesnrSoocm8hg80l4cfcg9 i1mcu47ti91f2luu5u31i6t6428hm1hh900 · பைரவர்!!!! எங்கள் தெருவில் நிறைய வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள். இது போக நாலு தெரு நாயும் உண்டு.!!!ஏதாவது ஒரு வீட்டில் உள்ள நாய் தனியாக வெளியே வந்தால்,தெரு நாய்கள் எல்லாம் சேர்ந்து சத்தம் போட்டு,வீட்டு நாயை விரட்டும்!!!! வேற தெருவில் இருந்து ஏதாவது நாய்,தனியாகவோ,குரூப்பாகவோ வந்தால், எங்கள் தெருவில் உள்ள தெரு நாய்கள்,வீட்டு நாய்கள் எல்லாம் சேர்ந்து, வந்த நாயை சத்தம் போட்டு விரட்டி விடும்.!!!எங்க ஏரியா உள்ளே வராதே என்பது போல்.!!! பைரவருக்கே இந்த கதி.இதில் நடந்து போவோரையும்,காரில் போவோரையும் பைரவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.!!!!!!பைக்,சைக்கிள் டூ வீலரில் போகிறவர்களை நன்றாகவே தெரு அத்தம் வரை விரட்டுவார்கள். பயங்கர சத்தம் போடுவார்கள்.பாவம் அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள்.!!! எனக்கு ஒரு 7__10 வயது இருக்கும் போது,இப்படி தொல்லை கொடுக்கிற நாய்களின் வாயை கட்டி விடுவார்கள் விசயம் தெரிந்தவர்கள்.!!!அப்புறம் அந்த நாய் சத்தம்போடாது(குறைக்காது) உணவு சாப்பிடாது..!!!! எங்க பெரியப்பாவிடம் சிலர் நாயை கூட்டிட்டு வருவாங்க.!!இந்த நாய் குறைக்க மாட்டேங்குது,சாப்பிடவும் மாட்டேங்குது,தெருவில் போன எவனோ இதன் வாயை கட்டி விட்டான் என சொல்வார்கள்.இரண்டு நாளாக இப்படித்தான் இருக்கிறது என சொல்வார்கள்.!!! உடனே எங்க பெரியப்பா நாயின் தலையை தடவி கொடுப்பார்.கொஞ்சம் தண்ணி வைத்து அதன் கழுத்தை தடவி கொடுப்பார்..அப்புறம் சொல்வார்.என்ன பைரவரே(நாய் என்று எப்போதும் சொல்ல மாட்டார்.)தெருவில் போகும் ஆட்களை ரொம்ப பயமுறுத்தக் கூடாது. வீட்டுக்குள்ள வந்தா மட்டும் சத்தம் போடுங்க என சொல்லிக்கொண்டே அவர் கையை நீட்டுவார்.அதில் பெரியம்மா,அத்தை,பாட்டி யாராவது ஒருத்தர் ஒரு துண்டு கருப்பட்டியை அவர் கையில் வைப்பார்கள்.!!!! அவர் அதை வாங்கி,நாய்க்கிட்ட போடுவார்.அந்த கருப்பட்டியை நாய் நக்கி,நக்கி திங்கும்.அப்புறம் ஊளையிடும்.!!! பெரியப்பா சொல்வார்,உன் பைரவருக்கு வாய் கட்டை அவிழ்த்து விட்டாச்சி.வீட்டுக்கு போயி கொஞ்சம் தண்ணீர் குடு. அப்புறம் அரை மணி நேரம் கழிச்சி சாப்பாடு குடு. என்பார். அப்புறம் அந்த நாய் வழக்கம் போல சத்தம் போடும்,சாப்பிடும்.!!! இன்று வரை எனக்கு இது ஒரு புரியாத புதிர் தான்.!!! இது மனிதர்களை,மெஸ்பரிஸம்,பண்ற மாதிரியா??? அல்லது மனோதத்துவம் முறையா எனக்கு தெரியல.????எப்படி சாத்தியம் .!!!இந்தக்கேள்வி எனக்குள் பல வருஷங்களாக இருக்கிறது.!!! உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.!!!தெரிந்து கொள்கிறேன்.!!!! இது எப்படி,என்று பெரியப்பாவிடம் கேட்போம். எங்களுக்கும் நாய்க்கு வாயை கட்டவும்,அவிழ்த்து விடவும் சொல்லித்தாங்க என்று பல முறை கேட்டிருக்கிறோம்.அதற்க்கு அவர் சொல்லும் ஒரே பதில்.!!!! அம்மாவாசை,பௌர்ணமி இந்த இரண்டு நாட்களில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ,ஆறு,கடல்,குளம் இவற்றில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு,இரு கை கூப்பி ஓம்,ஓம் என ஒரு லட்சம் தடவை சொல்லனும்!!!!! மொத்தம் 41 நாட்கள் இவ்வாறு செய்தால், நீ சொன்னதெல்லாம் பலிக்கும்.அப்படின்னு சொல்வார்.!!! ஒரு கண்டிஷன் இதற்க்கு பணம் வாங்க கூடாது.ஒரு சேவையாக செய்யனும் என சொல்வார்.!!! இந்த அபூர்வ கலையை எங்க தாத்தாவிடம் இருந்து அவர் மட்டும் தான் கற்றார்.!!! ஆனால் பெரியப்பா யாருக்குமே சொல்லிக் கொடுக்க வில்லை.அவரோடு மறைந்து விட்டது அவர் கற்ற வித்தை.!!!!! தமிழர்களின் நிறைய வித்தைகள், கலைகள் யாவும் கிராமத்தை விட்டு நகரத்திற்க்கு வந்தவுடன் அழிந்து விட்டது.!!! நன்றி.!!!இது என் கற்பனை கதை அல்ல!!!🙏🏻".......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.