Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்13Points88127Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்11Points19253Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்7Points20100Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்4Points3001Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/29/25 in all areas
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
இப்படிதான் எங்கள் ஊரில் ஒருவர் கிறிஸ்தவ மதம் மாறி விட்டார். ஆனால் சேர்ச்சுக்கு போவதில்லை. ஒரு தரம் வழியில் கண்ட பாதிரியார் “ என்ன இப்ப சேர்சுக்கே வாறேல்லா யேசுவை மறந்துட்டியளோ” என கேட்க, எங்கட ஆள் சொன்னாராம்.. “சிவ, சிவா…நானாவது யேசுவை மறப்பதாவது” எண்டு 😂. அப்படித்தான் பலரது கிறிஸ்தவ நம்பிக்கையும். சாதி, தீண்டாமை, பெண்ணடிமைதனம், கர்மா, …. இப்படி சர்மாக்கள் சொல்லி கொடுத்த எதையும் கைவிடவில்லை. இங்கே பலர் அனுர காதலில் அனுங்குவதால் அவர்களுக்கு இலங்கை அரசு பற்றிய புரிதல் மங்கி விட்டது. 2009 க்கு முன் டக்கா செய்தவற்றுக்கு ஆக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் போக தேவையில்லை. அம்னெஸ்டி, HRW, US State dept அறிக்கைகளே போதும். ஆனால் இவற்றை அனுரா கனவிலும் தொடார். மேலே ஈழப்பிரியன் அண்ணா பதிந்துள்ளார். ஒரு உறுப்பினர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை சீண்டுவார் இல்லை. சும்மா கண்துடைப்புக்கு ஒரு கைது. அதை கண்டவுடன் காவடிக்காரருக்கு ஒரு சோடா குடித்த சிலிர்ப்பு.3 points
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
2 points
- கருத்து படங்கள்
2 points2 points- மகேந்திர படேல்-கரோலின் மில்லர்-வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டு.
சாதாரணமாக ஒரு குழந்தை விழப்போகுதே என்று குழந்தையைப் பிடித்தவருக்கு ஒருவாரமாக கம்பி எண்ணியிருக்கிறார். சிலவேளை இவர் ஒரு வெள்ளையராக இருந்திருந்தால் இவர்களால் மிகவும் பாராட்டப்பட்டிருக்கலாம். இதையெல்லாம் படிப்பினையாக வைத்து என்ன தான் நடந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியுமா?2 points- கருத்து படங்கள்
2 points2 points- மகேந்திர படேல்-கரோலின் மில்லர்-வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டு.
இந்தக் கலாச்சார வேறுபாடுகள் பற்றிய விழிப்புணர்வின்மை வேற்று நாட்டவருக்கு மட்டுமல்லாமல், வேற்று மாநிலத்தவர், ஒரே மாநிலத்தின் வேற்று நகரத்தவர் போன்றவர்களுக்கும் ஆப்பாக முடிந்திருக்கிறது. சில ஆண்டுகள் முன்பு, ஒஹையோவில் ஒரு பெரும்பனிப் புயல் வந்து, வீதிகளில் இருந்து வாகனங்கள் சறுக்கி மீடியனில் மாட்டிக் கொண்ட நிலை. இப்படி மாட்டிக் கொண்ட ஒரு வாகனத்தை, உதவும் நோக்கில் இன்னொரு வழிப்போக்கர் அணுகி கண்ணாடியைத் தட்டிய போது உள்ளே இருந்த அரை லூசுப் பயல் துப்பாக்கியால் சுட்டதில் உதவ வந்தவர் இறந்தார். சுட்டவருக்கு பின்னர் நீண்ட சிறை கிடைத்தது, ஆனால் ஒரு நல்ல மனிதர் உலகில் இருந்து மறைந்தார். இங்கே வாகனங்களை ஒரு வீதியில் திருப்ப வேண்டிய தேவை (U-turn) வந்தால், முடிந்த வரையில் எந்த தனியார் வீடுகளின் வாசல் பகுதி (driveway) யினுள்ளும் நுழையாமல் திருப்ப வேண்டும் என ஆலோசனை இருக்கிறது. நியூ யோர்க் நகரில் இருந்து வடக்கில் இருக்கும் நியூயோர்க் மாநில கிராமம் ஒன்றுக்குச் சென்ற ஒரு இளையோர் குழு, ஒரு தனியார் வீட்டின் வாசலில் நுழைந்து வாகனத்தைத் திரும்ப முயன்ற போது உள்ளேயிருந்து வந்த ஒரு கிழவர் வாகனத்தை நோக்கிச் சுட்டதில் ஒரு இளம் பெண் பலியானார். இந்தக் கிழவருக்கும் நீண்ட சிறை கிடைத்தது. எந்த வீட்டில்/வாகனத்தில் எத்தகைய மனப் பிறழ்வுடைய மனிதர்கள் இருப்பார்கள் என்ற அறுதியில்லாத காரணத்தால் சற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே 911 அல்லது உள்ளூர் காவல் துறையை அழைப்பதும் ஏனையோருக்கு உதவும் ஒரு பாதுகாப்பான வழி.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாங்க இருக்கிறமல்ல ஒரு சத்தியாகிரகமே நடத்துவோம்.1 point- மகேந்திர படேல்-கரோலின் மில்லர்-வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டு.
அவுஸ்ரேலியாவில் இதே போல் ஒரு சம்பவம் நான் அவுஸ்ரேலியாவிற்கு வந்த ஆரம்ப காலத்தில் நடந்திருந்தது, பஞ்சாப் பின்னணியினை கொண்ட ஒருவரின் தந்தையினை வரவழைத்திருந்தனர், அவர் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வெள்ளையின குழந்தையினை தூக்கியதாகவும் அதனை ஆந்த குழந்தையின் தாய் காவல்துறையில் முறையீடு செய்து நீதிமன்றம் சென்று அவரின் மகன் நீதிமன்றில் இந்தியாவில் குழந்தைகளை தூக்குவது சாதாரண விடயம் அந்த மனநிலையில் செய்துவிட்டார் என கூறியும் அவரினை (தந்தையினை) நீதிமன்றம் நாட்டிற்கு திருப்பி அனுப்பியதாக கூறினார்கள். இன்னுமொருவர் ஒரு வெள்ளையினை பெண் பின்னால் சுற்றிதாக நீதிமன்றம் சென்றபோது பொலிவூட் சினிமாவில் அவ்வாறுதான் காதலிப்பது என நீதிமன்றில் கூறியதாக வாசித்த நினைவுள்ளது. வேறுபட்ட கலாச்சாரங்களில் வந்தவர்களினால் அறியாமையினால் ஏற்படும் தவறாக இருக்கலாம்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நடுவரின் (கிருபன்) தீர்ப்பே இறுதியானது என்பதால், நான் போட்டியில் தொடர்வதில் சந்தோசமே, யாழ்கள போட்டியில் கலந்து கொள்ளும்போதுதான் போட்டி சுவாரசியமாகிறது (போட்டியினை மைதானத்தில் இருந்து பார்ப்பது போல கள உறவுகளுடன் போட்டியினை பார்க்கும் ஒரு அனுபவம்).1 point- வாசுகி கணேசானந்தனின் “Brotherless Night”
வாசுகி கணேசானந்தனின் “Brotherless Night” குடும்பத்தை விடுமுறைக் கால அங்காடி மேய்தலுக்காக இறக்கி விட்டு பார்ன்ஸ் அன்ட் நோபிள் புத்தகக் கடைக்குள் நுழைந்து நடந்த போது தற்செயலாகக் கண்ணில் பட்டது வி.வி. கணேசானந்தனின் "Bortherless Night” என்ற நாவல். இது இந்திய எழுத்தாளரின் படைப்பா அல்லது இலங்கை எழுத்தாளரினுடையதா என்ற குழப்பத்திற்கான விடை அட்டைப் படத்திலேயே தெரிந்தது: சைக்கிளோடும் பெண்கள் எங்கள் ஊர் வர்த்தகச் சின்னங்கள், ஒரு heritage என்று கூடச் சொல்லலாம். அதிகம் புனைவுகளை வாசிக்காத நான், ஒரு ஆர்வத்தில் வாங்கி வந்து ஆமை வேகத்தில் வாசித்து முடித்தேன். இதைப் பற்றி எழுதுவதா, தவிர்ப்பதா என்ற குழப்பத்தில் இருந்த போது விவிஜி யின் இன்னொரு சிறுகதை யாழில் இணைக்கப் பட்டிருந்தது நினைவிற்கு வந்தது. விவிஜி நேரடியாக "நாவல்" என்று மட்டும் குறிப்பிட்டிருந்தாலும் கூட, இது ஒரு “வரலாற்று நாவல்”. 83 கலவரத்தில் பாதிக்கப் பட்ட ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம், வடக்கு நோக்கிக் குடிபெயர்ந்து அதன் பின்னர் படிப்படியாக உள் நாட்டுப் போரினால் சூழ்ந்து கொள்ளப் பட்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. கொழும்பில் ஆரம்பிக்கும் நாவல் 2009 இல் நியூயோர்க்கில் முடிவடைகிறது. மிகச் சுருக்கமாகச் சொன்னால், 83 இல் இருந்து 2009 விடுதலைப் போரின் ஆயுதப் போராட்டம் நிறைவடையும் வரையான சம்பவங்களே நாவலின் சம்பவங்களாக விரிகின்றன. இந்த சம்பவங்களின் நாயகர்களும், நாயகிகளும் கூட, பெருமளவுக்கு நிஜமாக அந்தக் காலப் பகுதியில் வாழ்ந்த மனிதர்களே என்பது அந்தக் காலப் பகுதியில் வாழ்ந்த ஒரு வாசகருக்கு இலகுவாகப் புரியும். எனவே, இந்தக் காலப் பகுதியில் வடக்கில் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகள், அரசியல் படுகொலைகள், இந்திய இராணுவ வருகையின் பின்னர் மோசமான மனித உரிமைகளின் நிலை, திலீபனின் உண்ணா நோன்பு, அந்தக் காலப் பகுதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வான ராஜினி திராணகம படுகொலை என்பன நாவலின் மையங்களாகத் திகழ்கின்றன. இந்த நிகழ்வுகளின் விபரிப்பின் போது, பின்னணியில் வந்து போகும் பாத்திரங்களில் அந்தக் காலத்து புலிகள் இயக்கப் பிரமுகர்களையும் கூட இலகுவாக அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது. கிட்டு மாமா தனது "Honda CD200" இல் யாழ் வீதிகளில் பறக்கும் போது அவரது தோள்களில் சில சமயங்களில் அமர்ந்து பயணிக்கும் செல்லப் பிராணியான “மகாக்” குரங்கு கூட வந்து போகிறது கதையில். என்னுடைய புரிதலின் படி, நாவலின் முதுகெலும்பாகத் திகழ்வது புலிகள் அமைப்பு எவ்வாறு மாற்றுக் கருத்துக்களை அனுமதிக்காத, ஒற்றைத் தலைமையைத் தமிழர்களிடம் ஊன்ற விளைந்த ஒரு அமைப்பாகத் திகழ்ந்தது என்ற கதையாடல் தான். இலங்கை இராணுவம்/அரசு, புலிகள் அமைப்பு, இந்திய இராணுவம் என எல்லாத் தரப்புகள் மீதும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விமர்சனம் வைக்கப் பட்டிருந்தாலும், மிகப் பெரும்பான்மையான விமர்சனம் புலிகள் அமைப்பு மீதும், அடுத்த படியாக அதிக பட்ச விமர்சனம் இந்திய இராணுவம் மீதும் வைக்கப் பட்டு எழுத்தாளர் கதையாடலைக் கொண்டு செல்கிறார். புலிகள் அமைப்புப் பற்றிய விமர்சனங்களைப் பொறுத்த வரையில், சில விடயங்களில் உண்மைத் தன்மையும், உறுதி செய்யப் பட்ட தகவல்களும் அடிப்படையாக அமைந்திருந்தாலும், சில முக்கியமான இடங்களில் இணையத்தில் நடக்கும் அரட்டைகளின் வழி பெற்ற தகவல்களும், புலிகளின் எதிர்ப்பாளர்கள் கட்டிய கதைகளும் அடிப்படையாக பயன் பட்டிருக்கின்றன. உதாரணமாக, 90 களில் துரோகிகள் எனக் குற்றஞ் சாட்டப் பட்டு மின்சாரத் தூண்களில் கட்டிச் சுட்டுக் கொல்லப் பட்டவர்கள் அதிகமானோர் சாதி நிலையில் குறைந்தவர்களாக இருக்கலாம் என்ற அடிப்படையில்லாத சந்தேகங்கள் நாவலில் குறிப்பிடப் படுகின்றன. இப்படிக் கொல்லப் பட்டோர் எல்லோரும் துரோகிகள் அல்ல என்பது ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும், ஆனால் சாதி வேற்றுமை இவர்களது கொலைக்குக் காரணமாக இருந்தது என்பது தரவுகள் இல்லாத ஒரு புனைவு. இதே போல இன்னொரு உதாரணமாக பெண் கரும்புலியாகச் செல்லும் ஒரு போராளி இந்திய இராணுவத்தால் வல்லுறவுக்குள்ளான ஒருவர் என்ற சித்திரிப்பும் தெரிகிறது. பாலியல் பலாத்காரத்திற்குள்ளான ஒரு பெண்ணிற்கு தமிழ் சமூகம் காட்டும் வேற்றுமையும், பழிவாங்கும் உணர்வும் கரும்புலிகளாக அந்தப் பெண்கள் மாற முதன்மைக் காரணம் என்பது போன்ற - சில சிங்கள/இந்திய பிரச்சாரவாதிகளால் கட்டப் பட்ட கதைகளின் அடிப்படையிலான- சித்தரிப்பு இது. இந்தப் புலிகளின் மீதான விமர்சனம் என்பது "என் தனிப் பட்ட அரசியல்" என்ற பொறுப்புத் துறப்பை விவிஜி பின்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். வேறு யாரையும் அவர் குற்றம் சாட்டவில்லை. ஆனால், நாவலின் பின்னிணைப்பாக விவிஜி தந்திருக்கும் ஷெல்பி போல்க் என்ற எழுத்தாளருடனான உரையாடலில், "முறிந்த பனை" நூலினை வாசித்த பின்னர் தான் இந்த நாவலை எழுதும் தூண்டுதல் எழுத்தாளருக்கு உருவானதாகக் குறிப்பிடுகிறார். இந்த நாவலுக்கான தன் ஆராய்ச்சியை பல்வேறு நூல்கள், குறுந்திரைப் படங்கள், கட்டுரைகள் வழியாக மேற்கொண்டதாகவும் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். இந்தக் கட்டுரைகள், இலங்கையின் உள்நாட்டுப் போர் தொடர்பான நூல்கள் அனேகமானவை இந்தியாவின் நாராயணசாமி, இலங்கையின் அகிலன் கதிர்காமர், திருவரங்கன், ஹூல் சகோதரர்கள் ஆகியோரினால் எழுதப் பட்டிருப்பவையாக எனக்குத் தெரிகின்றன (நாவலின் மேலதிக வாசிப்புப் பட்டியலில் இவை இருக்கின்றன). அடிக்கடி இங்கே நான் தாயகத்தை "சின்னத்திரையில் பார்த்து விட்டு எழுதுவோர்" என்று சிலரைக் கண்டிப்பதுண்டு. அதே போல, ஒரு உள்நாட்டுப் போரின் சமூகவியலை - அதுவும் பெரும்பாலும் போரினால் பாதிக்கப் பட்ட தமிழ் சிவிலியன்களின் சமூகவியலை- வெறுமனே, ஒரு குறிப்பிட்ட பார்வை உடைய தரப்பின் வரலாற்று நூல்கள் , கட்டுரைகள் வழியாக மட்டுமே வாசித்து ஆய்வு செய்து ஒரு வரலாற்றுப் புனைவை விவிஜி உருவாக்கியிருக்கிறார் எனக் கருதுகிறேன். இது அவரது படைப்புச் சுதந்திரம் என்றாலும், இதனால் புலிகளின் ஆட்சி மோசமான அடக்கு முறைக் கூறுகள் மட்டுமே கொண்ட ஒரு இஸ்லாமிய ஆயுதக் குழுவின் ஆட்சி போன்றது என்ற விம்பத்தை உண்மை நிலவரம் தெரியாத வாசகர்களிடம் ஏற்படுத்தி விடும் பேராபத்து இருக்கிறது. இது ஆங்கில வாசகர்களை நோக்கிய ஒரு நாவல் என்பதால் இந்த ஆபத்து நிச்சயமாக இருக்கிறது. விவிஜியின் எழுத்துலகப் பிரசன்னம் காரணமாக, அவரது முதல் நாவலான “Love Marriage” சுவீடிஷ், பிரெஞ்சு, குரோஷிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. அதே போல இந்த நாவலும் மொழி மாற்றம் செய்யப் படும் போது, ஒரு வரலாற்றுப் புனைவினூடாக தமிழர்களின் ஆயுதப் போராட்டம் குறித்து நியாயமில்லாத ஒரு கதையாடலை பரப்பும் பேராபத்தும் இருக்கிறது. -ஜஸ்ரின் வாசுகி கணேசானந்தன்: அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் ஆங்கில உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் வி.வி.கணேசானந்தன், இது வரை இரண்டு நாவல்களை வெளியிட்டுள்ளார். இவரது இரண்டாவது நாவலான “Brotherless Night” அமெரிக்க NPR இன் "ஆண்டின் சிறந்த நூல்-2024" என்ற கௌரவம் பெற்றிருக்கிறது. மேலும், 2024 இல், Women’s Prize for Fiction, Carol Shields Prize, New York Times Editors’ Choice ஆகிய கௌரவங்களையும், பரிசுகளையும் பெற்றிருக்கிறது.1 point- வாசுகி கணேசானந்தனின் “Brotherless Night”
நான் இவரை முன்னர் அறிந்திருக்கவில்லை. அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஜஸ்டின். உங்களின் மிகச் சுருக்கமான வடிவத்தில் இருந்து, இந்த நாவல் மிகவும் பக்கச் சார்பாகவும், அடிப்படையிலேயே தவறுகள் உள்ளது போன்றும் தெரிகின்றது. ஆனாலும் நேரம் கிடைக்கும் போது இதை வாசிக்க வேண்டும் என்றிருக்கின்றேன். எவ்வளவு தான் மொழிகளில் ஆற்றல்கள் இருந்தாலும், மண்ணுடனும் அங்கிருந்த மனிதர்களுடனும் ஒட்டி ஒட்டி வாழ்ந்திருக்கா விட்டால், பல விடயங்களை என்றுமே புரிந்துகொள்ள முடியாது என்றே நினைக்கின்றேன்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவரின் பதில்களை கூகிள் சீற்றில் போட்டேன். அவரின் தெரிவுகள் புரிகின்றது. 41லிருந்து 69வரை சரி பண்ணித் தரவா. வீரத் கோலியையும் கேன் வில்லியம்சனையும் மற்றைய கேள்விகளுக்குத் தெரிவு செய்துள்ளார். அவர்கள் அணியில் இடம்பெற மாட்டார்கள். அவர்தான் இந்தக் கேள்விகளைத் திருத்த வேணும். ஓ இப்போ வாடகைக்கும் ஆட்களைப் பிடிக்கலாமா?1 point- மகேந்திர படேல்-கரோலின் மில்லர்-வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டு.
இது அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் அதிகம் நிகழக் கூடிய ஒரு ஆபத்துத் தான். ஜோர்ஜியாவின் தலை நகரான சவன்னாவில் சில ஆண்டுகள் முன்னர் ஒரு இந்திய வயோதிபர் காலை நடைப் பயிற்சி சென்ற போது "சந்தேகத்திற்கிடமானவர் திரிகிறார்" என்று யாரோ பொலிசைக் கூப்பிட பொலிஸ்காரர் வந்து அவரிடம் உரையாட முயல்கிறார். வயோதிபருக்கு ஆங்கிலம் தெரியாது, அவர் சிரித்து விட்டு தொடர்ந்து நடக்க, அந்தப் பொலிஸ்காரர் அவரை நிலத்தில் தள்ளி வீழ்த்திக் கைது செய்ததில் அவரது கழுத்தெலும்பு பாதிக்கப் படுகிறது. பல நாட்கள் மருத்துவ மனையில் இருந்த அவரது குடும்பம் நகர நிர்வாகம் மேல் வழக்குப் போட்டு சில மில்லியன்கள் நட்ட ஈடு பெற்றார்கள் என நினைக்கிறேன். ஒரேயடியாக அச்சம் கொள்ள வேண்டியதில்லை, ஆனால் அவதானமாக இருக்க வேண்டும். தேவையின்றி ஒருவருக்கு உதவப் போகக் கூடாது. இது எங்கள் தென்னாசியக் கலாச்சாரத்தில் இருந்து வேறுபாடானது தான், ஆனால் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது பாதுகாப்பிற்கு அவசியம். "வெள்ளையின மீட்பர்கள்" வந்து இது போன்ற நிறவாதம் பார்க்கும் இளம் தாய்மாருக்கு உதவுவார்கள். இந்த ஆசியரை 2 மாதங்கள் சிறையில் வைக்கச் செய்த அதே பெண்ணுக்கு, சில நிமிடங்களில், இன்னொரு வெள்ளையின ஆண் அவரது வண்டிலைத் தொட்டு உதவும் வீடியோவையும் வால்மார்ட் சேர்த்தே வெளியிட்டு உதவியிருக்கிறது. எனவே தான், தென் மாநிலங்களில் வசிக்கும் பிறவுண் மனிதர்கள், வெள்ளையின மீட்பர்களை உதவ அனுமதித்து விட்டு வாழ்க்கையை அமைதியாக அனுபவிக்க வேண்டுமென்கிறேன்😇.1 point- மலரும் நினைவுகள் ..
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
கோலாலம்பூரில் பல்லாயிரகணக்கான மக்கள் ஆதரவுடன் ஜனநாயகன் இசை வெளியீட்டை நடத்தியபின் சென்னை திரும்பிய விஜையை பார்க்க பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டு, இதில் காரில் ஏறும் போது விஜை தடக்கி வீழ்ந்துள்ளாராம். பிகு நாளைக்கு ரசிகர் குஞ்சுகள் யாரும் தற்கொலை செய்யாதவரை ஓக்கே.1 point- கருத்து படங்கள்
1 point- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
3012 கக்கூஸ் கட்ட வக்கில்லை….. ஆனால் நாங்கள் எல்லாம் மெத்த படித்த, டி என் ஏ யில் புத்தி கூர்மை ஏறிய, உலகளாவிய வியாபார காந்தங்கள் நிறைந்த சமூகம் எண்ட கதைக்கு மட்டும் பஞ்சமில்லை 😂. எத்தனை வளைவுகள், கோபுரங்கள், சுற்று மதில்களை இந்த 16 வருடத்தில் கட்டி இருப்பீர்கள். அந்த பணத்தில் இதையும் செய்து கொஞ்ச மலையக மக்களையும் குடியமர்த்தி இருக்கலாம். பிகு மனமுண்டானால் மார்க்கபந்து.1 point- அமரசிறி : கருணாகரன்
1 point- விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
இந்த திரியில் கூட கதறல் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது😂. பிகு கதறலை கேட்க என்றே இந்த செய்தி இணைக்கப்பட்டது என நினைப்பவர்கள் - கெட்ட எண்ணம் உடையோர் 😂1 point- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
நீங்கள் சொல்வது பிரபல தொழிற்சங்கவாதியான கேசி நித்யானந்தா என நினைக்கிறேன். நான் அறிந்த வகையில் டக்கா சில காலம் இவரின் சீடர்களில் ஒருவர் போல இருந்தார் என நினைக்கிறேன். ஆனால் பெரியப்பா, சுவீகார தந்தை என பல கதைகள் உலாவுகிறன. இந்த கதைகளை தனக்கு கீர்த்தி ஏற்படும் வகையில் டக்காவே பரப்பினார் என்பதே நித்யாநப்தாவுடன் அருகில் இருந்து வேலை பார்த்தோர் என்னிடம் நேரடியாக கூறியது. கிறிஸ்மசுக்கு கேக் அடிப்பவர் எல்லாம் கிறீஸ்தவர் அல்ல 😂1 point- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
செய்த "தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும், கர்மம் காத்திருந்து கழுத்தறுக்கும்.] கர்மம் கர்மா என்பது எல்லாம் பகவத்கீதையில் வருகின்ற பிஜேபி பாவிக்கின்ற சொற்கள் தானே புலம்பெயர் இலங்கை கிறிஸ்தவர்களும் நம்புவார்கள்🙄1 point- 'சோமாலிலாந்துக்கு தனி நாடு அங்கீகாரம்' - இஸ்ரேல் வியூகமும் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பும்
உலக அரசியல் நீதி நியாயங்கள் எப்படியெல்லாம் விளையாடுகின்றது?! இஸ்ரேல் நாட்டையும் அவர்கள் செயலையும் ஈழத்தமிழர்களும் ஆதரிக்க வேண்டும். அழிவார்களுக்கு ஆதரவழித்தால் நாமும் நலமுடன் வாழலாம் போல் இருக்கின்றது. 😂1 point- லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை பிரஜை!
எங்கடை ஆரம்ப பிரச்சனையே இந்த மாதிரியான மதம் மொழி என்று வேறுபடுத்தி பார்பவர்கள் தான் கடைசியில் சிங்களவன் கலைத்து கலைத்து அடி போட்டும் இன்னும் திருந்தாமல் சிங்களவனுக்கு மட்டுமே பல்லாக்கு துக்குவம் எனும் கோஸ்ட்டி . இந்திய தமிழ் முஸ்லிம்கள் ஆரம்ப கால உண்மையான முஸ்லிம் இளையோர்கள் தமிழ் ஈழத்துக்கு தம்முயுரை கொடுத்தார்கள் கொடுப்பதற்கும் தயராக இருந்தார்கள் தற்போதுள்ளளோர் தமிழனை திட்டினால் சிங்களவன் அடிக்க மாட்டான் என்ற நப்பாசையில் இருகின்றனர் போல் உள்ளது . ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழகத் தமிழன் “அப்துல் ரவூப்” நினைவுகூறுவோம்!! இற்றைக்குப் பதினைந்தாம் வருடங்களின் முன்பு திருச்சியில் தமிழனொருவன் ஈழத்தமிழனுக்காகத் தீக்குளித்துச் சாவடைந்தான்.யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில், தொடர்நதும் ஈழத்தமிழர்கள் மேல் கடுமையான யுத்தமொன்று தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 15.12.1995 அன்று “அப்துல் ரவூப்” என்ற 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக தன்னைத் தீக்கிரையாக்கிச் சாவடைந்தான்.இறப்பதற்கு முன், ‘ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்’ என்று கூறினார். இவ்வகையான சாவுகள் வரவேற்கப்படவேண்டியவையல்ல; போற்றப்பட வேண்டியவையுமல்ல. தவிர்க்கப்பட வேண்டியவை, நிறுத்தப்படவேண்டியவை. இம்மரணத்துக்காக யாழ்ப்பாணத்தில் துக்கதினம் அனுட்டிக்கப்பட்டது ஞாபகமிருக்கிறது. அப்போது இச்சாவினைத் தியாகமாகக் கருதியதிலும்பார்க்க, தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியதாய், பயன்பாடற்றதொரு சாவாய் பார்க்கும் நிலையே இருந்தது. இம்மரணத்தைக் குறித்து தோழர் தியாகு ‘இனி’ என்ற பத்திரிகையில் எழுதிய பத்தி ஞாபகம் வருகிறது.“சாகச்செய்வானைச் சாகச்செய்யாமல் சாகின்றாய் தமிழா” என்ற கவிஞனொருவனின் வரிகளை மகுடமாக்கி எழுதப்பட்ட அப்பத்தி இவ்வகையான செயல்களைக் கண்டித்தது. எம் நிலைப்பாடும் அதுவே. உணர்ச்சிப் பெருக்கால் தசையாடி எரிந்த அச்சகோதரனுக்கு ஓர் அஞ்சலியைச் செலுத்துவோம் … பதிவு : பூராயம் வன்னியன் நன்றி: மீனகம் நாம் தமிழர் கட்சிஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழகத் தமிழன் “அப்துல...ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழகத் தமிழன் “அப்துல் ரவூப்” நினைவுகூறுவோம்!! | நாம் தமிழர் கட்சிhttps://noolaham.net/project/816/81534/81534.pdf1 point- விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
சிலோன் மருமோனும் உலக நடிகருமான விஜய் அவர்களின் அதீர வளர்ச்சியையும், அவரது நற்பணி சேவைகளையும் கண்டு எரிச்சலும் பொறாமையும் கொண்டவர்களின் செயலாகத்தான் இது இருக்குமென நான் நினைக்கின்றேன். என் வன்மையான கண்டனங்கள். தள்ளி விடுறதெல்லாம் என்ன பழக்கம்?1 point- விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
இவர் நம்ம ஆள்..... அதனால் தண்ணீரில் சறுக்கி விழ வாய்ப்பில்லை... தள்ளுப்பட்டுத்தான் விழுந்திருப்பார் 😂 பனையாலை விழுந்தவனை மாடு ஏறி மிதித்த மாதிரி பனையூர் செல்லும் வழியில் இன்னொரு விபத்தால் 🤣சங்கடமாம்1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பெப் 5ம் திகதி வரலாமா கிருபன்ஜி சார்,ஆனா அந்த அஞ்சு பவுண்......1 point- விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
நம்ம தளபதிக்கு தல ரசிகர்களும் ஆதரவாம்! டீம்கா மீடியாக் குஞ்சுகளும் ஆமைக் குஞ்சுகளும் கதறிக்கொண்டு இருக்குதுங்க. 😎1 point- “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
வோட்டை மக்கள் தராது விடினும் … ஆமை ஓட்டை வைத்தே ஆட்சியை பிடிப்பேன்…. புஹா…ஹ.ஹா😂1 point- “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1 point- யாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்!
1 pointயாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்! இந்த ஆண்டு யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது தலைமை உரையை ஆற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இவ் வருடம் நிறைவடைய உள்ள நிலையில் யாழ் மாவட்ட செயலகத்துக்கு பொது நிர்வாக உள்நாட்டல்கள அமைத்து மற்றும் ஏனைய அமைச்சுகள் மூலம் கிடைக்கப்பெற்ற நிதிகள் 15 பிரதேச செயலக நீதியாக உரிய முறையில் செலவு செய்யப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்ட அலுவலர்கள் அமையத்தினால் யாழ் மாவட்ட செயலகத்துக்கு ஒதுக்கப்பட்ட 2700.9 மில்லியனில் 2625.2 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய அமைச்சுகள் மூலம் 5368.8 மில்லியன் ரூபா கிடைக்கப்பட்டுள்ள நிலையில் 4210.5 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. தீவக வீதிகள் வேலைத் திட்டம் நாட்டிலே ஏற்பட்ட இடர் நிலை காரணமாக உரிய காலப் பகுதியில் நிறைவு செய்யப்படாத நிலையில் அதற்கான நிதியை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் சந்திரசேகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆகவே இவ் வருடம் நிறைவடைய இம்மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் இருக்கின்ற நிலையில் தற்போது இடம் பெற்று வரும் வேலைகளுக்கான கொடுப்பனவுகள் இம்மாத இறுதி வரை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். Athavan Newsயாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது...இந்த ஆண்டு யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்1 point- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
நான் சு. பொன்னையா. 1990 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஈபிடிபி இயக்கத்தில் இருந்தேன். அந்தக் காலத்தில் நடந்த மிகச் சீரழிந்த, மனிதநேயத்துக்கு எதிரான சம்பவங்களை நேரில் பார்த்திருக்கின்றேன் சிலவற்றில் நானும் உடன் இருந்திருக்கிறேன் நான் எதற்கும் பயப்படவில்லை. உண்மையை சொல்ல வந்திருக்கிறேன். தினமுரசு நாளிதழின் ஆசிரியர் பத்திரிகையாளர் நடராஜா அற்புதராஜா, மகேஸ்வரி வேலாயுதம் ஆகிய இருவரையும் வி*டுதலைப் பு*லிகள் செய்தது என்று கூறி, நாமே கொ*ன்றோம். அந்தக் கொ*லைகளுக்கு புலிகள் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் உலகிற்கு “புலிகள் செய்தார்கள்” என சொன்னோம் ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களையும் எங்களில் சிலர் திட்டமிட்டு கொ*ன்றார்கள் அந்தக் கொ*லையில் தொடர்புடையவர்கள் சிலர் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள். சிலர் வெளியேறியிருக்கின்றார்கள் உதயன் நாளிதழ் மீது தாக்குதலையும் இராணுவமும், ஈபிடிபியும் சேர்ந்து செய்தார்கள். குறித்த தாக்குதலில் ராஜன், திவாகரன் ஆகிய ஈபிடிபி உறுப்பினர்கள் காயமடைந்தார்கள் இருவரும் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த பலாலி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள். அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல், அந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த Masterminds, யாரெல்லாம் தூண்டினார்களோ – எல்லோரும் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள். எந்தப் பயமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நெல்லியடி, புங்குடுதீவு, காரைநகர், யாழ்ப்பாணம், வவுனியா எங்கும் பொதுமக்கள் இராணுவத்தினருடன் இணைந்து ஈபிடிபியினரால் தான் கடத்தப்பட்டார்கள். கொ*லை செய்யப்பட்டார்கள். சிறுமிகளும், மாணவர்களும் என பலர் காணாமலாக்கப்பட்டார்கள் ஈபிடிபி யின் சாவகச்சேரி அமைப்பாளர் சார்ள்ஸ் தான் இந்த ஆட்கடத்தல்களுக்கு பின்னால் இருந்த Operation lead. 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் மண்டைதீவு பகுதி இராணுவ முற்றுகைக்குள் இருந்தே வேளை, அங்குள்ள மக்களுக்கு நாங்கள் நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற போது 15 – 20 பேர் அளவில் இராணுவத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை டக்ளஸ் தேவானந்தா பார்க்க வேண்டும் என சொல்லி இராணுவத்தினரிடம் கேட்டு , நாங்கள் நேரில் சென்று அவர்களை பார்த்தோம். அவர்களில் ஒரு 13 வயதுடைய சிறுவனும் இருந்தான். நாங்கள் பார்த்து வந்த சில நிமிடங்களில் வெ$டி சத்தம் கேட்டது. அத்தனை பேரையும் சு*ட்டு கொ*ன்று விட்டார்கள். அவ்வேளை அங்கிருந்த அரச உத்தியோகஸ்தரான நிக்லஸ் என்பவரை சந்திக்க வருமாறு கேட்டிருந்தனர். அவர் தான் நேரில் வர மாட்டேன் என கூறியதும் அவரை அ*டித்து சி*த்திரவதை செய்த வேளை , அவர் உயிரிழந்து விட்டார். பின்னர் அவரின் உடலை தூக்கில் தொங்க விட்டனர். யாரும் விசாரிக்கவில்லை. ஒரு கேள்வியும் இல்லை. ஏனெனில், எங்களை இராணுவத்தினர் பாதுகாத்தார்கள் எங்களுடன் இருந்த 6 உறுப்பினர்கள், பு*லிகளுடன் இணைய முயன்றார்கள். அவர்களை வெ*ட்டிக் கொ*ன்றது யாரென்று தெரியுமா? எங்களுடன் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமமூர்த்தி. அவரே வெ*ட்டிக் கொன்ற கத்தியுடன் வந்து, கூட்டம் நடத்தினார். முன்னாள் வானொலி அறிவிப்பாளர் கே.எஸ். ராஜா இந்தியாவில் இருந்தார். டக்ளஸ் தேவானந்தாவே அவரை அழைத்து வந்தார். பின்பு அவர் மீண்டும் ஒலிபரப்பு சேவைக்கு சேரலாம் என்ற தகவல் வந்ததும், அவர் நமது சில இரகசியங்களை வெளியே சொல்லக் கூடும் என்ற பயத்தால் அவருக்கு மதுவில் ந*ஞ்சு கொடுத்தோம். அவரும் செ*த்து போனார். மலையகத்தை சேர்ந்த மோகன், விஜி, யாழில் பாண்டியன், ஊர்காவற்றுறையில் கிளி – ஆகியோர் எங்களில் சிலருக்கு விரோதமாக நடந்ததால் நாமே அவர்களை கொ*ன்றோம். அவர்களை மலசல கூட குழிக்குள் போட்டு அசிட் ஊற்றி அவர்களின் உடல்களை பொ*சுக்கினோம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சூரி என்பவரை கொழும்பில் கொலை செய்து , கடற்கரையில் அவரின் உடலை போட்டோம் அதே போல ஈ.பி.டி.பி க்கு சொந்தமான கொழும்பு பார்க் வீதியில் இருந்த வீட்டில் பல கொ*லைகள் நடைபெற்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கான உத்தரவு – நம்முடைய முன்னாள் எம்.பி மதனராஜாவிடமிருந்து தான் வந்தது. பாதுகாப்பு அமைச்சகம் மாதாந்தம் எங்களுக்கு சம்பளத்தை அனுப்பியது. மஹிந்த ராஜபக்சே காலத்தில் எங்கள் அங்கத்தவர் ஒருவருக்கு 65,000 ரூபாய் வரை கணக்குக் காட்டி டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்பு அமைச்சிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டார். ஆனால் எங்களுக்கு ரூபா 10,000 - ரூபா 15,000 வரையில் சம்பளம் வழங்கினார்கள். கட்சியிலிருந்து விலகும் வரை மாதாந்தம் ரூபா 3,000 வரை EPF/ETF சேமிப்பதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் அடிப்படை வேதனம் கேட்ட சிலரை கூட டக்ளஸ் தேவானந்தா இல்லாமல் ஆக்கியுள்ளார் இவ்வாறு மிக நீண்ட ஆதாரங்களை ஈபிடிபி அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சு. பொன்னையா (சதா) என்பவர் திரு மைத்திரிபால சிறிசேன - திரு ரணில் விக்ரமசிங்கே அரசாங்க காலத்தில் குறைபாடாக முன்வைத்திருந்தார் பின்னர் தற்போது ஜேவிபி அதிகாரத்திற்கு வந்த பின்னர் மீண்டும் பொலிஸ் தலைமையகம் முதல் பலவேறு தளங்களில் முறைப்பாடுகளாக வழங்கியிருக்கின்றார் எத்தகைய விசாரணைகளுக்கு அழைத்தால் சாட்சியம் அளிப்பதாகவும் சொல்லியிருக்கின்றார் ஆனால் இந்த குற்றச்செயல்களில் இராணுவம் சம்பந்தப்பட்டு இருப்பதால் நல்லாட்சி ஆட்சியாளர்கள் போல ஜேவிபியும் முறைப்பாட்டை ஏற்று கொள்ள தற்போது வரை தயாரில்லை இராணுவ ஒருங்கிணைப்பில் தான் அப்பாவி தமிழ் மக்கள் வேட்டையிடப்பட்டு இருக்கின்றார்கள் என்பது பகிரங்கமாகி விடும் என்பதால் முறைப்பாட்டாளரை அலைக்கழிக்கின்றார்கள் குறிப்பாக அப்பாவி தமிழ் மக்களை வேட்டைடைய பாதுகாப்பு அமைச்சு மாதாந்தம் பணம் செலவளித்திருக்கின்றது என்கிற அசிங்கம் தெரியாமல் இருக்க நாடகமாடுகின்றார்கள் இருப்பினும் பிரதான சூத்திரதாரிகளான இராணுவ கட்டமைப்புகளை தெளிவாகவிருக்கும் ஜேவிபி ஆட்சியாளர்கள் தேவைகள் முடிவடைந்த நிலையில் கடுமையாக தண்டிக்க வேண்டிய ஓட்டுகுழு அம்புகளை களத்திலிருந்து அகற்ற சில்லறை வழக்குகளை நடத்தி நாடகமாடுகின்றார்கள் இது ஜே ஆர் ஜெயவர்த்தனே கால Technique https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02RU7NXS6p2mcYrfFgDxbkpz9kRa4FWrEvMrE6E7ZASKQzkEW62L7sHBK9ksWCTAB5l&id=1000575886389361 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
இந்தியாவில் அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி? பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,சுருட்டை விரியன் கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பாம்புக்கடி சம்பவங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் பாம்புக்கடி நிகழ்வுகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மரணங்கள் நிகழ்கின்றன. "தமிழ்நாட்டில் நிகழும் பாம்புக்கடிகளில் கிட்டத்தட்ட 95% நஞ்சற்ற பாம்புகளால்தான் நிகழ்கின்றன. மீதமுள்ள 5% சம்பவங்களில் பெரும்பாலும் கண்ணாடி விரியன், நாகம், சுருட்டை விரியன், கட்டு வரியன் ஆகிய நான்கு வகை நச்சுப் பாம்புகளே காரணமாக இருக்கின்றன," என்று கூறுகிறார் யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ். "நஞ்சுள்ளவை, நஞ்சற்றவை எனப் பிரித்தறிய முடியாத காரணத்தால் பல நேரங்களில் நஞ்சற்றவை எனக் கருதி மக்கள் கவனமின்றிச் செயல்படுவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பாம்புக்கடி விபத்துகள் நிகழக் காரணமாவதாக," கூறுகிறார் பாம்பு மீட்பு மற்றும் ஆராய்ச்சியில் கடந்த 9 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் மதுரையைச் சேர்ந்த சாம்சன் கிருபாகரன். இந்த நிலையில், நச்சுப் பாம்புகளை அடையாளம் காண முடிந்தால் பாம்பு-மனித எதிர்கொள்ளலின்போது ஏற்படும் அசம்பாவிதங்களை பெருமளவு தடுக்க முடியும் என்பதே நிபுணர்களின் பொதுவான கருத்தாக உள்ளது. எனவே, இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பிக்4 பாம்புகள் என்று அறியப்படும், அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளைப் பார்த்தவுடன் எளிதில் அடையாளம் காண உதவும், அவற்றின் உடலமைப்பின் முக்கியமான அம்சங்களை இங்கு காண்போம். நாகப் பாம்பை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி? பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,நாகப் பாம்பு நாகம் என்றவுடன் அது படமெடுத்து நிற்கும் என்பதைப் பலரும் நன்கு அறிந்திருப்போம். அச்சம் அல்லது கோபத்தின் வெளிப்பாடாக அவை அப்படி படமெடுத்து நிற்கும்போது, "முன்பகுதியில் இரண்டு பெரிய கரும்புள்ளிகள் இருக்கும். பின்பக்கத்தில் அதேபோன்ற கரும்புள்ளிகளுடன் வெந்நிறத்திலான 'V' போன்ற ஒரு வடிவமும் இருக்கும்," என்று சாம்சன் விவரித்தார். இது மட்டுமின்றி, "நல்ல பாம்பின் கண் முற்றிலும் கருப்பாக இருக்கும். அந்தக் கண்களுக்குக் கீழே கருமை நிறத்தில் மெல்லியதாக, கண் மை கலைந்ததைப் போன்ற வடிவில் ஒரு தடம் இருக்கும்" என்கிறார் முனைவர் மனோஜ். பெரும்பாலும், சாரைப் பாம்பினை நாகம் எனப் பலரும் தவறாகப் புரிந்துகொள்வதுண்டு. அப்படிக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பதற்கு, அவற்றின் கண்களைப் பற்றி அறிந்துகொள்வது உதவும் என்கிறார் அவர். பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,ஓலைப் பாம்பின் தலைப் பகுதியில் வேல்கம்பு போன்ற குறியீடு இருப்பதால் அதை நாகம் என்று நினைத்து மக்கள் குழப்பமடைவது உண்டு, ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட வடிவம் எனக் கூறுகிறார் சாம்சன் "சாரைப் பாம்பின் கண்ணில் இரண்டு நிறங்கள் இருக்கும். கருவிழி கருப்பாகவும், சுற்றியுள்ள பகுதி தங்க நிறத்திலும் இருக்கும். ஆனால், நாகத்தின் கண் முற்றிலும் கருப்பாக இருக்கும்." அதோடு, "நாகப் பாம்பின் தலை, கழுத்து என உடல் முழுக்க ஒரே தடிமனாக இருக்கும். ஆனால் சாரைப் பாம்புக்கு தலை பெரிதாகவும், கழுத்து சிறிதாகவும், உடல் தடிமனாகவும் இருக்கும். நிறமும் நாகத்தின் உடல் முழுக்க பழுப்பு நிறத்திலும், சாரை மஞ்சள், பழுப்பு, சாம்பல் ஆகிய நிறங்களிலும் காணப்படுகின்றன. இதை வைத்து அவற்றை வேறுபடுத்திக் கொள்ள முடியும்," என்று விவரித்தார் சாம்சன். இதுபோக, ஓலைப் பாம்பு என்ற நஞ்சற்ற வகையும் நாகத்துடன் குழப்பிக் கொள்ளப்படுகிறது. அதற்குக் காரணம், ஓலைப் பாம்பின் தலையிலும் வேல்கம்பு போன்ற வடிவம் இருக்கும் என்பதுதான். ஆனால், அந்த வடிவம் நாகத்தில் இருப்பதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்கிறார் சாம்சன். கட்டு வரியன் பாம்பை அடையாளம் காண்பது எப்படி? பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,கட்டு வரியன் கட்டு வரியனை பொறுத்தவரை, பொதுவாக பிற பாம்புகளின் நாக்கு கருமையாக இருக்கும்போது, இவற்றுக்கு மட்டும் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் என்கிறார் முனைவர் மனோஜ். பிற பாம்புகளைப் போலன்றி, இது சற்று தனித்துவமான உருவ அமைப்பைக் கொண்டது என்கிறார் சாம்சன். "கட்டு வரியனின் உடல் முற்றிலுமாக அடர் கருப்பு நிறத்தில், மினுமினுப்பாக இருக்கும்." இந்த மினுமினுப்பு இவற்றுக்கே தனித்துவமானது எனக் கூறிய மனோஜ், "அவற்றின் உடலில் '=' போல இரட்டை இரட்டையாக வெந்நிறத்தில் மெல்லிய கோடுகள் இணையாக இருக்கும். அதுவும் தலையில் இருந்து கழுத்து வரைக்கும் இருக்காது, கழுத்தில் தொடங்கி வால் வரைக்கும் இருக்கும்," என்று விளக்கினார். சில நேரங்களில் தோலுரிக்கும் கட்டத்தில் பாம்பு இருந்தால் இந்தக் கோடுகள் தெளிவாகத் தெரியாது எனக் கூறிய சாம்சன், அத்தகைய சூழ்நிலையில் "இவற்றின் அடர் கருப்பு நிறத்தை வைத்து அடையாளம் காணலாம்" என்றார். பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,நஞ்சில்லாத வெள்ளிக்கோல் வரையன், அதன் உடலிலுள்ள பட்டையான கோடுகளின் காரணமாகச் சில நேரங்களில் கட்டு வரியன் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பொதுவாக, வெள்ளிக்கோல் வரையன் போன்ற பாம்பினங்களுடன் மக்கள் இவற்றைக் குழப்பிக் கொள்வதாகக் கூறிய சாம்சன், "கட்டு வரியன் போலன்றி, இந்த நஞ்சில்லாத பாம்புகளுக்குத் தலையில் இருந்தே பட்டையான கோடுகள் தொடங்கிவிடும்" என்றார். அதேபோல, எண்ணெய்ப் பனையன் என்ற பாம்பு வகையுடனும் மக்கள் இதைக் குழப்பிக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம், எண்ணெய்ப் பனையன் ஆலிவ் பச்சை நிறத்தில் இருப்பதும் உடலில் கோடுகள் இருப்பதும்தான். ஆனால், இந்த நஞ்சற்ற பாம்புக்கு கருப்பு நிறத்திலான கோடுகள்தான் இருக்கும். அதேபோல முனைவர் மனோஜின் கூற்றுப்படி, வெள்ளிக்கோல் வரையனின் உடல் உருண்டையாக இருக்கும். "ஆனால், கட்டு வரியனின் உடல் முக்கோண வடிவில், முதுகுப்பகுதி மேல்நோக்கிய வகையில் இருக்கும்." அடர்த்தியான கருநீல நிறத்தில், மினுமினுப்பாக இருப்பது இவற்றை அடையாளம் காண்பதற்கான தனித்துவமான பண்புகள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கண்ணாடி விரியன் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்? பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,கண்ணாடி விரியன் பொதுவாக விரியன் வகைப் பாம்புகள் என எடுத்துக்கொண்டால், அவற்றின் தலைப் பகுதி முக்கோண வடிவத்திலும் கழுத்து சிறியதாக, தடிமன் குறைவாகவும் இருக்கும் என்கிறார் முனைவர் மனோஜ். கண்ணாடி விரியனை பொறுத்தவரை, தலை முக்கோண வடிவில் காணப்படும் என்கிறார் மனோஜ். அதோடு, "அதன் உடல் முழுக்க முதுகின் மேற்புறத்தில் கருப்பு நிற எல்லைகளைக் கொண்ட பாதாம் பருப்பு போன்ற நீள்வட்ட வடிவிலான வட்டங்கள் ஒரு சங்கிலித் தொடரைப் போல நீண்டிருக்கும்," என்று அவர் விவரித்தார். இந்த நீள்வட்டங்களின் சங்கிலித் தொடர் தலை முதல் வால் வரைக்கும் ஒரே சீராக இருக்கும் எனவும், அதுவே பக்கவாட்டில் அதேபோன்ற நீள்வட்டங்கள் அளவில் சிறிதாக இருக்கும் எனவும் விளக்கினார் சாம்சன் கிருபாகரன். படக்குறிப்பு,யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ் மற்றுமொரு தனித்துவமான அம்சமாக முனைவர் மனோஜ், கண்ணாடி விரியனின் மூக்கு துவாரம் இருபுறமும் நன்கு பெரியதாக இருப்பதைக் குறிப்பிடுகிறார். முனைவர் மனோஜின் கூற்றுப்படி, அனைத்து கண்ணாடி விரியன்களுக்குமே இந்த வடிவம்தான் பொதுவாக இருக்கும் என்றாலும், மிக அரிதாக இவை எதுவுமே இல்லாமல் கோதுமை நிறத்தில் மட்டும் காணப்படுவதும் உண்டு. ஆனால், அத்தகைய கண்ணாடி விரியனை பார்ப்பது மிக மிக அரிது என்றும் அவர் குறிப்பிட்டார். இதைப் பார்த்துப் பல நேரங்களில் மலைப் பாம்பு என மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு, தீங்கற்றது எனக் கருதி அணுகுவதால் பாம்புக்கடி விபத்துகள் நிகழ்வதாகக் கூறுகிறார் சாம்சன். "மலைப் பாம்பு போலவே, இதன் உடல் நன்கு தடிமனாக இருப்பதால் பலரும் இதைத் தவறாகப் புரிந்துகொள்வது நடக்கிறது. ஆனால், மலைப்பாம்பின் உடலில் இருக்கும் வடிவங்கள் சீரற்றதாக இருக்கும்." என்றும் அவர் விவரித்தார். சுருட்டை விரியனை அடையாளம் காண்பது எப்படி? பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,சுருட்டை விரியனின் தலைப் பகுதியில் கூட்டல் (+) வடிவிலான குறியீடு இருக்கும் சுருட்டை விரியன் வறண்ட பகுதிகளில் வாழக்கூடியது. கிராமப்புறங்களில் இவற்றால் பாம்புக்கடி அவ்வப்போது நிகழ்கிறது. சுருட்டை விரியனின் தலை முதல் வால் வரைக்கும், "பக்கவாட்டில் இருபுறமும் ரம்பத்தின் கூர்முனை எப்படி வளைந்து வளைந்து இருக்குமோ அப்படி இருக்கும்" என்றார் மனோஜ். அதுவே அதன் முதுகின் மேற்புறம் பார்க்கையில் 'X' வடிவத்தில் கோடுகள் தென்படும் என்கிறார் சாம்சன். "அதுமட்டுமின்றி, சுருட்டை விரியனின் தலைப் பகுதியில் கூட்டல் குறியீடு '+' போன்றதொரு வடிவம் இருக்கும். கண்களைப் பொருத்தவரை, சுருட்டை விரியனுக்கு பூனைக் கண்களைப் போல நீள்வட்ட வடிவில், ஒரு மெல்லிய கோடு போன்ற வடிவிலான கருவிழியுடன் காணப்படும்." படக்குறிப்பு,சாம்சன் கிருபாகரன், பாம்பு மீட்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் கடந்த 9 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார் பொதுவாக பாம்புகள் நேராக முன்னோக்கி ஊர்ந்து செல்பவை. ஆனால், சுருட்டை விரியனை பொருத்தவரை, பக்கவாட்டில் செல்லக்கூடியவை. அதாவது, நேராக ஊர்ந்து செல்லாமல், உடலை வளைத்து, பக்கவாட்டில் நகர்ந்து செல்பவை" என்று விவரித்தார் மனோஜ். தமிழ்நாட்டில் காணப்படும் பாம்புகளில் சுருட்டை விரியன் மட்டுமே இவ்வாறாக பக்கவாட்டில் செல்லக்கூடியது என்று விளக்கிய அவர், மிக மெதுவாக நகரும் நேரங்களில் மட்டும் அவை நேராகச் செல்லும் என்றும் கூறினார். இதேபோல, வறண்ட நிலப்பரப்புகளிலேயே வாழக்கூடிய பூனைக்கண் பாம்புடன் இதைக் குழப்பிக் கொள்வது அடிக்கடி நடப்பதாகக் கூறும் சாம்சன், சுருட்டை விரியன் அதிகபட்சம் ஒரு அடி வரைதான் வளரும் என்றும் உடல் சற்று தடிமனாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,பூனைக்கண் பாம்பு ஆனால், பூனைக்கண் பாம்பைப் பொருத்தவரை, ஒன்றரை அடி வரைக்கும்கூட வளரும் எனவும் உடல் ஒல்லியாக நீளமாக இருக்கும் என்றும் இரு பாம்புகள் இடையிலான வேறுபாட்டை சாம்சன் விளக்கினார். சுருட்டை விரியனின் தலையில் கூட்டல் குறியீடு இருப்பதைப் போலவே, பூனைக்கண் பாம்பின் தலையில் 'Y' வடிவக் குறியீடு காணப்படும். பாம்புக்கடி காயத்தை வைத்து எந்த பாம்பு என்று அடையாளம் காண முடியுமா? ஒரு குறிப்பிட்ட அளவு வரைக்கும் பாம்புக்கடியால் ஏற்படும் காயத்தை வைத்து, கடித்தது நச்சுப் பாம்பாக இருக்கலாம் என்பதைக் கூற முடியும் என்றாலும், அதை 100% உறுதி செய்ய முடியாது என்கிறார் முனைவர் மனோஜ். அனைத்து நச்சுப் பாம்புகளுமே கடிக்கும்போது பதியும் நச்சுப் பற்களின் தடம் இரண்டாகத்தான் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை என்கிறார் அவர். எனவே, "ஒரு பல் உடைந்திருக்கும் நேரத்தில் அதன் அருகிலேயே மூன்றாவதாகப் புதிய பல் முளைத்துக் கொண்டிருக்கலாம். அதனால் இரண்டு பல் தடங்களுக்குப் பதிலாக மூன்று பல் தடங்கள் பதிந்திருக்கலாம்." அவரது கூற்றுப்படி, பாம்புகளுக்கு ஆயுள் முழுவதுமே பல் மீண்டும் வளரக்கூடியது. இதனால், "அவை கடித்த இடத்தில் இரண்டு, மூன்று அல்லது நான்கு பற்கள் கூடப் பதிந்திருக்கலாம். இல்லையெனில் ஒரேயொரு பல் கூடப் பதியலாம். சில நேரங்களில் ஒரு கீறல் மட்டுமே இருக்கலாம். நஞ்சு உடலுக்குள் செல்வதற்கு அதுவே போதுமானது." அதோடு, "ஒரு சில பாம்புகளில், அதாவது, விரியன் வகைப் பாம்புகள் கடித்தால், கடித்த இடத்தில், வீக்கம், ரத்தக் கசிவு போன்ற வெளிப்புற அடையாளங்களே நன்கு தெரியும். அவற்றின் மூலம் கடித்தது நச்சுப் பாம்புதான் என்பதைக் கண்டறிய முடியும்" என்று விளக்கினார் மனோஜ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8dyv9g1y78o1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்கள் பெயர்ப்பட்டியலில் என்னையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி ஈழப்பிரியன். நான் விளையாட்டை ரசித்து பார்ப்பதுண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம். ஆனால் போட்டியில் கலந்துகொள்ளும் ஆர்வமில்லை, அதனால் என்னை மன்னிக்கவும்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கு வினாக்களை வாசித்து கிரகிக்கவே ஒன்று இரண்டு மாதங்கள் தேவை போல் உள்ளது. சரி பார்ப்போம். அல்வாயர் மன்னிக்கவேண்டும். நான் முன்பு பெயர்களை குறிப்பிட்டபோது @alvayan பெயர் தவறிவிட்டது. உடனடியாக நினைவில் வந்தோர் அத்துடன் அண்மைக்காலத்தில் பதிவுகள் இட்டவர்களை; வாழ்த்துக்களில் பெயர்களை குறிப்பிட்டேன். உங்களுக்கும், அனைவருக்கும் விடுமுறைக்காலமும் ஆங்கில புதுவருடம் 2026ம் சிறப்பாக அமையட்டும்!!1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Justin @vaasi @விளங்க நினைப்பவன் @குமாரசாமி @goshan_che @island @விசுகு @நெடுமாறன் @வாத்தியார் @nedukkalapoovan @சுவைப்பிரியன் @suvy @Kavi arunasalam @வாலி @நந்தன் @Kandiah57 @உடையார் @nochchi @புலவர் @ragaa @kandiah Thillaivinayagalingam @satan @புங்கையூரன் @ரசோதரன் @ரஞ்சித் @Sasi_varnam @Sabesh @Maruthankerny @புரட்சிகர தமிழ்தேசியன் @அனைவருக்கும் ✨🎉1 point- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
முன்னாள் யாழ்பல்கலைக் கழக மாணவர் ஒருவரின் பதிவிலிருந்து….. THUGS’ LIFE EPRLF இயக்கம் இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கோடு வடக்கில் நிலைகொண்ட இந்திய இராணுவத்தோடு(IPKF) மீளவும் பிரசன்மாகியிருந்தது. ஒவ்வொரு பிரதான சந்திகளிலும், சாலைத் திருப்பங்களிலும் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்தது. EPRLF இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீளவும் வந்திறங்கினர். புலிகளை அழித்து இந்தியாவின் உதவியோடு ஈழத்தைக் கைப்பற்றுவோம் என EPRLF இன் தலைவர்களில் ஒருவரான வரதராஜப் பெருமாள் அறிக்கைவிடுக்கிறார். யாழ்ப்பாண நகரின் கோடியில் அமைந்திருந்த அசோக் ஹோட்டலில் இருந்து EPRLF இராணுவம் செயற்பட்டது. EPRLF குழுவினர், சந்தேகத்தின் பெரில் கைதுசெய்த பலரை வெட்டியே கொன்றனர் என்ற தகவல்கள் வெளியாகின. இந்திய இராணுவம் நிலைகொள்ள ஆரம்பித்த முதலாவது நாளில் இருந்தே மக்கள் விரோதக்க் கும்பலாகவே EPRLF தன்னை அறிமுகப்படுத்தியது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என்ற அனைத்தும் இலங்கை இராணுவத்திற்கு ஒப்பான வகையில் நிறைவேற்றப்பட்டன. தேசியப் போராட்டம், வர்க்கப் புரட்சி, மக்கள் இயக்கம் என்ற அழகான வார்த்தைகளை உச்சரித்த EPRLF இயக்கம் இந்திய இராணுவத்தின் துணைக் குழுவாக இயங்க ஆரம்பித்தது. 1988 ஆம் நடுப்பகுதில் EPRLF மக்கள் மீதான பல முனைத் தாக்குதல்களை ஆரம்பித்தது. குறிப்பாகப் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான கைதுகள் உச்சத்தைத் தொட்டிருந்தன. பல்கலைக் கழகத்திற்குக் கல்விகற்கச் செல்வதென்பதே பாதுகாபற்றதாக இருந்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் அமைப்புச் சார்பாக ஒரு துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டோம். 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் தலைமையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. அவ்வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் விடுதியில் நான் தங்கியிருந்தேன். விடுதிக்கு நேர் எதிராக அமைந்திருந்த தொழில் நுட்பக் கல்லூரி தேர்தல் சாவடியாகப் பயன்படுத்தப்பட்டது. விடுதிக்குப் பின்புறமிருந்து தேர்தல் சாவடியை நோக்கி புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனையடுத்து இந்திய இராணுவத்தினர் விடுதியைச் சுற்றிவளைத்தனர். தெருவில் நடமாடிய ஒவ்வொருவரையும் எழுந்தமானமாகத் தாக்கினர். விடுதியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வரவில்லை என்பதை விடுதியைச் சுற்றிவளைத்திருந்த இந்திய இராணுவத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு என்னை அவர்களிடம் சென்று பேசுமாறு மாணவர்கள் முடிவெடுத்தனர். அவர்களிடம் பேசச் சென்ற போது நான் தேர்தல் சாவடியிலிருந்த இராணுவத் தளபதியிடம் பேசுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டேன். பஞ்சாபிக் காரரான அவரது முன்னால் சென்ற போது எனது மேலங்கியில் எண்ணைப் படிவு காணப்படுவதாகவும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது நானாக இருக்க வேண்டுமென முடிவெடுக்கிறார். என்னை தீர விசாரிக்குமாறு சில இராணுவத்தினரிடம் அனுப்பி வைக்கிறார். அவர்கள் என்னைத் தாக்க ஆரம்பிக்கின்றனர். இரண்டு இராணுவத்தினர் ஒரு மேசையுடன் இணைத்து என்னைக் கட்டிவைத்துவிட்டு மிருகத் தனமாக அடிக்க ஆரம்பிக்கின்றனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக எனக்கு அடி விழுகிறது. இறுதியில் நான் மயக்கமடைந்து விட்டேன். மயக்கம் தெளிந்த போது எனக்கு சிறிதளவு நீர் அருந்த அனுமதித்தார்கள். தேர்தல் முடிவடைந்திருந்தது. இராணுவத்தினர் முகாமிற்கு செல்ல ஆரம்பிக்கின்றனர். எனது கைகளை இறுகக்கட்டி இராணுவ வாகனத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றனர். சேகர் என்ற தமிழ் அதிகாரி அங்கு வருகிறார். என்னைப் புலியா எனக் கேட்கிறார். இல்லை என்றதும் தனது சப்பாத்துக் கால்களால் எனது முதுகில் உதைகிறார். சில நிமிடங்கள் நினைவிழந்த நிலையில் மருதானாமடம் பிரிவைச் சேர்ந்தா இராணுவத்தினரின் வாகனத்தில் ஏற்றப்படுகிறேன். அங்கு என்னை ஒப்ப்டைத்தவர் சேகர். அந்த அணியின் பொறுப்பதிகாரிக்கு நான் புலிகள் சார்ந்தவன் என்று கூறியே ஒப்படைக்கப்படுகிறேன். மருதனாமடம் முகாமிற்கு அவர்கள் என்னைக் கொண்டு செல்லும் வரைக்கும் ஏறத்தாழ 10 நிமிட நேரமாக பலர் அங்கும் இங்குமாகத் தாக்குதல் நடத்தினர். சிகரட் புகைத்துக்கொண்டிருந்த இராணுவதினர் ஒருவர் என் மீதே அதனை அணைக்கிறார். பல தடவைகள் உரத்து அலறியும் எந்தப் பயனும் இல்லை. எல்லாமே மரத்துப் போனது போன்ற உணர்வு. இறுதியாக முகாமை அடைந்ததும் அங்கு இராணுவ வண்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்த எனது கால்களைப் பிடித்து இழுத்ததில் எனது தலை அடிபட விழுந்ததில் மற்றொரு தடவை நினைவிழக்கிறேன். நான் விழித்துக்கொண்ட போது என்னைச் சுற்றிப் பலர் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் EPRLF உறுப்பினர்கள். எனக்குத் தெரிந்த ஒருவரையும் காணக்கூடியதாக இருந்தது. ஒரு சிலர் குடி போதையில் இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எல்லோருமே என்னிடம் பல கேள்விகளைக் கேட்கின்றனர். அங்கிருந்த EPRLF உறுப்பினர் ஒருவர் நான் இந்திய இராணுவத்திற்கு எதிராகச் செயற்படுவது தனக்குத் தெரியும் என்கிறார். உடனடியாகவே கேள்விகள் நிறுத்தப்பட்டு சாரமாரியாகத் தாக்குதல் நடத்த ஆரம்பிக்கின்றனர். தமக்குத் தெரிந்த சித்திரவதை முறைமகள் அனைத்தையும் கையாள்கின்றனர். ஒரு புலி உறுப்பினரையாவது காட்டிக்கொடுக்காவிட்டல் கொன்றுவிடப் போவதாகக் கூறுகின்றனர். எனக்கு முன்னமே தெரிந்த EPRLF உறுப்பினர் அங்கிருந்து செல்லும் போது எனது முதுகில் வில்லுக் கத்தியால் கீறிவிட்டு மறு நாள் வரைக்கு இது இரத்தம் சொட்டப் போதுமானது எனக் கூறிவிட்டு அகன்று செல்கின்றார். மருதனாமடம் முகாம் வழமையாகக் கைதிகளைத் தடுத்துவைப்பதற்கான முகாம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு நேரமெடுக்கவில்லை. முகாமில் என்னைத் தவிர வேறு கைதிகளைக் காணமுடியவில்லை. இரவு நெடு நேரமாக கிணற்றிற்கு அருகிலிருந்த மரத்தோடு என்னைக் கட்டிவைத்திருந்தனர். நள்ளிரவு இருக்கலாம் ஒரு இந்திய இராணுவத்தினர் எனக்கு அருக்கில் வந்து குடிப்பதற்கு நீர் கொண்டுவந்து தந்த பின்னர் முகாமின் பின்புறதில் இருந்த மலசல கூடத்திற்குப் பின்புறம் காணப்பட்ட அறையில் அடைத்துவிட்டனர். இரவு உறங்கியதாக நினைவில்லை. அதிகாலையில் உறங்க முற்பட்ட வேளையில் சற்று உணவோடு அறைக்குள் எனைத் தள்ளிய இராணுவ சிப்பாய் வருகின்றார். சற்றுப் பின்னதாக இரண்டு EPRLF பிரதான உறுப்பினர்கள் வருகின்றனர். ஒருவர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தங்கன் என்ற மானிப்பாயைச் சேர்ந்தவர். மற்றவர் பிரதீப் என்பவர். நீ எப்போது புலியில் சேர்ந்தாய் என்று கேட்டவாறே தங்கன் என்னைச் சாரமாரியாகத் தாக்குகிறார். கிணற்றிற்கு அருகில் அழைத்துச்சென்ற அவர்கள் நீர் நிரம்பிய ஒரு வாளிக்குள் எனது தலையை அமிழ்த்துகின்றனர். நான் மூச்சுத்திணறும் வரைக்கும் நீருக்குள் எனது தலையை வைத்திருக்கின்றனர். என்னிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாமையால் அறைக்கு அழைத்துச் சென்று மீண்டும் தாக்குதல்களைத் தொடர்கின்றனர். அப்போது தமிழ்ப் பேசும் இந்திய இராணுவ அதிகாரி சேகர் அங்கு வருகின்றார். தனது பங்கிற்கு அறையின் மூலையில் உட்காரவைக்கப்பட்டிருந்த என்னை கால்களால் உதைக்கிறார். என்னை இங்கு வைத்து விசாரணை செய்தால் உண்மை சொல்லப்போவதில்லை என்றும் மானிப்பாயில் உள்ள விசேட சித்திரவதை முகாமிற்கு என்னை அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறுகின்றனர். அங்கே மின்சாரம் பாய்ச்சும் உபகரணங்கள் உட்பட பல சித்திரவதைக் கருவிகள் இருப்பதாகவும் நான் எப்படியும் உண்மை சொல்வேன் என்றும் பேசிக்கொள்கின்றனர். அதன் பின்னர் வெளியே வாசலுக்குச் சென்று அங்கு சித்திரவதைச் செய்யப்படும் போது இறந்துபோன ஒருவரைப்பற்றியும் பேசிக்கொள்கின்றனர். அவர்கள் அங்கிருந்து அகன்ற சிறிது நேரத்தில் அறைக்குள் வந்த உப நிலை இராணுவ அதிகாரி ஒருவர் தன்னை நாகரீகமாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ராஜஸ்தானைச் சேந்தவர் என்கிறார். நான் உண்மையில் புலி இயக்கத்தைச் சார்ந்தவனா என்று கேட்கிறார். நான் நடந்தவற்றை விபரிக்கிறேன். அவர் சித்திரவதை முகாமில் நடப்பவற்றை விபரிக்கிறார். கைகளில் நகங்களைப் பிடுங்குவார்கள், கண்களில் ஊசி ஏற்றுவார்கள் என்று மனித நாகரீகங்கள் கேட்டிராத பல சித்திரவதைகளைப் பற்றிக் கூறுகின்றார். அவர் கூறும் போதே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. முதல் நாள் இரவு EPRLF உறுப்பினர் கீறிய கத்திக்காயம் மேலும் வலித்தது. யாராவது எனக்குத் தெரிந்த பல்கலைகழகப் புலி உறுப்பினர் தொடர்பான தகவல்களை மட்டும் கூறினால் என்னை இங்கிருந்து விடுதலை செய்துவிடுவதாகக் கூறினார். வெள்ளிக்கிளமை விடுமுறை நாளொன்றில் கைது செய்யப்படிருந்தேன். அன்று சனி. இன்னும் ஒரு ஞாயிறு கழிந்தால் திங்கள் பல்கலைக் கழகத்தில் போராட ஆரம்பித்துவிடுவார்கள். போராட்டம் ஆரம்பித்தபின்னர் அடிகாயங்களோடு என்னை விடுதலை செய்ய மாட்டார்கள். ஒன்றில் கொலை செய்துவிடுவார்கள் அல்லது சித்திரவதை முகாமில் நீண்டகாலம் வைத்திருப்பார்கள் என்கிறார். பல்கலைக் கழகதிலிருந்து சிலர் அணுகியதாகவும் இராணுவ அதிகாரிகள் நான் கைதானதை மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார். கைதானதை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லாத காரணத்தால் கொலை செய்து அழித்துவிடுவது இலகுவானது என்கிறார். அவரோடு ஒத்துழைத்தால் விடுதலைக்காக ஆவன செய்வதாகக் கூறுகிறார். எனக்குத் யாரையும் தெரியாது என்று மீண்டும் கூறியதும் எதுவும் பேசாமல் அங்கிருந்து அகன்றுவிட்டார். மதிய உணவு தரப்பட்டதாக நினைவு. மாலை வேளையில் தங்கன் மீண்டும் என்னை வந்து மிரட்டிவிட்டுச் சென்றார். ஞாயிறு மாலை சித்திரவதை முகாமில் சந்திப்பதாகக் கூறினார். சில மணி நேரங்களின் பின்னர் அதே உப நிலை இராணுவ அதிகாரி வருகின்றார். புலிகளின் ஒரு உறுப்பினரை காட்டிக்கொடுத்த பின்னர் விடுதலையாகி வெளியில் சென்று தமக்குத் தகவல் தருமாறு செயற்பட்டால் உடனடியாகவே விடுதலை செய்வதாகக் கூறுகிறார். தவிர, நான் அதிகமாகத் தாக்கப்பட்டிருப்பதால் ஏனைய கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு அனுப்பத் தயாரில்லை என்றும் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்த அடிப்படையில் விடுதலை செய்யலாம் அல்லது சித்திரவதை முகாமிற்கு அனுப்ப வேண்டியதாக இருக்கும் என்கிறார். நான் இப்போது பேச ஆரம்பிக்கிறேன், “உங்களுடைய நாட்டில் வெள்ளையர்களை வெளியேற்றுவதற்கான போராட்டம் நடைபெற்றபோது மக்கள் ஆதரவு இருந்ததைப் போன்றே இப்போதும் புலிகளை மக்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் புலிகள் தலைமறைவு அமைப்பு. மக்களுக்குப் பழக்கப்பட்டவர்கள் இப்போது அங்கே இப்போது தலைமறைவாகிவிட்டார்கள். காட்டிக்கொடுப்பதற்கு யாரும் இல்லை. ஆனால் நீங்கள் அப்பாவிகளைத் தாக்கினால் அவர்கள் புலிகளோடு இணைவதைத் தவிர வேறு வழி இல்லை என்றாகிவிடும்” என்பன போன்ற விடயங்களைக் கூறுகிறேன். ஆமோதிப்பது போன்று தலையசைத்துவிட்டுச் செல்கிறார். அவரை மீண்டும் நான் காணவில்லை. அன்று இரவு சித்திரவதைகள் குறைந்திருந்தன. மறு நாள் ஞாயிறு, மதியம் அளவில் முகாமின் முன்னரங்கில் காவலுக்கு நின்றிருந்த இராணுவத்தோடு என்னை நிறுத்தி வைத்தனர். தெருவால் புலி உறுப்பினர்கள் சென்றால் காட்டிக்கொடுக்குமாறு பணிக்கப்பட்டேன். துப்பாக்கியோடு ஒரு இராணுவச் சிப்பாய் தெருவில் போகிறவர்களை கண்காணித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட என்னைத் தாக்குவார். பொழுது சாய்ந்ததும் மறுபடி அறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். EPRLF உறுப்பினர்கள் வந்தார்கள். மானிப்பாய் முகாமிலிருந்து பிரதீப்பும் வந்திருந்தார். “*நல்ல தமிழ்” *மட்டும் தான் “தோழர்” பேசினார். வெளியே ஒடிச்சென்று பெரிய தடி ஒன்றைக் கொண்டுவந்து தாக்கியது நினைவிருக்கிறது. ஒரு கட்டத்தில் நான் நினைவிழந்துவிட்டேன். கண்விழித்த் போது யாரும் அருகில் இல்லை. நீண்ட நேரத்தின் பின்னர் இராணுவச் சிப்பாய் ஒருவர் வந்து ஏதோ ஹிந்தியில் கேட்டார். நான் பதில் சொல்லவில்லை. திட்டியபடி பல தடவை முகத்தில் அறைந்தார். அவர்கள் கூறியபடி சித்திரவதை முகாமிற்கு நான் கூட்டிச் செல்லப்படவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. மறு நாள் அதிகாலை அடி உதை எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தது. சித்திரவதை முகாமிற்குக் கொண்டு செல்லப்போவதாகவும் என்னை இராணுவ உடுப்பை அணிந்து கொள்ளுமாறும் ஒரு அதிகாரி உடை, தொப்பி ஆகியவற்றுடன் வந்தார். மதியத்திற்குச் சற்றுப்பின்னர், இராணுவ உடையுடன், பின்பக்கம் திறந்த இராணுவ வண்டியில் ஏற்றப்படுகிறேன். சித்திரவதை முகாமிற்குச் செல்லும் வழியில் எனது மானிப்பாய் வீட்டைச் சோதனையிடப் போவதாகச் சொல்கிறார்கள். வீட்டிற்குச் செல்லும் வழியில் பல்கலைக்கழகத்தில் போராட்டத்திற்கான தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக உளவாளிகள் மூலம் தகவல்கள் கிடைத்திருப்பதாகச் பொறுப்பதிகாரி சொல்கிறார். எனது வீட்டிற்குச் செல்லும் வழியில் கடை ஒன்றின் அருகில் சற்று மறைவான இடமொன்றில் என்னையும் இன்னொரு இராணுவ அதிகாரியை காவலுக்கும் நிறுத்திவிட்டு வீட்டைச் சோதனையிடச் செல்கிறார்கள். அவ்வேளையில் எனது வீட்டில் எனது ஆசிரியராகவிருந்த கலாநிதி சிறீதரன், பேராசிரியை ரஜனி திரணகம உட்பட உறவினர்கள், நண்பர்கள் பலர் “காணாமல்போன” என்னைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்ததை பின்னதாக அறியக் கூடியதாக இருந்தது. அங்கு சென்ற இந்திய இராணுவத்தினர் தாங்கள் என்னைக் கைது செய்யவில்லை என்றும், வீட்டில் ஒளிந்திருக்கிறேனா எனச் சோதனையிட வந்ததாகவும் கூறியிருந்தனர். எனக்குக் காவலுக்கு நின்றிருந்த இராணுவச் சிப்பாய் அருகிலிருந்த கடைக்கு பீடி வாங்குவதற்காகச் செல்கிறார். அவ்வேளையில் எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெருவால் நடந்து செல்கிறார். அவரை நான் சைகை காட்டி அழைத்ததும் என்னை நோக்கி வருகிறார். அடி விழுந்ததில் முகம் முழுவதும் வீக்கமடைந்திருந்ததால், கூர்க்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அழைப்பதாகக் கருதியே அவர் என்னை அணுகியதாக பின்னதாக அவர் என்னிடம் கூறியிருந்தார். அருகில் வந்ததும் என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர் என்னுடன் ஏதும் பேசாமல் உடனடியாகவே மறுபக்கம் திரும்பிச் சென்று எனது வீட்டில் விடயத்தைத் தெரிவித்திருக்கிறார். வீட்டில் இருந்த அனைவரும் கடையை நோக்கி ஓடிச் செல்ல, நிலமையைப் புரிந்துகொண்ட இந்திய இராணுவத்தினர் அவசர அவசரமாக வாகனத்தை நோக்கி விரைந்து அதனைச் செலுத்த ஆரம்பித்தனர். வாகனத்தின் பின்னால் எனது குடும்பத்தினர் ,மற்றும் அவர்களுடனிருந்த பேராசியர்கள் ஓடிவருவதைக் காணக்கூடியதாக இருந்தது. இப்போது நான் முகாமில் உயிரோடு வைக்கப்பட்டிருப்பதைப் பலர் சாட்சியாகக் கண்டிருக்கிறார்கள். இராணுவ வாகனம் இடையில் நிறுத்தப்பட்டு யாரையோ தொடர்பு கொள்கிறார்கள். இப்போது அவர்களது திட்டம் மாறியிருக்க வேண்டும். மருதனாமடம் முகாமிற்கு மீண்டும் கொண்டு செல்லப்படுகிறேன். அன்று மாலைவரை எனக்கு யாரும் அடிக்கவில்லை. அன்று இரவிற்குள் எனது வீட்டார், ரஜனி திரணகம போன்றோர் பல அதிகாரிகளைச் சந்தித்து EPRLF செயலாளர் பத்மனாபாவையும் சந்திக்கின்றனர். அன்று இரவே விடுதலை செய்யப்படுகிறேன். காயங்கள் குணமாகும் வரை வெளியே வரக்கூடாது, பத்திரிகைகளில் படம் வரக்கூடாது, என்ற எச்சரிக்கையின் பின்னர் எனதுகுடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகிறேன். * வைமன் வீதி முகாமில் நான் சந்தித்த வாசு இப்போது கே.பி இன் தன்னார்வ நிறுவனத்தின் பிரித்தானிய முகவர்…பிரித்தானியாவில் வசிக்கும் புலி எதிர்ப்பாளர். கலாநிதி சிறீ மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயற்பாட்டாளர், ஜெரோம் சில காலங்களின் பின்னர் மாரடைப்பால் மரணித்துவிட்டார், கிருபன் பிரான்சில் வசிக்கிறார், பிரதீப் பிரான்சின் புறநகர்ப் பகுதியில் வசிப்பதாகக் கூறுகிறார்கள். நான் மீண்டும் எழுத்துக்களோடு பிரித்தானியத் தெருக்களில். Naveen Nava, Rahulan Nadarajah @ரஞ்சித் , @நன்னிச் சோழன்1 point- கருத்து படங்கள்
1 point1 point- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
1 point- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
டங்க டலீவர் டக்கா அவர்களையும், ரணில் போல ஒரு “நிக்காத வழக்கில்” அனுர அரசு கைது செய்து நாடகம் ஆடுகிறது. ரணில், டக்லசை எல்லாம் தண்டிப்பது அல்ல அனுரவின் நோக்கம். டக்காவும் அனுரவும் ஒரே கூட்டணியில் இருந்தோர்தான். #ஈயம் பூசுனா மாரியும் இருக்கோணும், பூசவும் கூடாது1 point- கருத்து படங்கள்
1 point1 point- கருத்து படங்கள்
1 point- நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
1930-1940 களில் இருந்தே அப்பாவி தமிழனை சிங்களவன் கலவரங்கள் பல உருவாக்கி தாக்குவதும், அழிப்பதுமாகவே வாழ்க்கை ஓட... எங்கோ இருந்து வந்த வண்டுப்பையன் (மேதகு) 1983 இல் நின்று அடித்து சிங்களத்தை ஒரு கணம் நிலை குழையவைத்தான். அப்போ அந்த செயலை நித்திரையில் இருந்து எழும்பிய ஒருவரின் செயலாக பார்த்தோமா ? இல்லை தானே. சுமந்திரனின் அந்த "கருத்து" வெறும் ஆறுதல் படுத்தல் அவ்வளவே. நமக்கு தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் செத்தவீடு நடந்தால் அவர்கள் துயரத்தில் பங்கு கொண்டு ஏதாவது உதவி வெண்டுமானால் தயங்காமல் அழையுங்கள் என்று சொல்லும் பார்மாலிட்டி போன்றது. ஆனாலும் அந்த சொல்லில் ஒரு ஆற்றுப்படுத்தல், நம்பிக்கையூட்டல், இப்படி பல அம்சங்கள் இருக்கும். இதில் பெரும் தலைவர் மேதகுவையும், சுமந்திரனையும் தொடர்பு படுத்தி பேசியதாக நினைக்க வேண்டாம்.1 point- இலங்கை ஏன் ‘டித்வா’ சூறாவளிக்கு தயாராக இருக்கவில்லை?
1 point- நான் ரசித்த விளம்பரம் .
1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கருத்து படங்கள்