Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்8Points88402Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்6Points32727Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்3Points39049Posts -
புலவர்
கருத்துக்கள உறவுகள்2Points5876Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/18/26 in all areas
-
அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
உண்மையில்... தமிழரசு கட்சியை சிதைத்துக் கொண்டு இருக்கும், சுத்துமாத்து சுமந்திரனைத் தான் வெளியேற்ற வேண்டும். இந்த, நரகத்தின் முள்ளு தமிழரசு கட்சியில் இருந்தால், இன்னும் பல தோல்விகளை பாரம்பரியமான தமிழரசு கட்சி சந்திக்க வேண்டி வரும். பல தோல்விகளை சந்தித்த சுமந்திரனை... உடனே, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள்.3 points
-
அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
கடைசியில் சுமத்திரன்மட்டுந்தான் கட்சியில் மிஞ்சுவார் போல இருக்கிறது. அரியநேந்திரனுக்கு சங்கு. உன்னோட சேர்ந்து நான் செய்யும் காரியம் ரொம் பயங்கரமாக இருக்கும் என்ற வாக்கிற்கு அமைய சங்குக் கூட்டணியும் பத்தி எழுத்தாளர்களும் அரிநேந்திரனுக்கு சங்கு ஊதிவிட்டு பின்வாசல் வழியாக சுமத்திரனோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.2 points
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை பரராஜசிங்கம் ஐயாவின் மலசல கூடத்தை பூரணப்படுத்த குழிவெட்டும் பணிகள் முடிவடைந்துள்ளன. பொன்னாலை ஏரம்பு ஐயாவின் 3 பிள்ளைகளின் மலசலகூடம் பிளாற் புதிதாக போடப்பட்டுள்ளது. எஞ்சிய சல்லி, மணல், சீமந்து படங்கள்.2 points
-
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
மரியா மரியாதையா கொண்டு வந்து குடுத்திரு இல்லாட்டி மற்றவருக்கு நடந்தது தெரியும் தானே என மரியாதையா சொல்லியிருப்பாரு நைனா2 points
-
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்! 16 Jan, 2026 | 12:48 PM வெனிசுவெலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவைச் சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததோடு, மரியா கொரினா மச்சாடோவுக்கு தனது நன்றியினையும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று வியாழக்கிழமை (15) வெள்ளை மாளிகைக்கு சென்று ட்ரம்பை சந்தித்த வெனிசுவெலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தான் பெற்ற 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுப் பதக்கத்தை ட்ரம்பிடம் வழங்கினார். தனது நாட்டின் சுதந்திரத்துக்கான ட்ரம்பின் தனித்துவமான அர்ப்பணிப்புக்கு, தான் அளிக்கும் கௌரவம் என்று கூறிய மரியா கொரினா மச்சாடோவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ட்ரம்ப் சமூக ஊடகத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். “மரியா கொரினா மச்சாடோ, பலவற்றைக் கடந்து வந்த ஒரு அற்புதமான பெண்மணி. நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல். நன்றி மரியா!” என்றும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்த நோபல் பரிசுக்காக உலகில் இடம்பெறும் போர்களையெல்லாம் நிறுத்தியதாக ட்ரம்ப் வெற்றி முழக்கமிட்டதாக சர்வதேச ஊடகங்களும் தெரிவித்திருந்தன. எனினும், 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப் பெறாத காரணத்தினாலும் அந்தப் பரிசை மரியா பெற்றதனாலும் தனது அதிருப்தியை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார். அதன் பின்னர், வெனிசுவெலா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், ட்ரம்பின் ஆலோசனைப்படி அமெரிக்க இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதன் பின்னர், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், ட்ரம்பின் செயலுக்காக, தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கு வழங்கி கௌரவிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். எனினும், ஒருவர் பெற்ற நோபல் பரிசை இன்னொருவருக்கு கைமாற்ற முடியாது என நோபல் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே நேற்று மரியா, தனது அமைதிக்கான நோபல் பரிசை, வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தபோது அவருக்கு வழங்கியுள்ளார். Virakesari.lk“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ;...“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!1 point
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அடுத்த கட்டத்திற்கான செயற்பாடுகளை தொடர்வது நல்லது என நினைக்கின்றேன் தேவைக்கு அதிகமான மூலப்பொருட்களை அடுத்த கட்ட வேலைகளுக்குப் பாவிக்கலாம் தானே1 point
-
அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
யார்யாரெல்லாம் புலி அனுதாபிகளோ அவர்களனைவரும் நீக்கப்படுவர். அடுத்தவர் சிறீதரன்? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point
-
வெண்முகில் நகரம் – நாவல் வாசிப்பனுபவம்
வெண்முகில் நகரம் – நாவல் வாசிப்பனுபவம் இராதா கிருஷ்ணன் வெண்முகில் நகரம் நாவல் வாசித்து முடித்தவுடன் மனதில் நின்ற முதல் கதாபாத்திரம் என்று பார்த்தால் பூரிசிரவஸ் வருகிறார். அழகான மூன்று காதல் வாய்ப்புகள் அமைகிறது. அமைந்த சில காலங்களிலேயே அவை இல்லாமல் ஆகி விடுகின்றன .கனவுடன் செல்லத் தொடங்கி முடிவில் வெறும் கையுடன் தனது நாட்டிற்கு செல்லும் நிலையில் நாவல் முடிகிறது. கனவுகளை பின்தொடர்ந்து முடிவில் வெறும் கையுடன் திரும்புகிறான் . இவனுக்கு இணையான இன்னொரு பாத்திரமாக நாவலில் சாத்யகி வருகிறான். அவனுக்கு தன்னை கிருஷ்ணனுக்கு அளிப்பதை தவிர வேறு கனவுகள் இல்லை. கிருஷ்ணனுக்கு தொண்டு செய்வதே அவனது விருப்பமாக இருக்கிறது .அதற்காக தொழுமர் ( அடிமை) பணியில் இணையும் அளவுக்கு கிருஷ்ணர் மீது அன்பு கொண்டிருக்கிறார். மற்றபடி அவருக்கு என தனி விருப்பம் ஏதும் இல்லை. ஆனால் அவருக்கு கிருஷ்ணனிடம் வந்த பிறகு இளவரசருக்கு இணையான மதிப்பை எல்லோரும் அளிக்கிறார்கள். எங்கும் அவனால் நிமிர்ந்து நின்று பேச முடிகிறது. எல்லாம் அவனிடம் வந்து அமைகிறது. கிருஷ்ணர் அவனுக்கு பானுமதியிடம் சொல்லி பெண் பார்க்கிறார், வில்லில் சிறந்தவரான அர்ஜுனனிடம் மாணவராக சேர்க்கிறார். அவர் எதுவும் அடைய விரும்புவதில்லை. ஆனால் எல்லாம் அவரிடம் வந்து சேர்கிறது . ஆனால் அவர் எதையும் தனக்குள் ஏற்றாமல் தான் கிருஷ்ணனின் அடிமை / சேவகன் என்று மட்டுமே தன்னை முன்வைக்கிறார் ! நாவலில் ஆரம்பம் என்பது பாண்டவர்கள் திரௌபதியை மணந்த பின் உறவு கொள்வதற்கு முன்பாக ஆரம்பிக்கிறது. ஐந்து கணவன்கள் ஒரு மனைவி என்பதை ஏற்க முடியாமல் தவிக்கும், என்ன செய்வது நிலையில் இருந்து ஆரம்பிக்கிறது. இதை வெறும் திரௌபதி – பாண்டவர்கள் நிலையில் இல்லாமல் சாதாரண ஒரு பெண் இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட கணவன்கள் இருந்தால் அதை அந்த கணவன்கள் எவ்வாறு அணுகுவது என்பதாகவும் காண இயலும். ஒரு கணவன் பல மனைவி என்பது நமக்கு அதிர்ச்சி அளிப்பது இல்லை, ஆனால் பல கணவன் ஒரு மனைவி என்பது சட்டென்று அதிர்ச்சி அளிக்கிறது . நம் வழக்கத்தில் மனைவிக்கு ஒரு கணவன், அவனுக்கு மட்டும் அவள் உரியவள் என்றே அணுகப் படுகிறது. அப்படிதான் நாம் அணுகுகிறோம் . இந்த நாவல் எதிர் சூழலை எப்படி அணுக இயலும் என்பதைப் பேசுகிறது. அதிர்ச்சி அளித்தாலும் மனைவி என்ற இடத்தில் அன்னையை வைத்து இந்த நாவல் பேசுகிறது . அன்னைக்கு ஐந்து குழந்தைகள் இருக்குமெனில் ஏன் ஐந்து கணவன்கள் என்பது இருக்க கூடாது என்கிறது . அதாவது குழந்தைகள் அன்னையிடம் அன்பு செலுத்த, அன்னை குழந்தையிடம் அன்பு செலுத்த இன்னொரு குழந்தை தடையாக இருப்பது இல்லை , தடையாக தோன்றுவதில்லை அல்லவா, அது போல அணுகுங்கள் என்று பாண்டவர்களிடம் முன்வைக்கிறது. இன்னொருவருடன் உறவு என்பதை ஆண் யோசிக்கும் இடத்தில் நதியை காட்டி நதி இதுவரை வந்த பின்னணியும் , இனி செல்லும் பின்னணியும் நாம் பார்க்க வேண்டியதில்லை / பார்ப்பதில்லை தானே என்கிறது. உன்னுடன் இருக்கும் போது உன்னுடையவள் என்பதை மட்டும் எண்ணிக் கொள் என்று சொல்கிறது அல்லது அவ்வாறு நான் புரிந்து கொண்டேன் ! திரௌபதியை விளக்க புலோமை கதை சொல்லப்படுகிறது. திரௌபதியை புரிந்து கொள்ள நமக்கு மிக உதவும் பகுதி அது . நாவலில் ஆரம்ப பகுதியில் நிறைய புராணக் கதைகள் சூதர் பாடல்கள் வழியாக சொல்ல படுகிறது. அதில் இந்திரத்யும்னன் கதை, நீரர மகளிர் கதை என நிறைய வருகிறது . அவை கதை மாந்தர் மற்றும் அந்நேர மனநிலை , அவர்கள் எதிர் கொள்ளும் சூழல் சாரந்து வாசிக்கும் நமக்கு மேலதிகமாக புரிந்து கொள்ள மிக உதவுகிறது . இதில் இந்திரத்யும்னன் கதை வழியாக தென்னக நிலமும் பாரத கதையில் இணைகிறது . மேலும் இந்த கதை கூட இரண்டு கதைகளாக வருகிறது. ஒன்று சூதர்கள் சொல்வது , இன்னொன்று திரௌபதி சொல்வது . இந்த கதை பற்றி இணையத்தில் தேடிய போது கதையில் நாவலாசிரியர் உருவாக்கியிருந்த கோணம் முன்பு இருந்த கதை என இவற்றைக் கொண்டு ஆராய்ந்து அறிய நிறைய வெளிகள் இருக்கிறது . எனக்கு இந்திரத்யும்னன் தன்னை அறிந்தவரை தேடும் பகுதியில் கூட ஒரு வரிசை வைப்புமுறை இருக்கிறது என்று தோன்றியது . அவன் உடல் , அவன் மனத்தில் இருந்த காமம் , அதன் ஊற்றுமுகம் , அதைத் தாண்டிய அவனின் இருப்பு என செல்வதில் வைப்பு முறை இருப்பதாக உணர்ந்தேன் . நாவலில் இருக்கும் ஒரு சுவாரஸ்யம் என்பது ஒரு பாத்திரத்தின் இயல்புக்கு நேர் எதிராக இன்னொரு பாத்திரம் கூடவே இருக்கும் . உதாரணமாக புலோமை நெருப்பு போன்றவள் நிலைகொள்ளாதவள் என்றால், அவள் தமக்கை காலகை குளிர்ந்தவள் என புலோமைக்கு நேர் எதிரான குணங்களுடன் இருக்கிறது . நாவலில் போர்க் காட்சியும் வருகிறது . போர் என்றால் பலம் கொண்டவர்கள் வெல்வார்கள் என்று எண்ணுவோம் , இந்த போரில் வெல்ல வாய்ப்பு இருந்த, வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த கர்ணன் தோல்வியை அடைகிறான் . போரில் பங்கு பெறாத வெளியில் நின்று வேடிக்கை பார்த்த திரௌபதி தன் சமயோசித செயல்களால் வெற்றியை தங்கள் பக்கம் கொண்டு வருகிறாள் . வெல்லும் சூழலை உருவாக்கி அளிக்கிறாள் . பாண்டவர்கள் திரௌபதியிடம் முதல் உடல் உறவு கொள்ளும் நாள் காட்சிகளில் பாண்டவர்களின் மனநிலையை அறிய முடிவதை போல திரௌபதியையும் அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக மாயை, அவள் திரௌபதிதான் என்று எண்ணுகிறேன் . அர்ஜுனனிடம் அப்படியே தன்னை அளிக்கும் மாயை திரௌபதியில் இருக்கும் ஒருத்திதான் என்று வாசிக்கும் போது தோன்றியது . ஜெயமோகனின் முதன்மையான புனைவு திறன்களில் ஒன்று நிலகாட்சிகளை விவரிப்பது . நம்மால் அந்த நிலங்களை நேரில் பார்ப்பது போல வாசிக்கும் போது உணர முடியும் . பூரிசிரவஸ் பாத்திரம் துவங்கும் பகுதியில் மலை பிரதேசத்தில் பயணிக்கும் இடங்கள் மற்றும் மத்ர நாட்டில் பூரிசிரவஸ் காணும் காட்சிகள் , சாத்யகி வழியாக துவாரகை நில காட்சிகள் என பல பகுதிகளில் நில காட்சிகள் விரிவாக விவரிக்கப்படுகின்றன. வெண்முரசில் இருக்கும் முக்கியமான ஒரு சிறப்பம்சம் என்பது எந்த ஒரு விசயத்திற்கும் ஒரு கோணம் இல்லாது பல கோணப் பார்வைகள் காட்டப் படுகிறது . உதாரணமாக வெண்முரசு ஆரம்பத்தில் வந்த பால்ஹிகர் தனது மூத்தவருக்கு மன்னர் வாய்ப்பு இல்லாத போது மூத்தவர் அரண்மனையில் இருந்து வெளியேறிய போது இனி தனக்கும் இந்த இடம் தேவையில்லை என்று அண்ணன் மீதான பற்றில் வெளியேறியது போல வரும் , பிறகு இந்த வெண்முகில் நகரம் படிக்கும் போது வேறு வேறு கோணங்கள் காட்டப்படுகிறது. அவை எல்லாம் சுவாரஸ்யமானவை மட்டும் அல்ல மேலதிக புரிதல்கள் சமூக ஏற்பு, மறுப்பு சார்ந்து , தனது என்று நாம் உணரும் தருணங்கள் சார்ந்து பல்வேறு புரிதல்களை வாசகனுக்கு அளிப்பவை . எனக்கு இந்த நாவலில் மிக பிடித்த இடம் என்றால் அது பூரிசிரவஸ் – பிரேமை இணை கொள்ளும் காதல் / உறவு கொள்ளும் பகுதிகள் . இனிமையான பகுதி அது . நாவலில் திருதராஷ்டிரர் கொள்ளும் மகன் சார்ந்த மனநிலை ,அது சார்ந்த மாற்றங்கள் , அதன் வழியாக தந்தை தன் மகனில் கொள்ளும் அன்பு , அது எந்த புற விசயங்களாலும், மகன் தவறு செய்தாலும் மாறாமல் இருப்பது . அது விலங்குணர்வு போன்ற மாறாத ஆதி உணர்வு போல ஒன்று என்பதை பற்றி எல்லாம் தர்மன் ,விதுரன் , கிருஷ்ணர் வழியாக எல்லாம் பேசப்படுகிறது . மேலும் திருதராஷ்டிரர் செயல்கள் வழியாகவும் காண முடிகிறது . நாவலில் தர்மன் யார் மக்களை இணைக்கிறார்களோ அவர்களே பெரிய மன்னர்களாக முடியும், அந்த திறன் தனக்கும் கிருஷ்ணருக்கும் மட்டுமே இருக்கிறது என்று சொல்கிறார். இதைத் தாண்டி கிருஷ்ணரால் தனக்கு ஏற்ப தான் விரும்பும் விளைவுகளுக்கு ஏற்ப சூழலை , மாந்தர்களின் மனநிலையை மாற்ற முடிவதை இந்த நாவலில் விரிவாக பார்க்க முடிகிறது. எந்த பலிகளும் இல்லாமல் , யாரின் மனமும் வருத்தமும் ஏற்படாமல் நாட்டையே இரண்டாக அவனால் பிரிக்க முடிகிறது . எதை செய்தால் மக்கள் கவனம் திரும்பும், எதைச் செய்தால் மனிதனும் மனநிலை மாறும் ,எதை செய்தால் தான் விரும்பும் முடிவுக்கு மனிதர்கள் வருவார்கள் என்பதை உணர்ந்து அதை நிகழ்த்துகிறார். அவரால் அப்படி காட்டில் இருந்து தனிமையில் மூழ்கிய பீஷ்மரை கூட மனம் மாற்றி அரசவைக்கு கொண்டு வர முடிகிறது. எதையும் நேரடியாக செய்வது இல்லை, அந்த இடத்திற்கு அவர்களை அவர்கள் அறியாமல் நகர்த்துகிறார் ,அல்லது உரிய காரணங்கள் சொல்லி கொண்டு செல்கிறார் ! கிருஷ்ணர் சம்படையுடன் பேசும் காட்சி அவரை வேறு தளத்தில் கொண்டு செல்கிறது . அவர்கள் உரையாடுவது முற்றிலும் வேறு தளத்தில் என்று தோன்றியது. அன்றே சம்படை மரணிக்கிறார், அவர் மரணம் ஆவது முன்பே கிருஷ்ணருக்கு தெரியும் என்று தோன்றியது . இன்னும் பல குணங்கள் கிருஷ்ணர் சார்ந்து வருகிறது . மிக சாதாரண மக்களிடமும் உரையாடுவது என . இதை எழுதும் போது புரி சிரவஸ் விழா ஏற்பாட்டில் வேண்டுமென தவறு செய்யும் ஒருவனை கண்டு கொள்வதும் சரியாக அவனிடம் போய் கிருஷ்ணர் கண்டுகொண்டு உரையாடுவதும் ஞாபகம் வருகிறது ! இந்நாவலில் சில இடங்களில் வந்து இருந்தாலும் பூரிசிரவசின் மூத்தவரான சகனை பிடித்தது. நிகழ்வின் உணர்ச்சிகரத்துற்குள் சிக்கிக் கொள்ளாமல் வெளியில் நின்று பார்த்து தீர்வு காண்பவன் அவன் என்று வாசிக்கும் போது உணர முடிந்தது . இது தவிர பால்ஹிக நாடு சார்ந்த நில காட்சிகளும் மிக பிடித்தது . இது தவிர பூரிசிரவஸை ஆரம்பத்தில் விரும்பிய விஜயை, துச்சளை போன்றவர்கள் வேறு மணவாய்புகள் அமைந்த பிறகு பூரிசிரவசை எதிர்கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தன. பானுமதி பாத்திரமும் நன்றாக இருந்தது . நாம் மிக விரும்பும் ஒன்று நமக்கு கிடைக்காமல் ஆகி விடும் போது அது நமக்கு வாழ்நாள் எதிராக இருக்கும் தரப்பிடம் சென்று விடும் போது உருவாகும் மனநிலை நச்சுமுள் என்ற அத்தியாயங்களில் விரிவாகப் பேசப்படுகிறது . இன்னொரு இடம் காந்தாரியிடம் கிருஷ்ணர் சகுனியின் காந்தாரி மீது கொண்டிருக்கும் அன்பு/ வழிபாடு பற்றி பேசும் இடம் , மிக நுணுக்கமான மன இயல்பு பற்றி பேசும் இடம் அது . https://mayir.in/இந்திய-நாவல்கள்/radhakrishnan/4418/1 point
-
அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
தைப்பொங்கல் சிரிப்புகளில் வரவேண்டிய செய்தியைப்போல் சுமந்திரன் கட்சியின் நிலை உள்ளது.1 point
-
சரணாகதி
1 pointசரணாகதி ராமராஜன் மாணிக்கவேல் பார்த்தன் அதிகமாகத் திரௌபதியிடம் பேசியதில்லை. அவளும் அப்படித்தான். அவனிடம் அவள் அதிகமாகப் பேசியது இல்லையே தவிர, மற்றவர்களிடம் பேசாமல் இருந்தது இல்லை. அவள் சக்கரவர்த்தினி அல்லவா? கல்லும் முள்ளும் மண்டிய வெறும் கட்டாந்தரையில், அத்தனை பெரிய அதிசய அரண்மனை கட்ட வேண்டும் என்றால், எத்தனை எத்தனை கட்டளைகள் பிறப்பித்திருப்பாள்! இந்திரப்பிரஸ்தம் கண்ட ஸ்ரீசக்கரவர்த்தினி! எண்ணங்கள் இல்லாதவனுக்கு ஆசைகள் இல்லை. ஆசைகள் இல்லாதவனுக்குக் கனவுகள் இல்லை. கனவுகள் இல்லாதவனுக்கு இலக்குகள் இல்லை. இலக்குகள் இல்லாதவனுக்குச் செயல்கள் இல்லை. செயல்கள் இல்லாதவனுக்குக் கட்டளைகள் இல்லை. கட்டளைகள் இல்லாதவன் தலைவன் இல்லை. தலைவன் ஆக முடியாதவன் எப்படி அரசனாவது? அரசன் ஆகாதவன் எப்படிச் சக்கரவர்த்தியாவது? அவள் சக்கரவர்த்தினி அல்லவா? நிறையப் பேசுவாள். நிறைவாகப் பேசுவாள். ஆனாலும் அவள் பார்த்தனிடம் அதிகம் பேசியதில்லை. நெஞ்சகலில் தீபம் ஏற்றும் அவளின் அகல்விழிச் சிறு அசைவில், யுகங்களைத் தாண்டும் நீண்ட கதையாடல்கள் நடந்த நினைவுகள் நெஞ்சில் பூக்கும். அதனால் அவளிடம் பேச வேண்டும் என்ற நினைப்பே அவனுக்கு எழுந்ததில்லை. ஆனால் அவளிடம் இப்போது பேசத் தவிக்கிறான். அஸ்தினபுரியிலிருந்து கானகம் வந்த நாள் முதல், அவளிடம் தனியே பேச வேண்டும் என்ற தவிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. அந்தத் தவிப்பால் விலகி விலகி நிற்கிறான். அங்கு அந்தக் கொடும் செயல் நடக்கும்போது வெறும் தூசாக இருந்துவிட்டு, இங்கு எப்படி அவளிடம் பேசுவது? அவன் “கிருஷ்ணை” என்று தன்னை அழைக்கும்போதெல்லாம், கண்ணனையே அழைக்கிறான் என்று அறிந்தாள். அவள் கண்ணனின் பெண்வடிவம் என்ற மயக்கம் அவனுக்கு உண்டு. தனக்குள் கண்ணனே எழுகிறான் என்பதையும் கண்டாள். அன்பு, பிரியம், பக்தி கலந்து அவன் “கிருஷ்ணை” என்று அழைக்கும்போது, அவள் உணர்வு நரம்புகள் மீட்டப்படும். அவள் மனக்கொடியில் “கிருஷ்ணை” என்ற அவன் வாய்ச் சொல் மலர்ந்து மலர்ந்து தேன்வடிப்பதை, ரகசிய மணமாய் நுகர்வாள். ஆனாலும் அவள் சக்கரவர்த்தினி அல்லவா? அவளால் காதல் படிக்கட்டில் இறங்க முடியாது. அவளால் இறங்க முடியாது என்பதால், இவனால் ஏறவும் முடியாது. அதனால்தான் அவளிடத்தில் அவன் அதிகம் பேசியதில்லை. ஆனால் இப்போது அவளிடம் பேச வேண்டும் என்று தவிக்கிறான். பார்த்தன் “திரௌபதி” என்று அழைப்பதைத் தவிர்ப்பான். தவறி “திரௌபதி” என்று அழைத்துவிட்டால், அவன் உடலும், கைகளும், காற்றும் அறியாமல் நடுங்குவதை அவள் மட்டுமே அறிந்திருந்தாள். இப்போதெல்லாம் அவன் “கிருஷ்ணை” என்று தன்னை அழைத்த பின்புதான் திரும்புகிறாள். “திரௌபதி” என்ற அந்தப் பெயர், அவள் தந்தை துருபதன் நினைவை எழ வைக்கிறது. ஞாபகத்தீ எரிய வைக்கிறது. குருவுக்காக என்றாலும், யாருக்காக என்றாலும், மனிதனை மனிதன் சிறுமைப்படுத்தும் கணம் சுகமாக இருக்கலாம். அந்தக் கணத்தில் வெற்றி பெற்றதாய்க் களிப்புறலாம். அந்தக் கணத்தைத் தாண்டிவிட்டால், அந்தக் கணம் இறக்கி வைக்க முடியாத, அணைக்க முடியாத கனமான கனல் கல் என்றாகிவிடுகிறது. அது அழுத்திச் சுட்டுக்கொண்டே இருக்கும். யுகங்களைக் கடந்தும் கூட அது அணைவதே இல்லை. கணத்தில் செய்த பிழைகளை யுகங்கள்வரை ஓடியும், உழைத்தும் திருத்திவிட முடியுமா? யுதிஷ்டிரன் திரௌபதியைச் சூதில் வைத்த கணம் எத்தனை சிறுபொழுது? இமைக்கணம். அதன் வலி யுகங்களின் வலி; யுகமாந்தர்களின் வலி. அதைத் திருத்திவிட முடியுமா? கணங்களைக் காத்த மனிதன் யுகங்களைக் காத்தவன் ஆகிறான். மகிழ மரத்தில் சாய்ந்து நின்று, நெஞ்சுக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு, வானத்தின் நீலத்தையும், மேகங்களின் சித்திரத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பார்த்தன், ஓடை ஓரத்தில் அவிழ்ந்த கூந்தலோடு அமர்ந்திருந்த திரௌபதியைப் பார்த்ததும் திடுக்கிட்டான். காண்டீபம் ஏந்தும் கைகள் நடுங்கின. கை நடுக்கத்தில், சிறு நரம்புகள் பாம்புகள் போலப் புறங்கையில் அசைந்தன. பதறும் கால்களுக்குக் கீழே பூமி பிளந்துவிடாதா? எப்படி அவளிடம் பேசுவேன்? திரௌபதி ஓடையின் கரையில் கிடந்த சந்தன நிற வட்டக்கல்லின்மேல், பெரிய வாழைப்பூவைக் கொய்து குந்த வைத்ததுபோலக் குந்தி, பீமன் தேடிக் கொண்டுவந்த புல் அரிசியைச் சமைப்பதற்காகக் கழுவிக்கொண்டிருந்தாள். வண்டிச் சக்கரம் அளவுக்குப் பெரியதாக இருந்த அந்தக் கல்லைப் பீமன் வெகு தூரத்திலிருந்து தன்னந்தனியாய்த் தூக்கிவந்து அவளுக்காகப் போட்டுவைத்தான். ராஜ நாகங்கள் மலையில் புரள்வதுபோல, அவிழ்ந்த கூந்தல் கற்றைகள் காற்றில் அவள் முதுகிலும், கல்லிலும் புரண்டன. அவளுக்கு எத்தனை நீளமான கூந்தல்! அவள் கொண்டை போடும்போது, தலையின்மேல் ஒரு தலை இருப்பதுபோல இருக்கும். பொன்னும், மணியும், முத்தும், ரத்தினமும், இந்திர நீலமும், மரகதமும், மாணிக்கமும், பூங்காடும் நிறைந்த அவள் கொண்டை, வண்ண மீன் விளையாடும் கடலை உருட்டிக் கொண்டையாக வைத்ததுபோல் குளிர்ந்து ஜொலிக்கும். ஊர்ப் பெண்கள் எல்லாம் அவள் போடும் கொண்டையை நினைத்து, கனவிலும் பெருமூச்சு விடுவார்கள். கூடியிருந்தால் அலர் பேசுவார்கள். தனித்திருந்தால் உள்ளுக்குள் ரகசியமாய்ப் புகழ்வார்கள். சில நேரம் புழுங்குவார்கள், சில நேரம் அழுவார்கள், சில நேரம் சிரிப்பார்கள். அந்தக் கூந்தல் அவர்களைப் பித்துக்கொள்ளச் செய்தது. சிக்கில்லா அவள் கூந்தலில் சிக்கிக்கொள்ளாத மனம் உண்டா? ஆடவர்களைப்பற்றித் தனியாக என்னச் சொல்ல? கொடுத்தே பழக்கப்பட்ட கர்ணன்கூட அவளிடம் எடுக்க நினைத்தான் என்றால்… அந்தக் கூந்தலில் பார்த்தன் குழந்தையாகத் தவழ்ந்த காலம் வரம். யாருடைய சாபம், அதே கூந்தல் துச்சாதனன் கையில் அவளை இழுத்து வரும் கயிறானது? காலம் எத்தனை கொடியது! பதிமூன்று ஆண்டுகள் கழித்தேனும் அவள் கொண்டையிடுவாளா? காலமே அறியும். உச்சம் பெரும் எல்லாமும் நீச்சம் பெறும் என்றால் உச்சம் எதற்கு? அதில் என்ன பெருமை? சிறுமையைக் கடந்துதான் பெருமை, பெருமைப்பட வேண்டும் போலும். பார்த்தன் ஆழமாக மூச்சை இழுத்து, நெஞ்சுக்குள் நிறுத்திப் பையப்பைய விட்டான். கண்ணின் இமைச் சுவர்களில் நீர் திரண்டு நின்றது. வெண்விழி நரம்புகள் சிவப்பேறின. கண்களை மூடித் திறந்தவன், தலையை மெல்ல ஆட்டிக்கொண்டு மீண்டும் திரௌபதியை நோக்கினான். விழியில் இருந்து விழுந்த கண்ணீர்த் துளி, அவன் கால் பெருவிரல் நகத்தில் பட்டுத் தெறித்தது. வெந்நீர்த் துளி விழுந்ததுபோல் காலை உதறினான். அவள் உடுத்திருந்த மரவுரிச் சேலை, ஓடையில் இருந்து எழுந்த குளிர்ந்த காற்றில் அசையும்போது, அக்கினிக் குண்டத்தில் மலர்ந்த அனல் மலர்போலத் தெரிந்தாள். கரையில் இருந்த கல்வாழைப் பூக்கள் காற்றில் அசைந்து அசைந்து அவள் தலையைத் தொட்டன. மேகத்தில் நட்சத்திரங்கள் பூப்பதுபோல இருந்தது. வாயில் பசும்புற்கள் வழிய ஓடிவந்து திகைத்து, அங்கும் இங்கும் பவழம் போன்ற கண்களால் குழந்தைபோலப் பார்த்து, அவளை முகர்ந்துவிட்டுப் போகும் வெண்முயல்கள்! தண்ணீர் குடித்துவிட்டுப் போகும் மான்கள் அவள் முகம் நோக்கி முகம் நீட்டும்! ஆண் மயில்களின் சேட்டைக்கு அஞ்சுவதுபோல, அவள் அருகில் வந்து மேயும் பெண்மயில்கள்! பழமரங்களில் கொஞ்சும் கிளிகள் கொத்தி எடுத்து வந்த பழங்களை அவள் காலடியில் போட்டுவிட்டு, அவள் தோள்மீது அமர்ந்து கொஞ்சின. சொந்த வீட்டில் விளையாடும் குழந்தைகள் போல, இலக்கின்றி ஓடையில் நீந்தின மீன்கள்! கழுவிக்கொண்டிருந்த அரிசியில் கைப்பிடி அள்ளி ஓடையில் எறிந்தாள். ஒரு பிடி அள்ளி மயிலுக்கும், கிளிக்கும், அணிலுக்கும் கரையில் தூவினாள். மீன்கள் எல்லாம் அந்த அரிசி விழுந்த இடத்தை நோக்கிக் குவிந்தன. ஓடையில் மீன்கொத்துகள் மலர்ந்தன. திரௌபதி இதழ்கள் மெல்ல விரிய, மீண்டும் ஒரு பிடி அள்ளிப் போட்டாள். மீன்விழியாள் மீனோடு விளையாடினாள். அன்னை வயதில் ஒரு குழந்தை அங்கு களித்துக்கொண்டிருந்தாள். பார்த்தன் குனிந்து காலடியிலிருந்த மகிழம்பூ ஒன்றை எடுத்து, அவளுக்குள் இருந்து வெளிப்படும் குழந்தையை விரட்ட, அவள்மேல் வீசப் போனான். ஏதோ நினைத்து நிறுத்திப் பூவை முகர்ந்தபடி, மரத்தில் வலது காலை ஊன்றிச் சாய்ந்து நின்று, அவளை மீண்டும் பார்த்தான். நரம்புகள் ஓடிய அவன் கால், மரத்தின் கிளைபோலத் தோன்றியது. மகிழ மரத்தில் ஏறிக்கொண்டிருந்த சித்தெறும்புகள், அவன் பாதத்தின் சிறு வரிகளை நோக்குவதுபோல நின்று, தலை அசைத்து முகர்ந்தன. கூச்சத்தில் பார்த்தன் பாதத்தைச் சற்று அசைத்தான். சித்தெறும்புகள் வளைந்து வரிசையாக மரத்தில் ஏறின. கிருஷ்ணை, பார்க்கப் பார்க்கப் புதிதாகத் தோன்றிக்கொண்டே இருந்தாள். எங்குதான் இந்த அழகுப் பெண்களுக்குள் மறைந்திருக்கிறது? பார்க்கும் தோறும் புதையல்போல வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. “இத்தனை நாளாய் இவளை நாம் பார்க்கவே இல்லையோ?” என்ற ஐயம் அவனுக்குள் எழுந்தது. தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்துக்கொண்டான். யுதிஷ்டிரரும் பீமனும் அவர்கள் செயலில் மூழ்கியிருந்தார்கள். திரௌபதி மீண்டும் கைப்பிடி அரிசியை அள்ளி மீனுக்குப் போட்டாள். ஒரு பெரிய மீன் துள்ளி அவள் காலுக்கடியில் விழுந்து அவள் பாதத்தை முத்தமிடுவதுபோல் வாயைக் குவித்துத் திறந்து துள்ளியது. ஒரு துள்ளலில் அதன் வால் அவள் காலைத் தீண்டியது, கூச்சத்தில் சிலிர்த்து மகிழ்ச்சியில் வாய்விட்டுச் சிரித்து, கல்லில் உட்கார்ந்திருப்பதை மறந்து, அரிசியோடு கீழே சாய்ந்தாள். பார்த்தன் அங்கு எப்படிப் போனான் என்று உணரும்முன், அவளை ஒரு கையிலும் அரிசியை ஒரு கையிலும் பற்றித் தூக்கி ஒரு சுற்றுச் சுற்றிச் சமதளத்தில் விட்டான். மகரந்தம் நிரம்பிய மரகதத் தாம்பூலத்தில் நிற்பதுபோல, மஞ்சள் பூ பூத்த புல்தரையில் கால்களை அழுத்தி நின்றாள். மஞ்சள் பூப் பூத்த புற்கள் அவள் பாதத்தை மூடிக்கொண்டன. பார்த்தன் தலையிலிருந்து உதிர்ந்திருந்த மகிழம் பூக்கள் அவள் நெஞ்சில் விழுந்து, அவள் தனங்கள் தாங்க, மணத்தது. மகிழம்பூ வாசத்தில் அவள் மூச்சை சற்று ஆழமாக இழுத்தாள். பார்த்தன் கண்களைப் பார்த்தவள், ஆடையைச் சரி செய்வதுபோல் நகர்ந்துகொண்டாள். பார்த்தன் தன் விரல்களில் அனல் கங்கு ஒன்றைத் தொட்ட வலியை உணர்ந்தான். ”கிருஷ்ணை” என்று அழைக்கப் போனவன் நா மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. வியர்த்தது. கருப்பு வெள்ளை பளிங்கினால் செய்த மேகக் கோட்டையில் பதித்த இரத்தினத் தாம்பூலம் போன்ற மாலைச் சூரியன். வெண் பொன் வைர மணல் உருளும் சலசலக்கும் குளிர்ந்த நீர் ஓடை. அதன் அலை விசிறியிலிருந்து எழுந்து வரும் தென்றல். பூ, காய், கனி வாசம். ஓடையில் விளையாடும் மீன்கள். பூமரத்தில் விளையாடும் அன்றில்கள். கானம் பாடும் குயில்கள். வெண்பூக்கள் சூடிய நாணல் புற்களுக்கு இடையில் தவமிருக்கும் கொக்குகள். ஓடையின் உயரத்தில் ஓடைக்கு விசுறுவதுபோலச் சிறகடிக்கும் மீன்கொத்திகள். அக்கரையில் மேயும் பசுக்கூட்டங்கள். அணைத்து அமர்ந்திருக்கும் வானரங்கள். புல்லுக்கும் வலிக்காமல் நடந்து போகும் யானைகள். இந்த இடத்தில் மனைவியைத் தொடும்போது வியர்க்குமா? பார்த்தன் மனம் சிந்தனை அறுபட்டு நின்று போனது. தூரத்தில் நீலக்குயில் ஒன்று கூவ, எதிர் குரல் எழுந்ததும், பலாமரத்தில் இருந்த குயில் வெளிப்பட்டது. தூரத்தில் பீமன் பெரிய பெரிய பாறைகளைத் தூக்கிக் கொண்டு வந்து, விழுது விட்ட ஆலமரத்தடியைச் சுற்றிப்போட்டு உட்காரும் மேடை செய்தான். யுதிஷ்டிரர் இங்கு இல்லாததுபோல, வடக்கே இருந்த குளக்கரையில் அரசமரத்தடியில் குத்துக்காலிட்டு குனிந்து அமர்ந்திருந்தார். தோளில் கிடந்த அங்கவஸ்திரம் பூமிக்குப் போர்த்திவிட்டதுபோலக் கொஞ்சம் தோளில் கிடந்தது. இப்பொழுதெல்லாம் அவர் யாரையும் நிமிர்ந்து பார்ப்பதில்லை. நடுங்கும் கைகளை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதால் கைநீட்டிக் கூட யாரிடமும் பதில் விடுப்பதில்லை. ஏதோ ஒரு விடையைத் தேடிக் கொண்டே இருந்தார். நெற்றியில் அடிக்கடி கோடுகள் தோன்றி மறைந்தன. பீமன் அவர் அருகில் போகாமல் பார்த்தன் பார்த்துக் கொண்டான். திரௌபதியே பீமன் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள். நடுங்கும் கைகளால் முன்னால் கிடந்த வெண்மணலைச் சமன் செய்து, அரசச் சருகொன்றால் எதையோ எழுதுவதும் அழிப்பதுமாக இருந்தார். வாழ்வின் சம்பவங்கள் எழுதி அழிக்கக் கூடியவைதானா? திரௌபதியிடமிருந்து நகர்ந்து போக வழி தேடிய பார்த்தன், கல்லின் மீது கிடந்து துடித்த பெரிய மீனைச் சமையலுக்காகப் பாய்ந்து போய்த் தூக்கினான். ”இனியவரே, அது என் பாதத்தைத் தொட்டுவிட்டது. அது வாழட்டும், அதன் குடி பெருகட்டும். நீரில் விட்டுவிடுங்கள்” என்றாள். பார்த்தன் சிலையாகி விட்டான். கண்கள் இமைக்க மறந்துவிட்டன. ஆடைக்குள் தொடைத் தசைகள் ஆடின. நெஞ்சுக்குள் இருதயம் மலரும் ஓசை கேட்டான். வலது கையில் தலைகீழாய் தொங்கிய மீன் தனது விடுதலைக்காகப் பார்த்தன் கையில் துடித்துக் கொண்டு இருந்தது. பார்த்தன் இன்னும் சிலையாகத்தான் நின்றான். ஆனால், அவன் நெஞ்சுக் கூட்டுக்குள் இரு கரங்கள் குவிந்து மொட்டாகின. ”இனியவரே!” என்றாள் முன்னினும் இனிமையாக. செவி குளிர்ந்து, காது மடலில் மென்சூடு பரவிக், காது முடிகள் கூச்செறிந்தது. சிற்பத்தில் பூத்த புன்னகை. சொட்டிவிடுமோ என்பதுபோல இதழ்கனியில் தேன் ஈர மினுமினுப்பு. நோக்கி உளம் உருகினான். இந்திரப்பிரதஸ்தத்தில் வாழும் வரை இவளை ஆசையும் அகங்காரமும் கொண்ட பேரரசியாக மட்டுமே பார்த்து, மனம் விலகி இருந்ததை நினைத்து வெட்கினான். மனைவியரைக் கணவர்கள் புரிந்துகொள்வதே இல்லையோ? மனைவியர்கள் கணவர்கள் புரிந்துகொள்ளும் வட்டத்திற்கு அப்பாலுக்கு அப்பால் நின்று ஆடுகிறார்களோ? எத்தனை மூச்சடக்கிப் பாடிப்போனாலும் தொட முடிவதில்லை. இவள் யார்? அருகில் கிடந்த கருங்கல்லில் சிறு குழந்தையைப்போல துள்ளி ஏறி நின்று ”இனியவரே!” என்றாள் கர்ஜனையாக. அட்சயப் பாத்திரம் போலக் கையில் அரிசிப்பானை. குரலின் கடுமையில் கண்கள் விரிந்தன. அகன்ற கண்களும் அவிழ்ந்த கூந்தலும் மகிடன் தலையில் கொற்றவை எனக் காட்சிக் கொடுத்தாள். உடல் அதிர்ந்து, அகத்தில் பனித்துளி சொட்டிடக் குளிர்ந்தான். எண்ணங்கள் ஒழிந்தவனாய், யாரோ தன்னை இயக்குவதுபோலத் துரிதமாய் சென்று மீனை ஓடையில் விட்டான். மீன் ஆற்றில் நீந்தும் போதுதான் தனக்குள் தான் இருப்பதை உணர்ந்தான். திரௌபதி நீந்தும் மீனைப் பார்த்தாள். அவள் விழிகளும் நீந்தி மகிழ்ந்தன. ”கிருஷ்ணை” பார்த்தன் வாயில் இருந்து வார்த்தை வெளிப்படவில்லை. ஆனாலும் திரௌபதிக்குக் கேட்டது. திரௌபதி, கானக வாழ்க்கையை எளிமையிலும் எளிமையாக, ஏதிலியாகப் பன்னிரண்டு ஆண்டுகள் எப்படி கடத்துவது என்று எண்ணும் அறியாச் சிறுமிபோல நோக்கினாள். ”என்ன? இனியவரே” கண்களால் கேட்டாள். செவிவரை நீண்ட விழியும், கருங்குருவியின் இறகு இதழ் போன்ற இமை முடியும் அவள் கண்களை விசாலமாக மலரச் செய்தது. அவள் முகத்தைக் குழந்தையாக வடித்து வைத்தது. ‘’அஸ்தினாபுரத்தில் இத்தனை நடந்தபிறகும், இவளால் என்னை எப்படி இனியவரே என்று அழைக்க முடிகிறது. அதில் கேலி இல்லை. ஐவர்மீதும் இன்னும் அதிகப் பரிவிருக்கிறது. இவளால் மட்டும்தான் அது முடியுமோ’’ என்று நினைத்தபடியே ”எங்கு நின்றாலும் கருவறைப் பீடத்தில் நின்று அருளும் அன்னை எனவே தெரிகிறாய் தேவி” என்றான். திரௌபதி வாய்விட்டுச் சிரித்தாள். கானகம் முழுவதும் சிரிப்பொலி அலை அலையாய்ப் பரவியது. அவள் பின்னால் ஓடிக்கொண்டிருந்த ஓடையில், பெரும் காடு நகர்ந்து வந்ததுபோல் புழுதிப் பறக்க வந்து நீர் அருந்திக் கொண்டிருந்த எருமைக் கூட்டத்தின் தலைவன், நீர் வழியும் வாயோடு அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, வயிறு அதிர உறுமி, தலை தாழ்த்தியது. அவள் பாதங்களுக்கு இருபுறமும் வளைந்த வாள் போல அதன் கொம்பு மட்டும் காட்சி கொடுத்தது. எருமைகளின் வாசம் பிடித்து வந்த சிங்கக் கூட்டத்தின் முதல்வன் கோரைப்புல் புதரிலிருந்து ஓசை இன்றித் தலை நீட்டியது. அருகில் அடி பெருத்து நின்ற செண்பக மரத்திலிருந்து உதிர்ந்த செண்பகப் பூவில் ஒன்று காற்றில் மிதந்து வந்து, இதுதான் இடம் என்பதுபோல அவள் சென்னியில் விழுந்து, பாதத்தைத் தொட்டு, வான்பார்த்து மலர்ந்து அமைந்தது. பீடம் அமைத்துவிட்டு, மரக்கட்டைகளைப் பிளந்துகொண்டிருந்த பீமன், கோடரியைத் தரையில் ஊன்றித் திரும்பிப் பார்த்துக் கண்களைச் சுருக்கிக் கேள்வி எழப் புன்னகைத்தான். யுதிஷ்டிரன் திரும்பி முதல்முதலில் நிமிர்ந்து கூர்ந்து பார்த்தான். அவன் கைகள் நடுங்கவில்லை. நெஞ்சம் நிமிர்ந்தது. மீண்டும் பிறந்ததுபோலப் புன்னகைத்தான். குத்துக்காலில் உட்கார்ந்திருந்தவன் அங்கவஸ்திரத்தை இழுத்துத் தரையில் படாமல் தோளில் போட்டுக் கொண்டு, தரையில் அழுந்த உட்கார்ந்தான். உடம்பிலிருந்து பெரிய எடை இறங்கியதுபோல உடலை அசைத்தான். ”எதுவும் தூரத்தில் இல்லை, எல்லாம் அருகில்தான் இருக்கிறது” என்று தரையில் கிறுக்கினான். காதலி முன் பேச்சு வராமல் தவிக்கும் காதலன்போலப் பார்த்தன் தலை குனிந்தான் தலை குனிந்தான். நீண்ட நாட்களுக்குப் பின் இதழில் மென்னகை பூத்தது. தன்னாலும் சிரிக்க முடியும் என்பதை நம்பினான். சில விஷயங்கள் எளியவைதான். அது எளியவை அல்ல என்பதை வாழ்க்கை உணர்த்துகிறது. ‘’விஜயரின் வில் பேசும் என்பது தெரியும். விஜயரும் பேசுவார். அதுவும் கவிதை பேசுவார் என்பது இன்றுதான் அறிந்தேன். இதற்காக நாம் கானகம் வரவேண்டியிருக்கிறது. விலை அதிகம்தான். ஆனாலும் அதுவும் நன்று. கண்ணனின் தோழருக்குக் கவிதை வரவில்லை என்றால்தான் ஆச்சரியம். ஒருவேளை கண்ணனின் தங்கையிடம் கற்றிருப்பார்.” என்று மீண்டும் சிரித்தாள். ஒரு சொல்லும் அவளிடம் கேலி இல்லை. ஆனால் பார்த்தனுக்கு வலித்தது. கண்ணனின் தங்கை என்றபோது அதில் கனல் இருந்தது. அவள் நெஞ்சம் ஏறி இறங்கி மூக்குச் சிவந்து மூச்சுச் சீறியது. விஜயன் என்ற பெயரை அவள் உச்சரித்ததும் காயத்தில் கொதி எண்ணெயை ஊற்றியதுபோல எரிந்தது. உலகில் யாரிடமும் தோற்காத காண்டீபம் ஒரு புல் என இருக்கும் காலமும் வரும் என்று அவன் எண்ணியது உண்டா? அவள் பார்க்காமல் இருக்க விழிகளைத் திருப்பிக் கொண்டான். அவளும் அவள் விழிகளைத் திருப்பிக் கொண்டாள். அங்கிருந்து நகர்ந்துவிடத் திரும்பினான் பார்த்தன். ‘இனியவரே’ என்ற அவள் குரலின் குழைவு அவனை நகரவிடவில்லை. திரும்பாமல் நிலம் நோக்கி நின்றான். திரௌபதியின் வாசம் அருகில். திரும்பியவன் அவள் இமைகளின் ஈரத்தைச் சுண்டுவிரலால் நீக்கினான். ”உயிர் போகிற வலி இருந்தாலும் யானைகள் அலறாது, துடிக்காது இனியவரே” என்றபடி அவள் தன் முந்தானையால் அவன் கண்களை ஒற்றினாள். ”நாம் வெறும் மனிதர்கள் மட்டும் தேவி” என்றபோது அவன் உதடுகள் கோணின. ”மனிதம் மட்டுமே வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும் இனியவரே!” என்றவள் விலகி நின்று ”என்னிடம் என்ன பேசவேண்டும், சில நாட்களாய் அவதிப்படுகிறீர்கள்” என்றாள். ‘எப்படி அறிந்தாள்?” அன்னையின் வடிவு. குழந்தையின் முகம். தித்திக்கும் சொற்கள். உடல் முழுவதும் பரவும் பரிவு. அள்ளி நெஞ்சோடு அணைத்துக் கொள்ளவேண்டும் என்ற தவிப்பு. கைகளை இறுக்கி மூடிக்கொண்டான். என்ன நடந்தால் என்ன? அன்பு, காமம், ஆசை, கோபம் எல்லாம் இடம் கிடைக்கும் போதெல்லாம் துளிர்த்துவிடுகிறது. அதன் விழைவு வேர்கள் அறுபடுவதே இல்லையோ? இமைக்கணத்தில் துளி என விழுந்து கடலாகித் தடம் தெரியாமல் ஆழ மூழ்கடித்து விடுகிறது. மீன் துள்ளி அவள் காலுக்கடியில் விழுந்தபோது அவள் கல்லில் இருந்து சாய்ந்தது தெரியாமல் அல்ல, நான் தாங்கிக் கொள்வேன் என்ற தைரியத்தில்தானா? பார்த்தன் கால்களை அழுந்த பூமியில் பதித்தான். இதழ்கள் மலர்ந்தன. பார்வை அகத்திற்குத் திரும்பியது. நெற்றிப்பொட்டில் மனம் குவிந்து நின்றது. தலைக்குமேல் வானம் விரிந்து விரிந்து போனது. தலைக்குள் ஒளி வட்டங்கள் மின்னின. சென்னியில் திருவடித் தாமரை மலர்ந்தது போன்ற சிலிர்ப்பு. ”கானகத்திற்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. நீங்கள் காண்டீபப் பயிற்சி செய்யவே இல்லை. நீங்கள் உங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள். பீமருக்குத் தனியாகப் பயிற்சி தேவை இல்லை. அவர் செய்யும் ஒவ்வொரு வேலையும் மல்லருக்கான பயிற்சிதான். பேரரசருக்கும் அப்படித்தான். சொல்வளர் கட்டுக்குள் புகுந்து சொற்கனிகள் உண்டு சொல்லாகவே மாறிவிடுவார். அவர் வேண்டும் என்றால் பகடை பழகலாம். இதை கோபத்தில் சொல்லவில்லை. அவர் உண்மையை தேடுபவர். தோல்வி பொய் என்று அவருக்குத் தெரியும். அவர் பொய்யைப் பொய்யாக்கிவிடுவார்.” இளையவர்கள் இருவரும் பரியும் பசுவும் மேய்க்கிறார்கள். அதுவே அவர்களுக்கு வித்தையும் ஞானமும் கொடுத்துவிடும். நீங்கள் படித்தது தனுர்வேதம். அதை ஓதவேண்டியது உங்கள் கடமை. கல்வி கற்பவனையே காதலிக்கிறது. கல்வி விலகா காதலி. என்றும் இளையவள். எப்பொழுதும் இனியவள். அவள் தன்னைக் காதலிப்பவனை அமுதூட்டிச் சிரஞ்சீவி ஆக்குகிறாள். நீங்கள் வில்வித்தை கற்பதில் ஓய்வு கொள்ளாதீர்கள். யார் கண்டார்கள், நாம் பெரும் போர் செய்தே நம் நாட்டை மீட்க வேண்டி இருக்கலாம்.’’ என்றவள் ‘’இளையவர்கள் பசி தாங்க மாட்டார்கள். அவர்கள் வருவதற்குள் சமைத்துவிட்டு வருகிறேன்.” என்று அவன் பதிலுக்குக் காத்திராமல் குடிலுக்கு நடந்தாள். ”ஏன் எனக்குப் பசிக்காதா?” என்றவன், இவ்வளவு நெருக்கமாகக் கிருஷ்ணையிடம் பேசியது உண்டா? என்ற எண்ணத்தில் மூழ்கினான். அவளுக்குள் பரவிய கூச்சம் நடையில் தெரிந்தது. இடுப்பில் வைத்திருந்த அரிசிப் பானையை இடது கையால் அழுந்த அணைத்தபடி, வலது கையால் சேலையை இழுத்து மார்பை மூடியவள், பின்புறம் புடவைச் சுருக்கத்தைத் தடவி இழுத்துச் சரிசெய்தாள். “அவர்கள் முன் நான் குந்தி அத்தையாகிறேன்,” என்றாள், திரும்பாமல் நடந்து போனாள். அந்த கணத்தில் அவளின் உயரம் கூடியதுபோல் அவன் உணர்ந்தான். அவள் மெல்லச் சிரிப்பது அவள் முதுகில் தெரிந்தது. குடிலுக்குள் நுழையும் முன், தத்தித் தத்திப் பின்னால் வந்த பறவைகளுக்கு அரிசியை அள்ளித் தூவிவிட்டு, குடிலுக்குள் நுழைந்தாள். குடிலுக்கு அருகில் படர்ந்திருந்த வசந்த மல்லிகைக் கொத்து ஒன்று அவள் தோளில் தட்டியது. பார்த்தன் காண்டீபத்தை எடுத்தான். மலைக் குகையில் தன் துணை மற்றும் குட்டிகளுடன் படுத்திருந்த ஆண் சிங்கம் எழுந்து, பிடரி உலுக்கிக் கர்ஜனை செய்தது. காண்டீபத்திலிருந்து எழுந்த ஒலி, எதிர்ச் சிங்கம் கர்ஜிப்பதுபோல் காடே அதிர்ந்தது. பார்த்தன் அம்பை எய்து எய்து, கணக்கிலாத் தூரத்தை இலக்கை வென்றுகொண்டிருந்தான். தானே தனக்குக் கற்பித்துக் கொண்டிருந்தான். தன்னைத் தானே வென்றுகொண்டிருந்தான். குருவும் சீடனும் ஒன்றாகும் புள்ளியில் நின்று மையம் கண்டான். அந்த நொடி முடிந்ததும், “இன்னும் வெகுதூரம்” என்பதுபோல் வெறுமையில் விழுந்தான். அந்த வெறுமையை வெல்ல மீண்டும் தொடங்கினான். கல்வியோ, கலையோ, அதன் ஆடலே இதுதானோ? தேடல், தெளிவு, உண்மை; உண்மை, தெளிவு, தேடல். கீழிருந்து உச்சிக்கு. உச்சியிலிருந்து தரைக்கு. எங்கே நிற்பது? காண்டீபத்திலிருந்து அம்பு பறந்துகொண்டே இருந்தது. திரௌபதி பொங்கும் பானையில் கழுவிய அரிசியை அள்ளிப் போட்டாள். அவிழ்ந்து அவளை மூடியிருந்த கூந்தல் அடுப்பில் பட்டுவிடாமல் சற்றுத் தள்ளி அமர்ந்து, ‘பார்த்தன் என்ன கேட்கப்போகிறான்’ என்ற நினைப்பில் எரியும் அடுப்பையே பார்த்துக் கொண்டிருந்தாள். அடுப்பில் எரியும் தழல் ஒளி, அவள் கூந்தலில் நுழைந்து அவளை அக்கினிச் சிலை போல் செய்தது. உடைத்த விறகுகளை அள்ளிச் சேர்த்து, மழையில் நனைந்துவிடாமல் இருக்கப் பாதுகாப்பாய், ஆலமர அடியில் வீடுபோல் இருந்த பொந்தில் வைத்த பீமன், தாமரைக் குளத்திற்கு நீந்தப் போனான். யுதிஷ்டிரர் குளித்துவிட்டு வந்து கமலாசனத்தில் அமர்ந்து தன்னில் மூழ்கினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரால் தியானத்தில் அமர முடிந்ததை, பார்த்தன் அம்பு எய்தபடியே பார்த்தான். ஒரு அம்பை அதிவேகத்தில் எய்து, அது இலக்கைத் தொடப்போகும்போது, மறு அம்பை எய்து அதைத் தடுத்து, தன்னிடமே வரவழைத்தான். வந்த அம்பைத் தன் கை அம்பால் அடித்து, இரண்டையும் ஒன்றாகவே வானுக்கு அனுப்பினான். அங்கிருந்து இரண்டும் பிரிந்து, இருவேறு பாதையில் அவனிடமே வந்தது. இரண்டு அம்பையும் பிடித்து, அம்பறாத் தூளியில் இட்டவன், காண்டீபத்தைக் கண்ணில் ஒற்றி, மகிழ மரத்தில் மாட்டி வைத்துவிட்டு நீர் ஆடப் போனான். நகுலனும் சகாதேவனும் காட்டில் தேடிக் கொணர்ந்த தேன், கனிகள், கிழங்குகளைத் திரௌபதியிடம் கொடுத்துவிட்டு, மாடுகளையும் பரிகளையும் அவற்றிற்குரிய இடத்தில் கட்டினார்கள். சகாதேவன் பால் கறந்து, அருகில் உள்ள ஆசிரமத்திற்கு எடுத்துப்போனான். நகுலன் தேடி எடுத்துவந்த நோய் தீர்க்கும் மூலிகைகளை ஆசிரமத்தில் கொடுக்க அவன்கூடச் சென்றான். வன உயிர்கள் தீயில் மடிந்துவிடக் கூடாது என்பதால், அவர்கள் இரவில் அனல் எழுப்புவதில்லை. கதிரவன் இருக்கும்போதே ஐவரும் உண்டார்கள். திரௌபதி, ஐவரும் உண்டபின் உண்டாள். நகுலனும் சகாதேவனும் அவளுக்கு உதவினார்கள். அஸ்தினபுரியிலிருந்து வந்த பின்பு இன்றுதான் பார்த்தன் பாடினான். மெல்லிய ராகத்தில் பாடியபடி, மகிழ மரத்தடியில் நிலவொளியில் காத்திருந்தான். அவனையும் அறியாமல், தாளத்திற்கு ஏற்றவாறு அவன் கைகள் அபிநயம் பிடித்தன. நிலவொளியில் நிழற்சிலைபோல நடந்து வந்த திரௌபதி, பார்த்தன்முன் அவன் தொடாத தூரத்தில் அமர்ந்தாள். பார்த்தனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. “இனியவரே!” நீண்ட நாட்களுக்குப் பின் “விஜயரைப் பார்த்தேன்” என்று திரௌபதி பேச்சைத் தொடங்கினாள். “உன்னால்தான் மீண்டேன் தேவி! பேரரசர் கூட மீண்டுவிட்டார்” “நல்லது. வாழ்வென்பதே அதுதானே இனியவரே! நிலவின் ஒளியால் அந்த இடத்தை மனதில் அழியாச் சித்திரக்கூடமாக்கினாள். சற்றுமுன் பார்த்த இடமா இது?” என்று அதிசயித்தான். “உங்கள் மனைவியிடம் பேச இத்தனை நாள் ஏன் தவித்தீர்கள்?” அவள் நீண்ட, கூர்ந்த நாசி, கற்சிலையின் நாசிபோல் நிலவொளியில் பளபளத்தது. அதில் ஒரு காலத்தில் மின்னிய மாணிக்க மூக்குத்தியை எண்ணினான் பார்த்தன். பெரும் மூச்சு எழுந்தது. “பகடையாட்டத்திற்குப் பின்னும், துச்சாதனன் கொடும் செயலுக்கு மௌனமாய் இருந்தப் பின்னும் உன்னோடு பேச முடியும் என்று என்னை நான் எப்படி நம்ப வைப்பது, தேவி!” பார்த்தன் குரல் தழுதழுத்தது. மேலும் பேச முடியாமல், மேலே பார்த்தான். முழு நிலவின் ஒளி, இலைகள் வழியாகப் பனித் துகளாக வழிந்தது. தூரத்தில் விளா மரத்தைச் சுற்றி மின்மினிகள் பறந்தன. திரௌபதியின் நீண்ட மூச்சொலியால் அசைந்து திரும்பி, அவளைப் பார்த்தான். நிலவொளியில் நெய்த துகில் கூடத்திற்குள் கொலுவிருப்பதுபோல் சிலையாகி இருந்தாள். அவள் கண்கள் தூரத்தை நோக்கின. அவள் தனக்குள்ளேயே பார்க்கிறாள் என்று பார்த்தன் புரிந்து கொண்டான். சிலையின் புன்னகைபோல அவள் முகத்தில் புன்னகை படர்ந்திருந்தது. “எப்போதும் எப்படிப் புன்னகையோடு இருக்கிறாள்? எப்படி அந்தக் கணத்தைக் கடந்தாள்? கனத்தைத் துறந்தாள்? “இதை எப்படி அவளிடம் கேள்வியாய்க் கேட்பது? துகில் உரியும்போது எப்படி இருந்தது என்றா? கண்ணன் துகில் வழங்கியபோது எதை உணர்ந்தாய் என்றா? எப்படி இந்த நிகழ்விலிருந்து மீண்டாய் என்றா? ஏன் அந்த நிகழ்வை நினைத்தேன்? நடக்கக் கூடாதது நடந்துவிட்டால் அதை மறந்துவிட்டுச் செல்ல வேண்டும். ஏன் அதை மனதில் ஓட்டி ஓட்டிப் பார்த்தேன்? திரௌபதி மன ஓட்டத்தைப் படித்துவிட்டாள். “இப்போது எப்படி கேட்பது? என்ன கேட்பது?” பார்த்தனால் பேச முடியவில்லை. பொய் சொல்லவும் விருப்பம் இல்லை. ‘கண்டுபிடித்துவிடுவாள்’. “சொல்லுங்கள் இனியவரே! என்ன என்னிடம் கேட்க வேண்டும்?” “வேண்டாம் தேவி, அதைக் கடந்து செல்வோம்” “இது நடக்காதது அல்ல, விஜயரே! எந்த இழிவும் நமக்கு நடக்காதவரை அது சம்பவம் மட்டும்தான். நமக்கு நடந்தால் மட்டும்தான் துயரம்.” பார்த்தன் பதறிப்போனான், நெஞ்சு ஏறி இறங்கித் துடித்தது. “இந்த இழிவை நீங்கள், நான், எல்லோரும் பார்த்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால் நமக்கு வலித்திருக்காது. வலிக்காததற்கு ஒரு காரணம் நமக்குச் சொல்லப்பட்டிருக்கும். கடந்துபோயிருப்போம்.” பார்த்தன் தலை கனத்தது, பின் மண்டையில் படீர் படீர் என்று அறைந்துகொண்டான். அதற்குமேல் பேசாமல் எழுந்து சென்றுவிடலாம் என்று நினைத்தான். தோள்பட்டை இறுகிக் கனத்தது. உடலின் ஒவ்வொரு அணுவிலும் கனல் ஊசிகள் ஏறும் வலி. விழுந்து புரளலாம்போல் இருந்தது. “வேண்டாம், செல்வோம்” என்றான். ஆனால் எழுந்திருக்க முடியவில்லை. அவள் இனிமையாக ஏதேனும் பேச மாட்டாளா? என்று மனம் ஏங்கியது. உடலில் அமுதம் ஊறாதா? என்று தவித்தான். கானல் நீரைத் தேடி ஓடுபவன் நாவில், பனிக்கட்டி மழை விழ வேண்டாம்; விசும்பின் துளியாவது விழுந்தால் போதுமே! ஆண் எவ்வளவு பெரிய சுயநலக்காரன்! பெண்ணிடம் அவன் வேண்டிக்கொண்டே இருக்கிறான். அவள் காயங்களிலும் தேன் ஊறாதா என்று நக்கிப் பார்க்கிறான். பார்த்தனுக்கு ‘ஓ’ என்று கத்திக்கொண்டு ஓடி, அருகில் உள்ள ஓடையில் குதிக்க வேண்டும்போல் அகம் எரிந்தது. திரௌபதி சற்று நகர்ந்து, மெல்லக் கை நீட்டி அவன் நெஞ்சத்தைத் தொட்டாள். குழைவான குளிர் விரல்கள். பார்த்தன் நெகிழ்ந்தான். அந்தக் கைகளை அப்படியே நெஞ்சோடு வைத்து அழுத்திக் கொள்ள வேண்டும்போல் உருகினான். கண்கள் சிவந்து காந்தியது. “அமைதி அடையுங்கள்” என்றாள். தன் கையை எடுத்துத் தனது மடியில் வைத்துக் கோர்த்துக்கொண்டாள். காற்றில் பறந்த முடி, அவள் நெற்றியில் சுருண்டு விழுந்து, கண்களை மறைத்து அழகைக் கூட்டியது. தனது விரலை நீட்டி அதை ஒதுக்கப் போனவன் நிறுத்திக்கொண்டான். அவளே தனது புறங்கையால் ஒதுக்கினாள். அந்த நொடியில் அவளுக்குள்ளிருந்து ஒரு மயில் எழுந்து எட்டிப் பார்த்து மறைந்தது. அவள் தொண்டைக்குழி மெல்லத் துடித்தது. அவள் கழுத்தோரம் சுருண்டிருந்த பூ முடிகள், நிலா ஒளியில் ஈரம் கொண்டிருந்தன. இரவில் மலரும் பவழ மல்லி வாசம் கனமாக வந்து தாக்கியது. அருகில் இருந்த குளத்திலிருந்து அல்லிகள் மலரும் வாசம் எழுந்து வந்து சூழ்ந்தது. அதற்குமேல் அங்கு இருக்க வேண்டாம் என்று எண்ணினான். “தேவி, நீ குடிலுக்குச் செல். நான் மல்லர் உருவாக்கி வைத்திருக்கும் புல் படுக்கைக்குச் செல்கிறேன்” என்றான். குரலில் கனமும் கண்டிப்பும் இருந்தது. திரௌபதியின் உடலில் ஒரு சிலிர்ப்புத் தோன்ற, மெல்ல அசைந்து இதழ் பிரியாமல் புன்னகைத்தாள். பார்த்தனுக்கு அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவளை அருகில் வைத்துத் தாங்கிக்கொள்வதும் கடினமாக இருந்தது. “ஆணுக்கு உடம்பு ஒரு ஆயுதம் மட்டும்; அது போட்டி போடும், வெட்டும், வெட்டப்படும். பெண்ணுக்கு உடம்பே இதயம். கையளவு இதயம் கொண்ட ஆணுக்கு அது எப்படிப் புரியும்? வயதோ, கல்வியோ, குலமோ அதைப் புரியவைத்துவிட முடியாது. அதனால்தான் பெண்ணின் உடல் இங்கு காட்சிக்கு இழுக்கப்படுகிறது.” அவளுக்குள் அனல் எழுந்து ஆடியது. கண்ணாடிக் குவளைக்குள் வைக்கப்பட்ட தீபம்போல் அவளுக்குள் எரியும் அனலை அவன் பார்த்தான். “குளிர்ந்த நதியில் தீபத்தை ஏற்றி மிதக்க விடுவதுபோல், குளிர்ந்திருந்த அவளுக்குள் மீண்டும் அனலை ஏற்றி வைத்து விட்டேனோ?” என்று முகம் வாடினான். “என்ன கேட்க நினைத்தேன்?” அவனுக்குள் கேள்வியே எழவில்லை. அவளிடம் பேச வேண்டும் என்ற வேட்கையில் குழப்பிக்கொண்டேனா? ஏதாவது உதவி செய்வதுபோலப் பேசியிருக்கலாமே? ஏன் சிறு விஷயத்தையும் பெரியதாகக் குழப்பிக்கொள்கிறேன்? பெரிய வலி ஏற்படும்போது, சிந்தனை சிறு சிறு விஷயங்களைக் கையாள முடியாமல் தவிக்கிறது. அவன் முக வாடலைக் கண்ட திரௌபதி, அவன் மகிழ மெல்லச் சிரித்தாள். “விடுங்கள் விஜயரே! பெரும் பிரச்சினைகள் வரும்போது பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்” என்று எழுந்தவள், தன் பின்புறத்தைத் தட்டி அங்கிருந்த புற்களைப் பறக்கவிட்டாள். கண்ணுக்குத் தெரியாத தேவதைகள் நடுவிலிருந்து எழுந்தவள், அவர்கள் உடன்வரச் செல்வதுபோல் சென்றாள். எங்கிருந்தாலும் அவள் சக்கரவர்த்தினிதானே! “தேவி!” நின்று திரும்பிப் பார்த்து, “என்ன வேண்டும், குழந்தாய்?” என்பதுபோல் நோக்கினாள். “தேவி! அந்தக் கணத்தில் எப்படி கண்ணனை அழைத்தாய்?” “இத்தனை நாளாய் இந்தக் கேள்விக்குத்தான் தவித்தேன், கிடைத்துவிட்டது!” என்ற மகிழ்ச்சியும், ஆனந்தமும் அவனை உந்தி எழுப்பியது. திரௌபதி முகம் ஒளிர்ந்தது. விழிகள் கனிந்தன. இதழில் புன்னகை பூத்தது. விளா மரத்தைச் சுற்றிப் பறந்த மின்மினிகள் ஏனோ நகர்ந்தன. அதனால் தூரத்தில், அவள் சிரசுக்குப் பின்னால் மின்மினிகளின் ஒளிக்கோலம். “நம்மிடமிருந்து நம்மைத் துறப்பது அத்தனை எளிதில்லை, விஜயரே! அந்தக் கணத்தில் என்னிடமிருந்து என்னை நான் துறந்தேன், இனியவரே! அந்தக் கணம் எனக்கு வாய்த்தது. எனக்குள் நான் இல்லாதபோது வேறு யார் அங்கு இருப்பார்கள்? கண்ணன் வந்தான் என்றார்கள்.” என்றவள், காற்றும் கசங்காமல் மெல்ல நடந்தாள். பெண்வேடமிட்ட கண்ணன் நடந்து போவதுபோல் இருந்தது. குனிந்து கையில் கிடைத்த மகிழ மலர்களை அள்ளி, அவள் பாதம் பதிந்த இடத்தில் தூவினான். திரௌபதி திரும்பாமல் கடைக்கண்ணால் அதை நோக்கிப் புன்னகைத்துத் தன் நெஞ்சத்தைப் பார்த்தாள். மாலையில் பார்த்தன் சிரசிலிருந்து விழுந்த மலர்கள் அவள் தனத்தின்மீது மணத்துக் கொண்டிருந்தன. https://solvanam.com/2026/01/11/சரணாகதி/1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- டிரம்பும் அவரது வம்பும் – கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை!
அந்தம்மா விசுவாசத்தை வெளிப்படுத்தவில்லை. பிரதிபலனையே எதிர்பார்த்தா. ரம் எதுவுமே பேசவில்லை. எதிர்காலத்தில் ஆதரவு கொடுக்கலாம். வரும் தேர்தல் நேரம் தான் தெரியும்.1 point- ஜூலை முதல் வருகிறது புதிய 'புள்ளி' விதிமுறை!
இந்த புள்ளி விதிமுறை வீதி விபத்துக்களை குறைக்குமா பார்ப்போம்.1 point- பொங்கல் சிரிப்புகள்.
1 point- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
8 பைக்கற் சீமந்து, 2 லான்ட் மாஸ்ரர் மணல், 20 கம்பி, 2 லான்ட் மாஸ்ரர் சல்லி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 1 கிலோ கட்டு கம்பி.1 point- “மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
1 point- “மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
அன்னம்மாள் பள்ளிகூட 3ம் ஆண்டு விளையாட்டு போட்டி, நொண்டிநாய் ஓட்டத்தில் முதலாம் இடத்தை வென்ற சிவானந்தன் - மரியாதை நிமித்தம் அதை கோஷானிடம் கொடுக்குமாறும் இல்லையேல் நடப்பதே வேறு எனவும் எச்சரிக்கப்படுகிறார்.1 point- பராசக்தி - சுப.சோமசுந்தரம்
1 pointமுற்றிலும் உண்மை. நீதிக்கட்சி (Justice party) மூலமாகப் புகைய ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு அண்ணாவின் திமுகவினால் கொழுந்து விட்டு எரிந்தது என்பதே வரலாறு. தமிழக அரசியலில் அதுவே திருப்பு முனையானது. தமிழ்நாட்டில் மக்களின் தன்னெழுச்சியான பெரிய போராட்டம் என்பது சமீபத்தில் நான் அறிந்து ஜல்லிக்கட்டுப் போராட்டம். அடுத்து, சில இடதுசாரிகளின் (CPI, CPI(M) அல்ல) வழிகாட்டுதலில் மக்கள் போராடியது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு தன்னெழுச்சிப் போராட்டம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு. இவை இப்போது என் நினைவில் வருபவை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திராவிட இயக்கங்களின் முதன்மையை எடுத்துக் காட்ட பராசக்தி படக்குழுவினருக்கு மனமுண்டா என்பது தெரியாது. அப்படிச் செய்திருந்தால் பிரச்சாரப் படம் என்று சொல்லி, படம் தணிக்கைக் குழுவைத் தாண்டாமல் நின்றிருக்க வாய்ப்பு அதிகம். இன்றைக்கு இந்திய ஜனநாயகம் அவ்வளவுதான். ஆனாலும் அண்ணாவை அவர்களால் முற்றிலும் தவிர்க்க இயலவில்லை. எது எப்படியாயினும் தெரிந்தோ தெரியாமலோ, பராசக்தி பெரும்பான்மையான இளையோரிடத்தில் மொழியுணர்வைப் பற்ற வைத்துள்ளது வரவேற்கத் தகுந்த ஒன்று.1 point- “மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
நோபல் பரிசு சமாதனத்திற்கு கொடுப்பது என்பது ஓர் பூச்சாண்டி....தங்களுக்கு விருப்பமில்லாத ஆட்சி நடைபெறும் நாடுகளின் எதிர் கட்சியினருக்கு பரிசை கொடுத்து ஆட்சியை கவிழ்ப்பது இவர்களின் செயல் ..1 point- “மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
ட்ரம்பின் இந்தச் செயல் சின்னப்புள்ளத் தனமா இல்ல மூளை சீரழிந்த தனமா ? லூசிக்குப் பொறந்த, லூசிட புருசன்.1 point- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
அவமானம் என்பது மரணத்தை விட மோசமானது. மகாபாரதத்தில் துரியோதனனின் நண்பன் அஸ்வத்தாமனுக்கு சாகாவரம் அவனின் நல்ல செயலுக்காக வழங்கப்பட்டதல்ல. இந்த வரமே அவனுக்கு அளிக்கப்பட்ட சாபம்தான். இந்த சாபம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் அஸ்வத்தாமனுக்கு வழங்கப்பட்டது. பாண்டவர்களின் ஐந்து புதல்வர்களையும் கொன்று வெறி அடங்காத அசுவத்தாமன் உத்திரையின் கருவில் இருந்த அபிமன்யுவின் குழந்தை மீது பிரம்மாஸ்திரத்தை எய்தான். மன்னிக்க முடியாத இந்த குற்றத்திற்காக கிருஷ்ணர் அவனிடம் இருந்த மரணத்தை பறித்து கொண்டார். வாழும் காலம் முழுவதும் வலியுடனும், வேதனையுடனும் சாகாமல் வாழ வேண்டுமென்று அவர் இவ்வாறு செய்தார்..1 point- “மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
நோபல் பரிசை… தம் இஷ்டத்துக்கு மாற்றிக் கொண்டதன் மூலம், ட்ரம்பும், அந்த வெனிசூலா பெண்மணியும்…. உலக அரங்கில்… தம்மைத் தாமே தரம் தாழ்த்திக் கொண்டார்கள். மிக அருவருப்பான ஒரு செயலை… அந்த இரண்டு பன்றிகளும் செய்துள்ளது.1 point- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பணப்பரிமாற்ற ரசீது. வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை பரராஜசிங்கம் ஐயாவின் மலசல கூடத்தை பூரணப்படுத்த குழிவெட்டும் படங்கள்.1 point- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஓம் அக்கா. என்னால் வீட்டினுள் செல்ல முடியாது. இந்த படங்கள் பிளம்பிங் செய்யும் தம்பி எடுத்து அனுப்பி உள்ளார். இந்த நிலையில் உள்ள மலசலகூடத்தை தான் 3 சகோதரர்களும் பாவித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்க கவலையாக உள்ளது. நாளை தான் மணல், சல்லி, சீமந்து, கம்பி என்பன வழங்குவார்களாம். உடனடியாக வேலையை தொடங்க கேட்டுள்ளேன். மலசலகூடத்தையும் தூய்மைப்படுத்த கேட்டுள்ளேன். இவர்கள் டிசம்பர் 3ஆம் திகதி நிகழ்விற்கு சகோதரியுடன் வந்தவர்கள், பிந்தியபடியால் தூக்கி இறக்குவதும் ஏற்றுவதிலும் உள்ள சிரமம் காரணமாக ஆட்டோவில் இருந்தவர்கள். அப்போதே மலசலகூடம் திருத்தும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன் பின்னர் நடந்ததெல்லாம் விந்தைதான்!1 point- “மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
'என்ன கருமமடா இது.....................' என்று தான் சொல்லத் துடிக்குது மனது...............................🫣.1 point- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
சுகாதாரமற்ற இடங்களுக்கு போகும் போது உங்கள் நலனிலும் கவனம் எடுங்கள் ஏராளன்.1 point- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகன் அவர்களே! இதுவும் கடந்துபோகும் என்று சொல்வார்கள். ஆனால் வாழ்நாளில் கடக்கவே முடியாத துன்பங்களும் உண்டென்பதை மறுக்கவே முடியாது. அத்தகைய ஒரு துன்பம் உங்களையும் சூழ்ந்துவிட்டதை எண்ணிக் கலங்குகிறோம். ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் உங்களுக்கு ஆறுதல்கூற வார்த்தைகள் இல்லை. தமிழினம் அழிவுகளைச் சந்தித்துவந்த வேளையில் யாழ்களத்தை ஆரம்பித்து எங்கள் மனதுயருக்கு ஆறுதல்தந்து ஆற்றுவதற்கு வந்த ஒருவராகவே உங்களை எங்கள் மனங்களில் பதியவைத்தோம். அந்தப்பதிவு அழியாது. என்றும் உங்களுக்கு ஆதரவு தரவே மனம் விரும்புகிறது. ஆறுதல்கூற முடியாத உங்கள் துணைவியாரின் இழப்பிற்கு எங்கள் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம்... அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்!!🙏1 point- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பொன்னாலை ஏரம்பு ஐயாவின் 3 பிள்ளைகளின் மலசலகூடம் (பிளாற்) திருத்தப்பணிகளுக்காக 80000 ரூபா மூளாய் கணேஷா ஹாட்வெயர்ஸ் அன் எலக்ரிக்கல்ஸ் கடை உரிமையாளர் முருகசோதி அவர்களின் வங்கிக்கணக்கில் வைப்புச் செய்துள்ளேன். பணம் செலுத்தினால் தான் மணல், சல்லி, சீமந்து, கம்பி என்பவற்றை பறிப்பதாக கூறியதால் பணத்தை செலுத்திவிட்டேன். இருப்பு 380,420.67-80025=ரூ 300,395.67 சதம் இன்று 16/01/2026 80000 ரூபா வைப்புச் செய்த பின் வங்கி மீதி. 25 ரூபா இலங்கை வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள்.1 point- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மிகவும் கவலையான தகவல். சின்ன வயதில் இருந்து அப்பா, அம்மா, எனக்கு படிப்பித்த நல் ஆசான்கள், வாசித்த இலக்கியங்கள், கடந்து சென்ற நல்ல மனிதர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்தது நல்லவர்களுக்கு பெரும் துயரமோ இழப்போ ஏற்படாது என்பதே. அறத்தின் வழி வாழ்கின்றவர்களுக்கு துன்பமும் இழப்பும் குறைவு என்பதே. ஆனால் வாழ்வில் நிகழ்வது அவ்வாறு இல்லை எனும் மிகவும் கசப்பான உண்மையைத் தான் நான் அடிக்கடி காண்கின்றேன். மோகனுக்கும், அவரது பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட இந்த இழப்பை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வாழ்வின் யதார்த்தம் முகத்தில் அறைந்து செல்கின்றது. முரண்பட்ட அறம் தான் இன்று கண் முன்னே விரிந்து செல்கின்றது. மோகன், உங்களைப் பார்த்து Be Strong, இந்த நேரத்தில் உறுதியாக இருங்கள் என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதை கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உங்களை அவதானித்ததில் இருந்து நான் உணர்ந்த விடயம். ஏனெனில் உங்கள் துணை சுகவீனம் அடைந்ததில் இருந்து நீங்கள் காட்டிய உறுதி என்னால் நினைத்துப் பார்க்க முடியாதது. எல்லா வழிகளும் அடைபட்டு போன பின்பு கூட நீங்கள் மனதளவில் உறுதியாக இருந்ததை கண்டுள்ளேன். யாழை நிர்வகிப்பதில் கூட எந்த தளர்வையும் நீங்கள் காட்டவில்லை என்பது சாதாரண விடயம் அல்ல. எந்த நிலையிலும் தளராமல் இருக்கும் இந்த மனவுறுதி தான் உங்கள் பிள்ளைகள் இருவருக்கும் இருக்கும் என நம்புகின்றேன். அக்காவுக்கு எனதும் என் குடும்பத்தினரதும் கண்ணீர் அஞ்சலிகள்.1 point- அருண் சித்தார்த் அலுவலகம், வீடு எரிக்கப்பட்டது.
1 point- நாம் பெற்றோர்களாக தோல்வியுறுகிறோமா? டிஜிட்டல் காலத்தில் பெற்றோர் பங்கு — உளவியல் நிபுணர் டாக்டர் சரண்யா ஜெயக்குமார் விளக்கம்
1 point- EPRLF ஆல் சித்திரவதை செய்யப்பட்ட பல்கலைக்கழக மணவர் ஒருவரின் வாக்குமூலம்
முன்னாள் யாழ்பல்கலைக் கழக மாணவர் ஒருவரின பதிவிலிருந்து….. THUGS’ LIFE EPRLF இயக்கம் இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கோடு வடக்கில் நிலைகொண்ட இந்திய இராணுவத்தோடு(IPKF) மீளவும் பிரசன்மாகியிருந்தது. ஒவ்வொரு பிரதான சந்திகளிலும், சாலைத் திருப்பங்களிலும் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்தது. EPRLF இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீளவும் வந்திறங்கினர். புலிகளை அழித்து இந்தியாவின் உதவியோடு ஈழத்தைக் கைப்பற்றுவோம் என EPRLF இன் தலைவர்களில் ஒருவரான வரதராஜப் பெருமாள் அறிக்கைவிடுக்கிறார். யாழ்ப்பாண நகரின் கோடியில் அமைந்திருந்த அசோக் ஹோட்டலில் இருந்து EPRLF இராணுவம் செயற்பட்டது. EPRLF குழுவினர், சந்தேகத்தின் பெரில் கைதுசெய்த பலரை வெட்டியே கொன்றனர் என்ற தகவல்கள் வெளியாகின. இந்திய இராணுவம் நிலைகொள்ள ஆரம்பித்த முதலாவது நாளில் இருந்தே மக்கள் விரோதக்க் கும்பலாகவே EPRLF தன்னை அறிமுகப்படுத்தியது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என்ற அனைத்தும் இலங்கை இராணுவத்திற்கு ஒப்பான வகையில் நிறைவேற்றப்பட்டன. தேசியப் போராட்டம், வர்க்கப் புரட்சி, மக்கள் இயக்கம் என்ற அழகான வார்த்தைகளை உச்சரித்த EPRLF இயக்கம் இந்திய இராணுவத்தின் துணைக் குழுவாக இயங்க ஆரம்பித்தது. 1988 ஆம் நடுப்பகுதில் EPRLF மக்கள் மீதான பல முனைத் தாக்குதல்களை ஆரம்பித்தது. குறிப்பாகப் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான கைதுகள் உச்சத்தைத் தொட்டிருந்தன. பல்கலைக் கழகத்திற்குக் கல்விகற்கச் செல்வதென்பதே பாதுகாபற்றதாக இருந்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் அமைப்புச் சார்பாக ஒரு துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டோம். 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் தலைமையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. அவ்வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் விடுதியில் நான் தங்கியிருந்தேன். விடுதிக்கு நேர் எதிராக அமைந்திருந்த தொழில் நுட்பக் கல்லூரி தேர்தல் சாவடியாகப் பயன்படுத்தப்பட்டது. விடுதிக்குப் பின்புறமிருந்து தேர்தல் சாவடியை நோக்கி புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனையடுத்து இந்திய இராணுவத்தினர் விடுதியைச் சுற்றிவளைத்தனர். தெருவில் நடமாடிய ஒவ்வொருவரையும் எழுந்தமானமாகத் தாக்கினர். விடுதியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வரவில்லை என்பதை விடுதியைச் சுற்றிவளைத்திருந்த இந்திய இராணுவத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு என்னை அவர்களிடம் சென்று பேசுமாறு மாணவர்கள் முடிவெடுத்தனர். அவர்களிடம் பேசச் சென்ற போது நான் தேர்தல் சாவடியிலிருந்த இராணுவத் தளபதியிடம் பேசுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டேன். பஞ்சாபிக் காரரான அவரது முன்னால் சென்ற போது எனது மேலங்கியில் எண்ணைப் படிவு காணப்படுவதாகவும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது நானாக இருக்க வேண்டுமென முடிவெடுக்கிறார். என்னை தீர விசாரிக்குமாறு சில இராணுவத்தினரிடம் அனுப்பி வைக்கிறார். அவர்கள் என்னைத் தாக்க ஆரம்பிக்கின்றனர். இரண்டு இராணுவத்தினர் ஒரு மேசையுடன் இணைத்து என்னைக் கட்டிவைத்துவிட்டு மிருகத் தனமாக அடிக்க ஆரம்பிக்கின்றனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக எனக்கு அடி விழுகிறது. இறுதியில் நான் மயக்கமடைந்து விட்டேன். மயக்கம் தெளிந்த போது எனக்கு சிறிதளவு நீர் அருந்த அனுமதித்தார்கள். தேர்தல் முடிவடைந்திருந்தது. இராணுவத்தினர் முகாமிற்கு செல்ல ஆரம்பிக்கின்றனர். எனது கைகளை இறுகக்கட்டி இராணுவ வாகனத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றனர். சேகர் என்ற தமிழ் அதிகாரி அங்கு வருகிறார். என்னைப் புலியா எனக் கேட்கிறார். இல்லை என்றதும் தனது சப்பாத்துக் கால்களால் எனது முதுகில் உதைகிறார். சில நிமிடங்கள் நினைவிழந்த நிலையில் மருதானாமடம் பிரிவைச் சேர்ந்தா இராணுவத்தினரின் வாகனத்தில் ஏற்றப்படுகிறேன். அங்கு என்னை ஒப்ப்டைத்தவர் சேகர். அந்த அணியின் பொறுப்பதிகாரிக்கு நான் புலிகள் சார்ந்தவன் என்று கூறியே ஒப்படைக்கப்படுகிறேன். மருதனாமடம் முகாமிற்கு அவர்கள் என்னைக் கொண்டு செல்லும் வரைக்கும் ஏறத்தாழ 10 நிமிட நேரமாக பலர் அங்கும் இங்குமாகத் தாக்குதல் நடத்தினர். சிகரட் புகைத்துக்கொண்டிருந்த இராணுவதினர் ஒருவர் என் மீதே அதனை அணைக்கிறார். பல தடவைகள் உரத்து அலறியும் எந்தப் பயனும் இல்லை. எல்லாமே மரத்துப் போனது போன்ற உணர்வு. இறுதியாக முகாமை அடைந்ததும் அங்கு இராணுவ வண்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்த எனது கால்களைப் பிடித்து இழுத்ததில் எனது தலை அடிபட விழுந்ததில் மற்றொரு தடவை நினைவிழக்கிறேன். நான் விழித்துக்கொண்ட போது என்னைச் சுற்றிப் பலர் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் EPRLF உறுப்பினர்கள். எனக்குத் தெரிந்த ஒருவரையும் காணக்கூடியதாக இருந்தது. ஒரு சிலர் குடி போதையில் இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எல்லோருமே என்னிடம் பல கேள்விகளைக் கேட்கின்றனர். அங்கிருந்த EPRLF உறுப்பினர் ஒருவர் நான் இந்திய இராணுவத்திற்கு எதிராகச் செயற்படுவது தனக்குத் தெரியும் என்கிறார். உடனடியாகவே கேள்விகள் நிறுத்தப்பட்டு சாரமாரியாகத் தாக்குதல் நடத்த ஆரம்பிக்கின்றனர். தமக்குத் தெரிந்த சித்திரவதை முறைமகள் அனைத்தையும் கையாள்கின்றனர். ஒரு புலி உறுப்பினரையாவது காட்டிக்கொடுக்காவிட்டல் கொன்றுவிடப் போவதாகக் கூறுகின்றனர். எனக்கு முன்னமே தெரிந்த EPRLF உறுப்பினர் அங்கிருந்து செல்லும் போது எனது முதுகில் வில்லுக் கத்தியால் கீறிவிட்டு மறு நாள் வரைக்கு இது இரத்தம் சொட்டப் போதுமானது எனக் கூறிவிட்டு அகன்று செல்கின்றார். மருதனாமடம் முகாம் வழமையாகக் கைதிகளைத் தடுத்துவைப்பதற்கான முகாம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு நேரமெடுக்கவில்லை. முகாமில் என்னைத் தவிர வேறு கைதிகளைக் காணமுடியவில்லை. இரவு நெடு நேரமாக கிணற்றிற்கு அருகிலிருந்த மரத்தோடு என்னைக் கட்டிவைத்திருந்தனர். நள்ளிரவு இருக்கலாம் ஒரு இந்திய இராணுவத்தினர் எனக்கு அருக்கில் வந்து குடிப்பதற்கு நீர் கொண்டுவந்து தந்த பின்னர் முகாமின் பின்புறதில் இருந்த மலசல கூடத்திற்குப் பின்புறம் காணப்பட்ட அறையில் அடைத்துவிட்டனர். இரவு உறங்கியதாக நினைவில்லை. அதிகாலையில் உறங்க முற்பட்ட வேளையில் சற்று உணவோடு அறைக்குள் எனைத் தள்ளிய இராணுவ சிப்பாய் வருகின்றார். சற்றுப் பின்னதாக இரண்டு EPRLF பிரதான உறுப்பினர்கள் வருகின்றனர். ஒருவர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தங்கன் என்ற மானிப்பாயைச் சேர்ந்தவர். மற்றவர் பிரதீப் என்பவர். நீ எப்போது புலியில் சேர்ந்தாய் என்று கேட்டவாறே தங்கன் என்னைச் சாரமாரியாகத் தாக்குகிறார். கிணற்றிற்கு அருகில் அழைத்துச்சென்ற அவர்கள் நீர் நிரம்பிய ஒரு வாளிக்குள் எனது தலையை அமிழ்த்துகின்றனர். நான் மூச்சுத்திணறும் வரைக்கும் நீருக்குள் எனது தலையை வைத்திருக்கின்றனர். என்னிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாமையால் அறைக்கு அழைத்துச் சென்று மீண்டும் தாக்குதல்களைத் தொடர்கின்றனர். அப்போது தமிழ்ப் பேசும் இந்திய இராணுவ அதிகாரி சேகர் அங்கு வருகின்றார். தனது பங்கிற்கு அறையின் மூலையில் உட்காரவைக்கப்பட்டிருந்த என்னை கால்களால் உதைக்கிறார். என்னை இங்கு வைத்து விசாரணை செய்தால் உண்மை சொல்லப்போவதில்லை என்றும் மானிப்பாயில் உள்ள விசேட சித்திரவதை முகாமிற்கு என்னை அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறுகின்றனர். அங்கே மின்சாரம் பாய்ச்சும் உபகரணங்கள் உட்பட பல சித்திரவதைக் கருவிகள் இருப்பதாகவும் நான் எப்படியும் உண்மை சொல்வேன் என்றும் பேசிக்கொள்கின்றனர். அதன் பின்னர் வெளியே வாசலுக்குச் சென்று அங்கு சித்திரவதைச் செய்யப்படும் போது இறந்துபோன ஒருவரைப்பற்றியும் பேசிக்கொள்கின்றனர். அவர்கள் அங்கிருந்து அகன்ற சிறிது நேரத்தில் அறைக்குள் வந்த உப நிலை இராணுவ அதிகாரி ஒருவர் தன்னை நாகரீகமாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ராஜஸ்தானைச் சேந்தவர் என்கிறார். நான் உண்மையில் புலி இயக்கத்தைச் சார்ந்தவனா என்று கேட்கிறார். நான் நடந்தவற்றை விபரிக்கிறேன். அவர் சித்திரவதை முகாமில் நடப்பவற்றை விபரிக்கிறார். கைகளில் நகங்களைப் பிடுங்குவார்கள், கண்களில் ஊசி ஏற்றுவார்கள் என்று மனித நாகரீகங்கள் கேட்டிராத பல சித்திரவதைகளைப் பற்றிக் கூறுகின்றார். அவர் கூறும் போதே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. முதல் நாள் இரவு EPRLF உறுப்பினர் கீறிய கத்திக்காயம் மேலும் வலித்தது. யாராவது எனக்குத் தெரிந்த பல்கலைகழகப் புலி உறுப்பினர் தொடர்பான தகவல்களை மட்டும் கூறினால் என்னை இங்கிருந்து விடுதலை செய்துவிடுவதாகக் கூறினார். வெள்ளிக்கிளமை விடுமுறை நாளொன்றில் கைது செய்யப்படிருந்தேன். அன்று சனி. இன்னும் ஒரு ஞாயிறு கழிந்தால் திங்கள் பல்கலைக் கழகத்தில் போராட ஆரம்பித்துவிடுவார்கள். போராட்டம் ஆரம்பித்தபின்னர் அடிகாயங்களோடு என்னை விடுதலை செய்ய மாட்டார்கள். ஒன்றில் கொலை செய்துவிடுவார்கள் அல்லது சித்திரவதை முகாமில் நீண்டகாலம் வைத்திருப்பார்கள் என்கிறார். பல்கலைக் கழகதிலிருந்து சிலர் அணுகியதாகவும் இராணுவ அதிகாரிகள் நான் கைதானதை மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார். கைதானதை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லாத காரணத்தால் கொலை செய்து அழித்துவிடுவது இலகுவானது என்கிறார். அவரோடு ஒத்துழைத்தால் விடுதலைக்காக ஆவன செய்வதாகக் கூறுகிறார். எனக்குத் யாரையும் தெரியாது என்று மீண்டும் கூறியதும் எதுவும் பேசாமல் அங்கிருந்து அகன்றுவிட்டார். மதிய உணவு தரப்பட்டதாக நினைவு. மாலை வேளையில் தங்கன் மீண்டும் என்னை வந்து மிரட்டிவிட்டுச் சென்றார். ஞாயிறு மாலை சித்திரவதை முகாமில் சந்திப்பதாகக் கூறினார். சில மணி நேரங்களின் பின்னர் அதே உப நிலை இராணுவ அதிகாரி வருகின்றார். புலிகளின் ஒரு உறுப்பினரை காட்டிக்கொடுத்த பின்னர் விடுதலையாகி வெளியில் சென்று தமக்குத் தகவல் தருமாறு செயற்பட்டால் உடனடியாகவே விடுதலை செய்வதாகக் கூறுகிறார். தவிர, நான் அதிகமாகத் தாக்கப்பட்டிருப்பதால் ஏனைய கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு அனுப்பத் தயாரில்லை என்றும் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்த அடிப்படையில் விடுதலை செய்யலாம் அல்லது சித்திரவதை முகாமிற்கு அனுப்ப வேண்டியதாக இருக்கும் என்கிறார். நான் இப்போது பேச ஆரம்பிக்கிறேன், “உங்களுடைய நாட்டில் வெள்ளையர்களை வெளியேற்றுவதற்கான போராட்டம் நடைபெற்றபோது மக்கள் ஆதரவு இருந்ததைப் போன்றே இப்போதும் புலிகளை மக்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் புலிகள் தலைமறைவு அமைப்பு. மக்களுக்குப் பழக்கப்பட்டவர்கள் இப்போது அங்கே இப்போது தலைமறைவாகிவிட்டார்கள். காட்டிக்கொடுப்பதற்கு யாரும் இல்லை. ஆனால் நீங்கள் அப்பாவிகளைத் தாக்கினால் அவர்கள் புலிகளோடு இணைவதைத் தவிர வேறு வழி இல்லை என்றாகிவிடும்” என்பன போன்ற விடயங்களைக் கூறுகிறேன். ஆமோதிப்பது போன்று தலையசைத்துவிட்டுச் செல்கிறார். அவரை மீண்டும் நான் காணவில்லை. அன்று இரவு சித்திரவதைகள் குறைந்திருந்தன. மறு நாள் ஞாயிறு, மதியம் அளவில் முகாமின் முன்னரங்கில் காவலுக்கு நின்றிருந்த இராணுவத்தோடு என்னை நிறுத்தி வைத்தனர். தெருவால் புலி உறுப்பினர்கள் சென்றால் காட்டிக்கொடுக்குமாறு பணிக்கப்பட்டேன். துப்பாக்கியோடு ஒரு இராணுவச் சிப்பாய் தெருவில் போகிறவர்களை கண்காணித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட என்னைத் தாக்குவார். பொழுது சாய்ந்ததும் மறுபடி அறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். EPRLF உறுப்பினர்கள் வந்தார்கள். மானிப்பாய் முகாமிலிருந்து பிரதீப்பும் வந்திருந்தார். “*நல்ல தமிழ்” *மட்டும் தான் “தோழர்” பேசினார். வெளியே ஒடிச்சென்று பெரிய தடி ஒன்றைக் கொண்டுவந்து தாக்கியது நினைவிருக்கிறது. ஒரு கட்டத்தில் நான் நினைவிழந்துவிட்டேன். கண்விழித்த் போது யாரும் அருகில் இல்லை. நீண்ட நேரத்தின் பின்னர் இராணுவச் சிப்பாய் ஒருவர் வந்து ஏதோ ஹிந்தியில் கேட்டார். நான் பதில் சொல்லவில்லை. திட்டியபடி பல தடவை முகத்தில் அறைந்தார். அவர்கள் கூறியபடி சித்திரவதை முகாமிற்கு நான் கூட்டிச் செல்லப்படவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. மறு நாள் அதிகாலை அடி உதை எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தது. சித்திரவதை முகாமிற்குக் கொண்டு செல்லப்போவதாகவும் என்னை இராணுவ உடுப்பை அணிந்து கொள்ளுமாறும் ஒரு அதிகாரி உடை, தொப்பி ஆகியவற்றுடன் வந்தார். மதியத்திற்குச் சற்றுப்பின்னர், இராணுவ உடையுடன், பின்பக்கம் திறந்த இராணுவ வண்டியில் ஏற்றப்படுகிறேன். சித்திரவதை முகாமிற்குச் செல்லும் வழியில் எனது மானிப்பாய் வீட்டைச் சோதனையிடப் போவதாகச் சொல்கிறார்கள். வீட்டிற்குச் செல்லும் வழியில் பல்கலைக்கழகத்தில் போராட்டத்திற்கான தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக உளவாளிகள் மூலம் தகவல்கள் கிடைத்திருப்பதாகச் பொறுப்பதிகாரி சொல்கிறார். எனது வீட்டிற்குச் செல்லும் வழியில் கடை ஒன்றின் அருகில் சற்று மறைவான இடமொன்றில் என்னையும் இன்னொரு இராணுவ அதிகாரியை காவலுக்கும் நிறுத்திவிட்டு வீட்டைச் சோதனையிடச் செல்கிறார்கள். அவ்வேளையில் எனது வீட்டில் எனது ஆசிரியராகவிருந்த கலாநிதி சிறீதரன், பேராசிரியை ரஜனி திரணகம உட்பட உறவினர்கள், நண்பர்கள் பலர் “காணாமல்போன” என்னைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்ததை பின்னதாக அறியக் கூடியதாக இருந்தது. அங்கு சென்ற இந்திய இராணுவத்தினர் தாங்கள் என்னைக் கைது செய்யவில்லை என்றும், வீட்டில் ஒளிந்திருக்கிறேனா எனச் சோதனையிட வந்ததாகவும் கூறியிருந்தனர். எனக்குக் காவலுக்கு நின்றிருந்த இராணுவச் சிப்பாய் அருகிலிருந்த கடைக்கு பீடி வாங்குவதற்காகச் செல்கிறார். அவ்வேளையில் எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெருவால் நடந்து செல்கிறார். அவரை நான் சைகை காட்டி அழைத்ததும் என்னை நோக்கி வருகிறார். அடி விழுந்ததில் முகம் முழுவதும் வீக்கமடைந்திருந்ததால், கூர்க்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அழைப்பதாகக் கருதியே அவர் என்னை அணுகியதாக பின்னதாக அவர் என்னிடம் கூறியிருந்தார். அருகில் வந்ததும் என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர் என்னுடன் ஏதும் பேசாமல் உடனடியாகவே மறுபக்கம் திரும்பிச் சென்று எனது வீட்டில் விடயத்தைத் தெரிவித்திருக்கிறார். வீட்டில் இருந்த அனைவரும் கடையை நோக்கி ஓடிச் செல்ல, நிலமையைப் புரிந்துகொண்ட இந்திய இராணுவத்தினர் அவசர அவசரமாக வாகனத்தை நோக்கி விரைந்து அதனைச் செலுத்த ஆரம்பித்தனர். வாகனத்தின் பின்னால் எனது குடும்பத்தினர் ,மற்றும் அவர்களுடனிருந்த பேராசியர்கள் ஓடிவருவதைக் காணக்கூடியதாக இருந்தது. இப்போது நான் முகாமில் உயிரோடு வைக்கப்பட்டிருப்பதைப் பலர் சாட்சியாகக் கண்டிருக்கிறார்கள். இராணுவ வாகனம் இடையில் நிறுத்தப்பட்டு யாரையோ தொடர்பு கொள்கிறார்கள். இப்போது அவர்களது திட்டம் மாறியிருக்க வேண்டும். மருதனாமடம் முகாமிற்கு மீண்டும் கொண்டு செல்லப்படுகிறேன். அன்று மாலைவரை எனக்கு யாரும் அடிக்கவில்லை. அன்று இரவிற்குள் எனது வீட்டார், ரஜனி திரணகம போன்றோர் பல அதிகாரிகளைச் சந்தித்து EPRLF செயலாளர் பத்மனாபாவையும் சந்திக்கின்றனர். அன்று இரவே விடுதலை செய்யப்படுகிறேன். காயங்கள் குணமாகும் வரை வெளியே வரக்கூடாது, பத்திரிகைகளில் படம் வரக்கூடாது, என்ற எச்சரிக்கையின் பின்னர் எனதுகுடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகிறேன். * வைமன் வீதி முகாமில் நான் சந்தித்த வாசு இப்போது கே.பி இன் தன்னார்வ நிறுவனத்தின் பிரித்தானிய முகவர்…பிரித்தானியாவில் வசிக்கும் புலி எதிர்ப்பாளர். கலாநிதி சிறீ மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயற்பாட்டாளர், ஜெரோம் சில காலங்களின் பின்னர் மாரடைப்பால் மரணித்துவிட்டார், கிருபன் பிரான்சில் வசிக்கிறார், பிரதீப் பிரான்சின் புறநகர்ப் பகுதியில் வசிப்பதாகக் கூறுகிறார்கள். நான் மீண்டும் எழுத்துக்களோடு பிரித்தானியத்்தெருக்களில் https://www.facebook.com/naveen.navaneethan.501 point- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் மோ. சுமதி (பூமா) இன்று (14-01-2026) காலமானார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.0 points- “மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
இப்படியும் சில மனிதர்கள்0 points- பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை!
பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை! written by admin January 16, 2026 இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற முறையில் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதான நிமலராஜா மதியபரணம் என்பவரே இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தைச் செய்தவர். செஃப்டன் (Sefton) பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்த தனது மனைவி நிலானி நிமலராஜாவை (44), கடந்த ஜூன் 20 அன்று மதியபரணம் கத்தியால் தாக்கிப் படுகொலை செய்தார். நிலானி தனது மகள்களுடன் அந்தக் கடைக்கு மேல் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். 🔪" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> நீதிபதி பிரையன் கம்மிங்ஸ் கே.சி (Justice Brian Cummings KC) முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், நிலானியின் உடலில் 14 கத்திக்குத்து காயங்களும், 4 வெட்டுக் காயங்களும் இருந்ததாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. “கொலை செய்யும் நோக்கத்துடன் மட்டுமே” மதியபரணம் அங்கு சென்றதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். 💢" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> ஒரு குடும்ப நிகழ்வுக்குத் தன்னை அழைக்காததால் ஏற்பட்ட கடும் கோபமே இந்த கொலைக்குத் தூண்டுதலாக இருந்துள்ளது. தாக்குதலுக்கு முன்பே மதியபரணம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, ஆக்ரோஷமாக நடந்துகொண்டவர் என்பதும், தனது மனைவி மற்றும் மகளைத் தொடர்பு கொள்ளக் கூடாது என்ற நீதிமன்றத் தடையை அவர் மீறியிருந்ததும் விசாரணையில் உறுதியானது. 💔" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இந்தத் தாக்குதலின் போது 18 வயதான மூத்த மகள் அளித்த வாக்குமூலம் நீதிமன்றத்தையே உலுக்கியது: “அம்மாதான் எனக்கு எல்லாமே. இந்தச் சம்பவத்தால் நான் என் அம்மா, அப்பா, வீடு என அனைத்தையும் இழந்துவிட்டேன். தந்தையர் குடும்பத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும், அதை அழிப்பவர்களாக இருக்கக் கூடாது. என் தந்தை எனக்குத் துரோகம் இழைத்துவிட்டார்.” ⚖️" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிமலராஜா மதியபரணத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் குறைந்தபட்சம் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், அதுவரை அவர் விடுதலைக்காக விண்ணப்பிக்க முடியாது என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட நிலானி, ஒரு கனிவான மற்றும் ஒழுக்கமான பெண்ணாக வாழ்ந்தவர் என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்தார். #UnitedKingdom #Liverpool #CrimeNews #JusticeForNilani #TamilNews #UKCourt #DomesticViolence #BreakingNews #LiverpoolCrime #SrilankanTamilNews https://globaltamilnews.net/2026/226663/0 points - டிரம்பும் அவரது வம்பும் – கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.