Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    89120
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33926
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    39465
    Posts
  4. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1610
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/04/26 in all areas

  1. இன்று நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து ஆடாததால் ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களில் நின்றது. எனினும் மார்கோ ஜன்சனின் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 55 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும், டெவால்ட் பிறெவிஸின் நிதானமான 34 (27 பந்துகள்) ஓட்டங்களுடன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் 29 (24 பந்துகள்) ஓட்டங்களோடும் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்துகளைச் சிதறடித்து தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்தனர். ஃபின் அலென்னின் அபாரமான மரண அடியுடன் ஆட்டமிழக்காமல் எடுத்த செஞ்சுரியான 100 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும், டிம் செய்ஃபேர்ட்டின் புயல்வேக 58 (33 பந்துகள்) ஓட்டங்களோடும் 12.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்தோடு இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியையும் பெற்றது. யாழ் களப் போட்டியாளர்களில் எவரும் நியூஸிலாந்து அணி அரையிறுதிப் போட்டியில் வெல்லும் எனக் கணிக்காததால், ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! முதலாவது அரையிறுதிப் போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை):
  2. எனக்கு புள்ளிகளை கணக்குப் பார்க்கும் வேலை இன்று இல்லை!
  3. இந்த ஈரான் கப்பல்... காத்தான்குடி இணைய போராளிகளை, ஈரான் போருக்கு அழைத்துப் போக வந்ததாக சொல்கிறார்கள். 😂 அதனை கேள்விப்பட்ட அமெரிக்கா... இதனை தாட்டுப் போட்டுதாம். 🤣
  4. eSrpdsonot4a988s56a6h24i154215,60g2041 90:mga5rm2hc4 7lfc3la · எத்தனை முறை ஒதுக்கி இருப்பார்கள், எவ்வளவு இழிவான பேச்சுக்கள், ஆனால் அத்தனையும் ஓரம் கட்டி விட்டு, சோர்ந்து போகாமல் விசுவாசத்தோடு இன்று ஜெயித்துக் காட்டியிருக்கிறார், அதோடு மட்டுமல்லாமல் போட்டி முடிந்ததும் தேவன் தந்த வெற்றிக்காக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றியும் சேர்த்து சொல்லி இருக்கிறார்,.. 💜 ஒரு மனுஷனுக்கு என்ன மாதிரி பிரச்சனை எல்லாம் வரக்கூடாதோ அத்தனை பிரச்சினைகளும் பல உருவங்களாக பல வடிவங்களில் போட்டு வாட்டி வதைத்தது ஏன் நாமே பலமுறை இந்த சஞ்சு சாம்சன் அணிக்கு தேவையில்லை என்று எழுதியதும் உண்டு அப்படிப்பட்ட ஒரு மோசமான நிலையில் இருந்து இன்று இந்தியாவை அரையிறுதி போட்டிக்கு அழைத்து சென்று இருக்கிறான் தனி ஒருவனாக இந்த உலகக் கோப்பை போட்டியை தொடங்குவதற்கு முன்பாக இரு தரப்பு போட்டிகளில் சரியான ஆட்டம் ஆடாததால் போட்டியின் பாதியிலேயே அவனிடமிருந்து விக்கெட் கீப்பிங் கிளவுஸ் கழட்டப்பட்டு அது இஷான் கிஷான் கையில் கொடுக்கப்பட்ட போது அவன் முகம் எவ்வளவு வாடியது அவன் மனம் எவ்வளவு பதறியது என்று அன்றைய நாள் நாம் லைவாக பார்க்கும்போது உணர்ந்தோம் அன்றைய நேரத்தில் சஞ்சு தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோல ஒரு மோசமான நாளை இனிமேல் கண்டுவிடக்கூடாது என்று எடுத்த வைராகியம் தான் என்று இந்தியாவிற்கு உலக அரங்கில் உச்சபட்சமான வெற்றியை எடுத்துக் கொடுத்திருக்கிறது பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மிகப்பெரிய ஸ்கோர் ஆன கிட்டத்தட்ட 200 ரன்களை டார்கெட் ஆக வைத்தார்கள் இந்த ரன்னை அடிக்க வேண்டும் என்றால் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி தேவைப்படும் இதற்கு முன்பு உலக கோப்பை வரலாற்றில் எவ்வளவு பெரிய ரன்னை அடித்து துரத்தி வெற்றி பெற்றது என்று வரலாறே இந்திய அணிக்கு கிடையாது அப்படிப்பட்ட வரலாறை இன்று மாற்றி எழுதியிருக்கிறான் சாம்சன் அவர் 50 ரன்கள் அடித்த போதே நான் முடிவு செய்து விட்டேன் இன்று இவன்தான் போட்டியை முடித்துக் கொடுக்க போகிறான் என்று எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் முக்கியமான தருவாயில் கைவிட்டாலும் தான் கைவிடமாட்டேன் என்று இமயமலை போல ஒற்றை நம்பிக்கையாக இந்தியாவிற்கு கடைசி வரை ஜொலித்து நின்றான் சாம்சன் இறுதியாக நான் வணங்கும் கடவுள் என்னை கைவிடவில்லை என்பதை உணர்த்தும் வகையில் மைதானத்தில் முட்டி போட்டு தன்னுடைய மரியாதையை கொடுத்தபோது எவ்வளவு ஆனந்தம் இருந்திருக்கும் உண்மையில் இந்த சஞ்சுவுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க போட்டி இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி இது போல ஒரு வெற்றியை தன் வாழ்நாளில் இதற்கு முன்பு இவர் பெற்றிருக்க மாட்டார் இதன் பின் பெறுவாரா என்பது சந்தேகம்தான் இதைவிட பல போட்டிகள் இவர் இன்னும் ஆட வேண்டியது இருந்தாலும் இந்த போட்டியில் இவர் அடித்த அடிகள் அனைத்தும் இவர் அடித்த ரன்கள் அனைத்தும் இந்திய அணியின் வரலாற்றில் மறையாத சுவடுகளாக அப்படியே நிலைத்து நிற்கும் சஞ்சு சாம்சன் என்ற மாவீரனுக்கு 10000000 பயர் விடலாம் 🔥" #SanjuSamson #INDvsWI #cricketlovers #ICC #tilakvarma #ICCWorldCup #T20WorldCup2026 #icct20worldcup2026 #icccricket #TeamIndia #INDvsWI பதிவு உரிமையாளருக்கு நன்றிகள்.
  5. பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ நாவலில் மிகவும் விரிவாக இதைப்பற்றி எழுதி உள்ளார். அவர் இப்பொழுது இங்கிலாந்தில் வசிக்கிறார். 1970களில் இவர் கிழக்கு இலங்கை சம்மாந்துறையில் 4 ஆம் - 5ஆம் வகுப்புகளில் கல்விகற்கும் காலத்தில் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக "தூய இஸ்லாமிய" (அரேபிய) நடைமுறைகள் பள்ளிக்கூடங்களில், வீடுகளில் புகுத்தப்பட்டது, அதை ஊரில் யார் முன்னின்று செய்தார்கள், அவர்களுக்கான நிதி முதலில் ஈரானில் இருந்து தொடங்கி பின்னைய காலங்களில் சவுதியின் பங்கு எப்படி இருந்தது என்று விரிவாக எழுதியுள்ளார். அருமையான புத்தகம், கிடைத்தால் எடுத்து வாசியுங்கள். கிழக்கு இலங்கை முஸ்லீம் மக்களின் வட்டார மொழியோடு வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கும். Ethir Veliyeeduபர்தாAuthor: மாஜிதா Genre: நாவல் Language: தமிழ் Type: Paperback பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ காலத்துக்குப் பொருத்தமான படைப்பாக வெளிவருகிறது.உண்மையில், காலத்தைத் தீவிரமாக விசாரிக்கும் படைப்பு இது. இஸ்லாம
  6. களமுனையில் நேரடி மோதலில் வீரச்சாவடைந்த அடுத்த சில நொடிகளிலேயே மகளிர் போராளிகளின் ஆடைகளைக் களைந்து அவ்விடத்திலேயே புணர்ந்த நிகழ்வுகளும் உண்டு. லெப். கேணல் தாட்சாயினியின் வித்துடலிற்கு களமுனையில் இவ்வாறு நடந்ததை ஏனையை மகளிர் போராளிகள் கண்ணுற்று செய்த சிங்களப் படைவீரனை சுட்டுக் கொன்றனர், அவ்விடத்தில். இது தொடர்பில் பின்னாளில் வெளிவந்த ஒரு விடுதலைப் பாடலில் ஒருவரியை புலிகள் சேர்த்திருந்தனர்: "பிறந்த குழந்தை பிறந்த நொடியில் இறக்கும் நிலமை இன்னும் இருக்கு! மரணம் மீதில்... வீழ்ந்த பின்னர்... புணரும் பகைவர் கொடுமை நடக்கு!"
  7. நீங்கள் இருவரும் என்னையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் . ..... நான் இந்தப் பகுதியில் எழுதிய கவிதை பற்றித்தான் குறிப்பிட்டேன் ....... வேறொன்றுமில்லை . .......! புஷ்பா தங்கதுரை ஒரு மாபெரும் எழுத்தாளர் . ......அவருடன் என்னை ஒப்பிடுவதே, எனக்குத்தான் பெருமை .......அது எனக்கு மகிழ்ச்சியே .......மன்னிப்புக்கு அவசியமே இல்லை ஜஸ்ட்டின்.......! இந்த யாழ்களத்திலேதான் ஏதோ எழுதுகிறேன் .......வேறெங்கும் நான் எழுதியதே இல்லை . ...... அன்று எனது தம்பி முறையானவரும், டென்மார்க் (அடுத்தடுத்த வீடுகள் ) எனது சொந்த அத்தானும் ஜெர்மனி, காலமாகி விட்டனர் ....... அங்கு போய் இன்றுதான் வந்தனான்.......ஒரு அப்பாயின்மென்டுக்காக . ....... சில சமயம் ஓரிரு நாட்களில் மீண்டும் போகவேண்டி வரலாம் . .......! நான் எழுதுவேன் . ..... எனக்கு குறையொன்றுமில்லை . ......!
  8. இருப்பு 128,778.62+363.71=129,142.33. சேமிப்பு வட்டி 363.71. 129,142.33-36.37=129,105.96 தற்போதைய வங்கி மீதி 28/02/26. பிடித்து வைத்தல் வரி 36.37. இன்றைய தினம் 03/03/26 நமது கள உறவு ஒருவர் 10,649.52 ரூபா வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளார். முந்தைய இருப்பு 129,105.96+10,649.52=139,755.48 ரூபா தற்போதைய வங்கி மீதி. பொன்னாலை ஏரம்பு ஐயாவின் எஞ்சியுள்ள சீமந்து பைக்கற்றுகள், மணல், சல்லி என்பன கல் அறுக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நமது முன்னோடி அமைப்பிற்கு உறுதுணையாக உள்ள யாழ் கள உறவு ஒருவர் தாயகம் வருகை தந்துள்ளார். விரைவில் இரண்டு வேலைத்திட்டங்கள் நடந்த இடங்களுக்கு விஜயம் செய்த பின் மேலதிக தகவல்களை தருகிறேன். காரைநகர் வேலைகள் சம்பந்தமாகவும் நேரடியாக கொட்டப்புலம் பிரதேசத்திற்கு சென்று தகவல்கள் தருவதாக என்னுடைய வீட்டிற்கு நேற்று வந்து சந்தித்தபோது தெரிவித்திருந்தார்.
  9. காய்ந்து, ஆடையின்றி நின்ற மரங்களின் கிளைகளில் மெல்லிய பச்சைத் தளிர்கள் தலை தூக்குகின்றன. குளிர்காலத்தின்சோர்வு விலகி, வெயில் மெதுவாக பூமியைச் சூடேற்றத் தொடங்குகிறது. அதிகாலை நிசப்தத்தை பறவைகளின்கீச்சொலிகள் கிழித்து, அவற்றின் குளிர்காலப் பயணம் முடிந்ததையும் வசந்தம் பிறந்ததையும் அறிவிக்கின்றன. வசந்தம்என்பது வெறும் காலநிலை மாற்றமல்ல, அது மெதுவான, ஆனால் தெளிவான புத்துணர்ச்சியின் தொடக்கம். ஆனால் என்னால் வசந்தத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்க முடியவில்லை. இளம் சூரியஒளியில் சில நிமிடங்கள் நின்று காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால்முடியவில்லை. கொஞ்சம் நடைப்பயிற்சி செய்யலாமென்றாலே தயக்கம். காரணம், ஒவ்வாமை. கண்ணுக்குத் தெரியாத சிறு துகள்கள் என்னை ஆட்டிப்படைக்கின்றன. மகரந்தத் தூள்களின் வீச்சை நினைத்தாலேவெளியே செல்லத் தயங்குகிறேன். வீட்டுக்குள் ஒளிந்திருப்பதே எனக்குப் பாதுகாப்பாகத் தோன்றுகிறது. நான் மட்டும்தானா இவ்வாறு அல்லல்படுகிறேன்? யேர்மனியில் சுமார் 15% மக்களுக்கு மகரந்த ஒவ்வாமை இருப்பதாகக்கூறப்படுகிறது. இப்போது காற்றில் Hazel மகரந்தம் அதிகமாக உள்ளது. Alder மகரந்தமும் தோன்றத் தொடங்கியுள்ளது. இன்னும் சிலவாரங்களில் Birch மகரந்தம் பரவவிருக்கிறது. இந்த மூன்றும் எனக்கு ஒவ்வாதவை. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறேன். “மருந்து எடுத்தால் வாகனம் ஓட்ட வேண்டாம், சோம்பல்தோன்றலாம். நடைப்பயிற்சி என்றால் அதிகாலையில் செல். வெளியே சென்றுவிட்டு வந்தால் தலைக்குக் குளி, உடைகளைமாற்று…” என்று ஏராளமான ஆலோசனைகள். அவற்றை எல்லாம் கடைப்பிடிக்க முயற்சித்தாலும், ஒவ்வொரு வசந்தமும்ஒரு சோதனையாகவே மாறுகிறது. காலநிலை மாற்றமும் மகரந்தங்களின் அளவுகளில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வெப்பநிலையின் திடீர் ஏற்றஇறக்கங்கள் அதிக வீரியமுள்ள மகரந்தங்களை உருவாக்குகின்றன. வறட்சி மற்றும் சுற்றுச்சூழல், மாசு காரணமாகமரங்கள் மனஅழுத்தத்தில் இருப்பதால், அவை அதிக அளவு மகரந்தத்தை உற்பத்தி செய்கின்றன என ஆராய்ச்சிகள்கூறுகின்றன. இருந்தும், “சுற்றுச்சூழல் பிரச்சினை என்று ஏதாவது உண்டா?” என்று கேட்பவர்கள் இன்னும்இருக்கிறார்கள். ஏற்கனவே Cetirizine குளிசை ஒன்றை ப் போட்டுவிட்டேன். கொஞ்சம் அசதியாக இருக்கிறது. இப்போது கொஞ்சம்நித்திரை கொண்டு பார்க்கலாம், வசந்தத்தின் மணத்தை அனுபவிக்க முடியாவிட்டாலும், அதன் தாக்கத்திலிருந்து ஓரளவு தப்பிக்கவாவது.
  10. ஈரானுக்கான புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு! இஸ்ரேல் – அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உயர் தலைவர் கொமெய்னியின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் ஈரானின் புதிய உயர்த் தலைவரராக அவரது 56 வயதான மூத்த மகனான மொஜ்தபா கொமெய்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொமெய்னியின் தந்தையை அடக்கம் செய்த நினைவிடத்துக்கு அருகிலேயே அவரை புதைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன. கொமெய்னியின் உடல் அவரது பிறந்த ஊரான மஷாத்தில் உள்ள புகழ்பெற்ற ஷியா புனிதத் தலமான இமாம் ரெசா நினைவிடத்தில் (Imam Reza shrine) அவரது தந்தையின் கல்லறைக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. மஷாத்துக்கு கொண்டு செல்வதற்கு முன், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கிராண்ட் இமாம் கொமெய்னி தொழுகை கூடத்தில் (Grand Imam Khomeini Prayer Hall) ஒரு பிரமாண்ட பொது விடைபெறும் நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இறுதிச் சடங்குகள் இடம்பெறும் திகதிகள் மற்றும் நேரம் தொடர்பில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இருந்தபோதிலும் இரகசியமாகவே அவற்றை அரசு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் தெஹ்ரானின் நடுப்பகுதிகளில் ஏற்கனவே பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய தாக்குதலில் கொமெய்னி கொல்லப்பட்டார். அவரது மறைவையொட்டி, ஏற்கனவே ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்க தினமும் 07 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1467150
  11. "ரொம்ப நாள் ஆசைய்யா... ஆனா யார்கிட்ட கேட்டாலும் யாராவது சொந்தக்காரங்க சாட்சிக் கையெழுத்துப் போடணும்னு சொன்னாங்க. யாரைக் கூட்டிட்டிப் போறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ அறிவு இருக்கான்ல... நல்லகண்ணு அய்யாவே தன்னோட உடலை தானம் செஞ்சுட்டாரு... இதுக்கு மேல காத்திருக்கக் கூடாதுன்னு போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்..." - அற்புதம் அம்மாளின் வார்த்தைகளில் அத்தனை திருப்தி. அற்புதம் அம்மாளும் பேரறிவாளனும் இன்று (மார்ச் 4) சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு தன் உடலைத் தானம் செய்த பிறகு உடல் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. "எப்படியிருந்தாலும் மண்ணுக்குப் போற உடம்பு... மருத்துவம் படிக்கிற நம்ம பிள்ளைகளோட ஆராய்ச்சிக்கு தேவையில பாதிகூட உடல்கள் கிடைக்கிறதில்லைன்னு சொல்றாங்க. அவங்களுக்கு உதவட்டுமே... ரொம்பநாளா நினைக்கிறேன். ஆனா அதுக்கான நடைமுறைகள் அவ்வளவு எளிதா இல்லை. இன்னைக்கு நிம்மதியா முடிச்சுட்டேன். அறிவுக்கிட்ட சொன்னப்போ, கொஞ்சம் யோசிச்சான்... 'போடுப்பா கையெழுத்தைன்னு சொல்லிட்டேன். என் உடலைத் தானம் செய்யப்போனா கூடவே அவனும் செஞ்சிட்டான்... சாங்கியம், சடங்குகள் எல்லாம் வழக்கமா நாங்க செய்றது இல்லை. அதனால முழு மனதோட இந்த முடிவை எடுத்தோம்... எனக்கு அவனும் அவனுக்கு நானும் சாட்சிக் கையெழுத்துப் போட்டுக்கிட்டோம்..." என்கிறார் அற்புதம் அம்மாள். "அம்மா தொடர்ச்சியா சொல்லிக்கிட்டே இருந்தாங்க. கூட இருக்கவங்ககிட்டயும் நிறைய பார்க்கிறோம். சமீபத்துல என் நெருக்கமான நண்பர், 'கீற்று' ரமேஷ் மனைவி காலமானபோது அவர் ரொம்ப உறுதியா நின்னு உடல்தானம் செஞ்சார். இத்தனைக்கும் அவங்க இறக்கும்போது 43 வயதுதான். தஞ்சாவூர்ல ஒரு நண்பர் தன் அப்பாவோட உடலை தானம் செஞ்சார். ஒரு தம்பி தன் பிள்ளையோட கண்ணை தானம் செஞ்சார். இது எல்லாத்திலயும் கூட நின்னேன். எனக்கு இதெல்லாம் பெரிய தாக்கத்தை உருவாச்சு. நல்லகண்ணு அய்யாவோட உடலை தானம் செஞ்ச பிறகு அம்மா ரொம்ப உறுதியா நின்னாங்க. கூடவே நானும் பதிவு செஞ்சுக்கிட்டேன்... இது பெரிய விஷயமில்லை. ஆனா, நிறைய பேர் செய்ய முன்வரணும்..." என்கிறார் பேரறிவாளன். உடல் தானம் உறுப்பு தானம் பலரின் உயிரை மீட்கும். உடல் தானம், மருத்துவத்துறை மாணவர்கள் கற்றுத்தேர்ந்து மனித குலத்தைக் காக்க உதவும்! தாயும் பிள்ளையும் ஒருசேர உடல் தானத்துக்குப் பதிவு செய்திருப்பது நல்லதொரு முன்னுதாரணம்... வாழ்த்துகள்! காங்கிரசுக்கு 28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து!
  12. இது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத தாக்குதல் .நிராயுதபாணிகளாக வந்த கப்பலைத்தாக்குவதும். பாதையில் போவோரை பெரிய வாகனங்களில் வந்து அடித்துக் கொல்வதும். கத்திக்குத்துத் தாக்குதல் செய்வதும் பெரிய வித்தியாசம் இல்லை.முஸ்லிம் செய்தால்பயங்கரவாதம் அமெரிக்கா செய்தால் யுத்தம் என்பது ஏற்புடையதல்ல. அமெரிக்கா ஈரானோடு யுத்தம் செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். அது யுத்தம். ஆனால் இது கோழைத்தனமான தாக்குதல். இனி ஈரானின் எப்படிப்பட்ட யுத்த நெறிமுறைகளை மீறிய தாக்குதல்களையும் இது நியாயப்படுத்தும். அது சரி ஐநா என்று ஒரு அமைப்பு இருந்ததே. ஒருவாரமாக பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறது. செத்து விட்டதா?
  13. இந்தியாவிற்கு அல்ல....சீனாவிற்கு என நினைக்கின்றேன். இந்தியாவினது வல்லமையின் அழகு உலகிற்கே தெரிந்த விடயம்.
  14. மாஷா அமினிகளின் நியாயம் என்றோ ஒருநாள் அம்பலம் ஏறியே தீரும்.
  15. இருக்கலாம். ஆனால் இது அவ்வளவு இலகுவானதல்ல. மேலதிக விபரங்கள் சில. ஈரான் நிலகீழ் மிசைல் ஏவுதளங்களை சற்று நேர்ந்த்துக்கு முன் பாவிக்க ஆரம்பித்துள்ளதாம். இது நில மேல் தளங்கள் அதிக பாதிப்பை சந்தித்தை உறுதி செய்கிறன. இவை தாக்குதலில் ஈடுபடுவதை இவற்றின் இருப்பிடங்களை காட்டி கொடுக்குமாம். ஆனால் நிலக் கீழ் தளங்கள் 500 மீட்டருக்கும் கீழாக உள்ளனவாம். இவை அமரிக்காவின் 90 மீட்டர் மட்டுமே செல்லும் பங்கர் பஸ்டர் குண்டுகளால் தாக்கபட இயலாதனவாம். அதேபோல் கெமிக்கல் தாக்குதலில் இருந்தும் தற்காக்க வல்லனவாம். ஆனால் விசேட படை இறங்கி தாக்குவது, வாயில்களை அடைக்கும் விதமாக தாக்குவது, மின், தண்ணீர் சப்ளையை தாக்குவது என இவற்றை தாக்க/ முடக்க வழி இருக்கும் என நினைக்கிறேன். இஸ்ரேல் காரன் இப்பவே என்ன செய்வது என ஸ்கெட்ச் போட்டு வைத்திருப்பான். அண்ணை கூல் டவுண் 😂 இது போர் ஒத்திகை அல்ல, பல நாடுகள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் போர் கப்பல் ஒன்றும் வருவதாக இருந்து கடைசி நேரத்தில் பின் வாங்கியதாம்.
  16. ஈரானின் பலம் டிரோன்ஸ்…அடுத்து மிசைள்ஸ். கடுமையாக போரிட கூடிய தரைப்படையும் உண்டு. ஆனால் மிக பெரிய பலவீனம் விமானப்படை, கப்பல் படை. விமானப்படை, விமான எதிர்ப்பு ஏவுகணை கிட்டதட்ட முடக்கப்பட்டு விட்டன. பி 52 விமானங்களை நேற்றிரவு தெஹ்ரானில் அமெரிக்கா பாவித்தது. இவை உருமறைய, விமான எதிர்க்கும் திறன் அற்ற பறக்கும் குண்டு வீசும் தொழில்சாலைகள். இவற்றை அமெரிக்கா துணிந்து இறக்கினால் - ஈரானின் வான்பரப்பு ஒட்டு மொத்தமாக இஸ்ரேல்-அமெரிக்கா கையில் என்பதை ஊகிக்கலாம். வான் பாதுகாப்பு இல்லை எனில் கப்பல்கள் மிக இலகுவான இலக்குகள் - அடித்து நொருக்கி விடலாம். மிசைல்கள் ஏவும் போதே தளங்கள் அடையாளம் காணப்பட்டு அடித்து துவம்சம் செய்யப்படுகிறன. எனவேதான் 3 நாட்களில் ஏவப்படும் மிசைல் எண்ணிக்கை சடுதியாக குறைந்துள்ளது. இன்னும் சில நீண்ட இலக்கு மிசைல்கள் இருக்கலாம். ஆனால் வான் பாதுகாப்பு இல்லாமல் அவை நீண்ட காலம் தாக்கு பிடிக்க முடியாது. டிரோன்கள் மட்டுமே ஈரானின் ஒரே பலம் இப்போது. தரைபடைகள் சண்டையில் ஈடுபடும் நிலை வரும் என நான் நினைக்கவில்லை. குர்தீஷ் படைகள் முன்னேற தயார் என கேள்விபடுகிறேன். அப்போது அவர்களுக்கு இஸ்ரேல், அமெரிக்கா முழு வான் உதவி வழங்க கூடும். அதன் போதும் இரானிய தரைபடை பலத்த அழிவை சந்திக்கும். இதே டிரோன்களை உக்ரேன் சமாளிக்கிறது எனவே அவர்கள் உதவுவதாக சொல்லி உள்ளார்கள். தேவைபடாது என நினைக்கிறேன். கமேனி கொலைக்கு நேட்டோவின் துருக்கி வருத்தம் கூறியது. ஆனால் இன்று துருக்கி மீது ஏவப்பட்ட ஏவுகணையை நேட்டோ தடுத்துள்ளது. இது துருக்கியை கடுப்பாக்கி உள்ளது. விநாச காலே விபரீத புத்தி.
  17. ப்பா. பாத்துக் கொண்டு இருந்த எங்களுக்கே மூச்சு முட்டுதே. ஆடின அவங்களுக்கு. என்னா அடி. இம்மை மறுமை இல்லா அடி.
  18. RESULT 1st Semi-Final (N), Eden Gardens, March 04, 2026, ICC Men's T20 World Cup South Africa 169/8 New Zealand (12.5/20 ov, T:170) 173/1 New Zealand won by 9 wickets (with 43 balls remaining) Finn Allen* rhb 100 33 10 8 303.03 31 (7b) 24 (5b) Rachin Ravindra lhb 13 11 2 0 118.18 அடுத்த பக்கம் சம்பியன் கனவில் இருப்பவர்கள் பீதியாகப்போகிறார்கள் அண்ணை!
  19. 33 பந்துகள். ஒரே வீரன். பிஃன் அலன்.
  20. 19 பந்துகளில் 50 அடித்த பிஃன் அலன். பயபுள்ள!!!
  21. நிசியின் இருவரும், இணைப்பாட்டமாக, இதுவரை 463 ஓட்டங்கள் மொத்தமாக அடித்துவிட்டார்கள். இன்று இரண்டாவது 100 ஓட்ட இணைப்பாட்டம். எல்லா உலகக் கோப்பையிலும், இதுதான் அதிகூடிய இணைப்பாட்டமும்.
  22. வெனிசுவெலாகாரனை தூக்கின மாதிரி, ஈரான்காரனுக்கு இருந்த இடத்திலேயே "டொட்" வைச்சமாதிரி ....... நம்ம ரஷ்யன்காரனுக்கும் ஏதாவது சம்பவங்கள் செய்ய சாத்தியம் உள்ளதா சார்? 🤭
  23. இலங்கைக்கு அருகில் முல்லாக்களின் போர்க்கப்பல் ஒன்று நீர்மூழ்கி தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது... மொத்த கலக்குழு (crew) 180 பேரில் 150 பேர் வரை காணாமல் போயுள்ளனராம்... எங்கும் அடி எதிலும் அடி... 🤣🤣
  24. தற்போது ஈரான் போரை வழிநடாத்திக் கொண்டிருக்கும் முப்படை தளபதிகள். !! 😂 யாழ்ப்பாணம்.com
  25. 4 நாடுகளுக்கு மாணவர் விசா வழங்கலை நிறுத்திய இங்கிலாந்து! இந்த மாதம் முதல் ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்விக்கான விசா வழங்குவம் நடவடிக்கையை இங்கிலாந்து அரசு நிறுத்தும் என்று உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆப்கானியர்களுக்கு திறமையான வேலை விசாக்களையும் நிறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசா துஷ்பிரயோகம் பரவலாக இருப்பதாகக் கூறப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் முதலில் இங்கிலாந்துக்கு கல்வி பயில்வதற்காக வந்த பின்னர் புகலிடம் கோருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அரசாங்கம் தனது வெளியீட்டில், 2021 மற்றும் 2025 க்கு இடையில் சட்டப்பூர்வமாக இங்கிலாந்துக்குச் சென்றவர்களிடமிருந்து – கல்வி போன்ற ஏதாவது ஒன்றைச் செய்வதற்காக – புகலிடம் கோருபவர்கள் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகக் கூறியது. https://athavannews.com/2026/1467147
  26. அறுபதை அறுபது வெல்லுமா முடிவிலே?😊
  27. suvy , ஊசி போட்டுக் கொள்வது பற்றி நீங்கள் குறிப்பிடுவது சரிதான். எனது குடும்ப வைத்தியரிடம் இதைப்பற்றி கதைத்திருக்கின்றேன். எனக்குள்ளது பருவகால மாற்றத்தினால் ஏற்படும் ஒவ்வாமை. ஒன்றில் இருந்து இரண்டு, மூன்று மாதங்களுக்குள் சரியாகிவிடும். ஊசி போட்டுக் கொள்வதால் ( மிகச் சிறிய அளவில் அந்த மகரந்தப் புரதம் (allergen) உடலுக்குள் ஊசி மூலம் செலுத்துதல்) உடல் மெதுவாக அதற்கு பழகி விடும். காலப்போக்கில் ஒவ்வாமைத் தாக்கம் குறையும். ஆனால் ஒரு தடவை ஊசி போடுவது போதும் என்றில்லை, 3-5 ஆண்டுகள் திட்டமிட்ட முறையில் போட வேண்டும் என்று வைத்தியர் சொன்னார். ஆரம்பத்தில் போட்டுக் கொண்டேன். வேலை நிமித்தம் தொடர்ந்து ஊசி வைத்தியத்தை செய்யவில்லை. தற்காலிக நிவாரணமாக குளிசை போட்டுக் கொண்டேன். மூக்கடைப்பு ஏற்படும் போது Nasal Steroid Spray யும் பாவித்துக் கொள்வேன். அதுவும் பழகிவிட்டது. வீட்டில் ஒருதடவை தும்மினால், “ மனுசனுக்கு ஒவ்வாமை வந்து விட்டது. குளிசையைப் போட்டுட்டு படுக்கப் போய்விடுவான்” என்று எண்ணம் வர வீட்டு வேலைகள் குறைய வாய்ப்பிருக்கின்றது. 😉
  28. அப்ப சீமான் இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தது என்ன கணக்கு. முப்பாட்டன் முருகன் இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தாதால் அதை பின்பற்றி செபஸ்டியன் சீமானும் வைத்திருந்தார் என்று கூறிவீர்களா புலவரே!
  29. சுருக்கமா கிழக்கில் தமிழர் நிலங்களை அரச உதவியுடன் முன்புபோல ஆக்கிரமிக்க முடியவில்லை, தமிழ் இளைஞர் யுவதிகளை காதல் எனும் பெயரில் லவ் ஜிகாத் பண்ண முடியவில்லை, தமிழர் வியாபார நடவடிக்கைகளை கறையான் அரித்ததுபோல் அரிக்க முடியவில்லை, விவசாய வயல் நிலங்களை அபகரிக்க முடியவில்லை, கிழக்கு எங்களுக்குத்தான் என்று மிரட்டல் விட முடியவில்ல....இப்படி சமூக நல்லிணக்கம் பண்ண முடியாமல் உங்க மனம் வாடுவதை புரிந்து கொள்ள முடியுது. மனசுக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு ஹிஸ்புல்லாஹ்.
  30. சூழல் மாசு பற்றி உங்களின் அனுபவங்கள் ........எழுதுங்கள் . .....! வசந்தம் வரமுதலே இந்த ஒவ்வாமைக்கு ஒரு ஊசி இங்கு போடுவார்கள் இலவசமாக ........அதனால் அது அவர்களுக்கு கொஞ்சம் சுகமாய் இருக்கும் . ...... அங்கு அப்படி இல்லையா .........!
  31. கவனமாக இருங்கள். உடம்பைக் கவனியுங்கள் சுவை.
  32. வளர்ந்துவிட்ட இந்திய வல்லரசினதும், குட்டி வல்லரசாக மாறிவரும் சிறிலங்கவினதும் ஆழம் புரியாது நகைச்சுவையா? இவர்களது ஒத்திகையை அடுத்து றம்பே சற்றுத் தயங்கிநிற்பதாகப் பிந்திய செய்திகள் கூறுகின்றனவாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  33. விகாரையில் கடத்திவிடப்படும் சிறுவர்களை பராமரிக்கவும் இல்லம் அமையுங்கள். அறியாத வயதில் வறுமை காரணமாக பெற்றோரால் கடத்திவிடப்படும் சிறுவர், தாங்கள் விரும்பாமலேயே தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே பிக்குகளாக மாற்றி விடப்படுகிறார்கள். அவர்களுக்குள் எத்தனையோ திறமைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருந்தாலும் யாரும் அதை ஏற்றுக்கொள்வதில்லை, தங்கள் எண்ணங்களை திணித்து விடுகிறார்கள். தங்களின் ஆசையை பூர்த்தி செய்ய முடியாதவர்கள், தங்களை ஏற்றுக்கொள்ளாத உலகில் அவர்களால் எதை சாதிக்க முடியும்? விரும்பாமலேயே மற்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களும் சிறுவர்களுக்குரிய குறும்புத்தனம், விளையாட்டுகளை செய்து, சுயமாக கல்வி கற்று, அறிவு தெளிந்து தாங்களாகவே விரும்பிய துறையை தெரிவு செய்யும் வயதுவரை அவர்களை பராமரிப்பதற்கு இல்லங்கள் நிறுவப்படவேண்டும். அப்பொழுதே அறிவுள்ள, பண்புள்ள மத தலைவர்களை உருவாக்க முடியும், உருவாகுவார்கள்.
  34. முதலில் உடம்பைக் கவனியுங்கள்.யார் வென்றாலும் நமக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.
  35. இது எந்தளவு உண்மை? இலங்கை முஸ்லிம்கள் சன்னி பிரிவினர் (இந்தோனேசியா, பாக்கிஸ்தான் அரபு நாடுகளும்தான்). இவர்கள் அவசரமாக தொழக்கூட ஷியா பள்ளிகளுக்கு போகமாட்டார்கள். வீதியில் தொழுதுவிட்டு போவார்கள். நான் அறிய இலங்கையில் அடிப்படை வாதத்தை பரப்பியது சவுதி சலாபிகள். இலங்கையில் உள்ள ஷியாக்கள் மிக அமைதியானவர்கள். குஜராத்தி வழியினர்.
  36. உடல்நிலை தேறி வந்ததில் சந்தோசம்.
  37. உங்களுக்குப் பிடித்த பிளேயர் இருக்கட்டும், நீங்கள் நலமாக இருக்கிறீர்களா .......கவனமாக இருங்கள் ......!
  38. அண்ணா, ஏற்கனவே ராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்து அவை எதிர்பார்க்கப்பட்ட பலன்களை அல்லது விளைவுகளை கொடுக்கவில்லை என்ற நிலையிலேயே பொருளாதார தடைகளை அமல்படுத்த ஆரம்பிக்கின்றார்கள். ஈரான், ரஷ்யா, வட கொரியா போன்ற நாடுகளின் மேல் ஒரே இரவில் பொருளாதார தடைகளை எவரும் விதிக்கவில்லை. அப்படியான தடைகள் கூட படிப்படியாகவே அதிகரிக்கப்பட்டன. 40 வருடங்களாக பொருளாதார தடைகள் போடப்பட்டிருக்கின்றன என்றால், 50 வருடங்கள் அளவில் முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்று சொல்லலாம். பேச்சுவார்த்தைகளுக்கு அடுத்ததாக அழிவுகள் குறைந்த தெரிவாக இருப்பது பொருளாதார தடைகள். இராணுவ, பொருளாதார இலக்குகளை நேரடியாக தாக்குதல் என்பது மிக அரிதாகவே நடைபெறும் ஒரு விடயம். ஒரு நாட்டின் தலைவரை, அவருக்கு வயது 82 ஆகி விட்டதா அல்லது 28 மட்டுமே என்பது முக்கியம் அல்ல, கைது செய்வது அல்லது கொல்வது என்பது எதற்கும் தயாரான இறுதிக் கட்ட நடவடிக்கை போல. நாற்பது அல்லது ஐம்பது வருடங்களாக அமெரிக்காவும், அதன் நட்பு மேற்கு நாடுகளும் பெரும்பாலும் நிதானமாகவே நடந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அதிபர் ட்ரம்ப் மிகப் பெரிய விதிவிலக்கு. ஒரு பக்கம் நோபல் சமாதானப் பரிசு வேண்டும் என்று அடம் பிடிக்கின்றார், இன்னொரு பக்கம் இடைக்காலத் தேர்தல் வெற்றிக்காக இன்னொரு நாட்டின் தலைவரை கொன்று, அந்த நாட்டை அழிக்கின்றார். இவர் போன்றோர் இப்படியானவர்களே. எந்த விதமான தூரநோக்கும் அற்ற, நிகரில்லாத தன்முனைப்பும், ஆணவமும் கொண்டவர்கள். இவர் போன்றோரால் குறுகிய கால அழிவுகள் மட்டும் இன்றி, நீண்ட கால அழிவுகளும் உலகம் முழுவதும் உண்டாகின்றன. இவை பட்டுத் தெளியும் விசயங்கள் அல்ல. இவர் போன்றோரை அதிகாரத்தில் அமர்த்தும் முன் அமெரிக்கர்கள் நன்கு சிந்தித்து இருக்க வேண்டும். உலகெங்கும் உள்ள பெரும்பாலான ஈழத் தமிழர்கள் அதிபர் ட்ரம்பிற்கு காட்டிய ஆதரவு கூட வெறும் உணர்ச்சி வயப்பட்டதே. ஆனால் அதிபர் ட்ரம்ப் எவ்வளவு தான் விரும்பினாலும், கனடாவையோ அல்லது கிரீன்லாந்தையோ தொடமுடியாது. உலகமும், அமெரிக்க மக்களும் இந்த விடயத்தில் தெளிவான ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். அதே நேரத்தில் ஈரான், ரஷ்யா, வட கொரியா, வெனிசுவேலா, சிரியா போன்ற நாடுகளின் விடயங்களில் கண்டும் காணாதது போலவே உலகம் போய்க் கொண்டிருக்கின்றது. இந்த நாடுகளுடன் அணுகிப் போக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உலகெங்கும் பலர் இல்லை. அதற்கான காரணம் அந்த நாடுகளின் செயற்பாடுகளே.
  39. விடிய விடிய.... இராமாயணம். விடிஞ்சாப் பிறகு... இராமன், சீதைக்கு என்ன முறை என்று கேட்கிற மாதிரி உள்ளது. 😀 இப்படியான திரிகளுக்கு... கடைசியாய் வருவதை தவிர்க்க வேண்டும். 😅 இந்தத் தலைப்பை... முதல் பக்கத்தில் இருந்து வாசிக்கவும். 😂 நீங்கள் கேட்ட கேள்விக்கு, விடை கிடைக்கும். 😂
  40. இது சரியான முடிவு. அரை இறுதிக் குளறுபடியை, நிவர்த்தி செய்திருக்கிறீர்கள் அவுஸ்ரேலியாவைத் தெரிவு செய்த அந்த 13 பேருக்கும் பாத்து ஏதேன் குடுக்கலாமே. 😉
  41. இந்த அவுஸ்திரேலியக்காரனை நம்பினதுக்கு...என்னை செருப்பாலை அடிச்சிருக்கணும்.. நலமா சுவைப்பிரியன்
  42. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தமிழர்களாக தெரிகின்றார்கள். ஆக.... இறந்த தமிழ்ப் பெண்ணுக்கு அநீதி நடந்துள்ளது. இந்த அசிங்கமான, அருவருப்பான செயலை செய்தவர்கள்... சிங்கத்தை புணர்ந்து... பிறந்த இனமாக, இருக்குமோ என்ற சந்தேகம் வருகின்றது.
  43. நான் கடந்த சனி வைத்pய சாலை போய் இன்று தான் வீடு வந்தேன்.என்டாலும் புள்ளி கிடைக்காது என்டதுக்குமா அறிவிப்பாங்கள்.☹️🤣மற்றது றோய் டயஸ் எனக்கு பிடித்த ஸ்ரிலிஸ் பிளையர்.
  44. மத்திய கிழக்கில் பயங்கர சண்டை நடந்து கொண்டிருக்கு. இவங்கள் வேறை... குறுக்க, மறுக்க ஓடிக் கொண்டு இருக்கிறாங்கள். குண்டு அடிபட்டு சாகப் போறீங்கள். போய்.. ஓரமா விளையாடுங்க(டா) 😂
  45. பலா பழ செதில்கள்.. ஏகாம்பர நாதர் கோயில் - காஞ்சிபுரம்
  46. nerodtSspofhct4m71mm16u9h634 2tfu59m685m3g4281h1ht4050020g50 · எவ்வளவு அட்டூழியம் அராஜகம் இருந்தாலும் வெள்ளையர்களிடம் ஒரு நேர்மை இருந்தது. ஆனால் இன்றைய நம் அரசியல்வாதிகளிடம் அந்த நேர்மை இல்லை. வெள்ளையர்கள் ஆண்ட காலம். #திருநெல்வேலி க்கு அருகே #ரயில்பாதை அமைத்துக்கொண்டிருந்தனர். அதற்காக நிறைய பனைமரங்களை வெட்டவேண்டிய சூழல். அங்கு பனையை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு மிகப்பெரிய வருத்தம். ஆங்கிலேயர்களிடம் சென்று பனையை வெட்டுவதை தடுக்கும் தைரியமில்லை. அதே நேரத்தில் பனைமரங்களை இழக்க மனமும் இல்லை. உச்சிவெயல் மண்டையை பிளக்க பசியோடு ஆங்கிலேய அதிகாரிகள் இருந்த நேரம்பார்த்து அங்கிருந்த மக்கள் மண்பானையில்கொண்டு வந்த ஒரு உணவுப்பொருளை அவர்களிடம் வழங்க ருசித்து சாப்பிட்டு வாழ்த்திச் சென்றனர். மறுநாள் ரயில் பாதை அமைக்கும் இடத்துக்கு வந்த வெள்ளைய அதிகாரிகள், "நேற்று சாப்பிட ஏதோ கொடுத்தீர்களே! என்ன அது? மிகவும் ருசியாக இருந்தது. நீண்ட நேரம் பசியெடுக்கவில்லை. மிகவும் இதமான உணவதை எப்படி தயாரித்தீர்கள்". என கேட்க, அந்த மக்கள் கைகளைகாட்டிய இடம் பனைமர உச்சி. அவர்கள் நம்பமறுக்க, பனையில் இருந்து இளம்பனைநுங்கோடு பதநீர் கலந்து, பனைவெல்லம் சேர்த்து மண்பானையில் சிறிது நேரம் வைத்திருந்து கொடுக்க நேற்று சாப்பிட்ட அதே ருசி. "வாவ்" என வாயை பிளந்த அதிகாரிகள் பனைமரங்களை வெட்டாமல் மாற்றுப்பாதையில் ரயில்பாதை அமைக்க உத்தரவிட்டனர். நுங்கு சீசன் முடியும்வரை அவர்களுக்கு மக்கள் தயாரித்தளித்த பனை உணவே மதிய உணவானது. மக்களின் சாதுர்யத்தால் பெரிய அளவில் பனைமரங்கள் வெட்டுவது தவிர்க்கப்பட்டது. வெள்ளையர்களிடமிருந்து பனைமரங்களை காத்த நம்மால் இன்று ஆளும்வர்க்கம் சாலை விரிவாக்கம் என்றப் பெயரிலும், அறியா மக்கள் பனை எதற்கு என்று முடிவெடுத்து அதை அழிக்கும் முடிவிலிருந்தும் காக்க முடியவில்லை. பனை என்றதும் இன்றைய தலைமுறைக்கு நினைவில் வருவது நுங்கு. வியர்குருக்கு மருந்தான நுங்கை ருசியான பாயசம் வைத்தும் அசத்த முடியும். நுங்கு எடுத்து சாப்பிட்டபின் காயைக் கொண்டு தயாரித்த வண்டி உருவாக்கி விளையாடிய அனுபவம் முன் தலைமுறையோடு பறிபோனது. முற்றிய நிலையில் உள்ள பனம்பழத்தை பறித்து சீவி, அவித்து சாப்பிட்ட ருசி, விழுந்த பழத்தை சுட்டு சாப்பிட்ட ருசி, இன்னும் நாவிலிருந்து அகலவில்லை. அன்றைய கிராமத்துவாழ்க்கையில் பனம்பழம் விழும்காலங்களில் எங்கள் முதல் வேலை பனம்பழம் பொறுக்குவது. பொறுக்கிவந்த பழங்களை ஒரு இடத்தில் குவித்துவைத்திருப்போம். சில வாரங்களில் நன்கு பழுத்து அந்த பகுதியில் செல்லும் போது வாசம் வரும் பக்குவத்தில் அதை தனித்தனி விதைகளாக பிரித்து உலரவிடுவோம். விதைகள் உலரும் அதே நேரத்தில் பனங்கிழங்கு விளையவைக்க இடத்தை தயார்செய்வோம். இரண்டடி ஆழத்திற்கு மண்ணை புரட்டி சாம்பல் மக்கிய உரங்கள் கலந்து நடுமிடத்தை மட்டமாக்கி, உலர்ந்த விதையின் தலைப்பகுதி மேலிருக்குமாறு அடுக்கி மேலே சிறிது மணல் தூவிவிட்டோமென்றால் போதும் 115 லிருந்து 130 நாட்களுக்குள் பனங்கிழங்கு தயாராகிவிடும். அவித்து உண்பதாகட்டும், சுட்டு சாப்பிடுவதாகட்டும் அவ்வளவு ருசி. அதுவும் இரவு படுக்கச் செல்லும்போது, விறகடுப்பு நெருப்பில் புதைத்து வைத்து காலையில் எடுக்கும் பனங்கிழங்கை இலேசாக வளைத்தால் சுருக்கம் சுருக்கமாக வந்தால் அது சரியாக வெந்திருக்கிறது என்பதை உணர்த்தும். சுட்ட பனங்கிழங்கை துருவி அதோடு அப்போது பறித்த தேங்காயின் துருவலை சேர்த்து சாப்பிட்டா..! அடடா பாழாய்போன பணத்தை தேடி நகரத்துக்கு வந்ததால் இழந்தவைதான் எத்தனை.! பனங்கிழங்கை சனி மாலை அறுவடைசெய்து அரையடி நீளத்துக்கு வேரைவிட்டு நறுக்கி விதைகளை நீக்கி தலைப்பு மாற்றி நூறு கிழங்குகளாக கட்டி மறுநாள் ஞாயிறு சந்தைக்கு எடுத்துச்சென்று விற்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவருவோம். சரியாக கிழங்கு வராத சிறு விழுதுமட்டும் வந்த விதையை குறுக்காக வெட்டினால் உள்ளிருக்கும் பனம்பூவின் ருசிக்கு பனைமரத்தையே எழுதிவெக்கலாம். பனங்கிழங்கு அறுவடை செய்தபின் கிடைக்கும் விதைக்குடுகை அற்புதமான விறகு. பொங்கலுக்கு இருவாரங்களுக்கு முன்னே பனங்குருத்தை வெட்டி, சரியான அளவில் வகுந்து, பனியிலும் வெயிலிலும் பதப்படுத்தி முட்டுமாலை, நெத்திச்சுட்டி, அரிசிமாலை எனச்செய்து மண்பானை ஓட்டில் சாயம் காய்ச்சி, அதில் பனம் ஓலையில் செய்தபொருட்களை முக்கி, சாயமேற்றி மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு அணிவித்து மகிழ்வோம். • பனை ஓலை காத்தாடி, • பனை ஓலை கொழுக்கட்டை, • பனை ஓலை பாய், • பனை ஓலை பெட்டி, • பனை ஓலை கூடை, • பனை ஓலை குச்சிபெட்டி, • அபூர்வமாய் இருந்த ஒரே மாதுளைச்செடியில் காய்களை அணில் கடிக்காமல் இருக்க அப்பா செய்து கட்டிவிடும் பனை ஓலை பெட்டி, • அக்கினி நட்சத்திரத்தன்று வெட்டி, அழகாய் அடுக்கி, பதப்படுத்திய பனை மட்டையில் வெய்த வீட்டில் கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் கதகதப்பையும் உணர்ந்த அனுபவம், • அப்பப்பா பனைஓலையில்தான் எத்தனை பரவசம். • பதநீர் குடிக்கவும், சாப்பிடவும் பயன்பட்ட பச்சை பனை ஓலை குடலை. • கால்சியம் நிறைந்த ருசியான பதநீர், அதில் காய்ச்சி எடுத்த நலம்பயக்கும் பனைவெல்லம். பதப்படுத்திய மருத்துவ குணம் கொண்ட பனங்கற்கண்டு. • வீடுகட்ட வாரை, விறகாக மட்டை, மிதியடிசெய்ய சப்பை (ஒரு காலத்தில் கீழ் தஞ்சையில் பலகுடும்பங்கள் பனைமட்டை நார் தயாரித்து கேரளாவுக்கு அனுப்பி அந்த நார் மிதியடியாக தமிழ்நாடு திரும்பும்). • காய்கறி பந்தல் போட நார். • வீடுகட்டவும், கட்டில் தயாரிக்கவும் பயன்படும் அகனி. • முக்கியமாக உடலுக்கு நல்லதா? கெடுதலா? என விவாதத்தில் இருக்கும் கள்ளு. • ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்ட பனையிலிருந்து தயாரிக்கும் பனை வெல்லத்தோடு ஒப்பிடுகையில் அதே பரப்பில் பயிரிடும் கரும்பிலிருந்து கிடைக்கும் வெல்லத்தின் மதிப்பீடு குறைவு. • ஒருமுறைவிதைத்தால் பத்து ஆண்டுகளில் இருந்து ஒரு நூற்றாண்டுவரை பயன்தரக்கூடியது பனை. • மழைநீரை பூமிக்கடியில் சேகரித்து வெளியே விடாமல் பராமரிப்பது பனை. • தன்னிலிருந்து கிடைக்கக்கூடிய பொருட்களால் மனித வாழ்வை தன்னிறைவாக்கும் பனை. பனையின் பயன்களை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். #பனைமரம் #பனை பனை மரத்தின் பெருமையை இதைவிட யாரும் அழகாக சொல்லி விட முடியாது... பனை சார்ந்த வாழ்வியலையும் பனை சார்ந்த உணவுகளையும் ஏனோ மறந்து போனது தமிழ் சமூகம்... 💥"#பனைவிவசாயம் 🌴" #பனை மரத்தை பாதுகாப்போம் 🔥" #palmtrees #Palm #பனைமரம்......!
  47. @அல்வாயன் இப்ப புரியுதா உங்களுக்கு ......... இதுதான் கமலும் T . ராஜேந்திரரும் கதைப்பது . ........! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.