Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்18Points39480Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்12Points3061Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்9Points20461Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்6Points33962Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/09/26 in Posts
-
கறையான் புற்று
9 points2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை, சமீபத்தில் ஏற்பட்ட சில விவாதங்களின் பின்னணியில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். அன்று விடுதலைப் புலிகள் வழங்கிய பட்டங்கள் குறித்தும், அவர்கள் இல்லாத இன்றைய காலத்தில் வழங்கப்படும் பட்டங்கள் குறித்தும் சமீபத்தில் யாழ் கருத்துக்களத்தில் சிலர் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர். அந்த விவாதத்தில் நான் பார்வையாளனாக அமைதியாக இருந்தேன். ஆனால் யாழ் இணையத்தில் மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி நினைவுநாள் அறிவிப்பைப் பார்த்தபோது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ‘வெண்புறா’ திட்டம் குறித்த தகவல், இந்நினைவுகளை மீண்டும் எழுப்பியது. தாயகத்தில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், காந்தி நிலையம், குருகுலம், இனியவாழ்வு இல்லம், வெற்றிமனை, பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு மையங்கள், முன்பள்ளிகள், தொழில்சார் பயிற்சிநிலையங்கள், சத்துணவு நிலையங்கள் போன்ற பல சமூகநலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவற்றில்கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் ‘வெண்புறா’ திட்டமும் ஒன்றாக இருந்தது. இத்திட்டங்கள் அனைத்தும் சர்வதேச அளவில் இயங்கி வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளைகளுக்கு, அந்தந்த நாடுகளில் உள்ள கிளைகளின் விருப்பத்திற்கேற்ப பொறுப்பளிக்கப்பட்டன. நான் வசித்த யேர்மனியில், உரிய நேரத்தில் விண்ணப்பம் அனுப்பப்படாத காரணத்தால், யேர்மனிக் கிளைக்கு மன்னார் மாந்தை மேற்கு குடியேற்றத் திட்டத்துடன்‘வெண்புறா’ திட்டமும் ஒதுக்கப்பட்டது. ஆனால் ‘வெண்புறா’ திட்டத்தில் யேர்மனிக்கிளைத் தொண்டர்களுக்கு ஆரம்பத்தில் பெரியளவில் ஆர்வம் இருக்கவில்லை. அப்போது வன்னியில் அலுமினியத் தகரத்தில் செய்யப்பட்ட, மடிக்க முடியாத செயற்கைக்கால்களே தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றுடன் இயல்பான நடை சாத்தியமில்லாது, இழுத்து இழுத்தே நகரவேண்டியிருந்தது. மாற்று வழிகளை ஆராய்ந்தபோது, யேர்மனியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் பைபர்கிளாஸ் செயற்கைக் கால்களை அங்கு அறிமுகப்படுத்துவது, சாத்தியப்படுமா என்ற யோசனை எழுந்தது. ஆனால் இது செலவான முயற்சி. மூலப்பொருட்கள், பயிற்சி, நிபுணத்துவம் ஆகியவை இதற்கு அவசியம். இந்த விவகாரம் யேர்மனி தமிழர் புனர்வாழ்வுக் கழக கிளைப் பொறுப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது முயற்சியால், இந்தத் துறையில் நிபுணரான ஹொல்கர் என்பவர் எங்களுக்கு உதவ முன்வந்தார். ஒரு யேர்மனியரை வன்னிக்கு அழைத்துச் செல்வது, அதற்காக சிறீலங்கா அரசின் அனுமதி பெறுவது, குறைந்தது ஒருமாதம் அங்கே தங்கி பயிற்சி வழங்குவது இவை அனைத்தும் போர்நிலைச் சூழலில் பல அபாயங்களைக் கொண்டிருந்தன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் இருந்தது. எனவே நாட்டில் அமைதியான சூழல்உருவான பின் இந்த முயற்சியை நடைமுறைப்படுத்துவோம் என்று முடிவு செய்து, இடைக்காலமாக மாந்தை மேற்குகுடியேற்றத் திட்டத்தில் கவனம் செலுத்தினோம். 2002ஆம் ஆண்டு சூழல் மாறியது. சமாதானப் பேச்சுவார்த்தைகள், போர்நிறுத்தம் போன்ற மாற்றங்கள் நம்பிக்கையை உருவாக்கின. 2002 மே மாதத்தில், ஹொல்கருடன் வன்னிக்குப் பயணம் மேற்கொண்டோம். போர்நிறுத்தம் ஆரம்பித்த சில நாட்களுக்குப் பின்னர் நாங்கள் போனபோது பல சிரமங்களை எதிர்கொண்டபோதிலும், பயணம் நிறைவேறியது. யேர்மனிய தொழில்நுட்ப முறையில் அளவெடுத்து, உடல் நிலையை கருத்தில் கொண்டு, முதுகெலும்பு பாதிப்பு ஏற்படாதவகையில் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக் கால் ‘வெண்புறா’ நிறுவனப் பொறுப்பாளர் வீரனுக்கு பொருத்தப்பட்டது. இந்த முயற்சி குறித்து கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையிலும் செய்தி வெளியானது. இந்தியப் பத்திரிகையாளர்களும் அதைப்பற்றி குறிப்பெடுத்துச் சென்றனர். அந்தவேளை, இரண்டு கைகளையும் இழந்திருந்த ஒரு பெண்ணுக்கு செயற்கைக் கைகள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எங்களுக்கு வன்னியில் எழுந்தது. ஒரு கை பொருத்துவதற்கே 30 முதல் 35 ஆயிரம் யூரோ வரை செலவாகும். அத்தோடு கணினிவழிப் பயிற்சியும் அவசியம் என்பதால், தொடர்ச்சியாக பல தடவைகள் தான் வரவேண்டும் என ஹொல்கர் சொன்னார். செலவுகள் அதிகமாக இருந்தாலும், கால்களுடன் சேர்த்து கைகளையும் பொருத்தும் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்தோம். எனது வேலை நிமிர்த்தம் அடிக்கடி வன்னிக்கு வர இயலாது என்பதால், யேர்மன் மொழி அறிந்த ஒருவர் அவசியம் தேவை என்று சொன்னேன். அவர்கள் தங்களிடம் யேர்மனிய மொழி தெரிந்த ஒரு இளைஞன் இருப்பதாகவும் அவரை அனுப்பி வைப்பதாகவும் சொன்னார்கள். அந்த இளைஞனுக்கு ஹொல்கர் தனது நிலையத்தில் ஐந்து மாதங்கள் முழுமையான பயிற்சி அளித்தார். வன்னியில் யேர்மனியத் தொழில்நுட்பத்தில் செயற்கைக் கால் பொருத்தும் திட்டம் குறித்த செய்திகள் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், இணையத் தளங்களிலும் வெளிவந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில், ஜபிசி இலண்டன் வானொலியில், வன்னியில் செயற்கைக் கால் பொருத்தும் திட்டத்தை இலண்டன் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் ஊடாக, தான் முன்னெடுக்க இருப்பதாக மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி அறிவித்தார். இந்தச் சம்பவங்களை நினைவுகூரும்போது, பட்டங்களையும் புகழ்ச்சிகளையும் தாண்டி, அந்நேரத்தில் பலரின்அமைதியான உழைப்பும், தொழில்நுட்பம் மற்றும் மனிதநேயத்தை இணைக்க முயன்ற சிலர் எடுத்த சவாலான முடிவுகளும்தான் மனதில் முதலில் தோன்றுகின்றன. வரலாற்றைப் பேசும் போது, அந்தப் பின்னணியையும் மறக்காமல் நினைவுகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.9 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இறுதி நிலைகள்: T20 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெற்ற அணிகளையும், சாதனை படைக்கும் பல அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இல் இறுதி நேரத்தில் பதில்களைப் பதிந்ததில் முந்தியதின் அடிப்படையில் வெற்றியைத் தட்டிச் செல்லும் அதிகம் உரையாடாத @Newbalance க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! வெற்றியைத் தட்டிச் செல்லும் @Newbalance க்கு துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டடத்தில் இருந்து பெற்ற தங்க நாணயத்தின் நிழல்பிரதி தரப்படுகின்றது! இரண்டாவது இடத்தைப் பிடித்த @கந்தப்பு வுக்கும், மூன்றாம் இடத்தில் உள்ள @நியாயம் க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களில் பலநாட்கள் நின்ற @alvayan , @கந்தப்பு க்கும் வாழ்த்துக்கள். அத்துடன் பல நாட்கள் சுமைதாங்கியாக இறுதி நிலையில் நிற்கும் @வாதவூரான் க்கும் நன்றி பல! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும், குறிப்பாக @செம்பாட்டான் @வீரப் பையன்26, @goshan_che @ரசோதரன், @vasee , @suvy ஐயா, @ஈழப்பிரியன் ஐயா போன்றோருக்கு நன்றி பல. விடுமுறையில் மத்திய கிழக்கில் நின்றபோது புள்ளிகளைக் கணிக்கவும், நிலைகளை சரியாக வரிசைப்படுத்தவும் உதவிய @செம்பாட்டான் க்கு பிரத்தியேகமான நன்றிகள்!9 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெற்றிபெற்றநியூபலன்சுக்கும் பங்குபற்றிய அனைவருக்கும் போட்டியை திறம்படநடத்திய கிருபன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.நான் கோசானின் வீட்டை ஆட்டையைப்போடுவன் எண்டு எனக்கு எப்பவோ தெரியும். @goshan_che4 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் ஏற்கனவே என்னை அறிமுகப்படுத்தியிருந்தேன் நான் ஜெர்மன் பிரெமனிலிருந்து நியூபலன்ஸ் .நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை, முதல் இடம் பிடித்ததற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்4 points
-
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
இன்று அமெரிக்காவும், இஸ்ரேலும் செய்வது மனிதகுலத்திற்கு மிகவும் அவசியமான களையெடுக்கும் நடவடிக்கையே. இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் உந்தப்பெற்று, இஸ்லாமியர் அல்லாதவரை அழிக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டுவரும் ஈரானின் அணுக்குண்டு எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதனைச் செய்வதற்கு இஸாலாமிய அடிப்படைவாத காட்டாட்சி அழிக்கப்படுவதுதான் வழியென்றால், அதனைச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. ஈரான் அணுவாயுத உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமே அணுவாயுத நிலைகளை அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல் எல்லைகளுக்கு அப்பால், நிலக்கீழ் சுரங்கங்களில் அது கட்டிக் காத்து வருவதே. கையில் கிடைக்கும் எவ்வாயுதத்தைக் கொண்டும் மதவெறியில் உந்தப்பட்டு "அல்லாகு அக்குபர்" என்று கோஷமிட்டபடி தன்னையும் அழித்து ஏனையவரையும் அழிக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளிடம் அணுவாயுதம் கிடைத்தால் என்னாகும் என்பதை ஈரானின் அபிமானிகள் சிந்திப்பது நல்லது. இஸ்ரேல் எனும் நாட்டினை உலக வரைபடத்தில் இருந்து அழிப்போம், அமெரிக்காவிற்கு மரணத்தைக் கொடுப்போம் என்று கங்கணம் கட்டிச் செயற்படும், இஸ்ரேலைச் சுற்றியிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம், பயிற்சி, பணம் என்று வாரியிறைக்கும், நீண்டதூர ஏவுகணைகளை உற்பத்திசெய்து தனது பயங்கரவாத கொடுக்குகளை உலகம் முழுக்கப் பரப்ப எத்தனிக்கும் மூர்க்கர்களின் ஆட்சி முற்றாக நிர்மூலமாக்கப்பட வேண்டும், இது காலத்தினதும், மனித இருப்பினதும் அவசியமாகும். சொந்த நாட்டு மக்களையே அடிமைகளாக, அச்சுருத்தி வைத்துக்கொண்டு, மிருகத்தனமாக கொடுங்கோலாட்சி செய்யும் ஈரானிய மத அடிப்படைவாதிகள் சின்னாபின்னமாக்கப்பட வேண்டும். வேடிக்கை என்னவென்றால் ஈரானின் கொடுங்கோலாட்சி அகற்றப்படவேண்டும் என்று ஈரானியர்கள் கேட்கிறார்கள், கொடுங்கோலன் கமெய்னி கொல்லப்பட்டபோது வீதிகளில் ஆர்ப்பரித்து மகிழ்வதோடு அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் நன்றி கூறுகிறார்கள். ஆனால், ஈரானிற்கு எந்தவிதச் சம்பந்தமும் இல்லாத சிலர் ஐயோ, இது தகுமா? ஐ நா விடம் அனுமதி கிடைத்ததா? ஈரானிடம் அணுவாயுதம் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? என்று கூவுகிறார்கள் 😆.4 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 இல் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி சஞ்சு சாம்சனின் புயல்வேக 89 (46 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷன் கிஷனின் மின்னல்வேக 54 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், அபிஷேக் ஷர்மாவின் அபாரமான அதிரடியான 52 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிவம் டுபேயின் ஆட்டமிழக்காத கடுகதியான 26 (08 பந்துகள்) ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குப் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே ஓட்டவிகிதத்தைத் தக்கவைக்க வேகமாக அடித்தாட முயன்றனர். ரிம் செய்ஃபேர்ட்டின் அதிரடியான 52 (26 பந்துகள்) ஓட்டங்கள், மிச்சல் சன்ட்னரின் வேகமான 43 (35 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர மற்றையோர் விரைவாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால், குறிப்பாக ஜஸ்ப்ரிற் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சால் விக்கெட்டுகள் சரிய 19 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. ஜஸ்ப்ரிற் பும்ரா 4 விக்கெட்டுகளை 15 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்துச் சாய்த்திருந்தார். முடிவு: இந்திய அணி 96 ஓட்டங்களால் வெற்றியீட்டி T20 கிரிக்கெட் 2026 க்கான உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது. யாழ்களப் போட்டியாளர்களில் இந்திய அணியின் வெற்றியை சரியாகக் கணித்த 14 பேருக்கு தலா 5 புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றைய 09 பேருக்குப் புள்ளிகள் கிடையாது! இன்றைய இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்: @கந்தப்பு மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்! குறிப்பு: யாழ்களப் போட்டியின் வெற்றியாளர் அடுத்த 12 கேள்விகளுக்கான பதில்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவார்!4 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பங்குபற்றிய உறவுகளுக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த @Newbalance @கந்தப்பு அண்ணை @நியாயம் மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் அவர்களுக்கம் நன்றியும் வாழ்த்துக்களும். நான் அதிகம் கருத்துக்கள் எழுதாவிட்டாலும், பலரின் கருத்துக்களை வாசித்து வருகின்றேன். குறிப்பாக @ஈழப்பிரியன் அண்ணா, @செம்பாட்டான் , @வீரப் பையன்26 @goshan_che இன்னும் பலருக்கும் நன்றிகள்3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் ஜீக்கும், துல்லியமான கணிப்புகள் மூலம் முதல் மூன்று இடங்களை பிடித்துக் கொண்ட @Newbalance, @கந்தப்பு , @நியாயம் ஆகியோருக்கும்… போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட கள உறவுகளுக்கும் பாராட்டுக்கள். 👏🏻👏🏻👏🏻3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பல சிரமங்களுக்கு மத்தியிலும் சிரமமான போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் க்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்கள். போட்டியில் பங்கு கொண்டு போட்டியை கலகலப்பாக வைத்திருந்த உறவுகளுக்கு பாராட்டுக்கள். கடும் போட்டிக்கு மத்தியில் நிரந்தர முதல்வராக வந்த @Newbalance க்கு வாழ்த்துக்கள். முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடித்த @கந்தப்பு @நியாயம் இருவருக்கும் வாழ்த்துக்கள்.3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 74) இலிருந்து 79) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 256/4 சரியாகக் கணித்தவர்கள்: ஏராளன் வசீ அல்வாயன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் சுவி கிருபன் கோஷான் சே கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி நந்தன் போட்டியாளர் பதில் செம்பாட்டான் ENG ஏராளன் IND வசீ IND புலவர் SA சுவைப்பிரியன் IRE அல்வாயன் IND ஈழப்பிரியன் ENG நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் IND வீரப் பையன்26 PAK சுவி IND கிருபன் IND கோஷான் சே IND அஹஸ்தியன் ENG கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SL 95/10 சரியாகக் கணித்தவர்: நந்தன் போட்டியாளர் பதில் செம்பாட்டான் ITA ஏராளன் ITA வசீ ITA புலவர் ITA சுவைப்பிரியன் USA அல்வாயன் ITA ஈழப்பிரியன் CA நியூ பலன்ஸ் CAN வாத்தியார் ITA கறுப்பி ITA வாதவூரான் ITA வீரப் பையன்26 OMA சுவி OMA கிருபன் UAE கோஷான் சே UAE அஹஸ்தியன் ITA கந்தப்பு OMA நியாயம் ITA எப்போதும் தமிழன் OMA ரசோதரன் NAM பிரபா OMA நிலாமதி NAM நந்தன் SL 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Sahibzada Farhan (PAK) - 383 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் Abhishek Sharma ஏராளன் Travis Head வசீ Aiden Markram புலவர் Abhishek Sharma சுவைப்பிரியன் Abhishek Sharma அல்வாயன் Travis Head ஈழப்பிரியன் Babar Azam நியூ பலன்ஸ் Jos Buttler வாத்தியார் Sanju Samson கறுப்பி Abhishek Sharma வாதவூரான் Abhishek Sharma வீரப் பையன்26 Abhishek Sharma சுவி Abhishek Sharma கிருபன் Dewald Brevis கோஷான் சே Suryakumar Yadav அஹஸ்தியன் Aiden Markram கந்தப்பு Abhishek Sharma நியாயம் Suryakumar Yadav எப்போதும் தமிழன் Abhishek Sharma ரசோதரன் Suryakumar Yadav பிரபா Ishan Kishan நிலாமதி Suryakumar Yadav நந்தன் Abhishek Sharma 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Sahibzada Farhan (PAK) - 383 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் AUS ஏராளன் IND வசீ AUS புலவர் AUS சுவைப்பிரியன் AUS அல்வாயன் IND ஈழப்பிரியன் SA நியூ பலன்ஸ் ENG வாத்தியார் IND கறுப்பி AUS வாதவூரான் IND வீரப் பையன்26 IND சுவி AUS கிருபன் IND கோஷான் சே NZ அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah (IND) - Wickets: 14, Ave: 12.42, Econ: 6.21 சரியாகக் கணித்தவர்கள்: செம்பாட்டான் புலவர் நியூ பலன்ஸ் வாத்தியார் வீரப் பையன்26 சுவி கோஷான் சே போட்டியாளர் பதில் செம்பாட்டான் Jasprit Bumrah ஏராளன் Arshdeep Singh வசீ Jacob Duffy புலவர் Jasprit Bumrah சுவைப்பிரியன் Varun Chakaravarthy அல்வாயன் Varun Chakaravarthy ஈழப்பிரியன் Jofra Archer நியூ பலன்ஸ் Jasprit Bumrah வாத்தியார் Jasprit Bumrah கறுப்பி Varun Chakaravarthy வாதவூரான் Adil Rashid வீரப் பையன்26 Jasprit Bumrah சுவி Jasprit Bumrah கிருபன் Varun Chakaravarthy கோஷான் சே Jasprit Bumrah அஹஸ்தியன் Varun Chakaravarthy கந்தப்பு Adam Zampa நியாயம் Varun Chakaravarthy எப்போதும் தமிழன் Varun Chakaravarthy ரசோதரன் Kuldeep Yadav பிரபா Shaheen Shah Afridi நிலாமதி Varun Chakaravarthy நந்தன் Varun Chakaravarthy 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) சரியாகக் கணித்தவர்கள்: வசீ அல்வாயன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வீரப் பையன்26 கிருபன் கோஷான் சே கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி நந்தன் போட்டியாளர் பதில் செம்பாட்டான் NZ ஏராளன் AUS வசீ IND புலவர் AUS சுவைப்பிரியன் PAK அல்வாயன் IND ஈழப்பிரியன் AUS நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் PAK வீரப் பையன்26 IND சுவி ENG கிருபன் IND கோஷான் சே IND அஹஸ்தியன் SA கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND கேள்விகள் 79) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: @Newbalance முதல்வர் நாற்காலியை பதில்களைப் பதிந்ததில் முந்தியதின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளார்!3 points
-
கறையான் புற்று
2 pointsஇது விவகாரமான கேள்வியாகத் தெரிகிறது😂! "மாமனிதர்" என்பது இறந்த பின்னர் வழங்கப் படும் பட்டம். அர்ச்சுனா திட்டும் சத்தியமூர்த்தி இன்னும் யாழ் போதனாவில் பணிப்பாளராக இருக்கிறார். எனவே, நிச்சயமாக இவர்கள் இரு வேறு நபர்களாகத் தானே இருக்க வேண்டும்?2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அண்ணை நீங்களாச்சும் கேட்டது கொஞ்சம் மனதுக்கு ஆறுதலாக இருக்கு. அவுஸ்திரேலியாவையும் நன்றாக விளையாடுவினம் என்று நான் கருதிய அணிகளும் தோற்றது ஒரு காரணம். அதிக ஓட்டம், அதிக விக்கெட் போன்ற குண்டக்கமண்டக்க(உபயம் தம்பி @வீரப் பையன்26) கேள்விகளில் சறுக்கியதும் மற்றொரு காரணம். எனக்கு நல்ல துணை தம்பி @வாதவூரான் இருக்கிறபடியால பயமில்லாமல் இருக்கிறேன்! @goshan_che அண்ணை தான் ஏமாத்திப்போட்டார்!2 points
-
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
இதையே எத்தனை நாளைக்கு அறுந்த இசைத்தட்டு போல சொல்லிக்கொண்டிருக்கப்போகிறீர்கள். ஈரானிய மொத்த சனத்தொகை எவ்வளவு? அதில் எத்தனைபேர் வந்து அமெரிக்காவிடமும் இஸ்ரயேலிடமும் தமக்கு சுதந்திரம் பெற்றுத்தர கேட்டார்கள்? எத்தனைபேர் காமெனியின் இறப்பை வீதிக்கு வந்து கொண்டாடினார்கள். ஏன் ட்ரம்பை அதிபர் பதவியில் இருந்து அகற்றினால் அமெரிக்காவில் மக்கள் கூடி கொண்டாட மாட்டார்களா? வடகொரியாவிடமும்தான் அணுஆயுதம் இருக்கிறது. தன்னை யாராவது தாக்கினால் தான் அதை பாவிப்பேன் என்கிறது. அதில் பிழை எதுவும் இல்லையே! ஈரானிடம் அணுஆயுதமே இல்லை. பாலிஸ்டிக் ஏவுகணைகளை அழிக்கத்தான் போர் என்கிறது அமெரிக்கா. ஏன் அது உலகில் வேறு யாரிடமும் இல்லையா! தன்னை தற்காத்துக்கொள்ள ஒரு நாடு அதை உருவாக்குவதில் என்ன தவறு கண்டீர்கள்! இதில உக்கிரேனுக்கு ரஷ்யா அடித்ததற்கு கூப்பாடு வேறை!! சுதந்திரம் பெற்றுக்கொடுக்கிறோம் என்று கூவிக்கொண்டு போர் தொடுத்த ஆப்கான், ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் எல்லாம் தேனும் பாலும்தான் ஓடுகிறதா!!2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல்வர் நியூபலன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ......! அவரைத் தொடர்ந்து வந்திருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் பாராட்டுக்கள் .......! முதலில் இது போன்ற போட்டிகளை திறமையாக நடத்திவரும் கிருபனுக்கு பாராட்டுக்கள் . .....! இப்போட்டியில் அவருக்கு பக்கபலமாய் நின்ற செம்பாட்டானுக்கும் நன்றிகள் ........! பங்குபற்றிய மற்றும் திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் பாராட்டுக்கள் ........! எல்லாவற்றுக்கும் களம் அமைத்துத் தந்த யாழ் இணையத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ......!2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பங்குபற்றிய உறவுகளுக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நியூபலன்ஸ், கந்தப்பு அண்ணை, நியாயம் மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் அண்ணைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் க்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்கள். போட்டியில் பங்கு கொண்டு போட்டியை கலகலப்பாக வைத்திருந்த உறவுகளுக்கு பாராட்டுக்கள். @Newbalance @கந்தப்பு @நியாயம் வாழ்த்துக்கள்.2 points
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இந்தியா,பாகிஸ்தான் போரில் கற்றுக் கொண்டிருப்பார்களோ? பாராளுமன்ற உறுப்பினர் என்றால் கடிதம் எழுத வேண்டும் என்ற எழுதாத விதி.2 points
-
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
ட்ரம்பும் நெதன்யாகுவும் ஈரான் மீதுள்ள காழ்ப்புணர்வு, பொறாமை, பயம் காரணமாகவே இந்தப்போரை வலிந்து தொடுத்தனர். அதற்கு பொய்யான காரணங்களை இட்டுக்கட்டினர். ஜனநாயகத்தை கட்டியெழுப்பவும் அணுஆயுத உற்பத்தியை தடுக்கவும் இந்தப்போர் என தம்மைத்தாமே ஏமாற்றினர். இவர்களிடம் ஜனநாயகம் உண்டா? எல்லா நாடுகளிலும் ஜனநாயகப்படிதான் ஆட்சி நடக்கிறதா? ஏன் அந்த நாடுகளை கண்டுகொள்ளவில்லை இவர்கள்? அவர்களின் ஜனநாயக விரோத செயல்களுக்கு உதவி வழங்கினர்? அடுத்து, அங்கு அணு உற்பத்தி செய்கிறார்கள் என்றால்; நிரூபித்திருக்க வேண்டும் அல்லது அவர்களின் அணு ஆலைகளை அழித்திருக்கவேண்டும். அதைவிட்டு சிறுவர் பாடசாலைகளிலும் அந்த நாட்டின் பொருளாதார மையத்திலும் ஏன் தாக்குதல் நடத்தினார்கள்? அணு ஆலை அங்கே இல்லை. ஆகவே இவர்களால் தாக்கியழிக்கப்பட்டவை அணுஆலைகளா? ஈராக்கிலும், சதாம் குசேயினை அழிப்பதற்கு இந்தகாரணங்களையே சொன்னார்கள். அதன் பின் தாங்கள் சுமத்திய குற்றச்சாட்டை நிரூபிக்க இன்றுவரை அவர்களால் முடியவில்லை. இவர்களின் அடாவடியை ஐ. நா. கண்ணை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கு, இதற்கு எந்த அதிகாரமுமில்லை வலுச் சண்டியர்களை அடக்க. வந்துவிடுவார்கள் நசுக்கப்படுபவர்களை தாங்களும் சேர்ந்து நசுக்க. போர் முடிந்தபின் ஈரானுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டோடு ஐ .நா. கூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஊரிலே செல்லடிக்கு தப்பிப்பிழைத்து இங்கிலாந்துக்கு வந்து மீண்டும் வளைகுடாவில் நடுங்கிகொண்டு இருந்தும் போட்டியினை திறம்பட நடாத்திய கிருபன் அவர்களுக்கு பாராட்டுக்கள் முதலிடத்தை பிடித்த நியூபலன்ஸ் அவர்களுக்கும் மூன்றாம் இடத்தை பிடித்த நியாயம் அவர்களுக்கும் வாழ்த்துகள். தென்னாப்பிரிக்கா ஒரே ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்று இருந்தால் அகஸ்தியன் அவர்கள் வென்று இருப்பார்2 points
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
வத்திக்கானுடன் முரண்பட்டு பாருங்கள் சுயரூபம் தெரியும்.😎 கீழே இருக்கும் தரவுகளை பார்க்கலாம். எதற்காக அழிப்பதை தொழிலாக கொண்டுள்ளார்கள் என்பது புரியும்.அங்கே ஆன்மீகமும் இல்லை அண்டங்காககளும் இல்லை. மாறாக தமது பாதையில் குறுக்கே வருபவர்களை அழிப்பதுதான் அவர்கள் நோக்கம். அது அவர்களுக்கு சரியாக தெரிகின்றது.வல்லமையுள்ளவர்கள் எது செய்தாலும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டியது வல்லமை இல்லாதவர்களின் உலக நிலை. இங்கே ஆன்மீகத்தை கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றார்கள்.அவ்வளவுதான். மற்றும் படி அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை.ஜேர்மனியில் கூட ஆன்மீகத்தை அரசியலிருந்து அகற்ற முடியாது. வல்லரசு என்பது அழிப்பதில் முன்னிலை வகிப்பதல்ல. மாறாக மனிதாபிமானங்களும் வல்லரசுகளுக்கு சொந்தமானது. மற்றும் படி...... ரஷ்யாவின் மகிமை ஐரோப்பிய தொழிற்சாலைகளுக்கும் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் நட்பு பேணியிருந்தால் இன்றும் அதாவது ஈரான் யுத்தத்தின் போதும் அதன் பொருளாதாரம் வலிமையுடன் இருந்திருக்கும்.1 point
-
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!
ஜயக்கொடியின் கொடியும் இப்படி விழுந்து போனதே.................. இந்த விடயத்தில் கட்சி பேதமின்றி நடக்கின்றார்கள் போல...........🫣 என் நண்பன் ஒருவன் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு மாற்றலாகிப் போனான். எனக்கு தெரிந்த வரையில் அவன் ஒருவனே சுத்தமானவன்............1 point
-
வசந்தம் வருகிறது
1 pointகாய்ந்து, ஆடையின்றி நின்ற மரங்களின் கிளைகளில் மெல்லிய பச்சைத் தளிர்கள் தலை தூக்குகின்றன. குளிர்காலத்தின்சோர்வு விலகி, வெயில் மெதுவாக பூமியைச் சூடேற்றத் தொடங்குகிறது. அதிகாலை நிசப்தத்தை பறவைகளின்கீச்சொலிகள் கிழித்து, அவற்றின் குளிர்காலப் பயணம் முடிந்ததையும் வசந்தம் பிறந்ததையும் அறிவிக்கின்றன. வசந்தம்என்பது வெறும் காலநிலை மாற்றமல்ல, அது மெதுவான, ஆனால் தெளிவான புத்துணர்ச்சியின் தொடக்கம். ஆனால் என்னால் வசந்தத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்க முடியவில்லை. இளம் சூரியஒளியில் சில நிமிடங்கள் நின்று காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால்முடியவில்லை. கொஞ்சம் நடைப்பயிற்சி செய்யலாமென்றாலே தயக்கம். காரணம், ஒவ்வாமை. கண்ணுக்குத் தெரியாத சிறு துகள்கள் என்னை ஆட்டிப்படைக்கின்றன. மகரந்தத் தூள்களின் வீச்சை நினைத்தாலேவெளியே செல்லத் தயங்குகிறேன். வீட்டுக்குள் ஒளிந்திருப்பதே எனக்குப் பாதுகாப்பாகத் தோன்றுகிறது. நான் மட்டும்தானா இவ்வாறு அல்லல்படுகிறேன்? யேர்மனியில் சுமார் 15% மக்களுக்கு மகரந்த ஒவ்வாமை இருப்பதாகக்கூறப்படுகிறது. இப்போது காற்றில் Hazel மகரந்தம் அதிகமாக உள்ளது. Alder மகரந்தமும் தோன்றத் தொடங்கியுள்ளது. இன்னும் சிலவாரங்களில் Birch மகரந்தம் பரவவிருக்கிறது. இந்த மூன்றும் எனக்கு ஒவ்வாதவை. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறேன். “மருந்து எடுத்தால் வாகனம் ஓட்ட வேண்டாம், சோம்பல்தோன்றலாம். நடைப்பயிற்சி என்றால் அதிகாலையில் செல். வெளியே சென்றுவிட்டு வந்தால் தலைக்குக் குளி, உடைகளைமாற்று…” என்று ஏராளமான ஆலோசனைகள். அவற்றை எல்லாம் கடைப்பிடிக்க முயற்சித்தாலும், ஒவ்வொரு வசந்தமும்ஒரு சோதனையாகவே மாறுகிறது. காலநிலை மாற்றமும் மகரந்தங்களின் அளவுகளில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வெப்பநிலையின் திடீர் ஏற்றஇறக்கங்கள் அதிக வீரியமுள்ள மகரந்தங்களை உருவாக்குகின்றன. வறட்சி மற்றும் சுற்றுச்சூழல், மாசு காரணமாகமரங்கள் மனஅழுத்தத்தில் இருப்பதால், அவை அதிக அளவு மகரந்தத்தை உற்பத்தி செய்கின்றன என ஆராய்ச்சிகள்கூறுகின்றன. இருந்தும், “சுற்றுச்சூழல் பிரச்சினை என்று ஏதாவது உண்டா?” என்று கேட்பவர்கள் இன்னும்இருக்கிறார்கள். ஏற்கனவே Cetirizine குளிசை ஒன்றை ப் போட்டுவிட்டேன். கொஞ்சம் அசதியாக இருக்கிறது. இப்போது கொஞ்சம்நித்திரை கொண்டு பார்க்கலாம், வசந்தத்தின் மணத்தை அனுபவிக்க முடியாவிட்டாலும், அதன் தாக்கத்திலிருந்து ஓரளவு தப்பிக்கவாவது.1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1 point
- வசந்தம் வருகிறது
1 pointஒவ்வாமை என்பது ஒரு அசௌகரியம் தான் என்றாலும் இக்காலத்தில் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் படியாக நாம் அனுமதிக்கக் கூடாது. நித்திரைத் தூக்கம் ஏற்படுத்தாத (non-drowsy) ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் பல வந்து விட்டன. கீழ் வரும் மருந்துகளில் எவையாவது உங்கள் நாட்டில் கிடைக்கின்றனவா என்று தேடிப் பாருங்கள், மருத்துவரின் பரிந்துரை இல்லாமலே இவை மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடும். fexofenadine centrizine levocentrizine loratadine desloratadine1 point- கறையான் புற்று
1 pointஎனக்கும் ஒரு சின்ன சந்தேகம்.🤭இந்த தடவை யாழில் எழுதுபவர்களின் ஆக்கங்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது..அடிக்கடி ஞாபகபடுத்தல்கள் தேவை போலும்..✍1 point- கறையான் புற்று
1 pointநன்னிச்சோழன், இது யாழ் 28 அகவைக்காக எழுதியது. “வெண்புறா’ திட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் பயண அனுபவங்களை 2015இல் பொங்கு தமிழில் எழுதியிருந்தேன். இப்பொழுது அந்தத் தளம் இல்லை. கிருபன் அவற்றை யாழ் இணையத்தில் பதிந்து வைத்திருக்கின்றார். அதற்கான லிங்கை கீழை இணைத்திருக்கின்கேன்1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1 point- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
1 point- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள்...............................1 point- கறையான் புற்று
1 point- கருத்து படங்கள்
1 point1 point- டிரம்பின் நடவடிக்கைகள் சந்தைகளை அமைதிப்படுத்தத் தவறியதால் கச்சா எண்ணெய் விலைகள் சாதனை அளவில் உயர்ந்துள்ளன.
டிரம்பின் நடவடிக்கைகள் சந்தைகளை அமைதிப்படுத்தத் தவறியதால் கச்சா எண்ணெய் விலைகள் சாதனை அளவில் உயர்ந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு டேங்கர்களை மீண்டும் நகர்த்துவதற்கான அடிப்படைப் பிரச்சினையை டிரம்ப் நிர்வாகம் இன்னும் தீர்க்கவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பால்டிமோரில் மார்ச் 4, 2026 அன்று, ஒரு பெட்ரோல் பங்கில் எரிபொருள் விலைகள் பின்னால் காட்டப்படும்போது, ஒருவர் தனது காரில் பெட்ரோல் நிரப்புகிறார். | ஸ்டெஃபனி ஸ்கார்பரோ/ஏபி. ஜேம்ஸ் பிகேல்ஸ் எழுதியது03/06/2026 இரவு 09:11 EST ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடங்கி ஒரு வாரத்திற்குப் பிறகும், எரிசக்தி விலை உயர்வைத் தடுப்பதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகள் இன்னும் முன்னேற்றமடையவில்லை - மேலும் விலை அதிர்ச்சிகளில் மோசமானவை இன்னும் வரக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வெள்ளிக்கிழமை அமெரிக்க பெஞ்ச்மார்க் எண்ணெய் விலை பீப்பாய்க்கு $90 ஐ விட அதிகமாக உயர்ந்தது, சனிக்கிழமை போர் தொடங்கியதிலிருந்து $20 க்கும் அதிகமாகவும், வரலாற்றில் சந்தையின் ஒரு வாரத்தில் மிக உயர்ந்த விலை உயர்வாகவும் இது உள்ளது . விலை உயர்வு ஏற்கனவே அமெரிக்க நுகர்வோருக்குத் தெரியத் தொடங்கியுள்ளது, பெட்ரோல் பம்பில் விலைகள் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததை விட 32 காசுகள் அதிகரித்துள்ளன. உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகளே விலை உயர்வுக்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இடைக்காலத் தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்னதாக, அமெரிக்கர்கள் மீதான போரின் பொருளாதார தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகரித்து வரும் அழுத்தத்தில் இருப்பதால், கட்டுப்படியாகும் தன்மை பிரச்சினைகள் மனதில் முதன்மையாக உள்ளன. "ஜலசந்தி வழியாக போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படாவிட்டால், கச்சா எண்ணெய் விலை [பீப்பாய்க்கு] $200 ஆக உயரும்," என்று கமாடிட்டி கன்டெக்ஸ்ட் என்ற செய்திமடலை எழுதும் எண்ணெய் ஆய்வாளர் ரோரி ஜான்ஸ்டன் X இல் ஒரு பதிவில் கூறினார் . "கிளிக்பைட் அல்ல, மாறாக மிருகத்தனமான இயற்பியல் மற்றும் தேவையான பொருளாதார ஊக்கத்தொகைகள்." இந்த வாரம் எண்ணெய் சந்தைகளை அமைதிப்படுத்தும் நோக்கில் வெள்ளை மாளிகை பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது, இதில் இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கான தடைகளை தற்காலிகமாக தளர்த்துவது மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு டேங்கர்களுக்கு கடற்படை பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆபத்து காப்பீடு வழங்குவது ஆகியவை அடங்கும். இருப்பினும், விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டதாக செய்தி வெளியானதால் வர்த்தகர்கள் விலைகளை உயர்த்துவதால், அந்த நடவடிக்கைகள் எதுவும் வெற்றிபெறவில்லை. ஈரான் பல எண்ணெய் டேங்கர்களை சேதப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது, ஈராக் மற்றும் குவைத் ஏற்கனவே எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளன, ஏனெனில் அவற்றின் கச்சா டேங்கர்கள் இனி சந்தைக்கு வர முடியாது, மேலும் விநியோக கவலைகள் காரணமாக சீனா எரிபொருள் ஏற்றுமதியை நிறுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைக் கப்பல்கள் எவ்வளவு காலம் தவிர்க்கிறதோ, அவ்வளவு காலம் வளைகுடா நாடுகள் சேமிப்புத் திறன் தீர்ந்து, உற்பத்தியை மூட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என்று ஆராய்ச்சி நிறுவனமான ரைஸ்டாட் எனர்ஜியின் தலைமைப் பொருளாதார நிபுணர் கிளாடியோ கலிம்பெர்டி கூறினார். "ஹார்முஸ் ஜலசந்தி மூன்று வாரங்களுக்கு மூடப்பட்டிருந்தால், மத்திய கிழக்கில் ஒரு நாளைக்கு 15 மில்லியன் பீப்பாய்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கும்" என்று வியாழக்கிழமை வாஷிங்டனில் நடந்த ரைஸ்டாட் மாநாட்டில் கலிம்பெர்டி கூறினார். "இது [கடந்த] வெள்ளிக்கிழமை நிலவரப்படி வசதியான அதிகப்படியான விநியோக நிலையிலிருந்து நம்பமுடியாத பற்றாக்குறைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது, அதன் அளவு நாம் இதுவரை பார்த்திராதது." உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான கடினமான மற்றும் விலையுயர்ந்த செயல்முறைகளைக் கருத்தில் கொண்டு, கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கினாலும் எண்ணெய் ஓட்டம் மெதுவாக இருக்கலாம் என்று கலிம்பெர்டி குறிப்பிட்டார். "இது வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்தால், அதை மீண்டும் அதே நிலைக்குக் கொண்டுவர வாரக்கணக்கில், அநேகமாக மாதங்கள் ஆகும்" என்று அவர் கூறினார். இருப்பினும், நீண்டகால எச்சரிக்கைக்கு எந்த காரணமும் இல்லை என்று நிர்வாகம் கூறியுள்ளது. எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் வெள்ளிக்கிழமை காலை, அமெரிக்கர்கள் விரைவில் எரிவாயு விலைகள் மீண்டும் குறையும் என்று எதிர்பார்க்க வேண்டும் என்று கூறினார். "இது வாரங்கள் என்று நான் கூறுவேன், மோசமான நிலையில்," என்று ரைட் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார். "இது வாரங்கள், மாதங்கள் அல்ல." விலைகள் "நாங்கள் விரும்புவதை விட அதிகமாக உள்ளன" என்று ரைட் ஒப்புக்கொண்டார், ஆனால் பைடன் நிர்வாகத்தின் போது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் மிகவும் இறுக்கமாக இருந்தபோது, ஏற்பட்ட சாதனை அளவை விட அவை மிகக் குறைவாகவே உள்ளன என்று குறிப்பிட்டார். அமெரிக்க எண்ணெய் உற்பத்தி, வெனிசுலாவிலிருந்து புதிய விநியோகங்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் விலைகளைக் கட்டுப்படுத்தும் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். "வெள்ளை மாளிகை முதல் தேசிய எரிசக்தி ஆதிக்க கவுன்சில் வரை செயலாளர்கள் ரைட் மற்றும் பெசென்ட் வரை ஜனாதிபதி டிரம்பின் முழு எரிசக்தி குழுவும், ஆபரேஷன் எபிக் ப்யூரி முழுவதும் எண்ணெய் விலைகளை நிலையாக வைத்திருக்க ஒரு விளையாட்டுத் திட்டத்தைக் கொண்டுள்ளது" என்று லீவிட் கூறினார். இருப்பினும், சந்தை ஆய்வாளர்கள் நிலைமையைப் பற்றி மிகவும் மோசமான படத்தை வரைகிறார்கள். மோதலுக்கு ஆறு நாட்களுக்குப் பிறகும், எண்ணெய் மற்றும் எரிவாயு டேங்கர்கள் ஜலசந்தியைக் கடக்க பெரும்பாலும் விரும்பவில்லை, இதனால் வளைகுடாவில் உள்ள முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும் ஆசியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான முக்கிய விநியோக பாதை துண்டிக்கப்படுகிறது. இந்த வாரம் விலை உயர்வுகள் இருந்தாலும், ஜலசந்தியின் நீட்டிக்கப்பட்ட மூடலின் உண்மையான தாக்கத்தில் சந்தைகள் விலை நிர்ணயம் செய்யாமல் போகலாம் என்று பொருட்கள் கண்காணிப்பு நிறுவனமான Kpler இன் எண்ணெய் மற்றும் டேங்கர் ஆராய்ச்சி இயக்குனர் ஆண்டன் பாவ்லோவ் கூறினார். "ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காதது மிகவும் மோசமானது, இறுதியில் ஏதாவது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு சந்தை முழுவதும் பரவலாக உள்ளது," என்று அவர் வியாழக்கிழமை ஒரு இணையக் கருத்தரங்கில் கூறினார். "அது நடக்குமா? ஒவ்வொரு நாளும் அது குறைந்து கொண்டே வரும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது." டிரம்ப் நிர்வாகம் எண்ணெய் விலையை கட்டுக்குள் கொண்டு வந்தாலும், பெட்ரோல் விலை குறையும் என்பதற்கு அது உத்தரவாதம் அளிக்காது என்று கருவூலத் துறையின் காலநிலை மற்றும் எரிசக்தி பொருளாதாரத்திற்கான முன்னாள் துணை உதவிச் செயலாளர் கேத்தரின் வுல்ஃப்ராம் கூறினார். "எண்ணெய் விலைகள் உயரும்போது எரிவாயு விலைகள் ராக்கெட்டுகள் போல உயரும், ஆனால் எண்ணெய் விலைகள் மீண்டும் குறைந்தால் ... அவை மீண்டும் இறகுகள் போல குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் ராக்கெட்டுகள் மற்றும் இறகுகள் என்று அழைக்கப்படுவதைப் பற்றி பேசுகிறார்கள்," என்று இப்போது எம்ஐடி ஸ்லோன் மேலாண்மைப் பள்ளியில் ஆற்றல் பொருளாதாரப் பேராசிரியராக இருக்கும் வுல்ஃப்ராம் கூறினார். "குறிப்பாக கோடைகாலத்தில் வாகனம் ஓட்டுவதால் [எரிவாயு விலைகள்] உயரும் காலகட்டத்தில் நீங்கள் வருகிறீர்கள் என்றால், எண்ணெய் விலைகள் மீண்டும் குறைந்தாலும் அவை அதிகமாகவே இருக்கக்கூடும்," என்று அவர் கூறினார். டேங்கர்களை மீண்டும் இயக்குவதை நோக்கமாகக் கொண்ட காப்பீட்டுத் திட்டம் குறித்த புதிய விவரங்களை மேம்பாட்டு நிதிக் கழகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது, இது 20 பில்லியன் டாலர்கள் வரை இழப்புகளை ஈடுகட்டும் என்று கூறியது. "எங்கள் மறுகாப்பீட்டுத் திட்டம் எண்ணெய், பெட்ரோல், எல்என்ஜி, ஜெட் எரிபொருள் மற்றும் உரங்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மீண்டும் உலகிற்கு கொண்டு செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று டிஎஃப்சி தலைமை நிர்வாக அதிகாரி பென் பிளாக் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். காண்க: உரையாடல் Play Video 56:23 போர், டிரம்ப் மற்றும் வாஷிங்டனின் நெருக்கடி | செனட்டர் கேட்டி பிரிட் அரபு வளைகுடா நாடுகள் நிறுவனத்தின் எண்ணெய் ஆய்வாளரும், வெளிநாட்டு ஊழியருமான பென் காஹில், காப்பீட்டு பின்னடைவு ஈரானியர்களால் தாக்கப்படும் என்ற அச்சத்தைத் தணிக்காது என்றார். ஏனெனில் ஈரானியர்கள் "வெளிப்படையாகவே அவநம்பிக்கையுடன் ஒரு மூலையில் பின்வாங்கி" உள்ளனர். "எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சில அபாயங்களைக் குறைக்கலாம் மற்றும் கப்பல் காப்பீட்டுடன் தொடர்புடைய சில செலவுகளைக் குறைக்கலாம், ஆனால் அடிப்படைப் பிரச்சினை இன்னும் உள்ளது," என்று அவர் கூறினார். கப்பல் போக்குவரத்து மீண்டும் நகர, "மோதலின் பாதையில் ஒரு அடிப்படை மாற்றம் தேவை" என்று காஹில் மேலும் கூறினார். வியாழக்கிழமை இரவு ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க ஆதரவு பெற்ற காப்பீடு இருந்தாலும் கூட கப்பல் நிறுவனங்கள் ஜலசந்தியைக் கடக்கத் தயாராக இல்லை என்பதை ரைட் ஒப்புக்கொண்டார். "இப்போது, மிகப்பெரிய பிரச்சினை வெறும் உடல் பாதுகாப்புதான்," என்று அவர் கூறினார். "இன்று ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு பெரிய டேங்கர் கப்பலை இயக்க நீங்கள் விரும்பவில்லை, ஆனால் அது வெகு தொலைவில் இல்லாத எதிர்காலத்தில் மாறும்." அமெரிக்க இராணுவம் "முடிந்தவரை விரைவாக" எண்ணெய் டேங்கர்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தொடங்கும் என்று ரைட் கூறினார், ஆனால் அதன் உடனடி கவனம் ஈரானிய தாக்குதல்களை அடக்குவதில் இருந்தது. "முதலில் நாம் அவர்களின் பிரச்சனையை ஏற்படுத்தும் திறனைக் குறைக்க வேண்டும், பின்னர் அதைச் செய்வது நியாயமானதாக இருக்கும் வரை, ஜலசந்தி வழியாக கப்பல்களை அழைத்துச் சென்று ஆற்றலை மீண்டும் இயக்கச் செய்வோம்," என்று அவர் கூறினார். https://www.politico.com/news/2026/03/06/crude-prices-make-record-jump-as-trumps-measures-fail-to-calm-markets-008173971 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகள்.போட்டியை திறம்பட நடத்திய கிருபனுக்கும் விசேட பாராட்டுக்களும் நன்றிகளும்.மீன்டும் இன்னுமொரு போட்டியில சந்pப்போம்.1 point- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஓம்… இன்னும் திமுக கூட்டணியில் எந்த கட்சி என்ன தொகுதி என்பதும், அதிமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்டுகள் என்பதே முடிவாகவில்லை. Long way to go. நாடாளுமன்ற தேர்தல் கேள்விகள் போல இவையும் ஒருவரின் தமிழக அரசியல் அறிவை நுணுக்கமாக சோதிக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்.1 point- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தேர்தல் நாள், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள், எத்தனை தொகுதியில் கட்சிகள் போட்டியிடுகின்றன, போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.1 point- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
மன்னிப்பும் இல்லை ஒரு ரோமமும் இல்லை. தமது வில்லத்தனத்தை தமது அரபு நண்பர்களும் கண்டுகொடுவிட்டதால்த்தான் இந்த மன்னிப்புக் கோரும் நாடகம். ஆனால், இவர் மன்னிப்பு என்று மழுப்பும்போதே ஈரானின் ராணுவம் "அமெரிக்க இலக்குகள் எங்கிருந்தாலும் தாக்குவோம்" என்று அறிக்கை விட்டதோடு, தம்மீது தாக்குதல் நடத்தப்படாத போது கூட இந்த அரபு நாடுகளைத் தேடித் தேடித் தாக்கியது . ஆரம்பத்தில் அமெரிக்க இலக்குகள் என்றுவிட்டு பின்னர் விமான நிலையம், கடல் நீரை நன்னீராக்கும் தொழிற்சாலை, சிவிலியன் அடுக்கு மாடிக் குடியிருப்புக்கள், வீதியில் செல்லும் வாகனங்கள் என்று சிவிலியன் இலக்குகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது. இராணுவத்தின் அழுத்தத்திற்குப் பயந்துதான் தனது இரண்டாவது அறிக்கையான "அமெரிக்க இலக்குகளைத் தாக்குவோம்" என்ற இராணுவத்தின் அறிக்கையினை அப்படியே தனது டுவிட்டர் கணக்கில் பதிவுசெய்தார் ஜனாதிபதி. முன்னர் சொன்னார்கள் இராணுவத் தலைமைப் பீடத்திற்கும் களத்தில் நிற்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை. ஆகவே தான் ஏற்கனவே முடிவு செய்ததன்படி களத்திலிருப்போர் தம் விருப்பிற்குத் தாக்குகிறார்கள் என்று . இல்லையில்லை, நாமேதான் தாக்குதலை நடத்தச் சொல்லிக் கட்டளையிட்டிருக்கிறோம் என்று இப்போது சொல்கிறார்கள். வந்திருக்கும் புதிய ஆன்மீகத் தலைவரும் கடும்போக்குவாதி என்பதுடன் ஈரானின் புரட்சிகர படையின் முக்கிய தலைவர்களில் ஒருவர். ஆகவே இவர் உயிருடன் இருக்கும்வரை ஈரான் இன்னும் இன்னும் அழிவுகளைச் சந்திக்கப்போவது திண்ணம். என்னைப்பொறுத்தவரையில் ஆன்மீகத் தலைவர் என்று எவருமே இனிமேல் வரக்கூடாது. வருவோர் எல்லாம் அழிக்கப்பட வேண்டும். ஈரான் மதச் சார்பற்ற நாடாக மாறவேண்டும். மதம் ஆட்சியதிகாரத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். இதனால் ட்ரம்ப்பும், பிபியும் செய்யும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எனது பூரண ஆதரவு உண்டு. ஏனென்றால், இஸ்லாமிய அடிப்படைவாதம் உலக இருப்பிற்கு மிகவும் ஆபத்தானது. அதனை எவர் தடுத்து நிறுத்தினாலும் எனது ஆதரவு அவர்களுக்குண்டு. புட்டின் விசுவாசிகளுக்கு இப்போது நடக்கும் தாக்குதல்கள் கலக்கத்தைக் கொடுக்கலாம். தற்போது உலகில் இருப்பது ஒரேயொரு வல்லரசுதான் என்பதை அமெரிக்கா மீளவும் நிரூபித்திருக்கிறது. ரஸ்ஸியாவும், சீனாவும் நினைத்துக்கொண்டிருந்த "பல" வல்லரசுக் கனவினை இப்போதைய தாக்குதல்கள் முற்றாக அடித்து நொறுக்கியிருக்கின்றன. அமெரிக்காவின் இராணுவ வல்லமையும், தொழிநுட்பமும் ரஸ்ஸிய சீன தொழிநுட்பத்தைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு மகத்தானது என்பதை நடந்துவரும் தாக்குதல்கள் காட்டுகின்றன.1 point- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ரேடருக்கு முன்னால் ரஷ்யா வந்து பல்லு இளித்து கொண்டு நின்றாலும் அவர்களுக்கு தெரியாது கமல்காசன் என்ற நடிகரும் ஈரானை தாக்கியதற்கு ரம்பை கண்டித்து கடிதம் எழுதி உள்ளாராம் இவர் முன்பு அப்கானிஸ்தானில் சாதாரணமாக நடைபெறுகின்ற சம்பவத்தை தமிழில் படமாக எடுத்த போது தமிழ்நாட்டு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து பிரச்சனைகளை அவருக்கு எற்படுத்தியுள்ளார்களாம்1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 80) இலிருந்து 85) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Yuvraj Singh Samra (CAN) - 110 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் Mitchell Marsh ஏராளன் Abhishek Sharma வசீ Quinton de Kock புலவர் Aiden Markram சுவைப்பிரியன் Steve Smith அல்வாயன் Abhishek Sharma ஈழப்பிரியன் Daryl Mitchell நியூ பலன்ஸ் Suryakumar Yadav வாத்தியார் Phil Salt கறுப்பி Aiden Markram வாதவூரான் Ishan Kishan வீரப் பையன்26 Quinton de Kock சுவி Aiden Markram கிருபன் Abhishek Sharma கோஷான் சே Ben Duckett அஹஸ்தியன் Abhishek Sharma கந்தப்பு Abhishek Sharma நியாயம் Abhishek Sharma எப்போதும் தமிழன் Ishan Kishan ரசோதரன் Travis Head பிரபா Ishan Kishan நிலாமதி Abhishek Sharma நந்தன் Abhishek Sharma 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Yuvraj Singh Samra (CAN) - 110 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் IND ஏராளன் SA வசீ SA புலவர் AUS சுவைப்பிரியன் ENG அல்வாயன் SA ஈழப்பிரியன் NZ நியூ பலன்ஸ் IND வாத்தியார் ENG கறுப்பி AUS வாதவூரான் IND வீரப் பையன்26 IND சுவி IND கிருபன் ENG கோஷான் சே AFG அஹஸ்தியன் ENG கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் AUS பிரபா PAK நிலாமதி AUS நந்தன் IND 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Romario Shepherd (WI) - 5/20 Econ: 6.66 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் Mitchell Santner ஏராளன் Jasprit Bumrah வசீ Jasprit Bumrah புலவர் Jasprit Bumrah சுவைப்பிரியன் Jos Buttler அல்வாயன் Jasprit Bumrah ஈழப்பிரியன் Adam Zampa நியூ பலன்ஸ் Rashid Khan வாத்தியார் Rashid Khan கறுப்பி Jasprit Bumrah வாதவூரான் Wanindu Hasaranga வீரப் பையன்26 Jasprit Bumrah சுவி Varun Chakaravarthy கிருபன் Mohammad Nawaz கோஷான் சே Rachin Ravindra அஹஸ்தியன் Marco Jansen கந்தப்பு Adam Zampa நியாயம் Varun Chakaravarthy எப்போதும் தமிழன் Arshdeep Singh ரசோதரன் Kuldeep Yadav பிரபா Jasprit Bumrah நிலாமதி Kuldeep Yadav நந்தன் Jasprit Bumrah 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Romario Shepherd (WI) - 5/20 Econ: 6.66 சரியாகக் கணித்தவர்கள்: சுவைப்பிரியன் சுவி போட்டியாளர் பதில் செம்பாட்டான் SL ஏராளன் AUS வசீ AUS புலவர் AUS சுவைப்பிரியன் WI அல்வாயன் AUS ஈழப்பிரியன் PAK நியூ பலன்ஸ் AFG வாத்தியார் AFG கறுப்பி AUS வாதவூரான் PAK வீரப் பையன்26 IND சுவி WI கிருபன் NZ கோஷான் சே PAK அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் AUS 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Sanju Samson (IND) ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் Abhishek Sharma ஏராளன் Hardik Pandya வசீ Kuldeep Yadav புலவர் Abhishek Sharma சுவைப்பிரியன் Suryakumar Yadav அல்வாயன் Hardik Pandya ஈழப்பிரியன் Babar Azam நியூ பலன்ஸ் Jasprit Bumrah வாத்தியார் Suryakumar Yadav கறுப்பி Hardik Pandya வாதவூரான் Abhishek Sharma வீரப் பையன்26 Abhishek Sharma சுவி Hardik Pandya கிருபன் Tilak Varma கோஷான் சே Tilak Varma அஹஸ்தியன் Aiden Markram கந்தப்பு Abhishek Sharma நியாயம் Abhishek Sharma எப்போதும் தமிழன் Quinton de Kock ரசோதரன் Suryakumar Yadav பிரபா Suryakumar Yadav நிலாமதி Suryakumar Yadav நந்தன் Abhishek Sharma 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Sanju Samson (IND) சரியாகக் கணித்தவர்கள்: வசீ புலவர் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் வீரப் பையன்26 சுவி கிருபன் அஹஸ்தியன் கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் நிலாமதி போட்டியாளர் பதில் செம்பாட்டான் AUS ஏராளன் AUS வசீ IND புலவர் IND சுவைப்பிரியன் ENG அல்வாயன் AUS ஈழப்பிரியன் IND நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் IND வீரப் பையன்26 IND சுவி IND கிருபன் IND கோஷான் சே NZ அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா AUS நிலாமதி IND நந்தன் PAK1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல்வர் தெரிவு சுப்ரீம் லீடரின் தெரிவை விட அதிக சன்பென்ஸ் உள்ளதுபோல் தெரிகின்றதே. கண் தப்பின் நடமாட்டங்களை ஏற்கனவே அமெரிக்காவும், இஸ்ரேலும் இரகசுயமாக கண்காணிக்கின்றது. இன்று ஞாயிற்று கிழமையாதலால் நியூசிலாந்து மட்டையடி செய்தபோது போட்டியின் முடிவு கட்டத்தில் சிறிதுநேரம் போட்டியை பார்த்தேன். பிடிக்கல பிடிக்கல பிடிக்கல ☹️☹️☹️😁1 point- தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பு முயற்சி வெற்றி பெறுமா? நிலாந்தன்!
மக்களால் மட்டுந்தான் முடியும்.வரும் மாகாணசபைத் தேர்தலில் சுமத்திரனை மக்கள் தோற்கடித்து விட்டால் எல்லாம் சுபம்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தெரிவு?
பாவம் எவனோ இந்த ஆள் மீது கடுப்பில் உள்ளவன் இப்படி ஒரு வதந்தியை பரப்பி விட்டிருக்கிறானோ😂. கமேனியின் மகந்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்றார்களே? அவர் இலண்டனில் பல நூறு மில்லியன் சொத்து வைத்துள்ளார், ஆண்மைகுறைவுக்கு சிகிச்சை எடுத்தார் என்ற செய்திகள் - உள்நாட்டில் பல பிடுங்குபாடுகளை ஏற்படுத்தி விட்டது போலும். இந்த முல்லாக்களை முற்றாக சீனில் இருந்து அகற்றி விட்டு, இராணுவத்தில் நடைமுறை சாத்தியமாக சிந்திக்க கூடிய ஒருவர், அமெரிக்கா, இஸ்ரேலோடு டீல் போட்டால் நாட்டை காப்பாற்றலாம். எகிப்தில் ஜெனரல் சிசி செய்தது போல. இஸ்லாமிக் பிரதர்ஹூட், ஹமாஸ், ஹிஸ்புல்லா, தாலிபான், ஈரானிய முல்லாக்கள், ஹூதி, அல்ஷபாப், ஐசிஸ், அல்கொய்தா இது போன்ற கிருமிகள் உலகில் எங்கும் ஆட்சியில் இருக்க கூடாது, என்பது சர்வதேச மகளிர் தினமான இன்று என் வேண்டுதல்.1 point- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ஏன் என்றால் சிரியாவில் அமெரிக்கா இஸ்ரேல் நேரடியாக இறங்கவில்லை. யாழ்களத்திலும் நிகர் இப்படி இருக்கிறார்கள். அமெரிக்கா, மேற்கு, இஸ்ரேல் ஏதும் செய்தால் மட்டுமே அவர்களின் ரேடாரில் புலப்படும்😂.1 point- ஓநாய்களும் ஆட்டுக்குட்டிகளும் ஈழத் தமிழர்களும் - நிலாந்தன்
ஓநாய்களும் ஆட்டுக்குட்டிகளும் ஈழத் தமிழர்களும் - நிலாந்தன் ஒரு சிறுவர் கதையிலிருந்து தொடங்குவோம். ஓநாய் ஒன்று நீரோடையில் நீர் அருந்த வந்தது. அங்கே ஒர் ஆட்டுக்குட்டி நீர் அருந்தி கொண்டிருந்தது. ஓநாய் ஆட்டுக் குட்டியைப் பார்த்துச் சொன்னது “டேய் நீதான் போன மாதம் என்னை கேவலமான வார்த்தைகளால் திட்டியது. அதற்குத் தண்டனையாக உன்னை இப்பொழுது நான் கொன்று சாப்பிடப் போகிறேன்” என்று. அதற்கு ஆட்டுக்குட்டி சொன்னது “ஐயா நான் போன மாதம் பிறந்திருக்கவே இல்லை” என்று. ஓநாய் சொன்னது “அப்படியென்றால் அது உன்னுடைய அம்மாவாக இருக்கும். உன்னுடைய அம்மாவைத் தண்டிப்பதற்காக இப்பொழுது உன்னைச் சாப்பிடப் போகிறேன்.” என்று கூறி ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது. இந்தக் கதைக்குள் இருக்கும் செய்தி என்னவென்றால், கொல்வது என்று தீர்மானித்தால் அதற்கு ஒரு காரணம் தேவை. அதுதான் இப்பொழுது ஈரானில் நடக்கிறது. முன்பு ஈராக்கில் நடந்தது; லிபியாவில் நடந்தது. ஈரானை அடிக்க வேண்டும், அதன் எதிர்ப்பை நசுக்க வேண்டும். ஈரான் கீழ்ப்படிந்தால் மேற்காசியா சுருண்டு விடும். எனவே ஈரானை நசுக்க வேண்டும். ஈரான் அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கிறது. எனவே அதைத் தடுக்க வேண்டும் என்பது பிரதான குற்றச்சாட்டு. ஈரான் ஏன் அணுகுண்டை வைத்திருக்கக் கூடாது? அது பாரசீக நாகரிகத்தின் வழித்தோன்றல். பாரசீக நாகரிகமானது இப்போதிருக்கும் பெரும்பாலான ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளை விடவும் மூத்தது. ஒரு மூத்த நாகரீகம் அணுகுண்டை ஏன் வைத்திருக்கக் கூடாது? இதுதொடர்பாக ஓமானின் அனுசரணையோடு நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பீட்டர் கிர்னஸ் என்பவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார். ஓமான் நாட்டின் வெளிவிவிகார அமைச்சின் ராஜதந்திர உதவியாளரான அவர் கூறுவதின்படி, ஈரான் அமெரிக்காவோடு உடன்பாட்டுக்குச் சம்மதித்த பின்னர்தான் அமெரிக்கா ஈரானைத் தாக்கியிருக்கிறது. அதாவது ஈரான் அணுகுண்டு உற்பத்தியைக் கைவிடும் விடயத்தில் அமெரிக்காவோடு ஏதோ ஒரு சமரசத்துக்கு வரத் தயாராக இருந்தது. பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டிருந்த ஒரு பின்னணியில்தான் ஈரான் தாக்கப்பட்டிருக்கிறது. ஆயின், இங்கே பேச்சுவார்த்தைகள் எனப்படுகின்றவை ஈரான் உஷார் நிலையில் இருப்பதைத் தடுக்கும் தந்திர நோக்கத்தைக் கொண்டவையா? ஈரானின் அதிபர் இரும்பு கரம் கொண்டு நாட்டை ஆண்டார் என்று மேற்கு நாடுகள் கூறுகின்றன. பெண்களுக்கு உரிமை இல்லை. அரச எதிர்ப்பாளர்கள் ஈவிரக்கமின்றி வேட்டையாடப்படுகிறார்கள், உலகில் அதிகம் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட நாடு…. போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவற்றில் உண்மையுண்டு. ஆனால் அது ஈரானியர்களின் பிரச்சினை. அதற்காக ஈரானிய அதிபரை தண்டிப்பதற்கு வெளி நாடுகளுக்கு உரிமையும் இல்லை. அதேசமயம் போரின் தொடக்க நாளில் சில நிமிடங்களிலேயே கொமெய்னியும் அவருடைய குடும்பமும் அழிக்கப்படும் அளவுக்கு ஈரான் பலவீனமாக இருந்திருக்கிறது. அதன் எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தகர்த்தெறியும் அளவுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் வலிமையாக இருந்திருக்கின்றன. ஈரானின் வலிமையை உடைப்பதில் அதன் உள் எதிரிகளுக்கும் பங்கு இருந்திருக்கிறது. உள்ளே இருப்பவர்கள் வழங்கிய தகவல்களை வைத்துத்தான் கொமெய்னியின் தலை குறி வைக்கப்பட்டிருக்கிறது. தன்னைத் தானே மூடும் சமூகங்கள் தம்மைத் தாமே காட்டிக் கொடுப்பவர்களை உற்பத்தி செய்கின்றன. எதுவாயினும் கடந்த மூன்று மாத காலப் பகுதிக்குள் அமெரிக்கா தன்னை உலகின் ஏகப் பெரு வல்லரசு என்று நிரூபிக்கும் இரண்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. முதலாவது வெனிசுலாவின் அதிபரை அவருடைய நாட்டுக்குள் இறங்கித் தூக்கியது. இரண்டாவது, ஈரானின் அதிபரும் உட்பட தீர்மானிக்கும் அதிகாரமுடைய உயர்மட்டத் தலைவர்களை போர் தொடங்கிய அன்றே தீர்த்துக் கட்டியது. இறமையுள்ள நாடு ஒன்றின் தலைவரை அந்த நாட்டுக்குள் இறங்கிக் கைது செய்கிறார்கள். மற்றொரு நாட்டின் தலைவரை குண்டு போட்டுக் கொலை செய்கிறார்கள். வெளிநாடுகளின் வான்பரப்புக்குள் ஆளில்லா விமானங்களை அத்துமீறி அனுப்பி ஆட்களைக் கொல்லுகிறார்கள்; இலக்குகளை அழிக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள், இறையாண்மை எங்கே இருக்கிறது ? சுதந்திரம் எங்கே இருக்கிறது? நாடுகளின் ஆள்புல எல்லைகளுக்குப் பொருள் என்ன? 10 கோடி மக்களை கொண்ட ஈரானுக்கும் இது பொருந்தும். சிறிய இலங்கைத் தீவுக்கும் இது பொருந்தும். இலங்கைத் தீவின் 40 கடல் மைல் தொலைவில் வைத்து ஈரானியக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் செல்வாக்கு மண்டலம். அமெரிக்கா எதுவரை தான் வரமுடியும் என்பதனை அங்கே காட்டியிருக்கிறது. சிறிய இலங்கைத் தீவு சுதந்திரம், இறைமை என்றெல்லாம் வீரம் காட்டவில்லை. இந்தியா யாருடைய பக்கம்? இந்தியாவின் மௌனம் அதன் ராஜதந்திரமான வார்த்தைகள் எதை உணர்த்துகின்றன? ஈரானுக்கு அவர்கள் ஆதரவில்லை என்பதைத்தான். பாரசீகத்தைப் போலவே இந்திய பேரரசும் ஒரு பெரிய பண்பாட்டு நிலப்பரப்பு . ஆனால் ஒரு நாட்டின் ஆல்புல எல்லைக்குள் நுழைந்து அந்த நாட்டின் தலைவரைக் கொல்லும் காட்டு விதியை இந்தியா ஆதரிக்கின்றதா? எதிர்கின்றதா? இப்படிப்பட்டதோர் உலகச் சூழலில் அரசற்ற சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை? ஒரு பகுதியினர் ஈரான் தாக்கப்படுவதை ரசிக்கிறார்கள். ஏனென்றால் ஈரான் இறுதிக் கட்டப் போரில் அரசாங்கத்தின் பக்கம் நின்றது. ஈரான் மட்டுமல்ல, கியூபா, வியட்நாம், பாலஸ்தீனம் போன்ற நாடுகளும் ஐநாவில் அரசாங்கத்தின் பக்கம்தான் நிற்கின்றன. கியூபா எப்பொழுதும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் பாதிக்கப்படும் ஒரு நாடு. அங்கே மருத்துவ, பொருளாதாரத் தடை காரணமாக முதியவர்கள் இறந்து கொண்டிருப்பதாக ஒரு சிறுமி எழுதிய கடிதம் சமூகவலைத்தளங்களில் வாசிக்க கிடைத்தது. பொருளாதாரத் தடையால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் ஈழத் தமிழர்கள் கியூபாவின் பக்கம்தான் நிக்க வேண்டும். ஆனால் ஐநாவில் கியூபா ஈழத் தமிழர்களோடு நிற்பதில்லை. இன்னுமோர் உதாரணம். மேற்காசியாவில் அரசற்ற குர்திஷ் மக்கள் வெவ்வேறு நாடுகளால் பங்கிடப்படுகிறார்கள். அங்கெல்லாம் அவர்கள் இப்பொழுது அமெரிக்காவின் உதவியோடு அந்தந்த அரபு நாடுகளுக்கு எதிராக போராடுகிறார்கள். இந்த இடத்தில் அவர்கள் அறநெறியின் அடிப்படையில் அமெரிக்காவுக்கு எதிராக நிற்க வேண்டுமா? அல்லது எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்று ராஜதந்திரமாக முடிவெடுக்க வேண்டுமா? எது சரி ?அறமா? விடுதலையா ? இந்த இடத்தில் அறமும் விடுதலையும் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லை. அரசற்ற சிறிய மக்கள் கூட்டத்துக்கு இதுதான் விதி. ஏன் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கும் இதுதான் விதி. போர் என்று வந்தால் அங்கே தர்மம்,நீதி நியாயங்கள் இருக்காது. வெற்றியை உறுதிப்படுத்துவது என்ற ஒரே இலக்கு மட்டும்தான் இருக்கும். அது ஒரு காட்டு விதி. அது நாகரீகமடைந்த மனிதர்களின் விதியல்ல.மனித குல நாகரீகம் என்பது போரைத் தவிர்ப்பது. ஆனால் விலங்குகளின் விதி அதுவல்ல. அங்கே வெல்வதுதான் பிழைக்கும். அதுதான் காட்டு விதி. இங்கே தொடக்கத்தில் கூறப்பட்ட சிறுவர் கதையில் இருப்பது அதுதான். ஓநாய்கள் பசியோடு திரியும் காட்டுக்குள்தான் ஆட்டுக் குட்டிகளும் வாழ்கின்றன; ஈழத் தமிழர்களும் வாழ்கிறார்கள். ஓநாய்களிடமிருந்தும், சிங்கங்களிடமிருந்தும், ட்ராகன்களிடமிருந்தும் ஈழத் தமிழர்கள் தப்பிப்பிழைக்க வேண்டும். தமது போராட்டத்தின் நீதிக்கும், தமது ராஜதந்திர இலக்கிற்கும் இடையே ஏதோ ஒரு சமநிலையைப் பேண வேண்டும். கிறீஸ்து தன் சீடர்களுக்குப் போதித்ததுபோல”இதயத்தில் புறாக்களைப்போல கபடமற்றவர்களாகவும். செயலில் பாம்புகளைப்போல எச்சரிக்கையுணர்வோடும்” போராட வேண்டும். https://www.nillanthan.com/8178/1 point- ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!
பேசாமல் இலங்கையில் இவர்களுக்கு பீ ஆர் கொடுத்து ஈரான் மாலுமிகளை இலங்கை கடற்படையில் சேர்த்துவிடலாமோ?1 point- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இப்ப நடக்கிற சண்டையில ஒரு குருவியையும் நம்பேலாது கண்டியளோ..... ஈரானும் எல்லாத்திலையும் குண்டை போட்டுட்டு சாட்டுக்கு மன்னிப்பு கேக்கும். அமெரிக்காவும் இஸ்ரேலும் அரேபிகளை தூண்டி விடுறதுக்காக ஆங்காங்கே குண்டுகளை தூவுகின்றார்களோ எண்ட சந்தேகமும் இருக்கு. எண்டாலும் நோன்புக்காலம் களைகட்டுது.😂1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.1 point- வசந்தம் வருகிறது
1 pointsuvy , ஊசி போட்டுக் கொள்வது பற்றி நீங்கள் குறிப்பிடுவது சரிதான். எனது குடும்ப வைத்தியரிடம் இதைப்பற்றி கதைத்திருக்கின்றேன். எனக்குள்ளது பருவகால மாற்றத்தினால் ஏற்படும் ஒவ்வாமை. ஒன்றில் இருந்து இரண்டு, மூன்று மாதங்களுக்குள் சரியாகிவிடும். ஊசி போட்டுக் கொள்வதால் ( மிகச் சிறிய அளவில் அந்த மகரந்தப் புரதம் (allergen) உடலுக்குள் ஊசி மூலம் செலுத்துதல்) உடல் மெதுவாக அதற்கு பழகி விடும். காலப்போக்கில் ஒவ்வாமைத் தாக்கம் குறையும். ஆனால் ஒரு தடவை ஊசி போடுவது போதும் என்றில்லை, 3-5 ஆண்டுகள் திட்டமிட்ட முறையில் போட வேண்டும் என்று வைத்தியர் சொன்னார். ஆரம்பத்தில் போட்டுக் கொண்டேன். வேலை நிமித்தம் தொடர்ந்து ஊசி வைத்தியத்தை செய்யவில்லை. தற்காலிக நிவாரணமாக குளிசை போட்டுக் கொண்டேன். மூக்கடைப்பு ஏற்படும் போது Nasal Steroid Spray யும் பாவித்துக் கொள்வேன். அதுவும் பழகிவிட்டது. வீட்டில் ஒருதடவை தும்மினால், “ மனுசனுக்கு ஒவ்வாமை வந்து விட்டது. குளிசையைப் போட்டுட்டு படுக்கப் போய்விடுவான்” என்று எண்ணம் வர வீட்டு வேலைகள் குறைய வாய்ப்பிருக்கின்றது. 😉1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@Ahasthiyan முதல்வர் நாற்காலியை மயிரிழையில் கைப்பற்றியுள்ளார்!5 ஆம் இடத்துக்கு எப்படி வந்தேன் என்று என்னால் நம்ப முடியாமல் இருக்கிறது. அவுஸ்தான் கழுத்தறுத்து விட்டது.1 point- கறையான் புற்று
1 pointதன் சொந்த சொத்தை, நேரத்தை, புகழை போராட்டத்துக்கு பிரதிபலன் பாராமல் கொடுத்தவர் டாக்டர் சத்யமூர்த்த்தி. அவர், நீங்கள் உட்பட இப்படி பலர் வெளிநாட்டில் செய்தவேலைகள் போற்றப்பட வேண்டியன, எதிர்கால சந்ததிக்கு எடுத்து சொல்லபட வேண்டியன. அந்த வகையில் இந்த பகிர்வுக்கு நன்றி. நான் கெளரவ பட்டங்களை இனி பாவிக்க கூடாது என நினைப்பதன் முதன்மை காரணம் - அதை பெறும் தகுதி எவருக்கும் இல்லை என்பதல்ல, மாறாக அதை கொடுக்கும் தகுதி எவருக்கும் இல்லை என்பதே. போராட்டமும், இயக்கமும் வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கப்பட்டதன் பின் விழைவுகளில் இதுவும் ஒன்று.1 point - வசந்தம் வருகிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.