Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    20143
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    89365
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    34065
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    7207
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/12/26 in Posts

  1. தம்பர் யுத்தத்தை விரும்பாதவர்… யேசு…புத்தர்….தம்பர் தான்… எண்டு பைடன் காலத்தில் ஒரு அண்ணை யாழில் சலங்கை கட்டி ஆடினவர்😂 மானஸ்தன் எங்க எண்டு தேடிப்பார்த்தால்….. ஐயோ அமெரிக்கா ஈரானை அடிக்குது எண்டு ஒரு திரில நிண்டு கொண்டு மூக்கால அழுகிறார்😂…. தோசையை திருப்பி போடுவதில் யாழ்கள அண்ணைமார் தமிழக அரசியல்வாதிகளுக்கே டஃப் கொடுப்பார்கள்.
  2. சித்திரமும் கைப்பழக்கம் இன்று: Phone ஐ எடுத்து Tamil font ஐ தேடித்தேடி type பண்ணிக் கொண்டிருக்க வந்த பேத்தி போனைப் பறிச்சு “ஏன் இவ்வளவு கஸ்டப்படிறீங்கள் voice typing செய்யலாம்” எண்டு சொல்லத் தொடங்க, “பரவாயில்லை கொண்டா” எண்டு ஒவ்வொரு எழுத்தாத் தேடித்தேடி, தட்டித்தடவி எழுதத் தொடங்கினார் சந்திரன். குடும்பங்கள் busy ஆப் போனதால காலமை good morning இல இருந்து , பிறந்த நாள் வாழ்த்தெல்லாம் what’s app இல மட்டும் எழுத்தாய் மாறி, பிறகு அதுக்கும் பஞ்சி வர, voice message விடத்தொடங்கி, இப்ப என்னெண்டே விளங்காத emoji வந்து நிக்க, தானாவது ஏதாவது எழுதுவம் எண்டு போட்டு, கண்ணாடியை போட்ட படி type பண்ணத் தொடங்கினார். எண்டாலும் பேத்தி சொன்னதைக் கேட்டு ஒரு ஆர்வத்தில voice typing க்குப் போய்ப் பாத்துச் சரி வராம, ஒவ்வொரு எழுத்தா அடிக்க வெளிக்கிட, எழுதத் தொடங்க முதலே அடுத்த என்ன எண்டு googleம், யோசிக்க முதலே என்னெண்டு சொல்ல AI எண்டு எல்லாச் சொற்களும் வசதியும் இருந்தும் எங்கடை தமிழைக் காணாம திருப்பியும் type பண்ணத் தொடங்கினார். டைப் பண்ணிக் கை சோந்த போய் , typo mistake எல்லாம் correct பண்ணிக் களைச்சுப் போய் சாய்மனையில சாய்ஞ்சவரின்றை வீட்டு hall லை காட்சிக்கு மட்டும் வைச்சிருந்த, ஆச்சி பொங்கலுக்குப் பாவிச்ச பித்தளைக் குடத்துக்குப் பக்கத்திலை இருந்த…. Typewriter கண்ணில பட்டுது. அந்தக் காலத்தில இதுதான் தொழிலாயே இருந்திச்சுது , ஆனால் இப்ப கை நோகாம எழுதினாலும் ஐஞ்சு வரி எழுதவே கஸ்டமா இருக்குது எண்டு யோச்சபடி நித்திரையானார். அன்று: முதல் நாள் காலமை குண்டெறிந்தவனை ஓடவிட்டிட்டு, சாவகாசமா பின்னேரம் “ round up” எண்டு சனத்தைக் கூப்பிட்டிருத்தி வைச்சு கைக்கு அம்பிட்ட ஆக்களை அள்ளிக் கொண்டு போக, மிச்சச் சனம் எல்லாம் வீட்டோட பதுங்க பகல்லயே ஊர் இருண்டிச்சுது. இந்தக் களோபரத்தில கடைகளைப் பூட்ட, தேத்தண்ணிக் கடைக்காரன் தானமாப் போட்ட வடைத் துண்டோட பறந்து போய் காகத்தார் வயர்கம்பீல இருந்தபடி நரி இல்லைத்தானே எண்டு வடையைச் சாப்பிடத்தொடங்க கேட்ட வெடிக்கு இந்தமுறையும் வடை கீழ விழ ஆலமரத்தடிக்குப் போய் தானும் அடங்கிக் கொண்டார் ஊரடங்கினது போல. இனி ஊருக்கு விடிஞ்சு தான் என்ன எண்டு போட்டுச் அடுத்த நாள் சூரியனும் சோம்பலோட பிந்தி எழும்ப, இன்னும் நித்திரையால எழும்பாமக் காக்கையார் நித்திரை கொள்ள, சந்திரன் சைக்கிளைக் கொண்டந்து நிறுத்தி “ குட் மோர்னிங்” சொல்ல, கழுத்தை நிமித்தி ஒரு கண்ணால பாத்திட்டு கொஞ்சம் தள்ளிப் போய் “ஆக்கள் எல்லாம் எழும்பீட்டினம் மானத்தை வாங்காம எழும்புங்கோ” எண்டு பிள்ளைகளைப் பாத்துக் கரையத் தொடங்கிச்சுது. சைக்கிளால இறங்கி stand இல விடுவம் எண்டு சந்திரன் இழுக்க , அது , பிள்ளை அங்கால படுத்திருக்கேக்க கையைப் போடேக்க முறண்டு பிடிக்கிற மனசி மாதிரி வர மாட்டன் எண்டு நிண்டிச்சுது. சைக்கிள் பாரம் கூடவா இல்லாட்டி உடம்பில பலமில்லையா எண்டு சந்தேகம் வர, இந்தா பார் இழுக்கிறன் எண்டு ஒருமாதிரி இழுத்து நிமித்தி சைக்கிளை விட்டிட்டு சந்திரன் நிமிர மூண்டு நாளா வருமானமில்லாத முன் சைக்கிள் கடைக்காரன் “ அண்ணை ஒருக்கா கழுவிப் பூட்டுங்கோவன் “ எண்டு சொன்னான். பாவம் தன்னிலும் பாக்க அவன்டை நிலமை மோசம் போல எண்டு நெச்சிட்டு அப்பிடியே மரத்ததடீல இருந்த தேத்தண்ணிக்கடைக்குப் பின்னால இருந்த மேசையையும் கதிரையையும் எடுத்துக்க கொண்டந்து போட்டிட்டு பேப்பரைத் துறந்தார். சந்திரன் மூக்குக் கண்ணாடியின்டை உடைஞ்ச காதுப்பிடியைக்( கைபிடி) விழாம rubber band ஐப் போட்டு ஆடிக்கொண்டிருந்த கைபிடியை இறுக்கிக் கட்டீட்டு பேப்பரைத் துறந்து நேத்தைக்கு நடந்த சம்பவத்தை பாத்திட்டு பாவப் பட்டாலும் எப்பிடியும் ஐஞ்சு பேராவது வருவினம் எண்ட உள்மனசு சொல்ல fileஐ எடுத்து பேப்பரை அடுக்கத் தொடங்கினார். கச்சேரிக்கு முன்னால ஆலமரத்தை குத்தகைக்கு எடுத்தமாதிரி சுத்திவரக் கடைகள். வெய்யிலுக்கு ஒதுக்கமா வடக்கை சைக்கிள் கடையும் தெற்க தேத்தண்ணிக்கடையும் வர, கிழக்க கச்சேரி வாசலுக்கு நேர முன்னுக்கு சந்திரன் ஐக்கியமானர். மரத்திற்கு மேற்கை ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்கிறதுக்கு எல்லாரும் பாவிச்சிச்சினம். ”your highness” எண்டு தொடங்கி பேர் தெரியாத ஒருத்தனுக்கு, (வாசிக்கத் தெரியுமா எண்டும் தெரியாது ) நாலு வரீல கடிதம் எழுதி “yours truly ” எண்டு முடிச்சு, பேருக்கும், விலாசத்துக்கும் எண்டு இடம் விட்டபடி நாலு பேப்பரை அடிச்சு வைச்சிட்டு ஆக்களுக்காகப் பாத்துக்கொண்டிருந்தார் சந்திரன். காஞ்சு போன காபன் பேப்பரை வைச்சு தேய்ஞ்சு போனவிரலால இறுக்கி அடிச்சாத்தான் மற்றப் பேப்பரில ஏதாவது தெரியுது, அதிலேம் குண்டு செய்யிறாங்களோ எண்ட சந்தேகத்தில தடை விதிச்சதால இப்ப வாங்கிறதும் கஸ்டம் , எப்படியாவது அடுத்த முறை form எடுக்குப் கச்சேரிக்குள்ள போகேக்க CC ( Chief Clerk) ற்றை ரெண்டு பழசைக் கேட்டு வாங்கோணும் எண்டு யோசிச்சுக் கொண்டு இருக்க சனப்பிழக்கம் கூடத் தொடங்கிச்சுது. விடியாத காலையில ஊர்ச்சனம் எல்லாம் பிடிபட்டதை தேடினபடியும், பிடிச்சுவங்களைத் திட்டினபடியும் ஒவ்வொரு “campஆ” ஓடித்திரிஞ்சிட்டு ஒண்டும் சரிவராம கடைசியா GAக்கு ஒண்டு, ICRC க்கொண்டு, uniform போட்டபடி ஆமியே நடத்தின சிவில் நிர்வாகத்துக் கொண்டு எண்டு முறைப்பாட்டுக் கடிதம் கேட்டு வந்து நிக்க சைக்கிள் கடைக்காரன் சந்திரனைப் பொறாமையாய்ப் பாத்தான். எழுவதின்டை கடைசீல, அப்பரோட அதே தொழிலுக்குப் போகாம ஏதோ O/L ஐஞ்சு பாடம் திக்கிமுக்கிப் பாஸ் பண்ணி A/L பக்கம் எட்டிப்பாக்காம , “ விதி”ப்பட மோகன் மாதிரி பொம்பிளைப் பள்ளிக்கூட typing course க்குப் போனவர் சந்திரன். கச்சேரியடியில செஞ்சிலுவைச்சங்கம் பெண்களுக்கு மட்டும் எண்டு boardஐ வெளீல போட்டு உள்ளயே போகவிடாமத் தடுக்க , ஆரியகுளத்தடீல bond institute இல கடைசீல இடம் கிடைச்சுது. முதல் நாள் வகுப்பு எல்லா ரெட்டைப் பின்னலும் முன்னால இருக்க கடைசி வாங்கில சந்திரனும் முன்னுக்குப் படிப்பிச்ச கிழவனும் தான் அங்க trouser போட்ட ஆக்கள். வந்த கிழவன் அடிப்படையில இருந்து தொடங்கிறன் எண்டு அறுக்கத் தொடங்கிச்சுது. “ Ink ribbon ஐ load பண்ணுறது முக்கியமான வேலை கமராவிற்கு film roll போடிறது மாதிரித் தான் மேல மூடியைத் திறந்து வட்ட roller க்கால இழுத்து மற்றப் பக்க rollerஐக் கொண்டேச் சுத்தி lock பண்ணிறது முதல் வேலைஅடுத்தது paper load பண்ணிறது. Type பண்ணிற நல்ல பேப்பரைக் கடைசீல தலைகீழா வைச்சு பிறகு காபன் பேப்பரை வைச்சு அதுக்கு மேல copy பண்ணிற பழைய பேப்பரை வைச்சு மேல இருக்கிற வலப்பக்க குமிழை இழுத்தபடி அடுக்கின set ஐ உள்ள தள்ளீட்டு குமிழை உருட்ட சரியான பேப்பர் முன் பக்கம் வந்து நிக்கும்” எண்டு முடிச்சார் முதல் நாள் வகுப்பை. வாத்தியார் ஒவ்வொண்டா இது தான் key board , கடைசி வரீல நீட்டா இருக்கிறது space bar, இடது பக்கம் கீழ shift எண்டு சொல்லிக் கொண்டே போனார். அமெரிக்காரான் கண்டு பிடிச்சதால qwerty keyboard தான் type writerக்கும். எழுத்து அடிக்கிற இடமும் , எழுத்தும் சரியா எண்டு பாக்க hairpin நுனி மாதிரி ஒரு சின்ன வளை வொண்டிருக்கும் sniper point மாதிரி. “நாலு வரிசை key board இல ரெண்டாம் வரிசையில இருந்து தான் தொடங்கிறது. இடது கை நாலு விரல் , வலது கைநாலு விரல், தொடங்கேக்க நடுவில இருந்து தொடங்கி மேல கீழ side இல எண்டு விரலை நீட்டி ,அகட்டி மேல் வரிசை கீழ் வரிசை ஏறி இறங்கி , Capitalக்கு கீழ போய் shift ஐத் தேடிப்பிடிச்சு அமத்தி வைச்சு அடிக்கோணும். எப்பவும் line பாத்து paperஐ உருட்டி, மேல ஒட்டி இருக்கிற scale பாத்து alignment adjust பண்ணி இடைவெளி விடோணும்” எண்டு சொன்னது விளங்கின மாதிரி மண்டையை ஆட்டினார் சந்திரன். a, b, c, d பாத்துப் பாத்து அடிக்கிறது தானே சின்ன வேலை எண்டு நெச்சவர் ஒரு சொல் அடிக்கவே ஒரு நிமிசம் போச்சுது. அந்தாள் என்னெண்டா 50-60 words per minute எண்டாத் தான் வேலை கிடைக்கும் எண்டத்தான் விளங்கிச்சுது இதுகும் கஸ்டம் தான் எண்டு சந்திரனுக்கு. “ஒரு நாள் முழுக்க type பண்ணினால் விராலயே 3 மைல் நடக்கிற களை வரும்” எண்டு முதல் நாள் வாத்தி சொன்னது உண்மையோ எண்ட மாதிரி விரல் வீங்கி ஒரே நோ. விரலின்டை ரேகை எல்லாம் key board ஓட போச்சுது. நல்ல வேளை at least பெருவிரலை பயன்படுத்தாத படியால கைநாட்டுப் போட அதாவது மிஞ்சிச்சுதே எண்டு சந்தோசப்பட்டார். உத்தியோகம் தேடிற பொம்பிளைகள் O/L முடிய அப்ப தேடிப்போறது இந்த tutoryஐ தான். பழைய படங்கிளில வாறமாதிரி short hand & typing தெரிஞ்சாத் stenographer வேலை கிடைக்கும். கிளாக்கர் உத்தியோகம் தேடிக் களைச்சு கடைசீல typist ஆ இருந்து , முல்லைத்தீவுக்கு டிரான்ஸ்பர் வர, மனிசி சொன்னதைக் கேட்டு retire பண்ணீட்டு கச்சேரி வாசலில தஞ்சமடைஞ்சார் ஏற்கனவே இருந்த நாலுபேரோட ஐஞ்சாவதா போன சந்திரனை வாங்கோ எண்டு கூப்பிட்டது அந்த மரத்தைச்சுத்தி இருந்த நாலு பேர், என்ன எல்லாம் அவரிலும் பாக்கக் கிழடுகள் தான். பிறப்பு, இறப்பு, கலியாணம் , பென்சன் , பெட்டிசன் எண்டு எல்லாதுக்கும் formஓட, ஒரு கடிதம் இணைக்கோணும் எண்டதால சந்திரனுக்கும் சோத்துக்கு வழிசெஞ்சது இந்த type writer. அப்ப Town க்குள்ள ஆசுப்பத்திரிக்கு முன்னாலே இருக்கிற பாமசிகளுக்கு முன்னாலேம் ஆக்கள் இருக்கிறவை type writer ஓட. போயக் கொஞ்ச நாளிலியே எங்க போய் எந்த form வாங்கோணும் ,எத்தினை காபன் கொப்பி அடிக்கோணும், எங்க கையெழுத்துப் போடோணும், நிரப்பீட்டு எங்க போய் ஆரைச் சந்திக்கோணும், வேலை நடக்காட்டி எப்பிடி முடிக்கோணும் எண்டு எல்லாத்தையும் தெரிஞ்ச சந்திரன் சூரியனாய்ப் பிரகாசித்தார். ஏதோ பெருமாள் தாற பிச்சையில வாழ்க்கை போக புடிங்கித் திண்ண வந்த அனுமார் மாதிரி மினிபஸ்ஸால வந்திறங்கிறவயை மடக்கிப் பிடிச்சிக் கொண்டந்து விடத் தொடங்கினான் ஒருத்தன். முதல்ல வடை பிளேன்ரீக்கு ஒமெண்டவன் கடைசீல ஐஞ்சு, பத்தெண்டு கையை நீட்ட, விட்டால் வாறதும் போயிடும் எண்டு அவனையும் கவனிச்சுக் கொண்டு ஓடவேண்டியதாப் போட்டுது எல்லா டைபிஸ்ட் மாருக்கும். தொண்ணூறுக்குப்பிறகு காணாமல் போனோர் கடிதங்கள் இல்லாமல் போக, அங்க பக்கத்திலயே வந்த புது நிர்வாகத்திட்டை “ pass” எடுக்க கேட்டுக் கடிதம் , கையெழுத்தெண்டு நிலமை மாற type பண்ணிக்கொண்டிருந்த ஐஞ்சு கடைசீல ரெண்டாக அதே மரத்தடி உறவுகள் எண்டு தொடர்ந்து கொண்டிருந்தார் சந்திரன் . 95 இல சனம் இடம்பெயரத் தொடங்க வீட்டை விட்டுப் போக விருப்பமில்லாத சந்திரன் கடைசீல வெளிக்கிட்டு வேலைக்குப் போக பயம் எண்டு வேலையை விட்ட ஊருக்கே போய்த் திரிஞ்சலைஞ்சு திரும்பி வந்தார். சந்ததிக்கெண்டு சேத்து வைச்சதுகள் எல்லாம் இழந்து போனாலும் அவரின்டை type writer எங்கயோ பக்கத்து வீட்டில இருந்து வந்து சேர திருப்பியும் தூக்கிக்கொண்டு போய்ப் பாத்தா மரத்தைச்சுத்தி மண்மூட்டையும் கச்சேரியடீல காவலும் வர வீட்டோட நிரந்தரமா ஐக்கியமானார். இன்று பேத்தி கேக்கிறாள் license எடுக்க வரச்சொல்லி எண்டு கச்சேரியடிக்கு வந்தவர் இடம் வலம் பிடிபடாமக் கஸ்டப்பட்டார். ஆலமரத்தடியில மோட்டச் சைக்கிளை விட்டு stand ஐத் தட்டத் தலைக்கு மேல கத்தின காகம் பழைய காகம் தானோ எண்டு நிமிந்து பாத்திட்டு, வாசலுக்க போக “ ஏதும் வேணுமா ?செய்தரலாம் form ஐ check பண்ணிக் கொண்டு போங்கோ எண்டு வந்த அனுமாரைத் தாண்டி” உள்ள வந்தார். முந்தி அடிக்கடி போன இடம் இப்ப அந்நியப்பட்டுப் போனதை உணர்ந்த படி அறையைத் தேடி formஐக் குடுக்க, ஐயா மூண்டு கொப்பி வேணும் போய்க் கொண்டு வாங்கோ எண்டவரை இழுத்துக் கொண்டந்த பேத்தி முன்னால இருந்த கடையில Photocopy க்கு குடுக்க , அங்க இருந்த ஒரு பிள்ளை computer இல எதையோ தேடி அழிச்சழிச்சு அடிக்கிறதை எட்டிப் பாத்திட்டு qwerty key ஆவது மாறாமல் இருக்கெண்டு ஆறுதலோட திரும்பி நடந்தார். Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம். பி.கு( எண்பதுகளில St. John’s இல steno ஒராள் இருந்ததாகவும் அவவைப் பாக்கிறதுக்கே பிரின்சிப்பலிட்டை அடி வாங்கப் பல அண்ணாமார் போனதாகவும் வரலாறு உண்டு)
  3. உலக நாடுகள் அணி திரண்டுள்ளன எப்படி? 130 சொச்சம் நாடுகளின் அனுசரணையோடு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் நிறைவேறி உள்ளது. சாராம்சம்: ஈரானின் அரபு நாடுகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம். நிறுத்த வேண்டும். ஹோர்முஸ் நீரிணையை உடனடியாக திறக்க வேண்டும். பாதுகாப்பு கவின்சிலிலில் ரஸ்யா, சீனா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை(வீட்டோ பாவிக்கவில்லை). இது இப்படி இருக்க, வீரகத்தியளும், கிறீஸ் கத்தியளும், கொடுவா கத்தியளும் படுகிற பாட்டை பார்த்தால் ஒரே சிரிப்புத்தான்😂.
  4. ஒரு நாட்டினை உலக வரைபடத்திலிருந்தே அழிப்போம் என்று சொல்வதற்கும், அதை நடைமுறையில் சாதிப்பதற்கான அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. இங்கே ஈரான் செய்வது இரண்டாவது வகை, அதாவது இஸ்ரேலினை முழுவதுமாக அழித்தல். ஆகவே, தன்னை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டியிருக்கும் விரோத அரபு நாடுகளால் சூழப்பட்டுள்ள ஒரு நாடு நிச்சயம் தனது பாதுகாப்புக் குறித்து அதீத கவனம் செலுத்தும், தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்தும் உச்சத்தில் வைத்திருக்கும், தனது எல்லைகளுக்கு அப்பால் எதிரிகளை தடுத்து நிறுத்த தன்னால் ஆன அனைத்தையும் செய்யும். அதைத்தான் இஸ்ரேல் இன்று செய்கிறது. பலஸ்த்தீனம் என்பது இஸ்ரேல் எனும் நாட்டிற்குள் ஆக்கிரமிப்பின் மூலம் உட்பிரவேசித்த‌ அரேபியர்களின் வழித்தோன்றல்களால் வலிந்து உருவாக்கப்பட்ட ஒரு பகுதி. பலஸ்த்தீனர்களுக்கு இஸ்ரேலுடன் சேர்ந்து வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டே வந்தன. இரு தேச யோசனை முதன்முதலாக 1947 ஆம் (1) ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் முன்வைக்கப்பட்டபோது பலஸ்த்தீனிய அரபுத் தலைமை அதனை முற்றாக நிராகரித்தது. பின்னர் 2000 ஆண்டில் (2) அமெரிக்காவின் காம்ப் டேவிட் பேச்சுக்களின்போது இஸ்ரேலின் பிரதமர் இகுட் பராக்கினால் பெரும்பாலான மேற்குக்கரை மற்றும் காஸா உட்பட்ட பகுதியைப் பலஸ்த்தீன தேசம் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் ஜெருசலேத்தை இரு தேசங்களும் பொதுவான பகுதியாகப் பயன்படுத்தலாம் என்றும் பிரகடனம் செய்தபோது அன்றைய பலஸ்த்தீனத் தலைவர் யாசீர் அரபாத் அதனை நிராகரித்தார். பின்னர் 2008 இல் (3) இஸ்ரேலியப் பிரதமர் இகுட் ஒல்மேர்ட் 75 வீதமான மேற்குக்கரையினையும், கிழக்கு ஜெருசலேத்தின் பல பகுதிகளையும், இதற்கு மேலதிகமாக‌ பலஸ்த்தீனர்கள் இழக்கும் பகுதிகளுக்குப் பதிலாக இஸ்ரேலின் ஏனைய பகுதிகளில் மாற்று நிலப்பரப்பினைத் தருவதாகவும் அறிவித்தபோது அன்றைய பலஸ்த்தீன ஜனாதிபதி மகுமூட் அப்பாஸ் அதனை நிராகரித்தார். பலஸ்த்தீனர்கள் 1993 ஆம் ஆண்டிலிருந்து இரு தேசக் கொள்கைக்கு ஆதரவானவர்கள் என்று வெளியுலகில் அவ்வப்போது காட்டி வந்தாலும்கூட, இஸ்ரேல் அதனை வெளிப்படையாக தர முன்வந்தபோது அகதிகள், இறையாண்மை, எல்லைகள் என்று சாட்டுக்களைக் கூறி நிராகரித்தே வந்திருக்கின்றார்கள். ஆனால், ஹமாஸ் பயங்கரவாதிகளின் பயங்கரவாத நடவ‌டிக்கைகளால் இஸ்ரேலின் அணுகுமுறையும் இறுக்கமடையத் தொடங்கியது. குறிப்பாக 2024 ஐப்பசி 7 ஆம் திகதியன்று ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் இரு தேசக் கொள்கையென்பதை இஸ்ரேல் முற்றாகக் கைவிட்டு விட்டது. இன்று தனது இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல இஸ்ரேல் தயாராகியிருப்பதாகவே தெரிகிறது. இரு தேசக் கொள்கையினை ஏற்றுக்கொண்டு, இஸ்ரேலுடன் ஒரு நாட்டில் சமத்துவமாக வாழ்வதை விரும்பாது, ஆயுதம் மூலம் இஸ்ரேலினை அழித்து வெற்றி காணலாம் என்கிற மமதையில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட பலஸ்த்தீனர்களின் (இல்லாத) தேசம் அரிக்கப்பட்டு வருவது எனக்கு வியப்பளிக்கவில்லை.
  5. தம்பரின் உலகு தனி உலகு… அங்கே கச்சா எண்ணை பரலுக்கு 40 டொலர் போகிறது😂 தெஹ்ரானில் சிங்க கொடி பறக்கிறது…😂 தம்பருக்கு நோபல் பரிசை கமிட்டி அறிவிக்கிறது😂 ஏதோ இஸ்ரேல் காரன் கூட போயிருக்கிறான் எண்டது மட்டும்தான் ஒரே நம்பிக்கை. இல்லாட்டில் தம்பரும், வான்சும், ஹெக்செத்தும், ரூபியோவும் சேர்ந்து…அமெரிக்காவின் கோவணத்தையே முல்லாக்கள் கையில் கொடுத்து விடுவார்கள் 😂
  6. நோபல் பரிசை தனக்கு தரும்படி வாயால் கேட்கும் மனிதரல்லவா அவர்? ஈரான் போர், டிரம்புக்கு தீராத வடுவையும் வலியையும் தரப்போகிறது.
  7. சிரிப்புக்கு பஞ்சமில்லை . ........! 😂
  8. நான் அறிந்த வரையில் இரு பெரு மதங்கள் உருவாகிய பூமியில் என்றும் கலவரமும் இரத்தக்களரியும் தான்.....
  9. பொய் சொல்வதில் தம்பருக்கு நிகர் தம்பர்தான்.போரின் முதல்நாளே ஈரானின் தலைவரைப் போட்டவுடன் போர் முடியும் என்று சம்பிய அமெரிக்காவும் இஸ்ரேலும் 12 நாட்களாக தலைவன் இல்லாத நாட்டை அடக்க முடியாமல் படாத பாடுபடுகிறார்கள்.அமெரிக்காவை நம்பிய அரபுநாடுகள் தேவையில்லாமல் அடிவாங்குகின்றன.இஸ்ரேலும் அடிவாங்குவதும் அடி கொடுப்பதுமாக இருக்கிறது.இரானுக்கு இது வாழ்வா சாவா பிரச்சினை .அவர்கள் எந்த எல்லை வரையும் போவார்கள். அமெரிக்கா இந்தப் பேரில் பெரிய பொருளாதார இழப்பைச் சந்ததித்ததுடன் உக்கிரைனிடம் உதவி கேட்கும் நிலைக்குப் போய்விட்டது. எண்ணை விலை அப்பொழுது உச்சத்துக்குப் போய்விட்டது. இன்னும் போர்நீடித்தால் கொரோனா போன்ற முடக்கநிலை ஏற்பட வாய்ப்புண்டு. எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக விநியோகச்சங்கிலி தாறுமாறாகப் பாதிக்கப்படப் போகின்றது.புட்டினும. இப்பொழுது கொடுக்கின்ற எண்ணெய் வழங்கலை தடுக்கப் போவதாக வேறு மிரட்டுகிறார்.. தம்பர் வெனிசுலாவைக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் அவருக்கு எண்ணெய் பற்றிக் கவலை இல்லை.ஐரோப்பிய நாடுகளும் ஆசிய நாடுகளும் பெரிய அளவில் பாதிக்கப்படும். மக்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நிலை வரும்.பொருட்களின் விலை கட்டுப்பாடுகளின்றி அதிகரிக்கும்.சீனாவுக்கு இது பெரிய பாதிப்பைக் கொடுக்கலாம். சீனா அதற்காக இந்த முட்டுக்கட்டையை உடைப்பதற்கான நகர்வுகளைச் செய்ய வேண்டி வரலாம். அதனை ஈரானுக்குடாகவும் செய்ய முயற்சிக்கலாம். போர் அமெரிக்கா எதிர்பார்த்த மாதிரி போகவில்லை. அமெரிக்கா அணுக்குண்டை வீசினாலும் ஆர்சரிப்படுவதற்கில்லை.இப்போதைக்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான்.
  10. ஏன் இந்தக் கஞ்சத் தனம்? "பீல்டு மார்ஷல்", "வைஸ் அட்மிரல்", "எயார் கொமடோர்" என்று உச்சத்தில் இருந்து கொடுக்காமல் கீழ இருந்து குடுக்கிறியள் பட்டம்😂?
  11. அருமையான வரலாற்று விளக்கம். தெற்காசியாவின் Temu முஸ்லிம்கள் இதை ஏற்க தயங்க காரணம் கண்மூடித்தனமாம மதப்பற்று. எம்மை போன்ற மக்கள் கூட்டம் கூட இந்த புரிதல் இல்லாமல் இருப்பதும், சொன்னாலும் ஏற்க மறுப்பதும் ஏன் என்பதுதான் எனக்கு விளங்காத விடயம். இங்கே முக்கியம் பெறுவது ஐநா அல்ல -மாறாக 135 அங்கத்துவ நாடுகளின் இணை அனுசரனை.
  12. இஸ்ரேலை வரைபடத்தில் இருந்து நீக்காத வரை ஓயமாட்டோம் என்ற அறிவிக்க பட்ட கொள்கையில் இருந்து, ஈரான், அதன் அல்லகைகளான ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் மாறினால் - சாத்தியம்.
  13. ஓம் இதை எழுத மறந்து விட்டேன். நன்றி. அதேபோல் சீனா வெளிவிவகார அமைச்சு ஈரானின் மத்திய கிழக்கு தாக்குதலை கண்டித்துள்ளது. எங்கள் ஊரில் ஒரு மனநிலை தவறியவர் இருந்தார். அவருக்கு யாரும் கல்லெறிந்தால் போறவை வாறவை எல்லாரையும் பிடித்து அடிப்பார். அதை போல அரபுநாடுகள், துருக்கி, அசர்பைஜான், சமாதானம் பேசி கொண்டிருந்த ஓமான் என கண்ணை மூடி கொண்டு முல்லாக்கள் கல் எறிந்தது… சீனா உட்பட பலரை, இவர்கள் கைக்கு அணு ஆயுதம் போனால் என்ன நிலை என யோசிக்க வைத்துள்ளது.
  14. அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை இராக் போர் சென்ற திசையும், ‘மறக்காத’ பாடமும்! பாரதி ஆனந்த் Updated on: 11 Mar 2026, 8:48 pm 4 min read “பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் கடமைப்பட்டதுபோல் அனுபவிக்கின்றனர்!” - இந்த மேற்கோளை சுட்டிக் காட்டி தற்போதைய ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை விளக்க முற்படுகிறார், மத்திய கிழக்கு அரசியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிபுணரான ஃபரா என்.ஜான். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இவர் மூத்த விரிவுரையாளராக இருக்கிறார். அவரது பார்வையிலிருந்து... “பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் அனுபவிக்கின்றனர்.” - இதுதான் போரின் சாராம்சம். வரலாற்றில் அன்றும் இன்றும் போர்கள் நடக்கும்போது பலமான ராஜ்ஜியங்கள் / அரசாங்கங்கள் எதிரியை தோற்கடிக்க இயலாமல் இருந்ததில்லை. ஆனால் அழிவும், அரசு நிர்வாகமும் வெவ்வேறாக இருக்கின்றன. அதைக் குழுப்பிக் கொண்டுதான் பெரும் சாம்ராஜ்ஜியங்கள் சோர்ந்து போகின்றன. அமெரிக்க ராணுவத்தால் ஈரான் அரசை அப்புறப்படுத்த முடியும். ஆனால், அதனால் உருவாக்கப்படும் அதிகார வெற்றிடத்தை எது நிரப்பும், எப்போது நிரப்பப்படும் என்பதே கேள்வி. 2003-ல் இராக்கில் அமெரிக்க ராணுவம் தான் நினைத்ததை எல்லாம் செய்தது. சதாம் ஹுசைன் கைது செய்யப்பட்டு, வழக்கு நடத்தப்பட்டு தூக்கிலடப்பட்டார். அங்கிருந்த ஆட்சி தூக்கியெறியப்பட்டது. எல்லாமே வெறும் 21 நாட்களில் முடிந்தது. ஆனால், இராக் - அமெரிக்கா போர் முடிந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இராக்கில் இன்றும் சர்வாதிகார அரசுதான் இருக்கிறது. அந்த அரசு இப்போது ஈரானுடன் தொடர்பில் இருப்பதாகவே உள்ளது. ஈரானிய ஆதரவு ஆயுதக் குழுக்கள், இராக் மண்ணில் வெளிப்படையாகவே இயங்குகின்றன. சதாம் ஹுசைன் புதிய இராக்கை தன் இஷ்டத்துக்கு உருவாக்க, கிட்டத்தட்ட 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள், 4,400+ அமெரிக்க ராணுவ வீரர்களை அமெரிக்கா இழந்தது. ஆனால், இராக் இன்றும் ஈரானின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள்தான் இருக்கிறது” என்று ‘தி கான்வர்சேஷன்’ தளத்தில் கருத்துப் பகிர்ந்திருக்கிறார் ஃபரா. இந்தப் பின்னணியில் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் எதை நோக்கிச் செல்லக்கூடும், சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வரும் குரல் என்னவாக இருக்கிறது, சர்வதேச நிபுணர்களின் பார்வை என்ன, உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன? - இந்தக் கேள்விகளுக்கான விரைவுப் பார்வை இது. மத்திய கிழக்கு பதற்றம் தொடங்கி இன்று (மார்ச் 11) பன்னிரெண்டாவது நாள். இந்த 12 நாட்களிலேயே அமெரிக்க பங்குச் சந்தைகள் வரலாறு காணாத சரிவு, ஐரோப்பியா முதல் ஆசிய நாடுகள் வரை எரிபொருள் தட்டுப்பாடு என்று அதிர்வலைகள் கடுமையாக எதிரொலிக்கின்றன. இந்தச் சூழலில் ஈரான் ராணுவத்தின் மூத்த கமாண்டர்களுள் ஒருவர் அண்மையில் அரசு தொலைக்காட்சியில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், “அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து வெறும் 48 மணி நேரத்தில் ஈரானை நொறுக்கிவிடலாம் என ஒரு குறுகிய காலப் போரை நடத்தும் திட்டத்தோடு இறங்கினர். இன்று ட்ரம்ப்பும், நெதன்யாகுவும் திணறிப் போயுள்ளனர். அவர்கள் திட்டமிட்ட குறுகிய போர் இப்போது நீண்ட கால போராக மாறியுள்ளது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஈரான் போரை இனியும் சமாளிக்க அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஆயுதங்கள், வீரர்கள், இதைத் தாக்குப் பிடிக்கக் கூடிய முன் கணிப்புகளைக் கொண்ட போர் உத்தி திட்டங்கள் வேண்டும். ஆனால், அவை அவர்களிடம் இல்லை. உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் தங்கள் போர்க் கப்பல்களை இங்கு கொண்டு வந்தாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். ட்ரம்ப் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். அவரது படை வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். ஏற்கெனவே வெனிசுலா மிஷனில் ஈடுபட்டிருந்தவர்கள், ‘2 நாட்கள் தானே சொன்னீர்கள், விடுப்பில் அனுப்புங்கள்’ என்று நிர்பந்திக்கின்றனர். இதற்கிடையில், இப்போதே சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நீள்வதற்கு மற்ற உலக நாடுகள் அனுமதிக்காது. அதுவே போருக்காக அலையும் ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டையாக உருவாகும். கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 80 டாலரை தொடும் என்று நினைத்தனர். ஆனால் அது 160 டாலர் வரை செல்லக்கூடும். இனியும் ட்ரம்ப்பால் அவரது போர் வெறியை நீட்டிக்க முடியாது” என்று கூறியுள்ளார் ஈரான் ராணுவ மூத்த கமாண்டர். அவருடைய இந்தக் கருத்துகள், ஈரானிடம் அமெரிக்கா, இஸ்ரேல் வீழ்ந்துவிட்டது என்பதுபோல இருக்கிறது அல்லவா? ஏற்கெனவே, இன்னும் 6 மாதங்கள் வரை இந்தப் போரை நீட்டிக்க தங்களிடம் பலம் இருப்பதாக ஈரான் கூறியிருந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது. ஆனால், ஈரானில் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு, அந்நாட்டை ஸ்தம்பிக்கச் செய்துள்ளதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிவித்து வருகின்றன. “ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும்” என்று ட்ரம்ப் எச்சரித்தது போலவே ஈரானின் எண்ணெய்க் கிணறுகள் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அவை பற்றி எரிகின்றன. இதன் காரணமாக தெஹ்ரானிலும், தெஹ்ரானைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வானில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது குண்டுகள் வீச்சு இது ஒருபுறம் இருக்க, இந்தப் போரை முன்னெடுத்ததால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புக்கு டேமேஜ் கன்ட்ரோல் நடவடிக்கைகளையும் ட்ரம்ப் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். ரஷ்ய எண்ணெய்யை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு தற்காலிக அனுமதி உள்ளிட்ட பல்வேறு கரிசனங்களை இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கிடையில், ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்யாவும், வட கொரியாவும் வாழ்த்து தெரிவித்துள்ளது. போரில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது ஆகியனவையும் போரின் போக்கில் கவனிக்கத்தக்கது. ஈரானுடன் எப்போதுமே நட்பில் இருந்துவரும் சீனாவும், வெளிப்படையாக சொல்லிக் கொள்ளாமல் களத்தில் பல உதவிகளை செய்து கொடுத்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தச் சிக்கல்களுக்கு இடையே அமெரிக்கா, இஸ்ரேலுடன் நல்லுறவில் இருக்கும் இந்தியா தங்களுக்காக மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று ஈரான் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஈரான் போரின் பக்கவாட்டு சேதாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் வளைகுடா ஒதுழைப்பு நாடுகளோ புதின் உதவியை நாடுவதாகவும் தகவல்கள் வருகின்றன. ட்ரம்ப்பும், நெதன்யாகுவும் ஆரம்பித்த இந்தப் போர் இப்போது உலகமும் முழுவதையும் இழுத்துவிடும் சூழலுக்கு வந்து நிற்கிறது. காசா போர், லெபனான், ஏமன் மீதான தாக்குதல் என அடுத்தடுத்து போரில் சிக்கியுள்ள இஸ்ரேல், இப்போது ஈரான் ஏவுகணைகளை சமாளிப்பதிலும், ஈரானை தாக்குவதிலும் மொத்த நேரத்தையும், உழைப்பையும், வளத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், “ஈரானிய மக்கள் அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கு உதவுவதே இஸ்ரேலின் நோக்கம். இறுதியில் இது அவர்களிடமே இருக்கிறது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாம் அவர்களின் சக்தியை பலவீனப்படுத்தி வருகிறோம் என்பதில் சந்தேகமில்லை” என்று நெதன்யாகு கூறியிருக்கிறார். இந்தப் பேச்சில் ஒருவித அயர்ச்சி தெரிவதாக சர்வதேச நிபுணர்கள் கணிக்கின்றனர். எங்கே சறுக்கியது அமெரிக்கா? ஈரான் உச்ச தலைவரை கொன்றுவிட்டால், அங்கே இன்னொரு புதிய விஷயத்துக்கான இடம் உருவாகும் என்று அமெரிக்கா தவறாக கணித்துவிட்டது என்று கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவின் அந்தக் கணிப்பு தவறானது. இருக்கும் தலைமையை வீழ்த்தினால் அமெரிக்க விரும்பிய மாற்று களம் உருவாவதைவிட, ஈரானில் ஏற்கெனவே எந்தக் குழு / அமைப்பு / கட்சி வலுவாக இருக்கிறதோ, எதனிடம் ஆயுதக் குவியல் உள்ளதோ அதுவே அதிகாரத்துக்கு வரும். அப்படியாக இராக்கில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஈரான் நிரப்பிக் கொண்டது. இப்போது ஈரானில் ஏற்பட்டுள்ளதை யார் நிரப்புவார்கள் என்பதே கேள்வி. இப்போதைக்கு அங்கு, பலம் பொருந்திய இஸ்லாமிய புரட்சிகர படைகள் அமைப்பு ரீதியாக வலுவாக, ஆயுத பலம் கொண்டதாக இருப்பதோடு, ஈரான் பொருளாதாஅரத்தின் 30 முதல் 40 சதவீதத்தின் மீது தனது அதிகாரித்தையும் கொண்டுள்ளது. அதனால்தான் புதிய உச்ச தலைவர் நியமனமும் சாத்தியமானது. ஒருவேளை உச்ச தலைவரே அப்புறப்படுத்தப்பட்டாலும் ஐஆர்ஜிசி அதிகாரத்தில் இருக்கும். இப்போது உச்ச தலைவராகியுள்ள மோஜ்தபா காமேனியும் இந்தப் படையுடன் நெருங்கிய நட்புறவு கொண்டவரே. எனவே, அயதுல்லா காமேனி உருவாக்கிய இந்தப் படையின் பேராதரவோடு மோஜ்தபா பதவிக்கு வந்துள்ளார். இன்றைய சூழலில் ஈரானில் ஏதும் ஆட்சி மாற்றம் நடக்கவில்லை. ஒருவகையில் மணி மகுடம் தலைமாறியுள்ளது. பதில் கிடைக்குமா? இராக் போரின்போது அங்கு ஆட்சியில் இருந்த பாத் கட்சியின் அரசை கலைப்பதாகவும், இராக் ராணுவத்தை கலைப்பதாகவும் அமெரிக்கா அறிவித்தது. ஆனால் ராணுவத்தில் இருந்த 4 லட்சம் வீரர்கள் ஆயுதங்களோடு சென்றது மட்டுமே மிச்சம். அதற்கு அமெரிக்கா கொடுத்த விலை அதிகம். டொனால்டு ட்ரம்ப் இப்போது ஈரானில் அணு ஆயுதங்களை அழிப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்றால் 2025 செப்டம்பரில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் இன்னமும் ஈரானில் குவியல் குவியாக ஆயுதங்கள் எங்கிருந்து வருகின்றன? அமெரிக்காவுக்கு இது நடக்க வேண்டும், அது மாற வேண்டும் என்ற விருப்பம்தான் இருக்கிறதே தவிர, திட்டம் என்று எதுவும் இல்லை. ஒருவேளை பிராந்திய அமைதிக்காக ஈரான் மீது தாக்குதல் என்று அமெரிக்கா சப்பைக் கட்டு கட்டினால், ஒவ்வொரு முறையும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படும் போதும், அது பரவலான பிராந்திய பாதிப்பை ஏற்படுத்துவது ஏன்? அழிவைத் தாண்டி வேறேதும் திட்டமில்லாத அமெரிக்கா இவற்றுக்கு எல்லாம் பதில் சொல்லுமா? அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை
  15. "கிணறு" கிண்டிய பிறகு (அதுவும் தலையால் கிண்டிய பிறகு) வந்த தண்ணீர் "உப்புத் தண்ணீர்" என்றால் அவர்கள் என்ன தான் செய்வார்கள்😎? ஆனால், அந்த நேரமே "நீங்கள் கிண்டுவது கிணறல்ல, சாக்கடைக் குழி" என்று முன்னெச்சரிக்கை கொடுத்தவர்கள் மீது தான் இன்னும் கடுப்பு அவர்களுக்கு!
  16. இன்னொரு தீர்மானம் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் ரஷ்யாவினால் கொண்டு வரப் பட்டது. எவரையும் குறிப்பிடாமல் "அனைவரும் தாக்குதலை நிறுத்தி பேச்சு வார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும்" என்ற தீர்மானம். 4 வாக்குகள் மட்டும் கிடைத்தன (ரஷ்யா, சீனா, சோமாலியா, பாகிஸ்தான்). கிடைக்க வேண்டிய 9 வாக்குகள் கிடைக்காமையால் தீர்மானம் எழுதிய பேப்பரை மீள் சுழற்சிக்காக அனுப்பி விட்டார்களாம்😂! உலகம் தெளிவாகத் தான் இருக்கிறது!
  17. அண்ணைதான் வீட்டிலே சமையலோ?😉 தொடருங்கள். வாசிக்க காத்திருக்கிறேன்
  18. தம்பருக்கு மூக்கை உடைக்கத்தான் வேண்டும்… ஆனால் தம்பரும் அமெரிக்க சண்டித்தனமும், தடிமன் மாதிரி…கொஞ்ச நாளில மாறிடும். பிறகு வரும் போகும் ஆனால் உயிரை எடுக்காது. ஆனால் அடிப்படைவாத முல்லாக்கள் கான்சர் மாதிரி…வெட்டா விட்டால் உயிராபத்து. கூடவே இவர்கள் பிடியில் இருந்து விடுபட அடிக்கடி போராடி, மிருகதனமாக நசுக்கப்படும் ஈரானியர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆகவே இதில் முல்லாக்கள் தோற்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
  19. தேசிய இலங்கையில் ஏன் பிரிவினை ?தெற்கின் விளைச்சலை வடக்கு தராமல் விடுவார்களா? 🤣 என்னப்பா யாழ்ப்பாணம் தனிநாடா? அதற்கு ஒர் தூதுவரா....சொல்லவே இல்லை🤣
  20. மலர் ......... 3. விநோதன், மணிமேகலை சிறுவர்கள் சுஜிதா மற்றும் யுகேந்திரன் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக தத்தமது துன்பங்களை மறந்து சாதுக்கள் அமைத்துக் கொடுத்த கடை சாமான்களை விற்று வாழ ஆரம்பிக்கின்றனர்…….. அவ்வழியே செல்லும் வாகனங்கள் அங்கே தரித்து நின்று செல்ல ஆரம்பிக்கின்றன . அப்போது அங்கு அண்ணாதுரையின் லொறி வந்து கடையின் முன்னால் நிற்கின்றது. அண்ணாதுரையை கண்டதும் எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிள்ளைகள் ஓடிச்சென்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள விநோதனும் மணிமேகலையும் அவருக்கும் ரமேஷ்சுக்கும் முகமன் கூறி கடைக்குள் அழைத்து செல்கின்றனர்…… அவரும் அங்கிருந்த வாங்கில் அமர்ந்து அவர்களது சுகதுக்கங்களை விசாரித்து அறிந்து கொள்கின்றார்…… அப்போது அங்கு பல வாகனங்களும் வந்து நின்று கடையில் பலவிதமான பழங்கள் மரக்கறி வகைகளை வாங்கி செல்கின்றனர். அவை எல்லாவற்றையும் கவனித்த அண்ணாத்துரையும் அவர்களிடம் இங்கு நிறைய வாகனங்கள் வந்து தரித்து நின்று செல்வதால், நீங்கள் ஏன் தேநீர் வியாபாரம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்…..! அதுக்கு மணிமேகலையும் எங்கை அண்ணை இப்ப இந்தப் பிள்ளைகளும் வினோத்தும் ஊருக்குள் நடந்து போய்த்தான் பழங்கள், மரக்கறிகள் என்று வாங்கி கைகளிலும் தோளிலும் சுமந்து வருகின்றார்கள் என்று சொல்கிறாள். அவரும் சரி நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ, நாங்கள் இந்த வழியால் போகும் போதும் வரும் போதும் உங்களுக்குத் தேவையான சாமான்களை வாங்கி வந்து தருகிறோம். இப்போதைக்கு நீங்கள் காசு ஒன்றும் தரவேண்டாம். இந்தப் பிக்குகள் மிகவும் நல்லவர்கள் போல் இருக்கிறார்கள். கையில் இருக்கிறதையும் பிடுங்கி தூசண வார்த்தைகள் பேசி அடாவடி செய்யும் காவி உடையில் இருக்கும் போலிப் பிக்குகளையும் நான் பத்திரிகைகளிலும் செய்திகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்கள் போன்ற தூய்மையான சாதுக்களால்தான் இந்த நாட்டில் கொஞ்சமாவது காருண்யமும் அன்பும் நிலைத்திருக்கின்றது என்று சொல்லி அவரும் ரமேசும் சிற்சில பழங்களை வாங்கிக் கொண்டு அவர்களின் மறுப்பையும் பொருட்படுத்தாது அதிகமாகவே பணத்தைக் கொடுத்து விட்டு செல்கின்றனர். நாளடைவில் அவர்கள் கடையையும் பெருப்பித்து தேநீர், பலகாரங்கள், சாப்பாடு என்று விற்கத் தொடங்கி விட்டனர். அதற்கான பாய்லர்,பாத்திரங்களை அண்ணாத்துரையே கொண்டுவந்து குடுத்ததுடன் தன்னிடமிருந்த பெரிய கேரியர் கொண்ட சைக்கிளையும் வினோதனிடம் குடுத்திருந்தார். அது ஊருக்குள்ளும் பக்கத்து நகரங்களுக்குள்ளும் சென்று சாமான்கள் வாங்கிவர ரொம்ப உதவியாய் இருக்குது. கடை வேலை முடிந்ததும் அவர்கள் பின்னால் உள்ள குளத்தை அண்மித்த இடத்தில் வருபவர்கள் இயற்கை உபாதையை கழிக்கக் கூடியதாக கழிவறையும் கட்டி விட்டு அதற்கு அப்பாலும் காடழித்து தமக்காக ஒரு சிறிய வீடும் கட்டி பயிர்செய்கைக்கு ஏற்றவாறு காணியும் வைத்திருந்தனர். இரவில் மணிமேகலையும் சுஜிதாவும் வீட்டில் தங்கிக் கொள்வார்கள். வியாபாரத்தை விநோதனும் யுகேந்திரனும் பார்த்துக் கொள்வார்கள். கால ஒட்டத்தில் சுஜிதாவும் பெரியவளாக வளர்ந்து நிக்கிறாள்.யுகேந்திரனுக்கும் பூனை மீசை அரும்பியிருக்கு. சாதுக்களும் அவ்வழியே வரும்போது இவர்களின் வளர்ச்சியைப் பார்த்து மனநிறைவுடன் இவர்களிடமும் பிக்ஷை ஏற்று ஆசி வழங்கிச் செல்கின்றனர். யுகேந்திரனும் சுஜிதாவும் இப்பவும் தொடர்ந்து விகாரைக்கு சென்று கழுவுதல், துடைத்தல் போன்ற உதவிகளை செய்வதுடன் அங்குள்ள பாடசாலையில் பெரிய வகுப்பில் படிக்கின்றனர் கூடவே பிக்குகளுடன் சேர்ந்து தியானப்பயிற்சி, யோகா, சிலம்பம் போன்ற பல கலைகள் கற்பதும் சிறுவர்களுக்கு கற்பிப்பதுமாக இருக்கின்றனர். இவர்களது கடையும் விளம்பரம் இல்லாமலே “வீதியோரக்கடை” என்று பிரபலமாகி இருந்தது. அதற்கு மணிமேகலையின் கைப்பக்குவத்தில் செய்யப்படும் சுவையான சுத்தமான உணவு வகைகளும் மலிவான விலைகளுமே காரணம். வருபவர்கள் தாங்களும் சாப்பிட்டுவிட்டு பார்சலும் கட்டிக்கொண்டு போகிறார்கள். முன்பு ஐந்தாறு லாந்தர் விளக்குகள் இருந்த இடத்தில் இப்பொழுது சில பெற்றோல்மாக்ஸ் விளக்குகள் வெளிச்சம் தருகின்றன. அடர்ந்த காட்டின் நடுவே வீதியோரத்தில் இப்படியொரு பிரபலமான கடை இருந்தால் கூடவே சில தவறான வியாபாரங்களும் அங்கு உருவாகி விடுவது இயல்புதானே. முதலில் சில சாரதிகளும் கிளீனர்களும் சாராயம் போன்ற குடிவகைகளை தெரிந்தும் தெரியாமலும் கடைக்கு அருகில் வைத்து குடிக்க ஆரம்பித்தனர். பின் சில நாளில் கஞ்சா போன்ற போதைவஸ்துகள் சிலரால் சில்லறை வியாபாரமாகவும் புழக்கத்துக்கு வந்தன. அவர்களின் தேவைக்காக இவர்களும் உறைப்பான மாமிச கறிவகைகள், முட்டை பரோட்டாக்கள், கொத்து ரொட்டி போன்றவையும் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர். தொடர்ந்து எங்கோ தூரத்தில் இரவுகளில் தொழில் செய்யும் சில பெண்கள் இப்பொழுது கடைக்கு அண்மையில் தமது வாடிக்கையாளர்களுடன் காட்டுக்குள் செல்வதும் வருவதுமாய் தொழில் செய்து வருகின்றனர். தாங்கள் தங்குவதற்கு முன்பு யாரோ பழுதாகி விட்டுப் போன ஒரு லொறியை பாவிக்கின்றார்கள். சாராயம் மற்றும் போதைவஸ்துகள் விற்பவன் லொறியின் முன்பக்கத்தில் தனது சாமான்களுடன் தங்கிக் கொள்கிறான். அவர்களும் கடை வாடிக்கையாளர்களாய் இருப்பதாலும் அதனாலும் கடைக்கு வருமானம் பெருகி வருவதாலும் எல்லாமே ஒரு தொடர் சங்கிலியாய் மாறிவிட்டிருந்தன. ஒரு கட்டத்தில் இவர்களால் கூட இங்கு நடக்கும் தப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது......! மலர் ..............🌸 🌸 🌸
  21. இந்தப் பேரூந்து செல்வதற்கு உரிய… கேடு பள்ளம் இல்லாத வீதி அமைப்பு, மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியில் செல்வதற்கு உரிய சரியான பாதைகள் அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஶ்ரீலங்கா வீதிகள்… சாதாரண மக்கள் நடந்து செல்லவே, உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. பல வகையான.. டிப்பர், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றை அதிகமாக இறக்குமதி செய்து நெருக்கமாக ஓடும் நிலையில்… தமிழ்ப் பகுதி வீதிகள் 50 வருடத்திற்கு முன்பு இருந்த நிலையிலேயே இன்றும் உள்ளது.
  22. போதை பழக்கத்தால்…. மனநல பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். ஒரு குடும்ப தலைவர், அரச உத்தியோகத்தர்…. அவரின் வீட்டில் வாள் எல்லாம் ரெடியாக இருந்திருக்குது என்றால் சிந்திக்க வேண்டிய விடயம்.
  23. என்னக்கா நீங்களே இப்படிச் சொல்லலாமா? இது அவர்களின் குடும்ப சூழலை வெளிப்படுத்த எடுத்த படங்கள், நன்கொடை அளிப்பவர்களுக்கு வெளிப்படையாக தெரியப்படுத்தும் நோக்கம் மட்டுமே. இவர்களுக்கும் இன்னும் 24 பேருக்கும் 20 லட்சம் ரூபா (முகப்புத்தகத்தில் 30 லட்சம் என தவறாக குறிப்பிட்டுள்ளார்கள்) வீட்டுத்திட்டம் திரு சுவிஸ் நாதன் அண்ணாவினால் கட்டிக்கொடுக்கப்பட உள்ளது. மலசலகூடம் அந்த திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. @வாத்தியார் அண்ணா கிராமசேவகருடன் கதைத்தபோது உறுதிப்படுத்தினார். திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இதனை உறுதிப்படுத்தினார். ஆகவே அவர்களுக்கு மலசலகூடம் கட்டிக்கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்பது எனதும் வாத்தியார் அண்ணாவினதும் அபிப்பிராயம்.
  24. ஆழ்ந்த இரங்கல்கள். ரணில்… சில அரசியல் கைதிகளை விடுவித்து இருந்தார். அனுரா, மகிந்த, கோத்தா, மைத்திரி போன்ற ஜனாதிபதிகள்… ஒரு அரசியல் கைதிகளையும் விடுவிக்கவில்லை என நினைக்கன்றேன்.
  25. டிரம்ப் ஐயாவின் இளைய புதல்வன் தனது ஒரு சில பாடசாலை நண்பர்களுடன் சேர்ந்து பியர் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக முன்னர் ஒரு செய்தி பொக்ஸ் இல் பார்த்தேன். டிரம்ப் ஐயாவின் குடும்பம் மேலும் மேலும் உயர்ந்து செல்கின்றது என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. டிரம்ப் ஐயாவிற்கு எதிலும் ஒரு வியாபார புத்தி. போரின் பாதிப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு. இங்கே வெற்றி பெறுவோர் யார் என அடையாளப்படுத்தினால் அனைவரும் பெரும் தொழில் நிறுவனங்கள், மற்றும் முதலீட்டாளர்களே. அன்றாடம் உழைத்து சீவிக்கும் சாதாரண மக்கள் அனைவரும் தோற்கும் பகுதிக்குள் வருகின்றார்கள்.
  26. செம பகிடி சுவியாரே. உபிசியாக உள்ளேன்
  27. இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம் 🤣 ஈரான் மக்கள் நன்றி ரம் அவர்களே என்று எழுதி ஊர்வலம் செல்ல இந்த கொமடி மன்னர்கள் தமிழ் வீரகத்திகள் இலங்கை இந்திய முஸ்லிம்கள் திருமாவளவன் வைகோ கமலகாசன் 🤣 அமெரிக்கா இஸ்ரேல் மீது பேயடி அடித்த ஈரான் மனிதநேயம் காக்க களத்தில் மாஸ் காட்ட போகும் ரஷ்யா சீனா வட கொரியா
  28. ஆப்கானில் மொக்கன் அமெரிக்கன், மோடையன் யூகே, மகா மோடையன் ஜேர்மனி போன்ற கூட்டுக்களோட போனதால விசயம் பிழச்சு போட்டு… இந்த முறை இஸ்ரேலோடு போயிருக்கான்….அவன் போனால் வழிச்சு துடைக்காம வாறேல்ல எண்டு சில சனம் பேக்கதை கதைக்குதண்ணை…. உங்கட 50+ வருட உலக அரசியல் அனுபவத்தின் படி இந்த கருத்தை பற்றி என்ன நினைக்கிறியள்?
  29. 🤣............... தாரை தப்பட்டை என்று எதையாவது தூக்கிக் கொண்டு உடனேயே கலந்து கொள்ளுகின்றோம்...................... கூட்டம் சேர்ந்து விடும்................
  30. இன்றோ நாளையோ உயிர் போகும் தருவாயில் இருந்த ஒரு மத/அரசியல் தலைவரை ஒழித்து கட்டியதுதான் மிச்சம்.அதற்கான செலவோ பில்லியன் கணக்கில்..... ஆப்கானிஸ்தானை அழித்து மீண்டும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளிடம் நாட்டை திருப்பி கொடுத்த ஞாபகம் தான் வருகின்றது.😁
  31. 2024 இல் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இதே போல இரண்டுமுறை போட்டி விபரங்களை வெளியிட்டார்கள் . நீங்கள் இரண்டாவதாக வெளியிட்ட போட்டிகளைவைத்து போட்டியினை நடாத்தினீர்கள். சென்ற வருடம் 74 போட்டிகள் நடைபெற்றன. இம்முறை 84 போட்டிகள் நடைபெறவுள்ளது. 20 போட்டிகளின் விபரங்கள் இதுவரை வெளியாகியுள்ளது. மிகுதி 64 போட்டிகளை மட்டும் வைத்து நீங்கள் போட்டியை நடாத்துங்கள். கடந்த சிலவருடங்கள் போட்டிகளை அழகாக நடாத்தியுள்ளிர்கள். போட்டிகளை நீங்கள் நடாத்தினால் நன்றாக இருக்கும். உங்களுக்கு இம்முறை போட்டியினை நடாத்த நேரமில்லாமல் இருந்தால் மட்டும் நான் போட்டியினை நடாத்துகிறேன். தமிழக சட்டசபை தேர்தல் போட்டி கட்டாயம் நடைபெறும்
  32. என்னப்பு அடிப்படை சுகாதார வசதி திட்டம் என்று போய் இப்போ வீட்டோடு வாறியள்.திட்டம் ஒரு நிலைப்பாட்டில் இல்லைப் போலும்.தொடரட்டும்.🤭
  33. உந்த இந்தியன் பிக்கினி லீக் குக்கு போட்டி நடத்தாட்டியும் ஒண்டும் குறையப்போறேல்ல😂. ஆனால் கந்தப்புவ டிஸ்டேர்ப் பண்ண வேண்டாம்😂. அவருக்கு உலக கோப்பையை வெண்ட கோப்பைக்கான போட்டியை நடத்தும் பொறுப்பு உண்டு😂
  34. ஈரான் மட்டுமல்ல இன்னும் பிற நாடுகளும் Nuclear threshold states எனும் நிலையில் அணு நீர் மூழ்கி இல்லாமலே இருக்கின்றன, உண்மையில் அணுவாயுதம் செய்வதற்கு ஈரான் விரும்பியிருந்தால் 2021 இலேயே 60% யுரேனிய செறிவூட்டல் தகமை கொண்ட நாடு எதற்காக 5 வருடங்கள் பொறுக்க வேண்டும்? இங்கு நீங்கள் ஈரான் அணுவாயுதம்தான் செய்யப்போக்கிறது என எதனை கொண்டு கருதுகிறீர்கள்? உலகிலே ஈரான் போல வேறு நாடுகள் இருக்கும் போது ஈரான் மட்டும் அணுவாயுதத்தினை தயாரிக்க போவதாக எவ்வாறு கண்டுபிடித்தீர்கள் (IAEA கூட ஆதாரம் எதுவும் இல்லை எனும் நிலையில்?) இந்த 60% செறிவூட்டல் தகமை ஈரானுக்கு 5 வருடங்களுக்கு முன்னரே இருந்துள்ள நிலையில் இது வரை அது எந்த அணுகுண்டினையும் செய்யவில்லையே? உங்களது சந்தோசத்திற்காக ஈரான் அணுகுண்டிற்காகவே 60% யுரேனிய செறிவூட்டல் செய்துள்ளது என கூறி சம்பாசனையினை நிறுத்த நான் தயாராகவே உள்ளேன் ஆனால் கேள்விகள் புதிய புரிதல்களை உருவாக்கும், எனது நோக்கம் யாருடனும் தேவையற்று முரண்படுவதில்லை, ஆனால் ஆரோக்கியமான சம்பாசனைகள் எனது புரிதலையும் மற்றவர்களது புரிதலையும் அதிகரிக்கும், உங்களுக்கு தர்ம சங்கடத்தினை ஏற்படுத்துவது எனது உண்மையான நோக்கம் அல்ல. நீங்கள் விரும்பினால் ஈரான் அணுகுண்டு தயாரிப்பதற்காகவே 60% செறிவூட்டல் யுரேனியத்தினை தயாரித்த காரணத்தினை வெளிக்கொணரலாம் (நீங்கள் இரகசியமாக வைத்திருக்கும் காரணத்தினை), இல்லாவிட்ட்டால் சந்தேகத்தினடிப்படையில் என்னை போன்றவர்கள் இதனை ஒரு சதிக்கோட்பாடாகவே நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
  35. எமது சமுதாயம் சில உளநம்பிக்கைகள் அல்லது பயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் இருந்து மீள்வதற்கு முயலாமல் ஒன்றின் தார்ப்பரியத்தை கேள்விக்குட்படுத்தாமல் அல்லது அதனால் ஏற்பட்டுக் கூடிய விளைவுகளை சீர்தூக்கிப் பார்க்காமல் அல்லது அதனையும் மீறிய சமுதாய பயம் காரணமாக பல தலைமுறைகளாக சிலவற்றை தலைமுழுகி விடாமல் தொடர வேண்டும் என்பதற்காகவே தாமும் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தமது அதிகாரத்தை பயன்படுத்திக்கூட தமது சந்ததியினரையும் அதனை பின்பற்றி நடக்க செய்து கொண்டு வருகிறது. அதிலும் பெண்பிள்ளைகள் சார்ந்து கேட்கவே தேவையில்லை. இதனடிப்படையில் எமது தமிழ் பெற்றோர்கள் தமது பெண்பிள்ளைகள் சார்ந்து இன்னமும் கொண்டிருக்கும் பயம் அல்லது சந்தேகம் அல்லது அடக்குமுறை சார்ந்த பதிவே இது. பெண் பிள்ளைகள் சார்ந்த மாதவிடாய் சுழற்சிக்காலம் 28 நாட்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கால சுழற்சியில் மாற்றங்கள் நிகழும் போது அதன் விளைவுகள் அவர்களது அன்றாட வாழ்வில், மனதளவில், உடல் நலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அவர்களது எதிர்காலம் சார்ந்த எத்தனிப்புக்களை நாசமாக்கக்கூடியது என்பதை பெற்றோர்கள் அறிந்துள்ள போதும் அதற்கான மருந்தான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள எமது தமிழ் பெற்றோர்கள் மறுக்கின்றனர். 28 நாட்களில் ஒழுங்காக வரவழைக்ககூடிய மாத்திரைகளை உடலுறவுக்கான பாதுகாப்பு மாத்திரைகள் என்று புரிந்து கொண்டு அதனை திருமணமாகாத கன்னிப் பெண்கள் பாவிப்பது அப்பெண் பிள்ளைகளின் கன்னித்தன்மை சார்ந்ததாக அல்லது அவர்களை சந்தேகிப்பதாக அல்லது தாமே அவர்களுக்கு பிழையான வழியை திறந்து விடுவதாக பார்க்கப்படுகிறது. ஒரு சில பெற்றோர்களாவது இதை உணர இப்பதிவால் முடிந்தால்..... நன்றி.
  36. விசுகரின் எழுத்தில் சில குழப்பங்கள் இருக்கின்றன. மாதாந்த இரத்தப் போக்கை சில ஹோர்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் பிற்போடலாம் (period delaying pills). இந்தக் குளிசையை நிறுத்தியவுடன் 3 நாட்களில் மாதாந்த இரத்தப் போக்கு ஆரம்பிக்கும். ஆனால், இந்த நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப் படும் மாத்திரை கருத்தடை மாத்திரை அல்ல. இதை எடுத்துக் கொண்டு உடலுறவு கொண்டால், கருத் தரிக்கும். பக்க விளைவுகள் சில உண்டு: உடலில் நீர் சேர்தல் (இதனால் வயிறு ஊதியது போல உணர்தல்), தலை வலி, நிறுத்தியவுடன் அதிக இரத்தப் போக்கோடு மாதாந்த இரத்தப் போக்கு உருவாதல் என்பன பரவலான பக்க விளைவுகள். ஆபத்துக்கள்: இரத்தம் இலகுவாக உறையக் கூடிய கண்டறியப் படாத நோய் நிலை (blood clotting disorders) சிலரில் இருக்கலாம். அத்தகைய நோய் நிலை இருப்போரில் இரத்தக் கட்டிகள், மூளை இரத்த அடைப்பு என்பன ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் தான் மருத்துவர் சில பரிசோதனைகளைச் செய்த பின்னர் மட்டுமே இந்த மருந்தைப் பரிந்துரைப்பர். மருத்துவ ஆலோசனை இல்லாமல் இவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  37. படங்கள் @வாத்தியார் அண்ணா. @goshan_che அண்ணை உங்கள் நண்பரிடமும் அவர்களின் வீட்டின் சூழலை காட்டும் படங்களை பகிருங்கள். தற்போது ஒரு மேசன் தம்பி முன் வந்திருக்கிறார், நேரடியாக வந்து பார்த்து தமது சம்பளம் பற்றி கதைப்பதாக கூறியுள்ளார். @வாத்தியார் அண்ணையும் தனக்கு அறிமுகமான மேசன் ஒருவரிடம் கேட்டுச் சொல்வதாக கூறினார்.
  38. கோயில் நிலைய வித்துவான்களே 10 க்கு மேல் இருக்கும் நீங்கள் வேற .......! 😂
  39. விக்கெட்டுகளின் எண்ணிக்கை சமமாக இருந்தாலும், economy, strike rate இல் பும்ரா முன்னணியில் நிற்பதால் பும்ராதான் சிறந்த பந்துவீச்சாளர். அத்துடன் பும்ரா எட்டு மட்ச்களிலும், வருண் ஒன்பது மட்சுகளிலும் விளையாடியிருந்தனர். குறைந்த மட்சுகளில் பும்ரா விளையாடி ஒரே எண்ணிக்கையான விக்கெட்டுகளை வீழ்த்தியதும் இன்னோர் காரணம்.
  40. அமெரிக்காவிலும் இப்போது மதவாதம் மேலோங்கி உள்ளது. வெளிப்படையாகவே டிரம்ப் ஐயாவும், அவர் குழுவும் புதிய பாணியில் அமெரிக்காவின் அரசியலை மதத்தின் அடிப்படையில் நிறுவுகின்றனர்.
  41. நல்ல விழிப்புணர்வுக் கதைக்கு நன்றி . ....... பவுன், நகை விடயங்களில் போலிகள் நிறைந்து விட்டதால் யாரையும் நம்ப முடிவதில்லை..... எனக்கும் பவுன் சம்பந்தமான சில வேலைகள் இது போன்ற நம்பிக்கையீனங்களால் தாமதமாகிக் கொண்டு போகிறது . ......! பகிர்வுக்கு நன்றி கவி . படங்கள் நன்று . ......!
  42. சில விடயங்களுக்கு உள்ளூர் அனுபவ ஆட்டக்காறரரைத் தான் களத்தில இறக்கவேணும் ஐயா. இந்த வில்லங்கத்தால எங்களுக்கு ஒரு கதை கிடைச்சதே! அது சரி @Kavi arunasalam ஐயா அந்த நகல் தாலிக்கொடி தவறாகவில்லை தானே?!
  43. பங்குபற்றிய உறவுகளுக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நியூபலன்ஸ், கந்தப்பு அண்ணை, நியாயம் மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் அண்ணைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
  44. இவர் த‌னது வாயை வாடகைக்கு விடுபவர். தான் தனியாக கட்சி நடத்தியபோது தீம்காவை கிழித்துத் தள்ளினார். "வாருங்கள் நாடாளுமன்றத்தில் பதவி தருகிறோம்" என்று ஸ்டாலின் கூப்பிட்டவுடன் ஒரேயடியாகக் காலில் வீழ்ந்து பதவியை ஏற்றுக்கொண்டார். இப்போது தீம்காவும் காங்கிரஸும் போடும் தாளத்திற்கு ஆடவேண்டிய நிலை. ஆகவேதான் காங்கிரஸின் பல்லவியான "ஈரானைத் தாக்காதே" என்பதை இவர் பாடுகிறார். ஆனால், ஆள் சுத்தமான பிராமண இந்துத்துவவாதி.
  45. பெயர்: அனுர வேறு பெயர்: அரவிந்த, தமிழருக்கு சேர் பழைய தொழில்: கச்சான் விற்பது புதிய தொழில்: கஞ்சா விற்பது அல்ல அப்போது: பொதுவுடமைவாதி தற்போது: தேசியவாதி எப்போதும்: இனவாதி நம்புவது: பெளத்தாகமத்தை நம்பாதது: தமிழர்களை, முஸ்லிம்களை பழைய நண்பர்கள்: சந்திரிக்கா, மகிந்த, பசில், கோட்டா, விமல், டக்லஸ், கருணா, பிள்ளையான் புதிய நண்பர்கள்: இந்தியா, அமெரிக்கா பழைய எதிரிகள்: இந்தியா, அமெரிக்கா புதிய எதிரி: டில்வின் சில்வா எப்போதும் எதிரிகள்: தமிழர் உரிமையை கோருவோர், ரணில் பிடித்த டிவி சீரியல்: சித்தி பிடிக்காத படம்: மேட்டுக்குடி ஆர்ப்பாட்டமாய் செய்வது: யாழில் நடைபயிற்சி அமசடக்கமாய் செய்வது: வவுனியாவில் குடியேற்றம் அகற்றபடக்கூடாது: தமிழர் நிலத்தில் - புத்தர் சிலை அகற்ற பட வேண்டியது: தமிழர் மனதில் -சமஸ்டி நீண்டகால சாதனை: வடக்கு கிழக்கு பிரித்தது குறுகிய கால சாதனை : வடக்கில் 3 எம்பிக்களை பிடித்தது ஶ்ரீதரன் மறக்க கூடாதது: பார் லைசனஸ் விசாரணையை தமிழர்கள் மறக்க வேண்டியது: போர்குற்ற விசாரணையை தியாகிகள்: ஆயுதம் ஏந்திய சிங்கள இளைஞர்கள். பயங்கரவாதிகள்: ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் இலங்கையில் இல்லாதது: டொலர் கையிருப்பு, இனப்பிரச்சனை இலங்கையில் இருப்பது: வர்க்க அடக்குமுறை எப்போதும் பெருமை: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியது ஒருபோதும் வருந்தாதது: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியது மிரட்டினால் பணிபவர்: ஶ்ரீதரன் மிரட்டாமலே பணிபவர்: சந்திரசேகரன் நிரந்தர தலைவலி: சிங்கள வாக்காளர் ஒரே நிம்மதி: தமிழ் அனுர காவடிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.